எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அழகில் தொலைந்தேன் ஆருயிரே!

பழிவெறியோடு இருக்கும் நாயகன்!!... அப்படின்னு சொன்னதும் ரொம்ப தப்பா நினைச்சுட்டேன் இவனை பத்தி!!... என்னை பொறுத்த வரைக்கும் இவன் பழிவாங்குன மாதிரி தெரியலை!!... அவன் அம்மா, அப்பா பட்ட அவமானத்தையும், அவன் மேல தேவையில்லாம விழுந்த பழியையும் ரொம்ப காலம் கழிச்சு அதை கொடுத்தவங்களுக்கு அதோட வலியை அவங்க வழியிலேயே உணர வச்சான்!!..

மனு, இவதான் ரொம்ள கஷ்டப்பட்டுட்டா!!... இவளை யாருமே சரியா புரிஞ்சுக்கலை!!... ஆனால் அதைபத்திலாம் கொஞ்சம் கூட நினைக்காமல் எல்லாருக்காகவும் நின்ன இவளோட அன்பும், புத்திசாலித்தனமும் ரொம்ப ரொம்ப பிடித்தது!!..

கார்த்திகா சுயநலமா இருந்தாலும், அவ காதலை வச்சு கேம் விளையாண்டவனை இன்னும் கொஞ்சம் வச்சு செஞ்சுருக்கலாம்!!... காதலிச்சதுக்காக மன்னிச்சு விட்டுட்டா!!...

கவினு ஒரு நல்ல நண்பன்!!... மெல்வின் அருமையான விசுவாசி!!... பேக்கை வச்சு கழுத்தை நெறிச்ச சீன் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச சீன்!!!..

பெரிய மனிதர்களோட சில சிறிய குணங்களை பார்த்து இவங்க திருந்த மாட்டாங்க, இன்னும் நல்லா வேணும்னு தான் தோனுனது!!!.. அவங்களுக்கு அவங்க விதமாவே புரிய வச்சு, தெளிவு படுத்துனது சூப்பர்!!...

கல்யாணம் கலாட்டாவா பன்னுனாலும், ரெண்டு பேரும் அவங்கவங்க துணையோட கனவுகளுக்கு உறுதுணையா இருந்தது ரொம்ப பிடித்தது!!!..

விச்சு, மனு காட்சிகள் எல்லாமே கலாட்டாவா, அதிரடியா, நிறைய சஸ்பென்ஸோட, நெகிழ்வா, ரொம்ப அருமையா இருந்தது!!..

தாய்மாமா, மருமகன் கலாட்டா வேர லெவல்!!.. அதிரடியான, அருமையான காதல் கதை!!.. வெற்றி பெற வாழ்த்துகள் எழுத்தாளரே❣️!!..

 
Top