santhinagaraj
Well-known member
இடம்பகனின் இதி
விமர்சனம்.
ஃபேண்டஸி கலந்த குடும்ப கதை.
குடும்பத்தை பெரிதாக நினைக்கும் இன்பா மனைவி குழந்தைகளை கவனிக்க மறந்து குடியினால் இறந்து விடுகிறான். இறக்கும் போது மனைவி பிள்ளைகளை பெரிதாக நினைக்காமல் இறந்த பிறகு அருவமாக அவர்கள் அருகில் நின்று அவர்களின் அடுத்த நிலை பற்றி யோசித்து கொண்டிருக்கும் போது,
இன்பாவை அழைத்துச் செல்ல எமதூதர்கள் வருகிறார்கள் அவர்களிடம் மனைவி பிள்ளைகளுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தி கொடுத்துவிட்டு வருவதாக இரண்டு மாதம் அவகாசம் கேட்கிறான்.
இன்ஷித் இன்பாவின் உயிர் நண்பன்.இன்பாவின் மறைவிற்குப் பிறகு அவன் குடும்பத்திற்கு இன்பாவின் இடத்தில் இருந்து உறுதுணையாக நிற்கிறான்.
இன்பா மனைவி பிள்ளைகளுக்கு எவ்வாறு பாதுகாப்பு ஏற்படுத்திக் கொடுக்கிறான். இன்ஷித் இன்பாவின் மனைவி பிள்ளைகளை எவ்வாறு சரிப்படுத்துகிறான் என்று கதை ரொம்ப சுவாரஸ்யமாக நகர்கிறது.
கணவன் இல்லாமல் ஒரு பெண் எதிர் கொள்ளும் பிரச்சனைகளையும் அவளை உணர்வுகளையும் ரொம்ப அருமையா வெளிப்படுத்தி இருக்காங்க.
இன்ஷித் ஒவ்வொரு இடத்திலும் பிரச்சினைகளை பொறுமையாக யோசித்து கையாளும் விதம் அருமை. ஆனால் இலஞ்சிதா,இரினா இவர்கள் இருவரிடமும் கொஞ்சம் பொறுமை காட்டி இருக்கலாம் அவர்களிடம் காட்டும் அழுத்தம் ரொம்ப அதிகம் என்று எண்ணை வைத்தது.
ராஜேஷை நல்லா புரட்டி எடுத்து அவனோட தவறை சுட்டிக்காட்டி திருத்திய விதம் சூப்பர்.
கண்ணன் முதலில் இன்பாவிடம் குழந்தையை கேட்டு கொடுக்கவில்லை சரி அடுத்த அவனுக்குன்னு ஒரு குழந்தை வந்த பிறகும் ஏன் இலஞ்சிதாவை வீட்டை விட்டு வெளியே அனுப்ப துடித்துக் கொண்டிருக்கிறான்.??
அருமையான கதை கரு ரொம்ப நல்லா இருந்தது.

எழுத்து நடை ரொம்ப நல்லா இருந்தது ஆனா எழுத்துப் பிழைகள் கொஞ்சம் இருந்தது அவற்றை தவிர்த்து இருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்.
வாழ்த்துக்கள்

Last edited: