எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

13 வான்மழை அமிழ்தம் நீ!

priya pandees

Moderator


அத்தியாயம் 13

மூன்று மாணவர்களும், யாஷின் பார்வையை தயக்கமாக தான் எதிர் கொண்டனர். அவன் பொறுப்பில் தான் அவர்கள் வந்ததாக இப்போது வரை நினைத்திருக்க, அதில் அவன் அவ்வளவு உண்மையாக இருக்கவே இதோ அவர்கள் தொலைந்ததால் தேடிக்கொண்டு காடு என்றும் பார்க்காமல் அவனை பற்றியும் யோசிக்காமல் வந்து நிற்கிறான். ஆனால் உண்மையில் அவர்களை தேடிக்கொண்டு வரவேண்டியவர்கள் இப்போது வரை வந்திருக்கவில்லை. அவன் முன் நிச்சயமாக தலை குனியக் கூட முடியாமல் நின்றனர்.

"டேய் என்னன்னு தெளிவா சொல்லுடா?" என வருணி எட்வர்ட்டிடம் அதட்டலிட,

"சாரி வருணி. நா, வில்லியம், ஜோஷ் மூணு பேரும் பேசிக் ரிசர்ச் டாக்டர்ஸ். ஆனா கோர்ஸ் கம்ப்ளீட் பண்ண ட்ரைனிங்காக தானே, அங்க நம்ம ஹாஸ்பிடல் வந்தோம். எங்கள மாதிரி எங்க டீம்ல இருந்து அறுபது பேர் கிட்ட இப்படி காடுகளுக்கு சர்வீஸ் பண்ற ஹாஸ்பிடலுக்கு ட்ரைனிங்னு வந்து சேர்ந்துருக்கோம்" என்றான் எட்வர்ட்.

"சேர்ந்துருக்கோம்னா? கோர்ஸ் முடிக்கத்தான?" என்றாள் சுருங்கிய புருவத்துடன். யாஷ் அவர்களே பேசட்டும் என வேடிக்கை பார்த்து நின்றுவிட்டான். அவனுக்கு இப்போது எல்லாம் விளங்குவது போலிருந்தது.

"நாங்க ட்ரைனின்னு அந்த நேம்ம யூஸ் பண்ணிகிட்டோம். ஆக்சுவலி நாங்க அல்ரெடி டாக்டர்ஸ் தான்" என்றான் ஜோஷ்.

வருணி இந்தியாவில் மருத்துவ படிப்பை முடித்திருந்தாலும், அமெரிக்காவில் வேலை செய்ய அங்குள்ள மருத்துவமனையில் ஆறு மாதங்கள் பயிற்சி படிப்பை பெற்று பரீட்சை எழுதி அதில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என முன்பே சொன்னது போலவே வந்து சேர்ந்தவர்கள் தான் அவளுடன் இருந்த மாணவர்கள் அனைவரும். ஆனால் எட்வர்ட், வில்லியம், ஜோஷ் மூவரும் அந்த பெயரை பயன்படுத்தி அந்த மருத்துவமனையில் சேர்ந்திருந்தனர்.

அவர்கள் மூவரும் முழுமையாக டாக்டர் பட்டம் பெற்று அமெரிக்காவின் தனியார் ஆராய்ச்சி நிறுவனத்தில் மருத்துவ ஆராய்ச்சியாளர்களாக வேலையில் இருப்பவர்கள். அவர்கள் ஆராய்ச்சி மையத்திலிருந்து இந்த மூவரை போல இன்னும் பலரும் யாஷ் வேலையில் இருக்கும் மருத்துவமனை போன்ற பல மருத்துவமனைகளுக்குள் நுழைந்திருந்தனர். அதாவது அவர்கள் அரசாங்க பதிவேட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டு காட்டிற்குள் மருத்துவ சேவை செய்து இதுவரை முதலிடங்களிலிருக்கும் மருத்துவமனைகளை தேர்ந்தெடுத்து அவர்களின் தனியார் ஆராய்ச்சி நிறுவனம் அனைவரையும் வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பியிருந்தது.

அவ்வாறு வந்தவர்களின் குறிக்கோள் இந்த குரங்கு மனிதர்களும் அமேசான் காடும் தான். எந்த மருத்துவமனை அமேசான் காட்டிற்கான சேவை அழைப்பை ஏற்றுக் கொள்கிறதோ அவர்களுக்கு தான் முக்கியபங்கு. அங்கு செல்பவர்கள் குரங்கு மனிதர்களின் வாழ்விடத்தை அறியபடுத்த வேண்டும் என்பதே ஆணை.

அதற்கான முன்னேற்பாடுகளாக, 'சென்சார்ட் மைக்ரோ சிப்' அதை ஒருமுறை மட்டுமே ஆன் செய்ய முடியும், பத்து நிமிடங்களில் அது செயலிழந்துவிடும் எந்த வசதியும் இல்லாத காட்டிற்குள்ளிருந்து நாட்டிற்குள் செல்ல வேண்டிய கமென்ட் அது. அதிக தொலை தொடர்பை அது சென்றடைய வேண்டி இருப்பதால் அதன் செயல்திறன் பத்து நிமிடங்கள் மட்டுமே. அது இவர்கள் மூவரும் குரங்கு மனிதர்களை சந்தித்த நொடியில் ஒருவர், அடுத்த பத்து நிமிடங்களில் மற்றவர் அடுத்த பத்து நிமிடங்களில் மற்றவர் என மூவரின் 'சிப்' அடுத்தடுத்து ஆன் ஆகிய இடங்களை கணக்கிட்டு குரங்கு மனிதர்களின் வாழ்விடத்தை கண்டுகொள்வதாக தான் ஏற்பாடுகள் செய்து வந்திருந்தனர்.

இப்படி தான் யாஷ் வேலை செய்யும் மருத்துவமனைக்கு எட்வெர்ட், ஜோஷ், வில்லியம் மூவரும் வந்ததும். இங்கு வருவதற்கு அவர்களாக தான் முயன்று மருத்துவர்கள் உடன் வந்திருக்க வேண்டும், ஆனால் அதை யாஷ் வெகு சுலபமாக்கி அழைத்து வந்திருந்தான்.

முதலில் அங்கு அவர்கள் பழக்கப்படுத்திக் கொண்டு தான் காட்டினுள் நுழைய வேண்டும் என்பதாலேயே வந்த ஒரு மாதமும் அமைதியாக இருந்துவிட்டு இதோ இப்போது அவர்களாகவே காட்டிற்குள் வந்து மாய மனிதர்களிடமும் மாட்டிக் கொண்டனர். அவர்களிடம் மாட்டிய அடுத்த நொடி சொன்னது போல அவர்களின் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு செய்தியையும் அனுப்பிவிட்டிருந்தனர்.

கூடினாலும் இருபத்தி நான்கு மணிநேரத்தில் அவர்கள் ஆராய்ச்சி குழு அங்கு வந்திக்க வேண்டும். ஆனால் பதினைந்து நாட்கள் கடந்தும் இன்னும் எதுவுமே நடக்கவில்லை என்றதில் தான் இம்மூவருக்கும் இப்போது கொஞ்சம் பயமும் வந்திருந்தது. அவர்கள் உயிருடன் இப்போது வரை இருப்பதற்கும் யாஷ் மட்டுமே காரணம் என்பதில் அவனிடமும் மறைக்க முடியவில்லை.

யாஷை அவர்கள் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை, தங்களை காணவில்லை என்றதும் முயன்றளவிற்கு அரசாங்கத்தின் உதவியை நாடுவான் என்றே நினைத்திருக்க, இப்படி நேரில் வந்து நின்றதும் அவர்களை ஒருவித குற்ற உணர்ச்சியில் ஆழ்த்தியிருக்க வாய்ப்புண் சரியானதும் மொத்தத்தையும் கூறிவிட்டிருந்தனர்.

"சோ?" என்றான் யாஷ் இன்னும் அமர்தலாக.

"இவனுங்க என்ன பேசுறானுங்கன்னு புரியுதா மாமா உனக்கு? இப்படிலாம் கூட ஏமாத்த முடியும்னா என்னைய மட்டும் ஏன் படி படின்னு உசுர வாங்குன?" என்றாள் வருணி.

"மென்ட்டல். அதான் தெளிவா சொல்றாங்களேடி. நம்ம ஹாஸ்பிடல்ல ட்ராப் பண்ணி உள்ள வந்துருக்காங்க. நா உன்னால அவனுங்கள ஈசியா இங்க கூட்டிட்டு வந்துருக்கேன். அடுத்து இப்ப நடக்குறதெல்லாம் அவங்க லிஸ்ட்டுலயும் இல்ல நம்ம லிஸ்டுலயும் இல்லன்னு நம்மள மாதிரியே முழிச்சுட்ருக்காங்க"

"என்ன சொல்றாங்க டாக்டர் இவங்க? அப்ப மறுபடியும் எங்கள அட்டாக் பண்ண ஆளுங்க வரப்போறாங்களா?" என்றனர் க்ளாடியனும் ஜனோமியும்.

"ஏதோ காரணத்துக்காக தான் எங்களோட வந்து இங்க வர வந்துருக்காங்களாம். அது என்னன்னும் இனி அவங்க தான் சொல்லணும்" என்றான் யாஷ் சுருக்கமாக.

"என்ன? என்ன காரணம்?" என்றான் க்ளாடியன் எரிச்சலாக.

"சொல்லுங்க டாக்டர்ஸ்?" என்றான் யாஷ் திரும்பி அவர்களிடம்.

"அதோ அவங்க தான்" என்றனர் அந்த மூவரும் அங்கிருந்த குரங்கு மனிதர்களை காண்பித்து.

"அவங்கள மட்டும் தேடித்தான் இந்த பயணமா? எந்த ரிசர்ச் சென்ட்ர்டா நீங்க?" என வருணி கண்ணை விரிக்க,

"ப்ரைவேட் அனாடமி ரிசர்ச் சென்டர் ஆஃப் சுக்வாடோ" என்றனர். அது ஒரு தனியார் நிறுவனம். மருத்துவக்கல்லூரியுடன் கூடிய பெரிய நிறுவனம்.

"அப்ப இவங்களபத்தி முன்னமே தெரியுமா?" என்றான் ஜனோமி அதிர்ந்து. அவர்களே இதுவரை நேரில் இவ்வளவு அருகில் கண்டதில்லை, எல்லாம் கதைகளாக கேட்டவைகள். ஆனால் நாட்டிற்குள் இருப்பவர்கள் இவர்களைத் தேடித்தான் வந்தோம் என்பதில் அதிர்ச்சி தான் அவர்கள் இருவருக்கும்.

"தெரியும். சில வருடங்களுக்கு முன்ன நடந்த தங்க சுரங்கம் சண்டை பிரச்சினை சமயத்தில ஒருசிலர் கண்ணுல இந்த குரங்கு மனுஷங்க பட்ருக்காங்க. அதிர்ச்சி தான் இப்படியும் மக்கள் இனமான்னு? இல்ல மிருக வகைல வருவாங்களான்னு ஒரு க்யூரியஸ்ல மறுபடியும் அவங்கள பாக்க நாங்க ட்ரை பண்ணோம். எங்கள மாதிரி பல நிறுவனங்கள் இங்க காடு, மலை, மிருகங்கள், தங்க சுரங்கம், அகழ்வாராய்ச்சின்னு ஒவ்வொரு டிப்பார்ட்மெண்ட் எடுத்துட்டு இறங்குனாங்க. ஆனா இங்க இருக்க காட்டுவாசி மக்களுக்கு எந்த தொந்தரவும் இல்லாத எல்லைய எங்க ஆராய்ச்சிக்குன்னு பிரிச்சு தான் அனுப்பினாங்க. சோ அதவச்சு அல்ரெடி இந்த காட்ட பத்தின ஆராய்ச்சிக்கான ஆர்டர் கவர்ன்மென்ட்ட இருந்து எங்களுக்கு வந்துருச்சு. ஆனா இந்த குரங்கு மனிதர்கள் பற்றின ஆராய்ச்சி எங்க ஆராய்ச்சி மையத்தோட ரகசிய முயற்சி மட்டுந்தான். இவங்களோட ரோமங்கள மட்டுந்தான் அந்த சண்டை சமயத்துல எங்களால் எடுத்துட்டு போக முடிஞ்சது. அதவச்சு டி.என்.ஏ டெஸ்ட் பண்ணதுல இவங்கட்ட எக்ஸ்ட்ராடினரி இம்முயினிட்டி பவர் இருக்குன்னு தெரியவந்துச்சு" என எட்வர்ட் நிறுத்த,

"முழுசா தெரிஞ்சுக்க இவங்களே தேவைப்பட்டாங்க, எங்க சைட் இருந்து மிருகங்கள மாதிரி அட்டாக் பண்ணி அவங்கள கடத்திட்டு போக ட்ரை பண்ணோம், ஆனா மறையும் சக்தி உண்டு இவங்களுக்கு கண்ணால கூட பாக்க முடியாதுன்னு அப்றம் தான் தெரிஞ்சது. கவர்ன்மென்ட்ட பெர்மிஷன் வாங்க வேண்டிய கட்டாயம் வந்துச்சு, ஆனா கடுமையா மறுத்து எங்க கான்ட்ரக்ட எடுத்துடுவேன்னு சொன்னதால நாங்க கொஞ்ச நாள் அப்படியே அமைதியானோம். அப்றம் அனாடமி ரிசர்ச்சுக்காகன்னு சொல்லியே இவங்க இடத்தை கண்டுபிடிக்க சேட்டிலைட் மூலமா ட்ரை பண்ணி குண்டு வெடிப்புலாம் நடத்தி இங்க இருந்து ரெண்டு பேர எப்படியோ கொண்டு போக முடிஞ்சது. ஆனா அப்பவும் எக்ஸ்ப்ரிமென்ட் பண்ண அவங்க ரெண்டு பேர் மட்டும் பத்தல" என்றான் வில்லியம்.

"இவங்க ஒரு குழுவா வாழ்ந்து வர்றாங்கன்னு தெரிஞ்சது, மொழி பேச கூடியவங்கன்னு தெரிஞ்சது. அப்ப தலைவர்னு ஒருத்தர் இருப்பார்ன்னு தெரிஞ்சு அவர பிடிக்க ட்ரை பண்ணோம். அவர் இருப்பிடத்தையும் கண்டு பிடிக்க முடியல, அவரையும் நெருங்க முடியல, தொடர்ந்து குண்டு வெடிப்பு நடத்தி பயமுறுத்தினதால மட்டுமே தானா வெளியே வந்தார் அவர். ஆனா அப்பவும் தூரத்தில கண் மறைவுல தான் அவர பாக்க முடிஞ்சது. அட்லாஸ்ட் அவர மீறி அவர் ஆளுங்கள கண்டிப்பா இங்க இருந்து கூட்டிட்டு போக முடியாதுன்னு அவர்ட்டயே டீல் பேசுனாங்க எங்க டீம்" என்றான் ஜோஷ்.

"ஃபைனலா அவரே அவர் ஆளுங்கள கொண்டு ஒப்படைக்க ஒத்துக்குட்டாரு. எங்களுக்கு அவங்க ஆர்கன்ஸ பிரிச்சு எடுத்து ஆராய்ச்சி பண்ண பண்ண அவ்வளவு அதிர்ச்சி காத்திருந்தது. அவ்வளவு தூய்மையான வலிமையான உடல் உறுப்புகள் அவங்கட்ட இருந்தது. அத எல்லாம் தனி தனியா பிரிச்சு எடுத்து ஆராய்ச்சி பண்றோம் பண்றோம் பண்ணிட்டே இருக்கோம். அவங்க டி.என்.எ ஆல்மோஸ்ட் மனுஷங்களோடதோட அக்யூரேட்டா மேட்ச் ஆகுது. சோ ப்ளட் க்ரூப் சேம்மா இருக்குறவங்க அப்றம் வேற வேற க்ராஸஸ்ல மேட்ச்சஸ்னு ட்ரை பண்ணி பார்த்தோம்னா இன்னும் என்னன்ன இருக்குன்னும் தெரிஞ்சுக்கலாம். பெர்ஃபெக்டா எல்லாம் மேட்சாகி வந்து அத நம்ம மனுஷங்க உடம்புல கரெக்டான அளவுல தேவையான இடத்துல செலுதிட்டா, ஈவன் ஆர்கன் ட்ரான்ஸ்ப்ளான்ட் கூட பண்ணலாம் அப்றம் நாமளும் த்ரி ஹண்ட்ரட் டூ ஃபைவ் ஹண்ட்ரட் இயர்ஸ், ஏன் அதுக்கும் கூடவே வாழலாம். ஆர்கன் ட்ரான்ஸ்ப்ளான்ட் கூட நார்மல் மேன் டூ மேன் ப்ரொசீஜர். இட்ஸ் ஈசி. இவங்கள அதிக இனப்பெருக்கம் பண்ண வச்சா நாமளும் வாழலாம், அதுக்கு இவங்க மொத்தமா நம்ம கட்டுபாட்டுக்குள்ள வரணும்னு தான் அவங்க தலைவர மீறி இந்த இடத்தை கண்டுபிடிக்க இப்படியொரு ஐடியா பண்ணோம்" என முடித்தான் வில்லியம்.

"இதுவரை கொன்னு குவிச்சது பத்தாதுன்னு மொத்தமா அழிக்க கிளம்பி வந்துருக்கீங்களாடா?" என ஜனோமியும், க்ளாடியனும் பாய்ந்து அந்த மூவரையும் அடிக்க, அந்த மூவருமே இதை எதிர்பார்க்காமல் அதிர்ந்து விட்டனர். மக்களின் நன்மைக்காக தானே பேசினோம் என புரியாமல் விழித்தனர்.

"நோ நோ நோ. டாக்டர் யாஷ் ஸ்டாப் தெம்!" என கத்தியும் விடவில்லை,

"அடப்பாவிங்களா?" என மற்ற இரு பெண்களும் விஷயம் பாதி புரிந்ததிலேயே வாயை பிளந்து நின்று விட,

யாஷ் அவர்களை புரியாமல் ஆங்காங்கே நின்று வேடிக்கை பார்த்திருந்த குரங்கு மனிதர்களை சுற்றி பார்த்தவாறு தள்ளி வந்து நின்று கொண்டான்.

"லூசு மாமா அவனுங்க சொல்ற கதையெல்லாம் கேட்டா வேணும்னு வந்து மாட்டிருக்காங்க நாம தேவையே இல்லாம எக்குத்தப்பா வந்து மாட்டிருக்கோம்" என்றாள் வருணியும் அவன் பின்னரே வந்து நின்று.

"இது வேற மாதிரி பிரச்சினையா தெரியுதுடி. இது அவங்க நாடு அங்க உள்ள இன மக்களுக்குள்ள உள்ள பிரச்சினை, ஆனா அவங்க பேசுற மொழி நம்மளிது. அந்த கிடத்தினான் சொல்ற மாதிரி நாம ஹெல்ப் பண்ணணும்னே இப்ப இங்க வந்து நிக்றோமான்னு தெரியல எனக்கு. ரொம்ப குழப்பமா இருக்கு"

"நீ எப்பவும் சொல்றது தான் இது அவங்க பிரச்சினை அவங்களவிட நம்ம புதுசா எதுவும் பண்ணிட முடியாது. அவங்கள அவங்களே பாத்துப்பாங்க"

"இனி இங்க என்ன நடக்க போகுதுன்னு கூட ஐடியா இல்ல. அமெரிக்க கவர்ன்மென்ட்ட மீறி தான் இவனுங்க உள்ள வந்துருகாங்க. சோ சிக்குனானுங்கன்னா அவங்களே முடிச்சு விட்ருவாங்க. ஆனா இங்க எந்த சேட்டிலைட்டும்‌ வேலை செய்யாது. நம்மலாம் இந்த காலத்துல படிச்சு கண்டுபிடிக்குற விஷயத்த இந்த குரங்கு மனுஷங்க சாதாரணமா செஞ்சுட்ருக்காங்க. இந்த மொத்த இடமும் மாய வலைக்குள்ள இருக்கு. யாரலயும் அவங்களா இவங்க கண்ண மறைச்சு உள்ள வர முடியாது. இவங்களா தூக்கிட்டு வந்தா தான் உண்டு. அதே மாதிரி இவங்களே நம்மள இங்க இருந்து அனுப்பினா தான் நாம வெளியவும் போக முடியும்"

"நாசமா போச்சு! அங்கேயே உக்காந்து நாலு பேருக்கு மாவு கட்ட போட்டுட்டு ஊரபாத்து போயிருக்கலாம். பெரிய மன்னர் பரம்பரை! இவன நம்பி வந்தவங்கள இவனே வந்து தான் காப்பாத்துவானாம். உன்னால நா கெட்டேம்னு கூட வந்து உக்காந்துட்ருக்கேன்டா நானும்" என வருணி புலம்ப,

"உனக்கு என்னைய எதாவது சொல்லணும். உன்ன யாருடி வர சொன்னது? அவ்வளவு தெளிவா உள்ளவ அங்கேயே இருந்துருக்க வேண்டியது தான?" என்றான் இவனும் சுல்லென்று.

"திரும்ப திரும்ப சொல்லணுமா உனக்கு? கேட்டுட்டே இருக்க குளுகுளுன்னு இருக்கோ? அதான் என்னைய பாவமே பார்க்காம சொல்ல விடுறல்ல நீ? உன்ன பிரிஞ்சு இருக்க முடியாம உன்ன விட்டுட்டு இருக்க முடியாம தான் வால் புடிச்சுட்டு வந்தேன் போதுமா? நா உனக்கு முன்ன சாகலாம் ஆனா எனக்கு முன்ன நீ போயிட கூடாதுன்னு வந்தேன் போதுமாடா? திருப்தியா இருக்கா? மனசு நிறைஞ்சு போச்சா? இல்ல இன்னும் காதல் வசனம் எதுவும் பேசனுமா நானு?" என சட்டை கையை மடக்கி விட்டுக்கொண்டு அவனிடம் சண்டைக்கு செல்ல,

"மாச கணக்குல சாக போறேன்னு சலிக்காம சொல்ல தெரிஞ்சதுல? நா அத கேட்டுட்டு அமைதியா இருக்கல? அதேமாதிரி இப்ப இதையும் சலிக்காம சொல்லுடி" என்றான் அவனும் அதட்டலாக.

இருவரும் தமிழில் சண்டையிட்டுக் கொண்டிருக்க, அவர்களை சார்ந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை, ஆனால் குரங்கு மனிதர்களுக்கு நன்கு புரிய, சுவாரசியமாக வேடிக்கை பார்த்து நின்றனர். அங்கு ஆண்கள் போட்ட சண்டையும் இவர்கள் போடுவது போன்ற சண்டையோ என்றே பார்த்தனர். அவர்கள் அறிந்ததெல்லாம் ஆண் பெண் சேர்க்கை மட்டுமே, கணவன் மனைவி உறவை இவர்கள் இருவரை வைத்து தான் வித்தியாசமாகவும் நுட்பமாகவும் அறிந்து கொண்டிருந்தனர்.

கிடத்தினான், "உங்கள் சண்டை போல் இல்லாமல் அவர்கள் சண்டை தீவிரமாக இருக்கிறதே ஏன்?" என ஆண்கள் பக்கம் கை காண்பித்து கேட்க,

"அவங்க மூணு பேரும் உங்கள அழிக்க தான் எங்க கூடவே வந்துருக்காங்களாம். எங்களுக்கே இப்பதான் தெரியுது. அதான் அவங்க ரெண்டு பேரும் போட்டு அடிக்குறாங்க" என வருணி சொன்ன அடுத்த நொடி, வில்லியம், ஜோஷ் எட்வர்ட், மூவரின் மேலும் மர ஈட்டி பாய்ந்திருந்தது‌.

"ஜீஸஸ்!" என யாஷ் நெஞ்சில் புதைந்து மயங்கி சரிந்திருந்தாள் வருணி.

"இவர்களை உங்களுக்காக மட்டுமே இதுவரை விட்டு வைத்திருந்தோம்" என்ற கிடத்தினான், "இன்றைய விருந்து" என மற்றவர்களுக்கு கை காண்பிக்க, அம்மூவரையும் அந்த குரங்கு மனிதர்கள் தூக்கிச்‌ சென்றுவிட்டனர்.


 

Mathykarthy

Well-known member
ஆராய்ச்சின்னு எத்தனை பேரை கொன்னுருக்கானுங்களோ 😳😳😳 எல்லாம் பேராசை தான் காரணம்.... 😞😞😞

வரு குட் ஜாப் 🤣🤣🤣🤣🤣 பட்டுனு மூணு பேரும் காலி 🤣🤣🤣🤣🤣
 

priya pandees

Moderator
ஆராய்ச்சின்னு எத்தனை பேரை கொன்னுருக்கானுங்களோ 😳😳😳 எல்லாம் பேராசை தான் காரணம்.... 😞😞😞

வரு குட் ஜாப் 🤣🤣🤣🤣🤣 பட்டுனு மூணு பேரும் காலி 🤣🤣🤣🤣🤣
Ama sis
 
Top