எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நிலா கால போட்டி விதிமுறைகள்

admin

Administrator
Staff member
இன்று என் மகளின் முதலாவது பிறந்தநாளை முன்னிட்டு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்போடு வந்துருக்கிறேன். இந்த போட்டிக்கான பெயர் தெரிவு என் பிலவ்ட் அம்மா.. உங்கள் ஆசிர்வாதங்கள், வாழ்த்துக்களோடு..


நறுமுகை நிலவில் ஒரு கதை எழுது குறுநாவல் போட்டி - 2022


நறுமுகை நாவல்கள் தளம் உங்களை அன்போடு வரவேற்கிறது!


*போட்டி அறிவிப்பு இன்று (24.06.2022) தொடங்குகிறது. ஆக இன்றிலிருந்து (07.07.2022) ஜூலை 07 வரை போட்டியாளர்கள் தங்களை பதிவு செய்யலாம்.


*போட்டியில் கலந்து கொள்ளும் புதினங்கள் தங்களில் சொந்த படைப்பாக இருத்தல் வேண்டும்.


*பங்கு பெறும் கதைகள் இதற்கு முன் எந்த தளத்திலோ அல்லது புத்தகமாகவோ வந்திருக்கக்கூடாது. அதாவது, இப்போட்டிக்கென எழுதப்பட்ட புதிய கதையாக, உங்கள் சொந்த கற்பனையாக இக்கதை இருத்தல் அவசியம்.


*அடுத்தவர்களின் படைப்பைத் தழுவிய கதைகள் ஆதாரங்களோடு நிரூபிக்கபட்டால் போட்டியில் இருந்து நீக்கப்படும்.


*ஜூலை 10 ஆம் திகதி முதல் தளத்தில் பதிவுகள் இடத் தொடங்கி செப்டம்பர் 15 ஆம் திகதிக்குள் முழுப் படைப்பையும் தளத்தில் பதிவு செய்து முடித்திருக்க வேண்டும். 2022 அக்டோபர் 24 அன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்ற படைப்புகள் 2023 புத்தகக் கண்காட்சிக்கு புத்தகமாக வெளியிடப்படும்.


*நவம்பர் 24 (2022) வரை அனைத்து கதைகளும் தளத்திலேயே வைத்திருக்கப்படும். அதன் பின் நீக்கப்படும்.


*புதினம் ஒவ்வொன்றும் 25000 வார்த்தைகளுக்கு மிகாமல் 20000 வார்த்தைக்குக் குறையாமல் இருத்தல் வேண்டும்.


*விருதுகள் மற்றும் வெகுமதிகள்..


 • முதல் பரிசு - ₹5000.
 • இரண்டாம் பரிசு -₹3000.
 • மூன்றாம் பரிசு - ₹2000.-
 • கலந்து கொண்ட அனைவருக்குமே எங்கள் தளத்தின் சார்பாக சான்றிதழ் வழங்கப்படும்.

*போட்டியில் வெற்றி பெறும் முதல் மூன்று கதைகள் எங்கள் ப்ரஷா பதிப்பகத்தின் மூலம் புத்தகமாக வெளியிடப்படும்.(வேறு பதிப்பகத்தில் புத்தகம் வெளியிட்டு வரும் எழுத்தாளர்கள் விரும்பினால் மட்டுமே அவர்களின் படைப்புகள் எங்கள் பதிப்பகத்தின் மூலம் வெளிவரும். அப்படி வேறு பதிப்பகம் சார்ந்தவர் எனின் அதைத் தெரிவிக்கவும். அவர்களுக்கு பணப் பரிசும் சான்றிதழும் மட்டுமே)


*ஒருவர் மூன்று கதைகள் வரை எழுதலாம்.


*நீங்கள் சமூகக் கருத்து சார்ந்த கதை, முழுக்க முழுக்க காதல் சார்ந்த கதை, ஆன்டி ஹீரோ அல்லது ஆன்டி ஹீரோயின் கதை, குடும்பம், அமானுஷ்யம், சரித்திரம் என்று எப்படி, எந்த வடிவம் கொண்ட கதைக் களத்தை வேண்டுமானாலும் தெரிவு செய்யலாம் அது எழுத்தாளர் சார்ந்தது. அதற்கு முழு சுதந்திரம் உண்டு.


*வார்த்தை வரம்புகள் மீறி, முகம் சுளிக்கும் காதல் காட்சிகள் இல்லாமல் இருத்தல் வேண்டும்.(open romance)


*இந்தப் போட்டிக் களம் தேர்ந்த எழுத்தாளர்களுக்கு மட்டுமின்றி புது முக எழுத்தாளர்கள், முதல் முறை முயற்சி செய்வோர் என விரும்பும் யாரும் எந்தப் பாகுபாடுமின்றி கலந்துகொள்ளலாம்.


*இது வாசகர்களுக்கான நன்மதிப்பு! தளத்தில் போஸ்ட் செய்யப்படும் மீம்ஸ், ரிவியூஸ், விமர்சனங்கள் ஆகியவற்றில் சிறப்பாக பங்கு கொள்ளும் வாசகர்கள் ஐவருக்கு சான்றிதழோடு சிறப்புப் பரிசு உண்டு.
*வெற்றி பெறும் கதை புதினமாகும் போது அந்தக் கதைக்கு வந்த அதிசிறந்த விமர்சனம் ஒன்று வெற்றி பெற்ற எழுத்தாளரால் தெரிவு செய்யப்பட்டு அது அவர்களின் பெயரோடு புத்தகத்தில் பதிப்பிடப்படுவதோடு அவர்களுக்கு, அந்த எழுத்தாளரின் அந்த நூல் ப்ரஷா பதிப்பகம் சார்பாக பரிசாக வழங்கப்படும்.


* போட்டி முடிவுகள் voting மற்றும் views இரண்டையும் கருத்தில் கொண்டு முடிவு செய்யப்படும்.


* போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தரவேண்டிய இதர தகவல்கள்..


 • நறுமுகை நாவல்கள் தளத்தை பதிவு செய்திருப்பின் உங்கள் யூசர் நேம்.
 • ஈமெயில் ஐடி.
 • உங்கள் எழுத்தாளர் பெயர் (pen name or author name)
 • போட்டி கதையின் தலைப்பு
 • தொடர்புக்கு தொலைபேசி இலக்கம்

*கலந்து கொள்ள விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் narumugai.ink@gmail.com

என்ற மின் அஞ்சல் முகவரிக்கு தங்கள் விருப்பங்களை ஜூலை மாதம் 7ஆம் திகதிக்குள் தங்கள் ஒப்புதல் பதிலை தருமாறு கேட்டு கொள்கிறேன். முதல் 50 எழுத்தாளர்களுக்கு வாய்ப்புண்டு.


Incase of any discrepancy Prasha publications & narumugainovels team's decision will be final.


அன்புடன்

ப்ரஷா.


............

We welcome you to narumugainovels.com website.


Narumugai Nilavil oru kathai eluthu kurunovels competition - 2022.


*The competition will begin on 24.06.2022 hence, all competitors can register themselves commencing today till 07.07 2022.


*The story should be original.


*Any story submitted should not have been published prior in any form and if found will be disqualified.


*All genre of stories are accepted except for open romances.


*Open romances are strictly prohibited.


*Word limit for the story should be between 20000-25000.


*awards and rewards


 • Winner will be awarded with 5000 cash prize
 • Runner up 3000
 • Second runners up will be awarded with 2000 in cash.

 • The three best written stories will have the opportunity to have their stories published in Prasha Publication if they wish to.

 • All comments and reviews on the website will be appreciated and the top five most active reviewers, meme creators and commenters will be receiving special prizes.

 • If the author does wish so the best reviews would be printed on with the published work.

*All participants will be issued with a certificate.


*A singular participants can write up to three stories.


*Please refrain from using your id a special serial number will be provided for all participants (ex : Narumugai Nila kaalam - NNK - 1, 2,3 ect.)


*Competition will be held 10.07.2022 - 15.09.2022

Voting will take place between 15.10.2022

Results will be announced on the 24.10.2022


"All participants should provide with the following details-


 • Username used for the narumugai novels website
 • Email
 • Pen name
 • Story title
 • Contact number

*All participants if willing email the following details with a letter of approval to the following email


Incase of any discrepancy Prasha Publications & Narumugai ன்ovels team's decision will be final.


Best of luck for the competition


Sincerely

Prasha

(Proprietor of Prasha Publications & admin of narumugainovels.com)
 
Last edited:
Top