எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மதியின் வேந்தன் - 6

subasini

Moderator
பகுதி – 6



வந்தவள் புதியவள் அல்ல

நம்மோடு வாழ்ந்துப் பழகியவள்

வீட்டுப்பெண்ணாய் வளர்ந்து வாழ்ந்தவள்

இன்று வீட்டு மருமகளாய் விலகி நிற்கிறாள்...



பாலமுருகனைக் கண்டதும் பயத்தில் கைகள் நடுங்கியது மதுமிதாவற்கு...



கதிர்வேந்தனும் தருணும் சென்றதும், " நீ வருத்தப்படாதே மது விடு" என்று கையைப் பிடித்து ஆறுதல் படுத்திக்கொண்டிருந்த நேரம், அங்கே வந்த பால முருகன், "விடுடா மது, உன்னைப் பத்தி எங்களுக்கு நல்லவே தெரியும். இந்த வளந்துக்கெட்டவனுக்கு அறிவில்லை, இதெல்லாம் மறைக்கவேண்டிய விஷயமா? சொல்லு … ‌நாங்க அவனுக்குக் கல்யாணம் செய்து வைக்க முடிவுப் பண்ணி இருந்தோம்… ‌நடந்தியிருந்தால் என்ன ஆகும் சொல்லு"...



அவரிடம் வந்தவள் " தவறு செய்து விட்டேன் மாமா, என்னைய மன்னிச்சுருங்க " என்று அழுதபடியே காலில் விழப் போனவளைத் தடுத்தார் …



" நீ இந்த வீட்டின் லட்சுமி ம்மா… இப்படி அழாதே.. பானு அவளைச் சமாதானம் பண்ணு வா"…



கணவரின் வார்த்தைகள் கேட்டதும் , மதுமதியின் அருகே வந்து பானுமதி "நீ‌ இனி எங்கள் பொறுப்பு மது.. விடு எல்லாம் முடிந்து விட்டது, இனி பேசி என்ன பண்ண … உன் புருஷன் பண்ணி வைத்திருக்கும் வேலைக்கு உன்னைக் குற்றம் சொல்ல விரும்பவில்லை " என்றவர் அவளிடம்

" நீ போய் முகம் கழுவி, தயாராகி வாடா " என்று அவளை அனுப்பி வைத்தார்…



மதுமிதா, சென்றதும்…



"அண்ணி, கல்யாணம் தான் அவசரக் கெதியில் நடந்திருக்கிறது, அவளைச் சாமி அறையில் முறைப்படி விளக்கு ஏத்தச் சொல்லுங்க… இந்தாங்க இந்தப் பூவை அவளுக்கு வைத்து விடுங்கள்..நான் மீதிப் பூவெல்லாம் சாமிப் படத்திற்குப் போட்டு எல்லாம் தயார் பண்ணறேன்" …



"ஆமாம் , ராதிகா நாளைக்கு ரேணுகா மறுவீட்டுக்கு வருவாள்… நம் குலதெய்வம் கோயிலுக்குப் போய் அங்கே மாலை மாத்திக்க வைக்கலாம்… நேரம் காலம் பார்க்காமல் தாலியைக் கட்டிருக்கான்" என்று பானுமதி, கூறினாள். பெண்கள் இருவரின் பேச்சைக் கேட்டதும் மீண்டும் பாலமுருகனுக்கு‌, சினம் சீறிக்கொண்டு வந்தது…



"அவனுக்கு எல்லாம் தெரியும் என்கிற திமிர் தான் வேற ஒன்னும் இல்லை" என்றார்…



கணவன் அடித்ததில் இருந்த கோபம் அவரின் பேச்சிற்குப் பதில் எதுவும் சொல்லாமல் மௌனமாக இருந்தார் பானுமதி…



அப்பொழுது, தான் மனைவியின் பாரா முகம் புரிந்தது அவருக்கு…

மகன் மேல் இருந்த கோபத்தில் அவன் அம்மாவைத் தண்டித்ததில் தன் தவறு புரிந்தது அவருக்கு …



கணவனின் பேச்சைத் தவிர்க்கச் சமையலறைச் சென்றவரைப் பார்த்து இனி இவளைச் சமாதானம் பண்ணறதுக்குள்ள என‌ ஆயுசில் பாதிப் போயிரும் என்று மனதில் புலம்புதாகச் சத்தமாகப் பேசியவரின் வார்த்தைகள் கேட்டு ராதிகா " அடிக்கிறதுக்கு‌ முன்னாடி இதெல்லாம் யோசிக்கணும்" என்றாள்…



"வந்துருவா அவள் அண்ணிக்குப் பரிஞ்சுப் பேசிட்டு… நான் ஏதும் பேசலை " என்றார்…



"இனி என்ன பேச.. உங்க பையன் பண்ணினதுக்கு அவங்கள அடிபீங்களா… இதென்ன அப்படிப் பெண்கள் மேல் கைவைக்கிற பழக்கம்"



"தப்பு, தான் மன்னிச்சுரு ராதிகா" என்றார் ராதிகாவின் அண்ணா…



"எனகெதுக்கு இந்த மன்னிப்பு.. போய் அண்ணியிடம் கேளுங்கள்"...

இப்படித் தன் அண்ணனின் தவறைச் சுட்டிக் காட்டிப் பேசிக்கொண்டு இருக்கும் போது தன்னை அழகாக அலங்கரித்த மதுமிதா.. வேதாந்தை எடுத்துக் கொண்டு மித்ராவோடு வந்தாள்….



கீழே இறங்கி வரும் மகளையும் மருமகளையும் பார்த்ததும் தங்கள் பேச்சினை நிறுத்திய ராதிகா..

" வா‌ மது"… என்று அவளிடம் இருந்து குழந்தையை வாங்கிக் கொண்டார்…



சமையலறையில் இருந்து வந்த பானுமதியின் கையில் இருந்த பூவினை மதுமதியின் தலையில் சூடி விட்டார்..

"மது, சாமி அறையில் போய் விளக்கு ஏத்திச் சாமிக் கும்பிடு டா"என்றார்…



"சரிங்க அத்தை" என்று அவர் சொன்னதைச் செய்து பெரியவர்களிடம் ஆசியும் வாங்கினாள்…



அனைவரும் அமர்ந்து வேதாந்திடம் விளையாடிக் கொண்டிருக்கும் போது தருணும் கதிர் வேந்தனும் வந்தனர்…



தருண் நேராகத் தன் தாயிடம் வந்தவன்…



"அம்மா பையனைத் தாங்க, எனக்கு ரொம்பத் தலை வலிக்குதுக் கொஞ்சம் டீ, போட்டுத் தாங்க"...



"ம்ம் சரிடா" என்ற எழுந்த போன ‌ராதிகாவை, தடுத்த மதுமிதா



" நான் எல்லோருக்கும் டீ, போட்டுக் கொண்டு வரேன் அத்தை" என்றாள்…



"நான் உனக்கு அத்தை இல்லை அம்மா ஸ்தானம் வரும் மது … தருண் உனக்கு அண்ணா முறை, நீ என்னைச் சித்தி என்று கூப்பிடு" …



"சரிம்மா" என்றாள் மது…



அதில் கண் கலங்க "நானும் வரேன், வா இரண்டு பேரும் சேர்ந்துப் போடலாம் டீ.. உனக்கு இது தான் முதல் தடவை … யாருக்கு எப்படிப் பிடிக்கும் என்று சொல்லித்தரேன் " என்று இருவரும் சமையலறைக்கு நோக்கிச் சென்றனர்…



தங்கள் மருமகள் மகனின் முகம் பார்க்கத் தவிர்ப்பதை உணர்ந்து இருந்தனர்... பாலமுருகன் தம்பதியினர்…



இத்தனை காலத் திருமண வாழ்க்கையில் இருக்கும் அனுபவம் அவர்களுக்குப் புரிய வைத்தது…



தங்கள் மனக் கசப்பைத் தள்ளி வைத்து இருவரும் ஒருவருக்கு ஒருவர் பார்த்துக் கொண்டனர்..



இதை இப்படியே விடக் கூடாது என்று மனதில் நினைத்தவர்…



" பானு நாளைக்குக் குலதெய்வம் கோயிலுக்குக் குடும்பத்தோட போகலாம்.. ‌நீ‌, சொன்னது‌ போல எல்லாம் பண்ணலாம் , என்ன தான் கல்யாணம் நடந்ததாக இருந்தாலும், நமக்கு ஆசை இருக்கும் இல்லையா… மரியாதைத் தெரியாதவனாக, யாரும் வேண்டாம் என்று அவனால் முடியும்.. என்னால் கடமையை மறந்ததவனாக வாழ முடியாது"



"குலதெய்வம் கோயிலுக்குப் போகனும் சரி... அங்க என்ன பண்ணணும் அம்மா" பானுமதி அவனிடம் எந்தப் பதிலையும் தராமல் மௌனம் காத்ததில்



"சாமி முன்னே உங்களுக்கு மாலை மாத்தி வைக்கலாம் முடிவுப் பண்ணியிருக்கோம் வேந்தா" என்றார் ராதிகா….





"இந்த மாலை மாத்தறது எல்லாம் வேண்டாம் …கோயிலுக்கு மட்டும் சொன்னா வரோம், எதுக்கு இது தேவையில்லாமல் "...என்றான் கதிர்வேந்தன்.



தேனீர்க்கோப்பைகளைக் கொண்டு வந்த மதுமிதாவிற்கு, கணவனின் வார்த்தைகள் கேட்டுக் கண்கள் குளமாகியது …அவன் தாலிக் கட்டிய தருணம் மனதில் வந்து, வலியை உண்டுப் பண்ணியது…



கடவுளின் முன்னே மாலை மாற்றும் நிகழ்வாவது முறைப்படி நடக்கும் என்று நினைத்தால் கதிர் வேந்தனின் செயலில் உள்ளத்தால் அடி வாங்கினாள்…



தனக்கான அங்கீகாரத்தைப் முறைப்படித் தர‌‌மறுக்கும், அவன் மேல் மேலும் கோபமும் வெறுப்பும் கூடியது அவளுக்கு…



"டேய் வேந்தா , யாரிடம் பேசிறோம் நினைப்பு இருக்கா உன்னோட அப்பா டா, அவருக்கு மரியாதையில்லாமல் பேசாதே"… என்ற பானுமதியின் வார்த்தைகளுக்கு…



"அவர் மட்டும் மகனிடம் பேசற‌ப் போலவா, பேசறாரு"



"நீ எனக்குத் தந்த மரியாதைக்கு இதெல்லாம் குறைவுத் தான்" என்றார் அவன் தந்தை.



"இப்போ என்ன சொல்ல வரீங்க, நான் உங்களுக்கு மரியாதைத் தரவில்லை என்றா…"



"அப்போ என்னை மதித்து உன்னோட விஷயங்கள் எதாவது சொன்னியா? உனக்குக் கல்யாணம் ஆகிருச்சு‌ என்று நேத்து வரைக்கும் வீட்டுல் இருக்கும் யாருக்குமே தெரியாது, நாங்க எல்லாம் உன்னுடைய குடும்பம் சொல்லிட்டு இருக்கே, அந்தக் குடும்பத்தில் இருக்கும் எங்களுக்கு உன்னைப் பற்றி எதுவேமே தெரியவில்லை, அப்போ உன் வாழ்க்கையில் நாங்கள் எல்லாம் யாரு"...

"அப்பா… என்ன பேசறீங்க… எதை எங்கே கொண்டு போறீங்க… நான் சொல்லாமல் விட்டதுக்குக் காரணம்" என்று அவன் முடிக்கும் முன்னே, டீக்கோப்பையோடு ராதிகாவும் மதுமிதாவும் வந்தனர்…



அங்கே நின்றுக்கொண்டு இருந்த மதுமிதாவிடம்



"ஏன் இங்கே நின்றுவிட்டாய்... வா, போலாம்" என்ற‌ ராதிகாவின் குரலில் தன்னைக் கட்டுப்படுத்தியவள் ,



எல்லோருக்கும் டீயைக் கொடுத்தாள். தன் கணவனுக்கு மட்டும் கொடுக்கத் தயங்கியதைக் கண்டு கதிர்வேந்தன் கோபத்தின் உச்சத்திற்குச் சென்றான். அங்கே இருக்கும் அனைவருக்கும் காட்சிப்பொருளானார்கள். அவர்களுக்கு இடையே எதுவும் சரியில்லை என்பது மட்டும் நன்றாகத் தெரிந்தது அனைவருக்கும.



எதனால் என்று யாருக்கும் புரியாத புதிர் தான்…



காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்களுக்கான எந்த அறிகுறியும் இவர்களிடம் இல்லை….



காலை நேரம் கோயிலுக்குச் செல்ல வேண்டிய காரியங்கள் எல்லாம் பேசி முடிவுச் செய்தனர் பெரியவர்கள் மூவரும்…



மித்ராவோ எதிலும் கலந்துக்கொள்ளாமல் தாமரை இலை நீர் போல் நின்றிருந்தாள்…



அவள் அருகில் சென்ற மதுமிதா "மித்ரா என்ன ஆச்சு?ஏதோ போல இருக்கிற"



"ஒன்னும் இல்லை அண்ணி, கொஞ்சம் தலைவலி அது தான்"



" அத்தையிடம் தலைவலித் தைலம் வாங்கி வந்து ,உனக்குத் தேய்த்து விடறேன் சரியாகிவிடும், எதை‌யும்‌ யோசிக்காதே எல்லாம் சரி பண்ணிறலாம்"…



"பரவாயில்லை அண்ணி விடுங்கள், அது தான் டீக் குடிச்சுட்டேனே‌, சரி ஆகிரும் அண்ணி"





இவர்களின் உரையாடலைக் கேட்ட, கதிரவேந்தனோ 'ஒரு காலத்தில் கீரியும் பாம்புமாக இருந்தவர்கள் எப்படிக் கொஞ்சிக்கிறாங்க... கட்டினப் புருசனைக் கவனிக்கறாளா, எல்லாம் திமிர்.. உடம்பு முழுவதும் திமிர் தான்'… என்று மதுமதியை மனதில் கரித்துக் கொட்டினான் …



எல்லோருக்கும் முன்னே பாலமுருகன் மதுமிதாவிடம்…



"மது நாளைக்கு நம் குலதெய்வம் கோயிலுக்குப் போய், முறைப்படி உங்களுக்கு மாலை மாத்திக்கலாம் , நீயும் மித்ராவும் இப்போ மித்ராவின் அறையில் இன்னைக்குத் தங்கிக்கோ சரியா" என்று அவர் முடிவைக் கூறினார்…



"சரிங்க மாமா" என்றாள் மதுமிதா…



எல்லோரிடமும் பேசுபவள் கணவன் முகம் பார்க்க மறுப்பதில், மனைவியின் மேல் உண்டான கோபம், தந்தை தன்னைக் குறைவாக மதிப்பிடப்பட்டது.. எல்லாம் மனதில் ஒரு வித எரிச்சலை உண்டாகியது கதிர் வேந்தனுக்கு…



"அம்மா அவர் சொல்லறதெல்லாம் பண்ண முடியாது, வேணும் என்றால் கோயிலுக்கு வரோம்" என்றான் கதிர் வேந்தன்.



"ஒரு நல்ல விஷயம் பேசும் போது எதுக்கு இப்படிப் பண்ணற வேந்தா"..



" நல்லதுக் கெட்டது எனக்கும் தெரியும்மா"



" என் பேச்சைக் கேட்பதாக இருந்தால், இங்கே எல்லாம் ஒன்னா இருக்கலாம்… இல்லையென்றால் அவனைக் கீழே தனியா இருக்கச் சொல்லிரு பானு... தினமும் இவனிடம் என்னால் மல்லுக் கட்ட முடியாது"



"ஒ அப்போ என்னை வீட்டை விட்டுப் போகச் சொல்றீங்களா "



"வேந்தா என்ன புதுசாகக் கூட‌க் கூடப் பேசறப் பழக்கம்"…



"அவனே இப்போது புதிதாகத் தானே நமக்குத் தெரியறான், இதுல எதிர்த்துப் பேசறதைச் சொல்லறா இவ"… என்றவர்.



"நாளைக்கு உறுதியாக் கோயிலுக்குப் போறோம் , கோயிலுக்குப் போய்விட்டு வந்து இவங்களளைத் தனிக்குடித்தனம் வைக்கணும், நீங்க இரண்டு பேரும் பார்த்துப் பண்ணீருங்க" என்று தன் மனைவி மட்டும் தங்கையிடம் கூறி விட்டு, வெளியே வேகமாகச் சென்று விட்டார்…



தந்தை வெளியே சென்றதும்.. மெல்ல மித்ரா…"அம்மா நான் நாளைக்குக் கோயிலுக்கு வரவில்லை, நீங்க மட்டும் போயிட்டு வாங்களேன்" என்று உள்ளே போன குரலில் கூறியவளைத் திரும்பிப் ‌பார்த்த, தருணின் பார்வையில் என்ன படித்தாளோ…



"என்ன மித்ரா, சொல்ல வந்தாய்" என்றதும்



"இல்லை ஒன்றுமில்லை" என்று‌ வேகமாகத் தன்னறையை நோக்கிச் சென்றாள்…

செல்லும் அவளையே துளைத்தெடுக்கும் தருணின் பார்வையை அவளால் உணர முடிந்தது.

அதில் அவள் உடலில் நடுங்கியது….



ஏன் இப்படிப் பயம் வருது அவரைப் பார்த்தால் மட்டும் என்று அவளுக்குப் புரியவில்லை…

எதுவும் யோசிக்காமல் படுக்கையில் படுத்துக் கண்களை முடினாள்…விழி முடியதில் இருந்து மெல்ல நீரில் கசிந்தது…



தருண் வேதாந்திடம் விளையாடினான்…



மது, தன் மாமியார் மட்டும் சித்தியிடம் அடைகலமானாள்…



அவளைத் தனிமையில் சந்திக்கும் சூழலைத் தவிக்க, அவள் நடந்து கொள்வதைப்பார்த்து அவளை‌கொல்லும் ஆத்திரம் வந்தது.. எதுவும் யாரிடமும் பேசாமல் தோட்டத்தை நோக்கிச் சென்றான் ‌கதிர் வேந்தன்…



கதிர்வேந்தனின் நிலை‌புரிந்ததும், அவனுக்குத் துணையாகத் தோட்டத்திற்குச் சின்னவனையும் எடுத்துக்கொண்டு சென்றான் தருண்.



தன் பின்னால் வந்த தருணைக் கண்டதும் பேசாமல் திரும்பினான் கதிர் வேந்தன்…



"உனக்கு என்ன பிரச்சினை…எதுக்கு இப்படி டென்ஷனாகுற"…



"இல்லடா..அவள் வந்து முழுதாக இரண்டு நாட்கள் ஆகிருச்சு, இப்ப வரைக்கும், ஒரு வார்த்தை.. இல்லை ஒரு பார்வை என்னைப் பார்க்காமல் சுத்திட்டு இருக்கா..அவளை இன்னைக்கு இராத்திரி…



"டேய்.. ராத்திரி… என்ன பண்ணப் போற டா…. அது தான் நாளைக்குக் கோயிலுக்குப் போகணும் சொல்லி இருக்காங்க இல்ல.. அதுக்குள்ள உனக்கு என்ன அவசரம்" என்று… அவன் என்ன சொல்ல வருகிறான், என்று கூடக் கேட்காமல் பேசிய, தருணின் முதுகில் ஓங்கி அடி வைத்தான் கதிர் வேந்தன்…



"மனுஷன் என்ன பேச வரான் புரிஞ்சுக்காமல், எதையாவது பேசதே, கடுப்பு ஆகிரும் எனக்கு".. என்றான் கதிர்…



"நான் தான் டா, கடுப்பு ஆகணும்.. எல்லாம் மறைச்சுட்டு.. இப்போ கையில் பையன் இருக்கான் அது தான் தப்பிச்ச இல்ல… இதே போல் டபுளா‌கக் குடுத்து இருப்பேன்"



என்றவன் ஒரு கையால் முதுகினைத் தடவினான்…



அப்பொழுது, தான் தருண் கையில் இருக்கும் வேதாந்தைப் பார்த்தான் வேந்தன். தன் மருமகனைத் தருணிடம் இருந்து வாங்கியவன், " என்ன குட்டிப்பையா நீயும் உங்க அம்மா மாதிரியே என்ன ஏமாத்துக்காரன் சொல்லுவியா? என்று அவனை இறுக்கி அணைத்திருந்தான். உதடுகளில் இருந்த வார்த்தைகளுக்கு முரணாக அவன் செயல் இருந்தது. என்ன இருந்தாலும் தன் தங்கையின் மகன் மேல் அவன் பரா முகம் காட்ட முடியவில்லை. அவன் மழலையின் முகம் மாமங்காரனை வசீகரித்தது.



"குழந்தையிடம் என்ன பேசனும்தெரியாத மட்டி டா நீ" என்று கடிந்துக்கொண்ட தருண்,



" ஆமா நீ சொல்லு, என்ன யோசிச்சு வைச்சு இருந்த…உன்னோட திட்டத்தில் தண்ணிய ஊத்திட்டார் போல மாமா "



"ஆமா‌ ஆமா, அப்படியே திட்டம் போடுட்டாலும்"

என்றவன்…



தருண் எங்களுக்குள்ளே இன்னும் எதுவும் சரியாகவில்லை…நாங்க இன்னும் மனசு விட்டுப் பேசிக்கவே இல்லை…



உண்மையைச் சொல்லணும் என்றால், அவளிடம் இன்னும் என் காதலைச் சொல்லவே இல்லை… நான் அவளைக் காதலிக்கிறேன் என்று கூடத் தெரியாது" என்றான் கதிர் வேந்தன்…



"என்ன சொல்லற டா .. அப்பறம் எப்படி டா, எங்க வச்சுத் தாலிக் கட்டின?" என்ற தருணின் கேள்விக்கு



"அதெப்படி, சொல்ல" என்று தன் முடியை ஒருக்கையால் கோதியவன், " சொல்லணும் தான் நினைக்கிறேன், என்னைத் தப்பாக நினைத்து விட்டால், தருண் நீ என் நண்பன்... அதுமட்டுமின்றி என் மச்சான்‌ … அவள் என் மனைவி டா, அவளை யாரும் எதுவும் தவறாகச் சொல்லிவிடக் கூடாது நினைக்கிறேன் டா"



"புரியுது மச்சான்... உங்க அந்தரங்கம் என்றால் வேண்டாம். நான் தப்பாக நினைக்க மாட்டேன்... அதே போல் ஒரு விஷயம் சொல்லிடறேன்... உனக்கு எப்படித் தெரியவில்லை... உன் மனைவி என்னை அண்ணாவாக ஏற்றுக்கொள்வாள் என்றும் நான் எதிர்பார்க்கவில்லை... ஆனால் இனி வரும் காலங்களில் அவள் எனக்கு ரேணு போலத் தான் என் தங்கை… இதை நீயும் மனதில் வைத்துக்கொள், உன்னோட மனைவியிடமும் சொல்லி விடு... தருண் உனக்கு அண்ணா உறவு, அவன் பார்க்கத் தான் அமைதி, ஆனால் ரொம்பக் கோபக்காரன் என்று சொல்லிவைச் சரியா" என்றான் தருண்.



"உனக்கே இது கொஞ்சம் ஓவராகத் தெரியவில்லை" என்று சிரித்தான் கதிர்வேந்தன்.



"இல்லை... தெரியவில்லை டா, அவளாவது எனக்கு அண்ணா என்கிற மரியாதைத் தரட்டும் உனக்கென்ன அதில வந்துச்சு" என்று கோபித்துக்கொண்டான் தருண்.



"ஆமாம் ஆமாம் உன்னுடைய மரியாதையின் அளவு என்ன என்று ரேணுகா, பேசும் பேச்சில் தெரியுதே" என்று சிரித்தவனிடம்..



"போதும் போதும் … அவளுக்கு அண்ணா என்ற பயமே இல்லை டா‌" என்றான் சோகமாக...



இவ்வாறு தோட்டத்தில் இருவரும் பேசிக்கொண்டு இருந்ததில், நேரம் போனதே தெரியவில்லை …



அவர்களைக் காணவில்லை என்றதும்…





"மது... தருணையும் உன்னோட புருஷனையும் சாப்பிட வரச்சொல்லு... நேரம் ஆச்சுக் காலையில் நேரமாகக் கோயிலுக்குப் போகணும்" என்றார் ராதிகா…



"மித்ரா என்ன சொன்னாள்" என்ற ராதிகாவின் கேள்விக்கு,

"அவளுக்கு வேண்டாமாம் ராதிகா" என்று பானுமதி, கூறினார்…



ஆண்கள் இருவரையும் அழைக்க வந்தவள் தன் கணவனைக் கண்டதும் தன் பார்வையைத் தருணின் மேல் பதித்தவள்... "அண்ணா உங்க இரண்டு பேரையும் சாப்பிட அம்மா கூப்பிட்டாங்க" என்றவள் நிற்காமல் வேகமாக உள்ளே செல்ல எத்தனிக்கையில் "அத்தா" என்று அழைத்து எடுக்கச்சொன்னான் வேதாந்த்…



அப்பொழுதும் கணவனின் முகம் பார்க்காமல், சின்னவனை மட்டுமே நோக்கியவள் "வா, தங்கம்" என்று வேந்தனின் அருகில் சென்று வாங்கிய போது தன்னவனின் அருகாமையில் உண்டான தடுமாற்றத்தைச் சமாளித்தவள் வேதாந்தை வாங்கி, உள்ளே சென்றாள்.



அனைவரும் உணவு உண்ண ஒன்றாகக் கூடியபோது வெளியே சென்ற பாலமுருகனும் வீடு திரும்பி வந்தார்…



"வாங்க அண்ணா... சாப்பிடலாம் " ... என்ற பால முருகனை உணவு உண்ண அழைத்தார் ராதிகா.



அனைவரையும் பார்த்தவர்.. "எங்கே மித்து" என்று மகளைக்கேட்ட, பாலமுருகனின் கேள்விக்கு,



"அவளுக்குச் சாப்பாடு வேண்டாம் சொல்லிட்டா..குடிக்கப் பால் குடுத்துத் தூங்கச் சொல்லிட்டேன்.. இந்நேரம் தூங்கிருப்பாள்"



"ம்ம் சரிம்மா" என்றார் ராதிகா விடம்…



"எல்லாம் காலையில் நேரமாக ரெடியாகுங்க" என்று கூறி விட்டு உறங்கச்சென்றார்.





அப்பொழுது "தருண், நீ தான் எப்பவும் லேட், நாளைக்குச் சீக்கிரம் போகணும் சொல்லிட்டேன்" என்றார், பானுமதி.



"நீங்க‌ள் சொல்லி நான் கேட்டகாமல் இருப்பேனா அத்தை" என்ற தருணைப் பார்த்து,



"பிடிப் பிடி நல்லா, காக்காப் பிடி" என்று கேலிச்செய்தக் கதிரை முறைத்தான் தருண்.



மதுமிதாவைப் பார்த்து" நீ சாப்பிட உக்காரு மது" என்றான் தருண்…



"இல்லை அண்ணா, நான் அத்தை மற்றும் அம்மா கூடச் சாப்பிடறேன்" என்றவள் வேதாந்தை உண்ண வைத்து, பானுமதியிடம் கொடுத்தாள். பாட்டியின் மடியில் ஆனந்தமாக உறங்கினான் வேதாந்த்.



"சரிம்மா அந்தச் சட்னியைக் கொஞ்சம் ஊத்து" என்ற தருணிடம்



"இதோ அண்ணா" என்று அவனுக்குத் தேவையாதைக் கொடுத்தவள், அனைவருக்கும் என்ன வேண்டும் என்று பார்த்துப் பரிமாறினாள்…



இதெல்லாம் சாப்பிட்டவாறே பார்த்துக் கொண்டு இருந்தான் கதிர் வேந்தன்…



கணவனின் பார்வை, அவளின் தடுமாற வைத்தது. அதனால் மற்றவர்களிடம் கவனத்தைச் செலுத்த முடியாமல்.. வேகமாகச் சமையலறைக்குள் சென்றவள், அங்கே வேலை இருப்பது போல உருட்டிக் கொண்டு இருந்தாள்…



வேகமாக உணவின் உண்டு முடித்த கதிர் வேந்தன்... கைக் கழுவச் சமையலறைச் சென்றான்.



கணவனைக் கண்டதும், என்ன செய்யவது என்று தெரியாமல்‌‌, பதட்டத்தில் அவன் கைகளைத் தொடைக்க, அங்கே மாட்டி வைத்திருந்த துண்டை எடுத்துக் கொடுத்தாள் மதுமிதா…



அவளிடம் இருந்து துண்டை வாங்கிக் கையைத் துடைத்தவன், அருகே மிகவும் நெருங்கி வந்து நின்று, "இன்னைக்கு என்கிட்ட இருந்து தப்பிச்சுட்ட… இனி மேலே நீ என்னுடன் தானே இருக்ககணும்... அப்பொழுது என்ன பண்ணப் போகிறாய் என்று நானும் பார்க்கிறேன்"…

"என்னைக் குற்றப்படுத்திய உன்னோட எல்லாக் கேள்விக்கும் பதில் நான் தருவேன்" என்றவன் பார்த்தப் பார்வையில் மருந்துக்கும் நட்போ... காதலோ... எதுவும் இல்லை…



வரும் காலங்களில் தன் கணவனின் செயலில் அதிகம் வேதனைக்குள்ளாவள் என்று மெல்ல மெல்லப் புரிந்தது மதுமிதாவிற்கு…





தொடரும்…
 
Top