எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நங்கையின் மறவோன் - கதை திரி

NNK - 37

Moderator
டீஸர் 1 :


"ஆல் தி பெஸ்ட் மௌனா!" புன்னகை ததும்பும் குரலில் தனக்கு வாழ்த்துச் சொல்லிய அகதாவைப் பார்த்து,


"தாங்க்யூ அகி" என்று புன்னகைத்தாள் மௌனா.


பிரம்மாண்டமான அந்த ஹோட்டலின் வரவேற்பறையில், தனக்கான வேலை காத்துக் கொண்டிருக்க, அதை ஆசையுடன் ரசித்தவாறே சென்று தனக்காக வைக்கப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தாள் மௌனா.


அந்த நேரம் பார்த்து, அந்த தங்கும் விடுதியின் முதலாளி உள்ளே வந்தான்.


வந்தவன் நேரே அறைக்குச் செல்லாமல்,

"மிஸ்…" என்று அவளது பெயர் தெரியாததால், கேள்விக் குறியாக நோக்கினான்.


"மௌனா சார்" வெடவெடத்த போதும், பதில் சொன்னாள்.


"ம்ம்.மிஸ்.மௌனா.நியூ ஜாய்னி தான?"


கேள்வி கேட்டுக் கொண்டே, பார்வையால் அவளது கண்களைத் துளைத்தான்.


"எஸ் சார்"


"மேனேஜர் செலக்ட் பண்ணினாலும் உன்னோட சர்டிபிகேட்டை மறுபடியும் செக் பண்றேன்"


அதை அவளிடம் சொல்லாமல் கூட அவனால் செய்திருக்க முடியும். எதனால் தெரிவித்தான்? என்பது விளங்கவில்லை அவளுக்கு.


'அதைச் செக் செய்துட்டு என்ன சொல்லப் போறாரோ?'


அவளுடைய அத்தனைச் சான்றிதழ்களும் சரியானவையே! அப்படி இருந்தாலும் இவனைப் பார்த்ததும் உள்ளே உதறல் எடுத்தது. இதில் சான்றிதழ்கள் அவனால் சரிபார்க்கப்பட உள்ளது எனவும், மிரண்டு போனாள் மௌனா.


அவன் எப்போதோ அலுவலகத்தினுள்ளே போய் விட்டான்.

அவளுக்குத் தான் நிலை கொள்ளவில்லை.


"இதுக்கு இவரே என்னை இண்டர்வியூ செய்து எடுத்து இருக்கலாம்"


புலம்பித் தள்ளியவாறே இருந்தாள்.


தன்னுடைய அறைக்குள் வந்து,நாற்காலியில் அமர்ந்தவன் கணினியைக் கூட திறக்கவில்லை.

அதற்குள், மஹதனுக்கு அழைப்பு வந்தது.


"ஹலோ"


"மஹத்!! திஸ் இஸ் முக்தா. உங்களை மீட் பண்ணனும்? ஆஃபீஸூக்கு வர்றேன்"


"வெய்ட் முக்தா. நான் இப்போது தான் ஆஃபீஸூக்கு வந்தேன்" என்று சொல்லும் போதே குறுக்கிட்டு,


"இல்லை ப்ளீஸ். உன்னைப் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. நான் இப்போ தான் வெளிநாட்டில் இருந்து வந்திருக்கேன். உன்னை மீட் பண்ணனும்னு இங்க வந்ததில் இருந்து துடிச்சிட்டு இருக்கேன்"அவனைப் பார்த்தே ஆக வேண்டும் என செல்பேசியை அணைத்து விட்டு,அவனைப் பார்க்க கிளம்பினாள் முக்தா.
 

Shalini shalu

Moderator
நங்கையின் மறவோன் 1

தன் அறையில் குறுக்கும், நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள் பெண்ணவள்.

எல்லாம் நாளைப் போய்ச் சேரப் போகும் வேலையைப் பற்றிய யோசனை தான்.

"மௌனா! இன்டர்வியூ அட்டெண்ட் பண்ணிட்டு வெய்ட் பண்ணிட்டு இப்படி பதட்டப்பட்றதுல நியாயம் இருக்கு. வேலையே கன்ஃபார்ம் ஆகிருச்சு.இன்னும் கொலுசு சத்தம் கேட்குறா மாதிரி டங் டங்ன்னு நடக்காதடி. தலை வலிக்குது"

தலை வலி தந்த எரிச்சலில் குரலை உயர்த்தித் தோழியை அதட்டினாள் அகதா.

"என்ன அகி! நீயே இப்படி பேசற? முதல் நாள் வேலை, நர்வஸா இருக்குடி"

சினுங்கிக் கொண்டே பதிலளித்தாள் மௌனா.

"அப்படித்தான் முதல்ல இருக்கும் டி. ஆனால் போகப் போக பிடிச்சிரும். அதுவுமில்லாமல் உனக்குப் பிடிச்ச வேலை வேற. சோ, நர்வஸ் ஆகாம ஃபர்ஸ்ட் டே எப்படி ஃபேஸ் பண்ணலாம்னு யோசி"

சின்னதாக அறிவுரை தந்த அகதா உணவைச் சமைக்கப் போனாள்.

"ஆமால்ல! நமக்குப் பிடிச்ச வேலை.அதைச் செய்ய எதுக்கு இவ்ளோ பதட்டப்பட்றோம்"

சற்றுத் தெளிந்தவள், கிச்சனுக்குப் போய்,
"அகி…! சோ ஸ்வீட் தாங்க்யூ" என்று தோழியிடம் நன்றி கூறினாள்.

அடுத்த நாள் வேலைக்குக் கிளம்பியவளுக்கு,

"ஆல் தி பெஸ்ட் மௌனா!"

புன்னகை ததும்பும் குரலில் தனக்கு வாழ்த்துச் சொல்லிய அகதாவைப் பார்த்து,

"தாங்க்யூ அகி" என்று புன்னகைத்தாள் மௌனா.

பிரம்மாண்டமான அந்த ஹோட்டலின் வரவேற்பறையில், தனக்கான வேலை காத்துக் கொண்டிருக்க, அதை ஆசையுடன் ரசித்தவாறே சென்று தனக்காக வைக்கப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தாள் மௌனா.

அந்த நேரம் பார்த்து, அந்த தங்கும் விடுதியின் முதலாளி உள்ளே வந்தான்.

வந்தவன் நேரே அறைக்குச் செல்லாமல்,
"மிஸ்…" என்று அவளது பெயர் தெரியாததால், கேள்விக் குறியாக நோக்கினான்.

"மௌனா சார்" வெடவெடத்த போதும், பதில் சொன்னாள்.

"ம்ம்.மிஸ்.மௌனா.நியூ ஜாய்னி தான?"

கேள்வி கேட்டுக் கொண்டே, பார்வையால் அவளது கண்களைத் துளைத்தான்.

"எஸ் சார்"

"மேனேஜர் செலக்ட் பண்ணினாலும் உன்னோட சர்டிபிகேட்டை மறுபடியும் செக் பண்றேன்"

அதை அவளிடம் சொல்லாமல் கூட அவனால் செய்திருக்க முடியும். எதனால் தெரிவித்தான்? என்பது விளங்கவில்லை அவளுக்கு.

'அதைச் செக் செய்துட்டு என்ன சொல்லப் போறாரோ?'

அவளுடைய அத்தனைச் சான்றிதழ்களும் சரியானவையே! அப்படி இருந்தாலும் இவனைப் பார்த்ததும் உள்ளே உதறல் எடுத்தது. இதில் சான்றிதழ்கள் அவனால் சரிபார்க்கப்பட உள்ளது எனவும், மிரண்டு போனாள் மௌனா.

அவன் எப்போதோ அலுவலகத்தினுள்ளே போய் விட்டான்.
அவளுக்குத் தான் நிலை கொள்ளவில்லை.

"இதுக்கு இவரே என்னை இண்டர்வியூ செய்து எடுத்து இருக்கலாம்"

புலம்பித் தள்ளியவாறே இருந்தாள்.

தன்னுடைய அறைக்குள் வந்து,நாற்காலியில் அமர்ந்தவன் கணினியைக் கூட திறக்கவில்லை.
அதற்குள், மஹதனுக்கு அழைப்பு வந்தது.

"ஹலோ"

"மஹத்!! திஸ் இஸ் முக்தா. உங்களை மீட் பண்ணனும்? ஆஃபீஸூக்கு வர்றேன்"

"வெய்ட் முக்தா. நான் இப்போது தான் ஆஃபீஸூக்கு வந்தேன்" என்று சொல்லும் போதே குறுக்கிட்டு,

"இல்லை ப்ளீஸ். உன்னைப் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. நான் இப்போ தான் வெளிநாட்டில் இருந்து வந்திருக்கேன். உன்னை மீட் பண்ணனும்னு இங்க வந்ததில் இருந்து துடிச்சிட்டு இருக்கேன்"


அவனைப் பார்த்தே ஆக வேண்டும் என செல்பேசியை அணைத்து விட்டு,அவனைப் பார்க்க கிளம்பினாள் முக்தா.

அவள் வருவதற்குள், மௌனாவின் வேலையைப் பற்றிக் காண்போம்.

ஃப்ரண்ட் ஆஃபீஸ் ரிசப்ஷனிஸ்ட் தான் தற் சமயத்தில், மஹதனுடைய தங்கும் விடுதியில் அவள் பார்க்கப் போகும் வேலை.

புதிதாக வேலைக்குச் சேர்த்திருப்பதால்,இனி தான் இங்கிருப்பவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டி இருந்தது மௌனாவிற்கு.

தந்தையும், தாயும் ஊரில் இருக்க, இவள் மட்டும் வேலைக்காக இங்கே வந்திருந்தாள்.

தனியாக வீடு எடுத்துத் தன்னுடன் பள்ளியில் பயின்ற அகதாவுடன் தான் தங்கி இருக்கிறாள்.

அவளுக்குக் குறும்புத்தனம் தேவைக்கேற்ப இருந்தாலும்,சில நேரங்களில் பொறுப்பும் தலை தூக்கும்.

சொன்னது போலவே, மௌனாவின் சான்றிதழ்களைச் சரி பார்க்கத் தொடங்கி இருந்தான் மஹதன்.

அந்த நேரம் பார்த்து, அலுவலகத்திற்கு, வேண்டாத விருந்தாளியாக, வந்து சேர்ந்தாள் முக்தா.

ரிசப்ஷனில் நிற்கும் போது, மலர்ந்த முகத்துடன் இருக்க வேண்டும் என்பதால், மௌனா தன்னுடைய ட்ரேட் மார்க் புன்னகையில் மிளிர்ந்தாள்.

முதல் நாள் வேலை என்று உள்ளுக்குள் பதட்டம் கொண்டாலும், சான்றிதழ்களைப் பார்க்கும், மஹதன் என்ன சொல்வானோ? என்று இருந்தாலும் தன் வேலையைச் செவ்வனே செய்ய வேண்டும் என்பதே அவளது தலையாயக் கடமையாக இருந்தது.

மௌனாவின் சான்றிதழ்களைச் சரி பார்த்து மூடி வைத்தவன்,
"குட் க்ரேட்ஸ் தான்" என்று சொல்லிக் கொண்டான்.


முக்தா தன்னுடைய காரை அலுவலகத்தின் முன்னால் நிறுத்தி விட்டு, உள்ளே வந்தாள்.

தான் செய்திருந்த அலங்காரத்தில் , முக்தாவும் ஜொலித்துக் கொண்டு இருந்தாள் தான்!

ஆனால் அவ்வாறு ஜொலித்த முகமோ, மௌனாவைப் பார்த்ததும் விகாரமாக மாறியது.

மௌனா தன்னை விட அழகாகத் தெரிவது ஏனோ முக்தாவிற்குப் பிடிக்கவில்லை.

ரிசப்ஷனில் வந்து நின்று தன்னை கூரிய விழிகளால் ஆராயும் இந்தப் பெண் யாரென்று பார்த்துக் கொண்டே,
"குட் மார்னிங் மேம்.வெல்கம் டூ அவர் ஹோட்டல்! ஹவ் கேன் ஐ ஹெல்ப் யூ மேம்?" (காலை வணக்கம் மேம். எங்கள் விடுதிக்குத் தங்களை வரவேற்கிறேன்! உங்களுக்கு நான் எவ்வாறு உதவி செய்ய வேண்டும்?) என்று பணிவாகக் கேட்டாள் மௌனா.

அவளது பணிவை ஏற்காது, அலட்டலான விழிகளுடன், அலட்சியமானக் குரலில்,
"மஹதனைப் பார்க்கனும்" என்றாள் முக்தா.

"அப்பாயிண்ட்மெண்ட் இருக்கா மேம்?"

"நான் அவனோட ஃப்ரண்ட். அப்பாயிண்ட்மெண்ட் தேவையில்லைன்னு நினைக்கிறேன்" என்று பேசியவளிடம்,

"ஜஸ்ட் வெய்ட் மேம்" என்று மஹதனை இண்டர்காமில் அழைத்தாள் மௌனா.

தன்னிடம் அதற்கு அனுமதி கேட்காமல், முதலாளியை அழைத்தது சத்தியமாக முக்தாவிற்குப் பிடிக்கவில்லை,

அது மட்டும் இல்லாமல், மஹதன் தன்னைப் பார்க்க வர வேண்டாம் என்று கூறிய பிறகு, வம்படியாக 'வந்தே தீருவேன்' என வந்திருப்பவளை நிச்சயமாக அவன் வரவேற்க மாட்டான்.

"ஹலோ"

"சார்! உங்களைப் பார்க்க ஒரு பொண்ணு வந்திருக்காங்க"அவனிடம் கூறிவிட்டு,

" உங்கப் பேர் மேம்?" என்று வந்தவளைக் கேட்டாள் மௌனா.

"முக்தா!!!"

மஹதனே கோபத்தில் அவளது பெயரை உச்சரிக்கவும், தெரிந்த பெண் தான் போலும்,

"சார் அவங்களை உள்ளே அனுப்பவா?" என்று கேட்டாள்.

"வேண்டாம்.அப்படியே வீட்டுக்குக் கிளம்ப சொல்லிடு" என்று அழைப்பைத் துண்டித்து விட்டான் மஹதன்.

தெரிந்தவள் தான் ஆனால் பிடித்தமானவள் இல்லை போல!

மௌனா அவன் கூறியதை முக்தாவிடம் தெரிவிக்க, அவள் கொதித்து எழுந்து விட்டாள்.

"அவன் என்மேல் கோபமா இருக்கான். அதனால் தான் அப்படி பேசிட்டான். நான் உள்ளேப் போய்ப் பேசிக்கிறேன்"

இவளுடைய பேச்சைக் காதில் வாங்கப் போவதில்லை என்று தெரிந்தாலும், தன்னால் ஆன மட்டும் அவளைத் தடுக்க எண்ணினாள் மௌனா.

"மேம் ப்ளீஸ்! சார் உங்களுக்கு பர்மிஷன் குடுக்கல. இது ரொம்ப தப்பு" என்று புரிய வைக்க முயன்றாள்.

ஆனால் முக்தாவிற்கோ, இந்த வாய்ப்பை விட்டால், வேறு வழியில்லை என்று அவளைத் தள்ளி விடக் கூடத் தயாராக இருந்தாள்.

"வழியை விடு. இல்லன்னா நடக்கறதே வேற"

எச்சரிக்கை விடுத்துக் கொண்டிருந்த முக்தாவின் குரல் கொடுத்தச் சத்தத்தில் அலுவலகத்தில் இருப்பவர்கள் ஸ்தம்பித்துப் போயினர்.

பிறகு விஷயம் மஹதனுக்குத் தெரியாமல் இருந்து விடுமா?

இங்கு நடந்த களேபரத்தை அவனுக்கு ஊழியர் ஒருவர் தெரிவிக்கவும்,முக்தாவின் மீதிருந்த கடுப்பை அவளிடம் நேரடியாகக் காட்டி விட எண்ணி, அவ்விடத்திற்கு விரைந்தான் மஹதன்.

அதற்குள் முக்தா தள்ளி விட்டதால், மௌனாவின் தலைக் கதவில் இடித்து விட்டது.

சரியாக மஹதன் கதவைத் திறக்க வரும் போது மௌனாவின் தலையில் இருந்து வடிந்த குருதியைக் கண்டான்.

வேகமாக பணியாளரை அழைத்தவன்,
"ஃபர்ஸ்ட் எய்ட் எடுத்துட்டு வந்து ட்ரீட் பண்ணுங்க. சீக்கிரம்!" என்று துரிதமாக செயல்பட்டவன்,

பயத்தில் வெலவெலத்துப் போய் நின்றிருந்த முக்தாவிடம்,
"என்ன செய்திருக்க முக்தா?" அடிக்குரலில் சீறினான் மஹதன்.

ஏற்கனவே அழையாமல் வந்து விட்டோம், இதில் இந்த செயல் வேறு. அவளைப் படுகுழியில் தள்ளப் போகிறது என்ற அச்சம் உள்ளம் எங்கும் பரவித் தகித்தது.

"சொல்லு?"

அவன் வார்த்தைகள் சீறிப் பாய்ந்து கொண்டு இருந்ததை அமைதியாகப் பார்த்துக் கொண்டு இருந்தாள் மௌனா.

"சாரி…மஹத்.." மன்னிப்பைக் கூட ஏனோ தானோ என்று கேட்டவளை பார்வையாலேயே எரித்துக் கொண்டு இருந்தான் மஹதன்.

"என்னைத் தள்ளி விட்டியா? எங்கிட்ட சாரி கேக்குற! அந்தப் பொண்ணுக் கிட்டப் போய் சாரி கேளு"

ஆத்திரத்தில் கூறினாலும் சரியானதைக் கூறினான்.

"அவகிட்டயா?" முணுமுணுத்தவாறே மௌனாவின் அருகில் சென்றாள் முக்தா.

தலையில் பிளாஸ்திரி முளைத்திருக்க, முக்தாவைப் பார்வையிலேயே தடுத்து நிறுத்திய மௌனா,
"இங்க நான் வேலைக்குச் சேர்ந்து இருக்கேன் சார்.இவங்க உங்களுக்கு என்ன ரிலேஷன்னுத் தெரியாது. அதே மாதிரி உங்களோட பர்சனல் விஷயத்தில் தலையிட்ற உரிமையும் எனக்கில்லை. எல்லாத்துக்கும் முக்கியமாக, எனக்கு இப்படி தலையில் அடிபட்ற அளவுக்கு இவங்களை நான் எதுவும் ஹர்ட் பண்ணல.ஆனால் இவங்க கொஞ்சம் கூட, சென்ஸே இல்லாமல், எனக்குக் காயம் வரவழைச்சு இருக்காங்க " என்று பேசியவள்,

ஐந்து நொடிகள் மூச்சு வாங்கி விட்டு,

"இவங்க மேல நான் கம்ப்ளைண்ட் கொடுத்தாலும் ஈசியா வெளியே வந்துருவாங்க. ஆனால் இதற்கான விலை அவங்கத் தந்து தான் ஆகனும்" என்றாள்.

அதற்குள் முக்தாவோ,
"தர்றேன்.பணம் தான கேட்கப் போற?" என்று இளக்காரம் அவளது பேச்சில் அதிகமாகவே தென்பட்டது.

"இதையே எத்தனை நாளைக்குச் சொல்லுவீங்க மேம்.எனக்கு உங்கப் பணம் வேண்டாம்" அவளிடம் கூறிவிட்டு,

"இவங்க மேல என்னால் தான் கம்ப்ளைண்ட் கொடுக்க முடியாது. கொடுத்தாலும் பிரயோஜனம் இல்லை. அவங்க உங்களோட ரிலேடிவ் தானே? எனக்காக நீங்க கம்ப்ளைண்ட் ஃபைல் பண்றீங்களா சார்?"

என்று நிமிர்வாக கேட்டு விட்டு, உச்சபட்ச அதிர்ச்சியில் தடுக்கி விழுபவளைப் போல நின்றிருந்த முக்தாவையும் , ஆச்சரியத்தில் இருந்த மற்ற அலுவலக ஊழியர்களையும் கண்டு கொள்ளாமல், மஹதனைப் பார்த்துக் கொண்டு, அவனுடைய பதிலுக்காகக் காத்திருந்தாள் மௌனா.


- தொடரும்
 

Shalini shalu

Moderator
நங்கையின் மறவோன் 2

கைகளைக் கட்டிக் கொண்டு நின்றிருந்த மௌனாவைப் பார்த்து சுற்றி உள்ளவர்கள் பிரம்மித்துப் போயினர்.

முக்தாவின் முகமோ பலமாக இருண்டு போயிருந்தது.

பரிதாபகரமாக நின்று கொண்டு இருந்தாலும், அவளுடைய கண்களும், மனதும் மௌனாவை எரித்துச் சாம்பலாக்கும் உட்ச நிலையில் இருந்தது.

அனைத்திற்கும் மேலாக, மஹதனோ ஆச்சரியத்தின் விளிம்பில் இருந்தான்.

தன்னிடம் வேலை பார்ப்பவர்கள் என்ன அவமானப்படுத்தினாலும், வேலைக்காக அதைப் பொறுத்துக் கொள்வர். ஆனால் இவளோ, முக்தா தனக்குச் செய்த குற்றத்திற்குத் தண்டனை கிடைக்க வேண்டும் என்று புகார் அளிக்கக் கேட்கிறாள். அதுவும் முக்தாவின் பணபலத்தைக் கருத்தில் கொண்டு, தன்னையே புகாரளிக்குமாறு கேட்டுக் கொண்டு , தன் முன்னே நிற்கிறாளே!

"சார்! உங்களைத் தான் கேட்கிறேன்! கம்ப்ளைண்ட் கொடுக்கிறீர்களா?"மிடுக்காகக் கேட்டவளிடம் மஹதன் பதில் சொல்வதற்குள்,

முந்திக் கொண்ட முக்தா,

" ஏய்! என்ன? தெரியாமல் பண்ணதுக்கு ஓவரா சீன் போட்டு, மஹதனையும் ஏற்றி விட்டுட்டு இருக்க? உனக்கு எவ்வளவு திமிர் இருக்கனும் "

ஆத்திரத்தில் அடங்காது கத்தினாள்.

"திமிரா? எனக்கா மேடம்? உங்களோட திமிரால் தான் எனக்கு இந்த நிலைமை! இதுக்கு மேல உங்ககிட்ட பேச எனக்கு இஷ்டம் இல்லை" என்ற மௌனா திகைத்து நின்ற மஹதனிடம் பார்வையைச் செலுத்தினாள்.

"ம்ம்! முக்தா நான் இங்கே உன்னை வர வேண்டாம்னு சொல்லியும் வந்திருக்க, அது மட்டுமில்லாமல், என்னோட ஸ்டாஃப்க்கு ப்ளட் வர்ற அளவுக்கு காயத்தை ஏற்படுத்தி இருக்க. இதுக்கு உன்னோட எக்ஸ்ப்ளனேஷன் என்ன?"

அவள் இப்போதாவது தன் தவறை மனதார உணர்கிறாளா? என்ற நம்பிக்கையில் கேட்டான் மஹதன்.

அவனுடைய கேள்வியோ தன்னைத் திக்குமுக்காட வைத்ததால், இப்போதே இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்தவளோ,

"நான் தான் சாரி கேட்கிறேன்னு சொல்லிட்டேனே மஹத். அப்படி இல்லையா! பணம் கொடுக்கவும் தயார். அந்தப் பொண்ணுக்கு இரண்டில் என்ன வேணும்னு கேட்டு சொல்லு"

தன் நிலையிலிருந்து இறங்கி வந்து விட்டாளாம்!

"உங்கிட்ட இனிமேல் பேசறதே வேஸ்ட். நான் கம்ப்ளைண்ட் ஃபைல் பண்ணத் தயார் மௌனா"

தானும் அவளுக்குச் சளைத்தவன் இல்லை என்பதை காண்பித்தான் மஹதன்.

இப்போது மௌனாவின் பார்வை மஹதனை வியப்பாக ஏறிட்டது.

"மஹத்…!"

அவமானத்திலும், பயத்திலும் முகம் வெளிறிய நிலையில் கிறீச்சிட்டாள் முக்தா.

"ஆமாம் முக்தா. நீ செஞ்சது தப்பு, அதைவிட பேசின விஷயங்கள் ரொம்ப தப்பு.வேற வழியில்லை. கெட் ரெடி"

இப்போது முக்தாவின் கோபமெல்லாம் மஹதனின் புறம் திரும்பியது.

"இவ சொல்றதை எல்லாம் கேட்கனும்னு உனக்கென்ன தலையெழுத்தா மஹத்? உன்னால முடிஞ்சா இவளைக் கன்ட்ரோல் பண்ண முடியும்.ஆனால் நீயே கம்ப்ளைண்ட் கொடுக்க சம்மதம் சொல்லி இருக்க? வாட் இஸ் திஸ் மஹத்?"

இப்போது வாய் திறந்தாள் மௌனா.

"ஹலோ மேடம்! கன்ட்ரோல் பண்றதுக்கு அவருக்கு என் மேல எந்த உரிமையும் இல்லை. அப்பறம் எனக்கு உங்க ட்ராமாவைப் பார்க்க கொஞ்சம் கூட பிடிக்கல.இன்னைக்குத் தான் முதல் நாள் ஆஃபீஸ்ல ஜாயின் பண்ணேன்.ஒரு ரத்தக் காயம் கிஃப்ட் ஆக கிடைச்சிருச்சு. நீங்க எங்க டைம் வேஸ்ட் பண்ணாதீங்க" என்று மஹதனிடம் திரும்பியவள்,

"சார்! இவங்களைக் கூப்பிட்டுட்டு சீக்கிரம் வாங்க. கம்ப்ளைண்ட் கொடுத்துட்டு நான் வேலையைப் பாக்கனும்.ஏற்கனவே என்னோட ஒரு நாள் வேலையில் பாதி நாள் இவங்களால் வேஸ்ட் ஆயிடுச்சு"

அவள் கூறியதைக் கேட்ட மஹதனோ அதற்குப் பிறகு, பேச ஒன்றும் இல்லாததால், முக்தாவிடம்,
"வந்து காரில் ஏறி முக்தா.எனக்கும் முக்கியமான வேலைகள் நிறைய இருக்கு"என்று கோபமாக கூறினான்.

" ப்ளீஸ் மஹத்!!"

மிகவும் இறங்கிப் போய்க் கெஞ்சினாள் முக்தா. பின்னே, இந்தியா வந்திறங்கியதுமே, காவல் நிலையத்திற்குப் போனாள் என்பது தெரிந்தால், இவளது தந்தையின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதே அவளைக் கதி கலங்க வைத்தது.

தனக்கு நேர்ந்த இந்தப் பரிதாப நிலையால் , மனம் வெதும்பிப் போன முக்தா,காரில் ஏறப் போவதற்கு முன்னால்,
"அப்பா கிட்ட பேசனும் மஹத். நான் போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கிறது தெரிஞ்சா தான, ஜாமீனில் எடுக்க வருவார்" என்று கண்ணீருடன் கேட்டாள்.

அதிலும் மனமிரங்காத மஹதன்,
"நான் சொல்லிக்கிறேன். அங்கே போன பிறகு அதைப் பார்த்துக்கலாம்"என்று அவள் ஏறியதும், மௌனாவும் உடன் ஏறிக் கொள்ள, காரைக் காவல் நிலையத்தை நோக்கிச் செலுத்தினான்.

அவனுக்குள்ளும் எரிமலை வெடித்துக் கொண்டு தான் இருந்தது. இந்த மாதிரி எந்த ஒரு நிலையும் தனக்கு ஏற்பட்டதில்லையே!

முக்தாவோ உடல் எங்கும் அவமானம் பரவிட , கண்களை மூடிக் கொண்டாள்.

அவளை இந்நிலைக்கு ஆளாக்கிய மௌனாவோ, அடுத்து என்ன நடக்கும்? என்ற ஐயம் கொஞ்சம் கூட இல்லாமல், சாலையை வெறித்தாள்.

கால் மணி நேரத்தில் காவல் நிலையத்தை அடைந்திருந்தனர்.
அதன் வாயிலைக் கூட மிதிக்கப் பிடிக்காதவள் போல், முகம் அடிபட்டுப் போய் அப்படியே அமர்ந்திருக்கும் முக்தாவை இறங்கும் படி சைகை செய்தான் மஹதன்.

பின்னிருக்கையில் இருந்து வந்த மௌனாவோ முக்தாவையும், மஹதனையும் பார்த்து,
"ப்ச்" என்று சலிப்புடன் கூறினாள்.

அதைக் கண்ணுற்ற மஹதனோ,
"இறங்கு முக்தா" கடுமையான குரலில் கூறினான்.

மௌனாவின் சலிப்பு அவனைக் கேலி செய்ததைப் போல், தோன்றிற்று.

முக்தாவும் வேறு வழியின்றி இறங்கவும், மூவரும் காவல் நிலையத்திற்குள் சென்றனர்.

அங்கிருந்த காவலதிகாரியிடம்,
"வணக்கம் சார்! இவர் இந்தப் பொண்ணு மேல் கம்ப்ளைண்ட் கொடுக்க வந்திருக்கார்" என்று மௌனாவே பேச ஆரம்பித்து விட்டாள்.

அந்த அதிகாரி மஹதனைப் பார்த்ததும், "சார் நீங்க.. மிஸ்டர் மஹதன் தான?" என்று அவனை நன்றாக அடையாளம் கண்டு கொண்டதைப் போல கேட்டார்.

இருக்காதா பின்னே? அவன் தான் பார் போற்றும் கோடீஸ்வரன் ஆயிற்றே! அப்படிப்பட்டவன் இங்கே, இந்நிலையில் நிற்கிறான் என்பதே அந்த அதிகாரிக்கு அதிர்ச்சியைத் தந்தது.

" எஸ் சார். இவங்க மிஸ். மௌனா. என்னோட ஸ்டாஃப். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி மிஸ். முக்தா இவங்களோட தலையில் காயத்தை ஏற்படுத்திட்டாங்க.அதைப் பார்த்த நான் மௌனாவுக்காக கம்ப்ளைண்ட் கொடுக்கிறேன்.உடனே ஆக்ஷன் எடுங்க"

குனிந்த தலை நிமிராமல் நிற்கும் முக்தாவைப் பார்த்துக் காவலதிகாரி, அதற்கு நேர்மாறாக, தலை நிமிர்ந்து நின்றிருக்கும் மௌனாவையும் பார்த்தார்.

அவளது நெற்றியில் இருந்தப் பிளாஸ்திரியைப் பார்த்து விட்டு,
"ம்ம்.ஓகே சார். கம்ப்ளைண்ட் எழுதிக் கொடுங்க" என் சொல்லவும்,

அவர் கொடுத்த வெள்ளைத் தாளில் நாற்காலியில் அமர்ந்து, புகாரை எழுத ஆரம்பித்து விட்டான் மஹதன்.

எஃப் ஐ ஆர் (FIR) ரெடி பண்றேன்" என துரிதமாகத் தயார் செய்தார்.

தன்னை இந்தளவிற்கு இழிவுபடுத்திய இவ்விருவரையும் என்னவெல்லாம் செய்யலாம்? என்று திட்டம் போட்டாள் முக்தா.

அதற்குள், "எஃப் ஐ ஆர் ரெடி சார். சைன் பண்ணுங்க" என்கவும்,

மஹதனோ உடனே அதில் கையெழுத்திட்டான்.

இதைப் பார்த்ததும் 'பணம் இருக்கிறது' என்ற ஒரே காரணத்திற்காக தன்னைக் காயப்படுத்தியதைக் கூட ஒரு பொருட்டே இல்லை என தெனாவட்டாகப் பேசிய பெண்ணிற்கு உரிய தண்டனைக் கிடைக்கப் போகிறது என மௌனாவிற்கோ நிம்மதியாக இருந்தது.

இப்போதாவது தன் செல்பேசியை உபயோகப்படுத்தலாமா? என்பதாக மஹதனையும், செல்பேசியையும் மாறி மாறிப் பார்த்தாள் முக்தா.

"நானே கால் பண்ணி சொல்றேன்" என்று முக்தாவின் தந்தைக்கு அழைத்தான் மஹதன்.

அழைத்து வெகு நேரம் ஆகியும் அவர் ஏற்கவில்லை. எனவே,
"அங்கிள் கால் அட்டெண்ட் பண்ணல" என்று கூற, வெறுப்பை உமிழும் பார்வையால் மௌனாவைப் பார்த்தாள் முக்தா.

ஆனால் உடனே பார்வையைச் சரி செய்து கொண்டு,
"மௌனா! இவ்ளோ தூரம் வந்தாச்சு. கம்ப்ளைண்ட் ஃபைல் ஆகிருச்சு. கொஞ்ச நேரம் செல்லில் (cell) கண்டிப்பாக இருக்கேன். அதுக்கப்புறம் என்னை ஜாமீன்ல எடுக்கச் சொல்லி மஹதன்கிட்ட சொல்லு!" என்று அவளிடம் பரிதவிப்புடன் புலம்பினாள்.

அவளைத் கூர்மையாகப் பார்த்தவள்,
மஹதனிடம்,
"தாங்க்ஸ் சார். உங்களோட ஸ்டேட்டஸைக் கூட நினைச்சுப் பார்க்காமல், நான் கேட்டேன்றதுக்காக, நியாயமாக நடந்துக்கிட்டீங்க" என்று மனதார நன்றி சொன்னாள் மௌனா.

அந்த நன்றியை ஏற்றுக் கொள்ளப் போவதாக இல்லை போலும் அவன்!

"நோ நீட் (No need - தேவையில்லை)"

என்று அவளது நன்றியை ஏற்காமல் , மறுத்து விட்டான் மஹதன்.

பெருமூச்செறிந்தவாறே,
"ஒரு மணி நேரம் கழிச்சு இந்தக் கேஸை வாபஸ் வாங்கிடுங்க சார்" என்றாள் மௌனா.

"ஹேய்!!! என்ன!! தப்புப் பண்ணியது நான் இல்லன்னாலும், உனக்காக ஸ்டேஷன் வரைக்கும் வந்து கம்ப்ளைண்ட் கொடுத்தா, என் பொறுமையை ரொம்ப சோதிச்சுப் பாக்குற? இதுக்கு மேல நீ எங்கிட்ட எதையும் கேட்க ரைட்ஸ் இல்லை. ஒழுங்கா ஆஃபீஸூக்கு வந்து வேலையைப் பாரு"

அவனும் தான் எவ்வளவு நேரம் பொறுத்துப் போவான்.

மௌனாவைப் பொரிந்து தள்ளியவன் திரும்பிப் பார்க்காமல், காரில் ஏறிச் சென்று விட்டான் மஹதன்.

"ஓவர் ஆக்ட் பண்ணி என்னை இந்த நிலைமைக்குக் கொண்டு வந்து விட்டுட்டல்ல! அதுவும் இனி நான் மஹதனைப் பார்த்துப் பேச முடியாத அளவுக்குப் பண்ணிட்ட. உனக்கு இருக்குடி"

அங்கேயே அமர்ந்திருந்த முக்தாவோ, வார்த்தைகளை வஞ்சனை இன்றி பிரயோகித்தாள்.

அதைக் கேட்கப் பிடிக்காமலும், நேரம் போவதாலும் அங்கிருந்து அகன்றாள் மௌனா.

காரில் போகும் போது, மஹதனுக்குக் கால் வந்தது. முக்தாவின் தந்தை தான் அவன் அழைத்ததைப் பார்த்து விட்டு இப்போது கூப்பிட்டு இருக்கிறார்.

"ஹலோ மஹத். என்னப்பா கால் பண்ணி இருக்க?"

"ஆமாம் அங்கிள். முக்தா போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கா. போய் ஜாமீனில் எடுத்துட்டு வாங்க" என்று கூறியதைக் கேட்டதும்,

"என்னது!!! எப்படி நடந்துச்சு மஹத்?"
நெஞ்சு வலியே வரும் போலிருந்தது அவருக்கு.

"இப்போ லாயரைக் கூப்பிட்டுட்டு ஸ்டேஷன் போங்க அங்கிள்.
ஈவ்னிங் வீட்ல பேசுவோம்"

செல்லை அணைத்து விட்டு, அலுவலகத்தினுள் நுழைந்து கொண்டான் மஹதன்.

பிறகென்ன, மௌனா காவல் நிலையத்தில் இருந்து கிளம்பி, ஆட்டோ பிடித்து அலுவலகம் போகும் நேரத்தில், முக்தாவின் தந்தை நீலகண்டன் அடித்துப் பிடித்துக் அங்கே வந்தார்.அவருடன் வக்கீலும் வந்திருந்தார்.

அவரும் சமுதாயத்தில் பெரும் புள்ளி என்பதால், மஹதனைப் போலவே இவருக்கும் நல்ல வரவேற்பும் , மதிப்பும் கிடைத்தது.

"நீலகண்டன் சார்! நீங்க திடீரென இங்கே வந்திருக்கீங்க? என்ன விஷயம் சார்?"

அவர் கேட்டுக் கொண்டு இருக்கும் போதே, முக்தாவும் சற்று முன்னர் தான் தந்தையின் பெயரைக் கூறி எதாவது முயற்சித்துப் பார்ப்போமா? என்று நினைத்திருந்தாள். அதற்குள் தந்தையே பிரசன்னம் ஆனதில், அவளது கண்ணீர்த் துளிகள் கன்னங்களை அடைந்தது.

"அப்பா!"

கலங்கிய குரலில் தன்னை அழைத்த மகளைப் பார்த்ததும், நீலகண்டனுக்கு அதிர்வு ஏற்பட்டது.

"முகி... உனக்கு எப்படி இந்த நிலைமை? யாரு மஹதனா? அவன் தான் எனக்குக் கால் செய்து விஷயத்தைச் சொன்னான்" என்று மகளை ஆதரவாகத் தோளில் சாய்த்துக் கொண்டார்.

"இல்ல அப்பா. ஆனால் அவனும் ஒரு காரணம் தான். என்னை இந்த நிலைமைக்குக் கொண்டு வந்தது ஒரு பொண்ணு. விஷயத்தை நான் வீட்டுக்குப் போய் சொல்றேன். ப்ளீஸ் இப்போ என்னை ஜாமீனில் எடுங்கள் அப்பா. இங்கே இருக்க எனக்குப் பிடிக்கல"

கண்ணீரில் கரைந்து கொண்டிருந்த மகளிடம்,
"அழாத முகி. நான் இப்போவே உன்னை வீட்டுக்குக் கூப்பிட்டுப் போறேன்"
என்று அதிகாரியிடம் வந்தார்.

"சார்! இவங்க உங்கப் பொண்ணா?" இவர்களது பேச்சைக் கேட்டு தெரிந்து கொண்டார் போலும்!

"ஆமாம் ஆஃபீஸர். இவள் என்னோட பொண்ணு முக்தா. ஜாமீனில் எடுக்கனும்"

வக்கீலையும் அறிமுகப்படுத்தினார் நீலகண்டன்.

அதிகாரி தயக்கத்துடன், "மஹதன் சார் கம்ப்ளைண்ட் கொடுத்து இருக்கார் சார்" என்கவும்,

"ஓஹோ! அவர் தான் என்கிட்ட இன்ஃபார்ம் செய்து இங்கே வரச் சொன்னார்" இறுகிய குரலில் சொன்னார் நீலகண்டன்.

அவனே புகாரளித்து விட்டு, தனக்கும் கால் செய்திருக்கிறானே! என்று அவரது மனம் குமுறியது.

பிறகு, "டவுட் ஆக இருந்தா கால் பண்ணித் தர்றேன். கேளுங்க" என்று சொல்ல,

"இல்லை வேண்டாம் சார்"

அடுத்த நிமிடமே முக்தாவிற்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

காரில் ஏறியதும், "அப்பா!" என்று தன் தோளில் முகம் புதைத்துக் கொண்டு கதறி அழுத மகளைச் சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்தார் நீலகண்டன்.

வெளிநாட்டில் தங்கிப் படித்ததாலும், மாதக் கணக்கில் இங்கே வராததாலும் அவளை ஒரு விழா ஏற்பாடு செய்து அனைவருக்கும் அறிமுகம் செய்து வைக்க எண்ணினார். ஆனால் அவர் கணக்குத் தவறி, நிகழ்ந்ததோ வேறாக இருந்தது.

அலுவலகத்திற்குள் முன்னர் நடந்த சச்சரவின் தடமே இல்லாதது போல் இருந்தது.

மௌனாவும் இந்தப் பிரச்சனையை மறந்து விட்டு, வேலையைத் தொடர்ந்தாள்.

- தொடரும்

 

Shalini shalu

Moderator
நங்கையின் மறவோன் - 3

கண்களிலிருந்து வழிந்து கொண்டு இருந்த கண்ணீர்த் துளிகளைப் பார்க்கவே அவளுக்கு அருவருப்பாக இருந்தது.

இந்தியா வந்ததுமே தன்னை இந்தளவிற்கு அழச் செய்தவர்களை மன்னிக்கப் போவதில்லை என்று கருவிக் கொண்டாள் முக்தா.

தோளில் முகம் புதைந்திருந்த மகளிடம், "என்ன ஆச்சுடா? போலீஸ் ஸ்டேஷன் போகிற அளவுக்கு என்னப் பிரச்சினை?" அவளின் நிலை புரிந்து அழுத்திக் கேட்காமல், அமைதியான முகத்துடன் வினவினார் நீலகண்டன்.

ஏற்கனவே பயத்தில் வெளிறிப் போயிருந்தவள், தந்தையின் இந்தக் கேள்வியில், முற்றிலும் துவண்டு போனாள் முக்தா.

"கேட்கிறேன்ல சொல்லுமா?"

மீண்டும் கேட்டவரைப் பார்த்து,
கண்கள் சிவக்க,

" நான் மஹதனைப் பார்த்து ரொம்ப நாள் ஆச்சுன்னு உங்களுக்கே தெரியும்ல அப்பா? ஆசை ஆசையாக கால் செய்து மீட் பண்ணலாமான்னு ஆஃபீஸூக்கு வரவா என்று கேட்டேன். வேணாம்னு சொன்னான்.இருந்தாலும் என்னால் அவனைப் பார்க்காமல் இருக்க முடியல. ஆஃபீஸ்ல போய் வெய்ட் பண்ணிப் பாக்கலாம்னு போனேன்ப்பா.அங்கே இருந்த ரிசப்ஷனிஸ்ட் என்கிட்ட ரூட் (Rude - முரட்டுத்தனமாக) நடந்துக்கிட்டா. நான் அதுல எனக்குப் கோபம் வந்துடுச்சு. அவளைத் தள்ளி விட்டுட்டேன்"

தான் கூறியதை நம்பும் பாவனை அவர் முகத்தில் உள்ளதா? என்று தந்தையின் முகத்தை ஆராய்ந்தாள் முக்தா.

நீலகண்டனோ அவள் பேசுவதை உன்னிப்பாக கேட்டுக் கொண்டு இருந்தார்.

அசட்டுத் தைரியத்துடன், மேலும் கூறத் தொடங்கினாள்.

"பாவம் தலையில் அடிபட்டு ப்ளட் வந்துடுச்சு. நானும் சாரி கேட்டேன், பணம் தர்றேன்னு சொன்னேன். எதுக்குமே அவ வழிக்கு வரல அப்பா.வேற ஆப்ஷனும் எனக்கு இல்லைப்பா. ஆனால், அவ என் மேல் கம்ப்ளைண்ட் கொடுக்கிற அளவுக்குப் போகப் போறான்னு நினைச்சேப் பார்க்கலப்பா. அது கூட பரவாயில்லை. அவளை இதுக்கு முன்னாடி எனக்குத் தெரியாது. ஆனா…"

அடுத்துச் சொல்வதற்குள் முக்தாவிற்குத் தொண்டை அடைத்தது.

"அழாமல் மேலே சொல்லும்மா" என்று கண்களைத் துடைத்து விட்டார் அவளது தந்தை.

"ஆனால்… மஹத்! அவன் அங்கே வந்ததும், இவளுக்குச் சப்போர்ட் செய்து பேசினான்ப்பா.அவளுக்கு அவ்ளோ இன்ஃப்ளூயன்ஸ் இல்லன்னு, மஹத்தைக் கம்ப்ளைண்ட் கொடுக்கச் சொன்னா. அவன் முடியாதுன்னு தானே மறுத்து இருக்கனும்?" என்று அவரிடம் கேள்வி கேட்டாள்.

'ஆமாம்' என்று சொல்லும் விதமாக தலையசைத்தார்.

"அவனும் அதற்குச் சம்மதிச்சான். உங்களுக்குக் கால் பண்ணனும்னு சொன்ன அப்போ கூட அவனே இன்ஃபார்ம் பண்றேன்னு சொல்லிட்டான்.அதுக்கப்புறம், அவனோட கார்லயே எங்க ரெண்டு பேரையும் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூப்பிட்டுப் போனான்.அங்கேயும் என்னைப் பேச விடாமல், கம்ப்ளைண்ட் ஃபைல் பண்ணி…"

சொல்லி முடித்ததும், கதறி அழுது விட்டாள் முக்தா.

"அழாத முக்தா.. ஒன்னும் இல்லை.. சரியா!" முடிந்த வரை பலமிழந்து போன மகளைத் தேற்றினார் நீலகண்டன்.

"எனக்கு மஹதன் தான் கால் செய்து, ஸ்டேஷனுக்கு வக்கீலோட வர சொன்னான். ஈவ்னிங் வீட்டுக்கு வந்து நடந்ததைச் சொல்றேன் என்றும் சொல்லி இருக்கான்ம்மா" என்று குழப்பமாக கூறினார் தந்தை.

"அவன் எனக்குத் துரோகம் செய்துட்டான் அப்பா! எவ்ளோ கெஞ்சினேன் தெரியுமா? அவ கூட சேர்ந்துட்டு, அவ சொல்றதை எல்லாம் கேட்டுட்டு என்னை இப்படி அழ வச்சுட்டான் அப்பா" என்று புலம்பிக் கண்ணீர் வடித்தாள் முக்தா.

நீலகண்டனுக்கு இன்னும் குழப்பம் நீங்கவில்லை. தன் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்ணிற்காக இவற்றையெல்லாம் செய்தவன், தனக்கு எதற்காக கால் செய்து மகளைப் பற்றிக் கூறினான்?

"அவன் எதுக்கு அந்தப் பொண்ணுக்குச் சப்போர்ட் பண்ணனும் முக்தா? அவனுக்கு அவ்ளோ முக்கியமான பொண்ணா?"

"இல்லைப்பா.அவ இன்றைக்குத் தான் வேலைக்கே சேர்ந்திருக்கா"

நீலகண்டனுக்கோ மகள் எப்போது வெளிநாட்டில் இருந்து வருவாள்? அவளுக்கு மஹதனை மணம் செய்து வைக்கலாம் என்ற எண்ணம் இருந்ததே!

இப்போது அதற்கு வழியே இல்லை என்பது போல், இந்நிகழ்வு நடந்திருக்க,

"வீட்டுக்குப் போகலாம்ப்பா"

சோர்ந்து போயிருந்தவளின் குரல் கேட்டு, மகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

தாய் இல்லாதப் பெண் தன் மனப் பாரங்களைத் தந்தையிடம் இறக்கி வைத்து விட்டு, உறக்கத்திற்காக ஏங்கிய விழிகளுக்கு ஓய்வு கொடுத்தாள் முக்தா.

எண்ணங்களுக்குள் சிக்கிக் கொண்டிருந்த நீலகண்டனோ, மாலை மஹதனின் வரவிற்காகக் காத்திருந்தார்.

அறைக்குள் சென்ற மஹதனும் சரி, வெளியே வரவேற்பில் வேலை பார்த்துக் கொண்டு இருந்த மௌனாவும் சரி முந்தைய நிகழ்வை தங்களது மனதிற்குள்ளேயே போட்டு புதைத்து விட்டனர்.

அதன் பிறகு, முக்தாவை இருவரும் மறந்து விட்டனர். அவள் செய்த காரியத்திற்கும் தண்டனை வழங்கப்பட்டது. பின்னர் அவளைப் பற்றி நினைப்பது தவறு என்று உணர்ந்திருந்தனர்.

மாலையில், வேலை நேரம் முடிந்ததும், அங்கிருந்து வெளியேறி,
வீட்டை அடைந்தாள் மௌனா.

அகதாவும் அப்போது தான் வந்திருக்கச் சாவி கொண்டு திறந்த சமயம்,
"அகி! நீயும் வந்துட்டியா?" என்று அவளிடம் பேச்சுக் கொடுத்தாள்.

பூட்டைத் திறந்த அகதா, "வந்துட்டேன் மௌனா.வா உள்ளே போகலாம்" என உள்ளே சென்றவளது கண்களுக்கு மௌனாவின் நெற்றியில் ஒட்டி இருந்த பிளாஸ்திரி தெளிவாகத் தெரிந்தது.

"இதென்னப் பிளாஸ்திரி ஒட்டியிருக்க மௌனா? என்னாச்சு?"

சந்தோஷமாக காலையில் வேலைக்குச் சென்ற தோழிக்குக் காயம் ஏற்பட்டிருப்பதைக் கண்டு அகதா திடுக்கிட்டாள்.

"இதுவா அகி? நான் எவ்ளோ எக்ஸைட் ஆகி இருந்தேன்னு நீ காலையில் பார்த்தியே! அதே போல, ஆஃபீஸூம் பார்க்க சூப்பரா இருந்துச்சு. கியூரியோசிட்டி வேற! இது நடக்கலை என்றால் தான் ஆச்சரியம் அகி" என்று தோழியிடம் தன் போக்கில் கதைக் கட்டி விட்டாள் மௌனா.

அவள் பொய் தான் சொன்னாள்! ஏனெனில், முக்தா விஷயம் தன்னுடனேயே போகட்டும், அகதாவிற்குத் தெரிய வேண்டாம் என நினைத்தாள் மௌனா.

"நீ இருக்கியே! அப்படி என்ன கண்ணு, மண்ணுத் தெரியாத எக்ஸைட்மெண்ட் மௌனா? இனியும் இப்படி காயத்தைக் கொண்டு வராத"

அகதா திட்டியதைச் சமர்த்தாகக் கேட்டுக் கொண்டாள் மௌனா.

அவளுக்கு எது உண்மை? எது பொய்? என்று தெரியாதல்லவா? அதனால், பத்திரமாக இருக்க வேண்டும் என்று பலமுறை அறிவுறுத்தினாள் அகதா.

இருவரும் தங்களது உடை மாற்றிக் கொண்டு, தேநீர் பருகினர்.

அதே சமயத்தில், தன் வீட்டிற்குள் நுழைந்ததும், ஆசையாக மகனை வரவேற்றார் கௌசல்யா.

"வா மஹதா!" என்று அவனது சோர்வைக் கண்டு, தலை கோதி விட்டார்.

"ம்மா ! இன்னைக்கு முக்தா ஆஃபீஸூக்கு வந்தா" என்று நடந்தவற்றை விவரித்தான்.

"அச்சோ! இந்த முக்தா ஏன் இப்படி இருக்கா? எவ்ளோ தைரியம் பாரு" என்று முக்தாவைக் கரித்துக் கொட்டினார் கௌசல்யா.

"உன் ஸ்டாஃப் அந்தப் பொண்ணுப் பேர் என்ன சொன்னா?"

"மௌனா. அந்தப் பொண்ணுக்குத் துணிச்சல் அதிகம் தான்" என்று மஹதன் கூறவும்,

"துணிச்சல் இல்லை மஹதா. செல்ஃப் ரெஸ்பெக்ட். வந்த வேலையை மட்டும் பார்க்கனும் என்றும், அதை டிஸ்டர்ப் செய்தா என்னப் பண்ணனும் என்றும் நல்லா தெரிஞ்சு வச்சிருக்கா" என்று மௌனாவைப் பாராட்டினார் தாய்.

மென் புன்னகை புரிந்தான் மஹதன்.

"நீலகண்டன் சார் என்ன சொல்லப் போறாரோ? மகளுக்கு இப்படி ஆனதை அவரால் ஏற்றுக் கொள்ளவே முடியாதே!" என்று கூறினார் கௌசல்யா.

"அவருக்கு நான் இன்ஃபார்ம் பண்ணிட்டு வந்துட்டேன் மா. அதுக்கப்புறம் கான்டேக்ட் பண்ணல. இப்போ வீட்டுக்குப் போய் எல்லாத்தையும் விவரமாக சொல்லனும்" என்க,

"ஏற்கனவே தாயில்லாதப் பொண்ணுன்னு உருகுவார். இப்போ சொல்லவே வேண்டாம்"

அவரால் மகனுக்கு எதுவும் சங்கடம் நேர்ந்து விடுமோ! என்று தாய் உள்ளம் பதறியது.

"அதுக்காக அவளோட இஷ்டத்துக்கு எல்லாம் என்னால் ஆட முடியாதே அம்மா.அந்தப் பொண்ணுக் கேட்கிறதைச் செய்யாமல் இருந்திருந்தா, ஸ்டாஃப்ஸ் மத்தியில் என் கௌரவம் என்னாகுறது?" என்று பொருமினான் மஹதன்.

"அவர்கிட்ட பொறுமையாகப் பேசு மஹதா" அறிவுரை கூறியதை ஏற்றுக் கொண்டவன்,

"சரி அம்மா. நான் தயாராகிட்டு, நீலகண்டன் சாரைப் பார்த்துட்டு வர்றேன்" என்று எழுந்து சென்றான்.

அவன் போனதும், கௌசல்யா தன் கணவர் திருமூர்த்திக்குக் கால் செய்து அனைத்தையும் ஒப்புவித்தார்.

நீலகண்டனின் பங்களாவின் நுழைவு வாயிலில் தன் காரை நிறுத்தி, இறங்கி உள்ளே வந்தான்.

மஹதன் அவருக்கு நன்றாகத் தெரிந்தவன் என்பதால், காவலாளியும் உள்ளே அனுமதித்து விட்டு, முதலாளியிடம் தகவலும் தெரிவித்தான்.

வீட்டினுள் அடியெடுத்து வைத்தவனை மருந்துக்கும் முகத்தில் புன்னகை இல்லாது, வரவேற்றார் நீலகண்டன்.

"வா மஹத். உட்கார்"

அதிலேயே அவரது
மனநிலையைப் புரிந்து கொண்டான் மஹதன்.

"அங்கிள்! காலையில்…" என்று அவன் விவரிப்பதற்குள்,

கை நீட்டித் தடுத்தவர், "தெரியும் மஹத். பொண்ணு எல்லாம் சொல்லிட்டா" என்றார் நீலகண்டன்.

"நான் செஞ்சது தப்புன்னு நினைக்கிறீங்களா?"

"இல்லைன்னு சொல்ல மாட்டேன் மஹத். ஆனால் அவளை விட உன் ஸ்டாஃப் ரொம்ப முக்கியமாகப் போய்ட்டாளா?" என்று ஆதங்கத்துடன் வினவினார்.

"இதில் முக்கியம்ன்னு எதுவும் இல்லை அங்கிள். முக்தா நடந்துக்கிட்டது அப்படி!" புரிய வைக்க முயன்றான் மஹதன்.

"அப்படி என்னப்பா என் பொண்ணு நடந்துக்கிட்டா? உன்னைப் பார்க்க ஆசையாக வந்தா, அவளை வர விடாமல் தடுத்தது அந்தப் பொண்ணு தான். தெரியாமல் நடந்ததுக்கு என் பொண்ணை இப்படி அசிங்கப்படுத்திட்டீங்களே!" என்று கொதித்தார் நீலகண்டன்.

"நான் முக்தாவை ஆஃபீஸூக்கு வர வேண்டாம்னு முன்னாடியே சொல்லியிருந்தேன் அங்கிள்"

"நீ வர வேண்டாம்னு சொன்னாலும், அவளுக்கு உன்னைப் பார்க்க அவ்ளோ ஆசை மஹத்! அங்கே இருந்து வர்றதுக்கு முன்னாடி இருந்தே உன்னைப் பார்க்கிறதுக்காக சீக்கிரமாக வர்றேன்னு சொன்னா. அப்படி உன்மேல் இவ்வளவு அன்பு வச்சிருக்கிறப் பொண்ணை அசிங்கப்படுத்திட்டல்ல?"

அவரோ புரியாமல், திரும்பத் திரும்ப மஹதன் அவளை அசிங்கப்படுத்தி விட்டதாக கூறிக் கொண்டே இருந்தார்.

"அந்த ஆசையை இனிமேல் வச்சுக்க வேண்டாம்னு சொல்லுங்க அங்கிள்.எனக்கு முக்தா மேல் எந்த காதலும், அபிப்பிராயமும் இல்லை"

என்று சமாதானம் பேச வந்தவனோ, பட்டென்று அவரது முகத்திற்கு நேராகத் தன் மனதிலிருந்ததை வெளிப்படுத்தி விட்டான் மஹதன்.

அப்போது, தன் அறையிலிருந்து வந்த முக்தாவிற்கு இவன் பேசியதாக கேட்டு, இதயம் வெடித்துச் சிதறியது போலானது.

கட்டுக்கடங்காத ஆத்திரம் சூழ்ந்து கொள்ள, ரௌத்திரமாக அவன் முன்னால் போய் நின்றாள்.

அவள் வந்ததைக் கண்டு நீலகண்டனும், மஹதனும் திகைப்படைந்தனர்.

"என்னம்மோ அவ உன் கிட்ட வேலைப் பார்க்குறவ தான், அதுக்கு மேல எந்தப் பர்சனலும் இல்லைன்ற மாதிரி பேசின! இப்போ ஏன்டா அவளோட நடந்தப் பிரச்சினையில் என்னை வேண்டாம்னு சொல்ற?"

ஆங்காரமாக கேட்டவளை, உறுத்து விழித்த மஹதன், "நான் சொன்னதுக்கும், அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தேவையில்லாமல் அவளை இழுக்காத. நான் எப்பவோ காலையில் நடந்ததை மறந்துட்டேன். உங்க அப்பாவுக்குச் சொல்லித் தெளிவுபடுத்தத் தான் மறுபடியும் ஒரே ஒரு தடவை இதை விவரிச்சேன்.அவர் என்னமோ நீ என்னை நினைச்சு எப்பவும் ஏங்ககிட்டு இருக்கிறா மாதிரி சொல்லவும், தேவையில்லாத ஆசைகளை உருவாக்கிக்க வேண்டாமே என்று தான் அவர்கிட்ட என்னோட விருப்பத்தைச் சொன்னேன். உங்கிட்டயும் சொல்றேன். என்கிட்ட இருந்து தள்ளி இரு முக்தா"

எத்தனை நாட்கள் இதை இப்படியே விட்டு வைத்திருக்க முடியும் என்று, முக்தாவிடம் நேரடியாகத் தன் மனதிலிருந்ததைக் கூறி விட்டான் மஹதன்.

அதைக் கேட்டதும், ஏற்கனவே அதிர்ச்சி பாதி, ஆத்திரம் பாதியில் இருந்தவளோ, இப்போது முழுமையாக கோபத்தில் எரிந்து கொண்டிருந்தாள்.

"ஆமாம்.உன்னை நினைச்சு தினமும் உருகிக் கொண்டு தான் இருக்கேன். இப்போதும் அது மாறாது. அதை உனக்குப் புரிய வைக்கவும் முயற்சி பண்ணேன். ஆனால் நீ என்னைக் கண்டுக்கக் கூட மாட்டேங்குற!"

மகளை அடக்க வழியின்றி, ஸ்தம்பித்துப் போனார் நீலகண்டன்.

அவள் கேட்பதும் நியாயம் தானே? என்ற எண்ணமும் அவருக்கு இருந்தது அதனாலேயே அமைதியாக நின்றார்.

"இப்படி பேசாத முக்தா. உனக்குன்னு சுயமரியாதை இருக்கனும். நான் வேண்டாம்னு வெளிப்படையாகச் சொன்ன பிறகும் என்னதிது?" என்று தன்மையாகப் பேச முயற்சித்தான்.

"சுயமரியாதை! ஓஹோ!! காலையில் பார்த்தோமே ! அந்த மௌனாவா? அவ நடந்துக்கிட்டது உனக்குப் பிடிச்சுப் போச்சு போலயே? அவளை மாதிரி நான் மாறனுமா? " என்று உரக்கக் கத்தினாள் முக்தா.

தந்தையின் முன்னால் எவ்வளவோ கட்டுப்பாட்டில் இருந்தவள், கத்திக் கூச்சல் போடவும்,

"இப்படி கத்தாத முகி. உடம்புக்கு ஏதாவது வந்துடப் போகுது" என்று அந்த நிலையிலும் மகளின் மீது பரிவு காட்டினார் நீலகண்டன்.

"மன்னிச்சிருங்க அப்பா" என்று கூறிய முக்தாவிடம்,

"நான் தான் விசாரிச்சிட்டு இருந்தேன்ல! அதுக்குள்ள நீ ஏன் வந்துக் கத்தி உடம்பைக் கெடுத்துக்கிற? போய் அமைதியாக உட்கார்" என்று வலியுறுத்தினார்.

இவர்களது நாடகம் மஹதனுக்கு எரிச்சலைக் கொடுத்தது போலும்!

அவனும் எவ்வளவு தான் பொறுமையாகப் பேசுவான்! அதுவும் அந்தப் பெண்ணை இவனுடன் சேர்த்து வைத்துப் பேசிக் கொண்டு இருக்கிறாள்! தவறு அவள் மீது ஒப்புக் கொள்ளும் மனப்பான்மை கூட இல்லை எனும் போது, வேறென்ன தான் முக்தாவிடம் அவனால் எதிர்பார்க்க முடியும்?

நீள் சாய்விருக்கையில், அமர்ந்த முக்தா உஷ்ணப் பார்வையுடன் மஹதனைப் பார்த்தாள்.

"நீ சொல்லு மஹத்! ஏன் உனக்கு என் பொண்ணைப் பிடிக்கல?" என்று கேட்டார்.

"முதல்ல உங்கப் பொண்ணுக் கேட்டதுக்குப் பதில் சொல்லிடறேன் அங்கிள். அதில் உங்களுக்கும் தெளிவு கிடைக்கும் " என்று முக்தாவிடம் திரும்பி,

"நீ மௌனாவாகவோ, இல்லை வேற யார் மாதிரியும் மாறனும்னு நான் சொல்லல. எனக்கு உன் மேல எந்த காதலும் இல்லை. கல்யாணம் செய்துக்கத் தோணல.அதைத் தான் சொன்னேன்.அந்தப் பிரச்சினை நடக்கிறதுக்கு முன்னாடியே இது தான் என் முடிவாக இருந்துச்சு.இப்போதும் அதே முடிவு தான். இதில் அந்தப் பொண்ணைச் சும்மா, சும்மா உள்ளே இழுக்காத முக்தா"

"அப்போ நீ அந்த மௌனாவை லவ் பண்றியா?"

அவளால் மௌனாவை இழுக்காமல் இருக்கவும் முடியவில்லை. மஹதனுக்கோ பொறுமை எல்லை கடந்திருந்தது.

"உன் கேள்விக்கும், உன்னோட அப்பாவோட கேள்விக்கும் பதில் கிடைச்சிடுச்சு. அத்தோடு இதெல்லாம் முடிஞ்சு போச்சு. வேற பெண்ணை நான் லவ் பண்றதோ, இல்லையோ அது உங்க கவலை இல்லைன்னு நினைக்கிறேன்"

என்று எழுந்தவன்,

"இனிமேலும் உங்கப் பொண்ணுக்காக எங்கிட்ட நியாயம் கேட்டு வராதீங்க அங்கிள்"

நீலகண்டனிடம் அர்த்தத்துடன் கூறி விருட்டென்று வெளியேறி விட்டான் மஹதன்.

சாதாரணமாக நடந்தேறிய விஷயம், அதை எவ்வளவு முடியுமோ, அவ்வளவு ஊதிப் பெரிதாக்கி வைத்து விட்டாள் முக்தா.

இப்போது மஹதனிடம் கேட்ட கேள்விகளை முற்றும் தவிர்த்து விட்டு, சமரசம் ஆகி இருந்தாலே அவனும் இவளுடனான திருமணத்தை நினைத்துப் பார்த்திருப்பான். ஆனால், முக்தாவே தனக்குக் கேடு வரவழைத்துக் கொண்டாள்.

மஹதனும் பொட்டில் அடித்தாற் போல், அவளை மறுத்து விட்டான்.

"அவன் அந்த மௌனாவைக் கல்யாணம் செய்யப் போறானா அப்பா?"

இந்தக் கேள்வியில், ஒட்டு மொத்தமாக செயலற்றுப் போனது போல் உறைந்து நின்றார் நீலகண்டன்.

அவர் அடுத்து செய்ய நினைத்துக் காரியம் தான் உச்சபட்ச வேண்டாத வேலை!

மணி எட்டு என காட்டவும்,
"வீட்டுக்குக் கால் செய்துட்டு வர்றேன் அகி" என்று செல்பேசியில் தன் தாய்க்கு அழைத்தாள்.

"ஹலோ மௌனா"

அன்னபூரணியின் குரலில் தவிப்பும், உற்சாகமும் ஒருங்கே இருந்தது.

"அம்மா!" இவளும் குதூகலத்துடன் பேசினாள்.

"காலையில் தான் பேசினோம் ஆனாலும் என்னோட பொண்ணை ரொம்ப மிஸ் பண்றேன்டா" என்ற பாசமிகு தாயை நினைத்துப் பெருமிதம் கொண்டாள் மகள்.

"தானும் உங்களை ரொம்பவே மிஸ் பண்றேன்மா"

"சரி டா. வேலைக்குப் போன அனுபவத்தைச் சொல்லு?"

முதல் நாள் இரவே வேலைக்குச் செல்வதைப் பற்றி தாயிடமும், தந்தையிடமும் கூறி இருந்தாள் மௌனா.

அவர்கள் இருவரும் மகளுக்கு ஆசி வழங்கினர்.

அதை இப்போது பகிர்ந்து கொள்ளத் தான் அழைத்து இருந்தாள்.

"சூப்பர் அனுபவம் அம்மா!"

அவளது கை அனிச்சையாக நெற்றியிலிருந்த பிளாஸ்திரியைத் தடவிக் கொண்டது.

தொடர்ந்து, "வேலையும், பிடிச்சிருக்கு. அந்த இடமும் ரொம்ப பிடிச்சிருக்கும்மா" என்று மகிழ்ச்சியுடன் கூறினாள்.

எங்கே இந்த வேலை மகளுக்கு அமையாதோ! என்று பரிதவித்திருந்தவர் மௌனாவின் பதிலில் சற்றே நிம்மதி அடைந்தார்.

"உங்க முதலாளியை மீட் பண்ணுனியா?"

அன்னபூரணியின் கேள்வியோ மௌனாவிற்கு சிரிப்பை வரவழைத்தது.

தன் முதலாளியைச் சந்தித்த தருணத்தை நினைவு கூர்ந்து விட்டாள் போலும்!

"பார்த்தேன் அம்மா. ரொம்ப நல்ல டைப். தன்னிடம் வேலை பார்க்கிறவங்களுக்கு என்னப் பிரச்சினை என்றாலும் தயங்காமல் உதவி செய்வார்"

தாயிடம் காட்டிக் கொள்ளாதவாறு, சிரிக்க மிகவும் பிரயத்தனப்பட்டாள் மௌனா.

"நல்ல முதலாளி போலவே! இப்போ தான் நிம்மதியாக இருக்கு மௌனா"

அவர் அகமகிழ்ந்து போகவும்,

"நீங்களும், அப்பாவும் இனிமேல் என் வேலையைப் பற்றி கவலையேப்படாதீங்க அம்மா" என்று ஆறுதலாக கூறினாள்.

"அப்பா எங்கே? அவர்கிட்டயும் பேசனுமே?"

"கொஞ்ச நேரம் முன்னாடி தான் வெளியே கிளம்பினார். வர லேட் ஆகும். காலையில் சீக்கிரமாக உனக்குக் கால் செய்து பேச சொல்றேன்"

"சரிங்க அம்மா"

"அகதா என்னப் பண்றா? ரெண்டு பேரும் சாப்பிட்டீங்களா?" என்று விசாரித்தார் அன்னபூரணி.

" அவளும் நானும் இப்போ தான் சமையலை முடிச்சோம் அம்மா. சாப்பிடனும்" என்கவும்,

"அப்படியா? சரிடா. போய் சாப்பிடு.நான் இன்னொரு நாள் கால் பண்றேன்" என்று அவர் அழைப்பை வைக்கவும், அகதாவிடம் சென்றாள் மௌனா.

"அம்மா என்ன சொன்னாங்க?" என உணவுப் பாத்திரங்களை அடுக்கினாள் அகதா.

"வேலையைப் பற்றி விசாரிச்சாங்க. உன்னைப் பத்திக் கேட்டுங்க" என்று பேசிக் கொண்டே உண்டு முடித்தனர்.

மகனுக்காக காத்திருந்த கௌசல்யாவோ, அவன் உள்ளே வந்ததுமே,

" நீலகண்டன் சார் என்ன தான் சொன்னார் மஹதா?" என்று கேட்டார்.

"அவரும், அவர் பொண்ணும் பேசினதைச் சொல்றேன்மா"

என்று மொத்தமாக கொட்டினான் மஹதன்.

கௌசல்யாவிற்கோ முகம் அஷ்ட கோணலானது.

"வெறும் ஒரே நாளில் பார்த்தப் பெண்ணைப் பற்றி என்னவெல்லாம் பேசி இருக்காங்க! நீ சொன்னது தான் சரி மஹதா. அதுக்கப்புறம் முக்தாவோட தலையெழுத்து. நீ வந்து சாப்பிடு" என்று அவரும் நிம்மதியே அடைந்தார்.

"இவ்வளவு நடந்திருக்கு அந்த மௌனா ஆஃபீஸில் சாயங்காலம் வரை வேலைப் பார்த்துட்டுத் தான் போயிருக்கா. அப்போ நாளைக்கும் வேலைக்கு வந்துருவா போலிருக்கு"

அவனுக்குத் தன்னைப் பற்றிய ஆச்சரியங்களை ஆராயத் தந்து விட்டு, நிம்மதியாக நித்திரை கொண்டிருந்தாள் மௌனா.

மறுநாள் காலையோ, அவளுக்குப் பெரும் கலவரத்தையும், தலைவலியையும் கொடுக்கத் தயாராகி இருந்தது.

- தொடரும்
 

Shalini shalu

Moderator
நங்கையின் மறவோன் - 4

மௌனா எழுந்து தயாராவதற்குள் அகதா கிளம்பி இருந்தாள்.

"ஏய் அகி! இவ்ளோ சீக்கிரம் கிளம்புற?"
என்று வியப்படைந்தாள் மௌனா.

"ஆமாம் மௌனா. இன்றைக்குச் சீக்கிரம் வர சொல்லிட்டாங்க. உனக்கு ஃப்ளாஸ்க்ல டீ இருக்கு. காலைச் சாப்பாடு ரெடி. நான் போய்ட்டு வர்றேன்" என்று கூறிவிட்டு சென்றாள்.

அகதா ஒரு மென்பொருள் பொறியாளர். அவளுக்கு முக்கியமான ப்ராஜெக்ட் வேலை இருந்ததால், காலை விரைவாகவே எழுந்து அலுவலகம் சென்று விட்டாள்.

தேநீரைச் சுவைத்தவள், நேற்றைய பரபரப்பு இன்று இல்லாது, மெதுவாகவே கிளம்பினாள்.

குளிக்கச் செல்வதற்கு முன்னர் நெற்றிக் காலத்தைப் பரிசோதித்துப் பார்த்தாள் மௌனா.

பிரித்துப் பார்த்தவுடன் காயத்தில் இரத்தக் கசிவு தென்படாததால், பிளாஸ்திரியைக் குப்பையில் போட்டு விட்டாள்.

ஆனால் இலேசாகத் தழும்பு இருந்தது. அதைப் பார்க்கவும்,
"முக்தா உன்னோட கிஃப்ட் தான் இது!" என்று சொல்லிக் குளித்து முடித்தாள்.


இங்கே, மஹதனோ , "நான் பேசியது எதுவுமே தப்பு இல்லை அம்மா. முக்தாவுக்கும், அவளோட அப்பாவுக்கும் சரியாகப் புரிய வச்சுட்டேன். எந்த கனவும் காணக் கூடாது தான? முக்தாவோ திரும்பத் திரும்ப மௌனாவை லவ் பண்றியா? கல்யாணம் பண்ணப் போறியா? என்று கேட்டு இம்சைப் பண்ணினா! நான் ரொம்ப பொறுமைசாலி கிடையாதே அம்மா! ஒரு தடவை சொன்னால் சொன்னது தான்" என்று காரசாரமாக விவாதித்துக் கொண்டு இருந்தான்.

கௌசல்யா, "சரி தான் மஹதா! ஆனால் நீ ஏன் கடுமையாக நடந்துக்கிற? நீலகண்டன் சார் உன் அப்பாவோட பிஸினஸ் பார்ட்னர். அப்படி இருக்கும் போது, அவங்க ரெண்டு பேருக்கும் மோதல் ஏற்படுமே! அதை நினைச்சுப் பார்த்தியா?" என்று வருத்தத்துடன் கூறினார்.

அவருக்கும் முக்தாவின் நடவடிக்கை மகிழ்ச்சியைத் தரவில்லை தான்! அதற்காக நீலகண்டனிடம் தங்கள் மகன் நடந்து கொண்ட முறை சரியல்ல என்று அவருக்குத் தோன்றியது.

நீலகண்டன் தங்கள் குடும்பத்திற்கு நல்ல நண்பரும் கூட. நேற்றே கணவனிடம் இது பற்றி கூறி இருந்தார். இன்று மதியம் திருமூர்த்தியும் தாயகம் திரும்ப இருக்கிறார்.

அவருக்கும் இதில் அதிருப்தி இருப்பதில் ஆச்சரியம் இல்லை.

ஏனெனில், நீலகண்டனும், அவரும் நல்ல நண்பர்கள். தொழில் பாதிக்காத வகையில், தங்களுக்குள் எந்தவித பூசல்களோ இல்லாமல், சீராக நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படியிருக்கும் போது, தங்களது பிள்ளைகளால் இருவருக்குமே தர்ம சங்கட நிலை ஏற்படும் என்று தானே கணவர் நினைப்பார் என கௌசல்யாவிற்குத் தோன்றியது.

அதை மஹதனிடம் சொல்லவும்,
"முக்தாவோட முட்டாள்தனத்திற்கு நான் பலியாக விரும்பல அம்மா. நீலகண்டன் அங்கிள் கிட்ட சொல்லிட்டேன். இனி அவராச்சு, அவரோட பொண்ணாச்சு. நான் ஆஃபீஸூக்குப் போய்ட்டு வர்றேன்" என்று அவன் சென்று விட, கௌசல்யாவிற்கோ கணவனின் நிலையை அறிந்து கொள்ள மனம் திண்டாடியது.

மௌனா என்னும் அப்பெண்ணைப் பாராட்டியதும் கௌசல்யா தான்.ஏனெனில் அவளது செய்கைப் பாராட்டத்தக்கது தான். ஆனால், குடும்பம், நண்பர்கள் மற்றும் தொழில் என்று வரும் போது, சுயநலத்தின் பிடியில் சிக்கிக் கொள்வது இயற்கையே!

கௌசல்யா இப்போது அந்த நிலையில் தான் இருக்கிறார்.விஷயம் தீவிரமாகி விடுவதற்குள் அனைத்தையும் சீர்படுத்த வேண்டும் என்று நினைத்தார்.

மௌனாவை இனியும் வேலைக்கு வைத்திருக்க வேண்டாம் என்று மகனிடம் வலியுறுத்த எண்ணினார்.

அவளுக்குமே இவர்களால் ஆபத்து வருவதற்கு வாய்ப்புள்ளது தானே?

இவர் இங்கு திட்டங்கள் தீட்டிக் கொண்டு இருக்க, மஹதனின் தந்தை திருமூர்த்தியோ முந்தைய நாள் விஷயம் கேள்விப்பட்டதிலிருந்து, இன்னும் நண்பன் தனக்கு அழைக்கவில்லையே? என்று துணுக்குற்றார்.

அலுவலக விஷயமாக வெளிநாடு சென்றிருந்தவர், வேலையை முடிக்கும் தருவாயில்,
மனைவித் தனக்கு அழைத்துப் பேசியதைக் கேட்டு, திகைத்திருந்தார் திருமூர்த்தி.

நீலகண்டனும், அவரது மகளும் சாமானியர்கள் அல்ல.இவ்விஷயத்தை அப்படியே விட்டு விடும் அளவிற்குப் பெருந்தன்மையானவர்களும் கிடையாது.

தான் இந்தியா சென்று சேர்ந்ததும், ஒரு பெரிய பூகம்பமே வெடிக்கப் போகிறது என்று மட்டும் அவருக்கு உறுதியாக தெரிந்தது.

வீடு செல்லும் நேரம் வரைக்கும், நீலகண்டனையும், முக்தாவையும் எப்படியெல்லாம் சமாதானப்படுத்தலாம் என்று மனதிற்குள் ஒத்திகைப் பார்த்துக் கொண்டிருந்தார் திருமூர்த்தி.

தனக்கு இப்படியொரு சிக்கலை ஏற்படுத்தி விட்டானே! என்று மகன் மீது கோபமும், வருத்தமும் ஏற்பட்டது.

தன் பணியில் இருந்த மௌனாவிற்கோ, ஒரு அசௌகரியம் தோன்றியது. அது எதனால் என்று அவளால் கண்டறிய இயலவில்லை.

அப்போது மஹதன் அலுவலகத்தை அடைந்திருந்தான்.

வழக்கமான நேரத்தை விட விரைவாக வந்தவனைக் கண்ட காவலாளி சலாமிட்டுக் கொண்டே, அவன் கார் உள்ளே செல்ல அனுமதித்தான்.

அசௌகரிய உணர்வையும் தாண்டி, வேலையில் முனைப்பாக இருந்தாள் மௌனா.

அவனைப் பற்றி நினைத்துக் கொண்டு இருக்கும் போதே, அங்கு வந்தான் மஹதன்.

'நினைச்சதும் வந்து நிக்குறான்!' பெருமூச்செறிந்தவாறே, நிமிர்ந்து அவனைப் பார்த்து,
"குட் மார்னிங் சார்!" என்று புன்னகைத்தாள் மௌனா.

அவன் குளிர் கண்ணாடி எதையும் அணிந்திருக்கவில்லை. அதனால், லேசர் பார்வை கொண்டு, மௌனாவின் நெற்றிக் காயத்தை ஆராய்ந்தான் மஹதன்.

தனக்குப் பதில் வணக்கம் சொல்லாமல், நெற்றியைக் கூரிய விழிகளால் வருடியவனைத் திகைத்து நோக்கினாள் பெண்ணவள்.

அவள் திகைப்பில், தன் இதழ்களில் மென் புன்னகையைப் படர விட்டவன்,
"பிளாஸ்திரியை எடுத்துட்ட, அதுதான் காயம் சரி ஆகிருச்சு போல என்று பார்த்தேன். வேறொன்னும் இல்லை" என தன் பார்வையின் நோக்கத்திற்கு விளக்கம் கொடுத்தான் மஹதன்.

திகைப்பைச் சமாளித்துக் கொண்டவள்,
"ஓஹ்! நன்றி சார்" என்று சிக்கித் திணறினாள் மௌனா.

"குட் மார்னிங்" கூறி விட்டு, உள்ளே செல்ல, திகைப்பில் பெரிதாக விரிந்தது அவளது விலோசனங்கள்.

மௌனாவின் திகைப்பு நிறைந்தப் பாவனையையும், ஐந்து நிமிடத்திற்கு முன்னர் உள்ளே போன மஹதனையும் கண்டு கொண்ட நீலகண்டனோ, இறுகிய முகத்தை சிரமப்பட்டு மாற்றிக் கொண்டு, மௌனாவிடம் வந்தார்.

அவர் உள்ளே வந்ததுமே, மஹதனுக்குச் செய்தி சென்று விட்டது.

வாயிற்காவலாளியிடம் , அவன் தான் மறுபடியும் முக்தாவோ, நீலகண்டனோ அலுவலகத்திற்குள் நுழைந்தால், தனக்கு உடனடியாகத் தெரிவிக்குமாறு கட்டளை இட்டிருந்தான்.

அதேபோல் செய்தி வந்து சேர்ந்ததும், முக்தாவின் வருகை அன்று நடந்ததைப் போல், எந்த அசம்பாவிதமும் நடந்தேறக் கூடாது என மௌனாவிடம் விரைந்தான்.

அதற்குள்,
" வணக்கம்மா.உன் பேர் தான மௌனா?" என்று அவளிடம் தன்மையாக வினவினார் நீலகண்டன்.

விலுக்கென்று நிமிர்ந்து பார்த்தவள், இந்த ஊரில் தன்னைப் பற்றித் தெரிந்தவர்கள் மிகக் குறைவே! அப்படி இருக்க, இவர் தன் பெயரை இத்தனை உரிமையாகக் கூறி, அழைக்கிறாரே? என ஸ்தம்பித்தாள் மௌனா.

"சொல்லும்மா?" என்று மறுபடியும் கேட்க,

"ஆமாம் சார். என்னோட பேர் தான் மௌனா"

அதற்குப் பிறகு என்ன கூறுவதென்று தெரியாமல் நின்றாள்.

நீலகண்டனே, "நான் முக்தாவோட அப்பா ம்மா. அவ உங்கிட்ட நேற்று ரொம்ப முரட்டுத்தனமாக
நடந்துக்கிட்டா. அதுக்கு என்னோட வருத்தத்தைத் தெரிவிச்சுக்கிறேன்" என்று உண்மையாகவே வருந்துபவர் போல பேசினார்.

அவர் வயதின் பொருட்டு,
"பரவாயில்லை சார்" என்று பெருந்தன்மையுடன் கூறினாள்.

அந்த இடத்தை அடைந்திருந்த மஹதனோ,
"அங்கிள்!" நீலகண்டனைச் சற்று உரக்க அழைத்தான்.

தூக்கி வாரிப் போட்டவாறே திரும்பினர் இருவரும்.

முக்கியமானதைப் பேசி முடிக்கும் முன்பே, இடையூறு செய்த மஹதனைப் பார்த்து முகம் சுருங்கினார் நீலகண்டன்.

'அப்பாடா!' என ஆசுவாசமடைந்தாள் மௌனா.

"வா மஹத்" என்று அவனது அலுவலகத்திலேயே மஹதனை வரவேற்றார் என்றால் அது நகைப்பிற்குரிய விஷயம் தானே!

"வந்துட்டேனே அங்கிள்.நீங்க வந்த காரணம்?" என்று புருவம் உயர்த்திக் கேட்டான் மஹதன்.

நீலகண்டனின் அசட்டுப் பார்வையும், வியர்த்த முகமும் சொல்லாதவற்றையா அவரது வாய் கூறப் போகிறது?

இருந்தாலும் பதில் வேண்டி நின்றான் மஹதன்.

'நேத்துப் பொண்ணு, இன்றைக்கு அப்பா!' என்று நொந்து கொண்டாள் மௌனா.

அவளது வேலை தானே பாதிக்கிறது!

"மஹத்! இந்தப் பெண்ணைப் பார்த்துட்டு மன்னிப்புக் கேட்கலாம்னு வந்தேன். நீயும் நேத்து வீட்ல மௌனாவைப் பற்றி சொன்னியே! என்ன ஒரு தைரியமான பொண்ணு! வாழ்த்திட்டும் போகலாம்ன்னு வந்தேன்" என்று ஒருவாறு சமாளித்து முடித்தார் நீலகண்டன்.

அவர் சொன்னதைக் கேட்ட மௌனாவோ, 'என்னைப் பற்றி ஊரில் உள்ள எல்லாரிடமும் அள்ளித் தெளித்து இருக்கிறார்' என்று உள்ளுக்குள் புகைந்தாள்.

"சொல்லிட்டீங்களா? இனிமேல் தான் சொல்லனுமா?"

அவன் கேட்டதும், மௌனாவை ஒரு கணம் பார்த்தவர்,
"சொல்லிட்டேன் மஹத்! அந்தப் பெண்ணுக்கும் ரொம்ப நல்ல மனசு. உடனே மன்னிச்சுட்டா"

வார்த்தைக்கு வார்த்தை தன்னைப் புகழ்ந்து பேசிக் கொண்டு இருக்கும் இவரைப் பார்க்கையில் மௌனாவிற்குள் கிலி பரவியது.

தான் ஏதாவது பாராட்டும் வகையில் செய்திருந்தால் கூட, இப்படி புகழ்வதில் நியாயம் உள்ளது. அதுவும் இல்லாமல், இவருடைய மகளின் நிலைக்குத் தெரிந்தோ, தெரியாமலோ நான் காரணமாகி விட்டேன். அது நன்றாகவே தெரிந்திருந்தவர் தன்னை வானளவிற்குப் புகழ்ந்தால், ஐயம் ஏற்படும் தானே!

எதுவுமே சரியில்லை என்று அவனுக்குத் தோன்றிற்று.

நீலகண்டன் வந்த நோக்கமும் இதுவாக இருக்காது. எனவே, தந்தையும், மகளும் இவளைப் பழிவாங்க நினைக்கிறார்களோ? என்று தானே மஹதனுக்குச் சந்தேகம் எழும்.

அதனால்,"அப்பறம் என்ன? கிளம்ப வேண்டியது தான அங்கிள்?"

அவரை அங்கிருந்து அப்புறப்படுத்துவதில் முனைந்தான் மஹதன்.

"இதோ கிளம்பிட்டேன் மஹத். மௌனா உன்னோட அப்பா, அம்மாவை விசாரிச்சதாக சொல்லு ம்மா. நான் வர்றேன்" என்று அவளது குடும்பத்தை அவளுக்கே ஞாபகப்படுத்தி விட்டுப் போனார்.

உறைந்து போன மௌனா,
"சார் உங்க கூட தனியாகப் பேசனும்" என்று மஹதனிடம் கேட்டாள்.

"என் ஆஃபீஸ் ரூமுக்கு வா"

என்றவனைத் தொடர்ந்தாள்.

உள்ளே தனக்கு எதிராக அமர்ந்திருந்த மௌனாவை,
"என்ன?" என்று ஒற்றை வார்த்தையில் கேட்டான் மஹதன்.

"சார்! நான் வேலைப் பார்க்கத் தான் வந்தேன். நேற்று நடந்தது அப்போவே முடிஞ்சு போச்சு. அவங்களுக்கு என் மேல இவ்ளோ வன்மம் இருக்கக் கூடாது. அதுவும் இல்லாம நீங்க வேற என்னைப் பத்தி அவர்கிட்ட ஏதோ சொல்லி இருக்கீங்க! இப்போ தேவையில்லாமல் என்னோட குடும்பத்தை விசாரிச்சுட்டுப் போறார்.உங்களை யார் சார் என்னைப் பற்றி அவர்கிட்ட சொல்லச் சொன்னது?"

இப்போதும் கூட துளி பயம் இல்லாமல் தன்னை நேருக்கு நேராக நின்று கேள்வி கேட்கும் இவளது துணிச்சலை மஹதனால் ரசிக்காமலும், பாராட்டாமல் இருக்க முடியுமா என்ன?

ஆனாலும் விஷயம் தீவிரமானது என்பதால் அவளை அலைக்கழிக்கச் செய்யாமல்,
"அப்பாவையும் , பொண்ணையும் சமாதானப்படுத்தப் போனா முக்தா நான் உன்னைப் காதலிக்கிறேன்னு நினைச்சுட்டு, வாய்க்கு வந்ததைச் சொல்லிக் கத்துறா! உன்னைப் பற்றிப் பேசனும்னு எனக்கு எந்த உள் நோக்கமும் இல்லை. அவளுக்குப் புரியுற மாதிரி சொல்லவும் ட்ரை பண்ணேன்.முடியவே இல்லை. இதில் நானா ஒன்னும் உன்னை எங்கள் பேச்சில் இழுக்கல!"

- தொடரும்
 

Shalini shalu

Moderator
நங்கையின் மறவோன் - 5

கிட்டத்தட்ட ஆவேசமான குரலில் தான் பேசினான் மஹதன்.

முக்தாவும், இவளும் இந்த விஷயத்தில் ஒரே மாதிரியாக இருப்பது மஹதனுக்கு எரிச்சலையே கொடுத்தது.

ஆடிப் போய் உட்கார்ந்திருந்த மௌனாவோ, அவனது வார்த்தைகள் தந்த வீரியத்தில் பேச்சற்று, தளர்ந்திருந்தாள்.

மௌனாவின் நிலையைக் கண்ணுற்ற மஹதன்,
"தண்ணீர் குடி" என்று தம்ளரை நீட்டினான்.

அவனது குரலில் தான் நிகழ்காலம் புரிந்தது மௌனாவிற்கு.

கண்கள் தன் ஒளியை இழந்தது போல், வாடிக் கிடந்தவள்,
"வேண்டாம் சார். அவங்களுக்கு என்ன பதில் சொன்னீங்க?" என்று மட்டும் வினவினாள்.

தம்ளரை எடுத்த இடத்தில் வைத்தவன்,
"நான் உன்னைக் காதலிக்கவும் இல்லை, கல்யாணம் பண்ணிக்கவும் ஆசைப்படலைன்னு தெளிவாக சொல்லிட்டேன்" என்று விளக்கமளித்தான் மஹதன்.

தான் பயந்தது போல் ஒன்றும் நடக்கவில்லை என்று அவனை ஏறிட்டவள்,
"நான் இங்கே வேலையைப் பார்க்க வந்தா, அதைத் தவிர எல்லாமே நடக்குது. இப்படி பிரஷரோட இந்த வேலையை நான் பார்க்கனுமா சார்? ரிசைன் பண்ணலாம்னு முடிவெடுத்து இருக்கேன்"

பிரம்மிப்பின் மறு பெயர் தான் மௌனாவோ! அப்படித் தான் எண்ணினான் மஹதன்.

"எனக்கும், உனக்கும் இடையில் எந்த பிரச்சனையும் இல்லை. அவங்க என்னோட ஃபேமிலி மெம்பர்ஸ் கூட இல்லை. அப்படி இருக்கும் போது நீ வேலையை விட்றதுங்கிறது நல்ல விஷயமாகத் தோனல" என்று கூறினான் மஹதன்.

"இல்லை சார். இனிமேல் நீங்களும், அவங்களும் சேர மாட்டீங்கன்னு இல்லையே! முக்தாவும், அவங்களோட அப்பாவும் பேசியதை வச்சுப் பார்க்கும் போது, உங்களை நல்லா தெரிஞ்சவங்களா இருக்காங்க. அவங்களை எதிர்த்து எனக்கு உதவி செய்து இருக்கீங்க. இப்போ வரைக்கும் வந்திருக்கிற இந்தப் பிரச்சினை, இன்னும் சில நாட்களில் தொடர வாய்ப்பு நிறையவே இருக்கு சார். அப்போதும் நீங்க எனக்குச் சப்போர்ட் பண்ணுவீங்க என்று உறுதியாகச் சொல்ல முடியாது இல்லையா!"

தர்க்க ரீதியாக பேசினாள் மௌனா.

இந்த சம்பவத்தைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ள நிறைய வழிகள் இருந்தும், வேலையை விட்டு நிற்கிறேன் என்பவளது சுயமரியாதையை இனிமேலும் கூறு போட்டு, ஆராய்ந்துப் பார்க்க மஹதனுக்கு மனம் வரவில்லை.

"சரி. போய் இராஜினாமா கடிதத்தைத் தயார் செய்து கொண்டு வா" என்று சொன்னவுடன் தான் நிம்மதியாக மூச்சு விட்டாள் மௌனா.

"நன்றி சார்" என வெளியேறியவள், இராஜினாமா கடிதத்தைத் தட்டச்சு செய்ய ஆரம்பித்தாள்.

அந்த தங்கும் விடுதியில், மௌனா மட்டும் தான் தற்போது வேலையில் இருக்கிறாள்.

சேர்ந்த முதல் நாளே இரத்தக் காயம், இரண்டாம் நாள் வேலையை இராஜினாமா செய்யப் போகிறோம்! என்ன ஒரு புதுவிதமான அனுபவம் இது! என்று கடிதத்தை எடுத்துக் கொண்டு, மீண்டும் மஹதனைச் சந்தித்தாள் மௌனா.

"உன்னோட வேலையை நீ எப்படி செய்ற என்று கூட நான் பார்க்கல. சம்பளமும் வாங்காமல், இரண்டாவது நாளே ரிசைன் பண்ற! இதுக்கு ஒரு வகையில் காரணம் நான் தான? என்னோட வேற ஹோட்டலில் வேலைப் பார்க்க உனக்குச் சம்மதமா?"

அவளை விட்டு விடக் கூடாது என மனம் அலை பாய்ந்தது. அதற்கு அவளுடைய நேர்மையும், துணிச்சலும் தான் முதலாக இருந்தது.

உடனே மறுத்து விட்டாள் மௌனா.

"உங்க சம்பந்தப்பட்ட எதுவுமே எனக்கு வேண்டாம் சார்.நான் இங்க வேலைக்குச் சேரலாம்னு எடுத்த முடிவை நினைத்து வருத்தப்பட்றேன்.என்னோட முடிவு சரியாக இல்லைன்னு நினைக்கிறது இது தான் எனக்கு முதல் தடவையும் கூட சார்" என்றதும்,

எங்கிருந்து தான் சினம் துளிர்த்ததோ மஹதனுக்கு,

சாதாரணமாக மௌனா அந்த வேலையும் வேண்டாமென்று மறுத்திருந்தால் கூட, மௌனாவை விட்டிருப்பானோ?

"ஓஹோ! என் சம்பந்தப்பட்டது எதுவுமே உனக்கு வேண்டாம்ல!"

அவள் கூறியது புரியாதவன் போல் கேட்டான்.

"வேண்டாம் சார்" என்று தன் மறுப்பைத் தெளிவாகத் தெரிவித்தாள் மௌனா.

"இந்தா உன்னோட சர்டிஃபிகேட்ஸ். எடுத்துட்டுப் போய்ட்டே இரு" என அவளது இராஜினாமா கடிதத்தைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டான் மஹதன்.

திரும்பிப் பார்க்காமல் நடையைக் கட்டினாள் மௌனா.

உடனே தன் காரியதரிசிக்கு அழைத்து,
"உடனே நம்ம ஹோட்டலுக்குப் புதுசா ஒரு ஃப்ரண்ட் ஆஃபீஸ் ரிசப்ஷனிஸ்ட் வேணும்னுப் நியூஸ் பேப்பரில் விளம்பரம் கொடுங்கள்" என்று கூறி விட்டு, மௌனாவின் இராஜினாமா கடிதத்தை வெறித்துப் பார்க்கலானான் மஹதன்.

அங்கே இருந்து வெளி வந்ததும், சீராக மூச்சு விட்டுக் கொண்ட மௌனா, இந்நேரம் அகதாவும் வீட்டில் இருக்க மாட்டாள் எனவே,
வேறு எங்காவது செல்ல நினைத்தாள் மௌனா.

பூங்கா ஒன்று தென்படவும் அங்கு அமர்ந்து கொண்டு, செல்பேசியில் எப்போதும் சேமித்து வைத்திருக்கும் கார்ட்டூன்களைப் பார்க்க ஆரம்பித்து விட்டாள் மௌனா.

மாலை முகம் கடுக்க வீட்டிற்கு வந்த கணவனைப் பார்த்ததும் கௌசல்யாவின் வதனமும் கலக்கத்தைத் தத்தெடுத்துக் கொண்டது.

'நான் ஒரு முட்டாள்! உடனே கால் செய்து சொன்னேன் பாரு' என்று தன்னைத் திட்டிக் கொண்டார் கௌசல்யா.

"ஏங்க?" என்று திருமூர்த்தியை மெலிதான குரலில் அழைத்துப் பார்த்தார் மனைவி.

அவரோ, "ம்ம்… என்ன கௌசி இது?"

அவரது வார்த்தைகளில் ஆதங்கம் மட்டுமே நிறைந்திருந்தது.

வந்தவுடனேயே கணவர் இப்படி ஆரம்பிப்பார் என்று கௌசல்யா எதிர்பார்க்கவில்லை.

"அவங்க தான் தவறா நடந்துக்கிட்டாங்க. நம்மப் பையன் மேல எந்தத் தப்பும் இல்லைங்க" என்று மகனுக்காகப் பரிந்து பேசினார்.

"தப்பு யார் மேலேயோ இருந்துட்டுப் போகட்டும் கௌசி. நீலகண்டன் கிட்ட அப்படி பேசினது முறையே இல்லை. நான் ஊர்ல இருந்திருந்தால் கூட பரவாயில்லை.விஷயம் கேள்விப்பட்டதும், தலையைப் பிய்க்காத குறையாக கிளம்பி வர்றேன். மஹதனுக்கு ஏன் இந்த வேலை?" என்று மகனைக் குறை கூறினார் திருமூர்த்தி.

இடைவெளி விட்டு,
"அவன் என்னைப் பற்றி என்ன நினைப்பான்? பார்ட்னர்ஸிப்பை மறந்து விட வேண்டியது தான்!"
என்று ஏமாற்றமாக கூறினார்.

அவருக்குச் சரி, தப்பு பற்றிய கவலை எதற்கு? நண்பனுடைய எதிர் வேலை என்னவாக இருக்கும் என்று தான் பரிதவித்தார் திருமூர்த்தி.

இவரிடம் மறைமுகமாக தன் மகளுக்கு மஹதனைச் திருமணம் செய்து, வைக்க கேட்டுக் கொண்டு இருந்தார் நீலகண்டன்.

அதைப் பற்றிய முடிவு எடுப்பதற்குள், இந்த நிகழ்வுச் சம்மட்டியால் அடித்தது போல், அவருக்கு அதிர்ச்சியைக் காண்பித்து விட்டது.

" மஹதன் வந்ததும், அவன் கிட்ட, அந்தப் பொண்ணை உடனே வேலையில் இருந்து நீக்கச் சொல்லு கௌசி" என்று தீர்க்கமாக கூறினார் திருமூர்த்தி.

"அதுக்கு அவசியமே இல்லை அப்பா. அவ இராஜினாமா பண்ணிட்டுப் போய்ட்டா"

என்றவாறே உள்ளே வந்தான் மஹதன்.

வீட்டிற்குப் போவதற்குள் மௌனாவிற்குத் தந்தையிடம் பேச மனம் துடித்தது.

அகதா வர இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது என்பதால், நேரத்தை விரயம் செய்யாமல், உடனே அவளது தந்தை சுதாகருக்கு அழைத்து விட்டாள்.

இதே சமயத்தில்,
" உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை அப்பா?" என்று நீலகண்டனிடம் பொங்கிக் கொண்டிருந்தாள் முக்தா.

மௌனாவைச் சந்தித்து விட்டு வந்ததும், அவசரக் குடுக்கையாக மகளிடம் அனைத்தையும் ஒப்புவித்திருந்தார்.

அதற்குத் தான் முக்தா இப்போது கோபத்தில் அர்ச்சித்துக் கொண்டு இருக்கிறாள்.

"நிதானமாகக் கேளு முக்தா" என மகளுக்கு வலியுறுத்தினார் நீலகண்டன்.

"நிதானமாகக் கேட்கிற மாதிரியாக நீங்கப் பண்ணிட்டு வந்து இருக்கீங்க? என்னைப் பொறுமையாக இருக்கச் சொல்லிட்டு, அவளுக்கு மறைமுகமாக பயத்தை உண்டு பண்ணிட்டு வந்திருக்கீங்க" என தந்தையின் தவறைச் சுட்டிக் காட்டினாள் முக்தா.

"நீ தான் எங்கிட்ட அப்படி புலம்புனியே? மஹதன் அவளைக் கல்யாணம் செய்துக்கப் போறானா என்று கேட்டியே! அதுக்கப்புறமும் என்னால சும்மா இருக்க முடியல முகி!" என்று ஆற்றாமையுடன் கூறினார் நீலகண்டன்.

"அதுக்கு இப்படியா பண்ணுவீங்க? அதுவும் மஹதனுக்கு முன்னாடியே மிரட்டி இருக்கீங்க! அவனுக்கு அது புரியாமல் இருந்திருக்கும்னு நினைக்கிறீங்களா அப்பா?"

தன்னால் ஆரம்பித்து வைக்கப்பட்ட பிரச்சினை, இப்படி உருவெடுத்து விட்டதை நினைத்தும், மஹதனை நினைத்தும் முக்தாவிற்கு உலகமே இருண்டு போனது.

"என்கிட்ட பிடிக்கலைன்னுப் பட்டுன்னு சொன்னான், இருந்தாலும் எப்படியாவது சமாளிச்சு, சமாதானப்படுத்தலாம்ன்னு கனவு கண்டேனே அப்பா! என்னை இப்படி ஒரு சிக்கலில் மாட்டி விட்டுட்டீங்களே! மஹதனும் சும்மா இருக்க மாட்டானே! உங்களோட நானும் கூட்டு சேர்ந்து தான் அவளை மிரட்டச் சொன்னேன்னு நினைப்பானே!"

இப்போது தான் நீலகண்டனுக்குமே வீரியம் புரிந்தது.

அவரிடம் கத்தி விட்டு, ஓய்ந்து போய் அறைக்குள் அடைந்து கொண்டாள் முக்தா.

இவ்விஷயத்தை ஆறப் போட, அவருக்கு இருந்த ஒரே துருப்புச்சீட்டு தன் நண்பனும், கம்பெனிப் பார்ட்னருமான மஹதனின் தந்தை திருமூர்த்தி!

- தொடரும்
 

Shalini shalu

Moderator
நங்கையின் மறவோன் - 6

மகள் தன்னை கடிந்து விட்டு, போன பிறகு தான் அவர் செய்த முட்டாள்தனத்தைப் புரிந்து கொண்டார் நீலகண்டன்.

ஆனால் விஷயம் கை மீறிப் போய் விட்டதே! அடுத்து எந்த முட்டாள்தனமான செயலையும் செய்யக் கூடாது என்று முடிவெடுத்தார்.

இங்கே, மஹதனோ, "ஆமாம் அப்பா. நீங்க என்கிட்ட சொல்ல நினைச்சீங்க! ஆனால் அதை அந்தப் பொண்ணு எப்பவோ செயல்படுத்திட்டா.இப்போ அவ என்கிட்ட வேலைப் பார்க்கல. என்னோட வேற ஹோட்டல்ஸில் சேர்ந்துக்கிறியா என்று கேட்டேன். அதுக்கும் முடியாதுன்னு சொல்லிட்டுப் போய்ட்டா!" என்று நிதானமாகக் கூறிய மகனை ஆச்சரியமாகப் பார்த்தனர் கௌசல்யாவும், திருமூர்த்தியும்.

"அதெப்படி மஹதா? அவளுக்கு அவ்வளவு தைரியமா?" என்று கௌசல்யா வியந்துக் கேட்டார்.

திருமூர்த்தி எதுவும் பேசவில்லையென்றாலும், மகன் அடுத்துச் சொல்லப் போவதைக் கூர்ந்து கவனிக்கும் பாவனையில் இருந்தார்.

"தைரியம் தான் அம்மா. அவ அப்படி சொல்ற அப்போ எனக்குமே ஆச்சரியம் தான். ஆனால், அதுதான் அவளுக்குச் சரியான முடிவாகத் தோணுச்சுப் போல. எப்போடா வேலையை விட்டுப் போவோம்னு, ரெசிக்னேஷன் லெட்டரைக் கொடுத்துட்டுப் போய்ட்டா" என்று முழுவதுமாக கூறி முடித்தான்.

தந்தை தன்னை அறியாமல் நிம்மதிப் பெருமூச்சு விடுவதைக் கண்ணுற்றான் தனயன்.


அவன் நண்பன் நீலகண்டனைப் பற்றித் தான் கவலை கொண்டிருந்தார் என்றும் , இந்த விஷயம் சுமூகமாக முடிந்தது, அதனால் நண்பனைச் சமாதானம் செய்வது எளிது என்று அவரது மூளை சிந்தித்துக் கொண்டிருப்பதை
மஹதனுக்குமே தெரிந்திருக்கும் தானே!

"இப்போ போய் உங்க நண்பனைப் பாருங்க அப்பா. அவரைக் கன்வின்ஸ் பண்றது சுலபம் ஆயிடுச்சே!" என்று சற்று கிண்டலாக கூறவும்,

அவனைத் திரும்பி முறைத்த திருமூர்த்தி,
"நான் போய் குளிச்சிட்டு வர்றேன் கௌசி. சாப்பாடு எடுத்து வை" என்று அவரது அறையை நோக்கி காலடி எடுத்து வைத்தார்.

"ஏன் மஹதா அப்பாகிட்ட இப்படி பேசுற? அவரே செம்ம டென்ஷனில் வந்தார் தெரியுமா? நல்லவேளை அந்தப் பொண்ணு நமக்குத் தொல்லைக் கொடுக்காமல் வேலையை விட்டுட்டாள். இனி தலைவலி இல்லை" என்று மகனிடம் கூறி கணவருக்கு உணவை எடுத்து வைக்கச் சென்று விட்டார் கௌசல்யா.

ஆனால் மஹதனுக்கோ, அவளது செயலை விட , மௌனா இறுதியாகப் பேசிய வார்த்தைகளே
மனதினை மொத்தமாக ஆக்கிரமித்திருந்தது.

'உங்க சம்பந்தப்பட்ட எதுவுமே எனக்கு வேண்டாம் சார்.நான் இங்க வேலைக்குச் சேரலாம்னு எடுத்த முடிவை நினைத்து வருத்தப்பட்றேன்.என்னோட முடிவு சரியாக இல்லைன்னு நினைக்கிறது இது தான் எனக்கு முதல் தடவையும் கூட சார்'

தன் பெற்றோரிடம் மௌனாவை விட்டுக் கொடுக்காமல் பேசி விட்டான் மஹதன். ஆனால், தன் மனதில் எழும் கோபத்தை என்ன சொல்லி , செய்து அமைதிப்படுத்தப் போகிறான்? என்பது அவனுக்கே புரியவில்லை.

அவளது உதாசீனம் தனக்குள் தேவையில்லாத உரிமையைக் கிளப்பி விடும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருந்தானா என்ன?

அப்படித்தான் கூடிய விரைவில் நடக்கப் போகிறதோ?

"அப்பா!!" என்று பொங்கிய கண்ணீருடன் தந்தையை அழைத்தாள் மௌனா.

தன் மகள் இந்தளவிற்கு உணர்ச்சி வசப்பட்டு அழைப்பதைக் கேட்டு, பதறினார்.

மறுநாள் காலையில் விடிந்ததும் மகளுக்கு அழைத்துப் பேசுமாறு கூறிய மனைவியிடம் கூட,
"இப்போ வேண்டாம் அன்னம். வேலை முடிச்சுட்டு வரட்டும். பேசறேன்" என்று காத்திருந்தார் சிவமணி.

மாலை வரை காத்திருந்து விட்டு, மகளது வேலை முடிந்திருக்கும் என்று அழைத்திருந்தார்.

ஆனால், காலையில் நடந்தது தான் மௌனாவின் மனக்கிலேசத்திற்குக் காரணம்!

அதை தந்தையிடம் இப்போதைக்குச் சொல்ல வேண்டாம் என்று தடுத்து அணைப் போட்டிருந்தாள் மௌனா.

விசும்பும் ஓசை அதிகரிக்கவும்,
"மௌனா செல்லம்!" என்று பாசமாக அழைத்தார் சிவமணி.

தான் கோடீஸ்வரனாக இல்லையென்றாலும், தன் மகள் தந்தைக்குப் பொக்கிஷமாகக் கிடைத்தவள் தானே!

அப்பாசமிகு தந்தைக்கும் தன் செல்ல மகள் மௌனாவின் அழுகை நெஞ்சைக் கலங்கடித்தது.

அதை அறிந்தவள் வேகமாக,
"அப்பா! உங்களையும், அம்மாவையும் பிரிஞ்சிருக்கறது என்னவோ போல இருக்கு.அதுதான் அழுகையாக மாறிடுச்சு.வேறெதுவும் இல்லை. நீங்கள் உணர்ச்சி வசப்படாதீங்க" என்று தந்தையை சாந்தப்படுத்தினாள் மௌனா.

"ஆமாம் மௌனா. எங்களுக்கும் பிரிஞ்சு இருக்க முடியல தான்!" என்று வருத்தப்பட்டார்.

இருவரும் வருந்திக் கொண்டே இருந்தால், ஒருவர் மற்றொருவரைப் பற்றி விசாரிக்க வேண்டாமா? என்று புத்தியில் உரைத்து விட்டது போலும்!

"எப்படி இருக்க? அங்கே எல்லாம் சௌகரியமாக இருக்கா?" என்று சிவமணியே விசாரிப்பைத் தொடங்கினார்.

"அகதா கூட இருக்கிறதால், நல்லா இருக்கேன். எந்தக் கஷ்டமும் இல்லாமல், சௌகரியமாக இருக்கு அப்பா" என்று பதில் கொடுத்தாள் மௌனா.

"நல்லது ம்மா. வேளா வேளைக்குச் சாப்பிடு. செலவை எல்லாம் சம்பளத்தில் செய்திடாத. அதைச் சேமித்து வை. என்ன செலவு என்றாலும் என்கிட்ட கேளு. நான் பணத்தை அனுப்பி வச்சிடறேன்"

என்று பதினைந்து நிமிடங்கள் விசாரிப்புப் படலத்தை முடித்து, அழைப்பை வைத்தனர்.

தங்களைப் பிரிந்து இருக்கும் சோகம் மௌனாவை அதிகம் வாட்டுகிறது என்று நினைத்து விட்டார்கள் அவளது பெற்றோர்.

மௌனாவின் தொய்வு நிறைந்த முகம் அகதாவை துணுக்குறச் செய்தது.

"என்னாச்சு மௌனா?" என்று விசாரணை நடத்தினாள் அகதா.

இவளுடன் தங்கியிருக்கும் போது, உண்மை ஒருநாள் அகதாவிற்குத் தெரியத்தானே போகிறது? என்று உண்மையைக் கூறி விட்டாள் மௌனா.

"முதல் நாள் உன் நெற்றிப் பிளாஸ்திரி இதைத் தான் எனக்கு மறைமுகமாக சொல்ல நினைச்சுதா?" கேள்விக் கணைகளைத் தொடுத்தவளிடம்,

"ஆமாம் அகி.எனக்கே வெறுத்துப் போச்சு. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி இருக்காங்க. இதில், அந்தப் பெண்ணோட அப்பா பேசியதைச் சொன்னேன் தான? அதிகப்படியானப் பேச்சு, அது கூட இல்லை! சுத்தமான மிரட்டல்! அவங்களோட அகங்காரத்துக்கு நானோ, என் குடும்பமோ சிக்கிச் சின்னாபின்னமாகனுமா அகி?"

தோழியைக் கட்டிக் கொண்டாள் மௌனா.

"நீ இதுவரைக்கும் செய்ததில், எனக்கு எதுவுமே தப்பாகத் தெரியல மௌனா. இனிமேலும் அதை நினைச்சு வருத்தப்படாத. இதை விட நல்ல வேலை உனக்குக் கிடைக்காமலா போய்டும்"


வெடித்து அழுத தோழியின் வருத்தத்தைக் களைய முயற்சித்தாள் அகதா.

"வேலைக் கிடைச்சிருச்சு என்று சொன்னதும், அப்பா, அம்மாவுக்கு எவ்ளோ சந்தோஷம் தெரியுமா? இப்போ அதுவும் நிலைக்காமல் போயிடுச்சு அகி"

ஆற்றாமையுடன், வெம்பிப் போய் நின்றிருந்த மௌனாவிடம்,
"விடு மௌனா. அவங்களைப் பற்றி தெரிஞ்சு விலகி வந்துட்ட தான? அதுவே உனக்கு நல்லது" என்று இதன் பிறகும், மௌனாவைத் தொடர்ந்து அழுக வேண்டாம் என தன்னால் முடிந்தளவு அமைதிப்படுத்தினாள் அகதா.

உணவு, உறக்கத்திற்குப் பிறகு, மௌனா தெளிந்து விடுவாள் என்று காத்திருந்தாள்.

முக்தா தந்தையின் மீது தீரா கோபத்தில் இருந்தாள்.

"என்னப்பா இப்படி அவசரப்பட்டுட்டீங்களே!" என்று கொதித்துப் போய் விட்டாள்.

நீலகண்டனிடமும் தன் கோப முகத்தைக் காட்டாமல், மெத்தையில் அமர்ந்து, மஹதனிடமிருந்து சிறிது நாட்கள் தள்ளி இருக்க நினைத்தாள் முக்தா.

நீலகண்டனிற்கு நண்பன் திருமூர்த்தியிடம் இருந்து , அழைப்பு வந்தது.அதைப் பார்த்ததும் பரம திருப்தி அடைந்து விட்டார்.

இவன் இருக்கும் வரை எனக்கு என்ன கவலை? என்ற மெத்தனப் போக்குடன், அழைப்பை ஏற்றார்.

"ஹலோ மூர்த்தி!" என்று வேண்டுமென்றே குரலை உயர்த்திப் பேசினார்.

"நீலகண்டா! இன்னைக்குத் தான் ஊருக்கு வந்தேன். விஷயத்தைக் கேள்விப்பட்டேன்" என்று தடுமாறிப் பேசவும்,

"ஓஹோ! அப்படியா மூர்த்தி! உனக்கும் தெரிஞ்சிடுச்சா? மஹதனுக்கு என் பொண்ணு முக்தாவைக் கல்யாணம் செய்து வைக்கிறதைப் பற்றிப் பேசுவோமா?"

மஹதனுக்குத் தன் பெண் முக்தாவைத் திருமணம் செய்து வைப்பது பற்றி முன்னர் ஒரு சமயத்தில், மறைமுகமாக கலந்துரையாடியதை நேரடியாகவே தோழனிடம் கேட்டிருந்தார் நீலகண்டன்.

தொடர்ந்து தான் செய்து வைத்திருந்த, மடத்தனங்களை இந்த ஒரு விஷயத்தைச் திருத்திக் கொள்ள நினைத்தார்.

"எல்லாத்தையும் ஃபோன்லயே பேசினா நல்லா இருக்குமா நீலகண்டா? நேரில் வா" என்று அவரைச் சந்தித்துப் பேசுவதற்காக வினவினார் திருமூர்த்தி.

அதற்கு நீலகண்டனுக்கும் ஒப்புதல் தான். ஆனால் சிறிதும் இளக்கம் காட்டாமல்,

"முடிவு பண்ணிட்டுச் சொல்லு மூர்த்தி.பேச எல்லாம் ஒன்னும் இல்லை. ஏற்பாடுகளைச் செய்யத் தான் பேச்சுவார்த்தை இருக்கனும்னு நினைக்கிறேன்" என்று அசட்டையாக கூறினார்.

"மஹதன் கிட்ட நான் இதைச் சொல்லவே இல்லை. நீலகண்டா! கேட்காமல் முடிவெடுத்தா அவனுக்கு நம்ம மேல தான் கோபம் வரும். உனக்கும் அவனைப் பற்றித் தெரியும் தான?"

மகனுடைய குணத்தைப் பற்றி நன்கு அறிந்த திருமூர்த்தியோ, சட்டென்று வார்த்தையை விட்டு விடாமல், கவனமாகப் பேசினார்.

"ம்ஹ்ம்! சரி. நேரில் வா" என்று ஒப்புக் கொண்டார்.

திருமூர்த்தி, "வந்துடறேன் நீலகண்டா.நீ முக்தாவைக் கூப்பிட்டு வர்றியா?" அவளும் உடன் வந்து விடுவாளோ? என்ற ஐயத்துடன் கேட்டார்.

"பொண்ணு எதுக்கு மூர்த்தி? நான் மட்டும் தான் வருவேன்" என்றதும் தான் திருமூர்த்திக்குத் திணறல் குறைந்தது.


மனைவியிடம், "கௌசி! நான் நீலகண்டனைப் பார்த்துப் பேசிட்டு வர்றேன்.என்னவெல்லாம் சொல்லப் போறானோ!!" என்று முனங்கியவாறே சென்றார் திருமூர்த்தி.

மஹதனுக்கோ, அவர்களது திட்டம் ஓரளவிற்குப் புரிந்து கொள்ளும் படியாகத் தான் இருந்தது.

முக்தாவைத் தனக்குத் திருமணம் செய்து வைப்பதில், நீலகண்டனுக்கு இருக்கும் ஆர்வமும், அதைச் செயல்படுத்தலாமா? வேண்டாமா? என்ற தந்தையின் ஐயமும் வெகு நாட்களுக்கு முன்னரே அறிந்து கொண்டான்.

இப்போது கூட தந்தை அதனால் தான் வெளியே புறப்படுகிறார்.

விஷயம் தன்னிடம் நேரடியாக வரும் போது, பேசிக் கொள்ளலாம் என்று தயாராகத் தான் இருந்தான் மஹதன்.

அகதாவின் மடியில் உறங்கியிருந்த மௌனா மெல்ல தன் இமைகளைப் பிரித்தாள்.

"எழுந்துட்டியா?" என்று புன்னகைத்த தோழியிடம்,

"மெய் மறந்து தூங்கிட்டேன் அகி" என்று உடனே எழுந்து விட்டாள் மௌனா.

"பரவாயில்லை மௌனா. போய் முகம் கழுவு" என அவளை அனுப்பி வைத்தாள் அகதா.

குளியலறையில் இருந்து வந்தவளிடம்,
"அடுத்த வேலையைத் தேட தயாராகு மௌனா.நமக்காக எதுவும் காத்திருக்கப் போவதில்லை. நாம தான் கிடைக்கிற சமயத்தில்,பயன்படுத்திக்கனும்" என்று அகதா அவளுக்கு அறிவுறுத்தினாள்.

நிதர்சனங்களை எண்ணிப் பார்த்து, முழுமையாக ஏற்றுக் கொள்ள உறுதி பூண்டாள். அத்தோடு இல்லாமல், முக்தா மற்றும் மஹதன் என்ற இருவரையும் மறந்து விடும் முயற்சியில் இறங்கினாள் மௌனா.

ஆனால், நீலகண்டன் மற்றும் திருமூர்த்தி இருவரும் இணைந்து மஹதனின் வாழ்வில் எதைக் கொண்டு வர முயற்சிக்கிறார்கள்?

ஆனந்தத்தையா? அனர்த்தத்தையா?

- தொடரும்
 

Shalini shalu

Moderator
நங்கையின் மறவோன் - 7

உணவகம் ஒன்றைத் தங்களது உரையாடலுக்காகத் தேர்ந்தெடுத்து இருந்தனர் நண்பர்கள் இருவரும்.

இம்முறை தான் தான் தவறு செய்து விட்டோம் என்றதொரு மாயையால் சூழப்பட்டிருந்த திருமூர்த்தியோ, நண்பன் நீலகண்டனின் வருகைக்காகக் காத்திருக்கலானார்.

வேண்டுமென்றே தாமதமாக வந்தாரோ! என்பது போல, ஆடி அசைந்து தான் வந்து சேர்ந்தார் நீலகண்டன்.

இந்தச் சந்திப்பும் முக்தாவிற்குத் தெரியாது! தெரிந்திருந்தால் தடுத்திருப்பாளோ?

மகளிடம் கூறாது அவளது வாழ்க்கைக்காகவும், சந்தோஷத்திற்காகவும் தான் இதைச் செய்கிறோம் என்று மனதில் உருப்போட்ட படி வந்த நண்பனின் முகத்தைப் பார்வையால் அளந்தார் திருமூர்த்தி.

மிதமான புன்னகை கூட இல்லாமல், முக பாவனைகளைக் கணிக்கக் கூட வாய்ப்புத் தராமல், அவரின் எதிரில் அமர்ந்தார் நீலகண்டன்.

"வா நீலகண்டா! சௌக்கியமா இருக்கியா?" என்று ஒப்புக்கு ஒரு வரவேற்புப் படலம் அரங்கேறியது.

"சௌக்கியமா இருக்கேன் மூர்த்தி. திணறாமல் வந்த விஷயத்தைப் பேசி முடி. அப்பறம் உனக்கும் நிம்மதியாக இருக்குமே!"
என்று நண்பனைப் பேச ஊக்குவித்தார் நீலகண்டன்.

"அது!! நீலகண்டா! உன் பொண்ணுப் போலீஸ் ஸ்டேஷன் போய்ட்டு வந்ததைக் கேள்விப்பட்டதும் எனக்கு ஷாக் ஆயிடுச்சு.மஹதனை நல்லா திட்டி விட்டுட்டேன்"

இவர் தான் முகத்தில் நவரசங்களையும் காட்டிக் கொண்டு பேசினார். ஆனால் நீலகண்டனோ உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல், கல் போல் இருந்தார்.

அதற்கு நேர் எதிராக மனதினுள்,
'அப்பாடா! இதுக்கப்புறமும் மஹதனைச் சமாளிக்கனுமோ என்று நினைச்சேன். அதுக்கு அவசியமே இல்லாமல் போயிடுச்சு' என்று பூரித்துக் கொண்டார்.

"அப்பறம் ஒரு விஷயம் சொல்றேன். கேட்டா நீ ரொம்பவே சந்தோஷப்படுவ" எனவும்,

நீலகண்டனின் பார்வை கூர்மையானது.

"எல்லாத்துக்கும் காரணமான அந்தப் பொண்ணு ரிசைன் பண்ணிட்டுப் போயாச்சு நீலகண்டா" என்று தன் நண்பனின் தோளில் கையைப் பதித்தார் திருமூர்த்தி.

"என்னது? அந்தப் பொண்ணு இப்போ அங்கே வேலைச் செய்யலையா?" என அவரிடம் ஆர்வமாக கேட்டார்.

"ஆமாம்.மஹதன் தான் அதைச் சொன்னான். இனிமேல் எந்தப் பிரச்சினையும் இல்லை நீலகண்டா!"

கண்களில் மின்னி மறைந்த பிரகாசத்தைக் கண்ட மாத்திரத்தில், திருமூர்த்திக்குக் காணாமல் போன, உற்சாகம் திரும்ப வந்து விட்டது.

தன் மகளுக்கு இனிமேல் எந்த இடையூறும் இல்லை என்று ஆத்ம திருப்தி அடைந்தார் நீலகண்டன்.

"அப்போ முக்தாவுக்கும், மஹதனுக்கும் கல்யாணத்தை நடத்தி வச்சுடலாமா?" என்று பகிரங்கமாக கேட்டார்.

அதில், விழி பிதுங்கிப் போனார் திருமூர்த்தி.

"அது!!! நீலகண்டா! இப்போது தான் இதை ஆறப் போட்டு இருக்கோம். அதுக்குள்ள கல்யாணப் பேச்சு எடுத்தா எப்படி?" என்று தடுமாறினார்.

இவர் இப்படித்தான் மறுமொழி கூறுவார் என்பதைக் கணித்திருந்த நீலகண்டன்,
"வேற என்னப் பண்ணலாம் மூர்த்தி? என் பொண்ணோட ஆசையை நான் சீக்கிரம் நிறைவேத்தி வைக்கனும்ல?
அந்த மௌனாவை மஹதன் கல்யாணம் பண்ணிக்கப் போறானோ என்று அவ ரொம்ப ஃபீல் பண்ணினா! அதைப் பார்த்து எனக்கு கஷ்டமாக இருந்துச்சு. இனிமேலும் தாமதிக்க விரும்பல மூர்த்தி. புரிஞ்சுக்கோ"

தீர்க்கமான குரலில் கூறிய நண்பனைப் பார்த்து திகைப்படைந்தார் நீலகண்டன்.

இந்த உறுதியை இவனிடத்தில் எதிர்பார்க்கவில்லை என்பது போல் பார்த்தார் திருமூர்த்தி.

ஏனெனில், அதைப் பற்றி மகனிடம் பேசு என்று கூட சொல்வான் என தான் எதிர்பார்த்திருந்தார்.

ஆனால், தோழனின் உறுதியான குரலில் இவரின் உறுதி மறைந்து போயிற்று.

"அதெப்படி?? மஹதன்!!" என்று அநியாயத்திற்குத் திருமூர்த்திக்கு வாய் குழறியது.

