Lufa Novels
Moderator
அவனோடு இனி நானா!
அத்தியாயம் 19
விஹான் மலேசியா சென்று இரு வாரம் போலக் கடந்துவிட்டது. அங்கு இருக்கும் மீட்டிங் கூட முடிந்துவிட்டது. இனியும் எப்படி அங்கேயே இருப்பது எப்படியாயினும் வீடு திரும்ப வேண்டுமே! கிளம்பிவிட்டான். இந்த ஒரு வாரத்திற்குள் மனதில் உள்ள ஏமாற்றத்தை ஏற்றுக்கொள்ள பழகிக் கொண்டானோ!
கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் இவன் முன்னால் நடக்க அவனைப் பின்தொடர்ந்து பயணப்பொதிகளை தள்ளிக்கொண்டு வந்தான் அவன் பி.ஏ வெங்கட். விமானமும் ஏறிவிட்டனர். வெங்கட் அவனுக்குப் பதிவு செய்யப்பட்ட எக்கானமி வகுப்புக்குச் சென்று அவனிடத்தில் அமர்ந்தான்.
விஹானுக்கு பிஸ்னஸ் வகுப்பில் பதிவு செய்யப்பட்டிருக்க, அங்குச் சென்று அவன் இடத்தில் அமர்ந்து இருக்கையில் சாய்ந்து கண்களை மூடி அமர்ந்திருந்தான். மீண்டும் நாளைக் கல்லூரிக்குச் செல்ல வேண்டும்.
அங்குச் சென்றாலே அவளைப் பாராமல் அவன் காலைபபொழுது தொடங்காது. இனி எப்படி அவளைப் பார்க்க முடியும்? பார்த்தால் கட்டுப்பாடாக இருக்க முடியுமா? இல்லை ஏமாற்றத்தால் அவளைக் காயப்படுத்தி விடுவோமா? எனப் பல குழப்பம்.
ஒரு வாரம் முயற்சி செய்தும் மனதின் கலக்கம் மட்டும் குறையவேயில்லை.. அதில் தலை வலி தான் வந்தது அவனுக்கு. வின்வின்னென்று தலை வலிக்க அவனுக்கு மிக அருகில் கேட்டது அந்தக் குரல்.
“ஹாய் விஹான்” என நேஹா அழைத்திருந்தாள்.
விழிகளைத் திறந்து பார்த்தால் அவனுக்கு அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தாள் நேஹா. அடுத்த தலைவலி ஆரம்பமாகிவிட்டது அவனுக்கு.
“ஹாய்” என்றான். முகத்தில் மருத்துக்கும் கனிவு இல்லை. எரிச்சல் உணர்வை முகத்தில் காட்டியபடித்தான் அந்த ஹாய் கூடச் சொன்னான்.
“ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க விஹான்?” எனக்கேட்க, “உப்” எனக் காற்றை ஊதியவன்,
“என்ன வேணும் நேஹா மேடம். அல்ரெடி நான் செம்ம தலைவலில இருக்கேன்.. கொஞ்சம் என்னை ஃபிரியா விடுங்களேன்” எனக்கூறி மீண்டும் இருக்கையில் சாய்ந்து கண்களை மூடினான்.
“ஏன் தலைவலி? முன்னயே இருந்ததா? இல்ல இப்போ என்னைப் பார்த்ததும் வந்ததா? உங்களுக்கு ஏன் என்னைப் பிடிக்கவே மாட்டிங்குது?”
“வில் யூ ப்ளீஸ் ஷட்டப். நான் எல்லாமே தெளிவா சொல்லிட்டேன்ல அன்னைக்கே.. அகென் அன் அகென் ஏன் டார்சர் பண்றீங்க?” என்றவன் இருக்கையிலிருந்து எழுந்து வெங்கட்டிடம் சென்றவன், அவனை இங்கு அனுப்பிவிட்டு அவனிடத்தில் அமர்ந்து கொண்டான் விமான பணிப்பெண்ணிடம் கூறிவிட்டு. இது சாதாரண மக்கள் அமரும் இடம் தான். அவனுக்குச் சௌகரீகம் கொடுக்காத இடம் தான் ஆனால் இன்று இந்த இடம் அவனுக்கு அமைதியைக் கொடுத்தது.
4மணி நேர பயணம் கண்களை மூடிப் படுத்து இருந்தானே ஒழிய தூங்கவில்லை. சென்னை வந்தாகிவிட்டது. அவனுக்காகக் காத்திருந்தார் அவனின் ஓட்டுனர் வண்டியுடன். நேராகச் சென்றது சூர்யான்ஷ் அலுவலகத்திற்கு.
மானம் கெட்ட மனது அவளுக்காக அவனை எல்லாமும் செய்ய வைத்தது. இருவரும் ஒரே தொழிலில் இருப்பவர்கள் சூர்யான்ஷ் ஒர் இடத்திற்கு வருகிறான் என்றாலே விஹான் அந்த இடத்திற்கு செல்லமாட்டான். துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பதை போல் தான் இருப்பான்.
இன்று அவனே சூர்யான்ஷ்ஷை காண வர, வெகுநேர காத்திருப்புக்கும், அவமரியாதைக்கும் பிறகு தான் இருவரின் சந்திப்பும் நிகழ்ந்தது.
“அடடே விஹான் ராகவேந்திரா.. தி கிரேட் விஹான்.. சி. ஈ. ஓ ஆப் தி ராகவேந்திரா குரூப்.. என்னைப் பார்க்க வந்திருக்கீங்க? எதுவும் உதவி வேணுமா? எவ்ளோ பணம் வேணும்? அச்சோ நான் செக் புக் எடுத்துட்டு வரலயே! கையில..”
எனத் தன் மேல் கையை வைத்துத் தடவி பார்த்துவிட்டு, தன் அருகிலிருந்த மேஜை டியாயரிலிருந்து ஒற்றை ரூபாயை எடுத்து விஹானின் முன் வைத்தவன் “இப்போதைக்கு இது தான் இருக்கு.. எவ்ளோ வேணும்னு சொன்னா என் மெயிட் கிட்ட குடுத்துவிடுறேன்” என அவமானப்படுத்தினான்.
விஹானுக்கு நரம்பு புடைத்து ஆத்திரம் மண்டைக்கு ஏறியது ஆனாலும் காதல் கிறுக்கு ஆத்திரத்தை ஆஃப் பாயில் போட்டுத் திண்ணுவிட்டு அவன் முன் கூனிகுறுகி நிற்க வைத்தது.
“சூர்யான்ஷ்.. நீ தேவையில்லாத வேலை பார்க்குற. இப்போ ஏன் நீ எங்க வீட்டு புள்ள பின்னாடி திரியுற? உங்களுக்கும் எங்களுக்கும் செட் ஆகாது. அல்ரெடி ஏகப்பட்ட பிரச்சனை இருக்கு.. பிரணிய விட்டுட்..” என ஆரம்பித்த வார்த்தையை முடிக்கும் முன்னே..
“அதுக்கு அவ சம்மதிக்கனுமே! அவளுக்கு என் மேல பித்து.. காதல் பித்து.. நானே வேணாம்னு சொன்னா கூட அவ என் பின்னாடி நாய் மாதிரி வருவா.. ஏன் நான் என்ன சொன்னாலும் செய்வா” என விஹானை கோபப்படுத்த அள்ளி விட்டான்.
“யூ.. நீ வேணும்னு தான பண்ற? நான் அவள விரும்பிறேனு தெரிஞ்சு என்னைப் பழிவாங்க தான பண்ற?” என டேபிளை அடித்து எழுந்து நின்றான்..
அதே வேகத்தில் தானும் எழுந்தவன் “நீ பண்ணல? நான் நேஹாவ விரும்புறேனு தெரிஞ்ச பிறகும் நீ அவள என்கிட்ட இருந்து பிரிக்கல? அப்போ குளுகுளுனு இருந்துச்சா?” எனக் கேட்கவும் ஒரு நிமிடம் அதிர்ந்தவன்,
“ஹே! நான் எப்ப பிரிச்சேன்? நீ நேஹாவ விரும்புறன்னே எனக்கு இப்போ தான் தெரியும். எங்க கம்பெனிக்கு மாடல் வேணும்னு கேட்டோம் அவங்க அப்ளை பண்ணாங்க.. அவ்ளோ தான்”
“அவ என் கம்பெனிக்கு மாடலிங் பண்றானு தெரிஞ்சும் நீ அவள செலக்ட் பண்ணல?” எனக்கேட்க, தடுமாறியவன்,
“அப்ளை பண்ண கேண்டிடேட்ல அவங்க ப்ரோஃபைல் நல்லா இருந்தது செலக்ட் பண்ணோம். எங்க சேலரி பேக்கேஜ் புடிச்சு அவங்க ஓ.கே பண்ணாங்க. தட்ஸ் இட்”
“எப்படி எப்படி சேலரி புடிச்சு.. அவளுக்கு உங்க கம்பெனிய விட அதிகமான சேலரி நான் குடுத்தேன்.. அதுக்கும் மேல நிறைய நிறைய கொடுத்தேன். என்னைக் காதலிக்கிறேனு கூடச் சொன்னவ உன்ன பார்த்ததும் உன் கம்பெனிக்கு வந்தா.. உன் பின்னாடி நாய் மாதிரி வந்தா.. இப்போ பிரணி என் பின்னாடி வராலே அதுபோல..”
“ஏய்..” எனச் சீறினான் விஹான்.
“நாங்க அவள கரெக்ட் பண்ண இல்லாத குட்டிக்கரணம் அடிச்சு வைப்போமா இவனுங்க தொக்கா வந்து இவனுங்க கம்பெனிக்கு எடுப்பானுங்களாம்.. சினிமாவுல நடிக்க வைப்பானுங்களாம்..
அவளும் அப்படியே என்னைத் தூக்கி போட்டுட்டு உன் பின்னாடியே வருவாளாம்.. இப்போ தெரியுதா நாம விரும்பினவ நம்மள விட்டுட்டு அடுத்தவன் பின்னாடி போன எப்படி வலிக்கும்னு?”
“ஹே! இந்தா பாரு நான் ஒன்னும் நேஹாவ டிரை பண்ணல.. அவங்களா தான் என் பின்னாடி வராங்க.. என்ன சொல்லியும் விடாம டார்ச்சர் பண்றாங்க.. இப்போ என்ன உனக்கு நேஹா தான வேணும் என் கம்பெனில இருந்து அவங்கள ரிலீவ் பண்ணிடுறேன்.. நீ பிரணி பக்கமே வரக் கூடாது” எனக்கூற, சத்தமாக வாய்விட்டுச் சிரித்தான் சூர்யான்ஷ்.
“யாருக்கு வேணும் அந்த நேஹா? என்னை விட பெட்டரா நீ வந்தனு என்னை விட்டுட்டு போனவ எனக்குத் தேவையில்லை.. இப்போ எனக்கு என்னோட பியூட்டிகுயின் தான் வேணும்.. எனக்காக என்ன வேணும்னாலும் செய்வா என் பியூட்டி குயின். அவ பின்னாடி சுத்துன உன்னை விட்டுட்டு என் கூட வந்தா பாரு அது.. அது தான் எனக்குப் பிடிச்சிருக்கு.. ஐ லக் ஹெர்” என்றான்.
“அவ எங்க வீட்டு பொண்ணு என்னை மீறி அவ வரமாட்டா.. வரவிட மாட்டேன்.. உண்மையா நீ அவள லவ் பண்ணிருந்தா கூட விட்டுருப்பேன் ஆனா நீ என்னைப் பழிவாங்க தான் அவள காதலிக்கிறன்னா.. என்ன ஆனாலும் சரி இனி பிரணிய விட்டுக்கொடுக்கமாட்டேன் டா” எனக் கம்பீரமாகக் கூறிவிட்டு வெளியே வந்தான்.
