அத்தியாயம் : 36
ஆர்னி கண்விழித்து பார்த்த பொழுது நல்ல சொகுசான மெத்தையில் படுத்திருந்தாள். சுற்றிலும் இருள் சூழ்ந்திருக்க மெல்ல எழுந்தாள். சற்று நேரம் அவளுக்கு எங்கே இருக்கிறோம் என்றே புரியவில்லை .
அறையை விட்டு வெளியே வர, நேராக தொங்கிக் கொண்டிருந்த கடிகாரத்தில் மணி மாலை 7 என காட்டியது. சூழ்நிலை உறைக்க! அமிர்தனை தேட அவன் அங்கே இல்லை. "ஆதூ" என்று அழைத்தபடி வர,
"ஆனி.. கிச்சனுக்கு வா" என்ற அமிர்தனின் குரல் கேட்க ! அங்கே சென்றாள். இலகுவான டீ சர்ட் மற்றும் பேண்ட் அணிந்து உணவு எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்.
"ஆனி.. ரிஃப்ரெஷ் பண்ணிட்டு வா. சாப்பிடலாம் " என்று கூற,
"ஆதர்ஷ் எங்கே?" என்றாள்.
"திவி வந்து அழைத்து போய் விட்டாள். நீ நல்லா தூங்கின! எழுப்பி பார்த்தாள். நீ எழுந்திருக்கவில்லை. சரி, நான் அழைத்து வருகிறேன் " என்று ஆதர்ஷ் திவியோடு அனுப்பி வைத்தேன்" என்றான் .
"ஓஓ! நல்லா தூங்கிட்டேன் போலிருக்கு, எழுப்பியதே தெரியவில்லை . நான் ரெப்ஃபிரஸ் செய்து விட்டு வருகிறேன் " என்று சென்றாள்.
அமிர்தன் இருவருக்கும் உணவு எடுத்து வைத்திருந்தான். எதுவும் பேசாமல் , உணவை உண்டு முடித்தனர். சாப்பிட்ட பாத்திரங்களை ஆர்னியே எடுத்துச் சென்று சுத்தம் செய்து வைத்தவள். "போகலாமா?" என்று கேட்க ,
"உட்கார். உன்னிடம் சில விசயங்கள் பேச வேண்டும்" என்றான்.
எதற்கு பயந்து ஓடிக் கொண்டிருந்தாளோ! . அதை எதிர் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் அமிர்தன் அவளை நிறுத்தி விட்டான். ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது" என்ற நிலை!.அமிர்தன் எதிரில் பயம், தயக்கம், சங்கடம், தவிப்பு என கலவையான உணர்வுகளுடன் அமர்ந்தாள்.
என்ன விசயம் கேட்கப்போகிறார்? என்று அமிர்தனது கேள்வியை எதிர்நோக்கி காத்திருக்க! அமிர்தன் சொல்ல ஆரம்பித்தான்.
"நீ டெலிவரி முடிந்து , என்னை ம்ஹூம் என்று அந்த வார்த்தையை நிறுத்தியவன். குழந்தையை விட்டுவிட்டு போன பிறகு, ஆதர்ஷை இரண்டு மாதத்தில் லண்டன் அழைத்துச் சென்று விட்டேன்.
அப்புறம் நீ ரிட்டர்ன் செய்த பணம் வந்தது. அசோக் கூட கேட்டான். ஆர்னியை தேட முயற்சி செய்யலாம் அண்ணா? என்று!
நம்மை வேண்டாம் என்று போனவர்களை தேடி போறது ! நம்ம தன்மானத்திற்கு இழுக்கு.. அதனால் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன் என்றுவிட்டு, ஆர்னியின் முகத்தை பார்க்க! உதட்டை கடித்துக் கொண்டு தலைகவிழ்ந்து அமர்ந்திருந்தாள். எதுவும் பேசவில்லை . அமிர்தனே மேலும் தொடர்ந்தான்.
அப்புறம், ஒரு சிக்ஸ் மன்த் கழித்து தாரா எனக்கு போன் செய்தாள். நீ, தாராவுடைய அப்பா, விக்ரம், மூன்று பேரும் ஹாஸ்பிட்டலில் பேசிக் கொண்டிருந்ததை அவள் கேட்டாளாம்" என்றதும்!
ஆர்னி வெடுக்கென்று தலையை நிமிர்த்தி பார்த்தாள் . அமிர்தன் இப்போது ஷோபாவில் நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டு, தனது பேச்சை தொடர்ந்தான்.
"என் அப்பா தான், உங்களை கொல்வதற்கு ஆள் அனுப்பியது. அப்புறம் நீ என்னிடம் பணம் வாங்கி, அவங்க அக்கௌண்டில் டிரான்ஸ்பர் பண்ணது . புருஷோத்தமனை பற்றி சொன்னால்! தாராவுடைய வாழ்க்கை பாதிக்கப்படும் என்று நீங்க சொல்லாமல் மறைத்தது. இப்படி பல விசயங்களை சொன்னாள்.
என்னுடைய வாழ்க்கைக்காகத்தான் ஆர்னி, ஆதி உங்களிடம் உண்மையை சொல்லவில்லைனும், அவங்க அப்பா, நீ பாய்சன் சாப்பிட்டு கஷ்டப்பட்டதை பார்த்து திருந்தி விட்டாதாகவும், அவங்க அப்பாவை மன்னித்து விடும்படியும் கேட்டாள்" என்றான் .
ஆர்னி மூச்சு விடக் கூட மறந்து அமிர்தன் பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு அருகிலிருந்த லேப் டாப்பை இயக்கியவன். அதில் வீடியோ ஒன்றை ஓட விட்டு அவள் புறம் வீடியோவை திருப்பி வைத்தான்.
ஆர்னி அந்த விஷம் கலந்த கூல்டிரிங்க்ஸ் குடிப்பது தற்செயலாக பதிவாகியிருந்தது. ஒன்றும் புரியாதது போல் அமிர்தனை பார்க்க! ஆர்னி அந்த ஜூஸ் குடிப்பதை சுலோமோசனில் காண்பிக்க!
ஆர்னி முதலில் ஒரு கிளாஸில் உள்ள ஜூஸை குடிக்கிறாள். பிறகு மற்றொரு கிளாசை எடுக்கும்போது அவளது கைகள் நடுங்குவதும், முகத்தில் உயிர் பயம் இருப்பதும். அதை குடிக்கும்போது அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிவது கூட சூம் (zoom) பண்ணி பார்த்ததில் நன்றாகவே தெரிந்தது.
திகைத்து அமிர்தனை நிமிர்ந்து பார்க்க! "சோ! அந்த ஜூஸை தெரிந்தே தான் குடித்திருக்காய்? தவறுதலாக மாற்றி குடித்து விட்டேன் என்று சொன்னது பொய்! அப்படித்தானே? "என்று கேட்கும் போது அமிர்தனது தொண்டை அடைத்தது. அதை வெளிக்காட்டாமல் சாதாரணமாகவே பேசுவது போல் பேசினான்.
ஆர்னி, அமிர்தனையே பார்க்க! அவனும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
"இந்த விசயம் மட்டும் எங்க பேமிலிக்கு கிட்டதட்ட ஒன்றரை வருடத்திற்கு முன்பே தெரியும். அவங்க அந்த கார் ஆக்ஸிடெண்ட், அப்புறம் இந்த விஷம் கலந்த ஜூஸ் குடிக்காமல் என் உயிரை காப்பாற்றியது நீதான் என்று தெரிந்ததால்! அவங்க தான் இத்தனை நாட்களாக தேடி உன்னை கண்டுபிடித்தது" என்றான் .
"ஓ!" என்று சுரத்தில்லாமல் கேட்டுக் கொண்டாள். இதெல்லாம் எதற்காக சொல்கிறேன் என்றால்! "பணத்திற்காக கொலை செய்கிறேன் என்று வந்தாலும், அதை செய்யாமல் என் உயிரை மனிதாபிமான அடிப்படையில் காப்பாற்றியிருக்கிறாய்" என்று அமிர்தன் கூற!
' நான் மனிதாபிமான அடிப்படையில் காப்பாற்றவில்லை. உங்க மேல் உள்ள அளவு கடந்த காதலால் தான் காப்பாற்றினேன்' என்று உள்ளம் கதற! அதை வெளிக்காட்டாமல் அப்படியே சிலையென அமர்ந்திருந்தாள்.
"நீ எதற்காக வந்தாய்? என்று தெரியாமல் நான் தான் உன்னை கல்யாணம் செய்து உன் வாழ்க்கையை கெடுத்துவிட்டேனோ? என்று குற்றவுணர்வு " என்றான் தலையை கோதியபடி.
"அவசரமாக இல்லை " என்று மறுத்தவள். " நீங்க தாலியென்று தெரியாமல் தான் கட்டினீங்க. நான் அப்போவே விருப்பமில்லை" என்று மறுத்திருக்கனும் " என்றாள் ஆர்னி .
'ஆஹா! இவன் எதற்கு இப்படி பேசிகிறான் என்று தெரியாமல்,இவ வேறு தானாக வந்து மாட்டிக்கிறாளே' என்று பரிதாபப்பட்டது அமிர்தனின் மனசாட்சி .
"நம் இருவர் மேலும் தப்பு இருக்கு ஆனி" என்றவன். "அதை சரி செய்ய ஒரு வழியிருக்கு" என்றான் ஆர்னியை ஓரக்கண்ணால் பார்த்தபடி ,
"என்ன அது? " என்றாள் புரியாமல் .
"இப்போ, நமக்கு டைவர்ஸ் ஆகிவிட்டதென்றால்! என்னுடனான இந்த திருமண வாழ்க்கையிலிருந்து உனக்கு விடுதலை. எதற்கு உனக்கு விருப்பமில்லாமல் , சேர்ந்தும் வாழாமல் இதை தொடரனும்" என்று அவள் முன் டைவர்ஸ் பத்திரத்தை வைக்க,
அதிர்ந்து எழுந்து விட்டாள். "இல்லை. நான் இதில் கையெழுத்து போட மாட்டேன் " என்று பின்னால் நடந்த படியே சொல்ல,
"ஏன் ஆனி? என் கூட வாழ விரும்பாமல் தானே?. நீ விலகி போனது?" என்று கேட்க,
இதுவரை அமிர்தனுக்கு தன்னை மிகவும் பிடிக்கும் என்ற நம்பிக்கை . டைவர்ஸ் பேப்பரை பார்த்தவுடன் தவிடு பொடியாக! ஆர்னி, வெடிக்க ஆரம்பித்தாள்.
"இல்லை. உங்களுக்கு தான் என்னை பிடிக்கவில்லை. ஆரம்பத்தலிருந்து என்னிடம் கோபமாக தான் பேசுவீங்க. தாலின்னு தெரியாமல் போட்டதால் என் கூட வாழ்ந்தீங்க. குழந்தை உருவானதால் என்னிடம் பாசமாக இருக்கிற மாதிரி நடித்திருக்கீங்க. இப்போ குழந்தை பிறந்தவுடன் ,டைவர்ஸ் கேட்கிறீங்க?" என்று அழுது கொண்டே கூற..
"கொஞ்சம் முன்னாடி தான். என் மேல் எந்த தப்பும் இல்லை னு சொன்ன? இப்போ இவ்வளவு தப்பை அடுக்கிற?" என்றான்.
பதில் சொல்ல முடியாமல், முகத்தை மூடி அழ ஆரம்பித்தாள். அவள் அழுவது பொறுக்காது. அவள் கைகளை முகத்திலிருந்து விலக்கியவன்.
"எதுக்குடி இப்போ அழற?. அப்போ விட்டுவிட்டு போகும் போது தெரியலையா?" என்று குத்திக்காட்டியவன். "உனக்கு எங்கே தெரியப் போகுது? " என்றான் விரக்தியாக .
"உன்னை பார்த்ததிலிருந்தே பிடிச்சிருந்தது டி. ஆனால் அது காதல் என்றெல்லாம் எனக்கு தோணல! உங்கிட்ட சின்ன சின்ன வம்பு பண்ண தோணும். அது சும்மா ஃபன் தான்னு நினைத்துக் கொண்டிருந்தேன்.
அந்த கார் ஆக்ஸிடெண்ட் ஆனபோது! உன்னை முதலில் ஹாஸ்பிட்டல் கூப்பிட்டு போகனும் என்று தான், நினைத்து வந்து கொண்டிருந்தேன். கார் உங்க பிளான் படி ஆக்ஸிடெண்ட் ஆக, அந்த டிரைவருக்கு ஹெல்ப் பண்ண போய் எனக்கும் கையில் பிளட் வந்தது.
நீ என்னை கவனிக்காமல்! அந்த டிரைவரை போய் பார்த்து கவலைப்பட்டு கொண்டிருந்ததாய்! எனக்கு கோபம் வந்தது. அதனால் தான் உன்னிடம் கோபமாக பேசினேன்.
பிறகு, அந்த ஜூஸை குடித்துவிட்டு நீ உயிருக்கு போராடிய போது! என் உயிரே எங்கிட்ட இல்லடி. இதற்கு மேல் உன்னை விட்டு இருக்க முடியாது என்ற நிலையில், உனக்கும் என்னை பிடிக்கும் என்று உணர்ந்ததால் தாலியென்று தெரிந்து தான் உன் கழுத்தில் போட்டேன்" என்றான் .
ஆர்னி, " என்ன!" என்று அதிர்ச்சியாகி விட்டாள்.
" பின்னே! வெளிநாட்டில் பிறந்தாலும், எனக்கும் தாலியென்றால் என்னென்னு தெரியும். எல்லோரையும் சமாளிக்கத்தான். எனக்கு எதுவும் தெரியாத மாதிரி நடந்து கொண்டேன். பிரச்சனையாகாமல் பெரியவர்களே சேர்த்து வைத்து விட்டார்கள்" என்றான்.
" ஆனால் நீயென்ன செய்த ஆனி, உனக்கு ஒரு இடத்தில் கூட, நான் முக்கியமாக தெரியவில்லையா?.
உனக்கு நட்பு பெரிதாக இருந்ததால்! விக்ரமிற்காக இடுப்பு வலியிலும் போராடினாய். புருஷோத்தமனை காட்டிக் கொடுத்தால் எங்கே தாரா வாழ்க்கை பாதிக்கப்படுமோன்னு அந்த உண்மையை சொல்லாமல் மறைத்தாய்.
ஆனால் ஒரு இடத்தில் கூட, என்னை பற்றி நினைக்கவில்லையே?" என்றான் வேதனையாக..
"ஐயோ! தனு" என்று அவன் வேதனை கண்டு பதறி துடிக்க!
"என்னை விடு. அந்த பச்சை குழந்தை அது என்ன பண்ணுச்சு. அதையும் தானடி அப்படியே விட்டுட்டு போன" என்று சாட்டையடியாக கேள்வி கேட்க,
அங்கிருந்த சுவற்றில் சாய்ந்தவள். "என் மேல் தான் எல்லா தப்பும் . நான் ஒத்துக்கிறேன்" என்று துடித்தவள். "சின்ன சின்ன தவறுகளை செய்து வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்த எங்களுக்கு! உங்களை கொலை செய்ய வேண்டும்" என்ற புது வேலை வந்தது.
உங்க போட்டோ காண்பித்தார்கள். அதில் ஒரு குழந்தையை நீங்க கொஞ்சுவது போல் இருக்கும். உங்க முகத்தில் தெரிந்த கனிவை பார்த்து! அந்த குழந்தை நானாக இருக்கக் கூடாதா? என்று ஏக்கமாக இருந்தது.
பிறகு தான். உங்களை காப்பாற்ற நாங்க வந்தது. உங்களை அருகிலிருந்த பார்க்க பார்க்க! உங்களை ரொம்ப பிடித்திருந்தது. உங்களை காதலிக்க ஆரம்பிதேன்" என்று தலையை குனிந்து கொண்டு மெதுவாக கூற, அமிர்தன் அவளருகில் நெருக்கமாக வந்து நின்று கொண்டான்.
அமிர்தனின் இந்த திடீர் நெருக்கம். அவளுள் ஒரு இனம்புரியா அவஸ்தையை ஏற்படுத்த,
"ம்ம்ம். சொல்லு" என்று ஆர்னியை மேலும் ஊக்க!
' நீ கொஞ்சம் தள்ளி நில்லு அமிரு. அதான் அந்த புள்ள விசயத்தை சொல்ல வருதில்ல. இப்படி கிட்ட போய் நின்னா? . நீயே ஜெர்க்காகிற! அந்த பெண்ணிற்கும் அப்படித்தானே இருக்கும். முதலில் விசயத்தை சொல்ல விடு' என்று மனசாட்சி எடுத்துரைக்க,
அதே நிலையில் நெருங்கி சொல் என்பது போல் அவள் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தான்.
'என்றைக்கு நான் சொல்லி இவன் கேட்டிருக்கிறான்' என அவன் மனசாட்சி தான் தலையில் அடித்துக் கொண்டது.
ஆர்னி மேலும் தொடர்ந்தாள். "புருஷோத்தமன் உயிருக்கு போராடிய என்னை பார்த்து விட்டு மனம்திருந்தி , உங்களை எதுவும் செய்ய வேண்டாம் என்று கூறி திட்டத்தை கைவிடச் சொன்னார்.
உங்களை எனக்கு பிடித்திருந்தாலும், நான் கிளம்பிப் போக வேண்டிய சூழல் வந்துவிட்டதால்! அங்கிருந்த கிளம்பும் நேரத்தில் நம் திருமணம் நடந்தது.
எல்லோரும் வந்து இந்த திருமணத்தை ஒற்றுக் கொள் என சொன்ன பொழுது! நான் விரும்பிய உங்களுடன் வாழ வாய்ப்பு கிடைக்க, அதை ஏன் விட வேண்டும்? கொஞ்ச நாட்களாவது உங்க மனைவியாக வாழனும் என்ற பேராசை!
உங்க மனைவியாக சந்தோஷமாக வாழ்ந்தேன். பிறகு நடந்தது தான் உங்களுக்கே தெரியுமே.
புருஷோத்தமனை நான் ஏன் காட்டிக் கொடுக்கவில்லையென்றால்! தாரா ஒரு காரணமாக இருந்தாலும், உங்களை நான் சந்தித்தது அவரால் தான். என்னுடைய காதலை விட, உங்களுடைய அன்பு மிகப்பெரிய விசயம் தனு! காதலித்து கல்யாணம் செய்து கொள்வதோ, இல்லை கல்யாணத்திற்கு பிறகு கணவன் மனைவி காதலிப்பதோ பெரிய விஷயமில்லை.
ஆனால் தன்னை கொலை செய்ய வந்தவள் என்று தெரிந்தும்! அன்பா, பாசமா நடந்திக்கிறது என்பது சாத்தியமே இல்லை. அப்படிபட்ட பொக்கிஷமான நீங்க எனக்கு கணவனாக கிடைத்தது அவரால் தான். அதனால் தான் காட்டிக் கொடுக்கவில்லை.
இன்னொன்று ஆதி, "எனக்கு உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்று ஆசையால் ஏகப்பட்ட காரணங்களை சொல்லி சமாளித்து இங்கே வந்த போது, எனக்கு துணையாக ஒவ்வொரு விசயத்திலும் நின்றது ஆதி.
அப்படிப்பட்டவனை என்னோட சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொண்டு, அவனை அப்படியே விட்டுச் செல்வது! எப்படி சரியாகும்?" என்று கேட்க ! அமிர்தன் எதுவும் பேசவில்லை .ஆர்னி பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்தான்.
" அப்புறம் பேராசைபட்டு உங்க கூட மனைவியாக வாழ்ந்தேன். உங்க கூட இருக்கும் பொழுது எதுவும் தோணாது. ஆனால் நீங்க இல்லாதபொழுது! நான் உங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன். என்னோட சுயநலத்திற்காக உங்க வாழ்க்கையில் நான் கரும்புள்ளியாய் இருக்கேன் னு குற்றவுணர்ச்சி!
உங்ககூட முதலில் இருந்த இரண்டு நாளிலியே குற்றவுணர்ச்சியை தாங்க முடியாமல் தான்! உங்க அப்பா நல்லாயிருக்காங்கன்னு திரும்பவும் வந்த போனை மறைத்தேன்.
ஆனால் திரும்பவும் உங்களிடம் மாட்டிக் கொண்ட பொழுது என்னை பற்றி எல்லாம் தெரிந்து விட்டதில், எனக்கு நிம்மதி தான். நிம்மதியாக மூச்சு விட முடிந்தது.
ஆதர்ஷ் ! ஒரு குழந்தைக்கு தாய் முக்கியம்தான். ஆனால் என்னைவிட உங்க கூட இருந்தால் ஆதுவிற்கு எல்லாமே கிடைக்கும். என்னைவிட நன்றாக பார்த்துக் கொள்வீங்க, அந்த நம்பிக்கையில் தான்" என்று கூறி அமிர்தனை பார்க்க!
இரும்புச் சிலையென அவள் பேசுவதையே கேட்டுக் கொண்டிருந்தவன். "புருஷோத்தமன், ஆதியை நீ காப்பாற்றியதற்கு ஒரு காரணம். ஆதர்ஷை நான் பார்த்துக் கொள்வேன்" என்றாய்? அது கூட ஒரு வகையில் ஒற்றுக் கொள்ளலாம்!
ஆனால் எல்லோர் பற்றியும் யோசித்த நீ? . ஒரு இடத்தில் கூட என்னை பற்றி யோசிக்கலையே ஆனி" என்று இதயத்தின் வலி முகத்தில் அப்படியே தெரிய அமிர்தன் கேட்டதும் திகைத்தவள்.
"தனு".. என்று கதறி. அவனை இறுக்கி அணைத்துக் கொண்டவள். "அப்படியெல்லாம் இல்லை தனு. "நீங்க தான் எனக்கு முக்கியம். "உங்களுக்காகத்தான் நான் வந்தேன்" என்று அவன் முகத்தை கைகளில் தாங்கிக் கொண்டு முகம் முழுவதும் முத்தமிட்டாள்.
"ம்ஹூம் " என்று மறுப்பாக தலையசைத்து, அவளை தன்னிடமிருந்து விலக்கியவன். உனக்கு நான் முக்கியமென்று தோன்றியிருந்தால்! என் மேல் நம்பிக்கை இருந்திருந்தால்? என்னிடம் எல்லா விசயத்தையும் நான் கேட்ட போதே சொல்லியிருப்பாயே?" என்ற கேள்விக்கு, அவளுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை .
"முதலிலும் என்னை விட்டுப் போன? உன்னை காணும் னு , நான் எவ்வளவு துடிச்சிருப்பேன்? எத்தனை நாள் தூக்கமில்லாமல் என்னாச்சோ? ஏதாச்சோ?. யாராவது ஏதாவது பண்ணிட்டாங்களோன்னு? தவிச்சிருப்பேன்.
அதன் பிறகு, "நீ சொன்னியே? என்னை பற்றி தெரிந்தும் என்னிடம் அன்பாக இருந்தேன்னு. ஏன் தெரியுமா?" என்றான்.
"ம்ஹும் " என மறுப்பாக தலையசைக்க.
"என் கண்ணை நம்பவில்லை. மற்றவர்கள் உன்னை பற்றி சொன்ன விசயம் அத்தனையும் கேட்டு, இவ தப்பென்று சொல்ற அறிவை நம்பவில்லை. ஆனால் ! உன் கண்ணை நம்பினேன் டி.அதில் என் மேல் தெரிந்த காதலை நம்பினேன்! " என்று பெருமூச்சு விட்டவன்.
"இதெல்லாம் இப்போ பேசி பிரயோஜனமில்லை. நீ டைவர்ஸ் பேப்பரில் சைன் போடு என்று அதுதான் முக்கியம் என்பது போல் பேச!
"ம்ஹூம் . நான் கையழுத்து போட மாட்டேன்" என்றாள் இப்பொழுது அழுத்தமாக .
"ஏன்? " என்றவன். "நீனாகத் தானே பிரிந்து சென்றாய்? . இப்போது என்ன?" என்றான் புரியாமல்.
"நான் இனிமேல் உங்களை விட்டு, ஆதுவை விட்டு போக மாட்டேன் தனு" என்றாள் பாவமாக
' அடப்பாவி! உன்னிடமிருந்து எஸ்ஸாக இருந்தவளை, உன்னைவிட்டு போக மாட்டேன்னு சொல்ல வச்சிட்டியே டா!' என்று வாயை பிளந்தது. அமிர்தனின் மனசாட்சி
"அதெல்லாம் நம்ப முடியாது. திரும்பவும் அவனை காப்பாத்தனும். இவனை காப்பாத்தனும்னு, நீ கிளம்பி போய்விடுவாய். இதெல்லாம் சரியா வராது ஆர்னி" என்றான் கெத்தாக.
"ம்ஹூம் . அப்படியெல்லாம் போக மாட்டேன் தனு " என்றாள் அவசரமாக
"நான் எங்க இருந்தாலும். அங்கே தான் நீனும் இருக்கனும். அதற்கெல்லாம் நீ ஒற்றுக் கொள்ள மாட்டாய்" என்றான் . அவள் சிறுபிள்ளை போல் எல்லாவற்றிற்கும் சம்மதம் சொல்வதை கண்டு, வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு!
"இல்லையில்லை. நீங்க எங்கே இருக்கிறீர்களோ? அங்கே தான் நானும் இருப்பேன்" என்றாள் உறுதியாக.
"இதில் எந்த மாற்றமும் இல்லையே" என்றான் அழுத்தமாக .
"எந்த மாற்றமும் இல்லை" என்றாள் ஆர்னியும் உறுதியாக.
" சரி. ஓ.கே" என்றுவிட்டு போனில் யாருக்கோ தொடர்பு கொண்டான். எடுக்கவில்லை..
"ம்ம்ச்ச்" என்று சலித்தவன். " கொஞ்ச நேரத்தில் கிளம்பி விடலாம்" என்று விட்டு வாஷ் ரூம் சென்றான்.
அமிர்தன் சென்ற சிறிது நேரத்திலேயே அவனது போன் ஒலிக்க, அருகில் சென்று பார்த்த போது, "திவ்யா " என்ற பெயர் டிஸ்பிளேயில் ஒளிர்ந்தது