எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

இதயவாசல் திறவாயோ முகிலினமே! - கதை திரி

Status
Not open for further replies.

NNK 36

Moderator
1657806666461.jpg


இதயவாசல் திறவாயோ முகிலினமே-1


இமைகதவடைத்து


இதயவாசல் தாழ்மூட்டி

இனியவளின் சிறைவாசம் தகர்க்கவே

இப்புவியில் பிறவியெடுத்தவ அவளவன் நான்...


எனை அவள் மனமுவந்து ஏற்கும் காலம் வரை காதலோடு காத்திருப்பேன், காதலாகி காத்திருப்பேன், காதலே அனைத்துமாகி காத்திருப்பேன்...


நீளபாயை விரித்துவிட்டது போல் இரவு வானம் கருமை படர்ந்து நீண்டிருந்தது. கொத்து கொத்தாய் பூத்து நின்ற பூக்களை போல் பலகோடி நட்சத்திர அணுக்கள் வானபுள்ளியில் மினுங்கிக் கொண்டிருந்தது. இரவு வானத்திற்கு இன்னுமின்னும் பேரெழில் சூழ நிலா மகள் முழுவானில் தன் மிதமிஞ்சிய ஒளியை அழகோவியமாய் பூமியை நோக்கி கசியவிட்டுக் கொண்டிருந்தாள்.


நேரம் நள்ளிரவு 12 மணி.


ஆஸ்திரேலியாவின், குயின்ஸ்லாந்து நகரம்.


பெரிய பாரிய கண்ணாடி வளைவு கொண்ட மாளிகைக் கட்டிடங்களும், வானுயரத்தை தொட்டுவிடும் நவீன கலைகட்டிடங்களும், உயர உயர வானை முட்டி நிற்கும் அப்பார்மெண்ட்களும், வானவீதி வாசல்களை நிறைத்து நிற்கும் உயிரோவிய மெழுகு சிலைகளும், கரைபுரண்டோடும் கடற்கரை அலைகளும் அந்த நகரின் ஏகஅழகை பறைசாற்றிக் கொண்டிருந்தது.


அந்த நகரில் வாழும் ஜீவராசிகள் அனைத்தும் ஆழ்ந்த நித்திராதேவியின் பிடியில் தங்களை அடைக்கலமாக்கிக் கொண்டிருந்த நேரம்.


நீண்டு வளைந்து நுணுக்கமாக கட்டப்பட்டிருந்த அப்பார்ட்மெண்டின் பதினைந்தாவது பிளாட்டில் தலை முதல் கால் வரை வெள்ளை நிற போர்வையை போர்த்திக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தாள் ஆரணங்கு பதுமை அவள்.


அவள் விர்ஷாலி.


துயில் கொண்டிருக்கும் அந்த தேவதையின் அழகை பற்றி கூறவேண்டுமாயின்,


பிரம்மனின் தூரிகை கொண்டு நீண்டு வரையப்பட்ட பொன்னோவிய சிற்பம் அவள். ஐந்தரையடி தங்கசிலை. பால் போல் நிறம், பளிங்கு போல் மேனி, பஞ்சு பஞ்சாய் கேசம், பால்நிலாவை வெட்டி வைத்தது போல் பிறைநெற்றி, பாடலோபம் (மாணிக்கம்) போல் கண்கள், பாதோதத்தின் (மேகம்) மென்மையை போல் கன்னங்கள், பவளம் போல் பல்வரிசை, பாகீரதியின் (கங்கை) செப்பு இடை, பாகசாதனர்கள் (இந்திரன், யோகி) கூட இவளின் வனப்பிலும், அழகிலும் தத்தமது மனமதை தொலைத்துக் கொண்டுதான் நிற்பார்கள். அப்படி ஒரு பேரழகி அவள்.


ஜன்னல் சாளர திரைசீலை வழி ஒளிசிந்தும் நிலாமகள் இந்த நிலாமகள் அழகில் இலயித்துப் போய் மெய்மறந்து நின்றிருக்க, இமைக்கே நோகாமல் உறக்கத்தை தழுவிக் கொண்டிருந்த விர்ஷாலி பட்டென்று தன் நயன விழிகளைத் திறந்தாள்.


அவசரமாய் தான் படுத்திருந்த மெத்தையை விட்டும் விருட்டென்று எழுந்து கொண்டவள், இருகரத்தாலும் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு, வலக்கை கொண்டு தன் தொண்டைக்குழியை தடவிவிட்டுக் கொண்டாள்.


மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்க மூச்சுக்கே நிலைதடுமாறி நிற்பது போல் ஒரு தோற்றம் அவளுள் தோன்ற,


‘ஹாஹ்... ஹாஹ்...’, என்று தொண்டைக்குழி உள்வாங்க, இதழ் விரித்து பெருமூச்சொன்றை விட்டவள் சுற்றி முற்றி விழிகளால் பார்வையிட்டுக் கொண்டே மேஜை மேல் இருந்த தண்ணீர் போத்தலை எட்டி எடுக்க முயன்றாள். அவளின் முயற்சி பலனளிக்காமல் அந்த கண்ணாடி போத்தல் டொம்மென்ற பெரும் சப்தத்தோடு கீழே விழுந்து உடைந்தது.


