பகுதி - 15
மித்ராவைக் கல்லூரியில் விட்டவன் தன் அலுவலகத்திற்குப் பயணித்தான்…
அவன் கரங்கள் காரை ஒட்டியதென்றால், அவன் சிந்தனையோ காரின் வேகத்தை விட அதிவேகமாகப் பயணித்தது…
எப்படி மித்ராவைக் கைப்பிடிப்பது என்று, எதுவானாலும் அதிவிரைவில் நடக்க வேண்டும் என்பது மட்டுமே அவன் எண்ணமாக இருந்தது.
அவனால் வேதாந்தைப் பிரிந்து ஒரு கனம் கூட இருக்க முடியவில்லை என்பது தான் உண்மை.
அவன் சிரிப்பில் ஏதோ மாயாஜாலம் உள்ளது… அவனிடம் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் அவனுக்கு எந்தக் கவலையும் இல்லாமல் இருவரும் தங்கள் உலகில் வலம் வந்தனர்…
தான் பெறாத மகனை நினைக்கையில், இதழின் ஒரமாகத் தோன்றும் புன்னகையைத் தவிர்க்க முடியவில்லை அவனுக்கு.
உடனே அவனைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியதும், வண்டியை வீட்டிற்குத் திருப்பினான் தருண். வீட்டிற்கு உள்ளே வரும் போதே வேதாந்தின் அழும் குரல் தான் அவனை வரவேற்றது…
ஏன் அழறான் என்று வேகமாக உள்ளே வந்தவன் கண்டதோ, குழந்தையின் அழுகையை நிறுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் வீட்டின் பெண்களைத்தான்…
அதைப் பார்த்ததும் சிரிப்புத் தான் வந்தது தருணுக்கு.
வேகமாகத் தன் தாயிடம் சென்றவன் அவரிடமிருந்து வேதந்தை வாங்கினான்.
"அவனைப் பார்த்த ராதிகாவோ இவ்வளவு நேரம் நாங்க முயற்சிப் பண்ணிட்டு இருக்கோம். குடுடா அவனை, நான் தூங்க வைக்கிறேன். எதுவும் சாப்பிடவும் மாட்டேங்கறான். அவன் அம்மாவைத் தான் தேடுறான், அதுதான் அழுகையை நிறுத்தாமல் இப்படி அழறான்" என்றாள் ராதிகா.
"அவனை நான் பாத்துக்குறேன், என்னிடம் தாங்க" என்று வாங்கினான்.
"ஏன் செல்லம் அழுகுறீங்க, என்ன ஆச்சு என் தங்கத்துக்கு" என்று அவனை வாங்கியவன் குழந்தையின் கண்கள் இரண்டையும், தன் கைகுட்டியால் துடைத்து விட்டான்.
"நம்ம வெளியில் காரில் டூர்ர்ப்போலாமா" என்று குழந்தையின் மொழியிலேயே, அவனிடம் கொஞ்சிப்பேசிக் கவனத்தைத் திசைத் திருப்பினான்.
குழந்தையை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தவன் காரில் அவனைத் தன் மடிமையிலே நிறுத்திக் குழந்தையோடு சேர்த்து இருக்கையின் பட்டியையும் இணைத்தவன், காரை மிகவும் மெதுவாக ஓட்டிச் சென்றான். சற்றென்று காரில் பயணிக்கும் சூழலைக் கண்டதுமே, குழந்தையின் அழுகை நின்றது.
புதிய உலகத்திற்கு வந்தது போல் பிள்ளையோ, கார்ச் செல்வதையும் தருண் முகத்தையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தது.
அழுதக் குழந்தையின் கவனம் திசைத் திரும்பியதால், ஆனந்தத்தில் சிரித்தது. அவன் பாஷையில் தருணிடம் பேசவும் முயன்றது.
"என்ன செல்லம் வேணும்" என்று குழந்தையை ஒரு கையில் தடவிக் கொடுத்தவன், மெதுவாகவே காரை ஓட்டினான். அவன் சென்ற பாதையில் அதிகம் போக்குவரத்து இல்லாத சாலையாக இருந்தது .
அவன் கவனம் சாலையிலும் இருந்தது குழந்தையின் மேலும் இருந்தது.
மெல்ல அமைதியான இடத்தில் காரை நிறுத்திக் குழந்தையைக் கொஞ்சத் தொடங்கினான். அவனும் குழந்தையும் அரை மணி நேரம், அந்தக் காரிலேயே நேரத்தைச் செலவழித்தனர்.
வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணமே அவனுக்கு மறந்து போனது தருணுக்கு.
அழுதப்பிள்ளையை எடுத்துக்கொண்டு சென்ற மகனைக் காணவில்லை என்று வீட்டில் இருக்கும் அனைவரும் என்ன ஆச்சு என்று தெரியாமல் பதட்டம் அடைந்தனர்.
அரை மணி நேரத்திற்கு மேல் ஆனதில், தன் அலைபேசியில் மகனுக்கு அழைத்த ராதிகாவின் அழைப்பை ஏற்றவன், "என்னமா, என்ன விஷயம்" என்று கேட்டதும் அந்தப் பக்கத்தில் இருந்த ராதிகாவோ "எங்கடா இருக்கீங்க, குழந்தையைத் தூக்கிட்டு அரை மணி நேரத்துக்கு மேல ஆச்சு" என்று கேட்டார்.
"அவனுக்கு என்ன ராஜாப் பையன், நல்ல சிரிச்சுட்டுச் சந்தோசமாகத் தான் இருக்கான். நானும் அவனும் கார்ல ஒரு ரவுண்டு வந்தோம்" என்று கூறினான் தருண்.
"பிள்ளைக்குப் பசிக்கப் போகுதுடா, அவன் அழுதுட்டே இருந்ததில் சரியாகச் சாப்பிடவும் இல்லை, அவனைக் கூட்டிட்டு வீட்டுக்கு வா" என்றார் ராதிகா.
"சரிமா, இதோ வரேன்" என்று கூறியவனுக்கு, தான் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும் கதிர்வேந்தன் வெளியூருக்குச் சென்று விட்டான், நிறைய வேலைகள் தனக்காகக் காத்திருக்கிறது என்பதை உணர்ந்தான்.
"உன்னுடன் இருந்தால் அப்பாவுக்கு எதுவுமே ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது டா, வேலைக்குப் போக வேணும் எண்ணம் கூட வர மாட்டேங்குது, உன்னுடன் இப்படியே இந்த வாழ்க்கையை வாழ்ந்து விடவேண்டும்"
என்று அவன் முகம் முழுவது முத்தம் வைத்தவன், "வா வீட்டுக்குப் போகலாம், இல்லை என்றால் நம்மளைத் தேடி அவங்களே வந்துருவாங்க" என்று கூறிக் காரை வீட்டிற்குத் திருப்பினார்.
இனிமேல் தன் காரிலும் அவனுக்கான பொருட்களை இருக்க வேண்டும் என்று முடிவுச்செய்தான் தருண்.
பேபிச் சிட்டர் ஒன்று வாங்க வேண்டும், அப்பறம் அவனுக்கு என்னென்ன வாங்க வேண்டும் என்பதெல்லாம் காரை ஓட்டிக்கொண்டு மனதில் நினைத்துக் கொண்டான்.
மித்ரா, கல்லூரிக்குச் செல்வதால் நான் முழுவதும் வீட்டில் இருப்பவர்களிடமே விடாமல் தன்னுடனும் அவனை அதிக நேரம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று மனதில் நினைத்துக்கொண்டான். இவன் என் மகன் என்பது மட்டுமே அவன் எண்ணமாக இருந்தது.
வீட்டுக்கு வந்தவன் உறங்கிய வேதாந்தைத் தன் தாயிடம் கொடுத்தான் தருண். தன் கையில் உறங்கும் பேரப்பிள்ளையைப் பார்த்தப் பானுமதியின் மனதில் பல எண்ணங்கள் தோன்றியது. அதனால் அவர் தருணின் முகத்தையே ஊன்றிக்கவனித்தார்.
தன் அத்தை எதற்கு இப்படிப் பார்க்கிறார் என்பது உணர்ந்தப் போதும், எதுவுமே அவன் காட்டிக் கொள்ளவில்லை "எனக்குப் பசிக்குதுக் கொஞ்சம் சாப்பாடுத் தரீங்களா" என்று கேட்டான் தருண்
அவன் கேள்வியில் திசைத்திரும்பிய மதுமிதா "இதோ வாங்க அண்ணா, வந்து உட்காருங்க" என்று அவனை அழைத்து உணவு மேசையில் அமர்த்தி உணவுக் கொடுத்தாள்.உணவை முடித்துக் கொண்டு வந்தவன் "இன்னைக்கு ஈவினிங் நான் வரும்போது மித்ராவைக் கூட்டிட்டு வந்துடறேன், சரி நான் அலுவலகத்திற்குச் செல்கிறேன்" என்று கூறிவிட்டுக் கிளம்பிவிட்டான் தருண்.
மருமகன் வந்து உணவை உண்டு அவன் செல்லும் வரைக்கும் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார் பானுமதி. தருண் மனதில் இருக்கும் ஆசைப் பானுமதிக்குப் புரிகிறது. ஆனால் இததெல்லாம் சரி வருமா? என்கிற எண்ணம் உண்டானது.
ராதிகா மகனின் கல்யாண வாழ்க்கையைப் பற்றிக் கனவுகள் வைத்திருப்பார். அவருக்கு இந்தக் கல்யாணத்திற்குச் சம்மதம் தெரிவிப்பாரா? என்ற பயமும் பானுமதி மனதில் எழுந்தது.
மித்ரா ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக் கணவனை இழந்தவள். அவளைப் போன்று ஒரு மருமகளைத் தன் மகனுக்குப் பார்க்கும் மனநிலை ராதிகாவுக்கு இருக்குமா? என்பதும், என்ன இருந்தாலும் அவளுக்கும் தன் மகனின் திருமண வாழ்க்கைப் பற்றிய ஆசை இருக்கும் அல்லவா.
மித்ராவுக்கு ஒரு நல்ல வாழ்க்கை என்பதற்காக, ஒரு தாயின் மனதில் உள்ளது என்ன என்று அறியாமல் சுயநலமாகச் சிந்திப்பது தவறு என்று பானுமதிக்குத் தெரிந்திருந்தது. இதை ராதிகாவிடம் கேட்பதற்கும் பயமாக இருந்தது. தன்னுடைய மகளின் வாழ்க்கைக்காக அவரின் மகனின் வாழ்க்கையைப் பணயம் வைப்பது போல் ஆகிவிடாதா? தருணின் காதல் என்ன மாதிரியான பிரச்சனையைக் கொண்டு வருமோ! குடும்பத்தில் அமைதியைக் குலைக்குமோ என்ற பயம் மனதில் அந்த நேரம் எழுந்தது பானுமதிக்கு. கதிர்வேந்தனின் வாழ்க்கை ஒரு பக்கம் இழுபறியாகச் சென்று கொண்டிருக்கும் பொழுது மித்ராவின் வாழ்க்கையில் புதிய திருப்பம் ஏற்படுவதில், என்னென்ன கோலாகலங்கள் குடும்பத்தில் ஏற்படும் என்ற குடும்பத் தலைவியாக அவர் மனதில் சஞ்சலம் ஏற்பட்டது.
இவ்வாறு சிந்தனை வாய்ப்பட்டு இருந்த பானுமதி அருகில் வந்த அமர்ந்தார் ராதிகா.
"என்ன அண்ணி யோசிக்கிறீங்க" என்று கேட்டார் ராதிகா.
"ஒன்றுமில்லை ராதிகா வேதாந்தைப் பற்றித் தான் சிந்தித்துக் கொண்டிருந்தேன், எப்படித் தருணிடம் ஒட்டிக்கொண்டான் பார்த்தாயா?" என்று ராதிகாவின் மனதை ஆழம் பார்த்தாள் பானுமதி.
"ஆமாம் அண்ணி நானும் பார்த்தேன். அழகா இருக்குல்ல அவங்க ரெண்டுப் பேருக்கும் இடையில இருக்கும் பாசபந்தம்" என்று ராதிகாவோ பானுமதியின் மனதில் என்ன இருக்கும் என்று அறிய முற்பட்டார்.
இருவரும் ஒருவருக்கொருவர் மனம் திறந்து பேசிக்கொள்ளாமல், எதிரில் இருப்பவர் என்ன நினைக்கிறார் என்பதைப் பற்றி அறியவே முயன்றனர்.
எது எப்படியோ மித்ராவிற்கு நல்ல வாழ்க்கை என்பது மட்டுமே ராதிகா மனதில் இருக்க, பானுமதிக்கோ தருணிற்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்று மனதில் இருந்தது.
அதில் மித்ராவின் வாழ்க்கையும் கூட இரண்டாம் பட்சமாகத் தான் பானுமதி யோசித்தார்.
பெற்றவர்களின் மனமோ பிள்ளைகளின் நன்மையை மட்டுமே நினைத்தது. தருண் மட்டும் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தான். அதனால் மிகவும் சந்தோஷமாக அலுவலகத்திற்குச் சென்று வேக வேகமாகத் தன் வேலைகளை முடிக்கத் தொடங்கினான். கல்லூரி எப்பொழுது முடியும் என்பதை அறிந்துக்கொண்டு வந்ததினால் மாலை வீட்டிற்கு அவளை அழைத்துச் செல்வதற்குத் தன்னுடைய வேலைகளை வேக முடித்துக்கொண்டு மீதி இருக்கும் வேலைகளை வீட்டில் இருந்துகொண்டே செய்யுமாறுப்போன்ற பார்த்துக் கொண்டான்.
