priya pandees
Moderator
அத்தியாயம் 16
பௌர்ணமியிடம் மாற்றமே இல்லை. கையை கட்டியபடி நின்றவள், அவனை வினோதமாக தான் பார்த்தாள். மற்றொரு கார் வீட்டினுள் வரும் அரவத்தில் இருவரும் அங்கு திரும்பினர். அவளை லேசாக விலக்கி விட்டு உற்றுப் பார்த்தான் குஹநேத்திரன், வருபவர்களை யார் என கண்டு கொண்டதும், 'இவனுங்கள!' என பல்லை கடித்து முறைக்க, பௌர்ணமி அவனை திரும்பி பார்த்து விட்டு இறங்குபவர்களில் கவனம் வைத்தாள்.
"பாலாஜி, விஷ்ணு, ஹரி" மூவரும் தான் வந்திறங்கினர். குஹனின் நெருங்கிய நண்பர்கள் குழு என்றால் இந்த மூவரும் தான். ஆனாலும் வீடு வரை அடிக்கடி வருவதில்லை. பௌர்ணமியுமே ஒரு நான்கு முறை என்றளவில் தான் பார்த்திருக்கிறாள். மூவரும் வெவ்வேறு இடங்களில் அவரவர் தொழில் குடும்பம் என வாழ்க்கை ஓட்டத்தில் இருந்தனர். எப்போதாவது நால்வருக்கும் நேரம் வாய்க்கும் பொழுதுகளில் மட்டுமே நேரடி சந்திப்புகளுக்கு சாத்தியம். அப்படி இதற்கு முன்னர் சந்தித்ததால் தான் இன்று விவாகரத்தில் வந்து நிற்கிறான் குஹன்.
"வாங்க!" என்றாள் பௌர்ணமி சம்பிரதாயமாக.
"ஏன்டா வந்தீங்க?" என முறைத்தே கேட்டான் குஹன்.
பௌர்ணமிக்கு ஒரு தலையசைப்பை கொடுத்து, "எப்படி இருக்கீங்க? பசங்கள எங்க?" என ஓரிரு வார்த்தைகள் கேட்டு நின்றனர்.
"வெளில போயிருக்காங்க. உட்காருங்க" என வெளியே இருந்த இருக்கையை காண்பித்தவள், கணவனுக்கும் ஒரு பார்வையை கொடுத்தே உள்ளே சென்றாள்.
"ஃபோன்லயே வரவேணாம்னு சொன்னேன்ல? சீன் க்ரீயேட் பண்றீங்களா?" என மறுபடியும் குஹன் திட்ட,
"ம்ச், சூசைட் ட்ராமாலாம் பண்றது நீயா? நாங்களா? என்னடா பிரச்சினை? சோசியல் மீடியாவ பரபரப்பாவே வச்சுருக்க?" என மூவரும் அவனைச் சுற்றி அமர்ந்தனர்.
"எட்டி மிதிச்சுருவேன். நீங்க பாத்துவிட்ட வேலைல தான் அது பரபரப்பா என் வாழ்க்கைல விளையாண்டுட்டு இருக்கு"
"சாரிடா குஹா!" என்றான் பாலாஜி.
"அப்ப நீ தான் அந்த வேலைய பார்த்தியா? குடிச்சமா குப்புற படுத்தமான்னு இல்லாம, அங்க புலம்பனத எதுக்குடா வீடியோ எடுத்த? என்ன படம் காட்டுவியா உன் வீட்டுக்கு?" என பேச,
"ம்ச் சும்மா மறுநாள் மார்னிங் உனக்கு காட்டலாமேன்னு தான்டா எடுத்தேன்"
"ஆக்சுவலி வீடியோ எடுத்தது அவன் தான். ஆனா அத டெலிவரி பண்ணது அவன் வைஃப் குஹா" என்றான் விஷ்ணு.
"ஆமா நம்ம எல்லாரையும் எடுத்து, அவனையும் சேர்த்தே எடுத்து, அத போதைல காலைல நம்மட்ட காட்டவும் மறந்து, வீட்டுக்கு போய் அவன் பொண்டாட்டிட்ட காமிச்சு, மிதியும் வாங்கிருக்கு பண்ணாட. ஆனா மொத்தமா எல்லாத்தையும் நம்மட்ட மறச்சுட்டான்" என்ற ஹரி, பாலாஜி தலையிலும் தட்டி சொல்ல,
"பாதி பாதியா சொல்லாதீங்கடா" என்ற பாலாஜி, "குஹா, வீடியோவ அவ பார்த்துட்டு உங்க மூணு பேரோட வைஃபுக்கும் அனுப்ப வேண்டியத மட்டும் எடிட் பண்ணி அனுப்பிட்டு, அப்றம் தான்டா என்ட்டைய வந்து நின்னா. அப்ப கூட அனுப்பினத சொல்லலடா. நா என்னெலாம் பேசுனேனோ அதுக்கு சண்டை போட்டு, மண்டை காயவிட்டுட்டா. என்னைய பழிவாங்கணும்னே உங்க மூணு பேர் வைஃபுக்கும் அனுப்பிருக்காடா. நாலு நாள் முன்ன நீயா கால் பண்ணி திட்ற வர சத்தியமா எனக்கும் விஷயம் தெரியாது மச்சான்" என பாலாஜி பாவமாக சொல்லி முடித்தான்.
குஹன், பௌர்ணமி செல்லில் அதை பார்த்த அன்றே, இதை எடுத்தது அவன் நண்பர்களில் ஒருவன் தான் என கண்டிருந்தான், அவ்வளவு அருகில் எடுக்கப்பட்டிருந்தது அந்த வீடியோ, அதனாலேயே மற்ற மூவருக்கும் அழைப்பு கொடுத்து ஒருகடி கடித்திருந்தான். அதன் பின்னரே, பாலாஜி அவன் மனைவியிடம் விசாரிக்க அவள் எல்லோருக்கும் அனுப்பியிருக்கிறாள் என தெரியவந்தது. அதில் விஷ்ணு, ஹரி இருவரின் மனைவியும் அவர்களிடம் இதுவரை கேட்டிருக்கவில்லை, வேண்டாம் என ஒதுக்கியிருக்கலாம், இல்லை கேட்க பயந்து வைத்திருக்கலாம் என முடிவிற்கு வந்திருந்தனர். ஆனால் அது குஹன் வாழ்க்கையில் பிரச்சினையாக வெடிக்கவும் நேரில் கிளம்பி வந்திருந்தனர்.
"ம்க்கும்!" என குரலை செருமியவாரு, நாலு கப் ஜுஸ் ட்ரேயுடன் வந்தாள் பௌர்ணமி. எல்லோரும் அமைதியாகிவிட, வந்தவள் ஜுஸை கொடுத்துவிட்டு, பாலாஜியிடம் மட்டும், "உங்க வைஃப்ட்ட நா தேங்க்ஸ் சொன்னேன்னு கண்டிப்பா சொல்லிடுங்க" என சொல்ல,
"அது சாரிமா. ஆக்சுவலி" என அவன் சொல்ல வருமுன், கைநீட்டி தடுத்துவிட்டாள்.
"எக்ஸ்ப்ளைன் பண்ண கஷ்டப்பட வேணாம். நா எப்படி என்னன்னு எனக்கு தெரியும். ஹஸ்பண்டாவே இருந்தாலும் என்னைய பத்தி நாலு பேர் முன்ன முக்கியமா எங்க பெர்ஷனல் ஷேர் பண்ண என் ஹஸ்பண்ட் யோசிச்சுருக்கணும், சோ எனக்கு எக்ஸ்ப்ளைன் பண்ண வேண்டியது என் ஹஸ்பண்ட் மட்டுந்தான், நீங்க இல்ல" என நிறுத்தி ஒரு பெரு மூச்சை எடுத்துக் கொண்டு, "இனி இந்த மாதிரி வீடியோலாம் எடுத்து மனைவின்னு இருக்குற பொண்ணுங்களுக்குள்ள மனசாட்சிய உடைக்காதீங்க. உங்களுக்கு பொழுதுபோக்கான விஷயம் இன்னொருத்தங்களுக்கு தூக்கத்தையே கெடுத்துடும்னு புரிஞ்சுக்க ட்ரை பண்ணுங்க. ப்ரெண்டாவே இருந்தாலும் உங்க வைஃப்ப இன்னொருத்தங்க முன்ன விட்டு குடுத்து பேசுறதுக்கு கொஞ்சம் கூச்சப்படுங்க. சேம் அடுத்தவங்க அவங்க பெர்சனல இன்டீசன்டா சொன்னா கூட காத மூடிக்க ட்ரை பண்ணுங்க பெட்டர். ஒருத்தர் மாத்தி ஒருத்தர் பொண்டாட்டிய ரோட்டுல நிறுத்தி ஆசிட் ஊத்தி அத வீடியோ எடுத்து என்ஜாய் பண்ணுவீங்களோ? கேட்கவே அசிங்கமா இருக்குல்ல? அப்ப ஆசிட்ல குளிச்ச எங்களுக்கு எப்படி இருக்கும். வீட்டுக்கு வந்த இடத்துல பேசிருக்க கூடாது. பட் உங்கள தேடிவந்து பேசுற ஐடியாவும் எனக்கு இல்லாததனால் பார்த்ததும் சொல்லிட்டேன். ஜுஸ் குடிங்க" என்றுவிட்டு நிற்காமல் மறுபடியும் உள்ளே சென்றுவிட்டாள்.
மற்ற மூவரும் திருதிருவென விழிக்க, குஹன் இறுகி போய் அமர்ந்திருந்தான்.
மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு குஹனை பார்க்க, அவன் அமர்ந்திருந்த விதமே அவனிடம் அவர்களை வாயை திறக்கவிடவில்லை.
"என் பொண்டாட்டி இதையே தான்டா கொஞ்சம் வேற விதமா கேட்டா" என்றான் பாலாஜி.
"உன்னால இப்ப நாங்களும் சேர்ந்து பேச்சு வாங்கிருக்கோம் எரும. அந்நேரத்துல என்ன பேசுறோம்னே தெரியாம நாம பாட்டுக்கு பேசுனோமா போதை தெளியவும் எந்திச்சு அவனவன் வேலைய பாக்க போனோமான்னு போயிருக்கலாம். இதெல்லாம் தேவையா பக்கி" என ஹரி, பாலாஜி முதுகில் மறுபடியும் வலிக்க தட்டினான்.
"இப்பவும் யார் யார் என்ன பேசுனோம்ன்னு எனக்கு தெரியாதுடா. என் பொண்டாட்டி தான் கட்டிங் எடிட்டிங் பண்ணி தனித்தனியா உங்க பொண்டாட்டிங்களுக்கு அனுப்பிட்டு டெலீட் பண்ணிட்டாளே"
"ஆமா ரொம்ப முக்கியம் இப்ப இந்த விளக்கம். நம்மளயே இந்த வாங்கு வாங்கிட்டு போகுதே சிமி. அப்ப இவன?" என விஷ்ணு சொல்ல, திரும்பி முறைத்தான் குஹன்.
"ட்வோர்ஸ், சூசைடுலாம் பண்ணாதடா குஹா. கைல கால்ல விழுந்தாவது சரி பண்ணிடு. பிரச்சினைய பெருசாக்காத. நீ ரொம்ப ஈகோ பார்ப்பன்னு தெரியும். பட் இதுல பார்க்காத, தப்பு நம்ம பண்ணது தான் சோ இறங்கி போய் சாரி சொல்லலாம்" என்றான் ஹரி.
"சூசைட் நா பண்ணத நீ பார்த்த? மூணு தூக்க மாத்திரைய கலந்து குடுத்ததே அவதான்" என்றதும் மூவருக்கும் குடித்துக் கொண்டிருந்த ஜுஸ் மூக்கிற்கேறிவிட்டது, 'லொக்! லொக்!' என இறுமி சரிசெய்ய முயன்றனர்.
"ம்ம்! வராதீங்கன்னு சொல்லும்போதே கேட்ருக்கணும்!" என்றவன், "போற வழில தான் ஹாஸ்பிடல், வயித்த க்ளீன் பண்ணிட்டே ஊர் போய் சேருங்க" என எழுந்து மூவர் தோளிலும் தட்டியும் கொடுத்தான்.
"நிஜமாவாடா சொல்ற?"
"என்னைய பார்த்தா தூக்க மாத்திரை திங்குறவன் மாதிரி தெரியுதா?" என விரைப்பாக கேட்க, அது தான் அவர்கள் மூவரையும் உடனே அங்கிருந்து கிளம்ப வைத்தது.
"நாங்க பாத்துக்குறோம்டா. ரெண்டு பேரும் நல்ல இமேஜ்ல இருக்கீங்க. அது இப்படி சோசியல் மீடியால நாலு பேர பேச விட்டு கெடுத்துக்காதீங்க. பசங்க லைஃப்பையும் அது பாதிக்கும். எதுனாலும் ரெண்டு பேருமா பேசி சமாதானம் ஆகிடுங்க. பிரச்சினைய முடிச்சுட்டு சொல்லு மறுபடியும் ஃப்ரீயா ஒருநாள் மீட் பண்ணலாம்" என கூறியே மூவரும் விடைபெற்றுச் சென்றனர்.
அவர்கள் கார் கிளம்பியதும் ஜுஸ் டம்பளருடன் உள்ளே வந்தவன், சமையலறையில் சென்று அதை வைத்துவிட்டு, பௌர்ணமியை தான் தேடினான். அவர்கள் அறையில் தான் லேப்டாப்பை திறந்து வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
"லூசாடி சித்து நீ? அவனுங்க முன்ன ஆஃபுல்லா(கேவலமா) உன் இஷ்டத்துக்கு என்னலாமோ பேசுற? உன்ன என்ன நினப்பானுங்க இல்ல என்னையத்தான் என்ன நினப்பானுங்க. அவனுங்க தான் செஞ்சானுங்கன்னு தெரிஞ்சாலும், வாங்கன்னு பேசாம கூட நீ உள்ள வந்திருக்கலாம்ல?"
"இனி அப்படி கனவுலயும் அவங்க செய்ய கூடாதுன்னு தான் பேசிட்டு வந்தேன். உங்களுக்கும் புரியணும்ல? விட முடியாது சித்து, தனியா இருக்க முடியாது சித்துன்னு வசனம் பேசி கடுப்பேத்துனீங்களே, அந்த கடுப்புல தான் பேசிட்டு வந்தேன்" என்றாள் இன்னும் கடுப்பு குறையாமல்.
"இதோ இந்த ஆட்டிட்யூட தானே நா பேசுனேன்? சும்மா இல்லாததையா பேசிட்டேன்னு நீ திரும்ப திரும்ப அதையே சொல்ற?"
"அகைன்?" என லேப்டாப்பை பட்டென்று மூடிவிட்டு எழுந்தவள், "என்ன ஆட்டியூட காண்பிச்சுட்டேன் நான்? நீங்க உங்க ஃப்ரெண்ட்ஸ்ட்ட பேசினது தப்பில்லனா நானும் பேசுனது தப்பே இல்ல"
"நான் தெரியாம ஒருதடவ பேசிட்டேன் அதுக்கு விளக்கமும் கொடுத்துட்டேன். ஆனா தெரிஞ்சே நீ அதை திரும்ப திரும்ப நினைச்சுட்டு, பேசிட்டு இருக்க"
"மறக்க முடியாம தான் பேசுறேன். டிவோர்ஸ் குடுங்க மொத்தமா உங்களையும் சேர்த்தே மறந்துடுறேன்"
"டி சித்து!" என நறுக்கென்று அவள் தலையில் கொட்டு வைத்துவிட்டான்.
"குஹா?" என வெளியே விசாலாட்சி சத்தம் கேட்கவும், அவன் வெளியே செல்ல, பொத்தென்று கட்டிலில் அமர்ந்து தலையை தாங்கி கொண்டாள்.
"அன்னைக்கு டீ, இன்னைக்கு ஜுஸாடா? இதுல எத்தனை மாத்திரைய கலந்து விளையாண்டீங்க ரெண்டு பேரும்? பிள்ளைக இருக்க வீட்ல நீங்க ரெண்டு பேரும் என்னடா விளையாட்டு விளையாடுறீங்க? அறிவு கழுதையே கிடையாதா?" என சமையலறை வாசலில் நின்று கத்தினார் அவர்.
"ம்மா அது வீட்டுக்கு வந்தவங்களுக்கு குடுத்தது. எதுவும் கலக்கல. தூக்கி கீழ ஊத்துமா" என அவரிடம் இவனும் கத்த,
"யாரு வந்தது?"
"என் ஃப்ரெண்ட்ஸ், என்ன பார்க்க வந்தாங்க"
"ஓ! நீ தூக்க மாத்திரைய மாத்தி முழுங்கிட்டேம்னு சொல்லிட்டியா?"
"ஆமா!"
"பரவால்லயே பாசக்கார ஃப்ரெண்ட்ஸ்லாம் புடிச்சு வச்சுருக்க. ஆனா இந்த நம்பி பயல பாரு. வந்த அன்னைக்கு கண்ணுல பட்டான் அப்றம் ஆளையும் காணும் பேரையும் காணும். நீ சாக பொழைக்க வந்துருக்க அவனுக்கு அக்கறைய காணுமே?"
"நீ போதும் என் மானத்தை வாங்க. நம்பிய நாந்தான் வரவேணாம்னு சொன்னேன். ஒரு வாரம் அவன் ஊர்ல இருந்து வரட்டும், நீயும் ஃபோன போட்டு வரவச்சுடாத"
"பாரேன் நீலாம் இத யோசிச்சு சொல்லுத!" அவர் ஆச்சரியம் காட்ட,
"சித்து, இங்க வா அம்மாக்கு டீ வேணுமாம்" குஹன் சொல்ல, விசாலாட்சி வாயை நொடித்துச் சென்றார்.
அன்றைய இரவு, நடுசாமம் மணி ரெண்டை கடந்திருந்தது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பௌர்ணமியை இரு வலிய கரங்கள் இறுக தழுவிக்கொண்டது. பட்டென்று விழித்துக்கொண்டு அந்த கையை தட்டிவிட்டாள்.
அருகில் படுத்திருந்த பிள்ளைகளை காணவில்லை, பிள்ளைகளுக்கான அறையில் கொண்டு விட்டு வந்திருப்பான் என யூகித்தாள். பிள்ளைகளுக்கென்று தனியறை, படிப்பதற்கும் உறங்குவதற்கும் ஏற்றவாறு அமைத்திருந்தான். ஆனாலும் இவள் அவர்களை தனித்து விட்டதில்லை. என்றாவது இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்றானால் மட்டுமே பிள்ளைகளை அங்கு கொண்டு விட்டுவிட்டு வருவான். பல மாதங்கள் கழித்து இன்று கொண்டு விட்டு வந்திருக்கிறான்.
"என்ன பண்றீங்க குஹன்?"
"ரொம்ப டிஸ்டர்ப் பண்றடி நீ! ப்ளீஸ் சித்து"
"என்னால முடியும்னு தோணல"
"ஏன் முடியாது? நா எதுக்கு இருக்கேன். நா பாத்துக்குறேன்" என அவளை சுருட்டி மேலே கொண்டு வந்தான்.
"குஹன்!"
அவளை திருப்பி, இருட்டிலும் தன் முகம் பார்க்க நாடி பிடித்தவன், "சமாதானம் ஆகிடலாம்டி சித்து! லவ் இல்லாத ஒரு லைஃப் தான் நமக்கு நிரந்தரம்னு ரெண்டு வருஷமா நா பேசாம தான் இருந்தேன், ஆனா அப்ப கூட உன்ன விட்டு போகணும்னு நா நினச்சதே இல்ல. பட் இப்ப நீ மொத்தமா வேணாம்னு போக நினைக்குற, எனக்கு அத அக்ஷப்ட் பண்ணிக்க முடில. ஈவன் ரொம்ப தேட வைக்குற நீ!"
"ரைட் நவ் என்ன நீங்க ஃபோர்ஸ் பண்றீங்க குஹன்"
"இல்ல உன்ட்ட பேசி ஜெயிக்க முடியாது, சோ இப்படி காம்ப்ரமைஸ் பண்ண ட்ரை பண்றேன், ப்ளஸ் உன் ப்ரசன்ஸ்ல என் மைண்ட்டுக்கு பீஸ் தேடுறேன். எனக்கு கிடைச்சா கண்டிப்பா உனக்கும் கிடைக்குமேன்னு நினைக்கிறேன். லவ் மேக்கிங் சித்து"
"நோ!"
"ப்ளீஸ் சித்து!"
"நா டிவோர்ஸ் கேட்ருக்கேன். கேன் யூ மைண்ட் இட் ப்ளீஸ்!" என்றாள்,
"யூ நோ! நீ டிவோர்ஸே பண்ணிட்டு போனாலும், எனக்கு மூட் வந்தா உன்ட்ட தான் வந்து நிப்பேன்டி" என சிரித்தான்,
"ரெடிகுலஸ் தள்ளிப்போங்க" என அவனை தள்ளிவிட்டு, கீழே உருண்டு படுக்கையில் படுத்தாள்.
"ஹே வாடி சித்து. ப்ளீஸ்" என்றவன் மீண்டும் அவளை அவன் ஆளுகைக்குள் கொண்டு வந்தான்.
"நா உங்கள சேட்டிஸ்ஃபை பண்ண மாட்டேன்" என்றபோது குரல் வெகுவாக இறங்கி பாவமாகிவிட்டிருந்தது.
"சாரி சித்து! ரியலி சாரி! நா சாதாரணமா சொன்னது உன்ன இந்தளவுக்கு வீக் ஆக்கும்னு சத்தியமா எதிர்பாக்கல. சாரி" என அவள் முகம் பார்த்து கண் நோக்கி மனதார கேட்டான். அமைதியாகிவிட்டாள் பௌர்ணமி.
"சித்து! சாரிடி! வேற என்ன பண்ணணும்னு சொல்லு. டிவோர்ஸ் மட்டும் வேணாம் ப்ளீஸ்" இறங்கி போவது என்ற முடிவிற்கு அவன் எப்போதோ வந்துவிட்டிருந்தான். ஈகோவையும் இழுத்து பிடிக்க வேண்டியிருந்தது.
"நீங்க இன்னும் கெஞ்சணும் என்ட்ட. இதெல்லாம் பத்தவே இல்ல எனக்கு"
"ரொம்ப பண்ணாதடி சிலுப்பி" என்றவன் அவள் இதழில் மூழ்க, அடுத்த கட்டத்திற்கு அவளை இழுத்துச் செல்ல அவன் முயல, அவள் முரண்டு பிடிக்க, மீண்டும் அவன் அடக்க, அவள் திமிற, அவன் மடக்க, அவள் மல்லுகட்ட, அவன் ஆர்ப்பாட்டமாக சண்டையிட, அவள் அவனை வீழ்த்தியே ஆகவேண்டும் என்ற முனைப்பில் சண்டையிட, ஒரு கட்டத்தில் ஆர்ப்பரித்த உணர்வுகளுக்கு தான் வடிகாலாக ஆனது அவ்விரவு.
"கம்முன்னு பேசாம கைக்குள்ள இருப்பியே அதெல்லாம் விட இன்னைக்கு தான் சித்து சும்மா உடம்பு பெருசா ஏதோ வேலை பார்த்த ஃபீல்ல இருக்கு" என்றவனை, விரல் நகம் கொண்டு பிராண்டி விட்டாள். அடி வாங்கிய பின்னரும் எழுந்து செல்லாமல் இழுத்தணைத்து கைக்குள்ளேயே வைத்துக்கொண்டான் குஹன்.
பௌர்ணமிக்கு மனதினுள் ஆதங்கம் இருக்கிறது தான், இன்னும் எதுவுமே சரியாகவும் இல்லை தான், இப்போதும் மல்லுகட்டி காரியத்தை சாதித்து கொண்டவன் மீது ஆத்திரமாக வந்தது தான், ஆனாலும் விலகாமல் அவன் கைக்குள் இருந்துவிட்டாள். உண்மையில் அந்நொடி அவள் மனம் அவ்வளவு அமைதியாக இருந்தது.
அவன் வேண்டும் ஆனால் வேண்டாம் என்ற மனநிலையில் தான் ஊசலாடிக் கொண்டிருந்தாள். விவாகரத்தை விடாமல் கேட்கிறாள் தான், ஆனால் கொடுத்து விடுவானோ என்ற பயமும் அடி ஆழத்தில் இருக்கிறது. 'கொடுக்கமாட்டேன்டி!' என அவன் வீம்பு பிடிக்கையில், அதெப்படி சொல்லலாம், கொடுத்தே ஆகவேண்டும் என்றும் மனம் ஆர்ப்பரிக்கிறது, அவளுக்கே அவள் மனம் குழப்பத்தில் இருப்பது தெளிவாக தெரிந்தது.
முதல் நாள் மருத்துவர் பைந்தமிழ் பேசியதிலிருந்து அவள் தெரிந்து கொண்டது, 'ஒன்னுமே இல்லாம இத்தன வருஷமா ஒரு உறவுல இருக்குறது சாத்தியம் இல்ல', இன்று குஹன் பேசியதிலிருந்து அவள் தெரிந்து கொண்டது, 'அவனுக்கு தேவை அவள். காதலிக்கிறாள் இல்லை, மனைவியாக இருக்கிறாள் இல்லை, ஆனால் அவள் அவனுக்கு கண்டிப்பாக வேண்டும். இதோ உடலுறவிலாவது அவளை பிடித்து வைக்க வேண்டும் என நிற்கிறான். சுயநலமாக வேணும் அவனுக்கு அவள் வேண்டும்' என்பது.
'அப்படினா, நானா யோசிக்கறத விட, மத்தவங்கள்ட்ட பேசணும். பேசினா நாம கொஞ்சம் ஃபீல் பெட்டர் ஆகலாம்' என்ற முடிவிற்கு வந்திருந்தாள்.
மறுநாள் காலையில் பௌர்ணமி எழுந்து பார்க்கையில், நல்ல உறக்கத்தில் இருந்தான் குஹன், குளித்து உடை மாற்றி வெளியே வர, முன்னால் தோட்டத்தில் நிலனும், விசாலாட்சியும் எதையோ பேசிக் கொண்டு அமர்ந்திருக்க, காந்திமதி, ஹரிணி கிருத்தி இருவருக்கும் சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தார்.
"ம்மா உள்ள வச்சு அவங்களே சாப்பிட விடுங்கன்னு சொல்லிருக்கேன்ல" என அதட்டினாள்.
"ஏன் இப்ப உன் அம்மா ஊட்டி விட்டா உன் கை நோவுதா?" என்றார் விசாலாட்சி.
"அத்த! அப்றம் இதே பழக்கமாகும்"
"அப்டினாலும் ஊட்டிவிட நானும், உன் அம்மாவும் தான் வரணும்னு அந்த பிள்ளைகளுக்கு நல்லா தெரியும். இவ இல்லாத குரங்கு சேட்டைலாம் அவ சின்ன வயசுல பண்ணுவாளாம் ஆனா அவ பிள்ளைக மட்டும் பொம்மையா வளரணுமாம். கொடுமைய பாத்தியாடா நிலா" என அவன் தோளில் இடிக்க,
"அதானத்த!" என்றான் அவனும் ஆச்சரிய பாவம் காட்டி.
முறைத்தவள் விறுவிறுவென வந்து அவர்கள் இருவரின் எதிரில் அமர்ந்தாள், "சண்டைக்கு வந்துருக்காளோ?" என விசாலாட்சி நிலன் காதில் முனங்க,
"பயமா இருக்காத்த?" என சிரித்தான் அவன்,
"சித்தா! நைட்டு ஊருக்கு கிளம்பிருவோமேன்னு தான்டி ஊட்டுனேன், இதுக்குலாம் சண்டை போடாத" என அவள் வந்த வேகத்தை கண்டு காந்திமதியும் அருகில் வர, "நீ போய் ஊட்டுமா. நா சும்மா பேச தான் உட்கார்ந்துருக்கேன்" என பௌர்ணமி சமாதானமாக கூறிய விதத்தில் தான் மறுபடியும் பிள்ளைகளிடம் சென்றார் அவர்.
"எதுக்கும் ஜாக்ரதையா இருப்போம்டா நிலா!" என வீம்பாக நிமிர்ந்து அமர்ந்தார் விசாலாட்சி.
"அத்த! எனக்கு ஒரு விஷயம் கேட்கணும். நா கேட்கிறேன் நீங்க உங்க அனுபவத்துல நா என்ன செஞ்சா சரியா இருக்கும்னு எனக்கு சொல்லுங்க" என ஆரம்பித்தாள்,
'இவ இப்படிலாம் பேசுறவ இல்லையே!' என்ற பார்வை தான் பார்த்தார் விசாலாட்சி.
"நா ஏன் விவாகரத்து கேட்டேன்னு உங்களுக்கு சொல்லவே இல்லைல?"
"இப்ப சொல்ல போறியா?"
"ஆமா!"
"என்னடா அவளே வந்து சொல்றேன்றா? இந்த சிலுப்பட்டைக்கு நிஜமாவே எதுவும் ஆகிருக்குமோடா? பயமா இருக்கே?" என அவர் நிலன் கையை பிடிக்க,
"சும்மா இருங்கத்த" என இருவரும் ஒன்று போலவே கூறினர், "நா தெளிவா பேச தான் வந்து உட்கார்ந்துருக்கேன். கேட்கிறீங்களா இல்லையா?"
"நீ பேசுக்கா" என்ற நிலன், "அத்த!" என அவரையும் கண்ணை உருட்டி பார்த்தான்.