உமா கார்த்திக்
Moderator


அவனை விலகவோ வெறுக்கவோ ..முடியாமல் தவித்தாள் பவித்ரா. அவன் கையில் இருந்து துப்பட்டாவை வேகமாக.. ஏதோ கோபத்தில் இழுத்ததும், தீப்புண் மேல் துப்பட்டாவின் உராய்வோடு கீழே அதன் முனையில் உள்ள தங்க நிற சருகைகள் பட்டு கிழிக்கவும், வலியில் துடித்து கண்ணீருடன் வலி நிறைந்து ஏக்கமாக அவளைப் ப்ரீத் பார்த்தது.. அலையென நினைவில் வந்து கொண்டே இருக்க, தூக்கம் தோலைந்து போனது பவித்ராவுக்கு.
பட்டினியாய் அவன் உறக்கம் வராமல் உருண்டு புரண்டது வேறு இன்னும் உறுத்தல் தந்தது. அடுத்த நாளிலிருந்து அவனுக்கான உணவு மூன்று வேலையும் மேசையில் இருக்கும். வீட்டு வேலைகளை செய்வதோடு சரி நிமிர்ந்து கூட அவனை பார்ப்பதோ.. பேசுவதோ.. இல்லை.சமையல் செய்யும் சத்தம் வைத்து அவள் உள்ளே இருக்கிறாள் சமைக்கிறாள் என்று யூகித்து கொள்வான் ப்ரீத். வயிறுக்கு மட்டும் உணவு அளித்தவள் வார்த்தைகளில் வறுமைக் கொண்டு பேசா விரதம் கடைபிடித்தாள். அவனும் என்னென்னவோ செய்து பார்த்து விட்டான் பலன் தான் இல்லை.
வேகமாக வேலைகளை எல்லாம் முடித்து அறையில் பதுங்கி கொள்வாள் பவித்ரா.
சில நேரம் கோபமாக இருக்கா? அத்த போட்டோ முன்னாடி போய் உன்னோட கடைசி ஆசை கூட என்னால நிறைவேற்ற முடியல,என்னை மன்னிச்சிடுமா னு தினமும் அழறா.. இந்த பிரச்சினையின் தீர்வு கல்யாணம் மட்டும் தான் என்று சரியாக முடிவெடுத்தான். அதை பவியிடம் சொல்ல ஆபிஸிலிருந்து வீட்டிற்கு செல்ல வண்டியை ஸ்டார்ட் செய்தான் ப்ரீத். செல்லும் வழிகள் எல்லாம் அவளை பற்றிய சிந்தனையில் மூழ்கியபடி வேகமெடுத்தது வாகனம்.
மேகம் மழை பூக்கள் உதிர்த்து உடல் எல்லாம் சிலிர்பைத் தர, சாரலின் குழுமையில் மெல்ல மெல்ல நாயகன் உடல் நடுங்கியது. ரோட்டின் மீது கவனத்தை செலுத்தியப்படி வண்டியை ஓட்டினான் ப்ரீத்.
இவளோ! ஒரு முடிவை எடுத்துக்கொண்டு காதலன் வருகைக்காக காத்திருந்தாள். வாழ்நாளில் எதற்குமே ஆசைப்படாத தனது தாயின் கடைசி ஆசை நிறைவேற்ற என்ன வேண்டுமானாலும் செய்யலாம் எனும் முடிவோடு பவித்ரா.
'உண்மையா நான் உன்னை காதலிக்கிறேன் ப்ரீத். ஆனா என் சூழ்நிலையால வேற வழி இல்லாம அவன ஏத்துக்க நினைக்கிறேன் னு அவன் தப்பா புரிஞ்சுகிட்டு,
நான் வேணாம்னு விலகுறான்.கூடவே இருப்பதால,என்னோட காதல் அவனுக்கு அன்பா மட்டும் தான் தெரியுது.நான் உன்னை காதலிக்கிறேன். கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன் னு இப்ப நானா சொன்னா கூட அது பொய் னு நினைப்பான். அத்தைக்காக தான் சொல்லுறேன் விருப்பம் இல்லாம அவங்க ஆசைக்காக நான் அவனை ஏத்துக்கறேன். ஏதோ தியாகம் பண்ணுறேன்னு நெனைச்சு, என்ன வேணாம்னு தான் சொல்லுவான்.
என் காதலை புரிய வைக்கனும், சொன்னா புரிஞ்சுக்க மாட்டன். என் காதல செயல்ல காட்டனும்.'விபரீதமான சிந்தனைகள் தோன்றியது.குளித்து வந்தவள் மெல்ல புடவையை கட்ட துவங்கினால்
"கார்முகில் வானம் மழை என்ற வெண் முத்துக்களை தொடர்ந்து பூமியில்
சிதறவிட,பரவி ஓடிய நீர் திவளையை பருகி மண்ணும் குளிர்ந்து தன் தாகம் தீர்ந்து சில்லிட்டது.!!"
மொத்த ஆடையும் மழை நீர் நிரம்பி வழிய வழிய தொப்பரையாக நனைந்து வீடு வந்து சேர்ந்தான் ப்ரீத். காலிங் பெல்லை அழுத்தியதும் உடல் எல்லாம் குளிரில் உதறிட, உதடுகள் மெல்ல நடுங்க ஆரம்பித்தது. கைகள் இரண்டையும் தேய்த்து கன்னத்தில் ஒற்றி வைத்துக் கொண்டான் கதகதப்புக்காக, மெல்ல கதவு திறக்க மேலும் நடுக்கம் பிறந்தது.!!
காரணம் சோகத்தின் சொருபமாக இது நாள் வரை இருந்தவள் இன்று கருப்பு நிற பிளைன் புடவையில் .. வெள்ளை நிற மல்லிகை சூடி கண்களில் அஞ்சனம் தீட்டி.. இதழ் நிரம்பிய புன்னகையுடன் "வா.!"என்று அழகு வதன மோகினி போல் உள்ளே அழைக்கவும் வாயடைத்து போனான் ப்ரீத். இன்று தான் மெல்ல இதழ் விரிந்து புன்னகைக்கும் பழைய பவித்திராவை பார்ப்பது போன்ற ஒரு உணர்வு வந்தது.அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்!! இரண்டு மாத விடுமுறைக்கு பிறகு வந்த புன்னகை பார்த்ததும் சந்தோஷத்தில் உள்ளம் பூரித்துப் போனான்.
"ஏன் இப்படி முழுக்க நனைச்சு வர மாமா? மழை விடுற வரைக்கும் ஒதுங்கி எங்கயாவது நின்னுட்டு வர வேண்டியது தானே? " அக்கறையான குரலில் கேட்டால் பவித்ரா."நீ என் கிட்ட தான் பேசுறியா டி.!! " நம்ப முடியாமல் திகைப்போடு கேட்டான் ப்ரீத்.
" இங்க நீயும் நானும் மட்டும் தான் இருக்கோம் வேற யாரும் இல்லையே? உன்கிட்ட தான் கேக்குவாங்க, போய் டிரஸ் மாத்து" "பவித்ரா..உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும் " வார்த்தையில் தவிப்பும் பயமும் கலந்து வந்தது அவனுக்கு. "ஸ்..ஸ்..ஸ் என்று விரலை உதட்டில் வைத்து காட்டி
"இப்ப எதுவும் சொல்ல வேணாம். அப்புறம் சொல்லலாம் போய் ட்ரஸ் மாத்திட்டு வா " என்றால் கட்டளையாக, பேச வேண்டியதெல்லாம் யோசித்து மனதில் நிலைநிறுத்தி பேச முயல
" எனக்கு..உன்ன நா.. " அதற்கு மேல் வார்த்தையே வரவில்லை. காரணம் பவித்ரா மெல்ல அவனை நோக்கி நடந்து வரவும், அதை கவனித்தவனால் அதற்கு மேல் திக்கி திணறி கூட பேச முடியவில்லை.வாய் பசை போட்டு ஒட்டியது போல் அசைவில்லாமல் அப்படியே இறுகி போய் நின்றது. சிறு நூல் இடைவெளி விட்டு நெருங்கி அருகில் வந்து நின்றாள் பவித்ரா. அவள் மூச்சுக்காற்றின் வெப்பம் பரந்த மார்பின் மீது பட, மூச்சே வரவில்லை.!! எங்கு பேச்சு வரும்? நடப்பதெல்லாம் கனவா கற்பனையா என்று குழப்பத்தில் சிலையாகி போனான் ப்ரீத்.
துண்டை எடுத்து அருகில் வந்தவள் மெல்ல அவன் இதழ்களை விரலால் மூடினாள் " பேசாத.. எதையுமே சரியா புரிஞ்சுக்காம தான் பேச போற..ஏன் என்னை கல்யாணம் பண்ணிக்கலன் னு விளக்கம் சொல்ல போற.. உங்களோட தெளிவுரை எனக்கு வேணாம் மாமா. " அழுத்தமான பார்வையால் அவனை ஊடுருவி " பேசாதே " என்று அவன் இதழ் ஒற்றிய விரல்களை எடுத்தவள் அவன் சட்டையின் பட்டன்களை ஒவ்வொன்றாக அவள் மென் விரலால் விடுவித்தாள்.!எச்சில் விழுங்கிப் படி இதயம் படபடக்க.. நடுங்கிய உடலில் மின்சாரமும் சேர்ந்து பாய்ந்தது அவனுக்கு பயத்தில் வேர்வை துளிர்த்தது. அவள் விரல் செய்கையை வெறித்து பார்த்தான்.!! பவித்ரா இரண்டு கையால் சட்டையை விலக்கி அவன் மார்பில் சாய்ந்து பின் பக்கமாக கலட்டவும் அவள் முகமோ.! இவன் மார்பில் பதிந்தது. குளிர் பரவிய தேகத்தில் இதமான சூடு.. மதிமுகத்தால் அவள் கடத்திட, வெற்று மார்பு கூட்டில் ஒளி முகம் தந்த உரசலில் சிலிர்த்து அடங்கி தேகம் கூசியது ஆடவனுக்கு.நாயகியோ..லேசாய் விழியை மட்டும் உயர்த்தி நிமிர்ந்து அந்த நெடியவனின் முகத்தை பார்வையால் பருகிட, அவள் பார்வையில் விழுந்தவனுக்கு போதை ஏறியது.!!பேரழகின் பிறப்பிடமானவளின் பார்வை தீண்டிடவும்,ஆண்மகனின் ஆசைகள் எல்லாம் எரிமலையாய் வெடித்தன.! இரண்டு மாதத்தின் ஏக்கம் தவிப்பு பிரிவு மௌனம் எல்லாம் சேர்ந்து தாபத்தை கூட்டி.. உணர்ச்சி நரம்புகள் எல்லாம் செந்நிற அக்னியில் குளித்து மேல் நோக்கி பாய கண்கள் சிவந்து ஆதல் மேலோங்கியது.!!அவன் பார்வையின் பொருள் புரிந்து விரல்களால் அவன் விழி மூடி.. சம்மதம் சொல்லும் விதமாக, அவன் இதழில் தனது பிங்க் நிற இதழ்லால் முத்தமிட்டு விலகினாள் பவித்ரா. விட்டு விலகியவளை வாரி.. இழுத்து அணைத்ததான். காமன் மனம் கொண்ட மாமன். கைகளோடு சேர்த்து கண்களாலும் அவளை சிறைபிடித்தான்.!!
பூவைப்போன்ற இவளின் மெல்லிய
அதரங்களை முள்ளென தைத்தது மாமனின் முரட்டு இதழ்கள்.மீசை கம்பிகள் இதழ் வரிகளை ஒவ்வொன்றாய் உரசலில் என்ன தொடங்கி கணக்கு பாடம் பயில, அவளுக்கோ இவன் நடத்தும் புது பாடத்தில் கூச்சம் பெருகி மின்னல் வெட்டியது உடலெங்கும்!!
வன் முத்தத்தால் அவள் மென் இதழ்களை பல் பதித்தும் கொடுமை செய்தான் அந்த அவசரக்காரன். வலியில் அவன் சட்டை இல்லாத முதுகை விரல்களால் அழுத்தி பிடிக்க கூர் நகம் அவன் சதைகளை ஆழம் பார்த்திட ரத்தமே கசிந்தது!!
மோக போதை உச்சியில் ஏறி பித்தானவன் ரதியின் வளைவு நெளிவுகளை ஆராய்ச்சி செய்ய துவங்கியதால் வலிகளை எல்லாம் கவனத்தில் கொள்ளவில்லை.
இவள் நிலையோ.! தானாக தலையை தண்டவாளத்தில் கொடுத்த உணர்வு.. பயம் உயிரைப் பிரித்து தின்றது. தட்டி முட்டி எப்படியோ முயன்று விலக்கித் தள்ளிட பார்த்தால் சுவாசிக்க கூட விலகல் தராதவன் இப்பொழுது விலகுவானா? தாபம் மூட்டும் தீயை தண்ணீராலும் அணைக்க இயலாது.திரியைத்தூண்டி சும்மா இருந்தவனை பற்ற வைத்துவிட்டு எரியாதே என்றால் எப்படி? மலைபாம்பிடம் சிக்கிய இறையாய் அவள்!! திமிறி விடுபட துடிக்கவும், அழுத்தம் கூட்டி இம்மியளவும் விலகிடாமல் இறுக்கினான். உரிமையாய் காதலி உடல்களில் கைகளை மேய விட, அவளின் அங்க வனப்புகளில் மதி மயங்கி சொக்கிப் நின்றான்.அவள் மேல் இவன் பிடி தளர்த்ததை உணர்ந்து சட்டென விலகி அறைக்குள் ஒடினால் பவித்ரா.
காதல் விசையில் உந்தபட்டு பூவில் மகரந்தம் உண்ட ராஜா போதையில் திளைத்தவன். பூவையின் நெருக்கத்தில் காந்தம்மென ஈர்க்கப்பட்டு பின்னாலே சென்றான். கதவு தட்டப்படும் வேகத்திலே உடல் நடுக்கம் பரவியது.!இதயத்துடிப்பின் அளவு கூடி.. வேகமாக டிரம்ஸ் வாசிப்பதைப் போல் துடிப்புகள் அதிகரித்து. விடாமல் கதவு அதிர்ந்து கொண்டே இருக்க பயம் விஷம் போல நரம்புகள் எல்லாம் பரவி பதட்டத்தில் வியர்வை வழிந்தது பவித்ராவுக்கு, தனே வழிய சென்று வம்பு இழுத்துக் கொள்வது போல.! ஆணின் அருகே சென்று ஆபத்தை விலைக்கு வாங்கிய உணர்வு தன் தவறு உணர்ந்து தலையில் அடித்துக்கொண்டால். முத்தம் தந்து ஆரம்பித்து அவள்தான் என்றாலும் நிறுத்துவது அவள் கையில் இல்லையே..., நடுங்கிபடியே நின்றாள்.அவன் ஏக்கத்தின் இடிகளை அடிகளாக வாங்கிய கதவுகள் உடைந்து விடுவேன் என ஓலமிட்டது.!! 'கதவுக்கே இந்த நிலைமை என்றால் என் நிலைமை? ஐயோ.! 'கண்கள் கரித்துக் கொண்டு வந்தது. அச்சத்தோடு மெல்ல கதவின் தாழ் திறந்தாள். புயலாய் மாறி மையம் கொண்டான் அந்த மெல்லியவள் உடலில்"பேசனும்.. ப்ரீத்." இதழ் மீது விரல் வைத்து அழுத்தம் கூட்டி "ஸ்.. ஸ்... பேச கூடாது "பயத்தில் மிடரு விழுங்கி. நா நாம.. நீ "வார்த்தை திக்கி..வராமல் திக்கி முரண்டிட," காலையில் பேசிகலாம் வா டி.. " என்று பூவையை கையில் ஏந்தியவன்
மெத்தையில் மல்லிகை சரமாய் கிடத்தி அவள் மேல் படர்ந்தான். அவன் பரந்து விரிந்த மார்பில் சுருங்கி அடங்கியே போனால் பவித்ரா.! அவள் முகமெல்லாம் சின்ன சின்ன முத்தங்கள் வைத்தவன் மெல்ல அவள் இதழ்களை கவ்வி சிறை பிடித்தான். விட்டத்தை வெறித்து கிடந்தவளால் முத்தத்தில் லயிக்க முடியவில்லை. பிடித்தவன் தொடுகையே..., உடலெங்கும் ஒவ்வாமை கொள்ள செய்கிறது. பிடிக்காதவர்கள் தெரியாதவர்கள் உடல் தீண்டல்கள் எத்தனை அருவருப்பை வலியை கொடுக்கும்? வர்ஷா அக்காவின் நிலையை நினைத்து உள்ளம் வருத்தத்தில் பதபததைத்தது. 'பைத்தியம் போல ஏன் இதையெல்லாம் யோசிக்கிறேன்.' தன்னையே கேட்டுக் கொண்டாள்,ஏதேதோ எண்ணங்கள் வந்து பயம் கொள்ளச் செய்தது அவளை. மனமோ.. நீதி அரசனாய் மாறி.!! 'நீதான் வந்தாய்?உன்னையே தந்தாய்? என்னை தூண்டி தப்பு செய்ய வைத்து தாலி கட்டிக் கொண்டாய்? என்று பிரீத் சொல்லிகாட்ட நேர்ந்தால் என்ன ஆகும்? வாழ்க்கையே சூனியமாக மாறிவிடும் பவித்ரா.அப்படி சொல்ல மாட்டான் என்றாலும் கோபத்தில் சண்டையில் இதை சொல்லி விடுவானோ? என்று வாழ்நாள் முழுவதும் பயந்து பயந்து சாக நேரிடுமே..., சுமதியின் வளர்ப்பு தவறு செய்வதா.!! சுய ஒழுக்கம் மானமெல்லாம் காற்றில் பறக்க விடத் துணிந்தாயா பவித்ரா? என்று அவள் மனமோ கேள்வி எழுப்ப, 'தெரியாமலா தவறு செய்கிறாய். தெரிந்து தான் குற்றம் செய்கிறாய். கற்பை கொடுத்து சன்மானமாக தாலி கேட்பாயா!! இதற்குப் பெயர் என்ன? யாசகமாய் கூட காதலை கேட்கலாம். உடலை தந்து பேரம் பேசலாமா?
அவள் உள் மனது வன் சொற்களால் நெஞ்சத்தை கிழிக்க.தன்மானத்தை துண்டு போடும் கேள்விகளால் கண்ணீர் வடித்தவள் தடுக்கவும் முடியாமல்,ஏற்கவும் முடியாமல் அனல் பட்டப்பூவாய் மனதால் ஒன்ற முடியாமல் வெம்பி துடித்தாள்.
இங்கே ஆண் புயலோ...,மதம் கொண்டு திரைகள் எல்லாம் அகற்றி கரைகளைக் கடக்கும் வேட்கையில் .. திரை சேலையை அகற்றி சுருட்டி கீழே ஏறியவும்,தன் நிலை அடைத்தவள் திகைத்து தடுக்க வாய் எடுக்க!! இதழோடு சேர்த்து அவள் வார்த்தையும் விழுங்கி விட்டான் ராச லீலை புரியும் மாயவனாய்.!
தாலிக்காக தன்னையே தரைவார்க்க துணிந்து விட்டாள் கோதை.அவன் கோபம் புரிந்தவள். மாமன் வீசும் வார்த்தையின் கூர்மை தெரிந்தவள் அவனின் சந்தேகம் குணத்தால் காதலனாக கூட ஏற்க பயந்தவள், வாழ்நாள் முழுதும் வசை வாங்க வாய்ப்பை கொடுத்து விட்டாள்.