எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கை தீண்டாயோ பௌர்ணமி! - கதை திரி

Status
Not open for further replies.

NNK33

Moderator
இன்று முதல் நிலா காலம் போட்டிக்கான என் கதை 'கை தீண்டாயோ பௌர்ணமி!' பதியப்படும்.

சாதாரண கதை களம். ஓவர் எக்ஸ்பெக்டேஷன் இல்லாம நார்மலா படிங்க ரசிங்க விமர்சிங்க...

இன்று முதல் பதிவு. அடுத்த பதிவு எழுதி எழுதி தான் அப்டேட் பண்ண போறேன். அதனால இது தான்னு இப்போதைக்கு கன்ஃபர்மா சொல்ல முடியல.

நன்றி?
 

NNK33

Moderator
faiza-5.jpg

krithi-shetty-at-upenna-pre-release-event-in-yellow-lehenga2.jpg

அத்தியாயம் 01

உன்னைத் துதிக்க உன் திருநாமம்!

சரவண பவனே சைலொளி பவனே!
திரிபுர பவனே திகழொளி பவனே!
பரிபுர பவனே பவமொழி பவனே!
அரிதிரு மருகா அமராவதியை!!


என்று வீடெங்கும் பக்தி மணம் வீசிக் கொண்டிருந்தது.

பூஜையறையில் தீபாராதனை தட்டினை காட்டிய ஜனனி முன்நெற்றியில் திலகம் உச்சிவகிட்டில் குங்குமம் இட்டு சில நிமிடங்களில் பூஜை முடித்து வெளியே வந்தாள்.

இள மஞ்சளில் ப்ளேய்ன் லினன் புடவையும் கான்ட்ராஸ்ட் பிளவுஸும் வீட்டில் சாதாரணமாக அணியும் ஆபரணங்களில் வயது நாப்பத்தெட்டை தொட்டுவிட்டது என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்தாலும் 'நிஜமா இவங்களுக்கு வயசு நாப்பத்தெட்டா' முதல் தடவை பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அதிசயிக்கும் வண்ணம் அழகுடன் மிளிர்ந்தவள் அந்த வீட்டின் மூத்த மருமகள்.

லிங்க நாதன் ப்ரதர்ஸ் என்றால் தெரியாதவர்கள் அந்த ஊரில் நிச்சயம் இருக்க முடியாது. பணத்தால் மட்டுமல்ல பாசத்திலும் பேர்போனவர்கள் தான் அவர்கள்!

மூத்தவர் சொக்கலிங்கம். மனைவி வேதநாயகி. அவர்களுக்கு இரண்டு மக்கள். மூத்தவன் ஆத்ரேயன். அவன் மனைவி தான் ஜனனி. இரண்டாவது கலா ஶ்ரீ. ஆத்ரேயனின் மிக நெருங்கிய நண்பனான ஆதித்ய கரிகாலனுடன் திருமணமாகி அவர்களுக்கு ஒரு மகன்.

இளையவர் அரங்கநாதன் மனைவி காந்திமதி. அவர்களுக்கு ஒரே மகன் கௌரி சங்கர். மருமகள் மாலதி. இருவருமே வெளிநாட்டில் வசிக்க அவர்களின் இரட்டையர்களோ ஊட்டி கான்வெட்டில் பதினோராம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தனர்.

பெரியப்பா வீட்டோடு தங்கிப் படிக்க கொள்ளை ஆசை இருந்தும் "நாங்களே இங்க இல்லாதப்போ நீங்க இங்க இருந்து என்ன பண்ணப் போறீங்க. அதான் ஏதுடா விடுமுறை கிடைக்கும்னு காத்திருந்து வந்து கூத்தடிச்சிட்டு போறது பத்தலையா. இங்க இருந்தா படிப்பில் கோட்டை விடுறது உறுதி. பேசாம சொல்ற மாதிரி கேக்குறதுன்னா கேளுங்க இல்ல எங்கப்பம்மா வீட்டோட இருங்க" மாலதி ஒரே போடாக போட, 'அந்த வீட்டில் குப்பை கொட்டுறதுக்கு இங்கிருந்தா குப்பை அள்ளுற வேலையாவது மிச்சம்' என்று இருவரும் ஹாஸ்டலில் தங்கிக் கொண்டனர்.

விடுமுறைக்கு தாத்தா பாட்டியுடன் அவர்கள் வசிக்கும் கிராமத்திலும் சில சமயம் பெரியப்பா வீட்டிலுமாக அவர்கள் நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கிறது.

"ராதா, கோயிலுக்கு அனுப்ப வேண்டிய பொருளை எல்லாம் சரிபார்த்து எடுத்து வச்சிட்டியா? அவங்கள்லாம் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்திடுவாங்க" என்ற ஜனனி எதற்கும் இருக்கட்டுமென தானே சென்று ஒரு முறை சரிபார்த்தவள் காலை நேர பரபரப்புக்கு தன்னை ஒப்புவித்து பம்பரமாக சுழல

"எதுக்கு இப்போ நீ ரங்கராட்டினம் சுத்துற. எல்லா வேலைங்களுக்கும் ஆளுங்கருக்கில்ல... ஓரெடத்தில் இருந்து நிர்வாகம் பண்ணவே மாட்டியா ஜானு" அப்போது தான் ஜாகிங் முடித்து அதற்கென்ற உடை வியர்வையில் தொப்பலாகி உடலோடு ஒட்டியிருக்க வீட்டுக்குள் நுழைந்த அவள் கணவனுக்கு எதிரே அவனுக்கென்று தயாரித்த சத்துமாவு கஞ்சியுடன் ஆஜராகியவளை செல்லமான முறைப்பொன்றுடன் எதிர்கொண்ட ஆத்ரேயன் அவள் கைப்பற்றி இழுத்து சோபாவில் தனக்கருகில் அமர்த்தி கேள்வியாக புருவங்களை உயர்த்தினான்.

"இது ஒன்னும் உங்க ஆஃபிஸ் கிடையாது அத்தான். நம்ம வீடு. வீட்டு வேலைகளை நாம பார்க்கிறதில் என்ன தப்பாம்" என்றும் சொல்வதை சொல்லி அவனுக்கு தப்பாமல் வசீகரமாக புருவத்தை உயர்த்தி அவனைப் பார்த்தவளை கண்டவன் பார்வையோ கணவனுக்கே உரிய பார்வையாக மாற,

அருகில் இருந்தவளின் தோளைச் சுற்றி கைகளைப் படர விட்டவன் அதில் அதிக அழுத்தம் குடுத்து தன்னோடு இறுக்கி கொள்ள, "என்ன பண்றீங்க, ப்ச். இது ஒன்னும் நம்ம பெட்ரூம் கிடையாது. நாலு பேரு வந்து போற ஹால்ல இருந்திக்கிட்டு என்ன வேலை இது" பல்லிடுக்கில் கடிந்தவள் நாலாபுறமும் கண்களை சுழற்றிக் கொண்டு அவனை கோபப் பார்வை வீசி முறைக்க முயல

அவையெல்லாம் அவன் காதல் பார்வையின் முன் பஸ்பமாகி வெட்கச் சிவப்புகளாக அவள் கன்னத்தில் ஒட்டிக்கொள்ள "ஆதித்தான்" என்றவளின் அழகான வெட்கச் சிணுங்களில் "கில் லேடி" வஞ்சகமாக புகழ்ந்தவன் அவள் தலையோடு தலை சாய்த்து காலை நேரத்தின் அவளுக்கேயுரித்தான வாசத்தை சுவாசித்து மூச்சுக்குள் நிரப்பிக் கொண்டே அவள் விலக அனுமதித்தான்.

அதற்கென்றே காத்திருந்தவள் ஜாக்கிரதையாக அவனை விட்டு நான்கடி தள்ளி அமர, அதைக் கேலியாக இதழில் படர விட்டுக் கொண்டே அவள் கொண்டு வந்த சத்து மாவைப் பருகியவன் நேரத்தை ஒரு முறை பார்த்துக் கொள்ள,

அதைக் கவனித்தவள் "எப்போ வருவாங்களாம் கோயில்லருந்து" என்க

"வந்திடுவாங்க" என்றவன் முடிப்பதற்குள் "உள்ளே வரட்டுங்களா" என்று அனுமதியுடன் கோயில் பெரிய தலைகளுடன் வீட்டுக்குள் நுழைந்தவர்களை இன்முகத்துடன் வரவேற்று உபசரித்த ஜனனி கணவனுக்கு கண்ணைக் காட்டி "ராதா" என குரல் கொடுத்து சமையலறைக்குள் நுழைந்து கொண்டாள்.

கூடமாட ஒத்தாசையாக சமையல் வேலையில் ஈடுபடும் ராதா அதற்குள் காபிக்குரிய ஆயத்த வேலைகளில் ஈடுபட்டிருந்தவள் இவளைக் கண்டு "அவங்க சத்தம் கேட்டதுமே பாலை அடுப்பில் வச்சிட்டேனுங்ம்மா" என்றாள்.

"நல்ல வேளை பார்த்த. எவ்வளவு நேரம் இருப்பாங்கன்னும் தெரியாதே" என்றவாறே வந்திருந்தவர்களுக்கு மளமளவென காபியை கப்புகளில் ஊற்றி ட்ரேயில் ராதா அடுக்க கூடவே இன்னொரு கிண்ணத்தில் பலகாரங்களை அடுக்கியவள் "சமையலுக்கு தேவையானதை ஆரம்பி ராதா. வந்திறேன்" என்றவாறு வந்திருந்தவர்களுக்கு பரிமாறச் சென்றவள் கணவனுக்கு அருகில் சிறிது இடைவெளி விட்டு அமர்ந்துகொண்டாள்.

மெல்லிய முறுவலுடன் மனைவியை பார்த்தவன் அவர்களின் புறம் திரும்பி "வேலையெல்லாம் எப்பிடி போகுதுங்கையா... உங்களுக்கு எந்த சிரமமும் இல்லையே" பணிவுடன் கேட்க,

"எல்லாம் நல்லபடியா நடக்கிது. நல்ல காரியங்களை முன்னே நின்று நடத்திறதில் எங்களுக்கு என்ன சிரமம் இருந்திறபோது"

"இல்லைங்கையா ஆளுங்களை போட்டா எல்லாத்தையும் அவங்களே பார்த்திருப்பாங்க. உங்களுக்கு வீணா சிரமத்தை குடுத்திட்டோமோன்னு..." என்றவனை தொடர விடாமல் "என்ன பேச்சு இது. இதுல சிரமம்னு எதுவும் இல்லை. இனி எப்போது நல்ல காரியங்கள் செய்யறதா இருந்தாலும் எங்களுக்கிட்டையே ஒப்படைங்கன்னு சொல்லலாம்ன்னு தான் நாங்களே நேரில் வந்தோம்." என்ற கோயில் குருக்கள் அருகிலிருந்தவரைக் சுட்டிக்காட்டி

"இது நம்ம ஊரு பெரியவரு. நீங்க செய்யற நல்ல விஷயத்தை கேள்விப்பட்டு உங்களை பார்க்கனும்ன்னு எங்களோடயே புறப்பட்டு வந்திட்டாரு" என்று அறிமுகப்படுத்த "வணக்கம்ய்யா" என்ற ஆத்ரேயனுடன் ஜனனியும் கைகுவிக்க

அவரோ "இருக்கட்டும்ங்க. உங்களை மாதிரி நாலு நல்லவங்க நல்லது செய்ற குணம் படைச்சவங்க இருக்கப்போய்த்தான் நம்ம நாட்டுல மழைன்னு ஒன்னு பெய்யுது." என்றார் மனதிலிருந்து.

ஊருக்குள் பெரிய குடும்பம் பெரிய மனிதர்கள் என்று பேர் இருந்தாலும் ஊருக்கே நல்லது செய்யும் அளவுக்கு பணப்புழக்கம் இல்லாததால் ஒரு காலத்தில் நிறைய குடுத்து உதவிய மனிதருக்கு மனம் கேட்கவில்லை. அவரின் தவிப்பை போக்குவது போல் இப்போது ஆத்ரேயன் முன்னெடுத்த ஊருக்குள் பெரிய தொழிற்சாலையும் உள்ளூர் மக்களுக்கு வாழ்வாதரத்துடன் இலவச உணவும் வழங்கும் திட்டம் அவரை வியப்பில் ஆழ்த்தியதோடு அதைக் கண்டு இன்னும் சிலரும் தங்களாலான உதவிகளை மனமுவந்து செய்ய முன்வருவதும் ஆத்ம திருப்தியை தந்திருந்தது.

இன்று கோயிலுக்கு நன்கொடையாக பணமும் இன்னும் சில உதவிகளும் செய்வதாக ஆத்ரேயன் தெரிவித்திருக்க மரியாதை நிமித்தமாக கோயில் குருக்களோடு ஊர் மக்கள் சிலரும் தாங்களே வந்து அதை வாங்கிக் கொள்வதாக கூறியிருந்தனர். அத்துடன் இன்று அன்னதானத்துக்கும் அவர்கள் ஏற்பாடு செய்திருக்க அந்த வேலையும் அவனுக்கு தொந்தரவு தராமல் அவர்களே பார்த்து கொண்டனர்.

அவனுக்கு அது சங்கடத்தை தர அவர்களுக்கோ சாமி போல் அவர்களுக்கென்று செய்பவனை தங்களால் முடிந்தளவு அலைகழிக்காமல் பார்த்துக்கொள்வது என்ற முடிவுடன் அவர்கள் ஒவ்வொன்றும் செய்ய, அவனால் அதற்கு மேல் அவர்களிடம் மறுத்துப்பேசி சங்கடத்திற்குள்ளாக்க விரும்பாமல் அவர்கள் போக்கிலே விட்டு விட்டான்.

காபியை குடிக்காமல் அப்படியே இருப்பதைப் பார்த்த ஜனனி "எடுத்துக்கோங்க" என்று மீண்டும் வலியுறுத்த, காபியோடு பலகாரங்களையும் வயிறார உண்டவர்களின் மனநிறைவை துல்லியமாக முகங்கள் பிரதிபலிக்க

ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட கணவன் மனைவி புன்னகைத்துக் கொள்ள ஆத்ரேயன் தான் "பசங்களை வரச்சொல்லு ஜானு. அவங்க கையாலயே குடுத்திடுவோம்" என்க,

அதை ஆமோதித்தவள் "இருங்க வந்திர்றேன்" என்று மேலே அவர்களின் அறை நோக்கிச் சென்றாள்.

இருவருக்கும் தனித்தனி அறைகள் அவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப பால்கெனி வசதிகளுடன் அமைத்துக் கொடுத்திருந்தாலும் தங்குவதெல்லாம் சேர்ந்து தான். "இதுக்கு எதுக்கு இவங்களுக்கு இவ்வளவு செலவு பண்ணி ரூம் மெயின்டெயினஸ் பண்ணிருக்கோம். பேசாம ஒரு ரூம் போதும்ன்னு விட்டிருக்கலாம்" அடிக்கடி ஜனனி கோபப்படும் அளவுக்கு அவர்கள் சேர்ந்திருக்காத நாளை விரல் விட்டு எண்ணி விடலாம்.

'எந்த ரூம்ல இருக்காங்கன்னும் தெரியல' பல்லைக் கடித்துக்கொண்டு முதலில் இருந்த அறைக்கதவை திறந்து உள்ளே நுழைந்தவளை வெறுமையான அறையே வரவேற்க அதிருந்த கோலத்தைக் கண்டு தலையிலடித்துக் கொண்டே அடுத்த அறைக்கு சென்றவள் உள்ளே நுழைந்ததும் தலையை பிடித்துக்கொண்டாள்.

கதவு, ஜன்னல் அனைத்தும் மூடி கும்மிருட்டில் ஏஸியை அதிகம் வைத்து ரூம் ஸ்ப்ரேயின் வாசனை வேறு சுவாசித்ததும் தலைவலியை உண்டாக்க, 'தடிமாடுங்க' வைது கொண்டே முதல் வேலையாக ஏஸியை அணைத்து காற்றோட்டத்துக்கு திரைச்சீலையை இழுத்து விட்டவள் ஜன்னலைத் திறக்க,

அதற்கென்றே காத்திருந்து பலமணி நேரமாக உள்ளே வரப் போராடிக் கொண்டிருந்த சூரிய வெளிச்சமும் இளவெயில் காற்றும் திமிறிக்கொண்டு உள்ளே நுழைந்து அறையெங்கும் நிறைந்து ஆட்சி புரிந்தது.

கட்டிலில் குப்புறப் படுத்து ஆழ்ந்த உறக்கத்திலிருந்த உருவத்தின் பக்கவாட்டு கன்னத்தில் சுள்ளென்று பாய்ந்த சூரியக்கதிர்கள் சுட்டெரிக்க, "ஹேலோ மிஸ்டர் சன்னி, உங்களை யாரு உள்ளே அலோவ் பண்ணதாம் ஹா" தூக்கக் கலக்கத்தில் உளறிக் கொண்டே அருகில் படுத்திருந்த உருவத்தின் மீது காலைத் தூக்கிப் போட்டு "ஜன்னலை மூடிட்டு படுடி" எழுப்ப முயன்று உலுக்க

அந்த உருவமோ லேசாகப் புரண்டு படுத்து "உனக்கு வேணும்னா நீ போய் மூடு டி. என்னை எதுக்கு எழுப்புற" காலாலையே அதன் காலை தட்டிவிட்டு மேலும் உறக்கத்தின் வசமாகியது.

இருவரின் கூத்தையும் பார்த்து ஜனனி மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டாள். உதட்டோரம் முகிழ்ந்த முறுவலையும் அடக்கியவள் பொய்க்கோபம் பூசி பல்லைக் கடித்து சுற்றும் முற்றும் பார்வை வீசியவள் டீப்பாயில் ஜக் நிறைய இருந்த நீரை அப்படியே இருவர் மீதும் ஊற்றிவிட

"ஐயோ மழை மழை. டேயோங் குடை குடை" அலறியடித்துக் கொண்டு முதலில் ஜோ எழுந்தமர, அருகில் படுத்திருந்த மற்ற உருவமோ அவள் கத்திய கத்தில் அடித்துப் பிடித்து அரண்டு போய் எழுந்தமர்ந்திருந்தாள் பௌர்ணமி.

ஆத்ரேயன் ஜனனி தம்பதியினரின் மகள்கள் இருவரும்!

"எருமை மாடே, இப்பிடியாடி ஊரைக்கூட்டி ஒப்பாரி வைப்ப. ஒரு நிமிஷம் தூக்கிவாரிப் போட்டிடுச்சு." இதயத்தை பிடித்துக்கொண்டு ஆசுவாசமாகி பின்னர் திட்டத்தொடங்க

அதை காதில் வாங்காத ஜோ அம்மாவைப் பார்த்து மலங்க மலங்க விழித்தாள்.

குனிந்து கூந்தல் அவிழ்ந்து முகத்தை முற்றாக மறைத்திருக்க நிமிராமல் அமர்ந்திருந்த பௌர்ணமி "எவ அவ தண்ணீயை பிடிச்சு ஊத்தி விட்டது. ப்ளடி பிஸ்கெட்" அதட்டலாய் கேட்டுக்கொண்டே அள்ளி எடுத்த கூந்தலை மெஸ்ஸி பன் போட்டு நிமிர்ந்தவள் அங்கு நின்றிருந்த ஜனனியைக் கண்டு வாயை இறுக்கிப் பொத்தினாள்.

'சொல்றதுக்கென்னடி' ஓரப்பார்வையோ தங்கையில் விழுந்து அவளை எரிக்க,

அவளோ 'நானே மாட்டிக்கிட்டு முழிக்கிறேன். உன்னை வேற காப்பாத்தனுமா' கண்களாலே கணை வீசினாள்.

ஜனனி ஆத்திரத்தில் ஏதோ பேச வாயெடுப்பதற்குள் இங்கு என்ன நடக்கும் என்பதை ஊகித்தவனாக மகள்களின் அறைக்கே வந்திருந்த ஆத்ரேயன் "குட்மார்னிங் டா பட்டூஸ்" என்றான்.

தந்தையை கண்டதும் "ஹேப்பி மார்னிங் பா" ஆளுக்கொரு புறமாக தந்தையின் தோள் சாய்ந்து செல்லம் கொஞ்சிய சகோதரிகள் தாயின் பார்வை உக்கிரமாக மாறுவதைக் கண்டு தந்தையிடம் பார்வையாலே காப்பாற்றும் படி மனு குடுக்க, கண்களை மூடித் திறந்த ஆத்ரேயனோ "கீழ அவங்க எல்லாரும் வெய்ட் பண்றாங்க ஜானு. நீ இன்னும் இங்க என்ன பண்ற. நீ கீழ போய் அவங்களை கவனி" என்றவன் மகள்களிடம் திரும்பி "கெஸ்ட்ஸ் வந்திருக்காங்க பட்டூஸ். போங்க போய் சீக்கிரம் ஃப்ரெஷ் ஆகி வாங்க... டென் மினிட்ஸ் தான் டைம்" என்றவன் அவர்களை அழகாக காப்பாற்றி மனைவியின் கைப்பிடித்து தன்னுடனே அழைத்துச் சென்றான்.

வேறு வழியில்லாமல் கணவனுடன் இணைந்து நடந்தாலும் "போன பொங்கலுக்கு எடுத்த தாவணியை கட்டிக்கிட்டு வாங்க ரெண்டு பேரும். கம்ஃபர்ட்டபிள் இல்லேன்னு வெஸ்டர்ன் உடுத்தி வந்திங்க தோளை உரிச்சிடுவேன்" என்று கண்டித்து விட்டே சென்றாள்.

"வெவ்வவ்வெவ்வே. அதெல்லாம் உடுத்த முடியாது மீ..." மெல்லிய குரலில் பழிப்பு காட்டிய பௌர்ணமி ஜனனி பார்வை அவள் புறம் திரும்புவதை போல் இருக்க ஒரே ஓட்டமாக குளியலறை நோக்கி ஓடியவளை அவளுக்கு இணையாக ஓடி வந்த ஜோ இழுத்து நிறுத்த "என்னடி" அவள் கைகளை விலக்குவதிலே குறியாக இருந்தவள் சீறினாள்.

"இது என்னோட பாத்ரூம். உனக்கு குளிக்கனும்னா நீ உன் ரூமுக்கு போய்க்கோ." ஜோ போர்க்கொடி தூக்க

அவள் தலையில் நறுக்கென்று ஒன்று போட்ட பௌர்ணமி "நேத்து நீ எங்க குளிச்சியாம்" இடுப்பில் கை வைத்து முறைத்தாள்.

"ஹே ஹே அது நேத்து. நான் சொல்றது இன்னைக்கு கதை. அதெல்லாம் நேத்தோட முடிஞ்சு. குளிக்கிறதுன்னா உன் ரூமுக்கு போ. இப்போ வழியை விடு எனக்கு நேரமாச்சு"

"எத விடமாட்டியா... அப்போ உன் டேயோங் மேட்டரை டேஷ் டேஷ் டேஷ் போட்டு மீக்கிட்ட போட்டுக்குடுத்திடட்டுமா. ம்ம்... என்ன ஓகேவா பேபி" என்றவள் நக்கலாக புருவத்தை உயர்த்தவும் ஏதோ சொல்ல வாயெடுத்த ஜோ வேறு வழியின்றி தன் பிடியை தளர்த்தி வழி விட்டு நகர்ந்து நிற்க "இது நல்ல பிள்ளைக்கு அழகு" அவள் கூர்நாசியை பற்றி செல்லமாக ஆட்டியவள் பாடிக்கொண்டே குளியலறைக்குள் புகுந்து கொண்டாள் பௌர்ணமி!

'உனக்கு இருக்குடி' கறுவிக்கொண்டு வெளியே நின்ற ஜோ பௌர்ணமியின் அறைக்குச் செல்ல திரும்ப, அதற்குள் மார்பு வரை கட்டிய டவலுடன் கதவைத் திறந்து உள்ளிருந்து எட்டிப்பார்த்த பௌர்ணமியோ "செல்லம், அப்பிடியே என் தாவணியை அயர்ன் பண்ணி வச்சிடு என்ன..." என்று கதவை மூடியவள் மீண்டும் திறந்து "ஆங் மறந்திட்டேன். என்னோட பாத்ரூம் யூஸ் பண்ணாத எனக்கு பிடிக்காது. கெஸ்ட் பாத்ரூம் இருக்கில்ல அங்க போய்க்கோ" எனவும்

அதற்கு மேல் தாங்காமல் கைக்கு ஏதும் அகப்படுகிறதா எனத் தேடியவளை இன்னும் நக்கலாகப் பார்த்தவளோ "டேயோங் டேயோங்" என பாடிக்கொண்டே "என்ன சொல்லட்டுமா..." என்க

தேடுவதை நிறுத்தியவள் அவளை முறைத்துக் கொண்டே தங் தங்கென நிலம் அதிர அறையிலிருந்து வெளிநடப்பு செய்ய, அடக்கமாட்டாமல் சிரித்துக்கொண்டே குளியலறை கதவைப் பூட்டிக்கொண்டாள் பௌர்ணமி நக்ஷத்திரா!

எதார்த்தமாக வைத்த பேரோ அவளுக்கு அம்சமாகப் பொருந்திப்போனது. பௌர்ணமி வானில் நிலவுக்கு போட்டியாக மின்னும் நட்சத்திரங்களைப் போல் அவளுமே கொள்ளை அழகு தான்!

இருவரும் அக்கா தங்கை என்பதைத் தாண்டி க்ரைம் பார்ட்னர்ஸ், பிலவ்ட் எனிமீஸ், பெஸ்டீஸ் என்ற பதங்களுக்குள் அழகாக பொருந்திக் கொள்வர். மரியாதை குடுக்கும் உறவில்லை அவர்கள். மரியாதை என்றால் என்ன என்றே தெரியாத பாசக்கார பயல்கள் அவர்கள்!

பௌர்ணமி தயாராகி வந்த போது அடுத்த அறையில் இருந்து ஜோ வரவும் சரியாக இருக்க, இருவரின் பார்வையும் ஒன்றையொன்று வெட்டிக்கொள்ள ஒரு முறைப்புடனே கீழிறங்கி வந்து தந்தையின் மறுபுறம் நின்று கொண்டனர்.

அழகில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்லவே!

வாடா மல்லி நிறத்தில் கையகல ஜரிகை பார்டர் வைத்த பட்டுப்பாவாடை தாவணியில் கழுத்தில் பிரத்தியேகமாக அவளுக்கென்றே வடிவமைத்த வைர அட்டிகையும் கைகளில் கண்ணாடி வளையல்களும் காதில் தங்கத்திலான குடை ஜூமிக்கியுமென பௌர்ணமி அழகுப் பூஷிதையாக ஜொலித்தாள் என்றால்

உடைத்த பாசிப்பச்சை நிறத்தில் பாவாடை முழுவதும் கொடிகளும் பூக்களுமாக ஜரிகை வேலைப்பாடு செய்த பாவாடை தாவணியில் அவள் விரும்பிக் கேட்ட தங்கத்தினாலான ஆன்டிக் ஹாரமும் தங்க வளைவிகளும் வைர ஜூமிக்கியுமாக ஜோதி ஸ்வரூபிணியும் டாலடித்தனர்.

ஒரே நேரத்தில் விண்ணில் இருந்து இறங்கி வந்த ரம்பை மேனகை போலக் கொள்ளை அழகுடன் கண்களைப் பறித்தவர்கள் மீதே வந்திருந்தவர்களின் பார்வை இரு நிமிடத்திற்கும் மேலாக பெரும் வியப்பாக படிந்ததில் மனதுக்குள் 'முதல் வேலையா திருஷ்டி சுத்தி போடனும்' எண்ணிக் கொண்ட ஜனனி ஆத்ரேயனுடன் இணைந்து மகள்களிடம் தாம்பூல தட்டுகளை ஒப்படைக்க, இருவரும் ஒரு நிமிடம் கண்களை மூடி கடவுளை வணங்கி அவர்களிடம் ஒப்படைத்து அவர்கள் புறப்படும் வரை அங்கேயே ஓரிடத்தில் பதுமைகளாக நின்றனர்.

அது அவர்கள் வீட்டில் எழுதப்படாத சட்டம். காலம் காலமாக அவர்கள் குடும்பத்தினரால் கடைப்பிடிக்கபடுவதும் கூட! எந்த நல்ல காரியத்தின் தொடக்கத்திலும் அந்த வீட்டுப் பெண்களின் கை என்றும் ஓங்கியே இருக்கும்.

ஒருவழியாக அவர்கள் புறப்பட்டதும் தான் ஆசுவாசமாக மூச்சு விட்டனர்.

அது அந்தக் கடவுளுக்கே பொறுக்கவில்லை போலும்.

"பௌர்ணமி, ஜோ ரெண்டு பேரும் இங்க வந்து நில்லுங்க. வந்தவங்க கண்ணு பூரா உங்க மேல தான்" என்ற ஜனனி இருவருக்கும் திருஷ்டி கழித்தவள் "இன்னைக்கு வெளியே போற ப்ளான் இருந்தா கேன்சல் பண்ணிடுங்க எங்கேயும் போக வேண்டாம். தாத்தாவும் பாட்டியும் அத்தை வீட்டிலிருந்து வருவாங்க" என்க

கண்களில் மின்னல் வெட்ட "அத்தானுமாம்மா" ஜோ ஆவலே வடிவாக கேட்டு ஜனனியின் உக்கிர பார்வையை பரிசாகப் பெற பௌர்ணமியோ கடுப்பாக தங்கையை முறைத்தாள்.

'ரொம்பத்தான்' தாயைப் பார்த்து உதட்டைச் சுழித்தவள் தன் ஆயிரம் வாட்ஸ் உற்சாகத்தை அப்படியே உள்ளுக்குள் அடக்கியவளாக "இல்லேம்மா. செம் வருதில்லையா அதான் அத்தான் வந்தா டவுட்ஸை க்ளியர் பண்ணிக்கலாமேன்னு கேட்டேன்" என்றாள் பவ்வியமாக.

'நம்பாதீங்க மீ நம்பவே நம்பாதீங்க. எப்பிடி நடிக்கிறா அவ்வா' கண்களை சுருக்கி அவளை உறுத்து விழித்தவளோ "ஆமா அப்பிடியே அந்த ஜிஎம், சிடுமூஞ்சிக்கு சித்தப்பா சன் சொல்லிக்குடுத்து நீ பாஸாகிட்டாலும்..." எள்ளலாக மொழிந்தவளை "பௌர்ணமி" ஜனனி அடக்க

"ஏய் பொணமி என்ன லந்தா" ஜோ எகிற "ஆமா நீ ஊட்டி வளர்த்தேல்ல அந்த லந்து" என அவளும் சளைக்காமல் வாயடிக்க

"நிறுத்திறிங்களா ரெண்டு பேரும் இப்போ என்கிட்ட வாங்கிக்கட்டிக்க போறீங்க" என்றால் பார்த்துக் கொண்டிருந்த ஜனனி.

"அவன் உன்னை விட வயசில் பெரியவன். மரியாதை குடுத்து பேசிப்பழகுன்னு எத்தனை தடவைதான் சொல்றது பௌர்ணமி" ஜனனி ஒரு காளிதேவி பிரியை. கோபம் வந்தால் அவளை மலையிறக்குவதும் ஒன்று நாம் மலையேறுவதும் ஒன்றுதான்.

'முக்கியமான விஷயத்தை இன்னைக்கு ஓபன் பண்ணலாம்னு ப்ளான் வச்சிருந்தேன் பாதகத்தி கெடுத்துவிட்டுட்டா... அத்தானாம் அத்தான். சட்டை பொத்தான். வரட்டும் இழுத்து வச்சு தச்சு விட்டுர்றேன்' கடுகடுத்தவள் அவளை முறைத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.

அவளை முந்திக்கொண்டு உள்ளே நுழைந்த ஜோ தோள் பட்டையில் முகத்தை இடித்து அவளை விட ஒருபடி அதிக முறைப்பும் கொதிப்புமாக சோபாவில் சட்டமாக அமர, 'ப்ளஸ் டூ படிக்கிற உனக்கே இவ்வளவு திமிர்னா நாலு வருஷம் கஷ்டப்பட்டு படிச்சு வேலைக்கு போகாம வீட்டில் இருக்கும் எனக்கு எவ்வளவு திமிர் இருக்கும்' அவளுக்கு எதிரே அலட்சியமாக கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டாள் பௌர்ணமி.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்வையால் வெட்டிக் கொண்டவர்கள் அடுத்து டீவி ரிமோட்டுக்கு ஒரு கச்சேரியை ஆரம்பிக்க, "கொஞ்ச நேரத்துக்காச்சும் சண்டை போடாம மத்த வீடுங்கள்ள பசங்க இருக்கிறதாட்டம் அமைதியா இருக்கிங்களாடி எப்போ பாரு நொச்சு பண்றதையே வேலையா வச்சிக்கிட்டு" சமையலை பாதியில் விட்டு ஜனனி வந்து காட்டுக் கத்தலாக கத்திச் சென்ற பின்பும் அடித்துக்கொள்ளாத குறையாக மாரடித்தவர்களை 'என்னவோ பண்ணித் தொலைங்க' தண்ணி தெளித்து விட்டவள் தலையிலடித்துக் கொண்டு நகர்ந்து விட்டாள்.

ஆத்ரேயன் அலுவலகம் செல்ல கிளம்பி வரமட்டும் இருவரின் போரும் ஒரு முடிவுக்கு வந்திருக்கவில்லை. ஆடை தொழிற்சாலை உள்ளூரில் மட்டுமல்ல நகரங்களில் பல முக்கிய இடங்களில் பல ஏக்கர் நிலப்பரப்பில் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது அவர்கள் பேரில். சொக்கலிங்கம் சிறியளவில் ஆரம்பித்து சிறுகச் சிறுக வளர்த்ததை ஆத்ரேயன் தலையெடுத்து பெரியளவில் கொண்டு வர இந்த இருபது வருடங்களில் அசைக்க முடியாத வகையில் தனக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்து முன்னணியில் இயங்கி வருகிறது லிங்க நாதன் ப்ரைவேட் லிமிடெட். அதில் ஆடை தொழிலோடு பல தொழில்களும் உள்ளடக்கம்.

மணல் நிறத்தில் ஃபுல் சூட் அணிந்து இடது கையில் அவன் வழக்கமாக அணியும் விலையுயர்ந்த கைக்கடிகாரமும் வலது கை முகப்பில் வெள்ளிக்காப்பு சகிதமும் கம்பீரமாக படிகளில் இறங்கியவன் கோட்டின் நடு பொத்தானை இரு விரல்களால் போட்டபடி சீரான நடையில் இறங்கிவர

இத்தனை வயதிலும் கம்பீரமும் மிடுக்கும் குறையாமல் இருக்கும் தந்தையை என்றும் போல ஹீரோ வர்ஷிப்புடன் ரசித்துப் பார்த்தாள். அவளுக்கு முதல் ஹீரோ அவள் தந்தை தான். கனிவும் கருணையும் இதழில் உறைந்த புன்னகையுடன் அவன் தோற்றம் அவள் கண்களுக்குள் விழுந்து கன்னங்களில் தந்தையை நினைத்துப் பெருமிதப் புன்னகை பூக்க செய்தது.

மகளின் புன்னகையை ரசித்தவாறே அவளருகே வந்த ஆத்ரேயன் வாஞ்சையுடன் அவளின் தலைமுடி கோத, அவன் சட்டை கசங்காமல் இடுப்போடு அணைத்து வயிற்றில் முகம் புதைத்தவளோ "ஐ லவ் யூப்பா" என்றாள் உள்ளார்ந்த பேரன்போடு.

"நானும் லவ் யூ டூ பௌர்ணமிடா" என்றவனும் மகளின் கன்னத்தைத் தாங்கி முன்னெற்றியில் அழுத்தமாக முத்தம் வைத்து நிமிர, அங்கோ ருத்ர தாண்டவம் ஆடும் எண்ணத்துடன் அவனை அனல் பொங்கப் பார்த்திருந்தாள் இளைய மகள் ஜோதி ஸ்வரூபிணி!

"அதென்ன அவ மட்டும் ஸ்பெஷல் நாங்கள்லாம் இருக்கிறதே உங்க கண்ணுக்கு தெரியாதில்ல." இடுப்பில் கை ஊன்றி கோபமாக கேட்டவளை குறும்பாக பார்த்தவன் கைகளை விரிக்க "அப்பான்னா அப்பா தான்! நானும் நானும் ஐ லவ் யூப்பா" என்றவள் வாகாக தந்தையின் தோள் வளைவில் சாய்ந்திருக்க, அதைக் கண்டு பௌர்ணமியும் மறுபுறம் சாய்ந்து கொள்ள அன்றைய நாளின் தொடர்கதையாக அடுத்துவொரு பஞ்சாயத்து ஆலமரம், சொம்பு, முக்கியமாக கட்டை மீசை வைத்த நாட்டாமை இல்லாமல் ரணகளமாக ஆரம்பித்தது.

அந்த வீட்டில் அதற்கு மட்டும் பஞ்சமிருந்ததில்லையே.

அன்றைய நாளின் மீதிப் பொழுதும் அப்படியே சண்டையும் சமாதானமும் கிண்டலும் கேலியும் ஜனனியின் திட்டும் முறைப்புமாக நொடியில் கடக்க, அன்று வருவதாக இருந்த சொக்கலிங்கம் வேதநாயகி தம்பதியினரோ பயணத்தை மாற்றி நாளை வருவதாக சொல்லிவிட அதற்கொரு பஞ்சாயத்து எழுந்து அடங்க,

"நாளைக்கு சண்டே கண்டிப்பா என்னால வீட்டில் இருக்க முடியாது. வெளியே போகக்கூடாது தாத்தா பாட்டி வரும். அத்தான் பொத்தான் வரும்னு எந்தக் கதையும் சொல்ல வேண்டியதில்லை" இரவுணவின் போது தந்தை இருக்கும் தைரியத்தில் ஜனனியை நேர்கொண்டு பார்க்காமல் ஒருவாறு தைரியத்தை இழுத்துப் பிடித்து சொல்லிவிட்டவள் பாதியில் உணவை முடித்து அறைக்குள் ஒரே ஓட்டமாக ஓடிவிட,

"அதெப்பிடி அவளுக்கு மட்டும் பர்மிஷன் நாளைக்கு நானும் தான் வெளியே போவேன். அதெல்லாம் ஏன்னு கேக்கக்கூடாது" என்ற ஜோவும் பட்டென்று சொன்னவள் ஜனனி அவளை நிமிர்ந்து பார்ப்பதைக் கண்டு தட்டிலே கையைக் கழுவி பௌர்ணமியைத் தொடர்ந்து ஓடி தனது அறைக்குள் புகுந்து கொண்ட பின்னே மூச்சை இழுத்து விட்டாள்.

தன் அறையில் குளித்து இரவுடைக்கு மாறி ஆளுயர அலங்கார கண்ணாடி முன் நின்று நைட் க்ரீமை கன்னங்களில் தடவி இதமாக மசாஜ் செய்து கொண்டிருந்த பௌர்ணமி ஃபேஷன் படிப்பை முடித்து மேற்படிப்புக்கு தயாராகிக் கொண்டிருக்கிறாள். அதுவும் இட்டாலியில் உள்ள மிலன் நகரின் மிகப் பிரபலமான ஃபேஷன் ஸ்கூலில் தான் படிக்க வேண்டும் என்பதுதான் அவளின் கனவு!

அதற்காக தன் தகுதியை மட்டுமல்லாமல் தோற்றத்தில் ஆடை தெரிவுகளில் அதிகம் கவனம் செலுத்துவதால் இயற்கையிலே அழகானவள் மெல்லிய ஒப்பனையிலும் சார்டின் இரவுடையில் மேலும் பேரழகியாகத் திகழ்ந்தாள்.

கைகள் அதன் போக்கில் க்ரீமை தடவிக்கொண்ட போதும் மனம் அந்த பொத்தானின் நினைவில் தான் சிக்குண்டு தகித்துக் கொண்டிருந்தது.

இன்று அவளின் கல்லூரி நண்பர்கள் ஆண்களும் பெண்களுமாக மொத்தம் ஆறு பேர் அவளின் கேங்கில். அனைவருமாக அவுட்டிங் செல்வதாக ஏற்கனவே திட்டமிட்டிருந்தனர். 'அந்த பெரிசும் கிழவியும் வரலேன்னு யாரு இங்க அழுதாங்களாம் அப்பிடியே வராமலே இருக்கலாம்' மனதோடு பொருமியவளுக்கு நிச்சயம் தெரியும். இன்று அவளை வெளியே செல்ல விடாமல் மறைமுகமாக தடுத்தது கூட அவனாகத்தான் இருப்பான் என்று.

அவனுக்கு அது பழக்கமானதும் கூட! ஒவ்வொரு முறையும் முதல் நாள் அவர்களை அழைத்து வருவதாகச் சொல்லுபவன் திடீரென பயணத்தை மாற்றி அடுத்த நாள் வருவதாக சொல்வான். அவர்கள் வரும் போது வீட்டிலிருக்க வேண்டும் என்பதும் அவன் கட்டளை தான். அவன் தாளத்துக்கு அவர்கள் ஆடியாக வேண்டும் என்பதை ஒவ்வொரு செயலிலும் உணர்த்தும் அவன் சொல்வதற்காகவே அதை மீற நினைப்பவளாலும் ஏனோ இன்று வரை அதைச் செய்ய முடிந்ததில்லை.

'அந்த ஆறடி மலமாடை என்னதான் பண்றதாம்? அவனை மட்டும் தாண்டி என்னால வரமுடியல்லை., அதுகூட பரவால்ல அவன் சொல்றதை எல்லாம் வெக்கமே இல்லாம பண்ணிட்டு அவன் முன்னாடி நிக்கிறதை நினைக்க ச்சே!' நெற்றியில் அறைந்தவள் எதிரில் கண்ணாடியில் அவன் முகம் தெரிய 'உனக்கு தான் பக்கி காத்திருக்கேன்' கண்ணை உருட்டி ட்ரோவரில் கைக்கு அகப்பட்ட சீப்பை தூக்கி அவனுக்கு விட்டெரிந்தாள்.

அது அவனில்லை கண்ணாடி என்று புரிந்த போதோ தன்னையே நொந்து கொண்டாள்.

'அவனே பைத்தியம் அவனை நினைச்சு எனக்கு பைத்தியம் பிடிக்குது' இது கடைசி. இனி அவனை நினைச்சு பார்க்கவே கூடாது டாட். என்றும் போல் சொல்லிக் கொண்டே தலையை உலுக்கி அவன் நினைவில் இருந்து வலுக்கட்டாயமாக வெளி வந்தவள் படுக்கையில் வந்து விழுந்தாள்.

மனதில் ஏதேதோ எண்ணங்களின் ஊர்வலம்! அவை சுகமாக சுமையாக உள்ளிருந்து சிறுகச் சிறுக கொல்லும் ஆலகால விஷமாக தாக்க கைகள் தானாக தன்னிடமிருப்பதைப் பற்றிக் கொண்டே கண்களை மூடிக் கொண்டது. அது...?!!!கருத்துகளுக்கு

 
Last edited:

NNK33

Moderator
ranveer-singh-hd-wallpapersimages-1080p-dkyasr-1000x1333.jpg


அத்தியாயம் 02

போயஸ் கார்டனில் இருந்த அந்த பழைய பாணி வீடு ஒரு கிழட்டுப் புயலால் அல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது.

வீட்டின் உள்ளிருந்து வந்த சத்தமோ வாயில் வரை கேட்க, காதைக் குடைந்து கொண்டே அடிக்கடி உள்ளே ஒரு பார்வையும் வெளியே மறுபார்வையுமென ப்ளாக் ஆடியை துடைத்துக் கொண்டிருந்த மாணிக்கம் அந்த வீட்டின் விசுவாசமான ட்ரைவர். சுமார் இருபது வருடங்களுக்கும் மேலாக அங்கே பணிபுரிவதால் அவர்களில் ஒருத்தரும் கூட.

'சின்னவரு வந்தா தேவலாம்' என அவரின் எண்ணம் ஓடும் போதே உள்ளிருந்து

"ட்ரைவரை வண்டியை எடுக்க சொல்லுறியா இல்லையாமா கலா" என்ற குரல் உரத்துக் கேட்கத் தொடங்கியது.

'அய்யோ மறுபடியும் மொதல்ல இருந்தா' அவர் ஜெர்க்காகும் போதே அவரைத் தொடர்ந்து ஓய்ந்து போய் ஒலித்தது அவரது மகளாகப்பட்ட கலாவின் குரல்.

குரல் மட்டுமல்ல அவளுமே ஓய்ந்திருந்தாள் ஒரே விஷயத்தை கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக விடாமல் சொல்லிக் களைத்ததில்.

"அப்பா ஷேஷா வர்ற நேரம் தான். வந்திடுவான். நேத்தே வருவேன்னான் திடீர்னு செமினார் அரேன்ஞ் பண்ணதால டையத்துக்கு வர முடியல கண்டிப்பா காலையில் வந்ததும் நானே தாத்தவை கொண்டு விடுறேன். எனக்காக காத்திருக்க சொல்லுங்கம்மா மறந்திடாதீங்கன்னு அழுத்தி சொல்லிருந்தான். வந்திருவான் ப்பா. கொஞ்ச நேரம் நீங்க தூங்கி எழுந்தால் தான் என்னவாம்" கோப தொனியில் இப்போதே வீட்டுக்குப் கிளம்பியே ஆகவேண்டும் என பிடிவாதம் பிடித்து கொண்டிருக்கும் சொக்கலிங்கம் எழுவது சொச்சத்தில் 'என் குடும்பத்தின் ஆணிவேர் நான்' என்ற செருக்கோடு இருந்தார்.

இருந்தார் இருக்கின்றார் இனியும் மனிதர் இருப்பார். தன் பேரக்குழந்தைகள் வழி கொள்ளு பேரப்பிள்ளைகளை பார்க்க வேண்டும் என்பது அவர் அவா!

வெளிப்படையாக அவர்களிடம் பாசத்தை காட்டியதில்லையே ஒழிய ஒரு மாதத்திற்கு மேலாக அவர்களைப் பாராமல் இருக்க முடிந்ததில்லை. அதிலும் கல்யாண வயதில் மகன் வழியில் மூத்த பேத்தி வேறு இருக்க ஒரு மாதம் அவளை பார்க்காமல் இருப்பதே என்னவோ போல் இருந்தது. நிச்சயம் அவள் திருமணம் முடித்து இன்னொரு வீட்டுக்கு சொந்தமானவளாக சென்று விட்டால் அதுகூட முடியாது. இந்த எண்ணமே கடந்த சில தினங்களாக அவருக்குள் உறுத்திக் கொண்டிருக்க அதற்கொரு தீர்வாக மனது ஏதேதோ கணக்கிட்டு அதை செயற்படுத்த காத்திருந்தது.

நினைப்பதை நினைத்த மாத்திரத்தில் செயற்படுத்த வேண்டும் என்ற பிடிவாதம் அவரோடு கூடப் பிறந்தது. நான் சொன்னால் சொன்னது நடந்தே ஆகவேண்டும் என்ற உறுதியும் அதிகம் கிழவருக்கு. அதைத் தான் மகள் கலாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் வேதநாயகி.

அலுத்து சலித்துப் போய் வந்து அமர்ந்தவளிடம் "உங்கப்பாவை பத்தி உனக்கு தெரியாததில்லையே கலா. அந்த மனுஷனுக்கு பிடிவாதம் பிடிக்க சொல்லியா குடுக்க. பேரன் வரேன்னு சொல்லியும் கேக்காம அடம்பிடிச்சுருப்பாரே" சாய்வாக மெத்தையில் கால் நீட்டி அமர்ந்திருந்த நாயகியோ மகளை 'அப்படித்தானா' என்பது போல் பார்க்க,

"ப்ச் ஆமாம்மா. ஷேஷா நான் வருவேன்னு அழுத்தி சொல்லிருந்தான். அவன் அப்படி சொல்லி என்னைக்கு நான் மீறிருக்கேன். அப்பா வேற புரியாம அடம்பிடிக்கிறாரு. இங்க வந்து ஒரு மாசம் ஆச்சுன்னாலே இப்பிடி ஆரம்பிச்சிறாரு" அங்கலாய்ப்பாக சொல்லிக் கொண்டே மெத்தையில் நீட்டி நிமிர்ந்து அமர்ந்த கலா ஶ்ரீ அறைக்குள்ளே இருக்கும் டீவியை இணைக்க, அவர்கள் விரும்பி பார்க்கும் ஹிந்தி சீரியல் திரையில் மறுஒளிபரப்பாகியது.

அதில் மூழ்கிக் கொண்டே "உங்கப்பா பண்றது தான் புதுசா நாம இப்பிடி அங்கலாய்க்கிறது தான் என்ன புதுசா" மகளைப் பார்த்துச் சொன்ன நாயகி "மனுஷனுக்கு பேத்திங்களை பார்க்காம இருந்திட முடியுமா" என்றார் நொடிப்பாக.

அதுதான் உண்மையும் என்பதால் கலாவும் ஆமோதிக்க "என்னவோ போ கலா. கூடக்குறைய உன்னோட ஒரு மாசம் இருக்கலாம்னா முடியுதா... எல்லாம் நான் வாங்கி வந்த வரம் அப்பிடி." சலிப்பாக சொன்னவருக்கு பேத்திகளை பிடிக்காமல் இல்லை. அவருக்கோ உள்ளதும் ஒரே மகள். எல்லா தாய்மாரையும் போல் அவள் மீது பாசம் அதிகம். அந்தப் பாசம் அப்படியே மகள் வயிற்றுப் பேரன் மீதும் அளவில்லாமல் ஆறாக பாய, விட்டால் மகளுடனே இருந்துவிடுவார் சொக்கலிங்கம் எவ்வழியோ அவ்வழியே வாழ்ந்து பழகி விட்டதால் இத்தனை வயதுக்கு பின் அப்பழக்கத்தை மாற்ற முடியவில்லை. அதனால் மட்டுமே அடக்கி வாசித்தார்.

"நாயகி" வெளியே அதட்டலாக சொக்கலிங்கத்தின் குரல் கேட்க "இந்தா கூப்பிட்டாருல்ல" சடைத்த நாயகி "காலம் போன கடைசியில நிம்மதியா உக்கார்ந்து ஒரு டீவி சீரயலாச்சும் பார்க்க முடியுதா" சிடுசிடுத்துக் கொண்டே பருத்த தன் உடலை மெல்ல அசைத்து மெதுவாக கட்டிலில் இருந்து இறங்கி வெளியே வர "கூப்பிட்டதும் வரமாட்டியோ" என்றார் அவர் வந்ததும் வராததுமாக.

'ம்க்கும்' மனதுக்குள் நொடித்த நாயகி "எனக்கென்ன இளமை திரும்பிறதா நினைப்போ. இருந்தா எழ முடியலை எழுந்தா உக்கார முடியலை. இன்னும் ரெண்டு சொச்சம் கூடிச்சின்னா இருக்கேனோ இல்லையோ... காடு வா வாங்குது. வீடு போ போங்குது‌. இதில வயசு பிள்ளைக்கிட்ட சொல்றாப்ள பேசுறீரு பாரு பேச்சை" சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சொக்கலிங்கத்தை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கும் நாயகி இருந்த கடுப்பில் அன்றைக்கும் சூடாக திருப்பிக் குடுக்க

கண்கள் சிவக்க சகதர்மினியை உறுத்து விழித்து கிழவர் "என்ன என்னை தனியா விட்டு போய்டலாம்னு நினைச்சியோ. கிறுக்கச்சி... என்னை பேசுறேன்னு நீ பேசுற பேச்சைப் பாரு" கோபமாக வார்த்தையை திருப்பி கொடுத்தார்.

அதில் கோபத்துக்கும் அதிகமாக வெளிப்பட்ட இத்தனை வருட தாம்பத்தியத்தின் புரிதலும் அன்பும் அன்னியோன்யம் கலந்த காதலும் அந்த வயதிலும் அழகாக நாயகியை வெட்கப்பட வைக்க

"உங்களை அப்பிடியே எல்லாம் விட்டுறதா இல்லை பாட்டி. தாத்தாக்கிட்ட சொல்லுங்க, என் குழந்தை என்னோட பேரக்குழந்தைக்கு எல்லாம் அவர் தான் டயப்பர் மாத்தனும்னு..." அவர்களின் ஏகாந்தத்தை மேலும் இனிமையாக்குபவனாக அவர்களின் மூத்த பேரன் வருண் ஷேஷாதித்யன் சிரிக்காமல் சொல்லியவாறு கோட்டை ஒரு கையில் தாங்கி மறுகையால் டையை தளர்த்தியவாறே உள்ளே நுழைந்து கொண்டிருந்தான்.

முதல் பார்வையில் வசீகரிக்கும் தோற்றம். அவன் பளிச்சென்ற நிறம் வாடி இருப்பதிலே பயணத்தின் களைப்பு அப்பட்டமாக தெரிய அதைத் தாண்டி பேரழகாகத் தெரிந்தான். படிய வாரி ஜெல் தடவி பராமரிக்கும் சிகை கலைந்து ஃபேன் காற்றுக்கு முன்நெற்றியில் புரண்டு சடுகுடு ஆடியது. இரு விரலால் தலைசரித்து கோதிக் கொண்டான்.

ஆறடிக்கு குறையாத உயரம் தான் அவன். ஆண்களில் அதிகமான அண்ணார்ந்து பார்க்கும் உயரத்திற்கு ஏற்ற கட்டுமஸ்தான உடற்பயிற்சி தேகமோ கோட்டை கழற்றியதில் அவிழ்ந்திருந்த ஷேர்ட்டின் முதலிரண்டு பட்டன்களின் இடைவெளியூடு திமிறிக்கொண்டு இருந்தது. அளவான கற்றை மீசையோ மேலுதட்டை முழுதாக மறைத்து தனக்குள் சுருட்டியிருக்க, தடித்த கீழுதடும் அதற்குக் கீழே இரண்டு நாள் ஷேவ் செய்யாத தாடியும் அவனை ஆணழகன் என்றது.

இப்போதே அவர்கள் வட்டத்தில் பல பெண்களும் பெண்களைப் பெற்ற அப்பாமார்களும் நீ நானென்று அவனுக்காக போட்டியிட்டுக் கொண்டிருக்க அவனோ யாருக்கும் பிடி குடுக்கவில்லை. "இப்பயே வயசு முப்பதாகப் போகுதே ஷேஷா" அம்மா அப்பாவில் இருந்து தாத்தா பாட்டி வரை ஒரே கேள்வியை கேட்க, அவன் பதிலோ "நோ மோர் டிஸ்கஷன் மா. நான் சொல்லவேண்டியதை சொல்லிட்டேன். இப்போதைக்கு நான் தயாரா இல்லை' என்பது தான்.

அப்படிப்பட்டவன் இப்படிச் சொன்னதே சொக்கலிங்கத்துக்கு தான் எடுத்த முடிவில் மேலும் ஒரு உறுதியைத் தர அகங்கொள்ளாச் சிரிப்போடு கர்வத்துடன் நரைத்த மீசையை தடவிக்கொண்டவர் மறுநொடியே "நேத்து ஏன் வரலைன்னு கேளு நாயகி" சிறு குழந்தை முகத்தை தூக்கி வைத்து ஆசை காட்டி‌ ஏமாத்திய தாயிடம் கோபம் கொண்டதைப் போல் கேட்டார்.

மீசை இடுக்கில் உதடுகள் சிரிப்பில் துடிக்க அவரின் குறுகுறு பார்வையில் அதை மீசைக்குள்ளே அடக்கியவன் அவரைப் போலவே மீசையை அழுந்த தடவிக் கொடுத்து இமிடேட் செய்து "வரக்கூடாதுன்னு இல்லைன்னு சொல்லுங்க பாட்டி. திடீர்னு ஒரு செமினார் நான் தான் அட்டென்ட் பண்ணனும்னு ரிக்வெஸ்ட். எப்பிடி மீறதாம்? என்னை நம்பி ஒப்படைச்ச பொறுப்பை தட்டிக் கழித்து பழக்கம் இல்லையே எனக்கு. அது தெரியும் தானே. இன்னைக்கு கண்டிப்பா தேங்க்ஸ் கிவ்விங் பார்ட்டியில் கலந்துக்கிட்டே ஆகனும்னு சொன்னவங்களை கன்வீன்ஸ் பண்ணி கிளம்பி வந்திருக்கேன்" என்றான் தாத்தாவை நேருக்கு நேர் பார்த்து.

பதில் சொல்லாமல் அவனை ஒரு பார்வை பார்த்தவர் சோஃபாவில் சென்று அமர்ந்து கொண்டு அவனைத் தவிர்த்து அனைத்திலும் பார்வையோட்ட, நமட்டுச் சிரிப்புடன் "ட்டூ மினிட்ஸ் பாட்டி. ரெஃப்ரெஷ்ஷாகிட்டு வந்ததும் முதல் வேளை உங்களை கூட்டிட்டு கிளம்புறது தான்." என்றவன் அவன் குரல் கேட்டு அறையில் இருந்து வெளியே வந்த கலாவின் தோளை அணைத்து விடுவித்து "ப்ரேக் பாஸ்ட் எடுத்து வைங்கமா. ட்டூ மினிட்ஸ்" என்றவாறு வேக நடையில் படிகளில் தடதடவென விரைந்து அறைக்குள் புகுந்திருந்தான்.

கதவைத் திறந்ததும் அறைக்குள் வாசம் செய்த மல்லிப்பந்தலில் படர்ந்திருந்த பூக்களின் வாசம் நாசிக்குள் நுழைந்து சுகமாக தாக்கிச் செல்ல கால்கள் அவனை நேராக அங்கு தான் நகர்த்திச் சென்றது .

