எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பா. ஷபானாவின் சிறுகதைகள் - 05

Fa.Shafana

Moderator
திரு. அன்னை
------------------------------

இன்னும் இரண்டு நாட்களே மீதமிருந்தது மாதேஷின் கல்லூரி வாழ்க்கை நிறைவுற.
அதற்குள் தன் மனம் கவர்ந்தவளிடம் முடிவை கேட்டு விட அவன் மனம் பரபரத்துக் கொண்டே இருந்தது.

அவளுக்கு தன்னில் விருப்பம் இல்லை என்பதைக் கடந்து ஏதோ ஒன்றை மனதில் வைத்துக் கொண்டு தன்னை அலைக்கழித்துக் கொண்டு இருக்கிறாள் என்று நன்கு புரிந்தது தான். ஆனால் அது என்னவென்று தெரியாமல், தெரிந்து கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறான் இந்த இரண்டு வருடங்களாக.

சிந்தனை அவளைச் சுற்றியே இருக்க அவன் சிந்தை நிறைந்தவளோ அந்தக் காலை வேளையில் கல்லூரி வளாகத்தில் ஒரு ஓரத்தில் இருந்த மரத்தடியில் அமர்ந்து தன் தோழியுடன் பேசிக் கொண்டிருந்தாள்.

அவளை அவன் கண்கள் கண்ட நொடி கால்கள் அவன் போகும் திசை மாற்றி அவளை நோக்கி அடி எடுத்து வைக்க ஆரம்பித்து இருந்தன.

அவளை நெருங்க நெருங்க நெஞ்சம் முழுவதும் நிறைந்த அவள் மீதான நேசம் பொங்கி எழ அவளின் மறுப்பின் காரணம் அறிந்து கொள்ள முடியாத தன் இயலாமையை நொந்து கொண்டவனுக்கு சினமும் துளிர்த்தது அவளை நேசிக்கும் தன் மீதும் தன்னைத் தவிர்க்கும் அவள் மீதும்.

தன் முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாதவன் அவள் முன் சென்று நின்றதும், அவனை எதிர்பார்க்காதவள் எழுந்து கொண்டாள்.

"நான் உன் கிட்ட பேசணும் காவ்யா" என்றான் என்னவென்று உணர முடியாத குரலில்.

வர இருந்த புலி தான். என்ன ஒன்று கல்லூரி இறுதி நாளில் வரும் என்று நினைத்து இருந்த புலி இன்றே வந்து விட்டதே என்ற படபடப்பு அவளிடம். இத்தனை நாட்களில் இப்படி அவள் முன் வந்து நின்றதே இல்லை அவன்.

அவள் இந்தக் கல்லூரிக்கு சேர்ந்த இரண்டாவது மாதமே தன் விருப்பத்தைக் கூறி இருந்தான். உடனே மறுத்து விட்டாள் அவள். அதன் பிறகு அவன் இருக்கும் திசைப் பக்கம் அவள் இல்லை அவள் பார்வை கூட போகாது. அத்தனை விலகி இருந்தாள்.

ஆனால் அதையும் மீறி நேசம் கொண்டவனோ பல சந்தர்ப்பங்களில் தன் நேசத்தை அவளுக்குப் புரிய வைக்க முற்பட இன்னும் இன்னும் தூரமாகிக் கொண்டே இருந்தாள் அவள்.

கல்லூரி இறுதி நாள் தன் முடிவைக் கேட்டு மீண்டும் வருவான் என்று நினைத்து இருந்தவளது நினைப்பைப் பொய்யாகியவன் இன்றே வந்து விட்டான்.

படபடத்த மனதை உள்ளுக்குள் அடக்கியவள் திரும்பி தன் தோழியிடம்,

"நீ க்ளாஸ்க்கு போ, நான் வர்றேன்" என்க அவள் கிளம்பி விட அவள் சற்றுத் தூரம் சென்றதும் தான் அருகில் நின்றவன் பக்கம் திரும்பினாள் இவள்.

