பகுதி - 22
கணவன் தன்னிடம் பலமுறை கேட்டும் அவள் மனதில் இருப்பதை அவளால் பகிர முடியவில்லை. அவனுக்கு டீயைக் கொண்டு வர வந்தவள் சமையலறையில் தேயிலை அடுப்பில் கொதிப்பதைப் போல அவள் மனமும் வேதனையில் கொதித்துக் கொண்டிருந்தது.
காதல் தாய்மை எல்லாம் இயல்பாக நடக்க வேண்டிய விஷயங்கள், என் வாழ்க்கையில் மட்டும் ஏன் இவ்வளவு கடினமாக இருக்கிறது என்று அவளுக்குப் தெரியவில்லை.
திருமணமானத் தம்பதியர்கள் கிடையே இருக்கும் அன்னியோன்யமும் நெருக்கமும் அனைவரின் வாழ்க்கையிலும் சாதரணமாக நடப்பது, எனக்கு மட்டும் ஏன் அது மிகப்பெரிய பெரிய விஷயமாக இருக்கிறது என்று மதுமிதாவிற்குப் புரியவில்லை.
மனதில் உண்டாகும் வலியும் வேதனையும், அவன் உணர்வுகளை முதலில் ஆட்கொள்ளும் என்று அவளுக்குப் புரியவில்லை.
தாம்பத்திய வாழ்க்கையில் தன் கணவன் அவனுடைய முதல் அடியை எடுத்து வைக்காமல், அவளால் எதுவுமே செய்ய இயலாத நிலையில் இருப்பது வலியைத் தந்தது. மனம் முழுவதும் அவன் மேல் காதல்... காதல் மட்டுமே, கணவன் இல்லை என்றால் இவ்வுலகில் வாழ விருப்பமில்லை என்ற நிலையில் அவள் இருந்தாள்.
அவள் காதல் அவனுக்குத் தெரியவும் இல்லை, புரியவும் இல்லை என்பது அவளுடைய மிகப்பெரிய வேதனையாக இருந்தது. இதை எப்படி அவரிடம் கூறி அதை அவர் நம்பணுமே என்ற பயமும் அவளைக் கொன்று கொண்டு இருந்தது. காதல் உணர்த்த வேண்டிய அழகான உணர்வு என்பது தெரியாமல், மனதில் கவலையோடு தயாரான டீக் கோபியோடு தன் கணவனைக் காண வந்தாள் மதுமிதா.
அலைபேசிப் பார்த்துச் சிரித்தபடியே இருந்தவன் முன் டீயை நீட்டினாள் மதுமிதா. சிரித்த முகமும் கண்களில் காதலுமாகத் தன் மனைவியைப் பார்த்தவன் இரண்டு பேரும் வெளியே போலாமா என்று கேட்டான்.
இதை எதிர்பாராத மதுமிதா "போலாமே" என்றாள்
இருவரும் தயாராகி வெளியே வந்தனர் அவன் வாகனத்தில் அவளை அழைத்துச் செல்வான் என்று நினைத்த அவளின் எண்ணத்தில் மண்ணை அள்ளிப் போட்டவன் "உன் டூவீலர் எடு மதுமிதா, நாம் கோயிலுக்குப் போலாம்" என்றான்.
அவளும் உள்ளே சென்று தன் இரு சக்கர வாகனத்தில் சாவியை எடுத்துக் கொண்டு வந்து அவனிடம் நீட்டினாள். சாவியைப் பார்த்தவன் "என்னை எல்லாம் வச்சு வண்டி ஓட்ட மாட்டியா?" என்று கேட்டான் மேலும் அதிர்ச்சியாக இருந்தது அவளுக்கு.
"நீங்க என் வண்டியில் பின்னாடி உட்கார்ந்து வருவீங்களா? என்று கேட்டாள்.
