எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

'உயிரின் தாகம் காதல் தானே.💔' - கதை திரி

Status
Not open for further replies.

Mafa97

Moderator
ஹாய் ஃப்ரன்ட்ஸ்..👋
இதோ புது கதையுடன் வந்து விட்டேன்..

"உயிரின் தாகம் காதல் தானே 💔"

கதையை இன்று முதல் பதிவிடப் போகிறேன்..
படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..☺️
 
Last edited:

Mafa97

Moderator
டீசர்..."ஏய் நான் எழுந்தது கூட தெரியாம என்னடி பண்ணிட்டு இருந்த? போ போய் எனக்கு காபி கொண்டு வா..."என்று மேலும் சத்தம் போட அதே அமைதியுடன் சமையலறைக்குள் சென்று அவருக்காக காபி போட்டு எடுத்துக் கொண்டு வந்து அவரிடம் நீட்டினாள்..அதை வாங்கி ஒரு வாய் குடித்தவர் அப்படியே அதை தரையில் விசிறி அடித்தார்..அதிர்ந்து போய் அவரைப் பார்த்தாள் மதியழகி.." என்னடி இது மனுஷன் குடிப்பானா இதை.. தண்டம்.. தண்டம் .. இவ ஆத்தக்காரி என்னத்தை சொல்லிக் கொடுத்தாளோ.. ஒரு காபி கூட போட தெரியல.."என அவளை மட்டுமல்லாது இன்று உயிருடன் இல்லாத அவளது அன்னையையும் சேர்த்து திட்டினார் வடிவுக்கரசி..*************கனகாவிற்கு அழைத்து அவரை பேசவிடாமல் கண்ணீருடன் பேசிக்கொண்டு இருந்தவளின் கையில் இருந்த போன் திடீரென பறிக்கப்பட திடுகெட்டு திரும்பிப் பார்த்தாள் மதி..அங்கு அவளிடம் இருந்து போனை பறித்து அதனை ஆராய்ந்தஷியாம் சுந்தர் மீண்டும் தனது காதில் வைக்க"ஹலோ... ஹலோ.. மதிமா உனக்கு என்ன ஆச்சு.?" என்ற கனகாவின் குரலே கேட்டது.. அடுத்த கனமே போனை தூக்கி தரையில் அடிக்க அது சுக்கு நூறாக உடைந்து போனது..**************அவளது தலையாட்டலை கண்டவனும் "ச்சூ...ச்சூ இதை நீ முன்னாடியே யோசிச்சு இருக்கணும் மதியழகி.. டூ லேட்...." என்று அவளுக்காக பாவப் படுவது போல கூறினான்.அதில் சட்டென நிமிர்ந்து மதி அவன் முகம் நோக்கினாள்.அவன் இதழ்கள் சிரிப்பில் விரிந்து இருந்தாலும் கண்கள் கோவத்தில் பளபளத்தன. அந்த கண்களை பார்க்கையில் இறையை வேட்டையாட காத்திருக்கும் சிங்கத்தின் நினைவே வந்து போனது பெண் அவளுக்கு.."அந்த வீணாப்போன அன்பு செல்வன் பேச்சை கேட்டு என்னோட கோட்டைக்குள்ள வந்து சிக்கிக்கிட்ட.. இங்க இருந்து நீ நினைக்கிற அளவு ஈசியா எல்லாம் தப்பிச்சிட முடியாது ...எனக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கு மதியழகி.."என கூறியவன் எழுந்து அவளை நோக்கி வந்து அவளது முகத்தை தன் கை கொண்டு நிமிர்த்தி தன்னை பார்க்க செய்தான்.*************மழையில் நனைந்த கோழிக்குஞ்சு போல பயத்தில் நடுங்கினாள் மதியழகி.. அவனோ அவளது காதுக்கருகில் இதழ்களை கொண்டு சென்றவன்"வெல்கம் டு த லயன் கேவ் பேபி..." என மெல்லிய குரலில் கூறிவிட்டு நிமிர்ந்து அவள் முகம் பார்த்தான்..அதில் 'என்னை விட்டு விடேன்'என்ற கெஞ்சல் நிறைந்திருந்தது.. அவன் ஒன்றும் சராசரி மனிதன் இல்லையே தப்பு செய்தவரை போகட்டும் என்று மன்னித்து விட.. அவனுக்கு தப்பு செய்தால் பெண்ணும் ஒன்றுதான் ஆணும் ஒன்றுதான்..

 

Mafa97

Moderator

அத்தியாயம் 💔01


அது பணக்காரர்கள் மட்டுமே வசிக்கும் பகுதி.. பெரிய பெரிய பங்களாக்களே அதிகம் உள்ளன அந்த தெருவில். அதில் உள்ள ஒரு வீட்டில் அழகிய காலை பொழுதில் வேலைக்காரர்கள் பம்பரமாக சுற்றிச் சுழன்று வேலை செய்து கொண்டு இருந்தனர் ..

"மதிமா.. நீங்க போய் ஒரு ஓரமா இருங்க. நான் இதையெல்லாம் பார்த்துக்கிறேன் .." என அங்கு இருந்த ஒரு வயதான பெண் கூற அதை எல்லாம் பொருட்படுத்தாமல் தனது வேலையை செய்து கொண்டு இருந்தாள் அவரால் மதிம்மா என அழைக்கப்பட்ட மதியழகி ...அவரோ அவளது கையை பிடித்து தடுத்து
"ஏன்ம்மா இப்படி பண்றீங்க.. எனக்கு பார்க்கவே கஷ்டமா இருக்கு தெரியுமா ...இதை நாங்க பண்ண மாட்டோமா?"
என மன வருத்தத்துடன் அவளது முகம் பார்த்தபடி கேட்டார்..அவர் தனக்காக வருந்துகிறார் என உணர்ந்து கொண்ட மதியழகி "நானும் இங்கே ஒரு வேலைக்காரி தானேம்மா... என் வேலையை நான் பார்க்கிறேன் விடுங்கம்மா..." எனக் கூறினாள்.. அவள் முகம் எப்போதும் போல அமைதியாக இருந்தது ..அதற்கு மேலும் அவரால் என்ன செய்திட முடியும் .


எனவே அவர் வேலைகளை கவனிக்கலானார்.
ஆனால் மனம் என்னவோ மதியழகிக்காக கவலை கொண்டது... அவருக்கு இருந்த கவலை மதியழகிக்கு இல்லை போலும் ..எந்த விதமாக முகச் சுழிப்பும் இல்லாமல் வேலை செய்தாள் அவள் ..அந்த இடத்தில் வேலைகள் அமைதியாக நடந்து கொண்டு இருக்க அந்த அமைதியை கலைக்கவென்று வந்து சேர்ந்தார் அந்த வீட்டின் எஜமானி வடிவுக்கரசி.. பெயருக்கு ஏற்றவாறு ராணி போல் அந்த வீட்டில் வளம் வந்தார் அவர்... வயது அறுபதுக்கு மேல் இருக்கும்... வயது தான் ஏறியதே தவிர எந்த விதமான நற்குணங்களும் இல்லை அவரிடம்..சமையல் அறைக்குள் நுழையும் போதே
"அடியே மதி.." என்று குரல் கொடுத்த படியே தான் உள்ளே வந்தார். அவரது குரல் கேட்டு காய்கறி வெட்டிக் கொண்டு இருந்தவளது கை ஒரு நொடி தனது வேலையை நிறுத்தி மீண்டும் வேலைகளை செய்தது.


மீண்டும் அவரது குரல் கேட்கவே வேறு வழி இல்லாமல் செய்து கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு அவர் முன்னால் போய் நின்றாள் மதியழகி..


"என்னடி தைரியம் வந்துடிச்சா... ஒரு வாட்டி கூப்பிட்டா வரமாட்டியா என்ன ?"
என்று கர்ஜனையாக வெளி வந்தது அவரது குரல்.. உள்ளுக்குள் உதடு எடுத்தாலும் வெளியே அமைதியாக நின்றிருந்தாள் பெண்ணவள்.."நான் எழுந்தது கூட தெரியாம என்னடி பண்ணிட்டு இருந்த..போ போய் எனக்கு காபி கொண்டு வா..."


என்று மேலும் சத்தம் போட அதே அமைதியுடன் சமையல் அறைக்குள் சென்று அவருக்காக காபி போட்டு எடுத்துக் கொண்டு வந்து அவரிடம் நீட்டினாள்.. அதை வாங்கி ஒரு வாய் குடித்தவர் அப்படியே அதை தரையில் விசிரி அடித்தார் . அவரது செயலில் அதிர்ந்து போய் அவரை பார்த்தாள் மதியழகி.
"என்னடி இது மனுஷன் குடிப்பானா இதை..?
தண்டம் தண்டம் இவ ஆத்தாக்காரி என்னத்த சொல்லிக் கொடுத்தாளோ ஒரு காபி கூட போடத் தெரியல.."என அவளை மட்டுமல்ல இன்று உயிருடன் இல்லாத அவளது அன்னையையும் சேர்த்து திட்டினார் வடிவுக்கரசி.. அவர் கூறிய அளவுக்கு எல்லாம் அந்த காபி அவ்வளவு மோசம் இல்லை ..மதியழகி நன்றாகவே சமைப்பாள். இந்த வடிவுக்கரசிக்கு ஒரு நாளில் மதியழகியை ஒரு தடவையாவது திட்டா விட்டால் அந்த நாளே முடியாததை போல ஒரு உணர்வு.. அதனால் ஏதாவது குறை கூறுவார் அவர் ..எப்போதும் பொறுத்து போகும் மதியழகிக்கு தாயை திட்டினால் மட்டும் கண்ணீர் வந்து விடும்..


உயிருடன் இல்லாத தாயையும் அல்லவா அவர் குறை கூறுவது.. ஆனாலும் எதுவும் பேச மாட்டாள். கண்ணீருடன் கடந்து விடுவாள் பெண்ணவள்.

மீண்டும் அமைதியாக வந்து வேலை செய்யும் அவளை பார்க்கவே பாவமாக இருந்தது அந்த வீட்டில் வேலை செய்பவர்களுக்கு.. எப்படி எல்லாம் வளர்ந்த பெண் அவள். இன்று அவளது நிலையைக் கண்டு கவலை கொள்ள மட்டுமே முடிந்தது அவர்களால்.. இந்த வடிவுக்கரசியுடன் அன்றைய திட்டுக்கள் முடிந்தால் பரவாயில்லை...காலை உணவை தயாரித்து முடித்தவர்கள் உணவு மேசையில் ஒவ்வொன்றாக அடுக்கி வைத்தனர் ..அப்போது தான் வீட்டின் உறுப்பினர்கள் ஒவ்வொருவராக வெளியே வந்து உணவு மேசையில் அமர்ந்தனர்.. அங்கே மதியழகி இல்லாததை கண்ட ஜெயராணி"அவ எங்க போனா.. தினமும் அவதான் சாப்பாடு பரிமாறணும்.. வர சொல்லு அவளை.."

என்று திட்ட யாரை சொல்கிறார் என அனைவருக்கும் புரிந்து போனது... சமையலறையில் இருந்த மதியழகிக்கும் அது கேட்டு இருக்கும் போல். யாரும் சொல்லாமல் அவளே வெளியே வந்து உணவு பதார்த்தங்களை பரிமாற ஆரம்பித்தாள்.


அதை கண்டு திருப்தியான புன்னகை உதட்டில் தோன்றியது ஜெயராணிக்கு ..
அதுமட்டுமா அதைத் தா... இதைத் தா... என கூறிக் கூறி வேலை வாங்கினாள் ஜெயராமனின் மகள் மயூரி... அதீத மேக்கப் உடன் தான் எப்போதும் வலம் வருவாள் அவள்...பேத்தி ராணி போல் தோரணையாக அமர்ந்து கொண்டு வேலை வாங்குவதை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் வடிவுக்கரசி ...ஆனால் அதை எல்லாம் கண்டும் காணாதது போல் தனது உணவிலேயே கவனம் பதித்து இருந்தார் வடிவுக்கரசியின் மூத்த புதல்வன் அன்பு செல்வன்...
அவரோ வீட்டில் நடக்கும் பஞ்சாயத்தில் என்றுமே தலையிடுவது இல்லை ...அம்மா மனைவி இருவரும் ஏதாவது செய்து கொள்ளட்டும் என அவர் பாட்டுக்கு அவரது வேலையில் கவனமாக இருப்பார்.


அத்தையும் மருமகளும் எதில் அடித்துக் கொண்டாலும் மதி விஷயத்தில் மட்டும் அப்படி ஒரு ஒற்றுமை.. அவளை கஷ்டப்படுத்தி பார்ப்பதில் இருவருக்குமே அதீத இன்பம்.. அதைப் போல தான் மயூரியும்.. பாட்டியும் தாயும் செய்வதை போலவே தானும் தன் பங்குக்கு மதியை துன்புறுத்துவாள்.


தனது வேலைகள் அனைத்தையும் அவள் தலையில் கட்டி விடுவாள். மதி தன்னைவிட அழகாக இருப்பதால் எந்த நல்ல ஆடைகளையும் அணிய விடுவதும் இல்லை.. மொத்தத்தில் அந்த வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் தீயவர்களே..


அதில் அன்புச்செல்வன் - ஜெயராணி தம்பதியின் மகன் அதாவது மயூரியின் அண்ணன் சாத்விக் மட்டுமே விதிவிலக்கு.. அதனால் தான் அவன் இவர்களுடன் ஒட்டாமல் தனியாக வாழ்ந்து வருகிறான்.

காலை உணவை முடித்து விட்டு வடிவுக்கரசி தனது அறைக்குள் சென்று விட மயூரி காலேஜ் என்று சென்று விட்டாள்... அன்பு செல்வமும் , ஜெயராணியும் ஆபீஸ் என்று சென்ற பிறகே வீடு அமைதியானது. மதி இப்போது தான் தனது காலேஜ் படிப்பை முடித்து இருந்தாள். அதனால் அங்கு உள்ள வேலைகள் அனைத்தும் அவளது தலையில் கட்டப்பட்டன..வேலைகள் செய்வதற்கு அவள் என்றுமே கவலைப்பட்டதும் இல்லை... சோம்பல் பட்டதுமில்லை.. அப்படித் தான் அவளது அன்னை வசந்தி அவளை வளர்த்திருந்தார்.. அங்கு இருந்த அனைத்து வேலைகளையும் முடித்தவள் வேலை செய்பவர்களுடனே அமர்ந்து தனது காலை உணவை முடித்தாள்.அதன் பிறகு சற்று ஓய்வு எடுக்க விரும்பியவள் வெளியே தோட்டத்தின் பக்கம் சென்று அங்கு அன்று என்ன பூக்கள் புதிதாக பூத்து இருக்கின்றன என பார்க்க ஆரம்பித்து விட்டாள். அவளுக்கு பூக்கள் என்றால் கொள்ளை பிரியம் ..தாய் தந்தையுடன் இருந்த இனிமையான நினைவுகள் அவள் கண்முன்னே தோன்றி மறைந்தன..அவள் ஆசைப் பட்டாள் என்பதற்காகவே அவளது தந்தை விதவிதமான ரோஜாக்கள், மல்லிகை, சாமந்தி என பல வகையான பூக்களை கொண்டு அந்த தோட்டத்தை வடிவமைத்து இருந்தார். அதனை பராமரிக்க வேண்டி ஒரு ஆளையும் நியமித்து இருந்தார் அவளது தந்தை அன்பரசன் ...


அவரை நினைக்கையில் கண்களில் இருந்து அவளது அனுமதி இல்லாமலே கண்ணீர் வெளி வந்தது.

அவளும் இதே வீட்டில் பிறந்தவள் தான்.. இந்த வீட்டின் வாரிசு தான்.. ஆனால் இன்றைய அவளது நிலை வேலைக்காரி என்பதே. அவள் வடிவுக்கரிசியின் இரண்டாம் புதல்வன் அன்பரசனின் மகள்.. அன்பரசன் வசந்தியை காதல் திருமணம் செய்து கொண்டார்...அண்ணனின் திருமணம் முடிந்த அடுத்த வருடமே சாத்விக் பிறக்க அவனை தூக்கி வைத்துக் கொண்டே சுற்றுவார் அன்பரசன்.. அதனால் சாத்விக்கிற்க்கு அவருடன் அதிக நெருக்கம் ஏற்பட்டது... எப்போதும் சித்தப்பா சித்தப்பா என்று சுற்றிக் கொண்டு இருப்பான் அவன் ...
ஜெயராணிக்கு மகனை விட பணத்தின் மீது தான் அதிக நாட்டம். எனவே கணவனுடன் சேர்ந்து அலுவலகம் செல்ல ஆரம்பித்து விட்டாள் .
அதனால் சாத்விக்கை கவனித்துக் கொள்ள வேண்டி நியமிக்கப் பட்டவர் தான் வசந்தி...சாத்விக்கும் அவருடன் நன்கு ஒட்டிக் கொண்டான். இதனிடையே அன்பரசன் வசந்தி இருவருக்கும் இடையில் ஒரு மெல்லிய நட்பு தோன்றி அது காலப்போக்கில் காதலாக மாறியிருந்தது.. வசந்தி தாய் தந்தையற்றவர்... வசதி வாய்ப்பு இல்லாததால் அவர் தனது காதலை அன்பரசனிடம் இருந்து மறைக்க ஆனால் அவரோ விடாப்பிடியாக வசந்தியின் வாயில் இருந்து உண்மையை வர வைத்து பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டார்..அன்பரசனின் தாயைப் போன்று அல்லாது தந்தை மிகவும் நல்லவர். எனவே மனைவியின் எதிர்ப்பையும் மீறி மகனை வீட்டுக்குள் சேர்த்துக் கொண்டார். எப்போதும் போல் அன்புச் செல்வன் எதுவும் பேசாமல் இருக்க ஜெயராணிக்கும் வடிவுக்கரசிக்கும் தான் மிகுந்த கோபம்..


வடிவக்கரசிக்கு ஏழை பெண்ணை மகன் திருமணம் செய்து கொண்டது கோபம் என்றால் ஜெயராணிக்கு ஒரு சராசரி பெண் தனக்கு சமமாக இந்த வீட்டின் மருமகள் என்று வந்தது பெரும் கோபம் ...அவர் தான் பணக்கார வீட்டுப் பெண் அல்லவா.


யாருக்கு எப்படியோ சாத்விக் தான் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தான்.. நான்கே வயதான அவனுக்கு எது புரிந்ததோ இல்லையோ வசந்தி இனி அவனுடன் தான் இருப்பார் என்ற செய்தியே அவனது மகிழ்ச்சிக்கு காரணம்..


அன்பரசனும் அவரது தந்தையும் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து தான் அத்தை மருமகள் இருவரும் வசந்தியை வேலை வாங்குவது. வசந்தியும் இதை யாரிடமும் சொல்வதும் இல்லை ...

இப்படியே அவர்கள் நாட்கள் செல்ல இருவரின் காதலுக்கும் சாட்சியாக வந்து பிறந்தாள் மதியழகி.. சாத்விக் தான் 'தங்கச்சி பாப்பா'
என அவளையே சுற்றி வருவான்.
சிறிது நாட்கள் கழித்து ஜெயராணியும் உண்டாக சாத்விக் தாயை விட்டு மேலும் தூரமானான்.மயூரி பிறந்த பிறகும் அவளை விட்டு விட்டு மதியழகியை தான் தங்கை என்று அழைப்பான்.. அவளுடன் தன் விளையாடுவான்.. இதற்கு இடையில் அன்பரசனின் தந்தையும் இறந்து விட மெல்ல மெல்ல தன் சுய ரூபத்தை காட்டத் தொடங்கினார் வடிவுக்கரசி.. எதற்கெடுத்தாலும் வசந்தியை ஜாடை மாடையாக திட்ட ஆரம்பித்து இருந்தார்..
எனவே அன்னையின் போக்கு பிடிக்காமல் மனைவியை அழைத்துக் கொண்டு வெளியே செல்ல அன்பரசன் முற்படும் போது வசந்தி முடியாது எனக் கூறி விட்டார்.
' நான் இந்த குடும்பத்தை பிரித்ததாக இருக்கக் கூடாது 'என அவர் கூறி விட அதற்கு மேல் அன்பரசன் பேசவில்லை.. மனைவி மீது மேலும் காதல் தான் பெருகியது அவருக்கு ..சாத்விக் பெரியவன் ஆனதும் படிப்புக்காக வேண்டி வெளியில் சென்ற போது மதியழகியின் 15 ஆவது வயதில் அன்பரசனுக்கு மூளையில் ஏற்பட்ட கட்டியால் அவர் நோய்வாய்ப் பட்டார் ...அடுத்து ஓரிரு தினங்களிலேயே அவர் இறைவனடி சேர்ந்தும் விட்டார்...அன்றே உடைந்து போய் விட்டனர் தாயும் , மகளும். காதல் கணவன் இன்றி மிகவும் தவித்துப் போனார் வசந்தி... இருந்தும் மகளை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்பதற்காக தன்னை தானே தேற்றிக் கொண்டார் அவர் ..
ஆனால் அதற்கு மாறாக மகன் இறந்ததும் வேண்டாத மருமகளையும் பேத்தியையும் துரத்தி விட்டு அனைத்து சொத்துக்களையும் தனது மூத்த மகனுக்கே கொடுக்க எண்ணினார் வடிவுக்கரசி ..


'வெளியே போ' என அவரது வாயால் சொல்லாமல் அவர்கள் இருவரையும் துரத்த எண்ணி கொடுமை செய்ய ஆரம்பித்தார் அவர்.
ஆனால் வசந்தி தான் பொறுமையின் சிகரம் ஆயிற்றே.. அனைத்தையும் பொறுத்துக் கொண்டு வாழ ஆரம்பித்தார் அவர் தனது ஒரே மகளுக்காக...

தொடரும்...

 

Mafa97

Moderator
அத்தியாயம் 💔 02


வசந்தி கணவன் இறந்த பிறகும் அந்த வீட்டை விட்டு செல்லவில்லை. மகளை கூட்டு குடும்பத்தில் வளர்க்க வேண்டும் என்பது அவரது ஆசை. பணம் எல்லாம் அவருக்கு ஒரு பொருட்டே இல்லை ...அத்தையும் அந்த வீட்டின் மூத்த மருமகளும் சரியில்லை என்று தெரிந்தாலும் அவர் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் அவர்களுடன் நன்றாகவே பழகினார்.மகளை தைரியமான பெண்ணாக வளர்க்க எண்ணி சிறு வயதில் இருந்தே தாய் தந்தை இருவரும் அவளுக்கு தற்காப்பு கலைகளையும் கற்றுக் கொடுத்தனர்.. மதிக்கு படிப்பும் நன்றாக வரும் அதே வேலை அவளுக்கு இசையிலும் நாட்டம் அதிகம்.. அதனால் சிறு வயதிலேயே இசையை முறையாக கற்றுக் கொண்டாள் மதி..
எந்த விதமான மன நிலையில் அவள் இருந்தாலும் பாட்டு கேட்பது அவளது வழக்கம்.. தந்தை இறந்த பிறகு பாட்டி தனது தாய்க்கு எதிராக பல வேலைகளை செய்கிறார் என்பதை அவள் அறிந்தே இருந்தாள்.
அவள் சுட்டித்தனம் நிறைந்த பெண்.. அதே போல கோபமும் அதிகம் வரும் அவளுக்கு..


வடிவுக்கரசிக்கோ வசந்தி பேசாமல் தான் காலால் இட்ட கட்டளையை தலையால் செய்கையில் உள்ளுக்குள் அப்படி ஒரு மகிழ்ச்சி.. அதனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேலை வாங்குவார் அவரை ...இதை அறிந்த மதி அவரிடம் சண்டைக்கு போக அதையும் தடுத்தார் வசந்தி..அதற்கு அவர் மதியிடம் காரணமும் சொன்னார்..
" இங்க பாரு மதிம்மா. நான் வேலை செய்வதை பத்தி எனக்கு எந்த கவலையும் இல்லை. நான் ஒரு ஏழை. அதனால் இது எனக்கு பெருசா தெரியல. நம்ம வீட்டு வேலையை நாம தானே செய்யணும்.. நீயும் வேலைக்கு தயங்கவே கூடாது.. சரியா?
அப்புறம் நானும் அப்பாவும் காதலிச்சு கல்யாணம் பண்ணது தான் உன்னோட பாட்டிக்கு பிடிக்கல ..அதனால அவங்க கோபத்தை எல்லாம் என்னை திட்டியே தீத்துக்குறாங்க.. அதை பெரிசாக்க வேண்டாம்.." என மகளிடம் அமைதியாக எடுத்துக் கூற தாய்க்காக சரி என்று கூறி விட்டாள் மதி.

ஆனால் வசந்தி நினைத்ததை விட மோசமாக இருந்தார் வடிவக்கரசி. இளைய மகனின் சொத்துக்கள் அனைத்தும் மதிக்கு 18 வயதாகும் போது அவளது பெயருக்கு மாறி விடும்.. எனவே அதை தடுக்க எண்ணி வசந்தி இடம் பேசினார் அவர்.


" என்ன அத்தை பேசணும்னு கூப்பிட்டு இருக்கீங்க?" என்று வசந்தி மரியாதையாக கேட்க அவரை உட்கார கூட சொல்லாது கால் மேல் கால் போட்ட படி அமர்ந்து வசந்தியை பார்த்தார் அவர்.


"ம்...அது ஒன்னும் இல்லை அன்பரசன் பேர்ல இருக்கிற சொத்து எல்லாம் இன்னும் கொஞ்ச நாள்ல உன் பொண்ணு பேருக்கு வர போகுது போல .."என வசந்தியை பார்த்து நக்கலாக கேட்டார் வடிவுக்கரசி.அவர்
' உன் பொண்ணு' என்று கூறியது வசந்திக்கு பிடிக்கவில்லை..அன்பரசனுக்கும் தானே அவர் மகள். அப்படி இருக்கையில் ஏன் அவ்வாறு குறிப்பிடாமல் இப்படி... என யோசனை செய்தவரை மீண்டும் வடிவுக்கரசியின் குரலே நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது..


" அந்த சொத்து உன் பொண்ணு பேருக்கு போகக் கூடாது.. என் பையன் தான் இறந்துட்டானே. நீங்களும் எங்கேயாவது போய் தொலைங்க. அவ்வளவு சொத்தும் என் மூத்த பையனுக்கு தான். அவனோட ரெண்டு பசங்களுக்கும் தான் இந்த குடும்பத்தோட வாரிசு.." என்று அவர் கூறிக் கொண்டு போகவே மனம் கனத்து போனது வசந்திக்கு‌.எப்போதும் வடிவுக்கரசி மயூரியை தான் அன்பாக பார்ப்பார். அவளுடன் தான் பேசுவார் ..
மதியழகியை கண்டாலே திட்டு தான் விழும்... மதியோ முறைத்துக் கொண்டே கடந்து சென்று விடுவாள். இப்படி அவர் பாகுபாடு காட்டுவது வசதிந்திக்கு மன வேதனையை கொடுத்தாலும் என்றாவது மகளை ஏற்றுக் கொள்வார்கள் என எண்ணி அமைதியாக இருந்து விடுவார்..ஆனால் இன்று இவள் எங்கள் வீட்டு வாரிசே இல்லை என கூறுகையில் அப்படியே உடைந்து விட்டார் அவர். அவருக்கு சொத்து ஒரு பொருட்டே இல்லை ..எனவே ஒரு முடிவெடுத்தவராக சரியான தலையை ஆட்டி வைத்தார்..
அன்றே சாத்விக்கிற்கு அழைத்து மதியழகியை பார்த்துக் கொள்ளும் படியும் கூறினார். 'ஏன் சித்தி?'
என அவன் கேட்ட போதும் பதில் எதுவும் அவர் சொல்லவில்லை. அவனுக்கு தான் வீட்டில் நடக்கும் எதுவும் தெரியாதே‌.. வசந்தி இதுவரை அவனிடம் எதுவும் சொல்லவில்லை.வசந்தி சரி என கூறிய பிறகு வக்கீலை அழைத்த வடிவுக்கரசி அனைத்து சொத்துக்களையும் மூத்த மகன் பெயருக்கு மாற்ற போகும் சமயம் வக்கீல் கூறியதைக் கேட்டு மேலும் கோபம் கொண்டார். உயிரில் எழுதி இருப்பதற்கு இனங்க 'அன்பரசன் இல்லாவிடில் சொத்துக்கள் அனைத்தும் வசந்திக்கும் மதியழகிக்குமே செல்லும்.. அதே போல் அன்புச் செல்வனுக்கும் அன்பரசனுக்கும் சரிசமமாவே சொத்து பிரித்து வைக்கப்பட்டு இருந்தது.. அப்படியே மதியழகியும் இல்லாவிடில் தான் சொத்துக்கள் அனைத்தும் மூத்த மகனுக்கு செல்லும். '
என்றே வக்கீல் கூறினார்.


இதனைக் கேட்ட ஜெயராணி வடிவுக்கரிசியுடன் சேர்ந்து ஒரு திட்டத்தை தீட்டினார். அதாவது தாய் மகள் இருவரும் உயிருடன் இல்லை என்றால் சொத்து தானாகவே இவர்களுக்கு வந்து விடும் ..எனவே இருவரையும் கொன்று விட்டால் தானாகவே அவர்களிடம் வந்து சேரும் என்று ஜெயராணி கூற அந்த திட்டத்திற்கு ஒத்துக் கொண்டார் வடிவுக்கரசி.முதலில் தாயைக் கொன்று விட்டு அதற்கடுத்து எந்த தடையும் இல்லாமல் மகளை கொள்வதற்கே திட்டம் தீட்டி இருந்தனர்.
அதன்படி மாடியில் துணிகளை காய வைத்துக் கொண்டே இருந்த வசந்தியை யாரும் அறியாமல் அங்கு மறைந்து நின்று இருந்த ஜெயராணி தள்ளி விட்டார். அவருடன் வடிவுக்கரசியும் உடன் இருந்தார் ...
மாடியில் இருந்து விழுந்த வசந்தி அந்த நொடியே இவ்வுலகை விட்டு பிரிந்து விட்டார் மகளை அனாதையாக இந்த அரக்கர்களுக்கு இடையில் விட்டு விட்டு.


இருவரும் யாரும் காணவில்லை என நினைத்து இருக்க தூரத்தில் வேலைக்கார பெண்மணியுடன் பேசிக் கொண்டிருந்த மதியழகியும் அவளுடன் இருந்த கனகாவும் கண்டு விட்டனர்.. ஆனால் இது ஜெயராணிக்கும் வடிவுக்கரசிக்கும் தெரியாது. இதனை கண்ட மதியழகி திகைத்து விட்டாள். அவளை உலுக்கி சுய நினைவுக்கு கொண்டு வந்த கனகா அவளையும் இழுத்துக் கொண்டு அங்கு ஓட வசந்தியின் உயிர் பிரிந்து இருந்தது..


அன்று அவள் அன்னையை அணைத்துக் கொண்டு அழுத அழுகை கல் நெஞ்சம் கொண்டவர்களையும் அசைக்கும். ஆனால் அந்த இரண்டும் வீட்டில் தான் இருந்தது. பொய்யாக கூட ஒரு சொட்டு கண்ணீர் விடவில்லை. தனது தாயைக் கொன்றவர்கள் கண் முன்னே இருந்தும் எதுவும் செய்ய முடியாத நிலை தான் மதிக்கு.காரணம் தாய் வாங்கி இருந்த சத்தியம் .
"மதிமா..எந்த பிரச்சினை வந்தாலும் இந்த வீட்டை விட்டுப் போகக் கூடாது. நான் தான் அனாதையா இருந்துட்டேன் .
நீ
உன் அப்பா குடும்பத்தோடவே இருக்கணும். அவங்க எது செஞ்சாலும் சமாளிச்சிட்டு வாழ பழகணும்.. இது அம்மா மேல சத்தியம் .."என வசந்தி இரண்டு நாட்களுக்கு முன் கூறியது நினைவு வரவே அமைதியாகி விட்டாள் மதி.கனகா அந்த வீட்டில் வேலை செய்யும் பெண்..
கனகாவிற்கு வசந்தி என்றால் அப்படி ஒரு பிடித்தம்.அவரோ இதை கண்கூடாக கண்டதால் போலீசுக்கு செல்லலாம் என மதியை அழைக்க தாய் வாங்கிய சத்தியத்தை பற்றி கூறி மறுத்து விட்டாள் மதி.அன்றிலிருந்து இன்று வரை வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் அன்னையிடம் செய்த சத்தியத்திற்காக அனைத்தையும் பொறுத்துக் கொண்டு வாழ்கிறாள். அனைவரும் இவரது மரணம் சாதாரணமாக கால் தடுக்கி விழுந்ததால் தான் என நினைத்துக் கொண்டிருந்தனர் .. சாத்விக் உற்பட.


வடிவுக்கரசி எவ்வளவு கொடுமை செய்தாலும் அவளை படிப்பதற்கு அனுமதித்தார் ..அவளை கொடுமை செய்கின்றனர் என்று ஊரார் பேசிவிடக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக.. அன்னைக்காக அனைத்தையும் தாங்கிக் கொண்டு இருப்பவளால் முடியாத ஒரு செயல் இருக்கும் என்றால் அது அன்னையை அவர்கள் திட்டுவதே.." அவ வீட்டுக்கு வந்த நேரம் தான் வீட்ல தரித்திரமே வந்துச்சு. ராசி இல்லாதவ.. புருஷனையும் இழந்துட்டு கொஞ்ச நாள்ல அல்பாயுசுல போய் சேர்ந்துட்டா.. அதுவும் இன்னொரு தரித்திரத்தை விட்டுட்டு போயிட்டா.."என்று வசந்தியை வசை பாடிக் கொண்டே இருப்பார் வடிவுக்கரசி.


இது பெண்களின் சாபமோ என்னவோ.. எதற்கெடுத்தாலும் ராசி சரியில்லை என்று பெண்களை தான் திட்டுகிறார்கள்.. ஏன் இந்த ராசிபலன் எல்லாம் ஆண்களுக்கு இருப்பதில்லையா..?வசந்தியை கொன்றது போலவே மதியையும் கொலை செய்ய அவர்கள் முயற்சிக்க அதை அறிந்து கொண்ட பெண்ணவளோ எப்போதும் விழிப்புடனே தான் இருப்பாள்.அதனால் வசந்தி இறந்து இரண்டு வருடங்கள் கடந்த நிலையிலும் அவளை எதுவும் செய்ய முடியவில்லை அவர்களால்.." என்ன மதிம்மா.. இங்க என்ன பண்றீங்க?" என கூறியபடி அங்கு கனகா வர தனது யோசனையை தள்ளி வைத்து அவரை பார்த்து புன்னகைத்தவள்
"என்ன அக்கா இன்னைக்கு லேட்டா வரீங்க..?" என்று பேச்சை மாற்றினாள்.


இல்லை என்றால் ஏன் இங்கு தனியாக இருந்தாய்? என கேள்வி கேட்க ஆரம்பித்து விடுவாரே... இருவரும் பேசிக் கொண்டே உள்ளே சென்றனர்.

***********************


"ம்..ம்.. சீக்கிரம் வேலைய முடிங்கப்பா
இப்ப முதலாளி வர நேரம்.." என மேற்பார்வையாளர் கூற முதலாளி வருகிறார் என்ற வசனத்தை கேட்டதும் வேலைகள் சீக்கிரமாக நடந்தன.. அந்த இடம் ஊரை விட்டு சற்று தள்ளி இருந்தது ..அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை கட்டி எழுப்புகின்றனர்..

எஸ் எம் கன்ஸ்ட்ரக்ஷன் தான் இதனை செய்து வருகிறது.. அதன் எம். டி ஷியாம் சுந்தர் மிகவும் கடுமையானவன்.. அவனுக்கு வேலை திருப்தியாக இருக்க வேண்டும்.. அதில் ஏதாவது குறை இருந்து விட்டால் அதை தேடி கண்டு பிடித்து சம்பந்தப் பட்டவர்களுக்கு தக்க தண்டனையும் கொடுத்து விடுவான்..


வயது என்னவோ வெறும் இருபத்தி ஐந்து தான் ..ஆனால் அவன் இருக்கும் உயரம் என்னவோ பெரிது ..தந்தை இறந்த பின் தாயும் ஓய்ந்து போய்வி ட அம்மாவின் தம்பி ராகவ்வின் உதவியுடன் தொழிலை முன்னேற்றி இருந்தான் அவன் ..
இது மட்டுமல்ல அவனது தொழில்.

எஸ். எம் கார்மெண்ட்ஸ் ,சூப்பர் மார்க்கெட் என்று பல தொழில்கள்..ராகவ்விற்கு ஓய்வு கொடுத்து விட்டு தானே முழு பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு திறம்பட தொழிலை நடத்தி வரும் இளம் தொழில் அதிபர் அவன்.


ஆறடிக்கும் சற்றே கூடிய உயரம், சிவந்த நிறம், ஜிம் பாடி ,அலை அலையான கேசம் , இறுகிய தாடை, சிரிப்பை மறந்த உதடுகள், கூர் நாசி, மற்றவர்களை துழைத்தெடுக்கும் கண்கள் என ஆணழகனாக இருப்பவன் அவன்.


தாய் மீனா மற்றும் தங்கை வருணிக்காவுடன் மட்டும் சிறிது இயல்பாக பேசுவான்.. சிறிதாக சிரிப்பான்... ராகவ் மீனாவின் உடன் பிறந்த தம்பி இல்லை.. ஆனாலும் மீனாவுடன் அதிக ஒட்டுதல் அவருக்கு..


திருமணம் முடித்து சில நாட்களிலேயே மனைவி இறந்து விட அதன் பிறகு மீனா வற்புறுத்தியும் அவர் வேறு திருமணம் செய்து கொள்ளவில்லை ..ஷியாம் சுந்தருக்கு பக்க பலமாக இருந்தார் அவர் ..

தந்தை சேகர் ஆரம்பித்த எஸ் எம் கார்மெண்ட்ஸை மேலும் விரிவுபடுத்தி தனக்கு பிடித்த வேறு தொழில்களையும் செய்தான் அவன்...

இங்கு வேலைகள் விரைவாக நடந்து கொண்டிருக்க வழுக்கி கொண்டு வந்து நின்றது ஒரு கருப்பு நிற கார் .. அதில் இருந்து கம்பீரமாக இறங்கினான் ஷியாம் சுந்தர்.அவனது பின்னால் காரில் இருந்து அவசர அவசரமாக இறங்கினான் தீபக் ...அவனின் உதவியாளன்.

தொடரும்..


 

Mafa97

Moderator
அத்தியாயம் 💔 03

வேலை நடக்கும் இடத்திற்கு வந்து நின்றது அந்த கருப்பு நிற கார். அதில் இருந்து கம்பீரமாக இறங்கி வந்தான் ஷியாம் சுந்தர். அவனது பின்னால் அவனது உதவியாளன் தீப்பக்கும் அவனது நடைக்கு ஈடு கொடுக்க முடியாமல் வேகமாகவே அவன் பின்னால் வந்தான் .. அன்றைய அவனது வேலைகளை பட்டியலிட்ட படியே தான் நடந்து சென்றான் தீபக்.

அவனுக்கு இது பழகிய ஒன்று தான் .
எப்போதும் இப்படித் தான் நேரத்தை வீணடிக்காது இது போன்ற நேரங்களில் அவன் செய்ய வேண்டிய வேலைகளை கேட்டுக் கொள்வான் ஷியாம் சுந்தர்.

வேகமாக நடந்து வந்தவன் அங்கே தனக்கென ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும் அலுவலக அறையில் அமர்ந்தான். தீபக்கையும் அமரும் படி சைகை செய்ய வேணடாம் என்று மறுத்தான் அவன். தினமும் இப்படித் தான் அவனை அமரும் படி கூறினாலும் மறுத்து விடுவான். தீபக்கிற்க்கு அவன் மீது அளவு கடந்த மரியாதை இருப்பதால் அவன் முன்னால் உட்காரவே மாட்டான்..

" நீ எனக்கு தம்பி மாதிரி. இன்னொரு தடவை என்னை சொல்ல வைக்காதே உட்காரு.."என்று ஷியாம் சுந்தர் கண்டிப்பாக சொல்லவே அதை தட்டாமல் அங்கு உள்ள ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டான் அவன்..

" அப்புறம் சொல்லு வேலை எல்லாம் எப்படி போகுது? எந்த தடையும் இல்லை தானே..?"
ஷியாம் சுந்தர் சந்தேகமாக கேட்க என்ன சொல்வது என தெரியாமல் முழித்தான் தீபக் ..அவனது முழியை வைத்தே ஏதோ இருக்கிறது என அறிந்து கொண்ட ஷியாம்
"யார் பிரச்சினை பண்றது?" என்று தனது தாடையை தடவியபடி கேட்டான்...


அவன் நேரடியாகவே கேட்ட பிறகு பதில் சொல்லாமல் இருந்தால் அவ்வளவு தான் என புரிந்து கொண்ட தீபக் பயத்துடனே
" அன்பு செல்வன்..." என்று மட்டுமே கூறினான்.


இந்த பெயரை கேட்டு ஷியாம் ஒன்றும் அதிர்ந்து விடவில்லை. அவன் மனதில் யூகித்த பெயரை தான் தீபக் கூறி இருந்தான். இது இன்று நேற்று அல்ல ஷியாமின் தந்தை சேகர் தொழில் செய்யும் போது இருந்தே நடக்கும் ஒன்று தான்.

'இந்த பூனையும் பால் குடிக்குமா?' என்ற ரீதியில் இருக்கும் அன்பு செல்வன் செய்வது எல்லாமே கேடித்தனமான செயல்கள் தான். இவன் எந்த வேலையை தொடங்கினாலும் அதில் தலையிடுவதே அவர் வேலை .அதை எல்லாம் சமாளித்தே இன்று இந்த இடத்தை அடைந்து இருக்கிறான் ஷியாம் சுந்தர்..


எனவே இதையும் சமாளித்து விடலாம் என்று நினைத்தான்..
ஆனால் இது மிகப் பெரிய ஒரு ப்ராஜெக்ட் வேறு ..
அன்பு சொல்வனின் கம்பெனிக்கு கிடைக்க இருந்த இந்த ப்ராஜெக்ட் சில ஆயிரம் ரூபாய் வித்தியாசத்திலேயே இவனது கம்பெனிக்கு கிடைத்து இருந்தது.


அதனால் இவன் மீது கடும் கோபத்தில் இருந்தார் அன்பு செல்வன்.. ஆகவே இந்த வேலையை முடிக்க விடாமல் பல தடங்கல்களை ஏற்படுத்துகிறார் மறைமுகமாக மற்றும் நேரடியாகவும் ...


இதை அடுத்து இன்னும் ஒரு முக்கியமான ப்ராஜெக்ட் வேலை உள்ளது ...அதுவும் இவர்கள் இருவரில் ஒருவருக்கு கிடைக்க தான் வாய்ப்புகள் அதிகம்.. எனவே இருவரும் அயராது உழைத்து வருகின்றனர் அந்த ப்ராஜெக்ட்டிற்காக.

தான் அன்பு செல்வனின் பெயரை கூறியும் அமைதியாக இருக்கும் தனது முதலாளியை கேள்வியாக பார்த்தபடி இருந்தான் தீபக். அவனது பார்வையை உணர்ந்த ஷியாம்
"விடு தீபக் பாத்துக்கலாம் ..அப்புறம் அவனுக்கு ஒரு பொண்ணு இருக்குல்ல . ரொம்ப பண்ணான்னா அவளை தூக்கிடலாம்.."என்று
கூலாக பதில் சொன்னான் .

அவனது பதிலில் ஆடிப் போய் விட்டான் தீபக்..
அவன் அறிந்த வரை ஷியாம் தொழில் தொழில் என்று மட்டுமே அழைவான். அவனுக்கு பெண்கள் பக்கம் போக கூட நேரம் இருந்தது இல்லை..


இன்று என்னவென்றால் இப்படி சொல்கிறானே என்ற பயம் அவனுக்கு‌‌..
" டேய் அவளை நான் ஒன்னும் பண்ண மாட்டேன் பயப்படாதே..." என்று கூறிய ஷியாம் அங்கு இருந்த முக்கிய ஃபைல்களை படிக்க ஆரம்பித்து விட்டான்..

தன்னை அவன் கண்டு கொண்டதை நினைத்து அசட்டு சிரிப்பொன்றை சிந்தியவன் தானும் வேலைகளில் கவனமானான்.

****************

வேலைக்காரர்களுக்கு என்று ஒதுக்கப் பட்டு இருக்கும் அறையில் கனகா மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டு இருந்தாள் மதி.. அவளது தாய் இறந்த பிறகு அவளுக்கு இருக்கும் ஒரே உறவு என்றால் அது இந்த கனகா மட்டுமே..அவர் ஒன்றும் அவளது சொந்தமில்லை.. சிறு வயதில் இருந்தே இந்த வீட்டில் தான் வேலை செய்கிறார் கனகா. அவரது குடும்பம் வறுமையில் வாட அன்பரசன் மற்றும் வசந்தி இருவரும் தான் அவளை அழைத்து வந்து இந்த வீட்டில் வேலைக்கு சேர்த்து விட்டனர் ...அன்றிலிருந்து இன்று வரை குடும்பத்திற்காகவே உழைத்து வருகிறார் கனகா. தம்பி தங்கைகளை படிக்க வைத்து திருமணமும் செய்து வைத்தார் அவர்... ஆனால் தாய் தந்தை இறந்த பிறகு அவளை கண்டு கொள்ள தான் யாரும் இல்லை... இங்கு அதிகமானோரின் நிலைமை இதுதான்.. சிலர் இது போன்றவர்களை தேவைக்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர்..

கனகாவிற்கு பெரிதாக வயது ஒன்றும் ஆகிவிடவில்லை.. 32 தான் அவரது வயது.. இன்னும் திருமணம் கூட ஆகவில்லை.. செய்து வைக்கத் தான் யாரும் இல்லாத நிலை ...மதியின் பெற்றோர் இப்போது இருந்திருந்தால் நிச்சயம் அவருக்கு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்திருப்பார்கள்... ஆனால் அதற்கு தான் வழி இல்லையே..


அவரும் மதியழகியை குழந்தையாகவே பார்க்கிறார் .வசந்தி இறந்ததிலிருந்து மதியை கவனித்துக் கொள்வது அவர் மட்டுமே..
மதியோ அவரை தன்னுடனே தாங்கிக் கொள்ளும் படி கூறிய போதும் முடியாது எனக் கூறி விட்டார் ...தனது சிறிய குடிசையிலே தான் இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.


தனது மடியில் படித்துக் கொண்டு இருந்தவளின் தலையை தடவிக் கொடுத்துக் கொண்டே இருந்தார் கனகா. வீட்டில் உள்ளவர்கள் ஏதோ பார்ட்டி என்று வெளியே சென்று விட இவர்கள் இங்கு நிம்மதியாக இருந்தனர் ...

"என்ன மதிம்மா யோசிக்கிறீங்க...?" என்று இதமாக கனகா கேட்க "அக்கா எனக்கு வேலைக்கு போக ரொம்ப ஆசையா இருக்கு.. ஆனா இவங்க என்ன சொல்லுவாங்கன்னு பயமாவும் இருக்கு.." என்று தயக்கமாக கூறினாள் மதியழகி.

"நீங்க எதுக்கு பயப்படனும்?
இது உங்களோட வீடும் தானே‌‌.. நீங்க வேலைக்கு போறீங்கன்னா அது உங்க விருப்பம்.. அவங்க எதுவும் சொல்ல மாட்டாங்க .."என ஆறுதல் கூறினார் கனகா ...
ஆனால் அவருக்குத் தெரியும் இவர்கள் யாரும் மதியை வேலைக்கு என்று அனுப்ப மாட்டார்கள் என...

இருந்தும் மதியின் மனம் நோகக் கூடாது என நினைத்தவர் அவளுக்கு ஆறுதல் கூறினார். மதிக்கும் தெரியும் தான் வேலைக்கு எல்லாம் அனுப்ப மாட்டார்கள் என்று.. எதற்கு முயற்சி செய்து பார்க்க எண்ணினாள் அவள்.அடுத்த நாள் ஞாயிறு ஆகையால் அனைவரும் வீட்டில் தான் இருந்தனர். அன்று அதிசயமாக வீட்டு உறுப்பினர்கள் ஒன்றாக ஹாலில் அமர்ந்து இருக்க அவர்கள் முன் போய் நின்றாள் மதி...


இதை விட்டால் அவளுக்கு அனுமதி கேட்க வேறு வாய்ப்பும் கிடைக்காது அல்லவா.. எனவே தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவர்கள் முன்னால் நின்றாள் ‌. பேசிக் கொண்டிருந்தவர்கள் அவளை கண்டதும் பேச்சை நிறுத்தி விட்டு அவளை கேள்வியாக பார்த்தனர்...


"பாட்டி.." என்று மதி ஆரம்பிக்கவே "ஏய் நாதாரி... நீ யாருடி என்னை பாட்டினு கூப்பிட ..அழகா மேடம் என்று கூப்பிடு..." என உச்சஸ்தானியில் கத்தினார் வடிவுக்கரசி.


எப்போதும் கேட்பது தான் என்றாலும் மனதின் ஓரம் சிறு வழி தோன்றத் தான் செய்தது.
இருந்தும் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவள் பேச வந்ததை பேசியே ஆக வேண்டும் என முடிவு செய்து
"சாரி மேடம் . அது..அது வந்து நான்..நான் வேலைக்கு போகவா?" என்று பயந்த படி தான் கேட்டாள்.


அதற்கு அங்கு இருந்த பெண்கள் மூவரும் அவளை முறைத்து பார்த்தனர் என்றால் அன்பு செல்வன் அவளை ஆழ்ந்து பார்த்தான்.
அவர் மனது வேறொரு கணக்கு போட்டது.

"என்ன குளிர் விட்டு போச்சா.. தைரியமா வந்து வேலைக்கு போகணும்னு கேக்குற ...ஒழுங்கு மரியாதையா இங்க இருக்கிற வேலை எல்லாம் பார்த்துக்க.. அதை விட்டுட்டு வேலை அது இதுன்னு மறுபடி வந்து நின்ன தொலைச்சிடுவேன் ஜாக்கிரதை.."என்று ஜெயராணி கூற வடிவுக்கரசியும் அதைக் கேட்டு பேசாமல் இருந்தார்..தன்னுடைய சின்ன ஆசை கூட நிறைவேறாததை எண்ணி கண்களில் நீர் வடிந்தது மதிக்கு.. அவர்கள் முன்னாள் அழக் கூடாது என அவசரமாக அங்கிருந்து சென்று விட்டாள் கண்ணீரை மறைக்கும் பொருட்டு.


அவள் அழுது கொண்டே போவதை கண்ட கனகா அவள் பின்னால் சென்று ஆறுதல் கூற முற்பட
"சாரிக்கா.. என்னை கொஞ்சம் தனியா இருக்க விடுங்க ப்ளீஸ்..." என்று கூறி விட அவரும் அங்கிருந்து சென்றார் ...அவளை நினைத்து அவருக்கும் கவலையாக தான் இருந்தது... கனகா சென்ற பிறகு தோட்டத்தில் இருக்கும் ஊஞ்சலில் அமர்ந்து கண்ணீர் வடிக்கலானாள் மதியழகி ..


அவள் சட்டென்று அழுதுவிடும் ரகம் இல்லை. இருந்தும் இன்று ஏனோ அவளால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை ...அப்போது தன் முன்னால் நிழல் ஆட யார் என்று நிமிர்ந்து பார்த்தாள் அவள்... அங்கு நின்றிருந்த நபரை கண்டு வேகமாக எழுந்து நின்றாள் மதி.. அவர் வேறு யாரும் அல்ல அவளது பெரியப்பா அன்பு செல்வன் தான்...


அவர் எதற்கு இங்கு தன்னை தேடி வந்து இருக்கிறார் என கேள்வி மனதில் தோன்றிய போதும் அமைதியாக அவரைப் பார்த்தபடி இருந்தாள் அவரே பேசட்டும் என நினைத்து.அவரும் நேரத்தை வீணடிக்க விரும்பாமல் மதியை பார்த்து பேசலானார்.
"உனக்கு வேலைக்கு போகணும் அவ்வளவு தானே ..."
என்று நேரடியாக கேட்டு விட ஆமாம் என்று தலையசைத்தாள் மதி..

" அப்படின்னா நான் உனக்கு ஒரு வேலை தர்றேன்.. முதல் அதை சரியா பண்ணு.. அப்புறமா வெளியில வேலைக்கு போகலாம்.. எந்த தடையும் இல்லாம உன்னை நான் வேலைக்கு அனுப்பி வைப்பேன்.." என அவர் கூறவே மதிக்கு சந்தோஷமாக இருந்தது...


அவர் கொடுக்கும் வேலையை எப்படியாவது முடித்து விட வேண்டும் என நினைத்தாள் பேதை பெண்ணவள்.. ஆனால் அவர் அடுத்து கூறியதை கேட்டதும் தான் திக்கென்றானது அவளுக்கு...


" நான் சொல்ற இடத்தில நீ கொஞ்ச நாள் வீட்டு வேலை செய்யணும்... அது மட்டும் இல்லை உன் வேலை. அங்கு அவன் தினமும் செய்ற வேலை எல்லாம் எனக்கு அப்டேட் பண்ணிக்கிட்டே இருக்கணும். அப்புறம் நான் சொல்ற வேலையை நீ யாருக்கும் தெரியாம அப்பப்போ செய்யணும்.."
என்று அன்பு செல்வன் கூறிக் கொண்டே போக பயம் வந்து விட்டது மதிக்கு.'இவர் கூறுவதை பார்த்தால் அது மோசமான செயல் போல் அல்லவா இருக்கிறது' என அவள் மனதில் நினைத்துக் கொண்டே வெளியே முடியாது என தலையாட்டினாள்.. அவளது தலை அசைப்பை கண்டவர்


"ஓ அந்த அளவுக்கு பெரிய ஆளாகிட்டியா?
இந்த வேலையை நீ தான் பண்ணனும்... நான் முடிவு பண்ணிட்டேன் ...
நீ முடியாதுன்னு சொன்னா உன்னை எதுவும் பண்ண மாட்டேன்... இப்போ உனக்குன்னு இருக்கிற ஒரே உறவு கனகா தானே... அவளை தூக்கிடுவேன்... உனக்கு ஏற்கனவே நடந்ததெல்லாம் ஞாபகம் இருக்குமே..."என அவர் கண்கள் சிவக்க அழுத்தமான குரலில் அவளை மிரட்ட என்ன செய்வது என தெரியாமல் திகைத்துப் போய் நின்று விட்டாள் அவள் ...அன்பு செல்வன் இவ்வளவு கொடூரமானவர் என அவள் நினைக்கவே இல்லை அல்லவா.. அவர் மற்றவர்களை போல் அல்லாது சிறிதேனும் நல்லவராகத் தான் இருப்பார் என்று நினைத்து இருந்தாள் அவள். ஆனால் இன்று அவளது கணிப்பு பொய்யாகிப் போனதே...


தொடரும்...
சைட்லயும் கருத்துக்கள் வந்தா நல்லா இருக்கும்..🥰
 

Mafa97

Moderator
அத்தியாயம் 💔 04மதி மனதில் பயத்துடனே யோசனை செய்து கொண்டு இருந்தாள். அவளது பதிலுக்காக அவளை பார்த்தபடி இருந்தார் அன்பு செல்வன். அவர் சொல்வதை செய்ய வேண்டிய கட்டாயம் இப்போது அவளுக்கு ஏற்பட்டிருக்கிறது ...ஏனெனில் அவளுக்கு இருக்கும் ஒரே உறவு கனகா மட்டுமே ..'அவளது தாயை அவள் கண் முன்னே கொன்றதை போல இவரையும் ஏதாவது செய்து விட்டால்?' அந்த நினைப்பே அவளை பயமுறுத்தியது. அதற்கு மேல் சிந்திக்காமல்
" நீங்க சொல்றபடி நடந்துகிறேன்.." என்று ஒரே மூச்சாக கூறி முடித்தாள் மதியழகி. அவளது பதிலை கேட்டு வெற்றி புன்னகை ஒன்றை சிந்தியவர்
"மத்த டீடைல்ஸ் எல்லாம் அப்புறம் சொல்றேன்.. முக்கியமா நீ இதை கனகா கிட்ட சொல்லவே கூடாது.." என்று கூறிய படி அங்கிருந்து சென்று விட்டார்...அவர் சென்றதும் அப்படியே அங்கேயே அமர்ந்து கொண்ட மதிக்கு சாத்விக்கின் நினைவு வந்து போனது ..
அவனுடன் ' அண்ணா... அண்ணா..' என்று சுற்றித் திரிந்தவள் தான். ஆனால் இப்போது அவள் அவனுடன் பேசுவது கூட இல்லை.இதற்கு காரணமும் இந்த வீட்டு ஆட்கள் தான் ..அவனுடன் பேசக் கூடாது என உறுதியாக கூறி விட்டனர் அவளிடம் ..
அதிலிருந்து அவனுடன் பேசுவது இல்லை அவள்.
அவனாக அழைத்தும் பேச மறுத்ததாள். கனகாவுக்கு அழைத்து மதி எப்படி இருக்கிறாள் என நலம் விசாரிப்பதோடு நிறுத்திக் கொள்வான் அவன்..


சாத்விக் கனகாவிடம் விசாரிப்பதை அறிந்த போதும் அதை காட்டிக் கொள்ளவில்லை மதி.. இன்று இதை அவனிடம் சொன்னால் என்ன என்று அவளுக்கு தோன்றாமல் இல்லை. ஆனால் கனகாவும் அவளுடைய தாயின் மரணமும் கண்முன்னே வர அதை தனக்குள்ளே புதைத்துக் கொண்டாள் மதியழகி....************************ஊரை விட்டு சற்று தள்ளி அமைந்து இருந்த அந்த பங்களாவையே தனது பெரிய விழிகளால் பயத்துடன் பார்த்த படி நின்று இருந்தாள் மதி. அவள் அருகில் அந்த வீட்டில் அதிக நாட்களாக வேலை செய்யும் சுமதி நின்று கொண்டு இருந்தார்."என்னம்மா பார்த்துக்கிட்டு நிக்கிற..
வெரஸா வா... டைம் ஆச்சு பாரு.." என அவளை சுமதி தட்டி கூப்பிட சுய உணர்வு பெற்ற மதி அவருடன் உள்ளே சென்றாள் பயத்துடன்.

அன்பு செல்வன் அன்று அவளுடன் பேசிய பிறகு
மீண்டும் ஒரு
வாரம் கழித்து அவளை தேடி வந்து அவள் செல்ல வேண்டிய வீட்டு முகவரியை கூறி விட்டு சுமதி என்ற
பெண்மணியுடன் அங்கு செல்லுமாறும் கூறினார் ...மேலும் அவள் கையில் சிறிய பட்டன் போன் ஒன்றையும் திணித்தார். தேவைப்படும் போது பேசிக் கொள்வதற்கு என்று ...அதையும் வாங்கிக் கொண்டவள் அவரை பார்த்த படி நிற்க தனது தொலைபேசியில் இருந்த
ஷியாம் சுந்தரின் புகைப்படத்தை எடுத்து அவள் முன்னால் காட்டியவர்
"இவன் பேர் ஷியாம் சுந்தர். இவன் வீட்டுக்குத் தான் நீ போகணும்.. அவன் என்னென்ன பண்றான்னு எல்லாம் எனக்கு தெரிஞ்சாகணும்.. அப்பப்ப உனக்கு போன் பண்ணி நீ செய்ய வேண்டியதை நான் சொல்லுவேன் ...ஏதாவது சொதப்பின இங்கே கனகா காலி...." என்று அன்பு செல்வன் கூற சரி என்று சொல்வதை தவிர வேறு வழி இருக்கவில்லை அவளுக்கு..


அதிலும் அவனைப் புகைப்படத்தில் பார்த்தாலே பயமாக வேறு இருந்தது. 'நேரில் என்னென்ன நடக்குமோ?' என அவள் உள் மனம் வேறு கூறிக் கொண்டே இருந்தது..வீட்டை சுற்றும் மற்றும் பார்த்த படியே சுமதியுடன் நடந்தவள் சுமதி ஓரிடத்தில் நிற்கவும் அவளும் அப்படியே நின்று விட்டாள். கேள்வியாக அவள் சுமதியை பார்க்க அவர் ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்திருந்தவனை பார்த்துக் கொண்டு இருந்தார். அவரது பார்வை சென்ற திசையில் தானும் பார்த்தவள் சற்றே ஆசுவாசமானாள்.


ஏனெனில் அங்கு அமர்ந்து இருந்தது என்னவோ தீபக் தான். அவள் ஷியாம் சுந்தர் என நினைத்து ஒரு நொடி பயந்து விட்டாள். மதியை ஒரு கணம் பார்த்த தீபக் சுமதியின் புறம் திரும்பி
" என்ன சுமதிக்கா ? இந்த பொண்ணு யாரு?" என்று கேட்க அவனது குரல் கேட்டு தான் சுய நினைவுக்கு வந்தாள் அவள் ...
'அவர் என்ன சொல்ல போகிறாரோ... தன்னை மாட்டி விட்டு விடுவாரோ ?'என பயந்தபடி இருவரையும் மாறி மாறி பார்த்தாள் மதியழகி.


"இதுவா தம்பி பேரு மதியழகி. எனக்கு தெரிஞ்ச பொண்ணு தான். அம்மா அப்பா இல்லை. ரொம்ப கஷ்டப்படுதுப்பா இந்த பொண்ணு. நான் தான் உங்ககிட்ட கொஞ்சம் மாசத்துக்கு லீவு கேட்டேனே.. ஊருக்கு போகணும்னு. அதுவரைக்கும் இந்த பொண்ண இங்க வேலைக்கு வச்சுக்கோங்க.. நல்லா வேலை செய்யும் இந்த புள்ள.." என்று சுமதி விளக்கம் கூற அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்த தீபக்கோ அவர் பேசி முடித்ததும்


"சரி இந்த பொண்ணு இங்க வேலை பார்க்கட்டும். நான் சார் கிட்ட சொல்லிக்கிறேன்.." என்றான். அப்போது தான் போன உயிர் வந்தது போல் இருந்தது மதிக்கு. இவன் ஏதாவது கேள்வி கேட்டு விடுவான் என அவள் பயத்துடன் இருக்க சுமதி கூறியதுமே சரியென அவன் கூறி விட்டது சற்று ஆச்சரியமே அவளுக்கு..இருந்தாலும் வெளியில் எந்த உணர்வையும் காட்டாமல் அமைதியாக நின்று இருந்தாள் ‌ அவள் ..
அவளை இங்கே விட்டதும் தனது கடமை முடிந்து விட்டது என்பதைப் போல சுமதி அன்றே எங்கோ சென்று விட்டார். வீட்டில் வேலை ஆட்களை தவிர வேறு யாரும் இருப்பதாக தெரியவில்லை அவளுக்கு.அவள் வந்த போது தீபக்கை கண்டது தான். அதன் பிறகு அவனும் அங்கு இல்லை. அவளுடன் சேர்ந்து மொத்தம் ஐந்து வேலையாட்கள் ..அதில் அவள் மட்டுமே இளம் பெண் .மேலும் இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் வேலை செய்தனர். அதனைத் தவிர வெளியே வாட்ச்மேன் ஒருவர் இருந்தார்..
வீட்டு வாசலில் இரண்டு பெரிய நாய்கள் வேறு இருந்தன.
கை பாட்டிற்க்கு வேலை செய்தாலும் மனதில் என்னவோ பயம் இருக்கத் தான் செய்தது. அன்றைய நாள் அப்படியே கழிய இரவு உணவே சமைத்து முடித்தவள் அதன் பிறகு என்ன செய்வது என தெரியாமல் சமையல் அறையிலேயே ஒரு ஓரத்தில் அமர்ந்து கொண்டாள்.
அவளது வாழ்க்கையை நினைக்கையிலே அவளது இதழ்களில் விரக்தி புன்னகை.. அவளையும் வாட்ச்மேனையும் தவிர அந்த பெரிய பங்களாவில் அந்த இரவு நேரத்தில் வேறு யாரும் இருக்கவில்லை ..வேலை ஆட்கள் மாலை நேரமே சென்று விட்டிருந்தனர். அது வேறு அவளது பயத்தை அதிகப் படுத்தியது.

அப்படியே அமர்ந்து இருந்தவளது காதில் கார் ஒன்று வந்து நிற்கும் சத்தம் கேட்கவே திடுக்கிட்டு எழுந்து நின்றாள் அவள். இப்போது அவன் தான் வருகின்றான் என்பதை அறிந்திருந்தாள் பெண் அவள் ..
வேறு வழி இல்லை அவன் முன்னால் சென்று நிற்க வேண்டிய கட்டாயம் அவளுக்கு.. இப்போதே அவன் முன் போய் நிற்காமல் அவர்கள் அழைக்கும் போது செல்லலாம் என்று அமைதியாக அதே இடத்தில் நின்று கொண்டாள். மதியழகி எதிர்பார்த்ததைப் போலவே சற்று நேரத்தில் தீபக்கின் குரல் கேட்டது ..


"மதியழகி.. மதியழகி.." என்ற அவனது குரலில் அடித்து பிடித்து ஓடி வந்து அவன் முன்னால் நின்றாள் மதி. அவளுடைய வேகத்தை கண்டவன்
"நீ ஏன்மா ஸ்பீடா வர்ற.. மெதுவாவே வரலாம் .."என்று அக்கறையாக கூறியவன்
"அப்புறம் சார் வந்துட்டாரு ..சாப்பாடு எடுத்து வை.." எனக் கூற சரியென தலை அசைத்தவள் உள்ளே சென்று உணவு பாத்திரங்களுடன் வந்து உணவு மேசையில் ஒவ்வொன்றாக வைத்தாள்..அவள் வேலை செய்து கொண்டு இருக்கும் போதே உணவு மேசையை நோக்கி அழுத்தமான காலடி ஓசையுடன் அங்கு வந்து சேர்ந்தான் ஷியாம் சுந்தர். அவனது காலடி சத்தத்தில் நிமிர்ந்து பார்த்தவர்களுக்கு பயத்தில் தொண்டை அடைத்துக் கொண்டது. ஆறடி உயரத்தில் கிரேக்க சிலை போல இருப்பவனை கண்டு பதட்டம் தானாக வந்து ஒட்டிக் கொண்டது அவளிடத்தில்.மெதுவாக அவ்விடத்தை விட்டு நகர முற்பட்டவளை
"மதிழகி.." என அழைத்து தடுத்து நிறுத்தி இருந்தான் தீபக்.
அவனை மனதில் திட்டிக் கொண்டே திரும்பி அவர்கள் அருகே வந்தாள் மதி..

அவளை ஷியாம் சுந்தருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கோடு
" சார் இது புதுசா வேலைக்கு வந்த பொண்ணு.. பேரு மதியழகி.." என்று கூற தலையை நிமிர்த்தி ஒரே ஒரு நொடி அவளை அழுத்தமாக பார்த்தவன் மீண்டும் தனது உணவில் கவனம் செலுத்தினான்.அவன் பார்த்த நொடி இவளுக்குத் தான் உயிரே போய் விட்டது போல் ஒரு உணர்வு.. அவனது அழுத்தமான பார்வை வேறு அவளை ஏதோ செய்தது.. தீபக்கும் அவனிடம் விடை பெற்று அங்கிருந்து சென்று விட்டான்.. இப்போது அவளும் அவனும் மட்டுமே அந்த இடத்தில் எஞ்சி இருந்தனர்.
உணவை முடித்து விட்டு எழுந்தவன் அவளைப் பார்த்து "நல்லா சமைக்கிற.. இனிமே லஞ்ச்சை பேக் பண்ணி டிரைவர் கிட்ட கொடுத்து விடு.." என்று கூறி விட்டு தனது அறைக்குள் சென்று மறைந்து கொண்டான் ..அவன் அந்த இடத்தை விட்டு அகன்றதும் தான் நிம்மதி பெரும் மூச்சு விட்டவள் அந்த இடத்தை ஒழுங்கு படுத்தி விட்டு தனக்கு கொடுத்திருந்த அறைக்குள் சென்று தூங்க ஆரம்பித்தாள்.புது இடம் என்பதாலும் பயத்தாலும் அவளுக்கு தூக்கம் வரவே இல்லை. வெகுநேரம் தூங்காமல் இருந்தவள் தன்னையும் அறியாமல் தூங்கிப் போனாள்.

****************************அவள் அந்த வீட்டுக்கு வந்து இன்றோடு ஒரு வாரம் சென்று இருந்தது. அவளின் அதிர்ஷ்டம் அவள் இன்னும் அவனிடம் மாட்டிக் கொள்ளவில்லை. மதி இங்கு வந்து சேர்ந்த போது இருந்த பயம் இப்போது சற்றே குறைந்து நிதானமாக இருந்தாள் அவள்.. வந்து அடுத்த நாளே ஷியாம் வெளியே சென்ற பிறகு அவளது பெரியப்பா அவளுக்கு கொடுத்து இருந்த அலைபேசிக்கு அழைத்தார்..யாரும் இல்லாததை உறுதிப்படுத்திக் கொண்டவள் அவரின் அழைப்பை ஏற்று பேசினாள்.
அவர் அவளுக்கு பெரிதாக எந்த வேலையும் கூறவில்லை ...அந்த வீட்டில் ஒரு சிறந்த வேலைக்காரியாக யாருக்கும் சந்தேகம் வராத படி நடந்து கொள்ள மட்டுமே இப்போதைக்கு கூறினார்..அன்று அவரிடம் பேசியது தான் இன்னுமே அவளை தொடர்பு கொள்ளவில்லை அவர்.. அன்று மதியம் ஷியாம் கூறிய‌படி பகல் உணவை ஆபீசுக்கு அனுப்பி வைத்தாள்.
இரவிலும் காலையிலும் வீட்டில் தான் அவன் உண்பது ..அவன் அதிகம் பேசுவதும் இல்லை சிரிப்பதும் இல்லை..


' இந்த பெரிய வீட்டில் இவன் மட்டுமா இருக்கிறான்? வேறு யாரும் இல்லையா?' என அவள் நினைப்பதும் உண்டு ..ஆனால் யாரிடமும் அவள் கேட்டதே இல்லை. அது அவளுக்கு தேவையற்ற விடயமும் கூட.
இப்போது மாலை நேரம் என்பதால் தனது வேலைகளை முடித்து விட்டு அந்த வீட்டில் அமைக்கப் பட்டிருக்கும் தோட்டத்திற்கு வந்து அமர்ந்து கொண்டாள் மதியழகி. இன்று அவளுக்கு ஏதோ ஒரு வகையில் நிம்மதியாக இருந்தது என்றே சொல்லலாம்..


