எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

எனக்குள் வந்து வீழ்ந்தவளே (NM PART 2 VERSION) - கதை திரி

Status
Not open for further replies.

Shalini shalu

Moderator
அறிவிப்பு :

ஹாய் ஃப்ரண்ட்ஸ்!

"எனக்குள் வந்து வீழ்ந்தவளே!" - நங்கையின் மறவோன் பாகம் 2 எழுதப் போகிறேன்.

இது குறுநாவல் தான். ஏனெனில் , கிஷான் மற்றும் முக்தாவைப் பற்றி பாகம் 1 - லேயே வாசித்து விட்டோம். மே - ஆம் தேதியன்று முதல் அத்தியாயம் பதிவிடப்படும்.

அதனால் அவர்களுக்கிடையேயான நட்பு , மோதல் இவற்றையெல்லாம் இந்தப் பாகத்தில் பார்ப்போம்.

இறுதியில் , இவர்கள் மற்றும் மஹதன் , மௌனா ஜோடியின் திருமண வைபவத்தைப் பற்றிக் காண்போம். மே - 8 ஆம் தேதியன்று முதல் அத்தியாயம் பதிவிடப்படும்.

கதையில் எதுவும் விட்டுப் போகாமல் முழுமையாக முடித்து வைத்து "சுபம்" போட்டு விடுவேன். அதனால் நம்பி வாசியுங்கள்! கருத்து தெரிவியுங்கள்!

நன்றி 🙏🙏🙏🙏


IMG_20230421_130048.jpg
 
Last edited:

Shalini shalu

Moderator
நங்கையின் மறவோன் கதையின் முதல் பாகம் 👇

முழுக் கதை திரி :


 
Last edited:

Shalini shalu

Moderator
வணக்கம் நண்பர்களே! இந்தக் கதையை வாசிக்க விருப்பமுள்ளவர்கள், இதன் முதல் பாகமான,"நங்கையின் மறவோன்" கதையை வாசித்து விட்டு இதை தொடருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி 💞

💞💞💞💞

அத்தியாயம் 1

மாடியில் நின்று கொண்டு, பால்கனி வழியாகப் , பகலவனைக் கண்களால் பருகி கண் கொண்டு , காஃபியை வயிற்றுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தாள் முக்தா.

விரைவாகவே துயில் கலைந்து எழுந்து விடுபவள் தான்.

இரவு உடையை மாற்றும் நினைவு இன்றி , காஃபியின் மணமும், சுவையும் அவளைப் பிடித்து வைத்துக் கொண்டது.

"முகி!" என்ற தந்தையின் அழைப்பில், தலையைத் திரும்பினாள் அவர்புறம்.

"குட்மார்னிங்! இன்னைக்கு சீக்கிரம் போகனும் டா" என்று கனிவுடன் மகளிடம் கூறினார் நீலகண்டன்.

"ஏன் அப்பா?" என்றாள் அவரது செல்ல மகள்.

"மூர்த்தி தான் வர சொல்லி இருக்கான். போனா தான் தெரியும். நீ ஃப்ரெஷ் ஆகிடு" என்று கூறினார் தந்தை.

"ம்ம்! சரிங்க ப்பா"

"மறக்காமல் லன்ச் சாப்பிட்ருங்க! நான் கொடுத்து விட சொல்றேன்" என்கவும்,

"இல்லைடா. ஹோட்டலில் அரேன்ட்ஜ் செய்து இருக்கிறதா மூர்த்தி சொல்லி இருக்கான். நான் அவன் கூட தான் மதியம் சாப்பிடப் போறேன்" எனக் கூற,

"சாப்பிட்டுட்டு மெசேஜ் செய்திடுங்க அப்பா" என்று மட்டும் கூறி தந்தையை வழி அனுப்பினாள் முக்தா.

காலியானக் கோப்பையைக் கழுவப் போட்டவள், துவாலையை எடுத்துக் கொண்டு, குளித்து விட்டு வந்தாள்.

வேலையாட்களிடம் அதிகம் பேச மாட்டாள், அவர்கள் தங்களது வேலையைச் சரியாகச் செய்தாலே போதும் என்று உத்தரவிட்டு இருந்தாள் முக்தா.

காலையுணவு மேஜையில் தயாராகி இருக்க , நாளிதழைப் புரட்டிக் கொண்டு அதைக் கொறித்து முடித்தாள்.

மஸ்காராவைக் கொண்டு கண்களின் இமைகளை அழகாக தீட்டி முடித்தவள், அணிந்திருக்கும் உடையை ஆராய்ந்தாள்.

ஜீன்ஸூம் , டீ ஷர்ட்டும் அவளது உடலை மறைத்திருக்க, அதற்கேற்றாற் போல், அணிகலன்கள் அலங்கரித்திருந்தது அவளை.

பிங்க் வர்ண உதட்டுச் சாயத்தின் அளவைக் கொஞ்சம் தூக்கலாக்கிக் கொண்டு, வீட்டிலிருந்து காரில் கிளம்பினாள் முக்தா.

தோழிமார்களுடன் நேரத்தைச் செலவழிக்கத் தான் பயணித்துக் கொண்டிருந்தாள்.

உணவகம் ஒன்றில் குழுமியிருந்த நான்கு பெண்களும், ஐந்தாமவளுக்காகக் காத்திருந்தார்கள்.

"ஹேய்! முகியோட அப்பா நீலகண்டன் இருக்காருல்ல? அவரோட ஃப்ரண்ட் பையன் மஹதனைத் தான் அவ லவ் பண்ணிட்டு இருக்கிறா!" என்று லிஷா என்பவள் கூறிக் கொண்டு இருந்தாள்.

"மஹதனா? நானும் அவனைப் பத்திக் கேள்விப்பட்டிருக்கேன்" என்றாள் ஜியா.

"ஆனால், அவன் இவளைக் கண்டுக்கிறா மாதிரியே தெரியலை" என்று கூறினாள் ஹீமா.

"அதையும் சொல்லியாச்சு. அவ கேட்கிறாகவே இல்லை. கேட்டால், லவ்!" என்று சலித்துக் கொண்டாள் ஷீலா.

இப்படியாக, நான்கு பேரும் பிரித்து மேய்ந்து கொண்டிருந்த தோழியும் அங்கு வந்து சேர்ந்தாள்.

"என் கதை தான ஓடுது?" என்றபடி தன்னுடைய குளிர் கண்ணாடியைக் கழட்டி விட்டு, நாற்காலியில் அமர்ந்தாள் முக்தா.

"ஆமாம். எங்களுக்குப் பொய் சொல்ல அவசியமில்லை முகி!" என்று துடுக்காக கூறினாள் ஹீமா.

"அப்படியா? எனக்கும் உங்களோட அட்வைஸைக் கேட்கனும்னு எந்த கட்டாயமும் இல்லையே!" என்று அவள் பாணியிலேயே திருப்பிக் கொடுத்தாள்.

"இது ஒன்னும் பெருமை கிடையாது முகி!" என்று அவளைக் கடிந்து பேசினாள் லிஷா.

"உஃப்! ப்ளீஸ்! நான் ஹேப்பியா இருக்கலாம்னு வந்தால், வரிசையாக அட்வைஸைத் திணிக்கிறீங்களே!" என்று ஆற்றாமையுடன் கூறினாள் முக்தா.

"நாங்க சொல்றதை சொல்லிட்டோம் முகி! இதுக்கும் மேல் நீ ட்ரை பண்றது வேஸ்ட்!" என்று அடித்துச் சொன்னாள் ஜியா.

"அப்படியே இருந்துட்டுப் போகட்டும். இன்னொரு தடவை அசிங்கப்படுத்துற மாதிரி பேசினால், நம்ம ஃப்ரண்ட்ஷிப் கட் ஆயிடும். பாத்துக்கோங்க!" என்ற முடிவுடன் அவள் கூறி விடவும்,

"என்னமோ போ முகி. நாங்க சொல்றது இப்போ புரியாது. பட்டுத் தெரிஞ்சுக்கோ!" என்றவாறே பேச்சை மாற்றி விட்டனர் மற்ற நால்வரும்.

அதற்குப் பிறகு, தங்களுக்கான உணவுகளை வரவழைத்து உண்டனர்.

"அப்படி மஹதன் உன்னை ஹர்ட் பண்ணினால், தயங்காமல் எங்ககிட்ட வந்து பேசு முகி! ஈகோ பார்த்துட்டு வராமல் இருந்துடாத!" என்று அறிவுரை வழங்கினர் அவளது தோழிகள்.

"அப்படி சொன்னால் மட்டும், மனசுக் கஷ்டப்படுறா மாதிரி தான பேசுவீங்க!" என்று ஏளனமாக கேட்டாள் முக்தா.

"நாங்க அந்த அளவுக்குக் கேவலமானவங்க இல்லை. இப்போ நீ தான் எங்களைக் கஷ்டப்படுத்திட்டே. இனிமேல் நாம் மீட் பண்ண வேண்டாம்" என்று காயம்பட்டவர்கள் அங்கிருக்கவும், அவளிடம் நின்று பேசவும் பிடிக்காமல் வெளியேறினர்.

தன்னுடைய நான்கு தோழிகளும் பாதியிலேயே கிளம்பி விட்டதைக் கண்டு, தொய்ந்து போனாள் முக்தா.

அவளுக்குள் இருந்த இறுமாப்பு நால்வரையும் தடுத்து நிறுத்த விடவில்லை.

அமைதியாக வீட்டிற்குச் சென்று, தந்தைக்குத் தான் செல்பேசியில் அழைப்பு விடுத்தாள்.

"முகி" என்ற தந்தையின் விளிப்பைக் கேட்டதும், எங்கிருந்து தான் புத்துணர்வு வந்ததோ!

"அப்பா! ஆஃபீஸில் இருக்கீங்களா?" என்று வினவினாள் முக்தா.

"ஆமா டா. என்ன விஷயம்?"

"வொர்க் முடிஞ்சு எப்போ வீட்டுக்கு வருவீங்கப்பா?" என்றாள் மகள்.

"வர நைட் ஆகுமே. ஈவ்னிங் மூர்த்தியைப் பார்த்துப் பேசனும்" என்று கூறினார் நீலகண்டன்.

"ஓகே ப்பா" என்றவள், தந்தையிடம் எதுவும் சொல்லாமல், சாதாரணமாகப் பேசி விட்டு வைத்தாள் முக்தா.

தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு, சமையலறைக்குள் போய், அங்கிருந்த வேலையாட்களிடம்,

"எல்லாரும் வெளியே போங்க. நான் காஃபி போடனும்" என்று உத்தரவிட்டாள்.

இந்த வீட்டில் இதெல்லாம் பழக்கம் தான். முக்தா தன் மனதை நிலைப்படுத்திக் கொள்ளச் செய்யும் ஒரு சில வேலைகளில் இதுவும் ஒன்று.

அவளுக்குச் சமையல் நன்றாகவே வரும். மேற்கத்திய உணவுகள் மட்டுமில்லாமல், இந்திய உணவுகளும் அத்துப்படி.

காபியைப் பருகிக் கொண்டவள், மஹதனுக்குச் செல்பேசியில் அழைத்தாள்.ஆனால், வழக்கம் போல, அவன் அதை ஏற்றுப் பேசவில்லை.

முக்தாவின் தோழிகள் சரியான சமயத்தில் தான் அவளுக்கு அறிவுரை கூறியுள்ளனர். ஆனால் அதைப் பின்பற்றுவது அவளுடைய தனிப்பட்ட விருப்பம் அல்லவா! இப்போதே அவர்கள் கூறியதைச் செவிமடுத்து இருந்தால், எதிர்காலத்தில் படப் போகும் அவமானங்களில் இருந்து , முக்தா தன்னைக் காப்பாற்றிக் கொண்டிருக்கலாம்.

தாயின் வளர்ப்பு இல்லை தான்! தந்தையும் சுதந்திரத்தை அளவுக்கதிகமாக கொடுத்திருக்கிறார் தான். ஆனாலும், தனக்குரிய கட்டுப்பாடுகள் என சிலதை வகுத்துக் கொண்டுள்ளாள்.

'ஸ்டேட்டஸ்' - பணம் பிரதானமாக இருக்கும் பட்சத்தில், நமக்குத் தான் மற்றவர்கள் வளைந்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவளுக்குள் வேரூன்றி இருந்தது.

அதனால், மற்றவரிடம் பேசக் கூடாத ஒரு சிலவற்றைப் பேசிக் காயப்படுத்தி விடுவாள் முக்தா.

இந்தக் குணங்கள் நல்லது என ஒருநாளும் சொல்லவில்லை.
மாற்றிக் கொள்ளும் தருணம் கட்டாயம் வர வேண்டும். அப்படி வரும் போது, என்று சில ஞானோதயங்களும் முக்தாவிற்கு அவள் கேட்காமலேயே கிடைக்கப்படும்.

அன்றைய சமூக வலைதளங்களை ஆராய்ந்தவாறே பொழுதைக் கழித்தாள் முக்தா.

இந்தக் கதையின் நாயகன் கிஷான் அல்லவா! அவனுடைய அறிமுகத்தைப் பற்றிப் பார்ப்போம்.

கிஷானுடைய தந்தை காஞ்சியப்பன் மஹதனின் அப்பா திருமூர்த்தியைப் போல வசதி படைத்தவர் தான்.
ஆனாலும் , தொழிலில் அபார வளர்ச்சி அடைந்த போதும் , அதற்கேற்ப குணத்தை மாற்றிக் கொள்ளாமல் , முன்னர் இருந்த அதே நிலையிலேயே இன்றும் அவரது துறையில் வெற்றிகரமாக கோலோச்சிக் கொண்டிருக்கிறார்.

அவரது துணைவி சித்ரலேகாவும் கணவனின் தொழிலிலும் , மகனின் தொழிலிலும் பங்குதாரராக இருக்கிறார்.

"நீயும், நானும் பார்ட்னர்ஸ்ன்னு தான் பேரு. ஆனா, நான் மட்டும் தான், ரெகுலராக இந்த ஹோட்டலுக்கு வந்துட்டு இருக்கேன்!" என்று குறைபாட்டான் கிஷான்.

"அதனால் என்னடா? நானும் வரனும்னா சொல்லு! தினமும் வந்துடறேன்" என்று நண்பனிடம் கூறினான் மஹதன்.

"தினமும் வர வேண்டாம். எப்போதாவது வரலாமே டா? அப்படியே என்கூட பேசிட்டுப் போன மாதிரியும் இருக்குமே!"

"ம்ம். இது ஓகே. வாரத்துக்கு ஒரு தடவை வர்றேன் கிஷான். அதுக்கு மேல வர சொல்லாத. புரிஞ்சுக்கோ" என்க,

"சரி மஹத்! நீ வந்து ஹோட்டலைச் சரி பார்த்துட்டுத் போயிடு. எனக்கும் திருப்தியாக இருக்கும்"

தங்கும் விடுதி ஒன்றில் இருவரும் பங்குதாரர்கள் தான்.

அதில், கிஷான் மட்டும் நாள் தவறாமல், விடுதிக்கு வந்து, தனது முதலாளித்துவத்தைக் காட்டிக் கொள்வான். நேர்மையாகத் தான் ஒவ்வொன்றையும் அவன் நடத்துவதால், இன்னொரு உரிமையாளனான மஹதனுக்கு அதிக வேலையே இருக்காது. அதனால், விடுதியை எட்டிக் கூடப் பார்க்காமல் இருக்கிறான்.

அவன் அப்படியே இருந்து விடுவது முறையன்று, என அடிக்கடி வந்து மேற்பார்வையிட்டுச் செல்லுமாறு வலியுறுத்திக் கொண்டிருக்கிறான் கிஷான்.

"உங்கிட்ட இன்னொரு விஷயமும் பேசனும்டா!" எனவும்,

"சொல்லு மஹத்?" என்று அதைக் கேட்கத் தயாரானான் தோழன்.

"நீலகண்டன் சாரோட பொண்ணு முக்தாவை உனக்குத் தெரியும் தான?" என்று கேட்டான்.

"ம்ஹ்ம்! தெரியுமே! அவங்களைப் பத்தி நீயே சொல்லி இருக்கியே! அவரே எனக்கு இன்ட்ரோ பண்ணிருக்காரே!" என்றான் கிஷான்.

"அந்தப் பொண்ணுக்கு என் மேல் லவ் இன்ட்ரெஸ்ட்!" எனக் கூறவும்,

"உனக்கு ஓகேன்னா அக்சப்ட் பண்ணு" என்று இயல்பாக கூறினான்.

"இல்லையே டா. அங்கிளோட பொண்ணு, ஃப்ரண்ட்ஷிப் மெயின்டெய்ன் பண்றதுக்கு எனக்கு இஷ்டம் தான். காதல்ன்னு யோசிக்கலையே" என்று தன் எண்ணத்தைக் கூறி விட்டான் மஹதன்.

"அதை அவங்ககிட்ட சொல்லிட்டியா?"

"எப்பவோ சொல்லிட்டேன். மாறுவ, என் மேல் லவ் வரும்னு வெயிட் பண்றாங்க"

"ஓஹ்! நீயும் மாறிடும் போலவே?" எனக் கேட்கவும் மறக்கவில்லை கிஷான்.

"என்ன மாறனும்? அவங்க புரபோஸ் செய்ததை, நான் குறை சொல்லலை. எனக்கும் இஷ்டம் இல்லை. அப்பறமும் காத்திருக்கிற அளவுக்கு நான் அவ்ளோ பெரிய அழகன் கிடையாதே!"

"நீ அழகன்னுப் பார்த்து தான் அவங்க லவ் பண்ணாங்கன்னு உன்கிட்ட சொன்னாங்களா? சம்திங் உன்னோட கேரக்டர் பிடிச்சு இருக்கலாம். அதனால் லவ் வந்திருக்கலாம்!" என்று புரிய வைத்தான் கிஷான்.

"கண்டிப்பாக இருக்கும். நான் அதை மறுக்கலைடா. இப்போ டைரக்ட் ஆக சொன்ன பிறகும், எதிர்காலத்தில் நடக்கும்னு, காத்திருக்கிறது முட்டாள்தனம் தான?" என்று வினவினான் மஹதன்.

"ஆமாம். நீ நம்பிக்கை கொடுக்காமல், இப்படி வெளிப்படையாகச் சொன்னதே போதும். நீ அவங்களை ஏமாத்தலை. முக்தாவும் புரிஞ்சு, தன்னை மாத்திக்கட்டும்"

தங்கும் விடுதியில் செய்ய வேண்டிய எதிர்காலத் திட்டங்களைப் பற்றி விரிவாகப் பேசி விட்டுக் கிளம்பினர் இருவரும்.

- தொடரும்
 
Last edited:

Shalini shalu

Moderator
ஃப்ரண்ட்ஸ்! முக்தாவோட கேரக்டர் பாகம் 1 இல் இருக்கிற மௌனா மாதிரியான ஹீரோயின் கிடையாது. இந்தக் கதையில் வர்றது முக்தாவோட கடந்தகால குணாதிசயங்கள் தான்!

நன்றி 💞

🌸🌸🌸

சுற்றியிருந்த மற்றவர்களும் திருமூர்த்தியின் மேலிருந்த விசுவாசத்தில் அவர் கூறியதை நம்பி விட்டனர்.

அவரும் தன் கம்பெனியில் முக்கியப் பதவிகளில் வகிப்பவர்களை ஏமாற்றும் நோக்கத்தில் செயல்படவில்லை.

தரம் நன்றாக இருக்கும் பொருளைத் தான், தயாரிக்கும் யோசனையை முன் வைத்திருந்தார் திருமூர்த்தி.

அந்த மீட்டிங்கின் முதன்மைப் பேச்சே அதைப் பற்றியது தான்!

"எங்களுக்கும் சம்மதம் சார்!" என்று நீலகண்டனைச் சேர்த்து, அங்கிருந்த மற்ற உயர் பணியில் இருப்பவர்களும் ஒப்புக் கொண்டனர்.

மதிய உணவுக்கான வேளை வந்ததும், சாப்பாடு தன் இருப்பிடத்திற்கு வருவதற்கு முன்னாலேயே, தான் உணவுண்ணப் போவதைக் குறுஞ்செய்தியாக மகளுக்கு அனுப்பி வைத்து விட்டார் நீலகண்டன்.

"மூர்த்தி அங்கிள் கூட தான லன்ச்ன்னு சொன்னாரு" என்றபடி, யோசனையில் இருந்தவளுடைய செல்பேசியில் குறுஞ்செய்தி வந்தது.

மதிய உணவை எடுத்துக் கொண்டதாக தந்தை தான், அதை அனுப்பியிருந்தார். அந்த குறுஞ்செய்திக்குப் பதில் அனுப்பியவளுக்கு , வேறு என்னப் பொழுதுபோக்கு இருக்கிறது செய்வதற்கு? உறக்கத்தில் ஆழ்ந்து விட்டாள் முக்தா.

அதற்குப் பின்னர் தான், வெளி வேலைகள் முடிந்து, வீட்டிற்கு வந்து, மகளின் உறக்கத்தை உறுதி செய்து கொண்டு, தன்னறைக்குள் நுழைந்து கொண்டார் நீலகண்டன்.

தெளிவாகப் பேசியப் பிறகு ஏன் அலைப்புறுகிறாய்? முக்தா புரிந்து கொள்வாள் என்றெல்லாம் கூறிய இன்னும் கொஞ்ச நாளில் முக்தாவின் நிலைக்குத், தான் மாறப் போகிறோம் என்பது கிஷானுக்குத் தெரியவில்லை.

அவளது புறம் அல்லது அக அழகு அவனை ஈர்க்கப் போகிறது, அதற்காக, தான் வருடக்கணக்கில் காத்திருக்கப் போகிறோம் என்பதும் அவன் யோசித்துப் பார்க்காத ஒன்று.

இயல்பிலேயே கலகலப்பும், பொறுமை குணமும் பெற்றதால் தான் , இன்று வரை மஹதனுக்கு உற்றத் தோழனாக நிலைத்து இருக்கிறான் கிஷான்.

மடிக்கணினியின் விசையைத் தட்டிக் கொண்டவனுக்குள் திடீரென்று ஒரு நினைவு. அவன் வெகு விரைவில் முக்தாவை நேரில் சந்திப்பதாக இருந்தது அதன் சாராம்சம்.

"இப்படியெல்லாம் தோன்ற அளவுக்கு ரொம்ப அடிக்ட் ஆன மாதிரி இருக்கே!" என்று பெண்ணவளைப் பற்றிய‌ யோசனையைத் தள்ளி வைத்து விட்டான் கிஷான்.

அடுத்த வந்த நாட்களில், கிஷானுக்கும், மஹதனுக்கும் தங்கும் விடுதியில் செய்த மாற்றங்களைச் சரி பார்க்கவே நேரம் போதாமல் இருந்தது.

அனைத்தையும் முடித்துப் பெருமூச்சு விட்டுக் கொண்டார்கள் நண்பர்கள்.

அலுவலகத்தில் மஹதனின் அறையில் பேசிக் கொண்டிருந்த கிஷான்,

"இங்கேயும் சேஞ்சஸ் பண்ணனும் போலயே?" என்று நண்பனின் தங்கும் விடுதியையும் மாற்றி அமைக்க வேண்டும் என வலியுறுத்திக் கொண்டிருந்தான்.

"யெஸ் கிஷான்! அதுக்கு முன்னாடி இங்கிருக்கிற ஃப்ரண்ட் ஆஃபீஸ் ரிசப்ஷனிஸ்ட் வேலைக்குப் பொறுப்பாக ஒரு ஆளைத் தேர்ந்தெடுக்கனும்" என்றான் மஹதன்.

"இதுக்கு முன்னாடி வேலை பார்த்தவங்க?"

"அந்தப் பொண்ணு சரியாக வேலைப் பார்க்கிறது இல்லைன்னுக் கம்ப்ளைன்ட்ஸ். ஃப்ரஷரைத் தான் வேலைக்கு எடுக்கனும்" என்று பதிலளித்தான்.

"ஏன் அப்படி?"

"ஆமாம். இப்போ இருக்கிறவங்க அனுபவசாலி தான். ஆனால் வேலையில் கவனம் இல்ல. விருந்தாளிகள் கிட்ட இருந்து நிறைய புகார்கள் வருதுடா"

"சரி. நியூஸ் பேப்பரில் விளம்பரம் கொடுத்துடு. இல்லைன்னா எங்கிட்ட சொல்லு, நான் பாத்துக்கிறேன்" என்று கூறினான் கிஷான்.

"விளம்பரம் கொடுத்துப் பார்ப்போம்" என்று கூறிக் கொண்டிருக்கும் போது, அங்கிருந்த லேண்ட்லைன் ஒலித்தது.

"சார் ! உங்களைப் பார்க்க முக்தா மேடம் வந்திருக்காங்க" என்று அறிவித்தாள் முன் அலுவலக வரவேற்பு வேலையில் இருக்கும் பெண்.

"என்ன விஷயம்னு கேளுங்க?" என்றதும்,

அங்கே, அவன் சொன்னது போல முக்தாவிடம் கேள்வியைக் கேட்டாள் அப்பெண்.

"நான் அவரோட க்ளோஸ் ஃப்ரண்ட். பர்சனல் ஆகத் தான் பேசனும். உங்கிட்ட சொல்ல முடியாத விஷயம்னு சொல்லு" என்று கட்டளையைப் பிறப்பித்து விடவும்,

அதை அப்படியே அவனுக்குக் கடத்தினாள் வரவேற்பில் இருந்தப் பெண்.

"ஓகே. வர சொல்லு" என்று அழைப்பை வைத்து விட்டான்.

அவனுடைய முகத்தில் சலிப்புத் தெரியவும்,"யார் வர்றா மஹத்?" என்று கேட்டான் கிஷான்.

"முகி தான்" என்றான்.

"அவங்களா?" என இவனுடைய ஆச்சரியத்தைக் கண்டு, குழப்பத்துடன்,

"ஆமாம். அதில், உனக்கு ஏன் இவ்ளோ ஆச்சரியம்?" என்று கேட்டான்.

"இல்லையில்லை. சும்மா தான். நானும் அவங்களைப் பார்த்து ரொம்ப நாளாச்சே! அதான்" என்று வாய்க்கு வந்ததை உளறி விட்டு அவளின் வரவிற்காக வாயிலைப் பார்த்துக் கொண்டு இருந்தான் கிஷான்.

எதையும் நொடியில் கண்டுபிடித்து விடும் மஹதனுக்கு, தோழனின் இந்த மாற்றம் மட்டும் தெரியாமல் போகுமோ? அவனே வாய் திறக்கட்டும் என்று விட்டு விட்டான்.

அதற்குள், அலுவலக அறைக் கதவைத் தட்டி விட்டு, மெத்தனமாக வந்து நின்றவளை மேலிருந்து , கீழாக ஆராய்ந்தான் கிஷான்.

"ஹாய் மஹத்!" என்ற அவளது மிகுந்த மகிழ்ச்சி இவனுக்குள் நிறைவைக் கொடுத்தது.

இந்தக் காரணத்தினால் தான், முக்தா தன்னை ஈர்க்கிறாளோ? என்று தோன்றியது கிஷானுக்கு.

ஆனால், உணர்ச்சியற்ற முகத்துடன் அவளை வரவேற்றான் மஹதன்.

"என்ன முக்தா?"

அவன் கேட்டதும், கிஷான் அங்கு இருப்பதைப் பார்த்தவள்,

"உன்கிட்டப் பேசனும்" என்று தயக்கத்துடன் கூறினாள்.

"நான் வெளியே‌ இருக்கேன்" என்று நாகரீகமாக ஒதுங்கிச் சென்று விட்டான்.

அவன் வெளியேறியதும்,

"நானும் நீ மாறுவன்னு நினைச்சுட்டு இருக்கேன் மஹத்!"

"இதோ பாரு முகி. அதெல்லாம் நடக்காத காரியம்! நீ தான் மாறனும்" என்று திட்டவட்டமாக கூறினான்.

வெளியே காத்திருந்தவனின் மனநிலை தான் என்னவென்றே புரியாத ஒன்றாகிப் போனது.

அவளுடைய கெஞ்சலைப் பார்க்கத் தேவையிராது என்று தான் வந்து விட்டான் கிஷான்.

அந்த அளவிற்குத் தனக்கு முக்தாவின் மேல் காதலா? அவனது மூளையை யோசனைகள் சூழ்ந்து விட்டது.

"யோசிச்சு முடிவு பண்ணு மஹத்! உன் ஃப்ரண்ட் வேற வெளியே காத்திருப்பாரே.நானும் கிளம்பறேன்"

அவள் சென்றதே போதும் என நாற்காலியில் அமர்ந்து விட்டான் மஹதன்.

கதவைத் திறந்து கொண்டு வந்தவளை விழிகளை உருட்டிப் பார்த்து,

"ஹாய் முக்தா!" என்றான்.

அவனை ஏறிட்டுப் பார்த்தவளோ,"கிஷான் தான?" எனப் பேச்சுக் கொடுத்தாள்.

"யெஸ்!"

தன்னை ஞாபகம் வைத்திருக்கிறாள் என்ற நிறைவு அவனுக்கு.

"என்ன?"

வேண்டாவெறுப்பு மிகுந்த கேள்வி தான் வெளி வந்தது அவளிடமிருந்து.

"ஒரு விஷயமும் இல்லை. சும்மா ஹாய் சொன்னேன்" என்று குறும்புடன் கூறியவனிடம்,

"அப்படியா? பை!" என்று பதில் கூறி விட்டுப் புறப்பட்டாள் முக்தா.

குறுஞ்சிரிப்புடன் அறைக்குள் புகுந்தான் கிஷான்.

கடுகடுத்த முகத்துடன் அவனிடம்,
"அப்பப்போ இங்கேயும் வந்துடறா?" என்று குறைபாட்டான் மஹதன்.

அதைப் புன்னகையுடன் கேட்டுக் கொண்ட கிஷானுக்கு வேறு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. ஆனால், அவனது மனமோ முக்தாவை நினைத்து, நொடித்துப் போயிருந்தது.

தந்தைக்கு முன்னர் வீட்டிலிருக்கும் முக்தாவை, இன்றோ நீலகண்டன் தான் வரவேற்றார்.

"இவ்ளோ சீக்கிரம் வந்துட்டீங்களே அப்பா?" என்று ஆச்சரியமாக கேட்டாள் மகள்.

"ஆமாம் முகி.மஹதனைப் பார்த்துட்டு வந்துட்டியா?" என்று தான் ஆரம்பமானது அவர்களது பேச்சு வார்த்தை.

அதில், காயப்பட்ட மனதுடன்,"ம்ஹ்ம்… பார்த்துப் பேசிட்டு வந்துட்டேன் ப்பா" என்றாள் முக்தா.

"எப்பவும் போல தான?" எனக் கேட்டார் தந்தை.

"ஆமாம் ப்பா. அதுனால என்ன இப்போ? நீங்களும் மூர்த்தி அங்கிள் கிட்ட எனக்காகப் பேசுங்க"

"நான் உனக்காகப் பேசத் தயார் முகி. ஆனால் மஹதனும், அவனோட ஃபேமிலியும் சம்மதிக்கிற வரைக்கும் நீ ஒன்னுப் பண்ணனும்" என்று கூறினார் நீலகண்டன்.

"என்னப் பண்ணனும் ப்பா?" என வேகமாக கேட்டாள்.

" கொஞ்ச நாளைக்கு ஃப்ரண்ட்ஸோட ஜாலியாக டூர் போயிட்டு வா. அதுக்குள்ளே பேசிடறேன்" என்று உறுதியாக கூறினார் அவளுடைய தந்தை.

"டூரா? நீங்க தனியாக இருப்பீங்களே ப்பா?" என்று பதறினாள் முக்தா.

"உன்னை விட்டு எப்படி பிரிஞ்சி இருப்பேன்? அது தான் கஷ்டம். மத்தபடி, புதுப்புது ஐடியாஸ் கொட்டிக் கிடக்கிறதால், வேலையில் மூழ்கிட்டாப் போச்சு" என்று பரிவாகப் பேசினார் நீலகண்டன்.

"எனக்கும் அதே ஃபீல் இருக்குமே ப்பா! அப்பறம், என் ஃப்ரண்ட்ஸ் இப்போ என் மேல் கோபமாக இருக்காங்க!" என்று சோகமாக கூறிய மகளிடம்,

"அவங்க இல்லைன்னா வேற ஃப்ரண்ட்ஸ் இல்லையா? நம்பிக்கையாக இருக்கிற ஃப்ரண்ட்ஸோட போயிட்டு வா முகி" என ஆறுதல் கூறினார்.

"சரி அப்பா"

தோழிகளும் தன்னுடன் பேசுவதைக் குறைத்துக் கொண்டனர் என்பது முக்தாவின் மனதை வெகுவாக உலுக்கியது. இன்று மஹதனும் தன்னைச் சிறப்பாக கவனித்து விட்டான். இவ்விரண்டையும் தாங்கிக் கொண்டு, மறக்க பிரயத்தனங்கள் செய்ய வேண்டும் என்பதால், அது வெளிநாட்டுக்குச் சென்றால் தான் முடியும் என்று! தந்தை சொன்னதை ஒப்புக் கொண்டாள் முக்தா.

அதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, அவ்விடயம் மஹதன் காதுக்குப் போக, யதேச்சையாகப் பேசியதில் கிஷானுக்கும் தெரிந்து விட்டது.

- தொடரும்
 
Last edited:

Shalini shalu

Moderator
அத்தியாயம் 3

முக்தாவின் வெளிநாட்டுப் பயணத்தைப் பற்றி அறிந்து கொண்ட கிஷானுக்கு மனம் வலிமையை இழந்தது.

அப்போது தான், அவள் மேல், அவன் கொண்ட காதல் தெரிந்தது.

"டேய்! மஹத்" என நண்பனை அழைத்தான் கிஷான்.

"என்னடா?" என்று சாதாரணமாகப் பேசிய மஹதனிடம்,

கிஷான்,"முக்தா!" என்கவும்,

"அவளுக்கு என்ன?"

"ஃபாரீனுக்குப் போயிட்டாங்கன்னு உனக்குத் தெரியும் தானடா?" என்று விரக்தியுடன் கேட்டான் தோழன்.

"தெரியும். அப்பா சொன்னார். நீ ஃபீல் பண்ணுவன்னும் தெரியும்" என்று சேர்த்துச் சொன்னான்.

"மஹத்" குரலை உயர்த்தவும்,

"என்னை வேற என்ன சொல்ல சொல்ற கிஷான்?" என்று அவன் கோபத்திற்குக் கண்டனம் தெரிவித்தான்.

சினம் கொண்டு என்ன சாதிக்க முடியும் என்று அமைதியாகி விட்டான் கிஷான்.

ஆனால் , இதற்கு மாறாக ,
வெளிநாட்டில் ஆனந்தமாக தோழிகளுடன் சேர்ந்து பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தாள் முக்தா.

அவளுடைய பிரியமான தோழிகள் எல்லாரும், முக்தா அழைத்தும் வர முடியாது என்று சொல்லி விட்டனர்.

அதனால், தன்னுடன் பயின்ற ஒரு சில கல்லூரிக் கால சிநேகிதிகளுடன் கிளம்பி விட்டாள்.

செல்லும் இடமெல்லாம் எதாவது பொருளை வாங்கி அவர்களுக்குப் பரிசளித்து விடுவாள் முக்தா.

அதனாலேயே, எதிர்காலத்தில் இன்னுமின்னும் அவளுடன் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டு உள்ளனர் அந்த சிநேகிதிகள்.

"நாம தான் இன்ஸ்டாகிராமை அலற வச்சிட்டு இருக்கோம்!" என்று தொழிகளில் ஒருத்தி ஆர்ப்பரித்தாள்.

"அத்தனை ஃபோட்டோஸையும் அப்லோட் பண்ணிட்டியா ஸ்ருதி?" என்று கேட்டாள் முக்தா.

"யெஸ்! எடுக்க எடுக்க அப்லோடிங் தான்!"

அவர்களது மனநிலை எல்லாம், மற்றவர்கள் தங்களைப் பார்த்துப் பொறாமைக் கொள்ள வேண்டும் என்பது மட்டுமே!

அதையெல்லாம் தெரிந்து கொள்ளும் நிலையில் முக்தா இல்லை.

"ஃபரண்ட் ஆஃபீஸ் ரிசப்ஷனிஸ்ட் வேலைக்கு நான் சொல்ற, பிரபலமான நியூஸ் பேப்பர்களில் பேசி விளம்பரம் கொடுங்க. நம்மளோட ஆஃபிஷியல் (அதிகாரம் சார்ந்த) மெயிலை (மின்னஞ்சல்) சரியாக அனுப்புங்க. இன்டர்வியூவுக்கு (நேர்காணல்) வர்றவங்களை கரெக்டா வழி காட்டுங்க!" என்று தன்னுடைய விடுதியில் நடத்தப்படும் நேர்காணல்களை மேற்பார்வையிடும் குழுவிற்கு அறிவுறுத்தினான் மஹதன்.

அவன் தன் மகளைப் பற்றிய எந்த கவலையும் இல்லாமல் அலுவலகப் பணிகளைச் செவ்வனே நடத்திக் கொண்டார்கள் என்பது கண்டு நீலகண்டனுக்கு குறுகுறுப்பு உண்டாயிற்று.

மகள் அவனை விட்டு தூரம் சென்றும் கூட, கேட்டுத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இல்லை அவனுக்கு, எனும் நிதர்சனம் நீலகண்டனைத் தாக்கியது.

உடனே அவளை இங்கு வரவழைக்க முடிவு செய்தார்.

அதற்குள் முக்தாவே தந்தைக்குக் கால் செய்து நிலவரத்தைக் கேட்டாள்.

"அப்பா! மஹதனுக்கு என்னோட நினைப்பு இருக்கா? உங்ககிட்ட ஏதாவது விசாரிக்குறாரா?"

மகளிடம் பொய் சொல்லத் துணியவில்லை நீலகண்டன்.

"இல்லை முகி. அவனோட ஹோட்டலை டெவலப் பண்ணிட்டுத் தான் இருக்கானே தவிர, உன்னோட நினைப்புக் கொஞ்சமும் இல்லை!" என்று குறைபட்டார் தந்தை.

"என்னப்பா சொல்றீங்க?" என்று வருத்தத்துடன் கேட்டாள் மகள்.

அப்படியென்றால், அவன் தன்னை மதிக்கவே இல்லை என்பதை இன்னும் ஆழமாக உணர்ந்து கொண்டாள் முக்தா.

இன்னுமே விட்டு விட முடியாமல், முரண்டியதால், "நான் அங்கே கிளம்பி வர்றேன் அப்பா!" என்று கூறினாள்.

"வேணாம் டா. நீ என்ஜாய் பண்ணு" என்க,

"இங்கே நான் ஜாலியாக இருந்தால் அங்கே என் வாழ்க்கைப் போயிடும் அப்பா. நான் வர்றேன்" என்று உறுதியாக கூறிய மகளை வரவேற்கத் தயாராகி விட்டார் நீலகண்டன்.

முன் அலுவலக வரவேற்பாளர் பணிக்கான நேர்காணலுக்கு என்று விண்ணப்பங்கள் குவிந்த வண்ணம் இருந்தது.

அவற்றைப் பொறுப்பாகப் பார்த்து, தகுதியான ஒரு சிலருடைய விண்ணப்பங்களைத் தனியாக எடுத்து வைத்தார் மேனேஜர்.

அதில் , ஒரு பெண்ணுடைய விண்ணப்பப் படிவம் இவர்களது கவனத்தைக் கவர்ந்தது.அதை தனியாக எடுத்து வைத்தனர்.

"மகனே! இங்கே வாங்க" என்று கிஷானை அழைத்தார் அவனது தந்தை காஞ்சியப்பன்.

அவனுடைய கவலை படிந்த முகத்தைக் கண்டு வெகு நாட்கள் ஆயிற்று. இப்போது என்னப் பிரச்சினை என்று கேட்டு சரி செய்வதற்காக அழைத்தார் தந்தை.

"என்னப்பா?" என்று அருகே போனான் கிஷான்.

"லேகா!" என்று உள்ளே மேற்பார்வை செய்து கொண்டிருந்த மனைவியையும் கூப்பிட்டு விட்டு, மகனுடைய தோளில் கையைப் போட்டுக் கொண்டார் காஞ்சியப்பன்.

தந்தையின் செயலைப் பார்த்து புன்னகைத்தான் கிஷான்.

சித்ரலேகா அங்கே பிரவேசித்தவுடன்,
கணவன் மற்றும் புத்திரனை ஆராய்ந்து விட்டு அமர்ந்தார்.

"உன் மகனுக்கு ஏதோ மனக்கஷ்டம் இருக்கு போல?" என்றார் காஞ்சியப்பன்.

அவரது மனைவியுமே,"இருக்கு போலத் தான்ங்க! எதையும் நம்மகிட்ட மறைக்க மாட்டாரே?" என்று பிகு செய்தார்.

தாய் மற்றும் தந்தையின் உரையாடல்களைக் கேட்டவனோ,
"நேரடியாகவே என்ன விஷயம்னு கேட்டு இருக்கலாம் நீங்க?" என்றான் குறுஞ்சிரிப்புடன்.

"சரி. என்ன விஷயம் கிஷான்? ஏன் இப்படி இருக்கிற?" என்று கேட்டார் சித்ரலேகா.

"இப்படி ஃப்ரண்ட்லியா இருக்கீங்க, அதனால் உங்ககிட்ட நான் விஷயத்தைச் சொல்லத் தயங்கலை. சொன்னால் என்ன ரியாக்ட் பண்ணுவீங்கன்னு யோசிச்சா தயக்கமாக இருக்கே!"

"எங்ககிட்ட சொல்றதுக்கு நீ தயக்கம் காட்றியா?" என்று வியந்தார்கள் இருவரும்.

"விஷயம் அப்படி அப்பா!" என்றான் மகன்.

"அப்படி என்ன தான்னு சொல்லு கிஷான்!" அவசரப்படுத்தினார் காஞ்சியப்பன்.

"நீலகண்டன் சாரோட பொண்ணு முக்தாவை நான் லவ் பண்றேன்!" என்று இருவரையும் பார்த்துக் கூறியே விட்டான் அவர்களது புத்திரன்.

கேட்டதும் திகைப்பு ஏற,
"அவரோட பொண்ணையா?" என்று அதிர்ந்து போய்க் கேட்டார் சித்ரலேகா.

அவரது அதிர்ச்சிக்குக் காரணம், முக்தா திருமூர்த்தியின் மகனை விரும்புவது தான்!

"தெரிஞ்சு தான் லவ் பண்றியா?" என்று மகனிடம் கேட்கவும் மறக்கவில்லை காஞ்சியப்பன்.

"ஆமாம் ப்பா! மஹதனுக்கும் நான் முக்தாவை லவ் பண்ற விஷயம் தெரியும்" என்று விளக்கினான் கிஷான்.

"நீலகண்டன் சாருக்குத் தெரியுமா?"

"தெரியாது அம்மா" என்றான்.

"முக்தாகிட்ட சொல்லிட்டியா?"

"சொல்லிட்டேன் ப்பா. அவங்களுக்கு விருப்பமில்லை" என்று பொய்யுரைக்காமல் பேசினான் கிஷான்.

"எல்லாத்தையும் தெளிவாகச் சொல்றியே! அப்பறமும் ஏன்?" என்று கேட்டார் சித்ரலேகா.

ஒருவேளை அவள் மஹதனை மணந்து கொண்டால், தன் மகன் மனமுடைந்து போய் விடுவான் என்ன பயம் இருக்கும் அல்லவா அவருக்கு.

"தெரியலை அம்மா! எப்போதாவது அவங்களைப் பார்த்துப் பேசி இருக்கேன்.ஒரு வருஷமாச்சு.ஆனால், லவ் வந்தது இப்போ தான். மனசுக்குள்ள இருந்திருக்காங்க, அதை தெரிஞ்சுக்க நாளாகிடுச்சு" என்று கூறினான் கிஷான்.

"என்னென்னமோ சொல்றடா! முக்தாவுக்கே பிடிக்கலையே…" என்று தயங்கினார் காஞ்சியப்பன்.

"அவங்களுக்குப் பிடிக்கும் அப்பா!" என்று உறுதியாக கூறியவனிடம்,

"ஃபோர்ஸ் பண்ணப் போறியா?" என்று கேட்டார் சித்ரலேகா.

அதில் புன்னகைத்தவன்,"யாரு நானா ஃபோர்ஸ் பண்ணிக் காரியம் சாதிக்கப் போறேன்! நீங்க வேற ம்மா! வெயிட் பண்ணுவேன். அவ்ளோ தான்! ஃபோர்ஸ் பண்றதை விட காத்திருக்கிறது வேற லெவல் ஆக இருக்கும்!" என்று தத்துவம் பேசினான் கிஷான்.

"நாங்க என்ன பொல்லுவோம்னு எதிர்பார்க்கிற?" என்றார் காஞ்சியப்பன்.

"விட்டுடுன்னு சொல்லப் போறீங்களா?"

அதைக் கேட்டு ஹாஸ்யமாக சிரித்தவர்,"இல்லை. யாரையும் கஷ்டப்படுத்தாமல், உன்னோட லவ் சக்ஸஸ் ஆகட்டும்னு விஷ் பண்ணப் போறோம்!" என மனைவியைப் பார்த்தார்.

அவருக்கும் சஞ்சலம் இல்லாத சம்மதம் தான் என்பது முகத்தில் தெரியவும்,

"ஆல் தி பெஸ்ட்!" என்று மகனுக்கு வாழ்த்தும் தெரிவித்தனர் பெற்றோர்.

அவர்கள் இருவரையும் கட்டிக் கொண்டான் கிஷான்.

"ஆனால் முக்தா கடைசி வரைக்கும் மாறலை, மஹதனைக் கல்யாணம் பண்ணிக்கப் போறான்னுத் தெரிஞ்சா, நீ என்னப் பண்ணனும்னு உனக்குத் தெரியும் தான?" என்றார் சித்ரலேகா.

"விலகிடுவேன்! மறந்துடுவேன் அம்மா" என்று அவருக்கு உறுதி அளித்தான்.

"நாங்களா நீலகண்டன் சார் கிட்ட எதுவும் கலந்து பேச மாட்டோம் கிஷான். இது முழுக்க முழுக்க உன்னால் முடியனும். முக்தாவோட முழு விருப்பம் ரொம்ப அவசியம்!" என்று தெளிவாக அறிவுரை கூறினார் காஞ்சியப்பன்.

அதையும் ஒப்புக் கொண்டான் கிஷான்.

இந்த நிலையில், வெளிநாட்டில் இருந்து, தாயகம் திரும்பி விட்டாள் முக்தா.

- தொடரும்

இதில் வர்ற அந்த ஃப்ரண்ட் ஆஃபீஸ் ரிசப்ஷனிஸ்ட் யாராக இருக்கும் ஃப்ரண்ட்ஸ்? 😜
 

Shalini shalu

Moderator
அத்தியாயம் 4

விமான நிலையத்திலிருந்து தந்தைக்கு அழைத்து,

"அப்பா! நான் ஏர்போர்ட்டுக்கு வந்துட்டேன். என்னைப் பிக்கப் பண்ண வாங்க" என்று அவரை வரச் சொன்னாள் முக்தா.

"என்னம்மா முன்னாடியே சொல்லக் கூடாதா?" என்று மகளின் வரவை நினைத்து மகிழ்ந்து கொண்டே, அவளை அழைத்து வருவதற்காக விமான நிலையம் சென்றார் நீலகண்டன்.

தோழிகளும் உடனிருந்ததால் ,"எங்க அப்பா வர்றார்? உங்களைக் கூப்பிட யார் வர்றாங்க?" என்று அவர்களிடம் கேட்டாள் முக்தா.

"நீ தான் எங்களை வீட்டில் கொண்டு போய் விட ஏற்பாடு பண்ணனும்! உங்க அப்பா வர்றாருன்னு நைஸாக நழுவப் பாக்குற!" என்று சீறினர் அவளுடைய சிநேகிதிகள்.

அவர்களது சுயரூபத்தைப் பார்த்தவளுக்கு மனம் வதங்கிப் போய் விட்டது.

முந்தைய நாட்கள் வரை ஒன்றாக சேர்ந்து, சிரித்துப் பேசி, சுற்றிக் கொண்டு இருந்தவர்கள் இப்போது கறாராகப் பேசுவதைக் கேட்டு, திகைத்து,

"இவ்ளோ நாள் என்‌ கூட நல்லா தான பேசினீங்க? இப்போ பேச்சு அப்படியே மாறுது!" என்று எரிச்சல்பட்டாள் முக்தா.

"ஆங்! நீ தானே எங்களைக் கூட கூப்பிட்டுப் போன, எங்களைப் பத்திரமாக வீட்டில் விட்றதும் உன் பொறுப்பு தான?" என்று அவளை மடக்கினர்.

முக்தாவோ இவர்களை அழைத்துச் சென்றதே தவறு என்று தலையில் அடித்துக் கொண்டு,

"இருங்க!" எனத் தன் தந்தைக்கு மீண்டும் அழைத்து இன்னொரு மகிழுந்தை எடுத்து வருமாறு கூறினாள் முக்தா.

அவள் அப்படி சொன்னதும், உடனே முகத்தையும், பேச்சையும் சாமர்த்தியமாக மாற்றிக் கொண்டவர்கள்,

"அப்பறம் முகி, கார் வர்ற வரைக்கும் ஏதாவது பேசுவோம்" என்றனர்.

"உங்ககிட்ட வாயைக் கொடுக்கவே கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்!" என்று முணுமுணுத்தாள்.

"அச்சோ! காமெடி பண்ணாத முகி.நாம அடுத்த தடவையும் இந்த மாதிரி மாசத்துக்கு ஒரு‌ தடவை ட்ரிப் போகலாம்!" என அவளிடம் குழைந்துப் பேசினர்.

ஒரு தடவைக்கே நாக்குத் தள்ளி விட்டது. இவர்களை இனி தன்னுடன் வைத்துக் கொள்வது நல்லதல்ல என்று முடிவெடுத்து இருந்தாள் முக்தா.

அதற்குள் அங்கே வந்து சேர்ந்தார் நீலகண்டன்.

தந்தையைப் பார்த்ததும் அவரிடம் சென்று,"அப்பா!" என அவரது தோள்களைப் பற்றிக் கொண்டாள்.

"முகி ம்மா!" என்று தன் ஒரே மகளைப் பிரிந்திருந்த துயரைக் குறைக்க முயன்றார் நீலகண்டன்.

இவர்களுக்கு அருகிலிருந்த முக்தாவின் தோழிகள், அசிரத்தையாகத் தங்களது காதைக் குடைந்து கொண்டிருந்தனர்.

"ட்ரிப் எப்படி போச்சு ம்மா?" எனப் பொதுவாக அனைவரையும் பார்த்துக் கேட்டார்.

"செம்மையாகப் போச்சு சார்" எனப் பவ்யமாகப் பதில் கூறினர்.

"ஓகே ம்மா. உங்களுக்காக கார் வெளியே நிக்குது. வீட்டுக்குப் போங்க" என்று அந்தப் பெண்களை அனுப்பி வைத்தவர்,

அவர்களை வெறுப்பாகப் பார்த்துக் கொண்டிருந்த மகளிடம்,"ஏன் ம்மா இப்படி ஒரு வெறுப்பு அவங்க மேல? நல்லா தான ஃபோட்டோஸ் எல்லாம் எடுத்துப் போட்டு இருந்தீங்க?" என்று கேட்டார் நீலகண்டன்.

"ஆமாம் ப்பா. ஆனா அவங்களோட ரியல் ஃபேஸை இப்போ தான் பார்த்தேன்" என்று வாடிப் போனவள், சுற்றுலா சென்ற நாட்களைப் பற்றி தந்தையிடம் சொல்லி முடித்தாள் முக்தா.

"உன்னை ரொம்ப தொந்தரவு பண்ணிட்டாங்களா?" என்று ஆதூரமாக கேட்டார் நீலகண்டன்.

அவளது கரத்தைப் பிடித்து, விமான நிலையத்தின் வாயிற்புறம் நடத்திக் கூட்டி வந்தார்.

"பணத்துக்காக, அதை வச்சு செலவு செய்றதுக்காக, என் கூட வந்தவங்க தான அப்பா? அப்படித்தான் நடந்துக்கிட்டாங்க" என்று வருத்தப்பட்டாள் மகள்.

"எல்லாத்தையும் பார்த்துக்கலாம் முகி ம்மா" எனக் காரில் வீட்டை அடைந்தனர் தந்தையும், மகளும்.

"சார்! நம்ம ஃப்ரண்ட் ஆஃபீஸ் ரிசப்ஷனிஸ்ட் போஸ்ட்டுக்கு ஒரு பொண்ணோட ரெஸியூம் மேட்ச் ஆகுது" என்று கூறினார் விடுதியின் மேனேஜர்.

"அவங்க டீடெயில்ஸ்ஸைக் கொண்டு வாங்க" என்றான் மஹதன்.

சிறிது நேரம் கழித்து, கையில் ஒரு கோப்பை எடுத்து வந்து கொடுத்தான் மேனேஜர்.

அதிலிருந்த குறிப்புகளை வாசித்துப் பார்த்து விட்டு,"இவங்க ஓகே! இருந்தாலும் இன்டர்வியூ வச்சு செலக்ட் பண்ணுங்க. அதுக்கப்புறம், நான் இங்கே வரும் போது பேசிக்கிறேன்" என உத்தரவு அளித்தான்.

🌸🌸🌸

"மஹதனைப் பார்க்கனும் அப்பா!" என்று தான் வந்ததிலிருந்து தந்தையிடம் கூறிக் கொண்டிருந்தாள் முக்தா.

அவளிடம் எதுவும் சொல்லாமல் வெளியேறி விட்டார் நீலகண்டன்.

தாயகத்திற்குத் திரும்பி விட்டதை, புலனத்தில் ஸ்டேட்டஸ் ஆக வைத்திருந்தாள் முக்தா.

அதைப் பார்த்த மஹதனோ நண்பனுக்கு அழைப்பு விடுத்தான்.

"நண்பா! முக்தா இங்கே வந்தாச்சு!" என்று அறிவித்தான்.

"ஹூர்ரே! தாங்க்ஸ் டா மஹத்" என்று பேரானந்தம் கொண்டான் கிஷான்.

"பெஸ்ட் ஆஃப் லக்!" என்று வாழ்த்தி விட்டு, விடுதிக்குப் புதிதாக வேலைக்குச் சேர்க்கும் பெண்ணைப் பற்றிப் பேசி விட்டு வைத்தான்.

இங்கு கிஷானோ சந்தோஷ வானில் பறந்து கொண்டிருந்தான்.

ஆனால், முக்தாவோ இரண்டு நாட்களுக்குப் பிறகு, மஹதனைச் சந்திப்பதற்காக காத்துக் கொண்டிருந்தாள்.

முன் அலுவலக வரவேற்பாளர் பணிக்கு வந்திருந்த பெண்ணோ, நேர்முகத் தேர்வு நடைபெறும் அறைக்குள் நுழைந்தாள்.

"உங்கப் பேர்?" என்று கேட்டுக் கொண்டே அவளது கோப்பை வாங்கிக் கொண்டார் மேனேஜர்.

"மிஸ்.மௌனா! சார்" என்று நிதானமாக விடையளித்தாள்.

அதற்குப் பிறகான நேரங்களில் அவளிடம் பல கேள்விகளைக் கேட்டு, நன்முறையில் நேர்முகத்தேர்வை நடத்தி முடித்தவர்,

"உங்களை இந்த வேலைக்குச் செலக்ட் பண்றோம். ஆல் தி பெஸ்ட். மிஸ். மௌனா" என்று வாழ்த்தி,

அவளை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தியும் வைத்தார் மேனேஜர்.

அடுத்த நாளே வேலையில் சேர்ந்து விடுவதாக உறுதி அளிந்திருந்தாள் மௌனா.

ஆனால், அவளது முதல் நாளைய அனுபவம் மறக்கவே முடியாததாக இருக்கப் போகிறது முக்தாவின் வருகையால்.

நீலகண்டனுக்கு மகள் மஹதனைப் பார்க்கச் செல்வது உறுத்தியது தான்!

அவளுடைய ஆசையில் தலையிட வேண்டாம் என்றும் அதற்கான உதவியைச் செய்ய நினைத்து, ம‌ஹதன் மறுத்து விட்டாலும், திருமூர்த்தியின் மூலமாக விஷயத்தைச் சாதித்துக் கொள்ள நினைத்தார் நீலகண்டன்.

"மஹத்! நீ என்னைக் கண்டுக்கலைன்னா என்ன? நான் உன்னைப் பார்க்க வந்துட்டே இருப்பேன். இன்னைக்கும், இப்பவும் வரப் போறேன்!" என்று தனக்கு மிக மிகப் பொருத்தமான உடை ஒன்றை ஆசையாகத் தேர்வு செய்து அணிந்து கொண்டாள் முக்தா.

"இந்த தடவை நீ என்கிட்ட காரணம் சொல்லி ஒதுக்கவே முடியாது!" என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு தயாராகினாள் பெண்ணவள்.

- தொடரும்

வணக்கம் நண்பர்களே! இந்தப் பதிவுக்குப் பின்னர், நங்கையின் மறவோன் பாகம் 1 ஐ வாசித்து விட்டு, அடுத்த அத்தியாயத்தில் இருந்து கதையைத் தொடர்ந்து வாசியுங்கள்.


நன்றி 💞

நங்கையின் மறவோன் பாகம் 1 கதை திரி 👇

 

Shalini shalu

Moderator
லேட் அப்டேட்டுக்கு மன்னிச்சிருங்க ஃப்ரண்ட்ஸ். நான் காலேஜ் சேரப் போறேன். ஏற்கனவே, வருஷக்கணக்கில் லேட் ஆகிடுச்சு. அதனால் இப்போ முன்னாடியே அட்மிஷன் போடனும்னு அதுக்கு ரெடி பண்ணிட்டு இருந்தேன். ஆகஸ்ட்டில் தான் காலேஜ். அதுக்குள்ளே இரண்டு கதையும் முடிஞ்சிடும் 🙏

🌸🌸🌸

போர்வையை முகத்திற்கு ஏற்றி, வசதியாகப் படுத்துக் கொண்டாள் முக்தா.தன் தாயகத்தை விட்டு விட்டு, தூர தேசத்திற்கு வந்த போதும், எதையும் மறந்து விடவில்லை அவள்.தந்தைக்கு அடிக்கடி செல்பேசியில் அழைத்துப் பேசிக் கொள்வாள் முக்தா.தன்னுடைய நடை , உடை பாவனைகள் எவற்றையும் மாற்றிக் கொள்ளவில்லை, ஆனால், மாற்றப்பட வேண்டியவை எல்லாம் தானாகவே சரியாகி விட்டது அவளிடம்.காலை நேரத்து காபியை மட்டும் தனக்காகத் தயாரித்துக் கொண்டிருந்தவளோ, சமையலையும் தானே செய்து கொண்டாள் முக்தா.இந்தியாவில் இருக்கும் போது, எப்போதாவது சமைப்பவள், இங்கோ, தினமும் தன் கை வண்ணத்திலேயே உணவருந்த ஆரம்பித்து இருந்தாள்."ஹலோ ப்பா! குட்மார்னிங்" என்று உற்சாகம் பொங்கப் பேசினாள் மகள்."முகி! வேலையா இருக்கியாடா?" என்று வினவினார் நீலகண்டன்.அதிகாலையிலேயே அழைத்து விட்ட தந்தையிடம், உணவு சமைத்தபடியே அளவளாவிக் கொண்டிருந்தவள்,"குக்கிங் தான் நடக்குது அப்பா! ஒன்னும் இல்லை நீங்கப் பேசுங்க" என்று காய்களை நறுக்கியவாறு கூறினாள் முக்தா."என்னம்மா சமைக்கிற?" என்றதும்,"ஃப்ரைட் ரைஸ் ப்பா‌. நீங்க சாப்பிட்டீங்களா?" என்று கேட்டாள்."நான் சாப்பிட்டேன் ம்மா. இந்த வருஷம் ஊருக்கு வர்ற தான?"முன்பெல்லாம் தந்தை இப்படி கேட்டால், தயக்கம் கொள்வாள். ஆனால் இப்போதோ, அதையெல்லாம் துறந்து,"நான் டிக்கெட் புக் பண்ணிட்டு சொல்றேன் அப்பா. டேட் முன்னப் பின்னே ஆகும்ல? கம்பெனியிலும் லீவ் சொல்லனும்" என்றாள் முக்தா."சரி ம்மா. உடம்பை பாத்துக்கோ‌"இப்போதும் தன் தோழிகள் மற்றும் மஹதனிடம் கூட இயல்பாகப் பேசிக் கொண்டு இருக்கிறாள் முக்தா.இவனைப் போல ஒருவனைத் தனக்கானவனாகத் தேர்ந்தெடுத்ததில், தவறே இல்லை என்று எண்ணும் அளவிற்கு அவளது எண்ணங்களில் நிறைந்திருந்தான் கிஷான்.புலனத்தில் குறுஞ்செய்திகள் வரும் தான். ஆனால், எப்போதும் போல கண்ணியமானப் பேச்சுக்களுடன் முடித்துக் கொள்வான்.முகப்புப் படங்களை‌ மாற்றிக் கொண்டே இருப்பான். ஸ்டேட்டஸ் வைக்கும் பழக்கம் அவ்வளவாக இல்லை போலும். அரிதாக ஏதாவது பதிவு செய்வான் கிஷான்.இவள் தான் வெளிநாட்டில் எடுத்தப் புகைப்படங்களை வைத்திருந்தால், அவை தன்னை ஈர்க்கப்பட்டால் மட்டுமே அது சம்பந்தமாக கேட்பான்.பேச்சுக்கள் நீளாமல் இருந்தாலும், உணர்வுகள் பரிமாறிக் கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன அவர்களுக்குள்.அலுவலகத்தில் தனக்கான விடுப்பை எடுத்துக் கொண்டவள், ஊருக்குச் செல்வதற்கு முன்னர், தனக்காகவும், தன்னைச் சேர்ந்தவர்களுக்காகவும் பரிசுப் பொதிகளை வாங்கிக் குவித்தாள்.விமான நிலையத்திற்குச் சென்று, தந்தையையும், மற்றவர்களையும் பார்க்கும் ஆவலில், தனக்கான விமானத்திற்காக காத்திருந்தாள் முக்தா."நானும் ஏர்போர்ட்டுக்குப் போகலாம்னு இருக்கேன் மஹத்" என்றான் கிஷான்."ம்ம். போயேன் டா"விமான நிலையத்திற்கு வருவதாக அடுத்த கணமே, தன்னவளுக்குச் செய்தி அனுப்பி விட்டான்."வேண்டாம் கிஷான். அப்பாவும் வருவார்" என்று மெசேஜ் செய்திருந்தாள் முக்தா."அதனால் என்ன? அங்கேயே அவர்கிட்ட பேசிடறேன்" என்று கூறவும்,"வேற வினையே வேணாம். நான் அவர் கூட வீட்டுக்குப் போயிட்டு, அடுத்த நாள் உங்களைப் பார்க்க வர்றேன்" என்றிருந்தாள்."ஓகே" என்று பதில் அனுப்பினான் கிஷான்.அவளுக்கான விமானத்தைப் பற்றிய அறிவிப்பு வரவும், உடமைகளை எடுத்துக் கொண்டு, செக்கிங் செய்து விட்டு, அதில் ஏறினாள் முக்தா.இன்னும் சில மணி நேரங்களில் சொந்த மண்ணில் காலடி பதிக்கப் போகிறாள், காலம் மற்றும் மாற்றம் இவையெல்லாம் கொடுக்கப் போவதை ஆழ்ந்து அனுபவிக்க வேண்டிய கால கட்டத்தில் இருக்கிறாள்.நீலகண்டன் தன் மகளின் வரவை அனைவரிடமும் கூறியிருந்ததால், திருமூர்த்தியின் மூலமாக கௌசல்யாவிற்கும் செய்தி அறிவிக்கப்பட்டது."கடைசியாக வீட்டுக்குக் கூப்பிட்டு, சாப்பிட வச்சு அனுப்பினேன். பெண் குழந்தை இல்லாத குறையை நிவர்த்தி பண்ண வந்தவ முக்தா" என்றார் கௌசல்யா.அதற்காக மஹதனுக்கு உடன்பிறவாத தங்கை முறை என்றெல்லாம் அவர் நினைக்கவில்லை. அவனுக்குத் தோழியாகவே அவள் இருக்கட்டும் என்று எண்ணினார்."ராத்திரியில் தூக்கம் கூட வராதுடா" எனக் குதூகலித்தவரைப் புன்னகையுடன் ஏறிட்டு,"உன் பொண்ணு வர்றதால், ஆஃபீஸில் இருக்கிற ஸ்டாஃப்ஸூக்குக் கிஃப்ட்ஸ், சேலரின்னு ஜமாய்ச்சுட்ட போல!" என்று கூறினார் திருமூர்த்தி."ஆமாம் டா"‌ என்று உற்சாகமாக இருந்தவரைப் பார்த்து,"முக்தா வந்ததும், கிஷான் வீட்டுக்குப் போய் பேசிட்டு வந்துடு?" என்று வினவினார்."நான் மட்டும் போனால் நல்லா இருக்காதுடா.என் மனைவி தான் இல்லை. எனக்காகவும், பொண்ணுக்காகவும் நீயும், தங்கச்சியும் கூட வர்றீங்களா?" என்று தயங்கியவாறே கேட்டார் நீலகண்டன்."கௌசி கிட்டயும் கேட்டுட்டு சொல்றேன்"🌸🌸🌸"கல்யாணம் முடிஞ்சதும் வந்து வேலை பாருன்னு சொல்றதில் என்னத் தப்பிருக்கு மௌனா?" என்று காட்டமாக கேட்டான் மஹதன்.அவர்களிருவருக்கும் திருமணப் பேச்சு முடிந்த தருவாயில் இருந்தே, தொடர்ந்து அந்த தங்கும் விடுதியில் வேலை செய்து கொண்டிருந்தாள் அல்லவா? ஆனால் இப்போதும் வேலையைத் தொடர்வதை மஹதன் விரும்பவில்லை."நீங்களே நியாயத்தைச் சொல்லுங்க கிஷான்! நான் என்னோட சம்பளத்தை வீட்டுக்குக் குடுக்கனும்ல? அப்படின்னா, வேலையில் இருந்து தானே ஆகனும்?" என்று அவனைத் தனக்காகப் பேச அழைத்தாள் மௌனா."ப்ச்!" என்று சலித்துக் கொண்ட மஹதனிடம்,"நீங்க என்னை டீமோடிவேட் பண்றீங்க!" என வருத்தமாக கூறினாள்."சத்தியமா இல்லை ம்மா‌! நீ இந்த ஜாப்ல இருந்தாலும், வேற கம்பெனியில் வேலைக்கு அப்ளை பண்ணாலும், எனக்குப் பிராப்ளமே இல்லை. உன்னோட சுதந்திரத்தில் நான் தலையிடலை. கொஞ்ச நாளைக்கு இதெல்லாம் ஹோல்ட் பண்ணி வைக்கலாமேன்னு தான் கேட்டேன்" என்று புரிய வைக்க முயற்சி செய்தான்."அடேய்! என்னை உட்கார வச்சிட்டு நீங்க ஆர்கியூ பண்ணிட்டு இருக்கீங்க? என்னோட முகி டார்லிங் வேற வரப் போறா! அதுக்கு ஏதாவது முக்கியத்துவம் கொடுத்துப் பேசறீங்களா?" என்று நொடித்துக் கொண்டான் கிஷான்."ஆமால்ல! அண்ணா! முக்தா வந்ததும் என் கூட வர சொல்றீங்களா?""என் கூட வருவாளான்னே டவுட் தான் ம்மா!" என்றான்."ஓகே அண்ணா. நான் அவங்களை தாஜா பண்ணிக்கிறேன்" என்று குறும்புடன் கூறினாள் மௌனா."நீ டாபிக்கை மாத்தாதே! நான் சொன்னதைக் கேட்கிறியா?" என்று அதே விஷயத்திற்கு வந்து நின்றான் மஹதன்."யோசிக்கிறேன் மஹி" என்று பதிலளித்தாள்."என்னமோ போ!" என்று அவளது விருப்பத்திற்கே விட்டு விட்டான்."உங்க டாபிக் முடிஞ்சிதா? என் விஷயத்துக்கு வருவோமா?" என்று பரிதாபமாக கேட்டான் கிஷான்."சாரி டா. சொல்லு" என்றான் மஹதன்."முக்தா இன்னைக்கு நைட் வந்துடுவா. எப்படியும் ஜெட் லாக் சரி ஆகி, வர்றதுக்கு டைம் எடுத்துப்பா. நான் எப்படி அப்ரோச் பண்றதுன்னு தெரியல" என்று கேட்டான்."இப்போ வரப் போற முக்தா, உனக்குச் சொந்தமான ஒருத்தி, உன்னோட மனைவியாகப் போகிறவள் தான்! அப்படியிருக்க, நீ அவளை எந்தக் காரணம் கொண்டும் கடந்த காலத்தைப் பத்திப் பேசாமல் இருந்தாலே போதும்!" என அறிவுறுத்தினான் நண்பன்."ஆமாம் அண்ணா. அவங்க அதை தான் எதிர்பார்ப்பாங்க. என் கூட சகஜமாகப் பேசுறாங்க. இருந்தாலும் ஒரு ஒதுக்கம் இருக்கத் தானே செய்யும்" என்று முக்தாவின் பக்கம் இருந்து யோசித்துப் பேசினாள் மௌனா."நான் எதுக்கு அதைப் பண்ணப் போறேன்டா ம்மா! அவ எனக்கு ஓகே சொன்னதே போதும். என்னோட காதலி அப்பறம் மனைவி ஆகப் போறா. அது மட்டும் தான் எனக்கு நினைவில் இருக்கு" என்று உறுதியாக கூறினான் கிஷான்."அப்பறம் என்ன? ஏதாவது கிஃப்ட் வாங்கி வச்சுட்டீங்களா?" என்றாள் மௌனா."இல்லை ம்மா""ஏன் அண்ணா?""நாங்க முதல் டேட்டிங் போகிறப்போ வாங்கிக் கொடுத்துக்கலாம்னு தான்" என்று வெட்கத்துடன் கூறினான்."ஹூம்" என அருகில் இருப்பவளைப் பார்த்தான் மஹதன்."உங்களுக்கு என்னாச்சு?" என்று முறைப்புடன் கேட்டாள்."டேட்டிங்!" என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டான்."கொஞ்சம் கருணை காட்டு ம்மா" என்று நண்பனுக்கு ஏற்றுப் பேசினான்."கருணை தானே அண்ணா! காட்டிடலாம்!" என்று மஹதனுடன் வெளியேறினாள் மௌனா.அவர்களைச் சிரிப்புடன் அனுப்பி வைத்து விட்டு, முக்தாவின் வருகையினால் குதூகலம் அடைந்தான் கிஷான்.


- தொடரும்
 

Shalini shalu

Moderator
காலேஜில் அட்மிஷன் போட்டாச்சு ஃப்ரண்ட்ஸ்.அப்பறம், சொல்ல மறந்துட்டேன். இது என்னோட மூனாவது டிகிரி. விஷ் பண்ண எல்லாருக்கும் தாங்க்யூ ❤️🤩

🌸🌸🌸🌸

வெளிநாட்டு வாசம் இத்துடன் முடிவடைந்து விட்டதைப் போல, விமான நிலையத்தில் நின்று கொண்டு, உற்சாகமாகச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள் முக்தா.

தனது இரு கைகளை அகல விரித்துக் கொண்டு மகளை நோக்கி வந்தார் நீலகண்டன்.

"அப்பா" என்று புன்னகை தாங்கிய முகத்துடன் தந்தையை நோக்கி வந்தாள் மகள்.

மகளைப் பிரிந்திருந்த துயர் தாளாமல், இறுக்கிக் கொண்டார் நீலகண்டன்.

"முகி ம்மா!" என்று கண்ணீரைச் சுண்டி விட்டுக் கொண்டே கேட்டார்.

"அழாதீங்க அப்பா" என்று அவரை இருக்கை ஒன்றில் அமர்த்தினாள்.

"பயணம் சௌகரியமாக இருந்துச்சாடா?" என்று வினவினார் தந்தை.

"ம்ம். இருந்துச்சு அப்பா" என்றவள்,

அவ்விடத்தைக் கண்களால் கூர்மையாக அலசினாள் முக்தா.

அங்கே, கிஷான் வருகை தரவில்லை என்றதும் தான், அவளுக்குள் நிம்மதி படர்ந்தது.

வந்த முதல் நாளே தந்தையின் சங்கடத்தைப் பெற வேண்டாம் என்று தான் அவனை இங்கு வரக் கூடாது எனக் கூறித் தடுத்து விட்டாள் முக்தா.

"யாரைத் தேடுற முகி?" என்று கேட்டார் நீலகண்டன்.

"என் ஃப்ரண்ட்ஸ் வரேன்னு சொன்னாங்க அப்பா" எனக் கண்களால் அளைந்தாள் மகள்.

"யாரு? உன் கூட டிரிப் வந்தாங்களே, அவங்களையா?"

"அவங்க கூட நான் பேசுறது இல்லை ப்பா. என்னோட உண்மையான ஃப்ரண்ட்ஸ்" என்று அவள் கூறவும்,
தோழிகள் அங்கு வந்து விட்டனர்.

"முகி!!" என்ற பெருங்கூச்சலுடன் தன்னை நெருங்கியவர்களைப் பார்த்து, நெகிழ்ந்து போனாள் பெண்ணவள்.

லிஷா,ஜியா,ஹீமா,ஷீலா இந்நான்கு பேரும் அவளுக்காக வந்திருப்பதைக் கண்டு, முக்தாவின் தந்தையான நீலகண்டனுக்குப் பெருமகிழ்வு உண்டானது.

"கொஞ்சம் அமைதியாகப் பேசுங்க" என்று தோழிகளுக்கு அறிவுறுத்தினாள் முக்தா.

பொது இடத்தில் மற்றவர்களுக்குத் தொல்லைக் கொடுக்கக் கூடாது அல்லவா?

அவளது அப்பாவும் அங்கிருப்பதை உணர்ந்தவர்கள்,

"அப்பா" என்று நால்வரும் அவரது நலனை விசாரித்தனர்.

"உங்களையும் பார்த்ததும் தான், முகி முகம் பிரகாசமாகி இருக்கு" என்றார் நீலகண்டன்.

அதைக் கேட்டு உவகை கொண்டனர் தோழிகள்.

"வாங்க. நம்ம வீட்டிலேயே சாப்பாட்டை முடிச்சிடலாம்" என்று அவர்களைக் காரில் ஏற்றி, தங்கள் இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர் தந்தையும், மகளும்.

பயணத்தின் ஊடாகவே, கிஷானுக்குத் தகவல் தெரிவித்து விட்டாள் முக்தா.

அவனும் அதை மஹதனுக்கும், மௌனாவிற்கும் அறிவித்து விட்டான்.

வீட்டிற்குள் சென்றவர்கள், "முகி! ஜெட் லாக் ஆகி இருக்கும். நீ போய்த் தூங்கி எழுந்திரு.நாங்க கிளம்பறோம்" என்று லிஷா கூறினாள்.

"அப்படியெல்லாம் இல்லை. நான் ஃப்ரெஷ் ஆகிட்டு வர்றேன்.நீங்க என்கூட சாப்பிட்டுட்டுத் தான் போகனும்" எனக் குளியலறைக்குள் சென்றாள் முக்தா.

மகளது வருகையை அறிந்ததுமே, வீட்டில் பதார்த்தங்களைச் செய்து வைக்குமாறு பணியாளர்களுக்கு உத்தரவிட்டு இருந்தார் நீலகண்டன்.

அதை சிரமேற் கொண்டு செய்து முடித்து இருந்தனர்.

ஐவரும் பேசிக் கொண்டு இருக்க, முக்தாவும் டைனிங் ஹாலில் வந்து அமர்ந்தாள்.

"ஆஹ்ஹா!" என்று உணவைப் பார்வையாலேயே ரசித்தாள்.

"உன்னோட வேலையைப் பத்திக் கொஞ்சம் சொல்லேன்" என்று அவளது அலுவலைப் பற்றிய உரையாடலுடன் உணவுண்டு முடித்திருந்தனர்.

"நீங்க பேசிட்டு இருங்க‌" என்று நாகரீகமாக ஒதுங்கிக் கொண்டார் நீலகண்டன்.

அவர் சென்ற மறுநிமிடம், தோழிகளைத் தன் அறைக்கு அழைத்துச் சென்றாள் முக்தா.

"கிஷான் ஏர்போர்ட்டுக்கு வரலையா?" என்று கண்ணடித்துக் கேட்டாள் ஷீலா.

"வர வேண்டாம்னு சொல்லிட்டேன்" என்றாள்.

"ஏன்? நினைச்சுப் பாரு! அவரும், அப்பாவும் ஒரே நேரத்தில் வந்து உனக்குச் சர்ப்ரைஸ் கொடுத்து இருந்தால், சூப்பராக இருந்திருக்கும்ல?" என்று கிண்டலடித்தாள் ஜியா.

"இந்நேரம் அப்பாவுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கும். அதை என்கிட்ட அவர் காட்டிக்கலை" என்று கூறினாள் முக்தா.

"இப்போ கிஷானுக்கு இன்ஃபார்ம் பண்ணிட்டியா?" என்று கேட்டாள் ஹீமா.

"காரில் டிராவல் பண்ணிட்டு வரும் போதே மெசேஜில் சொல்லிட்டேன்" எனப் பதிலளித்தாள்.

அதற்குப் பிறகுப் பேச்சை மாற்றி விட்டாள் முக்தா.

தாங்கள் வீட்டிற்குக் கிளம்புவதாக நீலகண்டனுக்குத் தகவல் தெரிவித்து விட்டுச் சென்றனர் முக்தாவின் தோழிகள்.

கண்ணயரும் நொடிதனில், கிஷானிடம் இருந்து குறுஞ்செய்தி வந்தது.

"டேட்டிங்? என்னால் காத்திருக்க முடியலை முகி!" என்று அனுப்பியிருந்தவனை எண்ணுகையில் உவகை கொண்டாள் முக்தா.

உள்ளூரிலேயே இருந்து கொண்டு, பார்க்காமல் இருப்பது எத்தனை தவிப்பைக் கொடுக்கும் என்பதை அவளும் அறிந்திருப்பாள் தானே?

அதனால்,"தூங்கப் போறேன் கிஷான். நாளைக்குப் பார்க்கலாம்!" என்று பதில் அனுப்பவும், முக்தாவை உறங்கச் சொல்லி விட்டான்.

மறுநாளைய வேலைகள் அனைத்தையும் விடாப்பிடியாக நண்பனிடம் இருந்து வாங்கிக் கொண்டான் மஹதன்.

அன்று முழுவதும் முக்தாவுடன் அவன் பேசுவதற்காக ஒதுக்கப்பட்டு விட்டது.

அதனால் , நேரம் கடத்தாமல் நேசப் பெண்ணைச் சந்திக்க விரைந்து சென்றான் உணவகத்திற்கு.

அவள் வருவதற்கு முன்பாகவே, உணவகத்திற்குச் சென்று இருந்தான் கிஷான்.

உள்ளூர ஒரு சிலிர்ப்புத் தோன்றி மறைந்தது.

"ஹாய்" எனப் பளிச்சென்று, இதழ்ப் பிரித்துப் புன்னகைத்தாள் முக்தா.

காது குளிரத் தன்னவளது குரலைக் கேட்ட நொடியில், அவளை மென்நகையுடன் ஏறிட்டவன்,

"உட்கார் முக்தா" என்று தனக்கு எதிரே இருந்த ஆசனத்தில் அவளை அமரச் சொன்னான் கிஷான்.

இப்போதும் , மாடர்ன் டிரஸ் அவளை நேர்த்தியாகத் தழுவி இருக்க, உதடுகளில் கூட அதே நிற உதட்டுச் சாயம் என அப்போதிருந்த முக்தாவே இப்போதும் அவனுக்குத் தரிசனம் கொடுத்துக் கொண்டு இருக்கிறாள்.

"கிஷான்! ஏதாவது ஆர்டர் பண்ணுங்க ப்ளீஸ்!" என்கவும்,

அவள் பசியோடு இருக்கிறாள் என, துரிதமாக உணவு வகைகளைக் கொண்டு வருமாறு வெயிட்டரிடம் சொல்லி அனுப்பி விட்டான்.

"நெக்ஸ்ட் எப்போ ஃபாரீனுக்குப் போகப் போற முகி?" என்ற கேள்வியைப் பகிரவும்,

"போகனும்னு தோனலை!" என்று உடனே பதில் வந்தது அவளிடமிருந்து.

இதயத்தை அடைத்த ஏதோ ஒன்று விடுபட்டுச் சென்றதைப் போன்றதொரு பாரம் நீங்கிய உணர்வு அவனுக்கு.

எனினும்,"ஏன்? அங்கே உனக்கு வேலை இருக்குல்ல?" எனக் கேட்டான் கிஷான்.

"இருக்கு தான். அதை விட்டுட்டு இங்கேயே வரலாம்ன்ற ஐடியா" என்றதுமே,

"சூப்பர்!!" என உற்சாகம் அடைந்தவன்,

"உங்க ஆஃபீஸில் எனக்கு வேலை வேணும்" என்று திடுமெனக் கேட்டவளைக் கண்களைச் சுருக்கிப் பார்த்தான் கிஷான்.

"என்ன?"

"நத்திங் முகி‌. உன்னோட ரெஸியூம் அனுப்பு. நான் பார்த்துட்டு சொல்றேன்" என்று ஏமாற்றத்துடன் உரைத்தான்.

"எனக்கும் , உங்களுக்கும் கல்யாணம் முடிஞ்ச பிறகு தான் வேலைக்கு வரப் போறேன். சோ , அப்போ அனுப்பினால் போதும் தான?" என்று வெட்கப் புன்னகையில் நெளிந்தாள் முக்தா.

"டபுள் ஓகே முகி!" என்று உற்சாக மிகுதியில் கூச்சல் போட்டான்.

ஏக்கங்கள் சுமந்து, இரவு தூக்கம் இழந்து கிடந்த கிஷானுக்கு, இப்போது தான் உயிர்ப்பு வந்தது, அவளது வார்த்தைகள் கொடுத்தப் புத்துணர்வால்.

"அப்பாகிட்ட பேசிடுங்க" என்று அவனுக்கு ஞாபகப்படுத்தினாள் முக்தா.

அதற்கான நல்ல நாளும் பார்க்கப்பட்டது.

தந்தையிடம் தன்னுடைய காதலைப் பற்றி எதையும் சொல்லவில்லை நீலகண்டனின் புத்திரி.

புதியதோர் செய்தியாக, கிஷானின் வாயிலாக, இவர்களது காதல் அவருக்குத் தெரியட்டும் என்று எண்ணினாள் முக்தா.

ஆனால் , தன் வருங்கால மருமகனின் மொத்த ஜாதகமும் இவரிடத்தில் எப்போதோ வந்து சேர்ந்திருந்ததே! அதனால், அவனுடைய எதிர்ப்புறத்தில் அநாயாசமாக அமர்ந்திருந்தார் நீலகண்டன்.

- தொடரும்

 

Shalini shalu

Moderator
7. எனக்குள் வந்து வீழ்ந்தவளே!

"சோ, நீங்க என்னைப் பத்தி முன்னாடியே விசாரிச்சு இருக்கீங்க" என்றவாறே நிமிர்ந்து அமர்ந்தான் கிஷான்.

அசட்டையாகப் புன்னகை சிந்திய நீலகண்டன்,"வருங்கால மாப்பிள்ளையைப் பத்திக் கண்டிப்பாக விசாரிச்சு தானே ஆகனும் ப்பா!" என்றார்.

அவர் பொருட்டில் இது நியாயமான செயல் தான். கிஷானுக்குமே வருத்தம் இல்லை. யாராக இருந்தாலும் , தன் பெண்ணின் வாழ்க்கை என்று வரும் போது இதைத் தான் செய்வார்கள் என்ற புரிதல் அவனிடம் இருந்தது.

அதனால் கோபம் கொள்ளாமல்,"குட்.. அங்கிள்!" என்றான் கிஷான்.

"அதனால் உனக்கு எதுவும் மனக்குறை இல்லையே?" என்று வினவினார் நீலகண்டன்.

"இல்லை அங்கிள். நீங்க செய்தது சரி தான்" என்று அவன் கூறவும் தான், அவருக்கும் குறுகுறுப்பு நீங்கியது.

"என் பொண்ணோட கடந்த காலம் எல்லாமே உனக்குத் தெரியுமா ப்பா?" என்று முக்கியமான விஷயத்திற்குப் பேச்சை எடுத்துச் சென்றார்.

முகத்தில் தோன்றிய புன்னகையை மாற்றாமல்,"நல்லா தெரியும் அங்கிள்" என்று நெஞ்சுறுதியுடன் பதிலளித்தவனையும் அவருக்குப் பிடிக்காமல் போகுமோ?

மெச்சுதல் கூடிய பார்வையுடன் தொடர்ந்தவர்,"என்னைக்கும் இதை மாத்திக்க மாட்டியே? முக்தாவை எந்த சூழ்நிலையிலும் புரிஞ்சு வச்சுப்ப தானே?" என்று முன்பிருந்த உறுதியை விடுத்துப் , பரிதவிப்புடன் கேட்டார் அந்த தந்தை.

அவரது அருகில் சென்றான் கிஷான்.

நீலகண்டன் எழுந்து நின்று கொள்ளவும், வருங்கால மாமனாரின் இரு கரங்களைப் பற்றிக் கொண்டு,
"என்ன மாமா இப்படி கேட்கிறீங்க? நான் பாவம் பார்த்து காதலிக்கிறேன், கல்யாணம் பண்ணிக்கிறேன்னு எல்லாம் சொல்ல மாட்டேன். அப்படி சொல்றதும் ரொம்பவே தப்பு. அவளுக்காக அவளை லவ் பண்றேன். உங்க மகளை நல்லா பாத்துப்பேன்!" என்று கணீரென்றக் குரலில் கூறினான் கிஷான்.

வயதில் சிறியவனாகினும் தன் மனதைப் புரிந்தவன் போல, ஆறுதல் கூறியவனிடம்,"உங்க அப்பா , அம்மா…!" என்று தயங்கினார் நீலகண்டன்.

"அவங்களுக்கும் ஓகே தான் மாமா" என உரிமையோடு முறை வைத்துப் பேசினான் கிஷான்.

"மஹதனோட அப்பா , அம்மா கூட நானும், பொண்ணும் உங்க வீட்டுக்கு வர்றோம் கிஷான், அதுக்கப்புறம் பொண்ணுப் பார்க்க முறையாக வீட்டுக்கு வாங்க" என்று மகளுடைய வருங்கால கணவனிடம் தெரிவித்தார் நீலகண்டன்.

தங்களது மணத்திற்குச் சம்மதித்தவரிடம்,"ரொம்ப தாங்க்ஸ் மாமா!" என அவரை வணங்கினான்.

முக்தா தன்னுடைய அலுவலகத்தில் வேலைக் கேட்டிருப்பதைப் பற்றியும் அவரிடம் கூறினான் கிஷான்.

"உங்க ஆஃபீஸில் தானே மாப்பிள்ளை.சேஃப் ஆக இருப்பா" என்று அதற்கும் ஒப்புதல் அளித்தார் நீலகண்டன்.

அவருக்கு மறுபடியும் நன்றி சொல்லி விட்டு சென்றான் கிஷான்.

வீட்டிற்குப் போன நீலகண்டனோ , முதல் வேளையாக மகளிடம் அனைத்தையும் ஒப்புவித்தார்.

"தாங்க்ஸ் அப்பா!" என்று உருகிப் போனவள் அவர் அகன்றதும்,

விரைந்து போய் அன்னையின் படத்திற்கு முன்னால் நின்று கொண்டாள் முக்தா.

"எப்பவும் உங்களோட ஆசீர்வாதம் தான் அம்மா எனக்கு உறுதுணையாக இருக்கு!" என்று மனதிற்குள் தாயுடன் உரையாடினாள்.

புகைப்படத்தில் இருந்த அவளது அன்னை தேன்மொழியின் சாந்தம் தவழும் புன்னகையில் இருந்தது, தன்னை அவர் ஆசீர்வதிப்பதைப் போல உணர்ந்தாள் முக்தா.

தன்னை ஆறுதல்படுத்திக் கொண்டு, மௌனாவிற்கு அழைத்தாள்.

"ஹாய் முகி!!"

"மௌனா! எப்படி இருக்கே?" என்று ஒருவரையொருவர் விசாரித்துக் கொண்டவர்கள், நடந்ததையெல்லாம் விவரமாகப் பேசி,

"அப்போ என் கூட ஷாப்பிங் வரனும் நீங்க?" என்று அவளிடம் ஏக்கமாக வினவினாள்.

"வர்றேன் ம்மா" என்றாள் முக்தா.

இவர்களுடன் அகதாவும் இணைந்து கொள்ளப் போகிறாள்.

மௌனாவுடன் தான் இன்னமும் தங்கி இருப்பவள், தன் வேலையில் முழு கவனத்தைச் செலுத்தி மென்மேலும் வளர்ந்து கொண்டிருக்கிறாள் அகதா.

இன்னும் தீபக் அவளுக்குத் தொல்லைக் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறான். அதை ஒதுக்கித் தள்ளி விட்டுக் கொண்டிருக்கிறாள் அகதா. அவன் மற்றும் அவனுடைய தாயாருக்கும் விரைவில் முடிவு கட்ட எண்ணி இருக்கிறான் மஹதன்.

"உன் கார்ட் , என்னோடது ரெண்டையும் எடுத்தாச்சு" என்று கைப்பையை மாட்டிக் கொண்டவர்கள், வீட்டைப் பூட்டி விட்டு, முக்தாவின் மகிழுந்திற்காக காத்திருக்கலானார்கள்.

சரேலென்று அவர்களின் அருகே வந்து நின்ற மகிழுந்தின் இடப்பக்கக் கண்ணாடி இறக்கப்பட்டது.

"ஹாய்! ஹாய்!" என்று கூக்குரல் இடவும்,

"வந்துட்டோம் முகி" எனக் காரினுள் ஏறினர் மௌனாவும், அகதாவும்.

பிரத்தியேகமான வடிவமைப்புகள் கொண்ட உடைகள் மற்றும் மற்ற அனைத்தையும் வாங்கி வைத்துக் கொண்டவர்கள், மதிய உணவையும் அங்கு வரவழைத்துச் சாப்பிட்டனர்.

மாலை அவர்களை வீட்டில் விட்டு விட்டுச் சென்றாள் முக்தா.

தன் மனைவியிடம் நண்பன் கேட்டுக் கொண்ட விண்ணப்பத்தைச் சொன்னார் திருமூர்த்தி.

"போகலாம் ங்க" என்றார் கௌசல்யா.

கிஷானைப் பார்க்கவென்று அவர்கள் வீட்டிற்குச் செல்ல ஆர்வமாக இருந்தாள் முக்தா.

"நீலகண்டா! முக்தாவைக் சேலை கட்டிட்டு வர சொன்னியா என்ன?" என்று கேட்டார் அவருடைய தோழன்.

"இல்லை மூர்த்தி. ஏன்?"

"அவங்க அம்மாவோட சேலையைக் கட்டிக்கிட்டு வரலாமான்னுக் கேட்கிறா உன் பொண்ணு!" என்றார்.

"அந்த சேலையெல்லாம் அயர்ன் பண்ணும் போதே நினைச்சேன். தங்கச்சி என்ன சொன்னாங்க?" என்று வினவினார் நீலகண்டன்.

"கௌசியே சேலையைக் கட்டி விட்றேன்னு சொல்லியாச்சு. அங்கே கிளம்பி வந்துடவா நாங்க?" என்று கேட்டார் திருமூர்த்தி.

"வேண்டாம் டா. நானும் , முகியும் உங்க வீட்டுக்கு வர்றோம்" என்று முடிவாகச் சொன்னார்.

தாயின் பாரம்பரிய புடவைகளில் இருந்து தனக்குப் பொருத்தமான நிறத்தில் இருந்த ஒன்றைத் தேர்ந்தெடுத்து , அதை எடுத்துக் கொண்டு மஹதனின் வீட்டிற்குத் தந்தையுடன் சென்றாள் முக்தா.

"மாப்பிளாளைத் தோழனாக நீ கூட இருடா!" என்று அன்றைய நிகழ்விற்கு மஹதனைத் தனக்குத் துணையாக இருக்கச் சொன்னான் கிஷான்.

"கல்யாணத்துக்குத் தான் துணை மாப்பிள்ளை வேணும்டா!" என்று கிண்டலடித்தவன், முடிந்தளவு வேலைகளை முடித்துக் கொண்டு வருவதாக உத்தரவாதம் அளித்தான் மஹதன்.

முதலில் நடக்கவிருக்கும் திருமணம் மௌனா மற்றும் மஹதனுடையது என்பதால், தன் மகளைக் கவனித்துக் கொள்வதற்காக சிவமணியும், அன்னபூரணியும் சொந்த ஊரிலிருந்து வந்து கொண்டிருப்பதால், அவர்களை அழைத்து வர மௌனாவும், அகதாவும் சென்றிருந்தனர். அதனால் அவர்களாலும் கிஷானுடைய இல்லத்திற்கு வர முடியவில்லை.

மகள்களுக்காக விதவிதமாக உணவு சமைத்து இரு கைகளிலும் அடங்காத பைகளுடன் பேருந்தில் இருந்து இறங்கினர் மௌனாவின் பெற்றோர்.

"அங்கே பாரு அகி!" என்று அவர்களிடம் போயினர் தோழிகள்.

"மௌனா! அகதா!" என்று பெண்களைக் கரிசனத்துடன் நோக்கினர் சிவமணி மற்றும் அன்னபூரணி.

"இப்படி பிடிச்சிக்கிட்டா உனக்குத் தொந்தரவாக இருக்காது" என்று சேலையைக் கையாளும் முறையையும் முக்தாவிற்குக் கூறி முடித்திருந்தார் கௌசல்யா.

- தொடரும்

அடுத்த பதிவு ஞாயிறன்று பதிவிடப்படும் நண்பர்களே!
 

Shalini shalu

Moderator
பெற்றோருடன் வீட்டிற்குள் நுழைந்தனர்.

அவர்களுக்கு ஜூஸ் எடுத்து வந்து கொடுத்தாள் மௌனா.

" அப்பா, அம்மா! சாப்பாடு ரெடி பண்ணிடறோம்" என்று

"மாப்பிள்ளை கிட்ட சொல்லிட்டியா மௌனா?" என்றார் சிவமணி.

"சொல்லனும் அப்பா. அவர் வொர்க்ல இருப்பார். கிஷான் வீட்டுக்கு வேற போகனும்னு சொல்லிட்டு இருந்தார்" என்று கூறினாள் மகள்.

"ஆமாம். எப்போ கல்யாணமாம்?" என்று விசாரிக்க ஆரம்பித்தார் அன்னபூரணி.

அவர்களுடன் இணைந்து பேசியபடி உணவைத் தயாரித்தனர் தோழிகள் இருவரும்.

புடவை உடுத்தி ஆயத்தமாகி இருந்தாள் முக்தா.

திருமூர்த்தியையும், கௌசல்யாவையும் தங்கள் காரில் வர, நீலகண்டனும், முக்தாவும் அவர்களது காரில் பயணம் ஆனார்கள்.

அவர்களுக்கானச் சிற்றுண்டியுடன் காத்திருந்தனர் கிஷான் குடும்பத்தினர்.

மகிழுந்தின் சத்தம் கேட்டு வந்தவர்களை அடையாளம் தெரிந்து கொண்டு, அவர்களது கார் உள்ளே நுழைவதற்காக, இரும்புக் கதவைத் திறந்து விட்டு, காவல் நாய்களையும் அதட்டி, அடக்கி விட்டு, வழி விட்டு நின்றான் வாயிற்காவலன்.

காரிலிருந்து இறங்கிய நால்வரையும், வரவேற்றனர் கிஷானின் பெற்றோர்.

"முகி!" என்று மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியவன், அவளது புடவை உடுத்திய அழகிய தோற்றத்தை விழிகளால் பருகினான் கிஷான்.

நீலகண்டனைப் பார்த்து,"வாங்க மாமா!" என்று வரவேற்று,

"அப்பா,அம்மா!" எனத் தன் நண்பன் மஹதனின் பெற்றோரையும் வரவேற்று அழைத்துப் போனான்.

காஞ்சியப்பனும், சித்ரலேகாவும்,"ரெண்டு பெஸ்ட் ஃப்ரண்ட்ஸூம் குடும்பத்தோட வந்திருக்கீங்க! முறையாக ரிசீவ் பண்ணனுமே!" என்று திருமூர்த்தியையும், நீலகண்டனையும் பார்த்துச் சொன்னார் காஞ்சியப்பன்.

"இப்போ மூனு பேராக மாறிட்டா போச்சு சம்பந்தி!" என்றார் நீலகண்டன்.

"வாங்க! வா ம்மா!" என்று அவர்களை சோஃபாவில் உட்காரச் சொன்னவர்,

முக்தாவைத் தன் கை வளைவில் வைத்துக் கொண்டார் சித்ரலேகா.

அந்த அன்பான செயலில் அடங்கிப் போய் விட்டாள் அவரது கரங்களுக்குள்.

அதைக் கண்ட நீலகண்டனுக்குள் இருந்த அங்கலாய்ப்பு மறைந்து விட்டது.

சிற்றுண்டி பரிமாறப்பட்டதும், "மஹதன் வரலையா?" என்றார் காஞ்சியப்பன்.

கௌசல்யா, "வர்றேன்னு தான் சொன்னான் அண்ணா" என்று கிஷானைப் பார்த்தார்.

அவனோ, "வர்றதுக்கு டைம் இருக்காதுன்னு நினைக்கிறேன்" என மறுப்பாக கூறினான்.

"காணக் கிடைக்க மாட்டேங்குறான் ங்க.அந்தப் பொண்ணு மௌனாவோட அப்பா,அம்மா ஊரில் இருந்து வந்துட்டாங்க.
அவங்களையும் பார்க்கவும் போகனும்!" என்று பொரிந்தார் திருமூர்த்தி.

"அச்சோ! நீங்க கிளம்புங்க மூர்த்தி. சம்பந்திங்களைப் பாருங்க" என்று நண்பனுக்கு உரைத்தார் நீலகண்டன்.

"அப்போவே மௌனா சொல்லிட்டா அண்ணா. முக்தாவுக்காக நீங்கப் போயிட்டு வாங்கன்னு, சிவமணி அண்ணாவும், அன்னபூரணி அண்ணியும் கூட அதே தான் சொன்னாங்க" என்று பெருமையுடன் கூறினார் கௌசல்யா.

அதைக் கேட்ட கிஷானும்,"எங்க கூட முக்தாவையும் அழைச்சுட்டுப் போகவா அங்கிள்?" என்று நீலகண்டனிடம் அனுமதி வேண்டினான்.

"சரிப்பா" என்று அவரும் இசைவு கொடுத்தார்.

தன் வருங்கால மாமனார், மாமியாரின் கால் பணிந்து எழுந்தாள் முக்தா.

மஹதனின் பெற்றோரிடம் தங்களது நன்றி நவிழ்தலை முடித்துக் கொண்டு நீலகண்டனும், முக்தாவும் வெளியேறினர்.

தாயிடமும் தந்தையிடமும் விடைபெற்று, கிஷானும் அவர்களுடன் சென்றான் மௌனாவின் பெற்றோரைச் சந்திக்க.

"ஆங்… மௌனா! நாங்க வந்துட்டு இருக்கோம். முக்தாவும் , கிஷானும் கூட வர்றாங்க" என்று தகவல் தெரிவித்தார் கௌசல்யா.

கிஷான் வண்டியை இயக்க, அருகே அவனது தோளில் முகம் புதைந்திருந்தாள் முக்தா.

அவளைப் புடவையில் பார்த்த போதே விழுந்து விட்டவன், இதமாய் தன்னைத் தழுவிக் கொண்ட பாங்கில், முழுதாகத் தொலைந்து போனான்.

மௌனாவின் வீடு தென்பட்டதும், "முகி" என்று அவளது தோளை அழுத்தி அழைத்தான் கிஷான்.

"ஹாங்!" என்றதொரு முனகலில் நிமிர்ந்தவளிடம்,

"இறங்கு ம்மா" என வெளியே சுட்டிக் காட்டினான்.

அவளும் குறுநகையுடன் இறங்கவும், திருமூர்த்தியின் காரும் வந்து விட்டது. கடைசியில் மஹதன் மட்டும் வரவேயில்லை.

உள்ளறையில் இருந்த சிவமணியும், அன்னபூரணியும் விரைந்து வந்தனர்.

"வாங்க சம்பந்தி" என்று உபசாரம் நிகழ்ந்தது.

மஹதனுக்குக் குறுஞ்செய்தியில் சொல்லி விட்டான் கிஷான்.

அவன் வராததால் சிலவற்றை மட்டும் கலந்துரையாடி முடித்திருந்தனர்.

தேனாய் இனித்தது அங்கிருந்த ஒவ்வொரு நொடியும்!

மறுபடியும் தன்னவனது தோள் கொடுத்த சுகத்தில் பரிமளம் கொண்டு, அவனுடன் பயணம் செய்தாள் முக்தா.

கிஷானிற்குப் பிரியாவிடை கொடுத்து விட்டு வந்தாள் வீட்டினுள்.

"நான் எங்கே இருக்கேன்னு உனக்குத் தெரியனுமா?" என மௌனாவிடம் கேட்டவன், அவளுக்குத் தன் கைப்பிடியில் இருந்த ஒருவனது தலையை உயர்த்திக் காண்பித்தான் மஹதன்.

அவனைப் பார்த்தது அதிர்ச்சி என்றால், மஹதனுடன் இருந்த கிஷானும் தென்பட்டது பயங்கர அதிர்ச்சியைக் கொடுத்தது மௌனாவிற்கு.

அவளது வீட்டிலிருந்து நேரடியாக அங்கு தான் வந்திருக்கிறான் கிஷான்.

அவள் அதிர்ச்சியுறக் காரணம் தான் என்ன?

- தொடரும்

வர்ற வாரம் எனக்கு ஒரு எக்ஸாம் இருக்கு ஃப்ரண்ட்ஸ். அதனால் இந்தக் கதையோட அடுத்த யூடி வர கொஞ்சம் லேட் ஆகும். நன்றி 💞
 

Shalini shalu

Moderator
இன்னும் பெரிதாக விரிந்த விழிகளோடு திடுக்கிடலை ஓரம் போட்டுக் கேட்டாள் மௌனா.

"இவன்… தீபக்!"

"அவனே தான்!" என்று அசூயையுடன் பதிலளித்தான் மஹதன்.

"இவன் எப்படி உங்ககிட்ட?" என்று பிரயத்தனப்பட்டு வார்த்தையை வெளியிட்டாள் மௌனா.

"அதை நான் சொல்றேன்!" என்று வீடியோ காலின் மறுமுனையில் இருந்தவளுக்கு விளக்கம் செல்ல முன் வந்தான் கிஷான்.

அவனுடைய வாய் மொழிக்காக காத்திருந்தாள்.

"இவன் அக்காவோட முன்னால் கணவன் தான? மஹதன் சொல்லி இருக்கான். நீயும் அப்பப்போ பேசி இருக்க"என்றான்.

"ஆமாம் அண்ணா. இவனை எதுக்கு அடிச்சுருக்கீங்க? அதை முதலில் சொல்லுங்க?" என்று ஆர்வம் தாளாமல் வினவினாள் மௌனா.

"இவனுக்கும், உன் ஃப்ரெண்ட்டுக்கும் இன்னும் டைவர்ஸ் ஆகலைல?" என்றதும்,

"கேஸ் நடந்துட்டு இருக்குல்ல அண்ணா!" என்று முதலிலிருந்து ஒவ்வொன்றாக விசாரிப்பவனிடம் பொறுமையாக பதில் சொன்னாள்.

"டைவர்ஸ் பண்ணனும்னா காசு கேட்டுப் பார்ப்போம். கொடுத்தால் போனால் போகுதுன்னு முடிச்சு விடுவோம்னு நினைச்சிருக்கான்!" என்கவும்,

மௌனாவின் முகம் கோபத்தில் விகாரமானது.

கிஷான் மேலும் தொடர்ந்து,"அதனால், மஹதனை அவனோட கம்பெனியில் மீட் பண்ணி இருக்கான்!" என்றான்.

தாமதம் ஆனாலும் நண்பனுக்காக அவனுடன் முக்தாவின் வீட்டிற்குப் போக வேண்டும் என்ற கொள்கையில் வேலையைத் துரிதமாக முடித்த மஹதன் அறையிலிருந்து கிளம்பத் தயாராகும் போது,

வரவேற்பறையில் இருந்து கால் வந்தது அவனுக்கு.

"சார்! உங்களைப் பார்க்க தீபக் ன்னு ஒருத்தர் வந்திருக்கார்" என்று சொல்லவும்,

காதில் நாராசமாக ஒலித்தப் பெயரின் உரிமைக்காரனை உள்ளே வர அனுமதி அளிக்குமாறு கூறி விட்டான்.

சிறிது நேரம் சென்ற பின்னர், தோரணையாக உள்ளே வந்தவனை நெடிய மூச்சுக்களுடன் வரவேற்றான் மஹதன்.

அன்றைக்கு மௌனாவின் இல்லத்தில் சம்பந்தம் பேசும் பொழுது, தன் தாயுடன் வந்து கலாட்டா செய்ய முனைந்து, அனைவரும் போட்ட சத்தத்தில் அன்னையும், புத்திரனும் சத்தம் காட்டாமல் தான் சென்றனர்.

ஆனால், அடுத்த சில நாட்களில் விவாகரத்துக் கேட்டு பத்திரம் அனுப்பி வைத்திருந்தாள் தீபக்கின் விலாசத்திற்கு.

அதைப் பார்த்ததும் கொதித்தெழுந்து விட்டான்.

"வாங்கும் சம்பளம் அதிகமாக இருந்தாலும், அதை முக்கால்வாசியைக் கொடுத்துட்டு, ஒரு சொல் சொல்லாமல், அமைதியாக ஊரில் இருப்பா! இப்போ அந்த மௌனா கூட சேர்ந்துக்கிட்டு ஆடுறா!" என்று தன் மருமகளுக்குச் சாபம் விட்டுக் கொண்டிருந்தார் லலிதா.

அவர் நீட்டி முழக்கிப் பேசினார் என்றால், மகனோ, பத்திரத்தைப் பஸ்பமாகச் செய்யும் நிலையில் இருந்தான்.

காலைச் சுற்றிக் கொண்டு இருந்தவள் துணிந்து செய்த காரியத்தின் வீரியத்தை தண்டனையாக அனுபவித்தே தீர வேண்டும் என்று உறுதி பூண்டான் தீபக்.

"ஜம்முனு இருப்பா! அவளுக்கென்ன! இன்னொரு கல்யாணம் கூட பண்ணி வைக்கிறதாக இருப்பானுங்க போல! அதான், டைவர்ஸ் நோட்டீஸ் வந்திருக்கு" என்று திட்டித் தீர்த்தார் லலிதா.

அகதாவின் தோழியின் அம்மாவும், அந்த மஹதனும் சேர்ந்து கொண்டு தங்களை விரட்டும் போது, இவள் சிலையாக நின்று வேடிக்கைத் தானே பார்த்தாள் என்று மனைவியின் மீது கோபம் எழுந்தது அவனுக்கு.

இதில் அம்மாவின் புலம்பல்கள் வேறு அவனை உசுப்பி விட்டது.

"அம்மா! கொஞ்சம் நிறுத்துறியா? அவளோட சம்பாத்தியம் நம்மளை விட்டுப் போகுதுன்னா அதுக்கு நிகரா நமக்கு அவ பணம் அழுதுட்டு தான் போகனும்!" என்று குறிப்பாகப் பேசினான் தீபக்.

"எப்படிடா? நாம தான் அவளுக்கு நஷ்ட ஈடு கொடுக்கிறா மாதிரி இருக்கும்" என்று பொருமினார் லலிதா.

அந்த விதத்தில் கூட அவளுக்குத் தங்களால் நல்லது நடந்திடலாகாது என்று இறுமாப்புடன் இருந்தார் அவனது அவர்.

"நாம கொடுக்கக் கூடாது ம்மா! அவ நமக்குக் கொடுக்கனும்! அதை தான் இப்போ சொல்லிட்டு இருக்கேன்" என்று பொருள் பொதிந்த பேச்சில் கூறினான் மகன்.

"எப்படி? அவங்க தான் கூட்டமாக கூடி நம்மளை உண்டு இல்லைன்னுப் பண்ணிடுவாங்களே! அதுவும் பணக்கார கோஷ்டி வேற!" என இப்போதும் அவரது கண்களில் பயம் துளிர்த்தது.

"பயந்துட்டு இருந்தால், அவளையும் விட்டுட வேண்டியது தான், அவகிட்ட இருந்து வர்ற காசையும் விட்டுட வேண்டியது தான்!" என்று எரிச்சலடைந்தான் தீபக்.

"அதை மட்டும் விடக் கூடாதுடா! அப்பறம் நம்மளோட வாழ்க்கை முழுசும் தெருவில் தான் கையேந்தி நிக்கனும்"

"அதனால் எனக்கு ஒரு யோசனைம்மா! அவளுக்கு டைவர்ஸ் கொடுக்கனும்னா பல்கா ஒரு அமவுண்ட் வேணும்னுக் கேட்கப் போறேன்!" என்று ஆசை மின்னக் கூறினான்.

"நடக்கிறதைப் பேசுடா!" என அவன் உளறுவதைக் கண்டித்தார் லலிதா.

மஹதன் மற்றும் அவனது தந்தையின் பண மதிப்பு இவருக்கு மட்டும் தெரியாமல் இருக்குமா? இப்போது அங்கே அடைக்கலம் ஆகி இருக்கும் அகதாவுக்காகத் தங்களை என்ன வேண்டுமானாலும் செய்து விடுவார்கள் என்று அறிந்து தான் தன் ஆற்றாமையைப் பேச்சில் மட்டும் வைத்துக் கொள்கிறார்.

அவர்களிடம் வாலாட்டினால் தங்களை உருத் தெரியாமல் அழித்து விடுவார்கள் என்பது திண்ணம்.

"ப்ச்! நடக்கத் தான் போகுது அம்மா. நான் அந்த மஹதனைப் போய்ப் பார்த்துப் பேசுற விதத்தில், பேசினால் எல்லாம் நடக்கும்" என்று உறுதியாக கூறியவனை, மிரட்சியுடன் பார்த்தார் லலிதா.

சொன்னது மட்டுமின்றி இப்பொழுது தெனாவெட்டாக வந்து மஹதனின் முன்னால் அமர்ந்திருக்கிறான்.

"சார்!" என்றவனது பவ்யத்தைப் பார்த்துப் புருவம் உயர்த்தினான்.

"நான் தீபக். அகதாவோட ஹஸ்பண்ட்" என்றான்.

எதிரிலிருப்பவனோ,"சரி அதுக்கு?" என்று தனது கோபத்தைக் காட்டாமல் கேட்டான்.

"டீலிங் பேச வந்திருக்கேன்!" என்று நடுங்கினாலும் பரவாயில்லை விடுவதாக இல்லை என்ற நோக்கத்துடன் தொடர்ந்து பேசினான் தீபக்.

'டீல்' என்றவுடன் மஹதனுக்கு ஆத்திரம் தெறித்தது.

"என்ன டீல்?"

"அகதா எனக்கு டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பி இருக்கா!" என்று கூறினான்.

"அனுப்பினால், சைன் போட்டுத் திருப்பி அனுப்பி வை" என்றான் மஹதன்.

எச்சிலை விழுங்கிய படி,"அதுக்குத் தான் டீல் சார்!" என்று மெதுவாகப் பேசினான் தீபக்.

"என்னது?"

"நான் விவாகரத்து கொடுக்கனும்னா எனக்கு அதுக்கு ஏற்றப் பணம் வேணும் சார்" என்று சொல்லியவனை, விநோதமாகப் பார்த்து,

"எவ்வளவு தைரியம் டா உனக்கு!" என்று அதட்டினான் மஹதன்.

"இதெல்லாம் பேசினால் உங்ககிட்ட இருந்து உயிரோட தப்பிக்க முடியாதுன்னு தெரிஞ்சு தான் வந்திருக்கேன். ஆனாலும் பணம் என்னை இவ்வளவு துணிவாக யோசிச்சு, வர வச்சிருக்கே!" என்று வியாக்கியானம் பேசினான் தீபக்.

கோப உஷ்ணம் கூடிக் கொண்டே போனது மஹதனுக்கு.

"பணம் கொடுக்கலைன்னா?" என்று திடுமெனக் கூறியவனிடம்,

"அவளுக்கு முன்னாடி அகதாவைப் பத்தி நான் பேசிருவேன் சார்!"

"இதுக்கு மேல உன்னை நான் பேச விடக் கூடாது!" என்று நினைத்துக் கொண்டவன்,

"சரி.. வா. லீகல் ஆகப் பேசிக்கலாம்" என்றதும், அவனுக்கு உதறல் எடுத்தது.

"எங்கேயும் நான் வரலை சார். இங்கேயே உங்க ஆஃபீஸிலேயே எதுவாக இருந்தாலும் முடிச்சுக்கலாம்!" என்று கம்மிய குரலில் பேசியவனிடத்தில் பயத்தின் சாயலை உணர்ந்து,

"வேறே எங்கேயும் வேணாம். என் இடத்துக்குப் போய்ப் பேசலாம்" என்று சாமர்த்தியமாகப் பேசினான் மஹதன்.

"அது உங்க இடம்ன்னா என்னை என்ன வேணும்னாலும் செய்வீங்க! அதனால் நான் கூப்பிட்டுப் போறேன். கூட்டமான இடமாக இருக்கனும்" என்கவும்,

பல்லைக் கடித்துக் கொண்டு,"ம்ம்.. போவோம் " எனத் தீபக்கை அழைத்துக் கொண்டு வெளியே வந்தான்.

ஆனால் அவன்‌ சொன்னது போல கூட்டம் நிறைந்த இடத்திற்கு அல்ல, மஹதன் தன்னுடைய சொந்தமான பகுதிக்குக் கடத்திச் சென்றான் அவனை.

அந்தப் பகுதியினுள் நுழையும் முன், மஹதனிடம் அவ்வளவு அடிகளைப் பரிசாகப் பெற்றிருந்தான் தீபக்.

அதற்கு இடையே , அகதாவிற்கு இது தெரியுமா எனக் கேட்டதற்கு இல்லை என்று பதில் சொல்லவும், அது மஹதனுக்கு வசதியாகி விட்டது.

கிஷானுடைய செல்பேசிக்கும் அப்போது விஷயம் தெரிவிக்கப்பட்டது.

அதனால் தான் அவனும் முக்தாவை விட்டு விட்டு இங்கே வந்து தீபக்கை ஒரு வழி செய்து விட்டான்.

இதையெல்லாம் வீடியோ காலில் கேட்ட மௌனாவோ, தன் தோழிக்குக் கடைசி வரை இது தெரியவே கூடாது என்று நினைத்தாள்.

ஆனால்,"ஏய்
அகதா!!!" என்ற கர்ண கொடூரமாக வாசலில் நின்று அலறியவரைப்‌ பார்த்து புரியாமல் விழித்து நின்றாள் அந்தப் பெயருக்குச் சொந்தமானவள்!

- தொடரும்
 
Last edited:

Shalini shalu

Moderator
லலிதாவின் குரலைக் கேட்டதும், அதிர்ந்து போன உடலுடன் எழுந்து நின்று விட்டாள் அகதா.

அந்த இரைச்சல் நன்றாகவே மௌனாவிற்கும் கேட்டு விட, செல்பேசியை அப்படியே கையில் எடுத்துக் கொண்டு, என்னவென்று பார்க்க வெளியே சென்றாள்.

திடீரென்று மௌனா ஏன் அதைக் கவனிக்காமல் செல்கிறாள் என்ற குழப்பத்துடன் கிஷானும், மஹதனும் வீடியோ காலின் திரையில் காத்திருந்தனர்.

அடி வாங்கிய அலுப்பில் மயங்கிக் கிடந்த தீபக்கைத் தான் அவளிடம் காட்டிப் பேசிக் கொண்டு இருந்தனர் இருவரும். அவன் விழித்து இருந்தால் தான், தனக்காகப் பரிந்து பேச இவளிடம் கெஞ்சிக் கூத்தாடி இருப்பானே?

பதறிக் கொண்டு வீட்டின் வெளிப்புறம் வந்தாள் அகதா.

அவளைப் பார்த்ததும் ஆங்காரத்தில் விகாரம் கொண்டது லலிதாவின் வதனம்.

"ஹேய் இவளே! என் புள்ளை எங்கேடி?" என்று அவளிடம் உச்சஸ்தாயியில் கத்திக் கேட்டார்.

எதுவுமே புரியாதவளோ பயத்தை மறைத்தவாறு,"உங்கப் பிள்ளை எங்கே இருக்காருன்னு எனக்கு எப்படி தெரியும்?" எனக் கூறினாள்.

அவளுக்கு அருகே அணை போல வந்து நின்று கொண்டாள் மௌனா‌.

"நீயும் வந்துட்டியா? உங்களையெல்லாம் பகைச்சுக்காதடான்னு அவனுக்குப் புத்தி சொன்னேனே! கேட்கலையே! உன்னைக் கட்டுன பாவத்துக்கு இப்போ காணாமல் போய்ட்டானே!" என்று ஒப்பாரி வைக்கத் துவங்கி விட்டார் லலிதா.

தன் முன்னால் மாமியாரின் இந்த ஆற்றாமை படிந்த நிலைக்கு மூலம் எது? என்று புரியாது பாவப்பட்ட ஜீவனாக அலைக்கழிந்து போனாள் அகதா.

அவரது வருகையின் காரணம் அறிந்ததால், அதை அப்போது வெளியே சொல்ல முடியாது தவித்துக் கொண்டு நின்றிருந்தாள் மௌனா.

பேச்சினூடே அவர் சொன்னதையெல்லாம் மனதில் உருப்போட்டுப் பார்த்துக் கொண்டு அதன் உதவியுடன்,"இங்கே பாருங்க! உங்க மகனை நாங்க என்னப் பண்ணோம்? எதுக்கு இந்த ஒப்பாரி?" என்று கேட்டாள் அகதா.

"ஏன் சொல்ல மாட்ட? டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பின தான? அதை நினைச்சு மனசொடிஞ்சு போயிருந்தான். அதுக்கு நியாயம் கேட்கப் போறேன்னு சொல்லிட்டு இருந்தான். அப்படி வந்தவனை ஆளை வச்சு என்னப் பண்ணீங்களோ? யாருக்குத் தெரியும்?" என்று மறுபடியும் தனது ஒப்பாரியைத் தொடர்ந்தார் லலிதா.

"கொஞ்சம் அமைதியாக இருங்க. அவருக்கும், அகதாவுக்கும் எந்த சம்பந்தமும் இருக்கக் கூடாதுன்னு தான் டிவோர்ஸ் நோட்டீஸே அனுப்பினோம். நீங்க இங்கே வந்து கத்துறது வேஸ்ட்.உங்க மகனை வேறே எங்கேயாவது போய்த் தேடுங்க" என்று அதட்டினாள் மௌனா.

"அவன் உன் சிநேகிதியைப் பார்க்கத் தான் வர்றதாகச் சொன்னான். இதோ இந்த கைகாரியைப் பார்க்க வந்திருப்பான். நீ உன் வருங்காலப் புருஷனை வச்சு அவனை ஏதாவது செஞ்சிருப்ப!" என்று அரற்றினார் தீபக்கின் அம்மா.

இவர்களது சத்தத்தில் உள்ளேயிருந்து சிவமணியும், அன்னபூரணியும் வந்து விட்டனர்.

தீபக்கின் தாய் தங்கள் இல்ல வாசலில் நின்று பெருங்குரலெடுத்து வாக்குவாதம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தவர்கள், மகள்களிடம் விசாரித்தனர்.

"வாங்க! வாங்க!" என்று நக்கலாகச் சொன்னவர் அன்னபூரணியிடம்,

"ஏன்மா! அன்னைக்கு நீங்களும், இன்னொரு அம்மாவும் சேர்ந்துக்கிட்டு எங்களைத் துரத்தி விட்டீங்களே? அது போதாதா? என் பையனை என்ன செஞ்சீங்கன்னு எனக்குத் தெரிஞ்சாகனும்! சொல்லுங்க!" என்று நொடிக்கு நொடி மகனை என்ன‌ செய்தீர்கள்? என்று கேட்டுக் கொண்டே இருந்தார் லலிதா.

அவர்களைத் திட்டுவது பொறுக்க முடியாமல் அகதா,"இதோ பாருங்க. அவர் என்னைப் பார்க்க வரவே இல்லை! அப்படியே வந்திருந்தாலும்,துரத்தி விட்டிருப்பேன்.தேவையில்லாமல் வந்து சண்டை போடாதீங்க. இனிமேலாவது என்னை நிம்மதியாக இருக்க விடுங்க" என்று அவரிடம் கத்தினாள்.

இன்னும் தொடுதிரையில் இருந்தவர்களுக்கு இந்தக் காட்சியெல்லாம் இலவசமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது மௌனாவின் மூலம்.

மூர்ச்சையாகிக் கிடந்த தீபக்கோ மெல்ல கண்களைத் திறந்தான்.

அதைக் கவனித்த மஹதன் அழைப்பைத் துண்டித்து விட்டு, மீண்டும் மௌனாவிற்கு ஆடியோ கால் செய்தான்.

அனிச்சையாகத் தன் கையிலிருந்த அலைபேசியைப் பார்த்தவள், மஹதனின் அழைப்பு எனவும் பெற்றோரிடம்,"மஹதன் தான் கால் பண்றார்" என்று உரைத்தாள் மௌனா.

"ம்ம்! எடுத்துப் பேசு. என் பையனை அந்த ஆளு தான் என்னமோ பண்ணி இருக்கனும். அதான், உனக்குக் கால் பண்ணி சொல்லக் கூப்பிட்றாரு!" என்று முந்திக் கொண்டு ஆங்காரமாக கட்டளையிட்டார் லலிதா.

"எடுத்துப் பேசு மௌனா!" என்று அடிக்குரலில் கூறினார் அன்னபூரணி.

வீதியில் கூட்டம் கூடுவதற்கு முன்னர் பைசல் செய்து அனுப்பி விட நினைத்தார்கள்.

"ஹலோ" என்று உள்ளடங்கிய குரலில் பேசினாள் மஹதனிடம்.

"அவனுக்கு மயக்கம் தெளிஞ்சிடுச்சு. நீ ஃபோனை ஸ்பீக்கரில் போடு" என்றான்.

அவன் சொன்னதைச் செய்தவள்,"மஹத்!" என்று குரல் கொடுத்தாள் மௌனா.

"நல்லவரே! என் பையன் எங்கே?" என்று அவனிடமும் எகிறினார் லலிதா.

சிவமணியும், அன்னபூரணியும் மாப்பிள்ளையின் அடுத்த நகர்வு என்ன என்பதைப் பதைபதைப்புடன் கேட்க ஆரம்பித்தனர்.

தீபக்கின் அம்மாவோ அவளை ஒரு வழியாக்க முடிவெடுத்திருப்பார் போலும்!

தூண் போல் உணர்ச்சிகள் அமிழ்ந்து போய் அமைதியாகிப் போனாள் அகதா.

"உங்கப் பையன் எங்ககிட்ட பத்திரமாக இருக்கான்!" என்றதும் அங்கிருப்பவர்கள் அதிர்ச்சியில் தடுமாறிப் போயினர்.

அதுவும் அகதாவோ குற்றத்தில் ஈடுபட்டவள் போல சிலையாகிப் போயிருந்தாள்.

"கேட்டியா? இப்போ என்ன சொல்ற? ஆள் பலம் இருக்குன்னு எத்தனை நாளைக்கு உன் ஆட்டம்னுப் பாக்கிறேன்! தீபக்கை விட சொல்லுடி!" என்று அவளைப் பிடித்து உலுக்கப் போய் விட்டார் லலிதா.

அதற்குத் தடையாக வந்து நின்ற மௌனா,"அவளை விடுங்க. அகதாவுக்கு எதுவும் தெரியாது!" என்று பதிலளித்தாள்.

"அப்போ நீயும், அவனும் தான் கூட்டாளிங்களா?" என்று ஏக வசனத்தில் இரைந்தார்.

மற்றவர்கள் நம்பிக்கை உடைந்து போன ஏமாற்றத்துடன் மௌனாவை ஏறிட்டனர்.

"ஐயோ! இல்லை!" என்று அவள் சொல்லும் போது,

"இன்னும் ஒரு வார்த்தை அவளை நீங்க ஏதாவது பேசினாலும் உங்கப் பையன் தான் ஆளே அடையாளம் தெரியாமல் போயிடுவான்!" என்று கர்ஜித்தான் மஹதன்.

கப்சிப் என்று அடங்கி விட்டார் லலிதா.

அவரது மகனை வேறு கேமராவின் முன் கொண்டு வந்து காட்டினான் கிஷான்.

"ஐயோ!! தீபக்!!" என்று அலறித் துடித்தார்.

அவனைப் பார்த்த அனைவருக்கும் அதிருப்தி ஏற்பட்டது மஹதனிடம்.

"என்ன மாப்பிள்ளை இது?" என்று சிவமணி குரலை உயர்த்திக் கேட்டார்.

"இவன் எங்க ஆஃபீஸூக்கு வந்து டீல் பேசினான் மாமா" என அவனது அணுமுறையைக் கூறி முடித்தான்.

அதைக் கேட்டு மிரண்டே போய் விட்டார் லலிதா.

"இப்போ புரியுதா? உங்க மகன் ஏன் இந்த நிலையில் இருக்கான்னு?" என்றவன்,

"கிஷான்! இவனைக் கூப்பிட்டுப் போய், ஃபர்ஸ்ட் எய்ட் கொடுக்க சொல்லு!" என்று சிறிதாக மயக்கம் தெளிந்தவனைத் தன் அன்னையைப் பார்ப்பதற்குத் தடை விதித்தான் மஹதன்.

தீபக் இருந்த நிலைக்கு, லலிதாவை அவனால் தெளிவாகப் பார்க்க முடியவில்லை.

"டிவோர்ஸ் நோட்டீஸில் சைன் போட்ற வரைக்கும் உங்க மகன் இங்கே தான் இருப்பான்!" என்று அழைப்பை வைத்து விட்டான் மஹதன்.

உடனே அகதாவிடம் தஞ்சமடையப் போன லலிதாவைத் தடுத்த மௌனா,"ஏன் இவளைச் சித்திரவதை செய்றீங்க? விவாகரத்துக் கொடுத்து நிம்மதியாக வாழ நினைச்சாலும் முடியாது போலிருக்கே!" என்று அவரிடம் தன்னுடைய தோழிக்காகப் பொரிந்து தள்ளினாள்.

"மௌனா!" என்று அவளை அடக்கிய அன்னபூரணி,

"இப்படியெல்லாம் வந்து காட்டுக் கத்துக் கத்தினால், உடனே நாங்கப் பயந்துடுவோம்னு நினைக்காதீங்க!" என்று தீவிரமாக கூறினார்.

மருமகளின்‌ முகத்தில் ஏதாவது அறிய முடிகிறதா! என்று ஆராய்ந்து பார்த்து விட்டார் லலிதா.

ஒரு வார்த்தைக் கூட உதிர்க்காமல், யாரையும் எதிர்த்துப் பேசாமல் தேமேவென்று இருந்தாள் அகதா.

இனி அவளை நம்பி எதிர்பார்ப்பது வீண் என்று புரிந்து விட,

"சரிங்க. அவன் எங்கிட்ட எப்போ திரும்பி வருவான்?" என்று பரிதாபமாக கேட்டார்.

"எங்க மாப்பிள்ளைகிட்ட சொல்லி உங்கப் பையனை வெளியே விட்றோம். ஆனால் அதுக்கு முதல், அவன் டிவோர்ஸ் நோட்டீஸில் கையெழுத்துப் போடனும்" என்று திட்டவட்டமாக தெரிவித்தார் அன்னபூரணி.

அதை முதலிலேயே செய்திருந்தால் அவனுக்கு இந்த மரண அடி , தனக்கு இப்படியான அவமானம் எல்லாம் கிடைத்திருக்குமா?

குற்றுயிராக கிடைக்கிறானே! பார்த்த போதே நெஞ்சு பொறுக்கவில்லையே!

இது எல்லாம் தேவை தானா இவனுக்கு? என்று அவ்விடத்திலேயே ஓங்கி அடித்துக் கொண்டு, அழுக ஆரம்பத்தார் லலிதா.

"ச்சூ! சத்தம் காட்டக் கூடாது!" என்று தொண்டை வெடிக்கும் அளவிற்குக் கத்தினாள் அகதா.

அதில் அருகிலிருந்த மௌனாவிற்கே காது அதிர்ந்து போயிற்று.

லலிதாவின் நாக்கு உள்ளே சுழன்று கொண்டது.

"அதான், சொல்றாங்கள்ல! கேட்கலையா? ம்ஹ்ம்! இடத்தைக் காலி பண்ணுங்க!" என்று சீற்றம் கொண்டு அவருக்கு உத்தரவிட்டாள் அகதா.

அவ்வளவு தான்! துண்டைக் காணோம்! துணியைக் காணோம்! என்று அங்கிருந்து தழுவிக் கொண்டார் லலிதா.

மகனைப் பார்க்கக் கூட திராணி வேண்டுமே? இவள் இப்படி உறுமுவாள் என்று நினைத்தும் பார்க்கவில்லை அவர்.

அகதாவை உள்ளே அழைத்துச் சென்று குடிநீர் வழங்கினார் அன்னபூரணி.

அதைப் பருகியவள், தோழியை ஏறிட்டாள்.

"இது உங்கப் பிளானா?" என்ற கேள்வியில் தொடங்கியது அவளது வாதம்.

"ஐயோ! இல்லை அகி. அவர் கால் பண்ண அப்போ தான் எனக்கும் தெரியும். அடுத்து தான் அவங்க அம்மா வந்து கூச்சல் போட்டாங்க!" என்று பதறிக் கூறினாள் மௌனா.

"அவனை விடச் சொல்லு மௌனா! டிவோர்ஸ் நோட்டீஸ் கிடைக்கட்டும். அது நடக்கிற வரை பல்லைக் கடிச்சிட்டு இருக்கேன்" என்று சொல்லி விட்டு, அறைக்குள் போய் விட்டாள் அகதா.

மகளின் அருகில் வந்து,"அகதா ரொம்ப காயமடைஞ்சு இருக்கிறா!" என்றார் அன்னபூரணி.

"ஆமாம் மா" என்று நொடிந்துப் போனாள் மௌனா.

"நீ மாப்பிள்ளைக்குக் கால் பண்ணிப் பேசு‌‌" என்று கூறினார் சிவமணி.

"ஹலோ மஹத்" என்று கூறியவளிடம்,

"அகதாவுக்கு உன் மேல கோபமா?" என்று வினவினான்.

"அந்தம்மா வந்துட்டுப் போனதால் டிஸ்டர்ப் ஆகிட்டா. நானும் சம்பந்தப்படு இருப்பேன்னு நினைச்சா" என்று அவனிடம் சொன்னாள் மௌனா.

"தீபக்கிற்கு மறுபடியும் மயக்க மருந்து கொடுத்து இருக்கோம்" என அறிவித்தான் மஹதன்.

"அவனை வீட்டுக்கு அனுப்பச் சொல்லி, அகதா கேட்டுக்கிட்டா ங்க" என்றாள்.

"சைன் வாங்கிட்டு துரத்தி விட்றோம். நீ அங்கே பாத்துக்கோ" என்று அவளிடம் தைரியம் கூறி வைத்தவன்,

கிஷானிடம்,"மயக்கம் தெளிஞ்சதும், சைன் வாங்கி அவங்க அம்மாகிட்ட அனுப்பி விடு" என்று கூறி கிளம்பிச் சென்றான் மஹதன்.


அகதாவின் வாழ்வில் விடிவு காலம் வருவதற்கான ஆரம்பம் தான் இந்த நிகழ்வோ?

- தொடரும்

அகதாவை அம்போன்னு விட்டுடக் கூடாதுல்ல ஃப்ரண்ட்ஸ். அவளோட லைஃப் - யையும் சரி பண்ணிடலாம்!
 

Shalini shalu

Moderator
உடலிலிருந்த வெளி மற்றும் உள் காயங்கள் மட்டுமில்லாமல் ஊமைக் காயங்களும் சேர்ந்து தீபக்கை நிலை தடுமாறி விழச் செய்தது.

அவனைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு, வெளியே அழைத்து வந்தனர் மஹதனுடைய ஆட்கள்.

"நேராகப் பார்த்து நட!" என்ற அதிகாரக் குரலில் திடுக்கிட்டுக் கீழே விழப் போனான் தீபக்.

அதற்கும் கொலைவெறியோடு முறைத்துக் கொண்டே, வெளியே கூட்டி வந்தனர்.

அவர்களைப் பரிதாபமாகப் பார்த்தான்.

"இது வரைக்கும் தான் உன்னைக் கொண்டு வந்து விடனுமாம். நிற்காமல் கிளம்பு, கிளம்பு!" என்ற அதட்டலில் சர்வமும் ஒடுங்கிப் போய் இருந்தவனுக்குத் துணையாக யாரும் கூட வரவில்லை.

நொண்டி நடந்தவனைத் தோள் பற்றிக் கொண்டு, நடத்திப் போக ஆளில்லை.

தனது சட்டைப் பாக்கெட்டில் அவர்கள் வைத்திருந்த செல்பேசியின் இருப்பு உணர்ந்து, அதை எடுத்து அன்னைக்குக் கால் செய்தான் தீபக்.

ஒரு திட்டில் உட்கார்ந்து கொண்டவன், தாய் மறுமுனையில் அழைப்பை ஏற்கும் வரை பொறுமையின்றி மூச்சு வாங்கினான்.

"ஹலோ! தீபக்" என்ற அலறல் காதில் ஏறியதும்,

"அம்மா" எனச் சேய் போல தேம்பி அழ ஆரம்பித்து விட்டான் அவரது மகன்.

"டேய்! உனக்கு என்னடா ஆச்சு? அகதாகிட்ட கெஞ்சிறா மாதிரி ஆகிடுச்சு நம்ம கதி! அதுக்கும் அவ மசியல. கடைசியில் உன்னை ஃபோனில் காமிக்கவும், உயிரே போயிடுச்சு டா! ஆளாளுக்கு அம்மாவை அதட்டிப் பேசி, அசிங்கப்படுத்திட்டாங்க தீபு!" என்று
அவனது நிலை அறிந்தும், முன்னால் மருமகளைப் பற்றி, மகனிடம் கோள் மூட்டிக் கொண்டிருந்தார் லலிதா.

அவரது ஆதங்க வார்த்தைகளை அதற்கு மேலும் கேட்கும் சக்தி அவனுக்கு இல்லையென்பதால்,
"ம்மா!! நிறுத்துங்க! நானே செத்துப் பிழைச்சு வந்திருக்கேன். நம்ம வீட்டுக்குக் கூட வர முடியாமல் நடுத்தெருவில் நின்னுட்டு இருக்கேன். நான் இருக்கிற இடத்தைச் சொல்றேன், ஒரு ஆட்டோவோ, டாக்ஸியோ பிடிச்சிட்டு வாங்க சீக்கிரம்! ஹாஸ்பிடலுக்கு வேறப் போகனும்!" என்று உடனே கிளம்பி வருமாறு கத்தி விட்டு, அங்கேயே கிடந்தான் தீபக்.

தனக்கு இருக்கும் ஒரே உறவான மகனைக் காப்பாற்ற வேண்டி, தன்னிடமிருந்த பணத்தைப் பர்ஸில் அள்ளிப் போட்டுக் கொண்டு, ஒரு டாக்சியில் அவன் சொன்ன இடத்திற்கு விரைந்தார் லலிதா.

தன்னுடைய பையில் சொருகியிருந்த பணத்தைக் கையில் வைத்துக் கொண்டு, வெறித்திருந்தான் தீபக்.

மருத்துவச் செலவிற்காக அடித்தவர்களே கொடுத்தப் பணம் அது!

மஹதன் மற்றும் கிஷான் தன்னிடம் பேசியது, விடுதலைப் பத்திரத்தில் கையொப்பமிட வலியுறுத்தியது எல்லாம் தடையில்லாமல் கிலியை ஆழ்த்தியது அவனை.

அந்த நேரம் தனக்கு முன்னால் வந்த டாக்ஸியைப் பார்த்தான்.

மகனுடைய கோலத்தை ஜன்னல் வழியாகவே கண்ணுற்றவருக்கு, முகம் வெளுத்தது.

"என்னடா தீபு!" என்று சாலை என்றும் பாராமல் அப்படியே தரையில் இடிந்து அமர்ந்தார் லலிதா.

அவனுடைய உடலின் காயங்கள் இவரை வெகுவாக அச்சுறுத்தியது.

"அவனுங்களைச் சும்மாவே விட்டுடக் கூடாது ம்மா!" என வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான் தீபக்.

"இன்னும் ஏன்டா? உனக்கும், எனக்கும் வாங்கியது போதும்! அவங்களை அழிக்கப் போய் நாம் அழிஞ்சிடுவோம் போல இருக்கு!" என்று படபடத்தார் அவனது அன்னை.

"முதல்ல எனக்கு ட்ரீட்மெண்ட் பார்க்கனும் மா!"

டாக்ஸி டிரைவர் ஹாரன் அடிக்கவும்,
"எழுந்திருப்பா! ஹாஸ்பிடலுக்குப் போவோம்!" என மெதுவாக மகனை எழுப்பி டாக்ஸியில் உட்கார வைத்தார் லலிதா.

முகத்தை முழுமையாக மறைத்துக் கொண்டு இருந்த காயங்களைத் தொட்டுப் பார்த்தவன், ஆங்காங்கே ரத்தம் கட்டி , சுண்டிக் கிடந்தது. அலங்கோலமாக இருந்த முகத்தை ஆத்திரத்துடன் பார்த்தான் தீபக்.

மருத்துவமனையில் கட்டுக்கள் பல போட்டு விட்டார்கள் மருத்துவர்கள்.

தையல்கள் அனைத்தும் பிரிந்து விடக் கூடாது என்ற அறிவுரையுடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டான்.

தீபக்கிற்கு வெந்நீர் ஒத்தடம் கொடுத்து உறங்க வைத்தார் லலிதா.

திருமணத்திற்கான டிசைனர் துணிகள் யாவும் அணி வகுத்திருக்க, அவற்றையெல்லாம் தொட்டுப் பார்த்துக் கொண்டு இருந்தாள் மௌனா.

"இந்த டிசைன்ஸ் பிடிக்கலைன்னா வேற மாடல்ஸ் பாருங்க மேம்" என்று நகரிலேயே பிரசித்திப் பெற்ற துணிக் கடையிலிருந்து வந்திருந்த ஆடை வடிவமைப்பாளர் அவளிடம் மென்மையாக கூறினார்.

"வேண்டாம் மேம். இது நல்லா இருக்கு" எனத் தனக்கானதை விரைவாகவே தெரிவு செய்திருந்தாள்.

அதை வாங்கிப் பார்த்து, டேமேஜ் எதுவும் இருக்கிறதா? எனச் சரி பார்த்தாள் அந்த உடை வடிவமைப்பாளர்.

"ஒன்னு தான் சூஸ் பண்ணியிருக்கீங்க மேம். இன்னும் நாலு செலக்ட் செய்து வைங்க" என்று பணிவுடன் கூறினாள்.

"நாலு எதுக்கு?" எனக் கேட்டாள் மௌனா.

"கௌசல்யா மேம் தான் சொன்னாங்க" என்று பதிலளித்தாள்.

அத்தையின் பெயர் வந்ததும், "ஓகே" என்றவாறு ஆடைகளில் கவனம் பதித்தாள்.

மற்ற மூன்று உடைகளையும் தன் மேல் பொருத்திப் பார்த்து விட்டு, ஒப்புதல் சொன்னாள் மௌனா.

கௌசல்யா முதற்கொண்டு, மௌனாவின் பெற்றோர் கூட அவளது அறைக்குள் நுழையவில்லை.

ஆடை வடிவமைப்பாளருக்குமே போதிய சோதனைகளுக்குப் பிறகு தான் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

நான்கு உடைகளும் வெவ்வேறு மாடல்களில் இருந்தது.

வருங்கால மாமியாரின் அன்புக் கட்டளைகளில் இது முதலாவது என்பதால், அதிலிருந்து பிறழத் தோன்றவில்லை மௌனாவிற்கு.

உடைகளின் விலையை எக்காரணம் கொண்டும் அவளுக்குத் தெரியப்படுத்தக் கூடாது எனவும் உத்தரவிட்டு இருந்தான் மஹதன்.

அவனது விருப்பத்தையும் கேட்டு விட ஆசைப்பட்டாள் மௌனா.

ஆனால், "உனக்கும் பிடிச்சதாகத் தான் இருக்கனும். வேற யாரும் உள்ளே தலையிடக் கூடாதுன்னு தான் யாரையும் வர விடலை" என்று அன்பாக கூறி விட்டான்.

"என்னங்க சம்பந்தி?" என்று தங்கள் பெண்ணின் திருமண உடைகளைத் தேர்வு செய்ய ஆசையாக இருந்த சிவமணியும்,அன்னபூரணியும் கூட சங்கடத்தைத் தெரிவித்தனர்.

அகதா தான் இருவரையும் சமாதானம் செய்தாள்.

அவளையும் மௌனாவின் அறைக்கு உள்ளே விடவில்லை.

அதற்குப் பிறகு தான் மணப் பெண்ணுக்கான உடைகளைப் பார்த்தனர் மற்றவர்கள்.

நகைகள் விஷயத்தில் கூட இதையே கடைபிடித்து இருந்தான் மஹதன்.

தங்கள் பங்கிற்கு மகளுக்காக கடைகளில் துழாவி, சிறுகச் சிறுக சேமித்து வைத்தப் பணத்தில் தங்க நகைகளை வாங்கி வைத்து விட்டனர் சிவமணியும், அன்னபூரணியும்.

அடுத்து வந்த நாட்களில் மகளுடைய சுபாவத்தில் ஏற்படும் மாறுபாடுகளை அவதானித்துக் கொண்டு தான் இருந்தார் நீலகண்டன்.

அவளை அழைத்து உட்கார வைத்தவர்,"என்னாச்சு முகி?
கிஷான் ஏதாவது பேசி கஷ்டப்படுத்திட்டானா?" என்று முக்
தாவிடம் கேட்டார்.

"இல்லை அப்பா" என்றவள், தன் நிலையின் உண்மைக் காரணத்தை அவரிடம் விளங்கினாள் மகள்.

- தொடரும்
 

Shalini shalu

Moderator
தேன்மொழியைப் பற்றிய நினைவுகளுடன் போராடிக் கொண்டிருக்கிறாள் மகள் என்பதை உணர்ந்து கொண்டார் நீலகண்டன்.


"நீ யாரை மிஸ் பண்றன்னு எனக்குத் தெரியுதுடா" என்று உணர்ச்சி வசத்துடன் கூறினார் நீலகண்டன்.


"ப்பா" என்ற சிறிய கதறலுடன் அவரிடம் தஞ்சமடைந்தாள் முக்தா.


"நீ அப்பப்போ தேன்மொழியோட ஃபோட்டோவை ஏக்கத்தோட பார்க்கிறதை, நானும் கவனிச்சுக்கிட்டுத் தான் இருந்தேன்" என்றார் அவளுடைய தந்தை.


"அன்னைக்கு அவங்களோட சேலையைக் கட்டும் போது கூட எமோஷனல் ஆகிட்டேன் ப்பா" என்று அயர்ச்சியுடன் கூறினாள் மகள்.


"அந்தக் கோலத்தில் உன்னைப் பார்த்ததும் எனக்கும் உங்க அம்மா தான் மனசில் வந்து போனாங்க டா!" என்றவர்,


தேன்மொழியும் , தானும் ஊர் மெச்சும் தம்பதிகளாக எப்படி வாழ்ந்தோம்? என்பதை மகளிடம் பகிரத் தொடங்கினார் நீலகண்டன்.


தொழில் கற்றுக் கொண்டு இருந்த சமயத்திலேயே அவருக்கும், தேன்மொழிக்கும் திருமணம் நிகழ்ந்தது.


ஆதர்ஷ தம்பதிகள் என்று இல்லாமல் இருந்தாலும் கூட, சண்டைகள் இன்றி, சுமூகமான வாழ்க்கையை வாழ்ந்தனர் இருவரும்.


நீலகண்டனிடம் அவ்வப்போது தலை தூக்கும் பணச் செருக்கு தேன்மொழிக்கு அறவே ஆகாது.


எனவே, "இதையெல்லாம் எப்போ பாத்தாலும் பேசிக்கிட்டே இருக்கிறது நல்லா இல்லைங்க" என்றும் கூட சொல்லிப் பார்த்து விட்டார் மனைவி.


அதை அவரது கணவர் கண்டு கொள்ளவில்லை. இந்த விஷயத்தில் மட்டும் நீலகண்டன் பிடிவாதமாக இருப்பது தேன்மொழிக்கு அதிருப்தியைத் தந்தது.


தான் கருவுற்றிருந்த நாட்களில் கணவன் செய்யும் பணிவிடைகள் யாவற்றையும் மனமுவந்து ஏற்றுக் கொண்டார் மனைவி. பிரசவத்தின் போதும், பிறந்த
குழந்தை பெண் என்றதும், அவர்களிருவருக்கும் கடலளவு சந்தோஷம் ஏற்பட்டது.


அதற்குப் பிறகு, நீலகண்டனின் ஜம்பம், செருக்கு சற்று குறைந்திருந்தது.


இருவரும் ஒரு மனதாகத் தேர்ந்தெடுத்து ,"முக்தா" என்று தங்களது செல்ல மகளுக்குப் பெயர் வைத்தனர்.