காலை நேரத்துக்கு உரிய இதமான தென்றல் காற்று வருடிக் கொண்டிருக்க உப்பரிகையில் சீராகப் பராமரிக்கப்பட்ட மல்லிப்பந்தலும் அதைச் சுற்றி படர்ந்திருந்த ரோஜாக்களும் அவனைக் கண்டு காற்றுக்கு அசைந்தாடி வரவேற்றது.

அதன் கீழ் உயர் சாதி பர்மா தேக்கிலான மர ஊஞ்சல் அவன் ஆசைப்பட்டு வடிவமைத்த பிரத்தியேக டிஸைனில் அவனை வா வா என்க, ஷேர்ட்டை கழற்றி அதற்குரிய இடத்தில் வைத்து வெற்று மார்புடன் கம்பீரம் சொட்ட சென்று அமர்ந்தவனை அந்த ஏகாந்தச் சூழல் அப்படியே தன்னுள் அடக்கிக் கொண்டது. இதமாக தீண்டிச் சென்ற காற்றின் வாசத்தில் எல்லாம் இதழ் பிரிக்காத தன்னவள் மௌனத்தின் பாஷை தேடி தோற்றவன் கைகள் தன் பக்கவாட்டில் வெற்றிடத்தை மிருதுவாக வருட‌ கண்களோ வெறித்தது.

'இன்னும் எத்தனை நாள் இந்த காத்திருப்பாம்' இதயப் பகுதியை சுகமான சுகவேதனையில் அழுந்த தடவிக் கொண்ட கரங்கள் இதயத்தின் துடிப்பை உணர்ந்த பின்னே நகர, நேரம் விரைந்து கொண்டிருந்தது. மனக்கண்ணில் சொக்கலிங்கத்தின் கோப முகம் தோன்ற குளியலறைக்குள் புகுந்து ரெஃப்ரெஷ்ஷாகி வந்தவன் இலகுவாக அணியக்கூடிய கேஷுவல் ஜீன் டீஷேர்ட்டில் தலையைக் கோதிக் கொண்டே கீழிறங்கி வந்தவன் நேரே டைனிங் டேபிளில் சென்று அமர்ந்தான்.

அவனுக்கு பிடித்தமான உணவுகள் போதுமான சூட்டில் கலா பரிமாற தட்டில் கவனமாகியவன் "நீங்க தாத்தா பாட்டி சாப்பிட்டிங்களாம்மா" என்றவனுக்கு பதிலாக "அதெல்லாம் அப்பவே ஆச்சு ஷேஷா. தாத்தாவை தெரியாதா என்ன ஏழு மணிக்கே இங்கே காலை சாப்பாடு முடிஞ்சாச்சு. அவருக்கு தான் இருப்பு கொள்ளல. விட்டா பறந்திருப்பாரு நீ வருவேன்னு அடக்கி வைக்கிறதுக்குள்ள கைலாசத்துக்கு ஒரு நடை போயிட்டு வந்த மாதிரி இருக்கு இப்போ" என்றவருக்கு சொல்லும் போதே மூச்சு வாங்கியது.

லேசாக இதழ் பிரித்து சிரித்தவன் "ஒரு மாசமாகிடிச்சிம்மா அவரால் இனி இங்க இருக்க முடியாதே" என்றவனுக்கொன்றும் இது புதிதில்லையே.

கைகளை தட்டிலே கழுவிக்கொண்டு எழுந்தவன் "ஐம் ஃபுல்" என்க,

அவனை முறைத்த கலா "நீ சாப்பிட்டியா போடா கோவத்தை கிளப்பாம" சொல்லிக்கொண்டே அவனுக்கு வைத்ததில் பாதிக்கு மேல் மீய்ந்த உணவை சமையல் வேலை செய்யும் கமலம்மாவிடம் ஒப்படைத்த கலா "உங்க தெருப் பசங்களுக்கு எடுத்திட்டு போங்க கமலாம்மா" என்றவாறே அதை சிறிய பொட்டலமாக கட்டி அவர் கிளம்பும் போது குடுப்பதற்கு ஏதுவாக எடுத்து வைத்தார்.

வேலை முடித்து கைகளை துடைத்துக் கொண்டு கிச்சனில் இருந்து வெளியே வந்த கலாவிடம் "அப்பா வர இன்னும் ரெண்டு நாள் ஆகுமேம்மா. நான் வர எப்பிடியும் லேட் நைட் ஆகிடும். இங்க தனியாயிருந்து என்ன பண்ண போறிங்க பேசாம நீங்களும் எங்களோட வந்திடுங்களேன்" கேட்க

அவள் யோசிக்கும் போதே "நீ சொன்னா சரியா இல்லாம போகுமா ஷேஷா. அதான் அவனே சொல்லிட்டானே கலா. நீ புடவையை மாத்திட்டு கிளம்பி வா" பேரனிடம் தொடங்கி மகளிடம் முடித்து வைத்தார் நாயகி.

அதற்கு மேல் யோசிக்க அவசியமின்றி கலாவும் புடவை மாற்றிக்கொண்டு வந்தவள் கமலம்மாவை அனுப்பிய கையோடு வீட்டை பூட்டி சாவியெடுத்து காரில் பின்னால் நாயகியோடு அமர்ந்துகொள்ள, முன்னிருக்கையில் சொக்கலிங்கம் அமர "மாணிக் அங்கிள் பார்த்துக்கோங்க" என்றவாறே தன் ப்ளாக் ஆடி காரை கிளப்பினான் ஷேஷாதித்யன்!

அவர்கள் வீட்டில் இருந்து ஆத்ரேயன் வீட்டுக்கு செல்ல குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது ஆகும். இன்றைக்கென்று போக்குவரத்து நெரிசல் மற்ற நாட்களை விட அதிகமாக இருக்க அவர்கள் அங்கு சென்று சேர்வதற்குள் மேலும் ஒரு மணிநேரம் கடந்திருக்க 'லிங்க நாதன் ஹவுஸ்' என்ற பித்தளை பேர் பலகை அச்சிடப்பட்ட அந்த மாளிகையினை அடைந்த போது நால்வருமே ஓய்ந்திருந்தனர்.

வாசலில் ஹாரனை அலற விட்டான். அவன் வரும் போது சொல்லி விட்டே வருவதால் கேட் திறந்தே வைக்கப்பட்டிருக்கும். இன்று ட்ராஃபிக்கில் மாட்டிக்கொண்ட கடுப்பில் மறந்திருந்திருக்க இதுவும் சேர்ந்து கொண்டதில் ஏக கடுப்பில் இன்னும் விடாமல் ஹாரனை அழுத்தி 'லிங்க நாதன்' வீட்டை மட்டுமல்ல வீட்டினுள் தன் அறையில் இருந்த அவளையும் கிடுகிடுக்க வைத்து கொதிப்பேற்றி இருந்தான் பௌர்ணமியின் ஆசை(!?) அத்தான் ஷேஷாதித்யன்!!

அப்போது தான் கண்ணயர்ந்திருந்தாள் பௌர்ணமி நக்ஷத்திரா. இரவெல்லாம் தூக்கமில்லா விழிகள் இரண்டும் சிகப்பேறி இருக்க எல்லாம் ஜோ உபயமே!

கண் மூடினும் தன்னை அமிழ்த்தும் சுகமான நினைவுகளுக்குள் கலந்து கரைந்து உறவாடி கண்ணை மூடியது வரை மட்டுமே அவளாகச் செய்தது. "ஹாலோ ஸ்வீட்டி ஐ யம் கம்மிங்" என்று நள்ளிரவில் போர்வையை சுற்றிக்கொண்டு கையில் போனுடன் உள்ளே நுழைந்த உடன்பிறப்பின் சத்தத்தில் பௌர்ணமி அடித்துப் பிடித்து எழுந்தமர, "நானே இது நானே! தூக்கம் வரலையடி மூனே ஐ வான்ட் டு வாட்ச் கொரியன் ட்ராமா தானே. நீயும் வானே ப்ச் நீயும் வானே" கர்ண கடூரமாக கத்தி தன் கையைப் பிடித்து எழுப்பிவிட முயற்சித்தவளின் பிடியிலிருந்து உருவிக்கொண்டு "போடி பைத்தியமே" என சிடுசிடுத்தவாறு படுக்கையில் சரிய முயன்றவளை இழுத்துப் பிடித்து தன் பாடலை முடித்த ஜோ வில்லிச் சிரிப்பு சிரித்தாள்.

அவளை சந்தேகமாக பார்த்தவளை நோக்கி கண்களை சிமிட்டியவள் "காலையில் நீ குடுத்தது சாதா ஆப்பு. இப்போ நான் சொருக போறதுக்கு பேர் சாவடிக்கப்போற ஆப்பூ" சிரிக்காமல் வன்மத்தை கக்கியவள் அத்தோடு நிறுத்தினாளில்லை.

"செல்லமே, பைத்தியம்னா சொல்ற... அதெல்லாம் நீ சொல்லக்கூடாது செல்லமே. நம்ம டீல் உனக்கு ஞாபகம் இருக்கும்னு நம்புறேன்" என்றவள் கட்டிலில் பொத்தென விழ, ஸ்பிரிங் மெத்தையோ அவள் விழுந்த வேகத்தில் பௌர்ணமியை அரையடி அந்தரத்தில் மிதக்கச் செய்து ஆட்டங்காட்ட அவள் அதற்கே அயர்ந்திருந்தாள். "என்ன இதுக்கேவா" நக்கலாகக் கேட்ட ஜோ அதன் பின் எங்கே அவளை தூங்கவிட.

தூங்கினவளையும் வம்படியாக இழுத்துப் பிடித்து புரியாத கொரியன் ட்ராமாவை விடிய விடிய பார்க்க வைத்திருந்தாள்.

"தூக்கமா வருதுடி, நாளைக்கு ஃப்ரெண்ட்ஸோட வெளியே போற ப்ளான்லாம் வேற இருக்கு விடேன்" அரைத் தூக்கத்தில் காலில் விழாத குறையாக கெஞ்சியும் மசியவில்லை.

"காலையில் என்னை எவ்வளோ படுத்தியிருப்ப அனுபவிடி. டேயோங் பத்தி போட்டுக் கொடுப்பேன்னு வேற மிரட்டல். இப்போ விடிய விடிய என்னோட சேர்ந்து நீயும் என் ஆளு மூஞ்சை பார்த்து ரசிடி பக்கி" குப்புறப்படுத்து அவளின் கழுத்தைக் கட்டிக்கொண்டு வேதாளம் விக்ரமன் முதுகில் ஒட்டிக்கொண்டு இறங்க அடம்பிடிப்பதைப் போல் முரண்டியவளை பௌர்ணமியாலும் நகர்த்த முடியவில்லை.

'குட்டிச்சாத்தான் படுத்துறடி இதுக்காகவே சீக்கிரம் பாயாசத்தை போட்டுற வேண்டியது தான்' கடுகடுத்தவளுக்கு தெரியுமே. அவர்களுக்குள் எழுதப்படாத சட்டம் ஒன்று நடைமுறைப்பட்டுக் கொண்டிருந்ததே மற்றவரின் அறையை தேடிச் செல்பவர் சொல்வதையே செய்ய வேண்டும் என்று.

அது என்னவோ அவளுக்கு தன் அத்தை மகன் ஷேஷாதித்யனை கண்டாலே அடி மனதில் இருந்து ஒரு வெறுப்பு அணுவெங்கிலும் பாய்ந்தது போலவே இருக்கும் அவள் சிறுவயதில் இருந்தே. அவனுக்கும் அவளைக் கண்டால் ஆகாது அதுகூட காரணமாக இருக்கலாம். அவளைப் பார்த்தாலே எனக்கு கீழ் தான் நீ என்று சொல்லாமல் சொல்லும் அவன் பார்வையோ மாமன் மகள் வயதில் சிறியவள் என்று இளக்கம் காட்டாமல் அவளுக்கு பிடித்ததை தட்டிப் பறிப்பதும் பிடிக்காததை செய்வதுமாக சின்ன வயசில் அவளை அவளாகவே ஒதுங்கிச் செல்ல வைத்தவன் பருவத்தில் அவளைக் கண்டாலே காணக்கூடாததை கண்டது போல் அவள் வடக்கென்றால் தெற்கிலும் வலது என்றால் இடதிலுமாக ஒதுங்கி அவளை ஒதுக்கியது மனதளவில் பெரிய அடிதான்.

'நீயென்னடா என்னை ஒதுக்கிறது வெள்ளை பன்னி நான் ஒதுக்கிறேன் உன்னை என் கண் பார்வையில் படாதேன்னு' தனக்குள் சபதமே எடுத்தவள் முழுவீச்சில் அதை செயற்படுத்த அதிலிருந்தே இருவரும் நேருக்கு நேர் சந்திப்பது என்பது அத்தி பூப்பது போல் அரிதான ஒன்றாகி விட்டது.

அவனை சந்திக்க மாட்டாளே தவிர ஆத்ரேயன் ஜனனி ஜோ முதல் தாத்தா பாட்டி வாயில் தினமும் ஒரு முறையாவது அவன் பேர் அரைபடாமல் இருக்காது. அவனை அவள் மறக்காமல் ஏதோ ஒரு வகையில் ஞாபகத்தில் வைத்திருக்க அதுவே காரணமாக இருக்க அந்தக் கடுப்பை நேற்றைப் போல் கொட்டி யாரிடமிருந்தாவது மண்டகப்படி வாங்குவதும் அதற்கும் அவனையே குற்றம்சாட்டி திட்டித் தீர்ப்பதும் பௌர்ணமியின் அன்றாடம் தான்.


இரவு அந்தக் கடுப்பிலே அறைக்கதவை தாளிட மறந்திருக்க அப்படி மறந்த தன் மடத்தனத்தை காலம் தாழ்த்தி நொந்து வருத்தப்பட மட்டுமே பௌர்ணமியால் முடிய, ஒருவழியாக அந்த அமுக்குணி பிசாசிடமிருந்து விடுதலைப் பெற்று அப்போது தான் கண்ணயர்ந்தவளை அவன் காரின் ஹாரன் சத்தம் அடித்துப் பிடித்து எழச் செய்திருக்க என்றும் போல் அன்றும் அவளின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொண்டான் ஷேஷாதித்யன்.

'வந்திட்டான் கடன்காரன் காலங்காத்தால உயிரை எடுக்க. என்னை படுத்துறதிக்கென்றே அவனை பெத்து போட்டிருப்பாங்களா இருக்கும் மிஸ்டர் & மிசஸ் ஏகே' கரித்துக் கொட்டினாள்.

கண் இமை வரை தூக்கம் துருத்தி நின்றும் சத்தம் கேட்டால் தூக்கம் கலையும் பௌர்ணமியோ தலைவிரி கோலமாக எழுந்தமர்ந்திருக்க, பக்கத்தில் இடியே விழுந்தாலும் நான் அசர மாட்டேன் என உறங்கிக் கொண்டிருந்தாள் ஜோ. அவளைப் பார்க்கப் பார்க்க தன் பெரிய விழிகளில் பொறாமை தீக்கங்கென கொழுந்துவிட்டெரிய 'எப்பிடி தூங்கிது பாரு பக்கி. கேகே யோட க்ரேன்ட் கசினுக்கு பொறந்தவ' பல்லைக் கடித்தவள் உள்ள கோவத்தில் அவளை எட்டி உதைக்க, வலியில் லேசாக முகத்தில் சுருக்கியவளோ ஸ்லோ மோஷனில் உருண்டு சென்று கட்டிலின் அந்தப் பக்கமாக தரையோடு போட்டிருந்த பஞ்சு மெத்தையில் விழுந்தவளை அப்படியே அழகாக உள்வாங்கிக் கொண்டது.

பழக்கதோஷத்தில் கைக்கருகில் இருந்த தலகாணியை எட்டி எடுத்து வாகாக அணைத்துக் கொண்டே தடைப்பட்ட உறக்கத்தை சுகமாகத் தொடர்ந்தாள் ஜோதி ஸ்வரூபிணி.

அதற்கே பாதிப்படிகளில் நின்றிருந்தாள் பௌர்ணமி. 'யாரு அவக்கிட்ட அடிவாங்கிறதாம்? கையா அது இரும்புக் கவசம். அடி ஒன்னொன்னும் இடி மாதிரில இருக்கும்' தலையை உலுக்கியவள் 'உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை' சுட்டு விரல் நீட்டி தன்னைத் தானே கடிந்தவள் மேலே தன்னறையை பார்ப்பதும் கை பிசைவதுமாக பாதிப்படியில் நின்று தகதிமி ஆட, தன் பின்னால் கேட்ட அழுத்தமான காலடி தடங்கள் அவள் கவனத்தில் பதியவே இல்லை.

அவள் தன் போக்கில் இருக்க, "படிப்பை முடிச்சிட்டு வீட்டில் வெட்டியா தானே இருக்கேன்னு ஏதும் டான்ஸ் காம்பட்டீஷனில் கலந்திக்கிறியா என்ன" என்ற தொனியில் எக்கச்சக்க ஏளனம்.

காதருகில் சொடக்கிடும் ஓசை கேட்க அதைத் தொடர்ந்த கணீர்க் குரலோ உள்ளத்தை படபடக்கச் செய்து உடலை அதிர வைக்க நெஞ்சைப் பற்றிக் கொண்டு படக்கென திரும்பிய பௌர்ணமி பாதம் பிசகியதில் "ஆஆங்" என்று அலறிக்கொண்டே, எதிரே தன் முழு உயரத்துக்கு அழுத்தமான பார்வையுடன் நின்ற ஷேஷாதித்யன் மீதே சரிய, அவள் விழிகளோ அடுத்து நடக்கவிருப்பதை எண்ணி பெரியதாக விரிந்தது.

'மலமாடு மலமாடு எப்பிடி நிற்கிறான் பாரு. போயும் போயும் இவன் மேலேயா விழனும்' அப்போதும் அவனை வார்த்தைகளால் வறுத்த படி கண் சிமிட்டினால் தொட்டு விடும் நெருக்கத்தில் கைப்பிடியை பற்றி ஒருவாறு தன்னை நிலைப்படுத்திக் கொண்டவள் முகமோ அவன் மார்பின் நெருக்கத்தில் இருக்க, அவன் உஷ்ண மூச்சுக் காற்று பௌர்ணமியின் பிறை நெற்றி தீண்டியது.

சுய உணர்வு வந்ததும் கழுத்தை பின்னால் இழுத்தெடுத்தவளுக்கு மூச்சு தாறுமாறாக வர முகத்தை சுருக்கி மேல் மூச்சு கீழ் மூச்சு எடுத்தவள் 'கொஞ்சம் அசையுறானா. நீ விழுந்தா விழு எழுந்தா எழு எனக்கென்னன்னு நிற்கிது பாடிசோடா' எங்கே படங்களில் வருவது போல் இதுதான் சாக்கு என்று தன்னைத் தாங்குவானோ எனப் பயந்தவளே 'கேட்டர்சிக்காவது ஹெல்ப் பண்றாப்ள ஆக்ட் குடுக்குறானா பாரு தீஞ்சு போன தீவெட்டித் தலையன்' அதற்கும் குமுறியவள் 'இவனுக்கெல்லாம் கல்யாணமே ஆகக்கூடாது இந்த ஜென்மத்தில் மட்டுமில்ல இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீ சிங்கிள் தான்டியோய்' சாபம் குடுக்க, அவள் எங்கே அறியப்போகிறாள் அது பலிக்கும் காலம் வரக்காத்திருப்பதை.

கம்பீரத்திற்கு மறுபேர் இருந்தால் அது அவனைத் தான் சொல்லும். சாதாரண கேஷுவல் உடையிலும் படு ஸ்மார்ட்டாக ஜெல் தடவிய கேசம் மிதமான காற்றுக்கு அலை புரள கால்களை விரித்து ஜீன் பாக்கெட்டில் கைவிட்டு நின்றவன் நிஜத்துக்கு அவளை கவர்ந்திழுக்க வேண்டும். ஆனால் அவளோ அவன் மீது அப்படிப்பட்ட எண்ணம் சிறிதும் இன்றி கடைக்கண்ணால் அவனை முறைத்தாள்.

நேர்ப்பார்வையில் அவனை முறைக்கும் தைரியம் அவளுக்கு இருந்தது இல்லையே. முறைத்துக் கொண்டே எதேச்சையாக பார்வையை தளைத்தவள் தான் இருக்கும் கோலம் கண்டு 'அவ்வா' வாயில் அதிர்ச்சியோடு கை வைத்தவள் கண்கள் விரிய அதே வேகத்தில் மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு பட்டென்று மறுபக்கம் திரும்பி நின்று கொண்டாள்.

இதயக்கூடு நிதானமற்று ஏறி இறங்கியது.

மூச்சு அவள் சொல்பேச்சு கேட்காமல் சதிராடியது.

'இவன் முன்னாடி இப்பிடியா இவ்வளோ நேரம் நின்னேன். ஐயோ ஐயோ அய்யோ!! மானமே போச்சு போ' நெற்றியில் அறைந்தவள் உதட்டைக் கடித்து ஓரக்கண்ணால் அவனைப் பார்க்க அவனும் அவளைத் தான் பார்த்திருந்தான். கழுத்தை தாண்டி கீழிறங்காத அவன் பார்வையில் எந்த கல்மிஷமும் வெளிப்படவில்லை. எப்போதும் தன்னை பார்க்கும் உணர்வற்ற விழிகளை தான் கண்டவள் 'நல்லவேளை அவன் பார்க்கல. ரோபோக்கு எல்லாம் ஃபீல் வந்தா வரலாறு அது ஹிஸ்டரி பேசுமே. அவன் தான் எப்பவோ கமிட் ஆகிருப்பானே. ஹப்பாடா' நிம்மதியாக மூச்சை இழுத்து வெளியேற்றியவள் மறுகணமே அவனைப் பாராமல் தடதடவென படிகளில் ஏறி அறைக்குள் நுழைந்து கதவை அடித்துச் சாற்றி அதன் மேலே சாய்ந்து நின்றாள்.

எதிரே ஆளுயரக் கண்ணாடி பட்டவர்த்தனமாக அவள் அழகை கண்களுக்கு விருந்தாக்கியது.

அப்படி ஒன்றும் மோசமாக இல்லை தான். கண்களை உறுத்தியும் உறுத்தாமலும் நூலளவு நாடா தோள்பட்டையில் தாங்கி நிற்க மெல்லிய சார்டின் இரவுடையில் தங்கத்தை உருக்கி வார்த்த பொற்சிலை அவள் தேகத்தின் வனப்பை வரிவடிவமாக வெளிச்சமிட்டதில் செக்ஸியாகத் தான் இருந்தாள்.

'மாடல் அழகி மாதிரி அவன் முன்னாடி நின்னு பாரு பாருன்னு பக்கோடா வாயனுக்கு ப்ளூ பிலிம் காட்டிருக்கேன். ஷேம் ஷேம் பப்பி ஷேமாயிருச்சு' அவமானம் பிடுங்கித் திண்ண நகத்தை கடித்துத் துப்பினாள்.

உதட்டைக் கடித்து முகத்தை மறைத்து அவள் தனக்குள் மூழ்கி நடந்த அவமானத்தில் கப்பலேறிய தன் மானத்தை கைப்பற்றும் வழியறியாது ஆழ்ந்திருக்க, எத்தனை நேரம் கடந்ததோ ஜோ எழுந்து மேலும் கீழும் தன்னைப் பார்த்ததோ பேரைச் சொல்லி கத்தியதோ எதுவும் உறைக்காமல் நின்றவள் மீது இறுதியாக தண்ணீயை அள்ளித் தெளித்தாள்.

அதில் திடுக்கிட்டு விழித்து தன்னிலை மீண்டவளுக்கும் ஜோக்கும் இடையே பனிப்போர் நடந்து அது முடிவுக்கு வந்து இருவரும் குளித்து ஒன்றாக இணைந்து கீழிறங்கி வந்த போது மேலும் சில மணி நேரங்கள் கடந்திருந்தது.

"ஆளில்லாத வீட்டுல ஆட்டக்காரி அவளுக்கென்னேனு ஆட்டம் போட்டாளாம். வீட்டுக்கு பெரிய மனுஷி இல்லேன்னா இப்பிடித்தான் நேரங்கெட்ட நேரத்தில் எழுந்து வாரதா" ஒரே நேரத்தில் இறங்கி வந்த இருவரையும் கண்களை உருட்டி முறைத்த நாயகி நொடிக்க,

சொக்கலிங்கம் பாராதவரைப் போல் பேத்திகள் இருவரையும் மேலோட்டமாக பார்த்தவர் கடைக்கண்ணால் நாயகியை முறைக்கவும் தவறவில்லை. 'ம்க்கும். ஊரிலில்லாத பேத்திங்க' அதற்கும் முகத்தை சுழித்து திருப்பிக் கொண்டு கலாவோடு அறைக்குள் நுழைந்து கொண்டார்.

மனைவியை ஒரு பார்வை பார்த்துவிட்டு ஆத்ரேயன் ஷேஷாவிடம் விட்ட இடத்திலிருந்து "ஈரோடு பக்கமா விலைக்கு வந்த ஜவுளி கடையை வாங்கிடலாம்னு முடிவெடுத்திருக்கேன் ஆத்ரேயா. அதுக்கு வேண்டியதை ஏற்பாடு பண்ணிடு" என்க

யோசனையில் புருவங்கள் நெளிய சொக்கலிங்கத்தை ஏறிட்ட ஆத்ரேயன் "அதுக்கு அவ்வளவா அங்க மார்க்கெட் இல்லீங்களேப்பா. நஷ்டத்துல ஓடுற கடையை வாங்கனும்னு என்ன அவசியம். நம்மளால இருக்கதையே பார்த்துக்க முடியல இதுல இதுவும் சேர்ந்தா..." என்றவன் முடிக்காமல் ஏறிட

"நான் சொன்னா அதுல ஒரு அர்த்தமிருக்கும். உம் மூத்த பொண்ணு பேர்ல வாங்கிப் போட்டுடு" என்று சிறு இடைவெளி விட்டு "நஷ்டத்தை லாபமா மாத்துறவன் தான் நல்ல வியாபாரி. முதல்லயே நல்லதனமா ஓடுறதா வாங்கி ஒப்பேத்துறதுல என்ன பிரமாதம். நீ வாங்கிப்போடு. உங்க கைபட்டாலே அதுக்கு விமோச்சனம்தான்" என்றவருக்கு அன்றைக்கென்னவோ அதீத உற்சாகம் வேறு.

மனதுக்குள் எடுத்திருந்த முடிவு அதற்கு துணை செய்ய மருமகள் ஜனனி கொண்டு வந்த காபியை மீதம் வைக்காமல் முழுக்க அருந்தி அறைக்குள் நுழைந்து கொண்ட சிறிது நேரத்தில் நாயகியின் அழுகுரல் வீடு முழுவதும் எதிரொலிக்க 'லிங்க நாதன் ஹவுஸ்' கிடுகிடுக்க, இன்றைக்காவது அந்த முக்கியமான விஷயத்தை போட்டு உடைக்க காத்திருந்த பௌர்ணமியோ நெஞ்சைப் பிடித்துக் கொண்டாள் 'அய்யய்யோ அடுத்த ஆப்பு ஆஃப் தி டேவா'

அந்த முக்கியமான விஷயம் அப்படி என்னவா இருக்கும்?!!!


கருத்துகளுக்கு....

 
Last edited:

NNK33

Moderator
Ranveer Singh - Hottest actor in bollywood industry.jpeg

Weekend vibes?❤️.jpeg

Looks that can kill.jpeg

அத்தியாயம் 03

நகரின் பெரிய மருத்துவமனையில் அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார் சொக்கலிங்கம்.

மருத்துவர்கள் உள்ளே பரிசோதித்துக் கொண்டிருக்க வெளியே மொத்தக் குடும்பமும் கவலையுடன் காத்திருந்தது.

ஸ்டெத்தை கழற்றி கழுத்தில் போட்டுக்கொண்டு வெளியே வந்த விஜய்கோபால்சாமி ஆத்ரேயனின் பால்ய நண்பன். கலக்கமாக பார்த்தவனின் கையை ஆறுதலாக அழுத்தி விடுத்தவன் கண்ணை மூடித் திறந்து "பயப்படும் படி எதுவுமில்லை. சாதாரண மைல்ட் அட்டாக் தான். நல்லவேளை கரெக்டான டையத்துக்கு கூட்டிட்டு வந்திங்க. ஒரு வாரம் அப்சர்வேஷன்ல இருக்கட்டும் என்னனு பார்ப்போம்." என்க,

தங்களுக்குள் கலக்கமாக பார்வை வீசிக்கொண்ட‌ குடும்பத்தினரை ஒரு பார்வையால் அமைதிப்படுத்தி "ஒன்னுமில்லையே விஜய்? நல்லாதானே இருக்காரு" மீண்டும் ஒரு முறை அழுத்திக் கேட்ட ஆத்ரேயனின் குரலில் தந்தையின் நிலையில் தேங்கியிருந்த பரிதவிப்பில் அவன் தோளை ஆதரவாக தட்டிக்குடுத்து

"ப்ச். பயப்பட ஒன்னுமேயில்ல ஆதி. பேரன் பேத்திங்க கல்யாணம் கச்சேரி கொள்ளு பேரப்பிள்ளைங்கள பார்க்காம உங்கப்பா அவ்வளவு சீக்கிரமால்லாம் போய்ட மாட்டாரு. ஹீ இஸ் நார்மல். எதையோ மனசுல போட்டு யோசிச்சு குழப்பிக்கிறாருன்னு நினைக்கிறேன். அது என்னன்னு கேட்டு தீர்த்து வை சரியாயிடுவார்" என்றவன் நேரத்தைப் பார்த்து "ரவுண்ட்ஸ் போகணும். சாயந்திரம் பார்க்கலாம்" என தலையசைப்பில் விடைபெற்றுச் செல்ல,

பெருமூச்சுடன் அங்கே அழுது கரைந்து கொண்டிருக்கும் நாயகியை தோளோடு சேர்த்தணைத்தவன் தங்கை கலாவையும் "நீயும் அம்மாவோடு சேர்ந்து அழுதா அவங்களுக்கு யாரு ஆறுதலா இருக்கிறது. கண்ணைத் தொடை முதல்ல." சிறு அதட்டலில் பணிய வைத்து "அம்மா, விஜய் சொன்னது கேட்டதில்லையா. சொக்கலிங்கம் என்ன சாதாரணப்பட்ட ஆளா. பயப்படும் படியா எதுவுமில்லையாம் நல்லாருக்காரு." என்க,

மற்றது மறக்க பட்டென நிமிர்ந்து அவன் தோளில் சப்பென்று ஒரு அடி போட்டவர் "அவரு வயசென்ன உன் வயசென்னடா. அந்த மனுஷனை இப்படித்தான் பேர் சொல்லி கூப்பிடுவியோ..." மூக்கை விடைத்துக்கொண்டு நாயகி சண்டைக்கு வந்தார்.

அதுவரை இருந்த கவலைக்கு மாறாக முகத்தில் இலேசான முறுவல் தவழ, "சரி, மிஸ்டர் சொக்கலிங்கம். இந்த மரியாதை போதுமாம்மா" என்றான் அப்போதும் கேலியை கைவிடாமல். இளமைக்கு திரும்பி சூழ்நிலைக்கு இதம் சேர்க்கும் விதமாக பேசியவனை அழுகையும் அகல விரிய துடிக்கும் புன்னகையுமாக ஏறிட்ட நாயகியை தோளோடு சேர்த்தணைத்து 'நான் இருக்கேன் ம்மா உங்களுக்கு பக்கபலமாக' ஆதரவு குடுத்தவன் "அவர் முன்னால அழுது வடிஞ்ச முகத்தோட போகாம போய் பார்த்துட்டு வாங்க" நர்ஸ் வந்து ஒவ்வொருத்தராக பார்க்கச் செல்லலாம் என்றதும் நாயகியை முதலில் அனுப்பி வைத்தான்.

கம்பீரமாகவே பார்த்துப் பழக்கப்பட்ட கணவனை அப்படியொரு ஓய்ந்த நிலையில் காண சகியாத நாயகியின் கண்களோ கோடை மழையாகி ஓயாமல் பெருக்கெடுத்தது. கண்ணைக் கசக்கிக் கொண்டே அருகில் வந்தமர்ந்த கிழவியை அப்போது தான் லேசாக கண் விழித்த சொக்கலிங்கம் அசடாக பார்த்தார்.

"கெழவன் போய் சேர்ந்திட்டா மக வீட்டிலயே இனி கெடயா கெடக்கலாம்னு சந்தோஷத்தில் அழுறியோ" சுருதி சுத்தமாக குறைந்த குரலில் நரைத்த மீசையை தடவிக்கொண்டே நகைச்சுவையாக கேட்க முயன்ற சொக்கலிங்கத்தை உறுத்து விழித்து

"இப்ப மட்டும் நான் போக மாட்டேன்னா நினைக்கிறீங்க. ஆஸ்பத்திரியில் இருந்து மொத வீட்டுக்கு வாங்க விட்டுட்டு போயி மக வீட்டுல வருஷம் சொச்சத்துக்கு தனியா தங்கிட்டு வாறேன். பேசுறீரு பாரு பேச்சை" கோப மூச்சுக்களுக்கு இடையே கழுத்தை நொடித்து நாயகி தன் பெரிய கண்களை உருட்டி முறைக்க,

"ஹாஹா" கிழவியின் பாவனைக்கு அத்தனை இயலாமையிலும் ஆர்ப்பாட்டமாக வாய் விட்டு சிரித்த சொக்கலிங்கத்தை உள்ளே வந்த நர்ஸ் முறைத்து வைத்தாள்.

"பேஷண்ட் சார் நீங்க, இப்போ இருக்குற கன்டிஷனுக்கு இப்பிடிலாம் சிரிக்கக்கூடாது. கன்ட்ரோலா இருங்க..." என்றவள் நாயகியை 'நீங்களாவது சொல்லக்கூடாது' என்ற ரீதியில் முறைப்பாக பார்க்க,

"என்னை ஏன்டிம்மா முறைக்கிற? நானா அந்த மனுஷன் வாய இழுத்துப்புடிச்சு சிரிக்க வச்சேன்" அவளிடம் எகிறியவர் சொக்கலிங்கத்திடம் திரும்ப அவரோ கமுக்கமாக கண்களை மூடிக் கொண்டு படுப்பது போல் நடித்தார்.

"இதுக்கு ஒன்னும் குறைச்சலில்லை. புருஷனுக்கு ஒன்னுன்னதும் துடிச்சு போனேன் பாரத்தீரா அதான் நான் பண்ண தப்பு. இதுக்கு மேல நான் எதுக்கு இங்க... நான் போறேன்" சடைத்த நாயகி முறுக்கிக்கொண்டு எழ, கிழவியின் கையை நகர விடாமல் பற்றிக் கொண்டது சொக்கலிங்கத்தின் இறுகிய பிடி.

பிடித்த கையை விடாமல் நெஞ்சோடு சேர்த்து அழுத்தி "போடி பைத்தியக்காரி. நீ போறேன்னதும் உன்னை அப்பிடியே நான் விட்டுருவேனாக்கும், எங்கூடவே கூட்டிட்டு போயிட மாட்டேன்" முந்தைய தன் கேள்விக்கு தானே பதில் சொன்னவருக்கு லேசாக மயக்கமாக வர நாயகியின் கைகளை விடாமலே மெல்ல மெல்ல உறக்கத்தின் வசமாகி விட்டார்.

அதுவரை இயல்பாக காட்டிக்கொண்ட நாயகியின் கண்கள் மீண்டும் உடைப்பெடுக்க சேலை தலைப்பால் ஒற்றியெடுத்தவர் மெல்ல கணவனின் கையை விலக்கிக் கொண்டு வெளியே வர "ம்மா, அப்பாக்கு இப்போ எப்பிடி இருக்கு" கலா ஓடி வந்தார்.

"கலா!" சேயாகி மகளைக் கட்டிக்கொண்டு கண்ணீர் வடித்த நாயகிக்கு அழுகையை அடக்க முடியவில்லை. "வார்த்தைக்கு என்னைக்கு பஞ்சம் வந்திருக்கு அந்த மனுஷனுக்கு. யார் கண்ணு பட்டிச்சோ பேசிகிட்டிருந்தாப்ளயே கண்ணு சொக்கிடிச்சுடி" பெருங்குரலில் ஒப்பாரி வைக்க,

"ம்மா" கண்ணீரோடு தாங்கிக் கொண்ட மகளை ஆதரவாக பற்றிக்கொண்டே "ஓரெடுத்துல ஓய்ஞ்சு போய் முடங்கி உக்கார ஆளாடி உங்கப்பாரு" மூக்கை உறிஞ்சியவர் அடுத்த ஒப்பாரிக்கு ஆயத்தமாகினார்.

கலாவுக்கும் அது தெரியுமே. காலையிலே எப்படியெல்லாம் அவரைப் படுத்திருந்தார் வீட்டுக்கு கிளம்பி வர. வீடு வந்து முழுதாக ஒரு நாள் கூட ஆகவில்லை அதற்குள் இப்படி ஒரு மருத்துவமனை வாசம்.

இருவரும் தங்களுக்குள் கரைய, யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. பொறுத்துப் பார்த்த ஆத்ரேயன் கடிய வாயெடுப்பதற்குள் "ம்மா, பாட்டி" ஷேஷாதித்யனின் கணீர் குரல் அவ்விடத்தில் அதட்டலுடன் ஒலிக்க, இருவரும் தினுக்கிட்டு நிமிர்ந்தனர்.

ஒரு கை ஜீன் பாக்கெட்டில் விட்டு மறுகையால் செல்போனில் உரையாடிக் கொண்டே அங்கு வந்து சேர்ந்தவனோ அப்போது தான் ஹாஸ்பிடல் பார்மாலிட்டியை முடித்து விட்டு வந்திருந்தான். இருவரின் அழுதழுது சிவந்த முகத்தையும் ஆழ்ந்து பார்த்தவன் செல்போனை அடைத்து பாக்கெட்டில் போட்டு அவர்களை நெருங்கி "தாத்தா இஸ் பர்பெக்ட்லி ஆல்ரைட் பாட்டி. எதுவும் ஆகிடல்லை அவருக்கு. நல்லாத்தானே இருக்கார்" என்றவன் மெதுவாக குரலின் இறுக்கத்தை தளர்த்தி "ம்மா" என்க,

கலாவோ மகனை கலங்கிய கண்களில் ஏறிட்டு "காலையில் என்கிட்ட மூச்சு பிடிக்க பேசி அடம்பிடிச்சிட்டு இருந்தவருடா. இப்போ பாரு இப்பிடி படுத்துக்கிடக்காரு" என்றவர் மனதிலோ காலை நினைவுகள் தான் வலம் வந்தன.

"எல்லாம் சரியாகிடும்மா. நீங்க வீணா மனசைப்போட்டு அலட்டி எதையாச்சும் இழுத்து விட்டுக்காதீங்க. போன தடவையே பீபி ரொம்ப ஹையா இருக்கு நேரத்துக்கு மருந்து மாத்திரை குடுக்கிறதில்லையா நீயும் உங்கப்பாவும்; அவளை டென்ஷன் ஏத்தாம பார்த்துக்கோன்னு உங்க ப்ரெண்டு டாக்டர் சீதாலெக்ஷமி லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கியது என்னைத்தான் மறந்திடல்லை நான்" என்றவனை நிமிர்ந்து பார்த்த கலா கோபமாகி முறைத்தார்.

"ம்ப்ச், இப்போ எதுக்காக என்னை இந்த முறைப்பாம்... ம்ம்?" ஒற்றை புருவத்தை வசீகரமாக உயர்த்த,

"பின்ன என்னடா, காலா காலத்தில் நீயொரு கல்யாணம் பண்ணியிருந்தா நான் எதுக்கு டென்ஷனாக போறேன்" அதுதான் சமயம் என்று அவர் தன் ஆதங்கத்தை கொட்ட, "அப்பிடி கேளு கலா. அந்த மனுஷனுக்கும் உன்னை நினைச்சு தான் கவலையே. காலையில் நீ உன் பசங்க பேரப்பிள்ளைங்கள பத்தி பேசும்போது அவரு சந்தோஷத்தை முகத்தில் பக்கத்தில் நின்னு பார்த்தவடா நானு. நீ உம்னு ஒரு வார்த்தை சொல்லு எந்திரிச்சு உக்கார்ந்து ஜாம் ஜாம்னு உன் கல்யாணத்தை நடத்தி வைப்பாரு அந்த மனுஷன்" நாயகியும் தன்பங்குக்கு உருக்கமாக பேசினார்.

பார்வையாளர்கள் இருக்கையில் அமர்ந்திருந்த கலாவின் காலடியில் ஒரு காலில் மண்டியிட்டு அமர்ந்த ஷேஷாதித்யனின் விழிகளோ அங்கிருந்த அனைவரையும் சலிப்பாக ஏறிட்டு இறுதியாக அங்கு ஒரு ஓரமாய் அமர்ந்திருக்கும் பௌர்ணமி மற்றும் ஜோ இருவரின் மீதும் அழுத்தமாக பதிய,

'ப்பாஹ்... சீரியலையே மிஞ்சிடும் போலயே இந்தப் பாசக்கார பயலுங்க போடுற சீனு' உள்ளூர நக்கலடித்து 'நம்மளுக்கு ஃப்ரீ எண்டர்டெயின்மெண்ட்' அவர்களையே பார்வையிட்டுக் கொண்டிருந்த பௌர்ணமியோ ஷேஷாதித்யனின் பார்வை இங்கு திரும்பவும் பட்டென பார்வையை தழைத்து வேறு பக்கம் திரும்பிக் கொண்டவள் அங்கு சுவரில் ஒட்டப்பட்டிருக்கும் மருத்துவக் குறிப்புகள் அடங்கிய வோல் ஆர்ட்டை மும்முரமாக பார்வை இட தொடங்கினாள்.

அவளருகிலே அமர்ந்திருந்த ஜோ "அத்தான் இஸ் சோ கைன்ட் இல்லையா பொணமி" என்றவள் பார்வை முழுக்க ஷேஷாதித்யன் மீதே மையம் கொண்டிருக்க, அவள் விழிகளில் ஹார்டின் தெறித்தது.

அவன் பார்வை தாங்கள் இருக்கும் பக்கம் திரும்பவும் "அய்யோ பார்க்கிறாரு பார்க்கிறாரு பாரேன்... அத்தனை பேரும் இருக்கும் போதே என்னை பார்க்கிறாருடி" குதிக்காத குறையாக அருகிலிருக்கும் பௌர்ணமியின் கையை பிடித்து உலுக்கியவள் கன்னத்தில் புரண்ட முடிகளை காதோரம் சொருகி உதட்டைக் கடித்து, அத்தானை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே பௌர்ணமியின் பக்கமாக சரிந்து அவள் கதோரம் "வெக்க வெக்கமா வருதுடி" சிணுங்க,

அவளை மேலிருந்து கீழ் மார்க்கமாக பார்த்த பௌர்ணமி 'எனக்கு கடுப்பு கடுப்பா வருதே' ஜோ போல இமிடேட் செய்தவள் 'பேப்பேப்பே பே பேபேபே. அத்தான் இஸ் ச்சோ கைன்டாம் கைன்டு. காண்டாமிருகத்துக்கு க்ளோஸ் ப்ரெண்ட்டாட்டம் இருக்கான் இவன் கைன்டாமா... இவன் இஸ்டிரி தெரியாம அளந்து விடுது பக்கி' தங்கையை கண்டமேனிக்கு வறுத்தவளோ "உருட்டு உருட்டு உன் வாயி உன் இஷ்டம்" நக்கல் சிரிப்புடன் சொன்னவளை நெற்றிக்கண் மட்டும் இருந்திருப்பின் ஜோதி ஸ்வரூபிணி தன் கண்களாலே எரித்திருப்பாள்.

நல்லவேளை அவளின் அதிர்ஷ்டம் அப்படி ஒன்று இல்லாததால் அவளிடமிருந்து தப்பித்தாலும் 'நான் அடங்கமாட்டேன்' என்னும் விதமாக

"நீ முறைச்சா நான் சொன்னதை வாபஸ் வாங்குவேன்னு நினைக்கிறியோ... ஃபார் யுவர் கைன்ட் இன்ஃபர்மேஷன் வெரி சாரி." அசராமல் வம்புக்கு இழுத்தாள்.

பல்லைக் கடித்து அவளை கடுப்பாக பார்த்த ஜோ, "உனக்கு பொறாமைடி. இவ்வளோ சார்மிங் ஹேண்ட்சம் அத்தான், பிஹெச்டி ரேங் ஹோல்டர், நம்மள கண்டுக்காம தங்கச்சியை சைட் அடிக்கிறானேன்னு உள்ளுக்குள்ள நீ மறைச்சு வச்சிருக்க பொறாமை, ஐ க்நோ. உன் மனசு படும் வேதனை எனக்கு புரியுது, கவலைபடாதே. உனக்கேத்தாப்போல குண்டுமணியோ வண்டுமுருகனோ இந்நேரம் பொறக்காமலா இருப்பான்? அவனை உனக்காக தேடி கண்டுபிடிக்கிற பொறுப்பை நான் ஏத்துக்கிறேன் மை சிஸ்டா" கடுப்பையெல்லாம் சேர்த்து வஞ்சகமாக வாரினாள்.

மற்றதை விடுத்து 'எத இவன் சார்மிங், ஹேண்ட்சம்மா... அவ்வா!! அடிவாங்கின அங்கிள் மாதிரி ஒரு முகரகட்டை, இவன் என்னை பார்க்கலேன்னு எனக்கு பொறாமை வேறையா? ப்ளெடி பிஸ்கட்' பற்களை நறநறத்த பௌர்ணமி நக்ஷத்திரா இருக்கும் இடத்தை மறந்து தங்கையின் தொடையில் வலிக்க கிள்ளி வைத்தாள்.

வலியில் வாய் விட்டு அலறிய ஜோ "ஹவ் டேர் யூ?" சீறிக்கொண்டே சண்டைக்கு கிளம்பினவள் அதே போல் பௌர்ணமிக்கு கிள்ள, வழக்கமான போர் இருக்குமிடம் மருத்துவமனை என்பதை மறந்து பெரிதாக மூண்டது எந்நாளும் இல்லாத வகையில் அன்று கண்டனத்துடன் "ஜோ, பௌர்ணமி!" என்ற ஆத்ரேயனின் கடின அழைப்பில் தான் இருவரும் சுற்றுப்புறத்தை உணர, குடும்பமே இருவரையும் ஏகத்துக்கும் கடுமையாக முறைத்து தள்ளியது.

'ஹி ஹி' அசட்டுச் சிரிப்போடு அவர்களை பார்க்க, அதற்கும் கண்ணை உருட்டி முறைத்தவர்களை நோக்கி 'நான் கிடையாது இதோ இந்த பக்கி தான்...!' ஒருவரையொருவர் போட்டுக்குடுக்க அட் அ டைமில் சுட்டு விரலை எதிரில் நீட்டி 'இவ தான்' என்க,

"பௌர்ணமி ஜோ" அங்கிருந்தே ஜனனி வாய்க்குள் திட்டினாள்.

அதற்குமேல் வாயை திறக்க அவர்கள் என்ன முட்டாளா? மௌனமாக தலை குனிந்து கொண்டவர்கள் ஒருவரை ஒருவர் பார்வையில் வெட்டிக்கொள்ளவும் தவறவில்லை. 'உனக்கு இருக்குடி' அப்போதும் மாறி மாறி கருவிக்கொள்ள, இடையே முக்கிய அழைப்பொன்று வந்ததில் நகர்ந்து சென்ற ஜோ பேசி முடித்து நேரே ஜனனியிடம் வந்தவள்,

"ம்மா, ஸ்பெஷல் க்ளாஸ் போட்ருக்காங்க இப்போ தான் வாட்சப்பில் வந்தது. ப்ரியூகிட்ட பேசினேன். அவ இந்த ஏரியா தானே வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்னா நான் கிளம்புறேன்ம்மா. ப்பா, பாட்டி, அத்தே, அத்தான். லேட்டாச்சு இப்போவே." மூக்கை சுருக்கியவள் "தாத்தாவை நான் சாயந்திரம் நேரமா வந்து பார்க்கிறேன்னு சொல்லுங்க" விடைபெற்றவள் மறந்தும் பௌர்ணமியிடம் சொல்லிக்கொள்ளவில்லை.

அவளைக் கடக்கும் போது வேண்டுமென்றே முகத்தை திருப்பிக்கொள்ள 'அடப்பார்றா... ரொம்பத்தான்!' உதட்டைச் சுழித்துக் கொண்டாள் அவள்.

ஜோ கிளம்பியதும் தனியாக அமர்ந்திருக்க பௌர்ணமிக்கு கடுப்பாக வர பார்வையை சுழற்றி வேடிக்கை பார்க்க துவங்கியவள் அங்கு கண்ட காட்சியில் இமைசிமிட்டவும் மறந்தாள்; மூச்செடுக்கவும் அயர்ந்தாள்.

சலவை கற்கள் பதித்த பளிங்கு சுவரில் ஒரு காலை ஊன்றி வலது கையை இடுப்பில் குத்தி கம்பீரமாக நின்றவனோ இடது கையால் அடிக்கடி முன்னெற்றியில் வந்து விழுந்து அவனைப் போல் அடங்காமல் சண்டித்தனம் செய்யும் சிகையை கோதிக்கொடுத்து எதிரில் நிற்கும் இளம் பெண்ணுடன் சிரித்த முகமாக உரையாடிக் கொண்டிருப்பது ஷேஷாதித்யன் தானா என்பதை உறுதி செய்ய பக்கவாட்டுச் சுவரில் தலையை டங்கு டங்கென்று மோதியவள் 'ஸ்ஸ்ஸ்!!! அவுச்ச்' கிண் கிண்ணென்று வலித்த பின்னந் தலையை தடவிக்கொண்டே கண்ணை விரித்து உத்து உத்து பார்த்தாள் இருவரையும்.

உண்மையில் இப்போது தான் பொறாமையின் கால்தடம் உள்ளூர புஸுபுஸுவென பொங்கி தாளமாட்டாமல் குமுறியது லாவாக்கு இணையாக!

'பெரிய்ய்ய பருப்பு இவரு... எல்லார்கிட்டயும் கொழைஞ்சு கொழைஞ்சு சிரிச்சு சிரிச்சு பேசுவான். என்கிட்டே மட்டும் அஞ்சு விசில் வந்தும் வேகாம முழுசு முழுசா கிடக்கிறதாட்டம் வெறைப்ப காட்டும்' கண்டமேனிக்கு வசை பாட,

அவளின் மனசாட்சி குறுகுறுவென பார்த்தது. 'ஏஏய் என்ன... எதுக்கு இப்போ இந்தப் பக்கம் பார்க்குற படம் காட்டுறேனா நான் இங்க? அப்பிடியே ஓடிப்போய்டு. அந்த அரைவேக்காடு ஜோ மாதிரி நீயும் ஏதும் லூஸுத்தனமா உளறிட்டு வந்த அடுத்த வாரம் பாய் கடை பிரியாணி நீதான்டியோய்!' ஒரே போடாக போட்டவளை 'இவக்கிட்ட நம்ம பாட்சா பலிக்காது போல' இந்தப் பழம் புளிக்கும் ரீதியில் உதட்டைச் சுழித்த மனசாட்சி வந்த வழியே திரும்பிச் செல்ல 'ஒருத்தி எத்தனை பேரைத்தான் ஒரே நேரத்தில் சமாளிக்கிறது. ஷப்பாஹ்!' தலையை உலுக்கி மூச்சு வாங்கிய பௌர்ணமி 'மானங்கெட்ட மங்குனி கண்ணு' வலுக்கட்டாயமாக அவனிடமே பாயும் பார்வையை திருப்பிக் கொண்டாள்.

'அவனே ஒரு வெர்ஸ்ட்டு பீஸு; வேஸ்ட்டு ஃபெல்லோ. அவனைப் போய் விடாமல் பார்த்துக்கிட்டு' வழக்கமான தன் டயலாக்கை சொல்லிக்கொண்டே மூன்றாம் காதாக தன்னுடனே வைத்திருக்கும் ஏர் பொட்டை காதில் சொருகி, திசைமாறும் கவனத்தை இழுத்துப்பிடிக்க இளைஞர்கள் மத்தியில் சக்கைப்போடு போடும் பாடல் அல்லாமல் இளையராஜா இசையில் எஸ்பிபி பாடி மோகன் நடிப்பில் ஒரு காலத்தில் அனைவரின் ப்ளே லிஸ்ட்டையும் ஆட்சி செய்த வா வெண்ணிலாவில் மிதந்தவள் தன்னை மறந்து இசைக்குள் அமிழ்ந்தாள்.

இசைக்கு உயிர்ப்பை வழங்கவல்ல இசைஞானியும் குரலால் உயிரை உருக்கும் பாடும் நிலாவும் அவளைத் தாலாட்ட கண்கள் தாமாக மூடிக்கொண்டன.

எத்தனை நேரம் தன்னை மறந்திருந்தாளோ. சற்று முன் தலையில் வலித்த அதே இடத்தில் யாரோ பலமாக தட்ட திடுக்கிட்டு விழித்து திட்ட வாயெடுத்தவள் எதிரில் கைகளைக் கட்டிக்கொண்டு கோபமாக நிற்கும் ஷேஷாதித்யனை எதிர்பார்க்கவில்லை.

ஒரு நிமிடம் ஜெர்க்காகி காதிலிருந்து ஏர் பொட்டை அகற்ற "கிளம்பு போகலாம்!" என்றான் அதற்காகவே காத்திருந்தது போல.

"எ..எங்க? நான் எதுக்கு. அதெல்லாம் உங்களோட வரமுடியாது" பிடிவாதம் பிடிக்கும் முரட்டு குழந்தையாக சின்னக் குரலில் முகத்தை உர்ரென வைத்து சொன்னவளை அவன் தன் பாவனை மாற்றாமல் பார்த்திருக்க, அன்றைய நாளில் மட்டும் இரண்டாம் முறையாக ஆத்ரேயனின் கண்டிப்புக்காளாகி "பௌர்ணமி!" என்ற அவன் கடினக்குரலுக்கு தந்தையை ஏறிட்டுப் பார்த்தாள் பௌர்ணமி நக்ஷத்திரா.

"ஜோ இல்லையே, நீ எவ்வளவு நேரம் இங்க தனியே இருப்ப? கிளம்பி வீட்டுக்கு போடாம்மா நாங்க வர லேட்டாகும்" என்றவனால் மகள் மீது பிரயோகித்து பழக்கமில்லாத கண்டிப்பை சில நிமிடத்திற்கு மேல் இழுத்துப் பிடிக்க முடியாமல் போனது.

மகளைக் கொஞ்ச அவளோ மிஞ்சினாள்.

உதட்டைச் சுழித்தவளோ தங்கு தங்கென்று பாதத்தை தரையில் ஊன்றி அவளை ஆழ்ந்து பார்த்தவாறே முன்னேறிச் சென்றவனை தொடர்ந்து சென்றாள்.

சொல்லிக்கொள்ளாமல் செல்லும் பேத்திக்கும் பாட்டிக்கும் ஏழாம் பொருத்தம். அது தெரிந்தும் கலாவிடம் "நாமெல்லாம் இங்கே இருக்கிறோமேன்னு மட்டு மரியாதையே இல்லை பாரு" நொடித்த நாயகிக்கு அவள் 'ம்ம்' கொட்ட

ஆத்ரேயனிடம் "கொழுப்பெடுத்த கழுத, பெரியவங்க இருக்கோம் சொல்லிட்டு போறாளா பாரு. சின்னவளாச்சும் தேவலை. எல்லாம் நீ குடுக்கிற இடம்" பொறுபொறுப்பது காதில் விழ கணக்கெடுக்காமல் 'நீ என்னவோ பேசிக்கோ கிழவி' என விறுவிறுவென நடையை எட்டிப் போட்டவளோ பார்க்கிங் லாடில் இருந்து காரை எடுத்து வந்து முகப்பில் நிறுத்திய ஷேஷாதித்யனின் ஆடி காரை நெருங்கி வேண்டுமென்றே பின் கதவைத் திறந்தாள்.

அதுவோ திறக்க மாட்டேன் என அடம்பிடித்தது. 'சென்ட்ரல் லாக் போட்ருக்கான் வெட் ஆனியன்' பல்லை நறநறத்தவள் கதவில் சாய்ந்து அப்படியே நிற்க, சில நிமிடங்கள் காத்திருந்த அவனோ விருட்டென காரைக் கிளப்பினான்.

அதில் தடுமாறி கீழே விழப்பார்த்தவள் நல்லவேளை அத்தனை பேரின் முன்பும் விழுந்து வாரி அசிங்கப்படாமல் தன்னை ஒருவாறு நிலைப்படுத்தி கொண்டே, சில அடிகள் தூரம் சென்று ஹாரனை அலற விட்டவனை நெருப்புக் கங்குகளை விழுங்கியதாட்டம் உறுத்து விழிக்க, ஹாரன் சத்தம் அதிகரித்தது.

வேறுவழியின்றி வேகமாக காரை நெருங்க, அவள் பக்கம் திறந்திருக்கும் கண்ணாடியூடு உள்ளே ஏறும்படி சைகை செய்தவனை மனதுக்குள் அர்ச்சித்துக் கொண்டே காரில் அவனருகில் ஏறியவளுக்கு நடப்பதெல்லாம் கனவோ என்றே தான் இருந்தது.

இதுநாள்வரை இருந்த இடைவெளிக்கு மாறாக இன்றைய நாள் நெருக்கத்தை அதுவாக ஏற்படுத்தி தந்திருந்ததை ஏற்கவும் முடியாமல் மறுக்கவும் இயலாமல் பௌர்ணமி உள்ளம் தடுமாற்றம் கண்டது.

