எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

காதல் நெஞ்சங்கள் கருத்து திரி

priya pandees

Moderator
காதல் நெஞ்சங்கள்!
#காதல்_நெஞ்சங்கள்

#priyawadhanareview

Link 🖇️ 👇👇👇

"காதல் நெஞ்சங்கள் (முழு தொகுப்பு)", - பிரதிலிபியில் படிக்க :,


✨💞💞💞💞🌺🌺🌺🌺✨💞💞💞💞✨

அமைதியாய் நகர்ந்த
என் வாழ்க்கையில்
மலராய் மலர்விக்க வந்தவள்
என் மலர்..

உரிமையை நிலைநாட்டியதும்
அவள்தான்
உரிமையைக் களவாடியதும் அவள்தான்.

என் நிழலுக்கே உயிர் கொடுத்தவள்
என் நிமிர்வுக்கே நெஞ்சம் ஆனவள்..
நான் விழுந்த புழுதியில்
பூத்த ஒரு மலர் அவள்..

எனக்காகப் பிறந்தவள்!

ஒவ்வொரு நொடியும்
அவளின் நினைவுகள் என் இதயத்தில்
மலர்களாய் கொட்டிக் கிடக்கின்றன...
அவளை நினைக்க வைத்தவள் அவளே..

மழையில் நடக்கும் நம் காதல்
நனைந்து நனைந்து
மெதுவாய் வளர்ந்தது..

கொஞ்சலும் சீண்டலுமாய்
இருவரும் இருந்தாலும்
சிறு சண்டையை சமாதானமாக்கும் அவள்...
அவள் எங்கே நான் எங்கே?

சிறிது நேரமாவது கோபமாய் இருந்தாலும்
அவளிடம் அதைப் பொறுத்திருக்க முடியவில்லை..

அவளின் அன்பில் நான் அடிபணிந்தேன்..
அவளுக்காக செய்தது எல்லாம்
எனக்காகத்தான் என முடிவெடுத்தேன்..

ஒரு பெண்ணாய்
எனக்கான உயர்வும் மரியாதையும்
அவள்தான் பெற்று வந்தாள்..

அவளுக்காக நான்
எனக்காக அவள்...!!

🔥🔥🔥🔥🔥

🙈🙈🙈 அய்யையோ மாறன், மாறன் சொல்ல வச்ச ப்ரியா அக்கா வாழ்க..😝 சரி விஷயத்துக்கு வருவோம்..போற போக்குல ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிட்டவங்க தான் 😂 மாறன் 💞 மலர்..

எப்படியோ மணி தாத்தா வள்ளி தாத்தா கிட்ட பேசி ரெண்டு பேருக்கும் கல்யாணத்த நடத்தி வச்சிட்டாரு..

ரசனையும் சில்மிஷமா காதலுமா அவங்க வாழ்க்கை போகுது..ஒரு பெண்ணாக மாறனுக்கு புரிய வச்சி அவனுக்கு முடியாதது எதுவும் இல்லன்னு உறுதுணையா இருந்து சாதிக்க வைக்கிறது தான் மலர் செஞ்சது..நிறைய வீட்டு ஆளுங்களையும் திருத்த வேண்டியதா இருந்துச்சு..

மாறனும் மலரும் அத பொறுப்பு எடுத்து சிறப்பா குடும்பத்தை வழி நடத்திடாங்க அவங்க தப்பையும் புரிய வைச்சிடாங்க..

அறிவு , மதி , ராணி போன்ற ஆளுங்க குடும்பத்துக்குள்ள இருக்க தான் செய்றாங்க 😐😐 இந்த மூனு பேரும் பண்ற அலிசாட்டியம் இருக்கே..இதுல மதி வாய் வானளவு உயர்ந்து நிற்கும்..

இப்படியானவங்கள நிஜத்துல அவங்க குணத்தை திருத்துறதே கஷ்டம்..ஒரளவு அவங்கள மாத்த முயற்சி பண்ணலாம்..அதுக்கு மேலேயும் முடியலன்னா என்னத்தான் பண்றது..இந்த கதைல அப்படி இல்ல மாறனும் மலரும் சேர்ந்து அவங்கள மாத்திடுவாங்க அப்பப்ப அவங்க குணம் வெளிய வரத்தான் செய்து..

😎😎😎 இவங்க நடுவுல கதையே கலகலன்னு இழுத்துட்டு போன உண்மை தேனி 🤣🤣🤣 வேற லெவல் தவள வாயன் 😂 அவன் வாய்ஸ் வச்சி பாட்டு பாடுவான்ல பாத்ரூம்மே கதறி அழுமாம்..🤭 இவன் கிட்ட மாட்டிகிட்ட முழிச்ச வள்ளி தாத்தா தான் பாவம்..

ஒரு பெண்ணால எத நினைச்சாலும் செய்ய முடியும் என்கிறதோட 🙄 இதுக்கு மேல எனக்கு எதுவும் சொல்ல தெரியல 😅😅😁😁 சரி முடிவுக்கு வருவோம்...

காதல் , குடும்ப கதை , நட்பு , பகை , ரொமேன்ஸ் , உறவு இதெல்லாம் கலந்த கதை காதல் நெஞ்சங்கள்...

👌👌👌👏👏👏 மலர் மாறன் டயலோக் அவங்க character எல்லாமே செம்மயா இருந்துச்சு ரசிச்சி படிக்க கூடிய கதை..😍😍😍😍 அருமையான காதல் குடும்ப கதை அக்கா..💫💫💫 படிக்காதவங்க கண்டிப்பா படிச்சி பாருங்க உங்களுக்கே மாறன் 💞 மலர் பிடிக்கும்..இந்த மாதிரியான கதைகள் நிறைய எழுத வாழ்த்துக்கள் ப்ரியா அக்கா..💖💖💖💖🥰

நன்றி 🙏💙
 
Top