எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மறைமதி வாழ்வின் நிறைமதி அவள் -1

Padma rahavi

Moderator
அந்த வானுயர கட்டடத்தின் முன் நின்ற ஆட்டோவில் இருந்து இறங்கினாள் ஒரு 24 வயது யுவதி. வாயிலில் நின்ற காவலாளியிடம் தனக்கு வந்த பணி சேர்க்கை கடிதத்தை காட்டினாள்.

ஏற்கனவே இது போல் 15 பேர் இன்று வந்துவிட்டதால் பெரிதாக ஏதும் கேட்காமல், நேரா போய் இடது பக்கம் திரும்புங்க. பெரிய ஹால் இருக்கும் அங்கு போங்க என்றார்.

அவள் அந்த செமினார் ஹாலை அடைந்த போது அவளைப் போலவே இன்று புதிதாக நந்தன் எக்ஸ்ப்போர்ட்ஸ் அலுவலகதில் சேர வந்தவர்கள் நாற்காலியில் அமர்ந்து இருந்தனர். இவளும் ஒரு இருக்கையைத் தேடி அமர்ந்தாள்.

சரியாக இருபது நிமிடத்திற்கு பிறகு அலுவலகத்தின் முக்கிய நபர்கள் வந்து தொடக்க உரை வழங்கி, இன்னும் 10 நிமிடத்தில் நந்தன் எக்ஸ்போர்ட்ஸ் எம். டி சிபினந்தன் வந்து சிறப்புரையாற்றி, பணி நியமனம் ஆர்டரை தன் கையால் வழங்குவான் என்று தெரிவிக்கப்பட்டது.

சொன்ன நேரத்திற்கு சற்று முன்னதாகவே, கருப்பு கோட், பூட், கண்ணாடி சகிதம் உள்ளே நுழைந்த சிபினந்தன், சிறு புன்சிரிப்பை உதிர்ந்தபடி உரையாற்றினான்.

அலுவலகத்தின் இலக்கு, இதுவரை கடந்து வந்த பாதை, அவரவர்களின் பணி அனைத்தையும் எளிமையாக கூறியவன் 15 நிமிடத்தில் உரையை முடித்தான்.

முதன்மை அதிகாரி, ஒவ்வொருவர் பெயராக அழைக்க, லேசான புன்சிரிப்புடன் கை குலுக்கி பணி நியமன ஆர்டரை வழங்கினான்.

சிவகர்ணிகா என்ற பெயர் ஒலித்ததும், ஒரு பெருமூச்சு விட்டு ஆசுவாசபடுத்தி விட்டு மேடைக்குச் சென்றாள். ஆர்டரை வாங்கியவள், நன்றி சார் என்று புன்னகைக்க,

பதிலாக லேசான தலையசைப்பு மட்டுமே கிடைத்தது.

அனைவருக்கும் என்ன தோன்றியதோ, ஆனால் இவளுக்கு, 27 வயதிலேயே பேரும் பணம், புகழ், பெரிய கம்பெனி, அழகு என்று அனைத்தும் இருக்கும் இவனிடம் நிம்மதி இல்லாதது போல் தோன்றியது.

அழுத்தமான அவன் கண்களுக்குள் தெரியும் சோகத்தை மறைக்கவே கருப்பு கண்ணாடி அணிகிறான் என்று நினைத்தாள்.

முதல் நாள் அதுவும் அலுவலகத்தின் எம். டியை பற்றி இந்த அலசல் தேவை தானா என்று ஒரு மனம் கேள்வி கேட்டாலும், அவன் ஏன் இவ்வாறு இருக்கிறான் என்று இன்னொரு மனம் யோசிக்காமல் இருக்க வில்லை.

முதல் நாள் ஆதலால் பணி ஒன்றும் இல்லாது அலுவலகத்தை சுற்றி காண்பித்தார்கள்.

ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து வடிவமைத்து இருக்கிறான். ஆண், பெண்களுக்கு என்று ஒய்வறை, அலுவலகத்தின் உள்ளேயே சிறு மருத்துவ உதவி அறை, இளம் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை பார்த்துக் கொள்ள யாரும் இல்லாத பட்சத்தில் அந்தக் குழந்தைகளை விட என்று இலவச டே கேர் வசதி என்று பணியாளர்களுக்கு தேவையான அனைத்தையும் வழங்கி இருந்தான்.

