எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அமுத விஷமடா நீ எனக்கு

zeenath

Active member
#நறுமுகைநிலாக்காலம்_02
#NNK44 #அமுதவிஷமடாநீஎனக்கு
நறுமுகை தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்..
ரித்விக் குமரன்... அதிதி இஷிதா..
அனைவராலும் ஆர்கே என அழைக்கப்படும் ரித்விக் ஆரம்பித்தில் விஷமாக பெண்ணவளிடம் நடந்து கொண்டாலும் இறுதியில் அமுதமாக மாறி பெண் அவளை கொண்டாடுகிறான்.. ஆரம்பத்தில் ஆன்டி ஹீரோவாக தெரிந்தாலும் அப்படி அல்ல.. யாரோ ஒருவர் செய்த பிழையின் காரணமாக பெண் அவள் மீது கோபமாக ஆரம்பத்தில் இருந்தாலும் சூழ்நிலையை புரிந்து அனைத்தும் சரி ஆகிறது இறுதியில்.. சத்யா அர்ஜுன் சிவா அதிதி நண்பர்கள் நால்வரும்.. நண்பர்களின் சதியால் ரித்விக்கும் அதிதிக்கும் திருமணம் நடைபெறுகிறது ரித்விக்கின் மீது அதிக காதல் அதிதிக்கு இருந்தாலும் ஏனோ திருமணத்தை நிறுத்த முயல்கிறாள்.. அது ஏன் என்று தெரியவில்லை இடையில் ரித்விக் இது ஒப்பந்த திருமணம் எனக் கூறுகிறான் அதுவும் ஏன் என்று புரியவில்லை இதை கொஞ்சம் விவரித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.. இடையில் ரித்விக்கின் காதலியாக வரும் திவ்யாவால் கதையில் ஏற்படுகிறது டுவிஸ்ட் திருமணம் முடித்தவர்களின் நிலை என்ன சதி செய்து இவர்களின் திருமணத்தை முடித்த நண்பர்கள் அதற்கு கூறும் காரணம் என்ன என்பது கதையில்.. விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰
Good luck 🥰🌹💐
 
Top