எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

திரும்பிவிட்டேன் திமிர்பிடித்தவளாக

santhinagaraj

Well-known member
திருந்திவிட்டேன் திமிர் பிடித்தவளாக


விமர்சனம்

நல்ல ஒரு பெண்களுக்கான சமூக விழிப்புணர்வு கதை.

கதையின் நாயகி எழிலழகி ரொம்ப பயந்த சுபாவம் உடைய பெண்.

சொந்த வீட்டிலேயே சிறிதும் பாசமின்ன்றி சுதந்திரம் இன்றி அடர்த்திய ஆளப்படும் எழில் வெளி உலகத்தை அணுகும் படிக்கும் இடம் வேலை செய்யும் இடம் நம்பி வந்த ஆண் என பலரும் அவளை தவறான கண்ணோட்டத்தில் அழகும் போது அதை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் எழிலை ஒவ்வொரு முறையும் ஆபத்தாந்தவனாக காப்பாற்றி அவளை கை பிடிக்கிறான் நிரஞ்சன்.

எழிலை கல்யாணம் செய்யும் நிரஞ்சன் அவளை அவளோட பயத்தில் அடங்க விடாமல் இந்த உலகத்தை எதிர்கொள்ள கொஞ்சம் தைரியமும் திமிரும் தேவை என்று அவளை மாற்ற முயற்சிக்கும் செயலும் அதற்காக அவன் போடும் திட்டமும் எழிலிடம் ரொம்ப அருமையான மாற்றத்தை கொடுக்கிறது 👌👌👌

குனிய குனிய தான் கொட்டுவார்கள் பயத்தை விடுத்து எழுந்து நிமிர்ந்து நின்றால் பயந்து ஓடிடுவார்கள் என்று எழிலுக்கு மீரா உணர்த்தியது ரொம்ப சூப்பரா இருந்தது 👏👏👏

பெண்கள் தாங்கள் படிக்கும்,வேலை செய்யும் இடங்களில் ஏற்படும் பிரச்சனைகளை கண்டு பயப்படாமல் வளைந்து கொடுக்காமல் எதிர்த்து நின்று போராட நிச்சயம் ஒரு தைரியமும் திமிரும் தேவை.🔥🔥


இன்றைய சூழ்நிலையில் பெண்களுக்கு தேவையான ஒரு அருமையான விழிப்புணர்வு கான்செப்ட் எடுத்து ரொம்ப அருமையா கதையை கொடுத்தது சூப்பரா இருந்தது👌👌

வாழ்த்துக்கள் 💐💐💐
 

NNK-64

Moderator
உங்களின் இந்த நீண்ட விமர்சனத்திற்கு மிக்க நன்றிகள் சகோதரி 🙏🏻🙏🏻🙏🏻💕💕❤️❤️❤️. நான் எதை நினைத்து எழுதினேனோ அது சரியாக உங்களை வந்து அடைந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. நன்றி 💖 💖💖
 
Top