எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மறைமதி வாழ்வின் நிறைமதி அவள் -2

Padma rahavi

Moderator
மாடி கண்ணாடி ஜன்னலில் அவன் நின்று அவளைப் பார்ப்பது அவளுக்குத் தெரிய, லேசாக புன்னகைத்து விட்டு , நான் பேருந்தில் போகிறேன் என்று செக்யூரிட்டியிடம் எழுதிக் கொடுத்து விட்டு சென்றாள் சிவகர்ணிகா.

சமூகம், மக்களைப் பார்க்கத் தான் பேருந்து பயணம் என்று கூறினாளே தவிர, பேருந்து பயணம் முழுக்க அவள் நினைப்பு அவன் மேலேயே இருந்தது. என்ன ஒரு வித்தியாசமான மனிதன் என்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தாள்.

அவள் தாய் வாசுகி, வாசலிலேயே நின்று கொண்டிருந்தாள்.

அம்மா நான் தான் சரியா வந்திருவேன்னு சொன்னேன்ல. ஏன் இப்படி வெளியே நிக்கிற என்று கேட்டாள்.

என்னடி பண்றது, 5 நிமிஷம் லேட் ஆனாலும் பயமா இருக்குல்ல. நானாவது வாசல்ல தான் நிக்கிறேன். உங்க அப்பா வண்டி எடுத்துட்டு பஸ் ஸ்டாண்ட் க்கு போயிருக்காரு என்றாள்.

ஹையோ ஏன் தான் நீங்க எல்லாம் இவ்ளோ பயப்படுறீங்களோ தெரில என்றபடி உள்ளே வந்த சிவகர்ணிகா, ஹாலில் தொங்க விடப்பட்டிருந்த அவளின் அக்கா வேதிகாவின் படத்தைப் பார்த்து வாயை மூடிக்கொண்டாள்.

பின்னே உள்ளே வந்த வாசுகி, இப்ப தெரியுதா ஏன் பயப்படுறோம்னு. ஏற்கனவே ஒருத்தியை ஆக்சிடெண்ட்ல பறிகொடுத்தது பத்தாதா. நீ நல்லபடியா வீட்டுக்கு வர்ற வரைக்கும் வயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்க வேண்டியதா இருக்கு என்று புலம்பியபடியே உள்ளே சென்றார்.

ஜாடையில் சிவகர்ணிகாவை ஒத்து இருந்த வேதிகா, புன்னகை மாறாமல் படத்தில் தொங்கிக் கொண்டு இருந்தாள். இரண்டு வருடத்திற்கு மேல் ஆகி விட்டாலும் அதன் வடு இன்னும் ஆறாமல் மனதில் உள்ளது.

மேலும் பேசி பெற்றவளின் மனதை புண்படுத்த விரும்பாத சிவா, அமைதியாக இருந்தாள்.

மறுநாள் காலை நந்தன் எக்ஸ்போர்ட்ஸ் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

தன்னை அழைப்பதாக பியூன் வந்து கூற, மெலிதாக கதவை தட்டி விட்டு உள்ளே சென்றாள் சிவகர்ணிகா.

குட் மார்னிங் சார் என்றாள்.

குட் மார்னிங். நேத்து பாத்தேன் நீங்க தனியா உங்க சொந்த டிரான்ஸ்போர்ட்ல போறத எழுதி இருக்கீங்க. உங்க ஏரியாக்கு கேப், வேன் இப்படி எல்லாமே இருக்கிறப்ப அதை பயன்படுத்தலாமே என்றான் சிவநந்தன்.

ஐயையோ யாருடா இவன். ஆபிஸ்க்கு ஒழுங்காக வருகிறார்களா என்பதோடு இல்லாமல் இதுல வா , அதுல வா என்று டார்ச்சர் பண்றான் என்று மனதில் நினைத்தவள்,

சார், நான் வெளியே வர்றதே இந்த மாதிரி ஆபீஸ் வர்ற டைம்ல தான். இந்த நேரத்துல பலதரப்பட்ட மக்களைப் பார்க்க முடியும். ஸ்கூல், காலேஜ்nன்னு விதவிதமா ஏஜ் குரூப்ல மக்களை பார்க்கலாம். அதுல ஒரு நிம்மதி எனக்கு. அதுனால தான் நான் பஸ்ல வரேன் என்றாள்.

ஒரு நிமிடம் அவளையே பார்த்த சிவநந்தன்,


ம் சரி உங்க இஷ்டம்.ஆனா இன்னிக்கு பஸ் விட்டுட்டேன், எங்கேயோ மறியல் அதுனால வேற ரூட்ல வண்டி வந்துச்சு, இங்க பள்ளம் தோண்டிருக்காங்க அதுனால டைம்க்கு வர முடியலன்னு எந்த காரணமும் எனக்கு வரக்கூடாது என்றான் அழுத்தமாக.

அப்ப, இவன் அக்கறையா எல்லாரையும் விசாரிக்கல. இவன் கம்பெனிக்கு சரியான நேரத்துக்கு வரணும்னு தான் இவனே வேன், கேப், பஸ்ன்னு விடுறான். அது சரி இவன் கேப், வேன்க்கு எல்லாம் இந்த பிரச்சினையே வராதா. பள்ளம் தோண்டி இருந்த அப்டியே என்ன பறந்து வந்திருவார்களா ஆபீஸ்க்கு என்று நினைத்து கொதித்தாள் சிவகர்ணிகா.

ஷுயர் சார் என்று அறையை விட்டு வெளியே வந்தாள் . இதுல அந்த செக்யூரிட்டிக்கு பெருமை வேற எங்க அய்யா எல்லாரையும் அக்கறையா கவனிபாருன்னு என்று மனதில் நினைத்தபடி இடத்திற்கு வந்தாள்.

மறுநாள் காலை வழக்கத்தை விட சீக்கிரமே எழுந்தாள் சிவகர்ணிகா.

என்ன டி அதிசயமா இருக்கு என்ற வாசுகியிடம்,

இனி சீக்கிரம் எழுந்து நிதானமா கிளம்பி அரை மணி நேரம் முன்னாடியே ஆபீஸ் போக போறேன் மா. பாஸ் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் இதுல.

பரவால்லையே. ஸ்கூல், காலேஜ் பிரின்சிபால்க்கு பயப்படாம இருந்தவ ஒரே நாள்ல பயப்பட வச்சிட்டார் உன் பாஸ் என்று எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றிச் சென்றார் வாசுகி.

குளித்து முடித்து டிவி முன்பு சாப்பிட அமர்ந்தவள், செய்தி சேனல் போட, கொட்டை எழுத்தில்

"இன்று மாநகரப் பேருந்து மறியல் காரணமாக ஓடாது " என்று தலைப்புச் செய்தி ஓடியதை பார்த்து அதிர்ந்தாள்.

ஐயோ அம்மா என்ன இது. நானே சீக்கிரம் போகலாம்ன்னு எழுநதா இப்படி ஆகிருக்கு என்று கூறினாள் சிவகர்ணிகா.

நீ சீக்கிரம் எழுந்தியா, அதான் கடவுளுக்கே பொறுக்கல. பஸ் தான் டி ஓடல. ஷேர் ஆட்டோ, கேப் எல்லாம் ஓடும். ஆனா என்ன நல்ல கூட்டமா இருக்கும். நீ இப்ப கிளம்புனா கூட ஆபீஸ் டைம்க்கு போறது கஷ்டம் தான்.

நீ வேற, காலையில இருந்து அபசகுணமாவே பேசு மா என்று எரிந்து விழுந்த சிவகர்ணிகா, உடனே வீட்டை விட்டு கிளம்பினாள்.

அதே நேரம் அதே செய்தியை பார்த்துக் கொண்டிருந்த சிவநந்தன், நேற்று வீர வசனம் பேசி விட்டு சென்ற சிவகர்ணிகா நினைவு வர அவனை அறியாமல் சிரித்தான்.

அவன் சிரிப்பதையே அதிசயமாக பார்த்துக் கொண்டிருந்த வசந்தி அம்மாவை பார்த்தவன், என்ன வசந்தி அம்மா அப்படி பாக்குறீங்க என்றான்.

இல்லை தம்பி. ரெண்டு வருஷத்துக்கு மேல ஆவுது நீ சிரிச்சு பாத்து எப்படி இருந்த வீடு இது என்று பெருமூச்சு விட்டாள்.

அவர் பதிலில் சட்டென அமைதி ஆனவன், கடிகாரத்தை பார்த்து விட்டு,

சரி. இன்னிக்கு ட்ராபிக் நிறைய இருக்கும். நான் இப்பவே கிளம்புறேன் என்று கூறிவிட்டு கிளம்பினான்.

வெளியே புறப்படும் முன், ஹாலில் மாட்டி இருந்த விஷ்வாவின் படம் முன்பு ஒரு நிமிடம் நின்று விட்டு கிளம்பினான்.

அலுவலகம் போய் சேர்ந்தவன் சிவகர்ணிகா இன்னும் வரவில்லை என்று உறுதி செய்து கொண்டான்.

நேரம் ஆக ஆக கண்ணாடி வழியே வாசலை பார்ப்பதும், கடிகாரத்தை பார்ப்பதுமாக இருந்தான்.

10 மணி அடிக்க 5 நிமிடம் இருக்கையில் அரக்க பறக்க ஓடி வந்த சிவகர்ணிகா கை ரேகையை பதிவு செய்த போது மணி 10 என அடித்தது.

நல்ல வேளை. எப்டியோ ஷேர் ஆட்டோவில் முண்டி அடித்து வந்து சேர்ந்தாச்சு என்று பெருமூச்சு விட்டாள்.

என்ன மேடம். காலையில ரொம்ப ரசிச்சு பலதரப்பட்ட மக்களை பார்த்து சந்தோசமா வந்திருக்கீங்க போல என்றான் சிவநந்தன்.

அவனை முறைந்தவள், இது கூட புது அனுபவமா தான் இருந்துச்சு சார் என்றாள் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத பாவத்துடன்.

நல்லது என்று அவன் மீசையை லேசாக முறுக்கி கொண்டே சிரித்து விட்டு சென்றான்.

அவன் சிரிப்பில், உன்னை ஒரு நாள் என் ஆபீஸ் காரில் ஏற்றுகிறேன் என்ற திமிரும், அவள் முறைப்பில் லேட்டா கூட வருவேன் ஆனால் உன் டிரான்ஸ்போர்ட் கண்டிப்பா உபயோகப்படுத்த மாட்டேன் என்ற முறுக்கும் இருந்தது.

யார் வெற்றி பெறுவார் என்று பொருந்திருந்து பார்ப்போம்
 

Kalijana

Member
Wow Amazing சூப்பரா இருக்கு உங்க timing டைலாக் வேற லெவல் sis ♥️ Next ud சீக்கிரம் போடுங்கள்
 

Kalijana

Member
MEME-20220828-083226.jpg
 

Attachments

 • MEME-20220828-084525.jpg
  MEME-20220828-084525.jpg
  231.3 KB · Views: 0
 • MEME-20220828-084015.jpg
  MEME-20220828-084015.jpg
  276 KB · Views: 0
 • Picsart_22-08-28_21-43-33-143.jpg
  Picsart_22-08-28_21-43-33-143.jpg
  275.6 KB · Views: 0
 • MEME-20220828-092936.jpg
  MEME-20220828-092936.jpg
  222.1 KB · Views: 0
 • MEME-20220828-093620.jpg
  MEME-20220828-093620.jpg
  246.3 KB · Views: 0
 • MEME-20220828-092155.jpg
  MEME-20220828-092155.jpg
  315 KB · Views: 0
 • MEME-20220828-103813.jpg
  MEME-20220828-103813.jpg
  258.4 KB · Views: 0
Top