priya pandees
Moderator
அத்தியாயம் 10
அவன் இந்தியா வருவதற்கு நான்கு நாட்களுக்கு முன் நடந்தவை,
மனோ, "மஹிமா நல்லா தேடு, கண்டிப்பா ஆபிஸ் ரூம் தாண்டி எங்கையும் போயிருக்காது" என்றவளும் பரபரப்புடன், சண்முகசுந்தரம் அறையில் தான் தேடிக்கொண்டிருந்தாள்.
"நீங்க அந்த தமயந்தி மேடத்துட்ட ஒரு வார்த்தை அரட்டி கேளுங்க மனோ மேடம். ஈசியா வேலை முடியும்"
"ம்ச், சும்மா அவங்கள சீண்டிவிட்ட மாதிரி ஆகிட கூடாது. அவங்களுக்கும் எனக்கும் ஏற்கனவே டேர்ம்ஸ் சரியில்லன்னு தெரியும் தானே? போய் தேடுங்க, கிடைக்கலனா சிசிடிவில செக் பண்ணலாம்" என்றுவிட, மஹி முகத்தை தூக்கி வைத்தபடி தான் சென்று வெளியே இருக்கும் மர பீரோக்களில் தேடினாள்.
அவர்கள் பள்ளியில் அந்த ஆண்டிற்கான கலைவிழாவும், விளையாட்டு விழாவும் ஏற்பாடாக இருக்க, அதற்கு முதல்படியாக, விருந்தினர்கள் முடிவு செய்து, அதை பத்திரிகை மாதிரியாக அச்சடித்து நகலும் எடுத்து வைத்திருந்தாள் மனோ. இன்று அதை விருந்தினரின் பார்வைக்கு கொண்டு சென்று சரிபார்த்து வாங்கிவர வேண்டும் என சண்முகசுந்தரமும் சொல்லியிருக்க, நேற்றே தயாராக எடுத்து வைத்துவிட்டு தான் சென்றிருந்தாள். காலையில் வந்து பார்த்தால் வைத்த இடத்தில் அதை காணோம். அவள் அறையில் அவள் மேசையில் தான் வைத்துவிட்டுச் சென்றாள். ஆனால் இப்போது அங்கில்லை என்றதும் மொத்த அலுவலக அறையையும் தேடிக்கொண்டிருக்கின்றனர்.
இது தமயந்தியின் வேலையாக இருக்குமோ என தோன்றினாலும், ஒரு சிறிய பத்திரிகை பிரச்சனையை அவரை பேச வைத்து பெரிய பிரச்சனை ஆக்கிக்கொள்ள விரும்பாமல் அமைதியாக தேடியபடி இருந்தாள் மனோ. விருந்தினராக அழைத்திருப்பதோ, ஒரு பெண் நீதிபதியை. அவர்கள் ஊரை சார்ந்தவர் தான், அவரின் பேரன் இங்கு பயில, கடந்த மாதத்தில் அவன் பிறந்தநாளின் போது பள்ளிக்கு வந்தவர், "ரொம்ப நல்லாருக்கு ஸ்கூல் அட்மாஸ்பியர். என் பேரனும் ரொம்ப ஒபிடியன்ட் பிஹேவியர்ல இருக்கான். எனக்கு அது ரொம்ப சந்தோசம். நீங்க உங்க மேனேஜ்மென்ட்ட இப்படியே மெயின்டெயின் பண்ணணும்" என பாராட்டி, பள்ளி பராமரிப்பிற்கு உதவட்டும் என ஒரு தொகையை டொனேஷனும் கொடுத்துச் சென்றிருந்தார். அவரை இந்த விழாவிற்கு அழைத்தால் வருவாரோ என நினைத்திருக்க, சண்முகசுந்தரமும், ஞானமும் நேரில் சென்று பார்த்து பேசி வந்திருக்க, இதோ சாத்தியமாகிற்று.
அவர் தான் இன்று கோர்ட் விடுமுறை என, பத்திரிகை மாதிரியோடு நேரில் வர சொல்லியிருந்தார். பத்திரிக்கை அட்டையும் இவள் இரண்டு மாதிரிகள் எடுத்து வைத்து, இரண்டிலும் விஷயத்தை அச்சிட்டு வாங்கி வைத்திருந்தாள். தற்போது இரண்டையும் காணோம். கணினியில் அதை ஆவணமாக வைத்திருக்கிறாள் தான். இது கிடைக்கவில்லை என்றால், கணினியுடன் அவள் தான் நேரில் சென்று வரவேண்டியதாக இருக்கும்.
"கிடைச்சுட்டா பரவால்ல. இல்லனா அங்கிள் கண்டிப்பா என்னையும் கூப்பிடுவாரு. ஒருநாள் டைம் கிடைச்சா நாளைக்கு கூட மறுபடியும் ப்ரிண்ட் எடுத்து வச்சுடுவேன்" என புலம்பியபடியே தேட,
"எங்கையும் இல்ல மனோ மேடம்" என சலிப்பாக வந்து நின்றாள் மஹிமா.
"அங்கிள் இப்ப வந்துடுவாரே. பதினொரு மணிக்கு ஜட்ஜ் மேடம் கூட மீட்டிங்" என இடுப்பில் இடது கை வைத்து நிமிர்ந்து நின்றவள், வலது கையால் நெற்றியை தேய்த்து கொள்ள,
"அந்த மேடத்த கூப்பிட்டு திட்டுங்க மேடம். அன்னைக்கு மந்த் எண்டுல ஸ்டாஃப் லெட்ஜர தூக்கி ஒளிச்சு வச்சுட்டு நம்மள எவ்வளவு அலையவிட்டாங்க? அன்னைக்கே நீங்க திட்டிவிட்ருக்கணும். கைதவறி எடுத்து வச்சத சொல்ல மறந்துட்டேன்னு வந்து நடிச்சுட்டு நீங்களும் விட்டுட்டீங்க. இப்பவும் கூடுமான வர நேரத்த கடத்திட்டு வந்து நீட்டுவாங்க பாருங்க" என பேச,
"அவங்க தான் சின்னப்புள்ள தனமா நடக்காங்கன்னா நாமளும் அப்படியே நடக்கணுமா? அந்த மேடத்துட்ட பேச்சுல சுத்தம் கிடையாது, அதுக்கே அவங்க கிட்ட நாம பேச்சு வைக்க வேணாம் மஹிமா" என்றவள் பேச்சு பேச்சாக இருந்தாலும், பத்திரிகைக்கு என்ன செய்யலாம் என்ற யோசனையும் ஓடியபடி இருந்தது.
சற்று நேரத்தில் சண்முகசுந்தரம் வந்தவர், "சேம்பிள் குடு மனோ. பத்திரிகை ரெண்டு மாடல் தான் எடுத்து வச்சுருக்கேன்னு சொன்ன, அதுல ஒன்ன மட்டும் செலக்ட் பண்ண சொல்றது ரொம்ப கம்மியா தெரியுமா? இன்னும் ரெண்டு சேர்த்து எடுத்துருக்கலாமோன்னு தோணுதுமா? சரி இப்ப அதுக்கு டைம் இல்ல, இது சேம்பிள் தான் உங்களுக்கு பிடிக்கலனா வேற மாத்திக்கலாம்னு சொல்லிட்டு வரேன். மேக்ஸிமம் அக்ஷப்ட் பண்ணிக்குவாங்கன்னு தான் நினைக்கிறேன். எடு, ஞானத்த வர சொன்னேன், அங்க வந்துடுறேன்னு சொன்னான். இப்ப கிளம்பினா தான் சரியா இருக்கும்" என்றவர் தண்ணீர் பாட்டிலில் இருந்ததை எடுத்து குடித்துவிட்டு அவளை பார்க்க,
"சேம்பிள் மிஸ்ஸாகிடுச்சு அங்கிள்" என்றாள் மனோ, சற்று தயங்கியே,
புருவம் சுழித்தவர், "எப்படி மனோ? வீட்டுக்கு எடுத்துட்டு போனியா?"
"இல்ல அங்கிள். இங்க என் டேபிள்ல தான் வச்சுட்டு போனேன். மார்னிங் வந்து பார்த்தா காணும். மொத்த ஆபிஸ் ரூமும் தேடிட்டோம் காணும்"
"தமயந்தி வேலையா இது?" என்றார் கடுப்புடன்.
"இன்னும் சிசிடிவி செக் பண்ணல அங்கிள்"
"இவளுக்கு என்ன இன்னும் ஸ்கூல் பிள்ளன்னு நெனப்பா? அறிவே இல்லாம நடந்துக்குறா சிலநேரம்" என தலையிலடித்து கொண்டார்.
"நாம வேறெதுவும் தான் பண்ணணும் அங்கிள், இப்ப அவங்கள கூப்பிட்டு பேசுனாலும் டைம் வேஸ்ட்"
"என்ன பண்ணலாம்? சேம்பிள் காட்டிடுங்கன்னு அந்தம்மா மூணு முறை சொல்லிட்டாங்களே?"
"லேப்டாப் எடுத்துட்டு போய் காண்பிச்சுட்டு வந்திடுங்க அங்கிள்"
"இல்ல மனோ, அதெல்லாம் சரிபட்டு வராது. நீங்களாம் சிஸ்டம்லயே இருக்கீங்க, ஆனா நா அத தேவைக்கு மட்டும் யூஸ் பண்ணுவேன், அதுல எதாவது நானே தெரியாம டச் பண்ணி எதும் சேஞ்ச் ஆகிடுச்சுனா போச்சு" என அவர் பதட்டமாக சொல்ல,
"ஒரு நாள் டைம் கேட்போமா அங்கிள்?"
"ம்கூம் அது ஒருமாதிரி எக்ஸ்யூஸ் மாதிரி ஆகிடும். ஒரு ஸ்கூல் நடத்துற நாமளே ஒரு சின்ன வேலை அதுக்கு எக்ஸ்யூஸ் கேட்டா என்ன நினைப்பாங்க?" என மறுத்து தலையை அசைத்தார்.
"வேற என்ன செய்யலாம்? நா போய்ட்டு வரட்டா? அதும் மரியாதையா இருக்காது தானே? நீங்க வராம ஸ்டாஃப் அனுப்பிட்டாங்கன்னு நெனப்பாங்களே?" என்றாள் அவளே, வேறு வழியில்லை என்றால் அவள் தான் சென்று வரவேண்டி இருக்கும் என முன்னரே தெரிந்தது தான், ஆனாலும் சண்முகசுந்தரம் வேறெப்படியாவது சமாளித்தால், தனக்கு அலைச்சல் மிச்சமாகும் என நினைத்தாள்.
"குட் ஐடியா மனோ. நீயே போய்ட்டு வா. இல்ல நானும் வரவா? ரெண்டு பேரும் சேர்ந்து போய்ட்டு வருவோம்?" என்றதும் தமயந்தி இதை எப்படி பார்ப்பார் என்று தான் அவள் எண்ணம் சென்று வந்தது. அவளை பெறாத பிள்ளையாக பார்ப்பவர் இவர், ஆனால் அதை கொச்சை படுத்தி பேசிவிட்ட தமயந்தி வார்த்தைகள் தான் அவள் முன் நின்று திண்கிறது. அவளே அப்படி நினைக்கிறாள் என்றால், மஹிமா, விஜிக்கும் கூட அப்படி எண்ணங்கள் வந்து போகும் தானே? என அவள் நினைவுகள் எங்கெல்லாமோ சென்றுவர, தலையை உலுக்கி மறுத்தாள்.
"ஏன் மனோ?"
"தமயந்தி மேடத்தையே கூட்டிட்டு போய்ட்டு வரீங்களா?"
"அவளுக்கு நோட்லயே ஒழுங்கா பேனா புடிச்சு எழுத தெரியாது, அவ லேப்டாப்ல என்ன செஞ்சுடுவா?"
"அப்ப நா மட்டும் போய்ட்டு வரேன் அங்கிள். காமிச்சுட்டு வந்துடுறேன் மத்தத நீங்க பேசிக்கோங்க"
"சரி நீ தனியா போயிடுவனா ஓகே தான். எல்லாம் நீயும் கத்துக்க தான் வேணும்" என சிரித்தார்.
"சாரி அங்கிள்"
"ஏன்டாமா? சீக்கிரம் போய்ட்டு வா. எனக்கு மூணு மணிக்கு டாக்டர் அப்பாயின்மெண்ட் இருக்கு, நைட்டெல்லாம் நெஞ்செருச்சல், அடிக்கடி இப்படியாகுது. ஏன்னு கேட்டு கைவசம் மருந்து வாங்கி வைக்கணும்"
"ஆயில் ஃபுட் சாப்பிட்ருப்பீங்க?"
"இட்லி தான்மா நைட் எப்பவும், பருப்பு சாம்பார், பல வருஷமா இதான், ஆனா இப்ப ரெண்டு நாளைக்கு ஒருக்கா இந்த நெஞ்செருச்சல் தூங்கவிடாம பண்ணிடுது"
"அப்போ கண்டிப்பா டாக்டர பாருங்க அங்கிள்"
"ஆமா போணும். நீ போய்ட்டு வா, நீ வரவும் நா போறேன்" என்றுவிட, லேப்டாப்புடன் கிளம்பியவள், வெளியே வந்து, "மஹிமா, லஞ்ச் குள்ள வந்துடுவேன். ஒருவேளை டிலே ஆச்சுனா, கண்ணன இங்க கூட்டிட்டு வந்திடு, நா வந்தே சாப்ட வச்சுக்குறேன்" என்றவளை, தமயந்தி குறுகுறுவென்று தான் பார்த்தார்.
"எங்க மேடம்?" என்ற மஹிமாவிற்கு,
"ஜட்ஜ் மீட் பண்ண நானே போறேன்"
"நீ போயி?" என்றார் தமயந்தி,
"சேம்பிள் மிஸ்ஸாகிடுச்சு, சண்முகசுந்தரம் அங்கிளுக்கு நா மருமக தான். நாந்தான் இப்ப ஸ்கூல பாத்துக்குறேன். இனியும் இங்க எல்லாம் நாந்தான், அதான் உங்கள மீட் பண்ணவும் நானே வந்தேன்னு சொல்லிட்டு பேசிட்டு வருவேன். நீங்க நா வர்றதுக்குள்ள, ஸ்போர்ட்ஸ் டே அரேஞ்மென்ட் ஃபேர் ட்ராஃப்ட் ரெடி பண்ணி என் டேபிள்ல வச்சுடுங்க மேடம், லேட் பண்ணிடாதீங்க. இன்னைக்கு அந்த வொர்க் முடியணும்" என மிக அமைதியாக சொல்லி,
"பார்த்துக்கோ மஹிமா" என கிளம்பிவிட்டாள். மஹிமாவும், விஜியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள,
"இவளுக்கு அவ புருஷனலாம் தேடாதோ? இங்கேயே இருந்துடலாம்னு முடிவே பண்ணிட்டாளோ?" என தமயந்தி பல்லை கடித்தார்.
"இது அவங்க வேலை மேடம். புருஷன் எங்க இருந்தாலும் வேலை இருக்க இடத்துல தான் பொண்டாட்டி இருக்க முடியும்?" விஜி பேச,
"இவ இப்டி திமிரா பேசித்தான், புருஷன விரட்டிவிட்ருப்பா அதான் இங்கனயே இருக்கா" என்றார் முக சுளிப்புடன். அவர் இன்னுமே தீவிர நம்பிக்கை கொண்டிருக்கிறார், அவள் கணவன் வரவும் சென்றுவிடுவாள், மீண்டும் பள்ளி அவர் கைக்கு வந்துவிடும் என்று. அதனால் அவரும் கூட, அந்த மார்கண்டேயன் வந்து அவன் மனைவி பிள்ளைகளை அவனுடன் அழைத்துச் சென்றுவிட வேண்டும் என்ற வேண்டுதல் வைத்திருந்தார்.
பேசினால் இன்னும் பேசுவார் என நினைத்த மஹிமாவும், விஜியும், 'திருந்தாது இந்தம்மா!' என வேலையை பார்க்க உட்கார்ந்துவிட்டனர்.
அங்கு மனோ வீட்டில், கிஷோரின் திருமணத்திற்கு பத்திரிகை வைக்க அன்று தான் வந்திருந்தனர். இன்னும் பத்து நாட்களில் திருமணம், நான்கு நாட்களில் மார்கண்டேயன் வரவிருக்கிறான். அதை சொல்லி முடிந்தால் கையோடு மனோவை அழைத்தும் சென்றுவிடுவோம் என்ற எண்ணத்தில் கிளம்பி வந்திருந்தனர் கிஷோரின் பெற்றோர்.
"மாரா டிக்கெட் போட்டுட்டான். ஞாயிறு காலைல வந்துருவான், பத்திரிகை வச்சுட்டு மனோ பிள்ளைங்கள கூட பத்து நாள் லீவ் போட்டு எங்களோட கூட்டிட்டு போலாமான்னு யோசிக்கிறோம்" என தான் வந்ததும் ஆரம்பித்தனர். அப்படி சொன்னால் அவர்கள் சந்தோஷம் கொள்வர் என்ற எண்ணத்தில் பேசினர்.
"சந்தோசம். முதல்ல மாப்ள வரட்டும்" என்றார் ஞானம்.
"எத்தன நாள் லீவ்ல வாராகளாம்?" என கேட்டது மீனம்மா தான்.
"அது எப்படியும் ஒரு மாச லீவ் எடுத்துட்டு தான் வருவான்" என்றார் மார்க்கின் அத்தை.
"அப்ப திரும்ப போயிருவாகன்னு சொல்லுங்க?" என மீனம்மா நக்கல் செய்ய,
"நாம எடுத்து பேசி மனோவையும் அனுப்பி வைப்போம் மீனம்மா" என சிரித்தார் அத்தை.
"பிள்ளைக படிப்ப காரணம் காமிச்சுட்டு சிட்டா பறந்துருவாரு உங்க ஃபாரின் சாரு. இப்புடி எத்தனை முறை ஏமாற சொல்லுதீக?"
"அப்ப என்ன செய்யலாம் மீனம்மா? ரெண்டு பேரும் இப்படியே இருக்கட்டுமா?"
"அப்பவும் நஷ்டம் உங்க பக்கம் தான். எங்க புள்ளய நாங்க ஜம்முன்னு வாழ வச்சுக்குவோம்"
"ஷ்! மீனம்மா!" என்றார் ஞானம் கடிந்த குரலில்.
"சம்மந்தி. அவன்ட்ட நீங்களே கூட வந்து பேசுங்க. என்ன முடிவுன்னு கேளுங்க" என மார்க்கின் தாய்மாமா சொல்ல,
"இதுக்கு முன்ன பேசுனப்பவும், இந்தா ஒரு வருஷத்துல வந்துருவேன், காண்ட்ராக்ட் முடியவும் வந்துருவேன். கூடி போனா நாலு மாசம் வந்துருவேன்னு சத்தியமே பண்ணிட்டு தான் போனாரு. ஒருதடவ கூட சொன்ன சொல்ல காப்பாத்தல, இந்த முறை மட்டும் எப்படி நம்புறது?" என்றது பாலா, மனோவின் அண்ணன். அன்று அவன் வீட்டிலிருக்க, வந்து சிக்கியிருந்தனர்.
"இல்ல தம்பி?"
"அவங்க பத்திரிகை வைக்க வந்துருக்காங்க. மாப்ள வரட்டும் என்னன்னு பாக்கலாம்" என ஞானம் தான் அவர்கள் உதவிக்கு வந்தார். சமரசம் என வருகையில் சண்டலயாகிவிட கூடாதே என நினைத்தார் ஞானம்.
"அவ இங்க வேலை பாக்றா, பிள்ளைங்க ஸ்கூல் போகுது. அவர் நாலு நாள் முன்ன வர்றதுக்கு, பத்து நாள் முன்னவே போய் இவ அங்க காத்துட்டு இருக்கணுமா? வருஷ கணக்கா காத்துட்டு தான இருக்கா பத்தாதாமா அது?" என்றான் காட்டமாக.
"முணு வருஷமா அந்த பக்கமே மனோ வரல. முன்னவே வந்திருந்தா அவளுக்கு கொஞ்சம் இலகுவா இருக்குமேன்னு தான் அப்படி கேட்டோம்" என்றார் மார்க்கின் தாய்மாமா.
மல்லிகா, "அவ போறேன்னாலும் இவரு விடமாட்டாரு போலயே!" என தான் முனங்கி நின்றாள்.
"இருக்கட்டும் சம்மந்தி. எல்லாரும் அவங்க நல்லதுக்கு தானே நினைக்கிறோம்" என்ற ஞானம், "அமைதியா இரு பாலா" என்றுவிட்டார்.
வந்தவர்களும் இவர்களுக்கு பத்திரிகை வைத்துவிட்டு, "மனோக்கும் வைக்கணும். மாரா பேர போட்டு மனோ கைல தான் குடுக்கணும்" என கேட்க,
"இப்டி சொல்லித்தான் உங்க பொண்ணு கல்யாணத்துக்கும் அழைச்சீங்க. அப்ப பெருமையா மருமகன் இடத்துல நின்னு நீதான் செய்யணும்மான்னு அனுப்பி வச்சோம், அவரு என்னன்னா அதையே வழக்கமாக்கிட்டாரு. மறுபடியும் அதையே செய்றீங்க நீங்க?" என்றான் பாலா.
"அவளுக்கு தனியா அழைக்கணும் தானே தம்பி?" என்றார் அத்தை.
"அவ ஸ்கூல்ல இருந்து வர அஞ்சு, ஆறு மணி ஆகிடும். ஃபோன் பண்ணாலும் எடுக்குறாளோ என்னவோ?" என சமாளித்தார் ஞானம்.
"நேர்லயே போய் அங்கன வச்சு வச்சுட்டு கிளம்புறோமே?" என கேட்டுவிட, ஞானம் விழிக்க,
"கூட்டிட்டு போங்க சின்ன சாரு. அவங்க தான் சொல்லிட்டு போகணும்னு முடிவா கேட்குறாங்கள்ல. சொல்லு ஆண்டாளம்மா" என அதுவரை சத்தமாக பேசியவர், "இல்லனா அவள கிளப்புறதே பெரிய விஷயமாகிடும்" என்றார் ஆண்டாள் காதில் மெதுவாக.
"ஆமாங்க, கூட்டிட்டு போய்ட்டு வாங்க" என ஆண்டாளும் கண்ணை காட்ட, ஞானம் மனோவிற்கு அழைத்தவாறே வாசலுக்கு செல்ல, மார்க்கின் பெற்றோரும் சொல்லிக்கொண்டு கிளம்பி வெளியே வந்தனர்.
அங்கு மனோ அப்போது தான், நீதிபதி வீட்டிற்கு கிளம்பியவள், செல்லும் வழியில் பத்திரிகை மாடல் மட்டும் அதே கடைக்கு சென்று மறுபடியும் இரண்டை வாங்கிகொண்டு அவள் ஸ்கூட்டியிலேயே அவர் வீடு சென்றிறங்கினாள்.
வாசலில் நின்ற காவல் அதிகாரி உள்ளே சென்று கேட்டுவிட்டு வந்து இவளை அழைத்து செல்ல, இவளை நன்கு நினைவு வைத்திருந்தார் அவர். நலம் விசாரித்து, சிலபல பேச்சுக்களுடன், மாடல் பத்திரிகை அட்டையையும், கணினியில் அதில் அச்சிட போகும் விஷயத்தையும் அவர் முன் வைக்க, அவர் அதை பார்த்திருக்க, சண்முகசுந்தரம் அழைத்தார். அவள் எடுக்கும் முன் அழைப்பு நின்றிருந்தது.
அதற்கு முன் ஞானம் இருமுறை அழைத்திருப்பதையும் அப்போது தான் பார்த்தாள். பிள்ளைகளுக்கு என்னவுமோ என தான் முதலில் பயந்து பதறி, வேகமாக திருப்பி அழைத்தவள், இங்கு, "மேடம் ஒரு டூ மினிட்ஸ், ஸ்கூல்ல இருந்து ஃபோன், பேசிட்டு வந்திடட்டுமா?" என கேட்டு எழ,
"பேசங்க மனோ" என சிரித்தார் அவர்.
நகர்ந்து அந்த அறையின் ஜன்னல் பக்கம் கொஞ்சம் தள்ளி வந்தவள், "அங்கிள்?" என்க,
"உன் மாமியார் வீட்ல இருந்து உனக்கு அவங்க பையன் கல்யாணத்துக்கு இன்வைட் பண்ண வந்தாங்கமா. நா, நீ இங்க இல்ல ஜட்ஜ பாக்க போயிருக்கன்னு சொன்னேன், அவங்க ஏதோ மிஸ் அன்டர்ஸ்டாண்ட் பண்ணிட்டு அங்க கிளம்பி வந்துட்ருக்காங்க"
"இங்கையா? இங்க எதுக்கு அங்கிள்?" என்றாள். உண்மையில் அவளுக்கு டக்கென்று விஷயம் புரிபடவில்லை. இதற்குள், அவள் மாமியார், மாமனார், மார்க்கின் தாய்மாமா, அவன் அக்கா லதா, சுரேந்தர் என வரிசையாக இணை அழைப்பில் வர, யாருக்கு என்னவாகிற்று என மறுபடியும் படபடத்து தான் போனாள். இவளுக்கு மட்டுமா, இத்தனை பேரும் அத்தனை அழைப்பு அங்கு அமெரிக்காவில் இருப்பவனுக்கும் அழைத்திருந்தனர்.
"என்னாச்சு? இந்நேரம் மாத்தி மாத்தி கூப்பிட்ருக்கீங்க?" என பாதி ராத்திரியில் புருவ முடிச்சுடன் எழுந்தமர்ந்திருந்தான்.
"இங்க உன் பொண்டாட்டி டிவோர்ஸ் கேட்டு ஜட்ஜ் வீட்டுக்கே போய் உட்கார்ந்துருக்கா. நீ வர்றன்னு தெரிஞ்சு தான் இந்த டைம்ல இத பண்ணுறா போல. எதாவது பண்ணு மாரா. நம்ம குடும்பத்துக்கு இதெல்லாம் ஆவாத போவாத விஷயம். நல்ல வேலை நாங்க இன்னைக்குன்னு பார்த்து நறுமணந்தி வந்துருக்கோம், கடவுள் உனக்கு நல்லது செய்ய நினைக்காருடா அதான் நாங்க வர்ற அன்னைக்கு போயி உட்கார்ந்துருக்கா நம்மளுக்கும் விஷயம் தெரிஞ்சுட்டு. நாங்க இப்ப தடுத்துருவோம். ஆனாலும் நீ பேசு அவகிட்ட. எதுக்கு இவ்ளோ கோவம், நீயும் இப்படி மூணு வருஷமா ஒதுங்கி இருந்து தப்புதான் பண்ணிட்ட மாரா" மூச்சே விடாமல் அவசர அவசரமாக அவனிடம் புலம்பி தள்ளிவிட்டார் அவன் அத்தை.
"டிவோர்ஸ் கேட்டு ஜட்ஜுட்டயா? என்ன உளறுறீங்க? அத்தை பொறுமை. ஏன் இப்படி? நிதானமா சொல்லுங்க. என்னாச்சு அங்க? மாமா எங்க?"
"ம்ச் இப்ப அதுக்குலாம் நேரம் இல்ல. மாமா லதாவோட மாமானாருக்கு ஃபோன் பண்ணி வர சொல்லி பேசிட்ருக்காங்க. பெரியவங்க எல்லாருமா போய் பேசினா கொஞ்சம் அமைதியா வருவா. ஆனா உன் மச்சினன் தான் இதுக்கு ஐடியா குடுத்துருப்பான்னு நினைக்கேன். எங்கள்ட்ட அவ்ளோ பேசுனான். தங்கச்சி வாழ்க்கை ஆதங்கம் இருக்கத்தான் செய்யும் அத தப்பு சொல்ல முடியாதுன்னு நாங்களும் பொறுமையா கேட்டுட்டு வந்துட்டோம். ஆனா இப்படி ஒரு வேலை பாக்க போறான்னு அங்க யாருமே சொல்லலடா. ஒருவேளை அவங்க வீட்டுக்கும் சொல்லாம ஸ்கூலுக்கு கிளம்பி வர்றாப்புல வந்து இங்க வந்துட்டான்னு நினைக்கிறேன்" என அவனிடம் பொறிந்தவர், "இன்னும் எவ்வளவு நேரமுங்க ஆகும்? மனோ அப்பாட்டயாவது ஃபோன போட்டு கேளுங்க" என அங்கேயும் பேச, தலையை பிடித்துவிட்டான் மார்கண்டேயன்.