பகுதி - 28
தருண் மற்றும் மித்ராவின் திருமணம் முடிந்துத் தாமரை இலை நீர் போல அவர்கள் வாழ்க்கைப் போய்க் கொண்டிருந்தது.
ரேணுகாவிற்கும் பிரசவ நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது... தாய் வீட்டில் சீராடிக் கொண்டிருந்தவளுக்கு ராதிகா, பானுமதி மற்றும் மதுமிதா என்று எல்லோருடைய அன்பும் கவனிப்பும் அவளைச் சந்தோஷமாக வைத்திருந்தது.
அனைவரும் ஓய்வாக அமர்ந்திருந்த நேரம் ரேணுகாவிற்குப் பிரசவ வலி வந்தது. உடனே அவளை மருத்துவமனையில் அனுமதித்தனர் அங்கே சில மணி நேரப் போராட்டங்களுக்குப் பிறகு அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள் ரேணுகா.
ரேணுகாவின் குழந்தையைக் கையில் வாங்கிய தருண் வேகமாக அவளிடம் “என்ன என்னுடைய பையனுக்கு... பொண்ணுப் பெற்றுக் கொடுப்பேன் என்று பார்த்தால்… இப்படி அவனுக்கு மச்சானைப் பெத்துக் கொடுத்திருக்க” என்று கேலிச் செய்தான் தன் உடன் பிறந்தவளை…
அங்கே வந்த கதிர்வேந்தனோ “உன் பையனுக்கு நான் பொண்ணு ரெடிப் பண்ணிக் கொடுக்கிறேன் டா… உன் பையன் எனக்குத்தான் மருமகன்” என்று உறுதிச் செய்திருந்தான் கதிர்வேந்தன்..
“அதெப்படி இவ்வளவு உறுதியாகச் சொல்லுற... பெண் குழந்தைத் தான்" என்று கேட்டான் தருண்.
“அதெல்லாம் அப்படித்தான்”… என்று அவன் தன் அருகே இருக்கும் தன் மனைவி பார்த்துச் சிரித்தான் கதிர்வேந்தன்.
அவளின் சிரிப்பில் முகம் செவ்வண்ணமாய் இருந்தது மதுமிதாவிற்கு.
அவர்களின் வாழ்க்கை அழகாக இருந்தது. அவளுக்கு மட்டுமே அறியும் ரகசியம், அவளுக்கு நாட்கள் தள்ளிச் சென்று இருந்தது, தன் கணவனிடம் கூடப் பகிராமல் உறுதி ஆகட்டும் என்று ரகசியமாக வைத்திருந்தாள் மதுமிதா. ஆனால் அவள் கூறாமலே தெரிந்து கொண்டிருந்தான் கதிர்வேந்தன்.
“இன்னும் சில மாதங்களில் நாங்கள் சொல்லுறோம்” என்று தன் மனைவி பார்த்துக் கூறினான் கதிர்வேந்தன்.
அவனின் பேச்சில் தன்னுடைய ரகசியம் வெளிவந்துவிட்டது மதுமிதாவிற்கு என்று புரிந்துவிட்டது.
அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் கண்களாலேயே அவனிடம் பேசிக் கொண்டிருந்தாள் ‘எப்படிக் கண்டுபிடித்தாய்’ என்று…
அதற்குக் கதிர்வேந்தனோ ‘எல்லாம் எனக்குத் தெரியும்’ என்பது போல் இருந்தது அவன் சிரிப்பு
அவர்களின் இந்தக் காதல் பார்ப்பதற்கு கவிதைப் போல இருந்தது. அவர்களின் காதலைக் கண்டு பொறாமை கொண்ட தருண் “போதும்டா டேய்..
கல்யாணமாகி ஒரு வருஷம் ஆகப்போகுது… இன்னும் இப்படியே காதலிச்சிட்டுப் பக்கத்தில் இருக்கிற என்னை கடுப்பு ஏத்தாதீங்க” என்று கதிர்வேந்தனிடம் கடுப்போடு கூறினான்.
தருணின் வார்த்தைகள் அனைத்துமே கேட்ட மித்ராவோ மனதில் அடி வாங்கினாள்.
அவனருகில் செல்ல அவளும் எவ்வளவு முயன்றும், அவளைத் தவிர்த்துக் கொண்டிருந்தான் என்பது தான் அவளுக்கு உண்டான வலியின் காரணம்.
மதுமிதாவின் கர்ப்பமும், ரேணுகாவின் குழந்தைப் பிறந்ததும் இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருந்தது குடும்பத்திற்கு எல்லோருக்கும் . அழகாகச் சென்று கொண்டிருக்கிறது அவர்களின் குடும்பத்தில்... அப்பொழுது மதுமிதாவிற்கு வேலை மாற்றம் வந்திருந்தது. அவர்கள் இருக்கும் பகுதிக்கு அருகில், தினமும் பேருந்தில் சென்று வரவேண்டிய சூழ்நிலை உண்டானது.
தினமும் போய்க்கொண்டும் வந்து கொண்டும் இருப்பது சிரமம் என்பதால் கதிர்வேந்தன் அவளைக் கூட்டி அங்கே வீடு பார்த்துச் செல்வதாகக் கூறினான். கர்ப்பமாக இருக்கும் பெண்ணைத் தனியாக அனுப்பிவைப்பது கஷ்டம் என்பதினால் அவர்களோடு பாலமுருகனும் பானுமதிச் சென்றனர்.
இங்கே வீட்டில் மித்ராவும் தருணும் ராதிகாவும் குழந்தை மட்டுமே இருந்தனர்.
குழந்தைப் பிறந்ததும் ரேணுகாவோ குழந்தையோடு அவள் மாமியார் வீட்டுக்குச் சென்று விட்டாள்.
தருணும் மித்ரா இருவரும் மனம் விட்டுப் பேசிக்கொள்ளவே இல்லை என்பதால் அவர்கள் வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லாமல் போய்க் கொண்டிருந்தது.
வேதாந்தோடு தன்னுடைய நேரம் செலவழிக்கத் தொடங்கியிருந்தான் தருண்.
பகல் முழுவதும் ஆபீசுக்கும் மாலை நேரம் தன் மகனோடும் தன் நேரத்தைக் கழித்தான் தருண்.
கல்லூரியின் இறுதி ஆண்டு எட்டி இருந்தாள் மித்ரா.
தன்னைத் தொந்தரவுச் செய்யாத தருணின் மேல் அவள் பார்வை மையம் கொண்டிருந்தது. அவனுடைய செயல்களும் அவனுடைய பாசமும், காத்திருக்கும் அவனுடைய காதலும் அவளை ஆட்டிப் பிடித்துக் கொண்டு இருந்தது. கணவன் என்ற உரிமை அவனைப் பார்க்கச் செய்தது.
இது தெரியாத தருண் தன்னுடைய வேலையில் பிஸியாக இருந்தான். இப்படியே இருப்பது வாழ்க்கை அல்லவே… மாற்றம் ஒன்றுதானே மாறாதது… இதோ அவர்களின் வாழ்க்கையிலும் மாற்றம் வந்து கொண்டிருந்தது.
மித்ராவின் காதலால் அவன் வாழ்க்கை ஒவ்வொரு தடவையும் திசைத் திரும்பியது.
முதலில் அவன் வாழ்க்கை வேதனையில் திசைத் திரும்பக் காரணம் மித்ராவின் காதல் என்றால்... இப்பொழுது அவன் வாழ்க்கைச் சந்தோஷமாகவும் ஆனந்தமாகவும் மாறுவதற்கும் காரணம் மித்ராவின் காதல் தான். காதல் வந்ததும் அவள் மனதில் கள்ளத்தனம் வந்து அமர்ந்து கொண்டது.
சமையலறையில் ராதிகா, தன்னுடைய வேலைச் செய்து கொண்டிருந்தார் வேதாந்தோடு பேசிக்கொண்டே, மித்ரவோ தன்னறையில் தரையில் அமர்ந்து கொண்டு ஏதோ எழுதிக் கொண்டிருந்தாள். நிறையக் காகிதம் அவளைச் சுற்றிப் பரந்தக் கிடந்தது.
அவள் கைகள் எழுத, அவள் இதழ்கள் பாடல் ஒன்றை முணுமுணுத்துக் கொண்டிருந்தது.
வருவான் காதல் தேவன் என்று
காற்றும் கூற
வரட்டும் வாசல் தேடி இன்று
காவல் மீற
வளையல் ஓசை ராகமாக
இசைத்தேன் வாழ்த்துப் பாடலை…
என்று தன்னை மறந்துப் பாடிக் கொண்டு இருந்தாள் மித்ரா.
அவளின் குரலில் காதல் தழும்ப… முகத்தில் ஆசைத் தாண்டவமாட… அந்த முகத்தில் இருக்கும் அழகு அவள் சமீபமாகக் குத்திய மூக்குத்தியின் ஒளியில் இரட்டிப்பாகக் காட்டியது.
தருண் வந்து அங்கே நின்றுத் தன் பாடலை ரசித்துக் கொண்டு இருப்பது அறியாமல் அவள் தன் ஏகாந்த உலகில் சஞ்சரித்துக் கொண்டு இருந்தாள் மித்ரா.
மெல்லப் பாடலை மாற்றினாள்…
கடவுள் இல்லை என்றேன்…
தாயைக் காணும் வரை…
கனவு இல்லை என்றேன்…
ஆசைத் தோன்றும் வரை…
காதல் பொய் என்று சொன்னேன்…
உன்னைக் காணும் வரை…
என்று மெல்லச் சிரித்தவளின் முன் மண்டியிட்டு அமர்ந்தான் தருண்.
தன் முன்னே அமர்ந்து இருக்கும் கணவனை மெல்ல நிமிர்ந்துப் பார்த்தவளின் முகத்தைக் கைகளில் ஏந்தினான் தருண்.
அவள் கண்களைப் பார்த்தவன்
விடிக் காலை விண்ணழகு…
விடியும் வரை பெண்ணழகு…
ஊருக்கு ஆறழகு…
ஊர்வலத்தில் தேர் அழகு…
தமிழுக்கு 'ழ' அழகு…
தலைவிக்கு நான் அழகு…
என்று மெல்லிய குரலில் காதலோடு பாடியவன் கை விரல்கள் அவள் மூக்குத்தியை மென்மையாகத் தடவியது.
அதில் உடல் சிலிர்த்தது பெண்ணிற்கு…
முகம் நாணத்தால் சூடேற இரு விழகளை மூடினாள் மித்ரா.
அவளின் மோன நிலை அவனைக் கட்டி இழுக்க அவள் இதழ்களை முத்தத்தால் முற்றுகையிட்டான் தருண்.
தன் கைகளில் தோய்ந்தச் சரியும் பெண்ணின் நிலை உணர்ந்து முடிவுக்குக் கொண்டு வந்தான் நீண்ட இதழ் முத்தத்தை…
அவளையே பார்த்தவனின் பார்வையில் நிலம் நோக்கிய அவள் விழிகளில் தன் அச்சாரத்தைப் பதித்தவன்…மென்மையான குரலில் "மீரா" என்று அவளை விழித்தான் கண்களை நேருக்கு நேர்ப் பார்த்தவளின் பார்வையில் அவன் கண்டெடுத்த எல்லாமே அவனுக்கான காதல் மட்டுமே…
இந்த மாற்றம் எப்படி என்பது திருமணத்திற்குப் பின் அவர்களுக்கு இடையே நடந்த பல விஷயங்களின் எதிரொலியாகத் தான் இருந்தது.
அவன் மேல் காதல் வந்துவிடுமோ என்ற பயம் போய் அவனுக்காகக் காதலை அவளுள் வேரூன்றி வளர்த்து மரமாகி அவளையே சுருட்டிக் கொண்டது.
அதில் சுகமாக அமர்ந்து கொண்டு ரசித்தாள் அவள் காதலை. காதல் என்ன என்பதை உணர்ந்துக் காதலித்தாள் மித்ரா.
காதலிக்கக் கற்றுக் கொடுத்தான் தருண் தள்ளி நின்றே காதலித்தான்…
ஆம் கற்றுக் கொடுத்தான்... அவளைத் தள்ளி வைத்து எட்ட நிறுத்திக் கற்றுக் கொடுத்தான்…
அவர்களின் திருமணம் முடிந்தப் பின் அவன் வாழ்க்கையில் வேதாந்தைத் தன்னோடு சேர்த்திய தருண், மித்ராவைத் தள்ளி வைத்திருந்தான்.
அவனின் அவகணிப்பில் மனதளவில் அடி வாங்கினாள் மித்ரா.
ஒரு மனைவியாக அவளிடம் அவன் எதையும் எதிர்பாராமல், எப்பவும் போல இருந்தான். அவள் முகம் பார்த்தப் பேச மறுத்தான்.
