சக்கரை தழுவிய நொடியல்லவா!
சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்ட கதாநாயகியாகி மதுதாரா, அவளை பிறந்து கையிலேந்திய தருணத்திலிருந்து பொத்தி பாதுகாக்கும் நாயகன் சித்தார்த்., அவர்களின் கல்யாண கலாட்டாவில் தான் கதை துவங்குகிறது.
அத்தை மகளை காதலியாக தாங்கும் ஒருவன் தோழியாக தாங்கும் ஒருவன், இருவரில் யார் மணமகனாக போகிறார்கள் என சஸ்பென்ஸோடு கதை ஆரம்பிக்கிறது, ஆனந்தி, சிந்து, இளங்கோ இவர்கள் மூவரின் குளறுபடிகளில், தாராவை இழக்கவிருந்தவன் கடைசி நொடியில் கரம்பிடிக்கிறான். ஆனாலும் பின்னர் அவள் மேலும் அவள் குடும்பத்தின் மேலும் கோவத்தை காண்பித்து தாராவை தான் பாதிப்புள்ளாக்குகிறான்.
ஸ்டார்டிங்க்ல சித்தார்த் மேல கடுப்பு தான். ஆனா அப்றம் அவன பார்க்கவும் பாவமா தான் இருந்தது. பெத்தவங்களும் இல்ல காதலிச்சவளும் ஈசியா தூக்கி போட போயிட்டா, வளர்த்தவங்களும் பொண்ணு நல்லார்க்கணும்னு நினச்சுட்டாங்க. அப்ப அவன யாருக்குமே முக்கியமில்லன்னும் போது வர்ற கோவத்தை உரிமை பட்டவங்க மேலயே காட்றது தானே சரி. அத தான் அவனும் செஞ்சாம்னு தோணுச்சு.
இறுதியில் சண்டை சுமுகமாகி குடும்பமாக எவ்வாறு இணைந்தார்கள் என்பதையும் கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
வாழ்த்துக்கள் லூஃபா அக்கா.