எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

YTA - Teaser

admin

Administrator
Staff member

Untitled Design_1.jpg

யுகமே தொலைந்தேன் ஆருயிரே!

ஹீரோ : அகத்தியன் ரெட்டி

ஹீரோயின் : சம்யுக்தா தேவி, யாத்ரா சந்திர வர்மன்.

(யார் ஹீரோயின் என்பதை கதைக்களமும் நீங்களும் தான் சொல்லனும்)

இவரின் இதழும் ஒன்றோடு ஒன்று இணைந்து, ஈரைந்து விரல்கள் பிணைத்து போய் இருக்க அந்த ஏகாந்தம், காதல் கொண்ட இரு உயிர்களை இறுக்கமாக பிணைத்து வைத்தது..​

மூச்சு காற்றுக்கென இரு இதழ்களும் பிரிந்த போது அங்கே, இரு இதழ்களில் ஒட்டியிருந்த உமிழ் நீரோ அந்த பௌர்ணமியின் ஒளியில் வைரத் திரவங்களாக ஜொலிக்க, தன்னவன் முகம் காண வெட்கி அவன் மார்பில் முகம் புதைத்து கொண்டாள் சம்யுக்தா தேவி. அவள் அகத்தியனின் இதய ராணி மட்டுமல்ல மைசூர் அரச வம்சத்தினரின் உறவில் ஜனித்து வந்த ராஜ வாரிசுகளில் ஒருத்தி..​


"பாவா!"​

"பாவாக்கு என்னவாம்?"​

"ஹூம்.." அவள் சினுங்க அகத்தியன் மென்புன்னகையோடு..​

"அப்படினா."​

"வெட்கமா இருக்கு சும்மா இருங்களேன் பாவா!."​

"ஹா.. ஹா.. வெட்கமா ஹம்.."​

என்றவன் நக்கல் கூறலில்.​

"ஹாய் ஐ எம் சம்யுக்தா தேவி! ப்ராம் இந்தியா. மைசூர் ராஜ்புத்ரி. உங்கள ரொம்ப நாளா லவ் பண்ணுறேன். அண்ட் நீங்க ஒகேயா? ஓர் லிவிங்ல இன்டெர்ஸ்ட் இருக்க ஆளான்னு, மூணு வருஷம் முன்ன பொட்டுல அடிச்சாபுல பட்டுனு கேட்டவளுக்கு இப்போ வெட்கமாம்."​

சம்யுக்தா அன்று கேட்தை போல சொல்லி காட்டவும் அதில் மேலும் அவள் முகம் வெட்கத்தில் சிவக்க.​

"அது நீங்க அப்போ பார்த்திங்களே ஒரு பார்வை அதுல வந்த பதட்டத்துல அப்படி ஒரு வார்த்தையை கேட்டுட்டேன். இந்த அகத்தியன் எனக்குனு இப்போ நினைச்சாலும் பிரமிப்பா இருக்குதே."​

அமைதியான புன்னகையோடு அவள் இடக்கையை பிடித்து அந்த மதியின் ஒளியில் இருவரின் கரங்களை இணைத்து பார்க்க இருவர் விரல்களிளும் தாங்கி நின்ற ப்ளூ சப்பாரி கல் பதித்த நிச்சயதார்த மோதிரம் யுகமே ஆனாலும் ஓயாத அவர்கள் காதலின் சகாப்தத்தை கூறியது.​

"இன்னும் நாலே நாளுள்ல நீ என்னோட, இந்த அகத்தியனோட சம்யுக்தா! மிஸஸ்.சம்யுக்தா அகத்தியன்!" அவன் குரலில் காதலின் கர்வம் மிளுர.​

"ஏன் நாளு நாள்ல? நான் இப்போதும், எப்போதும் அகத்தியனோட சம்யுக்தா தான்."​

அதன் பின் விழிகள் கூறிய மொழியை படித்த இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்து கிடந்தனர்.​

___________________________​


"அகத்தியா!"​

"அம்மா!" அவன் தவிக்க..​

"பௌர்ணமி!" வசிஷ்டன் குரல் தடுமாறி வரவே.​

"இல்லை பாவா! நீங்க இதுல வாரதிங்க"​

"அம்மாயி நுவ்வு.."​

"பாவா!" அவள் ஒற்றை வார்த்தையில் ஆறடி ஆண் என்றும் போல இன்று அடங்க, மகன் புறம் திரும்பியவள்.​

"அகத்தியா அம்மாவ நிமிர்ந்து பாரு. என் கண்ணை பார்த்து சொல்லு நிவேதிதா சொல்ற மாதிரி கனடால நடந்த பாச்சுலர் பார்ட்டில நீ சுயநினைவு மறக்கிற அளவு குடிச்சது உண்மையா பொய்யா செப்புரா?"​


"அஆ..அம்மா! நேநு(நான்), அதி(அது).. "​

அவன் வார்த்தைகளை கோர்வையாக்க தடுமாற, பௌர்ணமியோ..​

"அகத்தியா ஒழுங்கா திக்கி திணறாம பதில் சொல். நீ வசிஷ்டனின் மகன் அவரை போல, அவர் பௌர்ணமிக்கு நீ கொடுக்கும் பதில் அம்பு மாதிரி தப்பே செய்தாலும் நேர்மையா, திடமா வரணும்."​

என்ற தாயின் தீட்சணியம், நிமிர்வு அந்த நேரத்திலும் ரசிக்க வைக்க அகத்தியனின் இதழ்கள் லேசாக புன்னகையில் நெளிய அங்கே வசிஷ்டனின் இதழ்களும் கர்வத்தில் விரிந்தது. உண்மையை வேண்டும் தாயிடம் பொய்யுரைக்க மகனுக்கு தெம்பில்லை ஆகவே வாய் திறந்தான்.​

"அம்மா எஸ்! ஒன் திங் இஸ் ட்ரூ, பட் அவ சொல்றது பொய். தட் மீன்ஸ் நான் அன்னைக்கு ஓவரா ட்ரிங்க் பண்ணிட்டேன் அதுவும் நிதானமில்லாத அளவு என்பது மட்டுமே உண்மை பட்.."​

என்று முடிக்கும் முன் பௌர்ணமியின் கரம் அகத்தியனின் கன்னத்தை வெகுவாக பதம் பார்க்க, அன்னை கொடுத்த அடியின் அதிர்வில் அகத்தியனின் கரங்கள் தன்னைப்போல் அவன் கன்னத்தில் படிந்தது என்றால், பௌர்ணமியின் பின்புறம் நின்றிருந்த விஷ்வதேவின் கரமும் அவன் கன்னத்தில் பதிந்தது. அதை பார்த்த வசிஷ்டனின் இதழ்களில் கேலி புன்னகை ஆனாலும் நிலைமையின் தீவிரம் உணர்ந்து தன்னை அடக்கி கொள்ள பௌர்ணமியோ..​

"ஆக நீயும் இந்த அம்மாவை ஏமாத்திட்ட அப்படி தானே?"​

"அம்மா நான் உங்க புள்ளை உங்க வளர்ப்பு நான் போய் முதல்ல குடிப்பனா? அதுவும் குடி போதையில் ஒரு பெண்ணோட கற்பை நாசம் செய்திருப்பேன்னு நம்புறீங்களா?"​

என்றதும் மகனை பலமாக முறைத்த பௌர்ணமி..​

"அகத்தியா வாங்குனா ஒரு அரை போதலையா நான் திட்டனது நிவேதிதா, அவள் கிட்ட நீ தப்பு செய்ஞ்சிட்டனு சொன்ன பொய்க்கு இல்லை. தெரியாமனாலும் குடிச்சத்துக்கு."​

என்றதும் அன்னையை பாய்ந்து அணைத்தவன்.​

"என்ன நம்புறீங்களா அம்மா?"​


"நீ என் அகத்தியன்!"​

மகனின் ஒட்டு மொத்த தவிப்புக்கு ஒரு வார்த்தையில் பதில் தந்த பௌர்ணமியின் விழிகள் நிவேதிதாவை உறுத்து விழித்து.​

"இந்த விஷயம் சம்யுக்தா அண்ட் அவ ஃபாமிலிக்கு தெரிய வேணாம் அதோட சொன்ன டேட்ல உனக்கு சம்யுக்தாக்கும் மேரேஜ் நடக்கும் பட் அதுக்கு முன்ன நிவேதிதா ஏன் பொய் சொன்னான்னு நிரூபிக்கனும்."​

பௌர்ணமி கூறியதை கேட்ட நிவேதிதா ஆடி போய்விட்டாள். இந்த பரம பதத்தில் நூல் தப்பினாலும் அவள் சர்பத்தின் வாயில் அல்லவா..​

அதேநேரம் அவளுக்கு ஒரு குறுஞ்செய்தி வர, அவள் அந்த இடம் விட்டு நகர்ந்த கணம் அகத்தியனும் அவளை பின் தொடர்ந்தான். அப்போது அலைபேசியில் 'கெமேர்' மொழியில்..​

'பத் தோ அவ்யூ க்னமங் சியங் பன் லீப் திரௌ பத் டோங் தேயத். ப்லாஸா ப்தௌ ரி சபா ப்ரசெண்பஸ் எக் தெவெகு டௌ பன். க்னோம் நவ்க்நோங் தை நேயி போஹ்வியேந்தோம்.'​


(யுகமே தொலைந்தேன் ஆருயிரிடம் மீண்டும் தொலைய ஒரு வரம் வேண்டும். முடிந்தால் விதியை மாற்று. நான் காலனின் கைகளில்)​

இருந்த மெஸேஜை மெதுவாக வாசித்தவள் இதழ்கள் இறுதியில் "யாத்ரா" என துடித்து அசைந்த நொடி..​

அதுவரை நடந்த நிகழ்வுகளில் இறுகி இருந்த அகத்தியனின் உடல் தளர்ந்து, யுகம் தொலைந்த அவன் உயிர் விழிகளுக்குள் நுழைய, சாமரம் வீசும் காற்றில் அவன் ஆன்மா மிதக்க தன்னை போல் வாய் பிரிந்து "யாத்ரா சந்திர வர்மன்" என்று உரைத்த நொடி அவன் இதழ்களில் விரிந்த மனோகர புன்னகை. கொஞ்சம் கொஞ்சமாக அது மந்தகாச புன்னகையாகி, இறுதியில் வன்ம புன்னகையாக இதழ்களில் ஒய்யாரமாக அமர்ந்து நான் 'அகத்தியன்' என்றது..​

கவர்வம் கொண்ட அகத்தியனின் புன்னகைகளுக்கு சாட்சியானவளோ அங்கே கம்போடியாவில் 'அங்கோர்' இடத்தில் அமைந்திருக்கும் மாளிகையில் உள்ள மர்ம அறைக்குள் சிறைவைக்கட்டிருக்க, நான்கு மாதங்களான அகத்தியனின் இரு உயிர்களுக்கு தன் உதிரத்தால் இடமாளித்து, உயிருக்குள் மறைத்து வைத்து காலனோடு போராடி கொண்டிருந்தாள்..​

யுகமே கடந்தாலும் தன்னில் தொலையாத, தன்னை தொலைக்க விரும்பாத அவள் ஆருயிரை தொலைக்க வந்தவளுக்காக காலம்மும், காலனும் காத்திருக்கிறது..​

அன்புடன்​

ப்ரஷா​

3பார்ட் title also சொல்றேன் வித் டீஸரோடு.​

 
Top