கீழே விழுந்து உடைந்த அந்த கண்ணாடி கிளாசையும், நடுங்கும் தன் கரத்தையுமே அவள் பயந்து விழி விரிய நோக்கிக் கொண்டிருக்க, இரண்டொரு நொடிகள் பின்னே அவளிருந்த அறைக்கதவு தட்டப்படும் ஓசை கேட்டது.


“விர்ஷிமா... விர்ஷிமா...”,


காண்டிபத்திலிருந்து புறப்பட்ட அம்பு போல் மெத்தையிலிருந்தும் பட்டென்று எழுந்தவள் அறைக்கதவதை வெகு அவதியாய் திறந்துவிடும் நோக்கோடு ஓடிவந்தாள்.


“விர்ஷிமா, பாப்பா கதவ திறடா”, என்று வெளியே இரண்டு குரல்கள் சேர்ந்து கேட்க,


நடுங்கும் தன் விரல்களால் சிரமம் கொண்டு கதவை தாழ்திறந்தவள் ஒருநொடி கூட யோசிக்காது தன்னெதிரில் நின்ற தன் தாயின் தோளை இறுக பற்றி அணைத்திருந்தாள்.


“விர்ஷிமா இங்கபாரு, இங்கபாருடா...”, கனாலி, விர்ஷாலியின் தலைபற்றி அவளை நிமிர்த்த முயல, விர்ஷாலியின் சூடான திரவாக கண்ணீர் கனாலியின் தோளை நனைத்தது.


“பாப்பா... பாப்பா... இங்கபாரு ஒண்ணுமே இல்ல. இங்க எங்கள நிமுந்து பாரேன்”, கனாலியின் கணவன் புக்காரியும் தன் பங்கிற்கு அவளை சமாதானம் செய்ய முயல, அவள் கண்டு வந்த பிம்பம் அவளையே நெக்குருகி நிற்க வைத்துவோ? என்னவோ?


மேனி நடுங்க மழையில் நனைந்த கோழிக்குஞ்சாய் நின்றாள் அவள்.


“கனாலி நீ பாப்பாவ அழைச்சுட்டு உள்ள போ. நான் அவளுக்கு ஹாட் வாட்டர் எடுத்துட்டு வர்றேன்”,


“ம்... சரிங்க... விர்ஷுமா வா உள்ள போவோம்”, கைதாங்கலாய் அவளை பற்றி உள்ளே அழைத்து வந்து மெத்தையில் அமர செய்த கனாலி தன் தோளில் அவள் தலைசாய்த்து கோதிக் கொடுக்க, சிலபல நொடிகள் கடந்த பின்னே தன் பவளவிழி திறந்தாள் நங்கை.


“விர்ஷுமா ஆர் யூ ஓக்கே நவ்?”,


தன் முகத்தை அழுந்த துடைத்தவள் சிவந்து போன தன் விழியை சரிசெய்து கொண்டே, முகத்தில் அமைதியை கொண்டு வந்தபடி, “யா... யா மாம் இட்ஸ் ஓக்கே”,


“இராத்திரில அம்மாகூட சேர்ந்து தூங்குனா ஏன்டா பாப்பா கேட்க மாட்டுற? என்ன இன்னிக்கும் அதே கனவா?”, கேட்டுக் கொண்டே தன் கையிலிருந்த ஹாட் வாட்டரை விர்ஷாலி கரங்களில் தந்தார் புக்காரி.


நடுங்கும் விரல்களால் தண்ணீர் கிளாஸை பற்றிக் கொண்டவள், அதை சிறுக பருகிக் கொண்டே, “தனிமைக்கு மனசு கொஞ்சமாவது பழகணும்’ப்பா. இருபத்தி ஐஞ்சு வயசு பொண்ணு இன்னும் அம்மா சேலைக்குள்ளவே ஒளிஞ்சி இருக்க முடியுமா?”,


“இல்லைடா அந்த கனவு...”,


“அப்பா ஐ யம் ஓக்கே நவ். எப்பவும் வர்ற பேட் வைப்ஸ் மாதிரி அந்த கனவு இப்பவும் வந்தது. ரெண்டுபேரும் போங்க இனி நான் பார்த்துப்பேன்”,


“இல்லைடா அம்மா இங்க உன்கூடவே உனக்கு துணையா இருக்கட்டும்”,


“இல்லப்பா ஐ கேன் மேனேஜ். உங்க பொண்ணால இருந்துக்க முடியும். நீங்க தைரியமா போங்க”,


இருவரின் கரம் பிடித்தும் அழுத்தம் கொடுத்து கூறியவள் அவர்கள் இருவரையும் தன்னறையை விட்டு வெளியே அனுப்பி வைத்தாள்.


ஒருசில நொடிகள் அவளுக்கு மெளனமாய் கரைய, ஜன்னலின் திரைசீலையை முழுவதும் நீக்கி வானில் தெரியும் நிலவைக் கண்டாள்.


இரவு சூழ் அண்டம், நிலவு, முகில், மழை போன்ற இயற்கை கொடையை வெறுக்கும் ஜீவனும் இப்புவி வாழ்வில் உள்ளார்களா என்ன?


இந்த கேள்விக்கு பதில் அவளகராதியில் ஆம் தான்.


இரவு வானம், நிலா, நட்சத்திரம், முகில், மழை, மழைக்கு பின் வானில் தோன்றும் வானவில் கூட அவளுக்கு பிடித்தமில்லாத ஒன்றுதான்.


