டீசர் 1
கல்லூரியில் வகுப்பிற்குள் நுழைந்த சத்யன் “டுடே ஆன்வோட்ஸ் வி ஸ்டார்ட் அ கிளாஸ், சோ லிசன்” என சொல்லி பாடத்தை ஆரம்பிக்க இவள் அவளின் தோழி ரம்யாவிடம் கிசுகிசுத்துக் கொண்டிருந்தாள். அவனும் “லிசன். டோண்ட் டாக்” என கூறி பாடத்தை நடத்த இவளின் முனுமுனுப்பு சத்தம் கேட்டபடியே இருக்க பாடத்தை நிறுத்தி ரம்யாவையும் அவளையும் பார்க்க இருவரும் எழுந்து நிற்க “வாட்ஸ் கோயிங் ஆன் ஃதேர்” என பற்களை கடித்த படி கேட்க ரம்யா பயத்தில் “அது… அது..” என திணற “அவுட்” என கைகளை வெளியே நோக்கி காட்ட “யூ டூ” என அவளையும் சேர்த்து வெளியே அனுப்பினான்.
வெளியே வந்த ரம்யா “என்னடி இந்த லாம்போஸ்ட் ஃபஸ்ட் டேயே வெளிய அனுப்பிட்டார். நாம மட்டுமா பேசினோம் எல்லாரும் தான பேசினாங்க.. இவரு கண்ணுக்கு நாம் மட்டும் தான் தெரிஞ்சோமா?” என குதிக்க
“நீ என்கூட இல்லாம வேற யாருகூட பேசினாலும் இவன் கண்ணுல பட்டுருக்க மாட்ட” என கூற
“உனக்கு முன்னாடியே அவர தெரியுமா?” கேட்க “ம்ம்” என மட்டும் கூறினாள்.
“எப்படி தெரியும்” என கேட்க
“விடு அப்புறம் சொல்றேன்” என்றவளை நச்சரிக்க
“ஒரே ஏரியா” என கூறினாள்
“அடியேய் குழாயடி சட்டைய காலேஜ் வரைக்குமா கொண்டுவரிங்க” எனறவள் மேலும் “என்ன உறண்டடி இழுத்து வச்ச” என கேட்க
“தெரியாம ஒரே ஒரு தடவ அவன அடிச்சுட்டேன், அதுக்கு பழிவாங்குறான் போல” எனக்கூற நெஞ்சில் கை வைத்த ரம்யா “உங்கூட சகவாசம் வச்சேன்ல அதுக்கு” என கூறி சுவற்றில் முட்டிக்கொண்டாள்.
———————————————————
சத்யன் வீட்டுக்கு வரும்போதே முகம் சரியில்லாமல் இருந்ததை கவனித்த சிவகாமி கணவர் வீட்டில் இருந்ததால் ஏதுவும் பேசவில்லை. சத்யன் நினைவு முழுவதும் அவளிடம், அவளில்லாத வாழ்வை நினைக்க கூட அவனால் முடியவில்லை. இந்த காதல் தான் எவ்வளவு விசித்திரமானது எவ்வளவு சுகமோ!! அவ்வளவு வலியும் கொடுக்கிறது.
கதிர்வேல் கடைக்கு சென்ற உடன் மகனைத்தேடி வந்த சிவகாமியிடம் அனைத்தையும் கூறிய சத்யன் “ மா அவ இல்லாம சத்யமா முடியாதுமா என்னால” என கலங்கிவிட மகனை அணைத்துக்கொண்ட சிவகாமி “யோசிக்கலாம் கொஞ்சம் பொறு, ஐஸ்ஸ உனக்கு பேசமா இருந்திருந்தா இன்னேரம் உங்கப்பா இழுத்துட்டு போய் பொன்னு கேட்டுருப்பேன். உங்கப்பா சரியான தங்கச்சி கோண்டு, அவக கண்ணக்கசக்கினா போதும் உடனே உருகிடுவாரு. பொறு இன்னைக்கு வந்ததும் நா விஷயத்தை காதுல போடுறேன், நீ நாளைக்கு காலைல அப்பாகிட்ட பேசு. நீ கொஞ்சம் மடங்குன ஐஸ்ஸ உன் தலையில கட்டிடுவாரு பாத்துக்கோ. அதுவரைக்கும் தைரியமா இருக்க சொல்லு, அங்க என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கோ, கைமீறி போயிடக்கூடாது.” சொல்லி செல்லவும் ஆசுவாசமாக மூச்சை விட்டவன் சூர்யாவை தேடிச் சென்றான்.
சூர்யாவை கூட்டிக்கொண்டு பார்க் சென்று அவனிடம் அவளை சந்தித்தது முதல் இன்று வரை நடந்ததை சொன்னான்.
சூர்யா “அட நாசமா போன எடுவெட்ட பயலுகளா….. என் வாழ்க்கையில சரசம் பண்ணுறதுக்கே உங்க அப்பனாத்தா பெத்துவிட்டாங்களா…. இப்போ தான் எனக்கு வாரிசு ரெடி பண்ணிருக்கேன், அத கண்ணுல கூட பாக்காம எனக்கு உயிரோட சமாதி கட்டிடுவிங்க போலயே… கீதா சீதா வேற சீரில்லாம ஆடுமே…” என புலம்பிய பாவனையில் சத்யனே வாய் விட்டு சிரித்தான்.
——————————————————
தன் காதருகில் கேட்ட சத்யனின் குரலில் திடுக்கிட்டு நெஞ்சில் கை வைத்து இரண்டடி தள்ளி நின்றவளை அழுத்தமாக ஒர் பார்வை பார்த்து விட்டு அறையினுள் நுழைய, செம்மறி ஆடு போல அவன் பின்னாலே குனிந்து கொண்டே சென்றாள். அவன் சட்டென திரும்புவானென அறியாது அவனை முட்டி நின்றதில் தடுமாறி கீழே விழப்போக அவன் கைகளிலே தஞ்சமடைந்தவள் ‘இன்னுமா விழல’ என எண்ணி ஒற்றை கண்ணை திறந்து சத்யனின் கைகளில் சுகமாய் சாய்ந்தபடி சத்யனை பார்க்க அவன் தீயாய்விழித்தான். அதில் பதறி அவனிடம் இருந்து பிரிந்து தனியாய் நின்றாள்.
தன்னிடம் இருந்து பிரிந்து நின்றவளை பார்த்து “என்னோட இந்த சின்ன தொடுகையையே உன்னால தாங்க முடியல, துள்ளிக்கிட்டு தள்ளி நிக்கிற, அப்புறம் எதுக்குடி என்னை கல்யாணம் பண்ணுன? உனக்கு தான் என்னை பிடிக்காதுல!! நான் அவ்ளோ சொன்னேன்னே அப்புறம் ஏண்டி இந்த கல்யாணம்.
அவனை விட்டு தள்ளி நின்றவள் கண்களில் எதேர்ச்சியாக பட்டது சத்யன் அறையில் உள்ள அந்த குளியலறை. தன் வாழ்க்கையையே மாற்றிய அந்த குளியலறை கண்ணில் பட்டதும் கண்ணில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வடிந்தது. இவ்வளவு நேரமும் சத்யன் பேசுவதே அவளுக்கு கேட்கவில்லை அவள் மூளை இந்த கணத்தின் நிஜத்தை நம்பமுடியாமல் மூச்சு விடுவதற்கே சிரமபட்டாள்.