எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கனலில் பூத்த சீ(தை)தன் அவன்(ள்) - கதை திரி

Status
Not open for further replies.
வணக்கம் தோழமைகளே,

நான் நிலா 29 என் கதையின் அறிமுகத்துடன் வந்துள்ளேன்.?

இதுவே தாமதம் தான் இருந்தும் வந்துவிட்டேன். Late at Latest Finally, I am arrived.?

என் நிலா எழுத்தாள தோழமைகள் சிலர் கதையையே முடித்து விட்டார்கள். நானோ இப்போ தான் அறிமுகத்தோடு வந்துருக்கேன். கொஞ்சம் படபடப்பா தான் இருக்கு.

ஏன்னா எனக்கு இது தான் முதல் போட்டி அதனால சாதரனமா வரப் படபடப்போட இன்னும் கொஞ்சம் அதிகமாவே இருக்கு உங்க அனைவரோட எதிர்ப்பார்ப்பையும் பொய்யாக்காம பூர்த்தி செய்துடுவேன்னானு தான். ஆனா என்னால் முடிந்தளவு சிறப்பா கொடுக்க முயற்சி செய்றேன்.?


நறுமுகை நிலா கால போட்டியில் பங்குபெற வாய்ப்பு அளித்த ப்ரஷா நட்புக்கு என் மனமார்ந்த அன்பை தெரிவித்து கொள்கிறேன் மற்றும் சக எழுத்தாள தோழமைகளுக்கு என் வாழ்த்தையும் கூறிக் கொள்கிறேன்.????

இப்போது கதையின் பக்கம் செல்வோம்,

நிலா - 29

கதை பெயர் - கனலில் பூத்த சீ(தை)தன் அவன்(ள்)

ஹீரோ - ஹீரோயின் கதையின் போக்கில் பார்க்கலாம்..?

இப்பொழுது ஒரு சிறு முன்னோட்டம் உங்களுக்காக விரையில் பதிவுகளுடன் வருகிறேன்..?


கனலில் பூத்த சீ(தை)தன் அவன்(ள்)

முன்னோட்டம்:

அடர்ந்த காரிருள் சூழ்ந்த வனப்பகுதி அது. மழைமகள் வந்து சென்றதற்கான அறிகுறியாய் மண்ணில் படர்ந்து இருக்கும் ஈரப்பதம்.

மண்ணில் இருக்கும் ஈரப்பதம் அங்கு நின்று இருப்பவர்கள் நெஞ்சில் இல்லையோ? அப்படித் தான் போலும், இருந்திருந்தால் இச்செயலை செய்யத் தான் துணிவார்களா?

"ஐயோ! அம்மா என்ன விட்டுறுங்களேன்… நான் எதுவும் சொல்லமாட்டேன்

என்னைப் போக விடுங்க… என்னை எதுவும் செய்யாத ப்ளீஸ், என்னை விட்டுறு…" அவள் கெஞ்ச,

எதிரில் இருப்பவன் விகாரமாய் சிரித்தான். "என்ன உன்னைக் காதலிச்சு உன் கூட வாழ்ந்து குடும்பம் நடத்துவேன்னு நினைச்சீயா… அப்படி எல்லாம் கிடையாது, எனக்கு உன் அழகு மட்டும் தான் தேவை… அது கிடைக்குற வரைக்கும் லாபம் நினைச்சு தான் உன் கூடப் பழகினேன். நீயும் அதுக்கு ஒத்துக்கிட்ட இப்போ என்ன பத்தினி வேஷம் போட்டா உன்னை விட்டுறனுமா…"

அங்கு நடக்கும் அநியாயத்தைத் தட்டி கேட்கும் நபர்கள் எவரும் இல்லை என்பது தான் பரிதாபத்திற்குரிய விடயமாகியது. அப்பெண்ணின் அலறலிலும், வலியின் முனகலிலும் அந்த அநியாயம் நடந்தேறியது.

களவாண்ட அந்த மிருகங்களை அவளைத் தூக்கி ஒரு ஓரமாய் வீதியோரம் வீசிவிட்டு சென்றனர்.

அநியாயமாக அவளின் வாழ்வு சூணியமாக்கப்பட்டது வெறும் காதல் எனும் ஒற்றைச் சொல்லில்.

அந்த வலியிலும் அவள் எண்ணங்கள் தன்னையே குற்றம் சாட்டியதோ? பொய்யெது? உண்மையெது? என அறியாமல் போன தன் அறியாமையால்.

********************************************

மும்பை அந்தேரி வெர்சோவா பீச் அருகில் விடியற்காலை 2:45 மணி அங்கு ஒரு ஆண் கதற கதற அவனின் ஈன செயலுக்கு மிகவும் கொடுமையாகத் தண்டனை கொடுக்கப்பட்டு கொண்டிருந்தது.

"என்ன டா. பொண்ணுங்கன்னா அவளோ இளக்காரமா போச்சா, நீங்க நினைச்சா பொண்ணுங்களை தூக்கிட்டு போய் யூஸ் பண்ணுவீங்க இல்ல காதலுன்னு பெயருல பொண்ணுங்களை ஏமாத்திட்டு கொண்ணுட்டோ இல்ல குற்று உயிராய் போட்டுட்டு போவீங்க அவங்க இது எல்லாம் சகிச்சிட்டு அமைதியா போகனுமா. இதுக்காகத் தான் அவங்க அம்மா, அப்பா பாசத்தையும் உயிரையும் கொடுத்து வளர்த்து இருக்காங்க பாரு."

"அது எப்படி எப்படி உங்க டைம் பாஸ்க்கு, அவங்க உங்களுக்கு உடன்பட்டு தான் ஆகனுமா. எவ்வளோ திமிர், ஏன்? உங்க அரிப்புக்கு பொண்ணுங்க தான் கிடைச்சாங்களா, ஏன் சுவத்துல போய்ச் சொரிய வேண்டியது தான அப்பத் தெரியும் கச்சேரி."

"அது முடியாதுன்னு பொண்ணுங்க வாழ்க்கையை நாசம் பண்ண வேண்டியது.. உங்களைக் கொல்ல போறதுனால இதைப் பார்த்து இன்னொருத்தன் திருந்துவான் அதுக்கு இது முன் மாதிரியா இருக்கும் சொல்றது எல்லாம் ரொம்பவே அபத்தமான விஷயம்."

"ஆனா, இப்ப நான் உன்னை அந்தப் பொண்ணு கையால கொலை பண்ண தான் போறேன்.. அதனால நீ கதறுறது வேஸ்ட்.."

அந்தப் பெண், அவன் பேச்சுக்குச் செவி சாய்த்து ஏற்கனவே வேட்டை நாய்களால் குதறி எடுக்கப்பட்டு இருந்தவனை தன் மனம் அமைதியுற சுட்டுக் கொண்றாள்.

இங்கு ஒரு ஆணை வேட்டையாடியவன் நேரே நவீன ரக உல்லாச விடுதிக்குள் நுழைந்தான். அங்கு மஞ்சத்தில் அவனுடன் கிறங்கிய பெண்ணுக்குச் சத்தமில்லாது இடுப்புக்கு கீழ் உணர்வே வராத ஊசியைச் செலுத்தி விட்டு அவளைத் தன்னுடன் இசைக்க உந்த, அவள் உணர்வு வராது முழிக்க.. அவளைக் கூர்மையாய் பார்த்தவன், அவளின் அறை குறை ஆடையில் இழுத்து வந்து அவ்உல்லாச விடுதி முன் அவளைப் பகிரங்கமாக நிற்க வைற்று தகாத வார்த்தையில் பேசி அவமானப்படுத்தி விட்டுச் சென்றான்.

பெண்களுக்காய் நியாயம் கேட்பவன்,
அதே பெண்களை மான பங்கம் படுத்தவும் தயங்காத அஞ்சா நெஞ்சன் இவன் காக்கும் தேவனா அல்ல அழிக்கும் ருத்ரனா இவனைப் படைத்தவேனே அறியான்.
ஆயினும் இவனையும் அறிய வருவாள் இவனின் மறுபிம்பம்.


********************************************

இக்கதையின் பதிவுகளுடன் விரைவில் உங்களைச் சந்திக்க வருவேன் முழு நிலவாக.. இப்போதைக்கு கதையின் முன்னோட்டத்தை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.?

வாசக தோழமைகளே உங்களின் கருத்துக்களே எனது ஊக்கம்.. அதனால் உங்கள் மனதின் கருத்தைத் தயங்காது கூறவும். ?

கதை எப்படி இருக்கு என்ன நினைக்கிறீங்க.. என்ன எதிர்ப்பார்ப்பு வருது முன்னோட்டம் படிச்சுன்னு இப்படி என்ன என்னாலம் சொல்ல நினைக்கிறீங்களோ தாராளமா கீழே கருத்து சொல்லுங்க.. விரைவில் நான் கதைக்கான பதிவுகளுடன் வரேன்.. ?

அதுவரை மேகத்துக்குள் மறைந்திருக்கும் நிலவாய் நான்.???

கருத்து திரி


அன்புடன்
நிலா 29
 
Last edited:
வணக்கம் தோழமைகளே,

முதலில் என் இனிய விநாயகர் சதூர்த்தி நல்வாழ்த்துகள்.

விநாயகரின் அருளால் இந்நாளில் என் கதையின் முதல் அத்தியாயத்துடன் வந்துவிட்டேன்.கனலில் பூத்த சீ(தை)தன் அவன்(ள்)


கனல் - 01


"அன்பை நாடிச் சென்ற

நங்கையவளுக்கு
விட்டில் பூச்சியின் கதியோ?"அடர்ந்த காரிருள் சூழ்ந்த வனப்பகுதி அது. மழைமகள் வந்து சென்றதற்கான அறிகுறியாய் மண்ணில் படர்ந்து இருக்கும் ஈரப்பதம்.

மண்ணில் இருக்கும் ஈரப்பதம் அங்கு நின்று இருப்பவர்கள் நெஞ்சில் இல்லையோ? அப்படித் தான் போலும், இருந்திருந்தால் இச்செயலை செய்ய தான் துணிவார்களா?

பெண்ணின் பெண்மை அங்கு களவாடப்பட்டது. முகமூடி அணிந்த நபர்களால், போலி அன்பின் உறவை காதலன் என்ற போர்வையில் மற்றும் அவன் நல்ல நண்பர்கள் எனும் பெயரில்.

காதலன் என நம்பி வந்தவளுக்கு அவள் காதல் மேல் வைற்ற நம்பிக்கை தூள் தூளாகியது அவன் செயலாற்றிய செயலில்.

"ஐயோ! அம்மா என்ன விட்டுறுங்களேன்… நான் எதுவும் சொல்ல மாட்டேன் என்னைப் போக விடுங்க… என்னை எதுவும் செய்யாத ப்ளீஸ், என்னை விட்டுறு…" அவள் கெஞ்ச,

எதிரில் இருப்பவன் விகாரமாய் சிரித்தான். "என்ன உன்னை காதலிச்சு உன் கூட வாழ்ந்து குடும்பம் நடத்துவேன்னு நினைச்சீயா… அப்படி எல்லாம் கிடையாது, எனக்கு உன் அழகு மட்டும் தான் தேவை… அது கிடைக்குற வரைக்கும் லாபம் நினைச்சு தான் உன் கூட பழகினேன். நீயும் அதுக்கு ஒத்துக்கிட்ட இப்போ என்ன பத்தினி வேஷம் போட்டா உன்னை விட்டுறனுமா…"

"டேய்! அங்க என்னடா வேடிக்கை இவ நல்லா கம்பெனி கொடுப்பா… நல்லா அனுபவிச்சிட்டு தூக்கி போடுங்கடா. எனக்கு சலிச்சு போச்சு…" என அவன் அந்த கானகம் அதிர கூற,

அவர்களோ கழுதைப்புலி இனம் போல, கிடைத்தவரை லாபம் என்று அவளை புசிக்க தொடங்கி அவளை நாசம் செய்து விலகினர்.

அங்கு நடக்கும் அநியாயத்தை தட்டி கேட்கும் நபர்கள் எவரும் இல்லை என்பது தான் பரிதாபத்திற்குரிய விடயமாகியது. அப்பெண்ணின் அலறலிலும், வலியின் முனகலிலும் அந்த அநியாயம் நடந்தேறியது.

களவாண்ட அந்த மிருகங்கள் அவளை தூக்கி ஒரு ஓரமாய் வீதியோரம் வீசிவிட்டு சென்றனர்.

அநியாயமாக அவளின் வாழ்வு சூணியமாக்கப்பட்டது வெறும் காதல் எனும் ஒற்றைச் சொல்லில்.

வீதியோரம் வீசியெறிந்தவளோ இன்னும் தான் ஏன் உயிருடன் இருக்கிறோம் என்று யோசித்தாளோ என்னவோ? இல்லை இந்த அயோகியர்களே வாழும் போது தான் மட்டும் ஏன் சாக வேண்டும் என்று நினைத்தாளோ? எதுவோ ஒன்று அவள் உயிரைப் பிடித்து வைத்திருந்தது வைராக்கியமாக.

அந்த வலியிலும் அவள் எண்ணங்கள் தன்னையே குற்றம் சாட்டியதோ? பொய்யெது? உண்மையெது? என அறியாமல் போன தன் அறியாமையால்.

இப்படியே அவள் மனம் விழித்திருக்க, அவள் மனதின் விழிப்புக்கு முளையும் ஒத்த விசை ஆற்றியதோ? அம்மரண வலியிலும்.

வெய்யோனவன் வந்தான் தன் கடமையை ஆற்ற, ஆனால் அவள் மேல் அவனுக்கும் அனுதாபம் தோன்றியதோ? தன் வெய்யோன் கிரண்களை மிகவும் இளக்கமாக அவள் மேல் பாய்ச்சினானோ..

அமைதியான சூழலில் அவ்விடம் இருக்க வாகனங்கள் மட்டும் வந்து சென்றுக் கொண்டிருந்தது.

அப்படி ஒரு வாகனம் அவ்வழியைக் கடக்கும் சமயம் திடீரென்று நின்று விட, வாகனத்தில் உள்ளவர்கள் என்னானது என யோசிக்க,

அந்த வாகனத்தை ஓட்டி வந்தவர், தன் மனைவியிடம்,"நீ உள்ளே இரும்மா நான் என்னாச்சுன்னு பாக்குறேன்.." என இறங்கி வாகனத்தை பார்க்க, ரேடியேட்டர் மிகவும் சுடாகியதால் கார் நின்று விட்டது என்று தெரிந்தது.

"ரேடியேட்டர் ரொம்ப சுடாகிடுச்சு, அதான் கார் நின்னு போச்சு.. நம்மக்கிட்ட தண்ணீர் இருக்கா, இருந்தா தாம்மா.." என்க,

அவர் தன்னிடம் இருந்த போத்தலை நீட்டினார். அதை வாங்கி தண்ணீர் ஊற்ற, தண்ணீர் பத்தவில்லை..

"ம்ச்" என சலித்துக் கொண்டு சுற்றிப் பார்த்தார். சுற்றிலும் வயல் வரப்புகள் இருந்தன. ஆனால் தண்ணீர் சற்று உள்ளே சென்றால் கிடைக்க வாய்ப்புள்ளது என்று யோசித்து விட்டு,

காரில் அமர்ந்திருக்கும் தன் மனைவியிடம்,"அம்மு, தண்ணீர் பத்தலமா அதனால கொஞ்சம் உள்ளே போய் எடுத்துட்டு வரேன். நீயும், குட்டிசும் காருக்குள்ளையே பத்திரமாக இருங்க.." என்க,

"சரிங்க பார்த்து போய்ட்டு சீக்கிரம் வாங்க.." என்றார்.

"ம்ம்" என்று விட்டு அவர் உள்ளே இறங்கி நடந்து செல்ல அவர் போன பாதையையே பார்த்திருந்தார் அவர் மனைவி.

சிறிது நேரத்தில் தண்ணீருடன் வந்து கொண்டிருந்தவர் காதில் ஏதோ மெல்லிய சத்தம் விழ..

முதலில் ஏதோ பூச்சி போல என்று நினைத்து அலட்சியப்படுத்தி விட்டு நடக்க.. மீண்டும் அதே ஒலி கேட்க,
முன்பு எளிதாய் கடந்து செல்ல நினைத்தவரால் இப்போது மனம் ஒப்பாது அங்கு நின்று சுற்றும் முற்றும் பார்த்தார். மறுபடியும் அதே சத்தம் கேட்க, இப்போது அதை உண்ணிப்பாக கவனிக்க அது ஒரு பெண் வலியில் முனங்கும் சத்தம் என்று புரிந்தது.

புரிந்த விநாடி சற்று திகைத்து பின் சத்தம் வந்த திசை நோக்கி வேக எட்டு வைத்து அந்த இடத்தை அடைந்தவர் அங்கு கண்ட காட்சியில் முன்பை விட இன்னும் திகைத்து தான் போனார் அப்பெண் இருந்த நிலைக் கண்டு.

மறுநிமிடமே, அவருள் இருந்த மனிதனும்,மருத்துவரும் விழித்துக் கொள்ள அவள் அருகே குணிந்து அவளின் நாடித் துடிப்பைப் பார்க்க அதுவோ ஊசிமுனையில் துடித்துக் கொண்டிருந்தது.

உடனே அப்பெண்ணை தன் வாகனம் இருக்கும் இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என சிந்தித்து விட்டு, அதற்கு முன் இவ்விஷயத்தை மனைவியிடம் கூற ஓடினார்.

தன் கணவர் ஓடி வருவதைக் கண்டு பதட்டமடைந்த அவர் மனைவி,"என்னங்க என்னாச்சு? ஏன் இப்படி ஓடி வரீங்க?" என்க,

அவரின் கேள்விக்கு தான் கண்ட விடயத்தை கூறினார் அவர். அவரும் கணவனுக்கு ஏற்ற மனைவியாய் மாறி அப்பெண்ணை தூக்கி கொண்டு வந்து தன் காரினுள் கிடத்தி விரைவாக அவளுக்கு முதலுதவி செய்ய தற்சமயத்துக்கு அவளின் ஊசலாடி கொண்டிருக்கும் உயிரை பிடித்து வைத்தனர்.

"என்னங்க சீக்கிரமா காரை எடுங்க, இந்த பொண்ணுக்கு உடனடியா டீர்ட்மென்ட் பார்க்கலைனா இந்த பொண்ணு உயிருக்கு ஆபத்தாகிடும்ங்க.. எப்படி இந்த பொண்ணு இவ்வளோ நேரம் தாங்குச்சுன்னே தெரியல.." என அவர் வருத்ததுடன் கூற,

"கவலைபடாதடா அம்மு, நம்ம தான் நம்ம ஊரை நெருங்கிட்டோம்ல நம்ம ஹாஸ்பிட்டல்லையே டீர்ட்மென்ட் பார்த்துடுவோம்.. டோன்ட் பெனிக்.."

இவர்கள் சத்தத்தில் உறங்கி கொண்டிருந்த மகனும்,மகளும் மெல்ல உறக்கம் கலைய "ம்மா" என்க,

அவர்களை கண்டவர்.. மெல்ல அவர்களைத் தட்டி கொடுக்க மனைவி புறம் திரும்பி மகவுகளை கண்காட்டி அமைதி காக்கும் படி கூறி காரை வேகமாக கிளப்பினார்.

மனிதம் இன்னும் இறக்காமல் இருப்பதற்கு இவர்களைப் போல மனிதர்களே சாட்சி.

—-----------------

மும்பை அக்காலத்தை தொட்டு இக்காலம் வரை மும்பை கனவுகளின் நகரமாகவும், நாகரிகத்தின் சின்னமாகவும், அதிர்வலைகளை ஏற்படுத்தும் வாழ்வியல் முறைகளுக்காக இன்றளவும் அறியப்படுகிறது. போர்ச்சுகீசியர்களாலும், பிரிட்டிஷ்காரர்களாலும் மும்பை வேறு வேறு பெயர்களில் அழைக்கப்பட்டது.

இந்தியாவின் கொங்கன் கடற்கரையில் அமைந்துள்ள மும்பை, ஓர் ஆழமான இயற்கை துறைமுகம். இந்தியா கையாளும் கடல்வழி சரக்கு வணிகத்தில் மும்பை துறைமுகம் ஏறத்தாழ 60% பங்களிக்கிறது.

இப்பேர்ப்பட்ட பல ஆச்சரியங்களை கொண்டு இருக்கும் மும்பை சில வித்தியாசமான உலகத்தையும் கொண்டுள்ளது.

உண்மை கசக்கும் பொய் இனிக்கும் அதற்கு சான்று இப்பெரிய மாநகரமும் விதிவிலக்கல்ல.

மும்பையின் கடைக்கொடி என்றும் சொல்ல முடியாது அது தான் பல குற்ற பின்னணிகளை உள்ளடக்கிய இடம் என்றும் கூற முடியாது. ஆனால் பல நிழல் உலக வேலைகள் அங்கு வெகு சுலபமாக நடைபெறும்.

காமாதிபுரா அல்லது காம்திபுரா ஆண், பெண், மூன்றாம் பாலினத்தினவர்கள் என பலர் உல்லாசமாக இருக்கும் இடமது. பல அதிரடிகளையும், காண்போரையும், கேட்போரையும் திகைக்க வைக்கும் காட்சிகளையும், செய்திகளையும், பிரச்சினைகளையும் உள்ளடக்கி பகலில் அமைதியாகவும் இரவில் ஆர்ப்பாட்டமாகவும் இயங்கும் பகுதி அது.

அப்படி ஒரு பகுதியில் தான் பெண்ணொருத்தி முஜ்ரா ஆடிக் கொண்டிருந்தாள். அவள் நடனத்தில் அங்கிருந்தவர்கள் மயங்கி கிறக்கமாக தங்கள் முன் இருந்த திரவத்தை ருசித்து பருகிக் கொண்டிருந்தனர்.

சிலர் அவளின் மேல் பணத்தை வாரி எறிந்துக் கொண்டும் அவளுடன் உரசிக் கொண்டு தானும் ஆடுகிறேன் பேர் வழி என்று போதையில் தள்ளாடி கொண்டு இருந்தனர்.

அனைவரின் தாக்குதலையும் லாவகமாக சமாளித்து புன்னகை முகமாகவே ஆடிக் கொண்டு இருந்தாள்.

அதில் ஒருவன் ஒரு படி மேலே போய்,"ஹே, லடுக்கி ஆஜ் ராத் மேரே சாத் பீத்தாகி கியா?"(ஹே, பொண்ணே இன்று இரவு என்னோடு கழிக்கிறாயா?) என கூறிக் கொண்டு அவள் கையைப் பிடித்து இழுக்க, அவளோ மிரண்டு முழித்தாள்.

அவனிடம் இருந்து அவள் விலக எத்தனிக்க, அதற்கு விடாது அவன் அவளை இழுக்க என அங்கே ஒரு இழுப்பிடி நடக்க, அதைக் கண்ட அவள் தோழி வேகமாக வந்து அவனை தன் பக்கம் திருப்பினாள்.

"சாப், உஸ்ஸே கியா பூச்சுனா, ஹம்ஸே பூச்சீயே, ஹம் ஆப்க்கி ஹர் கிவோயிஷ் பூரி கரேங்கி."(சார், அவகிட்ட என்ன கேட்குறீங்க, என்கிட்ட கேளுங்க, நான் உங்களுடைய எல்லா விருப்பத்தையும் நிறைவேத்துறேன்.) என அவள் குழைந்து உரசிக் கொண்டே நெருங்கி நின்று கூற, அவனோ போதையில் அவளின் மேலதிகமான அழகில் மயங்கி அவளுடன் இழைய ஆரம்பிக்க, அவள் தன் தோழியை நன்றி பெருக்குடன் பார்த்து விட்டு அங்கிருந்து ஓடினாள்.

ஒடிவந்தவள் தன்னறைக்கு வந்து தன்னிலையை எண்ணி கதறி அழுதாள்.

இதுவரை அவளை பாதுகாத்து தான் வருகின்றனர் அங்கு இருப்பவர்கள். அவளை மற்றவர்களை போல அந்த வேலைக்கு அவளை ஈடுப்படுத்தாது, ஏனெனில் அவளால் ஆடும் நடனத்திற்கு வரும் ஈடு இல்லா பணத்திற்கு. அவள் நடனம் இங்கு மட்டும் பிரபலம் இல்லை பல பெரிய பணகாரர்களின் அந்தரங்க கோட்டைக்கும் பிரபலமே.

அக்கோட்டை பூவையவளை இன்னும் தன் அசுத்தமான காற்றால் நுகராது தான் இருக்கிறது. ஆனால் எத்தனை நாளைக்கு?

அவள் கதறல் ஒரு முடிவுக்கு வந்த பின் மீண்டும் தன் ஓப்பனையை செய்ய ஆரம்பித்தாள் அடுத்த நடனத்திற்கு.

வாழ்க்கையின் ஓட்டத்தில் இவளின் சாபக் கால வாழ்க்கையும் செல்கிறது, என்று தீருமோ இவளின் இவ்வாழ்க்கை ஓட்டம் அதற்குள் இவள் காகித மலராய் கசங்குவாளா அல்ல நறுமன மலராய் நறுமனம் வீசுவாளா? பொறுத்து இருந்து பார்ப்போம்.

கனல் பூக்கும்.

***********

இதோ கனலில் பூத்த சீ(தை)தன் அவன்(ள்) கதையின் முதல் அத்தியாயம் பதிந்து விட்டேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை கருத்து திரியில் பதியுங்கள்..


கருத்து திரி:


உங்கள் கருத்துக்களை காண ஆவலாய் நான்..

வாசக தோழமைகள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை என் இனிய விநாயகர் சதூர்த்தி நல்வாழ்த்துகள்.


அன்புடன்
நிலா 29.
 
Status
Not open for further replies.
Top