"என்ன பேச வந்து இருக்கீங்கன்னு தெரியும்" என்றாள் எடுத்த எடுப்பில்.

"குட்.. அப்போ நானும் கடைசியா உன் முடிவ தெரிஞ்சிக்கலாம்ல?"

"ஆரம்பத்துல சொன்னது தான் இப்போ வர, நீங்க தான் நான் சொன்னத கேட்காம மனசுல ஏதேதோ நினைச்சிட்டு இருக்கீங்க" என்றவளை நோக்கி,

"ஏதேதோ இல்ல காவ்யா உன்ன நினைச்சிட்டு இருக்கேன், உன்ன மட்டுமே, உன்னோடான என் வாழ்க்கைய மட்டுமே நினைச்சிட்டு இருக்கேன்"

"அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? நான் எப்பிடி பொறுப்பாக முடியும்? அப்பிடி நினைச்சிட்டே இருங்கன்னு நான் சொல்லவே இல்லையே. வெயிட் பண்ணுங்க யோசிச்சு சொல்றேன்னு கூட சொல்லாம உடனே அப்போவே முடியாதுன்னு என் முடிவ நான் சொல்லிட்டேன். ஆனா நீங்க இன்னைக்கு வர நினைச்சிட்டு இருக்குறேன்னு வந்து சொல்றது அபத்தமா இருக்கு"

"அபத்தம் இல்ல உன் மேல வெச்ச அன்பு காவ்யா. உன்ன ஃபர்ஸ்ட் நம்ம காலேஜ்ல பார்த்தப்போ எனக்குள்ள ஏதோ ஒரு ஃபீல். தயங்கி, பயந்து, மருண்ட கண்களோட நீ அங்க இங்கன்னு பார்த்துட்டே வந்தது இன்னும் என் மனசுல இருக்கு. அப்பவே உன்ன என் கூடவே பத்திரமா வெச்சிக்கணும்னு நினைச்சது, இன்னைக்கு வர அந்த நினைப்பு மாறவே இல்ல.."

"ஆனா நான் மாறிட்டேன். அந்த பயம், தயக்கம் எல்லாம் கொஞ்சம் நாள் இந்த காலேஜ் அண்ட் இங்க இருக்கவங்கள பழகும் வர தான். அதுக்கப்புறம் நான் அப்படி பயந்து போய் நின்னத நீங்க பார்த்தீங்களா?" என்றாள் பட்டென்று.

"இல்லை தான். நீ இங்க வந்த டூ வீக்ஸ்ல ரொம்ப மாறிட்ட ஆனா உன்ன என் கூடவே வெச்சிக்கணும்னு நான் நினைச்சது இன்னைக்கு வர மாறவே இல்லயே" என்றான் அவனும் விடாது.

"என்னை பத்திரமா பார்த்துக்க, எப்பவுமே என் கூடவே இருக்க எனக்கு என்னோட அம்மா இருக்காங்க" என்றாள்.

"இல்லைன்னு நான் சொல்லவே இல்லையே. ஆனா கடைசி வர அவங்க கூடவே இருப்பியா இல்லைல? கல்யாணம் பண்ணி அவங்கள விட்டு போவ தானே? என்றவனை இடைமறித்து,

"ஆமா.. இருப்பேன்" என்றவள் நிறுத்தி அவனை ஏறிட்டு "அவங்க கூடவே தான் இருப்பேன். கல்யாணம் பண்ணவும் மாட்டேன், அவங்கள விட்டுப் போகவும் மாட்டேன். கடைசி வரை இப்படியே அவங்க கூடவே தான் இருப்பேன்.." என்றாள் தன் குரலை உயர்த்தி. கண்கள் ஏகத்துக்கும் கலங்கி இருந்தன.

"என்னால அவ்வளவு ஈசியா அவங்க விட்டுப் போக முடியாது. போறது என்ன அப்பிடி நினைச்சுக் கூடப் பார்க்க முடியாது மாதேஷ்" என்றாள் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு.

"ஹேய்.. ரிலாக்ஸ் காவ்யா" என்றவன் சுற்றி பார்வையை ஓட விட்டு யாரும் அருகில் இல்லை சற்றே விலகி இருந்தவர்கள் கவனம் கூட இவர்களிடம் இல்லை என்று உறுதிப்படுத்திக் கொண்டு, அங்கே அமர்ந்தவன் அவளையும் அருகே அமரச் செய்தான்.

அவன் வந்து பேசியது அதுவும் திருமணம் வரை அது நீண்டது என பதற்றம் ஒரு பக்கம் எனில் தாயைப் பிரிந்து சென்று விடுவாய் என்று கூறியது ஏகத்துக்கும் அவளை கலங்க வைத்திருக்க தன்னை நிலைப்படுத்திக் கொள்ளவென அவன் கூறிய உடனே அவனை விட்டு சற்றே தள்ளி அமர்ந்து கொண்டாள்.

அமைதியாக நொடிகள் நகர அவனே அமைதியைக் கலைத்து, "கல்யாணம் பண்ணிக்கிட்டு பொறந்த வீட்ட விட்டுப் போறது சாதாரணமா நடக்குறது தானே காவ்யா? அதையே தானே நானும் கேட்டேன்? அதுக்கு ஏன் இப்படி?" என்றான்.

"நீங்க நினைக்கறது போல மத்தவங்களோடது மாதிரி சாதாரணமானது இல்ல எங்க லைஃப் இது ஒரு வேள்வி. நீங்க நினைக்கறது, உங்க கற்பனை அது எல்லாத்தையும் தாண்டினவங்க தான் நானும் என் அம்மாவும் என்றாள் குரல் கரகரக்க.

"புரியல்ல" என்றான் இடவலமாக தலையசைத்து.

"அது அ..வங்க.. அவங்க என்னைப் பெத்தவங்க இல்லை" என்றாள் அவன் முகம் பார்த்து.

"என்ன சொல்ற காவ்யா?"

"ஆமா.. அதான் உண்மை" என்றவள் தொடர்ந்து,

"அப்போ எனக்கு ஏழு வயசு. திடீர்ன்னு ஒரு நாள் எங்க அம்மா ஆக்ஸிடென்ட்ல இறந்துட்டாங்கன்னு சொல்லி என்னை ஸ்கூல்ல இருந்து அழைச்சிட்டுப் போனாங்க. அப்புறம் கொஞ்சம் நாள் கழிச்சு அப்பா என்னை தூர இருந்த ஒரு ஊருக்குக் கூட்டிட்டுப் போய் அங்க ஒரு கோயில்ல என்னை விட்டுட்டுப் போய்ட்டார். என் ஸ்கூல் பேக், புக்ஸ், அப்புறம் கொஞ்சம் ட்ரெஸ் எடுத்துட்டு வந்து இருந்தார் அதையும் என் கிட்ட கொடுத்துட்டு இங்கேயே உட்கார்ந்துக்க யாராவது லேடீஸ் வந்து ஏதாவது கேட்டா இதக் கொடுன்னு ஒரு லெட்டர என் கைல கொடுத்தவர் கிட்ட எங்க போறீங்கப்பான்னு கேட்டேன் நான் வர நைட்டாகும்னு மட்டும் சொல்லிட்டுப் போய்ட்டார்.

கோயிலுக்கு அத்தன பேர் வந்தாங்க யாரும் என் கிட்ட வரவே இல்லை. என்ன பண்றது யார் கிட்ட பேசுறதுன்னு எதுவுமே தெரியாம அதே இடத்துல உட்கார்ந்து இருந்தேன். அப்போ ஈவினிங் டைம்ல தான் இப்போ இருக்குற என்னோட அம்மா அங்க வந்தாங்க. அவங்க வரும் போதே நான் கவனிச்சேன் அழுதுட்டே தான் வந்து அங்க எனக்கு கொஞ்சம் தூரமா உட்கார்ந்தாங்க. ரொம்ப நேரமா அவங்க அழுக விடவே இல்லை. நான் அவங்களையே தான் பார்த்துட்டு இருந்தேன்.

அப்புறம் ஐயர் வந்து அவங்க கிட்ட ஏதோ பேசிட்டு என் கிட்ட வந்து நான் யாருன்னு கேட்கவும் அப்பா வருவாங்கன்னு மட்டும் சொல்லிட்டேன். ஆனா அம்மாவுக்கு என்ன தோனிச்சோ ஐயர் போன உடனே என் கிட்ட வந்து விசாரிக்கவும் நான் என் கைல இருந்த லெட்டர அவங்க கிட்ட கொடுத்துட்டேன்" என்றவளுக்கு அன்றைய நினைவில் முகம் கசங்கி, கலங்கி இருந்தது.

"ஏன் நீ ஐயர் கிட்ட அந்த லெட்டர கொடுக்கல்ல?" என்ற மாதேஷிடம்,

"லேடீஸ் யாரும் கேட்டா தானே கொடுக்கணும்னு சொல்லி இருந்தாங்க?" என்றாள்.

அவள் கூற்றில் ஆமோதிப்பாக தலையசைத்தவன்,
"அப்புறம் என்னாச்சு?" என்றான்.

"லெட்டர படிச்சிட்டு, உன்னத் தேடித் தான் நான் வந்தேன், உன்னக் காணாமத் தான் அழுதுட்டே இருந்தேன். உங்க அப்பா உன்ன அழைச்சிட்டுப் போக சொல்லி இருக்காங்க,
வா நாம போகலாம்னு கூப்பிட்டாங்க. நானும் அவங்க பேச்ச நம்பி கூடவே போனேன்.

மதியம் அப்பா வாங்கிக் கொடுத்த சாப்பாடு தான். நைட் அவங்க ஒரு ஹோட்டல்ல எனக்கு மட்டும் ரெண்டு இட்லி வாங்கிக்கிட்டாங்க. நைட் பஸ்ல ட்ராவல் பண்ணி அடுத்த நாள் காலைல ஒரு ஊருக்குப் போய் சேர்ந்தோம்.

அன்னைல இருந்து என் அம்மாவா எனக்காக ஓட ஆரம்பிச்சாங்க என்னை கூடவே வெச்சிட்டு அங்க அங்க வேலை பார்த்தாங்க ரெண்டு மூனு நாள் தான் ஒரு இடத்துல வேல அடுத்து வேல இல்லைன்னு அனுப்பிடுவாங்க. நிரந்தரமா ஒரு இடம்னு இல்லாம என்னை ஸ்கூல்ல சேர்க்க முடியாது கொஞ்ச நாள் கழிச்சு சேர்த்து விடுறேன்னு அடிக்கடி என்கிட்ட சொல்லிட்டு இருப்பாங்க ஆனா என்கிட்ட இருந்த புக்ஸ்ல அவங்களே பாடம் சொல்லிக் கொடுப்பாங்க. கடைசியில ஒரு கார்ப்பரேஷன் ப்ரைமரி ஸ்கூல்ல க்ளீனிங் வேலைக்குச் சேர்ந்து என்னையும் அங்கேயே படிக்க வெச்சாங்க" என்று பெருமூச்சுவிட்டவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் மாதேஷ். ஆயிரம் கேள்விகள் அவனின் மூளையைக் குடைந்து கொண்டு இருந்தாலும் அவள் பேசி முடிக்கும் வரை வாய் திறவாது இருந்தான்.

நான் ஆறாவது படிக்க வேற ஸ்கூல் சேர்த்து விட்டாங்க. அவங்களையும் என் கூட வர சொல்லி அழுதேன் ஆனா அத மறுத்து அவங்க பழைய இடத்துலயே இருந்தாங்க.

நல்லாப் படிச்சேன் டென்த் எக்ஸாம்ல நல்ல ரிசல்ட் எடுத்தேன் மெரீட்ல இந்த காலேஜ்ல சீட் கிடைக்கவும் தான் இந்த ஊருக்கு வந்தோம். அம்மா இப்போவும் இங்க ஒரு கம்பெனில க்ளீனிங் வேலை தான் பார்த்துட்டு இருக்காங்க.

கொஞ்சம் வளரும் போது தான் நிறைய விஷயங்கள நான் புரிஞ்சிக்கிட்டேன். அவங்க பொய் சொல்லித் தான் என்னைக் கூட்டிட்டு வந்து இருக்காங்க" என்று காவ்யா கூற அதிர்ந்து விழித்து,

"பொய் சொல்லி கூட்டிட்டு வந்தாங்களா?"
என்றான் மாதேஷ்.

"ஆமா.. நான் அடிக்கடி அப்பாவப் பத்தி கேட்டுட்டே இருப்பேன். அவங்க அம்மா இறந்ததுனால ஃபாரின் போய்ட்டதா சொல்லுவாங்க. சில வருஷம் கழிச்சு நான் அப்பா வருவாங்கன்னு நம்பிட்டு இருக்குறத புரிஞ்சிக்கிட்டு அந்த லெட்டர என் கைல கொடுத்து படிக்க சொன்னாங்க" என்றாள்.

"லெட்டர்ல என்ன இருந்தது காவ்யா?" என்றான் உள்ளே போன குரலில்.

"அப்பான்னு நான் நினைச்சவங்க கூட என்னோட சொந்த அப்பா இல்லை தெரியுமா?" என்று விரக்திச் சிரிப்போடு தொடர்ந்தாள்.

"அவங்க கல்யாணம் பண்ணி மூனு வருஷம் குழந்தை இல்லைன்னு எனக்கு மூனு வயசுல தத்து எடுத்தாங்களாம். அவங்க வைஃப் இறந்த பிறகு என்னை வளர்க்க கஷ்டமா இருந்ததாம். அவங்க வீட்ல யாருக்குமே என்னை ஏத்துக்க மனசு இல்லையாம். அதான் என்னை ஏதாவது ஆசிரமத்துல விட சொல்லி இருந்தாங்க அவங்களுக்கு அதை பண்ண முடியாம மனசு கஷ்டமா இருக்குன்னு எழுதி இருந்தாங்க" என்றவளுக்கு கண்ணீர் கன்னம் தாண்டி கழுத்தில் வடிந்து கொண்டு இருந்தது.

உச்சபட்ச அதிர்ச்சியில் மொழி மறந்து அமர்ந்திருந்தான் அவள் மீது தீரா நேசம் கொண்டவன்.

"அதுக்கப்புறம் நான் அப்பாங்குறவர மொத்தமா மறந்துட்டேன். இவங்க.. என் அம்மா எனக்காக பட்ட கஷ்டம் தான் கண் முன்னாடி வரும். நல்லாப் படிக்கணும், நல்ல வேலைல சேர்ந்து அம்மாவ வசதியா வெச்சிப் பார்த்துக்கணும்னு மட்டும் தான் என் மனசுல இருந்தது, இன்னைக்கு வர அது மட்டும் தான் இருக்கு. இதுல காதல், கல்யாணம் எல்லாம் ஒரு பொருட்டாவே நான் நினைக்கல்ல"

"கேட்குறேன்னு தப்பா நினைக்காத. உன் அம்மா உனக்காக கல்யாணம் பண்ணிக்காம இருந்தாங்களா?" என்றான் திக்கித் திணறி.

மறுப்பாகத் தலையசைத்து,
"அவங்களுக்கு கல்யாணம் பண்ணிக்க முடியாததுனால தான் எனக்கு அம்மாவா இருக்காங்க" என்றவளை ஏறிட்டு,
"புரியல்ல" என்றான் மாதேஷ்.

"என் அம்மா கலா ஒரு திருநங்கை" என்று அழுத்தமான ஒரு இடியை அமைதியாக இறக்கி வைத்தாள் காவ்யா.

"என்னடி சொல்ற?" என்றிருந்தான் மாதேஷ் தன்னையே அறியாது தன்னவள் எனும் உரிமை வெளிப்பட்டிருந்தது அந்த 'டி' யில்.

அது எதையும் உணர்ந்து கொள்ளும் நிலையில் இருக்கவில்லை காவ்யா.

"ஆமா.. அம்மாவோட மாற்றம் தெரிஞ்சதும் அவங்கள வீட்ட விட்டு துரத்திட்டாங்களாம். அடைக்கலம் தேடி அவங்க ஊர்ல எல்லாம் அலைஞ்சுட்டு முடியாத நிலையில தான் நாங்க மீட் பண்ணின ஊருக்கு வந்து இருக்காங்க.

குப்பை வண்டில தான் வேலை பார்த்தாங்களாம் அங்க இருந்த ஒருத்தன் இவங்க கிட்ட மிஸ் பிஹேவ் பண்ண ட்ரை பண்ணி இருக்கான் அத இவங்க மேலிடத்துல சொல்லவும் இவங்க தான் தப்புன்னு விரட்டி விட்டுட்டாங்களாம். எங்க போறதுன்னு தெரியாம தான் அழுதுட்டே கோயிலுக்கு வந்து இருக்காங்க. என்னோட லெட்டரப் படிச்சிட்டு அந்த நிமிஷம் என்னை அவங்க பொண்ணாவே உணர்ந்து இருக்காங்க. என்னை தனியா விடாம எப்பாடு பட்டாவது வளர்த்து ஆளாக்கிடணும். அவங்க வாழ்க்கைக்கும் என் மூலமா ஒரு அர்த்தம் கொடுத்துக்கணும்னு நினைச்சாங்களாம். அவங்க திருநங்கை எங்குறதுனால தான் அடிக்கடி வேலைய விட்டு அலைஞ்சு கஷ்டப்பட்டாங்கன்னு அப்புறம் தான் எனக்குப் புரிஞ்சது" என்று அவள் நிறுத்த

"க்ரேட்.." என்றிருந்தான் மாதேஷ்.

"என்னை தத்தெடுத்தவங்க வீட்டுல யாருக்குமே என் மேல இல்லாத பாசம், என் அம்மாவுக்கு இருந்திருக்கு. அதோட அவங்களோட தாய்மை உணர்வு தான் என்னை இப்படி உங்க முன்னாடி நிற்க வெச்சிருக்கு. அவங்க மட்டும் அன்னைக்கு இல்லைன்னா நான் என்ன ஆகி இருப்பேன்? கோயிலுக்கு வர்றவங்க எல்லாருமே நல்லவங்க இல்லைல? யாராவது தப்பானவங்க கைல நான் கிடைச்சிருந்தா.." என்றவளுக்கு நெஞ்சம் அதிர மேனி நடுங்கி நின்றது.

அவள் நடுக்கம் உணர்ந்து,
"ரிலாக்ஸ் காவ்யா.. எல்லாம் நல்லதாகவே நடந்திருக்க ஏன் இப்படி நெகடிவ் தாட்ஸ் உனக்கு?" என்றவனை ஏறிட்டு,

"நெகடிவ் தாட்ஸ் இல்லை. நிதர்சனத்தை தான் சொல்றேன். இன்னைக்கு வர எத்தனை சம்பவங்கள் கேள்விப்படுறோம், அது எதுவும் நடக்காம நான் தப்பிச்சிட்டேன்னு தான் தோனும் எனக்கு" என்றாள்.

"உண்மை தான்.." என்றவன் சற்று நேர அமைதிக்குப் பின்னர்,

"உன் அம்மாவுக்காக நீ இப்படியே இருக்குறத அவங்க விரும்புவாங்களா காவ்யா? நீயும் கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழணும்னு தானே நினைப்பாங்க?"

"ஆனா என்னோட உண்மை நிலையையிம் என் அம்மாவையும் ஏத்துக்குற அளவு பெருந்தன்மையோட யாரு இருக்காங்க இங்க? என்னை ஏத்துக்குறவங்க என் அம்மாவ ஒதுக்கிட்டா நான் என்ன பண்ணுவேன்? கட்டின புருஷனா கண்ணுக்குள்ள வெச்சி என்னை வளர்த்த அம்மாவான்னு திணறிட்டு நிற்க என்னால முடியாது. அதனால தான் என் அம்மாவுக்குப் பொண்ணா கடைசி வரை இருக்குதுன்னு ஒத்த முடிவா எடுத்துட்டேன்" என்றாள் படபடவென்று.

