எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

விடைகொடு என்னுயிர் காதலே! - கதை திரி

Status
Not open for further replies.

Nila nila

New member
விடைகொடு என்னுயிர் காதலே!

குறுநாவலின்‌ கதை திரி
 

Nila nila

New member
விடைகொடு என்னுயிர் காதலே!

காதல் - 1

இருபத்தொன்றாம் நூற்றாண்டு எப்படி அசுர வளர்ச்சியில் நவீனமாக சென்று கொண்டிருக்கிறதோ, கண்டுபிடிப்புகளும் விஞ்ஞானமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்த நவீன காலத்தில் திரைப்பட துறையும் பெரும் வளர்ச்சியை பெற்று பல்வேறு தொழில்நுட்ப உதவியுடன் பல புதிய பரிமாணத்தில் திரைப்படத்தை இயக்கி வருகின்றனர் என்று முற்றிலும் உண்மை.

அன்று கீச்சகம்(Twitter), முகநூல்(Facebook) மற்றும் புலனம்(Whatsapp) போன்ற செயலிகளில் எல்லாராலும் பேசப்பட்ட ஒரு பெயர் தான் VDK.

#VDK
#Hot_Star_VDK
#Cute_Star_VDK
#Our_Proud_VDK_20
#HBD_VDK
#HBD_VDK_48
#VDK_50
#VDK_50_Update

இப்படியான பல ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட் ஆகி கொண்டிருக்க, அதில் இளசுகள், சிறுசுகள், தீவிர ரசிகர்கள், திரைப்பட கலைஞர்கள் சகிதம் அனைவராலும் ஆர்வமாக பேசப்பட்டது.

VDK என்று அனைவராலும் புகழப் படுபவன் தான் விதுல் தேவ் குமார். சிறந்த கதாநாயகன். அதையும் விட மிகச்சிறந்த சமூக சேவகன். எல்லாருக்கும் ஹாட் ஸ்டாராக இருப்பவன். வயது 48, இன்று தான் நாற்பத்தி எட்டாவது அகவையில் காலடி எடுத்து வைக்கின்றான்.

இன்னும் இரண்டு ஆண்டுகளில் வயது ஐம்பதை தொட இருந்தாலும் பார்க்க இன்னமும் இளமை ததும்பும் ஆணாகவே காட்சியளித்தான் விதுல்.

அவன் இந்த திரைப்பட உலகத்திற்குள் நுழைந்து இருபது வருடங்கள் நிறைவடைந்து விட்டன. இதற்குள் அவன் 50 படங்களை நெருங்கி விட்டான். 42 வெற்றி படங்களை தந்து தயாரிப்பாளர்களுக்கு கல்லா கட்டி இருக்கிறான்.

அதுமட்டுமின்றி அனைவரது மனதிலும் அவனுக்கான இடத்தை பிடித்து சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டான் எனலாம். இத்திரைப்படத் துறையில் எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் உள்நுழைந்து இத்தகைய நிலைக்கு வந்திருப்பது பெரும் சாதனை தான். தன் திறமையை மட்டுமே நம்பி ஒரு சிறந்த நடிகராக முன்னேறி, இப்பொழுது அனைவரும் அன்னாந்து பார்க்கும் அளவிற்கு வளர்ந்து விட்டான். இதில் அவனை இகழ்ந்த பலரும் கூட அடக்கம்.

இவனை ஹாட் ஸ்டார் என்று எல்லாரும் கூறுவர்‌ தான். ஆனால், இந்த ஹாட் ஸ்டார் என்பது அவனது கவர்ச்சியை குறிக்க அல்ல, அவனது திறமையையும் அவன் நடித்த படைப்புகளில் தத்ரூபமாக நடிக்கும் ஆற்றலால் கிடைத்த பட்டம்.

லவ் அன் லவ்லி படத்தில் நடிக்க விதுலே ஒத்துக் கொள்ள மாட்டான் ஏனெனில் அவனுமே வயது வந்த ஒரு பெண்ணுக்கு தந்தை தானே! அதுமட்டுமின்றி மனைவியின் மீது எல்லையற்ற காதலை கொண்டிருப்பவன், ஆதலால் அவனது நடிப்பில் தனக்கென ஒரு எல்லையை எப்போதுமே வகுத்து வைத்திருப்பான். இதனை படத்தை ஒப்புக்கொள்ளும் முன்னரே இயக்குனரிடம் சொல்லி, அவர்களும் அதனை ஒத்துக்கொண்ட பின்னரே படத்தை நடித்துக் கொடுப்பான்.

அதனாலேயே அவனது படங்களை குடும்பங்களும் கொண்டாடும்! கமர்சியல் சினிமா உலகமும் கொண்டாடும்.

அவனது ஒவ்வொரு படங்களிலும் அவனுடைய கதாப்பாத்திரத்திரம் அவ்வளவு நேர்த்தியாகவும் அற்புதமாகவும் அமைந்து இருக்கும். அவனது கதை தேர்ந்தெடுப்பு தாறுமாறாக இருந்து எல்லோரது வாயையும் பிளக்க வைக்கும். அதனாலேயே மக்களுக்கு அவனை இயல்பாக பிடித்துப் போனது. புது இயக்குனராக இருந்தாலும் கதை நன்றாக இருந்தால் ஒப்புக் கொண்டு முழுமனதுடன் நடித்துக் கொடுப்பான். நடிக்கும் படங்களில் அவனது கருத்துகளை இஷ்டத்துக்கு கூறி, அவன் எண்ணப்படி ஆட்டி வைக்க நினைக்காமல் இயக்குனர் சொல்படி, அவருக்கு தேவையானதை மட்டுமே கச்சிதமாக நடித்துக் கொடுக்கும் நடிகன் இவன்.

அவன் இவ்வளவு பெரிய உயரத்தில் இருந்தாலும் அகங்காரமோ தலைகணமோ துளியும் இருக்காது.‌ எப்போதும் ஒரு பணிவும் அடக்கமும் அவனிடம் இருக்கும். இப்படி மக்கள் கொண்டாடி தீர்க்க இதுவுமே ஒரு காரணம். நகைச்சுவையும் அவனுக்கு கை வந்த கலை, ஏதாவது ஒன்றை பேசி நொடி பொழுதில் அனைவரையும் சிரிக்க வைத்துவிடும் சூரன்.

இன்றைக்கு விதுலின் பிறந்தநாள் மற்றும் அவன் திரைப்பட துறையில் கால் பதித்து இருபது வருடங்கள் நிறைவடைந்ததின் கொண்டாட்டமாக அவனது 50வது திரைப்படத்தின் புதுப்புது தகவல்கள் வரிசையாக வெளியாகி கொண்டிருந்தது.

கொரானாவில் இரண்டு வருடங்களாக அவனது படங்கள் திரையில் வெளியாகவில்லையே தவிர ஒடிடி (over the top streaming) என்னும் இணையதள சினிமாத்துறையில் மூன்று படம் வெளியாகி இருந்தது. அதில் ஒன்று மாபெரும் வெற்றியை தழுவி, சிறந்த திரைப்படத்திற்கான விருதுகளையும் வாங்கியது‌.

இப்பொழுது இரு வருடங்கள் கழித்து‌ திரையில் வரப்போகும் படமென்பதால் மக்களிடமும் ரசிகர்களிடமும் பெரும் எதிர்பார்ப்பை பெற்றிருந்தது.

"சார் இன்னைக்கு அஞ்சு மணிக்கு உங்களுக்கு பர்ஸ் மீட் இருக்கு..." என்று நினைவூட்டினான் விதுலின் உதவியாளன் ஷங்கர்.

"ம்ம் ஞாபகம் இருக்கு ஷங்கர்..." என்று கண்களை மூடிய படி பதிலளித்தான் விதுல் தேவ் குமார்.

"சார் உங்களுக்கு வீட்டில் இருந்து போன் வந்தது பசங்க பேசணும்னு... நீங்க ஷூட்ல இருக்கவும் அப்பறமா ஃபோன் பண்றதா சொன்னேன் சார்..." என்கவும் சட்டென்று கண்களை திறந்தான் விதுல்.

இரவு பன்னிரண்டு மணிக்கு மனைவி அழைத்தது நினைவில் வந்தது.

"தேவ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்..." என்று மகிழ்ச்சியுடன் கணவனுக்கு பிறந்தநாள் வாழ்த்தைக் கூற...

"மித்ரா ஷூட் இருக்குடா... நான் காலையில பேசவா..." என்று சொல்லி அவளது பதிலையும் கேளாமல் வைத்துவிட்டான் இந்த திரைப்பட கதாநாயகன்.

"மேடம் பேசினாங்களா இல்ல மிருவும் விகியுமா?" என்றான் கேள்வியாக!

"மேடம் இல்ல சார் பசங்க தான் பேசணும்னு சொன்னாங்க..." என்று விடையளிக்க,

விதுலோ யோசனையாக, "ஓஓ... சரி போங்க... நான் கூப்பிடும் போது மட்டும் வாங்க ஷங்கர்..." என்றதும் அவனும் சென்றுவிட்டான்.

அதன்பின்னர், அவனே பிள்ளைகளிடம் பேச அழைப்பு விடுத்தான். தன் செல்வங்களை நேரில் கண்டு இரண்டு மாதங்கள் ஆகி போனதில் அவனுக்கும் வருத்தமே! வேலைகள் இருந்தும் வாரத்தில் இரண்டு மூன்று முறை வீடியோ காலில் அழைத்து பேசி விடுவான். அவர்களுக்கும் படிப்பு, நண்பர்கள், விளையாட்டு என்று இருக்க, அதில் மூழ்கி போனவர்களின் நேரம் சூறாவளியாக சென்றுவிடுகிறது என்பதால் கவலையின்றி இருந்தனர்.

ஆனால், தந்தை அழைத்து பேசும் போதெல்லாம் அவர்களிடம் அகத்திலும் முகத்திலும் மகிழ்ச்சி ஒட்டிக்கொண்டு எல்லாவற்றையும் அவனிடம் பகிர்ந்து கொள்வர்.

"அப்பா..." என்று இரு பிள்ளை செல்வங்களும் ஒருசேர அழைக்க, விதுலின் முகத்தில் புன்னகை ஒட்டிக் கொண்டது.

பிள்ளைகளும், "இருங்கப்பா விடியோ கால் போடறோம்..." என்று சொல்லி உடனே விடியோ கால் செய்தார்கள்.

"இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா..." என்று விகியும் மிருவும் தந்தை கண்டு மகிழ்ச்சியுடன் கூற...

"தாங்..! நன்றிடா செல்லங்களா..." என்று சொல்லி இருவரிடமும் உரையாடிக் கொண்டிருந்தான்.

விதுலு‌க்கு ஆணொன்று பெண்ணொன்று என இரு குழந்தைகள். விகிர்தன் (20) மற்றும் மிர்னாளினி (18). பெரியவன் கல்லூரியில் பயின்று கொண்டிருக்க, சின்னவளோ இப்பொழுது தான் பள்ளிப் படிப்பை முடித்து இருக்கிறாள்.

"அம்மா என்ன பண்றாங்க மிரு..." என்று மனைவியை பற்றி கேட்க...

"இங்க தான்பா இருக்காங்க தரவா..." என்று மகள் கேட்க...

"ம்ம் குடு குட்டிமா..." என்றான்.

அண்ணனும் தங்கையும் கைபேசியை தாயிடம் கொடுத்து விட்டு உள்ளே சென்றனர்‌.

மனைவியோ தேவ்வின் முகத்தை பார்க்காமல் தலை கவிழ்ந்தபடி இருக்க,

"மித்துமா..." என்ற அழைப்பிற்கு பலனில்லாமல் போகவும் அது மித்ராவாக மாற அப்போதும் தலை நிமிராமல் மௌனமாகவே இருந்தாள்.

"சத்தியமித்ரா!!!" என சற்று குரல் உயர்த்தவும் தான் நிமிர்ந்து பார்த்தாள்.

அவன் பார்வை அழுத்தமாக இருக்கவும் எழுந்து அவர்களது அறைக்கு சென்று, தாழ் போட்டு மெத்தையில் அமர்ந்ததும், "வீட்டுக்கு வருவீங்களா?" என்று மட்டுமே வார்த்தைகள் வந்தது அவளிடம்.

விதுலோ பதில் கூறாமல் மித்ராவின் முகத்தையே ஆராய்ந்து கொண்டிருந்தான்.

அவள் முகமோ பொலிவில்லாமல் சோர்வாகவே இருந்தது. எப்போதும் செங்காந்தள் மலராக இருக்கும் மனைவியின் வதனம் இன்று வாடிய மலராய் இருக்க அதற்காக காரணத்தை அவனாகவே கணித்து கொண்டு, "கோவமா மித்துமா, சாரி இன்னைக்கு நான் கண்டிப்பா வீட்டுக்கு வரேன்டா... பர்ஸ் மீட் முடிச்சிட்டு நேரா அங்க தான் வருவேன்... இந்த ரெண்டு மாசம் வீட்டுக்கு வராததுக்கும் சேர்த்து 10 டேஸ் நம்ம வீட்டுல மட்டும் தான் இருக்க போறேன்... இப்ப ஹேப்பி தானே பொண்டாட்டி..." என்று அவனை சரளமாக பேச, அனைத்தையும் கேட்டுக் கொண்டு தலையை மட்டும் ஆட்டினாள்.

தேவ்வோ, "மேடமுக்கு இன்னும் கோவம் போலன்னு நினைக்குறேன்... சோ நேர்ல வந்து கோவத்தை குறைக்குறேன்..." என்று எப்போதும் போலவே குறும்பாக பேசினான். ஆனால், அவளுக்கு தான் கண்கள் கரித்து போனது. அதை அவனுக்கு தெரியாமல் மறைத்தும் கொண்டாள் மித்ரா.

"ஆமா என்னோட பர்த்டே கிஃப்ட் எங்க கண்ணம்மா..."

"வச்சிருக்கேன் தேவ்..."

"ஓஹோ..."

"பட்... அது உங்களுக்கு பிடிக்குமா இல்லையான்னு தெரியல தேவ்..." என்றாள் எங்கோ பார்த்தபடி!

"என்னோட மித்து எது குடுத்தாலும் எனக்கு ரொம்ப பிடிக்கும்... ஏன்னா என் மித்து மேல தான் ரொம்ப பித்தா இருக்கேனே... அந்த பித்து 25 வருஷம் ஆகியும் போகலன்னா பாத்துக்க... எனக்குள்ள அந்த அளவுக்கு ஸ்ட்ராங்கா அஸ்திவாரம் போட்டு டான்ஸ் ஆடிட்டு இருக்கடி பொண்டாட்டி... சோ நீ கவலைப்படாத... உன்னோட பரிசு பொருளா இருக்குறத விட 100 கிஸ் குடுத்தா கூட ஓகே தான் எனக்கு..." என்று காதலில் அவளை கரைத்துக் கொண்டிருந்தான் மித்ராவின் தேவ்.

அவனது பேச்சில் அவளின் கலக்கம் அகன்று காதல் வெளிப்பட, "உங்களுக்கு வயசு 48 ஆச்சு..." என்று முறைக்க...

"எஸ்... அதுக்கு என்ன... ஓஹ்! 48× 2 = 96 கிஸ் தான் குடுப்பியோ... இன்னும் நாலு கிஸ் குறைச்சு தருவீயோ..." என்று வேண்டுமென்றே சீண்டுனான் தேவ்.

"உங்கள... ப்ச்... தேவ்... அறிவே இல்ல உங்களுக்கு..." என்று மித்ரா சினுங்க,

"ஹ்ம்ம்... இப்ப தான் என் மித்ரா அழகா இருக்கா... கியூட் ஸ்மைல்... லவ்லி டா..." என்று சொல்லி அவளது புன்னகையில் இவனும் சேர்ந்து கொண்டான்.

அச்சமயம் ஷங்கரோ கேரவனின் கதவை தட்டிக் கொண்டிருக்க, "கண்ணம்மா வன் செகண்ட்... இப்ப வரேன்..." என்று சொல்லி எழுந்து சென்று மீண்டும் வந்தவன், "மித்ரா... உனக்கு நான் அப்பறம் கூப்பிடுறேன்... இல்லனா டேரக்டா வீட்டுக்கு வரப் போறேன் தானே.. அப்ப பேசலாம்... பை மா... லவ் யூ மித்து..." என்று சொல்லி பறக்கும் முத்தத்தை தொடுதிரை மூலம் அனுப்பிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டான் விதுல் தேவ் குமார்.

இங்கு கணவனின் அழைப்பு துண்டிக்கப்பட்டதும் கைபேசியின் தொடுதிரையில் அவனது உருவம் மட்டுமே புகைப்படமாக இருக்க அதையே வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் சத்தியமித்ரா.

*********

உங்கள் கருத்துகளை பகிர...

 

Nila nila

New member
விடைகொடு என்னுயிர் காதலே!

காதல் - 2

மித்ராவின் மனம் மிகவும் சோர்ந்து போக, அதனை சரி செய்யும் விதமாக அவளுடைய சிந்தனை தன்னவனை முதன் முதலில் சந்தித்த நாட்களில் தஞ்சம் புகுந்தது.

தன் அண்ணன் சத்தியனிடம் நேற்று இரவில் இருந்து கெஞ்சிய சத்தியமித்ரா, இன்னமும் கெஞ்சிய படியே இருக்கிறாள்.

"அண்ணா ப்ளீஸ்... நீ படம் எடுக்குற அழக நானும் பார்க்கனும் அண்ணா... அதுக்காக தான் நான் என் காலேஜுக்கு கூட போகாம லீவ் போட்டுட்டேன்... வீட்டுல சும்மா இருக்குறதுக்கு உன் கூட வந்தா வேடிக்கை ஆச்சு பார்த்ததுட்டு இருப்பேன்ல..." என்று கண்களை சுருக்கி கேட்டு தொல்லை செய்துக் கொண்டிருந்தாள்.

"சத்யா வேணாம்னு சொல்லிட்டு இருக்கேன்ல... எத்தனை முறை சொல்றது... அங்கே நான் ஷார்ட் ப்ளிம் எடுக்குறதா இல்ல உன்ன கவனிச்சு பார்த்துக்குறதா..‌." என்று கோபமாகவே பேசினான் சத்யன்.

"என்னை நானே பாத்துக்குவேன் ண்ணா.‌‌.. உன்ன தொல்லை பண்ண மாட்டேன்... ப்ளீஸ் கூட்டிட்டு போயேன்... பத்து கிலோ குறைஞ்சா போயிடுவ..."

"உனக்கு செல்லம் குடுத்து குடுத்து நானே கெடுத்து வச்சிருக்கேன் சத்யா... அதுக்கு தான் இவ்ளோ அடம் பண்ற... அங்க நான் உன்ன கூட்டிட்டு போக முடியாதுன்னா முடியாது தான்..."

"சாரி ண்ணா... நான் உன்ன ரொம்ப கஷ்டப் படுத்தறேன்... சாரி... இனி நான் எதுவும் கேட்க மாட்டேன்..." எனக் கூறி அமைதியாக போய் படுத்து விட்டாள் மித்ரா.

சத்யனும் அவளை கண்டுக் கொள்ளாமல் இருக்க, ரொம்ப நேரம் தங்கையின் மௌனத்தை தாக்குப்பிடிக்க முடியாமல், "பாப்பா கிளம்பி வா போகலாம்... உன்னையும் கூட்டிட்டு போறேன்..." என்று சொல்ல, அவளுக்கு இன்னும் கோபமாம் அதனால் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

"அடிங்க... ஒழுங்கா கிளம்பு... இல்லனா விட்டுட்டு போய்டுவேன்... உனக்கு அஞ்சு நிமிஷம் தான் டைம்..."

மித்ராவோ முறைத்துக் கொண்டே, "நான் ரெடி தான் அண்ணா... போலாம் போலாம் வா..." எனக் கூறி முன்னால் நடக்க... தமையன் சிரித்துக் கொண்டே பின்னால் போனான்.

"அண்ணா உன் குறும்படம் பேர் நீயா செலக்ட் பண்ண... எனக்கென்னவோ டவுட்டா இருக்கு... உண்மையை சொல்லு..."

"ஏன் நான் தான் செலக்ட் பண்ணேன்..."

"இல்ல இல்ல... நேத்து வரை இதுக்கு தானே என்கிட்ட புலம்பிட்டு இருந்த... அதுக்குள்ள எப்படி டைட்டல் வச்ச... இது உன் கதைக்கு பக்காவா இருக்கு... உனக்கு அவ்வளவு அறிவெல்லாம் இல்லனு தெரியும் அண்ணா..."

'க்கும்... இதெல்லாம் மட்டும் ஏன் தங்கச்சி கிட்ட இருந்து மறைக்கவே முடியாது போல...' என்று மனதில் எண்ணி... "என் ஃப்ரண்ட் செலக்ட் செஞ்சான்..." என்க...

"அதான பார்த்தேன்... என் கெஸ்சிங் எப்பவும் தப்பா இருக்காதேனு... ஹ்ம்ம்... 'என்னுயிர் காதலே'" என்று மென்மையாக உச்சரித்து பார்த்தவள், "பேரு அழகா இருக்கு அண்ணா நிஜமாவே... உன் கதை கருவுக்கு பொருத்தமாவும் இருக்கும்... உன் காலேஜ் பங்ஷன்ல கண்டிப்பா நீதான் ஜெயிப்ப... அதுக்கு இப்பவே வாழ்த்துகள் அண்ணா..." என்று அண்ணனுக்கு வாழ்த்துக் கூற...

"தாங்க்ஸ் பாப்பா..." என்றான் சத்யன்.

"அண்ணா ஹீரோவா நடிக்க உன் ஃப்ரண்ட் ஓகே சொல்லிட்டாரா..."

"அதை ஏன் சத்யா கேட்கிற... அவன ஒத்துக்க வைக்குறதுக்குள்ள என் தொண்டை வரண்டு போச்சு..."

"அண்ணா நீ ஹீரோ சான்ஸ் குடுக்கற... அவர் வேண்டாம்னு எப்படி சொல்லலாம்?"

"போடி சிரிப்பை கிளப்பிட்டு..."

"அண்ணா... நீ நல்லா எடுப்ப... ஏன் சிரிக்கிற..."

"நானே ஏதோ சுமாரா எடுத்துட்டு இருக்கேன்... நீ வேற ஏண்டி கிண்டல் பண்ணிட்டு இருக்க..."

"இல்ல ண்ணா... அது..."

"என்ன காக்கைக்கும் தன் அண்ணன் கோல்ட் அண்ணன் பழமொழி சொல்ல போறியா..."

"ம்ஹூம்... இல்ல... இதுவரை நீ எடுத்த இரண்டு ஷார்ட் பிலிம்ல ஓகே பரவாயில்ல ரேஜ்ஜில் தான் இருந்தது... நானும் ஒத்துக்கறேன்... பட்... இது... ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு... அது என்னமோ தெரியல இந்த ஸ்டோரி அவ்ளோ பிடிச்சிருக்கு..." என்று உணர்வுபூர்வமாக சொன்னாள் சத்யமித்ரா.

"இது மத்தவங்களுக்கும் பிடிக்கணுமே பாப்பா..." என்றான் வருத்தமாக.

"அதெல்லாம் பிடிக்கும் நீ ஃபீல் பண்ணாத..."

"சரிமா..."

"ஹ்ம்ம்... நான் கடைசியா சொன்ன அந்த கரெக்ஷன் பண்ற தானே அண்ணா..." என்று கேட்க,

சத்யனும், "ம்ம்... பண்றேன்... அந்த சீன் வச்சா தான் நல்லா இருக்கும்னு எனக்கே தோணுது..." என்க,

"அப்பா... இப்ப தான் நிம்மதியா இருக்கு... எங்க படத்தை அழுகாச்சியா முடிச்சி விடுவீயோன்னு பயந்துட்டேன்..." என்று சத்யா சொல்லிக் கொண்டிருக்கும் போதே படமெடுக்கும் இடம் வந்துவிட, அப்போது சத்யனின் கைபேசியும் அலறியது.

அவன் அதில் பேசிக் கொண்டிருக்க, மித்ராவோ சத்யனின் நண்பனான பிரகாஷிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

"சத்யன், என்னடா ஆச்சு டென்ஷனா இருக்க... ஏதாச்சும் ப்ராப்ளமா?" என்று பிரகாஷ் கேட்க,

"லில்லியோட அப்பா சீரியஸா இருக்காங்களாம்... சோ அவளால் வர முடியாத சிடியேஷன்ல இருக்கா பிரகாஷ்... இப்படி சொல்லவும் நானும் சரி ஓகேன்னு சொல்லிட்டேன்... என்னால வர சொல்லி கம்பெல் பண்ணவும் முடியல... இப்ப என்ன பண்றதுன்னு தெரியலடா..." என்று கவலையுடன் பேசினான் சத்யன்.

அந்த லவ்லியோ அவன் எடுக்க போகும் குறும்படத்தில் கதாநாயகியாக இருக்க ஒப்புக் கொண்டவள்.

"ப்ச்... விடு சத்யன் பார்த்துக்கலாம்..." என்று பிரகாஷ் சொல்ல...

"எப்படிடா இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு... இப்ப நான் ஹீரோயின் ரோலுக்கு யார தேடுவேன்... அப்படியே கிடைச்சாலும் அமௌன்ட் கேட்பாங்க... லில்லி நம்ம ஃப்ரண்ட் சோ காசு வாங்காம நடிச்சி தரேன்னு சொன்னா, வேற யாராச்சும்னா எப்படி பிரகாஷ் சமாளிக்க முடியும்... அதுவும் இல்லாமல் இந்த ஒரு வாரத்துல ஷூட் முடிச்சி, எடிட்டிங் வொர்க் எல்லாம் முடிச்சி, காலேஜ்ல ப்ராப்பரா சப்மிட் பண்ண தான் செலக்ஷனுக்கு போகும்... இல்லாட்டி டிஸ்குவலிஃபைட் (disqualified) ஆகிடுவேன்... எல்லாமே போச்சு டா பிரகாஷ்..." என்று கூறி தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான் சத்யன்.

மித்ராவோ அண்ணனின் நிலையை கண்டு செய்வதறியாது நின்றுக் கொண்டிருந்தாள்.

இவர்கள் இப்படி பேசிக் கொண்டிருக்கும் போதே அங்கு வந்துச் சேர்ந்தான் விதுல் தேவ்.

"மச்சான்... என்னடா ஷூட் போலாமா?" என்று கேட்டபடி வந்தான் அவன்.

இப்படி கேட்கவும் அவனை முறைத்துப் பார்த்தாள் மித்ரா. விதுலோ அவள் முறைப்பது கண்டு என்னவென்று புரியாமல் யோசனையாகவே அவர்களிடம் நெருங்கினான்.

"என்னடா சத்யன், ஹீரோயின் ரோலுக்கு லில்லி தானே சொன்னா... நீ எப்ப ஆள மாத்தின... அத என்கிட்ட சொல்லவே இல்லை..." என்றான் மித்ராவை பார்த்துக் கொண்டே!

'நானா! நடிக்கவா! இது கூட நல்லா தானே இருக்கு... யார் நடிச்சாலும் கதை ஒன்னு தானே... அப்போ அண்ணனுக்காக நானே நடிச்சு குடுக்கவா? இதுக்கு அண்ணா சரின்னு சொல்லுமா?' என்று தனக்குள் கேட்டுக் கொண்டாள் பெண்.

"விதுல் அதெல்லாம் இல்லடா... அது என் தங்கச்சி..."

"ஒஹ்... சரி... ஓகே... லில்லி எங்க... டைமாச்சு இன்னும் வரலையா அவ?" என்று விதுல் கேட்க,

பிரகாஷோ, "அவ வரமாட்டா விதுல், அப்பாக்கு சிரியஸாம்... அவளை வர வைக்கவும் முடியாது... இப்ப என்ன பண்றதுன்னு எங்களுக்கும் தெரியலடா..." என்றார்.

இவ்வளவு நேரமும் ஆழ்ந்த சிந்தனையில் நின்றிருந்த சத்யமித்ராவோ, "அண்ணா நான் வேணாம்னா உனக்கு நடிச்சி குடுக்கவா..." என்று பட்டென கேட்டாள்.

அதில் ஆண்கள் மூவருமே அவளை தான் நோக்கினர்.

சத்யனுக்கோ ஒரு அண்ணனாக கோபம் வர, "சத்யா எதுவும் பேசாத வாய முடிட்டு அமைதியா இரு... அதெல்லாம் ஒன்னும் தேவை இல்ல... இது என் பிரச்சனை நான் பாத்துக்கிறேன்... நீ இதுல வராத..." என்று கடுமையாக!

"ஆமா சத்யா, உன் அண்ணன் சொல்றதும் சரிதான்..." என்றான் பிரகாஷ்.

"பிரகாஷ் அண்ணா நீங்களும் அவரை ஏத்தி விடாதீங்க... கம்மனு இருங்களேன்... ப்ளீஸ்..." என்று அவனது காதில் கிசுகிசுத்தாள் பெண்.

மித்ராவோ சத்யனின் பக்கத்தில் அமர்ந்து அவன் கைகளைப் பற்றி, "அண்ணா... இது உனக்கு கடைசி வருஷம் தானே... உங்க காலேஜ் கன்டெக்ட் பண்ற காம்பெடிஷன்ல கலந்து வின் பண்ணனும்னு நீ ஆசைப்பட்ட தானே... ப்ளீஸ் அண்ணா... நான் இதுல நடிக்க ஒத்துக்கோயேன்..." என்று கண்களை சுருக்கிக் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

விதுலோ அவனை அறியாமல் அவளின் பேச்சை ரசித்துக் கொண்டிருந்தான்.

"இல்ல சத்யா... என்னால முடியாது..." என்று ஒரு அண்ணானாக இருந்து மட்டுமே பேசினான் சத்யன்.

"ஏன் முடியாது? எதுக்கு முடியாது? அதெல்லாம் முடியும் அண்ணா... நீ சரின்னு மட்டும் சொல்லு..." என்று எவ்வளவு பேசினாலும் அவன் மனம் இறங்கவே இல்லை.

விதுலும் பிரகாஷும் இவர்களின் பேச்சு வார்த்தைகளை ஒரு பார்வையாளர்களாக நின்று பார்த்தனர்.

இவ்வளவு பேசியும் அண்ணன் ஒத்துக் கொள்ளாமல் இருப்பது மித்ராவுக்கு கோபத்தையே வரவழைத்தது.

"அண்ணா நடிக்கிறது என்ன தப்பா? நடிப்பை நீ அப்படி தான் பார்க்கறீயா? உன் தங்கச்சி மட்டும் இதுல எல்லாம் நடிக்க கூடாது ஆனா, அந்த லில்லி அக்கா மட்டும் நடிக்கலாம்... அப்படி தானே... அதெப்படி ண்ணா... நடிச்சா நான் தப்பான பொண்ணா ஆகிடுவேனா? நீ லில்லி அக்காவை நடிக்க கூப்பிட்டீயே... அப்போ அவங்க என்ன தப்பான பொண்ணா? அதான் அவங்களை கெஞ்சி கெஞ்சி ஒத்துக்க வச்சியா? நடிக்கிறது எல்லாம் தப்பு தானா? நீ இப்படி தான் நினைச்சிட்டு இருக்கியா? உன் மனசுல இவ்வளவு அழுக்கு இருக்கா?" என்று ஆத்திரமாக கத்தினாள்.

"அய்யோ பாப்பா... அப்படி எல்லாம் இல்லமா..." என்று சத்யன் பதற...

"அப்போ ஏன் அண்ணா சரின்னு சொல்ல யோசிக்கிற..."

விதுலோ மனதிற்குள், 'நைஸ் மூவ்...' என்று சொல்லி அவளை பாராட்டினான்.

"நீ சின்ன பொண்ணு மா..."

"இல்ல... எனக்கு பதினெட்டு ஆகிடுச்சு... நான் பெரிய பொண்ணு தான்..."

"சத்யா... என்னோட தேவைக்காக உன்ன யூஸ் பண்ணிக்க விரும்பல மா... இது என் பிரச்சனை..."

"ஒஹ்... எப்ப இருந்து உன் பிரச்சனை என் பிரச்சனை எல்லாம் பிரிச்சு வச்ச... நீ பத்திரம் பண்ணி வச்சத நான் பாக்கவே இல்லையே அண்ணா..." என்றாள் முறைத்துக் கொண்டே!

