எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

காதல் சா(சோ)தனை கதைக்கான டீஸர்

அனைவருக்கும் வணக்கம்,
போட்டியில் கலந்துக்க அனுமதியளித்த ப்ரஷா அக்காவிற்கு நன்றி....?
 
வணக்கம் நண்பர்களே,
நான் தான் உங்களுடைய "ஆகாய நிலா", என்னுடைய கதைக்கான ID NNK27.
என்னுடைய கதையான "
காதல் சா(சோ)தனை" யிலிருந்து உங்களுக்கான டீஸர்....


அந்த 11 ஆம் வகுப்பறைக்குள் ஆசிரியர் நுழைந்தார், நேற்று நடத்தின பாடங்கள் அனைத்தும் கரும்பலகையில் அழிக்கப்படாமல் இருந்ததை கவனித்துவிட்டு, மாணவர்களுள் அமர்ந்திருந்தவனை பார்த்து, "மாசத்துல 2 ,3 நாட்கள் தான் கிளாசை அட்டென்ட் பண்ற, நீ வந்து போர்டை கிளீன் பண்ணு" என்று உத்தரவிட்டார்.

அங்குள்ள டஸ்ட்டரையெடுத்து போர்டை அழித்து கொண்டே, "அதான் 2,3 நாளு மட்டும் தான் வரணு தெரியுதுல, அப்பறம் எதுக்கு வேலவாங்குறாங்க" என்று முணுமுணுத்தான். அப்பொழுது, "excuse me மிஸ்" என்ற குரலைகேட்டு அனைவரும் வாயிலை பார்த்தனர். அங்கு இப்பள்ளியின் உடையான சுடிதார் அணிந்து நின்றிருந்தாள், ஒரு சிறுபெண்.

"உள்ள வா" என்று ஆசிரியர் அனுமதி அளித்ததும், உள்ளே வந்து, "மிஸ், உங்க டஸ்ட்டரை தரீங்களா அழிச்சிட்டு தரோம்" என்று கேட்டாள்."உங்க கிளாஸ் டஸ்ட்டர் என்னாச்சு?" கேட்ட ஆசிரியரிடம்,"அது காணோம் மிஸ்" என்று பதிலளித்தாள்.

"அழிச்சிட்டு உடனே கொண்டுவரனும்" என்று இவளிடம் கூறிவிட்டு, போர்டை அழிபவனை நோக்கி, "அழிச்சிட்டு அவகிட்ட டஸ்ட்டரை கொடு" என்று பணித்தார்.

அவன் அவளிடம் டஸ்ட்டரை நீட்டினான், அவள் டஸ்ட்டரை வாங்கி திருப்பி பார்த்துவிட்டு, "இது தான் எங்க டஸ்ட்டர், பாருங்க மிஸ் 10 A போட்டிருக்கு" என்று ஆசிரியரிடம் கூறிவிட்டு , "எதுக்கு எங்களை கேட்காம எங்க டஸ்ட்டரை எடுத்துட்டு வந்திங்க" என்று அவனை பார்த்து கேட்டாள். அவன் அவளை பார்த்து சிரித்துவிட்டு, "நா எடுக்கல" என்று சொல்லிச்சென்று பெஞ்சில் அமர்த்துவிட்டான்.

"அப்ப நம்ம கிளாஸ் டஸ்ட்டர் எங்க?" என்று ஆசிரியர் வினவினார். பின் பெஞ்சில் அமர்த்திருந்த மாணவர்களுள் ஒருவன்,"நேத்து டஸ்ட்டர் வெச்சி சண்டை போடத்துல எங்க போச்சோ, யாருக்கு தெரியும்" என்று வாய்க்குள் முணுமுணுத்தான், ஆசிரியருக்கு தெரியாமல்.

