எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

50. கண் மூடி பேசும் மாய தீயே - கதை திரி

தீ 1:

“ஷாரா”

“ம்ச்சு என்னடா? எதுக்கு நொய்யு நொய்யுன்னு போன் பண்ணிட்டே இருக்க?” என்று அழைப்பை ஏற்றதுமே எரிந்து விழுந்தாள்.

“இன்னைக்கு ஈவினிங் 7க்கு முக்கியமான மீட் இருக்கு! நியாபகம் இருக்குல்ல? எப்படியாவது அவனை ஓகே சொல்ல வச்சிடு ஷாரா! பையன் முடியவே முடியாதுன்னு முரண்டு பிடிக்கிறதா தகவல் வந்துருக்கு!”

‘ம்ச்சு’ என்று கையில் நர்த்தனம் ஆடிக்கொண்டிருந்த பேனாவால் நெற்றியில் தட்டினாள்.

இதுவே வேறொரு பொழுதாய் இருப்பின், போடா என்று போயிருப்பாள்.

ஆனால், இவனிடம் அது முடியவில்லையே! புகைப்படத்தில் பார்த்ததுமே மிகவும் பிடித்து விட்டதே!

“சரி ட்ரை பண்றேன்!”

“என்ன பேசணும்ன்னு முடிவு பண்ணிட்டியா?”

“தோணுறத பேச வேண்டியது தான்! இதுக்காக யோசிச்சு என் முழு நாளையும் வீணடிக்க முடியாது அபய். இப்ப நீ கொஞ்சம் போனை வைக்கிறியா? எனக்கு நிறைய வேலை இருக்கு!” என்று மறுபடியும் கையில் இருந்த நோட்படில் கிறுக்க தொடங்கிவிட்டாள்.

“ராஜா”

“க்ரேண்ட்ப்பா, ஸ்டாப் ஆடரிங் மீ!!! நான் இன்னும் சின்ன குழந்தை இல்லை, நீங்க சொல்லுறதுக்கெல்லாம் கண்ணை மூடிட்டு தலையாட்டுறதுக்கு! என் லைஃபை எனக்கு பார்த்துக்க தெரியும், என் லைஃப் பார்ட்னரை எனக்கு சூஸ் பண்ணிக்க தெரியும். அதுல உங்க சஜெக்ஷன் எனக்கு தேவையில்லை” என்று ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தமாய் கூறினான் யுவ்ராஜ்! தாத்தாவின் பேச்சில் உள்ளுக்குள் எரிமலையாய் குமுறிக் கொண்டிருந்தாலும், அது கொஞ்சமும் முகத்திலோ, குரலிலோ வெளியாகவில்லை. அதற்கு தன் தாத்தாவின் மேலிருந்த அன்பும், அதைக்காட்டிலும் பன்மடங்கு அதிகமாய் இருந்த மரியாதையும் தான் காரணம்.

யுவியின் தந்தை ராம் தந்தை மகன் இருவரையும் மாறி மாறி பார்த்துவிட்டு, உணவிலேயே கவனமாய் இருப்பதாய் காட்டிக் கொண்டார்.

“டேட்! இங்க என்ன நடந்துட்டு இருக்கு? நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” தாத்தாவின் மீதிருந்த கோபத்தை தந்தையிடம் திருப்பினான்.

“மை சன்! நான் உண்டு என் தட்டுல இருக்க நான் உண்டுன்னு என் வேலைய தானடா பார்த்துட்டு இருக்கேன்! உனக்கு தான் உன் விஷயத்துல தலையிட்டா பிடிக்காதே மகனே!”


“உங்கப்பாவையும் அதையே பாலோ பண்ண சொன்னிங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும்”

“அவன்கிட்ட என்னடா பேச்சு? இந்த விஷயத்துல மட்டும் உங்கப்பாவால ஒரு வார்த்தை என்னை எதிர்த்து பேச முடியாது” ராமின் காதல் மனைவி சுமித்ரா ராஜேந்திரனின் தேர்வு தான்.

“இட் வோண்ட் ஒர்க் எவ்ரிடைம் க்ரேண்ட்ப்பா!”

“நீ இன்னைக்கு அந்த பொண்ணை மீட் பண்ணலைன்னா நீ கேட்ட அக்ரீமெண்ட்ல நான் சைன் பண்ண மாட்டேன் ராஜ்!” தாத்தா என்ற நிலையிலிருந்து ஒட்டு மொத்த சக்ரா எம்பையருக்கும் சேர்மேனாக உருமாறினார்.

“கிரேன்! அது எனக்கு எவ்வளவு முக்கியமான...”

“இதுவும் முக்கியம் தான் ராஜ்! உனக்கு அது எவ்வளவு முக்கியமோ அதைவிட என் பேரனோட லைஃப் எனக்கு முக்கியம்!”

“டேம் இட்!!!” என்று கோபத்தில் காலை உதைத்துவிட்டு வெளியேறிவிட்டான்.

மகன் கோபமாக வெளியேறுவதை பார்த்துவிட்டு விறுவிறுவென வந்த சுமித்ரா, “மாமா!”

“சுமிம்மா, மருந்து கசக்க தான் செய்யும், பிள்ளைங்க குடிக்க மாட்டேன்னு அடம் பண்ண தான் செய்வாங்க, அதுக்காக அவங்க போக்குல விட முடியாது. அதுவும் உன் தர்மபுத்திரன் இருக்கானே! வம்புல கூடுனவன்! அவனா ஒரு பொண்ணை கூட்டிட்டு வந்து பிடிச்சிருக்குன்னு சொன்னா கூட தேவல. அதையும் பண்ண மாட்டான். கல்யாணம்ன்னு ஒரு கான்செப்ட் இருக்குன்னு முதல்ல அவனுக்கு ஞாபகப்படுத்துவோம். அதுக்கு தான் இந்த மீட்டே! இந்த பொண்ணை தான் கட்டிக்கணும்ன்னு யாரும் அவனை கட்டாயப்படுத்தப் போறது இல்லை. பிசினெஸை தாண்டியும் வாழ்க்கை இருக்குன்னு தெரியாம சுத்திட்டு இருக்கான். அந்த பொண்ணுக்கு ராஜாவை ரொம்ப பிடிச்சிருக்கு! இவன் ஒரு விளங்காதவன்னு தெரிஞ்சும் சம்மதிச்சிருக்கு. போய் பார்த்து பேசட்டும்.”

“அப்பா! அப்ப எனக்கும் நீங்க சாய்ஸ் கொடுக்குறதா இருந்தீங்களா? நான் தான் அவசரப்பட்டு நீங்க காட்டுன முத பொண்ணுக்கே தலையாட்டிட்டேனா!!!” ராம்.

சுமி முறைக்க... “ஐய! பிடிக்காம தான் என்னை பொண்ணு கேட்டு எங்கப்பாக்கிட்ட வந்து சண்டை போட்டீங்களாக்கும்”

“டேய்! உனக்கு, உன் புள்ளைக்கெல்லாம் பொண்ணு கொடுக்க சம்மதிக்கிறதே பெரிய விஷயம் டா!” என்ற பேச்சு அப்படியே பழைய நினைவுகளை சேர்த்திழுத்துக் கொண்டு தொடர்ந்தது.

“7 மணி சந்திப்புக்கு சரியாக 6:45க்கெல்லாம் ஐந்து நட்சத்திர ஹோட்டலிற்கு வந்துவிட்டிருந்தான் யுவ்ராஜ். பெரிதாக ஆர்வம் எல்லாம் இல்லை. அவனின் வழக்கமே அது தான். ஆனால், இன்று ஏனோ எரிச்சலாக இருந்தது. விருப்பமில்லாமல், கட்டாயத்தினால் மட்டுமே ஏற்படுத்தப்பட்ட சந்திப்பிற்கு சொன்ன நேரத்திற்கு முன்னதாகவே வந்து காத்திருப்பது தலையிறக்கமாக இருந்தது.

அதே மனநிலையில் இருந்தவன், வந்தமர்ந்த ஒரு நிமிடத்திற்குள் நூறு முறை கைக்கடிகாரத்தை பார்த்திருப்பான். நேரம் தான் மனதில் பதியவில்லை.

சில நிமிடங்கள் கடந்திருக்கும்...

அவன் எதிர்திசையில் இருந்த பெரிய கண்ணாடி வாயிலுக்கு வெளியே ஒரு பெண் வருவது தெரிந்தது.

வெளிறிய வண்ண ஜீன்ஸும், வெள்ளைநிற பார்ம்ல் சட்டையும் அணிந்திருந்தாள். நீளக்கையை முட்டிவரை மடக்கிவிட்டிருந்தவளின் கூந்தல் நடுஉச்சியில் பிணைக்கப்பட்டிருந்தது. முன்நெற்றியில் அடங்காமல் புரண்டோடிய கற்றையை ஒதுக்கிவிட்டவாறே ஹோட்டல் பெண் ஊழியரிடம் பேசிக் கொண்டிருந்தவள் கண்கள் அவ்வப்போது வாயிலையே தொட்டு மீண்டது.

அந்நேரம் மணி பார்த்தான். 7 அடிப்பதற்கு சரியாக ஒரு நிமிடம் இருந்தது.

பார்த்தவுடனே உணர்ந்து கொண்டான். 'இவள் தான்!' அவளின் புகைப்படம் பார்த்தானா என்று கேட்டால்? இல்லை. அவள் பெயராவது தெரியுமா? அதுவும் இல்லை. பின், எப்படி கண்டுகொண்டான்? இது தான் உள்ளுணர்வா? இருக்கலாம்!

அவள் சரியான நேரத்திற்கு வந்தது எரிச்சல்பட்டிருந்த மனதில் தூரலாய் இறங்க, இறுக்கம் தானாய் குறைந்து டையை தளர்த்தினான்.

“இங்க டேபிள் ரிசெர்வ் பண்ணிருக்கேன்ங்க” என்று பெண் ஊழியரிடம் போராடிக் கொண்டிருந்தாள் ஷாரா.

“சாரி மேம்! பட், இங்க டிரஸ் கோட் இருக்கு. இங்க ஜீன்ஸ் நாட் அல்லோவ்ட் மேம். ஒன்லி பார்மல் ட்ரெஸ்ஸஸ் தான் அல்லோவ்ட்”

“இதுவும் பார்மல் தானங்க!” அவளுக்கு அப்பெண் என்ன கூறுகிறாள் என்று நன்றாகவே புரிந்தது. இந்த ஹோட்டலில் இருக்கும் வினோத விதியைப் பற்றி நன்கு தெரிந்தும் மறந்துவிட்டிருந்த தன் மூளையை சகட்டு மேனிக்கு திட்டிக் கொண்டிருந்தாள்.

“மேம்! சாரி! ட்ரெஸ்ஸஸ் மட்டும் தான் அல்லோவ்ட்”

“இங்க பாருங்க! எனக்கு இங்க முக்கியமான ஆளோட மீட்டிங் இருக்கு. இப்ப போய் சேஞ் பண்ணிட்டு வர அளவுக்கு டைம் இல்லை. ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க”

“மேம்! இது நான் முடிவு பண்றது இல்ல மேம்! நீங்க தான் என்னை புரிஞ்சுக்கணும்!”

அப்பெண் ஊழியருக்கு மிகவும் பதட்டமாகிவிட்டது. அவளால் விருந்தினர்களையும் பகைத்துக் கொள்ள முடியாது, முதலாளி விதித்திருக்கும் கட்டளையையும் மீற முடியாது. கையை பிசைந்தபடி பேசிக் கொண்டிருந்தவள் கண்ணாடியால் சூழ்ந்திருக்கும் உள்ளறையையே பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

'ஐயோ! இவள் போய் தொலைந்தால் பரவாயில்லையே!' என்று மனதிற்குள் ஷாராவை சபிக்கவும் தவறவில்லை.

யுவ்ராஜ் உள்ளே இருந்த உயர்நிலை ஊழியரை அழைத்து, ஷாராவை உள்ளே விட அனுமதிக்க சொல்ல,

“இதோ சர்” என்று வேக நடையிட்டு நகர்ந்தான்.

'இவள் தான்' என்று உணர்த்திய மனதிற்கு எதிலோ தோற்ற உணர்வு. பல லட்ச மதிப்பிலான மேற்கத்திய உடை, மயக்கும் வகையில் முகப்பூச்சு, ஒயிலான நடை என்று என்னென்னவோ எண்ணவோட்டத்தில் வந்தவனுக்கு பலத்த அடி. முதல் பார்வையிலேயே பிடிக்கவில்லை என்று எழுந்து சென்றுவிடலாம் என்று எண்ணித் தானே வந்திருந்தான். ஆனால், இப்பொழுது தன்னையே உள்ளே வர அனுமதி தர வைத்துவிட்டாளே! அதற்கு காரணம், அவன் எதிர்பார்ப்புக்கு நேரெதிராய் கொஞ்சமும் அக்கறையில்லாமல் வந்திருந்த அவளின் இயல்பான போக்கு தான். முதல் பார்வையிலேயே மனதில் நின்றுவிட்டாள்.


"ஷீ ஐஸ் நாட் ஹியர் டு இம்ப்ரெஸ் மீ வித் ஹேர் லுக்ஸ்" வெளித் தோற்றம் வெறும் மாயை தான் என்று எண்ணுபவன். அதை வைத்து ஒருவரையும் எடை போட்டுவிட கூடாது என்பது அனுபவம் கற்றுக் கொடுத்த பாடம். ஷாராவோ அவனுக்கு மாறாய் முழுக்க முழுக்க தோற்றத்திற்காக மட்டுமே அவனை பிடித்து சந்திக்க வந்திருக்கிறாள்.

அவனின் முதல் எதிர்பார்ப்பில் அவளறியாமலே டிக் அடித்து ஜம்மென்று மனதில் அமர்ந்தாள் ஷாரா!

யுவியின் ஆணைப்படி ஷாராவை உள்ளே அழைத்து வந்தவன், யுவி அமர்ந்திருந்த இருக்கையை காட்ட, வேகநடையில் அருகில் வந்தவள், "ஹலோ" என்று கைநீட்ட, ஒற்றை புருவ உயர்த்தலுடன் கை கொடுத்தான்.

“சாரி! வெளிய கொஞ்சம் டிலே ஆயிடுச்சு!” என்று சமாதானமாய் கூறியவளுக்கு, யுவி தான் உள்ளே வருவதற்கு அனுமதிக்க வைத்தான் என்னும் செய்தி அறியவில்லை.

“இட்ஸ் ஓகே! யு ஆர் ஆன் டைம்”

“தேங்க்ஸ்! என்னை மீட் பண்ண அக்ரீ பண்ணதுக்கு!”

பதிலாய் அவனிடம் தோள் குலுக்கல்!


தனக்கு முன் அமர்ந்திருந்தவனை விழியெடுக்காமல் பார்த்தபடி இருந்தாள்.

அவளை கலைக்கும் வண்ணம், “லைக் வாட் யு சி?” என்றான்.

“சாரி! சாரி பார் ஸ்டேரிங்! யு லுக் டிஃபரென்ட்” என்று மீண்டும் உச்சி முதல் தாடி வரை கண்களை பாயவிட்டாள்.

“நான் பார்த்த போட்டோல வேற மாதிரி இருந்தீங்க?” கண்களில் கூலர்ஸ் அணிந்திருந்ததனால் இந்த கூர் விழிகளை கேமரா கண்டிருக்கவில்லை. வழு வழு சருமமாய் இருந்தவன், நேரில் முரட்டு தாடியுடன் இருக்கிறான்.

“தட் பியர்ட்!!!” என்று ஆள்காட்டி விரல் நீட்டி சுட்டிக்காட்டியவள்,

பின் இதழசைப்பாய், "இட் லுக்ஸ் சோ குட் ஆன் யு!" என்று தலையசைத்து அவன் முகத்தின் லாவண்யங்களை மனதில் பதித்துக் கொண்டாள். அடுத்த இரு நொடிகள் யுவியின் முகத்தை பார்த்த வண்ணமே வேறு உலகத்திற்கு பயணப்பட்டவளை அவனின் சுடக்கு மீட்டு வந்தது.

“உங்களுக்கு இதுல பெருசா இண்டரஸ்ட் இல்லன்னு எனக்கு தெரியும்” அவளே பேச்சைத் தொடங்கினாள்.

“தெரிஞ்சும் வந்தீங்களா?” குரலில் ஏளனம் எட்டிப்பார்த்தது.


தகிப்பாள்...
sooper❤️
 
Top