எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

முகிலை கொய்த கொள்ளைநிலா - கதை திரி

Status
Not open for further replies.

Asha Evander

Moderator
அத்தியாயம் 1

“என் மனம் கானலின்
நீரென ஆகுமா கைகளில் சேருமா
அன்பே நேசிக்கும் காலம் தான்
வீணெண போகுமா நினைவுகள்
சோ்க்கிறேன் இங்கே ஆயினும்
காதலின் கைகளில் விரும்பியே
விழுகிறேன் அன்பே!”

சென்னை பெண்கள் சிறைச்சாலை மிகவும் பரபரப்புடன் காணப்பட்டது. ஜெயிலர் சிறைக்கைதிகளின் ஆவணங்களை எல்லாம் ஒழுங்கு படுத்தி வைத்துக் கொண்டிருக்க, அங்கே பாதுகாப்புக்கு இருந்த மற்ற பெண் காவலர்கள் ஒவ்வொரு சிறை கைதிகளின் அறைக்குச் சென்று அவர்களிடம் எதுவும் தேவை இல்லாத பொருட்கள் இருக்கிறதா என்று சோதனை செய்து கொண்டிருந்தனர்.

காரணம் இன்று எஸ்.பி முகிலன் ஐ.பி.எஸ் அந்தச் சிறைக்கு வருகை தர இருக்கின்றான். மிகவும் கண்டிப்பானவன். அதே நேரம் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட கூடாது என்பதில் தீவிரமாக இருப்பவன். இன்றும் அவனுக்கு நெருங்கிய ஒரு சொந்தம் சிறையில் இருப்பதால் அந்த நபரைப் பார்க்கச் சிறப்பு அனுமதி பெற்றிருந்தான். அவனின் வருகையின் காரணமாகத் தான் இந்தப் பரபரப்பு.

"இன்னைக்கு ஜெயிலுக்கு முகிலன் சார் வரார். எவகிட்டயாச்சும் காசு வாங்கிட்டு போன் கொடுக்குற பழக்கம் இருக்கவ எல்லாம் இன்னைக்கு மட்டும் ஒழுங்கா இரு" என்று அந்தப் பெண் ஜெயிலர் எச்சரிக்கை விடுத்து கொண்டிருக்க, அந்நேரம் பெண்கள் சிறைச்சாலை வாசலின் உள்ளே அடியெடுத்து வைத்திருந்தான் முகிலன்.

முகிலன் ஐ.பி.எஸ், முப்பது வயது இளைஞன். சிவில் சர்வீஸ் தேர்வில் முதல் பதினைந்து இடத்திற்குள் தேர்வாகி சென்னையில் எஸ்.பி ஆக இருந்தான். கட்டுக்கோப்பான உடல், ஐந்து அடி ஒன்பது அங்குலம் உயரத்தில் அந்தச் சீருடை அவனுக்கு இன்னும் அழகை கூட்டியது. ஏதேனும் வித்தியாசமாக இருக்கிறதா, அனைத்தும் ஒழுங்காக நடக்கிறதா என்று சுற்றுப்புறத்தை பார்வையால் அலசியவாறே வந்தவனின் கண்கள் தன் இலக்கையும் தேடியது.

அவனைக் கண்டதும் "குட் மார்னிங் சார்" என்று ஜெயிலர் சல்யூட் அடிக்க அதை ஆமோதித்தவன் தன்னுடன் வந்தவர்களுடன் உள்ளே நுழைந்தான்.

பொதுவான விசாரிப்புகளை முடித்தவன் அவரிடம் தான் தேடி வந்த நபரைப் பற்றி விசாரிக்க, ஜெயிலர் தயங்கினார்.

“என்னாச்சு மேடம்?” அவனின் குரலில் ஓர் அழுத்தம் இருந்தது.

“சார் அந்த பொண்ணு கிச்சனுக்கு போனா” ஜெயிலர் தயங்கி தான் சொன்னார். அவருக்குத் தெரியும் அவன் என்ன மாதிரி கோபப்படுவான் என்று.

“வாட் த ஹெல்?” அடுத்து ஏதோ சொல்ல வந்தவன் தன்னை அடக்கிக் கொண்டு அவரைப் பார்த்தான்.

“சார்.. ரூல்ஸ்”

“உங்க ரூல்ஸ் எல்லாம் இந்த மாதிரி நேரத்தில் தான் காட்டணுமா?” என்றவன் அவரைக் கண்டுகொள்ளாமல் சமையலறையை நோக்கி நடந்தான்.

“சார்! சார்!” அவரின் அழைப்பு ஒன்றும் அவனின் காதை எட்டவில்லை.

அவனின் வேகத்திற்கு அவரால் ஈடு கொடுக்கவும் முடியாது. கண்களில் பரிதவிப்புடன் தேடியவன், அவன் தேடிய பொருள் கிடைத்ததும் ஒரு பெருமூச்சுடன் அவளை நோக்கி நடந்தான்.

"அறிவழகி" என்ற குரலில் குனிந்து வேலை செய்து கொண்டிருந்தவள் அதிர்ந்து நிமிர்ந்து நோக்க அவளையே ஊடுருவிப் பார்த்துக்கொண்டிருந்தான் முகிலன்.

அவளுக்கு அவன் இனி என்ன செய்வான் என்று தெரியும். ஆனாலும் அவனை நேர்க்கொண்டு பார்த்தாள். இந்தப் பார்வையில் தானே அவன் வீழ்ந்து போனான்.

அறிவழகி. முகிலனின் உயிரானவள். சிறு வயது முதலே அவனின் அன்பிற்கு உரியவள். பால் வண்ண நிறமோ அல்லது கோதுமை நிறத்து அழகியோ என்று சொல்ல முடியாது. அவள் ஒரு கருப்பு சாக்லேட் அழகி. முப்பது வயதில் ஒரு கொலைக் குற்றத்திற்காக ஏழு வருட தண்டனை பெற்று சிறையில் இருந்தாள்.

“அழகி” முகிலன் நெருங்கவும் அவளின் பார்வை மற்றவர்களைத் தீண்டியது.

புரிந்து கொண்டவன் போல அந்தப் பெண் ஜெயிலரை பார்த்தான். அவருக்கு அவளைப் பற்றி ஏற்கனவே தெரியும் என்பதால் மற்றவர்களை வேலை செய்யச் சொல்லி விட்டுத் திரும்ப, அதற்குள் அறிவழகியுடன் அடுத்த அறைக்குள் நுழைந்திருந்தான்.

“என்ன பண்ணுற முகி?” அவனின் கை அவளின் வயிற்றை வருட நெளிந்து கொண்டே இருந்தாள்.

ஆனால் அவன் அதை எல்லாம் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. பார்வை மொத்தமும் அவளின் வயிற்றில் தான்.

"வலி ஏதாச்சும் இருக்காடி?" குரலில் பரிவோடு கேட்டவனை முறைத்தவள் பின் "எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா?" என்று கேட்டாள்.

"என்னடி?"

"இந்த குழந்தை.. இதை மட்டும் எப்படியாச்சும் நல்லபடியா வளர்த்து விடுறியா? என் குழந்தைன்னு தெரிஞ்சாலே அதோட எதிர்காலம் நாசமாகிடும்"

"அப்போ மேடம் என்ன செய்யுறதா உத்தேசம்?"

அவனின் கண்களில் கோபத்தை கண்டும் "நான்.. என் வாழ்க்கை இங்கேயே தானே முடியபோகுது" என்றவளின் கன்னத்தில் ஓங்கி அறைந்தவன் பின் அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்து கொண்டான்.

“ஏன்டி இப்படி எல்லாம் பேசுற? யாரை காப்பாற்ற உன் மேல பழியை போட்டுக்குற? உன்னால ஒரு எறும்புக்கு கூட பாவம் செய்ய முடியாது. நீ கொலை செய்தன்னு சொல்லுறத இந்த ஊர் உலகம் நம்பினாலும் என்னால நம்பவே முடியாது. எதுக்காக இந்த தியாகம்? உனக்காக நானும் நம்ம குழந்தையும் இருக்கிறோம்ன்னு நியாபகமே வரலயா?” அவன் குரலில் அவ்வளவு வலி.

அவனின் காதலைப் பற்றி அவளுக்கு நன்றாகவே தெரியும். தனக்காகத் தான் இன்று வரை அவனின் வீட்டை எதிர்த்துத் திருமணம் கூடச் செய்யாமல் இருக்கிறான். அதற்காக ஜெயிலில் தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ளப் போகும் அவளுக்காக அவன் இன்னும் அவனுடைய வாழ்க்கையை வீணாக்குவதை அவள் விரும்பமாட்டாள்.

மனதை கல்லாக்கி கொண்டவள் “இது உன் குழந்தைன்னு யார் சொன்னா முகி? ஒருவேளை அன்னைக்கு அவனால் கூட” என்று அவள் முடிக்கவில்லை அதற்குள் அவளின் முதுகில் கைக்கொடுத்து தன்னோடு சேர்த்தவன் குனிந்து அவளின் இதழைப் பதம் பார்த்தான்.

அறிவழகி எவ்வளவு முயன்றும் அவனின் பிடியிலிருந்து வெளி வர இயலவில்லை. வயிற்றில் அழுத்தம் வராமல் பிடித்தவன் அவளின் இதழில் உதிரம் வரும் வரை கடித்தான். அவளின் உதிரத்தின் சுவையை அவன் உணர்ந்த பின்பே அவளை விட்டவன் கண்கள் கொலைவெறியில் இருந்தது.

“இனி ஒரு முறை இப்படி பேசினால் உன்னையும் கொல்லுவேன். பின்னாடியே நானும் வந்துடுவேன். நான் சொல்லுறத செய்வேன்னு உனக்கு நல்லாவே தெரியும்”

“முகி” அவளின் குரலின் வலியை அவனும் உணர்ந்து கொண்டான் தான்.

"நீ கண்டிப்பா வெளில வருவடி. உனக்காக நானும் நம்ம குழந்தையும் காத்துட்டு இருப்போம்”

“எப்படி முகி? அவனை நான் தான் விஷம் வச்சு கொன்னேன்னு பார்த்த சாட்சி இருக்கு. அந்த விஷ பாட்டில் அண்ட் அவன் பால் குடித்த சொம்பில் என் கை ரேகை இருக்கு. எல்லாத்துக்கும் மேல அவன் சாகும்போது கைப்பட எழுதின என்னோட பெயர் இருக்கு. எப்படி? எப்படி கொலை பண்ணினேன் நான்? ஆனா நான் தான் கொலை பண்ணிருக்கேன். என்னோட கையில் அவனோட வாயில் இருந்த இரத்தம் எப்படி வந்துச்சு? நான் எதுக்காக நான் தான் கொலை பண்ணினேன்னு வாக்குமூலம் கொடுத்தேன்? தெரியலயே” அவன் அவளை அமைதியாக இருக்க சொல்ல அவளின் பேச்சு நிற்கவில்லை.

“என்னோட குழந்தை யாரோடது முகி? உன்னோடதா? ஒரு வேளை அவனோடதா இருக்குமோ? ஒரு வாரம் தானே கேப் இருந்துச்சு. முகி இது உனக்கும் எனக்கும் பிறக்க போகிற குழந்தை தானே” அவளின் கேள்வியில் அவன் மனம் சுக்கு நூறாகியது.

அது யார் குழந்தை என்று தான் அவனுக்குத் தெரியுமே. இப்போது சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அவள் நம்ப மாட்டாள்.

“அழகி” அவனின் அதட்டலில்
அதிர்ந்து விழிக்க எதிர்பாராத நேரத்தில் அவளின் கழுத்தில் தன் கையில் இருந்த தாலியை கட்டினான் முகிலன். யாரையும் எதிர்பார்க்கவில்லை. எந்தச் சடங்குகளும் தேவை இல்லை. அவனின் பெற்றோர் பற்றிய கவலை இல்லை. ஆனால் அவனின் உயிர் மூச்சானவளுக்கு நிம்மதியான வாழ்க்கை வேண்டும். அவனின் அருகாமை மட்டுமே அவளுக்கான துணை என்பது அவனுக்குத் தெரியும். நேரடியாகக் கொடுக்க முடியாது என்பதால் இனி அவன் கட்டிய தாலி அவளுக்குப் பாதுகாப்பை, நம்பிக்கையைக் கொடுக்கும்.

முகிலன் தாலியை அவளின் கழுத்தில் அணிவித்த நொடி அறிவழகி என்ன மாதிரி உணர்ந்தாள் என்றே தெரியாது.

“முகி” அவளின் நா தழுதழுக்க,

"நீ இப்படி எல்லாம் யோசிப்பேன்னு தான் இன்னைக்கு இந்த முடிவோடு நான் வந்தேன். இனி நீ, நான், நம்ம குழந்தை, இது தான் வாழ்க்கையினு நினைச்சா கண்டிப்பா இந்த முறை நீ கோர்ட்ல உண்மைய சொல்லுவ" என்றவன் அவளின் ஏழு மாத மேடிட்ட வயிற்றில் அழுத்தத்தைக் கொடுத்து விட்டு வெளியே சென்றான். அறிவழகி தான் அதிர்ந்து நின்றாள்.

அவளுக்குத் தெரிந்த வரையில் அவள் தான் அந்தக் கொலையைச் செய்தாள். சாட்சியங்களும் அப்படியே இருக்க என்ன உண்மையை அவள் சொல்வாள்? அன்றைக்கு அந்த நொடி அவளுக்கு எதுவும் நினைவிலும் இல்லையே. கண் விழித்தபோது அவனின் இரத்தம் அவளின் கையில் இருந்தது. அவனோ அவளுக்கு அருகில் வாயில் இரத்தம் வர இறந்து கிடந்தான்.

‘வேறு என்ன நடந்தது? அவர்கள் இருந்த அறையில் வேறு யாரும் இல்லையே. அவள் தானே பாலை காய்ச்சி எடுத்து வந்தாள்? அதுவும் நேரடியாகப் பால் காரரிடம் அவள் தான் போய் வாங்கி வந்தாள். இதில் யார் என்ன சதி செய்திருக்க முடியும்?

ஆனால் பாலில் விஷம் இருந்ததே! அவளின் கையால் தான் குடிக்க கொடுத்தாள். அதன் பிறகு அவளுக்குச் சுயநினைவு இல்லையே. மறக்கக்கூடிய நினைவுகளா அவை? கொடூர இரவு. ஆனால் நான் என்ன உண்மையைச் சொல்ல வேண்டும் என்று முகிலன் எதிர் பார்க்கிறான்?’


அவளுக்குத் தலை வலித்தது. அவளுக்காக வாதாடின வக்கீல் கூடக் கடைசியில் ஆதாரங்களை வைத்துப் பின்வாங்கி விட்டாரே. இனி யாரை அணுகுவது?

அன்று இரவு அவளுக்கு எதனால் மயக்கம் வந்தது? பல கேள்விகள் மனதை வருத்த அப்படியே அமர்ந்தாள்.

அவளைப் பார்த்துக் கொண்டே நின்ற முகிலனுக்கும் வலித்தது. இந்த ஏழு மாதங்களாகச் சிறையில் அவள் மனதால் படும் பாட்டைப் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறான். இனி அவளே உண்மையைச் சொன்னால் தான் உண்டு. அவள் ஏதோ ஒரு சூழ்ச்சியில் மாட்டிக் கொண்டு இருக்கிறாள் என்பது வரை அவனுக்குப் புரிந்தது.

'அன்று இரவு அவளுக்கு எந்தப் போதை மருந்தும் கொடுக்கப் படவில்லை. ஆனால் அவள் மயக்கத்தில் இருந்ததை பயன்படுத்தி யாராவது அவனைக் கொலை செய்திருப்பார்களா? ஆனால் அந்த வீட்டிலேயே அவர்களைத் தவிர யாரும் இருந்தது போலத் தடயம் இல்லையே'

இனி இறந்தவன் வந்து சொல்ல வேண்டும் இல்லையென்றால் அறிவழகி உண்மையைச் சொல்ல வேண்டும். பெருமூச்சை விட்டவன் அவளை ஏக்கமாகப் பார்த்த படி வெளியே வந்தான்.

ஜெயிலர் அவர்களுக்காகக் காத்து கொண்டிருக்க "அவ கழுத்துல இருந்து தாலியை மட்டும் கழட்டாம பாத்துக்கோங்க ப்ளீஸ்" என்றவன் சென்று விட ஜெயிலர் அவசரமாக உள்ளே சென்றார்.


அறிவழகியோ தன் கழுத்தில் தொங்கிய தாலியை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
 

Asha Evander

Moderator
அத்தியாயம் 2

முகிலன் தான் தங்கியிருக்கும் காவலர் குடியிருப்புக்கு வந்து விட்டான். அறிவழகியை சந்தித்த பின் அவனால் மற்ற வேலைகளில் கவனம் செலுத்த முடியாமல் போகவே அரை நாள் விடுப்புடன் அவனின் வீட்டிற்க்கு வந்து விட்டான்.

குளித்து விட்டு உடையை மாற்றி வெளியே வரவும் அவனின் அலைபேசி சிணுங்கியது. எடுத்து பார்த்தவன் கைகள் சலிப்புடன் அதை ஆன் செய்து காதில் வைத்தது.

“சொல்லுங்க அப்பா, எப்படி இருக்கீங்க? அம்மா நல்லா இருக்காங்களா?” முகிலனின் கேள்விக்கு அந்த பக்கம் அமைதி காத்தது.

“லைன்ல இருக்கீங்களாப்பா?”

“நீ எப்போ கல்யாணம் பண்ண போற முகி? இன்னைக்கும் ஜானகியோட அப்பா நிச்சயத்துக்கு நாள் குறிச்சிட்டு போக கேட்டு வந்தார். வர்ற திங்கட்கிழமை உனக்கும் ஜானகிக்கும் நிச்சயதார்த்தம். ஒழுங்கா வீட்டுக்கு வரும் வழியை பாரு” முகிலனின் கேள்விக்கு கூட பதில் இல்லை.

அதை உணர்ந்தவன் போல தன் தந்தையின் குரலில் இருந்த அழுத்தத்தை விட அதிக அழுத்தத்துடன் முகிலனின் குரல் ஒலித்தது.

“என் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் உரிமையை நான் உங்களுக்கு கொடுத்ததா எனக்கு நியாபகம் இல்லையேப்பா. நான் அப்போ சொன்னது தான் உங்க ஸ்டேட்டஸ் பார்த்து என்னால் அவளை கல்யாணம் பண்ண முடியாது. என் வாழ்க்கையில் ஒரே ஒரு காதல் தான். அது என் அழகிக்கு மட்டும் தான் சொந்தம். மறுபடியும் இந்த பேச்சை எடுத்தா இதுவரைக்கும் வீட்டுக்கு மட்டும் வராம இருக்கும் நான் இனி உங்க உறவே வேண்டாம்ன்னு முடிவு எடுக்க வேண்டி இருக்கும்”

“முகி யாரோ ஒருத்திக்காக பெத்த அம்மா, அப்பாவையே தூக்கி போடுவியா நீ?” அவர் குரல் கர்ஜித்தது.

முகிலனுக்கா அவரை பற்றி தெரியாது. ஒரு மாவட்டத்தையே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த ஆட்சியர் அல்லவா அவர்!

மிஸ்டர்.விஷ்வநாத், மாவட்ட ஆட்சியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். அவரின் மனைவி தமயா பள்ளி தலைமை ஆசிரியை.

“நீங்க என்னோட காதலை பிரிக்க என்ன எல்லாம் பண்ணுனீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்ப்பா, அழகியோட அம்மாகிட்ட போய் பேசி அவளுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வச்சது கூட எனக்கு தெரியும். உங்க பையன் நான் உங்களை விட கேடியா தான் இருப்பேன். ஆனால் ஒரு விஷயம் நீங்க யோசிக்கவே இல்ல. உங்க பையனோட பொண்டாட்டியை தான் இன்னொருத்தனுக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்க. ஹவ் சீப் யூ ஆர்?” அவன் அவருக்கு மேல் கத்தினான்.

“முகி, வாட் த ஹெல்? அந்த கொலைகாரி உன் பொண்டாட்டியா? என் மருமகளா வரவும் ஒரு தகுதி வேணும். அப்போவே அவளை உன்கிட்ட இருந்து பிரிக்க தெரிஞ்ச எனக்கு இப்போ ஒன்னும் பண்ண முடியாதா என்ன? திங்கட்கிழமை நீ இங்க இருக்கணும். உனக்கும் ஜானுவுக்கும் வர முகூர்த்தத்தில் கல்யாணம்” என்றவர் தன் பேச்சு முடிந்தது என்பது போல் அழைப்பை துண்டித்தார்.

முகிலனின் மனம் எரிமலையாய் கொதித்தது.
‘எவ்வளவு தைரியம் என் அழகியை இவர் என்கிட்ட இருந்து பிரிச்சிடுவாரா?’

ஒருமுறை அவளை விட்டு பிரிந்ததால் பட்ட வேதனையை மறுபடியும் அவன் அனுமதிப்பானா என்ன?

தலை வலித்தது அவனுக்கு. பிளாக் காபி தயாரித்து கப்பில் ஊற்றி அதை எடுத்து கொண்டு ஹாலில் வந்து அமரும் நேரம் மீண்டும் அலைபேசி ஒலித்தது.

"கடவுளே! இன்னைக்குன்னு பார்த்து இத்தனை டிஸ்டபர்ன்ஸ்” என்று புலம்பியவன் அழைப்பை எடுத்து காதில் வைக்கவும் “ஹலோ” என்று தேன் குழைத்த குரல்.

“ஹு இஸ் திஸ்?”

அவனின் கேள்வியில் அந்த பக்கம் பெரும் அமைதி.

அது முகிலனுக்கு இன்னும் எரிச்சலை கூட்ட, “போன் பண்ணினா பேச தெரியாதா மிஸ்? உங்களுக்கு வேலை வெட்டி இல்லாமல் இருக்கலாம். ஆனா எனக்கு நிறைய வேலை இருக்கு” என்றவன் அழைப்பை துண்டிக்க போக,

“முகி நான் ஜானகி” என்ற குரலில் மிதமிஞ்சிய எரிச்சல் தான் அவனுக்கு.

“ஹ்ம் சொல்லுங்க”

“அது.. நம்ம மேரேஜ்.. மாமா” என்று துண்டு துண்டாக பேசவும் மொத்த பொறுமையும் போனது அவனுக்கு.

“மிஸ் ஜானகி கல்யாணத்தை பற்றி சொன்ன உங்க மாமா எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சுன்னு சொல்லலையா? ஆனா பாருங்க உங்களுக்கு ரெண்டாம் தாரமாக வர விருப்பம் இருக்கலாம். ஆனா நான் ஏக பத்தினி விரதன். எனக்கு என்னோட அழகி மட்டும் தான் எப்போவும் மனைவி. இதை உங்க மாமா புரிஞ்சிக்கல. நீங்களாவது புரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்க” என்று கூறி அழைப்பை துண்டித்து விட்டான்.

அந்த பக்கம் ஜானகி பிரம்மை பிடித்தவள் போல் அமர்ந்திருந்தாள். முகிலனை முதல் முறை பார்த்த போதே அத்தனை பிடித்தது அவளுக்கு. அவனுக்கும் அவளுக்கும் கிட்டதட்ட எட்டு வயது வித்தியாசம். ஆனாலும் அவனுக்காக மட்டுமே இந்த திருமணத்திற்கு சம்மதித்தாள். இன்று அவன் இன்னொருத்தியை தன் மனைவி என்று சொன்னதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

அவளையே பார்த்து கொண்டிருந்த அவளின் தந்தை ராகவ் அருகில் வர அவரின் தோளில் சாய்ந்து கொண்டாள்.

“என்னாச்சு ஜானு?”

“அவருக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு சொல்லுறார்ப்பா” கண்களில் கண்ணீர் வழிய குரலில் அத்தனை ஏக்கம்.

அவளின் மனநிலை புரியாதவரா ராகவ்? அவளின் தலை கோதியவர் “முகிலனுக்கு இன்னும் கல்யாணம் ஆகல ஜானு. அவர் ஒரு பெண்ணை ரொம்ப காதலிச்சார். ஆனா இப்போ அந்த பொண்ணு தன்னோட புருஷனையே கொலை பண்ணிட்டு ஜெயிலில் இருக்கா. காதல் வலி ரொம்ப பெருசு தான். முகிலனோட வலிக்கு நீ மருந்தா இரு, அவர் உன் வழிக்கு வந்துடுவார்” என தேற்ற ஜானுவுக்கு அப்போது தான் நிம்மதியாக இருந்தது.

ஆனால் அந்த காவல் காரனின் உறுதி இவர்கள் யாருக்கும் தெரியாதே.

முகிலன் கட்டிய தாலியையே வெறித்து பார்த்து கொண்டிருந்தாள் அறிவழகி. அவளால் இன்னும் அவனின் மனைவி ஆனதை நம்ப முடியவில்லை. எத்தனை வருட காத்திருப்பு இது! ஆனால் இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் அவளின் வாழ்விற்கு உத்திரவாதம் இல்லாத நிலையில் இந்த உறவு தேவையா என்று மனம் கேட்டது. ஆனாலும் மனதின் ஓரம் ஒரு சந்தோஷம்.

பெண் ஜெயிலரும் அவளைத் தான் பார்த்து கொண்டிருந்தார். முகிலன் சொல்லி விட்டு போன காரணத்தினால் அவளை தனியாக விட அவருக்கும் மனம் இல்லை. எஸ்.பி சாரின் உறவு என்பதாலோ அல்லது அவளின் அப்பாவிதனத்தை கண்டு கொண்டதாலோ என்னவோ அறிவழகியை அவர் கொலை செய்தவளாக பார்த்தது இல்லை.

“அறிவழகி”

அவரின் குரலில் சட்டென எழும்ப முயற்சித்தவளை “ஹேய் பார்த்து எழும்பு, இப்போ உன் நிலமை உனக்கு நியாபகம் இருக்கா இல்லையா?” என கடிந்து கொண்டவர் அவள் எழும்ப உதவி செய்தார்.

“சாரி மேடம்”

“இட்ஸ் ஓகே, எஸ்.பி சார் உன்னை கொஞ்சம் கவனமா பார்த்துக்க சொல்லிட்டு போனார். இப்போ மேடம் அவரோட மனைவி வேற” சிரிப்புடன் சொல்ல அறிவழகிக்கு அந்த வார்த்தையில் நாணம் வந்தது.

“ஓ.. வெட்கமா?”

“இல்ல மேடம்”

“உன்னை பார்த்தா கொலை செஞ்சவ மாதிரியே இல்ல அறிவழகி. ஆனா நீ எப்படி வாக்குமூலம் கொடுத்திருக்க?”

“தெரியல மேடம். நான் தான் பேசிருக்கேன் அதுவும் போலீஸ் கிட்டயே சொல்லிருக்கேன். ஆனா இதெல்லாம் எப்படி நடந்துச்சுன்னு தான் எனக்கு நியாபகம் இல்ல”

“நீ பேசினது ஆடியோவா இல்லை வீடியோவா அறிவழகி?”

“ஆடியோ தான் மேடம், ஆனா பேசினது நான் தான். வார்த்தையில் ஒரு தடுமாற்றமும் இல்லாமல் பேசிருக்கேன். எனக்கே கோர்ட்ல அதை சாட்சியா எடுக்கும் போது தான் தெரிஞ்சது”

“ஏதோ தப்பா இருக்கே அறிவழகி. பொதுவாக வாக்குமூலம் கொடுக்கும் போது வீடியோ எடுப்பாங்களே. அதுவும் முதல் ஹியரிங்லயே உனக்கு ஏழு வருஷம் தண்டனை எப்படி கொடுத்தாங்க? யாரோ பெரிய ஆள் இன்வால்வ் ஆகி இருக்காங்க. முகிலன் சார் கிட்ட எல்லாத்தையும் சொன்னா தான் இப்போ பண்ணிருக்க மேல் முறையீட்டில் உன்னை காப்பாற்ற முடியும். இல்லைன்னா அடுத்த ஏழு வருசம் உனக்கு ஜெயில் தண்டனை தான்”

“மேடம் எனக்கே ஒன்னும் நியாபகம் இல்லையே.”

“யோசி அறிவழகி, எங்கேயோ ஒரு இடத்தில் நீயும் தவறியிருக்கலாம்” என்றவர் அவளை கவனமாக இருக்க சொல்லி விட்டு தன் வேலையை பார்க்க சென்றார்.

அவர் சென்ற பின் அன்று நடந்த நிகழ்வுகளை நினைவு படுத்தி பார்த்தாள் அறிவழகி.

கொலை நடந்த தினம் தான் அவளின் திருமணம் கதிர்வேலனுடன் முடிந்திருந்தது. அவளின் விருப்பம் இல்லாத திருமணம். தாயின் பேச்சை கேட்டு அவளின் தந்தையோ மகளின் உணர்வுகளை கொன்று அந்த திருமணத்தை நடத்தி முடித்திருந்தார். கதிர்வேலன் அவர்கள் இருந்த ஊரில் விவசாயம் செய்து கொண்டிருந்தான். பெரிய குடும்பம் தான் அவனுடையது. ஆனால் அத்தனை சொத்திற்கும் அவன் மட்டுமே வாரிசு. அவர்கள் குடும்பத்தில் இருந்த மற்றவர்கள் யாருக்கும் குழந்தை பாக்கியம் இல்லை. யார் செய்த பாவமோ?

மகளின் பேச்சை கேளாமல் இரண்டே நாளில் ஊர் கூட்டி அவளை தாரை வார்த்து கொடுத்திருந்தார். கணேசன் - வள்ளி தம்பதியருக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவள் அறிவழகி, இரண்டாமவள் தாமரை.

தாமரை பால் வண்ண அழகி. அவளின் அழகு மேல் கதிர்வேலனுக்கு எப்போதும் ஒரு மயக்கம் உண்டு. ஆனால் தாமரைக்கு அவனின் கெட்ட பழக்கங்கள் அனைத்தும் தெரியும் என்பதால் தன்னால் ஒரு குழந்தைக்கு தாயாக முடியாது என்று பொய் கூறி அவனை மறுத்து விட்டாள். கடைசியில் அவனிடம் போய் மாட்டியது அறிவழகி தான்.

திருமணம் முடிந்த இரவு தங்கள் அறைக்குள் பால் சொம்புடன் வந்தவளை ஒரே இழுப்பில் தன்னருகே நிற்க வைத்தான் கதிர். பால் சிந்தாமல் மேசையில் வைத்தவளுக்கு அவன் தொட்ட இடம் அருவருத்தது. புழுவாய் நெளிந்து கொண்டிருந்தாள். அவளின் அருவருப்பை அவனும் கண்டுக் கொண்டான்.

“என்னடி நான் தொட்டா மட்டும் நெளியுற? அன்னைக்கு மோட்டார் ரூமில் அந்த முகிலன் தொட்டப்போ உருகி போய் நின்னியே, என்ன எல்லாம் முடிஞ்சிடுச்சா?” என்று ஒரு மாதிரியாக கேட்டவனின் கேள்வியில் திகைத்து அவனை பார்த்தாள்.

“என்ன பாக்குற இவனுக்கு எப்படி தெரியும்னா? நான் தான் உன் பின்னாடியே ரொம்ப நாளாக சுத்திட்டு இருக்கேனே. அதுவும் அன்னைக்கு அவன் கூட ஒண்ணா ரெண்டு பேரும் பின்னி பிணைஞ்சு இருந்ததைப் பார்த்தப்போ என்ன ஒரு சீன் வாவ்! அப்போவே நினைச்சேன்டி அவன் கிட்ட இருந்து உன்னை பிரிக்கணும்னு. இப்போ என்ன அவன் உனக்கு கத்து கொடுத்ததை நீ எனக்கு சொல்லி கொடு” என்று அவளின் முந்தானையை இழுக்க “ச்சீ” என்று அவனை தள்ளி விட்டிருந்தாள் அழகி.

"என்னடி ஓவரா ஒதுங்குற? உனக்கு நான் ச்சீயா? அவன்னா இனிக்குதோ?”

“அவர் என் புருஷன்டா. அவருக்கு என்னை கொடுத்ததில் ஒரு தப்பும் தெரியல. ஆனா நீ இப்போ எச்சில் இலைக்கு ஆசைப்படுற. என் விருப்பமே இல்லாம கட்டாயப்படுத்தி உனக்கு கட்டி வச்சதும் உனக்கு அடங்கி போவேன்னு நினைச்சியா? நான் முகிலன் பொண்டாட்டிடா. எப்படியும் இன்னும் ரெண்டு நாளையில் அவன் வந்துடுவான் அப்புறம் இருக்கு உனக்கு கச்சேரி” என்றவள் கீழே அமர போக அவள் தலைமுடியை பிடித்து இழுத்தான் கதிர்.

வலியை பொறுத்து கொண்டு அவனை முறைத்தாள் அறிவழகி.

“உன்னை மடக்கி காட்டுறேன்னு என் பிரெண்ட்ஸ்கிட்ட சவால் விட்டுட்டேன். நானோ அடங்காதவன். எனக்கும் பொண்டாடின்னு ஒருத்தி, நான் ஆண் தான்னு நிரூபிக்க ஒரு வாரிசு, அவ்ளோ தான் வேணும். இந்த ஊருல தெரிஞ்சவன் எவன் எனக்கு பொண்ணு தருவான்? உன் வீட்டுல உன்னை கல்யாணம் பண்ணி பாக்க ஆசைப்பட்டு என்னை பத்தி தெரிஞ்சும் கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க. ஒழுங்கா வாடி, எவன் வர்ரான்னு நானும் பாக்குறேன்" என்று அவளின் கையை பிடித்து இழுக்க மொத்தமாய் அவனின் மேல் விழுந்தாள் அவள்.

“விடுடா” என்று அவள் திமிறி அவனின் கரத்தை கடிக்க ஓங்கி கன்னத்தில் அறைந்தான். பொறி கலங்கியது அவளுக்கு.

கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோட தீயாய் எரிந்த கன்னத்தை பற்றி கொண்டு அவனை பார்க்க மீண்டும் ஒரு அறை. தடுமாறி விழுந்தவளை தூக்கி பிடித்தவன் அவளின் பின்னங்கழுத்தில் அழுத்தம் கொடுத்து தட்ட சரிந்து விழுந்தாள். அடுத்து நடந்த எதிலும் அவள் சம்மதம் கேட்கப்படவில்லை. ஆனால் அவள் களவாடப்பட்டாள்.

வலி! வலி! வலி மட்டுமே அன்றைய நாளாக இருந்தது. உணர்வுகள் மரத்து அவனின் ஆவேசத்திற்கு பலியாகி அன்றைய நாளை இன்னமும் அவளால் மறக்க முடியவில்லை. அவனின் ஆவேசம் முடிந்ததும் கத்தினாள். அடிவயிற்றில் வலியெடுக்க கதறினாள். அவனோ அவளை சுவாரசியமாக பார்த்து கொண்டு அவள் கொண்டு வந்த பாலை பருகினான். அப்படியே தூங்கியும் விட்டான். அடுத்த நாள் காலையில் அவள் கண்டது உயிரில்லாத அவனின் உடலை தான். அவனின் வாயில் இரத்தம் வர அந்த இரத்தத்தின் சுவடு அவளின் கையிலும் இருந்தது.

அதிர்ந்து அவனை விட்டு நகர ஒரு வித வாசனையால் மீண்டும் மயக்க நிலை. ஆம் அன்று அவர்கள் அறையில் ஒரு வித வாசனை புதிதாக இருந்தது. என்னவென்று அவள் உணரும் முன்பே ஆழ்ந்த மயக்கத்திற்கு சென்று விட்டாள்.

அடுத்த நாள் காலையில் அவள் விழித்தது காவல் நிலையத்தில் தான். அதிலும் அவளின் வாக்குமூலம் வேறு இருக்க ஒரே வாரத்தில் அவளின் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு ஏழு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது.

‘அந்த வாசனை திரவியம் எப்படி அங்கே வந்தது?’

‘அவர்கள் அந்த அறைக்குள் இருந்த வரை அப்படி எதுவும் வாசம் வரவில்லையே. அவர்களை தவிர அந்த வீட்டில் யாரும் இல்லவும் இல்லை. ஆனால் அதன் பிறகு வந்திருக்கிறார்கள். யாராக இருக்கும்? எப்படி நிரூபிக்க போகிறேன்? அந்த வாசனை திரவியத்தை எங்கே போய் கண்டு பிடிப்பது?’

தலை வலிக்க அப்படியே சாய்ந்து அமர்ந்தாள். ஒரே நாள் இரவு அவளின் வாழ்க்கையில் எத்தனை பெரிய மாற்றத்தை கொண்டு வந்து விட்டது.

முகிலனிடம் அந்த வாசனையை பற்றி சொல்ல வேண்டும். இன்னும் இரண்டு வாரத்தில் அவள் கோர்ட் கொண்டு செல்ல படுவாள். ஆதாரம் இல்லாமல் எப்படி நிரபராதி என்று நிரூபிப்பது?

‘எல்லாம் முகி பார்த்துக் கொள்வான். முதலில் அவனிடம் நடந்ததை சொல்லணும்’ என்றவள் ஜெயிலரிடம் சொல்லி விட்டு முகிலன் வரும் நேரத்திற்காக காத்திருந்தாள்.

அதேநேரம் முகிலனின் வீட்டிற்கு முன் அழைப்பு மணியை அழுத்தி விட்டு அவனுக்காக காத்துக் கொண்டிருந்தாள் ஜானகி.
 

Asha Evander

Moderator
அத்தியாயம் 3

அழைப்பு மணியின் சத்தத்தில் எரிச்சலுடன் வந்து கதவை திறந்தான் முகிலன். இன்று அவனின் கர்ஜனைக்கு பலியாக போவது தெரியாமல் அவனை பார்த்து புன்னகைத்தாள் ஜானகி.

“சொல்லுங்க யார் நீங்க?” அவளை பார்த்திருந்தும் தெரியாத நபர் போல் கேட்க, ஜானகி விழித்தாள்.

“எதுவும் கேஸ் பத்தினா நாளைக்கு எஸ்.பி ஆபீஸ் வாங்க” என்று அவன் கதவை மூடும் போது தான் ஜானகிக்கு நினைவு வந்தது போல் “முகி” என்று அழைத்தாள்.

“கால் மீ முகிலன்”

“நான் ஜானகி. நம்ம கொஞ்சம் பெர்சனலா பேசலாமா?”

“சாரி மிஸ்.ஜானகி, யாருன்னு தெரியாதவங்ககிட்ட என்ன பெர்சனல் பேச்சு பேச முடியும்? அதுவும் இன்னைக்கு எனக்கு பயங்கர தலைவலி. கேஸ் விசயங்கள் எதுவும்னா நாளைக்கு பார்க்கலாம்” என்றவன் கதவை மூட போக சட்டென தன் கையை கதவிற்கு இடையில் வைத்தாள்.

“பிளீஸ் முகி, டென் மினிட்ஸ்”

“ப்ச், சொன்னா புரியாதா? என்ன பேசணும்?” அவன் குரலில் அத்தனை கோபம்.

“நீங்க அன்னைக்கு எதுக்காக பொய் சொன்னீங்க முகி? அதுவும் இன்னொருத்தர் மனைவியை உங்க மனைவின்னு சொல்லுறது தப்பு தானே? அவங்க இப்போ ஜெயில்ல கொலைக்கார பட்டத்தோட இருக்கும் போது உங்க வாழ்க்கையும் உங்க காதலுக்காக எதுக்காக அழிக்கணும்? நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம். கண்டிப்பா உங்களுக்கு என்னை ஏற்றுக் கொள்ள நாள்கள் ஆகும். அதுவரை நண்பர்களா இருந்து உங்க மனசு மாறின அப்புறம் நம்ம வாழ்க்கையை தொடங்கலாம்”

“வேற என்ன?” அவனின் குரலில் பாயப் போகும் புலியின் சீறல்.

“முகி, எனக்கு உங்களை முதன் முதலில் பார்த்ததுல இருந்தே ரொம்ப ரொம்ப பிடிக்கும். நான் கண்டிப்பா நல்ல மனைவியா, காதலியா, தோழியா இருப்பேன்”

“எது? அடுத்தவ புருசனுக்கு தான் இந்த பதவியில் எல்லாம் இருப்பியா நீ?”

“முகி” ஜானகிக்கு கண்கள் கலங்கி விட்டது.

“இங்க பாரு ஜானகி, எனக்கு கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆக போகுது. சந்தர்ப்ப சூழ்நிலைகளால் என் மனைவி இன்னொரு கல்யாணம் பண்ண வேண்டியதா போச்சு. அதுவும் அது கட்டாய கல்யாணம். நான் முறைப்படி எங்க கல்யாணத்தை ரெஜிஸ்டர் பண்ணிருக்கேன். அப்போ நான் இப்போவும் சட்டபடி அறிவழகியின் கணவன் சரி தானே? அவ கொலை பண்ணிட்டான்னு நீங்க சொல்லுறது என்னால் நம்ப முடியாது. அதுக்காக பொண்டாட்டி ஜெயில்ல இருக்கான்னு இன்னொருத்தியை ரெண்டாம் தாரமாக கல்யாணம் பண்ணுற அளவுக்கு நானும் என் காதலும் கீழ் தரமானது இல்ல. புரிஞ்சிருக்கும்னு நினைக்குறேன். உன் அப்பா சொன்னாரு என் அப்பா சொன்னாருன்னு மறுபடியும் என்கிட்ட வந்து நிற்காத. எப்பவும் என் பொண்டாட்டியை கொலைகாரி சொல்லுறாங்கல அவங்க ரெண்டு பேரையும் இந்த கேஸ்ல நான் இன்வால்வ் பண்ணி விட்டுருவேன். ஒழுங்கா வேற வேலை இருந்தா பாரு” என்று அழுத்தமாக சொன்னவன் கதவை அறைந்து சாத்தி விட்டு உள்ளே சென்று விட்டான்.

ஜானகி தான் திக்பிரமை பிடித்தவள் போல் நின்றாள். மனம் அவன் வேண்டும் என்று கதறியது. இன்னொரு புறம் அவன் சொன்னது போல தன் தந்தையையும் இந்த வழக்கில் இழுத்து விட்டு விடுவானோ என்ற பயம் வந்தது.

‘என்னை விட அழகா அந்த அறிவழகி? நான் எந்த விதத்தில் குறைந்து போனேன்?’ அவளின் மனதில் தானாக ஒரு பொறாமை உணர்வு வர கதவையே வெறித்து பார்த்தவள் ஒரு முடிவுடன் கிளம்பினாள்.

அவள் எடுத்த முடிவு எத்தனை பேரின் வாழ்வை சிதைக்க போகிறது என்பதை அவள் காலம் கடந்து தான் அனுபவிக்க போகிறாள். அவள் சீண்ட போவது சிங்கத்தை என்பதை அறியாமல் போனது அவளின் துரதிருஷ்டம்.

முகிலனுக்கு அன்றைய நாள் நல்லதாகவே அமையவில்லை போலும். ஒருபக்கம் அவனின் தந்தை, இன்னொரு பக்கம் ஜானகி. அனைத்தையும் விட அடுத்த இரண்டு வாரத்தில் வரும் விசாரணையில் அவனுக்கு சிறு ஆதாரமாவது அறிவழகி நிரபராதி என நிரூபிக்க வேண்டும். சிறிய துப்பு கிடைத்தாலும் அதை கொண்டே வாய்தா கூட வாங்கி விடுவான். மனதின் ஓரம் உறுத்தி கொண்டே இருக்க அடுத்த அழைப்பு அலைபேசியில் வந்தது.

அய்யோ என்றானது அவனுக்கு. இன்றைய தினமா இத்தனை அழைப்புகள் வந்து அவனை கஷ்டப்படுத்த வேண்டும். ஆனாலும் மனதின் குமுறலை ஒரு காவல் துறை அதிகாரியாக வெளிப்படுத்தாதவன் அழைப்பை எடுக்க பெண் ஜெயிலர் தான் பண்ணியிருந்தார்.

“சொல்லுங்க மேடம், இந்த நேரம் மொபைல் யூஸ் பண்ண கூடாதுல”

“தெரியும் சார். நான் வெளில தான் இருக்கேன். பையனுக்கு உடம்புக்கு முடியலன்னு ரெண்டு மணி நேரம் பெர்மிஷன்”

“ஓகே மேம், சொல்லுங்க”

“இட்ஸ் வெரி இம்பார்ட்டன்ட் சார். இன்னைக்கு நீங்க அறிவழகியை பார்த்துட்டு போன அப்புறம் தான் அவ என்கிட்ட சொன்னா. அன்னைக்கு கொலை நடந்த நாள் அவங்க ரூம்ல ஏதோ வாசனை வந்திருக்கு. மயக்கம் தெளிந்த அறிவழகி மறுபடியும் ஆழ்ந்த மயக்கத்திற்கு போயிருக்கா. அண்ட் போலீஸ் அவகிட்ட வீடியோ வாக்குமூலம் எடுக்கவே இல்ல. வெறும் ஆடியோ வச்சு தான் சப்மிட் பண்ணிருக்காங்க. ஆனாலும் அவ எப்படி வாக்குமூலம் கொடுத்தான்னு தான் புரியல சார். டாக்டர் ரிப்போர்ட்ல எதுவும் அப்நார்மலா இல்லன்னு நினைக்குறேன். எப்படி அவளோட மயக்கத்தில் அவ வாக்கு மூலம் கொடுத்திருக்க முடியும் அதுவும் ஒரே வாரத்தில் ஜட்ஜ்மெண்ட். லாயர் கூட பின் வாங்கிட்டார் அப்படின்னு சொல்லிட்டு இருந்தா”

ஜெயிலர் சொல்லும் போது தான் அன்று அவர்களின் வழக்கறிஞர் ஒரு வித பதட்டத்துடன் பின் வாங்கியது அவனுக்கு நினைவுக்கு வந்தது.

‘நீதிமன்றத்தில் டாக்டர் கொடுத்த ரிப்போர்ட்டில் அவ நார்மல்ன்னு தானே இருந்துச்சு. அப்படி என்ன வகையான வாசனை திரவியம் அது? அது எப்படி அவர்களின் அறைக்குள் வந்திருக்கும். ஃபாரன்சிக் கூட அன்று வித்தியாசமாக எதுவும் கண்டுபிடிக்கவில்லையே? நிஜமான விசாரணை தானா இது? இல்லையென்றால் அனைத்தும் அவளை மாட்ட வைக்க பின்னப்பட்ட சதியா?’

எதற்கும் முதலில் அந்த மருத்துவரை போய் சந்திக்க வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டான்.

இன்னும் ஜெயிலர் அவனின் அலைபேசியில் இணைப்பில் இருந்தது நியாபகம் வர “தேங்க்ஸ் மேடம், நான் விசாரிக்குறேன். நீங்க அழகியை கொஞ்சம் கவனிச்சிக்கோங்க” என்று கூற அவரும் சரியென்று அழைப்பை துண்டித்தார்.


தன் அழகியை சீக்கிரம் காப்பாற்ற போவதாக அவனின் மனம் குதூகலிக்க விதியோ அவ்வளவு சீக்கிரம் விட்டு விடுவேனா என அவனை பார்த்து சிரித்தது.

சந்திரபுரி ஊர். அந்த பெரிய மாளிகை விழாத் தோற்றத்துடன் அலங்கார மாளிகையாக ஜொலித்தது. கணேசன்-வள்ளி தம்பதியரின் இரண்டாவது மகள் தாமரையின் திருமண நிச்சயதார்த்தம் தான் மிகப் பிரமாண்டமாக நடக்கவிருக்கிறது.

“வள்ளி சீக்கிரம் தாமரையை ரெடி ஆக சொல்லு. இன்னும் கொஞ்ச நேரத்தில் மாப்பிள்ளை வீட்டில் இருந்து எல்லாரும் வந்துடுவாங்க. சமையல் எல்லாம் ரெடியா இருக்கான்னு ஒரு முறை சரி பார்த்திடு” என்றவர் மாப்பிள்ளை உபசரிப்பிற்கு அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று பார்த்து கொண்டார்.

“இதோ சொல்லுறேங்க” என்ற வள்ளி தன் ஒல்லி உடம்பை வளைக்காமல் அன்ன நடை நடந்து மகளின் அறைக்குள் சென்று பார்க்க தாமரை ஜொலித்த வண்ணம் இருந்தாள்.

“என் கண்ணே பட்டுடும் போல இருக்கு தாமு” என்று திருஷ்டி கழிக்க “அம்மா” என்று சிணுங்கினாள் தாமரை. அந்த வீட்டின் கடைசி வாரிசு. அனைவரின் செல்லப் பிள்ளை அவள்.

“கிரிஷ் வந்துட்டாரா அம்மா?”

“இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துடுவாங்க தாமு. அதனால் தான் நீ ரெடியான்னு பார்க்க வந்தேன்” என்ற வள்ளி அவளின் கன்னம் கிள்ளி விட்டு வெளியே வந்தாள்.

தாமரையின் முகம் செவ்வானமாய் சிவந்து இருந்தது. முதன் முதலில் கிரிஷ் அவளின் கன்னத்தை இப்படி தானே கிள்ளி முத்தமிட்டான்.

கனவில் மிதந்தவள் தன் தோழிகள் கலாய்க்கவும் சிறிது வெட்கத்துடன் அவர்களை முறைத்தாள்.

“போதும் போதும்டி. இவனுக்காக எவ்ளோ ரிஸ்க் எடுத்திருக்கேன் தெரியும்ல”

“அது தான் உன் குடும்பமே உனக்கு சப்போர்ட் ஆக இருக்கே. இதுக்கு மேல என்ன வேணும்? ஒரு காலமும் உண்மை வெளியில் வர போவது இல்ல. என்ஜாய் யூர் லைஃப் வித் யூர் லவ் தாமரை” தோழி ஒருத்தி சொல்லவும் தாமரையின் முகமும் மலர்ந்தது.

சிறிது நேரத்தில் கிரிஷ் குடும்பத்துடன் வரவும் நிச்சயதார்த்த விழா தொடங்கியது.

தாமரையும் கிருஷ்ணாவும் அருகருகில் அமர்த்தபட்டு நிச்சய பத்திரிக்கை வாசித்து தாம்பூலம் மாற்ற பட்டது.

தாமரை முகம் விகசிக்க கிரிஷ் முகத்தை பார்க்க அவனும் மலர்ச்சியுடன் அவளை பார்த்தான். இருவரையும் மோதிரம் மாற்ற சொல்ல “ஐ லவ் யூ அறிவு, வில் யூ பீ மை பெட்டர் ஹாஃப் ஃபார் எவர்?” என்று அவளின் விரல் பற்றி கேட்டான்.

அவன் சொன்ன பெயரில் ஒரு நொடி ஸ்தம்பித்தவள் “எஸ் கிரிஷ், லவ் யூ டூ” என்று தன் விரலை நீட்டினாள்.

இருவரும் மோதிரம் மாற்றவும் தன் வெற்றி களிப்பை தந்தைக்கு கண்களால் கடத்தியவள் குரலில் எதையோ சாதித்த உணர்வு.

“கிரிஷ், இன்னும் நம்ம கல்யாணத்துக்கு பதினைந்து நாள்கள் தான் இருக்கு. எப்போ அமெரிக்கா போக டிக்கெட் போட்டுருக்கீங்க?”

“கல்யாணம் முடிஞ்சு ஒரு மாசத்தில் நாம கிளம்பிடலாம் அறிவு. உன் தங்கச்சி பண்ணின தப்புக்காக உன்னை வச்சு எத்தனை நாள் தான் பேசுவாங்க? உன்னை நான் ராணி போல பார்த்துப்பேன். கதிர் கூட நடந்த கல்யாணத்தை ஏதோ திருஷ்டி கழிஞ்ச போல நினச்சிக்கோ. அவன் உனக்கு கொஞ்சமும் தகுதி இல்லாமல் உன் தங்கையை கூட்டிட்டு ஓடினவன். நமக்கான வாழ்க்கை பரந்து விரிந்து இருக்கு. நாம வாழணும்” என்றவன் அவள் உள்ளங்கையில் அழுத்தம் கொடுத்தான்.

அவன் பேசியதை கேட்க கேட்க தாமரைக்கு உள்ளம் எரிந்தது. தன் காதலுக்காக, அறிவழகியை காதலித்தவனை தன் கணவனாக்கி கொள்ள அறிவழகியின் கணவன் கதிர்வேலன் தாமரையுடன் ஓடி விட்டதாக பொய்யை கிளப்பி விட்டவள் தங்கள் பிறந்த ஊரை விட்டு யாருக்கும் தெரியாத இந்த ஊருக்கு வந்து குடியேறி, அறிவழகியை போல முகத்தை முக மாற்று அறுவை சிகிச்சை செய்து மாற்றி கொண்டவள் கிருஷ்ணாவின் காதலையும் பெற்றுக் கொண்டாள்.

ஆறு மாதங்களாக அவனை வெறுப்பது போல நாடகமாடி அவனும் கெஞ்சி இப்போது இந்த திருமணத்தை நடத்தும் அளவிற்கு கொண்டு வந்து விட்ட சாமர்த்தியம் தாமரையை தவிர எவருக்கும் வராது.

இன்னும் பதினைந்து நாள்கள். திருமணம் முடிந்து விட்டால் அவனின் குடுமி அவளின் கையில். நினைத்தது போல ஆட்டி விடலாம் என்று கணக்கு போட்டு கொண்டிருந்தாள். அதற்கு அவளின் பெற்றோரும் உடந்தை.

கிரிஷ் காதலுடன் அவளை பார்க்க, அவனுக்கு குறையாத காதலுடன் அவனை பார்த்தவள் “கிரிஷ் இன்னைக்கு நைட் சின்ன பார்ட்டி வெளில ஃப்ரெண்ட் வீட்ல தான். தனியா போக கொஞ்சம் பயமா இருக்கு. துணைக்கு வரீங்களா?” என்று கேட்க சந்தோஷமாக தலை அசைத்தான் கிரிஷ்.

"நைட் ஒன்பது மணிக்கு நம்ம மசாலா கஃபே பக்கத்தில வெயிட் பண்ணுவேன். வந்து பிக் அப் பண்ணுங்க. கார்ல தான் வரணும்” என்று அன்பு கட்டளை இட்டாள்.

“சுயர் அறிவு. நீ சொல்லி அங்க அப்ஜெக்ஷன் இல்லவே இல்ல” என்றவன் அவள் கரம் பிடித்து பக்கத்தில் இருந்த அறைக்குள் செல்ல புரிந்தவள் சிரிப்புடன் அவன் பின்னால் சென்றாள்.

“வெட்கம் ஒன்னும் வரலையா உனக்கு?”

“நான் உன்னை காதலிக்கிறேன் கிரிஷ்”

“அறிவு” அவன் இழைய,

அந்த பெயரில் கடுப்பானாலும் கண்மூடி அடுத்த நிகழ்வுக்காக காத்திருக்க அவளின் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டவன் “இதழ் முத்தம் எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான்” என்று நெற்றி முட்டினான்.

தாமரைக்கு பதட்டத்தில் வியர்த்தது. ஏதோ ஒரு நிகழ்வில் இவனை கட்டி போட்டால் தான் பிற்காலத்தில் விட்டு செல்ல மாட்டான். இப்போவே இத்தனை கண்ணியம் காப்பவன் உண்மை தெரிந்தால் ஒரு சேதாரமும் இல்லாமல் விட்டு சென்று விடுவான். ஆனால் தாமரையின் காதலின் நிலை?

பொய் சொல்லி காதலை பெற்றாலும் அவனை உயிருக்கு உயிராக காதலிப்பவள் அவள். அவனில்லாது அவளுக்கு ஒரு வாழ்வு இல்லையே. மீண்டும் தவறான பாதையை தான் தேர்ந்தெடுத்தாள் தாமரை.

முகிலன் மதிய உணவை உண்டு கொண்டிருக்க அவனின் அறைக்குள் அனுமதி கேட்டு வந்தான் கான்ஸ்டபிள் சத்யா.

“எஸ் சத்யா”

“சார் உங்களை பார்க்க உங்க அம்மா வந்திருக்காங்க”

“வர சொல்லுங்க” என்றவன் பொறுமையாக உணவை உண்டான்.

அவனின் செயலில் சிறிது அதிர்ந்த சத்யா பின் வெளியே சென்று தமயாவை உள்ளே அனுப்பி வைத்தான்.

“குட் ஆஃப்டர்நூன் மாம். இன்னைக்கு வேலைக்கு போகலையா? என்ன விஷயமா பார்க்க வந்திருக்கீங்க?”

“அம்மாகிட்ட பேசுற போலவா பேசுற முகி? யார்கிட்டயோ போல பேசுற”

“வந்ததும் மாம்னு தானே சொன்னேன். ஓகே தமிழ்ல அம்மான்னு சொல்லிடுறேன்”

“முகிலன்” பல்லை கடித்தார் அவர்.

“அம்மா இது உங்க வீடு இல்ல, எஸ்.பி ஆபீஸ். விசயத்தை சொல்லிட்டு கிளம்புங்க. இல்லனா நான் இன்னைக்கு ஈவினிங் கால் பண்ணுறேன்”

“ஓகே எஸ்.பி சார், நீங்க எப்போ வீட்டுக்கு வருவீங்கன்னு கேட்டுட்டு போக தான் வந்தேன். நாளைக்கு உங்களுக்கும் ஜானகிக்கும் நிச்சயதார்த்தம் நியாபகம் இருக்கா?”

“எனக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு நூறு தடவை உங்க கிட்ட சொல்லிட்டேன். ஒரே டயலாக் சொல்ல எனக்கே போர் அடிக்குது. சோ பிளீஸ் லீவ் மாம். டென்ஷன் பண்ணாதீங்க” என்றவன் சாப்பிட்டு கையை கழுவி விட்டு வெளியே சென்று விட்டான்.

தமயாவுக்கு முகத்தில் அடித்தாற்போல இருந்தது அவனின் செயல். அவனும் தெரிந்தே தான் செய்தான். அத்தனை கோபம் அனைவரின் மீதும் இருந்தது. திரும்ப திரும்ப ஒரே விஷயத்திற்காக பிடிவாதம் பிடிப்பது எரிச்சலை கிளப்பியது.


தமயா கிளம்பும் போதே அதை வெளியில் இருந்து பார்த்தவன் அடுத்ததாக அறிவழகிக்கு ரிப்போர்ட் கொடுத்த மருத்துவரை தேடி சென்றான்.
 

Asha Evander

Moderator
அத்தியாயம் 4

சிறுவாரூர் அரசு மருத்துவமனை வழக்கம் போல பரபரப்புடன் செயல்பட்டு கொண்டிருந்தது. எப்போதும் நோயாளிகள் அங்கே வந்து கொண்டிருப்பதால் சிரத்தையுடன் அனைவரும் செயல்படுவர். அவர்கள் அனைவரையும் கவனித்தபடியே வந்த முகிலன் டாக்டர். குரு மூர்த்தி அறைக்குள் அனுமதி கேட்டு நுழைந்தான்.

“என்ன ஆச்சு உடம்புக்கு?” என்று மருத்துவராக கேள்வி எழுப்ப,

“டாக்டர் நான் டிரீட்மெண்ட்காக வரல. ஒரு சின்ன என்குயரி. நான் முகிலன் எஸ்.பி” என்று தன்னை அறிமுக படுத்தி கொண்டான்.

சிறிது அதிர்ச்சி அடைந்தாலும் அதை காட்டி கொள்ளாமல் “எஸ் சார், ஹவ் கேன் ஐ ஹெல்ப் யூ?” என்று கேட்டார்.

“உங்களுக்கு இந்த கேஸ் நினைவிருக்கும்னு நம்புறேன் டாக்டர். ஏழு மாசத்துக்கு முன்னாடி ஒரு பொண்ணு தன்னோட புருஷனை விஷம் வச்சு கொன்னதா குற்றம் நிரூபிக்கப்பட்டு ஏழு வருஷம் சிறை தண்டனையில் இருக்கிறாங்க. ஆனா அன்னைக்கு அந்த பொண்ணுக்கு ஏதோ வாசனை வந்ததால் மயக்கம் வந்ததா அவங்க சொல்லுறாங்க. மயங்குற அளவுக்கு வாசனை வந்திருந்தால் ஏதோ ஒரு வகையில் அவங்களோட உடலில் அது பாதிப்பை ஏற்படுத்தி இருக்கணும். அண்ட் நீங்க நேர்ல அந்த பொண்ணை பார்த்து தான் அதுவும் அவள் சுயநினைவில் இருந்ததாக ரிப்போர்ட் கொடுத்துருக்கீங்க. எப்படி டாக்டர் மயக்கத்தில் இருந்த பெண் சுயநினைவோடு வாக்குமூலம் கொடுக்க முடியும்? கொஞ்சம் அதை தெளிவு படுத்தினால் நல்லா இருக்கும்”

முகிலன் பேச பேச குருமூர்த்திக்கு வியர்த்து வழிந்தது.

“சார் அது வந்து.. அப்போ அந்த பொண்ணு நல்லா பேசினாங்க. அதனால் தான் நார்மல் ரிப்போர்ட் கொடுத்தேன்”

“அப்படியா! ஆனா டாக்டர் அவங்க ரூம்ல இருந்து வெளில கொண்டு வரும் போது அந்த பெண் மயக்கமா இருந்ததுக்கு வீடியோ ஆதாரம் இருக்கு. அதே போல நீங்க விசாரணை முடித்து வெளியில் கொண்டு வரும் போதும் அவங்க மயக்கத்தில் தான் இருந்திருக்காங்க. இடையில் உங்க கிட்ட பேசும் போது மட்டும் எப்படி நல்லா பேசினாங்கன்னு தான் எனக்கு சந்தேகம் டாக்டர்”

ஒன்றும் அறியாதவன் போல கேட்க டாக்டர் பதட்டத்தில் விழித்தார்.

“டாக்டர், ஆர் யூ ஓகே?”

“எஸ் சார், ஐ ஆம் ஓகே”

“அப்போ உண்மையை சொல்லுங்க டாக்டர்ர்ர்” அழுத்தம் கொடுக்க,

“அந்த பொண்ணு உடம்பில் எதுவும் பிரச்சனை இல்ல சார். ஆனா அவங்க மயக்கத்தில் இருக்கும் போதே அவங்களுக்கு ஒரு ஊசி போட்டாங்க. அது என்னன்னு நான் கேட்டதுக்கு பதிலும் சொல்லல. கொஞ்ச நேரத்தில் அவங்க உடல் ரெஸ்பாண்ட் பண்ண ஆரம்பிச்சது. பெருசா இல்ல ஆனா அவங்க சொல்லுறத அந்த பொண்ணு திரும்ப சொல்லுச்சு. அப்புறம் கொஞ்ச நேரத்தில் திரும்பவும் மயங்கிட்டாங்க” குருமூர்த்தி சொல்ல,

“அப்போ உங்க கூட இருந்தது யார் எல்லாம்?” என்று கேட்டான் முகிலன்.

“இன்ஸ்பெக்டர், ரெண்டு லேடீஸ் அண்ட் ஒரு டாக்டர் என் கூடவே இருந்தாங்க. ரிப்போர்ட் மட்டும் தான் நான் கொடுத்தேன்” டாக்டர் பயந்து கொண்டே சொல்ல,

“நீங்க பண்ணின தப்பை உணரவே இல்லையா டாக்டர்? ஒரு பொண்ணோட வாழ்க்கையை அழிச்சிருக்கீங்க” முகிலனின் கண்கள் கோவத்தில் சிவந்தன.

“சார் பிளீஸ், அவங்க நீங்க நினைக்கிற போல ஈஸியான ஆளுங்க கிடையாது. ரொம்பவே பெருசா திட்டம் போட்டு மர்டர் பண்ணிட்டு பழியை அந்த பொண்ணு பேர்ல திருப்பி விட்டிருக்காங்க. எனக்கு தெரிஞ்சு உங்க லாயர் கூட பயந்து தான் பின்வாங்கி இருக்கலாம்”

“அந்த வாசனை எதுல இருந்து வந்திருக்கும்னு ஏதாச்சும் உங்களால் யூகிக்க முடியுமா டாக்டர்?”

“முடியல சார், அவங்க பேசின வார்த்தையே கொஞ்சம் தான். பிடிக்காத கல்யாணம் அதனால் அவனை பாலில் விஷம் கொடுத்து நான் தான் கொலை பண்ணினேன்னு தெளிவா பேசினாங்க. ஒரு டாக்டரா என்னால் உணர முடிந்தது அந்த பெண் ஒரு அப்பாவின்னு தான். ஆனால் எனக்கும் குடும்பம் இருக்கு சார். அதனால் தான் என் மனசாட்சியை கழட்டி வச்சிட்டு அப்படி ஒரு ரிப்போர்ட் கொடுத்தேன். இத்தனைக்கும் நான் அந்த பொண்ணை செக் பண்ண கூட இல்ல”

“ஓகே டாக்டர், இப்போ உங்களை விட்டுட்டு போறதும் நீங்க சொன்னத இனி கோர்ட்ல சொல்லி வேண்டி வரும்னு தான். இல்லனா இப்போவே உங்களை அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு போயிருப்பேன். இனியாச்சும் கொஞ்சம் மனசாட்சியோட இருங்க. உங்களுக்கு மட்டும் குடும்பம் இல்ல மத்தவங்களுக்கும் இருக்கு” என்றவன் அவர் பேசியதை அவருக்கே தெரியாமல் ரெகார்ட் பண்ணி விட்டு சென்றான்.

அவன் மனம் முழுவதும் யார் அந்த இரண்டு பெண்கள் மற்றும் அந்த மருத்துவர் என்ற நினைவே ஓடியது.

‘ஒருவேளை அறிவழகிக்கு எதிரிகள் யாரும் உண்டோ? இல்லையென்றால் கதிர்வேலன் சம்மந்தப்பட்ட நபர்களா?’

மனம் முழுவதும் எப்படியாவது அவனின் அழகியை குழந்தைபேற்றின் முன் வெளியே கொண்டு வர வேண்டும் என ஆசை கொண்டது. அவனின் உயிர் இந்த உலகத்தை வெளியில் இருந்து தான் பார்க்க வேண்டும். சிறையில் இருந்து அல்ல.

இந்த பிரச்சனையில் அவனின் தாய் தந்தையை மறந்திருந்தான். ஆனால் அடுத்த நாளே அவனை வைத்து பெரும் பிரச்சனையை உருவாக்கியிருந்தார் விஷ்வநாத்.

முகிலனின் இல்லத்தில் விஷ்வநாத்-தமயா தம்பதியர் சிறிது கலக்கத்துடனே வந்தவர்களை வரவேற்று கொண்டிருந்தனர். காரணம் அன்று தான் முகிலன்-ஜானகி நிச்சயதார்த்தம் நடக்கவிருந்தது. ஜானகி ஏற்கனவே தயாராகி முகிலனுக்காக காத்து கொண்டிருந்தாள். பெண் வீட்டில் நடக்கவிருந்த விழா முகிலனை காரணம் காட்டி விஷ்வநாத் தங்கள் வீட்டில் நடத்த வேண்டும் என்று கேட்டிருந்தார்.

அனைவரும் வந்து சேர இன்னும் முகிலன் வரவில்லை. ஜானகி வீட்டார், உறவினர்கள், முகிலனின் குடும்பத்தார் பதட்டத்துடன் இருக்க விஷ்வநாத் சபைக்கு நடுவில் வந்தார்.

“இங்க வந்திருக்க எல்லாருக்கும் வணக்கம். உங்களுக்கு சந்தேகம் வந்திருக்கலாம் என்னடா எல்லாம் ரெடி மாப்பிள்ளையை காணோமேன்னு. இன்னைக்கு ஒரு முக்கியமான கேஸ் அதனால் தவிர்க்க முடியாமல் முகிலன் கிளம்பி போயிட்டான். ஆனாலும் இந்த நிச்சயதார்த்தம் நடக்கும். பெண் வேறு யாரும் இல்ல என்னோட நண்பன் ராகவ் பொண்ணு தான் பெயர் ஜானகி.” என்றவர் ஜானகியை தன் பக்கத்தில் அழைக்க அவளும் மெதுவாக அவர் அருகில் வந்து நின்றாள்.

“இன்னைக்கு மோதிரம் மாத்துறது வேணும்னா நடக்காம இருக்கலாம். ஆனால் நிச்சய ஓலை படிச்சு உறுதி படுத்திக்கலாம்”

ஐயர் நிச்சய பத்திரிக்கை படித்து முடிக்க, ராகவ் மற்றும் விஷ்வநாத் தம்பதியினர் நிச்சய தட்டை மாற்றிக் கொண்டனர்.

விஷ்வநாத் முகிலன்-ஜானகி இருவரின் புகைப்படத்தையும் போட்டு பத்திரிக்கையில் அவர்களின் நிச்சயம் மற்றும் திருமணத்தை அறிவிக்க சொல்லியிருந்தார். அடுத்த நாள் பல பத்திரிக்கைகளில் முதல் பக்கத்தில் அவர்களின் புகைப்படங்கள் இருந்தன. அதுவே அவருக்கு எதிராகவும் திரும்பியது.

காலையில் ஜாகிங் முடித்து வந்து தேநீர் கோப்பையை கையில் எடுத்த முகிலன் கண்ணில் பட்டது அன்றைய செய்தித்தாள். எடுத்து புரட்டி பார்த்தவன் கண்கள் கோவைப்பழம் போல சிவக்க, அலைபேசியை எடுத்தவன் சத்யாவை அழைத்தான்.

முதல் அழைப்பே எஸ்.பி சாரின் அழைப்பு என்றதும் சத்யாவுக்கு கை நடுங்க அழைப்பை இணைத்தவன் “சார்” என்று முடிக்கும் முன்,

“சத்யா உங்க கூட ரெண்டு கான்ஸ்டபிள் கூட்டிட்டு உடனே முன்னாள் கலெக்டர் விஷ்வநாத் வீட்டுக்கு போங்க. அவரை எஸ்.பி முகிலன் பற்றி பொய்யான தகவல் பரப்பியதால் அரெஸ்ட் பண்ணுங்க” என்று சொல்லவும் பதட்டத்தில் கைப்பேசியை தவற விட்டான் சத்யா.

“சத்யா” முகிலன் பல்லை கடிக்கவும்,

“சார் ஓகே சார்” என்று அவசரமாக பதில் அளித்தவன் முகிலன் சொன்ன வேலையை முடிக்க கிளம்பினான்.

முகிலனின் கைகள் கோபத்தில் செய்தித்தாளை கிழித்து போட்டன.

“என்னை பத்தி ரொம்ப தப்பா கணக்கு போட்டுட்டீங்க அப்பா. இதுக்கு நீங்க பதில் சொல்லியே ஆகணும்” என்றவன் சாவகாசமாக தேநீரை அருந்தினான்.

அடுத்த அரை மணி நேரத்தில் அவனின் தாய் தமயா அவனுக்கு அழைத்தார்.

“இந்த போன் ஒரு தொல்லைப்பா” என்று சலித்தவன் எடுத்து “முகிலன் ஸ்பீக்கிங்” என்று சொன்னதும் அந்த பக்கம் தமயா பொரிய ஆரம்பித்து விட்டார்.

“முகி உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க? உன் அப்பா தகுதி அவரோட லெவல் பத்தி தெரிஞ்சும் என்ன கம்ப்ளைண்ட் இது? உன் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு நினைச்சு நாங்க பண்ணினா எங்களையே அரெஸ்ட் பண்ணுவியா நீ? இப்போ இவங்கள கிளம்ப சொல்லல நான் என்ன பண்ணுவேன்னு தெரியாது சொல்லிட்டேன்”

“என்ன பண்ணுவீங்க மாம். ஒருவேளை தற்கொலை பண்ணுவேன்னு மிரட்டுவீங்களோ? லாஸ் எனக்கு இல்ல உங்களுக்கு தான். நேத்து கூட சொல்லி அனுப்பினேன் இந்த நிச்சயத்தை நிறுத்துங்கன்னு. ஆனா எவ்ளோ தைரியம் உங்களுக்கு ஹான்? நேர்மையான கலெக்டருக்கு தெரியாதா இது குற்றம்னு. அடுத்து அவர் ஃப்ரெண்ட் வீட்டுக்கு தான் போக சொல்லிருக்கேன். கூடவே அந்த பொண்ணு ஜானகி காலேஜ்க்கும்”

“முகி என்னடா பண்ணுற? எதுக்காக இத்தனை வெறி? அவ வாழ வேண்டிய பொண்ணு” தமயா பதறினார்.

“ஓ காட், அவ மட்டும் தான் வாழ வேண்டிய பொண்ணா? உங்க புருஷன் ஒரு பொண்ணோட வாழ்க்கையை முடித்து வச்சிட்டார் தெரியும்ல. அதுவும் அந்த ஜானகி கிட்ட நிறைய முறை இது சரி வராதுன்னு சொல்லிட்டேன். ஆனாலும் எத்தனை திண்ணக்கம் அந்த பொண்ணுக்கு”

“முகி ஜஸ்ட் ஸ்டாப் இட். இப்போ இவங்கள எல்லாம் கிளம்ப சொல்லுவியா மாட்டியா?”

“நோ மாம், அவருக்கு இது தேவை தான்” என்றவன் அழைப்பை துண்டித்திருந்தான்.

இத்தனை நேரம் அவன் பேசியதை கேட்டிருந்த விஷ்வநாத் எதுவும் பேசாமல் காவலர்களுடன் கிளம்பி சென்றார். ஆனால் அவர் மனம் மட்டும் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.

ஜானகி கல்லூரி வந்து இறங்கியதும் அவளின் நண்பர்கள் அவளை சூழ்ந்து கொண்டனர்.

“ஹேய் கங்கிராட்ஸ் ஜானு. எஸ்.பி சாரை கல்யாணம் பண்ண போற. லவ் ஆர் அரேஞ்ச் மேரேஜ்?” என்று பல கேள்விகள் வர புன்னகையுடன் அவர்களுக்கு பதில் சொல்லி கொண்டிருந்தாள் ஜானகி.

அந்நேரம் பியூன் வந்து அவளை கல்லூரி முதல்வர் அழைப்பதாக சொல்ல ஒருவேளை வாழ்த்து சொல்ல இருக்குமோ என்ற எண்ணத்துடன் அவரின் அறைக்கு சென்றாள்.

“சார் இவங்க தான் நீங்க கேட்ட ஜானகி” கல்லூரி முதல்வர் யாருக்கோ அவளை அறிமுகப்படுத்த,

“யார் சார் இவங்க?” என்று கேட்டாள் ஜானகி.

“நாங்க போலீஸ், எஸ்.பி முகிலன் சார் சொல்லி இங்க வந்திருக்கோம்” எனவும் சந்தோஷ ஆர்பரிப்பில் அவள் முகம் மின்னியது.

அதை சத்யாவும் கவனித்தான். ஆனால் ஏனோ அவனுக்கு அவளை பிடிக்கவில்லை. முகிலன் மற்றும் அறிவழகி காதல் கதை அவனுக்கு தெரியும் என்பதால் உண்மை தெரிந்தும் முகிலன் மீது ஆசை கொள்ளும் இவளை பார்க்கும் போது கோபம் வந்தது.

“மிஸ்.ஜானகி நாங்க உங்களை ஒரு விசாரணைக்காக கூட்டிட்டு போக வந்திருக்கோம்”

சட்டென அவளின் ஆசை வடிந்து பயத்துடன் அவர்களை ஏறெடுத்து பார்த்தாள்.

"என்ன விசாரணை சார்?”

“நேத்து உங்களுக்கும் முகிலன் சாருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்ததாக பேப்பரில் நியூஸ் வந்ததே, அதில் உங்களோட பங்களிப்பு என்னன்னு தெரிஞ்சிக்க தான்” என்று நக்கலாக சொன்னவன் கூட வந்த பெண் காவலர்களிடம் கண் காட்ட அவர்கள் அவளை நெருங்கினர்.

“சார் பிளீஸ் வேண்டாம் சார். இது காலேஜ். என் மானமே போயிடும் சார்” ஜானகிக்கு பயத்தில் உடல் நடுங்கியது.

“ஆனா மிஸ்.ஜானகி நேத்து பொய்யான தகவல் குடுக்கும் போது இந்த பயம் இல்லையே”

“சார் முகிலன் சாரை நான் லவ் பண்ணுறேன். அவர் சம்மதத்தோடு தான் நிச்சயம் பண்ணினாங்க”

“இஸ் இட்? சார்கிட்டயே கேட்டுடுவோம்” அவன் அலைபேசியை எடுக்க போக,

“வேண்டாம் சார். அவருக்கு விருப்பம் இல்ல. இப்படி நியூஸ் குடுத்தா வேற வழி இல்லாமல் கண்டிப்பா கல்யாணம் பண்ணிப்பார்னு ஒரு நம்பிக்கையில் பண்ணிட்டேன். பிளீஸ் சார் அரெஸ்ட் எல்லாம் வேண்டாம். இனி அவர் பக்கமே போக மாட்டேன். நானே வீட்டில் பேசி மறுப்பு செய்தி கொடுக்க சொல்லுறேன்” என்று கெஞ்சினாள்.

“சரியா பாயிண்ட்டை பிடிச்சிட்டீங்க மிஸ்.ஜானகி. விருப்பம் இல்லாதவங்கள கட்டாயப்படுத்துறது ரேப் பண்ணுறதுக்கு சமம். புரிஞ்சிருக்கும்னு நினைக்குறேன். நாங்க கிளம்புறோம்” என்ற சத்யா முதல்வரிடம் பேசி விட்டதாக கூறி விட்டு கிளம்ப ஜானகி உள்ளுக்குள் மரித்து போனாள்.

இனி அவளின் நண்பர்கள் முகத்தில் எப்படி விழிப்பது? என்ன சொல்லி மறுப்பு செய்தி கொடுப்பது? பலவாறு சிந்தனைகளுடன் வெளியே வந்தவள் நண்பர்களின் கேள்விகளை மதிக்காமல் தன் தந்தைக்கு அழைப்பு விடுத்தாள்.

நடந்ததை விவரித்தவள் நிச்சய மறுப்பு செய்தி கூற சொன்னதும் ராகவ் கடும் கோபம் கொண்டார்.

“எப்படி காலேஜ் வரை வந்து மிரட்டலாம் ஜானு? இதை நான் சும்மா விட போறது இல்ல”

“நாம பண்ணினது தான் தப்புப்பா. இப்போ அவங்க நம்ம மேல கேஸ் போட்டா என்ன பண்ணுறது? வெறும் வார்ன்ங் ஓட விட்டதே பெருசு அப்பா. பிரச்சனை வேண்டாம். அவர் முதலிலேயே சொல்லிட்டு இருந்தார். ஆனா இப்போ தான் எனக்கும் புரியுது” என்றவள் செய்தியை வெளியிட சொல்லி விட்டு வகுப்பிற்கு சென்றாள்.

அடுத்த இரண்டு மணி நேரத்தில் பொய்யான திருமண நிச்சய செய்தியை யாரோ பரப்பியதாக கூறி மறுப்பை தெரிவித்தவர்கள் மனம் முழுவதும் கோபம் போய் குரோதம் குடி கொண்டது.

யாருக்காக இந்த திருமணத்தை மறுத்தானோ அவளின் வேதனையை பார்த்து அவர்களின் மனம் சந்தோஷம் கொண்டது.

அறிவழகி சிறையில் விட்டத்தை பார்த்து கொண்டிருந்தாள். இந்த சிறையிலேயே அவளின் வாழ்க்கை முடிந்து விடுமோ என்று மனம் அஞ்சியது. அவளின் வலது கை தனது மேடிட்ட வயிற்றை தடவி கொண்டிருக்க அவளின் அருகில் இரண்டு பெண்கள் வந்தனர்.

நிமிர்ந்து பார்த்தவள் “யார் நீங்க? இந்த ரூம் இல்லையே” என்று கேட்க,

“பார்ரா! பொண்ணுக்கு ரூம் மேட் எல்லாம் தெரிஞ்சிருக்கு. சரி நாங்க வந்த வேலையை முடிச்சிட்டு போகிறோம்.” என்று அவளின் கையை பிடித்து பின்னால் திருக வலி உயிர் போக கத்தினாள் அறிவழகி.

“என்ன பண்ணுறீங்க நீங்க? அய்யோ வலிக்குது விடுங்க. மேடம் மேடம்” என்று கதற அவளின் கையை இன்னும் முறுக்கியவர்கள் தாங்கள் கொண்டு வந்த ஊசி மருந்தை அவளின் கையில் ஏற்றி விட்டார்கள்.

“ஹேய்! என்ன இது? எதுக்காக ஊசி போட்டீங்க? மேடம் சீக்கிரம் வாங்க. ஆஆ வலிக்குதே” என்று கதற அவளை தரையில் விட்டவர்கள் வெளியே சென்று விட்டனர்.

அவளின் கதறல் சத்தம் சில நேரம் கழித்தே ஜெயிலர் காதுக்கு போக அவசரமாக ஓடி வந்தவர் பார்த்தது கீழே விழுந்து கிடந்த அறிவழகியை தான்.

மூச்சே நின்று விட்டது அவருக்கு. யார் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை. அவசரமாக அவளின் அருகில் சென்று அவளை தூக்க போக “அம்மா வலிக்குதே” என்று கதறினாள்.

அப்போது தான் அவளின் கையை கவனித்தார் அவர்.

“அறிவு என்னமா பண்ணுது? யார் இப்படி பண்ணினா?”

“மேடம் என் குழந்தை. என் முகியோட குழந்தை. அம்ம்ம்மா! ஏதோ ஊசி போட்டாங்க மேடம். காப்பாத்துங்க பிளீஸ்” என்று கதற உடனே அவசர சிகிச்சை பிரிவுக்கு அழைத்தவர் அவளை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது முகிலனுக்கும் விஷயத்தை சொன்னவர் அவனை அரசு மருத்துவமனைக்கு வருமாறு கூறினார்.

பதறி அடித்து வந்தவன் அவளின் பெயரை சொல்லி விசாரிக்கும் போதே மிசஸ்.முகிலன் என்ற குரல் கேட்டு அங்கு சென்றான். அவனின் அழகி படுக்கையில் படுத்திருக்க மருத்துவர் அவளை பரிசோதித்து கொண்டிருந்தார்.

மருத்துவர் முகிலனை பார்த்ததும் ஆச்சர்யமாக நோக்க “ஷி இஸ் மை வைஃப் டாக்டர். என்னாச்சு இவளுக்கு?” என்று பதற,

“நத்திங் டூ வொர்ரி சார். வலிப்பு வர ஊசி போட்டிருக்காங்க பட் அது லேட் ஆக வேலை செய்ய ஆரம்பிக்கும் என்பதால் பேபி அண்ட் மதர் சேஃப். மாற்று மருந்து கொடுத்திருக்கோம். கை எலும்பு பிசகி இருக்கு. கொஞ்சம் நாளில் சரி ஆகிடும்” மருத்துவரின் விளக்கம் கேட்ட பிறகே அவனுக்கு உயிர் வந்தது.

ஜெயிலர் பக்கம் திரும்பியவன் “உங்க கண்காணிப்பை மீறி இது எப்படி நடந்தது மேடம்? இவளுக்கு மட்டுமில்ல இப்படி வேற யாருக்காச்சும் நடந்தா கூட நாம தான் பொறுப்பு. சிசிடிவி கேமரா புட்டெஜ் உடனே பார்த்து எனக்கு யார் இப்படி பண்ணினதுன்னு சொல்லுங்க” என்றவன் வேறு இரண்டு காவலர்களை அவளுக்கு பாதுகாப்பிற்கு இருக்க வைத்து விட்டு அவரை கிளம்ப சொன்னான்.

அவனுக்கு ஒரு சந்தேகம் இருந்தது. அது மட்டும் அவர்கள் தான் என்று தெரிய வந்தால் அவர்களின் நிலை இவளை விட மோசம் என்பது அவனின் கோபத்தின் அளவிலேயே தெரிந்தது.
 

Asha Evander

Moderator
அத்தியாயம் 5

விஷ்வநாத் அன்று மாலையே விடுவிக்கப்பட்டார். வீட்டிற்கு வந்தவர் தன் மனைவியை கூட கண்டு கொள்ளாமல் அறைக்குள் சென்று விட்டார். அவர் மனம் முழுவதும் முகிலன் மற்றும் அறிவழகியின் மீது கோபம் கனன்று கிடந்தது.

தான் தூக்கி வளர்த்தவன் இன்று தன்னையே சிறையில் அடைத்ததை அவரால் பொறுத்து கொள்ளவே முடியவில்லை. அவரின் பதவி என்ன? என்ன மாதிரியான மரியாதையுடன் வெளியில் நடந்து கொண்டிருந்தார்? இன்று ஒரே நாளில் அனைத்தையும் கெடுத்து வெளியில் தலைக் காட்ட முடியாதபடி செய்து விட்டான் முகிலன். அதுவும் அந்த அறிவழகிக்காக என்பது இன்னும் பழிவெறியை கூட்டியது. வஞ்சம் நிரம்பிய கண்களால் கண்ணாடியில் தன்னையே பார்த்தவர் “இதுக்கு நீ பதில் சொல்லியே ஆகணும் முகிலன்” என்று சொல்லிக் கொண்டார்.

வெளியில் தமயாவுக்கு தான் இருப்பு கொள்ளவில்லை. என்ன தான் முகிலன் தந்தையை சிறையில் அடைத்தாலும் மகன் என்ற உறவு விட்டு போய் விடாது அல்லவா? விஷ்வநாத் ஏதாவது பண்ண போய் அது மகனை பாதித்து விட்டால் அவனின் வாழ்க்கை என்னாவது என்ற பயம் மனதை வருத்தியது.

ஆனால் தன் கணவன் ஏற்கனவே முகிலனுக்கு வலியை கொடுத்து விட்டார் என அவருக்கு இன்னும் தெரியவில்லை.

முகிலன் தன் முன்னே நின்று கொண்டிருந்த இரண்டு பெண்களையும் கூர்ந்து பார்த்து கொண்டிருந்தான்.

“சோ இதை யார் பண்ண சொன்னாங்கன்னு சொல்ல மாட்டீங்க ரைட்?”

இருவரும் வாயே திறக்கவில்லை.

திரும்பி ஜெயிலரை பார்த்தவன் “மேடம் அந்த புட்டேஜ்ல இருக்குறத திரும்ப இவங்களுக்கு பிளே பண்ணி காட்டுங்க” எனக் கூற அவர்கள் முன் மீண்டும் அந்த வீடியோ காட்சிகள் காட்டப்பட்டன.

அவர்கள் இருவரும் அறிவழகியின் முன் வருவது முதல் அவளை துன்புறுத்துவது வரை காட்டவும் அவர்கள் சிரித்தனர்.

“அட நல்லா சிரிக்குறீங்களே! இருங்க அறிவழகியோட லாயர் உங்ககிட்ட ஏதோ காட்டணும்னு சொன்னார்” என்றவன் வழக்கறிஞர் உள்ளே வரவும் அவரிடம் அலைபேசியை காட்ட சொன்னான்.

“சார்.. இப்போ” என்று அவர் தயங்க,

“யாருக்கும் எதுவும் தெரிய போவதில்லை சார். அப்படியே எதுவும் பிரச்சனை வந்தாலும் அதோட விளைவுகளை நான் பொறுப்பேத்துக்குறேன்” என்றான்.

அவனின் பேச்சில் அவர் தனது அலைபேசியை காட்ட அதில் அந்த இரு பெண்களின் கணவன்மார்கள், நான்கு குழந்தைகள் மற்றும் அதில் ஒரு பெண்ணின் தாயார் ஒரு குடோனில் கை கால்கள் கட்டப்பட்டு கிடந்தனர்.

“ஐயோ! என் பொண்ணு”, “ஐயோ! என் புருசன், என் பிள்ளைகள்” என்று அந்த பெண்கள் கதற,

“உங்களுக்கு இப்போ சிரிப்பு வரலையா? அட நீங்க அறிவழகிக்கு போட்ட ஊசி தான் அவங்க எல்லாருக்கும் போட போறாங்க” என்று கூடுதல் தகவல் சொன்னான்.

“ஐயோ சார்! விட்டுடுங்க. சின்ன புள்ளைங்க சார்”

“அறிவழகி வயிற்றில் கூட இன்னும் உலகத்தை காணாத ஒரு குழந்தை இருக்குதே” என்றவன் கை முஷ்டிகளை இறுக்கினான்.

“மன்னிச்சிடுங்க சார். நாங்க சொல்லிடுறோம். முந்தா நேத்து காலையில் எங்களை பார்க்க ரெண்டு பெரிய சாருங்க வந்தாங்க. அவங்க தான் இதை அந்த பொண்ணுக்கு போட சொல்லி கொடுத்தாங்க. எங்க புள்ளைங்கள விட்டுடுங்க சார்”

“இந்த சார் தானா பாருங்க” என்று தான் அலைபேசியில் இருந்த ராகவ் மற்றும் விஷ்வநாத் புகைப்படங்களை காட்ட ஆம் என்று ஒப்புக்கொண்டனர்.

முகிலனுக்கு ஒரு நொடி கை கால்கள் நடுங்கியது. தன்னை திடப்படுத்தியவன் லாயரிடம் “சார் இவங்க வாக்குமூலம் உங்க போன்ல ரெக்கார்ட் பண்ணிட்டீங்க தானே” என்று கேட்க,

“ஆமா சார். எல்லாமே வீடியோவா ரெக்கார்ட் ஆகிடுச்சு” என்றார்.

“தேங்க்ஸ் சார். நாம வெளில போய் பேசலாம்” என்றவன் அந்த பெண்களிடம் திரும்பி “நீங்க பண்ணின பாவத்துக்கு பலன் அனுபவிக்க தயாரா இருங்க” என்று எச்சரித்து விட்டு வெளியே வந்தான்.

அவன் கூடவே வெளியே வந்த லாயர் “இப்போ என்ன பண்ணுறது சார்?” என்று கேட்க,

“எனக்கு அவங்கள லீகலா புரொசீட் பண்ண தான் ஆசை. ஆனா இப்போ அவங்க தவறு ஊருக்கே தெரியணும்” என்றான்.

“சோஷியல் மீடியா போனா உங்களுக்கும் பிரச்சனை சார்”

"இல்லை கண்டிப்பா கோர்ட் மூலமா தான் போவேன். ஆனா இந்த நொடி அவங்களுக்கு வலிக்கணும்”

“எப்படி சார்?”

“வீடியோல எல்லாத்தையும் பிளர் (blur) பண்ணுங்க. காட்சிகள் எதுவும் தெளிவா தெரிய கூடாது. ஆனா நான் போன்ல காட்டின போட்டோ வரும் போது மட்டும் தெளிவா தெரியணும். நாம பேசினதில் அவங்க வாக்குமூலம் மட்டும் தான் வெளி உலகத்துக்கு கேட்கணும். அப்புறம் அதை எல்லா சோஷியல் மீடியால அப்லோட் பண்ணனும்”

“சார் இது ரிஸ்க். நாளைக்கு நாம கோர்ட்ல இதே ப்ரூப் சப்மிட் பண்ணினா எதுக்காக முன்னாடியே சோஷியல் மீடியால போட்டீங்கன்னு தேவை இல்லாத பிரச்சனை வரும்”

“ஒரு பிரச்சனையும் வராது லாயர் சார். அந்த பொண்ணுங்க யாருன்னு தெரிய போறது இல்ல. எந்த இடத்தில் வச்சு பேசுறாங்க யாருக்கு தீங்கு செஞ்சாங்கன்னு எதுவும் தெரிய போறது இல்ல. ஆனா இவங்க சொல்லி தான் அவங்க பண்ணினாங்கன்னு வெளி உலகத்துக்கு தெரிஞ்ச அப்புறம் கோர்ட் போனா போதும். நான் கோர்ட் போறத பத்தியே யோசிக்கல. என் அழகியை கஷ்டப்படுத்த நினைச்சா அவங்க ஆயிரம் மடங்கு அவமானப்படணும் அவ்ளோ தான். அழகா எடிட் பண்ணி நமக்கு தேவையானதை மட்டும் யூஸ் பண்ணிப்போம்” என்று சிரிக்க லாயர் அதிர்ந்து பார்த்தார்.

“சார் நீங்களா இப்படி?”

“லாயர் சார். நான் ரொம்ப நேர்மையா இருப்பேன். ஆனா என்னோட அழகி விஷயம்னா மட்டும் கொடூரன் தான். நாம அடுத்த வேலையை செய்வோம்” என்றவன் அவரிடம் சொல்லி விட்டு மருத்துவமனை கிளம்பினான்.

அவன் மருத்துவமனை சென்ற போது அறிவழகி விழித்திருந்தாள். கையில் மாவுகட்டு போட்டு கழுத்தோடு இணைத்து கட்டி விட்டிருந்தனர். அவளை அந்த கோலத்தில் பார்க்கவும் முகிலனுக்கு கண்கள் கலங்கியது.

காவலுக்கு இருந்த காவலர்களின் சல்யூட்டை கண்டு பதில் தலை அசைத்தவன் “அழகி” என்று அவள் அருகில் சென்றான்.

அவனையே வெறித்து பார்த்தாள். அந்த பார்வை அவனை கொல்லாமல் கொன்றது.

“நோ அழகி. அப்படி பார்க்காதடி”

“அப்படி தான் பார்ப்பேன்”

“நீ சண்டை கூட போடு. ஆனா என்னை யாரோ மாதிரி பார்க்காத. உயிரை உருவின போல வலிக்குது”

“வலிக்கட்டும். எனக்கு வலித்ததே. அவங்க ஊசி போடும் போது நம்ம குழந்தை என்ன ஆகும்னு உயிர் போற போல வலித்ததே”

அவளின் கூற்றில் மனம் காயப்பட அவளின் அருகில் சென்று தலை கோதியவன் “உன்னை இப்படி ஆக்கினவங்களை சும்மா விடுவேன்னு நினைச்சியா? அவங்களுக்கான தண்டனை ஆன் தி வே” என்று நெற்றியில் முத்தமிட்டான்.

“பொண்டாட்டி ஜெயில்ல இருக்கான்னு கொஞ்சம் கூட ஃபீல் இல்லாம கிஸ் பண்ணுற நீ” அவனை இலகுவாக்க,

“அவ தான் சீக்கிரம் வெளில வர போறாளே. அப்புறம் எதுக்கு ஃபீல் பண்ணனும்டி என் கருப்பு சாக்லேட் அழகி” என்று கன்னம் கிள்ளி கொஞ்சினான்.

“நிஜமாவா முகி?”

“குற்றவாளியை நெருங்கிட்டேன் அழகி. உனக்கு டாக்டர் பொய்யான ரிப்போர்ட் கொடுத்திருக்கார். நீ கொலை பண்ணல. உன்னை அப்படி வாக்குமூலம் சொல்ல வச்சிருக்காங்க. இன்னும் கொலை பண்ணினது யார்? எதுக்காக கொலை பண்ணினாங்கன்னு மட்டும் நிரூபிச்சிட்டா நீ வெளில வந்துடலாம்”

“அப்போ நான் கொலை பண்ணலையா? அன்னைக்கு வீட்டில் வேறு யாரும் இல்லையே?”

“நீ வாங்க போன பாலில் கூட முன்னாடியே விஷம் கலந்து வச்சிருக்கலாம். எல்லாமே திட்டம் போட்டு கொலை பண்ணி உன்னை இங்க மாட்ட வச்சிருக்காங்க. உன்னை அரெஸ்ட் பண்ணும் போதே நான் அங்க இருந்திருந்தா விசாரிச்சிருக்கலாம். ஆனால் நான் வரதுக்கு முன்னாடியே உனக்கு தண்டனை கிடச்சிடுச்சு” என்றவன் குரல் கம்மியது.

அவனின் வருத்தத்தை போக்க நினைத்தவள் “அது தான் இப்போ நீ எல்லாம் சரி பண்ண போறியே. அப்புறம் என்ன? சீக்கிரம் நானும் நம்ம குழந்தையும் உன்கிட்ட வந்துடுவோம்” என்று சிரித்தாள்.

அவள் சிரிப்பில் தான் அவன் உயிர் மீண்டது. சிறிது நேரம் அவளுடன் இருந்தவன் பின் மருத்துவரிடம் அவளின் உடல்நிலை பற்றி அறிந்து கொண்டு காவலர்களையும் கவனமாக பாதுகாக்கும்படி அறிவுறுத்தி விட்டு தன் வேலையை பார்க்க சென்றான்.

நேராக தன் அலுவலகம் சென்றவன் அவளின் வழக்கு சம்மந்தமான விவரங்களை எடுத்து கொண்டு போய் வழக்கறிஞரை சந்திக்க வேண்டும் என்று நினைத்து கொண்டான்.

அலைபேசி ஒலிக்க எடுத்து பேசியவன் முகம் யோசனையில் சுருங்கியது.

“ஆர் யூ சுயர்? எத்தனை மணிக்கு வேலையை விட்டு கிளம்பினாங்க? நான் ஸ்பாட்டுக்கு வந்துட்டே இருக்கேன்” என்றவன் “சத்யா” என அழைத்து அவனையும் கூட்டி கொண்டு அழைப்பில் சொன்ன முகவரிக்கு சென்றான்.

அவன் சென்ற முகவரியில் ஒரு நடுத்தர வயது பெண் மற்றும் அவருடன் இரண்டு குழந்தைகள் இருந்தனர். அவனை கண்டதும் அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் ஓடி வந்தார்.

“சார் இந்த வீட்டில் உள்ள பொண்ணு தான். நேத்து நைட் வேலைக்கு போயிருக்காங்க. இடையில் போன் பண்ணி ரெண்டு ஷிப்ட் சேர்த்து வேலை முடிச்சிட்டு ஈவினிங் வருவதாக சொல்லிருக்காங்க. கொஞ்ச நேரம் முன்னாடி அந்த பொண்ணோட போன்ல இருந்து இவங்களுக்கு ஒரு கால் வந்திருக்கு. அந்த பொண்ணுக்கு விபத்து நடந்ததாகவும் அழகம்புரி கவர்ன்மெண்ட் ஹாஸ்பிட்டலில் அட்மிட் பண்ணிருக்கதாகவும் சொல்லிருக்காங்க. ஆனா அந்த ஹாஸ்பிட்டல்ல எந்த ஆக்சிடன்ட் கேசும் வரலைன்னு சொல்லுறாங்க”

“எல்லாம் கிளீயரா விசாரிச்சிட்டீங்களா?”

“எஸ் சார்”

“கால் வந்த நம்பர் இப்போ எந்த இடத்தில இருக்குன்னு டிரேஸ் பண்ணுனீங்களா?”

“எஸ் சார். ஹாஸ்பிட்டல் வாசலில் தான் போன் சிக்னல் காட்டுது. ஆனா அங்க அப்படி யாரும் வரவே இல்லன்னு சொல்லுறாங்க. மொத்தமா செக் பண்ணிட்டோம்”

“சம்திங் ராங். கண்டிப்பா அந்த சுற்றுப்புறத்தில் தான் எங்கேயோ பொண்ணு இருக்கணும். ஏதாச்சும் வாகனம் வித்தியாசமா போகுதான்னு உடனே கண்ட்ரோல் ரூம்ல சொல்லி செக் பண்ண சொல்லுங்க” முகிலனுக்கு அந்த பெண் கண்டிப்பாக மருத்துவமனை சுற்றுப்புறத்தை விட்டு வெளியே போகவில்லை என்று உறுதியாகியது.

கண்ட்ரோல் ரூமில் செக் பண்ணியவர்கள் அங்கு வேறு எந்த வித்தியாசமும் இல்லை ஆனால் நேற்று இரவில் இருந்தே ஒரு ஆம்புலன்ஸ் அங்கேயே நிறுத்தி வைக்கப் பட்டிருப்பதாகவும் அது மருத்துவமனையை சார்ந்தது இல்லை எனவும் தகவல் கொடுக்க உடனே அந்த வாகனத்தை சோதனை செய்ய சொன்னவன் தானும் கிளம்பினான்.

ஆனால் அதற்குள் அனைத்தும் கை மீறி போயிருந்தது. அவர்கள் சென்ற போது அந்த வாகனத்தில் அந்த பெண்ணின் உடல் மட்டும் தான் இருந்தது. வேறு யாரும் இல்லை.

“சார் கொடூரமாக கொலை பண்ணிருக்காங்க”

“போஸ்ட் மார்ட்டம் பண்ண அனுப்புங்க” என்றவன் சுற்றுப்புறத்தை ஆராய்ந்தான். யாரும் வித்தியாசமாக, சந்தேகப்படும் படி கண்ணில் மாட்டவில்லை.

மீண்டும் கண்ட்ரோல் ரூமிற்க்கு அழைத்தவன் நேற்று மாலை முதல் அந்த பெண்ணின் அலுவலகம் பக்கத்தில் இருந்து ஹாஸ்பிட்டல் வரை சிசிடிவி புட்டெஜ் பரிசோதிக்க சொன்னவன் அந்த பெண்ணின் பெற்றோரை அழைத்து வரவும் கட்டளையிட்டான்.

பிரேத பரிசோதனை முடிந்து வரவும் பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப்படைத்தவன் தன் நண்பன் சொன்ன விசயங்களை யோசித்து கொண்டிருந்தான்.

அந்த பெண்ணின் பெயர் திஷா. ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து கொண்டிருப்பவள். தந்தை இரண்டு வருடங்களுக்கு முன்பு சாலை விபத்தில் மரணமடைந்திருந்தார். தாய் மற்றும் இரண்டு சிறு தங்கைகளுக்காக வேலைக்கு சென்று கொண்டிருந்தாள் திஷா. நேற்றும் முதல் ஷிப்ட் முடிந்ததும் இரண்டாவது ஷிப்ட் வேலையை தொடர்வதாக வீட்டிற்கு அழைத்து சொன்னவள் காபி குடித்து வரலாம் என்று சாலையை கடக்கும் போது ஒரு வாகனத்தில் வந்த சிலர் அவளை இழுத்து உள்ளே போட்டு விட்டனர்.

இரண்டு மணி நேரம் நிற்காமல் ஓடிய வாகனம் பின் ஓரிடத்தில் நின்று விட, அடுத்ததாக ஒரு ஆம்புலன்ஸ் வர அதில் திஷாவை கைத்தாங்கலாக சிலர் கூட்டி செல்கின்றனர். அந்த ஆம்புலன்ஸ் இரண்டு இடத்தில் நின்று பின் அழகம்புரி அரசு மருத்துவமனையின் அருகில் நின்று விட்டது. ஆம்புலன்ஸ் என்பதால் யாருக்கும் எந்த சந்தேகமும் வராமல் இருந்திருக்கிறது.

மாலையில் வரும் பெண் இன்னும் வீட்டுக்கு வரவில்லை என்ற பதட்டத்தில் அவளின் தாயார் இருக்கும் போது திஷாவுக்கு விபத்து என்று சொல்லி அழைப்பு வந்திருக்கிறது. மருத்துவமனையில் விசாரித்து அவளை காணவில்லை என்றதும் காவல் துறையின் உதவியை நாடியிருக்கின்றனர் அவளின் குடும்பத்தார்.

முகிலன் திஷாவுக்கு பிரேத பரிசோதனை செய்த மருத்துவரை பார்க்க சென்றான்.

“ரொம்ப கஷ்டப் படுத்திருக்காங்க சார். ஆங்காங்கே காயங்கள் ஆழமா இருக்கு. ரெண்டு மூணு இடத்தில் ஊசி போட்ட தடங்கள் இருக்கு. அந்த பொண்ணையே தூண்டியிருக்கலாம்”

“டாக்டர் ட்ரக்ஸ் ஏதாவது இஞ்செக்ட் ஆகிருக்கா?” முகிலன் கேட்க,

“பிளட் சேம்பில்ஸ் குடுத்திருக்கு. இன்னைக்கு ஈவினிங் ரிப்போர்ட் வந்துடும். வந்ததும் மொத்தமா ரிப்போர்ட் தரேன்” என்றார் மருத்துவர்.

“ஓகே தேங்க் யூ டாக்டர்” என்றவன் வெளியில் வரும் போது அந்த காரில் இருந்த நபர்களை பற்றி விசாரிக்க சொல்லி விட்டு கிளம்பினான்.

அன்று முழுவதும் ஓய்வில்லாமல் சுற்றியவன் அறிவழகிக்கு காவலுக்கு இருந்த காவலர்களிடம் அவளை பற்றி விசாரித்து தெரிந்து கொண்டவன் அடுத்து தன் தந்தையின் மீதான வழக்கை பற்றி விசாரிக்க லாயரை தேடி சென்றான். மறக்காமல் அறிவழகி சம்மந்தமான கோப்புகளையும் எடுத்து கொண்டான்.
 

Asha Evander

Moderator
அத்தியாயம் 6

வழக்கறிஞரின் முன் அமர்ந்திருந்தான் முகிலன். அன்று அவனுக்கு வேறு ஒரு கேஸ் இருக்கவும் அதை சத்யாவிடம் விசாரிக்கும் படி சொன்னவன் முதலில் இதை முடித்து விடலாம் என்று வந்திருந்தான்.

அவன் முதலில் அறிவழகி வழக்கு சம்மந்தமான விவரங்களை கூறவும் அவரும் யோசித்தார். மேல்முறையீடு செய்த பின் அனைத்து ஆதாரங்களும் இருந்தால் மட்டுமே அறிவழகியை நிரபராதி என நிரூபிக்க முடியும். ஆனால் இங்கு கொலை செய்தவர்கள் யார் என்று இன்னும் ஒரு துப்பு கூட கிடைக்கவில்லையே.

“முகிலன், கொலை செய்யப்பட்ட கதிர்வேலன் குடும்பத்தில் யார் யார் உண்டுன்னு விசாரிச்சீங்களா?”

“எஸ் சார். கதிர்வேலன் அம்மா, அப்பாக்கு அவன் ஒரே பையன். அவனோட அப்பாக்கு ரெண்டு தங்கச்சி, ஒரு தம்பி. கதிர்வேலன் அம்மாவுக்கு ரெண்டு தங்கச்சி. அவன் அம்மாவோட தங்கச்சி ரெண்டு பேருக்கும் ரெண்டு பையன்கள். ரெண்டு பையன்களும் கனடாவில் செட்டில்ட். அறிவழகியோட கல்யாணத்துக்கு குடும்பமா வந்தவங்க அடுத்த நாளே கனடா கிளம்பிட்டாங்க”

“அது தான் இப்போ எனக்கு இடிக்குது சார். மறுவீடு சம்பிரதாயம் எல்லாம் முடிக்காமல் அதுவும் கதிர்வேலன் இறந்ததை கூட கணக்கெடுக்காம உடனே கிளம்புற அளவுக்கு என்ன அவசரம்?” லாயர் தன் சந்தேகத்தை முன் வைக்க,

“ஓ காட்! இதை எங்க மிஸ் பண்ணினேன்? எஸ் லாயர் சார். நான் அன்னைக்கு அந்த டாக்டர்கிட்ட விசாரிக்கும் போது கூட ரெண்டு பெண்கள், ஒரு டாக்டர் கூட இருந்ததா சொன்னார். ஒருவேளை இவங்களில் யாராவது கூட இருக்கலாம் தானே?” என்று யோசித்தான் முகிலன்.

“இருக்கலாம் முகிலன். ஆனா அவங்க அடுத்த நாளே கனடா கிளம்பின ப்ரூஃப் கூட பக்காவா இருக்கு. அதுவும் அறிவழகி வாக்குமூலம் குடுக்குறதுக்கு முன்னாடியே கிளம்பிருக்காங்க. இங்கேயும் இடிக்குது”

முகிலன் தலையை பிடித்து கொண்டான். இருந்த சின்ன நம்பிக்கையும் உடைவது போல இருந்தது.

அவனை பார்க்க லாயருக்கு பாவமாக இருந்தது. அத்தனை கம்பீரமாக இருப்பவன் மனைவியின் விஷயத்தில் இப்படி உடைவது கஷ்டமாக இருந்தது.

“நான் என் அழகியை வெளில கொண்டு வரவே முடியாதா சார்? வாய்தாவே கேட்க கூடாத அளவுக்கு இந்த முறையே எல்லா ஆதாரங்களும் சப்மிட் பண்ணனும் நினைக்குறேன். எல்லாத்தையும் நெருங்கும் சமயம் ஒரு தடை வந்து நிக்குது” முகிலனுக்கு குரல் உடைந்தது.

“ரிலாக்ஸ் முகிலன். எனக்கு என்னமோ அவங்க ஏற்கனவே எல்லாத்தையும் ஏற்பாடு பண்ணிட்டு கனடா போன போல ஃபீல் ஆகுது. கதிர்வேலனோட சித்தி பசங்க மட்டும் தான் கனடா போயிருக்காங்க. அவங்க சித்தி இங்க தானே இருக்காங்க. அவங்கள விசாரிக்கலாமே” அவர் சொல்ல முகிலன் யோசித்தான்.

“நான் விசாரிக்க சொல்லுறேன் சார். எனக்கும் நீங்க சொன்ன அப்புறம் ஒரு சந்தேகம் வருது. தேங்க்ஸ் சார். அப்புறம் இந்த கேஸ் நீங்க அழகிக்காக வாதாட முடியுமா?”

“சுயர் முகிலன். அவங்க மிரட்டி சாகடிக்க எனக்கு குடும்பமா இருக்கு?” என சிரித்தவர்,

“கண்டிப்பா இந்த முறை நாம அறிவழகியை வெளியில் எடுக்கலாம். உங்க காதலுக்கு நான் பெரிய ஃபேன் ஆகிட்டேன்” என்று அடுத்த வழக்கை பற்றி விசாரித்தார்.

“உங்க அப்பா கேஸ் என்ன பண்ண போறீங்க?”

“சட்டபடி இவங்கள கொண்டு போனா ஒரே மாசத்தில் வெளில வருவாங்க சார். எத்தனையோ நீதி, நியாயங்கள் இன்னும் நேர்மையா இருந்தாலும் சில விஷயத்தில் பணம் புகுந்து விளையாடும். ஒரு கேஸ் பைல் பண்ணி வைப்போம். ஆனாலும் அந்த வீடியோ கண்டிப்பா வெளில விடுவேன்” என்றவன் அவர் எடிட் பண்ணி வைத்திருந்த வீடியோவை வாங்கி கொண்டான்.

அன்று இரவே அதை ஒரு தனிப்பட்ட ஐடியில் இருந்து பதிவேற்றம் பண்ணி விட்டான். அடுத்த நாள் காலை விஷ்வநாத் மற்றும் ராகவ் குடும்பத்திற்கு கெட்ட நாளாகவே ஆரம்பித்தது. எதேச்சையாக யூட்யூப் பக்கம் போன விஷ்வநாத் அதில் இருந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

அவர்கள் இருவரின் புகைப்படங்கள் மட்டுமே தெளிவாக இருந்தது. அது ஒரு பெண்ணை காயப்படுத்த அவர்கள் ஊசி கொடுத்ததை கொலை செய்ய சொன்னதாக வாய்ஸ் கொடுத்து பதிவேற்றம் பண்ணி விட்டான் முகிலன். பண்ணின பாவங்களுக்கு கொஞ்சமேனும் அனுபவிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் தான். பல இலட்சம் பேர் அதை லைக் செய்தும் ஷேர் செய்தும் இன்னும் பிரபலமாக்கி விட்டிருந்தனர்.

இது தான் சமயம் என்று தங்கள் தொலைகாட்சி அலைவரிசையில் பக்கம் பக்கமாக பேசி டி ஆர் பியை எகிற வைத்தனர். ராகவ் மற்றும் விஷ்வநாத் இருவருக்கும் இது யார் வேலை என்று புரிந்தாலும் எதுவும் செய்ய முடியாத நிலை. அந்த அளவிற்கு அவர்கள் இருவரையும் மீடியா சுற்றி வளைத்தனர்.

விஷ்வநாத் தான் “இவன் என் பையன் தானா?” என்று தமயாவிடம் கத்தினார்.

தமயாவுக்கும் புரியாத நிலை. ஆனால் இவர்கள் எதுவும் விஷமத்தனம் பண்ணாமல் முகிலன் இப்படி செய்பவன் அல்ல என்று நிச்சயம்.

“நீங்க என்ன தப்பு பண்ணுனீங்க?” என்று நேரடியாக கேட்டார்.

“நான் என்ன தப்பு பண்ணினேன்? அந்த பொண்ணு அறிவழகியை கஷ்டப்படுத்த சொன்னேன்” என்று உளறியவர் பின்,

“அவ நம்ம குடும்பத்துக்கு செட் ஆக மாட்டா தமயா. பணம், வசதி இருந்து என்ன பயன்? பாரு பொண்ணு அழகா இருக்கா? உன் கூட வெளில கூட்டிட்டு போகும் போது ஒரு அழகு வேண்டாமா? அவ ஜெயில்ல நல்லா இருந்தா முகிலன் இன்னொரு வாழ்க்கையை பற்றி யோசிக்கவே மாட்டான். இப்போவே முப்பது வயசு ஆகுது. இன்னும் எத்தனை காலம் தனியா இருப்பான்? அதான் அவளை விட்டு விலகி வர இப்படி பண்ணினேன்” என்று சமாளிக்க,

அவரின் கூற்றில் மனது கொஞ்சம் மாறினாலும் “அந்த பொண்ணு கர்ப்பமா இருந்துச்சே” என்று பதறினார்.

“அது யார் குழந்தையோ? உனக்கு எதுக்கு இந்த கவலை” விஷ்வநாத் சொல்ல தமயா முறைத்தார்.

“என் பையன் நல்லா இருக்கணும் தான். அவளை மறந்துட்டு இன்னொரு வாழ்க்கை வாழணும் தான். ஆனா கர்ப்பமா இருக்கிற ஒரு பொண்ணை கொலைப் பண்ணிட்டு அந்த பாவம் என் பையனை சேர வேண்டாம். இதோட அவளை கஷ்டப்படுத்துற வேலையை விடுங்க”

“சரி சரி, இப்போ இருக்குற பிரச்சனையை எப்படி சரி பண்ணுறது யோசிக்கணும்?” விஷ்வநாத் சொல்ல,

“பண்ண நினைச்ச பாவத்துக்கு ரெண்டு பேரும் சட்டப்படி தண்டனை அனுபவிங்க” என்றார் தமயா.

“வாட்?” விஷ்வநாத் முகத்தில் ஏக அதிர்ச்சி.

“உண்மையை தான் சொன்னேன்” என்ற தமயா நகர்ந்து விட்டார். அவராலும் வெளியில் தலைக்காட்ட முடியாத நிலமை. மகன் மேல் இன்னும் கோபம் பெருகியது.

‘எவளோ ஒருத்திக்காக தன்னோட குடும்பத்தை இவ்ளோ பாடு படுத்தணுமா?’ என்று இருந்தது.

அந்த எவளோ ஒருத்தியின் வயிற்றில் தான் தன் குடும்ப வாரிசு இருக்கிறது என்பதை அறியும் போது என்ன செய்வாரோ!

முகிலனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக அந்த நாள் விடிந்தது. அந்த வீடியோ எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை அறிந்து சந்தோஷ மழையில் நனைந்தான். இதை தான் அவனும் எதிர்பார்த்தான். அவமானத்தில் அவர்கள் வெளியில் வரவே யோசிக்க வேண்டும்.

எஸ்.பி அலுவலகம் சென்று சேர்ந்தவன் அன்றைய வழக்குகளை பற்றி பார்த்து கொண்டிருக்கும் போது சத்யா அனுமதி கேட்டு உள்ளே வந்தான்.

“சார் திஷா போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்”

அதை வாங்கியவன் படிக்க அவளின் இரத்தத்தில் போதை மருந்து கலந்திருந்தது. அதை உட்கொண்டால் தங்களையே கட்டுபடுத்த முடியாமல் போய் விடும். தானாகவே எதிர் பாலினத்தவரை நாடி செல்வார்கள். அதே மருந்து தான் திஷாவிற்கும் கொடுக்கப்பட்டிருந்தது.

“அவனுங்க எதிர்பார்த்த போல தானே நடந்திருக்கு. ஆனா எதுக்காக கொலை பண்ணனும்?”

நான்கு பேர் சேர்ந்து அவளை பலாத்காரம் பண்ணி கழுத்தை நெரித்து கொன்றிருக்கிறார்கள்.

“ஒருவேளை உண்மை வெளியில் தெரிஞ்சிடும்னு கொலை பண்ணியிருக்கலாம் சார்” சத்யா தான் சொன்னான்.

“ஹ்ம் இருக்கலாம். அந்த பசங்களை பற்றி ஏதாவது தெரிந்ததா?”

“எஸ் சார். நான்கு பேரில் ரெண்டு பேர் கர்நாடகாவை சேர்ந்தவர்கள். ரெண்டு பேர் தமிழ்நாடு. சும்மா இங்க சுற்றி பார்க்க வந்த இடத்தில் போதை பொருள் எடுக்க, போதையில் திஷாவை கட்டாயப்படுத்தி ரேப் பண்ணி கொலை பண்ணிருக்காங்க. நான்கு பேரையும் இன்னைக்கு காலையில் அரெஸ்ட் பண்ணியாச்சு. எப்.ஐ.ஆர் பைல் பண்ணிட்டோம். நாளைக்கு கோர்ட்ல ப்ரொடியூஸ் பண்ணனும்”

“ஓகே கேரி ஆன் அண்ட் அவங்களுக்கு எங்க இருந்து ட்ரக்ஸ் கிடைக்குதுன்னு விசாரிங்க”

“ஓகே சார்” என்ற சத்யா சல்யூட் வைத்து விட்டு கிளம்ப முகிலன் மருத்துவமனைக்கு கிளம்பினான்.

அவன் சென்ற நேரம் அறிவழகிக்கு செவிலியர் உடை மாற்றி கொண்டிருக்க வெளியில் காத்திருந்தவன் அவர் வெளியே வரவும் உள்ளே சென்றான்.

“ஆர் யூ ஃபீலிங் பெட்டர் அழகி?”

“கை உடைஞ்ச பொண்டாட்டிக்கிட்ட இப்படி தான் கேப்பியாடா?” அழகி முறைத்தாள்.

“உன் கை உடைய எல்லாம் இல்ல. அப்புறம் ரெண்டு கிஸ், நாலு ஹக் கேக்க முடியுமா என்ன? எத்தனை வருஷம் ஆனாலும் உன் வாய் கொழுப்பு மட்டும் குறையவே இல்லடி என் டார்க் சாக்லேட்” என்று அவளின் கன்னம் கிள்ளிக் கொண்டான்.

“இது ஹாஸ்பிட்டல்டா. நான் இப்போ ஒரு கைதி. நியாபகம் இருக்குல்ல”

“நல்லாவே இருக்குடி என் அழகி. என்ன சொல்றா என் பொண்ணு? அம்மா ஒழுங்கா சாப்பாடு கொடுக்கிறாளா?” அவளின் வயிற்றில் கை வைத்து கேட்க குழந்தை உதைத்தது.

“உன்னை விட பெரிய வாயாடியா வரும் போலடி”

“அப்புறம் உனக்கு டஃப் குடுக்க வேண்டாமா?” அவளின் பதிலில் வாய் விட்டு சிரித்தவன்,

“அவ உன்னை போல டார்க் சாக்லேட் அழகியா தான் வேணும். உன்னை முதல் முறை பார்த்தப்போ கியூட் ஆக என்கிட்ட பேசின என் அழகி தான் வேணும். என்னை போல இருக்க வேண்டாம்” என்றான். அவன் கண்களில் அவ்வளவு ரசனை.

“ஹிக்கும் சைட் அடிக்காதடா. வெட்கமா இருக்குதுல்ல”

“அழகியே! அரசியே!” அவன் கொஞ்ச,

“போதும் போதும் இன்னைக்கு வேற வேலையே இல்லையாடா? இப்படி வழியுற” என்று அவனின் தலையில் கொட்டினாள்.

“நீ ஜெயிலுக்குள்ள இருந்தா இப்படி உன்னை கொஞ்ச முடியுமா? ரொம்ப மிஸ் பண்ணுறேன்டி உன்னை. அதான் கிடைக்குற டைம் என் அழகியை பார்க்க ஓடி வந்துடுறேன்”

“இன்னும் கொஞ்சம் நாள் தான்டா. அப்புறம் உன் கூடவே தானே இருக்க போறேன்”

“ஹ்ம் அடுத்த பிரச்சனை எதுவும் வராமல் இருந்தால் சரி” என்று புன்னகைத்தான்.

அதில் இருந்த வேறுபாட்டை கண்டு கொண்டவள் “என்னடா பண்ணி வச்சிருக்க? சிரிப்பே சரி இல்லையே” என்று கேட்க,

“நத்திங்டி என் டார்க் சாக்லேட். உன் பக்கம் வாதாட லாயர் ரெடி. இன்னும் ஒரே ஒரு ப்ரூப் கண்டு பிடிச்சிட்டா அடுத்த டைம் நீ வெளில வந்துடலாம்” என்று அவளின் நெற்றி முட்டினான்.

“நிஜமா?” அவள் கண்கள் விரிக்க,

அதில் புதைந்து கொள்ள உருவான ஆசையை அடக்கி “கண்டிப்பா வந்துடுவ அழகி. கொலை பண்ணினவனை நெருங்கிட்டேன். நீ பத்திரமா இரு. எப்படியும் இன்னும் ஒன்னு ரெண்டு நாளில் மறுபடியும் ஜெயிலுக்கு கூட்டிட்டு போயிடுவாங்க. அதுவரை நமக்கான நாள். எதையும் பற்றி யோசிக்காம ரிலேக்ஸ் ஆக இரு. நான் இருக்கேன் எல்லாத்தையும் சரி பண்ணிடுவேன்” என்று அவளின் கன்னத்தில் இதழ் பதித்தவன் வெளியே வந்தான்.

வெளியில் நின்ற காவலர்களிடம் “ரொம்ப கவனமா இருங்க ரெண்டு பேரும். அவ தப்பிக்க மாட்டா. ஆனா அவளை கொலை பண்ண உள்ளே ஆள் வர சான்ஸ் இருக்கு. நர்ஸ், டாக்டர்ஸ் யார் வந்தாலும் நல்லா செக் பண்ணி அனுப்புங்க. வெறும் ஐடி கார்ட் நம்பி அனுப்பாதீங்க. எனக்கு அவங்க ஐடி கார்ட் போட்டோ அனுப்பிட்டு தான் வரவங்கள உள்ளே விடணும். உங்க ரூல்ஸ்ல இல்லைன்னாலும் ஒரு கர்ப்பிணி பெண்ணோட பாதுகாப்புக்காக இதை பாருங்க பிளீஸ்” என்று கூறி விட்டு செல்ல அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

“என்னடா சார் இந்த பொண்ணு மேல இவளோ கேர் எடுத்துக்குறார்?” ஒருவன் கேட்க,

“அது அவரோட வைஃப். செய்யாத கொலைக்கு மாட்டி இருக்கிறதா சத்யா சார் சொன்னார்” என்றான் மற்றவன்.

முகிலன் பற்றி அவர்களுக்கு நன்கு தெரியும். அவன் வெளியே கரடு முரடாக தெரிந்தாலும் உள்ளே பாசக்காரன் தான். அவனுக்காகவே அவன் சொன்னதை செய்ய நினைத்தார்கள்.

டொரன்டோ, கனடா. தீரன் வில்லா. காலை காபியை ரசித்து குடித்தவாறே கையில் இருந்த ஆப்பிள் மேக்கில் அன்றைய அப்பாயின்ட்மென்ட் பற்றி அலசி கொண்டிருந்தான். மேகதீரன் கனடாவில் புகழ் பெற்ற நரம்பியல் நிபுணர். முப்பத்து ஐந்து வயது நிரம்பிய பின்னும் திருமணம் செய்து கொள்ளாமல் கிடைக்கும் நேரம் தன் தாபத்தை வேறு வழியில் தீர்த்து கொள்பவன். இன்றும் காபி கப்பை கழுவி வைத்து விட்டு வழக்கமான வேலைகளை முடித்தவன் தான் வேலை செய்யும் மருத்துவமனைக்கு கிளம்பினான். அங்கு சென்று தன் வரவை குறித்து விட்டு அலைபேசியை பார்க்க இந்தியாவில் இருந்து நான்கு அழைப்புகள் வந்திருந்தன.

“என்ன திடீர்னு இத்தனை கால்?” என்று எண்ணியவன் திரும்ப அழைத்தான்.

அழைப்பு எடுக்க பட்டதும், “சொல்லுங்க மாம். என்ன இத்தனை போன் கால்? இன்னைக்கு இம்பார்டன்ட் ஆப்ரேஷன் ஒன்னு இருக்குன்னு சொன்னேனே” என்று கேட்டான்.

“சொன்ன தான் கண்ணா. ஆனாலும் இப்போ முடிஞ்சு போன பிரச்சனை மறுபடியும் தொடங்குதே” என்று புலம்பினார் கீதா, அவனின் தாய்.

“முடிஞ்சு போனதா? அது தான் பத்திர பதிவு எல்லாம் முடிஞ்சு இப்போ சொத்து நம்ம கைக்கு வந்துடுச்சே. தொல்லையான ஆள கூட தீர்த்து கட்டியாச்சு. அடுத்து என்ன பிரச்சினை?”

“அறிவழகி கேஸ் திரும்ப கோர்ட்க்கு வருது கண்ணா. ஒரு வேளை கண்டு பிடிச்சிடுவாங்களோ?”

“யாரும் எதுவும் கண்டு பிடிக்க முடியாது மாம். அதுக்கு முதலில் நாம மயக்கத்தில் என்ன பண்ணினோம்னு தெரியணும் அவளுக்கு. அவளே வாக்குமூலம் கொடுத்துட்டா. ஒன்னும் நிற்காது. பயப்படாம இருங்க”

“இருந்தாலும் கண்ணா..” கீதா இழுக்க,

“மாம் அவங்களால எதையும் கண்டு பிடிக்க முடியாது. நம்மையும் கெஸ் பண்ண முடியாது. பீ கூல் மாம். எனக்கு இப்போ ஆப்ரேஷன் தியேட்டர் போகனும். முடிச்சிட்டு வந்து கால் பண்ணுறேன் மாம். பை” என்று அழைப்பை துண்டித்தவனுக்கு அவர்கள் பேசிய அனைத்தும் இன்னொருவனால் ஆடியோ பதிவாக மாற்றப்பட்டு விட்டது என தெரியவில்லை.

இனி இவர்களின் குடுமி இன்னொருவன் கையில் என்பது தெரியாமல் இவர்களோடு சேர்ந்த மற்றவர்களும் நிம்மதியாக இருந்தனர். இவர்களின் நிம்மதியை கெடுக்கவே முகிலன் தன் நண்பர்களோடு வந்து கொண்டிருந்தான்.
 

Asha Evander

Moderator
அத்தியாயம் 7

சிறுவாரூர் காவல் நிலையம். தன் காவல்துறை நண்பர்களுடன் அங்கே வந்திருந்தான் முகிலன். அவன் எஸ்.பி என தெரிந்தவர்கள் எழும்பி சல்யூட் வைத்து மரியாதை செலுத்த அதை ஆமோதித்து பெற்று கொண்டவன் தான் வந்த காரியத்தை விசாரித்தான்.

“அவங்க போன்ல பேசினதை ட்ராக் பண்ண லீகல் பெர்மிஷன் வாங்கிட்டீங்களா?”

“எஸ் சார். அவங்க செயல்கள் வித்தியாசமா இருக்குறதையும் கொலை நடந்த அன்னைக்கு அவங்க ஆக்டிவிட்டீஸ் மேல சந்தேகம் இருக்கிறதாகவும் ப்ரூப் குடுத்து பெர்மிஷன் வாங்கிருக்கோம். நேத்து அவங்க பேசினதை லீகலா சப்மிட் பண்ணி இனி பேசுறத நாம ட்ராக் பண்ண முழு அதிகாரம் கொடுத்திருக்காங்க” என்றார் அந்த காவல்துறை அதிகாரி.

“தட்ஸ் குட்” என்றவன் அவர்கள் பேசியதை கேட்டு அடுத்து செய்ய வேண்டியதை குறித்து கொண்டான்.

“இந்த ப்ரூப் வச்சு அவங்கள சந்தேகத்தின் பேரில் அரெஸ்ட் பண்ணுங்க. அண்ட் மேகதீரன் அம்மாவுக்கு ஆக்சிடென்ட் ஆனதா ஒரு ஃபேக் நியூஸ் சொல்லி உடனே மேகதீரனை இந்தியா வர வைங்க” முகிலன் கட்டளையிட மற்றவர்கள் கொஞ்சம் தயங்கினர்.

“சார் இது வொர்க் அவுட் ஆகுமா? அவன் வேற யார் மூலமாவது இது பொய்ன்னு தெரிஞ்சிகிட்டா அலர்ட் ஆகிடுவான்”

“கண்டிப்பா அவனுக்கு தெரிய வராது” என்றவன் தன் நண்பர்களை பார்த்து “அவனோட சொந்தகாரங்க வீட்டுக்குள் போய் ஹவுஸ் அரெஸ்ட் பண்ணிடுங்கடா. யாரும் எந்த போன் காலும் பேச கூடாது. ரெண்டு நாள் தான். மேகதீரன் வந்ததும் அடுத்த ஸ்டெப் எடுக்கலாம்” என கேட்க, “டன் மச்சி” என்று கிளம்பினர்.

அன்று இரவே மேகதீரனின் தாய் கடத்தப்பட்டார். ஒரு தனியார் மருத்துவமனையில் தன் நண்பனின் உதவியுடன் விபத்தில் பாதிக்கபட்டவர் போல ஏற்பாடு செய்தவன் கீதாவை மயக்கத்திலேயே வைத்திருக்க செய்தான்.

இரவு தன் பணியை முடித்து விட்டு வந்த மேகதீரன் அலுப்பு நீங்க குளித்து விட்டு வெளியே வர அவனின் பெண் தோழி ஷீதல் அவனுக்காக காத்திருந்தாள்.

“ரொம்ப டயர்டா தீரன்?” அவனின் அருகில் வந்தவள் வெற்று மார்பில் கோலம் போட்டவாறே கேட்க,

“எஸ் பேப். பதினைந்து மணி நேரம் நின்று ஆப்ரேஷன் பண்ணிட்டு வந்திருக்கேன். ரொம்ப டயர்ட்” என்று தன்னுள் இழுத்து கொண்டான்.

“ஓகே தென் டேக் ரெஸ்ட் தீரன்” என்று அவனை விட்டு விலக பார்க்க,

அவளின் இதழை கவ்விக் கொண்டு “இப்போ உன் கூட இருக்கும் போது ரொம்ப ஃப்ரெஷ் ஆக ஃபீல் பண்ணுறேன்” என்றவன் அவளோடு கட்டிலில் சரிந்தான்.

தன் மோகத்தையும் தாபத்தையும் அவளுக்குள் தீர்த்துக் கொண்டவன் நிமிர்ந்து படுக்கும் போது அவனின் அலைபேசி ஒளிர்ந்தது. தன் மேல் படர்ந்திருந்த ஷீதலை மெதுவாக தள்ளி படுக்க வைத்தவன் அழைப்பை பார்க்க அவனின் பெரியம்மா ராகவி தான் அழைத்திருந்தார்.

‘இவங்க என்ன இந்நேரம் போன் பண்ணுறாங்க?’ என்று யோசித்தவன் அழைப்பை இணைத்து “ஹலோ பெரியம்மா எப்படி இருக்கீங்க?” என்று கேட்க அந்த பக்கம் பெரிய கேவல் வெடித்தது.

“என்னாச்சு பெரியம்மா? எதுக்கு அழுறீங்க?” தீரன் பதட்டப்பட,

“தீரா.. தீரா கீதாவுக்கு ஆக்சிடென்ட் ஆகிடுச்சுடா. ரொம்ப சீரியஸான கண்டிசன்ல ஹாஸ்பிட்டல்ல இருக்கா. தலையில் பயங்கர அடி. ஏதோ நரம்புல பிளாக் ஆகிருக்காம். எனக்கு பயமா இருக்குடா. இங்க யாருமே எதுவும் ஒழுங்கா சொல்ல மாட்டேங்குறாங்க. நீ கிளம்பி வாடா தீரா” என்று அழ மேகதீரன் அதிர்ந்தான்.

“காலையில் நல்லா தானே பேசினாங்க பெரியம்மா? எப்படி ஆச்சு?”

“மார்க்கெட் போகும் போது ஒரு பஸ் இடிச்சிட்டு போயிடுச்சுடா. இங்க யாருக்கு என்ன பண்ணனும்னு தெரியலடா. நீ வந்தா உனக்கு நரம்பு பத்தி கேட்க தெரியுமே” ராகவி கண்ணீர் விட, உடனே கிளம்பி வருவதாக சொன்னவன் அவர் சொன்ன மருத்துவமனையில் சீப் டாக்டரை விசாரிக்கவும் தவறவில்லை.

அவரும் முகிலனின் திட்டப்படி மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக சொல்லவும் உடனே இந்தியா கிளம்பினான் மேகதீரன். ஷீதலை எழுப்பி விஷயத்தை சொன்னவன் உடனே டிக்கெட் புக் செய்து இந்தியா கிளம்பினான்.

அவனிடம் பேசி முடித்த ராகவி கண்ணீரோடு அலைபேசியை முகிலனிடம் கொடுத்தார்.

“என் பையன் சாவுக்கு நீதி வாங்கி குடுங்க சார். இப்போ வரை அந்த அப்பாவி பொண்ணு அறிவழகி தான் கொலை பண்ணிட்டான்னு திட்டிட்டு இருந்தேன். ஆனா கூட இருந்தவங்களே சொத்துக்காக என் பையனை கொலை பண்ணிட்டாங்கன்னு கேட்கும் போது பெத்த வயிறு எரியுது. என் புள்ளை சாகும் போது அனுபவிச்ச வலி இவங்களும் அனுபவிக்கணும்” என்று அழ, முகிலன் தான் சமாதானப் படுத்தினான்.

ராகவி மற்றும் சந்தரிடம் உண்மையை சொல்லியே அவர்களின் திட்டத்தில் செயல்பட வைத்தான். சந்தர் வாயே திறக்கவில்லை.

“நம்ம பேரப் பிள்ளையை கூட்டிட்டு அறிவோட இனி இங்க வரணும்” என்று ராகவி தன் கணவரிடம் சொல்ல அவர் முகிலனை பார்த்தார்.

அவன் கண்களில் என்ன இருந்ததோ, “அது நம்ம பேரப்பிள்ளை இல்ல ராகவி. அறிவழகியை உன் பையன் கட்டாயக் கல்யாணம் பண்ணி ஒரு குடும்பத்தை பிரிச்சிருக்கான். அவளோட புருசன் இந்த முகிலன் சார் தான். அந்த குழந்தையும் அவரோடது தான்” என்று சந்தர் கூற ராகவி அதிர்ந்து பார்த்தாள்.

“அப்போ.. இன்னொருத்தன் பொண்டாட்டியை நம்ம பையன்” என்று திணற,

“ஆமா” என்ற சந்தர் முகிலன் தன்னிடம் முன்பே இதை பற்றி சொல்லி விட்டதாக சொன்னார்.

ராகவிக்கு அவமானமாக இருந்தது. முகிலனை பார்த்து கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டவர் தங்களால் இனி எந்த பிரச்சனையும் வராது என்று உறுதி கொடுத்தார்.

மற்ற குடும்பத்தினர் தீரனுக்கு எந்த தகவலும் கொடுக்க முடியாமல் காவல்துறை கட்டுப்பாட்டில் இருக்க, அடுத்த நாள் இந்தியா வந்திறங்கினான் மேகதீரன்.

ராகவ் மற்றும் ஜானகி இருவரும் முகிலன் வெளியிட்ட வீடியோவின் தாக்கத்தில் இருந்து வெளிவர முடியாமல் வீட்டினுள்ளேயே அடைபட்டு இருந்தனர். அதிலும் ஜானகிக்கு கல்லூரி செல்லவே முடியவில்லை. அனைத்து மாணவர்களும் அவளை வித்தியாசமாக பார்ப்பது போலவே இருந்தது.

அவளின் தோழிகள் “எஸ்.பி சாரை கல்யாணம் பண்ண போறேன்னு நினைச்சோம். ஆனா அவருக்கு ஏற்கனவே கல்யாணம் ஆனது தெரிஞ்சும் இப்படி அவரோட மனைவியை கொலை பண்ணுற அளவுக்கு போவன்னு எதிர்பார்க்கல” என்று திட்ட ஜானகிக்கு அறிவழகி மீது இன்னும் வன்மம் கூடியது.

அவளால் தானே எல்லாம். அவள் மட்டும் முகிலனின் வாழ்வில் இல்லையென்றால் முகிலன் ஜானகிக்கு சொந்தம் ஆகிருப்பானே.

மனம் குமுற மீண்டும் தவறு செய்ய துணிந்தாள் ஜானகி. எப்போதும் பின் விளைவுகளை யோசிக்காமல் செய்வதால் கிடைக்கும் தண்டனை பற்றி அவளுக்கு தெரிந்திருக்கவில்லை.

அன்று இரவு அறிவழகி அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்குள் நுழைந்தாள் ஜானகி. செவிலியர் உடையில் கையில் மருந்துகள் நிரம்பிய தட்டுடன் அறிவழகியின் அறைக்குள் செல்லும் முன் அவளை நிறுத்தினர் அங்கு காவலுக்கு இருந்த காவலர்கள்.

“சிஸ்டர் உங்க ஐடி கார்ட் காட்டுங்க. அப்போ தான் உள்ளே போக முடியும்” ஒருவர் சொல்ல,

“வாட்? நான் இங்க தான் வொர்க் பண்றேன். ஐடி என் பேக்ல இருக்கு. இப்போ உள்ளே இருக்குற பேஷியன்ட்க்கு இன்ஜெக்க்ஷன் போடணும்” என்று நகர போக மற்றவர் அவளை தடுத்தார்.

“சாரி சிஸ்டர். நீங்க புதுசுன்னு நினைக்குறேன். இதுவரை இந்த ரூமுக்கு வந்த டாக்டர்ஸ் அண்ட் நர்ஸ் ஐடி கார்ட் காட்டிட்டு தான் உள்ளே போவாங்க. நீங்களும் எடுத்துட்டு வாங்க” என்று கூறி விட்டு அவளுக்கு தெரியாமல் ஒரு போட்டோ எடுத்து அதை முகிலனுக்கு அனுப்பி விட்டார்.

மேகதீரனை கைது செய்து விசாரிக்க தேவையான ஆவணங்களை சரி பார்த்து கொண்டிருந்த முகிலன் காவலர் அனுப்பியிருந்த புகைப்படத்தை பார்த்து அதிர்ந்தான்.

‘இவ எதுக்கு அங்க போனா?’ என யோசித்தவன் உடனே அந்த காவலருக்கு அழைப்பு விடுத்தான்.

முகிலனின் அழைப்பை பார்த்தவரும் அவர்களை விட்டு தள்ளி நின்று பேச முகிலன் கேட்ட கேள்விகளுக்கு ஜானகி நடந்து கொள்ளும் விதத்தை கூறினார். சிறிது யோசித்த முகிலன் அவளை உள்ளே அனுப்புமாறு சொல்லி விட்டு மற்ற மருத்துவர்களையும் உடனே அவர்கள் அறைக்கு வரும்படி அழைக்க சொன்னான். காவலில் இருந்தவரும் அவன் சொன்னதையே செய்ய ஜானகி உள்ளே அனுப்பப்பட்டாள்.

வலி நிவாரணி கொடுக்கபட்டதால் அயர்ந்த உறக்கத்தில் இருந்தாள் அறிவழகி. அவளையே வெறித்துப் பார்த்தாள் ஜானகி.

“உன்னால தான். உன்னால மட்டும் தான் எனக்கு முகிலன் கிடைக்கல. என் அப்பா இப்போ வெளில தலை காட்ட முடியாத அளவுக்கு அவமானத்தில் இருக்காங்க. என்னை பார்த்து வியந்த என்னோட ஃப்ரெண்ட்ஸ் இப்போ என்னையே அருவருப்பா பாக்குறாங்க. இதெல்லாம் உன்னால தானே. நீ எதுக்கு உயிரோட இருக்குற? நீ இந்த உலகத்தில் இல்லன்னா என்னைக்காவது ஒருநாள் முகிலன் என் அன்பை புரிஞ்சிப்பார்” என்று தன் போக்கில் பேசி கொண்டிருந்தவள் கையில் இருந்த ஊசி மருந்தை அறிவழகியின் உடம்பில் ஏற்ற போகும் நேரம் கிளிக் என்ற சத்தம் கேட்டு திரும்பி பார்த்தாள்.

அங்கிருந்த காவலர்களில் ஒருவர் தான் அவளை படம் பிடித்திருந்ததார். அவள் குத்த போகும் நேரம் சரியாக எடுத்திருந்தார். கூடவே சில மருத்துவர்களும் வர ஜானகிக்கு பயத்தில் கைகள் நடுங்க, ஊசியை கீழே போட்டாள்.

“சார் அதை எடுத்து செக் பண்ணுங்க. ப்ரூஃப் வேணும்” முகிலனின் சத்தம் கேட்க தேடியவள் முன் தன் அலைபேசியை நீட்டினார்.

வீடியோ காலில் இருந்தவன் அவளை முறைத்தான்.

“அவ்ளோ சீக்கிரம் அழகியை விட்டு விலகி போவேன்னு தப்பு கணக்கு போட்டுட்டியே ஜானகி. நீ ஏதாச்சும் இப்படி பண்ணுவேன்னு எதிர்பார்த்தேன். அதனால் தான் முன்னாடியே எல்லாம் பக்காவா ரெடி பண்ணி வச்சிருந்தேன். உன்னை நான் வந்து கவனிச்சிக்குறேன்” என்றவன் அவளை கைது செய்து சிறையில் அடைக்க சொன்னான்.

பின் மருத்துவர்களிடம் தேவையான விஷயங்களை பேசி விட்டு பார்வையால் தன்னவளை வருடினான்.

“ஜானகி மேல இப்போ எப்ஐஆர் போட வேண்டாம் கபிலன்” என்றவன் மற்ற வேலைகளை கவனிக்க சென்றான். அவனுக்கு மேகதீரன் அவன் வாயாலே உண்மையை சொன்னால் மட்டுமே ஆதாரம் எடுக்க முடியும்.

மேகதீரன் தன் தாய் அனுமதிக்கப் பட்டிருந்த மருத்துவமனைக்கு விரைந்து வந்திருந்தான். அவனுக்கு இருக்கும் ஒரே சொந்தம் கீதா தான். தந்தை சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்திருக்க, மொத்தமும் கீதா என்றானது அவனுக்கு.

தாய் அனுமதிக்கப் பட்டிருந்த அறைக்கு வெளியே காவலர்கள் நிற்கவும் சிறிது சந்தேகத்துடன் அவர்களின் அருகில் சென்றான்.

“சார் இங்க கீதான்னு ஒரு ஆக்சிடென்ட் பேஷியன்ட்” என கேட்க,

“எஸ் இங்க தான் இருக்காங்க. எஸ்.பி முகிலன் சார் வரவும் டீடெயில் கேட்டுட்டு போய் பாருங்க” என்றார் அவர்.

“எதுக்காக எஸ்.பி சாரை பார்க்கணும்?” என்றவனுக்கு உள்ளுக்குள் திடீர் அதிர்வு. ஆனாலும் வெளியே காட்டாமல் நிற்க சிறிது நேரத்தில் முகிலன் வந்து விட்டான்.

“ஹலோ மேகதீரன் வெல்கம் டூ இந்தியா” என்று வரவேற்க, தீரன் புருவம் சுருக்கினான்.

கண்டுக்கொண்டான் என்பதை புரிந்து கொண்ட முகிலன் “எஸ் தீரன். யூ ஆர் ரைட். யூ ஆர் டிராப்ட். ஒரு கேஸ் விஷயமா ஸ்டேஷன் வரைக்கும் நீங்களா வந்தா நல்லது. நாங்க ஸ்டெப் எடுத்தா” என்று இழுக்க,

“வரேன்” என்று அவர்களுடன் நடந்தான் மேகதீரன்.

சந்திரபுரி பெரிய வீட்டில் தாமரை கல்லூரிக்கு கிளம்பி கொண்டிருந்தாள். அவள் தாய் வள்ளி தனது அலைபேசியை பார்த்து கொண்டிருக்க, பிரேக்கிங் நியூஸ் கேட்டு அதிர்ந்து எழுந்து விட்டாள்.

“என்னங்க! தாமு இங்க வாங்க சீக்கிரம்” என்று கத்த, என்னவோ பிரச்சனை என்று ஓடி வந்தார்கள் கணேசன் மற்றும் தாமரை.

“என்னாச்சுமா?” இருவரும் ஒரே நேரத்தில் கேட்க தன் கையில் இருந்த அலைபேசியைக் காட்ட, நேரலை ஓடிக் கொண்டிருந்தது.

“பிரேக்கிங் நியூஸ். சொத்துக்காக தன் தம்பியையே கொன்ற சம்பவம். பழியை தம்பி மனைவி மேல் போட்டு விட்டு கனடா தப்பி ஓட்டம்” செய்தியாளர் வாசித்து கொண்டிருக்க தாமரைக்கு உடல் நடுங்கியது.

“அம்மா” ஈன குரலில் அவள் அழைக்க,

“ஒன்னும் இல்லைடா தாமு. அறிவழகி போட்டோ எதுவும் வரலல. பயப்படாத” என்று தைரியமூட்டினாள் வள்ளி.

“எப்படிம்மா? அவ தான் பண்ணினதாக வாக்குமூலம் கொடுத்தாளே. இவன் எப்படி மாட்டினான்?”

“தெரியலையே தாமு. சனியன் இப்போ உன் வாழ்க்கைக்கும் இடைஞ்சலாக வந்து நிக்குது” என்று பெற்ற மகளை தூற்ற எதுவும் பேசாமல் நின்றார் கணேசன். ஆனாலும் மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத நிம்மதி.

மூத்த மகள் தான் அறிவழகி. அவளின் கருப்பு நிறம் தான் வள்ளிக்கு முதலில் எரிச்சலை கொடுத்தது. அதை கொண்டே அடித்து அடித்து காயப்படுத்துபவள் ஒரு கட்டத்தில் கதிர்வேலன் கெட்டவன் எனத் தெரிந்தும் திருமணம் செய்து வைத்து விட்டாள். அந்த வீட்டில் கணேசனின் மறுப்பு ஒருகாலமும் ஏற்றுக்கொள்ள பட்டதில்லை. அதனால் அவர்களோடு ஒத்து வாழ பழகி கொண்டார் அவர். இன்றும் மகளுக்கு விடுதலை கிடைத்து விடும் எனும் போது ஒரு சந்தோஷம். செய்தியை உன்னிப்பாக கவனித்தார்.

அதில் மேகதீரன் முகத்தை மறைத்து கொண்டு கோர்ட் வாசலில் நின்றிருந்தான். அவனின் பின்னால் முகிலன் உட்பட பல காவல் அதிகாரிகள் பாதுகாப்புக்கு இருந்தனர்.

“டாக்டர் மேகதீரன். கனடாவில் புகழ்பெற்ற நரம்பியல் நிபுணர். ஆனால் இன்று ஒரு கொலை செய்யும் அளவிற்கு போனதன் பின்னணி என்ன?” நேரலையாக கேள்விகள் கேட்டு கொண்டிருக்க,

அந்நேரம் பெண் காவலாளர்களுடன் வந்து இறங்கினாள் அறிவழகி. உடனே பத்திரிக்கையாளர்கள், கேமரா வெளிச்சம் அவளை சூழ்ந்து கொண்டது.

முகிலன் அவளை நெருங்கி வர நினைக்க அதற்குள் நீதிமன்றத்திற்குள் அழைத்து சென்றனர்.

நீதிபதி வந்து இருக்கையில் அமரவும் வாதங்கள் தொடங்கியது. முகிலன் தன் முன்னே நிற்கும் மேகதீரனை தான் முறைத்து கொண்டிருந்தான்.

அன்று தீரனை விசாரணைக்கு என்று அழைத்து சென்ற போதே தீரன் சுதாரித்து விட்டான். முகிலன் எத்தனை விசாரித்தும் அவன் உண்மையை ஒப்புக் கொள்ளவில்லை.

“மேகதீரன், நீங்க வாயை திறக்கலன்னா கூட எங்களுக்கு ஆதாரம் கையில் இருக்கு. உங்களுக்கு உதவின டாக்டர்ஸ் அண்ட் உங்க அம்மா, சித்தி வாக்குமூலம் கொடுத்துட்டாங்க. எங்களுக்கு இப்போ தெரிய வேண்டியது எதுக்காக அந்த கொலையை நீங்க பண்ணுனீங்கன்னு மட்டும் தான்” முகிலன் கேட்க இன்னும் மௌனம் சாதித்தான்.

“ஓ! அப்போ வாயை திறக்க மாட்டீங்க அப்படி தானே. சாரி தீரன் வேற ஆப்ஷன் எனக்கு இல்ல” என்று முகிலன் கூற புருவத்தை சுருக்கினான் தீரன்.

“லெட்ஸ் ஸ்டார்ட் அவர் இன்வெஸ்டிகேஷன் பிரம் தி எண்ட் ஆஃப் யுவர் மாம்‘ஸ் லைஃப்” (உங்க அம்மாவின் முடிவில் இருந்து நம்ம விசாரணையை தொடங்குவோம்)

“மிரட்டுறீங்களா சார்? இட்ஸ் இல்லீகல்”

“அட என்ன தீரன் நீங்க? என் மனைவிக்காக எத்தனை ஸ்டெப் வேணும்னாலும் எடுப்பேன்” முகிலன் கூலாக சொன்னான்.

“உங்க மனைவி?”

“அறிவழகி” ஒற்றை வார்த்தையில் முடித்து விட்டான் முகிலன்.

தீரனுக்கு இவன் மனைவிக்காக எந்த தூரத்திற்கும் செல்வான் என்பது புரிந்து விட்டது.

“கதிர்வேலன் என் பெரியம்மா பையன். அவங்க அப்பா சைட் யாருக்கும் குழந்தை பாக்கியம் இல்ல. கதிர் மட்டும் தான் அத்தனை சொத்துக்கும் வாரிசு. நானும் என் அம்மாவும் அப்பாவை இழந்த பிறகு பெரியம்மா தயவில் தான் இருந்தோம். ஆனா எதற்கு எடுத்தாலும் கதிரின் இடைஞ்சல் இருக்கும். பணம் தேவைன்னா கூட கதிர் தான் எடுத்து தருவான். என்னை விட சின்ன பையன். எனக்கு ஈகோ டச் ஆகிடுச்சு. நான் படிச்சு முடிஞ்சு கனடா போயிட்டேன். அம்மா அவங்க தயவில் தான் வாழ்ந்தாங்க. அவங்களுக்கு கதிர் கிட்ட கை நீட்டி காசு வாங்குறது பழகிட்டாலும் சில நேரம் பெரியவங்கன்னு கூட பார்க்காமல் நிறைய வேலை வாங்குவான். அதனால் அம்மாவுக்கு உடம்பு முடியாமல் போனா கூட கண்டுக்க மாட்டாங்க. அதை மத்தவங்களும் பார்த்து ரசிக்கிறது எனக்கு எரிச்சலை தரும். அதனால் அவங்களுக்கு இனி வாரிசு இல்லாம பண்ண நினைச்சேன். அப்போ தான் அவசரம் அவசரமா கதிருக்கும் அறிவழகிக்கும் கல்யாணம் பண்ணி வச்சாங்க. எனக்கும் அது வசதியா போச்சு. அன்னைக்கு நைட் அறிவு வாங்க வந்த பாலில் விஷத்தை கலந்து வச்சிட்டோம்”

“வச்சிட்டோம்னா யார் எல்லாம் இதுல சம்மந்தபட்டது?” முகிலன் கேட்க,

“நானும் என் அம்மாவும் தான் சித்தியை சம்மதிக்க வச்சு வேலையை முடிச்சோம். என்னோட ஜூனியர் டாக்டர் ஒருத்தன் இங்க இருந்தான். அவனை வைத்து அவங்க தூங்கின அப்புறம் மயக்கம் வர கேஸ் ரூம்ல ரிலீஸ் பண்ணினோம். கதிர் இறந்த பிறகு அறிவழகியை ட்ரக்ஸ் குடுத்து மறுபடியும் மயங்க வச்சோம். கதிரோட கையை வச்சே அறிவழகின்னு எழுத வைத்து அவனோட இரத்தத்தை அறிவோட கையில் தெளித்து விட்டோம். அவளையே வாக்குமூலம் குடுக்கிற போல பேச வச்சு இந்த கொலை கேஸில் மாட்டி விட்டுட்டு நான் கனடா கிளம்பிட்டேன்”

அவனின் வாக்குமூலத்தை கேட்டு முகிலனுக்கு இரத்தம் கொதித்தது. ஆனாலும் சட்டபடி தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்று அமைதி காத்தான்.

இன்று அவனின் வாக்குமூலம் நீதிமன்றத்தில் ஒளிபரப்பாக, அறிவழகி அதிர்ச்சியில் உறைந்து நின்றாள். இவர்களின் சொத்து ஆசையால் அவளின் வாழ்வை நாசமாக்கி விட்டார்களே!

இருபக்க வாதத்தையும் கேட்ட நீதிபதி மேகதீரனுக்கு ஆயுள் தண்டனையும் ஐந்து லட்சம் அபராதமும் விதித்து அவனின் மருத்துவர் உரிமத்தையும் பறிக்க ஆணையிட்டார். அவனுக்கு உதவியாக இருந்த அவனின் ஜூனியர் மருத்துவனுக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனையும் மருத்துவர் உரிமமும் பறிக்க பட்டது. கீதாவுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ஐந்து லட்சம் அபராதமும் வழங்கப்பட்டு அறிவழகி விடுவிக்கப் பட்டாள்.

இது நேரலையில் ஒளிபதிவாகி கொண்டிருக்க, கிருஷ்ணா அவசரமாக தாமரைக்கு அழைப்பு விடுக்க அவளின் கை நடுங்கியது.

அழைப்பை எடுத்தவள் முதலில் கேட்ட வார்த்தை “யூ சீட்டர். ஏமாத்திட்டியேடி. உருவத்தை மாத்தி என் காதலையும் அசிங்க படுத்திட்டியே. இனி இந்த கல்யாணம் நடக்காது. உன்னை போல் ஒரு ஏமாற்றுக்காரி கூட என்னால வாழ முடியாது. இதோட முடிச்சிக்கலாம்” என்று கத்த,

தாமரை “கிரிஷ் பிளீஸ். சொல்லுறத கேளு” என்று கெஞ்சியது எதுவும் அவனின் காதில் கேட்கவில்லை. அழைப்பை துண்டித்து விட்டான்.

“ஆஆஆ” என கத்தினாள் தாமரை. வீட்டில் இருந்த அனைத்தையும் போட்டு உடைத்தாள்.

“அறிவழகி உன்னை சும்மா விட மாட்டேன்டி” என்று சத்தம் போட்டவள் “கிருஷ்ணா" என கதறி அழுதாள்.
 

Asha Evander

Moderator
அத்தியாயம் 8

காவலர் குடியிருப்பு. முகிலன் நீதிமன்றத்தில் இருந்து அறிவழகியை தான் தங்கியிருந்த காவலர் குடியிருப்பு வீட்டிற்கு தான் அழைத்து வந்தான். அவனின் சொந்த வீட்டிற்கு போக அவனுக்கு விருப்பமும் இல்லை. இனியாவது அவனும் அவனின் அழகியும் குழந்தையோடு நிம்மதியான வாழ்வு வாழ ஆசைப்பட்டான்.

வீட்டிற்கு வந்ததும் அவளை தனது அறையில் விட்டவன் குளித்து வர சொல்லிவிட்டு மதிய உணவை தயார் செய்ய ஆரம்பித்தான். அவள் குளித்து முடித்து விட்டு அவன் எடுத்து கொடுத்த உடையில் வெளியே வர அவளை ஒரு கண்ணால் நோட்டம் விட்டு கொண்டிருந்தவன் சமையலை அப்படியே விட்டு விட்டு அருகில் வந்தான்.

“அழகா இருக்கடி அழகி” அவளின் இதழில் முத்தம் கொடுத்து விட்டு நிமிர,

“ரொம்ப மிஸ் பண்ணினேன் முகி. இந்த ஜென்மத்தில் உன் கூட சேர்ந்து வாழ முடியாமல் போயிடுமோன்னு உள்ளுக்குள்ள அவ்ளோ வலி இருந்துச்சு. இப்போ உன் கூட இப்படி இருக்கும் போது தான் உன்னை பார்த்ததுக்கு நான் லக்கியா ஃபீல் பண்ணுறேன்டா” என்றாள் அழகி.

“உனக்காக நான் இருக்காம வேற யார் இருக்க போறா அழகி? உன் கஷ்டத்திலேயும் சந்தோஷத்துலேயும் நான் கூட இருக்கணும்னு தான் அந்த கடவுள் நம்மள மீட் பண்ண வச்சு இந்த லெவல்க்கு கொண்டு வந்திருக்கிறார். உனக்காக நான் எப்போவும் இருப்பேன்டி. இந்த மாதிரி கர்ப்பமா இருக்கிறப்போ எதுக்கும் ஃபீல் பண்ணாத நீ” என அவளின் நெற்றி முட்டினான்.

“ஹ்ம்” அவளின் குரலே சரி ஆகவில்லை.

“என் டார்க் சாக்லேட்டுக்கு என்ன கவலை இப்போ?” அவளின் முகம் நிமிர்த்த,

“வலிடா. உன் கூட வாழ்ந்து இன்னொருத்தனுக்கும் என்னை கல்யாணம் பண்ணி வச்சு கடைசியில் கொலை கேஸ்ல மாட்டி இந்த ஏழு மாசம் நான் வெளியில் காட்டலன்னாலும் உள்ளுக்குள்ள ஒவ்வொரு நாளும் கடந்து வர பட்ட பாடு ஐயோ! யாருக்கும் இந்த நிலைமை வரக் கூடாது முகி” என கலங்கினாள்.

அவளின் கண்ணீர் அவனையும் வருந்தியது.

“இன்னொரு முறை அவனை பத்தி நமக்குள்ள பேச்சு வரக் கூடாது அழகி. அதுக்காக சொல்லுறேன். உன் வயிற்றில் வளருவது என் குழந்தை. நமக்கு பிறக்க போகிற குழந்தை. அவனுக்கு குழந்தை பெற்று கொள்ளுற தகுதி இல்ல அழகி. அவனோட வீட்டில் அதுக்கான மெடிக்கல் ரிப்போர்ட் பார்த்தேன். யார் எடுத்ததுன்னு தெரியல. என்ன சாபமோ அவங்க வீட்ல இது வரைக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கவே இல்ல. உன்னை உன் விருப்பம் இல்லாமல் தொட்டானே தவிர இந்த குழந்தை என்னோடது. நம்ம காதலோட பரிசு. மனசை இதை நினைச்சு குழப்பாமல் ஒழுங்கா பிள்ளைய பெத்து குடுடி என் அழகி” என்று கடைசியில் அவளை அணைத்து ஆறுதல் படுத்த,

“இதை முதல்லயே சொல்ல என்னடா உனக்கு? தினம் தினம் பயந்து செத்தேன் தெரியுமா?” என அவனை அடித்தாள் அறிவழகி.

“அதெல்லாம் சொல்ல முடியாது. உனக்கு நம்பிக்கை இருக்கணும். அடிக்காதடி மூட் எங்க எல்லாமோ போகுது. ஒழுங்கா இருந்தா சாப்பாடு. இல்லன்னா சாப்பாடாவது ஒன்னாவதுன்னு உன்னை சாப்பிடுற வழியில் இறங்கிடுவேன் பார்த்துக்கோ” அவளை மிரட்ட

“சேட்டை ஆகி போச்சுடா உனக்கு. முதல்ல சமையலை முடி. நிறைய பேச வேண்டி இருக்கு” என்று வெட்கத்தில் சிவந்த முகத்தை மறைத்த படி அவனை சமையலறைக்குள் தள்ளினாள்.

“நீயும் வாடி” என்று அவளையும் மெதுவாக அழைத்து சென்றவன் ஒரு இருக்கையை நகர்த்தி அதில் அவளை அமர வைத்து கொண்டான்.

“அப்புறம் கல்யாண வேலை எல்லாம் எப்படி போகுது முகிலன் சார்” கிண்டலாக கேட்க அவளை முறைத்தான்.

“உன்னை மறுபடியும் கல்யாணம் பண்ணுற ஐடியா இல்ல”

“சரி அத விடு. ஜானகியை என்ன பண்ணின?” அழகி கேட்க,

“அவளுக்கு என்ன திவ்யமா ஜெயில்ல இருக்கா” என்றான்.

“சின்ன பொண்ணுடா. சொன்னா புரிஞ்சிக்குவா” அறிவழகிக்கு வருத்தமாக இருந்தது.

“நான் சொல்லிருக்க மாட்டேன்னு நினைக்குறியா அழகி?”
அவளிடத்தில் மௌனம்.

“முதல் முறை அவ பேசும் போதே தெளிவா சொல்லிட்டேன். மறுபடியும் மறுபடியும் டார்ச்சர் பண்ணினா. காலேஜ் வரை போய் வார்ன் பண்ணியாச்சு. ஆனாலும் அந்த நியூஸ் பேப்பர்ல ரெண்டு பேருக்கும் நிச்சயம் முடிஞ்சதா போட்டது பத்தாதுன்னு உன்னை கொலை பண்ண வந்துட்டா. இனியும் அவளை சும்மா விடுவேன்னு நீ எப்படி எதிர்பார்க்கலாம்”

பேசிக் கொண்டே இருந்தாலும் சமையலையும் கவனித்து கொண்டான்.

“கொலை பண்ண வந்தாளா? இது எப்போ?” ஆச்சர்யமாக கேட்டாள் அழகி.

“இப்போவும் உனக்கு ஷாக்கா இல்லல” என்று அவளின் தலையில் கொட்டியவன் அன்று நடந்ததை சொன்னான்.

“எப்படி தூங்கியிருக்கேன் பாரேன்” அழகிக்கு அப்போதும் கிண்டல் தான். அவளுக்கு தெரியும் கண்டிப்பாக முகிலன் எதுவும் நடக்க விட்டிருக்க மாட்டான் என்று.

“ஆமா நீ தான் கும்பகர்ணனுக்கு தங்கச்சி போல தூங்குனியே” என்றவன் தக்காளி சாதத்தை இறக்கி விட்டு ரைத்தா செய்ய வெங்காயத்தை நறுக்கினான்.

“பீ சீரியஸ் முகி. நாளைக்கு நாம ஜானகியை பார்க்க போகலாம். நம்ம காதல் கல்யாணத்தை பத்தி சொன்னா அவளே ஒதுங்குவா பாரேன்”

அவளை பார்த்து பெருமூச்சு விட்டவன் “உனக்காக ஒரு ஸ்டெப் எடுக்கலாம். நாளைக்கு வேண்டாம். இப்போ இங்கேயே கூட்டிட்டு வர சொல்லுறேன்” என்று சத்யாவுக்கு அழைத்து அவளை கூட்டி வர சொல்லியவன் ரைத்தாவிற்கு தயிரை ஊற்றி வெங்காயத்தை போட்டு கலக்கி உப்பை சரி பார்த்து விட்டு அவளை எழுப்பி உணவு மேசைக்கு அழைத்து வந்தான்.

“இங்கேயே இரு. சாப்பாடை எடுத்துட்டு வரேன்” என்று அமர்த்தி விட்டு உணவுகளை தட்டுடன் எடுத்து வந்தான்.

அவளுக்கும் பரிமாறி விட்டு சாப்பிட ஆரம்பிக்க, “முகிலன்” என்ற குரலில் கையை இறக்கினான் முகிலன்.

அழகி அவனை கேள்வியாக பார்க்க “அம்மா வந்துட்டாங்க” என்று எழும்பினான்.

“நீ இரு முகி. நான் பாக்குறேன்” என்றவள் எழும்ப,

“வேண்டாம் அழகி” என்றவனையும் மீறி கதவை திறந்தாள்.

அவளை தமயா எதிர்பார்த்திருப்பார் போலும். அவளை தள்ளி விட்டு உள்ளே நுழைந்தார்.

“ஹேய் பார்த்து அழகி” முகிலன் தடுமாறியவளை சட்டென பிடித்து கொண்டு தாயை முறைத்தான். அதை அவர் கண்டு கொள்ளவேயில்லை.

“இவளுக்கு அழகின்னு பேர் ஒன்னு தான் குறைச்சல்” என்று முணுமுணுத்தவர் முகிலனை பார்த்து “இப்போ எதுக்காக இவளை இங்க கொண்டு வந்து வச்சிருக்க? ஊர் உலகம் என்ன பேசும்? அதுவும் புருஷனை கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு போனவளை நீ கூட்டிட்டு வந்து வச்சிருக்க. ஒழுங்கா அவளை அனுப்பி விடு” என்று கத்தினார்.

“இப்போ இங்க வந்து எதுக்கு எனர்ஜி வேஸ்ட் பண்ணுறீங்க மாம்? உங்களுக்கு முன்னாடியே சொல்லிட்டேன் அழகி தான் என்னோட காதலி, மனைவி எல்லாமே. சும்மா சும்மா சொல்ல வைக்காதீங்க. உங்களுக்கு எல்லாம் எவன் ஹெட் மிஸ்டர்ஸ் போஸ்ட் குடுத்தானோ அவனை மிதிக்கணும்” முகிலன் எரிச்சலில் கத்த அறிவழகி தான் அவனை அமைதி படுத்தினாள்.

“அமைதியா பேசு முகி”

“நீ ஒன்னும் என் பையன் என்கிட்ட பேச சொல்லி குடுக்க வேண்டாம். யார் குழந்தைக்கு யார் இனிஷியல் தேடுற?” என தமயா கேட்க அழகிக்கு கண்கள் கலங்கி விட்டது.

முகிலனின் கையை கெட்டியாக பிடித்து கொண்டாள். அவளின் கண்ணீர் அவனைச் சுட்டது.

“மாம் பார்த்து வார்த்தையை விடுங்க. உங்களை யாரும் இங்க கூப்பிடல அண்ட் இது உங்க வீடும் இல்ல. முதல்ல கிளம்புங்க” முகிலன் பொறுமையை பிடித்து கொண்டு பேச, தமயா பொங்கி விட்டார்.

“நான் தான்டா உன்னை பெத்து இத்தனை வருஷம் வளர்த்தேன். ஆனா என்னையே எவளோ ஒருத்திக்காக வெளில போக சொல்லிட்டல. இவ தானே எல்லாத்துக்கும் காரணம். இவளை வெளில அனுப்பினா சரியா போகும்” என்று அழகியை பிடிக்க போக முகிலன் அவர் கையை தட்டி விட்டான்.

“சொல்லிட்டே இருக்கேன்ல. மறுபடியும் அவள ஹர்ட் பண்ணுறீங்க. உங்களுக்கு என்ன தெரியணும்? என் குழந்தைக்கு என் இனிஷியல் வைக்காம வேற யார் இனிஷியல் தேடணும்னு சொல்லுறீங்க நீங்க? அழகி வயிற்றில் வளருறது என் குழந்தை. என் இரத்தம். அவளை ஒருத்தன் கட்டாய கல்யாணம் பண்ணினது மட்டும் தான் உங்களுக்கு தெரியும். ஆனா அதுக்கு முன்னாடி நடந்த ஏதாவது உங்களுக்கு தெரியுமா இல்ல நீங்க ஒருத்தியை கட்டிக்கோன்னு உயிரை வாங்குறீங்களே அவளுக்காகவது தெரியுமா?” என்று கத்தியவன் சத்யா அழைத்து ஜானகியுடன் வந்திருப்பதாக சொல்லவும் உள்ளே வர சொன்னான்.

