எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அழகின்!!!!!அமுதே!!!!! - கதை திரி

Status
Not open for further replies.
அழகின்!!!!! அமுதே!!!!!!!!

"வண்ணக் கனவே!!!!!

வட்ட நிலவே!!!!!!!!!!

என்ன என்ன
இன்பம் தரும் வண்ணம்
வரும் கற்பனையே!!!!!

சாமிக்கிட்ட சொல்லி
வச்சு சேர்ந்ததிந்தச்,

செல்லக்கிளியே!!!!!!!!"

ஸ்லோமோஷனில் பாடல் ஓடி கொண்டிருக்க அதன் வரிகளுக்கு ஏற்ப தனது முக பாவங்களை மாற்றி அவ்வப் போது ஒரு புருவத்தை ஏற்றியும் ட்ரீம் செய்யப்பட்ட தாடியினை வருடியவாரும் தொடுதிரையில் பாடி கொண்டிருந்தவனை கண் இமைக்காமல் ரசித்து கொண்டிருந்தாள் அமுதினி.

அவன் திரவியம்!!!!!!!இன்ஸ்ட்டா(insta) பிரபலம்.ஆனால் அவன் ட்ரெண்ட் ஆவதற்கு முன்பே அதாவது அவன் அரை டவுசர் போட்டு நண்பர்களுடன் காமெடி செய்து வீடியோ போட்ட காலத்திலேயே அவனது தீவிர ரசிகை இவள்.

இள நீல நிறத்தில் ‌இருந்த சட்டையின் முதல் இரண்டு பட்டன்களை திறந்து விட்டிருக்க அதன் நடுவே சிறிய மெல்லிய கழுத்து செயின் அதன் நடுவே சிறிய மீன் டாலர் அந்த டாலரின் நடுவே அவன் பெயரின் முதல் எழுத்து நெற்றியில் சிறியதாக சந்தனக்கோடு!!!! அப்பப்பா!!!!!!அமுதினியின் கண்கள் அவனை ஈன்ச் பை ஈன்ச்சாக அளவெடுத்து இண்டு இடுக்கெல்லாம் ரசித்தது.

நீல நிற சட்டை அவனின் நிறத்திற்கு மிகவும் எடுப்பாக இருந்தது.

நிறம் என்றதும் அவன் ஒன்றும் அன்னப்பறவை நிறம் அல்ல!!!!!!

ஒருமுறை இவள் அவளது தோழியிடம் இவனது இன்ஸ்ட்டா ஐ.டியை காட்டிய போது அவளது தோழி கூறியது

"என்ன டி இது கருப்பு விஜயகாந்த் மாதிரி இருக்கான்"

என்ன????அப்படியா இருக்கிறான்‌???

ஆமாம் திராவிட நிறம் தான் ஆனாலும் இவளை ஈர்த்தான்.

அளவுக்கதிகமாக அவனிடம் அவளை ஈர்த்தது அவனது கண்களே!!!!

பேசும் விழிகள்!!! என்பார்களே அது அவனது கண்களிற்கு பொருந்தும்.

உயிர்புள்ள விழிகள்!!!! அவனது முக அசைவுகளை விட விழிகள் அதிகமான பாவனைகளை காட்டிட தொலைந்து போனாள் இவள்.

இதோடு ஆயிரத்தெட்டு தடவையாக அந்த வீடியோவினை ரசித்திருப்பாள் ஆனால் அவள் விருப்ப பட்டனை தட்டி விடவில்லை.

அனைவரும் ஒரே பாடலை ஒரே நடனத்தை டிரெண்டாக்கி கொண்டிருக்க இவன் சற்று வித்தியாசமானவன் போலும்!!!!!

பழைய பாடல்களை அதன் நடுவரிகளை எடுத்து அதனை ஸ்லோமோஷனில் செய்து ரீல்சை வெளியிட்டு அனைவரிடம் இருந்தே தனித்து தெரிந்தான்.

இப்போது இவன் செய்து வெளியிடும் ரீல்ஸ்களை அனைவரும் டிரெண்ட் செய்ய ஆரம்பித்திருந்தனர்.

அடிக்கடி அவளது கண்கள் அவனின் ப்ரோஃபைலுக்குள் சென்று வந்து கொண்டிருந்தது.

ஈர்ப்பு!!!!!!!!!மிக அதிகப்படியான ஈர்ப்பு அவளுக்கு அவனிடம்!!!!!!!!!

அவளின் இந்த ஈர்ப்பு அவன் காமெடி வீடியோக்கள் செய்யும் பொழுது ஆரம்பித்தது கிட்டதட்ட ஒன்றரை வருடங்கள் கடந்து விட்டன.

வருடங்கள் கடந்தும் அவளது ஈர்ப்பு அதிகரித்தே தவிர இம்மியளவும் குறையவில்லை.

எதனை கண்டு அவளிடம் ஈரக்கப்பட்டால்???அவளே அறியாத ஒன்று!!!!!


"அம்மு!!!!!!அடியே அமுதா!!!!!கூப்புடுறது காதுல விழுகுதா இல்லையா டி???கரடியா கத்துறேன் ஒத்த கூப்பாடுக்கு ம்ம்ம் சொல்றாளா???என்னத்தான் அந்த போனுல பாப்பாளோ???
நெதைக்கும் அதோட தான் மல்லு கட்டுறா??? விடிஞ்சாலும் அதுல தான் முழிக்கிறா தூங்க போகையிலும் அதுல தான் இருக்கா???

இந்தாடி????இப்ப நீ வர்றியா???இல்லை அந்த போனை ஒடிச்சு ஒடப்புல போடவா???காலேஜ்ஜீக்கு போற எண்ணம் இருக்கா இல்லையா டி??மணி எட்டு" என்றவரின் கத்தலில் இறுதியாக சொன்ன விஷயம் அவளது மூளையை சரியாக தாக்கிட

"என்ன எட்டா?????ஆத்தாடி போச்சு!!! போச்சு!!!!காலேஜ் பஸ் வந்திடுமே" என அலறியவள் வேகவேகமாக துணிகளை அள்ளி கொண்டு குளியலறைக்குள் நுழைந்திட,

"அடேய் கருப்பழகா உனக்கு இதே வேலையா போச்சு எப்ப பாத்தாலும் என்னை மயக்கி உட்கார வச்சுர்றது!!!உன் கண்ணை வச்சு!!!" என புலம்பி தள்ளியவள் அரைகுறையாக குளித்து விட்டு ஐந்து நிமிடங்களில் வந்தவள் மூன்றே நிமிடங்களில் தலைமுடியை மேலே கீழே இடப்பக்கம் வலப்பக்கம் என நான்கு திசைகளிலும் இழுத்து சுருட்டி க்ளிப் போட்டு வெளியே வர எட்டு பத்து.

இன்னும் பத்தே நிமிடங்களில் அவளது காலேஜ்‌பஸ் வந்து விடும்.‌ இவளது ஸ்டாப்பிற்கு சற்று தூரம் நடக்க வேறு வேண்டும்.

வேகவேகமாக கிட்சன் சென்றவளை சரஸ்வதி முறைக்க எதுவும் பேசாது உணவினை தட்டில் இட்டவள் அள்ளி வாயில் போட புரை ஏறியது.

"மெதுவா தான் திண்ணு தொலையேண்டி!!!!" தண்ணீரினை வைத்து விட்டு அவர் அதட்டிட,

"இன்னைக்கு ஒரு செமினார் மா காலேஜ்ல அதான் ஃப்ரிபேர் பண்ணிட்டு இருந்தேன்" வாயில் வந்த பொய்யை அவிழ்த்து விட,

"சரி சரி பொறுமையா சாப்பிடு கார்த்தியை கொண்டு போய் ஸ்டாப்ல விட சொல்றேன்"

"சரிம்மா" என்றபடி உணவினை முடித்தவள் சார்ஜ் போட்டு வைத்திருந்த மொபைலை எடுத்து பையினுள் போட்டவள் சரஸ்வதி தந்த உணவு டாப்பாவினையும் எடுத்து அதனுள் அடக்கியவள் வெளியே வர கார்த்திக் நின்றிருந்தான்.

தூக்கம் கலைந்த கடுப்பு அவனிடம்!!!!!

ஈஈஈஈஈஈஈ என சிரித்தவாறு பைக்கில் ஏறி கொண்டாள்.

அவள் ஸ்டாப்பிற்கு சென்று சேர்வதற்குள் கல்லூரி பேருந்து சில அடிகள் நகர்ந்து விட பேருந்தை மடக்கி பிடித்து ஏறியிருந்தாள்.

"என்னடி இன்னைக்கும் உன்னோட கருப்பழகன் லேட் ஆக்கிட்டாரா??" ஆசுவாச பெருமூச்சு விட்டபடி ஜன்னல் இருக்கையில் அமர்ந்தவளை பார்த்து கிண்டலாக நர்மதா கேட்க,

அவளை வெட்டும் பார்வை பார்த்தவள் முகத்தை திருப்பி கொள்ள,

"நெஜமா அப்புடி என்ன தாண்டி அவன் கிட்ட உனக்கு பிடிச்சிருக்கு இப்புடி கிடந்து பிணாத்துற ஆளு பாக்க அழகா ஹேண்ட்சம்மா இருந்தா கூட பரவாயில்லை சைட்டடிக்கலாம் ஆனா இவன் அந்த கேட்டகரில கூட வர மாட்டானேடி!!!!!!

ஆளு நல்லா கருப்பு விஜயகாந்த் மாதிரி கொழுக் மொழுக்னு இருக்கான் இவனை போய் எப்புடி டி உனக்கு பிடிச்சது சத்தியமா எனக்கு தெரியலையா??? என அவள் புலம்ப அதனை கேட்டு சிரிப்பு தான் வந்தது அமிழ்தினிக்கு.

அழகாக ஹேண்ட்சமமாக இருப்பவரை மட்டும் தான் பிடிக்க வேண்டுமா என்ன???தோழியின் பேச்சு முதிர்ச்சி இல்லாதது போல தான் தோன்றியது அவளிற்கு.

மறந்தும் கல்லூரி பருவத்தில் அடி எடுத்து வைத்திருக்கும் கன்னிகளின் மனம் இவற்றை தான் சிந்திக்கும் என்றும் தான் தான் அதனை மீறிய முதிர்ச்சியுடன் இருக்கிறோம் என அவளிற்கு தெரியவில்லை.

விட்டால் இவள் இன்னும் ஏதாவது புலம்புவாள் என அறிந்த அமுதினி அமைதியாக ஹெட்போனை காதினில் மாட்ட அதனை கண்ட நர்மதாவிற்கு கடுப்பாகியது.

"பாட்டு கூட இந்த ஜெனரேஷன்க்கு ஏத்த மாதிரி கேட்குறியா டி நீ????எப்ப பாரு பழைய பாட்டு???நீ என்ன எண்பது தொண்ணூறு காலகட்டதுலயா இருக்கா??? நீ இருக்குறது டூ கேல??" என்றவளை இம்மியளவும் மதிக்காது மொபைலில் பாடலை ஒலிக்க விட்டவள் கண் மூடிட,

"எங்கேடோ கெட்டு போ டி " என எரிச்சலுற்ற நர்மதா தனது மொபைலில் தலையை கொடுத்து கொண்டாள்.


"தொட்டுத் தொட்டு வெளக்கி வச்ச வெங்கலத்துச் செம்பு அத
தொட்டெடுத்துத் தலையில் வெச்சா பொங்குதடி தெம்பு!!!!!!!!!!!

பட்டெடுத்து உடுத்தி வந்த பாண்டியரு தேரு இப்போ
கிட்ட வந்து கெளருதடி என்னப் படு ஜோரு!!!!!!!!!

கண்ணுக்கழகாப் பொண்ணு சிரிச்சா
பொண்ணு மனசேத் தொட்டு பறிச்சா

தன்னந்தனியா எண்ணி ரசிச்சா கண்ணு வல தான் விட்டு விரிச்சா!!!!!!!!!!!!"

பாடலின் வரிகளில் தன்னை மறந்த ஆரம்பித்திருந்தாள் அமிழ்தினி. நர்மதாவின் கணிப்பு சரி என்பது போல் அவளது அலைப்பேசி முழுவதும் 80'ஸ் கால கட்ட பாடல்கள் நிறைந்து வழிந்தன.

எல்லாம் அவனால்!!!!!!அவனால் மட்டுமே!!!!!!?

அவன் ரீல்ஸ் செய்து வெளியிடும் பழைய பாடல் அடுத்த நிமிடம் அவளது மொபைலில் தரவிறக்கம் செய்யப்பட்டிருக்கும்.

'ம்ம்ம்ம் கருப்பழகா உன் ரசனையோ ரசனை தான்யா ஒவ்வொரு லைனும் சும்மா மனசை கொத்தோடு அள்ளிக்குதே' என பாடலின் வரிகளில் தன்னை தொலைத்திருந்தவள் இடையில் அவனை பாராட்டியும் கொண்டாள்.

அன்றைய தினம் எந்த வித வம்பும் தும்பும் இல்லாமல் நகர்ந்து விட காலையில் அமுதினி அவள் அன்னையிடம் சொல்லிய பொய் மெய்யாகியிருந்தது.

நாளை அவளுக்கு செமினார்!!!!!அதற்கான வேலைகளில் இருந்தவளை நோட்டிபிக்கேஷன் ஒலி கலைக்க எடுத்து பார்க்க,

"ஹேய் உன் கருப்பு ராஜா புது ரீல்ஸ் போட்டு இருக்கான் டி " நர்மதாவின் பெயர் தாங்கி மெசேஜ் வர,

வேகவேகமாக அவள் அனுப்பிய லிங்க்கில் சென்றாள் அமுதினி.

இந்த தடவை பாடல் அல்ல வடிவேலுவின் காமெடியை எடுத்து செய்திருந்தான். பனியன் மற்றும் அரைடவுசர் போட்டு தலை முடி அலங்கோலமாக இருந்தவன் அவளின் மனதை அலைகழித்தான்.

அவன் ஆன்லைனில் இருக்கிறான் என்பதை உறுதி செய்தவள் காலையில் பார்த்த வீடியோவிற்கும் இப்போது போட்ட வீடியோவிற்கும் ஹார்ட்டினை விட்டு லைக்ஸ்ஸை அதிகரித்தவள் ஐந்து நிமிடங்களில் அதனை மீண்டும் அன்லைக் செய்து லைக்ஸ்ஸை குறைந்திருந்தாள்.

இது திரவியத்திற்கு அவள் தனித்துவமாக தெரிய வேண்டும் என அவள் கையாளும் யுக்தி. எல்லாரையும் போல லைக் போட்டால் அவள் பத்தோடு பதினொன்றாகா அல்லவா ஆகிவிடுவாள்.

அவனிற்கு அவள் வேறு என்பதை காட்ட அவள் செய்யும் வித்தை இது!!!!!!அவனை தன்னை கவனிக்க வைக்க அவள் செய்யும் கிறுக்குத்தனம் இது!!!!!!!

அவளின் மனதை கொள்ளை கொண்டவனை தொடுதிரையில் பார்த்து கொணடிருந்தவளின்‌ உதடுகள் அழகிய வெட்க புன்முறுவலை பூத்தன.

அழைகழிப்பான்!!!!!!!

கருத்து திரி


 
அத்தியாயம் 2:

அன்றைய தினம் எடுத்த வீடியோக்களை எல்லாம் எடிட்டிங் செய்யும் பணியில் இருந்தவனை விடாது நோட்டிபிக்கேஷன் ஒலி கலைக்க எடுத்து பார்த்தான் திரவியம்.

"ஸ்வீட்டி@00" என்ற பெயரினை தாங்கி வந்திருந்த நோட்டிபிக்கேஷனை கண்டதும் அவனின் வதனத்தில் அழகிய புன்முறுவல்.

இரண்டு நிமிடங்களுக்கு மேல் ஆகியும் வீடியோ அன்லைக்(unlike)ஆகாமல் இருக்க இவனின் முகத்தில் சிந்தனை கோடுகள்.

'பிடிக்கலையோ' என அவன் நினைத்த நொடி லைக் அன்லைக்காக மாறியிருக்க,

"பிடிச்சிருச்சு போலயே" என்றவனின் முகத்தில் சிரிப்பு மறையாமல் இருந்தது.

யாரவது வீடியோ அன்லைக் ஆனால் மகிழ்வார்களா????

ஆம் என்று ஒத்துகொள்வான் திரவியம்.

பின்னே அன்லைக் செய்வது அவனது ப்ர்த்யோகமான ப்ரீசியஸ் ஆன பாலோவர் ஆயிற்றே.

அவன் இன்ஸ்டாவில் அறிமுகமான காலத்தில் அவனிற்கு கிடைத்த முதல் பாலோவர் அனைவரும் அவனை திட்டி ட்ரோல் செய்த போது அவளின் லைக்ஸ் மூலம் அவனிற்கு துணையாக அவள் இருப்பதை காட்டியவள்.

அவள் லைக்ஸ் தான் அவனது துணைக்கோலே.ஆனால் இத்தனை வருடங்களில் அவள் ஒரு முறை கூட கமென்ட் செய்ததில்லை வெறும் லைக்ஸ் மூலம் மட்டுமே அவளை அவனிற்கு உணர்த்தியிருந்தாள்.

அவள் சற்றே இல்லை இல்லை அதிகமாகவே வித்யாசம் ஆனவள் தான் போல.

அவள் ஒரு வீடியோவினை லைக் செய்து அன்லைக் செய்தால் அந்த வீடியோ அவளிற்கு பிடித்திருக்கிறது என்று அர்த்தம் அதுவே வெறும் லைக்கோடு மட்டுமே இருந்தால் அந்த வீடியோ பிடித்தமில்லை என்று அர்த்தம்.

இதனை அறிந்து கொள்ளவே திரவியத்திற்கு நாட்கள் எடுத்தன.அவளிடம் ஏன் என்று கேட்கவும் முடியாமல் திண்டாடி போன காலமும் உண்டு. அடுத்தடுத்து அவனிற்கு நிறைய பெண் ரசிகைகள் கிடைக்க அவளை அவன் மறாவாமல் இருப்பதற்கு அவள் செய்த யுக்தி என்றும் சொல்லலாம்.

ஆனால் இதை எல்லாம் செய்து தான் அவளை அவனிற்கு நினைவுப்படுத்த வேண்டுமா என்ன??

மறந்தால் தானே நினைப்பதற்கு!!!!!!!

ஆரம்பத்தில் அவள் செய்த இந்த திருகுதளத்தை கண்டு சிரிப்பு தான் வந்தது அவனிற்கு.

ஆனால் ஒன்றை ஒத்து கொள்ள வேண்டும் மற்ற ரசிகைகளிடம் இருந்து அவள் கொஞ்சம் ஸ்பெஷலே அவனிற்கு.

ரசிகை என்றதையும் தாண்டி ஒரு நல்ல தோழமை அவள் மீது உண்டு.ஆரம்பத்திலிருந்து இப்போது வரை அவனிற்கு துணையாய் நிற்பவளை ஏனோ வெறும் ரசிகை என்று வட்டத்தில் அவளை அடக்க அவன் மனம் வரவில்லை அதை விட ஒரு படி மேல் வைத்திருந்தான் ஆனால் அதற்கு ஒரு தோழமை என்ற வட்டத்தையும் அவன் வகுத்திருந்தான்.

அவ்வளவே!!!!!!அவ்வளவு மட்டுமே!!!!

ஏனோ!!!!!திரவயித்திற்கு இந்த சோஷியல் மீடியாவின் மூலம் காதலிலோ இல்லை ஈர்ப்பிலோ எப்போதும் விருப்பமில்லை. அவனை பொறுத்தவரையில் இது அவனிற்கு ஒரு பொழுதுபோக்கு மட்டுமே.

தங்கள் அன்பை வெளிப்படுத்தும் வண்ணம் சில ரசிகைகள் அவனது இன்பாக்ஸிற்கு வந்ததுண்டு அதிலும் சில அத்துமீறும் மெசேஜ்ஜூகளை அவன் நாசுக்காக வெட்டி விட்டதும் உண்டு.

சில நிமிடங்களே மொபைலை பார்த்தவன் அதனை கீழே வைத்து விட்டு அவன் பாதியில் விட்டு வைத்திருந்த வேலையை தொடங்கினான்.

**************************

எங்கும் அமைதி எதிலும் அமைதி என்பதற்கேற்ப இருந்த அந்த நூலகத்தின் அமைதியை கிழித்து கொண்டு கிசுகிசுப்பாக வந்தது நர்மதாவின் குரல்.

"அமுதி!!!!!இங்க பாருடி???" சாண்டில்யனின் கடல்புறாவில் மூழ்கி இருந்தவளை மெல்ல அழைத்து திசை மாற்றினாள் நர்மதா.

"ப்ச்ச் என்ன டி???" வாசிப்பு தடைபட்ட எரிச்சலில் அவள் முணங்க,

"அய்யோடா ரொம்ப தான் இங்க கீழ என் கையை பாரு" என டேபிளில் அடியில் இருந்த மொபைலை அவள் காட்ட,

"டி???லைப்ரேரிக்குள்ள மொபைல் அலோவ்ட் இல்லைன்னு தெரியும்லடி என்னை சேர்த்து மாட்டி விட டிரை பண்றியா நீ???"

"அடச்சீ வாயை கழுவு டி அது எல்லாம் மாட்ட மாட்டேன் வால்யூம் கம்மியாதான் இருக்கு உன் ஆளை பத்தி ஒரு விஷயம் காட்டலாம்னு வந்தா??சிலுத்துக்குற?? போ டி நான் போறேன்" என அவள் எழுந்து செல்வது போல் பாவனை செய்ய,

போகிறது என்றால் போ என்று ரீதியில் அமுதினி மீண்டும் புத்தகத்தில் மூழ்க,

கடுப்பான நர்மதா,

"ஏண்டி உன் ஆளை பத்தி ஒரு விஷயம்னு சொல்றேன் என்னன்னு கேட்க மாட்டியா நீ சரி போ நானே சொல்றேன் உன்னை விட அதி பயங்கரமான ஒரு ரசிகை அவனுக்கு இருப்பா போலயே??" என்க,

அமுதனி புருவம் சுருக்கி என்ன என்பது போல் பார்க்க,

"ஆமா டி ஆமா நீ மோசம் போய்ட்டடி மோசம் போய்ட்ட கமென்ட்லயே சும்மா அருவியாக பொழிச்சுருக்கா பாரு பாரு" என அதனை காட்ட,

அந்த கமென்டினை பார்க்கும் முன் அவள் கண்களில் விழுந்தது அவனின் வீடியோ!!!!புதிதாக அப்லோட் செய்திருப்பான் போலும்,

இள மஞ்சள் நிற சட்டை அதே கழுத்தே செயின் தலைமுடி காற்றில் பறக்க, நெற்றியில் சந்தனத்திற்கு பதிலாக கருப்பு கோடு சட்டையின் முதல் இரண்டு பட்டன்கள் திறந்திருக்க

"வாய்பாட்டு பாடும் பெண்ணே மெளனங்கள் கூடாது

வாய் பூட்டு சத்தம் எல்லாம் பெண்ணுக்கு ஆகாது


வண்டெல்லாம் சத்தம் போட்டால் பூஞ்சோலை

தாங்காது மொட்டுக்கள் சத்தம் போட்டால் வண்டுகே கேட்காது

ஆடிக்கு பின்னாலே காவேரி தாங்காது
ஆளான பின்னாலே

அல்லி பூ மூடாது
ஆசை துடிக்கின்றதோ"


என்ற பாடலிற்கு ரீல்ஸ் செய்து கொண்டிருந்தவனை கண்டதும் அவள் மனம் தன்போல் மயங்கியது.அதிலும் அவன் கடைசி வரிகளுக்கு தன் கழுத்து செயினில் உள்ள மீன் டாலரை இதழ்கடியில் வைத்து கடித்து ஒரு முகபாவனை காட்டிட மொத்தமாக சுயம் இழுத்து நின்றவளின் இதழ்கள் அழகாய் விரிந்து வெட்கப் புன்னகையை உதிர்க்க, கண்களால் கபளிகரம் செய்து கொண்டிருந்தவளை தோள்பட்டையில் இடித்து நிகழ் உலகிற்கு நர்மதா இழுத்து வர,

ரசனை தடைப்பட்டதில் அப்பட்டமான முறைப்பு அவளிடம்.


"கீழே இருக்குற கமென்ட்டை பாருடின்னா நீ இந்த கருப்பழகனை கண்டு மயங்கி கிடக்குற மொதல்ல கமென்ட்டை படி டி" என்றதில்,

முகத்தை உர்ரென வைத்து கொண்டு அந்த கமென்ட்டை படிக்க ஆரம்பித்தவளின் முகம் நொடியில் கலக்கத்திற்கு மாறி அதனை படித்து முடிக்கும் பொழுது கண்கள் இரண்டும் கலங்கி கன்னங்களில் கண்ணீர் கோடாய் இறங்கிட,

இருக்கும் இடம் உணர்ந்து அதனை கட்டுப்படுத்தியவள் அதற்கு மேல் முடியாதென புத்தகத்தை பட்டென மூடி வைத்தவள் விறுவிறுவென்று நூலகத்தை விட்டு வெளியேறியிருந்தாள்.

அமுதினியின் கோவத்தை பொறாமையை எதிர்பார்த்து காத்திருந்த நர்மதாவிற்கு அவளது கலக்கமும் அழுகையும் திகைப்பை கொடுக்க வேகவேகமாக அவள் பின்னே சென்றாள்.

நூலகத்தை விட்டு சற்று இருந்த மரத்தின் அடியில் நின்றிருந்தவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்த வண்ணம் இருந்தது.

"அமுதி!!!!!" நர்மதாவின் குரலில் இதழ்களை அழுந்த கடித்து அழுகையை விழுங்க முயற்சித்து தோற்றாள் அவள்.

"அம்மு????எதுக்குடி இந்த அழுகை???" என்றவாறு அவள் முகத்தை தன்னை நோக்கி நர்மதா திருப்ப,

கண்களில் குளம் கட்ட மூக்கு நுனி சிவந்து அழுகையை அடக்க போரடியவளை கண்டு திக்கென்றது இருந்தது நர்மதாவிற்கு.

"அது ஜஸ்ட் ஒரு கமெண்ட் அமுதி??? செலப்ரட்டீஸ்க்கு இந்த மாதிரி ஒரு கமெண்ட் வர்றது சகஜம் தானே??"

பதிலில்லை அவளிடம்

"அமுதி!!!!!! டூ யூ லவ் திரவியம்????" என்றவளின் பார்வையில் இருந்த கூர்மையில் தவித்து தலை குனிந்தாள் அமுதினி.

"சொல்லு டி எனக்கு பதில் வேணும் நான் கூட ஏதோ ஜஸ்ட் க்ரஷ்ஷூன்னு தான் நெனைசசுட்டு இருந்தேன் ஆனா இப்ப உன் அழுகையை பார்த்தா அது தப்போன்னு தோணுது????

அவனை ரசிச்சு ஒரு பொண்ணு கமெண்ட் பண்ணிருக்கா அதை உன்னால தாங்க முடியலை இப்புடி அழுது கரையிற இதை வெறும் ஈர்ப்புன்னு மட்டும் நான் நம்ப தயாரா இல்லை??? எனக்கு பதில் சொல்லு" என அவள் அதட்டிட,

அதற்கு மேலும் அமைதியாக இல்லாது

"எனக்கே அது இன்னும் தெளிவா தெரியலை நர்மு ஆனா இப்போ இந்த கமெண்ட் பாத்தா அப்பறம் என்னால அதை சாதாரணமா எடுத்து கடக்க முடியலை டி அவரை ரசிக்கிறதை என்னால சத்தியமா தாங்க முடியலை இப்போ இந்த நிமிசம் என் மனசை ஒண்ணை சொல்லுது அவர் மேல ஈர்ப்பையும் தாண்டி ஒரு உணர்வு எனக்கு இருக்கு" என தலைகுனிந்து கூறியவளை கண்டு பரிதாபம் தான் எழுந்தது நர்மதாவிற்கு.

அமுதினியின் இந்த ஆசை முட்டாள்தனமான ஒன்றாகவே தெரிந்தது அவளது ஆருயிர் தோழிக்கு.

பின்னே சாதாரணமான ஒருவள் பிரபலத்தின் மீது காதலை வளர்த்தாள் அது நடக்க கூடிய ஒன்றா என்ன???

முதலில் இவளிற்கு தானே அவன் மீது ஈர்ப்பு ரசிப்பு அதையும் தாண்டிய உணர்வு எல்லாம் ஆனால் அவனிற்கு இவள் பத்தோடு பதினொன்றான ரசிகை மட்டும் தானே????

சாதாரண மனிதர்களின் ஒருதலை பட்ச காதலே இங்கு தோல்வியடையும் போது அமுதினி நேசிப்பது எட்டாக்கனி அல்லவா???

ஒருவேளை அமுதினியின் இந்த உணர்வு தோல்வியடைந்தால் அதை இவளால் தாங்கி கொள்ள இயலுமா???

அமுதினியை அந்த உணர்வுகளின் குவியலில் மாட்டி கொள்ளாமல் இருக்க தடுக்கும் வழி அறியாது தவித்து நின்றாள் நர்மதா.

கருத்து திரி


 
அமுதம் 3


கண்களில் நீர் வழிய விட்டத்தை பார்த்தவாறு படுத்திருந்தாள் அமுதினி.

வழிந்த கண்ணீர் காய்ந்து அதன் உப்பு தன்மையை காட்டும் விதமாக கன்னங்களில் ஓரத்தில் உப்பு வெள்ளையாய் ஒரு கோடு போல் படிந்து காய்ந்திருந்தது.


நர்மதா அந்த கமென்ட்டினை காட்டி

முழுதாக முற்று முழுதாக இரண்டு நாட்கள் கடந்து விட்டன. ஆனால் அதன் தாக்கத்தில் இருந்து இன்னும் இவளால் மீளவில்லை.


"வாவ் வாட்ட எக்ஸ்ப்ரஷன் அப்புடியே அள்ளி கட்டிக்கனும் போல இருக்கு!! புசுபுசுன்னு இருக்குற கன்னத்தை அப்புடியே கடிச்சு….! அந்த செயின்னை‌ கடிச்சுட்டு என்னம்மா எக்ஸ்ப்ரஷன் கொடுக்குறீங்க அப்புடியே என் மனசு உருகி உங்க காலடியில விழுந்துடுச்சு லவ் யூ லவ் யூ சோ மச்." இடையே இடையே வெட்க ஸ்மைலிகளும் முத்த ஸ்மைலிகளும் இடம் பெற்றிருந்த அந்த கமென்ட்டே மீண்டும் மீண்டும் அவள் நினைவில் வந்து கொள்ளாமல் கொன்று கொண்டிருந்தது என்றால்,


"வேண்டாம் அமுதி வெறும் ஈர்ப்போட நிறுத்திக்கோ! அதுக்கு மேல எந்த ஒரு உணர்வுக்கும் அவன் மேல வர மனசுக்கு இடம் கொடுத்துடாதா?‌ விளக்குனு தெரிஞ்சே அதுல விழுகுற விட்டில் பூச்சியா உன் நிலைமை மாறிடாமா பாத்துக்கோ?

இந்த முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்படலாமா? கிட்டதாயின் வெட்டேன மற இந்த மாதிரி பழமொழி எல்லாம் நம்மளை மாதிரி இருக்குவங்களுக்கு தான் சொல்லி வச்சுருக்காங்க!


நடக்கவே நடக்காத ஒரு விஷயத்துக்கு ஆசைப்படுற முட்டாள் நீ இல்லையின்னு நம்புறேன்! நீ நிதர்சனம் தெரிஞ்ச புத்திசாலின்னு நான் நெனச்சிட்டு இருக்கேன்! பாத்துக்கோ அவ்ளோதான் நான் சொல்வேன்" என்ற நர்மதா வின் வார்த்தைகள் ஒருபுறம் கூராய் அவள் மனதை கிழித்து கொண்டிருக்கிறது.


அவள் வார்த்தைகளில் இருந்து உண்மைகள் அனைத்தும் அமுதினியின் அறிவுக்கு புரிந்தாலும் ஆசை கெட்ட மனம் அதை ஏற்க மறுத்து அடம் பிடித்தது.


இதோ நர்மதாவின் வார்த்தைகளில் இருந்து உண்மை அவளை சுட்டதால் கிட்டதட்ட மூன்று நாட்களுக்கு மேலாகியும் அவனது எந்த பதிவையும் பார்க்கவில்லை அவள்.


ஒவ்வொரு முறையும் இன்ஸ்டாவில் வரும் நோட்டிபிக்கேஷனில் அவள் மனம் தடுமாற அதனை இறுக்க பிடித்து அடக்கி வைத்திருக்கிறாள்.


அவனை பார்க்காது இந்த மூன்றா நாட்களும் அவளிற்கு நரகமாய் தான் கழிந்தது. இதயத்தின் ஓரத்தில் ஏற்பட்ட வலியை அவள் கண்டும் காணாமல் விட அதன் தாக்கம் அவள் கண்களில்!

விடாது கண்ணீரை பொழிந்த வண்ணம் இருந்தன.


அழுகையை அவள் சுதந்திரமாக வெளிப்படுத்திட முடியாதல்லவா?


அன்னையின் கேள்விக்கு பயந்து தலைவலி என கூறி ரூமிற்குள் அடங்கிவிட்டாள்.


அப்படி அவளை ரூமிற்குள்ளே அடைகாக்க அவளது அன்னை விட்டுவிடுவாரா என்ன?

அவருக்கு பயந்தே தனது கண்ணீரை அடக்கி கொண்டு இயல்பாக நடமாடி கொண்டிருந்தவள் கிடைக்கின்ற சிறிது நேர தனிமையில் தலையணையை கண்ணீரில் நனைத்தால் என்றால் பொய்யல்ல.


இயல்பாக அவள் காட்டி கொள்வதாக அவள் நினைக்க அவளது முகம் அப்பட்டமாக அவளது வாட்டத்தை எடுத்துரைக்க அதனை வீட்டினரும் கவனித்திருக்கின்றனர் என்பதை அப்போது அவள் அறியவில்லை.


வாரவிடுமுறையை ஒட்டி ஏதோ உள்ளூர் விடுப்பும் சேர்ந்ததில் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இல்லையென்றால் நர்மதாவின் குத்தும் பார்வையில் இருந்து அவளால் தப்பித்திருக்க முடியாதே?


**********************************


"செட்டிநாடு உணவகம்" அந்த காலை வேளையிலேயே பரபரப்பாக இயங்க ஆரம்பித்து விட்டது. காலை ஏழு மணியளவில் உணவகம் திறந்தால் இரவு அவர்களாக இழுத்து மூடினால் மட்டுமே உண்டு. அந்த அளவிற்கு அந்த ஏரியாவில் புகழ்பெற்ற உணவகம் அது.


பெயருக்கேற்றாற் போல அனைத்தும் செட்டிநாடு உணவுகளே!! செட்டிநாட்டிற்கு பெயர் போன அந்த ஊரில் நிறைய உணவுகள் இருந்தாலும் இந்த உணவுகம் அனைத்திலும் இருந்து வேறுபட்டதே.


எந்நேரமும் ஆட்கள் கூடிய வண்ணம் தான் இருப்பர்.


தனது மணியோசையின் மூலம் அன்றைய நாளை துவக்கியிருந்தார் அதன் உரிமையாளாரான மல்லம்மாள்.

விளக்கேற்றி சாமி கும்பிட்டு முடித்த நேரம் ஆட்கள் மொய்க்க தொடங்கியிருந்தனர்.


"மொதச் சாப்பாடு போயாச்சா கண்ணு" கேஷ் கவுண்டரில் அமர்ந்திருந்த தனது மகனை நோக்கி கணீர் குரல் எழுப்ப,


"ஆச்சும்மா பிள்ளைங்க சாப்பிட ஆரம்பிச்சிருப்பாங்க" என பதில் வந்தது அங்கிருந்து.


மூன்று வேளையும் செய்யப்படும் உணவில் முதல் உணவு அங்கிருக்கும் குழந்தைகள் இல்லத்திற்கு அனுப்பப்படுவது அவர்கள் உணவகத்தின் வழக்கம்‌.


மல்லம்மாளின் மாமானார் அவருடைய தகப்பனார் காலத்தில் இருந்தே இவ்வழக்கம் இருந்து வருகிறது.


குழந்தையும் தெய்வமும் ஒன்றே என்பதில் தீராத நம்பிக்கை கொண்டவர் சொங்கலிங்கம் ஆக முதல் உணவினை குழந்தைகளுக்கு அளித்தால் அது தெய்வத்திற்கு படைத்ததற்கு சமம் என்ற கொள்கை உடையவர் ஆக வருடங்கள் கடந்தும் அவ்வழக்கத்தினை மாற்றாது கடைப்பிடித்து வருபவர் தனது வாரிசுகளுககும் அதனை கற்று தர மறுக்கவில்லை.நிற்காது அடுத்தடுத்து கூட்டம் அலைமோத பணம் வாங்கி போட்டே களைந்து போனான் திரவியம்.


வேலையில் கவனமாக இருந்தாலும் வினாடிக்கு ஒருமுறை அவன் விழிகள் தொடுதிரையை தொட்டு பார்ப்பதை கவனித்த மல்லம்மாளின் புருவங்கள் சுருங்கின.


'என்னாச்சு இந்த பையனுக்கு!' என்றவரின் சிந்தனையை அதற்கு மேல் வளர்க்க முடியாது வேலைகள் இழுத்து கொண்டன.


ஒருவழியாக காலை உணவிற்கு பின் கூட்டமே சிறிதே குறைந்திருக்க

"என்னாச்சு சாமி? என்னத்துக்கு அந்த போனையே பாத்துட்டு இருக்க??"என்றவரின் கேள்விக்கு என்ன பதில் சொல்லுவான்?


அவனது விருப்பமானவளிடம் இருந்து மூன்று நாட்கள் மேலாகியும் அவன் போட்ட எந்த வீடியோவிற்கும் லைக் வரவில்லை என்றா?


"இல்லம்மா சும்மா தான் பாத்தேன்"


"இல்லையே கண்ணு நீ வேலையில இறங்கிட்டா கவனம் சிதறாதே ஆனா‌ இன்னைக்கு அப்புடி இல்லையே!

ஏங் கண்ணு வீடியோவுக்கு எவனும் அசிங்கமா திட்டி புட்டானுங்களா? அதை எல்லாம் பெருசா எடுத்துக்காதா சாமி உனக்கு பிடிச்சதை நீ பண்ணு" பேசி கொண்டே சென்றவரை


"ம்ம்மா ம்ம்மா" என இடைநிறுத்தியவன் "நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்லம்மா அதெல்லாம் மொதல்ல தான் அப்புடி கமெண்ட் பண்ணாங்க இப்போ எல்லாம் அப்புடி இல்லைம்மா ஒரு நாள் வீடியோ போடலைனாலும் ஏன் போடலைன்னு தான் கேட்குறாங்க"


"அப்புடியா சரி சாமி எதுனாலும் மூஞ்சி சுணங்காதய்யா அம்மாவுக்கு என்னவோன்னு இருக்கு நீ சந்தோஷமா இருக்கணும்னு தான் நீ இப்புடி வீடியோ போடுறதுக்கு நம்ம சொந்தக்காரங்க எல்லாம் ஏசுனாலும் உனக்காக உன் சிரிப்புக்காக தான் நானும் அப்பாவும் அவுங்க பேசுனாலும் வாங்கிட்டு உனக்கு துணையா நிக்கிறோம்.


முன்னாடி ஏசுனவுங்க கூட இப்போ உன் கூட ஒரு வீடியோல வரணும்னு வந்து ஒட்டுறாங்க எதையும் மனசுல வச்சு மருகாதய்யா" என்றவரின் பேச்சில் தனது முகச்சுணக்கம் அவரை பாதித்திருக்கிறது என்பதை உணர்ந்தவன் நிமிடத்திலு தனது முகபாவனையை மாற்றியவன்,


"ஒண்ணுமில்ல ம்மா அப்புடி எல்லாம் எதுவும் இல்லை ப்ரண்ட் ஒருத்தன்ட்ட இருந்து மெசேஜ் வரலை அதான் பாத்துட்டு இருக்கேன்" என சமாளிக்க,


"வரலையின்னா என்ன சாமி நீ பண்ண வேண்டியது தானே அந்த தம்பிக்கு அங்க நிலைமை எப்புடியோ" என்றவர் பேசி கொண்டிருக்கும் போதே சொக்கலிங்கம் வந்து விட "அப்பா வந்துட்டாரு காய்கறி எல்லாம் வந்துருக்கும் நா போறேன் நீ இங்க பாத்துக்கோ" என அவர் நகர்ந்து விட அவர் சொல்லி சென்ற வார்த்தைகளின் தாக்கத்தில் நின்று விட்டான் திரவியம்.


'அம்மா சொன்னது போல் அவளுக்கு அங்கே என்ன நிலைமையோ? எங்காவது ஊருக்கு சென்றிருக்கலாம்? இல்லை என்றால் உடம்பிற்கு ஏதாவதா?' என குழம்பி தவித்தவன் பேசாமல் நம்மளே மெசேஜ் பண்ணிடலாமா என நினைத்த நொடி தயக்கம் வந்து ஒட்டி கொண்டது.


இதுவரை கமெண்ட் கூட செய்திராதவளிடம் எப்படி சென்று பேசுவது தவறாக நினைத்து விட்டாள்? இல்லை அவளின் பெற்றோர் எப்படியோ தான் செய்யும் மெசேஞ்ஞை அவர்கள் பார்த்து விட்டு அதனால் அவளுக்கு ஏதும் பிரச்சனை வந்து விட்டால் என்ன செய்வது' என மனம் அவனை போட்டு குழப்ப அலைபாயும் மனதினை கட்டுப்படுத்தி அப்போதைக்கு அவளின் நினைவினை ஒதுக்கி வைத்தவன் வேலையில் கவனமானான்.இரவு உணவகத்தை மூடிய நேரம் மணி பதினொன்று. வேலை செய்பவர்கள் இரவு உணவினை அங்கேயே முடித்து விட்டு கிளம்ப அனைத்தையும் சரி பார்த்து விட்டு திரவியம் கிளம்பினான்.


சொக்கலிங்கத்தை இரவு எட்டு மணிக்கு அனுப்பி விட்டான். மல்லம்மாள் காலையில் வந்தால் மதியம் வரை இருப்பார் அதற்கு மேல் அவரை விடாது வீட்டிற்கு அனுப்பி விடுவான். இனி காலையில் அவனின் தந்தை வந்து திறந்து கொள்வார் எப்போதும் அவர் தான் வந்து திறப்பார் இவன் வீடியோ ஏதாவது எடுக்க வேண்டும் என்றால் எல்லாத்தையும் முடித்து விட்டு தான் லேட்டாக வருவான். இன்று காய்கறி லோட் ஏற்ற சென்றதால் இவன் செல்ல வேண்டிய சூழல்.


"ம்ம்ம் நாளைக்கு சீக்கிரம் போக வேண்டியது இல்லை" என பேசியவாரே படுத்தவன் மொபைலை எடுக்க வழக்கம் போல் அவனது விழி ஸ்வீட்டி என்ற அவளது ஐ.டியை தேடியது.


அவளிடம் இருந்து எந்த ஒரு லைக்கும் வந்திருக்கவில்லை. வண்டாய் அவன் மூளையை அவள் குடைய ஆரம்பிக்க அதற்கு மேல் முடியாது அவள் ஐ.டியை பார்க்க ஆன்லைனில் இருப்பதற்கான பச்சை கலர் எரிய நேரத்தை பார்த்தான் பதினொன்றரை.


இத்தனை நேரம் கடந்து ஒரு பெண்ணிற்கு அதுவும் முகம் தெரியா பெண்ணிற்கு மெசேஜ் செய்வதா? ஒரு நொடி அவன் மனம் தடுமாற,


இத்தனை நாட்கள் என்னாயிற்றோ என அவன் தவித்த தவிப்பு அவன் கண் முன் எழ மூளையின் கட்டளையையும் மீறி "ஹாய்" என டைப் செய்து முடிப்பதற்குள் ஒரு வித அவஸ்தை அவனுடலில். கண்களை இறுக மூடி அவன் அதனை அனுப்பி விட சட்டென ஒரு உணர்வு குவியல் உள்ளங்கை எல்லாம் வேர்த்திருந்தது. ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டு தன்னை சமன் செய்தவனுக்கு


அவளின் பெற்றோரோ வேற யாரேனேம் மெசேஜ்ஜை பார்த்திருந்தால் என்ன செய்வாய் என மனது வாதாடி அவனை கண்டிக்க,


அதில் தனது அவசரதனத்தை எண்ணி நொந்தவன் வேகமாக அதனை டெலிடா செய்ய போக அங்கே அந்த மெசேஜ் பார்க்கப்பட்டு விட்டதற்கான அறிகுறி விழ மூச்சடைத்து போயிற்று இவனிற்கு.

அழகன் வருவான்!!


படிச்சுட்டு அப்புடியே போகாமல் உங்களோட எண்ணவோட்டத்தை என்னோட பகிர்ந்து கொள்ளுங்கள் நட்பூக்களே.

 
அமுதம் 4

திரவியத்திற்கு சற்றும் மாறாத நிலையில் இருந்தாள் அமுதினி.
அவனின் நினைவுகளில் உறக்கம் வராமல் தவித்து கொண்டிருந்தவளுக்கு கைக்கு எட்டிய தொலைவில் அலைப்பேசி இருந்தும் அதனை எடுக்க பயமாக இருந்தது.

எடுத்ததும் அவள் விழிகள் எங்கே செல்லும் என்று அவளுக்கு தெரியாதா என்ன?

முயன்று தன்னை கட்டுப்படுத்தி கொண்டவளுக்கு அவளது மனதினை கட்டுப்படுத்த வழி தெரியாது போயிற்று.

அவனை பார்க்காதே என விழிகளுக்கு தடை போட்டவளால் மனதிற்கு கடிவாளம் இட முடியவில்லை.

அவளின் நினைவுகளை செவ்வனே அது தட்டி எழுப்ப அதில் மீள முயன்று தோற்று போனாள்.

நிஜ விழிகளுக்கு தானே தடை நிகழ் விழிகளுக்கு இல்லையே என அவளது அக அண் அவன் உருவத்தை அட்சுபிசராமல் படம் பிடித்து காட்ட அவனது நினைவுகளில் இருந்து விடுபட துடித்து தான் போனாள்.

அவளின் துடிப்பை இன்னமும் அதிகரிப்பது போல் இன்ஸ்டாவில் செய்தி வந்திருப்பதாக சத்தம் எழ 'இந்நேரத்தில் யார்' என எடுத்து பார்த்தவள் நோட்டிபிக்கேஷனில் தெரிந்த திரவியத்தின் பெயரை கண்டு மூச்சு விட மறந்து சிலையானாள்.

கண்கள் இரண்டும் நிலைகுற்றி நிற்க இதற்கு மேல் என்னால் சுவாசிக்காமல் இருக்க முடியாது என நுரையீரல் வேகம் கொண்டு இயங்க அதன் விளைவு பெரும் இருமலுடன் அவளது வாய் திறந்து காற்றினை உள்ளிழுத்து கொண்டது.

படபடக்கும் இதயத்தின் மீது கைகளை வைத்தை அமுக்கியவள் தான் காண்பது நிஜம் தானா என கண்களை கசக்கி விரித்து சுருக்கி என பார்த்தும் அவனது பெயர் மறையாமல் இருக்க 'ஒருவேளை பிரம்மையோ' என எழுந்து முகம் கழுவ சென்றவள் நன்றாக நீரை முகத்தில் அடித்து கழுவி விட்ட வந்து பார்க்க அப்போதும் பெயர் மறையாமல் இருக்க நிஜத்தை அறிந்தவளின் முகம் அதிர்ச்சியை பிரதிபலித்தது.

அதனை எடுத்து பார்த்தவளின் இதயம் ரயிலின் வேகத்திற்கு இணையாக துடிக்க நடுங்கிய விரல்களுடன் அவனது மெசேஜ்ஜை ஓபன் செய்தாள்.

"ஹாய்" இரண்டு எழுத்துக்கள் வெறும் இரண்டே இரண்டே எழுத்துக்கள் அவள் உயிரின் ஆழம் வரை தொட்டு சென்றது.

திரையை பார்த்தவளின் விழிகளில் மெல்லிய நீர் படலம் அதற்கு மாறாக இதழ்களில் மெல்லிய புன்முறுவல்.

அந்நொடி அவளிற்கு வேறு எதுவும் ஞாபகம் இல்லை. அவனை பார்க்க கூடாது என தனக்குத்தானோ அவள் போட்டு வைத்த அரணை மறந்தாள் அவன் தனக்கு எட்டாத கனி என்பதை நினைக்க மறுத்தால் நர்மதாவின் எச்சரிக்கையை மறந்தாள் மொத்தத்தில் அவளையே மறந்து அவனது இரண்டு எழுத்துக்களில் இதயத்தில் மகிழ்ச்சி பூ பூக்க நின்றவளின் விரல்கள் ஆவலாய்

"ஹாய்!!!!" என அனுப்பிய நொடி அவளது உடலில் "குப்பென்ற" உணர்வு உடல் முழுவதும் பரவி அவளை சிவந்திட செய்தது.

மெல்ல அவனது மெசேஜ்ஜை அவளது விரல்கள் ஆசையாய் வருடி அவனையே வருடும் உணர்வு அவளுடலில்!!!!

எச்சில் விழுங்காது பயத்தில்‌ உரைத்திருந்தவனின் உள்ளம் பதிலுக்கு அவளிடம் இருந்து "ஹாய்" என்று வந்ததும் தான் நிம்மதி பெரூமூச்செறிந்தது.

ஒரு நொடி ஒரே ஒரு விநாடி அவனது உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை சிலிர்த்து அடங்கியது!!

முதலில் இருந்த தயக்கம் இப்போது இல்லை போலும் அவனிடம்!

"என்னாச்சு?" தயங்காமல் வந்தது வார்த்தை.

தான் பதில் அனுப்பிய அடுத்த நொடி அவனிடம் இருந்து பறந்த வந்த அடுத்த கட்ட விசாரணையில் அவளது இதயம் எகிறி துடித்தது.

"என்ன? என்னாச்சு"

"இல்லை மூணு நாளைக்கு மேலாகியும் எந்த வீடியோக்கும் லைக் வரலையே அதான் என்னாச்சுன்னு?? உடம்பு எதுவும் சரியில்லையா?" என அவன் அனுப்பி சில நொடிகள் வரையிலும் அவளிடம் இருந்து பதில் வரவில்லை.

எங்கே பதில் வரும் அவள் தான் அங்கே சிலையாயிருந்தாளே!!

அவனது மூன்று நாட்கள் என்ற வார்த்தை அவளது நினைவுகளை தட்டி எழுப்பி எதனால் அவள் அப்படி இருந்தால் என்ற காரணத்தையும் தேவையே இல்லாமல் தட்டி எழுப்பியதில் அதிர்ச்சியில் உறைந்திருந்தாள்.

அவள் அதுவரை மறந்திருந்த விஷயம்! அவனால் மறந்திருந்த விஷயம்? அவனாலயே நினைவு வந்தது விந்தை தான்?

சற்று முன் ஆனந்தத்தில் துளிர்த்த கண்ணீர் துளிகள் இப்போது துயரத்தில் கலங்கி துளிர்த்தன!!

கண்ணீரில் கூட ஆனந்தத்திற்கும் துயரத்திற்கும் எத்தனை வேறுபாடுகள்??

முன்பு மகிழ்ச்சியில் நடுங்கிய விரல்கள் இப்போது துயரத்தில் நடுங்கின??

ஆனால் இவையாவும் "என்னாச்சு ஏதும் தப்பா கேட்டுட்டேனா சாரி" என்ற வார்த்தைகள் அவனிடம் இருந்து வரும் வரை மட்டுமே நீடித்தன!!

அதனை கண்ட நொடி மனம் மீண்டும் மகிழ்ச்சிக்கு தாவ இதயத்தின் கண்ணாமூச்சி ஆட்டத்தில் தடுமாறி போனாள் அமுதினி.

அவளின் துயரத்தை கிடப்பில் போட்டு விட்டு ஆசை கொண்ட இதயம் அவனின் வருத்தத்தை துடைக்க கிளம்பிவிட்டன.

"இல்லை!! இல்லை அப்புடி எல்லாம் எதுவும் இல்லை கொஞ்சம் உடம்பு சரியில்லை" வாய்க்கு வந்து பொய்யை அவிழ்த்து விட்டாள்.

"ஓ..இப்போ பரவாயில்லை"

"ம்ம்ம் பெட்டர்"

அதற்கு மேல் அவர்களின் உரையாடலை தொடர்வதில் திரவியத்திற்கே விருப்பமில்லை. இத்தனை நேரம் கடந்து ஒரு வயது பெண்ணிடம் பேசியது அவனிற்கு உறுத்த ஆரம்பித்திருக்க பேச்சினை வெட்டும் நோக்கத்தோடு
"ஓகே...டேக் கேர்" என்ற அனுப்பிய கையோடு ஆப்லைனும் சென்றுவிட்டான்.

அதுவரை தோன்றாத உணர்வு இப்போது அவனை ஆக்ரமித்திருந்தது. ஏனோ இந்த இரவில் அவளிடம் உரையாடியது தவறோ என மனம் உறுத்த அதனை உறுதி செய்தது மூளை.

ஆர்வகோளறில் பேசிவிட்டவனிற்கு இப்போது அது தவறு என புத்தியில் உரைக்க செய்வதறியாது திகைத்தான் திரவியம்.

ஆசை கொண்ட மனம் அவனிடம் அடுத்த உரையாடலை எதிர்பார்த்து காத்திருக்க சட்டென அவன் பேச்சை முறித்ததில் மனம் சிணுங்கி சுருண்டு கொண்டது.

அலைப்பேசியை நெஞ்சோடு அணைத்து கொண்டவளுக்கு மெல்லிய வெட்கம் தோன்ற விடிவிளக்கின் உதவியால் எதிரே இருந்த கண்ணாடியில் தன்னை கண்டாள்.

அந்த மங்கிய வெளிச்சத்திலும் அவளது முகம் பிரகாசித்து விசிக்க உதடுகளில் சற்றே வெட்கபுன்னகை, உப்பிய கன்னங்கள் சற்றே பளபளக்க என அழகாய் தெரிந்தால் அவளுக்கே.

அதற்கு மேலும் அவளையே அவளால் காண முடியாது வெட்கம் தடுக்கு முகத்தை மூடி கொண்டவளுக்கு இபாபோதும் அவனுடன் பேசிய உரையாடல் "ஜிவ்" என்ற உணர்வை கொடுக்க கன்ன கதுப்புகள் சூடேறின.

கன்னங்களின் வெதுமையை குறைக்க அதனை அழுந்த தேய்த்தவளுக்கு மனதில் மத்தாப்பு பூக்கள்.

சிறகில்லா பறவையாய் அவளது மனம் பறக்க துடித்தது.

"ஒரு வாரம் ம்ஹீம் இல்லை வேண்டாம் ஒரு நாலு நாள் அவன் வீடியோக்கு நீ லைக் பண்ணாம இருந்து பாரு நீ ஒருத்தி இருக்கேன்றதையே அவன் மறந்துடுவான் அவனை பொறுத்தவரைக்கும் அவனுக்கு இருக்குற ரசிகைகள் கூட்டத்துல நீயும் ஒருத்தி அவ்வளவுதான் நீ நெனைக்குற மாதிரியோ இல்லை பாக்குறமாதிரியோ அவன் உன்னை நெனைக்கவும் மாட்டான் பார்க்கவும் மாட்டான்" என்று கூறியிருந்த நர்மதாவிடம்,

"இல்லை அவன் என்னை மறக்கலை அவனுக்கு நான் ஸ்பெஷல் தான்" என கத்தி கூற வேண்டும் போலிருந்தது அவளிற்கு.

உடனே தோழிக்கு இந்த செய்தியை கூறும் பொருட்டு அலைப்பேசியை எடுத்தவளை தடுத்து நிறுத்தியது அறிவு.

"என்ன பண்ண போற??"

"நர்மு கிட்ட சொல்ல போறேன்"

"சொல்லி!? சொல்லி என்ன பண்ண போற நீ சொன்னதும் ஆஹா அப்புடியான்னு சந்தோஷப்படுவாளா இல்லை முட்டாள்!! உன்னை தடுக்க பார்ப்பா திரவியம் கூட பேசவிடாம செய்வா"

"ச்சு..ச்சு என் நர்மு அப்புடி பட்டவ இல்லை என் நல்லதுக்கு தான் அவ!!!?" என்றவளை இடைவெட்டியது அறிவு.

"எது நல்லது அவ வார்ன் பண்ணதை மறந்துட்டியா?? உனக்கு திரவியத்து மேல ஆசைன்னு தெரிஞ்சும் அவனை மறந்திட சொன்னாளே! அப்புடி நீ அவன் மேல் இருக்கிற பீலீங்க்ஸ்ல இருந்து வெளிய வரலைன்னா உங்க வீட்டுல சொல்லிடுவேன்னு சொன்னாலே எல்லாத்தையும் மறந்துட்டியா? என்ன" என அறிவு எடுத்து கூற கூற அதன் நினைவுகள் கண்முண் வந்தன.

அன்று அமுதினி அழுத அழுகையை கண்ட நர்மதா அவளிடம் எச்சரித்திருந்தாள் "இங்க பாரு அமுதி நடக்காத ஒண்ணை நெனைச்சு நீ பீலிங்கஸ்ஸை வளர்த்துகிட்டே இருக்க அவன் மேல் உன்னோட முட்டாள்தனமான உணர்வுகள்ள இருந்து வெளி வரப் பாரு உன்னோடு ஈர்ப்பு ஈர்ப்பா இருக்குற வரை நல்லது அதோட எல்லை கோட்டை தாண்டுனா நல்லதுக்கு இல்லை அவன் கிட்ட இருந்து வெளி வர பாரு இல்லைன்னா நான் இதை உங்க வீட்டுல சொல்ல வேண்டியதா வரும் எனக்கு என் ப்ரெண்டோட சந்தோஷமும் உயிர்ப்பும் ரொம்ப முக்கியம் நீ மனசுடைஞ்சி போயிட கூடாது" என்றிருந்தாள்.

"அன்னைக்கு அவ அவ்வளவு சொல்லியம் இன்னைக்கு நடந்ததை சொல்லி போறியே முட்டாளே தான் நீ! நீ சொன்னா வேற வினையே வேண்டாம் அடுத்த நொடி அவ வீட்டாளுங்களுக்கு சொல்லிடுவா உனக்கு அது தான் இஷ்டம்னா போ போய் சொல்லு நான் தடுக்கலை"

"சொல்லலாமா விட்டா தப்பில்லையா??"

"சொன்னா நீ மாட்டிப்ப பரவாயில்லையா??"

அவளின் கேள்வி ஒவ்வொன்றிற்கும் எதிர்வாதம் புரிந்த அறிவின் பேச்சை மீள முடியாது அதற்கு கட்டுப்பாட்டாள் அமுதினி.

இதுவரை எந்த விஷயத்தையும் மறைத்திராத உயிர் தோழியிடம் முதல் முறையாக ஒரு விஷயத்தை மறைக்க போகிறாள்.

அறிவுக்கும் மனதிற்கும் நடந்த வாக்குவாதத்தில் அறிவு வெற்று விட அதன் சொல்லுக்கு அடி பணிந்தது மனம்.

காதல் வந்தால் அங்கே கள்ளத்தனமும் வந்து விடுமோ!!!!!!

அழகன் வருவான்!!!!!

படிச்சுட்டு உங்க எண்ணவோட்டத்தை பகிர்ந்துகிட்டீங்கன்னா எனக்கும் அடுத்த எபி போட ஆர்வமா இருக்கும் நட்பூக்களே. கீழே இருக்குற திரியில உங்க எண்ணங்களை பகிர்ந்துடுங்க இந்த கதையை பற்றி .

நன்றி 
அமுதம் 5

வழக்கம் போல் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பியிருந்தது. திரவியத்தின் வீடியோவிற்கு அமுதினியின் லைக்கும் அதில் அடக்கம்.

விடுமுறையை முடித்து கொண்டு கல்லூரிக்கு சென்றவளை நர்மதா ஆராய்ச்சி பார்வையுடன் வரவேற்க தன்னை இயல்பாக காட்டி கொள்ள படாதபாடு பட்டு விட்டாள் அமுதினி.

அகத்தை மறைத்தாலும் முகம் அவளது மகிழ்ச்சியை பறைசாற்ற முயன்று தனது உணர்வுகளை அடக்கி கொண்டாள் அவள்.

திரவியம் அன்று மெசேஜ் செய்ததோடு சரி அதன்பிறகு தேவைக்கு கூட அவள் பக்கம் வருவதில்லை. தினம் இரவுகளில் அவனது அழைப்புகளை எதிர்பார்த்து ஏமாற்றமடைபவள் நாளடைவில் தேறி கொண்டாள்.

இவளாக மெசேஜ் செய்யவும் தயக்கம் தடையிட்டது.

அவன் போடும் வீடியோக்களுக்கு கமென்ட் செய்ய அவளது கைகள் பரபரப்புக்கு நர்மதாவை நினைத்து அடக்கி கொள்வாள் ஏனெனில் அவளும் இவனை பாலோ செய்கிறாளே.

மூன்று நாட்களாக முகத்தில் சுரத்தில்லாமல் திரிந்த மகள் தற்போது இரண்டு நாட்களாக பழைய படி திரும்பியதில் தாய்க்கு மகிழ்ச்சியே.

ஏதோ தோழிகளுடன் மனக்கசப்பு என்று அதனை பெரிதுபடுத்தாமல் விட்டுவிட்டார் ஆனால் அவர் கேட்டிருக்க வேண்டுமோ அப்படி கேட்டிருந்தால் பிற்காலத்தில் மகளின் மனம் உடையாமல் தடுத்திருப்பாரோ!!

"சரசு!!" என்றவாறு செல்வராஜ் வர,

"இதோங்க ஆயிடுச்சு அஞ்சு நிமிசம் உட்காருங்க கொண்டு வந்துடுறேன்" என்றவரின் குரலை கேட்டு டைனிங்க டேபிளில் அமர்ந்தார்.

செல்வராஜ் அக்குடும்பத்தின் தலைவர் காரைக்குடியில் உள்ள அரசு பள்ளியில் பணிபுரிபவர்.மிகவும் கண்டிப்பான கட்டுகோப்பான மனிதர்.

அடுத்தடுத்து கார்த்திக்கும் அமுதினியும் கிளம்பி வந்தவர்கள் தந்தையை கண்டதும் அமைதியாக வந்தமர்ந்து கொண்டனர்.

சமயலை முடித்த சரஸ்வதி பாத்திரங்களை எடுத்து வைக்க செல்வராஜ் திரும்பி பிள்ளைகளை பார்க்க அடுத்த நிமிடம் எழுந்து கொண்ட இருவரும் ஆளுக்கொரு பாத்திரத்தை எடுத்து வந்து சரஸ்வதிக்கு வேலையை குறைத்திருந்தனர்.

அமுதினி வரும் போதே மூவருக்குமான மதிய உணவு டப்பாவினை எடுத்து வந்திருக்க செல்வராஜ் அதில் உணவினை இட ஆரம்பித்திருந்தார்.
கார்த்திக் மூவருக்குமான வாட்டர் பாட்டிலை நிரம்பி கொண்டு வர அமுதினி தந்தை உணவிட்ட டப்பாக்களை மூடி அவரவர் லன்ச் பேக்கில் வைத்து வேலையை முடித்தவர்கள் காலை உணவினை உண்ண ஆரம்பித்திருந்தனர்.

"கார்த்திக்!!!!!"

"ப்பா!!!"

"சொன்னது ஞாபகமிருக்கா??"

"இருக்குப்பா இனி வைக்க மாட்டேன் பாத்து கவனமா இருந்துப்பேன்" என பவ்யமாக கூறியவன் 'மொதல்ல உங்களையும் உங்க ப்ரண்ட் அந்த விக்கல் விருமாண்டியையும் ஹைக் பண்றேன் இருங்க' என மனதினில் கருவிக் கொண்டவன் வெளியே அமைதியாக இருந்து கொள்ள,

அண்ணனின் நிலையை நினைத்து சிரிப்பு வர தலையை குனிந்து கொண்டாள் அமுதினி 'பயபுள்ள ஒரு ஸ்டேட்டஸ் வச்சுட்டு மூணு நாளா படாதபாடு பட்டுட்டு இருக்கான்'

"இப்பவும் சொல்றேன் கார்த்திக் நம்ம சந்தோஷம் நம்மளோட அது வாட்சப்ல ஸ்டேட்டஸ் வச்சு எல்லாருக்கும் நான் சந்தோஷமா இருக்கேன்னு காட்டிக்க வேண்டிய அவசியம் இல்லை பாத்து நடந்துக்கோ"

"அமுதினி!!!"

'அடுத்தது நானா'

"சொல்லுங்க அப்பா"

"சந்தோஷத்தை மட்டும் இல்லை நம்ம துக்கத்தையும் கஷ்டத்தையும் கூட அடுத்தவர்களுக்கு காட்டிக்க வேண்டிய அவசியம் இல்லை உன் சந்தோஷமும் துக்கமும் உன்னோட பெத்தவங்க எங்களுக்கு தெரிஞ்ச போதும் உங்களோட சந்தோஷமும் துக்கமும் அடுத்தவங்களுக்கு தெரிஞ்சு அவுங்க கேள்வி கேட்குற‌ சூழ்நிலையை உருவாக்க வேண்டாம் என்ன??என்றவருக்கு தலையை பலமாக உருட்டி வைத்தாள் அமுதினி.

போனவாரம் முழுவதும் அவள் திரவியத்தின் நினைவில் தன்னிலை இழந்து சுற்றி கொண்டிருக்கையில் வீட்டிற்கு தந்தையின் பக்க உறவுகள் அவளின் சோகை இழந்த முகத்தை கண்டு விட்டு "என்னாச்சு செல்வா பொண்ணு மொகத்துல சுரத்தே இல்லை அப்புடி என்ன கஷ்டம் வந்திடுச்சு உன் பொண்ணுக்கு காலேஜ்ல எதுவும் பிரச்சனையோ பாத்து கவனமா இருந்துக்கோங்க" என துக்கம் விசாரிக்காத குறையாக அவளை விமர்சித்து சென்றிருக்க அப்போது செல்வராஜ் எதுவும் பேசாமல் அமைதியும் கடந்திட 'என்னடா எதுவும் சொல்லாமல் அமைதியா போறாரு' என அவள் நினைத்து அதனை மறந்திருக்க அதன் தாக்கம் இன்று வெளிப்பட்டது.

ஒருவழியாக காலை உணவினை முடித்து கொண்டு அவர் கிளம்பி சென்றிட "அப்பாடா!!!!" என‌ மூச்சை இழுத்து விட்டு ஆசுவாசமடைந்தனர் இருவரும்.

அதனை கண்டு சரஸ்வதி சிரிக்க,

"ம்ம்மா சிரிக்கிற நீ !!!! ஒரு வாட்சப்ல ஸ்டேட்டஸ் வச்சுதுக்கு மூணு நாளா‌ வறுத்தெடுத்துட்டு இருக்காரு இதை நீ என்னன்னு கேட்க மாட்டியா??" கார்த்திக் எகிற,

"உன்னை யாருடா வைக்க சொன்னது சரி வச்சதும் தான் வச்ச அவரோட ப்ரண்டுக்கு தெரியுற மாதிரியா வைப்ப"

"ம்மா நான் என்ன வேணும்னேவா வச்சேன் ஒரு சந்தோஷத்துல ஆர்வத்துல எவ்ரிஓன்(everyone)ஆப்சனை அமுக்கிட்டேன் அது இப்புடி ஆப்படிக்கும்னு எனக்கு தெரியாதே அவ்வ்வ்" என,

அதில் கிளுக்கி சிரித்தாள் தங்கை.

"ரொம்ப சிரிக்காத அமுது தின்னி உனக்கும் சேர்த்து தான் டோஸ் விட்டுட்டு போய்ருக்காரு"

"டேய் அப்புடி கூப்பிடாதன்னு எத்தனை தடவை சொல்லிருக்கேன் ம்மா பாரு இவன் மண்டைய ஒரு நாள் உடைக்க போறேன்"

"கார்த்திக் காலையிலேயே ஆரம்பிக்காம கிளம்பு மொதல்ல டைம் ஆச்சு" சரஸ்வதி விரட்ட கிளம்பி விட்டனர்.

வெளியே வந்தவர்களை மகேந்திரா ஸ்விப்ட்( Mahendra swift)க்ரே கலர் கார் வரவேற்க அதனை பார்த்ததும் கார்த்திக்கின் முகத்தின் பெருமை கலந்த கர்வம்.

"அடேய் அண்ணா ரொம்ப பொங்காத இதை ஸ்டேட்டஸ் வச்சதுக்கு தான் வாத்தி மூணு நாளா உன்னை‌ புரட்டி எடுத்தாரு" என அவள் சத்தமில்லாமல் சிரிக்க…

"போடி போடி அதையெல்லாம் டீல்ல விட்டுடனும்" என சட்டையை தூசு கட்டியவன் தங்கையை அழைத்து கொண்டு கிளம்பி விட்டான்.

கார்த்திக் பேர் சொல்லும் ஆடிட்டர்களில் இவனும் ஒருவன். கிட்டதட்ட நான்கு ஆண்டுகள் போராடி இந்த நிலையை அடைந்திருக்கின்றான்.

இந்த கார் செல்வராஜ் அவனின் போனவாரம் முடிந்த போன பிறந்த நாளிற்கு பரிசாக அளித்தது. முதல் தவணையை கட்டி அவர் வாங்கி கொடுத்து விட்டார் அடுத்தடுத்து இவன் கட்டி முடிக்க வேண்டும்.

இதுவரை தன்னுடைய சம்பள பணத்தை அவன் வீட்டிற்கு கொடுத்ததில்லை. அதற்கு அவசியம் இல்லை என்று விட்டார் தந்தை. முதல் மாத சம்பளத்தை கொடுக்க முயன்ற போது சம்பிரதாயமாக அதனை வாங்கி கொண்ட பெற்றவர்கள் அடுத்த நாள் திரும்ப அவனிடமே ஒப்படைத்து விட்டனர்.

"ஏன்ப்பா??" என்னறவனின் கேள்விக்கு

"வச்சுக்கோ கார்த்திக் இது உன்னோட உழைப்பு என் பிள்ளைக்கு சோறு போட்டு காப்பாத்துற அளவுக்கு என்கிட்ட தெம்பும் இருக்கு வருமானமும் இருக்கு இது ஒரு அப்பாவா என்னோட கடமை பிள்ளைக்கிட்ட காசு வாங்கி தான் சோறு போடணும்ன்ற நிலைமையில நான் இல்லை"

"அப்போ ஒரு மகனோட கடமை எதுவும் இல்லையாப்பா நானும் இந்த குடும்பத்துல ஒருத்தன் தானே"

"கண்டிப்பா இதுல உனக்கு சந்தேகமே வேண்டாம் உனக்கான கடைமை பெத்தவங்க எங்களுக்கு பெருமை சேர்க்குற மாதிரி நடந்துக்கிட்ட போதும் உன்னோட இந்த பணத்தை எல்லாம் சேர்த்து வச்சுக்கோ பின்னாடி உன் பொண்டாட்டி பிள்ளைகளுக்கு உதவும்.

நான் எப்புடி என் பிள்ளைகளுக்கு செய்தேனோ அதே மாதிரி நீயும் உன் பிள்ளைக்கு கடைசி வரைக்கு செய்ய வேண்டாமா? ஒரு அப்பாவா உன்னோட கடமை அது! பணத்தை சேர்த்து வை என்னைக்கா இருந்தாலும் அது உதவும்!!

ஏன் எனக்கே ஒரு இக்கட்டான சூழ்நிலையில பணம் தேவைப்பட்டுச்சுன்னு நீ தர மாட்டியா அப்போ இந்த பணம் இருந்தா நமக்கு உதவியாக இருக்கும்ல காசு இருக்குன்றதுக்காக கண்டப்படி செலவு செய்ய கூடாது சேர்த்து வைக்கிறதுல தப்போன்னுமில்லை" என கூறி அவர் மறுத்திருக்க அதற்கு மேல் வாதாடமால் இருந்து கொண்டான்.

"சரிப்பா நான் காசு தரலை ஆனா என் காசுல உங்க மூணு பேத்துக்கு அதுல நான்‌ செய்வேன் அதை நீங்க மறுக்க கூடாது" என தனது கருத்தையும் முன்வைத்து அதனை தந்தையை ஒப்பு கொள்ளவும் வைத்திருந்தான்.

இதோ இப்போது இந்த காரும் கூட அவனின் ஆசையே. அவனின் பணத்தில் வாங்க வேண்டும் என எண்ணம் அதனை நிறைவேற்றி வைத்திருந்தார் செல்வராஜ். அவர் சொன்னது போல் அவன் சேமித்த வைத்திருந்த பணம் சரியான நேரத்தில் இதற்கு உதவிற்று.

அன்று இருந்த மகிழ்ச்சியில் அவன் காரினை புகைப்படம் எடுத்து ஸ்டேட்டஸ் வைத்து விட ஆப்பு அதன் வடிவில் வந்தது. அதனை கண்டு விட்ட செல்வராஜின் நண்பர் "என்னப்பா காரு எல்லாம் பலமா இருக்கு பையனுக்கு அவ்வளவு வருமானம் போலயே ஏன் கேட்குறேன்னா நீ இன்னமும் டி.வி.எஸ்.ல சுத்திட்டு இருக்க ஆனா உன் பையனுக்கு காரு அப்போ வருமானம் பலமா வரும் போலயே பாத்துப்பா என்ன ஏதுன்னு விசாரிச்சுக்கோ எதுலயும் பையன் சிக்கிடமா" என மனதில் இருந்த பொறாமையை கொட்டி விட்டு செல்ல சுர்ரென்று ஏறியது செல்வராஜுக்கு.

ஆனால் கோபம் முழுவதும் கார்த்திக் மேல் தான் திரும்பியது. இவன் வைத்ததால் தானே இந்த பேச்சு எல்லாம் என்று. வீட்டிற்கு வந்ததுமே அதனை டெலிட் செய்ய சொன்னவர் அவனை காய்ச்சி எடுத்து விட்டார்.

"எவ்வளவு நக்கலா சொல்லிட்டு போறான் தெரியுமா? உன் பையன் எதுலையும் சிக்கிடமா பாத்துக்கோன்னு மறைமுகமாக சொல்லிட்டு போறான் இந்த பணம் நல்ல வழில வந்திருக்காதுன்னு இது எல்லாம் தேவையா?" என அவர் கத்த,

"ப்பா அவர் சொன்னதுக்கு அண்ணா என்னப்பா பண்ணும்?"அமுதினி தமையனுக்கு பரிந்து வர,

"யோசிக்கணும் அமுதினி ஒரு விஷயத்தை செய்ய போறம்னா அதோட சாதக பாதங்களை ஆராயனும் என்கிட்ட சொன்னமாதிரி அவன் இன்னும் நாலே பேருகிட்ட சொன்னா என்ன பண்ணுவ?? அடுத்தவங்களை பத்தி புரணி பேசுறதுன்னா மனுசங்களுக்கு அல்வா சாப்பிடுற மாதிரி வார்த்தைகளை தங்களோட இஷ்டத்துக்கு இட்டு கட்டி பேசி வைப்பாங்க நம்ம தான் ஜாக்கிரதையா இருக்கணும்?" என அவளிற்கும் குட்ட அவர் மறக்கவில்லை.

செல்வராஜ் சற்றே இல்லை இல்லை முழுமைக்கும் வித்தியாசமான மனிதர் தான். தங்கள் சந்தோஷம் தங்களோட அதனை சோஷியல் மீடியாவிலோ இல்லை வாட்சப்பில் ஸ்டேட்ஸ் வைத்தோ பிறருக்கு நான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன் பார் என காட்ட வேண்டிய அவசியம் இல்லை என திடமாக சொல்லுபவர்.

"ஒருத்தர் நினைப்பு மாதிரி எல்லாரோடதும் இருக்காது அமுதினி நம்ம சந்தோஷம் பிறருக்கு எரிச்சலை தரலாம் பொறமை வரலாம் நம்ம மட்டும் என் இப்புடியே இருக்கோம் இவுங்க எல்லாம் சந்தோஷமா இருக்காங்களேன்ற ஆதங்கம் வரலாம் இவுங்க மட்டும் எப்புடி சந்தோஷமா இருக்கலாம்ன்ற கோபமும் வரலாம் அதுல தறிகெட்டு தப்பான எண்ணங்களும் வர வாய்ப்பிருக்கு அப்புடி வர நம்மளே ஏன் வாய்ப்பை அவுங்களுக்கு கொடுக்கணும்.

நம்ம சந்தோஷமோ சோகமோ எப்பவும் அடுத்தவங்க கண்மை உறுத்தாத அளவுக்கு பாத்துக்கனும்" என்பது தான் அவரின் திடமான எண்ணம் அதில் பிள்ளைகளுக்கு சிறு சலிப்பு உண்டானாலும் இதுவரை அவரை மீறியதில்லை.

"அண்ணா என்ன பலமான யோசனை" என்றவளின் வார்த்தைகள் கார்த்திக்கின் யோசனையை கலைக்க,

"ஒண்ணுமில்லைடா சும்மா ஒரு யோசனை??"

"ஈவ்னிங் நீ வரியா இல்லை காலேஜ் பஸ்ல வந்திடவா??"

"ம்ம்ம் வேலை முடிச்சிருச்சுன்னா நான் வரேன் இல்லையின்னா நீ பஸ்ல வந்திடு அப்பறம் நாளையில இருந்து நீ காலேஜ் பஸ்லயே வந்திடு ஆசைக்கு இன்னைக்கு ஒரு நாள் போதும் அப்பறம் அப்பா அதுக்கும் திட்டுவாரு காலேஜ் பஸ்ஸீக்கு எதுக்கு தண்டாம பணத்தை கட்டிக்கிட்டுன்னு எனக்கு டைம் கரக்டா இருந்தா நானே உன்னை டெய்லியும் பிக்கப் டிராம் பண்ணிடுவேன் ஆனா என் வேலையில டைம்மிங் சொல்ல முடியாது அப்பறம் கஷ்டமாகிடும்??"

"சரிண்ணா இன்னைக்கு மட்டும் தான்" என அவன் கூறியதில் உள்ள உண்மை புரிந்து அவளும் ஒத்து கொண்டாள்.

பின் இருவருக்கும் இடையே பல பேச்சுக்கள் ஓடின.

"ஆமா எதுக்கு நீ போனவாராம் சோககடலில மூழ்கியிருந்த நானும் அப்போதைக்கு விட்டுடேன் என்ன பிரச்சனை?? காலேஜ்ல எதுவும் பிரச்சனையா சொல்லு??என அதுவரை இருந்த இயல்பு மாறி கண்டிப்புடன் அவன்‌ கேட்க,

நொடியில் ப்ரெண்டில் இருந்து அண்ணன் போஸ்ட்டிக்கு தாவியவனை கண்டு திகைத்து தான் போனாள் அவள்.

அழகன் வருவான்!!!!!


உங்களின் எண்ணவோட்டத்தை என்னுடன் கீழே உள்ள திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே.

நன்றி

 
அமுதம் 6

அன்று ஏதோ கல்லூரியின் பார்லிமென்ட் தினம் ஆதலால் மதியத்திற்கு மேலான வகுப்புகள் ரத்து செய்யப்பட்டிருந்தன.

பார்லிமென்ட் என்பது கல்லூரியில் டிபார்ட்மெண்டிற்கு இருவர் மாணவர்களுக்கான தலைவரும் துணை தலைவரும் தேர்ந்தெடுக்கபட்டு மாதத்திற்கு ஒருமுறை மீட்டிங் வைப்பர்.

அதில் மாணவர்களின் தலைவரோ இல்லை துணை தலைவரோ தங்களுக்கு கொடுத்திருந்த பொறுப்புகளை சரிவர செய்யவில்லை எனில் பார்லிமென்டில் சக மாணவர்கள் அவர்கள் மீது கம்ப்ளைட் கொடுப்பதற்காக நடத்தப்படும் மீட்டிங்.

அப்படி மாணவர்களின் கம்ப்ளைட் அதிகமாக இருக்கும் பட்சத்தில் மீண்டும் வோட்டிங் முறையில் வேறு தலைவரும் துணை தலைவரும் தேர்ந்தெடுக்கப்படுவர்.

"கேர்ள்ஸ் நீங்க எல்லாம் பல்டி அடிச்சிட மாட்டீங்களே கூட இருப்பீங்க தானே?"நர்மதா வினவ,

"ஏய் சந்தேகம் வேண்டாம்ப்பா கண்டிப்பா இருப்போம்" என்றனர் மற்றவர்கள்.

"நீங்க பல்டி அடிச்சாலும் சரி நாங்க பின் வாங்க போறது இல்லை கண்டிப்பா கம்ப்ளைன் பண்ணுவோம் என்ன அமுதி" என்க,

"டன் நர்மு" என்ற அமுதினியை அழைத்து கொண்டு பார்லிமென்ட் நடக்கும் இடத்திற்கு சென்றாள் நர்மதா உடன் அனைவரும்.

டிபார்ட்மெண்ட் ஹெச்சோடி(hod)களுக்காக காத்திருந்தவர்கள் அவர்கள் வந்ததும் வழக்கினை தொடர்ந்தனர்.

வரிசையாக ஒவ்வொரு டிபார்ட்மெண்டாக முடித்து விட்டு கடைசியாக இவர்கள் டிபார்ட்மெண்ட் வந்திருந்ததது.

அவர்களின் துறை மாணவர்களின் தலைவனும் துணை தலைவனும் முன்னே வந்து நிற்க,

"இஃப் யூ ஹேவ்வ எனி கம்ப்ளைட் ப்ளீஸ் ப்ரோசிட்( if you have a any complaint pls proceed) என்ற துறை ஆசியரின் வார்த்தைக்காக காத்திருந்த நர்மதா,

"எஸ் சார் வீ ஹேவ்(yes, sir we have) என்றபடி முன்னே வந்து நின்றார்கள் நர்மதாவும் அமுதினியும்.

வந்தவர்களை ஒரு நொடி புருவம் சுருக்கி பார்த்தான் மாணவர்களின் தலைவன் வேந்தன். பின் புருவங்களை ஏற்றி ஆரம்பிக்குமாறு சைகை செய்ய,

"ரொம்பதான்!!!!!" என முனங்கினாள் நர்மதா.

"உங்க கம்ப்ளைட்ஸ் நீங்க சொல்லலாம்" ஆசிரியர் அனுமதி அளிக்க வாய் திறந்தாள் நர்மதா.

"சார் இங்க சீனியருக்கும் ஜீனியருக்கும் இடையில எப்பவுமும் ஒரு வார்(war)நடந்துட்டு தான் இருக்கு அது இங்க இருக்குற எல்லாருக்குமே தெரிஞ்ச விஷயம் தான்" என்ற நர்மதாவை இடைவெட்டினான் வேந்தன்.

"உங்களோட சொற்பொழிவை யாரும் இங்கு கேட்க கூப்பிடலை தேவையில்லாத விஷயத்தை பேசாமா கம்ப்ளைன்ட்ஸ் என்னன்னு மட்டும் சொல்லுங்க" என அவன் கத்தரிக்க,

"அதை சொல்லுறதுக்கு நீங்க மொதல்ல விடணும் இப்புடி அடக்குமுறை பண்ணகூடாது" அமுதினி அழுத்தமாக கூற,

ஒரு நொடி அவளை அழுத்தமாக பார்த்து விட்டு வாயை இறுக மூடி கொண்டான் வேந்தன்.

"எதை தேவையில்லாத விஷயம்னு சொல்றீங்க சீனியர் ஜீனியருக்குள்ள நடக்குற விஷயம் ஒரு எல்லைக்குள்ள இருந்தா தான் நல்லது ஆனா இங்க இப்போ அந்த எல்லையை எல்லாம் தாண்டி அடக்குமுறை பண்றாங்க அடிமை மாதிரி மாத்த முயற்சிக்குறாங்க" என அவள் கத்தாமல் எகிறமால் தனது கோபத்தை வெளி காட்ட,

"அமுதினி!!!!!"

"எஸ் சார்"

"என்ன நடந்தது என்ன அடக்குமுறை கொஞ்சம் தெளிவாக உங்க பிரச்சனையை சொல்லுங்க' ஆசிரியை ஒருவர் கூற,

"சார் ஆரம்பத்துல சீனியர் நட்புரீதியா ஜீனியர்ஸை சீண்டுறதும் சின்ன கேலி கிண்டல் எல்லாம் இருந்தது உண்மை ஆனா இப்போ அதை எல்லாம் தாண்டி போயிட்டாரு இருக்கு.

சீனியர்ஸ் அவுங்களோட அசைன்மென்ட்ஸை எங்கிட்ட கொடுத்து எழுத சொல்றாங்க சரின்னு ஒண்ணு ரெண்டு தடவை எழுதி கொடுத்தா இப்போ அதையே வழக்கமா மாத்துறாங்க அப்போ எங்களுக்கு கொடுக்குற ப்ரோஜெக்ட்சை எப்போ நாங்க முடிக்கிறதுன்னு கேட்டா "அது எனக்கு அவசியமில்லாத ஒண்ணு" னு திமிரா பதில் சொல்லுறாங்க"என,

"அது மட்டுமில்லை சார் ஹாஸ்டல்ல இருக்குற ஜீனியர்ஸ்ஸை பயங்கரமா தொந்தரவு பண்றாங்க இவுங்களோட ரூம்மை கீளின் பண்ணணும், துணியை துவைக்கணும்‌, மூணு வேளையும் சாப்பாடு எடுத்து வைக்கணும்மாம்
இதுக்கெல்லாம் அதிகமா நேத்து டாய்லெட்டை கீளின் பண்ண சொல்லி கம்பள் பண்ணிருக்காங்க" என நர்மதா தனது நீண்ட நாள் கோபத்தையும் ஆதங்கத்தையும் கொட்டி தீர்த்திருந்தாள்.

ஆசியர்களுக்கே இந்த விஷயம் சற்றே அதிர்ச்சியை தான் தந்திருந்தது.

"வாட்ஸ் திஸ் வேந்தன்?? இது எல்லாம் தெரிஞ்சும் எப்புடி நீ அமைதியா இருந்த?"

"இல்லை சார் இதுவரைக்கும் இப்புடி ஒரு கம்ப்ளைட் என்கிட்ட வந்ததில்லை நீங்களே கேளுங்க அவுங்ககிட்ட??"

"ன்னம்மா வேந்தன் சொல்றது உண்மையா நீங்க இதை பத்தி சொன்னதில்லையா??"

"எப்புடி சார் சொல்லுவோம் இதை பண்றது எல்லாமே இவரோட க்ளாஷ்ல இருக்குறவங்க தானே‌ பின்னே எந்த நம்பிக்கையில சொல்லுவாங்க??"என்ற அமுதினியை கண்டு அழுத்தமாக முறைத்தவன்,

"அப்படி நம்பிக்கை இல்லாத பட்சத்தில எதுக்காக எனக்கு ஓட்டு போட்டீங்க??" என கேட்டவனின் குரலில் காரம் சற்று தூக்கலாக இருந்தது.

அவனின் முகபாவனையை கண்ட நர்மதா ஏதோ பேச வர,

"ஷ்ஷ்ஷ்!!!!!நீ பேசாத நீ பேசவே கூடாது!!!எனக்கு பதில் சொல்ல வேண்டியது நீ இல்லை" என அவளை அடக்கியவன்,

"சொல்லுங்க மிஸ்.அமுதினி ஐ நீட் ஆன்சர்" என்றவனின் இறுக்கத்தில் பதில் வார்த்தைகள் வராது சற்றே தடுமாறினாள் அமுதினி.

அவளிற்கே தான் விட்ட வார்த்தையின் வீரியம் உரைத்தது.

"என்ன பதில் பேச தெரியலையா?? இல்லை பேச வரலையா??" என்றவனின் நக்கலில் நிமிர்ந்து நின்றாள் அமுதினி.

'இவரு கொட்ட கொட்ட குனிவாங்கன்றோ நெனைப்பே' மனதில் நினைத்தவள்,

"ஆரம்பத்துல இருந்த நம்பிக்கை இப்போ உங்க மேல இல்லை அதுவும் உங்க க்ளாஷ் ஸ்டுடண்ட்ஸே அதை பண்றப்போ எப்புடி நம்பிக்கை வரும்??? இத்தனைக்கும் மதி(இவர்களின் தோழி விடுதியில் இருப்பவள்) உங்க ஃப்ரெண்ட்ஸ் கிட்ட சொல்லிருக்கா "நீங்க தொடர்ந்து உங்க வேலையெல்லாம் என்னை செய்ய வச்சீங்கன்னா நான் லீடர் கிட்ட கம்ப்ளைட் பண்ணுவேன்னு?" என்றவளை இடைவெட்டியவன்,

"மதி யாருகிட்ட சொன்னாங்க அதுக்கு அவுங்க என்ன சொன்னாங்க???"

"அதை ஏன் என்கிட்ட கேட்குறீங்க பதில் சொன்ன ஆளே இங்க தானே இருக்காங்க அவுங்களையே கேளுங்க!!"என,

அவனின் பார்வை உக்கிரமாக தனக்கு பின்னால் அமர்ந்திருந்த தங்களின் வகுப்பு மாணவ மாணவிகளை தீண்டியது.

"யாரது!!!!!!" என்றவனின் கர்ஜனை அங்கிருந்த அனைவருக்குமே சிறு‌ நடுக்கத்தை ஏற்படுத்தியது.

"யாருன்னு கேட்கிறேன்ல நீங்களா வந்து நிக்கிறங்களா?? இல்லை நானே கண்டுபிடிக்கட்டுமா???" என்றவனின பார்வை அனைவரையும் கூர்மையாய் அளவிட்டு ஒரு இடத்தில் நின்றது.

"ஷர்மி!!!!!!" என இறுக்கமாய்‌ அவன் அழைக்க அந்த ஷர்மியாய் பட்டவளுக்கு தூக்கி வாரிப் போட்டது.

தன் கணிப்பு சரிதானா என தெரிய வேந்தன் திரும்பி அமுதினியை பார்க்க அவளின் முறைப்பே அவனிற்கான பதிலை தந்து விட்டிருந்தது.

"ஷர்மி இங்க வா???" என்றவனின் பேச்சை மீற முடியாது எழுந்து வந்து நின்றவளுக்கு கை கால் எல்லாம் வெடவெடத்தது.

"மதி உன்கிட்ட பேசினாங்களா??" என்றவனின் கேள்வி அவளிற்கு மயக்கத்தையே தருவித்தது.

'சத்தியமாக இப்படி ஆகும் என ஷர்மி கனவிலும் நினைக்கவில்லை ஏனோ தன்னிடம் சொல்வதோடு விட்டுவிடுவார்கள்' என அவள் நினைத்திருக்க,

இவர்களின் இத்தகைய தைரியத்தை அவள் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை.

"ஆம்!!" என்று தலையசைத்தவளின் விழிகளில் நீர் திரண்டு விட்டது இத்தனை பேரின் முன்பு அவள் அவமானப்பட போவதை நினைத்து.

"ப்ளடி இடியட்!!!!!!" அவளின் தலையாட்டலில் இரத்த அழுத்தம் வேந்தனின் உச்சியை தொட்டிருக்க தன்னையும் மீறி கத்தியிருந்தான்.

"உப்ப்ப்!!!!!ஓகே அதுக்கு பதில் நீ என்ன சொன்ன??" அவளை மூச்சு விட கூட அனுமதியாது அடுத்தடுத்து குண்டினை தூக்கி போட்டான் அவன்.

"அது!அது நான் ம்ஹீம்!" என பேச வந்த வார்த்தைகளை பாதியில் நிறுத்தி அதற்கு மேல் முடியாது என தலையசைத்திருந்தாள்.

ஏனெனில் அவளிற்கு தெரியுமே அவள் சொன்ன வார்த்தைகளை இங்கே கூறினால் என்ன நடக்கும் என்று!

பயத்தில் வார்த்தைகள் தொண்டையை அடைந்து கொண்டு வெளிவர மறுத்தன.

அவளிற்கு ஆதரவாக எழுந்து வர முயன்ற அவனது வகுப்பு தோழியை பார்வையாலே எட்ட நிறுத்தியிருந்தான்.

"நான் சொல்றேன் என்ன சொன்னாங்கன்னு?" என குரல் கொடுத்த நர்மதா,

"நீ போய் கம்ப்ளைட் பண்ணாலாம் அங்க ஒண்ணும் நடக்காது? இதெல்லாம் இன்னமும் வேந்தனுக்கு தெரியாமலா இருக்கும்? அது எல்லாம் தெரிஞ்சு தான் இருக்கும்? இருந்தும் அவன் அமைதியா இருக்க காரணம் இதையெல்லாம் செய்ய சொல்றது நான்றதாலா புரியுதா? நான் அதாவது இந்த ஷர்மிகான்றதால அவன் அமைதியா தான் இருப்பான் போல போய் வேணும்னா சொல்லிப்பாரு நீ தான் அசிங்கப்பட்டு வருவன்னு" சொல்லிருக்காங்க அவுங்க அவ்வளவு கான்பிடன்ஸ்ஸா சொல்லும் போது எப்புடி மதி அதை மீறுவா?

"அதோடு அவுங்க இவ்வளவு கான்பிடன்ஸ்ஸா பேசுறாங்கன்னா அந்த அளவுக்கு இடம் கொடுத்து நீங்க வச்சிருக்கீங்க அப்புடி தானே!" என நக்கலாக உரைத்தவளை தீயாய் முறைத்து பார்த்தான் வேந்தன்.

"மைண்ட் யுவர் வோர்ட்ஸ்" என அவளை அதட்டியவன்,

ஷர்மியிடம் "இது எல்லாம் உண்மையா?" என,

"நாங்க இவ்வளவு சொல்லியும் நீங்க திரும்ப விசாரிக்கிறீங்கன்னா அப்போ நாங்க சொன்னதை நம்பலை தானே அர்த்தம் அப்போ மதி சொல்லாமா விட்டதுலயும் தப்பில்லையே? சொல்லிருந்தா மட்டும் நம்பியிருப்பீங்களா? இதே இப்போ நடந்தது தானே அப்பயும் நடந்துருக்கும்?" என்ற அமுதினியின் வார்த்தைகளில் அவளை அழுந்தமாய் முறைத்தவன்,

"வில் யூ ப்ளீஷ் செட்டப்!என்ன நடந்ததுன்னு இரண்டு பக்கமும் விசாரிக்கறது ஒரு லீடரோட கடமை. மதி வந்திருந்தாலும் நான் கண்டிப்பா இரண்டு பக்கமும் விசாரிச்சிருப்பேன் ஒருத்தவங்களோட கம்ப்ளைண்ட் மட்டும் வச்சு முடிவு எடுக்க நான் முட்டாள் இல்லை" என சீறியவன்,

ஷர்மியிடம் திரும்ப அவனின் பொறுமையின் எல்லை கடப்பதை உணர்ந்த ஷர்மி "ஆம்" என தலையசைத்து உண்மையை ஒத்து கொள்ள,
நொடிகளேனும் அதிர்ந்து விட்டான் அவன். நிச்சயம் ஷர்மியிடம் அவன் இதனை எதிர்பார்க்கவில்லை அதனை விட அவனது வகுப்பே அதற்கு துணை போயிற்பதை நினைத்தால் ஆத்திரமே!

நொடிகளில் தன்னை சுதாரித்தவன்,
"இங்க இருக்குற எல்லார் கிட்டயும் நான் சாரி கேட்டுக்குறேன். இத்தனை நாளா நான் ஒரு நல்ல லீடரா இருக்கேன்னு நெனைச்சுட்டு இருந்தேன். ஆனா அப்புடி இல்லையின்னு இன்னைக்கு செருப்பால அடிச்ச மாதிரி உணர்த்திட்டாங்க அதுக்கு காரணம் என்னோட வகுப்புல இருக்குறவங்களே காரணம்னு தெரியும் போது வருத்தமா இருக்கு

இத்தனை நாள் அவுங்க பண்ண துரோகத்தை தெரியாமலே இருந்துருக்கேன்னு என்னை நெனைச்சு எனக்கே அவமானமா இருக்கு

என்னோட தப்பை சுட்டி காட்டுனா உங்க ரெண்டு பேருக்கும் தாங்க்ஸ் அண்ட் தப்பு செய்தவன் என்னைக்கும் லீடரா இருக்க தகுதியில்லாதவன்றது என்னோட எண்ணம். எனக்கே தெரியாமா நடந்திருந்தாலும் தப்பு தப்பு தான் அதனால ஸ்டுடண்ட்ஸ் பாதிக்கப்பட்டு இருக்காங்கன்னு தெரியும் போது வருத்தமா இருக்கு

இப்போ இந்த நிமிசம் நான் லீடர் பதவில இருந்து விலகிக்கிறேன் தாங்க்ஸ்" என கூட்டத்தினரை பார்த்து கூறியவன்,

தனது ஆசிரியர்களிடம் திரும்பி "இதுக்கு என்ன ஆக்ஷன் எடுத்தாலும் நான் கட்டுப்படுறேன் சார் அண்ட் தப்பு பண்ணவங்களுக்கு கண்டிப்பா தண்டனை கிடைச்சே ஆகணும் அதுக்கான பொறுப்பை உங்ககிட்டயே விடுவேன் கண்டிப்பா நீங்க ஒரு நியாயமான தண்டனையை கொடுப்பதில் கன்று நம்புறேன் நா வரேன் சார்" என்றவன் அதற்கு மேல் அங்கு நில்லாது வெளியேறிட,

நர்மதா அமுதினியை கடக்கும் போது அவர்களின் மீது கூரிய பார்வையை செலுத்தவும் அவன் மறக்கவில்லை.

"மீட்டிங் டிஸ்போஸ்ட்" என்ற ஆசிரியரின் கட்டளைக்கு அடிபணிந்து கூட்டம் கலைந்து செல்ல பலரின் வாய்களில் அமதினியும் நர்மதா வரும் தாறுமாறாக விழுந்தனர்.

முக்கியமாக வேந்தனின் வகுப்பிடம்.

கூட்டம் முடிந்த சில நிமிடங்களில் கல்லூரி முடிந்ததற்கான அறிவிப்பு வர அனைவரும் கிளம்பி விட்டனர்.

அமுதினி தனது அண்ணனிற்காக காத்திருக்க உடன் நர்மதாவும் ஒருவரின் வருகைக்காக காத்திருந்தாள்.

"ம்ஹீம் நர்மு பேசாம நீ என்கூடவே வாயேன் இன்னைக்கு ஒரு நாள்?"

"ச்சு அது எதுக்கு இப்போ தேவையில்லாமா? விடுடி பாத்துக்கலாம். அதுவும் இல்லாம உங்கண்ண கூட எல்லாம் வர முடியாது சரியான சிடுமூஞ்சி" என,

அவளை முறைத்து பார்த்தாள் அமுதினி.

"என்ன என்ன முறைப்பு உண்மைய தானே சொல்றேன் இதுவரைக்கும் உங்க நொண்ணன் என்னை பாத்து திட்டாமயோ இல்லை முறைக்காமயோ போயிருக்காரா? சொல்லுடி இத்தனைக்கும் நீயும் நானும் கே.ஜி ல இருந்து ஒண்ணாவே படிக்கிறோம்.

இப்போவாச்சும் நா வாய் பேசுறேன் ஆனா அப்போ சின்ன பிள்ளையில்ல என்ன பண்ணேன் அப்பவே என்னை மண்டையில கொட்டுனவர் தானே உங்க நொண்ணன்" என்க,

"அதான் பதிலுக்கு அவர் மண்டையை பேத்தல அப்பறம் என்ன?" என இருவரும் மல்லுகட்டி கொண்டிருந்த நேரம் அவர்களிடம் வந்தனர் வேந்தனின் வகுப்பு தோழர்கள் உடன் ஷர்மியுடன்.

அவர்களை பார்த்ததும் அலட்சியமாய் தனது முகத்தினை திருப்பி கொண்டாள் நர்மதா.

"எதுக்காக நீங்க ரெண்டு பேரும் இப்புடி பண்ணீங்க? ஒரு சின்ன விஷயத்தை தேவையே இல்லாம சீன் கீரியேட் பண்ணி பெருசா மாத்தி விட்டுடீங்க எதுக்காக உங்களுக்கு இந்த வேலை?" என அவனது வகுப்பு தோழி சற்றே கோபமாக கேட்க,

பதில் இல்லை இருவரிடமும்.

இருவரின் மெளனம் அவர்களை அவமானப்படுத்துவதாக தோன்ற,

"உங்களால வேந்தனுக்கு எவ்வளவு பெரிய அசிங்கம் எல்லார் முன்னாடியும். இதை தனியா சொல்லிருந்தா ஆகாதா? உங்களால தான் அவரு லீடர் பதவில இருந்து விலகிட்டாரு? இப்போ அங்க சொன்னா விஷயத்தை தனியா என்னை கூப்பிட்டு சொல்லிருந்தா ஏதோ போன போகுதுன்னு விட்டுருப்பேன்‌. எல்லா சீனியரும் செய்றதை தானே நானும் செஞ்சேன் மத்த டிபார்ட்மெண்ட் எல்லாம் வாயை மூடிட்டு தானே இருக்காங்க உங்களுக்கு மட்டும் என்னவாம் ரோஷம்?" என ஷர்மி எகிற,

"மத்தவங்க வாயை மூடிட்டு இருந்தா நாங்களும் அப்படி இருக்கணும்னு அவசியம் இல்லை இருக்கவும் மாட்டோம்" என்ற அமுதினியை முறைத்த ஷர்மி,

"நீ பேசாத! நீ வாயவே திறக்க கூடாது! அதுக்கான உரிமை உனக்கில்லை எல்லாம் உன்னால வந்தது பாவம் வேந்தன்! நிச்சயம் நீங்க இதுக்கு அனுபவிப்பீங்க" என்றவளை பார்த்து நக்கலாக சிரித்த நர்மதா,

"அவளுக்கு தான் உரிமை இல்லை ஆனா எனக்கு இருக்குல்ல அதை நீ இல்லைன்னு சொல்லிடுவியா எங்க சொல்லு பாக்கலாம்" அமுதினையை பேசிய கடுப்பில் நர்மதாவும் மரியாதை விட்டு சண்டைக்கு வர,

"ப்ச் என்ன பேச்சு இது மரியாதை இல்லாமா உன்னை விட பெரியவ நான் இப்புடி தான் பேசுவியா இது மட்டும் வேந்தனுக்கு தெரிஞ்சா!" என்றவளை இடைமறித்தவள்,

"என்ன ஆகும் இல்லை என்ன ஆகும் இது கேட்கிறேன். தெரிஞ்சா என்ன பண்ணிடுவா அவன் உனக்கு அவ்வளவு தான் லிமிட் வேந்தனை வச்சு என்னை பேசனும்னு கனவுல கூட நெனைச்சிராதா உரிமை பட்டவ நானே அமைதியா இருக்கேன் நீ என்னமோ ரொம்ப துள்ளுற மைண்ட் இட் அவ்வளவு தான் உனக்கு லிமிட்" என எகிறியவளை அடக்குவதற்குள் அமுதினிக்கு பெரும்பாடானது.

அந்நேரம் சரியாக கார்த்திக் வந்து விட இறங்கி இவர்கள் பக்கம் வந்தவன் எகிறி கொண்டிருந்த நர்மதாவை கண்டதும் முகத்தை சுழித்து விட்டான்.

'இவளுக்கு வேற வேலையே இல்லை போல எப்புடி கத்துறான்னு பாரு காலேஜ்ல இருக்கோம்ன்ற நெனைப்பு கொஞ்ச கூட இல்லை' என பல்லை கடித்தவன்,

அமுதினி அருகில் சென்று,
"போகலாமா அம்மு?" என நர்மதாவை கண்டு கொள்ளாது வினவ,

"அண்ணா!" என்றவளுக்கு கார்த்திக் நடப்பதை பார்த்து விட்டும் தன்னை அழைப்பதை நினைத்து சங்கடமாக இருந்தது.

இவனின் குரலில் சண்டையை விட்டு விட்டு நர்மதா இவனை பார்க்க அவனது முகம் சுழித்தபடியே தான் இருந்தது.

"என்ன அம்மு போகலாம் வா காலேஜ் முடிஞ்சது இல்லை அப்பறம் என்ன வா" இவளின் பார்வையை உணர்ந்து அவன் மீண்டும் முகத்தை சுழிக்க,

"அண்ணா நர்மதாவை விட்டுட்டு எப்புடின்னா வர்றது கொஞ்ச வெயிட் பண்ணுங்க அவளை அனுப்பிட்டு போகலாம். இங்க கொஞ்ச பிரச்சனை!" என்றவளை இடைமறித்தவன்,

"யாரு பிரச்சனை பண்ணா உனக்கு என்ன? நீ எதுக்கு தேவை இல்லாத வம்புல மாட்டிக்கிற எனக்கு வேற வேலை இல்லையா? நீ கூப்பிட்டனு தானே வந்துருக்கே? யாரோ பண்ற பிரச்சனையில நீ ஏன் போய் தலையை கொடுக்குற? வேலை இல்லாதவங்க பிரச்சனை பண்ணா நம்ம என்ன பண்றது நீ கிளம்பு மொதல்ல?" என அவன் பல்லை கடிக்க,

நர்மதாவிற்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. அவனின் பேச்சு ஏதோ அவளை சண்டைக்காரியாக சித்தரித்து பேச அவள் கண்களில் நீர் துளிர்த்து விட்டது. அப்போதைக்கு அவளிற்கு ஆதரவுக்கு யாரும் இல்லாத தனிமையை மனம் உணர்த்திட கண்ணில் கண்ணீர் பூக்கள் பூத்து விட்டன.

"அமுதி நீ கிளம்பு இது என் பிரச்சனை நான் பாத்துக்கிறேன். என்னால யாரும் எதுலயும் மாட்டிக்க வேண்டாம்" என,

"ஏய் என்னடி பேசுற!"

"ப்ச் போ அமுதி இங்க நிக்காத போ எனக்கு ஒண்ணும் பயம் இல்லை நான் சமாளிச்சுப்பேன் நீ போன்னா போ" என தனது உணர்வுகளை அடக்கி கொண்டு அவள் பேச அவளையே பார்த்து கொண்டிருந்த கார்த்திக்கின் புருவங்கள் சுருங்கின.

பின் அலட்சியமாக தனது தோளினை குலுக்கி கொண்டவன் தங்கையின் கை பிடித்து இழுத்து செல்ல,

அதுவரை அவன் இருந்ததில் சற்று அடக்கி வாசித்த வேந்தனின் நண்பர் குழு அவன் அகன்றதும் மீண்டும் தங்களது வேலையை துவங்கினர்.

"ஆமா இவ்வளவு நடந்த அப்புறமும் எந்த நம்பிக்கையில இங்க நிக்கிற, வேந்தன் உன் மேல செம்ம கோபத்துல இருக்கான் வீணா இங்க நின்னு டைம் வேஸ்ட் பண்ணாம வீட்டுக்கு போய் சேரு" என ஒருவன் நக்கலாய் அவளை வம்பிழுக்க உடன் இருந்தவர்களின் இளக்கார பார்வையும் அதனை ஆமோதித்தது.

ஆனால் அதனை எல்லாம் கவனித்தாலும் நர்மதாவின் மூளையை சென்றடையவில்லை அவள் கண்கள் தங்கையை பாதுகாப்பாக அழைத்து செல்லும் கார்த்திக்கின் மீது படிந்திருந்தது.

அமுதினையை வாய் திறக்க அனுமதியாது காரினுள் அமர வைத்து கதவை மூடியவன் தானும் அமர்ந்து கதவினை ஓங்கி அடித்து சாற்ற அது நர்மதாவின் முகத்தின் மேல் அறைவது போல் இருக்க கண்களை இறுக மூடியவள் வேறு‌ புறம் திரும்பி கொள்ள,

அவளின் முகத்தை காரின் கண்ணாடியூடே கூர்மையாக பார்த்தவன் காரை கிளப்பி கொண்டு சென்று விட,

பார்த்திருந்த இவளிற்கு அவனின் உதாசீனத்தில் கண்ணீர் கன்னம் தொட முயற்சிக்க சடாரென அவள் முன் நின்றது பைக்.

வண்டியின் மீது அமர்ந்திருந்தவனை கண்களில் கண்ணீரோடு அவள் முறைத்து பார்க்க எட்டி அவளின் பேக்கை இழுத்து கழற்றி முன்புற பைக்கின் மீது வைத்து கொண்டு அவளை ஏறுமாறு சைகை முகத்தை திரும்பினாள் அவள்.

"ப்ச் நரம்பி ஏறுடி? லோட்டாச்சு ப்ளீஸ் ஏறுடி நம்ம சண்டைய வீட்டுல போய் வச்சுக்கலாம்?" என அவன் கோபத்தில் ஆரம்பித்து கெஞ்சலில் முடிக்க,

அருகில் நின்றிருந்தவர்களை படு நக்கலாக ஒரு பார்வை பார்த்து விட்டு வண்டியில் ஏறியவள்,

"என்ன நடந்தாலும் இவன் என் அண்ணன்றது மாறிடாது அதை அடிக்கடி மறந்துடுறீங்க நீங்க! போங்க போய் படிக்கிற வேலையை பாருங்க" என நக்கலாய் உரைத்தவள்,

"டேய் அண்ணா அமுதினி அண்ணன் காரை ஓவர்டேக் பண்றா போடா" என அவள் உரைக்க அடுத்த நெடி வண்டி சீறிப்பாய்ந்தது.

முகத்தை தூக்கி வைத்து கொண்டு அமர்ந்திருந்த அமுதினியை கண்டு சிரித்தவன் சைடு மிர்ரரை பார்க்க அவன் கண்கள் இடுங்க அடுத்த நொடி வண்டியின் வேகத்தை குறைத்திருந்தான்.

"ரைட் சைட் பாருடி குரங்கே!!" என்ற குறுஞ்செய்தி நர்மதாவிடம் இருந்து வர வேகமாக நிமிர்ந்து பார்த்தவளுக்கு முதலில் வேந்தனின் முகமே தென்பட்டது.

மெல்லிய சிரிப்புடன் இருந்தவனை கண்டு ஆச்சரியமுற்றவள் பின் தன் நண்பியை பார்க்க முன்னிருந்த கலக்கம் மறைந்து உற்சாக பந்தாய் மாறியிருந்தாள்.

சிரித்த முகமாய் இருந்த தோழியின் முகம் அமுதினிக்கும் மகிழ்ச்சியை தர வாய் விட்டு சிரித்தவள் அவளிற்கு பாய் என கை விரிக்க பதிலுக்கு நானும் செய்து பறக்கும் முத்தத்தை பறக்க விட்டாள் நர்மதா.

நர்மதாவின் மகிழ்ச்சி நிறைந்த முகத்தை ஒரு விநாடி நேரம் பார்த்த கார்த்திக் மீண்டும் வண்டியின் வேகத்தை கூட்ட அதில் தர்மத்தின் முகம் சிடுசிடுப்பிற்கு மாற அதனை கண்டு திருப்தியுற்றான் கார்த்திக்.

அழகன் வருவான்!!

உங்களது எண்ணவோட்டங்களை என்னுடன் கீழே உள்ள திரியில் பகிர்ந்து கொள்ள மறக்க வேண்டாம் தோழமைகளே.


 
அமுதம் 7

"சிறு கைவளை கொஞ்சும் கொய்யா பூ
அவள் கைவிரல் ஒவ்வொண்டும் பன்னீர் பூ
மை விழி ஜாடைகள் முல்லை பூ
மணக்கும் சந்தன பூ


சித்திர மேனி தாழம் பூ
சேலை அணியும் ஜாதி பூ
சிற்றிடை மேல் வாழை பூ
ஜோலிக்கும் செண்பக பூ


பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ"


என்றபடி திரையில் பாடி கொண்டிருந்தது திரவியம் என்றால் அதனை ரசித்து கொண்டிருப்பவள் வேறு யாராக இருக்க முடியும் அமுதினியை தவிர.

எதிர்காற்று முகத்தில் அடிக்க சுகமாய் ஜன்னலில் தலைசாய்த்திருந்தவள் அவனுள் தொலையாமல் தொலைந்து கொண்டிருந்தாள்.

எப்பொழுதும் மின்னும் வெட்கப்புன்னகை அவளது உதடுகளில் அவனை கண்டதும்.

சட்டென பேருந்து நின்றதும் தனது மோனநிலையை கலைந்தவள், அப்போது தான் பேருந்து நின்ற இடத்தை கவனிக்க அதிர்ந்தவள் வேகவேகமாக இன்ஸ்டாவில் இருந்து வெளியேற அவளது கஷ்டகாலம் மொபைல் ஹேங் ஆகிவிட திரவியத்தன் புகைப்படத்திலேயே நின்று விட்டது.

சற்றே எட்டி பார்த்தவளிற்கு நர்மதா ஏறிவிட்டது தெரிய வியர்த்து விட்டது அவளிற்கு.

சரி மொபைலை ஸ்விட்ச் ஆப் வது செய்யலாம் என முயன்றவளிற்கு கை வியர்வையில் நனைந்திருந்ததில் தொடுதிரை செயல்படாமல் போக அதிர்ந்து விட்டாள்.

"அமுதி!!!" என்ற ஆரவரத்துடன் நர்மதா வந்து இருக்கையில் அமர நொடி நேர வித்தியாசத்தில் அவளது அலைப்பேசி அணைந்து விட பட்டென அதனை பையினுள் அவள் போடவும் நர்மதா வந்தமரவும் சரியாக இருந்தது.

"என்ன டி எதுக்கு இப்புடி வியர்த்து போய் இருக்க உடம்பு முடியலையா??" என்றவளின் கேள்வியில் அமுதினியின் முகம் எங்கும் பயத்தில் வியர்வை மொட்டுகள் ஆக்ரமித்ததை அவள் உணர்ந்தாள்.

"அது..அது ஒண்ணும் இல்ல டி என்னன்னு தெரியலை ரொம்ப வெக்கையா இருக்கு" என்றபடி அவள் முகத்தை அழுந்த துடைத்து கொண்டாள்.

"ஓஹ் சரி" என்ற‌ நர்மதாவின் முகம் நொடி நேரம் சுருங்கி பின் அஷ்டகோணாலாகியது.

"வந்துட்டா வெள்ளப் பன்னி" என அவள் முணுமுணுக்க,

நர்மதாவின் முகமாற்றத்தில் அமுதினி சற்றே எட்டி பார்க்க அவள் நினைத்தது போலவே ஷர்மிகா வந்து கொண்டிந்தாள்.

இவர்களை கடந்து செல்லும் போது அக்னி குழம்பை அவள் கண்களிலே கக்கி செல்ல அதனை அசட்டை செய்தனர் இருவரும்.

"வெள்ள பன்னி வெள்ள பன்னி முகரைய பாத்தியா டி இவளுக்கே என்னமோ இவ அண்ணன் மேல நான் கம்ப்ளைட் பண்ண மாதிரி மொகரைய தூக்கிட்டு திரியுறா??

கூடப் பொறந்த பொறப்பு நானே அமைதியா இருக்கேன் இவளுக தாண்டி எகிறிட்டு வர்றாளுங்க எனக்கு இல்லாத அக்கறை சக்கரை எல்லாம் இவ கிட்டு இருக்கு" என,

அவள் அண்ணன் என்றதில் அமுதினி "பக்" என்று சிரித்து விட்டாள்.

"அண்ணண்னு சத்தமா சொல்லிடாத டி பாவம் ஹார்ட் டப்புன்னு வெடிச்சிட போகுது" என பின்னிருக்கையில் அமர்ந்திருந்த ஷர்மிகாவை கண்காட்டி அமுதினி கிசுகிசுக்க,

"ம்ம்ம் வெடிக்கும் வெடிக்கும் வெள்ள பன்னிக்கு" என நர்மதா நொடிக்க,

"பார்த்து பேசு டி இந்த பன்னியே உனக்கு வருங்காலத்துல அண்ணியா வர வாய்ப்பிருக்கு சுதானமா இருந்துக்க" அமுதினி கூற,

"செருப்பு பிச்சுடும்!! வாயை பினாயில் ஊத்தி கழுவி டி காட்டெருமை"நர்மதா கூற,

வாய் மூடி உடல் குலுங்க சிரித்தாள் அமுதினி.

இருவரின் சிரிப்பினையும் ஒருவித எரிச்சலுடன் பார்த்து கொண்டிருந்தாள் ஷர்மிகா.

அந்த நிகழ்வு நடந்து மாதங்கள் பல கடந்து விட்டன. ஆனால் இன்னும் அவளால் அதிலிருந்து வெளிவர முடியவில்லை. போதக்குறைக்கு வேந்தன் வேறு இப்போதெல்லாம் இவளை தள்ளி நிறுத்த அந்த கோபமும் சேர்ந்து இதற்கு காரணம் இவர்கள் தானே என அவர்கள் மேல் திரும்பியது.
சிரிக்கும் அவர்களை சிறிது வன்மத்துடனே பார்த்தாள் ஷர்மிளா.

***************************

கல்லூரியில் தேர்வுகள் தொடங்கிவிட்டிருந்தனர்.தேர்வுகள் முடிந்ததும் கல்லூரியின் கல்சுரல் ப்ரோக்ராம். ஆக மாணவ மாணவிகள் படு பிசி. தேர்வை ஒரு வித ஆர்வத்துடனே எதிர்கொண்டனர்.

கல்சுரலிற்கு தேவையான நடனம் நாடகம் என ஒரு புறம் ஏற்பாடு ஆகி கொண்டிருகக மறுபுறம் தேர்விற்கும் மாணவர்கள் தங்களை தயார்படுத்தி கொண்டிருந்தனர்.

நாளை அமுதினி நர்மதாவிற்கு முக்கியமான தேர்வு. விடுமுறையில் இருந்தனர் இருவரும். நெருங்கிய தோழிகளாக இருந்த போதும் இருவரும் மற்றவர் வீட்டிற்கு குரூப் ஸ்டடி என்று சென்றதில்லை. இருவர் வீட்டிலும் அதற்கு அனுமதித்தில்லை.

ஆக அவர்களின் குரூப் ஸ்டடி போனிலே தொடரும்.இப்போதும் அது தான் நடந்து கொண்டிருந்தது.

"டி எவன் டி இதையெல்லாம் கண்டுபிடிச்சான் எக்ஸாமு இன்டர்னல்லு ப்ராஜெக்ட் னு உயிரை வாங்குறானுங்க" நர்மதா கடுப்பில் வெடிக்க,

சிரித்து கொண்டாள் அமுதினி. அது என்னவோ நர்மதாவிற்கு படிப்பு ஒரு தடவையில் ஏறி விடாது தொடர்ந்து இரண்டு மூன்று முறை படித்தால் ஒழிய அவளது தலையில் போனபோகுதென்று ஏறும்.

ஆனால் அதற்கான பொறுமை அம்மணியின் இருக்காது. எல்லாவற்றிலும் வேகம் அவசரமும் மட்டுமே அவளிடம்.

"ச்சு ஈசி தாண்டி இன்னொரு தடவை சொல்றேன் நல்லா கவனி புரிஞ்சுடும்" என அமுதினி அவளிற்கு சொல்லி கொடுக்க ஆரம்பிக்க,

"அம்மு.. தின்னி!!" என்றவாறு கதவை தட்டி விட்டு உள்ளே நுழைந்தான் கார்த்திக்.

நுழைந்த வேகத்தில் அவனது முகம் கடுகடுவென மாறிற்று. ஏனெனில் அமுதினி கட்டிலின் தலைபுறத்தில் தலையணைகளை அடுக்கி அதன் மீது டேப்பை(tab)வைத்திருக்க அதில் முழுதும் நர்மதாவே நிறைந்திருந்தாள். இருவரும் வீடியோகாலில் இருந்தனர்.

அவளை கண்ட நொடி அவனது முகம் மாறிற்று. அவனை கண்டதும் நைட்டியில் குப்புற படுத்து காலாட்டி கொண்டிருந்த நர்மதா பட்டென எழுந்தமர்ந்திருந்தாள்.

"என்ன அண்ணா?"

"அம்மா கூப்பிடுறது கூட கேட்கலையா உனக்கு?"என அவன் காட்டமாக கேட்க

"கூப்பிட்டாங்களா? எப்போ? எனக்கு கேட்கலையே?"

"எப்போ பார்த்தாலும் போனும் கையுமாக இருந்தா எப்புடி கேட்கும். போ போய் மொதல்ல என்னன்னு கேளு" என்றவனை முறைத்த அமுதினி,
நர்மதாவிடம் "இரு டி டூ மினிட்ஸ் வந்துடுறேன்" என்றவள் "வா போகலாம்" என கார்த்திக்கை அழைக்க,

"என்ன எதுக்கு கூப்பிடுற அம்மா என்ன என்னையா கூப்பிட்டாங்க?"

"உனக்கு என் ரூம்ல என்ன வேலை நா இல்லாதப்போ?"

"ஆமா இவ பெரிய இவ தங்கத்தையும் வைரத்தையும் பதுக்கி வச்சிருக்கா அதை நீ இல்லாத நேரம் ஆட்டைய போட வந்தேன் பாரு போடி இவளே"

"என் ரூம்ல தங்கம் இருக்கோ தகரம் இருக்கோ உனக்கு என்ன வேலை??"

"என் நேரம் அம்மா துவைச்ச துணியை உன்னோட கபோர்டல வச்சுட்டாங்க அதை எடுக்க வந்தேன். நீ இப்புடியே வாய் பேசிட்டு இரு கொஞ்ச நேரத்துல வெளக்கமாறு பறந்து வரும் அம்மா கிட்ட இருந்து" என அவன் முடிப்பதற்குள் "அமுதினி!!" என அவளது தாய் அழைக்க முறைத்து கொண்டே வெளியே சென்றுவிட்டாள் அவள்.

அவனது துணிகளை எடுத்து கொண்டவன் அமுதினி சென்றதை உறுதிபடுத்தி கொண்டு போனின் முன்பே வந்தவன்,

"ச்சு அமுதிய நிம்மதியாவே இருக்க விட மாட்டியா நீ? காலேஜ்ல புல்லா கூடயே இருந்து இம்சை பண்றது பத்தாதா வீட்டுக்கு வந்து கூட அவளை விடமாட்டியா?" தன்னிடம் நேரடியாக அவன் பேசியதில் திகைத்தாள் அவனிற்கு பதில் அளிக்கும் வகையில்,

"இல்லை ஒரு டவுட்!!" என்ற போது அவள் குரல் கீழிறங்கிட,

"ஏன் க்ளாஸ் எடுக்கும் போது என்ன பண்ணியாம்? அதான நெனைப்பு படிப்புல இருந்தா தானே புரிய போகுது? இங்க தான் வேற எங்கயோ இருக்கே நெனைப்பு எல்லாம்" என கடைசி வாக்கியத்தை அவளுக்கு கேட்க வேண்டும் என்றே அவன் முணுமுணுக்க,

அவன் சுழித்த முகமும் அவன் சொன்ன வாக்கியமும் அவளை கொதிப்படைய செய்ய "ஷட்டப் யுவர் நான்சென்ஸ்" என்றவள் அழைப்பை துண்டித்து விட்டிருந்தாள்.

அவளது கோபம் அவனிற்கு திமிராக பட,
"என்ன இப்போ உண்மைய தான சொன்னேன் ரொம்ப ஒழுங்கு மாதிரி பேசுற கொழுப்பெடுத்தவ" என்றவன் நகர்ந்து விட,

இங்கே, நர்மதாவின் கண்கள் கலங்கி விட்டன அவனின் வார்த்தையின் வீரியத்தில்.

ஏன் இந்த வெறுப்பு அவள் மேல் அவனுக்கு? இத்தனை வெறுப்பை அவள் மேல் காட்டும் அளவிற்கு அவள் என்ன செய்தாள்? சத்தியமாக காரணம் தெரியவில்லை. இத்தனைக்கும் சிறு வயதில் எல்லாம் ஒன்றாக விளையாடியவர்கள் தானே!

சிறு வயதில் அவன் இவளிடம் கோபபட்டாலும் ஒதுங்கியே செல்வானே தவிர இத்தகைய வெறுப்பினை அவள் மேல் அவன் காட்டியதில்லை.

விடலை பருவத்தில் இருந்தே அவனின் இந்த மாற்றம். அமுதினியிடம் இருந்து இவளை தள்ளி விலக்கி வைக்கும்படியான செயல்கள் தான் அன்றிலிருந்து இன்றுவரை அவனிடம் வெளிப்படுகின்றன.

அப்படியா அமுதினியை இவள் எதிலாவது மாட்டி விடுவாள்? இவளது நண்பி இல்லையா அவள்.

திரவியத்தின் விஷயத்தில் கூட பின்னாளில் அவள் வருந்த கூடாது என தானே அவள் இப்போது அமுதினியை எச்சரிப்பது. அப்படிபட்டவளை ஏதோ அமுதினிக்கு வில்லங்கம் உண்டு பண்ணுபவளை அவளை நினைத்து அவன் செய்யும் செயல்களை அவளால் தாங்க இயலவில்லை.

அன்றும் அப்படி தானே கல்லூரியில் பேசினான். கணக்காய் அவனது தங்கையை மட்டும் தானே பாதுகாப்பாக அழைத்து சென்றான்.

அலைப்பேசியின் ஓசை அவளை நினைவுக்கு கொண்டு வர அமுதினி தான் அழைத்திருந்தாள்.

ஏனோ தற்போதிருக்கும் மனநிலையில் அவளுடன் பேச விரும்பாதவள "ஈவ்னிங் கூப்பிடுறேன் டி" என ஒரு குறுஞ்செய்தியை அனுப்பி விட்டு அலைப்பேசியை அணைத்து விட்டாள்.

குறுஞ்செய்தியை பார்த்த அமுதினி மீண்டும் நர்மதாவிற்கு அழைக்க ஸ்வீச் ஆஃப் என்ற பதில் வர,

வேகநடையுடன் கோவத்தில் கார்த்திக்கிடம் சென்று நின்றாள் அமுதினி.


அழகன் வருவான்!!!!

உங்களது எண்ணவோட்டத்தை என்னுடன் பகிரந்து கொள்ளுங்கள் தோழமைகளே

 
அமுதம் 8


"நர்மதாவை என்ன சொன்ன?" என நேரடியாக அமுதினி கேள்வி கேட்க,

"என்ன என்ன?? சொன்னாங்க?" என அவன் அசட்டையாக பதில் கூற,

"அதை நீ தான் சொல்லணும்? ஏன்னா நீ தானே அவளை ஏதோ பேசியிருக்க"

நர்மதா போனை எடுக்காததிலேயே அமுதினிக்கு தெரிந்திற்று கார்த்திக் ஏதோ பேசி இருக்கிறான் என. ஏனெனில் அவள் வந்த பின்னும் இவன் தானே அங்கிருந்தது.

"நான் எதுவும் பேசலை"

"பொய்! நீ ஏதோ பேச போய் தான் அவ போனை கட் பண்ணிருக்கா. நான் கூப்பிட்டாலும் அவ எடுக்கலை போனை ஆஃப் பண்ணி வச்சிருக்கா உண்மையை சொல்லு என்ன சொன்ன?"

"என்ன நீ அவளுக்கு பார்த்துக்கிட்டு என்கிட்ட சண்டைக்கு வருவியா?"

"ஆமா வருவேன் இப்போ நீ சொல்ல போறியா இல்லையா?"

"ஆமா சொன்னேன் காலேஜ்ல புல்லா அவ கூட தானே இருக்க. வீட்டுக்கு வந்ததும் உன்னை நிம்மதியா விட மாட்டாளா மா? அதை தான் கேட்டேன் அதுக்கு என்ன இப்போ" என்றவன் தான் கடைசியாக பேசியதை மட்டும் சொல்லவில்லை.

"உனக்கு ஏன் கார்த்திக் நர்மதா மேல் இவ்வளவு கோபமும் வன்மமும்?"

"லூசா நீ எனக்கு எதுக்கு அவ மேல வன்மம் இருக்க போகுது உன் இஷ்டத்துக்கு பேசுவியா? உன்னை வீட்டுல கூட நிம்மதியா இருக்க விட மாட்டுறாளேன்னு கோபம் தான்" என அவன் சாமாளிக்க,

"ம்ஹீம்! உனக்கு கோபம் மட்டும் இல்லை அவ மேல வெறுப்பும் இருக்கு. ஒவ்வொரு தடவையும் நீ என்னை ப்ரடஃக்ட் பண்றேன்னு பேர்ல் அவளை காயப்படுத்திட்டு இருக்க அது எனக்கு தெரியாதுன்னு நெனைச்சியா?

இருந்தாலும் நர்மதாவே அதை பெருசா எடுத்துக்காலன்றப்போ நானும் ஏதோ இரண்டு பேருக்கும் ஒத்துவரலைன்னு நெனைச்சு விட்டுட்டேன்."

"என் தங்கச்சியை நான் தானோ ப்ரடஃக்ட் பண்ண முடியும். ஊர்ல இருக்குறவங்களை எல்லாம் என்னால பாதுகாக்க முடியாது. எனக்கு என் தங்கச்சி முக்கியம் அவ சேப்டி முக்கியம். எந்த பிரச்சனையிலயும் மாட்டிக்காமா நீ படிப்பை முடிக்கணும். இது தான் எனக்கு முக்கியம் மத்தவங்களை பத்தி கவலைப்பட அவங்களுக்கு வீட்டுல ஆள் இருப்பாங்க"

"எப்போ இருந்து அண்ணா இவ்ளோ ஷெல்பிஷ்ஷா நீ மாறுன?"

"தேவைதான் எனக்கு? உனக்காக பாத்தேன்ல அப்போ நான் ஷெல்பிஷ் தான்?அப்படியே இருந்துட்டு போறேன் எனக்கு என் தங்கச்சி மட்டும் தான் முக்கியம்"

"உன்னை மாதிரி நர்மதாவோட அண்ணனும் நெனைச்சிருந்தா? அன்னைக்கு என் நிலைமை என்ன ஆகியிருக்கும்னு யோசிச்சு பாத்தியா? அவரும் அவர் தங்கச்சியை மட்டும் பாத்திருந்தா இன்னைக்கு நான் உன் முன்னாடி இப்புடி நின்னுருப்பேனா?"

"அந்த நிலைமைக்கு உன்னை தள்ளுனதே அவதானே அதை மறுந்துட்டியா? அவன் காட்டமாக கேட்க,

வாய் மூடி மௌனியானாள் அவள். அதற்கு அவளிடம் பதில் இல்லை.

"அண்ணா ப்ளீஷ் அது…ஏதோ அவ சின்ன வயசுல அதோட விபரீதம் புரியாம செஞ்சது. மனசறிஞ்சு அவ அப்படி நடக்கலையே! அவ தெரியாம செஞ்ச தப்புக்கு நீ இப்புடி அவளை வெறுக்குறது நியாயமே இல்லைண்ணா?ஏதோ தப்பா நடக்குதுன்னு அவ தெரிஞ்சுகிட்ட நிமிஷத்துல இருந்து கடைசி நொடி வரைக்கும் என்னை காப்பாத்த தானேண்ணா அவ போராடினா?

அவளை பத்தி கொஞ்சமும் யோசிக்காம என்னை எப்படியாச்சும் தப்பிக்க வைக்க தானே அவ பார்த்தா அதுக்காக அவளையும் பணயம் வச்சாலே அண்ணா அவ வேணும்னே என்னை அதுல சிக்க வைக்கலயே! அது உனக்கும் நல்லா தெரியும் தெரிஞ்சும் உன்னோட வீம்பால ஈகோவால அவ மேல கோபத்தையும் வெறுப்பையும் வளர்த்துகிட்டு இருக்க" அந்த நிகழ்வுகளின் தாக்கம் தாளாமல் அவளது குரல் உடைந்து தழுதழுக்க,

இப்போது பதிலின்றி மௌனிப்பது கார்த்திக்கின் முறையானாது.

அமுதினி சொல்வது அனைத்தும் முற்றிலும் உண்மைதானே! கடைசி நொடி வரை அமுதினியை காக்க தானே அவள் போராடினாள்.

"என்னாச்சு உங்க ரெண்டு பேருக்கும் இப்புடி கிடந்து கத்திட்டு இருக்கீங்க உள்ள கிரைண்டர் ஓடுற சத்தத்தையும் தாண்டி உங்க சத்தம் கேட்குது" மாவு வழித்த கையோடு ஓடி வந்துருப்பார் போலும் கைகளில் மாவு அப்பி இருக்க கேட்டபடி நின்றார் சரஸ்வதி.

ஏனோ அண்ணன் தோழியை தவறாக நினைத்திருப்பதை தாங்க முடியாத அமுதினி "அம்மா நர்மதாவ…" என்றவளை அவசரமாக இடைமறித்த கார்த்திக்,

"அதெல்லாம் ஒண்ணுமில்லை ம்மா அவ ப்ரெண்டு கூட ஏதோ சண்டை போல அது தெரியாம நானும் கொஞ்சம் சீண்டிட்டேன் அதான் டேமை திறந்துட்டா" என்றவனின் விழிகள் அவளை எதுவும் சொல்லாதே என எச்சரிக்க,

அமைதியாகி கொண்டாள் அமுதினி.

"ப்ச் ஏன் கார்த்திக் வீட்டுல இரண்டு பேரு இருந்தாலே அக்கப்போரு தான் நாளைக்கு அவளுக்கு எக்ஸாம் வேற இருக்கு அவளை சீண்டிட்டு இருக்காத அம்மு நீ போய் படி போ" என அவளை அனுப்பியவர்,

"நீயும் போடா எதோ க்ளைண்ட்டை பார்க்க போகணும்னு சொன்ன போய்‌ ரெடியாகிட்டு வா தோசை ஊத்துறேன்" என்றவர் மீண்டும் கிட்சனுள் சென்று விட,

உள்ளே வந்து கட்டிலின் மீது விழுந்தவனின் மனம் அனலாகவும் குளிராகவும் தகித்தது.

அமுதினி சொன்ன அனைத்து விடயங்களும் உண்மை என்றாலும் ஏனோ மனம் அந்நிகழ்வை மறக்க மறுக்கிறது.

அவனிற்கு ஈகோவா? ம்ம்ம் அதனை கேட்கும் போதே அவனிற்கு சிரிப்பாக வருகிறது. இன்னொன்று கூட அமுதினி சொன்னாலோ ஆங் ஏதோ கோபமாம் வெறுப்பாம் வன்மமாம் நினைக்கையில் அவன் மனமே அவனை எள்ளி நகையாடியது.

ஆனால் அவள் கூறியதில் ஒன்று மட்டும் உண்மை நர்மதாவின்‌ மீது அவனிற்கு கோபம் இருக்கிறது அளவு கடந்த கோபம் இருக்கிறது அதை மறுக்க இயலாதே!

தான் பேசியது தாங்காது அவள் கண்கள் கலங்கி நின்ற தோற்றமே அவன் கண்முன் வர மனதினை போல கண்களையும் இறுக மூடி கொண்டான் கார்த்திக்.

அறியாத வயதில் அசட்டு துணிச்சலில் அவள் செய்த ஒற்றை செயல் அவளை அவன்‌ பார்வையில் கீழிறக்கி விட்டிருந்தததை அறியாது போனாள் பாவை. அவள் மறந்திருந்து ஒன்றை இவன் மறக்காமல் இருக்கிறான்.

******************

"ஏதோ ஏதோ ஒன்று எனக்குள்ளே நுழைந்து
ஆயுள் ரேகை நீள செய்கிறதே

காதல் ரேகை ஒன்று இதயத்தை திறந்து
செல்லமாக மிரட்டி செல்கிறதே

உயிரே இதயம்
உனக்கே உனக்கே!"

ஹெட்போனின் வழியே கசிந்துருகி கொண்டிருந்த பாடலில் மனம் கரைய தவித்து தயங்கி வெளி வர முயலாது அதில் மூழ்கி கொண்டிருந்தாள் அமுதினி.

பாடலின் வரிகள் அவளின் மனதினை அப்பட்டமாக எடுத்துரைக்க இதழ்களில் அழகிய வெட்க புன்முறுவல்.

இப்போதெல்லாம் அதிகமாகவே புன்முறுவல் பூக்கிறாள். தனிமையில் இனிமை காண்கிறது பேடை.

காதல்! காதல் ரேகை அவளுள்ளும் நுழைந்து விட்டது போலும்!!

கசிந்துருகிய பாடல் அவளது இதயத்தை இளக்க விழிகள் தாமாக மூடி கொண்டன. மூடிய விழிகளில் அழகாய் வந்து தரிசனம் தந்தான் திரவியம். காதில் கேட்டு கொண்டிருந்த பாடல் பல்வேறு கற்பனை குதிரைகள் அவிழ்த்து விட அதனை அடக்க மறுத்து திரவியத்துடன் அதனை இணைத்து அழகாய் ரசித்து நின்றாள்.

தியவியத்துடனான காட்சிகள் கற்பனையில் பரந்து விரிந்து கொண்டிருந்தன. அக்காட்சிகளை நிகழ்காலத்தில் சம்பந்தப்படுத்தி அவள் மகிழ்ந்து கொண்டிருக்க அதன் பலனாய் அவளது கன்னங்கள் சூடேறுவதை அவளால் உணர முடிந்தது.

எங்கேயோ தூரமாக தள்ளி நின்ற திரவியம் இவளது அருகினில் வருவது போல் இருக்க நிஜம்தானா என அவள் கற்பனையிலேயே நினைத்து கொண்டிருந்த கணம் அவளை சுற்றி வளைத்திருந்தது அவனின் கரங்கள்.

மூச்சு முட்டும் நெருக்கம் முன்நெற்றியில் முடி அசைந்தாட வெள்ளை நிற முழுக்கை சட்டை நெற்றியில் அதே சந்தனக் கோடு அழகாய் அவனை ரசித்து கொண்டிருந்தவளின் விழிகளுக்கு நெருக்கமாய் அவன் மாற அவனது பார்வையின் தாக்கம் தாளாது தலைகுனிந்தவளின் விழிகளுக்கு அவனது கழுத்து செயின் விருந்தாக கள்ளதனமாய் அதனை ரசித்து கொண்டிருந்தவளுக்கு ஏதோ நெருடல் ஏற்பட மெல்ல அவனது சட்டையை நோக்கி கை உயர்த்தியவள் செயினில் டாலரை மறைத்து கொண்டிருந்த சட்டையை லேசாக விலக்க அங்கே பளீரென இவளிற்கு காட்சி தந்தது ஒரு பக்க சங்கு வடிவமும் அதன் மறுபக்கம் சிறு ருத்ராட்சமும்.

அதனை கண்ட நொடி தன்னை அணைத்திருப்பது திரவியம் அல்ல என அவள் உணர்நத நொடி அவனின் அணைப்பை உதறி வெளியே வந்தவள் அவன் முகம் காண திரவியத்தின் முகம் கொஞ்ச கொஞ்சமாக மறைந்து அங்கே வேறு ஒரு ஆடவனின் முகம் தோன்ற ஆரம்பிக்க அதன் வடிவம் முற்று பெறுவதற்குள் பட்டென எழுந்தமர்ந்திருநதாள் அவள்.

வியர்வை முத்துக்கள் முகம் எங்கு விரவியிருக்க அப்போது தான் பாடலை கேட்டபடி உறங்கியிருப்பதை அவள் உணர்ந்தாள்.

தேர்விற்கு படித்து கொண்டிருந்தவள் சற்றே தன்னை ரிலாக்ஸ் செய்ய பாடலை கேட்க ஆரம்பித்திருந்தவள் தன்னையும் மீறி தூக்கத்தில் சயனித்திருந்தாள்.

இதுவரை தான் கண்டது கனவு என ஆசுவாச பெருமூச்சு அவளிடம் ஏற்பட்டாலும் அதனை அவளால் இயல்பாக ஏற்க முடியவில்லை.

கனவே ஆனாலும் திரவியத்தை தவிர்த்து அந்நிய ஆடவனின் அணைப்பில் அவள் இருந்ததை அவளால் தாங்கி கொள்ள இயலாது கண்கள் கலங்கி விட்டன. உடம்பு எல்லாம் எரிவது போல் இருக்க வேகவேகமாக குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.

நீரின் குளிர்ச்சி அவளை கொஞ்சம் குளிர வைத்திருக்க மனம் கொஞ்சம் தெளிந்திருந்தது‌. கனவில் அவள் கண்ட பென்டென் அந்த சங்கு வடிவமும் ருத்ராட்சமும் அவளிற்கு பரிச்சயமானதாக தோன்றியது.

எங்கோ எங்கேயோ சர்வ நிச்சயமாக அந்த பென்டனை அவள் கண்டிருக்கிறாள். ஆனால் எங்கே என்று தான் அவளால் இனம் கண்டு கொள்ள முடியவில்லை.

"எங்க எங்க பார்த்தேன் அந்த டாலரை எங்க பார்த்தேன்" யோசித்து தவித்தவளுக்கு மூளை அந்த நிகழ்வை தட்டி எழுப்பி நினைவுப்படுத்தாது போக யோசித்து யோசித்து தலைவலி வந்தது தான் மிச்சம்.

நெற்றியை அழுந்த பற்றி அமர்ந்திருந்தவளை அலைப்பேசியின் சத்தம் கலைக்க எடுத்து பார்த்தாள்.

திரவியத்திடம் இருந்து புதிய ரீல்சுக்கான நோட்டிபிக்கேஷன் இன்ஸடாவில் இருந்து வந்திருக்க அதனை கண்ட நொடி அழகிய வெட்க புன்முறுவல் அவளிடம் வந்து ஒட்டி கொள்ள வீடியோவினை இயக்கியவளுக்கு மற்றவை அனைத்தும் பின் சென்று விட்டன.

அழகன் வருவான்!!!!!

உங்களது எண்ணவோட்டங்களை என்னுடன் கீழே உள்ள திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே


 

Attachments

  • Screenshot_20230922-195453.png
    Screenshot_20230922-195453.png
    864.6 KB · Views: 1
அமுதம் 9

அன்று தேர்வின் கடைசி நாள். பரீட்சை முடிய போகிறதே என்ற சந்தோஷத்தை விட இன்னும் ஏழு நாள்களில் கல்சுரல் ப்ரோக்ராம் என்ற நினைவே மாணவர்களிடம் தித்திப்பாய் இறங்கியிருந்தது.

டிபார்ட்மெண்ட் வாரியாக ஒவ்வொரு ப்ரோக்ராம் என முடிவு செய்திருந்தது கல்லூரி நிறுவனம்.

இன்னும் சில நிமிடங்களில் தேர்வு ஆரம்பிக்க இருக்க கடைசி நேரத்தில் பல மாணவர்களுக்கு டென்ஷன் தான்.

சில குறும்புக்கார மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கான பேனாவை தங்களின் நண்பனிடம் இருந்து திருடியிருக்க "டேய் பட்டரு எக்ஸாமுக்கு பேனா கூட கொண்டு வரமாட்டியாடா??" பேனாவிற்கு சொந்தமான மாணவன் அவனிடம் மல்லுகட்ட,

"ஈஈஈஈஈஈ வெயிட்டா இருக்கும்னு வீட்டுலயே வச்சிட்டேன்டா" என்ற அந்த குறும்புக்காரனின் பதிலில் மற்றவன் கொதிநிலைக்கு செல்ல அங்கே சிறு கலவரம்‌.

அதனை விட்டு நகர்ந்தால் "அய்ய்யோ இந்த கொஸ்டினை படிக்காமா விட்டுட்டேனே" என்ற மாணவியின் கடைசி நேர அலறல்.

இதனையும் தாண்டினால் வகுப்பில் ஆசிரியர் கூறுவதை கவனியாது கடைசி நேரத்தில் மாணவர்களுக்கு அவசர அவசரமாக புரியும்படி சொல்லிதரும் ஒரு மாணவனோ மாணவியோ இருக்க அவர்களை சுற்றி மொய்த்து கொண்டிருந்தனர் பலர்.

"டேய் மச்சான் இந்தவாட்டியாச்சும் அரியர் விழுந்துடாமா பாஸாகிடுடா ஏற்கனவே ஏழு பேப்பர்" என கண்டிக்கும் நண்பன்.

அதற்கு அசட்டையாய் மற்றவனின் பதில் என அந்த இடமே தேர்வு நடக்கிறது என்பதை பறைசாற்றி கொண்டிருந்தது.

"கிர்ர்ர்ர்!!" என்ற மணியோசையில் அடுத்த நிமிடம் சத்தங்கள் எல்லாம் அடங்கி அனைவரும் எக்ஸாம் ஹாலிற்குள் நுழைந்திருந்தனர்.

அடுத்த மூன்று மணி நோரத்திற்கு அந்த இடம் மயான அமைதியை தந்தெடுத்திருந்தது.


ஆனால் அந்த அமைதி வெறும் மூன்று மணி நேரத்திற்கு மட்டுமே. தேர்வு முடிந்ததற்கான பெல் அடிக்க காக்காய் கூட்டங்களாய் அடித்து பிடித்து வெளியேறிய மாணவர்கள் அடுத்த சென்ற இடம் ஸ்டேடியம்.

கல்சுரல் ப்ரோக்ராமிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடந்து கொண்டிருக்க ஆர்வத்துடன் ஆளுக்கொரு வேலையை செய்ய ஆரம்பித்திருந்தனர்.

"வேந்தா டான்ஸ்க்கு இந்த மெட்டீரியல்ஸ் எல்லாம் கொஞ்சம் தேவைப்படுது?" என்றவாறு ஷர்மிகா அவன் முன் சிறு பேப்பரை நீட்ட,

அவளை நிமிர்ந்தும் பாராதவன்,
"டான்ஸ் இன்சார்ஜ் பரமேஷ் கிட்ட கொண்டு போய் இந்த லிஸ்ட்டை கொடுங்க" என பதிலளித்தவன் தனது வேலையில் கவனமாக,

"ஏன் வேந்தன் நான் உன் கிட்ட கொடுக்க கூடாதா?? நீ தானே கல்சுரல் ப்ரோக்ராம் இன்சார்ஜ் அப்போ உன் கிட்ட தானே கொடுக்கணும்"

"ச்சு இன்ஜார்ஜ்ஜூன்னா எல்லாத்துக்கும் என்னையே வந்து இம்சை பண்ணூவீங்களா அதான் ஒவ்வொரு கேட்டகரிக்கும் இன்ஜார்ஜ் போட்டாச்சுல அப்போ அவுங்க கிட்ட தானே உங்களுககு தேவையானதை சொல்லணும். அவங்க கிட்ட கொடுங்க நான் இன்ஜார்ஜ்ன்னா என்கிட்டயே வரணும்னு அவசியம் இல்லை," என அவன் பட்டென்று கூற,

அதிலா முகப் விழுந்து விட்டது ஷர்மிகாவிற்கு. அந்த லிஸ்ட்டை அதுக்கான இன்ஜார்ஜ் பரமேஷ் கேட்டான் தான் இவள் தான் தானே வேந்தனிடம் கொடுத்துவிடுவதாக கூறி வந்திருந்தாள். அவனிடம் பேச அதனை ஒரு சந்தர்ப்பமாக அவள் பயன்படுத்தி கொண்டாள்.

அப்போது பரமேஷ் அங்கு வர,

"பரமேஷ் உன்னை எதுக்கு இன்ஜார்ஜ்ஜா போட்டு இருக்கேன். அவுங்களுக்கு என்னை தேவைன்னு பாத்து செய்யமாட்டியா?" அவனை வேந்தன் கடிந்து கொள்ள,

"இல்லை வேந்தா நான்‌ கேட்டேன். ஷர்மிகா தான் உன் கிட்டயே நேரடியா கொடுத்துக்கிறேன்னு சொல்லிட்டாங்க" என,

அவளை முறைத்தவன் "எதுக்கு இந்த தேவை இல்லாத வேலை நீங்க என் க்ளாஷ்மேட்டுன்றதுக்காக ஓவரா அட்வான்ட்டேஜ் எடுத்துக்க வேண்டாம். எல்லாருக்கும் என்னை ரூல்ஸ்ஸோ அதான் உங்களுக்கும் அதிகபிரசங்கி வேலை எல்லாம் பண்ண இங்க இடம் இல்லை" என வேந்தன் தயவு தாட்சண்யம் இன்றி கடிந்து கொள்ள,

அடுத்தவர் முன்னிலையில் அவன் கடிந்து கொண்டது ஷர்மிகாவிற்கு கோபத்தை வரவழைக்க,

"அவுங்க ஒரு ஜென்ஸ் அவுங்க கிட்ட எப்புடி எங்களோட தேவைகளை சொல்றது" என அவள் பட்டென்று கேட்க,

மற்ற இருவரும் அவளை விசித்திரமாக பார்த்தனர். அப்போது தான் அவள் கூறியதன் அபத்தம் அவளிற்கு உரைத்தது. பரமேஷ் ஆண்மகன் என்றால் அப்போது வேந்தன் யாராம்?

'போச்சு அப்போ நான் ஜென்ஸ் இல்லையான்னு கேட்க போறான்' என அவள் நினைத்ததற்கு மாறாக,

"ஓகே லேடிஸ் இன்ஜார்ஜ் ஒருத்தங்களையும் ஏற்பாடு செய்றேன்" என்றவன்,

பரமேஷிடம், "லதாவையும் உன்னோட சேர்த்துக்கோடா இனி நீங்க எதுனாலும் லேடி இன்ஜார்ஜ்கிட்டயே பேசிக்கலாம் அவங்களால முடியலைன்ன் என்கிட்ட கொண்டு வருவாங்க" என பரமேஷிடம் ஆரம்பித்து ஷர்மிகவிடம் முடித்தவனின் விழிகள் ஆடிட்டோரியத்தின் வாயிலில் உள்நுழைந்த நர்மதா மற்றும் அமுதினியிடம் படிந்தது.

தேர்வை முடித்தவர்கள் நேராக இங்கே வந்திருந்தனர்.

பரமேஷை கண்டதும் அவன் அருகில் வந்தவர்கள் "அண்ணா டான்ஸ்க்கு நேம் கொடுக்கணும்?" என,

பரமேஷ் பதிலளிக்கும் முன்,
"என்ன இப்ப வந்து சொல்றீங்க? கடைசி நேரத்துல வந்து நின்னா எப்புடி சேர்த்துப்பாங்க வேந்தன் எப்புடி முடியும் நீங்களே சொல்லுங்க" என ஷர்மிகா வாய் விட,

அவளை அலட்சியம் செய்த இருவரும், "அண்ணா நீங்க சொல்லுங்க!" என,

"அதான் நான் சொல்றேன்ல லாஸ்ட் மினிட்ல வந்த எப்புடி முடியும்" என விடாது ஷர்மிகா இடைபுக,

"நீங்க யாருங்க அதை சொல்ல?" அமுதினி எரிச்சலடைய,

"என்ன என்ன கேட்ட?" ஷர்மிகா கேட்க,

"காது கேட்கலையா உங்களுக்கு நீங்க யாரு அதை சொல்லன்னு கேட்டேன். நீங்க இன்ஜார்ஜ்ஜா இல்லையில்ல அப்போ நீங்க எதுக்கு இதுல தலையிடுறீங்க" அமுதினியும விடுவென என பேச,

"நான் சொல்லாம? நாங்களும் இதுல கலந்துக்கிறோம்ல எல்லாமே முடிவான பின்னே வந்து சொன்னா எங்களோடது எல்லாம் குளறுபடி ஆகாதா? எல்லா பாட்டுக்கும் டைமிங் செட் பண்ணி ஸ்கேடியூல் ரெடியாகிடுச்சு இப்போ போய் வேற எதையும் சேர்த்தா எல்லாமே மாறி குழப்பம் ஏற்படுமா இல்லையா? வேந்தன் நான் சொல்றது சரிதானே இப்போ எப்புடி முடியும்" என அவனையும் அவள் கூட்டு சேர்க்க,

அவனே இதற்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்ற ரீதியில் கல்சுரல் ப்ரோக்ராமிற்கான அஜெண்டாவை எழுதி கொண்டிருந்தான்.

அமுதினியும் நர்மதாவும் அவனை பார்க்க அவர்கள் பார்வை உணர்ந்தும் வேந்தனழகன் அவர்கள் புறம் திரும்பவில்லை.

"அண்ணா நீங்க தானே இன்ஜார்ஜ் நீங்க சொல்லுங்க சேரத்துக்க முடியுமா பாசிபில் இருக்கா?"

"என்ன நான் தான் இவ்வளவு தூரம்!!" என்ற ஷர்மிகாவை இடையிட்ட பரமேஷ்,
"வில் யூ ப்ளீஷ் கீப் கொயட் அவுங்க உங்க கிட்ட பேசலையே என்கிட்ட தானே பேசுறாங்க நான் பதில் சொல்லிக்கிறேன் நீங்க போகலாம்" என வெடுக்கென பதில் பேச,

ஷர்மிகாவின் முகம் கன்றிற்று.

அங்கிருந்து நகர சொல்லி அவள் அறிவு சொன்னாலும் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை அறிய வேண்டி அங்கயே நின்றாள் பரமேஷை முறைத்தப்படி,

"சீனியர் நீங்க சொல்லுங்க என்ன பண்ணலாம் இன்னும் நம்ம டைமிங் எதுவும் செட் பண்ணலை தானே?" பரமேஷ் கேட்க,

"இவ்வளவு நாளு என்ன பண்ணாங்கலாம் இப்புடி கடைசி நேரத்துல வந்து கேட்குறாங்க. எல்லாருக்கும் ஒரே ரூல்ஸ் தானே எப்புடி இவுங்களுக்கு மட்டும் நம்ம அதை மீற முடியும்" என்றிட,

அவனின் வார்த்தைகளில் ஷர்மிகாவின் முகம் மலர்ந்து விட மற்ற மூவரையும் எள்ளலாக பார்வை பார்க்க நர்மதாவிற்கு பற்றி கொண்டு வந்தது.


"நாங்க ஒண்ணும் எங்களுக்காக ரூல்ஸை மீற சொல்லலியோ சேர்த்துக்க வாய்ப்பு இருக்கான்னு தானே கேட்டோம்?"நர்மதா எகிறி கொண்டு வர,

"எல்லாமே கிட்ட தட்ட ரெடின்ற நிலைமையில இருக்குங்க டைம் மட்டும் தான் முடிவு ஆகலை இப்புடி கடசி நேரத்துல வந்தா கொஞ்சம் கஷ்டம் தான்" பரமேஷ் கூற,

"எங்களை இப்புடி வந்து கேக்க வச்சதுல உங்க சீனியரும் ஒரு ரீசன் தான் அண்ணா" அமுதினி கூற எழுதி கொண்டிருந்தவன் நிமிர்ந்து அவளை முறைக்க,

"விட்டா நீங்க டான்ஸ் ஆடாததுக்கும் நான் தான் காரணம்னு சொல்வீங்க போலயே" அமுதினியிடம் நேரடியாக அவன் கேட்டுவிட,

"அதானே" என் பின் பாட்டு பாடினாள் ஷர்மிகா.

"கண்டிப்பா நீங்களும் ஒரு காரணம் தான் ப்ரோக்ராமுக்கு நேம் கொடுக்க லாஸ்ட் டேட் எப்போ கொடுத்தீங்க வெறும் மூணு நாள்.

இந்த மூணு நாள்ல நாங்க யோசிக்க வேண்டாமா முக்கியமா வீட்டுல பேரன்ட்ஸ் கிட்ட பர்மிஷன் வாங்க வேண்டாமா? இன்னும் என்ன என்ன ப்ரோக்ராம் இருக்குன்னு கூட எங்களுக்கு சரிவர தெரியலை.

எங்க டிபார்ட்மெண்ட்க்கு இன்னைக்கு வரைக்கும் எக்ஸாம் இருந்திருக்கு அப்போ நாங்க எதுல கான்சன்ரெட் பண்ணுவோம். எக்ஸாமை வச்சுகிட்டு வீட்டுல பர்மிஷன் கேட்குறதும் கஷ்டம்னு உங்களுக்கு தெரியாதா என்ன?" என அமுதினி கேட்க,

'அவனிற்கு தெரிந்து தான் இருந்தது நேற்று வரை நர்மதா வீட்டில் போராடினாள் அல்லவா?'

"ச்சு மேனேஜ்மென்ட்ல அவ்வளவு தான் டைம் கொடுத்தாங்க, அந்த டைம்குள்ளயே எல்லாரும் நேம் கொடுத்தாங்களா இல்லையா? அட்லீஸ்ட் நீங்க ஒரு தகவலாச்சும் சொல்லியிருக்கலாம்ல எங்ககிட்ட வீட்டுல கேட்டு சொல்றோம்னு" வேந்தன் கூற,

அவன் கூற்றில் நியாயம் உள்ளது என்றாலும் பெண்கள் பக்கம் பார்க்கும் போது அவர்களிடமும் சரியான காரணம் இருந்தது.

'ஏனோ இதற்கு மேல் வேந்தனிடம் கேட்க பிடிக்காது போக'

"லீவ் இட் அமுதி போகலாம் அவுங்க அவுங்களுக்கு ஒரு சிச்சுவேஷன் வா அடுத்து வேற எதுலயாச்சும் பாத்துக்கலாம்" நர்மு கூறிட,

"ஏய் என்ன டி நீ தானே இதுல ஆர்வமா இருந்த" என்ற அமுதினிக்கு அங்கிருந்து போகவே விருப்பம் இல்லை. ஏனெனில் நர்மதாவின் ஆசை அது அவளிற்காக இவளும் வீட்டில் போராடி அனுமதி பெற்றிருந்தாள்.

"இரு டி கடைசியா ஒரு தடவை கேட்டு பாப்போம்" என்ற அமுதி, வேந்தனை பார்க்க அவனாலும் சட்டென முடிவு எடுத்து விட முடியவில்லை.

விடாது தன்னை நோக்கிய அமுதினியை கண்டு சற்றே எரிச்சல் வந்தது அவனிற்கு.

'ச்சு இப்போ தான் இவ கண்ணுக்கு நான் தெரியுற மாதிரி பார்ப்பா' என தலையை அழுந்த கோதியவன் அமைதியாக நிற்க அவனின் அமைதியில் அமுதியின் முகம் வாடிவிட்டது.

"போகலாம் வாடி" என்ற நர்மதா அமுதினியின் கையை இழுத்து கொண்டு செல்ல வேறு வழியின்றி அவள் பின்னே சென்றால் அவள்.

அமுதினியின் முகத்தை கண்டவன்,
"டேய் பரமேஷ் அவுங்களை கூப்பிடுடா?" என,

இருவரையும் அழைத்திருந்தான் அவன்‌.

"நான் மட்டும் இதுல டிசிஷன் எடுத்திட முடியாது மேனேஜ்மெண்ட் அண்ட் எல்லா ப்ரோம்ராம் இன்ஜார்ஜ் எல்லாருகிட்டயும் கேட்டு தான் முடிவு எடுக்க முடியும்.‌ அவுங்க ஓகே சொன்னாங்கன்னா நீங்க ஜாயின் பண்ணிக்கலாம் இல்லை அவுங்க வேண்டாம்னு பீல் பண்ணாங்கன்னா கண்டிப்பா நோ தான்" என சிறிதும் இளக்கமின்றி அவன் கூற,

இருவரும் சரியெனும் விதமாக தலையை ஆட்டினர்.

அடுத்த நிமிடங்களில் அனைவரையும் வர சொல்லியவன் நிலைமை கூறி "காய்ஸ் இதுல பார்ஷியாலாட்டி எதுவும் இல்லை உங்களுக்கு ஓகேன்னா சேர்த்துக்கலாம் இல்லை வேண்டாம்னா நோ தான் இது அவுங்க ரெண்டு பேருகிட்டயும் சொல்லியாச்சு அதனால உங்க கருத்துக்களை தயங்காமா சொல்லுங்க. உங்களுக்கு அவுங்களுக்கு ஒரு சான்ஸ் கொடுக்கலாம்னு தோணுச்சுன்னா ஓகே செல்லலாம் இல்லை எங்க கம்பர்டபிள் இதால டிஸ்டப் ஆகும் வேண்டாம்னு சொன்னீங்கன்னா கண்டிப்பு நோ சொல்லிடலாம்" என கூறி அவன் மாணவர்களின கருத்துக்களை கேட்க,

ஷர்மிகாவும் அவளது கேங்கும் முதல் ஆளாக நோ சொல்லி மறுத்திருந்தனர்.

வேந்தன் மற்றவர்களின் கருத்துக்களுக்காக காத்திருக்க‌ அவர்களுக்கு ஒரு சான்ஸ் கொடுத்து தான் பார்க்கலாமே என தான் தோன்றியது.

ஏனென்றால் ப்ரோக்ராம் இன்ஜார்ஜ்ஜே அவன் தான் அவன் நினைத்திருந்தால் அவனது தங்கையை சேர்த்திருக்கலாம் ஆனால் அவன் அதை செய்யாது தங்களை கூப்பிட்டு கருத்து கேட்டது அனைவருக்கும் பிடித்திருக்க அதற்காகவே சம்மதம் சொல்லலாம் என நினைத்தவர்கள் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கும்படி வேந்தனிடம் கூற அதன்படி அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

"ஓகே ஸ்டூடண்ட்ஸ் லெட்ஸ் கோ அண்ட் ப்ராக்டிஸ்" என அவர்களை செல்லுமாறு அவன் கூற மறு நிமிடம் கூட்டம் கலைந்தது.

கூட்டம் கலைந்து சென்று நர்மதாவும் அமுதினியும் செல்லாமல் இருக்க அவர்களை பார்த்தவன்,
"என்னாச்சு!! அதான் சேர்த்தாச்சுல கோ! போய் ப்ராக்டிஸ் ஸ்டார்ட் பண்ணுங்க டைம் கம்மியா இருக்கு ரீகர்சல் அப்போ சொதப்புனீங்கன்னா கண்டிப்பா தூக்கிடுவேன்" என அதுவரை புன்னகை முகமாய் இருந்த நர்மதா அவனது கடைசி வாக்கியத்தில் அவனை‌ முறைத்தவள்,

"அதெல்லாம் நல்லாவே பண்ணுவோம்" என்றவள் "வா அமுதி போகலாம்" என அவள் சில எட்டு வைக்க,

அப்போதும் நின்ற அமுதினியை அவன் புருவம் சுருக்கி பார்க்க "தாங்கஸ்" அதரங்களில் மெல்லிய புன்னகை மின்ன அமுதினி அவனுக்கு நன்றி உரைக்க,

தலையாட்டி அதனை ஏற்று கொண்டவன் மீண்டும் குனிந்து தனது வேலையை தொடர, சில விநாடிகள் அவனை பார்த்தவள் அங்கிருந்து நகர்ந்திருந்தாள்.

அடிக்கண்ணால் அவள் விலகி செல்வதை கண்டவன் நிமிர்ந்து செல்லும் அவளை பார்க்க,

தனது முதுகு துளைக்கும் உணர்வில் அமுதினி திரும்பி பார்க்க சட்டென கீழே குனிந்து கொண்டான் வேந்தன்.

அழகன் வருவான்!!!

உங்களது எண்ணவோட்டங்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே

 
அமுதம் 10

அதோ இதோ என நாட்கள் வேகமாக ஓடி நாளை கல்சுரல் என்ற நிலையில் வந்து நின்றது.

மாணவ, மாணவிகளுக்கு ப்ராக்டிஷிற்கு என ஆடிட்டோரியத்தை ஒதுக்கி கொடுத்திருந்தது கல்லூரி நிர்வாகம்.

அப்போது தான் தங்களது ப்ர்க்டிஷை முடித்து விட்டு அக்காடவென அமர்ந்திருந்தனர் அமுதினியும் நர்மதாவும்.

"ஏய் போதும் டி இதுக்கு மேல முடியாது" அழுகாத குறையாக நர்மதா கூற,

"என்ன போதுமா? கொலை பண்ணிடேவேன் உன்னை இன்னைக்கு ஈவ்னிங்க் வரைக்கும் புல் ப்ராக்டிஸ் தான்" என சிரிப்புடன் அமுதினி கூற,

"பேசுவ டி பேசுவ டான்ஸ் ஆடுறது நான் தானே நீ இதுவும் பேசவு இன்னமும் பேசுவ" என அவள் கடுப்பாக,

"நர்மதா சீனியர் உன்னை வர சொன்னாரு வெளிய நிக்கிறாரு" ஒருவன் தகவல் கொடுத்து விட்டு போக,

'இவன் எதுக்கு என்னை கூப்பிடுறான்?' என்ற யோசனையுடன் நர்மதா வெளியேற,

தனது மொபைலை எடுத்த அமுதினியின் கைகள் தன் போல இன்ஸ்டாவில் நுழைந்து திரவியத்தின் ஐ.டியினுள் நுழைந்தது.

'இன்னைக்கு சாரு என்ன ரீல்ஸ் பண்ணியிருக்காருன்னு தெரியலையே' என யோசித்தபடி அவனது பேஜ்ஜை ஸ்கோரல் செய்ய இன்று ரீல்ஸ் இல்லாது டிரெண்டிங் சாங்கிற்கு அவனது ஆஸ்த்தான ஸ்டெப்புகளை போட்டு நடனம் ஆடியிருந்தான்.

வழக்கம் போல் அவனது முக அசைவுகளில் தன்னிலை இழந்தவள் அடுத்தடுத்து ஸ்கோரோல் செய்ய தீடிரென அவளது விழிகளில் மின்னல்.

இன்ஸ்டா போஸ்டில் இவர்களது கல்லூரி இன்விடேசனை வைத்து அதில் சீப்கெஸ்ட்டாக அவன் கலந்து கொள்ள இருப்பதாக காட்டியது அப்போஸ்ட்.

பல நாள் பட்டினியாய் இருந்தவனுக்கு பழைய சோறு கிடைத்தால் எந்த மனநிலையில் இருப்பானோ அப்படியொரு மனநிலையில் இருந்தாள் அமுதினி.

தீடிரென உள்ளங்காலில் இருந்து உச்சந்தலை முழுவதும் மின்சாரம் பாய உடல் தள்ளாடிற்று.

உள்ளே ஆர்பரித்த சந்தோஷ அலை அவளை திக்குமுக்காட செய்ய உடல் லேசாக தள்ளாட மடங்கி அமர்ந்து விட்டாள்.

அவளின் சந்தோஷத்தை கத்தி வெளிப்படுத்த வேண்டும் என ஆவல் எழ இருக்கும் இடத்தை உணர்ந்து தன்னை கட்டுப்படுத்தி கொள்ள அவளையும் மீறி அவளது முகம் அதனை வெளிப்படுத்த, அவனை கண்டதும் தோன்றும் வெட்கப்புன்னகை அவளிதழ்களில்.

இங்கே, வேந்தனை தேடி சென்ற நர்மதா அவன் கேண்டீனில் இருப்பதை கண்டு அங்கு செல்ல,

தனக்கருகில் இருந்ந இருக்கையை சுட்டி காட்டி அவளை அமர சொன்ன வேந்தன் அவளிற்கு உணவினை வாங்கி வந்து தர,

கேள்வியாய் அவனை பார்த்தாள் நர்மதா.

"என்ன?" அவன் வினவ,

"அதான் நானும் கேட்டகிறேன் என்ன இது?"

"பார்த்தா தெரியலை உனக்குதான் சாப்பிடு காலையில இருந்து சாப்பிடமா தான இருக்க?"

"இல்லையே…யார் சொன்னா நான் சாப்பிடலைன்னு?"

"என்ன…நீ காலையில வீட்டுல சாப்பிடலைத்தானே அம்மா கூட சண்டை போட்டு தான கிளம்பின?"

"ம்ம்ம் ஆமா சண்டை போட்டேன் தான் ஆனா சாப்பிட்டுடேன்"

"எப்புடி அம்மா போன் செஞ்சாங்களே நீ சாப்பிடலைன்னு?"

"சாப்பிட்டேன்னு தானே சொன்னேன் எங்க சாப்பிட்டேன்னே சொல்லலையே?"

வேந்தன் புரியாது அவளை பார்க்க,

"அமுதினி!!!!" என்ற ஒற்றை வார்த்தையில் அவனிற்கு விளங்கி விட,

"ஓஹோ!!!!" என்றவன்,
"சரி நீ போ முன்னாடியோ சொல்லிருந்தா வாங்கமலே இருந்திருப்பேன்" என்றவன் அதனை எடுக்க,

"ஹேய் ஹேய் எதுக்கு எடுக்குற விட நானும் அமுதியும் சாப்பிட்டுக்குவோம் என்ன வாங்கியிருக்க" என்றவள் அதனை பிரிக்க போக,

அதற்குள் ஒருவன் வந்து "சீனியர் எல்லாம் ரெடியாகிடுச்சு" என்க,

அவசரமாக அவளை தடுத்தவன்,
"வா வா உனக்கு காட்டனும்னு தான் வர சொன்னேன்" என்றபடி அவளை அழைத்து கொண்டு கிரவுண்டிற்கு சென்றவன்,

"நேத்து இருந்து யாரு சீப்கெஸ்ட்டா வர்றாங்கன்னு கேட்டுட்டே இருந்தியே அங்க பாரு" என ஒரு இடத்தினை அவன் சுட்டி காட்ட,

ஆவலாய் திரும்பியவளின் முகம் அங்க பேனரில் இருந்த திரவியத்தை கண்டதும் சட்டென மாறி விட்டது.

தங்கையின் முக மாற்றத்தை கண்டவன்,

"என்னாச்சு நர்மு???" என்க,

"ஒண்ணும் இல்லை சின்ன யோசனை நான் கூட ஏதாச்சும் செலிஃப்பிராட்டியை கூப்பிடுவாங்கன்னு நெனைச்சேன்"

"இவரும் செஃலிபிரீட்டி தான் ஆனா இன்ஸ்டா செலிப்ரீட்டி" என்க,

"சரி லேட்டாச்சு நான் போறேன்" என வேகமாக அங்கிருந்து நகர்ந்தவளின் மனம் முழுவதும் யோசனையே.

யாரையோ எதிர்பார்த்து காத்திருக்க நிச்சயம் திரவியத்தினை அவள் எதிர்பார்க்கவில்லை.

'ச்சு இவனை தான் கூப்பிடனுமா வேற ஆளே கிடைக்கலையா?' நர்மதாவிற்கு அவனின் வருகையில் விருப்பம் இல்லை.

'ஏதோ இப்போது தான் அமுதினி அவனில் இருந்து வெளிவந்திருக்கிறாள். இப்போது பார்த்து இவனின் வரவு அவசியம் தானா?' என யோசித்தவாறே சென்றவளிற்கு உண்மை புலப்படையவில்லை.

"ஏய் என்ன டி இவ்ளோ நேரம்?" என கேட்ட அமுதினியை பார்த்தவளிற்கு மனம் கசங்கியது.

இவளின்‌ இந்த சிரிப்பு அவன் வந்து சென்ற பின்னும் இருக்குமா??

"சும்மா தான் டி வேற ஒண்ணும் இல்லை இந்தா இதை சாப்பிடு" என உணவினை அவளிற்கு நீட்டிய நர்மதாவிற்கு எப்படி விஷயத்தினை ஆரம்பிப்பது என தெரியவில்லை.

"ஹோய் நர்மு செல்லம்!!!! எப்புடி டி மறக்காமா வாங்கிட்டு வந்துட்ட? அதுவும் சூடா" என அவளிற்கு பிடித்தமான உணவு இருக்க அதனை ரசித்து ருசித்தவாறு அவள் உண்ண,

குழப்பத்தில் ஆழ்ந்திருந்தவள் தோழியின் வார்த்தைகளை கவனிக்க தவறினாள்.

"அமுதி!!!!"

"ம்ம்ம்"

"பேனர் பாத்தியா??"

"இல்லை டி இனி தான்!"

"நாளைக்கு சீஃப் கெஸ்ட் இன்ஸ்டா பிரபலம் திரவியம்!!!" என நர்மதா பட்டென கூற,

"அஹ்"இவளிற்கு உணவு தொண்டைக்குழியில் சிக்கிற்று.

இவ்வளவு சீக்கிரம் நர்மதவிற்கு தெரியவரும் என அவள் நினைக்கவில்லை.

நர்மதாவின் கூரிய விழிகள் தன்னை துளைப்பதை உணர்ந்து பதில் பேசும் அவசியத்தை உணர்ந்தவள்,

"ஓஹ்!!!!!" என்ற வார்த்தையோடு அமுதினி முடித்துக் கொள்ள,

"உனக்கு முன்னமே இது தெரியுமா?"

"ப்ச் லூசா டி நீ? நீ சொல்லி தான் எனக்கு இந்த விஷயமே தெரியும்" மனதறிந்து பொய்யுரைத்தாள் அமுதினி.

"அமுதி..நீ! நீ இன்னும் அவனை!!!!" என்றவளை முடிக்க விடாது இடைமறித்த அமுதினி,

"நர்மு ப்ளீஷ் அந்த பேச்சு வேண்டாமே விட்டுடு. எனக்கு அதை பத்தி பேச வேண்டாம் ப்ளீஷ்" என அவள் கெஞ்சிட,

"சாரி டி சாரி டி இனி பேசலை என் மேல ஏதும் கோபம் இல்லையே அமுதி நான் உன் நல்லதுக்கு தான் டி சொல்றேன். எனக்கு பொறமை எல்லாம் இல்லை டி அவன்கிட்ட இருந்து தள்ளி இருக்குறது தான் டி உனக்கு நல்லது.

சாரி டி நீ மறந்திருந்த அவனை நான் ஞாபகம் படுத்திட்டேன்" என விடாது மன்னிப்பு கேட்ட நர்மதாவை கண்டு குற்றவுணர்வு தலைதூக்கியது அமுதினியிடம்.

உயிரான தோழியிடம் உண்மையை அவள் மறைத்திருக்க அதுவே அவளது நெஞ்சத்தை அறுத்தது‌.

'அவளை போல நான் உண்மையா இல்லையே!!!அவகிட்ட இருந்து இவ்வளவு பெரிய விஷயத்தை மறைச்சு வச்சிருக்கேனே. என்னை முழுசா நம்பிட்டு இருக்குறவளுக்கு நான் துரோகம் பண்றேனோ!!' நட்பு கொண்ட மனம் குற்றவுணர்ச்சியில் தலைதூக்க ஆசை கொண்ட மனம் அதனை அடக்கி அதாளபாதாளத்தில் தள்ளியது.

*******************

'திரவியத்துக்கு மெசேஜ் செய்யலாமா?? நாளைக்கு எங்க காலேஜ்ஜுக்கு தான் வரப் போறீங்கன்னு சொல்லலாமா??' என தறிகெட்டு மனம் அலைப்பாய திரவியத்தின் மெசேஞ்சரினுள் செல்வதும் வருவதுமாக இருந்தவள்,

"இல்லை வோண்டாம் நாளைக்கு அவுங்களுக்கு சர்ப்ரைஷ் கொடுக்கலாம்' என அவள் ஒருமனதாக முடிவெடுக்க,

'ம்ம்ம் நாளைக்கு அவ்ளோ பெரிய‌ கூட்டத்துல நீ அவனை பார்க்கவா போறான்' அறிவு கொண்ட மனம் அவளை‌ ஏளனம் செய்ய,

"ஆமால்லா அவ்ளோ கிரவுட்ல அவுங்களை தேடி போய் பேச முடியுமா?? அப்டியே பேசுனாலும் என்னை அடையாளம் தெரிஞ்சுப்பாரா" அவள் வாய்விட்டு புலம்ப,

'அதெல்லாம் தெரிஞ்சுப்பான். எத்தனை கூட்டத்துல இருந்தாலும் நீ போய் நின்னா அவன் உன்னை கண்டுபிடிச்சுடுவான். ஏன்னா நீ தான் அவனுக்கு ஸ்பெஷல் ஆச்சே' ஆசை கொண்ட மனம் துள்ள,

அதன் துள்ளலிள் மகிழ்ந்தவள் அறிவுரை கூறிய மற்றொரு மனதினை டீலில் விட்டு விட்டாள்.

விடிந்தால் சல்சுரல் ப்ரோக்ராம் என்ற நிலையில் அமுதினியின் உள்ளம் குதுகலத்திலும் சந்தோஷத்திலும் நிறைந்திருந்ததில் தூக்கம் அவளை விட்டு எட்டி நிற்க நெஞ்சம் படபடவென அடித்து கொண்டது.

நெடுநேரம் அவனை பற்றிய சிந்தனையில் புரண்டவளின் உள்ளத்தில் சந்தோஷம் அலைஅலையாய் பரவியது.

காரணமே இல்லாத வெட்கசிரிப்பு அவளது உதடுகளில் நிரந்தரமாய் தங்கி விட்டிருந்து.

"ம்ஹீம் இது வேலைக்காகாது அவனை பாத்தா தான் இந்த மனசு அடங்கும்" என யோசித்தவள் வேகமாக மொபலை எடுத்து அவனது வீடியோக்களை பார்வையிட நெடு நேரம் சென்றே கண்ணயர்ந்தாள்.

**************
"கண்ணு நாளைக்கு காரைக்குடிக்கு போறியா??" அன்னை கேட்ட கேள்விக்கு பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்த திரவியம்,

"ஆமாம்மா நேத்தே சொன்னேன்ல?"

"ம்ம்ம்" என்றவரின்‌ முகம் வாட்டமாய் இருக்க,

செய்து கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு அவரின் அருகே வந்தவன்,

"என்னம்மா ஏன் மொகம் வாட்டமா இருக்கு" என்றவாறு அவரின்‌ முகத்தை அவன் நிமிர்ந்த பதறி விட்டான்.

"என்னம்மா என்னாச்சு எதுக்கு இப்புடி அழறீங்க??"

"நேத்து விஷேஷத்துக்கு போனேன்ல கண்ணு??" என அவர் விசும்ப,

"ஆமா அங்க என்னாச்சு ஏதும் சண்டையா??"

"இல்லை இல்லை அங்க உங்க அத்தை, சித்தி, பெரியம்மா எல்லாரும் வந்துருந்தாங்க"

"ஆமாம்மா நம்ம சொந்தக்கார விஷேஷம் அப்போ வந்திருப்பாங்கதான" என்றவன் சட்டென,

"அம்ம் அவுங்க ஏதும் சொன்னாங்களா??"

"ம்ம்ம்ம்" என்றவர் அவறின் கூற்றை ஆமோதிக்க,

"என்னம்மா எப்பவும் அவுங்க பேசுறது தானே??"

"இல்லை கண்ணு எப்பவும் நீ வீடியோ போடுறதை பத்தி தான் பேசுவாங்க ஏன் தேவையில்லாத வேலை உருப்படியா ஒரு வேலைக்கு போகமான்னு தான் சொல்லுவாங்க ஆனா ஆனா இந்த தடவை" என அவர் நிறுத்த,

"இந்த தடவை!!!!" அவன் முகம் மாற,

"ராமாசாமி மாமா உனக்கு வரன் எதுவும் பாக்கலையான்னு கேட்டாரு? நானும் பாக்கனும் மாமா நல்ல பொண்ணா சொந்தத்துல இருந்தா சொல்லுங்கன்னு தான் கண்ணு பேசுனேன்.

உடனே உன் அத்தை "ஏன் மதினி நம்ம சொந்தத்துல யாரு அவனுக்கு பொண்ணு தருவாங்கன்னு நீங்க பொண்ணு பாக்க சொல்றீங்கன்னு" கேட்டா கண்ணு".

"அம்மா பிட்டு பிட்டா சொல்லாம்மா என்ன நடந்துச்சு முழுசா சொல்லுங்க" என அவன் அதட்டியதும் முழுவதையும் கூறலானார்.

திரவியத்தின் அத்தை மல்லிகா அவ்வாறு கேட்டதும், "ஏன் மல்லிகா என் பையனுக்கு என்ன குறை? ஏன் அவனுக்கு பொண்ணு கேட்டா என்ன தப்பு? அவனுக்கு பொண்ணு கொடுக்கமாட்டேன்னு உன்கிட்ட வந்து யாரு சொன்னது??"

"யாரும் சொல்லனுமா என்ன? அதான் நம்ம சொந்தம் எல்லாம் பேசிக்குதே" அவனின் சித்தி வனிதா கூற,

அதிரிந்து விட்டார் மல்லம்மாள். ஏனெனில் கூறியது அவரின் உடன்பிறந்த தங்கையை ஆயிற்றே.

"என்ன வனிதா நீயே இப்புடி பேசுற?"

"உண்மையாதன க்கா சொல்லுறேன் என் நாத்தனார் பொண்ணை கேட்டியே அவுங்க என்ன சொன்னாங்கன்னு தெரியுமா?? "ஆம்பிளையா ஒரு வேலைக்கு போக துப்பில்லாமா இப்புடி பொண்ணுங்க மாதிரி வீடியோ போட்டு திரியிரவனுக்கு எப்புடி மா நீ பொண்ணு கேட்டு வரன்னு" மூஞ்சிலடிக்காத குறையா பேசிடாக" என்க கலங்கி விட்டார் மல்லம்மாள்.

இத்தனை பேரின் முன்னால் அதை கூறி தான்‌ ஆக வேண்டுமா என மல்லம்மாள் எண்ணாமல் இல்லை.

"அது மட்டும் இல்லைக்கா இன்னொரு விஷயமும் காத்து வாக்குல வந்திருக்கு. இவன் இப்புடி வீடியோ போட்டு திரியிறதுல நிறைய பொம்பிள்ளை பிள்ளைங்க கூட பழக்கம் இருக்குன்னும் பேசாறாங்கா. இப்புடி பொண்ணுங்க பழக்கம் இருக்குறவனுக்கு யாரு பொண்ணு கொடுப்பாங்க.

அதுவும் இல்லாமா என் பையன் ஒண்ணு காட்டுனா திரவியத்தோட வீடியோவுக்கு ஒரு பிள்ளை கமெண்ட் பண்ணியிருக்கு என்னன்னு பண்ணிருக்கு தெரியுமா? கருமம் கருமம் இப்புடியும் பொண்ணுங்க கூச்சநாச்சம இல்லாம பேசுவாங்களா?? அத்தனை பேரும் பாப்பாங்கன்னு தெரிஞ்சே அந்த பிள்ளை அவ்வளவு தெனாவட்டா பண்ணியிருக்கு அப்போ அந்த பிள்ளை எவ்வளவு மோசமான பிள்ளையா இருக்க வேணாம். இவன் அந்த பிள்ளை கூட சகவாசம் வேற வச்சிருக்கான்.

இதை எல்லாம் பாத்துட்டு எப்புடி நம்ம சொந்தக்காரங்க பொண்ணை கொடுப்பாங்க. பாத்துகோங்க பையன் எவகிட்டயாவது விழுந்து இழுத்துட்டு வந்துடப்போறான்" அவள் ஓரகத்தி கனகா வாழைப்பழத்தில் ஊசி ஏற்றவது போல் விஷத்தை கக்க,

"இன்னமுமா அதெல்லாம் இல்லாமா இருக்கும் கனகம் மதினி. யாருக்கு தெரியும்? பாத்து பெரிய மதினி பையன சூதனமா வச்சுக்கோங்க எந்த நேரத்துல எவளை இழுத்துட்டு வந்திடாமா? கொஞ்சம் கண்டிச்சு வைங்க இல்லையின்னா நீங்க தான் அசிங்கப்பட்டு போவீங்க" என மல்லிகா கூற அதற்கு மேல் அங்கு இருக்காது கிளம்பி வந்து விட்டார்.

மல்லம்மாள் கூறியது கேட்டு உடல் இருக்க அமர்ந்திருந்தான் திரவியம்.

தன்னைப் பற்றி இவ்வளவு கேவலமாக அதுவும் சொந்தங்களே பேசுவார்கள் என அவன் சத்தியமாக நினைக்கவில்லை. ஏதோ வீடியோ போடுவதில் பிடித்தம் இல்லாமல் இருக்கிறார்கள் என அவன் நினைத்துக் கொண்டிருக்க அவர்களோ அவனது ஒழுக்கத்தினை சந்தேகிந்துள்ளனர் என்பதை அவனால் தாங்க இயலவில்லை.

"கண்ணு!!!" மகனின் இறுகிய தோற்றம் அவரை கலங்கடிங்க,

"ஏம்மா அவுங்க சொன்னது எல்லாம் உண்மையின்னு நம்புறியா ம்மா??"

"ச்சே ச்சே உன்னை போய் அப்புடி நெனைப்பேனா கண்ணு நீ ஒழுக்கமானவன்டா என் வருத்தம் எல்லாம் நம்ம சொந்தமே இப்புடி பேசுறாங்களேன்னு தான். வெளி ஆள் பேசுனா கூட பரவாயிலாலை உன்னை பத்தி நல்லா தெரிஞ்ச இவுங்களே இப்புடி பேசுறதை தான் என்னால தாங்கிக்கவே முடியலை கண்ணு" என்றவரின்‌ கண்களில் இருந்து கண்ணீர் வழிய,

"ம்மா ம்மா அழுகாதம்ம் நீ அழுதா அவுங்க சொல்றது எல்லாம் உண்மையினு‌ ஆகிடாதா? அவுங்க சொன்ன மாதிரி நிறைய பொண்ணுங்க கமெண்ட் பண்றாங்கத்தான் ஆனா தப்பான‌ அர்த்தத்துல இல்லைம்மா அவுங்க அன்பை எப்புடி காட்டுறதுன்னு தெரியாமா சில பொண்ணுங்க ஆர்வக்கோளாறுல இப்புடி பண்ணிடுவாங்க.

ஆனா எனக்கு தெரியுமா என்னோட எல்லை எதுன்னு. எல்லார்கிட்டயும் போய் நான் பேசிட மாட்டேன்ம்மா எனக்கு தெரியும் நான் கொஞ்சம் பேசுனா அது அவுங்களை என்கரேஜ் பண்ணிட மாதிரி ஆகிடும்னு நான் ஒதுங்கி தள்ளியே தான் இருப்பேன் ம்மா. நான் அப்புடி எல்லாம் வழி தவறி போயிட மாட்டேன்ம்மா என்னை நம்புறியா??"

"உன்னை நம்பாமயா கண்ணு. நம்ம சொந்தம் எல்லாம் எப்போ நம்ம கீழ விழுவோன்னு கழுகாட்டம் பாத்திட்டு இருக்காங்க அவுங்களுக்கு அந்த வாய்ப்பை கொடுத்துடாதய்யா அம்மா உன்கிட்ட இதை மட்டும் தான் கேக்குறேன் செய்வியா"

"ம்மா ம்மா உனக்கு எப்புடி நான் புரிய வைக்கிறது. இதுவரைக்கும் என்‌ மனசுல எந்த பொண்ணும் இல்லைம்மா இனியும் யாரும் வரமாட்டாங்க. நீங்க பாத்து சொல்லுற பொண்ணை தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன் இது சத்தியம் இதுல என்னை நீங்க முழுசா நம்பலாம்.

யாரெல்லாம் இப்போ உங்களை பேசுனாங்களோ அவுங்க முன்னாடி நீங்க தலைநிமிரந்து நிக்கலாம். என் பையன் நீங்க சொன்ன மாதிரி இல்லைன்னு சும்மா கெத்தா சொல்லலாம்" என அவன் சிரிக்க அந்த தாயின் மனம் குளிர்ந்துப் போயிற்று.

அழகன் வருவான்!!!!!!

கதையினை பற்றிய உங்களது எண்ணவோட்டங்களை கீழே உள்ள திரியில் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே!!!


 
Status
Not open for further replies.
Top