*******
அதே நேரம் இங்குக் கவின் இல்லத்தில் எல்லாரும் ஒன்றாகச் சாப்பிடும் அறையில் கூடியிருந்த நேரம் சாத்விகா பேச ஆரம்பித்தாள்.
சாத்வி “அப்பா.. நான் உங்க எல்லார் கிட்டயும் ஒன்னு சொல்லனும்”
கவின் “சொல்லு.. என்ன டிஸ்கிளைமர் எல்லாம் போடுற பேசுறதுக்கு.. என்னமோ பெருசா பிளான் பண்றியா என்ன? சம்பளம் வர இன்னும் 10 நாள் இருக்கு” எனக்கூறி சிரிக்க, அனைவரும் சிரித்தனர்.
“அப்பா!” எனச் சிணுங்கியவள், வெகுவாகத் தன் மனதின் கலக்கத்தை மறைத்து இயல்பாகப் பேசுவது போலப் பேச ஆரம்பித்தாள்.
“அது நான்.. நான் பெங்களூர் போலாம்னு இருக்கேன்”
கார்த்திகா “எதுக்கு? அதெல்லாம் ஒன்னும் போக வேண்டாம்” எனக்கூற,
“அம்மா” எனக் கத்தினாள் சாத்விகா. பிரணவிகாவும், பரமேஸ்வரி பாட்டியும் பார்வையாளராக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
“என்னடாம்மா மெடிக்கல் கேம்ப்பா இல்ல டூரா?” என்றார் கவின்.
“எதுவாயிருந்தாலும் போக வேண்டாம். நான் விஹான் மாப்பிள்ளை கிட்ட பேசிக்கிறேன்” என்றார் கார்த்திகா.
“அம்மா கொஞ்சம் என்னைப் பேச விடேம்மா” என்றவள் கவினிடம்
“அப்பா.. அது நான் மீதியுள்ள இண்டர்ன் பெங்களூர்ல பண்ணலாம்னு” எனப் பேசி முடிக்கும் முன்னே
“ஏன் இங்க என்ன பிரச்சனை? பிரணி நீ என்ன அமைதியா இருக்க? நீ தான் அவள தூண்டி விட்டுக் கமுக்கமா உட்கார்ந்து இருக்கீயோ?” எனக்கேட்க,
“நான் நம்ம வீட்டுல இருந்து, நம்ம ஹாஸ்பிடல்ல தான் எல்லாமே பண்ண போறோன்.. யாரு போறேனு சொல்றாங்களோ அவங்க கிட்டயே கேளுங்க.. எப்ப பாரு என்னையே சொல்ல வேண்டியது.. அவ என்னமோ ஒழுக்கசீலியாட்டம்” எனக் கடுப்பாகக் கூறினாள்.
கவின் “ஏன்ம்மா அப்படி சொல்ற?”
“இல்லப்பா எனக்குக் கொஞ்ச நாள் ஃப்ரீயா.. இண்டிபெண்டெட்டா இருக்கனும்னு தோனுது.. எனக்கு எல்லாமே ஈஸியா கிடைக்குது அதுனால பின்னாடி சொஸைட்டிய ஃபேஸ் பண்ண கஷ்டமாயிருக்கும்னு தான்”
“இங்க என்ன உன்னைப் புடிச்சு அடைச்சா வச்சிருக்காங்க?” எனக் கடுப்பாகக் கேட்டார் கார்த்திகா.
“அம்மா!” என நெஞ்சை பிடித்தாள் பிரணவிகா. கார்த்திகா முறைக்க,
பிரணவிகா “பின்ன அவ சொல்றது கூட நெஞ்சு வலி வரல ஆனா நீ சொல்றது தாம்மா நெஞ்சு வலிக்குது..” எனக்கூற அனைவருமே சிரித்துவிட்டனர் கார்த்திகாவுக்கு கூடச் சிரிப்பு வந்துவிட்டது.
கார்த்திகா “உங்க பாதுகாப்புக்கு தான பொத்தி பொத்தி வளக்குறேன்”
கவின் “சாத்வி நீ சொல்லு உனக்குப் போகனுமா?”
“ஆமாம்ப்பா கொஞ்ச நாள் இண்டர்ன் முடிக்கவும் திரும்ப வந்திருவேன்” எனக்கூற,
“சரி போய்ட்டு வா. ஆனா உன் பாதுகாப்பை உறுதிபடுத்தாம அனுப்ப மாட்டேன்”
“நான் விஹான் அத்தான் கிட்ட கேட்டுட்டேன். அத்தானோட ஃபிரண்ட் ஹாஸ்பிடல்ல தான் பண்ண போறேன்”
கார்த்திகா “எல்லாம் முடிவு பண்ணிட்டு தான் வந்து சொல்ற? என்ன?” என கடுப்பாகக் கூறியவர் கவினை முறைத்தபடி எழுந்து சென்றார்.
பிரணவிகா “அப்பா என்ன இவ்ளோ சீக்கிரம் ஓ.கே சொல்லிட்டிங்க? அவ உங்க செல்லப் பொண்ணுனால தான இப்படி பண்ணீங்க.. இதே நான் ஒன்னு கேட்டா முடியாதுன்னு தான சொல்லிருப்பீங்க?” எனக்கேட்க, அவள் தலையில் நறுக்கெனக் கொட்டிவிட்டு எழுந்து சென்றாள் சாத்விகா. அவள் பின்னால் பரமேஸ்வரி பாட்டியும்.
கவின் “நீயும் தான் என் செல்லப் பொண்ணு”
“அப்போ நான் என்ன கேட்டாலும் சரின்னு சொல்லுவீங்களா?”
“அது கேட்டுகுற பொறுத்து”
“அப்பா!” என மெதுவாக எழுந்து கவின் அருகில் வந்து அமர்ந்தவள், குரலைத் தாழ்த்தி,
“அப்பா நான் ஒருத்தரை லவ் பண்றேன்னு சொன்னா என்ன பண்ணுவீங்க?”
“செறுப்ப கழட்டி அடிப்பேன்” எனக் கார்த்திகா அவளருகில் நின்று கூறினாள். கவினுக்கோ அன்று விஹான் கூறியது தான் நினைவுக்கு வந்தது. அவரும் விஹானைத் தான் மகள் விரும்புகிறாளோ என நினைத்தவர்,
“காதலிக்கலாம் தப்பு இல்ல.. நான், உங்கக்கா எல்லாரும் லவ் பண்ணி தான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். காதல் சரியாகுறதும், தப்பாகுறதும் யாரை காதலிக்கிறோம் அத பொறுத்து தான்”
“அப்போ காதல் சரி. அப்படித்தானப்பா”
“ஆள் யாரு.. அது தான் சரி தப்ப முடிவு பண்ணும்னு சொல்றேன்”
“அப்போ சாயந்தரம் ரெடியா இருங்க ஆளோட வரேன்.. பார்த்துட்டு உங்க முடிவ சொல்லுங்க.. கண்டிப்பா ஒ.கே தான் சொல்லுவீங்க” எனத் துள்ளிக் குதித்துக்கொண்டு ஓடியவள் மாலையில் மாலையும் கழுத்துமாக வந்து நிற்பாளெனக் கவினும் நினைக்கவில்லை அவளும் நினைக்கவில்லை.
பிரணவிகாவின் முடிவு சரியானதா? விஹான் அவளை விட்டுக்கொடுப்பானா? சூர்யான்ஷ் பண்ண போகும் குழப்பம் என்ன? குடும்பம் பிரணவிகாவின் திருமணத்தை ஏற்குமா? பொறுத்திருந்து பார்க்கலாம்.

Last edited: