எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நித்தமும் நின் ஸ்வபனங்கள் - கதை திரி

Status
Not open for further replies.

admin

Administrator
Staff member
வணக்கம்..

நித்தமும் நின் ஸ்வப்னங்கள்!

ஹீரோ : ருத்ரன் நாயூடு ஐபிஸ் (ஹீரோ தெலுங்கு)
ஹீரோயின் : ஆண்டாள் பாண்டியன் (மதுரை பொண்ணு)


கதை களம் அழுத்தமான கதை களம் காதலுக்கு கர்மாவுக்கும் நடுவில் ஒரு வேள்வி. நிறைய உண்மை சம்பவங்கள் உண்டு அதோட என் கற்பனை சேர்த்து என்னோட பாணியில்..

Ips ஸ்டோரி பாணில ஒன்லி கிரைம்ஸ், திரில்லர் இருக்கும்னு நினைக்க வேண்டாம் நண்பர்களே கதைக்களம் வித்தியாசம். இது ஒரு உணர்வு போராட்டம்.

என் கதையில் வர்ணனை உண்டு, காதல் காட்சிகள்(ரொமான்ஸ்) உண்டு. மதுரை பாஷை எனக்கு பரிச்சயம் இல்லை அதனால் அது ஒரு குறையாக இருக்கும் அண்ட் இது நான் பதிப்பகம் ஆரம்பிச்ச டைம்ல இருந்து பெல்லோவ் பண்ணுற ஒன்னு. வரும் விமர்சனத்தில் ஒன்னு புத்தகம் வெளியாகும் போது வாசகர் பெயரோடு புத்தகத்தில் பதிவிட்டு ஒரு புதினம் பரிசாக தரப்படும். முக்கிய விஷயம் அதுபோல தளத்தில் தொடர்ந்து அந்த கதைக்கு விமர்சனம் வழங்கும் 2 பேருக்கு அந்த புத்தகம் பரிசாக அனுப்பப்படும்..

அன்புடன்
ப்ரஷா.
 
Last edited:

admin

Administrator
Staff member
நித்தமும் நின் ஸ்வப்னங்கள்


அத்தியாயம்-01

1990ம் ஆண்டுகளில்

இரவின் நிறம், கார்காலத்தின் மொத்த நிறம், கூவும் குயிலின் நிறம்,அது கருமை நிறம்.. நீள் வானம் அந்த இருண்ட நிறத்தை அள்ளி மேனி எங்கும் பூசிக்கொள்ள, ஏகாந்த பொழுது மயான அமைதி, யட்சனிகள் நடமாடும் நடுநிசி நேரம் ,சுற்றிவர இருள் தனித்திருப்பவர்கள் நெஞ்சம் ஒரே ஒரு கணமேனும் திக்கென துடித்து நிற்கும்..


சுற்றிலும் மயான மரண ஓசை, பார்க்கும் திசை எங்கும் விடலைப் பெண்ணின் கண் மை போல அடர் இருள். இடை அளவு வளர்ந்த புற்கள், நடைபாதைக்கென இடை இடையே இரு பாதங்களின் அளவு இடைவெளி. இருபது அடி தூரத்தில் ஒரு மெல்லிய வெளிச்சம். அருகில் நெருங்கினால் மட்டுமே அறியக்கூடிய சலசலப்பு, அது ஒரு நெற்களஞ்சியம். பார்வைக்கு மட்டும் தான் ஆனால் நிஜத்தில் மீண்டுமொரு வேள்வியின் மகளின் துகில் உறிக்கப்படும் நவீன அஸ்தினாபுரம்..


புஜபலம் நிறைந்த ஐந்து மாவீரர்களின் கொண்டாளின் மானம் பறித்த கொடூரத்தின் நவீன கலியுகம்.

அவள் வேள்வியின் மகள்.. இவளோ காலனின் மாதா அதை இவர்கள் அறியவில்லையே.


“ஆஆ! டேய் நீங்க மானபங்கம் படுத்த நினைப்பது ஒரு பெண்ணை மட்டும் அல்லடா,ஒரு தாயை. என்னை விட்டுடுங்க. அப்படி நான் செய்த பிழைதான் என்ன? பிறரின் நலன் காக்க எண்ணியது பிழையா? உங்களைப் போன்ற கொடூடர்களின் அரக்கத்தனத்தை அழிக்க நினைத்தது தான் பிழையா? டேய் என்னை விடுடா..


அடேய் பாதகா! உன் சகோதரனோட மனைவியிடம் தான் நீ முறை தவறி நடக்க நிலைப்பது. பெண் பாவம் பொல்லாததுடா. கிட்டே நெருங்காத! பின்னாலே போங்கடா..”


கயவர்கள் கையில் சிக்கிய பெண்ணரசியோ தன் மானத்தை காத்துக்கொள்ள திமிறிக்கொண்டிருந்தாள். கொண்டவன் மட்டும் காண உரிமை கொண்ட அவள் பெண்ணுடலை வஞ்சகன் காண அனுமதிக்காதவளாய், அந்த நரிகளின் கூட்டத்துக்குள் அங்குமிங்கும் துடித்தோடிக் கொண்டிருந்தாள்.. ஆனால் பரிதாபம் இங்கோ அன்றொரு நாள் தன் சகியின் மானம் காத்த பார்த்தசாரதி இல்லாது போனானே..


“ஹா.. ஹா.. ஹா..” அகோரிகளின் கொடூர நகையைத் தொடர்ந்து..


“இதோ சொன்னீயே இது, இதுதான் காரணம். நீ மணந்த என் வம்சத்தின் வாரிசு! என்ன ஜாதி? நீ என்ன ஜாதி? பஞ்சம் பிழைக்க வந்த பரதேசிக்கு பட்டுக் குஞ்சமா?”


“ஐய்யோ! டேய் வேணாம் விடுங்கடா.. ஆ! ஆ.. அம்மா.. முடியவில்லை விடுங்கடா என்னை.. நான் வயிற்று பிள்ளைக்காரிடா. உன் இனத்து வாரிசை தானே என் வயிற்றில் நான் சுமப்பது இதை நினைத்துக்கூட உங்களுக்கு மனம் இறங்கவில்லையா? தயவுசெய்து என்னை விட்டுவிடுங்கள்.”


“ம்.. சாவுடி என்ன சொன்ன அரசாங்க அதிகாரியா.. ஹா.. ஹா.. ஹா.. ஹா.. உன் முந்தானை நுனியை கூட தொட முடியாதா. இப்போ பார்த்தீயா உன் மானம் எங்கள் கையில்.. பஞ்சம் பிழைக்க வந்தவளை வாழ விட்டதே தவறு இதில் எங்களை நீ எதிர்ப்பதா? இது எங்கள் கோட்டைடி.. அழிப்பதும் ஆக்குவதும் நாங்களே. ஆம்பளடி நாங்கள் ஆண் பிள்ளைகள். ஆளப் பிறந்தவர்கள் நாங்கள். இன்றோடு உன் ஆட்டம் முடியப் போகுது.”


என்றான் அந்த கொடூரன் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு. அவன் வார்த்தையில் தான் எத்தனை அகங்காரம். ஆண் எனும் சொல்லில் தான் எத்தனை ஆணவம். ஆனால் அந்த அகம்பாவிகள் அறிவார்களா ஆண் திமிர் கொண்ட துச்சாதனன் தொடை பிளக்க மண்ணில் வீழ்ந்ததும், ஆணவம் கொண்டு சிரம் தாழ்த்தா இலங்கேஸ்வரன் சிரம் சிதைய மாண்டதும் இந்த ஆண் எனும் அகம்பாவத்தில் தான் என்பதை அவர்கள் அறியவில்லை. அது அவர்களின் விதி. பிரம்பன் வடித்த நியதி.“நோ.. ஐயோ.. அம்மா.. ஆ.. ஆ..”


என்ற வானை எட்டிய அலறலை அங்கு கேட்பாறோ அல்லது கேட்டு காப்பாற்றுவாறோ யாரும் இல்லை.. அந்த மயான இருளில் இரண்டு காமுகர்களால் ஒரு காரிகையின் மானம் கதறக் கதறப் பறிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் அறியவில்லையே பெண் என்பவள் லட்சுமி தேவியின் அவதாரம் மட்டுமல்ல மகாகாளியின் அவதாரமும் கூட..


சதை தின்னும் அசுரர்கள் சூழ்ந்து நின்ற அசோகவனமது. அங்கே சிதைந்து கொண்டிருந்தாள் ஒரு சீதை. இந்தச் சீதையை மீட்க அஞ்சனை புத்திரனும் அங்கு இல்லையே.


“டேய் தம்பி இவ ரொம்ப பேசினாளில்லையா? ஹ்ம்.. அரசாங்க அதிகாரியாயிற்றே.. சட்டம் பேசுனாங்க. பெரிய நீதி தேவதையாயிற்றே அம்மணி.. ஆமாம் அன்றைக்கு இவள் என்ன சொன்னா தம்பி உன்னைப் பார்த்து மறந்துவிட்டேன் ?”


என போலியாக யோசித்த தமையனைப் பார்த்து.


“அதுவா அண்ணா, நாம அராஜகம் பண்றமாம், மக்கள் தந்த மந்திரி பதவியை வைத்துக்கொண்டு தனி அரசாங்கம் நடத்துகிறோமாம், ஜாதி வெறியில் கொலை பண்ணுகிறோமாம், கூடவே கௌரவ கொலை, கள்ளிப்பால் ஊத்தி பிறந்த குழந்தைகளையும் கொல்லுறோமாம் அதுக்கெல்லாம் அம்மணி கையில் நமக்கு எதிராக ஆதாரங்கள் உண்டாம். அதை வைத்து எங்களுக்கு தண்டனை வாங்கித் தரப் போகிறாங்களாம்..


ஹா.. ஹா.. யாரடி ஜெயிலில் போடுவ எங்களையா? ஹம்.. எங்களையல்ல எங்களில் ஒரு துரும்பைக் கூட உன்னால் அசைக்க முடியாது.”என்றான் அந்த காமுகன் நக்கல் தொனிக்கும் குரலில்.நாலு மாத சிசுவை சுமந்த அந்த வயிற்றுப் பிள்ளைக்காரியின் வயிற்று சிசு கலைய, அவள் ஆடைகள் கலைந்து, அங்கங்கள் அந்த காமுகர்களினால் சீரழிக்கப்பட்டு, கால்வழியாக அவள் சுமந்த உயிர் மொட்டு உதிரமாக ஓட..


“ம்.. ஹக்..”என்ற முனகலோடு அழிந்து, சிதைந்து,துடித்து நின்றது அந்த அஜந்தா ஓவியம்.


“ஹா.. ஹா.. என்ன தம்பி இவள் மேல் கொலைவெறியில் இருக்கிறாய் போல?”


“பின்ன என்ன அண்ணா லேசா இவள் மேல கை பட்டதற்கு என்னை எத்தனை திமிராக அறைந்தால் அன்று, இன்று என்ன செய்ய முடிந்தது இவளாள்? இதோ எங்கள் காலடியில் செல்லாக்காசாகி கிடக்கிறாள் பாருங்க”


என்ற அந்த இரண்டு வக்கிர காமுகர்களின் ஒருவன் அவள் தாடையை அழுத்தப் பிடித்து, விரல் நகத்தால் அவள் கன்னத்தில் அழுத்தி அவள் முகத்தை நிமிர்த்தியவன் அவள் முகத்திலே உமிழ் நீரை உமிழ்ந்தான்.


“ஏய் நாங்கள் ஆண்பிள்ளைகள்டி, ஜாதி வெறி தான், உயர் குலத்தில் பிறந்த வெறி தான்டி இந்த நாடி நரம்பெல்லாம் ஊறிப்போய் உள்ளது. இப்போ என்ன செய்ய முடிந்தது உன்னால். உன் கீழ் ஜாதி என்றும் எங்கள் காலுக்குக் கீழ் தானே வீழ்ந்து கிடக்கிறது..”


என்றவன் அவள் வயிற்றில் எட்டி உதைத்தான். வெறிபிடித்த அந்த மனிதப் பிண்டத்துக்கு சிறிதும் மனம் உறுத்தவில்லை. தானும் நிறை மாத கர்ப்பிணி பெண்ணின் கணவன் என்பதை அந்த கணம் மறந்தான்.


இங்கு சிதைந்து கொண்டிருப்பது தங்கள் குடும்ப வாரிசை மணந்த பெண் தெய்வம் என்பதையும் மறந்தான். ஆனால் அவனைப் படைத்த பிரம்மன் அவன் இழைக்கும் அநீதியின் கணக்கை காலனின் கைகளில் எழுத மறக்கவில்லை.


“ஆ.. அம்மா..” என்ற அலறலோடு வயிற்றை இரு கைகளால் இறுக்கிப் பிடித்தவள், இரு முழங்கால்களையும் வலி மிகுதியில் வயிற்றோடு இறுக்கியவாறு அந்த அசுரர்களை நோக்கி முகத்தை நிமிர்த்தி,


“ச்சீ.. தூ.. நாயே! ஜாதியா? உயர்குலமா?"


என தலையை மறுப்பாக இரு புறமும் அசைத்தவள்..


"ம்.. தாயாக பார்க்கவேண்டிய ஒருத்தியின் மானத்தை மஞ்சத்தில் பறிப்பது தான் உன் உயர்குலமா? உங்களைப் போன்ற பேய்களுக்கு உங்கள் தாய் கொடுத்த தாய்ப்பாலையும் விஷமா மாற்றிடீங்க. அதுவும் பிற உயிரைகளை ஈவு இரக்கமின்றி கொல்லும் கொடிய விஷமாக..


கருவை சுமப்பவளை கர்ப்பகிரகத்தில் இருக்கும் கடவுளாக பார்க்க நினைப்பவன் தான் உயர்ஜாதி. அதுதான் மனித ஜாதி. நீங்கள் மிருக ஜாதியில் இணைய கூட தகுதியற்றவங்கள். ஜாதிகள் இல்லையடி பாப்பானு கோஷமிட்ட ஒரு பாரதி இல்லைடா, ஆயிரம் பாரதிகள் வந்தாலும் உன்னை மாதிரி விஷக்கிருமிகளை அழிக்க முடியாது”


என்ற அந்த கற்புக்கரசி அத்தனை வலியிலும், வேதனையிலும் தான் பாரதி கண்ட புதுமைப்பெண் என நிரூபித்தாள்.


அப்போது அவள் கார் கூந்தலை பிடித்து முகத்தை நிமிர்த்திய ஒரு கொடூரன்..


“என்ன பேச்சுடீ பேசுகிறாய்? இன்னும் உன் திமிர் அடங்கல்லையா? உன்னைப் போல பெண்கள் எல்லாம் என்றைக்கும் எங்க காலுக்கு கீழ தான்டி இருக்கனும். நாங்க அடக்கும் வம்சம் நீங்க எங்களில் அடங்கிப்போகும் வம்சம்..”


என்றவன் தன் தமையனுக்கு கண்ஜாடை காட்டிய மறுநொடி அவள் தலையை வேகம் கொண்ட மட்டும் அங்கே மூளையில் இருந்த இரும்பு மேசையில் மோதினான்..“ஆ.. ஆ.. அம்மா.. ஹக்..”


என்ற அலறலோடு பின் தலை வெடித்து குருதி பெருக, நெற்றி ,மூக்கு பிளந்து ரத்தம் கசிய, அந்த அகோர வலியிலும் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு மத்தியில், காலனின் பாசக்கயிறு தன் கழுத்தை இறுக்கி விட்டதை உணர்ந்த அந்த மாதரசி முகத்தில்..


அந்த வலியையும் மீறி ஒரு நிமிர்வு, ஒரு பிரகாசம், முகத்தில் திடீரென்று தோன்றிய ஒரு தேஜஸ்.. அந்நொடி அந்தப் பெண்ணரசியின் முகமோ வாக்கின் மைந்தனின்(பீஷ்மர்) வம்சத்து வாரிசுகள் நிறைந்த அஸ்தினாபுர சபையில் தன் மானத்தை வார்த்தையாக மாற்றி சாபமிட்ட நொடி பாஞ்சாலியின் முகத்தில் தெரிந்த வெளிச்சம், அதே உயிர்ப்பு பிரதிபலிக்க.. உயிர் பிரியும் வலியில் கண்கள் இருள, நா பிறழ வெறி கொண்ட பெண் வேங்கையாக சிலிர்த்து நின்ற அந்த பத்தினி பெண்ணின் முகத்திலும், கண்களிலும் சிறிதும் குறையாது பிரதிபலித்த அக்கினியோடு தன் கண் முன்னே நின்ற ஆடவர்களை நோக்கி..


“ஹக்.. ஜாதி வெறி..யும் ,பணம் ப...கட்டும், ஆள்பலமு...ம் ,பதவி அந்தஸ்தும் தானே உங்களை எல்லாம் ஆட வைக்கிறது. ஒ.. ஒருநாள், அந்த ஒருநாள் வரும்டா.. நீ சொன்ன உன் வம்சம் அழிய. அ.. அம்மா..”


ஆழமாக மூச்சை இருமுறை இழுத்து விட்டவள்.


“எது எல்லா..ம் உ.. உங்க குலத்தின் பெருமை என்றா..யோ. அதே உங்க குலத்தி..ன் பெருமை பக...டையாக உங்க முன்னே உருட்டப்ப..டும்.. எ..என்னை ஒரு பெண்ணாக, தாயாக என்னாது சிதைத்த உங்கள் வ..ம்சத்தின் வேரறுக்க வித்திடப் போவதும் பெண் தான்டா..”“டேய் தம்பி இன்னமும் இவள் வாயும், திமிரும் அடங்கல்லை பாரேன். அது சரி அம்மா சட்டம் படித்த பாரதி கண்ட புதுமைப்பெண் இல்லையா அதுதான் இந்த நிலையிலும் தில்லாக பேசுகிறாங்க.


பெரிய பத்தினி தெய்வம்னு நினைப்பு.. இத்தனை நடந்தும், இவள் மானத்தை அழித்தும், இந்த நிலையில் எங்கள் முன் இருந்தும் இவள் திமிர் அடங்க வில்லையே பாரேன்..”


என்றவன் அவளை நான்கு உதைகள் காலால் ஓங்கி உதைத்தான். தன் சிசுவை சுமந்த மணி வயிற்றை வலியால் அழுத்தி பிடித்துவள். “அம்மா..” என்று கதறலோடு..“டேய்! வெறி பிடித்த நாய்களா நான் பத்தினி தான்டா. சிதைந்தது என் உடல் தானே ஒழிய எ..என் ஆன்மா இல்ல.


நா.. நான் பத்தினி என்பது உண்மைனா வருவாண்டா உன் குலத்தை நாசம் செய்ய, உன் வம்சத்தை வேரறுக்க..


எந்த ஆண் எனும் மமதையில் ஆடுகிறீர்களோ.. அந்த ஆண் எனும் ஆணவத்தை அழிக்க, உங்கள் ஆண் இனத்தின் வித்தே உங்களை களையெடுக்க வருவாண்டா. உன்னைப் போல மாற்றான் மனைவியை பெண்டாள நினைக்கும் ராவண இனத்தை அழிக்க ஒரு ராமன் வருவான்டா..


இந்த ஏகாந்த இருளின் கருமையில் என் கற்பை அழித்த உங்களை அக்னியின் வெளிச்சத்தில் இறையாக்கி, உன்னைப்போன்ற நரிகளை வேட்டையாட பிடரி முடி சிலிர்க்க ஆக்ரோஷமாக கர்ஜிக்கும் சிங்கத்தை போல ஒரு உண்மையான ஆண்மகன் வருவான்டா.. அந்த நொடி மரணத்தை நேரில் காண்பிங்க.


அவன் உங்களைப்போல் அதர்மிகளுக்கு நரகத்தை காட்டும், ஒரு பெண் தீயின் உயிர் பால் குடித்து வளர்ந்த ரத்தமாக மாறி உங்களை அழிப்பான்டா.. இதோ குருதியாக ஓடும் சிதைந்த என் சிசுவின் ரத்தத்தின் மீது நான் தரும் சாபம்!”


என்று வெறி கொண்ட மட்டும் நயன நேத்திரங்கள் சிவக்க சாபமிட்ட அந்த கண்ணகியின் மறு விம்பம்.. மரணத்தை தழுவும் முன் ஒரு நொடி ,காதை அடைக்கும் மரண ஓலத்திற்கு நடுவே, ஒரே ஒரு இடத்தில் அந்த மங்கையின் பார்வை குத்தும் கூர்முனை வாளின் கூர்மையோடு அழுத்தமாக, ஆவேசமாக, ஆழமாக பதிந்தது. பார்வையை பதித்தவளோ தான் நோக்கியதை கண்களின் வழியே இதயம், மூளை, ஆன்மா என முழுதாக நிரப்பியவள் உடல் கூட்டிலிருந்து உயிர் மறுநொடி பிரிந்தது..


அந்தக் கூர் விழியில் இருந்தது என்ன? வலியா?, பாவமா?, வாஞ்சையா?, வஞ்சகமா? இல்லை ஆசையா? அந்தப் பார்வையின் பொருளை அம்மங்கை மட்டுமே அறிந்தவள். இமை மூடும் இம்மி இடைவெளிலும் அந்த இரு விழிகளில் ஒரு ஸ்வப்னம்..


“டேய் தம்பிகளா.. ஹா.. ஹா.. ஹா.. உயர் அதிகாரி செத்துட்டாங்கடா. பெரிய பதவியில் இருந்தவங்க இல்லையா ராஜ மரியாதையோடு அனுப்பி வையுங்கள்.”


“ஹா.. ஹா.. ஹா.. அப்படியே செய்திடுவோம் அண்ணா.”


என்றவன் தன் சகாக்களுடன் சேர்ந்து அந்த நெற்களஞ்சியத்துக்கு தீ மூட்டினான். அந்த தீக்குள் எரிந்தது ஓர் நல் மங்கையின் சிதை மட்டுமல்ல கூடவே ஒரு நீதிதேவதையின் நேர்மையின் பக்கங்களும் கதற கதற தீ மூட்டப்பட்டது.


பெண் என்பவள் அக்கினிப் பிழம்பாவாள்.


சீதை எரிந்து பவித்திரம் தந்த அக்கினி!

வேள்வியின் மகள் உதிர்த்த வானுயர்ந்த அக்கினி!

கண்ணகியின் கற்பு காத்த ஆவேச அக்கினி!

மண்டோதரி உடன்கட்டை ஏறிய அர்ப்பணிப்பின் அக்கினி!


சுட்டெரிக்கும் தீயில் வெந்து சாக நான் வெறும் சருகல்ல சரித்திரம்!

மீண்டும் வருவேன்..

மீண்டு வருவேன்..
நின் ஸ்வப்பனங்கள்.
 
Last edited:

admin

Administrator
Staff member

admin

Administrator
Staff member
அத்தியாயம்-2


1999ம் ஆண்டு


மீண்டும் ஒரு கார்காலம் இரவு. மேகக் காதலன் மோகம் கொண்டு நிலாப் பெண்ணை ஒழித்து கொள்ள.அது தூவானமா அல்ல துயிலும் மன்மதனின் பள்ளியறையா என இதம் தரும் இரவு. புடைத்த கர்ப்பிணி பெண்ணின் மேடிட்ட வயிற்றை போல் மலை முகடுகள்.அவளோ மலைகளின் அரசி. அந்த அரசின் பிள்ளைகளான ரோடோடென்ரான் ,கருவாலி போன்ற மரங்கள் சூழ உள்ள வானந்தர மலைத்தொடர்.


அங்கங்கே இள இலைகளின் பச்சை நிறம். கொட்டும் பனியில் இச்சை ஊட்டும் அந்த பச்சை நிறத்தை மறைத்தவாறு தும்பை நிறத்தில் அதன் மேல் பனி படிவுகள். என்னவொரு ரம்மியம். படைத்தவன் ரசிகன் அல்ல கலாரசிகன்..


கூடவே மலர்களின் மணமும், இயற்கையின் பச்சை வாசனையும் கலந்த காற்று. மூச்சை ஒரு முறை ஆழ்ந்து இழுத்து சுவாசித்தால் நிச்சயம் மூர்ச்சையாக தோன்றும். அது காளி தேவியின் அவதாரம் சாம்மலா தேவி அன்னையின் பெயரை மருவி தோன்றிய சிம்லா நகரம்.


அந்நகரம் சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் விசித்திரம் அல்ல அங்கு இன்னுமொர் வித்திரமும் உண்டு. அது குல்கர் பிரதோசத்தில் உள்ள காண்டா சிறைச்சாலை.


உள்ளே இருப்போரை சிறைக்கைதிகளாய் பார்க்காது சிப்பியின் கையிலிருக்கும் செதுக்கும் கல்லாய் பாவிக்கும் இடம். பனைமர உயரத்தில் மதில் சுவரால் அரண் அமைத்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறைகளை கொண்ட நவீன கொள்ளன் பட்டறை.


இது சிறுவர்களுக்கான பிரத்தியோக சிறைச்சாலை. இங்கு கைதிகளின் திறமைகளை பொருத்து கைவினைப் பொருட்கள் முதல், ஆடை தயாரிப்பு வரை விசேட பயிற்சிகள் வழங்கி, அங்கு உற்பத்தி செய்யும் பொருட்களை அந்நகருக்கு வரும் சுற்றுலா விருந்தினர்க்கு விற்பனை செய்கின்றனர். இதில் அரசாங்கம் பெரும் பங்களிப்பு வகிக்கின்றது. ஆனால் விதுனனின் மந்திரி அவையில் சகுனிக்கும் இடம் உண்டே இங்கு நடப்பதும் அதுவே.


அரைகுறை இருளில் ஒரு உருவம். மேலாடையின்றி கைகள் பின்னுக்கு பிணைக்கப்பட, கால்களை அகட்டி நின்றது அந்த உருவம்.


கோதண்டம் ஏறிய கோமானின் (ஸ்ரீராமன்) கையிலுள்ள வில்லை போல் இறுகி ,உறுத்து, விறைத்து நின்றது அச்செரூபம்.


அவன் வளர்ந்த ஆண்மகன் அல்ல பருவம் எய்துக்கொண்டிருக்கும் இளைஞனும் அல்ல வளர்ந்துவரும் பாலகன். வெறும் 12 வயதுடைய பாலகன். ஆனால் அவன் மதலையல்லவே.(மதலை என்பதன் பொருள் குழந்தை)


அவன் பார்வையில் ஒரு ஆங்காரம் ஓங்கி ஒலித்தது. சத்தமிடவில்லை, சண்டையிடவில்லை, ஆயுதம் ஏந்தவில்லை ஆனால் எதிரில் நின்ற அந்த வடநாட்டவனை எரிக்கும் பார்வையாள் ஒரு அடி பின்னே எடுத்து வைக்க வைத்தான். அவன் தோற்றம், கூன் விழா நிமிர்ந்த அவன் நிமிர்வு, பேச்சில்லா அவன் அழுத்தம் இதைக் கண்டவன் உள்ளுக்குள் ஒரு நொடி அரண்டு போனான். ஆனால் மறு நொடி சிறுவனிடம் தான் தோற்பதா என்ற எண்ணம் எழ. (உரையாடல் இந்தியில் இங்கு தமிழில்.)


"டேய் பொடியா என்னடா பார்வை எல்லாம் பலமா இருக்கு என்னை விட்டுடுங்கள், நான் செய்தது தவறுதான் மன்னித்துக் கொள்ளுங்கன்ற வார்த்தையை மட்டும் கேட்டு விட்டு போ.

என்னிடம் மன்னிப்பு கேட்டால் மட்டுமே உன்னை விடுவேன் இல்லைனா மன்னிப்புங்கிற வார்த்தையை நீ கேட்கும் வரை என்னிடம் வதைப்பட்டு சாவ."


என்றவன் ஐஸ் கட்டியால் நிரப்பியது போலிருந்த அந்த குளிர்ந்த நீரை அவன் மேல் ஊற்றி அபிஷேகம் செய்தான். எதற்க்கும் அசராத அந்தத் தீயின் புத்திரனோ உணர்ச்சி இன்றி இறுகி நின்றான். இருக்காத என்ன அவன் வாழ்க்கையில் கொண்ட வேள்வி அத்தகையதே.


"சாலா! என்ன ஒரு திமிர். கொலை வழக்கில் உள்ளே வந்த தருதலைக்கு இத்தனை தில்லா? என்ன இருந்தாலும் தரங்கெட்ட தாய்க்கும் பிறந்தவன் தானே.. என்னதான் நடத்தை தவறிய உன் தாயை நீ கொன்றிருந்தாலும் அந்த ரத்தம் உன் உடம்பில் ஓடுவதால் தான் கொஞ்சமும் சுரணை இல்லாமல் இருக்கிற."


அந்த வார்டனோ அவனிடம் பிரதிபலிப்பு உள்ளதா என அவனைக் கூர்ந்து நோக்கினான் ஆனால் அச் சிறுவன் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாது பார்த்த பார்வையை மாற்றாது விறைத்து நின்றான்.


அதற்கு மேலும் பொறுமை இழந்த அந்த ஜெயில் வார்டன் தான் அணிந்திருந்த காற்சட்டை பாக்கெட்டில் இருந்து எடுத்த கஞ்சாவினை பற்றவைத்து அந்த புகையினை வலுக்கட்டாயமாக சிறுவன் நின்ற பக்கம் கொண்டு சென்று அவன் மூக்கு நேர் பிடித்து ஆழ்ந்து உறியுமாறு வற்புறுத்திக் கொண்டிருந்தான்.


"டேய் பயலே! மரியாதையா உறிடா.

இல்லைனா இன்றைக்கு உன்னை தொலைத்து விடுவேன்.

ஹூம்.. ஜெய்லர் ஐயா உன்னிடம் கேட்டால் உண்மையை சொல்லுவியா. ஓவ்.. அவ்வளவு பெரிய இவனா நீ. அட ஆமான்டா நான் தான் இங்குள்ள பசங்களுக்கு புகைக்கும் பொருட்களை வினியோக்கிறோன் ஏன் இனியும் வினியோகிப்பேன். என்னடா செய்வ என்னை?


என்ன என்னை பணிநீக்கம் செய்ய வைத்தால் மீண்டும் வேலைக்கு வரமாட்டேன் என்று நினைத்தியா? ஒழிந்து போடா நாயே!"


என்றவன் எரிந்த சுடு தணலை அந்த பாலகனின் புஜத்திலேயே வைத்து அழுத்தினான். விழிகள் சிவக்க இரும்பாக நின்றவனின் நெஞ்சம் வலிதனை உணர்ந்தாலும் அவன் கண்களில் நொடிபொழுதில் தோன்றிய ஒரு பளிச்சிடல், அதுவொரு ஸ்வப்பனம் அந்த ஸவப்பனத்தை வெல்ல விழி நீர் தடைக்கல் என நினைத்தானோ என்னவோ கண்ணீர் சிந்தவில்லை. வலியையும், கண்ணீரையும் தனக்குள்ளேயே முழுங்கி கொண்டது அந்த ஆலம் விழுது.


அவன் திணக்கத்தில் கோபம் கொண்ட வார்டனோ அப்பாலகனை அரைந்து தள்ளினான். ஆனால் அப்பொழுதும் அவனில் சிறிது மாற்றம் இல்லை.

குறி மாற அவன் ஒன்றும் கவசகுண்டலத்தின் அரசன் அல்லவே வில்லின் காதலன் ஆயிற்றே..


இரு கன்னங்களிலும் மாறிமாறி தோன்றிய விரல்களின் தடமும், சில் மூக்கு உடைய மூக்கில் வழிந்த குருதியும், தலைமுடி கலைந்து, புஜத்தில் தீக்காயம் என அந்த பரிதாப நிலையிலும் அசராது நின்றவனை குறையாத கோபத்தோடு நெருங்கியவன்.


"என்ன திமிராடா கொலைகார நாயே உனக்கு? உன்னை அடக்க வில்லை என்றால் நான் சலீம் இல்லையடா.."


என்றவன் மேலும் இரு வாளி நீரை அவன் தலையோடு ஊற்றினான். எலும்பை ஊடுருவிச் செல்லும் அந்த சிம்லா குளிரில் சிறிதும் இரக்கம் காட்டாது சிறுயவனின் தடையை பற்றி அவன் முகத்தை நிமிர்த்தியவன்..


"ஏய் இங்க பார். இங்கே உள்ள எல்லா மலசல கூடத்தையும் நீதான் கழுவி துப்புரவு செய்யனும். அப்படி செய்யவில்லைனா கீழ்படியாமை பிரிவின் கீழ் உன் தண்டனை காலம் மேலும் அதிகரிக்கும்.


அதுமட்டுமல்ல இங்கே உள்ள எங்கள் அனைவரின் உள்ளாடைகள் முதல் கொண்டு எங்கள் அத்தனை ஆடைகளையும் நீ தான் துவைக்கனும் மீறினால் இந்த சிம்லா குளிர் உன்னை நிர்வாணமாக பார்க்கும்.."


என்றான் அந்தக் கொடூரன். ஆனால் அவனுமே மூன்று பிள்ளைகளின் தந்தை என்பதை அந்த நொடி மறந்தவன் இது தான் கைதிகளின் விதி என நினைத்தான். ஆனால் அவன் அறிவானா காலனின் பாச கயிற்றுக்கு மரணம் இல்லை என்பதை.


கௌரவர் கூட்டத்தை துர் சிந்தனையால் சகுனி கலைத்தான் எனில் இந்த கலியுகத்தில் வளர்ந்து வரும் பிஞ்சுகளின் நெஞ்சில் நஞ்சை கலந்து உலக போதைக்கு அவர்களை அடிமையாக்கி ஆயிரமாயிரம் கௌரவர்களுக்கு உயிர் கொடுக்கின்றனர் இந்த நவீன சகுனிகள்.


"டேய் என்னடா கல்லு மாதிரி நிற்கிற போ போய் சொன்னதை செய்."


என்றவன் பிணைத்திருந்த அவன் கை கட்டை அவிழத்து விட்டு போக திரும்பிய நெடி அவனை மும்முறை அழைத்த சொடக்கு ஒலி மீண்டும் திரும்பிப் பார்க்க வைத்தது. திரும்பியவன் அருகில் நெருங்கிய அந்த அரிமா குட்டி (சிங்கம் குட்டி) 12 வயதிலேயே அசாத்திய உயரத்தில் அவன் மூக்கின் நுனி அளவு உயரமுடைய தோற்றத்தைக் கொண்டிருந்தான். தன் அகன்ற விழியால் அந்த வார்டனை உறுத்து விழித்து.


"ஒருமுறை, மீண்டும் ஒருமுறை என்னை பெற்றவளை பற்றி என்னிடம் நீ ஒரு வார்த்தை இனி பேசினாலும்.."


துளி இடைவேளைக்கு பின்..


"ஒரு கொலை வழக்கில் கைதியாகி உள்ள நான், மீண்டும் ஒரு கொலை செய்ய நேரிடும். நான் இருமுனை கத்தி என்னிடமிருந்து தள்ளியே இரு இல்லைனா இருக்க வைப்பேன்.."


என்றவன் அவனை மதியாது உக்கிரத்தோடு முறைத்துப் பார்த்து திரும்பி சென்றான். அந்த வார்டன் சலீமோ அசந்து நின்றான்..


'அம்மாடியோ என்ன ஒரு தைரியம், என்ன துணிச்சல்.. வெறும் 12 வயது பாலகனுக்குள்ளா இத்தனை உரம். குளிர் நீரை கொட்டிய எனக்கே நடுங்குகிறது, இவனோ அஞ்சாமல் நிற்கிறானே. இவன் சிறுவனா இல்லை இவனுக்குள் பேய் பிசாசு எதுவும் புகுந்து விட்டதா.'


என்று எண்ணியவன் அறியவில்லை அவன் பலரின் மரணத்தை கண்டால் ஒழிய அவன் கொண்ட ரணத்தில் வடு ஆறாது. அந்த காயம் தந்த திடமே இவனை நித்தமும் வாழ வைக்கும்.


வார்டன் இட்ட பணிகளை மௌனமாக செய்தவன் தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள் நுழைந்தான். அவனை வரவேற்ற அவருடைய சக அறைத் தோழன்.


"என்ன நண்பா ரொம்ப அடித்துட்டாங்களா?"


அவனின் பதில் மௌனமே ஆனால் அதில் சலிப்படையாதவன் மீண்டும்..


"நண்பா அந்த ராட்சசன் ரொம்ப படுத்திட்டானா? ஒரு மன்னிப்பு தானே அதைக் கேட்பதற்கு என்ன. நீ கேட்டிருந்தால் இத்தனை அடிகளும் தண்டனைகளும் இல்லையே."


துளி அமைதிக்கு பின் மற்றவனோ இரு நேத்திரங்கள் சிவக்க இறுகிய குரலில்..


"நான் கற்ற மகாபாரதத்தில் சக்கர வியூகம் அபிமன்யுவின் மரணம். அர்ஜுனனின் வெற்றி. கிருஷ்ணனின் யுக்தி.


இது எனக்கான சக்கரவியூகம். சுற்றிவர தீ மூட்டப்பட்ட சக்கரவியூகம்.

இதில் எரிந்து சாம்பலாவதும் சரித்திரமாவதும் என் கையில் தான் இருக்கு அதை யாரும் தீர்மானிக்க முடியாது என்னைப் பற்றி ஏன், எதற்கு என கேள்வி எழுப்பாதே. என்னிடமிருந்து தள்ளியே நில்."


அவனை விட இரு வயது மூத்த சிறுவனோ தன்னை விட சிறியவனின் பேச்சையும், பேசும்பொழுது வெறிகொண்ட அவன் நயனங்களையும் கண்டு திகைத்தான். ஏனோ அந்த விழிகளை நேர்கொண்டு பார்க்க முடியவில்லை. அது சிறுவனின் விழிகள் அல்ல, அவ்விழிகளின் வீரியம் வேட்டையாடும் சிங்கத்தின் உரம்..


'இவன் பேச்சை சித்தார்த்தம் என்பதா? வெறி என்பதா? இல்லையேல் அவன் கண்களில் நான் பார்த்தது உக்கிரம் என்பதா? எதுவோ இவன் மிகவும் ஆபத்தானவன். இவன் கூறியதுபோல் தள்ளியே நிற்க வேண்டும்."


ஏனோ அவன் மூளை அவ்வாறு அலறியது.


அவன் எங்கனம் அறிவான்... தான் ஆபத்தானவன் என எண்ணியவன் நாளைய சரித்திரத்தில் இடம் பெற பல உயிர் பலிகளை செலுத்தப் போகிறான் என்று.. ஆண்பிள்ளை அவன் விழிகளில் நித்தமும் ஒரு ஸ்வப்பனம் தீயாக தகிக்கிறது அதை அறிந்தால் அறிந்தவன் ஞானி..

………………………………………………


அதேநேரம் மாயாவிகள் மயங்கும் அந்த ஏகாந்த இரவில் கற்புத் தீ கொழுந்துவிட்ட விசித்திர பூமியில் ஒரு நரபலி..


நான்கு பக்கமும் சுவர் எழுப்பி இரும்பு கதவுகளால் வேலி அமைக்கப்பட்ட அந்தரங்க கோட்டை. அங்கே உயர் தேக்கை வெட்டி செப்பனிட்டு செய்யப்பட்ட ஓர் உயர்ந்த சிம்மாசனத்தில் ஒய்யாரமாக அமர்ந்திருந்தாள் அவள்.


அவள் அரக்கி, ராட்சசி, எதிர்ப்பவர்களின் மரணம் மொத்தத்தில் பாவத்தின் புகலிடம் அவள். அந்த அசுர வாரிசின் பலமே பணம் ,பதவி, அதிகாரம், ஜாதி,அவள் உறவுகளும், மற்றவர்கள் தங்கள் மேல் கொண்ட பயமுமே ஆகும். அவளை எதிர்க்க நெஞ்சுரம் கொண்ட ஆண்மகன் இல்லை, பாரதி வடித்த வீர மங்கையும் அங்கில்லை. ஆனால் இன்றுவரை அவள் எழுதிய சட்டத்தில் தன்னை எதிர்ப்பவர்களின் வாழ்க்கையில் நரகம் உண்டு என்பதை மறவாது பதிய வைத்தாள்.


"என்ன வீரா! நம்ம வழக்கத்துக்கு எதிரான காரியம் எல்லாம் உன் வீட்டில் நடக்குதாமே? யார் கொடுத்த தைரியம் கொஞ்சம் விட்டுப் பிடித்தால் என்னை ஏமாற்றலாம்னு நினைத்தியா?"


"அ.. அம்மா.."


"என்னட அம்மா? நீ என் இனத்துகாரன் ஆகையால் தான் இவ்வளவு நேரம் அமைதியாக பேசுறேன். நான் சொல்வதை செய்யப் போகிறியா இல்லையா?"


"ஆ.. அம்மா.."


என்று அழைத்தவன் அவள் கால்களை பிடித்து கொண்டு கதறி அழுதான். அவன் உள்ளமோ எப்பாடுபட்டாவது தன் வீட்டு மூத்த வாரிசை காப்பாற்ற துடித்தது. அந்தப் பெண் பேயோ தன் காலைப் பிடித்துக் கொண்டு கதறி அழுதவனை அலட்சியம் செய்து அவன் நெஞ்சில் எட்டி உதைத்தாள்..


"வாய மூடுடா நாயே! இடத்தைக் கொடுத்தா மடத்தைப் பிடிக்கிறியா? இது என் முப்பாட்டன் காலத்திலிருந்து பின்பற்றும் மரபு. குடும்பத்தில மூத்த பிள்ளை பெண்ணாக பிறந்தால் உன் வம்சம் இல்லைடா மடையா ஊரையே கட்டி ஆளுர என் ஜாதி அழிந்துபோகும். இது சோலி குலுக்கிப் போட்டு என் முன்னோர்களுக்கு அப்போவே சித்தர்கள் கணித்துக் கொடுத்தது. இந்த ஊரோ இல்லை என் சாதி சனமோ அழிய நான் விடமாட்டேன்.


மரியாதையா கள்ளிப்பாலை ஊற்றி உன் குழந்தை மூச்சை நிறுத்திரு இல்லைனை நீயும் உன் பொண்டாட்டியும் உன் குழந்தைக்கு துணையா போய் சேருவீங்க. நீயே முடிவெடு."


"அம்மா கொஞ்சம் மனசு வையங்க. என் அம்மா மருதாயியே எனக்கு பெண்ணா பிறந்திருக்கா..

விட்டுடுங்க அம்மா எங்களை. இந்த ஊரை விட்டு போகிறோம். பெண்பிள்ளை குலத்தோடு மஹாலக்ஷ்மி அம்மா. அவள் எப்படி சாபமாகுவாள். இனி இந்த ஊர் எல்லையை கூட மிதிக்க மாட்டோம் எங்கேயாவது வடநாட்டிற்கு சென்று பிழைத்துக் கொள்றோம். எங்களையும் என் பிள்ளையையும் விட்டுடுங்கள் அம்மா."


"ஹா.. ஹா.. என்ன வீரா என் கிட்டவே வியாக்கியானம் பேசுகிற. இந்த பேச்சு எல்லாம் இங்க செல்லாது. பொட்ட பிள்ளையை பெற்றெடுத்துட்டு என்ன திணக்கு உனக்கு..


ஆண்பிள்ளை வீரமாக இருக்க வேண்டியவன் இப்படி பேடியை போல என் காலைப் பிடிக்கிறவன் இல்ல. நீஇந்த ஊர்ல எப்படி தலைநிமிர்ந்து இருந்தவன் இன்று உன் நிலமைக்கு காரணம் நீ பெற்று வைத்திருக்கும் பெண்பிள்ளை தான். பேசாம நான் சொல்வதைக் கேள் அவளை கள்ளிப்பால் ஊற்றி கொன்னுடலாம்."


குழந்தையை பெற்றவளோ..


"ஆ.. ஐயோ! வேண்டாம் அம்மா.. ஹக்.. முன்னூறுநாள் நான் தவமிருந்து பெத்த குழந்தை. என் பிள்ளைக்கு முழுதாக ஒருவேளை தாய்ப்பால் கூட கொடுக்கலையே. என் மார்பெல்லாம் கனமாக வலிக்கிறதும்மா. என் ரத்தம் எல்லாம் பாலாக தரையில் சிந்துகிறது. என் பிள்ளையை ஒன்றும் செய்து விடாதீங்கமா.."


கெஞ்சிய அத்தாயின் கதறலை கேட்டு பேய் கூட இறங்கும் ஆனால் இவளோ சிறிதும் அசையாது இரும்பாக கொண்ட கொள்கையில் மாறவில்லை.


"என்ன வீரா பொண்டாட்டியை பேசவிட்டு பார்த்துக் கொண்டு இருக்கிற. இப்போ நீ, நான் சொன்னதை செய்யவில்லைனா அடுத்து உன் வீட்டில விழும் சாவு உன் மனைவியது தான்.


காதலித்து தானே உன் மனைவியை திருமணம் செய்து கொண்ட. நீயே சொல் பெற்ற உன் பெண் வேண்டுமா? இல்லை நீ காதலித்தா உன் காதல் மனைவி உயிரோடு வேண்டுமா?"


இடியை வார்த்தையாக மொழிந்தவளை ஒன்றும் செய்ய முடியாத கையாலாகாத தனத்துடன் சிறிது நேரம் வெறிக்க பார்த்தான். காதல் அந்த வார்த்தையின் சக்தியை அறியாதவர் இல்லையே? அந்த ஒரு வார்த்தை அம்மனிதனை கட்டிப்போட்டது.


இதற்கு மேலும் தாமதித்தால் தன் காதல் மனைவியின் உயிர் மிஞ்சப் போவதில்லை என்பதை நன்கு அறிந்து கொண்டான். அவன் மட்டுமல்ல அந்த ஊரே அறிந்த விடயம் இவள் சொல்பவள் அல்ல சொன்னதையும், சொல்லாததையும் செய்பவள். தன்னவள் உயிர் காக்க அந்த அரக்கியின் முன் கூனிக்குறுகி அவள் சொன்ன சொல்லுக்கு கட்டுப்பட்டான். ஆனால் பெற்றவர்களின் மனமே புண்ணாக நொந்து உதிரம் வடித்தது.


தன்னுடைய வாயால் தன் உயிரை கொல்லச் சொல்ல மனம் வராதவன் தலையை ஆட்டினான் சம்மதமாக..


"இப்பதாண்டா நீ என் ஜாதிக்காரன். இந்த பொட்ட பிள்ளை போனால் என்ன ஆண் சிங்கம் ஒன்றை பெற்றுக் கொள்ளுங்க."


என்றவள் ஈவிரக்கம் சிறிதும் இன்றி தன்னோடு வந்த மூதாட்டிக்கு கண் ஜாடை காட்டி, கையிலே வைத்திருக்கும் சிரட்டையில் உள்ள கள்ளிப் பாலை சின்னஞ்சிறு சிசுவின் வாயில் ஊற்றி அந்த குழந்தையின் அழுகையையும் மூச்சியையும் முடித்து வைத்தாள்..


"ஆ..ஆஆ..ஐயோ! அம்மா என் கண்ணே! இந்த அம்மா வயிற்றில் பிறந்தது தானாம்மா நீ செய்த பாவம்? என் கருவறையை கிழித்து உன்னை நான் சுமந்தது இப்படி பறிகொடுக்க தானா? ஐயோ அம்மா என்னால் முடியல்லையே.."


என்ற அந்தப் பெற்றோர்கள் வாயிலும், வயிற்றிலும் அடித்துக்கொண்டு கதறினார்கள்.. கோடிப் பிள்ளைகளை சுமக்கும் பூமா தேவியோ அந்த கதறலை கேட்க சக்தியின்றி மழையாக மாறி கண்ணீர் வடித்தாள். அவர்களை நோக்கிய அந்த ஆணவக்காரி.


"ம்.. போதும் கூப்பாடு போட்டது. இனி ஆக வேண்டிய வேலையை பாருங்கள். நான் சொன்னதை செய்து முடித்ததற்காக இதோ உன் பெயரில் மூன்று ஏக்கர் நிலத்தை மாற்றி எழுதி வைத்திருக்கிறேன். அதுவும் நீ என் தூரத்து உறவினன் என்பதற்காகத்தான்."


என்றவள் விலை மதிக்க முடியாத ஒரு உயிருக்கு நிகராக விலைக்குப் போகும் ஒரு விளைநிலத்தை ஈடாக கொடுத்தாள். அந்த நேரம் அவளின் பக்கவாட்டு பக்கத்தில் ஒரு பெண்மணி வெள்ளைத்துணியில் சுற்றிய ஒரு ரோஜா மொட்டை கைகளில் ஏந்தி வந்த வண்ணம்.


"பெரியம்மா. சின்னம்மா ரொம்ப நேரமா அழுகிறாங்க. பசி வந்துவிட்டதுனே நினைக்கிறேன். பாலுக்காக தான் அழுகிறாங்க. நீங்கள் தாய்ப்பால் கொடுத்து விட்டு தந்தால் பிள்ளையை தூங்க வைத்து விடுவேன்மா."


என்றவளிடமிருந்து தன் வீட்டு குலதெய்வத்தை, அழகு பெண் வாரிசை, பஞ்சுப்பொதியை கையில் ஏந்துவது போல் மென்மையாக அள்ளி நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்..


அந்த சின்னஞ்சிறு பெண் மெட்டும் தன் தாயின் கதகதப்பை அறிந்து அவள் மார்போடு ஒன்றிக் கொண்டது.. இரக்கமே இல்லாத அரக்கியின் முகத்தில் அந்த கணம் தாய்மை பொங்கி வழிந்தது. ஒரு சின்ன சிசுவுக்கு கள்ளிப்பால் ஊற்றி கொலை செய்தவள் இவள் தான் என்பதை கூறினால் அந்தக் கணம் யாருமே நம்ப மாட்டார்கள். அத்தனை மென்மையை அவள்முகம் தத்தெடுத்து.


"என் தங்கப் பெண்ணே! அழுதீங்களா? பசி வந்துவிட்டதா? என் குட்டிமா அம்மாவை தேடினீங்களா?.. வாங்க வாங்க அம்மா பால் தருறேன்."


என்றவள் தான் செய்த மகா பாதகத்தை எண்ணி மனம் கூசாது தன் குழந்தையை கையில் ஏந்திக் கொண்டு பாலூட்ட அழைத்துச் செல் முட்பட்டாள் ஆனால் அங்கே ஒரு தாயோ மார்பு சேலையில் பால் வடிய தன் சிசுவுக்கு பாலூட்ட முடியாத தன் நிலையை எண்ணி குமைந்து கொண்டிருந்தாள். தான் உயிர் கொடுத்த உயிர் மொட்டை அழித்தவள். தன் பெண் குழந்தையை இளவரசியை போல் அணைப்பதை கண்டு ஆக்ரோஷம் கொண்ட அந்த பெண்ணோ..


"ஏய் நில்லு நீயெல்லாம் ஒரு பெண் தானா? நீ சுமந்த பெண்ணை பூ போல் அணைக்க நினைப்பவள், என் குழந்தையை மண்ணுக்கு உரமாக்கி விட்டியே? கண் கூட விழிக்காத என் மலர் மொட்டை கருகி விட்டியே?


நீயும் ஒரு தாய் தானே? அதுவும் இரு குழந்தைகளை பெற்றவள் தானே? உன் மனம் கொஞ்சமும் இலகவில்லையே? ஒரு பெண் குழந்தையை பத்து மாதம் வயிற்றில் சுமந்தவள் தானே நீ ஆனால் இன்னொரு பெண் குழந்தையை அழித்து விட்டியே பாவி.


அனுபவிப்ப! உன் திமிர் அடங்க அனுபவிப்ப! உன் கண்முன்னே எதன்மீது நீ உயிர் வைத்து இருக்கிறியோ அது துடிதுடிப்பதை பார்த்து உன் ஆவி துடிக்கும்.


ராணியா உலா வரும் உன் ஊரோ உன்னை அசிங்கமா எண்ணி நகைக்கும். என் புருஷனை ஆண் மகனானு கேட்டு அவர் கைகளுக்கு உணர்வுகளாள் விலங்கிட்ட உன் விட்டு ஆண்கள பேடியாக்கி செயலிழக்க வைக்க போவது ஒரு பெண் தெய்வம் தான்..


வருவாண்டி உன்னைப்போல ஒருத்திக்கு எமனாக ஒருவன் வருவான். எத்தனுக்கு எல்லாம் எத்தனாக இருப்பான், உன்னையும் உன் வம்சத்தையும் அடியோடு அழிப்பான். இதோ கையில் வைத்து கொண்டிருக்கிறியே இவள் என்னைப்போல உன் முன்ன ஒருநாள் நீதி கேட்பாள். அந்த கணம் நீ உயிரோடு புதைவ. என் பெற்ற வயிறு குலுங்கி அழ சொல்றேன் நன்றாக ஞாபகம் வைத்துக்கொள். இனிமேல் உன் வம்சத்தின் அழிவை ஒவ்வொரு நாளும் எண்ணிக் கொண்டோ இரு..


காளி தெய்வமாக உக்கிரத்தோடு கத்தியவளை நோக்கி..


"ஏய்!" என்ற கர்ஐனையோடு..


"பாவம் பெற்ற குழந்தையை பறிகொடுத்தவள்னு உன்னை விட்டுடுகிறேன்.


வீரா! நீ உன் பொண்டாட்டியை கூட்டிக்கொண்டு இந்த ஊரை விட்டே போய்ரு மீண்டும் ஒரு முறை உன் மனைவியை என் கண்ணில் கண்டால், அவள் உயிர் மிஞ்சாது.. நான் கொடுத்த வாக்கை காப்பாற்றுவேன். என் வம்சத்தில் எவரும் கொடுத்த வாக்கை மீறியதில்லை. அதனால உன் மனைவியை இன்னும் உயிரோடு விட்டு வைத்திருக்கிறேன்..


முட்டாள் பெண்ணே நன்றாக கேட்டுக்கோ. என் கையில் இருப்பவள் என் குலசாமி. அவள் மீது ஒரு துரும்பும் பட விடமாட்டேன். என்ன நினைத்த நீ. இந்த சாம்ராஜ்யத்தின் இளவரசி இவள். உன் சாபம் எல்லாம் அவளிடம் பலிக்காது. இதுதான் உனக்கு நான் தரும் கடைசி எச்சரிக்கை. இனிமேல் என் கண்முன்னே வராதே.."


என்றவள் தன் மகளோடு தன் கோட்டையை நோக்கி சென்றாள்..


ஆனால் அவள் அறிவாளா? தன் வீட்டு சீதா தேவியின் ஸ்வப்பனத்தில் நித்தமும் ஒருவன் நிறைய போகிறான். அவன் தங்கள் வம்சத்தின் காலனாக வரும் காலம் நெருங்கி விட்டது என்றும்..


அவன்முன் தன் வீட்டு குல தெய்வம் என மார்தட்டிக்கொள்ளும் தன் மகளுக்காக மண்டியிட்டு நிற்க போகிறாள் என்றும் இவள் அறியவில்லை..


அஸ்தினாபுரம் அவையில் அன்று திரௌபதி தான் பகடை!

அயோத்தி மன்னன் ஆட்சியில் அந்த ஜானகிதான் பகடை!

இந்த மாதரசி பகடை ஆகுவாளா அல்லது பலியாகுவளா.. படைத்த பிரம்மன் மட்டுமே அறிந்தது..நின் ஸ்வப்பனங்கள்.
 
Last edited:

admin

Administrator
Staff member

அத்தியாயம் - 3


23 வருடங்களுக்குப் பிறகு

………………………….


தெருவெல்லாம் மார்கழி பஜனைகள், மங்கைகளின் கைகளில் கோயில் பூஜைக்கான மலர் கூடைகள். அது பாண்டிய மன்னன் கோலொச்சி பத்தினி தெய்வம் சரித்திரம் படைத்த பூமி. அதிக கோயில்களையும் வீரம், வேகம், ஆளுமை, ஜாதி, பாரம்பரியம், பரம்பரை என மார்தட்டிக்கொள்ளும் மாவீரர்களையும், சக மனிதர்களையும் சில அரக்கர்களையும் கொண்ட அந்த பாற் கடலின் பரந்தாமனின் தங்கை ஆட்சிசெய்யும் தூங்கா நகரமான மதுரை.


மதுரையில் கிராமமும் அல்லாத நகரமும் அல்லாத பகுதியில் அங்குள்ள அத்தனை மனைகளையும் சிறிதாக்கி உயர்ந்து நின்ற கட்டிடம். கட்டிடம் என்பதை விட அதை மாளிகையெனலாம். பரந்து விரிந்த பதினைந்து ஏக்கர் பரப்பில் அமைந்த விசித்திரமான மாளிகையது. அந்தக் காலத்து ராஜ வம்ச வாரிசுகளுக்கு பெண் கொடுத்து பெண் எடுத்து ராஜ பரம்பரையில் இடம்பிடித்த வம்சத்தினரின் வழிவந்த வாரிசுகளே அந்த மாளிகைக்குள் வாழ்ந்து வருகின்றனர்.


இவர்கள் கோலொச்சும் கோமான்கள் அல்ல சாதி வெறிபிடித்த சர்வாதிகாரிகள். மேலும் சூழவுள்ள பிரதேசங்களை தங்கள் கட்டுக்குள் வைத்திருக்கும் ஆளுமை கொண்ட அதிகார வர்க்கம். அந்த காலத்து ஆக்க கலைஞர்களை கொண்டு உயர்தர தேக்கு மரத்தை செப்பனிட்டு அத்துடன் பளிங்கு கருங்கற்களை கொண்டு மதில் சுவரும் இரும்பு வாயிலுமாக அமைக்கப்பட்ட அரண்மனை அது. அங்கு அறைகளுக்கும் வேலை செய்யும் ஆட்களுக்கும் பஞ்சமில்லை.


மீனாட்சியின் கோட்டைக்குள் ஒரு சிவபக்தை. நாலரை அடி சிவனின் சிலைக்கு சாம்பிராணிப் புகையும் கற்பூர ஆரத்தியுடன் ஒரு பூஜை.


"ஈசனடி போற்றி!

எந்தை அடி போற்றி!

தேசனடி போற்றி!

சிவன் சேவடி போற்றி!

நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி!

மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி!

சீரார் பெருந்துறை நம்தேவன் அடிபோற்றி!.."


என்று கடினமான கம்பீர குரலில் கீர்த்தனையை தொடர்ந்து ஆரத்தி தட்டில் உள்ள விபூதியை மூன்று விரல்களில் தொட்டு நெற்றியில் பட்டையாக இட்டுக்கொண்டு பூஜை அறையில் இருந்து வெளியே வந்தாள் அவள். அந்தகாலத்து மனிதர்கள் சிலரால் ராணியம்மா என்று பலரால் பெரியம்மா என்றும் அழைக்க படும் 'தேவி வேதநாயகி பூபதி'. ஆளுமை, துணிச்சல், திமிர் என ஆணவத்தின் மொத்த பிறப்பிடம். பணம், படை, அதிகாரம் படைத்த ராட்சசி. நொடிப்பொழுதில் கொலையும் செய்ய அஞ்சாத பாதகியவள்.


"ராஜா இன்னைக்கு புது டெண்டர் விடுறாங்க ஞாபகம் இருக்கில்ல. இந்த டெண்டர் சிறுசு தாம்ல ஆனா நாம தோற்க்க கூடாது. நீ என்னச் செய்வியோ எவன போடுவியோ அது எனக்கு தேவையில்ல எங்க நாம நின்னாலும் அங்க நம்ம கை தாம்ல ஓங்கி நிற்கணும் என்ன சொன்னது புரியுதா தம்பி."


பிறந்து வளர்ந்தது எல்லாம் மதுரை என்றாலும் ஏனோ அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் அனைவருக்கும் மதுரை தமிழ் நாவினில் உழல்வது மிகக் குறைவு அவ்வப்போது மட்டுமே தொட்டு சொல்லும்.


"அதுக்கு என்னங்க அக்கா அம்சமா இந்த டெண்டரையும் நமக்கே நமக்குனு வாங்கிறலாம்."


"இந்த டெண்டர் இல்ல தம்பி இனி எந்த டெண்டர்லயும் நம்ம மிஞ்சி ஒருத்தன் ஜெயிக்க கூடாதுல. அதைவிட நமக்கு எதிரா நிற்க நினைக்க கூட எவனுக்கும் நெஞ்சுரம் இருக்க கூடாது. மனுசங்க மனசுல உள்ள இந்த பயந்தான் நம்ம பாட்டன், முப்பாட்டனையும் ராஜாவா வாழ வச்சது."


"என்னங்க அக்கா இப்படி சுலுவா சொல்லிட்டீக நமக்கு எதிரா நின்னு டெண்டர் கோட் பண்ண யாருக்கு இங்க துணிச்சல் இருக்கு. அப்படி ஒரு ஆம்பள இந்த ஜில்லாலயே இல்ல."


என இறுமாப்பாக உரைத்தவாறு தன் நரை முடி பூத்த மீசையை முறுக்கி கொண்டான் ராஜேந்திரன் பூபதி. வேதநாகியின் இரண்டாவது தமயன்.


தேவி வேதநாயகி, உடன் நான்கு ஆண் சகோதரர்களை கொண்ட தேவேந்திரன் பூபதி வம்சத்து பெண்ணாவாள். முத்த சகோதரனுக்கு பின் இரண்டாவதாக பிறந்தவள். அவளுக்கு முன் பிறந்தவன் வீரேந்திர பூபதி மிக நேர்மையானவன். சேற்றில் முளைத்த செந்தாமரை அவனின் 24து வயதில் துர்மரணம் நிகழ்ந்தது அப்போது வேதநாயகி 21 வயது இளம் மங்கை நோயில் படுத்த தந்தை, பரம்பரை வெல்வாக்கு, சொத்து, தொழில் கூடவே மூன்று இளைய சகோதரர்கள் என அனைவரின் சுமையையும் மிக கம்பீரமாக ஏற்று நின்றவள். இரும்பு ஆளை முதல் மதுபான கடை வரை அத்தனை தொழிலும் கால் வைத்து 1990களில் வெற்றிகரமாக ஏற்றுமதி வியாபாரத்தில் கால் பதித்தாள். அவள் தம்பிகளோ அவள் கிழித்த கோட்டை தாண்டுவதில்லை. ஒற்றை பெண்ணாக அவள் சாதனை என்னமோ சிகரம் தொட்டது உண்மையே இருந்தும் அவளில் மனிதம் மிஞ்சி இருக்கலாம்.


இவளுக்கு பின் பிறந்தவர்கள் ராகவேந்திரன் பூபதி, ராஜேந்திரன் பூபதி, கஜேந்திரன் பூபதி..

மூவரில் ராகவேந்திரன் பூபதி பட்டதாரி, அறிவில் சாணக்கியன், விவேகி இருப்பினும் என்ன செய்வது அவன் மதி விதியிடம் தோற்று போனதே.


அடுத்தவன் ராஜேந்திர பூபதி. 90களிலே தன் அக்காவின் கட்டளையின் படி ஜாதி கட்சி ஓட்டில் ஜெய்த்து சட்டசபை வரை சென்றவன். தற்போது தொழில் துறை அமைச்சராக இருக்கிறான். சகோதரிக்கு ஏற்ற தமயன் எந்த ஒரு கொலை பாதகத்தையும் செய்ய அஞ்சாதவன். அதில் அவன் செய்த அரசியல் கொலைகளும், கௌரவ கொலைகளும் ஏராளம்.


மூன்றாமவன் கஜேந்திர பூபதி பிரபல ஜாதி கட்சி தலைவர். வெளிப்பார்வைக்கு பெரிய மனிதன். மனைவிக்கு முன் மகா யோக்கியன் ஆனால் அவனோ பெண் பித்தன் பெண்களை கட்டிலில் காதலாக, காமமாக மட்டுமின்றி மிருகமாகவும் வேட்டையாட அஞ்சாத அயோக்கியன். சுயநலத்தின் மொத்த உருவம். தன் சொத்தால் மட்டுமின்றி பிறர் சொத்துகளாலும் வாழ்க்கையில் சிகரம் தொட நினைக்கும் பக்கா சுயநலவாதி. கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கந்து வட்டி, நில ஆக்கிரமிப்பு என எதற்க்கும் இவன் அஞ்சுவதில்லை.


இங்கு ராஜேந்திரன் தன் அக்காவோடு பேசி கொண்டிருக்கையில் முன் வாசலின் கதவு பெரிய சத்தத்துடன் திறப்படும் ஓசைக் கேட்டது. அது எழுப்பிய ஒலியில் சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்த பெண்கள் தொடக்கம் ஆண்கள் வரை அனைவரும் ஹாலில் கூடியதோடு அவர்கள் பார்வையோ வாசல் பக்கம் திரும்ப அங்கே அந்த சத்ததிற்க்கு சொந்தகாரனோ நிதானத்தில் அல்ல முழுபோதையோடு இவர்களை நோக்கி வந்தான்..


"வணக்கம் மக்கா.. எல்லா கொலைக்கார பயலுகளும் இங்கதான் இருக்கீங்களா. அதுசரி காலங்காத்தால எவன் குடியை கெடுக்க இப்படி முன்வரமா பேச்சுவார்த்தை நடத்துறீக.


ஹம்.. டேய் தகப்பா நீயும் இங்க தான் இருக்கியா. என்ன ஒரு டிக்கட் மட்டும் குறையுது.

என்ன தகப்பா புருவத்த சுருக்குற அதாம்ல உம்ம அண்ணன் ராகவேந்திரன் பூபதிய இந்த கும்பல்ல காணலயே. நீங்க செய்யற அநியாயத்தை எல்லாம் பார்த்துட்டு, தான் செத்ததாலும் உங்க கூட இருக்க பாவத்துக்கு மோட்சம் கிடைக்காதுனு நினைத்து ஓடி போய்ட்டானா. ஹா.. ஹா.. ஆனா தகப்பா உனக்கு தெரியுமா புவர் கைய்(Poor guy), அவன் இப்போ வாழ்ற வாழ்வே நரகம்தான்ல."


"டேய் யாருகிட்ட பேசுறேன்னு தெரியுமா வார்த்தைய அளந்து பேசுடா."


"உஷ்ஷ்.." என்று உதடுகளில் ஒரு விரலை வைத்து மறு கையை பின்புறமாக கட்டிக்கொண்டு போதையில் தள்ளாடும் உடலோடு சற்றே சரிந்து போலி பவ்யத்தோடு.


" ஆமா, ஆமா ஐயா! நீங்க யாருன்னு ரொம்ப நல்லாவே தெரியும் நீங்கதான் ஊரரிஞ்ச பெரிய பொம்பள பொறுக்கி ஆச்சே."


என்றவன் கஜேந்திரன் காதருகே சற்று குனிந்து.


"கஜேந்திரா உம்ம பொண்டாட்டிக்கு இது தெரியாது இல்லையா.

என்ன முழிக்கிறீர் சண்டியரே! அதாம்ல நீர் பெரிய பெண்பித்தன்கிற விஷயம். அது சரி எப்படி சொல்லுவீர் உம்ம பொண்டாட்டி தான் மினிஸ்டர் வீட்டு அம்மனியாச்சே. நீ யோக்கியனா மட்டும் நடிக்கலனா உம்ம மாமனார் அந்த சட்ட அமைச்சர் சட்டசபையில் உம்ம வேட்டிய உருவிர மாட்டாரு.."


கஜேந்திரன் பல்லை கடித்துக்கொண்டு நிற்கவும் அவனோ தொடர்ந்து..


"ஆனா மவனே எந்த மதுரையில நான்தான் ஆம்பளைன்னு நெஞ்ச நிமித்தி திமிராக திரிறீயோ அதே ஊருக்குள்ள உன் வேட்டியை உருவிட்டு உன்ன ஓடவிட ஒருவன் வருவாண்டா கஜேந்திரா."


என்றவன் தன் ஆள்காட்டி விரலால் மற்ற இருவரையும் சுட்டிக்காட்டி.


"இவங்க மேல வெறி மட்டும் தாண்டா ஆனா மவனே உம்மேல கொலைவெறியோடு இருக்கேன். பெண்ணுங்க மானம் உனக்கு அவ்வளவு இலப்பமா போய்ச்சு இல்லையா."


என சில பல கெட்ட வார்த்தைகளால் திட்டியவன் தன் அறைக்குள் தள்ளாடியபடியே நுழைந்து கொண்டான்..


அதே நேரம் அவனை ஈன்ற அந்த அபலைப் பெண்ணோ, ராட்சச கூட்டத்துக்கு மத்தியில் தன் வாக்கும், தானும் ஒரு பொருட்டல்ல என்பதை அறிந்து, முன்னூறு நாள் தான் சுமந்து ஈன்ற மகவை திருத்தும் வழியோ, அவன் துயர் துடைக்கும் வழியோ தெரியாது கைகளை பிசைந்து கொண்டு தன்னை திரும்பியும் பாராது செல்லும் மகனை நினைத்து இதயத்தில் உதிரம் வடிய உள்ளுக்குள்ளே துடித்து அழுத வண்ணம் தான் பெண்ணாக அவதரித்து இவ் வீட்டுக்குள் வந்த துஷ்ட நிலையை நினைத்து நொந்தவாறு நின்று கொண்டிருந்தார் சரஸ்வதி..


அங்கே மீசையை முறுக்கிவிட்ட ராஜேந்திரனோ..


"என்ன அக்கா அமைதியா இருக்கிறீவ ஒரு வார்த்தை சொல்லுங்க இந்த பயல வெட்டி போட்டுருறோன்"


"யாருடா இவன் சுத்த கூறு கெட்டவனா இருக்கியே. வெட்டி போட்டுவானாமில, வெட்டி.

டேய் ராஜேந்திரா கொஞ்சம் அடங்குடா. அதை செய்ய எனக்கு தெரியாதா என்ன. என்னதான் வீட்டுக்கு அடங்காத பிள்ளைனாலும் அவன் ஆண்பிள்ளைடா நமக்கு பிறகு இந்த வம்சத்தை ஆள வேண்டிய சிங்ககுட்டிடா. மூணு தலைமுறையா ஆண் பிள்ள மூத்ததா பிறந்தும் நிலைக்காம போச்சு.."


என்றவள் முகத்தில் தன் மூத்த ஆண் மகவை எமனுக்கு தாரை வார்த்த வலியின் சுவடு நொடியில் வந்து போனது இருப்பினும் தன் கடினத்துக்குள் அதை மறைத்தவள்..


"ஹம்.. இள ரத்தம் இல்லையா அப்படித்தான் சலம்புவான் அவனுக்கான இழப்பை கடந்து வரும் வரை நாம நேரம் கொடுத்துதான் ஆகணும்." என்றாள்.


ஊரையே அடித்து உலையில் போடுபவள். தன்னை எதிர்ப்பவர்களின் ஒற்றை பார்வையைக் கூட பொறுக்காதவள். தன் வீட்டு பிள்ளை இத்தனை பேசியும் அமைதியாக இருக்க ஒரு காரணம் உண்டு. கஜேந்திரனின் மனைவியோ காலத்தின் கோலத்தால் பிள்ளைப் பேற்றை இழந்தவள். இப்போதைக்கு அவர்கள் குடும்ப பெருமையைக் காக்க இவன் மட்டுமே ஒற்றை ஆண்வாரிசாக உள்ளான். அந்த ஒரு விஷயம் மட்டும் தான் அவள் அமைதியாக இருக்க முக்கிய காரணம்.


"ஹம்.. அது சரி இவன் சோலிய பொறவு பார்த்துக்கலாம். நான் ரொம்ப நாளைக்கப்புறம் என் ராஜாத்தி கூட பேச போறேன் சீக்கிரமா ஆந்திராக்கு போன் போடு தம்பி. எவ்வளவு நாளாச்சு என் தங்க பெண்ணோட பேசி."


என்றவள் கண்களில் அளவில்லாத கனவுகளும், தாய் அன்பும் பெருகியது. பிறந்த குழந்தைக்கு விஷம் கொடுக்க அஞ்சாத பாதகியின் கண்களில் பாசமா? ஆம் நேசம் தான் அவள் மகளை நினைத்தவளின் இதயத்துக்குள் தாய்மை பொங்கியது. வம்சத்தின் மூத்த பெண் வாரிசை சாபமாக கொள்ளும் அதே வம்சம் இளைய பெண் வாரிசை விருத்தி செய்ய வந்த மகாலட்சுமியாக அவர்கள் இனத்தில் போற்றுவார்கள்.


அப்படிப் பிறந்தவள் தான் அவள் மகள். சர்பம் தீண்டி மூத்த மகனைப் பறி கொடுத்தவள் இளைய மகளை பொக்கிஷமாக கொண்டாடினாள். அவள் பெண் தான் இவள் வாழ்க்கையின் அர்த்தமே. மகளுக்காக எதையும் செய்யத் துணிபவள். அது எந்த எல்லை என அறியும்போது வேதநாயகியின் நிலைமை என்ன? அந்த முடிவோ காலத்தின் கையிலா அல்லது காலனின் கையிலா?


"சரி சரி என்ன எல்லோரும் என் வாயை பார்த்துகிட்டு நிக்கிறீவ. போங்க போய் அவங்க அவங்க சோலிய பாருங்க." என்று கம்பீரமாய் மொழிந்தவள்..


"சிவனே போற்றி!"

என்ற வண்ணம் அவ்விடம் விட்டு அகன்றாள்.


அங்கு குடி போதையோடு அறைக்குள் சென்றவனோ தன் முன்னாடி வீற்றிருந்த நிழல் படத்தை கண் கொட்டாது பார்த்தான். அவன் ராஜேந்திரனின் மகன் கதிரவன் பூபதி. ஆறரை அடி ஆணழகன் பார்க்க மூக்கும் முழியுமா தெலுங்கு பட ஹீரோ அல்லு அர்ஜுனை போல் வாட்டசாட்டமாக இருப்பான். அவன் புன்னகையில் தொலைந்து கரைந்து போக காத்திருக்கும் பெண்கள் ஏராளம். ஆனால் அந்த அழகனின் மனமோ இங்கே மலர் மாலையோடு சட்டத்துக்குள் வீற்றிருக்கும் அவன் மன மோகினியிடம் சிறை கொண்டது யார் விதியோ?


அந்த மலர்மாலைகளுக்கு சொந்தக்காரி கதிரவனின் காதல் மனைவி சங்கமித்ரா. கண்களில் கண்ணீர் வடிய நடுங்கிய கை விரலால் அவள் வரிவடிவை அளந்த வண்ணம்…


"மித்ரா மை லவ்! எஸ் ஐ லாஸ்ட் யூ பட் என்னைக்கு இருந்தாலும் அதற்கு நான் பழி தீர்ப்பேன். என் காதல் மனைவியை வேணும்னா கானல் நீராக்கி இருக்கலாம் ஆனால் என் காதலை இல்ல. ஐ லவ் யூ மை ஸ்வீட் ஹார்ட் எவர் அண்ட் எவர்!"


என்றவன் நேத்திரங்களில் நொடியில் ஒரு ஸ்வப்பனம். அதில் வன்மமா, காயமா இல்லை வெறியா அறிந்தவன் அவன் ஒருவனே. அதை அறியும் காலத்தில் குறுசேஷ்த்திர காலத்தை கண்களில் காணுவர்.


……………………………………………


"தாம் தித் தாம்…

தளாங்கு தக தின

தக ததிங்கிணதோம்…

தாம் தித் தாம்…"


என்ற ஜதியை தொடர்ந்து அஞ்சலிஸ்ட முத்திரையை சற்றே தலைக்கு மேலே தூக்கிப் பிடித்து அரை மண்டியில் இருந்த நிலையில் கண்களில் மட்டும் பாவத்தை வெளிப்படுத்தியவள், மாறிய அடுத்த மெட்டுக்கு அந்த தேவலோக ரம்பையின் அளவுக்கு சுழன்று பரதமாடினாள் பிரம்மலோகத்து அழகு சிற்பம்.


கொடியிடையாள், மான்விழி சற்று நீண்டு தடித்த கண் இமைகள், கருகருவென அடர் புருவம், சிறிய எடுப்பான மூக்கு அதில் அவ்வப்போது ஒவ்வொரு நிறத்தில் வீற்றிருக்கும் மூக்குத்தி. நீண்ட கார் கூந்தல். அதில் அசையாத ஆண் மனம் இல்லை எனலாம். ஆனால் உயரம் மட்டும் சரியாக ஐந்தடிக்கு மட்டு பள்ளி பிள்ளையின் உயரம்.


அந்தப் பால் நிலவு முகம். முகம் மட்டுமல்ல மனமும் வெள்ளை நிலவே. கள்ளம் கபடமற்ற தூய மனம் கொண்ட வளர்ந்த குழந்தையவள். தான் நேசிப்பவர்கள் 'அதோ வெள்ளை குயில் பறக்கிறது' என்றால் நம்பும் அளவு எளிமையான மனம்கொண்ட ஏமாளி.. கோபத்தை அறியாள் என்றும் புன்னகைக்கும் இதழ்களை சுமப்பவள். அதற்கு காரணம் அவள் செழித்த மாளிகைக்குள் வாழும் பரம ஏழை.


ஆதரிக்க அன்பு செய்ய யாரும் அருகில் வர மாட்டார்களா என தவிக்கும் அபலை. ஆனால் அப்படிப்பட்ட மங்கையின் மனங்கவர் மன்னவன் அவள் மனதை கவர்ந்து வெகு நாளாயிற்று. இங்கு அவன் ஜெயிக்க தன்னையே அறியாது வரம் கொடுத்த தேவதை..


அவள்தான் ஆண்டாள் பாண்டியன். தேவி வேதநாயகியின் ஆசை மகள்.ராட்சசியின் வயிற்றில் வரம் பெற்ற தேவதை பெண்.


"ஏய் ஆண்டாள்! எந்தா சேப்பு நின்னு பிலிசேதி?(எவ்வளவு நேரம் உன்னை கூப்பிடறது?☺️). பெரிய நாட்டிய தாரகை ஷோபனானு நினைப்பு."


கொஞ்சம் சத்தமாக முணு முணுக்க, முத்து முறல்கள் மின்ன நகைத்தவள்.


"என்ன அஞ்சு ஏன் இவ்வளவு டென்ஷன். நான் நெக்ஸ்ட் பேச்க்கு கிளாஸ் எடுக்க பிராக்டிஸ் பண்ணிட்டு இருந்தேன்."


"பிச்சி! பிச்சி இக்கடக்கி ரண்டி அம்மாயி." (பைத்தியம், பைத்தியம்! இங்க வா பெண்ணே)


அவள் திரு திரு என முழிக்க. தன் தலையிலே அடித்து கொண்டவள்.


"ஏந்டி அம்மாயி இந்த நாட்டியாலயாக்கு நுவ்வு வந்து ஒன்னறை வருஷமாச்சு இதுல நீ தெலுங்கு அப்பாயிக்கு.."


என்றவள் தொடங்கவும் ஆண்டாளின் கெஞ்சல் பார்வையில் பேச்சை நிறுத்தினாள். அதில் அவள் புறம் திரும்பி.


"கோபமா அஞ்சுமா?"


"கோபம் இல்லடி, டென்ஷன். உன் மொபைல்ல லைன் கிடைக்கலைனு ரிசப்சனுக்கு உன் அம்மா போன் செய்து இருக்கிறாங்க. சீக்கிரம் போய் பேசுடி."


கண்கள் மலர புன்னகைத்தவள்.


"என்ன அம்மா லைன்லயா. அதை வந்ததும் சொல்ல வேண்டியதுதானே."

என சினுங்கியவள் கால் சலங்கை கிணுகிணுக்க விரைந்து ஓடினாள். அங்கே போனை எடுத்ததும்.


"ஹலோ அம்மா! எப்படி இருக்கிறீங்க? நல்லா இருக்கிங்களாம்மா? மாமாஸ், அத்தைங்க அப்புறம் வள்ளி அக்கா, காமாட்சி அம்மா எல்லோரும் எப்படி இருக்கிறாங்க?"


சிறிது தயங்கியவள் துளி அமைதிக்கு பின்.


"அத்.. அத்தான் நல்லா இருக்கிறாங்களா?"


"ஹா.. ஹா.. ஹா.. கண்ணு இரு இரு என்ன அவசரம். எம் புள்ளைய அம்மா நலம் விசாரிக்கவே இல்லையே? அதுக்குள்ள நீ எல்லாத்தையும் கேட்டுட்ட. இன்னும் குழந்தையாகவே இருக்கடா. அம்மா நல்லா இருக்கிறேன்டா என் தங்க பொண்ணு எப்படி இருக்கீக?"


"நல்லா இருக்கேன்மா." என்று சிறிது நேரம் தாயோடு அளவளாவியவள்.


" அ..அம்மா"


"அட என்ன கண்ணம்மா குரலுல தயக்கம். எதுவானாலும் கேளுடாம்மா."


"நான் நம்ம ஊருக்கு வரட்டுமாம்மா. உங்க எல்லோரையும் பார்க்கணும் போல இருக்கு. அப்புறம் நம்ம வீடு, ஊரு, தோட்டம் எல்லாத்தையும் ரொம்ப மிஸ் பண்றேன். என்னமோ தெரியல இப்ப எல்லாம் இங்க தனியா இருக்கவே பிடிக்கவில்லை. நானும் ஊட்டி ஹாஸ்டலுக்கு வந்து 18 வருஷம் ஆச்சுமா அங்க இருந்து இப்போ ஆந்திரா நாட்டியாளயா வந்து இரண்டு வருஷம் ஆக போது.


நீங்க தான் என்ன ஊருக்கு வரக்கூடாதுனு சொல்லி இருக்கீங்களே. எனக்கு ஆசையா இருக்காதா வரதுக்கு. ப்ளீஸ்மா இந்த ஹாலிடேக்கு நான் நம்ம ஊருக்கு வரட்டுமா? உங்ககிட்டவும் அங்க வந்து நான் நிறைய பேசணும்."


தன் வீட்டு இளவரசி தன்னிடம் கூட கெஞ்சுவதை பொறுக்க மாட்டாத தாய் மனம் தவித்தது. ஆனாலும் அவள் விழிகளுக்குள் ஓடிய சில நிகழ்வுகளும். அவள் செவிக்குள் நித்தமும் ரீங்காரமிட்ட.


'எங்கள் பெண்ணை அழித்துவிட்டு எந்த உன் மகளை தேவதையாக கொண்டாடுறியோ அதே உன் மகள் இதோ நீ ராணியாக வாழும் இந்த ஊரில் வாழும் போது அவள் காலனும் அவளோடு வாழ்வதை உன் கண்ணால் பார்ப்ப.' வார்த்தைகள் அசரீரியாக அவள் செவியில் நுழைந்து உள்ளத்தில் உரைத்த மறுகணம் உடல் இறுக விகாரமாக மாறிய முகத்தோடு,

சிறிது நேரம் மவுனமாக இருந்தாள்.


"அம்மா!"

"சொல்லுடா தங்க பொண்ணு!"

"ஏன் சைலண்ட் ஆகிட்டிங்க."


"அதெல்லாம் ஒன்னுமில்ல தாராளமா நீ வரலாம் அதுக்கு முன்ன உனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணிறனும்."


என்றவளின் மனம் தன் மகளை தனக்குள் பொத்தி வைக்கும் ஒரே வழி கதிரவனுக்கு மகளை மணமுடிப்பது என அப்போதே திட்ட இட முற்பட்டாள். ஆனால் இது பரமனின் பரம பதமாயிற்றே. மகளோ தாயின் ஆசையில் தானாக வாய் திறந்து.


"அம்மா! எனக்கு ஒரு பிராமிஸ் பண்ணுங்க என் மேரேஜ்ல என் விருப்பம் இல்லாம எதுவும் நீங்க பண்ண கூடாது. நான் இது வரை நீங்க சொன்னது எல்லாமே மறுக்காம செஞ்சேன். இன்னார்ட பொண்ணுக்கிற அங்கீகாரம் இல்லாம வெறும் ஒரு பணக்கார வீட்டு பொண்ணா, டான்ஸ் டீச்சர் ஆண்டாளா தான் வாழ்ந்துட்டு இருக்கேன். என்னோட ஐந்து வயசுல நம்ம வீட்ட விட்டுட்டு வந்தேன் இன்னும் வரை நான் அங்க வரல ஆறு மாசத்துக்கு ஒரு முறை வந்து பார்ப்பிங்க. நீங்க யாருமே என்னை நெருங்கி வந்து வெளியுலகத்துக்கு என்னை யார்னு காட்டிக்கல. அது ஏன் எதுக்குன்னு இன்னும் வரை நான் கேட்டதில்ல இனியும் கேட்க மாட்டேன் ஏன்னா எங்க அம்மா மேல அம்புட்டு நம்பிக்கை அவங்க எது செஞ்சாலும் என் நன்மைக்காக செய்வாங்கன்னு மமதை."


என்றதும் வேதநாயகி நெகிழ்ந்தாள். பதவிக்காக கொலை செய்யும் போது நடுங்காத கைகள் மகளின் அன்பில், அவள் நம்பிக்கையில் அதில் தொக்கி நின்ற தன் மீதான கர்வத்தில் கைகள் நடுங்கியது. கரகத்த குரலில்..


"எஞ்சாமி! என் உசுருடா நீ? கேளு எதுனாலும் கேளு இந்த அம்மா நீ கேட்டு மறுப்பனா? உனக்கு மிஞ்சி தான் என் உசுரும்."


அவளோ தயங்கி, தயங்கியே..

"இப்போ இல்ல அம்மா நான் ஒன்னு எனக்குனு கேட்பேன் அப்போ அதை மறுக்காம, எந்த தடை வந்தாலும் செய்வேன்னு சத்தியம் பண்ணி தாங்க."


தன் தாய் வாக்கு மாற மாட்டாள் என்ற நம்பிக்கையில் பயந்த குரலில் கேட்ட தன் மகளின் தொனியில் சந்தேகம் கொள்ளாது வெகுளிப் பெண் திருமணம் செய்துகொள்ள அஞ்சுகிறாள் என எண்ணியவளாக. அன்று பீஷ்மன் சத்தியவதிக்கு தந்த சத்தியம் சரித்திரம் ஆகியது என்றால் இன்று அதுவே கலியுக அர்ஜுனனின் அம்பாக மாறும் என அறியாது.


"சரிடா ராஜாத்தி உன் மேல சத்தியம். உன் இஷ்டம் இல்லாமல் அம்மா உன் விஷயத்துல இனி எதுவும் செய்யமாட்டேன். இப்போ சந்தோஷமா."


"வெரி ஹாப்பிமா. லவ் யூ மா."

"நானும், நானும்." என்றதும்..


"இன்னோரு விஷயம் அம்மா நான் ஒரு மாசத்துக்கு இங்க இருக்க மாட்டேன் ஆந்திரா உள்ளுக்கு சர்வீஸ் இருக்குனு தொண்டு நிறுவனத்தில சொன்னாங்க நானும் கூட போறேன்மா."


இது அடிக்கடி நடப்பதே. தொழில் சார்ந்த கல்வியை மறுத்து தமிழ் இலக்கியத்தில் பட்ட படிப்பை படித்தவளுக்கு இந்து சமயத்தில் பற்று அதிகம் அதுவே பாரதம் கற்க வைத்தது வளர, வளர இந்து சமய தொண்டு நிறுவனங்களில் இணைந்து போது தொண்டாற்ற செய்தது ஆக இது மாதிரி நேரங்களில் மகள் அழைக்கும் வரை அவளை தொந்தரவு செய்வதில்லை காரணம் அவள் ஆர்வம் அறிந்து அந்த நிலையங்கள் அனைத்தையும் முன்னரே அலசி ஆராய்ந்தவள் அப்படியே விட்டுவிட்டாள் ஆனால் மகள் அதை இன்று தனக்கு சாதகமாகினாள்.


"சரி சாமி போய்ட்டு வா. நேரம் இருக்கும் போது அம்மாவுக்கு கூப்பிடு. நீயும் உடம்ப பார்த்துக்கோமா."


"சரிமா நீங்களும். மறுபடியும் லவ் யூமா."

"நானும்டா." என்றாள் சிரிப்பினூடே.


தன் மகளின் மகிழ்ச்சியில் மகிழ்ந்தவள் அறியவில்லை காதல் புகுந்தால் கூடவே கள்ளமும் புகுந்து கொள்ளும் என.


அங்கே அலைபேசியைவை துண்டித்த ஆண்டாளின் கண்களுக்குள் அவள் கணவாளனை நினைத்து ஆயிரம் கனவுகள் மின்ன இதழ் மந்தகாச புன்னகையில் மின்னியது.


அவள் வயதும் இளமையும் தன்னவன் அன்பில் தொலைந்து போக துடித்து. ஆனால் அவளவன்?


காதல் தந்த கிளர்ச்சியில் பெண்ணவள் கன்னத்தோடு சோர்ந்து விழிகளிலும் செந்நிற கோடுகள் பூத்தன.


அதே நேரம் அங்கே விசாகப்பட்டினத்தில் உள்ள நவீன நகரத்துக்குள் அரைகுறை ஆடையில் அங்கங்களை காட்சியாக்கி நடனமாடும் மங்கையர் முன் கிண்ணத்தை கைகளில் ஏந்தி அவர்களை நோக்கிய பார்வையை சிறிதும் அசையாது பார்த்தபடி, சட்டமாக கர்வத்தின் மொத்த உருவாக அமர்ந்திருந்தான் ஆண்டாளின் ஸ்வப்னங்களின் நாயகன்..


மன்னவன் விழிவீச்சில் சிக்கிய மங்கையரோ குத்தும் பார்வையில் கிறங்கி தம் இன்றைய இரவை அவனோடு இன்பமாக கழிக்க வேண்டுமென வேட்க்கை கொண்டு தங்கள் ஆட்டத்தின் நெழிவு சுழிவை அதிகரித்தனர். காரணம் அந்த பப்பில் எழுதப்படாத ஒரு சட்டம் உண்டு.

இதை சிலர் விரும்பி ஏற்பது வேதனையானது. அதாவது இது போன்ற நடன பெண்களில் எவர் ஒருவர் தம்முன் உள்ள பெரும் புள்ளிகளை கவர்கிறார்களோ அவர்களோடு அன்றய இரவை கழிப்பார்கள்.


அதுபோலவே அந்த நடன மங்கையரும் ஆணவனின் விழிக்குள் காமத்தை கலக்கும் தருணத்தை பார்த்து காத்திருக்களானர். அப்போதும் அவன் பார்வையில் ஒரு மாற்றமும் இல்லை.


ஆனால் கணப்பொழுதில் அவன் விழிகளுக்குள் ஒரு ஸ்வப்பனம் மின்னி மறைந்தது. அது காமமா, காதலா ,கயமையா இல்லை வேட்டையா? அவனைப் படைத்த பிரம்மனே அதை அறியவில்லையோ..


நான் இரவுகளை
கொள்ளையிடும் ஸ்வப்பனம் அல்ல..
இரையை தேடும் ஸ்வப்பனம்!

நின் ஸ்வப்பனங்கள்.


 
Last edited:

admin

Administrator
Staff member
ஹாய் டியர் ஆல்..
யூடி கரெக்ஷன் பார்க்களை மைண்ட்ல தோணுன விஷயங்களை பட்டு, பட்டுனு டைப் பண்ணிட்டேன். உங்க கருத்தை பகிர்ந்துகொள்ளுங்க. கொஞ்சம் தெலுங்கை சேர்க்க இருந்ததுனால இந்த தாமதம். அதுக்கு சரியான இடத்தில் சேர்க்க வேண்டி பொறுமை தேவைபட்டது. என்ன ஆனாலும் கிழமைல 3 யூடி கட்டாயம் உண்டு..
Happy reading

அத்தியாயம் 4


காதைப் பிளக்கும் இசைக்கும், வெறிபிடித்த களியாட்ட உணர்வுகளுக்கு மத்தியில் அமர்ந்திருந்தான் அவன். கருப்பு நிற முழுக் கை வைத்த ஷர்ட்டை கை முட்டிவரை மடித்து விட்ட தோற்றமோ முறுக்கேறிய புஜங்களை மேலும் விடைத்து காட்டிக்கொண்டு இருந்தது. நெறித்த புருவங்களுக்கிடையே விரிந்த நீண்ட மூக்கு, சற்றே பெரிய உணர்ச்சிகளைப் பிரதிபலிக்காத முட்டை கண்கள், இறுகிய உதட்டின் மேலே முறுக்கி விடப்பட்ட அடர் மீசை, ஒட்ட நறுக்கிய தலைமயிர், உடற்பயிற்சியில் நன்கு புடைத்து திரண்ட நரம்போடிய ஒற்றைக்கையின் மணிக்கட்டில் கருப்புநிற லெதர் வாட்ச், வலக்கையில் ஏற்றி விட்ட ஐம்பொன் காப்பு, வீர திராவிடர்களுக்கே உரிய நிறத்தை சொந்தமாக மேனி எங்கும் பூசிக்கொள்ள சுழலும் அந்த இருக்கையில் அமர்ந்தவாறு கவர்ச்சி மாதுக்களின் முன் கிண்ணத்தை கையில் ஏந்தி கர்வத்தின் சாயலாக அமர்ந்திருந்தான் அவன்.


அவன் ருத்ரன் நாயூடு ஐபிஸ். அவனுக்கு இன்னோரு பெயர் உண்டு 'டேஞ்சர் ஆப் ஆட்டிட்யூட்ஸ்.' அவன் பெயரில், அவன் ஆட்டிட்யூட்டில், அவன் மேனாரிசங்களில் அலாதி மமதை கொண்டவன். அந்த மமதை அவனை எந்த இடத்திலும் சரிய வைத்ததில்லை. 34 வயதில் அவன் சாதனைகள் அபாரம் அதுவே அவனை டெபுடி கமிஷனர் எனும் பதவி வரை உயர்த்தி இருக்கிறது..


சுந்தர தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட பல மக்களை சுமந்து வாழும் ஆந்திராவின் விறுவிறுப்பான வர்த்தக நகரத்தில் அமைந்துள்ள உயர்ரக பப் அங்கே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என எதற்கும் பஞ்சமில்லை. இதன் உரிமையாளர் பிரபல அமைச்சரின் மைத்துனன்.


16 வயதில் அடிதடி கட்டப்பஞ்சாயத்து என தொடங்கி 20 வயதில் கொலையுமாக அரசியல் உலகில் கால்பதித்த அக்மார்க் அரசியல் தாதா. பல பிரபல புள்ளிகளின் ஆதரவில் எம்.எல்.ஏ, அமைச்சர் என பதவி உயர்வு பெற, பிற்காலத்தில் தன்கீழ் செயல்களுக்கு தத்துப் பிள்ளையாக தன் மனையாளின் தமையனுக்கு வாகை சூடினான். அந்த கடைந்தெடுத்த பொறுக்கியின் கைவண்ணத்தில் உருவானது தான் இந்த 'ராக் கிட் பப்'.


மதுவா? இங்கு விதவிதமாக உண்டு. போதையா? அதுவும் உயர் ரக போதை வஸ்துக்கள் அளவின்றி உண்டு. மாதுவா? இந்தியாவின் அத்தனை மாநிலங்களிலும் உள்ள பெண்களை நபருக்கு ஏற்ப சப்ளை செய்யும் கேடுகெட்ட செயலும் இங்குண்டு. இதெல்லாம் பணக்கார வர்க்கத்தினருக்கு ஜஸ்ட் எ ஃபன் எனும் அளவில் காணப்பட்டது. பணமுதலைகள் வயது வித்தியாசமின்றி தன் உணர்வுகளை குப்பையாக கொட்ட இங்கே குவிந்திருக்கும் கோலம் ஏராளம்.


இதை நடத்துபவன் சனா செட்டி. கேடுகெட்டவன் போதை உலகின் நிழல் தாதா. பெரும் புள்ளிகளுக்கு களியாட்டங்களை அறிமுகப்படுத்துகிறேன் எனும் போலி முகமூடிக்குள் இந்தியாவின் வளர்ந்து வரும் சமூகத்திற்கு கேடு விளைவிக்கும் போதை பொருட்களை பள்ளி தொடங்கி கல்லூரியிலிருந்து பிரபல தனியார் துறைகள் வரை சப்ளை செய்து வருகிறான். அப்படிப்பட்டவன் இடத்தில் தான் நம் நாயகன் வியூகம் அமைந்திருகக்கிறான். இங்கே கலந்து இன்புற வந்தானா அல்லது எமனாக வந்தானா அது அவன் மனம் அறிந்தது.


மயக்கும் மான் விழிகள் அவனை வட்டமிட ஒரு பக்க மீசையை நீவியவன் நொடியில் ஒற்றை புருவத்தை ஏற்றி இருக்க மப்டியில் இருத்தவர்கள் கண்டுகொண்டனர் புலி தன் இரையை கட்டம் கட்டிவிட்டதென, அவர்கள் அலர்ட் ஆகுவதற்கு ஒரு செக்கனுக்கு முன்னே அமர்ந்திருந்த சூழல் நாற்காலியில் சுழன்று எழுந்தவன் அதே வேகத்தில் தன்னை கடந்து சென்றவனின் குறுக்கில் ஒரே எத்து, அதே வேகத்தில் அவனை தாக்க வந்த சனா செட்டியின் சகாக்களை தான் கற்ற மாசிலாஷில் நொடியில் விழ வைத்தவன் பின் இடுப்பில் செருக்கியிருந்த கன்னை எடுத்து லோட் செய்யவும் அவனின் அசிஸ்டன் ஏசிபி கர்ணாவுக்கு அல்லுவிட்டது. பின்னே கன்னை லோட் செய்துவிட்டால் காவு வாங்காது அதை இறக்க மாட்டானே. அவன் மனமோ..


'இவர் இன்னும் சற்று பொறுமை காத்து இருக்கலாமே. கலவரமின்றி கைது செய்திருக்கலாமோ.' என்று நினைக்க ருத்ரன் எண்ணங்களுக்கு அப்பாற்பட்டவன். சூனியங்களை கடந்தவன் ஆயிற்றே. இவன் எண்ணி முடிக்கும் முன் மூன்று அடியாட்களை பட், பட் என சுட்டவன் சனா ஷெட்டியை பிளந்து கட்டி மீண்டும் சுழல் நாற்காலியில் அமர்ந்து, அவன் ஒற்றைக் காலை சனாவின் கழுத்தில் வைத்து அழுத்தியவன்.


"செப்புரா!" என்று உறும.

கர்ணாவுக்கு கதி கலங்கியது. போன மாதம் தான் இரண்டு என்கவுன்டரில் மனித உரிமை வரை போய் வந்தான். அப்போதும் இந்த ஆக்ரோஷம். 'மீண்டுமா?' என நினைக்கையில் நெஞ்சில் நீர் வற்றியது.


"போன்ல ஏமி செப்பித்துவோ அதி இப்புடு செப்புரா?(போன்ல என்ன சொன்னியோ அத இப்போ சொல்லுடா)" மீண்டும் உறும."


இருள் விளக்கி காண அப்போதே வந்திருப்பது தெலுங்கானா புலி என்பதை கண்டுகொண்டவன் சப்த நாடியும் ஒடுங்க அவன் வாயோ..

"நாயு.. நாயுடுகாரு." என தந்தியடிக்கவும். தன் ஐம்பொன் காப்பை வலிய கையில் இறுக்கியவன், விரல்கள் மீசையை முறுக்கி விட்டு அவன் இதழ்களின் அசைவில் கர்வம்


"ஹம்.. ருத்ரன் நாயுடு ஐபிஸ்."


என தெரித்து விழ, இரு விரல்களில் கன்னை ஒரு சுழட்டு சுழட்டினான். இப்போது சனா செட்டியின் மனம் அடித்து கூறியது தானே அவனது முப்பதாவது என்கவுண்டர் டெத் என. காரணம் எதிரியின் முன் கன்னை இரு விரலில் சுழட்டி ஒற்றை புருவம் ஏற்றி பார்க்கும் அவன் ஆட்டிட்யூட் கண்டிப்பாக காவு வாங்கும் என ருத்ரனின் ருத்ரம் அறிந்தவர்கள் சொல்லி கேட்டதுண்டு.


"ஹம்.. சமாதானம் காவாலி. (பதில் வேணும்)"

"டீ.. டீ..சி.." அவன் திக்க.


"நோர் தெருசேவா லேதன்ட்டே நீ நோட்டுல துப்பாக்கி பெட்டேதா.(வாய திறகிறியா இல்லை கன்ன வாயில விடட்ட.)"


அதில் சற்றே மூண்ட கோபத்தில்.

"டீசி! நான் யாருன்னு தெரியாம ரொம்ப பண்ற."

என்றதும் அவன் கழுத்தில் காலை அழுத்த, அவனோ மூச்சு விடவே திணறியாவனாக.


"சா.. சார்." அலறவும்.

"ஹம்.. சாக போறம்னதும் மரியாத தானா வருது. தொங்கனா கொடுக்கா! போலீஸ் என்ன உனக்கு மாமா வேலை பார்கிற மாமா பயனு நினைச்சியா?"


"டீசி! நேநு மந்திரி மச்சான்.(நான்)."


"ஹம்.. அடுத்து உன் மாமனோட வெட்டிய தான் உருவ போறேன்."


"ஓத்தூ டீசி. ரொம்ப தப்பா போறீங்க.(ஓத்தூ டீசி - வேணாம் டீசி)"


"அவுன்னா? (அப்படியா)"

என்றவன் நொடியும் தாமதிக்காது அவன் ஆண் உறுப்பில் சுட்டு விட்டு அவன் அலறலையும் பொருட்படுத்தாது.


"உன் முடிய கூட தொட முடியாது போலீஸ்*** சொன்னல."

என்றவன் உதட்டை பிதுக்கி.


"சொன்ன சொல்ல காப்பாத்த, பெட்டர் ட்ரை நெஸ்க்ஸ் ஜென்மம்."

என்றவன் மேலும் மூன்று குண்டுகளில் அவன் அத்தியாயத்தை முடித்து வைத்து, ஆசுவாசமாக சாய்த்து அமர இங்கு கர்ணாவுக்கு நடுக்கம் பிறந்தது. போன முறையே, தடுக்காமல் என்ன செய்தனு கமிஷனர் தன்னிடம் அல்லாவா காய்ந்தார். அவனோ பெரும் பதட்டதோடு.


"சார்!"

"ஹம்.. செப்புரா." எச்சிலை முழுங்கிவிட்டு.

"கொஞ்சம் பொறுமையா இருந்து இருக்கலாமே." அவனின் பார்வையில் வாயை கப்பென்று மூடிக்கொள்ள. ருத்ரனோ..


"நெக்ஸ்ட் ஏசி."

"சார்!"

"சொல்லி முடி மேன்." 'ஐயோ தெரிஞ்சே வாய கொடுத்து மாட்டிக்கிட்டமோ.'


"அ.. அதி.(அது)" அவன் திணற மீண்டும் ஒரு முறைப்பு.


"இல்லை சார் மந்திரி மச்சான் இப்படியே விட்டுற மாட்டாங்க நாம என்கவுண்டர் பண்ணாம கஸ்டடில எடுத்திருக்கலாமே."


தயங்கியே என்றாலும் சொல்லிவிட்டான். அவனோ அப்படியா எனும் அலட்சிய பாவனையோடு.


"கர்ணா!" குரல் கர்ஜனையாக வர.


"டேக் தெம் அவுட்."

"சார்!"புரியாமல் அழைக்கவும். தனக்கு நேர் எதிரிலிருந்த அறைக்கதவை விழிகளில் காட்டி.


"அந்த ரூம்ல இருக்கவங்களை வெளிய கொண்டு வாங்க."


என்றதும் நொடியில் விரைந்தான்.அவன் மனமோ 'எப்படி மறந்தேன். காரணம் இல்லாம காரியம் செய்றவர் இல்லையே அவரு. சம் திங் ராங்.' தன்னை தானே கடிந்து கொண்டு, அந்த அறைக்குள் சென்றவன் நெஞ்சம் கலங்கி நின்றான். பள்ளி சீருடை ஆங்காங்கே கிழிய கை கால்கள் கட்ட பட்டு வாயில் பிளாஸ்ரோடு நின்ற இரு பெண் பிள்ளைகளை கண்டதும் பெண் சகோதரிகளோடு பிறந்தவன் நெஞ்சம் குருதி வடித்தது. விரைந்து அவர்களை விடுவித்தவன் மப்டியில் இருந்த பெண் காவலாளிகளோடு அவர்களை கை தாங்களாக அழைத்து வந்து, ருத்ரனின் கண் அசைவில் சேப்பாக அப்புற படுத்தி விட்டு ருத்ரனிடம் வந்தவன்.


"சார்!" என்று ஆரம்பிக்கவும் அவனை தடுத்தவன்.


"என்னோட துப்பாக்கி என் ஆணையை தவிர எவனோட ஆணைக்கும் அடிபணியாது. இது அர்ஜுனனோட குறி இல்ல அபிமன்யுவோட குறி. காட் இட்."


முகம் இறுக கூறியவன் வெளியே அகல. அன்றும் இன்றும் அவனில் தீராத பிரம்மிப்போடு மீதி வேலைகளை கவனிக்க, வெளியே வந்தவனோ கமிஷ்னரை கண்டு விறைப்பாக சலுட்டடிக்க. அவரோ முடிந்த மட்டும் அவனை முறைத்து மிக கடுமையாக.


"ஏந்டி இதி?(என்ன இது)"

"என்கவுன்டர் டெத் சார்."


"ருத்ரன் அது தெரியுது இப்போ அதுக்கான அவசியம் என்னனு கேட்கிறேன்."


"அல்ரெடி டிஸ்போஸ் செய்யவேண்டியவன் தான் அத முன்னமே செய்திருந்தா சிலதை அவோய்ட் செய்து இருக்கலாம்."


அங்கே அலங்கோலமாக காட்சி தந்த இரு பள்ளி பிள்ளைகளும் விழிகளுக்குள் உலா வர அவன் தாடை இறுகி புடைக்க, விழிகளில் சிவப்பு கோடுகள். அவன் கோபத்தின் நியாயத்தை உணர்ந்தாலும் சட்டம் என்று ஒன்று உண்டல்லவா..


"என்ன வேணுனாலும் இருக்கலாம் ருத்ரன் அதுக்குன்னு இப்படியா. அல்ரெடி நீங்க கிளீயர் செய்ய வேண்டிய விசாரணை கமிஷன்ஸ் இருக்கும் போது இது தேவை தானா. அதுவும் இவன் மந்திரியோட மச்சான் தேவையில்லாத பொலிட்டிகல் இஸ்சுஸ் ஃபோஸ் பண்ண வேண்டி வரும்."


"ஓகே சார் ஐம் ரெடி."


"ஏந்டி?(என்ன)"


"அதான் சார் பொலிட்டிகல் இஸ்ஸுவை ஃபேஸ் செய்ய ரெடினு சொன்னேன்."


கமிஷனர் பிரேமுக்கோ மிக கடுப்பாக வந்தது எந்த கேள்விக்கும் வளைந்து கொடுக்காத அவன் அலட்சியத்தில்.


"என்ன ஆட்டிட்யூட் ருத்ரன் இது. ஒரு போலீஸ் ஆபிசர்க்கு இவ்வளவு ஆட்டிட்யூட் இருக்க கூடாது அதுவும் ஆயர் ஆபிசர்ங்கிற பயமில்லாம இப்படி தான் பதில் சொல்லுவிங்களா."


ஒற்றை புருவம் மேலே ஏற.. "ஆயர் ஆபிசர்க்கு கொடுக்க வேண்டிய ரெஸ்பெக்ட்ட கொடுக்க எனக்கு நல்லாவே தெரியும் சார். அதுல தவிரலைன்னு நினைக்கிறேன்."


அவனோ அவரை ஒரு பார்வை பார்க்க. எப்படி இல்லை என்பார். நின்ற நிலையிலிருந்து தனக்கு அளிக்கும் மதிப்பில் வரை ஒரு துளி மாற்றமும் இல்லையே. அவரோ ஆமாம் என்பதாக தலையசைக்க..


"டூட்டில டெடிகேஷன் ரெஸ்பான்ஸ் மட்டும் இருந்தா போதும்னு நினைக்கிறேன் சார். அண்ட் மை ஆட்டிட்யூட்ஸ் அதை சேஞ்ச் பண்ணனும்னு அவசியம் இல்லை."


அந்த ஆட்டிட்யூட் என்பதில் அழுத்தம் கொடுத்தவன்.

"திஸ் இஸ் ருத்ரன் நாயுடு ஐபிஎஸ்."

உணர்ச்சித் துடைத்த முகத்தோடு கமிஷனரின் கண்களை நேருக்கு நேர் பார்த்து..


"இன்னைக்கி மந்திரி மச்சானுக்கு பாட கட்டி இருக்கேன். நாளைக்கு அந்த மந்திரியையே டிரெஸ்ஸ உருவிட்டு ஓட விடுறேன்."


"ப்ளடி மாமா பய**" மெலிதாக வாய்க்குள் வண்ணம் வண்ணமாக வார்த்தைகள் அரைப்படுவதை சிரமத்தோடு அடக்கியவன்.


"இந்த ஐபிஎஸ்ஸோட யூனிபார்மில் கை வைப்பேன்னு சொன்ன அந்த மந்திரியை இந்த ஹைதராபாத் சிட்டிக்குள்ள ஜட்டியோட ஓட விடுறது தான் நாளையோட ஹைலைட் நியூஸ். சோ ரெடி பார் தட் கன்சர்ன் சார்.."


என்றவன் தன் ஆறடிக்கும் நிமிர்ந்து நின்று விரைப்பாக சல்யூட்டை வைத்து ஷர்ட்டின் பின்பக்கம் கொலுவிருந்த கண்ணாடியை எடுத்து கண்களில் மாட்டியவன் நிறுத்தி வைத்திருந்த ஜிபில் ஒற்றை காலை வைத்து பாய்ந்து ஏறினான்..

அதுவரையும் அவனிலிருந்து பார்வையை எடுக்காமலிருந்தவர் இதழ்களில் ஒரு கர்வ புன்னகை. மிக கம்பீரமாக மீசையை முறுக்கிக் கொண்டார். அவருடைய உற்ற தோழன் கேனல் ரவீந்திர நாயுடுவின் மகன் என்பதைவிட தன்னுடைய சிஷ்யன் அவன் என்பதில் அவருக்கு அலாதி கர்வம் உண்டு. அன்று துரோணரின் இதழ்களில் 'என் சீடன் அர்ஜுனன்' என்று உச்சரிக்கையில் தோன்றிய அதே குருவின் கர்வம் துளியும் மாறாது சற்று சத்தமாக 'தெலுங்கானா புலி ருத்ரன் ஐபிஎஸ்.' என்று மிக மிக கர்வமாக இதழல்களை அசைந்தது கூறிக்கொண்டார்.


இங்கே ஜீப்பில் பயணம் செய்துகொண்டிருந்தவன் தொலைபேசி அழைப்பில் அதை எடுத்துப் பார்க்க வந்த அழைப்பை நினைத்து தேகம் சூடாக, உடல் இறுகியது. அதை ஆன்சர் செய்யாது அவன் கட் செய்யவும், சிறிது நேரத்தில் மீண்டும் வந்த அழைப்பை எடுத்தவன், 'காலிங் அம்மா' என்றதும் நொடியும் தாமதிக்காது அலைபேசியை ஏற்று காதில் வைத்தான். பதைப்பதைபோடு மகனுக்கு அழைத்த சாரதா தேவி தான் பேசுவதற்கு முதலே ருத்ரனின்..


"அம்மா நேநு க்ஷேமங்கா உந்நாநு.(அம்மா நான் நல்லா இருக்கேன்)"


என்ற வார்த்தையில் சற்றே ஆசுவாசமானவர்.


"பங்காரம் எல்லாம் ஓகே தானே." தாயின் அந்த அழைப்பில் சற்று நெளிய தொடங்கிய இதழ்களை இறுக்கிக்கொண்டான். ருத்ரன், அவன் இசைவது, அசைவது இரண்டும் தந்தைக்குப் பின் அவன் தாயிடம் மட்டுமே. தாய் ஒரு துளி கண்ணீரையும் சிந்துவதை விரும்பாதவன். அதனாலேயே டிவி நியூஸை பார்த்து தனக்கு என்னமோ என பதறியிருப்பார் எனும் யூகத்தில், 'கண்டேன் சீதையை' என்பதை போல் ஒற்றை வார்த்தையில் அன்னையின் அலைப்புறுதலை நீக்கினான். அன்னையின் மனதை அவர் கூறாது கண்டு கொள்பவன் ஏனோ மனையாளின் மன எண்ணங்களை பிற்காலத்தில் கணித்திருக்கலாம்.


"ருத்ரா என்ன அமைதியா இருக்க எல்லாம் ஓகே தானே."


"எஸ், எஸ்மா. எல்லாம் ஓகே தான். நோ வோரிஸ். இப்போ இங்க கெஸ்ட் ஹவுஸில் தங்குறேன் மார்னிங் உங்களை பார்க்க வரேன்மா."


"ஹம்.. சரி பங்காரம்."


என்றதோடு அன்னையின் அழைப்பு துண்டிக்கப்படவும். விழிகளை மூடி ஆர்பரிக்கும் தன் உணர்வுகளை அவன் ஒரு நொடி அடக்கவும் மீண்டும் அழைப்பு. அந்த அழைப்பை எடுத்துப் பார்த்தவனின் உடலில் தன்னை போல் ஒரு இறுக்கம் மீண்டும், மீண்டும் ஓடி மறைய தொலைபேசி அழைப்பை பார்த்தவன் இதழ்கள் மிகக்கடுமையாக.. 'ஆண்டாள் பாண்டியன்' என அசைந்தது.


அழைப்பு முடியும்வரை அதில் பார்வையை அகற்றாதவன் ஆழைப்பு ஓய்ந்ததும் இருளை வெறிக்க தொடங்கினான்.


அந்த இருட்டுக்குள் ஒரு ஸ்வப்பனம் ஓடி ஒளிந்தது. கண்ணீரின் தடங்களோடு, காயங்களோடு, கயவர்களின் கயமைகளோடு. காலங்கள் கடந்தாலும் நீண்டுகொண்டே சென்ற வலி நிறைந்த ஸ்வப்பனம் அது.


நின் ஸ்வப்பனம்.
 
Last edited:

admin

Administrator
Staff member
அத்தியாயம் - 05


1980களில்..


கரும் இருளை கிழித்துக்கொண்டும் கிட்ட தட்ட பத்து பயணிகளை சுமந்து கொண்டும், உள்ளம் நிறைய பயமும், தவிப்பும், உயிரை காத்து கொள்ள வேண்டிய வெறியுமாக விரிந்த சாகரத்தில் ஒரு படகு விரைந்து வந்தது. அமைதி கொள்ளும் இந்து சமுத்திரம் இன்று ஏனோ வழமையை விட ஆரவாரமாக ஆர்பாரித்தது.


"ஐயோ! எண்ட அம்மா முடியுதில்லையே."


நிறை மாத கர்ப்பிணி பிரசவ வலியில் துடித்து அலற தொடங்கிவிட்டாள். அப்போது படகை செலுத்தும் அவள் தந்தையோ.


"எண்ட மகளே! கொஞ்சம் பொறுத்துகொள் அம்மா. அப்பா சீக்கிரம் வெல்லத்த ஓட்டுறேன். சுமதி அக்கா எண்ட பிள்ளைய ஒருக்கா பாருங்களேன் கதறுறாள் அக்கா."


"துரையப்பா! முடிஞ்சா சீக்கிரம் போய்சேருவம் நான் நினைக்கிறேன் அவக்கு பிள்ளை பிறக்க போகுது எண்டு. நாங்கள் பிரசவம் பார்த்து போடுவம் ஆனால் ஏதும் அந்தரம்(பிரச்சனை) எண்டால் நடுகடலுல நீண்டு கொண்டு என்ன செய்றது எண்டு தான் யோசனையா கிடக்கு."


செவிபறையை கிழித்து செல்லும் காற்றை எதிர்க்கும் அழுகை நிறைந்த அவலத்தை காலம், காலமாக தான் சுவீகரிக்க போவதை ஒரு வேளை அந்த இந்து சமுத்திரம் அறிந்திருக்காதோ என்னமோ..


"எண்ட கந்தா! எங்களுக்கு மட்டுமேன் இப்படி ஒரு விதி அக்கா. எங்கட சனங்கள் ஆருக்கு என்ன பிழை செய்தினம். தமிழன் எண்டதுக்காக சொந்த நாட்டுக்குள்ள ஒரு பிடி இடமில்லாம அகதியா போக வேண்டிய நிலைம."


அவர் தங்கள் நிலையை நொந்து அழவும் கூட இருந்தவர்களும் அவருக்கு இணையாக அந்த கர்ப்பிணி பெண்ணோடு சேர்ந்து கதற தொடங்கினர். இலங்கையில் 1983ம் ஆண்டில் தமிழர்களுக்கு எதிரான வன்செயளின் உக்கிரம் தமிழ் மக்களின் உயிரை காவு வாங்கி தாகம் தணிப்பதற்கு முன், மீண்டும் சிங்கள அராஜகம் தலை தூக்கி யுத்த முனையில் தமிழ் மக்களை நிறுத்தி வைத்து குருதி பார்க்க அதன் ஆக்கிரோஷம் தாங்காது தஞ்சம் புகும் அப்பாவி மக்களில் அவர்களும் சிலர்.


"ஆ.. அம்மா.. வலி பொறுக்க ஏலுது இல்லை மாமி."


என்றவள் தந்தை புறம் திரும்பி.


"கரையாதிங்கோ(அழாதிங்க) அப்பா இதான் எண்ட விதி எண்டால் நடக்கிறது நடக்கட்டும். ஆஆ.. ஹம்.. எங்கட சனங்களை காத்து வாழ வைத்த இந்த ஆழி தாய்க்குள்ள அழிஞ்சி போகணும் எண்டாலும் போவமேன் ஏன் அஞ்சனும், அகதியா போய் வேணும் அப்பா."


"வேணாம் அம்மா ஒன்னும் பறையாத.(சொல்லாத) இது பயம் இல்லையம்மா நாங்கள் குண்டு சத்தத்தோடு வாழ்ந்த மனுசர். உயிருக்கு பயந்துகொண்டு பதுங்கிறது இல்லை, இது நம்மட சந்ததியாவது துப்பாக்கி முனை தவிர்த்து வாழ வைக்க வேண்டும் எண்ட வெறியம்மா."


என்றவர் அழுக..


"என்ன விஜயா இது, கணக்க யோசியாத. நாங்கள் இப்போ ஸ்ரீலங்கா ராணுவத்திண்ட போடர கடந்து இந்திய எல்லைக்குள்ள வந்துட்டம் நீ கலங்காத."


என்றவருக்கு நெஞ்சில் நீர் வற்றியது. காரணம் பனிக்குடம் உடைந்து விட்டது பிள்ளையை வெளியே தள்ளும் முயற்சியில் தன் தம்பியின் மகள் துடிக்கிறாள். கூட இருந்த தன் தம்பியை தவிர்த்து மற்றவர்கள் பெண்கள் ஆயினும் நெஞ்சு நடுங்கிற்று.


"என்ன அக்கா பிள்ள இப்படி கத்துறாள்."


"துரை நீ கொஞ்சம் ராமேஸ்வர போடர நெருங்கி வந்துட்டமா எண்டு பாருமேன்."


"ஓம் அக்கா ராமேஸ்வரம் அருகில வந்துட்டம் சரியா ஒரு மணி நேரத்துல போகலாம் எண்டு நினைக்கிறேன் ஆனால் இந்திய ராணுவம் பிடிச்சதெண்டால் என்ன பண்ணுறது எண்டு நினைக்கேக்க விசரா கிடக்கு அக்கா."


"அந்த நல்லூர் கந்தன வேண்டிக்கோ துரை. விஜயாவிண்ட பிள்ளை சுகமா வர வேணுமெண்டு."


தன் அக்காவின் தொனியில்.


"அக்கா!" என்றவர் பயத்தில் துடிக்க.

"அழாத துரை தைரியமா இரும்." மகளோ தந்தையின் கண்ணீரை பொறுக்க மாட்டாதவளாக அத்தனை வலியிலும்.


"அப்ப.. அப்.. அப்பா." வேதனையில் முனங்க.


"அம்மாடி ஒன்னும் கதையாத நான் இருக்கனான்."

"ஹூம்.." பலமாக மறுத்தவள்.


"ஆ..அப்பா நீங்கள் நெஞ்சு வறுத்தகாரர் எனக்கெண்டு நீங்க மட்டும் தான் இருக்கியல். நாங்கள் சாகுறது தான் விதியெண்டால் இந்த கடலுல விழுந்து சாகுவம் அப்பா."


அவள் பார்வையோ செல்லடியில் தன்னை தப்பி பிழைக்க வைக்க தந்தை வாங்கிய காயங்களிலும், உடலில் பெருகிய குருதியிலும் வேதனையோடு பதிய. மகளின் வலி இந்த சாகரத்தை விட பெரிது என அறிவார் அவள் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவள் இழந்தது ஒரு பொக்கிஷத்தை அல்லவா.


"விஜயா அபசகுணமா கதையாத. ஏன் கடலுக்குல விழுந்து சாகனும் அதுக்காகவா இத்தனை போராட்டம் கண்டனான். நீயும் நானும் வாழுறமோ இல்லையோ. மகளே! உண்ட வயித்துக்குள்ள இருக்க நெடுஞ்செழியனோட பிள்ள வாழனும்.


நெடுஞ்செழியன் ஒண்டும் நம்மள போல சாதாரண பிள்ள இல்ல அவன் ஒரு சிறந்த வீரன். இனத்துக்காக, மொழிக்கா முன்னூறு மனுசர காப்பாத்த வேண்டி மரணம் எண்டு தெரிஞ்சும் உயிரை கொடுத்த போராளி. எண்ட மருமகன் நெடுஞ்செழியனோட வம்சத்தை அழிய விட மாட்டனான். நெடுஞ்செழியனோட ரத்தம் உலகத்தில எங்கயோ ஒரு மூலையில வாழனும் அதுக்காக எப்பாடு பட்டாவது இந்த அப்பா உன்ன காப்பாத்துவன்."


"ஆ.. ஆ! எண்ட மனுஷன் தண்ட மனுஷிய தனியா போராட விட்டுட்டு போய்ட்டார் அப்பா. முடியலை இந்த வலிய தாங்க ஏலுது இல்லை."

அவள் வாய் விட்டு குமுற.


"விஜயா பிள்ள அழாதயேன். இந்த மாமி சொல்றத கேளுடா இன்னும் கொஞ்சம் முயற்சி செய்யம்மா பிள்ள வெளிய வந்துரும்."


"ஓம் விஜயா! தளராத உண்ட மனுஷன் நெடுஞ்செழியன் மாதிரி ஒரு அற்புதமான ஆளுண்ட வாரிசோட உயிர் உண்ட கைல தான் கிடக்கு. முயலும்மா."


விஜயாவின் நெஞ்சத்தில் அந்த ஆழ்கடலை விட ஆழமான நேசத்தோடு ஆஜானுபாகுவான தன் ஆறடி ஆண் மகனின் கம்பீர தோற்றம் பிரகாசித்து. மீசையை முறுக்கி கன்னத்தில் குழி விழ சிரிக்கும் சிரிப்பு, கோபம் கொண்டு ஏறி இறங்கும் புருவம், குத்தீட்டியாக குத்தி கிழிக்கும் பார்வை, தன்னிடம் மயங்கும் போது விழிகளில் தோன்றும் மின்னல், கையில் உள்ள தடித்த சிலம்பு காப்பை முறுக்கி விட்டு நான் நெடுஞ்செழியன்டா என்று மார்தட்டும் அடிபணியாத வீரம் என அத்தனையையும் ஒன்றன் பின் ஒன்றாக விழிகளில் நிறுத்தியவள் விழி வழி நெஞ்சமெல்லாம் அவன் நினைவுகளை மட்டுமே நிரப்பி, எப்பாடு பட்டேனும் தன்னவன் உயிர் அணுவுக்கு ஜனனம் கொடுக்க வேண்டி அந்த அண்டமும், ஆழியும் கிடுகிடுக்க..


"ஆஆஆ.. அம்மா.."

என்று ஓங்கி ஒலித்த அங்காரா சத்தை தொடர்ந்து ஆழ்கடலில் ஒரு அதிசயத்தை நிகழ்த்தினாள்.


அவள் ஓங்காரத்தில் நடுங்கியவர்கள் "ம்ம்மா.." என்ற குழந்தையின் அழுகையில் நெஞ்செல்லாம் சாமரம் வீச நெகிழ்ந்து போயினர்.

துரையப்பர் இதழோ "நெடுஞ்செழியன் சாகவில்லை சரித்திரம் ஆகிவிட்டான் மீண்டும் அவன் சரித்திரத்துக்கே உயிர் கொடுத்து விட்டான்."

என ஆர்பரிக்கும் கடலை போல அசைந்தது..


அதேநேரம், வீட்டில் அணியும் சாதாரண காட்டன் புடவை, வாரி பின்னலிட்ட ஜடை, அறிவின் தீட்சண்யம் மிக்க இரு நேத்திரங்கள் அதை மறைக்க அவள் அணிந்திருந்த பார்வை கண்ணாடி. அவளின் தெள்ளிய அறிவை சிதறாமல் படம்பிடித்த அகன்ற நுதல், இரு புருவ மத்தியில் வீற்றிருக்கும் சிவப்பு பொட்டு என ஜன்னலோரம் சாய்ந்து நின்று கொண்டு ஒரு கடுமையான சூழலைக் கடக்கும் முகபாவனையை காட்டும் அவள்முகத்திற்கு குறையாது பேனா ஏந்திய கைகள் வெள்ளை ஏட்டில் சரித்திரம் படைத்துக் கொண்டிறிக்க அவள் இடையோடு ஊர்ந்த இரு வலிய கரங்கள் அவளை பின் புறமாக தன்னை நோக்கி இறுக்கி கொள்ள இத்தனை நேரம் மூழ்கியிருந்த அந்த ஸ்வப்பனத்தில் கலைந்தவள்..


"அவ்ச்!" என்ற சத்தத்தோடு பெண் பயந்து துள்ளி குதிக்க.


"ஹா.. ஹா.. இந்திரா ஐஏஸ்க்கு பயமா?"

"ஏமிரா பாவா இதி?"

"இதி லவ் அம்மாயி."

"அப்பாயிக்கு அம்மாயி மேல லவ்வோ."

என்றவள் முகம் இத்தனை நேரம் சுமந்த வேதனை தணிந்து அங்கு நேசம் பொங்கியது. இதை தானே அவள் கணவனும் எதிர் பார்த்தான். என்றெல்லாம் இந்த நீண்ட புத்தகத்தை மனைவி கையில் எடுத்து அங்காங்கே வார்த்தைகளை கோர்கிறேன் என்று மீள படிக்கிறாளோ அன்றெல்லாம் அளவில்லாத இந்த கடும் வேதனையை கண்டு அந்த காதல் கணவனின் நெஞ்சமெல்லாம் வேதனையில் துடிக்கும். இப்போதும் அதுவே நிகழ ஒருவழியாக அதை கலைந்தவன் தோன்றிய பெருமூச்சை அவளறியாது உள்ளுக்குள் புதைத்து கொண்டான்.


நாசுக்காக அந்த புத்தகத்தை மேசையில் வைத்து விட்டு பின்னிருந்தே அவள் கண்ணாடியை கலட்டியவன் தன் மீசையால் அவள் கழுத்தில் குறுகுறுப்பு காட்ட."


"ஓத்தூ பாவா!(வேணாம் பாவா!)"


"எனக்கு வேணுமே பொண்டாட்டி."

என்றவன் அவள் கழுத்தில் இதழ் பதித்து அதே இடத்தில் கடித்து வைக்க.


"ஆ!" என்ற அலறலோடு."இப்ப உங்க வாயை கடிச்சு வைக்க போறேன் பாவா."


"எஸ் கமான் பேபி பாவா வெய்ட்டிங்."

என்றவன் இதழை குவித்துக் கொண்டு பரவசமாக விழி மூட, அவளோ அவனை பார்த்த வண்ணம் அவன் இதழில் வலிக்க ஒரு அடி போட்டாள்.


"ஆவ்.. ராட்சசி!"

என்றவன் அவளை பிடிக்க முயல.


"உன்காலி இந்திரன்!(போடா இந்திரன்)" என்றுவிட்டு அவனை விட்டு தூர ஓடிப் போக.


"ஏ ஆகு!(ஏய் நில்லுடி)"


"ஹூம்.. ஹூம்.. லேது பாவா!" (முடியாது பாவா)


"இக்கடக்கி ரண்டி பொண்டாட்டி!" (இங்க வாடி பொண்டாட்டி)


"லேது பாவா லேது!"


அவன் கையில் சிக்காமல் ஓடியவளை நொடியில் வளைத்துப் பிடித்து துளியும் தாமதிக்காது அவள் இதழ் மீது இதழ் பதித்தான். அந்த இதழின் சங்கமம் பின் இரு இணைகளின் சங்கமமாகி காதல் சாகரத்தில் சந்தோஷமாக கரைந்தது.


______________________________


இன்று..


"சார்!"


என்ற கார் டிரைவரின் குரலில் அதுவரையும் இருளை வெறித்து கொண்டு தன் ஸ்வப்பனங்களில் கரைந்து கொண்டிருந்தவன் வெளிச்சத்துக்கு வந்த தருணம், அவன் கெஸ்ட் ஹவுஸும் வந்தது. இறங்கி நின்ற கார் டிரைவரின் விரைப்பான சலூட்டை ஏற்றுக் கொண்டு உள்ளே நுழைந்தவன் அப்படியே கார்டனில் உள்ள மர ஊஞ்சலில் இருகைகளையும் வெகு ரிலாக்ஸாக விரித்துவிட்டு வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கையில், அவன் தொலைபேசியோ மீண்டும் அழைத்தது. அதன் சத்தத்தின் அழைப்பில் வந்த பெயரை பார்த்தவனின் உக்கிரம் நுனி மூக்கை தொட..


"மூர்க்குடு! (முட்டாள்)"


என்று அவன் வசைபாடவும் மீண்டும் அழைப்பு வந்தது.

அங்கே அழைத்தவளோ செய்தியை தன்னவனிடம் சேர்க்க தவித்துக்கொண்டிருந்தாள். அவ்வழைப்பை ஏற்றவன்.


"ஐம் பிஸி" என்றதோடு பட்டென்று கட் செய்ய, அங்கே அவள் நிலவு முகம் பட்டுப்போனது. இருந்தும் காதல் தான் மானம்கெட்டதாகிற்றே.


"பேசனுமே." என்று குறுஞ்செய்தி அனுப்ப அதை கோபத்தோடு பார்த்தவன்.


"இந்த ருத்ரன் ஐபிஎஸ் ஒன்னும் உன் வீட்டு நாய் இல்ல கூப்பிட்டதும் வர, சொன்னதும் செய்ய."


என்று ரிப்ளே அனுப்பி வைக்க அதை பார்த்தவளின் வதனம் சற்று முன்னர் எத்தனை சுருங்கி இருந்ததோ அதுக்கு மாறாக மலர. அந்த எண்ணங்களின் நாயகனின் அம்பை அவனுக்கே திருப்பி விடுபவளாக திரும்பவும்..


"நான் திருமதி. ஆண்டாள் ருத்ரன். ருத்ரன் நாயூடுவோட வீட்டாம்மாங்க. என் புருஷனோட கொஞ்சம் பேசனுமே. என் செலவுக்கு வேற அவரு இந்த மாசம் பணம் தரலங்க. போன்ல பாலன்ஸ் போதாது அவரை கொஞ்சம் எனக்கு திருப்பி கூப்பிட சொன்னீங்கனா சௌரியமா இருக்குமுங்க."


என அனுப்பி வைக்க. அதன் ஒலியில் மெஸேஜை பார்த்தவன் இதழ்கள் "ஆண்டாள் ருத்ரன்!" என்பதில் அழுத்தத்தோடு பதிந்து தொடர்ந்து வாசிக்க, இத்தனை நேரமும் இருந்த ஆக்கிரோஷம் மறைந்து அவன் விழிகளுக்குள் மின்னல் தெறித்தது. ஆண்டாளோ யோசிக்காது வெகு இலகுவாக மெஸேஜ் அனுப்பிவிட்டாலும் அவன் அதிரடியை அறிந்தவள் மனம் மத்தளம் வாசிக்க நெஞ்சை இறுக்கி பிடித்து கொண்டும், அவன் தன்னை அழைப்பானா என மொத்த எதிர்பார்ப்போடு போனை அழுத்தி பிடித்து காத்திருக்க, அவள் அலைபேசி அழைத்தது.


'பாவா காலிங்!' அந்த ஒற்றை வார்த்தையில் இறுகி இருந்த அவள் உயிர் இலகுவாகி காற்றில் மிதந்து கொண்டிருக்க.


'அழைத்துவிட்டார். பாவா என்னை கூப்பிட்டுட்டார். இது, இது போதும் ஆண்டவா!'

அவள் உள்ளமெல்லாம் இனித்தது. ஒன்றெல்ல இரண்டல்ல அவளது ஆறு மாத தவம் கை கூடிய மகிழ்வு. அன்றொரு நாள் அவனை கண்டாள், அப்படியே அவன் விம்பத்தை விழி வழி அகம் நுழைத்தாள். அவளது காதல் அதுவும் தென்றலை போன்ற இதமான காதல் இல்லை கடுமையான சூறாவளியை போன்று சுழட்டி அடிக்கும் நேச காதல். அவன் காதல் சொல்லவில்லை, நேசம் கொண்டு பார்க்கவில்லை, அவள் சுண்டு விரல் கூட அவன் ஸ்பரிசிக்கவில்லை ஆனால் அவளுக்கு கொள்ளை ஆசை உண்டு. அதை எல்லாம் அடக்கி அவன் ஒற்றை வார்த்தைக்கு, அழைப்புக்கும் தவமிருந்து இரு மாதத்துக்கு முன் அவன் கைகளால் தாலி வாங்கி இன்னுமே தள்ளியிருந்து தவமிருந்தவளுக்கு பலன் கொடுத்தான் அவள் ராமன்.


ஆசை தீர அவன் அழைப்பை கண்ணுக்குள் காப்பாந்து செய்தவள் தாமதித்தால் கட் ஆகிவிடுமோ எனும் பதைப்பதைப்போடு ஆன்சர் செய்து காதில் வைத்தவள்.


"டீசி சார்!" என்றாள்.


அந்த ராப்பொழுதில் நிலவின் ஒளியை போல மென் சாரல் வீசிய குரலை உணர்ச்சி இல்லா முகத்தோடு உள்வாங்கியவன்.


"ஹம்.. ஆண்டாள் ருத்ரன்." என அழுத்தமாக உச்சரிக்க.


"டீசி சார்!" என்றவள் இனிமையாக அதிர.


"ஆண்டாள் ருத்ரனோட, புருஷன் ருத்ரன்." மீண்டும் அழுத்தமாக கூறி நிறுத்த.


"அது.." அவள் தயங்கவே.

"செப்புரா?" அவள் மௌனிக்க, அவனோ மீண்டும்.

"ஹம்.. செப்புரா?" என, அவளோ தன் குரலை செருமவும்.


"என் பொண்டாட்டி போன்ல பாலன்ஸ் இல்லையாம் அது தான் நான் எடுத்தேன் என்னமோ என் பொண்டாட்டிக்கு என்னோட பேசனுமாம் ஏந்டி அதி?"

என்று நின்று, நிதானித்து, நிறுத்த.. வெட்கத்தோடு திணறியவள்.


"டீசி சார்."

"ஹூம்.. எங்க ஊருல புருஷனை பாவானு சொல்லுவாங்க நொட் டீசி சார்."

அவனின் குரலில் என்ன இருந்தது என்பதை சத்தியமாக பெண்ணால் அனுமானிக்க முடியவில்லை.


"நானா?"


"நீ தானே என் பொண்டாட்டி." மீண்டும் மௌனம்.

"செப்புரா?"

"ஆமாம்."


"அப்போ யாரு கூப்பிடனும்."

"நான் தான்."

"அப்போ கூப்பிடு." என்றதும் மலைத்து போய் நின்றாள். எப்படியோ தன் கேள்விக்கு தன்னிடமே பதில் வாங்கி விட்டானே..


"ஆண்டாள்!" என்ற அழைப்பு மீண்டும், மீண்டும் சில்லென்று தாக்க தன்னை அறியாமல்.


"பாவா!" என்ற குரலில் இப்போது அவன் உணர்வுகள் பல ஆண்டுகளுக்கு பின் உள்ளுக்குள் ஆர்பரிக்க தொடங்கியது. 34 வயதில் ஒற்றை வார்த்தையால் ஆறடி ஆண்மகன் அவன் உணர்வுகளில் இப்படி ஒரு மாற்றம் என்பதை சகிக்க முடியாதவனாக தலையை அழுத்த கொதிக்கொண்டவன் தன்னை அடக்கிக்கொள்ள எழுந்து நடக்க தொடங்கவும்.


"பாவா! எப்படி இருக்கீங்க." அவள் குரலில் அவன் மனமெனும் இறுக்கமான இரும்பு தடுப்பில் விரிசல் விழும் உணர்வு. இருந்தும் அதை மறைத்தவன்.


"ஹம்.. பைன். நுவு?"


அவள் விழிகள் உடைப்பெடுத்தது. தன் உறவுகளின் விசாரிப்பில், அன்பில் தோன்றாத நெருக்கம் உயிர் நேசம் அவன் ஒருவனில் தோன்றியது. சற்றே கரகரத்த குரலில்.


"நல்லா இருக்கேன் பாவா. இப்போ, இப்போ தான் ரொம்ப, ரொம்ப நல்லா இருக்கேன்."


அவனுக்கோ என்னமோ போல் ஆனது அவனது இந்த இணக்கத்தை காரண காரியங்களோடு அல்லவா நிகழ்த்துகிறான். இவளது எதிர்பார்ப்பு இல்லாத இந்த அன்பில் அவன் மனம் கனத்துப் போனது. இருந்தும் தெரிந்தே தன் சீதையை தீக்குளிக்க துணிந்தவன்.


"சொல்லு என்ன பேசணும்." பெண் மடை திறந்த வெள்ளமானாள்.


"பாவா! நான் அம்மா கிட்ட சொல்லிட்டேன் ஒரு மாசத்துக்கு இருக்க மாட்டேனும், அறநெறிக்கு போறேன்னும். அம்மா ஓகே சொல்லிட்டாங்க அண்ட் நீங்க சொன்னீங்களே ஊருக்கு வரனும்னு, அதோட மேரேஜ்க்கு அம்மாவ சம்மதிக்க வைன்னு. நான் அதுக்கு அம்மாகிட்ட சத்தியம் வாங்கிட்டேன் பாவா."


அவள் துள்ளல் குரலில் சந்தோஷ ஆர்பரிக்க அவனோ களையெடுக்க நாள் குறித்தான். அவன் வன்மம் அவள் 'அம்மா' என்றதில் உச்சம் தொட, பெண் காதல் அங்கே நடக்கின்ற பரம பதத்தில் பணயம் ஆனது. உண்மை அறியும் போது அவள் நிலை? அதிலும் காதல், கல்யாணம், காமம் மூன்றையும் அருவெறுப்பவன் வன்மம் கொண்டு மூன்றுக்கும் முகவரி ஆகும் போது பெண் சிதைவது உறுதி.


"ஹம்.. ஓகே பைன். லெட்ஸ் ஸ்டார்ட் ஹவர் நியூ ஜேர்னி."


என்றவன் பின் இடுப்பில் சொருகி இருந்த துப்பாக்கியை இரு விரலால் ஒரு சுழட்டு சுழட்டி ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கியவன்..


"நாளைக்கு ஈவினிங் ரெடியா இரு நான் வந்து உன்னை பிக்கப் பண்ணிக்கிறேன். திரும்பி வர ஒன் மந்த் ஆகும் அதுக்கு தேவையான மாதிரி ரெடி ஆகிக்கோ.

இன்னொரு விஷயம் உன்னோட தேவைக்கு எந்த காரணத்துக்காகவும் உன் வீட்டு ஆளுங்க தரும் காச யூஸ் பண்ண கூடாது. அது இந்த ருத்ரனுக்கு கேவலம். ருத்ரனோட பொண்டாட்டி அவனோட சம்பாத்தியத்தில் தான் வாழனும் காட் இட்."


எல்லா பக்கமும் தலையசைத்தவள்.


"இல்ல பாவா! நம்ம மேரேஜ் நடந்து இந்த ரெண்டு மாசத்துல அம்மா தந்த பணத்தை நான் யூஸ் பண்ணவே இல்ல நீங்க தந்தது தான் யூஸ் பண்றேன். உங்களை மீறி எதுவும் பண்ண மாட்டேன் பாவா."


"ஹம்.."


என்றதோடு அவன் அழைப்பை துண்டிக்க, அவனோடு வாழப் போகும் ஒரு மாத கால வாழ்க்கையை எண்ணி அவள் மனம் கனவு காணத் தொடங்கியது. வெகுளி பெண்ணின் காதலும் வெகுளியானதாக மாறியதுதான் விந்தையோ? பெண்ணின் ஸ்வப்பனங்களில் எல்லாம் ருத்ரன் என்பவன் மட்டுமே நிறைந்தான்.


அவளிடம் ஏன், எதற்கு, எப்படி என்றெல்லாம் கேள்வி எழுப்பினால் அவளுக்கு பதில் தெரியாது ஆனால் காதலிக்கிறாள். அவன் உயிரை விடு என்றாலும் ஏன், எதற்கு எனும் கேள்வி எழுப்பாது உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவு பித்துப் பிடித்த காதல். அந்த காதலின் ஆழத்தின் உச்சத்தை ருத்ரன் அறியும்போது கல்லாக இறுகி இருக்கும் அவன் ஆண் மனம் ஆட்டம் காணும்.


அவனிடமோ யாரும் காதல் உண்டா என்றால் அவனிடம் காதல் இல்லை, காமம் உண்டா என்றால் அவனிடம் கலவியும் இல்லை. ஆனால் மாங்கல்யம் தந்தவன் மங்கையோடு மஞ்சத்தையும் பகிர்வான் அதுவே பிரம்மனின் நியதியாகியது.


மங்கையின் ஸ்வப்பனமோ மணவாளனோடு..

அவன் மன்னவனின் ஸ்வப்பனமோ மங்கையை பகடை ஆக்குவதில்..


நின் ஸ்வப்பனம்.
 
Last edited:

admin

Administrator
Staff member
அத்தியாயம் - 06.1


"ஏய் பிச்சி!"

"ஆ! மஞ்சு ஏன் கில்லுன வலிக்குது பாரு." என்றவள் கையை பர பரவென தேய்க்க.


"கில்லாமா என்ன செய்வாங்க. கூப்டுறது கூட கேட்காம கனவு." என்றவள் குறும்பாக.


"ஏமிரா கனவுல வந்தது தெலுங்கானா புலி தானே." ஆண்டாள் கண்கள் விரிய.


"எப்படி மஞ்சு."

"இது என்ன பிரமாதம். உன் கண்ணுல அண்ட் கனவுல மட்டுமில்ல இன்னைக்கு பலரோட கனவுல காதலனா, கிரஷ்ஷா, ஏன் ஏமானாவும் வலம் வாராது நம்ம தெலுங்கானா புலி தான்."


இதுவரை மலர்ந்திருந்த முகம் அவள் கூற்றில் சோர்ந்து போக.


"என்ன ஆண்டாள் பொறாமையா? ஒரு பிரபலத்தை லவ் பண்ணா இதெல்லாம் பேஸ் பண்ணி தான் ஆகணும். இதுக்கெல்லாம் கண்ணை கசக்குனா எப்படி."


என்றதும் கரகரத்த குரலில்.


"அப்படியெல்லாம் ஒன்றுமில்ல."


"ஹூம்.. ஹூம்.. உன் கண்ணு ஒன்னும், வாயி வேற ஒண்ணும் சொல்லுதே."


என்றவள் ஆண்டாளை ஆழமாக பார்த்துக்கொண்டே.


"ஆண்டாள் வெளியே இருந்து பார்க்கும்போது தப்பானது கூட அழகாக இருக்கும். சிலதை சில நேரம் உள்ளே இருந்து பார்க்கனும் அப்போ தான் அதோட ஆழமும் புரியும். ஆபத்தும் புரியும்.


இப்போ உனக்கு அழகா இருக்க விஷயமும் நீ அதுக்குள்ள ஆழ்ந்து போனால் தான் ஆழமானதா, ஆபத்தானதானு தெரியும்."


என்றதும், இரு விழிகள் கண்ணீரில் மிதக்க மஞ்சுவை பரிதவிப்புடன் பார்த்தவள்.


"நீ அவ..ரை.. அவரை."


என்றவள் தவிப்போடு ஆரம்பிக்கவே.


"உஷ்! ஆண்டாள் ஏந்டி இதி. ருத்ரன் சாரை பற்றி நான் எப்படிடீ தப்பா சொல்லுவேன். உனக்கே தெரியும் என்னோட அக்கா, புருஷன்கிற பெயரில ஒரு சைக்கோ கிட்ட மாட்டிக்கிட்டு இருந்தா. அதிலிருந்து அவளை மீட்டு தந்ததே டீசி சார் தான். அவரை போய் தப்பா சொல்லுவேனா. பட் நான் சொல்ற விஷயம் வேற தட் மீன்ஸ் நுவ்வு.."


என்றவள் அவளின் இதயத்துக்கு நேராக விரல் நீட்டி.


"இது உன் மனசு சம்பந்தப்பட்டது. என்னோட பிரண்டு ஆண்டாள் அவள் குடும்பத்துல உள்ளவங்ளைப் போல இல்ல. ரொம்ப, ரெம்பவே மென்மையானவ. வெகுளி, வம்புக்கு பயந்தவ, சண்டை சச்சரவுனா ஒதுங்கி இருக்கிறவ அப்படிப்பட்டவளுக்கு அடுத்தவங்கள கன் பாயிண்ட்ல நீக்க வைக்கிறவரு சரியா வருவாரா."


அவள் எங்கனம் அறிவாள் இது அந்த தர்மனின் தர்மத்தையும் மிஞ்சும் ஆத்மார்த்தமான பந்தமென. அவளோ தொடர்ந்து..


"எனக்கு தெரியல டீசி சார்க்கு பொறுமைனா என்னனு தெரியுமானு. எதிர்ல இருக்கிறவன் பேசி முடிக்கும் முன்னரே பொட்டுன்னு போட்டுட்டு பட்டுனு போயிருவாரு. இது உன் வாழ்க்கை ஆண்டாள் நான் முடிவெடுக்க முடியாது. ஆனாலும் மென்மைனா என்னனு தெரியாத அவருக்கும், முரட்டு குணங்களை அறியாத உனக்கும் எப்படி செட் ஆகும்."


"ஏன் மஞ்சு அப்படி பேசுற எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும். இல்ல, இல்ல ரொம்ப, ரொம்ப பிடிக்கும்."


"எனக்கு தெரியும்டி உனக்கு அவரை ரொம்ப பிடிக்கும்னு அதனாலதான் நான் இதுல தலையிடவில்லை. உன்னோட மென்மை அவரோட நீ வாழும் காலத்துல கண்டிப்பா காயப்படும். இதை ஒரு தோழியா நான் சொல்லல பட் ஒரு காதலியா, ஒரு மனைவியா, நீ அவரோட பிரியத்தமாவா எப்படி மாறப்போகிறன்றது உன் கையில தான் இருக்கு."


அவள் கூற்றில் ஆண்டாளின் மன எண்ணங்கள் அலை பாய தொடங்கியது. ஆனால் இது உண்மை என்று பிற்காலத்தில் அவள் உணரும் தருணங்கள் மிகவும் வேதனையாக நகரம். விழிகள் இரண்டும் கலங்கி நின்றவளை பார்த்து மனம் பொறுக்காமல்..


"ஏய் என்னடி அழுந்துகிட்டு. ஓகே, ஓகே நான் வெளி மனுஷி வெளியே இருந்து பேசுறேன் நீ அவரோட பிரியத்தமா இப்படி எல்லாம் ஃபீல் பண்ணாம நாளையிலிருந்து உங்க வாழ்க்கைய எப்படி வாழ போறீங்கனு கனவு காணு."


என்றவள் புன்னகையோடு அகல, வானில் உலாவும் அந்த நிலவில் தன்னவனை முதல் முதலில் கண்ட நொடிகளை தேடிக்கொண்டிருந்தாள் பெண்..


ஒரு வருடத்துக்கு முன்..


விசாகப்பட்டனத்தில் உள்ள டீசி ஆஃபீஸ் அந்த ராப்பொழுத்திலும் படு பிசியாக இயங்கிக்கொண்டிருக்க, டீசி அலுவலக காத்திருப்பில் கைகளை பிசைந்துகொண்டு அமர்ந்திருந்தாள் ஆண்டாள். அவள் கண்களில் இரு துளி நீர் முத்துக்கள் உருண்டு விழ வாய்க்குள் எழுந்த கோவல் இப்போவா, அப்போவா என தொண்டைக்கும் வாய்க்கும் நகர்ந்து கொண்டிருந்தது..


"சிறிகிபோயிந்தி!"(கிழிஞ்சது)

நெற்றியிலே அடித்து கொண்ட மஞ்சு.


"ஏய் கடிதா! எதுக்கு இப்படி இருக்க. போற, வார போலிஸ் எல்லாம் ஒரு மாதிரி பார்க்கிறாங்க மூஞ்சியை நல்லா தான் வையேன்."


"இல்லடி! என்.., என்.." எனும் போதே கோவல் வெடிக்க. அதில் சிலரின் கவனம் இவர்கள் புரம் திரும்பியது.


"உஷ்! ஏந்டி அம்மாயி இதி."


"இல்ல மஞ்சு எனக்கு மனசே சரில. புலில அம்மன் அமர்ந்திருக்கும் பென்டன் ஒன்னு செயின்ல கோர்த்து போட்டு இருந்தேனே, அது திடீர்னு அருந்துட்டு அப்போவே மனசு ஒரு மாதிரி இருந்தது. சரின்னு பென்டன மட்டுமே பர்ஸ்ல போட்டு வைத்தேன் முக்கியமா எங்க அம்மா போட்டோ ஒன்னும் பர்ஸ்ல இருக்கு. இப்படி அது தொலைஞ்சு போகும்னு நினைக்களை."


மூக்கை உறிஞ்சிக்கொண்டு அழுதவளை பரிதாபமாக பார்த்த மஞ்சுவின் மனமோ.. 'இவள் இத்தனை வெகுளியாக இருக்க வேண்டாம் .' எனவே எண்ணிக்கொண்டது.


"சரி சரி அழாத. திருடன்னா திருட தான் செய்வான். நீ இப்படி பயந்து, பயந்து சாகுறியேனு தான் லோக்கல் ஸ்டேஷனுக்கு போகாம டீசி ஆஃபீஸ்க்கு அழைச்சுட்டு வந்தேன். டீசியும் கொஞ்சம் நல்லவரு தான்."


இப்போது ஆண்டாள் அழுகையோடு மிரண்டு முழிக்க மஞ்சுவோ மீண்டும் தன் தலையிலேயே அடித்து கொண்டு..


"உன்னை பற்றி தெரிஞ்சும் இப்படி சொன்னேன் பாரு. ஹம்.. டீசி நல்லவரு தான் பட் பொறுமை ரொம்ப கம்மி. அதை மீன் செய்தேன். அது சரி உன் வீட்டுலயே அமைச்சர், மந்திரினு ஏகப்பட்ட செல்வாக்கு இருக்கே அப்படி இருக்கும் போது ஒரு பேர்ஸ் தொழைஞ்சுட்டுன்னு போலீஸ் ஸ்டேஷன் வருவியா நீ? அப்டியேனாலும் போலீஸ்னா அப்படி என்ன பயம்."


முகம் முழுக்க சோகம் அப்பி கிடைக்க.


"ஹம்.. எல்லாம் இருக்காங்க ஆனா, ஆனா எனக்கு யாரும் இல்ல மஞ்சு. என் வீட்டுல மட்டும் இப்படின்னு தெரிஞ்சா இன்னொரு ஊருக்கு என்னை பார்சல் செய்து அனுப்பிருவாங்க. அவங்கள பொறுத்தவரை அவங்களை விட்டு தள்ளி இருக்கிறதும், சமுகத்துல இருந்து இப்படி எல்லாத்துலயும் என்னை நானே தனிமை படுத்திக்கிறதும் எனக்கான பாதுகாப்புன்னு நினைக்கிறாங்க.

அப்படியும் நான் கேட்டா அவங்க எதிரிகளால என் அண்ணன் இறந்தானாம் சோ என் உயிர்க்கும் ஆபத்தாம் பட் அவங்களுக்கு தெரியாதே ஆண்டாள்கிற பொண்ணோட மென்மையான இதயம் தனிமைல அனாதையா வாழுறது. சிலது சொன்னா புரியாது மஞ்சு பட் அனுபவிக்கிறப்போ உள்ள வலி கொடுமை.


ஹாஸ்டல் ரூம், நாலு சுவரு, தடியோட வாடன், நைட்ல அடக்க முடியாத அவசரத்தில் பாத்துரும் வந்தா இருட்டா இருக்க நடைபாதை, அதையும் கடந்து போனா இருட்டுல லைட் ஸ்விசை தேடும் வரை வரும் அவஸ்தை, நமக்கு வலி வந்தாலும் முகம் புதைச்சிக்க மடி இருக்காது. முதுகு தடவி கொடுக்க கை இருக்காது. எனக்கு முத்தம் வாங்குறதுனா ரொம்ப பிடிக்கும் அதை அனுபவிக்கும் வாய்ப்பு என் 5 வயசுல இருந்து கிடைச்சது இல்லை. இப்போவும் எதிர் பார்ப்பேன், கன்னத்தில ஒன்னு, அட்லீஸ்ட் நெற்றியில ஒன்னாவது எங்க அம்மா தருவங்களான்னு பட் அவங்களுக்கு வளந்த பிள்ளைக்கு தர கூச்சம். எனக்கோ வாய் திறந்து கேட்க முடியாத இறுக்கம். எனக்கு இது எல்லாமே என் தனிமை தந்த வலி பட் என்னை தெரிஞ்சவங்களுக்கு நான் தேவேந்திரன் அரண்மனைக்கு இளவரசி, பணத்துக்கு பஞ்சமில்லா கோடிஸ்வரி ரொம்ப வேடிக்கை இல்லையா.."


என்றவள் முடிக்கையில் தன்னைப்போல் விழிகளில் நீர் இறங்க தொடங்கியது. அவள் கையை தட்டிக் கொடுத்த மஞ்சுவோ.


"ஆண்டாள் என்ன இது ரிலாக்ஸ். ப்ளீஸ்டா கன்ட்ரோல் யூர் செல்ப். நான் ஏதோ சென்டிமென்ட் பொருளை தொலைச்சட்டனு நீ ஒர்ரி பண்றனு நினைச்சி பேச போய் உன்னை காய படுத்திட்டனா?"


தன்னை வெகுவாக கட்டுப்படுத்தியவள்..


"சே சே.. அப்படியெல்லாம் இல்ல மஞ்சு ஏதோ இன்னைக்கு மனசு பிசைது அந்த பென்டன் மட்டுமாவது கிடைத்தா போதும். அது என் அத்தான் கொடுத்தது. அவங்களுக்கு ரொம்ப ஸ்பெஷல் பெர்சன் கொடுத்ததுனு சொல்லி கொடுத்தார். எப்போம் தொலைக்காம என் கூடவே வச்சிகணும்னு சத்தியம் வாங்குனாறு. அது தொலைத்தது தான் மனசுக்கு ஒரு மாதிரி இருக்கு."


என்று சொல்லி பேசிக்கொண்டே இருவரும் எழுந்த கணம் படார் என ஒரு சத்தம் அதைத்தொடர்ந்து ஆண்டாளுக்கு கண்களில் பூச்சி பறக்க, கையோ கன்னத்தை பொத்திக்கொள்ள அரண்டு போய் நின்றாள். அவள் முன்னே ஆறடி உயரத்தில், இறுக்கி பிடித்த தேகத்தோடும், முறுக்கு மீசையில், காக்கி சட்டைக்குள் நின்றவனை பார்த்தவளுக்கு பூமி தட்டாமலை சுற்றியது. அவள் நிலை அதோ பரிதாபம் என்றால் மஞ்சுளாவிற்கு பயத்தில் அவள் ஆவி அந்தரத்தில் மிதந்தது..


டிவியிலும், செய்திகளிலும் கேள்விப்பட்ட ருத்ரன் ஐபிஸின் நிஜ ருத்ர தாண்டவத்தின் சிறு பகுதியை கண்டதற்கே அவள் அணுவே ஆட்டம் கண்டது. இதையெல்லாம் எண்ணத்தில் வாங்காதவன் அருகே இருந்த இன்ஸ்பெக்டரை கன்னடத்தில் திட்டியவாறு இவர்கள் புறம் திரும்பி அழுது கொண்டிருந்த ஆண்டாளை நோக்கி..


"மூர்குடு! அப்பாயின்மென்ட் வாங்கி வெயிட் பண்ணா மட்டும் போதாது, உங்களுக்கான டெர்ன் வந்தா உள்ள வர தெரியணும். இல்ல எந்த கிறுக்கனாவது வெளியே வந்து உங்கள கூப்பிட நின்னா அதையாவது கவனிக்கணும். இங்க நின்னு ஊ.. ஊனு.. ஊளையிட தான் கிளம்பி வந்தீங்களா. டீசிபி ஆபீஸ்ல நான் என்ன *** புடுங்குறனு நினைச்சிங்களா."


என்றதும் ஆண்டாள் பயத்தில் வெடவெடக்க தொடங்கினாள். மஞ்சு அவனை அறிந்ததால் சற்றே திடமாக நின்றாள் ஆனாலும் இது எல்லாம் அவன் சிந்தையில் நிற்கவே இல்லை அவனோ ஒரு முறை மீசையை முறுக்கி விட்டு அருகிலிருந்த இன்ஸ்பெக்டரை முறைத்தவாறு..


"உன்ன அவங்கள உள்ள வர சொல்லுன்னு சொன்னா அழுதுகிட்டு இருக்காங்கன்னு வேடிக்கை பார்க்கிறியா இடியட். இந்த மாதிரி இன்னொரு முறை நடந்துச்சு நீ அழுதுகிட்டு வீட்ல இருக்க வேண்டியதுதான்."


என்றவனின் ருத்ரம் நொடியில் மீண்டும் ஆண்டாள் புரம் திரும்ப.


"இந்த அறை எப்பவுமே உனக்கு ஞாபகம் இருக்கணும். இனி எங்கேயாவது அப்பாயின்மென்ட் வாங்கி அவன், அவன் டைமை வேஸ்ட் பண்ணும் போதெல்லாம் இது உனக்கு ஞாபகம் வரணும். இப்போ பாவம் பார்த்து விடுறேன் இல்லனா பொறுப்பில் இருக்க போலீஸ் ஆபீஸர் டைமை வேஸ்ட் பண்ணுனிங்கன்னு உங்க ரெண்டு பேர் மேலயும் கேஸ் போட்டு உள்ள வச்சிருப்பேன்."


என்ற வரிகளோடு ஏன், எதற்கு, என்ற கோள்வியின்றி அவன் இரு விழி கூர் பார்வையும் சில நொடிகள் ஆழமாகவே அவன் நெஞ்சத்தை மஞ்சம் கொள்ளபோகிறவளின் நெஞ்சில் விழுந்தது. தான் பார்த்த அந்த பார்வைக்கான் அர்த்தத்தை அவன் அப்போது அறியவில்லை. பெண்ணுக்கோ அவன் அடியில் இருந்து மீள்வதற்குள் விழிகளுக்குள் விழிகளால் அவளுள் அவன் பாய்ச்சிய மின்சாரம் அடிவயிற்றின் நரம்புகளை மீட்ட, எங்கே அடியில் சிவந்த கன்னம் வெட்கத்தில் சிவந்து காட்டிக் கொடுத்து விடுமோ என பயந்தே போனாள். தலையை அழுத்த கோதி தன்னை சமாளித்தவனோ அவர்களை உள்ளே அனுமதித்துவிட்டு தானும் உள்ளே வந்து பிரச்சனையை கேட்ட அறிந்தான்..


இந்த சிறு பிரச்சினைக்கு ஏன் டீசி ஆபீஸ் வரை வந்தார்கள் என்பதை அவன் ஒன்றும் அத்தனை ஆழமாக விசாரிக்கவில்லை. அவன் இந்த மாகாணத்தில் பொறுப்பேற்ற நாளிலிருந்து அட்டம்டு ரேப்க்கு அவன் அளவில் கொடுக்கும் சிறு தண்டனையான என்கவுன்டரில் திருப்தியுற்ற அனேக இளம்பெண்கள் தங்கள் பிரச்சினைகளுக்கு என அவனை நோரடியாக நாடி வருவது உண்டு. அவனைப் பொறுத்த அளவு கற்பழிப்பு என்ற சொல்லுக்கு என்கவுண்டர் என்பது சட்டரீதியாக சிறு தண்டனையே..


ஆண்டாளுக்கோ அவன் கொடுத்த அறையிலிருந்து, ஒரு நொடி விழிகளுக்குள் கடத்திய உணர்வு தொடங்கி, பிரச்சனை என அவன் முன் போய் நின்ற தருணத்தில் நடந்துகொண்ட முறை வரை அத்தனை அவன் அசைவுகளையும் ஆழமாக நெஞ்சில் புதைத்து கொண்டவள் அதை ஆன்மா வரை பத்திரமாக சுமக்க அவளை அறியாது ஆயத்தமாகி போனாள்.


அந்த ஒரு நொடி அவளுக்கு அந்த பார்வை தந்த மாற்றம் இதுவரை உரிமையைக் கூட தன்னில் எவரும் உரிமையாக கையில் எடுத்துக் கொண்டதில்லை எனும் ஆதங்கம் தந்த வேட்கை என அத்தனையையும் அவன் மூலம் புதிதாக, புதுமையாக தோன்றிய உணர்வுகள் அவளை மொத்தமாக ஆண்டது. அன்றிலிருந்து அவனை பற்றிய செய்திகளை சேகரிக்க தொடங்கினாள். அவன் இன்டவியூவிலிருந்து, என்கவுண்டர் செய்திகள் வரை அத்தனையும் அவளுக்கு அத்துபடி என்றே கூறலாம். சாதாரண நபருக்கே தன்னை பின்தொடரும் சக்தியை இனம் காணலாம் என்றால் அவன் உடல் முழுவதும் உள்ளுணர்வுகளால் உந்தப்படும் விழிகளைக் கொண்ட காக்கிச்சட்டை அணிந்த போலிஸ் உணராது போவானா. உணர்ந்தவன் தன் வீரம் மற்றும் விவேகத்தின் மீது ஆளுமை கொண்டவன் என்னை மீறி என்னவாகிடும் என்ற எண்ணத்தில் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால் அவன் கண்டுகொண்ட நொடி ஒன்று வந்தது.


அன்று அலுவலகத்துக்கு வந்தவன் தன் மேசையின் மீதி இருந்த பர்ஸை கண்டு கான்ஸ்டபல் சுபாவை அழைத்தவன்..


"வாட் இஸ் திஸ்." என்றான் இறுகிய கூறலில். அவனுக்கு கீழ் வேலை செய்பவர்கள் ஆயினும் அவனிடம் அப்படி ஒன்றும் இலகுவாக பேசி விடுவதில்லை அதற்கு அந்த பெண் அதிகாரி ஒன்றும் விதிவிலக்கல்லவே அவளோ தயங்கியவாறே..


"சார் இது பர்ஸ் மிஷ்ஷிங் கேஸ். உங்ககிட்ட கம்பெனி கொடுத்த அந்த பொண்ணு ஆண்டாளோடது. அவங்க நாட்டியாலயா இருக்க குப்பத்தை சேர்ந்த ஸ்கூல் பையன் ரோட்டில கிடந்த எடுத்து அவன் வீட்டில் கொடுத்து இருக்கான். அவங்க லோக்கல் ஸ்டேஷன்ல கொடுக்க இங்க கம்ப்ளைன்ட் பதிவானது தெரிந்ததும் இங்கே அனுப்பி இருக்காங்க சார்."


தலையசைப்பில் அந்த பெண் அதிகாரியை வெளியேற்றிவிட்டு. ஒரு உந்துதலில் அந்த பர்ஸை பிரித்தவன் அதிலிருந்த ஆதார் கார்டு முதல் ஆறுதலாக பார்த்துக் கொண்டே வந்தவன் சைட் சீப்பில் இருந்த ஒரு பாஸ்போர்ட் புகைப்படம் மற்றும் அதிலிருந்த ஒரு தெய்வத்தின் பென்டன் இரண்டையும் கையில் எடுத்து பார்த்தவனின் விழிகளில் ரௌத்திரம் ஏறியது. அவன் உடல் இறுகி உதடுகளோ கோபத்தில் துடித்துக்கொண்டிருந்தது. அடித்தே கொல்லுவேன் என்ற ரீதியில் அவன் சினம் நொடிக்கு, நொடி கூட அதை தாங்க இயலாதவன் மேசையில் இருந்த தண்ணீர் கிளாசை தூக்கி விசிறி அடித்திருந்தான். அது ஏசி ரூம் ஆகையால் சத்தம் வெளியே கேட்டு விடுவதில்லை இருந்தும் லேசாக திறந்திருந்த கதவின் வழி கேட்ட சத்தத்தில் வெளியில் இருந்தவர்கள் மிரண்டு போனார்கள்.


அப்போதும் அடங்காத அவன் ஆத்திரம் எல்லை மீற, கையை முறுக்கி அந்த தேக்குமர மேசையில் ஒரு குத்து விட்டான். இப்படி அவன் அடங்க வெகுநேரம் எடுத்தது.


அந்த நொடி அவன் விழிகளுக்குள் ஒரு ஸ்வப்பனம். அந்த விழிகள் காலத்துக்கும் காலனுக்கும் வழியிட்டது.

 

admin

Administrator
Staff member
அத்தியாயம் - 06.2


அந்த புகழ் பெற்ற போர்ட் ரைடிங் ரெஸ்டூரண்ட்க்கு வந்து கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஆகிவிட்டது. வந்ததிலிருந்து இறுகி போய், பாக்கெட்டில் ஒரு கையை விட்டு, மற்ற கையால் அடிக்கடி தலையை கோதுவதும், மீசையை முறுக்குவதுமாக செய்து கொண்டிருந்தவனை விசித்திரமாக பார்த்துக் கொண்டிருந்தாள் ஆண்டாள். இப்படி அமைதியாக ஒரு இடத்தில் அவனை பிடித்து வைக்க முடியுமா? அல்லது அவனால்தான் அமைதியாக ஒரு இடத்தில் இப்படி இருக்க முடியுமா? சில மாதங்களாக அவனை நன்கு அறிந்த ஆண்டாளுக்கு இது ஆச்சரியமே.


'என்ன இவரு நம்மள வர சொல்லிட்டு இப்படி சைலன்ட்டா இருக்காரு.'

அவள் மன எண்ணங்கள் அவனை சென்றடைந்ததோ என்னவோ பட்டென்று திரும்பி பார்க்க திடீரென இதை எதிர்பார்க்காதவள் முழியை எந்த மாதிரி வைத்துக் கொள்வது என்று தெரியாமல் முழிக்க தொடங்கினாள். ருத்ரனோ அவளை ஆழமாக பார்த்துக் கொண்டு அருகில் வந்தவன் மேசை மீது இருந்த கவரை அவளை நோக்கி நகர்த்தி வைத்து விழிகளால் அதை உணர்த்த, ருத்ரனின் விழிகளின் பாஷையை படித்தவள் அதை எடுத்து பிரித்த கணம், தான் தொலைத்த பொருளை கண்டுகொண்டாள். தன் பென்டனை கரத்தில் ஏந்தியவள் அதில் முத்தமிட்டு தன் நெஞ்ஜோடு பொத்திக் கொண்டாள். ருத்ரனின் விழிகள் அவள் நெஞ்ஜோடு இறுக்கி பிடித்த கரங்களில் கூர்மையாக படிய அவனை நிமிர்ந்து பார்த்தவள், அவன் பார்வை தன்னில் நிலைத்திருக்கும் இடம் கண்டு கூச்சத்தில் முகம் சிவக்க தலை குனிந்தாள். ஆனால் அந்தப் பார்வையின் அர்த்தம் அவன் மட்டுமே அறிந்தது.


அது வரையிலும் எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்த்திராதவன் அவள் முகத்தில் தோன்றிய பரவசத்தில், தனக்குள் இருந்த வெறி நொடிக்கு நொடி கூட, தான் செய்யும், செய்ய நினைக்கும் காரியங்கள் சரியே என இதயம் அடித்துக் கூறியது.


அவள் விழிகளை அழுத்தமாக பார்த்த ருத்ரன்.. "ஆண்டாள்" என்றான்.


ஒற்றை அழைப்பு அவளுள் பூகம்பத்தை உண்டு பண்ண பெண் உடலெல்லாம் புல்லரித்து, பரவசத்தை விழிகளில் தேக்கி அவள் இதழ்கள் புன்னகையில் விரிந்தது. அவனோ மீண்டும் அழுத்தி..


"ஆண்டாள் தானே உன் பேரு?" அவளிடம் ஆழ் கடலின் மௌனம். அவன் மீண்டும் குரலை செருமிக் கொண்டு, மறுபடியும்.. "ஆண்டாள்!" என சத்தமாக அழைக்க. 'ஆமாம்' என்பதாக தலையாட்டினாள். ருத்ரன் பேர்ஸை கண்களால் உணர்த்த.


"என்னோடது தான்."


கையில் பொத்தி வைத்து இருந்ததையும் கண்களால் காட்ட.


"இதுவும் என்னோடது தான்."

"அவுனு?"

"ஹம்.."


மீண்டும் இருவரிடமும் ஒரு ஆழ்ந்த மௌனம்..


"தென் நேநு?" அவன் மௌனத்தை கலைக்க.


"என்ன?" அவள் திகைத்தாள்.

"செப்புரா?" அவளிடம் மௌனம்.

மீண்டும் "செப்புரா?" என்க..


"செப்.. செப்புரா? என்ன செப்பு?"

அவள் கேள்வில் அவன் இதழ்கள் நெளிவதை போல தோன்ற மீண்டும் இறுக்கி கொண்டவன்.


"ஹம்.. செப்புரா?" அப்போ நான்."


"என்ன? ஏன்? உங்களுக்கு?" அவள் திக்க.


"பேர்ஸ் உன்னோடது, அதுல இருக்க பொருள் உன்னோடது. தொலைச்ச தேடுன கிடைச்சதும் அத அணைச்சுகிட்ட அப்போ ஏன் என்னை தேடுன, போலோவ் பண்ணுன."


என்றவன் நிதானமாக கை காப்பை முறுக்க. ஆண்டாள் பயத்த்தில் எச்சில் முழுங்கினாள்.


"ஹம்.. செப்புரா?" அவன் சாதாரண தொனியே அதட்டலை போல தோன்ற. கண்ணீர் கர, கரவென வந்து விழவும், அவன் மூக்கின் நுனியில் ஏறி நிற்கும் கோவம் வார்த்தையாகி விழுந்தது.


"மூர்குடு! அழுறத தவிர ஏதும் தெரியாதா உனக்கு. ஜஸ்ட் ஸ்டாப் கிரையிங் இட்ஸ் மேக் மீ இரிடேட்."


என கடுமையாக பேசவும், அழுகை வந்த இடம் அறியாது ஓடிவிட அப்படியே அதிர்ந்து விட்டாள். அவள் நிலையை கண்டவன் மீண்டும் காப்பை ஏற்றி இறக்கி தன்னை சமன் செய்து.


"ஓகே, செப்புரா? எந்துக்கு?(ஏன்)"

அழுத்தி கேட்க அவளுக்குள் சிறு ரோஷம் முளைக்கவும்.


"செப்புரானா. எனக்கு லவ்வுரா."


"வாட்?" விரைந்து இரு கைகளால் வாயை பொத்தியவள்.. 'இன்னைக்கு ஒரு என் கவுண்டர்.' சுற்றி வரும் அவள் மன எண்ணத்துக்கு சிறையிட்டவன்.


"ஆண்டாள்! அகைன்." 'தெலுங்கானா புலி இன்னைக்கு ஒரு புடி உன்னை புடிக்க போறாரு ஆண்டாளு.' மனதோடு பேசி பயன் இல்லையே அவள் வாய் திறந்தது.


"அது டீசி சார் எனக்கு தெலுங்கு லேது அதான் ஒரு போலோவ்ல பேசிட்டேன்."


மீண்டும் அவன் இதழ்கள் நெளிய, அவளுடன் வாழ போகும் வாழ்வில் சுவாரஸ்யம் நிறைந்திருக்கும் என்பதை மனதால் உணர்ந்தான்.


"அவசர லேது(அவசரம் இல்லை) ஆறுதலா தெலுங்கு கத்துக்கலாம். இப்போ சொல்லு முதல்ல என்ன சொன்ன."


தன்னை திட படுத்தியவள் அந்த கூர் விழிகளை நோக்கி.


"கன் போய்ட்ல தலையெழுத்தை மாற்றி எழுத்துவிங்களாமே நீங்க அப்படி பட்ட உங்க கைகளுல என் தலையெழுத்தை எழுதனும்னு ஆசையா இருக்கு.

உங்களுக்கு பொறுமையே இல்லையாம் பட் எனக்கான நேரங்களை நீங்க பொறுமையா கடந்து வரனுன்னு ஆசையோ, ஆசையா இருக்கு. உங்களுக்கு வாய் பேசும் முன் கை பேசுமாம் எனக்கோ உங்க வார்த்தைகள் என்னை சுற்றி நேசத்தோட வலம் வரனுன்னு ஆசையா இருக்கு.


உங்களுக்கு ஆட்டிட்யூட் அதிகமாம் பட் அந்த ஆட்டிட்யூட் என்னை கர்வமா கை பிடிக்கன்னு கொள்ளை, கொள்ளையா ஆசை இருக்கு. நீங்க பிரம்மச்சாரியாமே அந்த விரதம் எனக்கே எனக்காக மட்டும் தளரணும்னு ஆசை, ஆசையா இருக்கு. நீங்க முரடாம் டீசி சார் பட் அந்த முரட்டு கைகளுக்குள்ள காலம் எல்லாம் கரைஞ்சு காணா போகனும்னு ரொம்ப ஆசையா இருக்கு. இப்படி நிறைய, நிறைய ஆசை இருக்கு டீசி சார் அந்த ஆசை எல்லாம் ஈர்ப்பு இல்லன்னு உங்க கண்களை பார்த்து கத்தி சொல்லனும்னு பேராசையா இருக்கு. ஆனால் பயம் என்னை சொல்ல விடாம தடுக்குது இதை எல்லாம் விட உங்களை உயிரா நேசிக்கிறேன், உணர்வா நினைக்கிறேன், கணவனா மானசீகமா ஆராதிக்கிறேன்னு சொல்லனுன்ற ஆசைல என் ஆவி துடிக்குது. என்னோட இந்த ஆசைகள் எல்லாம் காதல்னா நான் உங்களை காதலிக்கிறேன்."


என்று நொடியில் தோன்றிய தைரியத்தோடு கூறியவள் தேகம் நடுங்க தொடங்கியது. தன்னை அடக்க நாழிகை தேவைப்பட.


"வ.. வந்து எனக்கு ரெஸ்ட் ரூம் போகணும்."


என்றவள் எழுந்து ஓடியே விட்டாள். அவனோ பெண் கொடுத்த அதிர்ச்சியில் இருந்து மீளவே இல்லை ஆனால் அதை துளியும் முகத்தில் காட்டவில்லை அப்படி காட்டினால் அவன் ருத்ரன் அல்லவே. அவனுக்கு அதிர்ச்சி என்பதை விட ஆச்சர்யம். அவன் எண்ணமோ, இது ஜஸ்ட் கரஷ் என்பதாக, ஆனால் அவளின் அன்பின் ஆழம் அவள் கூறி கேட்ட பின் கரஷ் என்று கூறி அவள் நேசத்தில் கரி பூச அவன் விரும்பவில்லை.


அவள் வரும் வரை காத்திருந்தவன் வந்ததும் தண்ணீர் க்ளாஸை அவள் புரம் நகர்த்தி வைத்து அதை அவள் குடிக்கும் வரை அவகாசம் கொடுத்துவிட்டு ஆண்டாள் நிதானம் அடைந்ததும் அவளை ஆழமாக பார்த்து கொண்டே.


"இஷ்டம் லேது.(பிடிக்கல)" என்றதும்.

"என்ன?" திகைப்பது அவள் முறையானது.


"நான் கேள்வி கேட்டேன் நீ பதில் சொன்ன, அந்த பதில்லையும் ஒரு கேள்வி கேட்ட பட் நான் ஆன்சர் பண்ணும் முன்ன நீ ஓடிட்ட அது எனக்கு பிடிக்கல."


ஒற்றை புருவம் ஏற்றி இறக்கி அவன் சொன்ன தோரணையில் பெண் மயங்கியே போனாள் ஆனால் இது காதல் தந்த மயக்கம்.


மீண்டும் மௌனம், மீண்டும் கை காப்பை நிதானமாக ஏற்றி இறக்கியவன், மீசையையும் முறுக்கி கொண்டான். ஆண்டாளின் நிலைமை அனலில் நிற்பதை போல தவித்து கொண்டிருக்க, ருத்ரனின் அழுத்தமான இதழ்கள் பிரிந்ததும்.


"ஓகே.. பெல்லி சேஸ்குன்டாம்.."(ஓகே கல்யாணம் பண்ணிக்கலாம்) என்க, அவள் புரியாது முழிக்கவும்.


"கல்யாணம் பண்ணிக்கலான்னு சொன்னேன்"அவனோ தமிழில் அழுத்தி சொல்ல அவளுக்கு எங்கே மயங்கி விழுந்தே விடுவோமோ எனும் உணர்வு தான்.


"நிஜம்மா தானா?"

"அவ்வுன்னு.(ஆமாம்)"

"அப்போ என்னை பிடிக்குமா?, விரும்புறிங்களா?"


இந்த கேள்வியில் அவன் உடல் விறைக்க கை முஷ்டியை இறுக்கி கொண்டான். தன்னை போல ஒரு முரட்டுதனம் தானாக வந்து தலையில் அமர்ந்து கொள்ள எங்கே அவள் கேள்வியில் அவளை அடித்து விடுவோமோ என்று நினைத்தவன் உள்ளமோ.. 'இவ உனக்கு பகடையா இருக்கலாம் பட் அவள் உணர்வுகளோடு விளையாடாதே' என எச்சரிக்க, நிதானமானவன்..


"ஆண்டாள்!" அழுத்தி அழைக்க.

"டீசி சார்."


"நாம மேரேஜ் பண்ணிக்கலாம் பட் நீ கேட்குற லவ் இருக்கானு கேட்டா மை ஆன்சர் நோ."


அவள் முகம் வாடி போனது. இருந்தும் பொய்யான நம்பிக்கையை அவன் தர விரும்பவில்லை.


"இந்த லவ், கரஷ், டேட்டிங், சாட்டிங் இதுக்கு எல்லாம் எனக்கு நேரமில்ல பிகாஸ் நான் அண்ட் என் வேலை அப்படி. எனக்கு இதுவரை தோணுனதில்லை இன்டரஸ்டும் இல்ல. என் வேலை தான் எனக்கு எல்லாம் யாருக்காகவும் அதுல நான் கம்பரமைஸ் ஆக மாட்டேன் அண்ட் நான் கால் வைக்கும் இடம் எல்லாம் ஆபத்து இருக்கு பட் ஐ டோன்ட் கோர்."


என்றவன் அவன் மீசையை திமிரோடு முறுக்க அந்த மேனாரிசம், அத்தனை பரபரப்பிலும் அள்ளிக் கொண்டது.


"சோ திஸ் இஸ் மீ ருத்ரன். ருத்ரன் ஐபிஸ். உனக்கு நான் தான் வேணும்னா வெறும் ருத்ரன் மட்டுமில்ல ருத்ரன் ஐபிஸையும் நீ சேர்த்தே ஏத்துக்கனும் சொய்ஸ் இஸ் யூவர்ஸ்."


அவளிடமிருந்து அடுத்த நொடியே ராமபானமென பாய்ந்து வந்தது பதில்.


"எனக்கு சம்மதம்." அவன் சந்தேகமாக பார்க்க. ஏனோ அந்த பார்வையை உடனே மாற்றி விடும் எண்ணம்.


"நீங்க என்ன நேசிக்க வேணாம் அதுக்கும் சேர்த்து நானே நேசிக்கிறேன். நீங்க." என்றவள் அவன் இதயத்துக்கு நேராக விரல் நீட்டி காட்டி.


"டீசி, டீசி சாரை அப்படியே அவரோட யூனிபோர்மோட பிடிச்சிருக்கு. அவரை அவரோட எல்லாத்தோடையும் சேர்த்தே காதலிக்கிறேன், காதலிச்சுட்டு இருப்பேன்."


முதல் முறை ஒரு பெண்ணின் காதலின் ஆழம் கண்டு அவன் புருவங்கள் உயர்ந்தது. ஒன்றை மற்றும் நினைத்தான் எந்த காலத்திலும் அவளை கை விடுவதில்லை என்று.


"அவுன்னா?(அப்படியா)"

அவள் தலையை மேலும் கீழும் ஆட்ட.


"அப்போ ஓகே இன்னும் த்ரீ வீக்ல மேரேஜ் பண்ணிக்கலாம் நான் சொல்லுவரை நம்ம மேரேஜ் யாருக்கும் தெரிய வேணாம்."


எடுத்ததும் தடாலடியாக கூற. எத்தனை அதிரிச்சியை தான் தங்குவாள். அவள் மௌனத்தில்.


"என்ன என்னை பிடிக்கும் தானே அப்போ நிரூபி."


ஒரு பெண்ணிடம் காதலை நிரூபி எனும் நிபந்தனை வைத்தவன் மனதும் காக்கி சட்டையை போன்றே கடினமானதாகியது இல்லையென்றால் பெண்ணின் மெல்லிய உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் விட்டிருப்பானா. அவன் புரிந்து கொள்ள மறுத்த உணர்வுகள் அவள் உள்ளம் உள் வாங்கியதோ என்னமோ மீண்டுமொரு ராம பானம் பாய்ந்து வந்தது..


"சரி.. பண்ணிக்கிறேன் ஆனா அம்மா.." என்றவள் கூற்றை முடிக்கும் முன் அவன் உஷ்ண பார்வையில் வார்த்தை வாய்க்குள்ளே பொசுங்கியது.


"அது.. அது.."

"ஓகே லீவ் இட் விருப்பம் இல்லைனா விடு."


"இல்ல, இல்ல யாருக்கும் தெரியாமனு தயக்கம் தான். அதான் நீங்க இருக்கிங்களே."


அந்த வார்த்தையில் அவன் புருவம் மீண்டும் ஏறி இறங்கியது. அவளுக்கோ அவன் எட்டாகனி. அவன் நேசம், ஏன் இந்த தரிசனம் இவ்வளவு அருகில் கிடைக்கும் என்பதே கனவு அல்லவா. ருத்ரன் தனக்கு வேலியானவன் தன் உணர்வுகளுக்கு புகலிடமானவன் என்ற நம்பிக்கையில் சம்மதித்தாள். தான் உயிராக நினைக்கும் தாயிடம் மறைத்தாள், தன் தலைகளை துறந்தாள். சரியாக மூன்றே நாளில் அவளுக்கு மாங்கல்யம் தந்து தன் சரி பாதி ஆக்கி கொண்டான்.


அன்றிலிருந்து அவளுக்கான முடிவுகள் அனைத்தும் அவன் ஆகிப் போனான். ஆண்டாள் என்னும் பகடை ருத்ரன் என்பவனின் கைகளில் உருட்டப்பட, எதிரியின் கோட்டை தகர்க்கப்படும் நாளொன்று சிவனின் பெயர் கொண்டவனால் குறிக்கப்பட்டது.


இப்படி தன் கடந்தகால எண்ணங்களில் மூழ்கி இருந்தவள், தன்னவனை சந்தித்து, நேசம் கொண்டு, அவன் உணர்வுகளில் ஆழ்ந்து, அவன் மனைவியாகி என அத்தனை உணர்வுகளையும் ஒருமுறை ஓட்டி பார்த்தவள் விடியலை நெருங்கும் தருவாயில் உதட்டில் ஒட்டிய புன்னகையோடு நெஞ்சில் நிறைந்த ஸ்வப்னங்களோடும் கண்ணுரங்க தொடங்கினாள்.

 

admin

Administrator
Staff member
சின்ன விளக்கம் எனக்கு மதுரை பாஷை சிறிதும் பரிச்சயம் இல்லை கொஞ்சம் முயன்று இருக்கேன் தவறு இருந்தால் மன்னிக்கனும். அது போல அவசர அவசரமா எழுத்து பிழை பார்த்தேன் இருந்தும் பிழை இருந்தால் மன்னிகனும் விரைவில் திருத்தி விடுகிறேன்..

அத்தியாயம் - 07


"அக்கா!" அவளிடம் பதில் இல்லை என்றானதும் மீண்டும்..


"அக்கா!" என அழுத்தி அழைக்க.

"ஹாங்! சொல்லு ராஜேந்திரா. ஏதும் அவசர சோழியா."


"என்னங்க அக்கா. நீங்க நல்லா இருக்கிங்க இல்ல."


"ஏன் எனக்கு என்ன?"


"இல்ல பேசணும் சீக்கிரம் கெழம்பிவானு சொன்னீங்கன்னு கட்சி ஆபிஸ்ல இருக்க வேலையெல்லாம் கை மாத்திட்டு வந்தேன். நீங்க ஏனுங்க அக்கா யோசனைல இருக்கிங்க."


அப்போதே அவனை வர சொன்னதை நினைவில் கொண்டு வந்தவள், ஒரு ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டு கொண்டு.


"ராஜா! ஆண்டாள்!" என்றவர் தேங்கி நிறுத்த, மாமன்காரன் பதறிவிட்டான்.


"ஏன் ஆண்டாளுக்கு என்ன? நல்லா இருக்கா இல்ல."


தன் மகள் மீதான தம்பியின் பாசத்தில் உருகியவள் உள்ளமோ.. 'இவனுக்காகவேணும் இவன் மகனின் வாழ்வை செம்மையாக்க வேணும்' என நினைக்க. அவன் வாழ்வை சில்லு சில்லாக சிதைத்தவர்களுக்கு அவனே எமன் என்பதை அறிய வாய்ப்பில்லை.


"என்னங்க அக்கா கேட்டுட்டு இருக்கேன் அமைதியா இருக்கீவ மருமவ புள்ளைக்கு ஒடம்புக்கு ஒன்னுமில்லையே."


"உம்ம மருமவளுக்கு ஒன்னுமே இல்ல ராஜா! அவ சௌக்கியன்தேன். நீ மூச்சிக்கு முன்னூறு தரம் எம் மருமவ! எம் மருமவனு உருகுறியே அவள நேசமாவே உம் மருமவ ஆக்கலானு இருக்கேன்."


"அதுகென்ன இப்போவும் அவ எம் மருமவ தேன்."

எனும் போதே தமக்கையின் கூற்றை முழுதும் புரிந்தவன், உணர்ச்சிவசப்பட்டவனாக. தேவ நாயகியின் கைகளை பற்றி கொண்டு..


"அக்கா! நெசந்தானா, நெசமா தான் சொல்லுறீங்களா. எனக்கு எம் மவன் மேல கோபம் கடலளவு இருக்குங்க அக்கா. ஆனா அவன் நமக்கு ஒத்த ஆண் வாரிசு எங்க வெளங்காம போயிருவானொன்னு உள்ளுக்குள்ள வெசனபட்டது என்னமோ உண்மை தான் ஆனா கீழ்சாதி சிறுக்கிய கட்டிக்கிட்டு அவ புள்ளைக்கு அப்பனா வந்தவன என்னன்னு சொல்றது. அவனோட ஒட்டிகிட்டவள ஒழிக்க முடிஞ்ச நமக்கு நம்ம ரத்தத்த வெட்ட முடியல இவன் வாழ்க்க ஒத்தையா போயிருமோன்னு ஒரு நெனப்பு இருந்துச்சு ஆனாலும் நம்ம தங்க புள்ள இந்த வீட்டோட சாமிய இணை கூட்ட நினைக்கல அக்கா."


உணர்வு ததும்ப பேசி கொண்டிருந்தவன் செய்த மஹா பாதகம் அவள் கண்களுக்கு புலப்பட்டாலும் கருத்தில் பதியவில்லை ஆனால் தம்பி மகனை கரையேத்தி, தன் மகளை கைக்குள் வைத்துக்கொள்ள நினைத்தாள். அவளுக்கு உரைக்காத ஒன்று உண்டு அது எத்தனுக்கெல்லாம் எத்தன் பூமியில் உண்டு. அவன் ஆடும் பரம பதத்தில் இவர்கள் பகடையாகி பல காலம் கடந்துவிட்டது.


"சரி சரி வெசனபடாத. அக்கா நான் என்னத்துக்கு இருக்கேன்."


இது அத்தனையையும் ராஜேந்திரனின் மனைவி பொம்மையாகி பார்த்து கொண்டிருந்தாள். இவர்கள் பேச்சு சத்தியம் சார்ந்தது இல்லை என்று அறிந்தாலும் மகனுக்கு நல்லது நடக்க வேண்டும் என சுயநலமாக எண்ணியது தாயுள்ளம். அதில் இன்னோரு பார்வையாளரான ராகுவேந்திரன் உள்ளுக்குள் கனன்று கொண்டிருந்தார் பல வருடங்களாக ஆறாத ரணமொன்று அவருள் நீரு பூர்த்து போய் கிடக்கிறது. ஆண்டுகள் பல கடந்தும் பலியெடுக்கும் படலத்துக்காக அவர் மனம் ஊமையாக கொதிப்பதை யாரும் அறியார்.


"அக்கா!"


"அக்காதேன் அம்புட்டு சுலுவா எம் மருமவன விட்டு கொடுத்துருவனா. நம்ம தங்க பொண்ணு ஊருக்கு வாறேன்னு சொல்லி இருந்தால் எப்படியோ, ஆனா அவள் வரவானு கேட்க்கா. இந்த பூபதி வீட்டு மகாலஷ்மி யாசகம் கேட்பதா? அதான் முடிவு எடுத்துட்டேன் அவளுக்கு கதிரவனை கட்டி வைக்கணும்னு."


"அக்கா எல்லா சரித்தேன் ஆனா எம் மருமவ புத்தம் புது பூவு. இவன் அப்படி இல்லையே."


"இருந்துட்டு போவட்டும் ராஜா. நமக்கு பிறகு அவன் தானே ஆளனும் அங்க என் தங்க பொண்ணு ராணியா இருக்கட்டுமே. அதை விட எத்தனை காலம் போனாலும் சிலது மறக்க முடியாதுல."


என்றவளின் காதுக்குள் சாபங்கள் சத்தமிட, அதை அடக்கி ஆளும் வேற்கை பிறந்ததோ என்னமோ.


"எம் புள்ளைய அம்புட்டு சீக்கிரம் விட்டுற மாட்டேன். எந்த சாபத்துக்கு பயந்து அவள ஒழிச்சி வைத்தனோ அதே சாபத்தை இனியும் எம் புள்ளைய அண்ட விடாம இருக்க அவளை என் கைக்குள்ளேயே வச்சுக்க போறேன்."


ஏற்கனவே ஒரு உயிரை பறிகொடுத்த தன் அக்காவின் ஆதங்கம் புரிந்தவனாக.


"விடுங்க அக்கா நாம பார்த்துக்கலாம்." என்றவன் குரலில் இருந்த யோசனையை கண்டவள்.


"என்ன ராஜா யோசனை."

"அக்கா நாம இவ்வளவு பேசுறோம் ஆனா இந்த பய கல்யாணத்துக்கு ஒத்துக்கணுமே. கடைசி வரை மாட்டான் அடம் புடிப்பான்."


"ஹா.. ஹா.." என்றவளின் சிரிப்பில் அத்தனை அரக்கத்தனம். மிதமிஞ்சிய திமிரோடும், நயவஞ்சகத்தோடும்.


"ஒத்துக்காம எங்குட்டு போவான்."

"அக்கா!"


"என்னத்த மினிஸ்டர் ஆனாலும் என் தம்பிக்கு அத்தனை சூது போதாது."

அவன் அப்போதும் யோசிக்க.