அவன் இந்தச் செயலை முதலில் கவனிக்கத் தவறிய மித்ரா.. நாட்கள் செல்லச் செல்ல உணரத் தொடங்கினாள்.
அவர்களின் வாழ்க்கையில் தனக்கு என்ற இடம், இல்லைவே இல்லை என்பதை உணர்ந்துத் துவண்டு விட்டாள்.
ஒரு நாள்… அவன் அலுவலகத்தில் இருந்து திரும்பிய நேரம்.. தன்னுடைய மகனிடம் மித்ராப் பேசுவதைக் கேட்க நேர்ந்தது தருணுக்கு…
சாப்பிடாமல் அடம் பிடிக்கும் மகனைப் பார்த்து…
“ம்ம் வர வர உனக்கு நான் அம்மா என்பதையே மறந்துட்ட டா…உனக்கு அப்பா மட்டும் போதுமா.. அவருக்குத்தான் பொண்டாட்டித் தேவையில்லை… அப்பறம் எதுக்குக் கட்டிக்கிட்டாறாம்… உனக்காகத் தான் நான் அவருக்கு… உனக்கு அப்பாவாகனுமென்றால் அவருக்கு நான் பொண்டாட்டியாகணுமே... அதுதான் கட்டிக்கிட்டாரு போல.. கெட் ஒன் பை ஒன் ஆஃபர் போலத் தான் இந்தக்கல்யாணம்…உனக்கான இலவச இணைப்பே அவருக்கு நான் தான் ”… இந்த வார்த்தைகள் அவள் வாயில் இருந்து வரும் போது அழுது விட்டாள்…
“ம்ம் எல்லாத்துக்கும் யோகம் வேணும்… உனக்கு அவரோட இருக்கும் யோகம் கிடைத்ததே போதும்” என்று திரும்பியவள் அதிர்ச்சியில் நின்று விட்டாள்.
அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான் தருண்.
அவன் பார்வையில் பயந்தவள் “இல்லை…நான்” ..என்று எச்சிலை முழுங்கினாள்…
வேகமாக வந்தவன் மகனை எடுத்துக் கொண்டு கீழே போனான்.. அவன் செயலில் அவன் பின்னே வந்தவளைத் திரும்பிப் பார்த்து முறைத்தான்.. அதில் அவள் கால்கள் நகரவில்லை…
அம்மாவிடம் “இவனைக் கொஞ்சம் தூங்க வைங்கம்மா… அவளுக்குத் தலைவலி போல” என்று ராதிகாவிடம் பிள்ளையைக் கொடுத்து விட்டுத் தன் அறைக்கு வந்தான் தருண்.
அங்கே கைகளைப் பிசைந்து கொண்டே நின்றிருந்தாள் மித்ரா..
‘உனக்கு வேணுமடி…அக்கம் பக்கம் பார்த்துப் பேசமாட்டாயா’ என்று முணுமுணுத்தாள் வாயினுள்ளே…
அவள் அருகில் வந்து அவள் கையைப் பிடித்துத் தன்னருகே இழுத்தவன்.. “நீ என்னடிப் பையனிடம் பேசிட்டு இருக்க அறிவு இருக்கிறதா உனக்கு… அவன் சின்னப் பையன் இப்போது எதுவும் தெரியாது..ஆனால் பெரிசாக இதெல்லாம் புரிந்து கொள்ளும் அறிவு வந்துரும்.. அப்போ வந்து என்னிடம் எதாவது கேட்டால்... உன் உடலில் உயிர் இருக்காதுச் சொல்லிட்டேன்… இப்படியான வார்த்தைகளை உன் வாயில் இருந்து வந்தது என்றால்... என்னோட இன்னொரு முகம் பார்க்க வேண்டியது வரும் .. கல்யாணம் பண்ணச் சம்மதிக்க முன் நமக்கு இடையே நடந்த சண்டையில் என்னிடம் என்ன சொன்னாய் நீ ”… என்று கேட்டான் தருண்.
அவனின் இந்தக் கோப முகம் பயத்தை உண்டாக்க
“நான்” என்று அவனைப் பயம் கலந்தக் குழப்பத்தில் பார்த்தவளிடம்…
“உனக்கு என் மேல் காதல் வந்தால்… நீ எப்படிப் பட்டப் பெண் என்று எண்ணி அவமானப் படுகிறேன் என்று சொன்னதுக்குப் பின்னர் … உன்னிடம் நான் என்ன எதிர்பார்ப்பது” என்று நேரடியாகக் கேட்டான் தருண்.
அவள் பேசிய பேச்சினைச் சொல்லிக் காட்டினான் அவள் கணவன்.
“நீ என்னிடம் எப்போ பேசினாய்… எதாவது கேட்கிறாயா… இல்லை உன் மனதில் என்ன இருக்கிறது என்று உணர்த்தினாயா… அதெப்படி உங்களுக்குக் காதல் வந்தால் நாங்கள் அதை நீங்கள் சொல்லாமல் உணரவேண்டும்…எங்கள் காதல் எல்லாம் ஒன்னுமே இல்லை அப்படிதானே”... என்று கேட்டான்..
அவன் கேள்வியில் அழுகையினூடே கோபமும் வந்தது அவளுக்கு.. “என்னைத் தள்ளி வைத்து இருக்கும் உங்களிடம்… என்ன கேட்பேன் எப்படிக் கேட்பேன்?” என்று அழுதாள் மித்ரா…
“நான் தள்ளி வைத்தேனா… எப்போ” என்றவனிடம்
“நான் என்ன பண்ணறேன் கவனிக்கறீங்களா… என்னை என்னைக்காவது பார்த்து இருக்கீங்களா?” என்றாள்…
“லூசாடி நீ உன்னைப் பார்க்காமலா, பேசிட்டு இருக்கேன்” என்றவனிடம்..
“சுத்தம்…நான் என்ன கேட்கிறேன்… நீங்கள் என்ன சொல்லிட்டு இருக்கீங்க… நான் சொல்லறப் 'பார்க்கிறது' வேற” என்றாள் வேகமாக…
அப்பொழுதுத் தான் அவனுக்குப் புரிந்தது.. மனைவியாக அவளை நான் பார்ப்பதோ பேசுவதோ இல்லை … அவளிடம் அவனுக்காக எதுவும் கேட்பதில்லை… எதிர்பார்க்கவில்லை என்று தன் தவறு புரிந்தது…
இருந்தும் அவள் எண்ணம் புரிந்த உடன், அவளிடம் விளையாட நினைத்தவன், அவள் அருகில் இன்னும் நெருக்கமாக நின்று “உன்னைப் பார்க்க வில்லை என்றால்… எப்படிப் பார்க்கணும் சொல்ல வர... தெளிவாகப் பேசவேமாட்டியாடி… மட்டி” என்று அவளைச் சீண்டினான்..
அவன் மக்கு போல நடந்து கொண்டு, தன்னை மட்டி என்றதும் கோபத்தில் “பொண்டாட்டியை முழுசாகப் பார்க்கத் தெரியாமல்… நீங்கள் என்னதான் பத்து வருடங்கள் காதல் பண்ணுனீங்க… எனக்குப் புரியவில்லை” என்றாள் மித்ரா.
“நீ தான் சொன்ன என்னை நெருங்காதே” என்றான் காட்டமாக…
“ஒஒ நான் சொல்வதெல்லாம் அப்படியே கேட்கிறவர் தான்”.. என்று இனி உன்னிடம் பேச்சில்லை என்பது போல் தன் வேலையைத் தொடர்ந்தாள் மித்ரா…
“நான் பேசிட்டு இருக்கேன்” என்று அவளைத் தடுக்கவும்…
“நீங்க பேசுங்கள் மாமா எனக்கு வேலை இருக்கு” என்று அவனைக் கடந்த போகவும்…
“எனக்கும் தாண்டி வேலை இருக்கு” என்றவன் அவளை அப்படியே இழுத்தவன் தன் இரு கைகளில் ஏந்தினான் .
“பாவம்.. ரொம்பக் குழம்பி இருக்காளே…கொஞ்சம் ஸ்பேஸ் தரலாம் என்று நினைத்தேன் பாரு என்னைச் சொல்லணும்”…என்றவன்
“நான் உன்னைத் தள்ளி வைத்தேனா… இல்லை நீ என்னைத் தவிர்க்கிறாயா… என்று இப்போது தெரிந்து விடும்” என்றவன் அவளிடம் அத்து மீறல்களைத் தொடங்கினான்…
“அப்போது மாமா ப்ளீஸ்.. இப்போ இதுவேண்டாமே என்றாள்.
"நீ தானேடிச் சொன்ன.. உன்னை நான் பார்க்கறதே இல்லை என்று... அதுதான் உன்னை முழுசாகப்பார்க்கப்போறேன்" என்றான் தருண்.
"எதுவாக இருந்தாலும் உங்கள் காதலோடு தான் நடக்கணும்.. இப்படிக் கோபமாக வேண்டாம்” என்றவளின் முகத்தில் தன் முத்தங்கள் வாரி வழங்கியவன்…
“என்றைக்குமே உன் மேல் கோபம் பட முடியாது என்னால்… உன்னை நெருங்கினால் என்னைக் கட்டுப் படுத்துவது ரொம்பக் கஷ்டமாக இருக்கும் என்று கவனமாய் இருந்தேன்… ஆனால் உன்னை இந்த அளவுக்குப் பாதிக்கும் என்று நினைக்க வில்லை, என் வாழ்க்கையே நீ தான்.. எப்படித் தள்ளி வைப்பேன் நினைத்தாய் நீ” ... என்றவன் அவளைத் தன்னுடன் இறுக்கமாகக் கட்டிபிடித்து அவள் கண்ணத்தில் முத்தமிட்டான்.
“அன்றைய நாளில் உங்களுக்கு என்னை விட நல்ல பெண் வாழ்க்கைத் துணையாக வரவேண்டும் என்று தான் அப்படிப் பேசினேன்… மாமா சாரி உங்களுக்கு வேதனை உண்டாகி இருந்தால்” என்று அவனிடம் மன்னிப்புக் கேட்டாள் அவன் மனைவி…
“எனக்கு இப்போ மன்னிக்கும் மன நிலை இல்லை, நான் என்ன மீட் ல இருக்கேன் இன்னுமா தெரியவில்லை” என்றவன் ஒரு கணவனாகத் தன்னுடைய காதல் எப்படி இருக்கும் என்று காமத்தில் புரிய வைத்தான்.
அவளைக் கலைத்து அவளில் இருந்த துன்பங்களையும் வலியையும் களையெடுத்தான்…
அவளுக்குத் தன் காதலை முத்தத்திலும்... அவளை எவ்வளவு பிடிக்கும் என்பதை இந்தக் கூடலில் கூடிக் களித்தும் அவள் பித்தத்தைத் தெளிய வைத்தான்.
அவனுக்கு அவள் எவ்வளவு பிடிக்கும் என்பதை உணர வைத்தான் தருண்…
திருமண வாழ்க்கையில் புரிதலும் காதலும் இளையோடினால் மனக்கிலேஷம், தானாகவே மறைந்து விடும்… இருக்கும் இடமளிக்காமல்…
அதுதான் இவர்களின் இடையே நடந்தது. தன்னுடைய காதல் கேட்டு வராமல் அவளுக்குள் உணர்ந்தத் தருணத்தை அவன் கொண்டாடித் தீர்த்தான் தருண்.
பால முருகன் குடும்பத்தில் இருக்கும் பிள்ளைகளின் வாழ்க்கை அழகாக மாறியிருந்தது.
அன்பு மட்டுமே நடமாடும் வீடாக இருந்தது பாலமுருகன் குடும்பம். அனைத்தும் நன்றாகச் சென்று கொண்டிருந்தது. கதிர் வேந்தன் மதுமிதா, தம்பதிக்கு அழகான பெண் குழந்தையைப் பிறந்தது.
கதிர்வேந்தன் கூறியது போலவே மித்ராவின் மகன் வேதாந்துக்குத் தான் அவன் பெண் என்று அவள் பிறந்த உடனேயே உறுதிச் செய்தனர் குழந்தைகளின் திருமணத்தை.
தருணின் வாழ்க்கையில் வேதம் படிக்க வந்த வேதாந்த் அவன் வாழ்க்கையில் சந்தோஷம் மட்டுமே இருந்தது. இனி வரும் காலங்களில் அனைவரின் சந்தோசமும் வேதாவின் கைகளில்.
இதோ தந்தையின் சொல் மிக்க மந்திரம் இல்லை என்பது போல் அவன் வாழ்க்கையில் எல்லாமுமாக இருந்தான் தருண்…
வாழ்க்கை என்றும் அழகிய பூந்தோட்டம் , நம் அன்பும் பாசமும் தான் அந்தப் பூக்களில் மணம் வீசிக் கொண்டிருக்கும்… இங்குப் பிருந்தாவனமாகக் காட்சியளிக்கும் வாழ்க்கை என்றுமே அழகு.
சுபம்.