உள்ளே வந்த ஜானகி முகிலனின் அருகில் நின்ற அறிவழகியை பார்த்து முறைத்து விட்டு தமயாவின் அருகில் அமர்ந்தாள்.

“கண்ணை நோண்டி காக்காக்கு போட்டுடுவேன்னு சொல்லு அழகி அவகிட்ட” என்று முகிலன் சீற அழகி சிரித்தாள். கூடவே சத்யாவும்.

“சிரிக்காதீங்கடா” என்று கத்தியவன் ஜானகியிடம் “உன் வயசு என்ன?” என்று கேட்டான்.

“முகிலன்” அழகி திட்ட,

“என்ன பொண்ணுங்க கிட்ட வயசு கேட்க கூடாதுன்னு எந்த சட்டத்தில் இருக்கு. வாய மூடுடி” என்று அடக்கினான்.

சத்யா அவர்களை புன்னகையுடன் பார்த்து கொண்டிருந்தான்.

மீண்டும் ஜானகியிடம் அதே கேள்வியை கேட்க “இருபத்தியிரண்டு” என்றாள்.

“கேட்டுக்கோ அழகி. இருபத்தியிரண்டாம்” என்றவன் ஜானகியிடம் “உன் வயசு தான் எங்க பாசம், நட்பு, காதல், கணவன் மனைவி உறவோட வயசும்” என்றான்.

ஜானகி புரியாமல் பார்க்க தமயா வேண்டுமென்றே முறைத்துக் கொண்டிருந்தார்.

“மாம்” என்று சிரித்தவன் அழகியை தன்னோடு அணைத்துக் கொண்டு “எங்க நட்பு எங்களோட எட்டு வயசுல தொடங்குச்சு ஜானகி. இப்போ எங்களுக்கு முப்பது வயசு ஆகுது. அப்போ எங்க காதலுக்கு வயசு இருபத்தியிரண்டு தானே” என்று கேட்டான்.

“அவ்ளோ வருசமா?” ஜானகி கதை கேட்கும் பாவனையில் அமர்ந்து விட்டாள். அழகிக்கு அவளை பார்க்க சிறு குழந்தை போலவே இருந்தது.

“சோ கியூட் பொண்ணுல” முகிலனின் காதில் கிசுகிசுக்க,

“உன்னை விட அழகு இல்ல என் டார்க் சாக்லேட்” என்று கொஞ்சினான்.

ஜானகி மற்றும் தமயா அவர்களை வியப்போடு பார்த்தனர். அமைதியிலும் அவர்கள் காதல் ஒரு கவிதை போல தான் இருந்தது. இப்போது தமயாவும் அவர்களின் காதல் கதையை கேட்க ரெடி ஆகி விட்டார்.

“அப்புறம் எட்டு வயசுல எங்க மீட் பண்ணுனீங்க?” தமயா தான் கேட்டார்.

“மாம் நீங்க எங்க மேல கோவமா தானே இருக்கீங்க?” முகிலன் சிரிக்க,

“கோவம் அப்படியே தான் இருக்கு. இது கியூரியாசிட்டி” என்றார்.

“ஓகே ஓகே” என்றவன் அவர்களின் காதல் கதையை சொல்ல ஆரம்பித்தான். முடியும் போது யார் மனநிலை எப்படி இருக்கும் என்பது அவனுக்கு தெரியாது. ஆனாலும் இவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்து விட்டான்.

இருபத்து இரண்டு வருடங்களுக்கு முன்பு, விஷ்வநாத் கடலூர் மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியாளராக பொறுப்பேற்று சென்றிருந்த நேரம். அவரால் மனைவியை விட்டு பிரிந்திருக்க முடியாது என்பதால் அவரையும் அந்த மாவட்டத்தில் தனக்கு அருகிலேயே ஒரு ஊரில் ஆசிரிய பதவியில் இருத்தி கொண்டார். ஆனால் முகிலன் அவர்களோடு வர மாட்டேன் என்று அடம் பிடித்ததால் சிறுவாரூர் ஊரில் தன் தந்தை வழிப் பாட்டியுடன் தங்கி கொண்டான். அங்கேயே பள்ளிப் படிப்பையும் தொடர்ந்தான்.

அன்று அவனுக்கு அந்த ஊரின் தொடக்கப்பள்ளியில் முதல் நாள். அவனுடைய பாட்டி செண்பகம் தான் அவனை பள்ளிக்கு கொண்டு போய் விட்டு வந்தார்.

"பசங்களா இவன் பேர் முகிலன். இந்த ஊருக்கு புதுசா வந்திருக்கான். இனிமேல் உங்க கூட தான் சேர்ந்து படிக்க போறான்" என்று மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு அவனை அறிமுகப்படுத்திய அந்த ஆசிரியை அவர்களோடு சென்று அமரும் படி சொல்ல அனைவரும் தங்கள் அருகில் வந்து அமர சொல்ல அவனோ சுற்றிலும் பார்த்தான். அனைவரும் அருகருகே அமர்ந்திருக்க ஒருத்தி மட்டும் தனியே ஒரு கோணி பையின் மேல் அமர்ந்திருந்தாள். அவளை வித்தியாசமாக பார்த்தான் முகிலன்.

அவன் திரும்பி ஆசிரியரை பார்க்க அவர் புன்னகைத்தார். எத்தனையோ பேரிடம் அவளின் அருகில் அமர சொல்லியும் யாரும் அமர்ந்தது இல்லை. இன்று இவனின் சிநேகப்பார்வை அவருக்கு புரிந்தது.

எட்டு வயது சிறுவன் அவன். ஆனாலும் அவளின் தனிமை அவனை பாதிக்க மெதுவாக அவளின் அருகில் சென்று அமர்ந்தான். அவளோ அவனை நிமிர்ந்தும் பாராமல் இருக்க மற்ற அனைவரும் "ஏய் அவ அழுக்கு பொண்ணு. அவ பக்கத்துல போனா உனக்கும் ஒட்டிக்கும்" என்று கோரசாக சிரிக்க,
"எனக்கு ஒன்னும் இல்ல. நான் இங்கே தான் இருப்பேன்" என்றவன் அவளின் அருகில் அமர்ந்தான். ஆசிரியை அவர்களை கண்டித்து விட்டு பாடத்தை நடத்த துவங்கினார்.

அவளை நோக்கி முகிலன் சிறியதாய் புன்னகைக்க இன்னும் அவனை விட்டு நகர்ந்து அமர்ந்தாள் அந்த எட்டுவயது சிறுமி அறிவழகி.

"உன் பேர் என்ன?"

அவள் அமைதியாக இருக்க "பேச மாட்டியா?" என்று கேட்டான்.

"நீ என்ட்ட எல்லாம் பேசுவியா?"

"ஏன் நான் பேச மாட்டேனா?" என்று அவளை கேட்க "நான் கருப்புன்னு யாரும் என்கிட்ட வர மாட்டாங்க. என்கூட விளையாட கூட வரல" என்ற அவளின் வருத்தம் கண்ணில் பட "ஓ காட்! கருப்பு தான் பேரழகு தெரியுமா? நம்ம உடம்பிலேயே முடியா ஒட்டிக்கிட்டு இருக்கு பாரேன். முடி நிறைய இருந்தா அழகு தானே. அதுவும் கருப்பா இருந்தா தான் அழகு. அதனால் நீ அழகி தான். பிரெண்ட்ஸ்" என்று அவளின் கையை பிடித்து கொண்டே சொன்னான் முகிலன்.

“ஹேய் அப்போ நான் அழகியா? என் பேர் கூட அறிவழகி தான்” என்று குதூகலித்தாள்.

“பாரு உனக்கு தெரிஞ்சே தான் அந்த பெயர் வச்சிருக்காங்க. நீ அழகான பொண்ணு. டார்க் சாக்லேட் போல” என்றவனுக்கு அன்றிலிருந்து அவள் அழகியும் டார்க் சாக்லேட்டும் ஆகி போனாள்.

அறிவழகி வீட்டில் தாய் வள்ளி, தந்தை கணேசன், தங்கை தாமரை என இவளோடு சேர்த்து நான்கு பேர் உண்டு. ஆனால் இவள் கருப்பு என்னும் காரணத்தால் இவளை அவர்கள் கண்டு கொள்வதே இல்லை. அதுவும் இந்த சின்ன மொட்டின் மனதில் ஆறாத வடுவாய் மாறி விட்டது.

இப்போது புதிதாக ஒரு நண்பன் கிடைக்க அவனை கெட்டியாக பற்றிக் கொண்டாள் அழகி. வீட்டில் யாருக்கும் தெரியாமல் இனிப்புகள் கொண்டு வந்து கொடுப்பாள். அவன் தினமும் அவனின் பாட்டியிடம் சொல்லி இவளுக்கு உணவு கொண்டு வருவான். அவள் வீட்டில் கொடுத்து விடும் உணவு சிறிதளவே இருக்கும். அதை இவன் எடுத்து விட்டு அவளுக்கு தான் கொண்டு வந்த உணவை கொடுத்து விடுவான். சில சமயங்களில் ஊட்டியும் விடுவான்.

என்னவோ தெரியவில்லை அறிவழகி அப்போதே அவனின் நெஞ்சில் ஆழமாக பதிந்து விட்டாள்.

அனைவரும் நான்காம் வகுப்பிற்கு வந்திருந்தனர். இப்போதும் வழக்கம் போல முகிலன் அழகியின் அருகில் தான் அமர்ந்து கொள்வான். அன்றும் அவன் அவளின் அருகில் அமர்ந்து தான் கொண்டு வந்த அதிரசத்தை கொடுக்க, அதை வாங்க கை நீட்டியவளின் கையை பார்த்து அதிர்ந்து விட்டான் முகிலன். அவனின் தந்தையை பார்த்து வளர்ந்ததாலோ என்னவோ ஒன்பது வயதிலேயே அவன் பேச்சில் முதிர்ச்சி இருக்கும்.

“ஹே என்னாச்சு அழகி?” அவளின் உள்ளங்கையை வருடியவாறு கேட்க

“ஸ்ஸ் வலிக்குது முகி. அம்மா அடிச்சிட்டாங்க. நீ அதிரசத்தை குடு” என்றவள் இடதுகையால் வாங்கி உண்ண ஆரம்பித்தாள்.

“என்ன ஆனாலும் சாப்பிடுறதுல கரெக்டா இரு. எதுக்காக அடிச்சாங்க?” என்று கேட்டான்.

“தாமரையோட புது ட்ரெஸ நான் கிழிச்சிட்டேன்னு அம்மா அடிச்சாங்க”

“நீ எதுக்கு கிழிச்ச?”

“நான் எங்க கிழிச்சேன்? அவளுக்கு அந்த துணி பிடிக்கல. புதுசு வேணும்னு அவளே கிழிச்சிட்டு என் மேல பழி சொல்லிட்டா. இது வழக்கமா நடக்கிறது தான். அம்மா என்னை தான் அடிப்பாங்க” என்று சிறிது வருத்தத்துடன் சொன்னாள்.

“நீ பண்ணலன்னு சொல்லிருக்கலாம்ல”

“என்ன சொன்னாலும் அடி விழும். வா வா கிளாஸ் போகலாம். இன்னைக்கு மிஸ் கிட்ட வாய்ப்பாடு சொல்லணும்” என்று அவனை இழுத்து சென்றாள்.

அவள் அடி வாங்கியதை சர்வசாதாரணமாக சொல்ல, முகிலனுக்கு தான் வலித்தது.

“நான் பெரிய போலீஸ் ஆகி அவங்கள திருப்பி அடிப்பேன்” என்று சொல்ல சிரித்தாள் அழகி.

“என்ன சிரிக்கிற?” முகிலனுக்கு வெட்கமாகி போனது.

“என் அப்பா சொல்லுவாங்க போலீஸ் எல்லாம் பெரிய அங்கிள் தான் ஆவாங்களாம். அப்போ நீ எப்போ அங்கிள் ஆவ?”

“அங்கிளா?” என முறைத்தவனுக்கு போலீஸ் ஆக வேண்டும் என்ற வெறியே வந்து விட்டது. ஒன்பது வயதில் தன் கனவிற்கு வித்திட்டான் முகிலன்.
 

Asha Evander

Moderator
அத்தியாயம் 9

அடுத்த இரண்டு வருடங்களில் தான் ஒரு காவல் துறை அதிகாரி ஆக வேண்டும் என்பது அவன் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. தன் பாட்டி செண்பகத்திடம் கூறிக் கொண்டே இருப்பான். அவரும் இவன் ஏதோ சிறிய வயது ஆசையில் இப்படி பேசுகிறான் என்று விட்டு விட்டார்.

ஆனால் அழகி கேட்டுக் கொண்டே இருப்பாள் “நீ எப்போ அங்கிள் ஆவ முகி?” என்று. அவளின் அந்த வயதிற்குரிய முதிர்ச்சி அப்படி தான் யோசிக்க வைத்தது.

முகிலன் அவள் அடி வாங்கி வந்த நாளில் இருந்து எப்போதும் அவளுக்கான அனைத்தையும் தன் பாட்டியின் உதவியுடன் தந்தை தரும் பணத்தில் தானே வாங்கி கொடுத்து விடுவான். ஆனாலும் சில சமயம் தாமரையின் சேட்டையால் அவள் அடி வாங்குவதை பார்க்க கஷ்டமாக இருக்கும்.

விஷ்வநாத் மீண்டும் திருநெல்வேலிக்கு பணிமாற்றம் ஆகி வந்த போது முகிலனை தன்னோடு வரும்படி அழைத்தார். ஆனால் முகிலன் தன் பாட்டியுடன் இருப்பதே சந்தோஷம் எனக் கூறி வர மறுத்து விட்டான்.

அவன் கடந்த காலத்தை சொல்லி கொண்டிருக்கும் போதே தமயா “அவர் கூப்பிட்டும் வராம இருந்துட்டு அவரையே குற்றம் சொல்லுவியா நீ?” என்று கோபப்பட,

“மாம் கொஞ்சம் நிறுத்துறீங்களா? என்ன வரல நான்? கடலூருக்கு போகும் போது என்னை பாட்டிகிட்ட தானே விட்டுட்டு போனீங்க. ஏதோ பாசம் இருக்குற போல பேசுறீங்க. அடுத்து என்னால அழகியை விட்டுட்டு வர மனசில்ல. அதனால் உங்க கூட வந்து தனிமையை அனுபவிக்கிறதுக்கு பதில் நான் என் அழகி கூட கொஞ்சம் வருஷம் வாழ்ந்துட்டேன். அது தான் எனக்கு சந்தோசமும் கூட” என்று கடின குரலில் முடித்தான் முகிலன்.

“எட்டு வயசுலேயே லவ்வா?” அவர்கள் சண்டை எல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்பதை போல ஜானகி சந்தேகம் கேட்டாள்.

“இவளை” என்று பல்லை கடித்த முகிலன்,
“சத்யா முதல்ல இவ மேல கொலை முயற்சி கேஸ் போட்டு உள்ள தள்ளு. அவன் அவன் தொண்டை தண்ணி வத்த கோபப்பட்டா இவ வந்து எட்டு வயசுல காதலான்னு கடுப்பேத்துறா” என்றான்.

அழகியும் சத்யாவும் சிரித்துக் கொண்டனர்.

அழகி ஜானகி அருகில் சென்று அமர உடனே முகிலனும் அழகியின் அருகில் அமர்ந்தான்.

“ஜானு எட்டு வயசுல என்ன காதல் வரும்? அது ஒரு வகையான பாசம்டா. முகி என்னை விட்டு போக மாட்டான். எனக்கும் அப்போ முதல் இப்போ வரை அவனை தவிர எதுவும் தெரியாது. எட்டு வயசுல தொடங்கின நட்பு எங்களோட பத்தொன்பதாவது வயசுல காதலாகி இப்போ கணவன் மனைவி ஆகிட்டோம்” அழகி சொல்ல, ஜானகிக்கு கொஞ்சம் பொறாமை தான் கூடியது.

“ஹ்ம் அப்புறம் பத்து வயசுல என்ன நடந்தது?” மறுபடியும் ஜானகியே தொடங்கி வைக்க அந்த நாளின் நினைவுகளுக்குள் புகுந்தனர்.

விஷ்வநாத் மீண்டும் முகிலன் படிப்பிற்காக அவனை சிறுவாரூர் பள்ளியிலேயே படிப்பை தொடர சொன்னார். ஆனால் பத்தாம் வகுப்பு முடிந்ததும் மீண்டும் அவருடன் வந்து விட வேண்டும் எனும் கட்டளையுடன் தான். முகிலனும் அதற்கு சம்மதிக்க அழகி முகிலனின் நட்பு எந்த வித தடங்கலும் இல்லாமல் தொடர்ந்தது.

இப்போது செண்பகம் பாட்டி கூட அறிவழகியுடன் நன்றாக பழகுவார். அவளுக்கு சமையல் கற்று கொடுப்பதில் தொடங்கி, பரத நாட்டியமும் சிறிது சிறிதாக கற்று கொடுக்க ஆரம்பித்தார். இயல்பிலேயே அவளுக்கு நடனம் பிடிக்கும் என்பதால் மிகவும் சிரத்தையோடு கற்றுக் கொண்டாள். ஒவ்வொரு ஆண்டு பள்ளி விழாவிலும் அவளின் நடனம் இருக்கும்.

அழகிக்கு முகிலன் ஒரு தந்தையை போல அன்பு காட்டுவதால் அவனை மிகவும் சார்ந்திருப்பாள். எதற்கு எடுத்தாலும் அவளுக்கு முகிலன் வேண்டும். அவனின் ஆலோசனை இல்லாமல் அவளின் ஒரு அணுவும் அசையாது.

நாட்கள் வருடங்களாக ஓட, அது அவர்களின் பத்தாம் வகுப்பு நிறைவு வருடம். பொதுவாக அறிவழகி தனது நிறத்தை பற்றி கேலி செய்பவர்களை கண்டு கொள்ள மாட்டாள். எட்டு வயதில் தயங்கியவள் முகிலனின் உதவியால் அனைத்தையும் கடந்து வர பழகிக் கொண்டாள். ஆனால் ஒருவன் மட்டும் அவளை எப்போதும் சீண்டிக் கொண்டே இருப்பான். அவன் தான் கதிர்வேலன். வசதியான குடும்பத்தில் பிறந்தவன். அவர்கள் குடும்பத்துக்கு ஒரே வாரிசு. அவனுக்கு அறிவழகியை கண்டாலே மோகம் தலைக்கேறும். சிறு வயது பெண் என்பது எல்லாம் அவன் கணக்கில் இல்லை. அழகியும் அவனை கண்டுக் கொள்ள மாட்டாள்.

அன்று அவர்களின் பள்ளி ஆண்டு விழா. வழக்கம் போல அழகியின் நடனமும் அதில் இடம் பெற்றிருந்தது. பரத நாட்டியத்தில் அவள் இப்போது தேர்ந்து விட்டாள். அந்த அலங்காரத்துடன் வெளியே வர கதிர்வேலன் குறுக்கே வந்து விட்டான்.

"ஏய் கருப்பி. உன்னை யாரு இங்க வர சொன்னது? நீயெல்லாம் ஸ்கூல் வரதே பெருசு. இதுல எல்லார் முன்னாடியும் டேன்ஸ் வேற ஆடணுமா?" என்று கேலி செய்ய அவனை முறைத்தவள் தன் முட்டை கண்களால் நண்பனை தேடினாள்.

“நான் பேசிட்டே இருக்கேன். உனக்கு அந்த பையனை தான் கண்ணு தேடுதோ. பார்க்க மட்டும் தானா இல்ல” என்று வக்கிரமாக பேச அவன் பேசியதற்கு அர்த்தம் அவளுக்கு புரியவில்லை.

எனவே அவனை விட்டு விட்டு முகிலனை தேடினாள். அவளின் தேடலை உணர்ந்தவனும் அவள் முன் வர இப்போது முகிலனை முறைத்தாள்.

"எங்க போயிட்ட?"

"பாட்டி கூப்பிட்டாங்க கோவிலுக்கு போகணுமாம். இன்னைக்கு உன் டேன்ஸ் முடிஞ்சதும் நான் கிளம்பி ஊருக்கு போயிடுவேன். அடுத்த முறை வரும் போது கண்டிப்பா உன்னையும் கூட்டிட்டு போயிடுறேன்" என்றவனை கலங்கிய கண்களுடன் நோக்கியவள் அவனை திரும்பியும் பாராமல் நடனத்திற்கு தயாராக சென்றாள்.

இருவரும் இப்போது பத்தாம் வகுப்பு நிறைவில் இருந்தனர். முகிலனின் பெற்றோர் அவனிடம் சொன்ன படி அவனை நகரத்தில் படிக்க வைக்க விரும்ப மேல்நிலை வகுப்பை தொடர இன்று சென்னை கிளம்புகிறான். அவளின் கலக்கம் அவனும் புரிந்தே இருந்தான். ஆனால் பெற்றோரின் விருப்பத்தையும் கருத்தில் கொள்ள வேண்டுமே. அவளுக்காக அவன் காவல்துறை அதிகாரி ஆக வேண்டும் என்று நினைத்ததை எப்படி நிறைவேற்றுவான்? அதனால் சில வருடங்கள் அவளை பிரிந்திருக்க முடிவு செய்தான்.

இன்னும் ஒரு காரணம் இருந்தது. சிறிது நாட்களாக அறிவழகியை அவன் பார்க்கும் பார்வையில் வித்தியாசம் இருந்தது. முன்பெல்லாம் கரம் கோர்த்து நடக்கும் போது தோன்றாத உணர்வு இப்போது காலம் முழுவதும் அவளோடு பயணிக்க வேண்டும் என்ற எண்ணத்தை கொடுத்தது. அதிலும் அவனுக்கு இந்த வயதில் வரும் கோளாறா என்று தெளிய வேண்டி இருந்தது. எனவே தான் தந்தை அழைத்ததும் எந்த மறுப்பும் கூறாமல் கிளம்ப முடிவு செய்தான்.

தன்னை முறைத்து கொண்டு சென்றவளை பார்த்து புன்னகைத்தவன் தன் அருகில் நின்ற கதிர்வேலனை முறைத்து "இனி அவளை கருப்பின்னு கூப்பிட்டா உன் மூஞ்சி தார் ரோடாகிடும்" என்று எச்சரித்து விட்டு அறிவழகியை தேடி செல்ல அவளோ அவனை கண்டும் கொள்ளாமல் அவனை தாண்டி சென்றாள். கடைசி வரை அவளை பார்க்காமலேயே சென்னை சென்றான்.

பனிரெண்டாம் வகுப்பில் மாவட்டத்தில் முதல் மாணவியாக வந்தாள் அறிவழகி. முகிலன் மாநிலத்தில் இரண்டாம் இடம் பிடித்திருந்தான்.

சென்னை சென்ற இரண்டு வருடங்களில் முகிலனுக்கு அறிவழகியை மறக்க முடியாது என்பது புரிந்து விட்டது. அப்போதே அவளை தன்னவளாக்கி அவளின் அனைத்து கஷ்டங்களையும் போக்க வேண்டும் என்று உறுதி கொண்டான். கல்லூரிக்கு அவளிடம் தன் பாட்டி மூலமாக விசாரித்து அவள் விண்ணப்பித்த அதே கல்லூரிக்கு தானும் விண்ணப்பித்தான். இருவரும் ஒரே கல்லூரியில் தான் இளநிலை வணிகவியல் படித்தனர்.

அங்கும் அவளை எல்லாரும் கிண்டல் பண்ண படித்த மூன்று வருடங்களில் அவளை பொத்தி பொத்தி பாதுகாத்தது முகிலன் தான். இருவரும் ஒரே அப்பார்ட்மெண்ட்டில் எதிர் எதிர் வீட்டில் தங்கி கொண்டனர். அதிலும் அவனின் மீதான நட்பை தாண்டி காதலை அறிவழகி உணரும் நாளும் வந்தது.

கணேசன் என்ன தான் மனைவிக்கு பயந்து அமைதியாக இருந்தாலும் மூத்த மகள் விஷயத்தில் கொஞ்சம் அக்கறை கொண்டிருந்தார். எனவே தான் கல்லூரி விடுதியில் அவளை சேர்க்க சொன்ன போது மறுத்து அபார்ட்மெண்ட்டில் தங்க வைத்திருந்தார். தினமும் காலையில் பேருந்தில் முகிலனும் அழகியும் சேர்ந்து தான் கல்லூரி செல்வர். அன்று முகிலனுக்கு வெளியில் ஒரு முக்கியமான வேலை இருந்ததால் இவளை தனியாக செல்ல சொல்லி விட்டு முந்தைய பேருந்தில் கிளம்பி விட்டான்.

அறிவழகிக்கு சென்னை வந்த இத்தனை வருடங்களில் தனியாக பயணிக்கும் நிலமை வந்ததே இல்லை. ஒரு வித பயத்தோடு பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தவள் அருகில் அவளுடன் படிக்கும் சில மாணவர்கள் வந்தனர்.

“கரு, கரு, கருப்பாயி
நீ வெளுத்தது ஏன் கருப்பாயி
தொட, தொட, தொடமாட்டேன்
தொட்டா நானும் விடமாட்டேன்
சுடும் சுடும் நெருப்பு போல ஒத்திக்கலாமா
பஞ்சு பஞ்சு நான் இருக்கேன் பத்திக்கலாமா”

அழகியை பார்த்து பாட இவளுக்கு வியர்த்து வழிந்தது.

“மச்சி என்னடா இன்னைக்கு மேடமோட பாடிகார்டை காணல. ஒருவேளை அவனுக்கு வேற பட்சி சிக்கிடுச்சோ” ஒருவன் கலாய்க்க,

மற்றவனோ “நீ வேறடா. ரெண்டு பேரும் ஒரே அப்பார்ட்மெண்ட்ல தான் இருக்காங்க. ஒரே பஸ்ல தான் பக்கத்து பக்கத்துல உட்கார்ந்து வருவாங்க. மேடமை யாராச்சும் ஒரு வார்த்தை சொல்லிட்டா அவன் பொங்கிட்டு வருவான். ஆனாலும் ஒரு டவுட் மச்சி” என நிறுத்த,

“என்ன டவுட் மச்சி?” என கேட்டான் இன்னொருத்தன்.

“இந்த கருப்பாயியை அவன் தொடாமலா இருந்திருப்பான்?”

“அதெல்லாம் நடந்திருக்கும் மச்சி. அன்னைக்கு சொன்னான்ல இவ அவனோட ஆளாம். இவகிட்ட நாம வம்பு வச்சிக்க கூடாதாம்”

“அடிக்கவே வந்துட்டான்டா”

இவர்கள் பேசிக் கொண்டே அவளை பார்வையால் வருட அங்கு நிற்கவே கூசியது. அவர்கள் பேச்சில் முகிலன் அவளை அவனது ஆள் என்று சொன்னது புரியவும் மண்டைக்குள் கொஞ்சம் பல்ப் எரிய ஆரம்பித்தது.

மனதிற்குள் ரசித்து கொண்டிருந்தவளின் கையை பிடித்து இழுத்தான் ஒருவன்.

“ஹேய் விடு என்னை. காலையிலன்னு கூட பயமே இல்லாம இப்படி பொறுக்கி தனம் பண்ணுறீங்க. விடுங்க என்னை” என திமிற,

அவனோ கூலாக “மச்சி ஆளுக்கு ஒன்னு போதுமா?” என்று கேட்டான்.

“இவகிட்ட இருந்து ஒன்னு வாங்குறதே அதிகம். ஆனாலும் அன்னைக்கு நம்மள நடுரோட்டில் வச்சு இவளை கமெண்ட் பண்ணினதுக்கு அடிக்க வந்தானல. இன்னைக்கு இவ நடுரோட்டில் வச்சு கதறணும்”

இரு மாதங்களுக்கு முன்பு கல்லூரி விட்டு வெளியே வந்தவளை பார்த்து கேவலமாக பேசி கொண்டிருந்தனர் இந்த கூட்டம். அவர்களை கண்டித்து அடிக்க பாய்ந்து விட்டான் முகிலன். நடுரோட்டில் வைத்து நடந்ததால் அதற்கு பழி வாங்க இந்த தருணத்தை உபயோகப்படுத்தி கொண்டனர்.

“என்ன.. என்ன பண்ண போறீங்க? விடுங்க” அறிவழகி கதற,

“ஜஸ்ட் ஒரு கிஸ். அதுவும் இவங்க எல்லாரும் பார்க்க எங்க எல்லாருக்கும் நீ குடுக்கணும். விட்டுடுறோம்” என்றனர்.

“ஐயோ! பிளீஸ் விடுங்க. முகி வந்துடுடா” என அழுதாள்.

அவளின் எட்டு வயதில் வருத்தப் பட்டு அழுதிருப்பாள். முகிலன் வந்த பிறகு அவளை எதற்கும் அழ விட்டதும் இல்லை. வருத்தப்பட விட்டதும் இல்லை. இந்த அவமானத்தை அவளால் தாங்கவே முடியவில்லை.

“முகி முகி” என மனம் கதற அவர்களை தள்ளி விட்டு ஓடினாள்.

கிடைத்த சந்தர்ப்பத்தை விட அவர்கள் என்ன முட்டாளா? அவளை துரத்தி சென்றனர். அவளின் கெட்ட நேரம் அவள் சென்றது யாரும் நடக்காத தனி பாதையில். முட்டு சந்து வந்து விட கண்களில் மரண பயத்தை தேக்கி கெஞ்சியவளை பொருட்படுத்தாமல் நெருங்கியவன் நெஞ்சில் மிதி விழ தூரமாய் போய் விழுந்தான்.

சுதாரித்து எழும்பி பார்க்க அவன் முன் ருத்ரமூர்த்தியாய் நின்றிருந்தான் முகிலன். ஒருத்தனையும் விடாமல் அடி வெளுத்து விட்டான். அவன் பார்க்க வேண்டிய ஆள் மதியத்திற்கு மேல் வரச் சொல்லவும் மீண்டும் பேருந்து நிலையம் வந்தவன் கண்ணில் அறிவழகி ஓடும் காட்சி பட்டது. பின் தொடர்ந்து வந்தவன் அவளை மற்றவன் நெருங்கும் முன் அவனை அடித்திருந்தான். அவனிடம் அடியை வாங்கி விட்டு எதிர்த்து நிற்க முடியாமல் அனைவரும் ஓட அறிவழகி அவனிடம் ஓடி வந்தாள்.

“முகி” தன் நெஞ்சில் சாய்ந்து கதறி அழுதவளை பார்க்க பார்க்க மனம் கலங்கியது.

“அழகி ஒன்னும் இல்லடி விடு. அவனை அடிச்சிட்டேன்ல. நீ அழாத” தலை கோதியவன் கைகளை பிடித்துக் கொண்டவள் “என்னை உனக்கு ரொம்ப பிடிக்குமாடா? கடைசி வரை என் கூடவே இப்படி என்னை அரவணைச்சிக்கிட்டு இருப்பியா?” என்று கேட்டாள்.

“அதுல சந்தேகம் வேறயா உனக்கு?” அவளின் தலையில் கொட்டினான்.

“அப்போ.. அப்போ” அடுத்து சொல்ல அவளுக்கு தயக்கமாக இருந்தது.

அவளின் நாடியை பிடித்து நிமிர்த்தியவன் “மை டியர் டார்க் சாக்லேட் அழகி. நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று அவள் கண்களை பார்த்து கேட்க,

“முகி எப்படி சொல்ல தெரியல. எனக்கு நீ வேணும். இந்த காதல் வேணும். உன் பரிவு, அரவணைப்பு, கோவம் எல்லாம் எனக்கே எனக்கா வேணும். அந்த பசங்க சொல்லும் போது தான் நீ என்னை காதலிச்சதே எனக்கு தெரியுது. எனக்கும் உன்னை பிடிக்கும். ஆனா இது தான் காதல்னு புரியல. இப்போவும் காதலிக்கிறேனான்னு தெரியல. ஆனா உன்னை கல்யாணம் பண்ணி கூடவே இருக்கணும். இருப்பியா? என் கையை இப்போ போல எப்போவும் கெட்டியாக பிடிச்சுப்பியா?” என்று கேட்டாள்.

அவள் மனம் அவனுக்கும் புரிந்தது. காதலின் ஆழத்தை அவளுக்கு அறிந்து கொள்ள தெரியா விட்டாலும் அவளும் அவனின் மீது உயிரையே வைத்திருக்கிறாள்.

சிரித்தவன் “இன்னும் மூணு வருஷம் போகட்டும்டி. கல்யாணம் பண்ணிப்போம். அதுக்கு முன்னாடி நானும் சிவில் சர்வீஸ் எக்சாம் பாஸ் பண்ணிடுவேன். அப்புறம் நாம ரெண்டு பேர். நமக்கு ரெண்டு பேர்” என்று அவளின் கன்னம் கிள்ள அது செவ்வானமாய் சிவந்தது.

அடுத்த இரண்டு வருடம் எம்.பி.ஏ முடித்து விட்டு சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று காவலர் பயிற்சிக்காக சென்ற முகிலனுக்கு அவனின் தந்தை மூலம் கஷ்ட காலம் ஆரம்பித்திருந்தது.
 

Asha Evander

Moderator
அத்தியாயம் 10

முகிலன் முதல் மூன்று மாதங்கள் முசோரியில் பயிற்சி முடித்து விட்டு ஹைதராபாத் அகாடமியில் தன் பயிற்சியை தொடர்ந்து கொண்டிருந்தான். அறிவழகியை இளங்கலை மட்டுமே படிக்க அனுமதித்த வள்ளி பின் அவளை வீட்டில் வேலை செய்ய அமர்த்திக் கொண்டாள். தாமரை தான் கல்லூரி சென்று கொண்டிருந்தாள்.

முகிலனுக்கு அறிவழகி வெளியில் வராததால் அவளை பற்றிய எந்த தகவலும் கிடைக்காமல் போக தனக்கு கிடைத்த விடுமுறையில் சிறுவாரூர் வந்தான். தன் பாட்டியின் வீட்டில் தங்கி கொண்டவன் மறுநாள் காலை அறிவழகி கோவில் செல்வதை கண்டு அவளின் பின்னால் சென்றான். ஆனால் அவனையும் ஒருவர் பின் தொடர்வதை பற்றி அறியாமல் போனான்.

கோவிலுக்குள் நுழைந்த அறிவழகி சாமி தரிசனம் முடிந்ததும் தன் முன் நின்றவனைப் பார்த்து அதிர்ந்து விழித்தாள்.

“முகி” அவளின் உதடுகள் முணுமுணுக்க, கண்களில் கண்ணீர் வழிந்தது.

“நோ அழகி, அழக் கூடாது” என்றவன் அவளின் கண்ணீர் துடைத்து கோவில் படித்துறைக்கு அருகில் அழைத்து சென்று அங்கிருந்த படிகளில் இருவரும் அமர்ந்து கொண்டனர்.

அவனையே கண் வெட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அழகி.

“என்னடி டார்க் சாக்லேட் ரொம்ப மிஸ் பண்ணுனியா?”

“ஹ்ம் ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணுறேன் முகி. எனக்கு வீட்டுல இருக்கவே பிடிக்கல. ஒரு வேலைக்காரி போல இருக்கேன். என்னால எனக்கு பிடிச்ச விஷயங்களை பண்ண முடியலங்குறத விட மூச்சு விட கூட முடியலடா. அத்தனை மன அழுத்தமா இருக்கு. எப்போ உன் கூட கூட்டிட்டு போவ?” அத்தனை ஏக்கம் அவளின் குரலில் தெரிந்தது.

முகிலனுக்கு கஷ்டமாக இருந்தது. இப்போது கூட அவளை அழைத்து சென்று விடலாம். ஆனால் யார் பொறுப்பில் அவளை விடுவது? அவனின் பயிற்சி காலம் இன்னும் சில மாதங்கள் உள்ளதே.

அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டவன் “நாம கல்யாணம் பண்ணிக்கலாமா அழகி? இப்போ இங்க கல்யாணம் பண்ணிட்டு ரெஜிஸ்டர் பண்ணிக்கலாம். நான் டிரெய்னிங் முடிச்சிட்டு வந்து உன்னை கூட்டிட்டு போறேன்” எனக் கேட்க,

அறிவழகிக்கு தயக்கம் இருந்தாலும் அவனின் கையால் பெறும் தாலி இன்னும் நம்பிக்கையை கொடுக்கும் என்றே தோன்றியது. இத்தனை வருடம் தன்னை கண்ணின் மணி போல பாதுக்காத்தவனா தனக்கு துரோகம் செய்து விட போகிறான்? அவனின் மீதிருந்த காதலை விட அவனின் மீது அவளுக்கு அபார நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கையில் அவள் உடனே சம்மதம் கூறி விட்டாள்.

அன்றே அவர்களின் திருமணம் யாருக்கும் தெரியாமல் நடந்து முடிந்தது. தன் பாட்டியையும் அறிவழகியின் நம்பிக்கைக்குரிய தோழியின் கணவனையும் சாட்சியாக கொண்டு அவர்களின் திருமணம் பதிவு செய்யப்பட்டது. அவனை பின்தொடர்ந்து வந்தவர் அவர்கள் படித்துறையில் பேசி கொண்டிருக்கும் போதே தன் நண்பனுக்கு தகவல் சொல்ல சென்றிருக்க, இவர்களின் திருமணம் அவரால் அறியப்படாமல் போனது.

அறிவழகி தன் வீட்டிற்கு அழைத்து அன்று தோழி ஒருத்தியின் உடல்நிலை குறைவால் அவளுக்கு பாதுகாப்பாக தங்குவதாக கூற வள்ளி அதை பெரிதாக எடுக்கவில்லை. அழகி பொதுவாக இப்படி உதவிகள் செய்பவள் என்பதால் அவளைப் பற்றிய சந்தேகம் யாருக்கும் வரவில்லை.

அன்று செண்பகம் பாட்டியின் வீட்டில் தங்கிக் கொண்டாள் அறிவழகி. அதுவும் பாட்டியின் ஏற்பாடு தான். பேரனின் காதலை கண்கூடாக பார்த்தவருக்கு அவர்களை பிரித்து வைக்கும் எண்ணம் இல்லை. இனி அவன் பயிற்சியை முடித்து விட்டு எப்போது திரும்ப வருவான் என்பது தெரியாது. எனவே அன்றே முதலிரவை வைத்து விட்டார் செண்பகம் பாட்டி.

தன் அறைக்குள் வந்தவளை காதல் பொங்க பார்த்தான் முகிலன். அவனின் காதலை யாராலும் பிரிக்க முடியாது என்பது அவனுக்கு நிச்சயம். ஆனால் இத்தனை சீக்கிரம் அது கல்யாணத்தில் முடியும் என்பதை அவன் நினைக்கவில்லை. அவனின் அருகில் வந்து நின்றவளை கை நீட்டி தன் அருகில் அமர்த்தி கொண்டவன் அவளின் நாடியை பற்றி நிமிர்த்தினான்.

“அழகி”

“ஹ்ம்”

“உன் அம்மாகிட்ட பொய் சொல்லி இங்க தங்கிட்டோமேன்னு ஃபீல் பண்ணுறியா?”

அவளிடம் மௌனம்.

“ப்ச் அழகி பதில் சொல்லுடி”

“என்ன சொல்லணும் முகி? இன்னும் கொஞ்ச நேரத்தில் உனக்கே பதில் கிடைச்சிடும்” அவள் குரலில் என்ன இருந்தது என்பதை அவனால் உணரவே முடியவில்லை.

“வித்தியாசமா இருக்குடி. இப்படி உன் கூட நம்ம காதலோடு கல்யாணம் முடிச்சு நீ என்னோட அறையில் இருக்கிற இந்த நிமிடம் மனசு முழுக்க நிறைஞ்சு போன ஃபீல்”

அவனின் கூற்றில் நிமிர்ந்து பார்த்தவள் “எனக்கும் ரொம்ப ஹேப்பியா இருக்கு முகி. நீ இல்லாத இந்த நாட்கள் தான் என்னோட வாழ்க்கையில் மிக மோசமான நாட்கள். இப்போ உன் கூட வாழ போற நிமிஷம் எனக்கு என்ன சொல்லன்னு தெரியாத அளவுக்கு சந்தோசம் நிறைஞ்சு இருக்கு. ஐ லவ் யூ முகி” என்று கூற, முகிலன் ஆச்சர்யமாக பார்த்தான்.

“இப்போ என்ன சொன்ன நீ?”

அவள் வெட்கத்தில் முகத்தை மறைத்து கொண்டாள்.

“அழகி ஒரே ஒரு டைம்டி”

“ஐ லவ் யூ முகி” என அவனின் நெஞ்சில் சாய்ந்து கொள்ள, அவளை நிமிர்த்தியவன் அவளின் இதழில் ஆழ்ந்த முத்தமிட்டான்.

அவனின் கழுத்தை சுற்றி தன் கரங்களை விட்டு கோர்த்து கொண்டவள் அவனின் முத்தத்தில் மயங்கி நின்றாள்.

அவளின் சுவாசம் முட்டும் வரை முத்தமிட்டவன் அவளை கட்டிலில் சரித்து “ஷால் ஐ?” என அவளின் சம்மதம் வேண்ட அவனின் மார்பிலேயே முகத்தை புதைத்து சம்மதத்தை வழங்கினாள் முகிலனின் அழகி.

அவளை கொண்டாடியவனுக்கு சிறிது நேரத்தில் அவளின் உடலில் இருந்த வித்தியாசம் தெரிய வர விளக்கை போட்டவன் அவளின் உடலை பார்த்து அதிர்ந்தான். அத்தனை காயங்கள் இருந்தன. நெஞ்சில் துவங்கி கீழ் பாதம் வரை ஆங்காங்கே அடித்த தடங்களும், சூடு போட்ட தடங்களும் இருக்க,

“அழகி” என அவனின் கண்கள் கலங்கி விட்டது.