"என்னத்த யோசிக்கிறவ அவன் சம்மதிப்பான் அப்படியும் சம்மதிக்கலையா அவன் ஆத்தா கழுத்துல கத்திய வை. அப்போவும் மாட்டேன்கிறானா அவன் ஆத்தா கழுத்த திருகி போடு எப்படி சமதிக்காம போவானு நாமளும் பார்க்கலாம். அவனுக்கு ஆத்தான அம்புட்டு இஷ்டமாச்சே அவ உசுரோட வேணுனா நாம சொல்றதுக்கு தலையாட்டி தான் ஆவோனும் வேற வழி."


என்றதும் இருவரும் இணைந்து சிரிக்க, சரஸ்வதியின் நெஞ்சில் உத்திரம் வடிந்தது. வேதனையோடு தன் நிலையை நொந்தாலும் தாயாக தன் மகன் வாழ்வு சிறக்க நினைத்தார் என்றால், ராகுவேந்திரனோ. 'மீண்டுமொரு சரித்திரம்' என வெறுப்போடு எச்சிலை விழுங்கினார்.


அதே நேரம் பெங்களூர் ஹை வே ஊடாக மங்களூர் செல்லும் வழியில் ஆண்டாளை ஏற்றிக்கொண்டு ருத்ரன் ஜீப் பறக்க அவன் மனமோ காலையில் தாய் கூறியதில் சுழன்றது.


………………………..


பல நாள் கழித்து தன் மடியில் தலைசாய்த்த மகனின் சிகைக்குள் கை கொடுத்து சாரதா கோதிக் கொடுக்க அது சுகமாக இருந்தாலும், முகத்தில் அதை சிறிதும் காட்டாமல் என்றும் போல் இறுகி கிடக்க அந்த தாய்க்கு மட்டும் கண்ணுக்கு தெரியா ஒரு இளக்கம் மகனிடம் தோன்றியது.


"நேநு வெல்லாளி அம்மா."(நான் போகணும் அம்மா)


"தெலுசு பங்காரம்."(தெரியும் செல்லம்)"

"ஏந்டி அம்மா இதி."(என்ன அம்மா இது)


"எந்துக்கு பங்காரம்?"(ஏன் செல்லம்) வார்த்தை ஜாலத்தில் நீ புலி குட்டினா நான் தாய் புலி என்றார் சாரதா.


"ஹம்ச்.. அம்மா! ப்ளீஸ் அல்லவ் மீ மா."

"நுவ்வு வெல்லு."(நீ போ)

எப்பக்கமும் வளைந்து கொடுக்காத தாயில் ஆதங்கம் எழுந்தாலும் தன் இறுக்கத்துக்குள் அதை மறைந்தவன், அவர் மடியில் இருந்து எழுந்து அவரின் முகத்தை நேருக்கு நேர் நோக்கி.


"பட்டல! அம்மா."(பிடிக்கல அம்மா) என்றான் முகத்தை கடினமாக வைத்துக்கொண்டு.


"ஏந்டி பட்டல டீசி சார்."(என்ன பிடிக்கல டீசி சார்)


"இங்க நான் உங்களுக்கு டீசிபியும் இல்ல நீங்க எனக்கு எக்ஸ் கலெக்டரும் இல்ல. நீங்க என் அம்மா நான் உங்களுக்கு மகன்."


என்றான் முன்னிலும் கடினமாக. மகனை தான், டீசி என அழைப்பதை இருவருக்கான தருணங்களில் அவன் விரும்ப மாட்டான் என அறிந்தே கூறினார்.


"டீசிபி ருத்ரன் நாயூடு ஐபிஸ். தெலுங்கானா புலி என் மகன். ஹம்.. சொல்லி பார்கிறப்போ பெருமையா சும்மா கெத்தா கள்லிகி பங்காரம்" (கள்லிகி-இருக்கு)


"அம்மா பீ சீரியஸ் நேநு வெல்லாளி அம்மா."


மகன் குரலில் இருந்த அழுத்தத்தில் நக்கலில் இருந்து மீண்டவர் மீண்டும்..


"அதான் போனு சொன்னேன்."


"நீங்க இப்படி சொன்னா நான் ரியாக்ட் செய்ய மாட்டேன்னு தெரிஞ்சே பேசறீங்க இது சரியா அண்ட் இப்போ இந்த ருத்ரன், ஐபிஸ் ஆபிஸரா மட்டும் தான் தெரியிறனு சொல்லுறீங்களா அம்மா?"


"ஏந்டி பங்காரம்! காக்கி சட்டைக்குள்ள ருத்ரன் ஐபிஸ்க்கு இதயம் இல்லைனு நான் சொன்னதை குத்தி காட்டுறியா?"


தன், எண்ண நாடியில் விரல் வைத்து கூறிய அன்னையை மெச்சுதலாக பார்த்து புருவம் உயர்த்தியவன்.


"ஹம்.. மே பி." என்க.


"ஹம்.. எனக்கு தொடர் என் கவுண்டர் செய்த தெலுங்கானா புலிய பார்த்து ஒரு எக்ஸ் கலெக்டரா அப்போ அப்படி கேட்க தோணுச்சு.

பட் பங்காரம் இப்போவும் உன்னை ஐபிஸ் ஆஃபீஸரா மட்டும் பார்த்தேன்னா கண்டிப்பா அப்படி தான் கேட்பேன் ஆனால் இப்போ இந்த ருத்ரன் சாரதா தேவியோட மகன். ஒரு அம்மாவா என் மகனை பார்த்து அப்படி கேட்க முடியாது. ஏன்னா அவனோட தவத்தை முழுசா அறிஞ்சவ நான். அதே நேரம் ஒரு பெண்ணா நீ செய்ய போற காரியத்தை ஏற்க முடியல ருத்ரா."


தன்னை வெகுவாக கட்டுப்படுத்தியவனாக.

"உங்க புள்ளைய வுமனைஸர்னு நினைக்கிறீங்களா."


"நீ ரொம்ப வளந்துட்டேன்னு அடிக்கவெல்லாம் யோசிக்க மாட்டேன் ருத்ரா."

அவன் இதழ்கள் புன்னகையில் மெலிதாக நெளிய முயன்றது.


"தென் வை."

"இன்னோரு மகா பாரதம் வந்தாலும் பெண் தானே பணயம் இல்லையா?"


தன் தாயை ஆழமாக நோக்கியவன்.

"இது குருஷேத்திர போராக இருக்கலாம் ஆனா என் மனைவிய பாஞ்சாலியா மாற்றி துகிலுரிய நானே காரணமாக மாட்டேன்."


"இதி ஓத்தூ ருத்ரா!"(இது வேணாம் ருத்ரா)

"காவாலி அம்மா."(வேணும் அம்மா) என்றவன் ஆழ்ந்த மூச்செடுத்து.


"அவ மதுரைக்கு போகும் போதும் முழுசா என் மனைவியா தான் போகணும்."

என்றவன் மனமோ 'என் குழந்தைக்கு அம்மாவாவும் போகணும்.' என இறுமாப்பாக எண்ணியது. சில நேரங்களில் இறைவன் நாம நினைப்பதை நினைத்த படியே நடத்தி முடிப்பதும் உண்டு.


"ருத்ரா!"

"ப்ளீஸ் அம்மா அது, ருத்ரனோட மனைவிங்கிற அந்த ஒன்னு மட்டும் தான் அவளை காப்பாத்தும். இதுக்குமேல கான்ட் எஸ்பிளேன் அம்மா."


"ஹம்.. நீ பாஞ்சாலிய உருவாக்கல ஆனா இன்னோரு அக்கினி பரீட்சை வேணும்னு நினைக்கிற பங்காரம்."


மீண்டும் தாயை ஆழமாக பார்த்தவன்.


"சீதையை சிறையெடுக்கலனா அரக்க இனம் அழிந்து இருக்காது. அதே சீதை தீக்குளிக்கலைனா சாகும் வரை ஒரு பெண்ணோட மாண்பும், வைராக்கியமும் என்னனு மனுசங்களுக்கு தெரியாமலே போய் இருக்கும்."


என்றவனின் கருத்தின் சூட்சமம் புரியாதவரா அவர். அதன் பின் வாக்குவாதம் செய்யவில்லை. வதம் செய்ய போகும் மகனுக்கு துணை நின்றார் என்பதே உண்மை.


"பாவா!"

"பாவா!" என்ற சத்தத்திலும் சில்லென்ற தொடு உணர்விலும் நினைவுகளில் களைந்தவன் ஓர விழி பார்வையில் ஆண்டாளிடம் என்னவென்று கேட்க.


'வாய திறந்து கேட்டா தான் என்னவாம் மனம் சுணங்கினாலும்.' அவன் முன் மடக்கி பிடித்த கையை நீட்ட. வண்டி ஓட்டுபவனுக்கு அது இடைஞ்சலாக இருந்ததோ..


"ஏமிரா இதி."


என்று அதட்டவும். அவள் முகம் சுருங்கி விட்டது அதை பார்த்தவன். "ஹம்ச்!" என்ற சலிப்போடு தலையை அழுத்திக்கோதிக் கொண்டு.


"செப்புரா" என்று அழுத்தி கேட்கவும்.

"கோயில் பிரசாதம் என்றாள் மெல்லிய குரலில்.


"அவுன்னா."(அப்படியா)

"அவுன்னாங்க"

"வாட்?"

"அப்படி தானு சொன்னேன்." எப்போதும் அவள் பேச்சில் உண்டாகும் ஒரு வித சுவாரசியத்தோடு


"அதுக்கு அவுன்னா லேது அவுன்னுனு சொல்லணும்."


"ஓவ்!"

"நுவ்வு செப்புரா."

"எத செப்பு."

"இப்போ பிரசாதம்னு ஒரு கதை சொன்னீயே அதை."


"ஆமா! இது கோயில் பிரசாதங்க நாம இன்னைல இருந்து புது வாழ்க்கையை ஆரம்பிக்க போறோமா அதான் அஞ்சுவோட கோயிலுக்கும் போய் வேண்டிட்டேன்."


என்றவளின் கன்னங்கள் இரண்டும் வெட்கத்தில் வெகுவாக சிவந்தது. அதனை ஓர விழியால் ரசனையோடு பார்த்தாலும் முகத்தில் வெளிப்படுத்தவில்லை அதை அவளும் பெரிதாக கண்டு கொள்ளாமல்..


"எனக்கும் அம்மன் கோயில்னா ரொம்ப பிடிக்கும். அதுவும் கைல திரி சூலத்தோட கண்களில கருணையோடு, அன்புக்கு அன்பும். தப்புக்கும் தண்டனையும் உண்டுகிற அந்த பெண் தெய்வத்தோட தோற்றத்துல பக்தியை விட, தீராத காதல் உண்டு பாவா!"


அவளின் வார்த்தைகளில் அவன் ஜீப் டையர்கள் தார் சாலையில் தேய 'கீரிச்..!' என்ற சத்தத்தோடு வாகனம் குலுங்கி நிற்கவும், அந்த வார்த்தைகள் கொடுத்த தாக்கத்தில், ஒரு காலத்தில் அவன் நேசித்த அந்த பெண்ணிடம் இதே விளக்கத்தை கேட்க நேர்ந்த தன் துர்பாக்யத்தில் அதிர்ந்து இறுகி நின்றான்.


ஆண்டாள் எனும் தென்றல் சொல்லாமல் கொள்ளாமல் அவனுக்குள் புதைந்து போன ரணங்களை தோண்ட தொடங்கியது. அவள் கையாள போகும் புயலின் வீரியத்தை ஆண்டாள் அறிய வாய்ப்பில்லை. அவன் நிலையோ இதுவென்றால் அவளோ கண்கள் சிவந்து போய் உக்கிரமாக இருந்தவன் தோற்றத்தில் அலண்டு போய்விட்டாள்.


"பாவா! நா.. நான்.. தப்.." அவள் திக்கி திணற. நொடியில் தன்னை சமன் செய்தவன்.


"கைல கோயில் பிரசாதம் தானே."

'என்ன மறுபடியும் முதல்ல இருந்தா.' மனதால் கவுண்டர் கொடுக்க தலையோ அசைந்து ஆம் என்றது.


"எதுக்கு என் முன்னாடி நீட்டுன."

எச்சிலை முழுங்கியவள். "உங்களுக்கு வச்சு விட." என்றாள் தயங்கிக் கொண்டே


"அப்போ வச்சு விடு."

"பாவா!" அவள் திகைக்கவே.

"பட் ஒன் கண்டிஷன் நான் தலைய குனிந்து வாங்கிக்க மாட்டேன். நீயே வச்சு விடு."


"அது எப்படி." அவள் வாய்விட்டே கேட்க. அது உண்பாடு என்பதை போல அவன் தோள்களை குலுக்கி கொண்டான். இத்தனைக்கு ஜீப்பை வீதியோரம் நிறுத்தி இருந்தான்.


"அது எப்படி முடியும்."


"முடியனும் அம்மாயி! உனக்கு வைக்கணும்னா நீ தான் எப்படின்னு சொல்லணும் ஓர் செய்யணும்."

அவன் அலட்சியமாக கூறவும்.


கணவன் குனியாது ஆறடி உயரத்தில் இருப்பவனை நெருங்கி வைப்பதென்றால் அவன் மீது சாய்ந்தோ படந்தோ முயன்றால் தான் வைக்க முடியும், இதை அவனும் நன்கு அறிவான் என்பதும் அவளுக்கு நிச்சயம். இருந்தும் தான் இதை செய்யாது ஜீப்பை இயக்கவும் மாட்டான் என்பதால், அவன் மீது சாய்ந்து, ஒரு கையால் அவனின் தோளை பற்றிக்கொண்டு விபூதி குங்குமம் இட்டவளின் மேல் எழுந்த பாசி பயறு, சீயக்காய், மஞ்சள், சந்தனம் கலந்த குளியல் பொடியின் வாசனையும், பிச்சு பூவின் சுகந்தமும் இது வரை அவன் அறிந்திடாத மெல்லிய பெண்ணின் வாடை என கொந்தளிக்கும் அவன் உணர்வுகளுக்கு வேலியிட, தன் நீண்ட மூக்கால் அவள் மணத்தை ஆழ்ந்து சுவாசித்தவன், தன் மேல் உணர்ந்த மனைவியின் ஸ்பரிசத்தை தேனை சுவைப்பதை போல துளி துளியாக சுவைத்தான்.


நீண்ட நேரம் படுக்கையில் காமத்தில் கிடைக்காத இன்பம் ஒரு மனைவியின் ஆத்மார்த்தமான சிறு மெல்லிய தொடு உணர்வு கொடுக்கும். ருத்ரனும் அதையே உணர்ந்தான். அவளை சமப்படுத்த விளைந்தவன் மனதே சமப்பட்டது. கணவனுக்கு பிரசாதமிட்டவள் மேனியெல்லாம் நாணக்கோடுகள் கணவனின் முகத்தை அருகில் கண்டதும் எங்கே வெட்கத்தை மீறி அவனுக்கு முத்தமிட்டு விடுவோமோ என வெகுவாக நடுங்கி விட்டாள். படபடக்கும் இதயத்தை மங்களையத்தோடு சேர்த்து இறுக்கி பிடிக்க.


"அம்மாயி!" என்றவன் அழைப்பு ரீங்காரமாக மாற அவள் நிமிரவே இல்லை.


"லுக் அட் மீ." என்று அழுத்தி அழைக்கவும் விலுக்கென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள்.


"பாவா!" ஒற்றை சொல்லில் அவனுள் மீண்டும் புயல்.


"ஹம்.." அவள் விழியோடு விழி நோக்கி.


"நீ என்னோட பயணிக்க போற பாதை முழுக்க மலர் பாதை இல்லை. கல்லும் முள்ளும் கூடவே நிறைந்திருக்கும்.. இந்த ருத்ரனோட கரங்களுக்குள்ள காலம் முழுக்க பதுங்க முடியாது அதே நேரம் என் நிழல் உன்னை விட்டு என்றும் நீங்காது. முக்கியமா இந்த ருத்ரன் நாயூடு பல ரகசியங்களை புதைச்சு வச்சு இருக்க மனுஷன். அது உனக்கு மகிழ்ச்சியை தருமானு தெரியலை. நான் ஷார்ட் டெம்பர் பொறுமைக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. என் கன் பாயிண்டை தெரிஞ்ச அளவு அடுத்தவங்களை தெரிஞ்சிக்க முயன்றதில்ல சோ நீ இப்போ இந்த செகண்ட் முடிவு பண்ணு. மறுபடியும் ஒரு சான்ஸ் தாறேன் இப்போ நீ திரும்பி போகணும்னு சொன்னா உன்னை நீயாவே திருப்பி கொண்டு போய் ஹாஸ்டல்ல விட்டுருறேன். இல்லை என்னோட இப்படியே வாறேன்னு சொன்னா நீ மிசஸ் ருத்ரனா மட்டும் தான் இனி வாழ முடியும் நீயா போறேன்னு சொன்னாலும் நானா உன்னை விலக மாட்டேன் அதுக்கு பிறகு உன் பிடி ஆயிசுக்கும் என் கைல முடிவு பண்ணு.."


அவள் பதில் பேசவும் இல்லை நொடியும் தாமதிக்கவும் இல்லை. ஸ்டெரிங் பிடித்த அவன் ஒற்றை கையை விளக்கி விட்டு அவன் நெஞ்சோடு புதைந்து தன்னை அவனோடு இறுக்கி கொண்டாள். அவள் வாய் மொழி தராத சம்மதம் செயலில் கிடைக்க அவனும் தன் தலைகளை களைந்து மூச்சு முட்ட ஒரு நொடி இறுக்கி அணைத்து அவளை விடுத்தவன் கைகளில் ஜீப் பறந்தது எனின் அவன் விழிகளுக்குள் ஒரு ஸ்வப்பனம் வலம் வர தொடங்கியது..


…………….

அன்று..


"அம்மப்பா எனக்கு ஏன் இந்த பெயர் வைத்தனீங்க."


"ஏன் உங்கட பெயருக்குக்கென்ன அருமையான பெயர் அல்லோ."


"அதான் எப்படி வைத்தனிங்க எண்டு கேட்டனான்."


"அதுவோ உங்கட பெயர்ல இருந்தவ நல்லவர் எங்கட சனத்துக்கு எண்டு இந்திய அரசங்கத்துல இருந்து கொண்டு நிறைய நல்லது பண்ணி இருக்கவே."


வெகு நேரம் யோசித்த தேன் சீட்டு.


"அப்படியெண்டா இங்க இந்தியாவில கேம்புக்குள்ள நாங்கள் அகதியா தானே கிடக்கோம்."


"ஓம் பிள்ள. நாங்கள் அகதிகள் தான்."

"அப்படி எண்டால் இங்க இருக்க பொலிஸ் உடுப்பு போட்டவை நல்லவங்கள் இல்லை தானே."


"எண்ட பிள்ள ஏன் அப்படி சொல்லுது."


"பிறகு என்ன அம்மப்பா? அவங்கள் நல்லவங்கள் எண்டால் ஏன் அம்மாவ தினமும் இரவைக்கு கூட்டி கொண்டு போறீனம். அம்மா வராட்டி என்னை வெருட்டுறினம். அம்மாவும் பயந்துகொண்டு போறா. அதோட அங்க இருந்து வரேக்க முகத்துல காயத்தோடு, நோண்டிக்கொண்டும் அழுது கொண்டும் தானே வாரவ."


தன் பேர குழந்தையின் தெளிவான பேச்சில் அந்த முதியவர் மனம் ஊமையாக அழுதது. என்னவென்று விளக்குவது. சொந்த நாட்டிலிருந்து புகலிடம் தேடி அகதியாக இங்கே வந்தால் அகதி முகம் எனும் போர்வைக்குள் நடக்கும் அட்டூழியங்களும், பெற்ற மகளே காவளர்களால் கூட்டு பலாத்காரம் செய்ய படுவதும், அவள் மறுத்தாள் பேர குழந்தையின் உயிர் பணயமாக வைக்க படுவதுமென உள்ளுக்குள் துவண்டே போனார்.

அதுவும் தன் மகள் எப்பேர்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தவள் எப்பேர்பட்ட, பார் போற்றும் வீரனுக்கு மனைவி என்று நெடுஞ்செழியனை நினைத்த மனம் இன்றும் பெருமையில் ஏறி இறங்கியது என்னவோ உண்மை. இப்படியே தன் பேர குழந்தையின் கேள்விகளுக்கு பதில் கூறி தூங்க வைத்து சிறிது நேரத்தில்..


"ஸ்ஸ்.." என்ற அனத்தலோடு தன் அக்காளின் மகள் நித்தியாவின் உதவியில் வந்து சேர்ந்தாள் மகள் விஜயா. அதை அறிந்து பெற்ற தகப்பனாக மகளின் அவல நிலையை காண மனம் ஒப்பவில்லை கண்களை இறுக மூடிக்கொண்டு தூங்குவது போல பாசாங்கு செய்ய, வலியோடு வந்தவளின் விசும்பல் அந்த டெண்ட்டுக்குள் ஏனோ அலறலாகவே கேட்டது.


"என்னடி விஜயா அழுறனி"


"முடியலடி! ஆம்பிளை, பதவில இருக்கினம் எண்ட திமிருல தானே இவ்வளவு நாசம் செய்யிறானுகள். நான் கும்பிடுற அந்த நாக பூசணி தாய் சும்மா விடாதுடி.."


கூட சேர்ந்து அழுத நித்தியாவோ..


"சொந்த நாட்டுல தான் பாதுகாப்பு இல்லை எண்டு இங்க வந்தா, முகாம்ல இருக்க பொம்பிளை பிள்ளைகளை விடுறானுகள் இல்லையடி. இந்த ஆட்சியாளர் மாறினால் ஒழிய நமக்கு விடுவு இல்லையடி. இப்படி அனுதாபத்தோடு வாழனும் எண்டு எங்கட விதில எழுதி இருக்கு போல..


ஈழம் எண்டைக்கு அனுதாபத்தோடு பார்க்க வேண்டியதும், ஈழ மக்களும் பாவப்பட்ட சனங்கள் தானடி."


என்றதும் அதுவரை கழிவிரக்கத்தில் குமைந்தவள் விழிகள் சிவக்க கோபத்தோடு குரலுயர்த்தி..


"அனுதாபம்! ஏன் அனுதாபம்? எதற்கு அனுதாபம்? ஈழம் என்பது அனுதாபத்தை தரவல்லதல்ல. ஒருபோதும் அனுதாபத்தோடு பார்க்கப்பட வேண்டியதும் அல்ல என் ஈழ பூமி. அனுபவத்திற்கு அப்பாற்பட்டது. இன்னொரு முறை என் முன்னால அந்த வார்த்தையை சொல்லாதீர் நித்தியா. நெடுஞ்செழியன் உயிரோடு இல்லையெண்டாலும் நான் அவரிண்ட ஆன்மா. அந்த வார்த்தையை எண்ட மனுஷன் விரும்ப மாட்டார்."


"இல்லையடி விஜயா எனக்கு தெரியாதா அத்தான பற்றி. அவர் இருந்து இருந்தா இந்த நிலை இல்லை தானே விஜி. மனசு எல்லாம் வலிக்குது இப்படி நம்மட அம்மா, அப்பா, பிள்ளை எண்டு அவங்களை பணயம் வைத்து எங்கள கொண்டு போய் சீரழிக்கேக்க மனசு தவிக்குதடி. உயிர விட மானம் பெருசு தானேயடி. இப்படி வாழுறத விட கடலுக்க விழலாம் போல கிடக்கு."


என்று கதறிய சகோதரியை அணைத்து கண்ணீரை துடைத்து விட்டவள்..


"நாங்கள் ஏனடி சாகோனும். கடைசி மட்டிலும் ஆயுதம் ஏந்தி போரில நின்னு செத்தாலும் தற்கொலை வீரனாக போக மாட்டேன் எண்ட கர்வம் நிறைந்த நெடுமாறன் மனுசியடி நான். நீ அவரிண்ட தாய் மாமன் மகள். சொந்த மச்சாள் நீயே இப்படி கதைக்கலாமா நித்தி..


எதுடி கற்பு! இவனுங்கள் தினமும் கொண்டு போய் கூட்டா சிதைக்கிறானுகளே அந்த முக்கோண உறுப்பா கற்பு! சொல்லு நித்தி அதா கற்பு! அதா நம்மளோட மானம்!

உனக்கு நம்மளோட கற்பு எது எண்டு தெரியுமோ நித்தி.


பொதுவாக பெண்கள் சுற்றித் திரிகையில் ஆசையாக நாங்கள் வளர்த்த கூந்தலை அறிவாய் முனையில் அறுத்து துச்சமென குப்பையில் போட்டுவிட்டு எங்கட இனத்துக்காக செத்து மடிந்தோமே அந்த வீரம் தான் கற்பு. சொகுசாக திரிய வேண்டிய வயதில் பிஞ்ச செருப்பை போட்டுக்கொண்டு சமர்க்களம் ஆடியவர்கள் நாங்கள் அப்படி பட்ட துணிச்சல் தானடி மானம். நகைநட்டு என ஆடம்பரமாக வாழ வேண்டிய வயதில் நஞ்சைக் கழுத்தில் கட்டிக்கொண்டு காலனோடு தினமும் வாழ்ந்தவர்கள் நாங்கள் அப்படிபட்ட நம் நிமிர்வு தானடி கற்பு.


காலுடைந்து, கை முறிந்து, முகம் எறிந்து, முள்ளம் தண்டு நொறுங்கி, ஓலைக்குடிசையில் ஒரு வேளை உணவு உண்டு ஒட்டிய வயிற்றோடு வாழ்ந்தவர்கள் நாங்கள் அந்த வைராக்கியமே நம் கற்பு. சொல்லும் இது தானே நாங்கள் கண்ட எங்கட பொம்பிளை பிள்ளைகள். அவைல இருக்க இந்த நிமிர்வு, வைராக்கியம், வீரம் இது தானடி கற்பு, மானம் எல்லாம். இதுக்கு முன்னால் நம் உடம்பை சிதைக்கிறதால என்ன ஆக போது.


இந்த வைராக்கியம், வீரம், நிமிர்வு எண்ட மனுசன போல என் கிட்டவும் இன்னும் இருக்கேக்க நான் மனசலவில் நெடுஞ்செழியன் பொம்பிளை தான். அதை இவனுங்கள் என்ன, என்னை படைத்த ஆண்டவனாலும் மாற்ற முடியாது.


நான் வாழனுமடி எண்ட பிள்ளைக்காக எண்டாலும் வாழனும். அப்படியே நான் இறந்தாலும் எண்டைக்கு நெடுஞ்செழியனோட ரத்தம் மறு பிறவி எடுத்து இந்த பூமில சுதந்திர காற்றை அதே வீரத்தோட ஒரு போர் வீரனாக சுவாசிக்குமோ அன்றே என் ஆன்மாவுக்குள் எரிந்து கொண்டிருக்கும் இந்த நெருப்பும் அணையும்."


என்றவளின் பேச்சு அந்த கடல் காற்றில் மிதந்து திக்கெல்லாம் பரவி வீரத்தின் சுவடுகளை பதித்தது. அதன் தாக்கம் இன்று ருத்ரனுக்குள் ஸ்வப்பனங்களாக வலம் வர அந்த நினைவுகளை பத்திரமாக தனக்குள் பொதித்து கொண்டு அவன் கண்ட ஸ்வப்பனத்தை நனவாக்கும் வெறியோடு ஜீப்பை செலுத்தினான்.


அன்று அவர்களுக்கு இரவும், நிலவும் சாட்சியானது இன்று நினைவும், நிஜமும் சமர்களாம் புகுந்தது.


ஸ்வப்பனங்கள்.
 
Last edited:
Status
Not open for further replies.
Top