எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மின்னலடி உன் பார்வை -கதை திரி

Status
Not open for further replies.

L.keerthana

Moderator
வணக்கம் ஃபிரண்ட்ஸ் நறுமுகையில் என்னோட முதல் கதை ‘மின்னலடி உன் பார்வை' செய்’யோட ஃபர்ஸ்ட் எபி அப்லோட் பண்ணிட்டேன். ரீட் பண்ணிட்டு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க.

சாரி ஃபிரண்ட்ஸ் சில காரணங்கள் நால டைடல் சேஞ்ச் பண்ணிட்டேன்


நன்றி.



WhatsApp Image 2023-06-05 at 19.00.54.jpgWhatsApp Image 2023-06-19 at 23.22.14.jpgWhatsApp Image 2023-06-19 at 23.11.41.jpg


பார்வை -1

கல்கி காப்பகம், திருச்சி.

2001 ஆகஸ்ட் 10, அதிகாலை மூன்றுமணி.

படபட வென்ற இடியுடன் கூடிய கனத்த மழை பெய்து கொண்டு இருந்த அந்த கங்கிருள் வேளையில் அந்த மழை சத்தத்துக்கு போட்டியாக ஒரு பச்சிளம் குழந்தையின் பலத்த அழுகுரல் அவளின் தூக்கத்தை கலைக்க கண்களை கசக்கி கொண்டு வேகமாக வாயில் கதவை திறந்து வெளியே எட்டிப் பார்த்தாள் கல்கி. கல்கி குழந்தைகள் காப்பகத்தின் பொறுப்பாளினி .

அந்த விடுதியின் வராண்டாவில் சத்தம் வந்த திக்கில் தொங்கிய அந்த மரத்தொட்டிலை நோக்கி சென்றாள். தொட்டிலில் பிறந்து பத்தே நாள் ஆன அந்த பிஞ்சு தனது கை கால்களை அசைத்து அழுதுகொண்டு இருந்தது.

அவளது பல வருட அனுபவத்தில் இது ஒன்றும் புதிதில்லை என்றாலும், எப்போதும் போலவே மனம் கனக்க அவள் வேகமாக குழந்தையை வாரி மார்போடு அணைத்து, அதன் அழுகை குறைந்தவுடன் அது என்ன குழந்தை என ஆராய்ந்தாள். அது ஒரு பெண்சிசு என தெரிந்து அவளது இதழ் விரக்தி சிரிப்பொன்றை சிந்தியது.

குழந்தை இன்னும் அழுது கொண்டிருக்க,

“ஏன் செல்லம் அழுறீங்க...... பசிக்குதா என் பட்டு குட்டிக்கு.........அழாதீங்க செல்லம்.......இனி நீங்க யாரும் இல்லாத அநாதை இல்ல.......உங்களுக்கு அம்மாவா நான் இருக்கேன்.....இங்க உன்ன போல நிறய அண்ணா அக்கா எல்லாம் இருக்காங்க.. இது இனி நம்ம உலகம்.. இங்க நாம யாரும் தனி ஆள் இல்ல சரியா....”என குழந்தையின் மூக்கோடு மூக்குரசி செல்லம் கொஞ்சினாள். அதற்கு என்ன புரிந்ததோ லேசாக இதழ் பிரித்து சிரித்தது.

“அச்சம் அச்சம் இல்லை
இனி அடிமை எண்ணம்
காலம் மாறி போச்சு
கண்ணீர் மிச்சம் இல்லையே”


என்ற பாடல் வரிகளில் திடுக்கிட்டு கண்திறந்த கல்கியின் எதிரில் தன் குழுவினருடன் அன்றைய இல்ல ஆண்டு விழா மேடையில் பாடிக்கொண்டு இருந்தாள் இருபத்திரண்டு வருடங்களுக்கு முன் கல்கியின் கைகளில் குழந்தையாய் தவழ்ந்த ஆதிரை.

