நன்றி.வாழ்த்துகள் டோலி?
நன்றி.Nice start sis ?
நன்றி சகோ.. nothing serious.. அடுத்த எபிசொட்ல சொல்றேன்..Nalla thana ponathu... arranged marriage azhaga fix achu... athu yen last line la apdi sollirukenga ?
இல்ல.. அப்படி எதுவும் இல்ல.. நம்பி படிங்க..Nice... so far story oru smooth line la travel aguthu... Ana ungala ellam namba mudiyathe... ethum roller coster ride varuma pinnala
இன்னும் இந்த கண்ணாமூச்சி ஆட்டம் தொடரும்..Ennaya ithu kannamoochi aatam...
Nice going.
எஸ் மா.. அவள் குழம்ப மாட்டாள்..Kavya idhaya iniya 3 diff kind of life approach towards their better half.
Antha pulla ithunga kita pesi ethum kulambama irukanum
கதை முடியல டியர்.. இன்னும் நிறைய இருக்கு எழுத.. படிங்க..Nice uds. Kalyanam mudinju. Vazhthukal
உங்க கருத்துக்களை பகிர்த்து கொண்டதற்கு நன்றி.. உங்கள் கேள்விக்கு பதில் அடுத்த அத்தியாயத்தில் இருக்கிறது.. முதல் கதை மாதிரி தான்..கதை ரொம்ப இயல்பாக நகர்கிறது. நல்லா இருக்கு
இது உங்கள் முதல் கதையாக இருக்கும்னு நினைக்கிறேன்.
படத்துல இரண்டாவது ஹீரோ ஜீவா தானே? இவ பீபிய ஏத்தி டெலிவரியப்ப ஏதோ இழுத்து விட்டுக்க போறா.
உங்கள் கருத்துக்களை அருமையாக சொல்லி இருக்கீங்க.. ரொம்ப ரொம்ப நன்றி..#நிலவில்ஒருகதைஎழுது
#NNK
#ஜீவன்யா
#NNK23
ஜீவானந்தன்... இனியா..
ஐடி வேலை பார்க்கும் ஜீவாவிற்கு இயக்குனதாக வேண்டும் என்பது அவனின் கனவு இலட்சியம் அதனை நோக்கி செல்வது குடும்பத்தில் அவனின் தந்தை ஆதவன் தாய் வெண்ணிலா தங்கை இதயா என யாருக்கும் பிடிக்கவில்லை.. அவனுக்கு திருமணம் செய்து வைத்தால் பொறுப்பாக குடும்பத்தை கவனித்துக் கொண்டு சினிமா துறையை தேர்ந்தெடுக்க மாட்டான் என நினைத்து அவனுக்கு திருமணம் செய்ய முடிவு செய்கிறார்கள்.. முதலில் திருமணத்திற்கு மறுக்கும் இவன் பெண்ணின் புகைப்படத்தை பார்த்து சம்மதிக்கிறான்.. இனியா...தந்தை இல்லாமல் தாயுடன் வசித்து வரும் இவள் பெரிதாக எந்த கனவும் எதிர்பார்ப்பும் இல்லாமல் திருமணத்திற்கு பின்பும் ஆடிட்டராக படிப்பை தொடர வேண்டும் என ஒரு கண்டிஷனை மட்டுமே தன்னை பெண் பார்க்க வரும் ஜீவாவிடம் கூறுகிறாள்.. ஜீவானந்தன்.. இனியா.. தங்களின் பிடிப்பை கூறி இவர்களின் திருமணமும் அதற்கு பின்னான இவர்களின் வாழ்வும்... என்ன சுவாரஸ்யமாக இருக்கிறது கதை...இயக்குனராக வேண்டும் என்ற அவனின் கனவை நோக்கி செல்லும் ஜீவாவின் கனவு நிறைவேறியதா அதற்கு மனைவியவள் துணை நின்றாளா... குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி என்பது கதையில்... ஒருவருக்கொருவர் புரிதல் இருந்தாலே வாழ்வில் வெற்றி பெறலாம் என்பதற்கு சான்றாக ஒரு கதைநீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்
Good luck dear![]()
ரொம்ப ரொம்ப நன்றி..hi , very very nice story. Thank you. with regards from rajinrm
கதையை படித்து அழகாக உங்களுடைய கருத்தினை சொல்லி இருக்கீங்க.. மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்..Nice story… congratulationsஇயக்குநர் ஆகும் கனவோடு இருக்கும் நாயகன்… ஆடிட்டர் ஆக ஆசைப்படும் நாயகி…. பெண்களின் சின்ன சின்ன கனவு ஆண்களுக்கு பெரிதாக தெரியாது அதே இலக்கண்த்துடன் தான் நாயகன்… பெண்கள் தங்கள் விருப்பத்த சொல்லாமல் புரிஞ்சுக்கனுன்னு நினைக்குற மாதிரி தான் நாயகியும்….