அவள் அமைதியாக வர,

காரை கிளப்பிய ஷேஷாதித்யனோ "கையை பிடிச்சு தரதரன்னு இழுத்து வந்து உள்ளே தள்ளி விட்டுருப்பேன். நாலு பேருக்கு ஃப்ரீ ஷோ காட்டாமல் நீயே ஏறிட்ட, குட்" என்க

'எவ்வளவு திமிர் இவனுக்கு?' கண்களை விரித்து அவனை முறைத்தவளோ அவன் பார்வை தன்னைத் தொடவும் சட்டென மறுபக்கம் திரும்பிக்கொள்ள, அவன் இதழிலோ அவளறியாத குறுநகை மீசைக்குள் ஒளிந்திருந்து கண்ணாம்பூச்சி ஆடியது புதிராய்!

"என்ன பாட்டு? நான் கூப்பிட கூப்பிட காதிலே விழாமல் ரசிச்சு கேட்டிருந்த" அவனாக மௌனத்தை கலைத்து இலகுவான குரலில் அவளிடம் கேட்ட முதல் கேள்வி.

'பார்ரா, இப்பிடிலாம் சாஃப்டா கூட பேசுவானா இவன்? அதுவும் என்கிட்டே. அதிசயம்தான் போ... கடவுளே இன்னைக்கு என்னதான் ஆச்சு இன்னைய நாளே ஒருமாதிரி வித்தியாசமா இருக்கே' வழக்கம் போல் அவள் தனக்குள் உழன்று அவன் சொடக்கொலியில் தான் கலைந்தாள்.

"அ..அது எஸ்பிபி பாட்டு உங்களுக்கு சொன்னா புரியாது" என்றாள்.

'நீ தான் 2.0 வெர்சன் ரோபோவாச்சே' என்னும் தன்னைப்பற்றிய அவள் கணிப்பீடு அறியாது

அவளை ஒரு மாதிரியாக பார்த்தவனோ "எனக்கு புரியாதா..." கேட்க, தோளை குலுக்கினவள் காருக்கு வெளியே வேடிக்கை பார்த்தவாறு வர "சொக்கலிங்கம், உனக்கும் தாத்தா தானே. சீரியஸா ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகிருக்காரேன்னு கொஞ்சங்கூட நீ ஃபீல் பண்ணல?" அவன் குரலில் மறுபடியும் இளக்கம் குறைந்து இறுக்கம் பரவியிருக்க,

'இப்போ நல்லாத்தானே பேசினான் அதுக்குள்ள மாறிட்டான்' சந்தேகமாக அவனை பார்த்த பௌர்ணமிக்கு அப்படியே கல்லைத் தூக்கி அவன் மண்டையில் போடலாம் போலிருந்தது. "அப்பிடிலாம் ஒன்னுயில்லை" என்றவள் குரலில் தானாகவே சுருதி குறைந்திருக்க,

"என்ன ஒன்னுமில்ல... நம்ம குடும்பத்தில் மூத்தவர்ங்கற கேட்டர்சிக்காகவாச்சும் ஃபீல் பண்ண மாதிரி தெரியலையே" என்றவன் தொனியிலோ அவளை இகழும் நக்கல் தூக்கலாக இருக்கவும் சுர்ரென்று ஏற "அதெல்லாம் அதுவா வரணும். வா வான்னு நாம வரிஞ்சு கட்டி இழுக்க முடியாது. இதுவரை அவரு பாசமா ஒரு வார்த்தை கூட பேசியதில்லை தெரியுமா... அப்பிடி பேசிருந்தாலாவது ஃபீல் பண்ணிருப்பேனோ என்னவோ" என்றவளின் ஆதங்கத்தில் கோபத்தின் சூடு அவன் முகமெங்கும் விஸ்வரூபம் எடுத்து வியாபித்தது.

"கம் அகெய்ன்" அவளிடம் சீறியவன் "எது பாசம்ங்கற? நல்லா சிரிச்சி பேசி நீ கேக்குறதா வாங்கிக்குடுத்து, உனக்கொன்னுன்னா துடிச்சு உன் காலடியில் உக்கார்ந்து, தினமும் நாலு முத்தம் ரெண்டு தலை கோதல், பசிச்சா சாப்பாடு ஊட்டிவிடணும். நெஞ்சில் போட்டு தட்டிக் குடுத்து தூங்க வைக்கணும். உன்கூட செல்ஃபிக்கு ரெண்டு போஸ் குடுத்து உன் செல்போன் கேலரியில் இருந்தா அது தான் பாசமா... ஏன் வெளியே முறைப்பா விறைப்பா காட்டிக்கிட்டாலும் உள்ளுக்குள்ள கொட்டிக்கிடக்கும் பாசத்தை உன்னை பார்க்கிற ஒத்தை பார்வையில் கொட்டி உனக்கொன்னுன்னதும் இங்கே... இங்கே உயிரே இல்லேங்கற மாதிரி வெளிக்காமிக்காம மனசுக்குள்ளேயே மறுகிறது எல்லாம் உன்னைப் பொருத்தவரை பாசமில்லையோ" இடதுபக்க மார்பை தொட்டுக் காட்டி அழுத்தமாக கேட்டவனுக்கோ அடங்காத ஆத்திரம்.

அவை அணுவெங்கும் கோலோச்சியதில் ஸ்டியரிங்கை பற்றியிருந்த கரங்களில் நடுக்கம் பரவியது. அதைத் தடுக்க இறுக்கமாக பற்றியவன் ஆடியை பறக்க விட்டான் கோபத்தின் வடிகாலாக!

அவன் வேகத்துக்கு திகைத்து அமர்ந்திருக்கும் பௌர்ணமியின் நிலையோ வார்த்தைக்கும் அப்பாற்பட்டது.

சட்டென கலங்க துவங்கிவிட்ட கண்களோ வழியத் தயாராக "ஏ..ஏன் இப்பிடில்லாம் பேசுறீங்க" என்றவளுக்கு பதிலில்லா அவன் அமைதியே விடையாக கிடைத்தது.

இதுவரை பேசிக்கொண்டதே இல்லை. இன்றைய முதல் பேச்சும் சண்டையில் முடிந்திருக்கிறது. எப்போதும் அவனை நக்கலடித்து அவன் பேசாமல் விலகிச் செல்லும் வருத்தத்தை திட்டித் தீர்ப்பதன் மூலம் கடந்து விடுபவளால் அன்று அதுவும் முடியாமல் போக தன்னையே நிந்தித்தாள்.

'அவன் பேசுறதில்லைன்னு வருத்தம் உள்ளுக்குள்ள இருக்குல்ல. அதென்ன என்னை மட்டும் தள்ளி தள்ளி நிறுத்துறான்னு மனசுக்குள்ள புலம்புறேல்ல... இப்போ அவனே பேசினா பக்கி மாதிரி பேசி அவனை கோபமாக்கிட்டியேடி' படுமோசமாக தன்னைத் தானே திட்டிக்கொண்டு அவன் முகத்தை அடிக்கொரு தரம் பார்த்திருப்பாள் அவன் தன்னை ஒரு முறையாவது பார்க்கிறானா என்றறிய.

காரோட்டுவதில் கவனமாக இருக்கும் ஷேஷாதித்யனின் ரோபோட் முகத்திலிருந்து எதையும் கண்டறிய முடியவில்லை. நகத்தைக் கடிக்க, பட்டென திரும்பி அவளை முறைத்தவனோ "ப்ச், பேட் கேர்ள்" வாயிலிருந்து கையை பிடுங்கி தன் பிடிக்குள் வைத்துக்கொண்டு வண்டியோட்டுவதில் கவனம் செலுத்த 'கோபம் போயிடிச்சா' என கேட்க எண்ணிய பௌர்ணமியோ அங்கு இன்னம் மிச்சமிருந்த கோபச்சூட்டில் வாயை கப்பென இறுக மூடிக்கொண்டாள்.

இருவருக்கும் இடையே மீண்டும் இங்கு அசாதாரண மௌனம் நிலவ அங்கு மருத்துவமனையில் இவர்களுக்குள் முடிச்சிட மகனை அழுத்தமாக பார்த்த சொக்கலிங்கம் பிடிவாதமாக இருந்தார் நான் நினைப்பது நடந்தே ஆகவேண்டும் என்று.

"அப்பா எதுக்கு அவசரம்? எல்லாம் மெதுவா பார்த்துக்கலாம். நீங்க முதல்ல குணமாகி வீட்டுங்க வாங்க. இது இங்க வச்சு பேசுற விஷயமில்லீங்களேப்பா" ஆத்ரேயன் சொக்கலிங்கத்தின் அருகில் அமர்ந்திருந்தவன் மார்பை நீவிக்கொடுத்துக் கொண்டே மெதுவாகக் கூற

"நான் உனக்கு அப்பனா இல்ல நீ எனக்கு அப்பனாடா..." எகிறிய சொக்கலிங்கம் உன் பேச்சை இதில் கேட்பதாக இல்லை நான் என்ற பிடிவாதத்துடன் கண்களை மூடிக் கொண்டார் தூங்கும் பாவனையில்.
 
Last edited:

NNK33

Moderator
அதுவோ திறக்க மாட்டேன் என அடம்பிடித்தது. 'சென்ட்ரல் லாக் போட்ருக்கான் வெட் ஆனியன்' பல்லை நறநறத்தவள் கதவில் சாய்ந்து அப்படியே நிற்க, சில நிமிடங்கள் காத்திருந்த அவனோ விருட்டென காரைக் கிளப்பினான்.

அதில் தடுமாறி கீழே விழப்பார்த்தவள் நல்லவேளை அத்தனை பேரின் முன்பும் விழுந்து வாரி அசிங்கப்படாமல் தன்னை ஒருவாறு நிலைப்படுத்தி கொண்டே, சில அடிகள் தூரம் சென்று ஹாரனை அலற விட்டவனை நெருப்புக் கங்குகளை விழுங்கியதாட்டம் உறுத்து விழிக்க, ஹாரன் சத்தம் அதிகரித்தது.

வேறுவழியின்றி வேகமாக காரை நெருங்க, அவள் பக்கம் திறந்திருக்கும் கண்ணாடியூடு உள்ளே ஏறும்படி சைகை செய்தவனை மனதுக்குள் அர்ச்சித்துக் கொண்டே காரில் அவனருகில் ஏறியவளுக்கு நடப்பதெல்லாம் கனவோ என்றே தான் இருந்தது.

இதுநாள்வரை இருந்த இடைவெளிக்கு மாறாக இன்றைய நாள் நெருக்கத்தை அதுவாக ஏற்படுத்தி தந்திருந்ததை ஏற்கவும் முடியாமல் மறுக்கவும் இயலாமல் பௌர்ணமி உள்ளம் தடுமாற்றம் கண்டது.

அவள் அமைதியாக வர,

காரை கிளப்பிய ஷேஷாதித்யனோ "கையை பிடிச்சு தரதரன்னு இழுத்து வந்து உள்ளே தள்ளி விட்டுருப்பேன். நாலு பேருக்கு ஃப்ரீ ஷோ காட்டாமல் நீயே ஏறிட்ட, குட்" என்க

'எவ்வளவு திமிர் இவனுக்கு?' கண்களை விரித்து அவனை முறைத்தவளோ அவன் பார்வை தன்னைத் தொடவும் சட்டென மறுபக்கம் திரும்பிக்கொள்ள, அவன் இதழிலோ அவளறியாத குறுநகை மீசைக்குள் ஒளிந்திருந்து கண்ணாம்பூச்சி ஆடியது புதிராய்!

"என்ன பாட்டு? நான் கூப்பிட கூப்பிட காதிலே விழாமல் ரசிச்சு கேட்டிருந்த" அவனாக மௌனத்தை கலைத்து இலகுவான குரலில் அவளிடம் கேட்ட முதல் கேள்வி.

'பார்ரா, இப்பிடிலாம் சாஃப்டா கூட பேசுவானா இவன்? அதுவும் என்கிட்டே. அதிசயம்தான் போ... கடவுளே இன்னைக்கு என்னதான் ஆச்சு இன்னைய நாளே ஒருமாதிரி வித்தியாசமா இருக்கே' வழக்கம் போல் அவள் தனக்குள் உழன்று அவன் சொடக்கொலியில் தான் கலைந்தாள்.

"அ..அது எஸ்பிபி பாட்டு உங்களுக்கு சொன்னா புரியாது" என்றாள்.

'நீ தான் 2.0 வெர்சன் ரோபோவாச்சே' என்னும் தன்னைப்பற்றிய அவள் கணிப்பீடு அறியாது

அவளை ஒரு மாதிரியாக பார்த்தவனோ "எனக்கு புரியாதா..." கேட்க, தோளை குலுக்கினவள் காருக்கு வெளியே வேடிக்கை பார்த்தவாறு வர "சொக்கலிங்கம், உனக்கும் தாத்தா தானே. சீரியஸா ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகிருக்காரேன்னு கொஞ்சங்கூட நீ ஃபீல் பண்ணல?" அவன் குரலில் மறுபடியும் இளக்கம் குறைந்து இறுக்கம் பரவியிருக்க,

'இப்போ நல்லாத்தானே பேசினான் அதுக்குள்ள மாறிட்டான்' சந்தேகமாக அவனை பார்த்த பௌர்ணமிக்கு அப்படியே கல்லைத் தூக்கி அவன் மண்டையில் போடலாம் போலிருந்தது. "அப்பிடிலாம் ஒன்னுயில்லை" என்றவள் குரலில் தானாகவே சுருதி குறைந்திருக்க,

"என்ன ஒன்னுயில்ல... நம்ம குடும்பத்தில் மூத்தவர்ங்கற கேட்டர்சிக்காகவாச்சும் ஃபீல் பண்ண மாதிரி தெரியலையே" என்றவன் தொனியிலோ அவளை இகழும் நக்கல் தூக்கலாக இருக்கவும் சுர்ரென்று ஏற "அதெல்லாம் அதுவா வரணும். வா வான்னு நாம வரிஞ்சு கட்டி இழுக்க முடியாது. இதுவரை அவரு பாசமா ஒரு வார்த்தை கூட பேசியதில்லை தெரியுமா... அப்பிடி பேசிருந்தாலாவது ஃபீல் பண்ணிருப்பேனோ என்னவோ" என்றவளின் ஆதங்கத்தில் கோபத்தின் சூடு அவன் முகமெங்கும் விஸ்வரூபம் எடுத்து வியாபித்தது.

"கம் அகெய்ன்" அவளிடம் சீறியவன் "எது பாசம்ங்கற? நல்லா சிரிச்சி பேசி நீ கேக்குறதா வாங்கிக்குடுத்து, உனக்கொன்னுன்னா துடிச்சு உன் காலடியில் உக்கார்ந்து, தினமும் நாலு முத்தம் ரெண்டு தலை கோதல், பசிச்சா சாப்பாடு ஊட்டிவிடணும். நெஞ்சில் போட்டு தட்டிக் குடுத்து தூங்க வைக்கணும். உன்கூட செல்ஃபிக்கு ரெண்டு போஸ் குடுத்து உன் செல்போன் கேலரியில் இருந்தா அது தான் பாசமா... ஏன் வெளியே முறைப்பா விறைப்பா காட்டிக்கிட்டாலும் உள்ளுக்குள்ள கொட்டிக்கிடக்கும் பாசத்தை உன்னை பார்க்கிற ஒத்தை பார்வையில் கொட்டி உனக்கொன்னுன்னதும் இங்கே... இங்கே உயிரே இல்லேங்கற மாதிரி வெளிக்காமிக்காம மனசுக்குள்ளேயே மறுகிறது எல்லாம் உன்னைப் பொருத்தவரை பாசமில்லையோ" இடதுபக்க மார்பை தொட்டுக் காட்டி அழுத்தமாக கேட்டவனுக்கோ அடங்காத ஆத்திரம்.

அவை அணுவெங்கும் கோலோச்சியதில் ஸ்டியரிங்கை பற்றியிருந்த கரங்களில் நடுக்கம் பரவியது. அதைத் தடுக்க இறுக்கமாக பற்றியவன் ஆடியை பறக்க விட்டான் கோபத்தின் வடிகாலாக!

அவன் வேகத்துக்கு திகைத்து அமர்ந்திருக்கும் பௌர்ணமியின் நிலையோ வார்த்தைக்கும் அப்பாற்பட்டது.

சட்டென கலங்க துவங்கிவிட்ட கண்களோ வழியத் தயாராக "ஏ..ஏன் இப்பிடில்லாம் பேசுறீங்க" என்றவளுக்கு பதிலில்லா அவன் அமைதியே விடையாக கிடைத்தது.

இதுவரை பேசிக்கொண்டதே இல்லை. இன்றைய முதல் பேச்சும் சண்டையில் முடிந்திருக்கிறது. எப்போதும் அவனை நக்கலடித்து அவன் பேசாமல் விலகிச் செல்லும் வருத்தத்தை திட்டித் தீர்ப்பதன் மூலம் கடந்து விடுபவளால் அன்று அதுவும் முடியாமல் போக தன்னையே நிந்தித்தாள்.

'அவன் பேசுறதில்லைன்னு வருத்தம் உள்ளுக்குள்ள இருக்குல்ல. அதென்ன என்னை மட்டும் தள்ளி தள்ளி நிறுத்துறான்னு மனசுக்குள்ள புலம்புறேல்ல... இப்போ அவனே பேசினா பக்கி மாதிரி பேசி அவனை கோபமாக்கிட்டியேடி' படுமோசமாக தன்னைத் தானே திட்டிக்கொண்டு அவன் முகத்தை அடிக்கொரு தரம் பார்த்திருப்பாள் அவன் தன்னை ஒரு முறையாவது பார்க்கிறானா என்றறிய.

காரோட்டுவதில் கவனமாக இருக்கும் ஷேஷாதித்யனின் ரோபோட் முகத்திலிருந்து எதையும் கண்டறிய முடியவில்லை. நகத்தைக் கடிக்க, பட்டென திரும்பி அவளை முறைத்தவனோ "ப்ச், பேட் கேர்ள்" வாயிலிருந்து கையை பிடுங்கி தன் பிடிக்குள் வைத்துக்கொண்டு வண்டியோட்டுவதில் கவனம் செலுத்த 'கோபம் போயிடிச்சா' என கேட்க எண்ணிய பௌர்ணமியோ அங்கு இன்னம் மிச்சமிருந்த கோபச்சூட்டில் வாயை கப்பென இறுக மூடிக்கொண்டாள்.

இருவருக்கும் இடையே மீண்டும் இங்கு அசாதாரண மௌனம் நிலவ அங்கு மருத்துவமனையில் இவர்களுக்குள் முடிச்சிட மகனை அழுத்தமாக பார்த்த சொக்கலிங்கம் பிடிவாதமாக இருந்தார் நான் நினைப்பது நடந்தே ஆகவேண்டும் என்று.

"அப்பா எதுக்கு அவசரம்? எல்லாம் மெதுவா பார்த்துக்கலாம். நீங்க முதல்ல குணமாகி வீட்டுங்க வாங்க. இது இங்க வச்சு பேசுற விஷயமில்லீங்களேப்பா" ஆத்ரேயன் சொக்கலிங்கத்தின் அருகில் அமர்ந்திருந்தவன் மார்பை நீவிக்கொடுத்துக் கொண்டே மெதுவாகக் கூற

"நான் உனக்கு அப்பனா இல்ல நீ எனக்கு அப்பனாடா..." எகிறிய சொக்கலிங்கம் உன் பேச்சை இதில் கேட்பதாக இல்லை நான் என்ற பிடிவாதத்துடன் கண்களை மூடிக் கொண்டார் தூங்கும் பாவனையில்.


ஓம் செல்வம் அருள்க தேவா போற்றி
ஓம் நல்லன எமக்கருள் நாயக போற்றி
ஓம் ஆக்கமும் ஊக்கமும் அருள்வாய் போற்றி
ஓம் காக்க எங்களை உன்கழிலிணை போற்றி

காலை ஆறு முப்பது மணிக்கெல்லாம் பூஜையறையில் மணியடிக்க, காதைப் பொத்திக்கொண்டு குப்புறப்படுத்த பௌர்ணமிக்கு மேல் காலைத் தூக்கிப் போட்டு ஜோ விட்ட குறட்டை சத்தத்தில் அவளை எத்தி தள்ளிவிட்டு சோம்பலாக எழுந்தமர்ந்தவளோ போனில் நேரத்தையும் நாளையும் சரி பார்த்து கொண்டாள்.

அன்று ஞாயிற்றுக்கிழமை, பௌர்ணமி தினம்!

மணி ஆறரையை தொட்டிருக்க 'மணி சத்தம் கேக்குதே' நினைத்துக்கொண்டே அவள் குளியலறைக்குள் தான் ஓடினாள்.

மற்ற நாட்களில் மகள்களின் காலைத் தூக்கத்தையோ அவர்களின் அன்றாட கூத்தையோ கண்டு கொள்ளாமல் கடந்து செல்லும் ஜனனி வருடத்தில் பௌர்ணமியோடு சேர்ந்து வரும் ஞாயிறில் மட்டும் கடுப்பாகி விடுவதுண்டு. அன்றைக்கு மட்டும் அவள் நோன்போடு மௌன விரதமும் இருப்பதால் மற்ற நாட்களை விட உக்கிரமாக இருப்பாள்.

ஜோ பௌர்ணமி கூட அடக்கி தான் வாசிப்பார்கள்.

காலையில் நேரத்துக்கு பூஜையறையில் இருக்க வேண்டும் என்பதும் அன்றைய நாளின் எழுதப்படாத சட்டம். அதற்கும் யாரும் விதிவிலக்கல்ல.

கடகடவென இவள் தயாராகிய தடபுடலில் எழுந்த ஜோ நேரம் பார்த்து நெஞ்சைப் பிடித்துக் கொண்டே "சொல்றதுக்கென்னடி" சீறினாள்.

"உன்கிட்ட சொல்லனும்லாம் எனக்கென்ன அவசியம்" டச்சப் செய்து கொண்டிருந்தவளோ அலட்சியமாக இதழை சுழிக்க,

தமக்கையை நக்கலாக பார்வையிட்ட ஜோ 'நீ ரெடியானதும் கீழே போய் நல்ல பேர் எடுக்கலாம்னு பார்க்கிற... அது இந்த ஜோ இருக்கிறது வரை நடக்காதுடியோய். நான் மனசு வச்சாத்தான் இன்னைக்கு நீ கீழேயே போக முடியும் கண்ணு' அவள் கவனம் தன்னில் இல்லை என உறுதி செய்ததும் ஒரே ஓட்டமாக அறைக்குள் அவளை வைத்து பூட்டி சாவியுடன் பக்கத்து அறை தன்னுடையதில் நுழைந்து காக்காய் குளியல் போட்டு நிமிடத்தில் தயாராகியவளோ ஓடிவந்து கதவைத் திறந்து விட்டு் அவளை முந்திக்கொண்டு படிகளில் விரைந்தாள்.

"பக்கி பன்னாடை பரதேசி" வரிசையாக வசைபாடிக் கொண்டே பின்னோடு இறங்கியவளை நமுட்டுச் சிரிப்புடன் ஏறிட்டு,

"என் காது கேட்காது" என்றவளுக்கோ பொங்கிய சிரிப்பை அடக்க பெரும்பாடாக கண்களை மூடி பூஜையறையில் சென்று சாமி கும்பிட்டவள் உடல் மௌனச் சிரிப்பில் குலுங்க

இருக்கும் கோபத்தையெல்லாம் சேர்த்து ஓங்கி அவள் காலில் மிதித்தாள் பௌர்ணமி. "ஆஆஆ" என அலறியவளை சட்டை செய்யவில்லை. இப்போது கண்ணை மூடிக்கொண்டு சிரிப்பது தன் முறையானதில் 'யாருக்கிட்ட பௌர்ணமிடி' அவளே அவளை மெச்சிக்கொண்டாள.

வலியில் ஒரு காலை தூக்கி ஒற்றைக் காலில் நின்ற ஜோ ஆத்ரேயன் ஜனனி நாயகி என அனைவரின் பார்வையும் தன் புறம் திரும்பியதில் "ஆஆ... ஓஓம் செல்வம் அருள்க தேவா போற்றி போற்றி" கன்னத்தில் போட்டுக் கொண்டு "இங்க என்ன பார்வை சாமிய கவனிங்க லேட்டானா கோச்சுக்க போறார்" சமாளித்தவள் பக்தியே மயமாக கண்ணை மூடிக்கொள்ள

மகளின் செய்கை சிரிப்பு மூட்டியதில் ஆத்ரேயன் நமட்டுச் சிரிப்புடனும் ஜனனியும் நாயகியும் முறைப்புடனும் தாங்களும் திரும்பிக் கொள்ள,

ஜோவும் பௌர்ணமியும் ஒருவரை முறைத்துக் கொண்டனர்.

பூஜை முடிந்து ஆரத்தித் தட்டை காட்ட கண்களில் ஒற்றிக் கொண்டு அனைவரும் கலைந்ததும் பரபரப்புடன் சமையல் அறைக்கும் ஹாலுக்கும் நடந்து கொண்டிருக்கும் ஜனனியை தோள்பட்டையில் கைவைத்து அழுத்தி ஓரிடத்தில் நிறுத்திய ஆத்ரேயன் "இன்னைக்கு கூட லீவு போட மாட்டியா உன் ஓட்டத்துக்கு?" சலிப்பாக கேட்டான்.

"ப்ச், வெட்டியா பேச நேரமில்லை அத்தான். மாமா இன்னைக்கு டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வர்றார். அவருக்கு ஏத்த மாதிரி பத்திய சாப்பாட்டை நர்ஸ்கிட்ட கேட்டு டயட் சார்ட் வாங்கி வச்சிருந்தேன். என்ன தான் ராதா பார்த்துப்பாள்ன்னாலும் கூட நான் நிக்கிறப்போ எனக்கொரு திருப்தி" தன் விழியோடு அவள் கண் கலந்து ஏறிட்டவளின் மௌனத்தை மொழிபெயர்த்தவன் அவள் நெற்றி முட்டி "சரி போ..." என்றான் அவளுக்கான தன் பிரத்தியேக சிரிப்போடு.

அவள் இதழ்களையும் அவை தொற்றிக் கொண்டது. இளஞ்சிரிப்பு உதட்டில் மினுங்க தன் வேலையை தொடர்ந்தவளை பார்த்தவாறே தங்கள் அறைக்குள் நுழைந்தான்.

விஜய்கோபால்சாமி சொன்ன ஒரு வாரத்துக்கு மேலாக கூடுதல் ஒரு வாரம் சொக்கலிங்கத்தின் மருத்துவமனைவாசம் நீடித்து இன்று தான் டிஸ்சார்ஜ் ஆகுறார்.

கடந்த இரு வாரங்களாக வீட்டுக்கும் மருத்துவமனைக்குமாக ஓய்வில்லாமல் சுழன்று கொண்டிருக்கும் மனைவியின் மீது சற்று சுணக்கம் ஆத்ரேயனுக்கு. வேலையாட்கள் பார்ப்பார்கள் என்று அவன் சொல்லியும் துளியும் கேட்கவில்லை ஜனனி.

சிறு பெருமூச்சுடன் அவன் தயாராகி வரவும் ஷேஷாவின் குடும்பமும் வர மாமனும் மருமகனுமே தாங்கள் பார்த்துக்கொள்வதாக கூறி சொக்கலிங்கத்தை அழைத்து வர மருத்துவமனை புறப்பட்டனர்.

மருத்துவமனை வாசம் முடிந்து வீட்டுக்குள் நுழைந்த சொக்கலிங்கத்துக்கு மீண்டும் தனக்கான கூட்டுக்குள் வந்து சேர்ந்த நிம்மதி முகத்தில் பரவியது.

பழைய கம்பீரம் அதுவாகவே வந்து அவர் முகத்தில் அணிகலனாக அமர்ந்துகொள்ள, கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தவரை பார்த்து செல்ல அவர்கள் பக்க உறவுக்காரர்கள் ஒவ்வொருவராக வந்து பார்த்து கலைந்து சென்று இறுதியில் குடும்பத்தினர் மட்டுமே கூடியிருந்த அறைக்குள் அனைவரையும் ஒரு பார்வை பார்த்து தொண்டையை செருமியவர் "என்ன முடிவெடுத்திருக்க ஆத்ரேயா" என்றார் தன் கணீர் குரலில்.
 

NNK33

Moderator
Ranveer Singh Wallpapers.jpg

Love❤❤.jpeg

அத்தியாயம் 04

காலை ஆறரைக்கெல்லாம் ஜனனி சாமிக்கு விளக்கு காட்டிக் கொண்டிருந்தாள். பூஜையறையில் மணியடிக்க 'லிங்க நாதன்' வீடெங்கும் அதன் ஓசை எதிரொலித்தது.

காதைப் பொத்திக்கொண்டு குப்புறப்படுத்த பௌர்ணமிக்கு மேல் காலைத் தூக்கிப் போட்டு ஜோ விட்ட குறட்டை சத்தத்தில் அவளை எத்தி தள்ளிவிட்டு சோம்பலாக எழுந்தமர்ந்தவளோ போனில் நேரத்தையும் நாளையும் சரி பார்த்து கொண்டாள்.

அன்று ஞாயிற்றுக்கிழமை, பௌர்ணமி தினம்!

மணி ஆறரையை தொட்டிருக்க 'மணி சத்தம் கேக்குதே' நினைத்துக்கொண்டே அவள் குளியலறைக்குள் தான் ஓடினாள்.

