எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் 20

Status
Not open for further replies.
♥️♥️ ஏக்கம்_20 ♥️♥️
தீவிர சிகிச்சை பிரிவு ( ICU) முன்னால் போடப்பட்ட, இரும்பு நாற்காலி மீது அமர்ந்து. கதவின் வட்ட வடிவ கண்ணாடி மீது விழி பதித்தவாறு இருந்தாள் பவித்ரா.

பிழைப்பதற்கு சாத்தியம் குறைவு என்ற இடியை கேட்டு இதயமே துடிப்பதை நிறுத்தியது. மனம் தகர்ந்து .. உள்ளம் கனக்க மருத்துவமனையின் இரும்பு சேரில் தொப்பென்று சரிந்து விழுந்ததாள் பவித்ரா.

இருண்ட காட்டில் தனித்து நிற்கும் குழந்தையாய் அவள்.அழவில்லை, உணர்வில்லை மெய்நிலை அற்று அதிர்ச்சியில் உறைந்து போய் ஜடமாய் மாறிவிட்டாள்.

ஒசை இன்றி அவள் உதடுகள் "அம்மா..அம்மா.." என முனகியபடியே இருக்க, கண்களில் நீர் வற்றாமல் வழிந்து ஓடியது. மனத்திரையில் சிறு வயதில் தாயிடம்.. பேசிய நினைவுகள் மெல்ல பரவியது. தாயன்பு மனதில் காட்சியாக விரித்தது.!

மகளின் மடியில் தலை வைத்து படுத்தபடி இருந்ததார் பவித்ராவின் தாய் சுமதி "அம்மா.. நான் பொறந்த உடனே அப்பா பொம்பள புள்ளை வேணாம்னு விட்டு போனதா சொல்லுவ, உனக்கு என்மேல வெறுப்பு வரலையா? " தாயின் பதிலை அறிய ஆவலாய் கேட்க?

சுமதியோ.. நொடி பதறி மெல்ல மகளின் கண்ணம் வருடி" உன் அப்பாவுக்கு என்ன விட்டுட்டு போக ஒரு காரணம் வேணும். அவர கட்டுனதால கிடைச்ச ஒரே ஒரு நல்லது நீ பிறந்தது. ரொம்ப கொடுமை மா.. நிம்மதியா ஒரு வேளை சோறு திங்க முடியாது. ஒத்த ரூவா சம்பாதிச்சு தந்ததும் கிடையாது. புகுந்த வீட்டையே ஒண்டிகிட்டு ஓசி சாப்பாடு.., அவமானம்.. அசிங்கம்.. அதுக்கு மேல உங்க அப்பா குடிச்சுட்டு வந்து மாட்ட அடிக்குற மாதிரி தினமும் அடி.!நான் மாசமா இருந்ததால வயித்த மட்டும் அடி விழாம இரண்டு கையும் கோர்த்து மறைச்சுக்குவேன். நரகம் எப்படி இருக்கும்னு எனக்கு நல்லா தெரியும். அது உங்க அப்பா கூட நான் வாழ்ந்து வாழ்க்கை. என்ன விட்டுட்டு அவர் போனதும் சாப்பாட்டுக்கு கூட வழி இல்லை. ஆனா நிம்மதியா இருந்தேன். " என்றவரின் கண்களில் அத்தனை உறுதி.
"அவர் கூட மட்டும் நாம இருந்திருந்தா.. நினைக்க கூட பயமா இருக்கு பவி.நீ வந்து தான் அம்மாவுக்கு விடுதலை கிடைச்சது. எல்லாருக்கும் நிம்மதி சந்தோஷம் தர பொறந்தவடா நீ..ஒரு பொண்ணு சந்தோஷமா இருந்தா அந்த வீட்டுல தெய்வ அருள் பரிபூரணமாக இருக்கும்.பெரிய மகான்கள் எல்லாம் சொல்லுவாங்க.! எங்க வாழுறோம்? எப்படி வாழ்றோம்? என்பதை விட நிம்மதியா வாழ்ந்தோமா என்பது தான் முக்கியம். "

" இல்லை மா? தினமும் எந்த வேலை கிடைச்சாலும் ஒடி.. ஓடி.. செய்வ, எல்லார் வீட்டுலயும் அம்மா வீட்டுல இருப்பாங்க. அப்பா வேலைக்கு போய் குடும்பத் பாப்பாங்க, என்னாலே ரொம்ப கஷ்டம் இல்லை மா.!" ஒரு வித நெருடலோடு குற்ற உணர்ச்சியில் மகள் பேசிட,