“ஒன்னும் இல்ல முகி. அவங்க சொல்லுறதை செய்யலைன்னா ரூம்ல பூட்டி போட்டு அடியும் சூடும் தான் தண்டனையா கிடைக்கும். என்ன தான் சரியா வேலை செஞ்சாலும் அடிக்க அவங்களுக்கு ஏதோ ஒரு காரணம் இருந்துகிட்டு இருக்கும். இன்னைக்கு எனக்கு அந்த அடியில் இருந்து விடுதலை. இனி நீ கூட்டிட்டு போகும் நாளுக்காக தான் நான் காத்துகிட்டு இருப்பேன்” அவள் சொல்ல,

“சாரிடி, லவ் யூ டி” என அவளை வாரி அணைத்துக் கொண்டவன் ஒரு இடத்தில் கூட அவளை வன்மையாக கையாளவில்லை. அவனின் காதல் மொத்தத்தையும் அவளிடம் கொட்டினான்.

அவளை தன் கை வளைவில் வைத்துக் கொண்டவன் உதடுகள் ஆடையில்லாத அவளின் உடம்பு காயங்களுக்கு முத்தமிட்டு கொண்டே இருந்தது. அடுத்த நாள் காலையில் அவளை வீட்டிற்கு அனுப்பி வைத்தவன் தங்கள் தோப்பிற்கு சென்றான். அவனின் மனதில் ஒரு திடமான முடிவும் எடுத்திருந்தான். ஆனால் அவன் திரும்பி வரும் போது அனைத்தும் தலை கீழாக மாறி இருந்தது.

தோப்பிற்குள் நடந்து கொண்டிருந்தவன் கதிர்வேலனும் தாமரையும் பேசிக் கொண்டிருப்பதை கவனித்தான். கதிர்வேலன் முகம் அதிர்ச்சியில் விரிந்து, சோகமாக மாறி பின் மகிழ்ச்சியில் திளைத்ததை பார்த்த போது எதுவோ தவறாக தோன்றியது அவனுக்கு.

'என்னவாக இருக்கும்?' என யோசித்துக் கொண்டே நடந்தவன் முன் வந்தாள் அறிவழகி. அவள் கையில் சாப்பாடு கூடை இருக்க, அவனுக்கு தான் என புரிந்தது.

“என்னடி அழகி. அக்மார்க் கிராமத்து பொண்டாட்டி ஆகிட்ட”

“உன் பொண்டாட்டி தானே நான்” என சிரித்தவள் அங்கிருந்த கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்து உணவை பரிமாற இருவரும் ஊட்டி விட்டு உண்டனர்.

“உன் கைபக்குவமே தனி தான் அழகி. நாளைக்கு நான் திரும்ப போகணும். கண்டிப்பா மிஸ் பண்ணுவேன் உன்னையும் உன் சாப்பாட்டையும்”

“சீக்கிரமே கூட்டிட்டு போ முகி. டெய்லி சமைச்சு தருவேன்ல”

“ஹ்ம் நேத்து நடந்ததுக்கு பிறகு உன்னை விட்டு ரொம்ப நாள் எல்லாம் இருக்க முடியாது” என்று சிரிக்க,
“முகி” சிணுங்கலுடன் அவனின் தோளில் அடித்தாள் அழகி.

“என்னையா அடிக்கிற?” என அவளை தூக்கியவன் அங்கிருந்த மோட்டார் அறைக்குள் நுழைந்து கொண்டான். அது கொஞ்சம் விசாலமான அறையும் கூட. அது அவனுக்கு வசதியாக போய் விட்டது.

மீண்டும் அவளுடன் கூடலில் கலந்தவன் அவளின் காயங்களை வருடி முத்தமிட்டு விட்டு, “சீக்கிரமே உனக்கு இந்த கஷ்டத்தில் இருந்து விடுதலை கிடைக்கும் அழகி” என்று உடை மாற்ற வைத்தவன் வெளியே வந்தான்.

அவர்களின் கூடலை கண்களில் வெறியுடன் பார்த்துக் கொண்டிருந்தான் கதிர்வேலன். தாமரையிடம் திருமணத்திற்கு கேட்டவனை அவனின் கேடு கெட்ட குணங்களை பற்றி அறிந்தவள் என்பதால் தனக்கு குழந்தை பாக்கியம் இல்லை எனவும் அறிவழகியை திருமணம் செய்து குழந்தை பெற்றுக் கொள்ளவும் ஆலோசனை தந்தாள். அவளின் ஆலோசனை பிடித்த காரணத்தால் வள்ளியிடம் சென்று பெண் கேட்க வேண்டும் என யோசித்து கொண்டே நடந்தவன் கண்களில் முகிலன் அழகியை தூக்கி செல்லும் காட்சி பட்டது. அவர்களை தொடர்ந்து சென்று நிழலாக அவர்களின் கூடலை பார்த்தவனுக்கு என்ன நடந்தாலும் சரி அவளை விட்டு கொடுக்க மாட்டேன் என்ற வெறி வந்தது.

அடுத்த நாள் முகிலன் கிளம்பி விட, கதிர்வேலன் அறிவழகியின் பெற்றோரிடம் பேசி அவளையும் கட்டாயப் படுத்தி, தடுக்க வந்த செண்பகத்தை தலையில் அடித்து கோமாவிற்கு அனுப்பி விட்டு அழகியை திருமணம் செய்து கொண்டான். அடுத்த நாளே கொலையும் செய்யப் பட்டான். பழி அறிவழகியின் மீது விழ இருந்த சாட்சியங்களை கொண்டு அவளுக்கு ஏழு வருட சிறை தண்டனை கிடைத்தது.

விஷயம் அறிந்து முகிலன் வரும் முன் அனைத்தும் கை மீறி போயிருந்தது. அவனால் அவள் வாக்குமூலம் கொடுத்தாள் என்பதை நம்பவே முடியவில்லை. அதிலும் அவள் கொலை செய்பவளும் கிடையாது. எனவே தான் மேல் முறையீடு செய்தான். இதற்கிடையில் அவள் கருத்தரித்து இருப்பது தெரிய வர ஒருபக்கம் சந்தோசம் என்றாலும் அவனின் குழந்தை இந்த உலகத்தை பார்ப்பது வெளியில் இருந்து தான் என்கிற வெறியே உருவானது. அத்தனை சிரமப்பட்டு உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்து தண்டனை வாங்கி கொடுத்து அறிவழகியை வெளியில் கொண்டு வந்திருந்தான்.

அவன் நடந்ததை சொல்லி முடிக்கவும் தமயா “இவளுக்கும் அந்த கதிர்வேலனுக்கும் கல்யாணம் நடந்தது அவனோட கட்டாயத்தால். ஆனா நீ எதுக்காக உன் அப்பாவை பழி சொல்லிட்டு இருக்க?” என்று கோபமாக கேட்டார்.

“சொல்லுறேன் சொல்லுறேன். நான் எங்க கல்யாணம் முடிஞ்சு அடுத்த நாள் ஹைதராபாத் கிளம்பும் போது ராகவ் அங்கிளை சிறுவாரூரில் பார்த்தேன். இவர் இங்க என்ன பண்ணுறாருன்னு சந்தேகத்தில் அவரை ஃபாலோ பண்ணினா அவர் அப்பாகிட்ட நான் அங்க என்ன பண்ணுறேன், எங்க போறேன்னு போன்ல சொல்லிட்டு இருக்கார். கூடவே அவங்க ஆள் சொல்லி கேள்விப்பட்ட விஷயம் கூட உண்மைதான்னு கன்பார்ம் பண்ணிட்டு இருக்கார். அப்போ தான் புரிஞ்சுது என் பின்னாடி எனக்கே தெரியாமல் இத்தனை நாள் ஒருத்தன் ஃபாலோ பண்ணிருக்கான்னு. இதென்னடா இவருக்கு வேண்டாத வேலைன்னு நினைச்சு கிளம்பும் போது தான் அழகியும் நானும் கோவிலுக்கு போனதை பார்த்து சொல்லிட்டு இருந்தார். அதுவும் அவர் ஒரு கலெக்டர். இவருக்கு இதெல்லாம் தேவையான்னு கடுப்புல கிளம்பிட்டேன். இவ ஜெயிலுக்கு போன அப்புறம் தான் எனக்கு ஒரு விஷயம் தெரிய வந்துச்சு. நான் ஹைதராபாத் போன அப்புறம் அப்பா கதிர்வேலன் குடும்பத்தையும் அழகி குடும்பத்தையும் பார்த்து பேசி கல்யாணத்துக்கு ரெடி பண்ணிருக்கார். கணேசன் முதலில் அழகியை அந்த வேலனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க தயங்கினாலும் அப்பா அவங்களையும் தாமரையை கொன்று விடுவதாக மிரட்டி இருக்கார். அதனால் தான் அழகியை கட்டாயப்படுத்தி கதிர்வேலனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க. நல்ல வேளை நான் முன்னாடியே கல்யாணம் பண்ணிட்டேன். இல்லேன்னா இப்போ எவ்வளவு பிரச்சனை வந்திருக்கும்?” என்று தமயாவை முறைத்தான்.

அவருக்கும் தன் கணவனா இப்படி என்று அதிர்ச்சியாக இருந்தது.

முன்பிருந்தே அவருக்கு ஜானகியை முகிலனுக்கு திருமணம் செய்து வைக்க விருப்பம். விஷ்வநாத் மற்றும் ராகவ் ஒரே பேட்சில் (batch) பயிற்சியை முடித்து ஆட்சியாளர் ஆனவர்கள். நல்ல நண்பர்களும் கூட. எனவே தான் முகிலனுக்கு ஜானகியை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

முகிலன் அறிவழகியை காதலிப்பதை அவர் தெரிந்து கொண்ட போது அவர்கள் கல்லூரி படிப்பில் இருந்தனர். அடுத்த இரண்டு வருடங்கள் படிப்பு முடிந்ததும் முகிலன் பயிற்சிக்கு சென்று விட அவர்களுக்கு இடையேயான தொடர்பு நின்றிருந்தது. ஆனாலும் அவர்களை கண்காணிக்க ஆள் வைத்திருந்தார் விஷ்வநாத். அதே போல முகிலன் வந்த தகவல் கிடைத்ததும் ராகவை சிறுவாரூர் போக சொன்னவர் அவர்களை பற்றி விசாரித்த போது தான் கதிர்வேலன் பற்றிய தகவல் கிடைத்தது. அழகி அவனை திருமணம் செய்து விட்டால் முகிலனின் வாழ்க்கைக்கு இடைஞ்சலாக வர மாட்டாள் என கணக்கு போட விதி அவரை வைத்து வேறு விளையாடி விட்டது.

அவரை பற்றி கேட்டு கொண்டிருந்த அனைவருக்கும் கோபம் வந்தது. ஜானகி தலையை குனிந்து அமர்ந்திருந்தாள்.

“சாரி” அவள் சொல்ல அழகி அவளை அணைத்துக் கொண்டாள்.

“சொன்னா புரிஞ்சிக்குற பொண்ணு தான் நீ. உனக்கான லைஃப் பார்ட்னர் சீக்கிரமே முழு காதலோடு உன்கிட்ட வருவாங்க பாரு” என்று கூற ஜானகி புன்னகைத்தாள்.
 

Asha Evander

Moderator
அத்தியாயம் 11

முகிலன் அவர்களின் கடந்த கால நிகழ்வுகளை சொல்லி முடிக்கவும் ஒவ்வொருவர் மனநிலையும் ஒவ்வொரு மாதிரி இருந்தது. தமயாவுக்கு தன் கணவனா இப்படி செய்தது என்ற அதிர்ச்சி, ஜானகி தன் தந்தையுடன் சேர்ந்து அவளும் அழகியை கொல்ல பார்த்தாளே என்ற குற்ற உணர்ச்சி, சத்யாவுக்கு மன நிறைவு, முகிலன் மற்றும் அறிவழகி தம்பதியினருக்கு வலியுடன் கூடிய நிறைவு.

முதலில் மீண்டது என்னவோ தமயா தான். அறிவழகியை நெருங்கியவர் அவளின் கரம் பிடித்து மன்னிப்பு வேண்ட அழகிக்கு பதட்டம் தொற்றிக் கொண்டது.

“ஆன்டி நீங்க என்ன என்கிட்ட மன்னிப்பு கேட்டுகிட்டு இருக்கீங்க? பெரியவங்க நீங்க. என்னை சங்கடப் படுத்தாதீங்க” என்று விலக தமயாவுக்கு இத்தனை நல்ல குணமுள்ள பெண்ணை வார்த்தையால் குதறி விட்டேனே என்ற குற்ற உணர்ச்சி மேலோங்கியது.

“சாரிமா. நான் உன்னை அப்படி பேசியிருக்க கூடாது. எனக்கு முகிலன் மேல் நிறைய பாசம் உண்டு. ஒரே பையன் அவனுக்கு நல்ல அழகான பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க ஆசை உண்டு. உன்னை காதலிக்கிறேன்னு சொல்லவும் ஒரு கோபம். அதனால் தான் அப்படி பேசிட்டேன்” என மன்னிப்பு வேண்டினார்.

“ஆமா இவங்க பேசுறது எல்லாம் பேசிட்டு மன்னிப்புன்னு வந்துடுவாங்க” என்று முகிலன் முணுமுணுக்க அழகி அவனை கிள்ளினாள்.

“ ஏன்டி?” அவன் பார்வையால் வினவ,

“மன்னிப்பு கேக்குறவங்களை மன்னிக்க தெரியுறவன் தான் பெரிய மனுஷன்” என்று கண்டித்தாள்.

“நான் ஒன்னும் உன் லெவல்க்கு அன்னை தெரசா இல்ல” என்றவன் ஜானகியின் பக்கம் திரும்பி “நீ என்ன பண்ண போற? ஜெயிலுக்கு போறியா இல்ல வீட்டுக்கு போறியா?” என்று கேட்டான்.

“இவனை” என்று அழகி பல்லை கடிக்க,

“என் புள்ளைக்கு பிரஷர் குடுக்காதடி பல்லை கடிச்சு” என திட்டினான்.

ஜானகி அவர்களை பார்த்து விட்டு “வீட்டுக்கே போறேன். சாரி அகைன்” என கூறி விட்டு கிளம்பினாள்.

சத்யா அவளை அழைத்துக் கொண்டு கிளம்பி விட தமயாவும் வீட்டிற்கு கிளம்பினார். அவனை குடும்பத்துடன் அவர்களின் வீட்டிற்கு அழைக்க ஆசை தான். ஆனால் முகிலனின் மனநிலையும் விஷ்வநாத்தின் மனநிலையும் எப்படி இருக்கும் என்று அவர் அறிந்ததால் அந்த முயற்சியை கை விட்டார்.

அனைவரும் சென்றதும் உள்ளே போக போனவளை பிடித்து மடியில் அமர்த்தினான் முகிலன்.

“என்ன முகி?” அவள் சிணுங்க,

“நீ என்ன முடிவு பண்ணிருக்க?” என்று கேட்டான்.

“எதை பற்றி?”

“வீட்டில வெட்டியா இருக்க போறியா இல்ல எதுவும் வேலை பாக்குறியா?”

“வீட்டுல” என்று திணறியவளை முறைத்தவன் “படிச்சிருக்கல்ல? அப்புறம் என்னடி பிரச்சனை?” என்று கேட்டான்.

“எவ்ளோ பெரிய இடத்தில் இருந்தாலும் ஜெயிலுக்கு போயிட்டு வந்தா அது கடைசி வரை ஒரு அடை மொழியா தான் இருக்கும்”

“அப்படி உன்கிட்ட எவன் சொன்னான்?”

“முகி” அவளுக்கு கஷ்டமாக இருந்தது.

சொந்த காலில் சம்பாதித்து யாரையும் எதிர்பார்க்காமல் வாழ வேண்டும் என்பதே அவளின் அதிகபட்ச ஆசை. அதை முகிலனும் அறிவான். இப்போது அவளின் சூழ்நிலை மாறவும் அவள் தாழ்ந்து போவது அவனுக்கு பிடித்தமில்லை.

“என்னை பாரு அழகி. உனக்கு பிடிச்சத நீ பண்ணனும். யாருக்காகவும் எதுக்காகவும் நீ விட்டு குடுக்காத. ஜெயிலுக்கு போயிட்டு வந்தவன்னு உனக்கு யாரும் வேலை தர மாட்டங்கன்னு யோசிக்குறியா?" என்று கேட்டவனை அவள் பார்த்த பார்வையிலேயே புரிந்து கொண்டவன் அவளின் கரத்தை பிடித்து கொண்டான்.

"யாருக்கும் யாரும் வேலை தரணும்னு அவசியம் இல்லை அழகி. உனக்கு தேவையான வேலையை நீயே சொந்தமா தேடி கொள்ளலாம். உன்னை மாதிரி பாதிக்க பட்டவங்க எத்தனையோ பேர் இந்த உலகத்தில் இருக்காங்க. அவர்களுக்கு ஒரு முன்மாதிரியா நீ ஏன் இருக்க கூடாது?" என்று கேட்க அவளின் கண்கள் மின்னியது. ஆனால் அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.

அவனும் அதை பொருட்டாக எண்ணவில்லை. அவளை தன்னோடு அணைத்து கொண்டவன் அவளின் மேடிட்ட வயிற்றில் கை வைத்து "உன் லட்சியத்துக்கு குறுக்கே இந்த காவல் துறையும் நம்ம குழந்தையும் எப்போவும் குறுக்கே நிற்க மாட்டோம் அழகி. நான் உனக்கு ஒரு காவலன் தான். நம்ம குழந்தையை வளர்க்கும் பொறுப்பு என்னோடது. நீ உன் ஆசையை தேடி ஓடு" என்று கூற அவளோ அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.

“லவ் யூ முகி”

“லவ் யூ டூ டி என் டார்க் சாக்லேட் அழகி” என அவள் உதட்டில் முத்தமிட்டபடி அவளுள் புதைய துவங்க, “முகி ஹால்ல இருக்கோம்.” என நினைவு படுத்தினாள்.

“யார் இங்க வர போறா?” என்று கேட்டாலும் அவளின் மறுப்பை மதித்து அவளை கைகளில் ஏந்திக் கொண்டவன் தங்கள் படுக்கை அறைக்குள் நுழைந்தான்.

“இப்போ ஓகேவா அழகி?” என அவளின் வயிற்றில் கை வைத்து ஸ்பரிசத்தை உணர, அவர்களின் குழந்தையும் தன் இருப்பை உணர்த்தியது.

“இப்போ ரொம்ப கிக் பண்ணுறால” அவன் உடல் சிலிர்க்க,

“மாசம் போகுதுல. இனி இப்படி தான். ஆனாலும் நீ அவளை தான் கவனிக்குற. அவ வந்த அப்புறம் என் மேல பாசம் கொஞ்சம் குறையுதே” என்று குறை பட்டாள்.

“அப்படியா சொல்லுற? இப்போ பாரு உன் மேல எவ்ளோ பாசம் இருக்குன்னு நிரூபிக்குறேன்” என்றவன் அவள் மேல் படர,
“கைல அடிபட்டிருக்குடா” என்ற முறைப்புடன் அவனுக்கு ஒத்துழைத்தாலும் மனம் இப்போது தான் நிம்மதி அடைந்தது.

எத்தனை வயதானாலும் எத்தனை பிள்ளைகள் வந்தாலும் கட்டினவன் காதலில் சிறிது குறை தெரிந்தாலும் மனைவிக்கு மனம் படும் பாடு அவளுக்கு மட்டுமே தெரியும். அதற்கு அழகியும் விதி விலக்கல்ல. ஆனால் முகிலன் அவளை விட்டு ஒருபோதும் விலக மாட்டான். அவனின் அன்பை இப்போதும் அவளுக்கு சிறிது வன்மையாகவே காட்ட அவளும் அதில் சுகமாய் நனைந்து கொண்டிருந்தாள்.

வீட்டிற்கு வந்த தமயா அமைதியாக தங்கள் அறைக்குள் செல்ல அவரின் பின்னாலேயே கத்திக் கொண்டு வந்தார் விஷ்வநாத்.

“அவன் என்ன தான் நினைச்சிட்டு இருக்கான்? எவனோ ஒருத்தன் பொண்டாட்டி புள்ளைக்கு இவன் காவலா? ஏதோ நேர்மையின் சிகரம் போல அவளை நிரபராதின்னு வெளில கொண்டு வந்தது அவனோட வேலை சம்மந்தபட்டதுன்னு விட்டுடலாம். அதுக்காக இப்போ அவளோட குடும்பம் நடத்துவானா அவன்?” என்று கத்த தமயா கண்டு கொள்ளவே இல்லை.

அதில் இன்னும் எரிச்சலானார் விஷ்வநாத்.

“என்னடி நான் பேசிட்டே இருக்கேன். நீ பாட்டுக்கு கண்டுக்காம போற?”

“என்ன பேசணும் நான்? எனக்கு வேலை இருக்கு” என்று நகர பார்த்தார் தமயா.

“என்ன பேச்செல்லாம் ஒரு தினுசா இருக்கு. அவனை போய் பார்த்தியா?”

சட்டென திரும்பியவர் “ஆமா போய் பார்த்தேன். அவன் என்னோட பையன். ஆனா நீங்க எப்படி படிச்சு கலெக்டர் ஆனீங்கன்னு தான் எனக்கு சந்தேகம். ஒரு மாவட்டத்தை நல்லா நிர்வாகம் பண்ண தெரிஞ்ச உங்களுக்கு மனசு முழுக்க அழுக்கா இருக்கே. சாதி, நிறம், அந்தஸ்து பார்த்து என் பையன் வாழ்க்கையை கெடுத்துருக்கீங்க. உங்களுக்கு அவன் வாழ்க்கைக்குள் விளையாட யார் அதிகாரம் கொடுத்தது?” என்று கத்தினார்.

“அவன் எனக்கும் பையன் தான். அவன் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு தான் நானும் நினைச்சேன்” விஷ்வநாத் கூற தமயா சிரித்தார்.

“யாரு நீங்க?” நக்கலாக சிரித்தவர்,
“ஜானகி ஒன்னும் தெரியாத பொண்ணு. அவளை முகிலனுக்கு கல்யாணம் பண்ணி வச்சு அவளை வச்சே அவனுக்கு மென்டல் டார்ச்சர் குடுத்து உங்களையே சார்ந்திருக்க பண்ண பார்த்திருக்கீங்க. இந்த விஷயம் இன்னைக்கு தான் எனக்கு புரிஞ்சுது. இனி யார் சொன்னாலும் சரி என் பையனும் மருமகளும் எனக்கு முக்கியம். நான் அவங்கள போய் பார்ப்பேன். நீங்க இல்ல யாரு வந்தாலும் என்னை தடுக்க முடியாது” என்றவர் வெளியே போக விஷ்வநாத் அதிர்ந்து நின்று விட்டார்.

ஜானகியும் வீட்டில் முகிலனை திருமணம் செய்ய முடியாது என்று மறுத்தாள். ராகவ் உடனே விஷ்வநாத்துக்கு அழைத்து சொல்ல “எல்லாம் அந்த பொண்ணால வந்தது” என பல்லை கடித்தவருக்கு விஷயத்தை கொஞ்சம் ஆறப்போடலாம் என்றே தோன்றியது.

ஜனவரி 5. காவலர் குடியிருப்பு. அன்று அறிவழகியின் பிறந்தநாள். முகிலன் அன்று அவளுடன் நேரத்தை செலவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அரை நாள் விடுப்பு எடுத்திருந்தான்.

காலையிலேயே அவளுக்கு பிடித்தமான உணவுகளை சமைத்து வைத்தவன் அவள் எழுந்து வருவதற்காக காத்துக் கொண்டிருந்தான். பிரசவ நாள் நெருங்க நெருங்க அவளுக்கு இரவில் நிம்மதியான உறக்கம் என்பதே கிடையாது. அடிக்கடி எழும்பி நடப்பவள் சிறிது நேரம் அவனின் கையணைப்பில் உறங்கினால் தான் உண்டு. எனவே அவளை அவன் காலையில் எழுப்ப மாட்டான்.

நேற்று இரவில் கால் வலி, முதுகு வலியில் புரண்டு புரண்டு படுத்தவள் அயர்ந்து உறங்க விடியற்காலை ஆனது. முகிலன் சீக்கிரம் எழும்பி வேலைகளை முடித்து விட்டு கேக் ஆர்டர் செய்திருந்தது வரவும் அதை வாங்கி குளிர்சாதனப் பெட்டியில் வைத்தவன் குளித்து முடித்து அவளுக்காக காத்திருந்தான்.

சிறிது நேரத்தில் அவனின் வீட்டு காலிங் பெல் அடிக்கவும் “யார் அது?” என்ற யோசனையுடன் கதவை திறந்தான். அவன் யாரிடமும் அவளின் பிறந்தநாள் பற்றி சொல்லியிருக்கவில்லை.

வெளியில் ஒரு இளைஞன், அறிவழகியை போல தோற்றம் கொண்ட ஒரு பெண், வள்ளி மற்றும் கணேசன் நின்றிருந்தனர். அவனுக்கு வள்ளி மற்றும் கணேசனை தெரியும். மற்ற இருவரையும் அடையாளம் காண முடியவில்லை.

“வாங்க சார்” என்று கணேசனை அழைத்தவன் மற்றவர்களை யோசனையுடன் பார்த்தான்.

“இது என் ரெண்டாவது பொண்ணு தாமரையும் அவளை கல்யாணம் பண்ணிக்க போறவரும். பெயர் கிருஷ்ணா” என்று அறிமுகப்படுத்த,

“உள்ளே வாங்க” என்று அழைத்து சென்றான்.

அவர்கள் உள்ளே வரும் நேரம் தங்கள் அறையில் இருந்து வெளியே வந்தாள் அறிவழகி.

“முகி பால் பிளீஸ்” என கண்ணை கசக்கி கொண்டு வயிற்றில் ஒரு கையை வைத்து வந்தவளை பார்த்த மற்றவர்கள் அதிர்ந்தனர்.

அவளை கண்ட முகி அவசரமாக அருகில் சென்றவன் “ஒழுங்கா தூக்கம் கலையாமல் எதுக்கு எழும்பி வர அழகி” என மெதுவாக கடிந்து கொண்டு அவளை அழைத்து வந்து சோபாவில் அமர வைத்தான்.

அதுவரை அவனை மெல்லியதாக முறைத்துக் கொண்டிருந்தவள் புதிதாக வீட்டில் ஆள் இருக்கும் சத்தத்தில் ஒழுங்காக பார்க்க வந்தவர்களை கண்டு அவசரமாக எழும்பி நின்றாள்.

“அழகி” என பல்லைக் கடித்த முகிலன் “நீ என்ன நிலைமையில் இருக்கன்னு மண்டையில் ஏறுதாடி? சட்டுனு எழும்புற. எங்கயாவது பிடிச்சு வைக்க போகுது. பிறந்தநாள் அதுவுமா கோபப்பட வைக்கிற” என்று கடிந்து கொண்டான்.

அவளுக்கு அதெல்லாம் மண்டையில் ஏறவில்லை. பெற்றோரை பார்த்த அதிர்ச்சி நீங்காமல் நின்றாள்.

“ஒரு நிமிஷம் சார்” என்றவன் அவளை அழைத்துக் கொண்டு தங்கள் அறைக்கு சென்றான்.

“இங்க என்ன சார் நடக்குது? அவர் ஏதோ பொண்டாட்டி போல அறிவை கவனிக்கிறார். ஆனா நீங்க அவளுக்கு வேற கல்யாணம் தானே பண்ணி வச்சீங்க?” என்று கிருஷ்ணா சிடுசிடுக்க, தாமரை மற்றும் வள்ளியின் முகத்தில் கடுமை ஏறியது.

அறைக்குள் சென்ற முகிலன் அவளை கட்டிலில் அமர வைக்க, “முகி அவங்க எதுக்காக இங்க வந்திருக்காங்க? மறுபடியும் என்னை உன்கிட்ட இருந்து பிரிச்சு கூட்டிட்டு போயிடுவாங்களா?” என பயத்துடன் வினவினாள்.

“அழகி ரிலாக்ஸ்” என அவளின் கலைந்த முடிகளை ஒதுக்கி விட்டவன்,
“அவங்க எதுக்காக வந்திருக்காங்கன்னு இன்னும் சொல்லவே இல்ல. அப்படியே கூப்பிட்டாலும் உடனே உன்னை தூக்கி குடுக்குற அளவுக்கு வீக் இல்ல நம்ம உறவு. சோ பீ கூல் மை டியர் டார்க் சாக்லேட்” என்று கூற ஒருவாறு சமாதானம் ஆனாள் அழகி.

“வா வெளில போகலாம். இன்னைக்கு அவங்களும் உன் பிறந்தநாளை கொண்டாடட்டும்” என்று அழைத்து வந்தான்.

“சாரி சார்” பேச்செல்லாம் கணேசனிடம் மட்டும் தான்.

அவரும் எதுவும் கண்டுக் கொள்ளாமல் இருக்க கிருஷ்ணா தான் ஆரம்பித்தான்.

“ஹேப்பி பர்த்டே அறிவு”

“தேங்க்ஸ் சார்” என்று அழகி முடித்து விட முகிலன் கிருஷ்ணனை பார்த்து யோசனையானான்.

“சொல்லுங்க சார். என்ன விஷயமா என்னை பார்க்க வந்தீங்க?” முகிலன் கேட்க,

கணேசன் “என் பொண்ணை வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்னு வந்தோம் முகிலன். இனி அவ உங்க வீட்ல இருந்தா சரி வராதுல” என்று கூற அழகி முகிலன் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டாள். அதை அனைவரும் கவனித்தனர்.

“இவ ஜெயில்ல இருக்குற வரை உங்க யாருக்கும் கரிசனை வரலையே கணேசன் சார்” என்று முகிலன் நக்கலாக கூற அவருக்கும் என்ன பதில் சொல்வது எனத் தெரியவில்லை.

“அது.. அது வந்து” என்று திணற, “அறிவு தப்பு பண்ணி ஜெயில்ல இருக்கிறதே லேட் ஆக தான் தெரியும் சார். எல்லாம் இந்த தாமரையை சொல்லணும். இவ தான் அறிவழகியை போல பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணி எல்லாரையும் ஏமாத்திட்டா” என கிருஷ்ணா சொல்ல அப்போது தான் தங்கையை பார்த்தாள் அழகி.

கலர் வேறுபாட்டை தவிர அறிவழகி போலவே தாமரையின் முக தோற்றம் இருந்தது. ‘இவ எதுக்காக என்னை போல மாற ட்ரை பண்ணிருக்கா’ என்று தான் தோன்றியது.

அதையே தான் முகிலனும் கேட்டான். “எதுக்காக அவ அழகியை போல மாறணும்?”

“எல்லாம் காதல் படுத்தும் பாடு சார். நான் இவரை உண்மையா காதலிச்சேன். ஆனா கிரிஷ் இந்த அறிவை தான் காதலிச்சார். இவ ஜெயிலுக்கு போகவும் நாங்க வேற ஊருக்கு போயிட்டோம். கிரிஷ் அறிவை காதலிச்சதை பயன்படுத்தி நான் அவளை போல பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிட்டு வந்து நிச்சயதார்த்தம் கூட பண்ணிக்கிட்டோம். இவளை அன்னைக்கு டிவியில் பார்த்துட்டு உண்மையை தெரிஞ்சுகிட்ட கிரிஷ் இப்போ என்னை கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொல்லிட்டார்”

முகிலன் மற்றும் அழகிக்கு அதிர்ச்சி தான். ஆனாலும் முகிலன் சுதாரித்துக் கொண்டான்.

“சரி இப்போ அதுக்கு என்ன பண்ணனும்?”

“எனக்கு அறிவை கல்யாணம் பண்ணிக்கணும். அறிவு வயிற்றில் வளருறது கதிர்வேலனோட குழந்தையா இருந்தாலும் சரி. நான் கண்டிப்பா நல்லா பார்த்துப்பேன். எனக்கு அவளை அவ்வளவு பிடிக்கும்” என்று ரசனையோடு கூற அழகி முகத்தில் ஒவ்வாத பாவனை.

“உங்களுக்கு அழகியை எவ்வளவு நாளாக தெரியும் கிருஷ்ணா?”

“நான் பி.எஸ்.சி படிக்கும் போதிலிருந்தே தெரியும். அவளோட அமைதி, அன்பா பேசுறது, தைரியம் எல்லாமே என்னை ஈர்த்துச்சு. காதலை சொல்லுறது விட நேர்ல பொண்ணு கேட்கணும் நினைச்சு வீட்ல பேச முன்னாடி அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சு. இடையில் சில வருடங்கள் அப்பாவோட உடல்நிலையால் என்னால அறிவை பார்க்க முடியல. அந்த கேப்பில் எல்லாம் முடிஞ்சு போச்சு. அப்புறம் அவளோட புருசன் தாமரையோட ஓடி போயிட்டதா சொல்லி இவங்க எங்க வீட்ல கல்யாணத்துக்கு கேட்டாங்க. எனக்கு அறிவை பிடிச்ச ஒரே காரணத்துக்காக வீட்டில் சம்மதிச்சு நிச்சயம் முடிஞ்சது. அப்புறம் தான் தெரியும் இவ அறிவு இல்ல தாமரைன்னு”

கிருஷ்ணா சொல்லி முடிக்கவும் அழகியின் கைகளை தன் கைகளோடு கோர்த்துக் கொண்டவன் “உங்களுக்கு இது ரொம்ப பெரிய ஷாக் நியூஸ் ஆக இருக்கலாம் கிருஷ்ணா. பட் வீ ஆர் மேரிட். இந்த குழந்தை என்னோடது. கதிர்வேலன் கூட நடந்தது அவளுக்கு பிடிக்காத கட்டாய கல்யாணம். அதுக்கு முன்னாடியே நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டோம்” என்று சொல்ல சட்டென எழுந்த கிருஷ்ணா கண்களில் பெரும் வலி.

தாமரை நிம்மதி பெருமூச்சோடு பார்க்க, அவளின் புறம் திரும்பிய முகிலன் கண்களில் அனல் பறந்தது.

“கிருஷ்ணா இவ மேல புகார் கொடுக்க நினைக்குறீங்களா?” என்று கேட்க தாமரை அதிர்ந்து எழும்பி விட்டாள். கிருஷ்ணா அமைதியாக அவளை பார்த்தான்.
 

Asha Evander

Moderator
அத்தியாயம் 12

முகிலன் அவனுக்கும் அழகிக்கும் திருமணம் முடிந்ததை கூறிய போது கிருஷ்ணாவால் அந்த வலியையும் ஏமாற்றத்தையும் தாங்கி கொள்ள முடியவில்லை. கன்னம் தாண்டி வழிந்த கண்ணீரை துடைத்து கொண்டவன் “சாரி சார். ரொம்ப லவ் பண்ணிட்டேன், அதான் கொஞ்சம் அதிகமா எமோஷனல் ஆகிட்டேன்” என்று கூற முகிலனால் அவனை புரிந்து கொள்ள முடிந்தது.

“இட்ஸ் ஓகே கிருஷ்ணா. பிரிவின் வலி எனக்கும் தெரியும். நீங்க புரிஞ்சிக்கிட்டதே ரொம்ப பெருசு. கண்டிப்பா உங்களை உண்மையா நேசிக்கிற பொண்ணு உங்க வாழ்க்கையில் வருவா” எனக் கூறினான்.

வலியுடன் புன்னகைத்துக் கொண்ட கிருஷ்ணா தாமரையை பார்க்க அவள் விழிகளில் தன் ஆசை நிறைவேறும் வெறி தெரிந்தது. முகிலனுக்கு அவள் மேல் கொலை வெறியே வந்தது.

“கிருஷ்ணா இவ மேல புகார் கொடுக்க நினைக்குறீங்களா?” என்று கேட்க தாமரை அதிர்ந்து எழும்பி விட்டாள். கூடவே வள்ளியும் செய்வதறியாமல் எழும்ப கிருஷ்ணா அழகியை பார்த்தான்.

“இதற்கு முடிவு எடுக்க வேண்டியது அறிவு தான் சார்” என்றான் கிருஷ்ணா.

முகிலன் அழகியை பார்க்க அவளோ ஒருவித சஞ்சலத்துடன் நின்றிருந்தாள். அவளால் இன்னும் தாமரை செய்ததை ஜீரணிக்க முடியவில்லை.

“என்ன அழகி பார்த்துட்டு நிக்குற? நீ இவ மேல புகார் கொடுக்கலன்னாலும் நான் கொடுக்க தான் போறேன்” முகிலன் கூற,

“உன் இஷ்டம் முகி” என முடித்துக் கொண்டாள் அறிவழகி.

“ஏய்! என் மேல பழி போடுறன்னு நானும் திரும்ப புகார் கொடுப்பேன்” என்று கத்தினாள் தாமரை.

“ஓ! அப்படியா விசயம். ஃபார் யுவர் கைன்ட் இன்ஃபர்மேஷன் அரசாங்க பதிவேடுகளில் உள்ள ஆதாரங்களில் எல்லாம் அறிவழகி தான் ஒரிஜினல்னு இருக்கு. ஆதார் அட்டை ஆதாரமே போதும், கை ரேகை வச்சு கண்டுபிடிக்கலாம். நீ பண்ணின தப்பு படி பார்த்தா உனக்கு மூணு வருசம் வரை தண்டனை கிடைக்க வாய்ப்பு இருக்கு. என் பொண்டாட்டி போல நீ மாறி நடிக்குறத நான் பாரத்துட்டு வேற இருப்பேன்னு நினைச்சியா? தவறுகள் என் கண்ணுல படாத வரை தான் அவங்க சேஃப். மீறி மாட்டினா அவங்க தவறுக்கான தண்டனையை அனுபவிச்சே ஆகணும்” என்றவன் சத்யாவுக்கு அழைத்து இரண்டு பெண் காவலர்களுடன் வந்து அவளையும் அதற்கு துணை நின்ற வள்ளியையும் கைது செய்ய உத்தரவிட்டான்.

இந்த திருப்பத்தை அங்கிருந்த யாரும் எதிர்பார்க்கவில்லை. தாமரை அறிவழகிக்கு திருமணம் ஆனதை சொல்லி விட்டால் கிரிஷ் தன்னையே திருமணம் செய்து கொள்வான் என கணக்கிட்டு தான் பெற்றோருடன் அங்கே வந்தாள். ஆனால் இப்போதோ நடந்ததே வேறு.

கணேசன் முகிலனிடம் பேச வர “இதுல நீங்களும் சம்மந்த பட்டிருப்பீங்கன்னு தெரியும் கணேசன் சார். ஆனாலும் என் அழகி மேல ஏதோ ஒரு விதத்தில் உங்களுக்கு கொஞ்சம் இருந்த பாசத்திற்காக சும்மா விடுறேன்” என்றவன் சத்யா காவலர்களுடன் வந்து அவர்களை அழைத்து செல்லும் வரை நின்ற இடத்தை விட்டு நகரவில்லை.

பிரச்சனைகள் அவ்விடத்தை விட்டு சென்றதும் கிருஷ்ணா மற்றும் கணேசன் அங்கிருந்து கிளம்ப நினைக்க, அவர்களை பார்த்தவன் “இன்னைக்கு அழகியோட பிறந்த நாள். கேக் கட்டிங் முடிஞ்ச அப்புறம் நீங்க போங்க” என்று கூறி விட்டு கேக்கை எடுக்க சென்றான்.

அவனின் கூற்றில் அழகி தான் பல்லைக் கடித்தாள்.

“சாரி அவன் எப்பவும் இப்படித்தான் படபடன்னு பேசிடுவான்” என்று மன்னிப்பு கேட்டாள்.

“இட்ஸ் ஓகே அறிவு. நீ ஹேப்பியா இருக்கியா?” கிரிஷ் கேட்க,

“அவளுக்கு என்ன குறை?” என்று வந்தான் முகிலன்.

“அவங்க என்கிட்ட கேட்டாங்க” அழகி திட்ட,

“நீயும் நானும் அப்போ ஒன்னு இல்லயா அழகி?” என வராத கண்ணீரை துடைத்தான் முகிலன்.

“டேய் வாய மூடுடா கொஞ்ச நேரம்” என கடிந்து கொண்டவள் கிருஷ்ணா புறம் திரும்பி “நான் எதிர்பார்த்த வாழ்க்கையும் இது தான். நான் ஆசைபட்டதும் இவனை தான். ஒரு காலத்திலும் இன்னொருத்தன் என் மனசில் இடம் பிடிக்க மாட்டான். நான் ரொம்ப நிறைவா சந்தோஷமா இருக்கேன்” என்று கூறி புன்னகைத்தாள்.

முகிலன் அவளின் கைக் கோர்த்து கேக்கை வெட்ட, கிருஷ்ணா தான் பிறந்தநாள் பாடலை பாடினான். வலி இருந்தாலும் அதை மறைக்க பழகிக் கொண்டான்.

அந்த நேரம் திடீரென உள்ளே நுழைந்தாள் ஜானகி.

“அறிவு அக்கா நான் இல்லாம கேக் கட் பண்ணிட்டீங்களா?” என முறைக்க,

“முறைக்கிற கண்ணை நோண்டி காக்காக்கு போட்டுடுவேன் பார்த்துக்கோ” என்று சீறினான் முகிலன்.

“என் கண்ணு, நான் முறைப்பேன் லவ்ஸ் பண்ணுவேன். நீங்க கொஞ்சம் ஷட் அப் பண்ணுங்க” என அவனை இடித்து தள்ளியவள் அழகியுடன் சென்று ஒட்டி கொண்டாள்.

“தங்கச்சின்னு சொன்னதும் சொன்னா ஒருத்தி. அதையே பிடிச்சுக்கிட்டு வாலு இல்லாத குரங்கு போல எங்க வாழ்க்கைக்குள் நுழைஞ்சிட்டா” என முணுமுணுத்தான் முகிலன்.

“என்ன மாமா அங்க சத்தம்?” ஜானகி கிண்டல் அடிக்க இப்போது அவளின் வாயில் அடித்தது அழகி.

“மாமா சொல்ல கூடாது”

“ஹ்ம்கும். உங்களுக்கு ஓவர் பொறாமை அக்கா. ஆனாலும் இவருக்கு நீங்க கொஞ்சம் அதிகம் தான்” என்று சிடு சிடுக்க அங்கே ஜானகிக்கும் முகிலனுக்கும் இடையில் குடுமிப்பிடி சண்டை ஆரம்பித்தது.

“இவங்க இப்போதைக்கு நிறுத்த மாட்டாங்க. நான் உங்களுக்கு ஜுஸ் எடுத்துட்டு வரேன்” என்று கிருஷ்ணா மற்றும் தன் தந்தையிடம் சொல்லி விட்டு நகர,

“ஏய் நில்லுடி” என்று கத்தினான் முகிலன்.

“இவனை வச்சிக்கிட்டு” என பல்லை கடித்தவள் அங்கிருந்த சோபாவில் அமர, முகிலன் அவர்களுக்கு ஜுஸ் எடுத்து கொண்டு வந்தான்.

“கையை ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணாதன்னு சொன்னா கேக்குறது இல்ல” அவளை திட்ட,

“நைட் மட்டும் இந்த கை உன் கண்ணுல படாதாடா?” என முறைத்தாள்.

இவர்களை பார்த்து கொண்டே ஜானகி அவளுக்கு அருகில் வந்து அமர்ந்தாள். அவர்களின் காதல் கதையை கேட்டதில் இருந்து அவளுக்கு அழகியை ரொம்ப பிடிக்கும். இப்போது அவளுக்கு முகிலன் மீது காதல் இல்லை. ஆனால் அவனை வம்பிழுக்க ரொம்ப பிடிக்கும் என்பதால் அடிக்கடி அவனின் இரத்த அழுத்தத்தை அதிகரித்து வைப்பாள். ஒரே வாரத்தில் இவ்வளவு நெருங்கின பெண் என்றால் அவள் தான்.

முகிலன் அவர்களுக்கு ஜுஸ் கொடுத்து விட்டு அழகியின் இன்னொரு பக்கம் அமரவும் “யார் அக்கா இந்த ஹேன்ட்சம்?” என்று கிருஷ்ணாவை பார்த்து கேட்டாள் ஜானகி.

“ஃப்ரெண்ட்.” என்று அழகி முடித்துக் கொள்ள அதற்கு பின் அவள் எதுவும் கேட்கவில்லை. ஆனால் முகிலன் அவளின் பார்வையை குறித்து கொண்டான்.

‘இந்த பொண்ணு என்ன அடுத்த வாரமே ஆள மாத்திட்டா’ என யோசிக்க, ‘ஆள மாத்திட்டான்னு சந்தோஷப்படு மேன்’ என மனசாட்சி கவுண்டர் கொடுத்தது.

‘அதுவும் சரி தான்’ என்றவன் பொதுவான விசயங்களை பேசி விட்டு தாமரை கேஸில் கிருஷ்ணாவை வந்து சாட்சி சொல்ல அழைத்தான். அவனும் ஒத்துக்கொண்டு கிளம்ப கணேசனும் சொல்லி விட்டு கிளம்பினார்.

“என்ன ஜானு லவ்ஸா?” அழகி அவளை கண்டு வினவ,

“அப்படி எல்லாம் இல்ல அக்கா. ஆனா அவங்களுக்குள்ள ஏதோ ஒரு சோகம்ல. கண்ணுல தெரியுது” என்றாள்.

“ஹ்ம் லவ் பெயிலியர்” அழகி சொல்ல, “அந்த பொண்ணுக்கு குடுத்து வைக்கல” என்றாள் ஜானகி.

“ஏய்” என்று தன்னை மீறி கத்தி விட்டான் முகிலன்.

ஜானகி பயத்தில் நடுங்க, “முகி ஜஸ்ட் ஸ்டாப் இட். அவளுக்கு விசயம் தெரியாம பேசுறா. நீ எதுக்கு இப்படி கத்துற?” என்று சினந்தவள் ஜானகியை அழைத்துக் கொண்டு வேறு அறைக்கு சென்று விட்டாள்.

முகிலன் கண்களை மூடி தன் கோபத்தை கட்டுப்படுத்தினான். முதலில் தாமரை விசயத்தை முடிக்க வேண்டும் என்று எண்ணியவனுக்கு சத்யா அழைப்பு விடுத்தான்.

“சொல்லு சத்யா”

“சார் திஷா கேஸ்ல போதை பொருள் எங்க இருந்து சப்ளை ஆகுதுன்னு கண்டு பிடிச்சாச்சு. நீங்க வந்து கன்பார்ம் பண்ணிட்டா புரோசீஜர் ஃபாலோ பண்ணிடலாம்”

“ஓகே அரை மணி நேரத்தில் வரேன்” என்றவன் அழகியிடம் சொல்லி விட்டு கிளம்பினான். அன்றைய பிறந்தநாள் தினம் என்னவோ அவனுக்கு நிம்மதியாகவே இல்லை.

எஸ்.பி அலுவலகம் வந்தவன் சத்யாவிடம் விவரம் அறிந்து கொண்டு சில காவலர்களுடன் அந்த வீட்டை நோக்கி சென்றான். அது தான் அவர்கள் சந்தேக பட்ட வீடு. அங்கு அவனுக்கு இன்னும் சில அதிர்ச்சி தகவல்கள் இருப்பதை அறியாமல் உள்ளே சென்றான்.

ஒவ்வொரு அறையாக திறந்து பார்த்து கொண்டே வந்தவனுக்கு முதலில் அங்கு எதுவும் பெரிதாக புலப்படவில்லை. நான்காவது அறையில் இருந்து சிலரின் சத்தங்களும் வாசனையும் வர அங்கே சென்றவன் முதலில் அதிர்ந்து விட்டான். அத்தனை பேரும் பதினெட்டு வயதிற்கு கீழ் உள்ள ஆண்களும் பெண்களும் ஆக இருந்தனர்.

“என்ன நடக்குது இங்க?” முகிலன் சத்யாவை பார்க்க அவன் மெதுவாக மற்ற அறைகளை எட்டி பார்த்தான்.

அங்கேயும் சிலர் தங்கள் உடலில் மருந்துகளை ஏற்றிக் கொண்டும் சிலர் பெண்களை கட்டாயப் படுத்துவதும் தெரிய அனைவரையும் அடி வெளுத்து விட்டான் முகிலன்.

“இவங்களுக்கு யார் போதை மருந்து கொடுத்ததுன்னு விசாரி சத்யா. ஒருத்தனையும் சும்மா விட போறது இல்ல. இவங்கள ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போய் இவங்க பேரன்ட்ஸ் எல்லாரையும் வர சொல்லுங்க” என்றவன் தெளிவாக இருந்த ஒருத்தனை பிடித்து இழுத்தான்.

“சொல்லுடா உனக்கு யாரு இந்த மருந்து கொடுத்தது?”

“சார்” அவன் எச்சில் விழுங்க,

“இப்போ நீ சொல்லலைன்னா விளைவு விபரீதமாக இருக்கும். இது நேரடி சப்ளையா?” என்று மிரட்ட,

“எங்க ஊர்ல ஒரு குடோன்ல இருக்க ஆளுங்க குடுப்பாங்க சார். நிறைய பேர் அங்க போய் தான் வாங்கிப்போம்” என்று உண்மையை சொன்னான் அவன்.

அவனையும் இழுத்து ஜீப்பில் போட்டவன் அவன் சொன்ன இடத்திற்கு விரைந்தான். அவன் எதிர்பார்த்ததை விட பெரிய நெட்வொர்க் ஆக இருந்தது. அவர்களிடம் விசாரிக்க அவர்கள் இன்னொருவனை கை காட்டினர். அவனோ தனக்கும் மேலே ஒருத்தன் தலைமையில் இருப்பதாக சொன்னான்.

திஷா கொலை வழக்கு எங்கேயோ தொடங்கி எங்கேயோ முடிவதை போல இருந்தது. அவர்கள் சொன்ன தலைமையிடத்தை தேடி சென்றால் அவன் இவர்களுக்கு முன்பே தப்பி ஓடியிருந்தான்.

அன்றைய நாள் முழுவதும் அலைச்சலில் ஓய்ந்து அலுவலகம் திரும்பியிருந்த போது போதை வழக்கில் மாட்டின நபர்களின் பெற்றோர் வந்திருந்தனர். அவர்களில் பலருக்கு தங்கள் பிள்ளைகளுக்கு இப்படி ஒரு பழக்கம் இருப்பதே தெரியவில்லை. சிலருக்கு தெரிந்தும் திருத்த முடியாத நிலமை. பார்க்க பார்க்க எரிச்சலும் கோபமும் தான் அவனுக்கு வந்தது.

“அந்த லட்சணத்தில் பிள்ளை வளர்க்குறீங்க நீங்க. அவன் எங்க போறான் என்ன பண்ணுறான்னு தெரியாம இருக்க எதுக்கு நீங்க எல்லாம் வீட்டில் இருக்கிறீங்க? இதுல பெண் பிள்ளைகள் வேற அந்த பழக்கத்திற்கு அடிமை ஆக்கிருக்காங்க. ஒருத்தன் அவ வாயில அதை போட்டு விட்டு அவளோட நடவடிக்கையை பார்த்து ரசிக்குறான். என்ன மாதிரியான மனநிலை இது? இவங்க யாரையும் நான் சும்மா விட போறது இல்ல. தெரிஞ்சும் தப்பு பண்ணினா தண்டனை அனுபவிக்க தான் வேணும்” என்றவன் அவர்களின் கெஞ்சலையும் பொருட்படுத்தாமல் அனைவரின் மீதும் வழக்கு பதிவு செய்ய சொன்னவன் இரவு நேரம் கழித்தே வீட்டிற்கு வந்தான்.

அவன் வீட்டிற்கு வந்த நேரத்தில் அழகி தூங்கிக் கொண்டிருந்தாள். அவளை பார்த்தவனுக்கு மனதில் ஏதோ பாரம் நீங்கிய உணர்வு. சிறிது நேரம் அவளை பார்த்துக் கொண்டு நின்றவன் பின் குளித்து முடித்து உணவை உண்டு விட்டு அவளை நெருங்கி அணைத்து படுத்துக் கொண்டான்.

அவனின் ஸ்பரிசத்தில் அவள் விழித்துக் கொள்ள, “தூங்கு அழகி” என தட்டிக் கொடுத்தான்.

“தூக்கம் போயிடுச்சு” என அவனின் பக்கம் திரும்பியவள் அவனின் மார்பில் தலை சாய்த்துக் கொண்டாள்.

“என்னமா ஆச்சு?” அவன் பரிவாக வினவ,

“சீக்கிரம் வீட்டுக்கு வர பாரு முகி. தனியா இருக்க கொஞ்சம் பயமா இருக்கு” என்று அவனை ஒண்டிக் கொண்டாள்.

“இன்னைக்கு கொஞ்சம் அவசர வேலை அழகி. அதான் லேட். இனி இப்படி நடக்காது” என்றவன் அவளின் பயத்தை போக்குகிறேன் எனும் பெயரில் இதழை முற்றுகையிட அவனுக்கு வாகாக திரும்பினாள் அவனின் அழகி.

அவளை முழுவதும் ஆட்கொண்டவன் நெற்றியில் ஆழ்ந்த முத்தமிட, “இந்த ஒரு கிஸ் வாங்கிக்க உனக்கு எதுவும் தரலாம் முகி” என அனுபவித்து சொன்னாள்.

“ஹ்ம் நான் கிஸ் தரேன். நீ உன்னை தா” என்றவன் மீண்டும் அவளுள் மூழ்க, “பெஸ்ட் பெர்த்டே கிஃப்ட்” என்றாள் அவள். அவளின் பேச்சு அவனிடம் இருந்தாலும் அவனையே தனக்குள் வாங்கி கொள்ளும் அளவிற்கு வேகம் இருந்தது.

ஒரு கட்டத்தில் போதும் என அவனே சொன்ன போதும் “நோ முகி. எனக்கு உன்னை, உன் ஸ்பரிசத்தை ஆழ்ந்து அனுபவிக்கணும்” என்றவள் அவனை இறுக பற்றிக் கொண்டு அவனுள் மோகத்தை தூவ, காதலுக்கும் காமத்துக்கும் இடையில் அங்கு பெரும் போர் மூண்டது.

மறுநாள் அவள் சோர்ந்து போய் விடுவாள் என அவளை தட்டி தூங்க வைத்தவன் மனம் பெரும் நிம்மதி கொண்டது. அது அவளால் மட்டுமே சாத்தியம் என்பதை அவனும் அறிவான்.

“லவ் யூ டி அழகி” அவன் அவளின் இதழில் மெல்லியதாக கடிக்க,

“நெக்ஸ்ட் ரவுண்ட் வேணுமா முகி?” என தூக்கத்திலும் அவனை கண்டு கொண்டாள்.

“அடுத்த ரவுண்ட் போனா என் புள்ளை இப்போவே வெளில வந்தாலும் ஆச்சர்யபட இல்லை. கை வேற சரியா இல்ல. ஒழுங்கா தூங்குடி” என அதட்டி விட்டு அவளை கட்டி அணைத்து அவனும் துயில் கொண்டான்.
 

Asha Evander

Moderator
அத்தியாயம் 13

அடுத்த இரண்டு வாரங்கள் மிகவும் வேகமாக நகர்ந்தது. அன்று தாமரையை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டிய நாள். முகிலன் அறிவழகியையும் ஆதாரத்திற்காகக் கூட்டி கொண்டு வந்திருந்தான். தாமரையின் மனது கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. அவள் ஒன்று நினைக்க விதி மற்றொன்றை நடத்தி முடித்திருந்தது. அவளின் கூடவே வள்ளியும் ஆஜர் படுத்த பட அவர்களின் வழக்கறிஞர் எவ்வளவு போராடியும் ஜாமீன் கூட வாங்க முடியவில்லை.

நீதிபதி அறிவழகியின் தரப்பு ஆதாரங்களைப் பார்வையிட்டு விட்டுத் தாமரைக்கு அவளின் குற்றம் மன்னிக்கப்படாதது எனவும் ஒருவரின் அடையாளத்தை அவரது அனுமதி இல்லாமல் திருடியது மற்றும் அதை மறைக்கப் பழியை அறிவழகி மேல் திருப்பியதற்காகவும் அவளுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ஒரு லட்சம் அபராதமும் வள்ளி அதற்குத் துணை போனதால் அவளுக்கு ஆறு மாத கடுங்காவல் தண்டனையும் அவர்களுக்கு உதவின மருத்துவருக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையும் மருத்துவர் உரிமமும் பறிக்கப்பட்டது. மேலும் தாமரை அறிவழகியின் முக அமைப்பு மற்றும் ஆதாரங்களை அவளின் அனுமதி இல்லாமல் உபயோகப் படுத்தியதால் அறிவழகிக்கு தாமரை இரண்டு லட்சம் நஷ்ட ஈடும் வழங்க வேண்டும் எனத் தீர்ப்பளித்தார்.

தாமரையும் வள்ளியும் நீதிமன்றத்திலிருந்து வெளியே வரும்போது கிருஷ்ணா நிற்கத் தாமரை அவனிடம் செல்ல முயற்சிக்க காவலர்கள் அவளைத் தடுத்தனர்.

“பிளீஸ் சார். பிளீஸ் மேடம். ஒரே முறை பேசிட்டு வரேன்” என்று கெஞ்ச அதைப் பார்த்த கிருஷ்ணா அவளின் அருகில் வந்தான்.

அவனின் கண்களில் அவள்மீதான அப்பட்டமான வெறுப்பு தெரிய “உன் அறிவை பார்த்தாலும் இப்படி தான் கோபப் படுவியா கிரிஷ்? நான் உன்னை முதன் முதலில் ஒரு மாலில் பார்த்ததிலிருந்து காதலிக்கிறேன். நீ அறிவை காதலிச்சது தெரிஞ்சதும் எனக்கு அந்த காதல் வேணும்னு அவளை போல மாறினேன். எல்லாம் உனக்காக தானே கிரிஷ்? என்னை புரிஞ்சுக்கவே மாட்டியா?” என்று கெஞ்ச அவளை அற்பமாய் பார்த்தான் கிருஷ்ணா.

“உனக்கு என் மேல உண்மையா காதல் இருந்தா நீ உன் அடையாளத்தோடு வந்து பேசிருக்கலாம். ஒருவேளை நான் யோசிச்சிருப்பேன். இப்போ எனக்கு நீ தாமரையா தெரியல. இந்த முகம் இன்னொருத்தர் மனைவியோடதுன்னு மனசை உறுத்துது. அப்புறம் எப்படி உன் கூட வாழ முடியும்? இனி உனக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல. இனியாவது திருந்தி நல்லவளா வெளில வரப் பாரு. குட்பை” என்றவன் கிளம்பி விட்டான்.

“கிரிஷ்” என்று கதறி அங்கேயே அமர்ந்து விட்டாள்.

“இந்த முகம் எனக்கு வேண்டாம். கிரிஷ் என்னை விட்டு போகாத” என்று முகத்தில் அடித்து அழுதவளை பார்க்கச் சிலருக்கு பாவமாக இருந்தாலும் உண்மை தெரிந்தவர்களுக்கு அவளை மன்னிக்கத் தோன்றவில்லை.

அறிவழகி திரும்பிப் பார்த்து “பாவம் முகி” என்று கூற,

“ஓவரா பேசினா கோர்ட்னு பார்க்காமல் உன் வாயை அடைக்க வேண்டி இருக்கும் எப்படி வசதி?” முகிலன் கேட்க அவள் வாயை அவசரமாகக் கை வைத்து மூடினாள்.

“அந்த பயம் இருக்கணும். அவ பண்ணினதை மறக்க நீ ஒன்னும் மார்டன் அன்னை தெரசா இல்ல. ஜஸ்ட் ஸ்டாப் திஸ் டாபிக் ஹியர் அழகி. உன்னை போல நீ மட்டும் தான் இருக்கணும். வேற யாரும் அதை பயன்படுத்தி லாபம் அடைய வேண்டாம்” என்று கடின குரலில் கூற அழகி அமைதியாகி விட்டாள்.

“வந்த வேலை முடிஞ்சதுல. இன்னைக்கு கைக்கு டாக்டர்கிட்ட காட்டிட்டு அப்படியே செக்கப் முடிச்சிட்டு வந்துடலாம்”

அவனுடன் அமைதியாக நடந்து வர அவளின் அமைதியும் அவனுக்கு என்னவோ போல் இருந்தது. காரின் உள்ளே அமரவும் அவளை இழுத்து அணைத்து நெற்றியில் இதமாக முத்தமிட்டான் முகிலன்.

“என்னால அவ பண்ணினதை எந்தக் காலத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது அழகி. நீ அவளை மட்டும் பார்க்கிற. நான் கிருஷ்ணாவும் இதுல சம்மந்த பட்டிருக்கார்னு சொல்லுறேன். இப்படியொரு ஏமாத்துக்காரி கூட அவர் வாழ்ந்து பிற்காலத்தில் உண்மை தெரிஞ்சா அவரோட வாழ்க்கை என்னாகுறது. எல்லாமே யோசி” என்றவன் காரைக் கிளப்பினான்.

அவன் கூற்றும் உண்மை என்பதால் அதை ஆமோதிக்கும் விதமாக அவனின் கரத்தின் மேல் தன் கரத்தை வைத்து அழுத்தினாள்.

மருத்துவரின் முன் இருவரும் அமர்ந்திருந்தனர். அவரோ இவர்களை பார்த்து கேலியாகப் புன்னகைத்தார்.

“டாக்டர்.” அழகி வெட்கப்பட,

“நான் போட்டு விட்ட கட்டு எங்க மிசஸ் அறிவழகி. கையில் காயம் இருக்குன்னு தெரிஞ்சும் நீங்க” வார்த்தையை முடிக்காமல் சிரிக்க இருவருக்கும் வெட்கம் தாளவில்லை.

முகிலன் புன்னகைக்க, “சின்ன காயம் தான். ஒரு பாதுகாப்புக்காக தான் அந்த கட்டு போட்டு விட்டேன். இப்போ அறிவழகி கை பெர்ஃபெக்ட் கண்டிசன்” என்றார் மருத்துவர்.

இருவரும் நன்றி கூறி விட்டு அடுத்து மகப்பேறு மருத்துவரை அணுகி குழந்தை வளர்ச்சியின் நலனைக் குறித்து அறிந்து அடுத்த ஸ்கேன் நாளைக் குறித்து வாங்கி விவிட்டுக் கிளம்பினர்

வீட்டிற்கு சென்றதும் அறிவழகி தங்அறைக்குச் சென்றுன்று விடச் சிரிப்புடன் அவளைப் பின் தொடர்ந்தான் முகிலன்.

“அசிங்கமா போச்சு அழகி” தன் கைகளால் கண்களை மூடி வெட்கத்துடன் கண்ணாடியில் தனக்கு தானே சொல்லிக் கொண்டாள் அழகி.

“என்னடி அசிங்கம் இதுல? அவங்க பார்க்காத பேஷியன்ட்ஸா?”

“இல்ல முகி. ஆனாலும் உனக்கு அவசரம்டா”எனச் சிணுங்கினாள்ள் அழகி.

“யாரு எனக்கு? இன்னொரு ரவுண்ட் யாரோ கேட்டாங்க" எனக் கிண்டல் பண்ண அவனின் உதட்டை இழுத்து கிள்ளியவளுக்கு பதில் அவளின் உதட்டைக் கவ்விக் கொண்டான் முகிலன்.

“வாவ்! யம்மி டேஸ்ட் டார்க் சாக்லேட்!” சிலாகித்து கூற, அவனுள் புதைந்து கொண்டாள் அழகி.

“போய்க் குளிச்சிட்டு வா.” என்று அவளை அனுப்பியவன் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைப் பற்றி யோசித்தான்.

அவனுக்கு அறிவழகி ஒருபக்கம் என்றால் விஷ்வநாத் பற்றியும் மறுபக்கம் யோசிக்க வேண்டி இருந்தது. அவர் அமைதியாக இருக்கிறார் என்றால் ஏதோ பயங்கர ஆபத்து வரப் போவது உறுதி. என்றைக்கும் அவர் தங்களை ஏற்றுக் கொள்ள போவதில்லை என்பது நிச்சயம். அவரைப் பொறுத்தவரை சாதி, அந்தஸ்து, வெளியில் இருக்கும் மதிப்பு என யோசிப்பவர். மாவட்டத்தை ஒழுங்காக நிர்வகித்தவருக்கு தன் மன அழுக்கைப் போக்க நேரம் இல்லை.

முகிலன் யோசனையுடன் நிற்க, குளித்து முடித்துத் தளர்வான ஆடை அணிந்து வந்த அறிவழகி அவனைப் பின் புறத்திலிருந்து அணைத்துக் கொண்டாள்.

“என்ன யோசனை முகி?” அவனின் முதுகில் முத்தமிட்டுக் கொண்டே கேட்க அவனுக்கு உடல் சிலிர்த்தது.

“முன்னாடி வா அழகி” கரகரத்த குரலில் அழைக்க,

“வரமாட்டேன். இது தான் வசதி” என்றவள் இப்போது அவனின் தலையைப் பின்னால் இருந்து இழுத்து சரித்து அவனது கழுத்தில் கடித்து வைத்தாள்.

“அழகி” அவன் குரல் உடைய, அவளை மெதுவாக முன்னே இழுத்துக் கொண்டவன் அவளின் உதட்டை வருடிக் கொண்டே “அடுத்து உன் பிளான் என்ன?” என்று கேட்டான்.

“என்ன பெரிய பிளான்? இந்த பாப்பாவை பெத்து கொடுத்து உன்னை வேலை வாங்குறது தான்” என்றவள் அவனையும் கட்டிலில் அமர்த்தி அவனின் மார்பில் கடித்து வைத்தாள்.

“ஏய் என்னடி பண்ணுற என்னை?” அதற்கு மேல் பொறுக்க முடியாமல் அவளைக் கட்டிலில் சரித்தவன் தானும் அவளோடு சரிந்து மூழ்கி முத்தெடுக்க ஆரம்பித்தான்.

சிறிது நேரத்தில் அவளை விட்டு விலகியவன் முகம் தெளிவாக இருந்தது.

“ஐ லைக் திஸ் ஃபேஸ் ஒன்லி. நோ டென்ஷன் ஃபேஸ்” என்று போர்வைக்குள் இருந்து அழகி சொல்ல, அவனுக்கு அத்தனை நிம்மதி.

“தேங்க்ஸ்டி அழகி. ஆனாலும் நீ டாபிக் மாத்தாத. உனக்கு மேக்கப் போடக் கொஞ்சம் தெரியும்ல. ஒரு பார்லர் ஸ்டார்ட் பண்ணு. ரெண்டு எக்ஸ்பர்ட் பியூட்டிசியன் வச்சு இப்போ தொடங்கலாம். அவங்க கிட்டயே நீ கத்துக்க ஸ்டார்ட் பண்ணு. அடுத்து நீயும் பண்ணலாம். அதுவரை கணக்கு வழக்குகளை பாரு” என்று கூறவும்,
“முகி. கண்டிப்பா பண்ணனுமா?” எனச் சிணுங்கினாள் அவள்.

“கட்டாயமா நீ பண்ணுற. இப்போவே ஸ்டார்ட் பண்ணு. பேபி பிறக்கும்போது நீ கொஞ்சமாச்சும் கத்துக்கணும். நான் ஏற்கனவே இடம் பார்த்து வச்சிட்டேன். ரெண்டு நாள்ல எல்லாம் அரேஞ்ச் பண்ணிடுவாங்க. பியூட்டிசியன் கூடப் பேசிட்டேன். கொஞ்சம் அதிக சம்பளம் தான் ஆனாலும் வொர்த் பெர்சன்ஸ்” என்றவன் அனைத்தையும் திட்டமிட்டே அவளிடம் சொல்ல “முகி” என அவனை இழுத்து கட்டிக் கொண்டாள் அவள்.

அவளை எழுப்பி மார்போடு சாய்த்து கொண்டவன் “சிறுவாரூர் போகணும்னு நினைக்குறியா அழகி?” என்று கேட்டான்.

“வேண்டாம் முகி. மறக்க நினைக்கிற இடமும் நினைவுகளும் அது” என்றவள் மனம் திருமணம் நிச்சயிக்கப் பட்ட அன்று அவளின் தோழிகள் பேசியது பற்றி நினைத்தது.

அவளின் நிறத்தை வைத்து எத்தனை இழிவாகப் பேசினார்கள்! அதையே இப்போது நேர்மறையாக மாற்ற முயற்சிக்கிறான் முகிலன்.

"அடியே சேதி தெரியுமா? நம்ம கருப்பழகிக்கு கல்யாணமாம். இத்தனை வருஷம் எவனும் இவளை ஏறெடுத்து கூடப் பார்க்கல. இப்போ எந்த இளிச்சவாயன் வாழ்க்கை நாசமாகப் போகுதோ? ஆனாலும் அவன் பாவம்டி. தொட்டாலே அவ நிறம் அவனுக்கு ஒட்டிக்கும்" அறிவழகியை பிடிக்காத பெண்ணொருத்தி சொல்லி விட்டுச் செல்ல அவளையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள் அறிவழகி. அன்றைய நாளின் முதல் வாரம்வரை அவளின் தோழியென இருந்தவள் அவள்.

"அவ பாத்துட்டாடி." கூட இருந்தவள் சொல்ல "நான் என்ன இல்லாததையா சொன்னேன். அவ கருப்பு தானே" என்று கூறி விட்டுச் செல்ல அறிவழகியோ இன்னும் அவர்களின் பேச்சைக் கேட்க விரும்பாமல் தங்கள் வயலுக்கு ஓடினாள்.

அன்று வயலில் கூட எத்தனை பேர் அவளைக் கேலி செய்தார்கள்! ஆனால் கதிர்வேலன் தான் மாப்பிள்ளை என்று அறிந்ததும் இவளுக்கு இதுவே அதிகம் என்று தூற்றியவர்கள் கூட உண்டு. அதனாலேயே அந்த ஊரை வெறுத்தாள் அழகி.

அன்றைய நாளை நினைத்தவளுக்கு தாழ்வு மனப்பான்மை வந்து ஒட்டிக் கொண்டது. அதைப் போக்க தான் முயற்சிக்கிறான் முகிலன்.

“என்னடி சைலண்ட் ஆகிட்ட?”

“கருப்பா இருக்க என்னை உனக்கு எப்படி பிடிச்சது முகி?” அவள் கேட்க,

“வர வர தேவை இல்லாதது எல்லாம் உன் மண்டைக்குள் வருது அழகி. இத்தனை நேரம் என்னோட இருந்தவ தான் என்னோட டார்க் சாக்லேட் அழகி. இப்போ உனக்கு பைத்தியம் பிடிக்குது போல. உன் கலர் கொஞ்சம் டஸ்கி அவ்ளோ தான். யாரோ எதையோ எப்பவோ சொன்னாங்கன்னு இப்போ இருக்குற சந்தோசத்தை இழக்காத அழகி” என்றவன் அவளின் கன்னத்தை வலிக்கக் கிள்ளி விட்டு வெளியே சென்றான்.

போகும் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் அழகி.

இவனின் காதலை பெறத்தான் என்ன தவம் செய்தாளோ! கண்கள் கலங்க உதடுகள் புன்னகைக்க அவனையே நினைத்துப் பூரித்தாள் அழகி.
 

Asha Evander

Moderator
அத்தியாயம் 14

கிருஷ்ணா சில மாதங்கள் சந்திரபுரி போவதை தள்ளிப் போட நினைத்தான். அவனின் நிச்சயதார்த்தம் முறிந்த பின் அதை வைத்துப் பல கதைகள் உருவாக்குவார்கள். வீணாக மன வேதனை இப்போதைக்கு அனுபவிக்க வேண்டாமென நினைத்துச் சில காலம் சென்னையில் வசிக்கலாம் என்று முடிவெடுத்தான். ஊரில் உள்ள நண்பன் ஒருவன் சென்னையில் ஒரு கம்பெனியில் வேலை செய்வதால் அவனோடு கூடத் தங்கியிருந்தான்.

அன்று நண்பன் வேலைக்குச் சென்றதும் வீட்டிற்குள் அடைந்து இருக்க ஒருமாதிரி இருக்கவும் ஸ்பென்சர் பிளாசா மாலுக்கு வந்தான். அதே நேரம் தன் தோழியுடன் மாலுக்கு வந்திருந்தாள் ஜானகி.

அவர்களின் இன்னொரு தோழிக்குத் திருமணம் நிச்சயிக்கப் பட்டதால் பரிசு கொடுக்க எண்ணி புடவை வாங்க கடைக்குள் நுழைந்தவர்கள் பின்னே கிருஷ்ணாவும் தன் தாய்க்கு புடவை எடுக்கலாம் என்று வந்தான்.

அவனை எதேச்சையாகப் பார்த்த ஜானகி “ஹேய் ஹேன்ட்சம்” என அழைக்க, கிருஷ்ணா யாரையோ என எண்ணி திரும்ப ஜானகி அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

“என்னையா?” அவன் தன்னை சுட்டிக் காட்டி கேட்கவும்,

“உங்களைத் தான் ஹேன்ட்சம். அறிவு அக்கா வீட்டில பார்த்தோமே நியாபகம் இருக்கா?” என்று கேட்டாள்.

அவனுக்கு அவளைச் சுத்தமாக நியாபகம் இல்லை. ஆனாலும் சின்னப் பெண் மனது கஷ்ட பட வேண்டாம் என்றெண்ணி “இருக்கு” எனத் தலை அசைத்தான்.

“சூப்பர் சூப்பர். புடவை எடுக்க வந்தீங்களா? அம்மாக்கா? லவ்வருக்கா?” என்று கேட்டவள் பின் “உங்களுக்கு லவ் ஃபெய்லியர்னு அறிவு அக்கா சொன்னாங்களே. அப்போ அம்மாக்கு தான் எடுப்பீங்க” என்று தானே கேள்வியும் பதிலாகக் கூற அவளைச் சற்று சுவாரசியத்துடன் பார்த்தான்.

அது காதல் சார்ந்த பார்வையோ அல்லது அவளைப் பெண்ணாக ரசிக்கும் பார்வையோ அல்ல. அவன் கண்களுக்கு அவள் குழந்தைபோலத் தோன்றினாள்.

அவளிடம் புன்னகைத்தவன் பில் போடத் திரும்ப “எனக்கும் லவ் பெயிலியர் தான் ஹேன்ட்சம். ஆனா அவங்களோட உண்மையான காதலை பற்றித் தெரிஞ்ச அப்புறம் என்னோட மனசை நான் மாத்திக்கிட்டேன். உங்களுக்கும் சீக்கிரம் உங்களை லவ் பண்ணுற பொண்ணு கிடைப்பா” என்று கூறி சிரித்தவள் தன் தோழியுடன் பில் போட நகர்ந்தாள்.

அவள் வார்த்தை கொடுத்த அதிர்ச்சியில் அசையாமல் நின்றான் கிருஷ்ணா.

“அவளுக்கும் லவ் பெயிலியரா?” மனம் அதிர்ந்தது.

“இந்த சின்னப் பொண்ணு யார்கிட்ட போய் ஏமாந்தா?” என்று யோசித்தவன் மனதில் அவளின் படபட பேச்சு நேர்மறை எண்ணத்தை உருவாக்கியது உண்மையோ உண்மை. ஆனால் அவள் செய்த குற்றங்களை அறிந்தாலும் சின்னப் பெண் என்று சொல்வானோ என்னவோ.!

சிரிப்புடன் புடவையைப் பில் போட்டு வாங்கி விட்டுக் கிளம்பினான். இனி அவளைப் பார்ப்பானா என்று கூடத் தெரியாது. அவளைப் பற்றியும் தெரியாது. ஆனால் எதுவானாலும் புன்னகையுடன் கடந்து செல்லப் பழக்கிவிட்டுச் சென்றாள். அதே மாறாப் புன்னகையுடன் வீட்டிற்கு வந்தவன் தன் பெற்றோருக்கும் அழைத்துப் பேசி விட்டுத் தனியாகத் தொழில் தொடங்குவதை பற்றி யோசித்து கொண்டே படுத்திருந்தான்.

வீட்டிற்கு வந்த ஜானகி மனம் முழுவதும் அவளின் ஹேன்ட்சம் முகம் தான். ‘பாவம் அவர் லவ் பண்ணின பொண்ணுக்கு குடுத்து வைக்கல’ என்று எண்ணியவள் மனசாட்சி, “வேணும்னா நீ வாழ்க்கை குடேன்” என்று சிரிக்க பதறி சோபாவை விட்டு எழும்பினாள்.

“ஏதே! நான் வாழ்க்கை குடுக்கணுமா? நான் முகிலன் சாரை லவ் பண்ணி காதல் தோல்வியில் இருக்கேன். நீ எப்படி இந்த மாதிரி ஒரு ஐடியா குடுக்கலாம்” என மனசாட்சியுடன் சண்டை போட அதுவோ இவளைப் பார்த்துக் கேலியாகச் சிரித்தது.

“ஆமா பெரிய லவ். வேண்டாம் வேண்டாம்னு சொன்ன மனுஷனை டார்ச்சர் பண்ணி அவர் பொண்டாட்டியை கொலை பண்ண போய், இதுல இவளுக்கு உண்மை காதலாம்” என்று திட்ட,

“சுப் கரோ (வாயை மூடு)” என்று மனசாட்சியை அடக்கியவள் “ஹேன்ட்சம் கூட நல்லா தான் இருக்கார். வாழ்க்கை குடுக்கலாம் தப்பில்லை” என்று சொல்லிக் கொண்டாள்.

அங்கு கிருஷ்ணாவின் மனநிலை தெரிந்தால் இந்த வாய் பிளாஸ்டர் போட்டு மூடிக் கொள்ளுமோ?

‘சீக்கிரம் நான் வாழ்க்கை குடுக்க போறத அவர்கிட்ட சொல்லணும்’ என எண்ணிக் கொண்டவள் தந்தை வரவும் அவருடன் பேசிக் கொண்டே இரவு உணவை முடித்து விட்டு தூங்க சென்றாள்.

ராகவ் போகும் அவளையே ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்தார். சில நாட்கள் முன்பு முகிலனுக்காக தவம் இருந்த ஜானகி இல்லை இவள். ராகவ் மற்றும் விஷ்வநாத் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதை விடவும் ஒருவருக்கொருவர் சம்மந்தி ஆகவே விரும்பினார்கள். எனவே தான் முகிலனுக்கு பிடிக்கவில்லை என்றாலும் ஜானகி மூலமாக திருமணம் செய்ய கேட்டுக் கொண்டே இருந்தனர். இப்போது ஜானகியே விலகிய இரகசியம் தான் அவர்களுக்கு தெரியவில்லை.

ராகவ் மனதில் சிறு வலியும் கூட. சிறு வயதில் இருந்தே தாயில்லாமல் வளர்ந்த ஜானகிக்கு அவள் கேட்டதை எல்லாம் வாங்கி கொடுத்தவருக்கு முகிலன் விஷயம் மட்டும் தூரமாக இருந்தது. ஆனால் அவர் மகள் அடுத்து ஒருவனுக்கு வாழ்க்கை கொடுக்க முடிவு செய்து விட்டதை அறிந்தால் என்ன முடிவு எடுப்பார்?

முகிலன் அன்று ஒரு கேஸ் விஷயமாக வெளியே வந்திருந்தான். ஏற்கனவே திஷா வழக்கில் இன்னும் போதை பொருள் வழங்குபவனை கண்டு பிடிக்க முடியாத கோபத்தில் இருக்க, இன்று இன்னும் ஒருவன் ஒரு பெண்ணையும் அவளின் தாயாரையும் கூட ஒரு சிறு பையனையும் நடைபாதையில் நடந்து கொண்டிருக்கும் போது போதையில் காரை ஓட்டி வந்து விபத்துக்குள்ளாக்கி இருந்தான். அதில் அந்தப் பெண்ணிற்கும் தாயிற்கும் தலையில் அடி. சிறு பையனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. அவனை கைது செய்து விசாரிக்கும் போது போதையில் அவனால் பதில் பேச கூட முடியவில்லை. முகிலனுக்கு எரிச்சலாக இருந்தது.

“யார்டா நீ? மறைஞ்சு நின்னு கோழை போல வியாபாரம் பண்ணுற” என்று அலுவலகத்தில் மேசையில் கையை குத்தி கத்தினான். அவ்வளவு அழுத்தம் அவனுக்கு.

அவனின் அழுத்தத்திற்கு காரணமானவனோ கூலாக பர்கர் சாப்பிட்டு கொண்டிருந்தான். அவன் தன் பெயர் வெளியில் வராதபடி தான் அனைத்தும் திரை மறைவில் செய்து கொண்டிருந்தான். இதுவரை எவரிடமும் அவன் நேரடியாக பேசியது கிடையாது. அவனுக்கென்று அசிஸ்டன்ட் கிடையாது. ஒரு செயலியில் தேவையான தகவல் வரும் போது பொருளை மட்டும் கைமாற்ற குறுஞ்செய்தி அனுப்பி விடுவான். பொருள் சேர வேண்டிய இடத்திற்கு சரியாக சென்று சேரும். ஒரு சிலரை தவிர அந்த செயலி என்ன என்பது கூட யாருக்கும் தெரியாது.

அவனை முகிலன் தேடுவது பற்றி தெரிந்தும் அமைதியாக பர்கரை உண்டு முடித்தான். பின் தன் மனைவியை தேட அவளே அவனை தேடி வந்தாள்.

“ஹனி இட்ஸ் டூ லேட் ஃபார் லஞ்ச்” அவள் கடிந்து கொள்ள,

“ஹேட் சம் வொர்க் டார்லிங்” என்றவன் அவளை அருகில் அமர்த்திக் கொண்டான்.

“வாட்ஸ் ஈட்டிங் யூ?” (என்ன உங்களை தொந்தரவு பண்ணுகிறது?) அவள், கரீனா கேட்க,

“பிசினஸ் டீல் பேபி. நான் இல்லன்னா உன்னால சமாளிக்க முடியுமா?” அவன் திருப்பிக் கேட்டான்.

“நெவர் ஹனி. கண்டிப்பா முடியாது. எதுவும் பிரச்சனையா? பிஸினஸில் என்ன ஆச்சு?” என்று பதறினாள்.

கரீனா ஒரு அப்பாவி என்பதை விட பாசத்தை மட்டுமே காட்ட தெரிந்தவள். அவளின் கணவன் அபராஜிதனின் தொழில்களை பற்றி எதுவும் அவளுக்கு தெரியாது. அதை தெரிந்து கொள்ளும் அளவிற்கு அவனும் விட்டது இல்லை. சிறுவயதிலேயே தாயுடன் லண்டனுக்கு வந்தவன் ஒரு மீட்டிங்கில் கரீனாவை கண்டு காதல் கொண்டு மணந்து சந்தோசமான வாழ்க்கையை தான் அவளுக்கு கொடுத்தான். ஆனாலும் அவனின் போதை பொருள் தொழில் பற்றி தெரிய வந்தால் மன்னிக்கும் அளவிற்கு கரீனா நல்லவள் இல்லை. அந்த பயமும் அவனுக்கு உண்டு.

இன்றும் அவளைப் பார்த்துக் கேள்வி கேட்டவன் மனதில் “ஒரு வழிப் பாதையில் பயணித்து விட்டேன். இனி திரும்ப வழி இல்லை” என எச்சரிக்கை மணி அடித்தது. முகிலன் அவனை நெருங்கும் நாள் அதிக தூரத்தில் இல்லை.

கரீனா அவனை கலக்கத்துடன் பார்க்க, “கவலைப்படாத டார்லிங். உன்னை விட்டுட்டு எங்கேயும் போக மாட்டேன். இட்ஸ் அ ப்ராமிஸ்” என்று அவளை அணைத்துக் கொண்டான்.

