பகுதி -10
கார்ப் பயணம் தொடங்கியது.
ரேணுகா, கணவனின் அருகில் அமர்ந்தாள். கண்களில் காதல் வழிய, அவளின் காதலின் மாயம், தன்னைச் சுற்றி இருக்கும் யாரையும் கவனிக்காத கதிர்வேலன், அவளை மட்டுமே பார்த்துக் கொண்டே காரை ஓட்டினான்.
இவர்களின் காதல் சடுகுடு, கண்டு கடுப்பான வேந்தன், திரும்பித் தன்னவளைப்பார்த்தான், அவளோ அருகில் இருக்கும் கணவனை ஏறெடுத்தும் பார்க்காமல், எப்படி அவனைச் சமாதானம் செய்ய என்று தீவிரமாக யோசித்தாள்.
அவளைப் பார்த்ததும் மனதில் இவள் எப்போ என் காதலை உணர்ந்து, என்னைப் புரிந்துக்கொண்டு,நாம எப்போ நம் வாழ்க்கையைத் தொடங்க என்று தன் வாழ்க்கையில் இப்போது இருக்கும் இந்த நிலையை நினைத்து வேதனைப் பெருமூச்சு விட்டவன் மெல்ல, தன் அலைப்பேசி நோண்டத் தொடங்கினான்.
தீரவச் சிந்தனையின் விளைவாக மெல்ல, கண் அசைந்தாள் மதுமிதா.
தூக்கக்கலக்கத்தில் சரிந்து விழப் போனவளை, மடியில் படுக்க வைத்தான் வேந்தன்.
கணவனின் இந்த அக்கறையில் கண்கள் கலங்கியது.
அவள் கண்களின் நீர் அவன் வேட்டியை நனைத்தது. மெதுவாகக் குனிந்தப் பார்த்தவன் தன் கரங்களால் கண்ணீரைத்துடைத்து விட்டான்.. துடைத்தப்போதும் நிற்காமல் அழுதவளைப் பார்த்தான் வேந்தன். கணவனின் ஸ்பரிசத்தில் கண் விழித்தவள் கணவனையே ஏக்கமாகப் பார்த்தாள். அவளின் பார்வையின் வலியை உணர்ந்தவன் மெல்ல, குனிந்த அவள் விழிகளில் தன் இதழ்களைப் பதித்தான். கணவனின் அதிரடியில் கண் அகல இதழ்ப் பிரித்தவளின் அழகில் சொக்கியவன் வேகமாக அவள் இதழைச் சிறையெடுத்தான்.
இதழோடு இதழ்ச் சேர அவன் கரங்களோ சரசமாய் அவள் மேனியில் அத்துமீறியது.
கணவனின் காதலில் தினறியவள் மூச்சு முட்டியதில் சட்டென்று கண் திறந்தாள்.
கண் திறந்துப் பார்த்தவளுக்கு அதிர்ச்சி என்றால்,ரேணுகாவிற்கோ சிரிப்பு.
"என்ன மது, கனவா? இப்படி முழிக்கிற" என்றவளை முறைத்தாள் மதுமிதா.
"என்னை ஏன் செல்லம் முறைச்சுப் பார்க்கற… உன் மாமானைப் பாரு"… என்று அவளைக் கிண்டல் செய்தவள் "என்ன கனவில் ஒரே ரொமென்ஸா?… என்ன பண்ணினாரு உன்னோட வேந்தன்…" என்று அவளைச் சீண்டியதும், கன்னங்கள் சிவக்க வெட்கம் வந்து தலையைக் குனிந்தாள் மதுமிதா.
'என் அருகில் தானே இருந்தார்… எப்போ முன்னாடிப் போனாரு…' என்ற கேள்வி மனதில் தோன்றியதும் ரேணுகாவிடம் கேட்டாள், " நீ ஏன்டிப் பின்னாடி வந்த, அவர் ஏன் போனாரு" என்றாள்.
"நீ தூங்கினதும் என்னைக் கூப்பிட்டாரு... பின்னாடி வா என்று, நானும் சரியென உன் பக்கத்தில் உக்காந்தேன், நீயோ தூங்கிக் கீழே விழப் போற, அதுதான் நான் என் மடியில் படுக்க வைத்தேன்" என்றாள் ரேணுகா.
தன் சந்தோஷம் என்றும் கனவில் தான் என்று உணர்ந்தத் தருணம் மதுமதிக்கு.
"ஏன் என்ன ஆச்சு?… ஏதாவது சொன்னாரா? மாமா? என்ற தோழியின் கேள்வியில்
"அதெல்லாம் ஒன்னும் இல்லைடி… எப்படித் தூங்கினேன் தெரியலை, அது தான் யோசிச்சேன்" என்று மழுப்பினாள்.
பின் இருவரும் பழைய கதைகளைப் பேசியபடி வந்தனர்.
தன் மனைவியின் பேச்சினைக் கேட்ட வேந்தனுக்கு என்னசொல்லியிருப்பாள் என்று புரிந்தது, அவள் குரலில் இருந்த பேதத்தை உணர்ந்தவன் 'இவளுக்குக் காதல் வந்தால் நம்ம அப்படியே அள்ளி அணைத்து எல்லாம் பண்ணணும், நம் காதல் எல்லாம் இவளுக்கு அவ்வளவு கேவலம் ' என்று பொண்டாட்டியைக் கடுமையாக மனதில் அர்ச்சனைச் செய்தான்.
இவர்களின் பயணம் இப்படிச் செல்ல, தருணோ காரினை ஒட்டியபடி வந்தான். அவனருகில் தாயுடன் அமர்ந்து இருந்த வேதாந்த், தருணிடம் தாவி கொண்டிருந்தான்.
அவனை முயன்ற வரைச் சமாளித்த மித்ராவிற்கு, என்ன செய்வது என்று தெரியாமல் தினறியவள். தருணின் முகத்தைப் பார்க்கவே பயந்தாள்.
எதற்கு இந்தப் பயம் என்று அவளுக்குப் புரியவில்லை.
மகனை என்ன சொல்லிச் சமாதானம் செய்ய என்று தெரியவில்லை.
ரொம்பச் சங்கடமான சூழ்நிலை நிலவியது.
தருணை யார் என்று சொல்லி மகனுக்குப் புரிய வைக்க என்று தெரியவில்லை அவளுக்கு.
அவனைச் சமாளிக்க முடியாமல் பின்னிருக்கையைத் திரும்பிப் பார்த்தாள், மூவரும் நல்ல உறக்கத்தில் இருந்தனர்,அவர்களைத் தொந்தரவு செய்ய விரும்பாமல் மகனை, சன்னல் பக்கம் திரும்பி அங்கே பாரு மரம், குயில் என்று திசைப் திருப்பினாள்.
சிறிது நேரம் அமைதியாக வேடிக்கைப்பார்த்தவன், மீண்டும் தருண் பக்கம் திரும்பிப் பாய முயன்றான்.
வண்டியை ஒட்டியபடி நடப்பதைக் கவனித்த தருணோ மனதில் தோன்றிய ஆனந்ததிற்கு அளவே இல்லை.
வண்டியை மெல்ல ஒரமாக நிறுத்தியவன் அவளிடம் இருந்து வேதாந்த் வாங்கினான்.
சின்னவனைத் தன்னோடு சேர்த்துச் சீட் பெல்ட் போட்டவன் இன்னொரு பக்கம் அவன் சரியாமல் இருக்க. மித்ரா அணிந்திருந்த துப்பட்டாவை இழுத்தான், தன்னோடு இன்னொரு பக்கம் கட்டுவதற்கு, அவனின் இந்தச் செய்கையில் அதிர்ந்துப் பயத்தோடு, அவனை ஏறிட்டவளின் தோளில், குழந்தைக்குக் குளிருக்குப் போர்த்த வைத்திருந்த பெரிய துண்டைத் தோளில் போட்டு விட்டவனின் பார்வையில் மெல்லச் செத்துக்கொண்டு இருந்தாள்.
'என்ன எல்லாம் சொல்லியிருக்கோம்… எனக்கு மன்னிப்பு என்பதே இந்த ஜென்மத்தில் இல்லை, என் உறவுகளை நம்பாமல், போனதுக்கு இதை விடப் பெரிய தண்டனை எனக்கு கிடைக்காது' என்று மனதிலேயே புலப்பியவளின் வேதனைக் கண்களில் நீராக வெளி வந்தது.
தன்னருகே அமர்ந்து அழுதுக்கொண்டிருப்பவளை ஒரு முறைத் திரும்பிப் பார்த்தவன், எந்த எதிர் வினையும் ஆற்றாமல், மனதளவில் இரும்பென இறுகி, கார் ஓட்டும் பணியை மட்டுமே செய்தான்.
எந்தப் பேச்சும் இல்லாமல் அமைதியாக இருந்தது இந்தப் பயணம்.
சிறிது நேரத்திற்குப் பிறகு மீண்டும் ஒரமாக வண்டியை நிறுத்தியவன் சின்னவனை மித்ராவிடம் கொடுத்தான்.
வண்டி நின்றதும் அவனைப் பார்த்தவளுக்கு அப்போது தான் மகன் உறங்கி விட்டான் என்று தெரிந்தது.
அவனிடம் இருந்து மெதுவாக வாங்கித் தன்னிடம் உறங்குவதற்கு வசதியாக அமர்ந்துக் கொண்டாள்.அவளிடம் மகனைக் கொடுத்தவன், அவளின் துப்பட்டாவையும் அவள் தோளில் போட்டு விட்டான்.
அவளின் துப்படாவில் அவன் வாசத்தை உணர்ந்தாள் மித்ரா. ஒரு வித்தியாசமான பதட்டம் ஏற்பட,மகனை நன்றாகக் கட்டிக்கொண்டாள்.
இதை உணர்ந்தும் உணராதது போலத் தன் கவனத்தை ரோட்டில் வைத்தான் தருண்.
உறக்கத்தில் இருந்த பானுமதி விழித்ததும் மெல்ல, தருணிடம் "எங்கே வந்துட்டாங்க என்று அவங்களைக் கேளுப்பா, நமக்கு முன்னால் போறாங்க என்றால், மெதுவாக வரச் சொல், நம்ம முதலில் போக வேண்டும், வீட்டில் ராசம்மாவிடம் ஆரத்திக் கலக்கி வைக்கச் சொல்லி இருக்கேன், நாம் போய் அவங்களுக்கு எடுக்கணும் தருண்"என்றார்.
"சரிங்க அத்தை. இதோக் கேட்கிறேன். நீங்க ஒன்னும் கவலைப் படாதீங்க, இன்னும் கொஞ்ச நேரத்தில் வீட்டிக்குப் போயிடலாம்"என்றவன் வண்டியை வேகமாக ஓட்டினான்.
வேந்தனை அழைத்து அத்தைத் தன்னிடம் சொன்னதைக் கூறினான்.
சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர் அனைவரும்.
புது மணத் தம்பதியருக்கு ஆலம் கரைத்து அவர்களை உள்ளே அழைத்துச் சென்றனர்.
இரண்டு நாள் விருந்து என்பதால் ரேணுகாவும் தன் கணவனுடன் தாய் வீட்டில் தங்கினாள்.
"ரேணு. இன்னைக்கு அவங்களுக்கு முதல் இரவு, மது வீட்டில் தான் ஏற்பாடு பண்ணிருக்கு. அவளைத் தயார் செய்து அங்கே கூட்டிப் போ, மித்ராவும் நீயும் தான் அவளை ரெடிப் பண்ணணும், இப்போ மித்ரா இருக்கும் மனநிலைக்கு அவள் வேண்டாம் நீயே எல்லாம் பண்ணிரு" என்று கூறினார் பானுமதி.
"என்ன அத்தை… அவள் வீட்டில் ரெடிப் பண்ணிருக்கீங்க முதல் இரவை, இங்கே தானே வைக்கணும்" என்றாள் ரேணுகா.
"ம்ம் அது உன் புருஷனும்.உன்னோட அண்ணனும் தான் இந்த வேலையைப் பண்ணிருக்காங்க, ஏன் உனக்குத் தெரியாதா? என்ற பானுமதியிடம்.
"சத்தியமா எனக்குத் தெரியாது அத்தை. ம்ம் இதுவும் நன்றாகத் தான் இருக்கு, அவங்கக் காதல் அங்கே தான் பூத்துச்சாம்…அப்போ அங்கே தானே முதல் இரவும் நடக்கணும்" என்று கேலிச் செய்தாள் ரேணுகா.
"நீ பேசறது மட்டும் உன் மாமன் மகன் கேட்கணும், அப்போ இருக்குடி உனக்கு" என்ற பானுமதியிடம்
அத்தை, இனியெல்லாம் என்னைத் திட்டவோ, மிரட்டவோ எல்லாம் உரிமை இல்லை, அதுவும் முக்கியமாச் சும்மா, சும்மா கொட்டு வைக்கவும் தான். இதெல்லாம் தட்டிக்கேட்க என் புருஷன் இருக்காரு என்று உங்க புள்ளகிட்ட சொல்லி வைங்க " என்று திரும்பி நடந்தவளை முறைத்தப்படியே நின்றிருந்தான் கதிர்வேந்தன்.
சட்டெனத் தன் அத்தையைப் பார்த்தவள் 'என்ன அத்தை இதெல்லாம்' என்று சைகையில் கேட்டவள். எதுவும் நடக்காதது போல வேந்தனைக் கடந்து சென்றபோது, அவள் தலையில் நங்கென்று கொட்டினான் வேந்தன்.
"எதுக்கு மாமா இப்போ கொட்டினீங்க, நான் போய் என் மாமாவிடம் சொல்லறேன்" என்று தலையைத் தேய்த்து விட்டவள் தன் தாய் மாமனிடம் முறையிட்டாள்.
"விடுடா அவன் கிடக்கிறான் கிறுக்கன்" என்று மகன் மேல் இருக்கும் வன்மத்தைக் கக்கினார், பாலமுருகன்.
அவர் மெதுவாகத் தன் அறைக்குச் சென்று படுத்ததும்
" பார்த்தியா, இவ்வளவு தான் உன்னோட கம்ப்ளைன்டோட பவர், ஐயாவை ஒன்னும் பண்ண முடியாது " என்றவன், ஏன்டிக் கல்யாணம் ஆனால் புருஷன் கூட நல்ல சந்தோஷமாக இருக்கணும்… அது விட்டு…
எங்க வீட்டில் இப்படி, அண்ணாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும், அவன் என்னிடம் பேசறது இல்லை என்றெல்லாம் அவனிடம் போய்ப் புலம்பி வச்சு இருக்க. உன் புருஷன் என்ன வேறளாடி, எங்க நண்பன். அவனுக்குத் தெரியாத நம்மைப் பத்தி. அப்படிக் கிண்டல் பண்ணறான்.
என்னடா, பொண்ணை வளர்த்தி வச்சு இருக்கீங்க, ஸ்கூல் படிக்க வேண்டிய பொண்ணைக் கல்யாணம் பண்ணி வைச்சு இருக்கீங்க, என்றெல்லாம் எங்களை ஒரே கிண்டல், ஏன்டி இப்படி மானத்தை வாங்கற" என்றுஅவளைக் கேலிச் செய்தான் வேந்தன்.
