பகுதி - 13
கணவனுக்கான காதலை உயிர் தோழியிடம் கூடப் பகிர முடியாத நிலையில் இருந்தாள் மதுமிதா.
கடந்த காலத்தில் நடந்தவை அதற்குக் காரணம் என்று தெளிவாகப் புரிந்தது.
தன்னுடைய காதலை உணர்ந்து, தன்னையும் புரிந்துக் கொள்வான். அவனுடைய காதலின் மேல் இருந்த நம்பிக்கையில் காத்திருக்க முடிவுச் செய்தாள்.
தோழிகள் இருவரும் அவள் அறையில் இருந்து வெளியே வந்தனர்.
பெரியவர்களிடம் அமர்ந்துச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்பொழுதுப் பானுமதி "மித்ராவை அவள் குடும்பத்தில் திரும்பிச் சேர்த்த வைக்கத்தான் நீ இங்கே வந்தாயா"?… என்று நேரடியாகவே கேட்டாள் தன் மருமகளிடம்.
"இல்லை அத்தை… ரேணுத் திருமணத்திற்கு வருகிற சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நாங்க இங்கே வந்துட்டோம்… இது தானே என் வீடு” என்று தங்களுக்குள் இருக்கும் பிரச்சனையை மறைத்தாள் மதுமிதா.
“உனக்கும் அவனுக்கும் இடையே என்ன ஊடல் என்று கேட்ட மாட்டேன், அதெல்லாம் உங்கள் தம்பதியருக்கு இடையே இருக்கும் அந்தரங்கமான விஷயம்.
உனக்கு அவன் தாலியைக் கட்டியிருக்கான், உன்னோட அம்மா இருந்திருந்தால், இதெல்லாம் மறைச்சு வைச்சு இருக்க முடியுமா ?… நீ என்னை அம்மாவாகப் பார்க்க வேண்டாம்… நான் உன்னோட மாமியார், நேராக என்னிடம் வந்து, இங்க பாருங்க உங்க மகன் இப்படிப் பண்ணிட்டான் சொல்லி இருக்கலாமே, நான் எதாவது பண்ணி இருப்பேன் தானே… உன் வேதனையை உணர்ந்து இதெல்லாம் பேசறேன் மது" என்றாள் பானுமதி…
"புரியுதுங்க அத்தை, நான் பண்ணினது தவறு தான், ஆனால் நீங்கள் வருத்த படாதீங்க, எல்லாம் சரி ஆகிரும்.
நீங்க எதுக்கு இவ்வளவு யோசிக்கிறீங்க… விடுங்க… நாங்க மூன்று பேரும் ரொம்ப நாட்களுக்குப் பிறகு ஒன்றாகச் சேர்ந்து இருக்கோம். அதற்கு எதாவது ஸ்பெஷல் சமைச்சுத் தாங்கள் அத்தை”…
என்று பேச்சைத் திசைத் திருப்பினாள் மதுமிதா.
"உனக்கு இருக்கும் சாமர்த்தியம் எனக்கு இல்லடி.. எப்படி உன்னோட மாமியாரை வேலை வாங்கற… இதெல்லாம் நான் நோட்ஸ் எடுத்து எழுதி வச்சு என் வீட்டில் முயற்சிப் பண்ணறேன்” என்று வம்பிழுத்தாள் ரேணுகா.
"அத்தை, பாருங்கள் இவளை” என்று ரேணுகாவைத் தன் மாமியாரிடம் மாட்டி விட்டாள் மது.
"எதுக்கு ரேணு, அவளைச் சீண்டி விளையாடற, உன் மாமியார் ரொம்ப நல்லவங்க உன்னோட குறும்பு அங்கே போய்க் காட்டாத" என்று ராதிகா... களத்தில் இறங்கவும்
“வந்துரும் இந்த அம்மா. என் மாமியாரைக் கூடச் சமாளிச்சுருவேன் போல, உன்னைச் சமாளிக்கத் தான் இன்னும் எனக்குத் தெரியவில்லை" என்று புலம்பினாள்.
அந்நேரம் தூக்கம் வந்ததால் அழுதான் வேதாந்த். "அவனைத் தூங்க வைக்கலாம் வா"… என்று பானுமதி மகளையும் அழைத்து அவள் அறைக்கு வந்தார்.
அப்பொழுது " உன்னோட மாமியார் பேசினது மனதில் வைத்துக் கொள்ளதே மது, அவளுக்குத் தன் பிள்ளைகள் வாழ்க்கையில் நடக்கும் எல்லாம் பார்த்து வேதனையில் பேசுகிறாள்…
அதுவும் உன் புருஷன் இருக்கானே …
ஒரு சிடு மூஞ்சி…அவனை இந்தக் கோபத்தில் இருந்து மலை இறக்குவது ரொம்பக் கஷ்டம்… அவனோட சினத்தில் உங்களோட திருமண வாழ்க்கை என்ன மாதிரியான பிரதிபலிப்பினை உண்டாகும் என்ற பயம் எங்க அண்ணிக்கு " என்றார்.
எல்லாம் புரியத்தான் செய்தது மதுமிதாவிற்கு, தன்னுடைய காதல் பற்றிய அனைத்தும் அறிய வேண்டிய உரிமை, தன் கணவனுக்கு மட்டும் தான் உண்டு என்பதை உணர்ந்தும் இருந்தாள்.
"புரியுதும்மா, கண்டிப்பாக எல்லாம் சரி ஆகிரும். அவர் அப்படி ஒன்னும் சிடு மூஞ்சி இல்லை" என்றாள் விளையாட்டாக…
"பார்ரா, புருஷனைச் சொன்னதும் வந்துட்டாள் சண்டைக்கு… இதுதாம்மா உலகம்"... என்று கேலிச் செய்தாள் ரேணுகா.
இப்படி அவர்கள் பேசியப்படிச் சமைத்துக் கொண்டு இருந்தனர்.
மகளோடு வந்த பானுமதிக்கு இப்பொழுது அவர்களுக்கான தனிமை கிடைத்தது. அதில் தன் மகளிடம் பேச முடிவு செய்தார்.
தன் மகனை உறங்க வைத்த மித்ரா… உறங்கும் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.
'தூங்கறப் பிள்ளையைப் பார்க்கக் கூடாது மித்து… அவனுக்குத் கண்ணுப் படும் "… என்றாள் பானுமதி.
"எங்க வாழ்க்கையே கண் பட்டபோலத்தான் இருக்கு… அது வேறு தனியாகப் படணுமா.. போங்கம்மா"… என்று கண் கலங்கப் பேசிய மகளைத் தன் மடியில் கிடத்திய பானுமதி…
"அப்படியெல்லாம் பேசாதே மித்து... ஏதோக் கெட்ட நேரம், இப்படி எல்லாம் நாம வழித்தவறிப் போயிடறோம் சில நேரங்களில்… இதெல்லாம் தான் விதி என்று சொல்லறது" என்றுஅவளுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறினார்.
"என்னம்மா விதி… எல்லாம் என்னோடு தவறு தான், வாழ்க்கையில் இப்படி நடந்ததையெல்லாம்… நான் விதி மேல் எல்லாம் பழிப் போட விரும்ப வில்லைம்மா… நான் வாழ்ந்த ஒரு மாதத் திருமண வாழ்க்கைக்குக் கிடைத்தவன் தான் வேதாந்த்"… என்றாள் மித்ரா.
"என்ன மித்துச் சொல்லற" என்று கண்ணில் நீர் வரப் பதறியப் பானுமதியிடம்.
"என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று போதிய அறிவின்மைத் தான் காரணம் அம்மா..
என்னோட பன்னிரண்டாம் வகுப்புப் படிக்கும் சமயம் வேதாந்த் அப்பாவைப் பார்க்கிறேன், அவன் காலேஜ் இரண்டாம் வருடம் படிக்கிறான்…
எங்கே என்னைப் பார்த்தான் எல்லாம் எனக்குத் தெரியாது, ஒரு நாள் என்னைக் காதலிப்பதாகச் சொன்னாரு… நான் சரி என்று சொல்லவே இல்லை…
ஆனால் அடுத்த நாள், அண்ணா நீ அவனிடம் பேசாதே, இனி அவன் கூடப் பேசறதைப் பார்த்தேன்... அவ்வளவு தான் என்று... என்னை ரொம்பவே திட்டிடான்… நான் எதுவுமே தவறு செய்யாமல் என்னை அவருத் திட்டியது, எனக்கு ரொம்பக் கோவம் வந்துச்சு..
அதற்குத் தகுந்த போல் என் பிரண்ட் கிட்ட அவன், நான் இல்லை என்றால் செத்திருவேன் சொல்லி அனுப்பி இருந்தான்.. அந்தப் வயசில் இது ரொம்பப் பெரிய விஷயமாக இருந்தது எனக்கு. நமக்காக ஒருத்தன் சாகபோறானா! அதனால் நான் அவனுக்கு ஒகே சொல்லிட்டேன்….
அவனுக்குக் காதலிக்கிறேன்னு சொல்லிக் கொஞ்ச நாளிலேயே கல்யாணம் பண்ணிக்கலாம் வா என்று சொல்லிக் கூப்பிட்டான்…
நானும் அண்ணாக்குப் பயந்துட்டுச் சரி கல்யாணம் பண்ணிக்கலாம் எனச் சொல்லி, அவன் கூடப் போய்க் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். கல்யாணம் பண்ணி இரண்டாவது நாளிலேயே தான் தெரிஞ்சது அவன் என்னை எதுக்காகக் கல்யாணம் பண்ணினான் என்று" மௌனமானாள் மித்ரா…
“எதற்காக உன்னைக் கல்யாணம் பண்ணினான்” என்று பானுமதிக் கேட்டாள்…
"என் பேரில் இருக்கும் சொத்துக்காகத் தான் என்று தெரிஞ்சது. அவனைப்பத்தின எல்லா விஷயமும் அண்ணனுக்குத் தெரிஞ்சு இருக்கு. அதனால் தான் என்னிடம் சொல்லி இருக்கார். நான் தான் அண்ணாவைப் புரிஞ்சுக்கவில்லை. அவரை அவமானப்படுத்தி அனுப்பிட்டேன் இப்போ அதுக்காக நான் ரொம்ப வருத்தப்படுகிறேன்” என்று கூறினாள் மித்ரா…
இதெல்லாம் நடக்கணும் என்பது விதி என்று நான் சொல்ல விரும்பவில்லை. தவறு என் பெயரில் தான், படிக்க வேண்டிய வயதில், காதல் அப்படிங்கற வார்த்தையை நம்பி ஒரு வாரத்தில் என் வாழ்க்கையைத் தொலைச்சிட்டு நின்னேன்" என்று அழுதாள் மித்ரா..
"அதுதான் தப்புப் பண்ணிட்டேன் தெரியுது இல்லையா! அப்போ எங்களைத் தேடி வந்து இருக்கலாம் தானே மித்ரா. எதுக்கு ஒரு வருஷம் இப்படி எங்களை வந்து பாக்காமல், வயிற்றில் பிள்ளையோடு கஷ்டப்படாடாய்... மது, சொல்லும் போது என் உயிரே போயிருச்சு... அதற்காகவா உன்னை எந்தக் கஷ்டமும் தெரியாமல் வளர்த்தினோம்... மதுமிதா இல்லைன்னா, நீ இப்போ கூட எங்களைத் தேடி வந்திருப்பாயா மித்து? அப்படி என்னடிப் பிடிவாதம் உனக்கு" என்று அவளைக் கடிந்துக் கொண்டாள் பானுமதி…
"கஷ்டத்தை உணர்த்தி என்னை வளர்த்தி இருக்கணும் அம்மா, நான் பிழைத்திருக்க மாட்டேன்...
திமிராக அண்ணனிடம் பேசிவிட்டு... எந்த முகத்தை வைத்தம்மா நான் திரும்பவும் வீட்டுக்கு வருவேன்... அவன் நினைச்ச மாதிரிச் சொத்துக்காக என்று ஆயிரும் இல்லையா... அதனால் தான் நான் வர விரும்பவில்லை" என்றாள் மித்ரா.
என் கணவன் இருந்து 15 நாளில் தான் நான் மாசமாக இருக்கிறேன் என்று தெரிந்தது எனக்கு…
என்ன செய்ய ஏது செய்ய என்று தெரியாமல் இருந்த நேரம்... நான் குடி இருக்கிற வீட்ல இருக்கும் பாட்டி தான் எனக்கு நிறைய உதவிச் செஞ்சாங்க. அவங்களோட உதவியோட தான் பக்கத்துல இருக்குற ஸ்கூலுக்கு நான் வேலைக்கு போனேன். அங்க வைத்து அண்ணியைப் பார்த்தேன். அவங்க ஏன் நீங்க இருக்கே என்று கேட்டு, எனக்கு என்ன நடந்தது எல்லாம் தெரிஞ்சு, அவங்க கூட என்னைக் கூட்டிப் போய்ட்டாங்க.
அண்ணனோட இடத்தில் இருந்து என்னை அவங்கப் பொண்ணு போலப் பார்த்துக் கிட்டாங்கம்மா…
அண்ணி மட்டும் இல்லேன்னா நான் என்னவாகி இருப்பேன் என்று எனக்கே தெரியலமா இந்தக் குழந்தையைப் பெற்று இந்தப் பிரசவத்தை முடித்து வருவதற்கு நான் பட்டக்கஷ்டம்... அவங்க எனக்கு எல்லாமுமாக இருந்து பார்த்துக்கிட்டாங்க. நீங்க இப்படி என்னைத் தாங்கி இருப்பீங்களா என்பது கூடச் சந்தேகம் தான், அந்த அளவுக்கு என்னைப் பார்த்துகிட்டாங்க” என்று மதுமிதாவைப் பற்றியும் கூறினாள் மித்ரா..
நடந்ததை எல்லாம் தன் தாயிடம் பகிர்ந்தவள்... சிறிது நேரம் மௌனத்திற்குப் பிறகு "நான் பண்ணது ரொம்பப் பெரிய தப்புத்தானம்மா... மன்னிப்புக் கேட்டு, அதை நான் சரி பண்ண விரும்பவில்லை... ஆனால் இதெல்லாம் நடந்திருக்காமல் இருந்திருக்கலாம், என்று இப்போ வரைக்கும் நான் வருந்துகிற விஷயம். நான் காதலிக்காமல் இருந்திருக்கலாம் என்பதை என் வாழ்க்கையில் நான் நினைச்சு வருத்தப்பட்டு இருக்கேன். நான் ஏன் காதலித்தேன், எதனால் காதலிச்சேன்? ஏன் இந்தத் தப்பு நான் செய்தேன். என் வாழ்க்கையில இன்னும் ரொம்ப ரொம்ப வருத்தப்பட்ட நாட்கள்தான் அதிகம். அதனால எனக்கு இந்தக் காதல் என்ற வார்த்தை மேல வெறுப்பே வந்துருச்சு" என்றாள் மித்ரா.
அப்பாவும் நீங்களும் என்னை மன்னிச்சிடுங்கம்மா. ஆனால் அண்ணா கிட்ட எப்படி மன்னிப்புக்கேட்டுவிட்டேன் தான் ஆனால் என்றவள் அதற்கு மேல் எதுவும் சொல்லாமல், விட்டு அழுதாள்…
அழும் மகளை அணைத்த அவள் தாய் " விடு மித்து, நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும், சும்மா வருத்தப்படாத, நீ கொஞ்சம் அமைதியாகு... வாழ்க்கையில் சில நேரம் நாம் நினைத்த எதுவும் நடக்காது ... அதற்காக நாம் தவறு என்று அர்த்தமில்லை. தவறைத்திருத்திக்கொள்ள இந்தக் காலம் நமக்குச் சந்தர்பம் தந்திருக்கு... சந்தர்ப்பம் கடவுள் போல் அதைப்பயன் படுத்திக்கொள்" என்றாள் பானுமதி.
"வாழ்க்கை இப்படி ஆனதில் கூட எனக்கு வருத்தம் இல்லை … அண்ணனை வேதனைப் படுத்தி விட்டேன் என்பது தான் என்னால் தாங்கவே முடியவில்லை.
"என் பையன் முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் அண்ணாவை நினைத்துத் தான் அழுவேன். அவருடைய கோபம் எனக்குப் புரியுது, நான் எதற்காக அவரை அவமானப்படுத்தினேன் என்று எனக்குத் தெரியலம்மா" என்று அழுதாள் மித்ரா.
"அதெல்லாம் உன் அண்ணா சரி பண்ணிடுவான் மித்து… இப்ப இருக்கும் சூழ்நிலை, அப்படி விறப்பாகப் சுத்திட்டு இருக்கான், நீ ரொம்ப எல்லாம் உங்க அண்ணனைத் தப்பாக நினைக்காத, அவனுக்கு உன் மேலேயும் பாசம் இருக்கு, அவனோட மருமகன் மேலையும் பாசம் இருக்கும் " என்றாள் பானுமதி.
"உங்களுக்கு இன்னும் தெரியல… நான் அவரிடம் என்ன பேசினேன்…அவரை அவமானப்படுத்தி இருக்கேன் ம்மா"…என்று அழுதாள் மித்ரா.
"எல்லாத்துக்குமே ஒரு முடிவு இருக்கும் மித்து… நீ உங்க அண்ணனிடம் பேசி மன்னிப்புக் கேட்டு விட்டாய் அல்லவா விடு, கண்டிப்பா அவன் மனசும் மாறும்"…
" புரியுதுமா, எனக்கு இந்த வாழ்க்கையிலே இனி எதுவுமே வேண்டாம், இந்த வீட்ல என் ஆயுசு முழுக்க இருந்தால் அதுவே போதும். எப்படியாவது என் பையனை நல்ல விதமா வளர்த்தினால் போதும். அது மட்டும் தான் என்னுடைய ஆசை". என்றாள் மித்ரா.
"ஏண்டி… இந்தச் சின்ன வயசுல இப்படி விரக்தியாகப் பேசுற, 90 வயசுக் கிழவிப் பேசுற மாதிரி இருக்கு உன்னுடைய பேச்சு, வாழ்க்கையில ஒரு துன்பம் வந்திருச்சு, கணவனை விதியாலே இழந்து விட்டாய் ,அதனால வாழ்க்கையில் எல்லாமே முடிஞ்சிருச்சு அப்படின்னு நினைக்கிறது தப்பு மித்ரா, இனியும் வாழ்க்கை இருக்கு, நீ உன்னுடைய வலியைக் கடந்து வந்து பாரு, இந்த உலகம் ரொம்பப் பெருசு. எல்லாருக்கும் அவங்கவங்க வாழறதுக்கான சந்தர்ப்பத்தை இந்த உலகம் உருவாக்கிக் கொடுக்கும். நீங்கதான் யாரும் புரிஞ்சுக்காமல் ஒரு வட்டத்துக்குள்ள உங்க வாழ்க்கை அமைச்சுக்கிறீங்க” என்று பானுமதி அவளுக்கு அறிவுரைக் கூறினார்.
தாயின் அறிவுரையைக் கேட்ட மித்ராவிற்குத் தன் காதல் வாழ்க்கைப் பாதியில் தவிக்க விட்டதால் உண்டான விரக்தியில் இருக்கும் மகளைத் தைரியப்படுத்த பேசுவது புரிந்தது.
“துன்பங்களைக் கடந்து வந்து வாழறதுத் தான் வாழ்க்கை மித்து, நம்ம விடப் பல மடங்கு வலியும் வேதனையையும் பொறுத்துட்டு, இந்த வாழ்க்கையில இனியும் சந்தோஷம் இருக்கு என்று நம்பிக்கையோடு காத்திருந்து வாழறவங்களோட வாழ்க்கையைப் பாரு, அப்பொதுப் புரியும் உனக்கு, இந்த விரக்தி வேதனை எல்லாம் நம்ம முட்டாள்தனமா யோசிச்சிட்டு வாழ்க்கை முடக்கிட்டோம்னு" என்றாள் பானுமதி. தாயின் நம்பிக்கை ஆன வார்த்தைகள் மித்ரா மனதில் ஒரு தைரியத்தை உருவாக்கியது.
இந்த முறை வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தைத் தவற விடக் கூடாது என்று உறுதிப் பூண்டாள். நன்றாகப் படித்துத் தன் மகனுக்குக் கௌரவமான எதிர் காலத்தைக் கொடுக்கனும் அதற்கு நான் நிமிர்ந்து நிற்க வேண்டும் என்று தன்னைத் தானே சக்தி உள்ளவளாக மாற்றிக் கொண்டாள். தாயின் அரவணைப்பில் நிம்மதி உண்டாகியதில் அப்படியே உறங்கிப் போனாள்.
துயரங்கள் சிதறிக்கிடக்கும் பிள்ளைகளின் வாழ்க்கையை எப்படிச் சீர்ச்செய்ய என்று தெரியாமல் கண்கள் கலங்கியவாறே வெளியே வந்த பானுமதி, கண்டது அங்கே முகம் கறுத்து, கண்கள் சிவக்க நின்றிருந்த தருணை.
மனதில் பல எண்ணங்கள் மின்னல் வெட்ட, துயரத்தில் வெளிறியது பானுமதியின் முகம்.
அவருக்கு உறுதியாகத் தோன்றியது தன் மகளின் பேச்சியதெல்லாம் கேட்டுக் கொண்டிருந்திருக்கிறான் தன் மருமகன்.
அவன் அருகில் மெல்ல வந்தவர், மருமகனின் தோளில் கை வைத்து அவனை நேருக்கு நேர் நோக்கியவர்,
"நீ அவளை” என்று கேட்கும் முன் அவரை வேகமாகத் தன் அறைக்குக் கூட்டி வந்தான்.
அந்த இடைவெளியில் தன்னை நிலைப்படுத்தியவன், தன் முகத்தில் சிரிப்பைக் கொண்டு வந்து" ம்ம் சொல்லுங்க மாமி.என்னமோ கேட்க வந்தீங்க" என்றான்.
அவன் சாமர்த்தியமாகப் பேச்சை மாற்றுகிறான் என்று புரிந்தது பானுமதிக்கு.
எதுவுமே பேசாமல் அவனையே பார்த்தார் பானுமதி.
என்ன பேச என்று யோசித்தவனிடம், "உண்மையைச் சொன்னால் நான் கேட்கிறேன், இல்லையென்றால் விடு, தேவையில்லாமல் எனக்காகப் பொய் எல்லாம் யோசிக்க வேண்டாம் தருண்” என்றாள் பானுமதி.
தன் அத்தையின் அதிரடியில் சற்று அதிர்ந்து போனான் தருண். எதுவுமே சொல்லாமல் அவளை அணைத்தான்.
தாயிடம் சரணடையும் பிள்ளையின் தவிப்பை உணர்ந்தாள் பானுமதி…
மெல்ல அவன் முதுகினைத் தடவியப் படி "எல்லாம் மனசிலே போட்டு ஏன்டா? உன்னையே இப்படிக் கஷ்டப்படுத்திக்கிற, என்னிடம் சொன்னால் தானே தெரியும்" மெல்ல அவனை அணைப்பில் இருந்து வெளியே வந்த பானுமதி,
"உங்களுக்கு என்ன பிரச்சினை என்று சொல்லாமல், இப்படி இருந்தால் என்ன தான் பண்ணுவேன்" என்று மெல்லத்தலையில் கை வைத்தபடி அவன் மெத்தையில் அமர்ந்தாள் பானுமதி…
“எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை… இப்போ மித்ராவை மட்டும்தான் நாம் பார்த்துக்கணும்… அதை மட்டும் நீங்கள் யோசிச்சால் போதும் அத்தை, நீங்க ஏன் எல்லாத்துக்கும் வருத்தப்படுறீங்க”.
“சுலபமாக நீ சொல்லிவிட்டாய், ஆனால் என் இடத்துல இருந்து பாரு உனக்குப் புரியும் தருண்”.
“நீங்கள் சொல்றதுப் புரியுது... சில நேரங்களில், வாழ்க்கையில் என்ன கிடைக்குதோ... அப்படியே ஏற்றுக் கொள்ளப் பழகிக்கணும் அத்தை”.
“புரியுது ... கடவுள் யாருக்கு என்ன எழுதி வச்சிருக்காரு என்று, யாருக்குத் தெரியும், நான் போயி மதிய சாப்பாட்டுக்கு என்ன என்று பார்க்கிறேன்” என்று சமையலறை நோக்கிச் சென்றாள் பானுமதி.
காதல் என்ற பெயரில் ஏமாந்து இருக்கிறாள் மித்ரா என்பது மட்டும் தருணுக்கு நன்றாகப் புரிந்தது.
கதிர்வேந்தன் தன்னிடம் கூறியதும், அந்த நாளில் காதலன் மேல் இருந்த நம்பிக்கையில், மித்ரா அவனிடம் பேசிய வார்த்தைகளும் நினைவுக்கு வந்தது தருணுக்கு.
என்ன சொல்வது எல்லாம் அவள் விதியின் சதி என்றே அவனால் நினைக்கத் தோன்றியது.
சிட்டுக்குருவி போல அழகாகப் பறந்து வந்தவளின் வாழ்வில் காதல் மாய வலையை விரித்து அவளைச் சிறையில் அடைத்தது போல் இருந்தது அவளைக் காணும் பொழுது.
நடந்து முடிந்ததைப் பற்றி யோசித்து எந்தப் பயனும் இல்லை என்பது தெளிவாகப் புரிந்தது தருணுக்கு.
இனி நடப்பது எதுவானாலும் அது காலத்தின் கையில் தான் என்பதும் புரிய வந்தது.
கண்ணை மறைக்கும் காதல்
காலனாய் கைப்பிடித்து
நம்மை என்றும் இருளில்
தள்ளிவிட்டு வேடிக்கைப்பார்க்கும்.
தொடரும் …