ஆதிரை.......பேரழகி இல்லை.... அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என சொல்லுவார்களே அந்த வகையை சேர்ந்த அழகி. ஆனால் கண்ணழகி.... பார்ப்பவர்களை சுண்டி இழுக்கும் காந்தக்கண்கள்.


அன்பான, அமைதியான, எந்த சூழலையும் அனுசரித்து செல்லக் கூடிய இளம்பெண்ணாக அவளை இன்று மேடையில் பார்த்த கல்கி, சூழலை மறந்து கடந்த கால எண்ணங்களை மீட்டி கொண்டிருந்தவர், மெதுவாக தன்னை மீட்டுக் கொண்டார். அடுத்து செய்ய வேண்டியது குறித்த சிந்தனை அவரிடமிருந்து ஒரு ஆழந்த பெருமூச்சை வெளிப்படுத்தியது.

காப்பகத்தில் ஒவ்வொரு வருடமும் எளிமையாக கொண்டாடப்படும் ஆண்டு விழா முடிந்து அவரவர் தத்தம் வேலைகளை கவனிக்க செல்ல,

‘அக்கா.......உன்ன கல்கி அம்மா வர சொன்னாங்க’ என சைகையில் அழைத்தது அந்த குட்டி வாண்டு மீரா.

“மீரா குட்டி வாங்க.... என்ன இனைக்கு உங்கள பார்க்கவே இல்ல.... சாப்பிட்டீங்களா?” என கேட்டாள் ஆதிரை.

மெதுவாக அவள் அருகே வந்து ஆம் என தலையை ஆட்டினாள் மீரா.

ஆறுதலாய் அவள் முடியை கோதி விட்டவள் “நீ போ...... அக்கா வரேன்” என்றாள்.
மறுபடியும் சரி என தலையை ஆட்டி விட்டு ஓடி விட்டாள் மீரா.

பாவம் மீரா பிறவியிலே அவளால் வாய் பேச இயலாது. . இங்கு வந்ததில் இருந்து மீராவை ஆதிரை தான் கவனித்து கொண்டாள்.

ஒரு ஆழந்த பெருமூச்சுடன் கல்கியை தேடி சென்றாள் ஆதிரை.

“அம்மா.. உள்ள வரலாமா?” என அனுமதி கேட்டாள்.

“வா..... ஆதிரை”

என திரும்பிய கல்கியின் வயது ஐம்பது. சாந்தமான முகம், கண்களில் கண்ணாடி, உயர்த்தி கட்டிய கொண்டை, லேசாக நரைத்த தலை முடி, பாந்தமாக அணிந்திருந்த புடவை என அமைதியான அன்பே உருவான தோற்றம்.

“வர சொன்னிங்களா அம்மா?”

“மம்.... ஆதிரை.... உன்னோட படிப்பு போன வருஷமே முடிஞ்சிருச்சில்ல.... உன்னோட அடுத்த பிளான் என்னம்மா?” என கேட்டார் கல்கி

“அது........ வந்தும்மா......” என்ற அவளது தடுமாற்றம் அவள் அதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை என காட்ட,

“இங்க பாரு ஆதிரை.......இந்த ஆச்சிரமத்தோட ரூல்ஸ் உனக்கு தெரியும் தானே.. இங்க பதினெட்டு வயசுக்கு பிறகு உங்க படிப்பு முடிசஞ்சதோட வேலை தேடிக்கிட்டு நீங்க உங்க சொந்த உழைப்புல வாழணும்..”

“ஆமாம்மா...... எனக்கு புரியுது .. ஆனா.... “ என்று அவள் இழுக்க,

“ஆதிரை... எனக்கும் நீ இங்க இருந்து போகணும்ரத நினைக்கவே கஷ்டமா தா இருக்கு.. அது என்னனு தெரியல.. உன்ன குழந்தையா இங்க பார்த்ததுல இருந்தே ஏதோ ஒரு பாசம்.... இருந்தாலும் எல்லா குழந்தைகளையும் சமமா பார்க்கணும்கிறதால நான் அத காட்டிக்கிட்டதில்ல..”

“அம்மா..” என்றாள் கண்ணீர் குரலில்.


தன் கண்களில் துளிர்த்த நீரை விரலால் தட்டி விட்டவர் குரலை செருமி,

“உன்னோட இந்த இடம் இன்னொரு ஆதரவு இல்லாத குழைந்தைக்கு கிடைக்கும் இல்லயா?....ம்ம்... ” என்றார்.

“இது தான் நடைமுறை.. நீ போய் தான் ஆகணும்.. நீ புத்திசாலியான பொண்ணு.......... உனக்கு புரியும்னு நினைக்குறேன்..” என்றார் கல்கி தொடர்ந்து.

“நீங்க சொல்லுறது சரிதான் அம்மா... நான் நாளைல இருந்து வேலை தேடுறேன்” என சொல்லிவிட்டு சோகமான முகத்துடன் வெளியேறினாள்.

தனது அறைக்கு சென்ற ஆதிரை ‘அம்மா சொல்லுறதும் சரி தான்... நான் போனாதான் என்னோட இடத்துக்கு என்ன மாதிரி ஒரு ஆதரவு இல்லாத குழந்தை வரும்....அதுக்கு நான் தடையா இருக்க கூடாது...... நாளைல இருந்து தீவிரமாக வேலை தேடணும்’ என மனதுக்குள் உறுதியாக முடிவெடுத்தாள்.

மறுதினம் காலை அழகாக விடிய, ஆச்சிரம வாயிலின் முன் வழுக்கி கொண்டு வந்து நின்ற அந்த உயர் ரக காரின் பின்புற கதவை திறந்து கொண்டு ஆறடி உயரத்தில், கம்பீரமாக, முகத்தில் வழியும் புன்னகையுடன் இறங்கினான் அஜய்.

காவலாளியிடம் எதையோ விசாரித்து விட்டு உள்ளே நுழைந்து அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து அங்கு விளையாடும் சிறுவர்களை புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தவனின் முகத்தில் தவழ்ந்த புன்னகை, ‘எப்படி தான் பெற்றவர்களுக்கு தனது குழந்தையை இப்படி விட மனசு வந்ததோ’ என்ற எண்ணம் தோன்றிய வினாடியில் மறைந்து முகம் ஒரு வலியைக் காட்டியது.

“ஏன் சார் இங்க வெயிட் பண்றீங்க? யார பார்க்கணும்?” என்ற அங்கு வேலை செய்யும் சித்ராவின் குரல் அவனது சிந்தனையை கலைத்தது.


“ஓ......சாரி.... மிஸ்..... நான் கல்கி மேடமை தான் பார்க்க வந்தேன்.. நேற்று கால் பண்ணி வரேன்னு சொன்னேன்” என்றான்.

“ம்ம்ம்......ஓகே.. சார்.. உங்க பெயரை சொல்லுங்க” என்றாள்.

“நான் அஜய்.... ஊட்டியில் இருந்து வரேன்” என்றான்.

“கொஞ்சம் வெளிய வெயிட் பண்ணுங்க சார். நான் மேடம் கிட்ட இன்ஃபார்ம் பண்ணிட்டு உங்கள வந்து கூட்டிட்டு போறேன்.” என வெளியே இருந்த இருக்கையை காட்டினாள்.

“ஓகே” என அவனும் இருக்கையில் அமர்ந்தான்.

உள்ளே சென்ற சித்ரா “மேடம்.... உங்கள ஊட்டியில் இருந்து அஜய்னு ஒருத்தர் பார்க்க வந்து இருக்கார்” என்றாள்.

“ஆமா நேத்து கால் பண்ணி இருந்தாரு. உடனே உள்ளே வர சொல்லு சித்ரா” என்றார் கல்கி.

வெளியே சென்ற சித்ரா “சார்.... உங்கள மேடம் வர சொன்னாங்க” என உள்ளே அழைத்து சென்றாள்.

உள்ளே நுழைந்தவனை “வாங்க மிஸ்டர் அஜய்...... பிளீஸ்......ஹாவ் யுவர் சீட்..” என தன் முன்னே இருந்த இருக்கையை காட்டினார் கல்கி.

“தாங்க்ஸ்” என புன்னகையுடன் அமர்ந்தான்

“என்கிட்ட உதவி வேணும்ன்னு நேத்து ஃபோன்ல சொன்னீங்க.... என்ன உதவி மிஸ்டர் அஜய்?” என கனிவுடன் கேட்டார் கல்கி.

“மேம்......ஊட்டில இருக்க pearl bay எஸ்டேட் பத்தி கேள்வி பட்டு இருக்கீங்களா ?” என்றான்.

“ம்ம்...... மிஸ்டர் அஜய் கேள்விபட்டு இருக்கேன்” என்றார் யோசனையுடன்.

“நான் pearl bay எஸ்டேட் ஓனர் சிதம்பரத்தோட இரண்டாவது பையன். எங்க எஸ்டேட் வீட்டு நிர்வாகத்த பார்த்துக்க ஒரு பொறுப்பான ஆள் வேணும். . இங்க வளர்ரவங்க பொறுப்பாவும் நேர்மையாகவும் இருப்பாங்கனு கேள்வி பட்டு இருக்கேன்.. ” என்றான்.

“மாம்.... என்ன நீங்க அஜய்னே கூப்பிடலாம்.... “என்றான் தொடர்ந்து.

“ஓ.. என்ன மாதிரியான குவாலிபிகேஷன் எதிர் பார்க்கிறீங்க “ என கல்கி வினவ,

“அதான் மேடம்... சொன்னேனே நேர்மை, பொறுப்பு, கொஞ்சம் நிர்வாக திறமை “ என அவன் அடுக்க,

கல்கிக்கு என்னவோ ஆதிரை இதற்கு பொருத்தமாய் இருப்பதாக தோன்ற ,

“ஓகே.. அஜய்.. பட் இது விஷயமா எனக்கு இன்னும் க்ளரிபிகேஷன் வேணும்..” என்றார்.

“எஸ்... பிளீஸ்” என்றான்.

நீங்க எங்க காப்பகத்த சூஸ் பண்ணதுக்கான ரீஸன் சொல்லிட்டீங்க..... பட் எம்ப்லாயிஸ் தேடிக்க எத்தனையோ மெதட் இருக்கிறப்போ ஏன் ஒரு ஆஸ்ரமத்து வளர்ந்த ஒரு நபர தேடுறீங்க?”.. என கேட்டார்.

“இது என்னோட பிரதரோட முடிவு .....பொதுவா சிட்டில ஏன் எங்க எஸ்டேட் எண்வயமெண்ட்ல வளர்ந்தவங்க கூட சிட்டி லைப் தான் விரும்புறாங்க..... அண்ட் இங்க இருந்து வரவங்க எந்த சூழலையும் அட்ஜஸ்ட் பண்ணிப்பாங்க” என்றான் தெளிவாக.

“ஓகே.. அப்ப நீங்களே நேரா வர காரணம்?..” என கல்கி வினவ ,

“அது இங்க ஒரு வேலையா வரவேண்டி இருந்தது.. சோ அப்படியே இதயும் நேரலயே பேசி முடிச்சிடலாம்னு.. அண்ட் என்ன நேர்ல பார்த்தா உங்களுக்கும் நம்பிக்கை வரும் இல்லயா?..” என்றான் மீண்டும் புன்னகையுடன்.

“ரொம்ப சந்தோஷம் அஜய்..... உங்க இந்த தாட் கூட நல்லாதான் இருக்கு.. நீங்க எதிர் பார்க்கிற நபர் பொண்ணா ஆணா?” இங்க பொண்ணுங்க மட்டும் தான் இருக்காங்க.. பசங்கள பத்து வயசுக்கப்புறம் வேற இடம் மாத்திருவோம்” என்றார் விளக்கமாக.

“ஓ.. இந்த வேலைக்கு ஒரு பெண் இருந்தா நல்லது மேடம்” என்றான்.

“அஜய்...... இங்க வளர்ந்த ஆதிரைன்னு ஒரு பொண்ணு வேலை தேடிக்கிட்டு இருக்கா...... ரொம்ப பொறுப்பான நேர்மையான பொண்ணு அவள வர சொல்றேன்.... நீங்க இன்டர்வியூ பண்ணி எடுங்க..” என்றார்.

“நீங்க ரெகமெண்ட் பண்ணாவே போதும் மேடம்....... இன்டர்வியூ எல்லாம் தேவயில்லை........... .நீங்க அவங்களுக்கு வேலைல சேர விருப்பமா? இல்லயான்னு? கேட்டுட்டு சொல்லுங்க..” என்றான்.

“அவ என்னோட பொண்ணு அஜய்.. என்னோட பேச்ச மீற மாட்டா.. அவ எப்போ ஜாயின் பண்ணனும்னு மட்டும் நீங்க சொல்லுங்க..” என்றார்.

“கம்மிங் மன்டேயே அவங்க ஜாயின் பன்னிக்கலாம் மேடம்...... அவங்க டீடெயில்ஸ் எல்லாம் நீங்க சொல்லுங்க...... நான் அவங்க அபாய்மெண்ட் லெட்டர் மெயில் பண்றேன்..” என்றான்.

அவரும் அவளது தகவல்களை சொன்னார்.

“ஓகே..... மேடம் அப்ப நான் கிளம்புறேன்..... . நாளைக்கு அவங்களுக்கான அபாய்மெண்ட் லெட்டர் உங்க மெயில்க்கு வரும்..” என விடைபெற்றான்.

“நல்லது அஜய்” என அவனை வழியனுப்பி விட்டு யோசனையில் அழந்தார் கல்கி.

‘இங்க வேலைக்கு போக சொன்னதுக்கே உங்கள விட்டு போக மாட்டேன்னு சொன்னா..... இப்போ ஊட்டிக்கு போக சொன்னா என்ன சொல்லுவான்னு தெரியல.....’ என நினைத்தார். மறுகணமே ‘அவ என்னோட பொண்ணு என் பேச்ச மீற மாட்டா’ என தன் எண்ணத்தை மாற்றினார்.

“உள்ள வரலாமா அம்மா” என அனுமதி கேட்டு உள்ளே நுழைந்தாள் ஆதிரை.

“வா..... மா ஆதிரை” என்றார் கல்கி.

“உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லனும் அம்மா”.....

“நானும் உன்கிட்ட ஒன்னு சொல்லணும்” என பீடிகையுடன் ஆரம்பித்தார். “”முதல் நீ சொல்லு” என்றார்.

“நான் வொர்க் அப்ளை பண்ணி இருக்கேன்.... அம்மா நாளைக்கு இன்டர்வியூ கால் பண்ணி இருக்காங்க..” என்றாள்.

“அதுக்கு அவசியம் இல்லை மா” என்றவரை யோசனையுடன் பார்த்தாள் ஆதிரை.

“இன்னைக்கு என்ன பார்க்க ஊட்டியில் இருந்து அஜய்னு ஒருத்தர் வந்தாரு..... அவங்களோட எஸ்டேட் வீட்டு நிர்வாகத்த பார்த்துக்க ஒரு பொறுப்பான ஆள் வேணும்னு கேட்டாரு...... எனக்கு உன்னோட நியாபகம் தான் வந்துச்சி...... நீ என்னோட பேச்ச மீற மாட்டன்னு நம்பிக்கையில் நீ வருவன்னு வாக்கு குடுத்துடேன்..” என்றவரை அதிர்ச்சியுடன் பார்த்தாள் ஆதிரை.

“அம்மா” என அழுகையுடன் அழைத்தாள் ஆதிரை.

அவளது அதிர்ந்த முகத்தையும் கலங்கிய விழிகளையும் பார்த்த கல்கி “நான் எது செஞ்சாலும் உன்னோட நல்லத்துக்காக தான் இருக்கும்” என்றார்.

“உங்கள பார்க்காம எப்படி அம்மா இருப்பேன்” என விம்மினாள்.

“அழுகுறத நிறுத்து ஆதிரை..... இந்த வேலை உன்னோட எதிர்காலத்துக்கு ரொம்ப நல்லது..... இப்ப நீ போகலனு சொன்னா எனக்கு வாக்கு தவறுனவன்னு பேர் வரும் பரவாயில்லையா?..” என்றார் அழுத்தமாக.


உடனே கண்களை துடைத்தவள், “ஐயோ பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதீங்க அம்மா...... என்னால என்னைக்கும் உங்களுக்கு கெட்ட பேர் வராது” என்றாள்.

“அப்போ ஊட்டிக்கு போற தானே?” என்றார் ஆர்வமாக.

“நான் என்னைக்கு ஜாயின் பண்ணணும்மா?” என கேட்டாள்.

“தட்ஸ் மை கேர்ள்” என பாசத்துடன் அவளை கட்டியணைத்தார் கல்கி.

மறு தினம் “எல்லாம் எடுத்து வச்சிடியா ஆதிரை” என கேட்டபடி உள்ளே நுழைந்தார் கல்கி.

“ஆமாம்மா எல்லாம் ரெடி” என்றாள்.

“இந்தா ஆதிரை என அபாயின்மெண்ட் லெட்டரை” நீட்டினார் கல்கி.

“தாங்க்ஸ்மா” என வாங்கி அதனை தனது கைப்பையில் பத்திரப்படுத்தினாள்.

ஆசிரம வாயிலில் நின்ற மகிழுந்தில் தனது பெட்டிகளை வைத்துவிட்டு உள்ளே வந்தாள் ஆதிரை.

பூஜையறையில் விளக்கேற்றி கொண்டிருந்த கல்கி வா என கண்களால் அவளை அழைத்தார்.

உள்ளே சென்று அவரிடம் ஆசி பெற அவர் பாதம் பணிந்த பொழுது,

“உன்னோட மனசு போல நீ எப்பவும் நல்லா இருப்ப மா” என அவளை தூக்கி நிறுத்தினார் கல்கி.

அப்படியே அவரை கட்டியணைத்து ஒரு மூச்சி அழுது தீர்த்தாள் ஆதிரை.

அவளை பிரியும் துயரம் அவருக்கும் இருக்கவே செய்தது. அவரது கண்களிலும் லேசாக கண்ணீர் எட்டிப்பார்த்தது. அவள் அறியாவண்ணம் தனது கண்களை துடைத்தார் கல்கி.

அப்போ “நான் போய்ட்டு வரேன் அம்மா “என மகிழுந்து உள்ளே ஏறி அமர்ந்து கார் கதவை மூடினாள் ஆதிரை.

“போய்ட்டு வாம்மா” என தழுதழுத்த குரலில் கூறினார் கல்கி.

ஆச்சிரமத்தை பார்த்து கண்ணீருடன் கையசைத்து விட்டு, முன்புறம் திரும்பி அமர்ந்து சீட்டில் சாய்ந்தவள், கண்களில் நீரும் முகத்தில் சோகமுமாக வாழ்வில் முதல் தடவையாக தன்னந்தனியாக தனது புது வாழக்கைப் பயணத்தை ஆரம்பித்தாள் ஆதிரை.

அடுத்த ஏபி நெக்ஸ்ட் வீக் அப்லோட் பண்ணுவேன்.







 
Last edited:
Status
Not open for further replies.
Top