santhinagaraj
Well-known member
அழகில் தொலைந்தேன் ஆருயிரே
விமர்சனம்
குடும்பம், நட்பு,பழி உணர்வு கலந்த 100% ஆன்ட்டி ஹீரோ கதை.
விஷ்வாமித்திரன் தன் தாய் மாமன்களான சொக்கநாதன்,சுந்தரேசன் இருவராலும் அவமானப்படுத்தப்பட்டு அதனால் வைராயத்துடன் உழைப்பில் முன்னேறி பெரிய ஆளாகி அவர்களை பழி வாங்கும் வெறியில்
அவர்களின் குடும்பத் தொழிலான ஓட்டலை மறைமுகமாக இருந்து இழுத்து மூட வைத்து விட்டு.
பிறகு தானே முன்வந்து அந்த ஓட்டலை திறப்பதற்கான வழிவகை செய்து, மாமன் இருவரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அவர்களை ஆட்டிப்படைத்து வைக்கிறான்.
சொக்கநாதன் சுந்தரேசன் இருவரும் ஆண் என்று கர்வம் கொண்டு பெண்களை அடக்கி இருக்க சொல்லும் குணம் உடையவர்கள். எவ்வளவுதான் படித்திருந்தாலும் பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது தனியாக சுயமாக சிந்திக்க கூடாது என்று அடக்கி வைத்திருக்கிறார்கள்.
இவர்கள் குடும்பத்தில் பிரபஞ்சன் ரஞ்சன் இரண்டு மகன்களும் கார்த்திகா மேனகா என்று இரண்டு மகள்களும் இருக்கின்றனர்
இவர்களின் மகன்களான ரஞ்சன் பிரபஞ்சன் இருவரையும் அவர்களின் ஓட்டலை கவனிக்க சொல்ல அவர்கள் வேறொரு தொழிலில் தங்கள் கவனத்தை பதிக்க நினைக்கிறார்கள்.
பெண் பிள்ளைகள் சுயமாக தொழில் செய்ய நினைக்க அவர்களையும் அடக்கி வைக்கிறார்கள்
இப்படி இருக்கிற நிலையில் விஸ்வாமி மந்திரம் இவர்களின் குடும்பத்திற்குள் புகுந்து அவனும் செய்யும் அட்டகாசங்கள் எல்லாம் அவன் மேல செம கடுப்பு வர வைக்கிறது.
மாமன்களைப் பழி வாங்குவதற்காக கார்த்திகா மேனகாவை கல்யாணம் வரை கொண்டு வந்து அவன் ஆடும் கண்ணாமூச்சி ஆட்டம் செம கோவத்தை வர வைத்தது

பழிவாங்கும் உணர்வுடன் மேனகாவுடன் விஸ்வாமித்திரன் நடந்து கொள்ளும் முறைகள் எனக்கு சுத்தமா பிடிக்கவே இல்ல.
விஷ்வாமித்திரன் பழி உணர்வுடன் அந்த குடும்பத்துக்குள் நுழைந்தாலும் அங்கு இருக்கிற பெண்களுக்கு சுதந்திரமா நடமாடும் வழிமுறையை செய்து அவர்களின் தொழிலை ஏற்படுத்திக் கொடுத்தது ரொம்ப நல்லா இருந்தது.
ஆரம்ப எபியிலிருந்து என்னை கோபப்படுத்திய விஷ்வாமித்திரன் இறுதி எபில ஜெயிச்சுட்டான்.
மொத்த கதைக்கும் சேர்த்து இறுதி எபில காதல் கலந்து கொடுத்த விதம் சூப்பர்

கூலிங் கிளாஸ் சீன், மாமன் மருமகன் சீண்டல், மனுவின் பொய்யான கண்டிப்பு என ஒவ்வொரு சீனும் செம்ம யா இருந்தது.

எழுத்துப் பிழைகளற்ற அருமையான எழுத்து நடை சூப்பர்

வாழ்த்துக்கள்