முகிலன் தீவிரமாக போதை பொருள் விற்பதை பற்றிய தகவல்களை சேகரிக்க தொடங்கினான். அவன் எடுத்த வழக்குகளில் இது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது. சத்யாவிடம் எந்த இடத்தில் தொடர்பு கொண்டு போதை பொருளை விற்கிறார்கள் என அவர்களின் சங்கிலி தொடரை விசாரிக்க சொன்னவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விபத்துக்குள்ளான நபர்களை பார்த்து வாக்குமூலம் வாங்கி விட்டு அதை இன்ஸ்பெக்டரிடம் கொடுத்து விட்டு வீட்டிற்கு கிளம்பினான்.

மாலை ஆகி விட்டதால் அறிவழகி அவனை எதிர்பார்த்து வாசலில் காத்துக் கொண்டிருந்தாள். அவளை முறைத்துக் கொண்டே உள்ளே சென்றவன் பின்னால் வால் பிடித்து சென்றவள் அவன் குளியலறை நுழையும் முன் அவனின் சட்டையை பிடித்து இழுத்தாள்.

“ம்ப்ச் அழகி. வெளில ஹாஸ்பிட்டல் எல்லாம் அலைஞ்சிட்டு வந்திருக்கேன். குளிச்சிட்டு வந்து உன் பஞ்சாயத்தை பார்க்கிறேன்” என்று அவளை நகர்த்தியவன் குளித்து விட்டு வெளியே வந்தான்.

அறிவழகி அறையிலேயே கட்டிலில் அமர்ந்திருந்தாள். உடையை அணிந்து விட்டு அவள் அருகில் அமர்ந்தவன் “இந்த மண்டைக்குள் என்ன ஓடுது?” என்று கேட்டான்.

“நீ எதுக்கு முகி மாமா மேல கேஸ் போட சொல்லிருக்க? லாயர் இன்னைக்கு உன் போன் அட்டென்ட் ஆகலன்னு இங்க வீட்டு லேண்ட் லைனுக்கு கால் பண்ணிருந்தார்” என்று முறைத்தாள்.

“அவர் பண்ணினது ஒன்னும் சின்ன விசயம் இல்ல அழகி. உன்னை கொலை பண்ண பார்த்திருக்காங்க. என்ன தான் வீடியோ வச்சு அவங்களை அவமான படுத்தினாலும் கோர்ட்ல வச்சு தண்டனை கிடைக்கிறது தான் சரி” முகிலன் சொல்ல அவனை நெருங்கி அமர்ந்தாள் அழகி.

“சரி, மாமாவை விடு ராகவ் சாரை இப்போ இதுல இழுத்து விட்டு அவர் ஜெயிலுக்கு போனா ஜானகி பாவம்டா. அவளுக்காக பிளீஸ் முகி. இந்த கேஸ் வேண்டாம்”

“நான் ஏற்கனவே சொல்லிட்டேன் அழகி. நான் ஒன்னும் உன்னை போல யோசிக்க மாட்டேன். ஜானகியை எதுக்கு யோசிக்கணும்? அவளும் உன்னை கொல்ல பார்த்தவள் தானே” என்று கோபப்பட, அவள் விழித்தாள்.

“பிளீஸ் பிளீஸ் முகி. இந்த கேஸ் மட்டும் வேண்டாம். இனி அவங்க ஏதாச்சும் பண்ணினா நீ கேஸ் போடு. வீடியோ மேட்டர் அவங்களுக்கு போதும்” என்று கெஞ்ச மனமில்லை என்றாலும் அவளுக்காக இறங்கி வந்தான்.

“உனக்காக இந்த முறை மன்னிச்சு விடுறேன். எல்லா முறையும் இதை எதிர்பார்க்காதே” என்றவன் சமைக்க சென்றான்.

“லவ் யூ டா முகி” என்று அறையில் இருந்தே கத்தினாள் அழகி.

சிரித்துக் கொண்டே சமையலை கவனித்தான் முகிலன். அழகியின் பேச்சு சத்தம் கேட்க அறைக்குள் எட்டி பார்த்தவன் அவளின் புன்னகையில் மயங்கி நின்றான்.

“ஹான் சொல்லு அப்புறம் உன் ஹேன்ட்சமுக்கு வாழ்க்கை குடுக்கலாம்னு முடிவு பண்ணிட்ட. எப்போ அவர்கிட்ட இதை பத்தி சொல்ல போற” என்று ஜானகியிடம் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாள்.
"சொல்லணும் அக்கா. ஆனா அவர் எப்படி ரியாக்ட் பண்ணுவார் தெரியல" ஜானு கவலைப்பட,

“அட சீக்கிரம் சொல்லு ஜானு. உன் ஆளுக்கு ஏற்கனவே அப்ளிக்கேஷன் நிறைய வந்திருக்கும்”

“அந்த அளவுக்கு அவர் வொர்த் இல்ல" என சிரித்தாள் ஜானகி.

“ஹாஹா. அவ்ளோ வொர்த் இல்லையா? உனக்கு இன்னும் விசயம் தெரியல ஜானு. அவருக்காக அவரோட காதலி போல முகத்தை மாத்தின கதை எல்லாம் இருக்கு. நீ சீக்கிரம் வாழ்க்கை குடு”

“இந்த கதை எப்போ நடந்துச்சு? இன்னும் அவளை தான் நினைச்சிட்டு இருக்காரா?" அவளுக்கு வருத்தமாக இருந்தது. அவனை கண்டதும் ஒரு இனம்புரியாத பாசம். அது நடக்காதோ என்ற ஏக்கம் அவளின் குரலில் அறிவழகிக்கும் புரிந்தது.

“ஒன்னும் ஃபீல் பண்ணாத ஜானு. அந்த சேப்டர் ஓவர். இனி நீயா பார்த்து ஏதாவது பண்ணினா தான் உண்டு. ஹான் வாழ்க்கை குடுக்கும் போது எங்களுக்கும் சொல்லுமா” என்று சிரித்து கொண்டே பேசி விட்டு அழைப்பை துண்டித்தாள்.

முகிலன் எளிதாக சமையலை முடித்தவன் அழகியை அழைக்க அவனுக்கு எதிர் இருக்கையில் வந்து அமர்ந்தவள் ஜானகி கிருஷ்ணாவை பற்றி சொன்னதை பகிர்ந்து கொண்டாள்.

“குட் சாய்ஸ்” முகிலன் சொல்ல,

“உனக்கு தான் அவளை பிடிக்காதே. அப்புறம் குட் எல்லாம் சொல்லுற” என்று கேட்டாள்.

“உன்னை கொல்ல வந்தா பிடிக்காது தான். நான் முதல்லயே சொல்லும் போது புரிஞ்சிகிட்டு விலகி இருந்தா நானே நல்ல வழியை சொல்லிருப்பேன். இப்போவும் இவங்க ரெண்டு பேரும் சேர்ந்தா எனக்கு ஹேப்பி தான்” என்றவன் பேசிக் கொண்டே உணவை முடித்தான்.

“ஹ்க்கும் ரொம்ப தான்” என்று உதட்டை சுளித்தவள் சாப்பிட்டு கையை கழுவி விட்டு வர, அவளை பிடித்து கொண்டான் முகிலன். அடுத்து வந்த நேரங்கள் அவர்களை மட்டும் உள்வாங்கி கொண்டது.
 

Asha Evander

Moderator
அத்தியாயம் 15

ஜானகி தன் தந்தையுடன் வெளியே வந்திருந்தாள். அந்த வீடியோ நிகழ்வுக்குப் பின் ராகவ் பெரும்பாலும் வெளியே வருவதில்லை. வீட்டினுள் அடைந்து கிடந்தவரை வற்புறுத்தி வெளியே கூட்டி வந்திருந்தாள் ஜானகி.

தயக்கத்துடன் வந்தவருக்கு மகளின் மகிழ்ச்சியை காணவும் பின் அவரும் அவளோடு இணைந்துக் கொண்டார்.

“இப்படி வெளில வந்து ரொம்ப நாள் ஆகுதுலப்பா. ஜாலியா இருக்கு” ஜானகி சொல்ல அவளையே வாஞ்சையுடன் பார்த்தார் ராகவ். இப்போதெல்லாம் அவர் பண்ணினது தவறு என்பதை உணர ஆரம்பித்திருந்தார்.

அவளுடன் இணைந்து “ஆமாடா. ரொம்ப நாளைக்கு அப்புறம் ஃப்ரெஷ் ஆக ஃபீல் பண்ணுறேன்” என்று நடந்தார்.

இருவரும் வீட்டிற்கு தேவையான காய்கறிகள் மற்றும் சில அத்தியாவசிய பொருட்கள் வாங்க சூப்பர் மார்க்கெட் வந்திருந்தனர். ராகவை பலர் கவனிக்கவில்லை என்றாலும் சிலர் பார்த்து முகத்தைத் திருப்பினர். அவரின் காதுபடவே மோசமாகப் பேசிச் செல்ல, ஜானகி அவர்களை முறைத்தாள்.

“விடுடா. இல்லாததையா பேசுறாங்க? நேருக்கு நேர் பேசுறவங்களுக்கு மட்டும் பதில் சொன்னா போதும்” என்றவர் அவளுடன் சேர்ந்து பொருட்களை வாங்கி விட்டு வெளியே வரும்போது கிருஷ்ணா எதிரில் வந்தான். அவனும் ஜானகியும் இருப்பது ஒரே ஏரியா தான்.

“ஹலோ ஹேன்ட்சம்! எப்படி இருக்கீங்க?” அவனைக் கண்டு கொண்ட ஜானகி கேட்க அவனும் புன்னகைத்தான்.

“பேசினா முத்து உதிர்ந்துடும்” என்று முணுமுணுத்தவள் கேள்வியாகப் பார்த்த ராகவிடம் “அப்பா இவர் கிருஷ்ணா என்னோட ஃப்ரெண்ட்” என்று கூற அவரையே கூர்ந்து பார்த்தான் கிருஷ்ணா. அவனும் வீடியோ பார்த்திருந்தான்.

ராகவ் அவனைப் பார்த்துப் புன்னகைத்தார். கிருஷ்ணாவோ “எதுக்கு சார் அறிவை நீங்க அப்படி பண்ண ஆள் அனுப்பினீங்க?” என்று நேரடியாகக் கேட்டான்.

அவனின் கோபம் கண்டு சிரித்தவர் “உங்க கேள்வியை நேருக்கு நேரா கேட்டது பிடிச்சிருக்கு கிருஷ்ணா. ஆனா பதில் என்ன சொல்லன்னு தான் தெரியல. என் பொண்ணுக்காக ரிஸ்க் எடுத்தேன். ஆனா அது தப்புன்னு புரிஞ்சு ரொம்ப நாள் ஆச்சு. கண்டிப்பா அறிவழகியை பார்க்கும்போது மன்னிப்பு கேட்பேன்” என்றவர் மகளைத் திரும்பிப் பார்க்க அவளோ பேயறைந்தது போல நின்றிருந்தாள்.

“ஜானு” அவர் அவளைத் தட்ட,

“ப்பா” என்றவளுக்கு வேறு வார்த்தை வரவில்லை.

“என்னடா? என்ன ஆச்சு?” அவர் பதற அவள் கிருஷ்ணாவை தான் பார்த்தாள். அவளைப் பார்த்துப் புன்னகைத்த கண்கள் இப்போது கோபத்தை வாரி இறைத்தது.

“ப்பா நான் இவர் கிட்ட ஒரு ஐந்து நிமிஷம் பேசிட்டு வரவா?”

“சரிடா” மனதில் கேள்வி இருந்தாலும் ஒன்றும் சொல்லாமல் அனுமதித்தார். ஒரு அனுமானம் வந்திருந்தது. அவளின் சந்தோஷமே அவருக்குப் பெரிது.

கிருஷ்ணாவை பார்த்துக் கண்களால் கெஞ்சியவள் அவன் நகர்ந்ததும் “ஹேன்ட்சம், உங்ககிட்ட எப்படி சொல்லுறதுன்னு தெரியல. ஆனா சொல்ல முடியாம போயிடுமோன்னு பயமா இருக்கு. உங்க கண்ணுல அப்பாவை பார்த்தப்போ இருந்த வெறுப்பு எனக்கு வலிக்குது. நான் நிறைய தப்பு பண்ணிருக்கேன். முகிலன் சாருக்காக அறிவு அக்காவை கொல்லவே போயிருக்கேன்” என்று முடிக்கும் முன் பளார் என்ற அறை.

கன்னத்தைப் பிடித்துக் கொண்டு ஜானகி நிமிர, கண்களில் கொலை வெறியுடன் “சொல்லு” என்றான் கிருஷ்ணா.

வழியும் கண்ணீரை துடைத்த படி, “முகிலன் சார் நிறைய டைம் அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகிடுச்சுன்னு சொல்லியும் நான் நம்பாமல் அப்படி பண்ணிட்டேன். அறிவு அக்கா என்னை ஜெயிலுக்கு அனுப்பாம அவங்க கதையை சொல்லும் போது நான் எத்தனை முட்டாள் என்பதே புரிந்தது. அவங்க காதலுக்கு முன் நான் தூசி. எனக்கு முகிலன் சார் மேல வந்தது காதலும் இல்லன்னு புரிஞ்சிகிட்டேன்” என்று கூற, அதற்கு இப்போ என்ன என்பது போல பார்த்தான் கிருஷ்ணா.

“அது வந்து.. அது.. எனக்கு உங்களை பிடிச்சிருக்கு கிருஷ்ணா. இது சட்டுனு வர காதல் தான். ஆனா கண்டிப்பா உண்மையா இருப்பேன். பிடிச்சாலும் பிடிச்சிருக்கு சொல்லுங்க. பிடிக்கலன்னாலும் பிடிச்சிருக்கு சொல்லுங்க. காலப்போக்கில் பிடிக்க வச்சிரலாம்” என்று கூற, ‘இவள் என்ன லூசா’ என்பது போல பார்த்தான்.

“என்னை பற்றி உனக்கு என்ன தெரியும்?” கோபம் கொஞ்சம் குறைந்திருந்தது.

“ஒன்னும் தெரியாதே. ஆனாலும் நான் வாழ்க்கை தர ரெடியா இருக்கேன்” என்று கன்னத்தில் கை வைத்து கொண்டே கூற சட்டென சிரித்து விட்டான்.

“ஹேய் சிரிச்சிட்டீங்க” ஜானகி குதூகலிக்க, கிருஷ்ணாவுக்கு அவள் குழந்தை போலவே தோன்றியது.

“லுக் ஜானகி”

“லுக்குறேன் லுக்குறேன்”

அவளின் பேச்சில் வந்த சிரிப்பை அடக்கி கொண்டு, “சின்ன பொண்ணு போல பிகேவ் பண்ணாத. எனக்கு ஏற்கனவே நிச்சயம் ஆகி நின்னுடுச்சு” என்று கூற,

“தெரியும் தெரியும்” என்றாள் அவள்.

“இன்னொரு அடி வேணும் போல உனக்கு. எனக்கு உன்மேல் எந்த ஒரு ஃபீலிங்சும் இல்ல. உன்னை நான் குழந்தை போல பாக்குறேன். இதுல எப்படி கல்யாணம் காதல் எல்லாம்? ஒழுங்கா படிக்கிற வேலையை பாரு” என்றவன் அவளை நகர்த்தி விட்டுச் செல்ல அவனைப் பிடித்து நிறுத்தித் திருப்பியவள் அவனின் இதழைச் சிறைப்பிடித்து விட்டாள்.

ஒரு நிமிடம் என்ன நடந்தது என்பதே உணர முடியாத அளவுக்கு அவளின் முத்தம் இருக்க, உணர்ந்த நொடி அவளைத் தள்ளி விட்டவன் ஓங்கி அடுத்த கன்னத்தில் அறைந்தான். இந்த முறை கீழே விழுந்து விட்டாள் ஜானகி.

ராகவ் வெளியே வந்தவர் அதைப் பார்த்துப் பதறி நெருங்கி வர “ஸ்டே ஆன் யுவர் லிமிட் ஜானகி” என்றவன் வெளியேறி விட்டான்.

ஜானகி “ஷப்பா என்னா அடி!” என்று சொல்ல, “ஜானு” என அதட்டினார் ராகவ்.

“ப்பா”

“என்ன சொன்ன அவர்கிட்ட? எதுக்கு உன்னை அடிச்சார்?”

“லவ் பண்ணுவோம். கல்யாணம் பண்ணுவோம்னு கேட்டேன். அடிச்சிட்டு போறார்” என்று கூற ராகவ் முறைத்தார்.

“சின்ன பொண்ணு போல பிகேவ் பண்ணாத ஜானு” அவர் அதட்ட,

“ப்பா என்ன நீங்களும் அவரை போலவே சொல்லுறீங்க. நான் ஒன்னும் சின்ன பொண்ணு இல்ல. எனக்கு இருபத்தி இரண்டு வயசு ஆகுது” என்று கத்தினாள்.

“ஷ்ஷ் இது நம்ம வீடு இல்ல. அவருக்கு ஏற்கனவே நிச்சயம் ஆகிருந்துச்சு.”

“தெரியும்ப்பா”

“யாரை லவ் பண்ணினார் தெரியுமா?”

“நிச்சயம் பண்ணின பொண்ணை தான் பண்ணிருப்பார்”

“இல்ல” என்ற ராகவ் அவன் அறிவழகியை காதலித்தது முதல் தாமரை செய்தது, தண்டனை அனுபவிப்பது என அனைத்தும் கூறினார்.

“இந்த முகிலன் சாருக்கு நிறைய வில்லன்கள் வில்லங்கமா வருவாங்க போலயே அப்பா. ஆனா எனக்கு எதுவும் பிரச்சனை இல்ல. கிருஷ்ணா மேல இருந்த ஒரு கிரஷ் இப்போ காதலா மாறி போச்சு. நான் அவரை சம்மதிக்க வைக்கிறேன். நீங்க கல்யாணம் பண்ணி வச்சா மட்டும் போதும்” என்றவள் அவரை பார்த்துக் கண்ணடிக்க ராகவ் சிரித்து விட்டார்.

கிருஷ்ணா வீட்டிற்கு வந்தவன் மனம் முழுவதும் அவளின் முத்ததிலேயே நிலைத்திருந்தது. தேனாய் தித்தித்தாலும் அவளை விட்டு விலகவே நினைத்தான். காதல் என்றெல்லாம் இல்லை ஆனால் ஒரு பிடித்தம் உண்டு.

இப்போது அவனின் காதல், திருமண நிச்சயம் என அனைத்தும் அவனை அவளுக்குத் தான் தகுதி இல்லாதவன் என்ற எண்ணத்தைக் கொடுக்க அவளை விட்டு விலகினான். பெரும் வலி இல்லை என்றாலும் சின்னதாய் இதயத்தில் ஒரு வலி. அது அவள் தேடி வந்தால் சரி ஆகுமோ!

முகிலன் அவசரமாகப் பணிக்குக் கிளம்பிக் கொண்டிருந்தான். அறிவழகி அவனின் அவசரத்தை பார்த்தபடியே உணவை எடுத்துத் தட்டில் வைத்து அவனிடம் நீட்டினாள்.

“வேண்டாம் அழகி நேரம் ஆச்சு” சொல்லியபடியே தன் வாட்சை தேட,

“பசிக்கலனா சரி” என்றபடியே அந்த உணவை அவள் உண்ண ஆரம்பித்தாள்.

அவளையே ஒரு கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் கண்டுக் கொள்ளாமல் உண்ணவும் அடுத்த வாய் உணவை அவன் வாங்கிக் கொண்டான்.

“புருசன் சாப்பிடலனா ஊட்டி விடணும்னு எல்லாம் தோணாதா அழகி?” கேட்ட படியே அவளின் கையில் இருந்த அடுத்த கவள உணவையும் வாயில் வாங்கிக் கொள்ள அழகி முறைத்தாள்.

“உன் லெவலுக்கு எனக்கு ரொமான்ஸ் வராது முகியே”

“எல்லாம் கத்துக்கணும் அழகியே” என்று அவள் கொடுத்த உணவைச் சாப்பிட்டு முடித்து விட்டு அவள் நெற்றியில் முத்தமிட்டவன்,
“இன்னைக்கு அம்மா வரேன்னு சொன்னாங்க. கேர்ஃபுல்லா இரு. வலி எதுவும் வந்தா எனக்கு உடனே கால் பண்ணனும். பை அழகி” எனக் கிளம்பி விட்டான்.

“எட்டு மாசம் தான்டா ஆகுது” என்று அவள் புலம்பியதை கேட்க அவன் அங்கில்லை. சிறிது நேரத்தில் தமயா அவளுக்குப் பிடித்த உணவுகளைச் சமைத்துக் கொண்டு வரவும் சாப்பாடு, பேச்சு என அவர்கள் நேரம் சென்றது.

எஸ்.பி அலுவலகத்தில் முகிலன் முன் அமர்ந்திருந்தனர் சத்யா மற்றும் துணை காவல் ஆய்வாளர்கள். சத்யா ஏற்கனவே அந்தப் போதை பொருள் விநியோகம் செய்பவனை பற்றித் தகவல் வந்திருப்பதாகச் சொல்ல, வந்திருந்த காவலர்களும் அதை உறுதி படுத்தினர்.

“சார் இன்னைக்கு அமைச்சர் செல்வன் வீட்டில் ஒரு கேஸ் விசயமா விசாரிக்க போனப்போ அவரோட பையன் புகழேந்தி யார்கிட்டயோ தீவிரமாக மெசேஜ் அனுப்பிட்டு இருந்தான். கொஞ்ச நேரம் நாங்க அதை கவனிக்கல. ஆனா எதேச்சையாக பார்த்தப்போ அதுல போதை பொருள் படங்களும், மாத்திரை பற்றிய தகவல்களும் வர சந்தேகம் வந்தது. அதனால் புகழேந்தியை கால் மணி நேரம் கூட வந்த போலீஸ்கிட்ட பேச வச்சு அவரோட போன்ல இருந்து தகவல்கள் எடுக்கும் போது தான் தெரிஞ்சது அது ஒரு செயலி. பொதுவா நாம அதை யூஸ் பண்ண மாட்டோம். அதில் ரெண்டு வருஷமா அவனுக்கு மருந்துகளும், போதை பொருள் கைமாத்துற தகவலும் இருக்கு. அவனுக்கே தெரியாம அதை ஹேக் பண்ண சொல்லிட்டு உங்க கிட்ட இன்பார்ம் பண்ண வந்தோம். அதுக்கு முன்னாடியே ஒரு தகவல் கிடைச்சிருக்கு அதை சப்ளை பண்ணுறவன் இருக்கிறது லண்டன்ல” என்றார்.

“வாட்? தென் இன்னும் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறீங்க?” முகிலன் கோபமாகக் கேட்க,

“அது அவ்ளோ ஈசியா இல்ல சார். நாங்க கலெக்ட் பண்ணின விசயங்களை வச்சு அந்த நபரை ட்ராக் பண்ணினா இன்னொரு இடத்தில் இருப்பது போல காட்டுது” என்றார் அந்தக் காவல்துறை அதிகாரி.

“டெக்னாலஜி வளர்ந்துடுச்சுன்னு நாமளும் அவனுக்கு காட்ட வேண்டாமா? ரூபனை கூப்பிடுங்க. அவன் அசால்ட்டா இவனை டிராக் பண்ணி டீடெயில்ஸ் தருவான். இனி அவன் தப்பிக்கவே முடியாது” என்று கூறினான்.

ஆனால் அவர்களுக்கும் தண்ணீர் காட்டினான் அபராஜிதன். தான் மாட்டப் போவதை உணர்ந்தவன் செயலியை முடக்கி விட்டுத் தன் அலைபேசி, சிம் அனைத்தையும் மாற்றி விட்டு அமைதியாக லண்டனை விட்டு வெளியேற முடிவெடுத்தான்.
 

Asha Evander

Moderator
அத்தியாயம் 16

முகிலன் மாலை ஆனதும் அறிவழகிக்கு அழைப்பு விடுத்தான். அந்நேரம் தான் தமயா தனது வீட்டிற்கு கிளம்பியிருந்தார். முகிலனின் அழைப்பைப் பார்த்ததும் ஒரு சிரிப்போடு அதை எடுத்தாள்.

“என்ன முகியே வேலை நேரம் பொண்டாட்டி நியாபகம் வந்திருக்கே!” அவள் சிரிப்போடு வினவ,

“அதெல்லாம் எப்போவும் உன் நியாபகம் தான்டி அழகி. நான் வீட்டுக்கு வரேன் நீ அழகா கிளம்பி இரு. ஐஜி வீட்டுல ஒரு சின்ன பார்ட்டி போயிட்டு வரலாம்” என்றான்.

“என்னடா புதுசா வெளில எல்லாம் கூட்டிட்டு போறேன்னு சொல்லுற. இன்னும் நம்மள பத்தி யாருக்கும் தெரியாதுல” எனக் குரலில் சிறிது பதட்டத்தை காட்டிக் கூறினாள்.

“இன்னைக்கு தெரிய வச்சிடுவோம். நாம என்ன கள்ளக்காதலா பண்ணுறோம்? நீ என் பொண்டாட்டிடி. கிளம்பி இரு” என்றவன் அடுத்து செய்ய வேண்டிய வேலைகளைத் திட்டமிட்டு கூறி விட்டுக் கிளம்பினான்.

அவன் வீட்டிற்கு வந்து சேர்ந்த நேரத்தில் அழகியும் ஒரு அழகான நீள கவுன் அணிந்து ரெடியாகி இருந்தாள்.

“அடியே அள்ளுற போ!” என்று அவளின் கன்னம் கிள்ளியவன் தானும் குளித்து ரெடியாகி வந்தான்.

இருவரும் ஐஜியின் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். இன்று அவரின் இளைய மகள் பிருந்தாவின் இருபத்தைந்தாவது பிறந்தநாள் தினம்.

முகிலன் அறிவழகியோடு வர யாரும் அதை எதிர்பார்த்திருக்கவில்லை. அனைவருக்கும் அதிர்ச்சியே. அவர்கள் அழகியின் வழக்கைப் பற்றி முழுவதும் தெரிந்தவர்கள். எனவே ஒரு சந்தேகத்துடன் பார்க்க,

“ஹலோ ஃப்ரெண்ட்ஸ் மீட் மை வைஃப் அறிவழகி” என்று அவர்களுக்கு அறிமுகப் படுத்தினான்.

“என்ன அவசரம்னு இரண்டாம் தாரமான பொண்ணை கல்யாணம் பண்ணிருக்கீங்க முகிலன்?” மற்றவர்கள் மனதில் இருந்த கேள்வியை ஒரு அதிகாரி கேட்டு விட,

“எங்களுக்குத் தான் சார் முதலில் கல்யாணம் ஆச்சு. அடுத்து நடந்த எதுவும் எதிர்பாராமல் நடந்தது. அதனால் மறந்துடுவோமே” என்றவன் அழகியின் கைக்கோர்த்து பிறந்தநாள் நாயகிக்கு வாழ்த்து சொல்ல அவள் சிறு புன்னகையுடன் ஏற்றுக் கொண்டாள்.

“எத்தனை மாதம்க்கா?” என்று அழகியிடம் கேட்க,

“எட்டு மாசம்” எனப் புன்னகைத்தாள் அழகி.

“உங்களோடது லவ் மேரேஜா?” பிருந்தா கிசுகிசுக்க, முகிலன் சிரித்து விட்டான்.

“உனக்கே என் லவ் ஸ்டோரி தெரியும் தானே. அப்புறம் என்ன கேள்வி?”

“ஆனாலும் ஒரு கியூரியாசிட்டி”

“இந்த மக்களுக்கு கியூரியாசிட்டிக்கு அளவே இல்லாம போச்சு” என்று புலம்பினான் முகிலன்.

அறிவழகி அவர்களைப் புரியாமல் பார்க்க,

“ரொம்ப யோசிக்காத அழகி. ஐஜி சார் ஒரு முறை அவரோட பொண்ணு இந்த வாலை என் தலையில் கட்டிக்க ஐடியா பண்ணினார். நான் தான் நம்ம காதல் கதையை சொல்லி ஆஃப் பண்ணிட்டேன்” என்று சிரித்தான்.

“ஆனாலும் உனக்கு ஃபேன்ஸ் ஓவர் தான் முகி” அழகி சிரிப்புடன் நகர்ந்து விட, பிருந்தா கேள்வியாகப் பார்த்தாள்.

“ஹான், பேசுறதுக்கு டைம் தராங்களாம். பாக்க தான் அமைதி. பயபுள்ளைக்கு ஓவர் பொஸஸிவ்” என்றவன் பிருந்தாவிடம் கூறி விட்டு அழகியின் அருகில் வந்தான்.

“என்னடி சாப்பிடுவோமா? இங்க லைட் புட் இருக்கும்” என்றவன் அவளுக்கும் சேர்த்து எடுத்துக் கொண்டு வந்தான். அங்கிருந்த இருக்கையில் அவளை அமர வைத்து விட்டு உணவைப் பிசைந்து ஊட்டி விட்டான்.

அழகிக்குச் சங்கடமாக இருந்தது. அனைவரின் பார்வையும் அவர்கள் மீதே இருந்தது.

“முகி நானே சாப்பிடுறேன்” என்று தட்டை வாங்க முயலப் பின்னால் இழுத்துக் கொண்டவன்,

“காலையில் நீ எனக்கு ஊட்டி விட்டல. அதான் இப்போ நான் பண்ணுறேன்” என்றவன் அவளின் முறைப்பையும் பொருட்படுத்தாது ஊட்டி விட வாயில் வாங்கிக் கொண்டாள்.

அவளுக்குக் கொடுத்து விட்டு அவனும் உண்டு முடித்து வர, பிருந்தா அவளின் காதலனை அழைத்துக் கொண்டு வந்தாள்.

“ஒரே ரொமான்ஸ் தான் போல” அவள் கிண்டல் செய்ய அழகி முகிலனை தான் முறைத்தாள்.

“ஓவரா பண்ணாதடி” என்றவன் பிருந்தா பக்கம் திரும்பி, “உங்க வீட்டு சாப்பாடு இன்னைக்கு ரொம்ப டேஸ்ட் ஆக இருந்ததா அதை நான் என் கையால் என் பொண்டாட்டிக்கு ஊட்டி விடணும்னு வேண்டுதல் அதான்” என்று கூற பிருந்தா அவனை முறைத்தாள்.

நிஜத்திற்கும் இன்று உணவு மிகவும் காரம். அறிவழகிக்கு காரம் என்றால் மிகவும் விருப்பம். ஆனால் இப்போதைய சூழலில் அவள் உண்ண முடியாது அதே நேரம் இன்று அவள் அதை உணரவும் கூடாது என்று உணவை ஊட்டி விட்டு ஒரு குட்டி ரொமான்ஸ் நிகழ்த்தி விட்டான்.

அவனின் பேச்சில் பிருந்தாவின் காதலன் வருண் சட்டெனச் சிரித்து விட்டான்.

“இவளை சமாளிக்க நான் கூட உங்ககிட்ட கிளாசுக்கு வரணும் போல சார்” என்றவன் தன்னை அறிமுகப்படுத்த அவர்களுடன் சிறிது நேரம் பேசிய முகிலன் தம்பதியர் பின் சொல்லி விட்டுக் கிளம்பினர்.

முகிலன் நேராகக் கடற்கரைக்கு வண்டியை விட்டான். கடல் காற்று இதமாய் முகத்தில் மோத அதை ஆழ்ந்து அனுபவித்தாள் அழகி.

கல்லூரி காலத்தில் கடற்கரைக்குச் சென்ற அனுபவம் உண்டு. அதன்பின்பு திருமணம், சிறை வாழ்க்கையென மொத்த வாழ்க்கையின் பாதையும் மாறியிருந்தது. மீண்டும் இன்று அவளின் கணவனுடன் ஒரு அழகிய தருணம்.

அவள் ரசிப்பதை பார்த்துத் தானும் அவளை ரசித்துக் கொண்டிருந்தான் முகிலன். அவனுக்கு அவளைத் தாண்டித் தான் மற்ற அனைத்தும் கணக்கில் வரும். வெளியில் ஒரு தைரியமான காவல்துறை அதிகாரி என்றாலும் எப்போதும் அவளிடம் குழந்தையாகவே இருக்க விரும்புபவன். ஆனால் அதை ஒருபோதும் வெளிப்படுத்தியதே இல்லை.

இன்றும் அவளையே ரசித்துக் கொண்டிருக்க, அவனைப் பார்த்தவள் தன் மேடிட்ட வயிற்றை ஒரு கையால் பிடித்தவாறே அவனை நோக்கி வந்தாள். கவிதையாய் இருந்தது அவளின் நடை.

நெருங்கி வந்தவள் அவனின் கரம்பற்றி “முகி அலையில கால் நனைப்போமா?” என்று கேட்க,

“போலாம் அழகி. பட் ரொம்ப தூரம் போகக் கூடாது ஓகே?” என டீல் பேசி அழைத்துச் சென்றான்.

சொன்னபடியே அலைகள் காலைத் தீண்டும் தூரத்தில் நின்றவர்கள் பேசிக் கொண்டே அந்தச் சூழலை ரசிக்க ரம்மியமாக இருந்தது.

அவர்களைப் பார்த்துக் கொண்டே நான்கு இளைஞர்கள் கொண்ட கூட்டம் வர முகிலன் தான் அவர்களை முதலில் கவனித்தான். என்னதான் செய்கிறார்கள் எனப் பார்க்க,

அவர்களோ “இவ்வளவு அழகான பையனுக்கு இப்படியொரு பொண்ணுடா. டேஸ்ட் இல்லாத ஆளு போல. இவ கலருக்கு விளக்கை அணைச்சா ஆளு கூட இருட்டுல தெரிய மாட்டா” என்று சிரிக்க முகிலன் பல்லைக் கடித்தான்.

“மச்சி கர்ப்பமா வேற இருக்காடா. பிள்ளை இவரை போல பிறக்குமா இல்ல இந்த பொண்ணு போல கருப்பா பிறக்குமா?” என்று தீவிர யோசனையில் இறங்க அதுவரை அவர்களுக்கு முதுகுக் காட்டி கொண்டு நின்றிருந்த முகிலன் திரும்பினான்.

அவன் முகத்தைப் பார்த்தவர்களுக்கு மிகவும் அதிர்ச்சி. முகிலனை எஸ்.பி என்ற முறையில் அறிந்தவர்கள் தானே அவர்களும்.

“என்ன சொன்ன திரும்ப சொல்லு?” என்று முகிலன் ஒருவனின் கையை பிடித்துத் திருக, அழகி தான் தடுக்க வந்தாள்.

“முகி விடு என்ன பண்ணுற? இது பப்ளிக் பிளேஸ். அவங்க மனசுல பட்டதை பேசினாங்க. பிரச்சனை வேண்டாம் விடு”

“என்ன விட சொல்லுற ஹ்ம்? கருப்பா இருந்தா அது கலர் இல்லையா? நீயும் பிறந்ததில் இருந்தே இந்த விஷயத்தில் எத்தனை அவமானத்தை பார்த்துட்ட? வீட்டுல உள்ளவங்க பேசுறது வேற. அவங்களையே சும்மா விட மாட்டேன் நான். ஆனா அடுத்தவன் பேசினாலும் பார்த்துட்டு போகணுமா?” என்று அவளிடம் சீறியவன் அவளை பற்றிப் பேசியவன் பக்கம் திரும்பி,

“அவளுக்கு என்ன கலர்ல குழந்தை பிறந்தா உனக்கு என்னடா? உன் அக்கா தங்கச்சிக்கிட்ட போய் அவ குடும்ப அந்தரங்கம் எல்லாம் கேட்பியா? எங்க குழந்தையை பார்த்துக்க எங்களுக்கு தெரியும். உன்னை முதல்ல ஈவ்டீசிங் கேஸ்ல அரெஸ்ட் பண்ணனும்” என்று தன் போனை எடுக்க,

“சார் சார் தெரியாம பண்ணிட்டோம் சார். இனிமேல் யாரையும் இப்படி கிண்டல் பண்ண மாட்டோம் சார். மன்னிக்க சொல்லுங்க மேடம்” என்று அந்த இளைஞர்கள் கெஞ்ச ஆரம்பித்து விட்டார்கள். அவர்கள் ஏதோ விளையாட்டாக நினைத்து பேச இப்படி விபரீதமாக முடியும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள்.

அழகி அவர்கள் கெஞ்சுவதை பார்த்தவள் “போய் தொலைங்கடா. பேச முன்னாடி யோசிக்கணும். இல்லன்னா இப்போ போல என் புருசன் எப்போவும் விட்டுட மாட்டான்” என்றவள் முகிலன் கையை அழுத்தினாள்.

“எனக்காக முகி. விட்டுடு”

முகிலன் எதுவும் பேசாமல் நகர அவர்களை முறைத்து விட்டு அழகியும் அவனுடன் நடந்தாள். நல்ல சூழலைக் கெடுத்து விட்டனர் அவர்கள்.

முகிலனின் அமைதி அவளைப் பாதிக்க அவனை நெருங்கிக் கரம் கோர்த்தவள் “சாரிடா. நீ கூட இருக்கும்போது என்னை எதுவுமே பாதிக்காது. எனக்காக நீ சண்டை போடக் கூடாது” என்று கூறினாள்.

மனம் சிறிது இளக, அவளைத் தன்னோடு அணைத்து கொண்டு நடக்க தொடங்க “அறிவு அக்கா” என்று ஓடி வந்தாள் ஜானகி.

“வந்துட்டா வில்லி.” என்ற முகிலன் அவளை பார்க்க கூடவே கிருஷ்ணாவும் வந்தான்.

“ஹாய் கிருஷ்ணா” முகிலன் கை குலுக்க, கிருஷ்ணாவும் பதிலுக்கு புன்னகைத்து குலுக்கினான்.

“எனக்கு” என்று ஜானகி இடையில் வர,

“குட்டி பிசாசு இது என்ன கோலம் முள்ளங்கிக்கு கை, கால் முளைச்ச போல. ஒழுங்கா ஒரு ட்ரெஸ் கிடைக்கலையா? இதுல இவ வில்லி ரோல் வேற பிளே பண்ணினா” என்று திட்ட, தன்னை குனிந்து பார்த்துக் கொண்டாள் ஜானகி.

பக்கத்தில் தான் வீடு என்பதால் இரவு உடையோடு கிளம்பி வந்திருந்தாள்.

“இதுக்கு என்ன குறைச்சல்? என் லவ்வர் கூட குல்பி சாப்பிட வந்தேன் அவ்ளோ தான்” என்றவளை முறைத்தான் கிருஷ்ணா.

“லவ்வரா?”

"நாம ஃப்ரெண்ட்ஸ் அப்படி தானே ஹேன்ட்சம்” என்றவள் “நாங்க வரும்போது என்ன பஞ்சாயத்து?” என்று முகிலனிடம் கேட்டாள்.

“அவன் உன்னைப் போலவே ஒரு அரைவேக்காடு.” என்று சலித்த முகிலன் பின் கிருஷ்ணாவிடம் அவன் எப்போது ஊருக்குப் போவான் என்று விசாரித்தான்.

“போகணும் சார். ஆனா கொஞ்சமும் மனசு ஒப்பல. அங்கே போனாலே முடிஞ்சு போனதை கிளறி காயப்படுத்துற கூட்டம் நிறைய” கிருஷ்ணா கூற,

“எல்லா இடத்திலேயும் இருப்பாங்க கிருஷ்ணா. நாம தான் அதையும் தாண்டி வாழப் பழகணும். உங்க அம்மா அப்பாவை யோசிங்க” என்றான் முகிலன்.

“சரி சார். சீக்கிரம் போகிறேன்” என்று கிருஷ்ணா கூற ஜானகி கண்களில் கலக்கம். அதை அங்கிருந்த அனைவரும் கவனித்தனர்.

“என்ன கண்ணு வேர்க்குது குட்டி பிசாசு?” முகிலன் சிரிக்க,

“இப்போ எதுக்கு என் லவ்வை பிரிக்குறீங்க நீங்க?” என அவனிடம் கத்தினாள் ஜானகி.

“ஜானு” அறிவழகி அதட்ட அவளுக்கு கண்கள் நிறைந்து விட்டது.

“நான் உண்மையாவே லவ் பண்ணுறேன். அது எதனால் உங்களுக்குப் புரியல ஹேன்ட்சம்?” என்று கேட்டவள் அவனின் பதிலை எதிர்பாராமல் வீட்டை நோக்கி நடக்க கிருஷ்ணா சங்கடமாக நின்றான்.

அவனின் தோளைத் தட்டிய முகிலன் “அவ உங்களை உண்மையா நேசிக்கிறா கிருஷ்ணா. சின்ன பொண்ணு தான். ஆனா கண்டிப்பா உங்களுக்கு செட் ஆவா” என்றான்.

“யோசிக்கிறேன் சார். எனக்கும் அவளைப் பிடிக்கும். ஆனா கல்யாணம் வரை யோசிக்கல. வீட்ல பேசிட்டு அவகிட்ட சொல்லுறேன்” என்று அவர்களுக்கு விடை கொடுத்துக் கிளம்பினான்.

“பாவம்ல ஜானு” அழகி வருத்தப்பட,

“எனக்கு என்னமோ அடுத்த கல்யாணம் அவளுக்கு தான்னு தோணுது” என்று சிரித்தான்.

“அவ்ளோ நம்பிக்கை?” கேள்வியாக கேட்க,

“கண்டிப்பா. இவனை அவ மாத்தலன்னா பார்த்துக்கோ” என்றவன் நாளை பியூட்டி பார்லருக்கு செல்ல வேண்டும் என்று நினைவூட்டி விட்டு அவளுடன் வீட்டிற்கு கிளம்பினான்.

நாளைய தினம் மட்டுமே அவர்களுக்கான சந்தோச தினம் என்பதை அவன் அறிந்திருந்தால் அடுத்தநாள் அவளைத் தனியாக விட்டிருக்க மாட்டான்.
 
Status
Not open for further replies.
Top