மற்ற நாட்களில் மகள்களின் காலைத் தூக்கத்தையோ அவர்களின் அன்றாட கூத்தையோ கண்டு கொள்ளாமல் கடந்து செல்லும் ஜனனி வருடத்தில் பௌர்ணமியோடு சேர்ந்து வரும் ஞாயிறில் மட்டும் கடுப்பாகி விடுவதுண்டு. அன்றைக்கு மட்டும் அவள் நோன்போடு மௌன விரதமும் இருப்பதால் மற்ற நாட்களை விட உக்கிரமாக இருப்பாள்.

ஜோ பௌர்ணமி கூட அடக்கி தான் வாசிப்பார்கள்.

காலையில் நேரத்துக்கு பூஜையறையில் இருக்க வேண்டும் என்பதும் அன்றைய நாளின் எழுதப்படாத சட்டம். அதற்கும் யாரும் விதிவிலக்கல்ல.

கடகடவென இவள் தயாராகிய தடபுடலில் எழுந்த ஜோ நேரம் பார்த்து நெஞ்சைப் பிடித்துக் கொண்டே "சொல்றதுக்கென்னடி" சீறினாள்.

"உன்கிட்ட சொல்லனும்லாம் எனக்கென்ன அவசியம்" டச்சப் செய்து கொண்டிருந்தவளோ அலட்சியமாக இதழை சுழிக்க,

தமக்கையை நக்கலாக பார்வையிட்ட ஜோ 'நீ ரெடியானதும் கீழே போய் நல்ல பேர் எடுக்கலாம்னு பார்க்கிற... அது இந்த ஜோ இருக்கிறது வரை நடக்காதுடியோய். நான் மனசு வச்சாத்தான் இன்னைக்கு நீ கீழேயே போக முடியும் கண்ணு' அவள் கவனம் தன்னில் இல்லை என உறுதி செய்ததும் ஒரே ஓட்டமாக அறைக்குள் அவளை வைத்து பூட்டி சாவியுடன் பக்கத்து அறை தன்னுடையதில் நுழைந்து காக்காய் குளியல் போட்டு நிமிடத்தில் தயாராகியவளோ ஓடிவந்து கதவைத் திறந்து விட்டு் அவளை முந்திக்கொண்டு படிகளில் விரைந்தாள்.

"பக்கி பன்னாடை பரதேசி" வரிசையாக வசைபாடிக் கொண்டே பின்னோடு இறங்கியவளை நமுட்டுச் சிரிப்புடன் ஏறிட்டு,

"என் காது கேட்காது" என்றவளுக்கோ பொங்கிய சிரிப்பை அடக்க பெரும்பாடாக கண்களை மூடி பூஜையறையில் சென்று சாமி கும்பிட்டவள் உடல் மௌனச் சிரிப்பில் குலுங்கியது.

இருக்கும் கோபத்தையெல்லாம் சேர்த்து ஓங்கி அவள் காலில் மிதித்த பௌர்ணமி "ஆஆஆ" என அலறியவளை சட்டை செய்யவில்லை. இப்போது கண்ணை மூடிக்கொண்டு சிரிப்பது தன் முறையானதில் 'யாருக்கிட்ட பௌர்ணமிடி' அவளே அவளை மெச்சிக்கொண்டாள்.

வலியில் ஒரு காலை தூக்கி ஒற்றைக் காலில் நின்ற ஜோ ஆத்ரேயன் ஜனனி நாயகி என அனைவரின் பார்வையும் அவள் புறம் திரும்பியதில் "ஆஆ... ஓஓம் செல்வம் அருள்க தேவா போற்றி போற்றி" கன்னத்தில் போட்டுக் கொண்டு "இங்க என்ன பார்வை? சாமிய கவனிங்க லேட்டானா கோச்சுக்க போறார்" சமாளித்தவள் பக்தியே மயமாக கண்ணை மூடிக்கொள்ள,

மகளின் சேட்டை சிரிப்பு மூட்டியதில் ஆத்ரேயன் நமட்டுச் சிரிப்புடனும் ஜனனியும் நாயகியும் முறைப்புடனும் தாங்களும் திரும்பிக் கொள்ள,

ஜோவும் பௌர்ணமியும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டனர்.

பூஜை முடிந்து ஆரத்தித் தட்டை காட்ட கண்களில் ஒற்றிக் கொண்டு அனைவரும் கலைந்ததும் பரபரப்புடன் சமையல் அறைக்கும் ஹாலுக்கும் நடந்து கொண்டிருந்த ஜனனியை தோள்பட்டையில் கைவைத்து அழுத்தி ஓரிடத்தில் நிறுத்திய ஆத்ரேயன் "இன்னைக்கு கூட லீவு போட மாட்டியா உன் ஓட்டத்துக்கு?" சலிப்பாக கேட்டான்.

"ப்ச், வெட்டியா பேச நேரமில்லை அத்தான். மாமா இன்னைக்கு டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வர்றார். அவருக்கு ஏத்த மாதிரி பத்திய சாப்பாட்டை நர்ஸ்கிட்ட கேட்டு டயட் சார்ட் வாங்கி வச்சிருந்தேன். என்ன தான் ராதா பார்த்துப்பாள்ன்னாலும் கூட நான் நிக்கிறப்போ எனக்கொரு திருப்தி" தன் விழியோடு அவள் கண் கலந்து ஏறிட்டவளின் மௌனத்தை மொழிபெயர்த்தவன் அவள் நெற்றி முட்டி "சரி போ..." என்றான் அவளுக்கான தன் பிரத்தியேக சிரிப்போடு.

அவை அவள் இதழ்களையும் தொற்றிக் கொண்டது.

இளஞ்சிரிப்பு உதட்டில் மினுங்க தன் வேலையை தொடர்ந்தவளை பார்த்தவாறே ஆத்ரேயன் தங்கள் அறைக்குள் நுழைந்தான்.

விஜய்கோபால்சாமி சொன்ன ஒரு வாரத்துக்கு மேலாக கூடுதல் ஒரு வாரம் சொக்கலிங்கத்தின் மருத்துவமனைவாசம் நீடித்து இன்று தான் டிஸ்சார்ஜ் ஆகுறார்.

கடந்த இரு வாரங்களாக வீட்டுக்கும் மருத்துவமனைக்குமாக ஓய்வில்லாமல் சுழன்று கொண்டிருக்கும் மனைவியின் மீது சற்று சுணக்கம் ஆத்ரேயனுக்கு. வேலையாட்கள் பார்ப்பார்கள் என்று அவன் சொல்லியும் துளியும் கேட்கவில்லையே ஜனனி.

சிறு பெருமூச்சுடன் அவன் தயாராகி வரவும் ஷேஷாவின் குடும்பமும் வர மாமனும் மருமகனுமே தாங்கள் பார்த்துக்கொள்வதாக கூறி சொக்கலிங்கத்தை அழைத்து வர மருத்துவமனை புறப்பட்டனர்.

மருத்துவமனை வாசம் முடிந்து வீட்டுக்குள் நுழைந்த சொக்கலிங்கத்துக்கு மீண்டும் தனக்கான கூட்டுக்குள் வந்து சேர்ந்த நிம்மதி முகத்தில் பரவியது.

பழைய கம்பீரம் அதுவாகவே வந்து அவர் முகத்தில் அணிகலனாக அமர்ந்துகொள்ள, கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தவரை பார்த்து செல்ல அவர்கள் பக்க உறவுக்காரர்கள் ஒவ்வொருவராக வந்து பார்த்து கலைந்து சென்று இறுதியில் குடும்பத்தினர் மட்டுமே கூடியிருந்த அறையில் அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவர் தொண்டையை செருமி "என்ன முடிவெடுத்திருக்க ஆத்ரேயா" என்றார் தன் கணீர் குரலில்.

தங்களுக்குள் சலசலத்து கொண்டு இருந்தவர்கள் அமைதியாக ஆத்ரேயனுக்கோ அப்பட்டமான திகைப்பு.

வார்த்தையின்றி அவன் தடுமாற ஜனனியின் பார்வை கேள்வியாக உயர்ந்து அவனில் படிந்து மீளவும் அக்கணம் அவளின் அருகாமை தனக்கு இன்றியமையாததாக உணர்ந்த ஆத்ரேயனின் மனநிலையை தன்னை அவன் பார்க்கும் பார்வையில் இனங்கண்டு ஜனனி அவனருகில் வந்து நின்றாள்.

'ஜானு' இதழ்கள் லேசாக பிரிந்து உச்சரிக்க, 'நான் இருக்கிறேன்' என ஜனனி கண்களை மூடித் திறந்து விழிகளுக்குள் ஆழ்ந்து பார்த்ததில் சஞ்சலப்பட்ட மனது அமைதி காண மனைவியின் கை கோர்த்து தன்னை திடப்படுத்திக் கொண்ட மகனையும் மருமகளையும் அழுத்தமாக பார்த்தார் சொக்கலிங்கம்.

"நான் குடுத்த வாக்கை காப்பாத்தாமல் நீ ஆசைப்பட்டேன்னு ஒரே காரணத்திற்காக உம் பொண்டாட்டியை உனக்கு கட்டிவச்சேன்ல. இப்போ நான் கேக்குற வாக்கை நிறைவேத்திக்குடு." அத்தனை இயலாமையிலும் அவரின் குரல் உறுதியாக ஒலித்தது.

மறந்திருப்பார் என்றே அவன் நினைத்திருக்க எதையும் அவ்வளவு சீக்கிரம் மறப்பவன் நானில்லை என்று நினைவுபடுத்தும் வகையில் அவர் கேள்வி அவனை உண்மையில் திகைக்கத்தான் வைத்தது.

அவனை மட்டுமல்ல ஜனனி முதற்கொண்டு அனைவரும் சொக்கலிங்கத்தையும் ஆத்ரேயனையும் மாறி மாறி பார்க்க,

"அ..ப்பா" மற்றவர்களின் கேள்விப்பார்வையோடு ஆத்ரேயனின் தடுமாற்றமும் சேரவே மகனை அதிருப்தியாக பார்த்து

"என் பேரன் வருண் ஷேஷாதித்யனுக்கு உன் பொண்ணு பௌர்ணமியை கட்டிக்குடுக்கிறியா இல்லையா..." அனைவர்க்கும் முன் பட்டென போட்டு உடைத்து கிழவர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக அதிர்ச்சி குடுத்திருந்தார்.

ஜோவும் அவளுமாக வழக்கமான தங்கள் விவாதித்தின் முடிவில் சண்டையின் முதல்படியில் காலடி எடுத்து வைத்துக் கொண்டிருந்த பௌர்ணமிக்கோ தூக்கிவாரிப்போட விலுக்கென நிமிர்ந்தவள் மானசீகமாக நெஞ்சைப் பிடித்துக் கொண்டாள்.

'போயும் போயும் இந்த சிடுமூஞ்சி சிங்காரவேலனோடயா' அவள் விழிகள் இரண்டும் அதிர்ச்சியில் உறைந்து அசைவற்று நின்றவை ஒருவாறாக சிமிட்டி அங்கிருக்கும் அனைவரையும் வெறித்து இறுதியாக பக்கவாட்டில் இதற்கும் தனக்கும் சம்மந்தமே இல்லை என நிற்கும் ஷேஷாதித்யனில் படிய உள்ளுக்குள் பெரும் அதிர்வு பெர்முடா முக்கோணம் போல் உன்னை மூழ்கடிக்கவா என்றது.

ஒரு நாள் கார் பயணமே கடந்த இரு வாரங்களாக அவளை உறுத்த 'ஒரு நாளைக்கே மூச்சு முட்டுது இதில் வாழ்க்கையெல்லாம் ஒன்றாக பயணம்?' கண்களை இறுக்கி மூடி திறந்தவளோ தலையை உலுக்கி 'கற்பனையே கஷ்டம் தருதே இவனைக் கட்டிக்கிட்டால் காலம்பூரா அந்தக் கஷ்டத்தை எப்படி அனுபவிக்க' அயர்ந்தே விட்டாள்.

மனம் அப்போதே கடவுளிடம் ப்ரார்த்திக்க தொடங்கி விட்டது.

சில நிமிடங்கள் ஆத்ரேயன் மௌனம் அங்கு சில உயிர்களுக்குள் பெரும் போராட்டம்!

சத்தமின்றி சிறு பெருமூச்சுடன் அவன் பார்வை அங்கு கூடியிருக்கும் ஒவ்வொருவராக தொட்டுவந்து மகளில் இறுதியாக நிலைக்க அவள் கண்களில் பரிதவிப்பு. அலைபாயும் அவள் விழிகளைப் பார்த்தவனோ ஒரு முடிவுடன் நிமிர்ந்தான். என் ஆசை நிறைவேறப் போகிறது என்று அதீத உற்சாகத்தில் அவருக்கேயான செருக்குடன் பிடிவாதத்தோடு அமர்ந்திருக்கும் சொக்கலிங்கத்தை நோக்கி,

"என் வாழ்க்கையில் என் விருப்பம் எப்பிடியோ என் பொண்ணு வாழ்க்கையும் அப்பிடிதானுங்களேப்பா. உங்க வாழ்க்கையை உங்க இஷ்டப்படி அமைச்ச நீங்களே என் வாழ்க்கையை உங்க கையில் எடுத்திட்டீங்களேன்னு என் பொண்ணு கைநீட்டி என்னை ஒரு குறை சொல்லிட்டாலும் நான் ஒரு நல்ல அப்பாவா இருக்க தவறிட்டேன்னு அர்த்தமாகிடாதா..."

"அந்தத் தப்பை ஒருநாளும் நான் என் பொண்ணுங்களுக்கு செய்யமாட்டேனுங்ப்பா" என்ற ஆத்ரேயனை பாய்ந்து வந்து அணைத்திருந்தாள் பௌர்ணமி.

சில நிமிடங்களே என்றாலும் உள்ளுக்குள் பட்ட வேதனை அவள் அறிவாள் அல்லவா!

"ஐ லவ் யூ ப்பா. லவ் யூ லவ் யூ லவ் யூ சோ மச்ச்" கழுத்தோடு கட்டிக்கொண்டு மார்புக்குள் புதைந்த மகளை வாஞ்சையுடன் தடவிக்குடுத்து அவள் உச்சந்தலையில் அழுந்த முத்தமிட்ட ஆத்ரேயன் "லவ் யூ டூ டா பௌர்ணமிடா" என்றவனின் ஒரு கை மூத்த மகளை அரவணைத்துக் கொள்ள, மறுகைக்குள் சரண் புகுந்திருந்தால் ஜோதி ஸ்வரூபிணி "நானும் லவ் யூப்பா" என்ற சொல்லுடன்.

இரு புறமும் மகள்களுடன் நிற்கும் ஆத்ரேயனின் விழிகள் சொக்கலிங்கத்தை நோக்கி "என் பொண்ணுங்க விருப்பம் தான் என் விருப்பமும். அவளுக்கு சம்மதம்னா எனக்கும் சம்மதம்ப்பா" என்க,

தந்தையின் மார்புக்குள் புதைந்திருக்கும் பௌர்ணமியின் இதழ்களோ "எனக்கு சம்மதம் இல்லைப்பா" முணுமுணுத்தது.

"ஹையர் ஸ்டடீஸ்க்கு பொலிமோடாவில் அப்ளை பண்ணிருந்தேன். வேர்ல்ட் பெஸ்ட் ஃபேஷன் டிசைனிங் ஸ்கூல்ஸில் ஒன்னு அவ்வளோ சீக்கிரம் அங்கே அட்மிஷன் கிடைச்சிறாதுப்பா. என்னோட லக் கன்பர்மேஷன் மெயில் பண்ணிருந்தாங்க. இதை சொல்ல வந்தும் சிட்டுவேஷன் சரியா அமையலை சொல்ல முடியாம போய்டிச்சு. இன்னும் ரெண்டு வாரத்தில் ஸ்கூல்ஸ் ஸ்டார்ட் ஆகிடும். நா..நான் போகட்டுமாப்பா" ஆவல் தேக்கி முகம் பார்ப்பவளுக்கு மறுப்பு சொல்ல முடியவில்லை அந்த அன்புள்ளம் கொண்டவனால்.

"உன் இஷ்டம்ந்தான் பௌர்ணமிடா" என்க

முகமெங்கும் எல்லையில்லா பேருவகை பூச்சொறிந்து அவள் அழகுக்கு பேரெழில் சேர்க்க "தேங்க்ஸ்ப்பா" இன்னும் வாகாய் தந்தையின் அணைப்புக்குள் அடங்க,

மறுபக்கமிருந்து கேட்டுக் கொண்டிருந்த ஜோ தலையில் அடித்துக் கொண்டே "நாலு கொரியன் ட்ராமா பார்த்தோமா ரெண்டு ஹிந்தி சீரியல்ல மூழ்கி எழுந்தோமா வாரத்துல ஒரு நாள் ஷாப்பிங். ரெண்டு நாள் அவுட்டிங். அம்மா கையால் சிக்கன் பிரியாணி, பாய் கடை மட்டன் பிரியாணி. நல்லா வெளுத்து வாங்கினோமா குப்புற படுத்து தூங்கினோமான்னு இல்லாம டைம் பாஸ் பண்ண நேரம் கிடைச்சும் எக்ஸாம் பாஸ் பண்ணி படிக்க போறேன்னு நிக்கிற நீயெல்லாம் இந்த உலகத்தில வாழ தகுதியே இல்லாதவ ல்லாதவ லாதவ தவ வ" சிவாஜி போல் மூச்சிரைக்க வசனம் பேசியவளின் நடு மண்டையிலயே நச்சென்று நாலு கொட்டு குட்டினாள் பௌர்ணமி.

"என்னை என்ன உன்ன மாதிரி பேக்குன்னு நினைச்சியா... பௌர்ணமி டி. இன்னும் எண்ணி ட்டூ அண்ட் ஹாஃப் இயர்ஸ்ல ஃபேஷன் டிஸைனர் பௌர்ணமி நு சொன்னா தெரியாதவங்க இந்த நாட்டுல அன்வான்டட் லிஸ்ட்ல சேர்க்கப்படுறவங்களா தான் இருப்பாங்க. இன்னும் ட்டூ வீக்ஸ் தான். அப்பறம் உஷ்ஷ்ஷ்ஷ்..." விமானம் பறப்பதைப் போல் கையால் சைகை செய்தவள் அணிந்திருந்த டாப்ஸ் காலரை கெத்தாக தூக்கி விட,

அதை அசட்டை செய்த ஜோ "உனக்கு வாழத்தெரியலன்னு சொல்லு" நக்கலாக வேறு சொல்லவும்

"சொல்லுவடி சொல்லுவ. அத்தை மகனை கட்டிக்கிறதையே லட்சியமா வச்சிருக்கிற உனக்கெல்லாம் என்னோட கனவை சொல்றதும் ஒன்னு குப்பையில் மண்ணை கொட்டுறதும் ஒன்னு தான். போடி போ எக்கேடோ கெட்டு குட்டிச்சுவராப்போ" பௌர்ணமி தலையிலடித்துக் கொண்டாள்.

"எல்லாம் இந்த தாத்தாவை சொல்லனும். நான் இருக்கும் போது அத்தானுக்கு உன்னை போய் கேக்கறாரு" கடுகடுத்த ஜோ "இங்க பாரு பொணமி, இன்னைக்கு வீம்புல வேணானு சொல்லிட்டேன். அத்தானை எனக்கே கட்டிக்குடுங்கன்னு அப்பறம் வந்து கேட்டுராதே. கேட்டுட மாட்டேல்ல..." என சந்தேகமாக கேட்டு பௌர்ணமியை குறுகுறுவென பார்த்த இளையவளை "நீயே தூக்கி குடுத்தாலும் நான் வாங்கிக்க மாட்டேன்டி. உன் பொத்தானை சட்டையில் தைச்சு நீயே பத்திரமா வச்சுக்கோ" என்றவள் அத்தோடு நிறுத்தவில்லை.

ஜோவை கடுப்பேற்றவென்றே

"ஃபாரின்ல கலர் கலரா பிகருங்க நாலு பேரை உஷார் பண்ணி ரெண்டுக்கு ப்ரேக்கட் போட்டு ஒன்னோட டேட்டிங் போய் மீதியிருக்கவன் கூட செட்டில் ஆனோமான்னு என் ரேன்ஜே வேற வேற வேற மாரி" என்க, உதடுகளோ நமுட்டுச் சிரிப்பில் சடுகுடு ஆடியது.

"எதே... நாலு பேரை பார்த்து ரெண்டை ரிஜெக்ட் பண்ணி ஒன்னை சைட் அடிச்சு மத்தொன்னோட குடும்பம் நடத்தப்போறேன்ற"

"ம்ம்" ஆங்கிலேய மாடல்களின் பாணியில் ஸ்டைலிஷாக தோள்களை அசைத்தவளை தொட்டுத் திருப்பி "இதே கொஞ்சம் இங்க பார்த்து சொல்லு பார்க்கலாம்" என்கவும் "எனக்கென்ன பயமா...ஆஆ அம்மா" என்றவள் வாயை கப்பென இறுக்கிப் பொத்தினாள் எதிரில் உக்கிரமாக நிற்கும் ஜனனியை கண்டு.

"ஆ ஆ அம்மா இல்லடி அது அ அம்மா, எங்க சொல்லு" நமுட்டுச் சிரிப்புடன் எடுத்துக் கொடுத்தாள் ஜோ.

'வன்மக் குடோன்' வாயை மூடி உதட்டை சுழித்து மனதுக்குள்ளாக வசை பாடியவள் கண்களால் அவளை உறுத்து விழித்துக் கொண்டே அம்மாவின் புறம் திரும்பி "இவ கிடக்கிறா மீ லூசி. நான் என்ன அப்பிடியா சொல்ல வந்தேன். என் ரேன்ஜே வேற மாரி..." என்றவளை இடைமறித்து "வேற வேற வேற மாரி" ஜோ எடுத்துக் குடுக்க,

"நான் கேட்டேனா"

"நீ கேக்கலேன்னாலும் நான் சொல்லுவேனாக்கும்" என்க,

ஓங்கி அவள் காலை மிதித்து அம்மாவிடம் திரும்பி "அ..அதத்தான்மா நானும் சொல்லலாம் வந்தேன். என் ரேன்ஜே வேற, நான்லாம் அம்மாப்பா பாக்கிறவனத்தான் கட்டினா கட்டுவேன். அதுவும் எனக்குன்னு ஒரு அடையாளத்தோடன்னு சொல்லலாம்னு வந்தேன்... அதுக்குள்ள இந்த பக்கி வார்த்தையை ட்விஸ்ட் பண்ணிடிச்சு"

சத்தியம் செய்யாத குறையாக கண்களை படபடவென அடித்து அப்பாவியாக மொழிந்தவளை 'உன்னை எனக்கு தெரியாதா' என்று முறைப்புடன் பார்க்கும் அம்மாவை பார்த்தவளுக்கு அப்போது தான் ஞாபகம் வந்தது. அவள் அம்மா ஜனனி ஜாக்கிக்கு ஒன்று விட்ட சித்தியின் மூன்று விட்ட தங்கையின் ஐந்து விட்ட மகளின் மகளாயிற்றே! அவர் வாயும் கையும் அட் அ டைமில் வேலை செய்யுமே.

'நோன்பும் மௌன விரதம் இருக்காங்க... அடிதடில்லாம் பண்ண மாட்டாங்க. நல்லவேளை தப்பிச்சேன். இன்னைக்குனு பார்த்து பௌர்ணமி ஞாயத்து கிழமை வந்ததெல்லாம் வரம்யா' ஆசுவாசமாக நீண்ட நெடிய மூச்சை இழுத்து விட்டு அடுத்த நொடி சிட்டாக பறந்திருந்தாள்.

அவளைத் தொடர்ந்து ஜோவும் 'ஓல்டீஸ் அவங்களுக்குள்ள பேசிக்க போறாங்களா இருக்கும். நான் எதுக்காம் இங்க சிவபூசையில் கரடியாட்டம்' தானும் அங்கிருந்து ஓட்டமெடுத்தவள் செல்போனுடன் அறைக்குள் ஐக்கியமாகிட

மகள்கள் சென்ற திக்கில் அவர்கள் குறும்பில் தன்னை மறந்து லயித்திருக்கும் ஆத்ரேயன் முன் தன் பருத்த உடலை நகர்த்தி மூச்சு வாங்க வந்து நின்ற நாயகி

"என்னடா நடக்கிது இங்க? அப்பாரும் மகனும் என்னத்தை நினைச்சு என்ன பேசிக்கிட்டிருக்கிறீங்க" தந்தை மகன் இருவரையும் மாறி மாறி பார்த்தபடி கேட்டவரின் குரலிலோ அடக்கப்பட்ட ஆத்திரம் அப்பட்டமாக தெறித்தது.

அவை கோபச்சிகப்புகளாக உருமாறி முகமெங்கும் கடுகடுக்க "ம்மா" என்று வந்த மகனின் கையை தட்டி விட்டவர் உள்ளிருந்து புறுபுறுக்கும் கோபம் குறையாமல் கணவனின் அருகே சென்று இறுகிப் போய் அமர்ந்திருக்கும் கிழவரிடமும் "என்ன பேசுறீங்க நீங்க? என் பேரனுக்கிட்ட என்ன குறையக்கண்டீருன்னு இந்த அடங்காபிடாரியை போய் பொண்ணு கேக்குறீர்" பல்லைக் கடித்து எகிறினார்.

விட்டால் அம்மிக்கல்லில் விட்டு ஆட்டிருப்பாராயிருக்கும்.

விழிகளை உருட்டி கண்களாலே கணவனை எரிக்கும் கிழவியின் பார்வையை தவிர்த்து பதிலின்றி அழுத்தமாக அமர்ந்திருக்கும் சொக்கலிங்கத்தை பார்க்க பார்க்க நாயகியின் கோபமோ இதோ அதோவென அணையுடைக்க காத்திருந்து கரையை கடக்க,

வேகவேகமாக மூச்சை இழுத்து விட்டு நாயகி "இந்த அக்கிரமத்தை கேக்க ஆளில்லையா" தலையில் அடித்துக் கொண்டே ஒப்பாரி வைக்க ஆயத்தமாகியவரை அனைவரும் செய்வதறியாமல் பார்க்க சொக்கலிங்கத்தின் "நாயகி" என்ற அதட்டலோ "ம்மா!!" என்னும் ஆத்ரேயனின் கோபமோ கூட அவரை ஆற்றுப்படுத்தவில்லை.

என் பேரனுக்கு போயும் போயும் என்னை மதிக்காத பௌர்ணமியை பெண் கேட்டு விட்டாரே இந்த மனுஷன் என்ற ஒன்றிலே மனது ஆறமறுத்து சூரியனை சுற்றி வரும் கோள்களாக அதிலே நின்றது.

அது தந்த சீற்றத்தில் "குரல் உசத்திறயலோ அப்பாரும் மகனும்? இந்தாருங்க இந்த பேச்சை இத்தோட நிப்பாட்டுங்க. அதெல்லாம் என் பேரனுக்கு குணத்துல தங்கமா ஒருத்தியை பார்த்து நான் கட்டிவச்சிக்கிடுதேன்" என்று நாயகி பேசப் பேச அதுவரை அமைதியாக இருந்த கலாவின் விழிகளோ அடிக்கடி தவிப்பாக மகனின் புறம் தொட்டு மீள இறுகிப் போய் நிற்கும் ஷேஷாதித்யனின் உணர்வுகளை இதுதான் என்று என்றும் போல் அவளால் வரையறுக்க முடியவில்லை.

அழுத்தமும் ஷேஷாதித்யனும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் என்று கலாவே நாயகியிடம் எப்போதும் அலுத்துக் கொள்வதுண்டு.

தன் உணர்வுகளை அவனாக வாய் விட்டு சொன்னால் அன்றி நாமாக அறிய முற்படுவது என்பது நடக்காத காரியம் தான். இப்போதும் அதுவே நிகழ 'ஏன்தான் இப்பிடி இருக்கானோ இந்த பையன்' மனதுக்குள் கோபமாக மகனை வைத கலா 'ஷேஷா' மெல்ல வாயசைத்தார்.

அது கேட்டது போல் சரியாக நிமிர்ந்து அம்மாவை ஏறிட்டு ஒரு பார்வை பார்த்தவன் கலாவின் கெஞ்சுதல் பாவனையில் புருவம் சுழித்து அழுத்தமான பார்வையொன்றுடன் மீண்டும் திரும்பிக் கொள்ள அதுவே சொல்லாமல் சொல்லியது அவன் கொண்டிருக்கும் சீற்றத்தை.

