எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

காதல் பொம்மை-1

காதல் பொம்மை-1டேய் அண்ணா எந்திரிக்க போறியா இல்லையா என்றபடி தலையணையை எடுத்து உறங்கும் தமையனை அடிக்க தொடங்கி இருந்தாள் ராகவி.சும்மா இரு காலையிலேயே மனுசன படுத்தாத என்று வாய்க்குள் முணுமுணுத்தப்படியே தங்கையின் கையில் இருந்த தலையணையைப் பிடிங்கி தூர எறிந்தவன் பெட்ஷீட்டை தலைமுழுவதும் போத்திக் கொண்டு மீண்டும் உறங்கத் தொடங்கினான்.


மா இவன பாருமா எவ்ளோ எழுப்பினாலும் எந்திரிக்காம மறுபடியும் தூங்கறான் என்று தாயிடம் புகார் தெரிவித்தபடி அங்கிருந்து சமையலறையை நோக்கி ஓடினாள்.விடு ராகா அவன் தூங்கினா தூங்கிட்டு போறான்.. காலையிலேயே அவனை படுத்தி எடுக்காத என்ற கண்மணியை முறைத்தவள்…உன் கிட்ட வந்து சொன்னேன் பாரு நீ என்னைக்கு எனக்கு சப்போர்ட் பண்ணியிருக்க.எப்பவும் உனக்கு அவன் தான் முக்கியம் ம்கூம் என்று சலித்தபடியே உடற்பயிற்சி கூடத்தில் இருக்கும் தந்தையிடம் புகார் தெருவிக்க ஓடினாள்.த்ரெட் மில்லில் நடை பயிற்சி மேற்கொண்டிருந்த ஐம்பது வயது மதிக்கத்தக்க மனிதரைப் பார்த்தவளுக்கு அவ்வளவு நேரம் தாய் மீதும் தமையன் மீதும் இருந்த சுணக்கங்கள் மறைந்து தந்தையின் அருகே ஆர்வமாக ஓடினாள்.


என்னடா காலையிலேயே தூங்காம அப்பாவை தேடி வந்திருக்க என்று மகளைக் கண்டதும் உடற்பயிற்சியை நிறுத்தியவர் அங்கிருந்த பூத்துவாலையால் வேர்த்திருந்த வியர்வை துளிகளை ஓற்றியப்படி மகளின் அருகே வந்தார்.


பா அவன் சண்டே காலையிலேயே ஷாப்பிங் கூட்டிட்டு போறேன்னு சொன்னான்பா.. ஆனா இன்னும் அவன் எந்திரிக்கவே இல்லப்பா அவன் எப்போ எந்திரிச்சு எக்ஸர்சைஸ் முடிச்சிட்டு என்னை ஷாப்பிங் கூட்டிட்டு போறது.ப்ளீஸ்பா நீங்களாவது வந்து எழுப்பி விடுங்கப்பா நான் எழுப்பினா எந்திரிக்க மாட்டேங்கிறான்.அம்மா கிட்ட சொன்னா அவன் தூங்கட்டும் விடுன்னு சொல்லறாங்க. ப்ளீஸ் பா என்று செல்லக்குரலில் கெஞ்சவும்.மென்னகையை புரிந்தபடி கையில் அணிந்திருந்த ஸ்மார்ட் வாட்ச்சில் நேரத்தை பார்க்க மணி ஏழை நெருங்கிக் கொண்டிருந்தது.அவருக்கு தெரியும் ஞாயிற்றுக்கிழமை என்றால் அவரின் செல்லப் பிள்ளைகள் இரண்டு பேருமே பத்து மணிக்கு குறைவில்லாமல் தான் தூங்குவார்கள்.அதுவும் மூத்த மகனான ஈஸ்வர் கணினி துறையில் வேலை செய்பவன் வாரம் முழுவதும் ஓய்வின்றி உழைத்து விட்டு வாரக் கடைசியில் தான் விடுமுறை எடுப்பவன்.