"அதனால் என்ன நீ ?வண்டி ஓட்டு நான் பின்னாடி உட்கார்ந்து வரேன்" என்று கூறியவன் அவள் வந்து ஸ்டார்ட் செய்ததும் எந்த ஒரு தயக்கம் இல்லாமல் அவள் வாகனத்தின் பின்னே ஏறி அமர்ந்தான்.
வாகனத்தை ஓட்டிச் சென்றவளுக்கு மனதில் ஒரு சிறு பதட்டம் இருந்தது மிகவும் நெருக்கமாகத் தன் பின்னில் அமர்ந்து வரும் கணவனின் செயலில், அவளுக்கு அதிர்ச்சி என்றால் காதல் மட்டுமே உள்ள அவள் மனமும் உடலும் அவன் அருகில் தடுமாறத் தொடங்கியது.
அருகில் இருக்கும் கோவில் வண்டியை நிறுத்தினாள் மதுமிதா. இருவரும் வண்டியிலிருந்து இறங்கிக் கோயிலில் உள்ளே சென்றனர். அப்போது வெளியே இருந்து பூக்கடையில் பூவும் சாமிக்கு வேண்டியது அனைத்தும் வாங்கி வந்தவன், பூவை அவளிடமும் பூஜைக்கான பொருள்களைத் தன்னிடமும் வைத்துக்கொண்டான். அவளைப் பார்த்துப் "பூவை வைத்துக்கொள்வது" என்றான்.
இன்று நடப்பது எல்லாம் அவளுக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. இதுவும் நன்றாகத் தான் இருக்கிறது என்று மனதில் சிரித்துக் கொண்டு, அவள் தலையில் பூவை வைத்துக் கொண்டே தன் கனவுகளுடன் நடந்தாள்.
பூஜைக்குக் கொடுத்தவன் இன்று தொடங்கும் எங்கள் வாழ்க்கையில் சந்தோஷமும் ஆனந்தும் மட்டுமே இருக்க வேண்டும் குடும்ப வாழ்க்கையில் சச்சரவுகள் இருந்த போதும் எங்களிடையே பிளவு வரக்கூடாது என்று மனதாரக் கடவுளை வேண்டியவன் அங்கிருக்கும் திண்ணையில் வந்து அமர்ந்தான்.
அதேபோல் கோவிலைச் சுற்றி வந்தவள், தன் கணவனின் அருகில் வந்து அமர்ந்தாள். என்றிக்கும் இல்லாது இன்று அமைதி மட்டுமே அவள் மனதில், இனி எல்லாம் நல்லபடியாக இருக்கும் என்ற நம்பிக்கையும் மனதில் உதித்தது.
அப்பொழுது அங்கு விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தனர். அந்தக் குழந்தைகள் கூட்டத்தில் மழலை ஒன்று தத்தித் தத்தித் தாவி, நடந்து வந்துக்கொண்டுருப்பதைக் கண்டு, அதன் அழகில் மெய் மருந்து, இதழில் சிரிப்பும் கண்களில் கண்ணீருமாகப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.
அவளின் ஏக்கம் அப்பொழுதுதான் புரிந்தது கதிர்வேந்தனுக்கு ரேணுகாவின் தாய்மையும் வேதாந்தின் குறும்பும் கண்டு தாய்மை பிறந்திருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டான். திருமணமானப் பெண்களின் ஆசையே தாயாவது தானே, அவளுக்கும் அந்த எண்ணம் இருக்கும் தானே, இதெல்லாம் சிந்திக்கத் தவறிவிட்டேனே என்று மனதினுள் வருத்தப்பட்டான் கதிர்வேந்தன்.
வாழ்க்கையில் நமக்கு உண்டாகும் துன்பமும் துயரமும்... வேதனையும் வலியும், நம் எதிரில் இருப்பவர்களைப் பற்றிச் சிந்திக்க விடாது என்பதைக் கற்றுக் கொண்டான்.
தன்னுடைய காதலை மட்டுமே சிந்தித்தவன் தன்னுடைய வலியை மட்டுமே உணர்ந்தவன்... தன்னைக் கல்யாணம் செய்தப் பெண்ணின் உணர்வுகளையும் மனதினையும் கவனிக்கத் தவறிவிட்டான் என்பதைக் கோயிலில் வைத்துத் தெரிந்து கொண்டான்.