திரைசீலையை இழுத்து விட்டு நிலவின் ஒளிக்கதிர்கள் தன் மேனியை தீண்டாவண்ணம் இருந்து கொண்டவள் இமை மூட மூடிய இமைகளுக்குள் அவள் மறக்க நினைக்கும் விடயங்கள்.


‘மறக்க நினைக்கும் விடயத்தை மறந்து போ மனமே! மறந்தே போ! வருடம் பல கடந்தும் அதிலேயே ஊழ்வினை கொண்டு நகராது நிற்கும் வழிவகை தான் என்னவோ? மறந்தே போ’,


தரையில் அமர்ந்து தியானத்தில் தன்னை சமன்படுத்திக் கொண்டவள், உறங்காது விழித்திருந்து விடியலை எதிர்நோக்க தயாரானாள்.


ஆண்வர்க்கமே வேண்டாம் எம்பெண் இனமே இந்த பரந்த உலகை ஆளாட்டும். ஆண்வர்க்கமே போலியான ஒன்று என்ற முதிர்ந்த மனோபாவம் கொண்டவள் அவள்.


ஒட்டுமொத்த ஆண் குலத்தையும், ஆண் என்பவனையும் அளவுக்கு மீறிய கோபத்தால் வெறுத்து ஒதுக்குபவள் அவள்.


ஆண் இனமே வேண்டாமென்று வெறுத்து ஒதுக்கும் அவள் மனதுக்குள் நிலாமகன் நுழைய முயற்சி செய்தால்? நிலை என்னவாக இருக்கும்?


இந்தியாவின் கோவா.


சுற்றி நாற்புறத்திலும் கடல்கள் சூழ்ந்து நிற்க, தனித்தீவாய் பார்ப்போரின் கண்ணுக்கு விருந்து படலமாய் காட்சி தந்தது கோவா.


நண்பகலின் உச்சிப்பொழுது. நடுவானத்தில் கொழுவிருந்த வெய்யோன் தன் உஷ்ணக்கதிர் கொண்டு மனிதபட்சிகளின் அருகில் வந்து நின்றுவிடுவேன் என்ற நோக்கில் ஈவிரக்கம் பாராது சுட்டெரித்துக் கொண்டிருந்தான்.


வெயிலின் சுட்டெரிப்பை கணக்கில் கொள்ளாமல் அந்த நவீனரக கப்பலில் இருந்த கூட்டம் கோலாகலத்தின் உச்சகட்டத்தில் இருந்தது.


இரண்டடுக்கு கொண்ட நவீன கப்பலின் மேல்மாடி தளத்தில் நவீன அல்ட்ரா மாடர்ன் மங்கைகளுக்கு நடுவில் மன்மதனாய் தன் ஆணழகு கம்பீரத்தோடு ஆடிக் கொண்டிருந்தான் யாழேந்திரன். யாழேந்திர வர்மன்.


வெறும் ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து தன் வஜ்ர தேகத்தை பார்ப்பவர்களின் கண்களுக்கு விருந்தாக்கிக் கொண்டிருந்தான் அவன். அவன் ஒரு கைகளில் சிவப்புநிற திரவம் மிதந்த கண்ணாடி குடுவை இருக்க, மற்றொரு கையில் கைக்கு அகப்பட்ட நங்கைகளையும் சேர்த்தணைத்துக் கொண்டு ஆடிக் கொண்டிருந்தான். அவன் முகமெல்லாம் வார்த்தையில் வர்ணித்து விட முடியாதளவு மகிழ்ச்சி கரைபுரண்டோடியது.


அவனின் அழகை பற்றியும், அவன் பின்புலம் பற்றியும் கூற வேண்டுமாயின்,


இரண்டு கைகொண்டு அடக்கி பார்த்தாலும் அடங்கவே மாட்டேன் என்று அழிச்சாட்டியம் செய்யும் பஞ்சன்ன கேசம், அதற்கு கீழ் வரிகோடுகள் முடிச்சிட்டு நிற்க பரந்த நெற்றி, இருகரிய அடர்த்தியான புருவம், எதிரி, துரோகி, நண்பர், நல்லவர், கெட்டவர் என எவரையும் பிரித்தரியும் கருடக் கண்கள், கூர்நாசி, தடித்து போயிருந்த உப்பலான உதடுகள், அதற்கு மேல் மெல்லிசான சதைபற்றில் ஒரு மீசை, நான்கு நாட்கள் சவரம் செய்யப்படாத முட்கள் படர்ந்திருந்த கன்னத்து குறுந்தாடிகள் அந்த அழகனின் முகத்திற்கு இன்னும் கொஞ்சம் கூடுதல் அழகு சேர்த்தது என்றால் அது மிகையல்ல.


இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டு இப்பொழுது ஆஸ்திரேலியாவில் தன் வியாபார வர்த்தகத்தை பெருக்கிவிட்ட நந்தகுமார வர்மன்- சிந்துஜாவின் ஒரே ஆருயிர் தவப்புதல்வன் தான் யாழேந்திர வர்மன்.


நந்தகுமாரனுக்கு முன்னால் இருந்த அவர் அப்பா, தாத்தா வம்சாவழி சொந்தங்கள் பெருக்கிவிட்ட சொத்துக்களே இன்னும் ஐந்தாறு தலைமுறை அழியவே மாட்டாத சொத்துக்களாய் இருக்க, இளமையின் தேடலில் தன் பங்கிற்கும் சேர்த்து ஓட ஆரம்பித்த நந்தகுமார வர்மனின் ஓட்டம் இன்றும் தீர்வதாய் இல்லை.


தன் ஒரே ஆசைமகன் கேட்டு அவர் எதையும் செய்யாமல் இருந்ததில்லை. இனி செய்யாமல் இருக்கப் போவதுமில்லை.


அளவுக்கு மீறி செலுத்தப்பட்ட அன்பு நல்பாதை விடுத்து அவனை வேறோர் பாதையில் இழுத்து செல்லாமல் இருந்தாலே சரிதான்.


யாழேந்திர வர்மனின் போன் ரிங்காக அவனுடைய பெர்சனல் செக்கரட்டரி அதை அவனிடம் கொண்டு வந்து கொடுத்தார்.


“சார் யுவர் டாட் இஸ் காலிங்”,


ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்திலிருந்து வெளியே வந்தவன் போனை எடுத்து தன் காதுக்கு கொடுத்துக் கொண்டே, “யா டாட் திஸ் இஸ் யாழன் ஸ்பீக்கிங்”,


“யாழ் கண்ணா உன்னோட ட்ரிப் எல்லாம் எப்டி போயிட்டிருக்கு? நீ போகணும்னு நினைச்ச இடத்துக்கெல்லாம் போயிட்டு வந்துட்டியா?”,


“யா டாட் மோஸ்ட் பிளேசஸ் இஸ் ஓவர். இன்னும் ஒன், ஆர் டூ கன்ட்ரிஸ் பேலன்ஸ் இருக்கு”,


“ஓ... ஓக்கே யாழ் கண்ணா இப்போ டாட் எதுக்கு கால் பண்ணேனா?”,


“இந்த வயசான காலத்துல கால்ல சக்கரம் கட்டிக்கிட்டு இங்கேயும், அங்கேயும் உங்களால ஓட முடியல. சோ ஆஸ்திரேலிய கம்பெனியோட முழு பொறுப்புகளையும் என்கிட்ட ஒப்படைக்க போறீங்க. ஐ மே ரைட் நவ்?”,


தான் எதுவும் சொல்லாமல் மகன் கண்டுபிடித்த அபார கண்டுபிடிப்பு கண்டு அவர் புருவம் மெச்சுதலோடு மேலுயர்ந்தது.


“சரி யாழு கண்ணா எப்போ ஆஸ்திரேலியா வர்ற”,


“நாளைக்குத்தான டாட் பங்ஷன் அரேஜ் பண்ண நினைச்சிங்க. சோ உங்க விருப்பப்படியே நாளைக்கே ஏற்பாடு பண்ணுங்க நான் கரெக்ட் டைம்க்கு அங்க இருப்பேன்”,


“ஓக்கே யாழு கண்ணா பாய்”,


“பை டாட்”,


தன் தலைகோதி நிமிர்ந்தவன் விழிகளுக்குள் ஆஸ்திரேலிய கண்டத்தின் பிரதிபிம்பம் வந்து சென்றது.


“ம்... அங்கேயும் கம்பெனி குடுக்க ஒரு பொண்ணு இருந்தா ரொம்ப ரொம்ப நல்லாருக்கும் அண்ட் லைப்பும் போரடிக்காம இருக்கும்”, தன் நாடிநீவி கூறிக்கொண்டவன் சன்கிளாஸை எடுத்து மாட்டிக் கொண்டான்.


ஆண் வர்க்கத்தை வெறுக்கும் ஒரு துருவமும், பெண் என்றாலே உல்லாசத்திற்காக மட்டுமே பயன்படுவாள் என்ற எண்ணம் கொண்ட எதிர் துருவமும் ஒரே நேர்கோட்டில் சந்தித்தால்???


எதிரெதிர் துருவம் ஒன்றையொன்று ஈர்க்குமா? இல்லை முட்டி மோதிக்கொள்ளுமா?இதயவாசல் தாழ் திறவும்...
 
Last edited:

NNK 36

Moderator
இதயவாசல் திறவாயோ முகிலினமே-2


பெரிய பெரிய பாரிய கண்ணாடி கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்தது அந்த மூன்றடுக்கு மாளிகை. ஏகபோக பணம் கொட்டி மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட மாளிகை அது என்பது அதன் வெளித்தோற்றமே கூறாமல் கூறியது.


மாளிகை உள்ளேயே லிப்ட் வசதிகள் வடிவமைக்கப்பட்டு இருக்க அங்கு இருக்கும் பொருட்கள் அனைத்தும் அத்தனை மதிப்பு வாய்ந்தவை.


பளிங்கு மார்பிள் சுவற்றில் ஒருபக்கம் விவேகானந்தர் தன் நேர்விழி பார்வையோடு பாதி சுவற்றை மறைத்தபடி கைகளை கட்டிக்கொண்டு காவி உடை அணிந்தபடி நின்று கொண்டிருந்தார்.


லிப்டின் தளம் திறந்து கொள்ள தன் இடக்கையில் கட்டியிருந்த வாட்சில் மணியை பார்த்தவாறு விரைந்து நடந்து வரவில்லை ஓடிக்கொண்டு வந்தார் நந்தகுமார வர்மன்.


அகவை ஐம்பத்தியேழை தொடப் போகிறது. ஆனாலும் மார்கண்டேய தோற்றம் காட்டும் உடலமைப்பு. முன்நெற்றி மட்டும் ஏற்றம் இல்லாது இருந்திருந்தால் அவரின் அகவை இவ்வளவு கூடுதல் என்று கண்டுபிடிப்பது எதிரில் நிற்கும் எவருக்கும் கடினமாகிப் போயிருக்கும்.


கோர்ட் சூட்டில் வந்தவர் டைனிங் டேபிளில் அமர்ந்தவாறு, சமையலறை பக்கம் பார்வையை படரவிட,


“இதோ வந்துட்டேன் நந்து”, என்றவாறு தான் அணிந்திருந்த ஏப்ரனை கழட்டியவாறு வந்தார் சிந்துஜா.


அகவை ஐம்பத்தி இரண்டு. இதுதான் என் வயது என்று வாய்மொழியாக அவர் கூறினாலும் அதை யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள் ஏனென்றால் இந்த வயதிலும் கூட அப்படி ஒரு வசீகரிக்கும் முகம். வசீகரித்திற்கு இன்னும் கொஞ்சம் அழகு சேர்ப்பது போல் எப்பொழுதும் ஒட்டிக்கொண்டே இருக்கும் அந்த புன்னகை அவரிடம் மிகவும் தனித்துவமானது.


“உங்களுக்கு புடிச்ச புட்ஸ் தான் செஞ்சிருக்கேன் சோ நல்லா வாய்க்கு ருசியா நீங்க சாப்டலாம்”, சிந்துஜா கூற, நந்தகுமார் மெல்ல சிரித்துக் கொண்டார்.


வசிப்பது ஆஸ்திரேலியாவாக இருந்தாலும் உணவுமுறை பழக்க வழக்கம் என்னவோ தொன்று தொட்டு இன்னும் இந்தியா தான். வெறும் தண்ணீரில் வெந்து நிற்கும் மல்லிப்பூ இட்லிக்கு இணையாக இந்த பிரபஞ்சத்தில் வேறு எந்த உணவும் உண்டா என்ன? அதுவும் சிந்துஜாவின் கைப்பக்குவத்தில் தயாராகும் இஞ்சி துவையலுக்கும், வரமிளகாய் சட்னிக்கும் காலம் முழுக்க அடிமையாக கிடக்க சொன்னாலும் நந்தகுமார் சரி என்பார்.


சாப்பாடு விடயத்தில் தந்தை, மகன் இருவரின் குணமும் ஒன்றே.


சிந்துஜா மிதுக்கம் பழம் போல் இருக்கும் இட்லியை தட்டில் எடுத்து வைத்து இஞ்சி துவையலை இட, அதை இரசித்து உண்ணத் துவங்கினார் நந்தகுமார்.


“எப்பவும் போல இப்பவும் உன்னோட கைபக்குவம் வேற லெவல் சிந்த். காலம் முழுக்க உன் கையால இப்டியே என்னை சாப்டுட்டு சாப்பாட்டு இராமனா இருக்க சொன்னாலும் நான் சரினு தான் சொல்வேன்”, டிஷூ பேப்பரில் தன் கரம் துடைத்தவர் எழுந்து நின்று கொண்டார்.


வாட்சை மீண்டும் திருப்பி பார்த்தவர், “சிந்த்... அப்புறமா டிரைவர் உன்னை கூட்டீட்டு ஆபிஸ் வருவான் அவனோட வந்துடு. நான் போயி இப்போ அரேஜ்மெண்ட்ஸ்க்கு தேவையானத பண்றேன்”,


“ஏங்க இப்போவே நேரம் கூட ஆகிட்ட மாதிரி இருக்குது இன்னும் யாழ் வரல”,


“யாழ் என்னதான் கண்ணாமூச்சி ஆடுனாலும் வரவேண்டிய நேரத்துக்கு ஷார்பா வந்து நிற்பான். நீ கிளம்பி வா நான் முன்ன போறேன். பாய் சிந்த்”, விரைந்து நடந்து வந்தவர் காரிடரில் நின்றும் விடைபெற்றுக் கொண்டார்.


காரின் உடல் மறையும் வரை பார்த்துக் கொண்டு நின்ற சிந்துஜா தான் தயாராக ஆயத்தமாக உள்ளே சென்றார்.


“சார் இன்னிக்கு சாரோட பங்க்ஷன் பின்ன இவங்களோட எல்லாம் சார்க்கு மீட்டிங் இருக்கு. நிறையா டிஸ்கஷன்ஸ் கூட பேச வேண்டி இருக்கு. சின்ன பாஸ்க்கு ஓக்கேவா இல்ல இதெல்லாம் கேன்சல்”,


“நோ... நோ... நோ பாதவ். யாழ் எல்லாத்தையும் கரெக்ட்டா மேனேஜ் பண்ணிப்பான். நீங்க அரேஜ்மெண்ட்ஸ் மட்டும் சரியா இருக்கானு பார்த்தாப் போதும் “,


“ஓ... சரிங்க சார்”, நந்தகுமாரின் நம்பிக்கைக்கு பாத்தியப்பட்ட பலருள் பாதவும் ஒருவர்.


வழுக்கும் மெழுகு தரையில் வழுக்கிக் கொண்டு சென்ற கார் பதினைந்து மாடிகளுடன் உயர்ந்து நின்ற, ஜிகினாதாள் போல் சூரிய ஒளியில் மிளிரும் செவ்வக வடிவத்தில் பல ஏக்கர் விழுங்கி ஏப்பம் விட்ட எம்என்சி கட்டிடத்தின் முன் நின்றது. அதன் முகப்பு புள்ளியில் பெரிய எழுத்துக்களாய் பளிச்சிட்டு ஓடியது எம்என்சி எனும் டிஜிட்டல் திரை.


பணியாளர் ஒருவர் ஓடிவந்து நந்தகுமாரின் கார் கதவை பவ்யமாய் குனிந்தபடி திறக்க, காரிலிருந்தும் இறங்கி வேகநடைகளோடு கம்பெனி உள்நோக்கி நடந்தார் நந்தகுமார்.


முகப்பு வாயில் தாண்டி உள்ளே சென்றவுடன் பல்வகையான வண்ண மலர் கொண்டு தரை, சுவரெல்லாம் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தரையில் வட்டமிட்டிருந்த மலர்கள் சூழ் வண்ணக் கோலம் தான் அவரின் கவனத்தை அதன்புறம் ஈர்த்தது.


எட்டி நடைபோட்டு வரவேற்பு ஹால் நோக்கி வர, அங்கு ஹாலின் முன்னே ஒரு அகண்ட தாழி வைத்து அதில் பன்னீர்துளி சிந்தி சூரியனின் காதலி தாமரை தன் படரிலை விரித்து மிதந்து கொண்டிருந்தாள்.


ஹாலிலிருந்து கான்பிரன்ஸ் ஹால் வரை சிவப்புக் கம்பளம் விரித்து அதன் மேலும் பன்னீர் புஷ்பங்கள், ரோஜா இதழ்கள் இன்னும் மணம் சிந்தும் பல்வகை பூக்கள் கொட்டிக் கிடக்க, நந்தகுமாரின் வாயருகே ஒரு பொன்சிரிப்பு மலர்ந்தது.


அனைத்தையும் இரசித்துக் கொண்டே கான்பிரன்ஸ் ஹால் உள்ளே நுழைந்தார்.


சிவப்பு திரைசீலைகள் ஹாலின் ஜன்னல், வாயிலை அலங்காரம் செய்திருக்க, பூங்கொத்துகள் அடங்கிய பெரிய பூவாஸ் டேபிளின் முன்னே வெகு நேர்த்தியாய் சிரித்துக் கொண்டிருந்தது.


குளிரூட்டப்பட்ட ஏசியின் உள்ளே அலைபாய்ந்த அவரின் கண்கள் அவளை கண்டுகொண்டு அவளருகில் சென்று நின்றது.


“விர்ஷூமா”,


தூலிப் மலர்களை சுழற்றிப் பார்த்து இரசித்து சிரித்துக் கொண்டிருந்தவள், அவரின் அழைப்பு கேட்டு ஒரு முகமலர்ச்சியோடு எழுந்து நிற்க,


“உன்னை நம்பினா போதும்மா பொறுப்புக்களை யார்கிட்டவும் கொடுக்கணும்னு அவசியம் இல்ல. உன்னோட பணி அவ்ளோ நேர்த்தியா இருந்தது”,


“தேங்க் யூ சார்”,


“சடனா ப்ளான் பண்ணோமே எல்லாமே சரியா நடக்குமானு யோசிச்சுட்டு இருந்தேன். இப்போ டெக்கரேசன் எல்லாம் பார்த்த பின்னே அவ்ளோ ஹேப்பி. கண்டிப்பா இது எல்லாம் யாழுக்கும் பிடிக்கும் பாரேன்”,


“ஓ சரிங்க சார்”,


“சார் எப்போ சார் வருவாங்க?”, அவசர துடுக்காய் விர்ஷாலி அருகில் நின்ற ஒருபெண் கேட்க,


“ஆன் தி வே மா. சீக்கிரம் வந்துருவான். நீங்க போயி மத்த அரேஜ்மெண்ட்ஸ் பாருங்க”,


“சரிங்க சார்”, நான்கு பேராய் நின்று கொண்டிருந்தவர்கள் மொத்தமாய் நகர,


“விர்ஷு”, என்றழைத்தார் நந்தகுமார்.


“ஆங்க் சார்”,


“நீ போயி யாழ் சைன் பண்ண போற இம்பார்டண்ட் பைல்ஸ் எல்லாம் என் கேபின்ல இருந்து அவனோட கேபினுக்கு மாத்திடு. அண்ட் அவனோட கேபின்லையும் டெக்கரேசன் கொஞ்சம் கூடுதலா பண்ணி வைமா”,


“ஓக்கே சார் அப்டியே பண்றேன்”, என்றவாறு அவள் விலகிச் செல்ல,


“கண்டிப்பா ரொம்ப கஷ்டப்பட்டு எல்லாத்தையும் பண்ணிருப்பா. ஒருவார்த்தை அவள வருத்திக்கிட்டத பத்தி சொல்லுறாளா பாரு பாதவ். இந்த சின்சியாரிட்டிதான் விர்ஷு கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது”.


அருகே வந்து தொட்டு பார்க்க சொல்லும் வானத்தின் வர்ண ஜாலத்தை இரசித்தவாறே, நவீன பறவையின் உள்ளே அமர்ந்தவாறு ஆஸ்திரேலியா நோக்கி பயணமாகி வந்து கொண்டிருந்தான் யாழேந்திரன்.


இன்னும் சிலமணித்துளிகளில் எம்என்சி கம்பெனியின் முழுபொறுப்பும் அவன் வசம். நினைத்து பார்த்த மாத்திரத்தில் ஒரு புன்சிரிப்பு அவனிதழில் சூரிய உதயம் போல் தோன்ற அநாசாயமாக தலைகோதிக் கொண்டான்.


வெண்ணிற நவீன புரவி அந்த ஓடுபாளத் தரையில் சறுக்கிக்கொண்டு வந்து நிற்க, வெகு கேசுவலாய் தன் டிராலியை தள்ளியவாறு நடந்து வந்தான் யாழேந்திரன்.


அவனுடைய பெர்சனல் செகரட்டரி அவன் பின்னே நடந்து வர, செக்இன் முடித்து வெளியே வந்தவன் தன்னுடைய சொகுசு காரில் ஏறி அமர்ந்தான்.


“சார்! வீட்டுக்கு போயிட்டு அப்புறம் ஆபிஸ் வரச்சொல்லி அப்பா சொன்னாங்க. உங்க வசதி...”,


தன் கைக்கடிகாரத்தில் மணியை திருப்பி பார்த்தவன், “வீட்டுக்கு எல்லாம் வேண்டாம் மோயூனா. நேரா ஆபிஸ்க்கு போ நான் அங்கேயே தயாராகிக்கிறேன். ஏன்னா இப்போவே டைம் ஆகிட்டு சொன்ன நேரத்துல அங்க இருக்கணும்”,


“சரிங்க சார்”,


“ஆன்... மோயூ கார பின்வாசல் வழி விடுங்க. நான் தயாரான பின்ன முன்னால வந்துக்கலாம். அண்ட் மகிழ்னன் நீங்க போயி அப்பாகூட இருங்க நான் டைம்க்கு வந்துடுவேனு அவர்கிட்ட சொல்லிடுங்க”, காரின் டிரைவரிடம் கூறிவிட்டு தன் பெர்சனல் செக்கரட்டரி மகிழ்னனிடம் கூறியவன் அங்கு என்னென்ன பேச வேண்டும் என்பதை தனக்குள் யோசித்துக் கொண்டான்.


கார் எம்என்சியின் பின்வாசலில் வந்து நிற்க, யாரின் கண்ணுக்கும் தென்படாதவாறு நடந்து சென்றவன், மாடிப்படிகளில் விரைந்து ஏறி தன்னறைக்கு சென்றான்.


அவனுக்கென்று பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டு இருந்தது அந்த அறை. மெத்தை, ஷோபா இன்ன பிற இத்யாதிகள் கொண்டு அந்த அறை இருக்க ஜன்னலின் திரைசாளரம் விலக்கி நகரை பார்த்தான்.


பரபரப்பான மனித தலைகளின் ஓட்டம் முற்று பெறுவதாய் இல்லாமல் தெரிய, ‘காலம் எத்தனைதான் மாறினாலும் மனுஷங்க ஓட்டம் மட்டும் மாறவே மாறாது. ம்ஹூம்...’, ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டவன்,


‘ஊப்ஸ்... சீக்கிரம் கிளம்பணும். டாடும் மத்த ஸ்டாப்சும் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க’, மனதுள் நினைத்துவிட்டு, கப்போர்டை திறந்து கோர்ட் சூட்டை எடுத்து டேபிள் மேல் பரத்திவிட்டு தயாராக செல்ல,


தன் கொலுசுமணி சிணுங்க மெல்ல நடையிட்டு வந்தாள் விர்ஷாலி.


“ப்ச்... எல்லா பைலும் சரியா இருக்கு. இந்த யெல்லோ கலர் பைல் மட்டும் எங்கதான் போச்சு”, தன் கழுத்தில் கிடந்த செயினை வாயில் வைத்து பற்களால் கடித்துக் கொண்டே அவள் பேசிக் கொண்டிருக்க, புடவையில் மனம் மயக்கிய தாரகை அவளை, நடுவில் தொங்கிக் கொண்டிருக்கும் திரை பின்னே நின்று வைத்த விழி அகலாமல் பார்த்துக் கொண்டிருந்தான் யாழேந்திரன்.


“இந்த ஷெல்பல இருக்குமோ?”, ஒரு சேரை இழுத்து போட்டு தன் கைகளை உள்ளே விட்டு தலை உயர்த்தி அவள் தேடிக் கொண்டிருக்க, புடவை வழி தெரிந்து கொண்டிருக்கும் அந்த செப்பு இடையில் சிக்கி தவித்ததோ ஆண்வண்டு.


பிரயத்தனப்பட்டு பார்வையை வேறுபுறம் திருப்பினாலும் அவள் இடைவளைவை சுற்றியே அவன் பார்வை செல்ல,


‘சோ ஹாட்... வந்த முதல்நாளே கம்பெனிக்கு சரியான ஆள் கிடைச்சுருச்சு. ட்ரை பண்ணி பார்ப்போமா?’,


மெல்ல நடையிட்டு வந்தவன் அவள் உள்ளங்காலில் தன் இருவிரல் கொண்டு சீண்ட, கத்திக் கொண்டே கால் வழுக்கி அவன் கைகளில் தஞ்சமாகியிருந்தாள் விர்ஷாலி.


ஆடவனின் கை ஆதிரையின் இடையை சுற்றியிருக்க, அவள் கை அவன் தோள் சுற்றி படர்ந்திருந்தது.


அவளின் தாமரை முகம் பார்த்து ஏங்கும் சூரியனாய் அவனிருக்க, தன் வேல்விழி தூக்கி அவனை தீயாய் முறைத்தாள் அவள்.


இருவரின் முகமும் வெகு அருகில் இருக்க, எதுவும் யோசியாமல் அவளின் பஞ்சன்ன கன்னத்தில் தன் மீசை ரோமம் கீற முத்தம் வைத்தவன், “ஹேய் முகில்! வில் யூ ஷேர் அ பெட் வித் மீ ஒன் நைட்?” (Will you share a bed with me one night?) அவள் காதோரம் கிசுகிசுத்து மொழிந்தவாறு அவன் கேட்க,


ஒற்றைக் கேள்வி! ஒற்றைக் கேள்வி கத்தியின்றி இரத்தமின்றி உயிரை ஊசலாட வைக்குமா? வைத்ததே அவனின் தகாத இந்த கேள்வி அவள் உடலின் குருதியை நீர்குமிழி போல் கொப்பளிக்க வைத்தது. உடலெல்லாம் நடுங்கி வேர்வையில் முக்குளித்துப் போனாள் விர்ஷாலி.


வாழ்வது ஆஸ்திரேலியாவில் என்றாலும் உடலில் ஓடுவது தமிழ்நாட்டின் பாரம்பரிய முகவரி அல்லவா? வெளிநாட்டில் வாழ ஒப்புக் கொண்டாலும் இம்மாதிரி இழிவான செயல்கள். ம்ஹூம்...


துள்ளி குதித்துக் கொண்டு அவன் கைகளில் இருந்து விடுபட்டவள் அவன் காது ஜவ்வு கிழிந்து போகும் வண்ணம் விட்டாள் ஒரு அறை பொளீர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று.


சூலாயுதம் மட்டும் தான் அவள் கரத்தில் இல்லை இருந்திருந்தால் அவன் குடலை உருவி மாலையாகக் கூட போட்டிருப்பாள்.


“ச்சீ... பொறுக்கி நாயே, இவ்ளோ மோசமான ஆளா நீ? நீயெல்லாம் அப்படி ஒரு மனுசனுக்கு எப்டித்தான் பையனா பொறந்தியோ? உன்னோட ஆம்பளத் திமிர வேற எங்கேயாவது காட்டு என்கிட்ட காட்டுன மூஞ்ச பேர்த்துடுவேன். பொண்ணுங்கனா படுக்கைக்கு நீ பகிர்ந்துக்கிற டிஷூ தாளா? இனி எந்த பொண்ணுகிட்டயும் போயி நீ இப்டி கேட்கணும்னு நினைச்சா இந்த அறை”, அவன் முன் சொடக்கிட்டவள், “இந்த அறை உனக்கு ஞாபகம் வரணும் டா. மைண்ட் யுவர் வோன் பிஸினஸ். ச்ச்சீ பொறுக்கி. த்தூ...”, கன்னத்தை பற்றிக்கொண்டு நின்றவனின் மற்றொரு கன்னத்தில் இன்னொரு அறை விட்டவள் வெளியே சென்றுவிட்டாள்.


விர்ஷாலி விட்ட அறையில் பொறி கலங்கிப் போய் நின்றான் யாழேந்திரன். அவளின் ஐவிரல் அச்சுரேகை அப்படியே அவன் கன்னத்தில் பதிந்திருந்தது.


“இங்க இதெல்லாம் சாதாரணமான வேர்ட்ஸ்தானே சே! யெஸ்? ஆர் நோ? சொன்னா முடிஞ்சு போச்சு எதுக்கு இவ்ளோ சீன் கிரியேட் பண்ணி பேசிட்டு போறா? நீ ஹார்ஷா பேசிருந்தாலும் சும்மா விட்டுருப்பேன்டி. ஆனா என்னைவே அடிச்சுட்ட இல்ல. என்னை தொட்ட உன்னை”, கன்னத்தை தடவியவன், “அவ்ளோ சீக்கிரம் சும்மா விடுவேனா முகில்? உன்னை கதற கதற காயப்படுத்தல நான் யாழேந்திர வர்மன் இல்லடி”, கன்னத்தை தடவிக் கொண்டவன், அடுத்த வேலை நோக்கி நகர்ந்தான்.


யாழேந்திரன் கேட்ட கேள்வி விர்ஷாலியின் பாஷை வழி கண்டிப்பாக தவறுதான். ஆனால் அவன் பழகி வாழ்ந்து வந்த இடங்களில் இது அத்தனையும் சர்வசாதாரணம்.


இதை மட்டுமே பெரிதாக நினைத்து தன்னை நிந்தித்து அவமானப்படுத்திவிட்டாளே என்ற கோபம் தான் அவனுக்கு.


ஆண் இனமே பிடிக்காதவளிடம் இப்படி ஒரு கேவலமான கேள்வியை கேட்டுவிட்டானே அவனை கொல்லாமல் விட்டுவிட்டோமே என்ற கோபம் அவளுக்கு.


இருவரின் கண்பார்வையில் இருவர் செய்ததுமே சரியென்றால் இங்கு தவறு யார்பக்கம்?...


இதயவாசல் தாழ் திறவும்...

 
Status
Not open for further replies.
Top