எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வெந்தழல் நயனங்கள் - டீசர்

Status
Not open for further replies.

NNK-28

Moderator
#நறுமுகை_நிலாகாலம்02
#வெந்தழல்_நயனங்கள்
வணக்கம் மக்கா,
உங்களுக்காக கதையிலிருந்து சிறு துளிகள்💜.

****************************************

அவன் செல்லும் பாதையை தான் பார்வையால் விழுங்கிக் கொண்டிருந்தாள். அவளின் இதயம் அவனிடம் இடமாறி பல மாதங்களுக்கு மேலாகிவிட்டது. இன்னுமும் அவளது வெளிப்படையான நுண்ணிய உணர்வுகளை புரிந்துக் கொள்ளாமல் அவன் தான் சுற்றிக் கொண்டு இருக்கின்றான்.

பல முறை சந்தேகம் கேட்பது போல் அவள் எவ்வளவு பேச்சுக் கொடுத்தாலும். அவன் தான் பிடி கொடுத்து பேசாமல் இருக்கின்றான். இப்போது கூட அவளை கண்டும் காணாமல் முன்னேறிக் கொண்டிருந்தவனை நினைத்து அவளுக்கு கடுப்பாக இருந்தது.

இந்த மாங்கா மண்டையன் கண்ணுக்கு நான் தெரியுறேன்னா இல்லையா? ஊர்ல இருக்கிற அத்தனை பேர் கூடவும் பேசுறான். ஆனா, என்னை மட்டும் கண்டுக்க மாட்டேங்குறான்.
ஒரு வேல மணி கணக்கா தியானம் பண்ணுறதால மனுஷன் சாமியாரா மாறிடலாம்ன்னு முடிவு பண்ணிட்டாரா என்ன? என்று எக்கு தப்பாக நினைத்தவள்.

"மிஸ்டர் உதய் கொஞ்சம் நில்லுங்க என்று கணீர் குரலில் அவனை அழைக்க. அந்த காரிடோரில் உள்ள அனைவரும் அவள் கத்திய கத்தலில் அவளையே பார்த்திருக்கும் போது. அவளது எண்ணத்தின் நாயகன் மட்டும் எப்படி தற்போது திரும்பாமல் இருப்பான்?"

பின்னால் திரும்பி அவளை தான் பார்த்தான். இல்லை... இல்லை முறைத்தான். அவன் முறைப்பை கண்டுக் கொண்டு பின்புதான் தனது செயல் பெண்ணவளுக்கு உரைத்தது. ஆத்தி ரொம்ப சத்தம்மா கூப்பிட்டிடோமோ என்று நாக்கை கடித்தவளின் முன் அவன் என்ன வேண்டும் என்பது போல கையை கட்டிக் கொண்டு நின்றிருந்தான்.

"அது..அது.. என்று தினறியவளை கண்டு. ஹலோ மிஸ் நிறைய வேலை இருக்கு கொஞ்சம் எதுக்கு கூப்பிட்டிங்கன்னு சொல்லுறீங்களா? என்று வினவ. அது வந்து இன்னிக்கு உங்க ஸ்பீச் ரொம்ப நல்லா இருந்தது என்று கூற(உளற)".

ஓ... தாங்க்ஸ் என்று மட்டுமே கூறினான்.

அவ்வளவு தான் ரியாக்சனா? என்று நினைத்தவள் அப்போது தான் உணர்ந்தாள் அவன் இப்போதும் அவளை நேருக்கு நேராக பார்க்கவில்லையென்று. அதனை நினைத்து வெதும்பியவள்.

அது, ஒரு டவுட்டு பாஸ். நீங்க தான் டவுட்ன்னா கேட்க சொல்லிருந்தீங்களே என்று கூற. அவனோ சீரியஸான குரலில் சொல்லுங்க மிஸ் உங்களுக்கு என்ன டவுட்? என்று வினவ.
தியானம் பண்ணினால் வெயிட் லாஸ் ஆகும்ன்னு சொன்னீங்க தானே? நானும் ரெண்டு வாரம் தொடர்ந்து பண்ணினேன்.

ம்கூம்.. ரெண்டு இன்ச் கூட குறையல என்று குறைப்பட.

அதில் அவளை ஏற இறங்க பார்த்தவன். "ஐ திங்க் நான் சொன்னதை நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டீங்கன்னு நினைக்குறேன். மெடிட்டேஷன் செய்யுறதால, உங்க கிராவிங்க்சை(cravings) அது கண்ட்ரோல் பண்ணும்ன்னு தான் நான் சொன்னேன் மிஸ்".

அப்புறம் ஃபோர் யுவர் கன்சர்ன் "நாவை அடக்கினால் நாட்டையும் ஆளலாம்" என்று மட்டும் கூறிவிட்டு அவன் நடையை கட்டினான். கடைசியாக அவன் கூறியது சாதாரணமான சொல்லாக தான் இருந்தது. ஆனால் அதில் எத்தனை உண்மை பொதிந்துக் கிடக்கிறது என்று அவளது விதிக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாகும்.


*********************************

"வயிற்றை மெதுவாக தடவினாள், ரோமங்கள்‌ எல்லாம் சிலிர்த்தது அவளுக்கு. காது மடல்களும், கன்னக்குழியும் கூட சிவந்து போனது.
காலடி சத்தத்தை வைத்துக் கொண்டே தன்னவன் வந்துவிட்டான் என்று அறிந்துக் கொண்டவள். வேகமாக நாணச் சிரிப்புடன் அவனை வரவேற்க சென்றாள்".

"மெல்லிய புன்னைகயுடன் வரவேற்றவளை கண்டவனுக்கோ தான் கூற போகும் செய்தியை கேட்டு அவளை கையாள வேண்டிய பணி வேறு சேர்ந்துக் கொண்டதே என்று மனம் நொந்தது".

அவன் எப்படி அந்த செய்தியை அவளிடம் கூறலாம் என்று யோசிக்க.

அவளோ, ஒரு வெட்கச் சிரிப்புடன் இதற்கு மேல் காத்திருக்க முடியாது என்றெண்ணி மெல்லிய நடுக்கத்துடனே மெதுவாக அவனது வலது கரத்தை பிடித்து தனது மணி வயிற்றில் பதித்தாள்.
உலகம் நின்றது போன்ற மாயை தான் அவனிடத்தில்.

ஆனந்தத்தையும், அதிர்ச்சியையும் ஒரே நாளில் சந்தித்தான். எப்படி இச்சூழ்நிலையை கையாள வேண்டும் என்று அவனுக்கு விளங்கவில்லை.
தற்பொழுது கரையில் துடிக்கும் மீன்களைப் போல தவித்து, துடித்துக் கொண்டிருந்தான்.

"நாணத்தை அடக்க தெரியாமல் மன்னவனின் மார்ப்போடு முதல் முறையாக அவளே உரிமையுடன் முகம் பதித்து, முகத்தில் பதிந்திருந்த வெட்க ரேகைகளை மறைக்க விழைய. அந்தோ பாவம்! அவனுக்கு தான் எவ்வாறு அவளிடம் நடந்துக் கொள்ள வேண்டுமென்று பிடிப்படவில்லை".

ஆனந்த செய்தியினை இப்படி ஆராதிக்க முடியாமல் இறைவன் தன்னை நிந்தித்து விட்டானே என்று வருந்தியவன்.

"ஆழினி என்ற மெல்லிய அழைப்புடன் அவன் மனையாளின் தாடையை நிமிர்த்தி அவள் கைகளை அழுத்தமாக பிடித்துக் கொண்டான். அப்போது தான் ஒருவித ஆர்பரிப்போடு அலைப்பாயும் அவளது நீல நயனங்கள் கூறிய பல செய்திகளை படித்துவிட்டு. தன் வேதனைகளை அடக்கியவாறே. ஆராவாரம் இல்லாமல் அவள் மனதை கிழிக்கும் அந்த செய்தியினைக் கூற தொடங்கினான்".

"யான் கூற போகும் செய்தியினை சற்று... மனதிடத்துடன் கேளடி பெண்ணே. அது.... அது... நுதல்.. நு...நுதலழகி கருத்தரித்திருக்கிறாள் என்று முதல் முறையாக குரலில்‌ ஏற்ப்பட்ட ஒருவித நடுக்கத்துடன் கூறியவன்.‌ ஒரு இடைவேளையை விட்டுவிட்டு அவள் வயிற்றில் உதித்திருப்பது என்னுடைய உதிரம் என்ற செய்தியை அசராமல் கூறிவிட்டு அவளை நோக்கினான். அவளோ அதிர்ச்சியாக அவனைக் கண்டாள். அவள் இதயத்தில் ஒரே நொடியில் கூர் வாளை இறக்கி வைத்த உணர்வு. அவளது நீல நயனங்களிலிருந்து அடுத்த நிமிடமே கண்ணீர் சொறிந்தது. ஆனால் அது கன்னத்தை தாண்டவில்லை. இமைக்குள்ளே குளமாக கட்டி நின்றது".

அவளது ஒரு மனமோ இது முற்றிலும் உண்மையல்ல திரிக்கப்பட்ட பொய் என்று மௌனமாக கரைய. மற்றோர் மனமோ அவனை தவிர எந்தவொரு ஆண்மகனுக்கும், நுதலழகியின் விரல் நுனியை கூட தொட துணிவில்லை என்ற உண்மையை எடுத்துரைத்தது.

உண்மை சுட்ட வேளையில் அவளது மனம் வெகுவாக வலித்தது. கூச்சலிட்டு தன் மனக்குமறலை வெளியே ஆற்ற கூட முடியாத கையறு நிலையில் இருந்தாள் பேதையவள்.

பேசா மடந்தையால் வேறென்ன செய்து விட முடியும்? மௌனமாக நீர்சுரபியை வெளியேற்றுவதை தவிர? அவள் நயனங்களில் இருந்து வெளியேறும் கண்ணீர் தான் சாபமென்று கூற அங்கு யாரும் இல்லாது போனது தான் அவர்களது விதியின் சதியோ?

*****************

இப்போதைக்கு அவ்வளவு தான்😁. டீசர் பற்றியே கருத்துக்கள் வரவேர்க்க படுது👇.

 

NNK-28

Moderator
#நறுமுகை_நிலாகாலம்02
#வெந்தழல்_நயனங்கள்

கதையிலிருந்து சிறு துளிகள்💜.

****************

அவளின் குறையை நினைத்து இளப்பம் கொண்டோ அல்லது பரிதாப பார்வை வீசும் நபர்களை நினைத்தோ அவள் என்றுமே தோய்வடைந்தது கிடையாது. ஏன்னெனில் ஒட்டி பிறந்த இதழினி, தீகனின் மகள் இழையினி மற்றும் தானைத் தலைவரின் மகள் அமரா அதற்கு என்றுமே அவளுக்கு வாய்ப்பளித்தது கிடையாது.

அவளது தந்தை என்றாவது மனம் நோகும் படி செய்துவிட்டு அன்றைய தினம் அவள் முகம் சிறிதேனும் வாடிவிட்டால் போதும். உடனே மூவரும் சேர்ந்து அவளை குளக்கரைக்கு அழைத்து வந்து பாச மழையில் குளிக்க வைத்தே அவளது மனநிலையை மாற்றி விடுவார்கள்.

சுருங்க சொல்ல போனால் அவளை குறையுள்ள பெண்ணாக அவர்கள் என்றுமே நடத்தியது கிடையாது. சராசரி பெண்ணை போல வம்பிழுத்துக் கொண்டு, கேலி பேசி சிரித்துக் கொண்டு இருப்பார்கள். சில சமயங்களில் வெந்திறல் மொழியை காட்டிலும் மௌன மொழி சிறந்தது தானே?

இந்த உண்மையை இளம் வயதிலிருந்தே அம்மூவரும் அறிந்து வைத்திருந்தனர். ஆனால் அனுபவ ரீதியிலும் சரி வயதிலும் சரி எவ்வளவு மூப்படைந்திருந்தாலும் சிலருக்கு அந்த உண்மை மட்டும் இன்னமும் விளங்கவில்லை.

********************

என்னோட ஃபேவரட் சப்ஜெக்ட் ஹிஸ்டரி தான். எனக்கு ஹிஸ்டரி ரொம்பவே பிடிக்கும். ஏன்னு காரணம் கேட்டால்? நம்ம முன்னோர்கள் எப்படி வாழ்ந்திருக்காங்க? என்னவெல்லாம் உபயோகிச்சிருக்காங்க? நம்ம இப்போ வாழ்ந்திட்டு இருக்கிறதுக்கும் அவங்களோட வாழ்க்கை முறைக்கும் என்னென்ன வித்தியாசங்கள் எல்லாம் இருக்குன்னு தெரிஞ்சுக்க எப்போவுமே ஒரு கியூரியாசிட்டி இருக்கும். அதனால தான் இந்த ஃபீல்ட்டுக்கு வந்தேன் என்று கீர்த்தனா கூற.

"உண்மையே சொல்லு க்கா மத்த டிபார்ட்மெண்ட்ல எல்லாம் ஒரு செம்லயாவது மேத்ஸ் வந்திடுமேன்னு பயந்து தானே ஹிஸ்டரி எடுத்த என்று ரவி அவளை வம்பிழுக்க. உனக்கு என்னை அசிங்க படுத்துலைன்னா தூக்கம் வராதே என்று தலையில் தட்டிக் கொண்டாள். அவர்களை பார்த்து அனைவரும் சிரித்திருக்க அதே கேள்வி ஆத்யாவிடமும் கேட்கப்பட்டிருந்தது. கீர்த்து சொன்ன ரீசன்ஸ் தான். இப்போ நம்ம வாழ்ந்திட்டு இருக்கிறதுக்கும் இதுக்கு முன்னாடி வாழ்ந்து முடிச்சவங்களுக்கும் இருக்கிற வேறுப்பாடுகளை பத்தி ஆராய எனக்கு எப்போவுமே ஆர்வம் அதிகம். எத்தனையோ நாகரிகங்கள், வாழ்க்கை முறைகள், நிகழ்வுகள், குறிப்பா உண்மை சம்பவங்கள் இது எல்லாம் கால மாற்றத்தினால மண்ணுக்கடியிலே பொக்கிஷமா புதைஞ்சு கிடக்கு. அதெல்லாம் என்னென்னு தெரிஞ்சுக்க தான் இந்த ஃபீல்ட்டை ச்சூஸ் பண்னினேன் என்று அவள் கூற".


அவளது இனிய குரலின் ஆளுமையையும், அவள் சொன்ன காரணங்களையும் பிரமிப்பாக கேட்டுக் கொண்டிருந்தான் அவன்.

****************
உங்களின் கருத்துக்களை மறக்காம இங்க பகிர்ந்துக்கோங்க 👇

 
Last edited:
Status
Not open for further replies.
Top