"ஆனா உனக்குன்னு ஒரு லைஃப்.." என்று ஏதோ ஆரம்பித்தவனை கை நீட்டித் தடுத்து

"எனக்கு என் அம்மா அவங்களுக்கு நான் இதுதான் எங்களோட லைஃப். இதுல மூனாவதா யாருக்கும் இடம் இல்லை" என்றவள் எழுந்து செல்ல

தன்னை விட்டு தூரம் போகும் அவள் பிம்பத்தையே விழி எடுக்காது பார்த்துக் கொண்டிருந்தான் அவளில் நேசம் கொண்டு நெஞ்சில் சுமந்தவன்.

அடுத்த இரண்டரை வருடங்கள் ஓடி மறைந்து விட்டன. இன்று அந்த வீடே கலகலப்பாக இருந்தது. காவ்யாவோ சோர்வை மீறிய சந்தோஷத்தில் திளைத்து இருக்க அவளில் ஒரு கண்ணை வைத்தவாறே மற்ற வேலைகளையும் கவனித்துக் கொண்டிருந்தார் அவளது தாயுமானவர்.

கல்லூரிப் படிப்பை முடித்து நகரில் பிரபலமான ஒரு நிறுவனத்தில் நல்ல வேலையில் சேர்ந்து விட்டது வரை அவள் நினைத்தபடியே நடந்தது,
வேலையில் சேர்ந்த அடுத்த சில மாதங்களில்
மாதேஷ் வந்து அவள் முன் நிற்கும் வரை. அதுவும் அவளது வீட்டிற்கே தன் வீட்டினரை அழைத்துக் கொண்டு வந்தவனை மலங்க மலங்க பார்த்து வைக்க மட்டுமே முடிந்தது காவ்யாவால்.

அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகள் முடிய அடுத்த மாதமே திருமணம் என்று முடிவு செய்து விட்டே வந்தவர்கள் விடைபெற மூச்சடைக்கும் நிலை தான் அவளது.

"நாங்க எல்லாம் பிற்போக்குவாதிகள் இல்லைம்மா. உன்ன எங்க பையன் விரும்புறான். எங்க பையன் மனசுக்குப் பிடிச்சவள வளர்த்து ஆளாக்கி தலை நிமிர்ந்து வாழ வெச்சிருக்கும் இவங்கள நாங்க எப்படி ஒதுக்கி வைக்க முடியும்? நாம வெளிய யாருக்கும் சொல்லாம இருந்தா உங்களை பத்தின உண்மைகள் எதுவும் யாருக்கும் தெரியாது தானே. அப்போ சொல்லாமலே இருப்போமே" என்று கூறிய மாதேஷின் பெற்றோரை அவ்வளவு பிடித்தது தான் அவளுக்கு, என்றாலும் அதையும் மீறி தாயைப் பற்றிய கலக்கம் ஒன்று இருந்தது என்னவோ உண்மை. ஆனால் அதை எதையும் பொருட்படுத்தாமல் வந்த வேலையை இனிதே நிறைவேற்றிக் கொண்டிருந்தார்கள் அவர்கள்.

தன்னவள் கலக்கம் உணர்ந்தும் கண்டு கொள்ளாது இருந்து கொண்டான் மாதேஷ்.