"பிடிச்சவங்களுக்காக கஷ்டப்படுறதுல ஒரு சந்தோஷம் இருக்குமா.! வெறும் சோத்து அடிமையா.. சுயமரியாதை இல்லாம, எல்லா கஷ்டத்தையும் சகிச்சுகிட்டே வாழுறது வாழ்க்கை இல்லை டா?தண்டனை.! " என்ற சுமதியின் குரலோ இப்போது தனக்கு அருகில் பேசுவது போல் எதிரொளித்தது அவள் செவிகளில் " விட்டுட்டு பொய்டாத மா.!" மெளனமாய் அழுகை வெடித்தது.பிரியமானவரின் கண்ணீர் உயிரை வலிக்க செய்யும்.

தூரத்தில் நின்று வெறும் உணர்வற்று கதறும் தன்னவளின் கண்ணீர் பார்த்து உயிர் வலித்தது காதலனுக்கு.கிறுக்கிய ஓவியம் போல முடிகள் பறந்து முகம் இருண்டு கிடந்தவளை கண்டதும் வந்த கண்ணீரை கைகளால் துடைத்துவிட்டு தன்னை தானே தேற்றி அவள் அருகில் சென்று" பவி.. " என்று அவன் அழைத்து முடிக்கும் முன்னே.‌. மடியில் வைத்த பர்ஸ் , போன் கீழே விழுந்து சிதறிட, ஒடி .. சென்று அவன் சட்டையை கொத்தா பற்றி மாமன் மேல் சாய்ந்து அழுதாள்.
" பயப்புடாத டி.. அத்தை சரியாகிடுவாங்க.. அழாத மா.. பவி. " என்று எவ்வளவு நேரம் முயன்றும் அழுதாள்.. அடித்தாள்..., " நீ தான் காரணம் " என்று நிற்பவனை சாடினாள். "அம்மா.. வரமாட்டாங்களா.? அம்மா வேணும் ப்ரீத். வர சொல்லு டா ..நீ சொன்ன வந்துடுவாங்க. என்ன விட உன் மேல தான் அதுக்கு கொள்ள பாசம். அத்தைம்மா னு கூப்பிடு ப்ரீத்.. உள்ள விட மாட்டிங்குறாங்க என்ன " விசும்பிக் கொண்டு அழுதாள்.

மெல்ல உச்சியை வருடிவிட்டு" அம்மு அழாத டி.." என்றபடி அவள் அமர்ந்து இருந்த சேரின் கீழ் பார்வை விழ, இரத்தம் தோய்ந்த பாத சுவடுகள் அச்சாக தென்படவும். அவசரமாக அவளை விலக்கிவிட்டு, சேரில் அமர வைத்து, மண்டி இட்டவன் அவள் பாதங்களை கையில் ஏந்திட , கற்களால் குத்தி கிழித்துக் காயம்பட்ட இடங்களில் இரத்தம் உறைந்து பாதங்களில் சிவப்பு சாந்திட்டது போல இருப்பதை பார்த்த கணமே கண்ணீரால் பாதங்களுக்கு மருந்திட்டான். இரு விழியின் துளிகள் காயங்கள் மீது பட்டு வெண்நிற கண்ணீர் துளிகள் அவள் பாதம் தோய்ந்து கீழே வழியும் நேரம் செந்நிரமாய் உருண்டு தரையில் சொட்டியது.!!


நடப்பதை உணராத சிலையாய் அமர்ந்து ஐ சி யூ அறையை வெறித்தாள். பாதம் கீறியது வழியும் ரத்தத்தையும் அதன் வலியையும் கூட உணராத போது ? இவன் கண்ணீரை எப்படி அறிவாள்? சோகம் நிரம்பி வழியும் கண்ணீரை தவிர, மற்ற புலன்கள் எல்லாம் வேலை நிறுத்தம் செய்து விட்டது போல் சிலையென சமைந்தாள் பவித்ரா.


அவள் கண்ணீர் உயிரை அழுத்த, கண்களை அழுந்த துடைத்த படி ஆறுதல் கூற முயன்றான். ஆனால் வார்த்தைகள் வர மறுத்து ஏனோ நெஞ்சு அடைத்தது. அத்தை இருந்தவரை ஆலமரத்தின் நிழலில் வாழும் பறவைகள் போல ஒரு அரவணைப்பு இருக்கும். ஆறுதல் தேடி மடி சாய்ந்தால் அன்பின் கரம் கொண்டே கவலையை காணாமல் போக செய்யும் மந்திரமாக பெறாத தாயின் ஸ்பரிசம் கிடைக்கும். நிமிர்வு கொண்ட பெண் சிங்கமாய் அவர் அருகாமை ஆயிரமாயிரம் பலம் கொடுக்கும்.
"மீட்டுக் கொடு இறைவா..!இடிந்து போய் ஒளி இழந்து முகத்தில் சோகமும், வேதனையும் அப்பி இருக்கும் என்னவளை பார்க்கும் துணிவில்லை எனக்கு. அவளின் கண்ணீர் துளிகள் பட்டு கண்ணாடியை போல் உடைக்கிறது என் இதயம். ' என்று மனதிலே புலம்பும் போது அவள் குரல் கேட்டது. " ப்ரீத். அம்மாக்கு உன்ன நான் மாமானு சொல்லனும். இப்ப நீ போய் நான் உன் பேர் சொல்லி கூப்பிடறேன் னு சொல்லு அப்படியே கோவப்பட்டு
எந்திரிச்சு வந்துரும் சுமதி. மரியாதையா பேச சொல்லி அடிக்கும். அம்மாவை அடிக்க வர சொல்லு ப்ரீத். " மனசிதைவு ஏற்பட்டது போல! "அம்மாவை வர சொல்லு ப்ரீத்.. " என்றபடி அவனையே உறுத்து பார்த்தவளோ .. திரும்பத் திரும்ப இதையே மந்திரம் போல் பிதற்றிய படியே இருந்தாள்.

அழுது கரைவது ஒரு வகையான வேதனை என்றால்? அழ முடியாமல் உணர்வை அடக்கி உயிர் வலியை அனுபவிப்பது கொடும் துயரம்.! அன்னையாய் வளர்த்த அத்தையை இந்த நிலையில் பார்த்து வேதனை கொள்வானா? இல்லை அம்மா வேண்டுமென அழுது அடம் பிடிக்கும் பவித்ராவை பார்த்து வேதனை கொள்வானா? சுற்றிலும் பற்றி எரியும் வீட்டின் நடுவில் மாட்டிக் கொண்டவனை போல் மனதிலே மாண்டான். மனதில் மட்டும் கதறி தவித்தான் ப்ரீத்..

" ப்ரீத்..னு யாரும் இங்க இருக்கிங்களா? பேஷன்ட் உங்க கிட்ட பேசணும்னு சொல்றாங்க.

" நானும் வர வா.., ப்ளீஸ்.. மா.. வ பாக்கனும். " மாமன் கையை கோர்த்து பிடித்தபடி கெஞ்சினாள் பவித்ரா.
" மேடம்.. இது ஐசியூ வார்ட் ஒருத்தவங்க மட்டும் தான் போகலாம். நீங்க மட்டும் வாங்க சார். மெல்ல அவள் விரல்களை மறு கையால் விலக்கி உள்ளே சென்றான்.

சுமதி மெல்ல ஆக்ஸிஜன் மாஸ்க் ஐ கலட்டி விட்டு பேச முயல, வெறும் காற்று மட்டுமே வந்தது. இந்த மெளன வாய் அசைவுக்கு கூட உடலின் மொத்த உயிர் சக்தியை திரட்டி பேசுவது திராணி அற்ற அவரின் உடலின் தளர்வில் தெளிவாக தெரிந்தது அவனுக்கு.


" ப்ரீத்.. எனக்கு பயமா இருக்கு
அவள.. "மூச்சு தினறியது இருந்தும் இறுதி பேச்சிற்காக வேக வேகமாக மூச்சிழுத்து" உன் பொறுப்பு பவித்ரா.. பத்திரம் "
கோர்வையாக பேச முடியாமல் நா குழறியது. மேல் மூச்சு வாங்க," கஷ்டப்படாதிங்க.. அத்தை மா..நீங்க நல்லா ஆகிடுவிங்க " என்று கலங்கும் இவனை பார்த்ததுமே அவர்கள் கண்ணில் நீர் வடித்தது.!

" ம்ஹூம்..." இல்லை என மறுப்பாக தலை அசைத்து பேச வேண்டியதை உயிரை கரைத்து பேசி முடிக்கவும் அவசரமாக வெளிய வந்தவன் பவித்ராவிடம் கூட சொல்லாமல் வீட்டிற்கு ஓடினான். எங்கே போகிறான்? என்று புரியாமல் பரிதவிப்புடன் செல்லும் அவன் முதுகையே திகைப்போடு பார்த்துவிட்டு, வாசலின் மேலே பார்வை நிலைத்தால் பவித்ரா.

வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு வண்டியை அதிவேகத்தில் சீறிய படி ஓட்டி வந்தவன்.பார்க்கிங் கூட செய்யாமல் வண்டியை அப்படி கீழே போட்டு விட்டு வேகமாக அவன் அத்தை அட்மிட் செய்திருக்கும் ஃப்ளோரை நோக்கி ஓடினான். எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் பவித்ராவின் கையை அழுத்தி பிடித்து இழுத்து ஐ சி யூ வார்டிற்க்கு அழைத்துச் சென்றான் ப்ரீத்.

அவன் கையில் வைத்திருந்த கைப்பையைப் பார்த்த சுமதி, திற என கண்களால் சைகை செய்ய,

மெல்ல அதனை கைவிட்டு துலாவி எடுத்தான்.அதில் ப்ரீத், பவித்ரா இருவரின் ஜாதகத்தின் நகலும் பொருத்தம் பார்த்து ஒன்பது பொருத்தம் உள்ளது என்று ஜோசியர் கணித்த காகிதமும் கண்ணில் பட, புரியாமல் அத்தை முகத்தை ஏறிட்டான் ப்ரீத்.

உயிர் கரையும் தாயோ..,பவித்ராவை பார்த்து கண்ணில் நிரப்பிய படி இருக்க ,
மெல்ல அந்த மஞ்சள் நிறத்துணி பையில் கையை விட்டு எடுக்கவும் அதில் மஞ்சள் கயிற்றுடன் கோர்க்கப்பட்டு பொன் தாலி இருக்கவும் கண்டு அதிர்ந்தான்.!! அவன் பக்கம் மெல்ல திரும்பிய பவித்ராவின் பார்வையிலும் தாலி பட்டுவிட, உடனே மிரட்சியில் அலண்டு போய்விட்டாள். தாயின் கெஞ்சும் பார்வை பவித்ராவை மோதி சம்மதம் கேட்டு நின்றது எனது கடைசி ஆசை.. உங்களது திருமணம் என்று வழியும் கண்ணீர் சொன்னது.மெல்ல அவன் முகத்தை கேள்வியாக இவள் பார்க்கும் முன்னே தாலியை எடுத்துக் கட்டிவிட்டு,படுக்கையில இருக்கும் அத்தையின் பாதங்களை தொட்டு கண்ணீர் விட்டான் ப்ரீத்.

கனவு போல நடப்பது எதுவும் நிஜமா என்று கூட புரியாமல்? உறைந்து போய் நின்றால் பவித்ரா.!
கண் நிறைந்து இருவரின் திருமணத்தை கண்டதும் நெஞ்சம் நிறைந்த நிலை சுமதிக்கு .!!மணக்கோலத்தில் மகளைக் கண்ட மகிழ்ச்சி..அவன் கை சேர்த்ததும் தன் மகளை பாதுகாப்பான கூட்டில் சேர்ப்பித்த முழுமை அடைந்த நிறைவு.விழிகளில் மட்டும் தேங்கி நின்ற ஜீவனை பிடித்துக் கொண்டு கடைசி காட்சியாய் தம்பதியராய் ஜோடி சேர்ந்த நிற்கும் மகளை மருமகனை கண்ட ஆத்ம திருப்தியில் மெல்ல கரைந்து கொண்டு இருந்தது சுமதியின் உயிர்.!
இறுதி மொழியாய் " அவன் பாவம் அவன பத்திரமா பாத்துக்கோ பவித்ரா.., விற்றாத மா.." கடைசி வார்த்தை கூறி நிறைவடைந்தது அவரின் ஜீவப் பயணம். ஒரே மகளை கரை சேர்த்து விட்ட நிம்மதியில் இறைவனடி சேர்ந்தது அந்த தாயுமானவளின் ஒப்பற்ற உயிர்!!