வீட்டில் இருக்கும் பெரியவர்கள் தனக்காக யோசிப்பது, இனி தன் வாழ்க்கையில் என்ன நடக்கவேண்டும் என்ற தருணின் எண்ணம் பற்றிச் சிறிதும் தெரியாமல் தன்னுடைய கல்லூரி வாழ்க்கை முதல் நாளை எதிர்கொண்டாள் மித்ரா.
வகுப்பறைக்குச் சென்ற மித்ரா ஒரு வருடம் சீனியர் என்று அவளாகச் சொல்லாமல் யாருக்கும் தெரிய வாய்ப்பும் இல்லை.
முதல் நாள் என்பதால் தன்னுடைய பாடத்திட்டம் அமைந்திருக்கும் பகுதிக்குச் சென்றாள். அங்கே எல்லாரும் அமர்ந்திருந்தனர். யாரிடம் போய் வகுப்பறைப் பற்றிக் கேட்க என்று தெரியவில்லை. அப்பொழுது அங்கு அருகே ஒரு பெண் அமர்ந்துக் கொண்டிருந்தாள், அவளிடம் போய்த் தான் எடுத்த பாடமும் அதற்கான வகுப்பும் எங்கே என்று வினவினாள்.
"ஹாய் என் பேரு ஜோதி, நானும் அதைத் தாங்கத் தேடிட்டு இருக்கேன், புதிய மாணவர்களை இங்கே தான் உட்காரச் சொல்லி இருக்காங்க, நீங்களும் புதுசா, உங்கள் பேர் என்ன" என்று தானாகவே வந்து நட்புக்கரம் நீட்டினாள் ஜோதி.
"ஹாய் என் பேரு மித்ரா, நானும் முதல் வருடம்தான் படிக்க வந்திருக்கேன்" என்று அவள் நட்பை ஏற்றுக் கொண்டாள் மித்ரா.
"எல்லாரும் இங்கே தான் இருக்காங்க, நீங்களும் வந்து உட்காருங்க, எப்படியும் நம்மளைக் கூப்பிடுவதற்கு யாராவது ஒரு ஸ்டாப் வருவாங்க. அது வரைக்கும் நம்ம இங்கே அமர்ந்து இருக்கலாம். உங்களைப் பத்தி நீங்க சொல்லுங்க" என்று மித்ராவிடம் ஜோதிக் கேட்டாள்.
"நான் முதல் வருடம், இதைத் தவிரப் பெருசாக எல்லாம் சொல்லிக்கிற அளவுக்கு என்னிடம் எதுவும் இல்லைங்க, சுமாராகப் படிப்பேன் அவ்வளவுதான், நீங்க" என்று கேட்டாள் ஜோதியிடம்.
மித்ராவின் பேச்சில் ஒரு தயக்கமும், ஒதுக்கமும் இருந்ததை உணர்ந்தாள் ஜோதி. அவளிடம் நல்ல நட்பபோடு கூடிய பாசம் மனதில் தோன்றியது ஜோதிக்கு.
இருவரும் தங்களைப் பற்றிய உரையாடல் போய்க் கொண்டிருக்கும் பொழுது அங்கே வந்தவர்கள், அவர்களுக்கு என்னென்ன வகுப்பு என்பதைப் பற்றிய அறிவிப்பையும் கொடுத்தனர்.
இருவரும் சேர்ந்துத் தங்களுடைய வகுப்பறைக்குச் சென்றனர். அருகருகே அமர்ந்து மித்ராவுக்கு ஒரு நல்ல ஒரு நட்புக் கல்லூரியில் கிடைத்தது.
அதுவே அவளுக்குத் தன்னுடைய புதிய வாழ்க்கைக்கான தொடக்கம் நல்லபடியாக அமையும் என்ற நம்பிக்கையும் உண்டாக்கியது. நன்றாகப் படித்துத் தன் மகனுக்கான வாழ்க்கையை நல்லவிதமாக அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற நம்பிக்கை அவள் மனதில் ஆணிவேரைப்போல் ஆழமாக வேரூன்றியது.
தனக்கும் தன் மகனும் இடையே யாரும் இல்லை என்பது மட்டும் உறுதியாக இருந்தாள் மித்ரா. இந்த எண்ணத்தை உடைத்து எப்படித் தருண் அவளைத் தன்னவளாக்குவான் என்பது கேள்விக்குறிதான். ஆனால் இதற்கு ராதிகாவும் பானுமதியும் நல்ல பாலமாக அமைவார்கள். இல்லை அவளுடைய பையன் வேதாந்தே அவளை அசைத்துப் பார்ப்பானா? என்பது தான் கதையின் ஓட்டமாக அமையும் என்று யாருக்குமே தெரியவில்லை.
எது எப்படியோ எல்லோருக்கும் நல்லதாக அமைவது தானே வாழ்க்கை.
தொடரும்…