சிறு வயதிலிருந்தே முக்தாவிற்கும் தன்னுடைய ஒரு சில தேவையற்ற குணங்களைத் தெரிந்தோ, தெரியாமலோ புகுத்திக் கொண்டிருந்தார் நீலகண்டன்.


அதை தேன்மொழி கண்டித்தும் பலனின்றிப் போயிற்று.


தன்னளவில் மகளிற்கு நல்ல குணங்களைச் சொல்லிக் கொடுத்து வளர்த்தார் அந்த அன்னை.


அவர் உயிருடன் இருந்தவரை முக்தாவும், தாய் சொல்லிக் கொடுப்பதைக் கேட்டு வளர்ந்து வந்தாள்.


பிறகு எதிர்பாராத விதமாக தேன்மொழியின்‌ இறப்பு நிகழ்ந்து விட்டது.


முக்தாவைத் தேற்றும் வழி தெரியாது தன்னைப் போலவே, தனக்குத் தெரிந்தவாறு வளர்க்க ஆரம்பித்து விட்டார் நீலகண்டன்.


பிறகு நடந்தவை யாவும் விதியிடம் ஒப்படைக்கப்பட்டது.


"கல்யாணம் வரைக்கும் மூர்த்தியோட வொய்ஃப் கௌசல்யாவை உன்னோட துணைக்கு இருக்கச் சொல்லிக் கேட்டுப் பார்க்கவா?" என்று கேட்டார்.


அவளிடமிருந்து வெற்றுப் பார்வை தொனித்தது.


"என்னவாக இருந்தாலும் சொந்த அம்மா மாதிரி வராதே அப்பா?" என்று நிதர்சனத்தை உரைத்தாள் முக்தா.


தாய் தேன்மொழியின் இடத்தில் எவரையும் ஒப்புக்குக் கூட வைத்துப் பார்க்க முடியவில்லை அவளால்.


அந்த அன்பையும் யாராலும் தர முடியாது என்பதும் முக்தாவிற்கு விளங்கி விட்டது.


அதைப்‌ பிறரிடம் தேடி அவர்களுக்கும் சங்கடத்தை வரவழைக்கும் எண்ணமில்லை அவளுக்கு.


"ம்ஹம்" என்றார் நீலகண்டன்.


"கல்யாணத்தப்போ நீங்களே எனக்கு எல்லாம் செஞ்சிருங்க அப்பா. மத்ததை நானே கத்துக்கிறேன்" என்று மிக உறுதியான குரலில் கூறினாள் மகள்.


"சரி முகி"


மௌனாவின் திருமணத்தில் தான் தன்னுடைய முழுக் கவனத்தையும் வைத்திருக்க முடிவெடுத்தாள் முக்தா.


தன்னுடைய திருமணத்தில், உடைகள், அலங்காரங்கள் அனைத்தையும் தன்னால் தனியாகவே ஏற்பாடு செய்து கொள்ள முடியும் என்ற நிலைப்பாடு அவளுக்குள் உருவானது.


"நீ எனக்கு உதவி பண்ணனும்" என்று மௌனாவிடம் போய், எல்லாவற்றையும் சொன்னாள் முக்தா.


"அன்னைக்கு அகதா கூட நீங்களும் மணப்பெண் தோழியாக வாங்க முகி. பார்க்கும் போதே எல்லாமே தெரிஞ்சிடும்" என்று நம்பிக்கை அளித்தாள்.


"அப்பறம் இது மஹத் - க்குத் தெரிய வேண்டாம்" என்று கூறி விட்டாள்.


"யாருக்கும் தெரியாது. நான் ப்ராமிஸ் பண்றேன் முகி" என்றாள் மௌனா.


"டேய்! முக்தாவுக்குத் தாய் , தகப்பனாக நாம தான் கூட இருக்கனும். அதுவும் நான் கண்டிப்பாக இருந்தாகனும்" என்று கூறிக் கொண்டு இருந்தார் சித்ரலேகா.


"அம்மா! நீங்க இப்படி சொல்லலாம், ஆனால் அதை முக்தா செய்ய விட மாட்டாள்" என்று அழுத்தமாக உரைத்தான் கிஷான்.


"ஏன்டா?" எனக் கேட்டார் காஞ்சியப்பன்.


"ஆமா‌. நான் முகி கிட்ட கேட்கிறேன்" என்றார் சித்ரலேகா.


"அவளோட அம்மா இடத்தில் வேற ஒருத்தவங்களை நிக்க வைக்க விருப்பப்படவே மாட்டா" என்று தீவிரமாக கூறினான் கிஷான்.


"நீயா சொல்லாத! அவகிட்டயும் கேளு" என்று கூறினார் அவனுடைய அன்னை.


"அவளோட பதிலைத் தான் நான் இப்போவே சொல்லிட்டேன் ம்மா" என்று விடையளித்தான் மகன்.


"அதுக்குள்ளப் புரிஞ்சிக்கிட்டியா அவளை?" என்று கேட்டு, முக்தாவிற்கு அலைபேசியில் தொடர்பு கொண்டார் சித்ரலேகா.


அதைப் பார்த்ததும் தந்தையிடம் கம்மிய குரலில்,"என்னப்பா இவங்க?" என்றான் கிஷான்.


"உங்கம்மா எது செஞ்சாலும் சரியா இருக்கும் மகனே!" என அலுங்காமல் கூறி விட்டார் காஞ்சியப்பன்.


"அத்தை" என்ற அழைப்புடன் பேசினாள் முக்தா.


"ஆங்… முகி ம்மா! நம்ம வீட்டுக்கு வாடா" என்றார்.


"இப்போ உடனே வரனுமா அத்தை?" என்று கேட்டாள் அவரது வருங்கால மருமகள்.


"இன்னைக்கு வேணாம். ஆனால் நாளைக்கு வந்துரு" என்று கூறினார் சித்ரலேகா.


அதற்கு முக்தா,"சரிங்க அத்தை‌. ஆனால் இதைப் பத்திக் கிஷான் எதுவும் சொல்லலை" என்று பதில் சொன்னாள்.


"நானே அவன்கிட்ட இன்னும் சொல்லலைடா ம்மா" என்றதும் சம்மதித்து விட்டாள்.அந்த அழைப்பைத் துண்டித்தவுடனேயே,"என்னம்மா நீங்க இப்படி பண்ணிட்டீங்க?" என்று குறைபட்டான் கிஷான்.


"என்னடா? என் மருமகளுக்கு நான் கால் செய்து பேசினேன்! இதில் என்ன?" என்றார் சித்ரலேகா.


"நான் அவளுக்குக் கால் பண்ணிப் பேசப் போறேன். போங்க!" என்று தன் கைப்பேசியை எடுத்தான்.


"ப்ச்! நாளைக்கு வருவா, பேசிக்கோ. இப்போ கால் பண்ணுன கொன்றுவேன்!" என்று மகனை எச்சரித்தார்.


"ஃபோனை உள்ளேயே வை" என்றார் காஞ்சியப்பன்.


"அதெப்படி தாயில்லாதப் பொண்ணை அம்போன்னு விட முடியும் டா?" என்று வெகுண்டு எழுந்து கேட்டார் சித்ரலேகா.


"சரி தான்டா" என்று கூறினார் அவனது தந்தை.


"அப்படிங்களா அப்பா!" எனப் பல்லைக் கடித்தான் கிஷான்.


- தொடரும்
 
Last edited:

Shalini shalu

Moderator

"நான் சொல்வதைப் பொறுமையாக கேளு ம்மா" என்ற தொடக்கத்துடன் பேசினார் சித்ரலேகா.


"உங்களோட கல்யாணத்தில் நான் உனக்கு எல்லாமா இருந்து என் மகன் கூட மேரேஜ் பண்ணி வைக்கிறதுல சம்மதம் தான?" என்று மகனுடைய மறுப்பையும் மீறி மருமகளிடம் கேட்டு விட்டார் சித்ரலேகா.


"அத்தை! அம்மா இருந்த இடத்தில்…" என்று அவள் தன் நிலையைச் சொல்ல முயல,


அதற்குள் காஞ்சியப்பன்,"உன் பையன் சொன்னதை தான் மருமகளும் சொல்லப் போறா லேகா" என்றார் மனைவியிடம்.


அவர்களிருவருடைய புரிதலைக் கண்டு, கணவனுக்கும், மனைவிக்கும் நிறைந்து தான் போனது மனம்.


ஆனால் முக்தா மறுத்தது தான் வருத்தத்தை அதிகப்படுத்தியது சித்ரலேகாவிற்கு.


"ஏன் டா ம்மா?" எனச் சோகமான முகத்துடன் மருமகளிடம் வினவினார்.


"அது வந்து அத்தை, என்னோட அம்மாவை நான் யாருடைய பிரதிபிம்பத்திலேயும் பார்க்க விரும்பலை.அவங்க எப்பவும் அவங்க மட்டும் தான்! அதை மறுக்க முடியாது என்னால்! அப்பாகிட்ட இதை எப்பவோ சொல்லிட்டேன். உங்ககிட்ட மறுக்கிறதுக்கு மன்னிச்சிருங்க" என்று ஏற்ற , இறக்கத்துடன் கூறி முடித்தாள் முக்தா.


அம்மாவின் இடத்தை நீங்களும் முழுமையடையச் செய்யவே முடியாது என்று மறுத்தவளிடம்,"ஓகே டா ம்மா" என்றார் சித்ரலேகா.


கிஷானுக்குத் தன்னவளது தயக்கம் புரிந்து விட, அவளது மென் கரங்களைப் பற்றிக் கொண்டான்.


"அந்தச் சடங்கு, சம்பிரதாயம் எல்லாம் சொல்லிக் கொடுக்க எனக்கு அனுமதி உண்டா முகி ம்மா?" என்று மருமகளிடம் விண்ணப்பம் வைத்தார்.


"அத்தை!" என்று அவரை அணைத்துக் கொண்டு,


"நான் உங்ககிட்ட எல்லா உரிமையையும் ஒப்படைக்கிறேன்" என்று உணர்ச்சிப் பொங்க கூறினாள் முக்தா.


"இல்லைடா. வேண்டாம். உன்னோட அம்மா மேல நீ வச்சிருக்கிற பாசத்தை நான் கலைக்க மாட்டேன்" என்று மென்மையாக கூறினார் சித்ரலேகா.


"சாரி அத்தை" என்றதும்,


"என்ன தான் இருந்தாலும் அவங்க இடத்தை நான் எடுத்துக்க நினைக்கிறது தப்பு தான் டா!" என்று பரிவுடன் சொன்னார்.


"அச்சோ!!" என முக்தா அதிர்ந்த போது,


"அம்மா … கொஞ்சம் பொரியல் வைங்க " என்று வேகமாகத் தாயிடம் தன் தட்டைக் காட்டினான் கிஷான்.


அவனை முறைத்தச் சித்ரலேகா,"நமக்குள்ளே சண்டை வரப் போகுதுன்னு முன்னெச்சரிக்கையாக இருக்கானாம்!" என்று கிண்டல் செய்தார்.


"இல்லைம்மா. உண்மையிலே எனக்குப் பொரியல் வேணும்" என்று சமாளித்தான் மகன்.


"இரு. நான் பரிமாறுறேன்" என அவனுடைய தட்டில் பொரியலை வைத்தார் காஞ்சியப்பன்.


"தாங்க்யூ அப்பா" என அவருக்கு நன்றி சொல்லி விட்டு,


"பார்த்தீங்களா? அப்பா தான் என்னை நம்புறார்!" என்று அம்மாவிடம் பெருமிதமாகச் சொன்னான் கிஷான்.


"நம்பட்டும்" என்றவர்,


முக்தாவிடம்,"நீ எதுவாக இருந்தாலும் எங்கிட்ட கேளுடா" என்று மருமகளைத் தாஜா செய்தார் சித்ரலேகா.


அவருக்கு எந்த வித தவறான அனுமானமும் இல்லை என்ற நிறைவில் அதிகமாகவே உணவை உட்கொண்டாள் முக்தா.


அதன் பிறகு,

"மௌனாவுக்கு மணப்பெண் தோழி நான் தான். சோ, அகதா மாதிரியே நானும் அவ கூடயே இருக்கனும்" என்று அவள் சொல்லவும், பொறி தட்டியது சித்ரலேகாவிற்கு.


"அப்படியா முகி? போயிட்டு வாடா" என அவளை ஆசீர்வதித்து அனுப்பி விட்டார்கள்.


"மகனே! மருமகளோட பிளான் எல்லாம், எனக்கு இப்போ தெரிஞ்சிருச்சு" என்று கிஷானிடம் கூறிக் கொண்டே கணவனின் அருகே உட்கார்ந்தார் அவனுடைய தாய்.


"பிளானா? அது என்னதும்மா?" என்று புரியாமல் கேட்டான்.


"உங்களுக்குப் புரிஞ்சிடுச்சு தான ங்க?" என்று காஞ்சியப்பனிடம் கேட்கவும்,


"ரொம்ப நல்லாவே!" என அவரும் சம்மதமாகத் தலையை ஆட்டினார்.


"சொல்லுங்க அம்மா" என அவசரப்படுத்தினான் கிஷான்.


"மௌனாவுக்குத் துணையாக கல்யாணத்தில் நிற்கப் போகிறதா சொன்னாளே? அதுக்கு என்ன அர்த்தம்ன்னா! அவளுக்கு நடக்கிற கல்யாணச் சடங்கு எல்லாத்தையும் இவளும் ரொம்ப பக்கத்தில் இருந்து பாக்கலாம். அதே மாதிரி இவகிட்டயும் பொறுப்பு கொடுப்பாங்க. அப்போ, தன்னோடு மேரேஜில் என்னென்னப் பண்ணனும்னு ஆட்டோமேட்டிக் ஆக முக்தாவுக்கு ஒரு கிளாரிட்டிக் கிடைக்கும் தான? அதுக்குத் தான்!" என்று புரிய வைத்தார் சித்ரலேகா.


"நம்மளை ஒதுக்குறாளா? இல்லேன்னா, நமக்கானது இது மட்டும் தான். மருமகளாக வேணும்னா வருவேன். மகளாக வேண்டாம்னு சொல்றாளா?" என்று தன் ஐயத்தைக் கேட்டார் காஞ்சியப்பன்.


"அந்தப் பெருந்தன்மை வேணாம்னு சொல்றா - ங்க. இப்போ எடுத்துக்காட்டுக்கு, மஹதனைக் காதலிச்சக் கடந்த காலமே வேண்டாம்னு சொல்லி இருக்கா, அதே மாதிரி அவங்க அம்மாவையும் யார்கிட்டயும் தேடக் கூடாதுன்ற வைராக்கியம் போல ங்க" என்று கணவனிடம் கூறினார்.


"நம்மகிட்ட எதுக்கு இவ்ளோ வைராக்கியம் அவளுக்கு?" என்று சோகத்துடன் வினா எழுப்பினான் கிஷான்.


"வைராக்கியம்ன்றது அவளோட இஷ்டம்டா. அது யார்கிட்ட வேணும்னாலும் நியாயமான விஷயங்களுக்குக் காமிக்கலாம்" என்று பதிலளித்தார் சித்ரலேகா.


"நாம அவகிட்ட நடிக்கவா போறோம் மா? உண்மையாகத் தானே நீங்கப் பாசத்தைக் காட்டப் போறீங்க?"


"ப்ச்! டேய்! அது அவளுக்கும் புரியுதுடா. அவங்க அம்மாவுக்கு இணையாக யாரும் இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறா!" எனப் பொறுமையை இழந்தார்.


"உங்களை மாமியார்ன்ற லிமிட்டோட நின்னுக்கச் சொல்றா! அப்படித் தான அம்மா?" என்று கேட்டான் கிஷான்.


"அது தப்பு இல்லையே? எல்லாரும் நான் உன் மாமியார் மட்டுமில்லை, அம்மாவாகவும் பார்த்துப்பேன்னு சொல்லனும்னு, அவசியம் இல்லையே? அவளுக்குத் தேவையான அன்பை, மாமியார் ஸ்தானத்தில் இருந்து கொடுத்துட்டுப் போறேன்" என்று எடுத்துக் கூறினார் அவனுடைய அன்னை.


"கரெக்ட் லேகா ம்மா" என்று மனைவியின் கருத்தை ஒப்புக் கொண்டார் காஞ்சியப்பன்.


"நீங்க தான முக்தாகிட்ட இந்த விஷயத்தை ஆரம்பிச்சீங்க? இப்போ நீங்களே கன்வின்ஸ் ஆகிட்டீங்க! அதெப்படி ம்மா?" என்று ஆர்வத்தை அடக்க முடியாமல் கேட்டு விட்டான் கிஷான்.


"எனக்குக் கேட்க உரிமை இருந்துச்சு கேட்டேன். அவளுக்கு மறுக்க உரிமை இருந்துச்சு, நியாயமான காரணம் இருந்துச்சு மறுத்துட்டா! அதை நான் அக்சப்ட் செய்துக்க தான வேணும்? சண்டை போடவா முடியும்?" என்று நிதர்சனத்தைக் கூறினார் சித்ரலேகா.


"சண்டை எல்லாம் போட்றாதீங்க ம்மா" எனப் பதட்டமானான்.


"கண்டிப்பாக நடக்காது விடுடா" என்றார் காஞ்சியப்பன்.


மௌனாவின் இல்லத்தில் தான் இருந்து கொண்டு, ஒவ்வொரு சடங்கைப் பற்றியும் அன்னபூரணியிடம் கேட்டுக் குறிப்பெடுத்துக் கொண்டிருக்கிறாள் முக்தா.


"ப்ரக்னென்ட் ஆக இருந்தால் தான் வளையல் போட்டு வளைகாப்பு நடக்கும்னுப் பார்த்துருக்கேன். கல்யாணத்துக்கும் அதெல்லாம் நடைமுறையில் இருக்கா என்ன?"


"இருக்கு ம்மா" என அதற்கான விளக்கங்களைத் தெரிவித்தார் மௌனாவின் தாய் அன்னபூரணி.


தீபக் மற்றும் அவனது தாய் லலிதா செய்த அட்டகாசங்களால் தனக்குள் சுருங்கிப் போயிருந்தாள் அகதா.


மௌனாவைப் போல , அவளை வலுக்கட்டாயமாகத் தங்களது பேச்சில் இழுத்துக் கொண்டாள் முக்தா.


"பொண்ணு வீட்டு சைட் சொந்தக்காரங்களே இல்லாமல் இருந்தால் என்னப் பண்றது ம்மா?"


"முக்கியமான சடங்குகளைச் செய்றதுக்கு மட்டும் தூரத்து உறவினர்கள் கிட்ட கேட்டு அனுமதி வாங்கிப்பாங்க டா. ஆனால், ஒரு சிலர், தன்னோட சொந்தப் பிள்ளைங்களுக்குத் தான் முதலில் இதெல்லாம் பண்ணனும்னு முடிவாக இருப்பாங்க. அவங்களை டிஸ்டர்ப் பண்ணி விடக் கூடாது" என்று விடையளித்தார் அன்னபூரணி.


"ஓகே ம்மா" என்றாள் முக்தா.


ஒரு சில குடும்பங்களில் தாயோ, தந்தையோ அவர்களது இணையை இழந்திருந்தால், அவர்களுக்கு மூத்தவர்களோ, இளையவர்களோ தங்கள் உடன்பிறந்தவர்களுடைய பிள்ளைகளைக் கன்னியாதானம் செய்து கொடுக்கும் பொறுப்பை முன் வந்து ஏற்றுக் கொள்வர்.


ஆனால், ஒரு சிலர் தங்களது சொந்தப் பிள்ளைகளுக்குத் தான் முதல் உரிமை என்று நினைத்திருப்பர். அதையும் குற்றம் சொல்வதற்கில்லை.


இவற்றையெல்லாம் செய்வதற்குத் தனக்கு இப்படியான சொந்தங்கள் இருக்கிறார்களா? என்று யோசித்தாள் முக்தா.


- தொடரும்

என்னம்மா இப்படி எழுதி இருக்கீங்க? அப்பாவையோ , அம்மாவையோ இழந்தவங்களுக்கு அவங்களோட வாழ்க்கைத் துணை தான் அந்த ஸ்தானத்தில் இருந்து, அன்பு செலுத்துவாங்க, அப்படின்றக் கருத்தை நான் கண்டிப்பாக மதிக்கிறேன். ஆனால், இந்த யூடியில் நான் சொல்லி இருக்கிற மாதிரியும் சிலர் இருக்காங்க ஃப்ரண்ட்ஸ். அதையும் இல்லைன்னு மறுத்துச் சொல்லி விட முடியாது. அப்பறம், இந்தக் கன்னியாதானம் செய்றதைப் பத்திச் சொன்னதும், என்னோட ஃப்ரண்டோட மேரேஜில் நடந்த உண்மைச் சம்பவம் தான்.

புரிதலுக்கு நன்றி 💞

 

Shalini shalu

Moderator
'அப்படி யாரும் தனக்கு இல்லை' என்று உணர்ந்து, குறிப்பெடுப்பதைத் தொடர்ந்தாள் முக்தா.


"அம்மா! அவங்களுக்கு அடுத்ததைச் சொல்லுங்க. ஒரே விஷயத்திலேயே இருக்கீங்களே!" என்றாள் மௌனா.


அதன் பின்னர், இருந்த சடங்குகளை அவர் சொல்லச் சொல்லப் பட்டியலிட்டு முடித்து,


"எல்லாமே லிஸ்ட் எடுத்தாச்சும்மா" என்று மலர்ச்சியுடன் கூறினாள்.


"இப்போ ஓகேயா?" என அவளது கையிலிருந்த வெள்ளைத் தாளையும், பேனாவையும் வாங்கி ஓரத்தில் வைத்து விட்டாள் மௌனா.


அவர்களுக்கு நன்றி தெரிவித்தாள் முக்தா.


மஹதன் மற்றும் மௌனாவின் நிச்சயத்திற்கு, எவ்வளவு கூட்டம் வந்தாலும், தாராளமாகத் தாங்கும் அளவிற்கான, எல்லா இடங்களிலும் ஏஸி பொருத்தியிருந்த, விசாலமான கூடத்தைத் தான் புக் செய்திருந்தனர்.


அந்தச் செலவுகள் யாவற்றையும் தங்கள் பொறுப்பில் தான் விட வேண்டும் என்று உறுதியாக கூறி விட்டனர் சிவமணியும், அன்னபூரணியும்‌.


திருமூர்த்தி மற்றும் மஹதனின் அலுவலகங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அனைவரையும் நிச்சயத்தார்த்தத்திற்கு வரவேற்று இருந்தனர்.


அதே போல, முக்கியஸ்தர்கள் எல்லாரையும் அழைத்திருந்தனர் அக்குடும்பத்தினர்.


மௌனாவுடைய பெற்றோரின் சொந்தங்கள் சிலர், தாங்களாகவே முன் வந்து அவளுடைய நிச்சயத்தைப் பார்க்க வந்திருந்தனர்.


அதிகாலையிலேயே தங்கள் மகனுடன் வந்திருந்தனர் சித்ரலேகாவும், காஞ்சியப்பனும்.


அவர்களுக்கு முன்னதாக ஆங்கே விஜயம் செய்திருந்தார் நீலகண்டன்.


"ஹாய் அங்கிள்" என அவரையும் வரவேற்று, தன் தாய், தந்தையுடன் உட்கார வைத்து விட்டு,"மஹதனோட ரூமுக்குப் போறேன்" என்றான்.


"மாப்பிள்ளை! என் பொண்ணு,

மௌனாவோட ரூமுக்குப் போய், ரொம்ப நேரமாச்சு. அவளை இவங்கப் பாக்கனும்ல? சோ, நான் வர சொன்னேன்னு கூப்பிட்டு வாங்க"என்று கூறினார் நீலகண்டன்.


"ஓகே அங்கிள்" என மஹதனுடைய அறைக்கு விரைந்தான் கிஷான்.


சமூகத்தில் முக்கியத் தொழிலதிபரின் மகனுடைய நிச்சயத்தார்த்தம் எனும் போது, அவர்களுடன் தோழமை பாராட்டுபவர்கள் மட்டுமில்லாமல், போட்டியாளர்களும் கூட மண்டபத்திற்கு வருகை புரிந்திருந்தனர்.


பார்வைக்குத் தெரிந்த, தெரியாத இடங்களில் எல்லாம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தியிருந்தார்கள்.


மஹதனுடைய மெய்க்காப்பாளன் அவற்றில் இருந்து கண்களை விலக்காமல், கண்காணித்துக் கொண்டிருந்தான்.


"நண்பா" என்ற குரலுடன் மஹதனுடைய அறைக்குள் நுழைந்தான் கிஷான்.


"வாடா.." என்று அவனை அழைத்து,


"செக்யூரிட்டி செக்கிங் முடிஞ்சுதாடா?" என்றான்.


"கம்ப்ளீட் செக் பண்ணிட்டேன் டா. எல்லாம் நம்ம கன்ட்ரோலில் தான் இருக்கு"


"அப்போ சரி" எனத் தான், தாயாராகி விட்டதைப் பெற்றோரிடம் கால் செய்து தெரிவித்தான் மஹதன்.


"நான் முக்தாவைப் பார்க்கப் போறேன்" என்று நண்பனின் அறையிலிருந்து ஜூட் விட்டான்.


அப்போது தான் மௌனாவிற்கும் அலங்காரங்கள் முடிந்திருந்தது.


அதனால் அவளது அறையை விட்டு வெளியேற ஆயத்தமானாள் முக்தா.


கிஷான் தனது செல்பேசிக்கு அழைக்கவும்,

"மேக்கப் முடிஞ்சதுங்க. நான் அப்பாவைப் பார்க்க ஹாலுக்குத் தான் வந்துட்டு இருக்கேன்" என்றாள்.


"அவரும், என் அப்பா, அம்மாவும் சேர்ந்து தான் உட்கார்ந்து இருக்காங்க‌. உன்னை அழைச்சுட்டு வர சொல்லி மாமா என்னை அனுப்பினார்"


சிறு கால இடைவெளிக்குப் பிறகு, இவனைப் பார்த்ததும், அருகே வந்தாள்.


"மாமா உன்னைத் தேடுறாங்க முகி. என் பேரன்ட்ஸ் வந்துட்டாங்க" என்றதும்,


தந்தையின் அழைப்பு எதற்காக என்பதை உணர்ந்து,"ஓஹ்…! ஷ்யூர் கிஷான்" என்று அவனுடன் வேகமாக நடை போட்டாள் முக்தா.


"வெல்கம் ட்ரிங்க் கொடுத்தாங்களாடா?" என்று நீலகண்டனிடம் கேட்டார் திருமூர்த்தி.


"எல்லாம் வந்துடுச்சு. நாங்களும் ஜுஸ் குடிச்சிட்டுத் தான் பேசிக்கிட்டு இருந்தோம்" எனவும்,


"அரேன்ட்ஜ்மெண்ட்ஸ் எல்லாம் மௌனாவோட அப்பா,அம்மா தான் பண்ணியிருக்காங்க" என்று பெருமையுடன் கூறினார் திருமூர்த்தி.


"அப்படியா? கிளாஸ்ஸியா (classy- உயர்தரமான, நடை நயம் மிக்க, நாகரிகப் பாணியும் கொண்ட) இருக்கு!" என்று புகழ்ந்தார் காஞ்சியப்பன்.


"ஆமாம். செலவு பத்தி நீங்க எதுவும் கண்டிஷன் போடலையா?" என்றார் சித்ரலேகா.


"இல்ல ம்மா‌. ஏற்கனவே மஹத் பெண்ணோட டிரெஸ், ஜூவல்ஸ்ன்னு எதிலும் அவங்களைத் தலையிட விடலை. அந்த ஆற்றாமை அவங்களுக்கு இருக்கு. அதனால், நிச்சயத்தார்த்த ஏற்பாடுகளில் எதுவும் சொல்லக் கூடாதுன்னு ஒப்பந்தம் போட்டுட்டாங்க" என்று விவரித்தார் திருமூர்த்தி.


அப்போது, கிஷானுடன், முக்தாவும் வந்து விடவே.


மருமகளைக் கண்டதும், "முகி! இயர்லி மார்னிங் வந்துட்டியா? பொண்ணு அலங்காரம் முடிஞ்சிதா?" என்று விசாரித்தார் சித்ரலேகா.


"ஆங்! முடிஞ்சு தான் நான் வந்துட்டு இருந்தேன் அத்தை. அப்போ இவரோட ஃபோன் காலும் வர, அப்படியே இங்கே வந்தாச்சு" என்று மொழிந்தாள் முக்தா.


"மஹதன் ரெடி ஆகிட்டானா கிஷான்?" என்று தன் மகனைப் பற்றி அவனிடம் விசாரித்தார் திருமூர்த்தி.


"அவனும் தயார் ப்பா"


அப்படியென்றால் உடனே கணையாழிகளை மாற்றிக் கொள்ளும்

வைபவத்தை ஆரம்பிக்க வேண்டுமே! என்று தன் சம்பந்தியிடம் கூறினார் திருமூர்த்தி.


சிவமணி,"இதோ சொல்றேன் சம்பந்தி" என்று தன் மனையாளைத் தேடிப் போனார்.


அவரது துணைவி, கௌசல்யாவுடன் அமர்ந்திருப்பதைப் பார்க்கவும்,


"பூரணி! மாப்பிள்ளையும், பொண்ணும் ரெடி. மோதிரத்தைப் போட்ற சடங்கை நடத்திடலாமா?" என்றார் சிவமணி.


"சரிங்க. வாங்க சம்பந்தி" எனக் கௌசல்யாவையும் அழைத்துப் போனார்கள்.


"கௌசி! மோதிரங்கள் உங்கிட்ட தான் இருக்கு. எடுத்துட்டு வா சீக்கிரம்!" என்று மனைவியிடம் கூறிவிட்டு, மஹதனைப் பார்க்கச் சென்றார் திருமூர்த்தி.


அன்னபூரணியும், தனது மகளைப் பாராத்து வரப் போனார்.


"அகிம்மா! மோதிரம் போட்ற நேரம் வந்தாச்சு.கூப்பிட்றப்போ, இவளை மேடைக்கு அழைச்சிட்டு வா"என்று அறிவுறுத்தினார்.


"முகி! என் கூட வா" எனத் தன் கைப்பையை எடுத்துக் கொண்ட கௌசல்யா, அவளையும் உடன் அழைத்துச் சென்றார்.


ஏனென்று கேட்காமல் அவரைப் பின்பற்றினாள் முக்தா.


"நீ தான் இந்த எங்கேட்ஜ்மெண்ட் ரிங்ஸை, மேடையில் வச்சு, அவங்க ரெண்டு பேருக்கும் கொடுக்கனும்" என்று உரிமையாக அவளுக்கு உத்தரவிட்டார் கௌசல்யா.


மஹதனைத் தான் விரும்பியதைச் சபையில் இருந்தவர்கள் அத்தனைப் பேருக்கும் தெரியும். அப்படியிருக்க, இதைச் செய்தால், அவர்கள் மத்தியில் இருந்து, கண்டிப்பாக ஏதாவது பேச்சு வரும்.அதையெல்லாம் தெரிந்தும் கூடவா, இவர் தன்னிடம் இவ்வாறு சொல்கிறார்! என்று திடுக்கிட்டது அவளுக்கு.


"என்ன முழிச்சுப் பாக்குற? நீ தான மணப்பெண் தோழி? அப்போ நீ தான் கொடுக்கனும்" என்று புன்னகை செய்தார் கௌசல்யா.


மணப்பெண் தோழி என்றால் மௌனாவுடன் மட்டும் இருந்தால் போதும், மஹதனின் பக்கமே செல்லத் தேவையிராது என்று தான் எண்ணினாள் முக்தா. ஆனால், இருவருக்குமான மோதிரத்தைத் தான் கொடுக்க வேண்டும் என்று விழைகிறார் கௌசல்யா. இது எதற்காக? என யோசித்தபடி அவள் தயங்கவும்,


"நீ யோசிக்கிறது எதுக்காகன்னுப் புரியுது முகி. அவங்களோட எண்ணத்தை மாற்றத் தான், இப்படி சொல்றேன்" என்க,


அவரைக் குழப்பமாக ஏறிட்டாள் முக்தா.


"மஹதனோட மனசில் நீயும் இல்லை, உன் மனசில் அவனும் இல்லை. ரெண்டு பேரும் ஃப்ரண்ட்ஸ் ஆகிட்டீங்க. உன்னோட கையால் அவங்களுக்கு இதைச் செய்தால், அவங்களோட தவறான அபிப்ராயம் மாறிடும். மத்தவங்களைப் பத்திக் கவலை எதுக்குன்னுத் தோனும்‌. உன்னைப் பத்திக் கேவலமாகப் பேசினவங்களுக்குக் கொஞ்சமாகப் பதிலடி கொடுத்தால் உனக்கும் நிம்மதியாக இருக்குமே! அதான்,

அது மட்டுமில்லாமல், உனக்குக் கிஷான் கிடைச்சதையும் எல்லாருக்கும் தெரியப்படுத்தனும். அது என் மகனோட நிச்சயத்தில் நடக்கனும்னு நான் ஆசைப்பட்றேன்டா ம்மா!" என்று விவரமாக கூறினார் கௌசல்யா.


அவருடைய நிதானமானப் பேச்சைக் கேட்டு, அவளுக்கும் அதே தான் தோன்றிற்று.


இத்தனைக் கோடி மக்கள் பார்க்கும் நேரலையில், அவதூறுப் பேச்சுக்களைக் கேட்டுக் கண்ணீர் வடித்த தனக்கு நியாயம் கிட்டப் போகிறது அல்லது குறைந்தது நிம்மதியாவது கிடைக்கப் போகிறது என்று அவரது விழிகளைச் சந்தித்தவள்,


"சரிங்க ஆன்ட்டி" எனக் கௌசல்யாவிடம் இருந்து, கணையாழிகளைக் கைப்பற்றினாள் முக்தா.


"நண்பா! மௌனாகிட்டப் பேசிட்டு வர்றேன்" என்று செல்பேசியுடன் சற்று விலகிச் சென்றான் மஹதன்.


அப்போது, "மோதிரங்களைக் கொண்டு வந்துட்டாங்க. அவன் எங்கே கிஷான்?" என்று கேட்டார் திருமூர்த்தி.


"பொண்ணுக் கூட ஃபோன் பேசப் போயிருக்கான் ப்பா" என்றான்.


"அழிச்சாட்டியம் பண்றான்" எனச் சலித்துக் கொண்டு மனைவியைத் தேடிக் கிளம்பினார்.


"மஹத்! நிச்சயம் நடக்கிற நேரத்தில் இதென்னது?" என்று பதட்டமானாள் அவனது காதலி.


"மௌனா! நீ பதட்டமாக இருப்பன்னுத் தெரியும். ஏதாவது பேசி கூல் பண்ணி, மேடைக்கு வர வைப்போம்னு பார்த்தால், இன்னும் நர்வஸ் ஆகுறியே!" என்று குறுஞ்சிரிப்புடன் கூறினான் மஹதன்.


"தானாகவே பதட்டம் வந்துடுது ங்க" என்று பெருமூச்சு விட்டாள்.


"அதைத் தடுத்து நிறுத்துறா மாதிரி எதாவது சொல்லவா?" என்று விஷமத்துடன் வினவினான்.


"சொல்லுங்க ப்ளீஸ்!" என அவள் ஊக்குவிக்கவும்,


"ஐ லவ் யூ மௌனா! இந்தப் பதட்டத்தில் என்னைக் காதலோட பார்க்கிறதை மறந்துடாதம்மா ப்ளீஸ்! இன்னும் நீ எனக்குப் புரபோஸ் கூட செய்யலை" என்றான் மஹதன்.


அவன் காதலைச் சொன்னதிலேயே பதட்டம் குறைந்து, மௌனாவின் விழிகளில் வெட்கம் துளிர்த்தது.


"நான் புரபோஸ் பண்ணுவேன்! ஆனால் இப்போ இல்லைங்க!" என்று அதே வரியை அட்சுப் பிசகாமல் சொல்லி அழைப்பைத் துண்டித்தாள் மௌனா.


தன்னவளுடைய பதட்டத்தைத் தணித்தவனுக்கும், உற்சாகமும், ஆரவாரமும் அதைவிட, காதலும், ஆசையும் பெருகிற்று.


இங்கோ,"மஹதனோட மோதிரத்தை எங்கிட்ட கொடு முகி?" என்று தன் கரத்தை அவள் புறம் நீட்டினான் கிஷான்.


"அது…" என்று தயங்கி நின்றாள் முக்தா.


"என்னம்மா?" என்று கனிவுடன் கேட்டான்.


"நான் தான் இரண்டு பேருக்கும் இதைக் கொடுக்கனும்னு கௌசல்யா ஆன்ட்டி கேட்டுக்கிட்டாங்க கிஷான்" என்றாள்.


"அப்போ நீயே கொடு. இதுக்கு ஏன் தடுமாறுற!" என்றவாறு அவளைச் சமாதானப்படுத்தினான் கிஷான்.


"அதுக்கு அவங்க சொன்னக் காரணம்?" என்று முழுவதும் சொல்லி முடித்தாள் முக்தா.


"கௌசல்யா ம்மா சரியாகத் தான் டிஸைட் செய்திருக்காங்க. வா" என மேடைக்குக் கீழே அழைத்துச் சென்று இவ்விஷயத்தை மற்றவர்களிடமும் போட்டுடைத்தான் கிஷான்.


"அவங்களுக்கு உண்மையிலேயே நல்ல மனசு" எனத் தன் மகளிடம் சொன்னார் நீலகண்டன்.


"இன்னும் மஹதனும்,மௌனாவும் ஃபோன் பேசிக்கிட்டு இருக்கிறாங்க" என்றார் திருமூர்த்தி.


"இந்நேரம் பேசி முடிச்சிருப்பாங்க அப்பா" என்றான் கிஷான்.


"அதோ அகதா வர்றாங்க" என்று கூறினாள் முக்தா.


"மௌனாவை மேடைக்குக் கூப்பிட்டு வா அகிம்மா. நீயும் கூட போ முகி" என்றார் அன்னபூரணி.


"நீ உன் நண்பனை அழைச்சிட்டு வா" என்று கிஷானிடம் சொன்னார் காஞ்சியப்பன்.


அங்கு குழுமியிருந்தவர்கள் எல்லாரும் மேடையைப் பார்க்க ஆரம்பத்தனர்.


உயர்தர வகையிலான கோட்,சூட் அணிந்து, ஸ்டைலாக நடந்து வந்தான் மஹதன். அவனுக்கு நேரெதிராக இருந்தப் படிகளில், நுணுக்கமான வேலைப்பாடுகளுடன், அவளுக்கென்றே கச்சிதமாக வடிவமைத்திருந்த உடையை உடுத்தி இருந்த மௌனா, தன் மென் பாதங்களை வைத்து ஏறி வந்தாள்.


காதல் பார்வையால் தாக்கியவாறு வந்த மௌனாவின் கண்களில், சிறு பதட்டமும் இல்லாதது கண்டு, நிம்மதியுற்றான் மஹதன்.


அவன் நினைத்ததை நடத்திக் காட்டி விட்டான் அல்லவா!


மைக்கை வாங்கி,"ஹலோ! லேடீஸ் அண்ட் ஜென்டில்மென்! என்னோட ஒரே சன் மஹதனுக்கும், சிவமணி அண்ட் அன்னபூரணியோட டாட்டர் மௌனாவுக்கும் நடக்கப் போற இந்த எங்கேட்ஜ்மெண்ட்டுக்கு வந்திருக்கிற உங்களை மனமார வரவேற்கிறேன்" என்று தன் குரலை உயர்த்திப் பேசினார் திருமூர்த்தி.அதை ஏற்றுக் கொண்டதற்கு சாட்சியாகப் பலத்தக் கரகோஷம் எழுந்தது.


மௌனாவின் பெற்றோரான சிவமணிக்கும், அன்னபூரணிக்கும் கொஞ்சம் கூச்சமாக இருந்தது. இவ்வளவு கூட்டத்தைப் பார்த்து மிரண்டு போயிருந்தனர்.


அவர்களிடம் மெதுவாக,"உங்களோட பொண்ணும் இதே நிலையில் தான் இருப்பா. உங்கப் பதட்டத்தை வெளியே காட்டிக்காதீங்க, நிமிர்ந்து நில்லுங்க" என்று உரைத்தாள் அகதா.


அதைக் கேட்டுத் தானும் திரும்பி, அவர்களைப் பார்த்து, தைரியம் கொள்ளுமாறு புன்னகைத்தாள் மௌனா.


"இப்போ மோதிரத்தை மாத்திக்கப் போறாங்க" என்று திருமூர்த்தி அறிவிக்கவும்,


கௌசல்யா தந்தவற்றை விரிந்த சிரிப்புடன் மஹதன் மற்றும் மௌனாவின் கரங்களில் அளித்தாள் முக்தா.


அந்தக் காட்சியைப் பார்த்ததும், கீழிருந்த ஒரே ஒரு சிலர் தங்களுக்குள் பேசிக் கொள்ள, அதைக் கடந்து செல்லும் வண்ணம், மௌனாவின் தோளைப் பற்றி, அவளை முன்னேறிச் செல்ல உந்தினாள்.


"நண்பா! போ" என்று வாழ்த்தியவாறு மஹதனை அனுப்பினான் கிஷான்.


கணையாழிகளைக் கையில் வாங்கி, ஒருவருக்கொருவர் மற்றவருடைய மோதிர விரல்களில் அணிவித்து மகிழ்ந்தனர் மணமக்கள்.


"லவ் யூ மஹத்" என்று அவன் தலைகீழாய் நின்று தண்ணீர் குடிக்காத குறையாக கேட்டுப் பார்த்தும், சொல்லாமல் வக்கனைக் காண்பித்துக் கொண்டிருந்த மௌனாவோ, இன்று இப்படியான ஒரு சூழலில், மொழிந்திருக்க, திகைப்படைந்து நின்று விட்டான் மஹதன்.


அவள் தன்னவனுக்கு மட்டும் கேட்கும் விதமாக கூறியிருந்ததால், மேடையில் நின்றிருந்தவர்களும், கீழே அமர்ந்திருந்தவர்களும் மணமக்களுடைய அலாதி அமைதியின் காரணம் என்னவோ? என்று தங்களது பார்வையைக் கூர்மையாக்கினர்.


"டேய்! என்னடா ஃப்ரீஸ் ஆகி நிக்கிற? மௌனா என்ன சொன்னாங்க?" என்று நண்பனின் தோளைத் தட்டினான் கிஷான்.


மௌனாவின் கன்னம் ஏன் இவ்வளவு சிவந்துள்ளது? முகத்தில் போட்ட அலங்காரத்தில் ஏதாவது சேராமல் போய் விட்டதா அவளுக்கு? என்று அவளை ஆராய்ந்தவள்,


"முகத்தில் போட்டிருக்கிற மேக்கப் ஸ்கின்னுக்கு ஒத்துக்கலையா?" என்று மணப்பெண்ணிடம் வினவினாள் முக்தா.


"அச்சோ! இல்லைங்க" என்று அவளது காதில் ஓதினாள் மௌனா.


அதன்பின் தான் முற்றிலும் புரிந்தது அவளுக்கும், அகதாவிற்கும்.


அவளைச் சீண்டுவதற்காக சிரித்து வைத்தவள், கிஷானிடம் உண்மையை உரைத்து விட்டாள் முக்தா.


கீழிருப்பவர்களுடைய முணுமுணுப்பு அதிகமாகி விடவும்,


"கைஸ்! ஒன்னும் இல்லை. கொஞ்சம் அதிகமாக எக்ஸைட் ஆகிட்டாங்க. அவ்ளோ தான்" என்று பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தான் கிஷான்.


தன் பெண்ணின் வதனமும், மாப்பிள்ளையுடைய குறுஞ்சிரிப்பும், பெற்றோருக்கு நடந்ததைச் சொல்லாமலேயே உணர்த்தியது.


"ஸ்டேஜையே இரண்டு பண்ணிட்டு இருக்காங்க!" என்று சிரித்தார் சித்ரலேகா.


"ஆமாம் லேகா. மஹதனைப் பார்த்தால் வெட்கப்படுறா மாதிரி தெரியுது" என்றார் அவரது கணவர்.


"மௌனா ஏதாவது சொல்லி இருப்பா. அதான் ரியாக்ட் செய்திருக்கான் போல!" என்று விஷயத்தைக் கணித்து விட்டார் நீலகண்டன்.


"கொஞ்ச நேரத்தில் களேபரம் பண்ணிட்டீங்க" எனச் செல்லமாக இருவரையும் கடிந்து கொண்டார்கள் அவர்களுடைய பெற்றோர்கள்.


அலங்கரிக்கப்பட்ட நாற்காலியில் சமர்த்தாக அமர வைக்கப்பட்டு, சபையினரைப் பார்த்துக் கை கூப்பி வணங்கினர் மணமக்கள்.


"இப்படியா பண்ணுவ?" என்று மௌனாவின் காதில் கிசுகிசுத்தான் மஹதன்.


"நானும் அதிரடியாக இதைச் செய்யனும்னு யோசிச்சிட்டு இருந்தேன். இப்போ திருப்தியாக இருக்குங்க" என்று கண் சிமிட்டினாள்.


"இப்பவும் முணுமுணுத்துப் பேசாமல் சபையில் இருக்கிறவங்களைப் பார்த்து நேராக உட்காருங்க" என்று அறிவுரை வழங்கினார் அன்னபூரணி.


முக்கியப் புள்ளிகள் தவறாமல் வந்திருந்ததால், அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளவே பாதி நாள் போயிற்று.


குடும்பத்துடன் ஓரிரண்டு புகைப்படங்கள் தான் எடுக்க முடிந்தது.


ஆனால், மேலே சுற்றிக் கொண்டிருந்த ட்ரோன் கேமராக்கள் நிச்சயத்தார்த்த நிகழ்வுகளை முழுவதுமாகப் படமெடுத்து தள்ளி இருக்க அவற்றையும் கண்காணித்துக் கொண்டு இருந்தனர் மெய்க்காப்பாளர்கள்.


சாப்பாட்டிற்கு பஃபே முறையை வைத்திருந்ததால், அனைவரும் தங்களுக்கான உணவுகளைத் தட்டில் எடுத்துக் கொண்டு, ருசித்து உண்டனர்.


மௌனாவும் , மஹதனும் உணவுண்ண, கிஷானுடன் பேசிக் கொண்டே உண்டு கொண்டிருந்தாள் முக்தா.


  • தொடரும்

 

Shalini shalu

Moderator
அகதாவுடன் அமர்ந்திருந்த முக்தாவிற்கு, யாரும் பாராமல் தன்னை ரசிக்கும் கிஷானின் விழி வீச்சை எதிர்கொள்ளவே, பிரயத்தனமாக இருந்தது.


கண்களால் போதும் என்று கெஞ்சினாலும் பலனில்லை‌.


ஒருவாறு சாப்பாடு முடிந்து, மீண்டும் மேடை ஏற்றப்பட்டார்கள் ஜோடிகள்.


அந்த நேரம், தற்காலிகமாக அகதா கீழே சென்றிருந்ததால், முக்தாவை ஒட்டி வந்து நின்று கொண்டான் கிஷான்.


அவனை அவளருகில் பார்த்தவர்கள் எல்லாரும்,"இந்தப் பையன் அப்போதிலிருந்தே நீலகண்டனோட பொண்ணைத் தான் பாத்துட்டு இருந்தான். இப்போ பக்கத்திலேயே போய் நின்னுட்டான்" என்று பேசிக் கொண்டனர்.


அவையெல்லாம் கௌசல்யாவின் செவிகளையும் அடைந்தது.


"சித்ரலேகாவோட பையன் தான? ஆனால், அந்தப் பொண்ணு கௌசல்யாவோட பையன் பின்னாடியே தான் சுத்திட்டு இருந்தாள், இப்போ இவனைப் பிடிச்சிட்டாளா?" என்று அவர்களை நோட்டம் விட்டுக் கொண்டே பேசினர்.


இதைக் கேட்டுக் கொண்டு இன்னும் அமைதியாக இருக்கலாகாது என்ற வண்ணம், அவர்களை நோக்கிய கௌசல்யா,"ஹலோ மிசஸ்.கரீஷ்மா! நீங்கப் பேசினதை எல்லாம் கேட்டுக்கிட்டு தான் இருந்தேன்.முக்தாவுக்கு அந்தப் பையனைத் தான் கல்யாணத்துக்குப் பேசி இருக்கோம். மஹதனோட மேரேஜ் முடிஞ்சு, அடுத்து இவங்களுக்குத் தான்" என்று புன்னகைக்கவும்,


அந்தக் கரீஷ்மா என்பவர், அவருக்குத் திகைப்பு ஏற்படாமல், "ம்ம். சந்தோஷம் மிசஸ்.கௌசல்யா! ஆனால், சித்ரலேகாவுக்கு இதில் இஷ்டமா?" என்று அப்போதும் ஏளனத்துடன் தான் கேட்டார்.


"இஷ்டம் தான் ங்க‌‌. முதலில் இப்போ நடக்கிற சுப நிகழ்ச்சியைப் பாருங்க. மத்ததை அஃபிஷியல் ஆக நியூஸ் வெளியிடுவோம்" என்று பேச்சைக் கத்தரித்து விட்டார் கிஷானுடைய அன்னை.


ஒரு வழியாக, மாதர் சங்கத்தில் தன்னைப் போன்ற ஒரு உறுப்பினராக இருக்கும் பெண்மணியிடம் விஷயம் சேர்ந்து விட்டது. இனி, அவரே இதை மற்றவர்களுக்குப் பரப்பி விடுவார். தன் வேலைப் பாதியாகி விட்டது என்ற மமதையில் குறுஞ்சிரிப்புடன் மேடையை நோக்கித் திரும்பிக் கொண்டார் கௌசல்யா.


அதைக் கணவனிடமும், நீலகண்டனிடமும் கூட சொல்லி விட்டார்.


அவரது சாமர்த்தியத்தை எண்ணிப் பெருமிதம் அடைந்தார் திருமூர்த்தி.


தன்னுடைய பெண்ணிற்காக யோசித்து இப்படியொரு விஷயத்தைச் செய்துள்ளார் என்ற பூரிப்பில், கௌசல்யாவிற்குத் தன் நெஞ்சார்ந்த நன்றியைப் பறை சாற்றினார் நீலகண்டன்.


"இருக்கட்டும் அண்ணா" எனக் கூறி விட்டார்.


உணவுண்டுத் தாமதமாக வந்தார்கள் சித்ரலேகாவும்,காஞ்சியப்பனும்.


கௌசல்யாவிடம் மூக்கு உடைப்பட்டக் காரணத்தால், கொதிநிலையில் இருந்த அந்தப் பெண்மணியின் அடுத்த இலக்கு சித்ரலேகாவாக இருந்தார்.


மடை திறந்த வெள்ளம் போல், கௌசல்யா கூறியதை அவரிடம் சொல்லியவர்,"இது உண்மையா மேடம்?" என்று வேறு அதிசயித்துக் கேட்டார் அப்பெண்.


"எங்கப் பையனோட விருப்பத்தைத் தவிர, வேறெதுவும் எங்களுக்குத் தேவையில்லை மிசஸ்.கரீஷ்மா" என்று பதிலளித்தார் சித்ரலேகா.


"ஆனால், அந்தப் பொண்ணு மேலேயா, உங்கப் பையன் விருப்பத்தை வைக்கனும்?" என்று ஏதோ தன்னுடைய மகனே இந்தக் காரியத்தைச் செய்தது போலப் படம் காட்டினார்.


"ப்ச்! அதனால் உங்களுக்கு ஏன் கவலை? மேடையைப் பாருங்க. இப்போவே இவ்ளோ பொருத்தமாக இருக்காங்களே! கல்யாண நாள் அன்னைக்கு இன்னும் கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருப்பாங்களே!" என்று மெச்சிக் கொண்டு இருந்தார் சித்ரலேகா.


தன் பேச்சு அவரையும் அசைக்கவோ,தாக்கவோ இல்லையென்பதை உணர்ந்த கரீஷ்மாவிற்கு முகத்தில் ஈயாடவில்லை.


அதைப் பார்த்து, சித்ரலேகாவிற்கு 'ஹைஃபை' கொடுத்துக் கொண்டார் கௌசல்யா.


அதனாலும், அந்த அம்மையாருக்கு முகமெல்லாம் கோவைப் பழமாகச் சிவந்து வெளிறிப் போயிற்று.


"ம்ஹூம்!" என்ற சீற்றத்துடன் இருக்கையில் இருந்து எழுந்து சென்று விட்டார் கரீஷ்மா.


கால் வலிப்பது போலிருந்ததால் அவ்வப்போது, அலங்கரிக்கப்பட்ட சோஃபாவில் உட்கார்ந்தும், வலியைச் சமாளித்துச், மலர்ச்சியுடன் தங்களைக் காட்டிக் கொண்டார்கள் மஹதனும்,மௌனாவும்.


அவர்களுக்குக் குடிக்கவென்று பழச்சாறுகளைக் கொடுத்து சோர்வைப் போக்கிக் கொண்டு இருந்தனர் முக்தா மற்றும் கிஷான்.


இடையிலும், "முகி! கொஞ்ச நேரமாவது உங்க அப்பா கூட போய் உட்காரும்மா‌. அவர் ஏதாவது நினைச்சுக்கப் போறாரு!" என்று அவளிடம் விண்ணப்பமிட்டார் அன்னபூரணி.


"நீங்க சொன்னதுக்காக வேணும்னா போறேன். ஆனால், இங்கே நின்னு வேலைப் பாக்குறதுக்குத் தடைச் சொல்ல மாட்டார் என்னோட அப்பா" என்று தன் தந்தையைப் பற்றி அவரிடம் பெருமிதமாகக் கூறி விட்டு, மேடையிலிருந்து இறங்கி நீலகண்டனிடம் வந்தாள் முக்தா.


"என்னாச்சு டா? ஏன் வந்துட்ட?" என்றார் அவளது தந்தை.


அவரிடம் அன்னபூரணியின் வேண்டுகோளைச் சொன்னாள் மகள்.


"ஓஹ்! சரி. கால் வலிக்கும். கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டுப் போடா" எனத் தன்னுடன் அவளை அமர வைத்துக் கொண்டார் நீலகண்டன்.


"அவங்களை விட உன்னையும், கிஷானையும் தான், எல்லாரும் நோட் பண்ணிட்டு இருக்கிறாங்கடா" என்று கூறினார் சித்ரலேகா.


"லேடீஸ் கிளப் ஆளுங்களுக்குத் தீயாக விஷயம் கசிஞ்சிருச்சு லேகா" என்று தன் செல்பேசியில் இருந்தப் புலனத்தில், குறிப்பிட்ட ஒரு குழுவில் வந்து குவிந்திருந்த குறுஞ்செய்திகளை அவருக்குக் காட்டினார் கௌசல்யா.


"இப்போவே படிக்க வேண்டாம் கௌசி. வீட்டுக்குப் போய், எல்ல மெசேஜ்ஜையும் வாசிப்போம்" என்று சொல்லிச் சிரித்தார் சித்ரலேகா.


அதற்குள், அன்றைய விழாவின் நாயகன், நாயகியும் சோர்வுடன் இருந்தாலும், முகப்பொலிவுடன் காணப்பட்டனர்.


நிச்சயத்தர்த்தம் முடிவடையும் நேரமும் கூடி வந்திருந்ததாலும், மண்டபத்தில் இருந்தவர்கள், ஒவ்வொருவராக மணமக்களின் பெற்றோர்களிடம் விடைபெற்றுக் கிளம்பி விட்டனர்.


"நீங்க தான் அவங்களை ஒரு நிமிஷம் கூட தனியாக விடலை" என்று முக்தாவிற்கும், கிஷானிற்கும் நன்றி கூறினார்கள்.


"ஆமாம். முகி! நீங்க பண்ணியதை மறக்கவே மாட்டேன். ரொம்ப ரொம்ப தாங்க்ஸ்" என்று அவளது கரம் பற்றி நெகிழ்ச்சியுடன் உரைத்தாள் மௌனா.


"அதில் என் சுயநலமும் அடங்கி இருக்குல்ல மௌனா? சோ, தாங்க்ஸ் வேணாம்" என்று மறுத்து விட்டாள் முக்தா.


அதைக் கேட்ட மஹதனுக்கு ஒன்றும் புரியவில்லை. அதனால்,


"என்ன சுயநலம்? எங்க கல்யாணத்தில் உனக்கு என்ன லாபம் கிடைக்கப் போகுது?" என்று அவளிடம் தன் சந்தேகத்தைக் கேட்டான் மஹதன்.


அவளை முழுமையாக நம்பினாலும், முன்னெச்சரிக்கையாக இருக்க நினைக்கும், அவனது மனம் அதற்கு இடமளிக்கவில்லை.


அங்கே நிலவிய சிறு சங்கடமும் அனைவரின் நிறைவான நெஞ்சத்தையும் சுனங்க வைத்தது.


உடல் இறுக நின்றிருந்தான் கிஷான்.முதலில் தெளிந்ததும் அவன் தான்.


"எல்லாரையும் சந்தேகப்பட்றது நல்லது தான். ஆனால், என் வருங்கால மனைவியை இப்படி பேசியது எனக்குக் கஷ்டமாக இருக்கு. இது உன்னோட நாள்! அதனால், பிரச்சினை செய்யாமல் விலகிப் போறேன். இன்னொரு தடவை இப்படி பேசாத!" என்று நண்பனை எச்சரிக்கை செய்தான் கிஷான்.


"மஹத்!!!" என்று மகனை அதட்டியவர், அவனின் சொல்லம்புகளுக்காக, நண்பனின் முகத்தைப் பார்த்து சங்கடத்துடன் மன்னிப்புக் கேட்டார் திருமூர்த்தி.


முக்தாவின் வெற்றுப் பார்வையும் இவரைத் தாக்கிற்று.


"விடு மூர்த்தி" என்று கூறி அமைதியாகி விட்டார் நீலகண்டன்.


"மஹி! ப்ளீஸ்" என்று அவனிடம் வேண்டிய மௌனா,"சாரி முகி" என மன்னிப்பும் கேட்டுக் கொண்டாள்.


"ம்ஹூம்…இட்ஸ் ஓகே" என்றவள்,


"நீங்க நினைக்கிறா மாதிரி உங்களோட ஃபியான்சிக்கு நான் எந்தக் கெடுதலும் செய்து விட மாட்டேன் மிஸ்டர்.மஹதன்!" என்று அழுத்தமாக கூறி , அவனுக்கு உறுதி அளித்தாள் முக்தா.


பின்பு,"அதை நீ இவர் கிட்ட சொல்லிடு மௌனா" என்று கூறி விட்டு,


தந்தையிடமும், தன்னவனிடமும்,"நான் போய்க் கார் கிட்ட நிற்கிறேன். வந்துடுங்க" என்று சொல்லி, வாயிலை நோக்கிச் சென்றாள் முக்தா.


யாரையும் ஏறிட்டுப் பார்க்காமல், வெளியேறி விட்டார் நீலகண்டன்.


"அப்பா! அம்மா! நான் முக்தா கூட வெயிட் பண்றேன்" எனக் கிளம்பினான் கிஷான்.


மஹதனின் ஐயம் அடங்கிய கேள்வியும், முக்தாவின் இறுக்கமானப் பதிலும் அங்கிருப்பவர்களுக்கு அதிருப்தியைக் கொடுத்தது.


ஆனால், விழாவே மஹதன் மற்றும் மௌனாவிற்கானது என்பதால், சித்ரலேகாவும், காஞ்சியப்பனும் மஹதனைப் பார்க்காமலேயே மௌனாவிடம் மட்டும்,


"பார்த்து இரும்மா. வாழ்த்துகள்!" என்று வாழ்த்தி விட்டு,


அவளது பெற்றோரிடமும், திருமூர்த்தி மற்றும் கௌசல்யாவிடமும் விடைபெற்றுச் சென்றனர்.


'சந்தோஷமே இல்லாமல் போறாங்களோ! என் பொண்ணோட வாழ்க்கை இதில் பாதிக்கப்பட்டு விடக் கூடாது!!' என்று மனதில் தங்களது இஷ்ட தெய்வத்தை நினைத்து வழிபட்டார் அன்னபூரணி.


சிவமணிக்கும் வருங்கால மருமகனின் செயலில் பிடித்தமில்லை என்பது அவரது முகமே பறை சாற்றியது.


வருந்தி வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன்,


"சம்பந்தி! நீங்கப் பொண்ணை அழைச்சுட்டுப் போங்க. நாங்களும் கிளம்பறோம்" எனக் கூறினார் கௌசல்யா.


உடனே மகளைப் பார்த்தார் அன்னபூரணி.


மாமியார், மாமனாரிடம் ஆசி வாங்கி விட்டு, மஹதனிடம் வந்து,


"வீட்டுக்குப் போயிட்டு, நைட் கால் பண்றேன். வேலையாக இருக்கேன்னு சொல்லாமல் அட்டெண்ட் பண்ணனும்" எனக் கறாராகச் சொல்லி விட்டு பெற்றோருடன் சென்றாள் மௌனா.


திருமூர்த்தி,"உன் பையனை வீட்டுக்கு வர சொல்லு" என்று கூறி விட்டு, அவரும் கிளம்பினார்.


கணவனைப் பின் தொடர்ந்து செல்லாமல், தனக்காக காத்திருக்கும் தாயிடம்,"வாங்கம்மா போகலாம்" என்று அவரை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தான் மஹதன்.


"முக்தாவைப் பேசிய‌ விதம் உனக்கே தப்பாகத் தெரியலையா?" என்று கர்ஜித்தார் திருமூர்த்தி.


"அப்பா! நான் தப்பான அர்த்தத்தில் முக்தாகிட்ட அப்படி கேட்கலையே? அப்பறம் எப்படி என்னோட பேச்சு தவறானதாக இருக்கும்?" என்று நிமிர்ந்த பார்வையுடன் தந்தையிடம் கேட்டான் மஹதன்.


"அவ மௌனாவைக் கொலை பண்ண டிரை பண்ணிட்டு இருக்கிறா மாதிரியான டவுட் - ல தான் கேள்வி கேட்ட மஹத்!" என்று கௌசல்யாவும் அவனிடம் வினா எழுப்பினார்.


அப்போது வீட்டிற்குச் சென்று, உடையைக் கூட மாற்றாமல் மஹதனுக்கு அழைப்பு விடுத்தாள் மௌனா.

  • தொடரும்
 

Shalini shalu

Moderator
மௌனாவுடைய அழைப்பை நிராகரித்து விட்டு தந்தையிடமும், தாயிடமும்,"என்னோட வருங்கால பொண்டாட்டிக்கு ஏதாவது ஆபத்து வந்தால் நான் என்ன செய்யனும்?" என்று கர்ஜித்தான் மஹதன்.

"ப்ச்! அப்போ நீ ஆக்ஷன் எடு மஹத்! ஆனால், முக்தாகிட்ட அப்படி என்ன சிடுசிடுப்பு, குரோதம்?" என்று காட்டமாக கேட்டார் கௌசல்யா.

"எனக்குக் குரோதம் இல்லைம்மா. முக்தாவுக்கு இருந்து விடக் கூடாதுன்னு தான்!" என்று இவனும் குரலை உயர்த்தினான்.

"நீ இன்னும் அந்தப் பொண்ணை நம்பலையா?" என்றார் திருமூர்த்தி.

நண்பனின் மகள் மனம் மாறிய பிறகும் மகனுக்கு அவள் மேல் நம்பிக்கை வரவில்லை என்றால், இவருக்குச் சங்கடமாக இருந்தது.

"நம்பிக்கை இல்லை ப்பா!" என்று உறுதியாக கூறினான் மஹதன்.

ஏனெனில், இந்தளவிற்கு, முக்தாவை நம்புவதற்கு மனம் இடம் தரவில்லை அவனுக்கு.

"ப்ச்! ஒரு சாரி கூட கேட்காமல் அப்படியே நின்னுட்டு இருந்த!" என மீண்டும் ஆரம்பிக்க,

"போதும் அப்பா. முக்தாவே அதைப் பெருசு பண்ணலை. நீங்க ரெண்டு பேரும், அவளுக்காகப் பேசி எனர்ஜியை வேஸ்ட் பண்ணிக்காதீங்க!" என்று அதற்கு மேல் நில்லாமல் அறைக்குள் போய் விட்டான் மஹதன்.

"நீங்க நீலகண்டன் சார் கிட்டப் பேசுங்க" எனக் கணவனிடம் சொன்னார் கௌசல்யா.

🌸🌸🌸

இதே சமயம், மண்டபத்திலிருந்து வந்த, வெளியில் நிற்காமல், காரினுள் ஏறி அமர்ந்து கொண்டாள் முக்தா.

மஹதனுடனிடம் தங்களது மனக்கிலேசத்தைக் கொட்டிய பிறகு வந்து சேர்ந்தனர் கிஷானும், நீலகண்டனும்‌.

"எவ்ளோ நேரம் வெயிட் பண்றது? ஏறுங்க! ஏறுங்க!" என்று தன் மனநிலை மாறியதைப் போலக் காட்டிக் கொண்டாள் முக்தா.

அதைப் பார்த்த இருவருக்குமே, வருத்தம் மேலிட்டது.

தந்தையின் முகம் கசங்கிப் போயிருப்பதைப் பார்த்தவுடன்,"அப்பா!" என்று அவரை அழைத்தாள் மகள்.

"என்னம்மா?"

"உங்களுக்கும், இவருக்கும் என்னைப் பத்தித் தெரிஞ்சால் போதும் ப்பா! வேற யாருக்கும் சொல்லி, அதுக்கப்புறம் என்னை நம்பனும்ன்றது தேவையே இல்லை. நீங்க இடிஞ்சுப் போய் இருக்கிற அளவுக்கு இது வொர்த்தும் கிடையாது" என வார்த்தைகளைக் கொண்டு அவரைச் சமாதானம் செய்தாள் முக்தா.

தனக்காக மஹதனின் அன்னைக் கௌசல்யா செய்தவை எல்லாம் பிராயச்சித்தம் செய்யும் அளவிற்கு முக்கியமானவை தான். ஆனால், முதலில் தன்னுடைய புத்திரனின் எண்ணத்தை மாற்றாமல், சுற்றி வாழும் மற்ற மனிதர்களின் மனதை மாற்றிப் புனிதமாக்கச் செய்யும் முயல்வது நியாயமற்ற செயல் தானே?

"அதுவும் சரி தான் - னு நாங்களும் பேசாமல் வந்துட்டோம். நம்மளோட கண்ணியத்தை விட்டுத் தரக் கூடாதே?" எனக் கூறினான் கிஷான்.

"ஆமா. நீங்க சண்டை எதுவும் போட்டுடுவீங்களோன்னுப் பதறிட்டேன்" என்று அவனிடம் சொன்னாள் முக்தா.

யதேச்சையாகப் பார்ப்பது போல தன் செல்பேசியை எடுத்து ஆராய்ந்து விட்டு,

இருவரிடமும்,"ஆஃபீஸில் வேலை வந்துடுச்சு. என்னை அங்கே டிராப் செய்துட்டு, முக்தாவை வீட்டில் விட்டுடறீங்களா?" என்று கிஷானிடம் வினவினார் நீலகண்டன்.

அவரது யுக்தியைத் தெரிந்து கொண்ட கிஷானும்,"சரிங்க அங்கிள்" என்று சம்மதித்தான்.

இவர்களது இந்தச் சம்பாஷணைகளை, முக்தா உன்னிப்பாக கவனிக்கவில்லை. ஆதலால், அதை ஆராயவும் முற்படவில்லை.

எனவே,"முகி ம்மா! அப்பா இறங்கி ஆஃப்ஸூக்குப் போயிட்டு வர்றேன். நீ மாப்பிள்ளைக் கூட வீட்டுக்குப் போ" என்று மகளிடம் எடுத்துச் சொன்னார் நீலகண்டன்.

"ஓகே ப்பா" என்று அவருக்கு விடையளிக்கவும், மகிழுந்தில் இருந்து இறங்கிக் கொண்டார் அவளது தந்தை.

அவர்களுக்குக் கையசைத்து விட்டு, அலுவலகத்திற்குள் போய் விட்டார் நீலகண்டன்.

வாகனத்தை இயக்கும் ஓட்டுநரிடம்,"டிரைவர்! நீங்களும் பஸ் ஸ்டாப்பில் இறங்கிக்கோங்க. வீட்டுக்குப் போயிட்டு, நாளைக்கு எப்பவும் போல, வேலைக்கு வந்துடுங்க.இப்போ கீழே இறங்குங்க"என்று உத்தரவிட்டாள் அவனது எஜமானியான முக்தா.

ஏன் இந்த திடீர் உத்தரவு? எனத் திகைத்தாலும், அவள் சொன்னதைச் செய்தான் வாகன ஓட்டுநர்.

"முகி!" என்ற கிஷானின் அழைப்பிற்கு,

"எனக்கு உங்க கூட தனியாக நேரம் செலவழிக்கனும்!" என அவனிடம் கெஞ்சினாள் முக்தா.

குறுநகையுடன், பின் இருக்கையிலிருந்து எழுந்து இறங்கி வந்து, ஓட்டுநர் இடத்தில் அமர்ந்தான் கிஷான்.

அவளையும் முன்னே வருமாறு கண்ணசைக்க, சில நொடிகளுக்குப் பிறகு, அவனது இடப்புறக் கையைச் சுற்றித் தன்னுடையதைச் சேர்த்திருந்தாள் முக்தா.

"நாம இவங்களுக்கு முன்னாடியே கல்யாணம் செய்திருக்கனும்மா" என்றான்.

"ம்ஹூம்"

"ஏன்?"

"இதுக்காகவா நாம உடனே கல்யாணம் பண்ணி இருந்திருக்கனும் கிஷான்? நமக்குப் பிடிக்கிற அப்போ மேரேஜ்ஜைப் பத்தி யோசிச்சா தான், எல்லாம் நல்லா நடக்கும். அதுவுமில்லாமல், இப்போ ரிவெஞ்ச் எடுக்கிறப் பழக்கம் எல்லாம் எனக்கு மறந்து போச்சு!" என்று மெல்லப் புன்னகை செய்தாள் முக்தா.

"கெஸ்ட்ஸ் குறைஞ்ச அப்பறம் தான் அவன் அப்படி உங்கிட்ட கேட்டான்! மொத்தக் கூட்டமும் இருக்கும் போது, பேசியிருந்தால், சத்தியமாகச் சட்டை போட்டிருப்பேன் முகி!" என்று அவளது கன்னத்தில் இதழ் பதித்து விலகினான் கிஷான்.

"அதை விடுங்க. இதுக்கு மத்தியில் மௌனாவும், அவங்க அப்பா, அம்மாவும் தான் பாவம். இந்நேரம், மஹதனுக்குக் கால் செய்திருப்பாங்க மௌனா. சண்டை வெடிக்கப் போகுது! அதுவும் என்னால்! ப்ச்!" என்று கழிவிரக்கம் கொண்டாள் முக்தா.

"அதென்ன உன்னால்? அவன் வார்த்தையை அளந்து பேசியிருக்கனும் முகி. என்ன விஷயம்ன்னுக் கூடக் கேட்டிருக்கலாம். அதை விட்டுட்டு, இப்படி விசாரிக்கிறான்!" என்று இறுக்கம் கொண்டான் கிஷான்.

"அவங்க மேரேஜூக்கு நாமப் போக வேண்டாம் முகி!" என்று பட்டென்று கூறியவனை விழி விரித்து, மிரட்சியுடன் பார்த்தாள் முக்தா.

🌸🌸🌸

"ஹலோ! என்ன மௌனா?" என்று செல்பேசியில் பேசினான் மஹதன்.

"என்னப் பண்ணி வச்சிருக்கீங்கன்னுப் புரியுதா மஹி?" என்று அவனிடம் சிடுசிடுத்தாள் மௌனா.

மருமகனை எதிர்த்துக் கேட்க முடியவில்லை என்று பரிதவிப்புடன் வீடு வந்திருந்தனர் அவளது பெற்றோர்.

அதேபோல, தன்னால் தான் முக்தாவிற்கு இந்த அவமானம் கிட்டியுள்ளது என்ற குற்ற உணர்வு வேறு மௌனாவைப் படுத்தி இருந்தது.

"இல்லை புரியலை" என்று விட்டேற்றியாகப் பதில் உரைத்தான் மஹதன்.

"முக்தாவை நான் தான் எனக்கு மணப்பெண் தோழியாக நிற்கச் சொன்னேன் ங்க!" என்றாள்.

"சோ?"

"அவ சுயநலம்ன்னுக் குறிப்பிட்டதுக்குக் காரணமிருக்கு மஹி!" என அந்தக் காரணத்தையும் விளக்கி முடித்தாள் மௌனா.

"ஓஹ்! நம்ம மேரேஜ் முக்தாவுக்கு ஒரு டிரையல் ஆ?" என்று ஏளனமாக வினவினான் மஹதன்.

"உங்ககிட்ட நான் இப்போ பேசலைங்க. ஒரு வாரம் கழியட்டும்‌. அப்பறம் பேசறேன்" என்று அழைப்பைத் துண்டித்து விட்டாள் மௌனா.

அதில் கடுப்பானவன், அவளுக்கு அழைத்து, "அப்போ நீ எங்கூட பேசக் கூப்பிடலை, அவளுக்காகப் பரிஞ்சிப் பேசக் கால் செய்திருக்கிற! அப்படித் தான?" என்று கேட்டவுடன் விக்கித்து நின்றாள் மௌனா.

🌸🌸🌸

"நாமளும் அவரை மாதிரி பிஹேவ் பண்ணக் கூடாதுன்னு சொல்லிட்டுக் கல்யாணத்துக்குப் போக வேண்டாம்னா, என்னங்க அர்த்தம்?" என்று மென்மையாக கேட்டாள் முக்தா.

"அப்பவும் நீ போய் மௌனா கூட ஹெல்ப்புக்குச் சுத்திட்டு இருப்ப, இவன் அதைப் பார்த்துட்டு, 'இப்போ என்ன சுயநலத்துக்கு இதைப் பண்றன்னுக்' கேட்பான். அதையெல்லாம் காதில் வாங்கிக்கிட்டு, அப்படி ஒன்னும் மேரேஜ் அட்டெண்ட் பண்ணனும்னு அவசியமே இல்லை முகி!" எனத் தீர்க்கமாக கூறி விட்டான் கிஷான்.

"அவரு உங்களோட பெஸ்ட் ஃப்ரண்ட் கிஷான்!" என்று அதிர்ச்சியில் அலறினாள் முக்தா.

"அவன் மனசில் மோனா இருக்காங்கன்னுத் தெரிஞ்சதும், அவங்களை என் கூடப் பிறக்காத தங்கிச்சியாகவே ஏத்துக்கிட்டேன். ஆனால், எனக்கு மனைவியாக வரப் போகிற உன் மேல, அடிப்படை நம்பிக்கையைக் கூட வைக்காமல் இருக்கிறான்! அப்பறம்
என்ன ஃப்ரண்ட்ஷிப்?" என்று பாரம் அழுத்தியது அவனை.

"கிஷான்!" என அவனது தோளில் முகம் புதைத்துக் கொண்டாள் முக்தா.

- தொடரும்

 

Shalini shalu

Moderator
முக்தாவின் சமாதானங்கள் யாவும் கிஷானிற்குள் எந்த விளைவையும் கொண்டு வரவில்லை.

"நாம் போகக் கூடாது தட்ஸ் இட்!" என்று அவளுக்கு மீண்டுமொரு முறை உத்தரவிட்டான்.

"இப்போ இப்படி சொல்லுவீங்க! கொஞ்ச நாள் கழிச்சு, எல்லாம் மாறிடும்" என்றாள் முக்தா.

அவளுக்கு இவர்களிருவரையும் இப்படிப் பார்க்க வருத்தமாக இருந்தது.

"அதெல்லாம் நீ ஏன் யோசிக்கிற? அவன்கிட்ட சண்டை போட எனக்கு உரிமை இருக்கு. நாங்கப் பார்ட்னர்ஸ் வேற!" என்று அவளை வீட்டில் இறக்கி விட்டு விட்டுச் சென்றான் கிஷான்.

மௌனாவிற்காக அவளது திருமணத்திற்குத் தவறாமல் செல்ல வேண்டும் என்று நினைத்திருந்தாள் முக்தா. அந்த எண்ணத்திலேயே வீட்டிற்குள் நுழைந்தாள்.

🌸🌸🌸

"சொல்லு மௌனா?" என்று கிட்டத்தட்டக் கத்தி விட்டான் மஹதன்.

ஏற்கனவே , அன்றைய நாள் அளித்த, உடல் சோர்வையும், தொய்வையும் சமாளித்துத் தான், அவனுடன் உரையாடிக் கொண்டிருந்தாள் மௌனா.

அந்த வேளையிலும், தன்னை இப்படி நெருக்கிக் கேள்விக் கேட்பதை நினைத்து அவளுக்கு அதிகச் சோர்வைத் தந்தது.

"நீங்க என்னோட ஃப்ரண்ட்ஷிப்பை அவமானப்படுத்திட்டீங்க மஹி!" என்று சூடாகப் பதிலளித்தாள் மௌனா.

"ரியலி? என் மூலமாகத் தான் அவ உனக்கு அறிமுகம் ஆனாள்! உங்க முதல் அறிமுகம் ஞாபகம் இருக்கா?" என்று கோபமாக கேட்டான் மஹதன்.

"இல்லாமல் போவானேன்? நல்லாவே ஞாபகம் இருக்கு. ஆனால், இப்போ எனக்கு அவங்க ஃப்ரண்ட், அதை விட வெல் விஷர்!" என்று தானும் கொதித்துப் போய்த் தான் கூறினாள்.

சோர்வு தந்த அழுத்தத்தை விட, இவனுடன் விவாதம் செய்வது மிகவும் அழுத்தத்தைக் கொடுத்தது.

அதனால், "மஹி!!! எனக்கு ரொம்ப டயர்டாக இருக்கு. முக்தாவை ஏன் அப்படி பேசினீங்கன்னுக் கேட்டதுக்கு, எல்லா கோபத்தையும் என்கிட்டத் திருப்பிட்டீங்க! கிஷான் அண்ணா பேசியதும் எனக்கு நினைவில் இருக்கு. நம்ம கல்யாணம் அவங்க இல்லாமல் தான் நடக்கப் போகுது. உங்கப் பார்ட்னர் தான? முடிஞ்சா, இந்த நட்பைப் புதுப்பிச்சுக் காட்டுங்க! அதை விட்டுட்டுத், தப்பு உங்க மேல இல்லைன்னு சொன்னால், அப்படியே கடந்து போயிருங்க! குட்நைட்!" என்று மூச்சுப் பிடிக்கப் பேசி விட்டு அழைப்பைத் துண்டித்து விட்டாள் மௌனா.

அகங்காரம் கொண்ட‌ மனிதன் அல்லவே மஹதன்! அதற்காக, கிஷானிடம் இறங்கிப் போக முயல்வானா? என்பதுவும் சந்தேகமே!

முதலில் கிஷான் கோபத்திலிருந்து இறங்கி வர வேண்டுமே? ஒரே கம்பெனியின் முதலாளிகளாக இருவரும் பொறுப்பேற்று இருக்க, அதற்காகவாவது, இவர்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்ள வேண்டுமே?

"டிரஸ்ஸை மாத்திட்டு, தலைவலியாக இருந்தால், மாத்திரையைப் போட்டுட்டுப் படு மௌனா ம்மா" என்று மகளுக்கு அறிவுறுத்தினார் அன்னபூரணி.

அதற்கேற்றாற்போல், தன் கையிலிருந்த மாற்றுடையைத் தொய்ந்து போயிருந்த தோழியிடம் சேர்ப்பித்தாள் அகதா.

அதை வாங்கிக் கொண்டு, அறைக்குள் நுழைந்தவள், சில நாழிகைகளுக்குப் பிறகு, வெளியே வந்தாள் மௌனா.

"அங்கே சாப்பாடே வயிறு நிரம்பி இருக்கும். நீ கொஞ்சமா பால் குடிச்சிட்டு, இதைப் போட்டுக்கோ" என்று மகளின் கையில் மாத்திரையைத் திணித்தார் சிவமணி.

அவர் கூறியதைச் செய்து விட்டு, உறக்கத்தில் அமிழ்ந்து போனாள் மௌனா.

🌸🌸🌸

நீலகண்டனின் சொந்த விருந்தினர் மாளிகையில், அவருடன், கிஷானும் திருமூர்த்தியும் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.

மஹதனின் மேலுள்ள கோபம் முழுவதையும் திருமூர்த்தியிடம் திருப்பி விடவில்லை நீலகண்டன். எப்போதும் போல உரையாடினார்.

"உங்கப் பையனையும் வரச் சொல்லுங்க! ரெண்டில் ஒன்னு இன் கேட்கனும்!" எனக் கொந்தளித்தான் கிஷான்.

மண்டபத்தில் பேசவில்லை என்றாலும், தன்னவள் அவமானப்பட்டதை‌ ஏற்றுக் கொள்ள முடியவில்லை அவனால்.

"மாப்பிள்ளை!" என்று அவனை அடக்கியவர்,

"மூர்த்தி! என் பொண்ணு முன்னே பண்ணியதுக்கு எல்லாம் உன் பையன் அவளை அசிங்கப்படுத்தியதை நான் ஒன்னும் சொல்ல மாட்டேன். ஆனால் இப்போ தேவையே இல்லாமல், அவளை நோகடிச்சாட்டான் மஹதன்! சாரி கேட்கவெல்லாம் சொல்ல மாட்டோம்! ஆனால், இதைக் கிஷான் விடுவதாக இல்லை. பார்ட்னர்ஷிப்பில் இருக்கிறதால், அதைக் கேன்சல் பண்ணிடுவாங்களோன்னு தோனுது!" என்றவுடன்,

மஹதனின் தந்தைக் கிஷானை ஏறிட்டார்.

"அதை முறிச்சிக்க நினைச்சா, அது உன் இஷ்டம் ப்பா! அவன் செஞ்சதுக்கு முக்தாகிட்ட மன்னிப்புக் கேட்டுட்டு, உங்கிட்டயும் வருத்தம் தெரிவிக்கனும்‌. இல்லைன்னா, மௌனாவும் அவனை விட மாட்டா!" என்று வீட்டில் நிகழ்ந்ததைக் கூறினார் திருமூர்த்தி.

"அவங்களை நினைச்சு, முக்தாவும் ஃபீல் பண்ணினா அப்பா! ஆனால், நானும், அவளும் உங்கப் பையனோட கல்யாணத்தை அட்டெண்ட் பண்ண மாட்டோம்!" என்று அவரைத் திடுக்கிட்ச் செய்தான் கிஷான்.

"என்னப்பா சொல்ற?" என்றார் திருமூர்த்தி.

"ஆமாம் அப்பா. அவனோட ஈகோ, கோபம் எல்லாம் என்னோட முக்தாவை ரொம்ப பாதிச்சிருச்சு. தான் செஞ்சக் கடந்த காலத் தப்புக்காக, இன்னும் தண்டனை அனுபவிக்கிறா! அவளுக்கு அது ஒரு விஷயமாக இல்லைன்னாலும், எனக்குக் கஷ்டத்தைக் கொடுக்கிறதால் தான் இந்த முடிவு!" என்று விளக்கினான் கிஷான்.

தளர்வுடன் எழுந்து,"சரிப்பா. மத்ததை நீயும், மஹத்தும் பேசிக்கோங்க" என்றவர்,

"ஐ யம் சாரி நீலகண்டா! முக்கியமாக உன் பொண்ணுகிட்ட இதைச் சொல்லிடு" என நண்பனிடம் கூறி விட்டுக் கிளம்பினார் திருமூர்த்தி.

மஹதனுடைய திருமணத்திற்குச் செல்ல வேண்டாம் என்ற முடிவையே எடுத்து விட்டானே! எனத், தன் மகளின் மேலுள்ள இவனது காதலைப் பார்த்துப் பிரம்மித்துப் போனவர், அதை மகளிடமும் உரைத்து விட்டார் நீலகண்டன்.

உடனே கிஷானைப் பார்க்கச் சென்றவள், அவனை இறுக்கமாக கட்டிக் கொண்டது மட்டுமில்லாமல், "எனக்கு உங்களை இப்போவே கல்யாணம் செய்துக்கனும் போல இருக்குக் கிஷான்!" என்று உணர்ச்சி வசத்துடன் கூறினாள் முக்தா.

"ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம் முகி!" என்றான் கிஷான்.

"போகலாமா அப்போ?" என்று குறும்புடன் வினவினாள் பெண்ணவள்.

"ம்ம்… ரெடி தான்!" என்று இவனும் புன்னகைத்தான்.

"ஒரே ஒரு ரிக்வெஸ்ட் கிஷான்!" என்று கெஞ்சினாள் முக்தா.

"என்ன அது?"

"அவங்க மேரேஜூக்கு நாம் ரெண்டு பேருமே போகனும் கண்டிப்பாக!" என்று தன் விருப்பத்தைக் கூறினாள்.

"இவ்வளவு நல்லவளாக மாறி இருக்கக் கூடாது நீ!" என்று கோபமாகச் சலித்துக் கொண்டான் கிஷான்.

"மௌனாவுக்காக!" என்று கூறினாள் முக்தா.

தனக்கும், அவளுக்குமான முதல் சந்திப்பு எல்லாம் கிஷானுக்குத் தெரிந்திருக்கும் தான்! இப்போது இருக்கும் நட்பின் வலிமை தெரிய வாய்ப்பில்லை. மஹதன் மற்றும் கிஷானை விட இவர்களது நட்பு இன்னும் ஆழமாகி இருந்தது.

அதனால் தான், மௌனாவைச் சட்டென்று உதறித் தள்ளி விட முடியவில்லை முக்தாவால்.

"உனக்காகச் சம்மதிக்கிறேன் முகி" என்றான்.

அதில் சிரித்தவளது கன்னத்தை வருடி விட்டு,"அதுக்கு முன்னாடி அவனைக் கொஞ்சம் கடுப்பாக்கிப் பார்க்கனும்" என்று கண்ணடித்துச் சிரித்தான் கிஷான்.

"வேண்டாமே ங்க"

"ஊஹூம்! உனக்காக அவங்க அப்பாகிட்ட தான் பேசினேன். ஆனால் அவனுக்குத் திருப்பிக் கொடுக்க நிறைய இருக்கு. ஹோட்டலுக்கு வந்து தான ஆகனும்! நிச்சயமாக வரவும் செய்வான். அதில் அவன் ஷேரும் இருக்கே! திமிராக வந்து மீட்டிங் அட்டெண்ட் பண்ணுவான்" என்று மஹதனைப் பற்றிக் கூறியவனைப் பார்த்துப் புன்னகைத்தாள் முக்தா.

"என்ன?" என்று புரியாமல் கேட்டான் கிஷான்.

"என்ன தான் கோபம்னாலும், உங்க ஃப்ரண்டைப் புகழ்ந்து பேசிக்கிட்டு இருக்கீங்க!" என்றாள்.

"மாத்திக்கனும் இனிமேல்!" என்று கூறினான்.

"மாத்திக்கத் தேவையில்லைங்க. உங்க ஹோட்டலில் மீட் பண்ணும் போது, வாய்ச் சண்டையாகி, கடைசியில் மன்னிப்பில் வந்து முடியும்" என்று சொன்னாள் முக்தா.

"இந்தளவு நம்பிக்கைக் கூடாது முகி" என்று அவளை எச்சரித்தான் கிஷான்.

"எனக்காக நீங்கப் பேசுங்க, சண்டைப் போடுங்க… ஆனால் நடத்தப் போறது இது தான்!" என்று அடித்துக் கூறினாள்.

"ம்ஹூம்" என்று அவளிடம் வீராப்பாகப் பேசி விட்டாலும்,

தங்கும் விடுதியில், தன்னுடைய அறையிலிருந்த இன்னொரு நாற்காலியில் அமர்ந்து, கோப்புகளை
ப் பார்வையிட்டுக் கொண்டிருந்த மஹதனைக் கண்டதும்,
"வணக்கம் பார்ட்னர் சார்!" என்று நக்கலாக கூறினான் கிஷான்.

- தொடரும்
 

Shalini shalu

Moderator
அறைக்குள் வந்ததும், இப்படியானதொரு அழைப்பை எதிர்பார்க்கவில்லை மஹதன்.

"சார்!" என்று கிஷான் மீண்டும் அழுத்தவும்,

"வாங்க பார்ட்னர் சார்!" என்று வரவேற்றவனிடம்,

"ஃபைல்ஸைப் பார்த்துட்டால், எங்கிட்டயும் கொடுங்க.நானும் சரி பார்க்கனும்!" என்று தோரணையாகப் பேசியவனிடத்தில், ஒன்றுமே கூறாமல், கோப்பைகளை நீட்டினான் மஹதன்.

"தாங்க்ஸ்" என்றவாறு அதைப் புரட்டினான் கிஷான்.

மௌனா கூறியபடி , இவன் தன்னுடைய திருமணத்திற்கு வர மாட்டானே! எனத் தோழனையே வெறித்துப் பார்க்கலானான் மஹதன்.

சிரத்தை நிமிர்த்தாமல், அவனது பார்வை கையிலிருப்பதை ஆராய்ந்து கொண்டிருந்ததால்,

"கிஷான் சார்!" என்றான் மஹதன்.

"எஸ் பார்ட்னர்" என நிமிர்ந்தான்.

"என் எங்கேட்ஜ்மெண்ட்டில் நடந்த விஷயத்துக்காக கல்யாணத்துக்கு வர மாட்டீங்க தான?" என்று அவனது பதிலைத் தெரிந்து கொள்வதற்காகத் தூண்டில் வீசிப் பார்த்தான் மஹதன்.

"க்கும்! நான் ஏன் சார் உங்க கல்யாணத்துக்கு வராமல் இருக்கப் போறேன்? உங்களோட வருங்கால மனைவி மௌனா இருக்காங்களே? அவங்க என்னோட பெட்டர் ஹாஃப்க்குப் பெஸ்ட்டு ஃப்ரண்டு! அவங்களுக்காகவே முக்தா வரேன்னு சொல்லியிருக்காங்க.அதுவும் இல்லாமல், உங்களுக்கு இங்கிதம் தெரியலை, நம்பிக்கை இல்லைன்னாலும், உங்க அப்பா, அம்மாவுக்கு நல்லாவே தெரியும். சோ, கண்டிப்பாக மேரேஜூக்கு வந்து தானே ஆகனும்!" என்று கடகடவென்றுப் பொரிந்து விட்டான் கிஷான்.

அவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டு உள்ளம் கொதிக்க அமர்ந்திருந்தவன், மேஜையிலிருந்தக் கோப்பை எடுத்து, அதற்குரிய அலமாரியில் பத்திரப்படுத்தி வைத்தவன்,

"சோ, இப்போ நீங்க என்னோட இருக்கிறப் பார்ட்னர்ஷிப்பை முடிச்சிக்கப் போறீங்க! அதான?" என்று வினவினான் மஹதன்.

"ஹாஹா… இல்லை! இப்போ தான், இன்னும் பார்ட்னர்ஷிப்பை அதிகமாக்கிக்கத் தோனுது சார்"என்று சிரித்தான் கிஷான்.

"அப்போ வேறெந்தக் கம்பெனியை என் கூட ஷேர் பண்ணி, நடத்தத் தாயாராக இருக்கீங்க பார்ட்னர்?" என்று கிண்டலாக கேட்டான்.

"இன்னும் முடிவு பண்ணலை சார்! நல்லக் கம்பெனியாகத் தேர்ந்தெடுத்துக்கிட்டு உங்களைத் தேடி ஓடி வந்துடுவேன்!" என்றான் கிஷான்.

"யூ ஆர் ஆல்வேய்ஸ் வெல்கம் பார்ட்னர்" என மொழிந்தான் மஹதன்.

"ம்ஹூம்" என்று தலையைச் சிலுப்பிக் கொண்டு, தன் மடிக்கணினியை இயக்க ஆரம்பித்து விட்டான்.

🌸🌸🌸

"ஹேய் ப்ளீஸ் மௌனா" என்று அவளிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள் முக்தா.

"இல்லையில்லை முகி! நீங்க தடுக்காதீங்க" என அவளை மன்னிப்பில் குளிப்பாட்டுகிறாள்.

மஹதனிடம் பேசி விட்டு, மாத்திரை உண்டுப் படுத்து எழுந்தவளுக்கு, முக்தாவின் நினைவு எழுந்ததும், அடுத்த நாள் கால் செய்து விட முடிவெடுத்திருந்தவள், முக்தா இடையூறு செய்ய வழியே இராது, தன்னால் முடிந்தளவு அவளிடம் வேண்டிக் கொண்டிருந்தாள் மௌனா.

"போதும் மா. அவரையும் நான் தவறாக நினைக்கலை!" என்று முற்றுப்புள்ளி வைத்தாள் முக்தா.

"தாங்க்ஸ் முகி" என நன்றி சொல்லவும்,

"மஹதனும் , கிஷானும் ஹோட்டலில் தான் இருக்காங்களாம்" என்று அறிவித்தாள் முக்தா.

"இவர்கிட்ட ரொம்ப வாயை விட்டுட்டேன் முகி! அந்தக் கோபத்தில் எதுவும் கிஷானைப் பேசிடுவாரோ?" என்று பதட்டமடைந்தாள் மௌனா.

"அவங்களுக்குப் பல வருஷ நட்பும்மா! நீ கூலாக இரு" என்றாள்.

"அப்படின்னாலும் அவர் பேசினது உங்களை முகி?" என வருத்தமடைந்தாள்.

"என்னைத் தான? நான் அவனுக்குப் பண்ணாத கொடுமையா? விடு" என்று தடா போட்டு விட்டாள் முக்தா.

"எங்க கல்யாணத்துக்கு வருவீங்க தான முகி? கிஷான் அண்ணா ரொம்ப கோபமாக இருந்தாரே! அதான் கேட்கிறேன்!" என்றாள் மௌனா.

"கோபம் தான் அதுக்காக வராமல் இருந்திட முடியுமா? நாங்க ரெண்டு பேருமே வருவோம்" என வாக்குறுதி அளித்தாள் முக்தா.

கிஷான் வர மாட்டேன் என்று சொன்னதை மௌனாவிடம் கூற விருப்பமில்லை அவளுக்கு.

என்றாவது ஒருநாள், இருவரும் நண்பர்களாகச் சேர்ந்து விட்டால், இதைக் கொண்டு ஒரு பிரச்சினை மூண்டு விடும் எனப் புத்திசாலித்தனமாக யோசித்தாள் முக்தா. அதுவும் இல்லாமல், மூட்டிக் கொடுக்கும் வேலையும் அவளிடத்தில் இல்லை.

முக்தாவின் பதிலைக் கேட்டு, வருத்தம் களைந்து, நிம்மதி ஆக உணர்ந்தாள் மௌனா.

"அதையெல்லாம் விடும்மா. இவங்களைச் சேர்த்து வைக்கனும்னு உனக்கும் ஆசை தான?" என்று வினவினாள் முக்தா.

"அதெல்லாம் நிறைய இருக்கு முகி. ஆனால், அது நடக்கிறதுக்குள்ள எங்க மேரேஜே முடிஞ்சிடும்!" எனச் சலித்துக் கொண்டாள் மௌனா.

"அதுக்கு முன்னாடியே நம்ம சேர்த்து வைக்க, ஒரு பிளான் இருக்கு! பேச்சிலர்ஸ் பார்ட்டி!" என்று உற்சாகமாக கூறினாள் முக்தா.

"என்னது? பேச்சிலர்ஸ் பார்ட்டியா? அப்படின்னா, அது மஹதனும், கிஷானும் தானே அட்டெண்ட் பண்றா மாதிரி இருக்கும். அவங்களோட ஃப்ரண்ட்ஸ் வேணும்னா வருவாங்க. அங்க நமக்கு பிளானைச் செயல்படுத்த ஸ்பேஸே இருக்காதே முகி?" என்று தவித்தாள் மௌனா.

"நம்மையும் இன்வைட் செய்வாங்கம்மா"

"ஜென்ட்ஸூக்கு மட்டும் தானே பார்ட்டி நடக்கும்?"

"நீ என்ன நினைச்ச, பேச்சிலர்ஸ் பார்ரடினாலே, ட்ரிங்க்ஸ் மட்டும் தான் இருக்கும்னா?"

"ஆமாம் முகி. பல வகையான ட்ரிங்க்ஸ், சைட் டிஷ் எல்லாம் இருக்குமாம், கேள்விப்பட்டு இருக்கேன்"

"ஹைய்யோ மௌனா! அதெல்லாம் ஒரு சில இடங்களில் இருக்கும் தான். ஆனால், எல்லாரோட பார்ட்டிஸிலும் இருக்காது. குடிக்காமல் பார்ட்டி கொண்டாடவே முடியாதா என்ன? இதை மட்டும் நீ மஹதன்கிட்ட கேட்டிருந்தால் அவ்ளோ தான்! உன்னைப் பயங்கரமாகத் திட்டி விட்ருப்பார்!" என அவளைப் பயமுறுத்தினாள் முக்தா.

"ஏன் முகி?" என்று கலவரமடைந்தாள் மௌனா.

"கிஷானுக்கும்,அவருக்கும் குடிக்கிறப் பழக்கமே கிடையாது!" என்கவும்,

"அது தெரியும். மஹதன் எப்பவோ சொல்லிட்டாரு! அவரோட ஃப்ரண்ட்ஸ், ஆஃபீஸ் ஸ்டாஃப்ஸ்?" என்று தயங்கினாள்.

"அவங்களோட பர்சனல் விருப்பம். ஆனால், கம்பெனிக்குள்ளேயோ, அது சம்பந்தமான ஃபங்க்ஷன்ல கண்டிப்பாக ட்ரிங்க்ஸ்ஸூக்குத் தடை தான்!" என்று விளக்கினாள் முக்தா.

"அது தான் சரியானதாக இருக்கும். என்ன சொல்ற?" என்க,

"இதை நீங்க சொன்னால், கிஷான் சம்மதிப்பாரா?" என்ற வினாவை எழுப்பினாள் மௌனா.

"நான் ஏன் சொல்லப் போறேன்? நீங்க தான கல்யாண ஜோடி? அப்போ நீ தான் மஹதன்கிட்டப் பேசனும்!" என்றாள்.

"முகி! நான் எப்படிங்க?"

"நீங்க தான் செய்யனும்ங்க!" என்று குறும்பாக கூறினாள் முக்தா.

"அவர்கிட்ட ஏட்டிக்குப் போட்டியாகப் பேசி வச்சிருக்கேன் முகி" எனச் சொல்லி முடித்தாள் மௌனா.

"நீங்க எனக்காகப் பேசியதுக்குத் தாங்க்ஸ். நானே இதை எங்க அப்பா மூலமாக, திருமூர்த்தி அங்கிள் கிட்டச் சொல்றேன். ஃபேமிலியும் கலந்துக்கனும்னும் கேட்போம்! ஆல்ரெடி, மஹதனோட ஃப்ரண்ட்ஸ் கேட்டிருப்பாங்க. சோ, ஈசியாக சக்ஸஸ் ஆகிடும் இந்தப் பிளான்!" என்று கூறியவளிடம்,

"டிரை பண்ணுவோம்" என்று கூறினாள் மௌனா.

"நான் அப்பாகிட்ட சொல்றேன்" என அழைப்பை வைத்து விட்டு, தன் தந்தை நீலகண்டனிடம்,
"அப்பா!" என்று அவரருகில் வந்தவள்,

மௌனாவுடன் பேசியதைப் பகிர்ந்து கொண்டாள் முக்தா.

"நாம சொன்னால், மாப்பிள்ளைக்கும், மஹதனுக்கும் சந்தேகம் வராதாடா?" என்று மகளிடம் கேட்டார் நீலகண்டன்.

"வந்தால் வந்துட்டுப் போகுது அப்பா! நான் தான் கேட்டேன்னுக் கூட சொல்லுங்க!" என்று கூறினாள் முக்தா.

"மூர்த்திக் கிட்ட இன்ஃபார்ம் பண்றேன்" என அப்போதே நண்பனுக்கு அழைத்து விட்டார் அவளது தந்தை.

"இவனுக்கு இதெல்லாம் இப்போ தேவையா நீலகண்டா! குதூகலமாக இருக்கிறா மாதிரியாகப் பண்ணி வச்சிருக்கான்?" என்று பொரிந்தார் திருமூர்த்தி.

"ப்ச்! முக்தாவும், மௌனாவும் கேட்டுக்கிட்டாங்கடா" எனச் சொல்லவும்,

"அவங்களுக்காகச் செய்வோம்! அதுக்கு அவன் ஒத்துக்காமல் மட்டும் இருக்கட்டும்! பாரேன்!" என்று வெடித்தார் நீலகண்டனின் நண்பன்.

சன்னச் சிரிப்புடன் அழைப்பை வைத்தவர், மகளிடம், "சக்ஸஸ்!" என்றார் நீலகண்டன்.

அதை மௌனாவிற்குக் குறுஞ்செய்தியாக அனுப்பி விட்டு, கிஷான் மற்றும் மஹதனின் பதில்களைக் கேட்ட ஆர்வமாகி விட்டாள் முக்தா.

இருவரும் ஒரே இடத்தில் தானே இருக்கிறார்கள்! எனவே,

"மஹத்! பேச்சிலர்ஸ் பார்ட்டிக்கு எப்போ தேதிக் குறிச்சிருக்க?" என்று செல்பேசியில் அழைத்துக் கேட்டார் திருமூர்த்தி.

"எனக்கே ஞாபகத்தில் வரலை. உங்களுக்கு எப்படி?" என் ஒரு கணம் வியந்து போனான் மஹதன்.

அதைக் கேட்டதும், கவனத்தை அவனிடம் வைத்தான் கிஷான்.

"எங்கேட்ஜ்மெண்ட் முடிஞ்சிருச்சு. அடுத்து அது தான? உன் மகன் எதுவும் ஃபிக்ஸ் பண்ணலையான்னு என்னோட ஃப்ரண்ட் கேட்டான்" என்றார் திருமூர்த்தி.

"பேச்சிலர்ஸ் பார்ட்டியாக இல்லாமல், எல்லா கம்பெனி ஃப்ரண்ட்ஸ் தங்களோட ஃபேமிலியோட வர்ற மாதிரி பார்ட்டியை நடத்தலாம் அப்பா" என்றவன் ,"என் பார்ட்னரோட டிஸ்கஸ் பண்ணிட்டுக் கூப்பிடறேன் அப்பா!" எனக் கூறி வைத்தான் மஹதன்.

'பார்ட்னர்ன்றது நான் தானே?' என்று மனதில் நினைத்துக் கொண்டான் கிஷான்.

"ஹலோ சார்! நிமிர்ந்து பாருங்க! என்னோட பார்ட்டிக்கு வர, உங்களுக்கு நேரம் இருக்குமா?" என்று அவனை வம்பிழுத்தான்.

"நீங்க முறையாக வந்து இன்வைட் செய்தால், இல்லாமலா போகும்! அப்படி நடக்காமல் போனால், நானும் நேரமில்லைன்னு சொல்ல வேண்டியதாகிடும்… உச்!!" என்று கிண்டலடித்தான்.

"வீட்டுக்கு வரேன், இன்வைட் பண்றேன்" என ஒப்புக் கொண்டான் மஹதன்.

எதற்குத் தொல்லை என்று விலகி விடுவது ஒரு வகையான நட்பென்றால், உரிமையாக வாயடித்து, வம்பிழுப்பதும் ஒரு வகையிலான தோழமை தான் என்பதை இருவர் உணர்ந்த தருணம் அதுவாக கருதப்பட்டது.

அந்த தினத்திற்குப் பிறகு, திருமணத்திற்கு முந்தைய விருந்து வழங்கும் நிகழச்சியை நடத்துவதற்கான ஆயத்தங்களைச் செய்வதாக, மௌனாவிடம் மொழிந்தான் மஹதன்.

முக்தா தன் யோசனையை வெற்றிகரமாகச் செயல்படுத்தி விட்டால் என்று அவளுக்குப் பாராட்டுக்களைச் சொன்னாள் மௌனா.

அங்கே, நாம் எவ்வாறு செல்ல முடியும்? என்ற குழப்பங்கள் எழும்பவும், பொறுமையாக எடுத்துக் கூறினான்.

ஆனாலும், "நான் வரலை சார்" என்று மறுத்த அகதாவிடம்,"ப்ளீஸ் யாரும் மிஸ் பண்ணக் கூடாதுன்னு தான், இவ்ளோ தூரம் பேசுறேன்!" என்று அவளையும் சமாதானம் செய்து விட்டான்.

தீபக்கால் இன்னுமே அவள் தன்னிலை திரும்பவில்லை.அவன் எப்போது தன்னைப் பழி வாங்க முயல்வானோ? என்று பதைபதைப்புடன் இருக்கிறாள் அகதா.

அதனால் தான் இந்த மறுப்பு, அதையும் சரிகட்டி விட்டான் மஹதன்.

விருந்திற்கான நாள் குறிக்கப்படவும், அதை தாய் , தந்தையிடம் தெரிவித்தான் மஹதன்.

தன் வீட்டில், தந்தை காஞ்சியப்பனுடன், மஹதன் பேசுவதை ஓரக்கண்ணால் பார்த்தபடி வந்தவன்,"வாங்க பார்ட்னர்!" என்று வேண்டுமென்று தான், தகப்பனின் முன்னால், அவனை அவ்வாறு சொல்லி வரவேற்றான் கிஷான்.

"ஹாய் சார்" என இவனும் சொல்ல,

அவை யாவும் நீள்சாய்விருக்கையில் இருந்த காஞ்சியப்பனுக்கும், சித்ரலேகாவிற்கும் விநோதமாகத் தோன்றியது.

"என்ன இப்படி பேசிக்கிறீங்க? பார்ட்னர், சார்ன்னு?" என்று கேட்டார் கிஷானின் அன்னை.

"முதல்ல அவர் தான் அப்படி கூப்பிட்டார் ம்மா!" எனச் சித்ரலேகாவிடம் அவருடைய மகனைக் கைக் காட்டினான் மஹதன்.

"கிஷான்!" என்று அதட்டியவரிடம்,

"அவர் பண்ணியது ஞாபகம் இருக்குல்லம்மா? மறந்துட்டீங்களா?" என்று தோள் குலுக்கலுடன் கூறினான் அவரது மகன்.

"வந்த விஷயத்தைச் சொல்லிட்டுக் கிளம்பறேன்ம்மா" என்றான் மஹதன்.

"சொல்லு மஹத்" என்று அவன் பேச வாய்ப்பளித்தார் காஞ்சியப்பன்.

"நான் நடத்தப் போகிறப் பார்ட்டிக்கு, உங்களையெல்லாம் இன்வைட் பண்ண வந்தேன்!" எனக் கூறினான்.

ஏன் அதை அவனுடைய ஆண்,பெண் நண்பர்களுக்குமான விருந்தாக அமைக்கப்படவில்லை? என அவனிடம் வினவினார் சித்ரலேகா.

அனைவரையும் அன்புடன் உபசரிக்க வேண்டி அப்படி ஏற்பாடு செய்யப் போவதாக விளக்கிச் சொன்னான் மஹதன்.

"உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு" என்று அழுத்தினார் காஞ்சியப்பன்.

அதைக் கேட்டுத் தோழனை ஏளனமாகப் பார்த்தான் கிஷான்.

அதைப் பொருட்படுத்தாமல்,"நீங்களும் வந்துடுங்க பார்ட்னர்" எனக் கூறியவனிடம்,

"ஷ்யூர்" என்று கிஷான் சம்மதிக்கவும்,
உரிய உபசரிப்பு வழங்கிய பின்னர், அனுப்பி வைக்கப்பட்டான் மஹதன்.

அவன் கிளம்பியதும், "முக்தாகிட்ட மன்னிப்புக் கேட்க மனசில்லை. ஆனால், இவரோட பார்ட்டிக்கு மட்டும் கூசாமல் வந்து இன்வைட் பண்ணிட்டுப் போறாரு!" என்று அவனைக் குறைப் பேசினான் கிஷான்.

"பார்ட்டியில் சாரி கேட்பானா இருக்கும்டா!" என்றார் காஞ்சியப்பன்.

"இடியே விழுந்தாலும் நடக்காது ப்பா!" என்று சொல்லி விட்டுப் போய் விட்டான் மகன்.

"நீங்களும் டிரெஸ் எடுத்துக்கனும்" அந்த விருந்திற்கான உடைகளைத் தன் பெற்றோருக்காகத் தேர்ந்தெடுப்பதற்குக் கடைக்குப் போனார்கள் மௌனாவும், அகதாவும்.

"எதுக்கு மாப்பிள்ளைக்கு இந்தச் செலவு? நிச்சயம் தான் ஊர் மூக்குல விரலை வைக்கிற மாதிரி செஞ்சாச்சே?" என்று வினவினார் அன்னபூரணி.

"அன்னைக்கு யாரையுமே ஒழுங்காக கவனிக்க முடியலையாம் அம்மா. அதான், இப்போ தனியாக ஒரு மார்ட்டின்னு வைங்களேன்! மறுபடியும் எல்லாரோட வாழ்த்தும் கிடைக்குமே!" என்று பதிலளித்தாள் மௌனா.

என்னவோ! என்பது போல உடைகளைத் தேர்ந்தெடுத்தனர் சிவமணி மற்றும் அன்னபூரணி.

'இந்தப் பார்ட்டிக்கான முதன்மை நோக்கமாக, எதை நினைத்துக் கொண்டு காத்திருக்கிறான் மஹதன்?' என்ற ஐயத்தை மனதில் இருத்திக் கொண்டிருந்தான் கிஷான்.

- தொடரும்
 

Shalini shalu

Moderator
"நிச்சயத்தில் நடந்தா மாதிரி எதுவும் ஆகாது அங்கிள்" என்று நீலகண்டனிடம் நிதானமாக சொல்லிக் கொண்டிருந்தான் மஹதன்.


அப்போது பேசிக் கொண்டிருந்தவரின் மகளும் வந்து விட,"வா முக்தா" என அவளையும் அழைத்து அமரச் சொன்னான் மஹதன்.


அவனது அழைப்பிற்குச் செவி மடுத்தவள்,"ஹாய் மஹதன்" என்றாள்.


"ஹாய்! உங்கிட்டயும் சொல்லி, இன்வைட் பண்றேன்" என நீலகண்டனிடம் கூறியதை அப்படியே அவளிடமும் கூறியவன்,"உன்னைக் காயப்படுத்திப் பேசிட்டேன்னு வராமல் இருந்திராதே முக்தா" என்ற வேண்டுகோளையும் விடுத்தான் மஹதன்.


தான் போட்டத் திட்டம் பாதி வெற்றியைப் பெற்று விட்டது என உள்ளுக்குள் குஷியாகிப் போனவள்,


"ஷூயர்!" என்று மிதமான குரலில் ஒப்புதல் கூறினாள் முக்தா.


"உன்னோட ஃபியான்சே - யை இன்வைட் பண்ணிட்டு தான் இங்கே வந்திருக்கேன்" என்று கூறினான் மஹதன்.


"ஓஹ் சூப்பர்!" எனக் கூறியவள், அவனுக்காகப் பழச்சாறு வரவழைத்தாள்.


அதை மறுக்காமல் வாங்கிப் பருகியவன்,"அப்போ கிளம்பறேன்" என்று இருவரிடமும் சொல்லி விட்டுச் சென்றான் மஹதன்.


"பையன் மாறிட்டான் போலவே முகி ம்மா! உங்கிட்ட நிதானமாப் பேசுறானே!" என்று சிறு வியப்புடன் மகளிடம் வினவினார் நீலகண்டன்.


"கிஷானும், மஹதனும் தான் ஆஃபீஸில் இருந்தாங்களே! உங்க மாப்பிள்ளை ஏதாவது நியாயம் கேட்டிருப்பாரு போலயே அப்பா" என யோசனையாக கூறினாள் முக்தா.


"ரெண்டு பேருக்கும் தகராறு ஆகியிருக்குமா டா?" என்று விசாரித்தார்.


"அப்படி ஆகியிருந்தால், மஹதன் இப்படி வந்து அழைச்சுட்டுப் போக மாட்டாரே ப்பா!" என்றாள் முக்தா.


"மாப்பிள்ளைக் கிட்டக் கேட்டுப் பாரு முகி" என்று தன் ஆர்வத்தை அடக்க இயலாமல் கூறினார் நீலகண்டன்.


அவருக்காக கிஷானுக்குக் கால் செய்தாள் முக்தா.


"சொல்லும் மா"


"ஏங்க! மஹதன் இப்போ தான் வந்துட்டுப் போயிருக்கார். நடத்தையில் இவ்ளோ மாற்றம் இருக்கே!" என்கவும்,


அலுவலகத்தில் தங்கள் இருவருக்கும் இடையே நிகழ்ந்தவற்றைக் கூறினான் கிஷான்.


"என்னங்க இப்படி வம்பிழுத்து வச்சிருக்கீங்க?" எனச் சிரித்தாள் முக்தா.


"ஆமாம். என்ன தான் இருந்தாலும் அவன்கிட்ட உன்னை விட்டுக் கொடுக்கக் கூடாதுல்ல! அதான் வச்சு செஞ்சிட்டேன்! அவனுக்கு மண்டையில் ஏறி, ஏதோ உறுத்தப் போய் தான் வந்திருக்கான்" என்று விளக்கினான்.


"தாங்க்ஸ் கிஷான்" எனத் தெரிவித்தாள்.


"அமைதியாக இருந்துரு முகி!" என்று அவளைச் சத்தம் போட்டான் கிஷான்.


திருமணம் முடிவான பிறகு, உரிமையுள்ள உறவுகளுக்குள் நன்றி தெரிவிப்பது அந்நியமாகி விடும் அல்லவா? அதனால் தான் இந்த அதட்டல்!


"ஓகே ஓகே!" என்று புன்னகைக்கவும்,


"பார்ட்டிக்குப் போய் ஜமாய்ச்சுடலாம்! அங்கே என்ன நடந்தாலும் உனக்காகப் பேச நான் இருப்பேன் முகி!" என்று உறுதி அளித்தான் கிஷான்.


"சரி கிஷான்" என்று புன்னகைத்தாள் முக்தா.


இரு நண்பர்களையும் இணைக்கவே இந்தப் பார்ட்டி என மஹதனுக்கும், கிஷானுக்கும் இன்னும் தெரியாது! தெரிந்தாலும் என்ன சொல்லி விடப் போகிறார்கள்! என்று அவளும், மௌனாவும் அமைதியாகினர்.


"நிச்சயம் முடிஞ்சப் பொண்ணை எப்படி இங்கெல்லாம் கூட்டிட்டு வர்றது?" என்று அன்னபூரணி கவலைப்பட்டார்.


அவருக்கு மகளுக்குக் கண் பட்டு விட்டது, அதனால் தான் அனர்த்தங்கள் வரிகை காட்டி வருகிறது எனத் தோன்றியது போலும்! ஒவ்வொரு முறையும் இதைக் கூறி வருத்தம் கொண்டார் அன்னபூரணி.


எப்போதும் இப்படி அலட்டிக் கொள்ள மாட்டார். மகளுடைய வாழ்வு, சந்தோஷம் என்கையில், இதெல்லாம் அவருக்கு அறியாமலேயே வந்து விடுகிறது.


"அம்மா! நீங்கப் பயப்படுறது கரெக்ட் தான்! ஆனால், நிச்சயம் மாதிரி இதில் எல்லாருமே வர மாட்டாங்க. ப்ரஸ் கூட அலவ்ட் இல்லை. நம்ம ஃபேமிலி, ஃப்ரண்ட்ஸ் மட்டும் தான்‌" என்று அவருடைய பயத்தைத் தெளிய வைக்க முயன்றாள் அகதா.


அவளுக்கும் முதலில் விருப்பமில்லை தானே? முடிந்து போனதைக் காரணமாக வைத்து, எதையும் மறுக்கலாகாது என்ற மனமுதிர்வு வந்து விட்டது போல!


பிள்ளைகளின் சந்தோஷம் தானே முக்கியம் என்று மனைவியைச் சமாதானம் செய்தார் சிவமணி.


முக்தாவின் சமயோசிதப் புத்தியைப் பாராட்டினார் கௌசல்யா.


அவரும் முழு மனதுடன் பார்ட்டியில் கலந்து கொள்ளப் போகிறாராம்!


அனைவருக்கும் புதிய உடைகளைத் தருவித்துக் கொடுத்தான் மஹதன்.


ஒரே நிறத்தில் அவரவருக்கு ஏற்ப, சேலையோ, கவுனோ, சுடிதாரோ இவற்றில் எது வேண்டுமென்றாலும் உடுத்திக் கொள்ளலாம் என்று முடிவு செய்தார் கொசல்யா.


பார்ட்டியில், சோம பானம் மற்றும் இதர போதை வஸ்துக்களுக்குப் பெரிய தடை கேட்டு விட்டதால், ஆணோ, பெண்ணோ இருவருமே சங்கடமின்றி கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொண்டான் மஹதன்.


உணவு வகைகளையும் தெரிவு செய்து வைத்தனர்.


"மஹத்! இது உண்மையிலேயே பேச்சிலர்ஸ் பார்ட்டி மாதிரி தானா? வேற எந்த உள் நோக்கத்துக்காகவும் இல்லையா?" என்று பார்ட்டி நிகழ்வதற்குச் சில நாழிகைகளுக்கு முன்னர், அவனிடம் வினவினாள் மௌனா.


எப்படியாவது அவனது வாயாலேயே அதைக் கேட்டு விட வேண்டுமென்ற ஆவல் அவளுக்கு!


ஆனால், "நோக்கம் எதுவும் இல்லை மௌனா. ஜஸ்ட் பேச்சிலர்ஸ் பார்ட்டி!" என்று அழுத்திக் கூறினான் மஹதன்.


"சரிங்க" என்றவாறு வெளியேறி விட்டாள் மௌனா.


தன்னவளது பதட்டத்தை உணர்ந்தாலும், அவளுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கவே காத்திருந்தான் மஹதன்.


நிச்சயத்திற்கு என்று மண்டபம் பிடித்த மாதிரி இல்லாமல், தங்களது விருந்தினர் மாளிகையிலேயே விருந்தினர் கூட்டத்தை நடத்த முடிவெடுத்து இருந்தனர் மஹதனின் பெற்றோர்.


மிகவும் முக்கியமானவர்களைத் தவிர்த்து வேறு எவரையும் காண முடியவில்லை அங்கு!


தன் ஒரு பக்கம் தந்தையும், மறுபக்கம் கிஷானும் இருக்க, அந்த மாளிகைக்குள் நுழைந்தாள் முக்தா.


கிஷானுடைய அன்னையும், தந்தையும் வேலை ஒன்றை முடித்து விட்டு வருவதாகச் சொல்லி இவர்களை முதலில் அனுப்பி வைத்திருந்தனர்.


அவர்களை வரவேற்றவர்கள், திருமூர்த்தியுடன் மற்ற இரு ஆண்களும் சென்று விட, முக்தாவைத் தன்னுடன் இணைத்துக் கொண்டனர் கொசல்யா.


"முகி" என்று பரிதவித்தக் கொசல்யாவைக் கனிவுடன் பார்த்தாள் முக்தா.


"ஆன்ட்டி! நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னுப் புரியுது. மௌனாவே எங்கிட்ட அவ்ளோ பேசிட்டாங்க. சோ, எல்லாரும் இதையே சொல்லி என்னை நர்வஸ் ஆக வைக்காதீங்க! மறந்துடலாம்! நான் பார்ட்டியை என்ஜாய் பண்ணனும்னு தான் வந்தேன்" எனக் கடகடவென்று அவள் கூறவும், மௌனாவை நோக்கிப் போனவளை நன்றியுடன் பார்த்து வைத்தார் கௌசல்யா.


மௌனாவின் பதட்டம் நிறைந்த விழிகளை ஏறிட்டதும், அவளிடம் விரைந்தவள்,"ஹாய்!! அங்க பாரு" என மஹதன், திருமூர்த்தி, நீலகண்டனுடன் கிஷானும் நிற்பதைக் காட்டினாள் முக்தா.


"எல்லாரும் சிரிச்ச முகமாகத் தான் பேசுறாங்க" என்று அகதாவும் ஆச்சரியப்பட்டாள்.


"ஆனால் முகி! நான் அவர்கிட்ட கேட்டேனே!"


"என்னன்னு?" என்கவும், விவரித்துக் கூறினாள் மௌனா.


"கிஷான் கூட இருக்கும் போது மஹதனும், அவரும் பேசாமல் இருக்க வாய்ப்பே இல்லைம்மா. வெயிட் செய்து பார்க்கலாம்" என்று உத்தரவாதம் கொடுத்தாள் முக்தா.


"பாருங்க சம்பந்தி! இதுக்கெல்லாம் இவ்ளோ பெரிய பார்ட்டி தேவையா?" என்று கௌசல்யாவிடம் அங்கலாய்த்துக் கொண்டார் அன்னபூரணி.


அவருக்கும், சிவமணிக்கும் விஷயம் தெரியாது எனவே, "இந்தப் பார்ட்டியே எல்லாரோட மனக்குறையைத் தீர்த்து, சந்தோஷமாக இருக்க வைக்கத் தான் சம்பந்தியம்மா!" என அவரிடம் விளக்கினார் கௌசல்யா.


"அப்படியா விஷயம், சம்பந்தி? அந்தப் பொண்ணுக்காக இதைச் செய்யலாம்! இனிமேல் குறை சொல்றா மாதிரி ஒரு வார்த்தை என் வாயில் இருந்து வராது பாத்துக்கோங்க!" என்று முக்தாவைப் பற்றி உயர்வாகப் பேசினார் அன்னபூரணி.


"உன் பையன் என்னச் செய்யப் போறான்னு உனக்கே தெரியலையா?" என்று கிண்டல் செய்தார் நீலகண்டன்.


"அது எனக்கு என்னைக்குத் தெரிஞ்சு இருக்குடா?" எனத் தானும் சேர்ந்து புன்னகைத்தார் திருமூர்த்தி.


"பக்கத்தில் போய்க் கவனிப்போம். வாங்க" என்று மற்ற இருவரையும் (மௌனா, அகதா) அழைத்துச் சென்றாள் முக்தா.


"சார்! சாரி!" என்று கூறியிருந்தான் மஹதன்.


அதைக் கேட்ட கிஷானோ விறைப்பாக நிற்கவும், அதே தொனியில், தாங்கள் பேசுவதை அவதானித்துக் கொண்டிருந்த முக்தாவிடம் சென்று,


அருகிலேயே இருந்த மௌனாவைப் பார்த்துப் புன்சிரிப்பை உதிர்த்தவனோ, முக்தாவின் கண்களை நேருக்கு நேராகப் பார்த்து,"என் நண்பனோட வருங்கால வொய்ஃப் ஆகப் போகிற உன்னை நான் மதிக்காமல் அவ்ளோ பேர் முன்னாடி அப்படி பேசினதுக்கு ரியலி சாரி முக்தா" என்றிருந்தான் மஹதன்.


அவரவர் இருக்கும் இடத்திலேயே ஸ்தம்பித்துப் போயினர் அனைவரும்.


மஹதன் கூறியதைக் கேட்ட முக்தாவோ, அவன் கேட்ட மன்னிப்பை ஏற்றுக் கொண்டதை மறந்து இமைக்காமல் நின்றாள்.


அவளது தோளை அழுத்தி, "முகி! அவன்கிட்ட ஏதாவது சொல்லு!" என்று நினைவுபடுத்தினான் கிஷான்.


"ஹாங்! இட்ஸ் ஓகே மஹதன்" என்று அவனது மன்னிப்பை ஏற்றுக் கொண்டதாக அறிவித்தாள் முக்தா.


"தாங்க்ஸ்" என்றவன், மௌனாவின் அருகில் நின்று கொண்டான் சற்று முன்னர் எதுவும் நடவாததைப் போல!


அவர்களைத் தனியாக விட்டுத் தள்ளிச் சென்றாள் அகதா.


சுற்றியுள்ளவர்களும் அதிலிருந்து மீண்டு விட்டப் பேச்சைத் தொடர்ந்தனர்.


"மஹி" என அழைத்தாள் தன்னவனை.


"என்னங்க மேடம்?" என்று குறுஞ்சிரிப்புடன் நோக்கினான் அவளை.


"சூப்பர் மஹி! இதை தான் எதிர்பார்த்தேன்"என்று பெருமையாக கூறினாள் மஹதனிடம்.


இதழ்களில் புன்னகையைத் தவழ விட்டான் அவன்.


இவர்களே இப்படி காதலில் மூழ்கி இருக்கும் போது, தன்னுடைய மரியாதையை மீட்டெடுத்தக் கிஷானை விழிநீருடன் அணைத்துக் கொண்டாள் முக்தா.


அங்கிருப்பவர்களுக்கு அது விரசமாகத் தோன்றவில்லை.


நீலகண்டனுக்குத் தொலைந்த தன் மகளின் புன்னகை அனைத்தும் இந்த சொந்தங்களின் உதவியால் திரும்பக் கிடைத்து விட்டது என்ற சந்தோஷத்திலேயே மனம் நிம்மதி அடைந்தது.


"ஓகேவா சார்? உங்க ஃபியான்சே கிட்ட சாரி கேட்டாச்சு! கல்யாணத்துக்கு வர்ற ஐடியா இருக்கா?"


"இதுக்காகத் தான் இவ்ளோ செஞ்சியாடா?" என்று பிரம்மிப்படன் கேட்டான் கிஷான்.


"ஆமாம். என்னோட தவறைத் திருத்திக்கறதுக்காக, என்னோட நண்பனுக்காக!" என்று விடையளித்தான் மஹதன்.


அவனது நன்னடத்தையைப் பாராட்டி, நட்புக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை எண்ணி, மஹதனை ஆரத் தழுவிக் கொண்டான் கிஷான்.


"இப்படியொரு பிளான் போட்டு, இவங்களைச் சேர்த்து வச்சதே நாம தான்! நம்மளையே கலட்டி விட்டுட்டாங்க பாருங்க!" என்று மௌனாவிடம் புகைந்து கொண்டிருந்தாள் முக்தா.


அதைக் கேட்டு வாய் விட்டுச் சிரித்து விட்டாள் அகதா.


"எங்க நிலைமை இப்படி இருக்குல்ல அகி" என அவளைச் செல்லமாக அதட்டினாள் முக்தா.


"நான் சொன்னேன்ல கிஷான்! மஹதன் மன்னிப்புக் கேட்டுட்டான் பாரு!" என்று மகனுடைய தோளில் தட்டிக் கொடுத்தார் காஞ்சியப்பன்.


"உங்க ஃப்ரண்ட்ஷிப்பை எதனாலும் பிரிக்கவே முடியாதுடா!" என்றார் சித்ரலேகா.


இவர்களுக்கு மத்தியில் நிம்மதிப் பெருமூச்சு விட்ட இன்னொரு ஜீவன் அன்னபூரணி தான். அதைப் பார்த்து கிண்டல் கூட செய்தார் சிவமணி.


குடும்பங்கள், நட்பு இவற்றிற்கிடையேயான தீர்க்கப்படக் கூடிய, நியாயமான சண்டைகளை அப்போதே பேசித் தீர்த்து, மன்னிப்புக் கேட்டுக் கொண்டால், அந்தப் பந்தம் உடையாமல் இறுதி வரை அழகாய்த் தொடரும்…


அவளது இதழ் ஸ்பரிசத்தை இன்னுமின்னும் எண்ணிப் பார்த்து பூரிப்படைந்தான் கிஷான்.


அதிலும் அவள் சொன்ன,"இது இனிமேல் தொடரவே கூடாதுங்க! எனக்கு அப்பாவும், நீங்களும் , உங்க ஃபேமிலியும் போதும்!" என்று முடிவுடன் கூறியவள், அழகிய புன்னகையுடன் எப்பொழுதும் வலம் வந்தாள் முக்தா.


"லவ் யூ முகி!" என்று அவன் கூறியவுடன், அதற்கு அவளிடமிருந்து எண்ணிலடங்காத முத்தங்களையும் பெற்றுக் கொண்டான் கிஷான்.


இந்த விருந்து நடந்து முடிந்த ஒரு சில நாட்களுக்குப் பிறகு, கல்யாண மும்முரத்தில் இருந்தனர் மஹதனும்,மௌனாவும்.


அப்பொழுது, "ஹலோ, மௌனா! எப்போ வருவ?" என்று தோழிக்கு அழைப்பு விடுத்த அகதாவிடமிருந்து இவ்வளவு பயம் அப்பிய குரலை எதிர்பார்க்கவில்லை அவளது சிநேகிதி.


"நான் வர லேட் ஆகுமே அகி!"


"ப்ளீஸ் முடிஞ்சா சீக்கிரம் வா!" என்று கெஞ்சினாள் அகதா.


- தொடரும்

 

Shalini shalu

Moderator
"சரி.இதோ வந்துட்றேன்" என்று அழைப்பை வைத்தவள், மஹதனைப் பார்த்தாள் மௌனா.

அவளது தோழி அகதா தான் அழைத்திருந்தாள் எனவும் , அவளுக்கு ஏதோ பிரச்சினை உதவி தேவைப்படுகிறது என்பதையும் இவளிடம் இருந்து அவதானித்துக் கொண்டான் மஹதன்.

தீபக்கைத் தவிர, அகதாவிற்கு வேறெந்தப் பிரச்சினை வரப் போகிறது? என்று யோசித்துக் கொண்டு இருந்தவனிடம்,"மஹி! அகதா தான் பேசினாள்" என்று அவனிடம் விவரமாக கூறினாள் மௌனா.

"அதைத் தான் நானும் யோசிச்சேன் ம்மா" என்றான் மஹதன்.

"காரை வீட்டுக்குத் திருப்ப முடியுமா மஹி?" என்று அவள் வேண்டுகோள் விடுக்கவும்,

"ஷ்யூர்" என மகிழுந்தை அவர்களது இல்லத்தை நோக்கிச் செலுத்தினான்.

"அந்த வீணாப் போனவனைத் தவிர வேற என்னப் பிராப்ளம் வந்திடப் போகுது உன் ஃப்ரண்ட் - க்கு?" என்று சலித்துக் கொண்டான் மஹதன்.

"தீபக்! அவனைத் தான் நீங்களும், கிஷானும் நல்லா கவனிச்சு அனுப்பிட்டீங்களே! அப்பறமும் எப்படி இவ்ளோ தைரியம் வந்திருக்கும் அவனுக்கு?" என்று கோபத்தில் பொரிந்தாள் மௌனா.

"அகதா மட்டும் சந்தோஷமாக நிம்மதியாக இருக்கிறது அவனுக்குப் பிடிக்கலை போல! இந்த மாதிரி, நேரத்தில் தீபக் மாதிரியான ஆளுக்கு உயிர் மேல் கூட பயம் இல்லாமல் போயிடும் மௌனா" என்று விளக்கினான் மஹதன்.

"ப்ச்! ரொம்பவே கடுப்பேத்துறான் மஹி!" எனத் தோழிக்காகப் பரிந்து பேசினாள்.

மிகத் தொலைவில் செல்லவில்லை என்பதால், ஒரு சில நிமிடங்களிலேயே வீட்டிற்கு வந்து விட்டிருந்தார்கள்.

"நீ போய் அகதாவைக் கூல் பண்ணு. நான் காரைப் பார்க் பண்ணிட்டு வர்றேன்" என்று அவளை அனுப்பி வைத்தான் மஹதன்.

மௌனாவின் பெற்றோருக்கு இது தெரிய வேண்டாமென்று அறையில் தான் இருந்தாள் அகதா. எக்காரணம் கொண்டும் வெளியே தலையை நீட்டவில்லை அவள்.

"என்னடி போன வேலை முடிஞ்சுதா?" என்று சாவகாசமாக வினவிய அன்னைக்கு,

"ஆங்! முடிஞ்சது அம்மா.. அவர் காரை நிறுத்திட்டு வருவார்" என்றதும், மருமகனை வரவேற்கத் தயாரானார் அன்னபூரணி.

அவரது கணவர் சிவமணி ஒரு வேலையாக வெளியே போயிருந்தார்.

அகதா தன் தாயிடம் எதையும் கூறி இருக்கவில்லை என்பதை உணர்ந்தவள், அதை மஹதனுக்கும் குறுஞ்செய்தியாக அனுப்பி விட்டுத் தோழியிடம் சென்றாள் மௌனா.

அங்கே அழுது கொண்டிருந்த அகதாவோ, இவளைப் பார்த்ததும், ஓடிப் போய்க் கட்டிக் கொண்டாள்.

"மௌனா!" என கண்ணீர் உகுத்தவளிடம்,

"அகி என்ன ஆச்சு? ஏன் அழுகுற?" என்று அவள் பதிலளிப்பதற்காக காத்திருந்தாள்.

"அந்த ராஸ்கல் எனக்குக் கால் பண்ணான்" என்று தடுமாறிப் பேசினாள் அகதா.

"யாரு? தீபக் ஆ?" என்று கேட்டாள் மௌனா.

"ம்ம்"

"அவனைத் தான் அடிச்சுத் துவைச்சு அனுப்பியாச்சே! அப்பறமும் என்னவாம்? ரொம்ப துள்ளுறான்!" என்று கோபத்தில் பற்களைக் கடித்தாள்.

"அவனுக்குப் பயம் இருக்கு தான் மௌனா! ஆனால், அதை விட என் மேல் வன்மம் இருக்கே! என்னை எப்படி பழி வாங்குறதுன்னுத் திட்டம் போட்டுட்டு இருக்கானாம்! அதைக் கூட விட்டுடலாம்! ஆனால்…!" என்று திக்கினாள் அகதா.

மஹதன் தன் காரை நிறுத்தி விட்டு வந்து விட்டான் போலும். வெளியே அவனது பேச்சுக்குரல் ஒலித்தது.

"வாங்க மாப்பிள்ளை!" என்று பழச்சாறு கொடுத்து உபசரித்தவர்,"மௌனா! அகதா!" என உள்ளிருந்த இருவரையும் சத்தமிட்டு அழைத்தார் அன்னபூரணி.

"மஹதன் வந்திருக்கார் அகி‌. வா!" என்று அவளைக் கைப்பிடித்து எழுப்பவும்,

அதைச் சற்றும் எதிர்பாராத வண்ணம் உதறியவள், "நீ போ மௌனா! நான் வரலை!" என்று நிர்தாட்சண்டயாக மறுத்து விட்டாள் அகதா.

அவள் மனம் வெதும்பிக் கொண்டிருப்பதால் வர விருப்பமில்லை போலும் என நினைத்தவள், அறையிலிருந்து வெளிப்பட்டாள் மௌனா.

அங்கே, தன் கோட்டை மட்டும் கழட்டி சோஃபாவில் இட்டுப், பழச்சாறைப் பருக ஆரம்பித்தான் மஹதன்.

தாயின் அருகில் நின்று கொண்ட மௌனாவின் முகம் அவனுக்குச் சிலதை உணர்த்தியது.

எனவே, இங்கிருந்தபடியே கேட்டால், அன்னபூரணிக்குத் தான் வீணாக கவலை வந்து விடும் என்பதால்,

"நான் கிளம்பறேன் அத்தை. ஆஃபீஸில் வேலையை முடிக்கனும்" என்று எழுந்து,"போயிட்டு வர்றேன்" என மௌனாவிடம் கூறி விட்டுக் கிளம்பினான் மஹதன்.

"இவரை ஆளைக் காணோம்! என்னன்னுக் கேட்டுட்டு வரேன்.
நீ டிரஸ்ஸை மாத்து‌" எனச் செல்பேசியுடன் ஐக்கியமாகி விட்டார் அன்னபூரணி.

அறைக்குள் நுழைந்த அகதாவிடம்,"தீபக் தான?" என்று கணித்ததைக் கேட்டாள் மௌனா.

"ம்ஹ்ம்" என இயந்திரத்தனமாக ஒப்புக் கொண்டாள்.

"அவனுக்குச் சூடு, சொரணையே இருக்காதா?" என்றவள்,

"என்ன சொன்னான் அகி?" என்று தோழியிடம் வினவினாள் மௌனா.

"எனக்கு…!" என்று எச்சில் விழுங்கினாள் அகதா.

அவள் ஆழ்ந்த அதிர்ச்சியில் உறைந்து காணப்படுவதால், கைகளை அழுத்திய மௌனா,"ப்ளீஸ் சொல்லு அகி!" என்று பேச உந்தினாள்.

"அந்த ராஸ்கல் எனக்குக் கால் செய்து பேசினான்" என்று அவனுடைய அழைப்பு வந்ததற்கானச் சான்றையும், தனது செல்பேசியிலிருந்து எடுத்து, அவளுக்குக் காண்பித்தாள் அகதா.

"என்னன்னு?" என்று அழுத்திக் கேட்கவும்,

அவர்களது உரையாடலைத் தெளிவாய்க் கூறினாள், இருந்தாலும் அவளது உடல் தூக்கி வாரிப் போட்டுக் கொண்டு இருந்தது நடுக்கத்தில்.

சற்று முன்னர், அகதாவிற்கும், தீபக்கிற்கும் இடையே நிகழ்ந்த சம்பாஷணைகள் :

புது எண்ணிலிருந்து அழைப்பு வரவும் சினுங்கிய செல்பேசியைக் கையிலெடுத்தாள் அகதா.

"ஹலோ" என ஏதோ ஞாபகத்தில் எதிரிலிருப்பவர் பேசுவதற்கு முன் தன் குரலை வெளிப்படுத்தி விட்டாள்.

மறுபுறம் அமைதியாகவே இருக்க,

"யாருங்க?" என்று கேட்டவள், இனிமேலும் அப்படியே இருந்தால் அழைப்பைத் துண்டித்து விட வேண்டியது தான் என்ற நோக்கம் கொண்டிருந்தாள்.

ஆனால்,"ஹலோ!" என்று அவளுக்குப் பரிச்சயமான ஆண் குரல் கேட்கவே,

"யார் பேசுறது?" என்று திடுக்கிடலுடன் பேசினாள் அகதா.

"தீ..ப..க்" என்று எக்காளமிட்டுச் சிரித்தான் அவளது முன்னால் கணவன்.

அதிர்ந்த உடலைத், திராணி கொண்டு, முயன்று, அமைதிப்படுத்திக் கொண்டவள்,

அவனுக்குப் பயப்படத் தேவையில்லை என்ற சிலிர்ப்புடன்,"ஹேய்! எதுக்கு என்னைக் கான்டாக்ட் பண்ற?" என்று கோபத்தில் கத்தினாள் அகதா.

"எதுக்கா? அந்த ரெண்டு பேரும், என்னை மரண அடி, அடிக்கும் போது, உன்னை நினைச்சுத் தான் வெறி ஏத்துக்கிட்டேன்டி.எல்லாம் உன்னால் தான?" என்று நாராசமானக் குரலில் பேசினான் தீபக்.

"நீயும், உன் அம்மாவும் பண்ணியதுக்கு இதெல்லாம் கம்மி தான்!" என்று கெத்தை விடாமல் கூறினாள் அகதா.

அவள் தானே, தீபக் மற்றும் லலிதாவால் பாதிக்கப்பட்டவள்! அதற்குத் தான், இவன் அடி வாங்கிப், பிராயச்சித்தம் செய்துள்ளதாக எண்ணிக் கொண்டிருந்தாள்.

"ஏய்! எனக்குக் காயமெல்லாம் ஆறிப் போகிறதுக்கே எவ்ளோ நாளாச்சுத் தெரியுமா?" என்று கத்தினான் தீபக்.

"இன்னும் உயிரோட இருக்கியேன்னு நிம்மதி தான் வந்திருக்கனும் உனக்கு!" எனப் பொறுமையாகப் பதில் பேசினாள் அகதா.

"நக்கலு! அடியேய்! உனக்கு இருக்குடி!" என்று கீழ்த்தரமாக அவளை மிரட்டவும்,

"இதையும் மஹதன்கிட்ட சொன்னால், உனக்கு உயிர் மிஞ்சாது!" என்று பொறுக்க முடியாமல் கூறி விட்டாள்.

"ஓஹோ! அவன் உன்னோட ஃப்ரண்ட்டைத் தான கல்யாணம் செய்துக்கப் போறான்! உன்னை இரண்டாவது கல்யாணமாகப் பண்ணிக்கப் போறான்! ஆ , ஊ - ன்னா அவங்கிட்ட சொல்லிடுவேன்னு மிரட்டுற?" என்று அவன் பேசியக் கொச்சை வார்த்தைகளைக் கேட்டவளின் உடலில் உயிர் மிஞ்சியது ஆச்சரியம் தான்!

"தப்பான வார்த்தைகளை விடாதே தீபக்!" என்று முயன்று அடக்கிய அழுகைப் பூதாகரமாக வெடித்தது அவளிடமிருந்து.

"உன்னை மாதிரிக் கேடு கெட்டவளைப் பழி வாங்குற வெறியில் இருக்கேன் இப்போ!" என்று தான் மிகவும் நேர்மை, நியாயவாதி என்பது போலப் பேசினான் தீபக்.

பொலபொலவென்றுக் கண்களில் இருந்து நீர் இறங்கியது அவளுக்கு.

"நீயெல்லாம் மனுஷனே கிடையாதுடா!" என்று வெறுப்பை உமிழ்ந்தாள் அகதா.

"சொல்லிக்கோ! காயம் ஆறவே நாளாச்சே! இவன் இப்படி தைரியமாக கால் பண்ணிப் பேசுறானேன்னுத் தோனுமே உனக்கு? ஆமாம்டி! உயிர் போகிற வலி தான்! அதையும் மீறி உன்னைப் பழி வாங்கனும்னு எனக்குள்ளப் புகைஞ்சிட்டு இருக்கு! அவனுங்க என்னைக் கொன்னாலும் பரவாயில்லை! உன்னை நாறடிக்காம விட மாட்டேன் டி!" என்று சூளுரைத்தான்.

அவள் மட்டும் தன்னுடன் இல்லாமல், நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருப்பது, தீபக்கிற்கு வெறியைத் தூண்டியது.

எதற்கும் துணிந்து விட்டேன் என்று இறுமாப்புடன் பேசியவனிடம், "உளறாதே தீபக்! என்னோட குணத்தைக் களங்கப்படுத்திட்டால் மட்டும், நீயும், உங்க அம்மாவும் பண்ணிய கொடுமைகள் எல்லாம் சரியாகிடுமா? நீங்க நல்லவங்களாக ஆகிடுவீங்களா?" என்றவளுக்கு உடல் வெடவெடத்தது.

"ஹேய்! வாயை மூடு! என்னையும், என் அம்மாவையும் பத்திப் பேச உனக்குத் தகுதியில்லை!" என்று அவளை அதட்டினான் தீபக்.

"ஏன்?"

"உன்னை மாதிரி குணக்கேடு இருக்கிறவ அதெல்லாம் பேசலாமா?" என நக்கலாக கேட்டான்.

இதற்கு மேல், அவனுடைய பேச்சைக் கேட்க விரும்பாதவள், "கொஞ்ச நாளில் நீயே காணாமல் போயிடுவ பாரு!" என்று சொல்லி அழைப்பைத் துண்டிக்கப் போனாள் அகதா.

"வெயிட்! வெயிட்! அதுக்கு முன்னாடி நீயும், உன் மரியாதையும் காத்துலப் பறக்கும்!" என்று மஹதனுடன் அவளைச் சேர்த்து வைத்துப் பேசினான் தீபக்.

"ச்சீ!" என்று அருவருத்து விட்டு அழைப்பை வைத்தவளது உடல் அவமானத்தில் நடுக்கம் கொண்டது.

இந்த நேரம் பார்த்து, அன்னபூரணியும், சிவமணியும் திருமண விஷயமாக எதையோ சுவாரசியமாகப் பேசிக் கொண்டு இருந்தனர்.

இவள் கதவை அடைத்துக் கொண்டு, தீபக்கிடம் பேசியதாலும், குரல் கம்மிப் போயிருந்தாலும் என்ன நிகழ்ந்தது என்பதை அவர்களால் அறிய முடியவில்லை. அதற்குப் பிறகு, சிவமணி ஒரு வேலையாக வெளியில் செல்கிறேன் என்று கிளம்பி விட, அன்னபூரணி தான் சமைத்துக் கொண்டிருந்தார்.

அந்த மும்முரத்தில், இவளையும் அடிக்கடி கவனித்துக் கொள்ள முடிவதில்லை அவரால்.

வீட்டிற்குள் தானே இருக்கிறாள் என்ற எண்ணம் கூட அதற்குக் காரணமாக இருக்கலாம். மொத்தத்தில், இவளது அழுகை அறையை விட்டு வெளி வரவில்லை என்பதே உண்மை.

அனைத்தையும் சொல்லி முடித்த அகதாவால், தோழியின் முகத்தை நிமிர்ந்துப் பார்க்க இயலவில்லை.

மௌனாவின் வருங்கால கணவனையும், தன்னையும் அல்லவா அந்தக் கயவன் தவறாகச் சித்தரித்துப் பேசியுள்ளான்! அதை ஒருவாறு திக்கித் திணறிக் கூறி முடித்திருந்தாள் அகதா.

🌸🌸🌸

"என்னடா நீ பாட்டுக்கு இஷ்டத்துக்கு அவகிட்ட கத்தி வச்சிருக்கிற? அந்தக் குடும்பமே விவகாரமானதாச்சே! இதில் இரண்டாவதாக ஒருத்தன் சேர்ந்துக்கிட்டு உன்னை மொத்தி எடுத்தது பத்தாதா? நீயா ஏன் தலையை உள்ளே விட்ற?" என்று பயத்தில் அலறினார் லலிதா.

அடி வாங்க இவனது உடலில் இடங்கள் உள்ளதா? எனத் தேடிப் பார்க்கும் நிலை தான் அவனுக்கு. அப்படியிருக்க இதெல்லாம் தீபக்கிற்குத் தேவையற்ற வேலை எனப் பொருமினார் அவனது அன்னை.

"நான் இஷ்டத்துக்குப் பேசலை ம்மா! அவளைப் பழி வாங்கிட்டுச் செத்தால் கூட பரவாயில்லைன்ற முடிவில் இருக்கேன்!" என்று சினத்தில் முகம் சிவந்தான் அவரது மகன்.

"உன் கூட இருந்தால் எனக்கும் உயிர் இல்லாமல் செய்திடுவ‌ டா!" என்று நடுநடுங்கிப் போனார் லலிதா.

"அப்படின்னா, என்னை விட்டுப் போயிடுங்க ம்மா! எனக்கு யாரும் வேண்டாம்! ஆனால், உங்களுக்குச் சாப்பாட்டுக்கு, எல்லா செலவுகளுக்கும் நான் தான் பணம் கொடுக்கனும்! அதுக்குக் கொட்டிக் கொடுத்துட்டு இருந்த, உங்க மருமக தான் இப்போ நம்ம கூட இல்லையே!" என்று சீறினான் தீபக்.

"சும்மாச் சும்மா இதையே சொல்றான்! லட்சணமாக வேலைக்குப் போய் சம்பாதிக்காமல், என்னையே எகத்தாளமாகப் பேசுறான்!" என்று மெல்லிய குரலில் அவனை அர்ச்சித்து முடித்தவர்,"ஐயோ! நான் எங்கேயும் போகலை டா! என்னை நீ பார்த்துக்க மாட்டியா தீபு?" என்று நீலிக்கண்ணீர் வடித்தார் லலிதா.

"அம்மா உங்க நடிப்பு போதும்! பசிக்குது! சாப்பாடு போடுங்க" என்று சலித்துக் கொண்டே உணவுண்ண அமர்ந்து விட்டான் மகன்.

அவனை முறைத்துக் கொண்டே பாத்திரங்களைக் கொண்டு வந்து அதிலிருப்பதைப் பரிமாறத் தொடங்கினார் லலிதா‌.

உண்டு கொண்டிருந்த மகனுடைய முகத்தில் தோன்றிய விகாரமும், பழி வெறியும் அவரை அச்சத்தின் பிடியில் தள்ளியது.

🌸🌸🌸

வெகு நேரமாக அமைதியாகவே இருந்த தோழியைத் தொட்டு உலுக்கினாள் அகதா.

"மௌனா!" என்றவளது பலவீனமான குரலைக் கேட்டதும் அவளை நோக்கியவளோ,

"இதைக் கேட்டுத் தான் இவ்ளோ உடைஞ்சு போயிருந்தியா அகி?" என்று சாதாரணமாக வினவினாள் மௌனா.

"வேற எப்படி ரியாக்ட் பண்றது? அவனோட அசிங்கம் பிடிச்ச நாக்கு என்னைக் குத்திக் கிழிச்சுடுச்சே!" என்று வெற்றுப் பார்வையை உதிர்த்தாள் அகதா.

"அவன் எல்லாம் ஒரு ஆளுன்னு, அவன் சொன்னான்னு நீ இப்படி சுருண்டு போய் உட்கார்ந்து இருக்கிற!" எனத் தோழிக்கு மட்டும் கேட்கும் குரலில் அதட்டினாள் மௌனா.

"அவன் பேசின…" என்று முகத்தைச் சுருக்கினாள் அகதா.

"ப்ச்! ரொம்பவே மோசமான, தப்பான வார்த்தைகள் தான் அகி! அதை இல்லைன்னு மறுக்க மாட்டேன்! ஆனால், அப்படிப் பேச அவனுக்கு அசிங்கமாக இருந்திருக்கனும்! ஆனால் திமிராகச் சொன்னான்னு நீயே சொல்ற! அப்படி இருக்கிறப்போ, நாம மட்டும் ஏன் கலங்கி நிற்கனும்? அப்படியான அழுக்குப் புத்தியோ, எண்ணமோ நாம் யாருக்குமே இல்லையே அகி?" என்று தோழியைச் சமாதானம் செய்தாள் மௌனா.

"மஹதனை… நான் அப்படி… யோசிக்கலை!" என்று அழுகையில் திணறினாள் இவள்.

"அகி! ஸ்டாப் இட்! நான் உன்னையும், அவரையும் எப்பவும் சந்தேகப்பட மாட்டேன்! அதுவும் இவன் உளறுனதுக்கு எல்லாம் உங்களைக் களங்கப்படுத்திக்க வேண்டாம்!" என்று அவளைக் கடிந்து கொண்டாள் மௌனா.

"அறைக்குள்ளேயே அடைஞ்சு இருக்கீங்க இவ்வளவு நேரமா! உங்க அப்பா வந்துட்டாரு. அகி! நீ சாப்பிடவே இல்லை. மௌனாவையும் கூப்பிட்டுக்கிட்டு வந்து உட்காரு!" என்று அவர்களை வெளியிலிருந்து அழைத்தவர்,"மாப்பிள்ளை வந்தாருங்க. பொண்ணை விட்டுட்டுக் கிளம்பிட்டார். இன்னும் ஒரு வாய் கூட உள்ளே தள்ளாமல் என்னப் பண்றாங்களோ?" எனக் கணவனிடம் கூறி, நொடித்துக் கொண்டார் அன்னபூரணி.

அவரது அழைப்பைக் கேட்டதும், அங்கே வந்து விட்டனர் இருவரும்.

அவர்களிடம் தங்களது முக மாறுதலைக் காட்டிக் கொள்ளாமல், உணவுண்ண ஆரம்பித்தனர்.

"கல்யாணப் பத்திரிக்கையைக் கொடுக்கப் போகனும்லங்க?" என்றவாறு தனக்கும் சோற்றைப் பரிமாறிக் கொண்டபடி கேட்டார் அன்னபூரணி.

"ஆமா பூரணி. அவங்க ரெண்டு விதமானப் பத்திரிக்கையை தயார் செய்திருக்காங்களே! ரெண்டையுமே எடுத்துக்கச் சொல்லியாச்சு. நீங்க என்ன நினைக்கிற?" என்று மனைவியிடமும், பெண்களிடமும் கேட்டார் சிவமணி.

அகதாவிற்கு உணவைத் தொண்டைக்குள் அனுப்பவே சிரமமாக இருக்க, அவள் பதிலே கூறாமல் அமைதியாக இருந்தாள்.

மௌனாவோ,"ரிலேட்டிவ்ஸூக்கு ஒரு டிசைன், ஃப்ரண்ட்ஸ் அண்ட் கொலீக்ஸூக்கு ஒரு டிசைன்னு ரெடி பண்ணியிருக்காங்க அப்பா.அதுக்கு ஏத்த மாதிரி நாமளும், எல்லாருக்கும் பத்திரிக்கையை வச்சிடுவோம்" என்று கூறினாள்.

"நீ ஏன் உம்முன்னு இருக்கிற?" என்று அகதாவைப் பார்த்துக் கேட்டார் அன்னபூரணி.

அதில் திகைத்து விழித்தவள்,
"தூக்கக் கலக்கம் அம்மா! மதிய நேரம் ஆனாலே தூக்கம் வந்துருது" என்று பொய்யை அடித்து விட்டாள் அகதா.

"வொர்க் ஃப்ரம் ஹோம் பார்த்துட்டு இருக்கிற ஞாபகம் இருக்கா? நைட் பேசிக்கிட்டு இருந்துட்டு தூங்க லேட் பண்றீங்களா?" என இருவரையும் கண்டித்தார் அன்னபூரணி.

"விடு பூரணிம்மா‌. இப்போ சாப்பிட்டுட்டு உடனே தூங்காதம்மா‌. அரை மணி நேரம் கழிச்சுக் கூட படுத்துக்கோ. இன்னைக்கு வேலை இல்லையே உனக்கு" என்றார் சிவமணி.

"சரி ப்பா" என வேகமாக உணவை விழுங்கி விட்டு, அறைக்குள் புகுந்தாள் அகதா.

மௌனாவிற்கும் உணவு இறங்கவில்லை தான்; ஆனால், அவளும் அகதாவைப் போல, அரைகுறையாக உண்டு விட்டு எழுந்தால், பெற்றோருக்குச் சந்தேகம் வந்து விடும். என்வே, முயன்று அனைத்தையும் காலி செய்து விட்டுப் போனாள்.

அதில் அதிருப்தி அடைந்தவர், "நீங்களாவது ஒழுங்காக சாப்பிடுங்க" என்று கணவருக்குப் பரிமாறினார் அன்னபூரணி.

இதுதான் சமயம் என்று அறைக்கு வந்து, கண்கள் சிவப்பாகும் வரை அழுது முடித்தாள் அகதா.

"அகி!!" என்று அவளை ஆசுவாசப்படுத்த முயற்சித்து,"இது சரியில்லை" எனத் தன் செல்பேசியில் மஹதனுக்கு அழைத்தாள் மௌனா.

- தொடரும்
 

Shalini shalu

Moderator
"ஹலோ மஹி" என்றவளது குரலில் தான் பட்டென்று அழுகையை நிறுத்திய அகதா,தோழியின் கையிலிருந்த செல்பேசியைப் பிடுங்க முயன்றாள்.

"ஹேய்! கால் கனெக்ட் ஆகிருச்சு!" என்று மெல்லிய, அழுத்தமானக் குரலில் அவளை எச்சரித்தாள் மௌனா.

"ப்ச்! ஏன்டி?" என்று மீண்டும் விழிகளில் அனிச்சையாக நீர் நிரம்பியிருக்கப் பரிதாபமாக கேட்டாள் அகதா.

அதற்குள், மஹதனின் அழைப்பு விடாமல் கேட்கவும்,"ஸ்ஸூ!" என்று அவளை அமைதியாக இருக்கும் படி கட்டளையிட்டவள்,

"சாரி மஹி!" என்றாள் மௌனா.

"என்னாச்சு ம்மா?" என அப்போது தான் அலுவலகத்தில் தன் அறைக்குள் சென்றிருந்தான் மஹதன்.

"நீங்க சொன்னவன் தான் அகதாவோட பயத்துக்கும்,பதட்டத்துக்கும் காரணம்" என்று கூறினாள் மௌனா.

"அவன் சரியானக் கிறுக்கனா? எவ்ளோ உதைக் கொடுத்தாலும் புத்தி வராதா?" என்று சலிப்புடன் வினவினான்.

"இருங்க! இதுக்கே இப்படின்னா! அகதாகிட்ட என்னச் சொல்லி இருக்கான்னுத் தெரியுமா?" எனச் சொல்லியவளிடம்,"வேண்டாம் மௌனா!" என்று சைகை செய்தாள் அகதா.

"நீ சும்மாயிரு அகி" என மஹதனுக்கும் கேட்கும் விதமாக, அவளைத் திட்டி விட்டு,

நடந்ததை அப்படியே உரைத்து விட்டாள் அவனிடம்.

"சட்!" என்று அருவருப்பில் எழுந்து நின்று விட்டான் மஹதன்.

அவனது குரலில் தெறித்த உணர்வுகள், இவளுக்கும் நன்றாகப் புரிந்தது.

தனக்கு வந்தக் கோபம், அவனுக்கும் வரும் தானே! என்று மௌனமாக இருந்தாள்.

அகதா வேறு மூலையில் அமர்ந்து கொண்டு மெலிதாக விசும்பவும்,"அம்மா வந்துடுவாங்க அகி" என அவளை உருட்டி மிரட்டினாள் மௌனா.

அவர்களுக்குத் தெரிந்து விட்டால் இன்னும் மோசமாகி விடும் என்று வாயை மூடிக் கொண்டுக் கண்ணீர் விட்டாள் அகதா.

பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவாறு,"என்ன உன் ஃப்ரண்ட் மூலையில் உட்கார்ந்துக்கிட்டு அழுகுறாங்களா?" என்று கேட்டான் மஹதன்.

"ம்ஹ்ம்" என ஆமோதித்தாள் மௌனா.

"இதைத் தான் செய்வாங்கன்னு எதிர்பார்த்தேன். ஊஃப்!" என்று சலித்தான்.

"அவளே பிரம்மைப் பிடிச்சுப் போயிருக்கிறா மஹி" எனவும்,

"தீபக்கை உயிரோட விட்டதே தப்பாகிடுச்சு மௌனா" என நிதானமாக கூறினான் மஹதன்.

கொலை என்ற வார்த்தையை அவன் மறைமுகமாகக் கூறியவுடன் இப்போது மௌனாவிற்கு உதறல் எடுத்தது. அவள் அதையெல்லாம் நினைத்துப் பார்க்கக் கூட மாட்டாளே?

அது உணய்ந்தவனாக, "மௌனா" என மிருதுவாக அழைத்தான் மஹதன்.

"ஹலோ" என்றாள்.

"என்னம்மா அமைதியாகிட்ட?" என்று விசாரித்தான் மஹதன்.

அவளுக்குள் தீபக்கின் சொற்கள் எதிர்மறையானப் பாதிப்பை ஏற்படுத்தி இருக்குமோ? அதாவது தன் வருங்கால கணவனையும், தோழியையும் இணைத்துப் பேசி இருக்கிறானே! என்ற மன அழுத்தம் காரணமாக உள்ளுக்குள்ளேயே தகித்துக், குமைந்து கொண்டிருக்கிறாளோ? என்ற அக்கறை மிகுதியாகத் தெரிந்தது அவனுடைய குரலில்.

"அவ ரொம்ப ஃபீல் பண்றா மஹி?" என்றதும் தான் அவனுக்கு ஆசுவாசமாக இருந்தது.

"உனக்கு எதுவும்…" என்று இழுத்தான்.

"எனக்கு உங்க ரெண்டு பேரைப் பத்தியும் நல்லா தெரியும். இது கண்மூடித்தனமான நம்பிக்கை கிடையாது மஹி! நான் பல தடவை உணர்ந்திருக்கேன். அகியும், நீங்களும் பிரதர், சிஸ்டர் மாதிரி தான் நடந்துக்கிட்டு இருக்கீங்க!" என்று அகதாவிற்கும் கேட்குமாறு அழுத்தமாக கூறினாள் மௌனா.

"ம்ஹ்ம்… தாங்க்ஸ் மா" என்று நன்றியுரைத்தான் மஹதன்.

"ப்ளீஸ் மஹி! இங்கே இவ பண்றதையே என்னால் பார்க்க முடியலை!" என்று தோழியின் நலிந்த தோற்றம் தன்னை உறுத்தி எடுப்பதைக் கூறி அவனிடம் சங்கடப்பட்டாள் மௌனா.

"சரி சரி! கூல்!" என்று கூறியவன், "இதை எங்ககிட்ட விட்ருங்க! நீங்க மனசளவுல பாதிக்கப்படக் கூடாது! அகதாவை நல்லா கவனிச்சுக்கோ! அத்தை, மாமா கிட்ட சொல்லிட்டீங்களா?" என்று வினவினான் மஹதன்.

"இல்லைங்க. அவங்களுக்குத் தெரிஞ்சா அவ்ளோ தான்!" என்று பதறினாள் மௌனா.

"சரி சொல்லாதீங்க! யதேச்சையாகத் தெரிஞ்சா பார்த்துப்போம்! அகதா அழுகுறதைக் கண்டுபிடிச்சிட்டா, நீங்க அவங்களுக்கு உண்மையைச் சொல்லி தான் ஆகனும்!" என்றான்.

"அப்படி நடக்காமல் பாத்துக்கிறேன் மஹி" என்று தெரிவித்தாள் மௌனா.

"ஓகே ம்மா! நான் கிஷானுக்குச்‌ இன்ஃபார்ம் செய்து, அவனை இதை ஹேண்டில் பண்ணச் சொல்றேன்" என்று உரைத்து விட்டு அவர்களைப் பத்திரமாக இருக்கச் சொல்லி விட்டு நண்பனுக்குக் கால் செய்தான் மஹதன்.

அவன் அழைப்பை வைத்ததும்,"அழுது அழுது மூச்சடைக்கப் போகுது பாரு!" என்று அகதாவிடம் வந்தாள்.

"மௌனா…" என அழைத்தவளிடம்,

"என்னம்மா?" எனக் கனிவான குரலில் கேட்டாள் மௌனா.

"மஹதன் என்ன சொன்னார்?" என்றாள் அகதா.

"அவருக்குத் தீபக் மேல் ரொம்ப கோபம் வந்து, கொதிச்சுப் போயிருக்கார்!" என்று விவரித்தாள்.

"ச்சீ! அவன் பேரைக் கேட்டால் கூட அருவருப்பு வருது!" என்று கைகளை உதறிக் கொண்டாள் மௌனா.

"யாரோட பேரைக் கேட்டால்?" என மூன்றாவதாக ஒரு குரல் கேட்கவும், உட்சபட்ச அதிர்ச்சியில் சரேலென்று அறையின் வாயிற் புறம் திரும்பினர் மௌனாவும், அகதாவும்.

🌸🌸🌸

"ஹலோ பார்ட்னர்!" என்று நிலைமை தெரியாமல் வம்பிழுத்தான் கிஷான்.

"டேய்! ஒரு சீரியஸ் மேட்டர்" என்று சுருக்கமாக கூறி முடித்தான் மஹதன்.

"இந்த தடவை எல்லாத்துக்கும் சேர்த்து வச்சுக் கொடுத்திடலாம்! உயிரையும் எடுத்துடுவோம்!" என்று குரூரமாக கூறினான் கிஷான்.

இவனெல்லாம் வாழ்ந்து என்னச் செய்யப் போகிறான்? என்ற எண்ணம் தான்!

"நான் பாத்துக்கிறேன். நீ தலையிடாதே மஹத்! உன்னோட மேரேஜ் முடியிற வரைக்கும் எல்லாமே என்னோட கன்ட்ரோலில் இருக்கும்" என்று நண்பனுக்கு அறிவுறுத்தினான் கிஷான்.

"சரிடா. இவனை ஃபாலோவ் பண்ணு. இன்னமும், அதே எண்ணத்தோட எங்கேயும் போய் ஏதாவது கிறுக்கு வேலை செய்தால் போட்டுத் தள்ளிரு!" என்று கர்ஜித்தான் மஹதன்.

அவனுக்கு இந்த எண்ணம் வராமல் இருந்தால் தான் வியப்பு! அப்படி ஒரு ஆத்திரத்தில் இருந்தான் அவன்.

அகதாவைச் சமாதானம் செய்யச் சொன்னவனுக்குத் தனது கோபத்தை, அமைதிப்படுத்த இயலவில்லை. இட்படியான வழியில் ஒரு பழியையோ, வஞ்சகத்தையோ யாரும் தன் மேல் சுமத்தியதில்லை. அவனது திட்டம் கூட ஊர்ப் பார்க்கத் தங்களை அசிங்கப்படுத்துவதாகத் தான் இருக்கும் என்ற சிந்தனையும் அவனது மூளைக்கு எட்டியது.

ஒருவர் அவருடைய வாழ்வில், தன்னால் துயரம் ஏற்படுவதாக கூறி, விலக்கி வைத்தால், ஒதுங்கிச் செல்வது தான் நியதி; அதை விடுத்து, அவர்களைப் பழி வாங்க கிளம்பி விட்டால், அதற்கான பிராயச்சித்தத்தையும் பெற்றுத் தான் ஆக வேண்டும்!

இறுதியாக, கிஷானுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதையும் அவன் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்காமல்,"சோஷியல் மீடியாவில் இதெல்லாம் சொன்னால், நம்மளைத் தான் லூசு மாதிரி பார்ப்பாங்க! ஏன்னா, சமுதாயத்தில் மஹதனுக்கு இருக்கிற வரவேற்பும், பேர் மற்றும் புகழும் நம்மளோட பேச்சையே எல்லாம் எடுபட வைக்காது! தூசி மாதிரி தட்டி விட்டுட்டுப் போயிடுவாங்க! வேற என்னப் பெருசாகப் பண்ணலாம்? அதுவும் தரமான ஆதாரம் இருக்கனும். அது அவங்களை சந்தி சிரிக்க வைக்கனும்! தூங்க விடக் கூடாது!" என்று வில்லத்தனமான பலவித திட்டங்களை ஆற அமரப் போட்டுக் கொண்டிருந்தான் தீபக்.

அகதாவை மிரட்டி வைத்துள்ளோம்! அவள் அதை மற்றவர்களிடம் சொல்லும் போது, தான் அடையாளம் தெரியாமல் சிதைந்து போக வாய்ப்புள்ளது என்பதை எல்லாம் அந்தக் கிறுக்கன் யோசிக்கவில்லை போலும்! மனப்பிறழ்வு ஏற்பட்டு விட்டவனைப் போல, தூக்கம், பசியுணர்வு இன்றி, சகலத்தையும் யோசித்துக் கொண்டு இருந்தான் தீபக்.

நாளாக நாளாக லலிதாவிற்கு மகனைப் பார்க்கவே பயமாக இருந்தது. அடுத்தவனது வாழ்க்கையைக் கெடுக்க அவ்வளவு தீவிரமாக முயற்சிகள் மேற்கொள்பவனை என்னவென்று சொல்லித் திருத்த முடியும்? அதுவும் இந்தளவிற்கு வந்து விட்டப் பிறகு!

அவருக்குத் தன் நிலையை நினைத்துக் கலக்கமும், பயமும் வரத் தொடங்கியது போலும்! அதனால் தாமதிக்காமல், மஹதனைச் சந்திக்கச் சென்றார் லலிதா.

ஏற்கனவே அவரது மகன் கிஷானின் ஆட்களுடைய கூரியப் பார்வைக்குள் தான் இருக்கிறான் என்பதை அறியாமல் அவரோ,"இவனைப் பார்க்கவே எனக்குப் பயந்து வருது சார்!" என்று திகிலுடன் உரைத்தவரை அமைதியாகப் பார்த்தான் மஹதன்.

அவருடைய புத்திரன் தீபக் செய்தக் காரியங்களில் பாதிக்கு மேல் இவருடைய பங்களிப்பும் உள்ளதல்லவா? அதை நினைத்து, ஏளனப் பார்வையை வீசினான் அவர் மீது!

'புதல்வன் சரியாக இருந்தால் மற்றவர்களுடைய பரிதாபத்திற்கு ஆளாக வேண்டிய கட்டாயம் இருக்காது அல்லவா? தன்னை இந்த நிலைக்குத் தள்ளி விட்ட தீபக்கை மனதினுள் அர்ச்சித்தார் லலிதா!'

"ஹலோ! மேடம்! என்ன சொன்னீங்க?" என்று அலட்சியமாக வினவினான் மஹதன்.

அவர் வயதில் பெரியவர் என்பதால், கீழிறக்கமாக எதையும் மொழிந்திடவில்லை அவன்! அதேபோல், உரிய மரியாதையும் கொடுத்திட மனம் விரும்பவில்லை மஹதனுக்கு.

"க்கும்! தீபக் ஏதோ திட்டம் போடுறான் போல இருக்கு சார்! அவனை என்னால் கட்டுப்படுத்த முடியலை. வயசான காலத்துல கொஞ்சம் கூட நிம்மதியும் கிடைக்கலை! வயித்துக்குச் சோறு கிடைக்குமான்னு பயம் வந்துருச்சு சார்!" என்று சிறிது நாட்கள் முன்பு, அவருடைய மகன், இவனை எதற்காக சந்திக்க வந்தானோ? அதே காரணத்திற்காக வேறு விதமாகப் பேசி, ம‌ஹதனின் மனதை இளக்கித், தனக்கு ஆதாயம் பெற்றுக் கொள்ள வந்திருக்கிறார் லலிதா.

'அம்மாவுக்கும், பையனுக்கும் இதில் நல்ல பொருத்தம்!' என்று பற்களைக் கடித்தான் மஹதன்.

"என்ன சார்?" என வினவியவரிடம்,"நீக்க சொன்னதைக் கேட்டாச்சு! அதுக்கு மேல நான் என்ன செய்ய முடியும் ங்க? உங்கப் பையனுக்கு நீங்க தான் புத்திமதி சொல்லிப் பழக்கனும்! நானா அவனைத் திருத்த முடியும்?" என்று நக்கலாக கூறினான்.

"சார்… அவனைத் திருத்தனும்னு உங்ககிட்ட கேட்க வரலை நான்! உதவி ஏதாவது?" என்று தயங்கியவரிடம்,

"நான் எதுக்கு உங்களுக்கு உதவி பண்ணனும்? நீங்கப் பெத்த உதவாக்கரையே உங்களை அம்போன்னு விட்டதுக்கு அப்பறம், மத்தவங்களைத் தொந்தரவு செய்ய வந்துட்டீங்களா?" என்றான் மஹதன்.

"ஐயோ! இல்லை தம்பி!" என்று பதறினார் லலிதா.

அவன் கண்டிக்கும் குரலில் பேசியது, அவருக்கு இதயத்தை எகிறித் துடிக்க வைத்தது.

தான் அவனை விட வயதில் பெரியவள், அவனது அம்மாவைப் போன்றவள் என்று பலவித சாக்குப் போக்குகள் சொல்லி, மனதைக் கரைத்துப் பணம் பெற வந்தால், இப்படி குத்திக் குதறுகிறானே! என்ற அச்சம் உண்டானது அவருக்கு.

"உங்கப் பையன் செஞ்ச காரியத்தால் கொலைவெறியில் திரிஞ்சிக்கிட்டு இருக்கிறேன். அப்படியும் எப்படி இவ்ளோ சாதாரணமாக எங்கிட்ட வந்து பண உதவி கேட்க முடியுது உங்களால?" என்று கூர்மையானப் பார்வையுடன் கேட்டான் மஹதன்.

அந்தக் கேள்வியில் சர்வமும் ஒடுங்கி நின்றார் லலிதா.

- தொடரும்
 

Shalini shalu

Moderator
கண்டிப்பான பார்வையுடன் அங்கே நின்றிருந்தார் அன்னபூரணி.


அவரைப் பார்த்ததும், அகதாவிற்கு அதிர்ச்சியில் நின்ற அழுகை மீண்டும் வந்தது.


அவரிடமிருந்து எதையாவது மறைத்துச செய்ய முடியுமா? என்ற அசட்டுத்தனத்தில் மௌனாவும், அமைதி கொண்டாள்.


ஆனால், அவர் விடுவதாக இல்லையே!


"யாரைப் பத்திப் பேசினீங்க?" எனச் சற்று மிரட்டலாகவே வினவினார் அன்னபூரணி.


இதற்கு மேல் மறைத்தால் அது அவரை அவமானப்படுத்துவது போலாகும் என்ற எண்ணத்தில்,"தீபக் ம்மா!" என்று வேறு வழியில்லாமல், அகதாவிடம் இருந்து முகத்தைத் திருப்பிக் கொண்டு, தன் தாயிடம் பதிலளித்தாள் மௌனா.


அதைக் கேட்டதும் தலையைக் குனிந்து கொண்டு, வழிந்த கண்ணீரைத் துடைத்தாள் அகதா.


"அவனா? அந்த ராஸ்கலுக்குத் தான் மாப்பிள்ளை தண்டனை கொடுத்துட்டாரே! இப்போ என்னப் பண்ணி வச்சிருக்கான்?" என்று அகதாவை இழுத்து தன் அருகில் அமர்த்தியவர், அவளது குனிந்த தலையை உயர்த்தி விட்டார் அன்னபூரணி.


அழுகையையும் தன் சேலை முந்தானையில் துடைத்து விட்டவர்,

"இதுக்கா இப்படி கண்ணீரை வீணாக்குற?" என்று அக்காவை அதட்டினார்.


அதை நிம்மதியுடன் பார்த்துக் கொண்டு இருந்த மௌனாவிடம்,"என்ன தான் ஆச்சு?" என சாராம்சத்தைப் பற்றிக் கேட்டார் அன்னபூரணி.


தாயின் சொல்லுக்கு இணங்கி, அனைத்தையும் ஒப்பித்தாள் அவளும்.


"கேடு கெட்டப் பையன்! அவனையெல்லாம் இன்னும் சாத்தனும்!" என்று திட்டித் தீர்த்தார் அன்னபூரணி.


"மாப்பிள்ளைக்குத் தெரியுமா?" என்றார் மகளிடம்.


"தெரியும் ம்மா. அவர் இதைப் பாத்துக்கிறேன்னு சொன்னார்" என்று கூறினாள் மௌனா.


"இதுக்கே முடங்கி இருந்தால், காலம் பூராம் இப்படியே ஒளிஞ்சி இருக்க வேண்டியது தான் அகி! முகத்தைக் கழுவிட்டு வா!" என அவளை அனுப்பியவர்,


மகளிடம்," உங்க அப்பாகிட்டயும் சொல்றேன். அவருக்கு மட்டும் தெரியாமல் இருக்கக் கூடாதுல்ல! சம்பந்திக்குத் தெரியுமா?" என்று கேட்டார் அன்னபூரணி.


அதில் விலுக்கென்று நிமிர்ந்தவள்,"இல்லைம்மா! அவர் சொல்லிடுவாரோ?" எனப் பயந்தாள் மௌனா.


"நீ எதுக்குப் பயப்பட்ற இப்போ? சொல்லட்டுமே! சின்னவங்களே எல்லாம் எடுத்துச் செய்தால் நாங்க எதுக்கு இருக்கோம்? இதை ஈகோவால் சொல்லலை மௌனா ம்மா! எங்களோட சப்போர்ட் எப்பவும் உங்களுக்கு இருக்கும்னு நம்பிக்கையைக் கொடுக்கவும், நீங்க அதிக ஸ்ட்ரெஸ் எடுத்துக்கக் கூடாதுன்னும் தான்! அப்பாகிட்ட பேசிடறேன். மாப்பிள்ளை அவர் வீட்டில் பேசுறேன்னு சொன்னால் தடுக்காத!" என்று அறிவுரை வழங்கினார் அன்னபூரணி.


அதற்குள் அங்கே பிரசன்னமானாள் அகதா.


"உனக்குத் தான் நிறைய சொல்ல வேண்டியது இருக்கு" என அவளுக்குத் தன்னம்பிக்கை வர வைக்கப் போதுமான ஆலோசனைகளைக் கொடுத்தார்.


ஒரு சில நிமிடங்கள் அவளுக்குத் தேவைப்பட்டது. அவள் தெளிவு பெற்றதும், "சாரி ம்மா! சாரி மௌனா! இனிமேல் பொசுக்குன்னு அழுக மாட்டேன்!" என்று உறுதி தந்தாள் அகதா.


"சாப்பிடாமல் வேற அழுதுட்டு இருந்திருக்க" என அவர்களை உணவருந்தச் செய்தார் அன்னபூரணி.


🌸🌸🌸


"எங்க இருக்கீங்க கிஷான்? நாம மீட் பண்ணலாம்னு நீங்க தான் சொன்னீங்க? இப்போ லேட் ஆகிட்டே இருக்கு! உங்களைத் தான் காணோம்!" என்று பொரிந்தாள் முக்தா.


அவ்வப்போது பார்த்துப், பேசிக் கொள்ளலாம் என முடிவெடுத்து இருந்தார்கள், இப்படி ஏதாவது வேலையில் மாட்டிக் கொண்டால் கிஷான் வருவது தமாதமாகி விடும். அதை ஓரளவிற்குப் பொறுத்துப் போன முக்தாவோ, இன்று அவனிடம் கூறி சண்டை பிடித்தாள்.


"அகதாவோட பிரச்சனைக்கு முடிவு கட்டப் போறேன் முகி!" என ஆழ்ந்த குரலில் கூறினான் கிஷான்.


"என்ன?" என்று அதிர்ந்தாள் முக்தா.


"அவனோட அட்டூழியம் ஜாஸ்தி ஆகிடுச்சு" என்று நடந்ததை உரைத்தான் அவளிடம்.


"ஓஹ்! அப்போ, அவனுக்கு முடிவு கட்டிடுங்க கிஷான். நான் காத்திருக்கேன்" என்று தீர்க்கமாக கூறினாள் முக்தா.


"முடிச்சிட்டு உனக்குக் கால் செய்றேன். லவ் யூ முகி" எனத் தெரிவித்து விட்டு, தீபக்கைப் பின் தொடர்ந்த தன் ஆட்களிடம்,


"அவன் யாரையாவது பார்க்கப் போறானா?" எனக் கேட்கவும்,


"ஆமாம் சார். ஏதோ டிவி சேனலோட ஆஃபீஸூக்குள்ளப் போக, அப்பாயிண்ட்மெண்ட் வாங்குறதுக்கு, அலைஞ்சிட்டு இருக்கான்" என்று கூறினான்.


"அந்த ஆஃபீஸூக்குள்ள நுழையறதுக்கு முன்னாடியே தூக்கிடுங்க!" என்று உத்தரவிட்டான் கிஷான்.


காவலாளியிடம் கெஞ்சியவனை,"தம்பி!" என்ற குரல் திசை திருப்பியது.


அடியாள் போன்ற தோற்றமின்றி, கேஷுவலாக உடுத்தியிருந்தவனை ஏறிட்டான் தீபக்.


"என்னையா?" என்று கேட்டான்.


"ஆமாம். உன்னைத் தான் ப்பா. இங்கே வா" என அவனைக் கைக் காட்டி அழைத்தான்.


ஒருவேளை இந்த அலுவலகத்தில் வேலை செய்பவனாக இருப்பானோ? என்று அவனிடம் போனான் தீபக்.


"எதுக்கு இங்கேயே சுத்திக்கிட்டு, அந்த ஆஃபீஸூக்குப் போகத் துடிச்சிட்டு இருக்கிற?" என்று வினவினான் அவன்.


"அது எனக்கு ஒரு முக்கியமான வேலை ஆகனும். அதான் ங்க" என்றான்.


இப்போதிருக்கும் சூழ்நிலையில் யாரிடமும் வம்பு வளர்த்துக் கொள்ளக் கூடாது என்று தணிவாகவே பேசினான் தீபக்.


ஆள் பார்க்கவும் வாட்டசாட்டமான தோற்றத்துடன் இருக்க, இவன் தன்னைத் தாக்கினால், உடலில் மீதமிருக்கும் உறுப்புகளைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது என்ற எச்சரிக்கை உணர்வும் இருந்தது தீபக்கிற்கு.


ஆனால், மஹதனுடைய அடியாளாக இருப்பானோ? என்ற ஐயத்தில்,


"நீங்க யாரு?" என்று பணிவாக கேட்டான் தீபக்.


"நானும் ஒரு பிரஸ்ஸில் வேலை பார்க்கிறேன் ப்பா. நீ இங்கே சுத்திட்டு இருக்கிறது, அப்பறம் வாட்ச்மேன் கிட்டப் பேசியதைக் கேட்டேன். உனக்கு என்ன ஹெல்ப் வேணும்?" என்று இயல்பாகப் பேசுவதைப் போல வினவினான் அவன்.


"வேலை விஷயமாக வந்தேன் சார். உங்க இடத்தில் எனக்கான ஜாப் ஏதாவது கிடைக்குமா? ரெஸ்யூம் கொடுக்கவா?" என்று பாவமாக கேட்டான் தீபக்.


"அப்படியா? எங்க ஆஃபீஸில் இல்லாத வேலையா? உன்னோட ரெஸ்யூம் வேணாம் ப்பா. ஆளே இங்கிருக்கும் போது அதெல்லாம் எதுக்கு? என் கூட வா! உன் தகுதிக்கு ஏத்த மாதிரி வேலையைத் தர்றேன்" எனத் தீபக்கால் கத்தக் கூட முடியாத அளவிற்குக் கிடுக்கிப்பிடியில் வைத்து, தீபக்கை இழுத்துச் சென்று, அவனைக் காரிலேற்றித் தங்களது முதலாளியின் இடத்திற்குக் கொண்டு சென்றான் அந்த அடியாள்.


இவன் மஹதனுடைய ஆளே தான்! அதுவும், அகதாவிடம் தான் பேசியதற்காக, பிரதிபலன் கிடைக்கப் போகிறது என்பதையும் புரிந்து கொண்டு, இறுகிப் போய், திகிலுடன் இருந்தான் தீபக்.


ஆனால், இவற்றையெல்லாம் செய்யச் சொன்னது, மஹதன் இல்லை, கிஷான் என்பது அவனுக்குத் தெரியாது.


தன் நண்பனை அவமானப்படுத்திப் பேசியவனைத் தானே கவனிக்க உறுதி கொண்டான் கிஷான்.


அறைக்குள் இருந்த அந்தகாரம் தீபக்கைப் பயமுறுத்தியது.


அவனை அடைத்து வைத்து விட்டு, அதை தன் முதலாளியிடம் தெரிவிப்பதற்காக வெளியேறி விட்டான் அந்த அடியாள்.


🌸🌸🌸


அவரது நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது, பேச்சற்று, பயத்தில் விறைத்து நின்றார் லலிதா.


"அவன் செய்ததுக்கும், எனக்கும் துளியும் சம்பந்தம் இல்லை தம்பி" எனக் கூறினார்.


"பொய்யாகப் பேசி, நடிக்கிறதுக்கு, யோக்கியமாக ஏதாவது வேலை செய்யலாம்!" என்று சீறினான் மஹதன்.


"இல்லையில்லை தம்பி" என அவர் மேலும் தொடர,


"ஸ்ஸ்! நீங்களும், உங்கப் பையனும் அகதாவை விட்டு நிரந்தரமாக விலகிப் போகனும்! இல்லைன்னா, நான் விலக்கி வைப்பேன்!" எனக் கர்ஜித்தவனை ஆடிப் போய்ப் பார்த்தார் லலிதா.


"அவங்க என் வருங்கால மனைவியோட ஃப்ரண்ட். அப்போ எனக்குத் தங்கச்சி மாதிரி‌. இப்படியான உன்னதமான உறவுகளைத் தெரிஞ்சே கொச்சைப்படுத்த உங்களுக்கு வெட்கமா இல்லை?" என்று அவரிடம் அருவருப்புடன் கேட்டான் மஹதன்.


அவரால் எதை தான் கூற முடியும்? அமைதியாக நிற்பதை தவிர வேறு மார்க்கம் இல்லை.


"ப்ச்! உங்க மகனை உயிரோடு பார்க்கனும்ன்ற ஆசையை மறந்துடுங்க! ஏற்கனவே ஒரு தடவை அவனை நாங்க அனுப்பி வச்ச நிலைமை உங்களுக்கே தெரியும்! என்னோட நேரத்தை வீணாக்காமல், போய் உழைச்சு சம்பாரிங்க" என்று அதற்குப் பிறகு அவரைக் கெஞ்ச விடாமல், அனுப்பி விட்டான் மஹதன்.


அப்படியென்றால் தன் மகன் உயிருடன் வருவதற்கு வாய்ப்பே இல்லையா? இப்போது எங்கிருக்கிறான்? மறுபடியும் தன் கைங்கரியத்தைக் காட்டி விட்டானா மஹதன்? மீண்டுமொரு குழாயடிச் சண்டையை அகதாவிடம் போட முடியாது! என்ற எண்ணங்கள் சூழ வீட்டிற்கு வந்து சேர்ந்தவர்,


மகனுக்குச் செல்பேசியில் அழைத்துப் பார்த்தார். அதில் வந்த தகவலிலேயே இவருக்கு எல்லாம் புரிந்து போனது. இரண்டாவது முறையாகத் தன்னிடம் மாட்டிக் கொண்டவனை உயிருடன் வெளியில் விடுவதற்கு மஹதனும், சாதாரணமான ஆள் இல்லையே? மகனுடைய ஈமக் கிரியைகளைத் தான், தான் செய்யப் போகிறோமா? என்று நினைக்கும் அளவிற்குப் போய் விட்டார் லலிதா.


  • தொடரும்
 

Shalini shalu

Moderator
தீபக்கின் தாய் லலிதாவின், பெருங்குற்றத்திற்கான தண்டனைக் காலம் ஆரம்பித்து விட்டது.

அவர் அப்படி ஒடுங்கிப் போய் இருக்க, இங்கே அவரது மகனை அடைத்து வைத்திருந்த கோபாலோ தன் முதலாளிக்குச் செல்பேசியில் அழைத்தான்.

"சார்! அவனை அடைச்சாச்சு" என்று தெரிவித்தான்.

அதைக் கேட்டதும்,"நான் வர்ற வரைக்கும் அவனை எதுவும் பண்ணாத.என்னக் கேட்டாலும் பதில் சொல்லாத" என்று வைத்து விட்டு அவ்விடத்திற்கு விரைந்தான் கிஷான்.

அவனுக்கு இருக்கும் கோபத்திற்கு, தீபக்கை ஒரேயடியாக காணாமல் போக வைத்து விட வேண்டுமென்ற வெறி இருந்தது. ஆனால், எடுத்தவுடன் அவனது உயிரைப் பறிக்க வேண்டாம், அது தவறும் கூட, இழிந்த சொற்களைப் பேசுவது இதுவே கடைசி தடவையாக இருக்க வேண்டும் என்று மிரட்டி விட்டு, அனுப்பி வைத்து விடு என்றதொரு கோரிக்கையை நண்பனிடம் வைத்திருந்தான் மஹதன். அதனால் தான்,தன்னுடைய ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு உள்ளான் கிஷான்.

தீபக்கை கட்டிப் போட்டு வைத்திருந்த இடத்திற்கு வந்தவனுக்கு வணக்கம் வைத்த அடியாளிடம்,"ஏதாவது பேசினானா?" என்று வினவினான் கிஷான்.

"இல்லை சார். கொஞ்சம் முரண்டு பிடிச்சான். அப்பறம், கையைக், காலைக் கட்டிப் போட்டதுக்கு அப்பறம், அமைதி ஆகிட்டான்" என்கவும்,

ஒருவேளை தன்னைக் கடத்தியது யாரெனத் தீபக்கிற்குத் தெரிந்து விட்டதோ?

கண் கட்டிவிருந்து, எல்லாமே அவனுக்குப் பாதகமாக அமைந்திருந்தது போலும். இருந்த இடத்தை விட்டு நகர இயலவில்லை தீபக்கால்.

உள்ளே வந்த பூட்ஸ் ஒலிகளைக் கேட்டவுடன் நிமிர்ந்தான்.

"மஹதன்!" என்று ஆத்திரத்தில் ஒலியெழுப்பினான்.

"ஹாஹா! மஹதனா? அவன் எதுக்கு இங்கே வர்றான்?" என்று நகைப்பொலியுடன் உரைத்தான் கிஷான்.

"நீ…! அவனோட ஃப்ரண்ட்!!" என்றவனிடம்,

"ஆமாம். மஹதனோட உயிர்த் தோழன் தான்!" என்று பதிலளித்தான் கிஷான்.

"உன்னை எனக்குத் தெரியும்! அன்னைக்கு அவன் கூட நீயும் சேர்ந்து தான, என்னை டார்ச்சர் செய்தீங்க?" என்று கத்தினான் தீபக்.

"பின்னே, நீ பண்ண வேலைக்கு, உன்னைப் பாராட்டனுமோ?" என்று நக்கலாக கூறினான் கிஷான்.

"ஹேய்! என் பொண்டாட்டி கூட நான் பேசினால், உங்களுக்கு என்னடா வருது?" என்று அப்போதும், வரம்பு மீறிய வார்த்தைகளைப் பேசினான் தீபக்.

"டிவோர்ஸ் ஆனப் பிறகும், அவங்களை இப்படி தொல்லை செய்ய உனக்கு என்ன உரிமை இருக்கு?" என்றான்.

"அதை நாங்கப் பேசிக்கிறோம். உங்களுக்கு முன்னாடி, அந்த மௌனாவும், அவளோட அப்பா, அம்மாவும் ஓவராக ஆடுனாங்க! ஏதோ அவங்கப் பெத்தப் பொண்ணு மாதிரி! இப்போ நீங்களா?" என்று வெறுப்புடன் பேசியவனிடம்,

"ஆமா டா! அவ்வளவு சொல்லியும் உனக்கு ஏன் மண்டையில் ஏற மாட்டேங்குது?" என்க,

"எதுக்கு ஏறனும்? எங்களுக்குக் காசு சம்பாதிச்சுக் கொடுத்துட்டு, மறு வார்த்தைப் பேசாமல் இருந்தவளை, அந்த மௌனாவும், நீங்களும் சேர்ந்து அவளை எங்கிட்ட இருந்து டிவோர்ஸ் வாங்க வச்சிட்டீங்க! அவளோட சம்பாத்தியத்தில் தான் நாங்க சாப்பிட்டுட்டு, மத்ததைப் பார்த்தோம், அதுக்கு ஆப்பு வைக்கும் போது சும்மா விட்டுடுவோமா?" எனப் பொரிந்தான் தீபக்.

இவ்வாறு பேசியவனை இப்போதே அடித்துக் கொன்றால் என்ன? என்று தோன்றியது கிஷானுக்கு.

"என் நண்பனையும், அகதாவையும் ஏன் சேர்த்து வச்சுப் பேசின?" என்று அடக்கி வைக்கப்பட்ட ஆத்திரத்துடன் வினவினான்.

"அவன் தான அவளுங்களுக்குப் பக்கப்பலமாக இருக்கான். அவனால் தான, எங்க விஷயமே தெரியாத, நீயெல்லாம் என்னைப் போட்டு மிதிச்ச! உங்கிட்ட அடி வாங்கனும்ன்றது எனக்கு என்னத் தலையெழுத்தா டா?" என்று சீறினான் தீபக்.

"கரெக்ட் தான்! ஆனால் அதையெல்லாம் நீயே இழுத்து விட்டுக்கிட்டியா டா!" என்று அவனிடம் கிண்டலாக கூறினான் கிஷான்.

"உங்களையெல்லாம் பார்த்தாலே கோபம், கோபமாக வருதுடா! எவ்வளவு கெத்தாக அகதாவை ஹேண்டில் பண்ணேன் தெரியுமா? நீங்க உள்ளப் புகுந்ததுக்கு அப்பறம் அவளுக்கு என் மேலேயும், என் அம்மா மேலேயும் இருந்த பயமே போயிடுச்சு!" எனப் பல்லைக் கடித்தான் தீபக்.

"ஆமாம். நீயும், உங்க அம்மாவும் பெரிய பயங்கரவாதிங்க! பார்த்ததும், பயப்பட்றதுக்கு! போடா டேய்! உன்னை விட்டால் இப்படியே பேசிக்கிட்டு இருப்ப! இரண்டு நாள் இங்கேயே இரு! அதுக்கப்புறம் உனக்கு மங்களம் பாடுறேன்!" என அவனது கத்தலைப் பொருட்படுத்தாமல், அவன் வாயில் பிளாஸ்திரியைப் பொருத்தி விடச் சொன்னவன்,

"இங்கேயே இருக்கட்டும். சாப்பாடு எல்லாம் நீ பார்த்துக் கொடுத்திடு" என்று உத்தரவிட்டுச் சென்றான் கிஷான்.

🌸🌸🌸

"இவ்வளவு நடந்திருக்கு! இன்னும் ஏன் பொறுமையாக இருந்த மஹத்?" என்று மகனிடம் கேட்டார் கௌசல்யா.

ஏனெனில், தனக்கு யாராவது தீங்கிழைத்தால் அதை வட்டியும், முதலுமாக திருப்பிக் கொடுத்து விடுவான் மஹதன். ஆனால் தீபக் விஷயத்தில் மட்டும் ஏன் இவ்வளவு அமைதியாக உள்ளான்? என்ற குழப்பத்தில் இருந்தனர் அவரும், அவரது கணவர் திருமூர்த்தியும்.

"தட்டி வைக்க நினைச்சேன் ம்மா, வளந்து வந்துட்டான்! இப்போ கிஷான் பாத்துக்கிறேன்னு சொன்னதால், அவன்கிட்ட பொறுப்பை ஒப்படைச்சுட்டேன்!" என்று கூறினான் மஹதன்.

"அப்போ கொலை செய்யப் போறானா?" என்றார் திருமூர்த்தி.

"இல்லை ப்பா. அந்த அளவுக்கு வேண்டாம்னு சொல்லிட்டேன். கடைசி வரைக்கும், அவன் அதே இடத்தில் அடைபட்டு இருக்கட்டும். அப்பறம் அவனுக்கே மனசு விட்டுப் போயிடும். உடலில் வலு காணாமல் போகும். அந்த நேரத்தில், பண்ணது எல்லாம் தப்புன்னு உணருவான். அப்பறம் என்னப் பண்றதுன்னுப் பாத்துக்கலாம்னு சொல்லிட்டான் கிஷான்" என்று விளக்கினான் மஹதன்.

இவன் கூறியதைப் போலத் தான், தனது திட்டத்தை உருவாக்கி இருந்தான் கிஷான்.

தீபக்கின் உயிரைப் பறிக்காமல், அவனுக்காகத் தண்டனை வழங்கப்பட வேண்டாமென்பதில் முனைப்புடன் இருந்தனர் நண்பர்கள் இருவரும்.

🌸🌸🌸

இங்கே சிவமணியோ,"அந்த ராஸ்கலை என்னச் செய்தால் தகும்?" என்று சினத்தில் குதித்துக் கொண்டு இருந்தார்.

"பிரச்சனை ஒய்ஞ்சுப் போன அப்பறம் இப்படி குதிக்கிறீங்களே?" என்று அவனை அமைதிப்படுத்தினார் அன்னபூரணி.

"இப்போ தான இதை எங்கிட்டேயே சொல்றீங்க!" என்று வருத்தமாக கூறினார் சிவமணி.

"அம்மாகிட்டயும் லேட் ஆக தான் ப்பா சொன்னோம்" எனக் கூறினாள் மௌனா.

அதற்கும் அவருக்கு மனம் ஆறாமல்,
"ஓஹ்! சம்பந்தி கிட்ட சொன்னீங்களா?" என்று வினவினார்.

"அவர் சொல்லி இருப்பார் ப்பா" என விடையளித்தாள் மகள்.

அவரை மலையிறக்க வெகு நேரம் எடுத்தாலும், எப்படியோ இவர்களுக்காகச் சமாதானம் ஆனார் சிவமணி.

இனி, மௌனாவின் மற்றும் மஹதனின் திருமணத்தை ஆயத்தம் செய்ய வேண்டியது தான் பாக்கி!

முதலில், பத்திரிக்கையைத் தனியாக ஒரு நாளில் சென்று தேர்ந்தெடுத்து முடித்துக் கொண்டார்கள்.

இந்த முறை, எல்லாரையும் அழைத்துப் போய், அவர்களது விருப்பங்களையும் கேட்டு, இரு வீட்டாரின் ஒப்புதலுடன் பத்திரிக்கையை அடிக்கக் கொடுத்தான் மஹதன்.அதில் மௌனாவிற்கு ஆனந்தமாக இருந்தது.

"நீங்க மனசில் எதையும் வச்சிக்காம, உங்க மகளை அனுப்பி வைப்பீங்களா சார்?" என்று நீலகண்டனிடம் கேட்டாள் மௌனா.

ஏனெனில், முக்தாவுடனான நட்பு சிறிதளவிலும் முறிவதில் அவளுக்குப் பிடித்தமில்லை.

அகதாவைப் போலவே, தன்னுடன் ஒட்டிக் கொள்ளும் நல்ல உள்ளத்தைக் கை‌ விட முடியாது என்ற முடிவில் இருந்தவள், அதனால் தான், அவளது தந்தையிடம் இந்தக் கோரிக்கையை வைத்தாள் மௌனா.

அவருக்கு இவள் மேலும், அண்ணபூரனி மற்றும் சிவமணி மீதும், நல்ல மதிப்பு இருப்பதால், மகளை அவளுடன் அனுப்பி வைக்கச் சம்மதித்து விட்டார் நீலகண்டன்.

நிச்சயத்தின் போதே, பாதுகாப்பை வெகு மும்முரமாகப் பிசகு இல்லாமல் பார்த்துக் கொண்ட கிஷான், இப்பொழுது, தோழனின் திருமணத்தில் மட்டும் அலட்சியமாக இருந்து விடுவானா? இதோ ஆரம்பித்து விட்டான் தனது பாதுகாப்பு முறைமைகளை நடைமுறைப்படுத்தும் வேலையை!

அதற்கிடையில்,"சார்! இன்னைக்கு உங்களோட வேலை முடிஞ்சதும் என்னைப் பார்க்க வரனும்" என்று கறாராக கூறியவளிடம்,

"இந்த தடவை நீ எங்க வீட்டுக்கு வா முகி. ரொம்ப நாளைக்கு முன்னே வந்தது. அப்பா, அம்மா உனக்காக வெயிட் ப
ண்றாங்க" எனவும்,

"ஓஹ் சூப்பர்! வர்றேன் கிஷான்" என்று மகிழ்ச்சியாகவே ஒப்புதல் அளித்தாள் முக்தா.

- தொடரும்
 

Shalini shalu

Moderator
"அப்பா! நான் கிஷானோட வீட்டுக்குப் போய், அத்தை, மாமாவைப் பார்த்துட்டு வர்றேன்" என்று தந்தையிடம் உத்தரவு கேட்டு நின்றாள் முக்தா.


"சரி‌ முகி. நானும் மூர்த்தி கூட கல்யாண வேலையைப் பாக்குறேன்" என்று மகளை அனுப்பி விட்டு, நண்பனுடன் சென்று விட்டார் நீலகண்டன்.


இன்னும் பல முக்கியமான ஆட்களை முறைப்படியாகப், பத்திரிக்கையைக் கொடுத்து, அழைத்து விட்டால் போதும் என்ற எண்ணத்துடன் திருமூர்த்தியும், நீலகண்டனும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டனர்.


மஹதனும், கிஷானுடன் சேர்ந்து, தன் சகாக்களுக்குப் பத்திரிக்கை வைத்து விட்டான்.


அந்த வேலையை முடித்தப் பின்னர் தான், முக்தாவைத் தன்‌ வீட்டிற்கு அழைத்திருக்கிறான் கிஷான்.


"முகி" என்ற வரவேற்புடன் அவளை உள்ளே அனுமதித்தார் சித்ரலேகா.


"வணக்கம் அத்தை, மாமா!" என இவளும் கூக்குரலிட்டவள்,


"ஹாய் கிஷான்" என்று தன்னவனைப் பார்த்துப் புன்னகைத்தாள் முக்தா.


கிஷான், "வா முகி"


அவளுக்கான உணவையும் தயாராக்கி இருந்தார் சித்ரலேகா.


"இப்போதைக்கு, ஜூஸ் மட்டும் போதும் அத்தை" என்று கேட்டு வாங்கிக் குடித்தாள் முக்தா.


"அப்பா எப்படி இருக்கார் ம்மா? அவரையும் அழைச்சிட்டு வந்திருக்கலாம்ல?" என்றார் காஞ்சியப்பன்.


"மூர்த்தி அங்கிள் கூட வெளியே போயிருக்கார் மாமா" எனத் தெரிவித்தாள் அவரிடம்.


"இன்னும் அங்கிளும், அவரும் இன்விடேஷன் கொடுத்து முடிக்கவே அப்பா! நானும், மஹதனும் தான் முதலில் கொடுத்து முடிச்சோம்" என்று தந்தையிடம் கூறினான் கிஷான்.


"ஓகே டா" என்றார் காஞ்சியப்பன்.


"மௌனா கூடப் பேசினாரா?" என்று அவளைத் தன்னுடன் வைத்துக் கொண்டு கதையளக்கத் தொடங்கினார் சித்ரலேகா.


செய்து வைத்திருந்த உணவுகள் வீணாகி விடும் என்ற நல்லெண்ணத்தில்,"அம்மா! பசிக்குது.உங்களை விட்டுட்டு சாப்பிட மனசு வரலை. நீங்களும், முகியும் வந்தால், உங்களுக்கும் பரிமாறிட்டு, நாங்களும் சாப்பிடுவோம்" எனப் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கூறினான் கிஷான்.


"ஹாஹா!" என அவனது தாயும், முக்தாவும் சிரித்து விட்டார்கள்.


அதன்பின், உணவைப் பரிமாறி உண்டு விட்டு, "இதுக்கு மேலேயும் நாங்க உன் கூட பேசினால், என் பையன் ரொம்ப வாடிப் போயிடுவான். அவன் கூட வெளியே போயிட்டு, அப்படியே உன்னை வீட்டில் டிராப் பண்ணச் சொல்லிடு" என் முக்தாவைக் கிஷானுடன் அனுப்பி வைக்க மனமிரங்கினார் சித்ரலேகா.


"அங்கிள், ஆன்ட்டி ! பை" என்று கிஷானுடன் கிளம்பினாள் முக்தா.


"தீபக்கை என்ன செஞ்சீங்க?" என்றதும்,


அவனைக் கடத்திய அன்று, தீபக் பேசியப் பேச்சுக்களை நினைத்துப் பார்த்தவன், முகம் சுளித்தவாறே, "இன்னும் எதுவும் செய்யலை முகி. ஆனால், இப்படியே விடவும் மாட்டேன்" என்று உறுதியாக கூறினான் கிஷான்.


"ஓகே.. விடுங்க" என்று கூறியவள், அவனைச் சமாதானம் செய்தவள்,


"நீங்களும், மஹதனும் பத்திரிக்கை கொடுத்து முடிச்சாச்சுன்னு சொன்னீங்க! எனக்குக் கொடுக்கவே இல்லையே?" என்று வினவினாள் முக்தா.


"அவன் ஃபேமிலியோட வந்து இன்வைட் செய்றதா சொன்னான் முகி‌. அப்போ நானும் கூட வருவேன். மத்தவங்களுக்கு நாங்க மட்டும் தான் போனோம். இவ்ளோ டிலே ஆகிடுச்சுன்னு வருத்தப்படாத! ப்ளீஸ்" என்று கெஞ்சினான் கிஷான்.


"ஹேய் என்னங்க இது? இட்ஸ் ஓகே! எனக்கு இன்விடேஷன் வரலைன்னு தான் கேட்டேன். எப்போ என்றாலும் வீட்டுக்கு வாங்க" என்றவள்,


பின், "இனிமேல் உங்க கூட டைம் ஸ்பெண்ட் பண்ண முடியுமான்னு தெரியலையே" என்று சோகமாக கூறினாள் முக்தா.


"ஏன்? ஏன்?" என்று பதறினான் கிஷான்.


"உங்களுக்குத் தெரியாதா? மௌனாவோட மணப்பெண் தோழி நான் தானே?" என்று குறும்புடன் கேட்டாள் முக்தா.


"ஆமால்ல! உனக்கு மணப்பெண் தோழியாக யாரு இருப்பா?" என்று கேட்டான்.


"யாருக்குத் தெரியும்! அப்படி நிக்கனும்னு நான் எதிர்பார்க்கவும் இல்லை" என்றவளை, ஆறுதலாக அணைத்துக் கொண்டான் கிஷான்.


அவளை வீட்டில் விட்டவன், மஹதனுக்கு அழைத்து, முக்தாவின் வீட்டிற்கு எப்போது பத்திரிக்கை வைக்கச் செல்லலாம்? என்று கேட்டான்.


அதற்கு அவனோ,"நீலகண்டன் அங்கிளும், அப்பாவும் தான, மத்தவங்களை இன்வைட் பண்றாங்க? சோ, எப்போ கேட்டாலும் வீட்டில் இல்லைன்னு தான் சொல்றார்.நான் என்னச் செய்யட்டும் கிஷான்?" என்றான் மஹதன்.


தந்தைக்கும், மகளுக்கும் தனித்தனியாகப் பத்திரிக்கை வைக்க முடியாதல்லவா? என்ற ரீதியில் அவன் கேட்டதும்,


"மாமா கிட்டக் கேட்டுச் சொல்றேன்" என்று கூறி வைத்து விட்டு, நீலகண்டனுக்கு அழைத்தான் கிஷான்.


அழைப்பை ஏற்றதும், "சொல்லுங்க மாப்பிள்ளை" என்றார் முக்தாவின் தந்தை நீலகண்டன்.


"எப்போ மாமா நீங்க உங்க வீட்டில் இருப்பீங்க?" என்று கேட்டான் கிஷான்.


"ஏன் மாப்பிள்ளை?"


"உங்களுக்கும், முக்தாவுக்கும் தான் இன்னும் இன்விடேஷன் வைக்கலை‌! உங்களைப் பிடிக்க முடியலைன்னு மஹத் புலம்புறான்!"


"ஹாஹா! நான் நாளைக்கு வீட்டில் இருக்கிறேன் மாப்பிள்ளை. மஹதனை அழைச்சுட்டு வந்துடுங்க" என்றார் நீலகண்டன்.


"ஓகே மாமா. அவன் கூட, தானும் வர்றேன்" என்றுரைத்தான் கிஷான்.


"ம்ம்… லன்ச் பிரிப்பேர் செய்யச் சொல்றேன்" என அவர்களது வரவை எதிர்நோக்கிக் காத்திருந்தார் நீலகண்டன்.


அவரது பதிலை மஹதனுக்குச் சொல்லவும்,"ஓகே கிஷான். உங்க வீட்டுக்கும் வருவோம்" என்று கூறினான்.

—------------------------------


தன்னுடைய அலுவலகத்திற்கு வந்திருந்த மௌனாவை,"வாங்க சிஸ்டர்!" என்று சிரித்த முகத்துடன் வரவேற்றான் கிஷான்.


"ஹாய்!" என்றவாறே இன்முகத்துடன் பேசினாள் மௌனா.


"என்ன இங்கே விசிட்?" என்று வினவினான்.


"என் கூட வேலைப் பார்த்தவங்களை மேரேஜூக்கு இன்வைட் பண்ண வந்தேன் கிஷான்" என்று கூறினாள்.


"ஓஹோ! பிரேக் டைமில் பேசுங்களேன்! எல்லாருமே வந்துடுவாங்க" என்றான் கிஷான்.


"சரி. அதுவரைக்கும் ஹோட்டலைச் சுத்திப் பார்த்துட்டு வர்றேன்" என்று அவனிடம் அனுமதி பெற்று, தான் வேலைப் பார்த்த இடத்திற்கு வந்தாள் மௌனா.


இவள் விடுப்பு எடுத்திருப்பதால், முன் வரவேற்பறையில், மௌனாவிற்குப் பதிலாக வேறொரு பெண்ணை வேலைக்கு நியமித்து இருந்தான் கிஷான்.


அவளைப் பார்த்துப் புன்னகைத்தவள், தன்னுடைய வேலையைத் தான் அவள் இப்போது செய்வதாகவும், திருமணத்திற்கு அழைக்க வந்ததாகவும் எடுத்துக் கூறினாள் மௌனா.


"அப்படியா மேம்? காங்கிராட்ஸ்" என்று கைக் குலுக்கி வாழ்த்துச் சொன்னாள் அந்த ரிசப்ஷனிஸ்ட்.


"தாங்க்ஸ்" என்றாள் மௌனா.


விடுதியை ஆசை தீரச் சுத்திப் பார்த்தப் பிறகு, கிஷானிடம் வந்தவள்,"இப்போ ஸ்டாஃப்ஸை மீட் பண்ணலாமா நான்?" என்று கேட்டாள்.


"ஷூயர்" என்றவன், விடுதியில் வேலை செய்யும் ஊழியர்களை வரவழைத்து, மௌனாவைப் பற்றிய அறிமுகம் தெரிந்தவர்களைத் தவிர, மற்றவர்களுக்கு அவளைப் பற்றிக் கூறினான் கிஷான்.


அதைக் கேட்ட அனைவரும் அவளுக்கு வாழ்த்துக் கூறினர். அவர்களைத் தன் திருமணத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்து விட்டுக் கிஷானிடம் விடைபெற்றுச் சென்றாள் மௌனா.


—---------------------


மறுநாள், நீலகண்டனின் வீட்டிற்கு வந்திருந்தனர் மஹதனும், மௌனாவும்.அவனுடைய பெற்றோரும்.


கடைசி நிமிடத்தில் தான், தானும் வருவதாக மஹதனிடம் கூறியிருந்தாள் மௌனா.


அன்னபூரணி, சிவமணி மற்றும் அகதா மூவரும் மௌனாவின் சொந்த ஊருக்குப் போயிருந்தனர் அங்கிருப்போருக்குப் பத்திரிக்கை வைப்பதற்காக.


மருமகளை மட்டும் தன்னுடன் அழைத்துக் கொண்டார் கௌசல்யா.


அவர்களை வரவேற்றவர், மாப்பிள்ளையைத் தனியாக கவனிப்பதையும் சிறப்பாக செய்தார் நீலகண்டன்.


முக்தாவும் அங்கே தான் இருந்தாள்.


மஹதனின் தாய்க் கௌசல்யாவைப் பார்த்தாலே, அவளுக்கு நேர்மறை உணர்வுகளைக் கொடுக்கும் ஆதலால், சலுகையுடன் அவரது அருகில் அமர்ந்து கொண்டாள் முக்தா.


அதைப் பார்த்துக் கொஞ்சம் கூடப் பொறாமை வரவில்லை மௌனாவிற்கு.


குடும்ப நண்பர்களுக்கு என்று பிரத்தியேகமாக அச்சடிக்கப்பட்டிருந்தப் பத்திரிக்கையை எடுத்துக் கொடுத்தார்கள் வந்திருந்த அனைவரும்.


அதில் புன்னகைத்தவர், "வா முகி, வாங்க கிஷான். மூனு பேரும் சேர்ந்து வாங்குவோம்" என்று மகளையும், மருமகனையும் அழைத்தார் நீலகண்டன்.


இருவரும் வந்து நிற்க, மூவராக, அதைப் பெற்றுக் கொண்டு, அவர்களை உணவுண்ண வைத்து அனுப்பினர்.


இனி அடுத்துக் கிஷானுடைய வீட்டிற்குச் சென்றார்கள்.


  • தொடரும்
 

Shalini shalu

Moderator
"உன்னையும், உன் பேரன்ட்ஸையும் என்னோட மேரேஜூக்கு இன்வைட் பண்றேன். தவறாமல் கலந்துக்கனும்" என்று புன்னகையுடன் தாய், தந்தை மற்றும் மௌனாவுடன் சேர்ந்து, தன் கல்யாணப் பத்திரிக்கையை நீட்டினான் மஹதன்.


"உங்களோட மேரேஜில் ஆல் இன் ஆல் நான் தான்! அப்பறம் வராமல் இருப்பேனா?" என்றவாறு தன் பெற்றோருடன் இணைந்து அதைப் பெற்றுக் கொண்டான் கிஷான்.


"இருந்தாலும் எல்லாம் புரொசீஜர் படி செய்யனும்ல டா" என்றான் மஹதன்.


"மாப்பிள்ளைத் தோழனும் இவர் தானே?" என்று கூறினாள் மௌனா.


"ம்ம்… எல்லா பொறுப்பையும் சிறப்பாக செஞ்சிடலாம்!" என்று குறுநகை புரிந்தான் கிஷான்.


அவனுடைய பெற்றோர்,"சாப்பாடு எல்லாம் ரெடி. வந்துட்டு சாப்பிடாமல் போகவே கூடாது" என உணவுண்ண வைத்தே அனுப்பினர்.


ஏற்கனவே, அதிகாரப்பூர்வமாக அறிவித்து, நிச்சயத்தார்த்தம் முடிந்த தருவாயில், இப்போது மஹதன் மற்றும் மௌனாவின் திருமணம், பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.


இரவு நலங்கின் போது, மௌனாவை மண்டபத்திற்கு அழைத்து வந்து அறையில் இருங்க வைத்தவர்கள், அவளுக்கான அலங்காரங்களையும் ஆரம்பிக்கச் சொல்லி விட்டு, மாப்பிள்ளையின் வருகைக்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.


திருமூர்த்தி மற்றும் கௌசல்யா இருவரும், மௌனா மற்றும் அவளது பெற்றோருடன் மண்டபத்திற்குச் சென்று விட்டனர்.


"நானும், அவரும் தான் பார்த்துக்கக் கூடாது, ஆனால், நீங்களும், கிஷானும் எதுக்கு மீட் பண்ணாமல் இருக்கீங்க முகி?" என்று வினவினாள் மௌனா.


"அங்க மஹதன் தான் அவரைப் பிடிச்சு வச்சிருக்காராம்!" என்று சொல்லிச் சிரித்தாள் முக்தா.


அவளுடன் இணைந்து நகைத்தனர் மௌனாவும், அகதாவும்.


ஆம் ! மஹதன் தான், தன் தோழன் கிஷானை அங்குமிங்கும் நகர விடாமல் தன்னுடன் வைத்துக் கொண்டான்.


மாப்பிள்ளை அழைப்பின் போது அருகில் இருப்பதாக கூறியவனை,

"முக்தாவும் பொண்ணுக் கூடத் தான் இருப்பாங்க! சோ, நீங்க இங்கேயே ரெஸ்ட் எடுங்க!" என்று கறாராக உரைத்து விட்டான் மஹதன்.


அதற்குள், அலங்காரத்தை முடித்திருந்த மௌனாவை, மேடைக்கு அழைத்து வரச் சொல்லி அமர வைத்து விட்டு, மணமகனையும் கூப்பிட்டனர்.


அப்போது தான் மூச்சு வந்தது மஹதனுக்கு.


அவனுக்கு மட்டுமில்லை, கிஷானுக்கும் கூட, நண்பனின் தவிப்பைப் பார்க்க முடியவில்லை.


எனவே,"ரிலாக்ஸ் டா!" என்று மஹதனைச் சமாதானம் செய்தான்.


மேடையில் இருந்த மௌனாவிற்கோ, அணிந்திருந்தப் புடவையும், அலங்காரங்களும், அதனுடன் கைகளில் சிவப்பேறி இருந்த மெஹந்தியும், தன் அகச்சிவப்பை வெளிப்படுத்திக் கொண்டிருப்பதை நினைத்து நாணி நின்றாள்.


அன்னபூரணியோ, மகளை, அவளது இரு தோழிகளின் கரத்தில் ஒப்படைத்து விட்டாலும், அவளின் மீது கவனம் இருக்கும் படி பார்த்துக் கொண்டார்.


மௌனாவின் வந்ததும், சிறிது நேரம் கழித்து, மஹதனுடைய பிரவேசம் நடைபெற்றது.


அடர் சிவப்பு நிற முழுக்கைச் சட்டையில், கண்கள் சுருங்க நடந்து வந்தவனைக் காண்கையில், இந்த நிமிடத்திலும், அவனிடம் காதலை உரைக்க வேண்டும் போலிருந்தது மௌனாவிற்கு.


மேடையேறியவன் மட்டும், சும்மா இராமல், பாவையவளின் நாணத்தை, தன் கடைக்கண் பார்வைக் கொண்டு அதிகப்படுத்தினான் மஹதன்.


நலங்கிற்கு வெளியாட்கள் யாரையும் அழைத்திருக்கவில்லை இரு வீட்டாரும். சொந்தங்கள் சிலரைத் தான் கூப்பிட்டு இருந்தனர்.


நிச்சயத்தின் போது, பஃபே முறையில் சாப்பாடு தயார் செய்து வைக்கப்பட்டிருந்தது போல இல்லாமல், இம்முறை, இந்தச் சடங்கிலும் சரி, திருமணத்திலும் சரி! டைனிங் டேபிளில், தலைவாழை இலை போட்டுத் தான், விருந்தினர்களுக்கு, உணவைப் பரிமாறப் போவதாக உறுதியாக இருந்தனர் இரு வீட்டாரும்.


இப்போது கூட்டம் அதிகமில்லை என்பதால், அனைவரும் திருப்தியாக உண்டனர்.


அடுத்த நாளும் ஒரு குறையும் இல்லாமல் முடித்து விட நினைத்து இருக்கின்றனர்.


"முகி!" என்று தன்னவளை அழைத்தான் கிஷான்.


விரிந்த புன்னகையுடன், அவனிடம் சென்றாள் முக்தா.


"இப்போ தான் அவன் என்னை விட்டான்!" என்று மேடையிலிருந்த மஹதனைக் காட்டினான் கிஷான்.


"ஹாஹா!‌ நானும் அதை தான் மௌனா கிட்ட சொன்னேன்" எனச் சிரித்தாள் முக்தா.


"இனி நாளைக்குத் தாலி கட்ட மேடையேறுகிற வரைக்கும், விட மாட்டான் முகி! கூடவே கையைப் பிடிச்சிட்டுப் போவான்!" என்று பொய்யாக அலுத்துக் கொண்டான் கிஷான்.


"நாளைக்கு ஒருநாள் தான? அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க!" என்றாள் முக்தா.


"ஆமாம்… நண்பனாகப் போயிட்டான்" என்று புன்னகை செய்தான் கிஷான்.


தன் மனைவி சித்ரலேகாவிடம்,"உன் மகனைப் பாரு! நம்ம மருமகப் பக்கத்தில் கரெக்ட் ஆகப் போய் நின்னுட்டான்!" என்று கிஷானும், முக்தாவும் இருக்கும் இடத்தைச் சுட்டிக் காட்டிக் கூறினார் காஞ்சியப்பன்.


"இவ்ளோ நேரமும் அவனோட ஃப்ரண்ட் படுத்தி எடுத்துட்டானாம்! 'நான் மட்டும் பிரிஞ்சிருக்கேன்! நீ மட்டும் உன் முகியோட சேர்ந்து நிக்கனுமா?' அப்படின்னு சொல்லி, தன்னோட ரூமிலேயே இவனை அடக்கி வச்சிட்டானாம் மஹதன்! இப்போ தான் ரிலீஸ் செய்துருக்கான்ங்க!" என்று சிரித்தவாறே கூறினார் சித்ரலேகா.


"இதெல்லாம் எப்போ சொன்னான் உங்கிட்ட?" எனக் கேட்டார் காஞ்சியப்பன்.


"அங்கேயிருந்து மெசேஜ் அனுப்பினான் ங்க!" என்று பதிலளித்தார் சித்ரலேகா.


"இந்த மஹனுக்குள்ளே இப்படி ஒரு குறும்புத்தனமானப் பக்கமா?" என்றவாறு மேடையில் பார்வையைப் பதித்தார் காஞ்சியப்பன்.


தன் விழிகளை, இனி, வேறெங்கும் உலாவ விடப் போவதில்லை என்ற முடிவில் மஹதன் இருந்தான் போலும்!


அழகுப்பெண் இவள் தன்னை ஈர்க்கும் வேலையைச் செவ்வனே செய்து கொண்டிருக்க, அவளிடமிருந்து பிரிந்து செல்ல, மஹதனுடைய கண்களும் தயாராக இல்லை.


இவர்களின் காதல் பார்வைப் பரிமாற்றங்களோடு, சடங்கும் தொடங்கியது.


"இந்தா ம்மா" என தங்கள் வருங்கால மருமகளுக்கானப் புடைவையை அவள் தரத்தில் தந்தார்கள் கௌசல்யாவும், திருமூர்த்தியும்.


அதை வாங்கிக் கொண்டு உடை மாற்றி வரப் போய் விட்டாள் மௌனா.


"கிஷான்!" என்று நண்பனை அழைத்து விட்டான் மஹதன்.


"அடேய்! இருடா! நான் இன்னும் முகி கிட்ட நாலு வார்த்தைப் பேசக் கூட இல்லை!" என்று பொய்க் கோபத்துடன் அலறினான் கிஷான்.


"சரி அங்கேயே இரு!" என்று பெரிய மனது வைத்தான் மஹதன்.


"எங்க அம்மா, அப்பா கூட நாம பேசுறதைக் கண்டுக்கல முகி! இவன் இருக்கானே!" என்று அவளிடம் கூறினான் கிஷான்.


மஹதன் இவனை அழைத்ததைப் பார்த்து விட்ட மௌனாவின் தந்தை சிவமணியோ,"ஏதாவது வேணுமா மாப்பிள்ளை?" என்று மருமகனிடம் பரிவுடன் கேட்டார்.


"இல்ல மாமா. அவனைச் சும்மா தான் கூப்பிட்டேன்" என்று அவரிடம் கூறி விட்டான்.


பத்திரிக்கை கொடுக்கவே தோழனுடன் சென்ற நீலகண்டனோ, இப்போதும் திருமூர்த்தியுடன் தான் சுற்றிக் கொண்டு இருந்தார்.


புடவை கட்டும் வரை, மௌனாவுடன் அவளது தோழி அகதா தான் அறைக்குள் இருந்ததால், அதில் தான் அதிகபட்சமாகத் தோன்றவே, வெளியே வந்திருந்தவள், கூடவே, கிஷானைக் கண்டதும் அப்படியே அங்கே நின்று அவனுடன் பேச ஆரம்பித்து விட்டாள் முக்தா.


"சாப்பாடு எப்போன்னு தெரியலையே?" என்றான் கிஷான்.


"ஏன் உங்களுக்குப் பசிக்குதா? நான் வேணும்னா ஏதாவது சாப்பிட எடுத்துட்டு வரவா?" என்று கேட்டாள் முக்தா.


"வேணாம் முகி. எல்லார் கூடயும் சேர்த்து சாப்பிட்டுக்குவோம். அதுவும் பத்தி செட்டப் போட்டு இருக்காங்க. நாம ரெண்டு பேரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடனும்" என்று தன் ஆசையை அவளிடம் தெரிவித்தான் கிஷான்.


"ஆமாம். நானும் அதுக்காகத் தான் வெயிட் பண்றேன்ங்க. ஒரு மாதிரி நல்லா இருக்கும்ல?" என்று இவர்கள் இனிக்க இனிக்கப் பேசிக் கொண்டு இருக்கும் போது, மேடைக்கு வந்திருந்தாள் மௌனா.


கிஷானுடன் பேசியபடி இருந்த முக்தாவைப் பார்த்ததும், அவளைத் தொல்லை செய்யாமல் பொறுப்பைத் தான் எடுத்துக் கொண்டாள் அகதா.


"அங்கே பாரு முகி! மௌனா வந்தாச்சு. அகதா மட்டும் மேடையில் இருக்காங்க. நீயும் போய் ஹெல்ப் பண்ணு" என்று இவளிடம் கூறினான் கிஷான்.


"சரிங்க" என்றவள், அகதாவிடம் சென்று விட்டாள் முக்தா.


தன் வருங்கால மனைவியின் சேலைக் கட்டியத் தோற்றத்தில், தலைக் குப்புற விழும் அளவிற்கு, கண்ணை விழித்துப் பார்த்தான் மஹதன்.


அந்த அலங்காரத்தில் அவளை இப்போது தான் பார்க்கிறான் அல்லவா? அதனால், மற்றவர்களே அவனது கண்களுக்குப் புலப்படவில்லை.


இங்கோ, அவனைச் சிறு குரலில் கூட, எச்சரிக்கை செய்ய இயலாமல், அந்தப் பார்வையில், நாணம் மேலோங்க நின்றாள் மௌனா.


தங்களது ஒரே மகளின், தம்பதி கோலத்தை, முதல்முறையாக காண்பதால், சிவமணி மற்றும் அன்னபூரணிக்கு உற்சாகம் பீறிட்டது.


மகனது திருமணத்தைப் பற்றி, அவனிடம் சொல்லித் துரிதப்படுத்தாமல், தாங்கள் ஒருவருக்கொருவர் மட்டுமே அதைப் பேசி ஏக்கப் பெருமூச்செறிந்து கொண்டிருந்த கௌசல்யாவிற்கும், திருமூர்த்திக்கும், இப்போது மஹதனை, மேடையில் ஜோடியுடன் பார்க்கையில், அவ்வளவு ஆனந்தக் கூச்சலிட வேண்டும் போல இருந்தது.


"கையைக் கொடுங்க சம்பந்தி‌" என்று சிவமணியின் கரத்தைப் பிடித்துக் குலுக்கினார் திருமூர்த்தி.


இரு குடும்பத்துக்குமான சந்தோஷமான சூழ்நிலை என்பதால், அவரது செயல் இவ்வாறாக இருந்தது.


அதில் நெகிழ்ந்த சிவமணி,"நம்மப் பிள்ளைங்களை ஆசீர்வாதம் பண்ணுவோம்… வாங்க சம்பந்தி" என்று மேடைக்குப் போனார்கள்.


"உங்க ரெண்டு பேரோட அம்மாவும், அப்பாவும் வர்றாங்க" என்று மௌனாவிடமும், மஹதனிடமும் அறிவித்தாள் அகதா.


அவர்களைக் கண்டதும், மலர்ந்து புன்னகை செய்தனர் இருவரும்.


மகனைக் கட்டித் தழுவிய திருமூர்த்தி,"வாழ்த்துகள் டா மகனே!" என்றவர்,


"உனக்கும் வாழ்த்துகள் மா" என மௌனாவிடம் உரைத்தார்.


கௌசல்யாவோ, மருமகளின் தோளை மென்மையாக அணைத்துக் கொள்ள, அவர்களுக்குப் பின்னால் வந்த, அன்னபூரணியைப் பார்த்ததும், தன் கரத்தை விலக்கிக் கொண்டு, அவருக்கு வழி விட்டார்.


ஆனந்தக் கண்ணீருடன் மௌனாவை ஆசீர்வதித்தான் அன்னபூரணி. சிவமணியோ, மகளின் கரத்தை அழுத்தித், அவளுக்குத் தன் மகிழ்வை உணர்த்தினார்.


அவர்கள் கீழிறங்கியதும்,"காங்கிராட்ஸ்!" என்று முக்தாவும், கிஷானும் ஜோடியாக வந்து வாழ்த்து தெரிவித்தனர்.


"தாங்க்யூ"


"சாரி டா கிஷான்! உன்னை ரொம்ப படுத்திட்டேன்!" என்று அவனிடம் மன்னிப்புக் கேட்டு விட்டான் மஹதன்.


"இவன் ஒருத்தன்! விடுடா" என நண்பனை ஆரத் தழுவிக் கொண்டான்.


மௌனா மற்றும் மஹதனுடன், கிஷான் மற்றும் முக்தாவும் இணைந்து நிற்க, அவர்களுடன் அகதாவும் சேர்ந்து கொண்டு, புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.


இவர்களது ஒற்றுமையைப் பார்த்து நீலகண்டனுக்குப் பெருமை முகிழ்த்தது.


இவ்வளவு நேரமாக நண்பனுடன் அலைந்தவரோ, மணமக்கள் மேடையேறியதும், நாற்காலியில் வந்து அமர்ந்து கொண்டார் அவர்.


அவரது விழிகளோ மகளைத் தான் நொடிக்கு நொடி பார்த்துக் கொண்டு இருந்தது.


ஏனெனில், அவளிடம் தென்பட்டப் புன்னகையும், ஆனந்தமும் கடையில் வாங்கித் தரும் பொருள் அல்லவே?


கிஷானுடனான அவளது ஜோடிப் பொருத்தத்தைக் கண்களில் நிரப்பிக் கொண்டு, முகிழ்நகையுடன் அமர்ந்திருந்தார் நீலகண்டன்.


- தொடரும்


மௌனா & மஹதனோட கல்யாணத்தைச் சீக்கிரமே முடிக்க முடிவெடுத்து இருக்கேன் ஃப்ரண்ட்ஸ். முக்தாவுக்கும், கிஷானுக்கும் மேரேஜ் செய்து வைக்கும் ப்ளான் இல்லை. அவங்க இஷ்டப்படி எப்போ கல்யாணம் செஞ்சுக்க விருப்பப்பட்றாங்களோ, அப்போ பண்ணிக்கட்டுமே!
 

Shalini shalu

Moderator
நலங்கு முடிந்து, மஹதனும், மௌனாவும் ஜோடியாக அமர்ந்திருப்பதைப் போல, முக்தாவும், கிஷானும் ஒன்றாக உட்கார்ந்தனர்.


அனைவரும் மெல்லிய புன்னகையுடன் ஆத்மார்த்தமாக உணவுண்டு கொண்டிருந்தனர்.


தனக்குப் பிடித்தமான தென்னிந்திய உணவுகள் யாவும், வாழை இலையில் இடம் பெற்று இருக்க, அவற்றை ரசித்து ருசித்தாள் முக்தா.


சோற்றைக் குழம்பில் பிசைந்து, அதில் பொரியலை வைத்து, வாயில் பொருத்தியவளை, ரசனையாகப் பார்த்துக் கொண்டு தானும் உண்டான் கிஷான்.


நீலகண்டன்,"நம்ம ஊரு ஐட்டம்ஸ் வச்சு ஜமாய்ச்சுட்டீங்க சார்!" என்று சிவமணியையும், அவரது மனைவி பாராட்டினார்.


"இதைக் கேட்டு, எங்களுக்கும் சந்தோஷம் சார்" என்றார் அன்னபூரணி.


"இன்னொரு தடவை சாப்பிடலாம் போல இருக்கு!" என்று கூறினார் காஞ்சியப்பன்.


உணவின் சுவை மற்றும் தரம் அவரை வெகுவாக கவர்ந்தது.


"உங்களுக்குப் பார்சல் அனுப்பி வைக்கிறோம் சார்" என்றார் திருமூர்த்தி.


"அது கண்டிப்பாக வேணும் அண்ணா" என்று சித்ரலேகாவும் கூறினார்.


குடும்ப உறுப்பினர்கள் மட்டுமில்லாமல், வந்திருந்த சொந்தங்களும் பரிமாறப்பட்ட உணவு வகைகளைப் பாராட்டி விட்டுப் போனார்கள்.


இவ்வாறாக, நலங்குச் சாப்பாடு நடந்து முடிந்தது.


மேடை ஏறியவர்களை அனைவரும் வாழ்த்தி விடைபெற்றனர்.


காஞ்சியப்பன் மற்றும் சித்ரலேகாவும் தங்களது வீட்டிற்குச் செல்ல ஆயத்தம் ஆனார்கள்.


நீலகண்டனும் மகளைத் தன்னுடன் வர அழைக்கவும்,


"சரிங்க அப்பா" என்றவள்,


"நான் சீக்கிரம் வர்றேன் மௌனா. டேக் கேர் அகி.நான் வரும் போது, நீங்களும் வந்துருவீங்களாம்!" என்று கிஷான் மற்றும் அவனுடைய பெற்றோரிடம் கெஞ்சலாக கோரிக்கை விடுத்து,

அனைவரிடமும் விடைபெற்றுத் தந்தையுடன் கிளம்பினாள் முக்தா.


"பியூட்டீஷியன் எங்கே?" என்று தேடலானாள் மௌனா.


"ஏன்டா? ஏதாவது கேட்கனுமா?" என்றார் கௌசல்யா.


"ஆமாம் அத்தை. மேக்கப்பை ரிமூவ் பண்ணனுமே?" என்று உரைத்தாள் மௌனா.


"நீ ரெடியான ரூமில் தான் இருக்காங்களாம்" என்று அவளுக்குப் பதிலளித்தாள் அகதா.


"சீக்கிரம் போய் ரிமூவ் பண்ணு டா! நல்லா தூங்கி எழு" என்று அறிவுரை கூறி விட்டுச் சென்றார் கௌசல்யா.


அறைக்குள் போய், "மேம்! உங்களை நான் இங்கே தேடினேன்" என்றவாறு மௌனாவை அமர வைத்து, அவள் முகத்திலிருந்த அலங்காரப் பூச்சுக்களை, உரிய பொருட்களைக் கொண்டுத் துடைத்து எடுத்து விட்டுக் கிளம்பினார் அந்தப் பியூட்டீஷியன்.


அந்த வேலை முடிந்ததும்,"கொஞ்ச நேரம் கழிச்சுக் கிளம்பனும் மௌனா. அசதியில் தூங்கிடாத!" என்றார் அன்னபூரணி.


அவள் வீட்டிற்குச் செல்லும் வரை, தன்னுடைய அறையிலிருந்து வெளியே வந்தவன், அந்தப் நீண்டப பொது அறையில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தான் மஹதன்.


"நாமளும் கிளம்பலாம் மஹத்" என்று மகனிடம் கூறினார் திருமூர்த்தி.


அவரும், சிவமணியும் நாளை நடக்கவிருக்கும் நிகழ்விற்கு அனைத்தும் தயாராகி விட்டதா? என்று பார்த்துக் கொண்டு இருந்தனர்.


"ப்பா! நான் மௌனாவுக்குக் குட் நைட் சொல்லிட்டு, உங்க கூட வர்றேன்"என்று கூறி விட்டு அங்கே சட்டமாக அமர்ந்து விட்டான் மஹதன்.


அதில் சிரித்த திருமூர்த்தியும், சிவமணியும் தங்களது உரையாடலைத் தொடர்ந்தனர்.


"கல்யாணச் செலவு எங்களுது சம்பந்தி. ரெண்டு குடும்பத்தோட சொந்தக்காரங்களையும் நல்லா கவனிச்சு அனுப்பனும். சாப்பாடு, தாம்பூலப் பை எல்லாம் சிறப்பாகச் செஞ்சுக் கொடுத்திடலாம்!" என்று சிவமணியிடம் சொன்னார் திருமூர்த்தி.


"சரிங்க சம்பந்தி. எங்களுக்கு எதுவும் செலவு இருக்கா?" என்று கேட்டார்.


"இல்லை. நீங்கப் போதுமான அளவு செலவு செய்துட்டீங்க! நாங்க நான் பாக்கனும்!" என்று அவரிடம் தீர்க்கமாக கூறினார் மஹதனின் தந்தை.


அதற்குள், இங்கே மௌனா இருந்த அறையில்,"முகம் நார்மல் ஆகிடுச்சா? போவோமா?" என்று தங்களது உடைமைகளை எடுத்துக் கொண்டார் அன்னபூரணி.


"கார் ரெடி சம்பந்தி. நீங்க நாலு பேரும் வீட்டுக்குப் போயிட்டுக் கால் பண்ணுங்க. அப்போ தான் எனக்கு நிம்மதியாக இருக்கும். இல்லைன்னா, மஹதனை அனுப்பவா?" என்றார் கௌசல்யா.


"காரில் தானே போறோம் சம்பந்தி. மாப்பிள்ளையை ஏன் ஸ்ரமப்படுத்துறீங்க? நாங்கப் பாத்துக்கிறோம்" என்று கூறி விட்டுச் சிவமணியையும் அழைத்துச் செல்வதற்காக அவரிடம் வந்தனர் மூவரும்.


அவர்களைப் பார்த்ததும்,


"நாங்க கிளம்பறோம் சம்பந்தி! மாப்பிள்ளை! வீட்டுக்குப் போயிட்டு நாளைக்கு இங்கே வர்றோம்" என்று இருவரிடமும் கூறினார் அன்னபூரணி.


திருமூர்த்தி,"போயிட்டு வாங்க" என்றவரிடமும், கௌசல்யாவிடமும் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டாள் மௌனா.


அவளது பெற்றோரிடம் மஹதன் ஆசி வாங்கி விட்டு, "குட் நைட், ஸ்வீட் ட்ரீம்ஸ்!" எனத் தன்னவளிடம் கூறினான் மஹதன்.


"சேம் டூ யூ" என்றுரைத்தாள் மௌனா.


"நான் உங்களை டிராப் பண்றேன்" என அவர்களை அழைத்தான்.


"இல்ல, வேணாம் மாப்பிள்ளை" என்று அவனிடமும் மறுத்துப் பார்த்தார்கள் சிவமணியும்,அன்னபூரணியும்.


"நம்ம வீட்டுக் காராக இருந்தாலும், போகிற வழியில் சேஃப் ஆக இருக்குமான்னு டவுட் தான் அத்தை! அதனால், நானும், பாடிகார்ட்ஸூம் வர்றோம்" என்றான் மஹதன்.


"ஆமாம் சம்பந்தி! லேட் நைட் ஆகிடுச்சு. அப்படியே நாங்களும் வீட்டுக்குப் போகனுமே? உங்க வண்டிக்குப் பின்னாலேயே, வண்டியில் வர்றோம்" என்று மகனுக்காகப் பரிந்துரை செய்தார் திருமூர்த்தி.


"அம்மா! ப்பா! அவரே நம்மளை விட்டுட்டு வரட்டும். ரொம்பவே லேட் ஆகுது!" என்று வாயைத் திறந்தாள் மௌனா.


"சரி" எனச் சம்மதித்து நான்கு பேரும் அவனுடன் காரில் கிளம்பினர்.


ம‌ஹதனோ காரை இயக்க, அதில் அமர்ந்திருந்தனர் மௌனாவின் பெற்றோர் மற்றும் அகதா.


அவர்களுக்குப் பின்னால், ஒரு காரில் திருமூர்த்தி மற்றும் கௌசல்யாவும், மற்றொன்றில், அவனுடைய பாதுகாவலர்களும் தொடர்ந்து வந்தனர்.


மௌனாவைப் பார்த்தபடி மகிழுந்தையும் லாவகமாக இயக்கினான் மஹதன்.


அவளுக்குத் தூக்கம் வந்தாலும், தன்னவனுக்குப் புன்னகையை வழங்கினாள்.


அவர்களது வீடு வரவும்,"முதலில் நீங்க இறங்கிச் செக் பண்ணுங்க" என்று தன் ஆட்களிடம் உத்தரவிட்டான் மஹதன்.


ஆட்களும் அவன் சொன்னதைச் செய்து விட்டு, "சேஃப் தான் சார்" எனப் பதில் கூறினர்.


அதற்குப் பின்னர் தான் தங்களுடைய மகிழுந்தின் பூட்டைத் திறந்தான் மஹதன்.


சின்னத் தலையசைப்புடன், நால்வரும் இவர்களுக்கு விடை கொடுத்து விட்டுத், தங்களது வீட்டின் தாளைத் திறந்து உள் நுழைந்தனர்.


அவர்களைக் கண்காணித்து, நிம்மதி அடைந்து, தன்னுடைய வீட்டிற்குச் செல்ல, மகிழுந்தை இயக்கினான் மஹதன்.


இவ்வளவு நேரம், அசதியில் நெளிந்தவளோ, அன்னையின் கைப்பிடியில் குழந்தையாகச் சிக்கிக் கொண்டாள் மௌனா.


அவளது கண்ணீர் தன் தோளை நனைக்கவும் தான், பதறிப் போய், மகளுடைய முகத்தை நிமிர்த்தினார் அன்னபூரணி.


மௌனாவின் விசும்பல் சப்தத்தைக் கேட்டதும் உடல் விறைத்துப் போனது சிவமணிக்கு.


"வேலைக்கு அனுப்பிய, இந்த ஊரில் என்னைத் தொலைச்சிட்டுப் போறோம்னு, உங்களுக்குத் தோனுதா ம்மா?" என்று தன் அன்னையிடம் அழுகையுடன் வினவினாள் மௌனா.


ஆனால், மகளைத் தொலைக்கவில்லை எனினும், விட்டுச் செல்லப் போவது உண்மை தானே?


வேலைக்குப் போய், அதில் நிலைத்து நின்று விட்டுப் பிறகுத் தன் திருமணத்தைப் பற்றி யோசிப்போம் என்று மௌனாவும், அவள் நல்லதொரு பணியில் அமர்ந்ததும், வரன் பார்க்கலாம் என யோசித்த அவளது பெற்றோரும் இப்போது தங்கள் பெண்ணுக்கும், மஹதனுக்குமானத் திருமணத்தை எதிர்பார்க்கவில்லையே?


அவர்களுடன் ஒரு மகளாக அகதா வந்தாலும், வாழ்ந்தாலும் கூட, மௌனாவின் இடம் வெற்றிடமாகத் தானே இருக்கும்?


மகளின் பிரிவை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற கவலையில், அவர்களுக்கு உள்ளம் குமுறியது.


அதைக் கட்டுப்படுத்திக் கொண்டவர்களால், இவளது கண்ணீர் பெருகிய வதனத்தைக் கண்டதும், பெற்றோருக்கும் விழிநீர் கசிந்து விட்டது.


நள்ளிரவு ஆன போதும், இவர்களது தேம்பல் அடங்கவில்லை. தோழியைப் பிரிவதை தாங்க இயலாத அகதாவும் கூட, முதலில் இம்மூவரையும் சமாதானம் செய்ய நினைத்தாள்.


"அம்மா! அப்பா! எப்பவும் இவ உங்கப் பொண்ணு தான்! நீங்களோ, இவளோ மீட் பண்றதை யார் கேட்கப் போறா? மஹதனோட ஃபேமிலியும் நல்ல டைப் ஆக இருக்கும் போது ஏன் இந்த அழுகை? ப்ளீஸ்! மௌனா! கன்ட்ரோல் யுவர்செல்ஃப்!" என்று அவர்களைத் தேற்றினாள் அகதா.


விசும்பல் அதிகமானதே தவிர, குறைந்தபாடில்லை.


"இப்படி அழுதுகிட்டு இருந்தால், காலையில் மண்டபத்துக்குப் போக முடியாமல் போயிடும்!" என்று மூவரையும் எச்சரிக்க ஆரம்பித்து விட்டாள் அகதா.அதில் கொஞ்சமாக நிதானம் அடைந்தார்கள்.


"அகி!" என்று அவளையும் கட்டிக் கொண்டு அழுதாள் மௌனா.


"நானே ரொம்ப கஷ்டப்பட்டு என்னோட அழுகையை மறைச்சு வைச்சிருக்கேன். அதை வர வைச்சிடாத! வா" என்று அவளை அழுத்தாள் அகதா.


"நான் அம்மா கூடத் தூங்குறேனே அகி?" என அழுத வண்ணம் கூறினாள் மௌனா.


"ஓகே" என்று அன்னபூரணியையும், அவரது மகளையும் அனுப்பி விட்டுச் சிவமணியிடம்,


"நீங்களும் அமைதியாகப் போய்த் தூங்குங்க அப்பா" என அவரையும் அறைக்கு அனுப்பினாள் அகதா.


இவள் மட்டும் இன்று தனியாகத் தங்களது அறையில் உறக்கம் கொள்ள வந்து, தனக்கும், மௌனாவிற்கும் ஒன்று போல வாங்கிய கைச்சங்கிலிகளை எடுத்துப் பார்த்துக் கண்ணீர் சிந்தினாள் அகதா.


(நங்கையின் மறவோன் கதையின் 20-வது அத்தியாயத்தில் இந்தக் கைச்சங்கிலிப் பற்றிய விளக்கம் இருக்கும் ஃப்ரண்ட்ஸ்)


  • தொடரும்
 
Status
Not open for further replies.
Top