பவித்ராவின் கண்ணீரும் கதறல்களும்
ஐ சி யூ அறையின் முழுவதுமே நிரம்பி, அதிர்வுடன் பேர் இரைச்சலாக
எதிரொலித்தது.!!"அம்மா.. அம்மா.!" என்று கதறி துடிப்பவளை பார்க்கும் போதே மனம் இளகி கழிவிரக்கம் பிறந்தது.அவள் துயர் நிலையை பார்க்கும் டாக்டர்ஸ், நர்ஸ்,உதவியாளர்கள், யாவருக்கும்.
ப்ரீத் கைகளில் அடக்கிடமுடியாதபடி திமிறியவளோ .. நீர் இல்லாத மீனென உடல் துடித்தாள். அவன் கை பிடியிலிருந்து வெளிவர துள்ளி பாய்ந்து குதிப்பவளை கட்டுப்படுத்த முடியாமல் தவித்து போனான் ப்ரீத்.


அமைதிப்படுத்த முடியாமல் .. அவளது அழுகையும் சகிக்க முடியாமல் நெஞ்சை கசக்கி பிழியும் சோகத்தில் அழாமல் தன்னை நிலைபடுத்த படாத பாடு பட்டான் ப்ரீத். தலையில் அடித்துக் கொண்டு "அம்மா.! " வேண்டும் என்றே அலறி துடிப்பவளை எப்படி தேற்றுவது என்று புரியாமல், ஒரு கையால் தன் தலையையும் இன்னொரு கையால் அவளையும் அழுத்தி பிடித்தவன் கோபத்தினால் ஆக்ரோஷமாக கத்த ஆரம்பித்தான்.

" பவித்ரா நிம்மதியா அழுற அளவுக்கு நமக்கு இப்ப நேரம் இல்ல டி. நமக்கு யாரும் இல்லை மா.. இப்போதைக்கு அவங்களுக்கு செய்ய வேண்டிய இறுதி மரியாதை சரியா செய்யணும். நான் தான் செய்யணும்.வர்ற அழுகையை தேக்கி வைச்சு நிக்கிறேன் டி.. நிறைய ப்ரொசீஜர் இருக்கு. உன் பக்கத்திலேயே நிக்க முடியாது. தயவு செஞ்சு சூழ்நிலை புரிஞ்சிக்கோ..நீ இப்படி அழுதுகிட்டே இருந்தா? என்னால உன்னை விட்டுட்டு போக முடியாது. ப்ளீஸ்.." என்று முடிக்கும் போது கண்ணீர் உருண்டு வழிய, அவளிடம் கெஞ்சினான் ப்ரீத்.

இரு கைகளால் வாயை மூடி அழுகையை அடக்கியவள்.
ஒரு மூலையில் கீழே அமர்ந்து கொண்டு கண்ணீரை மெளனமாய் வடித்தாள்.!

ப்ரீத்.. தன் அத்தையின் மேல் உயிரே வைத்தவன். இன்று அவர்களின் இறப்பிற்க்கு அழ முடியாமல் தனியாக நிலை கொள்ளாமல்.. துணையாக யாருமில்லாமல் நிற்பதை பார்த்ததும் முதல் முறையாக ஆற்றிட தேற்றிய ஆள் இல்லாது தனித்து நிற்கும் தங்களின் மீதே சுய மனவுருக்கம் வர, நிற்கதியான நிலையை எண்ணி அகம் வருந்தினாள் பவித்ரா.நிம்மதியாக அழ கூட புண்ணியம் செய்து இருக்க வேண்டும் போல.!! இறப்பையும் அதனால் இருவருக்கும் ஆன இழப்பையும் கூட சோகமாக அழுது வெளிப்படுத்திட முடியாத கோரமான நரகவகை சூல்நிலையில் இருவருமே.
வேகமாக அவளை விட்டு வெளியே வந்தவன்.மருத்துவ பரிசோதனை மற்றும் இறப்பின் காரணம் அடங்கிய தாழ்களில் கை ஒப்பம் இட்டு பில் பணத்தை கட்டிவிட்டு, மீதமுள்ள பணத்தை ஆம்புலன்ஸக்கு கொடுத்து பவித்ராவை அழைத்து வர வேகமாக வந்தவனுக்கு.. பார்வையில் விழுந்தது என்னவோ? பிரம்மை பிடித்தார் போல எங்கயோ பார்த்தபடியே, சிவப்பு நிற குர்த்தாவின் மீது துப்பட்டா அணியாமல், மஞ்சள் கயிறுடன் சேர்ந்த தாலி வெளியே கவனிப்பாரற்று , அனுதாப சின்னமாக அவள் மார்பில் விழுந்து
கிடக்க, மெல்ல அவளின் அருகில் சென்று அவளை அரவணைத்து அழைத்து வந்து ஆம்புலன்ஸ்ல் அமர வைத்துவிட்டு ப்ரீத் வெளிய சென்றிருந்த போது
மருத்துவமனை ஊழியர்கள் வந்து
" பிணத்த ஏத்துங்க. " என்றதுமே ஆவேசமாய் கத்தலானாள் பவித்ரா.

" எங்க அம்மா வ அப்படி சொல்லாதீங்க. எங்க அம்மா சாகலை ...," ஸ்டெச்சரில் ஏற்றி வந்தவரின் சட்டையை பிடித்து உலுக்கி சண்டை இட்டு அழுது ஆர்ப்பாட்டம் செய்து துடித்த படியே, ஆ.! ஆ.! என அலறினாள் பவி. அம்மா இறந்து விட்டார் என்பதை ஏற்க முடியாமல் சுயம் நிதர்சனம் மறந்து பித்தான வளாக பிதற்றினாள்.


தினமும் பத்துக்கு மேற்பட்ட இறந்த உடல்களை ஆம்புலன்ஸ் ஏற்றி விடுவார்கள் இறந்தவர்களை அப்படி பிணம் என்று சொல்லி தான் பழக்கம் என்பதால் அவளை முறைத்தபடி சட்டையை அவள் கைகளின் பிடியில் இருந்து விடுவித்துக் கொள்ள முயன்றான்."அம்மா தான் மா.. விடு " தன் சட்டையில் இருந்து அவள் கைகளை உதறிக் கொண்டு வந்தவன் 'பைத்தியம் பிடிச்சு போச்சு போல?'
என்று நினைத்து "என்ன சார் இப்படி எல்லாம் பண்றாங்க? "ஆதங்கமா கேட்டு விட்டு உடலை நீள் வாக்கில் படுக்க வைத்து வெளியே வந்து " அந்த பாப்பா பாருங்க, சட்டை எல்லாம் கிழிச்சு விட்டுடுச்சு அதுக்கும் எதாவது பார்த்து போட்டு தாங்க சார். " என்றவனோ அதற்க்கும் சேர்த்து பணம் பெற்று சட்டை முனையால் வேர்வைத் துடைத்தபடி நடந்தான்.

தினமும் இறந்த உடல்களை சுமந்து ஏற்றி விடுவதால் உணர்வுகள் கூட அவர்களுக்கு மரத்து போய் இருக்கும். அவர்களைப் பொறுத்தவரை இறப்பு ஒரு நிகழ்வு அவ்வளவே அம்மாவை பார்த்து பார்த்து தேமியபடி அழுதுஉருகியவளை தோள் சாய்ந்து அரவணைத்தவன் மனதில் ஓடுவது இது மட்டும் தான். வரும் அழுகையை கடினபட்டு அடக்கிக்கொண்டே
அத்தையின் இறுதி மரியாதை எந்த குறைவும் வந்து விடக்கூடாது.தானுமே உடையாமல் உறுதியோடு இருந்து இறுதி காரியங்களில் எந்த குறைவும் இல்லாமல் நல்ல முறையில் நடத்த வேண்டும். தனக்கு தானே சொல்லியபடி வீட்டிற்கு வரும் முன்னரே ஃபோன் மூலம் எல்லா ஏற்ப்பாட்டையும் செய்து இருந்தான் ஒரு (மறு)மகனாக,

*.".°.".*.".".°'."'.'.*.'.".*.".".

அக்கம் , பக்கம், இருந்த பெரியவர்கள், பெண்களின் உதவியோடு செய்ய வேண்டிய சடங்குகள் சாங்கியங்கள் முடித்து மாலை போட்டு முகம் முழுவதும் மஞ்சள் அப்பி, பெரிய குங்கும பொட்டு வைத்து மேசையில் படுக்க வைத்து இருந்தனர்
பவித்ராவின் அன்னையை.பவித்ரா தலையில் அடித்துக் கொண்டு அழுவதை எல்லாம்..ஒரு மூலையில் பார்வையாளனாக நின்று சகிக்க முடியாமல் பார்பவனால், வந்து சமாதானம் கூட செய்ய முடியாத நிலை.! இறுதி காரியங்களுக்கான வேலையில் மும்முறமாக இருந்தான் ப்ரீத்.
நடக்கும் நிகழ்வு நல்லதோ ?கெட்டதோ? குறை கூறவே ஒரு கூட்டம் வரும், உறவுகள் எனற பெயரில் அது சரி இல்லை? இது சரி இல்லை?அதை எல்லாம் விட , டீ காபி கூட இல்லையா? அங்கே ஒரு உயிர் போய்விட்டது. இருவரும் தவிக்கிறார்கள் என்பதெல்லாம் அவர்களுக்கு பொருட்டே கிடையாது. உறவினர்களுக்கு உபசரிப்பு வேண்டும். எந்த நிலையில் நான் பரிதவித்து நின்றாலும். குறைகூறும் அவர்களுக்கு சாவு கூட ஒரு நிகழ்ச்சி மாத்திரமே.!!

சடங்குகள், சம்பிரதாயங்கள் என எந்த விதத்திலும் குறைவு வராமல் சிரத்தையோடு ஒவ்வொன்றையும் விசாரித்து கேட்டு செய்து கொண்டிருந்தான் ப்ரீத். இறுதியாக கொல்லி போடுவதற்கு கணவனான இந்திரன் வரவேண்டுமே? என்ற கேள்வி எழுந்தது பவித்ரா மெல்ல எழுந்து தடுமாறி நடந்து, எல்லார் முன்பும் வந்து அவர்களின் முகம் பார்த்து நின்றபடி இதுவரை அழுததால் கம்மி வராத குரலை உயர்த்தி பேசலானாள் .

"அவர் வந்து நெருப்பு வெச்சா எங்க அம்மா நெஞ்சு வேகாது. என் மாமா தான் எங்க அம்மா கொல்லி வைக்கணும்.யாரும் மறுப்பு சொல்லாதிங்க, என கூட்டத்தில் உள்ள எல்லாரையும் கை கொண்டு வணங்கி கேட்டுக் கொண்டாள்.ஒவ்வொரு சடங்குகளையும் பவித்ரா ப்ரீத் இருவருமே அழுதபடி செய்து முடித்தனர்.மகளின் மனதில் தாயுடனான நினைவு எல்லாம் நிறைந்து மனதை அழுத்த,ஒவ்வொன்றாக வாய்விட்டு சொல்லி அழுதாள். " ஒடிக்கிட்டே இருப்பேயே மா.. உட்காரவே பிடிக்காதே? உனக்கு. இப்படி படுத்து இருக்க?
எந்திரி மா.! அம்மா.., வா..மா "முணுமுணத்தாள் தொடர்ந்து கத்தி அழுந்ததால், பவித்ராவின் தொண்டை வறண்டு குரல் கம்மியது.அமரர் ஊர்தியில் தாயின் உடலை ஏற்றியதும் அடித்துக் கொண்டு அழுதவள் அப்படியே மயங்கி கீழே சரிந்தால். விழிகளின் மேலே நிலைக்குத்துக்கொள்ள அருகில் இருந்த பெண்கள் தண்ணீரை தெளித்து வீட்டிற்குள் அழைத்து வந்து தண்ணீர் புகட்டி அமர வைத்தனர். அவர்களால் முடிந்த அளவுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு ஒவ்வொருவராக
துக்கம் அனுசரித்து விட்டு சென்றனர்.


இப்போது தன் வீட்டில் தனித்து அமர்த்திருந்தாள் பவித்ரா. கவலை படாதே! என வாய் மொழி சொல்ல கூட ஆள் இல்லாமல் அம்மாவின் இறப்புக்குப் பிறகு அனாதை போல் உணர்ந்தாள் பவித்ரா. சகல மரியாதையுடன் இறுதி ஊர்வலம் நடந்தது.சுமதி அம்மையாரின் பூத உடலை தகனம் செய்து மகனாய் தன் கடமையை நிறைவேற்றி முடித்தான் மறுமகன்.

♥️♥️ஏக்கம் தொடரும்♥️♥️

 
Status
Not open for further replies.
Top