இதை கேட்ட விதுலுக்கு சட்டென்று சிரிப்பு வர, சத்தம் போட்டே சிரித்தான். மித்ராவோ அவனை முறைத்து வைக்க, சத்யனோ 'எதுக்குடா என் உசுர வாங்குற... கம்முனு இரேன்டா...' என்பது போல் நொந்துபோய் பார்த்தான். அதில் சிரிப்பை அடக்கி சிரியஸாகவே நின்றான் இன்றைய பெரும் நடிகன்.

"ஏன் அண்ணா, உன் ஃப்ரண்ட் கேரக்டர் சரி இல்லையா என்ன? ஆள பார்த்தாலே அந்த கேட்டகிரில தான் தெரியுது... அதுக்கு தான் என்னை பாதுக்காக்க நினைச்சி இப்படி எல்லாம் கதை சொல்லிட்டு இருக்கியா? அத வெளிப்படையா சொல்ல முடியாம தான் இப்படி தலைய சுத்தி மூக்க தொட்டுட்டு இருக்கியா?" என்று அழுத்தம் திருத்தமாக கேட்டாள் சத்யமித்ரா.

இதில் ஆண்கள் மூவரும் அதிர்ந்து போய் அவளை பார்த்தனர்.

"அம்மா... அம்மா..." என்று சத்தத்தில் நடப்புக்கு வந்தாள் மித்ரா. அவளோ முகத்தை கழுவி விட்டு வெளியே சென்று பார்க்க அறை வாசலில் மிர்னாளினி நின்றுக் கொண்டிருந்தாள்.

"என்ன மிருமா? ஏதாவது வேணுமா?" என்று மகளிடம் கேட்க,

"நோ மா... அப்பாவோட பிரஸ் மீட் டிவில போய்ட்டு இருக்கு... அதுக்கு தான் உங்கள கூப்பிட்டேன்... வாங்க போய் பார்க்கலாம்..." என்று சொல்லி மகள் அழைக்க... மறுக்க முடியாமல் ஒரு பெருமூச்சுடன் கீழே சென்றாள் மித்ரா.

என்ன தான் தொலைகாட்சி திரையில் கணவன் அழகுடன் கம்பீரமாக தென்பட்டாலும் அதில் லயிக்க மனம் ஒன்றிப் போகவில்லை. இருந்தும் பிள்ளைகளுக்காக அவள் முகத்தை ஆர்வத்தை வைத்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள் இந்த ஹாட் ஸ்டாரின் மனைவி.

************

 

Nila nila

New member
விடைகொடு என்னுயிர் காதலே!

காதல் - 3

விதுலின் செய்தியாளர் சந்திப்பு ஆர்வமாய் முடிந்தாயிற்று. ஆனாலும் அதையே மறுபடியும் மறுபடியும் ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். கையடக்க கைபேசியிலும் அவன் முகமும் பேச்சும் தான் வலம் வந்துக் கொண்டிருந்தது.

விகிர்தனும் மிர்னாளினியும் தந்தையின் புகழையே பாட்டாக பாடிக் கொண்டிருக்க தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டாள் சத்யமித்ரா.

"விகி வள்ளி பாட்டி கிட்ட அம்மாக்கு ஒரு சுக்கு டீ கேட்டேன் சொல்லு... தலை வலிக்குது..." என்று மகனிடம் சொல்ல...

அவனும், "ஓகே ம்மா... அப்பறம் உங்களுக்கு டேப்லெட் ஏதாவது குடுக்கவா..." என்று கேட்க...

"இல்லடா வேணாம்.‌.. இதுவே போதும்... ரூமுக்கே எடுத்து வர சொல்லு... நான் போய் படுக்கறேன்..." என்று சொல்லிவிட அவனும் சரியென்று சென்று விட்டான்.

சத்யாவோ அவளுடைய அறைக்கு வந்து கதவை தாழிட்டுக் கொண்டு, அவள் ரகசியமாக வைத்திருக்கும் பெரிய டைரியை எடுத்து எதையோ கிறுக்கி கொண்டிருந்தாள்.

'நான் இன்னைக்கு ஒரு பெரிய முடிவு எடுக்க போறேன்... இது தப்புன்னு தெரியும்... இருந்தாலும் எனக்கு வேற வழி தெரியல... இவரை விட்டு நான் போக தான் போறேன்... வாழ்க்கைக்கு நிம்மதி ரொம்ப முக்கியம்... அதுக்கு நான் போயே ஆகணும்... என்ன மன்னிச்சிடுங்க தேவ்...' என்று தனக்குள் சொல்லிக் கொண்டு, அவளின் மனதிற்கு அமைதியை அளிக்க மீண்டும் அவர்களின் பழைய நினைவிற்கு சென்றாள் சத்யமித்ரா.

இவள் கேட்ட கேள்வியில் மூவரும் அதிர்ந்து பார்க்க, "ஏய்! சத்யா என்ன டி பேசிட்டு இருக்க... என்னோட ஃப்ரண்டை பாத்து என்ன கேள்வி கேட்கிற? இப்படி எல்லாம் பேசின தங்கச்சினு கூட பாக்க மாட்டேன்... செவில்லயே நாலு விடுவேன்..." என்று சத்யன் அவளிடம் எகிற...

"நான் கேட்டதுக்கு நீ தயங்குறத பார்த்த அப்படி தானே அண்ணா இருக்கு... அதனால தான் இப்படி பட்டுனு கேட்டேன்..." என்று வெடுக்கென்றே பதில் வந்தது அவளிடம்.

"இல்ல சத்யா... நீ அப்படி கேட்டது தப்பு... அப்படி பேசியிருக்கவே கூடாது... அவன் ரொம்ப நல்லவன்... மொதல்ல இந்த ஷாட் பிலிம்கே அவன் ஒத்துக்கல... ஏன் தெரியுமா! இது ஃபுல் அண்ட் ஃபுல் லவ் இருக்கு... எனக்கு வேணாம்... கிரைம் ஜானர்ல இல்ல வேற ஏதாவது ஜானர்ல மட்டும் தான் நான் நடிப்பேன்னு ஒத்த கால்ல நின்னான்... அப்பறம் நான் தான் அவன் கிட்ட கெஞ்சி... இந்த கதைக்கு நீ தான் செட் ஆகுவன்னு எல்லாம் சொல்லி... கடைசியா தான் ஓகே வாங்கினேன்... அவனை போய் ஏன் சத்யா... நீ விதுல தப்பா பேசிறதும் பாக்குறதும் கொஞ்சம் கூட சரியில்ல..." என்று கண்டிப்பாக சொல்ல,

"சரி ஓகே அண்ணா... நீ தான் சொல்லிட்டு இருக்க... இவரை நல்லவரு வல்லரு உத்தமரு ன்னு... சோ, இவர் கூட நடிக்கறதுல என்ன பிரச்சனை உனக்கு... நான் சேஃப்டி தானே... ஒரு ப்ராப்ளமும் வராதுல... அப்பறம் ஏன் உனக்கு தயக்கம்... நீயும் என் கூட தான் இருக்க போற... எதுக்கு இவ்வளவு யோசிக்குற அண்ணா.‌‌.. நான் கேட்டதுக்கு சரின்னு சொல்லேன்... ப்ளீஸ்..." என்று மீண்டும் அவனை தாஜா செய்தாள் சத்யனின் தங்கை.

இது தன்னை பற்றிய பேச்சு எனினும் இவர்களுக்கிடையே ஒரு வார்த்தையும் பேசாமல் கைகளை கட்டிக் கொண்டு அமைதியாக கவனித்தான் விதுல் தேவ்.

சத்யனோ சிறிது நேரம் யோசித்து விட்டு, "சரி பாப்பா... நீயே நடிச்சி குடு... நான் சொல்றத மட்டும் தான் பண்ணனும்... வேற எதையும் செய்ய கூடாது... அதிகப் பிரசங்கித்தனமா பேசிட கூடாது... அதுக்கு முன்னாடி இவன் கிட்ட நீ சாரி கேளு..." என்று தங்கையிடம் கறாராக சொல்லில் நண்பனை பார்த்து, "சாரிடா மச்சான்... சின்ன பொண்ணு ஏதோ தெரியாம பேசிட்டா... எதையும் மனசுல வச்சிக்காத விதுல்..." என்று மெய்யான வருத்தத்துடன் சொன்னான்.

விதுலோ, "ஹேய் சத்யன்! அதெல்லாம் ஒன்றுமில்ல விடு..." என்று தட்டிக் கொடுக்க,

"நான் பேசினதுக்கு என்னை மன்னிச்சிடுங்க..." என்று மெல்லிய குரலில் கூறினாள் மித்ரா.

அவனும், "ம்ம்..." என்று அமைதியாகி விட்டான்.

அதன் பின்னர், சத்யனும் பிரகாஷும் படம் எடுப்பதற்காக இடம் பார்த்து கேமராவை ஒரு இடத்தில் பொருத்திக் கொண்டிருந்தனர்.

விதுலும் மித்ராவும் மட்டும் தனியாக நின்றுக் கொண்டிருந்தனர்.

அவளோ அவனிடம் பேச வெகு நேரமாக தயங்கிக் கொண்டிருக்க, "ஏதாச்சும் பேசணுமா?" என்று கேட்க, ஆமா என்று வேகமாக தலை ஆட்டினாள்.

"அப்போ பேசு..."

"நான் வேணும்னே தான் பேசிட்டேன்..."

"தெரியுது..."

"என்ன தெரியுமா!" என்று கண்கள் விரிய, "இல்ல... நான்... சாரி... நீங்க அப்படி எல்லாம் இல்ல... தெரியல... நான் தான் அபத்தமா கேட்டேன்... என் சிடியேஷன் அப்படி... அதான்..." என உளறிக் கொட்டினாள் பெண்.

"ஜஸ்ட் ரிலாக்ஸ்... தண்ணி வேணுமா?"

"ம்ஹூம்... என் அண்ணா ஒத்துக்க மட்டும் தான் இப்படி எல்லாம் பேசினேன்... மத்தபடி உங்க மேல தப்பான இன்டென்ஷன் எல்லாம் வரல... நீங்க நல்லவர் போல தான் எனக்கு தெரிஞ்சிங்க..." என்று பாவமாக பேச,

"நல்லவர் போலவா?" என்றான் கேள்வியாக!

"இல்ல... நல்லவர் தான்..."

"ம்ம்ஹம்ம்... தென்..." என்றான் நையாண்டியாக!

"இப்படி எல்லாம் நக்கல் பண்ணா நான் அழுதுடுவேன்... என் மேல தப்பு இருக்கு... அதான் இப்படி பேசறேன்... ப்ளீஸ்... நான் உங்கள அப்படி பேசிட்டேன்னு தப்பா நினைச்சிடாதீங்க... என்னை மன்னிச்சிடுங்க... உங்க பார்வை ஏதோ குற்றவாளியை பார்க்குற மாதிரியே இருக்கு... தப்பு என்னோடது அதான் நான் மன்னிப்பு கேட்டுட்டேனே... அண்ணனுக்காக மட்டும் தான் அப்படி பேசினேன்... அவனோட ஆசை இதுல வின் பண்ணனும்னு... இந்த படம் எடுக்க முடியாம போயிட்டா தோத்து போயிடுவான்... அப்படி ஆகிட்டா அண்ணா ரொம்ப வருத்தப்படுவார்... அத என்னால பார்க்க முடியாது... அதான்..." என்று கண்கள் கலங்கி சொன்னாள் சத்யமித்ரா.

"மித்ரா... ஹேய் அழறீயா! இங்க பாரு... நீ எதுக்காக அப்படி பேசினேன்னு எனக்கு புரிஞ்சுது... அதனால தான் அப்போ நான் அமைதியா இருந்தேன்... இல்லனா அப்பவே உன்ன ஏதாவது பேசி இருப்பேன்... அழாத மா... உன்ன நான் தப்பாவே நினைக்கல... சரியா... உன்மேல கோபமோ வருத்தமோ இல்ல... உன் அண்ணன் கிட்ட இருந்து ஓகே வாங்க தானே இப்படி பேசின... கரெக்ட்டா... விடுமா... இதுக்கெல்லாமா அழுவாங்க..." என்று அவளை சமாதானம் செய்தான் தேவ்.

அவளோ கண்களை துடைத்துக் கொண்டே, "நிஜமாவா..." என்றாள் சிறுபிள்ளையாக!

"நிஜமா..." என்றான் அவனும்!

"அது எப்படி தெரிஞ்சது..."

விதுலோ, "நீ என்னை பார்த்து பயத்தை வெளிக்காட்டாம கை நடுங்கிட்டே கேள்வி கேட்டீயே... அப்போவே கண்டு பிடிச்சிட்டேன்... நீ ஃபீல் பண்ணாத ஓகேவா..." என்றான் மென்மையாக!

"தாங்க்ஸ்... ஆனாலும் என்னை மன்னிச்சிடுங்க... என்னவா இருந்தாலும் நான் அப்படி பேசினது தப்பு தான்..." என்றாள் மித்ரா.

"சரி தப்பு தான்... ஹ்ம்ம்... நீ இத்தன முறை சாரி கேட்கிறத விட, ஒரு நல்லா புக்கா வாங்கி தந்துடு... தப்பு எல்லாம் சரியா கன்வேர்ட் ஆகிடும்..." என்று புன்னகையுடன் யோசனை சொன்னான் விதுல்.

"அட! இது கூட நல்லா தான் இருக்கு..." எனக் கூறி அவளும் சிரித்தாள்.

அன்றே அவனது காதல் அவளில் உடைக்கப்படும் என்று இருவருமே எதிர்பார்க்கவில்லை! இருந்தும் கடவுளின் சித்ததால் அது நிகழ்ந்தேறியது.

சத்யன் இயக்கும் குறும்படம் 90'ஸ் கிட்ஸ் காதலை அழகுறக் காட்டும் விதமாய் இருந்தது.

காதலனும் காதலியும் தங்களின் காதலை வெளிப்படுத்தும் சமயத்தில் காதலனுக்கு உயிர் பிரிந்து விடும், அந்த காதலனுக்கு உயிர் போகும் தருவாயில் அவனிடம் தன் காதலை அழுதபடி கூறுவாள் காதலி. கதை இதனுடன் முடிந்து விடாது, இவை அனைத்துமே காதலனின் கனவாய் இருக்க, இவ்விருக்கும் திருமணம் முடிந்து இரு பெண் குழந்தைகளும் இருப்பர். இப்படி ஒரு சுபமான முடிவில், மகிழ்ச்சியான படமாய் அந்த குறும்படம் முடியும்.

அந்த குறும்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் தருவாயில் தான் மித்ரா மேலுள்ள காதலை உணர்ந்து ஒரு வேகத்தில் அவளிடம் அப்படியே சொல்லி இருப்பான் தேவ். அவளுடைய கூர்மையான கண்கள் அவனுடைய காதலை சொல்ல வைத்துவிடும்.

இதில் விதுலோ சத்யன் சொல்லிக் கொடுத்த உரையாடலை சொல்லாமல் இவனாக உணர்ந்து பேசிய காதல் வசனங்களாக சொல்லி இருப்பான். சத்யாவின் குறும்படத்திற்கு அந்த நிஜ உணர்வுகளே அழகிய காட்சியாக அமைந்திருந்தது.

அந்த காலகட்டத்தில் அவர்களது கல்லூரியில் இந்த 'என்னுயிர் காதலே' என்ற குறும்படமே பிரபலமாக பேசப்பட்டது. அதுவே முதல் பரிசையும் தட்டிச் சென்றது.

இந்த குறும்படமே தேவ் மற்றும் மித்ராவின் வாழ்க்கையை மாற்றி அமைத்து, அவர்களுக்கான துணையை தேடிக் கொடுத்தது எனலாம்!

மித்ராவின் பழைய நினைவுகளை கலைக்கும் விதமாக மீண்டும் கதவுகள் தட்டப்பட, வள்ளியம்மாவாக இருக்கும் என்று எண்ணி கதவை திறக்க, அவர் டீ கப்புடன் நிற்பதற்கு பதிலாக முகம் முழுதும் புன்னகையுடன் அவளின் தேவ் அறை வாசலில் நின்றுக் கொண்டிருந்தான்.

