Privi
Moderator
அந்த இரவுக்கு பிறகு அருண் உமையாளுக்கு இடையே உறவு நல்ல விதமாக சென்றது. நீலனும் நன்றாக படித்தான். அருணின் தங்கையோ அருணுடன் சண்டையிட்டுக்கொண்டு வேறு இடத்திற்கு சென்று விட்டாள்.
அருண் அதை கண்டு கொள்ளவே இல்லை. உமையாளுக்குத்தான் தன்னால் தான் அவள் வேறு இடத்திற்கு சென்று விட்டாள் என நினைத்து வருத்தப்பட்டாள். ஆனால் அருணோ
"அவளை விடு உமையா. அவள் எப்போதுமே அப்படிதான்" என்று கூறி விட்டான்.
நடுவிலே ஒரு நாள் இவர்களின் கல்யாண விஷயம் கேள்வி பட்டு தர்மன் அவர்களை தேடி வந்திருந்தான். வந்தவன் உமையாளையும் நீலனையும் திட்டி தீர்த்தான்.
நீலனை அடிக்க கை ஓங்கி வந்தான். அந்த கையை பிடித்து தடுத்திருந்தான் அருண்.
"உங்களுக்கு எவ்ளோ தைரியம் இருந்த என் வீட்டுக்கு வந்து என் மச்சானை அடிக்க பார்ப்பீங்க. இவ இப்போ உங்க பொண்ணு இல்ல, என் மனைவி அதே போல் இவனும் உங்க மகன் இல்ல என் மச்சான். இவுங்க மேல கை வைக்கணும்னா என்னை தாண்டித்தான் வைக்கணும்.
முடிந்தால் கை வைத்து பாருங்க" என கர்ஜனையாக கூறியிருந்தான். அன்று பயந்து போனவர்தான் இன்று வரை இந்த பக்கமே வரவில்லை.
நீலனுக்கு அருணின் இச்ச்செயல் அவன் பால் ஒரு வித பிடித்தமும் மரியாதையும் ஏற்படுத்தியது.
இப்போதெல்லாம் நீலனும் ஓர் அளவிற்கு அருணுடன் பேசுவான். காலங்கள் இப்படியே செல்ல அன்று வேலைக்கு சென்று விட்டு வந்த உமையாளுக்கு மிகுந்த சோர்வாக இருந்தது. தலை வேறு பாரமாக இருந்தது.
அப்போதுதான் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்திருந்தான் நீலன்.
"நீலா எனக்கு சோர்வாகவும், தலை பாரமாகவும் உள்ளது. பால் கலந்து எடுத்து வரியா குடிப்பதற்கு” என்று கேட்டாள். அவனும் சம்மதித்து பால் கலந்து எடுத்து வந்து குடுத்தான்.
ஒரு மிடறுதான் குடித்திருப்பாள் குமட்டி கொண்டு வந்து விட்டது. வாந்தி எடுத்ததும் இன்னும் சோர்வாக இருந்தது. அப்படியே சென்று கட்டிலில் படுத்து விட்டாள். கொஞ்ச நேரம் கழித்து நீலன் பிடிவாதமாக அவளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றான்.
அவளுக்குள் நடக்கும் உபாதைகளை மருத்துவரிடம் கூறினாள். மருத்துவர் அவளுக்கு மாதவிடாய் கடைசியாக எப்போது வந்தது என்று விசாரித்தாள். அவளும் நாள் தள்ளி போனதாக கூறினாள். உடனே கர்ப்ப பரிசோதனை செய்தார். அதன் முடிவு இரு சிகப்பு கோடுகளாக வந்திருந்தது.
ஆம் கருவுற்றிருந்தாள். உடனே மருத்துவர் குழந்தையின் ஆரோக்கியத்தை ஸ்கேன் மூலம் பரிசோதித்தார். பின்பு அவளிடம் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக கூறி சில சத்து மாத்திரைகளை குடுத்தார்.
உமையாளுக்கு எல்லை இல்லா மகிழ்ச்சி. தனக்குள் ஒரு ஜீவன்! மேனி பூரித்து போனது. நீலனுக்கும் ஒரே கொண்டாட்டம்.
"அக்கா இவளை நான் தான் பார்த்துப்பேன், நான்தான் பெயர் வைப்பேன்" என்றான்.
"அது என்னடா இவளை? அதற்குள் பெண் பிள்ளை என்று முடிவு பண்ணிவிட்டாயா?" என்று கேட்டான். அவன் அதற்கு “ஆம்” என்று தலையாட்டினான். அவளும் சிரித்து விட்டு
"நீலா மாமாவிடம் நானே சொல்றேன், நீ ஏதும் சொல்லாதே" என கூறினாள்.
அதற்கு அவன் ஆமோதிப்பதாக தலை ஆட்டினான். வீட்டிற்கும் வந்தாயிற்று. வீட்டின் வாசலில் ஒருவன் இருந்தான் அவன் யாரென்று உமையாளுக்கு தெரியவில்லை.
" யார் நீங்க? நான் உங்களை பார்த்ததே இல்லையே" என கேட்டாள்.
அதற்கு அவனோ "ஆரோன்(Aaron) எங்க?"
"அப்படி யாரும் இங்க இல்லையே"
"இல்லையே இந்த அட்ரஸ் தான் குடுத்தாங்க, சரி என்னவோ, தோ பாரு அவன் வந்தா தேவா அண்ணா அவன் மேல காண்டுல இருக்காருன்னு சொல்ற. அவகிட்ட இருக்குற பொருளு எவ்ளோ ஒர்த் தெரியுமா?
அந்த பவுடர் கிடைக்க ரொம்ப கஷ்டம். அவனுக்கு கிடைச்சதால அவன் அண்ணனை விட பெருசா ஆகலாம்னு நினைச்சானா? ஒழுங்கா பொருளு எடுத்துட்டு அண்ணனை வந்து பாக்க சொல்லு புரிந்ததா?"
"நீங்க தவறா வந்து பேசுறீங்க, ஆரோன் அப்படினு இங்க யாருமே இல்ல"
“ஹ்ம்ம் சரி ஆரோன் இல்ல ஆனால் அருண், அவன் இருக்கான்ல. எங்க தொழில்ல நாங்க யாரும் உண்மையான பெயர் வச்சுக்க மாட்டோம் அதான் அருண் ஆரோன் ஆகிட்டான். சொன்னது புரிஞ்சிருக்கும்னு நினைக்கிற. வந்தத மறக்காம சொல்லு"
அவளுக்கு தலையில் இடி விழுந்த உணர்வு. வந்த கண்ணீரை கஷ்டப்பட்டு உள்ளிழுத்து
"ஒரு நிமிடம் அது என்ன பவுடர்?" என வினவினாள். போதை பொருள் என்று மட்டும் சொல்ல கூடாது கடவுளே என வேண்டிக்கொண்டாள். ஆனால் கடவுளுக்கு அவள் வேண்டியது போய் சேரவில்லை.
"போதை பொருள் பவுடர்" என கூறி வந்தவன் சென்று விட்டான்.
உமையாளின் மனதில் ஆயிரம் வெடிச்சத்தம் ஒருங்கே கேட்பது போல் இருந்தது. என்ன செய்வது? என்ன பேசுவது என்றே உமையாளுக்கு தெரியவில்லை.
நல்லவன், நேர் வழியில் சம்பாதிக்கும் கணவன் என்ற பிம்பம் இன்று தூள் தூளானது. தன் கணவனால் பலர் போதை பொருளுக்கு அடிமையாகின்றனர், பலர் வாழ்க்கை சீரழிகிறது என்று நினைத்தாலே மனம் ரத்தக்கண்ணீர் வடிகிறது.
இவர்களின் உரையாடலை உமையாளின் பக்கத்தில் நிற்கும் நீலனும் கேட்டுக்கொண்டுதான் இருந்தான். அவனுக்கும் இது பேரதிர்ச்சிதான். அவனும் அவனது முன்னாள் படித்த பள்ளியில் சில மாணவர்கள் போதை பொருள் எடுத்து அவர்களின் வாழ்க்கையை அழித்துக்கொள்வதை பார்த்திருக்கிறான்.
அப்போதெல்லாம் இதனை அவர்களுக்கு விநியோகம் செய்பவர்கள் மீது அளவுக்கு அதிகமான கோபம் வரும் பள்ளி மாணவர்கள் என்று தெரிந்தும் விநியோகம் செய்கிறார்களே என்று ஆனால் இன்று தனது அக்காவின் கணவனும் அதில் ஒருவன் என்று தெரியும் போது அவனுக்கு அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது கொஞ்சம் நேரத்திற்கு முன்பு. இப்போது அந்த மகிழ்ச்சி துணி போட்டு துடைத்ததை போல் ஆகிவிட்டது. வீட்டிற்குள் சென்று அவன் வருகைக்காக காத்திருந்தனர் இருவரும்.
வேலைகளை முடித்து விட்டு வீட்டிற்கு வந்தான் அருண். உமையாள் அவர்களின் படுக்கை அறையில் இருந்தாள். நீலன் முன் அறையில் அமர்ந்திருந்தான்.
வந்தவன் அவன் கைக்கடிகாரம், அவனது பணப்பை எல்லவற்றையும் அவன் வீட்டு வரவேற்பறையில் இருக்கும் சிறு மோடாவின் மீது வைத்தான். திரும்பி தரையில் அமைதியாக அமர்ந்திருக்கும் நீலனை பார்த்தான்.
எப்போதும் அவன் பார்த்தால் அவனை பார்த்து சிரிக்கும் நீலன், இன்று தரையை வெறித்து பார்த்துக்கொண்டு இருந்தான். சரி குளித்து விட்டு வரலாம் என்று அறையை நோக்கி சென்றவன் அங்கு நீலனை போல் தரையை வெறித்து பார்த்துக்கொண்டு இருந்த உமையாளை பார்த்தான்.
அவனுக்கு ஒன்றும் புரியவில்லை சரி குளித்து விட்டு வந்து கேட்போம் என குளிக்க சென்று விட்டான். குளித்து விட்டு வந்தவுடன் உமையாளிடம் சென்று "உமையா சாப்பாடு எடுத்து வை பசிக்கிறது" என்று கூறினான்.
உமையாள் அசைவின்றி அமர்ந்திருந்தாள். "என்னடி உன்கிட்டத்தான் கூறுகிறேன் அப்படியே அமர்த்திருக்கிறாய்" என உமையாளிடம் கேட்டான். அதற்கு உமையாளோ கண்களை அழுத்த மூடி பெருமூச்சு ஒன்றை இழுத்து விட்டு கண்களை திறந்து அருணை நோக்கினாள்.
"சாப்பாடு தானே போடுறேன் அதற்கு முதல் எனக்கு ஒரு சந்தேகம் தீர்த்து வைக்க முடியுமா?" என கேட்டாள்.
அதற்கு அவனோ "என்ன சந்தேகம்?" என கேட்டான்.
"நான் யாருடன் வாழுறேன், அருணுடனா இல்லை ஆரோனுடன் ஆஹ்?" என கேட்டாள்.
ஆரோன் என்ற பெயர் கேட்டவுடன் அவனுக்கு தெரிந்து விட்டது இருவருக்கும் எல்லாம் தெரிந்து விட்டது அதான் இந்த அமைதி என்று. எந்த விஷயம் தெரிய கூடாது என்று நினைத்தானோ அதே விஷயம் இன்று தெரிந்து விட்டது. சிலையாக நின்றான்.
"என்ன ஆனது? ஆரோன் என்ற பெயரை கேட்டதும் ஏன் இந்த அமைதி? அப்போது நான் கேள்வி பட்ட அனைத்தும் உண்மை தானா? உங்களை நம்பினேன். என்னை ஏமாற்ற உங்களுக்கு எப்படி மனசு வந்தது.
உங்களால் எத்தனை பேர் வாழ்க்கை நாசமாகியுள்ளது. கடவுளே!” என கையை முகத்தில் மூடி அழுதாள். அவள் அழுவதை நீலனால் பார்க்க முடியவில்லை. அதே சமயம் கணவன் மனைவிக்கு நடுவே வரவும் இஷ்டமில்லை. அதனால் ஏதும் சொல்லாமல் வெளியே சென்று விட்டான்.
இங்கு அருணுக்குத்தான் உமையாளை எப்படி சமாதானம் சொல்வதென்று தெரியவில்லை. இதுநாள் வரை அவன் வாழ்வில் நடந்ததை கூற முடிவெடுத்து விட்டான்.
"நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு உமையா"
"என்ன கேட்கணும்? இன்னும் என்னென்ன பொய் சொல்ல போறிங்க?" என ஆக்ரோஷமாக கேட்டாள் அருணிடம்.
அருணோ "உமையா எல்லாம் சொல்றேன், சொன்ன பிறகு நீ என்ன முடிவெடுத்தாலும் எனக்கு சம்மதம். எனக்கு பேச ஒரு வாய்ப்பு கொடு” என கெஞ்சினான்.
அவளும் மார்பு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு சொல் என்பதை போல் அவனை பார்த்தாள்.
இது அருணின் கதை இங்கு எல்லோரும் சுய லாபத்திற்கு கெட்டவர்கள் ஆவதில்லை. சந்தர்ப்பமும் சூழ்நிலையும் தான் ஒருவனை கெட்டவனாகவும் முரடனாகவும் மாற்றுகிறது.
ஃப்ளாஷ்பேக்குள் இன்னொரு குட்டி ஃப்ளாஷ்பேக்... வாங்களேன் நாமும் அருண் வாழ்க்கையில் என்ன நடந்தது என தெரிந்து கொள்வோம்.
Last edited: