priya pandees
Moderator
அத்தியாயம் 3
யாஷ் அடுத்தடுத்து அவன் வேலையில் இருந்துவிட, மதிய உணவிற்காக அவளை அழைத்தபோது அவள் எடுக்கவில்லை என்றதும், "கோச்சுட்டு போன நேரத்துக்கு இந்நேரம் கேன்டீனே காலியாகி இருக்கும். பட்னியா இருப்பான்னுலாம் நினைக்காத, உன் பொண்டாட்டிக்கு மூளை தான் வேலை செய்யாது வாயும் வயிறும் டைமுக்கு நல்லாவே வேலை செய்யும்" என அவனாகவே முடிவிற்கு வந்து, சிரித்துக் கொண்டே அவனுக்கான உணவை மட்டும் வரவழைத்து உண்டுவிட்டு மீண்டும் அவன் வேலையில் இருந்து கொண்டான்.
மாலை ஐந்து மணி ஆகவும் அவன் கிளம்பி வெளியே வந்தவாறு மீண்டும் அவளுக்கு அழைத்தான். இப்போதும் அவள் எடுக்கவில்லை. யாஷ் ஒரு அறுவை சிகிச்சை நிபுணன் என்பதால், அவசர சிகிச்சை என்பதை தாண்டி மற்ற எல்லாவுமே திட்டமிட்ட நேரப்படி சிகிச்சைகளாக தான் இருக்கும் என்பதால் அவனது மருத்துவம் பரபரப்பு விறுவிறுப்பு எதுவுமின்றி நிதானமாக செய்யும் வேலை தான். அதில் பெரும்பாலும் அவனது அறுவை சிகிச்சை நேரத்தை காலை இருப்பது போல் பார்த்து கொள்வான். சிகிச்சை முடிந்து ஆறுமணி நேரம் அந்த நோயாளி அவன் பார்வையில் இருக்கும்படி வைத்து கொண்டிருந்துவிட்டே வீட்டிற்கு கிளம்புவான். அது தான் அவன் வழக்கமும்.
இதோ பள்ளி பிள்ளைகள் போல மாலை ஆனதும் வீட்டிற்கு கிளம்பி விட்டான். இனி நாளை காலை வரை இருக்கும் நேரம் முழுவதும் அவனுக்கே அவனுக்கானது மட்டும். அதில் அவன் மனைவியையும் அடக்கிக் கொள்வான். ஆறு மாதங்களுக்கு முன்பு வரை அவள் நினைவுகளோடும் இப்போது அவளின் முழு உணர்வுகளோடுமாக அவன் வாழ்க்கையை அவன் அழகாக தான் வாழ்கிறான்.
மீண்டும் மீண்டும் முயன்றும் வருணி எடுக்கவில்லை என்றதும், அவள் பணியில் இருக்கும் இடத்தை விசாரிக்க முன்னால் இருக்கும் வரவேற்பரை வர, அவன் கைபேசி இசைத்தது. அதில் அருணேஷ் தான் அழைத்துக் கொண்டிருந்தான்.
வேகமாக நடந்தவாறு அதை எடுத்து "சொல்லு அரு?" என்க,
"என்ன மாமா பண்ற? வரு ஏன் ஃபோன எடுக்கல?" என்றான் அவன் எடுத்ததுமே.
"என் ஃபோனயும் எடுக்கலடா. கோச்சுட்டு எங்க போய் உட்கார்ந்துருக்கான்னு இனி தான் தேடணும் நான்"
"ம்ச் உங்க ரெண்டு பேருக்கும் டெய்லி இதே தானா பொழப்பு? மாமா எனக்குள்ள மெயில் ஐடி பாஸ்வேர்ட மாத்தி வச்சுருக்கா. எனக்கு இப்ப பாஸ்வேர்டு வேணும். நீங்க அவள சாவகாசமா எப்ப கண்டுபிடிப்பீங்க?"
"ஃபர்காட் பாஸ்வேர்ட் குடுத்து மாத்து. இல்லனா வேற ஐடிய ஓபன் பண்ணிக்கோ"
"ம்ச் மாமா விளையாடாத கட்சி ஐடி அது. ஃபர்காட் பாஸ்வேர்ட் குடுத்தாலும் கோட் அவ பழைய இந்தியா நம்பருக்கு போகுது. இப்ப அதெல்லாம் ரெக்கவர் பண்ண டைம் இல்ல. பாஸ்வேர்ட் வேணும்"
"வேணும் வேணும்னா அவ வேணும்டா அதுக்கு. நேத்து ஒரு மணிநேரம் கழிச்சு தான் என் ஃபோன் எடுத்தா. இன்னைக்கு எங்க என்ன பண்றான்னு எந்நேரம் சொல்றாளோ அப்ப தான் நா அவள பிடிக்க முடியும் உன் பாஸ்வேர்ட் கேட்க முடியும். அவ தான் லூசுன்னு தெரியும்ல எதுக்கு அவ மாத்துற மாதிரிலாம் கட்சி மெயில் ஐடிய வைக்குற நீ?" என அதட்டினான் யாஷ்.
"இத என்னைக்கு எதுக்கு மாத்துனான்னு எனக்கெங்க தெரியும்? எனக்கு தெரிஞ்சு இப்பகுள்ள நா அவகிட்ட சண்டையே போடல. ஃபுல் டைம் ட்யூட்டியா அத நீங்க தான் பாக்றீங்க. அவ இங்க இருக்கும் போதே மாத்திட்டா போல. அது ஓபன்லயே தான் இருக்கும். இப்ப சிஸ்டம் செர்வீஸ் குடுத்து வாங்கின அப்றம் தான் லாக் ஆகிடுச்சு சோ பாஸ்வேர்ட் கேட்குது. அப்பா இன்னொருக்கா கேட்குமுன்ன நா ரிப்ளை வாங்கி குடுக்கணும். அவள கண்டு புடிச்சு தா மாமா" என கெஞ்சவே செய்தான் அருணேஷ்.
"உனக்கு உடனே அவ இடம் தெரியணும்னா நீ அவர்ட்ட தான் போய் நிக்கணும். நிச்சயமா அவருக்கு தெரியாம இருக்காது போய் கேளு டக்குன்னு சொல்லுவாரு"
"அத நீயே கேட்டு சொல்லு மாமா. நா போய் பாஸ்போர்ட் வேணும் அதுக்கு அவ வேணும்னு கேட்டா திட்டுவாங்க"
"நா உங்கப்பாட்ட சண்டைல இருக்கேன்டா அரு. என் பொண்டாட்டிய காணும்னு நா அவர்கிட்ட போய் நின்னா என் ப்ரஸ்டிஜ் என்ன ஆகுறது? பிடிக்காத பொண்டாட்டினாலும் பொண்டாட்டி தான?"
"ம்ச் பொல்லாத சண்டை. மத்ததெல்லாம் மட்டும் பேசுற? அதான் கல்யாணம் ஆகிடுச்சுல்ல பின்ன என்ன? கேளு மாமா அவசரம்" என அவன் கத்துவதை கண்டுகொள்ளவில்லை யாஷ்.
வரவேற்பரை வந்திருக்க, "வருணி ஷெட்யூல் செக் பண்ணி சொல்லுங்க" என கேட்டு நின்றான்.
அங்கு தான் அந்த மருத்துவமனையில் வேலையில் , படிப்பில் இருக்கும் மருத்துவர்கள், தற்சமயம் பணியில் இருப்பவர்கள் முதல் நோயாளிகள் அவர்கள் அட்டென்ட்டர்கள் வரை அனைவரின் தகவல்களும் இருக்கும். அதாவது அந்த மருத்துவமனைக்குள் இருக்கும் ஆட்களின் மொத்த அட்டவணைகளும் பதிவேற்றப் பட்டிருக்கும் இடம் அது.
"டாக்டர் வருணி ஒன் வோ க்ளாக்கே ரிலீவ்டுன்னு குடுத்துட்டு போயிருக்காங்க டாக்டர்" என்றார் அங்கிருந்தவர்.
"ஓகே தேங்க்ஸ்" என நகர்ந்தவன், "கேட்டியா மதியமே கிளம்பி போய்ட்டா. எங்க போனான்னு எனக்கும் சொல்லல. இந்நேரம் வர ஃபோனும் பண்ணல பாத்துக்கோ இப்படி என் வாழ்க்கைய வேஸ்ட் பண்ணிட்டாரு உன் அப்பா"
"நீயுந்தான அவ வேணும்னு கேட்டு வந்த?"
"நா கேட்டப்ப குடுத்துருந்தா புடிச்சுருக்கும். கேட்டப்ப கிடைக்கல அவங்க பொண்ணுக்கு வேணும்னதும் என்னைய இனாமா தூக்கி குடுப்பாங்களாமா?" என பேசிக்கொண்டே வந்து காரில் ஏறி இருந்தான்.
"அது உங்க பிரச்சினை. எனக்கு பாஸ்வேர்ட் வேணும் இப்போ"
"அதுக்கு உன் உடன்பிறப்பு வேணுமேடா" என்றான் மறுபடியும் யாஷ்.
"என்ன மாமா நீ. ஒரு புருஷனா இருந்துட்டு அவ எங்க போனான்னு தெரியலன்னு அசால்டா சொல்ற?"
