#நிலவில்ஒருகதைஎழுது
#NNK
#மலரேமௌனமா
#NNK34
மூன்று சகோதரிகள் இவர்கள் வாழ்வில் ஏற்படும் இன்னல்களும் துயரங்களும் வலிகளும் இதை கலையவே இவர்களுக்காக வருகிறார்கள் மூன்று சகோதரர்கள் இவர்களின் நாயகன்களாக

இளமாறன் வெற்றிமாறன் மற்றும் எழில்மாறன் அண்ணன் தம்பிகள் மூவரும் ஒருவருக்கொருவர் அன்பாகவும் பாசமாகவும் தங்கள் மனம் கவர்ந்தவர்களை பற்றி பேசிக்கொள்ளும் போதும் நெகழ்வாகவும் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து கொண்டு கலாய்த்து கொள்வதும் என அவ்வளவு அருமை


இளையராணி..கார்மேக குழலி.. தீப்தி.. சகோதரிகள் மூவரின் மனதிலும் அவ்வளவு வலியும் ரணமும்

ஆடவர்களின் காதலை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கும் தவிப்பும் தங்களின் கையறு நிலையை நினைத்து இவர்களின் கண்ணீரும் ஒருவருக்கொருவர் ஆறுதலாக அனைத்து பிடித்து இருக்கும் இவர்களின் பாசமும் வலி நிறைந்தது

ஏதோ ஒரு நேரத்தில் தன்னுள் எழுந்த தைரியத்தை கொண்டு அயோக்கியனை சாய்த்த மங்கைகளின் தைரியம் அபாரம்


காளையர்களின் பெற்றோர் மணிமேகலை அருள்மாறன் கதாபாத்திரங்கள் அருமை


மங்கையர்களிடம் தங்கள் காதலை உரைத்து அவர்கள் மனக்கதவை வென்று அவர்களை கைப்பிடிக்க பெரிதும் போராடும் தமையன்கள் வெற்றி பெற்றார்களா என்பது கதையில்.. விறுவிறுப்பாகவும் சஸ்பென்ஸ் ஆகவும் அருமையாக கதையை நகர்த்திச் சென்ற மலரே மௌனமா அவர்களுக்கு பாராட்டுக்கள்


நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர்


Good luck dear