யாரிடமுமிருந்து ஒரு பதிலும் வராததால்,"எங்க கிளசஸ்ல தான் யாரோ உங்க டஸ்ட்டரை எடுத்துட்டு வந்துட்டாங்க போல, நீங்களே வெச்சுக்கோங்க" என்று அந்த பெண்ணை அனுப்பிவிட்டு , "நாளைக்கு நம்ம கிளாஸ்க்கு ஒரு புது டஸ்ட்டர் எடுத்துட்டு வாங்க" என்று கூறிவிட்டு பாடம் நடத்த ஆரம்பித்தார்.

images (95).jpeg


**************************

அந்த மாலைவேளையில், அவர்கள் இருவரும் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தின் அருகில் உள்ள மரத்தடியில் உட்கார்ந்திருந்தனர்.அங்கிருந்து பார்த்தால், மைதானத்தில் நடந்துக்கொண்டிருந்த மேட்ச் நன்றாக தெரிந்தது.
அதனையே இருவரும் பார்த்துக்கொண்டிருந்தவேளையில் , "உங்களுக்கு தெரியுமா சீனியர், நீங்க இந்த காலேஜ்ல படிக்கிறீங்கன்னு தான் நானும் இங்க சேர்ந்தேன்," என்று அவனிடம் கூறிவிட்டு சிரித்தாள். அவளை திரும்பிப் பார்த்தவன் எதுவும் சொல்லாமல் அமைதியாகவே இருந்தான்.
"சொல்லுங்க சீனியர் நீங்க ஏன் இப்படி மாறிட்டீங்க, ஸ்கூல்ல இருந்த மாதிரி நீங்க இல்லையே, என்னாச்சு உங்களுக்கு", என்று அவனிடம் கேட்டாள். அவன் அப்பொழுதும் பதில் எதுவும் கூறாமல், பெருமூச்சொன்றை வெளியிட்டு, மைதானத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்.
அவனிடம் பதிலில்லை என்றதும், "சரி ஓகே சீனியர், சொல்ல விருப்பம் இல்லையென்றால் வேண்டாமென்று" கூறிவிட்டு செல்வதற்கு எழுந்தாள்.
"நான் சொன்னதுக்கு அப்புறமும், நீ இதே மாதிரி என்கூட பேசுவயில்ல", என்று அவன் வினவ, அவள் குழப்பமாக அவனை ஏறிட்டாள்.
நடந்த அனைத்தையும் அவன் கூறினான், கேட்ட அவளுக்குதான் என்னவென்று கூறமுடியா நிலை. இப்படியும் நடக்குமா, இதுவரை சினிமாவில் பார்த்தது , கதைகளில் படித்தது, நமக்கு நெருக்கமானொருவர் வாழ்வில் நடந்தால் எப்படி இருக்கும் என்ற அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் சிலை போல் சமைந்தாள்.

images (82).jpeg


**************************

"நா ப்ரொபோஸ் பண்ணதுக்கு இன்னும் நீ ஒன்னுமே சொல்லலையே, அதுக்குள்ள கெளம்புறேன்னு சொல்ற", அவளை முறைத்துக்கொண்டேக் கேட்டான்.

"ஓ நீங்க இப்ப ப்ரொபோஸ் பண்ணீங்களா..., சாரி சீனியர் எனக்கு தெரியலையே", சிரித்துக்கொண்டே அப்பாவியாக முகத்தை வைத்து நடித்துக் கொண்டிருந்தாள்.

"அடிப்பாவி, அப்ப இவ்வளவு நேரம் நா சொன்னதையெல்லாம், நீ கவனிக்கவே இல்லையா", என்று ஆற்றாமையுடன் கேட்டான்.

அவன் கூறியதனைத்தையும் தன் மனதில் சேமித்து வைத்தவள், அவனை வெறுப்பேற்றும் விதமாக, "ப்ரொபோஸ் பண்ணணும்னாலே ரோஸ்,டைரிமில்க் கொடுக்கணும் ஆனா நீங்க... இந்த பஜ்ஜி, சுண்டல், மாங்காய் எல்லாம் வாங்கிக்கொடுத்து ப்ரொபோஸ் பண்ணிருக்கீங்க", என்று கிண்டலடித்தாள்.

அவர்கள் இருந்த அந்த கடற்கரை காற்றில் கேசம் பறக்க, அதனை கோதிக்கொண்டே "ப்ரொபோஸ் பண்றப்ப அவங்களுக்கு என்ன புடிக்குமோ அதை தான் வாங்கிக்கொடுப்பாங்க..., உனக்கு இதுயெல்லாம் தான் புடிக்கும்னு வாங்கிக்கொடுத்தேன்" என்றவன்.

அவள் முறைப்பதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து, "அது எல்லாத்தையும் தான் நீ ஒருத்தியே காலி பண்ணிட்டல, அப்புறம் என்ன" என்று கூறி நகைத்தான்.

"யோவ் போயா..." என்றுவிட்டு அவள் நடக்க துவங்கினாள்.

images (77).jpeg
 
Top