“அப்படியாச் சொன்னாரு, அவரு வரட்டும், வச்சுக்கிறேன்” என்று தன் சேலைத் தலைப்பை எடுத்துச் சொருகினாள் இடுப்பில்.
சரியாக அந்த நேரத்தில் கதிர் வேலன் வந்தான்.
"என்னடா, சொல்லறாள் என் அழகு மனைவி என்றவாறே ரேணுகாவைப் பார்த்தவன், அவள் நிற்கும் தோரனையில் ஏதோ சரியில்லையே, என்றபடியே வேந்தனைப் பார்த்தும், புரிந்தது இதெல்லாம் அவன் லீலைத் தான் என்று.
கதிர்வேந்தனைப் பார்த்து "பொறுக்காதே உனக்கு, நான் சந்தோஷமாக இருந்தால்" என்றவன் அவள் அருகில் சென்று "என்ன ரேணு ஏன் இப்படிக் கோபமா இருக்க" என்று கேட்டான்.
"நான் என்ன ஸ்கூல் படிக்கிற பொண்ணா" என்று சத்தமாகவும், அவன் காதின் அருகில் குனிந்தவள், "நேற்று எல்லாம் நடந்ததுக்கப்பறமும், உங்களுக்கு நான் ஸ்கூல் படிக்கிற பொண்ணு, அப்படித் தானே" என்று அவள் கேட்ட விதத்தில் அவன் சொக்கிப் போனான்.
கணவனின் முக மாற்றத்தில் அவன் மனதைப் படித்தவள், " சரி நான் போய் மதுவை ரெடிப் பண்ணறேன, நீங்க உங்க நண்பனை ரெடியாகச் சொல்லுங்க, அவங்களுக்கு இன்னைக்கு முதல் இரவு, அவங்களுக்கு மட்டும் தான் முதல் இரவு" என்று நொடித்தவாறே மதுமதாவை அலங்கரிக்கச் சென்றாள்.
மனைவியின் ஊடலில் பயந்துப்போனான் கதிர் வேலன், தன் நண்பனைப் பார்த்து, " எங்களுக்குள் சண்டை வந்தா, இந்தக் கரடிக்கு அப்படி ஒரு சந்தோசம் இல்ல, நல்லா வருவடா, நீ ரொம்ப நல்லா வருவ " என்றான்.
நண்பனின் இந்தக் கோபத்தைப் பார்த்தவாறே வந்த தருண் "என்ன பிரச்சனை டா" என்று கேட்டான்.
"ஒன்னும் இல்லை டா " என்றான் கதிர் வேந்தன்.
அதான் நானும் சொல்லறேன், ஒன்னுமே இல்லையே" என்று இரு பொருள் படக் கூறியவன், வேந்தனைப் பார்த்து. "ம்ம் சீக்கிரம் ரெடியாகுப் புது மாப்பிள்ளை, இன்னைக்கு உனக்குத் தான் சடங்கு" என்று கேலிச் செய்தான்.
தங்களின் இடையே எதுவுமே சரியில்லாத போது இந்த முதல் இரவு எல்லாம் வேண்டுமா என்ற கேள்வி வேந்தனின் மனதில் இருந்தது.
அவனின் எண்ணங்களை உணர்ந்த நண்பர்கள், "டேய். எல்லாம் ஒரே நாளில் சரியாகாது, எல்லாத்துக்கும் அதற்கான நேரம் இருக்கும் டா, எது சொன்னாலும் வேண்டாம் என்று சொல்லாதே" என்று கதிர் வேலன் கூறினான்.
"உனக்கு வேண்டாம் என்றாலும் முறை என்று இருக்கும் இல்லையா! அது மட்டும் இல்லைடா, வாழ்க்கையில் நாம மறக்கவே முடியாது பல விஷயங்கள் இருக்கும்… அதில் இந்த முதல் இரவு ஒன்று, அது நம் வாழ்வில் வரவே இல்லை என்றால், யோசித்துப் பார், அப்பறம் தங்கச்சி இடத்தில் இருந்து கொஞ்சம் யோசி டா, எப்பொழுதும் புருஷன் அப்படிங்கற விறப்பாகச் சுத்தாத, அம்மா . அப்பா இல்லாத பொண்ணு டா, நாம் தான் நன்றாகப் பார்த்துக்கணும் " என்றான் தருண்.
மௌனமாக இருவரையும் பார்த்தக் கதிர் வேந்தன், " ஆக இங்கே எனக்கு என்று சப்போர்ட் பண்ண யாரும் இல்லை. நான் தனித் தானா" என்று இடுப்பில் கையை வைத்துக் கோபமாக முகத்தை மாற்றினான்.
"ஆமாண்டா உனக்கு யாருமே இல்லை… இப்ப என்ன பண்ணணும் அதுக்கு"… என்று அருகில் வந்த தருணிடம்
"ஒரு பேச்சுக்குக் கூட நாங்கள் இருக்கோம் ... சொல்ல மாட்டிங்களா டா"… என்றான் வேந்தன்.
'மாட்டோம்' என்று இருவரும் ஒரே போலத் தலையை ஆட்டினர்.
"இருக்கட்டும் பார்த்துக்கிறேன், எனக்கு நேரம் வரும், அப்போ என் கைகள் ஒங்கும் "என்றான் வேந்தன்.
"ஓங்கட்டும் ஓங்கட்டும்… நீ ரூமுக்குப் போ... தங்கச்சி வந்துருவா"என்று அவன் தயாராகட்டும் என்று வந்தனர்.
" எதுக்கு இதெல்லாம் என்று சீன் போட்டுட்டு, மாப்பிள்ளைக்கு அவசரத்தைப் பார்த்தாயா" ... என்றான் கதிர்வேலன்
"அதெல்லாம் அப்படித் தான்டா, நாம் தான் புருச்சுக்கணும் ... நீ வா வேந்தா, போகலாம் " என்றான் தருண்.
"போகலாமா? எங்கே டா… என்று கேட்டவேந்தனிடம்,
"உன் முதல் இரவு கொண்டாடத்தான், நீ வா… உங்க வாழ்க்கை இனி பக்கத்தில் இருக்கும் வீட்டில் தான், உங்களுக்கு இடையே எல்லாம் சரியாவதற்குத் தனிமைத் தேவை என்று மாமா தான் இந்த முடிவு எடுத்தார், அதனால் தான் கோயில் போயிட்டு வர இடைவெளியில் எல்லாம் தயார் பண்ணிட்டார், எங்களிடம் கேட்டாரு சரியான முடிவு என்று தான் தோன்றியது, ஆரம்பிக்கும் வாழ்க்கை முறையாகத் தொடங்கட்டும் என்று நாங்க இரண்டு பேரும் உனக்கு அங்கேயே முதல் இரவுக்கான ஏற்பாடுப் பண்ணினோம்." என்றனர் தருணும் கதிர்வேலனும்.
முதல் இரவு அறையில் அவளுக்காகக் காத்திருந்தான் கதிர் வேந்தன்.
அந்த அறையில் அவர்களுக்கான பலநினைவுகள் இருந்தது, அதில் வேதனையும் அவமானமும் நிறைந்தக் கிடந்தது கதிர்வேந்தனுக்கு. மனது வலியில் நிறைந்து இருக்கும் போதும் அதை ஈடு செய்யும் அளவிற்கு அவள் மேல் காதல் கரைப் புரண்டோடியது.
அவனுக்கு உண்டான அவமானத்தின் வலியில் இதயம் சில்லுச்சில்லாக அவனுள் சிதறிக்கிடக்கிறது, அதையெல்லாம் ஒன்றாக்கி, ஒட்ட வைக்க மதுமிதாவின் காதலுக்கு வலுவுண்டா, அப்படி ஒட்டி வைத்தாலும் வேதனையின் தடங்கள் இருக்கத்தானே செய்யும் என்று பலவாறு சிந்தித்துக் கொண்டிருந்தபடி, ஜன்னல் அருகே நின்று கொண்டு இருந்தான் கதிர் வேந்தன்.
எளிமையான அலங்காரத்தில் மெல்லக் கதவைத் திறந்து உள்ளே வந்தாள் மதுமிதா.
வானில் வலம் வரும் மதிக்குப் போட்டியாக அழகில் மிளிர்ந்தாள் இந்த மதி, அவளின் அரவம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான்.
முன்பு இருந்த வேந்தன் என்றால் அவளின் அழகினைக் கண்டதும் காதலில் தினறியிருப்பான்.
ஆனால் இங்கே இருப்பதோ அவமானத்தை மட்டுமே மனதில் நிறைப்பி, அவள் வார்த்தைகளால் கல்லென மாறி, உணர்வுகளை இழந்து நிற்கும் அவள் கணவன்.
கையில் பால் சொம்போடு வந்தவள் சிறிது நேரம் நின்றாள் கணவனின் அழைப்பிற்காக, அங்கே மௌனம் மட்டுமே என் விருப்பம் என்று அமைதியாக நிற்கும் வேந்தனின் செயலில் தடுமாறிய மதுமிதா, அருகில் இருக்கும் மேசையில் பால் சொம்பை வைத்தவள், மெல்ல அவன் அருகில் வந்து அவன் காலில் விழுந்தாள்.
அவளிடம் இருந்து இதை, எதிர்பாராத வேந்தன், சட்டெனப் பின்னால் நகர்ந்து நின்றான்.
கணவனின் செயலில் கலங்கிப் போனாள் பாவையவள்.
கட்டிய கணவனின் நிராகரிப்பால் உள்ளதில் தோன்றிய வலியில், விழி நிறைந்து வழிய மெல்ல எழுந்துக் கொண்டாள்.
அப்பொழுதுத்தான் எவ்வளவு பெரிய தவறைச் செய்துவிட்டோம் என்று புரிந்தது வேந்தனுக்கு.
இனி என்ன செய்வது என்று தடுமாறியவள் அமைதியாக நின்றாள். தான் எதாவது பேசி அவன் எந்த மாதிரியான எதிர் வினையாற்றுவான் என்று தெரியாமல் தவித்தாள்.
அவள் தவிப்பதை உணர்ந்தவன் மெல்ல மேசையின் அருகில் சென்று, அங்கே இருந்த பாலை டம்ளரில் ஊற்றி அவளிடம் கொடுத்தான்.
தன் முன் பாலை நீட்டியபடி நிற்கும் கணவனின் அழகில் சொக்கியவளுக்குப் பாலை வாங்க வெட்கம் தடுத்த போதும், அவன் மேல் இருந்த பயம் வாங்க வைத்தது.
அவளையே பார்த்தவன் குடி என்று சைகையில் சொன்னவன், தன் கையில் இருக்கும் மீதிப் பாலைக் குடித்தான்.
பாலிலைப் பருகியவாறே மெல்ல, கணவனைப் பார்த்தாள். அருகில் மிக அருகில், அவனுக்கென்று வீசும் மணம் அவள் நாசியைக் கடந்து அவளுள் பயணிக்க, இதே இடத்தில் அவனோடு உண்டான சில ஊடல் சம்பவங்கள் நினைவிற்கு வந்து அவளைப் படுத்தியெடுத்தது. அந்த நினைவே அவளை நாணத்தால் சிவக்க வைத்தது.
பெண்ணின் மனமோ கணவனின் காதலைப் பெற்று , அவனின் மனதில் ராணியாக வலம் வர வண்ணக்கனவில் நின்றாட, அவனின் மனதின் அரசனே, வார்த்தைகள் என்னும் வாள் கொண்டு அவள் கனவில் கருமையைப் பூசினான்.
தொடரும்…