"புருஷனாவா? அவ என்னைய மனுஷனாவே மதிக்க மாட்டேங்குறான்னு சொல்லிட்ருக்கேன்டா அரு. தெனமு எங்கையாவது போய் உட்கார்ந்துப்பா நா தேடி போய் கூட்டிட்டு வரணும். இதுக்கு தான் கல்யாணம் பண்ணி வச்சீங்களா எனக்கு? ஒழுங்கா உங்கப்பாட்ட சொல்லி அவர் பொண்ண அவர்கிட்டயே கூப்பிட்டுக்க சொல்லு"
"அதெல்லாம் அப்பா பேசிட்டாங்க. டிவோர்ஸ் பண்ண சொல்லிட்டாங்க"
"ஆமா மந்திரி பதவி தான? அவர் நினைச்சா குடுத்துக்கலாம் வேணாம்னா வாங்கிக்கலாம்"
"மாமா!" என பல்லை கடித்தவன், "வேணாம்னு சொன்னதே நீதான்" என்க.
"நா வேணும்னு கூட தான் வந்து கேட்டேன் உன் அப்பா அப்பவும் என் பேச்ச கேட்கலையேடா?"
"ச்சை லவ்வும் பண்ண கூடாது கல்யாணமும் பண்ண கூடாதுடாப்பா தெளிவா இருக்கவும் மாட்டாங்க மத்தவனையும் தெளிவா இருக்க விடமாட்டானுங்க" என அவன் தலையில் கை வைத்து புலம்ப.
"உனக்கு என்னடா என் கஷ்டம் எனக்கு?" என்றவன் அவன் புலம்பலில் கமுக்கமாக சிரித்துக் கொண்டான்.
"உங்க எல்லாருக்கும் நாந்தான் உரலு மாதிரி தெரியிறேன் ஆளாளுக்கு போட்டு இடிக்கிறீங்க"
"ஏன்டா?" என யாஷ் இப்போது வெளிப்படையாக சிரிக்க.
"நீ நல்லாதான மாமா இருந்த? ஏன் இப்படி ஆகிட்ட?"
"சேர்க்க அப்படிடா. பாஸ்வேர்ட்டுக்கு வேற ஆப்ஷனே இல்லையா?"
"இருந்தா இவ்வளவு நேரமும் உன் நொந்த கதையை பொறுமையா கேட்டிட்ருப்பேனா?"
"அவ என்னடா பெருசா வச்சுருக்க போறா? ஒன்டு டூ த்ரி. வருணிக்ஷா ஆரோன், வருஅரு, இப்படிலாம் ட்ரை பண்ணு"
"எதுக்கு லாக் ஆகுறதுக்கா?"
"இரு வீட்டுக்கு வந்துட்டேன். அவகிட்ட தரேன் நீயே கேளு" என காரை நிறுத்தி இறங்க,
"வீட்ல தான் இருக்காளா? அப்றம் எதுக்கு மாமா ஃபோன எடுக்கல அவ?"
"அது கொழுப்பு டிப்பார்ட்மெண்ட் அரு" என்றவன் கதவின் குமுளியை திறக்க அது திறந்து கொண்டது, "பாரு லாக் கூட பண்ணல. எத்தன தடவ சொன்னாலும் கேட்க மாட்டா. கேட்டா இந்திய பிரதமர் மக நான்னு அளந்து விடுவா" என முனங்கி கொண்டே தான் உள்ளே நுழைந்தான்.
"வருணி!" என அழைத்துக் கொண்டே வந்தவன், நேராக அவர்கள் அறைக்குள் நுழைய, குளியலறைக்குள் அவள் இருக்கும் சத்தம் கேட்டதும், "பாத்ரூம்ல இருக்காடா அரு. வரவும் உனக்கு கூப்பிடுறேன்" என உடனே வைத்து விட்டான்.
அறையே அலங்கோலமாக கிடந்தது. வார்ட்ரோபெல்லாம் திறந்து கிடந்தது. தலையணையை எல்லாம் தூக்கி வீசி இருந்தாள். அவனறிந்தவரை அதிகமாக வயிறு வலிக்கும் நேரங்களில் இப்படி செய்வாள். வயிறு வலி தான் என முடிவிற்கு வந்து அறையை ஒதுங்க வைக்கவும் துவங்கி விட்டான்.
"வருணி! ஏன்டி சொல்லாம வந்த? அதும் மதியமே கிளம்பி வந்துருக்க. ஓவர் அட்வான்டேஜ் எடுக்காத அங்க எல்லாம் ஃபைல் ஆகும். த்ரி தௌசன்ட் சிக்ஸ் ஹண்டர்ட் ஹவர்ஸ் உன் டைம் ஷெட்யூல் காட்டலனா என்னால கூட சைன் பண்ண முடியாது. அப்றம் நீ ஃபீல்ட் வொர்க் பண்ணின ஆறு மாசமும் வேஸ்ட் தான் சொல்லிட்டேன். நினைச்ச நேரத்துக்கு வர்றதும் நினைச்ச நேரத்துக்கு கிளம்புறதும் அதென்ன நீயும் உங்கப்பாவும் ரன் பண்ற ஹாஸ்பிடல்னு நினைச்சியா? ஃபோன் பண்ணாலும் எடுக்குறதில்ல. வயிறு வலினா என்ன அங்கேயே ரூம் இருக்குல்ல ரெஸ்ட் எடுக்க வேண்டியது தான?" என அவன் போக்கில் அறையில் அங்குமிங்குமாக நடந்தவாறு கீழே கிடக்கும் பொருட்களை எடுத்து வைப்பதும். அவன் கொண்டு வந்த பையை அதனிடத்தில் வைப்பதும், சட்டையை கழட்டுவதுமாக பேசிக் கொண்டே இருக்க, அவளிடமிருந்து சத்தமே இல்லை.
"என்னடி பண்ற?" என வந்து கதவை தட்ட,
பட்டென்று திறந்தவள், "மொத்தமா திட்டி முடிச்சுட்டு கூப்பிடு வெளில வரேன் நான்" என மீண்டும் கதவை சாற்றி கொள்ள முயல, தடுத்து பிடித்தவன், "என்ன பண்ணுது?" என்றான் அவள் முகம் இருந்த சிவப்பு நிறத்தில் குழம்பி.
"போடா" என மீண்டும் சென்று வாஷ் பேசின் முன் சென்று நின்று கொண்டாள்.
"வருணி என்ன செய்யுது? வாமிட் வருதா?"
"வருதாவா? அல்ரெடி நாலு தடவை எடுத்துட்டேன்"
"ஏன்? ப்ரீயட்ஸ் க்ராஸாகிடுச்சா? ப்ரெக்னன்ட்டா இருக்கியா?"
"என்ன கொலைகாரி ஆக்காத. இருக்குற எரிச்சல்ல என்ன வேணா செய்வேன் நா!"
"லூசாடி? நாலு தடவ வாமிட் வந்தா, வருதுன்னு எடுத்துட்டே இருப்பியா. செகென்ட் டைம் வரவுமே டேப்லெட் போட்டு ஸ்டாப் பண்ணிட்டு ஹாஸ்பிடல் வர வேண்டியது தான? ஆமா அங்க தான இருந்த நீ? அங்கேயே இருந்தா என்னவோன்னு செக் பண்ணிடுவாங்கன்னு இங்க ஓடி வந்துருக்க. ரைட்?" என அவன் கண்டு பிடித்து விட்டதில் இன்னும் குனிந்து கொண்டாள்.
"நிமுருடி!" என அவன் கொஞ்சம் சத்தம் கூட்டி அதட்டிவிட,
"மாமா, நானே பாவம்" என முகத்தை பாவமாக வைத்து கொண்டு கெஞ்ச, அதற்கு மேல் திட்ட முடியாமல் தான் போனது அவனுக்கும்.
"மவுத் வாஷ் பண்ணிட்டு வெளிய வா" என சொல்லி வெளியே சென்றவன், சமையலறை சென்று, வெந்நீர் வைத்து எடுத்து வந்தான், அறையிலிருந்த சோஃபாவில் சயணித்திருந்தாள் அவன் மனைவி.
இவன் அருகில் வரும் அரவத்தில், "மாமா நா இன்னைக்கே செத்து போயிடுவேனோ? பயமா இருக்கு மாமா, எப்பவும் விட இந்த டைம் அதிக வாமிட். அப்பா, அம்மாலாம் என்ன மிஸ் பண்ணுவாங்களா?" என அவனை இடுப்போடு கட்டிக்கொண்டு கெஞ்சலாக கேட்க,
"ம்கூம் வாய்ப்பு கம்மி தான். நீ அங்க இருந்த வரைக்கும் அவங்க உயிர தானே வாங்குன? அதனால நீ கிளம்பிட்டனா டாடா பாய் பை தான். அதும்போக நீ இல்லனா இன்னொன்னு சொல்ல அங்க இன்னும் மூணு டிக்கட் இருக்கு" என்றவன் அவளை மெல்ல தலையை நிமிர்த்தி உட்கார வைக்க முயன்றவாறு பேச,
"போடா டேய் போடா. ஒன்னும் வேணாம் நீயும் நா இல்லனா இன்னொருத்தின்னு போயிடுவ. நா இருந்தா என்ன போனா என்ன போங்கடா. என் மேல யாருக்குமே பாசமில்ல" என அவள் அழ துவங்க, அங்கு ஆரு மறுபடியும் அவளுக்கு முயன்று விட்டு இவனுக்கும் அழைக்க துவங்கினான்.
"ம்ச் அழாத மறுபடியும் வாமிட் வந்துட போகுது. இத குடிச்சுட்டு டேப்லட் போடு" என அவன் தண்ணீரை நீட்ட,
"ஒன்னும் வேணாம் ரத்தம் ரத்தமா வாந்தி எடுக்குறேன். கொஞ்சம் கூட பதறாம பேசிட்ருக்கியே நீலாம் புருஷனா?"
"ம்ச் படுத்தாதடி குடி முதல்ல, த்ரோட்டுக்கு நல்லாருக்கும்" என்கையில் மறுபடியும் அழைத்தது அவன் கைபேசி.
"இவன் வேற" என எட்டி கட்டிலில் கிடந்த போனை எடுத்தவன், "நானே கூப்பிடுவேன்ல அரு?" என்க,
"இங்க அப்பா நாலு தடவ கேட்டுட்டாரு. ஒரு பாஸ்வேர்ட்ட எனக்கு சொல்லிட்டு நீங்க அங்க என்ன முக்கிய வேலையவும் பாருங்க நா டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்" என்றான் அவன்.
"அஃபிஸியல் பாஸ்வேர்ட எதுக்குடி மாத்துன நீ? அரு கேட்குறான் பாஸ்வேர்ட் சொல்லு" என அவளிடம் திரும்பி கேட்க.
வேகமாக எழுந்து வந்தவள், "டேய் அரு. இந்த மாமாக்கு என் மேல பாசமே இல்லடா" என்றாள் ஃபோனை வாங்கி.
"அதான் தெரியுமே. நீ பாஸ்வேர்ட்ட முதல்ல சொல்லிடேன் ப்ளீஸ்" என அரு அதிலேயே நின்றான்.
"அரு நா சாக போறேன்டா"
"பாஸ்வேர்ட் சொல்லிட்டு என்ன வேணா செய். உனக்கு தேவையான ஹெல்ப்ப நா கண்டிப்பா செய்றேன்" என்றான் அவன்.
"ஆளாளுக்கு கிண்டல் பண்றீங்களா என்ன?" என மறுபடியும் அவள் அழத்துவங்க,
"பாஸ்வேர்ட் சொல்லிட்டு அழு வரு" என அரு ஒருபக்கம் சொல்ல.
"ஹே அழுறத நிறுத்துடி. சும்மா லூலாய் பாப்பா மாதிரி வயிறு வலி வர்றப்போ மட்டும் நடிக்குறது"
"ஏன் மாமா திட்டிட்டே இருக்க?"
"திட்டலடி அல்ரெடி வாமிட் எடுத்துருக்க, வயிறு வலி இருக்கு. இன்னும் தலைவலியவும் இழுத்துக்காதன்னு சொல்றேன்டா வருணி குட்டி" என யாஷும் கொஞ்சி சொல்ல, தலையில் அடித்து கொண்டான் அரு.
"அப்ப நா செத்தா நீ இன்னொரு கல்யாணம் பண்ண மாட்டியா?"
"அதெப்படி? இந்த குளிருக்கு தனியாவே கடைசி வர தூங்க முடியுமா?" என்றான் இப்போது யாஷ்.
"உன்னையும் கொண்ணு என்னோட கூட்டிட்டு போயிடுறேன் இரு" என அவன் மேல் பாய, இருவரும் கட்டிலில் விழுந்தனர். ஃபோன் கட்டிலில் ஒருபக்கம் தெறித்து விழுந்தது.
"வரு பாஸ்வேர்ட்!" என அங்கிருந்தவன் கத்த,
"அவனுக்கு பாஸ்வேர்ட்ட சொல்லி அனுப்பிவிடேன்" என யாஷ் தன்மேல் அமர்ந்திருந்தவளிடம் கிசுகிசுக்க,
அவன் முக மாற்றத்தில் முறைத்தவள், "உனக்கு நா அவ்வளவு ஈசியா போயிட்டேன்ல?" என ஆரம்பிக்க, அங்கு பொறுமை போக ஆடியோ அழைப்பை நிறுத்தி விட்டு வீடியோ அழைப்பில் வந்தான் அருணேஷ். அவர்கள் பேச்சிலிருந்து இவனை கண்டு கொள்வர் போல் தெரியாததால் நேரடியாக கேட்டுவிடும் முடிவில் அழைத்தான் அவன்.
"அட்டென்ட் பண்ணிடவா? நீ என்ன பிடிக்காத மாதிரி நடிக்குற சீனெல்லாம் காத்துல கரைஞ்சுடும்?" என்றாள் நக்கலாக.
"நீதான் என் மேல உட்கார்ந்துருக்க. பாக்றவங்களுக்கு நம்ம போஸ் எப்டி தெரியும்னு நா உனக்கு சொல்லி தர தேவையில்லை" என அவனும் சொல்ல, அவன் வாயிலேயே இரண்டு அடி அடித்தாள் வருணி. அவனுடன் மல்லு கட்டியதில் வாந்தி, வயிற்றுவலி எல்லாம் வாய்தா வாங்கி கொண்டது போலும்.
அரு மறுபடியும் அழைக்க, "அவனுக்கு பதில் சொல்லு முதல்ல" என்றவன் அவளை திருப்பி கீழே படுக்க வைத்துவிட்டு எழுந்து கொண்டான்.
"என்ன அரு?"
"மடசாம்புராணி பாஸ்வேர்ட்ட சொல்லி தொலை. அப்பா வீட்டுக்கே வந்துட்டாங்க. இனியும் நா மெயில் கூட பண்ணலன்னு தெரிஞ்சா தொலைஞ்சேன் நானு. மனுஷன் அவசரம் புரியாம? பாஸ்வேர்ட் என்னத்த வச்ச. இனி இதுல கைய வை கொன்னுடுறேன்" என அவன் போக்கில் பேசியவன்,
இவள் முறைத்து பார்த்த வண்ணமே இருக்கவும், "உடன்பிறப்பே, தாய்குளமே, மேரி பியாரி பேஹன், சொல்லுமா வருணிக்ஷா ஆரோன்" என்றான் இறங்கி வந்து.
"வருணி லவ்ஸ் மாமா!"
"ஆமா ஆமா இப்ப அதான் முக்கியமான ஸ்டேட்மென்டுன்னு அப்பாட்டா குடுக்க முடியாது வருணி. பாஸ்வேர்ட் சொல்லு"
"அதான் பாஸ்வேர்ட்"
"வருணி லவ்ஸ் மாமா?"
"ஆமா" அவன் அங்கு அதை பதிவுசெய்ய அது திறந்து கொண்டது, சொல்லாமல் கொள்ளாமல் அழைப்பை நிறுத்தி விட்டு அவன் வேலையை பார்க்கச் சென்றுவிட்டான் அவன்.
"பார்றா அவ்வளவு லவ்வா வருணி என்மேல?" என யாஷ் இடுப்பில் கட்டிக் கொண்டிருந்த துண்டுடன் குளிக்க திரும்பியவன் அவள் பதிலில் அவளிடம் வந்திருக்க,
"சும்மா வச்சேன்"
"பொய் சொல்லாதடி. பாஸ்வேர்ட் இங்க வந்தப்றம் நீ மாத்திருக்க வாய்ப்பே இல்ல அங்க இருக்கும் போதே மாத்திருக்கணும். ஆனா ஏதோ தீராத நோய் சாக போறதால அதுவரை எங்கூட இருக்கேன்னு சொல்லி தான கல்யாணம் பண்ணிக்கிறேன்னு என்ட்ட சொன்ன? ஏன்டி பொய் சொன்ன? என்ன லவ் பண்ணதால பல
மேரேஜ் பண்ணிக்க கேட்ருக்க அப்படிதான?" என்றான் கூர்ந்து பார்த்தவாறு.
"ஊவே" என அவள் உடனே ஓங்கரிக்க துவங்க,
"உடனே நடிச்சுடுவா" என்றவன், அங்கிருந்த தண்ணீரை எடுத்து வந்து, அவள் உணரும் முன், மூக்கை பிடித்து வாயை திறக்க வைத்து வாயினுள் ஊற்றி விட்டான். மீண்டும் மாத்திரையை எடுத்து கொண்டு அருகில் வர, "நானே போடுறேன்" என அவள் கையை நீட்ட, அவள் கையில் கொடுத்தவன், "ஹாஸ்பிடல் இப்போ போறோம் கிளம்பு" என்றுவிட்டு குளியலறை புகுந்து கொள்ள, இவள் விறுவிறுவென வேறு உடை மாற்றிக் கொண்டு கைப்பையையும் எடுத்துக் கொண்டு தப்பித்தோம் பிழைத்தோம் என கிளம்பி வெளியேறிவிடும் முடிவில் கதவை திறந்து கொண்டிருக்க, குளித்து வந்தவன் அறை வாசலில் இருந்தே அவள் செய்கைகளை பார்த்திருந்தான் யாஷ்.
"கீ இங்க என்ட்ட இருக்கு வா தரேன், திறந்தே போலாம்" என்றவன் குரலில், நெஞ்சில் கைவைத்து அதிர்ந்தவள், அதை காட்ட கூடாது என்பதற்காக மெல்ல திரும்பி, "யாரோ கதவை நாக் பண்ண மாதிரி இருந்தது அதான் திறந்து பாக்கலாம்னு வந்தேன் மாமா" என சமாளிப்பாக சொன்னாள்.
"உன்ன பிறந்ததுல இருந்தே தெரியும். அதைவிட இந்த ஆறு மாசமா இன் அண்ட் அவுட்டா தெரியும். வா கீ என்ட்ட தான் இருக்கு, நாம சேர்ந்தே போலாம்" என உள்ளே சென்றுவிட்டான்.
காலை அழுந்த உதைத்து நடந்து வந்து வெளியே வரவேற்பரையில் இருந்த சோஃபாவிலேயே அமர்ந்து கொண்டாள். இப்போது மருத்துவமனை செல்வதை தடுத்தே ஆகவேண்டுமே என்ன செய்யலாம் என்ற பலத்த யோசனையில் இருந்தாள் அவள். அதில் உள்ளே பாதியாக திறந்திருந்த அவள் கபோர்டை அடைக்க மறந்திருந்தையும் கவனிக்க மறந்திருந்தாள்.
அவனும் எட்டி பார்த்தவன் அவள் முகத்தை கவனித்து விட்டு, "இன்னைக்கு என்ன ட்ராமா பண்ணாலும் செக் பண்ணாம விட போறதில்ல வருணி" என அவளுக்கு சொல்லிவிட்டே, அவனுக்கான உடையை எடுத்து மாற்றினான். பின் அவளது திறந்திருந்த கப்போர்டையும் அடைக்க செல்கையில் அதிலிருந்த மாத்திரை அட்டைகள் கண்ணில் பட்டது. ஆறு மாதங்களாக ஒளித்து தான் வைத்து கொள்கிறாள். அவனும் அவள் மாத்திரை விழுங்கி பார்த்ததில்லை என்பதால் அது என்னவோ என தான் எடுத்து பார்த்தான். அதுவரை வாங்கி உண்ட மாத்திரைகளின் முடிந்த அட்டைகள் கூட குப்பைக்கு செல்லாமல் அங்கேயே இருந்தன.
"செக்கப்பே பண்ண வர மாட்டேங்குறா அப்றம் என்ன நோய்க்கு இந்த டேப்லெட்டாம்?" என எடுத்து பார்த்தவனுக்குமே அது எதற்கானது என தெரியவில்லை.
'எதையும் அவளா செக் பண்ணி பாத்துட்டு தான் டேப்லெட் எடுக்குறாளோ? அப்ப சாக போறேன் சாக போறேன்னு சும்மா சொல்லலையா இவ?' என நினைத்த நொடி, அவனிதையம் அடித்துக் கொள்ள துவங்கியது. உண்மையில் நொடியில் பதறி தான் விட்டான்.
சிறுவயதிலிருந்தே அவள் நினைத்ததை சாதித்து கொள்ள எதையும் சொல்லும் செய்யும் ரகம் தான் வருணி. அதனாலேயே, 'என்ன கல்யாணம் பண்ணிக்கோ. எனக்கு உன்ன தான் கல்யாணம் பண்ணிக்கணும். நா சீக்கிரம் செத்துருவேன். அதுக்கு அப்புறம் நீ சுதந்திரமா உன் வாழ்க்கைய வாழ்ந்துக்கோ. எனக்கு ஒரு டிசிஸ் இருக்கு உன் கூட இருந்தா மே பீ நீ அத சரி கூட பண்ணிடலாம். அதான் நா உன்னையே கல்யாணம் பண்ணிக்க சொல்றேன்' என்றதும் இவனுக்கு அல்வா தானாக வாய்க்கே வந்துவிட்ட மகிழ்ச்சியில் சென்று திருமணமும் செய்து கொண்டான்.
அவளும் அவனை காதலித்ததால் தான் இந்த திருமணம் அதற்கு அவள் பல காரணங்களை சொல்லிக் கொள்கிறாள் என்பது தான் அவன் எண்ணம். அதனாலேயே அதை பெரிதாக கிண்டாமல் ஜாலியாக இருக்கிறான் யாஷ்.
திருமணத்திற்கு பின்னர் இன்று வரை அவள் பல நேரங்களில் சாக போகிறேன் விட்டு போகிறேன் என புலம்பும் போதெல்லாம், 'வா ஹாஸ்பிடல் போலாம் நானே ஃபுல் செக்கப் பண்ணிடுறேன்' என நிற்பவனிடம் அதையும் இதையும் சொல்லி தப்பிக்கவே முயல்வதால் பொய் தான் என உறுதியாகவே நம்பி இருந்தான். அவ்வப்போது இவ்வாறு வயிற்றை பிடித்து கொண்டு படுப்பதும், வாந்தி எடுத்துவிட்டேன் என அழுவதும் நடக்கும் ஆனால் அதற்கெல்லாம் முந்தைய தினம் கொஞ்சம் அதிகமாக வெளி உணவை உட்கொண்டிருப்பாள். அதனால் அவனும் அது தான் காரணம் என்றே எடுத்துக் கொள்வான் இதோ இப்போது வரையிலும்.
"வ ரு" என அழைக்க வந்தவன் அப்படியே நிறுத்தி கொண்டு அவனே அவனது மொபைலை எடுத்து அது எதை சார்ந்த மருந்து என கேட்டான். அது கருத்தடை மாத்திரை என உடனே வந்து குதித்தது. அதில் படபடத்த நெஞ்சம் சட்டென்று ஆசுவாசமாகி, பிபி எகிற துவங்கியது. அதே அலமாரியில் வேறு எந்த மாத்திரை அட்டையும் இருக்கிறதா என தேடி பார்த்தான். இரண்டு இரண்டாக பேராசிடமால் அட்டைகளும் ப்ரீயட்ஸ் வலிக்கான மாத்திரையும் இருந்தது. மற்ற ஆறேழு அட்டைகள் கருத்தடை மாத்திரைகள் மட்டுமே.
அப்படியே அள்ளிக் கொண்டு வந்து அவள் முன் போட்டவன், "என்னடி இது? நிஜமாவே சாக போறியோ? என்ன நோயின்னு நீயே கண்டு புடிச்சுட்டியோ?" என கேட்டதில் அவனையும் அந்த மாத்திரைகளையும் மாறி மாறி பார்த்து பேந்த பேந்த விழித்தாள்.
"பதில் சொல்ல மாட்டியா? இரு உங்கப்பாட்ட கேட்குறேன். அவருக்கு தெரியாமாலா இருக்கும். உனக்கு இந்த டேப்லெட் ரெஃபர் பண்ண டாக்டரயே அவர் மூலமா பிடிப்போமே!" என அவன் ஆரோனுக்கு அழைக்க போக.
"மக்கு மாமா. நீ அவர் மேல கோவத்துல இருக்க. அத மறந்து அப்பாட்ட பேச போறேன்ற?"
"பரவால்ல இது என்னன்னு டாக்டர் எனக்கே தெரியலயே? அப்படி என்ன நோய் உனக்குன்னு நா தெரிஞ்சுட்டே ஆகணும்"
"இது பெர்த் கண்ட்ரோல் டேப்லெட்"
"ஓ! அப்ப தெரிஞ்சே சாப்பிடுற? ஆமா எதுக்கு இத சாப்பிடுற?" என முறைக்க,
"பின்ன உனக்கு கஷ்டம் தர கூடாதுல்ல? பேபி வந்துட்டா என் நோய் பேபிக்கும் போய்ட்டா?"
பல்லை கடித்தவன், "உயர்ந்த எண்ணம் தான். உனக்கு என்ன நோய்? நீ எப்ப சாகுவ?" என கேட்க.
"என்ன மாமா இப்படி கேட்குற?" என உதட்டை பிதுக்கினாள்.
"ஆமா எவ்வளவு நாள் வெயிட் பண்ணணும்னு எனக்கும் தெரியணும்ல?"
"அப்படி என்ன உனக்கு அவசரம்?"
"அவசரம் தான். ஒருவேளை லேசா இருந்தா ஸ்டார்டிங்கலயே பாத்திடலாம்ல. இல்லனா வேற கேர்ள் ஃப்ரண்ட் தேடணும்ல நானும். கமான் வா போலாம்" என எழுப்பி விட,
"போ வரமாட்டேன். அவங்க இனி ஒன்னும் செய்ய முடியாதுன்னு சொல்லிட்டாங்கனா என் மனசே என் பாடிக்கு சப்போர்ட் பண்ணாம என்ன படுக்க வச்சிடும். ப்ளீஸ் மாமா நா உங்கூட இருக்கும் போது அப்படியே தூங்கிட்டே எனக்கே தெரியாம போயிடுறேன். என்ன கம்பல் பண்ணாத ப்ளீஸ்" என அவன் கன்னம் தாங்கி அவன் மேலும் பேசும் முன், அதை தடுக்கும் விதமாக அவன் இதழை மூடி விட்டாள். புருவம் சுருக்கி அவளை பார்த்தவண்ணமே அவள் தரும் முத்தத்தினை பெற்றுக் கொண்டான் யாஷ்.