எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

லீலா - 06

Shambhavi

Moderator
ஓய்ந்து போய் அமர்ந்திருந்தனர் அனைவரும் அந்த மருத்துவமனையில். சரியாக கோபியின் தாய் தந்தை வந்துவிட நிலைமை கவலைக்கிடமானது.

"உன் வாய்னால என் பேத்தி இப்போ எப்படி இருக்கா பாரு?
பொம்பிளைங்களுக்கு அப்படி என்னடி ஊர் வம்பு? வாய அடக்கிட்டு இருக்க முடியாதோ?" என்று கோபிநாதனின் தாய் சகுந்தலா பேசிக்கொண்டே போக, நிரஞ்சன் அவரை தடுத்திருந்தான்

"பாட்டி.. இப்போ எதுக்கு இங்க வந்து தேவைமில்லாதத பேசிட்டு" - நிரஞ்சன்

"என்னடா தேவையில்லாதது? இவங்க பண்ணத விடவா நா இப்போ பேசிட்டேன். இவங்க ரெண்டு பேரும் பேசிப் பேசியே இப்போ எங்க வந்து நீக்குது பாரு! என்னடா பொழப்பு இது எல்லாம். வாயக் கட்டி இருக்க முடியாதோ? அப்படி என்ன ராங்கித் தனம்." - சகுந்தலா

"அது முடிஞ்சு எத்தன வருசம் ஆச்சு. இப்போ வந்து திரும்ப அதையே பேசிட்டு இருக்கீங்க" - கோபி

"எத்தன வருசம் ஆனாலும் பண்ண பாவத்துக்கான தண்டன உண்டு தான? நேத்து நடந்ததும் அப்படி தான். இவங்க ரெண்டு பேர் பண்ணி வெச்ச பாவத்துக்கு நீயும் என் பேரப்புள்ளைங்களும் ஏன்டா பலிகிடக்கனும்" - சகுந்தலா

"அய்யோ அத்த" என்ற சகுந்தலாவின் கடைசி வார்த்தையில் கத்தி விட்டார் ராதிகா.

"உனக்குனு வரும் போது சுடுது.. ஆனா மத்தவங்களுக்குனா மட்டும் குளுகுளுனா இருக்கும்." - சகுந்தலா

"அம்மா போதும் ம்மா.." - கோபி

"என்னடா உன் பொண்டாட்டிய சொன்னதும் கோபம் வந்திடுச்சோ" - சகுந்தலா

அப்போதே மணி எட்டிற்கு மேல் ஆகி இருந்தது. இப்படியே போனால் அவ்வளவு தான் என்று நினைத்துக்கொண்டு தன் தாத்தாவை அழைத்து கேண்டீன் நோக்கி சென்றுவிட்டான் முரளி.

பக்கத்து அறையில் தான் பூஜா செவிலியர்கள் இருவரின் துணையுடன் இருக்க, அவளை தொந்தரவு செய்யமால் இவர்கள் பேசியது அனைத்தும் பேச்சி இருந்த அறையில்.

"காலேல என்னடா ஆச்சு?" - மாணிக்கம், கோபியின் தந்தை.

"அட நீங்க வேற ஏன் தாத்தா.. பூஜா ஏதோ மெண்டலி டிஸ்டர்ப் ஆகியிருக்கா. அதுனால கொஞ்சம் ஓவர் ரியாக்ட் ஆகிருச்சு.. இவங்க ஏதோ பேய் புகுந்த மாதிரி பேசிட்டு இருக்காங்க.. ரெண்டு நாளா அவ தூங்கல அதோட வெளிப்பாடு தான் இதெல்லாம்.." - முரளி

"அப்படி எல்லாத்தையும் லேசுல விட முடியாது முரளி கண்ணா.. இப்போ உன் பாட்டி இப்படி படுத்திருக்காங்க, பூஜா வேற ஏதோ பிணாத்துனானு சகு சொல்லுறா.. படாத பாடு பட்டுத் தான் இவங்கள இங்க வந்து சேர்த்ததா வேற சொன்னா" என்றவர் சொல்லிக் கொண்டே போக,

"உங்களுக்கு யார் தாத்தா இது எல்லாத்தையும் சொன்னா?" என்றான் அவன் மனதில் உறுத்தியதை தெளிவு செய்ய.

"அதான்.. அந்த பக்கத்து வீட்டு பாப்பா இருக்கே.. பேரு கூட.."

"ஸ்பூர்த்தியா?"

"ஆமா.. ஆமா.. அந்த பாப்பாவோட பாட்டினு சொன்னாங்க.. பூஜாக்கு ஏதோ பேய் புடுச்சிட்டு அந்த அம்மாவ நேத்து ஏதோ ஆவினு.. என்னன்னமோ சகு கிட்ட சொல்ல, அவ என்னைய இழுத்துட்டு இங்க வந்துட்டா"
என்றவர் அவன் முகம் பார்க்க,
அவனோ தீவிர சிந்தனையில் இருந்தான்.

இந்த ஆவி, பேய் இந்த விஷயத்தில் எல்லாம் அவனுக்கு சுத்தமாக நம்பிக்கையே இல்லை. இருந்தாலும் காலனி ஆட்கள் அடிக்கடி அவனை எச்சரித்தே இருந்தனர்.

அவர்களின் பக்கத்து வீட்டில் நடந்த அந்த துர் சம்பத்தினால் அவர்களுக்கும் இரண்டாம் எண் வீட்டினருக்கும் தான் ஏதோ பிரச்சினை வரும் என்ற ரீதியில் அவர்கள் சொல்ல, அவன் அதற்கெல்லாம் செவி சாய்ப்பதில்லை.

ஏன் நிரஞ்சன், கோபி உட்பட. ஆனால் என்ன இருந்தாலும் பூஜாவை மட்டும் தனித்து எங்கும் அவர்கள் வீட்டில் நடமாட விட்டதில்லை. 'சொந்த வீட்டிலேயே இப்படியா' என்று பலமுறை அவள் கேட்டிருந்தாலும் அவளை தனித்து விடுவதே இல்லை ராதிகாவும் பேச்சியும்.



"நா வேணும்டே பண்ணல ஐயா.. அவங்க வந்து எழுதி கொடுக்க சொன்னாங்க.. அதான் நா எழுதுனே வேற ஒன்னும் இல்லைங்க ஐயா.. நா எதுவும் பண்ணலங்க ஐயா" சக்தியின் கைகளைப் பிடித்தவாறு ரம்யா அழுகையில் கதறிக் கொண்டிருந்தாள்.

"சரி.. என்ன எழுதிக் கொடுத்த நீ?" மிகுந்த கண்டிப்புடனே அவரின் குரல் வெளி வந்தது.

"நா அவங்க சொல்லச் சொல்ல அவங்க கேட்டத தான் சக்தி எழுதிக் கொடுத்தேன்." என்றால் சக்தியிடம் ஒட்டிக்கொண்டு.

ஒரு கையால் ரம்யாவை தாங்கிக் கொண்டவனுக்கோ மனது வலித்து அவளின் அழுகையினால். ஆனால் நாராயணன், ஜானகியின் பிடிவாதமும் ஏதோ ஒரு செய்தியை உணர்த்த அமைதியாக அவளைத் தாங்கிக்கொண்டான் சக்தி.

"அது அவங்க ஏதோ ஒரு நம்பூதிரி கிட்ட இங்க நடந்தத சொல்லனும். அதுக்கு அவர் உங்க பிரச்சனைய கைபட எழுதிட்டு வாங்கனு பேச்சி அம்மா.. " என்றவளின் பேச்சு தடைப்பட்டது ஸ்பூர்த்தியுடன் வெளியே சென்றிருந்த சந்ருவின் வருகையால்.

முகம் வெளிறிப் போய், "ஐயா" என்று வந்து நின்றவனின் முகமே இருண்டிருந்தது.

கண்டிப்பு பார்வையுடனே அவனை திரும்பி பார்த்தவர் 'என்ன' என்று வாய் திறந்து கேட்கவில்லை என்றாளும் சந்ருவே செய்தியை சொல்லியிருந்தான்.

"பேச்சியம்மா தவறிட்டாங்களாம்" என்றான் அதிர்ச்சியுடன்.

ரம்யாவும் சக்தியும் அதிர்ந்த முகத்துடன் நின்றிருக்க, ஜானகியின் முகமோ சாந்தத்தைத் தத்தெடுத்திருந்தது.

நாராயணனின் முகத்திலிருந்து எதையும் பிரித்தறிய முடியவில்லை. ஒரு மைய்ய பாவம், அவ்வளவே.

ஆனால் அவர் எப்படி இறந்தார் என்று தெரிந்து அதனை பார்த்திருந்த கோபியின் குடும்பத்தாருக்குத் தான் அங்கு நின்ற, நிற்கின்ற ஒவ்வொரு விநாடியுமே இதயம் நின்று நின்று துடித்தது.



கேண்டீன் சென்று விட்டு, சகுந்தலா, கோபி, ராதிகாவிற்கான உணவுடன் முரளியும் மாணிக்கமும் மேலே வர மணி ஒன்பதிற்கு மேலே ஆனாது.

முரளியின் முகத்தில் இருந்த தெளிவில்லாத தன்மை மாணிக்கத்தை யோசனையில் ஆழ்த்தியிருந்தது.

முதலில் பூஜாவின் அறைக்கு சென்றனர். மதியம் அவளுக்கு கொடுக்கப்பட்டிருந்த மயக்க ஊசியின் விளைவாக நன்கு உறக்கத்தில் இருந்தாள் அவள். அவளின் அருகிலேயே சகுந்தலாவும் ஒரு நர்சும்.

உணவை சகுந்தலாவிடம் கொடுத்துவிட்டு பேச்சியின் அறைக்கு சென்றனர்.

கோபி காலை அமர்ந்திருந்த இடத்திலேயே அயர்வாய் அமர்ந்திருக்க, ராதிகா பேச்சியின் அருகே.

நிரஞ்சன் முன்மாலை நேரத்திலேயே வீட்டிற்கு சென்றிருந்தான் அழுத்ததமும் அலைச்சலும் மிகுந்திருந்த காரணத்தால்.

சரியாக மணி ஒன்பது இருபத்தி இரண்டு, பேச்சியின் அறை இரண்டாவது மாடியில் இருந்த காரணத்தினால் சன்னல்கள் எல்லாம் சற்று மூடியே இருந்தது காற்று அதிகமாக வீசும் காரணத்தினால்.

அனைத்து விளக்குகளையும் அனைக்காமல் ஒன்று‌ இரண்டு விளக்குகள் மட்டும் அனைத்திருந்தனர். அரை இருளில் அறையிருக்க திடீர்‌ என்று ஒரு பூனையின் கத்தல் குரல்.

ஒரு மாதிரியான ஓலம் என்று கூட சொல்லும் படியாக இருந்தது அந்த சப்தம். அப்போது தான் கைகளை கழுவியபடி வந்தமர்ந்த கோபிக்கும் ராதிகாவிற்கும் துணுக்குற்றது.

முரளி, "இங்க என்ன பூனை சப்தம் எல்லாம் கேட்குது" என்றவனாக அங்கிருந்த ஒரு சன்னலைத் திறந்து பார்க்க, நன்கு 'மை' கருப்பில் பச்சை நிற கண்களைக் கொண்டு பூனை ஒன்று மிகுந்த ஆக்ரோசத்துடனை அவனையேப் பார்த்திருந்தது.

பயந்து முகத்தைப் பின்னால் அவன் திருப்புவதற்குள் அவன் மீதே பாய்ந்திருந்தது அந்த பூனை.

நல்ல கணம். அதைவிட முரளியின் முகத்தில் பிராண்டி வைக்க, அவன் அருகே வந்து நின்ற ராதிகாவின் மேலே இப்போது பாய்ந்து.

அனிச்சையாகக் கைகளைக் கொண்டு அதை விளக்கப் பார்க்க, எங்கே அதற்குள்ளாக அவரின் முகம், கழுத்து, கைகள் எல்லாம் அதன் நகம் பதம் பார்த்திருந்தது.

கோபி அருகே சென்று ராதிகாவை இழுக்க முற்பட, ஒரு உறுமலுடன் அவரை பார்த்திருந்தது.

அதற்குள் சப்தம் கேட்டு சகுந்தலாவும் மாணிக்கமும் வந்துவிட, அந்த பூனையின் ஆக்ரோஷம் அவர்கள் மிரட்டியது.

சரியாக அந்த நேரத்திற்கு ஒரு புறா ஒன்று அந்த சன்னலில் வந்து மாட்டிக் கொண்டு, றெக்கைகளை படபடவென்று அடித்துக்கொள்ள, அந்த பூனை அந்த புறாவிடம் பாய்ந்து அதை கொன்றே விட்டிருந்தது.

சகுந்தலாவின் கத்தலின் பயனாக அந்த தளத்தின் 'வாட் பாய்' இருவர் வந்து போராடி அந்த பூனையை விரட்டனர். பேச்சியைத் திரும்பிப் பார்த்த சகுந்தலா வீரிட்டிருந்தார்.

அங்கு முகம் முழுவதும் அந்த புறாவின் ரத்தம் சிந்தியிருக்க, மேலே நிலைக்குத்திய பார்வையுடன் பிரிந்திருந்தது பேச்சியம்மாவின் உயிர்!

_வருவாள் 👣
 
Top