“நன்னிலவே நீ நல்லை அல்லை” டைட்டிலின் அர்த்தம் “நிலவே நீ செய்வது சரியா ?” என்று வரும்.....
டீஸர் :
கல்லூரியில்,
“என்னடா காலைல இருந்து சிரிப்பா இருக்க, என்ன விஷயம்” என்று காலையிலிருந்து ஏதோ நினைத்து சிரித்து கொண்டே சுற்றி கொண்டிருக்கும் சர்வஜித்தை கண்டு சிரிப்புடன் ஆத்யா வினவ, நித்திலாவும் கண்களில் அதே கேள்வியுடன் அவனை ஏறிட்டாள்,
“சொல்றேன் சொல்றேன் அதுக்கு தான் உங்க ரெண்டு பேரையும் இங்க பிடிச்சு வச்சு இருக்கேன்” என்று சிரிப்புடன் கூறியவன் யாருக்கோ போனில் அழைத்து “இன்னும் எவ்ளோ நேரம்” என்று கேட்க,
மறுமுனையில் என்ன கூறப்பட்டதோ, “சரி சீக்கிரம் வா” என்று கட் செய்து விட்டு அங்கும் இங்கும் நடக்க, அவன் செய்கைகளை எல்லாம் குழப்பத்துடன் பார்த்திருந்தனர் இருவரும்.
சிறிது நேரத்தில் அவர்களின் ஜூனியர் அதிதி இவர்களை நோக்கி வர, “இவ ஏன் இங்க வரா” என்று நிது எரிச்சலாக கேட்க,
அவளை கேள்வியாக பார்த்த ஆத்யா, “யாரு அது உனக்கு தெரியுமா” என்று கேட்க, “ஆமா தியா நான் சொன்னேன்ல ஒருத்தி ஜூனியர்ல கொஞ்சம் கடுப்பு ஏற்றிவிட்டுட்டானு அது இவ தான்” என்று பற்களை கடித்து கூறவும், அவள் சர்வா அருகில் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.
“மீட் மிஸ்.அதிதி நம்ம ஜூனியர், ச்ச இல்ல நேத்து காலை வரைக்கும் நம்ம ஜூனியர் ஆனா நேத்து மாலைல இருந்துஎன்னோட லவர்” என்று கூறியவன் தொடர்ந்து, “எஸ் நானும் அதிதியும் லவ் பண்றோம், நேத்து அவ ப்ரொபோஸ் பண்ணா அப்போ தான் எனக்கும் என் மனசு புரிஞ்சுது, இவளை உங்களுக்கு நேர்ல இன்ட்ரோ கொடுக்கணும்னு தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்” என்று அதிதியை தோளோடு அணைத்து கொண்டு முகம் மலர கூற, அவளும் அவன் தோளில் உரிமையுடன் சாய்ந்து நின்றாள்.
அவன் சொன்னதையெல்லாம் கேட்டு அதிர்ந்து நின்ற நித்திலாவிற்கு, அவர்களின் நெருக்கத்தை கண்டு இதயத்தில் சுருக்கென்ற ஒரு வலி பரவியது. இதுவரை மனதில் அவனுக்காக கட்டியிருந்த காதல் கோட்டைகள் அனைத்தும் நிலத்தினுள் புதைவது போன்றதோர் பிரம்மை தோன்ற, கலங்கிய கயல் விழிகளின் கண்ணீரை உள்ளிழுத்துக்கொண்டாள் பெண்ணவள்.
“சார் சார் ப்ளீஸ் சார் இந்த அவார்ட் என் கரீயர்க்கு ரொம்ப முக்கியம், இந்த விருது தான் சார் என் சினிமா வாழ்க்கை கிடைக்க போற ஒரு அங்கீகாரம் அ….அதை என்கிட்ட இருந்து பறிச்சுடாதீங்க சார் உங்க காலுல கூட விழுறேன்” என்று சர்வாவின் காலில் விழுந்து கெஞ்சி கொண்டிருந்த அந்த இளம் இயக்குனரை பார்க்க கார்த்திக்கு பாவமாக இருந்தது. கார்த்திக் சர்வாவின் பி.ஏ.
ஆனால் பரிதாபப்பட வேண்டியவனோ அவன் நிலையை கண்டு ரசித்து கொண்டிருந்தான். “இவர் பாவம் பார்க்க வேண்டாம், இப்படி அந்த மனுஷன் கெஞ்சுறதை பார்த்து ரசிக்காம ஆவது இருக்கலாம்” என்று நினைக்காம இருக்க முடியவில்லை, நினைக்க மட்டும் தான் முடியும் வெளியே சொன்னால் அவனை யாரு சர்வாவிடம் இருந்து காப்பது.
சர்வாவோ ரசித்து முடித்தது போதும் என்பது போல எழுந்து தன் காரை நோக்கி நடக்க, “சார் ப்ளீஸ் சார், இந்த அவார்டு என்னோட இத்தனை வருஷ உழைப்பு கிடைக்க போற அங்கீகாரம் சார், புரிஞ்சுக்கோங்க சார்” என்று அங்கே மண்டியிட்டு கதற, “நோமினீஸ்ல நான் தயாரித்த படம் இருக்கும் பொது வேற ஒரு படத்துக்கு அவார்டை தூக்கி கொடுக்க நான் என்ன பைத்தியக்காரனா, ஒன்னு அதுவா என்கிட்ட வரணும் இல்லனா நான் வரவைப்பேன்” என்று திமிராக உரைத்துவிட்டு கடந்து செல்ல,
தனக்கு நடக்கும் அந்நீதியை பொறுக்க முடியாமல், “பணம் இருந்தா என்ன வேணா பண்ணுவீங்களா டா” என்று அதுவரை கடைபிடித்த மரியாதையை விட்டுவிட்டு ஆக்ரோஷமாக சர்வாவை பார்த்து கத்த, நிதானமாக திரும்பி பார்த்தவனின் விழிகள் அவனை அழுத்தமாக நோக்க, அதற்கு எதிர்மாறாக அவன் இதழ்கள் ஒரு நக்கல் சிரிப்பை உதிர்த்தது.
அடுத்த நாள் கார்த்திக் சர்வாவின் அறைக்குள் அனுமதி கேட்காமல் பதற்றமாக நுழைய, “இது என்ன பழக்கம் கார்த்திக், அனுமதி கேட்காம உள்ள வர” என்று அழுத்தமாக அவனை பார்த்து வினவ, “சார் ஓரு முக்கியமான விஷயம் சார்” என்றவன் தொடர்ந்து “நேத்து நீங்க மிரட்டுன அந்த டைரக்டர் இன்னைக்கு தற்கொலை பண்ணிகிட்டானாம் சார்” என்று படபடப்பு அடங்காமல் கூற,
அதை கேட்ட சர்வாவோ பக்கத்தில் அமர்ந்திருந்த தன் நண்பனை திரும்பி பார்த்து “அச்சச்சோ பாவம்ல” என்று போலியாக வருத்தப்பட, அவன் நண்பனும் டெபுட்டி கமிஷனரும் ஆனா அமரேந்திரன் சர்வாவை அர்த்தம் பொதிந்து பார்வை பார்க்க, அதை தொடர்ந்து சர்வாவின் இதழ்களில் ஒரு மர்ம புன்னகை தோன்றியது.
இந்த டீஸர்ல வராது நிதிலாவா???அதிதியா ??? நீங்களே guess பண்ணுங்க பாப்போம் ?
டீஸர் - 3
பழைய நினைவுகள் தந்த ஒரு இதமான மனநிலையில் அவள் ஜன்னல் வழியே வெளியே தெரிந்த மழையை ரசித்து கொண்டிருக்க, அவளை பின்னிருந்து அணைத்தான் சர்வா.
முதலில் திகைத்தவள், ஆறு வருடங்கள் பிறகு கிடைத்த அவன் அருகாமையை இழக்க மனமின்றி அமைதியாக அவன் மார்பில் தலைசாய்த்து கண்மூடி நிற்க, அவள் கழுத்தில் முகம் புதைத்து நின்றான்.
நிமிடங்கள் அமைதியாக கழிந்தது அவன் இதழ் அவளில் பதியும் வரை, அதிர்ந்து திரும்பி பார்க்க அவளை பார்த்து கொண்டே மீண்டும கழுத்து வளைவில் அழுத்தமாக தன் இதழ்களை பதிக்க, அவள் உடல் முழுவதும் ஒரு முறை சிலிர்த்து அடங்கியது.