கலா இரவுணவை எடுத்துக் கொண்டு அவளருகே வந்து அமர்ந்து கொண்டவர் "உன்னை சின்ன வயசுல இருந்தே வளர்க்க முடியாம போய்டுச்சு, நீ கல்யாணம் பண்ணி உனக்குப் பிறக்குற பிள்ளைகள வளர்த்து என் ஆசைய நிறைவேத்திக்க நினைச்சா நீ அத கெடுத்துடுவ போல காவ்யா" என்றவரை நிமிர்ந்து பார்த்தவளின் தலை கோதி தன் கேலியை கைவிட்டு, "நீ தான் எனக்கு அம்மாங்குற அங்கீகாரம் கொடுத்தவ, அதே போல நீ தான் எனக்கே எனக்கான ஒரு குடும்பத்தையும் உருவாக்கித் தரணும். நீ கல்யாணம் பண்ணி புருஷன் குழந்தைன்னு நிறைவா வாழ்றதப் பார்க்க அவ்ளோ ஆசையா இருக்குடா இந்த அம்மாவுக்கு" என்றவர் தோசையை அவள் வாயில் வைக்க வாங்கிக் கொண்டவள் யோசனையானாள்.

குறித்த திகதியன்று திருமணம் முடிந்த கையோடு தான் வாங்கியிருந்த வீட்டிற்கு காவ்யாவையும் கலாவையும் அழைத்து வந்து விட்டான் மாதேஷ்.

அவருக்காகவே அவன் தனி வீடு என்று கூறியதும் சம்மதம் தெரிவித்து விட்டனர் அவன் பெற்றார்.

இன்று காவ்யாவின் வளைகாப்புக்காக குடும்பமே கூடி இருந்தது.
தன்னவனை நினைத்து பூரிப்பும், தன் தாயை மதித்து நடக்கும் அவன் குடும்பத்தினரை நினைத்து பிரம்மிப்பும் என்றும் போல் அன்றும் வந்தது அவள் மனதில்.

மாதேஷ் மற்றும் காவ்யாவின் நிருவனத்தில் வேலை செய்பவர்கள், நண்பர்கள், உறவினர்கள்
என வந்தவர்கள் கிளம்பிச் சென்றிருக்க மாதேஷின் பெற்றோரும் சகோதரர்களுமே அங்கே இருக்க கலாவை ஓர் இடத்தில் நிறுத்தி வைக்க முடியாமல் இருந்தது அவர்களால். ஓடியாடி அத்தனை வேலைகளையும் செய்து கொண்டிருந்தவரின் உற்சாகமே அவரின் மகிழ்ச்சியைப் பறைசாற்றியது.

அடுத்து வந்த மூன்றாவது மாதம் காவ்யா ஒரு பெண் குழந்தையை பிரசவித்திருக்க அவர்களின் மகிழ்ச்சியும் இரட்டிப்பானது.

"உன்னைப் போலவே தான் பாப்பா இருக்கு பாறேன்" என்று குழந்தையை முதல் முறையாக கையில் ஏந்தியவர் கண்களில் கண்ணீர் மல்க தழுதழுத்த குரலில் கூறிய கலா நெஞ்சோடு அணைத்துக் கொண்டார் அந்தப் பிஞ்சுக் குழந்தையை.

சுபம்.

(தாய்மை வரம்பெறாதவர்களுக்கும், பெற முடியாத திருநங்கைகளுக்கும் இந்தக் கதை சமர்ப்பணம்)

அனைவருக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.

____________________
முதல் முறையாக திருநங்கை ஒருவரை என் கதையில் இணைத்து எழுதியுள்ளேன். படித்து விட்டு உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.
 
Last edited:

Eswaran

Member
அருமை அருமை அருமை அக்கா ????கண்ணே கலங்கிடுச்சு ???அழகா எடுத்து சொல்லிட்டீங்க... திருநங்கைகளுக்கு இருக்கும் தாய்மை உணர்வை ❤❤❤அருமையான சிறுகதை அக்கா ???
 
அழகான கதைகரு டா.... நிறைவாக இருந்தது.... இயல்பா இது போல சமூகம் மாறனும்.... வாழ்த்துக்கள் டா
 
Fa.Shafana

Moderator

அருமை அருமை அருமை அக்கா ????கண்ணே கலங்கிடுச்சு ???அழகா எடுத்து சொல்லிட்டீங்க... திருநங்கைகளுக்கு இருக்கும் தாய்மை உணர்வை ❤❤❤அருமையான சிறுகதை அக்கா ???
ரொம்ப நன்றிடா ❤️❤️
 
Sema story ka ??
 
Top