உமா கார்த்திக்
Moderator






திடீரென பவித்ரா அழுது கொண்டே கீழே சரிந்ததும் விடவிடத்து போனாள் வர்ஷா. ஆங்காரமாய் தன் தலையில் ஓங்கி ஓங்கி அடித்துக் கொள்பவளை,
நெருங்க கூட ஒருவித பயம் உந்தியது வர்ஷாவின் இதயத்தில். "பவித்ரா.." என்று கூச்சலிட்டவள். அருகில் சென்று அவள் கைகளை பற்றி தடுக்க முயன்றாள். அவளை உதறிவிட்டு விலக்கியவளோ
விம்மி சீரற்ற மூச்சோடு.. வார்தைகள் தடை பட்டு போக, நா குளரியது, தேம்பலோடு "ஸ்..ஸா..ஸாரி டா ப்ரீத். எனக்கு தெரியாதுடா?" என்று கதறினாள்.
'அப்படி என்ன எழுதி இருக்கிறான்.' என்று புரியாமல் மனதில் பொருமினாள் வர்ஷா.. " மெல்ல பவித்ராவை தன் மேல் சாய்த்து தேற்ற முயன்றாள்.
மெளனமாய் விழியின் வெதுநீர் சுனை போல் வடிய வார்த்தைகள் வராமல், வெட்டி வெட்டி இழுத்தவாறு உடல் நடுங்கி அழுதவளை, மென்மையாக தன் தோள் மீது சாய்த்து அவள் உச்சியை வருடி விட்டாள் வர்ஷா.
" அழாதே..ஷோனா (தங்கம்) ப்ளீஸ்..குடியா" (பொம்மை)என தேற்ற முயன்றவள் இவளின் ஓயாத கண்ணீரை கண்டு அவழுக்கும் அழுகை பிடிக்க,
பவித்ரா சிறிது நேர அழுகைக்கு பின் தன்னை தானே தேற்றி அழுகையை அடக்கியவள். விசிம்பியவாறு வர்ஷாவை கைகளால் கூப்பி வணங்கினாள். விம்மி கரைந்தாளே ஒழிய வார்த்தைகள் வரவில்லை.
அவளின் கூம்பிய விரல்களை அழுத்தி பற்றி "ம்ஹூம்"என்று தன்னை வணங்கும், அவள் கையை கீழே இறக்கினாள் வர்ஷா." என்ன எழுதி இருக்கு இதுல" என்று கைகளை காகிதத்தின்
புறம் நீளசெய்தாள்.
" சூசைட் லெட்டர் " என்று சொல்லி நா தழு தழுத்து அழுதாள் பவித்ரா. நிற்க முடியாமல் அழுகையோடு சடார்ரென கீழே விழுந்தவள். கேள்விக்குறி போல் தரையில் உடலை குறுக்கி கொண்டு அழுதாள்.
ஆற்றாமை கொண்டு அவள் கதறும் கதறலையும் வடிக்கும் கண்ணீரையும் தடுக்காமல், அவளே மீளட்டும் என பார்வையாளராக வேடிக்கை மட்டும் பார்த்தாள் வர்ஷா.
"இதுல என்ன எழுதி இருக்கு தெரியுமா?அக்கா." விம்மியவாறே படிக்கலானாள் பவித்ரா."
___________________
"தேவதையின் கரம்
என்னை தீண்டாது
என்றால்.?
என் சாபமாக
எண்ணி மண்ணில்
சவமாகிப் போவேன்.
மாண்ட பின்
என் கல்லறையை
கடக்க நேரிட்டால்
உற்று கேளடி..!
உயிரே போனாலும்
காதல் நெஞ்சமோ ?
உன் பெயர்தான்
சொல்லிடும்..!
"காதல் கண்மணி.."
மாமாவ பிடிக்கலையா டி.??
என்று கடிதம் முடிய
ஓடி வந்து வர்ஷாவை கட்டிக் கொண்டு தப்பு பண்ணிட்டேன். அவனோட காதல புரிஞ்சுக்க முடியாத முட்டாள் நான். அம்மாவும் ப்ரீத்தும் இதெல்லாம் என்கிட்ட சொன்னதே இல்லை. அவன் அன்ப அடக்கு முறையா தப்பா புரிஞ்சுகிட்டு நெறைய காயப்படுத்தி இருக்கேன்.