ஒரு சமூகத்தை சரியாக புரிந்து கொண்டவனாலே இத்தனை சரியாக தன் பணியாளர்களின் தேவையை புரிந்து கொள்ள முடியும் என்று தோன்றியது சிவகர்ணிகாவிற்கு.

இவர்கள் அலுவலகத்தை சுற்றிப் பார்த்த வேளையில் 5,6 முறை சிபிநந்தனை பார்த்து விட்டாள். எம். டி என்று அறையில் இருந்து வெறுமனே பேப்பரில் கையெழுத்து இட்டுக் கொண்டு இராமல் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அனைத்து செக்ஷன்களையும் பார்வையிட்டு, நிறை குறைகளை கேட்டான்.

அவன் குரல் தன்மையாக இருந்தாலும் அதில் ஒரு மகிழ்ச்சி இல்லை. அவன் முகம் கடுமையாக இல்லை ஆனால் அதில் அசாதாரண வெறுமை இருந்தது. அவன் கண்கள் கூர்மையாக அனைத்தையும் பார்வையிட்டன ஆனால் அதில் ஒரு சோகம் அப்பி இருந்தது.

இதெல்லாம் பிரமையா இல்லை அவன் இயல்பே இப்படித் தானா என்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தாள் சிவகர்ணிகா.

ரொம்ப ரூட் விடாத மா. நாங்க எல்லாம் ட்ரை பண்ணி ஓஞ்சி போய்ட்டோம். அந்த ஆள் பார்வை கூட இங்க திரும்பாது என்ற குரல் கேட்டு திரும்பிய சிவகர்ணிகா, தன் எதிரில் நவ நாகரிக உடையில், ஸ்டைலாக இருந்த ஒரு பெண்ணைப் பார்த்தாள்.

ஹாய். ஐயம் மாயா! என்று அறிமுகப்படுத்திக் கொண்டாள்.

ஹாய். நான் சிவகர்ணிகா. நான் ரூட் எல்லாம் விடல என்று அசடு வழிந்தபடி
கூறினாள்.

அதான் ஆளை முழுங்குறாப்ல பாத்தியே என்னவாம் அது என்று நகைத்தவள், சும்மா சொல்ல கூடாது ஆள் செம ஸ்மார்ட் இல்லை என்றாள்.

ஐயோ மாயா. நான் அப்படி எல்லாம் நினைக்கல. இவ்ளோ பெரிய கம்பெனி ஓனர். ஆனால் முகத்துல ஒட்டு சிரிப்பு இல்லையே. என்ன காரணமா இருக்கும்ன்னு பாத்துட்டு இருந்தேன் என்றாள்.

சற்று அவளை உற்றுப் பார்த்த மாயா, நாங்க எல்லாம் அவரை ஒரு சிடுமூஞ்சி போலன்னு தன் நினைச்சோம் சிவா! ஆனா நீ மட்டும் அவர் முகத்துக்கு பின்னாடி இருக்கிற எக்ஸ்பிரஷன் என்னனு யோசிக்கிற இல்லை. ஹ்ம்ம் பாப்போம் உன் கண்ணுக்காவது தெரியுதான்னு.

நீ எத்தனை வருஷமா வேலை பாக்கிற மாயா?

ரெண்டு வருஷமா. நமக்குத் தேவையான எல்லாத்தையும் சரியா செஞ்சிருவாரு. ஆனால் அவருக்கு என்ன தேவை, அவர் குடும்பம், அவர் என்ன பண்றாரு எதுமே நமக்குத் தெரியாது. இங்க பல வருஷமா வேலை பாக்கிற மேனேஜர் கிட்ட கூட கேட்டு பாத்துட்டேன்.சம்பளம் வந்துச்சா வாங்கிட்டு போயிட்டே இருன்னு சொல்லிட்டாரு. அதுக்கு மேல நமக்கு என்ன வேணும்ன்னு நானும் என் வேலையை பார்க்கத் தொடங்கிட்டேன் என்றாள் மாயா.

சரி சரி! எனக்குமே இது தேவை இல்லாத வேலை தான் மாயா! நானே இன்னும் வேலைல கத்துக்க வேண்டியது நிறைய இருக்கிறப்ப யாரு எப்படின்னு ஆராய்ச்சி ரொம்ப முக்கியமாகும் என்றாள் சிவகர்ணிகா.

அன்று பணி முடிந்து அனைவரும் கிளம்பும் போது மீண்டும் அவனைப் பார்த்தாள். அனைவரும் வெளியேறுவதை தன் அறையின் கண்ணாடிச் சுவர் வழியே பார்த்துக் கொண்டிருந்தான்.

கிளம்பியவளை நிறுத்திய மாயா, என்ன சிவா, ஆபீஸ் கேப் இருக்கு, ஆபீஸ் பஸ் இருக்கு. எல்லாருமே பயன்படுத்தலாம். நீ எங்க போற என்று கேட்டாள்.

இல்லை மாயா. எனக்கு மக்களோடு மக்களா போது பேருந்துல போக தான் பிடிக்கும். இந்த பயணத்துல எத்தனை விதமான மனிதர்கள், அனுபவம் கிடைக்கும் தெரியுமா. நான் அப்டியே பழகிட்டேன் என்று கூறிவிட்டு வெளியே சென்றாள்.

அலுவலக டிரான்ஸ்போர்ட் இருக்கும் திசையை நோக்கிப் போகாமல் வெளியே செல்லும் சிவகர்ணிகாவைப் பார்த்த சிபி, செக்யூரிட்டியை அழைத்து என்னவென்று கேட்கச் சொன்னான்.

காரணம் கேட்ட சிவகர்ணிகாவிடம், அய்யா தான் மா கேட்கச் சொன்னாரு. அவரு கம்பெனில வேலைக்கு வர்ற எல்லாரும் எப்படி வராங்க, எப்படி போறாங்கன்னு தெரிஞ்சு வச்சுப்பாரு. நீங்களா தனியா வண்டில வாரிங்களா, இல்லை பஸ்ஸான்னு சொல்லிட்டு போங்கமா என்றான்.

சாதாரண அலுவலக பணியாளர்கள் மேல் இத்தனை அக்கறை காட்டும் ஒருவன் ஏன் அவனை மட்டும் ஒரு வட்டத்திற்குள் சுருக்கிக் கொள்கிறான் என்று புரியவில்லை அவளுக்கு.

ஏது எப்படியோ, தன்னிடம் வழிந்து பேசி, தவறாக நடக்கும் ஆண்களைக் கூட பெண்களால் உதாசீனப் படுத்த முடியும். ஆனால் தன்னை கவனிக்காமல் அவன் வேலையை செய்யும் ஆண்கள் தான் பெண்களால் அவ்வளவு எளிதாக கடந்து விட முடியாது.
 

Kalijana

Member
Starting he Amazing sis எல்லாமே Visual ah தெரிஞ்சுச்சு சூப்பர் next episode சீக்கிரம் போடுங்க ♥️❤️?Picsart_22-07-28_15-03-24-243.jpgMEME-20220728-032620.jpgMEME-20220728-034019.jpg
 

Attachments

  • MEME-20220728-042559.jpg
    MEME-20220728-042559.jpg
    288.9 KB · Views: 1
  • MEME-20220728-043132.jpg
    MEME-20220728-043132.jpg
    253.5 KB · Views: 1
  • MEME-20220728-044033.jpg
    MEME-20220728-044033.jpg
    275.5 KB · Views: 0
  • MEME-20220729-121156.jpg
    MEME-20220729-121156.jpg
    317.2 KB · Views: 0
  • MEME-20220729-122542.jpg
    MEME-20220729-122542.jpg
    241.6 KB · Views: 0
  • MEME-20220729-012530.jpg
    MEME-20220729-012530.jpg
    297.8 KB · Views: 0
  • MEME-20220729-013250.jpg
    MEME-20220729-013250.jpg
    274.3 KB · Views: 0
Top