அப்படியே நெற்றி, கன்னங்கள் என்று பயணித்த அவள் இதழ்கள், அவள் இதழ் அருகே நூலளவு இடைவெளியில் வந்து நின்றது. அவளின் மோன நிலையை கண்டு நக்கல் சிரிப்பை உதிர்த்தவன் ஏதோ சொல்ல, அவன் குரலில் கண்களை திறந்தவள் புரியாமல் பார்க்க “என்ன கேக்கலையா, இந்த மாதிரி எத்தனை ஹீரோஸ் கம்பெனி கொடுத்திருக்க” என்று தான் கேட்டதை மீண்டும் ஒருமுறை அழுத்தமாக கேட்க, விலுக்கென்று நிமிர்ந்து அவனை அடிபட்ட பார்வை பார்த்தவளின் இதயத்திலோ அவன் வார்த்தைகள் இடியாய் இறங்கன.
அவன் மார்பில் கைவைத்து தள்ளியவள் வெளிய மழை பெய்வதையும் பொருட்படுத்தாமல் வெளியேறினாள்.
செல்லும் அவளை வெறித்து கொண்டு நின்றவனுக்கு தெரியும் அந்த வார்த்தைக்கள் அவளை எவ்ளோ காயப்படுத்தும் என்று, பின்னே அவள் காயப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் சொன்னவனுக்கு தெரியாமல் இருந்தால் தான் அதிசியம்.
கொட்டும் மழையில் சென்று கொண்டிருந்தவளின் காதில் அவன் கூறிய வார்த்தைகள் மீண்டும் மீண்டும் ஒலிப்பது போல் தோன்ற ‘என்னை பார்த்து அப்படி கேட்க உனக்கு எப்படிடா மனசு வந்துச்சு’ என்று கத்த வேண்டும் போல் இருந்தது.
பெண்ணவளின் கண்ணீர் மழை நீரில் காணாமல் கரைந்து போனது.
கல்லூரி மைதானத்தின் ஒரு ஓரத்தில் இருந்த மரத்தடியில் போடப்பட்டிருந்த இருக்கையில் சர்வா அமர்ந்திருக்க பக்கத்தில் அவன் தோளில் தலைசாய்த்து அமர்ந்திருந்தாள் அதிதி.
“என்னாச்சு பேபி ஏன் முகம் டல் ஆஹ் இருக்கு” என்று அவன் தோளில் சாய்ந்திருந்தபடியே வினவ,
“இல்ல நிலா சரியா பேச மாட்டிக்கிற என்னை அவொய்ட் பண்ற போல இருக்கு, அவகிட்ட பேசாம ஏதோ ஒரு மாதிரி இருக்கு” என்று உரைக்க,
“எப்போவும் நிலா தானா நம்ம லவ் பண்ண ஆரம்பிச்சதுல இருந்து எப்பப்பாரு நிலாவை பத்தி தான் பேச்சு” என்று சற்று எரிச்சலாக கூற,
அவளை திரும்பி முறைத்தவன் “உனக்கு நான் முன்னாடியே சொல்லிருக்கேன் அதிதி நிலா என்னோட பெஸ்ட் பிரெண்ட் என் வாழ்க்கையில ரொம்ப முக்கியமானவ” என்று அழுத்தமாக உரைக்க,
அவன் கோபத்தை உணர்ந்தவள் “நான் அப்படி சொல்ல வரல, எனக்கு தெரியும் பேபி நிலா உன் பெஸ்ட் பிரெண்ட்னு. அதுக்குன்னு நமக்கு கிடைக்குற இந்த கொஞ்ச டைம்லையும் நீ அவளை பத்தி பேசுனியா அதான் கொஞ்சம் அப்செட் ஆகி பேசிட்டேன் சாரி” என்று சிறுபிள்ளை போல் முகத்தை வைத்துக்கொண்டு உரைக்க அதில் மயங்கியவன், “சாரி இப்படி கேட்க கூடாது” என்று கண்களில் குறும்பு மின்ன உரைக்க, “வேற எப்படி இப்படியா” என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டு சிரிக்க, “நான் இதை சொல்லல ஆனா இதுவும் நல்லா தான் இருக்கு” என்று பற்கள் தெரிய சிரித்தான்.
அதில் முகம் சிவக்க அவன் மார்பில் தலைசாய்க்க, அவளை அணைத்து கொண்டவனின் கண்கள் பின்னாடி அவனுக்கு பிடித்த லஞ்ச் எடுத்து வந்திருந்தால் அதை கொடுத்து விட்டு செல்ல வந்து பொது நடந்ததை கண்டு அதிர்ந்து போய் நின்றிருந்த நிலாவை கண்டதும் விரிந்தது.