இதனை எப்படிச் சரி செய்ய வேண்டும் என்பதும் தெரிந்தது. மெல்ல அவள் கைகளைப் பிடித்தான். அப்பொழுதுதான் கோயிலில் இருப்பதும் தன் கணவன் அருகில் இருப்பதையும் உணர்ந்தவள் கலங்கிய கண்ணோடு அவனைப் பார்த்துச் சிரித்தாள்.
மிகவும் மெல்லிய ஆழ்ந்தக் குரலில் "மது நம் குழந்தையும், இதுபோல நடந்து வந்தால் எப்படி இருக்கும் யோசித்தாயா?" என்று மனைவியிடம் நேரடியாகவே கேட்டான் கதிர்வேந்தன்.
கணவன் கேட்டக் கேள்வி முதலில் புரியாமல் இருந்தவளுக்குப் பிறகு, அதன் உள்ளர்த்தம் புரிந்ததும் வேகமாக அவன் கண்களை நோக்கினாள். அவன் கண்களில் காதல் மட்டுமே இருந்ததை உணர்வும் செய்தாள் அவன் மது.
"நிஜமாகத்தான் சொல்லுறேன் உன்னை மாதிரி இதே அழகோடு இதே அன்போடும் ஒரு பொண்ணு எனக்கு வேணும் பெற்றெடுத்துத் தருவாயா?" என்று கேட்டான்.
தன் மனதில் இருக்கும் ஆசையை உணர்ந்து கொண்ட கணவனின் காதலின் மேல் அவளுக்குக் காதல் அதிகரித்தது.
நொடிப்பொழுதுக் குழந்தை மட்டும் தான் வேணுமா என்றொரு எண்ணமும் மனதில் அவளுக்கு மின்னல் போல் தோன்றி மறைந்தது. இருந்த போதும் அவனுடைய காதல் அவளுக்குத் தெரியும் அல்லவா அதனால் அவன் வார்த்தைகளில் சந்தேகம் வரவில்லை மதுமிதாவிற்கு.
மீண்டும் அவள் கண்களையே பார்த்தவன் “என் வாழ்க்கையில் நீ மட்டும் தான் எப்பொழுதுமே, அதை இன்னிக்கு நேற்று அல்ல ரொம்ப வருடங்களுக்கு முன்பாகவே நீ தான் என் மனைவி என்பதை நான் முடிவு செய்து வைத்திருந்திருக்கிறேன். உன் அப்பாவிடம் சொல்லி இருக்கிறேன். உன்னிடம் நான் சொன்ன விஷயம் தான்… இருந்த போதும் திரும்பி ஒரு தடவைச் சொல்லுறேன் குழந்தைக்காக அப்படின்னு யோசிக்காதே, என்னுடைய மனதில் இருப்பதை எப்படிப் புரிய வைக்கத் தெரியவில்லை...
காயம் பட்ட மனதில் அந்தக் காயத்தை விட அதிகமாகக் காதல் இருக்கிறது. அந்தக் காதல் காயத்திற்கான மருந்து உன்னிடம் தான் இருக்கு. என்னுடைய காதல் உனக்குள்ள காதலை உண்டாக்கும் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கு" என்று கூறினான்.
இப்பொழுது வரைக்கும் அவளுடைய மனதில் இருக்கும் காதல் அவனுக்குத் தெரியவில்லை அல்லவா. அதனால் இனி வரும் காலங்களில் காதல் வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்ற மனநிலைக்கு வந்து விட்டான் என்பது மதுமிதாவிற்குப் புரிந்தது.