அவனுக்கு இந்த உறக்கமும் இல்லை என்றால் அவனால் அடுத்து வரும் வாரம் முழுவதும் சுறுசுறுப்பாக பணியாற்ற முடியாது அதை பள்ளியில் படிக்கும் இளைய மகளுக்கு புரிய வைக்க முடியாது.


அதனால் ராகவியை சமாளிக்கும் பொருட்டு மகளின் தோள் மீது கை போட்டபடி அவன் வரலைன்னா என்ன நான் உன்னை கூட்டிட்டு போறேன் என்று கூறவும்.அப்பா என்னதான் நீங்க யங்கா இருந்தாலும் நீங்க அங்கிள்..அதனால உங்க டேஸ்ட் எனக்கு செட் ஆவாது..அண்ணா தான்பா ஷாப்பிங்கிற்கு சரியா வருவான்.

என்று முகத்தை மிகத் தீவிரமாக வைத்துக் கொண்டு கூறவும்.


அடி கழுதை.. ஐயோ பாவம்னு பார்த்தா நீ என்னையே கலாய்க்கிறீயா.


நீயாச்சு உன் அண்ணனாச்சு உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல நான் வரப்போவதில்லை ஆள விடு என்றபடி வேகமாக உடற்பயிற்சி கூடத்தை விட்டு வெளியே வந்தவர்.


மகளைக் கோபித்துக் கொண்டது போல பாசாங்கு காட்டியபடி வேகமாக படி இறங்கி அவரின் அறைக்குள் சென்றார்..ம்ப்ச் என்று சலித்துக்கொண்ட ராகவின் வயது இப்பொழுது தான் பதினேழை தொட்டிருக்கிறது.


தந்தை ஹீரோ என்றால் தயையனோ மாஸ் ஹீரோ.தந்தையை நேசிக்கும் அளவிற்கு தமயனையும் சரிபாதியாக நேசிக்க தெரிந்தவள்.ஓரளவுக்கு வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் துளி பந்தா கூட இல்லாமல் தாய் கண்மணியை போல் மிகவும் எளிமையாக இருப்பவள்.அவர்களின் அந்த எளிமைக்கு முக்கிய பங்காற்றுபவர் தந்தை முருகானந்தம் தான். அவரின் இளமை காலம் தென்மாவட்டத்தில் கடை கோடியில் இருந்த ஒரு சிறு கிராமம் தான்.அங்கிருந்து கஷ்டப்பட்டு படித்து அவரின் உறவின் வழியில் இருந்த கண்மணியை காதல் புரிந்து பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் முடித்தவர் பல கனவுகளோடும் எதிர்பார்ப்புகளோடும் வந்து சேர்ந்த இடம்தான் சிங்கார சென்னை.ஆரம்பத்தில் சிங்காரச் சென்னையில் அவர்களின் வாழ்க்கை மிகவும் போராட்டமாக இருந்தது.


கணவன் மனைவி இருவருமே படித்திருந்ததால் இருவரும் ஆளுக்கொரு வேலையை தேடிக்கொண்டனர் .


ஆனால் கண்மணியால் வேலையை தொடர முடியவில்லை திருமணமான ஓராண்டுகளிலேயே மகன் ஈஸ்வரனை வயிற்றில் சுமக்க முருகானந்தம் இன்முகத்துடன் அந்த கஷ்ட காலங்களை கடக்க ஆரம்பித்தார்.ஓரிடத்தில் வேலை செய்து கொண்டிருந்தால் கண்டிப்பாக வாழ்க்கையில் முன்னேற முடியாது என்று மகன் பிறந்த உடனேயே இருவரும் புரிந்து கொண்டனர்.கண்மணிக்கு அவரின் தாய் வீட்டில் போட்ட நகைகளையும் முருகானந்தத்தின் தந்தை செய்த சிறு உதவியும் வைத்து சிறிய அளவிலான ஒரு பர்னிச்சர் கடையை ஆரம்பித்து அதை திறம்பட நடத்த தொடங்கினார்.அந்த சமயத்தில் கண்மணி கணவனுக்கு உறுதுணையாக நிற்கு அவர்களின் வாழ்க்கை

வண்ணமயமாகியது.


ஈஸ்வருக்கு எட்டு வயதாகும்பொழுது தான் கடைக்குட்டி ராகவி பிறந்தது.


அவள் பிறக்கும் வரை அவர்கள் இருந்தது வாடகை வீட்டில் தான்.அவள் பிறந்த அதிர்ஷ்டமோ இல்லை முருகானந்தத்தின் கடுமையான உழைப்பா என்று தெரியாமலே அவர்கள் சிறியதாக சொந்த வீட்டை வாங்கி குடிபுகுந்தனர்.அவளது பத்தாவது வயதில் நகரை விட்டு ஒதுக்குப்புறமாக இருந்த இடத்தை வாங்கி இப்பொழுது இருக்கும் வீட்டை அழகாக வடிவமைத்து கட்டினர்.அனைவருக்கும் தனித்தனி அறைகள் அதுமட்டுமின்றி உடற்பயிற்சி கூடம் விருந்தினர் தங்குவதற்கு சிறிய அளவிலான அவுட் ஹவுஸ் என எல்லாவற்றையும் பார்த்து பார்த்து கட்டி முடிக்கும் பொழுது ஈஸ்வர் அவனது கணினி தொழில்நுட்ப பொறியியல் படிப்பினை வெற்றிகரமாக முடித்து இருந்தான்.அவர்களின் வீட்டைச் சுற்றிலும் பெரிய அளவிலான ஐடி நிறுவனங்களும் கார் உதிரி பாகம் தயாரிக்கும் நிறுவனங்களும் மட்டுமே இருந்தது.. அதில் ஒரு நிறுவனத்தில் அவனுக்கு வேலையும் கிடைக்க போக்குவரத்து மிக சுலபமானது.ராகவியை அருகில் இருந்த அகில இந்திய அளவிலான பள்ளியில் சேர்த்தவர்கள் பர்னிச்சர் கடையின் மற்றொரு கிளையை அருகில் இருந்த ஒரு ஷாப்பிங் மாலில் ஆரம்பித்து அங்கேயே அலுவலகத்தையும் வைத்துக்கொண்டார்.வாரம் ஒரு முறை மட்டுமே நகரில் இருந்த பர்னிச்சர் கடையை சென்று பார்ப்பது.


அவருக்கு உதவியாக ஈஸ்வரும் இருக்க மேலும் மேலும் அவர்களின் பொருளாதாரம் உயர்ந்து கொண்டே தான் இருந்தது.ஈஸ்வர் கூட ஓரளவுக்கு தாய் தந்தையின் கஷ்டத்தை பார்த்து வளர்ந்திருக்கிறான் வாடகை வீட்டில் ஜீவனம் நடத்தி இருக்கிறான்.ஆனால் கடைக்குட்டி ராகவி எந்த ஒரு சிரமத்தையும் சந்தித்ததே கிடையாது அவள் பிறந்த உடனேயே சொந்த வீட்டிற்கு குடிபோனவர்கள் அவள் வளர ஆரம்பிக்கும் பொழுதே இதுபோன்றதொரு பங்களா வீட்டிற்கு வந்து விட்டனர்பணக்கார பட்டியலில் அவர்களின் குடும்பம் இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு வசதியான குடும்பம் தான் .


சொந்த வீடு ..ஆண்கள் உபயோகிக்க தனித்தனி இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனம் என ஒரளவு வசதியை பறைசாற்றும்.


கண் நிறைந்த கணவன், குடும்பத்தை மிக அழகாக நிர்வகிக்கும் மனைவி, கை நிறைய சம்பாதிக்கும் மகன் வீட்டையே கலகலப்பாக வைத்திருக்கும் குட்டி இளவரசி ராகவி என அழகான அந்த குடும்பத்தில் மிகப்பெரிய சூறாவளி ஒன்று அடிக்கப்போகிறது..அதில் மொத்த குடும்பத்தின் சந்தோஷமும் பறிபோகப் போகிறது என யாருக்கும் தெரியவில்லை.
 
Top