கனவுக்காக வேலையை விட்டாலும் தன்னை நம்பி வந்தவள் கஷ்டப்படாம இருக்க எல்லாம் செய்யும் அருமையான நாயகன்….
சந்தேகப்படும் படி ஆயிரம் வந்தாலும் ஏன் உறவே வந்தாலும் அதை மதிக்காமல் கணவனுக்காக நம்பிக்கையோடு காத்த்கிருக்கும் அழகிய நாயகி…
என்ன அவள் குழந்தைக்காக ஏங்கும் போது ஜீவா மேல லைட்டா கோபம் வந்தது… ஆனால் குழந்தை வந்ததும் மனைவி மனம் புரிந்து ஏற்றுக்கொண்ட போது பிடிச்சது… ஆனா கொஞ்சம் அவளை கவணிச்சுருக்கலாம்….
குடும்பமே எதிர்ந்து நின்னாலும் பொண்டாட்டி உடன் நின்றால் எதையும் சாதிக்கலாம்….
வெற்றி பெற வாழ்த்துக்கள்..![]()
நன்றி டியர்.கதையை படித்து முடித்து விட்டேன். அருமையான காதல் கதைஇருவரின் மனநிலையையும் அழகாக கதை நகர்த்தி இருக்கிறது வாழ்த்துக்கள்
![]()
நன்றி நன்றி நன்றி..# ஜீவன்யா
#நறுமுகை_நிலா_காலம்
#NNK 23
கணவன் : ஜீவானந்தன்
மனைவி: இனியா
மனைவியாக இனியா
மனதுக்குள்ளே ஆசைகளை
மறைத்துக் கொண்டு
மன்னவன் முன் சந்தோசமாக
மறைவில் துடித்து கொண்டு
மறுகும் குடும்பத்து பெண்.....
கணவனாக அனைத்தும் செய்தாலும்
குடும்பத்தையும் வேலையும்
கச்சிதமாக கொண்டு செல்ல
முடியாமல் தவிப்பது.....
தன்னால் முடிந்த அளவு
தன்னவளை பார்த்து கொள்வது ..
தன் மனைவி விருப்பத்தை
தடையின்றி படிக்க வைப்பது....
திடிரென்று பாட வைப்பது
அருமை.....
இனிமையாக அணைப்பு முத்தம்
இதுவல்லவோ காதல்
இது தான் புரிதல்
இப்படி தான் வாழ்க்கை
இயல்பாய் தாம்பத்ய உறவு
இவ்வாறு தான் உறவுகள்
இது போல ஜோடி வேண்டும் .....
இனியா ஜீவா போல.....
இரு உடல் ஒரு உயிர் போல
இரு வேறு நிலைமையில்
இயல்பாய் விட்டு கொடுத்து
இன்னல்களை தாண்டி
இன்பமாக ஒரு காதல் கதை.....
தோசை தக்காளி சட்னியில்
காபி டீயில் காதல்...
மடியில் அமர்ந்து
மலையளவு காதலை
பரிமாறிக் கொள்ளும் விதம்
மனதை கொள்ளை கொள்ள செய்கிறது ........
வீட்டு வேலை செய்வது
விட்டுச் செல்வதும்
விலகி இருப்பதும்
விரும்பி வருவதும்
வலியில் துடிப்பதும்
வெற்றி பெற்ற பிறகு
வீட்டில் இருவரும் மனம்
விட்டு பேசுவது என்று
அனைத்தும் அற்புதம்.....
எதிர்பார்ப்புகள் பொய்யாக போனாலும்
எதிரில் புன்னகையுடன்..
ஏக்கங்களையும்
விருப்பத்தையும்
மனதில் வைத்து கொண்டு....
கணவன் மேல் நம்பிக்கையுடன்
சுற்றி இருக்கும் குடும்ப உறவுகளிடம் இருந்தும்
எந்த சூழ்நலையிலும்
கணவனுக்கு எந்தவொரு
இடையூறு இல்லா ( வரா)மல்
அவன் லட்சியத்தை
அடைய முழு ஒத்துழைப்பு தந்து....
வெற்றி அடைய
செய்யும் மனைவியின்
அமை(தியாக ) தியான
வாழ்க்கையே கதை....
குடும்ப காதல் கதை.....
வாழ்த்துகள் சகி![]()
நன்றி ம்மா..வாழ்த்துக்கள் சகி. கதை அருமை. கணவன் மனைவி புரிந்து கொண்டால் வாழ்க்கை நல்ல போகும் என்பதை அழகாக சொல்லியிருக்கீங்க சகி
ரொம்ப ரொம்ப நன்றி ம்மா..இரண்டாவது பாகம் செம சகி. ஜிவானந்தன் இனியா காதல் ரொமான்ஸ் லட்சியத்துக்காக அவனை தொந்தரவு பண்ணாமல் விட்டு Bp ஏற்றிக்கிட்டது அவனும் அவளும் மனசுக்குள் நேசிக்கிறது சூப்பர். கதை அருமை. வாழ்த்துக்கள் சகி