செய்வதறியாமல் கைகளைப் பிசைந்த கலா அதற்குமேல் நாயகியை பேசவிடுவது உசிதமல்ல இங்கே ஓர் பிரளயம் வெடிக்கும் என்பதை உணர்ந்தவளாய் "ம்மா, அவங்கதான் பேசுறாங்கன்னா நீயும் எதுக்கு தேவையில்லாம பேசிக்கிட்டு" நாயகியின் தோளை அழுந்தப் பற்றி அடக்கப் பார்க்க,

அவரோ "நீ பேசாம இரு கலா. இது எனக்கும் எம் புருஷனுக்கும் மகனுக்கும் இடையில் நடக்கிற சமாச்சாரம்." மகளை அடக்கியவர் இன்னும் தீராத ஆத்திரத்தில் பல்லைக் கடித்து மூச்சை இழுத்து விட,

மேலும் வார்த்தை தடிப்பதற்குள் "ம்மா, நீ எதுக்கு உணர்ச்சிவசப்பட்டு உடம்பை கெடுத்துக்கிற? இன்னாருக்கு இன்னாருன்னு மேல அவன் எழுதி வசசிருக்கானே. என் மகனுக்கு என்ன ப்ராப்தமோ அதுப்படி நடக்கட்டும். வீணா பேசி நீ வேற ஏன்மா மனஸ்தாபத்தை இழுத்து விட்டுக்கிற" என்கும் கலாவை சேலை தலைப்பால் மூக்கை உறிஞ்சி கொண்டே பார்த்த நாயகி "பார்த்தியாடா என் பொண்ணோட பெருந்தன்மையை... அவ மகனைக் கட்டிக்கிட உம்மகளுக்கு கசக்குதாக்கும்?" நொடித்தார்.

"ப்ச். அம்மா..." என்று வந்த ஆத்ரேயனிடம் முகம் திருப்பிய நாயகி சொக்கலிங்கத்துக்கு மறுபக்கம் சென்று விறைப்பாக அமர்ந்தார்.

அவரருகில் சிறிது இடைவெளி விட்டு அமர்ந்த ஆத்ரேயன் தங்கை கலாவையும் ஒரு பார்வை பார்த்துக்கொண்டான்.

"நான் சொன்னதில் இப்பவும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லமா. என் பொண்ணுக்கு என்ன ஆசையோ எது விருப்பமோ அதுதான் எனக்கும். அவ விருப்பத்துக்கோ ஆசைக்கோ குறுக்கே என்னால என்றைக்கும் நிற்க முடியாதுமா. அதுக்காக என் மருமகனை எனக்கு பிடிக்காதுன்னோ அவன்கிட்ட குறைன்னோ அர்த்தமாகிடாது. சின்ன வயசில் இருந்தே ஷேஷாக்கும் பௌர்ணமிக்கும் ஒத்துபோறதில்லை. இப்பவும் ரெண்டு பேருமே ஒருத்தர்கிட்ட ஒருத்தர் முகம் குடுத்து பேசியும் நீங்களோ நானோ பார்த்ததுமில்லை. அவங்களுக்குள்ள கல்யாணம்னு ஒன்னு நடந்தால் புரிதல்ங்கிறது இல்லாமல் பிரிவில் தான் வந்து நிற்கும். இது உங்களுக்கும் தானுங்கப்பா. பெரியவங்க நம்ம பிடிவாதத்துக்காக வாழ வேண்டிய ரெண்டு பேரை பிடித்தமில்லாத உறவுக்குள் தள்ளி வீணா அவங்க வாழ்க்கையை நாமே சிக்கலாக்கி அழிக்க வேணாமே. இதுக்காகத்தான் நான் யோசிக்கிறதும்." நாயகியின் கையை தனக்குள் அடக்கி இருந்தவன் மெல்லக் கூறி "யோசிங்ம்மா" என்றான்.

அது புரிந்தாலும் வீம்புக்கு ஒத்துக்கொள்ள மனமின்றி அரை குறையாக தலையாட்டியவர் முகமே நாயகி முழுமனதாக சமாதானமாகவில்லை என்றது.

சலிப்பாக தலையசைத்த ஆத்ரேயனுக்கும் கோபம் துளிர் விட்டது, அவன் மனநிலை புரிந்தது போல் தன் முகம் காட்டி எதிரே நிற்கும் மனைவியின் தரிசனத்தால் மெல்ல இளகியவனுக்கு ஜனனி கண்ணைக் காட்டினாள்.

நெடுமூச்சுடன் எழுந்து கொண்ட ஆத்ரேயன் விழிகள் சொக்கலிங்கத்தை ஒரு முறை தொட்டு அவனை பாராமல் தவிர்க்கும் அவரின் வறட்டுப் பிடிவாதத்தில் தனக்குள் சிரித்துக் கொண்டே மனைவியின் பார்வையை தொடர்ந்தவனுக்கு அப்போது தான் அங்கு இறுகிப்போய் அமர்ந்திருக்கும் தங்கை கணவன் மற்றும் அவனருகிலே மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு இறுக்கத்தோடு அழுத்தமாக நிற்கும் ஷேஷாதித்யனும் அங்கு இருப்பதே புத்திக்கு உரைத்தது.

'சொல்லிருக்கலாமே ஜானு' அவன் பார்வை ஜனனியை தொட, அதை ஏறிட்டவளின் விழிகள் சொல்லும் பாஷை அவனுக்கு புரியாமலில்லையே. சங்கடமாக நெற்றியை வருடிக்கொண்டே "ஏகே" என்றவாறு தன்னருகே நெருங்கியவனை ஏறிட்டு பார்த்த ஆதித்ய கரிகாலன் முகத்திலோ அப்பட்டமான பிடித்தமின்மை அதிருப்தியாக நிலவியது.

கோபமாய் இருக்கையிலிருந்து அவன் எழ முற்பட்ட போது அவனருகில் நிற்கும் ஷேஷாதித்யனின் கரமொன்று உயர்ந்து தந்தையின் தோளை அழுத்தி பற்றியது எழ வேண்டாம் என்பதாக.

"ஷேஷா" கேள்வியாக தன்னை அழைக்கும் தந்தைக்கு பதில் சொல்லாமல் "எமர்ஜென்சி கிளம்பிறேன்" தந்தியாக இரு வரியில் அவரின் செல்போனுக்கு தகவல் அனுப்பியவன் சொல்லிக்கொள்ளாமலே தன் மாமன் வீட்டில் இருந்து வேகமாக புறப்பட்டிருந்தான் இதுதானென்று வரையறுக்க முடியாத உணர்வுகளின் குவியலாய்.

ஆத்ரேயனின் "ஷேஷா" என்றழைப்போ பின்னே வரமுயன்றவனையோ ஷேஷாதித்யன் கண்டுகொண்டதாக காட்டிக்கொள்ளவில்லை.

அவன் ஆடி கார் புறப்பட்டு செல்லும் வேகத்தில் கவலை ரேகைகள் அப்பட்டமாக முகத்தில் கோடிழுக்க, தவறிழைத்தவனாக பார்த்து நிற்கும் நண்பனின் முகத்தை கண்டதும் அதுவரை இழுத்துப்பிடித்த கோபத்தை தொடர முடியாமல் சட்டென எழுந்து வந்த ஆதித்ய கரிகாலன் ஆத்ரேயனின் தோளைச் சுற்றி கைகளை போட்டுக்கொண்டவனோ ஆறுதலாக அழுத்தி விடுவித்தான் "எம்பாரஸிங்கா இருக்கும். இத்தனை பேர் முன்னாடி தன் வாழ்க்கையை அவங்கவங்க இஷ்டத்துக்கு கையில் எடுத்திக்கிட்டாங்களேன்னு டென்ஷனாகி இருப்பான். விட்டுப்புடி எங்க போய்ட போறான்" என்றான் மகனை அறிந்தவனாக.

சட்டென அதுவரை இழுத்துப்பிடித்து அடக்கி வைத்திருந்த மூச்சை வெளியேற்றிய ஆத்ரேயனுக்கு அப்போது தான் சுவாசம் சீராகியது.

"என்னவோ ஒரு வேகம்... பழசெல்லாம் ஒரு நிமிஷம் குறும்படமா மனசுல ஓடி மறைஞ்சதும் ஓவர் எமோஷனலாகி மறந்திட்டேன்டா நீயோ அவனோ இங்கே நிற்கிறதை. அப்பா திடீர்னு இந்த பேச்சை தொடங்கவும் எப்பிடி ரியாக்ட் பண்றதுன்னு தெரியாம சொதப்பிட்டேன் போல" என்றவன் குரலே அவன் அழுத்தத்தை சொல்லியது.

அழுந்த தலையை கோதிக்கொண்டவனின் தோள்களை தட்டிக் குடுத்து ஆதித்ய கரிகாலன் "எனக்கு உன்னை தெரியாதாடா ஆதி?" என்க, அவன் குரலே அவர்களுக்கு இடையிலான நட்பின் ஆழத்தை சொல்ல சற்றே தெளிந்த ஆத்ரேயனிடம் "லீவ் இட். கொஞ்ச நாளைக்கு இந்த பேச்சை ஆறப்போடு. பௌர்ணமி விருப்படி அவ மேற்படிப்புக்கு தேவையானது என்னென்னு பார்த்து அதுக்கான ஏற்பாட்டை கவனி. இப்போ இல்லென்னாலும் போகப் போக பெரியவங்க அவங்களாவே புரிஞ்சிப்பாங்க இல்ல நாம புரிய வைக்கலாம்." என்க,

தலையாட்டிய ஆத்ரேயனிடம் விடைபெற்று ஆதித்ய கரிகாலன் கலாவுடன் அங்கிருந்து விடைபெற "கலா" மன்னிப்பாக அழைக்கும் ஆத்ரேயனை மறுத்து தலையசைத்தாள்.

"நீ மன்னிப்பு கேக்கும் அளவுக்கு இப்போ எதுவும் நடந்திடலைண்ணா. அம்மாகிட்ட நான் சொல்லி புரியவச்சிக்கிறேன்" என்று அவர்களிடம் தலையசைப்பில் விடைபெற்று கிளம்பியிருக்க, புயலடித்து ஓய்ந்ததைப் போல் லிங்க நாதன் இல்லமோ ஆழமான மௌனத்தில் அமிழ்ந்திருந்தது என்றைக்கும் இல்லாத வகையில்.

பெரியவர்களின் அறையில் இருந்து வெளியேறிய ஜனனியை தொடர்ந்த ஆத்ரேயன் அறைக்குள் நுழைந்ததும் தங்கள் ஆஸ்தான இடமான அவர்களின் அறையை ஒட்டி விசாலமாக கட்டியிருந்த வெட்ட வெளியான பகுதியில் பூக்களும் இலைகளும் கொடிகளுமாக ஜனனியின் கை வண்ணத்தில் அழகிய தோட்டமாக உருமாறி பராமரிக்கப்படும் அறைக்குள் நுழைந்து நீள்விரிக்கையில் சரிந்தமர, ஜனனி அவன் அருகில் சிறிது இடைவெளி விட்டு அமர்ந்தாள்.

அது அவர்களுக்கேயான அறை, அங்கு மகள்களுக்கு கூட அனுமதியில்லை. அவர்களின் காதலை காமத்தை ஆசையை அரவணைப்பை யாசிப்பை நேசிப்பை அத்தனைக்கும் மௌன சாட்சியாய் அவர்களோடு உடனிருக்கும் அறை.

"அப்பிடி என்னதான்பா இருக்கு உள்ளே பார்க்கக்கூட விடமாட்றீங்க" செல்லமாக சிணுங்கி ஆர்வமுள்ள குழந்தையாக அடம்பிடிக்கும் பௌர்ணமி ஜோ இருவரையும் ஆத்ரேயனின் அழகான புன்னகையே சமாளித்து விடுவதால் எப்போதுமே அவர்களுக்கு அந்த அறையின் மீது ஒரு கண்.

"நானும் இதே மாதிரி ஒரு ரூம் செட்டப் போட்டு உங்கள உள்ளே விடுறேனா இல்லையா பாருங்கபா" கோபமாக சொல்லிக்கொண்டு மூக்கை விடைத்து செல்லும் மகள்களின் செல்லக்கோபத்தை பல சமயங்களில் அவன் ரசித்துச் சிரித்ததுண்டு.

இப்போதும் சிரித்துக் கொண்டான்...

கொத்து கொத்தாக பூத்துக்குலுங்கும் கலவையான பூக்களின் வாசத்தோடு போட்டி போட்டு மனையாளின் வாசம் சுவாசம் தொட்டது.

மகள்களின் நினைவில் இருந்து கலைந்தவனது கவனம் மனைவியை தொட்டது.

அவளுக்கேயான பிரத்தியேக நறுமணத்தை ஆழ்ந்து நுகர்ந்தவனின் அழுத்தங்கள் ஒவ்வொன்றாக அவனை விட்டு பறந்து கொண்டிருந்தது.

மெல்ல சரிந்து மனையாளை இடையோடு கட்டிக்கொண்டு அவள் மடியில் சேயாகி துயிலும் கணவனின் கேசத்தில் விரல் நுழைத்து தலைகோதி தாயாக அரவணைத்துக் கொண்ட ஜனனி ஆத்ரேயனின் அகன்ற நெற்றியில் இதழ் பதிக்க, கண்களை மூடிக்கொண்டவனின் விரல்களோ அவளின் விரல்களை தனக்குள் அழுத்தமாய் கோர்த்துக் கொண்டது.

"கோபமா ஜானு? பௌர்ணமி கேட்டு நான் மறுக்க எதுவும் இல்லையே... இப்போவும் அவ ஆசைப்பட்டு கேட்டதை மறுக்க முடியலை." என்பவனுக்கு தான் மகளின் பிரிவு அதிகம் துயரத்தை கொடுக்கும் என்பதை ஜனனி அறியாதவளில்லையே.

அவள் விரல்கள் கணவனின் சுழித்திருக்கும் புருவங்களை இதமாக நீவிக்குடுக்க அதன் இதத்தில் லயித்து கண்களைத் திறந்து மனைவியை ஏறிட்டுப் பார்த்தவனின் விழிகளுள் கூர்ந்தவள் "நீங்க இருந்திடுவீங்களா அத்தான் அவளை பார்க்காமல் பேசாமல்" என்று கேட்கும் அவள் விழிகளின் கேள்விக்கு அவன் மௌனமே பதிலானது.

"வேணாம்னு நான் சொன்னா போக மாட்டா நம்ம பொண்ணு. சொல்லட்டுமா..." ஆத்ரேயனின் மௌனத்தை தாங்கமாட்டாத அவன் ஜானு கேட்க,

சில நிமிடங்கள் அமைதியின் பின் ஏதோ யோசனையில் இருப்பவனாக "பழகனும் பழகிக்கனும். பழகத்தான் வேணுல்லையா ஜானு" என்றான் கேள்வியாக தன்னைப் பார்க்கும் ஜனனியின் பார்வை தவிர்த்து ஆத்ரேயன் மகளின் எதிர்காலம் குறித்து யோசித்தவனாக.

இவர்கள் யாரைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்களோ அவள் அன்றைய இரவு அத்தனை நாட்கள் மனதில் அடைத்து வைத்து அவஸ்தைபட்டதை கொட்டிய நிம்மதியில் கட்டிலில் மல்லாக்க விழுந்த பௌர்ணமி கைகளுக்குள் பொத்தி வைத்திருக்கும் பொருளை மற்ற கையால் வருடி கொடுத்தாள்.

இதமான உணர்வு உள்ளுக்குள் சிறகவிழ்த்தது...

பரவசத்தில் பௌர்ணமியின் வதனம் தன் பேருக்கெற்றது போல் வெளிச்சமாகி திளைத்த கணத்தில் கதவு பட்டென திறக்கும் சத்தத்தில் திடுக்கிட்டு கலைந்தாள்.

தன் கையிலிருக்கும் பொருளை தலகாணிக்கு அடியில் பதட்டத்துடன் மறைப்பதற்குள் அறைக்குள் வந்த ஜோ அதைக் கண்டவள் "ஏய் இது அதானே... அவன் தந்தது, எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. நான் அன்னைக்கு கேட்டப்போ தொலைஞ்சுடுச்சுன்னு சொன்னேல்லடி. பொய் சொன்னியா நீ?" தன் விழிகளை அகல விரித்து புருவங்களை இடுக்கியவள் குழப்பத்துடன் கேட்டவாறு பாய்ந்து தன்னருகே வர முயன்றவளில் பௌர்ணமி பில்லோவை விசிறியடித்தாள்.

லாவகமாக அதை கேட்ச் பிடித்து மார்போடு பில்லோவை கட்டிக்கொண்டு ஜோ குறுகுறுவென அவளை நோக்க,

உள்ளுக்குள் அரும்பும் படபடப்பை மறைத்துக்கொண்டவளோ "அது அதுவும் இல்லை இதுவும் இல்லை. கெக்கபெக்கேன்னு கத்தாம போடி முதல்ல ரூமை விட்டு வாயாடி" எகிற

"சரியில்லையே... என்னவோ மறைக்கிற நீ. இல்லாம டென்ஷனாக மாட்டியே" சொல்லிக்கொண்டே கதவு வரை சென்ற ஜோ மீண்டும் உள்ளே வந்தவள் "அவன் பேரு கூட என்னவோ..." யோசித்து நெற்றியில் ஓட்டை போட்டும் "ப்ச் சட்டுனு ஞாபகம் வரமாட்டேங்குது" என்றவள் "ஆனா பார்க்கிறதுக்கு நல்லா வெள்ளாவியில் வெச்சு வெளுத்த வெள்ளை பன்னி மாதிரி இருப்பான்ல. அவன்தானே" என்றவளோ கதவை பட்டென அடித்து சாற்றி நாலுகால் பாய்ச்சலில் வெளியேறியிருந்தாள் பின்னால் கொலைவெறியோடு அடிக்க பாய்ந்து வரும் பௌர்ணமி என்னும் ராட்சஸியிடமிருந்து தப்பிக்கும் பொருட்டு.

'இப்போ தப்பிச்சிட்ட மாட்டும்போது இருக்குடி'

மூடியிருக்கும் கதவை வெறித்துப் பார்த்தது பார்த்தபடி நின்ற பௌர்ணமியின் உதடுகள் மெல்ல விரிய இதழ்கள் அழகாக பிரிந்து அந்தப் பேரை உச்சரித்து கொண்டது உள்ளத்தில் தேக்கி வைத்திருக்கும் மொத்த நேசத்தையும் சேர்த்து.

யாரவனோ எங்கிருக்கிறானோ இந்தப் பௌர்ணமியின் உள்ளம் தீண்டிய கள்வனவன்...?!!

கருத்துகளுக்கு...

 
Last edited:

NNK33

Moderator
ranveer-singh1659078424-0.jpg

289672914_5339146739479219_3679676071467798927_n.jpg


அத்தியாயம் 05

ஷேஷாதித்யனின் ஆடி கார் வீட்டினுள் நுழைய லேசாக மழை தூறலாக ஆரம்பித்து வலுக்க, வாசலில் காத்திருந்த மாணிக்கம் அவன் வந்ததும் கேட்டை திறந்து பிடித்தவர் கார் உள்ளே வரவும் மூடச்சென்றார்.

ஓங்கி உயர்ந்த மதில்சுவர்களுக்குள் அரணாக சுற்றிலும் தென்னை மரங்களும் கொன்றை மரங்களும் நிழல்குடையாக உயர்ந்து வளர்ந்திருக்க, பார்த்துப் பார்த்து தேர்வு செய்த உயர் சாதி சலவைக்கற்கள் பதிக்கப்பட்ட நடைபாதையில் இருபுறமும் புற்தரைகள் சீராக பராமரிக்கப்பட அதனிடை இடையில் மணக்கும் பூக்கள் ஒரு ஒழுங்கில் பூத்துக்குலுங்கி செழித்திருந்தது.

மழைக்கு அவை மேலும் ஜோராக தெரிய

"மாணிக் அங்கிள், காரை பார்க் பண்ணிடுங்க" டையை தளர்த்தியபடி சோம்பலாக காரிலிருந்து இறங்கியவனோ எப்போதாவது இதுபோல் அதீத களைப்பில் வந்தால் அவர் அந்தப் பணியை செய்வது வழக்கம் தான் என்பதால் வாயிற்கதவை பூட்டிக்கொண்டு வந்தவரோ "நான் பார்த்துக்கிறேன் தம்பி. நீங்க உள்ளார போங்க மழை வலுக்குது பாருங்க" என்றவாறே ஓடி வந்து காரை ரிவர்ஸில் எடுத்து அதற்குரிய இடத்தில் நிறுத்தச் சென்றார்.

இரவு விளக்குகள் மட்டும் அங்கொன்றும் இங்கொன்றுமாக உயிர் நீத்துக் கொண்டிருக்க இடது கை உயர்த்தி நேரத்தைப் பார்த்துக் கொண்டே ஓசை எழுப்பாமல் தன்னிடமிருக்கும் சாவி கொண்டு கதவைத் திறந்து சேர்ட்டின் முதலிரண்டு பட்டன்களை அவிழ்த்தபடி உள்ளே வந்த ஷேஷாதித்யனோ அங்கு சோஃபாவில் ஒருக்களித்து டீவி பார்த்தபடியே அசதியில் உறங்கி போயிருக்கும் கலாவை கண்டு நடையை நிறுத்தியவன் புருவத்தை சுழித்து முறைப்பாக பார்த்தான்.

பல தடவை அவன் படித்துப் படித்து சொல்லியும் கேட்க மறுக்கும் தாயின் மீது ஷேஷாதித்யனுக்கு கோபமாக வந்தது.

சரியாக அதேநேரம் லேசாக கண்ணைக் கசக்கிக்கொண்டே எதிரில் மகனைக் கண்டு வேகமாக எழுந்து கொண்ட கலாவை "ப்ச், எத்தனை தடவை தான்மா சொல்றது. நான் என்ன சின்னப்பிள்ளயா எனக்காக உங்க தூக்கத்தை கெடுத்து காத்திருக்க..." தலையை அழுந்த கோதிக் கொண்டே கோபமாக வார்த்தையால் விளாசியவன் சிறிது நேரம் எடுத்து தன்னை சமன்படுத்த முயல,

முகத்தை ஒரு பக்கமாக சரித்து தூக்கம் முற்றிலும் கலையாத முகத்துடன் காதைப் பற்றி மன்னிப்பு கோரும் தாயின் செய்கையில் அவன் கோபம் தணியத்தான் செய்தது. இருந்தும் முகத்தில் இளக்கத்தை காட்டாமல் "ரெப்ரெஷ்ஷாகிட்டு வர்றேன்" முணுமுணுப்புடன் வேக எட்டுக்களில் படிகளை கடந்து தனதறைக்குள் நுழைய உள்ளிருக்கும் மல்லிப்பந்தலோ என்றும் போல் தன் வாசத்தால் அவனை சுண்டியிழுத்தது.

முழுமையாக ஒரு நிமிடம் எடுத்து கண்களை மூடி மலர்களின் மணத்தை நாசிக்குள் நிரப்பிக்கொண்டு 'நீ கூப்பிட்டு நான் வரணுமா எனக்காக நீ வரமாட்டியோ' மனதோடு கேட்டுக்கொண்டான். அது மல்லிப்பந்தலிடமா மனதோடு உள்ளவளிடமா என்று அவன் மட்டுமே அறிவான்.

வலுக்கட்டாயமாக அந்தப் பக்கம் நகரத்துடிக்கும் கால்களை இழுத்து குளியலறைக்குள் புகுந்து ஷவரின் அடியில் நின்றவனை குளிர்ந்த நீர் சொட்டு சொட்டாக வருடிச் சென்றது மனதின் புழுக்கத்திற்கு இதமாக.

குளித்து இரவுடைக்கு மாறியவன் தலையை உலர்த்திக் கொண்டே கீழிறங்கி வர சாப்பாட்டு மேஜையில் இரவுணவை தயாராக எடுத்து வைத்திருந்த கலா மகன் அமர்ந்ததும் தானும் எதிரில் அமர்ந்து கொண்டார்.

"என்னவாம் ஸ்பெஷல்? எதுக்கு இத்தனை ஐட்டம்ஸ்" என்ற ஷேஷாதித்யன் உணவு மேஜையில் வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும் உணவு வகைகளை புருவம் சுருக்க பார்க்க, இரவில் இலகுவில் செரிக்கும் உணவுகளாக உட்கொள்வது அவன் வழக்கம்.

கைகள் அதற்கேற்ப தானே அளவாக பரிமாறிக் கொள்ள விழிகளால் மௌனம் காக்கும் கலாவை கேள்வியாக துளைத்தான்.

சற்று நேரம் அமைதிக்கு பின் கலாவே "பௌர்ணமி நாளைக்கு கிளம்பிறாடா. அத்தைன்னு நானொருத்தி இருந்தும் வெளிநாடு போய் படிக்க போறவளுக்கு ஒரு வாய் சாப்பாடு போடலைனா நல்லாருக்காதே ஷேஷா. இன்னைக்கு அங்க நம்ம சாப்பாடு தான். வீட்டுக்கே அழைக்கலாம்னு தான் இருந்தோம். நீ என்ன சொல்றியோன்னு தான்..." என்றவரின் இழுவையில் அவன் தேகம் இறுகியது.

காட்டிக்கொள்ளாமல் "இதில் நான் சொல்றதுக்கு என்ன இருக்கு" புரியாதவனாக கேட்க,

மகனை குழப்பமாக பார்த்த கலாவின் திகைப்பை அவர் முகமே அப்பட்டமாக காட்டிக்குடுத்தது.

அன்றைய நாளின் பேச்சுவார்த்தையை அதன் பின் தொடங்காமல் கவனமாக அனைவரும் தவிர்த்துக் கொண்டிருந்தனர். அனைவராலும் தவிர்க்கப்படுவதை இன்று நாம்தான் தேவையில்லாமல் தொடக்கி விட்டோமோ என்று கலாவே யோசிக்க ஆரம்பிக்க அவர் வாய் தானாக மகனுக்கு மறுமொழி கூறியது.

"அது... அன்றைக்கு தாத்தா பாட்டி மாமா பேசினதில் நீ ஏதும் வருத்தப்பட்டிருப்பியோ... வீணா அவங்களைப் கூப்பிட்டு எதுக்கு மனசங்கடம்னு தான் கூப்பிடல. உனக்கு எ...எதுவும் வருத்தம் இல்லையே ஷேஷா" என்றவருக்கு அவன் பதில் அளிக்கவில்லை.

ஒரு பார்வை பார்த்தவன் "போதும்" என்றபடியே கைகளைக் கழுவிக்கொண்டு எழுந்து சென்று விட மகன் செல்லும் திக்கைப் பார்த்திருக்கும் கலாவை வெகு நேரம் சென்றும் மனைவியை காணாமல் தேடி வந்த ஆதித்ய கரிகாலன் தான் உலுக்கி நிகழ்வுக்கு கொண்டுவர "என்னாச்சி கலா" என்றவனுக்கும் "ஷேஷா அவன் மனசில என்னதான் நினைச்சிருக்கான்னு ஒன்னும் புரிய மாட்டுதுத்தான்." கலக்கமாகக் கூறினாள்.

மெல்ல மனைவியை அறை நோக்கி நகர்த்திச் சென்றவன் கட்டிலில் அமர்ந்ததும் தன் தோள் சாய்ந்தவளின் முதுகை மெதுவாக தடவிக் கொடுத்து "அவன் இன்னும் சின்ன பையனில்லை கலா. தான் என்ன செய்றோம்? தனக்கு எது தேவை, தேவையில்லைனு அவனுக்கு தெரியும். தேவைப்பட்டால் அவனே நமக்கிட்ட வருவான் விட்டுப்புடி" என்க

மொழி புரியாத குழந்தையாக சில நொடிகள் முழித்தவள் "சொல்லத் தெரியலை. மனசுல என்னவோ இனம்புரியாத கலக்கமா படுது. யாருக்கும் எதுவும் ஆகாமல் நடக்கிறதெல்லாம் நல்லபடியா நடந்தாச்சரி" என்றவளை ஆதித்ய கரிகாலன் இதமாக தட்டிக்குடுக்க, கணவனின் கையணைவில் சில நிமிடங்களிலே கலா அயர்ந்து உறங்கிருக்க ஆதித்ய கரிகாலன் தான் மனைவி சொன்னதைக் கேட்டு தூக்கம் வராமல் நீண்ட நேரம் முழித்திருந்தான், தான் ஒரு முறை மகனிடம் இதைக் குறித்து பேச வேண்டும் என்ற எண்ணத்தோடு.

மறுநாள் மகனிடம் பேச அவன் தனக்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்க, "கிளம்பலாம்த்தான்" என்றவாறு இரவின் கலக்கம் துளியுமற்று குளித்து தயாராகி ஃப்ரெஷ்ஷாக வந்து நிற்கும் மனைவியை பார்த்த போதே இன்று பௌர்ணமி வெளிநாடு கிளம்புகிறாள் என்பதே ஞாபகம் வர ஷேஷாதித்யனிடம் பேச நினைத்தது தள்ளிப்போனது.

வீட்டில் சாதாரணமாக அணியும் உடையில் இருந்த கரிகாலன் "வந்திர்றேன்" உடைமாற்ற எழுந்து செல்ல, மெல்ல படியேறினார் கலா மகனிடம் சொல்லிக் கொள்ள.

அப்போது தான் மேல் வேலைகளை முடித்து கையில் துடைப்பம், மாப்பர் வாளி சகிதம் கீழிறங்கி வந்து கொண்டிருந்த செல்வி ராதாவின் சிபாரிசின் பேரில் அங்கு வேலைக்கு இருப்பவள். கலாவைக் கண்டவளோ "அய்யா இல்லீங்ம்மா. அப்போவே கிளம்பிட்டாரே" என்றாள் அவர் எதற்காக வருகிறார் என்பதை ஊகித்தவளாக சொல்ல,

நடையை நிறுத்திய கலா அவளை கேள்வியாக பார்க்கவும் "ஆமாங்மா, நான் கிளம்பிறேன் மேலே என்னோடதை தவிர மத்த ரூமையெல்லாம் சுத்தம் பண்ணிடுன்னு சொல்லிட்டு போயி ஒரு மணி நேரம் சொச்சம் இருக்கும்மா." என்கவும் யோசனையுடன் "சரி நீ போய் வேலையை பாரு" என்றபடி மீண்டும் கீழிறங்கிய கலாவை உடைமாற்றி வந்த கரிகாலன் "என்ன கலா" என கேட்க,

"ஷேஷா வெளியே கிளம்பிட்டானாம். நம்மோட வருவான்னு நினைச்சேன் எங்கே போனான்னு தெரியலை சொல்லிட்டும் போகலையே இந்தப் பையன்" எனவும்

"நேத்து நாம போகலாம்னு அவன்ட்ட சொன்னியா கலா? வருவேன் இல்ல வேலை ஏதாச்சும் இருக்குன்னு சொன்னானா"

"நான் எங்க போகன்னு சொல்ல... போகலாம்னு கேக்க வரதுக்குள்ள பேச்சு திசைமாறி போச்சுதே. அவன் பாட்டுக்கு சாப்ட்டான், கையை கழுவிட்டு போதும்னு போய்ட்டான்" என்றாள் நேற்றைய உரையாடலை ஞாபகப்படுத்தி.

"சரி விடு, நாம கிளம்புவோம். அவன் அப்புறம் வருவானா இருக்கும்" என்றவர் வெளியே வர மாணிக்கம் காரை தயாராக வைத்திருந்தார். இருவரும் பின் புறம் ஏறிக்கொள்ள கார் ஆத்ரேயனின் வீடு நோக்கி புறப்பட்டது.

காலையிலே ஜனனி வந்து பாட்டு பாடி சென்றிருக்க "இன்னிக்கும் திட்டனுமா மீ? கொஞ்சமும் பாசமே இல்லை உங்களுக்கு வரவர என்மேல..." குளிக்க ஆயத்தமாகிய பௌர்ணமியோ கடுப்பில் கதவைப் பார்த்து முனகிக் கொண்டிருந்தாள்.

"உண்மை கசக்கத்தான் செய்யும் அதுக்காக சொல்லாமல்லாம் இருக்க முடியாதே. தவிட்டுக்கு வாங்கின உனக்குல்லாம் இவ்வளவு பாசம் போதும்னு நினைச்சிருப்பாங்களாருக்கும்" கையிலிருக்கும் போனே கதியென இருந்த ஜோ கொதிக்கிற எண்ணெய்யில் வேண்டுமேன்றே கடுகை அள்ளிக் கொட்ட,

"அதை நீ சொல்றியாக்கும். உன் மனசு கஷ்டப்படக்கூடாதுனு என்னைன்னு நம்ப வச்சிருப்பாங்க மீ" என்றவளின் சூடான பதிலோடு பில்லோவும் நச்சென்று வந்து மேலே விழுந்ததில் திடுக்கிட்டு நிமிர்ந்து பௌர்ணமியை ஏறிட்டு முறைக்க

காரம் உண்டவளாட்டம் அவள் முகத்தை கடுகடுவென வைத்திருந்தாள். 'ரொம்ப சூடா இருக்கா போலிருக்கு' என்றெண்ணிய ஜோ வெடுக்கென மூஞ்சை திருப்பிக் கொண்டு குளியலறைக்குள் புகுந்தவளிடம் "இதையே மெயிண்டெயின் பண்ணி உன்னை நீயே சமாதானப்படுத்திக்கோடி பொணமி" சீண்டலுடன் வாய் பொத்தி சிரித்து "இன்ஸ்டால இஷ்டத்துக்கு ஒரு ஃபோட்டோ அப்லோடு பண்ண முடியுதா இந்த வீட்டுல" நொடித்தவள் மெல்ல கதவை நோக்கி நகர

"அடிவாங்க போறடி நீ என்கிட்டே" தன் எண்ணத்தை ஊகித்தவளாக பின்னாலே அடிக்கத் துரத்தியவளை கண்டு பழிப்பு காட்டியவள் "சிறுத்தை சிக்கும் சில்வண்டு சிக்காதிடியோய்" என அடுத்த நொடியே விடு ஜூட்'டிருந்தாள்.

உதட்டை சுழித்து கை,கால் ஆட்டி அவள் சென்ற திக்கில் சில கெட்ட வார்த்தைகள் உதிர்த்த பௌர்ணமி கொஞ்சம் இன்பம் மிச்சம் கலக்கம் என கலவையான மனநிலையில் இருந்தாள்.

மனதுக்குள் மத்தாப்பூக்களின் மகிழ்வு மனு தொடுக்க; மேனி இன்பத்தில் நனைந்து கொண்டிருந்தது!

நடப்பதெல்லாம் நனவா என நம்ப முடியாத கற்பனைக்குள் திளைத்திருந்தவள் அடிக்கொரு தரம் நேரம் பார்ப்பதும் நகரும் நொடி நேரத்தையும் எண்ணுவதுமாக தனக்குள் ஒரு உலகத்தை சிருஷ்டித்து கொண்டிருந்தாள்.

'லாலாலாலா' அணிந்திருக்கும் மினி ஸ்கர்ட்டை இரு புறமும் பற்றி சுழற்றிக் கொண்டே பாத்ரூமில் தஞ்சமாகியவள் அடுத்த சில நிமிடங்களை ஆமை வேகத்தில் பாத் டப்பில் அமிழ்ந்து ஒருவழியாக ஷவரில் குளித்து ஏற்கனவே எடுத்து வைத்திருக்கும் உடுப்பை ஒன்றுக்கு மூன்று தடவை கண்ணாடியில் சரி பார்த்து வேறு வழியின்றி திருப்திப்பட்டு என கடத்தியவள் பட்டாம்பூச்சிக்கு கைகால் முளைத்தது போலே படிகளில் துள்ளிக்குதித்து இறங்கி வெளியேவர, ஜனனியோ கோபமாக மாடியேறிக் கொண்டிருந்தால் மகளைக் காணாமல் இத்தோடு பத்தாவது வாட்டியாக.

இவளைக் கண்டதுமே தோளில் சப்பென்று ரெண்டு போட்டு "இப்போவே போனால்தான் ஃப்ளைட்டை புடிக்க முடியும் இல்ல புறவாசல்ல உக்கார்ந்து ஃப்ளைட் போறதை வேடிக்கை வேணா பார்க்கலாம்" சிடுசிடுக்க,

அதுவரை மலர்ந்திருந்த முகத்தை உர்ரென வைத்த பௌர்ணமி வலித்த இடத்தில் தடவிக்கொண்டே "இப்போல்லாம் எப்போ பாரு திட்டிட்டே இருக்கே மீ கொஞ்சமும் நல்லால்ல ஆமா" சின்னக் குரலில் முனகினாள்.

முன்னால் இறங்கிக் கொண்டிருக்கும் ஜனனியின் பார்வை தன்புறம் திரும்பவும் கப்பென வாயை இறுக்கி மூடியவளோ 'இப்போ என்ன! நான் போறது தான் உங்க ப்ராப்ளமா...' வாய் வரை வந்த கேள்வியையும் சேர்த்தே விழுங்கினாள்.

'க்கும்! இது தான் சாக்குனு ஆமான்னு சொல்லிட போறாங்க அப்பறம் உன் கனவு லட்சியம் என்னாகறது? கடல்ல கலந்து காத்தோடு கரைஞ்சிடும். பரவால்லயா' என்றுமில்லாத வகையில் மனசாட்சி கூட தனக்கு ஆதரவாக பேசவும் வாயே திறக்கவில்லை அதன்பின் பௌர்ணமி.

சமத்து பிள்ளையாக வாய் பொத்தி தலை குனிந்து ஜோ அருகில் வந்து நிற்க, அவளோ "மூனு குரங்கையும் உன் மூஞ்சில் ஒன்னா பார்த்தாப்போல இருக்குடி பொணமி" பொங்கி வரும் குபீர் சிரிப்பை உள்ளடக்கிய குரலில் கேலி செய்தவள் திடீர்னு ஞாபகம் வந்தவளாக, "டீலா நோ டீலா? அதைச் சொல்லு முதல்ல?" கறாராய் புருவம் உயர்த்தி.

அவள் எதைச் சொல்லுகிறாள் எனப் புரிய

வெட்டும் பார்வையில் உடன் பிறப்பை அலட்சியமாக தழுவிய பௌர்ணமியின் விழிகள் சவாலாக அவளை ஏறிட "இரண்டாயிரம் வெட்டு. பார்க்கலாம் நீயா நானான்னு" என்றாள்.

"பார்ரா!! ரெண்டாயிரமா... அன்றைக்கு தாத்தா சொன்னாருங்கறதுக்காக ஆடாத டி பௌர்ணமி. ஓவர் கான்பிடன்ஸ் உடம்புக்கு ஆகாது செல்லோ. போனாப்போகுதுன்னு சொல்றேன் எதுக்கும் இன்னொரு தடவை யோசிச்சிக்கோ" என்றாள் தோளை குலுக்கி.

"தோத்துடுவோம்னு பயம் இருந்தா போடி போய் வேற வேலை இருந்தா பாரு பக்கி" பௌர்ணமி தொடர்ந்து சீண்டும் விதமாகவே பேச "பாவம் பார்த்தா என்னையே சீண்டுற. வெட்டு வெட்டு தான் அப்பறம் வெட்டிக்கிட்டு ஓடலாம்னு பார்த்த இத்தாலிக்கே ஓடி வந்து உன்னை வெட்டுவேன்" ஒற்றை விரல் நீட்டி மிரட்ட

அவளோ "பார்க்கலாம் பார்க்கலாம்" என்றாள் அசிரத்தையாக.

இருவரும் காரசாரமாக தங்களுக்குள் மூழ்கி இருக்க அதற்கு மாறாக லிங்க நாதன் இல்லமோ கண்ணுக்கு எட்டாத சோகத்தில் மூழ்கி இருந்தது வெளிக்காட்டாத வகையில்.

"நாம சாதாரணமா காட்டிக்கிட்டால் தான் பௌர்ணமி சந்தோஷமா இங்கிருந்து கிளம்புவாள்‌. அவக்கிட்ட எதையும் காமிச்சிக்க வேணாம்" ஆத்ரேயன் அன்று காலையில் இருந்தே அனைவருக்கும் ஆயிரம் முறையாவது அதை சொல்லியிருப்பான்.

ஹாலில் அமர்ந்திருக்கும் ஆத்ரேயன் விழிகளின் ஓரம் ஏக்கம்; மகளுக்கு காட்டப்படாமல் தொக்கி நின்றது. பரிவுடன் விழிகளுக்குள் அவளை நிரப்பிக் கொண்டிருந்தவன் தொண்டை லேசாக செரும ஜனனி அவனை முறைத்தாள் "நீங்க சொன்னது நல்லா ஞாபகம் இருக்குத்தான் போதும்" என.

அதில் லேசாக அசடு வழிந்தவன் மனைவியை பார்வையில் அதக்கிக்கொண்டே மீசை நுனி முறுக்கி தன் கம்பீரத்தை மீட்டெடுக்க அவளின் பார்வை அவனில் ஆசையாக படிய 'அவ்வா அவ்வா மனசு வலிக்குது அவ்வா!' வாயில் கை வைத்து அப்பா அம்மாவை விழிவிரித்து பார்த்தாள் பௌர்ணமி நக்ஷத்திரா.

'ஒருத்தி இந்த வீட்டை விட்டு நாட்டை விட்டு போறாளேன்னு கொஞ்சமாச்சும் ஃபீல் பண்ணுறாங்களா பாரேன்' அவளின் உஷ்ண பெருமூச்சுக்கு இடக்காக "திடீர்னு பேக்கரிக்குள்ள வந்துட்டாப்ளயே ஃபீலாவுதே" சொன்ன ஜோ கையால் விசிறியபடியே தானும் சென்று அவர்கள் ஜோதியில் இணைந்து கொண்டாள் தமக்கையை கடுப்பேற்றவென்றே.

அது குறி தவறாமல் சென்று தாக்க, அனைவரையும் உறுத்து விழித்தபடி தங்கு தங்கென நிலம் அதிர நடந்து வரும் மகளை கண்டு கொள்ளாமல்

காலை பலகாரங்கள் சாப்பாட்டு மேஜையில் தயாராக இருக்க, "சாப்பிட்டு கிளம்பலாம்" என ஆத்ரேயன் குரல் குடுக்கவும் அதை ஆமோதித்து அனைவரும் அமர்ந்ததும் ஜனனி ஒவ்வொருவராக பரிமாற தொடங்கினாள்.

'யூ டூ டாடி!' சிணுங்கின பௌர்ணமி உன்னை நான் அறிவேன்' என்ற ரீதியில் தன்னை பார்க்கும் ஜோவை கண்டு சடுதியில் முகபாவத்தை மாற்றினாள்.

ஆத்ரேயனுக்கு அருகில் காலியாக இருக்கும் நாற்காலியை இழுத்துப் போட்டு அமர கையால் அவளை தடுத்து ஜனனி "பௌர்ணமி, வா வந்து பரிமாற ஹெல்ப் பண்ணு, எல்லாரும் சாப்பிட்டோம்னா கிளம்ப சரியாருக்கும்" என்க,

அதிர்ச்சியில் வாயை சாஸராக விரித்தாள். "மீ! என்னயா..."

"ப்ச் உன்னைத்தான்டி, பௌ-ர்-ண-மி ன்னு தெளிவா தானே சொன்னாங்க" ஜோ சொல்ல

"அடி வாங்க போற பக்கி" பக்கத்திலே நமட்டு சிரிப்பு சிரிக்கும் ஜோவை சந்திரமுகியாக மாறி கண்களை உருட்டி 'கொதறவா கொதறவா' என்றாள்.

பதிலுக்கு அவளும் கண்களாலே 'ரா ரா' எனவும்,

மேலும் இருவருக்கும் இடையில் சண்டை வலுப்பதற்குள் "பௌர்ணமிடா! அப்பாட்ட வாடா பட்டூ" என்றழைத்து மகளை தனக்கருகில் அமர்த்திய ஆத்ரேயன் தானே அவளுக்கு பார்த்துப் பார்த்து பரிமாறியபடி "ஜானு நீயும் உக்காரு. நாமளே போட்டுக்குவோம்" மறுபுறம் நிற்கும் மனைவியையும் அவன் கவனிக்க தவறவில்லை.

அடுத்து வந்த சில நொடிகளோ நதியின் இழுப்புக்கு வளைந்தது போல் அதுபாட்டுக்கு விரைந்தது...

ஏர்போர்ட் செல்ல நேரம் நெருங்க காதுக்குள் அபஸ்வரமாக ஜோவின் குரல் தான் ஒலித்தது. அதைத் தட்டி அடக்கிய பௌர்ணமி தன் லக்கேஜ்களை மீண்டும் ஒரு முறை சரிபார்த்து கொண்டாள் ஆத்ரேயனின் கேள்விக்கிணங்கி.

"எல்லாம் சரியாருக்குப்பா" என்றவாறே "கிளம்பிறேன் பாட்டி" என நாயகி முன் வந்து நின்று காலில் விழ, அவரோ தன் முன் நிற்கும் பௌர்ணமியை வெளிநாடு செல்கிறாள் என்பதால் தலையில் கை வைத்து ஆசிர்வாதம் செய்தவர் ஒன்றும் பேசவில்லை.

தாத்தாவிடம் சென்றவள் "கிளம்பிறேன் தாத்தா" என்க, அதுவரை பத்திரிகையில் கவனமாக இருப்பவராக பாவனை செய்து கொண்டிருந்த சொக்கலிங்கம் அதை மடித்து டீப்பாயில் போட்டு எதிரில் நிற்கும் பேத்தியை நிமிர்ந்து பார்த்தவர் அவள் கண்களுக்குள் ஆழ்ந்து "போய்ட்டு வரேன்னு சொல்லுமா" என்க, பௌர்ணமியின் முகத்தில் அகல விரிந்த புன்னகை.

சிரிப்பு மாறாமலே புன்னகை முகமாக தலையசைத்தவளை சொக்கலிங்கம் கண்களுக்குள் சேமித்துக் கொள்ள, கலா ஆதித்ய கரிகாலன் என ஒவ்வொருவராக விடைபெற்றுக் கொண்டவள் விழியோ தன்னையறியாமல் அங்கு இல்லாத ஒருவனையே விழி தேடி சுழற்றியது ஒருவித டென்ஷனோடு.

பரபரப்பில் மானசீகமாக நகத்தை வேறு கடித்து துப்பியவள் அடிக்கடி ஜோவை பார்க்க, பௌர்ணமியின் பதட்டத்தை உள்ளூர ரசித்துக்கொண்டே அவளும் இவள் கிளம்பப் போகும் துக்கத்தை உள்ளுக்குள் புதைத்துக் கொண்டு நான் சாதாரணமாக இருக்கிறேன் என காட்ட அரும்பாடுபட்டுக் கொண்டிருந்தாள். இளைய மகளை அறிந்தார் போல் ஆத்ரேயன் அவளை தட்டிக்குடுத்து கண்களை மூடித் திறக்க சற்றே தெளிந்தாள்.

ஆத்ரேயனின் கார் வெளியே தயாராக நின்றது.

அங்கிருந்து செல்லும் கடைசி நொடி வரை அவன் வரமாட்டான் எனத் தெரிந்தும் தேடிய மடத்தனத்தில் தன்னையே குட்டிக் கொண்ட பௌர்ணமி 'அதானே பாத்தேன் அவனாவது வர்றதாவது. அதுவும் எனக்குன்னா போனா போ வாரதுனா வான்னு இருப்பான். சரியான பொறாமை புடிச்ச புல்டோசர் வாயன்' சிடுசிடுத்தவளுக்கு ஆத்திரமாக வர 'நான் போறது தெரிஞ்சும் வேணும்னே பண்ணுது சிசி.' உதட்டை சுழித்து கடுகடுத்தவளை மனசாட்சி ஒரு லுக்கு விட 'குத்திடுவேன் ஓடிப்போய்டு' ஒற்றைப் பார்வையில் விரட்டி அடித்தவள் தனக்குள் பிஸியாக இருக்க, தோளில் இடித்து தன்னைக் கலைக்கும் ஜோவை உள்ளூர இருக்கும் கோபம் குறையாமல் நிமிர்ந்து பார்த்து "என்னடி" சீறினாள்.

"வெண்ணே! எல்லாரும் உன்னைத்தான் பார்த்திருக்காங்க உர்ருன்னு முகத்தை வச்சிருக்காம கொஞ்சம் சோக வயலின் வாசி" முகத்தை சோகமாக வைத்துக்கொண்டே பல்லைக் கடித்து காதுக்கருகில் கிசுகிசுக்கும் தங்கையை பார்த்தவளுக்கு சோகத்துக்கு பதில் சிரிப்புத்தான் வர 'அவனே ஒரு மங்கி காஞ்சு போன டொங்கி. அவனை நினைச்சு எப்பவும் போல உன் டைமை வேஸ்ட் பண்றியே டி பௌர்ணமி' தனக்கு தானே தலையில் தட்டிக் கொண்டு ஷேஷாதித்யனை தன் நினைவில் இருந்து ஓரங்கட்டியவள் தங்கையை கன்னத்தில் கைதாங்கிப் பார்த்தாள்.

"உன் பார்வையே சரியில்லையே? உன் மண்டையில் என்னவோ ஓடுது. என்னடி" குறுகுறுவென தன்னைப் பார்க்குமவளை அப்படியே தன் போனில் புகைப்படமாக கிளிக்கிக் கொண்டே அதை அவள் முன்னே ஆட்டிக்காட்டி "பாரேன் இந்த மூஞ்சி நான் போறேன்னு சோகத்தில மிதக்குது..." என்றவளுக்கா தங்கையை தெரியாது.

"ம்க்கும்! நினைப்பு தான் பொழப்பை கெடுக்குமாம் அது உனக்கு தெரியாது... இப்போ தான் நான் ஜாலியா இருக்கேன். இனி இது என் வீடு என் சாம்ராஜ்யம்! பங்கு போட நீ இருக்கமாட்ட. அப்பாம்மா கூட ஜாலியா இருப்பேன். ராத்திரியில் உன் தொல்லை இல்லாமல் நிம்மதியா தூங்குவேன். அப்பறம் முக்கியமா இனி உன் பாத்ரூமைத்தான் யூஸ் பண்ணபோறேன்" என்றாள் அழுகையை மறைக்க சிரித்துக்கொண்டே.

"பக்கி! பக்கி. கொஞ்சமாச்சும் ஃபீல் பண்றியாடி" பொய்யாக சிடுசிடுத்துக் கொண்டே அவளின் சட்டைக் காலரை இழுத்து கழுத்தோடு கட்டிக்கொண்ட பௌர்ணமி கண்களில் துருத்திய கண்ணீரை சுண்டி விட்டாள். மறுபுறம் அதையே செய்த ஜோ முகத்தில் மலர்ச்சியை பூசிக் கொள்ள பார்த்திருந்தவர்களின் கண்கள் பணித்தது.

"கிளம்பலாம் நேரமாச்சு" என்ற ஆத்ரேயனின் குரலில் களைந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள "காசை எடு டி" என ஜோவும் "இந்தா புடி" உதட்டை வலித்துக் கொண்டு பௌர்ணமியும் பணத்தை குடுக்கவும் வாங்கவும் ஒரே நேரத்தில் கையை நீட்ட, பக்கென சிரித்து விட்டனர்.

சிரிப்புடனே அவள் கையில் பணத்தை திணித்த பௌர்ணமி "இந்த தடவை நீ ஜெய்ச்சுட்ட அடுத்த தடவை நாந்தான் ஷ்யோரா" எனவும்

அவளை இமிடேட் செய்து "பார்க்கலாம் பார்க்கலாம்" என்றாள் ஜோ இதழில் பெரிய முறுவலோடு.

இதோ அனைத்தும் முடிந்து ஆத்ரேயன் ஜனனியின் ஆயிரம் ஆயிரம் பத்திரம் பாதுகாப்பு வார்த்தைகளுடன் சென்னையில் இருந்து அமெரிக்கா செல்லும் விமானத்தில் அமர்ந்திருந்தாள் பௌர்ணமி நக்ஷத்திரா அடுத்த பதினைந்து மணி நேரங்களை ஒரே இடத்தில் தனியாகக் கழிக்க வேண்டுமே என்று அலுப்போடு.

வரும் வழியெல்லாம் ஆத்ரேயன் பேசிக்கொண்டே வர ஜனனி மகளின் கை கோர்த்திருந்தாள் பிரியத்துடன்!

அம்மா அப்பாவின் கதகதப்புக்கு இப்போதே மனம் ஏங்க தொடங்கிட வாட்சப்பில் மேசேஜை தட்டிவிட்டாள். அவர்கள் பதில் அனுப்பினாலும் உடனே தன்னால் பார்க்க முடியாதே என்ற எண்ணத்தில் மொபைலை எயார்ப்ளேன் மோடுக்கு மாற்றி ஹெட்செட்டை காதுக்குள் சொருகினாள்.

செவிக்குள் இளையராஜா இசைக்கு எஸ்பிபி குழைந்து கொண்டிருந்தார்.

மனிதரின் குரலுக்கு மயங்காதாரும் உண்டா? கண்களை மூடிக் கொண்டாள் இன்பமாய்.

கரைந்த ஐந்து நிமிடங்களும் இசைக்குள் அவள் மெய்மறந்து மிதந்து கொண்டிருக்க அருகில் கேட்ட அரவத்தில் தான் தரையிறங்கினாள்.

காதிலிருப்பதை கழற்றி ஆவலே வடிவாய் விழி மலர்த்தியவள் திரும்பிப் பார்க்க பார்த்த மறு விநாடி 'எதே இவனா!' என்று அதிர்வும் 'வீணா என் ரெண்டாயிரம் தண்டம் அழுதிட்டேனே' என கொலைவெறியும் ஒருசேர உண்டாக விழி விரித்தாள் பௌர்ணமி காணாததை கண்டவளாக.

மறுகணமே மூக்கை உறிஞ்சியவள் அங்கு தனக்கும் அவளுக்கும் சம்மந்தம் இல்லை என அவளுக்கு அடுத்திருக்கும் இருக்கையில் காலின் மேல் கால் போட்டு கையிலிருக்கும் மேகசினில் கவனமாக இருக்கும் ஷேஷாதித்யனை 'எல்லாத்துக்கும் இவன்தான் காரணம்' என விழிகளால் கும்மி எடுத்தாள்.

அவள் பார்வை கண்டும் காணாதவனாக இதழ்களில் கண்ணாம்பூச்சி ஆடும் ரகசிய முறுவலுடன் அவன் அமர்ந்திருக்க, 'ஜின்ஞர் ஈட் மங்கியை பார்த்திருக்கயாடி ஜோ. நானும் இப்பத்தான் பார்க்கிறேன்' கையிலிருக்கும் மொபைலில் தன்னையே செல்ஃபியாய் க்ளிக்கிக் கொண்டாள்.

அதில் மேலும் அவன் புன்னகை அவளறியாமல் விரிய வழக்கம் போல் அதைக் காணத் தவறியிருந்தாள் அவன் மாமன் மகள்.

அவர்கள் அமர்ந்திருந்த உலோகப் பறவை அதன் ராட்சத சிறகுகளை விரித்து படபடவென அடித்து மெல்ல உயர உயர பறந்தது பௌர்ணமியின் கட்டவிழ்ந்த எண்ணங்களைப் போல்.

பயணம் அவளுக்கொன்றும் புதிதல்லவே. குடும்பமாகவும் ஜோவும் அவளுமாக என இந்தியாக்குள்ளும் வெளிநாடுகளுக்கும் பல முறை பயணம் செய்திருக்கிறாளே. ஆனால் இது தான் முதல் தடவை தனியாக, பக்கத்தில் அத்தை மகன் அமர்ந்திருந்தும் தனிமையை தான் அவள் உள்ளம் உணர்ந்தது.

உடல்கள் அருகில் இருப்பினும் உள்ளங்கள் தொலைவில் இருக்கையில் பக்கம் கூட தொலைவு தான். அவர்களுக்கு இடையிலான உறவு அப்படிபட்டதாயிற்றே.

பேசிப் பழகிய அவள் உதடுகள் மௌனம் துறக்க போராடியது அருகில் அவனைக் கண்டு மீண்டும் இறுக மூடியது. ஜன்னல் இருக்கையில் அவளும் அவளுக்கு அடுத்து ஷேஷாதித்யனும் அதுக்கடுத்து ஒரு மத்திம வயதில் பார்க்க வெளிநாட்டவர் போல் மனிதரும் அமர்ந்திருந்தார். அவருடனாவது பேசுவோம் என்றால் நடுவில் நந்தியாக ஷேஷாதித்யன் அமர்ந்திருக்க 'மலமாடு மலமாடு நட்ட நடுவுல குத்த வச்சி உக்காந்திருக்கான்' ஓரக் கண்ணால் முறைத்தாள்.

அப்போது அவன் கவனம் அவள் புறம் திரும்பாமலே இருக்க 'தெரிஞ்சு பண்ணுதா தெரியாம பண்ணுதா இந்த வெட் ஆனியன்' தனக்குள்ளே குழம்பியவள்

பொறுத்தது போதும் என தொண்டையை லேசாக செருமி "எக்ஸ்கியூஸ் மீ, கொஞ்சம் இந்தப் பக்கம் வர்றீங்களா? சீட் மாறிக்கலாம்" பல்லிடுக்கில் வார்த்தை கடித்து துப்பினாள்.

தலை திருப்பி அவளை புரியாத பார்வை பார்த்தவன் "சாரி" என மெல்ல தோளை அசைத்தான்.

உள்ளே சுறுசுறுவென ஏற 'ரொம்பத்தான்' உதட்டை சுழித்து முட்டை கண்ணை விரித்து அவனை ஏகத்துக்கும் முறைத்தவளோ வேறு வழங ஜன்னல் பக்கமாக திரும்பி கொட்ட கொட்ட வேடிக்கை பார்த்திருக்க, விமானம் பறக்கும் சீரான லயத்தில் சொக்கி கண்களை மூடி அயர்ந்து உறங்கினாள்.

இடையில் இரு முறை அவளை உணவு உண்ண எழுப்ப தூக்கக் கலக்கத்தில் ருசியறியாமல் வாய்க்குள் தள்ளி முழுங்கியவள் தூங்கிக் கொண்டே வந்தாள் எல்லேயின் லாக்ஸ் ஏர்போர்ட்டில் ஃப்ளைட் தரையிறங்கி அவனாக எழுப்பும் வரை.

கருத்துக்களுக்கு...

 
Status
Not open for further replies.
Top