"உன் மகன் தான் என் பொண்ணுக்கு ஏற்பட்ட அவமானத்துக்குக் காரணம்! அதனால், மஹதனைச் சம்மதிக்க வைக்கிறது உன் பொறுப்பு மூர்த்தி. நம்ம பிஸினஸ் பார்ட்னர்ஷிப் இதுக்கப்புறமும் தொடரனும்னு ஆசை இருந்தா, நீ இதைச் செய்து தான் ஆகனும்"

நண்பனாகவே இருந்தாலும், தன் பலவீனத்தை அவனிடம் பகிர்ந்து கொள்வது எவ்வித ஆபத்தில் இழுத்து விடும் என்பதை தற்போது உணர்ந்திருந்தார் திருமூர்த்தி.

தன் அலுவலகங்கள், தன் பங்குப் பணம் அல்லாது, நீலகண்டனின் பணமும் முதலீடு செய்யப்பட்டு, உருவாக்கிய அலுவலகங்கள் தான் இப்போது உயரத்திலும், பண வரவிலும் முதன்மையாக உள்ளன.

அப்படியிருக்க, இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தனக்குச் செக் வைக்கும் நண்பனைப் பார்த்து விரக்தியாகப் புன்னகைத்தார் திருமூர்த்தி.

"நீலகண்டா! இப்படியொரு செக் வைக்குற? உனக்கு மனசாட்சி இருக்கா?" என்று மனம் கேளாமல் நண்பனிடம் வினவினார்.

"உன் பையனுக்கு முதல்ல மனசாட்சி இருந்துச்சா?" என்று இரக்கமின்றி கேட்டார் நீலகண்டன்.

அதற்குப் பிறகு பதிலேதும் சொல்லாமல், வந்த வழியாக சென்று விட்டார் திருமூர்த்தி.

அவரை இப்படி நோகடிப்பதற்கு விருப்பமில்லை என்றாலும், நீலகண்டனுக்கு வேறு வழி தெரியவில்லை.

மகளுடைய வாழ்க்கைக்கு முன்னால், எதுவும் பெரிது இல்லை என்பது போல் அவர் நடந்து கொண்டது திருமூர்த்திக்கு வேதனை அளித்தது.

வீட்டிற்குப் போனவர், மனைவியிடம் கூட இதைப் பகிர்ந்து கொள்ளவில்லை.ஆனால், அவரது முகத்தில் தெரிந்த வேற்றுமை கண்டு, நீலகண்டனுடனான பேச்சு வார்த்தையை அவர் சொல்லாமலேயே அறிந்து கொண்டான் மஹதன்.

அவனுக்கு முக்தாவை மணந்து கொள்ளும் எண்ணம் துளி அளவும் இல்லை.

அதை அவளிடமும், நீலகண்டனிடமும் புரிய வைக்க முயன்று அயர்ந்து போனான் மஹதன். அதைத் தான் இப்போது தந்தையும் பரீட்சித்துப் பார்த்திருக்கிறார்.

இதற்கும், தனக்கும் சம்பந்தம் இல்லை என்று மஹதன் கடந்து செல்ல நினைத்து விட்டான்.

"மூர்த்தியைப் பார்த்தாலும் பாவமாகத் தான் இருக்கு. சுயநலம் பிடிச்ச இந்த மனசுக் கேட்க மாட்டேங்குதே! மன்னிச்சுடு மூர்த்தி"

என்று மகளுடைய அறைக்குச் சென்றார்.

கதவைத் தட்டிய சத்தம் கேட்டதும்,
"உள்ளே வாங்க அப்பா" என்று உள்ளே அழைத்தாள் முக்தா.

"முகி! திருமூர்த்தி வெளிநாட்டில் இருந்து வந்துட்டான். அவன் கிட்ட மஹதனுக்கும், உனக்கும் கல்யாணம் நடக்கனும்னு ஸ்ட்ரிக்ட் ஆக சொல்லிட்டேன். அவனும் பையனைச் சீக்கிரம் கன்வின்ஸ் பண்ணிடுவான்" என்று மகளின் முகத்தில் சிரிப்பை வரவழைக்க முயற்சித்தார் நீலகண்டன்.

புன்னகைக்காமல், தந்தையைக் கூர்மையாகப் பார்த்தாள் முக்தா.

"உண்மை தான் முகி. மூர்த்தி நிச்சயமாக எனக்காக இதைச் செய்வான். நீ கவலையேபடாதம்மா" என்று அவளது தலையை வருடிக் கொடுத்தார்.

"என்னால் நம்பவே முடியல அப்பா. மஹதன் அவ்ளோ உறுதியாக இருந்தானே? அப்பறம் எப்படி?"

தன்னாலாகாத விஷயத்தைத் தந்தை எப்படி சுமூகமாக முடித்தார்? என்ற ஐயம் முக்தாவிற்கு வெகுவாக எழுந்தது.

"அதெல்லாம் மூர்த்திகிட்ட பேசிட்டேன் முகி" என்று அழுத்தம் திருத்தமாக அவர் கூறினாலும்,

"பேசிட்டீங்க சரி. மஹதன் எப்படி ஓகே சொல்லுவான்? அவன் என்னச் சின்னக் குழந்தையா அப்பா? அவனோட முடிவுகளுக்குள்ள யாரையும் தலையிடவே விட மாட்டான். அப்பா சொன்னால் இதை மட்டும் செய்துடுவானா?"

மஹதனைப் பற்றி இவளுக்கு நன்றாகவே தெரியுமே! தந்தைக்கும் தெரியும்! பிறகு எப்படி இது சாத்தியம்? என்று முக்தாவிற்குத் தோன்றாமல் இருக்குமா?

"செய்ற மாதிரி மகன்கிட்ட மூர்த்தி சொல்லுவான். அதைப் பத்தி உனக்கு என்னக் கவலை? மஹதன் மனசு மாறினால் சரி தான? கண்ணைக் கசக்காம இரு" என்று முக்தாவிடம் கூறினார் நீலகண்டன்.

மலையளவு அவருக்கு இருக்கும் திடம் , இவளுக்குக் குன்றளவும் கூட இல்லை.

'தன் மேல் எந்தப் பழியும் விழுந்து விடக்கூடாது' என்று கவனமாக இருக்க நினைத்தாள் முக்தா.

"அதுவே படைக்கும்,
அதுவே உடைக்கும்,
மனம் தான் ஒரு குழந்தையே!"

என்ற பாடலைக் கண்மூடிக் கேட்டுக் கொண்டு இருந்தாள்.இப்பாடலின் வரிகளுக்கு அடிமை அவள்! தனக்கு மனச் சுணக்கம் வரும் நேரங்களில் எல்லாம் இப்பாடலை ஒலிக்க விட்டு, உலகை மறந்துக் கேட்டு ரசிப்பாள் மௌனா.

இப்போதும் அதே போல, பாடலின் வரிகளை ஆழ்ந்து அனுபவித்துக் கேட்டாள்.

ஊன் உண்ணத் தோன்றவில்லை! அமைதி கொள் பெண்ணே! என்றது மனம். பாடல் முடிந்ததும், ஹெட்செட்டைக் கழட்டியவள்,

"இந்தப் பாட்டு மட்டும் இல்லைன்னா, நம்மப் பொழப்பு அவ்ளோ தான்" என்று கூறிக் கொண்டாள்.

"நீ சாப்பிட வரப் போறியா? இல்லையா?" என்று அவளை அதட்டிக் கேட்டாள் தோழி அகதா.

"பசிக்கலை அகி" என மறுத்தாள் மௌனா.

"சாப்பாட்டு மேல தான் கோபம் எல்லாம் வருமா? ஒரு விஷயம் மனசை உடைச்சிருச்சுன்னா, அதை மட்டும் விட்டுத் தள்ளி ஒதுங்கி வந்திடனும். அதை விட்டுட்டு, அதுக்குக் கொஞ்சமும் சம்பந்தமே இல்லாததை எல்லாம் வேணும் என்றே ஒதுக்கக் கூடாது மௌனா! சாப்பிடலன்னா தூக்கம் வராது, இதையே நினைச்சுட்டு தூங்காமல் இருப்ப.இருக்கிறதையும் பறி கொடுத்துடாத. அது பணமாக இருந்தாலும் சரி, நிம்மதியாக இருந்தாலும் சரி" என்று தன் கருத்து மழைகளைப் பொழிந்து கொண்டிருந்தாள் அகதா.

"ப்ளீஸ் அகி! என்னால முடியல. நானே வந்துட்றேன்" என்று கையெடுத்துக் கும்பிட்டு விட்டு, உண்ண ஆரம்பித்தாள் மௌனா.

அகதாவுக்குமே தினந்தோறும் வாழ்வில் பிரச்சனைகள் ஏற்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால் அவளோ நிறைகுடம் போல் தளும்பாமல், தன் போக்கில், வாழ்கிறாள் அதைத் தான் தோழிக்கும் போதித்துக் கொண்டு இருக்கிறாள்.

(அவளது வாழ்க்கையைப் பற்றிப் போகப்போக தெரிந்து கொள்வோம்)

தோழியிடமிருந்து பெற்ற அறிவுரைகள் நன்றாக வேலை செய்தது எனலாம். மௌனாவோ,
"மஹதனோடது மட்டும் தான் ஹோட்டலா? வேற வேலையைத் தேடி அவன் முன்னாடி போய் நிக்கனும்" என்று சபதம் எடுத்துக் கொண்டாள்.

அடுத்த நாளிலிருந்து, தன் சான்றிதழ்களை எடுத்துக் கொண்டு, வேலையைத் தேட கிளம்பி விட்டாள் மௌனா.

தந்தை, தாய்க்கும் சம்பளம் அனுப்பத் தேவையில்லை என்றாலும், அவர்களிடம் அவ்வப்போது வேலையைப் பற்றி பகிர்ந்து கொண்டால் போதும் என்று வாரத்திற்கு இரண்டு நாட்கள் அவர்களுக்கு அழைத்துப் பேசி விடுவாள்.

அவளுக்கு வேலை கிடைக்கும் வரை, தோள் கொடுத்துச் சகல வழிகளிலும் உதவினாள் அகதா.

நண்பியின் ஊக்கத்தாலும் , அவளது தேடலுக்கானப் பலனாகவும் மௌனாவிற்கு வேலையும் கிடைத்தது.

"எம்.டி வந்திருக்கார். அவரைப் பார்த்துட்டு வேலையைப் பாருங்க. ஆல் தி பெஸ்ட் " என்று மேனேஜர் கூறி விட்டுச் சென்றதைக் கேட்டதும்,

'என்ன மஹதனோட ஹோட்டலில் நடந்தா மாதிரியே இருக்கு' என்று திகைத்தாள்.

ஆனாலும், வேலையின் முதல் நாள் அல்லவா! அந்த தங்கும் விடுதியின் முதலாளியைப் பார்க்கச் சென்றாள் மௌனா.

அங்கு தனக்குக் கிடைத்த அதிர்ச்சியை யாரிடம் விளக்கிக் கூறப் போகிறாள் மௌனா?

- தொடரும்
 

Shalini shalu

Moderator
நங்கையின் மறவோன் 8

திடுக்கிட்டு அங்குமிங்கும் அலைபாயும் மௌனாவின் கருவிழிகளைப் பார்த்துக் கொண்டே மெத்தனமாக நாற்காலியில் அமர்ந்திருந்தான் மஹதன்.

'இவரா!! இவருக்கு இங்கே என்ன வேலை?' என்று உள்ளம் துடிக்க, அவனையே பார்த்துக் கொண்டு இருந்தவளை மஹதனுக்கு அருகிலிருந்தவன்,

"மிஸ்.மௌனா!" என்று கூவி அழைத்தான்.

அதில் சுயநினைவு அடைந்தவள்,
"சார்… சாரி!" என்று மஹதனைத் தவிர்த்தவள், இவன் புறம் பார்வையை வைத்துக் கொண்டாள்.

அவளிடம் பேச்சுக் கொடுத்தவன் தான் கிஷான். மஹதனின் நெருங்கிய நண்பன். முக்கியமாக மஹதனுடன் இந்த கம்பெனியைச் சேர்ந்து நடத்துகிறான். இதை மட்டும் மௌனா அறிந்தால், நிச்சயம் இங்கு வேலை பார்க்கலாம் என்ற எண்ணத்தைத் தலை முழுகி விடுவாள்.

"உங்க சர்டிஃபிகேட்ஸ்?" என்று அவளிடம் கேட்டுப் பெற்றுக் கொண்டவன், அதை ஆராயத் தொடங்கி விட்டான்.

"கடைசியாக எங்கே வேலைப் பார்த்தீங்க?" என்று எப்போதும் இன்டர்வியூ செய்யும் போது கேட்கப்படும் கேள்வியைக் கேட்டான் கிஷான்.

ஆனால் மௌனாவிற்கோ தூக்கி வாரிப் போட்டது.

கிஷானுக்கு அருகிலேயே இருப்பவனது பெயரை உச்சரிக்கத் தன்னால் இயலுமா? என்று அலை பாய்ந்தது அவளது விழிகள்.

அதையெல்லாம் கிஞ்சித்தும் கண்டு கொள்ளாதவாறு, கால் மேல் கால் போட்டு , அமர்ந்து கொண்டு இருந்தான் மஹதன்.

வேறு வழியில்லை!
"மஹதன் குரூப்ஸ்ஸோட ஹோட்டலில் வேலை பார்த்தேன் சார்" என்றதும்,

கிஷான் அதிர்ந்தவாறே அருகிலிருந்தவனை 'அவள் சொல்வது உண்மையா ?' என்பது போல் திரும்பிப் பார்த்தான்.

"யெஸ் கிஷான்! இவங்களே வேலை வேண்டாம்ன்னு சேர்ந்த இரண்டாம் நாளே ரிசைன் பண்ணிட்டு போய்ட்டாங்க" என்று குத்தலாக அவளைப் பற்றி நண்பனிடம் மறைக்காமல் கூறினான் மஹதன்.

சந்தேகக் கண் கொண்டு அவளைத் துளைத்தெடுத்த கிஷானோ, "ஏன் மிஸ். மௌனா! இவரோட ஹோட்டலில் அப்படி என்ன அசௌகரியம் நடந்துச்சு?" என்று நிஜமாகவே எதுவும் தெரியாத கிஷான் வினா எழுப்பினான்.

உதவிக்கு வருவானா மஹதன்? வருவான் என்றும் எதிர்பார்த்திட முடியுமா? இதுவரை நிகழ்ந்த அனைத்திலும் தன்னைத் தானே காப்பாற்றிக் கொண்ட மௌனாவிற்கு நடந்த உண்மையைக் கூறுவதில் தயக்கமேது!

நேர் பார்வை சகிதம் அவனை எதிர் கொண்டவள்,
"அங்கே எனக்குப் பிடிக்காத, சுய மரியாதையைச் சீண்டிற மாதிரியான விஷயங்கள் நடந்தது சார். அதுதான் ரிசைன் செய்துட்டேன்" என்று பட்டென்று கூறியவளைப் பிரம்மித்துப் பார்த்தான் கிஷான்.

அப்படியே மஹதனையும் ஒரு பார்வை பார்க்க,
அவனோ,'இது உனக்கு மட்டுமே ஆச்சரியம் தரும்' என்பதைப் போல, சலனமின்றி அமர்ந்திருந்தான்.

"சரி.அங்கே உங்களுக்கு எந்த ப்ளாக் மார்க்கும் கொடுக்கலை. அதே போல, மஹதன் என்னோட பெஸ்ட் ஃப்ரண்ட். அவரோட கம்பெனியில் இருந்து ரிலீவ் ஆகிட்டு இங்கே வேலை பார்க்கிறதுல உங்களுக்கு எதாவது அப்ஜெக்ஷன் இருக்கா?" என்று மொழிந்தான் கிஷான்.

வெளிப்படையாக அவன் கேட்கவும், இவளும்,
"எனக்கு எந்த அப்ஜெக்ஷனும் இல்லை சார். ஆனால் இவரும் இந்த கம்பெனியோட எம். டி யா?" என்று தயக்கத்துடன் வினவினாள் மௌனா.

நொடியில் முறைக்கத் துவங்கி விட்டான் அவளை.இன்னும் வேறென்ன வேண்டுமாம் அவளுக்கு?
கேட்கத் துடித்த வாயைத் திறவாமல், எந்த எல்லை வரை செல்லப் போகிறாள்? என்று பார்க்க ஆரம்பித்தான் மஹதன்.

"இல்லை.இவன் என் கூட ஜஸ்ட் பேச வந்தான். இந்தக் கம்பெனிக்கும், இவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது என்னோட கம்பெனி மட்டுமே" என்று தேவைக்கு அதிகமான தகவல்களை அவன் கொடுத்த பொழுதே பெண்ணவளுக்குத் தெரிந்திருக்க வேண்டும் இதில் மஹதனுடைய கைங்கர்யம் இருக்கிறது என்று!

பாவையவள் எப்போதும் விழி திறந்து, ஒவ்வொன்றையும் கூறு போட்டு பிரித்தறிந்துப் பார்த்துக் கொண்டு இருக்க முடியாதல்லவா!

இருந்தாலும் இதை விட்டால் வேறு வேலை தேடுவதற்குள் வீட்டிற்கு விஷயம் தெரிந்து விடக்கூடும் என்ற ஐயத்திலேயே அவ்வேலையில் சேர முடிவெடுத்தாள் மௌனா.

"எனக்கு ஓகே சார். நீங்க தான் என்னை வேலைக்குச் சேர்த்துக்கலாமா என்று முடிவெடுக்கனும்?" என தடுமாற்றம் கொண்டவள், மஹதனை இடையிடையே பார்வையிட்டாள்.

அவனோ அவள் கண்டுபிடிக்க முடியாதது போல், செல்பேசியில் எதையோ ஆர்வத்துடன் பார்வையிடுவதைப் போல் பாசாங்கு செய்தான்.

"எனக்கும் எந்த அப்ஜெக்ஷனும் இல்லை மிஸ். மௌனா. நீங்க இன்னைக்கு, இல்லைன்னா நாளைக்கு வேலையில் சேர்ந்திடுங்க.ஆனால் எந்த அப்ஜெக்ஷனோ, அன்கம்ஃபர்டபிளோ நேர்ந்தால் உடனே சொல்லிடுங்க" எனவும்,

நம்பிக்கை துளிர்ந்த முகத்துடன் தன் இன்றைய முதலாளியை ஏறிட்டவளது கண்களில் தெரிந்த மகிழ்ச்சிப் புன்னகையில் ஆட்டம் கண்டது மஹதனின் மனம்.

அத்துடன், தன் நண்பனின் தங்கும் விடுதியில் மட்டும் உடனே வேலையில் சேர உடனே சம்மதம் சொன்ன மௌனாவைப் பார்க்கையில் கோபமும் அளவுக்கதிகமாகவே ஏற்பட்டது.

அவனது முறைப்பில் எரிந்து சாம்பலாகி விடுவோமோ? என்ற பயத்தில் வேகமாக கிஷானிடம்,
"தாங்க்யூ சார்!" என்று கூறி வெளியேறினாள் மௌனா.

"இப்போ சந்தோஷமா மஹத்?" என்று கிஷான் நண்பனிடம் கேட்டான்.

ஏனெனில், மௌனாவை இங்கே வேலைக்கு அமர்த்திக் கொள்ளுமாறு சொல்லியதே மஹதன் தான்!

அது மட்டுமின்றி, இந்த தங்கும் விடுதிக்கு இவர்கள் இருவருமே சரி சமமானப் பங்குதாரர்கள் தான்.

கிஷானுக்கும், மஹதனுக்கும் யார் வேலைக்குச் சேர்க்கலாம், சேர்க்கக் கூடாது என்ற முடிவெடுக்கச் சமமான உரிமை உண்டு.

மௌனாவின் அப்ளிகேஷனைப் பார்த்தவுடனேயே கிஷானிடம் செய்ய வேண்டியவற்றைக் கூறி விட்டான் மஹதன்.

அவனுமே ஏன்? எதற்கு? என்றெல்லாம் கேள்விகளைத் தொடுக்காமல், அவளை வேலைக்குச் சேர்த்துக் கொண்டான்.

கிஷான், "இப்போ சொல்லு? லவ் பண்றியா?" என்றதும்,

மஹதன், "சேச்சே! கில்ட்டி ஃபீல் மச்சான்!" என்று கூறவும் அவனை நம்பாமல் பார்த்தான் தோழன்.

" அப்படியே லவ் ஆக இருந்தாலும், அவள் அவ்ளோ சீக்கிரம் ஓகே சொல்லவும் மாட்டா" என்றான்.

"எங்கே! உன்னைப் பார்த்தாலே மிரண்டு போறாங்க! அவங்களாவது உன்னை லவ் பண்றதாவது?" என்று கலாய்த்தான் கிஷான்.

மஹதன் அவளைக் காதலிக்கத் தொடங்கி விட்டான் என்ற எண்ணத்தில் மௌனாவை மரியாதையுடன் விளிக்க ஆரம்பித்து விட்டிருந்தான் கிஷான். அதையும் கண்டு கொண்டான் மஹதன்.

சிறிது நேரம் கழித்து, மஹதன் கிளம்பி விட்டான்.

தனக்கு வேலை கிடைத்ததை முதலில் அகதாவிடமே சொல்ல ஆசைப்பட்டாள் மௌனா.

அதனால், அவளுக்கான மாலைச் சிற்றுண்டியைச் செய்து வைத்து விட்டு, தோழியின் வரவிற்காக ஆவலாக காத்திருந்தாள்.

அகதா வந்ததும், தேநீர் கலந்து கொள்ளலாம் என்று இருந்தவளுக்கு
தன் வாழ்வில் நிகழ்ந்த இந்த மாற்றங்களை ஏற்க மனம் இல்லாமல், தவித்துப் போனாள்.

திடமான பெண்ணவள் என்று பலர் கூறக் கேட்டும், தன்னால் அந்த திடத்தைத் தொடர்ந்து கையகப்படுத்திக் கொள்ள இயலவில்லையோ? என்று பல நேரங்களில் துன்பப்பட்டாள் மௌனா.

இப்போதிருக்கும் வேலை கூட நிரந்தரமாக இருந்தால் சரி என்று தான் தோன்றியது.

அழைப்பு மணி ஒலிக்க, அகதா தான் என்ற உறுதியுடன் கதவைத் திறந்தாள்.

தோழியும் அவளது உறுதியைப் பொய்யாக்காமல்,
"ஹேய் மௌனா!" என்ற உற்சாகம் பொங்க உள்ளே வந்தாள்.

"அகி!!" என்று அவளைக் கட்டிக் கொண்டு விழிநீரைத் துடைத்துக் கொண்டாள் மௌனா.

"என்னாச்சு? மறுபடியும் எதாவது ப்ராப்ளமா?" என்று அக்கறையாக கேட்டாள்.

"இது ஆனந்தக் கண்ணீர் அகி!" என்று தனக்கு வேலைக் கிடைத்த விவரத்தைக் கூறினாள் தோழியிடம்.

"சூப்பர் மௌனா!" என்று தன் அன்பைப் பகிர்ந்து கொண்டாள் அகதா.

"ஆனால் அங்கேயும் எனக்கு ஒரு ஆப்பு இருந்துச்சு அகி" என்று மஹதனைப் பார்த்ததைக் கூறினாள் மௌனா.

"இதென்ன மௌனா! அவரும், நீயும் இப்படி எதேச்சையாக மீட் பண்ணிக்கிற மாதிரியே இருக்கு?அவர் ஃப்ரண்டோட ஆஃபீஸ் வேற! நல்லா யோசிச்சியா?" என்று தோழியின் நலன் கருதி வினாக்கள் தொடுத்தாள் அகதா.

"டீ குடிச்சிக்கிட்டே பொறுமையாக கேளு அகி" என்று அவளுக்குத் தேநீர் தயாரித்துக் கொடுத்தாள் மௌனா.

"இவ்ளோ நடந்திருக்கு. மஹதன் உங்கிட்ட ஒரு வார்த்தைக் கூட பேசலையா? கிஷானும் அறிமுகப்படுத்தி வைக்கலையா?" என்று முக்கியமான வினாவைக் கேட்டாள் அகதா.

"இல்லையே அகி! அவர் ஒருத்தர் அங்கே இருக்கிறார்னு கிஷானுமே முக்கியத்துவம் கொடுத்தா மாதிரி தெரியல. வாலன்டியராக இன்ட்ரொடியூஸ் பண்ணலைனாலும், நான் அவர் ஹோட்டலில் இருந்து ரிலீவ் ஆனதைப் பற்றி விசாரிச்சார். அப்போ, எதேச்சையாக மஹதனை இன்ட்ரோ பண்ணினார். அவ்ளோ தான் அகி! மத்தபடி அவருக்கும், அந்த ஹோட்டலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு கிஷான் சொன்னார்" என்று விவரித்தாள் மௌனா.

"ஃப்ரண்ட் ஆக இருக்கும் போது அடிக்கடி மீட் பண்ணிக்கிற வாய்ப்பு இருக்கே? மஹதனும் ஆஃபீஸ் வரவும் வாய்ப்பு இருக்கு மௌனா"

நாலாபுறமும் யோசித்துப் பார்த்துக் கூறினாள் அகதா.

"ம்ஹ்ம் அகி. ஆனால் வேற வழியில்லையே? இன்னும் எனக்கு வேலை கிடைக்காமல் இருந்தால், என்னால் நீங்க எல்லாரும் தான் பாதிக்கப்படுவீங்க!" என்று கூறினாள்.

"எங்களுக்கு என்னப் பாதிப்பு வரப் போகுது?" என்று வினவினாள் தோழி.

"அப்பா, அம்மாகிட்ட விஷயத்தைச் சொல்லலை அகி. உன்னோட சம்பளம் உன் ஃபேமிலிக்குத் தான். அதை எனக்கு நீ செலவழிக்கிறது எனக்கு விருப்பம் இல்லை" என்றதும்,

முகம் சுருங்கலானது அகதாவிற்கு.

"இதை உங்கிட்ட இருந்து எக்ஸ்பெக்ட் செய்யலை மௌனா" என்றவாறே, மெல்ல நடந்து, சோஃபாவில் அமர்ந்தாள் அகதா.

தான் செய்ததைச் சொல்லிக் காட்டினோமா? அல்லது செய்ததைக் கேட்டோமா? எதனால் இவளுக்கு இத்தனை அவசரம்? என்று பரிதவித்தது அகதாவிற்கு.

மௌனா, "நான் அப்படி சொல்லலை அகி. ஆனால் எனக்கு மனசு உறுத்துது. முடியலை. எந்த தப்பும் பண்ணாமல், இப்படி நடந்து, வேலைப் பார்க்கத் தானே இங்கே வந்தேன். அதுக்கு ட்ரை பண்ணனும்ல. ப்ளீஸ் புரிஞ்சுக்கோ" என்று அகதாவைச் சமாதானம் செய்தாள் மௌனா.

வேறு வழியில்லாமல், சமாதானம் ஆகி விட்டாள் அகதா.

வீடு திரும்பிய மஹதனுக்கோ, தன்னை அவமதித்தவளின் மீது ஈர்ப்பு உண்டாயிற்றோ? என்ற குழப்பமே தலையெடுத்து இருந்தது.

நண்பனுடைய பேச்சில் வந்த மாயையா? என்பது போல, பலவிதமான சிந்தனைகள் ஆக்கிரமித்திருந்த சமயம் அவனருகில் வந்தமர்ந்தார் தந்தை திருமூர்த்தி.

அவர்களைப் பதட்டத்துடன் கவனித்துக் கொண்டிருந்தார் கௌசல்யா.

மறுபடியும் முயற்சித்துப் பார்க்க வந்தவர், மஹதனின் தலையை மெல்லமாக கோதி விடவும்,
"என்னாச்சு அப்பா?" தலைக் கோதலில் நெகிழ்ந்து போகாமல் , கேட்டவனை ஆயாசமாகப் பார்த்தார் தந்தை.

"முக்தா விஷயம்…" என்று இழுத்தார்.

"அப்போவே சொல்லிட்டேனே அப்பா. எல்லாருக்கும் நேரடியாகவே பதில் சொல்லிட்டேன். ஆனாலும் இப்படி வந்து மறுபடியும் கேட்கிறது எந்த விதத்தில் சரி?" அவனும் தான் எந்தளவிற்குப் பொறுப்பான்?

அதுவும் இன்றோ, மௌனாவின் நடவடிக்கை அவனுக்குள் சோர்வை ஏற்படுத்தி இருந்தது. இந்த நேரத்தில் தந்தையின் முயற்சியும், பேச்சும் உவப்பானதாய் இல்லை.

மகனின் குரலில் தெரிந்த மாற்றத்தைப் புரிந்துணர்ந்த கௌசல்யா, "மஹதா! ப்ளீஸ்! பொறுமையாக பேசு"என்றார்.

அவனுக்கே அனைவரும் வகுப்பு எடுப்பது போலவே தோன்றியதால்,
" அம்மா! எல்லாரும் எனக்கே அட்வைஸ் பண்றீங்க! அந்த முக்தாவை நான் கல்யாணம் பண்ணிக்கனும்னு நீலகண்டன் இவரை எதையாவது சொல்லி ப்ளாக் மெயில் பண்ணி இருப்பார் அதனால் தான் இப்படி என்கிட்ட சாஃப்ட் ஆக பேசிட்டு இருக்கார்"

தந்தையிடம் திரும்பியவன்,
"முக்தா சேப்ட்டர் முடிஞ்சுருச்சு அப்பா. அவளைத் தவிர வேறெந்த விஷயத்தைப் பத்தி என்றாலும் பேசுங்கள். நான் பொறுமையாக கேட்கிறேன் " என்று அறைக்குச் சென்று அடைந்து கொண்டான்.

மகனுடைய துல்லியமான கணிப்பைப் பாராட்டும் நிலையிலா அவர் இருக்கிறார்?

- தொடரும்
 

Shalini shalu

Moderator
நங்கையின் மறவோன் 9

மகனோ பதிலில் தந்தையை அதிர்ச்சிக்குள்ளாக்கி விட, தந்தையோ செய்வதறியாது திகைத்திருந்தார்.

திருமூர்த்தி, "என் பேச்சுக்கு மரியாதையே இல்லை கௌசி" மனைவியிடம் பொருமலை ஆரம்பித்தார்.

கௌசல்யா, "வேண்டாம்னு சொல்றவனைப் பிடிச்சு சுத்தி சுத்தி அடிச்சா! அவனும் எவ்வளவு தான் பொறுமையாக இருப்பான்?" என்று மஹதனுக்காகப் பேசினார்.

"உன் மகனுக்கு மட்டும் ஆதரவா பேசு. புருஷனைப் பத்திக் கவலை இருக்கா?"

அப்போதும் தன்னை உணராமல், மனையாளிடம் தான் கோபத்தைக் காட்டினார்.

"அவன் பொதுவாக தான் பதில் சொல்லியிருக்கான் ங்க. நான் கேட்டாலும் இதே தான் சொல்லுவான். நீங்க உங்க ஃப்ரண்டை கன்வின்ஸ் பண்ணுங்க" என்று கூறிவிட்டார்.

"அவன்கிட்ட நான் என்னன்னு போய் சொல்லுவேன் கௌசி? இவனைத் தான் நம்பினேன்" என தலையிலடிக்காத குறையாக வருத்தப்பட்டார் திருமூர்த்தி.

"இவனை நீங்க நம்பலைங்க. உங்க பிஸினஸ் பார்ட்னர்ஷிப் போய் விடக் கூடாதுன்னு, யூஸ் பண்ணிக்கப் பார்க்கிறீங்க" என்று தைரியமாக கணவனை எதிர்த்தார் கௌசல்யா.

எல்லாம் ஒரு அளவு தானே! மகனும் தான் எத்தனை தடவைகள் எல்லாவற்றிற்கும் பதில் சொல்லிக் கொண்டே இருப்பான்? தாய் மனம் பெற்றவனுக்காகப் பதறியது. அதனால் தான் இந்த விளைவு.

"அப்படின்னு யார் சொன்னது கௌசி? என்னோட சொத்து எல்லாம் மகனுக்குத் தான? என்ன யூஸ் பண்ணப் பார்க்கிறேன்?"

"பின்னே! இதை வேற எப்படி சொல்றதுங்க? உங்க ஃப்ரண்ட் உண்மையிலேயே ப்ளாக் மெயில் தானே செய்திருக்கார்?" இடுங்கிய கண்களுடன் கணவரிடம் வினவினார் கௌசல்யா.

"ப்ளாக் மெயில் பண்ணலை கௌசி. இத்தனை வருஷ நட்புக்கு இதைக் கூட செய்ய மாட்டியான்னு கெஞ்சினான்! பாவமாக இருந்துச்சு"

"ஓஹோ! நீங்க பாவம் பார்க்கிறதுக்கு என் பையன் வாழ்க்கை தான் கிடைச்சுச்சா?"

கௌசல்யாவிற்குள் புதிய சக்தி எதுவும் புகுந்து விட்டதா? என்பது போல கணவனிடம் பொரிந்து கொண்டிருந்தார்.

"நான் என்னமோ அவனுக்கு ஸ்டேட்டஸ் பார்க்காமல் கல்யாணம் செய்து வைக்கிறா மாதிரி பேசுற கௌசி? நீலகண்டனோட பொண்ணு தானே? வசதிக்குக் குறைவாக இல்லையே?"

எதையெல்லாம் நேர்மறையாக சொல்ல முடியுமோ, அதையெல்லாம் கடை பரப்பினார் திருமூர்த்தி.

"இருக்கட்டுமே - ங்க. அதுக்காக அவனுக்குப் பிடிக்கலை அவ்ளோ தான்" என்று இவரும் உறுதியாக கூறவும்,

தொடர்ந்து இந்த பதில்கள் வந்த வண்ணம் இருந்தாலும், திருமூர்த்திக்கு கோபம் உண்டானது.

"என்ன நீயும் எதிர்த்துப் பேசுற? அவனுக்கு நல்லது சொல்லிப் புரிய வை. அவன் சம்மதிக்கனும்" என்று உத்தரவிட்டார்.

"அவனோட பிஸினஸ் விஷயத்திலேயே நம்மளை தலையிட விடல. சொந்த கல்யாண வாழ்க்கையில் மட்டும் அதைப் பண்ணிடுவானா? நீங்களும், உங்க ஃப்ரண்ட் - உம் தான் பிஸினஸ் பண்றீங்க! அப்போ அதுக்குள்ள தேவையில்லாமல் அவனோட வாழ்க்கையைப் பணயம் வைக்கிறீங்க! அவனுக்குப் பொறுமை கம்மி. இருந்துமே இந்த அளவுக்குப் பேசி இருக்கான்ங்க. பெரிய மனுஷன் மாதிரி புரிந்து நடந்துக்கோங்க " என்று புத்திமதி சொன்ன மனைவியைப் பல்லைக் கடித்துக் கொண்டு முறைத்தார் திருமூர்த்தி.

"அதிகமாகப் பேசாத கௌசி. நான் கொஞ்சம் தனியாக இருக்கனும். போ" என்று விரட்டினார்.

துணையின் அருமை இப்போது எங்கே புரியப் போகிறது அவருக்கு.

"மௌனா கிட்ட பேசனும் அன்னம். போன தடவையே நம்மளை ரொம்ப மிஸ் பண்ணினா" என்று உணவுண்டு கொண்டே கூறினார் சிவமணி.

" ஆமாங்க. வேலைக்குச் சேர்ந்ததும் பிஸியாக இருப்பான்னு நானுமே அவ கால் செய்யும் போது தான் பேசுவேன். இருந்தாலும் மனசு தவிக்குது.பகல்ல பேசுவோம்-ங்க" என்று அன்னலட்சுமி கூறினார்.

தந்தையின் அருகாமையில் பிள்ளைகள் எப்போதும் பாதுகாப்பு, நிம்மதியாகத் தானே இருப்பார்கள்! மௌனாவிற்கும் அதே தான் தோன்றியதோ?

இனிமேலும் மௌனாவிடம் அடிக்கடி பேசி விட வேண்டும் இல்லையெனில் மகள் ஏங்கிப் போய் விடுவாள் என்று முடிவெடுத்தார் சிவமணி.

நீலகண்டன் தன் பொறுமைக்குப் போட்டிருக்கும் எல்லையைக் கடந்து விடுவார் போல! மகளிடம் அமைதியாக இருக்குமாறு கூறியவருக்கு இருப்புக் கொள்ளவில்லை.

அலுவலகம், பார்ட்னர்ஷிப் என்றெல்லாம் மண்டையைக் கழுவி அனுப்பி வைத்தேனே? அதெல்லாம் வீணோ?

முக்தாவிடமும் இதைச் சொல்லி விட, அவளோ, "எனக்குத் தெரியும் ப்பா. அந்த மஹதனை யாராலும் கன்ட்ரோல் பண்ண முடியாது. அவன் தனியாக, சொந்தமாக பிஸினஸ் பண்றான். பரம்பரை சொத்தும் அவனுக்குப் போகிறதை தடுக்க முடியாது. அப்படியிருக்கும் போது, அங்கிள் அவனை என்ன சொல்லி வழிக்கு வர வைப்பார்?" என்று தந்தையிடம் கூறினாள்.

"அப்பாவுக்காக கூட அவன் மாறலாம் இல்லையா முக்தா? அந்த குருட்டு நம்பிக்கையில் தான்…" என்று இழுத்தார் நீலகண்டன்.

"ஒன்னுப் பண்ணுங்க. மூர்த்தி அங்கிளுக்குக் கால் செய்து கேளுங்க. அவர் குரலிலேயே உண்மை தெரிஞ்சிடும்"என்று வழி காட்டினாள் மகள்.

திருமூர்த்திக்கு அழைத்து விட்டார் நீலகண்டன்.

தனிமையில் இருக்க நினைத்தவருக்கு அந்த அழைப்பு சினம் மூட்டியது.

'நீலகண்டன்' பெயரைப் பார்த்ததும், திரையில் ஒளிர்ந்து கொண்டிருந்ததை அவரது வாய் முணுமுணுத்தது.

அழைப்பை ஏற்று காதில் வைத்தவுடன்,
"மூர்த்தி!" கணீரென்ற குரல் அவருக்குள் பதட்டத்தை வாரியிறைத்தது.

"சொல்லு நீலகண்டா"

எச்சிலை விழுங்கிக் கொண்டு பேசியவரின் தடுமாற்றம், தக்க பதிலைக் கொடுத்தது நீலகண்டனுக்கு.

"அப்பறம்! நான் கேட்டது, நீ வாக்குக் கொடுத்தது! என்னாச்சு?" அவரது குரலிலிருந்த நையாண்டித்தனத்தின் ஆட்சியைப் புரிந்து கொண்டார்

" மஹதனுக்கு விருப்பம் இல்லைன்னு தெளிவாக சொல்லிட்டான் நீலகண்டா"

சொல்லித் தானே ஆக வேண்டும்! அதை இப்போதே, செல்பேசி வாயிலாக கூறியதில் நிம்மதி திருமூர்த்திக்கு.

நீலகண்டன், "எல்லாத்தையும் யோசித்துப் பார்த்துத் தான் சொல்றியா மூர்த்தி? உன் பேச்சையே உன் பையன் கேட்கலையா?" என்று உச்சஸ்தாயியில் கேட்டார்.

"கேட்கலைடா.புரிஞ்சுக்கோ!" என்று மன்றாடினார்.

இவனிடம் இப்படியெல்லாம் மன்றாட வேண்டி வரும் என்று நினைத்துப் பார்த்திடாத திருமூர்த்தி, தன் இழிநிலையை எண்ணித் தொய்வு அடைந்தார்.

"என்ன மகன் அவன்? பெத்த அப்பாவோட வார்த்தையை மதிக்காமல் சுத்துறான்!" என்று மஹதனை அவனது தந்தையிடமே இழிவாக பேச ஆரம்பித்து விட்டார்.

"நீலகண்டா!"

"என்ன மூர்த்தி? நான் சொல்றது கரெக்ட் தான? இதில் தான் உன் மரியாதை, மதிப்பு எல்லாம் இருக்குன்னு தெரிஞ்சும் இப்படி சொல்லிட்டானே?"

தூபம் போடும் வேலையைத் தொடர்ந்தார் நீலகண்டன்.

"விடு மூர்த்தி. நான் உன்னை என்னமோ என்று நினைச்சேன். இப்படி ஆகிடுச்சே?" என்று திருமூர்த்தியைக் கிண்டல் செய்தார்.

அவமானத்தின் தடத்தைப் பொறுமையாக கடந்து செல்லும் நிலையில் இருந்தார்.

முன்னோக்கிச் செல்ல முடியாமல், வழியை அடைத்திருப்பது போல, மனதளவில் தள்ளாட்டம் கொண்ட திருமூர்த்தி உடலளவிலும் சோர்ந்தார்.

பேச்சற்று இருக்கிறான் நண்பன் என்பதை உணர்ந்த நீலகண்டன்,
"நீ ரெஸ்ட் எடு மூர்த்தி. உடம்பைப் பார்த்துக்கோ. நான் இதுக்கு வேற வழி தேடிக்கிறேன்" என்று இறுதியாக ஒருமுறை காலை வாரி விட்டு திருப்தியாக அழைப்பைத் துண்டித்தார்.

நீள்சாய்விருக்கையில் கால்களை நீட்டி விட்டுக் கொண்ட திருமூர்த்தி,
"கௌசி" என்று நிதானமற்ற குரலில் மனையாளை அழைத்தார்.

தனிமையை விரும்பியவர், தன்னை அழைக்கவும், உடனே சென்றார் கௌசல்யா.

"என்னாச்சு-ங்க?" தளர்ந்து போன உடலைக் குறுக்கிப் படுத்திருந்த கணவரைப் பார்த்ததும், ஒரு நொடி ஸ்தம்பித்து விட்டார் மனைவி.

"ஒரு கிளாஸ் தண்ணீர் கொண்டு வா-ம்மா" என்று நடுங்கிய, நளுங்கிய குரலில் கேட்டார் திருமூர்த்தி.

"இதோ கொண்டு வரேன்-ங்க"

சமையலறைக்குச் சென்று தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார்.

வாங்கி குடித்த மூர்த்தி, "இங்கேயே தூங்குறேன்ம்மா" என்று கண் அயர்ந்தார்.

நன்றாக இருந்த மனிதர் இப்படி ஆகி விட்டாரே! என்று கௌசல்யாவின் கண்களில் இருந்து நீர் பெருகியது.

அதற்குள் கண் திறந்த மூர்த்தி, "நீ அழுகாத கௌசி.நான் அடுத்து என்னன்னு யோசிக்கனுமே? அதுக்குத் தான் தூங்கி எழுந்திரிக்க நினைக்கிறேன். நீ போ" என்று அனுப்பி வைத்தார்.

அவர் அப்படி சொல்லியதும்,
கௌசல்யா மகனுடைய அறைக்குச் சென்றார்.

கதவை தட்டியதும்,"வாங்க அம்மா" என்று கூறினான் மஹதன்.

நொடிப்பொழுதும் தாமதிக்காமல், அவன் முன்னால் சென்றவர்,
"மஹதா! அந்த நீலகண்டன் உங்க அப்பாகிட்ட என்ன சொன்னார்ன்னு தெரியலை.மனுஷன் ரொம்ப தளர்ந்து போய்ட்டார்" என்று தவிப்புடன் கூறினார் கௌசல்யா.

"ஃபோனில் பேசினாரா அம்மா? இனிமேல் பேசுவதாக இருந்தால் எங்கிட்ட அவரை பேச சொல்லுங்க அம்மா" என்றான் தனயன்.

" இது இப்படியே முடியாதுன்னு நினைக்கிறேன் மஹதா"

நீலகண்டனும், அவரது மகளும் இவ்விஷயத்தில் எளிதாக விடப் போவதில்லை என்பதை இவரும் புரிந்து கொண்டார் போலும்!

இதில் சிக்கித் தவிப்பது மகன் மட்டுமில்லாமல் கணவனும் தான் என்பதால் தான் கௌசல்யாவிற்கு இருவரையும் காப்பாற்ற மனம் பரபரத்தது.

" தெளிவாகச் சொன்ன பிறகு அவங்களுக்கு இருக்கிற பிடிவாதத்தில் நானும், அப்பாவும் பலியாக முடியாது அம்மா! அப்பாவுக்காக நான் எதுவும் செய்ய மாட்டேன்னு இல்லை. அவர் கூட தான் நிழலாக நான் இருக்கேன். ஆனால் அது அவருக்குத் தெரியாது. நீலகண்டன் அங்கிள் அவர் கூட இருக்கிற பார்ட்னர்ஷிப்பில் இருந்து விலகிட்டால், அப்பாவுக்கு எதுவுமே இருக்காதுன்னு நினைக்கிறாங்க. ஆனால் அது உண்மை இல்லை அம்மா.நீலகண்டன் அங்கிளுக்கும் அப்பா பயப்பட தேவையே இல்லை. எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்.அப்பாவுக்கு இப்போ மன அமைதி தேவை. அது மட்டும் போதும் " என்று தந்தைக்காக தான் எப்போதும் நிழலாக இருப்பேன் என்பதை தாயிடம் உரைத்தான் மஹதன்.

"நீ கூட இருக்கேன்னு அவர்கிட்ட நேரடியாக சொல்லலாமே மஹதா?" என்றார் கௌசல்யா.

"சொல்லலாம் தான் அம்மா. ஆனால் அவர் கூட இருக்கிறவங்க எப்படிப்பட்ட ஆளுங்கன்னு பார்த்து தெரிஞ்சிக்கட்டும். நேரம் வரும் போது நானே அவர்கிட்ட பேசுவேன் அம்மா"

அப்பா, மகளுடைய பிடிவாத குணத்திற்காக எல்லாம் தானும் , தன் தந்தையும் கொடி பிடிக்க முடியாது என்ற இறுமாப்பு மஹதனுக்கு இருந்தது.

முக்தாவை நினைத்தால் இப்போதும் எரிச்சல் மூண்டது மஹதனுக்கு.

அவளுக்கு அழைத்துப் பேசி விட வேண்டும் என்று கால் செய்தான்.

கண்கள் முழுவதும் புத்துணர்ச்சி பெற்று ஒளிர்ந்தது மஹதனின் அழைப்பைப் பார்த்த முக்தாவிற்கு.

"மஹத்! இப்போ தான் அப்பாகிட்ட உன்னைப் பத்தி பேசிட்டு இருந்தேன். அதுக்குள்ள கால் செய்துட்டியே! எனக்கே டவுட் தான் ! நீ ஓகே சொல்வியா? மாட்டியான்னு? இப்போவும் எதிர்பார்ப்போட தான் கால் அட்டெண்ட் பண்ணப் போறேன்!" என்று துள்ளலுடன் அவனது அழைப்பை ஏற்றாள்.

"ஹலோ மஹத்!" உற்சாகத்தில் குறைவு எதுவும் இல்லை.

"முக்தா! நீயும், உங்க அப்பாவும் விளையாட்றதை நிறுத்துறீங்களா?"

"விளையாட்றோமா? புரியல மஹத்"

"ப்ச்! என் அப்பாவை உங்கப்பா பிளாக்மெயில் பண்ணி இருக்கார்.அது தெரியும் தான?" என்று காட்டமாக கேட்டான் மஹதன்.

"அவங்க ரெண்டு பேரும் நேரில் பார்த்து பேசினது தெரியும் மஹத்.ஆனால்…"

"தெரியும் தான? பார்ட்னர்ஷிப்பை வச்சு பிளாக்மெயில் பண்ற அளவுக்குப் போய்ட்டாரா உங்க அப்பா?" என்றதும்,

தந்தையின் செயல்பாட்டால் தனக்குத் தான் எதிராக நடக்கிறது என்று நொந்து கொண்டவள்,
"அப்படி இல்லை மஹத்" என்றாள்.

"இங்கே பாரு முக்தா. எங்க அப்பா கூட நான் வெளிப்படையாக பிஸினஸ் பண்ணலை தான். நான் சுதந்திரமாக கம்பெனி நடத்தினால் அப்பா கூட இல்லைன்னு அர்த்தம் கிடையாது. இதை உங்கப்பா கிட்ட சொல்லு. பார்ட்னர்ஷிப்பை முடிச்சுக்கலாம்ன்னா எங்க அப்பாவுக்கும் சம்மதம் ன்னு சொல்லிடு. எப்போ அதுக்கான லீகல் வொர்க் பார்க்கலாம்னு கேளு. நாங்கள் தயார். பாய்" என்று தெளிவான விளக்கமளித்து விடை பெற்றிருந்தது அவனது குரல்.

தந்தையின் அறைக்குள் வேகமாக சென்றாள் முக்தா.

"இந்த ஹோட்டலை இன்னும் சரியாகவே சுத்திப் பார்க்கலையே நாம? வேலை நேரம் முடியட்டும். நிதானமாக சுத்திப் பார்ப்போம்" என்று ஆவலாகத் தன் வேலையைத் தொடங்கினாள் மௌனா.

- தொடரும்
 

Shalini shalu

Moderator
நங்கையின் மறவோன் 10

"அப்பா!" என்று பலவீனமான குரலில் தந்தையை அழைத்தாள் முக்தா.

"சொல்லு முகி" என்று தன்னுடைய மகளைப் பார்த்தார் நீலகண்டன்.

"மூர்த்தி அங்கிள் கிட்ட பேசுனீங்கள்ல, அதுக்கு மஹதன் எனக்கு கால் பண்ணினார்" என்று தோய்ந்த குரலில் ஆரம்பித்தாள்.

அதிலேயே புரிந்து கொண்டார் நீலகண்டன்.

மஹதன் கோபத்தைத் தன் மகளிடம் காட்டியுள்ளான் என்று தான் யோசித்தார்.

"எதாவது கோபமாக பேசிட்டானா முகி?"

"இல்லை அப்பா. ஆனால் அவர் தன்னோட அப்பாவுக்காக பேசினார்"

என்று செல்பேசியில் மஹதன் பேசியவற்றைக் கூறினாள்.

"மஹதன் ஏதோ தனியாக பிஸினஸ் பண்றான். அவன் மூர்த்தி கூட இல்லைன்னு நினைச்சுட்டு இருந்தேன். ஆனால் மூர்த்திக்கு நிழலாக இருந்துக்கிட்டு இருக்கான்னு இப்போ தான் தெரியுது. நான் பிஸினஸை வச்சு பிளாக் மெயில் பண்ணினால் அவன் அதைவிட நம்மளை பிளாக் மெயில் பண்றான்" என்று கோபத்தில் பல்லைக் கடித்தார்.

"நாம விஷயத்தை ரொம்ப கிரிட்டிக்கல் ஆக்கிட்டோம் அப்பா" என முற்றிலும் நம்பிக்கை உடைந்த குரலில் கூறினாள் முக்தா.

"அப்படி இல்லை முகி" என்று மகளைத் தேற்ற முயன்றார் நீலகண்டன்.

"அப்படித்தான் நடந்துருக்கு அப்பா. மஹதனோட பேசியதில் எனக்கு எல்லாமே புரிஞ்சிருச்சுப்பா. கட்டாயப்படுத்தினாலும் கூட என்னை அவன் கல்யாணம் பண்ணிக்க மாட்டான். இத்தோடு எல்லாம் முடியட்டும் அப்பா" என்று அறைக்குள் போய் விட்டாள் முக்தா.

எல்லாரும் எல்லா நேரமும் ஒரே மாதிரியாக இருக்க மாட்டார்கள் தானே! அதுபோல, முக்தாவிற்கு ஞானோதயம் வந்திருக்கலாமே! தன்னிலை உணர்ந்து விட்டாள் போல! அப்படியானால் நிம்மதி தான், இல்லையென்றால் கஷ்டம்.

மகள் கூறியதை மூளைக்குள் செலுத்துவதற்கே நீலகண்டனுக்கு நேரம் எடுத்தது.

பெண்ணின் ஒட்டுமொத்த சந்தோஷத்தையும் உருவி எடுத்து விட்டோமோ? உள்ளத்தை வாட்டியெடுத்தது.

திருமூர்த்தியின் நிலையில், இப்போது நீலகண்டன் இருக்கிறார்.

முக்தாவின் மனம் சுக்குநூறாக உடைந்து விட்டது.அது உடைந்ததில், தன் பங்கும் பெரும்பான்மையானது என்று உணர்ந்து கொண்டார்.

மகள் முழுமையாக மனதளவில் சரியாக வேண்டும் என்பதே அவரது தற்போதைய விருப்பம்.

விரக்தியின் உச்சக்கட்டத்தில், ஒரு சில நேரங்களில் வருவது புன்னகை தானே!

முக்தாவின் இதழ்கள் விரக்திச் சிரிப்பை உதிர்த்துக் கொண்டிருந்தது.

ஏமாற்றம் தரும் வலிகளுக்கு வீரியம் அதிகம் தானே?

அதையும் தனக்குள்ளேயே வைத்துக் கொண்டாள் முக்தா.

இனி வரும் காலங்கள் அவளுக்கு வாழ்வில் உதயத்தைக் கொடுக்கட்டும்.

தான் செய்ததை சரி பண்ண நினைத்த நீலகண்டன், நண்பனுக்குக் கால் செய்தார்.

உறக்கம் சற்றே கலைந்து போயிருந்த திருமூர்த்தி கால் வருவதைப் பார்த்து,
'மறுபடியுமா?' என்று அட்டெண்ட் செய்தார்.

"மூர்த்தி" என்றழைத்த குரலைக் கேட்டு திகைத்தார்.

"என்னாச்சு நீலகண்டா?"

"ஒன்னும் இல்லை மூர்த்தி. நான் உன் கிட்ட பார்ட்னர்ஷிப் பத்தி சொன்னேன்ல. அதை கேன்சல் பண்ண வேண்டாம். எப்போதும் போலவே நாம பார்ட்னர்ஷிப்பில் இருக்கலாம்" என்றார்.

தயக்கம் களைந்து,
"உண்மையாகவா நீலகண்டா?" என்று வினவினார்.

"ஆமாம் மூர்த்தி. எல்லாத்துக்கும் உங்கிட்ட மன்னிப்புக் கேட்டுக்கிறேன்" எனவும்,

உடனே நெகிழாமல், இனிமேல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று பார்த்துப் பார்த்து பேச ஆரம்பித்தார் திருமூர்த்தி. ஒரு தடவை பெற்ற அனுபவம் பல பாடங்களுக்கு சமம் அல்லவா!

"மன்னிப்பு வேண்டாம் நீலகண்டா. நீ டிசிஷனை மாத்திக்கிட்டதே போதும்" என்று பட்டும் படாமல் பேசினார்.

அதற்குப் பிறகு இருவரும் கல்யாண விஷயத்தை தவிர்த்து மற்ற பொதுவான விஷயங்களைப் பேசி விட்டு, அழைப்பைத் துண்டித்தனர்.

ஒரு புத்துணர்வு வந்தது போல, அறையை விட்டு வெளியேறிய கணவரைப் பார்த்து யோசனையில் ஆழ்ந்தார் கௌசல்யா.

அவரைப் புன்னகையுடன் ஏறிட்டு நீலகண்டனின் மறுமொழியைக் கூறினார் திருமூர்த்தி.

கொசல்யாவிற்கு உடனே தோன்றியது மஹதனைப் பற்றித் தான்!

தந்தைக்குப் பக்க பலமாக நிழலுருவாக இருப்பேன் என்பதை காப்பாற்றியிருக்கிறான்.

"ஸ்ட்ராங் ஆக காஃபி கொண்டு வா கௌசி" என்று கம்பீர குரலில் கூறினார்.

கௌசல்யா காஃபி கலக்கச் சென்று விட்டார்.

சுற்றிப் பார்க்கத் துடித்த மனதுடன் நின்றிருந்த மௌனாவைக் கிஷான் எதிர் கொண்டான்.

"குட் மார்னிங் சார்" என்று அவனைப் பார்த்ததுமே வணக்கம் செலுத்தினாள்.

"குட் மார்னிங் மௌனா. ஹோட்டலை சுற்றிப் பார்த்துட்டு வரனும்னு தோணுது போல?" என்று விழி இடுங்க கேட்டான் கிஷான்.

கண்கள் காட்டிக் கொடுத்ததை இதழ்கள் கொண்டு சரி செய்ய முயன்றாள்.

"அதெல்லாம் இல்லை சா.. ர்" என்க,

"பரவாயில்லை போயிட்டு வாங்க. ஆனால் சீக்கிரம் வந்துடுங்க" என்று கூறிவிட்டு தன் அலுவலக அறைக்குள் அவன் நுழைந்ததும், கொடுத்த நேரத்தை வீணடிக்கப் பிடிக்காமல், வேகமாக விடுதியின் உள்ளே சென்றாள் மௌனா.

அறைகள் அவ்வளவையும் அளவிட்டது அவளுடைய விழிகள். உள்ளே செல்லக் கூடாது என்று வெளியே இருந்து ஒவ்வொரு அறையின் முன்னும் இருந்த வேலைப்பாடுகள், அலங்காரப் பொருட்களைப் பார்வையிட்டாள்.

பிறகு, சத்தமில்லாமல் வந்த தடம் தெரியாமல், தன் இருப்பிடத்திற்கு வந்தாள்.

மஹதனின் தங்கும் விடுதியில் முக்தாவுடனான தனக்கு நேர்ந்த முதல் நாளைய அனுபவத்தை எண்ணிப் பார்த்துக் கொண்டது மனம்.

'லீவ் இட் மௌனா! கடந்த காலம் அது' என்று தனக்குள் உத்வேகத்தை வரவழைத்துக் கொண்டு வேலையைத் தொடங்கினாள்.

கிஷானும் அவளது வேலையையும், அணுகுமுறையையும் கண்காணித்துக் கொண்டு தான் இருக்கிறான்.

பெர்ஃபெக்ட் என்று சொல்ல முடியாவிட்டாலும், ஓரளவிற்கு தன்னுடைய முழுமையான பங்களிப்பை வேலையில் காட்டினாள்.

இரண்டு முறையும் வேலை கிடைத்ததற்கு அகதாவை வெளியே அழைத்துச் சென்று, உணவு வாங்கிக் கொடுத்து உபசரிக்கவில்லை. அதனால் மாலை வேலை முடிந்ததும் அவளுடன் வெளியே செல்ல திட்டமிட்டிருந்தாள் மௌனா.

மடமடவென்று வேலைகள் முடிந்து விடுதியில் இருந்து பணியாளர்கள் வெளியேறினர். அவர்களுடன் அன்றைய நாட்குறிப்பை சமர்ப்பித்து விட்டு மௌனாவும் வெளியேறி வீட்டை அடைந்தாள்.

"குட் ஈவ்னிங் மௌனா" என்று மலர்ந்த முகத்துடன் வரவேற்ற தோழியைக் ஓடிப் போய்க் கட்டிக் கொண்டாள் மௌனா.

"அகி! இன்னைக்கு வொர்க் சூப்பராக இருந்துச்சு. ஒரு பிரச்சினையும் இல்லாமல், நிம்மதியாக வேலை பார்த்தேன்" என்று அவள் கூறவும்,

"இதுவே உனக்கு நிலைக்கனும் மௌனா" என்று மனதார வாழ்த்தினாள்.

"கண்டிப்பாக நிலைக்கும். இப்போ விஷயம் அது இல்லை அகி. நீ நாளைக்கு ஈவ்னிங் என் கூட வெளியே வரனும்" என்று ஆணையிடுவது போல கூறினாள் மௌனா.

"ஏன் திடீர்னு?"

"எனக்கு வேலைக் கிடைச்சதுக்கு இன்னும் உனக்கு நான் ட்ரீட் கொடுக்கவே இல்லையே அகி? அதுக்குத் தான்" என்றாள்.

"இப்போ இது தேவையா மௌனா? உன் கிட்ட இருக்கிற பணத்தை முதலில் வீட்டுக்கு அனுப்பு. என்னை அப்பறம் பார்த்துக்கலாம்" என்று கூறினாள்.

"அகி! ப்ளீஸ்… வீட்டுக்கு முதல் மாச சம்பளத்தை அனுப்பிடுவேன். உனக்கு நான் எதுவுமே பண்ணியது இல்லை. அதனால் ட்ரீட் கண்டிப்பாக நீ அட்டெண்ட் பண்ணனும்" என்று உத்தரவிட்டாள் மௌனா.

அதற்குப் பிறகு அகதாவின் மறுப்பு அங்கு வேலைக்கு ஆகவில்லை.

"அண்ணா பேசினாரா அகி?" நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தப் பேச்சை எடுக்கிறாள் மௌனா.

காது கேளாதவள் போல அமர்ந்திருந்தாள் தோழி.

"ப்ச் அகி" என்று அவளைத் தன்பால் திருப்பினாள்.

"என்ன மௌனா?"

"உங்கிட்ட தான கேட்கிறேன்?"

"ஆமாம்.அவர் கால் பண்ணலை போதுமா?" என்று அணைத்து வைத்திருந்த தொலைக்காட்சியை வெறித்தாள் அகதா.

"வா சாப்பிடலாம்"

மேலும் மௌனா இதைப் பற்றி வினவினால் தன்னால் பதிலளிக்க முடியுமா? என்பதாலேயே சாப்பாட்டில் பேச்சு போயிற்று.

"சரி"

மௌனாவும் தோழியை தூண்டித் துருவாமல், எழுந்து சென்றாள்.

பிரம்மாண்டமான மால் ஒன்றிற்கு சென்றிருந்தனர் மௌனாவும், அகதாவும்.

அங்கே அகதாவிற்குப் பிடித்தவற்றை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று சுற்றிக் கொண்டிருந்தாள் மௌனா.

அவளுடன் அமைதியாக நடை போட்டாள் அகதா.

ஒரு கட்டத்தில் எதேச்சையாக முக்தாவை எதிர் கொண்டனர் இருவரும்.

அகதாவின் கையை இறுகப் பிடித்துக் கொண்டாள் மௌனா.

முக்தாவையும், மௌனாவின் செயலையும் ஒரு சேர அறிந்து கொண்ட அகதா, தங்கள் எதிரிலிருப்பது முக்தா என்பதை அறிந்து கொண்டாள் அகதா.

மருட்சியான பார்வையில் தன்னைப் பார்த்துக் கொண்டு , அருகில் நின்றிருப்பவளின் கரத்தைப் பற்றிப் பிடித்துக் கொண்டு இருந்த மௌனாவை வெற்றுப் பார்வை பார்த்தாள் முக்தா.

திடீரென்று தான் முன்னால் வந்து நிற்கவும் அவளுக்குள் ஏற்பட்ட பதட்டம் தான் இவற்றிற்கு காரணம்.

"இவங்க தான் முக்தாவா?" என்று கேட்பது போல பார்வைப் பரிமாற்றம் செய்தாள் அகதா.

"ஆமாம்" என தலையசைத்தாள் மௌனா.

"ஹாய் மௌனா" என்று பேருக்குப் புன்னகை புரிந்தாள் முக்தா.

"ஹா.. ய் மேடம்" என்று திணறியவளிடம்,

"பதட்டப்படாத.இனிமேல் உன்னைத் தொந்தரவு செய்ய மாட்டேன்" என்று உறுதியாக கூறியவளை விழி விரித்துப் பார்த்தாள் மௌனா.

"உண்மையைத் தான் சொன்னேன். பை" என்று அவர்களைத் தாண்டிச் சென்றாள் முக்தா.

"அகி!! என்னைக் கொஞ்சம் கூட்டிட்டுப் போய் சேரில் உட்கார வை" என்று கூறவும்,

அவளைத் தாங்கிப் பிடித்து அங்கே இருந்த நாற்காலியில் அமர வைத்தாள் அகதா.

தண்ணீர் பாட்டிலையும் கொடுத்தாள்.

"அகி! இப்போ என்ன நடந்தது? முக்தா மேடமா அவங்க?"

"ஆமா மௌனா. எனக்குமே ஆச்சரியம் தான். நீ அவங்களைப் பத்தி சொன்னதுக்கும், இப்போ நடந்துக்கிட்டதுக்கும் சம்பந்தமே இல்லையே? ஒருவேளை மனசு மாறிட்டாங்களோ?" என்று சந்தேகமாக கேட்டாள்.

"இருக்கலாம் அகி. அது அவங்களுக்குத் தான் நல்லது. நிம்மதியாக இருக்கட்டும்"

முக்தாவின் வாழ்க்கையில் இனி நல்லது நிகழட்டும் என பிரார்த்தித்துக் கொண்டாள் மௌனா.

"உனக்குப் பிடிச்ச திங்க்ஸ் எல்லாம் வாங்கியாச்சு. அப்பறம் என்ன சாப்பிடலாம்?" என்று உணவு உண்பதற்காக வந்தார்கள்.

"நான்வெஜ் வேணுமா? வெஜ் வேணுமா அகி?" என்று கேட்டாள்.

"வெஜ் போதும் மௌனா" என சைவ உணவுகளைப் பார்வையிட்டாள் அகதா.

"அப்போ பன்னீர் பட்டர் மசாலா, நாண். இதை ட்ரை பண்ணு. உன்னோட ஃபேவரைட்"

முதலில் அதை ஆர்டர் செய்தனர்.

மௌனாவிற்கான உணவையும் தருவித்தனர்.

"டெஸர்ட் என்ன ஆர்டர் பண்ணலாம் அகி?"

"சிஸிலிங் ப்ரௌனி" என்றாள்.

"எனக்குச் சாக்லேட் ஐஸ்கிரீம்" என்று ஆர்டர் செய்து கொண்டனர்.

கிளம்பத் தயாராகும் போது, மற்றுமொரு அதிர்ச்சியை எதிர் கொண்டனர் மௌனாவும், அகதாவும்.

இப்போது மௌனா மயங்கி விழுந்தாலும், ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஆனால், எதிரே நின்றிருந்தவனோ இவர்களைப் பாராமல், ஒதுங்கிச் சென்று விட்டான்.

ஆணியடித்தாற் போன்று நின்று விட்டாள் மௌனா.

- தொடரும்
 

Shalini shalu

Moderator
நங்கையின் மறவோன் 11

"இப்போ நம்மளை தாண்டிப் போனாரோ அகி? அவர் தான் மஹதன்" என்று வியப்பும், திகைப்பும் விலகாமல் கூறினாள் மௌனா.

"ஓஹோ! உன்னைப் பார்த்தும், பேசாமல் போறாரே?" என்று வினவினாள் அகதா.

"அதுதான் எனக்கும் புரியல அகி.கொஞ்ச நேரம் முன்னாடி முக்தாவைப் பார்த்தோமே? இரண்டு பேரும் ஒன்றாக வந்து இருப்பாங்க போல. அதனால் தான் என்னைத் தொந்தரவு பண்ண மாட்டேன்னு முக்தா சொல்லிட்டுப் போனாங்க போல" என்று காரணத்தைக் கண்டறிந்து கொண்டாள் மௌனா.

ஆனால் அவள் அனுமானித்தது தவறு. இவர்களுக்கு நிகழ்ந்த சந்திப்பு எதேச்சையானது என்பது அவளுக்குத் தெரியாது.

அவர்கள் வெளியேறியதும், மஹதன் மாலின் உரிமையாளரின் அறைக்குப் போவதற்காக நடந்தான்.

அந்த சமயம் முக்தாவைச் சந்திப்பான் என்று எதிர்பார்க்கவில்லை.

தனது ஏக்கத்தை மறைத்துக் கொண்டு,
"ஹாய் மஹத்!" என்று அவனைப் பார்த்துப் புன்னகைக்க முயற்சிகள் மேற்கொண்டாள்.

"ஹாய் முக்தா. ஹவ் ஆர் யூ?" என்று இயல்பாக விசாரித்தான் மஹதன்.

"ஃபைன் மஹத் " என்று இப்போது நிஜமாகவே புன்னகைத்தாள்.

"டேக் கேர்" என்று கடந்து சென்றான்.

அவனைப் பார்த்ததும் மன்னிப்புக் கேட்க துடித்துக் கொண்டிருந்தாள் முக்தா.

அதற்குள் அவன் இரண்டு வார்த்தைகளை மொழிந்து விட்டு விடைபெற்று விட்டதால், பின்னாலேயே செல்ல முக்தாவிற்குச் சரியாகப் படவில்லை.

அதனால் கடந்து சென்று விட்டாள் அனைத்தையும்!!

மௌனாவையும், முக்தாவையும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் பார்த்தான் அல்லவா? மஹதனுக்கு முக்தாவின் முகத்தில் இருந்ததைப் படிக்க முடிந்திருந்தது.

"இவ என்ன ஒரே நாளில் இப்படி மாறிட்டா?" என்ற யோசனையும்,

"மௌனாவுக்கு நம்மளைப் பார்த்து கொஞ்சம் பயம் தான் போல?" என்றும் தோன்றியது.

வீட்டை அடைந்த நேரத்தில் , மௌனாவின் செல்பேசியில் அழைப்பு வந்து கொண்டிருந்தது.

"அப்பா தான் கால் பண்றாங்க அகி" என்று அழைப்பை ஏற்றாள்.

"அப்பா!" என்று மகள் குதூகலமாக அழைத்ததும் தான் உயிர் வந்தது போலிருந்தது சிவமணிக்கு.

"மௌனா! என்னம்மா அப்பாவுக்கு அடிக்கடி கால் பண்ணச் சொன்னேன்ல?" என்று குறைபட்டார்.

"சாரி அப்பா. வேலை அதிகம் "

இவளது மனப் போராட்டங்களை தாயும், தந்தையும் அறிந்தால், அங்கே நிம்மதியாக இருக்க மாட்டார்கள் என்று பொய் கூறினாள்.

"பரவாயில்லைடா.நீ நல்லா இருக்க தான?" என்று மகளின் நலனைக் கேட்டார்.

"நல்லா இருக்கேன் அப்பா.உங்களுக்கும் , அம்மாவுக்கும் கிஃப்ட்ஸ் வாங்கி அனுப்பப் போறேன்.என்னென்ன வேணும்னு மறக்காமல் லிஸ்ட் அனுப்புங்க" என்றதும்,

"எதுக்குடா சம்பளத்தை வீணாக்குற? எங்களுக்கு எதுவும் வேண்டாம். நீ சேமித்து வை" என்று மறுத்தார் சிவமணி.

"இப்படித்தான் சொல்வீங்கன்னு எனக்கு அப்போதே தெரியும் ப்பா. ஆனால் , உங்களுக்கும், அப்பாவுக்கும் என் சுய சம்பாத்தியத்தில் எதாவது வாங்கிக் கொடுக்கனும்னு ஆசை இருக்கும் தான?" என்று கெஞ்சி கேட்டுக் கொண்டதால், அவர் எப்படியோ சம்மதித்து விட்டார்.

"அம்மா கிட்ட ஃபோன் கொடுங்க அப்பா" என்றதும் அன்னபூரணியிடம் மொபைல் வழங்கப்பட்டது.

"அம்மா! எப்படி இருக்கீங்க?" என்ற மௌனா கேட்டதும்,

"நான் நல்லா இருக்கேன்டா.நீ போன தடவை அப்பா கிட்ட பேசினதே உனக்கு ஏதோ மனசளவுல கஷ்டமாகி இருக்கு. என்னாச்சுன்னு தெரிலன்னு புலம்பினார்.எதுவும் பிரச்சினையாடா?" என்று ஆறுதலாக கேட்டார் அன்னபூரணி.

"அச்சோ! இல்லை அம்மா. அப்போவே சொன்னேன். உங்களைப் பிரிஞ்சு இருக்கிறது தான் எனக்குக் கஷ்டம். இனிமேல் நான் அடிக்கடி கால் பண்ணிப் பேசிடுவேனே! சோ, யாரும் ஃபீல் பண்ண வேண்டாம். பத்து நாட்கள் கழிச்சு ஊருக்கு வர்றேன் அம்மா"

"முதல் மாசமே லீவ் கொடுப்பாங்களான்னு தெரில. இருந்தாலும் கேட்டுப் பார் மௌனா. ஒரு மூனு நாட்கள் லீவ் எடுத்து தங்குற மாதிரி வா"

" கண்டிப்பாக கேட்டுப் பார்க்கிறேன் அம்மா.அப்பா கிட்ட ஒரு விஷயம் சொல்லியிருக்கேன். மறக்காமல் பண்ணிடுங்க" என்று பேசி விட்டு வைத்தாள் மௌனா.

"சரி டா" என்று ஃபோனை வைத்தார்.

"ஈவ்னிங் சாப்பிட்டதால், எனக்கு டின்னர் வேண்டாம் அகி" என்றாள் தோழியிடம்.

"எனக்கும் தான் வயிறு ஃபுல் மௌனா. பால் மட்டும் குடிப்போம்" என்று தனது மடிக்கணினியில் வேலையைப் பார்க்க,

மௌனாவோ , முக்தாவின் இயல்பு மாறிய நடவடிக்கையும், மஹதனுடைய கண்டு கொள்ளாத தனமும் வித்தியாசமாகத் தெரிந்ததை யோசித்துப் பார்த்தாள்.

இருவரும் ஒன்றாகத் தான் மாலிற்கு வந்தார்கள் என்றால், தனித்தனியாக ஏன் செல்ல வேண்டும்?

ஒருவேளை இவன் காரை நிறுத்தி விட்டு வர தாமதம் ஆகிறது இருக்குமோ? அப்படியே இருந்தாலும், முக்தாவின் இறுக்கமான, வெறுமையான பார்வை எதையோ உணர்த்தியதே?

ஒரு வித எகத்தாளமான, அலட்சியமான பார்வையைத் தான் முக்தாவிடம் இருந்து எதிர்பார்த்தாள் மௌனா.

அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட முக்தாவை இன்று பார்த்திருக்கிறாள்.

இதெல்லாம் மௌனாவிற்குத் தேவையில்லாதவை தான். ஆனாலும், தன்னால் இருவருக்கும் ஏற்கனவே பிரச்சினை ஏற்பட்டிருந்த நிலையில், தான் அங்கிருந்து வெளியேறிய பிறகு, எல்லாம் சரியாகி இருக்கும் என்று தான் மௌனா எண்ணியிருந்தாள்.

தலைகீழாக மாறிப் போனது எதனால் என்று மௌனாவிற்கும் புரியவில்லை.

"மௌனா! எனக்கு வீட்டில் இருந்து கால் வருது. பேசி முடிக்க லேட் ஆகும். நீ பால் காய்ச்சி வச்சிட்டு, குடிச்சிடு" என்றாள் அகதா.

அகதா செல்பேசியில் ஐக்கியமாகி விட்டாள்.

அவள் வரும் வரை தொலைக்காட்சியில் , படம் பார்த்துக் கொண்டே பாலைக் குடித்து முடித்தாள் மௌனா.

அடுத்த இருக்கையில் அமர்ந்த அகதா,
"வீட்டில் எப்போ வர்றேன்னு கேட்டாங்க? என்ன சொல்றது? வெறுப்பா இருக்கு மௌனா" என்று அயற்சியுடன் கூறினாள்.

"அண்ணா ஊருக்குக் கிளம்பலையா?"

"இல்லை.அவர் அங்கே தான் இருக்கார். என்னை வர சொல்றதே அவர் அங்கே இருக்கிறதால் தான். நானும் போக வேண்டாம்னு தள்ளிப் போட்டுட்டு இருக்கேன் மௌனா"

"எதுக்கு திடீர்னு அண்ணாவும் வந்து, உன்னையும் வர சொல்றார்?"

"பணம் பத்தாம போயிருக்கும். அதனால் என்னை நேரில் வந்து எவ்ளோ பணம் இருக்கோ அதை வாங்கிக்க நினைக்கிறார் போல" என்று அட்டையாக கூறியவளின் வேதனைப் படிந்த முகத்தை ஒரு பெருமூச்சுடன் ஏறிட்டாள் மௌனா.

"அப்போ நீ கிளம்பறியா அகி?" என்று கேட்டாள்.

"ம்ஹ்ம்! போகனும் மௌனா. ஆனால் உனக்கே நான் என்ன நிலைமையில் இருக்கேன்னு தெரியுமே! போய்ட்டு உடனே வந்துடறேன்" என்று சுரத்தே இல்லாமல் கூறியவளிடம்,

"எப்போ கிளம்பற?"

"நாளைக்கு லீவ் எடுத்துட்டு போகனும். நைட் வர பாக்கிறேன். இல்லைன்னா விடியற்காலையில் வந்துட்றேன். நீ தனியாக நாளைக்கு மேனேஜ் செய்ய முடியும் தான?"

"முடியும் அகி.நீ பத்திரமாகப் போய்ட்டு வா. உனக்காக வெய்ட் பண்ணிட்டு இருப்பேன்" என்று கூளியவளுக்குத் தோழியின் நலன் மீது தான் கவனம் இருந்தது.

கணவன் என்ற பெயரில் பல தடவைகள் அகதாவின் மனதைச் சுக்குநூறாக உடைத்திருந்தான் தீபக்.

இன்னும் இருவருக்கும் குழந்தை இல்லாததால், அதுவும் உடன் சேர்ந்து கொண்டது அவனது மிருகத்தனமான செயல்களில்.

அதனால் தான் வேலையை வேறு ஊருக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு, வீடு எடுத்து தங்கியிருக்கிறாள்.

தீபக்கும் வேறு ஊரில் வேலை செய்வதால், இதை அவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அகதா ஊருக்கு வரும் போதெல்லாம் குத்திக் காட்டிப் பேசுவதையும் தவிர்க்க மாட்டான்.

என்ன தான் நன்றாகப் படித்தவள் , மென் பொறியாளர் என்றாலும், அவளுக்கு இருக்கும் ஒரே உறவு என்றால் அகதாவின் கணவன் மற்றும் மாமியார் வீடு தான். அதனாலேயே அவள் அங்கு எல்லாவற்றையும் சகித்துக் கொள்ள வேண்டியதாயிற்று.

மறுநாள் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று விடுப்பு எடுத்துக் கொண்டு, தன் ஊருக்குச் செல்ல ஆயத்தமானாள் அகதா.

"பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் நான் கூட வர்றேன் அகி. பர்மிஷன் எடுத்துட்டேன். உன்னைப் பஸ் ஏற்றி விட்டுட்டு வொர்க் போய்க்கிறேன்"

அகதாவோ, "சரி. நான் லீவ் சொல்லிட்டு வர்றேன்" என அலுவலகம் விரைந்தாள்.

மௌனாவின் ஆற்றாமை எல்லாம் அகதாவின் வாழ்வை நினைத்து தான். தீபக்கின் மனம் மாற வேண்டும் என ஒவ்வொரு முறையும் தோழிக்காக வேண்டிக் கொள்வாள்.

விடுப்பு எடுத்துக் கொண்டு வந்த தோழியிடம்,
"ஆட்டோ அண்ணாவுக்குக் கால் பண்றேன் அகி. கொஞ்ச நேரம் உட்கார்" என கால் செய்து ஆட்டோவை வரவழைத்தாள் மௌனா.

ஆட்டோவில் பேருந்து நிலையத்தை அடைந்தனர்.

"பத்திரமாகப் போய்ட்டு வா அகி" என்று வழியனுப்பி வைத்தாள் மௌனா.

தனியே வீட்டிற்கு வந்தவள், தனக்குக் 'குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டே இரு' என்று அகதாவிற்கு உத்தரவிட்டிருந்தாள்.

"நான் மறுபடியும் வெளிநாட்டுக்கே போயிடறேன் அப்பா"

முக்தாவின் முகத்தை ஆராய்ந்து கொண்டே,

"ஏன் முகி? மஹதனை மறக்க முடியலையா?அவனுக்காக இந்த அப்பாவை விட்டுப் போகப் போறியா?" என்று வேதனையுடன் கேட்டார் மகளிடம்.

தன்னை விட அந்த மஹதன் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்தவனா? என்று வருத்தம் ஏற்பட்டது நீலகண்டனுக்கு.

"இல்லை அப்பா. அவனை நான் கண்டிப்பாக மறந்துருவேன். ஆனால் எனக்கான அடையாளத்தைத் தேடிப் போறேன் அப்பா. அந்த மௌனா மாதிரி, நானும் என்னோட படிப்பு மூலமாக ஒரு வேலையைத் தேடப் போறேன். நான் உழைச்சு சம்பாதிக்கப் போகிற பணத்தை உங்களுக்கு அனுப்பி வைக்கனும்னு ஆசையாக இருக்கு அப்பா"

நீலகண்டன், "அந்தப் பொண்ணு உன்னை அப்படி, இப்படி சொல்லி அசிங்கப்படுத்திட்டாளா?" என்று வினவினார்.

"மௌனா ரொம்ப நல்ல பொண்ணு அப்பா. அவளுக்கும், மஹதனுக்கும் இடையில் எதுவுமே இல்லை. நான் தான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன். இப்போ நான் கேட்கிறது எனக்காக அப்பா?"

"நீ வேலைக்குப் போய் தான் என்னைப் பெருமைப்படுத்தனும்னு இல்லை முகி" என்றார் நீலகண்டன்.

"அப்பா பணக்காரராகவோ, ஏழையாகவோ இருந்தாலும், குழந்தைங்களுக்கு கஷ்டம் தெரியாமல் வளர்க்கனும்னு தான் நினைப்பாங்க. நீங்களும் அப்படித்தான் நினைக்கிறீங்க.ஆனால் இப்போ நான் கேட்கிறது பிடிவாதத்தால் வந்தது இல்லை அப்பா. புரிஞ்சுக்கோங்க"

"அதுக்கு வெளிநாடு போகனுமா முகி? இங்கேயே வேலை பார்க்கலாமே?"

மகளைப் பிரிவதில் சிறிதும் அவருக்கு விருப்பமில்லை.

"இங்கே இருந்தா நான் உங்க பொண்ணுன்னு எல்லாருக்கும் தெரியுமே? ஒரு இரண்டு வருஷம் அப்பா? இடையில் நான் இங்கே வந்துருவேன். எனக்கு இருக்கிற உறவு நீங்க மட்டும் தானே அப்பா?"

தாவிச் சென்று தந்தையைக் கட்டிக் கொண்டாள் முக்தா.

மகளுக்குத் தன் மேல் பாசம் இருக்கிறது என்று நீலகண்டனுக்குத் தெரியும் . ஆனால், அவர் தான் முக்தாவிற்குச் சகலம் என்பதை இப்போது தெளிவாகப் புரிந்து கொண்டார்.

இது போதாதா தந்தைக்கு? நெஞ்சம் உருகிப் போனவர், முக்தாவின் தலையை வருடிக் கொடுத்தார்.

கணங்கள் கடந்ததும்,
மகளிடம்,

"மஹதன் கிடைக்கலன்னு சூசைட் அட்டெம்ப்ட் பண்ணிடுவியோன்னு தினமும் துடிச்சிட்டு இருந்தேன் முகி. இப்போ என் பொண்ணு எவ்ளோ தைரியமாக , என் முகத்துக்கு நேராக பேசுறான்னு பெருமையாக இருக்கு. நீ ஃபாரினுக்குப் போய்ட்டு வாடா. அப்பா எப்பவும் உன் கூட இருப்பேன்"

வழி மாறாமல், தெளிவாக முடிவெடுத்த முக்தாவை நினைத்துப் பெருமிதம் கொண்டார் நீலகண்டன். அவள் வெளிநாடு செல்வதற்கான ஏற்பாடுகளை ஆரம்பித்தார்.

தன் மகள் கூடிய விரைவில் வெளிநாடு செல்ல இருப்பதால், அலுவலகப் பணிகளை தனக்காக சிறிது நாட்கள் பார்த்துக் கொள்ளுமாறு திருமூர்த்தியிடம் கேட்டுக் கொண்டார் நீலகண்டன்.

அதன் மூலம், கொசல்யாவிற்கும், மஹதனுக்கும் விஷயம் தெரிவிக்கப்பட்டது.

"எதனால் முக்தா இப்படி முடிவெடுத்து இருப்பா?"

கௌசல்யா தான் கேட்டாரே தவிர, மஹதன் எதையும் கண்டு கொள்ளவில்லை. அது அவளது
தனிப்பட்ட முடிவு என ஒதுக்கி விட்டான்.

- தொடரும்
 

Shalini shalu

Moderator
நங்கையின் மறவோன் 12

"உன் பொண்ணுக்கு என்ன ஆச்சு நீலகண்டா? மறுபடியும் ஃபாரீன் போகப் போவதாக சொல்ற?" என்று திருமூர்த்தி தான் மனம் கேளாமல் விசாரித்தார்.

"முக்தாவுக்கு எதுவும் ஆகலை மூர்த்தி. இப்போ தான் மனசு தெளிஞ்சிருக்கா.அங்கே போய் வேலை பார்க்கப் போறா. வர்றதுக்கு இரண்டு வருஷம் ஆகும்" என்று விளக்கினார் நீலகண்டன்.

அதிசயித்துப் போனார் திருமூர்த்தி.

"மஹதனைத் திருமணம் செய்ய வேண்டும்" என்று தினமும் மந்திரம் சொல்லிக் கொண்டிருந்தவளோ இப்போது மனம் மாறி விட்டாள், அத்தோடு தந்தையின் பணம் வேண்டாம், சொந்த சம்பாத்தியம் வேண்டும் என்று முடிவெடுத்திருப்பது இவையெல்லாம் சேர்ந்து வியப்பை அளித்தது அவருக்கு.

இதை மனைவியிடம் பகிர்ந்து கொண்டார்.

பிடிவாதம் பிடித்த போது, முக்தாவின் மேல் அதிருப்தி அடைந்த கௌசல்யா, இப்போது அவளது மனமாற்றத்தின் பிறகு, தட்டிக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தார்.

அதனால் யோசிக்காமல், முக்தாவிற்குக் கால் செய்து விட்டார்.

"ஹலோ முக்தா" என்ற கௌசல்யாவின் குரலைக் கேட்டதும், திகைத்து விட்டாள் முக்தா.

"ஹாய் ஆன்ட்டி" என்று பதிலளித்தாள்.

"நீ வெளிநாடு போகப் போறன்னு சொன்னாங்க. அதுக்கு முன்னாடி இங்கே உனக்கு ஒரு விருந்து மாதிரி கொடுக்கலாம்னு நினைக்கிறேன். ப்ளீஸ் அட்டெண்ட் பண்ணுவியா முக்தா?" என்றவரது கோரிக்கையை தவிர்க்க இயலாமல்,

"சரிங்க ஆன்ட்டி. கண்டிப்பாக வர்றேன்" என்று சம்மதித்தாள்.

மனதில் எதையும் வைத்துக் கொள்ளாமல், அவள் உடனே சரியென்று கூறியது அவருக்கு திருப்தியாக இருந்தது.

'ஊர் சென்று சேர்ந்து விட்டேன்' என்ற அகதாவின் குறுஞ்செய்தி கண்ணில் பட்டவுடன் தான் மௌனாவிற்கு ஆசுவாசமாக இருந்தது.

அலுவலகம் விரைந்தவளுக்கு தோழியின் நினைவாகவே இருந்தது.

அகதாவின் மீது தீபக் கை நீட்டியதில்லை தான். ஆனால் இப்போது என்ன சூழ்நிலை என்று தெரியாததால், விபரீதம் எதுவும் அவளுக்கு நேர்ந்து விடக் கூடாது என வேண்டிக் கொண்டாள் மௌனா.

சட்டென்று நெஞ்சு படபடப்பு ஏன் வருகிறது? என்று சுற்றும் முற்றும் பார்த்தவள் , எதிரில் பார்வையை வைத்தாள்.

காரணம் எதிரிலேயே வந்து கொண்டிருந்தது மஹதனின் உருவத்தில்.

அவள் வேலை செய்யும் விடுதி கிஷானுடையது என்றாலும், நண்பனைப் பார்க்கிறேன் பேர்வழி என மஹதனின் வருகை இவள் வரவிற்கு முன்பிருந்தே தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருந்திருக்கிறது.

இப்போதும் கிஷானைப் பார்க்க வந்தான் மஹதன்.

'இவரோட ஹோட்டலில் வேலைப் பார்த்தாக் கூட பயப்பட்றதுல ஒரு நியாயம் இருக்கு. வேற ஹோட்டலுக்கு வந்தாலும், துரத்திக்கிட்டே வர்றார்!'

"குட் மார்னிங் சார். ஹவ் கேன் ஐ ஹெல்ப் யூ?" என்று உபசரித்தாள் மௌனா.

"ம்ம்.கிஷானைப் பார்க்கனும்" எனவும்,

"ப்ளீஸ் வெய்ட் சார்" என்று நிதானத்தைக் கடைபிடித்துக் கொண்டே கிஷானுக்கு அழைத்தாள்.

அவளைப் பார்வையால் துளைத்து எடுக்காமல், செல்பேசியில் கவனம் பதித்தான்.

"ஹலோ சார். உங்களைப் பார்க்க மஹதன் சார் வந்திருக்கார்"

"ரூமுக்கு வர சொல்லுங்க மிஸ். மௌனா"

"கிஷான் சார் உங்களை அவரோட ரூமுக்கு வர சொல்றார். ஹேவ் அ குட் டே" என்று மலர்ந்த முகமாக அவனுக்கு விடையளித்தவளை கூர்ந்து நோக்கி விட்டே கடந்து சென்றான்.

'ஹார்ட் பீட் இப்போ தான் குறையுது' என கிடைத்த அந்நேரத்தில், தண்ணீர் பருகிக் கொண்டவள், கணினியில் பார்வையைப் பதித்தாள் மௌனா.

"வா மஹத்!" நாற்காலியை நண்பனுக்கு அருகிலேயே மாற்றிப் போட்டுக் கொண்டான் கிஷான்.

"ம்ம்.கிஷான் ! முக்தா வெளிநாட்டுக்குக் கிளம்பறா" என்றதும், ஷாக் அடித்தாற் போல, நிமிர்ந்தான்.

"என்ன சொல்ற மஹத்? ஏன் திடீர்னு?" என்று திடுக்கிட்டான் கிஷான்.

திருமூர்த்தி கூறியதை நண்பனிடம் சொன்னான் மஹதன்.

"அப்போ மனசு மாறிட்டாளா மஹத்?" எதிர்பார்ப்புடன் கேட்டான் கிஷான்.

"மனசு மாறினாளா என்று தெரியலை. ஆனால் அவளுக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக்கிற எண்ணம் இப்போ இல்லை" என்று தெளிவாக உரைத்தான்.

"அது போதும் மஹத். ஆனால் அவ ஃபாரீன் போறதை தடுக்க முடியாதா?"

"என்னால் எப்படி தடுக்க முடியும் கிஷான்? நான் எப்பவோ இதிலிருந்து விலகிட்டேன். முக்தாவோட தனிப்பட்ட விருப்பத்தில் என்னால் எதுவும் செய்ய முடியாது கிஷான்" என்று தீர்க்கமாக கூறியவனிடம்,

"அப்போ நான் தான் எதாவது பண்ணனுமா?" என்று சோர்வடைந்தான்.

"உன் லவ்வுக்கு நீ தான் ட்ரை பண்ணனும்டா" என மெலிதாக புன்னகைத்தான் மஹதன்.

"உன் லவ்வுக்கு நீ என்னப் பண்றன்னு பார்க்கத் தானே போறேன்" என்று நண்பனைக் கிண்டல் செய்தான் கிஷான்.

"என் லவ்?" புரியாமல் கேட்டான்.

"மிஸ்.மௌனா" பெயரைக் கூறியவனை முடிந்த வரை முறைத்துப் பார்த்தான் மஹதன்.

"ஏன்டா உனக்கு எண்ணமெல்லாம் இப்படிப் போகுது?"

"அடேய்! நீயா அதை ஒத்துக்கிற வரைக்கும் நான் இனிமேல் அவங்க பேச்சு எடுக்க மாட்டேன்" என்று கிஷான் சபதம் எடுத்தான்.

"இருந்தால் தானே ஒத்துக்கிறதுக்கு" சலித்துக் கொண்டான்.

"இல்லைன்னு சொல்லுவியோ?"

பேச்சால் கிடுக்குப் பிடி பிடித்தான் தோழன்.

"நீ தானே அன்னைக்கு சொன்ன,அவங்களாவது என்னை லவ் பண்றதாவதுன்னு? இப்போ என்னாச்சு?" என்று கேட்டான்.

"அவங்க லவ் பண்றது சந்தேகம் தான். ஆனால் நீ லவ் பண்ண மாட்டே என்று நான் சொல்லலையே? உனக்கு லவ் வந்துடுச்சு"

"ஓஹோ! நான் உன்னைப் பார்க்க வர்றேன்னு சொல்லிட்டு மௌனாவைப் பார்க்க வர்றேன்னு நினைக்கிறியா?"

நண்பன் தவறாக எண்ணி விட்டான் போல என்று கேட்டான் மஹதன்.

"இல்லையே! நீ என்னைப் பார்க்கத் தான் வர்ற. ஆனால் அவங்களையும் பார்க்கிற. உன்னைப் பத்தி எனக்குத் தெரியும் மஹத்"

கிஷான் நண்பனைப் பேச்சால் மடக்கினான்.

"அவளையும் பார்க்கிற - நோட் பண்ணிக்கோ. மௌனாவை மட்டும் பார்க்கலை" என்று தோளைக் குலுக்கிக் கொண்டான் மஹதன்.

"அவங்களை மட்டும் பார்க்கிற நாள், நேரம் எல்லாம் வரும் நண்பா! அது வரை காத்திருக்கிறேன்" என்று வெடித்துச் சிரித்தான் கிஷான்.

"ப்ச்! நீ இதையே பேசாதேடா" என மிரட்டினான்.

அவ்வப்போது ஒருவரைப் பார்த்தால் மட்டும் காதல் பெருக்கெடுத்திடுமோ? சிரித்துக் கொண்டான் மஹதன்.

மௌனாவைப் பற்றிய சிந்தனையை மேற்கொண்டுள்ளான் என எண்ணினான் கிஷான்.

இவற்றையெல்லாம் அறியாத மௌனாவோ , வேலையில் கண்ணும், கருத்துமாக இருந்தாள்.

எப்போதும் முடியும் நேரத்தைக் கணக்கிடாதவள், இன்றோ எப்போது வேலை முடித்துச் செல்வோம் என்றிருந்தாள்.

தோழியிடம் இருந்து குறுந்தகவல் வந்தாலும், அவள் வீடு வந்து சேரும் வரை பொறுமையின்றி தவித்தாள் மௌனா.

விடியற்காலையில் தான் வரப் போகிறாளோ? என்று ஐயம் வேறு.

கைக்கடிகாரத்தில் தான் கவனத்தைப் பதித்திருந்தாள். அதனால் மஹதனைக் கவனிக்கவில்லை.

மஹதன், "என்ன வொர்க் பண்ண சலிப்பாக இருக்கா?" என்று அழுத்தமாக கேட்டான்.

"இல்லை சா.. ர்! " என்று தடுமாறியவளிடம்,

"இது என்னோட ஹோட்டல் இல்ல. ஆனால் என் ஃப்ரண்ட் கிட்ட சொன்னால் இந்த வேலையும் உனக்குப் போயிடும். வீட்டுக்குப் போகிறதுக்கு ரொம்ப இன்ட்ரெஸ்ட் ஆக இருக்கியே!" என்று நக்கல் செய்தான்.

"சாரி சார். உங்களுக்குப் பதில் சொல்லனும்னு எனக்கு அவசியம் இல்லை. நீங்களும் என்னை இப்படி கேள்வி கேட்க ரைட்ஸ் கிடையாது. உங்க ஹோட்டலில் வொர்க் பண்ணும் போது என்ன நடந்துச்சுனு தெரியும் தான சார்? நானே ரிசைன் பண்ணினேன். இப்போதும் நான் அதே மௌனா தான்! கிஷான் சார் சொன்னால் மட்டுமே நான் வேலையை விட்டுப் போவேன். நீங்க உங்க ஃப்ரண்ட் கிட்ட போய் என்னைப் சந்திக்க கம்ப்ளைண்ட் செய்து வேலையை விட்டு துரத்துங்க" என்று அகதா எப்போது கிளம்புவாள்? என்று சேர்ந்திருந்தவள் இவனது வார்த்தைகளால் காயப்பட்டுப் போனாள்.

அதனால் தான் மௌனாவும் இப்படி அவனிடம் பொரிந்து தள்ளி விட்டாள்.

தன்னுடைய அலுவலக அறையிலிருந்து இதை கணிணியில் பார்த்துக் கொண்டிருந்தான் கிஷான்.

"என்கிட்ட வீராப்பாக பேசிட்டு, மௌனாகிட்ட அவ்ளோ நேரம் பேசிக்கிட்டு இருக்கான்" என்று நினைத்தான் .

ஆனால் மஹதனோ , தன்னை மீண்டும் மீண்டும் அவமானப்படுத்திப் பார்க்கும் இவளை மட்டும் அடக்க வழி தெரியாமல், கோபமாகி , அங்கிருந்து வெளியேறி விட்டான்.

செல்லும் வழியெல்லாம் மௌனாவின் மிடுக்கான பேச்சு அவனை இம்சித்தது. நண்பனுடைய தங்கும் விடுதியில் இருப்பவளை ஏறெடுத்தும் பார்க்காமல் இருப்பவன் இன்று அவளது பதட்டம் துணுக்குறச் செய்தது.

வேலை அவளுக்கு விரைவில் சகிப்புத் தட்டி விட்டதோ? என்று தான் வாயைக் கிளறினான்.

மறைமுகமாக அவன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்காமல், மூக்கை உடைத்து அனுப்பி விட்டாள்.

"உன்னை நான் லவ் பண்றேன்னு சொன்னால் காமெடியாகத் தான் இருக்கும். அதுக்கு உன் பதில் என்னவாக இருக்கும்னு தெரிஞ்சிக்க ஆர்வமாக இருக்கே!"

தான் நினைத்ததை நடத்திக் கொள்ள துணிந்தால் , விளைவுகளையும் எதிர்கொள்ள வேண்டும் தானே?

அதற்குத் தயாராகி விட்டுத் தான் அந்த விபரீதத்தை நடத்த முடிவெடுத்தான் மஹதன்.

"அகி! எல்லாம் ஓகே தான?"

வேலை முடிந்து வீடு வந்து சேர்ந்தவள், அழைத்தவுடன் அகதா காலை அட்டெண்ட் செய்து பேசி விட்டாள்.

"ஓகே தான் மௌனா. லேட் நைட் வர வாய்ப்பு இல்லை. விடியற்காலையில் வந்துடுவேன்.தீபக் கிளம்பியாச்சு. தூங்கி ரெஸ்ட் எடுத்துட்டு வர்றேன்"

அகதாவின் குரல் பிசிறடித்தது.

என்னவோ நடந்திருக்கிறது! அதை வந்தவுடன் கேட்டுக் கொள்வோம் என்று அன்றிரவு வீட்டில் தனியே உறங்கினாள் மௌனா.

அகதா இங்கே வந்ததும், அடுத்த மூன்று நாட்கள் அவளுடன் தன் பெற்றோரைப் பார்க்கச் செல்ல வேண்டும் என்று திட்டம் போட்டிருக்கிறாள் மௌனா.

இன்னும் சம்பளம் வரவில்லை தான். அதற்காக தன்னை நினைத்து கவலை கொள்ளும் தாய், தந்தையைப் பார்க்க இவளுக்கும் ஏக்கம் வந்தது.

தன்னிடம் இருக்கும் அளவான சேமிப்புப் பணம், போய், வர சரியாக இருக்கும். அதற்குப் பிறகு அடுத்த மாதம் சம்பளம் வந்து விடுமே! என்று கணக்குப் போட்டாள்.

குறிப்பு எடுத்து அனுப்புங்கள் என்று கூறியும், அவளது அப்பாவும், அம்மாவும் தங்களுக்குத் தேவையான பொருட்கள் இன்னதென்று அவளுக்கு அனுப்பி வைக்கவில்லை.

அதையும் நேரில் போய்க் கேட்டுக் கொண்டு, அடுத்த தடவை செல்லும் பொழுது வாங்கிக் கொண்டு போகலாம்! இவ்வாறான பல திட்டங்களுடன் உறங்கிக் கொண்டு இருந்தாள் மௌனா.

நாளைய விடியலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மௌனாவிற்கு , அவளைக் கலங்கடிக்கப் போகும், மஹதனின் திட்டம் தெரிந்தாள் அவளது நிலை என்னவாகும்? நிலை தடுமாறாமல் இருப்பாளா?

- தொடரும்
 

Shalini shalu

Moderator
நங்கையின் மறவோன் 13

அழைப்பு மணியின் ஒலியில், காஃபிக் கோப்பையை வைத்து விட்டு, சென்று கதவைத் திறந்தாள் மௌனா.

வெளியே களைந்து போன முகத்துடன், நலிந்த தோற்றத்துடன் நின்றிருந்தாள் அகதா.

சட்டென்று அவளைத் தாவி அணைத்துக் கொண்ட மௌனா,
"அகி!! என்ன ஆச்சு? இப்படி உடைஞ்சு போயிருக்க?" என்று விசாரித்தவாறே,
உள்ளே அழைத்துச் சென்றாள்.

ஒரு குவளைத் தண்ணீரைக் குடித்து, ஆசுவாசமான பிறகே, அவளிடம் மேற்கொண்டு விசாரிக்க ஆரம்பித்தாள் மௌனா.

அவளே மெதுவாக சொல்லட்டும் என்று தோழியைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அவள் எதிர்பார்த்தது போல,
"அழுகக் கூடாதுன்னு அடக்கி வச்சிருக்கேன் மௌனா. எனக்கு அழுகுறதும் சலிப்பாகிடுச்சு" என வெறுத்துப் போய்ப் பேசினாள்.

"ஏன் அகி? அங்கே தீபக் ரொம்ப ஹார்ஸ் ஆக நடந்துக்கிட்டாரா?" என்று வினவினாள் மௌனா.

"இல்லை.ஆனால் மனசாட்சியே இல்லாமல் நடந்துக்கிட்டார்" என்று நடந்ததை விவரித்தாள் அகதா.

தன் மாமியார் வீட்டிற்குச் சென்றதும்,
தீபக்கும் , அவனது தாயும் பேசிக் கொள்வதைக் கேட்டாள்.

"பணம் மட்டும் கொடுத்தால் போதும், அவளை ஊருக்கு அனுப்பி வச்சிடலாம்.அக்கவுண்ட்டில் அனுப்பி வச்சிட்டா, எவ்ளோ இருக்குன்னு தெரிய மாட்டேங்குது. இப்போ நேராக இங்கே வந்தா , செக் பண்ணிப் பார்த்துடலாம்" என்று மகனுக்குத் தூபம் போட்டுக் கொண்டிருந்தார் லலிதா.

இதுதான் நடக்கும் என்பதை முன்பே தெரிந்து இருந்ததால், அகதாவோ சாதாரணமாக உள்ளே நுழைந்தாள்.

அவளை அலட்சியமாகப் பார்த்த லலிதா,
"இந்தா வந்துட்டா உன் பொண்டாட்டி. பேச வேண்டியதை பேசிடு"என்று பணம் கேட்பதை முடுக்கி விட்டு சென்றார்.

" வா! இப்போ தான் வர முடிஞ்சுதா?" அதட்டிக் கேட்டான் அவளது கணவன் தீபக்.

"ஆமாம். எனக்கு ஆஃபீஸில் லீவ் கிடைக்க வேண்டாமா? வேலையை விட்டுட்டு வந்துடவா?" என்று அவளும் நக்கல் தொனியில் பதில் கூறினாள்.

"ஏய்! கிண்டலா பேசினா நடக்கிறதே வேற!" என்று அவளை மிரட்ட,

"என்ன நடக்கும்? அப்படி எதாவது நடந்தால், நான் வேலைக்குப் போக வேண்டியது இல்லை. இங்கேயே தங்கிடுவேன். எப்படி வசதி?" என்று அவனது பலவீனத்தை ஞாபகப்படுத்தி விட்டாள் அகதா.

"ப்ச்! கம்முனு இருந்திடு. போய் ஃப்ரெஷ் ஆகிட்டு , சாப்பிட்டு வா. இன்னைக்கு நிறைய பேசனும் " என வலியுறுத்தி விட்டு, அகன்றான் தீபக்.

பணம் என்னவெல்லாம் செய்கிறது பார்! என்று உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டாள் அகதா.

அரை மணி நேரம் சென்றதும், உணவை அருந்தி தான் ஆக வேண்டுமா? என்று தோன்றி விட்டது.

இந்த வீட்டில் உணவுண்பது அத்தனை பிடித்தமில்லை அவளுக்கு. இருந்தாலும் பசிக்கு உண்டாள்.

எதிரெதிர் அமர்ந்திருந்த தாயையும், மகனையும் வெறுப்புடன் நோக்கியவள்,

"என்ன பேசனும்?" என்று கேட்டாள்.

"புதுசா வேற என்ன கேட்கனும்? அதே விஷயம் தான்" என்று பணத்தில் குறியாக இருந்தார் லலிதா.

இவளைப் பார்த்த நேரத்திலிருந்து, அலட்சியம் நிறைந்திருந்த தீபக்கின் கண்களில் இப்போது, ஆசை தெரிந்தது.

"எவ்வளவு வேணும்?"

"உன்னோட மொத்த சம்பளத்தில், எங்களுக்குப் பெரிய தொகையை நீ தாராளமாக கொடுக்கலாம். ஆனால் அக்கவுண்ட்டில் போட்றதால் , அதில் பாதி கூட நீ தர்றது இல்லைன்னு தோணுது" என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினான் தீபக்.

"நான் வேலைக்குப் போகும் போது, சம்பளம் இவ்ளோ தான் என்று சொல்லிட்டேன். அதுக்கும் மேல என்ன சொல்றது? எனக்கு மாதா மாதம், வர்ற சம்பளம் இவ்ளோ தான்!" என்று தன் செல்பேசியில் மாத சம்பளம் வந்து விட்ட, குறுஞ்செய்தியைத் தீபக்கிற்குக் காண்பித்தாள் அகதா.

அதில் பார்த்து உறுதி செய்து கொண்ட தீபக்,
"ம்ம்! புரிஞ்சுது. இதில் முக்கால்வாசி பணம் அனுப்பி விடு" என அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போது, லலிதாவும் அங்கே வந்தார்.

"முடியாது" என்று மறுத்து விட்டாள் அகதா.

"முடியாதா? உனக்கு அவ்ளோ தைரியமா?" என்று கொதித்து எழுந்தார் லலிதா.

தீபக்கும் அவளை முறைத்துப் பார்த்தான்.

"ஆமாம்.நான் இருக்கிற வீட்டுக்கு வாடகை கொடுக்க வேண்டாமா? சாப்பாட்டு செலவு இதெல்லாம் இருக்குல்ல?" என தன் பக்க நியாயத்தைக் கூறினாள் அகதா.

"ஓஹ்! வேற எவ்ளோ பணம் தருவீங்க?" என்று நக்கலாக வினவினான் தீபக்.

"அதில் பாதி பணம் தான் தருவேன்" என கறாராக கூறி விட்டாள்.

அதில் வெகுண்டெழுந்த லலிதா,
"பாதி பணத்தை வச்சு என்னப் பண்ண முடியும்?" என்று மருமகளிடம் கத்தினார்.

"அவ்ளோ தான் என்னால் முடியும்" என்று கத்தரித்துப் பேசினாள் அகதா.

"உன் தோரணை எல்லாம் எனக்கு வேற மாதிரி தெரியுதே?"

"எப்படியோ தெரிஞ்சிட்டுப் போகட்டும். எனக்கு உங்களைத் தவிர வேற யாரும் இல்லைன்றதால் தான் நீங்க இப்படி பண்றது எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு இருக்கேன். என்னைக்கு அதுவே எனக்கு வெறுப்பாக மாறுதோ , அப்போ உங்களைத் தூக்கிப் போட்டுட்டு போய்க்கிட்டே இருப்பேன்"

அதிர்ச்சியின் விளிம்பில் இருந்தனர் லலிதாவும் , அவரது மகன் தீபக்கும்.

"இப்போ பணத்தை அனுப்பி விட்றேன்" என்று அவர்கள் முன்னிலையிலேயே பணத்தை அனுப்பி வைத்தாள் அகதா.

"நீ பண்றது சரியே இல்லை அகதா!" என்று தீபக் முறையிட்டான்.

"அப்படித்தான் பண்ணுவேன். உங்க சம்பளம் எங்கே? அதில் பாதியை எனக்கு அனுப்பி வைங்க"என்று கூறவும்,

" ஏய்! என்னப் பேச்சுப் பேசுற நீ?" என்று அவளை அடிக்கப் பாய்ந்தான் தீபக்.

"என் மேல கை வச்சா அடுத்து ஒரு பைசா கூட உங்க ரெண்டு பேருக்கும் வராது" என தடாலடியாக கூறினாள் அகதா.

இவளுடைய மாற்றம் லலிதாவிற்கும், தீபக்கிற்கும் உள்ளம் கொதித்தது. அவள் பேசுவதைக் கேட்டுத் தான் ஆக வேண்டும் என்பதால் கோபத்தை அடக்கிக் கொண்டனர்.

"என் பாதி சம்பளத்தை எப்படி தர முடியும்? அம்மாவுக்கு அனுப்பனும்ல?" என்று பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டான் தீபக்.

"அப்போ கால் அளவு சம்பளம் வேணும். அதை அனுப்பினால் தான், நானும் என்னோடதை அனுப்புவேன்" என்று தீர்க்கமாக கூறி விட்டாள் அகதா.

"சரி! அனுப்புறேன்"


அம்மாவிடம் சம்மதமாகத் தலையசைத்தான்.

"என்னமோ போ!" என்று மருமகளைக் கரித்துக் கொட்டினார் லலிதா.

"நான் போய் ரெஸ்ட் எடுக்கிறேன்"என சாவகாசமாக அறைக்குள் புகுந்து கொண்டாள் அகதா.

" இவ பேசியதைக் கேட்டியா தீபக்? எவ்ளோ திமிர்!" என்று மருமகளை அவனிடம் மூட்டிக் கொடுத்தார் லலிதா.

"பணம் வரனுமே அம்மா! இல்லைன்னா இவளை எப்பவோ துரத்தி விட்டு இருப்பேன்"

நல்லவேளை தீபக் மற்றும் அகதா தம்பதியருக்குக் குழந்தை இல்லை. இருந்திருந்தால், அந்தக் குழந்தையும் மனதளவில் பாதிக்கப்பட்டு இருக்கும்.

கொண்டு வந்த தோல் பையை அறையின் மூலையில் வீசி விட்டு, கட்டிலில் பொத்தென்று சரிந்தாள் அகதா.

இதற்கிடையில், தோழிக்கும் குறுந்தகவல் அனுப்பி வைத்தாள்.

அவளது அறைக்குள் நுழைந்த தீபக்,
"எல்லாத்தையும் பேசி முடிச்சாச்சே. நானும், அம்மாவும் கிளம்பறோம்" என்று கடுகடுவென்ற முகத்துடன் கூறினான்.

"ம்ம்...கிளம்புங்க" என்றதோடு முடித்தவள், விழிகளை இறுக மூடிக் கொண்டாள்.

"நீ எப்போ கிளம்பறே?" என கேட்டான்.

"நான் நாளைக்குக் காலையில் சீக்கிரம் கிளம்பிடுவேன். நீங்களும், உங்க அம்மாவும் தயவு செஞ்சு கிளம்பிடுங்க" என கையெடுத்துக் கும்பிட்டாள் அகதா.

கோபத்தில் முழுதாக தன்னிலை இழந்திருந்த தீபக், அவளைக் காயப்படுத்தி விட்டால், வருவதும் வராது என்பதால், கட்டுப்படுத்திக் கொண்டு விருட்டென்று வெளியேறினான்.

அவளிடம் விடைபெறாமலே ஊருக்குச் சென்ற , கணவனையும், மாமியாரையும் நினைத்து கசப்புப் புன்னகையுடன் கதவைத் தாழிட்டு, அமைதியான உறக்கத்தைத் தொடர்ந்தாள் அகதா.

அவளது தைரியம் மௌனாவிற்கு மிகவும் பிடித்திருந்தது. அதைவிட, நிம்மதியாக இருந்தது. கூடிய விரைவில் அகதாவும் தன் வீட்டாரை உதறித் தள்ளப் போகிறாள்.

சுயநலவாதிகளை அனுசரித்துப் போய்க் கொண்டிருந்தால், தன் சுயத்தைத் தான் தொலைக்க முடியுமே தவிர, காலத்திற்கும் நிம்மதியாக வாழ முடியாது. அதனால் தான் மௌனா தோழிக்கு இந்த தைரியம் வந்ததை நினைத்து மகிழ்ந்தாள்.

"உன்னோட அறிவுக்கும், வேலைக்கும் இந்த குணம் உனக்குப் பொருத்தமே இல்லை அகி. நீ ஏன் இப்படி இருக்க? என்னோட லைஃப்ல எதாவது முடிவு எடுக்கனும், இல்லைன்னா சஜஷன்ஸ் கேட்கனும்னா கூட உன்கிட்ட தான் வருவேன். எனக்கு அப்படியொரு மோட்டிவேஷன் கொடுப்ப. ஆனால் உன்னோட வாழ்க்கையை என்னப் பண்ணி வச்சிருக்க அகி?" என்று இப்போது தோழியைச் சரி செய்ய முயற்சித்தாள் மௌனா.

"ம்ஹூம்! உண்மை தான் மௌனா. எனக்கு இருக்கிற ஒரே உறவு அவங்க தான் என்று நம்பினேன். அதனால் அவங்க செய்வதை எல்லாம் பொறுத்துக்கிட்டேன்.இப்போ முடியல. எனக்குன்னு ஒரு உறவு வேணும். எப்பவும் என் கூட இருக்கிற மாதிரி!" என்று மனம் கசந்து போய்க் கூறினாள் அகதா.

"உனக்குப் புரிஞ்சுடுச்சு. நீ தெளிவாகிட்ட. சோ, சீக்கிரமே இதிலிருந்து வெளியே வந்துடுவ அகி"

காலை உணவை இருவரும் ஒன்றாக அமர்ந்து உண்டனர்.

இன்று முழுவதும் தான் ஓய்வு எடுப்பதாக கூறி விட்டாள் அகதா.அதனால், மௌனா மட்டும் வேலைக்குப் போனாள்.

விடுதியின் வரவேற்பில், எப்போதும் போல நின்றிருந்தவளுக்கு, தரிசனம் கொடுத்தான் மஹதன்.

வழக்கம் போல, கிஷானைப் பார்க்கப் போகிறான் என்ற ரீதியில் ,

"வெல்கம் சார்! வெரி குட் மார்னிங்!" என்று வரவேற்பு அளித்தவளைப் பார்த்து மயக்கும் புன்னகை வீசினான் மஹதன்.

'இது என்ன ஸ்மைல்? ஒரு தடவை கூட இவர் இப்படி நம்மளைப் பார்த்து ஸ்மைல் பண்ணியது இல்லையே?'

கண்ணியம் மற்றும் கட்டுப்பாடு நிறைந்த ஆண்மகன் என்று தன் மனதில் அவனை உயர்த்தி வைத்திருந்தாள் மௌனா.

அதெல்லாம் இடிந்து போய் விடுமோ? என்று வேறு தத்தளித்துக் கொண்டிருந்தாள்.

"குட் மார்னிங் மிஸ். மௌனா" மறுபடியும் ஒரு வசீகரப் புன்னகை அவனிடத்தில் இருந்து, இவளை நோக்கி வந்தது.

'என்னாது!!! மஹதன் சார் இது நல்லா இல்லை' மனம் அடித்துக் கொண்டது மௌனாவிற்கு.

இவர்களை மடிக்கணினி வழி கண்காணித்துக் கொண்டிருந்த கிஷான்,

"அப்போ மஹதன் அவங்களை மட்டும் பார்க்கப் போறது, சீக்கிரமே நிறைவேறப் போகுது" என்று அவர்களைக் கூர்ந்து கவனித்தான்.

மௌனாவின் உடல் மொழியில், பதட்டம் இருந்தது, ஆனால் மஹதனோ கூலாக நின்று கொண்டிருந்தான்.

முகத்தில் இருக்கும் உணர்வுகள் தெளிவாக தெரியாது அதனால் நண்பனிடமிருந்து விஷயத்தைக் கறக்கக் காத்திருந்தான் கிஷான்.

இங்கே மஹதனின் மர்மப்

புன்னகையில், மொத்தமாக வீழ்ந்து கொண்டிருந்தவள்,

'என்ன சொல்லக் காத்திருக்கிறான்?' என்று வியர்த்து வழிந்து கொண்டிருந்தாள் மௌனா.

- தொடரும்
 

Shalini shalu

Moderator
நங்கையின் மறவோன் 14

"நீ வேலைப் பார்க்கிற இடத்தில் இருந்து பேசுறது முறை இல்லை. அதனால், வேலை முடிஞ்சு, வீட்டுக்குப் போய், ரெடி ஆகிட்டு வா. உன் கூட பேச வேண்டியது இருக்கு" என்று ஒரு உணவகத்தின் பெயரையும் கூறினான் மஹதன்.

சுதாரித்த மௌனா, "எங்கிட்ட நீங்க பேச என்ன இருக்கு சார்?" என்று அவன் தன்னிடம் தனியாக சந்தித்துப் பேச என்ன இருக்கப் போகிறது? அதை ஏன் இப்பொழுதே பேச மறுக்கிறான்? என்று நினைத்தாள்.

"இது ரொம்பவே பர்சனல் மௌனா. இங்கே பேசினால், உன் வேலை பாதிக்கும். அதான்" என்று அலட்டிக் கொள்ளாமல் கூறியவனைப் பிரம்மிப்பாகப் பார்த்தாள்.

"பர்சனலா? முக்தா மேடம் விஷயமா சார்?"

"ஏன் அதை தவிர வேறெதுவும் பேச எனக்கு வராதுன்னு நினைச்சுட்டியா?"

விழிகள் இடுங்க அவளிடம் கேட்டான் மஹதன்.

"வேற என்ன பேசப் போறீங்க?" என்று தவித்துப் போய்க் கேட்டாள் மௌனா.

"கண்டிப்பாக இருக்கு. அதுக்குத் தான் கேட்கிறேன்" என்று விடுவதாக இல்லை என்பது போல, பார்த்தான்.

"சார்! விஷயத்தை இங்கேயே சொல்லுங்க. இல்லைன்னா என்னை வேலையைப் பார்க்க விடுங்க. இப்படி வந்து நின்னுட்டு, பேசிட்டு இருந்தால், எனக்கு வேலை பாதிக்குது"

அவளிடமிருந்த பயத்தை வலுக்கட்டாயமாக விரட்டி விட்டு, கறாராகப் பேச ஆரம்பித்தாள்.

"அப்போ நீ வர மாட்ட?"

உள்ளுக்குள் குளிர்ச்சி பரவியது அவளுக்கு.

"வர மாட்டேன் சார். சாரி" என்று மென்மையாக மறுத்தாள்.

கண்கள் கோவைப்பழங்களாக சிவப்பேறியது மஹதனுக்கு.

"ப்ச்! உங்கிட்ட ரொம்ப இறங்கி வந்து பேசினால், ஈசியாக போய்ட்டேனா நான்?" என்றான்.

"அப்படி நினைக்கலை சார். ஆனால் , நீங்க என்கிட்ட இறங்கி வாங்கன்னு நான் கேட்கவும் இல்லை" என்று தடுமாறாமல் பதிலுரைத்தாள் மௌனா.

இவர்கள் அதிக நேரம் பேசிக் கொண்டிருப்பது சரியில்லை என்று எண்ணிய கிஷான் அங்கே பிரவேசித்தான்.

"மஹத்!" என வந்து நின்ற நண்பனை ஏறிட்டான்.

"சார்!"

மரியாதை நிமித்தமாக அவனுக்குப் பணிந்து வணக்கம் செலுத்தினாள் மௌனா.

இவன் உனக்கு முதலாளி என்பதால் மரியாதை அளிக்கிறாயோ? என்று கண்களில் வினவுவது போல, மௌனாவைப் பார்த்தான் மஹதன்.

மரியாதைக் கொடுக்கும் விதமாக நடந்து கொண்டாலே போதும் என்று அவள் பதிலுக்குப் பார்த்தாள்.

"என்னடா இங்கேயே நின்னுட்டு இருக்கிற? உள்ளே வா" என கைப்பற்றி இழுத்துச் சென்று விட்டான் கிஷான்.

அவனுக்கு மௌனாவின் படபடப்பும், மஹதனின் கூர் பார்வையும் எதையோ உணர்த்தியது. இதற்கு மேல் மௌனா சமாளிக்க முடியாதது போல் இருந்ததால், நண்பனை இழுத்துச் சென்றான்.

"என்னடா நீ! அவங்களை பயமுறுத்திக்கிட்டு இருக்கிற?" என்றதும்,

"டேய்!! நான் ஒன்னும் உன் ஸ்டாஃபை முறைக்கலை. வெளியே போய் தனியாக பேசனும்னு நினைச்சேன். அதைக் கேட்டதுக்குத் தான் அவங்க வியர்த்து வழிஞ்சாங்க" என்று நக்கலாக கூறினான்.

"அப்படி பயமுறுத்தி வச்சிருக்கிற! எதுக்கு தனியாகப் பேச கூப்பிட்ட?" என்று குறும்பாக கேட்டான் கிஷான்.

"சும்மா லவ்வை சொல்லிப் பார்த்தால், என்ன ரியாக்ஷன் கொடுக்கிறான்னு பார்க்க கியூரியஸ் ஆக இருக்கு" என்று கூறியவனை மலைத்துப் போய்ப் பார்த்தான் நண்பன்.

"அடேய்! நீ அதை இந்த இடத்தில் கேட்கலை!! அப்பறம் என் மேல கம்ப்ளைண்ட் கொடுத்து இருப்பாங்க" என்று தான் தப்பித்து விட்டதாக உணர்ந்தான்.

"ஏண்டா இப்படி பயப்பட்ற?"

"அவங்க தானே எனக்கு வருங்கால அண்ணியாக வரப் போறாங்க.பயம் இருக்கத் தான் செய்யும்" என்று கிஷான் நண்பனிடம் ஆழம் பார்த்தான்.

"அண்ணியா?! நீ என்னை விட ஸ்பீட் ஆக இருக்கிற கிஷான்! இது ஜஸ்ட் ஒரு டெஸ்ட்" என்றான்.

"மஹத்! இது தப்புடா. டெஸ்ட் பண்ணிப் பார்க்கிறது என்ன மாதிரியான விஷயம்! எனக்கு உன் மேல இருக்கிற மரியாதையை இதனால் போக வச்சுடாத" என்று கண்டிப்புடன் கூறினான்.

"அப்போ உண்மையிலேயே லவ் - ன்னு வச்சுக்கோ" என்று மஹதன் அலட்சியமாக கூறவும்,

"நீ அவங்களை உண்மையிலேயே லவ் பண்ற நாளும் வரும் மஹத். அதுக்கு வெய்ட் பண்ணனுமே தவிர, டெஸ்ட் பண்ணக் கூடாது" என்று தீவிரமாக அறிவுரை சொன்னான்.

" எனக்கு அவ மேல் லவ் இருக்கான்னு நான் டெஸ்ட் பண்றேன் கிஷான். அப்படி இருந்தால், டைம் வேஸ்ட் ஆகாது. உடனே கல்யாணம் பண்ணிப்பேன்" என கூறவும்,

"உளறாதே மஹத்! நீ அப்படி செஞ்சா, அவங்களை ஹர்ட் தான் பண்ணுவியே தவிர, அவங்களை உன்னை லவ் பண்ண வைக்க மாட்ட! நான் உன்னை ட்ரிக்கர் பண்ணிட்டேனோ என்று தோணுது!"

தன் தவறை நினைத்துக் குமைந்தான் கிஷான்.

நண்பனைத் தவறான பாதைக்கு அனுப்பி வைக்கிறோமோ? என்று அவனது முடிவைத் தகர்க்க முயற்சித்தான்.

"இல்லை கிஷான். எனக்கே என் மேல் டவுட் வர ஆரம்பிச்சிருச்சு. ஒருவேளை அவளை நான் லவ் பண்றேனோ என்று! அதனால் தான் இந்த யோசனை"

"அப்படின்னா நான் கேட்கும் போது, நீ உன்னோட மறுப்பைத் தெளிவாக சொல்லியிருக்க மாட்ட. லவ் இல்லைன்னு தான் அர்த்தம்"

"ப்ளீஸ் கிஷான்! நானே அவ என் கூட பேச வரலையேன்னு கடுப்பில் இருக்கேன்.விடு" என்று தன் திட்டத்தை அவனிடம் இன்னும் விரிவாக கூறாமல், சாமர்த்தியமாக
மறைத்து விட்டான் மஹதன்.

"டெஸ்ட் பண்றதை விட்டு விடு மஹத்" என்று சொல்லியே அவனை அனுப்பி வைத்தான் கிஷான்.

முதலாளி வந்து தன்னை மஹதனிடம் இருந்து விடுவித்து விட்டதால், பெருமூச்சு விட்ட மௌனா, மீண்டும் அவன் வெளியேறும் சமயம் இதையே தொடர்வானோ? என்று பதறினாள்.

திடீரென்று இவன் எப்படி பேச அழைப்பான்? என்று தோன்றிக் கொண்டிருந்தது.

"எக்ஸ்க்யூஸ்மீ" என்று அவள் முன்னால் சொடுக்கிட்டவன்,

"நான் கூப்பிட்டதும் மரியாதைக்கு ஆவது வந்திருந்தால், நல்லா இருந்திருக்கும். ஆனால் நானே உன்கிட்ட பேசுவதற்கான சூழ்நிலையை உருவாக்கப் போறேன். அப்போ நீ என்னப் பண்ணுவ?" என்ற கேள்வியைக் கேட்டு சென்றவனைப் பார்த்து அயர்ந்து போனாள் மௌனா.

'வர்றார்! கேள்வியைக் கேட்கிறார்! பதில் வாங்காமலேயே போறார்! ரிபீட்' என்று புலம்பித் தீர்த்துக் கொண்டாள் மௌனா.

அகதா உணவுண்டாளா? உறங்குகிறாளா? என்று விசாரித்துக் கொண்டாள்.

தான் மனம் தளரும் பொழுது தாங்கிப் பிடித்தவளை, இப்போது பார்த்துக் கொள்வது தன் முறை என இதெல்லாம் செய்கிறாள் மௌனா.

முக்தா வெளிநாடு செல்கிறாள் என்பதை அறிந்து கொண்டதில் இருந்து , கிஷானுக்கு இருப்புக் கொள்ளவில்லை.

மஹதனின் மூலம் தான் கிஷானுக்கு அவளைத் தெரியும்.

பார்த்தவுடன் காதல் இல்லை. ஆனால் ஏதோ ஒரு விதத்தில் தன் மனதை அசைத்துப் பார்த்தவளை இன்னும் மனதினுள் பூட்டி வைத்துள்ளான் கிஷான்.

ஒருமுறை தன் காதலைக் கூட அவளிடம் தெரிவித்துக் பார்த்தான். ஆனால் முக்தாவோ பாரபட்சம் பார்க்காமல் மறுத்து விட்டாள்.

ஒரு வருடம் ஆகி இருந்தாலும், அவனது காதல் இன்னும் துளிர் விட்டுக் கொண்டு தான் இருக்கிறது. முக்தாவோ தன் மனதை மஹதனிடம் பறி கொடுத்து விட்டாள்.

மஹதனும் மறுத்து விட்டான். இப்போது முக்தாவின் நிலையை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கவில்லை கிஷான்.

அவளுக்காக ஒரு வருடம் காத்திருந்தவன், இரண்டு வருடங்கள் காத்திருக்க முடியாதா என்ன?

ஆனாலும் அவளது வெளிநாடு பயணம் ரத்து ஆகாதா? என்ற நப்பாசையும் அவனுக்கு உண்டு.

தனக்காக இப்படி யோசிக்கும், ஏங்கும் ஒருவனை முக்தா கரம் பிடிக்கும் நாளும் விரைவில் வருமோ?

"அகி! நான் ஊருக்கு வர்றேன்னு அப்பா, அம்மாகிட்ட சொல்லியிருந்தேன். உன்னையும் கூப்பிட்டு வர சொல்றாங்க. போவோமா?" என்று தோழியிடம் வினவினாள்.

அவள் இப்படி இடிந்து போய், எதிலும் பற்றில்லாமல் அமர்ந்திருப்பது மௌனாவிற்கு மனம் கனத்ததுப் போனது.

அவளை மீட்க முயற்சி செய்து கொண்டிருக்கிறாள்.

"நான் இந்த சுவிட்சுவேஷன்ல?" என்று தயங்கினாள்.

"இந்த சுவிட்சுவேஷனுக்கு என்ன அகி? நீ வர்றதால் அவங்க சந்தோஷப்படுவாங்க.அதே மாதிரி உனக்கும் மைண்ட் ரிலாக்ஸ் ஆகும். எனக்கு அது தான் வேணும்" என்று அவளைச் சம்மதிக்க வைத்து விட்டாள் மௌனா.

"ஏற்கனவே ரெண்டு நாள் லீவ் எடுத்துட்டேன் மௌனா. ஒன் வீக் கழிச்சு கேட்டுப் பார்க்கிறேன்" என்று மனமிரங்கி வந்தாள் அகதா.

மௌனாவும் தற்போது தான் வேலைக்குச் சேர்ந்துள்ளாள். எனவே அவளாலும் உடனே விடுப்பு எடுக்க முடியாது.அதனால் ஒரு வாரம் கழித்து , விடுப்பு கேட்போம் என்று நினைத்தாள்.

"காலப்போக்கில் எல்லாமே மாறிடுமா மௌனா?" என்று விரக்தியாக கேட்டாள்.

"மாறாது அகி. நாம தான் நமக்கு என்ன வேணும்னு தெரிஞ்சுக்கிட்டு மாத்தனும்.காலம் காயங்களை ஆற்றும்னு சொல்லுவாங்க. ஆனால், அது காயங்களை மறைத்து மட்டும் தான் வைக்கும். அது எப்போ வேணும்னாலும், நம்மளை காயப்படுத்திப் பார்க்கும். அழுக வைக்கும். அதை வெளியே காட்டிக்காமல், சாமர்த்தியமாக மறைச்சுடறாங்க என்பதற்காக அவங்களுக்கு எதுவும் கஷ்டம் இல்லைன்னு ஆகிடாது அகி"

கருத்துக் கூறும் தோழியை மௌனமாய்ப் பார்த்தாள் அகதா.

"கொஞ்ச நாள் முன்னாடி நான் உன் நிலையில் இருந்தேன். அப்போ எனக்காக நீ இருந்த. இப்போ உனக்காக நான் இருக்கேன். உன்னோட காயத்தை மறைக்க ட்ரை பண்றேன்.இப்படி உறவுகள் தான் ஒருத்தருக்கு ஒருத்தர் துணையாக இருக்கிறதால் தான் நாம் ஓரளவுக்கு எல்லா காயத்தையும் , கஷ்டத்தையும் முழுங்கிட்டு சாதாரணமாக இருக்கிறா மாதிரி காட்டிக்கிறோம் அகி"

தனக்குத் தோழி ஒருமுறை கொடுத்த அறிவுரையை அவளுக்குத் திருப்பிப் படித்துக் காட்டினாள் மௌனா.

"நான் தான் மாத்தனும்! இல்லையா மௌனா?" என்று கேட்டாள் அகதா.

"யெஸ் அகி. நீ தான் சேஞ்ச் பண்ணனும்" என்று மௌனா அவளுக்குச் சரியான இலக்கைக் காட்டினாள் மௌனா.

சிறிது சிறிதாக தெளிய ஆரம்பித்தவளது மனம், மௌனாவின் ஊருக்குச் சென்றால், முற்றிலும் தெளிந்து விடும் என்று பயணத்திற்காக காத்திருந்தாள் அகதா.

"அடுத்த வாரமே ஊருக்குப் போகலாம் மௌனா. நான் லீவ் கேட்க தயார்" என்று தெளிந்த மனதுடன் கூறினாள் அகதா.

அவளுக்காகவே சீக்கிரம் விடுப்பு எடுக்க வேண்டும் என்று நினைத்த மௌனா,

"கண்டிப்பாக அகி. நான் முன்னாடியே எம். டி கிட்ட கேட்டு வைக்கிறேன்" என்றாள்.

நீலகண்டனும், திருமூர்த்தியும் இப்போது எல்லாம் தங்கள் அலுவலகம் பற்றிய பேச்சுடன் நிறுத்திக் கொண்டனர்.

அதுவே அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது. முக்தாவின் மாற்றம் அவர்களுக்கும் வர வேண்டும் என்றெல்லாம் இருவருமே நினைக்கவில்லை. தானாகவே நட்பு மறுபடியும் மலரட்டும் என விட்டு விட்டனர்.

கௌசல்யா முக்தாவை வீட்டிற்கு உணவுண்ண அழைத்தது இருவருக்கும் தெரிந்திருந்தது.

அதில் தவறு என்றும் இல்லை, ஆதலால், நீலகண்டன் மகளுக்கு அனுமதி அளித்திருந்தார். திருமூர்த்தியும் மனைவியிடம் இதற்காக கடிந்து கொள்ளவில்லை.

மௌனா தன் ஊருக்குப் போவதற்காக விடுப்பு கேட்க வேண்டிய நாளும் வந்தது!

- தொடரும்
 

Shalini shalu

Moderator
நங்கையின் மறவோன் 15

அலுவலகத்தில், மதிய உணவு நேரத்தில் , தன் உடையில் இருந்த சுருக்கத்தைச் சரி பண்ணி விட்டு, கிஷானைப் பார்க்கப் போனாள் மௌனா.

அப்போது தான் அவனும் உணவை முடித்திருந்தான்.

"மே ஐ கமின் சார்?" என்று அனுமதி வேண்டி நின்றாள்.

"யெஸ் வாங்க" அனுமதியளித்ததும் உள்ளே வந்தாள்.

மஹதனைப் பற்றி குறை கூறப் போகிறாளோ? என்று எதிர்பார்த்தான்.

"சார்! எனக்கு த்ரீ டேய்ஸ் லீவ் வேணும்" என்று தயக்கத்துடன் கேட்டாள்.

"லீவ் ஆ?" என்று வினவினான்.

"ஆமாம் சார். இந்த ஊருக்கு வந்து ரொம்ப நாளாச்சு. வீட்டுக்குப் போகவே இல்லை. அப்பா, அம்மாவைப் பார்க்கனும்னு தோணுது. உங்ககிட்ட நேரடியாக விஷயத்தைச் சொல்லி கேட்கனும்னு வந்தேன்" என்று உண்மையான காரணத்தைக் கூறியே விடுப்புக் கேட்டாள்.

"வேலைக்கு வந்தே கொஞ்ச நாட்கள் தான் ஆகுது மிஸ். மௌனா"

அவன் இதைத் தான் கூறுவான் என தெரிந்து வைத்திருந்ததால் , அமைதியாக நின்றாள்.

ஆவலுடன் வந்தவளை , ஏமாற்ற விரும்பாமல்,

"லீவ் தர்றேன் மௌனா.ஆனால் ஒரு கண்டிஷன்! அடுத்த மாதம் ஞாயிற்றுக்கிழமை தவிர உங்களுக்கு வேறெந்த லீவ்வும் கிடையாது. இதுக்கு ஓகே சொன்னால், எனக்கும் நீங்க லீவ் எடுக்கிறதுல எந்த அப்ஜெக்ஷனும் இல்லை" என்று கேட்டான்.

ஊருக்குப் போக வேண்டும் என்ற ஆசையைக் கை விட முடியாதவளோ,

"ஷ்யூர் சார். நான் நெக்ஸ்ட் மன்த் எந்த லீவ்வும் எடுக்க மாட்டேன்" என்று சம்மதித்தாள் மௌனா.

" அப்போ லீவ் லெட்டரில் தெளிவாக காரணத்தை எழுதிக் கொண்டு வாங்க " என்று முடித்துக் கொண்டான்.

"தாங்க்யூ சார்"

கடிதத்தை எழுதி அவனிடம் ஒப்படைத்து விட்டு, குதூகலமாக மாலை வீட்டிற்குச் சென்றாள்.

நீள்சாய்விருக்கையில் நலிந்த தோற்றத்துடன் அமர்ந்திருக்கும் தோழியை உற்சாகப்படுத்த முயற்சித்தாள் மௌனா.

"அகி!! எனக்கு த்ரீ டேய்ஸ் லீவ் கிடைச்சிருக்கு. இன்னைக்கு நைட் கிளம்பினால், நாளைக்கு மார்னிங் போய் சேர்ந்திடலாம்"

அகதா இருக்கும் மனநிலையில் மஹதன் தன்னிடம் நடந்து கொண்டதைக் கூற வேண்டாம் என்று மனதில் புதைத்து விட்டாள் மௌனா.

இரவு ஊருக்குப் போகப் போவதால், இப்போதே தன் உடைமைகளையும், அகதாவின் உடைமைகளையும் பையில் எடுத்து வைத்தாள்.

"ஏழு மணிக்குப் பஸ் இருக்கு அகதா.சாப்பாடு இங்கேயே முடிச்சுட்டுப் போகலாம். வழியில் பசிச்சா லைட்டா எதாவது வாங்கிச் சாப்பிடலாம்"

என்று திட்டங்கள் போட்டவள், மஹதனின் மிரட்டலை மறந்திருந்தாள்.

தன்னைத் தனியாக சந்தித்துப் பேச மஹதன் தேர்ந்தெடுக்கப் போகும், நேரமும், இடமும் தெரிந்தால் மௌனா சுதாகரித்து இருந்திருப்பாளோ?

தன் பெற்றோருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கப் போவதை நினைத்து கனவு கண்டு கொண்டிருப்பவளுக்கு, அதை விட பெரிய சர்ப்ரைஸ் தனக்காக மஹதன் தயார் செய்யப் போகிறான் என்று அறியாதவள், அகதாவுடன் தன் சொந்த ஊருக்குப் பயணமானாள் மௌனா.

"நாளைக்கு ப்ரேக்ஃபாஸ்ட்டுக்கு வந்திடு முக்தா. லன்ச் - உம் இங்கே தான். நாம் நிறையப் பேசனும்" என்று
முக்தாவிடம் செல்பேசியில் கூறிக் கொண்டிருந்தார் கௌசல்யா.

மறுநாள் உணவிற்கு முக்தா வரப் போகிறாள் என்று மஹதனுக்கும் தெரியும். தாயின் ஆசையை ஏன் தடுக்க வேண்டும் என்று காலை விரைவாக எழுந்து அலுவலகம் செல்ல முடிவெடுத்தான்.

தன் பிடிவாதத்தை விட்டு, அடையாளத்தைத் தேடிச் செல்ல விரும்பும் பெண்ணிற்கு முன்னால் போய் நின்று அவளது ஏமாற்றத்தை ஞாபகப்படுத்த வேண்டாம் அது மட்டுமின்றி, அவளும், தானும் சங்கடமான சூழலில் நிற்கக் கூடாது என்பதற்காக இந்த முடிவு.

"முக்தாவை நான் இங்கே வர சொல்லி இன்வைட் பண்ணியிருக்கிறேன் மஹதா. நீயும் எங்களோட லன்ச்க்கு ஜாயின் பண்றியா?" என்று கேட்டார் கௌசல்யா.

" இல்லை அம்மா. எனக்கு வேலை அதிகம் " என மறுத்து விட்டான்.

இரவு ஏழு மணியளவில்,

"அப்பாடா! சீட் கிடைச்சிருச்சு. பஸ்ஸில் கூட்டமே இல்லைல அகி?"

ஏதாவது பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருந்தாள் மௌனா.

"ஆமாம் மௌனா. ஃப்ரீயா இருக்கு"

என சாய்ந்து அமர்ந்து கொண்டாள் அகதா.

"இந்த மூன்று நாட்களும் சந்தோஷமாக இருக்கனும் நீ"

மௌனாவிற்குப் பெற்றோரைப் பார்க்கப் போகும் உற்சாகம் மட்டுமே இருக்க, மஹதனின் மிரட்டலை அசட்டையாக ஒதுக்கி விட்டாள்.

மூன்று நாட்கள் இங்கே இருக்கப் போவதில்லையே? தன் சொந்த ஊருக்குப் போகிறோம்! அது தெரிந்தாலும் அவன் அங்கே வந்து பிரச்சினை செய்யும் அளவிற்கு எல்லாம் போக மாட்டான் என மஹதனைத் தவறாக கணித்து விட்டிருந்தாள் மௌனா.

அந்த மூன்று நாட்களுக்குள் மஹதனால் என்ன செய்ய முடியும், முடியாது என்பதை ஆணித்தரமாக அவளுக்கு உரைக்க வைக்கப் போகிறான் என்பது தெரிந்திருந்தால், ஊருக்குப் போவதை தள்ளிப் போட்டிருப்பாளோ, என்னவோ!

அவர்களைச் சுமந்து கொண்டு, பேருந்து மௌனாவின் ஊருக்குச் செல்ல தொடங்கியது.

தன் அறையில் யோசித்துக் கொண்டிருந்த மஹதனுக்கு, வெகு நாட்களாக தன்னைக் கல்யாணம் செய்து கொள்ளச் சொல்லி தொல்லை செய்த பெண் இப்போது முழுவதுமாக அந்த எண்ணத்தைக் கை விட்டிருக்கிறாள்

அவளுக்கும், தனக்கும் இடையே மௌனா வந்திருக்கிறாள் என்று நினைத்திருக்க, அவளுக்கும், மஹதனுக்கும் இடையில் தான் முக்தா வந்திருக்கிறாள் என்பது தாமதமாகத் தான் புரிந்தது மஹதனுக்கு.

தன் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு ஒதுங்கி இருப்பவளைச் சீண்டி, சோதனை செய்து பார்க்கத் தான் முதலில் மஹதனுக்குத் தோன்றியது.

ஆனால், கிஷான் கொடுத்த உபதேசத்தில், மௌனாவைச் சோதனை செய்து பார்க்க நான் யார்? அது முறையும் இல்லை.

அப்படி நடந்திருந்தால், மௌனா வாழ்நாள் முழுவதும் தன்னை வெறுத்திருப்பாள். ஒருமுறை கூட அவளது புறத்தோற்றத்தில், மஹதனுடைய கவனம் பதியவில்லை.

மஹதன் ஒன்றும் முக்தாவை புற அலங்காரத்தைப் பார்த்து, பிடிக்காமல், மறுக்கவில்லை.
உண்மையிலேயே அவள் மேல் தனக்கு எந்த காதல் உணர்வும் இல்லை என்பதால் தான் மறுத்தான்.

அடுத்த சந்திப்பில் , மௌனாவின் மேலுள்ள காதலை அவளுக்கு உணர்த்தி விட எண்ணினான் மஹதன்.

ஆனால், வகை தொகை இல்லாமல், தன்னைப் பார்க்கும் போதெல்லாம், தனக்கு இணையாக பேசி, கழுவி ஊற்றும் பெண்ணிற்குத் தன் மேல் காதல் மலருமா? என்பதை மஹதன் யோசித்திருக்க வேண்டும்!

அன்றைய இரவே, மௌனா ஊருக்குக் கிளம்பி விட்டாள் என்பது அவனுக்குத் தெரியாது அல்லவா?

அதனால், முக்தா வீட்டிற்கு வரும் நேரத்திற்கு முன்னர், கிஷானுடைய விடுதிக்கு விரைந்தான் மஹதன்.

வரவேற்பில் மௌனாவைக் காணவில்லை ஆதலால், கிஷானுக்குச் செல்பேசியில் அழைத்தான்.

"ஹாய் கிஷான்! மௌனா இன்னும் வேலைக்கு வரலையா?" என்று விசாரித்தான்.

தான் அவ்வளவு சொல்லியும் இவன் அடங்க மாட்டான் போலும்!

"அவங்க மூன்று நாட்கள் லீவ் எழுத்து இருக்காங்க மஹத்" என்று பொறுமையாக கூறினான்.

"வாட்!! லீவ் ஆ? ஏன்? மௌனாவுக்கு என்னாச்சு?" என்று பதறியபடியே கிஷானின் அறைக்குச் சென்றான்.

செல்பேசியை அணைத்து விட்டு,
"சொல்லு கிஷான்?" என்று நண்பனின் முகம் பார்த்தான்.

"அவங்க ஊருக்குப் போறாங்களாம் மஹத். சோ, லீவ் எடுத்துக்கிட்டாங்க" என்று பதிலளித்தான்.

"எந்த ஊருன்னு கேட்டியா?"

ஏமாற்றத்தை விழுங்கிக் கொண்டு கேட்டான் மஹதன்.

"கேட்கலை மஹத்" என்று நண்பன் கூறிவிட,

"நான் வர்றேன் கிஷான்" என உடனடியாக அங்கிருந்து வெளியேறினான்.

'இவன் மௌனாவோட ஊரைக் கண்டுபிடிச்சு அங்கேயே போய்ப் பார்த்துடுவானோ?' மஹதன் அதைச் செய்யக் கூடியவன் தானே!

மீண்டும் கதவைத் திறந்து கொண்டு வந்தவன்,
"முக்தாவை இன்னைக்கு எங்க வீட்டுக்கு ப்ரேக்ஃபாஸ்ட் அண்ட் லன்ச்சுக்கு அம்மா இன்வைட் பண்ணியிருக்காங்க" என்ற செய்தியைத் தெரிவித்து விட்டு, கிளம்பினான் மஹதன்.

அவனுடைய வீட்டிலிருந்து முக்தா செல்லும் வழியில், அவளைச் சந்தித்துப் பேசி, தன் காதலை மறுமுறை தெரிவிக்கலாமா? என்று கூட யோசித்தான் கிஷான்.

மஹதனுக்கு நன்றி தெரிவித்துக் குறுஞ்செய்தி அனுப்பினான்.

"உட்கார் முக்தா" என்று அவளை டைனிங் டேபிளில் அமர்த்தினார் கௌசல்யா.

இத்தனை நாட்களாக தன்னிடம் அன்பு காட்டியவர்களை எல்லாம், அடிமைப்படுத்தப் பார்க்கிறார்கள் என்று அவர்களைக் கிட்டே நெருங்க விட்டதில்லை முக்தா. இப்போது தான், உண்மையான அன்பு காட்டுபவர்களை இனம் கண்டு கொண்டாள்.

"இன்னைக்கு நீ ரொம்ப அழகாக இருக்க முக்தா" என்றவாறு உணவைப் பரிமாறினார்.

"தாங்க்ஸ் ஆன்ட்டி"

மென் புன்னகையுடன் நன்றி கூறியவளை, வாஞ்சையுடன் பார்த்தார் கௌசல்யா.

அவளருகில் அமர்ந்தவர்,
"அப்போ அப்போ இங்கே வந்து போகனும் முக்தா. லன்ச்சுக்கு உனக்குப் பிடிச்சதை செய்யனும். என்ன வேணும்?" என்று மதிய உணவைத் தயார் செய்வதற்காக அவளது விருப்பத்தைக் கேட்டார்.

"எனக்கு நான்வெஜ் சாப்பிடனும். அதுவும் உங்க கையால் சாப்பிடனும் ஆன்ட்டி" பலநாள் ஆசை போல கேட்டவளிடம்,

"செஞ்சிட்டாப் போச்சு முக்தா. சிக்கன், மட்டன் அப்பறம் நண்டு செய்றேன்" என்று குறிப்பெடுத்துக் கொண்டார் கௌசல்யா.

"ஸ்ட்ரெயின் பண்ணிக்காதீங்க ஆன்ட்டி.எதாவது ஒரு டிஷ் போதும்" என்று அவரிடம் கூறினாள்.

"அட ! அதெல்லாம் கஷ்டம் இல்லைம்மா" என்று அவள் காலை உணவை முடித்தவுடன், டைனிங் டேபிளிலேயே அமர்ந்து, அவளுடன் பேசலானார்.

தாயுடன் பேசியது ஞாபகம் இல்லாததால், முக்தா இன்று கௌசல்யாவுடன் மணிக்கணக்கில் பேசினாள்.

அவரும் முக்தாவை முகம் வாட செய்து விடாமல், மகன் சம்பந்தப்பட்ட பேச்சை எடுக்காமல், பொதுவான விஷயங்களை மட்டும் பேசினார்.அதுவே நிம்மதியாக இருந்தது முக்தாவிற்கு.

"அகி! வீட்டுக்கு வந்தாச்சு" என்று உற்சாகத்துடன் அவளைத் தன் வீட்டிற்கு வரவேற்றாள் மௌனா.

காய்கறி வாங்கப் போயிருந்த அன்னபூரணி, திடீரென்று மகள் தன் வீட்டின் முன் வந்து நிற்பதைப் பார்த்ததும், ஆனந்தமாக அதிர்ந்தார்.

"ஹேய் மௌனா!" என்று கூடையை கீழே வைத்து விட்டு மகளை அணைத்துக் கொண்டார் அன்னபூரணி.

அந்த அணைப்பில் தாயின் தவிப்பை உணர்ந்திருந்த மௌனா, அவர் விலகும் வரை காத்திருந்தாள்.

இதை அமைதியான புன்சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் அகதா.

மகளிடமிருந்து விலகிய அன்னபூரணி,
"அகதா ம்மா ! வாடா ! " என்று அவளையும் அணைத்து விடுவித்தார்.

அதில் வெளிவந்த கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டாள்.

"வாங்க உள்ளே போகலாம்" என்று சாவி கொண்டு கதவைத் திறந்தார்.

"அப்பா எங்கே அம்மா?" என்று மௌனா தந்தையைத் தேடினாள்.

அவர் சலூன் கடைக்குப் போயிருக்கார் மா. கால் செய்து வர சொல்றேன்" என்று கணவனை செல்பேசியில் அழைத்து வீட்டிற்கு வரச் சொன்னார்.

மௌனாவும், அகதாவும் குளித்து வருவதற்குள், சிவமணி வீட்டிற்கு வந்து விட்டார்.

"உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்! " என்று அன்னபூரணி சொல்லிக் கொண்டிருக்கும் போது, மௌனா வெளிப்பட்டாள்.

"செல்லம்!" என்று மகளை ஆரத் தழுவிக் கொண்டார் சிவமணி.

மகளின் வரவு அவரை நெகிழ வைத்திருந்தது. தலையை வருடிக் கொடுத்து விட்டு, "அகதா! நல்லா இருக்கியாம்மா?" என்று அவளிடமும் பேசினார்.

"இப்போ தான் வீட்டுக்கு உயிர்ப்பு வருது. அன்னம்! சிக்கன் எடுத்துட்டு வர்றேன். பிள்ளைகளுக்குச் சமைச்சிடலாம்" என்று கறிக்கடைக்குப் போனார்.

காலை உணவு முடித்து, மகளுடனும், அகதாவுடனும் பேசிக் கொண்டே, மதியத்திற்குச் சிக்கன் சமைக்க மற்ற காய்கறிகளை வெட்டினார்.

"வேலையெல்லாம் எப்படிப் போகுது ரெண்டு பேருக்கும்?"

"எனக்குக் கம்ப்யூட்டரில் வேலைன்றதால், கண்ணுப் போற நிலையில் இருக்கேன் மா " என்று அகதா கலகலத்தாள்.

"எனக்கு கால் வலி வந்துடும் அம்மா" என்று மௌனாவும் தன் வேலையைப் பற்றி கூறினாள்.

"அடிப்பாவிகளா! ஒருத்தராவது சூப்பரா போகுது, நல்லா போகுதுன்னு சொல்றீங்களா!" என்று செல்லமாக கண்டித்தார் அன்னபூரணி.

"நானும் வந்துட்டேன்" சிவமணியும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார்.

அன்னபூரணியை மட்டும் தனியே சமைக்க விடாமல், நால்வரும் சேர்ந்து சமைத்தனர்.

தாயை அழைத்து அகதாவின் மனதில் நீங்காமல் இருக்கும், கஷ்டத்தைக் கூறினாள் மௌனா. அவளை எப்படியாவது பழையபடி மாற்றி, தன்னுடன் ஊருக்கு அனுப்பி வைக்குமாறு அவரிடம் விண்ணப்பித்தாள்.

அதேபோல, அவரும், சிவமணியும் நடந்து கொண்டனர்.

"எந்த ஊருக்குப் போய் இருப்பா?" என்று யோசித்தான் மஹதன்.

கிஷானிடம் கேட்டு பயனில்லை. தானே கண்டுபிடிக்க நினைத்து, அவனது விடுதிக்கு மௌனா அனுப்பிய, விண்ணப் படிவத்தில் அவளது ஊரை கண்டு கொண்டான்.

வீட்டிற்குப் போய் உடைகளை எடுத்துக் கொள்ள நேரமில்லை. அதனால் செல்லும் வழியிலேயே அந்த ஊரிலிருக்கும் ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்தான் மஹதன்.

உடைகள் மற்றும் மற்ற பொருட்களை வழியில் கடையில் வாங்கிக் கொள்ளலாம் என்று கௌசல்யாவிற்குக் குறுஞ்செய்தி அனுப்பி விட்டு, காரில் அதிவேகமாக சென்றான் மௌனாவின் ஊரை நோக்கி!!!

- தொடரும்
 

Shalini shalu

Moderator
நங்கையின் மறவோன் 16

மதியம் ஆகாரம் வயிறை நிறைத்திருக்க, முக்தாவோ,
"ரொம்ப தாங்க்ஸ் ஆன்ட்டி. சோ ஸ்வீட் நீங்க!" என்று கௌசல்யாவின் கையைப் பற்றி நன்றி தெரிவித்தாள்.

"இருக்கட்டும் முக்தா. நான் கேட்டதும் நீ இங்கே வந்து சாப்பிட, சம்மதிச்சதுக்கு தாங்க்ஸ்" என்று பரிசாக சிலவற்றைக் கொடுத்து அவளை வழியனுப்பினார் கௌசல்யா.

அதற்குப் பிறகு தான் தன் செல்பேசியையே பார்வையிட்டார்.

அதில் மஹதனின் பயணத்தைப் பற்றி தெரிந்ததும்,

'அப்படியென்ன முக்கியமான வேலை? ட்ரெஸ்ஸைக் கூட வீட்டுக்கு வந்து எடுத்துட்டுப் போகாமல், கிளம்பி இருக்கான்!' என்று அவனுடைய அலுவலக காரியதரிசிக்குக் கால் செய்து கேட்டார்.

"ரொம்ப முக்கியமான வேலைன்னு மட்டும் தான் சொன்னார் மேடம். அதையும் ஃபோன் செய்து தான் இன்ஃபார்ம் பண்ணினார்" என்று கூறவும், அழைப்பைத் துண்டித்தவர்,

"இது ஆஃபீஸ் விஷயமாகப் போன மாதிரி தெரியலையே? மஹதன் அம்மாகிட்ட எதை மறைக்கிற?"
என்று யோசித்துக் கொண்டே , மகனுக்கு அழைத்தார் கௌசல்யா.

"ஹலோ அம்மா!" என்று எப்போதும் போல பேசிய மகனிடம்,

"மஹதா! மெசேஜ் மட்டும் அனுப்பிட்டு, எங்கே போயிருக்க? என்ன வேலை?" என்று விசாரித்தார்.

"அம்மா! வேலையை முடிச்சுட்டு வந்து சொல்றேன். நீங்க என்னை நினைச்சுப் பயப்படாதீங்க. நான் எந்தப் பிரச்சினையிலும் மாட்டிக்கலை. இப்போதைக்கு இவ்ளோ தான் சொல்ல முடியும். சாரி அம்மா" என்று மன்னிப்பு வேண்டினான் மஹதன்.

"அப்போ இங்கே வந்தவுடனே எல்லாத்தையும் எங்கிட்ட சொல்லனும்" என்று கூறினார் கௌசல்யா.

"உங்ககிட்ட தான் முதலில் சொல்லுவேன். ப்ராமிஸ்" என சத்தியம் செய்தான்.

போன வேலையை முடித்து விட்டு வந்தவுடன், அதைப் பற்றி மகனிடம் உரையாட காத்திருந்தார் கௌசல்யா. ஆனால், மகன் போனது அவனுடைய காதல் மற்றும் திருமண விஷயம் என்று கௌசல்யாவிற்குத் தெரிய வந்தால்?!

தானே கார் ஓட்டிக் கொண்டு போன முக்தாவை வழிமறித்து நின்றது கிஷானுடைய கார்.

சாய்ந்து நின்றிருந்தவனை யோசனையாகப் பார்த்தாள் முக்தா.

அவளுக்குச் சற்று தள்ளி நின்று கொண்ட கிஷான்,
"ஃபாரின் போகப் போறன்னு கேள்விப்பட்டேன் முக்தா!" அவளது வதனத்தை மென்மையாக கண்களால் வருடியபடி கேட்டான்.

அவனைப் பார்த்தது எதிர்பாராத விஷயம், அதே போல் இப்படி பட்டென்று கேட்பான் என்பதையும் அவள் எதிர்பார்க்கவில்லை.

"ஆமாம் கிஷான். கொஞ்ச நாளில் கிளம்பிடுவேன்" என்று தன்மையாக பதில் சொன்னாள்.

"நான் உங்கிட்ட லவ் சொல்லி ரொம்ப வருஷம் ஆயிடுச்சு முக்தா. இன்னும் அதே கிஷான் தான் உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன். இப்பவும் யோசிச்சுப் பார். நான் காத்துட்டு இருக்கேன்" என்று அவளது விழிகளை நேராகப் பார்த்து மறுமுறை தன் காதலைச் சொன்னான்.

இப்போதும் மாறாத காதல் தன் மேல் இவனுக்கு எப்படி இருக்கிறது? தான் மஹதனைக் காதலித்த விஷயம் தெரியும் தானே? அப்படியிருந்தும் இவனால் மட்டும் இந்த நிமிடம் வரை, தன் மேல் காதல் என்று எப்படி கூற முடிகிறது?

முதல் தடவை அவன் காதலை வெளிப்படுத்திய போது, இருந்த முக்தா இப்போது இல்லையே?

எதையும் நிதானமாக கையாண்டு பார்க்க முயற்சி செய்து கொண்டிருப்பவள்.

ஆதலால், அவனைப் பற்றி யோசிக்க முடிவெடுத்தாள்.

"நான் ஃபாரின் போற வரைக்கும் டைம் இருக்கு கிஷான். யோசிச்சு சொல்றேன்" என்று கூறியவளிடம்,

"ஷ்யூர் முக்தா. நல்லா யோசி. உன் முடிவு எதுவாக இருந்தாலும் நான் ஏத்துக்கிறேன்" என அங்கிருந்து கிளம்பினான் கிஷான்.

முக்தாவும் காரை ஓட்டிச் கொண்டு இல்லம் வந்தடைந்தாள்.

அவளது எண்ணங்களில் கிஷானும், அவன் கேட்ட விஷயமும் முழுமையாக வியாபித்து இருந்தது.

ஊரிலிருக்கும் இந்த மூன்று நாட்களும் சொர்க்கமாக இருக்கப் போகிறது என்று மௌனா நினைத்திருந்தாள்.

ஆனால், மறுநாளே அங்கே வந்து சேர்ந்திருந்த மஹதனை அவள் மறந்திருந்தாள்.

மௌனாவிடம் தன் காதலை வெளிப்படுத்தும் தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டு இருந்த மஹதன் விடுதி அறையில், தயாராகிக் கொண்டிருந்தான்.

மௌனாவின் வீட்டு விலாசத்தை மஹதன் கண்டுபிடிக்கப் போவதில்லை என்று முன்னரே உறுதி கொண்டிருந்தான்.

அவள் ஊரைப் பற்றி தெரிந்து கொண்டதே தவறு. ஏனெனில், அந்தப் பெண்ணிற்குத் தெரியாமல் அவளைப் பற்றிய தகவல்களை அறிந்து கொள்வது நல்ல காரியம் இல்லை.

ஊரை மட்டும் தெரிந்து கொண்டால் மற்றதெல்லாம் தாமாகவே நடக்கும் இல்லையென்றால், நாமாக கண்டுபிடிப்போம் என்று நினைத்திருந்தான் மஹதன்.

வேறு எந்த வழியும் இல்லையென்றால் மட்டுமே மேற்கொண்டு யோசிக்க வேண்டும் என முடிந்தளவு அவ்வூரில் தங்கியிருந்து அடுத்த இரண்டு நாட்களுக்குள் மௌனாவைச் சந்தித்து தன் மனதிலிருப்பதை வெளிப்படுத்த வேண்டும் என நினைத்தான்.

அவனுக்குக் காத்திருப்பதற்குப் பொறுமையில்லை.அதேபோல், மௌனாவிற்குக் காதலில் நம்பிக்கை உள்ளதா? என்பதும் தெரியவில்லை.

அசட்டுதனமான செயல்களால் , நிச்சயம் துன்பம் ஏற்படும் என்பது அவனுக்குத் தெரியாமல் போய் விட்டது.

மௌனாவைச் சந்திக்கும் நேரமும் வெகு விரைவில் அதன் போக்கில் நடந்தேறியது.

"இங்கேயும் வந்து லேப்டாப் பார்த்துட்டு இருக்கியா அகி?" என்று கடிந்து கொண்டாள் மௌனா.

" எதாவது பெண்டிங் வொர்க் வச்சுட்டு வந்துட்டேனா என்று பார்த்தேன் மௌனா" என்றாள் அகதா.

"சீக்கிரம் முடி.கோவிலுக்குப் போய்ட்டு, ஊரைச் சுத்திப் பார்ப்போம்" என்று மலர்ச்சியுடன் கூறினாள்.

"முடிஞ்சது மௌனா. வா!" என்று மடிக்கணினியை வைத்து விட்டு எழுந்தாள்.

"அம்மா! நாங்க கோயிலுக்குப் போய்ட்டு வர்றோம். இங்கே வந்ததில் இருந்து, சாமியை தரிசிக்கவே இல்லை. அப்பாகிட்ட சொல்லிடுங்க. அப்படியே ஊரையும் ஒரு ரவுண்ட் சுத்திப் பாத்துட்டு வந்திடறோம்" என்று அகதாவை அழைத்துக் கொண்டு, கோயிலுக்குச் சென்றாள் மௌனா.

சுடிதார் அணிந்து, கூந்தலை எப்போதும் தனக்குப் பிடித்தமான வகையில், பின்னிக் கொண்டு, தோழியையும் அழகாக தயார் செய்திருந்தாள் மௌனா.

சொந்த ஊரில், தன் பாதத்தைப் பதித்து, நடை பயின்று, காற்றை சுவாசித்துக் கொண்டிருப்பது மௌனாவிற்கு அதிகமாக புத்துணர்வு கிடைத்தது.அதனால் அவளது முகமும் பொலிவு கொண்டிருந்தது.

பிள்ளையார் கோயிலை ரசித்துக் கொண்டு, சூழலை அனுபவித்துக் கொண்டு, சாமி தரிசனம் செய்தனர் இருவரும்.

அகதாவின் வாழ்வில் நல்லது நடக்கட்டும் என்று விண்ணப்பித்தாள் மௌனா.

அதேபோல, மௌனா என்றும் மங்காத புன்னகையுடன் வாழ்க்கையை வாழ வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள் அகதா.

மெல்லிய கீற்றுப் புன்னகையுடன் கோயிலில் இருந்து அகதாவுடன் பேசிக் கொண்டு வெளியே வந்தவளுக்கு உள்ளுணர்வு உந்துதல் செய்ய, சற்று தொலைவில் நின்றிருந்த ஆடவனின் புறம் விழிகளைச் சுழற்றிப் பார்த்தாள் மௌனா.

அங்கே எதிரே இருந்த கட்டிடத்தின் சுவற்றில் சாய்ந்து கொண்டு, இவளைப் பார்த்துக் குறுஞ்சிரிப்பு ஒன்றை உதிர்த்தான் மஹதன்.

அவனைக் கண்டதும் அதிர்ச்சியில் அலங்க, மலங்க விழித்தாள் மௌனா.

'யாருங்க நீங்க? என்னங்க இப்படியெல்லாம் பண்றீங்க?' என்று தன் முன்னால், ஸ்டைலாக நின்றிருந்த மஹதனை அச்சத்துடன் ஏறிட்டாள் மௌனா.

அகதாவின் புறம் திரும்ப, அவளோ அவனைப் பார்த்து விட்டு, மௌனாவைப் புருவம் உயர்த்திப் பார்த்தாள்.

'நீ தான் வர சொன்னியா?' என்றெல்லாம் அவள் கேட்கவில்லை. இப்படி வருமளவிற்கு வைத்து விட்டாயே! என்ற கண்டிப்புப் பார்வை தான் அவளிடமிருந்து வந்தது.

"உன் எக்ஸ் - எம். டி தான மௌனா?" எனக் கேட்டாள்.

"யெஸ் அகி. இவர் என்ன திடுதிப்புனு வந்து பயமுறுத்துறார்?" என்று முணுமுணுத்தாள் மௌனா.

"உன்னைப் பார்க்கத் தான் வந்திருக்கார் போல" என அவளும் சரியாக கணித்தாள்.

"ஆமாம்.ஆனா ஏன்?" என குழம்பினாள் மௌனா.

"அதை ஸ்ட்ரைட் ஆக அவர்கிட்டயே கேளு" என்று இன்னும் தன் நிலையை மாற்றாமல், அதே குறுநகையுடன் நின்றிருந்த மஹதனைக் கண்களால் காட்டிக் கூறினாள் அகதா.

"போய்ப் பேசிட்டு வர்றேன் அகி" என்று கண்களில் மிரட்சியுடன் மஹதனிடம் சென்றாள்.

'நானே சூழ்நிலைய உருவாக்குவேன்னு அன்னைக்கு சொன்னதைக் கொஞ்சம் சீரியஸாக எடுத்திருந்து இருக்கலாமோ மௌனா! சொன்ன மாதிரியே செஞ்சுட்டான். அதே மௌனாவா , கெத்தா பேச ட்ரை பண்ணு!' என்று பதட்டத்தை முடிந்தளவு மறைத்துக் கொண்டாள் மௌனா.

"ஹாய் சார்! இந்த ஊருக்கு வேலை விஷயமாக வந்தீங்களா?" என்று சகஜமாகப் பேச முயன்றாள்.

"நாட் பேட்! இல்லையே! உன்னைப் பார்த்துப் பேசிட்டுப் போகலாம்ன்னு வந்தேன் மௌனா" அலுங்காமல் உண்மையைக் கூறினான் மஹதன்.

"என்னைப் பார்க்கவா? அன்னைக்கு ஹோட்டலிலேயே மீட் பண்ணோமே சார்? அங்கேயே பேசினோமே?" என்று பதிலளித்தாள்.

"அங்கே நீ என்னைப் பேசவே விடல. அதே மாதிரி ரொம்ப பர்சனல் விஷயத்தை எல்லாம் அப்படி அவசரமாக நின்னுப் பேசக் கூடாது. பொறுமையாகப் பேசனும்.அதுனால தான் இப்போ, இங்கே உன்னை மீட் பண்றேன்" என்று தடாலடியாக கூறினான்.

அகதாவின் புறம் அவ்வப்போது, விழியின் கருமணிகளைச் சுற்றிக் கொண்டு, மஹதனிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

"என்னப் பேசனும் சார்? நாங்க சீக்கிரம் வீட்டுக்குப் போகனும்" என்று விஷயத்தைக் கேட்டாள் மௌனா.

"ம்ஹ்ம்! அவசரப்படுத்தினேனா வேற இடத்தில் உன்னை மீட் பண்ண வேண்டி இருக்கும்" என்றான்.

"இல்லையில்லை! அவசரப்படுத்தலை. சொல்லுங்க"

"இவ்ளோ நாளாக
உன்னோட நிமிர்வு , பிரச்சனையை தைரியமாக ஹேண்டில் பண்ற ஆட்டிட்யூட் இதையெல்லாம் பார்த்து, ரசிச்சேன். அப்போ எனக்குள்ளே நீ வந்ததை நான் உணரலை.முதல்ல, நான் உங்கிட்ட லவ் சொன்னால் உன்னோட ரியாக்ஷன் என்னவா இருக்கும்னு தான் ப்ரபோஸ் பண்ண நினைச்சேன். ஆனால் இப்போ, உண்மையிலேயே நான் உன்னை லவ் பண்றேன்னு கன்ஃபார்ம் ஆக எனக்குத் தெரிஞ்சது. அதுனால தான் இவ்ளோ லேட். உன்னோட மனசில் நான் இருக்கேனான்னு நீ தான் பதில் சொல்லனும்?" என்று கேட்டு நின்றவனை மலைத்துப் போய்ப் பார்த்தாள் மௌனா.

அவள் நிச்சயமாக இதை எதிர்பார்க்கவில்லை. அதுவும் மஹதன் இப்படி காதலைத் தெரிவிக்கக் கூடும் என்று கனவிலும் நினைக்கவில்லை. ஆனால் அது தான் நடந்துள்ளது!

மஹதனுக்குப் பதிலளிப்பதற்கு முன்னர், அவனிடம் சில கேள்விகளைக் கேட்க நினைத்தாள்.

"பதில்! அதைச் சொல்றதுக்கு முன்னாடி, நான் கேள்விகளைக் கேட்டுத் தெரிஞ்சுக்க நினைக்கிறேன் சார்! "

அவளது நிதானமான தோற்றமும், உறுதியான பார்வையும் மற்றும் மறுமொழியும் மஹதனைக் கவர்ந்தது.

"நீங்க எப்படி என்னோட ஊரைக் கண்டுபிடிச்சீங்க?" என்று முதல் கேள்வியைக் கேட்டாள் மௌனா.

அதற்கடுத்து சரமாரியாக தன்னை நோக்கிக் கேள்விக் கணைகளைத் தொடுக்கப் போகிறாள் என்பதை அவளது விழிகளிலிருந்த தீவிரத்தில் கண்டு கொண்டு, அதற்கான பதிலையும் சொல்லத் தயாரானான் மஹதன்.

- தொடரும்
 

Shalini shalu

Moderator
நங்கையின் மறவோன் 17

"உன்னோட அப்ளிகேஷன் ஃபார்மில் இருந்து எடுத்தேன்" என்று அலட்டிக் கொள்ளாமல் கூறினான் மஹதன்.

"இது தப்புன்னு தெரியலையா சார்?" என்று அவனுக்குக் குறையாமல் கேட்டாள் மௌனா.

அவள் வெளிப்படையாக இப்படி கேட்டதும், சிறிய அமைதிக்குப் பிறகு,
"தப்பு தான் மௌனா! ஆனால் நான் உங்கிட்ட கேட்ட அப்போவே நீ பேச வந்திருக்கலாம் தான?" என்று அவளையே குற்றம் சொன்னான் மஹதன்.

"இது என்ன பேச்சு சார்? நான் ஏன் நீங்க கூப்பிட்ட உடனே வரனும்? மறுப்புத் தெரிவிச்சா, இப்படித் தான் அதிரடியாக, ஊரைக் கண்டுபிடிச்சு , வந்து முன்னாடி நிக்கிறதா?" என்று சலனம் இல்லாமல் கேட்டவளைப் பார்த்து,

" நீ கேட்கிறது சரி தான். நான் உன்னைக் கட்டுப்படுத்தி என்கிட்ட பணிய வைக்க முயற்சி செய்யலை மௌனா. என்னோட காதலைச் சொன்னேன். இந்தக் கேள்வியை நீ கேட்டதுமே உனக்கு இதில் விருப்பம் இல்லைன்னு புரிஞ்சது" என்றான்.

"உங்க காதலைச் சொன்னது தப்பில்லை சார். ஆனால், என்னோட ப்ரைவசியில் ரொம்ப தலையிட்றீங்க! நான் இங்கே வந்ததே மனசுக்கு அமைதியைத் தேடித் தான்! ஆனால் உங்க கூட நான் பேசியே ஆகனும்னு, என்னைத் தேடி இங்கே வரைக்கும் வந்துட்டீங்க! ஒரு விதத்தில் இது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ஏன்னா, எனக்காக இவ்ளோ ட்ரை பண்ணி , என்னைப் பார்க்க வந்திருக்கீங்கன்னு ஹேப்பி ஆக இருக்கு. ஆனால், லவ் வர லேட் ஆகும். பொறுமையாக வெயிட் பண்ணுங்கன்னு எல்லாம் சொல்ல மாட்டேன். லவ் வரலைன்னா அதை அக்சப்ட் பண்ணிக்கோங்க" என்று தீவிரமாக கூறினாள்.

பிறகு, தள்ளி நின்றிருந்த அகதாவை ஒரு பார்வை பார்த்த மௌனா,
"அங்கே ஃப்ரண்ட் ரொம்ப நேரமாக வெயிட் பண்ணிட்டு இருக்கா. நான் போய்ட்டு வர்றேன் சார். இது என்னோட சொந்த ஊர், இங்கே எல்லாரும் தெரிஞ்சவங்க. சோ, இப்படி மறுபடியும் பேச வேண்டாம் ப்ளீஸ் சார்!" என கோரிக்கை விடுத்து விட்டு சென்றாள் மௌனா.

"வா அகி. வீட்டுக்குப் போய்ட்டு சொல்றேன்" என்று அவளுடன் எதுவும் பேசாமல் வீட்டை அடைந்தாள்.

கோயில் பிரசாதத்தை தன் அம்மாவிடம் கொடுத்தாள் மௌனா.

"கூட்டமாக இருந்துச்சா மா?" என்று நெற்றியில் திருநீற்றைப் பூசியபடி கேட்டார் அன்னபூரணி.

"கூட்டம் இல்லைம்மா. கோயிலே அமைதியாக இருந்தது" என்று அகதா கூறவும்,

"சரி.அப்பாவுக்கும் திருநீறு கொடுங்க" என்றார்.

"அப்பா இந்தாங்க திருநீறு, பிரசாதமும் எடுத்துக்கோங்க" என்று மௌனா தந்தையிடம் கொடுத்தாள்.

"நைட்டுக்கு ஸ்பெஷல் ஆக எதாவது சாப்பாடு செய்யலாமா? என்ன சாப்பிட்றீங்க டா?" என்று இருவரிடமும் கேட்டார் சிவமணி.

"எனக்குச் சப்பாத்தி செய்யுங்கள் அப்பா. அகதாவுக்கு வெஜ் புலாவ் பிடிக்கும்" என்று தோழியின் பிடித்தத்தை ஞாபகம் வைத்துக் கூறினாள் மௌனா.

"நான் ரெடி பண்றேன். பூரணிம்மா! நீ ரெஸ்ட் எடு" என்று தானே சமைத்து விடுவதாகக் கூறினார் சிவமணி.

அறைக்குள் போனதும், அகதா தோழியைப் பிடித்துக் கொண்டாள்.

"என்ன சொன்னார் உன்னோட எக்ஸ் எம். டி?" என்று ஆர்வமாக கேட்டாள்.

"அகி! எக்ஸ் எம். டி இப்போ லவ்வர் ஆக புரமோஷன் ஆக விரும்புறார்" என்று இப்போதும் அவனுடைய ஒவ்வொரு வார்த்தையும் அவளை உலுக்கியதை உணர்கிறாள்.

"என்னது! எப்படி மௌனா?"

அவனைப் பார்த்து மௌனா தான் ஒதுங்கிப் போய்க் கொண்டிருந்தாள். அப்படியிருக்க, மஹதனுக்கு மட்டும் இவள் மீது காதல் ஏற்பட்டது எவ்வாறு சாத்தியம்? என்று அகதாவுக்கும் ஆச்சரியம் தான்.

"அவருக்கு என் மேல் லவ் வந்தது, அதை கன்ஃபார்ம் செய்துக்க இங்கே வந்து என்னைப் பார்த்ததோ இன்னும் என்னாலேயே நம்ப முடியலை அகி! ஆனாலும் இது தான் நடந்திருக்கு. நானும் யோசிக்கிறேன்னு சொல்லியிருக்கேன். எந்த ப்ராமிஸூம் கொடுக்கலை" என்று தன் தெளிவான பதிலைக் கூறினாள்.

"மௌனா! அவர் உண்மையிலேயே உன்மேல் லவ் வந்து இங்கே வந்தாரா? இல்லைன்னா உன்னைப் பழி வாங்குறதுக்காக இப்படியெல்லாம் சொல்றாரோ?" என்று கேட்டாள் அகதா.

"பழி வாங்க கூட ப்ரபோஸ் பண்ணி இருக்கலாமோ அகி?" என மௌனாவிற்கும் ஐயம் ஏற்பட்டது.

"நல்லவேளை நீ உடனே ஓகே சொல்லலை. எதுவாக இருந்தாலும் அங்கே போய் யோசிச்சுப் பார். இங்கே அப்பா, அம்மாவுக்கு இந்த விஷயம் தெரிய வேண்டாம் மௌனா"

உள்ளூரில் எந்த பிரச்சனையும் தோன்றி விடக் கூடாது என்ற ரீதியில், அகதா அறிவுரை கூறினாள்.

"சரி அகி"

அவளும், அகதாவும் மௌனாவின் அறையில் தான் தங்கி இருக்கிறார்கள்.

"உன்னோட அப்பா, அம்மா ரொம்ப நல்லவங்க மௌனா" என்று பேச்சை ஆரம்பித்தாள்.

"யெஸ் அகி. நீயும் என்னை மாதிரி அவங்களுக்கு இன்னொரு பொண்ணுன்னு தான் பார்க்கிறாங்க"

"ஆமாம் அகி" என்றாள் மௌனா.

இவர்களது உண்மையான அன்பில் மனம் குளிர்ந்து போனாள் அகதா.

விடுதியில், கட்டிலில் மாற்று உடையை வீசி எறிந்த மஹதன், ஏமாற்றத்தில் மன இறுக்கம் கொண்டிருந்தான்.

"பழி வாங்குறேன்னு அவளுக்குத் தோணுதோ?" என்று மௌனாவின் மனநிலையைச் சரியாக கண்டறிந்திருந்தான்.

"அதை எப்படி நான் அவளுக்குத் தெளிவுபடுத்துறது?" என்று தளர்ந்து போனான்.

சந்தேகத்தை உறுதி செய்ய வந்து விட்டு, இப்போது அவளது மறுப்பை நினைத்துக் கவலைப்படுகிறான்.

"இனிமேல் போய்ப் பேசனும்னு கூப்பிட்டால், வரவே மாட்டா. அது உறுதி! என்ன செய்றது?" என்று அவளுடன் கண்ணாமூச்சி ஆட்டம் ஆட நினைத்தான் மஹதன்.

அவளிடம் தன் மனதில் உள்ளதை வெளிப்படுத்தியதால், வந்த வேலை முடிந்தது என்று, அன்றைய நாளே தன் வீட்டிற்குப் பயணத்தை மேற்கொண்டான் மஹதன்.

மகளின் முகத்தில் மாறாத தெளிவு இருப்பதைக் கண்ணுற்ற நீலகண்டன்,
"அங்கே ஒரு குறையும் இல்லை தான முகி?" என்று முக்தாவிடம் விசாரிக்கவும் செய்தார்.

"எந்த குறையும் இல்லை அப்பா. கௌசல்யா ஆன்ட்டி என்னை நல்லா பார்த்துக்கிட்டாங்க. சாப்பாடு பிரமாதமாக இருந்துச்சு. வயிறு ஃபுல் ஆயிடுச்சு" என்று புன்னகையுடன் கூறினாள் முக்தா.

அப்போது தான் நீலகண்டனுக்கும் மனதில் தெளிவு பிறந்தது.

"மஹதன்?"

"அவரை நான் பார்க்கலை அப்பா.ஹோட்டலுக்குக் கிளம்பிட்டார் போல" என்றாள் முக்தா.

மஹதனுடைய பெயர் மகளுக்குள் எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை, இனிமேலும் ஏற்பட வாய்ப்பில்லை என அவருக்கு அகம் நிறைந்தது.

வேறு நல்ல வாழ்க்கை மகளுக்காக காத்திருக்கிறது அதுவும் கிஷானுடைய ரூபத்தில் என்பதை விரைவில் நீலகண்டனும் அறிந்து கொள்வார்.

"அம்மா!"

கௌசல்யாவின் மடியில் தலை சாய்த்துக் கொண்டான் மஹதன்.

"மஹதா! நீ வந்ததும் அந்த விஷயத்தைச் சொல்றேன்னு சொன்ன?" என்று அவனுடைய முகம் வாடி இருப்பதற்கான காரணத்தை மறைமுகமாக வினவினார் கௌசல்யா.

"விஷயம் பாசிட்டிவ் ஆக முடியலை அம்மா! அப்பறம் எப்படி உங்ககிட்ட சொல்வேன்?" என்று இறுக்கமான குரலில் கூறினான்.

"எப்படியும் பிஸினஸ் விஷயமாகத் தான் போய் இருக்கிற, அவங்க கன்வின்ஸ் ஆகலையா?" என்று கேட்டார்.

"நான் லைஃப் விஷயமாகப் போனேன் அம்மா"

"அதை யார் கிட்ட பேசப் போன?"

"மௌனா!" என்றதும்,

"அந்தப் பொண்ணா?"

வாழ்க்கை விஷயம் என்று கூறியது அவருக்கு வியப்பு என்றால், அதற்கு அடுத்தபடியாக மௌனாவின் பெயரைக் கூறியவனை, மின்சாரம் தாக்கியது போல பார்த்தார் கௌசல்யா.

"அவளோட வீட்டுக்குப் போய்ப் பார்த்தியா?" என்று வியப்பாக கேட்டார்.

"இல்லை ம்மா! அவ ஊருக்குப் போய்ப் பார்த்தேன்" என்று அவருக்கு இடியை இறக்கினான்.

"என்ன சொன்னா?"

"வெயிட் பண்ணுன்ற மாதிரி சொல்லி இருக்கா அம்மா!" என்றான் மகன்.

"கல்யாணத்துக்குக் கொஞ்ச நாள் போகட்டும்னு சொன்ன! இப்போ லவ் பண்றேன்னு அந்தப் பொண்ணுகிட்ட ப்ரபோஸ் பண்ணிட்டு வந்திருக்க! இது நல்லபடியாக அமைஞ்சு , அந்தப் பொண்ணையே நீ கல்யாணம் செய்துக்கனும்னு எனக்கும் ஆசை மஹதா!"

எனக்காக இதை நிறைவேற்ற மாட்டாயா? என்றெல்லாம் மஹதனை அச்சுறுத்தி, காரியம் சாதிக்க நினைக்கவில்லை அவர்.

கௌசல்யாவின் நீண்ட நாள் ஆசை தான்! ஆனாலும், மகன் முழு மனதாக அல்லவா சம்மதம் தெரிவித்து அவனது திருமணம் நிகழ வேண்டும்! அதைத் தான் அவரும் விரும்பினார். அதற்காகக் தான் காத்திருக்கிறார்.

இப்போது தான் காற்று அவர் பக்கம் வீசுகிறது, எனவே, அவன் விரும்பும் பெண் என்றாலும், மஹதனுடைய வாழ்வு சிறந்து விளங்கினால் போதும் என்ற முடிவுக்கு வந்தார் கௌசல்யா.

"முகி! ஃபாரின் போறதுக்கு முன்னாடி டிரெஸ் எதாவது எடுக்கனுமா? மத்த பொருள் வாங்கனும்னா வாங்கிக்கோ" என்று தன் கிரெடிட் கார்டைக் கொடுத்தார் நீலகண்டன்.

"தேவைக்கு ஏற்ப டிரெஸ் இருக்கு அப்பா. மத்ததை எல்லாம் போன தடவை மால் போகும் போது அங்கேயே வாங்கிட்டேன். கார்ட் உங்ககிட்டயே இருக்கட்டும். எனக்குத் தேவைப்படும் போது வாங்கிக்கிறேன் ப்பா" என்று அவருடைய பண எந்திர அட்டையைக் (credit card) கொடுத்தாள்.

"கௌசல்யா ஆன்ட்டி வீட்டில் இருந்து வரும் போது, மஹதனோட ஃப்ரண்ட் கிஷான் எங்கிட்ட பேசினார் அப்பா"

"அந்தப் பையனைப் பத்திக் கேள்விப்பட்டு இருக்கேன் முகி"

"அவர் எங்கிட்ட ஏற்கனவே கல்யாணம் பண்ணிக்கக் கேட்டார். நான் மறுத்துட்டேன். இப்பவும் அதே எண்ணம் தான் இருக்குன்னு சொன்னார்" என்றதும்,

"நீ என்னம்மா சொன்ன?" என்று ஆவலுடன் கேட்டார் நீலகண்டன்.

"நான் எதுவும் சொல்லலை அப்பா! பேசாமல் வந்துட்டேன்"

"நேரம் எடுத்துக்கோ டா" என்று மகளிடம் கூறினார்.

ஆனால், கிஷானுடைய வாழ்க்கை வரலாறு அடங்கிய கோப்பு, அவரிடம் அடுத்த வாரம் வந்து சேர்ந்து விடும் என்பது அவர் மட்டும் அறிந்த விஷயம்!

மகளின் கவனம் அவன் புறம் திரும்பினால், அவளுக்குக் கிஷான் பொருந்தினால், மனம் மேல் மாங்கல்ய பாக்கியம் முக்தாவிற்குக் கிடைப்பதில், தந்தைக்கு மகிழ்ச்சி தானே!

"அம்மாவோட ஃபோட்டோஸை ஃப்ரேம் போட்டுக் கொடுங்க அப்பா. நான் போகும் போது எடுத்துட்டுப் போகனும்"

"நிறைய ஃப்ரேம் போடலாம் டா. இன்னைக்கே மொத்தமாக கொடுத்து, ரெடி பண்ணி வாங்கிடறேன்" என்று கூறியவர்,

"அப்போ நம்ம ஃபோட்டோஸ்?" என்று பாவமாக கேட்டார் நீலகண்டன்.

"நாம உடனே கிளம்பி போய் ஃபோட்டோஸ் எடுத்து கையோட ஃப்ரேம் போட்டுட்டு வந்துடுவோம் அப்பா" என்று அவரைக் குஷிப்படுத்தினாள் முக்தா.

❤மௌனாவின் வாழ்வில் புயலென வந்த மஹதன் மற்றும் முக்தாவின் வாழ்வில் வசந்தத்தைக் கொடுக்க நினைக்கும் கிஷான் இவர்களின்
காத்திருப்புக்குப் பலன் கிடைக்குமா?❤

- தொடரும்
 

Shalini shalu

Moderator
நங்கையின் மறவோன் 18

மௌனாவின் வீட்டிலிருந்து, இருவரும் விடைபெறும் நாளும் வந்தது.

காலையிலேயே கிளம்புவதாக இருந்தவர்களை உணவுண்டு விட்டு, மாலையில் செல்லுமாறு கேட்டிருந்தனர் சிவமணியும், அன்னபூரணியும்.

இலகுவான உணவைச் சமைத்தனர். மதியம், வீட்டிலேயே செய்து , பார்சல் கட்டிக் கொடுத்து விட முடிவெடுத்தனர்.

"உங்ககிட்ட நான் லிஸ்ட் கேட்டு இருந்தேனே? எழுதி கொடுங்க" என்று பெற்றோரிடம் வந்தாள் மௌனா.

"விட மாட்டியே மா நீ? எதுவும் வேண்டாம் டா. நீயும், அகதாவும் இங்கே வந்து தங்குனதே நிறைவா இருக்கு" என்றார் அன்னபூரணி.

"அம்மா! நாங்க உங்களுக்கு சந்தோஷத்தைக் கொடுத்தா மாதிரி, நாங்களும் உங்ககிட்ட இருந்து அதை எதிர்பார்ப்போமே? ப்ளீஸ்!!!" என்று வேண்டி நின்றாள்.

"பொண்ணு ஆசைப்பட்டு இவ்ளோ தூரம் கேட்கிறாள்ல! எழுதிக் கொடுப்போம் பூரணி" என சிவமணியும் ஆமோதித்தார்.

அவர்கள் கொடுத்த குறிப்பை ஆராய்ந்தாள் மௌனா. அதில், அன்னபூரணி தான் வரைபடம் வரைவதற்கான பொருட்களை எழுதிக் வைத்திருக்க, சிவமணியோ, துணிமணிகள் என்று எழுதி வைத்திருந்தார்.

அவர்களைப் பார்த்து, செல்லமாக முறைத்தவள், "அகி! இந்த லிஸ்ட்டைப் பாரேன்" என்று தோழியிடம் பேப்பரை நீட்டினாள் மௌனா.

அதை வாங்கிப் படித்த அகதாவும்,
"உங்களை என்னன்னு சொல்றது!!" என்று சிரித்து விட்டாள்.

"முதல் சம்பளத்தில் நான் உங்களுக்கு டிரெஸ் வாங்கிக் கொடுக்கிறது மாத்த முடியாத விஷயம். எல்லா மாதமும் அது தவறாமல் நடக்கும். ஆனால், இப்போ உங்களுக்கு உண்மையிலேயே வாங்கனும்னு ஆசைப்பட்ற பொருட்கள்" என்று அவர்களிடம் கோபித்துக் கொண்டாள்.

"எங்களோட ஆசை என்னன்னு நீயே யோசிச்சு வாங்கிக் கொடுத்துடு மௌனா" என்று சிவமணி மகளிடம் கூறி விட்டார்.

"சரி அப்பா. நானே வாங்கி அனுப்புறேன்" என்று சம்மதித்தாள்.

உடைமைகளை எடுத்து வைத்துக் கொண்டனர் இருவரும்.

"எவ்ளோ ஹேப்பியா அதைவிட ரிலாக்ஸ் ஆக இருந்தேன் தெரியுமா மௌனா?" என்று உணர்ந்து கூறிய அகதா தோழியை நன்றியுடன் கட்டிக் கொண்டாள்.

இதைத் தானே மௌனாவும் எதிர்பார்த்தாள்.

"தாங்க்யூ மௌனா" என்று நன்றி கூறவும்,

"என்கிட்ட அடி வாங்கப் போற அகி" என கடிந்து கொண்டாள்.

மதிய உணவை முடித்து விட்டு, அன்னபூரணி மற்றும் சிவமணியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டார்கள் அகதாவும், மௌனாவும்.

கண்ணீருடன் பிரியாவிடை கொடுத்தனர் மௌனாவின் பெற்றோர்.

பேருந்தில் ஏறி அமர்ந்ததும், அகதாவுக்கு உறக்கம் வந்ததால்,
"நான் தூங்குறேன் மௌனா" என்று கண்களை மூடிக் கொண்டாள்.

ஆனால், மௌனாவிற்கு தூக்கம் வரவில்லை. வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அப்போது தான், மஹதன் இன்னும் அங்கே இருக்கிறானா? அல்லது ஊருக்குக் கிளம்பி இருப்பானோ? என்று யோசித்துப் பார்த்தாள்.

ஒருவர் தன் இயல்பு மாறாமல், எங்கும் தன் நிலையிலிருந்து தவறாமல் இருந்தாலே அவர் மேல் நல்ல அபிப்பிராயம் தோன்றி விடும். அதுவும் காதலுக்கு முதல் காரணமாக இருக்கலாம் தானே!

தன்னைப் பிடிக்கவில்லை என்று மௌனா மறுத்திருந்தால் கூட, விலகி இருப்பான் மஹதன். தன் முயற்சி பிடித்திருந்ததாலும் , காத்திருக்கச் சொல்லியிருந்ததாலும் அவனுக்கு நம்பிக்கை தோன்றியது.

இதை இன்னும் கிஷானுடன் பகிர்ந்து கொள்ளவில்லை. அதற்காக அவனைப் பார்க்கச் சென்றான்.

மாலை நேரம் , உணவு விடுதி ஒன்றில், சந்தித்துக் கொண்டனர் கிஷானும், மஹதனும்.

" மஹத்! அன்னைக்கு மௌனாவைப் பற்றி விசாரிச்சுட்டுப் போன அதுக்கப்புறம் ஆளையேக் காணோம்?" என்று சந்தேகமாக கேட்டான் கிஷான்.

"மௌனாவோட ஊருக்குப் போய்ப், பார்த்துப் பேசிட்டு வந்துட்டேன் கிஷான்" என்றதும் இவனுக்குப் புரை ஏறியது.

"அடப்பாவி!! அன்னைக்கு அவ்ளோ அட்வைஸ் செய்தேனே? அதையும் மீறி போய் , என்னப் பண்ணி வச்சிருக்க?" என்று பொரிந்து தள்ளினான் கிஷான்.

"டேய்! டெஸ்ட் தான் பண்ணிப் பார்க்கக் கூடாதுன்னு சொன்ன! எனக்கு அவ மேல் உண்மையிலேயே லவ் வந்துடுச்சு! அப்பறம் எதுக்கு நான் யோசிக்கனும்? அதான் போய் சொல்லிட்டேன்" என்று அலட்சியமாக கூறினான் மஹதன்.

"ஓஹோ! அதுக்கு அவங்க என்ன சொன்னாங்க?" என்று கேட்டான் கிஷான்.

அடுத்த நிமிடங்களில், நடந்ததை விவரித்திருந்தான் மஹதன்.

"பார்த்தியா? அவங்க அக்சப்ட் பண்ணலை" என்றான்.

"ஆனால் ரிஜெக்ட்யும் பண்ணலையே?" என்று நண்பனிடம் சவடால் பேசினான்.

"ஆமாம். அதனால் வேலையெல்லாம் விட்டுட்டு அவங்க ஓகே சொல்ற வரைக்கும் , வெயிட் பண்ணப் போறியா?" என்றான் கிஷான்.

"பிஸினஸை ஏன் விடனும்? அதையும் ஜாலியாகப் பார்த்துட்டு, மௌனா யெஸ் சொல்ற வரைக்கும் வெயிட் பண்ணுவேன்" என கூறினான் மஹதன்.

"ஆனால் நான் சொன்னதுக்காக டெஸ்ட் பண்ணாமல், லவ் புரபோஸ் பண்ணதுக்கு தாங்க்ஸ்டா. யாரோட உணர்வுகளையும் ஹர்ட் பண்ணி, விளையாடக் கூடாது அதனால் தான் உன் மேல இருந்த உரிமையில், பாசத்தில் கடுமையாக சொல்லிட்டேன். சாரிடா!"

"ஹேய்!! நீ சொன்னதால் தான் நான் கிளியர் ஆக யோசிச்சு இருக்கேன்.அதுக்கு உனக்குத் தான் தாங்க்ஸ் சொல்லனும்" என்று நண்பனுடைய கரங்களைப் பரிவாக அழுத்தினான் மஹதன்.

"முக்தாகிட்ட பேசியாச்சா?" என்று கிஷானிடம் வினவினான்.

"பேசிட்டேன் மஹத்.அவ கொஞ்சம் யோசிக்கனும்னு சொன்னா"

"ஒரு விஷயம் கவனிச்சியா? நீயும், நானும் ஒரே சுவிட்சுவேஷனில் தான் இருக்கோம்"

"அட! ஆமா மஹத்!" என்று ஆச்சரியம் அடைந்தான் கிஷான்.

"ம்ம்! மௌனா நாளைக்கு ஹோட்டலுக்கு வந்துடுவா தான?" என்று கேட்டான் மஹதன்.

"வந்துடுவாங்க டா. அப்பறம் நீயும் இனிமேல் டெய்லி அங்கே வருவ போல?" என்று குறும்பாக கேட்டான் கிஷான்.

"இல்லை கிஷான். லவ் சொன்ன அப்பறம் எதுவும் டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுன்னு ஃபிக்ஸ் ஆகிட்டேன். நான் அவளைப் பழி வாங்கப் போறதா நினைச்சுட்டு இருக்கா. அதை முதல்ல மாத்தனும்.அதுக்கான ஸ்டெப் தான் இது!" என்று தெளிவாக கூறினான் மஹதன்.

"தெளிவான டிசிஷன்டா. அதை மட்டும் இல்லைன்னு ப்ரூவ் பண்ணிடு"

"ப்ரூவ் பண்ணி, லவ் வர வேண்டாம்டா. நான் நானாக இருக்கேன். பழி வாங்குற இன்டென்ஷன் எதுவும் எனக்கு இல்லைன்னு அவளே பார்த்து புரிஞ்சிக்கட்டும்"

பழி வாங்கும் படலம் இல்லையென்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்று தான் மஹதன் நினைத்திருந்தான். அதை நிரூபித்துப் பெறும் காதலை அவன் ஏற்க மறுத்து விட்டான்.

மௌனாவின் இயல்பு எவ்வாறு தனக்குப் பிடித்ததோ, ஈர்த்ததோ அதே போல, தன்னுடைய இயல்பும் அவளை ஈர்த்தால், நிச்சயம் காதல் மலரும்.

"பார்சலில் இருக்கிற சாப்பாட்டை சுட வச்சுக் கொண்டு வர்றேன். நீ சாப்பிட்டுத் தூங்கு அகி" என்று அரைகுறை உறக்கத்தில் இருந்தவளை உலுக்கியவள், சமையலறைக்குள் போய், உணவைக் கொண்டு வந்தாள் மௌனா.

"தூக்கம் வருது மா" என டைனிங் டேபிளிலேயே தலை வைத்துப் படுத்துக் கொண்டாள் அகதா.

"எழுந்திரு அகி!!" என்று எழுப்பி, அவளை உண்ண வைத்து விட்டு, உறங்க அனுப்பினாள்.

பெற்றவர்களுடன் கழித்த சந்தோஷ நேரங்களை அசை போட்டுக் கொண்டு, துயில் கொண்டாள் மௌனா.

"குட் மார்னிங் சார்!" என புன்முறுவல் கொண்டு, வாழ்த்தியவளிடம்,

"ஹாய் மிஸ். மௌனா! குட் மார்னிங்" என அவளுக்குப் பதிலளித்தான் கிஷான்.

இந்த வேலையையும் விட்டு விடுவாளோ? என்ற சந்தேகம் அவனுக்கு இருந்தது. ஆனால் இப்போது மௌனாவுடைய சாதாரணமான நடவடிக்கையைப் பார்த்து நிம்மதி அடைந்தான்.

மௌனா எதையும் வெளியே காட்டிக் கொள்ளத் தயாராக இல்லை. மஹதன் மூலமாக இவனுக்குத் தெரிந்தாலும் ஒரு போதும் அவளுக்குக் கவலையில்லை என்ற ரீதியில் வேலையைப் பார்த்தாள்.

அலுவலக அறைக்குச் சென்ற கிஷான் தனது புலனத்தை ஆராய்ந்தான்.

இன்னும் அவனுடைய எண்ணை ,
முக்தா தன்னுடைய செல்பேசியில் சேமித்து வைக்கவில்லை என தெரிந்தது.

'நம்பரைக் கூட இன்னும் சேவ் பண்ணலையா? நிலைமை மோசம் தான்!' என்று நொந்து போனான் கிஷான்.

"நம்மளோட ஒரு பிராஞ்ச் - சில் வருமானம் கம்மியாக இருக்கு மூர்த்தி! என்னப் பண்ணலாம்?" என்று அலுவலக விஷயத்தைப் பற்றி பேசிக் கொண்டு இருந்தனர் திருமூர்த்தியும், நீலகண்டனும்.

"நீலகண்டா! அதை நான் விசாரிச்சுப் பார்க்கிறேன்.அக்கௌண்ட் செக்ஷனிலும் விசாரிக்கிறேன்" என்று கூறினார் திருமூர்த்தி.

"இதை முதலில் முடிச்சுடுவோம்" என்று அடுத்த விஷயத்தைப் பார்த்தார் நீலகண்டன்.

"திருவான்மியூர் பிராஞ்ச்சில் வருமானம் தாராளமாக வருது" என்று அந்தக் கணக்கையும் காண்பித்தார்.

"மூர்த்தி ! நம்ம பங்குப் பணம் வந்ததும் என்னோட பணத்தை முக்தாவோட அக்கௌண்ட்டில் கிரெடிட் பண்றியா?" என்று கேட்டார் நீலகண்டன்.

ஒரு சிறு அதிர்வுக்குப் பிறகு,
"பண்ணிட்றேன் நீலகண்டா! அக்கௌண்ட் டீடெய்லை வாட்ஸப்பில் அனுப்பி விடு" என்றார்.

"கௌசல்யா தங்கச்சி எப்படி இருக்கா? மஹதன் நல்லா இருக்கானா?" என்று பொதுப்படையாக விசாரித்தார் நீலகண்டன்.

"அவங்க நல்லா இருக்காங்க. முக்தா எப்போ ஃபாரீன் கிளம்பறா? விசா எடுத்தாச்சா?" என்று கேட்டார் திருமூர்த்தி.

"விசா எடுத்தாச்சு மூர்த்தி. அடுத்த வாரம் கிளம்பிடுவா.அவளுக்கு நான் நல்ல மெமரீஸை கிரியேட் பண்ணிக் கொடுக்க நினைக்கிறேன். அதுக்குத் தான் அவ கூட அடிக்கடி வெளியே போய், பிடிச்சதை வாங்கி கொடுப்பேன்.ஃபோட்டோ ஃப்ரேம் போடப் போறோம் மூர்த்தி" என்று அடுக்கடுக்காக முகத்தில் பெருமையுடன் பேசிய நண்பனைப் பார்த்து, நிம்மதியாகப் புன்னகைத்தார் திருமூர்த்தி.

"சூப்பர் நீலகண்டா! அப்படியே கையோட மாப்பிள்ளைப் பார்த்துடு"

"அதைப் பத்தி தான் உங்கிட்ட பேசனும்னு இருந்தேன்.மஹதனோட ஃப்ரண்ட் கிஷானைப் பத்தி விசாரிக்க சொல்லி இருந்தேன். நல்ல குடும்பம், கொஞ்சம் கொஞ்சமாக தன்னோட கம்பெனியை அவனே உருவாக்கி இருக்கான்.குணத்திலும் குறை இல்லை. முக்தா கிட்ட ஏற்கனவே கல்யாணம் பண்ணிக்கிறதைப் பத்திக் கேட்டான். அவ அப்போ இருந்த மனநிலையில் வேண்டாம்னு சொல்லிட்டா. இப்பவும் அவன் அதே ஐடியாவில் தான் இருக்கான்" என்று விரிவாக கூறினார்.

"நீயே அவனைப் பத்தி விசாரிச்சேன்னு சொல்ற, அதே மாதிரி எனக்கும் அவனைப் பத்தி தெரியும் நீலகண்டா! ஆனால் முக்தா ஃபாரீன் போக இன்னும் ஒரு வாரம் தானே இருக்கு?"

"ஆமாம் மூர்த்தி. அதுக்குள்ள அவ நல்ல முடிவாக எடுக்கட்டும்னு நான் ஒன்னும் சொல்லலை. ஆனால் இந்த மாப்பிள்ளையை விட எனக்கு விருப்பமில்லை. இந்த சம்பந்தம் கை விட்டுப் போகக் கூடாதுன்னு நினைக்கிறேன்"

"அப்போ கிஷான் கிட்ட பேசி, இரண்டு வருஷம் காத்திருக்க சொல்லு, இல்லையா! முக்தாவை அவளோட ப்ளானைக் கேன்சல் பண்ண சொல்லு. முடியலைன்னா, ஃபாரீன் போக வேண்டாம்னு கேட்டுப் பார் நீலகண்டா. உனக்கு இந்த சம்பந்தம் வேணும்னா, முக்தாகிட்ட பேசுறது தான் சரி" என்றார் திருமூர்த்தி.

தான் விரும்பியது கிடைக்காமல் தான், வெளிநாடு செல்ல முடிவெடுத்து இருக்கிறாள் முக்தா.

இப்போது , 'நீ வெளிநாடு சொல்லாதே' என்று அவரால் எப்படி அவளைத் தடுக்க முடியும்? மகளின் மனதை தெரிந்தே காயப்படுத்த நினைப்பாரா நீலகண்டன்?

- தொடரும்
 

Shalini shalu

Moderator
நங்கையின் மறவோன் 19

"முக்தா ம்மா! நீ ஃபாரீனுக்குப் போகிறது உறுதி பண்ணிட்டியா?" என்று வாங்கிய புகைப்படங்களை பிரித்து வைத்துக் கொண்டே கேட்டார் நீலகண்டன்.

"ஆமாம் அப்பா.என்னோட முடிவு இப்பவும் மாறலை" என்று தெளிவாக கூறினாள் முக்தா.

இது தனக்கென்று தானே கொடுக்கும் கால அவகாசம்.கிஷானுக்குத் தான் பொருத்தமான பெண்ணாக மாற வேண்டும் என்பது அவளுடைய விருப்பம்.

அவனுடைய எண் தன்னுடைய செல்பேசியில் கேட்பாரற்றுக் கிடக்கிறது என்பதை அறிந்து கொண்டவள், உடனே அதை சேமித்தாள் முக்தா.

கிஷான் தன்னுடைய முகத்தையே முகப்புப் படமாக வைத்திருந்தான்.முதல் முறையாக அவனை ரசிக்கத் தொடங்கினாள் முக்தா.

அவன் தனக்காக இரண்டு வருடங்கள் காத்திருப்பானா? என்ற நினைப்பு வேறு உள்ளுக்குள் குறுகுறுப்பை உண்டாக்கியது.

"இரண்டு வருஷம் கழிச்சு உனக்காக திரும்பி வருவேன் கிஷான்! அப்பவும் இதே கிஷானாக என்கிட்ட வந்து புரபோஸ் பண்ணுவியா?" என்று அவனது புகைப்படத்திடம் கேட்டாள் முக்தா.

அதே சமயம், ஏதோ தகவலைப் பார்ப்பதற்காக புலனத்தைப் பார்வையிட்ட கிஷான், எதேச்சையாக முக்தாவின் அக்கவுண்ட்டை ஆராய்ந்தான்.

அவளது முகப்புப் படத்தில், அழகாக சிரித்துக் கொண்டு இருந்த முக்தாவைப் பார்த்து,
"அடடே! நம்பரை சேவ் பண்ணிட்டாளே!" என்று ஆனந்தக் கூத்தாடினான் கிஷான்.

அடக்கி வாசிக்க வேண்டும் என்ற காரணத்தால், அவளுக்கு குறுந்தகவல் எதுவும் அனுப்பி விடவில்லை அவன்.ஜாக்கிரதையாக இருந்தான்.

"ப்ரொஃபைல் பிக்சரை மட்டுமே பார்த்துட்டு வாழ்க்கை முழுசும் இருந்துடுவேன்" என்று ரசனையாகப் புகைப்படத்தையே கண்ணெடுக்காமல் பார்த்தான் கிஷான்.

"ஹாய் கிஷான்!" என்ற முக்தாவின் குறுஞ்செய்தி வந்தது.

"ஆஹா!!" என்று ஆனந்தமாகப் பார்த்தான்.

"ஹேய் முக்தா!" என்று அவளைப் போலவே செய்தி அனுப்பினான்.

"நீங்க கேட்டதுக்கு என்னால் நேரில் பதில் சொல்ல முடியலை. வாட்ஸப்பில் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க" என்று ஆரம்பித்தாள் முக்தா.

'இல்லவே இல்லைன்னு சொல்லப் போறாளோ?' தறி கெட்டு ஓடியது அவனுடைய எண்ணம்.

"சொல்லுங்க முக்தா" என்று ஆவலை அடக்கிக் கொண்டு கேட்டான்.

"இரண்டு வருஷம் நான் ஃபாரீன் போகிறதை தவிர்க்க முடியாது கிஷான். அதுக்கப்புறம் தான் இந்தியா வருவேன். அப்பவும் உங்களுக்கு என் மேல் விருப்பம் இருந்தால், உங்களைத் தான் கல்யாணம் செய்துப்பேன்" என்று தன் எண்ணத்தை வெளிப்படையாக குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைத்தாள் முக்தா.

'என்னைத் தான் கல்யாணம் செய்து கொள்வாள்! பிறகு என்ன கவலை? இரு வருடங்களை அவளது நினைவுகளுடன், குறுஞ்செய்திகளுடன் நெட்டித் தள்ளி விடலாம்' என்று முடிவெடுத்து விட்டான் கிஷான்.

அவன் காத்திருக்க மாட்டேன் என்று மறுத்து விடுவானோ? என செல்பேசியையே வெறித்துப் பார்த்தாள்.

"வெயிட் பண்றேன் மா" என்று அவனது குறுஞ்செய்தி வந்ததும், விரல் நடுங்க, அதைப் படித்தாள் முக்தா.

தனக்கானவன் இவன் தான்! என்பதை அந்த நிமிடத்தில் இருந்து, மனதில் பதிய வைத்துக் கொண்டாள்.

இப்போது தயக்கமின்றி, அவனுடைய புகைப்படத்தில் தன்னைத் தொலைக்கலானாள் முக்தா.

தற்போது கௌசல்யாவிற்கு ஆசையே மௌனாவைப் பார்க்க வேண்டும் என்பதே!

அதை மகனிடம் மறைக்காமல் தெரிவித்தார்.

"ஆமாம் மஹதா! நான் மௌனாவைப் பார்க்கனும்" என்ற ஆவலுடன் கேட்டார் கௌசல்யா.

"பார்த்து கன்வின்ஸ் பண்ணலாம்னு நினைக்கிறீங்களா அம்மா?" என்று சிரித்தான் மஹதன்.

"அப்படி கன்வின்ஸ் பண்ணா உடனே ஓகே சொல்ல மாட்டா - ன்னு எனக்குத் தெரியும் மஹதா!"

அவளைப் பற்றி மகன் சொன்ன போதே, மௌனாவைக் கணித்திருந்தார்.

அவரை மெச்சிக் கொண்டு,
"மௌனாவோட ஃபோட்டோ எதுவும் எங்கிட்ட இல்லை ம்மா?" என்று உதட்டைப் பிதுக்கினான் மகன்.

"இல்லையா?" என்ற ஏமாற்றம் அவரிடம் தோன்றியதும்,

கிஷானைப் பார்க்கப் போகிற மாதிரி அவனோட ஹோட்டலுக்கு வாங்க. அப்படியே மௌனாவைப் பார்த்துடுங்க அம்மா" என்று யோசனை கூறினான்.

"அப்படிங்குற?"

"யெஸ் மா"

பிறகு, கிஷானிடம் பேசினான்.

"அம்மா வரணும்னு சொல்றாங்க கிஷான்" எனவும்,

"என்ன திடீர்னு?" என்றான்.

"அவங்க மௌனாவைப் பார்க்கனும்னு ஆசைப்பட்றாங்க. நான் ஏற்கனவே அவளோட ஊரைக் கண்டுபிடிச்சுப் போனதுக்கே சங்கடப்பட்டுட்டா! இதையும் சொன்னா, உடனே ரிஜக்ட் பண்ணிடுவா" என்றான் மஹதன்.

"அதுக்கு!! அம்மா இங்கே வந்தா அந்தப் பொண்ணு மிரண்டு போயிடுவாங்கடா"

ஏற்கனவே அவனுடைய விடுதியில் நடந்த களேபரங்கள் அனைத்தும் கிஷானுக்குத் தெரியும். அதனால் யோசித்து முடிவெடுக்குமாறு கூறினான்.

"கேஷூவல் விசிட் மாதிரி, அம்மாவை முன்னாடியே வர சொல்றேன் கிஷான். நான் அவங்க வந்து, கால் மணி நேரம் கழிச்சு வர்றேன்" என்றான் மஹதன்.

"ஃபர்ஸ்ட் முக்தா, அப்பறம் அவளோட அப்பா வந்து மிரட்டிட்டுப் போனார். இப்போ கௌசல்யா அம்மா! எதுக்கும் நான் அவங்களோட ரெசிக்னேஷன் லெட்டரை வாங்குறதுக்கு ரெடியாக இருக்கேன்"

"இந்த தடவை எதுவும் ஆகாது டா. நீ அன்னைக்கு மட்டும் சீக்கிரம் ஹோட்டலுக்கு வந்துடு" என்றான்.

"மௌனா! இங்கே பாரேன்" என்று தன் செல்பேசியை அவளிடம் காட்டினாள் அகதா.

"தீபக் அண்ணா கிட்ட இருந்து அமௌண்ட் வந்துடுச்சா அகி? சூப்பர்! எப்படி இவ்ளோ சீக்கிரம் அனுப்பினார்?"

"நான் அன்னைக்கு விட்ட டோஸ் அப்படி மௌனா! உங்கிட்ட தான் எல்லாமே சொன்னேனே!" என்று அந்தப் பணத்தை தன் இன்னொரு வங்கிக் கணக்கிற்கு மாற்றிக் கொண்டாள் அகதா.

"இன்னும் கண்டிப்பாகப் பேசு அகி. விட்டுக் கொடுத்துடாத" என்று அறிவுரை கூறினாள்.

"அப்பா, அம்மாவுக்கு ட்ரெஸ் எடுத்துட்டு, கிஃப்ட்ஸ் வாங்கி அனுப்பனும் அகி.நாம சண்டே போகனும்" என்று அறிவித்தாள் மௌனா.

'அவர் எங்கிட்ட புரபோஸ் பண்ணியது முக்தா மேடம் கிட்ட சொன்னாரான்னு தெரியலையே? அவங்க கிட்ட இருந்து தானே ஆரம்பிச்சது! விஷயம் தெரிஞ்சா அவங்க என்ன நினைப்பாங்க? அப்போவே சொன்னேன்னு, நக்கல் பண்ணுவாங்களோ?' என்று பல விதமான யோசனைகள் அவளது மூளைக்குள் படையெடுத்தது.

முக்தா வெளிநாடு செல்வது மௌனாவிற்குத் தெரியாததால், எதேச்சையாக அவளைப் பார்த்தால் கூட, மௌனாவிற்குக் குற்றக் குறுகுறுப்பாக இருக்கும்.அதை எவ்வாறு எதிர் கொள்வது? என்று தயங்கி இருந்தவளுக்காக காத்திருந்தது மஹதனின் இரண்டாவது சர்ப்ரைஸ்!

அன்றைய தினம் கிஷான் விரைவாக விடுதிக்கு வந்திருந்தான்.எதாவது முக்கியமான அலுவல் இருக்கும் என்று நினைத்தாள் மௌனா.

"நான் ஹோட்டலுக்கு வந்துட்டேன் மஹத்!" என்று நண்பனுக்கு அழைத்துச் சொன்னான்.

"அம்மா! கிஷான் ஹோட்டலில் தான் இருக்கான். நீங்க போய்ப் பாருங்க" என்று கௌசல்யாவைத் துரிதப்படுத்தினான் மஹதன்.

அவரும் மௌனாவைப் பார்க்கும் ஆர்வத்தில் வேகமாக கிளம்பினார்.

முன் வரவேற்பறையில், வேலைக்கான, பிரத்தியேகமான சீருடை அணிந்து, சாந்தமான பார்வையுடன் தன்னை வரவேற்றவளைப் பார்த்து, மென்மையாக முறுவலித்தார் கௌசல்யா.

"குட் மார்னிங் மேம்! ஹவ் கேன் ஐ ஹெல்ப் யூ?" என்றாள் மௌனா.

"உங்க எம். டி யைப் பார்க்கனும் மா" என்று அவர் கூறவும்,

"யுவர் ஸ்வீட் நேம் மேம்?"

"மிசஸ்.கௌசல்யா" என்று பதிலளித்தார்.

"இதோ இன்ஃபார்ம் பண்றேன் மேம்" என அவர் முன்னிலையில் கிஷானுக்கு லேண்ட் லைனில் அழைத்தாள்.

"ஹலோ சார்! உங்களைப் பார்க்க ஒரு மேடம் வந்துருக்காங்க. பேர் மிசஸ்.கௌசல்யா" என்று கூறினாள்.

"உள்ளே வர சொல்லுங்க மிஸ். மௌனா" என்றான்.

அதற்குள் கௌசல்யா தன் வருங்கால மருமகளை கண் குளிரப் பார்த்துக் கொண்டார்.

"சார்! உங்களை வர சொன்னார் மேம்! ஹேவ் அ ஹேப்பி டே!" என்று வாழ்த்தி அனுப்பினாள் மௌனா.

"தாங்க்யூ மா" என்று நன்றி தெரிவித்து விட்டு, கிஷானைப் பார்க்கப் போனார்.

"வாங்க அம்மா! வருங்கால மருமகளைப் பார்த்தாச்சா?" என்று புன்னகைத்தான் கிஷான்.

"பார்த்துட்டேன் ப்பா!" என்று பூரிப்புடன் கூறினார் கௌசல்யா.

"எப்படி இருக்காங்க?"

"அமைதியாக, அழகாக இருக்கா" என்றார்.

"ஏன் அவங்க கலகலப்பாக இருந்தால், உங்களுக்குப் பிடிக்காதா அம்மா?" என்று கேட்டான் கிஷான்.

"எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்கள்ல கிஷான்? அவங்க அவங்களுக்குன்னு ஒரு தனித்தன்மை இருக்கும்." என்று தெளிவுபடுத்தினார் கௌசல்யா.

"சூப்பர்மா!" அவரைப் பாராட்டினான்.

"இப்போ மஹதன் வந்தால் கரெக்டா இருக்கும்" என்று அவன் நினைத்ததும்,

விடுதியின் முன்னால் தன் காரிலிருந்து வெளிப்பட்டான் மஹதன்.

அவனது வரவைக் கண்டதும், அன்று ஊரில் காதல் சொல்லிய நிகழ்வு, அவளது மனதில் எழுந்தது. அதற்குப் பின் இப்போது தான் மஹதனைப் பார்க்கிறாள்.

"ஹாய்! கிஷான் உள்ளே இருக்காரா?" என்று வழக்கமான பாணியில் வினவினான் மஹதன்.

அவனிடம் எந்த மாற்றமும் தெரியவில்லை.ஆனால் உற்சாகமாக காணப்பட்டான்.

"இருக்கார் சார். ஆனால் ஏற்கனவே ஒரு மேடம் அவரைப் பார்க்கப் போயிருக்காங்க. எதுக்கும் நான்
சார் - க்குக் கால் செய்றேன்" என்று துரிதமாக கிஷானுக்கு அழைப்பு விடுத்தாள் மௌனா.

"சார்! சாரி ஃபார் டிஸ்டர்பிங் யூ! உங்களைப் பார்க்க மிஸ்டர். மஹதன் வந்திருக்கார்" என்று அறிவித்தாள்.

"நோ பிராப்ளம். அவரை என் ரூமுக்கு அனுப்புங்க" எனவும்,

"நீங்க உள்ளே போகலாம் சார்" என்று அனுப்பினாள்.

அந்தப் பெண்மணி மஹதனுக்கும் தெரிந்தவர் போல! என்று தான் நினைத்துக் கொண்டாள் மௌனா.

"ஹாய் அம்மா! ஹாய் டா!" என்று ஆர்ப்பாட்டமாக உள்ளே வந்தான் மஹதன்.

"வாடா! அம்மாவுக்கும் மௌனாவைப் பிடிச்சுப் போச்சு" என்று குதூகலித்தான் கிஷான்.

"ஆமாம் மஹதா!" என்று ஆனந்தமாக கூறினார் கௌசல்யா.

"அவங்க வீட்டில் இருக்கிறவங்களுக்கு என்னைப் பிடிக்கனுமே அம்மா?" என்றான் மஹதன்.

"அதெல்லாம் அவங்களுக்கு உன்னைப் பிடிக்கும் மஹதா!" என்று மகனுக்கு தைரியம் சொன்னார் கௌசல்யா.

"நீங்க வந்து இவ்ளோ நேரமாச்சு. இருங்க ஜூஸ் சொல்றேன்" என்று அவர்களுக்காகப் பழச்சாற்றை வரவழைத்தான் கிஷான்.

குளிர்ந்த பழச்சாற்றை பருகிக் கொண்டே,
"இனிமேல் மௌனாகிட்ட தான் சொல்யூஷன் இருக்கு மஹதா! அவ மனசை நீ நம்பிக்கையால் நிரப்பனும். உன் மேல் அவளுக்கு நம்பிக்கை வரனும். அப்போ தான் காதல் வரும். அந்த நம்பிக்கையை எப்பவும் உடைச்சுடக் கூடாது" என்று உபதேசித்தார் கௌசல்யா.

அதை அமைதியாக கேட்டுக் கொண்டான் மகன்.

"நான் உன்னோட அம்மான்னு கண்டுபிடிச்சு இருப்பாளா?" என்று கேட்டார்.

"இல்லை ம்மா. அவ வேலைப் பார்க்கிற பரபரப்பில் இருக்கிறதால், அதையெல்லாம் கண்டுக்க மாட்டா" என்று பதிலளித்தான்.

"ஓஹோ! அப்போ நாம கிளம்பும் போது, இதைச் சொல்லிட்டுப் போய்டுவோமா?" என்று குறும்பாக கேட்டார் கௌசல்யா.

"குட் ஐடியா அம்மா!" என்று ஆமோதித்தான் கிஷான்.

"மௌனாகிட்ட எனக்கு அடி வாங்கிக் கொடுக்க ப்ளான் போட்டுட்டீங்க போல?" என கேட்டவாறே வெளியேறினான் மஹதன்.

அவனுடன் மௌனாவிடம் வந்தார் கௌசல்யா.

"மௌனா! நான் மஹதனோட அம்மா!" என்று அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

அவரைப் பார்த்து, திடுக்கிட்டு விழித்தவள், அவர் பின்னாலிருந்த மஹதனை தீயாக முறைத்தாள் மௌனா.

"போய்ட்டு வர்றேன் ம்மா" என்று மஹதனுக்குத் தலையசைத்து விட்டு, கௌசல்யா அங்கிருந்து சென்றார்.

இங்கே மௌனாவோ, "உங்க அப்பா வரலையா சார்?" என்று அழுத்தமாக கேட்டாள்.

- தொடரும்
 

Shalini shalu

Moderator
நங்கையின் மறவோன் 20

நக்கல் நிரம்பிய குரலில் மௌனா , தந்தையைப் பற்றி வினவவும், அடங்காத கோபம் உண்டானது மஹதனுக்கு.

அவளை ஆசையாகப் பார்க்க நினைத்ததால் மட்டுமே தாயை அழைத்து வந்து, சந்திக்க வைத்தான்.

அதற்காக அவள் இப்படி கிண்டல் செய்வது தவறு என்று நினைத்தவன்,
"மிஸ்.மௌனா! என் அம்மா இங்கே எதேச்சையாக வந்தாங்க. முன்னாடியே உன்னைப் பற்றி அவங்க கிட்ட சொல்லியிருக்கேன். அதனால் தான் விசாரிச்சாங்க. எதுக்கு எடுத்தாலும் இப்படி பேசுறதை முதல்ல நிறுத்து" என்று அறிவுரை வேறு கொடுத்தான்.

"சார்! நான் இப்படித்தான்! எனக்குத் தோணுச்சு , பேசினேன்" என்றாள் மௌனா.

தாயிடம் மருமகளைக் காண்பிக்கிறேன் என்று அழைத்து வந்தது தவறோ என்று எண்ணும் அளவிற்கு, இவள் தன்னிடம் பேசி விட்டாள் என கோபத்தில் மௌனாவை வெறித்துப் பார்த்தான் மஹதன்.

ஒன்றும் பேசாமல், வெளியே போனவனை, அலட்சியமாக ஒதுக்கி விட்டு, வேலையைத் தொடர்ந்தாள் மௌனா.

வீட்டிற்குப் போன கௌசல்யாவிற்கோ, தன் மருமகளைப் பார்த்த திருப்தி.அவளைப் பற்றி மஹதன் சொல்லக் கேட்டிருந்தவர், இப்போது நேரில் பார்த்தும் விட்டார்.

இன்னும் விஷயம் திருமூர்த்திக்கு மட்டும் தெரியாது.முக்தாவுடனான பிரச்சினையில் நீலகண்டனுடன் பேசிய பிறகு அவருக்கு மௌனா மீது வருத்தம் இருக்கும். அது இப்போது காணாமல் தான் போகும் என்பது கௌசல்யாவின் எண்ணம்.

அவரது செல்பேசி ஒலியெழுப்ப, அதை எடுத்துப் பேசினார்.

"ஹாய் ஆன்ட்டி" என்று முக்தா தான் பேசினாள்.

"ஹேய் முக்தா! நல்லா இருக்கியா ம்மா?" என்று கேட்டார்.

"நல்லா இருக்கேன் ஆன்ட்டி. நான் நாளைக்கு ஃபாரீனுக்குக் கிளம்புறேன்.உங்ககிட்ட இன்ஃபார்ம் பண்ணனும்னு தோணுச்சு. அதான் சொன்னேன்" என்று கூறினாள் முக்தா.

"நல்லபடியாக போய்ட்டு வா ம்மா. என்னோட ஆசீர்வாதம் எப்பவும் உனக்கு இருக்கும்" என்று முக்தாவை மனதார வாழ்த்தினார் கௌசல்யா.

"தாங்க்ஸ் ஆன்ட்டி" என அவரிடம் சில நிமிடங்கள் பேசி விட்டு, தந்தையிடம் வந்தாள்.

"அப்பா!" என்றழைப்பில் திரும்பிய நீலகண்டன்,

"எல்லாம் தயாராக இருக்காடா?" என்று கனிவுடன் கேட்டார்.

"யெஸ் ப்பா" என்று பெட்டிகளை எடுத்துக் கொண்டாள் முக்தா.

நீண்ட இரண்டு வருடங்கள் மகளைப் பிரியப் போகிறோம் என்று பாரம் ஏறிய மனதுடன், முகத்துடன் காணப்பட்டாலும், அது முக்தாவைப் பாதித்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார் நீலகண்டன்.

அதனால், உதடுகள் தாண்டாத மெல்லிய புன்னகையுடன் வலம் வந்தார்.

அதைக் கண்டு கொண்ட முக்தாவிற்கும் வேதனையாக இருந்தது.

தந்தையை இறுக்கமாக கட்டிக் கொண்டாள் முக்தா.

இதுவரை பிடித்து வைத்திருந்த இறுக்கம் தளர்ந்து மகளைப் பாசமாக அணைத்துக் கொண்டார் நீலகண்டன்.

கண்களின் ஓரம் நீர் துளிர்க்க,
"என்னை மன்னிச்சிருங்க அப்பா! இப்பவும் நான் என்னோட சுயநலத்துக்காக உங்களைப் பிரிஞ்சு போறேன். ஆனால், எனக்கு இதைத் தவிர வேற வழி தெரியலை அப்பா" என்று அவரிடம் மன்னிப்பு வேண்டி மன்றாடினாள்.

"முகி! அப்படியெல்லாம் இல்லைடா. நானும் என் பொண்ணோட முடிவை மதிக்கனும்ல.நீ போய்ட்டு வாடா" என்று ஆறுதல் கூறினார் நீலகண்டன்.

"மிஸ் யூ அப்பா" என தன்னுடைய கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள் முக்தா.

தந்தையும், மகளும் விமான நிலையத்திற்குச் சென்றார்கள்.

மாதத்தில் ஒரு தடவையேனும் வர வேண்டும் என்ற விண்ணப்பத்துடன் வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டாள் முக்தா.

அவள் செல்வதை மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த கிஷான்.

"மிஸ் யூ முகி!" என்று முணுமுணுத்துக் கொண்டான்.

அவளுக்கும் கிஷானுடைய நினைவு இல்லாமல் போகுமா? தன்னவனை மனதினுள் நிறைத்துக் கொண்டு தான் இப்பயணத்தை மேற்கொண்டு இருக்கிறாள் முக்தா.

"மஹதா!" என்று மகனை அழைத்தார் கௌசல்யா.

அப்போது தான் வீடு வந்திருந்தவன் தாயின் அழைப்பில் அவரிடம் சென்றான்.

"இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ப்பா. மௌனாவைப் பார்த்துட்டேனே!" என்று சிறு பிள்ளை போல கூறினார் கௌசல்யா.

அதில் புன்னகைத்தவன், "எனக்கும் சந்தோஷம் தான் ம்மா" என்று தன் மனக்கிலேசத்தை மறைத்துக் கொண்டு கூறினான்.

"முக்தா இன்னைக்கு ஃபாரீனுக்குக் கிளம்பிட்டா" என்று தெரிவித்தார்.

சிறு தலையசைப்புடன் அறைக்குள் போன மகனை, யோசனையாகப் பார்த்தார் கௌசல்யா.

எதேச்சையாக நடந்த சந்திப்புக்குத் தன் இயல்பு மீறி நடந்து கொண்டு விட்டோமோ? என்று மௌனாவிற்குத் தோன்றியது.

தான் வேலை பார்க்கும் இடத்தில் வேண்டுமென்றே வந்து பிரச்சினை செய்பவனாகவே மௌனாவின் மனதில் உலா வந்தான் மஹதன்.

அதனால் தானோ, மௌனாவிற்கு அவனுடைய காதலை ஏற்றுக் கொள்ளத் தயக்கமோ?

பணக்காரர்கள் என்றால் கெட்டவர்களாகத் தான் இருப்பார்கள் என்று நினைப்பதெல்லாம் தவறு தானே?

அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது தெரியாமலேயே கெட்டவர்கள் என்று முத்திரைக் குத்தி விடக் கூடாது அல்லவா?

அதேபோல தான் மஹதனின் காதலையும் தான் தவறாக நினைக்கிறோமோ? என்றும் அவளுக்குத் தோன்றியது.

தன் பெற்றோரை நினைத்து எழுந்த தயக்கத்தால் , இதுவரை அவனுடைய காதலை உதாசீனம் செய்து விட்டேனா? என்றெல்லாம் மனம் விடாமல் அடித்துக் கொண்டது.

தன்னைப் பழி வாங்கும் நோக்கம் அவனுக்கு இருந்திருந்தால், இந்நேரம் அதைச் செயல்படுத்திக் காட்டியிருக்கலாமே?

"யோசிச்சு முடிச்சுட்டா, என்ன டின்னர் செய்யலாம்னு சொல்றியா?" என்ற அகதாவின் குரல் அவளது சிந்தையைக் கலைத்தது.

"ஹாங்! சாரி அகி.இட்லி, தக்காளிச் சட்னி போதும் அகி" என அவளிடம் தன் விருப்பத்தைச் சொன்னாள் மௌனா.

"ஓகே மௌனா" என்று தோழியை
மறுபடியும் தொல்லை செய்யாமல் அன்றைய இரவு உணவை அகதாவே செய்து முடித்தாள்.

"ஏதோ யோசனையில் இருந்ததால் அப்படி சொன்னா, எல்லாமே நீயே சமைச்சிட்டியே!" என்று கலவையாக கூறினாள்.

"இருக்கட்டும் மௌனா. எப்போதாவது தான? ஒன்னும் இல்லை. வந்து உட்கார்" என அவளுக்குப் பரிமாறி, தானும் உண்டாள்.

அகதாவிற்கு தோழியின் மனதின் நெருடல் மேம்போக்காக தெரியும். ஆனால் அதைக் கேட்டு அவளைச் சஞ்சலப்படுத்தி விட வேண்டாம் என்று ஒதுங்கி இருக்கிறாள்.

தன்னுடைய குறுக்கீடு இல்லாமல், மஹதனைப் பற்றிய சிந்தனையை மௌனா மேற்கொள்ளப்படும் அப்போது தான் அவளுக்கும் தெளிவு கிடைக்கும் என்று முடிந்தளவு மௌனாவை அவள் தொந்தரவு செய்யவில்லை.

மௌனாவிற்கோ, காதல் என்று போய் நின்றால் பெற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? தன்னை நம்புவார்களா? அல்லது தன் தேர்வாக இருக்கப் போகும் மஹதனை ஏற்றுக் கொள்வார்களா?

இவளும் இன்னும் காதலை உணரவில்லை , அதற்குள் வீட்டில் எவ்வாறு எடுத்துக் கொள்வார்கள் என்று கவலைப்படுகிறாள்! ஆனால் இதையும் அலட்சியமாக ஒதுக்குவது சாத்தியமில்லை தானே?

'எப்படி அப்பா, அம்மாவிடம் இதைச் சொல்வது?' என்ற யோசனையில் வந்து நின்றாள் மௌனா.

இதற்குப் பிறகும் காதல் இல்லை என்று மறுக்கப் போகிறாளா?

ஏதோ ஒரு தடை தங்களுக்குள் இருக்கிறது என்று நினைத்தாள் மௌனா.அவனது பணமா? பகட்டா? என்று கூட யோசித்தாள்.

உண்மைக் காதலுக்கு அன்பு, புரிதல் மற்றும் வாழ்க்கைக்குத் தேவையான அளவுக்குச் சம்பாத்தியம் இவை மட்டுமே பிரதானம் என்பது தெரியவில்லை அவளுக்கு.

அவர்கள் வீட்டில் கௌரவம் பார்ப்பார்களே? இவளது கௌரவத்திற்கு என்ன குறைச்சல்?

இந்த பதில்களை எல்லாம் மௌனாவும் அறிந்து கொண்டால் , அவள் மஹதனை மறுக்க வாய்ப்பில்லை.

எப்போதும் நிதானமாக யோசிக்கும் மௌனாவிற்கு காதல் விஷயத்தில் மட்டும் , எப்படி முடிவெடுப்பது என்பது தெரியவில்லை.உடனே ஒப்புக் கொள்ளக் கூடாது என்றும், ஒரு முறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும் என்றும் மௌனாவின் மூளை வலியுறுத்தியது.

மனதின் பேச்சை மட்டும் கண்மூடித்தனமாக நம்ப அவள் தயாராக இல்லை.அடுத்த தடவை மஹதனைச் சந்திக்கும் போது, அவளது மனம் உறுதிப்படுத்தி விடும்.

"நான் அவளைப் பார்க்கத் தான் அம்மாவைக் கூப்பிட்டு வந்தேன்னு அவளுக்கு எப்படி தெரிஞ்சது?" என்று நினைத்தான் மஹதன்.

அதை உண்மை என்று ஒப்புக் கொள்ளாமல் அவளுடன் சண்டையிடுவது போல் பேசி விட்டு வந்திருக்கிறான்.

'தான் ஒரு பெரிய பிஸினஸ்மேன் என்று மார் தட்டிக் கொண்டு, அவளைக் காதலிப்பதே பெரிய விஷயம், அதற்கு அவள் தன்னுடைய அடிமையாக இருக்க வேண்டும்' என்றெல்லாம் அவன் கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை.

அதையும் தாண்டி, இருவரது உள்ளங்களும் காதலால் நிறைந்தால் மட்டுமே, வாழ்க்கை அழகாக இருக்கும்.அதனால் , தான் காதலிப்பவள் தன்னால் கூட காயப்பட்டு விடக் கூடாது என்பது அவனுடைய எண்ணம்.

"உன்னோட காதலின் வெளிப்பாட்டை உணர நான் ரொம்பவே காத்திருக்கேன் மௌனா!" என்று பொங்கிய காதலுணர்வுடன் தனக்குள் பேசிக் கொண்டான் மஹதன்.

ஏற்றத் தாழ்வுகளைப் பற்றிய சிந்தனையில் மௌனாவும், அவள் மேல் கொண்ட கண்ணியமான காதலில் மஹதனும் மூழ்கி இருந்தனர்.

"முதல்ல ட்ரெஸ் எடுத்துடலாம் அகி" என்று ஜவுளிக்கடைக்குள் நுழைந்தனர் மௌனாவும், அகதாவும்.

தந்தைக்குப் பேண்ட், சேர்ட் பார்த்து எடுத்தவள், தாய்க்குப் பட்டுச் சேலை வாங்கினாள் மௌனா.

அகதா, "நானும் ஒரு செட் எடுத்துக் கொடுக்கிறேன்" என்று தன் பங்கிற்கும் அவர்களுக்கு உடை எடுத்தாள்.

பிறகு, தோழிகள் இருவரும் நகைக்கடைக்குள் நுழைந்தார்கள்.

தாய், தந்தையின் ஜோடிப் பொருத்தத்திற்கு ஏற்ப, ஜோடியாக மோதிரத்தைத் தேர்வு செய்தாள் மௌனா.

இவற்றையெல்லாம் ஏற்கனவே தன்னிடம் இருந்த சேமிப்புப் பணத்திலும், தற்போது இருக்கும் விலையில் கிடைத்த சம்பளத்திலும் வாங்கினாள்.

தன் சொந்த சம்பாத்தியத்தில் பெற்றவர்களுக்குப் பொருட்கள் வாங்கித் தருவது எத்தனை சந்தோஷத்தை அளிக்கும் என்பதை அன்று தான் முழுமையாக உணர்ந்து அனுபவித்தாள் மௌனா.

"இந்த மோதிரங்கள் உங்க அப்பா, அம்மாவுக்கு சூப்பராக இருக்கும் மௌனா" என்று அகதாவும் தோழியின் தேர்வைப் பாராட்டினாள்.

அதன் பின், இருவருடைய இஷ்ட தெய்வங்களின் புகைப்படங்களையும் வாங்கிக் கொண்டாள் மௌனா.

"உன் பேரண்ட்ஸ்ஸூக்காக இவ்வளவு வாங்கிக் கொடுத்திருக்க. அதே மாதிரி உனக்காக நான் ஒன்னு வாங்கியிருக்கேன்" என்று மௌனாவின் வலது கரத்தில், தங்க கைச்சங்கிலியை அணிவித்து விட்டாள் அகதா.

இதைப் பார்த்ததும், மௌனாவிற்கு விழிகள் கலங்கிப் போனது.

"அகி!" என்று உணர்ச்சி வசப்பட்டாள் மௌனா.

"இதே மாதிரி எனக்கும் ஒரு பிரேஸ்லெட் இருக்கு. இங்கே பாரு" என்று தன் கரத்தில் வைத்திருந்ததையும் அவளிடம் காண்பித்தாள்.

"கொடு அகி. நான் போட்டு விட்றேன்" என்று அகதாவின் கரத்தில் அதை மாட்டி விட்டாள் மௌனா.

தங்கத்தில் இல்லையென்றாலும், பிளாஸ்டிக்கில் செய்ததாக இருந்தாலும், அந்தக் கைச்சங்கிலியைப் பார்த்து இதே போல் தான் உணர்ச்சி வசப்பட்டு இருப்பார்கள் இருவரும்.

நட்பின் பெருமையை உணர்ந்தவர்களுக்குத் தங்கம், பித்தளை என்றெல்லாம் பிரித்துப் பார்க்கத் தோன்றாது.

- தொடரும்
 

Shalini shalu

Moderator
நங்கையின் மறவோன் 21

மஹதனுடைய ஒவ்வொரு நல்ல செயல்களும் இப்போது தான் ஒவ்வொன்றாக புரிந்தது மௌனாவிற்கு.

முக்தா விஷயம் தொடங்கி, இப்போது கடைசியாக கிஷானின் விடுதியில் நடந்தது வரைக்கும் பொறுமையாக யோசித்துப் பார்த்தாள்.

அதில், தனக்கு முழுமையாக சாதகமாக இல்லையென்றாலும், நியாயமாக நடந்து கொண்டான் மஹதன்.அதுமட்டுமின்றி, முக்தா தனக்கு நன்கு தெரிந்த பெண்ணாக இருந்தாலும், தவறு எனும் போது, உண்மையின் பக்கம் நின்றான்.வேலையை விட்டுச் செல்கிறேன் என்று இவள் சொன்ன போது கூட, அதற்கான மாற்று வழியையும் அறிவுறுத்தினான்.

இது மட்டும் அவள் சம்மதம் சொல்வதற்குப் போதுமா? என்றால் நிச்சயமாக இல்லை.

தன்னுடைய ஊரைக் கண்டுபிடித்து வந்தது தவறு என்று இப்போதும் முழு மனதுடன் நம்பினாள்.அவளுடைய அனுமதியின்றி மஹதன் ஊரைக் கண்டுபிடித்து இருக்க வேண்டாம் என்று நினைத்தாள்.

இருவருக்கும் இடையில் இருந்த ஏற்றத்தாழ்வுகள் எல்லாம் பூதாகரமாக தோன்றியது மௌனாவிற்கு.

நியாயமாகப் பார்த்தால், அவள் இதையெல்லாம் யோசித்து இருக்கவே கூடாது. ஏனென்றால், மௌனா எப்போதும் தன்னம்பிக்கை உள்ள பெண். எனவே, தான் யாருக்கும் கீழே இல்லை என்ற மனநிலையை எப்போதும் கொண்டிருப்பவள். அதனால் தான் முக்தாவுடன் பிரச்சினை நடந்த போது, அவளைத் தைரியமாக எதிர் நோக்கிச் சமாளித்துச் சரியாகப் பேசினாள் மௌனா.

இப்போது காதல் என்று வந்ததும், தன் மொத்த வாழ்க்கையையும் அவனிடத்தில் ஒப்படைக்க நினைக்கும் போது, இப்படியெல்லாம் யோசிக்க வைத்தது மூளை.

இதை அவனிடம் பேசி சரிப்படுத்த வேண்டும் என்று எண்ணிக் கொண்டு, இரவு உணவிற்கு உதவப் போனாள்.

"அகி! உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்?" என்று சட்னிக்குத் தாளித்துக் கொண்டே பேசினாள் மௌனா.

"சொல்லு மா?" என்றதும்,

"நான் வொர்க் பண்ற ஹோட்டலுக்கு மஹதனோட அம்மா வநதாங்க" என்று அவள் கூறியதும்,

"என்னது? உன்னைப் பார்க்கவா வந்தாங்க?" என்று வினவினாள்.

"இல்லை அகி. கிஷான் சாரைப் பார்க்க வந்தாங்க" என்று நடந்ததைக் கூறினாள் மௌனா.

"ம்ஹ்ம்! அவங்க எதேச்சையா வந்ததை நீ தப்பாக புரிஞ்சிக்கிட்ட" என்றாள் அகதா.

"ஆமாம் அகி. மஹதன் சாரை வேற ரொம்ப கடுமையாக திட்டிட்டேன்" என்று சங்கடமாக உணர்ந்தாள்.

"நாம மட்டும் தான் எப்பவும் சரின்னு இருக்கக் கூடாது மௌனா. அவங்களைப் பத்தியும் யோசிச்சுப் பார்க்கனும்.இதையே நீ அவங்க அம்மா முன்னாடி கேட்டிருந்தால், அவங்க மனசு கஷ்டப்பட்டு இருக்கும்ல!" என்று கூறினாள்.

அதைக் கேட்டதும் , தூக்கி வாரிப் போட்டது மௌனாவிற்கு.

"யெஸ் அகி. நான் பாட்டுக்கு பொரிஞ்சு தள்ளிடறேன். அவங்க பார்த்திருந்தா, ஹர்ட் ஆகி இருப்பாங்கள்ல?" என்று உருகிப் போய்ப் பேசிய மௌனாவை அழுத்தத்துடன் பார்த்தாள் அகதா.

ஏனெனில், மற்றவர் மனம் கட்டப்படக் கூடாது என்பது வாஸ்தவம் தான். அதற்கும் மேலாக, இவள் அவருக்காக யோசிப்பது எங்கோ இடித்தது!

ஆனால் மௌனாவே விஷயத்தைச் சொல்லட்டும் என்று காத்திருக்க முடிவு செய்தாள்.

"சொல்லு அகி! ஹர்ட் ஆகி இருப்பாங்க தான?" என்று மீண்டும் கேட்டாள் தோழியிடம்.

"ஆமாம் ஆமாம் மௌனா. ரொம்பவே ஹர்ட் ஆகி இருப்பாங்க. நீ பேசாமல் அவங்க வீட்டுக்குப் போய் மன்னிப்புக் கேட்டுட்டு வந்துடு" என்று கூறி விட்டாள்.

"வீட்டுக்குப் போகனுமா? அகி!!" என்று அதிர்ச்சியுற்றாள்.

"ஆமாம் மௌனா. முடிஞ்சா போய்ட்டு வா.கல்யாணம் ஆகி சாரோட மனைவியா, அவங்களோட மருமகளாகப் போய் மன்னிப்பு கேளு" என்று சொல்லிக் கண்ணடித்தாள் அகதா.

விழிகளைப் பெரிதாக விரித்துப் பார்த்த மௌனா,
"என்ன அகி நீ? அதெப்படி நான்…" என்று இழுத்தவளிடம்,

"எல்லாம் எனக்கு மறைமுகமாக தெரிஞ்சுடுச்சு மௌனா. நீ அவர்கிட்ட சொல்லிட்டு, என்கிட்ட கன்ஃபார்ம் பண்ணு" என்று அழகாகப் புன்னகைத்தாள் அகதா.

அதிர்ந்து விழித்தப் பெண்ணோ, கண்களைச் சுருக்கிக் கொண்டு,
"அப்படி வெளிப்படையாகத் தெரியுற அளவுக்கா இருக்கேன் அகி?" என்று சோகமாக கேட்டாள்.

"ஆமாம் மௌனா" என்று அடித்துக் கூறினாள் அகதா.

"ஹி ஹி" என்று அசடு வழிந்தாள் மௌனா.

"இது உன்னோட தனிப்பட்ட விருப்பம் தான். இருந்தாலும் நான் சில விஷயங்கள் கேட்கனும். கேட்கலாமா?" என்று தோழியின் முகம் பார்த்தாள்.

"கேளு அகி " என்றாள் மௌனா.

"எல்லாம் யோசிச்சுப் பார்த்துத் தான் முடிவு எடுத்தியா?"

"ஆமாம் அகி. நாம தெரியாதவங்க கிட்ட பேசுறதுக்கே ரொம்ப யோசிப்போம். இது வாழ்க்கை சம்பந்தப்பட்டது, கண்ணை மூடிக்கிட்டு உடனே ஒத்துக்கலை அகி. எல்லாம் நினைச்சுப் பார்த்தேன். அது மட்டுமில்லாமல், அப்பா, அம்மாகிட்டயும் அவர் எப்படி நடந்துக்கப் போறார்ன்னு ஐடியாவே இல்லை" என்று தன் கவலையையும் நண்பியிடம் பகிர்ந்து கொண்டாள் மௌனா.

"காதல் கண்ணை மறைக்கும்ன்னு சொல்லுவாங்க. ஆனால் அது அப்படி மறைச்சு, எல்லா விஷயத்திலும் அவங்க மட்டும் தான் தெரியுறாங்கன்ற மாதிரி இருந்திட கூடாது. எனக்கு அந்த லவ் ஃபீல் கல்யாணத்துக்கு முன்னாடி என்னன்னே தெரியாது.தீபக்கைக் கல்யாணம் பண்ண அப்பறமும் அதை நான் தெரிஞ்சிக்கிட்டது இல்லை மௌனா!" என்று கூறியவளது விழிகளில் துளி கண்ணீர் தோன்றியது.

மெல்ல அதை துடைத்துக் கொண்டு,
"அப்படி இருந்தாலும் நீ தவறான வழியைத் தேர்ந்தெடுத்து விடக் கூடாதுன்னு கவனமாக இருக்கனும்னு தான் இதைச் சொல்றேன். சீக்கிரம் மஹதன் சார் கிட்ட சொல்லி, வீட்லயும் பேசி, சம்மதம் வாங்குங்க. அது தான் ரொம்ப முக்கியம் மௌனா" என்று நல்ல விதமாக அறிவுரை கூறினாள் அகதா.

மௌனா எப்போதுமே சுதாகரிப்பாகத் தான் எல்லாவற்றையும் யோசித்துச் செய்வாள். ஆனாலும், இது அவளது நிகழ்காலம் மற்றும் எதிர்கால வாழ்க்கை! ஆதலால் தான் இப்படி கருத்துக்களைப் பகிர்ந்தாள் அகதா.

"கரெக்ட் அகி. நானும் வழி மாறிப் போக மாட்டேன். மஹதன் கிட்ட பேசுறதுக்கு மட்டும் கொஞ்சம் பதட்டமாக இருக்கு" என்று கைகளைப் பிசைந்தாள் மௌனா.

"ஒருநாள் முழுசா யோசி, அவசரப்படாதே! அப்பறம் பதட்டம் குறைஞ்சதும், நிதானமாக யோசிச்சுப் பேசு" என்றாள் தோழி.

"அப்பா, அம்மா சம்மதிப்பாங்களா அகி?" என்று தவிப்புடன் கேட்டாள்.

"பணக்காரவங்க, மிடில் கிளாஸ் ஃபேமிலின்னு யோசிக்கிறியா?" சரியாகப் புரிந்து கொண்டாள் அகதா.

'ஆம்' என தலையசைத்தாள் மௌனா.

"காதல் சரி. ஆனால் கல்யாணம்னா இப்படி பல விஷயங்கள் வரும். நீங்க தான் அதையெல்லாம் பார்த்துக்கனும். அவரும் ஸ்டேட்டஸ் பார்க்கிற ஆள் மாதிரி தெரியல மௌனா"

"யோசிக்கனும் அகி" என்று கூறியவளுக்குத் தனிமை கொடுத்து விட்டு அகன்றாள் மற்றவள்.

"ஏன் பப்ளிக்ல இப்படி நடந்துக்கிற தீபக்?" என்று கணவனைக் கண்டித்தாள் அகதா.

"அப்படி நடந்துக்கிட்டா தான் நீ வழிக்கு வருவ?" என்று மார்க்கமாகப் பேசினான் தீபக்.

"நான் உனக்கு ஒழுங்காக தான பணத்தை அனுப்பிட்டு இருக்கேன்? அப்பறம் ஏன் வந்து டிஸ்டர்ப் பண்ற? நடு ரோட்டில் சீப் ஆக நடந்துக்கிற?" என்று அவனிடமிருந்து கையை உதறிக் கொண்டே கேட்டாள் அகதா.

"எனக்கு அந்தப் பணம் பத்தாது அகதா! நீ என்னோட சம்பளத்திலும் பங்கு கேட்கிற!" என்று கத்த ஆரம்பித்து விட்டான் தீபக்.

சுற்றி நின்ற மக்களைப் பார்த்து கூனிக் குறுகிப் போனாள் அகதா.

அந்த நேரம் பார்த்து, மஹதனுடைய கார் அங்கே வந்து நின்றது.

அவனைப் பார்த்ததும் இன்னும் கூசிப் போனது அகதாவிற்கு.

மஹதன் இறங்கி வருவதைப் பார்த்தவள், கணவனின் பிடியிலிருந்து விலகப் போராடினாள்.

"ஹேய்! அந்தப் பொண்ணு கிட்ட ஏன் இப்படி நடந்துக்கிற?" என்று அவனிடம் கோபமாக வினவினான்.

"அது உனக்கு எதுக்குடா? தேவையில்லாமல், உள்ளே வந்து எதுக்கு தலையைக் கொடுக்கிற?" என்று அவனும் சினம் கொண்டான் தீபக்.

கண்ணீர் மல்க மஹதனைப் பார்த்தாள் அகதா.

அவள் மௌனாவின் தோழி என்பது மஹதனுக்கு ஏற்கனவே தெரியும் அல்லவா! அது மட்டும் இல்லாமல், யராக இருந்தாலும், இறங்கி வந்து உதவிடுவான்.

"டேய்! என்ன முறைக்கிற? கிளம்பு… கிளம்பு" என்று அவனை அலட்சியப்படுத்தினான் தீபக்.

அவனைக் கண்டு கொள்ளாது , அகதாவிடம் , "யாரும்மா இவன்?" என்று கேட்டான் மஹதன்.

"என்னோட ஹஸ்பண்ட்.. சார்" என்று தலை கவிழ்ந்து பதில் சொன்னாள்.

"நீ அவங்களோட புருஷன்றதைச் சொல்றதுக்கே அவமானமா நினைக்கிறாங்க. உனக்கு வெட்கமா இல்லை" என்று கர்ஜித்தான் மஹதன்.

"அவ்ளோ தான் சொல்லிட்டேன் உனக்கு! என்னை அடக்க நீ யாருடா? புருஷன்னு சொல்லிட்டால்ல? அப்பறம் ஏன் பஞ்சாயத்துக்கு வர்ற?" என்று கேட்கவும்,

தீபக்கின் கரத்திலிருந்து அகதாவின் கையைப் பிரித்தெடுத்தான்.

மறு வார்த்தைப் பேசுவதற்குள் இடி போன்ற அடியை அவனுடைய கன்னத்தில் இறக்கினான் மஹதன்.

தீப்பற்றி எரிந்தது தீபக்கின் கன்னம். அந்த அறையையும் வாங்கிக் கொண்டு சளைக்காமல்,
"யாருடி இவன்?" என்று மனைவியிடம் கேட்டான்.

"மௌனாவோட ஃப்ரண்ட்" என்று கூறினாள் அகதா.

"அவளோட ஃப்ரண்ட்னா, உனக்கு ஏன் வக்காலத்து வாங்கிட்டு வர்றான்?" என்று திமிராக வினவினான் தீபக்.

"ஹேய்!! எங்கிட்ட பேசுடா?" என்று அவனைப் பார்வையால் எரித்தான் மஹதன்.

"உன்கிட்ட பேச எனக்கு இஷ்டம் இல்லைடா.நான் என் பொண்டாட்டி கிட்ட பேசிக்கிறேன்" என்று அவளது கரத்தை மீண்டும் பற்றப் போக, அடுத்த இடி கன்னத்தில் இறங்கியது.

"அகதா! வீட்டுக்கு வந்து பேசிக்கிறேன்" என்று அங்கிருந்து உடனே நழுவி விட்டான் தீபக்.

அவனைப் பிடித்து அடித்து உதைத்து இருக்கலாம் தான்! ஆனால் , முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று அகதாவிடம் போனான்.

அவனை நிமிர்ந்து பார்க்கத் திராணி இல்லாமல், குறுகி நின்றாள்.

அவளை அழைத்துக் கொண்டு, காஃபி ஷாப்பிற்குச் சென்றான் மஹதன்.

"நீங்க மௌனாவோட ஃப்ரண்ட் தான? என்னப் பிரச்சினை?" என்று கேட்டான்.

"சார்! அவர் என்னோட ஹஸ்பண்ட் தான்" என தன் நிலையைப் பற்றிக் கூறி முடித்தாள் அகதா.

முழுவதையும் பொறுமையாக கேட்டான், "இங்கே பாருங்க அகதா. நீங்க கவலைப்படாதீங்க! உங்களோட படிப்பு, வேலை எல்லாம் பெருமையான இடத்தில் உங்களை வச்சிருக்கு.உங்களுக்கு யாருமே இல்லைன்றதுக்காக இப்படி ஒரு வாழ்க்கையைச் சகிச்சுக்கனும்னு இல்லை. ஒரு அளவுக்குத் தான் பொறுமையாக இருக்கனும் அகதா" என்று அவளிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தான்.

அப்போது, தோழியைக் காணவில்லை என்று அகதாவின் செல்பேசிக்கு அழைத்தாள் மௌனா.

"ஹலோ அகி! எங்க இருக்க? எவ்ளோ நேரம் வெயிட் பண்றது?" என்று கேட்டாள்.

"நான் ஒரு ஃப்ரண்ட் ஓட காஃபி வந்திருக்கேன் மௌனா. சீக்கிரம் வீட்டுக்கு வர்றேன்" என்று அழைப்பைத் துண்டித்தாள்.

மௌனா என்றதும் மஹதனுடைய கண்கள் நட்சத்திரங்கள் போல மின்னியது.

"உங்க விஷயம் எனக்குத் தெரியும் சார்" என்று மட்டும் கூறியவள், மௌனாவிற்கும் பிடித்தம் என்பதை மஹதனிடம் அவள் தெரிவிக்கவில்லை.அவனும் அதைக் கேட்கவில்லை.

வீட்டிற்கு வந்ததும், வாடிப் போன முகத்தைத் தோழியிடம் இருந்து மறைக்கப் போராடியது எல்லாம் வீணாகிப் போயிற்று. ஏனெனில், மௌனா எளிதாக கண்டுபிடித்து விட்டாள்.

அவள் கேட்பதற்குள் , வேறு வழியின்றி நடந்ததை விவரித்தாள் அகதா.ஆனால், இறுதியாக மஹதன் வந்ததை மட்டும் மறைத்து விட்டாள். அதை அவனே தோழியிடம் கூறட்டும் என்று விட்டு விட்டாள் அகதா.அதுவே மஹதனுக்கு எதிரி ஆனது.

தன் குழப்பத்தைத் தீர்த்துக் கொள்வதற்காக மஹதனிடம் பேச நினைத்த மௌனா, அவனது அலுவலகத்திற்குப் போனாள்.

விஷயம் அறியாதவனோ,
"என்ன உன்னோட ஃப்ரண்ட்க்கு ஹெல்ப் பண்ணதுக்கு தாங்க்ஸ் சொல்ல வந்தியா?" என்று கேட்கவும்,

இவள் புரியாது, "என்ன ஹெல்ப்? யாருக்கு?" என்று குழப்பமாக கேட்டாள் மௌனா.

- தொடரும்
 

Shalini shalu

Moderator
நங்கையின் மறவோன் 22

'தன்னுடைய தோழி அகதாவை மட்டும் தான் இவனுக்குத் தெரியும்!' என்று இவள் எண்ணிக் கொண்டிருந்த சமயத்தில்,

"உன்னோட ஃப்ரண்ட் தான அகதா?" என்று வினவினான் மஹதன்.

"ஆமாம் சார். அவளுக்கு என்ன ஹெல்ப் செய்தீங்க?" என்று கேட்டாள்.

"அவங்களோட ஹஸ்பண்ட் பேர் தீபக் தான?" என்று கேட்டதும், ஆமாமென தலையசைத்தாள் மௌனா.

"அப்போ நான் சொல்வதைப் பொறுமையாக கேளுங்க" என்று அவளிடம் எல்லாவற்றையும் தெளிவாகக் கூறி முடித்தான் மஹதன்.

'இவன் தான் அகதாவிற்கு உதவி செய்து இருக்கிறான். அப்படியென்றால், தீபக்குடன் பிரச்சினை என்று அவள் சொல்லும் போது, தனக்கு மஹதன் உதவி செய்ததை ஏன் தன்னிடம் கூறவில்லை?' என்று குழப்பத்தில் ஆழ்ந்தாள்.

"ஹலோ! எக்ஸ்க்யூஸ்மீ ! மிஸ். மௌனா!" என்று அவளை இருமுறை அழைத்தான்.

"ஹாங்! சார்! அவ இதைப் பத்தி எங்கிட்ட இன்னும் எதுவுமே ஷேர் பண்ணல.அதான் குழப்பமாகிட்டேன்.ரொம்ப தாங்க்ஸ் சார். அவளுக்குச் சரியான நேரத்தில் உதவி செய்தீங்க" என்று உளமார்ந்த நன்றியைத் தெரிவித்தாள்.

"தாங்க்ஸ் இருக்கட்டும். நீங்க என்னைப் பார்க்க வந்ததைப் பத்தி இன்னும் சொல்லலையே?" என்று அவளைக் கூர்ந்து பார்த்தான் மஹதன்.

"அதைக் கண்டிப்பாக இப்போவே சொல்றேன். ஆனால் அதுக்கு முன்னாடி, அகதாவுக்காக எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா சார்?" என்று அவனிடம் கோரிக்கையை வைத்தாள் மௌனா.

"உங்க ஃப்ரண்ட்டுக்காக என்கிட்ட ரெக்கமெண்டேஷனுக்கு வந்து இருக்கீங்களா மேடம்?" என்று பட்டென்று கேட்டு விட்டான் மஹதன்.

அதைக் கேட்டதும், முகம் சுருங்கிப் போய் விட்டது மௌனாவிற்கு.

"ஆமால்ல சார்! சரி நானே பாத்துக்கிறேன்" என்று அவள் எழுந்து செல்ல முயலும் போது,

"ப்ச்! அதுக்குள்ள எங்கிட்ட கோபப்பட்ற பார்த்தியா மௌனா? உனக்கு நான் ஹெல்ப் பண்ண எப்பவும் தயார். அதுவும் இல்லாமல், அவங்களை ரோட்டில் வச்சு அசிங்கப்படுத்துனதைப் பார்த்த அப்பறம், எனக்கே ரொம்ப கோபம் வந்துடுச்சு. உண்டு இல்லைன்னு பண்ணலாம்னு வெயிட்டிங்ல இருந்தேன். அதுக்குள்ள நீயே இதைக் கேட்டுட்ட. நான் என்னப் பண்ணனும்னு சொல்லு?" என்று அவளிடம் தன்மையாக கேட்டான் மஹதன்.

ஏற்கனவே இவனிடம் தன் மனம் பொருந்தி விட்டதால், தயக்கமின்றி தோழியைப் பற்றி விவரித்தாள் மௌனா.

அகதாவும் தன் வாழ்க்கையைப் பற்றிக் கூறி இருக்க, இப்போது மௌனாவும் முழுவதையும் சொல்லி முடித்தாள்.

"அகதாவுக்குன்னு யாருமே இல்லை சார். ஆனாலும் அவ ரொம்ப உறுதியான, தைரியமான பொண்ணு. ஆனால், இப்படி இருக்கிறவங்களோட உணர்வுகளோட விளையாடுறாங்க" என்று கசப்பான புன்னகை ஒன்றை உதிர்த்தாள் மௌனா.

அவளை இமைக்காமல் பார்த்தான் மஹதன்.தன்னவளின் பாசத்தில் பங்கு கொண்டிருந்த அகதாவை நினைக்கையில், அவனுக்குக் கொஞ்சம் பொறாமையாகத் தான் இருந்தது.

"தீபக் அப்பறம் அவரோட அம்மாவை எப்படியாவது அடக்கி ஒடுக்கி, பயமுறுத்தி வைக்கனும்" என்று தீவிரமாக கூறிவளைப் பார்த்தவனுக்குக் குறுஞ் சிரிப்பு வந்தது.

"அதுக்கு என்னப் பண்ணலாம்?" என்று அவளிடமே யோசனை கேட்டான்.

" முகமூடி போட்ட ஒரு சிலரை அனுப்பி , அவங்களை மிரட்டி வைக்க முடியுமா சார்?" என்று கேட்டாள் மௌனா.

"அது வேண்டாம் மா. அகதாவே இதை தைரியமா எதிர்க்கனும்" என்று முடிவாக கூறினான் மஹதன்.

"அது எப்படி முடியும் சார்?" என்று புரியாமல் கேட்டாள்.

"அந்தப் பொண்ணுக்கு யாருமே இல்லைன்றது தான அவங்களோட ப்ளஸ். அதை முதலில் உடைக்கனும். ஒரு நம்பிக்கையான வாழ்க்கையை உன் ஃப்ரண்ட்டுக்காக தயார் பண்ணும்மா. அப்பறம் அவங்களுக்கே எதிர்க்கிற தைரியம் வந்துடும்.இட்ஸ் வெரி சிம்பிள்" என்று தனக்குத் தெரிந்த சிறந்த வழியைக் கூறினான்.

"ம்ஹ்ம்! ஐடியா நல்லா தான் இருக்கு சார். ஆனால், அவளுக்கான வாழ்க்கையைக் , குடும்பத்தை நான் எங்கேன்னு தேட்றது?" என்று யோசித்தாள்.

"எதாவது வழி கிடைக்கும் மௌனா" என்று நம்பிக்கை கொடுத்தான்.

"தாங்க்ஸ் சார்" என இதழ் விரித்துச் சிரித்தாள் மௌனா.

"நீ என்னைப் பார்க்க வந்த விஷயம்?" என்று அவளுக்கு ஞாபகப்படுத்தினான்.

அப்படி கேட்டதும்,
தாமாகவே நாணம் கொண்டாள் பெண்ணவள்.மஹதனுக்கு அவளது உதடு துடிப்பது நன்றாகத் தெரிந்தது.

'இந்த ரியாக்ஷன் எல்லாம் உண்மையிலேயே நம்மளைப் பார்த்துத் தான் வருதா?' என்று அவளை உற்றுப் பார்த்தான் மஹதன்.

அதில் சமாளித்துக் கொண்டவள்,
"உங்கப் புரபோஸலைப் பத்தி யோசிச்சுப் பார்த்தேன் சார். நம்ம ஸ்டேட்டஸ்?" என்று தடுமாறினாள் மௌனா.

அதில் பெருமூச்செறிந்தவாறு,
"அதுனால என்ன மா?" என்று வினவினான்.

"நீங்க பணக்காரர்" என்று தன்னுடைய மனக்கிலேசத்தை மறைக்காமல் கூறினாள்.

"நம்மளோட முதல் மீட்டிங் ஞாபகம் இருக்கா மௌனா?"

"இருக்கு சார்"

"முக்தா அவ்வளவு பணத்திமிரில் பேசும் போது, தைரியமாக நின்னுப் பதில் சொன்னியே? அப்போ அந்தப் பணம் ஒரு பொருட்டாகவே இல்லை. ஆனால் என்னோட லவ்வைப் பத்தி யோசிக்கும் போது, இப்போ அந்த ஏற்றத்தாழ்வு குறுக்கே வருதுல்ல?" என்று அடிபட்ட உணர்வுடன் கேட்டான் மஹதன்.

"சா.. ர்!" என்றவளுக்கு அவனை வெகுவாக காயப்படுத்தி விட்டோம் என்பது புரிந்தது.

"ஆனால் ஒரு விதத்தில், இதை நீ இப்போவே சொன்னதால், எனக்கு நிம்மதியாக இருக்கு மௌனா.எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு. அவ்ளோ தான்! உனக்கும் என் மேல் லவ் இருக்கு. அதை மட்டும் யோசி.அப்பா, அம்மா கிட்ட பேசு. இந்த ஸ்டேட்டஸ்ங்குற பேச்சு வந்தால், நானே நேரில் வந்து பேசறேன்" என்று அவளிடம் தெளிவாக கூறியவனைத் தயக்கத்துடன் பார்த்தாள்.

" உன்னோட சைட் பார்த்து, நீ சொல்லியிருக்க! அதை நான் மனசில் வச்சுட்டு, சொல்யூஷன் கண்டுபிடிக்கிறேன்" என்று வாயிலைக் காண்பித்தான் மஹதன்.

மௌனமாக அங்கிருந்து வெளியேறினாள்.

"லவ் புரபோஸலைத் தவிர, மத்த எல்லாத்தையும் பேசிட்டா' என்று சலித்துக் கொண்டான்.

தன்னிடம் அவளுடைய காதலை வார்த்தைகளால் தெரிவிப்பால் என்று காத்திருந்தான் மஹதன். ஆனால், அது இறுதி வரை நடக்கவே இல்லை.

" இன்னும் வெயிட் பண்ணனுமோ?" என்று யோசித்தான்.

தன் இடத்தில் நின்று கொண்டு, குதூகலமான மனநிலையுடன் வேலை பார்த்துக் கொண்டிருந்த மௌனாவைப் பார்த்து,
'இன்னைக்கு ரொம்ப குஷியாக இருக்காங்க!' என்று நினைத்தான் கிஷான்.

அவனது வரவை அறிந்ததும்,
"குட் மார்னிங் சார்!" என வாழ்த்துச் சொன்னாள்.

"குட் மார்னிங் மிஸ். மௌனா!" என கூறி உள்ளே சென்றான்.

அப்போது தான் மஹதன் அவனுடைய செல்பேசிக்கு அழைப்பது தெரிந்தது.

"ஹலோ மஹத்!"

"ஹாய் கிஷான். உங்கிட்ட சூப்பர் விஷயம் ஒன்னு சொல்லப் போறேன்!" என்று உற்சாகமாகப் பேசினான்.

"அது என்னன்னு நான் கெஸ் பண்ணியிருக்கிறதைச் சொல்லட்டுமா?"

"எங்கே சொல்லு பார்ப்போம்!"

"மௌனா உன்னோட புரபோஸலை அக்சப்ட் பண்ணிட்டாங்க கரெக்டா?"

"ஹேய்!! எப்புட்றா?" என்று வியந்தான் மஹதன்.

"மௌனா சிஸ் இங்கே தானே வொர்க் பண்றாங்க. குட் மார்னிங் சொல்லும் போது, அவங்களோட முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம்! அதை வச்சுத் தான் சொன்னேன்"

"ஓஹோ!!"

உடனடியாக மௌனாவின் முகம் , அவனுடைய மனக்கண்ணில் வந்து போனது.அதில் லயித்திருந்தவனை,

"மஹத்!! கனவு கண்டது போதும். நடந்ததை நீ எனக்கு முழுசா சொல்லனும்.வீக் எண்ட் மீட் பண்றோம்" என்று உத்தரவு போல் கூறி, வாழ்த்தையும் தெரிவித்தான்.

அலுவலகத்தில் தன் இருக்கையில், மடிக்கணினியையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் அகதா.

அன்று நடந்ததை இன்னும் மறக்க முடியவில்லை அவளால். தன் கணவன் இப்படி கீழ்த்தரமாகத் தெருவில் இறங்கி தன்னை அசிங்கப்படுத்தி விட்டானே! என்ற விரக்தி அவளுக்கு.

அலைபேசி விடாமல் அடித்துக் கொண்டு இருந்தது. தீபக் தான் அழைத்துக் கொண்டு இருக்கிறான். எடுத்துப் பேசினால், எத்தனை வன்மையான வார்த்தைகளைக் கேட்க நேருமோ? என்ற ஆயாசத்தில் தான் எடுக்காமல் இருக்கிறாள் அகதா.

குறுஞ்செய்திகளும் வந்த வண்ணமே இருந்தன.மஹதனிடம் தன் பிரச்சினையை சொன்ன பிறகு தான் விஷயம் தெரு வரை வந்து விட்டது , இதற்கு மேல் பொறுமையாக இருப்பது மிகப் பெரிய முட்டாள்தனம் என்று எண்ணினாள்.

அதற்குண்டான தீர்வைக் கண்டறிய வேண்டும். இனி சகித்துக் கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை என்று ஆழ்ந்து சிந்திக்க ஆரம்பித்து விட்டாள் அகதா.

மௌனா திருமணம் முடித்துச் சென்றதும், இப்போது இருக்கும் வீட்டிலேயே வசித்து விடலாம் தான். ஆனால், அவள் மட்டும் தனியாக இருந்தால், தீபக் மட்டுமல்லாமல், வேறு சில இடையூறுகளும் நிச்சயம் வரும். எனவே, பெண்களுக்கான விடுதியில் தங்கிக் கொள்ள வேண்டும் என்று தனக்கான இருப்பிடத்தைத் தேட ஆரம்பித்து விட்டாள் அகதா.

அதன் முதல்படியாக உடன் வேலை பார்க்கும் ஒரு சில பெண் தோழிகளிடம், பெண்களுக்கென்று பிரத்தியேகமாக தங்கும் விடுதிகள் இருந்தால், தன்னிடம் தெரிவிக்குமாறு வேண்டிக் கேட்டுக் கொண்டாள் அகதா.

கணவனையும், மாமியாரையும் பார்த்து நான்கு நல்ல கேள்விகள் கேட்கலாம் என்று கூட அவளுக்குத் தோன்றியது. அந்தளவிற்குக் கீழ்த்தரமாக இறங்குவதில் நாட்டமில்லை என்பதால், அதையும் கை விட்டு விட்டாள்.

மாலை தன் கைப்பையில் இருந்தப் பணத்தில் இருவருக்கும் கொறிப்பதற்காக, சூடாக சில துரித உணவுகளை வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள் அகதா.

அங்கே ஏற்கனவே வந்து விட்ட மௌனாவோ,
"அகி! என்னமோ வாங்கிட்டு வந்திருக்கியே?" என்று தோழியின் கையிலிருந்த பிளாஸ்டிக் கவரைப் பார்த்துக் கேட்டாள்.

"ஆமாம் மௌனா. பாப்கார்ன், காளான் சில்லி, அப்பறம் உனக்கு ரொம்பவே பிடிச்ச பானிபூரி!" என்றதும்,

"ஹேய்! சூப்பர்! குடு அகி. காளான் சில்லியை சூடு பண்றேன். பானிபூரியை நான் தான் செட் பண்ணிக் கொடுப்பேன்" என்று அவளிடம் இருந்து கவரை வாங்கினாள் மௌனா.

அவள் சமையலறை சென்றதும், அகதா முகம் கழுவி விட்டு, வேறு உடை மாற்றி வந்தாள்.

சற்று நேரத்திற்கு எல்லாம், சுடச்சுட காளான் சில்லியுடன், பானிபூரியையும் வாயில் போட்டுக் கொண்டனர் இருவரும்.

அவை காலியானதும், இடத்தைச் சுத்தம் செய்து விட்டு, அறைக்குள் செல்லத் திரும்பிய தோழியை,
"அகி!" என்று அழைத்து நிறுத்தினாள்.

"என்ன மௌனா?"

"தீபக் வந்து சண்டை போட்ட அப்போ மஹதன் உனக்கு ஹெல்ப் பண்ணார் தான?"

இவளுக்கும், மஹதனுக்கும் சந்திப்பு நிகழ்ந்து விட்டது போலும்! என்று அனுமானித்தவள்,

"ஆமாம் மௌனா" என பதிலளித்தாள்.

"அதை மட்டும் ஏன் என்கிட்ட சொல்லலை?"

"ஏற்கனவே உனக்கு அவர் மேல லவ் வந்துடுச்சுன்னு தெரியும். ஆனால், நீ அதை முழுசா உணராமல் இருந்த. அப்போ வந்து இதை நான் உங்கிட்ட சொல்லியிருந்தா, இதனால் தான் உனக்கு அவர் மேல லவ் வந்துச்சுன்னு ஆகிடும். அதான் மறைச்சேன் மௌனா. வேறெந்த தப்பான காரணத்திற்காகவும் இல்லை" என்று புரிய வைத்தாள்.

"தப்பான காரணம்னு நான் இதைக் கேட்கலை அகி.நான் மஹதனை மீட் பண்ணேன்.அப்போ தான் அவர் இதைச் சொன்னார்.அப்பறம்,எனக்கு உன்னைப் பத்தியும் தெரியும், அவரைப் பத்தியும் தெரியும்.கன்ஃபார்ம் பண்றதுக்காக கேட்டேன்" என்று மௌனாவும் சகஜமாகப் பேசி முடித்தாள்.

"ஓகே மௌனா" என்று அறைக்குள் அடைந்து கொண்டாள் அகதா.

அவளுக்காக என்ன செய்தால் சரியாக இருக்கும்? என்று யோசித்துக் கொண்டே, தன் ஊரில், வீட்டில் அவளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைப் பார்வையிட்டாள்.

சட்டென்று, அவளது கண்கள் மின்னிட, தரமான யோசனை ஒன்றைக் கண்டுபிடித்து விட்டாள்.

- தொடரும்
 

Shalini shalu

Moderator
நங்கையின் மறவோன் 23

அவளுக்குக் கிடைத்த யோசனையே அவ்வளவு அர்த்தமுள்ளதாக இருந்தது.

"இது சூப்பர் ஐடியா!" என்று அகதாவிடம் சொல்வதற்கு முன்னால், மஹதனிடம் பரிமாறிக் கொள்ள நினைத்தது அவளது காதல் கொண்ட மனம்.

அவனுடைய உந்துதலால் தானே இந்த எண்ணம் தோன்றியது என்று மஹதனை மீண்டுமொரு முறை சந்திக்கத் தூண்டியது உள்ளம்.

விடுமுறை நாட்களிலும் அவன் அலுவலகம் இயங்குமா? என்பது தெரியவில்லை ஆதலால், சனிக்கிழமை போல, அவனுடைய தங்கும் விடுதிக்குச் சென்றாள் மௌனா.

வரவேற்பில் இருந்த ரிசப்ஷனிஸ்ட்,
"ஹலோ! குட் மார்னிங் மேம்!" என்று புன்னகையுடன் வினவினாள்.

"குட் மார்னிங் மேம்! மஹதன் சார் ஆஃபீஸில் இருக்காரா? நான் ஒரு முக்கியமான விஷயமாக அவர்கிட்ட பேசனும்" என்று கேட்டாள் மௌனா.

"அப்பாயின்ட்மெண்ட் ஆர்டர் (Appointment Order) இருக்கா மேம்?"

"இல்லை மேம். ஆனால், அவருக்குக் கால் செய்து, என்னைப் பத்தி சொல்லுங்க. சாருக்கு என்னைத் தெரியும் " என்று உறுதியாக கூறினாள்.

"யுவர் குட் நேம் மேம்?" என்று அந்தப் பெண் கேட்கவும்,

"மௌனா" என பதிலளித்தாள்.

"ஜஸ்ட் வெயிட் எ மினிட் மேம்!" என்று கூறி விட்டு, மேஜையிலிருந்த தரைவழி தொலைபேசியை எடுத்து எண்களை அழுத்தினாள் ரிசப்ஷனிஸ்ட்.

"ஹலோ சார்! உங்களைப் பார்க்க மௌனா - ன்னு ஒருத்தவங்க வந்திருக்காங்க. அப்பாயின்ட்மெண்ட் ஆர்டர் எதுவும் இல்லைன்னு சொன்னாங்க" என்று விளக்கினாள்.

மௌனாவின் பெயரைக் கேட்டதும் , அவனுடைய அதரங்களில் தானாகவே புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது.

"அவங்களை உள்ளே வர சொல்லுங்க" என்று கூறி அழைப்பைத் துண்டித்து விட்டு, மௌனாவின் வரவிற்காக காத்திருந்தான் மஹதன்.

"சார் உங்களை வர சொன்னார் மேம்! ஹேவ் அ ஹேப்பி டே!" என்று அவளை வாழ்த்தி அனுப்பி வைத்தாள் ரிசப்ஷனிஸ்ட்.

குதூகலத்துடன் மஹதனின் அறைக்குள் சென்றாள் மௌனா.

கதவைத் தட்டிக் கொண்டு வெளியே நின்றாள்.

"எஸ் கமின்!" என்று அவளை உள்ளே வருமாறு அழைத்தான் மஹதன்.

உடனே திறந்து கொண்டு, அறைக்குள் நுழைந்து, குறுநகையுடன் அவனைப் பார்த்தாள்.

"ஹாய்!"

மலர்ச்சியான முகத்துடன் அவளை ஏறிட்டான்.

"ஹாய் சார்!!" என்று அவனை வம்பிழுத்தாள்.

"உட்காருங்க மேடம்" என்று அவனும் மரியாதையாக அழைத்து அமரச் சொன்னான்.

"முக்கியமான… விஷயம்னு ரிசப்ஷனில் சொன்னீங்களாம்!" என்று குறும்புடன் கேட்டான் மஹதன்.

"ஆமாம் சார்…! ஆனால், அகதா விஷயமாக தான் பேச வந்திருக்கேன்" என்று அவன் வேறெதையும் தவறாகப் புரிந்து கொண்டு, ஏமாந்து விடக் கூடாது என்று கவனமாக முதலிலேயே இது தான் விஷயம் என்பது போல தயங்கியவாறு கூறினாள் மௌனா.

"அதனால் என்ன ம்மா? சொல்லு?" என்று இயல்பாக கேட்டவுடன் தான் அவளுக்கு மனம் இலேசானது.

"என்னோட ஊருக்கு நாங்க இரண்டு பேரும் போயிருந்தோமே?" என்று அவள் கூறவும் சட்டென இருவருக்கும் மஹதனின் காதல் மொழிகள் தான் ஞாபகத்திற்கு வந்தது.

அவனுடைய முகம் பளீரென்று மாறுவதை கன்னச் சிவப்புடன் பார்த்து வைத்தாள் மௌனா.

புன்னைகையை மறைத்துக் கொண்டு,
"அங்கே என்னாச்சு மௌனா?" என்று சாதாரணமாக வினவினான் மஹதன்.

"அகதா ஊரில் ரொம்ப சந்தோஷமா, நிம்மதியாக, ஒவ்வொரு நாளையும் ரசிச்சு , அங்கே இருந்தா மஹதன்! அதனால் நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கேன்"

"என்ன முடிவு?" என்று அவளைக் கூர்மையாகப் பார்த்தான்.

"எப்படியும் நான் கல்யாணம் முடிஞ்சு, இங்கே செட்டில் ஆகிடுவேன். ஆனால், அப்போ அப்போ தான் அங்கே போய்ட்டு வர்றா மாதிரி இருக்கும். அகதாவை அப்பா, அம்மா கூட தங்க வச்சிடலாம்னு நினைக்கிறேன். அவங்களுக்கும் இது கண்டிப்பாக சரின்னு தான் தோணும் மஹதன்!" என்று தன் யோசனையை அவனிடம் கூறினாள்.

"ஷ்யூர் ஆ மௌனா?" என்று ஒரு தடவை கேட்டுக் கொண்டான்.

"நூறு சதவீதமாக சொல்றேன். அப்பாவும், அம்மாவும் அவளையும் அவங்க பொண்ணா தான் பார்க்கிறாங்க. அப்பிடி இருக்கிறப்போ இந்த ஐடியா ஒர்க் அவுட் ஆகும்" என்று நம்பிக்கையுடன் கூறினாள் மௌனா.

"முதல்ல உன் அப்பா, அம்மா கிட்ட இதைப் பேசிட்டு, அப்பறம் உடனே அகதாகிட்ட சொல்லு. அவங்க ரொம்ப டிப்ரஷனில் இருப்பாங்க" என்றான் மஹதன்.

"அடுத்த தடவை அவங்களுக்கு கிஃப்ட்ஸ் கொடுக்க ஊருக்குப் போவேன் மஹதன். அந்த நேரத்திலேயே விஷயத்தைச் சொல்லி, சம்மதம் கேட்டுட்றேன்" என்று கூறினாள்.

"அதுக்கப்புறம் என்னைப் பத்தியும் கொஞ்சம் யோசிக்கலாம்!" என்று நமுட்டுச் சிரிப்பு சிரித்தான்.

"உங்களைப் பத்தி யோசிக்கலைன்னு யார் சொன்னா?" என்று இதழ்களுக்குள் வெட்கப் புன்னகையை ஒளித்துக் கொண்டாள் மௌனா.

"அப்படித் தெரியலையே?" என அவளது விழிகளைத் தன் விலோசனங்களால் சிறை செய்தான் மஹதன்.

நாணத்தில் முக்குளித்துப் போனாள் மௌனா. அது மட்டுமின்றி , இவ்வளவு நாளாக இருந்த குழப்பங்கள் எல்லாம் களையப்பட்டு,
முற்றிலுமாக தன் மனதைக் கொள்ளையடித்தவனை விழி அகலாமல் பார்த்து வைத்தாள்.

"அப்படின்னா தெரிஞ்சிக்கிற வரைக்கும் வெயிட் பண்ண வச்சுடவா?" என்று கண்டித்தாள்.

அதில் கிறங்கிப் போனவனோ,
"இதுக்கு மேல வெயிட் பண்ண முடியாது மௌனா! ஊருக்குப் போனதும், அகதா விஷயத்தோட இதையும் சொல்லிடு.டைரக்ட் ஆக கல்யாணம் தான்!" என்று கறாராக கூறினான் மஹதன்.

நேர் எதிராக அமர்ந்திருந்த மங்கையின் உணர்வுகளை முகம் அழகாக எடுத்துக் காட்டியதை, அம்சமாகப் படம் பிடித்துக் கொண்டது மஹதனுடைய காந்த விழிகள்.

காதலைச் சொல்ல அவளுடைய உதடுகள் தயாராக இருந்தாலும், கண்கள் எப்போதோ சொல்லி முடித்திருந்தது.

"உங்க வீட்டில் இதைப் பத்திச் சொல்லிட்டீங்களா?" என்று வினவினாள்.

"அம்மாவுக்குத் தெரியும் மா" என்று கூறவும், அவனை முறைத்தாள் மௌனா.

'அய்யோ! உளறிட்டேனே!' என தலையில் கை வைத்துக் கொண்டான் மஹதன்.

"அப்போ அன்னைக்கு அவங்க என்னைப் பார்த்தது எதேச்சையாக நடந்ததே கிடையாது அப்படித்தான?" என்று கடுமையான குரலில் கேட்டாள்.

"ஆமாம் மா"

" அப்பறம் ஏன் பொய் சொன்னீங்க மஹதன்?" என்று அதிருப்தியைக் காட்டினாள்.

"நானே வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கிறேன்" என நொந்து போனான்.

"கரெக்ட் ! நான் உங்களை நல்ல விதமாக நினைக்கும் போதெல்லாம், நீங்களே அதில் இரண்டு கைப்பிடி மண்ணை அள்ளிப் போட்டுக்குறீங்க" என்று பொரிந்து தள்ளினாள் மௌனா.

"இதனால் தான் இவ்ளோ லேட் ஆகிடுச்சோ!"

"அதை நான் சொல்லி தான் உங்களுக்குத் தெரியனுமா?"

"ஹி ஹி!!" என்று அசடு வழிந்த , முகத்தை மறைத்துக் கொண்டான் மஹதன்.

"உங்க அப்பா?" என்று கலவரத்துடன் கேட்டாள் மௌனா.

"அவர்கிட்ட நான் பேசுறேன் ம்மா. அவர் சம்மதம் தான் சொல்வார்.நீ கவலைப்படாதே" என்று அவளுக்குத் தைரியம் அளித்தான்.

"நானும் வீட்டில் பேசறேன்ங்க" என்று உறுதியாக கூறினாள்.

"அகதாவுக்கும் இன்னைக்கு லீவ்ங்க. தனியாக இருப்பா. நான் இதைப் பேச தான் வந்தேன்" என்று இங்கே வந்த போது, இதழ்களில் இருந்த புன்னகை மாறாமல், வெளியேறினாள் மௌனா.

"சாப்பிட எதாவது எடுத்துட்டு வரவா அகி?" என்று நாளுக்கு நாள் சோர்ந்து தெரிந்தவளிடம், கவலையுடன் கேட்டாள்.

"வேண்டாம் மௌனா. தண்ணீர் மட்டும் கொடுக்கிறியா?" என்று எழ முடியாத அளவிற்கு உடல் வலியுடன் கூறினாள் அகதா.

"கொண்டு வரேன். இரு" என்று தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள் மௌனா.

"உனக்கு உடம்பு சரியானதும் சொல்லு அகி. இன்னொரு தடவை ஊருக்குப் போய், அப்பா, அம்மாவைப் பார்த்துட்டு வரலாம்" என்று தோழியிடம் கூறினாள்.

"சீக்கிரமே போகலாம் மௌனா!" என்று அழுது விட்டாள் அகதா.

அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டு தேற்ற முயற்சித்தாள்.

" உடனே நான் அதுக்கு ரெடி பண்றேன். நீ அழுகாத"

என்று மறுநாளே விடுப்பு எடுக்கும் முடிவுக்கு வந்து விட்டாள் மௌனா.

" நீ லீவ் எடுக்க வேண்டாம். வொர்க் ஃப்ரம் ஹோம் பாரு. நான் மட்டும் லீவ் போட்டுக்கிறேன்" என்று தான் மட்டும் விடுப்பு எடுக்க முடிவெடுத்து விட்டாள் மௌனா.

அதைச் செயல்படுத்தும் விதமாக கிஷானுக்கு அழைத்து,
"ஹலோ சார்!" என்றாள்.

"சொல்லுங்க மௌனா? என்னாச்சு இந்த நேரத்தில் கால் பண்ணி இருக்கீங்க?" என்று கேட்டான் கிஷான்.

இதற்கு முன்னர் எல்லாம் அவள் இப்படி தன் முதலாளிக்குக் கால் செய்தது இல்லையே!

"சார்! எனக்கு அவசரமாக மூனு நாள் லீவ் வேணும். ப்ளீஸ்..!!!" என்று அவசரமாக தனக்கு விடுப்பு வேண்டும் என்பதை வலியுறுத்தினாள்.

"ஏன் இப்படி பேசறீங்க மௌனா? எமர்ஜென்சியா?" என்று தன்னாலான உதவி எதாவது செய்யலாம் என்று தான் இதைக் கேட்டான் கிஷான்.

"ஆமாம் சார். எமர்ஜென்சி தான்! பட் லீவ் மட்டும் கொடுங்க. உங்களை டிஸ்டர்ப் பண்ணியதுக்கு ரொம்ப சாரி சார்!" என்று மறக்காமல் அதற்குண்டான மன்னிப்பையும் கேட்டாள் மௌனா.

"நாளைக்கு சண்டே தானே? சோ, அது பொதுவான லீவ். தொடர்ந்து இரண்டு நாட்கள் லீவ் எடுத்துக்கோங்க. ஆனால், வேலைக்கு வந்ததும், எனக்கு இதுக்கான காரணத்தைச் சொல்லனும்!" என்று கூறி, மௌனாவிற்கு விடுப்பு அளித்தான் கிஷான்.

"தாங்க்யூ சோ மச் சார்!" என்று ஆள மூச்செடுத்துக் கொண்டு, அவனுக்கு நன்றி கூறி, அழைப்பைத் துண்டித்தாள்.

"ஹலோ மஹத்! மௌனா சிஸ் கால் பண்ணி இருந்தாங்க" என்று அவளுடைய பதட்டத்தையும், விடுப்பு வேண்டியதையும் நண்பனிடம் சொன்னான்.

"வீட்டுக்குப் போகனும்னு சொன்னா, ஆனால் ஏன் இப்படி பதட்டமாக இருக்கான்னு தெரியலையே? எனக்கு இன்னும் அவ நம்பர் கொடுக்கலை கிஷான்.என்னாச்சுன்னு தெரியலையே?" என்று யோசனையாக நெற்றியை நீவிக் கொண்டான் மஹதன்.

"எங்கிட்ட நம்பர் இருக்கு. அனுப்பி விட்றேன். என்னன்னு கேட்கிறியா?" என்று வினவினான் கிஷான்.

"அது சரியாக இருக்குமா?"

மௌனாவின் அனுமதியின்றி இனிமேல் எதையும் செய்யக் கூடாது என்று இருந்தவனுக்கோ தற்போது இதைத் தவிர வேறு வழியில்லை என்று கிஷானிடமிருந்து அவளது செல்பேசி எண்ணைப் பெற்றுக் கொண்டான் மஹதன்.

"அகி! நாளைக்குக் கிளம்பிடலாம். நீ இப்போ நல்லா தூங்கினால் தான் எழுந்திரிக்க முடியும்" என்று தம்ளரில் பால் கொணர்ந்து, அவளைப் பருக வைத்து விட்டு, உறங்கச் சொன்னாள் மௌனா.

அந்த நேரம் பார்த்து தான் அவளுக்குக் கால் செய்தான் மஹதன்.

புது எண் என்பதால், யோசித்து, வீடு நேரம் கழித்தே அழைப்பை ஏற்றாள்.

"ஹலோ!" என்று மறுமுனையில் இருந்து வந்த குரல் அவளுக்குப் பரிச்சயம் இல்லாததா என்ன?

"மஹதன்!" என்று தன் அதிர்ச்சியைக் குரலில் வெளிக் காட்டினாள் மௌனா.

- தொடரும்

 

Shalini shalu

Moderator
நங்கையின் மறவோன் 24

"நான் தான் பேசறேன் மௌனா! அங்கே நீங்க ரெண்டு பேரும் பாதுகாப்பாகத் தானே இருக்கீங்க?" என்று இவளது அதிர்ச்சியை உணர்ந்து கொண்டாலும், முதலில் அவ்விருவரின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்துக் கேட்டான்.

அவளும் அதைப் புரிந்து கொண்டாள் போலும்!

அதனால், "எங்களுக்கு எதுவும் ஆகல மஹதன். நாங்க பாதுகாப்பாக இருக்கோம். என்னாச்சு?" என்று கேட்டாள் மௌனா.

"கொஞ்ச நேரம் முன்னாடி கிஷான் கால் செய்து, நீ உடனே லீவ் வேணும்னு கேட்டதா சொன்னான்! அதான், எதாவது பிரச்சனையான்னு கேட்க நினைச்சேன்?" என்று விளக்கினான்.

அவனுடைய நண்பன் தானே கிஷான்! அப்படியிருக்க, தன்னைப் பற்றிய தகவல் அவன் மூலம் மஹதனுக்கு எளிதாக கிடைத்து விடும் என்பதை யோசிக்கவே இல்லை அவள்! அத்தனை பதட்டத்தில் அல்லவா இருந்தாள்!

"அகதாவுக்கு மனசு டிஸ்டர்ப் ஆக இருக்காம்!" என்றவள், தாங்கள் இருவரும் உடனே ஊருக்குச் செல்லப் போவதாகவும், அதற்காக தான் கிஷானுக்கு அழைத்து , தான் விடுப்பு எடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்தாள் மௌனா.

"நல்லது தான் மௌனா. அப்படியே அகதாவை அங்கே தங்க வைக்கிறதைப் பத்தியும் உன் அப்பா, அம்மா கிட்ட பேசிடு"

"ஷ்யூர் மஹதன்!" என்று பதிலளித்தவளிடம்,

"சாரி ம்மா! உனக்கு எதாவது பிரச்சினையோன்னு தான் கிஷான் கிட்ட இருந்து நம்பர் வாங்கிட்டேன்" என்று தன் செயலுக்கு மன்னிப்பு வேண்டியவனை, அவளால் தற்போது கடிந்து கொள்ள முடியவில்லை.

எனவே, "பரவாயில்லை மஹதன்! ஊருக்குப் போயிட்டு கால் செய்றேன்" என்று அழைப்பைத் துண்டித்தாள் மௌனா.

அவள் ஊருக்குச் சென்று திரும்புவதற்குள் தன் தந்தையிடம் மௌனாவைப் பற்றிக் கூறி, கல்யாணத்திற்குச் சம்மதம் வாங்க முடிவெடுத்தான் மஹதன்.

அதற்கு முதல் வேளையாக, கௌசல்யாவிடம் சென்று,
"அம்மா! நான் அப்பா கிட்ட கொஞ்சம் பேச வேண்டியிருக்கு!" என்று கூறவும்,

"என்ன விஷயம் மஹத்?" என்று விசாரித்தார் கௌசல்யா.

"உங்க வருங்கால மருமகளைப் பத்தி! எங்க கல்யாணத்தைப் பத்தி தான் பேசனும்" என்று அழகாகப் புன்னகைத்தான் மகன்.

"ஓஹோ!! அப்போ மௌனா ஒகே சொல்லியாச்சா?" என்று சந்தோஷத்துடன் கேட்டார் அன்னை.

"ஆமாம் அம்மா! இனிமேல் , எங்க கல்யாணத்துக்கு எந்த தடங்கலும் வராது.அப்பா கிட்ட பேசிட்டா போதும்!" என குதூகலித்தான்.

"அவருக்குக் கால் செய்து வீட்டுக்கு வர சொல்றேன்" என்று கணவனுக்குச் செல்பேசியில் அழைத்தார்.

"ஹலோ! கௌசி!! என்னம்மா?"

"என்னங்க! மஹதனும், நானும் உங்ககிட்ட பேசனும். வீட்டுக்கு வர முடியுமா?" என்று கேட்டார்.

"ஏன் கௌசி? ஈவ்னிங் வர்றேனே! அதுக்குள்ள வெயிட் பண்ண முடியாத விஷயமா என்ன?" என்று வினவினார் திருமூர்த்தி.

"ஆமாங்க!" என்றார் கௌசல்யா.

"சரி ம்மா! கிளம்பி வர்றேன்" என்று உடனே வீட்டிற்கு வருவதாக கூறி வைத்தார்.

"உங்க அப்பா வர்றாராம் மஹத்!" என்று மகனிடம் அறிவித்து விட்டு, சோபாவில் அமர்ந்து கொண்டார் கௌசல்யா.

இருபது நிமிடங்களுக்குப் பிறகு, திருமூர்த்தியின் கார் அவர்கள் வீட்டிற்கு முன்னால் வந்து நின்றது.

"வாங்க!" என்று கணவனை உள்ளே அழைத்தார் மனைவி.

"ம்ம்… கௌசி! மஹத்! வீட்டுக்கு வந்துட்டேன். இப்போ சொல்ல ஆரம்பிங்க!" என்று தனது செல்பேசியை அங்கிருந்து டீப்பாய் மீது வைத்தார் திருமூர்த்தி.

"அப்பா! நான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவெடுத்து இருக்கேன்!" என்று மஹதன் ஆரம்பிக்கவும், அவனை ஆராய்ச்சியாகப் பார்த்தார் திருமூர்த்தி.

"ம்ஹ்ம்! மேல சொல்லு மஹத்!" என்று மகனை ஊக்குவித்தார்.

தாயை ஒரு பார்வை பார்த்து விட்டு,
"பொண்ணு!" என்று தடுமாறி விட்டான்.

"ஏன் தடுமாறிப் போற மஹத்? நீ கல்யாணம் பண்ணிக்கிறதுக்காகப் பார்த்திருக்கிற பொண்ணு யாரு?" என்று அழுத்தமாக கேட்டார் திருமூர்த்தி.

"அவ பேர் மௌனா…! அப்பா!" என்று உறுதியான குரலில் கூறினான் மகன்.

அந்தப் பெயரைக் கேட்டதும், சுருங்கி விரிந்த புருவங்களை நீவி விட்டுக் கொண்டே,
"முக்தாவோட பிரச்சினை ஆச்சே அந்தப் பொண்ணா? இப்போ உன் ஹோட்டலில் வேலைப் பார்க்கல தான?" என்று மகனிடம் கேட்டார்.

நீலகண்டனும், முக்தாவும் எது நடக்கும் என்று கூறினார்களோ! கடைசியில் அதுவே நிகழ்ந்து விட்டது என்ற உணர்வு அவரை விழித்துக் கொள்ளச் செய்தது.

"ஆமாம் ப்பா! அந்தப் பொண்ணு தான். நாங்க ரெண்டு பேரும்…" என்று வெகுவாக தயங்கினான்.

"இவ்ளோ தயங்குறியே ப்பா? சரி!! அந்தப் பொண்ணு எப்படி உன்னைக் கல்யாணம் செய்துக்க ஓகே சொன்னா?"

மௌனாவின் தன்மானம், சுய மரியாதையைப் பற்றியெல்லாம் இவரிடம் அள்ளித் தெளித்து இருந்தானே மகன். மஹதனுடைய
தங்கும் விடுதியில் பணிபுரிவதற்கே மறுப்புத் தெரிவித்திருந்தாளே!

பிறகு எவ்வாறு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்புகின்றனர்? என்று தான் அவருக்குத் தோன்றியது.

"இப்போ மௌனா என் ஹோட்டலில் வேலைப் பார்க்கல தான் ப்பா! அவளோட கேரக்டரைப் பார்த்து தான் காதலிச்சுட்டேன்.அதை வெளிப்படுத்துனதும், அவளும் ஏன் காதலைப் புரிஞ்சுக்கிட்டு சம்மதம் சொல்லிட்டா!" என்று தந்தையிடம் விரிவாக கூறினான்.

"ஓஹோ! அப்போ நீலகண்டனும், முக்தாவும் சொன்னது நடந்திடுச்சு! அப்படித்தான மஹத்?" என்று இறுக்கத்துடன் கேட்டார் திருமூர்த்தி.

அவரைக் கலவரமாகப் பார்த்தார் கௌசல்யா.

எப்போதும் சரியாக நடந்து கொள்ளும் மகனுடைய இந்த முடிவும் சரியானதாகவே இருக்கும் என்றும், மௌனாவின் குணநலன்களும் அவருக்குப் பிடித்துப் போனதால் தான் கௌசல்யாவும் மகனுடைய விருப்பத்திற்கு சம்மதம் தெரிவித்திருந்தார்.

ஆனால், கணவனின் மூளை இவ்வாறு யோசிக்கும் என்று அவரும் எதிர்பார்க்கவில்லை!

"ஏங்க!" என அவரிடம் பேச முயன்றார்.

"பொறு கௌசி! நான் மஹத் கிட்ட தெளிவாக கேட்டுக்கிறேன்!" என்று தன் புத்திரனைப் பார்த்தார் திருமூர்த்தி.

அவனும் இதை எதிர்பார்க்கவில்லை என்பது, மஹதனின் உடல் மொழியிலேயே தெரிந்தது.

"ஆமாம் ப்பா! ஆனால், இது எதேச்சையாக நடந்தது! அவங்க அப்படி சொன்ன அப்போவே நாங்க வீம்புக்கு லவ் பண்ணியிருந்தா, அது தப்பு! இப்போ எங்களுக்குப் பிடிச்சுப் போய் தான் உண்மையாக விரும்புறோம்" என்றான் மஹதன்.

ஏட்டிக்குப் போட்டியாக இல்லை! நிஜமான காதல், விருப்பம் என்பதை எடுத்துக் கூறினான்.

ஏதாவது ஏடாகூடமாக ஆகி விடுமோ! என்று இருவரையும் மாறி மாறிப் பார்த்தார் கௌசல்யா.

"பயப்படாதே கௌசி! அவங்க உண்மையிலேயே விரும்புறாங்களான்னு நான் தெரிஞ்சுக்கனுமே! அதான், இப்படி கேட்கிறேன்!" என்று மனைவியின் கரத்தைப் பற்றி, அவரை அமைதிப்படுத்தினார் திருமூர்த்தி.

அதில் ஆசுவாசமடைந்த கௌசல்யா,
"எனக்கு இது முன்னாடியே தெரியும்ங்க" என்று குற்ற உணர்வுடன் கூறினார் மனைவி.

"இருக்கட்டும் கௌசி! அவ உன் கிட்டயாவது விஷயத்தை முன்னாடியே சொல்லிட்டானே! நீயும் கிரீன் சிக்னல் கொடுத்துட்ட போல?" என்று சாதாரணமாக கேட்டார்.

"ஆமாம் ங்க! மருமகளை நேரிலும் போய்ப் பார்த்துட்டு வந்துட்டேன்!" என்று மற்றொரு உண்மையையும் கூறி விட்டார்.

தாயைப் போலியாக முறைத்தான் மஹதன்.

"என் வொய்ஃப்பை முறைக்காமல், மருமககிட்ட பேசிட்டு சொல்லு.முறையாகப் போய்ப் பேசுவோம்" என்றார் திருமூர்த்தி.

தந்தை தன் சம்மதத்தை மறைமுகமாக உணர்த்தி விட்டதைக் கண்டு நிம்மதி அடைந்தவன்,

"ஒரு வாரம் போகட்டும் அப்பா! அவ சொந்த ஊருக்குத் தான் போயிருக்கா! வந்ததும் பேசறேன்" என்று கூறினான் மஹதன்.

என்ன தான் திருமூர்த்தி மகனுடைய காதலுக்குச் சம்மதம் சொல்லி விட்டாலும், நண்பனை நினைத்துக் கவலையாக இருந்தது. எப்படியும் நீலகண்டனுக்கு இந்த விஷயம் தெரிந்து விடுமே!

அதனால், தானே அவரை நேரில் பார்த்துப் புரிய வைக்க வேண்டியது தான் என்று உடனே நண்பனைச் சந்தித்தார் திருமூர்த்தி.

அவருடைய குழப்பமான முகத்தை யோசனையுடன் பார்த்த நீலகண்டனோ,

"என்ன மூர்த்தி! பேச வர சொல்லிட்டு வேற எதையோ யோசிச்சுட்டு இருக்கிற?" என்று வினவினார்.

"நீலகண்டா! நான் உங்கிட்ட இப்போ சொல்லப் போறதை, நீ எப்படி எடுத்துக்கப் போறன்னு தெரில!" என்றதும்,

"எதுவாக இருந்தாலும் சொல்லுடா. நமக்குள்ள என்ன தயக்கம்?" என்று கூலாக கூறிய நண்பனிடம்,

"மஹதன் கல்யாணம் செய்துக்க சம்மதிச்சுட்டான் நீலகண்டா!" என்று கூறினார்.

"சூப்பர் மூர்த்தி! இதை ஏன் இவ்ளோ சோகமாக சொல்ற?"

"ம்ம்! பொண்ணு வேற யாரும் இல்லை! மௌனா!"

இதைச் சொல்ல தான் இவ்வளவு தயக்கமா? என்பதை ஊகித்தார் நீலகண்டன்.

"ஓஹ்!! எப்போ கல்யாணம் டா?" என்று சகஜமாக வினவிய நண்பனை வியப்புடன் பார்த்தார் திருமூர்த்தி.

"உன் பார்வையோட அர்த்தம் எனக்குப் புரியுது! முக்தா கூட பிரச்சினை நடந்த அன்னைக்கே இவங்க லவ் பண்ணிடலையே? அப்படியும் பண்ணினா என்ன தப்பு? அது அவங்களேட தனிப்பட்ட விருப்பம் மூர்த்தி! என் பொண்ணுக்கு மட்டும் தான் அந்த ஆசை இருக்கணும்னு இல்லையே! நான் வேற எதையும் கேட்டு உன்னைச் சங்கடப்படுத்த மாட்டேன். நீ தலை நிமிர்ந்துப் பையனோட கல்யாண வேலைகளைப் பாருடா!" என்று முன் சிரிப்புடன் கூறிய நீலகண்டனை நெகிழ்ந்துப் போனார்.

இவர்களது நட்பும் உடைந்து போகும் அபாயம் இல்லை எனும் போது இருந்த ஒரு கவலையும் நீங்கி விட்டதால், தன் மகனுடைய திருமணத்திற்காக ஆவலுடன் காத்திருக்க ஆரம்பித்தார் திருமூர்த்தி.

அதை மனைவி, மகனிடமும் மறக்காமல் பகிர்ந்து கொண்டார்.

தன் மனதை நிலைப்படுத்திக் கொள்ளவும், தன் முடிவில் ஸ்திரமாக இருக்கவும் தோழியின் உதவியுடன் மீண்டுமொரு பயணத்தை மேற் கொண்டிருந்தாள் அகதா.

ஊரை அடைந்ததும், பேருந்தில் இருந்து வேகமாக இறங்கினாள். தோழியின் இந்த அவசரத்தைப் புரிந்து கொண்ட மௌனா,

"நீ முன்னாடி நடந்து போ அகி. லக்கேஜை நான் எடுத்துட்டு வர்றேன்" என்று தோழியிடம் கூறினாள்.

"இல்லை மௌனா! ரெண்டு பேரும் ஒன்னா போகலாம்" என்று அவளது கரங்களைப் பிடித்துக் கொண்டு முன்னேறினாள் அகதா.

தாயைத் தேடும் குழந்தையாக இருவரும் குதூகலித்துக் கொண்டே, கிணற்றடியில் நின்று கொண்டிருந்த அன்னபூரணியைப் பின்னிருந்து அணைத்துக் கொண்டனர் அகதாவும், மௌனாவும்.

"ஹேய்!! மௌனா!! அகதா!!" என்று மகிழ்ச்சியில் கூக்குரலிட்டார் மௌனாவின் அன்னை.

மனைவியின் கூச்சலைக் கேட்டு, பதறியடித்துக் கொண்டு அங்கு வந்து சேர்ந்த சிவமணியும் ஆனந்த அதிர்ச்சி அடைந்து போனார்.

"அப்பா!!" என தந்தையை அணைத்துக் கொண்டாள் மௌனா.

சிவமணியின் பாதம் பணிந்தாள் அகதா.

"நல்லா இருடா ம்மா!" என்று ஆசீர்வதித்து அவளை எழுப்பி விட்டார்.

பெற்றோர் அவர்களது வருகை தங்களுக்கு ஆனந்தத்தை அளித்தாலும், திடீரென்று இந்த விஜயம் எதற்கு என்ற அவர்களது கேள்வியான பார்வை மகளைத் தொக்கி நின்றது.

அதைக் கண்ட மௌனாவும், 'தான் பிறகு கூறுகிறேன்' என்று ஜாடை செய்தாள் மௌனா.

- தொடரும்
 

Shalini shalu

Moderator
நங்கையின் மறவோன் 25

இரவு உணவு முடித்ததும், அகதாவை அறைக்குள் அனுப்பி வைத்து விட்டு,
அப்போது தன் பெற்றோரின் அறையில் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்த மௌனா,
"அகதாவுக்கு அவளோட புருஷனும், மாமியாரும் ரொம்ப டார்ச்சர் கொடுக்கிறாங்க ப்பா! ம்மா!" என்று முந்தைய நாட்களில் நிகழ்ந்தவற்றை ஒப்புவித்தாள்.

"மனுஷங்களா அவங்க! பொண்ணை எப்படியெல்லாம் கஷ்டப்படுத்தி இருக்காங்க!" என்று பொருமினார் அன்னபூரணி.

"அவங்களுக்குப் பணம் மட்டும் வந்தா போதும் போல" என்று கரித்துக் கொட்டினார் சிவமணி.

"அதனால் எனக்கு ஒரு ஐடியா தோணுச்சு? உங்களுக்கு சரி - ன்னா நான் உடனே அகி கிட்டயும் பேசுவேன்!" என்று அவர்கள் இருவரிடமும் கூறினாள் மௌனா.

"சொல்லும்மா!" என்று அவளை ஊக்கப்படுத்தினார் அன்னபூரணி.

அகதாவை இங்குத் தங்க வைக்க முடிவெடுத்து இருந்ததை அவர்களிடம் பகிர்ந்து கொண்டாள் மகள்.

"ரொம்பவே உடைஞ்சு போயிட்டா! இப்போ உடனே ஊருக்குக் கிளம்பி வந்ததே அதனால் தான். நீங்க என்ன சொல்றீங்க அப்பா! அம்மா!" என அவர்கள் தான் கூறியதை ஒப்புக் கொள்வார்கள்? என்ற எதிர்பார்ப்புடன் ஏறிட்டாள்.

"சரி தான் மௌனா ம்மா! ஆனால் , அவங்க மறுபடியும் இங்கே வந்து பிரச்சினை பண்ணினால் என்னப் பண்றது?" என்று வினவினார் சிவமணி.

"தீபக்கை விவாகரத்துப் பண்ணலாம்னு அகதா நினைச்சிருக்கா போல ப்பா! நீங்க சம்மதம் சொன்னால், நான் அவகிட்ட கேட்கிறேன்.அதே மாதிரி, விவாகரத்துக்கு பதிவு செய்துட்டால், அதுக்கப்புறம் நடக்க வேண்டியதை நான் பாத்துக்கிறேன் ம்மா!" என்றாள்.

அதற்கு, அன்னபூரணி, "அடியாள் வச்சு அடிச்சு, மிரட்டப் போறியா?" என்று மகளிடம் கேட்டார்.

தாய் அப்படி கூறியதும், அழகானதொரு புன்சிரிப்பு மௌனாவின் இதழ்களை அலங்கரித்தது.

"என்ன மௌனா? அதையும் செய்து பார்த்துட்டியா?" என்று கேட்டார் சிவமணி.

"இல்லை ப்பா! அதுவும் தோணுச்சு. அப்பறம் ரிஸ்க் - ன்னு விட்டுட்டேன்" என்று சிரித்தாள்.

"ஓஹோ! பிரமாதம் மா" என்று அவர்களும் புன்னகைத்துக் கொண்டனர்.

"என்ன முடிவு செய்துருக்கீங்க?" என்று தந்தையிடமும், தாயிடமும் மறுபடியும் ஒருமுறை கேட்டாள் மகள்.

"அகதாவை இங்கே தங்க வைக்குறதுக்கு நாங்க வேண்டாம்னா சொல்லுவோம்? ஆனால்…" என்று மீண்டும் அவளது கணவனையும், மாமியாரையும் நினைத்துத் தயங்கினார்கள்.

"அவங்க நம்ம வீட்டுப் பக்கமே வராத மாதிரி பண்ணிடறேன். என்னை நம்புங்க!" என்று நம்பிக்கை அளித்தாள்.

"உன்னை நம்பாமல், வேற யாரை நம்பப் போறோம் மௌனா! ஆனால் எதையும் எங்ககிட்ட சொல்லிட்டு செய்!" என்றா அறிவுறுத்தினார் அன்னபூரணி.

"நான் - னு இல்லை ம்மா! அவளே தன்னோட மரத்துப் போன உணர்வுகளுக்காக நியாயம் கேட்பாள்! அவளோட தன்மானத்தைத் தக்க வச்சுக்குவா!" என்று அவள் சொல்லிக் கொண்டே இருக்கும் போது, எதிர்பாராத விதமாக,

"நான் உள்ளே வரலாமா?" என்ற குரல் கேட்டு மூவரும் அதிர்ந்தனர்.

ஏனென்றால், அகதா தான் அறையின் வாயிலில் நின்றிருந்தாள். இவர்கள் பேசியதை எல்லாம் கேட்டிருப்பாள் போல!

"உள்ளே வா அகி!" என்று அவளை அறைக்குள் அழைத்தாள் மௌனா.

"நீங்கப் பேசனதை எல்லாம் நான் வெளியே இருந்து கேட்டுட்டேன் ப்பா ம்மா!" என்று கூறியவளோ, அளவில்லா அன்பைத் தன் மேல் பொழியும் தோழியைக் கட்டிக் கொண்டாள் அகதா.

மற்ற இருவரும் அவர்களது தோழமையைக் கண்டு பெருமிதம் கொண்டனர்.

"ஹேய் அகி! ரிலாக்ஸ்" என்று நண்பியைச் சமாதானம் செய்தாள்.

சில நிமிடங்கள் கடந்ததும், மௌனாவிடம் இருந்து பிரிந்து,
"நீங்க எனக்காக இவ்ளோ யோசிக்கிறது எனக்கு ரொம்ப சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருக்கு. ரொம்ப நன்றி அம்மா! அப்பா!" என்று தன் நன்றி உணர்வை வெளிப்படுத்தினாள்.

சூழ்நிலையை இலகுவாக மாற்றுவதற்கு,
"போதும் அகி. அழாமல், நாங்க பேசிக்கிட்டு இருந்ததைக் கேட்ட தானே? சம்மதம் சொல்லு!" என்று தோழியை அவசரப்படுத்தினாள் மௌனா.

அவளுடைய பெற்றோர் தயங்கிய விஷயம் அகதாவிற்கும் சம்மதம் சொல்வதற்குத் தடையாக இருந்தது.

"நீ எதை யோசிச்சுட்டுத் தயங்குறன்னு தெரியுது அகி! அவங்களும் மனுஷங்க தானே! தீபக்கும், அவரோட அம்மாவும் உன்னை கன்ட்ரோல் பண்ணி வச்சு இருந்துருக்காங்க! அதை நீ தான் உடைச்சு எரியனும்!" என்று அவளை ஊக்கப்படுத்தினாள் மௌனா.

"நீங்க எல்லாரும் இவ்ளோ சொல்லியும், நான் இப்படியே இருக்கிறது நியாயம் இல்லை.கண்டிப்பாக அவங்களை எதிர்த்துப் பேசுவேன்.ஆனால், என்னால் உங்களுக்குப் பிரச்சினை வந்தால், என்ன செய்றது?" என்று கவலையுடன் கூறினாள் அகதா.

"மறுபடியுமா!!!" என்று தலையில் கை வைத்துக் கொண்ட மௌனா,

"அடியேய்! நான் சொல்றதைக் கேளு. அதையெல்லாம் எங்கிட்ட விட்டுரு" என்று அழுத்தமாக கூறினாள்.

"சரி மௌனா! அடுத்த தடவை வரும் போது நான் திங்க்ஸ் எல்லாம் எடுத்துட்டு இங்கே வந்துடறேன்.அப்பா, அம்மா உங்களுக்கு…?" என்று கேட்டு நிறுத்தினாள்.

"எங்களுக்கு இன்னொரு மகள் கிடைச்சுட்டா அகி ம்மா!" என்று அவளுடைய உச்சந்தலையில் அன்பு முத்தத்தை அளித்தார் அன்னபூரணி.

கடுகளவு கூட அதைப் பார்த்து, மௌனாவிற்குப் பொறாமை வரவில்லை. தன் அன்புக்குரிய தோழியும் குடும்பத்தில் ஒருவளாகி விட்டது அவளுக்கு நிம்மதியாகத் தான் இருந்தது.

"அப்பா! அம்மா! நான் காலையில் ஒரு விஷயத்தைச் சொல்லுவேன். அதை நீங்க நல்லா யோசிச்சுப் பார்த்து அதுக்கு சம்மதம் சொல்லனும்" என்று அவர்களிடம் கூறி விட்டு, மௌனாவைப் பார்த்துக் கண்டித்தாள் அகதா.

வேண்டாமென்று தலையசைத்தாள் மௌனா.

அவர்களது பார்வைப் பரிமாற்றங்களை நெற்றியைச் சுருக்கி, புருவத்தை உயர்த்திப் பார்த்தனர் சிவமணியும், அன்னபூரணியும்.

"அவ சும்மா எதாவது சொல்லுவா ம்மா! நீங்க தூங்குங்க. ஏற்கனவே லேட் ஆயிடுச்சு" என்று அகதாவின் கையைப் பிடித்து இழுத்து, தங்களது அறைக்குள் வேகமாக வந்து விட்டாள் மௌனா.

"அகி! நானே அவங்க கிட்ட எப்படி சொல்றதுன்னு பயந்துட்டு இருக்கேன்! நீ வேற நாளைக்கே பேசறேன்னு சொல்லிக்கிட்டு இருக்கிற!" என்று கலக்கத்துடன் கூறினாள் மௌனா.

"டியர்! நீங்க ஒன்னும் ஃபீல் பண்ண பண்ணவே பண்ணாதீங்க! அப்பா, அம்மாகிட்ட நல்லா விளக்கமாகச் சொல்லி சம்மதம் வாங்கித் தர்றேன்.உனக்காக இல்லை, எனக்காக நான் இதைச் செய்ய அனுமதி கொடு மௌனா!" என்றாள் அகதா.

போர்வையைப் போர்த்திக் கொண்டு அவள் உறங்க ஆரம்பித்ததும், மௌனாவின் செல்பேசியில் குறுந்தகவல் வந்தது.

அதில், 'ஹாய் மௌனா! எங்க அப்பா நம்ம கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டார். நாளைக்கே கூட பொண்ணுக் கேட்க வர்றதுக்குத் தயார்! உனக்கு எப்படி?' என்று ஸ்மைலியையும் சேர்த்தே அனுப்பி வைத்திருந்தான் மஹதன்.

அதை வாசித்து முடித்ததுமே, 'மஹி! நீங்க ரொம்ப ஃபாஸ்ட்! நாளைக்கு அகதாவே ரெடியாக இருக்கா! எப்படியும் நாளைக்கு அகதாவே ஓபன் பண்ணிடுவா! ஒரு பூகம்பத்துக்கு அப்பறம் புயலா, மழையான்னு சொல்றேன்!' என்று அனுப்பினாள் மௌனா.

அவனுடைய வீட்டில் தங்களது திருமணத்திற்குப் பச்சைக் கொடி காட்டி விட்டிருக்க, இங்கோ பெரும் சங்கடம் ஏற்பட்டு விடக் கூடாது என்ற தவிப்பிலே அவ்விரவைக் கழித்தாள் மௌனா.

காலையில் எழுந்ததும்,
" மௌனாவைப் பத்தி நம்ம கிட்ட ஏதோ சொல்லப் போறதா அகதா சொன்னாளே ம்மா! என்ன விஷயமாக இருக்கும் பூரணி?" என்று மனைவியிடம் வினவினார் சிவமணி.

"அதுதான் ங்க எனக்கும் புரியல. மௌனாவும் அவளைப் பேச விடாமல் கூப்பிட்டுப் போயிட்டா! அதைக் கவனிச்சீங்களா?"

சிவமணி, "ஆமாம் பூரணி! எதுவோ பெருசா வரப் போகுதுன்னு தோணுது!" என்றார்.

"அகதாவே வர்றா பாருங்க!"

அவளை அழைத்தவர் ,"இந்தா ம்மா!" என்று காஃபி கொடுத்தார் அன்னபூரணி.

அதைக் குடித்து முடிக்கும் வரை காத்திருந்தவர்கள்,
"நைட் ஏதோ சொல்றேன்னு சொன்னியே அகி ம்மா! என்னது?" என்று பரபரத்தனர்.

"மௌனா எழுந்து வந்துரட்டும் ம்மா! அவ இங்கே இருக்கனுமே!" என்று தோழிக்காக காத்திருந்தாள் அகதா.

பல் துலக்கி , முகம் கழுவி விட்டு வந்த மௌனாவை அருகில் அமர்த்திக் கொண்டாள் அகதா. அவளுக்கும் காஃபி கொணர்ந்தார் அன்னபூரணி.

மகளையே அழுத்தமாகப் பார்த்துக் கொண்டிருந்தார் சிவமணி.

"அப்பா!" என்று பதட்டத்தின் உச்சக்கட்டத்தில் இருந்தாள் மௌனா.

"இரு ம்மா! அகதா நீ சொல்லும்மா!" என்று தீவிரமாக கேட்டார் அன்னபூரணி.

"அகி" என்றவளுக்கு வியர்த்து விறுவிறுத்தாள் மௌனா.

எப்படியானாலும் மஹதனுடனான தன் காதலைப் பெற்றோரிடம் வெளிப்படுத்திச் சம்மதம் வாங்க வேண்டும் தானே?

அதை இன்றே அகதாவின் மூலம் செய்து விடலாம் என்று பெற்றோர்களைப் பார்த்தாள் மௌனா.

தோழியின் வாழ்க்கையில் மஹதனின் வருகையையும், அவர்களுக்கு இடையே நிகழ்ந்த பூசல்களும் , அதற்குப் பிறகான உரையாடல்களும் என இரண்டு பத்திகள் விரிவாக அவர்களுக்குச் சொன்னாள் அகதா.

அவள் சொல்லும் போதே அவ்வப்போது இவர்களின் பார்வை ஊசியாக, மகளைத் தொட்டு மீண்டு கொண்டே இருந்தது.

அவளது உடல் முழுவதும் நடுக்கத்தில் குலுங்கியது. தந்தையையும், தாயையும் ஏறிட்டுப் பார்க்கத் திராணியற்று உடலைக் குறுக்கிக் கொண்டு தோழியின் கரங்களைப் பற்றிக் கொண்டாள் மௌனா.

தங்கள் பெண்ணை இப்படி பார்த்ததே இல்லை அவர்கள்!

மெல்ல வாய் திறந்து,
"அந்தப் பையன் மேல உனக்கு நம்பிக்கை இருக்கா மௌனா?" என்று தான் கேட்டார் சிவமணி.

காதலிக்கிறாயா? என்று கேட்டால் அவளிடம் ஆமாம் என்ற பதில் மட்டும் தான் வரும். ஆனால், அதற்கு முதல் அஸ்திவாரமே நம்பிக்கை தானே! அது இருந்தால் தானே காதலே முளைக்கும்? அதனால் தான் மகளிடம் இந்தக் கேள்வியைக் கேட்டார் தந்தை.

"ம்ஹ்ம்! இது வரைக்கும் அவர் எங்கிட்ட ன்னு இல்லை, மத்தவங்க கிட்டயும் நடந்துக்கிறதைப் பார்த்திருக்கேன்.எனக்கு மஹதன் மேல நம்பிக்கை இருக்கு அப்பா.
அவருக்கும் என் மேல நம்பிக்கை இருக்கப் போய் தான் காதலைச் சொல்லி இருக்கார். அதேபோல, என்னோட காதல், அதைக் கல்யாணத்தில் கொண்டு போய்ச் சேர்க்கனும்ங்கிற எதிர்பார்ப்பு, நம்பிக்கை எல்லாம் தான் உங்ககிட்ட இதை வெளிப்படையாகப் பேச வச்சிருக்கு. என்னோட முடிவு எப்பவும் சரியாக இருக்கும்னு சொல்ல வரலை. நீங்க அதுக்காக சம்மதம் சொல்லனும்னும் இல்லை ம்மா! ப்பா! நீங்க அவரையும், அவர் குடும்பத்தையும் பார்த்துப் பேசனும். பெரியவங்களுக்கும் விருப்பம் இருந்தால், உங்களோட ஆசீர்வாதத்தோட எங்க கல்யாணம் நடக்கட்டும்!" என்று உணர்ச்சிகரமாகவும், அழுத்தம் திருத்தமாகவும் பதிலளித்தாள் மௌனா.

மகளின் வதனத்தில் தெரிந்த உறுதி இவர்களை யோசித்துப் பார்க்கச் சொல்லியது.

அதனால், "சரி ம்மா. அவங்களைப் பார்த்துப் பேசனுமே?" என்று கேட்டார் சிவமணி.

"நான் அவர்கிட்ட சொல்றேன் ப்பா! அவங்க வீட்டில் சம்மதம் சொல்லிட்டாங்க. நமக்காக தான் காத்திருந்தாங்க" என்றதும்,

"அப்போ நாம அங்கே போகலாம்" என்றார் அன்னபூரணி.

ஒருவேளை அந்த ஏற்றத்தாழ்வு உணர்வு தன்னைப் பெற்றவர்களுக்கும் தோன்றி விட்டதோ? என்று "ஏன் ம்மா?" எனக் கேட்டாள் மகள்.

"நாங்க அங்கே வந்ததே இல்லையே மௌனா! வந்தா பையன் வீட்டார் கிட்ட பேசினா மாதிரியும் இருக்கும், நீங்க தங்கி இருக்கிற வீட்டைப் பார்த்த மாதிரியும் இருக்கும் அதான்!" என்று விளக்கினார் அன்னை.

"அப்படியே தீபக் பிரச்சினையையும் முடிச்சிட்டு வந்துடலாம் மா" என்று அகதாவைப் பார்த்துக் கூறினார் சிவமணி.

"சரி ப்பா" என்று மெலிதாகப் புன்னகைத்தாள் அகதா.

"லவ் யூ அப்பா! லவ் யூ அம்மா!" என்று பூரிப்படைந்தாள்.

இங்கும் விஷயம் சுமூகமாகி விட்டது என்று மஹதனுக்குக் குறுஞ்செய்தி ஒன்றைத் தட்டி விட்டாள் மௌனா.

விரைவில் அனைவரும் அங்கே வந்து , மஹதனுடைய பெற்றோரைச் சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தாள்.

"இதுக்கப்புறமாவது உங்கிட்ட இருந்து புரபோஸல் வரும்ன்னு எதிர்பார்க்கிறேன் மௌனா ம்மா!" என்றிருந்தான் மஹதன்.

அந்த நாளுக்காக தானும் காத்திருப்பதாகச் சொல்லி விட்டு ஊருக்குக் கிளம்பும் நாளை முடிவு செய்தாள் மௌனா.

- தொடரும்
 

Shalini shalu

Moderator
நங்கையின் மறவோன் - 26 (Pre - final and Final Episodes)


காலையில் விழித்தெழுந்தவர்களுக்கு இயல்பாகவே பரபரப்பு தொற்றிக் கொண்டது.


"குளிச்சிட்டு ட்ரெஸ்ஸை மாத்து மௌனா!" என்று மகளிடம் இளஞ்சிவப்பு நிறத்திலான சுடிதாரைக் கொடுத்தார் அன்னபூரணி.


" சரி ம்மா" என குளியலறைக்குள் நுழைந்தாள்.


"இந்தா அகி. இது உனக்கு!" என்று அவளுக்கும் உடை கொடுத்து அனுப்பினார்.


"பூரணி ம்மா! பூ, பழம் எதாவது வாங்கிட்டு வரவா?" என்று மனைவியிடம் கேட்டார் சிவமணி.


"வேண்டாம் ங்க! அவங்க வாங்கிட்டு வந்தா என்னப் பண்றது?" என்றார் மனைவி.


"அப்போ ஸ்வீட், காரம் இப்படி வாங்கலாமா?"


"கொஞ்சமாக ஸ்வீட்ஸ் வாங்கலாம் ங்க. அவங்க சாப்பிடுவாங்களா - ன்னு கூட தெரியாதே!" என்று பதிலளித்தார் அன்னபூரணி.


"கவலையை விடு ம்மா! நான் இனிப்பு மட்டும் வாங்கிட்டு வந்துடறேன். வீட்டிலேயே லெமன் ஜூஸ் மட்டும் போட்டுக் கொடுப்போம்!" என்று கூறி விட்டு கடைக்குச் சென்று விட்டார் சிவமணி.


குளித்து விட்டு வந்த மகளோ,

"அப்பா எங்கே ம்மா?" என்று கேட்டாள்.


"அவர் கடைக்குப் போயிருக்கார் மௌனா.நீ அந்தப் பையனுக்குக் கால் செய்து எப்போ வர்றாங்கன்னு கேளு"


அம்மா சொன்னபடியே மஹதனுக்குக் கால் செய்தாள்.


"ஹலோ மௌனா!" என்று களிப்புடன் அவளது பெயரை உச்சரித்தான்.


"ஹலோ மஹதன்! நீங்க எத்தனை மணிக்கு வர்றீங்க?" என்று கேட்டாள்.


"ரிலாக்ஸ் ம்மா! தடபுடலா எதுவும் அரேன்ட்ஜ் பண்ணாதீங்க.நீங்களே டைம் சொல்லுங்க. நாங்க அப்போவே வர்றோம்" என்று அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்தான் மஹதன்.


"அது இல்லை…உங்க வீட்டில்.." எனவும்,


"இப்படி கேட்க சொன்னதே அம்மா தான். அதே மாதிரி, பலகாரம் எதுவும் செய்யாதீங்க. காஃபி போதும்!" என்று அவளை நிதானப்படுத்தினான் மஹதன்.


"ஓகே மஹதன். ஒரு மணி நேரம் கழிச்சு வர்றீங்களா?"


அவள் கூறியதும் கையில் வீற்றிருந்த கடிகாரத்தைப் பார்த்து விட்டு,"சரி மௌனா. நாங்க பத்து மணிக்கே வர்றோம். நீயும் டென்ஷன் ஆகாதே. மத்தவங்களையும் பொறுமையாகத் தயாராகச் சொல்லு" என்று தன்மையாகப் பேசி வைத்தான்.


"பத்து மணிக்கு வர்றதுக்கு ஓகே சொல்லிட்டாங்க அம்மா!" என்ற தகவலை அன்னையிடம் சேர்த்தாள் மௌனா.


அப்போது சிவமணியும் தான் வாங்கி வந்த இனிப்புகளைப் பத்திரப்படுத்தி வைத்தார்.


முந்தைய தினமே மஹதன் தன் தோழன் கிஷானுக்கு அழைத்து எல்லாவற்றையும் கூறி விட்டான்.


கிஷானோ,"கங்கிராட்ஸ் டா மஹதா!" என்று தன் வாழ்த்தைப் பரிமாறினான்.


"தாங்க்ஸ் டா"


"உன் கல்யாணத்துக்கு முக்தா வருவா தான?"


" உனக்காக நிச்சயமாக முக்தாவை இன்வைட் பண்ணுவேன் டா!" என்று நண்பனுக்கு ஆறுதல் வாக்கு அளித்திருந்தான் மஹதன்.


"நாம பூ வாங்கிட்டுப் போகனும் மஹதா!" என்றார் கௌசல்யா.


"போகும் வழியில் வாங்கிடலாம் அம்மா!" என்று கூறி தன் செல்பேசியை ஆராய ஆரம்பித்து விட்டான்.


அப்பொழுது தான் தனக்குத் தகவல் தெரிவிப்பவனிடம் இருந்து செய்தி வந்திருப்பதைக் கவனித்தான்.


அதைப் பார்த்தவுடன் அவனுக்குக் கால் செய்து விட்டான்.


"ஹலோ!" என்று மஹதனது குரலில் கோபமாக ஒலித்தது.


மறுமுனையில் இருப்பவனோ,

"விடியற்காலையிலேயே வந்துட்டாங்க சார்!" என்றான்.


" இங்கே தான் வருவாங்க. ஒரு மணி நேரம் வரைக்கும் நீ ஃபாலோ பண்ணு.அதுக்கப்புறம் நான் பாத்துக்கிறேன்" என்று கூறி வைத்தான் மஹதன்.


இன்றைய நாளைக் கெடுக்கவே வந்திருக்கிறார்கள் போலும் என்று அவனது முகம் கோபத்தில் சிவந்தது.


யாராக இருக்கும்?


"கையோட சாப்பிட்டுப் போவோம் தீபக்" என்று பேருந்து நிலையத்தில் நடந்து கொண்டிருந்த லலிதா மகனிடம் கூறினார்.


ஆம்! அவர்களைப் பற்றி தான் மஹதனுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.


இன்னும் சில மணித்துளிகளில் மௌனாவைப் பார்க்கப் போகும் முன்னர் பெற்றோரை அழைத்து விஷயத்தைச் சொல்லி விட்டான் மஹதன்.


"முதலில் போய் கல்யாணத்தைப் பத்திப் பேசி முடிச்சிட்டு அப்பறம் அவங்களை ஒரு கைப் பார்த்துடலாம்" என்றார் கௌசல்யா.


திருமூர்த்தி, "ஆமாம் மஹதா! அந்தப் பொண்ணுக்குத் துணையாக நாமளும் இருப்போம்" என்றார்.


கடிகார முள் தன் பணியைச் செவ்வனே செய்ததால், பத்து மணிக்கு வந்து நின்று இருந்தது.


"கிளம்பலாம் அம்மா! அப்பா!" என்று அவர்களை அழைத்துக் கொண்டு தன்னவளையும், அவளது குடும்பத்தையும் பார்க்கப் புறப்பட்டான்.


"ஏறுங்க அம்மா!" என்று தன் அன்னையை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு அகதாவைச் சந்திக்கச் சென்றான் தீபக்.


"எப்போ வேணும்னாலும் வந்திடுவாங்க!" என்று பரபரத்தார் அன்னபூரணி.


"நாற்காலி இல்லை.சோஃபாவில் உட்கார சொல்லிடலாம்" என்று நீள்சாய்விருக்கை சுத்தமாக உள்ளதா? என ஆராய்ந்தார் சிவமணி.


அந்த நேரத்தில், காரின் ஓசை இவர்களின் காதுகளுக்கு எட்டியது.


"வந்துட்டாங்க மௌனா" என தோழிக்கு அறிவித்தாள் அகதா.


அதைக் கேட்டதும் பூவாக மலர்ந்து, விரிந்தது மௌனாவின் முகம்.


சொல்லொண்ணா உற்சாகமும், ஆவலும் அவளுக்குள் பீறிட்டுக் கொண்டு இருந்தது.


மற்றவர்கள் எல்லாரும் வாசலைத் தாண்டி அவர்களை வரவேற்கச் சென்று விட, வேகமாக துடிக்கும் இதயத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு, சுவற்றில் சாய்ந்து நின்றாள் பெண்ணவள்.


"வாங்க ! வாங்க !" என்று அவர்களை வரவேற்றவாறே உள்ளே அழைத்து வந்தனர்.


திருமூர்த்தி மற்றும் கௌசல்யா தம்பதியர் இவர்களைப் பார்த்துப் புன்னகைத்தவாறே உள்ளே நுழைந்தனர்.


"வணக்கம் ஆன்ட்டி, அங்கிள். வாங்க மஹதன்" என்று அகதா கூட அவர்களிடம் சகஜமாகப் பேசினாள்.


ஆனால், மௌனாவின் மான் விழிகளோ, தன் கண்ணாளனைப் பார்வையால் அளவெடுத்தது.


எப்போதும் போல ஃபார்மல் உடையில், ஆனால் இன்று அவளது கண்களுக்கு மட்டும் அழகானவனாக தெரிந்தான் மஹதன்.இங்கிருந்தே அவனை ரசிக்கத் துடித்தக் கண்களை கண்டிக்கும் எண்ணம் இல்லாமல் அப்படியே சிலையாக நின்றிருந்தாள் மௌனா.


கண்களைச் சுருக்கி மஹதன் இவளைப் பார்த்த விதத்தில், மனம் அவனிடம் செல்லத் தொடங்கிய போது,


"மௌனா ம்மா! நல்லா இருக்கியா" என்று அவளிடம் பேச்சுக் கொடுத்தார் கௌசல்யா.


"ஆங்!! நல்லா இருக்கேன் ங்க" என்று தன்னிலை அடைந்தாள்.


தன்னைப் பார்த்து இப்படி வசீகரமாகப் புன்னகை உதிர்த்துக் கொண்டிருப்பவனிடம் இருந்து, விழிகளை மீட்க வழி தெரியாமல் தவித்தவளது நிலையைப் புரிந்து கொண்டு தோழியின் அருகில் நின்று கொண்டாள் அகதா.


"உட்காருங்க!" என்று அமரச் சொன்னார் அன்னபூரணி.


"மௌனா! அம்மா கிச்சன் போனால் சரியாக இருக்காது. அதனால் நான் போய் காஃபி போட்டு எடுத்துட்டு வர்றேன். நீ அவங்கப் பக்கத்தில் போய் நில்லு" என்று அவளை அன்னபூரணியின் அருகில் நிற்க வைத்து விட்டு, சமையலறைக்குச் சென்றாள் அகதா.


"எங்களைப் பத்தி உங்கப் பொண்ணு சொல்லி இருப்பாங்களே?" என்று பேச்சை ஆரம்பித்தார் திருமூர்த்தி.


"ஆமாம் ங்க" என்று அவர்களது உயரத்திற்கு மதிப்புக் கொடுப்பது போல ஓரிரு வார்த்தையில் பதில் சொன்னார் சிவமணி.


"இங்கே பாருங்க. நீங்க எங்க பணத்தையோ, சமுதாயத்தில் இருக்கிற செல்வாக்கையோ பார்த்து ஒதுங்கிப் போக மட்டும் செஞ்சிடாதீங்க! எங்களோட மகனுக்கு உங்கப் பொண்ணு மேல காதல். அதே மாதிரி தான் உங்கப் பொண்ணுக்கும் இவனைப் பிடிச்சிருக்கு. அது கல்யாணம்ன்ற பந்தத்தில் அழகாகப் பொருந்திப் போகனும் அதுக்காக தான் பேச வந்திருக்கோம். இப்படி நர்வஸ் ஆகாதீங்க!" என்று அவர்களிடம் தெளிவாக கூறினார் கௌசல்யா.


"எனக்கும் முதலில் ஸ்டேட்டஸ், பணம்ன்னு தான் தோணும். ஆனால் அதை விட என் பையன் கொடுத்த ஒரு நம்பிக்கை அதுவே வாழ்நாள் முழுவதும் என்னை வாழ வச்சிடும்" என்று தன் நண்பன் நீலகண்டனுக்கும், தனக்கும் இடையேயான சிக்கலில் மகன் தனக்குக் கொடுத்த வார்த்தையைப் பற்றியும், நம்பிக்கையைப் பற்றியும் விளக்கமாக கூறினார் திருமூர்த்தி.


அதைக் கேட்டு தன்னவனை நினைத்து உவகை கொண்டாள் மௌனா.


இவர்கள் பேச்சிற்கு இடையே காஃபி கொடுத்து உபசரித்து விட்டு ஒதுங்கிக் கொண்டாள் அகதா.


தன் மகனைப் பற்றிக் கூறிய அந்த தந்தையின் கண்களில் மஹதனை நினைத்து அபாரமான பெருமை ஒளிர்ந்தது.


"அப்பா!" என்று புகழாரம் சூட்டியவரைக் கையமர்த்தப் பார்த்தான் மைந்தன்.


"எனக்கும் உன்னைப் பத்திப் பேச நிறைய இருக்கு. நீ சும்மா இரு" என்றார் திருமூர்த்தி.


"உங்களுக்கு எங்கப் பொண்ணை எப்படி பிடிச்சது?" என்று கேட்டார் சிவமணி.அதற்கு எதிரில் இருந்தவர்களோ,

" அவங்களுக்குள்ளே நடந்த எல்லா கசப்பான, இனிப்பான பேச்சுக்களை எல்லாம் சொல்லிட்டுத் தான் என் பையன் மௌனாவைக் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னே வந்து சொன்னான் சம்பந்தி! நாங்களும் உங்களை மாதிரி தான் திகைச்சுப் போனோம். ஆனால் அவனுக்கும், உங்க மகளுக்கும் இருக்கிற நம்பிக்கையை அவங்க இரண்டு பேர் மேலும் வைக்கலாமே! அதில் தப்பு என்ன இருக்குன்னு யோசிச்சு சம்மதிச்சுட்டோம்" என்ற கூறினார் கௌசல்யா.


இருவரும் காபியைப் பருகி விட்டு, "காஃபி சூப்பர் ம்மா!" என அகதாவையும் பாராட்டத் தவறவில்லை.


"தேங்க்ஸ் ஆன்ட்டி, அங்கிள்" என அவளும் நன்றி தெரிவித்தாள்.


இன்னும் தன் கோப்பையைக் கையில் எடுக்காமல் இருந்தான் மஹதன்.


"உங்களுக்கு காஃபி பிடிக்காதா மஹதன்?" என்றாள் அகதா.


காதைக் கூர் தீட்டிக் கொண்டு அவனது பதிலிற்காக காத்திருந்தாள் மௌனா.


"பிடிக்கும் அகதா. இதோ எடுத்துக் குடிக்கிறேன்" என்று கோப்பையை எடுத்து மெதுவாக உறிஞ்சிக் கொண்டே தன்னவளையும் பார்வையால் பருகினான் மஹதன்.


"நீங்க என்ன சொல்றீங்க சம்பந்தி? நான் பூ வேற வாங்கிட்டு வந்துட்டேன்" என்று இப்போதே பூ வைத்துச் சென்று விடும் அவசரத்தில் இருந்தார் கௌசல்யா.


"நீங்க சொன்னதையே தான் நாங்களும் சொல்லப் போறோம் சம்பந்தி! இந்தச் சந்திப்பு எப்படி இருக்கப் போகுதுன்னு எங்களுக்குப் பதட்டமாக இருந்துச்சு. அதையெல்லாம் ஒன்னும் இல்லாமல் ஆக்கிட்டீங்க! எங்களோட நம்பிக்கையையும் சேர்த்து மஹதன் மேலேயும், எங்கப் பொண்ணு மேலேயும் வைக்கிறோம்! வாழ்க்கை முழுவதும் அந்த ஆசீர்வாதம் அவங்களுக்கு நிறைஞ்சு இருக்கட்டும் " என்று வாழ்த்தியும் விட்டனர் மௌனாவின் பெற்றோர்.


கண்ணிலிருந்து நீர் மணிகள் சிந்த, தன் பெற்றோரை அணைத்துக் கொண்டாள் மௌனா.


அகதாவிற்கோ சந்தோஷம் தாளவில்லை!


"கங்கிராட்ஸ் மஹதன்!" என்று அவரனுக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு, தோழியைக் கட்டிக் கொண்டாள்.


"நம்ம அப்பா, அம்மா உடனே சம்மதிச்சுட்டாங்களேன்னு நினைச்சுடாதீங்க. பெத்தவங்களுக்குப் பிள்ளைங்களோட ஒவ்வொரு அசைவும் தெரியும்ன்ற மாதிரி அவங்களோட ஆசையையும், கண்களில் உண்மையையும் ஈஸியாக கண்டுபிடிக்கத் தெரியும். அதை வச்சு தான் நாங்க சம்மதிச்சு இருக்கோம்" என்றார் கௌசல்யா.


"கரெக்ட்டு ம்மா!" என்று மனைவிக்கு சபாஷ் போட்டார் திருமூர்த்தி.


"நமக்கு இதிலும் ஒத்துப் போகுது சம்பந்தி!" என்று கூறினார் அன்னபூரணி.


"அப்பறம் ஆன்ட்டி, அங்கிள்!" என்று ஆரம்பித்தவளுக்கு வேலையே வைக்காமல் வந்து சேர்ந்தனர் தீபக் மற்றும் அவனது அன்னை லலிதா.


"என்ன கார் நிக்குது?" என்று முணுமுணுத்தவாறே யார் இருக்கிறார்கள்? என்று கூட ஆராயாமல் ஜம்பமாக உள்ளே வந்த இருவரையும் பார்த்து பீதி அடைந்தாள் அகதா.


தன்னைத் தேடி வருவதற்கு, போயும் போயும் இந்த நாளைத் தான் தேர்ந்தெடுத்தார்களா? என்று அவளுக்கு ஒரு பக்கம் சினம் வேறு எகிறியது.


"இவங்க தானா?" என அன்னபூரணியும், கௌசல்யாவும் ஒரே குரலில் கேட்டனர்.


அதில் வெகுவாக திடுக்கிட்ட அகதாவோ, மஹதனின் தாயாரை அதிர்ச்சியுடன் பார்த்தாள். மௌனாவும் அவரைப் புரியாமல் பார்த்தாள்.


"மஹதன் சொல்லிட்டான் ம்மா!" என விளக்கினார் கௌசல்யா.


"பணக்காரவங்களா இருப்பாங்களோ? காரு யாருது?"


"ஆமாம் அம்மா! பணக்காரவங்க தான். அதோ அங்கே சோபாவில் உட்கார்ந்து இருக்கானே! அவன் தான் என்னை அடிச்சான்" என்று தன் அன்னைக்கு மஹதனை அடையாளம் காட்டினான்.


அவனை இங்கே தீபக் எதிர்பார்க்கவே இல்லை! அன்று வாங்கிய அடியில் தோன்றிய வலி இன்னும் குறையவில்லை. அதற்குள் மற்றொரு சம்பவமா? என்ற ரீதியில் அவன் முகம் அஷ்ட கோணலானது.


" இதையெல்லாம் கவனமாகப் பேசிக் கையாளனும்டா மகனே! உன் பொண்டாட்டி இருக்காளான்னுப் பாரு?" என்று மகனிடம் கேட்டார் லலிதா.


சற்று தள்ளி இறுகிப் போய் நின்றிருந்தவளை அடையாளம் கண்டு கொண்டான் தீபக்.


"அங்கே நிற்கிறா அம்மா" என்றுரைத்தான்.


"அமைதியாகப் பேசி அவளை மட்டும் கூப்பிட்டுப் போயிடுவோம். நான் முதலில் ஆரம்பிக்கிறேன்!"


"பெரிய வீட்டு ஆளுங்களா இருக்கீங்க! ஏதோ முக்கியமான விஷயமாகத் தான் பேச வந்திருப்பீங்க. நான் தான் லலிதா. இவன் என் மகன் தீபக். அகதா தான் என்னோட மருமகள்! அவ கூட தான் மௌனா பொண்ணு தங்கி இருக்கிறதா சொன்னா. நீங்க அந்தப் பொண்ணை தான் பார்த்துப் , பேச வந்திருக்கீங்கன்னு நினைக்கிறேன். சந்தோஷமாகப் பேசுங்க. அதுக்கு முன்னாடி அகதா எதுக்கு இங்கே இடைஞ்சலாக இருந்துக்கிட்டு! நான் என்னோட மருமகளைக் கூப்பிட்டுப் போறேன்!" என்று பவ்யமாகச் சொன்னவரையும், அவர் அருகில் அப்பாவி போல் நடித்துக் கொண்டு இருந்தவனையும் பார்த்த அகதாவிற்குப் பொறுமை காற்றில் பறந்தது.


"இங்கே பாருங்க!" என்று எகிறியவளிடம்,


"இரு அகி ம்மா! அவங்க அட்ரஸ் மாறி வந்துட்டாங்க போல இருக்கு" என்று அமைதிப்படுத்தினார் அன்னபூரணி.


பின்னர் லலிதாவிடம்,

"அவ எங்களோட மக. உங்க கூட எல்லாம் அனுப்ப முடியாது" என்று காட்டமாக கூறினார்.


தன் அன்னை ஆரம்பித்துச் சிறப்பாக முடித்தும் வைத்து விடுவார் என்ற எண்ணத்தில் மௌனாவிற்கும் இறுக்கம் தளர்ந்தது.


"அம்மாடி மௌனா! கால் வலிக்கும். நீ போய் மாப்பிள்ளைப் பக்கத்தில் உட்கார்" என்று சிவமணி கூறியதும்,


துள்ளிக் குதித்த மனதுடன் மஹதனின் அருகில் அமர்ந்து விட்டாள் மௌனா.


அவரும் திருமூர்த்தியின் அருகில் சென்று அமர்ந்து கொண்டார்.


"என்னது! உங்கப் பொண்ணா?" என்று வாய் பிளந்து நின்றனர் தாயும், மகனும்.


மஹதனின் மேலுள்ள பயத்தால் , தீபக்கால் மனைவியை எட்ட நின்று முறைக்க மட்டுமே முடிந்தது.


அவனைத் தன் கழுகுப் பார்வையால்

துளைத்து எடுத்தவனிடம்,

"மஹத்! கூல்!" என்று அவனுடன் தன் கரங்களைக் கோர்த்துக் கொண்டாள் மௌனா.


"அகதா ம்மா! இவங்க என்ன எல்லாமோ சொல்றாங்க? எங்க மேல உனக்குக் கோபம் இருக்கும் தான்! அதுக்காக நாங்க உறவே இல்லைன்னு ஒதுக்கிட்டு, சம்பந்தமே இல்லாத இவங்களைப் பேச விட்டு வேடிக்கைப் பாக்குறியே!" என்று நீலிக் கண்ணீர் வடித்தார் லலிதா.


"அவங்க சரியாகத் தான் சொல்றாங்க! நீங்க பிரச்சினை பண்ணாமல் கிளம்புங்க!" என்று அவர்களை விரட்டினார் கௌசல்யா.


இருவருடைய கணவன்மார்களும் தங்களது மனைவிகளின் பேச்சுத் திறமையையும், ஆளுமையையும் ரசித்துக் கொண்டிருந்தனர்.


இதற்கிடையில் , எக்காரணம் கொண்டும் மஹதனுடைய கரத்தை விலக்காமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள் மௌனா.


"நீயே எழுந்திரிச்சுப் போய் அவனை அடின்னு சொன்னாலும் நான் பேக மாட்டேன் ம்மா! புரபோஸல் தான் கிடைக்கல. அட்லீஸ்ட் உன் கையைக் கொஞ்ச நேரம் பிடிச்சிக்கிறேனே!" என்று பிடியின் இறுக்கத்தைக் கூட்டினான்.


அதில் வெட்கம் கொண்டு,

"அச்சோ! போங்க மஹத்!" என்று அவனிடமிருந்து பார்வையை விலக்கிக் கொண்டாள்.


"அது எப்படிங்க முடியும்? உங்களை மாதிரி பணக்கார ஆளுங்க இல்லை தான். ஆனால் பொய் சொல்ல மாட்டோம். அவ என் பையனோட பொண்டாட்டி. என்னோட மருமக" என்றார் லலிதா.


"அட ஆமாங்க! வேணும்னா இவரைக் கூட கேட்டுப் பாருங்க" என்று மஹதனைக் காட்டி அவனிடம்,


"சார்! உங்களுக்கு என்னை ஏற்கனவே தெரியும்ல? அன்னைக்குக் கூட ரோட்டில் பிரச்சினை ஆச்சே!" என்று தங்கப் பதக்கம் வாங்கிய பெருமையைக் கூறுவது போல கேட்டான் தீபக்.


"இவன் ஒருத்தன் சுவிட்சுவேஷன் தெரியாமல் சீண்டிப் பார்க்கிறான்!" என்றாள் மௌனா.


மஹதனோ ஒரு வார்த்தைப் பேசாமல் தீபக்கை விழிகளால் எரித்தான். அதன் அபாயத்தை உணர்ந்தவனோ, வாயை மூடிக் கொண்டான்.


"எங்க மாப்பிள்ளை கிட்ட என்னப் பேச்சு உங்களுக்கு? எதுவாக இருந்தாலும் எங்க கிட்ட பேசு ப்பா!" என்று கடுமையாக கூறினார் அன்னபூரணி.


அதில் கோபம் வந்ததால் , பயத்தையும் மீறி, "ப்ச்! அவ என்னோட பொண்டாட்டி ங்க!" என்று மனைவியிடம் செல்ல முயன்றான் தீபக்.


இதற்கு மேல் தாங்காது என்பது போல், "உனக்குப் பொண்டாட்டியா வேணும்? பணம் தான் வேணும்னு சொல்லுவியே? நீங்க புதுசா பாசம் எல்லாம் காட்டுறீங்க?" என்று கணவனையும், மாமியாரையும் நக்கலாகப் பார்த்தாள் அகதா.


"எல்லாம் நம்ம ஊருக்குப் போய்ப் பேசலாம் அகி ம்மா" என்று மனைவியிடம் குழைந்தான் தீபக்.


"அதெல்லாம் வர முடியாது. இவங்க தான் என் அப்பா, அம்மா! இவங்க கூட தான் இனிமேல் நான் இருப்பேன். ஒழுங்கு மரியாதையாக இடத்தைக் காலி பண்ணுங்க. இல்லைன்னா நடக்கிறதே வேற!" என்று எச்சரித்தாள்.


"பொறுத்தது போதும்ன்னு பொங்கி எழுந்துட்டா!" என தன்னவனிடம் கூறினாள் மௌனா.


"ப்ளீஸ் அகி! என்னை மன்னிச்சு ஏத்துக்கோ" என்று வெட்கமே இல்லாமல் அவள் முன்னால் மண்டியிட்டு விட்டான் தீபக்.


"பணம் வேணும்னா இப்படி கூட காலில் விழத் தோணும்ல?" என்று அருவருப்புடன் கூறினாள் அகதா.


அவளது ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு அடி கொடுக்கப் பரபரத்தக் கைகளை அடக்கிக் கொண்டு இருந்தான் தீபக்.


"இதைக் கூட நீ நம்பலையா அகி?" என்று தன் நாடகத்தை ஆரம்பிக்கலானார் லலிதா.


"கல்யாணப் பேச்சு நடக்கிற வீட்டில் வந்து ஒப்பாரி வச்சுட்டு இருக்கிறியே? இந்தா ப்பா! உங்க அம்மாவைக் கூப்பிட்டுக் கிளம்பு" என்று உத்தரவிட்டார் கௌசல்யா.


"நான் வேலையை விட்டுட்டு, இவங்க கூட ஊருக்குப் போய்த் தங்கப் போறேன். என்னால இனிமேல் உங்களுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை" என்று தடாலடியாக கூறினாள் அகதா.


"வேலையை விடப் போறியா?" என்று அதிர்ந்தார்கள் தாயும், மகனும்.


"சும்மா சும்மா ஷாக் ஆகாமல் வேற பொழப்பை போய்ப் பாருங்க" என்றார் அன்னபூரணி.


வேறு எதையோ சொல்லத் தொடங்கியவர்களிடம், "இன்னும் உங்களால் அகதாவுக்குத் தொந்தரவு வந்தால், நான் என் பாணியில் உங்ககிட்ட பேச வேண்டியது வரும்!" என்று தன் சிம்மக் குரலில் கர்ஜித்தான் முஹதன்.


அந்தக் குரல் தந்த நடுக்கத்தையும், அதிர்வையும் தன்னுள் உணர்ந்த தீபக்கோ, "பணம் வேண்டாம் அம்மா! உயிர் போதும்! தனியாகச் சிக்குவா. அப்போ பாத்துக்கலாம். இப்போ போயிடலாம்" என்று தாயின் காதில் சொன்னான்.


அவன் கூறுவதும் சரியே! என நினைத்த லலிதாவோ கிடைத்த வாய்ப்பை கை விடாமல், "நாங்க போயிட்டு வர்றோம் டா மருமகளே!" என்று அழுவதைப் போல பாவனை செய்து விட்டு மகனுடன் வெளியேறினார்.


"என்னா ம்மா ரெண்டு பேரும் பேசி இருக்கீங்க!" என இருவரையும் பாராட்டினர் திருமூர்த்தி மற்றும் சிவமணி.


மௌனாவும் , "ஆமாம் அம்மா! அத்தை! சூப்பர்! அகதா நீயும் தான் பிச்சு உதறிட்ட" என்று தன் பாராட்டைத் தெரிவித்தாள்.


கௌசல்யாவைப் பார்த்து,"உங்களை நான் எதிர்பார்க்கலை ஆன்ட்டி!" என்றாள் அகதா.


"அதான் சொன்னேனே ம்மா! பையன் எல்லாத்தையும் சொல்லியாச்சு. அவங்க வேற லேடி. சோ, நாங்கப் பேசினா தான் கரெக்டா இருக்கும்னு சம்பந்திக்குக் கம்பெனி கொடுத்தேன்!" என்று புன்னகைத்தார்.


பிறகு மஹதன் மற்றும் மௌனாவிடம் , "இப்படியே கையைக் கெட்டியாகப் பிடிச்சுக்கோங்க. நான் மௌனா தலையில் பூ வச்சு விட்டுடறேன்" என்று அன்னபூரணி மற்றும் சிவமணியிடமும் ஒரு வார்த்தைக் கேட்டுக் கொண்டார் கௌசல்யா.


தன் கையைச் சிறை பிடித்திருந்தவனோ, அதை மேலும் அழுந்துப் பற்றிக் கொண்டான்.


"கெட்டியாகப் பிடிச்சு இருக்கீங்களாக்கும்" என்று மஹதனிடம் செல்லமாக நொடித்துக் கொண்டாள் மௌனா.


" நான் ஸ்வீட் எடுத்துட்டு வர்றேன்" என்று இனிப்பு அடங்கிய தட்டை எடுத்து வந்து அனைவருக்கும் பகிர்ந்து அளித்தார் அன்னபூரணி.


"ஒரு நல்ல காரியம் நடக்கிறதுக்கு முன்னாடியே எல்லா கெட்டதும் விலகிடுச்சு பாருங்க! இப்படியே உங்க வாழ்க்கையில் வரப் போகிற கெட்டது எல்லாம் உடனே விலகிடனும்" என்று பெரியவர்கள் தங்கள் பிள்ளைகளுக்காகப் பிரார்த்தனை செய்தனர்.


பின்னர் தன் வருங்கால மருமகளின் தலையில் பூவைச் சூடினார் கௌசல்யா.


"எல்லாரும் என்னை மன்னிச்சிருங்க! அவங்க பிரச்சினை பண்ண வருவாங்கன்னு தெரியும்! ஆனால் இன்னைக்கே வந்து நிற்பாங்கன்னு தெரியல" என்று அனைவரையும் பார்த்து கை குவித்து மன்னிப்பு வேண்டினாள் அகதா.


"அகி! நான் சொன்னது ஞாபகம் இருக்குல்ல!" என்று அவளைக் கடிந்து கொண்டார் அன்னபூரணி.


"அட விடு ம்மா! எந்த பிரச்சனையுமே இல்லாமல் சப்புனு முடிஞ்சுருமோன்னு நினைச்சேன்! இப்போ தான் திருப்தியாக இருந்துச்சு. அதுக்குத் தாங்க்ஸ்!" என்று அவளுக்கு நன்றி தெரிவித்தார் கௌசல்யா.


அதைக் கேட்டு அங்கிருந்த அனைவருக்கும் நகைப்பு குறைய வெகு நேரம் தேவைப்பட்டது.


"அம்மா! இதெல்லாம் ரொம்பவே ஓவர்!" என்றான் மஹதன்.


"விட்றா! விட்றா!" என்று சொல்லி நகைத்தார்.


திருமூர்த்தி, "அப்பறம் சம்பந்தி மத்தது எல்லாம் உடனடியாக நடக்கட்டும்! நாள், கிழமை எல்லாம் பார்க்கலாம்" என்றார்.


அதற்கு சிவமணியோ, "பூ வைக்கிறது முடிஞ்சுடுச்சே ங்க சம்பந்தி. அடுத்து நிச்சயதார்த்தம் தான்!" என்று கூறினார்.


"ம்ம்! அந்த வேலையைத் தொடங்குவோம். மௌனா ம்மா நீயும், அகதாவும் அப்பா, அம்மா கூட ஊருக்குக் கிளம்புறீங்களா? இல்லை நம்ம வீட்டில் வந்து தங்கிக்கிறீங்களா?" என்று கேட்டார் கௌசல்யா.


இதைக் கேட்டதும் மௌனாவைப் பார்த்துக் கண் ஜாடை காட்டினான் மஹதன்.


"மகனே! நாங்களும் இருக்கோம்!" என்று அவனைக் கிண்டல் செய்தார் திருமூர்த்தி.


தந்தையின் கிண்டலில் வாலைச் சுருட்டிக் கொண்டான் மஹதன். அதைக் கண்டு தன் தெற்றுப் பல் தெரிய சிரித்தாள் மௌனா.


"உங்களுக்கு சிரமம் வேண்டாம் சம்பந்தி. இவங்க ரெண்டு பேரோட கல்யாணம் முடியுற வரைக்கும் , வீட்டு ஓனர் கிட்ட பேசிட்டு, நாங்களும் இங்கேயே தங்கிக்கிறோம். அந்த தீபக்கும், அவனோட அம்மாவும் வந்து பிரச்சினை கொடுத்தா நாங்க பாத்துக்குவோம்ல!" என்றார் அன்னபூரணி.


"நைஸ் ஐடியா!" என்று கூறினார் கௌசல்யா.


விலோசனங்கள் தன் மனதிற்கினியவனைப் பார்த்திருக்க , அனைத்தும் நன்மையாக முடிந்ததை எண்ணி இரு குடும்பங்களும் பேரானந்தம் கொண்டனர்.கரை கடந்த மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.இனிப்பு ஊட்டி தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்திக் கொண்டனர்.


"நாங்க கிளம்பறோம் சம்பந்தி!" என எழுந்து கொண்டனர் மஹதனும், அவனது பெற்றோரும்.


"சாப்பிட்டுப் போகலாமே?" என்று அவர்களிடம் கேட்டார் சிவமணி.


"இருக்கட்டும் சம்பந்தி. இங்கே தானே இருக்கப் போறீங்க? அப்போ ஒரு தடவை வந்து சாப்பிட்டால் போச்சு" என்றார் திருமூர்த்தி.


"போயிட்டு வர்றோம் சம்பந்தி! சந்தோஷமாக இருக்கனும் மௌனா! தைரியமாக இருக்கனும் அகதா!" என்று இருவரிடமும் விடைபெற்றனர்.


அவர்கள் மெல்ல நடந்ததும் மஹதன்,

"வர்றேன் அத்தை, மாமா" என்று முறையாக விடை பெற்றுக் கொண்டு, தன் மனம் கவர்ந்தவளிடம் வந்தான்.


"நான்… போயிட்டு வர்றேன் மௌனா" என்று அவளைப் பார்த்துக் குறும்பாகச் சொல்லி விட்டு விஷமப் புன்னகைப் புரிந்தான்.


"ம்ஹ்ம்… ம்ஹ்ம்" என்று

தன் பங்கிற்கு குறுநகை செய்தாள் மௌனா.


"சார்! என்னைத் தெரியுதா உங்களுக்கு?" என்று பாவமாக கேட்டாள் அகதா.


"தெரியுது ம்மா! எதுவாக இருந்தாலும் என்கிட்ட சொல்லனும். சரியா?" என்று அவளிடம் கூறி விட்டு வெளியேறினான் மஹதன்.


"அப்பா! அம்மா! எல்லாத்துக்கும் தாங்க்ஸ்" என்று காலில் விழுந்து வணங்கி எழுந்தாள் மௌனா.


"நீ மட்டுமா ? நானும் தான்!" என்று சிவமணி மற்றும் அன்னபூரணியின் கால்களைத் தொட்டு நன்றி கூறினாள் அகதா.


"எழுந்திருங்க டா ம்மா!" என்று அவர்களைத் தூக்கி விட்டனர்.


மனம் நிறைந்து போனதால், இறைவனுக்கு நன்றி சொல்வதற்கு வேண்டி, நால்வரும் கோயிலுக்குப் படையெடுத்தனர்.


"ஹப்பாடா! பெரிய விஷயத்தை நடத்தி முடிச்சுட்டோம் ங்க!" என்று கணவனிடம் கூறினார் கௌசல்யா.


"ஆமாம் கௌசி. நானும் இதை நீலகண்டன் கிட்ட சொல்லனும்" என்றார் திருமூர்த்தி.


"நானும் கிஷான் கிட்ட சொல்லனும் ப்பா" என்று வீட்டை அடைந்ததும் தன் அறைக்குள் புகுந்து கொண்டு நண்பனுக்குக் கால் செய்தான் மஹதன்.


"மஹதா! சிறப்பாக நடந்துச்சா?" என்று எடுத்ததுமே ஆர்வமாக வினவினான்.


"செம்மயா நடந்து முடிஞ்சது கிஷான்" என்று கூறினான்.


"ஓஹ் பாரேன்! அவ்ளோ களேபரமாகவா இருந்துச்சு?" என்றான் நண்பன்.


"என்னை விட்ருந்தா அடிச்சு துவம்சம் பண்ணி இருப்பேன் டா" என்று தீபக் மற்றும் அவனது அன்னையின் நடவடிக்கையைப் பார்த்துக் கொந்தளித்ததைக் கூறினான் மஹதன்.


"சரி. மௌனா வேலைக்கு வருவாங்களா?" என்றான் கிஷான்.


"தெரியலைடா! அவளே உனக்குக் கால் பண்ணி சொல்லுவா. நான் மீதி நான் நேரில் வந்து உங்கிட்ட பேசறேன் கிஷான்.பை " என்று அழைப்பைத் துண்டித்து விட்டான் மஹதன்.


"ஹலோ சார்! நான் இவ்ளோ நாள் லீவ் போட்டதுக்கு எதாவது பனிஷ்மெண்ட் தருவீங்களா?" என்று தன் முதலாளி கிஷானுக்குக் கால் செய்து கேட்டாள் மௌனா.


"தேவையில்லை மிஸ். மௌனா. நீங்க ஏன் லீவ் எடுத்தீங்கன்னு எனக்குத் தெரியுமே!" என்று நமுட்டுச் சிரிப்பைச் சிந்தினான் கிஷான்.


"சார்" என்று அசடு வழிந்தாள்.


"ரிசைனிங் லெட்டர் எப்போ கொண்டு வர்றீங்க?" என்று வினவினான்.


"அய்யோ சார்! நான் இப்போ வேலையை ரிசைன் பண்ற ஐடியாவில் இல்லை. கல்யாணத்துக்குக் கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும் வேலை பார்க்கிறேனே?" என்று அனுமதி வேண்டினாள்.


"உங்க இஷ்டம் மிஸ். மௌனா. என்னோட விஷ் - யையும் சொல்லிக்கிறேன்" என்று வாழ்த்து தெரிவித்தான் கிஷான்.


"உங்க ஃப்ரண்டுக்கும் வாழ்த்துச் சொல்லி இருப்பீங்களே?" என்று கேட்டாள்.


"எப்பவோ சொல்லியாச்சு ங்க" என்று பெருமையாக கூறினான்.


"அதானே பார்த்தேன் சார். ஒரு வேண்டுகோள் இருக்கு! நான் அங்கே வேலைக்கு வர்றதை அவர்கிட்ட சொல்லிடாதீங்க! ப்ளீஸ்!" என்று கோரிக்கை விடுத்தாள் மௌனா.


"சொல்லவே மாட்டேன். நீங்க வரும் போது எனக்கு இன்ஃபார்ம் பண்ணுங்க" என்று வைத்து விட்டான்.


கால் கொலுசு சத்தமிட்டுக் கொண்டு இருக்க, குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள் மௌனா.


"ஆரம்பிச்சுட்டியா மௌனா?" என வேலைக்குச் செல்ல தயாராகி இருந்தவளைப் பார்த்துக் கேட்டாள் தோழி.


"ஏன் அகி?" என்று கேட்டார் அன்னபூரணி.


"அவ முதல் முதல்ல வேலைக்குப் போகும் போதும் இப்படித்தான் விடாமல் நடந்துக்கிட்டு இருந்தா அம்மா!" என்று விளக்கினாள் அகதா.


"ஓஹோ! அப்போ நடந்த சரி. இப்போ எதுக்கு இப்படி நடக்குற மௌனா?" என்று மகளிடம் கேட்டார் அன்னை.


"அதுவா ம்மா! அவரைப் பார்க்கப் போறேன் அதான்" என்று நாணத்தால் முகத்தை மூடினாள் மகள்.


"நீ எப்பவும் வேலைப் பார்க்கிற ஹோட்டலுக்குப் போகலையா மௌனா?" என விசாரித்தார் சிவமணி.


"அங்கே தான் ப்பா போகப் போறேன். ஆனால் மஹதன் வர வாய்ப்பு இருக்கு" என்று கூறிக் கொண்டு தோற்பையை மாட்டிக் கொண்டாள் மௌனா.


"ஆல் தி பெஸ்ட் மௌனா!" என்று புன்னகை முகமாக அவளை வழியனுப்பி வைத்தார்கள்.


முன் அலுவலக வரவேற்பாளர் வேலைக்காக தனக்குக் கொடுத்த இடத்தை அடைந்து, நாற்காலியில் அமர்ந்து , குமிண்சிரிப்புடன் வேலையைத் தொடர்ந்தாள் மௌனா.


அதே நேரத்தில், உள்ளே வந்தான் கிஷான்.


"குட் மார்னிங் சார்" என்று வழக்கம் போல அவனுக்கு வணக்கம் வைத்தாள்.


"வெரி குட் மார்னிங்" என்று தலையசைத்து விட்டு அலுவலக அறைக்குச் சென்று விட்டான்.


சில மணித்துளிகள் கழிந்ததும், அந்த தங்கும் விடுதியின் வாசலில் வந்து நின்றது கார்.அதிலிருந்து இறங்கி வந்தான் மஹதன்.


நேராக மௌனாவின் இருப்பிடத்திற்கு வந்தவனோ, "ஹேய்! குட் மார்னிங்" என்று இளநகையுடன் கூறினான்.


"குட் மார்னிங் சா… ர்!" என்று நிமிர்ந்தவளுக்கு வழக்கம் போல ஆனந்த அதிர்ச்சியைக் கொடுத்திருந்தான் அவளவன்.


"கிஷானைப் பார்க்க வந்தேன் மேடம்!" என்று அடக்கப்பட்ட புன்னகையுடன் கூறினான்.


அவளும், "யுவர் குட் நேம் சார்?" என்று ஒன்றும் தெரியாதவளைப் போல வினவினாள் மௌனா.


"மஹதன்!" என கண்களில் போட்டிருந்த கூலரைக் கழட்டினான் ஆடவன்.


"ம்ஹூம்! ஓகே சார். நான் சார்க்குக் கால் பண்றேன்" என்று தொலைபேசியில் கிஷானுக்கு அழைத்தாள்.


"ஹலோ சார்! உங்களைப் பார்க்க மஹதன் சார் வந்திருக்கார்" என்று அறிவித்தாள்.


"உங்க ரெண்டு பேரோட குறும்புக்கு நான் தான் கிடைச்சேனா? வர சொல்லுங்க" என்றான்.


"ஓகே சார்" என அழைப்பை வைத்தவள், தன்னவனுடைய குளுமையான பார்வையில் சில்லிட்டுப் போகும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு,


"உங்களை உள்ளே கூப்பிட்டாங்க சார். ஹேவ் அ நைஸ் டே!" என்று புன்னகையை ஒளித்து வைத்துக் கொண்டு கூறினாள் மௌனா.


"இன்னைக்கு உண்மையிலேயே எனக்கு நைஸ் டே தான் மேடம்" என்று முறுவலித்து விட்டு அங்கிருந்து அகன்றான் மஹதன்.


"நினைச்சேன்! வந்துட்டீங்க!" என்று சென்றவனையே எண்ணிச் சிரித்தாள்.


"ஹாய் டா"


"உள்ளே வா மஹதா!" என நண்பனை உள்ளே அனுமதித்தான் கிஷான்."ரிசப்ஷனைத் தாண்டி தானே வந்த?"


"அஃப்கோர்ஸ் டா" என்று தோள்களைக் குலுக்கிக் கொண்டான் மஹதன்.


"முகத்தில் இருக்கிற மினுமினுப்பைப் பார்த்தாலே தெரியுது" என்று கலாய்த்தான் கிஷான்.


"ஹா ஹா!" சிரித்தவாறே அவனுடன் பேசிக் கொண்டு இருந்து விட்டு, மூன்று மணி நேரங்கள் கடந்த பின்னரே வெளியே வந்தான் மஹதன்.


"பேசியாச்சு! வந்தாச்சு மேடம்" என்று மௌனாவைச் சீண்டினான்.


"சரிங்க மிஸ்டர். மஹதன். தாங்க்ஸ் ஃபார் கமிங்! (வருகைக்கு நன்றி)" என்றாள்.


"நான் நிறைய தடவை இங்கே வந்துட்டுப் போயிருக்கேன்! ஆனால் இந்த தடவை மட்டும் தான் நீ என்னைப் பார்த்து முறைக்காமல் சிரிச்சிருக்க!" என்று குறும்புடன் கூறினான் மஹதன்.


இப்போது உண்மையாகவே அவனை முறைக்கத் தொடங்கி விட்டாள் மௌனா.


"அச்சோ! முறைப்பு வேண்டாம் மா. நான் கிளம்பிட்றேன்" என்று கையசைத்து விட்டு வெளியேறினான்.


தங்களது திருமண வைபவத்தை எதிர் நோக்கிக் கொண்டிருந்த அவ்விருவரின் அழகான காதல் என்றும் அழியாமல் தொடர்ந்து கொண்டே இருக்கட்டும் என்று வாழ்த்தி விடைபெறுவோம்!


- முதல் பாகம் முடிவடைந்தது


 

Shalini shalu

Moderator
ஹாய் ஃப்ரண்ட்ஸ்!

கிஷான் , முக்தாவின் காதலையும் , அகதாவின் முன்னாள் கணவன் தீபக் மற்றும் அவனுடைய தாய் லலிதா இவர்களின் முடிவையும் மற்றும் மஹதன், மௌனாவின் திருமணத்தையும் இரண்டாவது பாகத்தில் பார்ப்போம்.

நன்றி 🙏
 
Top