"தேவ்..." என்று உச்சரித்த இதழ்கள் அவளை அறியாமல் விரிந்துக் கொண்டன.

"மேடமுக்கு தலைவலி போல..." என்றபடி உள்ளே வந்து கதவை அடைத்தான் கணவன்.

"லைட்டா..."

"அப்படியா..."

"ம்ம்..."

"அந்த தலைவலி என்னால வந்தது போல..."

"இல்ல..."

"சரி வந்து உட்காரு மித்து மா..." என்றவன் மனைவியை இழுத்து பக்கத்தில் அமர வைத்தான் விதுல்.

"சாப்பிட்டீங்களா பா..."

"ஆச்சுமா..."

"சரி..."

"ஏதாவது பேசேன் மித்ரா... உன் குரல் கேட்க தானே ரகசியமா வந்து இருக்கேன்..‌." என்றான் சிரித்துக் கொண்டே!

"ரகசியமாவா!" என்று கேட்ட சத்யாவிற்கு கண்கள் விரிய,

அவள் கணவனோ விரிந்த கண்களில் முத்தமிட்டு நகைத்தவன், "ஹிஹி... முன் வாசல் வழியா வந்தா பசங்க இருப்பாங்க... வந்து உடனே என்னை பிடிச்சி ஒட்டிப்பாங்க... ரெண்டு மூனு மணி நேரம் அவங்களை விட்டு எங்கேயும் போக முடியாது... அதான் பின் வாசல் பக்கமா நுழைஞ்சு நேரா நம்ம ரூமை தேடி வந்துட்டேன்..." என்று கண்களை சுருக்கிச் சொல்ல... அவளால் இதை கேட்டு அவனது காதலில் மயங்கி போக முடியவில்லை!

இவ்வளவு காதலை தன் மேல் வைத்திருப்பவன் மனதை எப்படி சுக்கு நூறாக உடைப்பது என்று எண்ணி கதிகலங்கி போனாள் சத்யா.

"சரி வாங்க கீழ போலாம்... ரெண்டு பேரும் உங்கள பார்க்க ரொம்ப நேரமா வெயிட்டிங் தேவ்... பாவம் பிள்ளைங்க... மிஸ் பண்றாங்க..."

"பிள்ளைங்க மட்டும் தான் மிஸ் பண்றாங்களோ, அவங்க அம்மா... என்னோட ஸ்வீட் பொண்டாட்டி மிஸ் பண்ணலையோ?" என்று சொல்லி நாசியை உரச,

"அதெல்லாம் இல்ல..."

"பொய்..."

"நான் ஏன் உங்கள மிஸ் பண்ண போறேன்..."

"ஓகே என் கண்ணை பார்த்து இதே தைரியத்தோட சொல்லுங்க மேடம்..." என்று குறும்பாக சொன்னான் விதுல்.

"சரி... சொல்றேன்..." எனக் கூறி நிமிர... ஒற்றை கண் அடித்து அவளை பார்த்தான் அவன்.

மித்ராவின் கண் இமைகள் படபடவென அடித்துக் கொள்ள, "மிஸ் பண்ணல..." என்று கூற...

அவனுடைய கரங்களால் இல்லாளின் முகத்தை தாங்கியவன், "கண் சிமிட்டாம சொல்லணும் மித்து மா..." என்றவனுக்கு கொள்ளைச் சிரிப்பு.

"மிஸ் பண்ணேன் தேவ்..." என்று அவளை அறியாமல் சொல்ல, "தட்ஸ் மை மித்ரா..." என நெற்றியை முட்டிய பின்பே தான் என்ன சொல்லி இருக்கிறோம் என மூளைக்கு உரைத்தது.

அவனுடனான தனிமை வேண்டாம் என்று எண்ணியவள், "கீழே போலாம் தேவ்..." என மீண்டும் தொடங்க,

அவனும், "சரி கண்ணம்மா வா போலாம்..." என்க, அப்போது தான் மித்ராவின் மூச்சு சீராக வந்தது.

"ஹே மித்ரா! நீ எனக்கு விஷ் பண்ணவே இல்ல டி..." எனச் சொல்லி மீண்டும் அமர்ந்து விட்டான்.

"சாரி... சாரி தேவ்... மறந்துட்டேன்... இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..." என்றாள் உடனடியாக.

"ஓகே இருக்கட்டும்... எனக்கு இப்பவே ஒரு ஹக் வேணுமே டி..." என்று கேட்டுக் கொண்டு அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான் விதுல் தேவ் குமார். மறுத்து பேசாமல் மித்ராவும் அவனுடன் ஒற்றிக் கொண்டாள்.

கணவன் மனைவி இருவரின் அணைப்பின் நடுவே மௌனமே ஆட்சி செய்தது. வார்த்தைகள் இன்றி காதல் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

சில நிமிடங்கள் கழித்த பின்னரே அவ்வறையில் இருந்து வெளியேறி கீழே சென்றனர்.

விதுல் நினைத்தது போலவே விகியும் மிருவும் இரண்டு மாதங்கள் கழித்து அப்பாவை கண்டதும் பாச மழையை இடைவிடாது பொழிந்து கொண்டிருந்தனர்.

அன்று இரவு உணவை சத்யமித்ராவே செய்ய, கணவனும் பிள்ளைகளும் அவளின் கைப் பக்குவத்தில் விரும்பியே உண்டு அவரவர் அறைக்கு சென்றனர்.

மித்ரா அவள் அறைக்கு சென்று விட, விதுலோ மகனிடமும் மகளிடமும் பேசிவிட்டு, அதன் பின்னரே அங்கு வந்துச் சேர்ந்தான்.

மித்ராவோ ஏதோ ஒரு ஆங்கில புத்தகத்தை புரட்டிக் கொண்டிருக்க, விதுலோ அவனுடைய உதவியாளன் ஷங்கருக்கு அழைத்துப் பேசி கொண்டே மடிக்கணினியை பார்வையிட்டுக் கொண்டிருந்தான்.

அவளோ புத்தகத்தை முடி வைத்துவிட்டு எழுந்து சென்றவள், பால்கனிக்கு சென்று அவளது மனதை சமநிலைப் படுத்தி, குளிர் காற்றை சுவாசித்து விட்டு மீண்டும் உள்ள வந்து, தன் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய முக்கிய பிரமுகர்களுக்கு பதிலளிக்க மும்முரமாக தட்டச்சு செய்து கொண்டிருந்த கணவனையே கொஞ்ச நேரம் ஆழ்ந்து பார்த்தாள்.

அவள் மனமோ மீண்டும் எச்சரிக்கை செய்ய, "எனக்கு டிவோஸ் வேணும் தேவ்..." என்று உணர்ச்சி உடைத்த முகத்துடன்... உணரவில்லாமல் கேட்டு விட்டாள் சத்யமித்ரா.

இனி இவ்விருவரின் நிலை தான் என்னவோ?

**********

கருத்துகளை பகிர


 
Last edited:

Nila nila

New member
காதல் - 4

தன்னுடைய கணினித் திரையில் மூழ்கி போய் இருந்த விதுல்... அவனது துணைவி சொன்னதை கேட்டு, தன் காதில் விழுந்தது உண்மையா பொய்யா என நம்ப முடியாமல் மனைவியை பார்த்து... "என்ன சொன்ன‌.‌.. கம் அகென் மித்ரா..." என்று குழப்பமாகவே கேட்டான்.

"உங்க காதுல விழலயா... ஹ்ம்ம்... எனக்கு டிவோஸ் வேணும் தேவ்... அத சீக்கிரமே கொடுத்துடுங்க... நான் போறேன்..." என்று சொல்லும் போதே அவளுக்கு ஆறுதல் சொல்லும் விதமாக அவளுடைய கண்ணீரும் கண்ணில் இருந்து எட்டி பார்க்க, ஆனாலும் அதனை கட்டுப்படுத்திக் கொண்டே பேசினாள்.

அவனுக்கோ அவளின் பேச்சு இம்மியளவும் புரியவில்லை, "எதுக்கு... நீ எங்க போக போற மித்ரா..." என்க...

"எங்கேயோ போறேன்..." என்று அவள் கூறவும், அவனுக்கு தலையில் அடித்துக் கொள்ளலாம் போல இருந்தது.

அவள் தன்னிடம் விளையாடுகிறாளா? இல்லை இப்படி பேசி தனக்கு ஏதாவது பிறந்தநாள் பரிசை அளிக்க போகிறாளா? என்று இப்படியான எண்ணங்களும் மனதிற்குள் வந்து போயின.

ஆகையால், "ஓஹ்..." என நெற்றியை நீவியவன்... "நமக்கு கல்யாணம் ஆகி எத்தனை வருஷம் ஆச்சு மித்ரா?" என்று சாதாரணமாக கேட்டான் விதுல்

"ஏன் தேவ்‌... அதை கூட நான் தான் உங்களுக்கு ஞாபகப் படுத்தணுமா? உங்களுக்கு தெரியாதா?" என்று கோபத்துடன் கேட்டாள் மித்ரா.

இவ்வளவு நேரம் பேசியதை பெரிய விஷயமாக நினைக்காமல் இருந்த தேவ்வோ, இப்பொழுது மனதிற்கு ஏதோ தவறாக தோன்றவும், "மித்ரா... சின்ன பிள்ள தனமா பேசாத... நீ என் மேல ஏதோ கோபமா இருக்க போல... அது எனக்கு புரியுது... உன் கோபத்தை இப்படி பேசி தான் குறைக்கணுமா? நமக்கு கல்யாணம் ஆகி இருபத்தொரு வருஷம் ஆக போகுது... நமக்கு இரண்டு குழந்தைங்க இருக்காங்க டி... பேச்சுக்கு கூட இப்படி எல்லாம் சொல்லாத... என்னால தாங்க முடியல டி... நீ இல்லாம நான் ஒன்னுமே இல்ல... இது உனக்கே தெரியும் தானே மா..." என்றான்.

"என் முடிவுல உறுதியாக தான் இருக்கேன் தேவ்... இவ்வளவு நேரம் பேசிட்டு இருந்தீங்களே... அதெல்லாம் இப்ப தான் உங்களுக்குக் தெரியுதா தேவ்... நம்ம குழந்தைங்க எப்பவோ வளந்துட்டாங்க தேவ்... அது உங்களுக்கு தெரியுமா தெரியாதா?"

"தெரியாமலா மித்ரா இருப்பேன்... நீ பேசுறது எல்லாமே புதுசா இருக்கு மித்ரா..."

"எஸ்... புதுசு தான்... சரி தேவ் உங்க கிட்ட ஒரு கேள்வி கேட்கறேன்... பசங்க ரெண்டு பேரையும் நீங்க கூட இருந்து வளத்தீங்களா?"

"கூட இருந்தா... என் கூட இருந்து தானே மித்ரா அவங்க வளந்து வந்தாங்க... என்ன பேசற டி... ஊஃப்... இப்ப உனக்கு என்ன தான் வேணும் மித்ரா.‌.. அத தெளிவா சொல்லு... அத விட்டுட்டு என்ன என்னமோ எல்லாம் பேசிட்டு இருக்காத..."

"டிவோஸ்... டிவோஸ் மட்டும் தான் எனக்கு வேணும்... அது குடுங்க நான் எப்பவும் இருக்குறத விட ரொம்ப சந்தோஷமா இருப்பேன் தேவ்..."

"லூசா டி நீ... எனக்கு 45 ப்ளஸ்... உனக்கு 40 ப்ளஸ்... இப்ப வந்து டிவோஸ் கேட்டுட்டு இருக்க... நமக்குள்ள எதுவுமே பிரச்சனை இல்லையே மித்ரா அப்பறம் ஏன்?"

"ஆமா எனக்கு நாற்பத்தி நாலு வயசும் உங்களுக்கு நாற்பத்தி எட்டு வயசும் ஆகுது... அதுக்கு என்ன! ஏன் தேவ்... இப்ப டிவோஸ் பண்ணா... உங்க எண்ணற்ற ஃபேன்ஸ் முன்னாடி உங்களோட இமேஜ் டேமேஜ் ஆகிடும் ன்னு நினைக்கறீங்களா... நான் வேணா ப்ரஸ் கிட்ட சொல்றேன்... என் கேரக்டர் சரியில்லை... நான் வேற ஒருத்தர் கூட ஆஃப்பெர் வச்சி இருக்கேன்... அதனால் உங்களுடைய ஹாட் ஸ்டாரை நான் டிவோஸ் பண்ணிட்டு என் வாழ்க்கையை நான் அமைச்சிக்க போறேன்னு..." என்று அவள் சொல்லி முடிக்கும் முன்பே... எதிரே நின்றிருந்தவனின் ஐவிரல்களும் அவளுடைய கன்னத்தை தாங்கி நின்றது.

மித்ராவோ அடி வாங்கிய கன்னத்தை பற்றிக் கொண்டு சலனமின்றி தன்னவனையே உறுத்து விழித்துக் கொண்டிருந்தாள்.

தன்னவள் முகம் நிர்மூலமாக இருக்கவும் விதுவால் என்ன விஷயம் என்பதை யூகிக்க கூட முடியாத நிலையில் இருந்தான்.

"இட்ஸ் ஹேர்ட்டிங் மித்ரா... எதுக்கு டி இப்படி எல்லாம் பேசி கஷ்டப் படுத்திட்டு இருக்க... சத்தியமா புரியல டி... ஏன் இப்படி பைத்தியம் போல பண்ணிட்டு இருக்கன்னு... என் பிறந்த நாளுக்கு உன்கிட்ட கிஃப்ட் தான் கேட்டேன்... பட் , நீ என் கிட்ட கேட்ட கிஃப்ட்ல நான் ஏன் வாழ்ந்துட்டு இருக்கேன்னு நினைக்க வச்சிட்ட மித்ரா... இப்படி எல்லாம் பேசி உன்ன என் கையாலயே அடிக்க வச்சிட்டீயே... என்னை நினைச்சா எனக்கே அசிங்கமா இருக்கு மித்ரா..." என்று வெறுமையான குரலில் சொன்னான் விதுல் தேவ்.

சத்யமித்ராவின் உணர்வுகளோ உள்ளுக்குள் ஆர்ப்பரித்து பேரலையாக சுழன்று கொண்டிருந்தது. ஆனால், வெளியேவோ அவன் முன்னால் பிடித்து வைத்த சிலையாக நின்றிருந்தாள்.

'இவனோடு வாழக் கூடாது... இவனை விட்டு தூரமா போய்டனும்... அப்போ தான் தனக்கு நிம்மதி...' என்று உறுதியாக நினைத்துக் கொண்டே அவனை நேர்கொண்டு பார்த்தாள் பெண்ணவள்.

"எல்லாத்துக்குமே நான் மட்டும் தான் காரணம் அப்படி தானே மிஸ்டர். விடிகே..." என்று சினத்துடன் கேட்டாள் சத்யா.

"விடிகேவா?"

"எஸ்... விடிகே தான்... பிகாஸ் நீங்க இத்தனை வருஷமும் அப்படி தானே இருந்தீங்க... எனக்கே எனக்கு புருஷனாவும் என் குழந்தைகளுக்கு அப்பாவவும் மட்டுமா இருந்தீங்க... உங்களுக்கு உங்க சினிமா வாழ்க்கைல முக்கியமோ போச்சு... அது கூடவே குடும்பம் நடத்த தானே நேரம் சரியா இருந்துச்சு... நீங்க ஒரு சுயநலம் பிடிச்ச மனுஷன்... அதான் உங்க சந்தோஷத்துக்காக மட்டுமே ஓடி ஓடி நடிச்சிட்டு இருந்தீங்க... எனக்கு வேற வழி தெரியாம எல்லாத்தையும் பொறுத்து உங்க கூட குடும்பம்... சாரி உங்க வீட்டுல அகதியா இருந்து இருக்கேன்..." என்று அவள் வெறுப்புடன் பேச, அதை கேட்டவனுக்கே நெருப்பு மேல் நிற்பது போல இருந்தது.

"இவ்வளவு நாளும் என்னை பத்தி இதெல்லாம் மட்டும் தான் நினைச்சியா..." என்று வெறுமையாக கேட்டான் விதுல்.

"ஆமாங்க ஹாட் ஸ்டார்... இப்படி தான் நினைச்சேன்... என்னால உங்கள எதிர்த்து பேசவும் முடியல... ஏன் தெரியுமா? நீங்க குடுத்த ஆடம்பர வாழ்க்கையில தானே பகட்டா வாழ்ந்து... தினமும் மினுக்கிட்டு திரியறேன்‌... அதான் இத்தனை நாளா ஊமையா இருந்தேன்... இதுக்கு மேலயும் நீங்க குடுத்த இந்த பணக்கார ஸ்டேட்ஸ்ல ஒரு பொம்மலாட்ட பொம்மையா என்னால வாழ முடியாது... எனக்கு இதுல இருந்து விடுதலை வேணும்... இங்க இருந்து வாழ்க்கையை வாழவே மூச்சு முட்டுது... கடைசி வரைக்கும் இதுலயே வாழ்ந்து செத்து போயிடுவேனோ அப்படி நினைச்சி நினைச்சியே என் நிம்மதி போகுது... அதனால எனக்கு இந்த நரகத்தில் இருந்து சுதந்திரம் குடுத்து என்னை மட்டும் தனியா விட்ருங்க... நான் எங்கயாச்சும் போய் மீதம் இருக்குற வாழ்க்கையாவது எனக்கு பிடிச்ச போல ஹேப்பியா வாழ்ந்துக்கிறேன்..." என்று ஆவேசமாக பேசிக் கொண்டிருந்தாள் சத்யமித்ரா.

விதுலோ இதை எல்லாம் கேட்டு இடிந்து போய் கட்டிலில் அமர்ந்து விட்டு, மனைவியே வலியுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

"அவ்வளவு தானா மித்ரா..." என்று தன்னவளிடம் கேட்க, அவளிடம் அதற்கு பதிலில்லாமல் போனது.

"நான் ஒவ்வொரு முறையும் நீ சந்தோஷமா இருக்கியா மித்து மா? உன்னை நான் நல்லா வச்சிக்கிறேனா? இப்படி எல்லாம் கேட்பேன்... இதை எப்பவும் கேட்பேன்... அப்ப எல்லாம் என்னடி சொல்வ, நல்லா இருக்கேன்... நீங்க கூட இருக்குறது வரம்... இப்படி இன்னும் நிறையவே பேசி இருக்க... அது பொய்யா? இல்ல இப்ப பேசினது எல்லாம் பொய்யா? எது மித்ரா பொய்? சொல்லு டி... சொல்லு... நீ பேசினதுல எது தான் நிஜம்..." என்று வேதனை நிறைந்து கேட்டான் தேவ்.

"எதுவுமே நிஜம் இல்ல தேவ்... ஏன்னா நம்ம வாழ்க்கை முழுசுமே நிழல் தான்... எல்லாமே நிழல்... கணவன் மனைவின்னா ஒருத்தருக்கு ஒருத்தர் ஒன்னா இருக்கணும்... அவங்க கிட்ட மனசு அளவுல நெருக்கமா இருக்கணும்... நீங்க என்கிட்ட அப்படியா இருந்தீங்க?" என்று அவள் கேட்ட கேள்வியில் உருக்குலைந்து விட்டான் ஆண்.

"என்ன சொன்ன மனசளவுல நெருக்கமா இல்லையா? எதுக்கு டி இப்படி பொய் பேசற... நான் எங்க போனாலும் என் மனசு உன்கிட்ட தான் இருக்கும்... எங்க இருந்தாலும் எனக்கு உன் நினைப்பு மட்டும் தான் இருக்கும்... உன் மேல நான் வச்சி இருந்த காதலை பத்தி இவ்வளவு கேவலமா பேசறியே மித்ரா... உனக்கு என் காதல் ஒரு பொருட்டாவே தெரியலையா?" என்று வருத்தம் தாளாமல் கேட்டான் தேவ்.

அவளோ கொஞ்சமும் இரக்கமின்றி, "இல்லை... தெரியல... என்னை பார்த்தா மட்டும் தானே உருகி போய் பேசுவீங்க... அத பார்த்து நானும் மயங்கி உங்க பின்னாடியே நாய் குட்டி போல சுற்றி திரியணும்... அப்படி தானே... அதுக்கு தானே நீங்க ஆசைப்படறீங்க... உங்களுக்கு உங்க நடிப்பு தானே ஃபர்ஸ்ட் பிரியாரிடி... நாங்கெல்லாம் அடுத்து தானே... அதுலையும் உங்களுக்கு நானெல்லாம் ஒரு பொருட்டே இல்லை..." என்றெல்லாம் பேசி அவனை குற்றவாளி ஆக்கினாள் இல்லாள்.

"உன்கிட்ட காட்டிய காதல் எல்லாத்தையுமே நடிப்புன்னு சொல்றியா சத்யமித்ரா?" என்று திராணியற்ற குரலில் பேசினான் விதுல்.

"இல்ல... அத பொய்னு சொல்ல மனசு வரல தேவ்... அதுவும் நிஜம்... நீங்க என்னை... எங்களை மறந்ததும் நிஜம்..."

"இப்படி எல்லாம் பேசி என்னை பைத்தியக்காரனா மாத்திட்டு இருக்க மித்ரா..."

"நோ தேவ்... நான் நடந்ததை நடக்குறத மட்டும் தான் பேசிட்டு இருக்கேன்... ப்ளீஸ்... எனக்கு டிவோஸ் தந்துடுங்க... எனக்கு நிம்மதி வேணும்... எனக்கு அது கிடைச்சிட்டா நான் உங்களுக்கு எந்த ஒரு கஷ்டத்தையும் குடுக்க மாட்டேன்..." என்று சொல்லும் போதே அவள் குரல் உடைந்து விட்டது. அதுவரை வராத கண்ணீர் இப்பொழுது தாரை தாரையாக வந்து விழுந்தது. விதுலும் அவளை கவனிக்கும் மனநிலையில் இல்லை!

அவள் எப்படி பேச வேண்டும் என்று நினைத்தாலோ இதுவரையிலும் அப்படியே பேசினாள். ஆனால், இப்பொழுதோ அவனை வெறித்துப் பார்த்தபடி மித்ராவின் ஆழ்மன உணர்வுகளின் வெளிப்பாடாய் அவளை அறியாமல் வந்தன வார்த்தைகள். அப்போதே அவளது உடல் கொஞ்சம் சோர்ந்து போனது.

"நீங்க என் கூட இருக்கும் போது மட்டும் இந்த உலகத்திலயே நான் தான் சந்தோஷமா இருக்கும் ஒருத்தின்னு ஃபீல் பண்ணி இருக்கேன் தேவ்... உங்க காதல் எனக்கு அவ்வளவு மகிழ்ச்சிய தரும்... நாம காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்ட இத்தனை வருஷமும் நீங்க பேசுற பண்ற ஒவ்வொரு விஷயத்தையும் அவ்வளவு ரசிச்சேன்... உங்க காதலை பார்த்து பல வருஷமா வியந்து போவேன்... இப்பவுமே வியந்துட்டு தான் இருக்கேன்... என்னை அவ்வளவு நல்லா பார்த்துக்கறீங்க தேவ்... ஆனா, இதெல்லாம் நீங்க என் கூட இருக்கும் ஒன்னு ரெண்டு நாள் மட்டும் தான் தோணும்... அப்பறம் நீங்க வேலை விஷயமா வெளியே போய்ட்டா எல்லாமே ஆப்போசிட்டா தான் நினைக்க தோணும்... உன் கூட இருக்கணும் போலவே மனசு ஏங்கும் தேவ்..‌. ஆனாலும் என்னால இத உங்க கிட்ட சொல்ல முடியாது... நீங்க வீட்டுக்கு வரும் ரெண்டு நாள் அவ்வளவு ஹேப்பியா இருந்துட்டு நீங்க விட்டுட்டு போனா அடுத்த நாள் உங்களை ரொம்ப தேடுவேன் தேவ்..‌. அப்போ நீங்க என் பக்கத்துல இருக்கவே மாட்டீங்க தேவ்... படம் விஷயமா போயிட்டா உங்களுக்கு பேசவே நேரம் இருக்காது... நீங்க ஃபோன் பேசும் பத்து நிமிஷம் மறுபடியும் நல்லா இருக்கும்... வானத்துல பறக்குற மாதிரியே ஃபீல் பண்ணுவேன்... ஃபோனை வச்சதுக்கு அப்பறம் எல்லாமே போயிட்ட மாதிரி ஒரு ஃபீல் வந்துரும்... எனக்கு நானே திட்டிப்பேன் தேவ்... என்னால முடியல தேவ்... அப்பறம்... அப்பறம்... நான் உங்கள விட்டு போகனும் தேவ்... ப்ளீஸ்... டிவோஸ் தாங்க தேவ்... எனக்கு வேணும் தேவ்... டிவோஸ் குடுத்துடுங்க... உங்கள பார்க்க முடியாத தூரத்துக்கு எங்கன்னா போறேன்... அப்ப தான் என்னால இத்தனை வருஷமா இருந்த போலவே நிம்மதியா இருக்க முடியும்... நீங்க கஷ்டப்படுறதை பார்க்க முடியாது... எனக்கு விடுதலை தாங்க தேவ்..." என்று சொல்லும் போதே அவளது மூக்கில் இருந்து உதிரம் வழிய, தலையை பிடித்துக் கொண்டு அவன் மீதே சரிந்து விழுந்தாள் சத்யமித்ரா.


*************

 
Last edited:

Nila nila

New member
விடைகொடு என்னுயிர் காதலே!

காதல் - 5

அது ஒரு பதினொரு மணியை கடந்து இருந்ததால் விகிர்தனும் மிர்னாளினியும் அவரவர் அறைகளில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

அந்த வீட்டில் வேலை செய்யும் மற்ற பணியாளர்களும் உறங்கிக் கொண்டு இருந்தார்கள்.

இங்கு விதுலோ மயங்கி சரிந்த மித்ராவின் கன்னத்தை தட்டிப் பார்த்து உடலை உலுக்கியவன், மேசையில் இருந்த நீரை எடுத்து முகத்தில் தெளித்து விட்டான். அப்போதும் அவளுக்கு விழிப்பு வராமல் இருக்க, இவனுக்கோ பதற்றம் அதிகம் ஆகியது.

"மித்ரா... மித்ரா... கண்ணை திறந்து பாரு டி..." என்று கத்தியும் பலனில்லை.

இனியும் அவள் மயக்கம் தெளிந்து விடும் என்று இப்படியே காத்திருந்தால் அது சரியல்ல என்றெண்ணி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம் என்ற முடிவுக்கு வந்து மனைவியை கைகளில் ஏந்தி ஓடினான் தேவ்.

யாரையும் துணைக்கு அழைக்கவில்லை, யாரிடமும் விஷயத்தை சொல்லாமல் அவன் மட்டுமே அவளோடு சென்றான்.

பக்கத்தில் இருக்கும் மருத்துவமனைக்கே அழைத்துச் செல்லலாம், அதுவே அவளுக்கு பாதுகாப்பாக இருக்கும் இல்லையெனில் தேவையில்லாத வதந்திகள் சமூகவலைத்தளங்களில் பரவிவிடும் என்று மனது எதார்த்தத்தை எடுத்துக் கூறவும், மித்ராவுடைய தோழியின் மருத்துவமனை அவனது வீட்டிற்கு கொஞ்சம் பக்கம் இருக்கவும் அங்கேயே கூட்டிச் செல்லலாமென வண்டியை விட்டான்.

விதுல் மனைவியை தூக்கிக் கொண்டு உள்ளே வரவும் அந்த இரவிலும் சிறுசிறு சலசலப்புகள் ஏற்பட்டன. உடனடியாக, நைட் டியூட்டி பார்க்கும் மருத்துவரும் சத்யமித்ராவை பரிசோதிக்க அழைத்துப் போனார்கள்.

அது மிகப்பெரிய மருத்துவமனை என்பதால் துரிதமாக செயல்பட்டு விதுலின் பாதுகாப்பிற்கு அவனை சுற்றியும் ஆட்கள் சூழ்ந்து கொண்டனர்.

அவசர சிகிச்சை பிரிவில் இருந்து வெளிவந்த ஒரு மருத்துவரோ, "சார்... இவங்க ஒரு கே..." என்று எதையோ சொல்ல ஆரம்பிக்க, அதற்குள் விதுலன் பக்கத்தில் வேறொரு மருத்துவர் பதட்டமாக வந்து, "ரிஷப் சார்... நீங்க மேடமோட பிபி செக் பண்ணீங்களா..." என்று கேட்க,

"நர்ஸ் செக் பண்றாங்க மேடம்..." என்றான் அவனும்.

"ஓஹ்... பரவாயில்லை சார்... இருந்தாலும் நீங்களும் கூட இருங்க... ஃபுல் பாடி செக் அப்புக்கு அரென்ஜ் பண்ணுங்க..." என்று அவர் சொன்னாலும்...

"மேடம்... இருந்தாலும்..."

"சார்... இது மகிழினி மேடமோட ஆர்டர்... அவங்க தான் சொல்ல சொன்னாங்க... மொதல்ல பேஷன்ட்டை கவனிங்க சார்... இப்ப நான் வந்து மத்த இன்ஸ்டிரக்ஷன்ஸை சொல்றேன்..." என்று கண்டிப்பாக சொல்லவும் அவனும் வேறு வழியில்லாமல் சென்று விட்டான்.

"சார் ஐம் நந்திதா... சத்யமித்ரா மேடமுக்கு ஒன்னும் இல்ல... சின்ன மயக்கம் தான்... நாங்க பாத்துப்போம்... நீங்க கவலை படாதீங்க சார்..." என்று சொன்னார் அந்த மருத்துவர்.

"இல்ல டாக்டர்... நீங்க எதையோ என்கிட்ட இருந்து மறைக்கறீங்களோன்னு தோணுது... என்ன அது?" என்று ஆவேசமாக கேட்டான் விதுல்.

"நோ சார்... அப்படி எதுவும் இல்ல..." என்று அவர் மறுக்க,

"அந்த டாக்டர் என்கிட்ட எதையோ சொல்ல வந்தார்... பட், நீங்க தான் பேச விடாம அனுப்பி வச்சிட்டீங்க... அது என்ன விஷயம்... மறைக்காம சொல்லுங்க... நீங்க என்கிட்ட இருந்து எதையாவது மறைக்க நினைச்சா, என்னோட ரியாக்ஷன் வேற மாதிரி இருக்கும்..." என்று கண்டிப்புடன் பேசினான் தேவ்.

"சார்... அது... வந்து..." என்று அவர் தயங்க...

"இப்படி மென்னு முழுங்கிட்டு இருக்காதீங்க டாக்டர்... எதுவாக இருந்தாலும் டைரக்டா சொல்லுங்க..."

"சார்... நம்ம இதைப் பத்தி கேபின் போய் பேசலாமா?" என்று கேட்டார் நந்திதா.

விதுலும் யோசித்துவிட்டு, "சரி..." என்று அவருடன் சென்றான்.

"இப்ப சொல்லுங்க டாக்டர்..." என்று விரைப்பாக கைகளை கட்டிக் கொண்டு கேட்டான் விதுல் தேவ்.

"சார்... மகிழினி மேடத்தை கேட்கணும்..."

"நோ... இது என் பொண்டாட்டியோட விஷயம்... இதுக்கு நீங்க யார் கிட்டயும் பெர்மிஷன் கேட்க அவசியம் இல்லை... டெல் மீ..."

"...."

"டெல் மீ ரைட் நவ் டாக்டர்..." என்று உக்கிரமாக கேட்டான் விதுல்.

"விதுல் சார்... உங்க வைஃப்... அவங்க... அவங்க ஒரு கேன்சர் பேஷன்ட்..." என்று அவர் திக்திக் திணறி சொல்லி முடிக்கவும் அதிர்ச்சியில் உறைந்து போனான் கணவனாகப்பட்டவன்.

அவனது காதில் கேட்ட துரதிர்ஷ்டமான செய்தியில் உலகமே நின்று விட்ட உணர்வு. அவனது முகம் அப்பட்டமான வலியை பிரதிபலித்தது.

அவனோ அந்த மருத்துவரிடம் வேறெந்த விளக்கத்தையும் கேட்க முற்படவில்லை. அவன் இருக்கையை விட்டு எழுந்துக்கொள்ள, "சார்..." என்று அழைத்த அழைப்பெல்லாம் காற்றோடு காற்றாகி போனது.