அந்த வீட்டில் அவளுக்கு மூச்சு முட்டுவதைப் போல ஒரு உணர்வே இருக்கும் . தாயை கண்முன்னே அவர்கள் கொன்ற போதும் அவளால் எதுவும் செய்ய முடியாத நிலை தானே.. அதனாலேயே அந்த வீடு அவளுக்கு நரகம் போலத் தான் இருந்தது ..தந்தை இருக்கும் வரை இன்பமாக வாழ்ந்தவர்களுக்கு அவர் சென்ற பிறகு வாழ்வதே போராட்டம் போல் ஆகி விட்டது. தந்தையுடன் வாழ்ந்த அந்த அழகான நாட்களை நினைத்து அவள் இதழ்கள் புன்னகை சிந்தின . இங்கேனும் அவள் நிம்மதியாக இருந்து விட நினைக்கையில் அவளை பார்த்து கேலியாக சிரித்தது விதி..


அவள் இது நாள் வரை பட்ட கஷ்டம் எல்லாம் தூசு போன்றது இனிமேல் அனுபவிக்க இருக்கும் கஷ்டத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் ..விதி யாரை விட்டது.தொடரும்...
கதை எப்படி போகுதுன்னு நீங்க சொன்னால் தான் தெரியும்..
அதனால கதைக்கான கருத்து திரியில் உங்கள் பொண்ணான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் 😆😆
 

Mafa97

Moderator

அத்தியாயம் 💔 05

தோட்டத்தில் அமர்ந்து இருந்தவள் சூரியன் மறைந்து இருள் பரவும் நேரம் தான் வீட்டுக்குள் சென்றாள். அந்த வீட்டில் இருந்த மற்றைய வேலையாட்கள் ஒவ்வொருவராக தங்களது வீட்டுக்கு செல்ல தொடங்கி இருந்தனர். இதற்கு மேல் அவள் இந்த பெரிய பங்களாவில் தனியாகத் தான் இருக்க வேண்டும்..


அவர்கள் சென்ற சிறிது நேரத்திலேயே வழுக்கிக் கொண்டு வந்து நின்றது ஷியாம் சுந்தரின் கார் ..
அதிலிருந்து வேக நடையோடு இறங்கி வந்தவன் அங்கு நின்று கொண்டு இருந்த மதியை ஒரு நொடி அழுத்தமாக பார்த்து விட்டு அந்த இடத்தை விட்டு அதே வேகத்துடன் நகர்ந்து சென்றான்.


அவனைக் கண்டாலே தானாக பயம் வந்து ஒட்டிக் கொள்ளும் மதியழகிக்கு.
இப்போதும் நெஞ்சம் படபடக்க நின்று கொண்டு இருந்தாள் அவள். அந்த நேரம் அவர் இடுப்பில் சொருகி வைத்திருந்த ஃபோன் அலறியது.. அவள் பொதுவாக சுடிதார் தான் வீட்டில் இருக்கும் போது அணிவது ..ஆனால் இங்கே வருவதற்காக என்று ஒரு பாவாடை தாவணி செட்டும் எடுத்துக் கொண்டு வந்து இருந்தாள். ‌
மொத்தமே அவளிடம் மூன்று செட் துணி தான் இருக்கும். அவைகளும் சாயம் போன பழைய உடைகளே. நல்ல உடைகளை தான் அந்த வீட்டில் இருப்பவர்கள் அணிய விடுவது இல்லையே.அன்பு செல்வன் கொடுத்த ஃபோனையும் இடையில் சொருகிக் கொண்டு தான் அவள் வேலை செய்வது.
அழைப்பை ஏற்று காதில் வைத்தவள் அக்கம் பக்கம் பார்த்துக் கொண்டே தனக்கு கொடுக்கப் பட்டு இருந்த அறைக்குள் சென்று மறைந்தாள். வெளியே சத்தம் கேட்டு விடாமல் மெல்லிய குரலில்
"ஹலோ.." என்று மதி கூற அந்தப் பக்கம் இருந்த அன்பு செல்வன் கட்டளைகளை பிறப்பிக்க ஆரம்பித்து விட்டார்.
"ஏய் இங்க பாரு.. நான் சொல்றதை தெளிவா கேளு.. ஏதாவது சொதப்பின அப்புறம் இருக்கு உனக்கு.." என்று அவளிடம் முதலில் கூறி விட்டு இடையில் நிறுத்தினார்...
"ம்.." என மட்டுமே மதியால் கூற முடிந்தது.. அதையெல்லாம் கண்டு கொள்ளாத அன்பு செல்வன் மேலும் பேசலானார்..


" நான் உன்னை அங்கு அனுப்பினது ஷியாம் சுந்தரை கண்காணிக்க தான் புரிஞ்சுதா.. இப்போ நீ என்ன பண்ணனும்னா நாளைக்கு முக்கியமான ஒரு டெண்டர் இருக்கு. அதுக்கு அவன் என்ன அமௌன்ட் போட்டு இருக்கான்னு பார்த்து சொல்லணும் ..அதுவும் இன்னைக்கு நைட்டே.." என்று அன்பு செல்வன் கூறி முடிக்க மதிக்கு உலகமே நின்று போன உணர்வு தான்...
இப்போதே மணி ஏழை நெருங்கி விட்டிருந்தது. இதற்குள் எப்படி அந்த ஃபைலை தேடி அதில் உள்ள தொகையை அவரிடம் கூறுவது.. அதுவும் அவன் ஃபைலை வீட்டுக்கு தான் கொண்டு வந்து இருப்பான் என்பதற்கு என்ன சான்று உள்ளது என மனதில் தோன்ற அதைக் கேட்டு விட்டாள் பெண்ணவள்.
" அது.. அது.. அவர் ஃபைலை வீட்டுக்கு எடுத்துட்டு வந்து இருப்பாரா?"
என ஒருவாறு அவள் கேட்டு விட சிறு அமைதிக்கு பிறகு
" அங்க தான் இருக்கும்.. நம்பிக்கையான ஆளுங்க இல்லாததால அவன் எப்போதுமே ஃபைல் எல்லாத்தையும் வீட்ல தான் வச்சுப்பான் ..நான் சொன்னதை மட்டும் நீ செஞ்சா போதும்.. உன்னோட ஃபோனுக்காக தூங்காம காத்துகிட்டு இருப்பேன்.." எனக் கூறியவர் அழைப்பையும் துண்டித்து விட்டார்.அவர் அழைப்பை துண்டித்ததும் தனது கையில் இருந்த அழைபேசியை சற்று நேரம் வெறித்துப் பார்த்தவள் நேரம் இல்லாததை உணர்ந்து அதை அனைத்து ஓரமாக வைத்தவள் அறையை விட்டு வெளியே வந்தாள்..அவள் என்ன செய்வது என யோசனையில் இருக்க ஒரு குளியலை போட்டு விட்டு வெளியே வந்தான் ஷியாம் சுந்தர். அவனுக்கு உணவை பரிமாறியவள் அப்படியே ஓரமாக நின்று கொண்டாள். அவன் உண்டு முடியும் வரை அவள் அவனது கண் முன்னால் இருக்க வேண்டும் .அது அவனது கட்டளை.உணவை முடித்து விட்டு எழுந்து செல்கையில் அவளைப் பார்த்து "இன்னிக்கு என்னோட ரூமுக்கு பால் கொண்டு வா.." என்று கூறியவன் ஒரு நொடி அவளது இடையில் பார்வையை பதித்து விட்டே தான் சென்றான்.
அவன் பார்வை சென்ற இடத்தை கண்டு திகைத்தவள் திரும்பி நின்றவாறு சரி என தலை அசைத்தாள்.ஆனால் அவளது தலையசைப்பையும் அவளது செயலையும் காண அவன் தான் அங்கு இல்லை ..
அவளுக்கு திகைப்பாக இருந்தது. அவள் வந்து இத்தனை நாட்களில் இன்று தான் அவன் இரவில் குடிக்க பால் கேட்கிறான்..
இதற்கு முன்பு அவன் இவ்வாறு கேட்டதே இல்லை.. இன்று தனக்கு இந்த விடயத்தை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள எண்ணியவள் அவன் கேட்டவாரே பாலை எடுத்துக் கொண்டு அவன் அறை நோக்கி சென்றாள் ...மெல்ல அவள் கதவைத் தட்ட அவனது குரல் மட்டுமே கேட்டது.
"வா..." என அவன் அழைக்க தயக்கமாக உள்ளே சென்றவள் அவனை தேட பால்கனியில் நின்றவன் அவளை பார்க்காமலே "வச்சிட்டு போ "
என கூற அவளும் பாலை அங்கே வைத்து விட்டு செல்ல நினைக்க கட்டிலின் மேல் இருந்த ஃபைல் அவள் கண்ணில் பட்டது.ஏதோ தோன்ற சட்டென திரும்பி ஷியாம் சுந்தர் நிற்கும் திசை பக்கம் பார்வையை செலுத்தினாள். அவனோ இவளுக்கு முதுகு காட்டி நின்று அவனது கையில் இருக்கும் ஃபோனில் பார்வையை பதித்து இருந்தார்.
இதை விட அருமையான சந்தர்ப்பம் அமையாது என தனக்குள்ளே சொல்லிக் கொண்டவள் சத்தம் வராமல் அந்த கோப்பை திறந்து பார்த்தாள்.பார்த்துக் கொண்டிருந்தவளின் கண்கள் பிரகாசமானது. காரணம் அவளது பெரியப்பா கூறிய அதே ஃபைல் தான் அது.
மீண்டும் ஒருமுறை அவனை திரும்பிப் பார்த்தவள் அதில் உள்ள தொகையை மனதில் குறித்துக் கொண்டு ஃபைலை அதே இடத்தில் வைத்து விட்டு வெளியே வந்தாள்.
அதன் பிறகு சிறிது நேரம் கூட நேரத்தை கடத்தாமல் அன்பு செல்வனுக்கு அழைத்து அதனை கூறியும் விட்டாள்.
இப்போது தான் அவளால் நிம்மதியாக இருக்க முடிந்தது. அன்பு செல்வனிடம் இருந்தும் தப்பியாயிற்று ..
ஷியாமிடம் மாட்டாமலும் காரியத்தை வெற்றிகரமாக முடித்தாயிற்று...


அன்று நிம்மதியாக உறங்கினாள் மதியழகி.
அதன் பிறகு அவளுக்கு எப்போது நிம்மதியான தூக்கம் கிடைக்குமோ யார் அறிவார்?


***************அன்பு செல்வன் வெற்றி புன்னகையுடன் கால் மேல் கால் போட்டவாறு அந்த மீட்டிங் ஹாலில் அமர்ந்திருந்தார்.. இன்னும் சில நிமிடங்களில் மிகப் பெரிய டெண்டர் தனக்கே என்ற இறுமாப்புடன் அவர் இருக்க அங்கு தீபக்குடன் வந்து சேர்ந்தான் ஷியாம் சுந்தர்..அவனை அடுத்து மற்ற கம்பெனிகளில் இருந்தும் ஆட்கள் வர அடுத்த சில நிமிடங்கள் மீட்டிங் ஆரம்பமானது..
அந்த டென்டரும் ஷியாம் சுந்தருக்கே கிடைக்க தனது ஏமாற்றத்தை தாங்க முடியாமல் எழுந்தே விட்டார் அன்பு செல்வன்..அனைவரும் அவரை கேள்வியாக பார்க்க
" ஐ அம் சாரி"
என கூறியவர் மீண்டும் அமர்ந்து கொண்டார் வேறு வழி இல்லாமல் நாகரீகம் கருதி ..
அவரை பார்த்து ஏளன புன்னகையோடு கண்ணை சிமிட்டினான் ஷியாம் சுந்தர்.அது வேறு அவரை மேலும் கோபப் படுத்தியது...அவனை நேரடியாக வெல்ல முடியாது என்ற காரணத்திற்காக தானே குறுக்கு வழியிலாவது வெற்றி பெற வேண்டும் என்று நினைத்து மதியழகியை அவன் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.. ஆனால் இன்று அதிலும் தோல்வியே...
' எப்படி இரவுக்குள் இவன் அமௌன்ட்டை மாற்றி இருக்க முடியும் ? '
என நினைத்து தலையைப் பிடித்துக் கொள்ளாத குறை தான் அவர் ..
அனைவரும் ஷியாம் சுந்தருக்கு நன்றி சொல்லும் பொழுது தான் மட்டும் சொல்லாமல் அங்கிருந்து நகர்வது முறையல்ல என உணர்ந்தவர் பகையை உள்ளுக்குள் மறைத்துக் கொண்டு வெளியில்
"வாழ்த்துக்கள்.." என்று அவனிடம் தனது கையை நீட்டினார்..அதனைப் பற்றிக் குழுக்கி "ரொம்ப நன்றி சார்.."
என அவரை பார்த்து கேலியாக புன்னகைத்தவன் பாக்கட்டில் இருந்த கூழரை தனது கண்களில் ஸ்டைலாக அணிந்து கொண்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்... அவனை எதுவும் செய்ய முடியாமல் காலால் தரையை எட்டி உதைத்தவர் அடுத்து அழைத்தது என்னவோ மதிக்கு தான்.அவள் சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்ததால் போனை ஆப் செய்து வைத்து இருந்தாள். யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்றே அவள் அப்படி செய்தது ..அவளுக்கு அழைப்பு செல்லாததால் மேலும் கோபம் வர ஆஃபீஸ் கூட வராமல் வீட்டுக்கு சென்று விட்டார் ...மதியழகியும் வேலைகளை முடித்து விட்டு இடுப்பில் சொருகி வைத்திருந்த போனை எடுத்து ஆன் செய்து வைத்து விட்டு வெளியே உணவு உண்பதற்காக செல்ல நினைக்கையில் அவளது போன் அலறியது.
அவளுக்கு பெரியப்பா தான் அழைக்கிறார் என்று தெரியும். ஏனெனில் இது அவர் கொடுத்தது தானே..அழைப்பை ஏற்று காதில் வைத்தது தான் தாமதம் அவர் திட்ட தொடங்கி விட்டார்..ஏன் என்று கூட தெரியாமல் அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்தான் மதி ..
சற்று நேரம் சென்ற பிறகு தான்
டென்ட்டர் கிடைக்காமல் போனதால் தான் தன்னை திட்டுகிறார் என்பது அவளுக்கு புரிந்தது ..


"சாரி நான் சரியான அமௌன்ட் தான் சொன்னேன் ..ஆனா எப்படி மாறுச்சுன்னு தான் எனக்கு தெரியல.. ப்ளீஸ் என்னை மன்னிச்சிடுங்க..."
என்று கண்கள் கலங்க மன்னிப்பு கேட்டாள் அவள் ...
மதியழகி வேண்டும் என்று செய்ததாக அவர் நினைத்துக் கொண்டால் கனகாவிற்கு தான் பெரும் ஆபத்து என உணர்ந்தே அவரிடம் பயத்துடன் மன்னிப்பு வேண்டினாள்.."ஏய் வாய மூடு.. உனக்கு தெரியாம எப்படி இது நடந்திருக்கும். சான்சே இல்ல ..
உன்னையெல்லாம் விட்டு வச்சது தப்பு ..
உன் அம்மா அப்பா போன இடத்துக்கே உன்னை அனுப்பி வச்சு இருக்கணும்... தப்பு பண்ணிட்டேன்..."
அவர் மறுபக்கம் பல்லை கடித்துக் கொண்டு அவளுக்கு திட்ட கண்களில் இருந்து கண்ணீர் அருவியாக பெருகியது பெண் அவளுக்கு ...


"சாரி.. சாரி பெரியப்பா நிஜமா எனக்கு எதுவுமே தெரியாது."
என்று கண்ணீருடன் மன்னிப்பு கேட்டாள். அதை தவிர அவளால் எதுவும் செய்ய முடியாது.." ஏய் பேசாத பேசாத... நீ பேச பேச எனக்கு வெறியா வருது. அவன் எப்படி ஏளனமாக சிரிச்சான் தெரியுமா ?
அவனோட முகத்துல வருத்தத்தை பார்க்க நினைச்ச என்னை நீ ஏமாத்திட்ட...
எத்தனை கோடி காண்ட்ராக்ட் தெரியுமா?
எல்லாமே உன்னால இப்ப போச்சு‌‌.. உன்னை சும்மா விடமாட்டேன்.. முதல்ல உனக்கு துணையாக இருக்கிற அந்த வேலைக்காரிய தூக்கணும் ...அப்ப தான் யாருமே இல்லாமல் அனாதையா நிப்ப... அதுக்கு அப்புறம் தான் உன்னை அணு அணுவா கொள்ளனும்... அப்பறம் சொத்து மொத்தமும் எனக்கே வந்துடும் .."என கூறி விட்டு பட்டென்று அழைப்பை துண்டித்தார் அன்பு செல்வன்...
என்ன செய்வது என தெரியாமல் கண்களில் இருந்து கண்ணீர் கோடாக வடிந்து செல்ல நின்று இருந்தாள் மதி..
திடீரென யோசனை வந்தவளாக இங்கு வந்ததிலிருந்து அழைக்காத கனகாவின் எண்ணிற்கு அழைத்தாள்.
மனதில் பதிந்திருந்த எண்ணை நினைவு கூர்ந்து அழைக்க ஒரு ரிங்கிலேயே மறுபக்கம் அழைப்பு எடுக்கப் பட்டது ..


அவரை பேச விடாமல்
" அக்கா நான் மதி பேசுறேன்..அக்கா நான் சொல்றதை முதல்ல கேளுங்க ..இடைநிலை எதுவுமே பேச வேண்டாம்..
நீ... நீங்க சாத்விக் அண்ணா கிட்ட போயிடுங்க ...அங்க வீட்ல யார்கிட்டயும் சொல்ல வேண்டாம்.. ப்ளீஸ் என் மேல சத்தியமா... நான் சொல்றதை செய்ங்க.. அண்ணா கிட்ட போயிடுங்க ..."
என்று மட்டுமே அவளால் பேச முடிந்தது...

தொடரும்...


 

Mafa97

Moderator
அத்தியாயம் 💔 06

கனகாவிற்கு அழைத்து அவரை பேச விடாமல் கண்ணீருடன் பேசிக் கொண்டு இருந்தவளின் கையில் இருந்த போன் திடீரென பறிக்கப்பட திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள் மதியழகி. அங்கு அவளிடம் இருந்து போனை பறித்து அதனை ஆராய்ந்த ஷியாம் சுந்தர் மீண்டும் தனது காதில் வைக்க"ஹலோ ....ஹலோ மதிம்மா.. உனக்கு என்ன ஆச்சு?"
என்ற கனகாவின் குரலே அவன் காதுகளுக்கு கேட்டது .
அடுத்த கனமே கோபத்தில் முகம் சிவக்க போனை தூக்கி தரையில் அடித்தான். அதுவோ சுக்கு நூறாக உடைந்து போனது.. உடைந்த ஃபோனையும் ஷியாமையும் மாறி மாறி பார்த்தவளின் கண்களில் இருந்து வந்த கண்ணீர் இப்போது துணி கொண்டு துடைத்தார் போல இல்லாமல் போனது..
பயத்தின் காரணமாக வெளிப்படையாகவே அவளது தேகம் நடுங்கத் தொடங்கியது. அவளது பயத்துக்கு மாறாக அவனோ கூலாக நின்று இருந்தான். அதை கவனிக்கும் நிலையில் கூட அவள் இல்லை..
" வா என் கூட .."
என்று கூறியவன் முன்னே நடக்க அவள் அசையாமல் நின்று இருந்தாள் அந்த இடத்திலேயே..சற்று தூரம் சென்றவன் அவளை திரும்பிப் பார்த்து
"ஏய்..."
என்று சத்தமாக அழைக்க அந்த குரலில் தூக்கி வாரிப் போட ஓடி வந்தாள் அவன் நின்ற இடத்திற்கு.
குனிந்து அவளை பார்த்தவன் "நான் சொன்னா அதை நீ செஞ்சே ஆகணும்... இல்லைனா எனக்கு கெட்ட கோபம் வரும்... புரியுதா..?" என பற்களுக்கு இடையே வார்த்தைகளை கடித்து துப்ப
"ம்....ம்.."
என்ற படி நான்கு பக்கமும் தலையை உருட்டி வைத்தாள் அவள் .


"சரி வா ...."
என கூறி விட்டு அவன் முன்னே நடக்க அவனது பின்னால் ஓடிச் சென்றாள் மதியழகி..
அவனது பின்னால் சென்றவள் அவன் ஒரு இடத்தில் சட்டென்று நிற்க அவனது பலம் கொண்ட முதுகில் மோதி ஓரடி பின்னால் சென்று நின்றாள். அவனது முதுகில் பட்ட தனது நெற்றி சிறிது வலிக்கவே தனது கை கொண்டு அதனை தேய்த்துக் கொண்டாள் அவள் ... அவன் இப்போது நிதானமாக திரும்பி அவளைப் பார்த்தான்..அவனது பார்வையில் முதுகு தண்டு சில்லிட அவனைப் பார்க்காமல் கீழே பார்வையை பதித்தபடி நின்று இருந்தவளை சொடக்கிட்டு அழைத்தான்..
அதில் சற்றே தலையை தூக்கி அவனை பார்த்தாள் அவள். பயத்தின் காரணமாக உதடுகள் வேறு நடுங்கிக் கொண்டு இருந்தன. அவனது கூர் பார்வை அவளது உதட்டில் நிலைத்து நின்றது....அவளையே பார்த்த படி அந்த அறையில் இருந்த ஒரு இருக்கையில் சென்று கால் மேல் கால் போட்ட படி அமர்ந்து கொண்டான்‌.
அந்த அறையில் இருவரது மூச்சுக்காற்றை தவிர வேறு எந்த சத்தமும் இருக்கவில்லை...
அந்த அமைதியை கிழித்துக் கொண்டு வந்தன அவனது வார்த்தைகள்..


" மதி... மதியழகி ரைட்.."
என்று அவனது ஆளுமை நிறைந்த குரலில் பயந்தவள் ஆம் என தலையை மட்டும் ஆட்டி வைத்தாள் தன்னை அறியாமலேயே.. மறந்தும் கூட அவனது முகத்தை நேருக்கு நேர் பார்க்கவில்லை அவள்.

"இவளோ பயப்படுற பொண்ணு இங்க வந்து இருக்கவே கூடாது
.. ஆனால் என்ன பண்றது உன்னோட பேட் லக் ...நீ இங்க அதுவும் என்னோட கோட்டைக்குள்ளேயே வந்துட்ட
.. அதுவும் என்னை ஏமாத்தி ...."என்று அவன் ஒவ்வொரு வார்த்தையாக அழுத்தி அழுத்தி உச்சரிக்க பெண்ணவளுக்கு ஏதோ ஒரு அடர்ந்த காட்டுக்குள் அவள் மட்டும் வெறி கொண்ட சிங்கத்திடம் மாட்டிக் கொண்ட உணர்வு தான் ...அவன் கோபத்தில் ஆக்ரோஷமாக பேசவில்லை.... அவளை சத்தம் போட்டு திட்ட கூட இல்லை அவன்... ஆனால் அவன் ஒவ்வொரு சொற்களையும் அழுத்தி அழுத்தி சொல்லும் போதே அவனது கோபத்தின் அளவை அவளுக்கு உணர்த்தியது.தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கூட கேட்கத் தோன்றவில்லை அவளுக்கு.. அன்பு செல்வனும் இனி அவளை காப்பாற்ற வர மாட்டார் ...அவரிடம் மாட்டினாலும் அவளது இறப்பு உறுதி ..இவனிடம் மாட்டினாலும் அதே கதி தான் அவளுக்கு.. அவனைப் பார்க்கையிலே புரிந்தது பெண்ணவளுக்கு அவனது ஒரு அடியிலேயே உயிர் போய் விடும் என்று ....அவனும் அவளது முகத்தில் தோன்றும் உணர்ச்சிகளை பார்த்த படி அமர்ந்திருந்தான்.
"என்ன யோசிக்கிற.. உன்னோட பெரியப்பாக்காக இங்க வந்து இருக்கக் கூடாதுனா?"
என்று அவன் அழுத்தமாக புருவங்களை ஏற்றி இறக்கிய படி கேட்க ஆம் என கீழே குனிந்து கொண்டே தலையாட்டி வைத்தாள்..
அவளது தலையாட்டலை கண்டவனும்
" ச்சு..ச்சு..இதை நீ முன்னாடியே யோசிச்சு இருக்கணும் மதியழகி..
டூ லேட் ..."
என்று அவளுக்காக பாவப் படுவது போலவே கூறினான்.. அதில் சட்டென நிமிர்ந்த மதியழகி அவன் முகம் நோக்கினாள்‌..
அவன் இதழ்கள் சிரிப்பில் விரிந்து இருந்தாலும் கண்கள் கோவத்தில் பள பளத்தன... அந்த கண்களை பார்க்கையில் இறையை வேட்டையாட காத்திருக்கும் சிங்கத்தின் நினைவே வந்து போனது அந்த பேதை பெண்ணுக்கு..."அந்த வீணா போன அன்பு செல்வன் பேச்சைக் கேட்டு என்னோட கோட்டைக்குள்ள வந்து சிக்கி கிட்ட ...
இங்க இருந்து நீ நினைக்கிற அளவு ஈஸியா எல்லாம் தப்பிச்சிட முடியாது
.... எனக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கு மதியழகி ...""
எனகன கூறியவன் எழுந்து அவளை நோக்கி வந்து அவளது முகத்தை தன் கை கொண்டு நிமிர்த்தி தன்னைப் பார்க்கச் செய்தான்.அவன் அருகே வந்ததும் அவளது இதயத் துடிப்பு இரு மடங்கானது.. அவள் அவனை விட குள்ளமாக இருப்பதால் குனிந்து அவளைப் பார்த்தவன்
"நீ இந்த வீட்டுக்கு வந்த அன்னைக்கே உன்னை பத்தி எல்லாமே தெரிஞ்சுகிட்டேன்... எதுக்காக உன்னை விட்டு வச்சேன்னு இப்ப யோசிக்கிறியா?"
என அவன் கேட்க பேச்சே வர மறுத்தது மதிக்கு ...
அவனது பிடி வேறு வலித்தது. இருந்தும் அமைதியாக அவனைப் பார்த்தபடி இருந்தாள் அவள்..
" நீ யோசிக்கலைன்னாலும் சொல்றது என் கடமை.."
என நிறுத்தியவன் அவளது கன்னத்தைப் பிடித்து இருந்த கைகளில் மேலும் அழுத்தம் கொடுத்தான்..


அது வலிக்கவே
"ஆ..ஆ..." என மெல்லிய குரலில் முனகினாள் அவள்.. அவன் தான் அதை எல்லாம் கண்டு மனம் இறங்குபவன் இல்லையே... அவளது முகம் வழியில் சுருங்குவதை ரசித்தவன் மேலும் பேசலானான்.

"உன்னை விட்டு வெச்சது உன் பெரியப்பா மூஞ்சில கறியை பூசத்தான்.. இன்னைக்கு அவன் மூஞ்சி போன போக்கை பார்க்கணுமே..வாவ்..வாவ்..
வட்ட அ மூமன்ட்.."
என்று போதை ஏறிய குரலில் கூறி நிறுத்தி விட்டு மீண்டும் தொடர்ந்தான்."நேத்து எல்லாம் தெரிஞ்சு தான் என்னோட ரூமுக்கு உன்னை பால் எடுத்துட்டு வர சொன்னேன்.
அப்புறம் அந்த ஃபைலை உன் கண்ணுல படுற மாதிரி வச்சதும் நான் தான் ..பட் அது ஒரிஜினல் ஃபைல் இல்லை.."
எனக் கூறி இடி எனச் சிரித்தான். அவன் சிரிப்பும் அவளை பயமுறுத்தியது... ஏதோ பேய் படம் பார்ப்பது போன்ற உணர்வு அவளுக்கு.மழையில் நனைந்த கோழிக் குஞ்சு போல பயத்தில் நடுங்கினாள் மதி‌.. அவனும் அவளது காதுக்கு அருகில் இதழ்களை கொண்டு சென்றவன் "வெல்கம் டு த லயன் கேவ் பேபி.."
என மெல்லிய குரலில் கூறி விட்டு நிமிர்ந்து அவள் முகம் பார்த்தான்...
அதில் 'என்னை விட்டு விடேன்" என்ற கெஞ்சல் நிறைந்திருந்தது.. அவன் ஒன்றும் சராசரி மனிதன் இல்லையே. தப்பு செய்தவரை போகட்டும் என்று மன்னித்து விட்டு விட ...அவனுக்கு தப்பு செய்தால் பெண்ணும் ஒன்று தான் ஆணும் ஒன்று தான்.. அவனது தண்டனைகள் வேறு மாதிரியாக இருக்கும்...இல்லை என்றால் தொழிலில் முன்னேறி விட முடியுமா என்ன? அத்தனை குள்ளநரிகளுக்கும் மத்தியில் இவன் வளர்ந்து வந்து இருக்கிறான் என்றால் அவனும் குள்ளநரி கூட்டத்தில் ஒருவனாகவே இருந்து இருக்க வேண்டும் ...


மதியோ அவனது வீட்டுக்கே வந்து நடித்து அவனை ஏமாற்றி ஃபைலை திருட வந்திருக்கிறாள் என்றால் சாதாரணமாக அவன் விட்டு விடுவானா என்ன?
அவள் இனி அவளுடைய வாழ்நாளிலேயே இது போன்ற தவறை மீண்டும் செய்யாமல் இருக்க அவன் தண்டனை கொடுக்கப் போகிறான் அவளுக்கு.


அதில் அவன் அறியாத விடயம் நிர்ப்பந்தத்தின் பெயரில் தான் மதி இங்கு வந்து இருக்கிறாள் என்பது.. மதியோ அவனைப் பாவமாக பார்த்து இருந்தாளே தவிர எதுவும் பேசவில்லை...ஏதோ பெரிய மனது உள்ளவன் போல்
"இன்னைக்கு நிம்மதியாக இருந்துக்கோ.
நாளைல இருந்து உனக்கு தண்டனை கொடுக்குறேன்.."
என கூறியவன்
'போ ...'
என்று கைகளால் சைகை செய்தான்...இப்போதைக்காவது அவனிடமிருந்து தப்பித்தோமே என நினைத்தவள் வேகமாக அங்கிருந்து செல்ல
"தப்பிக்க மட்டும் யோசிக்காத.. வெளியே நாய் இருக்கு..
கடிச்சு குதறிடும்..."
என சிரிப்பினூடே கூறியவன் "அப்பாடா .."
என்ற படி சோபாவில் அமர்ந்து கொண்டான் ..
அழக் கூட தோன்றாமல் தனக்கு வழங்கப் பட்டு இருக்கும் அறைக்குள் வந்து அடைந்து கொண்டாள் மதியழகி.
அந்த அறையின் மூலையில் சென்று ஒடுங்கிக் கொண்டவளுக்கு அடுத்து என்ன செய்வது என தெரியாத நிலை தான். அவள் வாழ்க்கையில் இன்னும் எத்தனை கஷ்டங்களைத் தான் அனுபவிக்க வேண்டுமோ? அவளை படைத்த அந்த கடவுளுக்கு மட்டும் தான் அது தெரியும்.

***********************அன்று வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து கொண்டார் கனகா. அவருக்கு மதி இல்லாத வீட்டுக்கு போகவே பிடிக்கவில்லை. அதனால் இன்று வேலைக்கு செல்ல பிடிக்காமல் வீட்டில் இருந்தவருக்கு மதியின் நினைப்பு தான் அடிக்கடி வந்து போனது..
அவளை நினைத்துக் கொண்டு இருந்ததாலோ என்னவோ அவளிடம் இருந்து அழைப்பு வந்தது அவருக்கு.
யார் என்று தெரியாமலேயே அழைப்பை ஏற்றவர் அவள் பேச பேச தான் மதி என உணர்ந்து கொண்டார்..


அவள் கூறியதை கேட்டு திகைத்து விட்டார் அவர் .
ஏதோ பெரிய பிரச்சினையில் சிக்கிக் கொண்டு இருக்கிறாள் என்பது மட்டும் தெரிந்தது .பேசிக் கொண்டு இருக்கும் போதே திடீரென லைன் கட்டாகி விட பயந்து போனவர் மீண்டும் அந்த ஃபோனிற்கு அழைக்க அது அழைப்பு எல்லைக்கு அப்பால் உள்ளது என்ற செய்தியையே பதிலாக தந்தது அவருக்கு.அவள் 'வீட்டுக்கு செல்ல வேண்டாம்.. அவர்களிடம் எதுவும் கூற வேண்டாம்' என்று கூறியதை கேட்டு உடனே சாத்விக்கிற்கு அழைத்தார்.. அவனிடம் விடயத்தை கூற அமைதியாக கேட்டவன் தான் பார்த்துக் கொள்வதாகவும் அவரை தன்னிடம் வந்து விடும் படியும் கூறினான்.

இனி மதி விடயத்தை சாத்விக் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில் அங்கிருந்து யாரிடமும் சொல்லாமல் மதி கூறியதைப் போல அவனது வீட்டுக்கு கிளம்பி சென்றார்.*********************


அழக் கூட தெம்பு இல்லாமல் ஓய்ந்து போய் இருந்தாள் மதியழகி. அடுத்த நாள் விடியவே கூடாது என மனதில் கடவுளை வேண்டிய படியே தான் இருந்தாள் ‌. ஆனால் நாம் நினைத்தவை எல்லாம் நடந்து விட்டால் தானே நன்றாக இருக்கும்..அவன் இப்போது இருந்தே அவளுக்கான தண்டனையை கொடுத்து விட்டான் என்பதை அவள் அறியவில்லை...
' அவன் நாளை என்ன செய்வானோ'
என்ன நினைத்து நினைத்து பயந்து கொண்டு இருப்பது கூட ஒரு வகை தண்டனை தான் அவன் அகராதியில் ...
அவன் நினைத்ததை போலவே அவள் நாளைய நாளை நினைத்து இப்போதே பயந்து கொண்டு தான் இன்றைய நாளை கழித்தாள். அவள் நினைப்பதால் உலகம் சுற்றுவதை நிறுத்தி விடுமா என்ன? அன்றைய நாள் இப்படியே கழிய அடுத்த நாள் உற்சாகமாக விடிந்தது.. ஆனால் மதியழகிக்கு மட்டும் என்ன வைத்து காத்திருக்கிறதோ அந்த விடியல்?
யோசனையிலேயே அமர்ந்திருந்தவள் தன்னையும் அறியாமல் தூங்கிப் போனவளின் அறை கதவு பட் பட்டென்று தட்டப்பட அந்த சத்தத்தில் தான் கண் விழித்தாள் அவள்.


அவசரமாக எழுந்தவள்
ஓடிச் சென்று கதவை திறந்து பார்க்க வெளியே தனது முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்று இருந்தான் ஷியாம் சுந்தர்.
இன்று காலை அவனது முகத்தில் தான் முழிக்க வேண்டும் என்று இருந்தது போலும் மதியழகிக்கு..

தொடரும்..

 

Mafa97

Moderator
அத்தியாயம் 💔 07


கதவு தட்டும் சத்தத்தில் திடுக்கிட்டு கண் திறந்த மதியழகி வெளியே வந்து பார்க்க அங்கே நின்று இருந்தது என்னவோ ஷியாம் சுந்தர் தான்.
அவனை கண்டதும் கண்களில் சற்று எஞ்சியிருந்த தூக்கமும் தூரப் போனது அவளுக்கு. அவனது முகத்தில் என்ன இருக்கின்றது என்று அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை...

" என்ன இன்னைக்கு தண்டனையை ஆரம்பிக்கலாமா? நல்லா தூங்கின தானே நைட்..."
என அவன் ஒரு மாதிரி குரலில் அவளிடம் பேச அவளுக்கு தூக்கி வாரி போட்டது ...

அவள் பேசாமல் இருப்பதை கண்டவன் தனது பேண்ட் பாக்கெட்டில் இரண்டு கைகளையும் உள்நுழைத்த படி அவள் முன்னே சற்று குனிந்து
" மதி ...மதியழகி ரைட் .
நான் பேசினா அதுக்கு பதில் வந்தே ஆகணும் ..பதில் பேசலன்னா கூட தண்டனை கடுமையாக இருக்கும்.."

என்று கூற தானாகவே அவள் தலை சரி என்பதைப் போல ஆடியது.
"குட்.."
எனக் கூறியவன்
"வா ..."
என்று விட்டு முன்னே நடந்தான்..

தயங்கி தயங்கி
" சா..சார்...."
என அவனை தடுத்து நிறுத்தினாள் அவள்.
இங்கு வந்த இத்தனை நாட்களில் இன்று தான் அவனுடன் பேசுகிறாள்.
சட்டென நின்று அவளை திரும்பிப் பார்த்தான் ஷியாம்.

என்ன என்று அவன் கேட்கவில்லை.. ஆனால் அவனது முகத்தில் என்ன என்ற கேள்வி தேங்கியிருந்தது..
பதில் சொல்லாமல் போனால் என்ன செய்வானோ என பயந்து அவசரமாக
"அது.. அது... .வ... வந்து
..பல்.. பல் ."
என கூறி முடிக்க முன்னரே அவள் சொல்ல வருவதை புரிந்து கொண்டவன்

"நான் என்ன உன்ன கிஸ் பண்ணவா போறேன்..
பல் தேச்சுட்டு வர எந்த அவசியமும் இல்லை.. இப்படியே வா ..."
என்று எந்தவித அலட்டலும் இல்லாமல் அவன் கூறி விட்டு முன்னே நடக்க அவனது வார்த்தையை கேட்டு திகைத்தது என்னவோ மதியழகி தான்..

ஆனால் அவள் திகைத்து நின்றது ஒரு நொடி தான் ..அதற்கு மேல் தாமதித்தால் அதற்கும் ஏதாவது சொல்லி விடுவானோ என பயந்தவள் அவனது நடைக்கு ஈடு கொடுக்க முடியாமல் அவன் பின்னே ஓடிச் சென்றாள்.

அவனது நடை வீட்டை விட்டு வெளியே சென்றும் நின்ற பாடில்லை.. அவளும் அவன் செல்லும் திசையிலேயே ஓடிச் சென்றாள்.. திடீரென நாய்கள் குறைக்கும் சத்தம் கேட்டு பயந்து அங்கிருந்து அவள் ஓட பார்க்க அவளுடைய கையை இறுக்கி பிடித்துக் கொண்டான் ஷியாம் சுந்தர்..

அவளுக்கு சிறு வயதில் இருந்தே நாய் என்றால் பயம். அதனால் தான் நாய் குறைக்கும் சத்தம் கேட்டு அவள் ஓடப் பார்த்தது..

அவனது வீட்டை காவல் காக்கவென்று இரண்டு பெரிய நாய்களை வளர்க்கின்றான் அவன். அதற்கென்று குட்டி வீடு கட்டி நேரத்திற்கு உணவு வழங்கி என அவன் அழகாக அதை பார்த்துக் கொள்கின்றான்.
இப்போது அவளை அழைத்து வந்து இருந்ததும் நாய்களின் இருப்பிடத்திற்கே.

அவளுடைய கையை அவன் இறுக்கப் பிடித்தது வலித்தாலும் அங்கிருந்து செல்லும் முயற்சியை அவள் விடவே இல்லை. அவன் மீது இருந்த பயத்தை விட அவளுக்கு நாய்கள் மீது அதிக பயம் இருக்கவே தான் செய்தது .

அவள் எவ்வளவு முயற்சி செய்தாலும் அவன் விடுவதாக இல்லை அவளது கைகளை. ஒரு கட்டத்தில் அதற்குமேல் முடியாமல் போக அமைதியாக நின்று கொண்டாள் மதியழகி. கண்களில் இருந்து கண்ணீர் வடிந்த வண்ணம் இருந்தது.

அவளுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று சொல்லி நாய்களிடம் கடிவாங்க வைத்து விடுவானோ என பயந்து தான் அவள் அழுது கொண்டு இருந்தாள். ஆனால் நாம் மனதில் நினைப்பதை செய்பவன் அல்லவே ஷியாம் சுந்தர்.

தான் பிடித்து இருந்த அவளது கையை பற்றி வேகமாக இழுக்க அவன் முன்னால் வந்து நின்றாள் மதியழகி.
அவளது அழுது சிவந்த கண்களையும் கண்ணீர் கோட்டுடன் காணப்பட்ட கன்னத்தையும் கண்டவன் நக்கதாக புன்னகைத்த படி அவளைப் பார்த்து கண் சிமிட்டினான்.

எதற்கு அவன் இப்படி செய்கிறான் என்று அவள் யோசிக்கும் முன்னே "ராஜு,ராமு ஸ்டார்ட் .."
எனக் கூறிய படியே அவன் பிடித்திருந்த அவளது கைகளை விட்டிருந்தான்.
அடுத்த நொடியே நாய்கள் இரண்டும் அவளை நோக்கி பாய தன்னிச்சையாகவே அவளது கால்கள் திக்கில்லாமல் ஓடத் தொடங்கின தன்னைக் காத்துக் கொள்ளும் பொருட்டு..

அந்த அதிகாலை வேலையிலே அவள் நாய்களுக்கு பயந்து ஓட அந்த நாய்களும் அவளுக்கு தாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று தனது எஜமானுக்கு காட்ட வேண்டும் என்று அவள் பின்னால் துரத்திக் கொண்டு ஓடின.

இவற்றையெல்லாம் படம் பார்ப்பதை போல ரசித்துப் பார்த்தபடி நின்று இருந்தான் ஷியாம் சுந்த‌ர் .
இருபது நிமிடம் வரை அவளை ஓட விட்டவன்
" ராஜு, ராமு ஸ்டாப்.."
என்று சத்தமாக கூறவும் தான் நாய்கள் இரண்டும் அப்படியே அமைதியாக அவனது கட்டளைக்கு அமைய நின்று கொண்டன..

நாய்கள் நின்றது கூட தெரியாமல் உயிரை காக்கவென்று ஓடிக் கொண்டு இருந்தாள் மதி.
சிறிது தூரம் அப்படியே ஓடியவள் நாய்களின் சத்தம் கேட்காமல் போகவே திரும்பிப் பார்க்க அவைகளோ அமைதியாக நின்று கொண்டு இருந்தன.
நிம்மதி பெமூச்சு விட்டவள் அதற்கு மேல் சக்தி இல்லாமல் தொப்பென்று தரையில் அமர்ந்து கொண்டாள்.

பயத்தின் விளைவாக மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்கியது பெண் அவளுக்கு..
தூரத்திலிருந்து அவளையே பார்த்திருந்தவன் சலிப்பாக இரு பக்கமும் தலையாட்டிய படியே அவளை நோக்கி நடந்து வந்தான்..

அவனை பார்க்க ராட்சசன் போலவே தோன்றியது அவளுக்கு. நடந்து வந்தவன் அவள் முன் தனது நடையை நிறுத்தி கீழே தலையை குனிந்து அவளைப் பார்த்தான். அவன் தன்னைத் தான் பார்க்கிறான் என உணர்ந்தாலும் தலையை உயர்த்தி பார்க்கவில்லை அவள்.

"இவ்வளோ பயம் இருக்கிறவ எதுக்கு என்னோட கோட்டைக்கு உள்ள வரணும் ..ஹா.."
என அழுத்தமான குரலில் அவன் கேட்டக மீண்டும் அழுகை வந்தது அவளுக்கு.
" ஷட் ஆப்.."
என்று அவன் கர்ஜிக்க வாயை தனது இரு கைகளாலும் பொத்திக் கொண்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள் மதி.

அவளை அதே அழுத்தமான பார்வை பார்த்தவன்
"ச்சு... மூச்சு சத்தம் கூட கேட்கக் கூடாது என்னோட காதுக்கு.. இப்போ நான் உனக்கு கொடுத்தது குட்டி தண்டனை தான்.."
என தனது கை விரல் கொண்டு செய்கையில் காண்பித்தான்.

அவன் கூறிய வார்த்தையில் அவனை நிமிந்து பார்த்தவள் அவன் முகத்தில் இருந்த கோபத்தை கண்டு மிரண்டு தான் போனாள்.
' பெரியப்பா சொன்னதுக்காக இங்கே வந்தது பெரிய தப்பு தான்..'
என்று காலம் கடந்து உணர்ந்து கொண்டாள் அவள்.

அவளை பார்த்துக் கொண்டே "ராஜு ..ராமு ."
என மேலும் குரல் கொடுக்க அந்த நாய்கள் இரண்டும் நான்கு கால் பாய்ச்சல் மூலம் அவர்களை நோக்கி வந்தன.
இப்போது ஓட முடியாமல் போகவே இருந்த அதே இடத்தில் இருந்து கண்களை இறுக மூடிக் கொண்டு காதுகள் இரண்டையும் தனது இரண்டு கைகளாலும் பொத்திய படி சுருண்டு கொண்டாள்.

சிறிது நேரம் சென்ற பின்னரும் சத்தம் வராமல் போக கண்களை மெல்ல திறந்து பார்க்க நாய்களோ தங்களது எஜமானின் அருகில் நின்று அவளை தான் முறைத்து பார்த்துக் கொண்டிருந்தன.
அதில் பயந்தவள் அமர்ந்த வாக்கிலேயே பின்னோக்கி நகர்ந்து செல்ல
"நான் சொல்லாம அதுங்க உன்னை எதுவும் பண்ணாது பயப்படாதே..."
என அவன் கூறியதும் தான் அப்படியே அமர்ந்து கொண்டாள்.

"இன்னைல இருந்து வேலைக்காரங்க யாரும் வர மாட்டாங்க .
எல்லா வேலையும் நீ தான் பண்ணனும்..
அப்புறம் தப்பிச்சு போகவும் முடியாது .."
எனக் குறிப்பாக நாய்கள் இரண்டையும் கண்களால் அவன் காட்ட இல்லை என்பது போல் தலையாட்டினாள் மதியழகி.

சற்றே உடலை குறுக்கி
அவள் முன் குனிந்தவன்
"குட் கேர்ள்.. இன்னைக்கு உனக்கு இந்த தண்டனை போதும்னு நினைக்கிறேன் ..போ.. போய் வேலையை பாரு...." என்று அவன் கூறியது தான் தாமதம்
அங்கிருந்து ஓட்டம் எடுத்தாள் மதியழகி.
ஓடும் அவளையே ஒரு நொடி பார்த்தவன் மீண்டும் திரும்பி தனது நாய்களுடன் ஐக்கியமானான்.

****************************

"தம்பி மதிம்மாவை பத்தி ஏதாவது தெரிஞ்சுதா? மனசெல்லாம் அடிச்சுக்கிட்டே இருக்கு..தூக்கமே இல்லைப்பா.."
என கனகா சாத்விக்கிடம் வினவ
அவனோ இல்லை என்பது போல் தலையை மட்டும் ஆட்டி வைத்தான்.

அவனுக்கு மதியை காணவில்லை என்ற கவலை ஒரு புறம் இருக்க அவள் மீது கோபமும் தோன்றியது. 'அவள் ஏன் தன்னிடம் சொல்லாமல் போனாள்?' என்று நினைக்கையிலே ஆத்திரமாக வந்தது அவனுக்கு.

கனகாவிடம் கூட அவள் போகும் இடத்தை கூறி இருக்கவில்லை. இடையில் தொலைபேசியில் அழைத்து அந்த வீட்டை விட்டுப் போகும் படி சொல்லி இருக்கிறாள் அவ்வளவே.

தெளிவாக எதுவும் தெரியாமல் இவனால் என்ன செய்து விட முடியும் ..
அவள் கனகாவிற்கு அழைத்து பேசிய எண் வேறு தொடர்பில் இல்லை இப்போது.
இருந்த ஒரே வாய்ப்பு.. அதுவும் இல்லை என்று ஆகிவிட இவனால் இந்த விஷயத்தில் ஒரு சிறு அடியேனும் முன்னே வைக்க முடியவில்லை.

"தம்பி நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க..
பொம்பள புள்ள வேற.
உங்களால என்ன முடியுமோ அதை பண்ணுங்க .
அப்புறம்... இது எல்லாத்துக்கும் காரணம் உங்க வீட்டு ஆளுங்க தான் தம்பி..
ஐயா தான் அவளை எங்கேயோ அனுப்பி வெச்சாரு.."
என்று சற்று தயக்கமாகவே கூறினார் கனகா.

அவனது குடும்பம் பற்றிய அவனிடமே குறை சொல்வது வேறு அவரை உறுத்தியது.
அவரை திரும்பி வெற்றுப் புன்னகையோடு பார்த்தவன்

" அவங்களை பற்றி எனக்கு முன்னாடியே தெரியும் அக்கா. எப்போ சித்தி சித்தப்பா ரெண்டு பேரும் நம்மள விட்டு போனாங்களோ அன்னைக்கே அந்த வீட்டில் இருந்த நல்ல விஷயம் எல்லாமே போயிடுச்சு.. அவங்களை புடிக்காததால தான் இங்க பெங்களூர்ல தனியா இருக்கேன்..
மதியை கூட என்கிட்ட வரச் சொல்லி சொன்னேன். அவ தான் முடியாதுன்னு சொல்லிட்டா.."

சாத்விக் தன் மனதில் உள்ளதை கூறினான் கனகாவிடம். அவருக்கு அவனை நினைத்து பெருமையாக இருந்தது. அந்த குடும்பத்தில் தப்பி பிறந்தவன் அவன்.
அவரது முகத்தை வைத்து என்ன நினைக்கிறார் என கண்டு கொண்டவன்

"அக்கா நான் சித்தியோட வளர்ப்புல வளர்ந்தவன்.. எனக்கு நல்லது சொல்லி கொடுத்தே தான் வளர்த்தாங்க.
அதனால தான் அந்த வீட்ல நான் மட்டும் தனியா தெரியுறேன்.
ஆனா அவங்க என்னோட சித்தயை ரொம்ப கொடுமை படுத்தி இருக்காங்க..இது தெரிஞ்சும் எதுவும் பண்ண முடியாத நிலையில் இருக்கேன்..ச்சே..."என்று
தனது கையை சுவற்றில் கோவமாக குத்தினான்..

அப்போதும் அவனுக்கு இருந்த கோபம் குறையவில்லை.. அவனிடம் மதிக்கும் அவளது அன்னைக்கும் அவர்கள் செய்யும் கொடுமைகள் அனைத்தையும் கூறி இருந்தார் கனகா.
ஆனால் இப்போதைக்கு வசந்தியை கொன்றது அவர்கள் தான் எனக் கூறவில்லை.
அதை பிறகு கூறிக் கொள்ளலாம் என்று விட்டு விட்டார்.

ஆனால் எப்படியும் ஒரு நாள் அந்த விடயத்தை அவனிடம் கூற வேண்டும் என்று நினைத்து இருந்தார் அவர். அவனுக்கு அவனுடைய குடும்பத்தவர்களின் உண்மை குணம் தெரிய வருவது நல்லது என்று தான் அவர் இந்த முடிவை எடுத்தார்.

இன்று மதியை காணாமல் ஒரு அண்ணனாக அவன் துடித்து தான் வருகிறான்.ஆனால் எந்த வித முன்னேற்றமும் இல்லை.
வீட்டுக்கு அழைத்து பாட்டியின் கேட்டால்
"அது எங்கயோ தொலைஞ்சு போச்சு விடுப்பா.."
என்றார்.

இதற்கு எல்லாம் அப்பா தானே காரணம் என்று அவருக்கு அழைத்தால் அவனது அழைப்பை அவர் ஏற்கவே இல்லை.
என்ன செய்வது என யோசனை செய்தவன் கனகாவை சமாதானம் செய்தான்
"அவள் கிடைத்து விடுவாள் "
என்று.. அதற்கு மேல் அவனால் எதுவும் செய்ய முடியாத சூழ்நிலை.

தங்கை கிடைத்து விட வேண்டும் என்று கடவுளிடம் உண்மையான அன்புடன் வேண்டிக் கொண்டான் அந்த உடன்பிறவா சகோதரன்.

தொடரும்..
 

Mafa97

Moderator
அத்தியாயம் 💔08


அண்ணன் எப்படியாவது இந்த அரக்கனிடமிருந்து தன்னை மீட்பான் என்ற நம்பிக்கையில் தான் மதியழகி ஒவ்வொரு நொடியையும் கழிக்க தொடங்கி இருந்தாள்.
அந்தப் பெரிய பங்களா போன்ற வீட்டில் அனைத்து வேலைகளையும் தனியாக செய்வது பெரும் பாடாகிப் போனது அவளுக்கு.


அவனுக்கான உணவையும் அவள் தான் சமைக்க வேண்டும். தோட்ட வேலை , வீட்டு வேலை என்று அனைத்து வேலைகளும் அவள் தலையில் தான். அதிலும் அவளுக்கு விதவிதமான தண்டனை கொடுக்க வேண்டும் என்று வகை வகையான உணவுகளின் பெயரை கூறி சமைக்க சொல்லுவான்.
தனக்கு தெரிந்த வகையில் செய்து வைப்பாள் அவள்..


அதில் சிறிய தவறு இருந்தாலும் அப்படியே அவளது மேல் வீசி எறிந்து விடுவான்.
சில நேரங்களில் அந்த உணவு சூடானதாகவும் இருக்கும். வலித்தாலும் அவன் முன்னே அவள் அதை காட்டுவது இல்லை.


இன்றும் அவனுக்கு மிகவும் பிடிக்கும் என்று பாயாசம் செய்து வைக்கும் படி கூறியிருந்தான். காலையிலிருந்து வேலை செய்து வெறுத்துப் போனவளாக தான் அந்த பாயாசத்தை செய்தாள் மதியழகி. இரவு அலுவலகத்தில் இருந்து வந்தவன் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு உணவு உண்ண வந்து அமர்தான் .அவனை கண்டதுமே அவளுக்கு கைகால் எல்லாம் நடுங்கத் தொடங்கி விடும். அவளை அவளது தாய் எவ்வளவு தைரியமான பெண்ணாக வளர்த்த போதும் அவனைக் கண்டால் மட்டும் பயம் தானாகவே வந்து ஒட்டிக்கொள்ளும் அவளிடத்தில். அவளது தைரியம் எங்கே போனது என்று கூட அவளுக்கு தெரியாமல் போகும்.


அவன் அமர்ந்ததும் அவனுக்கு அமைதியாக உணவு பரிமாற ஆரம்பித்தாள் .
அவனும் அங்கு தனக்கு பிடித்த பாயாசம் இருப்பதைக் கண்டு அதனை எடுத்து பருக ஆரம்பித்தான். முழுதாக அவனால் ஒரு வாய் கூட ஒழுங்காக பருக முடியவில்லை..


அதிக அளவு உப்பு சேர்க்கப் பட்டு இருந்தது அதில்..
"ச்சீ.." என்ற படி வாயில் இருந்ததை வெளியே துப்பினான் அவன். அவனுடைய செய்கையில் என்னவாக இருக்குமோ என்று பயந்து போனவள் அவனையே பார்த்து இருந்தாள்."வாவ் சூப்பரா செஞ்சு இருக்கியே.." என்றான் நக்கலாக.
ஏதோ பிழை விட்டு விட்டோம் என்பது வரை தெரிந்தது அவளுக்கு. ஆனால் என்னவென்று தான் தெரியவில்லை. பயத்தில் உதறல் வேறு எடுத்தது .
கையில் பாயாச கப்புடன் எழுந்தவன் அவள் முன்னால் போய் நின்றான்..


'என்ன செய்யப் போகிறானோ?' என நிமிர்ந்து கண்களில் பயத்துடன் அவனைத் தான் பார்த்தாள் பெண்ணவள்.
" நீயே குடிச்சு பாரு.."
என்று கூறி அவளது பின்னங் கழுத்தில் ஒரு கையை வைத்து தன்னை நோக்கி அவளது தலையை உயர்த்தியவன் மறு கையில் வைத்திருந்த பாயாசக் கப்பை அவளது வாயில் திணித்தான்..


இதை சற்றும் எதிர் பார்க்காதவள் விழி விரித்து அவனை பார்த்துக் கொண்டு இருந்தாள். அவளால் அதை பருக முடியவில்லை. வாயின் ஓரங்களில் இருந்து பாயாசம் வடிந்து கொண்டே இருந்தது. அதுவும் சூடான பாயாசம் வேறு.. உயிர் போவது போல் வலித்தது பெண்ணவளுக்கு.கண்ணம் இரண்டும் சூடு காரணமாக சிவந்து தான் போனது. ஆனால் அவன் நிறுத்துவதாக இல்லை. ஒரு கட்டத்தில் அவளால் முடியாமல் போகவே தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தனது கைகளால் அவனைத் தடுத்தாள். அது அவனுக்கு தூசி தட்டுவது போல் இருக்கவும் அதை புறம் தள்ளியவன் தனது வேலையை முடித்து விட்டே நிமிர்ந்தான்..அவன் விட்டதும் அவசர அவசரமாக முகத்தில் இருந்த பாயாசத்தை தட்டி விட்டாள்.. கன்னம் இரண்டிலும் ஏற்பட்ட எரிச்சல் காரணமாக தன்னை மீறி கண்களில் இருந்து கண்ணீரும் வந்தது ..
அவளை நக்கலாக பார்த்தவன் "சூப்பரா இருக்கு இல்ல?"
என்று கேட்ட படியே சென்று உணவு மேசையில் அமர்ந்தவன் மற்ற உணவுகளை உண்ண ஆரம்பித்து விட்டான்..முகத்தை தண்ணீரில் கழுவினால் நன்றாக இருக்கும் என்று மனதுக்கு தோன்றினாலும் அந்த இடத்தை விட்டு அவள் அசையவில்லை. காரணம் ஷியாம் சுந்தர் தான். அதற்கும் ஏதாவது தண்டனை கொடுத்து விடுவானோ என்ற பயம் அது அவளுக்கு..


இன்று இந்த தண்டனை அவளுக்கு போதும் என்று நினைத்தானோ என்னவோ அத்துடன் அங்கிருந்து சென்று விட்டான். அவன் தலை மறைந்தது தான் தாமதம் ஓடிச் சென்று தண்ணீர் அடித்து முகத்தை கழுவினாள். இப்போது தான் எரிச்சல் மட்டும் பட்டது போல் இருந்தது அவளுக்கு..


எப்போதடா இந்த சிறையில் இருந்து வெளியே செல்வோம் என்று இருந்தது அவளது மனநிலை இப்போது.
ஆனால் அதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

****************************


தனது அறையில் அமர்ந்து தங்கையை பற்றி யோசனை செய்து கொண்டு இருந்தவனது அழைபேசி தனது இருப்பை அவனுக்கு உணர்த்தியது. அதன் சத்தத்தில் நிமிர்ந்தவன் யார் என பார்க்க அதன் திரையில்
'ஹனி காலிங்..'
என்று இருந்தது..


அதனை கண்டவன் சோகம் எல்லாம் காற்றாய் பறந்தது போல ஒரு உணர்வு..
அழைப்பை ஏற்று காதில் வைத்ததும்
" ஹலோ சார் உங்களை நினைச்சுட்டு இங்க ஒரு பொண்ணு
இருக்கேன்னு உங்களுக்கு தெரியுமா இல்லையா?"
என்றாள் அந்தப் பக்கம் இருந்த சாத்விக்கின் ஹனி..


அதில் புன்னகை விரிய
" தெரியும் நல்லாவே தெரியும். கொஞ்சம் பிராப்ளம் .
அதனால் தான் உன் கூட பேச முடியல .."
என்று அவளுக்கு பதிலும் கொடுத்தான் சாத்விக்.


"என்ன பிராப்ளம் ..
ரொம்ப கஷ்டமா இருக்கா?"
என அவன் கஷ்டத்தை தன்னால் குறைக்க முடியாதா என்ற கவலையில் கேட்டாள் பெண்ணவள்.
அவளது கூற்றைக் கேட்டு புன்னகைத்தவன்
"அப்படி எல்லாம் இல்லடி .
நான் பார்த்துக்கிறேன். நீ படிக்கிற வேலையை மட்டும் பாரு .."
என்று கூறி மேலும் சில நிமிடங்கள் அவளுடன் பேசி விட்டு அழைப்பை துண்டித்தான்..


கடந்த ஆறு மாதங்களாக தான் இருவரும் காதலித்து வருகின்றனர். தனது நண்பனின் திருமணத்தில் தான் முதல் முதலில் அவளை கண்டது.
இருவரும் தமிழ் பேசுபவர்கள் என்பதால் உடனே பழக்கம் ஏற்பட அது காதலாகவும் மாறியது காலப்போக்கில் .


அவள் படித்துக் கொண்டு இருப்பதால் சற்று இடைவெளி விட்டு அவளுடன் பழகுவான். அவளும் பணக்கார பெண் என்று தெரியும் .
அதுவும் சென்னையில் உள்ள முக்கிய புள்ளியான ஷியாம் சுந்தரின் தங்கை என்பதும் தெரிந்து தான் இருந்தது.


எனவே தான் அவனும் அவளை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தொழிலில் கவனம் செலுத்துகிறான்.
தங்கள் காதல் விடயம் பற்றி தனது தாயிடம் கூட இதுவரை மூச்சு விடவில்லை வருணிகா.
இருவரும் கண்ணியமாகவே காதலித்து வருகின்றனர்..வெளியில் எங்கும் சுற்றுவதும் இல்லை. அவளது படிப்பை முன்னிட்டு அவளை விட்டு தள்ளியே இருந்தான் சாத்விக்.தனது தங்கையை தனது காதலியின் அண்ணன் தான் கடத்தி வைத்து இருக்கிறான் என தெரிந்தால் சாத்விக்கின் நிலை என்னவோ?

***********************


அது ஒரு அமைச்சரின் பீச் ஹவுஸ். அங்கு சில பெரிய மனிதர்கள் அமர்ந்து ஒருவனின் வருகைக்காக காத்துக் கொண்டு இருந்தனர். அதில் இருந்த அந்த பீச் ஹவுஸ்க்கு சொந்தக்காரரான அமைச்சர் சற்று ஆதங்கமாகவே


" என்ன சார் இது?
போயும் போயும் இந்த சின்ன பையனுக்காக வேண்டி காத்துகிட்டு இருக்கணுமா?"
என்று கேட்டிட மற்றவர்களோ அவரை பயத்துடன் பார்த்தனர். இவர் கூறியது அவன் காதில் கேட்டு விட்டால் நிலைமை மோசமாகி விடும் அல்லவா..


மேலும் அவர் என்ன பேசி இருப்பாரோ அதற்குள்ளாகவே அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தான் ஷியாம் சுந்தர்.. அதன் பிறகு அங்கு தொழில் சம்பந்தமான பேச்சுக்கள் மட்டுமே இருந்தன .
எல்லாம் முடிந்து விட அனைவரும் கலைந்து சென்ற பிறகு அங்கு எஞ்சி இருந்தது என்னவோ ஷியாம் சுந்தரும் முன்பு மற்றவர்களிடம் அவனைப் பற்றி பேசிய அமைச்சர் சதாசிவமும் தான்.எதற்காக தன்னை இவர் சிறிது நேரம் இருந்து விட்டு செல்லும் படி கூறினார் என்பது அவனுக்கு தெரியவில்லை.
சதாசிவம் அமைச்சர் மட்டுமல்லாது ஒரு தொழில் அதிபரும் கூட.அவனோ அவரை அழுத்தமாக பார்த்தபடி இருக்க அந்த மௌனத்தை கலைக்கும் விதமாக
"தம்பி அந்த ஸ்கூல் ப்ராஜெக்ட்டை எனக்கே கொடுத்திருப்பா.. அதுக்காக உனக்கு என்ன வேணும்னாலும் தர்றேன் .."என்றார் சற்றே குரலை உயர்த்தி.. அவரது கூற்றில் யோசனையாக புருவம் சுருக்கி பார்த்தவன்


"என்ன தருவீங்க ?"
என்றான் கேள்வியாக.
அவன் சம்மதித்து விட்டான் என்ற மகிழ்ச்சியில் என்ன கொடுக்கலாம் என அவர் யோசனை செய்து கொண்டு இருக்கையில் அங்கு இருவருக்கும் குளிர்பாணம் எடுத்துக் கொண்டு வந்தாள் அமைச்சரின் சின்ன வீடாக இருக்கும் ஷீலா.வயது என்னவோ முப்பதுக்குள் தான் இருக்கும்.
அழகு என்றால் அப்படி ஒரு அழகு அவள். தன்னை இளமையாக காட்டிக் கொள்ள வேண்டும் என்று அவளுடைய அழகில் அதிக ஆர்வம் எடுக்கக் கூடியவள். ஷீலாவிற்கு ஷியாம் சுந்தர் மேல் ஒரு கண். அவனது ஆளுமை நிறைந்த அழகு அவளை ஈர்க்கத் தான் செய்தது.ஆனால் அவனை அணுகும் முறை தான் தெரியவில்லை.. அதனால் இப்போது அமைச்சருடன் இருக்கிறாள்‌. அவள் அங்கு வந்ததும் ஷியாம் சுந்தரின் பார்வை அவள் மீது படிய அதை பார்த்த அமைச்சருக்கோ வழி கிடைத்து விட்ட திருப்தியில் இதழ்கள் விரிந்தன.


அதனால் ஷீலாவிற்கு ஷியாம் சுந்தரை கண்களால் காட்டி சைகை செய்க அதனை புரிந்து கொண்ட ஷீலாவும் அவன் அருகே சென்று அமர்ந்து கொண்டாள்..
சிறிது கூட இடைவெளி விடாமல் அவனை ஒட்டி அமர்ந்தவள்
"ஹாய் ஹான்சம் "
என்று குழைவான குரலில் பேச அவளை அழுத்தமாக பார்த்து வைத்தான் ஷியாம் சுந்தர்." தம்பி இவ பெயர் ஷீலா. இன்னைல இருந்து இவ உங்களுக்கு தான் .
சூப்பரா கம்பெனி கொடுப்பா.. என்ன சொல்றீங்க?
அந்த ஸ்கூல் ப்ராஜெக்ட் ..."
என்று அவர் பேசிக் கொண்டு போக ஷீலாவோ அவனது நெற்றியில் இருந்து தனது நடுவிரலால் மூக்கின் வழியே கோலம் போட ஆரம்பித்தாள்..அவளது கையை பிடித்து தடுத்து நிறுத்தியவன் எழுந்து நின்றான். "ஹேய் ஹான்ட்சம்... அவ்ளோ அவசரமா?
அப்படின்னா இங்கேயே.." என அவள் ஆரம்பிக்கும் போது அவன் விட்ட அரையில் மூன்று அடி தள்ளி சென்று விழுந்தாள்.


திடீரென அவன் அப்படி செய்ததும் அமைச்சரும் திடுக்கிட்டு போனவராக எழுந்து நின்று அவனை பயத்துடன் பார்த்தார்.
ஆனால் அவனோ அவரைக் கண்டு கொள்ளாமல் விழுந்து கிடந்தவள் முன்னே போய் நின்று சற்றே குனிந்தவன்


" பொண்ணுன்னு சொன்னதும் நாக்க தொங்க போட்டுட்டு பின்னாடியே வருவேன்னு நினைச்சியா?
கொன்னுடுவேன் ஜாக்கிரதை.. இதுதான் நீ என் கண்ணுல படுற கடைசி நாளா இருக்கணும்.
மீறி என் கண்ணுல பட்ட அப்புறம் நீ உயிரோட இருக்கிற கடைசி நாள் அதுவா தான் இருக்கும்."


என்று அவளை எச்சரிக்கும் தொணியில் கூறினான்.
அவனது ஆக்ரோஷத்தில் பயந்த ஷீலா சரி என்பது போல தலை அசைத்தாள்.
அவளைப் பார்த்து நக்கலாக புன்னகைத்து விட்டு மீண்டும் சதாசிவம் பக்கம் நடந்து வந்தவன் தனது முழு உயரத்திற்கும் அவர் முன்னே நிமிர்ந்து நின்று


"சாரி சார் ..எனக்கு பொண்ணுங்க பழக்கம் எல்லாம் இல்லை. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் .."
என்றான் ஏளனப் புன்னகையுடன். அமைச்சருக்கு அதில் கோபம் வரவே
"சொன்னா கேட்க மாட்டியா நீ.. எனக்கு அந்த ப்ராஜெக்ட் வேணும்.." என்றார் அவர் இப்போது கராறாக ..


"ஹா..ஹா..ஹா.. என்னால எதையும் விட்டு தர முடியாது.. முடிஞ்சா எடுத்துக்கோங்க.. அப்புறம் ஒரு முக்கியமான மேட்டர் எனக்கு கொஞ்சமே கொஞ்சம் ட்ரிங்க் பண்ற பழக்கம் இருக்கு.. அதுல ஏதாவது ட்ரை பண்ணி இருக்கலாம்.." என்று நிறுத்தியவன் திரும்பி ஷீலாவை கைகளால் காட்டி


"இது எல்லாம் உன்ன மாதிரி கேவலமானவங்க பண்ற வேலை. என்னோட அம்மா என்னை அப்படி வளர்க்கல.. ம்ம்... உனக்காக ஒரு சான்ஸ் தரேன்.."
என்று சிரித்த படி அவன் கூறியது கோபத்தை வரவழைத்த போதும் ஒரு சான்ஸ் என்று கூறியதால் அவனது முகத்தை ஆர்வமாக பார்த்தார் அந்த அமைச்சர்."என்னன்னு பாக்குறியா? ஸ்கூல் ப்ராஜெக்ட் வேணும்னா உன்னோட அமைச்சர் பதவியை விட்டுடனு..ம் நாட்டு மக்களாவது நல்லா இருப்பாங்க .."
என்று அவன் அழுத்தமாக கூறி முடிக்க அவனை கொன்று விடும் வெறியே வந்தது அவருக்கு.


அமைச்சர் பதவி என்பது அவரது எத்தனை வருட கனவு. அதை ஒரு ப்ராஜெக்ட்டிற்காக தூக்கி எறிந்து விட முடியுமா என்ன?
அத்தனை பெரிய முட்டாளா அவர்..


" முடியாதுல்ல.. அப்படின்னா மூடிட்டு இருக்கிற ப்ராஜெக்ட்டை ஆவது காப்பாத்திக்க பாரு . என்னோட மோதினா உன்னோட பிசினஸ்ஸும் காலி.. அமைச்சர் பதவியும் காலி...."
என வயதுக்கு கூட மரியாதை கொடுக்காது பேசி விட்டு பாக்கெட்டில் இருந்த கூலர்ஸை எடுத்து கண்ணில் போட்டவன் திரும்பி ஷீலாவையும் எச்சரிக்கும் பார்வை பார்த்து விட்டு ஸ்டைலாக அந்த இடத்தை விட்டு அகன்றான்..அமைச்சரும் அவரது சின்ன வீடும் அவனை பயத்துடன் பார்த்தபடி நின்று இருந்தனர். அமைச்சருக்கு அவனைப் பற்றி ஓரளவு தெரிந்து இருந்ததனால் வந்த பயமே இது.


தொடரும்..


 

Mafa97

Moderator
அத்தியாயம் 💔 09

மதியழகி தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருந்தாள்.. அவளுக்கு தோட்டப் பக்கம் வருவது என்றாலே நாய்களை நினைத்து பயம் தான் வரும் ..ஆனால் அந்த இரண்டு நாய்களும் அவளைக் கண்டு இப்போது குறைப்பது எல்லாம் இல்லை.. அவற்றிற்கு உணவு வைப்பதும் இவள் வேலை தானே.. அதனால் என்னவோ அவைகள் இவளை ஒன்றும் செய்வதில்லை..ஆனாலும் முதல் நாள் ஏற்பட்ட அனுபவத்தின் விளைவாக அவளுக்கு இன்னுமே பயம் இருக்கத் தான் செய்தது.
இப்போது தோட்டத்தில் வளர்ந்து இருக்கும் களைகளை அகற்றிக் கொண்டு இருந்தவள் அருகே நிழலாட நிமிர்ந்து பார்த்தாள். அவன் தான் என்று நன்றாகவே அவளுக்கு தெரியும். அந்த வீட்டில் தான் அவளையும் அவனையும் தவிர வேறு யாரும் இல்லையே..


அவள் நிமிர்ந்து பார்த்தது தான் தாமதம் அவள் மேல் ஒரு பச்சை நிற பாம்பை போட்டு விட்டான் ஷியாம் சுந்தர்.
"ஆ..." என்று அலறிய படியே அதை தட்டி விட மன்றாடினாள் பெண்ணவள் ..
சத்தம் செய்யாமல் இருந்திருந்தால் கூட அந்த பாம்பு அமைதியாக அதன் வழியிலேயே சென்று இருக்கும் .ஆனால் இவளோ அதை தட்டி விட போராட அதற்கும் செல்லும் வழி தெரியாது அவளது மேனியிலேயே அங்கும் இங்கும் ஊர்ந்து சென்றது. அந்தப் பாம்பு ஆபத்து அற்றது எனினும் மனிதர்கள் பொதுவாக பாம்பு என்றாலே பயப்படுவது சகஜம் தானே.. அந்த வகையை சேர்ந்தவள் தான் மதியழகியும்..அவளுக்கு பதட்டத்திலும் பயத்திலும் என்ன செய்வது என்று தெரியாமல் சத்தம் போட்டபடியே அதை தட்டிவிட முயன்றாள்."ப்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்..எ.. எனக்கு ப..பயமா இருக்கு.. இதை ..இதை....."
என்று ஏதேதோ சொல்லிய படி அழுகையின் ஊடே தட்டி விட முயன்றாள் அந்த பாம்பை .
ஆனால் அவளது இந்த நிலைமைக்கு காரணமானவனோ அவளது அவஸ்தையை இதழ்களில் ஒருவித குரூர புன்னகையுடன் ரசித்துக் கொண்டு நின்று இருந்தான் ‌‌.

எப்படியோ ஒரு வழியாக அந்தப் பாம்பு அவளை விட்டு சென்ற பிறகும் அது கூட தெரியாது தனது கைகளால் உடம்பில் தட்டிக் கொண்டே இருந்தாள் மதியழகி. அதை கண்டு சத்தம் போட்டு சிரித்தவன்
"ஹலோ மதி ..அழகி ..அந்த பாம்பு போயிடுச்சு.."
என்று கூற அதனை கேட்டவள் தரையில் அப்படியே தொப்பென்று விழுந்து விட்டாள்‌ உடலில் சத்தே இல்லாமல் ...விழுந்து கிடந்தவள் முன்னே குனிந்தவன்
"உன்னை இப்படி பார்க்கும் போது செம்ம ஜாலியா இருக்கு.. இதை விட இன்னும்... இன்னும் தண்டனை தரனும் போலவே இருக்கு.. நீ தாங்குவியா?"
என்று குரலில் நக்கல் வழிய கேட்டான்.


அவனது குரலிலும் பார்வையிலும் இருந்த தீவிரத்தில் மீண்டும் உதறல் எடுத்தது மதியழகிக்கு. ராட்சசனின் மறு வடிவமாக அவள் கண்களுக்கு தெரிந்தான் அவன்.


" எனக்கு டைம் ஆச்சு பாய் ..
அடுத்த தண்டனைக்கு ரெடியா இரு மதி... அழகி"
என்று கூறி விட்டு வேக நடையுடன் வீட்டின் உள்ளே சென்று மறைந்தான் ஷியாம் சுந்தர்..


இங்கிருந்து தப்பிச் செல்லும் வழி கூட அறியாது அந்த இடத்திலேயே அமர்ந்து அவன் சென்ற திசையை பார்த்தபடி இருந்தாள் பேதை பெண்ணவள்..அன்று இரவு நீண்ட நேரமாகியும் அவன் வீட்டுக்கு வரவில்லை. அவன் வரும் வரை அவளும் காத்திருக்க வேண்டிய நிலைமை. எங்கே அவன் வரும் முன்னே அவள் சென்று தூங்கி விட்டால் அதற்கும் தண்டனை தந்து விடுவானோ என பயந்து அவனது வருகைக்காக காத்துக் கொண்டு இருந்தாள் அவள்.


அவளை நீண்ட நேரம் காக்க வைத்து விட்டு தீபக்கின் உதவியுடன் தான் வீட்டுக்குள் நுழைந்தான் ஷியாம் சுந்தர். நன்றாக மது அருந்தி இருந்ததால் நிற்க கூட முடியாத நிலையில் தீபக் தான் கைதாங்கலாக பிடித்துக் கொண்டு வந்தான்..

" டேய் விடுடா என்..என்னை.."
என்று குளறலாக கூறிய படியே அவனுடன் நடந்தபடி வந்தான் ஷியாம் சுந்தர் .
அவர்களை கண்ட மதியழகி சட்டென எழுந்து நிற்க அவளைக் கண்ட தீபக் தயங்கி நின்றான்..

அவளும் இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் நின்று இருக்க
"தீப்பக் இனி நீ தேவ்வ இல்ல‌. இதோ.. இதோ இருக்காளே இல் பார்த்துக்குவா..ப்.. போடா .."
என்று கூறி அவனை தள்ளி விட்டான்..


" என்ன?"
என்று தீபக் மதியழகி இருவருமே சத்தமாக கேட்டு விட்டனர் அதிர்ச்சியில்.
தள்ளாடிய படியே இருவரையும் பார்த்தவன்
"என்னடா நான் உன்னை ப்போக சொல்லிட்டேன் தான்னே..ப்போ.."
என்றான் மீண்டும். அவனது குரலில் பழைய கம்பீரம் இருக்கவே இதற்கு மேல் இங்கே நின்று அவனிடம் வாங்கி கட்டிக் கொள்ள முடியாது என உணர்ந்த தீபக் மதியை பரிதாபமாக பார்த்து விட்டே தான் சென்றான்.அவன் போவதை பார்த்து விட்டு மீண்டும் மதியின் பக்கம் திரும்பியவன்
"மதி.. அழகி ப்போய் கதவை சாத்திட்டு வ்வா.." என்று கட்டளையாக அவன் கூற அதனை நிறைவேற்ற கதவின் அருகே சென்றாள்.
அவன் தானே குடித்து இருக்கிறான்..

இப்போது இதை பயன்படுத்திக் கொண்டு தப்பிச் செல்லலாம் என்று நினைத்தவள் வேகமாக வெளியே செல்ல வாசலிலேயே நின்று அவளைப் பார்த்து குறைத்துக் கொண்டு இருந்தன அந்த நாய்கள் இரண்டும்..


இவை எப்போது இங்கே வந்தன விட்டான் என பயத்துடன் மனதில் நினைத்தவள் வேகமாக கதவை சாத்தி விட்டு உள்ளே வந்து மறைந்தாள் அந்த நாய்களின் கண்களில் இருந்து தப்பிக்கும் பொருட்டு.
அவளைக் கண்டு சத்தம் போட்டு சிரித்தவன்
"என்ன.. என்ன.. தப்பிச்சு போகலாம்னு நினைச்சியா ?அத்து இந்..இந்த ஷி..ஷியாம் சுந்தர் க்கிட்ட நடக்காது.. "
என்று கூறி நிறுத்தியவன்
மீண்டும்


"வ்வா. என்ன ரூமுக்கு கூட்டிட்டு ப்போ.."
என்று கூறி அவளை நோக்கி கைகளை நீக்கினான்.
எப்படி இவனை கையாள்வது என்று அவளுக்கு தெரியவில்லை. மீண்டும் அவனது குரல் கேட்க பயத்துடனே அவன் அருகே சென்று நின்று கொண்டாள் அவள்..


அவள் தன்னருகே வந்ததும் அவளது தோளில் கையை போட்டு அவள் மீது தனது மொத்த பாரத்தையும் அழுத்தி நின்றான். அதில் நிலை குலைந்து தான் போனாள் அவள்.
' மலமாடு மாதிரி இருக்கார்.. ஐயோ பாரம் தாங்க முடியலையே '
என உள்ளுக்குள் அலறியவள் வெளியே அமைதியாகவே அவனை தாங்கிய படி மெல்ல மெல்ல நடக்கலானாள்.


எப்படியோ அவனது அறை வரை அவனை கொண்டு சென்றவள் அறையில் விட்டு விட்டு வெளியே செல்ல முற்படும் போது அவளது கையை பிடித்து தடுத்து நிறுத்தி இருந்தான் அவன்.

"என்ன சா.. சார்..?"
என்று பயத்தில் நா தந்தியடிக்க அவனிடம் வினவினாள் மதியழகி.
" எங்ங்ங்க போற...
என்க்கு என்க்கு தலை வலிக்குது.. கொஞ்சம் புடிச்சு விடு.."
என்றான் கட்டளையாக .
அவனது தலையில் எதையாவது போட்டு விட்டு ஓடி சென்று விடலாமா என்ற யோசனை வந்தாலும் வெளியே இருக்கும் நாய்களை நினைத்து அந்த யோசனையையும் விட்டு விட்டாள்."ஏய்ய்ய்.. நா..சொன்னதை செய்.." என்ற அவனது அழுத்தமான குரலில் வேறு வழி இல்லாமல் அவன் சொன்னதை செய்ய ஆரம்பித்தாள் அவள் .
அவனோ கட்டிலில் படுத்து இருக்க தயக்கத்துடனே அவன் அருகில் அமர்ந்து அவனது தலையை பிடித்து விட ஆரம்பித்தாள்.


அவளது மெல்லிய விரல்களின் மாயத்தில் சற்று நேரத்தில் அவன் தலைவலி குறைந்து போனாலும் அவளது விரல்களின் மென்மையான வருடலை அவன் இழக்க விரும்பவில்லை.
அதனால் அமைதியாகவே படுத்திருந்தான்.
ஆனால் அவளது அருகாமை மற்றும் அவளது வாசனை எல்லாம் அவனை ஏதோ செய்ய ஆரம்பித்து இருந்தது..


சுயநினைவில் இருந்தால் அதை எல்லாம் தூசு தட்டி விட்டு கடந்து வந்து இருப்பான் நிச்சயமாக‌. ஆனால் இந்த நிலைமையில் அவன் மூளை சொல்வதை மனது கேட்காமல் போக அவளது கையை பற்றி இழுத்து தன் மேல் அவளை போட்டுக் கொண்டான்.


அவனது இந்த திடீர் செயலில் திகைத்த மதியழகி உடனே அவனை விட்டு எழுந்து செல்ல முற்பட அவளது இடையில் கை கொடுத்து அவளை இறுக்கமாக பிடித்துக் கொண்டான்.குடித்து இருந்தாலும் அவனது பிடி உடும்பு பிடியாகவே தோன்றியது அவளுக்கு.
அவள் எத்தனை முயற்சி செய்தும் அவனை விட்டு எழுந்து செல்ல அவளால் முடியாமல் போனது தான் அவளது துரதிஷ்டம்..
அவளுடைய அருகாமையில் அவனது உணர்வுகள் விழித்தெழ அதற்கு மேல் நொடியும் தாமதிக்காமல் அவளை கீழே கிடத்தி அவள் மீது படர்ந்து அவளை முத்தமிட தொடங்கி விட்டான்..


முடிந்த மட்டும் அவளது கைகளாலும் கால்களாலும் அவனை தடுத்தாள் அவள். அதையெல்லாம் கருத்தில் கொள்ளாது தனது வேலையிலேயே கவனமாக இருந்தான் ஷியாம் சுந்தர்.
மதியும் தனது முயற்சியை விடுவதாக இல்லை.

ஆனால் ஷியாம் சுந்தர் தான் நினைத்ததை நடத்தி முடிப்பவன் ஆயிற்றே..
அவளை தன் உடைமை ஆக்கி விட்டே அவளை விட்டு விலகி படுத்தான். மொத்தமாக பெண்ணவளை கொள்ளை அடித்து விட்டான் அவன்..


அருகில் இருந்த போர்வையை எடுத்து தன் மேல் போட்டுக் கொண்டவள் இப்போது சத்தம் போட்டு அழத்தொடங்கி விட்டாள். பெண்கள் விரும்பியோ விரும்பாமலோ அவர்களது கற்பு போய் விடுகிறது.. அவனை தடுக்க முடியாமல் போனதை நினைத்து அழுகை தான் வந்தது அவளுக்கு.


தற்கொலை செய்து கொள்ள கூட தோன்றியது அந்த நொடி.
அவளது அழுகை கூட அவன் காதில் கேட்கவில்லை .
அப்படி ஒரு ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான் அவன் ..
அழுதழுது எப்போது தான் தூங்கினாள் என்று கூட தெரியாமல் அவனது கட்டிலிலேயே தூங்கிப் போனாள் மதி.


முதலில் தூக்கத்திலிருந்து விழித்தது என்னவோ ஷியாம் சுந்தர் தான். நேற்று இரவு குடித்ததால் ஏற்பட்ட தலைவியின் காரணமாக கைகளால் தலையை பிடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்தான் அவன். வாரத்தில் ஒரு நாள் மட்டும் அவன் இப்படி அதிக அளவு
குடிப்பான். தாய் வீட்டில் இருந்தால் அவர் முன்னாள் குடிக்க மாட்டான்..


தனியே இருந்தால் மட்டுமே இப்படி அளவுக்கு அதிகமாக அவன் குடிப்பது. அந்த நேரத்தில் எல்லாம் தீபக்கின் உதவியுடன் தனது வீட்டிற்கு வந்து விடுவான்.. நேற்று இரவும் வேலைகளினால் ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாகவே நன்றாக மது அருந்தி விட்டான்‌‌.."ஆ.."
என்றபடி தலையில் கைகளால் தட்டியவன் அப்போது தான் தன்னில் இருக்கும் வித்தியாசத்தை உணர்ந்து கொண்டான்.


அதன் பிறகு தான் அவனுக்கு நேற்று நடந்த அனைத்துமே சற்று மங்களாக நினைவுக்கு வந்தன.
" ஓ ஷிட்..."
என்று கட்டிலில் ஓங்கி அடித்தவன் அருகில் திரும்பி பார்க்க அங்கு போர்வைக்குள் கோழிக் குஞ்சு போல் அழுதழுது முகம் வீங்கிய நிலையில் தூங்கிக் கொண்டு இருந்தாள் மதியழகி..


அதில் அவளை கண்டதும் கோபம் பெறுக
"ஏய்.."
என்று உச்சஸ்தானியில் கத்தினான்‌.
அவனது குரலில் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தவள் அவனைக் கண்டு திருவெண விழித்தாள்.
மதியழகியின் கைகள் போர்வையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு இருந்தன.


" என்ன இங்கேயே இருக்கிற பிளானா?
ச்சீ.. எழுந்து போடி.."
என்று சத்தமாக கூறியவன் எழுந்து தனது உடைகளை அணிய ஆரம்பித்து விட்டான்.
அவனை பார்க்காமல் போர்வையாலே தன்னை மறைத்தபடி எழுந்து அந்த அறையை விட்டு ஓடியே விட்டாள் அவள்.


உடலும் மனமும் வலித்த போதும் அவனுக்கான காலை உணவை சமைக்க வேண்டிய கட்டாயம் அவளுக்கு இருக்கவே அழுகையினூடே குளித்து முடித்தவள் வேலைகளில் ஈடுபட்டாள். ஆனால் அழுகை மட்டும் நிற்கவேயில்லை .

எங்கே தான் அவ்வளவு கண்ணீரை சேமித்து வைத்து இருந்தாளோ தெரியவில்லை..
கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வந்து கொண்டே இருந்தது.அலுவலகம் செல்ல தயாராகி கீழே வந்தவன் அவள் எடுத்து வைத்திருந்த உணவை உண்டு முடித்து விட்டு அவள் முகம் பார்த்தான்.
மெல்லிய விசும்பல் அவளிடம்.. அதை பார்த்து என்ன நினைத்தானோ எழுந்து பூஜை அறையை நோக்கி சென்று அங்கு ஒரு பெட்டியில் வைத்து இருந்த அன்னையின் தாலியை கையில் எடுத்துக் கொண்டு அவள் அருகே வந்தான்.


மதியழகி என்ன என்று உணரும் முன்னமே அவளது கழுத்தில் அந்த தாலியை கட்டி இருந்தான் அவன். அவளோ அவனை விழி விரித்து பார்க்க


"நேத்து நைட் சூப்பரா கம்பெனி கொடுத்த..
இதை ஏன் நாம டெய்லி தொடரக் கூடாது ..?ஆனா எனக்கு இது இல்லாம உன்னை தொட புடிக்கல.. சும்மா பேருக்கு இது உன் கழுத்திலேயே இருக்கட்டும்.. இன்னைக்கு நைட்டும் ரெடியா இரு.."என்று அவளது கழுத்தில் சற்று முன்னர் அவன் கட்டிய தாலியை சுட்டிக் காட்டிய படி பேசினான். "என்ன மனிதன் இவன் ?"
என்ற எண்ணம் தான் தோன்றியது மதியழகிக்கு ..
தனது வேலை முடிந்தது என்பது போல் அதற்கு மேல் அங்கு நிற்காமல் சென்று விட்டான் அவன்."அம்மா .."
என்று தலையில் அடித்துக் கொண்டு அந்த இடத்திலேயே அமர்ந்து அழ ஆரம்பித்தாள் மதியழகி..
' இதற்காகவெல்லாம் தாலி கட்டி இருக்கிறானே.. இப்படி ஒரு திருமணம் இந்த உலகத்தில் யாருக்கும் நடந்து இருக்காது..' என்று நினைத்தவள் இதற்கு மேல் முடியாது என தனக்குள்ளே முடிவெடுத்து கொண்டு கண்களை துடைத்தாள்...


ஆழ்ந்த மூச்சை உள்ளிழுத்துக் கொண்டவள் எழுந்து சென்று பழங்கள் வெட்டும் கத்தியை கையில் எடுத்தாள் தனது வாழ்க்கையை இன்றோடு முடித்துக் கொள்ளும் முடிவோடு...

தொடரும்..


 

Mafa97

Moderator
அத்தியாயம் 💔 10

கையில் கத்தியை வைத்தபடி நின்று இருந்தவள் கண்களை இறுக மூடிக்கொண்டு கழுத்தை நோக்கி அதனை உயர்த்தினாள் ‌. மூடி இருந்த கண்களுக்குள் அவளது தாய் தந்தையின் முகம் வந்து போனது அந்த நொடிப் பொழுது .


"மதிம்மா வாழ்க்கை என்பது நீ நினைக்கிற மாதிரி ஈசி இல்லை. வாழ்க்கையில நிறைய போராடனும். கஷ்டத்துக்கு மத்தியில் தான் வாழ்ந்தாகணும். போராடி ஜெயிக்கும் போது தான் வாழ்க்கை அழகா மாறும்.
என்ன கஷ்டம் வந்தாலும் உன்னோட தைரியத்தை நீ இழக்கவே கூடாது. தைரியமா இந்த உலகத்துல வாழனும்."
என்று அவனது அன்னை அவளிடம் கூறியது நினைவில் வந்து செல்ல கையை கீழே இறக்கி விட்டாள்.எந்த பிரச்சினை வந்தாலும் தற்கொலை அதற்கு தீர்வாகாது என்றும் தற்கொலை செய்து கொள்பவன் கோழை என்றும் தோன்ற அந்த நொடியே தற்கொலை செய்யும் தனது முடிவை கை விட்டு விட்டாள் அவள்.தனது விருப்பம் இல்லாமல் தானே அவன் தன்னை எடுத்துக் கொண்டான்.
அப்படி இருக்கையில் தான் தப்பானவள் இல்லை என மனதில் ஒருவாறு உறுதியான முடிவை எடுத்தவள் மனதை கல்லாக்கி கொண்டு அன்றைய வேலைகளை கவனிக்க ஆரம்பித்து விட்டாள்.

**********************

"பாட்டி இந்த மதி எங்கே போனா?
என்னோட வர்க் எல்லாம் அப்படியே இருக்கு.
அது மட்டுமா அவளை வேலை வாங்காம எனக்கு போர் அடிக்குது பாட்டி .."
என்று கூறிய படியே சோபாவில் அமைந்திருந்த பாட்டியின் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள் மயூரி.பாசமாக அவளது தலையை தடவி விட்ட வடிவுக்கரசி
"உன் அப்பன் தான் ஏதோ வேலையா அனுப்பி இருக்கான் போல .
சனியன் தொலைஞ்சதுன்னு விடாம நீ ஏன் அவளை தேடுற...'
என்று கூறவே"அதுவும் சரி தான்
பாட்டி. அவ இருந்தா அவளை திட்டி வேலை வாங்கலாம். இப்போ ஒரு என்டர்டெயின்மென்ட் மிஸ் ஆச்சு.."
என்று சோகமாகவே சோகமே உருவாகக் கூறினாள் வடிவுக்கரசியின் அன்பு பேத்தி மயூரி .


அவள் கூறியதை கேட்டு ஏதோ பேத்தி காமெடி கூறியது போல் சத்தமாக விழுந்து விழுந்து சிரித்தார் அவர் .
அவளும் தனது மகனின் மகள் தான் என்பதை வசதியாக மறந்து விட்டார் போலும்.
இதனை எல்லாம் கேட்டுக் கொண்டே இருந்த அன்பு செல்வனுக்கு கோபமாக வந்தது. அவரும் அங்கு தான் அமர்ந்து இருந்தார்.


மதியின் பெயரை கேட்டதும் அழையா விருந்தாளியாக ஷியாம் சுந்தரின் நினைவு வந்து போனது அவருக்கு .
முன்பு இவர் அவனுக்கு தொல்லைகள் கொடுத்தாலும் அதை சாமர்த்தியமாக தகர்த்து விட்டு அவரை எச்சரிக்கை செய்வான். ஆனால் இப்போது அவனாகவே இவருக்கு பல தொல்லைகளை கொடுத்து கொண்டு இருக்கிறான்.தனியாக அவனே சமாளிக்க கூட முடியவில்லை அவரால்.
மகனை வேறு அழைத்துப் பார்த்தாயிற்று.
அவனும் இங்கு வருவதாக இல்லை .
தலையை பிய்த்துக் கொள்ளலாம் போல் இருந்தது அன்பு செல்வனுக்கு.தனது மடத்தனத்தால் அவனிடம் மாட்டிக் கொண்ட மதியை நினைத்து கொலை வெறி தான் தோன்றியது அவருக்கு.
அவள் மட்டும் சூதானமாக இருந்திருந்தால் அவருக்கு இந்த நிலைமை வந்து இருக்காது அல்லவா.
' அவன் கிட்டயே மாட்டிட்டு சாகட்டும்' என்று குரூரமாக
நினைத்துக் கொண்டார் அன்பரசன்.அவனை பற்றி நன்கு அறிந்தவர் ஆகையால் அவளை காப்பாற்ற எந்த முயற்சிகளும் எடுக்கவில்லை. இப்போது கனகாவை வேறு காணவில்லை. அவளை தனக்குத் தெரிந்த இடத்தில் எல்லாம் தேடிப் பார்த்தாயிற்று.
சொல்லாமல் எங்கு போனாள் என்ற கேள்வி மனதில் உதித்தாலும் 'வேலைக்காரி தானே எங்கு சென்றால் என்ன?' என்று விட்டு விட்டார்.


***************

முந்தைய நாள் இரவு நடந்ததிலிருந்து இன்னும் அவள் வெளி வராது இருக்க அதற்கிடையில் தாலியை பெயருக்கு என்று கழுத்தில் போட்டு விட்டு இன்றும் தயாராக இருக்கும் படி அவன் கூறி விடவே மனதே உடைந்து போனது அவளுக்கு.

இன்றைய நாளை நினைத்து இப்போதே கை கால்கள் உதறல் எடுக்கத் தொடங்கி விட்டது மதியழகிக்கு.
அன்று மாலை சீக்கிரமே வீடு வந்து சேர்ந்தான் ஷியாம் சுந்தர்.
அவன் இப்போது வருவான் என அறிந்திறாத மதி வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருந்தாள். அவனை கண்டதும் செய்து கொண்டு இருந்த வேலையை விட்டு விட்டு அவசரமாக எழுந்து நின்று விட்டாள் அவள்..அவனை கண்டதால் ஏற்பட்ட பதட்டத்தை மறைக்க தனது கைகளால் தான் அணிந்திருந்த சுடிதாரின் ஷாலினை திருக ஆரம்பிக்க அவளது முகத்தையும் கைகளையும் மாறி மாறி பார்த்தவன்
"எனக்கு ரொம்ப தலை வலியா இருக்கு ..காபி போட்டு ரூமுக்கு எடுத்துட்டு வா"
என கூறியவன் உள்ளே சென்று விட்டான் .


அவனது அறைக்கு செல்வதை நினைத்து மனம் படபடத்தது.
அவன் சொன்ன போதே அந்த வேலையை செய்யா விட்டால் அதற்கும் தண்டனை என்று ஆரம்பித்து விடுவானே என பயந்தவள் அவசரமாக அவனுக்கென்று காபி தயாரித்து எடுத்துக் கொண்டு நகர மறுத்த கால்களை வலுக்கட்டாயமாக நகர்த்தி அவனது அறைக்கு சென்றாள்.

அவள் அவனது அறைக்குள் நுழையும் போது குளியலறையில் இருந்து இடையில் ஒரு டவளுடன் மட்டுமே வெளியே வந்தான் ஷியாம் சுந்தர் .
அவனை அந்த நிலையில் கண்டவள் அவசரமாக காபி கப்பை மேசை மீது வைத்து விட்டு திரும்பி வெளியே சொல்ல நினைக்கையில்


"எங்கே போற எங்கேயே இரு.. நேத்து நைட் இங்கே தானே இருந்த.."
என்று எள்ளலாக கூறினான் அவன்.
ஐயோ என்றானது அந்த பேதை பெண்ணுக்கு.
அவன் கூறியதை கேட்டு அப்படியே நின்று இருந்தாளே தவிர திரும்பி அவனை பார்க்கவும் இல்லை. அந்த இடத்தை விட்டு ஒரு அடியேனும் எடுத்து வைக்கவும் இல்லை அவள்.அவனுக்குத் தான் அவள் முன்னால் அப்படி நிற்க எந்த சங்கடமும் இல்லை போலும். சாவதானமாக வந்து அவள் மேசை மீது வைத்து இருந்த காபி கப்பை எடுத்து பருக ஆரம்பித்தான்.அப்படியே அவளது முகத்தை ஊன்றி கவனித்தவன் கண்களுக்கு அவளது அழுது வீங்கி இருந்த முகம் தென்பட்டது.
"எதுக்கு டி அழுதழுது முகத்தை வீங்க வச்சி இருக்க..? "
என்று சத்தமாக கேட்க அவனது குரலில் உடல் ஒரு முறை தூக்கிவாரி போட்டது
அவளுக்கு.." ஆனா பாரு இப்படி இருக்கும் போதும் நீ அழகாகத் தான் இருக்க.. நேத்து வரைக்கும் உன்னோட இந்த அழகு என் கண்ணுல படவே இல்லை பாரு.."
என உச்சு கொட்டிய படி கூறி முடித்தான்.


என்ன எதிர்வினை காட்டுவது என்று கூட தெரியாது கீழே பார்த்தபடி நின்று இருந்தாள் மதி.. காபியை குடித்து முடித்தவன் அவள் கைகளில் அதை திணித்து விட்டு
"இதை வச்சிட்டு சீக்கிரமா ரூமுக்கு வா .."
என்று அவன் குரல் அவளது காதுக்கருகில் கேட்க திடுக்கிட்டு அவன் முகம் நோக்கினாள் மதியழகி .


"என்ன பார்வை சொன்னதை செய் சீக்கிரம்.."
என்று அவளை விரட்ட நேரத்தை கடத்தும் பொருட்டு மெல்லமாகவே நடந்து சென்றாள் அவள்.
அவன் கூறியதைப் போலவே காபி கப்பை சமையல் அறையில் வைத்தவள் மீண்டும் அவனது அறைக்கு வந்து சேர்ந்தாள்." கதவை சாத்திட்டு வா "
என்று கூற அவன் கூறியதை தட்டாமல் செய்தவள் மெல்ல அவனை நோக்கி அடிமேல் அடி வைத்து வந்தாள்.
கடைசி முறையாக அவனிடம் கெஞ்சிப் பார்க்கலாம் என முடிவெடுத்தவள் பசை போல் ஒட்டி இருக்கும் இதழ்களை பிரித்து

"சா..சார் ..என்னை விட்டுடுங்க.. இனிமேல் உங்க பக்கமே வரமாட்டேன்.. என்னால முடியல சார்..பெ.. பெரியப்பா பேச்சைக் கேட்டு நான் இங்க வந்து இருக்கக் கூடாது
... ரியலி சாரி சார்."
அவனை பார்க்காமலே பேசி முடிக்க
" ஹா.. ஹா..... ரொம்ப சீக்கிரம் புரிஞ்சுகிட்ட போல .."என்றான் நக்கலாக.பயத்துடன் அவள் அவனை பார்த்தபடி இருக்க மேலும் அவனே பேசினான்.
"ஆனா பாரு உன்னை மன்னிச்சு விடுற அளவுக்கு எல்லாம் நான் நல்லவன் இல்லையே.. அதுலையும் இன்னிக்கு காலையில உன் கழுத்துல தாலி வேற கட்டி இருக்கேன்.. இப்போ ஒரு மனைவியாவும் உன்னோட கடமைகள் நிறையவே இருக்கு.. சோ எனக்கு தோணும் போது தான் உன்னை இங்க இருந்து போக அனுமதிப்பேன்.."


அவன் பேச பேச அவனையை தான் பார்த்து இருந்தாள் மதி .
இடையில் டவல் மாத்திரமே அணிந்து தனது படிக்கட்டு தேகத்துடன் அவன் ஆணழகனாக காட்சி அளிக்க அவள் கண்களுக்கு மட்டும் சிறு வயதில் கதைகளில் படித்த ஒரு அரக்கனின் உருவம் போலவே தோன்றினான் .அதற்கு மேல் அவன் பேசவும் இல்லை ..அவளை பேசுவதற்கு அவன் அனுமதிக்கவும் இல்லை.. ஒரு கணவனாக அவளிடம் தனது தேவையை நிறைவேற்றிக் கொண்டான்
அவன் .
நேற்று மறுப்பு தெரிவித்தவள் இன்று கல்லை போல இறுகி இருந்தாள் அவனது கைகளில்.


எந்த மறுப்பும் அவள் தெரிவிக்கவில்லை.. பொம்மை போலவே இருந்தாள்.
ஆனால் கண்களில் இருந்து மட்டும் கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது .
தனது தேவையை நிறைவேற்றிக் கொண்டவன் விலகி படுத்துக் கொண்டான் ..


போர்வைக்குள் தன்னை மறைத்தவள் இப்போதும் அமைதியாக கண்ணீர் வடித்தாள்.
அது மட்டும் தானே அவளால் முடிந்த காரியம்.


அடுத்த நாள் காலை எழும் போது அவன் அங்கு இல்லை. அவசரமாக தனது ஆடைகளை அணிந்து கொண்டவள் வெளியே செல்ல முற்படும் போது பால்கனியில் இருந்து அறைக்குள் வந்தவன்
"ஏய் நில்லு.."
என்று கூறி தனது பர்சிலிருந்து ஒரு தொகை பணத்தை எடுத்துக் கொண்டு வந்து அவளது கையைப் பிடித்து அதில் பணத்தை திணித்தான்..


அவளோ அவனை அதிர்ந்து பார்க்க
" செஞ்ச வேலைக்கு பணம் கொடுக்கணுமே..
எனக்கு எவ்வளவு பணம் கொடுக்கணும்னு சரியா தெரியல.. இந்த பணம் போதுமா ..இல்லை?"
என்று அவன் கேள்வியாக நிறுத்த செத்து விடலாம் போல இருந்தது அவளுக்கு..


அத்தனை கூர்மையாக இருந்தது அவனது வார்த்தைகள் .
அவளது பிறந்த வீட்டில் அவர்கள் எப்போதும் அவளை திட்டுவார்கள் தான்..
ஆனால் இவன் பேசுவதோ இவளது பெண்மையைப் பற்றி அல்லவா..


அவன் தான் முதல் நாள் அவளை வலுக்கட்டாயமாக எடுத்துக் கொண்டான்.
அதன் பிறகும் திடுமென தாலியை வேறு கழுத்தில் கட்டினான்.
நேற்றும் அவள் தன்னை விட்டு விடும் படி கூறியும் அவன் அதையெல்லாம் காதில் வாங்காமல் 'மனைவி ,கடமை' என்று வசனம் பேசினான்..இன்று காலை என்னவென்றால் அவள் இந்த தொழில் செய்யும் பெண் என்பதை போல் அவள் கைகளில் பணத்தை திணிப்பதை தான் அவள் ஜீரணிக்கவே முடியவில்லை.
அதுவும் அவனது தண்டனைகளில் ஒன்று தான் என்பதை அந்த பேதை பெண் அறியவில்லை ..பாவம்.!அவனையும் தன் கைகளில் இருந்த பணத்தையும் மாறி மாறி பார்த்தவள் கோபத்தில் முகம் சிவக்க அந்த பணத்தை பட்டன அங்கு இருந்த கட்டிலில் போட்டு விட்டு அந்த இடத்தில் அதற்கு மேல் நிற்காமல் வேகமாக வெளியே சென்று விட்டாள் .


போகும் அவளது முதுகை பார்த்து இருந்தவனின் கண்களில் இருந்த கொடூரத்தையும் இதழில் இருந்த நக்கல் புன்னகையும் நல்ல வேலை அந்த பேதை பெண் காணவில்லை..


அன்றிலிருந்து தினம் அதே நிலை தான் அவளுக்கு. இரவில் அவன் அறையில் தான் அவள் தங்க வேண்டும். அவன் தனது தேவையை நிறைவேற்றிய பிறகே அவளை தூங்க விடுவான். காலையில் அவளுக்கு ஒரு நாள் தவறாமல் பணம் கொடுத்து விடுவான். ஆனால் அதை எப்போதும் போல அவள் அந்த கட்டிலிலேயே வைத்து விட்டு வெளியே சென்று விடுவாள்.தினமும் இரவில் அவன் தொடும் போதெல்லாம் உடல் விரைத்து கண்களில் இருந்து கண்ணீர் வந்து கொண்டே தான் இருக்கும் அவளுக்கு. அவனுக்கு அதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்பதைப் போலவே நடந்து கொள்வான்..


முன்பை விட மனதளவில் அதிகம் பாதிக்கப் பட்டு போனாள் பெண்ணவள் .
தப்பித்துச் செல்லும் வழியும் இருக்கவில்லை ..
அவனைப் போலவே அவனது இரண்டு நாய்களும் அவள் மேல் ஒரு கண்ணை வைத்த படி தான் சுற்றிக் கொண்டு இருந்தன.சாப்பாட்டில் உப்பு இல்லை என்றாலும் சிறிதளவேனும்
உப்பு , காரம் கூடி விட்டாலும் அவள் மேலேயே அதை அபிஷேகம் செய்தும் விடுவான்.

அன்று ஞாயிறு என்பதால் வீட்டில் தான் இருந்தான் அவன். இலகுவான உடை அணிந்து ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்து ஏதோ புத்தகம் படித்துக் கொண்டு இருந்தான் போலும். எப்போதும் போல் அவனது முகம் கடுமையாக தான் இருந்தது.


ஓய்வின்றி வேலை செய்வதால் உடல் மெலிந்து பார்க்கவே பரிதாபமான நிலையில் இருந்தாள் மதியழகி .
ஆனாலும் அந்த பெரிய வீட்டில் அவள் மட்டும் தான் வேலைகள் அனைத்தையும் செய்ய வேண்டிய கட்டாயம்.
சற்று முன்னர் அவன் அவளை அழைத்து காபி போட்டு எடுத்து வரும் படி கூறியிருக்க அவனுக்கான காபியை எடுத்துக் கொண்டு அவன் முன்னால் போய் நின்றாள் அவள்..
அவளால் முன்பு போல் வேகமாக வேலைகள் கூட செய்ய முடியவில்லை.

தொடரும்..


 

Mafa97

Moderator
அத்தியாயம் 💔 11

தன் முன்னே காபி கப்புடன் வந்து நின்றவளை நிமிர்ந்து பார்த்து விட்டு அவளது கைகளில் இருந்த காபி கப்பை வாங்கி ஒரு மிடறு பருகியவன் முகத்தை
சுழித்தபடி அவளைப் பார்த்தான்..


அவளும் அவனைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
" இது எப்போ போட்ட காபி?
சூடே இல்ல .."
என்று அவன் சத்தம் போட அவளுக்குத் தான் சோர்வாக இருந்தது.


அவள் இப்போது போட்டது தான். ஆனால் முன்பு போல் வேகமாக கூட நடக்க அவளது உடலில் தெம்பு இல்லை.
மெதுவாக நடந்து வரும் போது அதன் சூடு ஆறி இருக்கும்.

அதை அவனிடம் சொல்ல முடியாது என்பதால் அமைதியாக இருந்தாள் அவள். அவளது அமைதி அவனது கோபத்தை மேலும் தூண்ட கையில் இருந்த கப்பை தூக்கி அவளது காலிலேயே தூக்கி அடித்தான். எப்போதும் அவள் மேல் தான் வீசி எறிவான் .ஆனால் இன்று கோப்பையுடனேயே காலில் போட அதை அவள் எதிர்பார்க்காததால் வேகமாக காலை கூட பின்னால் எடுக்க முடியவில்லை அவளால்.


அவன் வேகமாக போட்டதில் காபி கப் அவளது காலை நன்றாகவே பதம் பார்த்து இருந்தது.
அது வெடித்து அதன் ஒரு முனை வேறு அவளது காலை கிழித்து விட ரத்தமும் வர ஆரம்பித்து விட்டது. காபியுடன் சேர்ந்து இரத்தமும் அந்த இடத்தை நிறைத்து இருந்தது.."ஆ.."
என்று வலி பொறுக்க முடியாமல் கதறினாள் பெண்ணவள்..

அதையும் இதழில் நக்கல் புன்னகையுடன் ரசித்துக் கொண்டு இருந்தான் ஷியாம் சுந்தர்.
கீழே குனிந்து தனது காலை பார்த்தவளுக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியாத நிலை தான் .
சிறிது நேரம் அப்படியே இருந்தவள் பின்பு அவசரமாக சமையலறை நோக்கி செல்ல


"ஹே நில்லு..."
என்றான் கட்டளையாக. அவனது குரலில் அவளும் பட்டென்று நின்று விட்டாள்.
" நான் உன்னை போக சொல்லவே இல்லையே ..நீ பாட்டுக்கு போற.."
என்று அவன் கூற
'இதற்கு மேலும் என்ன ?'
என்று வலி நிறைந்த கண்களோடு அவனை ஏறிட்டுப் பார்த்தாள் அவள்..


"உன் துப்பட்டாவை கிழிச்சு காலை கட்டிட்டு எனக்கு ஃபிரஸ்ஷா ஒரு காபி போட்டு எடுத்துட்டு வா .."
என்று அவன் கட்டளையிட அவளோ கண்ணீர் வடியும் கண்களுடன் அவனைப் பார்த்து

"சார் எனக்கு போட்டுக்குறதுக்கு மூணு செட் துணி தான் இருக்கு.. அதையும் கிழிச்சிட்டா வேற துணியே இல்லை சார் .."
என்றாள்.
அவளது தாய் தந்தை உயிரோடு இருந்தால் அவளது இந்த நிலைமையை கண்டு ரத்தக் கண்ணீரே வடித்து இருப்பார்கள்..


பரம்பரை பணக்காரர்களின் வீட்டில் பிறந்த பெண் வாரிசுக்கு இருப்பது மூன்றே செட் பழைய துணிகள் தான் ..
அதுவும் சாயம் போனவை..
ஆனால் அவன் ஒன்றும் அவளுக்காக பரிதாபப் படுபவன் இல்லையே.

"என்ன பேச்சு எல்லாம் பலமா இருக்கு.. சொன்னதை செய்.."
என்று கூறியதோடு தனது வேலையிலும் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டான் .
அங்கேயே அவன் சொன்னபடி அந்த துப்பட்டாவை கிழித்து காலில் கட்டியவள்
வலியில் காலை இழுத்து இழுத்து நடந்தபடி அவனுக்காக காபி போட வேண்டி சமையல் அறைக்குள் சென்றாள்..


இப்போது சூடு ஆறி விடாமல் வேகமாகவே வந்து அவனிடம் காபி கப்பை நீட்டினாள் .
கால் வலி உயிர் போனது அவளுக்கு.
அவளது கட்டையும் மீறி இரத்தம் வெளியே வந்தது.


" அப்றம் கால் வலி , கை வலின்னு சும்மா இருக்காம ஸ்பெஷலா சமைச்சு வை‌."
என்றவன் குடித்து முடித்த கப்பை அவளது கைகளில் திணித்தான். மதியழகியும் கால் வலியுடன் அந்த இடத்தையும் சுத்தம் செய்து விட்டு அவனுக்கான உணவையும் சமைக்க ஆரம்பித்தாள்.

சரியான நேரத்தில் அவனுக்கான உணவை கொடுத்தவள் அதன் பிறகு அனைத்தையும் ஒழுங்குப் படுத்தி விட்டே தனது காலை ஆராய்ந்தாள். லேசாக
இரத்தம் வந்து கொண்டு இருந்தது.

"அம்மா ரொம்ப வலிக்குதும்மா.. பேசாம உங்ககிட்டயே வந்துடலாம்னு தோணுது..
நான் , நீங்க, அப்பா மூணு பேரு அங்கையாவது சந்தோஷமா இருக்கலாம்... இல்லம்மா.."
என்று கண்களில் கண்ணீர் வெளியேற காற்றாய் போன தனது அன்னையுடன் பேசினாள் அவள்.

காயத்திற்கு மருந்திட்டு விட கூட யாரும் இல்லை அவளுடன்.
முன்பு கனகாவாவது உடன் இருப்பார். இன்று தனிமை வேறு அவளை கொன்றது .
ஆண்களை போல பலத்தையாவது அந்த கடவுள் பெண்களுக்கு கொடுத்து இருக்கலாம்..

அவனை எதிர்க்கவும் முடியாமல் அந்த நாய்களை தாண்டி தப்பித்து செல்லவும் முடியாமல் திண்டாடுகிறாள் அந்த பேதைப் பெண்.


சமையலறையின் உள்ளே தரையில் அழுதழுது தூங்கிப் போனாள் மதியழகி.
காலுக்கு மருந்திட கூட அவளிடம் மருந்தும் இல்லை. மறந்திட்டு விட துணைக்கு ஆளும் இல்லை.


அவளது நல்ல நேரமோ என்னவோ அன்று மாலை ஷியாம் சுந்தரை சந்திக்க வேண்டி அங்கு தீபக் வந்து சேர்ந்தான்.
அவளது காலில் துப்பட்டாவினால் கட்டி இருந்த கட்டையும் அவள் தாங்கி தாங்கி நடந்து வருவதையும் கண்டவன் அங்கு ஷியாம் இல்லாததை உறுதிப்படுத்திக் கொண்டு அவள் அருகே சென்றவன் என்ன என்றும் விசாரித்தான்..

அவளைப் பற்றி
அவனுக்கு ஓரளவு தெரியும். அவளுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று அனைத்து வேலையாட்களையும் நிறுத்தி விட்டு அவளை வைத்தே அவன் முதலாளி வேலை வாங்குவதும் அவனுக்கு தெரிந்து தான் இருந்தது.

ஆனால் அவளுக்கு ஷியாம் சுந்தர் கொடுக்கும் விசித்திரமான தண்டனைகள் மற்றும் அவன் அவளது கழுத்தில் தாலி கட்டியதும் தெரியாது.
அவளும் தாலியை முடிந்த மட்டும் மறைத்து வைத்து இருந்தாள் வெளியே யாருக்கும் தெரியாமல்.

தீபக் அவளிடம் காலை பற்றி விசாரித்ததும் கீழே உடைந்து கிடந்த காபி கப் குத்தி விட்டதாக அவனிடம் பொய் கூறி சாமாளித்தாள் .
"கொஞ்ச நேரம் அப்படியே உட்கார்ந்து இருமா ..இதோ வரேன்.." என்றவன் வேகமாக வெளியே சென்று விட்டான்.


சிறிது நேரத்தில் திரும்பி வந்தவன் கைகளில் அவளது காலுக்கு மறந்திட்டு கட்டு போட தேவையான மருந்து பொருட்கள் இருந்தன. அவளை வலுக் கட்டாயமாக அமர வைத்து காலில் மருந்திட்டு கட்டுப் போட்டவன் மீண்டும் மருந்திட்டுக் கொள்ளும் படி கூறி கையில் இருந்த மருந்தையும் அவளிடம் கொடுத்து விட்டே சென்றான்.

அவனது அன்பு சாத்விக்கையே அவளுக்கு நினைவூட்டியது. கண்கள் கலங்க
"தேங்க்ஸ் அண்ணா .."
என்றாள் தீபத்தை பார்த்து.
அதில் அவளுக்கு மெல்லிய புன்னகை ஒன்றை பரிசாக கொடுத்து விட்டு சென்றான் அவன்.


அன்றைய நாளுக்கான அவளது கெட்ட நேரம் முடியவில்லை என்பது போல் இரவு உணவு உண்ண வந்தவன் கண்களில் அவளது காலில் போடப்பட்டு இருந்த கட்டு தென்படவே
"என்ன மருந்து எல்லாம் போட்டு விட்டிருக்கான் போல.."
என்று நக்கலாக கேட்டான்..

தீபக் தான் இதை செய்திருப்பான் என்பதை அவன் நன்கு அறிவான். இவளோ எப்போதும் போல் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து விட்டாள்.
அதை பார்த்து இதழோரம் வில்லத்தனமான புன்னகை ஒன்றை சிந்தியவன்
"ராமு ராஜு.." என்று சத்தம் போட்டான்
வெளியே பார்த்தபடி .


அவன் நாய்களை கூப்பிட்டதில் உடல் நடுங்க அவனைக் கேள்வியாக பார்த்தாள் மதியழகி. தங்கள் முதலாளியின் கட்டளைக்கு இணங்க வேகமாக நான்கு கால் பாய்ச்சலில் அவன் அருகே ஓடி வந்து நின்றன அந்த இரண்டு வாயில்லா ஜீவன்களும்.

அவைகளை கண்டதும் சமையலறைக்குள் சென்று மறைய போன மதியை
"நில்லு .."
என்ற அவன் கர்ஜனை ஒகுரல் தடுத்து நிறுத்தியது. அவள் என்ன என்று உணரும் முன்னமே


" ராமு, ராஜு ஸ்டார்ட் .."என்று அவன் கூறியதும் அந்த இரண்டு நாய்களும் அவளை நோக்கி பாய்ந்தன.
வீட்டுக்குள்ளே ஓடக் கூட இடம் இல்லாமல் வலித்த காலை எடுத்துக் கொண்டு ஓடவும் முடியாமல் தடுமாறிய படி ஓட்டினாள் மதியழகி.

தனது உயிரை காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு அவள் அந்த வீட்டிற்குள்ளேயே சுற்றி சுற்றி ஓடினாள்.அவளால் ஒரு கட்டத்திற்கு மேல் ஓட முடியாமல் போகவே அவளது வேகம் குறைந்து விட சுடிதார் அணிந்து இருந்தவளின் துப்பட்டாவை பிடித்து இழுத்து இருந்தது அதில் ஒரு நாய்..


' முடிந்தது.. எல்லாமே முடிந்தது..' என மனதில் நினைத்தவள்
"அம்மா காப்பாத்தும்மா .."
என்ற அலறலோடு மயங்கி சரிந்து இருந்தாள்.
அதே நேரம் அவனும்
"ராமு ,ராஜு ஸ்டாப் ..
ஸ்டாப்.."
என்று கூறியிருந்தான்.

அவளது கண்களில் பயத்தையும், வலியையும் காண வேண்டும் என விரும்பியவன் அதை கண்டு ரசித்தும் இருந்தான் .
இப்போது நாய்கள் அவளை கடித்து வைத்து விட்டால் அவள் இல்லாமல் அவனுக்கு தான் நஷ்டம் என்பதை அறிந்து அவைகளை தடுத்தும் நிறுத்தி இருந்தான் .

அவள் அருகே எழுந்து சென்றவன் மயங்கி கிடந்தவளை கைகளில் அள்ளிக் கொண்டு தனது அறைக்கே சென்று விட்டான்.

கட்டிலில் அவளை கடத்தியவன் தண்ணீர் அடித்து அவளை எழுப்ப அவளும் கண் விழித்து தான் எங்கே இருக்கிறோம் என்று தனது கண்களால் சுற்றுப்புறத்தை ஆராய்ந்தாள்.
அவளது கண்களுக்கு அருகே நின்று இருந்த ஷியாம் சுந்தரும் அவனது அறையும் பட வேகமாக எழுந்து அமர்ந்தாள்.

கால் வலி உயிர் போவது போல் இருந்தது.. அவள் நாய்களுக்கு பயந்து ஓடியதால்
கட்டையும் மீறி இரத்தம் கசிந்து இருந்தது அவளது கண்களுக்கு தெரிந்தது‌..
.அவன் முன்னால் என்ன செய்வது என்று கூட தெரியாமல் எழுந்து செல்ல முற்படும் போது


" போ சீக்கிரம் வேற ஒரு கட்டு போட்டுட்டு வா ..எனக்கு தூக்கம் வருது.."
என அவளை விரட்டினான் அவன். எதற்காக இவ்வாறு கூறுகிறான் என்பதை அறிந்தவள் தனக்குள்ளேயே விரக்தியாக புன்னகைத்துக் கொண்டாள்.

அவளால் முடியாது என்றாலும் மறுத்து கூற முடியாது.. அவள் கிட்டத்தட்ட அவனது அடிமை ஆயிற்றே .
எந்தவித மறுப்பும் அவளால் சுதந்திரமாக கூறவும் முடியாது. எனவே வலித்த கால்களை கடினப்பட்டு நகர்த்திச் சென்று அவன் கூறியவாறு காலுக்கு புதிய கட்டிட்டு வந்தாள் ..

அவள் வரும் வரை அவளுக்காக காத்திருந்தவன் பெண்ணின் வலியை கூட உணராது தனது தேவைகளை நிறைவேற்றிக் கொண்டான்.
: இப்படியே ஏதாவது நடந்து செத்துட்டா கூட நல்லா இருக்கும்..' என்பதே அவள் மனதில் தோன்றிக் கொண்டு இருக்கும் வசனம்..

வாழவும் முடியாது தற்கொலையும் செய்து கொள்ளவும் முடியாது தவித்துப் போனாள் அவள் ..
இந்த வயதிலேயே இயற்கையான மரணத்தை கேட்டு நின்றாள் கடவுளிடம்.


அடுத்த நாள் காலை எழுந்தவளால் கண்ணை திறக்க கூட முடியாத அளவுக்கு காய்ச்சல் அடித்தது ..
கால் வலியாலும் நேற்று நாய்க்கு பயந்து ஓடியதாலும் ஏற்கனவே இருந்த உடல் சோர்வினாலும் அவளுக்கு காய்ச்சல் வந்து இருந்தது..

சிறு வயதில் காய்ச்சல் வந்தால் அவளது தாயும் தந்தையும் அவளை நடக்கக் கூட விடாமல் கையில் வைத்து தாங்குவார்கள்,
தாயின் மரணத்திற்கு பிறகு கனகாவே அனைத்தையும் செய்வார் அவளுக்கு.

இன்று அவளது நிலை... நினைக்கையிலே கண்களில் கண்ணீர்.. இப்போது எல்லாம் அடிக்கடி அழுகிறாள் அவள். கண்களை துடைத்தவள் மெல்ல எழுந்து அந்த அறையை விட்டு சென்று உடல் வலியையும் பொருட்படுத்தாது அந்த வீட்டு வேலைகளை செய்தாள்.

அவளுக்கு முன்பாகவே எழுந்த அவனுக்கும் அவளுக்கு காய்ச்சல் அடிப்பது நன்றாகவே தெரியும். ஆனால் அதை எல்லாம் கண்டு கொள்ளாதவன் அவளது தலைக்கு பக்கத்தில் பணத்தை வைத்து விட்டு ஜாக்கிங் சென்று விட்டான். அவன் உணவை உண்டு முடித்து விட்டு ஆபீஸ் சென்றதும் பகல் உணவையும் ஒரு வழியாக சமைத்து அவனுக்கு அனுப்பி விட்டு அப்படியே சமையலறையின் தரையிலேயே தூங்கிப் போனாள்.உடல் வலி காரணமாக நீண்ட நேரம் தன்னை மறந்து தூங்கியவள் அன்றைய நாள் நாய்களுக்கு உணவு வைக்க மறந்து இருந்தாள்.
மாலை வீடு வந்தவனிடம் நாய்கள் இரண்டும் பசியுடன் குறைத்து முறையிட பசியினால் தான் அவைகள் குறைக்கின்றன என்பதை அறிந்தவன் கோபத்துடன் வீட்டிற்குள் வந்து அவளை தேட எங்கும் அவள் இருப்பதாக அவனுக்கு தெரியவில்லை ..எனவே அதே கோபத்துடன் சமையலறைக்கு சென்றவன் கண்டது என்னவோ தரையில் தூங்கிக் கொண்டிருந்த மதியழகியை தான்.
"ஏய்.."என்று சத்தம் போட திடுக்கிட்டு கண் விழித்து பார்த்தாள் அவள்.


நீண்ட நேரமாக தூங்கிய தனது மடத்தனத்தை நினைத்து நொந்து போனவள் மெதுவாக எழுந்து அமர "என்னடி புருஷன் வீட்டில தூங்குகிற மாதிரி நிம்மதியா தூங்கிட்டு இருக்க ..
எதுக்காக இங்க இருக்கோம்னு மறந்து போச்சா என்ன ?
ராமுக்கும் , ராஜுக்கும் இன்னைக்கு ஏன்டி சாப்பாடு கொடுக்கல ?"
என உச்சஸ்தானியில் அவன் கத்த பேச்சற்றுப் போய் நின்றாள் அவள்.

தொடரும்.. 

Mafa97

Moderator
அத்தியாயம் 💔12


நாய்களுக்கு உணவு கொடுக்காமல் தூங்கிப் போன தனது மடத்தனத்தை எண்ணி தன்னையே நொந்து கொண்ட மதியழகி ஒட்டிக் கிடக்கும் உதட்டை கடினப் பட்டு பிரித்து
" இதோ வைக்கிறேன் சார்.. ரொம்ப உடம்புக்கு முடியல.. அதனால தான் தூங்கிட்டேன்.."
என்று கூறினாள்.


அவனிடம் தன்னிலை விளக்கம் கொடுக்கவே அவமானமாக இருந்தது அவளுக்கு.. இருந்தும் அவன் தனக்கு தண்டனை கொடுத்து விடுவான் என்ற பயத்தினாலேயே அவனுக்கு விளக்கம் கூறினாள்.


அவள் அவனுக்கு விளக்கம் கூறா விட்டால் கூட அவளை எதுவும் செய்யாமல் விட்டிருப்பான் போலும்.
அவனுக்கு இப்போது தான் அவளுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று தோன்றிற்று..

" ஓ ரொம்ப முடியலையா?
சரி இப்போ ரெண்டு பேருக்கும் சாப்பாடு கொடு.."
என்றான் ஒரு மாதிரி குரலில். அவனது குரலின் மாற்றத்தை உணர்ந்தவள்
ராமு , ராஜு இருவருக்கும் உணவை கொடுத்து விட்டு திரும்ப அவனும் அதுவரை அங்கேயே தான் நின்று இருந்தான்.


அவன் ஏன் இப்படி நிட்கிறான் என்று அவள் சங்கடமாக அவனைப் பார்க்க
" சீக்கிரமா நைட்டுக்கு சமைச்சிடு.. இப்போ ஒரு காபி போட்டு கொண்டு வா..
நைட்டுக்கு உனக்கு ஒரு வேலை இருக்கு.."
என்று கூறி விட்டு வேக நடையுடன் அறைக்குள் சென்று மறைந்து விட்டான் ‌.


இன்னுமே காய்ச்சல் இருக்கத் தான் செய்தது அவளுக்கு.. மறுத்திட முடியாத காரணத்தால் அனைத்து வேலைகளையும் செய்து முடித்தவள்
'என்ன வேலையை பற்றி அவன் கூறினான்?' என்று யோசனை செய்ய ஆரம்பித்து விட்டாள்.

அவளை அதிக நேரம் யோசிக்க கூட விடாது அங்கு வந்து சேர்ந்தான் ஷியாம் சுந்தர்.
அவள் சமைத்து வைத்திருந்த உணவை நன்றாக வயிறு நிறைய உண்டு விட்டு
"வா கொஞ்சம் வெளியே போகலாம் .."
என்று கூறி முன்னே நடக்க பயத்துடன் மெல்ல நடந்து அவன் பின்னே சென்றாள் அவள்.


தோட்டத்திற்கு வந்து நின்றவன் மேலே பார்த்து
" அதோ பாரு வானம்... ரொம்ப அழகா இருக்குல்ல...?"
என்று மென்மையான குரலில் அவளிடம் வினவினான்.
அவனிடம் இதுவரை இப்படியான ஒரு குரலை கேட்டிறாதவள் சட்டென அவன் முகம் பார்த்தாள்.ஆனால் பதில் எதுவும் பேசவில்லை.

அவள் எதுவும் பேசாததால்
"அழகா இருக்குல்ல..?" என்றான் அவள் முன்னே சற்று குனிந்து அழுத்தமான குரலில்..
அதில் அவளது தலை ஆமாம் என்று தானாகவே ஆடியது .
"அதுல எத்தனை நட்சத்திரங்கள் இருக்குன்னு நாளைக்கு விடியறதுக்குள்ள கௌண்ட் பண்ணி என்கிட்ட சொல்லணும்.. சரியா ...?"
என்றான் சீரியஸாக..


அவளுக்குத் தான் இதயம் நின்று துடித்தது.
இது என்ன புதுவித தண்டனை.. எப்படி வானில் இருக்கும் இத்தனை நட்சத்திரங்களையும் எண்ணி முடிக்க முடியும்..
' இவன் என்ன லூசா?'
என்று கூட மனதில் தோன்ற தான் செய்தது அவளுக்கு.. ஆனால் அதை வெளியே கேட்டு விட முடியாது அல்லவா.

அவனும் வேலை முடிந்தது என்பதைப் போல
"ராஜு, ராமு கம்.."
என்று அவற்றை அழைக்க எஜமானின் கட்டளைக்கு அமைய வேகமாக அவனிடம் வந்தன அவை.

" இன்னைக்கு நைட்டு இல் தூங்கவே கூடாது..
தூங்கினா அட்டாக் பண்ணிடுங்க.. இன்னைக்கு உங்களை பட்டினி போட்டதுக்காக தான் இந்த தண்டனை.."
என்று கூற அவைகளும் புரிந்தது என்ற ரீதியில் அவனைப் பார்த்து குறைத்து வைத்தன.


அவனிடம் கெஞ்சி பயனில்லை என்பதை உணர்ந்தவள் வேறு வழி இல்லாமல் அவன் கூறிய வேலையான நட்சத்திரங்களை கணக்கிட ஆரம்பித்து விட்டாள். அவளுக்கு தெரியும் கணக்கிட்டு முடிக்க கூடியது அல்ல அவை என்று .ஆனாலும் செய்தாக வேண்டிய கட்டாயம்..


நாய்களும் அங்கேயே சாவதானமாக அமர்ந்து அவளையே தான் பார்த்துக் கொண்டு இருந்தன ..
பகல் உண்டது மட்டும் தான் .
இரவு பச்சை தண்ணீர் கூட குடிக்கவில்லை அவள்.
கால் வலி ஒரு புறம் காய்ச்சல் மறுபுறம் என்று எல்லாம் சேர்ந்து அவளை சோர்வடையச் செய்தது.


இன்று அவனது ஆசைக்கு அவள் இறையாகவில்லை என்பதை நினைத்து சந்தோஷப்படுவதா, இல்லை காய்ச்சலுடன் இரவு வேளையில் தூங்காமல் அதுவும் கொட்டும் பணியில் இருப்பதை நினைத்து கவலை கொள்வதா? என்றே பேதை பெண்ணுக்கு தெரியவில்லை ..


விடிய விடிய தூங்காமல் பணியில் இருந்ததால் சற்றே குறைந்து இருந்த காய்ச்சல் இப்போது அதிகமாகிப் போனது தான் மிச்சம். உடல் நெருப்பாக கொதித்தது மதியழகிக்கு.
விடிந்த பின்னர் தான் ராமு ராஜு இரண்டும் அந்த இடத்தை விட்டு அகன்றன.
அப்போது தான் மதிக்கும் மூச்சே வந்தது.. இரவு தூங்காத காரணத்தினால் கண்கள் இரண்டும் தூக்கத்திற்காக ஏங்கின..

அன்று இரவு முழுக்க அவள் ஓரளவு நட்சத்திரங்களை கணக்கிட்ட போதும் இரவு சொன்னது போல் அவளிடம் "நட்சத்திரங்களை எண்ணி முடித்து விட்டாயா? எத்தனை?"
என்று எல்லாம் அவன் கேட்கவில்லை..

இரண்டு நாள் தான் வெளியூர் செல்வதாக கூறி அன்றே அவன் எங்கோ சென்று விட்டான். இப்போது அந்த வீட்டில் அவளும் இரண்டு நாய்களும் மட்டுமே.
வாட்ச்மேன் அண்ணாவிடம் கூறி காய்ச்சலுக்கு மருந்து வாங்கி பருகினாள் மதியழகி‌..


ஆனால் தப்பித்து செல்ல தான் முடியவில்லை‌‌.. அவள் எங்கே சென்றாலும் நாய்களும் பின்னாலே சுற்றிக் கொண்டு இருந்தன ...
அவன் வீட்டில் இல்லாத இரண்டு நாட்களும் ஏதோ ஒரு வகையில் அவளுக்கு நிம்மதியை கொடுத்தது. ஆனால் உடல் தான் பலவீனமாக இருந்தது.


********************


"அக்கா நான் சென்னை போகலாம்னு முடிவு பண்ணி இருக்கேன்.. மதி காணாம போய் மூணு மாசத்துக்கும் மேல ஆச்சு.. எவ்வளவு தேடியும் எந்த தகவலுமே கிடைக்கல.. எனக்கு பயமா இருக்கு.."
என்று சாத்விக் தலையை பிடித்துக் கொண்டு கனகாவிடம் கூற அவருக்கும் அதே கவலை தான்.பெண் பிள்ளை வேறு ..காணாமல் போய் இத்தனை நாட்கள் ஆகியும் கண்டுபிடிக்க முடியவில்லை. "நானும் உங்க கூடவே வரேன் தம்பி. எனக்கு மனசு கிடந்து அடிச்சுக்குது .தூக்கமே வர மாட்டேங்குது.."
என்றார் கனகாவும் கவலை படிந்த முகத்துடன்.‌


இந்த உலகத்தில் மதிக்காக கவலைப்பட இருக்கும் இரண்டே ஜீவன்கள் அவர்கள் தான். "இல்லக்கா நீங்க வர்றது சரியா வராது ...
வீட்டுக்கு போக வேண்டி இருக்கும். நீங்க அங்க வர்றது மதிக்கும் பிடிக்காது ..அதனால நான் மட்டும் போயிட்டு வரேன். நீங்க பத்திரமா இங்கேயே இருந்துக்கோங்க .."
என அவரை தடுத்து விட்டு தான் மட்டும் சென்னைக்கு கிளம்பி சென்றான்...


இங்க கனகாவுக்கு இருப்புக் கொள்ளவே இல்லை.
அவளுக்கு என்னானது என்று தெரியாமல் ஒவ்வொரு நாளும் நரகமாகவே கழிந்தது அவருக்கு.சென்னை வந்த சாத்விக் தனது வீட்டில் தங்காமல் ஹோட்டல் ஒன்றில் தங்கினான். அவனுக்கு தான் அந்த வீட்டில் உள்ளவர்களை பிடிக்காதே.
சித்தி சித்தப்பா இல்லாத பிறகு அந்த வீட்டிற்கு செல்வது அவனுக்கு பிடிப்பதே இல்லை..


அவனது பெற்றோர், தங்கை, பாட்டி என அனைவருமே நல்ல எண்ணம் கொண்டவர்கள் இல்லை என்று அவன் அறிவான்.
பணம் மட்டுமே அவர்களுக்கு முக்கியம் என்பதை அறிந்தே இருந்தான் அவன்.


முன்பு கனகா கூறியதும் அவன் நினைவுக்கு வந்தது.
வசந்தியை அவனது தாயும் பாட்டியும் தான் கொலை செய்தனர் என்பதை அறிந்தவன் கொதித்து தான் போனான்.
மேலும் மதியழகிக்கு அவர்கள் செய்யும் கொடுமையையும் கனகா கூறி இருந்தார்.


அதையெல்லாம் கேட்டதிலிருந்து வீட்டார் மேல் அவனுக்கு எல்லை இல்லாத கோபம் வந்தது.

ஹோட்டலில் வந்து ஓய்வு எடுத்தவனுக்கு வருணிக்காவிடம் இருந்து இப்போது அழைப்பு வரவே இன்று ஏனோ அவளுடன் பேச முடியாத மனநிலை அவனுக்கு. இருந்தும் அவள் வருந்தக் கூடாது என நினைத்து அழைப்பை ஏற்று காதில் வைத்தான்..

" என்ன சார் என்னை மறந்தே போயிட்டீங்க போல .."
என்று அவள் விளையாட்டாக பேச அவனால் தான் அதற்கு பதில் அளிக்க முடியவில்லை.
அவன் பேசாமல் இருப்பதை உணர்ந்தவள்
"என்ன ஆச்சு.. ஏதாவது பிராப்ளமா?" என்று மெல்லிய குரலில் கவலையாக கேட்க அவளிடம் சொல்லி விடலாம் என நினைத்தவன் அனைத்தையும் சொல்லி விட்டான் ...வசந்தியை அவனது தாயும் பாட்டியும் சேர்ந்து கொலை செய்தது உட்பட...


அதனை கேட்டு பேச்சற்று போனாள் வருணிகா.
" என்னங்க சொல்றீங்க.. இவ்வளவு மோசமானவங்களா உங்க ஃபேமிலி?"
என்று அவள் சற்று தயக்கத்துடனயே கேட்டாள்.


"ஆமா வரு.. நீ என்னையும் அப்படி நினைச்சுட்டியா? நான் வசந்தி சித்தியோட வளர்ப்பு ..
தப்பு பண்ண மாட்டேன்.." என்று கவலையாக கூறிட துடித்து விட்டாள் அவள்..

அவனுக்கு பயம் என்னவென்றால் தன்னையும் சேர்த்து அவள் அப்படி நினைத்து வெறுத்து விடுவாளோ என்பது தான்.
ஆனால் அதற்கு மாறாக
"ஐயோ சாத்விக் எனக்கு உங்களை பற்றி ரொம்ப நல்லாவே தெரியும். நீங்க தப்பு பண்ண மாட்டீங்கன்னு தெரியும் .
முதல்ல மதியை கண்டுபிடிங்க.. அவளுக்கும் என்னோட வயசு தானே இருக்கும் .
பாவம் அம்மா அப்பாவும் இல்லாம இப்போ எங்க இருந்து கஷ்டப்படுறாளோ.."
என அவனுக்கு ஆறுதல் கூறியவள் மதிக்காகவும் கவலை பட்டாள்.


" சரி டா ரொம்ப தேங்க்ஸ்..
என்னை புரிஞ்சிக்கிட்டதுக்கு.." என்று மனம் நிறைய காதலுடன் கூறியவன் அத்துடன் பேச்சை நிறுத்தி அழைப்பையும் துண்டித்து விட்டான்.
அவளிடம் அனைத்தையும் கூறியதில் மனம் இலேசானது போன்ற ஒரு உணர்வு அவனுக்கு.


நேரம் கடத்தாமல் தந்தையும் வீட்டில் இருக்கும் நேரம் பார்த்து அன்று மாலையை அவர்களது வீட்டிற்கு சென்றான் சாத்விக். அவனை கண்டதும் தாயும் பாட்டியும் ஆசையுடன் அவன் அருகே ஓடி வர வேகமாக தள்ளி நின்று கொண்டான் அவன்.


அதனை கண்ட இருவருக்கும் கவலையாகி போக வடிவுக்கரசி தான்
"என்னப்பா எங்களை கண்டு தூரமா போற.."
என்று கேட்டு விட்டார் .


ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாதவன்
"மதி எங்க போனா?"
என்றான் சட்டென குரலை உயர்த்தி .
அவன் மதியை பற்றி கேட்டதில் அவருக்கு கோபம் பெறுக
"அவ எங்கேயோ தொலைஞ்சு போயிட்டா ..சனியன் போனது போனதாவே இருக்கட்டும்.. நமக்கு எதுக்குப்பா அவளை பத்தி.."
என்றிட சாத்விக் அவரை அடிக்கவே கையை தூக்கி விட்டான்..


" சாத்விக் .."
என்று அங்கு வந்த அன்பு செல்வனின் சத்தத்தில் தான் தனது கையை கீழே போட்டான் அவன்.
" நீங்க தானே வீட்டுல பெரியவங்க..
அவளும் உங்க பேத்தி தானே‌.. அவளை ஏன் வெறுக்கிறீங்க ..பாவம் பாட்டி அவ.. ரொம்ப சின்ன பொண்ணு.." என்று மனம் கேளாமல் அவளுக்காக இந்த அரக்கர்களிடம் பேசினான் சாத்விக்‌.ஆனால் அவர்களா அவனது பேச்சை கேட்டு திருந்தி விடக் கூடியவர்கள்..
" இப்ப இதுக்காக இங்க வந்து கத்தூக்கிட்டு இருக்க?"
என அங்கு இருந்த மயூரியும் கேட்க "சரி கத்தல.. சொல்லுங்க மதி எங்கே.?"
என்றான் இப்போது முயன்று வரவழைத்துக் கொண்ட அமைதியான குரலில்.

"இப்போ அவளை எதுக்கு தேடுற?"
என்று இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த ஜெயராணியும் கேட்டிட
"ஏன் உங்களுக்கு தெரியாதா அவ இந்த வீட்டில் இல்லாதது.."
என்று அவரைப் பார்த்து கோபமாக எதிர் கேள்வி கேட்டான் அவரது மகன்.


இதனை எல்லாம் பார்த்தபடி அங்கு உள்ள சோபாவில் அமர்ந்த அன்பு செல்வன் தனது மகனை பார்த்து "சாத்விக் எதுக்காக அவளை பற்றி இப்போ வந்து கேட்கிறேன்னு நான் தெரிஞ்சுக்கலாமா ?"
என்று நிதானமாக கேட்க அவர் மேல் தான் அவனுக்கு இப்போது சந்தேகம் வந்தது."மூணு மாசத்துக்கும் மேல ஆச்சு அவ காணாம போய்..
எனக்கு என்னமோ உங்க மேல தான் சந்தேகமா இருக்கு.. என்ன பண்ணீங்க அவளை.. கேட்க யாரும் இல்லைனு நினைச்சிட்டீங்களா? அண்ணன் தான் இருக்கேன் அவளுக்கு.."
என்று தந்தையை பார்த்து கோபமாக பேசினான் ‌‌..

"ஓஹ் அவளோட அண்ணனா தான் இப்போ வந்து இருக்க இல்ல..ம்.. சொல்றேன்..அவ இப்போ பிஸ்னஸ் கிங் ஷியாம் சுந்தர் வீட்டுல இருக்கா.." என்று கூறினார் நக்கலாக ..
"என்ன?"
என்று அதிர்ந்து விட்டான் சாத்விக்
இப்போது .


அவனது அதிர்ச்சியை கண்டு தான் மதியை அங்கு எதற்காக அனுப்பி வைத்தோம் என்றும் இப்போது அவள் அவனிடம் தான் இருக்க வேண்டும் என்றும் கூறிட உலகமே இருண்டு போனது போன்ற உணர்வு சாத்விக்கு..


ஒரு பெண்ணை உலவு பார்க்க அனுப்பிய தன் தந்தையை என்ன செய்தால் தகும்.. அவனுக்கு மனது ஆரவில்லை.
ஷியாம் சுந்தர் சிறந்த தொழில் அதிபன் என்பது தெரியும். ஆனால் அவனது மறுபக்கம் சாத்விக்கிற்கு தெரியாது..


எனவே அவனிடம் பேசி தங்கையை மீட்டுக் கொள்ளலாம் என முடிவெடுத்தவன்
"என்னோட தங்கச்சியை நானே காப்பாத்துறேன்.. பணம் பணம்னு அலையுறீங்களே ஒரு நாள் அந்த பணம் இல்லாம நடு தெருவில நிக்கத்தான் போறீங்க.. சித்தியையும் பணத்துக்காக தானே கொலை பண்ணீங்க.. அந்த பணத்தையே கட்டிக்கிட்டு அழுங்க.. இனிமே நான் உங்க பையன்னு சொல்லிட்டு சுத்தாதீங்க.. அது எனக்கு கேவலம்
. இனி நீங்க யாரோ நான் யாரோ.."
என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்று விட்டான் அவன்...


மகன் சென்றதற்காக தாய் மற்றும் மனைவி இருவரும் வருத்தப்படுவதை கண்டு
" சரி விடுங்க பணம் தான் எல்லாம்னு புரிஞ்சுகிட்டு ஒருநாள் திரும்ப நம்ம கிட்டயே வருவான்.."
எனக் கூறிய அன்பு செல்வன் எழுந்து சென்று விட்டார்.. மற்றவர்களும் அவரது கூற்றையே ஆமோதித்தனர் ..

அவன் ஒரு நாள் தங்களை தேடி வருவான் என்று நம்பினார்கள் அந்த மூடர்கள்.
ஆனால் அவன் வசந்தியின் வளர்ப்பு என்பதை வசதியாக மறந்து தான் போனார்கள் அவர்கள்.


தொடரும்.. 

Mafa97

Moderator
அத்தியாயம் 💔 13


அடுத்து சாத்விக் செய்தது தனது நண்பன் ஒருவனிடம் ஷியாம் சுந்தரை பற்றி விசாரிக்க சொன்னது தான்.
அவன் நினைத்ததற்கு மாறாக ஷியாம் சுந்தர் கடினமானவனாக இருந்தான். தனக்கு யாராவது தொழிலில் துரோகம் செய்து விட்டால் அவன் கொடுக்கும் தண்டனைகளை கேட்டு அறிந்தவனின் உடம்பு பயத்தில் உதறல் எடுத்தது.


அப்படி கடுமையாக இருப்பவனது வீட்டுக்குள்ளேயே சென்று இருக்கும் தனது தங்கையை நினைக்கையில் பயமாக இருந்தது அண்ணன் அவனுக்கு.
'அவன் என்ன செய்து இருப்பானோ தனது தங்கையை'
என்ற எண்ணமே மனதில் ஓடிக் கொண்டே இருந்தது ..


எப்படியாவது அவனிடமிருந்து மதியழகியை மீட்க வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டவன் ஷியாம் சுந்தரை கவனிக்க ஆரம்பிக்க வேண்டும் என நினைத்தான். ஆனால் அவன் தான் இப்போது சென்னையில் இல்லையே. அதை அறியாத சாத்விக் அவனது ஆஃபீஸ் மற்றும் வீடு உள்ள பக்கம் என்று அடிக்கடி சென்று பார்க்க ஆரம்பித்தான் தங்கையை பற்றிய ஏதாவது ஒரு தகவல் கிடைக்குமா என்று.

*******************

வெறும் இரண்டு நாள் மாத்திரம் தான் மதியழகியால் நிம்மதியாக இருக்க முடிந்தது அந்த வீட்டில். மூன்றாம் நாள் காலையிலேயே வந்து நின்றான் ஷியாம் சுந்தர். அவன் காலை நேரமே வருவான் என்பதை அறிந்திராத மதியழகி பயத்துடன் அவனது முன்னாள் வந்து நிற்க அவனோ அவளை கண்டு கொள்ளாமல் அறைக்குள் சென்று விட்டான்..


அதுவும் ஒரு வகையில் நிம்மதி தான் என தோன்ற தனது வேலைகளை செய்ய தொடங்கி விட்டாள் அவள் .
அன்று ஏனோ அவளுடன் எதுவும் பேசாமல் அவள் சமைத்து வைத்திருந்த உணவை உண்டு விட்டு அலுவலகம் கிளம்பி சென்று விட்டான்.


தீபக்கிடம் இருந்து சாத்விக் அவனது வீட்டையும் ஆபீசையும் நோட்டமிடும் செய்தி அவன் காதுகளுக்கு வந்து சேர்ந்து இருந்தது ஏற்கனவே.
ஆனால் அவனுக்கு வருணிக்காவும் சாத்விக்கும் காதலிக்கும் விடயம் தெரியாது. வருணிகா படிக்கும் பெண் என்பதால் சாத்விக் வெளியில் அவளை சந்தித்து பேசுவது கிடையாது .
ஆகவே ஷியாம் சுந்தருக்கு அந்த காதல் விடயம் தெரியாமல் போனது ..அவன் அருகில் வந்த தீபக் தயங்கி தயங்கி நிற்க
"என்ன சொல்லணுமோ சொல்லு தீபக் .."
என்றான் ஷியாம் சுந்தர் .
அதில் தைரியம் வரப்பெற்றவனாக "சார் அது வந்து... அந்த மதியழகி பொண்ணே விட்டுடலாமே.. அவளையும் பாக்கப் பாவமா இருக்கு ..
அதுவும் இல்லாம அவ அண்ணன் வேற மூணு நாளா இங்கேயும் அங்கேயும் அலஞ்சிக்கிட்டே இருக்காரு..." என கூறி முடித்தது தான் தாமதம்


"என்ன தீபக் எனக்கே அட்வைஸ் சொல்ற அளவுக்கு வளர்ந்துட்டியா?" என்றான் ஷியாம் சுந்தர் அவனை அழுத்தமாக பார்த்துக் கொண்டே .. அவனது பார்வையில் தீபக்கிற்கே பயம் வந்து விட்டது..


அவனை பகைத்துக் கொள்ள முடியாது என்பதை அறிந்தவன் "சாரி சார்..'
என்று மன்னிப்பும் கேட்டுக் கொண்டான்..
மனதில் மதியழகியை நினைத்து வருந்தத் தான் செய்தான்..அவனுக்கு தெரியாத பக்கமும் உண்டு அல்லவா.. அது தெரிந்தால் இதயமே வெடித்து விடும் தீபக்கிற்கு..
ஒரு பெண்ணை இந்த அளவு கஷ்டப் படுத்துவான் என்பதை அவன் எதிர்பார்த்து இருக்கவில்லை.


அன்று மாலை அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு சென்றவன் தூரத்தில் நின்ற சாத்விக்கின் பைக்கை கண்டு கொண்டான். ஆனால் எதையும் காட்டிக் கொள்ளாமல் வீட்டின் உள்ளே நுழைந்து விட்டான்... அவனை கண்டதும் நாய்கள் இரண்டும் அவனைச் சுற்றி குறைத்தபடி இருந்தன.. அதன் தலையை வருடி கொடுத்தவன் உள்ளே செல்ல நாய்களின் சத்தத்தில் வெளியே வந்த மதியழகி மீது மோதி நின்றான்.அவனது வேகத்தில் சற்று தள்ளி விழப் போனவளை தாங்கிப் பிடித்தவன் வேண்டும் என்றே அவளை இடையோடு சேர்த்து இறுக்கிக் கொண்டவன் அவளது காதருகே குனிந்து
" என்ன மதி ...அழகி இந்த மூணு நாளும் நான் இல்லாமல் ரொம்ப கஷ்டமாயிடுச்சு போல.. இன்னைக்கு ராத்திரி அந்த ஏக்கத்தை தீர்த்து வச்சிடுறேன்.." என்று கூறியதும் அவனை தள்ளி விட்டு வேகமாக விலகி நின்றாள் மதியழகி.


இப்போது அவளது கால் நன்றாக இருந்தது. காய்ச்சலும் குணமாகி விட்டது.
எனவே உடலில் சற்று தெம்பு கூடி இருந்தது அவளுக்கு.
அவளை கேளியாக பார்த்தவன்
" நீ ஆசைப்பட்டாலும் இல்லனாலும் இன்னைக்கு என் ரூமுக்கு வந்தே ஆகணும் புரிஞ்சுதா ..?
என்னால திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு இருக்க முடியாது.."
என்று கூறியவன் இரண்டு அடி எடுத்து வைத்து விட்டு மீண்டும் அவளிடம் திரும்பி வந்து


" அப்புறம் ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன் பாரு... உன்னோட ஆசை அண்ணா.. அதான் சாத்விக் உன்னை தேடி இங்கேயே வந்துட்டான்...
அவ்ளோ பாசமோ சித்தப்பா பொண்ணு மேல.."
என இரு புருவங்களையும் ஏற்றி இறக்கி அவன் கேட்க கண்களில் ஆனந்த கண்ணீர் தோன்றியது மதிக்கு..அவள் நினைத்ததை போல அவளது அண்ணன் அவளை தேடி வந்து விட்டான்.
'ஆனால் இந்த கோட்டையையும் இவனையும் தாண்டி எப்படி வந்து தன்னைக் கூட்டி செல்வான்' என்ற எண்ணம் தோன்ற முகம் கூம்பி விட்டது அவளுக்கு ..அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவன் அவளது எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்டவன் போல்
"நீ நினைக்கிறது சரி.. என்னை தாண்டி இங்கே வந்து உன்னை கூட்டிட்டு போக அவனால முடியாது.. சோ வீணா கற்பனை எதுவும் பண்ணாம இருக்கிற வேலையை பாரு..."
என அவளது கன்னத்தில் தட்டி விட்டு உள்ளே சென்று விட்டான்.


சோர்ந்து போனவளாக அப்படியே தொப்பென்று அமர்ந்து விட்டாள் மதியழகி .
அண்ணனும் கனகாவும் எத்தனை நாட்களாக இப்படி அலைகிறார்களோ என்று நினைக்கையிலே கண்களில் கண்ணீரும் வந்தது.


ஒரு ஃபோன் போட்டாவது கூறலாம் என்றால் அந்த பெரிய வீட்டில் ஒரு ஃபோனும் இருக்கவில்லை.. அன்பு செல்வனின் பேச்சைக் கேட்டு இங்கு வந்த தனது மடத்தனத்தை எண்ணி இப்போதும் கண்ணீர் வந்தது அவளுக்கு. அவளது வாழ்க்கை மொத்தமாக அழிந்து விட்டது இப்போது..


இதற்கு மேல் என்ன இருக்கிறது அவளது வாழ்க்கையில் ..
பெருமூச்சு விட்டுக் கொண்டவள் எழுந்து சமையலறை நோக்கி சென்றாள்.
அன்றைய இரவும் அவன் சொன்னது போல் தான் நடந்தது. இரண்டு மூன்று நாள் நிம்மதியாக இருந்தவள் மீண்டும் அதே நரக வேதனையை அனுபவித்தாள்.


காலை எப்போதும் போல் அவள் தலையணைக்கு பக்கத்தில் பணம் இருந்தது..
அவளும் எப்போதும் போல அதை எடுக்காமல் சென்று விட்டாள் ‌. சிறிது நேரத்தில் அவளை தேடி வந்த ஷியாம் சுந்தர்
"மதி.. அழகி"
என்று அழுத்தமாக அழைக்க அவளோ திடுக்கட்டு திரும்பி அவனைப் பார்த்தாள்.. இன்று அவளை அவன் தேடி வரவும் எதுவும் விபரீதமாக நடந்து விடுமோ என பயந்து தான் போனாள் அவள்.

"ஆமா நேத்து கேட்கவே மறந்துட்டேன் ..
உன்னோட அண்ணன் எப்படி கரெக்டா இங்கே தேடி வந்தான்..
நீ ஏதாவது தகவல் சொன்னியா?"
என்று அவன் அவளை கூர்ந்து பார்த்துக் கொண்டே கேட்க பதறி விட்டாள் அவள் ..

"ஐயோ இல்லை ..நான் எதுவுமே சொல்லல.. சொல்றதுக்கு இங்கே வழியும் இல்லை.." என்று பதறியபடி கூற தனது தாடையை தடவியவன்
" நம்புற மாதிரி இல்லையே.. பேசாமல் உன்னோட அண்ணனை தூக்கிடலாம்னு இருக்கேன்.. என்று சர்வ சாதாரணமாக கூறி விட்டு வில்லத்தனமாக சிரிக்க உயிரே நின்றது போல் ஒரு உணர்வு மதிக்கு..


' தன்னை தேடி வந்ததற்காக அண்ணனின் உயிர் அநாவசயமாக போக வேண்டுமா ?'
தனது உயிரை கொடுத்தாவது அண்ணனை காப்பாற்ற எண்ணியவள் பட்டென்று அவன் காலில் விழுந்து விட்டாள்.


"ப்ளீஸ் சார் அவரை விட்டுடுங்க.. பாவம் சார் அவர் ..எனக்கு என்ன இருக்கிற ஒரே ஒரு உறவு அவர் மட்டும் தான்.. ப்ளீஸ் ..ப்ளீஸ்.. வேணும்னா என்..என்னோட உயிரை எடுத்துக்கோங்க.. அவரை விட்டுடுங்க.." என்று அவனது காலை பிடித்த படி கண்ணீர் விட்டு கதறினாள் அந்த பேதை பெண்.


"வாவ் சூப்பரா கெஞ்சுற..
ஆனா பாரு எனக்கு உங்க அண்ணன் போடுற ஐடியாவே இல்லை ..
சும்மா நீ என்கிட்ட இப்படி கெஞ்சுறதை பாக்கணும்னு ரொம்ப ஆசையா இருந்துச்சு..
எனக்கும் ஒரு என்டர்டைன்மென்ட் வேணும்ல.. அதான்.. இப்ப ரொம்ப திருப்தியா இருக்கு.."
என்று சோம்பல் முறித்தபடி கூறியவன்

தனது காலை நனைத்து இருந்த அவளது கண்ணீர் துளிகளை பார்த்த படியே கண்கள் பளபளக்க நின்று இருந்தான்.
அவன் 'சாத்விக்கை எதுவும் செய்யமாட்டேன் '
என்று கூறியது மனதுக்கு இதம் அளிக்க அப்படியே தொப்பென்று தரையிலேயே அமர்ந்து கொண்டாள் அவள்.


அவனோ திருப்தியாக புன்னகைத்துக் கொண்டவன் விசில் அடித்த படியே அங்கிருந்து அகன்றான்..
'அவளுக்கு எல்லாம் யாரோ ஒரு சிறு குழந்தை அழுதாலே மனது வலிக்கும்.. இவனோ வேண்டும் என்றே ஒருவரை அழ வைத்து அதை பார்த்து ரசிக்கிறானே.. எத்தனை அரக்க குணம் படைத்தவனாக இருக்க வேண்டும் இவன் '
என மனதில் தான் நினைத்துக் கொண்டாள். அதை வெளியில் கூறி அவனிடம் அதற்கும் யார் வாங்கி கட்டிக் கொள்வது..அன்றைய நாள் இரவு தனது தேவையை முடித்துக் கொண்டு அவன் தூங்கிய பிறகு அவன் நன்றாக உறங்கி விட்டதை உறுதி செய்து கொண்டவள் மெல்ல சத்தம் வராமல் எழுந்து தனது ஆடைகளை சரி செய்து கொண்டு மீண்டும் ஒருமுறை அவனை பார்த்தாள். ஆனால் அவன் நன்றாக உறங்கிக் கொண்டு இருப்பது அவனது சீரான மூச்சிலேயே தெரிந்தது..


மெல்ல அறை கதவை திறந்தவள்
இன்று அண்ணனுக்காக தப்பி சென்று விட முடிவெடுத்து வெளியே வந்தாள். முன் வாசலில் தானே நாய்கள் இருக்கும் என்பதால் சத்தம் வராமல் வீட்டின் பின் கதவை திறந்து வெளியேறினாள்.


முன்பு இப்படி தப்பிச் செல்ல அவளுக்கு பயம் .
தப்பித்து விட்டாலும் எங்கே செல்வது என்று கூட தெரியாத நிலை .
ஆனால் இன்று தனக்காக இந்த இடத்துக்கு அண்ணன் வந்து இருக்கிறான் என்று அறிந்ததிலிருந்து தப்பி சென்று விட்டால் போதும்.. அனைத்தையும் அண்ணன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையோடு வெளியே சென்று விட்டாள்.


சிறிதேனும் சத்தம் கேட்டு விட்டால் நாய்கள் இரண்டும் வந்து விடும் என்பதை அறிந்தவள் மெல்ல நடந்து சென்று பின்பக்கம் மதில் சுவரை அடைந்தாள். ஆனால் அந்த உயரமான மதில் சுவரை எப்படி கடந்து மற்றைய பக்கம் செல்வது என்று தான் அவளுக்கு தெரியவில்லை..

உடலில் பலம் இல்லாத போதும் மனதில் உறுதியுடன் தான் இருந்தாள் இப்போது அவள்.
தனக்காக சாத்விக் வந்து இருக்கிறான் என்ற வசனமே அவளது இந்த உறுதிக்கு காரணம்.


அவளது கண்களுக்கு அங்கு இருந்த உடைந்து போன பழைய இருக்கை ஒன்று தென்பட வேகமாக அதன் அருகே சென்றவள் அதில் கைவைத்த நேரம் 'தட் ..தட்..'
என்று சத்தம் கேட்க தலை உயர்த்தி சத்தம் வந்த திசையை பார்த்தாள்.


அங்கே தனக்கே உரிய வேக நடையுடன் கம்பீரமாக அவளை நோக்கி வந்து கொண்டே இருந்தான் ஷியாம் சுந்தர். அவனை கண்டதும்
'இப்போதே இந்த உலகம் அழிந்து விடக் கூடாதா?'
என்பது தான் அவளது மனம் நினைத்தது..


என்ன செய்வது என தெரியாமல் பயத்துடன் நடுங்கும் கைகளை இறுக்க பிடித்துக் கொண்டு நின்று இருந்தாள் அவள்.

"என்ன தப்பிச்சு போக பிளானா?
இத்தனை நாள் இல்லாம இன்னைக்கு தான் போக தோனிச்சோ.."
என்று நக்கலாக கேட்டபடி அவளை வந்தடைந்தான் ஷியாம் சுந்தர்.. அப்போதும் பேசாமல் இருந்தவள் உடல் பயத்தில் நடுங்கியது..


"அண்ணன் வந்ததால தைரியம் வந்துடுச்சாக்கும்.."
கேள்வியை கேட்டவனே பதிலையும் சொன்னான். அது தானே உண்மையும் கூட. அப்போது தான் சுயநினைவு வந்தவளாக எப்படியாவது இன்றே தப்பித்து சென்று விட வேண்டும் என நினைத்தவள் ஓட முற்பட இரண்டே எட்டில் அவளை பிடித்து தூக்கி தனது தோளில் போட்டுக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தான்..


" பிளீஸ் சார் என்னை விட்டுடுங்க.. இனிமே உங்க பக்கமே வரமாட்டேன்.."
என்று கை கூப்பிய படி கெஞ்சிக் கொண்டு இருந்தவளது கூற்றை சிறிதளவேனும் அவன் மதிக்கவில்லை .
இதற்கும் தண்டனை தருவானே என மனம் அடித்துக் கொண்டே இருந்தது மதியழகிக்கு.


"அம்மா காப்பாத்துமா.."
என சத்தமாகவே அன்னையிடம் வானத்தை பார்த்து கூறினாள் அவள். ஆனால் அந்த வானமோ நிர்மலமாக இருந்தது. அவனது இதழ்கள் அவளது கூற்றில் கேலியாக வளைந்தாலும் கண்களில் கோபம் கொழுந்து விட்டு எரிந்தது .ஒரு பெண் தன்னையே ஏமாற்றி சென்ற கோபம் அது.

தொடரும்....


 

Mafa97

Moderator

அத்தியாயம் 💔 14தோளில் கிடந்தவளை சமையலறைக்கு தூக்கிக் கொண்டு வந்தவன் தொப்பென்று கீழே போட்டு விட்டான் . அவன் போட்ட வேகத்தில் தரையில் வந்து விழுந்தவளுக்கு வலி உயிர் போனது.
" அம்மா.."
என்று வாய் விட்டே சத்தம் போட்டாள் பெண்ணவள்.


அவனோ அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அங்கே இருந்த கேஸ் அடுப்பை பற்ற வைத்தவன் அருகில் இருந்த ஒரு கத்தியை கையில் எடுத்து நெருப்பில் பிடித்து சூடு படுத்தினான்.
அதனை கண்டவளுக்கு எழுந்து ஓடவும் முடியாமல் அவன் கீழே போட்டதில் உடல் வலித்தது.


நன்றாக அந்த கத்தியை சூடு படுத்தியவன் அதனை எடுத்துக் கொண்டு வந்து அவள் முன்னே குனிந்து அவளது காலை பற்றினான். அவள் கால்களை இழுத்துக் கொள்ள போராட அதையெல்லாம் புறம் தள்ளியவன் அவளது காலை இருக்க பிடித்து "இந்த கால் தானே தப்பிச்சு போக பார்த்தது.."
என்று கூறிய படியே சூடாக்கிய கத்தியை அவளது இரண்டு உள்ளங்கால்களிலும் வைத்து இழுத்தான்.


"ஐயோ அம்மா.." என்று அவள் கத்தியது வெளியே நின்று இருந்த வாட்ச்மேனுக்கும் கேட்டு இருக்கும். அவன் கத்தியை இழுத்த வேகத்தில் அதன் வெட்டு முனையினால் கால் வெட்டுப் பட்டு இரத்தமும் கசிந்தது.
ஒரு பக்கம் சூட்டு புண் மற்றைய பக்கம் வெட்டு காயம் என்று அந்த வலியை அவளால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை.

" இனிமே இப்படி தப்பிச்சு போக எந்த பிளானும் போடக் கூடாது ரைட்.."
என்று அவளது கன்னத்தை தட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டான் அவன்.
உயிர் போகும் வலியை உணர்ந்த போதும் சொல்லி அழக்கூட யாரும் இல்லாத நிலை தான் அவளுக்கு.அழுதழுது தூங்கி விட்டு இருந்தாள் தன்னையும் அறியாமல். விடிந்த பின்னும் அவளால் எழ முடியாமல் போகவே அப்படியே தரையிலேயே படுத்துக் கொண்டாள். காலை கீழே வைக்கவே முடியாதவாறு காயம் இருந்தது .
அன்று உணவு சமைக்கவும் இல்லை அவள்.. வீட்டு வேலை செய்யவும் இல்லை..


நேரம் கடந்த போதும் அவனது சத்தம் அன்று அவளது காதில் கேட்கவே இல்லை .
காலில் உள்ள காயத்துக்கு ஏதாவது முதல் உதவி செய்ய வேண்டும் ..
இல்லை என்றால் அது இன்னுமே ஆபத்தாக மாறிவிடும் என்பதால் கையை பூமியில் ஊன்றி மெதுவாக எழுந்து நிற்க அது முடியாமல் போகவே சட்டென்று சமையல் கட்டை பிடித்துக் கொண்டாள்.


காலை முழுதாக பூமியில் வைக்க முடியாத காரணத்தால் காலின் பின் பகுதியை வைத்து
சமையல் கட்டை பிடித்தபடி நடந்து சென்று அன்று தீபக் வாங்கி கொடுத்து இருந்த மருந்தை எடுத்துக் கொண்டு வந்து மறந்திட்டு கட்டும் போட்டு கொண்டாள்.


வலி தெரியாமல் இருக்க அன்று அவன் கொடுத்த 'பெயின் கில்லர்' டேப்லட்டையும் பருகியவள் மீண்டும் தூங்கிப் போனாள். தரையில் கையை தலைக்கு கொடுத்து காலை குறுகிக் கொண்டு படுத்திருந்தவளை பார்க்கவே பரிதாபமாக இருந்தது..


மாலை நேரம் வீட்டுக்கு வந்தவன் அவளை தேட அவன் நேற்று விட்டுப் போன இடத்திலேயே தான் தூங்கிக் கொண்டு இருந்தாள். ஆனால் ஒரு மாற்றமாக காலுக்கு மருந்திட்டு கட்டு போட்டு இருந்தாள்.

அவளை பார்க்கையில் கோபம் பெறுக
"ஏய்"
என்று கர்ஜனையாக அவளை எழுப்பினான். அவனது சத்தத்தில் பயந்தவள் திடுக்கிட்டு எழுந்து அமர அதற்கு கூட அவளது உடல் ஒத்துழைக்கவில்லை..

நேற்று இரவு உண்டதற்கு பிறகு இப்போது வரை எதுவும் உண்ணவில்லை.
மருந்து சாப்பிடும் போது சிறிதளவு நீர் பருகியது மட்டுமே.
" என்ன நிம்மதியா தூங்குறியா?
இன்னைக்கு காலையில , பகல் ரெண்டு நேரமுமே சமைக்கல.. இப்போவாவது எழுந்து சமைக்கிற வழியை பாரு.."
என்றவன் மீண்டும் அவளைப் பார்த்து திரும்பி
" இப்போ சீக்கிரமா காபி போட்டு எடுத்துட்டு வா.."
என கூறி விட்டு சென்று விட்டான்.


அவன் சொன்னதை செய்யவில்லை என்றால் அதற்கும் ஏதாவது செய்து விடுவான் என்பதை அறிந்தவள் மெல்ல எழுந்து வலிக்கும் கால்களை மிகவும் சிரமப்பட்டு நகர்த்தி அவன் கேட்ட படியே அவனுக்காக காபி போட்டு எடுத்துக் கொண்டு சுவற்றை பிடித்தபடி மெல்ல மெல்ல நடந்து ஹாலுக்கு வந்து சேர்ந்தாள்..


அங்கு உள்ள சோபாவில் அமர்ந்து ஏதோ பைல்களை பார்த்துக் கொண்டே இருந்தான் அவன்.
அவனது அருகே மெல்ல நடந்து வந்தவளுக்கு சாப்பிடாத காரணத்தால் தலை சுற்ற காலை நிலத்தில் ஊன்றி நிற்க முற்படும் போது காலில் உள்ள காயத்தினால் அதுவும் முடியாமல் போகவே தடுமாறி விழுந்து விட்டாள்..அதனால் கையில் இருந்த காபி அங்கு மேசையில் இருந்த பைல்களின் மேல் சிந்தியது. அப்போது தான் உள்ளே வந்து கொண்டு இருந்த தீபக் கண்களில் இந்த காட்சி பட வேகமாக இருவரின் அருகேயும் ஓடி வந்தான்.

அவன் வருவதற்கு முன்பே கோபத்தில் இருந்த ஷியாம் சுந்தர் பைல்களை பார்க்க அதுவோ காபியின் உபயோகத்தால் மொத்தமாக நனைந்து வெள்ளைத் தாள்களில் காபி கரையும் பட்டு இருந்தது.


அதை பார்த்ததும் மேலும் கோபம் பெருக விழுந்து கிடந்தவள் அருகே வந்து அவளது தலை முடியை பற்றி தூக்கி நிறுத்தினான்.
ஆனால் அவளால் நிற்க கூட முடியவில்லை .
மயக்க நிலைக்கு சென்று கொண்டு இருந்தாள் அவள்.

" எவ்ளோ முக்கியமான ஃபைல் தெரியுமா இது..? இப்படி பண்ணிட்ட இடியட்.."
என்றவன் அவளது கன்னத்தில் ஓங்கி அரைய தூரச் சென்று அப்படியே தரையில் விழுந்தாள் சுயநினைவு இல்லாமல்.
அதை உணராது கோபத்தில் இருந்தவன் மேலும் அவளை அடிக்க முற்பட
"ஐயோ சார் .."
என்றபடி ஓடி வந்து அவனைப் பிடித்துக் கொண்டான் தீபக் ..

"விடுடா என்னை.."
என்று தீபக்கை உதறி தள்ளியவன் அருகில் இருந்த சோபாவில் காலால் உதைத்து தனது கோபத்தை கட்டுப்படுத்த முயன்றான்.
அவனை அப்படியே விட்டுவிட்டு வேகமாக கீழே மயங்கி கிடக்கும் மதியழகியிடம் ஓடிச் சென்று "மதியழகி.
மதியழகி..."
என்று அவளது கன்னத்தில் தட்ட எந்த அசைவும் இல்லை அவளிடம்.


அதன் பிறகு ஒரு நொடி கூட தாமதிக்காமல் ஓடிச் சென்று தண்ணீர் எடுத்து வந்தவன் முகத்தில் தெளித்தும் அவள் கண் விழிக்காத காரணத்தால் மெல்ல தலையை உயர்த்தி
"சார் கண்விழிக்கவே மாட்டேங்குறா.. என்ன பண்றது?"
என்றான் ஷியாம் சுந்தரிடம்.


அவனோ இருந்த கோபத்தில் இது வேற என நினைத்தவன்
"விடு செத்து தொலையட்டும்.."
என்று பட்டென கூறி விட்டான்.
' ஒரு பெண்ணை அடித்தே மயக்கம் போட வைத்து விட்டு அவள் சாகட்டும் என்றும் கூறுகிறானே'
என்று தீபத்திற்கு கோபமாக வந்தது.
ஆனாலும் வெளியே காட்ட முடியாதே ..அவனது முதலாளி ஆயிற்றே ..

அதனால் "சார் ப்ளீஸ்.. ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போகலாம்.."
என்று இப்போது மதியழகிக்காக தனது முதலாளியிடம் கெஞ்சியே விட்டான் அவன்.
அன்று அவள்
' அண்ணா '
என்று வேறு அழைத்தது இப்போது நினைவுக்கு வந்து கண்கள் கலங்கியது அவனுக்கு.


தீபக் கேட்டதாலோ என்னவோ
"சரி கூட்டிட்டு போ ..ஆனா சீக்கிரம் திரும்பி வந்துடனும்.."
என்று கூறியவன் தனது வேலைகளை பார்க்க ஆரம்பித்து விட்டான் .
அங்கிருந்து மதியழகியை கைகளில் ஏந்திக்கொண்ட தீபக் வேகமாக ஓடி சென்று அருகே இருந்த அவனது காரின் முன் இருக்கையில் கிடத்தினான்.


அப்போது தான் அவளது இரண்டு கால்களிலும் போடப்பட்டு இருந்த கட்டையும் கண்டான் அவன். ஆனால் அதை ஆராய இப்போது நேரம் இல்லாததை உணர்ந்தவன் டிரைவர் சீட்டில் அமர்ந்து காரை இயக்கிக் கொண்டு மருத்துவமனை நோக்கி சென்றான்.

எப்போதும் போல் இன்றும் தனது தங்கை இங்காவது இருக்கிறாளா இல்லை அவளைப் பற்றி ஏதாவது ஒரு செய்தி கிடைத்து விடாதா என்று நோட்டம் விட வந்து இருந்த சாத்விக்கின் கண்களில் தீபக்குடன் முன் இருக்கையில் அமர்ந்து செல்லும் தங்கை கண்ணில் பட அந்த காரை பின் தொடர்ந்து சென்றான் மதி கிடைத்து விட்ட திருப்தியோடு..


அவளை முன்னிருக்கையில் அமர்த்தி சீட்பெல்ட் போட்டு விட்டு இருந்ததால் தூரத்தில் இருந்த சாத்விக்கின் கண்களுக்கு அவள் அவனுடன் அமர்ந்து செல்வது போலவே தெரிந்தது.. தீபக்கிற்கும் இருந்த பதட்டத்தில் சாத்விக் பின்னால் வருவதை கவனிக்கவில்லை..

மருத்துவமனை அருகே சென்றதும் தீபக் அவளை மீண்டும் கைகளில் ஏந்தி கொண்டு மருத்துவர்களை அழைத்த படியே சென்றான். அவனுக்கு அத்தனை பதட்டம். அண்ணா என வாய் வார்த்தையால் கூறியவளை தங்கையாகவே எண்ணினான் அவன் .

அவனை வெளியே இருக்க சொல்லி விட்டு மருத்துவர் அவளை பரிசோதித்தார்.. சிறிது நேரம் கழித்து வெளியே வந்த நர்ஸ் ஒருவர் அங்கு இருந்த தீபக்கை பார்த்து
"சார் நீங்க தான் அந்த பொண்ணோட ஹஸ்பெண்டா?" என்று கேட்க அதிர்ந்து நின்ற தீபக்கின் வாயில் இருந்து "ஹஸ்பண்டா?"
என்ற வார்த்தை மட்டுமே மெல்ல ஒலித்தது.


" சீக்கிரமா போய் அந்த பொண்ணுக்கு போட்டுக்க ஒரு நல்ல துணி எடுத்துட்டு வாங்க.. கல்யாணம் பண்ணா மட்டும் போதாது. அவளை நல்லா வச்சு பாத்துக்கவும் தெரியனும்.. போங்க சார்."
என்று கோபமாக அந்த நர்ஸ் கத்தி விட்டு செல்ல அவனுக்கோ அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி தான்..


ஆனாலும் அவள் கூறியதை செய்ய வேண்டும் என்ற நினைவு தோன்ற ஷியாம் சுந்தருக்கு அழைத்தான் இப்போது..
அவனது அழைப்பை ஷியாம் சுந்தர் ஏற்றதும்
"சார் அந்த பொண்ணோட டிரஸ் கேக்குறாங்க .."
என்றான் தயக்கமாக .
அவன் ஏதாவது சொல்லி விடுவானோ என்ற தயக்கம் இருக்கத் தான் செய்தது தீபக்கிற்கு.


அவன் நினைத்ததை போலவே அந்தப் பக்கம் இருந்தவனும்
"டேய் டிரஸ் எல்லாம் எங்க இருக்குன்னு என்கிட்ட கேட்டுட்டு இருக்க .
வாயில நல்லா வந்துடும்.. நீ என்ன வேணா பண்ணிக்கோ.." என்று சத்தம் போட இங்கு இவனுக்கோ
"ஏன் தான் அவனிடம் கேட்டோம்?' என்று இருந்தது.

" சார் அப்படின்னா கடையில போய் வாங்கிட்டு வரவா?"
என மீண்டும் தயக்கமாக இழுக்க "ஏதாவது செஞ்சு தொலை. என்னை தொந்தரவு பண்ணாத.." என கூறியவன் பட்டென்று அழைப்பை துண்டித்து விட்டான் அவன் .

'இவர் கிட்ட கேட்டது என்னோட தப்பு தான்.
நானே கடைக்கு போய் வாங்கிக்கிறேன்..'
என தனக்குத் தானே கூறி விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டான் தீபக்.


இவன் எப்போதடா செல்வான் என்று சற்று தொலைவில் இருந்து இதுவரை பார்த்துக் கொண்டு இருந்த சாத்விக் வேகமாக அங்கு வந்து சேர்ந்தான்.


அப்போது தான் உள்ளே இருந்த மதியழகியும் மெல்ல கண் விழித்தாள்.
அவளது நாசியில் மருந்தின் நெடி நுழையவும் சுற்றும் மற்றும் பார்த்தாள் அவள்
'இது எந்த இடம்?'
என்பதை போல் .

சில நொடிகளுக்கு பின்னே தான் அவள் இருக்கும் இடம் மருத்துவமனை என்பதே புரிந்தது அவளுக்கு.
அப்போது அவள் அருகே வந்த அந்த நர்ஸ்

" எப்படிமா இருக்க.. மாசமா இருக்கிற பொண்ணு இப்படியா சாப்பிடாம இருக்கிறது.
உள்ளே இருக்கிற குழந்தை அம்மா பாத்துப்பாங்க என்ற நம்பிக்கையில தானே நிம்மதியா இருக்கு.."
என அவர் பாட்டுக்கு மதியை அன்பாக கடிந்து கொள்ள மதியழகிக்கோ இப்போது உலகமே சுழலாமல் நின்று விட்டது போல் ஒரு உணர்வு தான் ..


'நான் அம்மாவாக போறேனா?
என்னோட வயித்துல குழந்தையா?'
என நம்ப முடியாமல் தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டாள்.
தாய்மை என்பது ஒரு வரம் தானே. அது அவளுக்கும் இப்போது கிடைத்து விட்டது. இதுவரை மொத்த வாழ்க்கையுமே அழிந்தது என நினைத்துக் கொண்டு இருந்தவளுக்கு வாழ்க்கையின் பற்றுக் கோளாக ஒரு குழந்தை கிடைத்ததை நினைத்து மகிழ்ச்சி தான்..

எனவே அதை உறுதிப் படுத்திக் கொள்ள எண்ணியவள் அந்த நட்ஸிடம் கேள்வி கேட்க வாயை திறக்கையில் அனுமதி கூட கேட்காது அந்த அறை கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் சாத்விக். அவனை கண்டதும் ஆனந்த கண்ணீருடன் "அண்ணா.." என்றபடி எழுந்து நிற்க முயற்சி செய்தாள் மதியழகி.

அவசரமாக தங்களிடம் சென்றவன் "ஐயோ என்னம்மா ..அப்படியே இரு அண்ணா வரேன்.."
என்றபடி அவளை மீண்டும் கட்டிலில் அமர வைத்தான். உண்மையில் அவன் தங்கையை அழைத்துச் சென்ற கார் ஹாஸ்பிடலுக்கு வந்த போது நன்றாகவே பயந்து விட்டான்.

அவளுக்கு என்ன ஆனதோ என்று மனது கிடந்து அடித்துக் கொண்டே இருந்தது. இப்போது அவளை கண்டதும் தான் நிம்மதியாக இருந்தது அவனுக்கு.
" ஹலோ யாரு சார் நீங்க திடீர்னு உள்ளே வரீங்க.. இந்த பொண்ணோட புருஷன் ஏ
எங்க?"
என அந்த நர்ஸ் கேட்க அவசரமாக தங்கையின் முகம் பார்த்தான்..

அவளோ என்ன சொல்வது என்று தெரியாமல் கீழே பார்த்தபடி இருந்தாள். அவளுக்கு தீபக் தான் தன்னை இங்கு அழைத்து வந்தான் என்ற விடயம் தெரியாது. அவள் ஷியாம் சுந்தரை தான் கூறுகிறாள் என நினைத்துக் கொண்டாள் மதியழகி.

" சாரி சிஸ்டர் நான் என் தங்கச்சி கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்.." என்று சாத்விக் கேட்டிட அவளும் இருவருக்கும் தனிமை கொடுத்து விட்டு வெளியே சென்று விட்டாள்.


தொடரும்..

 

Mafa97

Moderator
அத்தியாயம் 💔 15


அந்த அறையை விட்டு நர்ஸ் வெளியே சென்றதை உறுதிப் படுத்திக் கொண்ட சாத்விக் தங்கையின் பக்கம் நிதானமாக திரும்பி
"என்ன ஆச்சு ?
எதையுமே மறைக்காம என்கிட்ட சொல்லணும்.."
என்று கூறிட சிறிது நேரம் தயங்கியவள் அன்பு செல்வன் இங்கு அவளை அனுப்பியதில் இருந்து இன்று நடந்தது வரை கூறி விட்டாள்.

அண்ணனிடம் எதையும் மறைக்கும் எண்ணம் இருக்கவில்லை அவளுக்கு. காரணம் வயிற்றில் வளரும் குழந்தை .
அவள் சிலவற்றை மறைத்துக் கூறினால் குழந்தையின் தந்தை யார் என்ற கேள்வி வருமே.. அதனால் தான் ஒன்று விடாமல் அனைத்தையும் கூறி விட்டாள்.
இந்தக் குழந்தையை அண்ணன் எப்படி ஏற்றுக் கொள்வானோ என்ற பயம் அவளுல் இருக்கத் தான் செய்தது.. ஆனாலும் அண்ணனிடம் சொல்லியே ஆக வேண்டிய கட்டாயம் அவளுக்கு இப்போது..

சாத்விக்கின் கோபத்தை வார்த்தைகளால் சொல்லி விட முடியாது .
"எவ்வளவு தைரியம் இருக்கணும் அவனுக்கு.. அவனை என்ன பண்றேன்னு பாரு.."
என கோபமாக அங்கிருந்து எழுந்து செல்ல போனவனின் கையைப் பிடித்து தடுத்த மதியழகி

"அண்ணா நீ நினைக்கிற மாதிரி அவர் சாதாரணமானவர் இல்லை. ப்ளீஸ் இப்படியே என்னை இங்கிருந்து கூட்டிட்டு போயிடு.. அவரோட போராட எங்க கிட்ட எதுவும் இல்லை ..
அவரை விட்டு என்னை தூரமா கூட்டிட்டு போ.. இனிமேல் எனக்கு இந்த குழந்தை மட்டும் போதும்.."
என்று பலவீனமான குரலில் கூற கோபம் உள்ளுக்குள் இருந்தாலும் இப்போது மதி சொல்வதை செய்வதே புத்திசாலித்தனம் என்று தோன்றியது அவனுக்கு.


இருந்தும் ஷியாம் சுந்தர் மேல் கட்டுக்கடங்காத கோபம் இருக்கவே செய்தது ஒரு அண்ணனாக .
"சரி வா போகலாம்.."
என்று அவளை அழைத்தவன் முன்னே நடக்க
"அண்ணா என்னால நடக்கக் கூட முடியல .."
என மெல்லிய குரலில் அவனை தடுத்து நிறுத்தினாள் மதியழகி.


அப்போது தான் தங்கையின் காலில் நேற்று அவன் சூடு போட்டதாக அவள் கூறியது நினைவு வந்து போனது.
திரும்பி அவள் அருகே வந்தவன் "அவன் கட்டுன தாலியை கழட்டி வச்சிட்டு என் தங்கச்சியா என் கூட வா.. ஒரு அண்ணனா உன்னை எப்பவுமே நல்லா பாத்துப்பேன்.."
என உறுதியான குரலில் கூற சற்றும் யோசிக்காமல் அவன் கூறியதை செய்தாள் பெண்ணவள்.


அப்போது உள்ளே வந்த நட்ஸிடம் கையில் இருந்த தாலியை மதி நீட்ட அவளோ இருவரையும் அதிர்ச்சியுடன் மாறி மாறி பார்த்தாள்.

" இதை இப்போ உள்ளே வர்றவன் கிட்ட கொடுத்துடுங்க. அவன் போய் இந்த தாலியை கட்டுனவன் கிட்ட கொடுப்பான்..
நீங்களும் ஒரு பொண்ணு தானே இந்த உதவியை மட்டும் செய்ங்க ப்ளீஸ் .."
என அந்த நர்ஸகன் பார்வையை உணர்ந்து சாத்விக் கூற கையை நீட்டி அந்த தாலியை வாங்கிக் கொண்டாள் அந்த நர்ஸ்.

அவளுக்கு மதியின் நிலை நன்றாகவே புரிந்தது. அதற்காக தானே வெளியே நின்ற தீபக்கையும் திட்டினாள்.
இப்போது தீபக் மதியின் கணவன் இல்லை என்பது அவளுக்கு புரிந்தது. அப்போது தான் மதிக்கும் புரிந்தது ஷியாம் சுந்தர் இங்கு அவளை அழைத்து வரவில்லை என்று .

அவன் இல்லை என்றால் தீபக்காக தான் இருக்கக் கூடும் என்பதையும் புரிந்து கொண்டாள் அவள்.
அதன் பிறகு ஒரு நொடி கூட தாமதிக்க விரும்பாமல் தங்கையை கைகளில் ஏந்தி கொண்டு அந்த மருத்துவமனையை விட்டு வெளியே வந்தவன் அங்கு நின்ற ஒரு ஆட்டோவில் ஏறி தான் தங்கி இருந்த அறைக்கு அழைத்துச் சென்றாள் .


முதலில் இங்கிருந்து செல்ல வேண்டும் என நினைத்தவன் அவளுக்கு உணவை வரவழைத்து ஊட்டி விடவும் செய்தான் .
அழுகை வந்தது மதிக்கு. அண்ணன் அந்த அரக்கனிடமிருந்து தன்னைக் காப்பாற்றி விட்டான் என்பதை அவளால் நம்பவே முடியவில்லை.

அன்று நிம்மதியாக தூங்கினாள் மதியழகி.
அண்ணன் அருகே இருக்கும் தைரியம் தான் அவளை நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆழ்ந்த தூக்கத்திற்கு கூட்டிச் சென்றது.

**********************

அங்கு மதியழகிக்கான உடையை தனக்கு தெரிந்த வகையில் எடுத்துக் கொண்டு அவளை அனுமதித்து இருந்த அறைக்குள் தீபக் நுழைய அந்த அறையில் இருக்கும் கட்டிலில் அந்த நர்ஸ் மட்டுமே அமர்ந்து இருந்தாள்.
சட்டென பதற்றம் தோன்ற
"ஹலோ என்னம்மா இது மதியழகி எங்கே? நீ இங்க உட்கார்ந்திட்டு இருக்க ..?"
என்று தீபக் அவசர அவசரமாக கேட்க எதுவும் பேசாமல் அவன் அருகே வந்தவள்


"இதை அவங்களோட புருஷன் கிட்ட கொடுக்கட்டுமாம்.
அப்புறம் அவங்க அண்ணன் வந்து கூட்டிட்டு போயிட்டாரு.."
என கூறி விட்டு தாலியை அவனது கையில் திணித்தவள் அங்கிருந்து நகர்ந்தாள்.
அவனுக்கு ஒரு புறம் மகிழ்ச்சியாக இருந்தது ..
அவள் ஷியாம் சுந்தரிடமிருந்து தப்பிச் சென்றது .


ஆனால் ஷியாம் சுந்தரை நினைக்கையில் பயமாகவும் இருந்தது.
கையில் இருந்த தாலியை புரியாமல் பார்த்தவன் அடுத்த நொடியே அங்கிருந்து கிளம்பிச் சென்றான் .

தன் முன்னால் வந்து நிற்கும் தீபக்கை கேள்வியாக பார்த்தாலும் அவனது கண்கள் வெளியே அவள் வருகிறாளா என்றும் ஆராய்ந்தன.
ஆனால் அப்படி எதுவும் அவனது கண்களுக்கு தென்படவில்லை.

"சார் அந்த பொண்ணு அவளோட அண்ணன் வந்து கூட்டிட்டு போயிட்டான். நான் டிரஸ் எடுக்க போன கேப்ல தான் வந்திருக்கான். அப்புறம் இதை அங்க இருந்த நர்ஸ்க்கிட்ட கொடுத்துட்டு போயிருக்காங்க .."
என விளக்கம் கூறியவன் கையில் இருந்தத தாலியையும் ஷியாம் சுந்தரிடம் நீட்டினான்.


தீபக் எதிர்பார்த்ததற்கு மாறாக கோபத்திற்கு பதில் அவனது முகத்தில் சிறு புன்னகை தோன்றி மறைந்தது.
"நான் நெனச்சது தான் நடந்திருக்கு அவன் இந்த வீட்டையும் என்னோட ஆபிஸையும் சுத்தி வரும் போதே என்னைக்காவது ஒரு நாள் அவனோட தங்கச்சியை கூட்டிட்டு போவான்னு எனக்கு நல்லாவே தெரியும்..
அதற்கான சந்தர்ப்பம் இப்போ கிடைக்கவும் கூட்டிட்டு போயிட்டான். போகட்டும் விடு.."என்று கூறிய ஷியாம் சுந்தர் தீபக்கிடம் இருந்து தாலியையும் வாங்கிக் கொண்டான்..
' இதை இவர் தான் அவ கழுத்தில கட்டினாரா? என்ன நடந்து இருக்கும்னே தெரியலையே.. ஒரே குழப்பமா இருக்கு..'
தலையை பிடித்துக் கொள்ளலாம் போல் இருந்தது தீபக்கிற்கு.


ஆனாலும் வெளியே கேட்கும் தைரியம் இல்லாததால் அமைதியாக இருந்து கொண்டான். ஷியாம் சுந்தருக்கு அவள் சென்றது கோபத்தையோ கவலையையோ கொடுக்கவில்லை போலும்.
தீபக் உடன் வேலைகளை பற்றி பேச தொடங்கி விட்டான் அவன். மதி கர்ப்பமாக இருப்பது தீபக்கிற்கு தெரியாத காரணத்தால் அது ஷியாம் சுந்தரிற்கும் தெரிவிக்கப் படவில்லை.

நேற்று தான் அவள் தப்பித்து செல்ல முயன்றாள் என்று அவளது கால்களில் சூடு வைத்தான். ஆனால் இன்று அவள் அண்ணன் மருத்துவமனையில் வைத்து தனக்குத் தெரியாமல் அவளை அழைத்துச் சென்றது அவனுக்கு கோபத்தை வரவழைக்கவில்லை போலும் .
அவனது மனம் விசித்திரமான ஒன்று தான் .அவன் என்ன நினைக்கிறான் என்று எதிரில் இருப்பவர்களுக்கு சிறிதளவேனும் தனது முகத்தில் காட்ட மாட்டான்.


***************

அடுத்த நாளே அங்கிருந்து தங்கையை அழைத்துக் கொண்டு சென்று விட்டான் சாத்விக்.
அவளை கண்டதும் தான் கனகாவிற்கு போன உயிர் வந்தது போன்று இருந்தது.
அலைபேசி மூலம் அனைத்தையும் கூறி இருந்தான் கனகாவிற்கு அவன்.

" அக்கா என்ன இது ..அது தான் நான் வந்துட்டேன்ல.."
என்று கனகாவை மதி தான் சமாதானப்படுத்த வேண்டியதாயிற்று.
"இல்லம்மா அவன் உன்னை.."என்று கனகா பேச ஆரம்பிக்கும் போது வேண்டாம் என்பது போல் சைகை செய்தான் சாத்விக்.


அதனால் கனகாவும் அத்துடன் பேச்சை நிறுத்திக் கொண்டார். அவளை ஒரு இருக்கையில் அமர வைத்த கனகா தானும் உடன் அமர்ந்து கொண்டார். அங்கு இருந்த இன்னொரு இருக்கையில் அமர்ந்த சாத்விக் இது தான் சரியான சந்தர்ப்பம் என்று எண்ணி தொண்டையை செறுமிக் கொண்டு பேச ஆரம்பித்தான்.

அவன் பேசப் போவதை மதி எவ்வாறு எடுத்துக் கொள்வாளோ என்ற பயம் அவனுக்கு.
அவனது சத்தத்தில் இருவரும் அவனைப் பார்க்க ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு
"உனக்கு இந்த குழந்தை வேணுமா மதி ?
உனக்கு கல்யாணம் பண்ணி வச்சு நீ சந்தோஷமா வாழ்றதை பார்க்க எங்களுக்கும் ஆசை இருக்கும் தானே..." எனக் ஒறுவாரு கூறி முடித்து விட்டான்..


மதிக்கு மட்டும் அல்ல இந்த விடயம் கனகாவிற்குமே அதிர்ச்சி தான். உலகத்தையே பார்க்காத ஒரு உயிரை அழிப்பது பாவமான காரியம் அல்லவா ..
முதலில் சுய உணர்விற்கு வந்த கனகா தான்
"தம்பி என்ன சொல்றீங்க ..அது ரொம்ப தப்பு..
நம்மள மாதிரி ஒரு உயிர் தானே அதுவும்..."
என கவலையோடு அவர் கூற அப்போது தான் உணர்வுக்கு வந்த மதியழகியின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது.

அவளது கண்ணீரை கண்டு மற்ற இருவருமே பதறிப் போய் விட்டனர்
"சாரி அண்ணா இது என்னோட குழந்தை ..
சிங்கிள் மதரா
இருந்து நான் வளர்ப்பேன் ..
இது என்னோட அம்மாவவோ அப்பாவவோ கூட இருக்கலாம். அவங்க இந்த பூமிக்கு வர்றதை தடுக்காத.." என்று உள்ளே சென்ற குரலில் மதி கூற சாத்விக்கிற்கு கண்கள் கலங்கி விட்டது.

அவர்களை அவனுக்கும் பிடிக்கும் அல்லவா.. அதன் பிறகு மறுப்பானா என்ன ?
அவனது முகத்தை பார்த்திருந்த மதி
"என்னோட வாழ்க்கையில கல்யாணம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை ..
ப்ளீஸ் இதை பத்தி பேசி என்னை காயப்படுத்தாத அண்ணா.."
என்றிட அவளது தலையை ஆதரவாக வருடி விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டான் அவன் .


அவன் சென்ற பிறகு அங்கு மௌனமே நிலவியது.
சிறிது நேரத்தின் பின் மதியும் கனகாவின் மடியில் படுத்து உறங்கி விட்டாள்.


தனது அறையில் அமர்ந்து இருந்த சாத்விக்கின் அலைபேசிக்கு அழைத்து இருந்தாள் வருணிகா.
அவளது பெயரை கண்டதும் ஷியாம் சுந்தர் செய்த காரியம் தான் நினைவு வந்து சென்றது அவனுக்கு. கடந்த சில தினங்களாக அவளுடன் அவன் பேசவே இல்லை. இன்று அவளே அழைத்து விட்டாள்.


அண்ணன் செய்த காரியத்திற்கு அவளிடம் நான்கு கேள்வியாவது கேட்க நினைத்து அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.
" ப்ளீஸ் சாத்விக் உங்களை பாக்கணும் போல இருக்கு.. எதுவுமே மறுப்பு சொல்லாம வந்துடுங்க .."
என அவள் கூற நேரில் அவளை பார்த்து அவளுடைய அண்ணனின் செயல்களை கூற நினைத்தவன் தான் வருவதாக கூறி விட்டு அழைப்பை துண்டித்தான்..


அவள் கூறியபடியே சிறிது நேரத்தில் தயாராகி அருகில் உள்ள ஒரு பார்க்கிற்கு சென்றான் சாத்விக்.
அவனுக்கு முன்பாகவே அவள் அங்கு வந்து அவனுக்காக காத்திருந்தாள் .
அமைதியாக அவள் அருகே சென்று அமர்ந்தவனிடம்
" உங்க தங்கச்சி கெடச்சுட்டாங்களா?"
என்று அவளே பேச்சை ஆரம்பித்து வைத்தாள். ‌

"ஆமா ..இன்னும் உயிரோட தான் இருக்கா.. போதுமா.."
என அவளது அண்ணன் மேல் இருக்கும் கோபத்தை அவள் மீது காட்டினான் சாத்விக்.
அவனுடைய அவள் மீதான முதல் கோபம் .
பயமாக இருந்த அதே வேலை கவலையாகவும் இருந்தது அவளுக்கு.


" ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க.. என்ன ஆச்சு ?"
என்று அவள் கேட்டிட தனது கோபத்தை எல்லாம் கொட்டி விட ஒரு வடிகால் கிடைத்ததை போல அவளிடம் பொறிந்து தள்ளி விட்டான் அவன்.
" என்ன ஆச்சுன்னு கேஷுவலா கேட்கிற.. எல்லாம் உன் அண்ணன் பண்ண வேலை தான். "
என்றான் கோபமாக ..

"என்ன சாத்விக் சொல்றீங்க ?
என் அண்ணனுக்கும் உங்க தங்கச்சிக்கும் என்ன சம்பந்தம்?.." உண்மையில் அவளுக்கு அவன் கூற வருவது புரியவில்லை.

"நல்லா கேட்டுக்க எங்க அப்பன் உன் அண்ணன் வீட்டுக்கு அவளை ப்ராஜெக்ட் திருட அனுப்பி இருக்கான் அதுவும் கட்டாயப்படுத்தி. ஆனா உன் அண்ணனுக்கு இந்த விடயம் முன்னாடியே தெரிஞ்சிருக்கு. ஒரு பொண்ணை அந்த இடத்திலேயே மன்னிச்சு அனுப்பி இருக்கணும். அதுதான் உண்மையான ஆம்பளை.
ஆனா உன் அண்ணன் என்ன பண்ணி வச்சிருக்கான் தெரியுமா.?"


என்று நிறுத்தி அனைத்தையும் கூறி முடித்தான் அவன்.
மதியழகி இப்போது கர்ப்பமாக இருப்பதை மட்டும் அவன் கூறவில்லை.
அதற்கும் ஷியாம் சுந்தர் ஏதாவது செய்து விடுவானோ என்ற பயம் தான் காரணம் .
அனைத்தையும் கேட்டுக் கொண்டு இருந்தவள்


" சாரி சாத்விக் என் அண்ணனைப் பற்றி எனக்கு நல்லாவே தெரியும். அவர் இப்படி பண்ணக்கூடிய ஆளே இல்லை .
என் அண்ணனோட சொத்துக்காக கூட உங்க தங்கச்சி இப்படியெல்லாம் உங்க கிட்ட பொய் சொல்லி இருக்கலாம்.. அப்போ தானே நீங்க அவர்கிட்ட சண்டை போட்டு சேர்த்து வைப்பீங்க.." என கூற கோபத்தில் அவளை அடிக்க கையை ஓங்கி விட்டான் அவன்..


வருணிகா இப்படி பேசுவாள் என அவன் எதிர்பார்க்கவில்லை.
மதியை பற்றி அவன் கூறி இருந்தும் எப்படி இவளால் அவளைப் பற்றி இவ்வாறு பேச முடிந்தது ?
இதற்கு மேல் மதியின் மொத்த பொறுப்புமே அவனுடையது.
இவள் அவனுக்கு மனைவியாக வந்தால் மதியை ஏதாவது சொல்லி காயப்படுத்தி விடுவாளோ என பயந்து போனான் அவன்.


சாத்விக் தன்னை அடிக்க கையை தூக்கியதிலும் அண்ணனை பற்றி தப்பாக கூறியதிலும் கோபம் அதிகரிக்க
"இங்க பாருங்க சாத்விக் .
நீங்க நல்லவர் தான்‌. எனக்கு அதுல சந்தேகமே இல்லை.
ஆனா நீங்க உங்க அப்பா அம்மாவை வெறுக்க காரணம் உங்க சித்தி தானே.
அவங்க உங்ககிட்ட நல்லவங்க மாதிரி நடிச்சு கூட உங்களை ஏமாற்றி இருக்கலாம்.
அதைப் போல மதியும் இப்போ என் அண்ணனை பற்றி தப்பா சொல்லி இருக்கலாம்.. ஏன் நீங்க இதைப் பற்றி யோசிக்க மாட்டேங்கிறீங்க?"
என அவள் பேசப் பேச எழுந்து நின்றே விட்டான் சாத்விக்.

"ப்ளீஸ் போதும் இதோட நிறுத்திக்கோ . எனக்கு நீ செட்டாக மாட்ட.. உன்னோட பணக்கார புத்தியை நீ காட்டிட்ட.. என்னோட சித்தி பற்றி நீ தப்பா பேசிட்டே.. இனிமே நீ யாரோ நான் யாரோ.. போயிடு.. என் கண் முன்னாடி நிக்காம போயிடு... எனக்கு சித்தி, மதி மட்டும் தான் சொந்தமே.. அவங்கள பத்தி தப்பா பேசின நீ எனக்கு தேவையே இல்லை.."


என கோபமாகவும் அதே சமயம் ஒவ்வொரு வார்த்தையும் அழுத்தியும் கூறினான் அவன்.. அவளை அடிப்பதற்காக கூட தொட கூடாது என நினைத்தான் அவன். அத்தனை வெறுப்பு வந்தது அவள் மேல். அவனுடைய கூற்றில் இளம் வயதான அவளுக்கும் கோபம் வந்து விட

" நீங்க இவ்வளவு பேசின அப்புறம் எனக்கும் நீங்க வேணாம் .
என் அண்ணனை குறை சொல்ற நீங்க எனக்கு தேவையே இல்லை.எங்க அப்பா இறந்ததுக்கு அப்புறம் எங்களை பார்த்துகிட்டது அவர் தான்.
எனக்கு உங்களை விட அவர் தான் முக்கியம்.. நீங்க என்ன என்னை விட்டு போறது ...நானே உங்களை விட்டு போறேன் பாய்." என கூறி விட்டு அவனுக்கு முன்பாகவே அந்த இடத்தை விட்டு சென்று விட்டாள்..

என்ன தான் அவள் வேண்டாம் என்று அவளிடம் கூறி விட்டாலும் அவள் விட்டு சென்றது சாத்விக்கிற்கு அதிக வேதனையை கொடுக்கத் தான் செய்தது. இருந்தும் இனிமேல் மதிக்காக மட்டுமே வாழ வேண்டும் என உறுதியாக தனக்குள் முடிவெடுத்தவன் தளர்ந்த நடையுடன் அந்த இடத்தை விட்டு அகன்றான் .

அவனுக்கு ஏற்ற பெண் வருணிகா இல்லை என்பதை மீண்டும் மீண்டும் மனதில் கூறிக் கொண்டான் அவன் .
அவள் மதியையும் அவனது அன்பான சித்தியையும் தவறாக பேசியது தான் அவனது கோபத்திற்கு காரணம்.
மேலும் அவள் தனது அண்ணன் நல்லவன் என்று அடித்து கூறுவதும் அவனுக்கு பிடிக்கவில்லை.

அண்ணனை பற்றி உண்மை தெரிந்தால் தன்னிடம் திரும்பி வருவாள் என்று அவன் நம்பினான்.
ஆனால் நாம் நினைத்தது மட்டுமே வாழ்க்கையில் நடப்பது இல்லை அல்லவா ..
இனி வரும் காலங்களில் அவர்களுக்கு வாழ்க்கை என்ன வைத்து காத்திருக்கிறது என்று அவர்களைப் படைத்த கடவுள் மட்டுமே அறிவார்.


அந்த நொடியில் இருந்து மதிக்காகவே தனது வாழ்க்கையை வாழ ஆரம்பித்து இருந்தான் அந்த அன்பான உடன் பிறவா அண்ணன்.
அவனை அவனுடைய சித்தி சிறு வயதிலிருந்து சொந்த பிள்ளை போல் வளர்த்ததற்காக அவன் செய்யும் சிறு கைமாறு தான் இது.
அவனது சித்தி இல்லா விட்டால் அவன் அன்னை பாசம் என்ற ஒன்றையே அறியாமல் போய் இருப்பான். அவன் எத்தனையோ முறை
'தான் ஏன் சித்திக்கு மகனாக பிறக்கவில்லை?' என்று ஏங்கியும் இருக்கிறான்.


சித்தி ஆசைப் பட்டதை போல மதியை நல்ல ஒரு நிலைக்கு கொண்டு வர வேண்டும் என அவன் நினைத்தான்..
அவன் நினைத்தது நடக்குமா?

தொடரும்..


 

Mafa97

Moderator
அத்தியாயம் 💔 16

ஐந்து வருடங்களுக்கு பிறகு....


"தான்வி குட்டி.. ஆருத் கண்ணா.. ரெண்டு பேரும் சீக்கிரம் வாங்க. விளையாடினது போதும் .."
என கனகா வீட்டு தோட்டத்தில் விளையாடிக் கொண்டு இருக்கும் குழந்தைகளை அழைத்தார் ‌.
" இதோ வந்துட்டோம் பெரியம்மா.."
என்று சத்தமாக கூறிய தான்வி தனது இரட்டை சகோதரனான ஆருத்தை பார்த்து

"வாடா உள்ளே போகலாம் .அம்மா வந்தா திட்டுவாங்க.
ரொம்ப நேரமா வெளியிலே இருக்கோம் ."
என கூறி விட்டு வீட்டை நோக்கி சிட்டாக ஓடி சென்றாள் அவள். பின்னே ஆருத்தும் வீட்டிற்குள் சென்றான் நிதானமான
நடையோடு .

ஆருத் தான்வி இருவரும் மதியழகியின் நான்கு வயது நிரம்பிய இரட்டைக் குழந்தைகள். தான்வி குறும்புத்தனம் நிறைந்தவள் ..
ஆனால் அதற்கு மாறாக ஆருத் அழுத்தமானவன் .
இருந்தும் வீட்டினரிடமும் நண்பர்களுடனும் தான் அவன் சிரித்து பேசுவான் .

ஆனால் வெளி ஆட்கள் யாரிடமும் எளிதில் பேசி விட மாட்டான். அவனிடம் எப்போதும் ஒரு அழுத்தம் ஒட்டிக் கொண்டே இருக்கும். தான்வி , ஆருத் இருவரும் தீர்க்கமாக பேசக் கூடியவர்கள். மறந்தும் மழலை மொழி பேசி விட மாட்டார்கள்.


இப்போது சாத்விக் தங்கையையும் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்து விட்டான். எங்கு இருந்தாலும் சொந்த மண்ணில் இருப்பது போல் ஒரு திருப்தி கிடைப்பதில்லை அல்லவா.
தனது தொழிலை சென்னைக்கு மாற்றியவன் சில மாதங்களாகவே சென்னையில் தான் வசித்து வருகிறான்.

ஒரு வாரத்திற்கு முன்பு தான் தங்கையையும் குழந்தைகளையும் அழைத்து வந்து இருந்தான்.. மதியழகியை தலை நிமிர்ந்து வாழ வைக்க வேண்டும் என்பதே அவனது ஆசை. அவனுடன் சேர்ந்து அவளும் தொழிலை பார்த்துக் கொள்கிறாள் இப்போது.
முன்பை விட தைரியமான பெண்ணாகவும் கம்பீரமான தோற்றத்தோடும் வலம் வருகிறாள் அவள் .


அவர்கள் இருவரும் வேலைக்கு சென்ற பிறகு குழந்தைகளை அன்புடன் கவனித்துக் கொள்வது என்னவோ கனகா தான் ‌‌.
அவரை
' பெரியம்மா...'
என்று அழைக்க பழக்கியிருந்தாள் மதியழகி.
சென்னை வந்த பிறகு நேற்று தான் ஒரு பாடசாலையில் இருவரையும் சேர்த்து விட்டு இருந்தனர்.


தான்வி ஆருத் இருவரும் உள்ளே வந்ததும்
"வாங்க செல்லங்களா அம்மா வர்ற நேரம் ஆச்சு.. போய் ரெடியாயிட்டு வாங்க.. பால் தர்றேன் ..
இல்லன்னா அம்மா திட்டுவாங்க.."
என கனகா இருவரின் தலையையும் வருடிய படி அன்பாக பேச மறு பேச்சு எதுவும் இன்றி இருவரும் ஆமோதிப்பாக தலையசைத்து விட்டு அறைக்குள் சென்று விட்டனர் அவர் கூறியதை நிறைவேற்றும் பொருட்டு .


இரு குழந்தைகளும் அன்னை வீடு வந்து சேரும் முன்னால் குளித்து விட்டு ஹாலில் அமர்ந்து டிவியில் கார்ட்டூன் பார்த்துக் கொண்டு இருந்தனர் .
சிறிது நேரம் கழித்து வெளியே காரில் சத்தம் கேட்க டிவி பார்த்துக் கொண்டு இருந்த தான்வி மட்டும் அன்னையைத் தேடி வெளியே ஓடினாள். அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு மீண்டும் டிவியில் தனது கவனத்தை செலுத்த ஆரம்பித்து விட்டான் ஆருத்.


காரை விட்டு கீழே இறங்கிய மதியழகி தன்னை நோக்கி ஓடிவந்த தான்வியை தூக்கி அவளது இரு கன்னங்களிலும் மாறி மாறி முத்தமிட்டாள். அன்னையை பின்பற்றி தானும் அப்படியே செய்தாள் அந்த சின்ன சிட்டு .
அப்போது காரை ஓட்டி வந்த சாத்விக்கும் காரில் இருந்து இறங்கி தாய் மகள் இருவரையும் நோக்கி வர
"மாமா .."
ன்றபடி அவனிடம் தாவி விட்டாள் தான்வி.


அவர்கள் இருவரையும் புன்னகையுடன் பார்த்த மதியழகி வீட்டிற்குள் சென்றாள் தனது மகனை தேடி.


அவனோ சோஃபாவில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டு இருந்தான். அவன் அருகில் அமர்ந்தவள் அவனது தலையை வருட அப்படியே தாயை கட்டிக் கொண்டவன் அவளின் மடியில் ஏறி அமர்ந்து கதை பேச தொடங்கி விட்டான்.
எப்போதும் இப்படித் தான்.
கார் சத்தம் கேட்டாலே தாண்வி வெளியே ஓடி விடுவாள்.

ஆனால் ஆருத் எங்கு இருக்கிறானோ அந்த இடத்திலேயே தான் இருப்பான். அன்னை அவனை தேடி வர வேண்டும் .யாராக இருந்தாலும் தன்னை தேடித் தான் வர வேண்டும் என்று நினைப்பவன் அவன்.. இந்த சிறு வயதிலேயே அவனது குணம் அப்படி இருந்தது. அவனது தந்தையைப் போன்றே குணம் படைத்தவன் அவன்.


மதியழகிக்கு அது புரிந்தாலும் அவனுடைய போக்கிலேயே விட்டு விட்டாள்.
தாய் ,மகன் இருவரும் பேசிக் கொண்டு இருக்கும் இடத்திற்கு கனகா தேநீருடன் வந்து விட வெளியே இருந்து மாமாவும் மருமகளும் வந்து சேர்ந்து விட்டனர்.

அதன் பிறகு அந்த ஐவருக்கும் நேரம் போனதே தெரியவில்லை. மதியழகி சிறு வயது முதல் எவ்வளவு கஷ்டப்பட்டாளோ அதற்கெல்லாம் சேர்த்து வைத்து இப்போது குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்கிறாள்.


******************


தோட்டத்தில் போடப் பட்டிருக்கும் கூடை நாட்காலியில் அந்த இரவு வேலையில் தனியே அமர்ந்து இருந்தாள் மதியழகி .
அவளது எண்ணம் எங்கெங்கோ சென்றது.
இப்போது அவள் தைரியமான பெண் தான். பிசினஸ் செய்யக் கூடிய அளவு வளர்ந்து இருக்கிறாள் தான் .

ஆனால் இப்படி தனியே அமர்ந்து இருக்கும் போது அழையா விருந்தாளியாக அவனது நினைவு வந்து விடுகிறது ..அதனுடன் சேர்ந்து மறந்து போன பயமும் அனுமதி இல்லாமல் வந்து விடுகிறது. அவனைக் கண்டால் மட்டும் அல்ல நினைத்தாலே அவளுக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்து விடும்..


அன்று அண்ணனுடன் வந்ததிலிருந்து இன்று வரை ஷியாம் சுந்தரை அவள் சந்திக்கவில்லை. அதற்கான வாய்ப்புகள் அவளுக்கு அமையவில்லை என்றே கூறலாம். இப்போது சென்னைக்கே வந்தாயிற்று.
அவனை எங்காவது காண நேர்ந்து விட்டால் தைரியமாக இருக்க வேண்டும் என்று மனதில் உறுதி எடுத்துக் கொண்டாள்.

அப்போது
"மதி .."
என அழைத்த படியே அங்கு வந்து சேர்ந்தான் சாத்விக்.
அவளை கண்டதும் முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டவள் "வா அண்ணா என்ன இந்த நேரத்துல இங்க வந்து இருக்கீங்க.. தூக்கம் வரலையா?"
என்று ஒரு வாறு கேட்டு வைத்தாள்.


அவளை அழுத்தமாகப் பார்த்தவன் "இது நான் கேட்க வேண்டிய கேள்வி ..
இந்த டைம்ல நீ என்ன பண்ற?"
என்றான் அவளிடம் .அவனது கேள்வியில் சற்றே தடுமாறிய மதியழகி உடனே தன்னை சமாளித்துக் கொண்டு

"அது தூக்கம் வரலைண்ணா.. அதான் சும்மா இங்க வந்தேன்.." என கூறி மெல்லிய புன்னகை ஒன்றை சிந்தினாள்.
அவள் ஷியாம் சுந்தரையும் அவளது பழைய வாழ்க்கையையும் பற்றி தான் நினைத்துக் கொண்டு இருக்கிறாள் என்பதை அறிந்தவன் அதற்கு மேல் தோண்டி துருவாமல் அவள் அருகே வந்து அமர்ந்து கொண்டான்.


"மதி.. நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காத .
நாம சென்னைக்கு வந்திருக்கோம்.அவனை அடிக்கடி சந்திக்க வேண்டி வரும்‌.." என்று மெல்ல பேச்சை ஆரம்பித்தான்.
அவன் கூறுவது உண்மை என்பதால் அமைதியாக இருந்து விட்டாள் அவள். அவளுடைய அமைதியை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சாத்விக் மேலும் பேச ஆரம்பித்தான்..


"அவன் உன் லைஃப்ல குறுக்கே வரக் கூடாதுன்னா நீ வேற கல்யாணம் பண்ணிக்கணும் ..."
என அண்ணன் கூறி முடிக்கவில்லை இருக்கையில் இருந்து எழுந்து விட்டாள் தங்கை.

அவளது அதிர்ச்சியை கண்டு தானும் எழுந்து நின்றவன்
"நான் சொன்னதுல எந்த தப்பும் இருக்கிற மாதிரி எனக்கு தெரியல. நீ யோசிச்சு சொல்லு.."
என்று கூறி விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

"அண்ணா அவர் என்னோட வழியில் குறுக்க வரவே மாட்டார்.
இப்போ அவரு கல்யாணம் பண்ணி இருக்கலாம்‌ .
நாம ஏன் பயப்படனும்.."
என்று மதியழகி சத்தமாக சொல்ல நடந்து கொண்டு இருந்தவன் திரும்பித் தங்கையை பார்த்தான்.


அவன் அருகே வந்த மதியழகி "எனக்கு எந்த குறையும் இல்லை அண்ணா .
எனக்கு இரண்டு குழந்தைங்களை கடவுள் கொடுத்து இருக்கிறார். என்னோட அம்மாவும் அப்பாவும் கூடவே இருக்கிற ஃபீல் எனக்கு. நீ தான் உன்னக்கான வாழ்க்கையை தேடணும்.." எனக் கூறி அண்ணனின் முகம் பார்க்க அதுவோ யோசனையில் சுருங்கி இருந்தது.


அவள் அப்படி கூறியதும் அவனது கண் முன்னே வருணிக்காவின் முகம் வந்து போனது.
தினமும் அவளது நினைவு தான் அவனுக்கு.
அதனால் வேலையில் அதிகம் கவனம் செலுத்தி அவளது நினைவை துரத்தி விடுவான்.

அண்ணனின் இந்த யோசனை படிந்த முகத்தை கண்டவள்
" என்ன அண்ணா யோசிக்கிற..? கனகா அக்காவும் பிடி கொடுக்கவே மாட்டேங்கிறாங்க..
அம்மா அப்பா இருந்திருந்தால் அவங்களுக்கு ஒரு நல்ல துணையை அமைச்சு கொடுத்து இருப்பாங்க.. ஆனா அதுவும் இல்லை.. நாங்க சொல்லி அவங்க கேட்கிறதாவும் இல்லை.."
என பெருமூச்சு விட்டுக் கொண்டாள் அவள் .


இருவரும் எத்தனையோ முறை பேசிப் பார்த்தாயிற்று .
ஆனால் கனகா உறுதியாகவே மறுத்து விட்டார்.
'தான் திருமணம் செய்து கொள்ளப் போவது இல்லை என்றும் கடைசி வரை உங்களுடன் தான் இருப்பேன் என்றும்' கூறி விட்டார் .


இப்போது அண்ணனாவது திருமணம் செய்து கொள்ள மாட்டானா என்ற ஏக்கம் மதியழகிக்கு .ஆனால் அவனுமே ஏதேதோ சொல்லி அந்த கதையை மாற்றி விடுகிறான்.
எப்போதும் போல் இன்றும் "ம்..பார்க்கலாம்.. இன்னும் கொஞ்ச காலம் போகட்டும் .."
என்று கூறியதோடு அந்த இடத்தை விட்டு சென்று விட்டான்
தங்கை அதற்கு மேல் எதுவும் பேசிவிட முன் .


இதற்கு மேலும் அந்த இடத்தில் இருந்தால் கேள்வி கேட்டே தங்கை உண்மையை வரவழைத்து விடுவாள் என்று அறிவான் அவன். மதியழகிக்கு மேலும் மனம் பாரமான உணர்வு .
அவளால் தான் சாத்விக் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறானோ என்ற எண்ணம் எப்போதுமே அவளுக்கு உண்டு.

மனதுக்குள்ளேயே கடவுளிடம் வேண்டியவள் அவர் மேல் பாரத்தை போட்டு விட்டு தூங்கச் சென்றாள்.


**************************

"பாட்டி.."
என்ற கொஞ்சும் குரலோடு வடிவுக்கரசி அமர்ந்து இருந்த இருக்கைக்கு பக்கத்தில் வந்து அமர்ந்தாள் மயூரி.
இப்போது அவளும் பெயருக்கென்று தந்தையுடன் கம்பெனிக்கு சென்று வருகிறாள்.. வேலை செய்கிறாளா? என்றால் பதில் என்னவோ இல்லை என்பதே.


அதில் அன்பு செல்வனுக்கு கோபம் தான் .
இருந்தும் செல்ல மகளிடம் காட்ட முடியாத சூழ்நிலை.
இப்போதும் அலுவலகம் செல்ல தயாராகி வந்தவள் தான் பாட்டியிடம் பேசுவதற்காக அவர் பக்கத்தில் அமர்ந்தாள்.

மயூரியை கண்டதும் வடிவுக்கரசியின் முகம் எப்போதும் போல் மலர்ந்து போனது .
"என்னடா கண்ணா..?"
என்று வாஞ்சையாக கேட்டார் அவர்.
அவரிடம் கூறினால் தான் காரியமாகும் என்பதை அறிந்து வைத்து இருந்தவள் மெல்ல பேச்சை தொடங்கினாள்.

"நீங்க என்னை கல்யாணம் செஞ்சுக்க சொல்லி ரொம்ப நாளா சொல்றீங்க இல்ல ..
அதனால நான் இப்போ ஒரு முடிவு எடுத்து இருக்கேன்.." எனக் கூறி அவரது முகம் பார்த்தாள். பேத்தி கல்யாணத்துக்கு சம்மதம் தான் கூற போகிறாள் என்று அறிந்தவர் சொல் என்பது போல் தலையை ஆட்டினார் தீராத மகிழ்ச்சியோடு.


அதில் அவளுக்கு உற்சாகம் தோன்ற
"பாட்டி எனக்கு ஒருத்தரை ரொம்ப புடிச்சிருக்கு. அவர் நம்மளை விட பெரிய இடம் தான் .
ஆனால் அப்பாக்கு தான் அவரைக் கண்டாலே ஆகாது.."
என்று உதட்டை பிதுக்கிய படி கூற இப்போது அவளை யோசனையாக பார்த்தார் அவர்.

இத்தனை நேரமும் பாட்டி, பேத்டி இருவரும் பேசுவதை கேட்டுக் கொண்டு இருந்த அன்பு செல்வனும் ஜெயராணியும்
ஒருவர் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
"நீ கேட்ட ஏதாவது கிடைக்காமல் போயிடுமா என்ன ?"
என்று பாட்டி பெருமிதமாக கூறி விட இப்போது பெற்றோரை ஒரு பார்வை பார்த்து விட்டு மீண்டும் பாட்டியின் புறம் திரும்பியவள்
" ஷியாம் சுந்தர்.."
என்ற பெயரை மட்டுமே கூறினாள்.


ஜெயராணிக்கு அவனது பெயரை கேட்டதும் அப்படி ஒரு மகிழ்ச்சி. அவன் மருமகனாக வர மாட்டானா என்று எத்தனை தொழிலதிபர்கள் ஏங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.. அவன் தனக்கே மருமகனாக வந்து விட்டால் அதனை சொல்லி சொல்லியே பெருமை பட்டுக் கொள்ளலாம் அல்லவா..

பாட்டிக்கு எப்போதும் பேத்தியின் சந்தோசமே முக்கியம் என்பதால் அவருக்கும் இந்த விடயம் சந்தோஷமே.
ஆனால் அன்பு செல்வன் மட்டும் தான் தீவிர யோசனையில் இருந்தார்.
அவரது அமைதியை கண்ட மயூரி


"அப்பா அவர் என்னை கல்யாணம் பண்ணா உங்களுக்கு பணத்துக்கும் பணமும் ஆச்சு.. பிசினஸ் வட்டாரத்தில் அதை சொல்லியே பெருமையும் பேசிக்கலாம்.. என்னோட ஆசையும் நிறைவேற மாதிரியும் இருக்கும்.. ப்ளீஸ் அப்பா முடியாதுன்னு மட்டும் சொல்லிடாதீங்க .."என கெஞ்சிய படி பேச மகளுக்காகவாவது ஒத்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டார் அவர்.


மேலும் தாய் மனைவி இருவரும் பேசிப் பேசியே அவரை ஒத்துக் கொள்ள வைத்து இருந்தனர்.
தந்தையின் சம்மதம் கிடைத்ததும் புள்ளி மானாக குதித்துக் கொண்டு ஓடினாள் மயூரி.

அவளுக்கு ஷியாம் சுந்தர் என்றால் அத்தனை பிடித்தம்.
தந்தையுடன் தொழில் சம்பந்தமான பார்ட்டிகளுக்கு செல்லும் போது அவனை கண்டு இருக்கிறாள். இளம் பெண்கள் அனைவருக்கும் அவன் மீது தான் கண்கள் இருக்கும் .

அப்படி பார்க்க ஆரம்பித்தவள் தான் மயூரியும் .
ஆனால் போகப் போக
' நானும் பணக்காரி தானே .அவரும் பணக்காரர் ..
நான் அழகா வேற இருக்கேன்.. என்னை ஏன் அவர் வேண்டாம் என்று சொல்ல போறார்..?'
என்ற எண்ணம் தோன்றி அவனையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் மனதில் உறுதி தோன்றிற்று..


எனவே அவன் மீது காதல் என்று சுற்றிக் கொண்டு திரிகிறாள் அவள். இப்போது இந்த விடயத்தை பெற்றோர்களிடமும் சொல்லியாயிற்று .
அவர்கள் அதனைப் பார்த்துக் கொள்வார்கள் என்று மகிழ்ச்சியாக இருந்தாள் ‌.

தொடரும்...
 

Mafa97

Moderator
அத்தியாயம் 💔 17

மாலை நேரம் போல் ஆருத் தான்வி இருவரையும் அழைத்துக் கொண்டு அருகில் இருக்கும் பூங்காவிற்கு சென்றார் கனகா. தான்வி தான் வாய் ஓயாமல் பேசிக் கொண்டே வந்தாள்.
அவள் பேசுவதை மற்ற இருவரும் கேட்டுக் கொண்டு அவளுடன் நடந்து சென்றனர் .

பேச்சு சுவாரஸ்யத்தில் தான்வி வீதியில் வாகனங்கள் வரும் பக்கம் சென்று விட அதனை கண்ட ஆருத் "ஏய் தான்வி.." என்றபடி அவளை பிடிக்க ஓடினான்.
அதற்கு இடையில் வேகமாக வந்த கார் ஒன்று தான்வியை மோதப் பார்க்க பட்டென்று அவளை தூக்கி அணைத்து இருந்தது ஒரு கரம்.

அந்தக் கைக்கு சொந்தக்காரர் அருகே சென்ற ஆருத்
" தேங்க்ஸ் அங்கிள்.."
என்று பெரிய மனிதன் போல் அவருக்கு நன்றி கூறிட தான்வியை இறக்கி விட்ட அவர் ஆருத்தை வாஞ்சையுடன் பார்த்து இதமாக புன்னகைத்தார்.

அப்போது அங்கே பதட்டத்துடன் வேகமாக வந்த கனகா
"ரொம்ப நன்றி சார் .
இந்த உதவியை நான் மறக்கவே மாட்டேன்.."
என்று கண்கள் கலங்க நன்றி தெரிவித்தார் .

மெல்லிய புன்னகையுடன் அந்த நன்றியை ஏற்றுக் கொண்டவர் "குழந்தைகளை கண் போல பாத்துக்கணும்.
இவங்க உங்க குழந்தைங்களா?"
என கேட்டிட
"இல்லை சார் மதிம்மாவோட பசங்க.. எனக்கு அவ தங்கச்சி மாதிரி .."
என்று விளக்கம் கொடுத்தார்.

" ரொம்ப அழகா இருக்காங்க. ட்வின்ஸ் ஆ ? .."
என்று கூறிய படி தான்வியின் கன்னத்தில் தட்டினார் அவர். எப்போதும் வாய் மூடாமல் பேசும் தான்வியோ
"ஆமா அங்கிள் நாங்கள் ட்வின்ஸ் தான்.
அவன் ஆருத்.. நான் தான்வி.
ஆமா உங்க பேர் என்ன அங்கிள்..?"
என பெரிய மனுஷி போல் அவரைப் பார்த்து கேட்க

அதில் ஈர்க்கப் பட்டவர் அவளது உயரத்திற்கு ஏற்ப குனிந்து "என்னோட பெயர் ராகவ் .."
என்றார் பரிவாக. ஆருத்திற்கு தான் இந்த பேச்சு வார்த்தை இனிக்கவில்லை போலும்.
" பெரியம்மா வாங்க போகலாம்.. தான்வி வா .."
என்று இருவரையும் அழைத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு சென்று விட்டான்.

கனகா தான் அவரை திரும்பி பார்த்து மீண்டும் நன்றி சொல்லும் விதமாக புன்னகைத்து விட்டு செல்ல தான்வி அவருக்கு கையசைத்து விட்டு சென்றாள். போகும் அவர்களை பார்த்துக் கொண்டு இருந்தவருக்கு ஏனோ ஆருத்தின் செயல்களை பார்க்கையில் ஷியாம் சுந்தரின் நினைவு வந்து போனது .

அவனும் சிறு வயதில் இருந்தே இப்படி அழுத்தமானவன் தானே.. அந்த இரண்டு குழந்தைகளும் தனக்கு நெருக்கமான ஒரு உறவு போலவே அவருக்கு தோன்றியது.ஆம் அவர் ஷியாம் சுந்தரின் அன்னையின் உடன் பிறவாத சகோதரர். சிறிது நேரம் அப்படியே இருந்து விட்டு அந்த இடத்தை விட்டு சென்றார்.
ஷியாம் சுந்தரின் குழந்தைகள் தான் அவர்கள் என்பது அவருக்கு தெரியாதே.

*******************

ஷியாம் சுந்தரின் அலுவலகத்திற்கு வந்து இருந்தார் அன்பு செல்வன். அது அவருக்கு பிடிக்காத போதும் மகளுக்காக வேண்டி அங்கு வந்து இருந்தார் அவர். அவனை சந்திக்க இதை விட்டால் வேறு வழியும் இல்லை என்பதற்காகவே அவனது அலுவலகத்திற்கு அவனை தேடி வந்து விட்டார்..

அவர் இங்கு வந்த விடயத்தை தீபக் சென்று ஷியாம் சுந்தரிடம் கூறிய போதும் அவனோ அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்காமல் தனது வேலையிலேயே கவனமாக இருந்தான்.
மீண்டும் அவனிடம் கூற தீபத்திற்கு பயம் .
ஆனால் அன்பு செல்வனை அதிக நேரம் காக்க வைப்பதும் நன்றாகப் படவில்லை அவனுக்கு.

என்ன இருந்தாலும் அவரும் ஒரு சிறந்த தொழில் அதிபர் தானே. எனவே அவரிடம் சென்று காத்திருக்கும் படி மரியாதையாக கூறியவன் மீண்டும் வந்து ஷியாம் சுந்தர் முன்னாள் நின்று விட்டான். ஆனால் அவன் இப்போது தீபக்கையே கண்டு கொள்ளவில்லை. இருபது நிமிடங்களை கடத்திய பிறகே
"அவரை உள்ளே வர சொல்லு" என்றான் அவன் .

முன்பை விட இப்போது அதிக கம்பீரத்துடன் பார்க்கும் பெண்களை எல்லாம் கவர்ந்திழுக்கும் அழகுடன் இருந்தான் ஷியாம் சுந்தர். தொழிலில் வெற்றி பெற்றுக் கொண்டே செல்கையில் கர்வமும் சேர்ந்து வந்தது அவனிடத்தில்.

இந்த ஐந்து வருடங்களில் தொழிலில் பாரிய அளவு முன்னேற்றம் கண்டு இருந்தார் அவன் .
ஆனால் வாழ்க்கையில் ..?

அனுமதி கேட்டுக் கொண்டு தீபக் உள்ளே வர அவனின் பின்னால் அந்த அறையின் உள்ளே வந்தார் அன்பு செல்வன். முதலில் அவர் தான் அவனைப் பார்த்து ஒரு மெல்லிய புன்னகையுடன் "ஹாய்..."
என்றார் .
இதற்கு பதிலும் அவன் சொல்லவில்லை ..முகத்தில் மருந்துக்கேனும் புன்னகையும் இல்லை அவனிடத்தில்.

ஆனால் தனக்கு முன்னால் இருந்த இருக்கையில் அமரும் படி சைகை செய்தான் அவ்வளவே . அவன் காட்டிய இருக்கையில் அமர்ந்தவர் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார் .
அதனை புரிந்து கொண்ட
ஷியாம் சுந்தர் தீபக்கை கண்களால் வெளியே போகும் படி கூற அவனும் வெளியே சென்று விட்டான்.

அதன் பிறகும் அன்பு செல்வன் பேசவில்லை .அதை கண்டு புருவம் சுருக்கியவன்
"பிசினஸ்மேன் அன்பு செல்வன் என்னை தேடி வந்ததற்கான காரணம் என்னவோ?'
என்றான் கேளியாக .
அவன் அப்படி மரியாதை இல்லாமல் பேசியது கோபத்தை வரவழைத்த போதும் இப்போது கோபப் பட்டால் காரியம் கெட்டு விடும் என்பதை அறிந்து இருந்தவர்

" பர்சனல் விஷயமாக பேச வந்திருக்கேன் ."என்றார் முயன்று வரவழைத்த மெல்லிய குரலில்.
அவர் சொன்னதை கேட்டு ஒரு நொடி அவனது முகம் இறுகிப் போனது .
அன்பு செல்வன் பார்க்கும் முன்னே மீண்டும் முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டான் அவன்.

அவனது மௌனத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டவர்
"எனக்கு ஒரு பொண்ணு இருக்கா.. பெயர் மயூரி. படிச்சு முடிச்சுட்டு என்கூட கம்பெனியை பார்த்துக்குறா‌‌.. அவளுக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு.. நீங்களும் ஓகே சொன்னா கல்யாணத்தை பத்தி பேசிடலாம்.." என்று கூறி விட்டு அவன் முகம் பார்த்தார் .

அவர் அவனிடம் அனுமதி கேட்காமல் இப்படி முடிவெடுத்து விட்டு அதன் பிறகு வந்து பேசுவது அவனுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
எனவே அவரை கேலியாக பார்த்தவன்

"உங்க பொண்ணுக்கு தானே என்னை பிடிச்சிருக்கு .
எனக்கு ஒன்னும் உங்க பொண்ணை பிடிக்கல .
அண்ட் உங்க பொண்ணு யாருன்னு கூட எனக்கு தெரியாது .
நீங்க என்னமோ நாங்க ரெண்டு பேருமே லவ் பண்ற மாதிரி வந்து பேசுறீங்க .
ஃபர்ஸ்ட் என்கிட்ட எப்படி பேசணும்னு கத்துக்கோங்க. எனக்கு இப்படி அதிகாரமா பேசுறது பிடிக்காது .

உங்க தகுதிக்கேத்த மாதிரியே
உங்க பொண்ணுக்கு ஒரு மாப்பிள்ளை பாருங்க..
கல்யாணம் அது இதுன்னுட்டு இந்த பக்கம் திரும்ப வந்துடாதீங்க. மீறி வந்தால் என்னோட உண்மையான முகத்தை பார்க்க வேண்டி இருக்கும்.. இந்த வயசான காலத்துல உங்களுக்கு அதெல்லாம் எதுக்கு..? அண்டர்ஸ்டாண்ட் .."என நீளமாகவும் அதே சமயம் அழுத்தமாகவும் பேசி முடிக்க அவமானத்தில் கூனி குறுகிப் போனார் அன்பு செல்வன்.

அவனுடனான பகையை மறந்து விட்டு மகளுக்காக அவனது இடத்திற்கே வந்து பேசியவரை அவன் மரியாதை இன்றி நடத்தியது அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை..
அதற்கு மேலும் எதுவும் பேசாமல் அமைதியாக எழுந்து சென்று விட்டார் அவர்..

அவரின் முதுகை ஒரு முழு நிமிடம் வெறித்து பார்த்தவன் உதட்டில் இகழ்ச்சி புன்னகை மட்டுமே எஞ்சி இருந்தது.

அன்பு செல்வனுக்கு அவன் மறுத்துக் கூறியது அவமானம் ஆகிப் போய்விட அலுவலகம் செல்லாது மீண்டும் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.
பெண்கள் மூவரும் முன்னறையில் தான் இருந்தனர்.
அவரை கண்டு விட்டு கேள்வியாகவும் ஒரு எதிர்பார்ப்புடனும் எழுந்து நின்றனர் மூவரும்..

அவர்களது எதிர்பார்ப்பை புரிந்து கொண்டவர் எரிச்சலாக சென்று அங்கு இருந்த ஒரு இருக்கையில் தொப்பென்று அமர்ந்து கொண்டார். அவரது முகத்தை கண்டதுமே போன விடயம் நன்றாக நடக்கவில்லை என்பதை உணர்ந்து கொண்ட வடிவுக்கரசி மகனின் அருகே சென்று தயக்கத்துடன் "என்னாச்சுப்பா.. ஏன் ஒரு மாதிரியா இருக்க?"
என கேட்டார் ...

அவர் அப்படி கேட்டதும் ஷியாம் சுந்தரின் மேல் இருந்த கோபம் அனைத்தும் வீட்டார் மேல் திரும்பியது இப்போது.
" என்ன ஆச்சு ..என்ன ஆச்சுன்னா... என்னத்தை சொல்றது.. வேணாம்னு சொல்லிட்டான்... மூஞ்சில அடிச்ச மாதிரியே சொல்லிட்டான்..." என இருந்த கோபத்தில் கத்தி விட்டார் அவர்..


பொதுவாக அவர் இப்படி கத்தி பேசும் ரகம் இல்லை என்பதால் மூவருமே அதிர்ந்து போய் அவரை பார்த்து இருந்தனர். மயூரிக்கு அழுகையே வந்து விட்டது. தோழிகளிடம் வேறு தன்னை அவன் வேண்டாம் என்று கூற மாட்டான் என பெருமை பேசி இருந்தாள் அவள் ..
இப்போது அவர்கள் வேறு கேலி செய்வார்கள் என்ற எண்ணமே அவளுக்கு.

பேத்தி அழுவதை தாங்கிக் கொள்ள முடியாமல் போக அவளது அருகே சென்ற வடிவுக்கரசி ஆதரவாக அவளை அணைத்துக் கொண்டார். செல்லமாக வளர்த்த பேத்தி அல்லவா.. மனது தாங்கவில்லை பாட்டிக்கு..

" நீ அழுவாதடா.. எப்படியாவது அவனையே உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறோம்..."
என பேத்தியின் தலை வருடிய படி வடிவுக்கரசி கூற
" அவர் நீங்க நினைக்கிற மாதிரி இல்லை பாட்டி .. ரொம்ப டெரர்.. ஒருவாட்டி நோ சொன்னா அது நோ தான் ...ஆனா எனக்கு அவர் தான் வேணும் .."
என்று மேலும் கண்ணீர் சிந்தினாள் மயூரி ‌.

ஜெயராணி அமைதியாகவே நடப்பவற்றை பார்த்துக் கொண்டு இருந்தார்.
அவருக்கு மகள் ஆசைப்பட்டதை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்ற எண்ணம் தான் மனதில் ஓடிக் கொண்டே இருந்தது.. என்ன செய்து அவனை மகளுக்கு திருமணம் செய்து வைப்பது என்று தனக்குள்ளே தீவிரமாக சிந்திக்கலானார் அவர்.

"அப்படின்னா அவனை மயக்கித் தான் கல்யாணம் பண்ணனும்.. இல்லைன்னா அவனை மறக்குறது தான் உனக்கு நல்லது .."
என்று அன்பு செல்வன் திடுமென கூற அந்த யோசனையே அங்கிருந்தவர்களுக்கு சரி எனப் பட்டது.

வழி கிடைத்துவிட்ட திருப்தியில் கண்களை துடைத்துக் கொண்ட மயூரி
" கண்டிப்பா என்ன தில்லு முல்லு பண்ணியாவது நான் அவரை தான் கல்யாணம் பண்ணிக்குவேன்.. நீங்க அவர் கிட்ட அவமானப்பட்டு இருந்தால் ரொம்ப சாரிப்பா.."
முதலில் அவனைத் தான் மணப்பேன் என உறுதியாக கூறியவள் பின் தந்தையிடம் மன்னிப்பு வேண்டினாள்.

அவள் நினைத்தது நடக்குமா?

*********************

இரவு உணவிற்காக உணவு மேசையில் அமர்ந்திருந்தனர் மதியழகி
மற்றும் குழந்தைகள் இருவரும். கனகா அவர்களுக்கு உணவு பரிமாறிக் கொண்டு இருந்தார்.
அப்போது ஃபோன் பேசிக் கொண்டே அங்கு வந்த சாத்விக் ஆருத்தின் அருகில் அமர்ந்தான்..

" நீங்களும் இப்படி உட்காருங்க அக்கா.."
என மதியழகி கூறிய பிறகே கனகாவும் அவர்களுடன் அமர்ந்து உண்ண ஆரம்பித்தார்.
பொதுவாக உணவு வேலை என்றாலே அந்த வீட்டில் கலகலப்புக்கு பஞ்சமே இல்லை. இன்றும் அப்படியே கதைகள் சென்று கொண்டு இருக்க மாலை நடந்த விடயம் பற்றி அன்னையிடமும் மாமாவிடமும் கூற ஆரம்பித்தாள் தான்வி.

அதைக் கேட்ட இருவரும் ஒரு நொடி பதறித்தான் போய் விட்டனர். குழந்தைகளுக்கு ஏதாவது ஆகி இருந்தால் அவர்களது நிலை ..?
அந்த இரண்டு குழந்தைகளும் தான் இவர்களது வாழ்வாதாரமே. ஆனால் அவர்களின் அதிர்வை கண்டு கொள்ளாத தான்வி கதையை கூறிக் கொண்டே இருந்தாள்.

அவள் ராகவ் பற்றி கூறுகையில் அவளது முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி .
"அம்மா அந்த அங்கிள் ரொம்ப நல்லவர்.."
என அவருக்கு பாராட்டு பத்திரம் வேறு .

"ஓகேடா அந்த அங்கிளை மறுபடி பார்த்தா அவருக்கு அம்மா தேங்க்ஸ் சொன்னேன்னு சொல்லு.."
என மதி கூறியதற்கு சரியென தலை ஆட்டினாள் அந்த சின்ன சிட்டு.

" தான்வி உனக்கு எத்தனை தடவை தான் சொல்றது தெரியாதவங்க கூட இப்படி குளோஸ்சா பழக கூடாதுன்னு.."
பெரிய மனிதன் போல் தன் உடன் பிறந்தவளுக்கு அறிவுரை கூறினான் ஆருத்.

அதைக் கேட்டு மதிக்கும் சாத்விக்கிற்கும் சிரிப்பே வந்து விட்டது.
ஆனால் அவன் அதை கண்டு விட்டால் சத்தம் போட்டே வீட்டை இரண்டாக்கி விடுவான்.. அதனால் அவனுக்கு காட்டாமல் தங்களுக்குள்ளேயே சிரித்துக் கொண்டனர் அண்ணன் தங்கை இருவரும்.

அவனது அழுத்தமான குரலில் தான்வியும் சரி என்பது போல் பாவமாக தலையாட்டி வைத்தாள் இப்போதைக்கு.
"ஏன் மதி இவங்க ரெண்டு பேரும் ட்வின்ஸ் தானே..
இவன் மட்டும் ஏன் இப்படி அழுத்தமா இருக்கான்.. எனக்கு இது ரொம்ப நாளாவே இருக்குற சந்தேகம் தான்.."
என தங்கையின் தங்கையிடம் மெதுவாக கேட்டான்.

ஆருத்திற்கு கேட்டு விடக் கூடாது என்பதற்காக மெல்லிய குரலில் பேசினான் அவன் .உணவில் கவனம் செலுத்தியதால் சாத்விக் தங்கையின் முகத்தை கவனிக்கவில்லை போலும் .
அண்ணன் அப்படி கேட்டதும் அழையா விருந்தாளியாக ஷியாம் சுந்தரின் நினைவு வந்து போனது அவளுக்கு .

அவனை போலவே அழுத்தமானவன் தான் ஆருத். அதனை வெளியே சொல்லவா முடியும் ..
அவனது செயல்களிலும் சரி பேசும் போதும் சரி ஷியாம் சுந்தரையே கண் முன் கொண்டு வருவான் அவன். ஆருத்தின் ஒவ்வொரு அசைவும் அவனைப் போலவே தான் இருக்கும்.

அவனை பற்றிய யோசனையில் இருந்தவளுக்கு இப்போது அண்ணனுக்கு பதில் சொல்ல வேண்டும் என்பது உரைக்க "எனக்கும் தெரியலண்ணா.."
என கூறி சமாளித்து வைத்தாள் அவள்.

தொடரும்...


 

Mafa97

Moderator
அத்தியாயம் 💔 18

"அம்மா ப்ளீஸ்மா.. என்னை கம்பெல் பண்ணாதீங்க. எனக்கு இப்போதைக்கு கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா இல்லை . வேணும்னா அண்ணாக்கு கல்யாணம் பண்ணி வைங்க .."
என கோபத்தில் பொறிந்து தள்ளினாள் வருணிக்கா.

மீனாவிற்கு இருக்கும் ஒரே கவலை மகன் மற்றும் மகளினது திருமணம் தான்.
ஷியாம் சுந்தரிடம் இதைப் பற்றி பேசவே அவருக்கு பயம் .
அதனால் தான் தினமும் மகளிடம் திருமணம் செய்து கொள்ளும்படி அவர் கூறுவது. பெண் பிள்ளை வேறு அல்லவா ..வயது ஏறிக் கொண்டே போகும் போது சராசரி அன்னைக்கு தோன்றும் பயம் தான் அவருக்கும் தோன்றிற்று.


அவர் எப்போது கேட்டாலும் சொல்லும் பதிலையே தான் இன்றும் கூறுகிறாள் அவள். அவர்களுக்கு அருகில் அமர்ந்து இருந்த ராகவ்வும் இந்த பேச்சு வார்த்தையை கேட்டுக் கொண்டு தான் இருந்தார். அவரது சிறு வயதிலேயே பெற்றோர் இறந்து விட மீனாவின் பெற்றோரிடம் தான் அவர் வளர்ந்து வந்தார். அன்றிலிருந்து இன்று வரை அவர் மீனாவுடன்
' அக்கா.. அக்கா '
என்று பாசமாக இருப்பார்.

இப்போதும் மீனாவின் வீட்டில் தான் இருக்கிறார். தன்னால் முடிந்த மட்டும் ஷியாம் சுந்தருக்கு தொழிலில் உதவுகிறார் அவர்.

"ஏண்டி இப்படி என்னை கஷ்டப்படுத்துறீங்க. யாரையாவது காதலிக்கிறாயா ?
அப்படின்னா சொல்லித் தொலை
கல்யாணம் பண்ணி வைக்கிறோம். இப்படி கல்யாணம் வேணாம்னு மட்டும் சொல்லிட்டு திரியாத‌."
அவரது பேச்சு ஆதங்கமாக வெளிப்பட்டது.


அன்னை அப்படி கேட்டதும் பழைய நினைவுகள் கண்முன்னே தோன்றின அவளுக்கு.
சாத்விக் தன்னை தேடி வருவான் என நம்பினாள் அவள் .
ஆனால் இன்று வரை அவன் வரவே இல்லை.
' என்னை விட அந்த மதியழகி தான் முக்கியமா போச்சு அவருக்கு ..'
என கோபமாக மனதில் எண்ணிக் கொண்டாள் பெண்ணவள்.

அவனை மறக்க தன்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்து விட்டாள். அவனை மறக்கிறேன் எனக் கூறிக் கொண்டு அவனை மேலும் அதிகமாக நினைத்தாள் என்றே கூறலாம்.
சில நேரம் 'அன்னை சொல்வதைப் போல் யாரையாவது திருமணம் செய்தால் என்ன?'
எனத் தோன்றும் .

ஆனால் மறு நொடியே சாத்விக்கின் நினைவு வந்து அந்த யோசனையை அடியோடு அழித்து விடும் .
அவள் தனக்குள்ளேயே சிந்திப்பதை கண்ட ராகவ்
" அக்கா அவ யோசிச்சு நல்ல முடிவா சொல்லுவா.. நீ இப்படி தினமும் சொல்லிக்கிட்டே இருக்காத.. போ போய் சமையல் ஆச்சான்னு பாரு.." என மீனாவை அங்கிருந்து அப்புறப் படுத்தினார்.


மீனாவும் தனக்குள்ளேயே புலம்பிக் கொண்டு சமையலறை நோக்கி சென்று விட அவரது தலை மறைந்ததும் வருணிகா புறம் திரும்பிய ராகவ்
" வரு நீ என்ன நினைச்சுட்டு கல்யாணம் வேண்டாம்னு சொல்றேனு எனக்கு தெரியாது. ஆனால் அம்மாவும் பாவம். அவங்களுக்கும் தன்னோட பொண்ணு கல்யாணம் பண்ணிட்டு குழந்தைகளோடு வாழ்வதை பார்க்க ஆசையா இருக்கும்.. இதுக்கு மேல உன் இஷ்டம்.." எனக் கூறி விட்டு எழுந்து சென்று விட்டார்.

அவர் கூறியதில் இருந்த உண்மை புரிந்தாலும் அவளால் சாத்விக்கை விட்டு வேறு ஒருவனை திருமணம் செய்து கொள்ளவே முடியாது என்பது தான் நிதர்சனம்.
அவனை பற்றிய யோசனையிலேயே அமர்ந்து இருந்தாள் அவள்.

*********************

தனது அலுவலக அறையில் அமர்ந்து தீவிரமாக வேலை பார்த்துக் கொண்டு இருந்தார் ஷியாம் சுந்தரை
கதவு தட்டும் ஓசை கலைத்தது.
" எஸ் கம் இன் .."
எனக் கூறியவன் மீண்டும் வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டான்.


அவனது அனுமதி கிடைத்ததும் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த தீபக்
"சார் .."
என அழைத்தான் தயக்கமாக. வேலை செய்து கொண்டிருக்கும் போது பேசினால் ஷியாம் சுந்தருக்கு கோபம் வரும் என்பதாலேயே இந்த தயக்கம்.

அவனது குரலில் நிமிர்ந்து பார்த்த ஷியாம் சுந்தர்
"என்ன?"
என்றான் ஒற்றை கேள்வியாக .
"சார் நீங்க சொன்ன மாதிரி புதுசா சென்னைல ஓபன் பண்ணி இருக்க கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனிகளோட டீடைல்ஸ் கலெக்ட் பண்ணிட்டேன்."
என்று கூறியபடி கையில் இருந்த கோப்பை அவனிடம் கொடுத்தான்.


இதுவரை பெரிய பெரிய ப்ராஜெக்ட் மட்டுமே எடுத்து அதை திறம்பட செய்து கொண்டு இருந்த ஷியாம் சுந்தர் இப்போது சின்ன சின்ன ப்ராஜெக்ட்களையும் எடுத்து அதை புதிதாக தொடங்கி இருக்கும் அல்லது சிறிய அளவில் பிராஜெக்ட் செய்து வரும் கம்பெனிகளுக்கு கொடுத்து அதிலும் இலாபம் பெற எண்ணினான்.
அதற்காகத் தான் இந்த தகவல்களை சேகரிக்க கூடியிருந்தான் அவன்.


அந்தக் ஃபைலில் சாத்விக்கின் கம்பெனி பெயரும் இருந்தது.
ஏ . வி கன்ஸ்டிரக்ஷன் என்று இருந்ததால்
அது சாத்விக்கின் கம்பெனி என்று இவனுக்கு தெரியாமல் போனது. அந்த ஃபைலை ஒரு நிமிடம் பார்த்து விட்டு
"இந்த கம்பெனிகளுக்கு டீடைல்ஸ் எல்லாம் அனுப்பு.
அவங்க ஓகே சொன்னா அடுத்த வாரம் இங்க நம்ம கம்பெனிக்கு மீட்டிங்கு வர சொல்லு.."
என்று கூறியவன் மீண்டும் விட்ட வேலையை தொடர்ந்தான்.

அவன் கூறியதை போல் அனைத்து கம்பெனிகளுக்கும் செய்தி அனுப்பினான் தீபக். அந்த செய்தியை பார்த்ததும் சாத்விக்கிற்கு அதிர்ச்சியாக இருந்த அதே வேளை மகிழ்ச்சியாகவும் இருந்தது. அது ஷியாம் சுந்தரின் கம்பெனி என்று அறிந்து கொண்டவனால் அதை தொடர மனமே இல்லை.

தங்கையின் வாழ்க்கையில் மீண்டும் இதனால் பிரச்சனை ஏற்பட்டு விடுமோ என பயந்தான் அவன்.
அதே சமயம் இப்படி ஒரு நல்ல வாய்ப்பு அவனுக்கு கிடைக்கப் போவதுமில்லை .
பெங்களூரில் நண்பன் ஒருவனுடன் சேர்ந்து தான் அவன் தொழில் செய்தது .

தந்தையின் பணத்தை வைத்து எதுவுமே செய்யக் கூடாது என நினைத்தவன் படித்து முடித்ததும் நண்பனுடன் இணைந்து தொழிலில் இறங்கினான்.
சிறிது சிறிதாக முன்னேறி இப்போது தான் ஒரு நிலைக்கு வந்திருந்தார்கள் அவர்கள். சென்னையில் கம்பெனி நிறுவுவது சாத்விக்கிற்கு நீண்ட நாள் ஆசை. ஆகையால் தனது பங்கை பிரித்து எடுத்துக் கொண்டு இப்போது சென்னைக்கு வந்தாயிற்று.


புது கம்பெனி என்பதால் பெரிதாக எந்த ப்ராஜெக்ட்களும் கிடைப்பது இல்லை. அதனால் இந்த சந்தர்ப்பத்தை நழுவ விட மனம் இல்லை அவனுக்கு .
இதைப் பற்றி தங்கையிடம் கூறி ஒரு நல்ல முடிவாக எடுக்கலாம் என நினைத்தவன் வீட்டுக்கு கிளம்பி சென்றான்.

சாத்விக்கிற்கு ஷியாம் சுந்தர் மேல் மலை அளவு கோபம் இருந்தது.
ஆனால் வெளியே காட்ட முடியவில்லை என்பதை விட மதியழகி தடுத்து வைத்திருந்தாள்
என்று கூறுவதே சரியானது.

" அண்ணா நீ அவரை ஏதாவது செய்யறேன்னு போய் உனக்கு ஏதாவது ஆச்சுன்னா உன்னை நம்பி இருக்கிற என்னோட நிலைமை..
அதுவும் இல்லாம அவர் மட்டுமே என் வாழ்க்கையில விளையாடல. பாட்டி உட்பட மொத்த குடும்பமே எனக்கு அநியாயம் தான் செஞ்சாங்க. ஒவ்வொருத்தரையும் நாம பழிவாங்க முடியாது .
அவங்க முன்னாடி வாழ்ந்து காட்டுவோம் ..
அப்புறம் முக்கியமான விஷயம்.. குழந்தைகளை பற்றி அவருக்கு எந்த சூழ்நிலையிலும் தெரிய வரவே கூடாது.. அதன் பிறகான பின் விளைவு மோசமா இருக்கும்.. சோ அமைதியா வாழ்ந்துட்டு போகலாம் அண்ணா.. ப்ராமிஸ் பண்ணு.."
எனக் கூறி அவனிடம் சத்தியம் வாங்கி விட்டாள்.

ஷியாம் சுந்தருடன் மோதும் அளவு செல்வாக்கு இல்லை அவனிடம். தான் ஏதாவது செய்யப் போய் குழந்தைகளுக்கும் மதிக்கும் ஏதாவது ஆகி விட்டால் இப்போது நினைத்து பார்க்கையிலே பயமாக இருந்தது அவனுக்கு.
" என்ன அண்ணா அமைதியா இருக்க..?"
என்ற மதியழகியின் கேள்வியில் தான் சுயம் பெற்றான் அவன்.

இரவு உணவிற்கு பிறகு பேச வேண்டும் என அவளைத் தோட்டப்பக்கம் அழைத்து வந்தவன் எப்படி பேசுவது என தெரியாமல் தான் இத்தனையும் யோசித்துக் கொண்டு இருந்தான். ஷியாம் சுந்தரின்
கம்பெனி மூலம் வந்த செய்தியை தயங்கிய படியே கூறி முடித்தவன் அவளது முகம் பார்த்தான்.

அதில் எந்த சலனமும் இல்லை. "உனக்கு புடிக்கலைன்னா விட்டுடுவோம் "
என்று அவசரமாக சாத்விக் கூற "நான் அப்படி சொல்லவே இல்லையே அண்ணா.
எனக்கு முழு சம்மதம் .
இது உன்னோட திறமையை காட்ட கிடைச்சிருக்க சந்தர்ப்பம்.
அதை நழுவு விடாம கெட்டியா பிடிச்சுக்கோ.. அப்புறம்..."
என்று முதலில் அண்ணனுக்கு சம்மதம் கூறியவள் கடைசியாக வாக்கியத்தை முடிக்காமல் இழுத்தாள் ..


அவள் என்ன கூறப் போகிறாள் என பார்த்துக் கொண்டு இருந்தான் சாத்விக்.
அவள் என்ன சொன்னாலும் அவன் மறுப்பு தெரிவிக்க போவதில்லை.

" அப்பறம் அண்ணா..
முக்கியமான விஷயம், குழந்தைகளை பற்றி எப்பவுமே அவருக்கு தெரியக் கூடாது .
இவங்க என்னோட குழந்தைங்க. அவரு அவங்களை ஏதாவது பண்ணிட்டாலோ இல்லை அவங்களை என்கிட்ட இருந்து பிரிச்சிட்டாலோ என்னால தாங்க முடியாது அண்ணா ..இப்போ அவர் கல்யாணம் பண்ணிட்டு நிம்மதியா வாழ்ந்துட்டு இருக்கலாம். குழந்தைகள் விஷயம் அவரோட மனைவிக்கு தெரிஞ்சா பெரிய பிரச்சினை ஆயிடும்.." என தனது மனதில் உள்ளவற்றை அண்ணனிடம் கூறினாள் மதி‌.
சிறிது நேரம் யோசித்தவன்
"இந்த ப்ராஜெக்ட் நமக்கு வேணாம்மா.."
என்றான் முடிவாக.
அதைக் கேட்டு அதிந்தவள்
அவனை பேசிப் பேசியே கறைத்தாள்.
தங்கையின் உறுதியில் அவன் தான் சரி என்று சொல்ல வேண்டியது ஆயிற்று .


தாங்கள் இதற்கு சம்மதிப்பதாக கூறி மெயில் அனுப்பியவன் அவர்களின் பதிலுக்காக காத்திருந்தான் .
திங்கட்கிழமை காலை 10 மணிக்கு அவர்களது ஆபீசுக்கு வரும் படி தீபக் பதில் அனுப்பி இருக்க அந்த நாள் அவனால் அங்கு செல்ல முடியாத சூழ்நிலை .

அதே நாள் தான் இவன் ஒரு முக்கியமான கிளைன்டை சந்திக்க வேண்டும். அவரை இவனை தான் சென்று சந்தித்தாக வேண்டிய கட்டாயம்.
அவன் வருவதாக கூ றிவிட்டு தங்கையை அனுப்பினால் கிடைக்க இருக்கும் ப்ராஜெக்ட் கிடைக்காமல் போய் விடக்கூடும்.


அதற்காக ஷியாம் சுந்தரின் கம்பெனிக்கும் தங்கையை அனுப்ப முடியாது .
அவனது யோசனை படிந்த முகத்தை கண்ட மதியழகி என்னவென்று விசாரித்தாள் ‌.


இவன் தங்கையிடம் இருக்கும் சிக்கலை கூற அவளோ எந்தவித யோசனையும் இன்றி
" அவரோட கம்பெனிக்கு நான் போறேன் ..
ஃபர்ஸ்ட் டைம் போறது தானே..நான் போனாலும் ஒன்று தான்.. நீ போனாலும் ஒன்னு தான். அந்த இடத்துக்கு நீ போகலேனா பெரிய நஷ்டம் ஆயிடும்.. இவரை பார்த்து பயந்துட்டு இருக்க நான் பழைய மதி இல்லை.." என்றாள் தைரியமாக ..


அவளின் தைரியமான பேச்சைக் கேட்டு அவனுக்கே ஆச்சரியமாகி போனது.
இனிமேல் தங்கையை பற்றி தான் பயப்படத் தேவையில்லை என்பதை உணர்ந்து கொண்டான் அவன்.


சாத்விக்கிடம் கூறியது போல் திங்கட்கிழமை ஷியாம் சுந்தரின் அலுவலகம் நோக்கி தனது அண்ணனின் காரில் சென்றாள் மதியழகி.
அவளுக்கு காரை கொடுத்து விட்டு சாத்விக் தனது பைக்கில் சென்று இருந்தான் ..


சேலையை நேர்த்தியாக அணிந்து இருந்தவள் தலைமுடியை விரித்து விட்டு அதில் காதோரமாக உள்ள சிறிதளவு முடியை எடுத்து சிறு கிளிப்பிற்குள் அடக்கி இருந்தாள்.
காதில் சிறிய தோடு கழுத்தில் சின்னதாக ஒரு செயின் மட்டுமே.. நெற்றியில் கருப்பு நிற சிறிய பொட்டு.. மேலும் கண்ணை உருத்தாத மிதமான மேக்கப் போட்டு அழகியாக இருந்தாள் அவள்.

இரண்டு குழந்தைகளின் தாய் என்று சத்தியம் செய்து சொன்னால் கூட நம்ப மாட்டார்கள்.
அவளுடன் மேலும் சிலர் அந்த அறையில் காத்துக் கொண்டு இருக்க எல்லோரிடமும் ஒரு சிநேக புன்னகையை சிந்தியவள் அமைதியாக அந்த அறையை வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டாள்.

என்ன தான் சாத்விக்கிடம் தைரியமாக பேசிவிட்ட போதும் உள்ளுக்குள் பயம் இருக்கவே தான் செய்தது அவளுக்கு .
தினமும் குணத்தில் அவனைப் போலவே இருக்கும் மகனை சமாளித்து வருவதால் ஓரளவுக்கு அவனையும் எதிர்கொள்ளலாம் என்று நம்பினாள் இப்போது.

முதலில் அந்த அறைக்குள் தீபக் தான் வந்தான்.
எந்தெந்த கம்பெனிகள் வந்து இருக்கின்றன என்று கணக்கிட்டு கொண்டு வந்தவன் மதியழகியை அந்த கூட்டத்தில் கண்டு விட்டு அதிர்ச்சியாக அப்படியே நின்று விட்டான்.
மதியழகி அவனை பார்த்து மெல்லிய புன்னகை ஒன்றை சிந்தினாள்.. பதிலுக்கு புன்னகைக்க கூட முடியவில்லை தீபக்கால் .


'பழைய உடையுடன் அழுது முகமெல்லாம் வீங்கி இருந்த அந்த பெண்ணா இது ?'
அவனால் நம்பவே முடியவில்லை. அனைவரின் முன்னிலையிலும் கேட்கவும் முடியாது.. முக அமைப்பு மட்டுமே இருவருக்கும் ஒத்துப் போனது ...
உடை, அவளது முகத்தில் இருக்கும் கம்பீரம், சிரிப்பு எதுவும் பழைய மதியுடன் ஒத்துப் போகவில்லை..

எதற்கும் பெயரை மட்டுமாவது கேட்போமே என நினைத்தவன் அதை அவளிடம் கேட்டும் விட்டான்‌. அவள் யார் என்று தெரிந்து கொள்வதில் அத்தனை ஆர்வம் அவனிடம்.
அவனது கேள்விக்கு பதில் அளிப்பது போல் அதே மெல்லிய புன்னகையை முகத்தில் படர விட்டு
"மதியழகி" என்றாள் கம்பீரமாக ..


தொடரும்....


 

Mafa97

Moderator
அத்தியாயம் 💔 19

தனது பெயரை மெல்லிய புன்னகையுடன் அழுத்தமாக அவள் கூற தீபக்கிற்கு இருந்த கொஞ்சநஞ்ச சந்தேகமும் தீர்ந்து போனது . அவளை இப்படி பார்க்கும் போது அவனுக்கு நிறைவாக இருந்தது.
அவள் ஷியாம் சுந்தரிடம் இருந்து தப்பிச் சென்று நல்ல நிலைமையில் இருப்பது அவனுக்கு மகிழ்ச்சியே.
அதற்கு மேல் அவளை தெரிந்ததை போல் அவன் எதுவும் பேசவில்லை.

அமைதியாக தனது கடமையை செய்து கொண்டு இருந்தான் அவன். அதனால் மதியழகியும் அமைதியாகவே இருந்து விட்டாள். முயன்று தனக்குள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஷியாம் சுந்தரின் வருகைக்காக காத்திருந்தாள் பெண்ணவள்.

அவர்களையெல்லாம் சிறிது நேரம் காத்திருக்கும் படி கூறிய தீபக் வெளியே சென்று விட்டான்.
அவன் கூறியதைப் போல அடுத்த ஐந்து நிமிடங்களில் "தட்... தட்" என்று சத்தம் மதியழகியின் காதுகளுக்கு கேட்டு பழைய நினைவுகள் எழுந்து அவளை மிரட்டியது.


ஆனாலும் அவள் வெளியே தைரியமாகத் தான் இருந்தாள் ‌
...
இதற்கு மேலும் அவனுக்கு பயப்படக் கூடாது என்று மீண்டும் மீண்டும் தனக்குள் கூறிக் கொண்டாள் அவள் .
ஷியாம் சுந்தர் முன்னாள் வர அவனுடன் தீபக் மற்றும் இன்னும் சில பேரும் அவனது பின்னால் வந்தனர்.

அங்கு நடுநாயகமாக போடப்பட்டு இருந்த இருக்கையில் வந்து கம்பீரமாக அமர்ந்தவன் அனைவரையும் தன் லேசர் கண்களால் ஒரு நொடி அளவிட்டான்.
அப்போதே அவனது கண்கள் மதியழகியை கண்டு கொண்டதாக அவனது நெற்றி சுருக்கமே காட்டிக் கொடுத்தது.

ஆனால் அடுத்த கணமே முகத்தை இயல்பாக்கி கொண்டவன் எல்லோருக்கும் வணக்கம் கூறினான். மதியழகியும் முகத்தில் பயத்தை காட்டாதவாறு அனைவரோடும் சேர்ந்து அவனுக்கு பதில் வணக்கம் கூறினாள்.
அடுத்து ஒரு நொடி கூட தாமதிக்காமல் தனது திட்டத்தை எல்லோருக்கும் அவன் விளக்க ஆரம்பித்தான். இதில் மதியழகுக்கு முழு திருப்த்தி.
அவர்களிடம் வேலைக்கு என்று போதிய ஆட்களும் இருந்ததால் ஒப்பந்தத்தில் கையெழுத்தும் இட்டாள் அவள்..

மீட்டிங் முடிந்ததும் வந்தவர்களுக்கு என்று சிற்றுண்டி வழங்க அதில் கலந்து கொள்ள விரும்பாத மதியழகி எழுந்து செல்ல முற்படும் போது தூரத்தில் தீபக்குடன் பேசிக் கொண்டு இருந்தவன் அவளை பார்த்து விட்டான்.
மதியழகியை பார்த்தபடியே தீபக்கிடம் ஷியாம் சுந்தர் ஏதோ கூற அவனது முகமோ பதட்டமானது.

இருந்தும் அவனது பேச்சைக் கேட்டு மதியழகியை நோக்கி வந்தான் தீபக். அவன் அருகே வந்ததும் மதியழகியும் தனது நடையை நிறுத்தி அவனை கேள்வியாக பார்த்தாள்.
" மிஸ் மதியழகி.. உங்க கூட பேசணும்னு எங்க எம்டி பிரியப்படுறார்.."
என மரியாதையாகவே அவளிடம் பேசினான் தீபக்.


அவளே தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளாத பட்சத்தில் தானும் அவளுடன் தெரிந்தவர் போல் பேசுவது நாகரீகமான செயல் அல்ல என்பதை உணர்ந்தே அவன் அப்படி பேசியது.
தீபக் கூறிய செய்தியை கேட்டு அதிர்ந்து தான் போனாள் அவள். இப்படி நேரடியாகவே அவன் தன்னிடம் பேசக்கூடும் என அவள் ஒருபோதும் நினைக்கவில்லை.

அவன் ஆபீஸில் வைத்து இத்தனை பேர் முன்னிலையில் தன்னை எதுவும் செய்து விடமாட்டான் என நம்பினாள் மதியழகி .
அதனால் வெளியே தைரியமாக இருப்பது போல் காட்டிக் கொண்டு தீபக்குடன் நடந்து சென்றாள் ஷியாம் சுந்தர் என்ற இடத்தை நோக்கி.

அவள் தான் இருந்த இடத்தை அடையும் வரை தனது பார்வையை மாற்றிக் கொள்ளவில்லை ஷியாம் சுந்தர்.அவளையே தான் பார்த்துக் கொண்டு இருந்தான்.
அவளோ பதட்டத்தில் இருந்தாலும் "கண்ணு ரெண்டையும் நோண்டி எடுக்கணும்... பாக்குறத பாரு.."
என தனக்குள்ளேயே அவனைத் திட்டவும் மறக்கவில்லை ...

"ஹலோ மிஸ் மதி ...அழகி.."
என்றான் அவள் முன்னே தனது கையை நீட்டியபடி.
அவனது முகத்தையும் அவன் நீட்டிய அந்த கையையும் ஒரு நொடி மாறி மாறி பார்த்தவள் மறு நொடியே கைகூப்பி அவனுக்கு வணக்கம் வைத்தாள்.

அதில் ஒரு மாதிரி புன்னகைத்தவன்
" ஓ தமிழ்நாட்டு பொண்ணு இல்ல.. நான் மறந்தே போயிட்டேன்.. அப்புறம் என்னோட ரூமுக்கு போய் பேசலாமா?"
என்று தாடையை தடவியபடி கேட்க கண்களை அதிர்ச்சியில் விரித்து அவனைப் பார்த்தாள் மதியழகி.

தீபக்கோ இருவரையும் விட்டு சற்று தள்ளி நின்று இருந்தான்.
அவளது பார்வையை உணர்ந்தவன்
"ரூம்னா பெட்ரூம் இல்லை.. இந்த ஆபீஸ்ல இருக்க என்னோட ரூம்.. ஆமா நீ என்ன நெனச்ச?"
என்று கேலியாக கேட்டிட இப்போது அவனை அடிக்க வேண்டும் போலவே இருந்தது அவளுக்கு.


அதற்கு மேல் அங்கு நிற்காமல் கைகளால் அவளை தன்னை நோக்கி பின் தொடரும் படி சைகை செய்து விட்டு முன்னே நடந்தான் அவன்.
அனைவர் முன்னாலும் மறுப்பு தெரிவிக்க முடியாத காரணத்தால் மௌனமாக அவன் பின்னே சென்றாள் அவள் ‌‌..போகும் இருவரையும் புரியாமல் பார்த்து இருந்தான் தீபக்..

தனது அலுவலக அறைக்குள் வந்த பின் அவளை அமரச் சொல்லி விட்டு தானும் அமர்ந்து கொண்டான்.
என்ன பேசப் போகிறானோ என பயத்துடன் அவனைப் பார்த்தபடி அமர்ந்து இருந்தாள் மதியழகி‌.
" முன்ன விட அதிகமாகவே தைரியம் வந்துடுச்சு போல.. அப்புறம் காஸ்டியூம் எல்லாம் சேஞ்ச் ஆகி... ஒரு கம்பெனியோட எம்டி யா வேற இருக்கீங்க. பெஸ்ட் ஆப் லாக் ...."
என அவனே பேச்சை ஆரம்பித்து வைத்தான்.

"சாரி சார் நான் இந்த கம்பெனியோட எம்டி இல்லை. என்னோட அண்ணா சாத்விக் தான் கம்பெனியோட எம்டி.." என்றாள் இப்போது தைரியமாக.
அவன் முன்னால் பயத்தை சிறிதளவேனும் முகத்தில் காட்டினால் அதை வைத்தே தன்னை அவன் மேலும் பயமுறுத்த செய்வான் என உணர்ந்தவள் தைரியமாகவே பேசினாள்..

அவளை தனக்குள்ளேயே மெச்சிக் கொண்டவன்
"மறுபடியும் அன்பு செல்வன் பேச்சைக் கேட்காமல் ஒழுங்காய் இருக்கிற வேலையை பாரு. இன்னொரு வாட்டி என்கிட்ட வந்து மாட்டிக்கிட்டா சாகும் வரை என்னோட சிறையில் தான் இருக்கணும்.
இன்னொரு விஷயம்... அன்னைக்கு நீங்களா ஒன்னும் தப்பிச்சு போகல ...எனக்கு நீ போர் அடிச்சுட்ட..சோ போனா போகட்டும்னு விட்டுட்டேன்..." என பேசிவிட்டு அவளை ஒரு மாதிரியாக பார்த்தான்..

அவனது பார்வை வித்தியாசத்தை உணர்ந்தவள் நன்றாக இருந்த தனது சேலையை மேலும் சரி படுத்திக் கொண்டாள்.
அவளது செயலை பார்த்து சத்தமாக சிரித்தவன்
" நான் பார்க்காத எதுவும் புதுசா உன்கிட்ட இல்லை.. ரொம்ப மூடாத... ஆனாலும் முன்ன விட ரொம்பவே செம்மையா இருக்க"
என்றான்.
அவனது அந்த சிரிப்பு அழகாக இருந்த போதும் ஏனோ மதியழகிக்கு மட்டும் வில்லன் சிரிப்பு போல் தோன்றியது அந்த சிரிப்பு .

மேலும் தற்போது அவன் கூறிய வார்த்தைகளில் கூனிக்குறுகிப் போனாள் அவள்.
இதற்கு மேலும் இங்கு தாமதித்தால் வேறு என்ன வேண்டுமானாலும் அவன் பேசக் கூடும் என பயந்து போனவள் தனது இருக்கையில் இருந்து எழுந்து
"சாரி சார் எனக்கு டைம் ஆச்சு.. வரேன்"
என கூறிவிட்டு அவனது பதிலை கூட எதிர்பார்க்காமல் அந்த அறையை விட்டு வெளியேறி விட்டாள் ...

இதழில் கேலி புன்னகையுடன் அவள் சென்ற திசையை பார்த்து இருந்தவனோ தோள்களை குலுக்கிக் கொண்டு வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டான்.

********************

தினமும் மாலையில் கனகாவை அழைத்துக் கொண்டு தான்வி, ஆருத் இருவரும் அன்று சென்ற பூங்காவிற்கு செல்வதை வழக்கமாக்கிக் கொண்டு இருந்தனர் .
மூவரையும் அவர்களுக்கே தெரியாமல் பார்த்துக் கொண்டு வருகிறார் ராகவ்.
அன்று அவர்களை கண்டதிலிருந்து ஏதோ ஒரு இனம் புரியாத பாசம் இருவர் மேலும் தோன்றியது .

அதனால் அவரும் தினமும் மாலை தனக்கு இருக்கும் வேலைகளை எல்லாம் விட்டு விட்டு இவர்களை கவனிப்பதையே வேலையாக வைத்துக் கொண்டு இருந்தார்.
தான்வி வாய் மூடாமல் பேசிக் கொண்டே இருப்பதை காண கண் கோடி வேண்டும் என்றே தோன்றும் அவருக்கு. இன்றும் அவர்கள் மூவரையும் ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்தவருக்கு இன்றேனும் அவர்களிடம் சென்று பேச வேண்டும் என்ற எண்ணம் தோன்ற எதேர்ச்சியாக அந்தப் பக்கம் செல்வதை போல் அவர்களை கடந்து நடந்து சென்றார்.

அந்த நேரம் அவரை சரியாக இனம் கண்டுகொண்ட
தான்வி
" ராகவ் அங்கிள்..."
என சத்தமாக அழைத்தாள் அவரை. அதில் இதழில் புன்னகையுடன் அவள் புறம் திரும்பியவர் அப்போது தான் அவளை காண்பது போல
"ஹே தான்வி குட்டி நீங்களும் இங்கே தான் இருக்கீங்களா..?"
என்று பேசிய படி அவள் அருகே வந்து அவளது தலையை பாசத்தோடு வருடி விட்டார்.

அந்த இடத்தில் கனகாவும் தான்வியும் மட்டுமே இருந்தனர். ஆருத் சற்று தள்ளிச் சென்று அங்கு இருந்த ஆண் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்ததால் அவரை அவன் காணவில்லை. ராகவ்வை கண்டு கனகாவும் மெல்ல புன்னகைத்து விட்டு இருந்த இடத்திலேயே அமர்ந்து கொண்டார்.

ராகவும் தான்வியும் நீண்ட நேரம் பேசியபடி விளையாடினர். நேரமாவது உணர்ந்த ராகவ் "தான்வி குட்டி அங்கிளுக்கு டைம் ஆச்சு.. நான் போகட்டா?.."
என்று அனுமதி கேட்டார் அந்த சின்ன குழந்தையிடம்..

இவளும் பெரிய மனுஷி
போல்
" ஓகே அங்கிள் ..ஆனா நாளைக்கும் வரணும்... "
என அவரிடம் உறுதி வாங்கிய பிறகே அவரை செல்ல அனுமதித்தாள்.
கனகாவிடமும் விடை பெற்றவர் தான்வியின் நெற்றியில் இதழ் பதித்து விட்டே சென்றார்.

********************

ஷியாம் சுந்தருடன் இணைந்து வேலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டாள் மதியழகி .
இந்த ப்ராஜெக்ட் கிடைத்த அதே நேரம் அவர்களுக்கு வேறு ஒரு ப்ராஜெக்ட்டும் கிடைத்து இருந்தது. அதனால் சாத்விக் அதில் பிஸியாகி விட மதியழகி தான் ஷியாம் சுந்தரின் கம்பெனி ப்ராஜெக்ட் செய்ய வேண்டிய கட்டாயம்..

அன்று அவள் வேலையை தொடங்கும் முதல் நாள் என்பதால் கோயிலுக்கு செல்ல விரும்பினாள்.
ஷியாம் சுந்தரின் கம்பெனி மூலம் அவர்களுக்கு கிடைத்திருப்பது ஒரே மாதிரியான அமைப்பில் மூன்று வீடுகளை அமைத்துக் கொடுக்கும் திட்டமே.
முதல் நாள் என்பதால் சாத்விக்கும் தங்கைக்கு சரியான முறையில் வேலைகளை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று தங்கையை அழைத்துக் கொண்டு தனது காரில் சென்றான்.

"அண்ணா போறப்போ அப்படியே கோயிலுக்கு போயிட்டு போகலாம்.."
என்று மதியழகி கூற அதுவே அவனுக்கு சரியாக பட போகும் வழியில் இருந்த ஒரு கோயிலில் தனது காரை நிறுத்தினான். அவனுக்கு முன்னமே மதியழகி கோயிலுக்குள் சென்று விட காரை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு வரும் போது தூரத்தில் வருணிக்கா நிற்பது போலவே அவனது கண்களுக்கு தெரிந்தது.


கண்ணை கசக்கிக் கொண்டவன் அவள் தானா என மீண்டும் பார்த்தான்.
சந்தேகம் எதுவும் இன்றி அது அவளே தான்..
அவன் கண்ட காட்சியை அவனால் நம்பவே முடியவில்லை.. ஐந்து வருடங்கள்.... முழுதாக ஐந்து வருடங்கள் கழித்து இன்று அவளை பார்க்கிறான் அவன்..

எனவே அவளது கண்களுக்கு தான் படாதவாறு மெல்ல மறைந்து மறைந்து சென்று நன்றாக அவளை பார்க்கக் கூடிய ஒரு இடத்தில் நின்று கொண்டான்.
முதலில் அவன் கண்கள் ஆராய்ந்தது என்னவோ அவளது கழுத்தையும் நெற்றியையும் தான். 'ஒரு வேலை அவளுக்கு திருமணமாகி இருந்தால்?'
என்ற கேள்வி தோன்ற பதறிப் போய் விட்டான் அவன்.

திருமணம் ஆனதற்கான எந்த அடையாளமும் அவளிடம் இல்லாததால் ஏன் என்றே தெரியாமல் ஒரு இதம் பரவியது அவனது உடல் முழுவதும். 'திருமணமாகவில்லை என்ற போது ஏன் அவள் தன்னை தேடி இன்னும் வரவில்லை.. ஆக அவள் இன்னும் அவள் அண்ணனை தான் நம்புகிறாள். நான் அவளுக்கு வேண்டாதவன் ஆகிவிட்டேன். அப்படி என்றால் அவர்களது காதல் கானல் நீராகிவிட்டது..' என்ற எண்ணம் தோன்ற அவள் மேல் கட்டுக்கடங்காத கோபம் பெருகியது அவனுக்கு ..

அதே கோபத்துடன் அவளது கண்களில் படாமல் தங்கையை தேடி கோயிலுக்குள் சென்று விட்டான் .
'அவள் தான் தன் அண்ணனின் தவறை உணர்ந்து என்னிடம் வரவேண்டும் ..'
என அவன் மனம் முரண்டு பிடித்தது..

அவன் தன்னைத் தேடி வர வேண்டும் என்று அவளும்,
அவள் தன்னை தேடி வர வேண்டும் என்று அவனும் நினைத்துக் கொண்டு பிடிவாதமாக நாட்களைக் கடத்த இருவருக்கும் இடையே அவர்களது காதல் தான் ஊசலாடியது.

இருவரும்
தங்களிடம் இருக்கும் தப்பை இன்றுவரை புரிந்து கொள்ளவில்லை என்பது சத்தியமான உண்மை.
காலம் தான் இருவரின் உண்மையான காதலையும் சேர்த்து வைக்க வேண்டும்.
இதற்கு இடையில் என்னென்ன நடக்க காத்திருக்கிறதோ... அனைத்தும் நம்மை படைத்த அந்த கடவுளின் கைகளில் தான் உள்ளது.

தொடரும்...


 

Mafa97

Moderator
அத்தியாயம் 💔 20

" என்ன அண்ணா இப்ப தான் வர்ற.. இவ்வளவு நேரம் எங்கே போயிருந்த?"
என்று தனது அருகே வந்து நின்ற அண்ணனை பார்த்து கேட்டாள் மதியழகி.

"ஓ அதுவா தெரிஞ்சவங்க ஒருத்தரை ரொம்ப நாளைக்கு அப்புறம் பார்த்தேன்மா.. அதான் பேசிட்டு இருந்தேன் .."
என அவளிடம் பொய் கூறி சமாளித்தான் சாத்விக். அதை அவளும் நம்பி விட்டாள்.
சாமி கும்பிட்டு விட்டு இருவரும் கோவிலை விட்டு வெளியே வந்தனர் .

தங்கைக்கு தெரியாமல் அவனது கண்கள் வருணிகாவை அந்த இடம் எங்கும் தேடின.
ஆனால் அவன் கண்களுக்கு அவள் தென்படுவதாக இல்லை. ஏதோ ஒரு ஏமாற்றம் உடல் முழுவதும் பரவுவதை அவனால் தடுக்க முடியவில்லை. அதை அவனை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்பது தான் உண்மை.


மனதை ஒருநிலைப் படுத்திக் கொண்டவன் தங்கையை அழைத்துக் கொண்டு சென்று விட்டான்.
வேலைகள் அனைத்தையும் ஒழுங்கமைத்து கொடுத்தவன் மதியழகியை பொறுப்பாக இருக்கும் படி கூறி விட்டு தனது வேலையை கவனிக்க அவன் சென்ற பிறகு மதியழகி தான் அனைத்தையும் பார்த்துக் கொண்டாள்.


அன்றிலிருந்து மதியழகியின் நாட்கள் பெரும்பாலும் அந்த இடத்திலேயே கழிந்தன.
மீண்டும் ஷியாம் சுந்தரை சந்திக்கும் வாய்ப்பு அவளுக்கு கிடைக்கவே இல்லை.
அதுவே அவளுக்கு நிம்மதியை கொடுத்தது எனலாம். பகல் நேரங்களில் வேலை செய்வதும் இரவானதும் தனது இரு குழந்தைகளுடனும் நேரத்தை செலவழிப்பதுமாக அவளது நாட்கள் கழிந்தன.


தினமும் அண்ணனை கஷ்டப்படுத்தக் கூடாது என்ற எண்ணத்தில் ஸ்கூட்டியில் தான் வேலைக்கு செல்கிறாள் அவள். அன்றும் வேலை முடிய சற்றே நேரமானதால் இரவு 7 மணி போல் தான் வீட்டுக்கு கிளம்பினாள். அவள் செல்லும் வழியில் பொதுவாக ஆட்கள் நடமாட்டம் பகல் வேலைகளிலும் இருப்பது இல்லை .இப்போது இரவு நேரம் என்பதால் யாருமற்ற வீதியே அவளது கண்களில் பட்டு மனதில் சிறிது பயத்தையும் தோற்றுவித்தது .


அவள் அன்னை தந்தையுடன் இருக்கும் போதும் சரி அவர்கள் இறந்த பின்பும் சரி இப்படி இரவு நேரத்தில் தனியே வெளியே சென்றது இல்லை.
சிறிது தூரம் தனியே சென்றவளுக்கு அதுவே பழகிப்போக மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அந்த பாதையில் சென்றாள்.

திடீரென அவளது ஸ்கூட்டி தனது இயக்கத்தை நிறுத்தி விட
"ச்சே .. என்ன பிரச்சனைனே தெரியல.. இந்த நேரத்தில் போய் நிக்குது.."
என அதனை கடிந்து கொண்டவள் மீண்டும் மீண்டும் அதனை இயக்க முயன்றாள்.

ஆனால் பலன் என்னவோ பூஜ்ஜியம் தான். ஸ்கூட்டியை விட்டு இறங்கியவள் பெட்ரோல் இருக்கிறதா என்றும் பார்த்து விட்டாள்.
அதுவும் இருக்கவே
'பின்பு என்னவாக இருக்கும்?' என்ற யோசனை தோன்ற தனக்கு தெரிந்த விதத்தில் ஆராய்ந்தும் பார்த்தாள்.

சிறிது நேரம் கடந்து சென்றுவிட அப்படியே ஸ்கூட்டி ஆராய்ந்து கொண்டு இருந்தவளின் பின்னால் ஏதோ ஒரு சத்தம் கேட்டது. பயத்தில் உடல் நடுங்க அவள் திரும்பிப் பார்க்கையில் அவளைப் பார்த்து நாக்கை தொங்கப் போட்ட படிய நின்று இருந்தது ஒரு நாய்.அவளுக்கு தானே நாய் என்றால் பயம்.
இதில் வேறு அவளை சுற்றி எங்குமே இருள் சூழ்ந்து இருந்தது. அதனால் வேறு எந்த யோசனையும் இன்றி தனது ஓட்டத்தை ஆரம்பித்து விட்டாள் அவள் .
நாயும் விடாமல் அ வளை துரத்தி சென்றது. கண்கள் வேறு இருட்டிக் கொண்டு வந்தாலும் தன்னால் முடிந்த அளவு வேகமாகவே ஓடினாள் அவள்.

தூரத்தில் ஏதோ வெளிச்சம் அவளது கண்களுக்கு தென்பட வழி கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் மேலும் வேகத்தை கூட்டி ஓடினாள். நாயும் குறைத்தபடியே அவளை துரத்திக் கொண்டு ஓடியது. அந்த வெளிச்சத்தை அண்மிக்கும் போது தான் அது ஒரு காரின் ஹெட்லைட் வெளிச்சம் என்று அவளுக்கு தெரிய "ஹெல்ப் மீ .."
என்று கத்திய படியே அந்த இடத்தை அடைந்தாள் அவள்.அந்த காரில் யாரோ சாய்ந்து நிற்பது போல் அவளுக்கு தெரிந்தாலும் அது யார் என்று தெளிவாக தெரியவில்லை.. இவளது சத்தம் கேட்டு திரும்பிய அந்த நபர் பாதையோரமாக இருந்த கற்களை எடுத்து நாயை குறி பார்த்து அடிக்க அது நாயின் மேனியில் பட்டதும் அந்த நாயும் அத்துடன் அங்கிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று சென்று விட்டது .


"அப்பாடா.."
என அந்த இடத்தில் நின்று மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிய படி தனக்கு உதவியது யார் என்று பார்க்க முற்படுகையில் கண்களை இருட்டிக் கொண்டு வரவே கடினப்பட்டு கண்களை திறந்து அந்த நபரை நோக்கி சென்றாள். அவ்வளவு தான் அவளுக்கு தெரியும். அதற்கு மேல் முடியாமல் போக தொப்பென்று அந்த பாதையோரமாகவே விழுந்து விட்டாள் அவள் .


இவ்வளவு நேரமும் அவளை பார்த்திருந்த அவளைக் காப்பாற்றிய அந்த நபரான ஷியாம் சுந்தர் அவள் அருகே வந்து அவளை கைகளில் ஏந்திய படி காரை நோக்கி சென்றான்.


காரின் பின்பக்க கதவை திறந்து உள்ளே அவளை கிடத்தியவன் அங்கு இருந்த தண்ணீர் போத்தலை எடுத்து முகத்தில் சிறிதளவு தெளித்து விட்டு அவளுக்கு நீரை புகட்டவும் செய்தான்.


அதில் தன் உணர்வு பெற கண்களை மெல்ல திறந்து பார்த்து விட்டு என்ன நினைத்தாளோ பாய்ந்து அவனை அனைத்து இருந்தாள்.
ஒருவேளை பயத்தின் காரணமாக கூட அவள் அப்படி செய்து இருக்கலாம்.

அவளது செய்கையை கண்டு புருவம் சுருக்கியவன் அவளது காதருகே குனிந்து
" எனக்கு இப்போன்னாலும் ஓகே தான்... எவ்வளவு பணம் வேணும்?"
என நாவில் விஷத்தை தடவி பேசி விட தீச்சுட்டார் போல அவனை விட்டு விலகியமர்ந்தாள் மதியழகி.


கோபத்தில் அவளது நாசி துடித்தது. தன்னை முறைத்துக் கொண்டு இருந்தவளை கேலி புன்னகையுடன் பார்த்தவன் "என்னம்மா நான் ஏதாவது தப்பா கேட்டுட்டேனா என்ன ?"
என்று கேட்க அவனை ஓங்கி அரைந்தால் என்ன என தோன்றியது அவளுக்கு..


"ச்சீ உங்களுக்கு பொண்ணு தேவைப்பட்டால் அந்த மாதிரி பொண்ணுங்க கிட்ட போக வேண்டியது தானே.. உங்களையும் நம்பி கல்யாணம் பண்ண அந்த பொண்ணு ரொம்பவே பாவம். என்ன மனுஷன் நீங்க.."
என இருந்த கோபத்தில் பொரிந்து தள்ளி விட்டாள் மதியழகி.

அவளது கோபம் அவனுக்கு புதிதே. அவனுடன் இருந்த காலப்பகுதியில் அவள் கோபப்பட்டு அவன் கண்டதே இல்லை .
அதிலும் அவள் இப்போது அவனது மனைவி என்று ஏதேதோ பேச அவள் மீது தோன்றிய கோபம் சற்றே மட்டுபட்டது அவனுக்கு .
'தான் திருமணம் செய்து கொண்டு இருக்கிறேன் என நினைத்து விட்டால் போலும் ..."
என உள்ளுக்குள் நினைத்தவன் அதை வைத்தே அவளை வெறுப்பேற்ற எண்ணினான்..


ஏன் அவன் அப்படி செய்ய நினைத்தான் என்று அவனுக்கே தெரியவில்லை .அவளது கோபம் அவனுக்கு பிடித்திருக்க வேண்டும் போல. எனவே தான் அவளை மேலும் கோபப்படுத்தி பார்க்க ஆசைப் பட்டான் அவன்.

"பொண்ணுங்களுக்கா பஞ்சம் இங்கே ..
அதுவும் இல்லாம எனக்கு என்னோட வைஃப் போர் அடிச்சு போயிட்டா.. அதனால தான் உன்கிட்ட கேட்டேன்..
நீ வேற என்னை கட்டிப்பிடிச்சுக்கிட்டியா...
ம்.. எனக்கு நீ வேணும்னு தோணுது.. பணம் எல்லாம் கரெக்டா கொடுத்துடுவேன் ..."
என அவன் குரலை குழைத்துக் கொண்டு பேச அவளோ அவனை திகைத்துப் போய் பார்த்தாள்.


அவனது இந்த குரல் அவளை ஏதோ செய்தது. மனதில் சொல்லொணா பயம் வேறு ஏற்பட்டது அவளுக்கு .
தனது கண்களை சுழற்றி யாரும் வருகிறார்கள் என பார்த்தாள். கதவை திறந்து கொண்டு ஓடவும் பயம் .
இருட்டு வேறு அவளை பயமுறுத்தியது.


மேலும் அப்போது சென்ற நாய் மீண்டும் திரும்ப வந்து விட்டால்...?
' சும்மா தப்பிச்சு வெளியே போ மதி.. அந்த நாயும் இவரும் ரெண்டுமே ஒன்னு தான்.. எது கிட்ட மாட்டினாலும் காயப்பட போறது உறுதி..'
என் மனசாட்சி வேறு அவளுக்கு ஆலோசனை வழங்கியது.


" ப்ளீஸ் சார்.. என்னை விட்டுடுங்க.. எனக்காக வீட்ல காத்துகிட்டு இருப்பாங்க.."
என குழந்தைகளை மனதில் வைத்து அவனிடம் கேட்டாள்.
"ம்.. ஓகே இன்னொரு நாள் வச்சுக்கலாம் .."
என அவன் ஒரு மாதிரி குரலில் கூறிவிட்டு கண் சிமிட்ட அந்தப் பாவனையில் அதிர்ந்தவள் பட்டென காரை திறந்து கொண்டு வெளியேறி விட்டாள்.


முன்பு அவள் மேல் இருந்த கோபம் இப்போது இல்லை அவனுக்கு. அவள் செய்த தவறுக்காக அவன் தண்டனை கொடுத்து விட்டான். அதனுடன் அவளை மறந்து மற்றும் விட்டான் அவன். இப்போது கண்முன்னே பழைய மதியழகி போல் அல்லாது புது தைரியத்துடனும் கம்பீரத்துடனும் அவள் வந்து நிற்கையில் அவளை பாராட்டாமல் இருக்க முடியவில்லை அவனால் .


அதற்காக அவன் திருந்தி விட்டான் எனக் கூறி விட முடியாது. அவளுக்கு அவன் கொடுத்த தண்டனைகள் அவன் அளவில் சரியே. ஏனெனில் அவளது தவறுக்கான தண்டனைகளே அவை என்று அவன் நினைத்துக் கொண்டு இருந்தான்.

அன்று அவளை கம்பீரமான தோற்றத்தில் கண்டதிலிருந்து அவளை வெறுப்பேற்றிப் பார்க்கும் எண்ணம் தோன்றியது அவனுக்கு. அவளது கோபம் அவனுக்கு சிரிப்பை வரவழைத்தது. அதற்காகவே இப்போதும் அவளை சீண்டினான்.
அவள் தன்னிடம் தனது குழந்தைகள் பற்றி தெரிந்தால் இதே நிலை நீடிக்குமா?


அவனும் காரை விட்டு இறங்கிய படியே
"ஓகே போ .."
என்றான் நிதானமாக.
ஆனால் அவள் நின்ற இடத்தை விட்டு அசையவில்லை .

"ஏன்மா இப்படியே நிக்கிற போ.. உனக்காக வீட்டில் காத்துகிட்டு இருப்பாங்க .."
என்று அவன் நக்கலாக கூற பாவமாக அவனை திரும்பிப் பார்த்தவள்
" நாய் வந்ததுனா என்ன பண்றது? இருட்டுல தனியா போகவும் பயமா இருக்கு .."என்றாள் அப்பாவியாக.


அதில் சத்தம் போட்டு சிரித்தான் அவன்.
" ஐயோ சத்தமா சிரிக்காதீங்க.. போன நாய் திரும்ப வந்துடும்." என்று பதட்டமாக சுற்றும் முற்றும் பார்த்தவாறு அவள் கூற இப்போது முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டவன்
" வந்து வண்டியில ஏறு.." என்றான் கட்டளையாக.


அவனது முகமாற்றத்தை கண்டவள்ண அவனுடன் பேசி வீட்டிற்கு சென்று விடலாம் என்று முடிவெடுத்தபடியே காரில் ஏறி அமர்ந்தாள்.
அதன் பிறகு தான் குழந்தைகளின் அவளை நினைவே வந்தது அவளுக்கு.. அவனுக்கு தெரிந்தால் அடுத்த நடப்பதை அவளால் யோசித்துப் பார்க்கவே முடியவில்லை.


"சார் சார்.. என்னோட ஸ்கூட்டி ரோட்டில இருக்கு ..அப்படியே விட்டுட்டு ஓடி வந்துட்டேன். என்னை அங்கேயே விட்டுடுங்க.."
என்றாள் பதட்டமாக .
அவளது பதட்டத்தை ஒரு நொடி யோசனையாக பார்த்தாலும் அவள் சொன்னதையே செய்தான் அவன்.


ஸ்கூட்டி இருக்கும் இடத்தில் காரை நிறுத்தியவன் அவள் இறங்கும் முன்
" நீ வண்டில வா.."
என்று விட்டு திரும்பிக் கொள்ள "இல்ல அது ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது.."
என்றாள் அவசரமாக அவன் விட்டுச் சென்று விடுவானோ என பயந்து. ..அவளது கூற்றை கேட்டு பெருமூச்சு விட்டவன்
" சரி இறங்கு பார்க்கலாம்.."
என்று கூறி விட்டு சென்று அவளது ஸ்கூட்டியை ஆராய்ந்தான்.
அடுத்த சில நிமிடங்களில் ஏதேதோ செய்து விட்டு மீண்டும் ஸ்கூட்டியை இயக்கி பார்க்க அவனது கைகளில் அது சமத்தாக ஸ்டார்ட் ஆகியது .


அதில் திகைத்தவள்
"தேங்க்ஸ்.." என்று மட்டும் அவனிடம் கூறிவிட்டு தனது வாகனத்தை எடுத்துக் கொண்டு பறந்து விட்டாள்.
அதன் பிறகு அவனுக்கு மட்டும் அங்கு என்ன வேலை.. அவனும் காரில் ஏறி சென்று விட்டான் தனது வீட்டை நோக்கி..

****************

மயூரிக்கு இப்போதெல்லாம் ஷியாம் சுந்தரை எப்படி அணுகுவது என்ற யோசனை தான். 'என்ன செய்தால் அவன் மனதில் இடம் பிடிக்க முடியும்?'
என்று பல நாள் யோசனை செய்தவளுக்கு இப்போது தான் நல்ல யோசனை ஒன்று உதித்தது.

' வாவ் அவரை நெருங்கனும்னா இது தான் சரியான ஐடியா' என வாய் விட்டே கூறிக் கொண்டவள் அதன் பிறகு நேரத்தை வீணடிக்காமல் வேலையில் இறங்கி விட்டாள் .
ஷியாம் சுந்தரின் தாய் பொதுவாக வெள்ளிக்கிழமைகளில் மாலை நேரம் கோயிலுக்கு செல்வதை வழக்கமாக்கி இருக்கிறார் என்தை அறிந்து கொண்ட மயூரி இன்று வெள்ளிக்கிழமை என்பதால் வேகவேகமாக அலுமாறியை திறந்து எப்போதோ வாங்கி வைத்த சுடிதார் ஒன்றை எடுத்து அணிந்து கொண்டு அவரை சந்திக்க சென்று விட்டாள்.


தூரத்தில் இருந்து மீனாவை கண்டவள் அவர் சாமி கும்பிடும் இடத்திற்கு அருகே சென்று நின்று கொண்டாள்..வேண்டும் என்றே அவரின் மேல் இடித்து விட்டு ஏதோ தெரியாமல் கைப்பட்டு விட்டதை போல
"ஐயோ சாரி.. சாரி ஆன்ட்டி தெரியாம பட்டுடுச்சு .."என கவலைப் படிந்த முகத்தோடு மன்னிப்பு வேண்டினாள் அவள்.


" அச்சோ என்னம்மா நீ தெரியாம பட்டத்துக்கு எல்லாம் மன்னிப்பு கேட்பாங்களா ..விடு .."
என மலர்ந்த முகத்தோடு அவர் கூற அதையே சாக்காக வைத்து அவரிடம் பேச தொடங்கி விட்டாள்.
அவருக்கு இவளை பற்றி எதுவும் தெரியாத காரணத்தால் அவளுடன் அன்பாகவே பழகினார்.

நீண்ட நேரம் அவருடன் பேசிக் கொண்டு இருந்தவள்
" ஓகே ஆன்ட்டி... எனக்கு டைம் ஆச்சு. நான் வரேன் ..உங்க போன் நம்பரை கொடுங்களேன்.. எனக்கு என்னவோ உங்களை ரொம்ப பிடிச்சு போச்சு ..எனக்கு எப்ப எப்ப தோணுதோ அப்போ உங்க கிட்ட பேசலாம்.. உங்களை வந்து பார்க்கலாம் இல்ல ...அதனால தான் ..."
என அவள் மெதுவாக அவருக்கு நூல் விட அதில் தானாக சென்று விழுந்தவர் தனது அலைபேசி எண்ணையும் கொடுத்து விட்டே சென்றார்..மீனாவுக்கு என்னவோ மயூரியை கண்டதுமே பிடித்துப் போனது.. அவளது உண்மை குணம் தெரியாததால் அவளை பிடித்தது போலும்.

தொடரும்...

 

Mafa97

Moderator
அத்தியாயம் 💔 21

" என்னடா முழிக்கிற.. ஏதாவது பிரச்சனையா என்ன?"
என்று தீபக்கின் முகத்தை வைத்தே கேட்டான் ஷியாம் சுந்தர்.
" ஆமா சார் அந்த சஞ்சய் ரொம்ப இடைஞ்சல் கொடுக்கிறான்.. அதனால தான் இந்த காலேஜ் ப்ராஜெக்ட் டிலே ஆகுது .."என்று தீபக் கூற
"ஓ ...."
எனக் கூறியவன் தனது தாடையை தடவியப் படியே யோசிக்க ஆரம்பித்து விட்டான்.


" அவன் வீட்டில யார் யாரெல்லாம் இருக்காங்கன்னு சொல்லு..."
என்று சிறிது நேர யோசனைக்கு பின் ஷியாம் சுந்தர் கேட்க ஏற்கனவே தான் சேகரித்து வைத்து இருந்த தகவல்களை கூற ஆரம்பித்தான் தீபக் .
"அப்படினா அவன் பொண்ணை தூக்கிடு"
என அசால்ட்டாக முடித்து விட்டான் அவன்.

தீபக்கோ அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்று விட்டான். சஞ்சய்க்கு இரண்டு குழந்தைகள்.. முதலாவது பெண் குழந்தைக்கு இப்போது தான் வயது ஐந்து.

அவளைத் தான் இவன் கடத்த சொல்கிறான் .
"சார் ..அவ சின்ன பொண்ணு.."
என தயக்கமாக இழுத்தான். அவனும் ஒரு குழந்தையின் தந்தை தானே.

" அந்த சின்ன பொண்ணை சித்திரவதை பன்ற அளவுக்கு நான் ராட்சசன் இல்லை தீபக்.. அவனுக்கு பயத்தை காட்டணும்.. அதுக்கு தான்"
எனக் கூறி இடை நிறுத்தியவன் "அது மட்டும் போதாது.. அவன் பிசினஸையும் குளோஸ் பண்ணனும் ..அதற்கான வேலையும் ஆரம்பிச்சிடு இப்போ இருந்தே...ரைட்.."
என கூறினான் அழுத்தமாக.


அவன் குழந்தையை ஒன்றும் செய்ய மாட்டேன் என்று கூறியதில் சற்று நிம்மதி பரவ அப்போதே அவர்களிடம் இருக்கும் ஒரு அடியாள் கும்பலுக்கு அழைத்து பேசினான் தீபக். மேலும் வாட்ஸ் அப் மூலம் சஞ்சையின்
மகளுடைய புகைப்படத்தையும் அனுப்பி வைத்தான்.


அடுத்த நாள் பாடசாலை விடும் நேரம் அடியாட்கள் நாள்வர் குழந்தையை கடத்த காத்திருந்தனர் அந்த பாடசாலை முன் .
அதில் கொஞ்சம் பெரிய தலை "அதோ வருது பாரு அந்த குழந்தை தான்.."
என காட்டி விட்டு மீண்டும் ஃபோனில் ஐக்கியமாகி விட்டான்.


மற்றவர்கள் அந்த புகைப்படத்தை பார்க்காததால் பெரிய தலை கூறியதும் திரும்பி பார்க்க அங்கு அவர்கள் கண்களுக்கு தெரிந்தது என்னவோ தான்வி தான்.
மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ளும் பொருட்டு
"தல அந்த பாப்பாவா?"
என கேட்டிட அவனும் ஃபோனில் கவனத்தை பதித்த படியே
"ஆமாடா ஒரு பையன் கூட பேசிட்டு வர்றா பாரு.." என்றான் அந்த பெரிய தலை.


அப்போது தான்வியும் ஆருத்திடம் பேசிய படி தான் வந்து கொண்டு இருந்தாள்.
அதனால் மற்ற அடியாட்கள் இப்போது தான்வியை தான் கடத்த திட்டம் தீட்டினர்
அவள் தான் சஞ்சயின் மகள் என நினைத்து.
அவர்களது ஜீப்பை தாண்டி தான்வி செல்லும் போது அதில் இருந்த ஒருவன்
"ஏய் பாப்பா .."என அழைக்க
"என்ன அங்கிள் ..?"
என்றபடி ஜீப்பின் அருகே சென்றாள் தான்வி குட்டி ..


"தான்வி எங்க போற.. நில்லு .."
என்ற படி அவள் பின்னால் சென்றான் ஆருத்.
அவனும் அவளுடனேயே சென்றதால் தான்வியை தனியே கடத்த முடியாமல் போக ஆருத்தையும் சேர்த்து கடத்தி விட்டனர் அந்த அடியாட்கள். அங்கே இருந்த அனைவரும் குழந்தைகள் என்பதால் இந்த கடத்தல் யார் கண்ணிலும் படவே இல்லை என்பது தான் விதியின் செயல்.

கனகா அவர்களை அழைக்க வருவதற்குள் இவை அனைத்தும் நடந்து இருந்தது.


அவர்களை கடத்தி வந்த அடியாட்கள் ஷியாம் சுந்தரின் வீட்டுக்கு அழைத்து வந்து இருந்தனர்.
அவனுக்கு சென்னையில் இரண்டு வீடுகள் உள்ளன. அடுத்த வீட்டில் அவனது தாயும் தாயும் தங்கையும் இருக்க
அவனுக்கு தனிமை தேவைப் பட்டாலோ அல்லது வேலை அதிகமாக இருந்தாலோ இங்கே வந்து விடுவது அவனது வழக்கம்.


இன்றும் சஞ்சையின் குழந்தையை கடத்திக் கொண்டு வரும்படி கூறியவன் அந்த வீட்டில் தான் சாய்வாக அமர்ந்து இருந்தான். குழந்தைக்கு மயக்க மருந்து ஸ்பிரே அடிக்க வேண்டாம் என்று கூறியதால் வாயையும் கைகளையும் மட்டுமே கட்டியிருந்தனர் அவர்கள்.


அடியாட்களின் தலைவனோ அந்த வீட்டிற்கு வந்து சேரும் வரை ஃபோனில் இருந்து கண்ணை எடுக்கவில்லை.
ஒரு ஆண் குழந்தையின் சேர்த்து கடத்தியது அவனது ஓர கண்ணுக்கு தெரிய
"என்னடா இது?"
என்று மட்டுமே கேட்டான் தலையை திருப்பாமல் .

அதற்கு மற்றவனும்
" அவ கூடவே இருந்தான் தல.. அதனால கடத்திட்டோம் ."
என்று கூற
"ம்.."
என்று மட்டுமே கூறினான் அவ்வளவே..

இப்போது இரண்டு குழந்தைகளை அடியாட்கள் தூக்கிக் கொண்டு வருவதை கண்ட தீபக்கும் ஷியாம் சுந்தரும் அதிர்ச்சியாகி விட்டனர். சியாம் சுந்தர் தீபக்கை முறைத்துப் பார்க்க அவனோ அடியாட்களை முறைத்துக் கொண்டே இருந்தான்.


" என்னடா பண்ணி வச்சிருக்கீங்க? யார் இந்த பையன் ?"
என்று தீபக் கோபமாக கேட்க "அதுவா சார்.. தல தான் இந்த பாப்பாவை தூக்க சொன்னாரு கூட இந்த பையனும் இருந்ததால இரண்டு பேரையும் தூக்கிட்டோம்."
என ஒருவன் பெருமையாக கூற "வாட்.." என்று ஆரம்பித்து ஆங்கிலத்தில் திட்டியபடியே இருக்கையில் இருந்து விழுந்து விட்டான் ஷியாம் சுந்தர்.


" இதுக்கு மேல ஒரு நிமிஷம் கூட இவங்க இந்த இடத்துல இருக்கக் கூடாது... போக சொல்லு.. என் கண் முன்னாடி இருந்தால் நானே இவங்களை கொன்னு போட்டுடுவேன்.."
என்று அவன் சத்தம் போட இரண்டு குழந்தைகளையும் அங்கேயே விட்டு விட்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிவிட்டனர் அந்த அடியாட்கள்.


முதலில் தான்வி அருகே சென்ற தீபக் அவளது கட்டுக்களை அகற்றி சந்தேகமாக அவள் முகம் பார்த்தான்.
" சார் இது சஞ்சய் பொண்ணு இல்ல.. பொண்ண
மாத்தி தூக்கிட்டாங்க.." என அதிர்ச்சியோடு தீபக் கூற ஷியாம் சுந்தருக்கு தலைவலி வந்தது தான் மிச்சம் ..

அப்போது "ம்..ம்.." என ஆருத் சத்தம் போட அவனிடம் சென்ற தீபக் அவனது கட்டுக்களையும் அகற்றினான் .
தான்வி இருவரையும் பயத்துடன் பார்த்தபடி இருக்க தனது கட்டுக்களை தீபக் அகற்றியதுமே அவனை முறைத்துப் பார்த்த ஆருத் கைகள் இரண்டையும் மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டவன் "நாங்க வீட்டுக்கு போகணும்.." என்றான் அழுத்தமாக.

அதில் தீபக் மட்டுமல்ல ஷியாம் சுந்தருமே ஆடி போய் விட்டான். நான்கு அல்லது ஐந்து வயது இருக்கும் சிறுவனிடம் இப்படி ஒரு அழுத்தமா என்று அவர்களால் ஆச்சரியப் படாமல் இருக்க முடியவில்லை ..
"என்ன சார் இவன் உங்களையே மிஞ்சிடுவான் போல .."
என தனது முதலாளியின் அருகே சென்ற தீபக் மெல்லிய குரலில் கூற அவனோ அதற்கு பதில் ஏதும் கூறாமல் ஆருத்தையே யோசனையாக பார்த்துக் கொண்டிருந்தான்.


தான்விக்கு தான் ஆஜானுபவமாக இருக்கும் இரு ஆண்களையும் பார்த்து பயம் தோன்றியது.
எனவே சகோதரனின் அருகே சென்றவள் அவனது கையைப் பிடித்துக் கொண்டு
"போலாம் ஆருத்.. எனக்கு பயமா இருக்கு.." என்றாள்.. அது அருகில் நின்ற மற்ற இருவருக்குமே கேட்டது.


"நீ பயப்படாதே தான்வி.. அவங்க ஆள் மாத்தி கடத்தி இருக்காங்க. அவங்களே கொண்டு போய் விடுவாங்க.."
என தான்விக்கு ஆறுதல் கூறினான் ஆருத்.

" சார் எனக்கு என்னமோ உங்களையே பார்க்கிற மாதிரி இருக்கு.. சின்ன வயசுல நீங்க இப்படித்தான் இருந்திருப்பீங்க போல .."
என மீண்டும் கூற அவனை திரும்பி பார்த்த ஷியாம் சுந்தர் மீண்டும் குழந்தைகள் பக்கம் திரும்பி
"உங்க பேர் என்ன?"
என்றான் .


ஆருத் எதுவும் பேசவில்லை..
தான்வி தான் பயம் நிறைந்த குரலுடன்
"அவன் ஆருத்.. நான் தான்வி.."
என்றாள் .
மேலும்
அவர்களை பற்றி அறிய ஆர்வம் தோன்ற அதனை கட்டுப்படுத்த முடியாமல்
" உங்க அப்பா அம்மா யாரு?" என்றான் ஷியாம் சுந்தர்.


இப்போது தான்வி பேசும் முன்னர் ஆருத்தே
"சொல்ல முடியாது.. வீட்டுக்கு போகணும் .."
என்றான் முடிவாக.
ஷியாம் சுந்தரை எதிர்த்து பேசும் முதல் நபர்.. தீபக்கிற்கு இதை பார்த்து கை தட்ட வேண்டும் போல் இருந்தது. தனது முதலாளி அடித்து விடுவான் என பயந்தவன் அமைதியாக நடப்பவற்றை வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டான்..ஷியாம் சுந்தருக்கு தீபக் சொன்னது போல் ஆருத்தை பார்க்கையில் அவனை பார்ப்பது போல் தான் இருந்தது.
இதற்கு மேல் குழந்தைகளை வைத்து இருப்பது நல்லதல்ல அவர்களை பெற்றோர்கள் தேட கூடும் என்று அறிந்தவன்
"தீபக் இரண்டு பேரையும் அவங்க சொல்ற இடத்துல விட்டுடு.."
என கூறி விட்டு இருவரையும் ஒரு முழு நிமிடம் ஆழமாக பார்த்தவன் திரும்பி நடந்தான்.


அப்போது அவன் அருகே ஓடி வந்த தான்வி
"தாங்ஸ் .."
என்று அவனது கையைப் பிடித்து அதில் தனது பிஞ்சு இதழ்களை பதிக்க என்னவென்று சொல்ல முடியாத ஒரு உணர்வு தோன்றியது அவனுக்கு.


தனது பிறவி பலனை அடைந்ததைப் போலவே இருந்தது. தான்விக்கோ அவன் அவர்களை எதுவும் செய்யாமல் விட்டு விட்டதால் ஒரு பாசம் அவன் மீது உருவாக நன்றி கூறி முத்தமும் கொடுத்து விட்டாள்.
ஷியாம் சுந்தர் ஒரு பரவச நிலையில் இருக்க குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்று விட்டான் தீபக். ஆருத் தான் ஷியாம் சுந்தரை முறைத்துக் கொண்டே தீபக் உடன் சென்றான்.அதனையும் காண தவறவில்லை ஷியாம் சுந்தர்.இங்கு கனகா பாடசாலை அருகே வந்து குழந்தைகளை தேட அவர்களை எங்கும் காணவில்லை. அக்கம் பக்கம் அனைத்து இடங்களிலும் தேடியவர் அழுது அழுது களைத்து போய் இருக்கும் நேரம்
" பெரியம்மா .."என்றபடி அவர் அருகே வந்தனர் இருவரும். காரில் வரும் இப்போதே இன்று நடந்த எதையும் அவர்களிடம் கூற வேண்டாம் என்று கூறி விட்டான் ஆருத்.

அதனால் தான்வியும் கனகாவிடம் வந்து எதுவும் நடக்காதை போல இருந்து விட்டாள்.
சற்று தள்ளி இருக்கும் கடைக்கு சென்றதாக ஆருத் பொய் கூற இருந்த பதட்டத்தில் கனகா எதையும் ஆராயாமல் நம்பி விட்டார். மீண்டும் அவர்களை கண்டதே பெரிது என்று விட்டு விட்டார் அவர்.. வீட்டில் யாரிடமும் குழந்தைகள் இருவரும் இதைப் பற்றி வாயை திறக்கவில்லை..எனவே மத்தியகிழக்கு இது தெரியாமலே போனது.


நாட்கள் அதன் போக்கில் நகர ராகவ்- தான்வி உறவு மேலும் வலுப்பெற்றது .
ஆருத்துக்கும் இது தெரிந்தாலும் ராகவ்வை பார்த்தால் கெட்டவர் போல் தோன்றாத காரணத்தால் அப்படியே விட்டு விட்டான்.
ஆனால் அவன் அவர்கள் கூட்டணியில் சேர்வதே இல்லை.


ராகவ் எவ்வளவு முயற்சி செய்த போதும் அவனை அவரால் அணுக முடிவது இல்லை .
தான்வி விளையாடி கொண்டு இருக்க கனகாவின் அருகே வந்து அமர்ந்த ராகவ்
"க்கும்.." என்று தொண்டையை செருமிக் கொண்டார்.


அதில் அவரை கனகா திரும்பிப் பார்க்க
"நான் இது கேட்கிறது சரியா தப்பான்னு எனக்கு தெரியல்லை.." என அவர் பீடிகைப் போட கனகா கேள்வியாக அவரைப் பார்த்தார்.
" நீ.. நீங்க கல்யாணம் பண்ணிக்கவே இல்லையா?
அப்படி இல்லைனா ..?"
என எவ்வாறு கேட்பது என்று தெரியாமல் தடுமாறினார் ராகவ்.


வெளியாற்கள் இப்படி அவரிடம் கேட்பது சகஜம் தான் .
அவருக்கும் பெற்றோர்கள் ஒழுங்காக இருந்து சகோதரர்களும் நல்லவர்களாக இருந்திருந்தால் இது போன்ற நல்ல காரியங்கள் அவருடைய வாழ்விலும் நடந்து இருக்குமோ என்னவோ..
திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை ஒரு காலத்தில் அவருக்கு இருந்தது தான்.


ஆனால் இப்போது சாத்விக், மதியழகி இருவரும் எவ்வளவு கூறியும் அவரால் அதை செய்ய முடிவதே இல்லை.
' இதற்குப் பிறகு தனக்கு எதற்கு திருமணம் ?'
என்று நினைத்தார் அவர் .
கனகா அமைதியாக இருப்பதை கண்ட ராகவ்விற்கு தான் ஏதாவது அதிகப்படியாக கேட்டு விட்டோமோ என்று கவலை தோன்றியது.


எனவே "சாரி .."
எனக் கூறியவர் எழுந்து கொள்ள "அது பரவாயில்லங்க ..எனக்கு இன்னும் கல்யாணமே ஆகல .."
என்று கூறினார் கனகா.
ராகவ் முன்னமே இதை எதிர்பார்த்து இருந்தார் போலும். பெரிதாக எந்த அதிர்ச்சியையும் காட்டவில்லை அவர்..


" ஏன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?"
ராகவ் கேட்டிட
தனது கதையை அவரிடம் கூறினார் கனகா .
பொதுவாக கனகா யார் கேட்டாலும் திருமணம் ஆகவில்லை என்று மட்டுமே கூறுவது.
இப்படி தனது மொத்த கதையையும் கூறியது இல்லை. ஆனால் ஏனோ இவரிடம் அனைத்தையும் கூறும் படி மனது சொல்லிக் கொண்டே இருந்தது.


முதலில் தயங்கியவர் பிறகு எந்த தயக்கமும் இன்றி தனது கதையை கூறி முடித்தார்.
அவர் பேசி முடிக்கும் மட்டும் பொறுமையாக இருந்த ராகவ் அடுத்து கேட்டது கனகாவை அதிர்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்றது.

அவரது அதிர்ச்சியை மெல்லிய புன்னகையோடு பார்த்தவர்
"நான் நிஜமாத் தான் கேட்கிறேன்.. என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?
உன்னை நல்லா பாத்துப்பேன் ...நீ இதுவரை பார்க்காத ஒரு உலகத்தை உனக்கு காட்ட ஆசைப்படுறேன்.." என்று காதல் வசனம் பேசினார் அவர் ..


கனகவால் இந்த சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது என்றே தெரியவில்லை. அவரது கண்களில் இருந்து இரண்டு சொட்டு கண்ணீர் துளிகள் கன்னத்தை தொட்டு சென்றன." இங்க பாரு கனகா உன் மேல உள்ள பரிதாபத்துனால நான் உன்கிட்ட அப்படி கேட்கல ..கொஞ்ச நாளாவே எனக்குள்ள உன்னை பார்க்கும் போது ஒரு தடுமாற்றம். கல்யாணம் பண்ணி இரண்டு மாதத்திலேயே என்னோட மனைவி இறந்துட்டா.. பணத்துக்கு ஆசைப்பட்டு எனக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டார் அவளோட அப்பா .அந்த பொண்ணும் பாவம் தான்.

நான் அவ கூட வாழவே இல்ல. முதல் ராத்திரி அன்னைக்கே என்கிட்ட எல்லாத்தையும் அவ சொல்லிட்டா..
நாங்க இதை பத்தி யார்கிட்டயும் சொல்லல ..ஆனா அக்காக்கும் மாமாக்கும் எப்படியோ தெரிஞ்சு போயிடுச்சு.. அந்த பொண்ணு இறந்ததுக்கு அப்புறம் அக்கா என்னை நிறைய தடவை கல்யாணம் பண்ண சொன்னாங்க..

ஆனா அப்போ அது எனக்கு தோணவே இல்லை ..
இப்போ உன்னை பார்த்ததும் கல்யாணம் பண்ணிக்கணும்னு தோணுது.. யோசிச்சு சொல்லு.. தேவையான அளவு டைம் எடுத்துக்கோ.." என தனது முழு கதையையும் கனகாவிடம் கூறி விட்டு தான்வியிடமும் விடை பெற்று சென்று விட்டார் ராகவ்.

கலங்கிய கண்களுடன் போகும் அவரை பார்த்தபடி இருந்தார் கனகா... அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.. யாரிடம் இதை பற்றி கூறுவது என்ற குழப்பமும் அவருள் இருந்தது. அவர் சென்று நீண்ட நேரம் ஆகியும் அந்த இடத்தை விட்டு அசையவில்லை கனகா


தொடரும்

 

Mafa97

Moderator
அத்தியாயம் 💔 22

ஷியாம் சுந்தருக்கு ஏனோ அன்று அந்த இரண்டு குழந்தைகளையும் கண்டதிலிருந்து தூக்கமே வரவில்லை.,
எந்த வேலை செய்தாலும் அந்த பிஞ்சு குழந்தைகளின் முகமே கண்முன் வந்து அவனது வேலைகளை செய்யவிடாமல் தடை செய்தது .


தான்வி அவனது கைகளில் இதழ் பதித்த போது அவன் உணர்ந்த அந்த பிஞ்சு இதழ்களின் பரிசம், அவனைப் போலவே இருக்கும் ஆருத்தின் அழுத்தம் ,கம்பீரம் என்பனவே அவன் நினைவில் மீண்டும் மீண்டும் வந்து சென்றன.ஆருத் தான்வி இருவரும் முக ஜாடையில் மதியழகியின் பெற்றோரைப் போலவே இருப்பதால் எளிதாக அவனால் அவர்களை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை.
எனவே அடுத்து அவன் செய்தது அவர்களை பற்றி விசாரிக்க தீபக்கிடம் கூறியது தான்.


தீபக் அன்று கனகாவை தூரத்தில் இருந்து கண்டதால்
அடுத்த நாளே அவரை பின் தொடர்ந்து வீடு வரை சென்றான் .
வீட்டை கண்டு பிடித்ததும் சில ஆட்களை நியமித்து அந்த இடத்தை நோட்டம் விடும் படியும் கூறி விட்டான் தீபக்.

அதற்கு அடுத்த நாளே அங்கு இருப்பவர்களின் புகைப்படம் தீபக்கின் கைகளுக்கு வந்து சேர்ந்தது.
அதனை கண்ட தீபக்கிற்கு கண்களை இருட்டிக் கொண்டு வந்தது.


"வாட்..?
இது மதியோட குழந்தைங்களா? அந்தப் பையனை பார்த்தா நம்ம சாரோட குழந்தை மாதிரியே இருக்கே ...இது எப்படி சாத்தியம்? ஒருவேளை மதி வேறு கல்யாணம் கூட பண்ணி இருக்கலாம்.. நாம ஏன் அப்படி நினைக்கணும்.."
என்று தனக்குத் தானே கூறியவன் அவசரமாக தனது மனைவிக்கு அழைத்தான் .


அவனுடையது காதல் திருமணம். அன்று மதியழகியை அனுமதித்த போது அங்கு இருந்த நர்ஸ் தான் அவன் மனைவி .
அன்று அவளை பார்த்த பிறகு அடிக்கடி சந்திக்க வேண்டும் என்று தோன்ற மீண்டும் மீண்டும் அந்த மருத்துவமனைக்கு சென்றான் தீபக்.
அவளிடம் காதலை கூறி அவளையே திருமணமும் செய்து கொண்டான் அவன்..


இப்போது அவர்களின் காதலுக்கு சாட்சியாக ஒரு குழந்தையும் இருக்கிறது. மனைவி அழைப்பை ஏற்றதும்
" ஹனி உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் கேட்கணும்.. நீ பிஸியா இருக்கியா ?"
என்றான் தீபக். அவனால் ஹனி என்று அழைக்கப்பட்ட ஹரினியும் "இல்லை சொல்லுங்க.." என்று கணவனின் குரலில் இருந்த தீவிரத்தை உணர்ந்து பேசினாள்."நம்மளோட ஃபர்ஸ்ட் மீட்டிங் உனக்கு ஞாபகம் இருக்கா?"
என அவன் கேட்க
"ஆமா நல்லாவே ஞாபகம் இருக்கு.. அந்த பொண்ணோட ஹஸ்பண்ட்னு நினைச்சு உங்களை திட்டிட்டேன் .."
என்று கூறியவள் இப்போதும் அதை நினைத்து சத்தமாக சிரித்தாள்.

"ஏய் சிரிக்காதடி.. இது முக்கியமான விஷயம்.. ப்ளீஸ் சொல்லு..."
என அவன் இப்போது அவளிடம் கேட்க
"என்ன கேட்கணும்.. கேளுங்க.."
என்றாள் அவளும் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து.

" அன்னைக்கு அந்த பொண்ணை அவ அண்ணன் வந்து கூட்டிட்டு போனானே ..
அப்போ அந்த பொண்ணு பிரக்னண்டா இருந்தாளா?"..

விஷயத்தை அறிந்து கொள்ளும் ஆர்வத்தோடு பதில் என்னவாக இருக்கும் என்ற பயமும் அவனுக்கு உள்ளுக்குள் இருந்து..


"ஆமாங்க அந்த பொண்ணு ப்ரக்ணன்ட்டா தான் இருந்தா. அவளை பார்க்கவே பாவமா இருந்தது ..
அவ பிரக்னண்ட்டா இருக்க விஷயம் அவளுக்கே தெரியாது. எனக்கு அந்த பொண்ணை பார்க்கும் போது மனசுக்கு கஷ்டமாக இருந்தது ..அதனால தான் அவ அண்ணன் கூட்டிட்டு போகும் போதும் நான் அமைதியாக இருந்துட்டேன். அவ புருஷன் அவளுக்கு கொடுமை பண்ணி இருப்பான் போல..

பழைய டிரஸ் ஓட பார்க்கவே மோசமான நிலைமையில இருந்தா.. அவ உடம்புல சக்தியே இல்ல.. அதனால தான் உங்ககிட்ட கூட அவ பிரக்னண்ட்டா இருக்கிற விஷயத்தை நான் சொல்லல ..ஆமா இப்போ எதுக்கு அதை கேக்குறீங்க ?"
என அவள் தனக்கு தெரிந்ததை எல்லாம் கூறி விட்டு அவனிடம் கேள்வியும் கேட்டாள்.


தீபக்கிற்கு தனது சந்தேகம் உண்மையானதில் அதிர்ச்சி கலந்த ஆனந்தம் தான் .
ஷியாம் சுந்தரின் குழந்தைகள் தான் அவர்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை அவனுக்கு‌. அவன் தாலியை கொடுத்ததும் எதுவுமே சொல்லாமல் ஷியாம் சுந்தர் வாங்கிக் கொண்டதினால் தான் அவனுக்கு அதிக நம்பிக்கை தோன்றியது.

மேலும் ஆருத் ஷியாம் சுந்தரை போலவே அழுத்தமாக இருப்பதும் அவனை அன்று உறுத்தியது. இன்று அவர்கள் தனது முதலாளியின் குழந்தைகள் தான் என்று முடிவே செய்து விட்டான். எனவே அவனுக்கு தெரிந்த வகையில் அனைத்தையும் மனைவியிடம் கூறியவன் அவள் ஷியாம் சுந்தருக்கு சரமாறியாக திட்டுவதை கூட காதில் வாங்காமல் அழைப்பை துண்டித்து விட்டான்.


இப்போது இந்த விஷயத்தினை எப்படி ஷியாம் சுந்தரிடம் கூறுவது என்பதே அவனது யோசனை. ஒருவேளை அவன் மதியழகியை தப்பாக நினைத்து விட்டால்?
என்ன நடந்தாலும் அவனிடம் விடயத்தை கூறி ஆக வேண்டும். மெதுவாக சியாம் சுந்தரின் அலுவலக அரை கதவைத் தட்டினான்.

" எஸ் கம் இன் .."
என்ற அவனது கம்பீரக் குரல் கேட்டதும் கதவினை திறந்து கொண்டு உள்ளே சென்றவன்
" சார் நீங்க அந்த பசங்களை பற்றி டீடைல்ஸ் கேட்டீங்க இல்ல ..இதோ.."
என்றவன் தனது மொபைலை அவன் முன்னால் நீட்டினான்.

தீபக்கை சந்தேகமாக பார்த்த ஷியாம் சுந்தரோ
"இதுல ..?"
என்று கேட்டாலும் அதனை வாங்கி என்னவென்று பார்த்தான்.
அதை பார்த்ததற்கான எந்த மாற்றமும் இல்லை அவன் முகத்தில். தீபக் அவனது முகத்தை பார்த்துக் கொண்டே தான் இருந்தான் என்ன உணர்வுகளை காட்டுவான் என்று அறிந்து கொள்வதற்காக .


ஆனால் அவனுக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது .
ஆம் அந்த ஃபோனில் தீபக் கொடுத்தது மதியழகியுடன் ஆருத் தான்வி இருவரும் இருக்கும் புகைப்படமே. எனவே இப்போது
" சார் மதியழகி அன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல இருந்து போகும் போது பிரக்னண்ட்டா தான் இருந்து இருக்கா.." என தயக்கமாகவே கூறினான் ..

ஷியாம் சுந்தரோ
" ஓகே நான் பாத்துக்கிறேன் .."
என்று கூறி விட்டு தீபக்கின் ஃபோனை அவனிடமே திருப்பிக் கொடுக்க அதனை வாங்கிக் கொண்டவன்
"என்னதான் பண்ண போறாரோ? எந்த ரியாக்ஷனுமே இல்லையே.." என மனதுக்குள் நினைத்துக் கொண்டு வெளியே அமைதியாக முகத்தை வைத்து கொண்டவன் அந்த இடத்தை விட்டு சென்று விட்டான்.


அவன் வெளியே சென்றதும் மேசையில் இருந்த பேப்பர் வெயிட்டை உருட்டியவாறு
"மதி ...அழகி ரொம்பவே முன்னேறிட்ட..
நான் நினைக்காத அளவு நீ ஸ்மார்ட்டா இருந்து இருக்க.. என்னோட பசங்களையே என்கிட்ட இருந்து மறைச்சுட்ட இல்ல.. உன்னை என்ன பண்ணலாம்.." என வாய்விட்டு சொன்னான் அவன்..அவனது கண்கள் கோபத்தில் தீச்சுடர் போல மின்னின.
"நான் என் பையனை பார்க்கும் போதே நினைச்சேன் டி ..
என்னடா இவன் நம்மள மாதிரியே ஆட்டிட்யூட் காட்டுறான்னு.. பொண்ணு என் கையில கிஸ் பண்ணும் போது அந்த ஒரு முத்தத்துக்காகவே என்ன வேணா பண்ணலாம்னு தோணுச்சு.. இனிமேல் என்கிட்ட அது நடக்காது.." என மேலும் தனக்குள்ளேயே கூறிக் கொண்டவன் இதழ்கள் இப்போது வன்மச் சிரிப்பில் விரிந்து கொண்டன.

***************************

அடுப்பில் வைத்திருந்த பால் பொங்கி வடிந்தது கூட தெரியாமல் கனகா தீவிர யோசனையில் இருந்தார்.
தண்ணீர் குடிப்பதற்காக உள்ளே வந்த மதியழகி இதனை கண்டு விட்டு ஓடிச் சென்று அடுப்பை அணைத்தவள்
"என்ன அக்கா இது.. என்ன யோசனை உங்களுக்கு ?"என அவரை தோளில் தட்டியபடி மதியழகி பேச ,

"ஹாங்.." என்ற படி யோசனையில் இருந்து வெளிவந்தார் கனகா. "என்ன அக்கா ஏதாவது பிராப்ளமா? என்கிட்ட கூட சொல்ல மாட்டீங்களா?"என்று மதியழகி கேட்க
" அது வந்து .." என முதலில் தயங்கியவர் ராகவ் அன்று தன்னிடம் பேசிய அனைத்தையும் கூறிவிட்டார் ..


"வாவ் ...இது எவ்வளவு பெரிய விஷயம்...
இதை ஏன் எங்ககிட்ட முன்னாடியே சொல்லல.."
மதியழகிக்கு சந்தோசத்தில் தலைகால் புரியவில்லை ..
இதனை கண்ட கனகாவிற்கு தான் சற்று சங்கடமாகி போனது.


அவரை கண்டு கொள்ளாத மதியழகி
"அண்ணா ..அண்ணா ..."என அழைத்தவாறு சமையல் அறையை விட்டு வெளியேறினாள் .
தான் கூறியதை பற்றி தான் அவள் கூற போகிறாள் என்று உணர்ந்த கனகா
" மதிமா .."
என அவளை அழைத்தபடி அவளது பின்னால் சென்றார்.


அதற்கு முன்னால் சாத்விக்கை அடைந்த மதியழகி விடயத்தை கூற அவனுக்கும் மதியழகியின் சந்தோஷம் தொற்றிக் கொண்டது.
" அக்கா உண்மைய சொல்லுங்க.. உங்களுக்கு அவரை புடிச்சு இருக்கா..?"
என்று அவரது விருப்பத்தை கேட்க வெட்கத்தில் அவரது கன்னம் சிவந்து போனது.


ஆனால்
"அது ...அது இந்த வயசுல.." என கனகா ஆரம்பிக்க
"என்ன வயசு ஆச்சு உங்களுக்கு.. இன்னும் 40 கூட ஆகல.. நீங்க சந்தோஷமா வாழ்றது தான் எங்களோட ஆசை.. எங்க மேல உண்மையான பாசம் இருந்தால் ஓகே சொல்லுங்க.." என சாத்தியக் கூறிட கனகாவும் சம்மதம் தெரிவித்தார்.


அடுத்த நாள் மாலை சாத்விக் கனகாவுடனும் குழந்தைகளுடனும் பார்க்கிற்கு சென்றான்.
ராகவ்வை பார்த்ததும் அவனுக்கு அப்படி ஒரு திருப்தி.
அவருடன் பேசும் போது
தான் ஷியாம் சுந்தரின் உறவு என தெரிய வந்தது அவனுக்கு.

" என்ன இது எல்லா விஷயமும் ஏன் அவன் கிட்டயே போய் முடியுது?" என தீவிர யோசனையில் இறங்கி விட்டான் சாத்விக்.
ஆனாலும் கனகாவின் எதிர்கால வாழ்க்கை கெட அவன் விரும்பவில்லை.


" எங்களுக்கு முழு சம்மதம்.. ஆனா கல்யாணத்தை சீக்கிரமா கோயில்லையே வச்சுக்கலாம்.. அதுவும் ரொம்ப சிம்பிளா .."
என்று சாத்விக் அவரிடம் கூற
"சரி தம்பி என் அக்காவை கூட்டிட்டு உங்க வீட்டுக்கு நாளைக்கு வரேன்.. பேசிக்கலாம்.." என்று கூறிய ராகவ் மேலும் சிறிது நேரம் அவனுடன் பேசிவிட்டு சென்றார்.


**********************

வழக்கம் போல் அன்றும் வேலைகளை முடித்து விட்டு மதியழகி வீட்டுக்கு செல்ல தனது ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்யும் போது அவள் அருகே வந்து ஒருவன் நின்றான்.
அவனை அவள் இதுவரை கண்டதே இல்லை.
எனவே கேள்வியாக அவனைப் பார்க்க அவளிடம் தனது மொபைலை நீட்டினான் அவன்.


யோசனையாகவே அதனை வாங்கி தனது காதில் வைத்தாள் மதியழகி.
" ஹலோ மதி ‌‌...அழகி.."
என்ற அழுத்தமான குரலிலேயே யார் பேசுவது என்று கண்டு கொண்டாள் அவள்.
அவனே தான்... அவளது வாழ்க்கையை அழித்தவன்...

" என்ன வேணும் உங்களுக்கு?" சூடாகவே வந்தது அவளது கேள்வி.
" எனக்கு ஒன்னும் நீ வேணாம்மா.. இப்போ நீ என் ஆள் கூட என்னோட இடத்திற்கு வந்தே ஆகணும்.. இல்லை முடியாதுன்னு வச்சுக்கவே... உன்னோட அண்ணன் பிசினஸ் பினிஸ்ட்.." என்று அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டான் அவன்..

மழை அடித்து ஓய்ந்தது போன்று இருந்தது அவளுக்கு.
தான் இப்போது அவன் சொன்னதை செய்யா விட்டால் அண்ணனின் இத்தனை நாள் உழைப்பையும் வீணாக்கி விடுவான்.. முன்பு போல் பயந்து போய் அவன் இடத்திற்கு செல்லவில்லை அவள். தைரியமாகத் தான் அவன் அனுப்பி இருந்த நபருடன் அவனது இடம் நோக்கி சென்றாள்.அன்று குழந்தைகளை கொண்டு சென்ற அதே வீடு .
ஆனால் அவளை கடத்தி வைத்து இருந்தது அந்த வீடு இல்லை. அவளுடன் வந்தவன் அந்த வீட்டு வாசலிலேயே அவளை விட்டு விட்டு சென்று விட்டான்.


மெதுவாக அவள் உள்ளே செல்ல "வெல்கம் பேக் மதி ...அழகி ..."
என்ற குரல் அவளுக்கு பின்னால் கேட்டது.
மிக அருகில் கேட்ட அந்த குரல் கேட்டு திடுக்கிட்டு தான் போனாள் அவள். இருந்தாலும் தன்னை சமாளித்துக் கொண்ட பெண்ணவளோ அவனை திரும்பிப் பார்த்து
"எதுக்காக என்னை இப்படி மிரட்டி வரவச்சு இருக்கீங்க?" என்றாள் கோபமாக.


குரலில் ஒரு கம்பீரம் ...அவளது கம்பீரமான தோற்றமும் குரலும் அவனுக்கு பிடிக்கவில்லை போலும்.. பாய்ந்து வந்து அவளது கழுத்தை பிடித்தவன் "ஏய்..." என்றான் அடிக் குரலில்.. இப்போதும் அவளது கண்ணில் பயம் இல்லாததை கண்டவன்


" ஓ பயம் வரலையோ...? இப்போ பாரு.."
என்று கர்ஜித்தவன் பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்து இருந்த துப்பாக்கியை எடுத்து அவளது வாய்க்குள் வைத்தான்.

தொடரும்...

 

Mafa97

Moderator
அத்தியாயம் 💔 23


துப்பாக்கியை அவளது வாய்க்குள் வைத்ததும் அவன் எதிர்பார்த்த பயம் அவள் கண்களில் தென்பட்டது ..
அதில் அவனது இதழ்களோ தாராளமாக விரிந்து கொண்டன. ஆனால் துப்பாக்கியை எடுக்கவில்லை அவன்.

" என்னோட குழந்தைகளை என்கிட்ட இருந்து மறைச்சுட்ட.. உன்னை என்ன பண்ணலாம்..?"
என மேலும் துப்பாக்கியை அவள் வாய்க்குள் தினித்தான்.
அவனது செயல் அவளை பயமுறுத்தியதை விட அவனது வார்த்தைகளே அவளை பயத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது என்றே கூறலாம்.
' எப்படி அவனுக்கு தெரிஞ்சது?'
என்று நினைத்தவள் கண்களால் இல்லை என்று சைகை
செய்தாள்‌.அவளது கண்கள் ஏதோ கூற வருவதை புரிந்து கொண்டவன் துப்பாக்கியை அவளது வாய்க்குள் இருந்து எடுத்து விட்டான். அவன் விட்டதும் நேராக நின்று கொண்டவள்
"உங்களுக்கு எப்படி?"
என்றாள்.


அவளால் அவ்வளவு தான் பேச முடிந்தது. குழந்தைகள் பற்றி அறிந்த பிறகு என்ன செய்வானோ என்ற பயம் அவளிடம்.
" உனக்கு எதுக்குடி அது எல்லாம்... என் குழந்தைகளை பத்தி என்கிட்டயே மறைச்சுட்ட.. நீ ரொம்ப ஸ்மார்ட் தான் .."
என்று அவளை நக்கலாக பாராட்டவும் செய்தான் அவன்.அதில் அவளுக்கு இது நாள் வரை வராத கோபம் வந்தது.
" பின்ன என்ன பண்ண சொல்றீங்க? உங்க கிட்ட வந்து நான் பிரக்னண்டா இருக்கேன்னு சொல்லவா சொல்றீங்க... அப்படியே நான் சொல்லியிருந்தாலும் என்ன பண்ணி இருப்பீங்க... உடனே கையில தூக்கி வச்சு கொஞ்சவா போறீங்க... என்னை உங்க ஆசைக்குத்தானே பயன்படுத்துனீங்க... அதுல நான் வந்து குழந்தைங்கன்னு உங்க முன்னாடி நின்னா ஒன்னு என்னை கொன்னு போட்டு இருப்பீங்க.. இல்லை குழந்தையை கருவிலேயே அழிச்சுருப்பீங்க.. நீங்க ஒரு ராட்சசன்... இதைத் தான் செய்வீங்க.." என்று குரலை உயர்த்தி அவன் முன்னால் கைநீட்டி பேசினாள் அவள்.


ஆனால் அவனா இதற்கு எல்லாம் அசுருபவன்..
" ஏய் என்னோட குழந்தைங்களை நானே அழைப்பேனாடி ...
அந்த அளவுக்கு ஒன்னும் என் அம்மா என்னை கேவலமா வளர்க்கலை..." என்றான் அவனும் அவளைப் போலவே.


"ஓ அப்படின்னா ஒரு பொண்ணோட கற்பை மட்டும் அவளோட அனுமதியே இல்லாம எப்படி எடுக்கிறதுன்னு சொல்லிக் கொடுத்து வளர்த்தாங்களா உங்க அம்மா?"
என்று அவள் கேட்டு முடிக்கவில்லை..


" மதி ...அழகி ..."
என்று கர்ஜித்த படி மீண்டும் அவளது கழுத்தை பற்றினான் ஷியாம் சுந்தர் .
அவளும் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் கோபத்தில் கூறி விட்டாள்.
அவளது கண்கள் சொருகுவதை கண்டு அவளை தள்ளி விட்டான் அவன்.. அதில் தொப்பென்று அங்கு இருந்த சோபாவில் விழுந்தாள் மதியழகி ..


அவள் முன்னே குனிந்தவன் "கொன்னுடுவேன் .."
என விரல் நீட்டி எச்சரித்து விட்டு மீண்டும்
"நான் தொட்ட முதல் பொண்ணு நீதாண்டி... நீ நம்பினாலும் நம்பலனாலும் எனக்கு பிரச்சனை இல்லை.."
என்று அழுத்தமாக கூறினான்.பழைய மதியழகியாக இருந்திருந்தால் பயத்தில் நடுங்கி இருப்பாள்.
ஆனால் இவளோ எழுந்து நின்றவள்
" இப்போ என்ன பண்ணப் போறீங்க..? என்னையும் என் பசங்களையும் விட்டுடுங்க.. உங்க வழியிலேயே நாங்க வர மாட்டோம்.. நீங்க உங்க மனைவியோட சந்தோஷமா வாழுங்க.. அவங்க கிட்ட எதையும் சொல்ல மாட்டேன்..." என்றாள் இப்போது சற்றே குரலை தாழ்த்தி.


அவளுக்கு இன்னும் அவன் திருமணம் ஆகாதவன் என்பது தெரியாது. சிறிது நேரம் யோசித்தவன் என்ன நினைத்தானோ
"சரி போ .."
என்றான் அமைதியாக அவளை பார்க்காமலேயே .


அவளுக்குத் தான் நம்பவே முடியவில்லை. சற்று முன்னர் வரை பேயாட்டம் ஆடியவன் மனைவி பற்றி பேசியதும் உடனே அமைதியாகி விட்டதை கண்டவளுக்கு ஒன்றும் புரியவில்லை.
" பொண்டாட்டிக்கு இவ்வளவு பயமா?"
என மனதில் நினைத்தவள் அவனிடம் சொல்லிக் கொள்ளாமலேயே அங்கிருந்து வெளியேறி விட்டாள்.
அவனும் ஏதோ சிந்தித்தவனாக அப்படியே அமர்ந்து கொண்டான். அவனது முகத்தை பார்த்தால் தீவிர யோசனையில் இருப்பது நன்றாகவே தெரிந்தது.

*******************


ராகவ் மீனாவிடம் அனைத்தையும் கூற மீனாவிற்கோ எல்லையற்ற மகிழ்ச்சி.
அவராவது திருமணம் செய்வதாக ஒத்துக் கொண்டாரே என்று இருந்தது மீனாவுக்கு. வருணிக்காவிடமும் ஷியாம் சுந்தரிடமும் இந்த செய்தி இரவு உணவின் போது கூறப்பட்டது. மீனாவோ காலம் கடத்தாமல் அடுத்த நாள் காலை நேரமே சென்று அவர்களது வீட்டில் பேசிவிடலாம் என்று கூறினார்.


ராகவிக்கும் அது சரியாக பட அவரும் சம்மதம் கூறி விட்டார். அதற்கு அடுத்தநாள் காலையிலேயே ராகவ் மீனா மற்றும் வருணிக்கா மூவரும் சாத்விக்கின் வீட்டுக்கு வந்து விட்டனர்.


வருணிகாவிற்கு இது அவன் வீடு என்பது தெரியாது. அதற்கு மேல் அவன் சென்னை வந்த விடயமே அவளுக்கு தெரியாது.
அவர்களது சத்தம் கேட்டு முதலில் வெளியே வந்தது மதியழகி தான். வெளியே நின்றவர்கள் யார் என தெரியாமல் அவர்களை அவள் கேள்வியாக பார்க்க
"நான் ராகவ்.."என்று அவர் கூற பெயரை கேட்டதும் யார் என்பது மதியழகிக்கு புரிந்து போனது.


ஆனால் இவர்கள் வருவது சாத்விக்கிற்கும் கனகாவிற்கு தெரியும். மதியிடம் கூற தான் நேரம் கிடைக்கவில்லை அவர்களுக்கு.
ஏனெனில் முதல் நாள் ஷியாம் சுந்தர் செய்த அலப்பறையால் அவள் வந்ததும் தலைவலி என்று கூறி தூங்கி விட அது அவளுக்கு தெரிவிக்கப்படாமலேயே போனது.


ஆனாலும் இயல்பாகவே
" வாங்க ...வாங்க.. "
என்று மூவரையும் உள்ளே வரவேற்று அமர வைத்து விட்டு "அண்ணா.. அக்கா.."
என உள்நோக்கி குரல் கொடுத்தாள் அவள்.


அவளது சத்தம் கேட்டு வெளியே வந்த சாத்விக் வருணிகாவை கண்டும் காணாததை போல ராகவ் உடன் சகஜமாக பேசியபடி அமர்ந்து கொண்டான்‌. ஆனால் வருணிகாவிற்கோ 5 வருடங்களுக்குப் பிறகு அவனை கண்டதில் ஆனந்தம் கலந்த அதிர்ச்சியே..


' அப்போ இது அவரோட மனைவியா இருக்குமோ? இருக்காது தாலியும் இல்ல.. அண்ணான்னு சொல்லித் தானே குரல் கொடுத்தாங்க.. அப்படின்னா இது மதியழகியா இருக்குமோ..?"
பல விடையறியா கேள்விகள் வருணிகாவின் மனதிற்குள் தோன்றி மறைந்தன.சாத்விக்கை தொடர்ந்து கனகாவும் சற்று தயங்கியபடி வெளியே வந்தார்.
அங்கு சிறிது நேரம் அறிமுகப் படலம் நடைபெற்றது. அடுத்த வாரம் இருக்கும் ஒரு நல்ல முகூர்த்தத்தில் கோயிலில் வைத்து எளிமையாக திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று பேசி முடிவு எடுத்துவிட்டு அவர்கள் விடை பெற்றனர். கனகா ராகவ் உடன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.. அவரும் திருமணத்திற்கு பிறகு பேசிக்கொள்ளலாம் என்று விட்டு விட்டார் ..


வருணிகா தான் நிலையாக இல்லை. சாத்விக் தன்னை கண்டு அதிர்ச்சி அடையாமல் இருந்ததும் இப்போது வரை அவள் முகம் பார்க்காததும் அவளை யோசனையில் ஆழ்த்தியது..

' ஒருவேளை என்னை மறந்து விட்டாரா?'
என்ற கேள்வி தோன்ற கண்கள் இரண்டும் கலங்கி விட்டன அவளுக்கு. இதனை யாருக்கும் காட்டாமல் மறைத்துக் கொண்டாள் அவள். மதியழகிக்கு இது ஷியாம் சுந்தரின் குடும்பம் என்பதே தெரியாது.
எனவே அவள் நன்றாகவே அவர்களுடன் பழகினாள்.

******************

வெளியாட்கள் யாரும் இல்லாது எளிமையாக நடத்த திட்டமிட்டு இருந்தனர் திருமணத்தை. வருணிக்காவும் மீனாவும் தயாராகி வெளியே வரும் போது அவர்கள் முன்னால் வந்து நின்றாள் மயூரி
"ஹாய் ஆண்ட்டி.." என்ற கூவளோடு.. அன்று கோயிலில் வைத்து பேசியதற்கு பிறகு இவர்களது வீட்டுக்கு வருவது வழக்கமாக்கி கொண்டு இருந்தாள் அவள்.
இரண்டு நாட்களுக்கு முன்பு அவள் வந்திருந்த போது மீனா ராகவ்வின் திருமணம் பற்றி கூற அன்றைய நாளாவது ஷியாம் சுந்தரை சந்திக்க வேண்டும் என முடிவு செய்த மயூரி மெதுவாக பேசி தானும் திருமணத்திற்கு வரலாமா என்று கேட்டிட மீனாவும் சரி என்று கூறிவிட்டு இருந்தார்.

மயூரி சாத்விக்கின் தங்கை என்பது
வருணிக்கா அறியாத விடயம்.அவளுக்கு ஏனோ மயூரியை பிடிப்பது இல்லை.
ஆனால் மீனாவிற்கு இவள் மகனின் மனைவியாக வந்தால் என்ன என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை..

" வந்துட்டியாமா.. ரொம்ப அழகா இருக்க இன்னைக்கு..." என்று மயூரியை பாராட்ட அவளுக்கு தலைகால் புரியாத சந்தோஷம். ராகவ்வும் வந்துவிட நாள்வரும் கோயிலை நோக்கி பயணமானார்கள்.

ஷியாம் சுந்தர் நேரே கோயிலுக்கு வருவதாக கூறிவிட்டான் .
இவர்கள் அங்கு செல்வதற்கு முன்னரே கனகாவுடன் அங்கு வந்து இருந்தனர் மதியழகி மற்றும் சாத்விக் இருவரும். குழந்தைகளும் அன்று வீட்டில் தான் இருந்தனர். ஆனால் சாத்விக் அவர்களை இங்கு அழைத்து வந்து ஷியாம் சுந்தரின் கண்களில் தென்பட வைக்க விரும்பவில்லை. அதனால் பக்கத்து வீட்டில் விட்டு விட்டு வந்திருந்தனர் ..

மீனாவுடன் கோயிலுக்குள் நுழைந்த மயூரி அங்கு நின்ற கனகா, மதி , சாத்விக் மூவரையும் கண்டு அதிர்ந்தே விட்டாள். 'எங்காவது சென்று தொலைந்து விட்டார்கள்" என்று நினைத்துக் கொண்டு அவர்கள் இருக்க இன்று கண்முன்னே வந்து நின்றால் எப்படி இருக்கும்..


அதிலும் மதியழகியின் அழகான தோற்றமும் அதில் இருக்கும் சிரிப்பும் மேலும் அவளுக்கு கோபத்தை உண்டு பண்ணியது. மற்ற மூவரும் இவளை கண்டாலும் இவளை ஏன் கருத்தில் கொள்வது என்று நினைத்து விட்டு விட்டார்கள்.

மீனா வேறு மயூரியிடம்
"இது தான் ராகவ் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு..பேரு கனகா.."
என்று மெல்லிய குரலில் கூறிட ஐயோ என்று ஆனது அவளுக்கு. இருக்கும் இடமும் உடன் இருப்பவர்களையும் கருத்தில் கொண்டு அமைதியாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டாள் மயூரி.

அவர்கள் எல்லோரும் தயாராக இருக்க அப்போது கம்பீரமாக அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தான் ஷியாம் சுந்தர்.
அவனையே வைத்த கண் வாங்காமல் மயூரி பார்த்துக் கொண்டே இருந்தாள். மதியழகியோ அதிர்ச்சியில் வாயை பிளந்தபடி நின்று கொண்டே இருந்தாள்.

' இவன் இங்கே எப்படி?'
எனும் கேள்வி தோன்ற திரும்பி அண்ணனை பார்த்தாள் அவள். அவளுடைய பார்வையை உணர்ந்து கொண்டவன்
" ராகவ் ஓட அக்கா பையன் தான் இவர் .."
என்று கூறினான் மெல்லிய குரலில்.. இப்போது மதிக்கு உலகமே தலைகீழான உணர்வு.


குழந்தைகளை பற்றியும் அவனுக்கு தெரியும் என்பதால் அவனது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை அவளால் கணிக்க முடியவில்லை .
அடுத்து அவள் கண்கள் என்னவோ அவனது மனைவியைத் தான் தேடின.


அப்படி யாரும் இங்கு இல்லாத காரணத்தால் 'ஏதாவது வேலை இருக்கும்.. அதனால தான் வந்து இருக்க மாட்டாங்க போல.."என்று தனக்குள்ளேயே பதிலையும் கூறிக் கொண்டாள் அவள்.

ஐயரும் வந்துவிட இனிதே ராகவ் கனகா திருமணம் நடந்து முடிந்தது.. சந்தோஷத்தில் கனகாவின் கண்களில் இருந்து இரு சொட்டு கண்ணீர் துளிகள் உருண்டு வழிந்தன.

"எதுக்கு அழற ..என்னை புடிக்கலையா ?"
என வேண்டும் என்றே ராகவ் அவரது காதுக்குள் கேட்க இல்லை என்று தலையாட்டினார் அவர்.
" குட் கேர்ள்.."
என்று கூறிய ராகவ் புன்னகைக்க அதனை பார்த்து கனகாவின் இதழ்களும் விரிந்து கொண்டன.


மன நிறைவுடன் அனைவரும் அங்கிருந்து செல்ல முற்பட ஐயரோ "அம்மா எங்க போறீங்க உங்க பையனோட கல்யாணமும் இருக்கே.."
என்று கூறி மீனாவை நிறுத்த அதிர்ந்து போய் அவனை பார்த்தார் . மற்றவர்களும் அதிர்ந்து நின்றிட ஐயரோ
மந்திரம் சொல்ல ஆரம்பித்து விட்டார்.அனைவருக்கும்
'என்னடா இது?' என்று இருந்தது..எனவே அவனை புரியாமல் பார்க்க சாத்விக்கின் அருகில் நின்று இருந்த மதியழகியிடம் சென்றவன் அவளது கைகளை பிடித்துக் கொண்டு வந்து ஐயரின் முன்னால் நின்றான்.

இதனைக் கண்ட அனைவரும் அவனை குழம்பிப் போய் பார்க்க மதியழகியோ அவனை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டே இருந்தாள்.
அவர்களது அதிர்ச்சியையும் புரியாத பார்வையையும் கண்டுகொள்ளாத ஷியாம் சுந்தர் தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்த தனது தாயின் தாலியை எடுத்து அவளது கழுத்தில் இரண்டாம் முறையாக கட்டினான்.

இதனைக் கண்ட மீனா அவசரமாக அவன் அருகே வந்து
" என்னடா இது எல்லாம்..?"
என்று சத்தமாக கேட்டிட ..

"அம்மா இவ என்னோட பொண்டாட்டி.. இது இன்னைக்கு நேற்றைக்கு முடிவு பண்ணது இல்ல. ஏற்கனவே எங்களுக்கு கல்யாணம் ஆச்சு.. அஞ்சு வருஷத்துக்கு முன்னாடியே கல்யாணம் பண்ணிக்கிட்டோம். எப்படின்னு எல்லாம் கேட்காதீங்க.. சின்ன மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்ல பிரிஞ்சிட்டோம் ..இப்போ ரெண்டு பசங்க வேற இருக்காங்க ..ட்வின்ஸ்.." என்றான் கோர்வையாக ..

"ஏய்.."
என்றபடி அவனது சர்ட் காலரை பிடித்து விட்டான் சாத்விக். அந்த சத்தத்தில் தான் சுய உணர்வு பெற்றாள் மதியழகி .
ஷியாம் சுந்தரும் சாத்விக்கை முறைத்தபடி நின்று கொண்டு இருந்தான்..
இருவரின் நிலையை கண்ட மதி அவசரமாக
"அண்ணா இப்படி வா .."
என்றபடி சாத்தவிக்கின் கையைப் பிடித்து இழுத்தாள்..

மயூரிக்கு ஒன்றும் புரியாத நிலை. அதிலும் கோபம் எரிமலையாக கொதித்துக் கொண்டு இருந்தது அவளுக்குள்..


தொடரும்....

 

Mafa97

Moderator
அத்தியாயம் 💔 24


அங்கு இருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருக்க இதற்கெல்லாம் காரணமானவனோ கூலாக எல்லோரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு தனது ஃபோனை எடுத்து அதில் யாருக்கோ அழைப்பு விடுத்தான்.
அந்தப் பக்கம் அழைப்பு ஏற்கப்பட்டதும்
"பசங்களை கூட்டிட்டு வா..* என்று அவன் கூற இப்போது மதியழகிக்கோ உதரல் எடுக்க தொடங்கி விட்டது.


அருகில் இருந்த அண்ணனின் கைகளை பிடித்துக் கொண்டவள் கண்களில் கண்ணீர் வடிய "அண்ணா.." என்றாள் இயலாமையுடன்.. இதற்கு மேல் அவன் குழந்தைகளை தன்னிடம் விட்டு வைக்க மாட்டான் என்பதை அறிவாள் அவள்.
சாத்விக்கிற்கும் இந்த கணம் என்ன செய்வது என்று தெரியவில்லை.


எனவே அவளது கைகளை தானும் ஆதரவாக பிடித்துக் கொண்டான்.
"சார் ..."
என்றபடி தூரத்தில் தீபக் வர அனைவரின் பார்வையும் அவன் பக்கம் திரும்பியது. அவனுடன் புதிய பட்டு பாவாடை சட்டையில் தான்வி அவனது கைகளை பிடித்துக் கொண்டு துல்லிய படி வர அவர்களுக்கு அருகே காலையில் இருந்த அதே உடையுடன் அழுத்தமான முகத்துடன் வந்தான் ஆருத்.

அவர்கள் மூவரும் அருகே வந்ததும் "அம்மா இதுதான் என்னோட பசங்க. டுவின்ஸ்.. தான்வி..ஆருத்.." என்றான் ஷியாம் சுந்தர் அறிவிப்பாக.
தான்வியோ அன்னையைக் கண்டு "அம்மா..."
என்றபடி அவளை வந்து கட்டிக் கொள்ள ஆருத்தும் அன்னையின் அருகில் வந்தான்.அவர்களது உயரத்திற்கு குனிந்த மதியழகி பாய்ந்து இருவரையும் அணைத்துக் கொண்டாள்.
அவளது கண்களில் இருந்து கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது .
இவ்வளவு நேரமும் நடப்பவற்றை எல்லாம் ராகவ்வின் அருகில் நின்று பார்த்துக் கொண்டு இருந்த கனகாவிற்கு மதியழகி கலங்குவதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.


எனவே அவள் அருகே சென்று "மதிம்மா.." என்றபடி அவளது தோளில் கை வைத்தார்.
ஆனால் அவள் தனது இரண்டு குழந்தைகளையும் விடவே இல்லை. அவர்கள் இருவரும் அன்னை அழுவதை கண்டு பயந்து விட்டனர்.
தான்வி அழவே ஆரம்பித்து விட்டாள்.


அதற்கு மேல் பொறுக்க முடியாத சாத்விக்
"மதி பசங்க பயப்படுறாங்க பாரு.. விடு அவங்களை.." என்று குழந்தைகளை அவளிடம் இருந்து பிரித்து எடுத்தான்.வருணிகாவிற்கு குற்ற உணர்வாக இருந்தது. அண்ணன் இப்படி செய்து இருக்கக்கூடும் என்று அவள் சிறிதளவேனும் நம்பவில்லை.


அதற்காக தானே தனது காதலையும் உதறி தள்ளி விட்டு வந்தாள் அவள்.
இன்று அண்ணனே அவன் வாயால் சொன்னதும் அவளுக்கு சாத்விக் முன்னால் நிற்கவே கூசியது.


"ஹே என்ன இது ...?
எதுக்காக அழுது டிராமா போடுற.. வா வீட்டுக்கு போகலாம் ..."
என்று மதியழகியை பார்த்து சத்தம் போட்ட ஷியாம் சுந்தர் குழந்தைகளிடம் சென்றான். அவனையே ஒரு நொடி பார்த்திருந்த தான்வி
" நீங்க தான் எங்களோட அப்பாவா? இந்த அங்கிள் என்கிட்ட சொன்னார்.." என்று தீபக் சற்று முன்னர் அவனை புகைப்படத்தில் காட்டி கூறியதை நினைவு கூர்ந்து ஷியாம் சுந்தரிடம் கேட்டாள்.


அதில் கவலை தோய்ந்த முகத்துடன் அவளை பார்த்தவன் "ஆமாடா கண்ணா ...நான் தான் உன்னோட அப்பா..."
என்று மென்மையான குரலில் கூற சுற்றி இருந்த அனைவரும் அவனே தான் பார்த்து இருந்தனர். அவனை அறிந்தவர்களுக்கே தெரியும் இப்படி அவன் இதுவரை பேசியதே இல்லை என்பது...


தீபக்கிற்கு மயக்கமே வராத குறைதான்.
ஆனால் ஆருத் மட்டும் அவனை தீர்க்கமாக பார்த்துக் கொண்டே இருந்தான். அவன் புறம் திரும்பிய ஷியாம் சுந்தர் அவனது கன்னத்தில் தட்டி
"அப்படியே என்னை மாதிரியே இருக்கடா..." என்று கூறி மகிழ்ச்சியடைய அவனது கையை தட்டி விட்டவனோ


"நான் ஒன்னும் உங்களை மாதிரி இல்ல ..அம்மா மாதிரி இருக்கேன்.." என்றான் சூடாகவே.. அதில் ஷியாம் சுந்தரிற்கு சிரிப்பு வந்துவிட்டது. குழந்தைகள் இருவரையும் அணைத்துக் கொண்டவன் இருவரின் நெற்றியில் இதழ் பதித்து விட்டு அப்படியே அவர்களை கையில் ஏந்தி கொண்டு எழுந்து நின்றான்.

தான்விக்கு மகிழ்ச்சி தாளவில்லை. 'மற்றைய குழந்தைகளுக்கு தந்தை இருப்பதை போன்று தனக்கும் தந்தை உள்ளார்' என்பதே அவளுக்கு போதுமானதாக இருந்தது. ஆருத் தான் தந்தையின் கைகளில் இருந்தாலும் உம்மென்று முகத்தை வைத்தபடி இருந்தான்.


ராகவ்விற்கோ இப்போது தான் புரிந்தது ஏன் அவர்களை முதல் முறை பார்த்த போதே ஒருவித பாசம் தோன்றியது என்று .
இங்கு கோயிலில் வைத்து கொண்டு குடும்ப விஷயம் பேசுவது சரியாக வராது என்று உணர்ந்தவர் சிலையாக சமைந்து நின்ற தனது அக்காவை தட்டி சுய நினைவுக்கு கொண்டு வந்தார்.

" அக்கா வீட்ல போய் பேசலாம்.. வாங்க எல்லோரும் வீட்டுக்கு போகலாம்.."என்று அக்காவிடமும் கூறியவர் மற்றவர்களிடமும் அதனை கூறி அனைவரையும் அங்கிருந்து வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

போகும் வழியில் தான்வியுடன் பேசிக் கொண்டே வந்தான் ஷியாம் சுந்தர்.
ஆருத் இருவரையும் முறைத்து பார்த்து விட்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டான். இதனை ஷியாம் சுந்தர் கண்டு கொண்டாலும் அமைதியாகவே இருந்து விட்டான். அவனை தன்னுடன் பேச வைத்து விடலாம் என்று எளிதாக நினைத்துக் கொண்டான் அவன்.


அதே காரில் தான் மதியழகியும் அமர்ந்து வந்தாள் ஷியாம் சுந்தரின் கட்டளைக்கு இணங்க .
அவளோ கண்கள் கலங்க மடியில் இருந்த மகனை அனைத்துக் கொண்டு வெளியே பார்த்தபடி வந்தாள். அவள் மனதில் பல கேள்விகள் ..

'ஏன் இப்படி செய்கிறான்?' என்று அவளுக்கு புரியவே இல்லை. தாலி வேறு கட்டி விட்டான். இதற்கு மேலும் அவன் தன்னை விட்டு விடுவான் என்ற நம்பிக்கை துணியும் இல்லை அவளுக்கு. மேலும் இன்னும் அவன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது இப்போது அவளுக்கு தெளிவாகவே தெரிந்தது ..


அந்த காரில் தந்தை ,மகள் இருவரினதும் பேச்சு சத்தத்தை தவிர வேறு எந்த சத்தமும் இருக்கவில்லை .
இவர்களுக்கு முன்பே சென்ற மீனா ஆரத்தி தட்டுடன் வாயிலில் காத்திருந்தார்.

முதலில் கனகா மற்றும் ராகவ்வினை ஆரத்தி எடுத்தவர் மகனை ஆரத்தி எடுக்கலாமா வேண்டாமா என்று அவனை பார்த்து இருந்தார். அன்னையின் பார்வையை உணர்ந்து கொண்டவன் மகனை தூக்கிக் கொண்டு இருந்த மனைவியின் அருகில் சென்று
" வா .."
என்று அழைத்துக் கொண்டு இருவரின் முன்னால் போய் நின்றான். அவனது கைகளில் மகள் சமத்தாக அமர்ந்து கொண்டு இருந்தாள்.

இதுனால் வரை இதற்காக தான் மகன் திருமணத்தை மறுத்து இருக்கின்றான் என்பதை உணர்ந்து கொண்ட அந்த அன்னையின் கண்கள் கலங்கியது அவரிடம் அவன் மறைத்ததை நினைத்து.


அவன் இதை அவரிடம் கூறியிருந்தால் அவர் மறுக்கவா போகிறார் ..முத்து முத்தாக இரண்டு குழந்தைகள் வேறு ..அழகான அமைதியான மருமகள்.. அவருக்கு கசக்கவா செய்யும்.. முழு மனதுடன் நால்வரையும் ஆரத்தி எடுத்தவர் இரண்டு குழந்தைகளின் நெற்றியில் இதழ் பதித்து விட்டு மதியழகியின் தலையையும் பாசமாக வருடி விட்டார்.அவருக்கும் மகனின் செயல் பிடிக்கவில்லை ..மதியழகியின் சம்மதம் கேட்காமல் அவன் தாலி கட்டியது அவரை உறுத்தத் தான் செய்தது.
இந்த திருமணம் மதியழகிக்கு பிடிக்கவில்லை என்பதும் அவருக்கு தெள்ளத் தெளிவாகவே புரிந்தது.


இருவரும் ஏதாவது மனக்கசப்பில் பிரிந்து இருப்பார்கள் சீக்கிரம் சேர்ந்து விடுவார்கள் என்று நம்பினார் அவர் .
"உள்ளே வாங்க ..."
என்று அனைவரையும் அழைத்துக் கொண்டு மீனா உள்ளே செல்ல தயங்கி தயங்கி மதியழகியும் உள்ளே சென்றாள்..


அவள் மூன்று மாத காலம் சிறை இருந்த அதே வீடு ...அவளை அறியாமலேயே அவளது கால்கள் நடுங்கத் தொடங்கின ...தன்னை முயன்று கட்டுப்படுத்திக் கொண்டவள் கையில் இருந்த மகனைக் கெட்டியாக பிடித்துக் கொண்டாள்.
அவளையே பார்த்துக் கொண்டிருந்த வருணிகாவிற்கு அவளது நிலையை இப்போது புரிந்தது ..குற்ற உணர்வில் சிறிது சிறிதாக செத்துக் கொண்டே இருந்தாள் அவள்.

ஷியாம் சுந்தர் தான்வியுடன் உள்ளே சென்று விட மதியழகியோ மகனுடன் அங்கு இருந்த சோபாவில் அமர்ந்து கொண்டாள். சாத்விக் ராகவையும் ,மீனாவையும் தனியே அழைத்துக் கொண்டு சென்று
"நீங்கதான் அவளை பத்திரமா பாத்துக்கணும்.. அவளுக்கு இந்த வாழ்க்கையில இஷ்டம் இல்லை என்று எனக்கு தெரியும் ...அதுக்காக என் கூட அவளை கூட்டிட்டு போக முடியாது.. ஏன்னா உங்க பையன் குழந்தைகளை அவகிட்ட தரமாட்டார் ...அவளும் இந்த ரெண்டு குழந்தைங்களுக்காகவும் இங்க இருந்து தான் ஆகணும்.." எனக் கூறியவன் ராகவ்வின் கையைப் பிடித்துக் கொண்டு"கனகா அக்காவை நல்லபடியாக பார்த்துக்கோங்க ..அவங்களுக்கு இதுவரை எதுவுமே சரியாக அமையல ...நீங்க தான் அவங்களை நல்லா பாத்துக்கணும்." என்று கூறினான் கண்கள் கலங்க.


அவன் ஒரு நல்ல சகோதரன் என்பதை மீண்டும் நிரூபித்தான். அவன் விடை பெற்று செல்லும் போது மதியழகியும் கனகாவும் அழுதே விட்டனர். அவனுக்கும் நான்கு பேரையும் இங்கே விட்டு செல்வதில் கவலை தான்.
ஆனால் ஆண்மகன் என்பதால் தனக்குள்ளேயே அழுகையை அடக்கி கொண்டான் அவன்.

சாத்விக்கிற்கு ஆறுதல் கூற வேண்டும் என மனம் பதறியது வருணிகாவிற்கு. ஆனால் அதை செய்ய முடியாத இடத்தில் அல்லவா அவள் இருக்கிறாள். போகும் அவனை விழிகளில் நீர் நிறைய பார்த்துக் கொண்டே இருந்தாள் அவள் .


ராகவ் கனகாவை அழைத்துக் கொண்டு அவர்களது அறைக்குள் சென்றுவிட வருணிக்காவும் அழுகையுடன் தனது அறைக்குள் சென்று விட்டாள். மீனா தான் தாய் மகன் இருவரினதும் அருகே வந்து "உள்ளே அவன் ரூமில் போய் ரெஸ்ட் எடுங்க .." என கூறி விட்டு தானும் ஓய்வெடுக்க வேண்டி தனது அறைக்குள் புகுந்து கொண்டார்.


வேறு வழி இல்லாமல் அவன் சென்ற அறைக்கு மகனை தூக்கிக் கொண்டு சென்றாள் .
ஆருத்தோ இப்போது அன்னையின் கைகள் தூங்கி விட்டு இருந்தான்.அவளோ கதவை லேசாக தட்டி விட்டு உள்ளே சென்று பார்க்க தான்வி கட்டிலில் தூங்கிக் கொண்டு இருக்க அவள் அருகே அமர்ந்து அவளையே பார்த்தபடி இருந்தான் ஷியாம் சுந்தர்.


இவளது சத்தம் கேட்டு
நிமிந்து பார்த்தவன்
"இங்கே தூங்க வை.." என்று கூறி அவளுக்கு இடம் கொடுத்து விட்டு நகர்ந்து அமர்ந்தான்.
அவனை விசித்திரமாக பார்த்து விட்டு மகனை படுக்க வைத்து விட்டு விலகி நின்று கொண்டாள் அவள்.


அவளைப் பார்த்தவன்
"ஏன் நிற்கிறே.. நீயும் இங்க இவங்க கூடவே படுத்துக்கோ.." என்று கூறிவிட்டு செல்ல அவளுக்கு அந்த அறையும் அந்தக் கட்டிலும் அருவருப்பையே தந்தது. அவளது அனுமதி இல்லாமல் அவளுடைய கற்பு களவாடப்பட்ட அறை அல்லவா அது..


அங்கு இருப்பதே நெருப்பில் நிற்பதை போல் ஒரு உணர்வை அவளுக்கு கொடுத்தது.
ஆனாலும் வீட்டில் அனைவரும் இருப்பதால் அவளால் வெளியே செல்ல முடியாத சூழ்நிலை.
மேலும் குழந்தைகள் எழுந்து கொண்டால் அவளை தேடுவார்கள் என்ற காரணத்தால் அந்த கட்டில் படுக்க முடியாமல் தரையில் படுத்துக் கொண்டாள் அவள்.


*************

"ஆ..." என்று கத்தியபடியே வீட்டில் இருந்த அனைத்து பொருட்களையும் தரையில் வீசி அடித்தாள் மயூரி.. பார்க்கவே பயங்கரமாக இருந்தது அவளது தோற்றம்.. பைத்தியம் பிடித்தவள் போல் நடந்து கொண்டாள் அவள்.


சத்தம் கேட்டு ஓடி வந்த அவளது பாட்டி தாய் இருவரும் அவளை பிடித்துக் கொண்டனர். ஆனாலும் திமிறிக் கொண்டே இருந்தாள் அவள் .
"என்னடி ஆச்சு..? ஏன் இப்படி பண்ற?"
என அவளது தாய் அதட்ட

"என்னென்னா கேட்குற..
இதோ நிக்கிறாங்களே இவங்களோட இரண்டாவது பையன் பெத்த
பொண்ணு மதியழகி என்னோட ஷியாம் சுந்தரை கல்யாணம் பண்ணிக்கிட்டா..." என்று பாட்டியை காட்டிக் கூறியவள்
மீண்டும் பொருட்களை எல்லாம் உடைக்க ஆரம்பித்து விட்டாள்..அவளால் இன்று நடந்த செயலை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அதனை கேட்டு இருவரும் திகைத்துப் போய் நின்று இருந்தனர்."அவள் எங்கிருந்து வந்தால்?"
என்ற கேள்வி இருவரின் மனதிலும் ஓடியது.
அவளை பாட்டி பிடித்துக் கொண்டு சமாதானம் செய்ய முற்பட ஜெயராணி ஓடிச்சென்று கணவனுக்கு அழைத்து விஷயத்தை கூறினார்.


அடுத்த அரை மணி நேரத்தில் வீட்டுக்கு அரக்க பறக்க ஓடி வந்தார் அன்பு செல்வன்.
இவ்வளவு நேரமும் சத்தம் போட்டுக் கொண்டு இருந்தவள் இப்போது தான் பாட்டியின் மடியில் தூங்கிவிட்டு இருந்தாள்.

என்ன நடந்தது என்று ஜெயராணியிடம் அன்பு செல்வன் விசாரிக்க மகள் கூறியது அனைத்தையும் கூறிவிட்டார் அவர். "எப்படி வந்தா.. அவன் கொன்னு இருப்பானு நினைச்சேன் ..இப்படி திடீர்னு கல்யாணம் பண்ணிக்கிட்டான். ச்சே...."
என்று தனது இயலாமை கோபமாக வெளியேற்றினார் அவர்.ஜெயராணியோ
"அது மட்டும் இல்லைங்க ..ரெண்டு பசங்க வேற இருக்காங்களாம்.. ஏற்கனவே கல்யாணம் ஆச்சுன்னு சொன்னானாம்..மயூரி சொல்லி புலம்பிக்கிட்டே இருக்கா ..கொஞ்சம் என்னன்னு விசாரிச்சு பாருங்க .."
என்று மேலும் கூறிவிட்டு மகளை பார்க்க உள்ளே செல்ல அன்பு செல்வனோ தீவிர யோசனையில் இறங்கி விட்டார்.

தொடரும்....
 

Mafa97

Moderator
அத்தியாயம் 💔 25


உடல் அசதியால் தன்னை மறந்து நீண்ட நேரம் தூங்கியவள் கண் விழித்து பார்க்க குழந்தைகள் இருவரும் இன்னுமே எழுந்து கொள்ளவில்லை .
அவள் எழுந்ததை அறிந்து கொண்டவன் போல் எங்கிருந்தோ வந்தான் ஷியாம் சுந்தர்.


அவளோ அவனை கேள்வியாக பார்க்க
"இனிமேல் இங்கே கீழே தூங்குற வேலை எல்லாம் வச்சுக்காத.. பசங்க பாத்தாங்கன்னா ஏன் எதுக்குன்னு கேள்வி கேட்பாங்க.. இவ்வளவு பெரிய கட்டில் இருக்கு தானே அதிலேயே தூங்கு.."
என்றான் குழந்தைகளுக்கு கேட்டு விடாத மெல்லிய குரலில்.


அவளும் அதே மெல்லிய குரலில் "என்னால் இந்த கட்டிலில் படுக்க முடியாது.
இந்த ரூமே எனக்கு புடிக்கல..." என்று கண்களில் நீர் தேங்கி நிற்க கூறி முடித்தாள்.
" அப்படின்னா பசங்களுக்கு ஒரு ரூம் ரெடி பண்ணி இருக்கேன். அதுலையே தூங்கிக்க.." என்று கூறி விட்டு மீண்டும் எங்கோ சென்று விட்டான்.


'இவன் நல்லவனா கெட்டவனா?' என்ற கேள்விதான் தோன்றியது அவள் மனதில். அன்று மாலை குழந்தைகளுக்கு என்று ஒரு அறையை தயார் செய்து அதற்குள் மூவரையும் விட்டுவிட்டு வந்தான். தான்வி அவனுடன் வாய் ஓயாமல் பேச அன்னை மகன் இருவரும் முகத்தை உம்மென்று வைத்தபடி இருந்தனர் .


அதனை பார்த்து தனக்குள்ளேயே பெருமூச்சு விட்டுக் கொண்டவன் ஆருத்தின் கன்னத்தை தட்டி விட்டு வெளியே சென்றான்.

இப்படியே அவர்களது நாட்கள் கழிந்தன ..
தான்வி மட்டுமே ஷியாம் சுந்தருடன் பேசுவாள்.
இருவரும் அவனுடன் பேசுவது இல்லை .
அவனும் காலப்போக்கில் மகன் தன்னுடன் பேசுவான் என்று நம்பிக் கொண்டு இருந்தான்.

மீனா மட்டும் மதி அழகியுடன் நன்கு பழகினார். வருணிக்கா மட்டும் பேசுவதே இல்லை. ஒரு புன் சிரிப்புடன் கடந்து விடுவாள் அவள். மதியழகியும் இதனை எல்லாம் கண்டு கொண்ட போதும் அதனை அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வருணிகாவிற்கு அவளை தப்பாக நினைத்து பேசியதினால் ஏற்பட்ட குற்ற உணர்ச்சி. அதனால் தான் மதியுடன் எப்படி பேசுவது என்று தெரியாமல் அமைதியாகவே இருந்து விட்டாள்.


ராகவ் கனகாவின் வாழ்க்கையோ இனிமையாகவே கழிந்தது. இதுவரை காலமும் அவர் அனுபவித்திறாத சந்தோஷத்தையும் அன்பையும் திகட்டும் அளவிற்கு கொடுத்துக் கொண்டு இருந்தார் ராகவ். கனகாவை இப்படி பார்க்கையில் மதியழகியின் மனது நிறைந்து போன உணர்வு..


அன்று இரவு உணவின் போது ஆருத்தின் பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டான் ஷியாம் சுந்தர் .
அவனது மற்றைய பக்கம் தான்வி அமர்ந்து இருந்தாள். அங்கு உணவு பண்டங்களுடன் பாயாசமும் இருக்கவே
"என்னம்மா திடீர்னு பாயாசம்..?" என புருவம் சுருக்கியபடி ஷியாம் சுந்தர் வினவ


"உன்னோட பையனுக்கு பாயாசம் ரொம்ப பிடிக்குமாம் ..அது தான் கிளாஸ்ல ஃபர்ஸ்ட் மார்க் வாங்கிட்டான்னு அவனோட அம்மா கிட்ட சொல்லி செஞ்சு கேட்டான்.." என்று மீனா விளக்கமும் கூறினார். மதியழகிக்கு பழைய நினைவுகள் வந்து போயின.. தன் அன்னை மகனுக்கு பாயாசம் பிடிக்கும் என்று கூறியதும் அவனும் சட்டென்று மதியழகியை தான் நிமிர்ந்து பார்த்தான்.


அவளை போலவே அவனுக்கும் ஐந்து வருடங்களுக்கு முன் நிகழ்ந்தது நினைவில் தோன்றி இருக்க வேண்டும் ..
மதியழகிக்கோ கண்கள் கலங்கி விட்டன.
அவளை பார்த்த ஆருத்
" என்ன ஆச்சும்மா..?" என்று கவலையாக கேட்டிட மகனை சமாளிப்பதற்காக
"காரம் டா கண்ணா.." என்று கூறிவிட்டு அங்கு இருந்த நீரை எடுத்து பருகினாள்.


அவன் சின்ன பையன் தானே அவள் சொன்னதை நம்பி விட்டான். ஆனால் ஷியாம் சுந்தருக்கு மட்டுமே தெரியும் அந்த கண்ணீருக்கான உண்மையான காரணம். அன்று இரவு தூங்கச் செல்லும் போது தான்வி தந்தையுடன் தான் தூங்குவேன் என்று அடம் பிடிக்க அவளை தூக்கிக் கொண்டு சென்று அவனது அறை கதவை தட்டினாள் மதியழகி.


குழந்தைகளுக்கு என்று கொடுக்கப்பட்ட அறையில் தான் மதியழகியும் இப்போது தூங்குகிறாள் .
மூவருக்குமான உடைகளையும் அவனே வாங்கி குவித்தான். அனைவர் முன்னிலையிலும் அவளுக்கு மட்டும் வாங்காமல் விட்டு விட்டால் சரியாக வராது என உணர்ந்து அவளுக்கும் சேர்த்து அனைத்தையும் செய்தான் .


அவள் கதவில் லேசாக தட்ட கதவை திறந்து கொண்டு வெளியே வந்தவன் அவளிடம் இருந்து குழந்தையை வாங்கிக் கொண்டு தனது தோளில் போட்டு அவளை தட்டிக் கொடுத்து தூங்க வைத்தான். ஓரிரு நிமிடங்கள் அங்கு நின்ற மதி அழகி வெளியே செல்ல முற்பட
"உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.. வெயிட் பண்ணு .."
என்றான் மெல்லிய அதே சமயம் அழுத்தமான அதிகாரமான குரலில்.

அவளும் தோன்றிய கோபத்தை தனக்குள்ளேயே புதைத்துக் கொண்டு அவன் வரும் வரை காத்திருந்தாள்.
தான்வியை தூங்க வைத்துவிட்டு வெளியே வந்தவன்
" வா .."
என்றபடி முன்னாள் நடக்க அவளும் அவன் பின்னே நடந்து சென்றாள்.


தோட்டத்தில் போடப்பட்டிருக்கும் இருக்கையில் அமர்ந்து கொண்டவன் அவளை அமர கூட சொல்லாமல் அவளையே அழுத்தமாக பார்த்து இருந்தான். அவன் அமைதியாக தன்னை பார்த்துக் கொண்டு இருப்பது எரிச்சலை உண்டு பண்ண
" என்ன விஷயம்? அங்க பசங்க தனியா இருக்காங்க .."என்று பட்டென கூறிய விட்டாள்.


அவளது பட்டென்ற பேச்சில் தனது தாடையை தடவிய படி பார்த்தவன் "நீ குழந்தைகளோட பர்த் சர்டிபிகேட்ல கூட என் பெயர் போடல நன அப்படித்தானே..?" என்றான் நக்கலாக.
வீட்டில் இருப்பதால் எதுவும் செய்ய மாட்டான் என்று அறிந்தவள் எ கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு
" ஆமா போடல ..அதுக்கு இப்போ என்ன?"
என்றாள் திமிராக.


அவளுடைய இந்த பேச்சு அவனது கோபத்தை தூண்டிய போதும் அமைதியாகவே பேசினான் அவன்.
" ஓகே ...
ஆனா இப்போ எல்லாம் மாத்தியாச்சு.." என்றான் அதே நக்கல் தொணியில்.

" என்ன?"
என்ற கேள்வி மட்டுமே அவளிடம் இருந்து வெளிப்பட்டது.
" அது மட்டுமில்ல நம்ம கல்யாணத்தையும் ரிஜிஸ்டர் பண்ணியாச்சு.. அதுவும் அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நடந்த மாதிரி.."
என்று அசராமல் அவன் கூறிக்கொண்டே போக மயக்கம் வராத குறைதான் அவளுக்கு.


'எப்படி முடிந்தது
அவனால்?
அவளது கையெழுத்து இல்லாமல் எப்படி ?'
அதை அவனிடம் கேட்கவும் செய்தாள் அவள் .

அவளை பார்த்து இளக்காரமாக பார்த்து புன்னகைத்தவன்
"எல்லாம் பணம் செய்யுற வேலைமா ..அன்னைக்கு ஆபீஸ்ல வச்சி நீ சைன் பண்ணத அப்படியே நான் தான் இங்க சைன் பண்ணேன்..
உன்னோட சைன் வைக்கிறதுக்கு ரொம்ப ஈஸியா வேற இருந்துச்சு.."
என்று அவளது கேள்விக்கு பதிலும் கூறினான் ..


அவனை பற்றி தெரிந்து இருந்ததால் அவள் எதுவும் பேசவில்லை .
அவனுடன் மோத முடியாது என்பது வரை தெரிந்தது அவளுக்கு.
" ஆமா நான் எதுக்கு உங்களுக்கு..? எதுக்காக மேரேஜ்ஜை ரிஜிஸ்டர் பண்ணுனீங்க..?"
என்று இப்போது அவனிடம் அடுத்த கேள்வி கேட்க அவளை மேலிருந்து கீழ் வரை ஒரு மார்க்கமாக பார்த்தவன்
"சொல்லியே ஆகணுமா..? செயல்ல காட்டட்டா?"
என்று அவளிடம் கேட்டு வைத்தான்.


அவனுடைய பார்வை அவளுக்கு அருவெறுப்பையே உண்டு பண்ணியது .
"ஒரு பொண்ணோட உடம்பை மட்டும் தானே பாக்குறீங்க.. அவளுக்கும் ஆசைகளும் கனவுகளும் இருக்கும் என்பதை மறந்து போறீங்க.. உங்களைப்போல ஆம்பளைங்களுக்கு பொம்பளை சுகம் தான் தேவைன்னா எவகிட்டயாவது போக வேண்டியது தானே.." என மூச்சு வாங்க பேசியவள் இருந்த கோபத்தில் மேலும் வார்த்தைகளை விட ஆரம்பித்தாள்.


" உங்களுக்கு எல்லாம் ஒரு ஆணா இருக்கும் போது ஒரு பொண்ணோட மனசு புரியாது.. அவ உடம்பு மட்டும் தான் கண்ணுக்கு தெரியும் .
இதே நீங்க இப்போ ஒரு பொண்ணோட அப்பாவாகிட்டீங்க.. எனக்கு நடந்த மாதிரியே உங்க பொண்ணுக்கும் நடந்தால்... அவளையும் என்னைப் போலவே உங்களை மாதிரி ஒருத்தன் நாசம்..."
என்று மட்டும் தான் கூறியிருப்பாள் அதற்குள் அவளது கழுத்தை பிடித்து தூக்கி இருந்தான் ஷியாம் சுந்தர்.


கோபத்தில் அந்த இருளிலும் அவனது கண்கள் ஜொலித்தன. அவள் பேசியதை அவனால் ஒரு அப்பாவாக ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

" என்னடி விட்டா பேசிட்டே போற.. புள்ள பூச்சி நீயெல்லாம் பேசுற அளவுக்கு வளர்ந்திட்ட இல்ல.. நீ என்னடி சொல்றது.. அவ என் பொண்ணு .
ராணி மாதிரி அவளை வாழ வைப்பேன். உன்னை போல அவ பிச்சைக்காரி இல்லைடி.. கோடீஸ்வரன் ஷியாம் சுந்தரோட பொண்ணு ..அவளுக்கு ஒரு ராஜகுமாரனை தேடி ஜாம் ஜாம்னு கல்யாணம் பண்ணி வைப்பேன் இந்த அப்பா.." என்றான் ஆங்காரமாக அவளது கழுத்தை நெறித்தபடி.


கால்கள் அந்தரத்தில் மிதக்க கழுத்தில் வலி ஏற்பட அவனது கைகளை தட்டி விட முயன்றாள் பெண்ணவள் .
சிறிது நேரம் அவளை அப்படியே தூக்கிப் பிடித்து இருந்தவன் சட்டென்று தனது கைகளை எடுத்துக் கொள்ள தொப்பென்று வந்து தரையில் விழுந்தாள் மதியழகி.


அவள் முன் அதே கோபத்துடன் குனிந்தவன்
" திரும்பவும் இதே மாதிரி பேசிட்டு இருந்தேன்னா உன்னை கொன்னு போட கூட தயங்க மாட்டேன்.. ஜாக்கிரதை..."
என விரல் நீடி எச்சரித்து விட்டு உள்ளே சென்றான்.


அவன் சென்ற திசையை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு கண்கள் கலங்கி கண்ணீரும் வெளியே வந்தது‌.
அது அவனது செயலால் அல்ல... தனது செல்ல மகளையே இப்படி பேசியதால் வந்த கண்ணீர் தான் அது ...


அவன் மீது இருந்த கோபத்தில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமலேயே பேசி விட்டாள்.

இதை எல்லாம் தனது அறை பால்கனியில் இருந்து பார்த்தபடி இருந்தாள் வருணிக்கா. நீண்ட நேரம் முயன்றும் தூக்கம் வராத காரணத்தால் வெளியே காற்று வாங்கலாம் என்று வந்தவளின் கண்களில் தான் இந்த காட்சி பட்டது.


அண்ணன் இப்படி செய்யக்கூடும் என்று அவள் கனவில் கூட நினைக்கவில்லை ..
இன்று அவளது கண் முன்னாடியே மதியழகியை எப்படி செய்கிறானே... யாரும் இல்லாத போது அந்த மூன்று மாத காலமும் அவளிடம் எப்படி நடந்து கொண்டு இருப்பான் ...என அவளால் நினைத்துக் கூட பார்க்கவே முடியவில்லை..


' ஏன் அவன் இப்படி ஆகிவிட்டான்.. அன்னையின் வளர்ப்பு எங்கே பிழைத்துப் போய்விட்டது.?' பெருமூச்சு மட்டுமே விட முடிந்தது அவளால் .
இதற்காக சாத்விக்கிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முடிவு செய்தவள் தூங்கச் சென்றாள்..


அடுத்த நாள் விடிந்ததும் விடியாததுமாக சாத்விக்கை தேடி அவன் வீட்டுக்கு சென்றாள் வருணிகா.
அவளை இந்த நேரத்தில் அதுவும் தன் வீட்டில் கண்டதும் அவனுக்கு அதிர்ச்சி தான். அவன்தான் இத்தனை நாட்கள் அவளை தெரிந்தது போலவே காட்டிக் கொள்ளவில்லை அல்லவா.


இன்று வீட்டுக்கு அவள் வந்ததும் அவனுக்கு என்ன செய்வது என்று தெரியாத நிலைதான். அவனது திகைத்த தோற்றத்தை கண்டவள்
" என்ன அப்படி பார்க்கிறீங்க..? உள்ளே வான்னு கூப்பிட மாட்டீங்களா!" என்றாள் கேள்வியாக .


அதில் சுய உணர்வு பெற்றவன்
"வா.."
என்று கூறிவிட்டு அவள் உள்ளே வருவதற்கு இடம் கொடுத்துவிட்டு தள்ளி நின்றான்.
அவன் உட்கார சொல்லாமலேயே அங்கு இருந்த இருக்கையில் அமர்ந்தவள்
"ஏன் வந்து இருக்கேன்னு கேட்க மாட்டீங்களா?"
என்று கேட்ட போதும் அவன் எதுவும் பேசவில்லை..


பெருமூச்சொன்றை வெளியிட்டவள்
" சரி நானே சொல்றேன்.. உங்களை இது நாள் வரை பிரிஞ்சு இருந்ததுக்காக சாரி கேட்டு வந்து இருக்கேன்.. அப்புறம் மதியை சாரி.. சாரி ..அண்ணியை பற்றி தப்பா பேசினதுக்கு ரொம்ப ரொம்ப சாரி..
எல்லாமே என்னோட தப்பு தான்.. என் அண்ணனை நம்பினேன் ..அவர் இப்படி பண்ணி இருக்க மாட்டார்னு முழுசா அவரை நம்பினேன்..


ஆனா அது ரொம்ப பெரிய தப்புன்னு இப்ப புரிஞ்சுகிட்டேன்.. இவ்ளோ வருஷத்துக்கு அப்புறம் அவரே புரிய வச்சுட்டாரு ..
என்னால அண்ணி கிட்ட நேரடியா போய் மன்னிப்பு கேட்க முடியல. என்னோட குற்ற உணர்ச்சி தடுக்குது ..
நீங்களாவது என்னை மன்னிச்சிடுங்க ..ரியலி சாரி .."என்று தன் இரு கைகளையும் கூப்பி அவனிடம் மன்னிப்பு கேட்டாள் அவள் .

ஆனால் அவன் அவளை பார்த்திருந்தானே தவிர எந்த எதிர்வினையும் காட்டவில்லை. அவளுக்கு அவனது நிலை புரிந்து இருந்தது. தான் செய்த தப்புக்கு
இதுவே தண்டனையாக இருக்கட்டும் என்று நினைத்தவள் "நீங்க மன்னிச்சிட்டேன்னு சொல்லும் வரை நானும் மன்னிப்பு கேட்டுக்கிட்டே தான் இருப்பேன்.. எனக்கு தெரியும் நீங்க என்னை அவ்வளவு சீக்கிரத்தில் மன்னிக்க மாட்டீங்கன்னு.. இருந்தாலும் அதுக்காக நான் போராடுவேன்..
இப்போ போயிட்டு மீண்டும் வரேன்.."


என்று அவனிடம் கூறி விட்டே சென்றாள் வருணிகா.
அவள் சென்ற பிறகு அங்கிருந்த இருக்கையில் பட்டென்று அமர்ந்தவனுக்கோ அவள் நினைவுதான் .
அவள் இப்படி வந்து மன்னிப்பு கேட்கும் போது மன்னித்துவிடு என்று மனம் சொன்னாலும் அவன் பட்ட வேதனைக்கு அது ஈடாகாது என எண்ணினான் அவன்.

தன் காதலி தன்னை நம்பவில்லை எனபதே மீண்டும் மீண்டும் மனதில் தோன்றி அவனை வதைத்தது. சிறிது நாட்கள் சென்ற பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டான் அவன்.

தொடரும்....

[
 

Mafa97

Moderator
அத்தியாயம் 💔 26


மயூரி தான் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தாள். வீட்டினருடன் கூட அவள் சரியாக பேசுவது இல்லை. எப்போதும் ஏதோ யோசனை செய்த வண்ணம் தான் அவள் இருப்பது. பாட்டிக்கும் மனது பொறுக்கவில்லை .
ஆசைப் பேத்தி இப்படி ஒரு நிலையில் இருப்பதை அவரால் கண் கொண்டு பார்க்கவே முடிவதில்லை .


அவளை அப்படி பார்க்க முடியாத காரணத்தால் அன்பு செல்வன் அனைத்தையும் விசாரித்து தெரிந்து கொண்டார். ஷியாம் சுந்தர் மதியழகியை திருமணம் செய்து கொண்டதாகவும் அந்த இரண்டு குழந்தைகளும் அவனுடையது என்றும் தான் அவருக்கு தகவல் கிடைத்தது ..


அதைக் கேட்டு ஆடித் தான் போய்விட்டார் அவர்.
' இந்த வீட்டில் வேலைக்காரியாக இருந்தவளுக்கு இப்படி ஒரு வாழ்வா?
அதனை அளித்தே தீர வேண்டும்' என்று முடிவு செய்தவர் தக்க தருணத்திற்காக காத்திருக்க ஆரம்பித்தார்.


இப்போது மகளின் அருகே சென்று அமர்ந்தவர் சுற்றி இருந்த தாயையும் மனைவியும் ஒரு பார்வை பார்த்துவிட்டு பேச்சை ஆரம்பித்தார்.


"மயூரி உனக்கு அவன் தான் வேணும்னா என்ன கஷ்டப்பட்டாலும் அவனை உன் கூட சேர்த்து வைக்கிறோம்... நீ மட்டும் இப்படி இருக்காதம்மா.. பார்க்கவே முடியல..." என்று அன்பு செல்வன் கவலையுடன் மயூரியின் தலை வருடியபடி பேச எப்படி என்ற கேள்வியை தாங்கிய பார்வை வெளிப்பட்டது மயூரியிடம் இருந்து.அதனை சரியாக புரிந்து கொண்டவர்
" மதியழகியை கொல்லனும். அப்புறம் ஈசியா அவன் லைஃப்க்குள்ள போயிடலாம் .."
என்று கூறி வில்லத்தனமாக புன்னகைத்தார் .
சுற்றி இருந்த மற்றவர்களும் அரக்கர்கள் என்பதால் அவரது யோசனை பிடித்து போக அவரைப் பார்த்து அதே புன்னகையை சிந்தினர் .."அப்படின்னா எதுக்குப்பா யோசிக்கிற ...
சீக்கிரமே அதை பண்ணு... அவ செத்தால்தான் என் பேத்தி சந்தோஷமா இருப்பான்னா உடனே அதை செய் ..."
என்று பாட்டியும் மதியழகியை தனது பேத்தி என்று மறந்து அவளை கொள்ளும் படி கூறினார்.ஆனால் ஜெயராணி மட்டும் ஏதோ யோசனையில் இருப்பதை கண்ட அன்பு செல்வன்
"என்ன?"
என்றார் ஒற்றை கேள்வியாக மனைவியிடம்..


" அது வந்து... அவ செத்து ட்டா மயூரியை எப்படியாவது கல்யாணம் செஞ்சு வைக்கலாம்
.. ஆனா அவ பெத்த அந்த இரண்டையும் என்ன பண்றது?"
என்று ஜெயராணி கேட்டிட பாட்டிக்கும் இப்போது தான் குழந்தைகளின் நினைவே வந்தது.


" அது ஒரு மேட்டரே இல்லை. அவங்களை காரணம் காட்டி கல்யாணம் பண்ணிக்கிட்டு கொஞ்ச நாள்ல அதுங்களையும் ஏதாவது பண்ணிடலாம்.. ரூட் கிளியர்..."
என்று அன்பு செல்வன் தனது திட்டத்தை இலகுவாக விளக்கிட அனைவருக்கும் அதில் ஏக திருப்தி. இப்போது தான் மயூரியின் முகத்தில் புன்னகை தோன்றியது.

"அதுக்கு முதல்ல நாம ஒரு காரியம் பண்ணனும்..."
என்று அன்பு செல்வன் ஆரம்பிக்க 'என்ன?'
என அவரையே பார்த்தனர் மற்ற மூவரும் .


"நாங்க திருந்திட்ட மாதிரி நடிச்சு மதியழகி சாத்விக் ரெண்டு பேர் கிட்டயும் மன்னிப்பு கேட்டு தான் அந்த வீட்டுக்குள்ள நுழையணும்.. என்ன சொல்றீங்க?"
என்றார் அவர்.
அதை விட்டால் வேறு வழியும் இல்லை என்பதால்
அனைவரும் அவர் கூறியபடி நடந்து கொள்ள முடிவு செய்தனர்.


ஷியாம் சுந்தர் எப்படிப்பட்டவன் என்று முழுமையாக தெரியாமல் அவர்கள் திட்டம் தீட்டி கொண்டு இருந்தார்கள்.

*****************


மதியழகி தான் உண்டு தன் வேலை உண்டு என்று தான் அந்த வீட்டில் வளம் வந்து கொண்டு இருந்தாள். கனகாவிடமும் குழந்தைகளிடமும் மட்டுமே சகஜமாக பேசுவாள் அவள். மீனாவாக பேசினால் அன்றி அவள் பேசுவது இல்லை ..


அன்றும் உணவு மேசையில் அனைவரும் உணவருந்திக் கொண்டு இருக்க குழந்தைகள் மட்டும் நேரமே உண்டு விட்டு தூங்கச் சென்று இருந்தனர். இதுதான் சரியான தருணம் என உணர்ந்த மீனா வருணிக்காவை ஒரு பார்வை பார்த்து விட்டு மகன் புறம் திரும்பி
"கண்ணா நம்ம வருக்கும் வயசு ஏறிக்கிட்டே போகுது.. கல்யாணம் செய்துக்கோன்னு சொன்னாலும் முடியாதுன்னு சொல்லிடுறா.. நீ தான்பா உனக்கு தெரிஞ்ச பையனா பார்த்து சொல்லணும்.." என்று மெதுவாக அந்த கதையை அவன் காதில் போட்டு விட்டார்.அவரை பார்த்து வருணிக்கா முறைத்துக் கொண்டு இருக்க அன்னையையும் அவளையும் மாறி மாறி பார்த்தவன்
" எனக்கு தெரிந்து சாத்விக் இவளுக்கு சரியான ஜோடியா இருப்பார்.. வேணும்னா மாமா கிட்ட சொல்லி அவர்கிட்ட பேசி பார்க்க சொல்லுங்க .."
என்று சொல்ல ஷியாம் சுந்தரி அதிர்ந்து போய் பார்த்தாள் வருணிகா.அண்ணன் தெரிந்து தான் சொல்கிறானா இல்லை ஒரு குத்துமதிப்பாக சொல்கிறானா என்று அவளுக்கு சரியாக தெரியவில்லை. மதியழகி கனகா இருவரும்
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனரே தவிர எதுவும் பேசவில்லை .


ராகவ் மற்றும் மீனா இருவருக்கும் சாத்விக்கை பிடிக்கும்.. அதனால் அவர்களுக்கு இதில் மகிழ்ச்சியே.. எனவே ராகவ் தான்
"ஓகே.. நான் கேட்டு பார்க்கிறேன்.. அப்புறம் நம்ம வருக்கு இதுல இஷ்டமான்னு ஒரு வார்த்தை கேட்கணும்பா.."
என்று கூற அவளோ என்ன சொல்வது என்று தெரியாமல் திருதிருவென விழித்தாள்.அவளைப் பார்த்து வந்த சிரிப்பை இதழ்களுக்குள் மறைத்தவன் "அவளுக்கு என்ன மாமா ..சாத்திவிக்கை யாருக்குத்தான் பிடிக்காது.. நீங்க தாராளமா அவர்கிட்ட பேசுங்க.." என்று கதையை அத்தோடு முடித்து விட அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர் ...நாட்களை கடத்தாமல் அடுத்த நாளே ராகவ் சாத்விக்குடன் பேச அவனால் தான் இதில் ஒரு முடிவை எடுக்க முடியவில்லை ..
எனவே 'யோசிச்சு சொல்றேன்' என்று மட்டும் கூறிவிட்டான் .
அன்று மாலையே சாக்விக்கிடம் மதிழகியும் இந்த விடயம் பற்றி பேச அவன் இதற்கு மேல் மறைத்து பயனில்லை என்று அவளிடம் அனைத்தையும் கூறிவிட்டான்.


அவளுக்குத் தான் இப்போது சங்கடமாகிப் போனது.
தன்னை மையமாக வைத்து அவர்களது காதல் பிரிந்தது என்பதை நினைக்கையில் வேதனை கொண்டது அவளது மனம்.


எனவே இப்போது அதை சரி செய்ய எண்ணியவள்
" அண்ணா எனக்காக நீ அவங்களை கல்யாணம் செஞ்சு தான் ஆகணும்.. ரெண்டு பேருமே இன்னுமே உங்க மனசுல காதலை வச்சுக்கிட்டு தான் கல்யாணம் கூட பண்ணாம இருக்கீங்க ..
சோ எல்லா மனக்கசப்புகளையும் விட்டுட்டு கல்யாணம் பண்ற வழியை பாருங்க.."
என்று கூறி விட அவனும் வருணிக்காவை தவிர வேறு ஒருவரை தன்னால் திருமணம் செய்து கொள்ள முடியாத காரணத்தால் சரி என்று கூறி விட்டான்.

மாலை நேரம் போல் தோட்டத்தில் ஆருத் தான்வி இருவரும் விளையாடிக் கொண்டு இருக்க அன்று நேரமே வீட்டுக்கு வந்து இருந்த ஷியாம் சுந்தர் அவர்களிடம் சென்றான் .
சற்று தொலைவில் அமைந்து புத்தகம் படித்துக் கொண்டு இருந்த மதியழகியின்
கவனம் முழுவதும் இரு குழந்தைகளிடமும் தான்.


எப்போதும் போல் தான்வி குதித்துக் கொண்டு அவனிடம் ஓட அவளை தூக்கி முத்தமிட்டவன் ஆருத்தையும் தூக்குவதற்காக கையை நீட்ட ஆருத் அதனை தட்டி விட்டான் . மகனது செயலை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை..


முதல் முறை இப்படி ஒரு வலியை உணர்கிறான் அவன்.
மகன் சின்ன குழந்தை தானே காலப் போக்கில் சரியாகிவிடுவான் என்று அவன் நினைத்து இருக்க சிறிதேனும் தன்னை நோக்கி வராமல் இருப்பதை நினைத்து இப்போது உள்ளம் வெடிப்பது போன்று இருந்தது அவனுக்கு.


மகளை இறக்கி விட்டவன்
"அப்படி போய் விளையாடுங்க. அப்பா இதோ வரேன்.." என்று அவளை அனுப்பி விட்டு நிதானமாக மகன் புறம் திரும்பினான்.
அவனோ தந்தையை கண்டு கொள்ளாமல் தனது விளையாட்டிலேயே கவனம் வைத்து இருந்தான்.

அவன் முன் மண்டியிட்டு அமர்ந்தவன் தன்னை நோக்கி அவனைத் திருப்பி
"ஏன்டா கண்ணா இந்த அப்பாவை உனக்கு பிடிக்கலை ...பாரு தான்வி என்கிட்ட பழகுறான்னு..
அப்புறம் நீ மட்டும் ஏன்டா..?" என்றான் கவலையோடு.


சற்று தொலைவில் இருந்து இவர்களையே அவதானித்து கொண்டு இருந்த மதியழகியும் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தாள். "எனக்கு உங்களை பிடிக்கல . நீங்க அம்மா கூட பேசுறது இல்லை. அவங்களுக்கும் உங்களை பிடிக்காது. சோ எனக்கும் பிடிக்காது.." என்றான்.
அப்போது அந்த இடத்தை அடைந்த மதிழகியும் அங்கு இருந்த ஷியாம் சுந்தரும் திகைத்து விட்டனர் அவன் பதிலில்.சிறு பையனாக இருந்த போதும் அவர்கள் இருவரையும் எத்தனை தூரம் அவன் கவனித்து இருக்கிறான் என்பது இருவருக்குமே ஆச்சரியம் தான். பொதுவாக பெண் குழந்தைகள் தந்தையுடனும் ஆண் குழந்தைகள் தாயுடனும் அதிக ஒட்டுதலாகத்தான் இருப்பார்கள்.. அதே போல் தான் ஆருத்தும் அன்னை என்றால் அவன் அப்படி ஒரு பிரியம் வைத்திருந்தான்.

ஷியாம் சுந்தரோ
என்ன பேசுவது என்று தெரியாமல்
"டேய் கண்ணா ..அப்படி இல்லடா அம்மா ....
அம்மாவை நான் பாசமாத்தான் பாத்துக்குறேன்.."
என்று தட்டுத்தடுமாறி வாய்க்கு வந்ததை பேசினான்...


" இல்லை ஸ்கூலுக்கு வர்ற என் ஃப்ரெண்ட்ஸோட அம்மா அப்பா சிரிச்சு சிரிச்சு பேசுவாங்க...
ஹக் பண்ணிப்பாங்க... நெத்தியில கிஸ் பண்ணுவாங்க... .
நீங்க அதெல்லாம் பண்றது இல்லை..."
என்ற ஆருத்தின் பேச்சில் அவனது பெற்றோர் பேச்சற்று திகைத்து நின்று விட்டனர்...

அவர்களை கண்டு கொள்ளாத ஆருத்
" அம்மா மேலே பாசம் இருந்தால் ஏன் இத்தனை நாள் எங்களை விட்டுட்டு இருந்தீங்க..?"
என்றும் கேட்டிட தனது செயல் மகனின் மனதை எவ்வளவு தூரம் பாதித்து இருக்கக்கூடும் என்பதை இப்போது அறிந்து கொண்டான் ஷியாம் சுந்தர்.


தனி மனிதனாக இருக்கும் போது தான் செய்த தவறுகள் இப்போது ஒரு தந்தையாக இருக்கும் போது அவன் முன்னே பூதாகரமாக தோன்றியது..
அன்று இரவு மதியழகி கூறியது நூறு சதவீதம் உண்மை என்பதை இப்போது புரிந்து கொண்டான்.. அதற்கு மேல் மனைவி மகன் முன்னிலையில் நிற்க முடியாமல் அந்த இடத்தை விட்டு சென்று விட்டான்.

மதியழகிக்கு அவனைப் பார்க்க பாவமாக எல்லாம் இருக்கவில்லை. அவனது தவறுக்கான தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும் என்று எண்ணினாள் அவள்.
ஆனால் மகன் பேசியது தவறு என்றே தோன்றியது அவளுக்கு..


பெரியவர்களிடம் மரியாதையாக பேச வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க எண்ணி
அமைதியாகவே மகனுக்கு எடுத்துக் கூறினாள்.

" கண்ணா அவர் உன்னோட அப்பா. சோ இனிமேல் அவர் கிட்ட அப்படி பேசக்கூடாது ..ரைட்டா... பெரியவர்களுக்கு மரியாதை தரணும்... அம்மா சொல்லி இருக்கேன் தானே.."
என்று பாசமாக அவன் தலைவருடிய படி பேச மாட்டேன் என அன்னைக்கு வாக்குறுதியும் கொடுத்தான் ஆருத்.இப்படியே மேலும் இரண்டு நாட்கள் கடந்து சென்று விட சாத்விக்கின் வீட்டிற்கு முறையாக சென்று பேச வேண்டும் என்பதற்காக வருணிக்காவை தவிர மற்ற அனைவரும் மாலை நேரம் போல் சென்றனர்.. நீண்ட நாட்களுக்கு பிறகு அங்கு செல்வது குழந்தைகளுக்கு சந்தோஷமாய் இருந்தது.


ஷியாம் சுந்தரும் சாத்விக்கை நேராக பார்த்து பேசவில்லை.. சாத்விக்கும் நேருக்கு நேராக பார்த்து பேசவில்லை.. என்ன இருந்தாலும் இருவருக்கும் இடையே ஒரு பனிப்போர் நடந்து கொண்டே தான் இருந்தது.
இது யாருக்கு தெரிந்ததோ இல்லையோ மதியழகிக்கு நன்றாகவே தெரியும்
.... ஆனால் அவளும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

இவர்கள் உள்ளே பேசிக் கொண்டு இருக்க வெளியே கார் சத்தம் கேட்கவும் சாத்விக் எழுந்து கொள்ள முற்படும் போது அவனை தடுத்து மரதியழகி தான் யார் என்று பார்க்க சென்றாள்..


அங்கு பாட்டி, அன்பு செல்வன், ஜெயராணி , மயூரி அனைவரும் அவளை நோக்கி வந்து கொண்டிருந்தனர்..
அவர்களை கண்டதும் மதியழகிக்கு பேச்சு வரவில்லை.. 'இத்தனை வருடங்கள் கழித்து ஏன் தானாக எங்களை தேடி வரவேண்டும்?'
என்று மனதில் தோன்றினாலும் வெளியே உணர்வுகளை காட்டாது அவர்களை பார்த்து இருந்தாள்‌.


அவளைக் கண்டு மற்றவர்களுக்கு கோபம் தோன்றிய போதும் இப்போது அவளை ஏதாவது சொல்லி காரியத்தை கெடுத்துக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை. எனவே போலியாக சிரித்துக் கொண்டு "என்ன மதி அப்படி பாக்குற..? உள்ளே வாங்கன்னு கூப்பிட மாட்டியா..?"
என்று பாட்டி கேட்டிட..


"வா.. வாங்க ..."
என்று அழைத்தவள்
உள்ளே செல்ல இவர்களும் அவளது பின்னே சென்றனர்... அவர்களுக்கு ஏற்கனவே சாத்விக்கிற்கும் வருணிக்காவிற்கும் திருமண பேச்சு நடைபெறுவது தெரியும்..


அவர்கள் இங்கு வருவதை அறிந்து கொண்டே தான் அன்பு செல்வன் தனது குடும்பத்தை அழைத்துக் கொண்டு இந்த நேரத்தில் வந்து இருந்தார். மதியழகி உள்ளே வர அவர்கள் பின்னால் வந்த தன் குடும்பத்தை கண்ட சாத்விக் கோபத்தில் இருக்கையில் இருந்து எழுந்து நின்றே விட்டான்.

கனகாவும் எழுந்து நின்று கொள்ள ஷியாம் சுந்தர் ஏளன புன்னகையோடு நடப்பவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தான். அவனை கண்ட அன்பு செல்வனுக்கு உள்ளுக்குள் சிறிது பயம் தோன்றத் தான் செய்தது.. ஆனாலும் வலுக்கட்டாயமாக புன்னகைத்துக் கொண்டு அங்கு இருந்த அனைவருக்கும் வணக்கம் வைத்தார்.

தொடரும்....

 

Mafa97

Moderator
அத்தியாயம் 💔 27

அன்பு செல்வன் அனைவருக்கும் வணக்கம் வைத்துவிட்டு இப்போது மகனைப் பார்த்தார்.
அவனோ அவரைக் கண்டு கொள்ளாமல் எங்கோ பார்த்தபடி நின்று இருந்தான்.


மீனாவிற்க்கு தான்
இவர்கள் யார் என்பது தெரியவில்லை ...
அவரது பார்வையை கண்டு கொண்ட வடிவுக்கரசி தான்
" நாங்க யாருன்னு உங்களுக்கு தெரியாதும்மா..
சாத்விக்கோட பாட்டி தான் நான்.. இது அவனோட அப்பா.. இது அம்மா.. இவ தங்கச்சி..." என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ள


மீனா அவரை பார்த்து புன்னகைத்தபடியே
"அப்படியா அம்மா... உங்களை பார்த்ததுல எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் ...அப்புறம் மயூரியை எனக்கு முன்னாடியே தெரியும்.. ரொம்ப நல்ல பொண்ணு அவ..." என்றார்...


தங்களுக்குள் ஏற்பட்ட சிறிய மனக் கசப்பு காரணமாகவே மகனை பிரிந்து இருப்பதாக அன்பு செல்வன் வாய்க்கு வந்த பொய்யை எல்லாம் எடுத்து விட்டார்.
மதியழகி மற்றும் கனகா இருவரும் அவரை அதிர்ச்சியாக பார்க்க சாத்விக்கோ அவரை முறைத்து பார்த்துக் கொண்டு இருந்தான்.


"ஐயோ அதுக்கு என்னங்க.. குடும்பம்னா ஆயிரம் பிரச்சனை இருக்கத்தான் செய்யும்.. அதை எல்லாம் பெருசா எடுத்துக்க கூடாது.. பையன் கல்யாணத்துல நீங்களே முன்ன நின்னு எல்லாத்தையும் பண்ணுங்க ..என் பொண்ணை உங்க குடும்பத்துக்கு அனுப்புறதுல ரொம்ப சந்தோசம் எனக்கு..."
என்று மீனா கூற அவர்களோ வாயெல்லாம் பல்லாக சரி என்பது போல் தலையை ஆட்டி வைத்தனர்.இதில் சாத்விக்கிற்கு தான் பேச இடம் கிடைக்காமல் போனது. அவர்களுக்கு முன்னால் பெற்றோருடன் சண்டை போட அவன் விரும்பவில்லை. நடப்பவற்றை எல்லாம் பார்த்துக்
கொள்ளலாம் என்று அமைதியாக இருந்து விட்டான் அவன்..தொடர்ந்து மீனாவே தான் ஜெயராணியிடம்
"ஆமா மதி உங்களுக்கு எப்படி சொந்தம்..?"
என்று கேட்டிட அவரோ என்ன சொல்வது என்று தெரியாமல் தடுமாறி விட்டார்.


ஆனால் பாட்டி தான் அவசரமாக "என் ரெண்டாவது பையன் அன்பரசன்னோட பொண்ணு.. அவளோட அம்மா அப்பா இப்ப உயிரோட இல்லை.."
என்று கூறினார்.மீனாவும் அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை.. எல்லோரும் பேசிக் கொண்டே இருக்க கனகாவை அழைத்துக் கொண்டு மதியழகி சமையலறைக்குள் நுழைந்தாள்.

கனகாவிற்க்கோ இவர்களின் வருகை பிடிக்கவில்லை. அதை மதியழகிடமும் வெளிப்படுத்தினார் அவர் .
மதியழகித்தான் அவரை சமாதானப்படுத்த வேண்டியது ஆயிற்று..
" அக்கா விடுங்க ...
அண்ணா என்னால தான் அவங்க குடும்பத்தை விட்டு பிரிஞ்சு இருக்கார் .
இப்போதாவது ஒன்னா சந்தோஷமா இருக்கட்டும்.."
என்று மதியும் முடித்துவிட கனகாவும் அதற்கு மேல் எதுவும் பேசாமல் அமைதியாகி விட்டார்..

இதே சமயம் மயூரிக்கு
தோட்டத்தில் விளையாடிக் கொண்டு இருக்கும் குழந்தைகளை பார்க்கையில் கோபம் கொழுந்து விட்டு எரிந்தது.
ஆனால் அதை வெளிக்காட்ட முடியாமல் அமைதியாக இருந்தாள் அவள்.. காரியம் கை கூடும் வரை அமைதியாக இருப்பதே நல்லது.

அனைவரும் அங்கிருந்து விடை பெற்று செல்ல மதியழகிக்கு
ஏனோ அண்ணனை விட்டு தனியே செல்ல முடியாத உணர்வு.. எனவே இன்று தான் இங்கு தங்கி கொள்வதாக அவள் மீனவிடம் மட்டும் கூற அவரும் சரி என்று விட்டாள்.


சஷியாம் சுந்தரிடம் அவள் சம்மதம் கேட்கவே இல்லை. அவனும் அனைவரும் இருக்கையில் எதுவும் சொல்ல முடியாமல் போகவே அவளை முறைத்து விட்டே தான் சென்றான்.
தான்வி சோகமாக தந்தையை வெளியே அனுப்பி வைத்தாள். இங்க வீட்டில் நால்வரும் விளையாடிக் கொண்டும் பேசிக்கொண்டும் இருக்க இரண்டு குழந்தைகளும் நேரமே தூங்கி விட்டு இருந்தனர் ...


தனிமை கிடைத்ததும் தங்கையின் அருகே வந்து அமர்ந்த சாத்விக்
" என்னடா ரொம்ப கஷ்டமா இருக்கா அந்த வீட்டில இருக்கிறதுக்கு..?"
.. என்று பரிவாகக் கேட்டிட
" அய்யோ அப்படியெல்லாம் இல்லை அண்ணா.. தான்வி அவர் கூட இருக்கும்போது சந்தோஷமா இருக்கா.. அதுவே போதும் ."
என்று அண்ணனை சமாளித்து விட்டு தனது அறைக்கு சென்று அடைந்து கொண்டாள்.


தங்கையை நினைத்து அவனுக்கு கவலையாகி போனது.
" என்றுதான் அவளது வாழ்க்கையில் உண்மையான மகிழ்ச்சி கிடைக்குமோ?"
என அவனால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

அறைக்குள் சென்ற மதியழகி தூங்கிக் கொண்டு இருக்கும் குழந்தைகளின் நெற்றியில் முத்தமிட்டு விட்டு எழுந்து கொள்ள அதே நேரம் அவளது அலைபேசி சத்தம் எழுப்பியது. இந்த நேரத்துல யார் என்று நினைத்தவள் அழைப்பை ஏற்க

"ஹலோ மதி... அழகி. .."
என்ற ஷியாம் சுந்தரின் குரல் அவளது காதில் கேட்டது.
திரும்பி தூங்கிக் கொண்டு இருக்கும் குழந்தைகளை பார்த்தவள் வெளியே வந்து பால்கனியில் நின்றவாறு
"ம் சொல்லுங்க ..."
என்றாள்.


"என்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு அங்க இருக்கணும்னு ஏன் உனக்கு தோணலை..?"
பட்டென்று வந்தன அவனது வார்த்தைகள்.,.
" ஏன் கேட்கணும்..?"
என்று அவளும் சளைக்காமல் பேச இப்போது அவனுக்கு கோபம் வரவே
" நான் உன் புருஷன் டி.. என்கிட்ட கேட்கணும் ..."
என்று சூடாகவே பதில் கூறினான்.

"ஓ நீங்க என் புருஷன்னு எனக்கு நீங்க சொல்லும் போது தான் ஞாபகம் வருது ..
தினமும் குடும்பம் நடத்துறதுக்காக முதலில் தாலி கட்டுனீங்க.. அப்புறம் அஞ்சு வருஷம் கழிச்சு குழந்தைகளுக்காக தாலி கட்டுனீங்க... அப்புறம் எப்படி என்கிட்ட உரிமை எடுத்துக்க உங்களால முடியும்..?"
என்று தனது முழு கோபத்தையும் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு கேட்டாள்.அவனா அதை எல்லாம் கேட்டு திருந்தி விடப் போகிறான்..
" நீ சொன்னது எல்லாம் உண்மைதான்... நான் இல்லைன்னு சொல்லவே இல்லை... அதுக்கு இப்போ என்ன பண்ணலாம்ங்குற..?"
என்று அவன் கேள்வி கேட்க இவனிடம் பேசி பயனில்லை என்று உணர்ந்தவள் அமைதியாகி விட்டாள்.

அவனது பிறவி குணத்தை மாற்ற முடியாது அல்லவா... அவள் அமைதியாக இருந்ததும் ஒரு குற்றமாகி போனது அவனுக்கு. "என்னடி பேச மாட்டேங்குற??..." என்று அதற்கும் எகிறினான் அவன்...


"பேசினாலும் உங்களுக்கு புரியப்போறதும் இல்லையே.. அதனால பேசாமல் இருக்கிறது நல்லதுன்னு நான் நினைக்கிறேன்.." என்றும் கூறிவிட்டாள்.. இன்று
தனக்கு தோன்றிய அனைத்தையும் பேச முடிவெடுத்து இருந்தாள்.அவளது பேச்சை கேட்டவன் "இப்பெல்லாம் நீ ரொம்ப பேச ஆரம்பிச்சிட்டே டி ...பேசுற அந்த வாய்க்கு சீக்கிரமே தண்டனை கொடுக்கணும்.." என்று ஒரு மாதிரி குரலில் அவன் கூற
அதை புரிந்து கொள்ளாதவளும்
"பெருசா என்ன தண்டனை கொடுக்கப் போறீங்க.. சாப்பாட்டை மேல கொட்டுவீங்க ..இல்லைன்னா சூடு வைப்பீங்க.. எல்லாம் பழகி போனது தானே..."
என்றாள்.


அதை கேட்டு சத்தமாக சிரித்தவன் "அது எல்லாம் பழசா போச்சு..
புதுசா ஏதாவது ட்ரை பண்ணலாம்னு நினைக்கிறேன்..
பேசுற அந்த வாய்க்கு என் வாயால தான் தண்டனை கொடுக்கணும்
.. ரெடியா இரு ....மதி ...அழகி‌‌.."
என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டான்.அழைப்பை துண்டித்த பிறகே அவன் கூறியது புரிந்தது அவளுக்கு...
அவன் இதுவரை அவளிடம் அப்படி பேசியதே இல்லை என்பதால் அவளுக்கு ஏதோ போல் இருந்தது ...அதனை முயன்று புறம் தள்ளியவள் குழந்தைகளுக்கு அருகே சென்று படுத்துக் கொண்டாள்.


அங்கு ஷியாம் சுந்தர்கோ தான் பேசியதை நினைத்தே அதிர்ச்சி தான்.
அவன் பேசியதை அவனாலே நம்ப முடியவில்லை..
' நானா இப்படி பேசினேன்..?' என்று தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டான் அவன்.

அடுத்த நாள் மதியழகி வீட்டுக்கு சென்ற போது ஷியாம் சுந்தர் இல்லை ...அதனால் அவளும் கிளம்பி வேலைக்கு சென்று விட்டாள்.. இப்போது எல்லாம் மாலை நேரங்களில் அதிக நேரத்தை குழந்தைகளுடன் செலவு செய்ய வேண்டும் என்று அவள் நேரமே வீட்டுக்கு வந்து விடுவாள்..


இன்றும் அப்படி நேரமே வந்து பார்க்க மீனாவுடன் பேசிக்கொண்டு இருந்தாள் மயூரி. அவளை இந்த நேரத்தில் இங்கு கண்டு அதிர்ந்தாலும் வெளியில் அதை காட்டிக் கொள்ளாமல் சாதாரணமாகவே அவர்கள் அருகில் வந்தாள்.


அவளை கண்டதும் மயூரியின் முகம் மாறிப் போக மீனாவோ
"வாம்மா.. இதோ உன் தங்கச்சி உன்னை பார்க்க வந்திருக்கா.. முன்னாடியும் இங்கு வருவா தான். ஆனா இப்பதான் உரிமையா வந்து இருக்கா.." என்று கூறினார். மதியழகிக்கோ இது சரியாக படவில்லை ..


'இவள் எல்லாம் திருந்தக் கூடிய ஆளே இல்லையே ..'என்று மனதுக்குள் நினைத்தவள் வெளியில்
" வா மயூரி.. வந்து ரொம்ப நேரம் ஆச்சா ..?"
என்று கேட்டு வைத்தாள்..
" கொஞ்ச நேரம் ஆச்சு "
என்று பட்டும் படாமலும் மதியழகிடம் பதில் கூறினாள் மயூரி.அதற்கு மேல் அங்கு நிற்காமல் அவர்களிடம் சொல்லிக் கொண்டு சென்று விட்டாள் அவள்.மகளின் வேண்டுகோளுக்கு அமைய இப்போது எல்லாம் ஷியாம் சுந்தர் மாலை 6 மணிக்கே வீட்டுக்கு வந்து விடுவான்..
இன்றும் அதே போல் வீட்டுக்கு அவன் வர அவனது மகள் வழமை போல பாய்ந்து வந்து அவனை அணைத்துக் கொண்டாள்.. மகளை தூக்கி நெற்றியில் முத்தமிட்டவன் மகனை திரும்பி ஏக்கமாக பார்க்க அவன் அமைதியாக நின்று இருந்தான். அதில் தைரியம் பெற குனிந்து மகனது கன்னத்தில் முத்தமிட்டு விட்டு அவனை தூக்கிக் கொள்வதற்காக கைகளை நீட்ட அந்த கைகளுக்குள் சமத்தாக அடங்கி விட்டான் அவன்..


இதனை கண்டு அப்படி ஒரு மகிழ்ச்சி ...
"கண்ணா
அப்பா மேல இருக்க கோபம் போயிடுச்சா..?"
என்று அவன் பேசிட அவனது மகனோ
நான் உன்னை விட புத்திசாலி என்ற நிரூபிக்கும் பொருட்டு
"அப்படி எல்லாம் இல்லை.. அம்மா சொன்னாங்க அதனால தான்..." என்றான் பட்டென்று..


அதனை கேட்டு சிரித்தவன் அவனது நெற்றியில் தனது நெற்றியால் முட்டி விட்டு
"நீ என் பையன்னு அடிக்கடி நிரூபிக்கிறடா... அதே அழுத்தம்... லவ் யூ சோ மச்...."
என்று கூறினான்.

அதனை கேட்டு அவனது மகன் முகத்தை திருப்பிக் கொள்ள மகளோ
"அப்போ எனக்கு...?"
என்று கேட்டு வைத்தாள்.
" உனக்கும் லவ் யூ சோ மச் டா பேபி.." என்று இருவரிடம் பேசிக் கொண்டே உள்ளே சென்றான் ஷியாம் சுந்தர்.


அவனைக் கண்டதும் மயூரி எழுந்து நிற்க அவளை புருவம் சுருக்கி பார்த்தான் அவன்‌..
ஷியாம் சுந்தரை கண்டு மகிழ்ச்சியில் பூத்திருந்த அவளது முகம் அவனுடைய கைகளில் இருந்த இரண்டு குழந்தைகளையும் கண்டதும் இருண்டு போனது..


இதனையும் காணத்தவிரவில்லை அவன்.
இருந்தாலும் அவளை கண்டுகொள்ளாமல் குழந்தைகளுடன் அவனது அறைக்குள் சென்று விட்டான்.அவனது அந்த செயல் அவளை மேலும் கோபப்படுத்தியது..


"இப்படி இரும்மா...இதோ வந்துடறேன்.." என்று கூறிவிட்டு மீனா உள்ளே சென்று விட தனியாக இருப்பதற்கு பிடிக்காமல் எழுந்து அந்த வீட்டை சுற்றிப் பார்த்தாள் மயூரி.அன்றைய நாள் அப்படியே எந்த மாற்றமும் இன்றி கழிய அடுத்த நாள் காலையில் பெட்டி படுக்கையுடன் அந்த வீட்டின் வாசலில் வந்து நின்றாள் மயூரி. உடன் பாட்டியும் நின்று இருந்தார். அப்போது தான் ஆபீஸ் போக தயாராகி வெளியே வந்து இறந்தனர் மதியழகி ஷியாம் சுந்தர் இருவரும்.பாட்டியோ தனது நடிப்பை தொடங்கி விட்டார் அவர்களை கண்டதும் ...
"சம்பந்தி... நாங்க ஒரு முக்கியமான பூஜைக்காக ரெண்டு வாரம் சுற்றி உள்ள கோயிலுக்கு எல்லாம் போக இருக்கோம்... வயசு பொண்ணை கூட்டிட்டு போகவும் முடியாது.தனியா விட்டுட்டு போகவும் முடியாது... அதனால தான் அவளோட அக்கா வீட்டில.."
என்று பாட்டி தயக்கமாக இழுத்து பேச கனகாவிற்கு மயக்கமே வராத குறைதான் ..


இதுவரை மதியழகியை அந்த வீட்டு பெண்ணாகவே அவர்கள் கருதியது இல்லை ...இன்று அவர் குழைந்து பேசுவது என்ன... மதியழகியை சொந்தம் கொண்டாடுவது என்ன.... அவரால் இதனை எல்லாம் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை ..


"அதுக்கு என்ன இங்கேயே தங்கிக்கட்டும் ..."
என்று கூறியது வேறு யாரும் இல்லை ஷியாம் சுந்தரே தான். அவன் அருகே நின்று இருந்த மதியழகி அவசரமாக நிமிர்ந்து பார்த்தாள். பாட்டிக்கும் பேத்திக்கும் மகிழ்ச்சியில் புரியவில்லை..


"என் பொண்டாட்டியோட சொந்தக்காரங்க எப்ப வேணா இங்க வரலாம்..தங்கலாம்..."
என்றான் மீண்டும் அழுத்தமாக.. பாட்டி அவனுக்கு நன்றி கூறிட அதனை ஏற்றுக் கொண்டவன் அடுத்த நிமிடமே அலுவலகம் சென்று விட்டான்..


இவன் ஏன் இப்படி செய்கிறான் என்று தெரியாமல் குழம்பிப் போனது என்னவோ மதியழகி தான் ‌..
அவளுக்கு அவனை புரிந்து கொள்ளவே முடியவில்லை... அவளுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் அவன் புரியாத புதிர் தான்..


அதன் பிறகு மதியழகியும் வெளியே செல்ல அவளுடன் கனகாவும் வெளியே வந்து செல்லும் மதியழகியை
" மதிம்மா.."
என அழைத்து நிறுத்தினார்.. அவர் என்ன பேசப்போகிறார் என்று அறிந்து இருந்த மதியழகி
திரும்பி பார்த்து
"அக்கா நீங்க என்ன சொல்ல போறீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும். இப்போ நான் முன்ன மாதிரி இல்லை.. எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்.. நீங்க கவலைப்படாமல் போய் ரொமான்ஸ் பண்ணுங்க.." என அவரை ஏதோ சொல்லி சமாளித்துவிட்டு ச
வெட்க்கப்பட வைத்து விட்டே தான் சென்றாள்.அந்த நேரத்திற்கு கனகா வைக்கப்பட்ட போதும் அவள் சென்ற பிறகு அவருக்கு
' இனிமேல் என்ன நடக்கும்..' என்ற யோசனை தான் மனதில் ஓடிக் கொண்டே இருந்தது..
இவர்களின் வருகையால் மதியழகியின் வாழ்க்கையில் மீண்டும் பிரச்சனை வருமா என்று பயந்தார் அவர்..
அவருக்கு ஏனோ இதனை எல்லாம் நினைக்கையில் பயமாகவே இருந்தது..மதியழகி முன்பு போல் அல்லாது இப்போது தைரியமாக இருப்பதால் ஓரளவு தன்னை சமாதானப்படுத்திக் கொண்டார்.தொடரும்...


 

Mafa97

Moderator
அத்தியாயம் 💔 28

தனது அலுவலக அறையில் வேலை செய்து கொண்டு இருந்த மதியழகியின் முன்னே வந்து நின்றான் ஷியாம் சுந்தர் .
"அவன் எப்படி இங்கே..?" என்ற கேள்வி தோன்ற எதுவும் பேசாமல் அவனை பார்த்திருந்தாள் அவள். அவனுக்கு என்று எந்தவிதமான மரியாதையும் அவள் வழங்கவில்லை ..


அது அவனுக்கு கோபத்தை வரவழைத்த போதும் இன்று அவளுடன் பேசி முடிவெடுக்க வேண்டும் என்று நினைத்தவன் அவள் அமரும் படி சொல்லாவிடினும் தானே அமர்ந்து கொண்டான்.
" என்ன மிஸ்டர் ஷியாம் சுந்தர்.. இந்த ஏழை பொண்ணை தேடி இவ்வளவு தூரம் வந்து இருக்கீங்க..?"
என்றாள் நக்கலாகவே.


அவனுக்கு அவளது பேச்சைக் கேட்டு ஆச்சரியமே.
தினம் தினம் அவனது கண்களுக்கு புதிதாக தெரிந்தாள் அவள் .
முன்பென்றால் அவள் இப்படி பேசியிருக்கவும் மாட்டாள் ..அதனை கேட்டுக் கொண்டு அவன் அமைதியாக இருக்கவும் மாட்டான்.. ஆனால் இன்று நிலைமையோ மாறி போயிருந்தது.

அவளது கேள்விக்கு இளக்காரமாக ஒரு புன்னகையை வீசிவிட்டு
"மிஸிஸ்.. ஷியாம் சுந்தரை கொஞ்சம் சந்திச்சுட்டு போகலாம்னு வந்தேன்.. இப்போ அவங்க கூட பேசலாமா.. ஃப்ரீயா இருக்காங்களா?"
என்றான் அவனும் நக்கலாக. அதில் பல்லை கடித்தவள்
"என்ன விஷயம் ?"
என்றாள் இப்போது நேரடியாகவே..


"ம்.. அதுவா..?"
என்று இழுத்துப் பேசியவன் மீண்டும் அவளை அழுத்தமாக பார்த்துவிட்டு
"நாம ஏன் பசங்க முன்னாடி கொஞ்சம் க்ளோசா இருக்க கூடாது..?" என்று கேள்வியாகவே நிறுத்தினான்.இப்போது அவனது கேள்வியில் கேலி புன்னகையுடன் அவனை பார்த்து இருந்தாள் அவள். அவளுடைய அந்த புன்னகை அவனை கோபப்படுத்தி இருக்க வேண்டும்.

" என்னடி நல்லா பேசுறேன்னு இப்படி நடந்துக்கிறியா?"
என்றான் சற்றே குரலை உயர்த்தி, அவனுக்கு இன்றாவது சரியான பதில் கொடுக்க எண்ணியவள் இருக்கையை விட்டு எழுந்து அவன் முன்னால் வந்து நின்றாள்.


நிமிர்ந்து அவளைப் பார்த்தான் அவன்.
" என்னை ஒரு சராசரி பொண்ணா தான் உங்களுக்கு தெரியும். ஆனால் நான் பட்ட கஷ்டங்கள் எதுவுமே உங்களுக்கு தெரியாது.. பணம் பணம்னு அலையுற குடும்பத்தில ஒரு நல்லவருக்கு பிறந்தது தான் நான் செஞ்ச முதல் தப்பு..

அம்மா ஒரு ஏழை.. அதுலையும் யாரும் இல்லாத ஒரு அனாதை அவங்க .
ரெண்டு பேரும் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க.. அவங்க உயிரோடு இருக்கும் வரை நானும் அந்த வீட்டுல ராணி தான்.. அப்பா இறந்ததுக்கு அப்புறம் தான் எல்லோரும் சுயரூபத்தை காட்ட ஆரம்பிச்சாங்க ..என் கண் முன்னாடியே என் அம்மாவை கீழே தள்ளிவிட்டு கொலை வேற பண்ணாங்க.." என்றவள் கண்களில் வடிந்த கண்ணீரை மெல்ல தட்டிவிட்டாள்.

அவனும் அவள் கூறுவதையே அமைதியாக பார்த்துக் கொண்டு இருந்தான்.
" எதுவும் பேசாதே.. அமைதியாகவே இரு.. உனக்கு குடும்ப முக்கியம், நீ என்னை போல யாரும் இல்லாதவளா வளரவே கூடாதுன்னு சொல்லி சொல்லியே என்னை வளர்த்தாங்க
என்னோட அம்மா ..

எந்த இடத்திலயும் அந்த குடும்பத்துக்கு எதிரா என்னை அவங்க பேசவிடவேயில்லை.. அவங்க ரெண்டு பேருமே இல்லாத அப்புறம் நான் அனுபவிச்ச வேதனையை என்னால சொல்லவே முடியல ..ஆறுதலுக்கு கனகா அக்காவை தவிர வேறு யாரும் என்கூட இருக்கவே இல்லை..

அப்புறம் தான் பெரியப்பா என்னை உங்ககிட்ட பைலை திருட சொல்லி அனுப்பி வச்சார். அப்போ கூட கனகா அக்காவை கொலை பண்ணிடுவேன்னு சொல்லித்தான் மிரட்டினார். எனக்கும் வேற வழியே தெரியல. அதனாலதான் இங்க வந்தேன்.. ஆனா நீங்களும் என்னை ரொம்பவே கஷ்டப் படுத்திட்டீங்க.. இப்போ நான் முன்னாடி இருந்த மதியழகி இல்லை ..குழந்தைகளுக்காக குடும்பத்துக்காகன்னு எல்லாம் நான் உங்க கூட சேர்ந்து நடிக்க கூட தயாரா இல்லை.." என்று கூறி முடித்தாள்.


அவனுக்கு தெரியாத சில விடயங்களையும் அவள் கூறினாள். அது அவனுக்கு அதிர்ச்சியை தான் கொடுத்தது. அவளுடைய அன்னையை அவர்கள் கொலை செய்த விடயம் அவனுக்கு புதிது அல்லவா .
மேலும் அன்பு செல்வன் அவளை பயமுறுத்தி இங்கு அனுப்பி இருப்பார் என அவன் நினைக்கவே இல்லை..


ஒருவேளை பணத்திற்கு ஆசைப்பட்டு அவளே வந்து இருப்பாள் என்று தான் அவன் எண்ணியிருந்தான்.
இன்று அவனது கணிப்பு பொய்யாய் போனதில் ஏனோ ஒரு கோபம் அவனுக்கு.. ஆனால் இப்போது இந்த கோபம் அவளிடம் இல்லை ..அவன் மேலே அவனுக்கு கோபம்.. இப்படி இதுவரை அவன் கணிப்பு பொய்யாய் போனதே இல்லை என்பதால் வந்த கோபமே அது.


அதற்காகவெல்லாம் உடனே காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் ரகம் இல்லை அவன் .
அதற்கு மேல் எதுவும் பேசாமல் எழுந்து கொள்ள
"ஒரு நிமிஷம்.."
என்று அழைத்து அவனை தடுத்து நிறுத்தினாள் அவள் ..


அவளது குரலை கேட்டு நின்றானே தவிர திரும்பி பார்க்கவில்லை. "நீங்க சொல்றதுக்காக பசங்க முன்னாடி என்னால க்ளோசா இருக்க முடியாது.. ஏன்னா நான் உங்களால அவ்வளவு பாதிக்கப்பட்டு இருக்கேன் . நீங்க தாலி கட்டிடீங்கன்றதுக்காக நான் உங்க கூட இருக்கல.. முன்னாடி நடந்த எல்லாத்தையும் உங்க ஃபேமிலி கிட்ட சொல்லவும் ஒரு நொடி போதும் எனக்கு.. ஆனால் நான் இப்போ எதையும் சொல்ல மாட்டேன். என் பொண்ணுக்கு புரியுர பருவம் வரும்போது அவகிட்ட நீங்க எனக்கு செஞ்ச கொடுமைகள் அனைத்தையும் சொல்லுவேன்.. அப்போ ஒரு பொண்ணா ஒரு மகளா அவளே முடிவு எடுப்பா..

என் பையன்
எல்லாத்தையும் புரிஞ்சுப்பான்.
அன்னைக்கு என் ரெண்டு பசங்களோடயும் நான் தலை நிமிர்ந்து இந்த வீட்டை விட்டும் உங்களை விட்டும் வெளியே போவேன்.... இப்ப கூட என்னால போக முடியும் ...ஆனா அப்பாகிட்ட இருந்து பொண்ணை பிரிச்ச பாவம் எனக்கு வேணாம் ...அவளே தான் உங்களுக்கான தண்டனையை கொடுக்கணும்..
'ஏன் அப்பா இப்படி ஒரு பொண்ணுக்கு துரோகம் பண்ணீங்க '
என்று அவள் உங்களை பார்த்து கேள்வி கேட்கணும்.. அதுவே எனக்கு போதும்... என தலை நிமிர்ந்து பேசினாள் மதியழகி.

இதுவரை காலமும் எதற்காகவும் அசராதவன் இன்று ஆடிப் போய்விட்டான். அவன் செய்ததை அவனது மகளிடம் கூறினால் அதன் பிறகு என்ன நடக்கும் என்பது அவன் கண்முன்னே தோன்றி மறைந்தது ..
அவன் செய்த பாவத்திற்கான தண்டனையை மகள் மூலம் கொடுக்க நினைக்கிறாள் ..


அவளை திரும்பி ஒரு பார்வை பார்த்து விட்டு விறு விறுவென அங்கிருந்து சென்று விட்டான் ஷியாம் சுந்தர் .
இன்று தான் மதியழகிக்கு திருப்தியாக இருந்தது.. அவளை பொருத்தவரை குழந்தைகளுக்கு தந்தை பாசமும் வேண்டும்... அவர்களே அவனுக்கு தண்டனையும் கொடுக்க வேண்டும்..


ஏனென்றால் அவன் அவளுக்கும் மற்றவர்களுக்கும் எப்படி போனாலும் ஆருத்
தான்வி இருவருக்கும் நல்ல தந்தை.. அவர்கள் தன்னுடன் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் மீண்டும் அவள் கழுத்தில் அவன் தாலி கட்டினான். அதுவே அவர்கள் மேல் அவன் வைத்த பாசத்திற்கு சாட்சி.

****************

இன்றுடன் இரண்டு நாட்கள் கடந்து சென்று விட்டன ஷியாம் சுந்தர் வீட்டிற்கு வந்து .
அவன் வெளிநாடு எதுவும் செல்லவில்லை என்பது மதியழகிக்கு நன்றாகவே தெரியும். ஏனெனில் அவன் ஆபீஸ் செல்வதை அறிந்திருந்தாள் அவள். ஆனால் அன்று அவளுடன் பேசிச் சென்ற பிறகு அவன் இந்த வீட்டுக்கு வருவதே இல்லை. மகள் தான் தந்தையைக் கேட்டு அடம் பிடிக்க ஆரம்பித்து விட்டாள்.இவளுக்கு தான் என்ன செய்வது என்றே தெரியவில்லை. தான் பேசியதால் தான் அவன் வீட்டுக்கு வருவது இல்லை என்பதை அறிந்து இருந்தாள் பெண்ணவள்.


இதனை எல்லாம் அவள் யோசனை செய்து கொண்டு இருக்க
" அண்ணி..."
என்று அழைத்தபடி அவள் அருகே வந்து சேர்ந்தாள் வருணிகா. முதல் முறை மதியழகியுடன் பேசுகிறாள் அவள்..மதியழகி வியப்புடன் அவளை நிமிர்ந்து பார்க்க கண்களில் கண்ணீருடன்
"அண்ணி என்னை மன்னிச்சிடுங்க..." என்று வருணிகா கைகூப்பி மன்னிப்பு கேட்க மதிக்கு ஒரு மாதிரியாகிவிட்டது..
சாத்விக் அனைத்தையும் அவளிடம் கூறியிருந்தான் என்பதால் இதற்கு மேலும் அவள் கேள்வி கேட்டு அவளை சங்கடப்படுத்த விரும்பாது "இருக்கட்டும் விடுங்க ..நீங்க என்கூட பேசுனதே போதும் .."
என்று கூறி விட அவளைப் பாய்ந்து பாய்ந்து அணைத்துக் கொண்டாள் வருணிகா.


மதியழகிக்கு தான் இப்போது சங்கடமாகிப் போனது. "இதையெல்லாம் எதுக்கு பெரிசு படுத்துகிட்டு இருக்கீங்க.. பழசை எல்லாம் மறந்துட்டு நிம்மதியா என் அண்ணன் கூட வாழற வழியை பாருங்க.. அவன் பாவம் ..எனக்காக வாழ்ந்தது போதும்..." என்று மதியழகி வருணிகாவிடம் கூற அவளும் சரி என்று கண்ணீருடனே தலையை ஆட்டி வைத்தாள்.
அப்போது அவர்கள் அருகே வந்த தான்வி
" அத்தை என் அப்பா எங்கே போனாங்கன்னு உங்களுக்கு தெரியுமா..?"
என்றாள் வருணிக்வை பார்த்து.. ஆனால் அவளுக்கும் அவன் எங்கே சென்றான் என்று தெரியாதே. எனவே "அவர் வேலை விஷயமா போயிருக்காருடா.. வந்துடுவார்.." என பொய் கூறி சமாளித்தவள் அவளை தூக்கிக் கொண்டு வெளியே சென்று விட்டாள்.


மதியழகிக்கு தான் மகளை நினைத்து கவலையாகி போனது.. மகள் ஓரளவிற்கு வளரும் வரை தந்தை பாசம் தேவை என்று எண்ணினாள் அவள் .
அதற்காக அவனிடம் சென்று பேசவும் அவளால் முடியவில்லை.இப்படியே மேலும் இரண்டு நாட்கள் கழிந்து விட வைரஸ் காய்ச்சல் வந்து சோர்ந்து போனாள் தான்வி. பாடசாலை மாணவர்களுக்கும் காய்ச்சல் இருப்பதால் அது தான்விக்கும் வந்து சேர்ந்து இருந்தது.. ராகவ் வைத்தியரை வீட்டிற்கு அழைத்து தான்வியை காட்டியும் ஆயிற்று.. ஆனால் காய்ச்சல் குறைந்தபாடு தான் இல்லை..


" அப்பா... அப்பா..."
என்று முனகிக் கொண்டு இருந்தாள் தான்வி.
அவளை பார்க்கையில் மதியழகிக்கு கோபம் தோன்றிற்று.. 'அம்மா நான் உடன் இருக்கும் போது இன்று வந்த இந்த தந்தையை அவள் தேடுகிறாளே...' என்று மனம் கவலை கொள்ளவும் செய்தது ..மகளுக்காகவாவது அவனிடம் பேசிட முடிவு செய்தவள் அவன் இப்போது இருக்கும் வீட்டுக்கு அவனை தேடிச் சென்றாள்.


அவன் அங்கு தான் இருப்பான் என்று யூகத்தில் தான் அவள் அங்கு சென்றது.மீனாவிடம் குழந்தையை பார்த்துக் கொள்ள சொல்லி விட்டு சென்றிருந்தாள் அவள்..


மதியழகி அவனது வீட்டை அடைந்ததும் உள்ளே செல்லாமல் சிறிது நேரம் தயங்கிய படியே வெளியே நின்றாள்.


இப்படியே நின்று இருந்தால் காரியம் ஆகாது என்று அறிந்தவள் உள்ளே செல்ல அங்கு இருந்த சோபாவில் கையில் மது பாட்டிலுடன் அமர்ந்திருந்தவன் தான் அவளை வரவேற்றான்..
" மதி ...அழகி.. "
என்று அவன் குளறலாக அழைக்க அவளுக்கு தான் திக்கென்றானது.


கண்கள் மூடிய நிலையில் இருக்க தன்னை எப்படி அவன் கண்டு கொண்டான் என்பது அவளை வியப்பிற்கு உள்ளாகியது. அப்படியே அவள் பேசாமல் நின்று இருக்க பட்டென கண்களை திறந்து பார்த்தவன்
"என்ன விஷயம் ?"
என்றான் கேள்வியாக ..


அவளுக்கு அவனை பார்க்கையில் கோபம் தான் தோன்றியது. அங்கு அவனுக்காக குழந்தை ஏங்கிக் கொண்டு இருக்க இவன் இங்கே அமர்ந்து குடித்துக் கொண்டு இருக்கிறான் என்பதை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.


" எதுக்காக வீட்டுக்கு வராம இருக்கீங்க..?"
என்று ஒற்றை கேள்வியோடு அவளும் முடித்துக் கொண்டாள்.
நிதானமாக சோபாவை விட்டு எழுந்தவன்
"எதுக்காக அந்த வீட்டுக்கு நான் வரணும்.. எனக்கு அங்க யாருமே இல்லை..என் பொன்னையும் நீ என்கிட்ட இருந்து பிரிக்க பார்க்கிற.. அவளை பார்க்காமலே இருந்தா வரப்போற பிரிவுக்கு நான் பழகிடுவேன்.. என்ன இருந்தாலும் நானும் மனுஷன் தானே .."
என்றான் அவளை பார்க்காமல் எங்கோ பார்த்தபடி ..


அவள் எதுவும் பேசவில்லை. அமைதியாகவே நின்று இருந்தாள். "என்னடி அப்படி பாக்குற ...
சொல்லு இங்க எதுக்காக வந்த..?"
என்றான் மீண்டும்.
" தான்வி குட்டிக்கு வைரஸ் ஃபீவர்.. 'அப்பா அப்பா..' என்று விடாமல் சொல்லிக்கிட்டே இருக்கா
... நீங்க வந்தால் தான் சரியாகும்.." என்றாள் அவள் அறிவிப்பாக..


" வா.."
என்று அவன் அழைக்கவில்லை.. தான்வியின் பெயரை கூறியதும் அடித்த சரக்கில் இருந்த போதை அப்படியே இறங்கிவிட்டது
அவனுக்கு.
" என்ன சொல்ற..?"
என அவன் கேட்டிட அவளும் விடயத்தை கூறினாள்.


" நீ போ இதோ வரேன்.."
என்றவன் ஏதோ ஒரு அறைக்குள் சென்று மறைந்தான். அவளும் பெருமூச்சு ஒன்றினை வெளியிட்டவள் வீட்டை நோக்கி சென்றாள்.


அவள் அங்கு சென்ற சில நொடிகளிலேயே அவனும் வந்து சேர்ந்திருந்தான். இப்போது குளித்து வேறு உடைக்கு மாறி இருந்தான் அவன் .
அவளுக்கே ஆச்சரியமாகி விட்டது..


அதன் பிறகு தான்வியை அவனே பார்த்துக் கொண்டான். அவளும் தந்தையின் அரவணைப்பின் நன்றாக உறங்கி விட்டாள். அந்த வீட்டில் இருந்தபடி இதனை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த மயூரிக்கு தான் கோபம் பற்றி கொண்டு வந்தது.
முதலில் தான்வியைத் தான் அவனை விட்டு பிரிக்க வேண்டும் என்று முடிவெடுத்தாள் அவள்.


இங்கு மகளை தோளில் போட்டு தட்டிக் கொடுத்தவன் நினைவுதான் இங்கு இல்லை.. அன்று மதியழகியுடன் பேசி விட்டு சென்ற பிறகு
அவனுக்கு அவனையே பிடிக்காமல் போனது போன்ற ஒரு உணர்வு.. அவனுக்கு இப்போது எல்லாமே குழந்தைகள் தான்.. அவர்களை வைத்தே அவள் தன்னை பழிவாங்க நினைப்பதை தான் அவனால் தாங்கவே முடியவில்லை..


அதனால் தான் வீட்டுக்கு வராமல் தனியாக இருந்த யோசித்தான்.
த்ன்வி வளர்ந்து பெரியவளாகி தன்னை கேவலமாக பார்ப்பதை இப்போது நினைத்துப் பார்த்தாலே அவனுக்கு மனம் வாடிப் போனது. பெண் பிள்ளை என்றால் எப்போதும் தந்தைகளுக்கு பாசம் அதிகம் தானே..


அதற்காக மதியழகியிடம் மன்னிப்பு கேட்டு அவளுடன் அவன் வாழ நினைக்கவில்லை.. குழந்தைகள் மீது தன்னுள் இருக்கும் பாசத்தை வெளிக்காட்டியவன் மனைவி மீது இருக்கும் காதலை வெளிக்காட்ட தயாராகவும் இல்லை.. அந்த காதலை அவன் உணரவும் இல்லை.


தொடரும்...


 

Mafa97

Moderator
அத்தியாயம் 💔 29


இப்போது அவளிடம் சென்று காதல் என்ற வார்த்தையை கூறினால் அவனது முகத்திலேயே காரி உமிழ்ந்து விடுவாள்.. முதலில் அவனுக்கே அது காதல் என்று தெரியாது.. யார் நம்பினாலும் நம்பாவிட்டாலும் அவனுக்கு மதியழகி மீது ஒரு இனம் புரியாத ஈர்ப்பு இருக்கத்தான் செய்தது.

அதனை காதல் என்றும் சொல்லி விட முடியாது ஏனெனில் அதற்கு அர்த்தம் அவனுக்கே தெரியாத போது அவன் எப்படி சொல்வான்?
அது இன்று நேற்று தோன்றியது அல்ல ...
சிறு வயது முதலே மதியழகி என்றால் அவனுக்கு அப்படி ஒரு ஈர்ப்பு..அன்பு.. பாசம் ...

அவனது தந்தை சேகரும் மதியழகியின் தந்தை அன்பரசனும் நண்பர்கள்.. அப்போது தான் அவனுக்கு மதியழகியை தெரியும்.. இருவரும் தொழில்முறை நண்பர்கள் என்பதால் மீனாவிற்கு அன்பரசனுடன் அதிக பழக்கம் இல்லை.. ஒரு முறை பார்த்தது உண்டு அவ்வளவே ..அதனால் அவர்களது குடும்பம் பற்றி மீனாவுக்கு எதுவுமே தெரியாது..

ஆனால் ஷியாம் சுந்தர் தந்தையுடன் ஜாக்கிங் செல்லும் போதெல்லாம் அன்பரசனுடன் வரும் குட்டி மதியழகியை காண்பது உண்டு ..
அவளைத் தூர இருந்து ரசிப்பதோடு நிறுத்திக் கொள்வான் அவன்.
அவள் முன்னால் போய் நின்றதே இல்லை.. அதனால் மதியழகிக்கு அவனை தெரியாமல் போனதுதான் விதி..

இப்படியே சில காலம் ஓடிவிட சேகர் மாரடைப்பில் இருந்து போனார் ..
காரணம் தொழிலில் ஏற்பட்ட நட்டம் என்றும் அவரது தொழில் பார்ட்னர் அன்பரசன் தான் அவரை ஏமாற்றி விட்டார் என்றும் பேசிக்கொண்டனர் தொழில் வட்டாரத்தில்.

தந்தையின் இறப்பினால் தாயும் உடைந்து போய்விட ராகவ்வின் உதவியுடன் தான் தொழிலை படிக்கும் போதே கையில் ஏற்றான் அவன்.. சிறிது சிறிதாக தொழிலில் முன்னேறினான் அவன்.
அவர்களை பழிவாங்க வேண்டும் என அவன் நினைத்து இருக்க அன்பரசன் இறந்த செய்தி அவனது காதுகளை வந்து அடைந்தது.

' கடவுள் கொடுத்த தண்டனை' என்று நினைத்து அத்துடன் அதை விட்டுவிட்டான். இடையிடையே மதியழகியின் நினைவு வந்து போகும். ஆனால் அதை புறம் தள்ளிவிட்டு படிப்பிலும் வேலையிலும் கவனம் செலுத்தி முன்னேறினான்.. எத்தனையோ பெண்கள் காதலை அவனிடம் சொல்லியபோதும் டேட்டிங் என்று அவனை அழைத்த போதும் மதியழகியை மனதிற்குள் நினைத்துக் கொண்டே அவர்களை எல்லாம் மறுத்து விடுவான் அவன்.

ஆனால் அவளை சென்று சந்திக்கவும் தயாராக இல்லை.. அவளைப் பற்றி விசாரிக்கவும் இல்லை அவன் ....
ஆரம்பம் முதலே அவன் ஒரு புரியாத புதிர் தான் போலும்..

இப்படியே அவனது நாட்கள் கடந்து செல்ல அப்போது தான் அன்பு செல்வன் அவனது தொழிலில் இடைஞ்சல்களை கொடுக்க ஆரம்பித்து இருந்தார் .
தங்கையின் படிப்பை காரணம் காட்டி அன்னை மற்றும் தங்கையை ராகவ்வுடன் பஇருவரையும் பெங்களூர் அனுப்பியவன் தீவிரமாக தொழிலில் இறங்கி விட்டான்.

உறவுகள் அற்ற தனிமையான வாழ்க்கையை வாழ ஆரம்பித்த போதுதான் மீண்டும் அவன் வீட்டுக்கே வந்து சேர்ந்தாள் அவனது உள்ளம் கவர்ந்த மதியழகி. அவளை தனது வீட்டில் அதுவும் நீண்ட நாட்களுக்குப் பிறகு கண்டபோது அவன் மனம் அடைந்த உவகையை வார்த்தைகளால் கூறிவிட முடியாது.

'ஆனால் அவள் ஏன் இங்கு வந்திருக்கிறாள்? அதுவும் வேலைக்காரியாக ...'
என நினைத்தவன் தனது காதல் மனதை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டு அவளை ஊன்றி கவனிக்க ஆரம்பித்தான். மேலும் வீட்டில் கண்காணிப்பு கேமராக்களையும் பொருத்தினான் அவன்.

ஷியாம் சுந்தர் நினைத்ததை போலவே அனைத்தும் அன்பு செல்வனின் வேலை தான் .
அவளை கையும் களவுமாக பிடித்தவன் தனக்கு தெரிந்த வகையில் அவளது தவறுக்கு தண்டனை கொடுக்க ஆரம்பித்து இருந்தான். அவனது அகராதியில் அவளுக்கு கொடுத்த தண்டனைகள் சிறியதே..

அவளது தந்தை தனது தந்தையை ஏமாற்றிய கோபம் ...மேலும் அவள் இதை பணத்துக்காக தான் செய்ய வந்து இருக்கிறாள் என்ற கோபம்... எல்லாம் சேர்ந்து அவனது காதலை குழி தோண்டி புதைத்து விட்டு அவளை துன்புறுத்த வைத்தது. ஏமாற்றியவர்களுக்கு அவன் கொடுக்கும் தண்டனைகளோ வேறு... அவனது மனம் கவர்ந்த பெண் என்பதால் தான் அவளுக்கு இப்படியான தண்டனைகளை கொடுத்தான்.

அன்று குடிபோதையில் வந்தவன் தெறிந்தே தான் அவளை தன்னவளாக்கிக் கொண்டான். அவன் ஒன்றும் பெண்களை கண்டாலே மயங்கி விடும் ரகம் அல்ல. அதையே சாக்காக வைத்து அவளது கழுத்தில் தாலியும் கட்டி விட்டான்.
தினமும் அவளை காதலுடன் தான் நாடுவான் அவன்.

அதை அவனே அறியவில்லை என்பது தான் உண்மை.
ஆனால் அடுத்த நாளே தனது தந்தைக்கு நீதி செய்ய வேண்டும் என்று அவளுக்கு பணத்தை கொடுத்து அவளை கேவலப்படுத்தி மனமுடைய வைப்பான் ..அவளை ஒவ்வொரு முறை காயப்படுத்தும் போதும் அவளை விட அவனே நொருங்கிப் போவான்..

ஆனால் மறுபடியும் அவளது தந்தை செய்த துரோகத்தையும் அவள் தன்னை ஏமாற்றியதையும் நினைத்து தனக்குள்ளேயே இறுகிப் போவான்.

அவனைப் பற்றி அவனுக்கே புரியாத நிலையில் தான் சுற்றிக் கொண்டு இருந்தான் அவன். வெளியே காட்டிக் கொள்ளாவிடினும் அவனுக்கு அவள் தன்னை விட்டு சென்று விடுவாளோ என்ற பயம் இருக்கவே செய்வது.

எனவே தான் எங்கும் அவள் தப்பிச் சென்று விடாமல் இருக்க நாய்களையும் காவல் வைத்தான். அவள் மூலம் தனக்கு குழந்தை வேண்டும் என்று முடிவு செய்தவன் எந்தவித பாதுகாப்பு முறைகளையும் பயன்படுத்தவில்லை.. குழந்தை பிறந்து விட்டால் தன்னுடனே இருப்பாள் என்று முழுதாக நம்பினான் அவன்.. ஆனால் அவனது நம்பிக்கை பொய்த்து போன நாளும் வந்து சேர்ந்தது.

தீபக் உடன் மருத்துவமனை சென்றவள் திரும்பி வரவே இல்லை. தாலியையும் கழட்டி கொடுத்து இருந்தாள் அவள். தீபக்கின் முன்னால் தனது ஏமாற்றத்தை காட்ட முடியாமல் சிரித்து வைத்தான் அவன்.

அவளை பற்றி தேட அவன் நினைக்கவே இல்லை ..அவளே வரட்டும் என்று விட்டு விட்டான்.. ஆனால் அவள் எப்போதும் வரவே மாட்டாள் என்று தெரியும்.ஏனெனில் அவள் அவனை தேடி வரும் அளவுக்கு அவன் எந்த நல்லதும் அவளுக்கு செய்யவில்லை..

இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து சென்று விட அவனது தந்தையின் டையரி அவனது கைகளில் கிடைத்தது. அதனை படித்தவனுக்கு அனைத்தும் புரிந்து போனது ..
அவனது தந்தையை ஏமாற்றியது அன்பரசன் அல்ல அன்பு செல்வன் என்று..

அதில் இருந்தே அன்பு செல்வனை நேரடியாகவே தாக்க ஆரம்பித்து விட்டான்,.
ஆனால் அவனது மனைவியை தேடிச் செல்ல அவன் தயாராக இல்லை. அவளுடைய தந்தை தப்பு செய்யாவிடினும் அவள் பணத்துக்காக தனது வீட்டுக்கு வந்து தன்னை ஏமாற்ற நினைத்தாள் என்று நினைத்துக் கொண்டு வீம்பாக தனியே வாழ ஆரம்பித்தான்..

இப்படி இருக்கையில் தான் மீண்டும் அவள் சென்னை வந்து சேர்ந்தாள். மேலும் குழந்தைகளை காரணம் காட்டி அவளை திருமணம் செய்து கொண்டான் அவன்.. அதை விட அவள் குழந்தைகள் பற்றி அவனிடம் கூறாது வேறு அவனை கோபப் படுத்தியது..

மேலும் அன்பு செல்வன் அவளையும் பயமுறுத்தி இங்கே அனுப்பினார் என்ற செய்தியும் அவளது தாயை அவர்கள் கொலை செய்த செய்தியும் அவனுக்கு புதியது. இப்போது மனைவி மீது துளி கூட அவனுக்கு கோபம் இல்லை.. காதல் தான் மடங்காக பெருகி இருந்தது.. ஆனால் அதை அவன் காதல் என்று உணரவே இல்லை.‌‌ ஈகோவை விட்டுவிட்டு அவளிடம் மன்னிப்பு கேட்க அவன் தயாராகவும் இல்லை.

குழந்தையை கட்டிலில் படுக்க வைத்தவன் எப்போதும் போல் இன்றும் டையரி எழுத ஆரம்பித்து விட்டான்.. அவனது தந்தையை போலே அவனுக்கு டையரி எழுதும் பழக்கம் இருந்தது.. அதை எழுதும் போதே தங்கையின் நினைவும் வந்து போனது அவனுக்கு. அவள் சாத்விக்கை விரும்புவது தெரிந்ததும் இருவருக்கும் திருமண பேச்சையும் ஆரம்பித்து வைத்தான். என்ன இருந்தாலும் சாத்விக் நல்லவன் என்பதாலேயே அவன் அப்படி செய்தது .

மனைவி குழந்தைகள் பிறந்த பிறகும் தன்னை தேடி வராமல் இருந்ததும் அவனது கோபத்தை அதிகப்படுத்தியது...
குழந்தைகள் பற்றி அவனிடம் மறைத்ததை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை.. அதற்காகத் தான் இப்போதும் அவளிடம் எரிந்து விழுகிறான்.. பெரு மூச்சுடன் டையரியை மூடி வைத்தவன் மகளுக்கு அருகே சென்று படுத்துக் கொண்டான்.

*******************

சாத்விக் வருணிக்காவிடம் பேசுவது இல்லை ..
தினமும் அவனை லவ் டார்ச்சர் செய்வதையே வேலையாக வைத்திருந்தாள் அவள். அவனுக்கு சில நேரம் அவளை பார்க்கையில் கவலையாகவே இருக்கும்.. இன்னும் சில நேரம் அவள் அப்படி செய்வதும் பிடித்திருந்தது அவனுக்கு..

அவள் மன்னிப்பு கேட்ட பிறகு தினமும் யோசித்து யோசித்து அவளை மன்னித்து விட முடிவெடுத்து இருந்தான் அவன்.

ஆனால் அவளிடம் அதைக் கூறாமல் அவளை அலைய விட்டான் என்றே கூறலாம்.. அவனது செய்தியை வைத்து அவனது திட்டத்தை புரிந்து கொண்டவள் இன்று அவனை எப்படியாவது தன் வழிக்கு கொண்டு வர வேண்டும் என்று நினைத்து அவனது வீட்டுக்கு தேடிச் சென்றாள் வருணிகா.

வேலை முடித்து வந்து ஓய்வாக அமர்ந்து இருந்தவனது அருகில் வந்து நின்றாள் அவள்.
அவளது வருகையை உணர்ந்தவன் வேண்டுமென்றே "வீடு திறந்து இருந்தா இப்படித்தான் கேட்காம உள்ள வருந்திடுவீங்களா ?"
என்றான் நக்கலாக..

அதனை புரிந்து கொண்டவள்
" என் வீட்டுக்குள்ள நான் வர்றதுக்கு யாரை கேட்கணும்..." என்றாள் ஒரு மாதிரி குரலில்.. அதில் முகத்தில் புன்னகை தோன்றினாலும் அதனை தனக்குள்ளேயே மறைத்துக் கொண்டான் அவன்.

"சரி என்ன விஷயமா வந்து இருக்கீங்க.." என்று அவன் அவளைப் பார்த்து பன்மையில் கேட்க அவளோ அவனை பார்த்தபடியே அருகே வந்தாள். அவனும் தன்னையும் அறியாமல் எழுந்து நின்று விட்டான் ..
அது அவளுக்கு இன்னும் வசதியாகப் போக அவனை நெருங்கி நின்றவள் தனது கையை எடுத்து அவன் நெஞ்சில் வைத்து கோடு இழக்க பாய்ந்து அவளது கையைப் பிடித்து அவளது செயலை தடுக்க எண்ணினான்..

அதனை கண்டு கொள்ளாதவள் அவனது கன்னம் மூக்கு என்று முத்தமிட்ட படியே வந்தாள்.. இதற்கு மேலும் அவளை தடுக்க அவன் நினைக்கவில்லை.

அனைத்து இடங்களிலும் முத்தமிட்டு விட்டு இப்போது இதழுக்கு வந்தவள்
சற்று தயங்கி அவனது முகம் பார்க்க இப்போது அவளது செயலை தனதாக்கிக் கொண்டான் சாத்விக் ..
நீண்ட நெடிய முதல் முத்தம்... சிறிது நேரம் கழித்து அவளை விட்டவன்

"இங்கே இருந்து போயிடு.. யாருமே இல்லாத வீட்டில் நீ இப்படி என் கூட இருக்கிறது சரியா படல ..அப்புறம் நடக்கிறதுக்கு நான் பொறுப்பும் இல்லை .
கல்யாணம் வரையாவது நல்ல பிள்ளையா இருக்க விடு என்னை.." இன்று பேசிவிட்டு உள்ளே செல்லப் போக அவனது செயலிலும் கூற்றிலும் அவளுக்கு வெட்கம் வந்துவிட்டது ..

"ஐ லவ் யூ... சாத்விக்.."என்று சிவந்த கன்னங்களோடு கூறிவிட்டு அங்கிருந்து ஓடியே விட்டாள் அவள்.
" லவ் யூ டூ..."
என்று அவளும் சத்தமாக கூறினான் அவளுக்கு கேட்கும் படியே..
திரும்பி அவனை பார்த்து சிரித்து விட்டு பறக்கும் முத்தம் ஒன்றை அவனுக்கு பரிசாக கொடுத்து விட்டே தான் சென்றாள் வருணிகா.

*****************

இந்த இரண்டு நாட்களாக மதியழகியும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறாள் ..அவளை கூட கிட்ட நெருங்க விடாமல் மகளை தானே பார்த்துக் கொள்கிறான் அவன் ..
அவளுக்கு அவனை பார்க்கையில் ஆச்சரியம் தான்.. அவளிடம் அவன் காட்டு முகமே வேறு ..இப்போது மகளிடம் அவன் காட்டும் முகம் வேறு.

'ஏன் என்னிடம் மட்டும் அவன் இப்படி நடந்து கொள்கிறான்.. என்னிடமும் நல்ல முறையில் நடந்து கொண்டு இருக்கலாமே..' என்று மனம் நினைக்க திடுக்கிட்டு போனாள் அவள்.
'மானம் கெட்ட மனசு.. ஏன் இப்படி எல்லாம் நினைக்குது..' என்று திட்டிக் கொள்ளவும் மறக்கவில்லை அவள்..

இன்று தான்வி சற்று குணமாகி இருந்தாள் என்றே கூறலாம்.. அனைவரையும் பார்த்து மெல்ல சிரித்து பேச ஆரம்பித்து இருந்தாள் அவள்.. இந்த சில நாட்களாக தாண்வி குட்டியை காய்ச்சல் பாடு படுத்தி எடுத்து இருந்தது ..மதியழகி மகளுக்கு கஞ்சி காய்ச்சி எடுத்துக் கொண்டு அவனது அறைக்கு சென்றாள். ஆருத் பாடசாலை சென்று இருந்தான்.. தான்வி தந்தையுடன் பேசி சிரித்துக் கொண்டு இருந்தாள்.

அவனும் மகளை மடியில் வைத்து புன்னகை முகத்துடன் பேசிக்கொண்டே இருந்தான். இருவரையும் பார்க்கவே கவிதை போல் தோன்றியது மதியழகிக்கு.
"க்கும்.."என்று அவள் இருவரையும் கலைக்கும் விதமாக குரல் கொடுக்க தந்தை மகள் இருவரும் ஒரு சேர அவளை நிமிர்ந்து பார்த்தனர்.

அவர்களை பார்க்க மதியழகிக்கு அவள் தந்தையுடன் சிறு வயதில் இருந்த நினைவுகளே வந்து போயின... அந்த நினைவில் இருந்தவளை
"அம்மா...." என்று அழைத்த படி அன்னையிடம் கைகளை நீட்டினாள் தான்வி..

" வாங்க செல்லம்.." என்று குழந்தையை கைகளில் வாங்கியவள் அவளுக்கு கஞ்சி கொடுத்தாள்..முகத்தை சுழித்த போதும்
சிறிதளவு கஞ்சியை பருகினாள் தான்வி குட்டி..
அதன் பிறகு அவளுக்கு மருந்தை கொடுத்து தூங்க வைத்தவள் அறையை விட்டு வெளியேற முற்படும் போது அவளது கையைப் பிடித்து தடுத்து இருந்தான் ஷியாம் சுந்தர் ..

அவனது செயலில் அதிர்ச்சியுடன் திரும்பி பார்க்க அவனுக்கோ அவளை முத்தமிட வேண்டும் போன்று இருந்து..
முயன்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவன்
"உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.." என்றான் மெல்லிய குரலில் ..அவள் மீது எந்த தப்பும் இல்லை என்று தெரிந்த பிறகு அவனுக்கு அவளை நெருங்க வேண்டும் போலவே தோன்றிக் கொண்டு இருந்தது..

இதுவரை பணத்திற்காக தான் தன்னை ஏமாற்றினாள் என்று அவன் நினைத்திருந்தான்‌.. ஆனால் இப்போது கதையே மாறிப் போனது அல்லவா.. அவனுக்கும் அவள் மேல் பொங்கியெழும் உணர்வுகளை கட்டுப்படுத்தவும் முடியவில்லை... அவளிடம் இருந்து கையை விடுவித்துக் கொண்டவன் அவனை முறைத்துப் பார்த்தபடியே "என்ன பேசணும்..?"
என்றாள்..

அதையும் அவள் அறியாமல் ரசித்தவன்
" இதுக்கு அப்புறம் இந்த ரூம்ல என் கூடவே தங்கிக்கோ.." என்றான் அசால்டாக.

அவள் தான் இப்போது ஆடிப் போனாள்..ஆனால் இந்த அறையில் தங்க அவள் தயாராக இல்லை ..
இது அவளுக்கு பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தியது..

" முடியாது.." என்று பட்டென்று கூறிவிட்டாள்..
அவன் இப்போது கைகளை தனது மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டவன்
"உன்னோட ஆசை பெரியப்பா பொண்ணு எதுக்காக சொந்தம் கொண்டாடிட்டு இந்த வீட்டுக்குள்ள வந்து இருக்கான்னு உனக்கு தெரியாம இருக்கலாம்.. ஆனா எனக்கு நல்லாவே தெரியும்.. அதனால இனி நீ இந்த ரூம்ல என்கூட தான் தங்கியாகணும்.. நாம ரெண்டு பேரும் வேற வேற ரூம்ல இருந்தா அவளுக்கு சந்தேகம் வந்துடும் ...அப்புறம் எது வேணும்னாலும் நடக்கலாம்... இது உனக்கு நான் சொல்லி புரியணும்னு எந்த அவஷியமும் இல்லை ...அவங்களைப் பற்றி என்னை விட உனக்கு நல்லாவே தெரியும் .."
என்று நீளமாக பேச அவன் கூறுவதும் சரி என்று தோன்றியது அவளுக்கு ..

முதலில் மயூரி இந்த வீட்டுக்கு வந்த நோக்கத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் மனதில் நினைத்துக் கொண்டாள் அவள்.. அவருக்கு பயந்து இந்த ரூமில் அவளால் இருக்க முடியாது.. அவளும் அவனைப் போலவே நிமிர்ந்து நின்று
"இந்த ரூம் என்னோட வாழ்க்கை அழிந்து போன இடம்.. இதுவும் நரகமும் எனக்கு ஒன்னு தான்.. என்னால இந்த ரூம்ல இருக்க முடியாது.."
என்று கூறிவிட்டு வெளியே சென்று விட்டாள்.

முன்பு என்றால் அவள் பேசியதற்கு அவன் கோபப்பட்டு இருப்பான். ஆனால் இப்போது அவளுக்காக உள்ளுக்குள் அழுதான் அவன்.. தன்னுடன் ஒரே அறையில் இருக்க முடியாது என்று அவள் சொல்வில்லை.. இந்த அறையில் தான் இருக்க முடியாது என்று கூறினாள் என்று நினைத்து சந்தோஷப்பட்டு கொண்டான் அவன் ..

எனவே அடுத்த நொடியை வேலை செய்பவர்களை அழைத்து அவனது அரையில் இருந்த பொருட்களை எல்லாம் வேறு ஒரு அறையில் மாற்றும் படி கட்டளையிட்டான்.

முதல் முறையாக அவளுக்காக என்று ஒரு செயலை செய்கிறான் ஷியாம் சுந்தர்.. அதனை நினைத்து தனக்குள்ளேயே புன்னகைத்துக் கொண்டான் அவன்.. கட்டிலில் தூங்கிக் கொண்டு இருக்கும் மகளை கைகளில் மெல்ல ஏந்தி கொண்டு குழந்தைகளுக்காக கொடுக்கப்பட்டு இருக்கும் அறையில் தூங்க வைத்தான்.

அவனது செய்கைகளை மதியழகி பார்த்துக் கொண்டுதான் இருந்தாள்.
ஆனால் எதுவும் பேசவில்லை.. மீனா மட்டும் ஏன் என்று கேட்டதற்கு 'மதியழகிக்கு அந்த அறை பிடிக்கவில்லையாம்..' என்றும் கூறிவிட்டான் அவன்...

மீனா தான் இருவரும் ஒன்று சேர்ந்து விட்டனர் என உள்ளுக்குள் மகிழ்ச்சியாக இருந்தார்.
ஒரு தாயின் எதிர்பார்ப்பு அதுதானே ..தன்னுடைய குழந்தைகள் என்றும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றே அவர்கள் நினைப்பது‌‌....

தொடரும்...


 

Mafa97

Moderator
அத்தியாயம் 💔 30இருவரும் ஒரே அறையில் தான் இருக்கிறார்கள்.
ஆனால் இருவரும் பேசிக் கொள்வது இல்லை. பேசிக் கொள்வது என்ன முகத்தைக் கூட பார்ப்பதே இல்லை என்றே கூறலாம்.
அவனுக்கோ அவனது ஈகோவை விட்டுக் கொடுத்து அவளிடம் சென்று பேச முடிவது இல்லை..

ஆருத்திற்கு தான் ஷியாம் சுந்தருடன் அவன் அன்னை ஒரே அறையில் இருப்பது பிடிக்கவில்லை.
பொறுத்து பொறுத்து பார்த்தவன் முடியாமல் போக அன்று இரவு அவர்களது அறைக்கே வந்து விட்டான்.
" அம்மா நீங்க ஏன் இங்கே தூங்குறீங்க ?
எங்க கூடவே வந்துடுங்க ..எனக்கு நீங்க இவர் கூட தூங்குறது பிடிக்கவே இல்லை .."
என்று அங்கு லேப்டாப்பில் வேலை செய்து கொண்டு இருந்த ஷியாம் சுந்தரினை முறைத்து பார்த்தபடியே கூறினான் .‌

மகனது பேச்சைக் கேட்ட ஷியாம் சுந்தர் அவனை சுவாரசியமாக பார்த்தான் என்றால் கண்டிப்பாக பார்வை ஒன்றே மகன் புறம் வீசினாள் மதியழகி.
அன்னையின் பார்வையை உணர்ந்தவன்
"சாரிம்மா ...எனக்கு பிடிக்கல. அதனால தான் சொன்னேன்.." என்று விரைப்பாகவே கூறினான்.

தந்தைக்கும் மகனை நினைத்து பெருமையாக இருந்தது. தன்னைப் போலவே பேச்சும் செயலும் தனது குழந்தையிடம் இருந்தால் எந்த தந்தைக்குத் தான் பெருமை இருக்காது..
அவனை கண்டிக்கவும் முடியாமல் கணவன் அவர்களையேப் பார்த்துக் கொண்டு இருப்பதை உணர்ந்தவள்
" கண்ணா வா தூங்கலாம் .."
என அவனை அழைத்துக் கொண்டு அவர்களது அறைக்கு சென்றாள்..

அப்போது அறையில் இருந்து வெளியே வந்த தான்வி
தந்தையைத் தேட மகளின் தேடலை புரிந்து கொண்ட மதி
" ரூம்ல இருக்கார் போ..."
என்றாள் .
மகனை தூங்க வைத்துவிட்டு அவள் வெளியே செல்ல முற்படும் போது தனது தோளில் தூங்கிக் கொண்டு இருக்கும் மகளுடன் உள்ளே வந்தான் ஷியாம் சுந்தர்.

மகனின் அருகில் மகளையும் கிடைத்தி விட்டு நிமிர்ந்தவன்
"வா போகலாம்.." என்று அவளை அழைத்துக் கொண்டு அறையை நோக்கி நடந்தான்.. அப்போது இவர்களை நோட்டமிடுவதற்கு என்று அந்தப் பக்கமாக வந்தாள் மயூரி.

அதனை கண்டு கொண்டவன் மதியழகியிடம் திரும்பி திடீரென அவளை தனது கைகளில் ஏந்தி இருந்தான். அவளும் முதலில் பயத்தில் திகைத்து நின்றவள் அவன் செய்த காரியத்தை உணர்ந்ததும் அவனை முறைத்துப் பார்த்தாள்.
அவளது முறைப்பை சட்டை செய்யாதவன்
"ஏண்டி இப்படி பார்த்து வைக்குறே.. உன்னை பார்த்ததும் இங்கேயே வச்ச கிஸ் அடிக்க தோணுது.. உனக்கு ஓகேனா எனக்கும் ஓகே.." என்று ஆளை மயக்கும் குரலில் கூற அதில் ஒரு நொடி மயங்கியவள் மறு நொடியே தெளிந்து பட்டென்று அவனது கைகளில் இருந்து கீழே இறங்கினாள்.

எதேர்ச்சியாக தான் அப்போது அவளது பார்வை மயூரி நின்ற பக்கம் திரும்பியது.
"இவ எதுக்கு இங்க வந்து இருக்கா?"... மனதில் தோன்றியதை கேட்டு விட்டாள் அவள் ..
"இங்கே என்ன பண்ற?" என்றாள் மதியழகி ..

அதைக் கேட்ட மயூரிக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது ..
முன்பு மரியாதையாக பேசுபவள் தான் கூறும் வேலைகள் எல்லாவற்றையும் நேரம் பாராமல் செய்பவள் இன்று தன்னையே கேள்வி கேட்பது கண்டு உள்ளுக்குள் கொதித்தது அவளுக்கு ..

இருந்தும் வெளியே சிரித்து வைத்து
" சும்மா தான் உங்களை எல்லாம் பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்.." என்று பேசி சமாளித்து வைத்தாள்.. மதியழகி அவளை யோசனையாக பார்த்து விட்டு உள்ளே செல்ல ஷியாம் சுந்தரோ அவளை அழுத்தமாக பார்த்தபடி நின்று இருந்தான்.

அவனது பார்வையில் பயம் தோன்றிய போதும் அதை அவனுக்கு காட்டாமல் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவனுடன் பேச முயன்றாள் மயூரி.
" உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.." என்று அவள் ஆரம்பிக்க எந்தவித உணர்வையும் காட்டாது அவளையே பார்த்த படி இருந்தான் மேலே பேசு என்பதை போல இருந்தது அவனது செயல்.

"மதியழகியை பற்றி கொஞ்சம் பேசணும்.."
என்று அவனது முகம் பார்க்க அது உணர்வுகளை வெளிக்காட்டாமல் இருந்தது ..

அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டவள் "அவங்களோட ஃபேமிலியே பணத்தாசை பிடிச்சவங்க.. அதனாலதான் அவ உங்க கிட்ட வந்ததே.. பணத்துக்காகத்தான் அவ உங்க ஃபைல திருட வந்தா.. முடிஞ்சா அவளை துரத்தி விட பாருங்க.." என்று ஏதோ நல்லவள் போல அவனுக்கு அறிவுரை வழங்க அவளைப் பார்த்து இளக்காரமாக புன்னகைத்தவன்

"அப்போ நீங்களும் பணத்தாசை பிடிச்சவங்களா?
ஏன்னா அவளும் உன்னோட ஃபேமிலி தானே.." என்று கேட்டு வைத்தான்.


அதனைக் கேட்டவள் அதற்கு மேல் அங்கு நின்றால் மேலும் ஏதாவது அவன் பேசக்கூடும் என்பதை உணர்ந்து கொண்டு அங்கிருந்து ஓடோடி சென்று விட்டாள்.
அவளது முதுகை வெறித்து பார்த்தவன் தனக்குள்ளேயே அர்த்தமாக புன்னகைத்துக் கொண்டு அங்கிருந்து
அகன்றான் ‌.அவன் அறைக்குள் சென்று பார்க்க அவனது மனைவி ஒரு போர்வையையும் தலையணையையும் கைகளில் எடுத்துக் கொண்டு சோபாவின் பக்கம் நகர்ந்து சென்றாள்.
"என்ன பண்ண போற..?"
என்ற அவனது அதிகார குரலில் அவனை ஏறிட்டு பார்த்தாள்.

" என்ன பண்ணப் போறேன்னு கேட்டேன் .."
என்றான் மீண்டும்
அவளது பார்வையை உணர்ந்து.
" தூங்க போறேன்.. பார்த்தா தெரியலையா ?"
அவளும் பதிலுக்கு அவனிடம் கேள்வி கேட்டாள்.


" அதெல்லாம் நல்லாவே தெரியுது. ஏன் இந்த பெட்ல இவ்வளோ இடம் இருக்கும் போது வேற இடம் தேடுற.. நானும் அப்போ இருந்து பார்த்துக்கிட்டு தான் இருக்கேன் ..
நீ இந்த பெட்ல தூங்குறதே இல்லை..."
அவன் கேட்டதும் அவனை புருவம் சுருக்கி பார்த்தாள்.


இன்று அவளை எப்படியாவது தன்னுடனேயே தூங்க வைக்கும் முயற்சியில் இறங்கி விட்டான் அவன்.
" என்னால என்னை கண்ட்ரோல் பண்ண முடியும்.. உனக்கு என்னை பார்த்ததும் ஏதாவது ஏடாகூடமா யோசனை வருதா என்ன ?"
என்று கேட்டிட முடிந்த மட்டும் அவனை முறைத்துப் பார்த்தவள் அந்த கட்டிலின் ஓரத்திலே சென்று படுத்துக் கொண்டாள்
அவனது கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக.

அதனை பார்த்து தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டவன் அடுத்த பக்கம் வந்து படுத்துக் கொண்டான். அவனால் அவளிடம் மன்னிப்பு கேட்டு அவளை சமாதானப்படுத்தி அவளுடன் சேர்ந்து வாழலாம் தான் ‌. ஆனால் அவனது குணத்திற்கு அதை செய்ய முடியவில்லை .. அவனுக்கு அவள் மேல் காதல் தான் என்றாலும் அதை கூறி மற்றவர்களை போல ஜோடியாக சேர்ந்து காதல் செய்யவும் அவனால் முடியவில்லை..


அவன் அப்படித்தான் ..அவனது இயல்பும் அதுதான் ..அவனாக மாறினாலே அன்றி அவனை யாராலும் மாற்ற இயலாது ..அதுவே உண்மை.


அவர்கள் இந்த அறைக்கு வந்ததிலிருந்து மதியழகி எப்போதும் அந்த சோபாவில் தான் தூங்குவது .
அவனுக்கு அவள் தன்னுடன் ஒரே கட்டிலில் தூங்க வேண்டும் என்று ஆசை ..

அதை அவளிடம் நேரடியாக கூற முடியாத காரணத்தினால் தான் இன்று அவன் இப்படி பேசியது.. அவன் நினைத்ததை போல அவளும் அவனுடனேயே அந்த கட்டிலில் தூங்க சம்மதித்தும் விட்டாள்..
சம்மதிக்க வைத்து விட்டான்.

*****************

தனது அறையில் இருந்த மயூரிக்கு நிலை கொள்ளவே முடியவில்லை. ஷியாம் சுந்தரை எப்படி அணுகுவது என்றே அவளுக்கு தெரியவும்
இல்லை.
தீவிர யோசனையில் இறங்கி விட்டாள் அவள்..

நீண்ட நேர யோசனையின் பலனாக முதலில் மதியை ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஒரு முடிவை எடுத்தவள் அதன் பிறகு தான் நிம்மதியாக தூங்கினாள். அடுத்த நாள் காலையில் இருந்து மதியழகியை நோட்டம் விட ஆரம்பித்து இருந்தாள் அவள்.

அன்றைய நாள் முழுவதும் மதியழகி செய்த வேலை சென்ற இடங்கள் என எல்லாவற்றையும் தனது வீட்டினருக்கு அழைத்து கூறியும் விட்டாள்.
" சீக்கிரமே அவளை தூக்கிடலாம்மா ..
நீ கவலைப்படாமல் இரு.." என்று மகளுக்கு ஆறுதல் கூறிய அன்பு செல்வன் தன்னிடம் இருக்கும் அடியாட்களுக்கு அழைத்து சில கட்டளைகளை பிறப்பித்தார்.


இது எதுவும் தெரியாத மதியழகி அன்று வேலை முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டு இருக்கும் போது அவளது வண்டியின் பின்னால் ஒரு கார் நீண்ட நேரமாக வருவதை அவதானித்தவள் வேகமாக செல்ல ஆரம்பித்தாள். அந்த காரும் அவள் செல்லும் வேகத்திற்கு ஏற்ப தனது வேகத்தையும் கூட்டிக் கொண்டே சென்றது..


அதனால் மேலும் பயந்து போனவள் தான் செல்லும் வழியை விட்டு வேறு வழியில் தனது ஸ்கூட்டியை செலுத்தினாள். அந்த காரும் அவள் பின்னோடு வர பயத்தில் அவளுக்கு அதற்கு மேல் என்ன செய்வது என்று தெரியவில்லை.


இதற்கு மேலும் என்னதான் அவள் வாழ்வில் நடக்கப்போகிறது.. இருந்தாலும் ஒரு நொடி அவள் கண்முன்னே தனது இரண்டு செல்வங்களின் முகமும் தோன்றி மறைந்தது.
அவர்களுக்காகவாவது இந்த உலகில் அவள் வாழ வேண்டும்.


பின்னால் வந்த காரையே திரும்பி திரும்பி அவள் பார்த்தபடி செல்ல அவளுக்கு முன்னாள் வந்த காரை கவனிக்காமல் அதன் மீது சென்று மோதினாள்.


அடுத்த நொடியே அவள் பின்னால் வந்த கார் அந்த இடத்தை விட்டு வேறு வழியில் சென்று மறைந்தது. தனது காரில் இருந்து இறங்கி வந்த ஷியாம் சுந்தர் கீழே ஸ்கூட்டியுடன் விழுந்து கிடந்த மதியழகியை ஒரு பார்வை பார்த்துவிட்டு திரும்பிச் செல்லும் காரையும் அழுத்தமாக பார்த்து வைத்தான்..

மதியழகிக்கோ பெரிதாக எந்த அடியும் இல்லை.. நெற்றியிலும் கைகள் இரண்டிலும் சிறிதளவு காயம் ஏற்பட்டு அதில் இருந்து இரத்தம் வந்து கொண்டு இருந்தது.


அவளிடம் வந்த ஷியாம் சுந்தர் அவளை தூக்கி நிறுத்தி விட்டு வண்டியையும் தூக்கி நிறுத்தினான். அந்த இடத்தில் கணவனை எதிர்பார்க்காதவள்
திகைப்புடன் கேள்வியாக அவனைப் பார்த்தாள்.
அவளது பார்வையை கண்டுகொள்ளாதவனோ
"தீபக் .."
என்று அழைத்திட இவ்வளவு நேரமும் ஒரு ஓரமாக நின்று யாருடனோ அலைபேசியில் தீவிரமாக பேசிக் கொண்டிருந்தவன் அவர்கள் அருகே ஓடி வந்தான் ..


"இவளோட வண்டியை கொண்டு போய் வீட்ல விட்டுடு.."
என்று கூறிவிட்டு கை தாங்கலாக அவளை அழைத்துக் கொண்டு காருக்கருகில் சென்றான்.


மதியழகிக்கோ ஆச்சரியம் நீங்காமல் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள். அவளது அந்தப் பார்வை சிறிது நேரம் தான் நீடித்தது.. காரில் ஏறி அமர்ந்ததும் அதை இயக்கியவன்
"உனக்கு முன்னாடி பார்த்து வண்டி ஓட்ட தெரியாதா..?
இப்படித்தான் வந்து இடிப்பியா? உனக்கு ஏதாவது ஆச்சுனா பசங்களுக்கு யாரு இருக்கா..? அவங்க கிட்ட யாரு தான் பதில் சொல்றது.."
என்றான் காட்டமாக ..

அவனது அந்த வாக்கியத்திலேயே அவளது ஆச்சரியப்பார்வை நீங்கி விட்டது..
அவனை போய் ஒரு நொடி நல்லவன் என்று நினைத்தோமே என்று தன்னையே திட்டிக் கொண்டாள் அவள்.


மருத்துவமனை அழைத்துச் சென்று அவளுக்கு கட்டிட்ட பிறகே வீட்டுக்கு அழைத்து வந்தான் அவன் .
அவளுக்கு ஒன்று என்றால் அவன் மனம் கிடந்து துடிக்கத்தான் செய்கிறது.. இப்போதும் அப்படித்தான் ..
மயூரி அந்த வீட்டிற்கு வந்ததிலிருந்து அவளை பின் தொடர ஆள் ஏற்பாடு செய்து இருந்தான்.


அவளை எப்போதும் போல் இன்றும் பின்தொடர்ந்தவன் சொல்லித்தான் அவளை தேடி அவன் அங்கு வந்தது ..
அவனுக்கு இது யாருடைய வேலை என்பதும் தெரியும்