" ஷோனா.. நீ அவன ஏத்துப்பியா? "
"ம்..என் சர்வமும் அவன் தான் அக்கா கூடவே இருக்க உறவு மேல ஒரு அலட்சியம் இருக்கும். அவங்க உணர்வுகளை மதிக்காம தூக்கி போட்டுட்டுவோம். ஏன்னா? எப்படியும் நம்ம கிட்ட தான் வருவாங்கனு தான் தீர்க்கமா தெரியுமே.அவன் இடத்தில் இருந்து நான் யோசிக்கவே இல்ல அக்கா.
என்னோட நிராகரிப்பு இந்த அளவு அவன போக வைக்கும் னு நினைச்சு கூட பார்க்கலை தெரியுமா?"
'வார்த்தையால வதைச்சேனே உன்ன..என் மேல வெறுப்பே வராதா டா உனக்கு!' மனதிலே மருகினாள்."
வர்ஷா -" என் தம்பிய கல்யாணம் பண்ணிகிட்டு சந்தோஷமா வாழு பவி போதும். வெளிகாட்டாத அன்பும் ஆபத்து தான். "
மூக்கை உறிஞ்சி மெல்ல நிமிர்ந்து பார்த்து"சீக்கிரமா கல்யாண பத்திரிக்கயோட உங்கள பாக்க வர்றேன்."
" நீயும் அவன.." என்று இழுக்க
"ம்..ப்ரீத் அ நானும் லவ் பண்றேன்.கல்யாணமும் பண்ணுவேன். " என்று கூறி நிலம் பார்த்தவள் மதிமுகத்தில் நாண வண்ணம் பூசி கொண்டது."
" அப்பறம் ஏன்? அவன வேணாம் என்று விலகிட சொன்ன?" வர்ஷா தனது அதிமுக்கிய சந்தேகம் ஒன்றை கேட்க.
" தெளிவா பேசி புரிஞ்சுக்க முடியாத நிலை தான் காரணம் வர்ஷா அக்கா. ரொம்ப பொஷஸிவ் டைய்ப் அவன், யாரும் என்ன பார்த்தா கூட கோவம் வரும்.. சண்டை போடுவான். அதை சந்தேகம் னு தப்பா நினைச்சுட்டேன் அதான். அவன ரொம்ப பிடிச்சாலும், காலம் முழுக்க சண்டை வருமோ? அதனால எங்க அன்பு பாசம் இல்லாம போய் வெறுமையாக மாறிடுமோ என்ற பயம்,
பிடிச்சவங்களோட வெறுப்பு வலிகள் அதிகம் தரும், அவன வெறுத்துடுவேன் னு ஒரு பயம்.! "
" நான் படிக்கல ஆனா அனுபவத்துல ஒரு அட்வைஸ் மட்டும் சொல்ல விரும்புகிறேன். சண்டையிடா உறவுகள் எங்க இருக்கு ஷோனா.!
ஆண்களோட தவிப்பு அடைஞ்ச உடனே அடங்கிடும்.
இதெல்லாம் அவன் பண்ண காரணம் உன்ன பாதுகாக்கணும் என்ற உணர்வும் இழந்து விடுவோம் என்ற பயமிகுதி மட்டும் தான்.. கல்யாணம் ஆயிடுச்சு எல்லாமே சரியாயிடும். அப்புறம் உன்னை கண்டுக்க கூட மாட்டான் இது நடக்கும் பாரு.!
ஆண்களுக்கு குரங்கு புத்தி.
பெண்ணோட காதல் மட்டும் தான் ஒரு நிலையான வடிவத்தோட இருக்கும். தன்னிலை மாறாம கடைசி வர நிலைப்பு தன்மையோடு இருக்கும்.இரும்பு மாதிரி.! ஆண்களோட காதல் மாறிக்கொண்டே இருக்கும். பெண்களோட காதலும் ஆசையும் கட்டுக்கடங்காதது.!"
அவள் தலையை மென்மையாக வருடி விட்டாள்.
"உரிமையா ஒரு உறவு நிலைத்த பிறகு தான் பெண் அந்த உறவை பாதுகாப்பா.. உரிமை வராத உறவுகளை மட்டும் தான் ஆண் பாதுகாப்பான்.!
பசங்க கிடைக்கிற வரைக்கும் தான். காதலியை கிரீடம் னு தாங்குவாங்க, அப்பறம் நேரம் தரலன்னு ஒரே புலம்பல்ஸ் தான் நம்ம விதி. காதலும், உணர்வும், குடும்பமும் சார்ந்த சிந்தனை வந்து மனைவி உடையது. அதே போல சமூகம் பொருளாதாரம் பணம் பற்றிய சிந்தனை வந்து கணவனுடையது.
வெறும் காதலா இருக்கும் போது மட்டும் தான் பொறுப்பு கடமைகள் பத்தி எந்த சிந்தனையும் இல்லாமல்,எல்லாமுமே அழகா தெரியும். நேரம் கொடுக்கிறது, அன்ப காட்டுறது, கிஃப்ட்ஸ் தருவது எக்ஸட்ரா.."
புரியாத பார்வை பார்த்தால் பவித்ரா."என்ன தான் அக்கா சொல்ல வரீங்க..?"
"கல்யாணம் பண்ணிக்கோ. உனக்காக யார்கிட்டயும் போய் சண்டை போட மாட்டான் . உன் கூட சண்டை போடவே நேரம் சரியா இருக்கும்னு சொல்றேன்." என்று தாம்பத்திய வாழ்க்கையின்
தத்துவத்தைக் கூறி அழகாக சிரித்தாள் வர்ஷா .
"நெஜமாவா அப்ப நம்பி கல்யாணம் பண்ணிக்கலாமா? அவன "
"நிறை குறை இல்லாத வாழ்க்கை இல்ல ஷோனா. உண்மையான காதல் எல்லாத்தையும் மாத்தும். தன்னைத்தானே செதுக்க வைக்கும். இந்த உலகம் ரொம்ப ஆபத்தான மனிதர்களால் நிறைந்தது
பாதுகாக்க ஒரு ஆண் வேண்டும்."என்று கூறும் போது தான் கண்ட பயங்கரமான பாதுகாப்பில்லாத உலகம் கண் முன் வந்து போனது.
தலையைக் குலுக்கி அந்த நினைவில் இருந்து மீண்டவள்.
" காதல சிறை போல நெனச்சா முரண் தான். ஒரு வேலியா பாவிச்சா அரண் தான்.
நம்ம பாக்குற கண்ணோட்டத்தில் இருக்கு.கேக்க பார்க்க யாருமே இல்லாத பெண்கள் கிட்ட இந்த உலகம் அத்தனை வீரத்தையும், வக்கிரத்தையும் காட்டும்,பெண்கள் எல்லாருமே பொக்கிஷம் தான்.! அதை காதலோடு பாதுகாக்க ஒரு காவலன் என்னைக்கும் வேணும். ப்ரீத் நல்ல புருஷனா, அன்பான அப்பாவா.. உன் பிள்ளைகளுக்கு இருப்பான். நான் கேரண்டி." என்று பதிலுக்காக அவள் முகம் பார்க்க.
" இந்த வளையல் அழகா இருக்கு. இதுபோல வாங்கணும்னா எங்க போய் வாங்கணும் அக்கா."
கைகளில் இருந்து வளையல்கள் எல்லாம் கழட்டி பவித்ரா கைகளில் அணிவித்தவள். "பேச்சை மாத்தாத ஷோனா.. ப்ரீத்திடம் போய் காதலை சொல்லு "
" இந்த புடவையும் நல்லா இருக்கு வர்ஷாக்கா."
"ம்.. " என தயங்கியவள் பின் " வேற புடவை இதே மாதிரி வாங்கி தர்றேன். இது வேண்டாமே ஷோனா.!" என்றால் சங்கடமாக,
" ஏன் உங்க ஷோனாவுக்கு தர மாட்டிங்களா.?வர்ஷா அக்கா " பொய்யாய் கோபிக்க ,
"பிடிச்சவங்க பரிசா கொடுத்தது ப்ளிஸ்.. வேற எது வேணா தரேன். "
" பிடிச்சவங்கனா யாரு .? "
"சந்தீப் வாங்கி தந்தது. " கண்களை மட்டும் வேறுபுறம் திரும்பி அவள் கூறிட,
" முதல்ல என் அண்ணன் காதலை ஏத்துகிட்டு, அப்றம் உங்க தம்பி காதலுக்கு கொடி பிடிக்கலாம். " என்றாள் மறாத மென்நகையோடு
"ஏன் நான் வேண்டாம் சொல்றேன் னு, ஒரு பெண்ணா உனக்கு புரியலையா பவித்ரா.? "
"நிறைகுறை இல்லாத வாழ்க்கை எங்க இருக்கு.? "என்று அவள் சொன்னதை அவளுக்கே திரும்பி போட,
"ஆசைப்பட்டு நீங்க இப்படி ஆகலையே. ? எனக்கு தெரிஞ்சு கூட படிக்கிற பெண்களில் சிலர் பணத்துக்காக, பாடி நீட்ஸ்காக நிறைய பேர் கூட தப்பு பண்ணிட்டு ஒழுக்கமா ஒரு கல்யாணம் பண்ணிட்டு வாழ்றது நானே பார்த்திருக்கேன். மாட்டிக்காத வரை எல்லாருமே நல்லவங்க தான். வாழ கடவுள் ஒரு வாய்ப்பு கொடுக்கும் போது தயவு செஞ்சு பயன்படுத்திகோங்க " என்று தங்கையாக ஆதங்கப்பட
"நான் வாழும் வாழ்க்கை ஒரு வழி பாதை மாதிரி. நானே நினைத்தாலும் திரும்ப முடியாது. கொன்னுறுவாங்க,
ஆரம்பம் அழகா தெரியும். புதுமை புரட்சிகர சிந்தணை என்று நிதர்சனம் சம்பட்டியால் அடிக்கும் போது வலிக்கும்."கலங்கும் விழிகளை கண்களை மூடி கண்ணீர் வடியாமல் அடைக்க போராடினாள் வர்ஷா .
"சந்தீப் வாழ்க்கையை என்னால் கெட்டுப் போக கூடாது நீயும் நானும் ஒன்னு கிடையாது. உன் பெயர் மாதிரி மிகவும் பவித்ரமானவ நீ.. ஆனா நான்? செருப்பு மாதிரி வெளியே ஒதுங்க வேண்டியவ,குற்ற உணர்வோட என்னால வாழ முடியாது ஷோனா."
" வர்ஷானா மழை தான.! அதுவும் பவித்ரம் தான் கற்பு
என்ன பொறுத்தவரை மனம் சார்ந்த விஷயம், உடல் சார்ந்தது இல்லை. உங்க அளவு அழகான அண்ணி எனக்கு கிடைக்க மாட்டாங்க."கன்னம் கிள்ளி முத்தமிட,
"இந்த அழகால தான் இவ்ளோ கஷ்டமே.. பாதுகாப்பு இல்லாத அழகு ரொம்ப ஆபத்தானது பவி." என ஆழமான அர்த்தத்தோடு சொன்னால் வர்ஷா .
"காதல் கல்லையும் கரைச்சுருமாம்.. நீங்க வெல்லம் ஆச்சே.! என் அண்ணன் கரைச்சிடுவாரு " என்றால் அண்ணனுக்கு வக்காலத்து வாங்கும் தங்கையாக வருங்கால அண்ணியிடம்.
"எதார்த்தம் என்னவோ அதை புரிஞ்சுக்காம கற்பனைல பேசுற, உங்களை நான் என்ன பண்றது. என்ன கல்யாணம் பண்ணி உன் அண்ணன் ரோட்ல அழைச்சிட்டு போக முடியுமா? உன் அண்ணன் கிட்டே வந்து ரேட் பேசுவாங்க." அழுகையால் உடைந்தது அபலையின் குரல்.
"இங்கிருந்து தூரமா போயிடலாம். வெளியூர் வெளிநாடு எங்கயாவது போய் நிம்மதியாக வாழலாம்.
உங்களுக்காக மட்டும் தான் என் அண்ணன் டெல்லியில இருக்கான். இல்லாட்டி எப்பயோ சென்னை வந்திருக்கும். வாழ நினைச்சா தான் வாழ முடியும்." என்று சொல்லி
ரூம் கதவை திறந்து வெளியே சென்ற பவித்ரா.. மாமனை அவன் அறையில் தேட.. கிட்சனில் அவன் அரவம் தென்பட ஒடி சென்று அவனை பின்னூடே அணைத்து கொண்டாள்.!
" என்னடி "என்றான் வாஞ்சையாக
" பேசனும் மாமா."
" என்ன பேசனும்?" என்று
கேட்டு தண்ணீர் பருக .
"தற்கொலைனா என்ன ப்ரீத்."என்ற அவளின் ஒற்றை கேள்வியில் புரையேறிட, சுதாரித்தவன்.
"வாழ விருப்பம் இல்லாமல் தன்னைத்தானே கொன்னுகிறதுக்கு பேர் தான் தற்கொலை."என்றான் எந்திரம் மனிதன் போல,
" என்னையும் சேர்த்துக் கொல்வதற்கு பேர் தான் தற்கொலை." சடுதியில் அவனை விட்டு விலகி அவள் சென்றுவிட,
மிரட்டி விட்டு
செல்கிறாள் என்பது தெளிவாக புரிந்தது .. நம் நாயகனுக்கு.
கிச்சனிலிருந்து வேகமாக வந்தவள் சோபாவில் சாய்ந்து அமர்ந்தாள். மனம் கனத்தது போன்ற உணர்வு எங்கேயாவது வெளியே சென்றால் தேவலாம் என்று நினைத்தவள்
'' ஏதாவது மூவி போவோமா.. சந்தீப் அண்ணா?"
"ம்..போலாமே.. டிக்கெட் புக் பண்ணவா.?"
" ஹான்..எங்க ரெண்டு பேருக்கும் கார்னர் சீட்டா புக் பண்ணிடு" என்று இவள் அடம் பண்ண.
"நமக்கு தான் காது தப்பா கேக்குதோ.?" சந்தேகமாய் தங்கையை பார்த்து சீ அப்படி இருக்காது. "என்னமா கேட்ட.?
-காது கேட்காதா..? கார்னர் சீட் புக் பண்ண சொல்லி கேட்டேன். அவைலபில் இருந்தா வந்து மூவி போலாம் இல்லாட்டி வேணாம் அண்ணா."
"ஏன் அம்மு கார்னர் சீட்டு தான் வேணும் னு கேக்குற? "
"அந்த இடம் தான் எங்களுக்கு ரொம்ப ராசியான இடம் சொன்னது செய் " அதிகாரமாக கட்டளையிட
சந்தீப் -"கார்னர் ஓ.. " முகமோ அஷ்ட கோணலாக போனது அவனுக்கு 'ஏதோ அந்த தியேட்டர்ல குடும்பம் நடத்துற மாதிரி சொல்றா.. ராசியான இடம் னு சரி இல்லையே.! சுமதி அம்மா பொண்ணா இப்படி ஆதங்கப்பட்டு கொண்டே, கண்ட கசமுசாக்களை நினைத்து பெருமூச்சு விட்டான். ஆனால் அதற்கான காரணம் தான் வேறு.!
பவித்ராவோ.. ப்ரீத்தின் சர்வ லட்சணங்களையும் அறிந்தவள் அல்லவா.! கார்னர் சீட் என்றால் ரெண்டு பக்கம் சுவரு பக்கத்துல இவரு. இருப்பதிலேயே கடைசி இருக்கை
மற்ற காதலர்களுக்கு எல்லாம் காதல் காமம் சில்மிஷங்களும் ,
கல்மிஷங்களும் கரை புரண்டு
ஓடும் இடம் அது..! (கார்னர் சீட்)
நம் நாயகனுக்கோ..!
பின்னாடி இருந்து எவனும் கால் நீட்ட முடியாது. சீட்டு இடையில கைவிட முடியாது. கேட் தான் போ.. எப்படி என் சாமர்த்தியம்.!காலரை தூக்கி விடுவான். ஒரு பய உள்ள வர முடியாது என அவன் ஒத்த அத்தை மகளை பாதுகாக்க இவன் படும் பாடு
அ.ய்.ய்.யோ.."நானே சொல்றேன். பயங்கரமான பாதுகாவலன் பா உன் மாமன். "
பவித்ராவாக இன்று
முன்னேற்பாடு நடவடிக்கை
எடுத்த காரணம்.
நிகழ்ந்த
ஒரு சம்பவம் அதன் அனுபவம்.
பிரீத் பவியும் கல்லூரி காலங்களில் காலேஜ் கட்டடித்து விட்டு, சினிமா செல்வது வழக்கம்.அதேபோல் ஒருநாள் பால்கனி சீட்டில் அமர்ந்து இருவரும் சினிமாவை பார்க்க..பின்னால் இருப்பவன் பவித்ராவை பார்க்க.! அவனது கால்கள் நமைச்சல் எடுத்து பவித்ராவின் காலை சொரிய,
ஹீல்ஸ் செருப்பாலே எல்லை தாண்டிய கால் விரல்களை மிதித்து பவித்ரா நசுக்க.!
'மாமாவுக்கு தெரிஞ்சா பெரிய சண்டை வரும். ஊர் வம்ப ஒண்ணா வாங்குவான்.' என்று அமைதியாக இருந்தாள்.
நமைச்சல் நாய். கஜினியின் சித்தப்பா மகன் போல, மீண்டும் பவித்ரா மீது படை எடுக்க துவங்க. 'காட்டேரிக்கு பொறந்தவனே' என்று மனதிலே கடுப்பானவள். சம்மணம் இட்டு சீட்டில் அமர்ந்து கொண்டாள்.
பாவம் பின்னால் இருந்த தம்பி, எக்கி.. எக்கி. பார்த்துவிட்டு சீட்டில் படுத்தவாரு கால்களை நீட்டி துலாவிட ,
நேராக கால்கள் ப்ரீத்தின் காலில் முட்டி நின்றதும்.!! இவனோ விரல்களால் அவன் (ப்ரீத்) கணுக்கால் இடுக்கில் கோலமிட,அக்னி ஜுவலயாக சீட்டில் சம்மணம் போட்டு அமர்ந்துள்ள பவித்ராவை பார்வையில் எரித்தான் ப்ரீத்.
ஆக்ரோஷமாக
எழுந்து ஒரு காலை சீட்டிலும். மற்றொரு காலை பின்னாலிருந்து நீட்டி முழக்கியவன் நெஞ்சில் வைத்து இறங்கி கதம்.. கதம்..என அவனை அதம் செய்து விட்டான் மாமன். தன் செருப்பு வலிக்காது என்று அவள் ஷீல்ஸ் செருப்பை வாங்கி அடி விலாசி
எடுத்து விட்டான்.
கோபத்தை கண்கள் மூடி அடக்க முயல, அவன் கால்களால் உரசிய இடம் கம்பளி பூச்சியின் ஊறல் தர,
" என்னையே ஈவ்டீசிங் பண்ணிட்டானே.. **** " மீண்டும் அவன் மேல் பாய்ந்திட, மார்ஷல் ஆர்ட்ஸில் கிங் இவன்.
அந்த கயவனின் காலை பிடித்து முருங்கைகாய் போல முறித்து விட, அவன் அலறிய சத்தத்தில் தியேட்டரில் கூட்டம் கூடி ..போலீஸ் வந்து அரஸ்ட் ஆகி, சிறை சென்று ஜெயில் பெயில் என ஒரு மாதம் ரோந்து பணி செய்தான் கோபக்காரன்.
இங்கே..பவித்ராவின் வீட்டில் சுமதி சாமியாட ஆரம்பித்து விட்டார். "பொம்பள பிள்ளைக்கு எதுக்குடி சினிமா என்று தாயின் விளக்கமாத்தின் விலாசல்.. கோர்ட் கேஸ் என அலைச்சல் மேலும் மன உளைச்சல் அதன் பிறகு மூலை (கார்னர்) சீட்டை மட்டும் முன்பதிவு செய்வார்கள் இருவரும் ரிஸ்க் வேண்டாம் என.
ப்ரீத்தும் சந்தீப்பும் கிளம்பி காத்திருக்க, சினிமா போக கிளம்ப போன இரு பெண்களும் வராததால்.. கடுப்புடன் ஆண்கள் மகளிர் வரவை நோக்கி நின்றனர்.
வர்ஷா முழு கையுடைய வெள்ளை குர்த்தி அணிந்து வந்து நிற்கவும்." என்ன அக்கா..அவுட் ஆஃப் பேஷனா டிரஸ் போட்டு இருக்கீங்க." முகம் சளித்தாள் பவி.
" இது மாதிரி உடுத்த தான் எனக்கு பிடிக்கும். " என்று மாஸ்க் எடுத்து முகத்தில் அணிந்தாள் வர்ஷா.
" ம்.. காத்து போக கூட வழி இல்லாம சாக்கு மாதிரி.. சுத்திக்குறதா ? இதுல மாஸ்க் வேற, ஆப்ரேஷன் பண்ற டாக்டர் மாதிரி இருக்கீங்க. " என்று சிரிக்க ஆரம்பிக்க " சும்மா இரு ஷோனா." என்று அதட்டினாள். வர்ஷா
இரு தேவதைகள் வெளியே வந்து நிற்கவும்.! காதலர்களின் வாய் தானாய் பிளந்து கொண்டது. பாலில் தோய்த்து எடுத்த உயிர் சிற்பங்களாய் இருவரும் நடந்து அருகில் வர.!
பவித்ரா " மாமா.." என்று அழைத்தாலே பார்க்கலாம்.! அச்சோ..அச்சோ.. காதுகளில் அவள் குரல் சர்க்கரை கரைசலை வீசிட, ஸ்தம்பித்து நின்றவனை கரம் கோர்த்து வெளியே அழைத்து வந்தாள் பவித்ரா.
கிளம்புங்க என்று வர்ஷாவிடம் பவி கண் காட்டிட , " நாம பைக்ல போகலாம்.. சந்தீப். பவி நீயும் ப்ரீத்ம் சேர்ந்து வாங்க தியேட்டர் கிட்ட தான். " என்று நடந்து போக சொல்லி ஒதுங்கி நின்றாள் வர்ஷா.
"என்ன வர்சு இப்படி சொல்ற.? தப்பா நினைச்சுபாங்க, ஊர்ல இருந்து வந்தவர்களை விட்டு போலாமா?"
"ம்..போக சொன்னது உன் தங்கச்சி தான். வாய மூடிட்டு கிளம்பு.."இருவரும் அவர்களுக்கு தனிமை தந்து பார்க்கிங் நோக்கி நகர்ந்தனர்.
மெல்ல இருவர்
கைகோர்த்துக்கொண்டு டெல்லியின் நெரிசலான வீதியில் ஒட்டி நடக்கும் போது.. மிரர் ஷாப் முன் நின்ற பவித்ரா. காட்சிக்காக வைக்கப்பட்ட, கண்ணாடிகளை ஆசையாக பார்த்தாள்.!
விதவிதமான வடிவத்தில் பூ வேலைப்பாடுகள் செய்யப்பட்ட கண்ணாடிகள் அவை.!
அவன் கையை விட்டுவிட்டு கண்ணாடியின் அருகே சென்று பார்த்தவளை , தூரத்தில் இருந்து பார்த்தவனுக்கு,
நூறு கண்ணாடிகளில் நிரம்பி வழியும் தேவதை இவளின் எழில் பிம்பம்..!காண கிடைக்காத ஓவிய காட்சி.! மெய்சிலித்தான் காதலன்.!
அப்படியே அவளை நிற்கச் செய்து அவளோடு சேர்த்து அவளின் பிரதிபிம்பங்களையும் காற்றோடு கைகளால் அள்ளி முத்தமிட்டான்.!
அதை கண்ட சிறு பாவைக்கோ.! வெட்கமும் பக்கம் வந்து ஒட்டிக்கொள்ள.! அவள் வெட்கச் சிதறலில் நிரம்பிய பிம்பங்களையும் சேர்த்தே..!
தன் அலைபேசியில் புகைப்படங்களாக பதிவு செய்தான் ஆசை மாமன்.
வேகமாக அவள் அருகில் வந்து
லேசாய் அவள் நெற்றியில் இவன் நெற்றி முட்டி நிற்க.!
அப்பப்..பா காதல் தீயாய் மூண்டது கன்னியின் நெஞ்சில்.!
பார்வைகளோடு ஆணின் வெட்கமும் பெண்ணின் நாணமும் மோதிக்கொள்ள.!!
"வெட்கத்தில் விதைத்த இரு ஜோடி காதல் கவிதைகள், புகைப்படம் ஆயின.! "
" பொல்லா கண்களில் படாமல் இருக்க வேண்டும் இந்த காதல் கிளிகள் "