அன்றிரவு முழுவதும் ஒரு நிமிடம் கூட கண் மூடாமல் அந்த மருத்துவமனையின் சுவற்றை வெறித்தபடி அமர்ந்திருந்தான்.

பலரும் அவனை பற்றி ஏதேதோ கிசுகிசுத்துக் கொள்ள தான் ஒரு பிரபல நடிகன் என்பதையே முற்றிலும் மறந்து அவனது மித்ராவின் கணவனாக இருந்து வலியை சுமந்து கொண்டிருந்தான்.

பல வருடங்கள் கழித்து‌ அவன் வாழ்க்கையில் அடுத்த என்ன? அதற்கு என்ன தீர்வு? என்பது தெரியாமல் அன்னையை தொலைத்த குழந்தையை போல நிர்க்கதியாக நிற்கின்றான்.

அடுத்த நாள் காலை,

பிரபல புற்றுநோய் மருத்துவமனையின் தலைமை மருத்துவரும் சத்யமித்ராவின் உயிர்த் தோழியுமான மகிழினியின் முன் உயிரற்ற உடலாய் அமர்ந்து இருந்தான் விதுல் தேவ் குமார்.

ஆம், விதுல் நேற்று அவசரத்தில் கூட்டிவந்த மருத்துவமனை புற்றுநோய் என்று தனித்துவமாக சிகிச்சை அளிக்கும் பிரபலமான தனியார் மருத்துவமனை தான்.

மகிழினிக்கு அவனை ஒரு நோயாளியின் கணவனாய் பார்க்க பாவமாக இருந்தது. ஆனால், தன் தோழியின் கணவனான பார்க்கும் பொழுது கோபம் மட்டுமே நிறைந்திருந்தது.

"எதுக்கு டாக்டர் என் கிட்ட இருந்து இவ்வளவு பெரிய உண்மையை மறைச்சீங்க?" என்று கோபமாக கேட்டான் விதுல்.

மகிழினியோ, "காம் டவுன் மிஸ்டர் விதுல்..." என்று ஆரம்பிக்க...

"எப்படி டாக்டர் காம் டவுனா இருக்க முடியும்... அவ... அவ... என் உலகம், உயிர், வாழ்க்கை, எல்லாமே மித்ரா மட்டும் தான்... அவ இறப்போட கடைசி கட்டத்துல இருக்கும் போது எப்படி என்னால பொறுமையா இருக்க முடியும்... ஒரு டாக்டரா நீங்க என்ன செய்து இருக்கணும்... மொதல்ல என்கிட்ட இன்பார்ம் பண்ணியிருக்கணும்... நான் அவளை பெஸ்ட் டாக்டர்ஸ் கிட்ட அழைச்சிட்டு போய் எப்படியாவது காப்பாத்தி இருப்பேன்... ஆனா இப்படி உண்மையை எல்லாம் மறைச்சி கழுத்து அறுத்துட்டீங்க தானே... மித்ரா உங்க ஹாஸ்பிடல் வரது உங்கள பார்க்கனு நினைச்சி தான் கேர்லஸா இருந்தேன்... இப்ப தானே தெரியுது இவ்வளவு பிரச்சனைய வச்சிட்டு இங்க வந்திருக்கான்னு... இதையெல்லாம் மறைச்சு வச்சு நீங்களும் உங்க ஃப்ரண்டும் என்ன சாதிச்சீங்க மேடம்..." என்று ஆத்திரமும் இயலாமையும் கலந்து பேசினான் தேவ்.

அவன் இப்படி பேசிக் கொண்டிருக்கவும் மகிழினியோ அவள் பொறுமையை முழுவதுமாக இழந்து, "போதும் மிஸ்டர் விதுல், நானும் அமைதியா பக்குவமா பேசலாம்னு இருந்தா அதுக்கு ஒத்துழைப்பு குடுக்கவே மாட்றீங்க... இவ்வளவு பேசறீங்களே நீங்க உங்க மனைவிக்காக என்ன பண்ணி இருக்கீங்க... டெல் மீ சார்... What have you done for your wife? (உங்கள் மனைவிக்காக என்ன செய்தீர்கள்?) சத்யா உங்களுக்கு வைஃப்னா எனக்கு பெஸ்ட் ஃப்ரண்ட், அத மனசுல வச்சிக்கோங்க..." என்று சினம் மிகுந்து பேச,

"என் மனைவிக்காக என்ன செய்தேனா! எல்லாமே அவளுக்காக மட்டும் தான் மிஸஸ் மகிழினி ஜெயராம்... காதல்! வாழ்க்கை! சந்தோஷம்! எல்லாமே அடக்கம்... என்னோட எல்லாமும் சத்யமித்ரா மட்டும்தான்..."

"வெல் மிஸ்டர் விதுல்! உங்க மனைவி மேல காதல் அளவில்லாம இருக்கு தான்! ஐ அக்செப்ட்டட்... மனமெல்லாம் காதல் இருக்குறது இருக்கட்டும்... நீங்க அவங்க நினைக்கும் போதெல்லாம் கூட இருந்து உங்க காதலை கொடுத்து இருக்கீங்களா? அக்கறையை காட்டி இருக்கீங்களா?" என்ற கேள்வியில் பதில் கூற இயலாமல் அமைதியாகி விட்டான் விதுல் தேவ்.

மகிழோ அவனை அழுத்தமாக பார்த்துக் கொண்டே, "பதில் இல்லையா சார்! ஹ்ம்ம்... நீங்க தூர இருந்து கொடுத்த காதலை பக்கத்துல இருந்து கொடுத்து இருக்கீங்களா? எங்க எங்கயோ ஷூட் போவீங்க அங்க இருந்து கால் பண்ணி டெய்லி வைஃப் கூட பேசுவீங்க... தட்ஸ் ஓகே... பட்... அந்த பேச்சு ஜஸ்ட் ஒரு பத்து நிமிஷமா இருந்தாலும் உங்க வைஃப் முகத்தை பார்த்து காதலை கண்ணுல காட்டி ஆர அமர அவங்க பக்கத்தில் உட்கார்ந்து நிம்மதியா பேசி இருக்கீங்களா? அவங்க கூட எந்த ஒரு டிஸ்டர்பன்ஸும் இல்லாம நேரத்தை செலவு பண்ணி இருக்கீங்களா? இத்தன வருஷத்துல இதை எல்லாம் எத்தனை முறை செய்து இருக்கீங்க... ஒன்னு புரிஞ்சுக்கோங்க விதுல் சார்... மனசுல மட்டுமே காதல் இருந்தா அது வாழ்க்கைக்கு பத்தாது... அத நம்மோட துணையிடம் வெளிபடுத்த தெரியணும்... நம்ம காதலை அவங்க ஃபீல் பண்ணனும் அதுதான் நீங்க சொல்லும் திகட்டாத காதலுக்கு ஏப்டான உதாரணம்...

சத்யா உங்ககிட்ட எதிர்பார்த்தது வெறும் காதலை இல்ல... உங்க அருகாமையோடு சேர்ந்த காதலை‌ தான்... உங்க பாசம் நிழலா கிடைக்க வேணாம் நிஜமா கிடைக்க தினம் தினம் ஏங்கிட்டு இருக்காங்க... தட் மீன்ஸ்... இருபது வருஷத்துக்கு முன்ன எல்லாம் எப்படி ஹேப்பியா இருந்தீங்களோ அப்படி... எந்த ஒரு கமிட்மென்டோ, பேரு, புகழ், பப்ளிசிட்டி, இந்த ஹீரோன்ற பட்டம் இப்படி எதுவும் இல்லாம சந்தோஷமா இருந்தீங்களோ அப்படி இருக்க இருபது வருஷமா தவம் கிடக்குறா...

ஐம் சாரி சார்... நான் பேசிட்டு இருக்கிற எல்லாமும் அதிகப்படி தான்... பட்... இதெல்லாம் பேசிட்டு இருக்குறது ஒரு டாக்டரா இல்ல சார்... என் சத்யாவோட புருஷன் கிட்ட... அவ மனசுல படுற கஷ்டத்தை எல்லா உங்ககிட்ட மறைச்ச போல தான் எங்கிட்ட இருந்தும் மறைப்பா... பட்... என்கிட்ட அதெல்லாம் மறைக்க முடியாம வெளிப்பட்டுடும்... இதப்பத்தி எல்லாம் என்ன தான் நான் துருவி துருவி கேட்டாலும் வெளிப்படையா எதுவும் பேச மாட்ட... அவ்வளவு அழுத்தக்காரி சார் உங்க பொண்டாட்டி... அந்த அழுத்தத்தால தான் உங்க கிட்ட இருந்து மூனு வருஷமா இதை மறைச்சு வச்சேன்... உங்கள கான்டேக்ட் பண்ண விடவே மாட்டா... விந்தையிலும் விந்தையா அவளுக்கு வெளியே எந்த ஒரு சிம்டம்ஸும் தெரியல... எல்லாமே உள்ளுக்குள்ள மட்டும் தான் பிரச்சனையா இருந்தது... அதனால தான் என்னால இத கண்டுபிடிக்க முடியாம போச்சு... இதுபோல கோடியில் ஒருத்தருக்கு தான் நடக்கும்... நல்லாவே இருப்பாங்க ஆனா திடீர்னு இறப்பு வந்துரும்... அந்த திடீர் இறப்பு தான் பல வருஷ நோயா அவங்களுக்கே தெரியாமலேயே உள்ளுக்குள்ள இருந்திருக்கும்... சத்யாவோட கேஸும் அதுபோல தான்... அவளோட கேன்சர் இயர்லி ஸ்டேஜில் கண்டுபிடிச்சி இருந்தா ஏதாவது பண்ணி உயிரை காப்பாத்தி இருக்கலாமோ என்னவோ! ஆனா, கண்டுபிடிச்ச அப்போ விஷயம் கை மீறி போய்டுச்சு... என்ன தான் டிரீட்மெண்ட் பார்த்தாலும் அவ்வளவு தான் சார்... இத்தன வருஷம் டிரீட்மெண்ட்ல எந்த ஒரு முன்னேற்றமும் இருக்கல..." என்று கோபத்தில் தொடங்கி வருத்தத்தில் முடித்தார் மகிழினி.

அவர் கேட்ட ஒவ்வொரு கேள்வியிலும் பேச்சிலும் கூனிக்குறுகி போனான் விதுல்.

"நீங்க இப்ப சொல்லிட்டு இருந்தீங்களே, எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை, ஃபாரீன் டாக்டர், ஃபாரீன் டிரீட்மெண்ட், ஃபாரீன் மாத்திரை மருந்து அதை எல்லாம் வச்சி எப்படியாவது அவளை பிழைக்க வச்சி இருப்பேன்னு, நான் அதை எல்லாம் டிரை பண்ணி பார்க்காம இருப்பேன்னு நினைச்சீங்களா மிஸ்டர் விதுல், பல நாட்டில இருக்கும் ஸ்பெஷல் டாக்டர்ஸ அவளுக்காக நானும் வரவழைச்சி பார்த்தேன்... பட், எல்லாரும் ஒரே பதிலை தான் சொன்னாங்க... கடைசி வரை மருந்து சாப்பிடுங்க, அப்பறம் என்ன நடக்குதோ அது தான் நடக்கும் வேற ஒன்னுமே பண்ண முடியாதுன்னு கைய விரிச்சிட்டாங்க... டாக்டர்ஸ் ஒன்னும் கடவுள் இல்லையே சார், நாங்க வெறும் டிரீட்மெண்ட் தான் பாக்க முடியும்... அதுக்கு மேல ஆண்டவன் விட்ட வழி தான்...

சத்யாவுக்கு இந்த மூனு வருஷமா பெருசா எந்த ஒரு சிம்டம்ஸும் தெரிஞ்சது இல்ல, பட், ஒவ்வொரு முறை டெஸ்ட் எடுக்கும் போதும் அந்த கேன்சர் செல்கள் வளர்ந்துக்கிட்டே தான் வரும், நாங்க தர மருந்துக்கு கூட பயன் இருக்காது, அப்படி தான் இவ்வளவு நாளா போய்ட்டு இருக்கு, சத்யா கிட்ட கேட்பேன் உடம்புல ஏதாவது பெயின் தெரியுதா, டிஃப்ரெண்ட் தெரியுதா, எல்லாமே ஆஸ் அ டாக்டரா கேட்பேன்... அதுக்கு அவ சிரிச்சிட்டே 'நான் நல்லா இருக்கேன் மகி நீதான் என்னென்னவோ உளறிட்டு இருக்க... என்னை ஏன் டார்ச்சர் பண்ற... விட்ரு...' இப்படியே தான் சொல்லுவா... ஒவ்வொரு முறையும் செக்கப்புக்கு நான் தான் கம்பெல் பண்ணி கூப்பிட்டு வர வைப்பேன்... அதுக்கு கூட அவளா வந்தது இல்ல சார்..." என்று சத்யாவை பற்றி அக்குவேறு ஆணிவேறாக சொல்லிக் கொண்டிருந்தார் டாக்டர் மகிழினி.

இதை எல்லாம் கேட்க கேட்க, அவனுக்கு அவன் மீதே வெறுப்பும் ஆத்திரமும் அதிகரித்தது. அவன் மித்ராவிற்கு தான் ஒரு நல்ல கணவனாக நடந்து கொள்ளவில்லை என்று நினைத்து நினைத்தே பைத்தியம் பிடிப்பது போல இருந்தது. எங்காவது சென்று ஓவென்று கத்தி அழ வேண்டும் போல தோன்றியது. தன் துயர் நீக்கும் தன்னவளின் தாய் மடி வேண்டும் என்று மனம் ஏங்கி தவித்தது.

தன் மனைவி மேல் அளவுகடந்த காதல் கொண்டவன் தான் தேவ், ஆனால் அக்காதலை உரியவளிடம் சேர்க்க தவறிவிட்டதே அவன் வாழ்வின் மிகப்பெரிய பிழை. அப்பிழையை சரி செய்ய நினைத்தாலும் காலமும் நேரமும் அவனுக்கு கைக் கொடுக்காமல் போனது யார் செய்த பிழையோ?


***********

 

Nila nila

New member
விடைகொடு என்னுயிர் காதலே!

காதல் - 6

மருத்துவமனையின் படுக்கையில் கண்களை மூடி படுத்திருந்த மனைவியையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் விதுல். அவளது மென்மையான கைகளில் டிரிப்ஸ் ஏற்றப்பட்டு‌ இருந்தது.

சத்யமித்ரா முன்பை விட மெலிந்து போயிருந்தாள். அதை இப்பொழுது தான் கவனிக்கவே செய்தான். அவள் முகமோ கலையிழந்து, எப்போதும் உப்பி கிடக்கும் கன்னங்கள் மாறி எலும்போடு ஒட்டிப் போய் இருந்தது. உதடுகளோ எப்போதும் இல்லாமல் வெளுத்து கிடக்க, கண்களை சுற்றி கருவளையங்கள் அதிகம் தென்பட்டன. மொத்தத்தில் அவளே மாறி போய் இருந்தாள். அவளை ஆழ்ந்து நோக்கவும் அனைத்தும் வெளிப்படையாக தெரிந்தது.

அவனுடைய மனைவியை எந்த அளவுக்கு கவனித்து வைத்திருக்கிறான் என்று நினைக்கையில் அளவுக்கு அதிகமான கோபமே உண்டானது.

அவன் சில மாதங்கள் முன்னர் வீடு வந்த சமயம், அவள் முகத்தில் எப்போதும் இல்லாமல் பல கிரீம்களையும், பவுடர்களையும், உதட்டு சாயத்தையும் போட்டு அலங்கரித்து கொண்டே அவன் முன் நின்றாள். அதை ரசினையுடனே பார்த்துவிட்டு, "மித்து மா... என்ன இப்ப எல்லாம் அதிகமாக மேக் அப் போடற போல..." என்று அவளை சீண்ட,

மித்ராவோ முகத்தை பாவத்தை வைத்து, "ஏன் நான் மேக் அப் எல்லாம் போட கூடாதா தேவ்... எனக்கு வயசு ஆகிட்டே போதுல.. அதான் கொஞ்சமா டிரை பண்ணி பார்க்கலாம்னு நினைச்சேன்..." என்றாள்.