கணவனின் மனம் மாறக் காரணம் தன்னுடைய ஏக்கமும் ஆசையும் என்பதும், தன்னுடைய மனதில் இருக்கும் எண்ணங்களும் ஆசைகளும் சொல்லாமல் புரிந்துக்கொள்ளும் அவனுடைய காதல் தன்னுடைய காதலை விட மிக உயர்ந்த நிலைக்குச் செல்வதைக் கண்ட மதுமிதாவிற்கு அப்பொழுதே தன் கணவனை ஆறத்தழுவ வேண்டுமென்று எண்ணம் பெருக்கெடுக்கத் தொடங்கியது.
“வீட்டுக்குப் போலாம் வாங்க” என்றாள் சட்டென்று
“இல்லை எனக்குப் புரியவில்லை” என்று சிரித்துக் கொண்டே கேட்ட அவன் கேள்வியில் கதிர் வேந்தன் குரலில் கேலி நிறைந்திருந்தது.
“எனக்கு இப்பவே வீட்டுக்குப் போகணும்” என்றாள் மதுமிதா.
“சரி வா, போகலாம்” என்று எழுந்தவன் கதிர்வேந்தனிடம் வண்டியின் சாவிக் கொடுத்தவள், நீங்களே வண்டியை ஓட்டுங்க என்றாள்.
என்ன நினைத்தானோ சரி என்று வேகமாக இருவரும் வெளியே வந்தனர். வண்டியை ஸ்டார்ட் செய்தவன் அவளை இருக்கையில் அமரச் சொல்லவும், அவனோடு நெருங்கி இடையோடு கைவிட்டு அவனைத்தபடியே அமர்ந்திருந்தாள். அவளுடைய செயலில் அவள் மனதில் ஓடும் எண்ணங்களும் அவளின் உணர்வுகளும் அவனுக்குப் புரிந்தது.
வீட்டிற்கு வந்தவர் எதுவும் பேசாமல் உணவை அருந்தி உறங்கச் சென்றனர்.
தங்கள் அறைக்கு வந்தவன் “மது நீ போய்த் தூங்கு, எனக்குச் சின்ன வேலை இருக்கு” என்று சிரித்தபடி அவளிடம் கூறினான் கணவனின் செயல்கள் எதுவுமே புரியவில்லை அவளுக்கு இருந்த போதும் மனதில் ஒர் அமைதி இருந்தது. அவள் சரி என்று தலையாட்டிபடி உறங்கச் சென்றவள் அப்படியே உறங்கியும் போனாள்.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவரின் இதழ்களில் மெல்லிய வெப்பம் படர உறக்கத்திலேயே மூச்சுத் திணறுவது போல் தோன்றியது மதுமிதாவிற்கு, சட்டெனக் கண்கள் திறந்தவளுக்கு, தன் இதழோடு இதழ் அனைத்துத் தன்னை ஆட்கொண்டு கொண்டிருக்கும் கணவனையே கண்டாள்.
தன்னை அதிர்ச்சியோடு விழி விரிய உறக்கத்திலிருந்து விழித்த மதுமிதியைப் பார்த்தவன் சிரித்தபடியே “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மது” என்று கூறினான்.
அப்பொழுதுதான் அவளுக்கு அன்றைய தினம் தனது பிறந்த நாள் என்பது நினைவிற்கு வந்தது. அந்நேரம் கண்கலங்கியவளை அணைத்தவன் “பிறந்தநாள் அன்று யாராவது அழுவாங்களா” என்று கேட்டவன்… அவள் கண்களைத் தன் இரு கரங்களால் மூடி அவளைத் தான் அடுக்கி வைத்திருக்கும் பரிசுப் பொருட்களுக்கு முன் அவளைக் கொண்டு வந்து நிறுத்தி அவள் கண்களைத் திறந்து விட்டான்.
தன் முன் குவிந்திருக்கும் பரிசுப் பொருட்களைக் கண்டு அதிர்ச்சியில் அவனைத் திரும்பிப் பார்த்தாள். கைகளைக் கட்டிக்கொண்டு சிரித்தபடியே அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் கதிர்வேந்தன்.
“இவ்வளவு பரிசும் ஒரே நாளில் வாங்கினீங்களா?” என்று கேட்டவளிடம், இல்லை என்று தலையாட்டியவன்
“ஒவ்வொரு பரிசும் உன்னுடைய ஒவ்வொரு பிறந்தநாள் அன்று, நான் வாங்கி வைத்தது” என்று தன் காதல் தொடங்கி அன்றிலிருந்து அவள் பிறந்த நாளுக்கு அவன் வாங்கிய பரிசுகளின் வரலாறுகளைக் கூறிக் கொண்டிருந்தான். இதையெல்லாம் கேட்டவளுக்குப் புரிந்தது தன் கணவனின் காதலின் ஆழமும், அதன் வலியும் உணர்ந்தது.
“இதெல்லாம் தெரியாமல் உங்களை வேதனைப்படுத்திவிட்டேனே ” என்று கூறியவள் அவனை அணைத்துக் கொண்டு அழுதாள்…
“இந்தக் கண்கள் அழகான கனவுகள் காண்பதற்கும், எதிரில் இருக்கும் என்னைச் சைட் அடிப்பதற்கும் தான்… அதைத் தவிர அழ மட்டுமே பயன் படுத்தற டி நீ, அதெல்லாம் நடந்து முடிந்தது தானே, இந்த நாள் உன்னுடைய நாள் உன்னுடைய பிறந்தநாள், அதைச் சந்தோஷமாக நாம் கொண்டாட வேண்டும்” என்றான். அந்தக் கொண்டாட வேண்டும் என்பதை அழுத்திக் கூறி இருந்தான் கதிர் வேந்தன்.
அப்போது தான் கவனித்தாள் அங்கே அடிக்கி வைத்திருந்த பரிசுப் பொருட்களெல்லாம், அவள் இங்கே வந்த வருடத்தில் இருந்து இருப்பது.. அதில் இன்றைய பரிசுக் காணவில்லை…
கணவனைப் பார்த்து "எல்லாப் பரிசுகள் பார்த்துட்டேன் இன்றைய பரிசு எங்கே?" என்று அவன் முன் கையை நீட்டியவளிடம்… அதோ என்று அவள் திருப்பித் தங்கள் படுக்கையைக் காட்டினான். அங்கே அழகாக வீற்றிருந்து அவளின் பரிசு வேகமாகச் சென்று அதைத் திறந்துப் பார்த்தவளுக்கு அங்கே அழகான இரண்டு சாரி இருந்தது.
ஒன்று விலை உயர்ந்தப் பட்டுப் புடவை இன்னொன்று டிசைனர் சாரி…
அவள் அருகே வந்தவன் “இந்தப் புடவையைக் கட்டிட்டு வா” என்றான் மைய லோடு…
கணவனின் வார்த்தைகளைத் தட்டாமல் அவன் ஆசைப் படிப் புடவையை அழகாகக் கட்டி வந்தவளை இமை பிரிக்காமல் பார்த்தவின் பார்வையில் மருந்துக்கும் கண்ணியம் இல்லை அவன் பார்வையில் பட்ட இடமெல்லாம் மயிர் கூசியது… அவள் உடலில் உண்டான மாற்றத்தில் அவள் மேனிச் சிவந்து சூடேறியது. அதற்கு மேல் அவளைத் தடுமாற விடாமல், தன் கைகளில் ஏந்தியவன், தன் முகம் அருகே அவள் முகத்தைக் கொண்டு வந்து, அவள் இதழில் ஆழுத்தாமாக முத்தத்தைப் பதித்தவனின் கழுத்தில் தன் கரங்களை மாலையாகப் போட்டவள் அவனுக்கு வசதியாகத் தன்னை அவனிடம் ஒப்பிவித்தாள்.
அவளைப் படுக்கையில் கிடத்தி அவளுக்கான பரிசை வாரி வழங்கினான்…
அன்றைப் பிறந்த நாள் பரிசாக அவனோட காதலை வாரி வழங்கினான்…
எப்படிக் காதலுற்றான்…எங்கே காதலித்தான் எப்படிக் காதலில் கட்டுட்டான் என்று எல்லாமே அங்கே காதலில் காட்டினான்… அவனின் இதழ்த் தீண்டத் தீண்ட அவனில் தன்னை இழந்து அவனோடு காதலில் பயணித்துக் கொண்டிருந்தாள் அவன் மதி… அவனின் ஸ்பரிசம் முழுவதுமாக உணர்ந்தத் தருணம் இரண்டு துளிக் கண்ணீர் அவள் விழிகள் பிரசவிக்க… என்ன என்று பதறியவனின் செயலில் ஒன்றும் இல்லை என்று தலையை அசைத்தவள், வேகமாக அவனைத் தன்னுள் அடக்கிக் கொண்டாள். எங்கே எல்லாம் நின்று விடுமோ என்ற பயத்தில்…
அவளின் இந்த உணர்வுகளை உள்வாங்கியவன் எல்லாம் முடிந்து அவளைத் தன் மடியில் இருத்தி அவளைப் பாதுகாத்து அணைத்து இருந்தான்… உன்னை எப்பொழுதும் விடவே மாட்டேன் என்று சொல்லியது அந்த அணைப்பு…
அவன் கரங்களில் முத்தமிட்டவள்… அவன் கைகளைப் பிடித்து விரல்களில் விளையாடியப் படியே அவன் உள்ளங்கையில் தன் காதலை எழுதினாள் அதைப் புரிந்துக் கொண்டவன்…
“என்ன டீச்சரம்மா வார்த்தைகளை எழுதிக் காட்டுவீங்களா” என்றவனிடம்…
“உங்கள் அளவுக்கு என் காதல் ரொம்ப உயர்ந்தது இல்லை என்றாலும், நான் என் காதலை உணர்ந்தத் தருணமும்… அதை நான் வெளிப்படுத்திய நேரமும் உங்களுக்கும் தெரியும், ஆனால் நீங்கள் எப்படி எல்லாம் தவித்தீர்கள் என்று எனக்குத் தெரியாது, ஆனால் நான்” என்றவள் மௌனமானாள்…
வேகமாகத் தன்னைப் பார்த்து அவளைத் திருப்பியவன் “இங்கே பார் மது, நம்மிடம் இப்போ மறைக்க எதுவும் இல்லை… இனி இப்படி மனதில் வைத்துக் கொண்டு இருக்காமல்… எதுவாக இருந்தாலும் சொல்லு… உன்னை நான் எப்பவும் தவறாக நினைக்க மாட்டேன். உன்னைத் தவறாக நினைப்பது என்னை நானே தவறானவனாக நினைப்பதற்குச் சமம். நீயும் நானும் ஒன்று தான் இன்னுமாத் தெரியவில்லை” என்ற அவனின் வார்த்தைகளில் விரசம் மட்டுமே இருந்தது.. கணவன் மனைவி இடையே விரசத்திலும் அழகு அங்கே இருந்தது…
ம்ம் சொல்லு நான்…என்று எடுத்துக்கொடுத்தான் அவளுக்கு வார்தைகளை…
"நாம் சண்டைப் போட்ட அன்றைக்கு" என்று அவன் முகம் பார்க்காமல் வெட்கத்தில் சிவந்தவளைப் பார்த்து…
"அன்றைக்கு"…என்றான்..
"நீங்கள்" என்றவள்…
"ம்ம் சொல்லுடி, நான்"…
என்று அவன் சிரித்தான்…
வேகமாக அவன் விழிகளைத் தன் ஒரு கரங்களில் மூடியவள்… மற்றொன்றில் அவன் கரத்தை எடுத்துத் தன் இதயத்தைத் தொட்டு..
"இங்கே உங்கள் முதல் முத்தம் பதித்தில் தான் என்னுள் நான் ஒழித்து வைத்து இருந்த, என் காதல் என் அனுமதியின்றி உங்களிடம் சரணடைந்தது…
என் காதல் உங்களிடம் என்னை விட்டுக் கொடுத்து விட்டு வேடிக்கைப் பார்த்தது… அன்றைக்கு நீங்கள் என்னிடம் கோபமாகப் பேசிய போதும் உங்கள் ஸ்பரிசத்தில் மென்மை மட்டும் இருந்தது. நான் நினைத்து இருந்தால் ஆரம்பத்திலேயே தடுத்து இருக்கலாம்… அங்கே தான் நீங்கள் என் காதலைக் கண்டுக்கொண்ட நிமிடங்கள்… நானும் மனிஷித் தானே… ஆனால் உங்களிடம் அகப்பட்டு விட்டது கோபம் என்றால், என் கண் முன் ரேணு முகம் வந்து அவளுக்குத் துரோகம் செய்து விட்டாய் என்று கூறியது போல் தோன்றியது…அது தான் உங்களிடம் அப்படி நடந்து கொண்டேன்" என்றவள்.. மேலும்
ஊரை விட்டுச் சென்றாலும் உங்கள் நினைவுகள் மட்டுமே போதும் என்று முடிவிற்கு வந்திருந்தேன்.. ஆனால்.. தினமும் அன்றை நாளில் நடந்தது கனவாக வந்து என்னைக் கொல்லும்… நிறைவு இல்லாத உறவாகிப் போனதே என்று வேதனை மனதில் உண்டாகும்... சில நேரம் நினைத்து இருக்கேன்..அன்றை நாளில் நமக்குள் எல்லாம் நடந்து இருந்தால், ஒரு வேளை தாயாகி இருப்பேனோ… என்று பல தடவை யோசித்து இருக்கிறேன்… அப்படி நடந்து இருந்தால் உங்கள் நினைவுகள் மட்டும் மனதில் வைத்து நம் பிள்ளையை வளர்த்தி என் வாழ்க்கையை வாழ்ந்து இருப்பேன் என்றவளின் காதலில் கட்டுண்டு இருந்தான் கதிர் வேந்தன்.
அவளிடம் தனக்கான காதலைத் தேடி அலைந்தவனுக்கு அவளின் வார்த்தைகள் எல்லாம் அப்படியே அவளை மீண்டும் அணைத்து முத்தத்தில் தினறடித்தான்.
உனக்கு என் மேல் இவ்வளவு காதல் இருக்கும் என்று நினைக்கவில்லை மது என்றவனிடம்…
உங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும் நீங்கள் பார்க்கும் பார்வையில் ஒழிந்து இருக்கும் செய்தி அறிந்தப் போதும் ரேணு விடம் பழகத் தொடங்கியதும் அவளுடைய முறை மாமன் என்பதும் அவளுக்குக் கதிர் மேல் காதல் என்பதும் தான் என்னைக் குழப்பி விட்டது.. இரண்டு பேரில் யாரிடமாவது கேட்டு இருக்க வேண்டும் தான் ஆனால் ஆம் என்ற பதில் எனக்குக் கேட்கப் பிடிக்காமல் இருக்கலாம்.. ஆனால் எனக்கு உங்கள் மேல் கோபம் வந்ததேயன்றி உண்மையைக் கேட்டுத் தெரிந்து கொள்ளத் தோன்றவே இல்லை" என்றாள் அவன் முகம் பார்த்து.
"ம்ம் புரியுது டி… நான் பல தடவை யோசித்து இருக்கிறேன்... நீ என்னிடம் பேசிய விதம் காதலி என்பதைத் தாண்டி என்று நிறுத்தியவன்…
மெல்ல அவள் காதருகே பொண்டாட்டி மாதிரிப் பிகேவ் பண்ணின அன்றைக்கு நடந்த எல்லாத்தையும் தான் சொல்லறேன் என்ற அவன் பேச்சில் கணவன் கூற வந்தது புரிந்தது மதுவிற்கு.
சத்தியமா உங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்றவள் ஐ லவ் யூ என்று அவன் இதழில் தன் காதலைப் பதித்தாள் வேந்தனின் மதி…
தொடரும்…