அகம் - 49
"ரெண்டு குடும்பமும் ஒன்று சேர்வதிலும் இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறதுலயும் நம்ம யாருக்குமே எந்த பிரச்சனையுமே இல்லப்பா. ஆனா இதுக்கெல்லாம் நீலவேணி சம்மதிக்கணுமே" என்றார் பெருமூச்சோடு.
"நீங்க பேசினா கூட அவங்களை சமாதானப்படுத்த முடியாதா பாட்டி" என்றான் ஆதவன்.
"கஷ்டம் தான் பேசி பார்க்கலாம்" என்றவருக்குமே அவரை மலை இறக்குவது அவ்வளவு லேசான காரியமாக தோன்றவில்லை.
அன்று இரவு ஆதவன் வருத்தமான குரலில் இனியாவிடமும் ஆதிரையிடமும் இதழினியின் குடும்பத்தை பற்றி விவரித்துக் கொண்டிருந்தான்.
இனியா மெல்லிய குரலில், "அண்ணா எனக்கும் இதெல்லாம் முன்னாடியே தெரியும்".
"அது இப்போ பிரச்சனை இல்ல இப்போ எப்படி அவங்க வீட்ல பேசி சம்மதிக்க வைக்கிறது என்று தான் தெரியல" என்றான் அழுத்தமாக தன் தலையை கோதியவாறு.
"நீங்க ஒன்னும் கவலைப் படாதீங்க ஆதவ். போய் பொண்ணு கேட்கலாம் சப்போஸ் அவங்க கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்கனா பொண்ண தூக்கிக்கிட்டு வந்து கல்யாணம் பண்ணிடலாம்" என்றாள் ஆதிரை குறும்பு புன்னகையோடு.
"சரி அப்படியே பண்ணிடலாம்" என்ற கம்பீரமான குரல் அவர்களுக்கு பின்னே கேட்கவும்.
அனைவருமே திடுக்கிட்டு யார் என்று திரும்பி பார்த்தனர். ஆருத்ரவர்மன் தான் தன் பேண்ட் பாக்கெட்டினுள் இரு கையையும் விட்டவாறு இவர்களையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.
ஆதிரைக்கு, 'இப்பொழுது என்ன சொல்ல போகிறானோ' என்று இதயம் தாளம் தப்பி துடிக்க தொடங்கிவிட்டது.
'போச்சு போன தடவை இதே மாதிரி ஒரு சீன் நடந்ததுக்கு தான் அண்ணா ஆதிரையை லெப்ட் ரைட் வாங்கினாரு. இப்போ திரும்பவும் மாட்டிக்கிட்டோம். இப்போ என்ன நடக்கப்போகுதோ தெரியலையே' என்று பதட்டத்தோடு அமர்ந்திருந்தாள் இனியா.
ஆதவன் நிலைமையை சமாளிக்கும் பொருட்டு, "அண்ணா ஆது அண்ணி சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னாங்க. நீங்க எதையும் சீரியஸா எடுத்துக்காதீங்க. நாங்க சும்மா தான் பேசிக்கிட்டு இருந்தோம்" என்றான் சமாளிப்பாக.
நிச்சயமாக அவன் ஆதிரையிடம் கண்டிப்புடன் தான் பேசுவான் என்று அனைவரும் எதிர்பார்த்து இருக்க.
அவனும் எந்த ஒரு உணர்ச்சியையும் தன் முகத்தில் காட்டாதவன் ஆதிரைக்கு அருகில் இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தவாறு, "எனக்கும் இந்த டீல் ஓகே தான்" என்றான் ஆதிரையை பார்த்துக் கொண்டு புன்னகை முகமாக.
இனியா அவன் கோபத்தில் தான் இப்படி எல்லாம் பேசுகிறான் என்று எண்ணியவள், "அண்ணா ஆது நிஜமாவே சும்மா தான் சொன்னாள்".
"இப்போ நான் ஒன்னும் இல்லன்னு சொல்லலையே. எனக்கும் இந்த டீலிங் பிடிச்சு தான் இருக்கு. நீ சொல்லு எப்போ தூங்கலாம்?" என்றான் ஆதிரையை பார்த்துக்கொண்டு.
'என்ன இவர் இப்படி எல்லாம் பேசுறாரு மனசுல வேற எதையாவது நினைச்சுகிட்டு நம்மகிட்ட இப்படி எல்லாம் பேசுறாரா இல்ல சீரியஸாவே இப்படி எல்லாம் பேசுறாரா என்று புரியலையே' என்று குழம்பிப்போய் அவனை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் ஆதிரை.
"அண்ணா நீங்க சீரியஸா தான் பேசுறீங்களா?" என்றாள் இனியா.
"ஐ அம் சீரியஸ்" என்று வர்மன் அழுத்தமான குரலில் கூறவும்.
"அப்போ பொண்ண தூக்குற மேட்டர் உங்களுக்கு ஓகேவா?" என்றாள் ஆதிரை தன் கண்கள் இரண்டையும் பெரிதாக ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் விரித்துக்கொண்டு.
அவளின் செயலில் சுற்றம் மறந்தவன் அவளின் முகத்தையே பார்த்துக் கொண்டு, "நீ என்ன சொன்னாலும் எனக்கு ஓகே" என்றான் மிக மிக மென்மையான குரலில் அவளை ஊடுருவும் பார்வை பார்த்தவாறு.
முதல் முறை தன்னிடம் மென்மையாக பேசுபவனை பிரம்மிப்போடு பார்த்தாள் ஆதிரை.
இனியா ஆதவனின் காதில், "என்ன அண்ணா நம்ம வர்மன் அண்ணா இப்படி ஆளே மாறிட்டாரே" என்று கிசுகிசுக்கவும்.
ஒருவரோடு ஒருவர் பார்வை பின்னிக்கொள்ள வார்த்தைகள் அற்று இப்படியே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தனர். வர்மன் ஆதிரையின் எண்ணத்தை கலைக்கும் பொறுட்டு ஆதவன் செறுமி காட்டவும்.
இருவரும் அவனின் குரலில் களைந்தவர்கள் வெவ்வேறு புறம் திரும்பிக் கொள்ளவும். ஆதிரையால் அதற்கு மேல் அங்கே அமரவே முடியவில்லை. ஏதோ ஒரு புது வித உணர்வு அவளை வெகுவாக ஆட்டி படைத்தது. அவசரமாக எழுந்து அறைக்கு சென்று விட்டாள்.
இனியா அவளின் பின்னோடு செல்ல.
ஆதவன், "என்னண்ணா பயங்கர லவ் மூட்ல இருக்கீங்க போலருக்கே" என்றான் கிண்டல் குரலில்.
அதில் பெருமூச்சு விட்ட வர்மன், "உண்மை தான். எனக்கு அவளை ரொம்ப பிடிச்சிருக்கு" என்றது தான் தாமதம்.
அவனின் வார்த்தையில் குதூகளித்த ஆதவன், "என்னண்ணா சொல்றீங்க நிஜமாவா.. இதெல்லாம் எப்போ நடந்தது.. ரெண்டு பேரும் எப்பயுமே சண்டை போட்டுக்கிட்டே தானே சுத்திக்கிட்டு இருப்பீங்க".
"தெரியல டா. எனக்கே தெரியாம பிடிச்சிடுச்சு. ஆதவ் எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா".
"சொல்லுங்க அண்ணா எதுக்கு ஹெல்ப்னு சொல்றீங்க என்ன செய்யணும்னு சொல்லுங்க".
"என்னுடைய லவ்வை எப்படி அவ கிட்ட சொல்றதுன்னு எனக்கு தெரியல டா. அவ கிட்ட இதை பத்தி பேசவே ரொம்ப தயக்கமா இருக்கு. அவகிட்ட எப்படி என் மனசுல இருக்குறதை சொல்றதுன்னு எனக்கு ஏதாவது ஐடியா தாயேன்".
தயக்கமான குரலில் முதல் முறை ஒரு விஷயத்தை செய்ய தயங்கும் தன் அண்ணனை பார்க்கவே ஆச்சரியமாக இருந்தது ஆதவனிற்கு.
"என்ன அண்ணா நீங்களா இப்படி எல்லாம் பேசுறீங்க. ஆதிரை ரொம்ப நல்ல பொண்ணு நீங்க தைரியமா உங்க மனசுல இருக்கிறத சொல்லுங்க நிச்சயமா அவ உங்க மனசுல இருக்குறத புரிஞ்சிப்பா".
"நல்லவ தான் டா ஆனா என்கிட்ட மட்டும் தான் சண்டக்கோழி மாதிரி சண்டை போட்டுக்கிட்டே இருக்கா" என்றான்.
இம்முறை அவன் முகத்தில் கோபம் தென்படவில்லை ஒருவித புன்முறுவல் தான் நிலைத்திருந்தது.
"அவ மட்டுமா சண்டை போடுறா" என்றான் தன் அண்ணனையே குறுகுறுவென பார்த்தபடி.
"சரிடா நானும் தான் சண்டை போட்டேன் போதுமா.. இவ்வளவு நாள் சண்டை போட்டுட்டு இப்போ அவகிட்ட போய் எப்படி என் மனசுல இருக்குறத சொல்றதுன்னு தான் எனக்கு கொஞ்சம் தயக்கமா இருக்கு. சொன்னா அவ ஏத்துப்பாலான்னு தெரியலையே".
"நீங்க சொல்லுங்க அண்ணா அதெல்லாம் அவ நிச்சயமா சம்மதிப்பா அண்ட் ஆல்சோ ஷி இஸ் யுவர் வைஃப்" என்றவாறு தன் அண்ணனின் தோளில் தட்டவும்.
அவனுக்கு சம்மதமாக தலையசைத்தான் வர்மன்.
இதழினி பல வேண்டுதல்களுடனும் படபடக்கும் இதயத்துடனும் தான் வீட்டிற்குள் நுழைந்தாள்.
அவளை பார்த்த அவளின் தாய் சித்ராதேவி, "இதழ் வாடா" என்றவாறு அவளை அணைத்து விடுவித்தார்.
நீலவேணி பாட்டி, "வந்துட்டியா மா என்ன நீ ஆசைப்பட்ட மாதிரி வேலைக்கு போயிட்டு வந்துட்ட இப்போ உனக்கு சந்தோஷம் தானே?".
"என்ன பாட்டி ஆறு மாசம் கழிச்சு தானே மாப்பிள்ளை பார்க்க போறதா சொன்னீங்க. என்ன அதுக்குள்ள மாப்பிள்ளை பார்த்தாச்சுன்னு போன் பண்ணி கூப்பிட்டீங்க" என்றாள் தயங்கிய குரலில்.
"நீ ஆசைப்பட்டனு தான் உன்னை வேலைக்கு அனுப்பினேன். ஆனா நல்ல வரன் வந்திடுச்சு எதுக்காக நாளை கடத்தணும்னு தான் உன்னை கிளம்பி வர சொல்லிட்டேன். எங்க எல்லாருக்குமே மாப்பிள்ளையை ரொம்ப பிடிச்சிருக்கு" என்றார் முகம் கொள்ளா புன்னகையோடு.
சித்ராதேவி, "அம்மா மாப்பிள்ளை போட்டோவை இதழ் கிட்டயும் காட்டுங்க".
"தேவையில்லை என் பேத்தி நான் யாரை கட்டிக்க சொல்றேனோ அவங்கள தான் கட்டுவாள். எனக்கு முழு நம்பிக்கை இருக்கு. நான் சொல்றது சரி தானடா" என்றார் வாஞ்சையாக இதழினியின் தலையை கோதியவாறு.
அவருக்கு பதில் உரைக்க முடியாமல் எதுவோ தொண்டையை அடைப்பது போல் இருக்கவும், "ம்ம்" என்றதோடு முடித்துக் கொண்டாள்.
"சரி நீ போய் ரெடியாகு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க சாயந்திரம் வரோம்னு சொல்லி இருக்காங்க".
"என்ன பாட்டி சொல்றீங்க அதுக்குள்ளவா" என்றாள் பதட்டமான குரலில்.
"ஆமாமா இன்னைக்கே வந்து பொண்ணு பாத்துட்டு போயிட்டா தானே கல்யாணத்துக்கு தேதி குறிக்க முடியும்" என்று அவர் சந்தோஷமாக பேசிக்கொண்டே போகவும்.
இதழினிக்குள் தான் பெரும் பூகம்பே வெடித்துக் கொண்டிருந்தது.
விட்டாள் அங்கேயே அழுது விடும் நிலை தான். வேகமாக அறைக்குள் நுழைந்தவள் முதலில் அழைத்தது ஆதவனுக்கு தான். இங்கு இருக்கும் சூழலை பற்றி விளக்கி கூறியவளுக்கு அழுகை நிற்கவே இல்லை.
ஒருவழியாக அவளிடம் பேசி அவளை சமாதானம் செய்து உடனே தாங்கள் வருவதாக கூறி அழைப்பை துண்டித்த ஆதவனும் தன் குடும்பத்தாருடன் உடனே இதழினியின் ஊரை நோக்கி புறப்பட்டான்.
மாப்பிள்ளை வீட்டினர் அனைவரும் வந்து அமர்ந்திருக்க. அறையில் இதழினியோ கிளம்பாமல் கண்ணாடியில் தெரியும் தன் பிம்பத்தையே வெறித்து பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
மனதில் ஆதவனை நினைத்துக் கொண்டு வந்திருப்பவர்களின் முன்பு பொம்மை போல் தன்னை அலங்கரித்துக் கொண்டு சென்று நிற்கவும் அவளுக்கு மனம் முன் வரவில்லை.
அறைக்குள் நுழைந்த சித்ராதேவி, "என்ன இதழ் அப்படியே உக்காந்திருக்க வெளியில் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க எல்லாம் வந்துட்டாங்க. சீக்கிரம் ரெடி ஆகு. உன் பாட்டி வேற உன்னை அழைச்சிட்டு வர சொன்னாங்க" என்கவும் வெளியே அகிலாண்டேஸ்வரி பாட்டியின் குரல் கேட்கவும் சரியாக இருந்தது.
அவரின் குரலை கேட்ட சித்ராதேவி, "பெரியம்மா குரல் போல இருக்கு" என்று பதட்டமாக கூறிவிட்டு வேக எட்டுக்களுடன் அறையை விட்டு வெளியேறினார்.
அவரின் பின்னோடு வெளியே வந்த இதழினிக்கோ ஒரு புறம் இப்பொழுது தான் நிம்மதியாக இருந்தது. மற்றொருபுறமோ அத்தனை பதட்டம், பயம்..
தன் பாட்டி என்ன கூற போகிறாரோ என்று எண்ண எண்ண அவளுக்கு மயக்கம் வராத குறை தான். பயப்பந்து வயிற்றுக்குள் சுழன்று கொண்டே இருந்தது.
வந்தவர்களை உள்ளே வருமாறு கூட அழைக்காமல் இருக்கையில் அமர்ந்திருந்தார் நீலவேணி.
சித்ராதேவி தான் அவர்களை நோக்கி விரைந்தவர், "வாங்க பெரியம்மா எல்லாரும் உள்ள வாங்க" என்று அவர்களை உள்ளே அழைத்தார்.
சித்ராதேவியின் பின்னோடு வந்த இதழினியை கண்ட நீலவேணி, "என்ன இதழ் மாப்பிளை வீட்டுக்காரங்க வந்திருக்காங்க தயாராகாமல் நீ பாட்டுக்கு அப்படியே வெளியில் வர சீக்கிரம் போய் தயாராகிட்டு வா" என்றவரோ வந்திருந்தவர்களை சற்றும் சட்டை செய்யவில்லை.
அவரின் செயல் ஆருத்ர வருமனுக்கு பெரும் கோபத்தை கொடுத்தது. அதிலும், தன் பாட்டியை அவமதிப்பது போல் அவரின் செயல் இருப்பது தான் இவனுக்கு பெரும் கடுப்பாக இருந்தது.
அவனின் கோபத்தை உணர்ந்த அகிலாண்டேஸ்வரி பாட்டியும் தன் கண்களை மூடி திறந்து தான் பார்த்துக் கொள்வதாக கூறி அவனை சற்று அமைதிபடுத்தினார்.
"எப்படி இருக்க நீலு?" என்ற அகிலாண்டேஸ்வரி பாட்டியின் வார்த்தைக்கு பதில் உரைக்காமல் வேறு எங்கோ தன் பார்வையை பதித்தவாறு அமர்ந்திருந்தார் நீலவேணி.'
"வந்த விஷயம் என்னன்னு சொல்லிட்டு கிளம்புங்க" என்றார் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக.
"என் பேரன் ஆதவனும் உன் பேத்தி இதழினியும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறாங்க. அதை பத்தி பேசலாம் என்று தான் நாங்க குடும்பமா கிளம்பி வந்து இருக்கோம்" என்றது தான் தாமதம் நாற்காலியில் இருந்து கோபமாக எழுந்து நின்றவர், "என்ன என் பேத்தி உன் பேரனை விரும்புகிறாளா.. என்ன உளறுர?" என்றார் தன் கோபத்தை உள்ளடக்கிய குரலில்.
"நான் உண்மையை தான் சொல்றேன் நீலு ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் காதலிக்கிறார்கள். உன் பேத்தி இதழினியை பொண்ணு கேட்டு தான் நாங்க இப்போ வந்திருக்கோம்" என்றவரின் வார்த்தையில் வந்திருந்த மாப்பிள்ளை வீட்டார் தங்களுக்குள் சலசலத்தபடி பார்வையை பரிமாறிக் கொண்டனர்.
"என்ன பேசுற நீ இப்படி சபைக்கு நடுவுல வந்து என் பேத்தியை பத்தி பேசி அவளுடைய கல்யாணத்தை நிறுத்தலாம்னு வந்திருக்கீங்களா.. மரியாதையா எல்லாரும் வீட்டை விட்டு வெளியில் போங்க" .
"உனக்கு சந்தேகமா இருந்தா நீயே அவகிட்ட கேட்டு பாரு" என்றவரின் வார்த்தையில் நீலவேணியின் பார்வை இதழினியில் தான் படிந்தது.
அவளோ பதட்டத்தோடு வெடவெடத்து போய் நின்று இருந்தாள்.
நீலவேணி, "என் பேத்தியை பத்தி எனக்கு தெரியும். நிச்சயமா அவ இப்படி ஒரு காரியத்தை செஞ்சிருக்க மாட்டான். அவ மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு" என்றவரின் வார்த்தையில் இதழினியின் கண்களோ கண்ணீரை சுரந்தன.
ஆருத்ரவர்மன், "இங்க பாருங்க பாட்டி உங்க வீட்ல நடக்கிற விசேஷத்தை தடுத்து நிறுத்துறது ஒன்னும் எங்களுடைய நோக்கம் கிடையாது. உங்க பேத்தியும் என் தம்பியும் ஒருத்தரை ஒருத்தர் காதலிக்கிறார்கள். என் தம்பியை தவிர உங்க பேத்தி வேற யாரையுமே கல்யாணம் செஞ்சுக்க மாட்டா. நீங்க வேணும்னா அவளையே கேட்டு பாருங்க".
"சொல்லு இதழ் இவங்க சொல்றதெல்லாம் பொய்யின்னு அவங்க முகத்துல அடிச்ச மாதிரி சொல்லு. அவங்க எல்லாரையும் வீட்டை விட்டு வெளியில் போக சொல்லு. காதல் கத்திரிக்கா என்று என்னென்னமோ வந்து உளறிட்டு இருக்காங்க. எனக்கு தெரியாதா உன்னை பத்தி.. இவங்க என்ன சொன்னாலும் நான் அப்படியே நம்பிடுவேன்னு நினைச்சுட்டாங்க போலருக்கு.
இவங்க சொல்றதை எல்லாம் நான் எப்படி நம்புவேன். உன்னை பற்றி எனக்கு தெரியாதா.. நீயே உன் வாயை திறந்து இவங்க சொல்றதெல்லாம் பொய் என்று சொல்லுமா. அப்போ தான் இவங்களுக்கு எல்லாம் புத்தி வரும்" என்றார் வந்திருந்தவர்களை உறுத்து விழித்து பார்த்துக் கொண்டு.
என்ன தான் தன் பாட்டியை எண்ணி பயமாகவும் படபடப்பாகவும் இருந்தாலுமே ஆதவனை விட்டு வேறொருவனை மணப்பதை எல்லாம் இதழினியால் நினைத்தும் பார்க்க முடியாது அல்லவா..
ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு தன் பாட்டியை நேர் பார்வை பார்த்தவள், "பாட்டி அவங்க சொல்றது எல்லாமே உண்மை தான். நான் ஆதவனை தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படுறேன். தயவு செஞ்சு எங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்சிடுங்க" என்றாள் தன் கரம் கூப்பி வேண்டுதலாக.
அவ்வளவு தான்.. மாப்பிள்ளை வீட்டினர் சத்தமின்றி கலைய தொடங்கினர். நிலவேணி பாட்டிக்கோ அனைவரின் முன்னிலையிலும் இதழினி இப்படி பேசியது பெரும் அவமானமாக இருந்தது.
"என்ன உளறுர இதழ் உன் மேல நம்பிக்கை வச்சு தான் நான் உன்னை வேலைக்கு அனுப்பினேன். இப்படி காதல்னு வந்து நிக்கிறதுக்காகவா நான் உன்னை வேலைக்கு அனுப்பினேன். போகும் போது எனக்கு அவ்வளவு நம்பிக்கையை கொடுத்துட்டு போனையே இப்போ நீயும் மத்தவங்க பண்ண அதே தப்பை தான செஞ்சிருக்க" என்றவரின் பார்வை அகிலாண்டேஸ்வரியின் மீதும் சித்ராதேவியின் மீதும் படிந்து மீண்டது.
"பாட்டி நான் வேலைக்கு போன பிறகு அவரை விரும்ப ஆரம்பிக்கல. எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்தே நான் அவரை என் மனசுல நினைச்சுகிட்டு இருக்கேன். அவருக்காக தான் நான் வேலைக்கு போனேன். இது எல்லாம் முன்னாடியே சொன்னா நீங்க என்னை அனுப்ப மாட்டீங்கன்னு தெரியும் அதனால் தான் நீங்க சொன்ன எல்லாத்துக்கும் சம்மதம்னு சொல்லிட்டு நான் போனேன்.
அதே சமயம் உங்களுடைய சம்மதம் இல்லாமல் என்னால் கல்யாணம் பண்ணிக்க முடியாது. ப்ளீஸ் பாட்டி, எங்க ரெண்டு பேரையும் நீங்க தான் சேர்த்து வைக்கணும்" என்றவள் நொடியும் தாமதிக்காமல் விறுவிறுவென ஓடிச் சென்று தன் பாட்டியின் கால்களை பிடித்துக் கொண்டு கதறி அழுக தொடங்கி விட்டாள்.
இதழினியின் செயலில் தன் மூச்சை நன்கு இழுத்து பிடித்த நீலவேணி பாட்டி, "சரி இப்போ உனக்கு என்ன வேணும் அந்த பையனை கல்யாணம் பண்ணிக்கணும் அவ்வளவு தான.. தாராளமா பண்ணிக்கோ" என்றதும் தான் இதழினிக்கு முகத்தில் மெல்லிய புன்னகை அனுப்பியது.
அழுத்தமாக தன் முகத்தை துடைத்தவள் வேகமாக எழுந்து நிற்கவும்.
"ஆனா திரும்ப நீ இந்த வீட்டுக்கு வரவே கூடாது. உனக்கு நாங்க யாரும் தேவையில்லை அந்த பையன் தான் வேணும்னா தாராளமா எங்க எல்லாரையும் விட்டுட்டு போய் அவன் கூட சேர்ந்து சந்தோஷமா வாழு. எனக்கு அதில் எந்த பிரச்சனையு
ம் இல்ல. ஆனா உங்க கல்யாணத்துக்கு ஒரு நாளும் நான் சம்மதிக்க மாட்டேன்" என்று அவளின் தலையில் பெரிய இடியை இறக்கினார்.
அவரின் வார்த்தையில் செயலற்று நின்று விட்டாள் இதழினி.