"என் பொண்டாட்டிக்கு வயசாகுதா! யார் சொன்னா... நீ எப்பவும் ஸ்வீட் 16 தான் டி..."

"என்னங்க... நக்கலா பண்றீங்க... என்னை பார்த்தா ஜோக்கர் போல இருக்கா..."

"இல்ல தங்கம்..."

"என்ன நொல்ல தங்கம்..."

"என்ன டி திட்டற..."

"பின்ன கொஞ்சவா!"

"கொஞ்சு... அதுக்கு தான் மீ வெயிட்டிங் கண்ணம்மா..."

"க்கும்... இப்ப தான் நீங்க நாலு வயசு பச்ச புள்ள... மடியில போட்டு கொஞ்சிட்டு கிடக்க..."

"ரொம்ப தான் பண்ற மித்ரா..."

"பின்ன என்னவாம்... சும்மா கடுப்பை கிளப்பிக்கிட்டு... இங்க வாங்க... உங்கள கொஞ்சம் கண்ணாடியில பாருங்க..." எனக் கூறி கணவனை கண்ணாடி முன்னே நிற்க வைத்தாள் மித்ரா.

விதுலோ மனைவியை புன்னகையுடன் நோக்கி இப்படியும் அப்படியும் காட்டியவன், "எனக்கு இன்னும் வயசாகல தானே மித்ரா?" என்று கேட்க...

"ஆமா ஆமா... உங்களுக்கு வயசே ஆகல தான்... முகத்தை பாருங்க இன்னும் இருபத்து அஞ்சு போலவே இருக்கு... ஆனா வயசு மட்டும் இரண்டு வருஷத்துல ஐம்பதை நெருங்கிடும்... என்னை பாருங்க எப்படி இருக்கேன்... அதான் உங்க ரேஜ்ஜுக்கு இல்லன்னாலும் பரவாயில்லை கொஞ்சமாவது பட்டி டிங்கரிங் பார்த்து வைப்போம்னு யோசிச்சு இந்த கருமத்தை எல்லாம் போட்டுகிட்டு இருக்கேன்..." என்று இதழை பிதுக்கி கொண்டே சொன்னாள் சத்யமித்ரா.

"அச்சோ... அழகி டி நீ..." எனக் கூறி கன்னத்தை மென்மையாக கடித்தான் கணவன்.

"ப்ச்... என்னங்க பண்றீங்க... தள்ளிப் போங்க... பசங்க வந்துட போறாங்க..." எனச் சொல்லி தள்ளி நின்றுக் கொள்ள,

விதுலோ அவளை விலக விடாமல் அணைத்துக் கொண்டு, "இங்க பாரு மித்ரா, இப்படி எல்லாம் நீ மேக் அப் போட அவசியமே இல்லடா... நீ எப்படி இருந்தாலும் சரி இந்த தேவ்வோட கண்ணு எப்பவும் என் கியூட் மித்ரா மேல தான் இருக்கும்... நீ எப்பவும் எப்படி இருப்பீயோ அப்படியே இரு... இதெல்லாம் உனக்கு பிடிக்காது தானே அப்பறம் ஏன் செய்ற... விட்ருமா... எப்படி இருந்தாலும்கூட என் மித்ரா எனக்கு பேரழகி தான்..." என்று சொல்லும் விதுலை கண் இமைக்காமல் பார்த்துக் இருந்தவள் அவனது மார்பிலேயே முகம் புதைத்துக் கொண்டு கண்ணீரை மறைத்தாள்.

"இல்ல நான் மேக் அப் போட்டுப்பேன் தேவ்... எனக்கு... எனக்கு பிடிச்சு தான் செஞ்சிக்கிறேன்... இப்ப...தான் அது... மேல இன்ட்ரெஸ்ட் வந்திருக்கு தேவ்..." என்று வலியை மறைத்து மெல்லிய குரலில் பேச,

"சரி ஓகேடா, அது உன் இஷ்டம் என்ன பிடிக்குமோ அதையே செய்துக்கோ மித்து மா... உனக்கு ஏதாவது தேவைப்பட்டாலும் என்னை கேளு... அரென்ஜ் பண்ணி குடுக்கறேன்..." என்று மனைவியின் சொல்லுக்கு அவனும் கீழ்ப்படிந்து பேச தலையை மட்டும் ஆட்டிக் கொண்டாள் மங்கையவள்.

அன்றிரவே அவனுக்கு ஒரு முக்கிய படத்தின் ஷூட்டிங் இருக்க அதற்காக வெளிநாட்டிற்கு பறந்து விட்டான் விதுல் தேவ் குமார்.

"என்னை ஏமாத்திட்டல மித்ரா... எதுவா இருந்தாலும் உன் வாய திறந்து கேட்டு இருக்கலாமே டி... ஏன் கேட்காம விட்ட... என் சட்டை பிடிச்சு... நாக்கு பிடுங்குற மாதிரி கேள்வி கேட்டு... நாலு அறை விட்டு இருக்கலாமே டி... நீ சந்தோஷமா இருக்க... உன்ன நான் சந்தோஷமா வச்சி இருக்கேன்னு தானே இத்தன வருஷமா நம்பிட்டு இருந்தேன்... அது எல்லாம்... எல்லாமே பொய்யா மித்ரா?" என்று கேட்கும் போதே நெஞ்சம் கனத்து போனது.

"நான் என்ன பண்ணாலும் சிரிச்சியே... எது செஞ்சாலும் வாங்கி குடுத்தாலும் பிடிச்சிருக்குனு சொன்னியே... ஃபோன்ல நான் உன்ன மிஸ் பண்றேன்னு சொன்னாலும் நீ ஒருமுறை கூட மிஸ் பண்றேன் தேவ்னு சொன்னதில்லையே மித்ரா, நான் உன்ன நல்லா பார்த்துக்கிறேனா? சந்தோஷமா இருக்கீயான்னு கேட்கும் போதெல்லாம் 'உங்க கூட இருந்தா எப்பவும் நல்லா தான் தேவ் இருப்பேன்... இதுல என்னங்க கேள்வி' அப்படின்னு சொல்லி இங்க இதோ இங்க சாய்நதுப்பீயே மித்ரா! எல்லாமே பொய் தானா டி..." என்று அவனது மார்பை சுட்டிக் காட்டி புலம்பினான் விதுல் தேவ்.

அப்போது சத்யமித்ராவின் உடலில் கொஞ்சம் கொஞ்சமாக அசைவு தெரிய, "மித்ரா..." என்றழைத்தான் தேவ்.

"க... கண்ணு வலிக்குது தேவ்... திறக்க முடியல..." என்று மெல்லமாய் கூற...

"ஸ்டெயின் பண்ணாத மித்ரா... கண்ண திறக்காத... அப்படியே படு..." என்றான் அமைதியாக!

மித்ராவோ கொஞ்சம் கஷ்டப்பட்டே கண்களை திறந்துப் பார்த்தாள். விதுலோ எதுவும் பேசாமல் அவளையே அழுத்தமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

அவளோ படுக்கையில் இருந்து உட்கார பார்க்க முடியவில்லை, கைகள் வலித்தது.

கணவனை பார்த்து, "என்னை கொஞ்சம் உட்கார வைங்களேன்... ப்ளீஸ்..." என்க...

"வேணாம் படு..." என்றான் ஒற்றை வரியில்.

"இல்ல உட்கார வைங்க தேவ்... நான் ஏதோ ஒரு மயக்கம் போட்டு விழுந்ததுக்கு இப்படி தான் ஹாஸ்பிடலில் கூட்டிட்டு வந்து பேஷன்ட் போல படுக்க வைப்பீங்களா... ப்ச்... என்னை இப்ப உட்கார வைக்க போறிங்களா இல்லையா..." என்றாள் முறைத்துக் கொண்டே!

அவனும் அவளை மௌனமாய் பார்த்துக் கொண்டே உட்கார வைத்துவிட்டு ஜன்னல் பக்கமாக நின்றுக் கொண்டான்.

"தேவ்..."

"...."

"தேவ்...."

"....."

"தேவ் உங்கள தான்..." என்று சத்தமாகவே அழைத்தாள் சத்யமித்ரா.

அப்போதும் அவள் புறம் திரும்பவில்லை விதுல்.

இவளோ இன்னமும் அவன் மனம் அறியாமல், அவனுக்கு விஷயம் தெரிந்து விட்டது என புரியாமல், தான் எந்த மருத்துவமனையில் இருக்கிறோம் என்பதை யூகிக்காமல், அவனை வதைத்து கொண்டிருக்கும் வலிகளை உணராமல், "எனக்கு எப்போ டிவோஸ் குடுக்க போறிங்க..." என்றாள் பிடிவாதமாக!

"நான் செத்துப் போன பிறகு..." என்று சூரியனின் சூடு போல வந்தன அவனது வார்த்தைகள்.

அவன் அப்படி சொன்னதை பிடிக்காமல், "தேவ் என்ன பேசிட்டு இருக்கீங்க..." என்று உடனே கேட்க,

"வேற என்ன செய்ய சொல்ற... உனக்கு அது தான வேணும்..." என்றான் தேவ்.

"நான் தான் சொன்னனே உங்க மேல ஒரு பழியும் வராது... என் மேல தான் தப்பு இருக்குன்னு சொல்லிக்கிறேன்... நம்ம குழந்தைகள என்னால பார்த்துக்க முடியாது... அவங்க உங்க கூடவே இருக்கட்டும்... அவங்களும் பெரிய பிள்ளைங்க ஆயாச்சு... சோ, ஒரு பிரச்சனையும் வராது... எனக்கு டிவோஸ் ஆச்சுன்னா நீங்க ஜீவனாம்சம் குடுப்பீங்கல... அதை வைச்சு நான் பாரீஸ் ஸ்விட்சர்லாந்து எல்லாம் போய் லைஃப்பை ஜாலியா என்ஜாய் பண்ணி வாழ்ந்துக்கறேன்..." என்று அவள் பாட்டுக்கு சொல்லிக் கொண்டே போக...

"வில் யூ ஷட் அப் சத்யமித்ரா..." என்று அந்த அறையே அதிரும் படி கத்தினான் விதுல் தேவ் குமார்.

"தேவ்..." என்று அழைத்த சத்யாவின் சத்தம் கொஞ்சமும் வெளிவரவில்லை.

"இவ்வளவு நாளும் பொய்யா இருந்து, இப்ப பொய்யா பேசி... எதுக்கு டி என்னை கொன்னுட்டு இருக்க... நான் என்னடி தப்பு செஞ்சேன்... எதுக்காக இவ்வளவு பெரிய தண்டனை எல்லாம்!" என்று துவண்டு போய் கேட்டான் விதுல்.

"தேவ், நான் பொய்... பொய்யாவா..." என்றவளுக்கு அழுகையாக வந்தது. மனமும் உடலும் வேறு அவளுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.

"ஆமா... பொய் தான்... மொத்தமும் பொய்... எனக்கு தெரிய வேண்டிய எல்லாத்தையும் என்கிட்ட இருந்து மறைச்சு இருக்க மித்ரா... சந்தோஷமா இருக்க போல பொய்யா தான் நடிச்சு இருக்க டி... நானும் அதை எல்லாம் நம்பி... இப்ப மொத்தமா ஏமாந்து போய் வாழ்க்கையை இழந்து, அதை மீட்டு எடுக்க முடியாத முட்டாளா உன் முன்னாடி நிக்கிறேன்... எல்லாம் இருந்தும் எதும் இல்லாத கிறுக்கனா நிக்கிறேன் உன்னால!" என்று வலியுடன் சொன்னான் தேவ்.

"நான்... நான் எதுவும் பண்ணலங்க..." என்று சொல்லிக் கொண்டே படுக்கையில் இருந்து கீழிறங்க, "ஆஆஆ..." என்று கையை பிடித்துக் கொண்டு கத்தினாள் சத்யா.

"மித்ரா மித்ரா..." என்று பதறிப் போய் அவளிடம் நெருங்கிய விதுலோ, அவளது கால்கள் படுக்கை மேலிட்டு, "படு மித்ரா..." என்று அவள் முகம் பார்க்காமல் சொன்னான்.

"தேவ்..." என்ற மித்ராவுக்கு கண்ணீர் மட்டுமே சுரந்தது. வேறெந்த வார்த்தையும் வெளி வராமல் தர்க்கம் செய்தது.

"நான் உன்ன நல்லா பார்த்துக்கல தானே..."

"தேவ்..."

"ப்ளீஸ்... பேசாத... நேத்து நிஜத்தை பத்தி நிழலை பத்தியும் அவ்வளவு பேசி என்னை குற்றவாளியா சுட்டி காட்டினியே... அதை பத்தி பேச உனக்கு என்ன டி தகுதி இருக்கு... சொல்லு... ச்சே... என்னால முடியல டி... நிஜம்னு நினைச்ச நீ நிழல் தானா! எல்லாமே பொய் தானா... செத்துடலாம் போல இருக்கு மித்ரா... இதுவரை நான் சரியான புருஷனாவே இல்லல... ஹ்ம்ம்... இவ்வளவு நாளா நான் ஒரு உத்தம புருஷன்னு பெருமையா நினைச்சிட்டு இருந்தேன்... என் பொண்டாட்டி ராணி மாதிரி வச்சி பார்த்துக்கிறேன்னு கர்வமா இருந்தேன்... பட், அது சுத்த பொய்... என்னோட குழந்தைங்க கிட்டயாவது நல்லா ஒரு தகப்பனா, சரியா இருந்தேனா, இல்ல அதுவும் பொய் தானா மித்ரா?" என்று கேட்டுவிட்டு அவளது முகத்தை பாராமல் கண்ணீருடன் வெளியே சென்று விட்டான் விதுல் தேவ் குமார்.

சத்யமித்ராவோ கண்ணீரில் கரைந்து கொண்டே, 'நான் இத்தன நாளா எது நடக்க கூடாதுன்னு நினைச்சேனோ அதுவே நடந்து போச்சே... இப்ப நான் என்ன பண்ணுவேன் ஆண்டவா... இதெல்லாம் பார்க்க கூடாதுன்னு தான் ஒவ்வொரு நாளும் நினைச்சிட்டு இருந்தேன்... அதுக்காக தான் சீக்கிரமே என்னை கூப்பிட்டுக்கோன்னு தினம் தினம் வேண்டினேன்... இப்ப அவர்... அவர்... மொத்தமா உடைஞ்சு போயிட்டார்... இனி அவர் முகத்தை எப்படி நான் பார்ப்பேன்...' என்று நினைத்துக் கொண்டாள்.

***********

கமெண்ட் செய்ய

 

Nila nila

New member
விடைகொடு என்னுயிர் காதலே!

காதல் - 7

சத்யமித்ராவோ தன்னவனுக்கு அவளது நோய் பற்றி தெரிந்து விட்டது அதனால் அவன் இப்படி மனம் உடைந்து போய் இருக்கிறானே என்று எண்ணி அடுத்து என்ன என தெரியாமல் அழுது கொண்டிருக்க, அந்த அறையினுள் நுழைந்தாள் மகிழினி.

"சத்யா... எதுக்கு இப்படி அழற... இப்ப நீ அழக் கூடாது டி... ப்ளீஸ்... உன்னை நீயே ஸ்ட்ரெயின் பண்ணிக்காத... அழறத நிறுத்து டி..." என்று அவள் மருத்துவராக சொல்லிக் கொண்டே மித்ராவின் அருகில் செல்ல,

"என்னால... என்னால முடியல மகி... இப்ப நான் என்னடி பண்ணுவேன்... அவர்... அவர்..." என்று திக்கி நண்பியின் இடையை கட்டிக் கொண்டு அழுதாள் பெண்ணவள்.

"சத்யா... சத்யா... அழாத... ஒன்னுமில்ல டி... இப்படி சின்ன பிள்ள போல அழாத... எதுவும் இல்ல சத்யா..." என்று மகிழினி தோழியாய் ஆறுதல் கூற, அதற்கு பயனில்லாமல் போனது.

"எதுக்கு மகி அவர் கிட்ட சொன்ன... ஏன் டி சொன்ன... இப்ப பார் அவரு ரொம்பவே மனசு உடைஞ்சு போய்ட்டார்... இத பார்க்க கூடாதுனு தானே நான் எல்லாத்தையும் மறைச்சு வச்சேன்... நான் இருக்கும் வரை அவர் முகத்துல சந்தோஷம் மட்டுமே இருக்கணும்னு நினைச்சேன்... ஆனா... ஆனா... இப்ப..." என்று மேல சொல்ல முடியாமல் கரைந்தாள்.

அவள் கையில் இருந்த டிரிப்ஸை மெல்லமாக கழட்டிக் கொண்டே, "லூசா டி நீ... உன் ஹஸ்பென்ட் அந்த நிலையில் கேட்கும் போது அப்பவும் நான் மறைச்சிட்டு இருக்கும் முடியுமா? இவ்வளவு நாளும் நீ ஃப்ரண்ட்டா இருக்க போய் தான் மறைச்சு வச்சேன்... அதுவே எனக்கு அவ்வளவு குற்ற உணர்ச்சியா இருந்துச்சு... உனக்கு ஃப்ரண்ட் தான் இல்லன்னு சொல்லல... பட் நான் ஒரு டாக்டர் டி... அந்த சிட்டியேஷன்ல எனக்கு பொய் சொல்ல மனசு வரல டி... அதுவும் இல்லாம உன் புருஷன் கண்ணை பார்த்துட்டு என்னால உன் பிரச்சனைய மூடி மறைக்க முடியல... அந்த மனுஷன் நீ மயக்கம் போட்டு இருக்க விழுந்து இருக்கன்னு நினைச்சியே அந்த பதறு பதறி நைட்ல தூக்கிட்டு ஹாஸ்பிடல் ஓடி வந்தாரு... ஆனா இப்ப உன் உசரே போக போகுதுனு சொல்லவும் ஆடிப்போய் நிக்கிறார்... உன் மேல இப்படி பாசத்தை வச்சவர் கிட்ட நான் என்னன்னு மறைக்க முடியும்... மறைச்சாலும் நம்பிடுவாங்களா மிஸ்டர். விதுல்? பைத்தியக்காரி... அவர் கிட்ட உன்னை விட்டுக் கொடுக்காம கேள்வி கேட்டேன்... எல்லாத்தையும் கேட்டுக்கிட்டு பதில் சொல்ல முடியாம தான் நின்னார்... ஆனா ஒன்னு சொல்றேன் டி... எல்லா தப்புக்கும் முழுமுதற் காரணம் நீ தான் சத்யா... நீ மட்டும் தான்... உன் மனசை உன்ன காதலிக்கிறவர் கிட்ட வெளிக்காட்டாம இருந்தது உன்னோட தப்பு... நீ ஏதாவது சண்டை போட்டு இருந்தா பரவாயில்ல... ப்ச்... சண்டை கூட வேணாம்... அவர் கிட்ட பேசி உங்க கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும் எனக்கான நேரத்தை கட்டாயம் ஒதுங்கி தான் ஆகணும்னு சொல்லி இருந்தா மறுத்து பேசியிருப்பாரா? போடி... உனக்கு இத்தனை வருஷமும் இதையே தான் பாட்டா படிச்சிட்டு இருக்கேன்... ஆனா, நீ உன்னில் இருந்து மாறாம கல்லுளி மங்கன் மாதிரியே இருந்துக்கோ...‌ உன் வாழ்க்கைய நீயே கெடுத்துக்கிட்ட சத்யா... நீ கெட்டது மட்டும் இல்லாம உன்ன காதலிச்சவர் வாழ்க்கையும் சேர்த்து கெடுத்து விட்டிருக்க... நிம்மதி இல்லாம மாத்தி இருக்க... இதெல்லாம் உனக்கு தெரியுது தானே! ஆனாலும் ஒன்னும் பண்ணாத... இப்படியே அழுதுகிட்டு இருடி... ச்சே..!" என்று கோபமும் சலிப்புமாக அவளிடம் பேசினாள் மகிழினி.

"உனக்கு எதுவும் புரியாது மகி..." என்று மட்டும் சொல்லி எங்கோ வெறித்துக் கொண்டு இருந்தாள் சத்யா.

தான் என்ன முயன்றும் இவளை மாற்ற முடியாது என்று அறிந்த மகிழோ, "சரி‌ டேப்லெட் போட்டீயா?" என்று கேள்விக்கு பதில் வராமல் போனதும், "க்கும்... நீதான் டிஃபனே சாப்பிட்டு இருக்க மாட்டீயே இதுல எங்கிருந்து மாத்திரைய விழுங்கி இருப்ப..." என்று முறைத்துக் கொண்டே சொல்லி செவிலியை அழைத்தாள்.

"நர்ஸ்... இவங்களுக்கு ஃபுட் கொண்டு வாங்க... ஃபுட் சார்ட் நான் சொன்னத ஃபாலோ பண்ணி அதுல இருப்பத மட்டும் கொஞ்சம் சீக்கிரமா கொண்டு வாங்க..." என்று சொல்லி அவரை அனுப்பி விட்டாள் மகிழினி.

"சத்யா போய் ஃபிரெஷ் ஆகிட்டு வா... எவ்வளவு நேரம் இப்படியே இருக்க போற..." என்று சொல்லும் போதே விதுல் உள்ளே நுழைந்தான்.

அவன் வந்ததை அறிந்து தன்னவனின் வதனத்தை எதிர்ப்பார்ப்புடன் பார்க்க அவனோ அவளை கண்டுக்கவே இல்லை.

மகிழோ அவனை மரியாதைக்காக, "வாங்க மிஸ்டர். விதுல்..." என்று அழைத்தாள்.

அவனோ, "நான் உங்க ஃப்ரெண்ட் பார்த்துக்கிறேன் மிஸஸ்... ப்ளீஸ்..." என்று நிறுத்த...

அதற்கு ஒரு பெருமூச்சுடன், "ஓகே... யூ கேரி ஆன்... டேக் கேர் சத்யா... ஏதாச்சும் இஸ்யூ இருந்தா உடனே நர்ஸ கூப்பிடு... சாப்பாடு வந்தா அடம் பண்ணாம ஒழுங்கா சாப்பிடு..." என்று தோழியிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறினாள் மகிழினி.

அவர் சென்ற பிறகு இருவரிடமும் வெறும் மௌனம் மட்டுமே எஞ்சி இருந்தது.

மித்ராவோ தேவ்வின் முகத்தை கூட பார்க்க முடியாமல் தலையை குனிந்த படியே‌ அமர்ந்திருந்தாள். ஆனால், அவள் மனமோ அவனிடம் பேசி அவனது அணைப்புக்குள் வர தவியாய் தவித்துக் கொண்டிருந்தது.

விதுலோ இதற்கு மேல் பொறுக்க முடியாமல், "எவ்வளவு நேரம் இப்படியே இருக்குறதா உத்தேசம்... இந்தா பிடி..." என்று மட்டும் சொல்லி அவளது கையில் பேஸ்ட் மற்றும் பிரெஷ்ஷை திணித்தான். அவளும் அங்கிருந்து சென்றால் போதும் என்ற எண்ணத்தில் கழிவறையில் புகுந்துக் கொண்டாள்.

அதன் பின்னர், அவன் கதவை தட்டிய பின்பே வெளியே வந்தாள்.

மித்ரா கட்டிலில் உட்கார்ந்துக் கொள்ள, விதுலோ அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.

பெண்ணவள் அவனின் முகத்தை பார்க்க, எல்லா வருத்தங்களையும் மனதின் உள்ளே பூட்டிக் கொண்டு வெளியே இறுக்கமாகவே இருந்தான். கண்கள் மட்டும் இரவெல்லாம் தூங்காததின் பலனாவும், ஒரே இரவில் பல அதிர்ச்சிகளை கேட்டதின் விளைவாகவும் அக்னி ஜூவாலையாக சிவந்து போயிருந்தது.

"தேவ்... ஏதாவது பேசுங்க... ப்ளீஸ்... இல்ல என்னை திட்டாவாவது செய்ங்க... இப்படி மட்டும் இருக்காதீங்க... எதை எதையோ தாங்க முடிஞ்ச என்னால இத தாங்க முடியல தேவ்... ப்ளீஸ் பேசிடுங்க... உங்க மித்ரா தேவ் நான்... பேசுங்க..." என்று அவனிடம் மன்றாடிக் கொண்டிருக்க, அவனோ தனது கைபேசியில் தான் பார்வையை வைத்திருந்தான்.

அவள் விடாமல் அவனிடம் கேட்டுக் கொண்டிருக்க கதவை தட்டும் ஓசையில் அமைதியாகி விட்டாள்.

விதுலோ வெளியே சென்று பார்க்க, ஒரு செவிலிப் பெண் சாப்பாட்டுடன் நின்றுக் கொண்டிருந்தார்‌.

"சார்... மேடமுக்கு சாப்பாடு..." என்று பயத்துடன் சொல்ல... அவனோ கையை நீட்டி, "குடுங்க..." என்றான்.

"இல்ல சார்... மேடமால சாப்பிட முடியாமான்னு தெரியல... அதான்..." என்று அவள் தயங்க...

"ஷி இஸ் மை வைஃப்... ஐ வில் டேக் கேர்... அவங்களால சாப்பிட முடியாம போச்சுன்னா ஊட்டி விட நான் இருக்கேன்..." என்று அந்த பெண்ணிடம் மென்மையாகவே சொல்லி அனுப்பி விட்டான் விதுல்.

கணவன் பேசியது அனைத்தும் காதில் கேட்க, கண்ணில் வழிந்த நீரை அவன் வரும் முன்னே துடைத்துக் கொண்டாள்.

தேவ்வோ கைகளை கழுவி கொண்டு வந்தவன், தட்டில் உள்ள கேழ்வரகு இட்லியை பூண்டு சட்டினியுடன் தொட்டு தன்னவளின் வாயருகே கொண்டுச் செல்ல, "இல்ல... தேவ்... நானே..." என்று கலங்கிய குரலில் சொன்னாள் சத்யமித்ரா.

அவளிடம் வந்த வார்த்தையில் முறைத்துப் பார்க்க, அதற்கு மேல் மறுக்க முடியாமல் வாயை திறந்து அதை வாங்கிக் கொண்டாள்.

அவளோ தேவ் தன்னிடம் ஒரு வார்த்தையேனும் பேசிட மாட்டானா? என்று எண்ணி அவனது முகத்தை ஏக்கத்துடன் பார்த்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

அவளுக்கு ஊட்டிக் கொண்டே, "உனக்கு என்ன வேணுமோ தரேன்..." என்று சொன்ன விதுலை ஒன்றும் புரியாமல் பார்த்தாள் சத்யா.

"நீ கேட்ட டிவோஸ நான் தந்திடுறேன் சத்யமித்ரா..." என்று தேவ் சொல்லவும் அதிர்ச்சியுடன் அவனை நோக்கினாள் அவனவள்.

"ம்ம்... உண்மைய தான் சொல்றேன்... பொய் சொல்லல... நான் தந்திடுறேன் மித்ரா..." என்று எந்த ஒரு சலனமும் இல்லாது சொன்னவனை கண் இமைக்காமல் பார்த்தாள் பெண்.

"பட், அதுக்கு ஒரு கண்டிஷன் இருக்கு..." என்க,

"தேவ்..." என்று தொடங்கும் முன்னரே...

"வெயிட், நான் பேசி முடிக்கணும்..." என்றவன் அவளை பொருட்படுத்தாமல் தொடர்ந்து பேசினான்.

"நான் கட்டின தாலிய கழட்டி தந்திடு... டிவோஸ் குடுக்கறேன்..." என்று அவன் சாதாரணமாக சொல்லவும் தன்னிச்சையாக அவளது கரங்கள் மாங்கல்யத்தை இறுக பற்றிக் கொண்டது.

அதனை அழுத்தமாய் உற்று நோக்கிக் கொண்டிருந்த விதுலோ மனைவியின் நயனங்களை நேருக்கு நேராக பார்த்து, "ஹ்ம்ம்... கழட்டி தந்தே ஆகணும் மித்ரா... ஒன்னு நல்லா ஞாபகம் வச்சிக்கோ... நீ தாலிய கழட்டுறதுக்கு காரணம் ஒன்னே ஒன்னு தான் இருக்கணும்... அது என்னோட இறப்பா மட்டும் தான் இருக்கணும்... உன் கழுத்துல இருந்து தாலி இறங்கியே ஆகணும்னா ஃபர்ஸ்ட் நான் சாகணும்... அப்ப தான் உன் தாலிய நீ கழட்டனும்... எப்ப கழட்ட போற மித்ரா? நீ டைம் சொன்னின்னா அதுக்கு முன்னமே எனக்கு நான் டைம் ஃபிக்ஸ் பண்ணிப்பேன்..." என்று அவன் சொல்லிக் கொண்டே போகவும் கையில் வைத்திருந்த சாப்பாட்டு தட்டை பிடுங்கி கோபத்துடன் சுவற்றில் எறிந்தாள் சத்யமித்ரா.

"ஸ்டாப் இட் தேவ்... இப்படி பேசிட்டு இருக்கிறதுக்கு பதில் என்ன மொத்தமாவே கொன்னுடலாம்..." என்று சொன்ன இல்லாளை சினத்துடன் பார்த்து, "கோவம் வருதா மித்ரா? எனக்கும் தான்டி வருது... உன்ன கன்னம் கன்னமா அறைய தோணுது... என் இறப்ப பத்தி பேசினாலே உனக்கு அளவுக்கு அதிகமா கோவம் வருதே... நீ தினம் தினம் செத்துட்டு இருக்கீயே டி... இன்னும் கொஞ்ச நாள்ல என்னை விட்டு மொத்தமா போயிடுவ அப்படின்னு எல்லாம் சொல்றாங்க... அப்ப எனக்கு எப்படி இருக்கு தெரியுமா மித்ரா?

என்னை ஏமாத்திட்ட மித்ரா? இப்போ... இப்போ... நான் மனசால செத்துட்டு இருக்கேன் மித்ரா... இதுவரையிலும் உன்னை நல்லா பார்த்துக்காம இருந்து ஒரு கையாலாகாத கோழையா எல்லார் முன்னாடியும் நின்னுட்டு இருக்கேன்... உனக்கு என்ன பத்தின டாத்ட்ஸ் அவ்வளவு தானா மித்ரா! அவ்வளவு கீழ்தனமாவா என்னை பத்தி நினைச்சிட்டு இருக்க... எதனால உன்ன பத்தி என்கிட்ட சொல்லாம விட்ட...

உனக்காக எல்லாத்தையும் பார்த்து பார்த்து செஞ்ச எனக்கு... உனக்கு என்ன வேணும்னு கேட்டு செய்ய தெரியல பாத்தியா! அப்ப நான் முட்டாள் தானே மித்ரா?

எனக்கு உன்ன பத்தி எல்லாம் தெரியும்னு நினைச்சேன் மித்ரா! பட், அது சுத்த பொய்... கஷ்டமா இருக்கு மித்ரா... எனக்கே என்ன நினைச்சா வெறுப்பா இருக்கு மித்ரா..." என்று நெஞ்சில் நிறைந்த வேதனையில் எல்லாம் சொல்லி அவள் மடி மீது படுத்து கண்ணீரை வெளியிட்டான் சத்யமித்ராவின் விதுல் தேவ் குமார்.

விதுல் அவள் மடி மீது படுத்து அழுவது ஒன்றும் புதிது அல்ல... என்றும் அவன் அழுகையின் சமர்ப்பிடம், உணர்ச்சிகளின் உச்சம், உணர்வுகளின் குவியல், வேதனைகளின் வடிகால், வருத்தங்களின் வருடல், மனக்காயங்களில் அவனுக்கான ஔடதம், வாழ்க்கையின் சாராம்சம் எல்லாமே மனைவி தான்.

அவளிடம் எத்தனையோ முறை பல விடயங்களுக்காக அழுது இருக்கிறான்; அவனுக்கு அவளும் யாதுமாகி நின்று ஆறுதல் சொல்லி தாயாகவும் தாராமாகவும் இருந்து மடி தாங்கி இருக்கிறாள்.

இன்று தன்னால் தனக்காக கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கும் கணவனை ஆறுதல் கூறி தேற்ற முடியாமல் தவிக்கின்றாள் காதலை சுமந்திருக்கும் பாவையவள்.

***********

கமெண்ட் செய்ய...

 
Status
Not open for further replies.
Top