எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

14 நேத்திரனை ஆளும் பௌர்ணமி!

priya pandees

Moderator


அத்தியாயம் 14

பௌர்ணமிக்கு, கவுன்சிலிங் செல்வதில் நம்பிக்கையும் இல்லை விருப்பமும் இல்லை. அவள் குஹனிடம் சொன்னது போல் மூன்று மாதத்திற்கு முன்பே ஒரு பிரபல மருத்துவமனையில் மிகமிக ரகசியமாக ஒரு மனநல மருத்துவரை பார்த்துவிட்டிருந்தாள்.

குகன் பேசிய ஆடியோவும், அந்த மெசேஜ்களும் அவளுக்கு வந்து கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் மேல் ஆகிறது, அது வந்த தினத்தில் உடனே அதை ஏற்க முடியாமல் ஒத்தி வைத்தாலும், மனம் அதனை விட்டு வர மறுத்து மீண்டும் மீண்டும் எடுத்து கொடுத்து அதை மறக்க விடாமல் செய்ய துவங்கியது. அதை யார் அனுப்பினார்கள் என்று கூட மிக எளிதாக கண்டறிந்து கொண்டாள். அனுப்பியவர்களும் ஒழிய நினைக்காதது அவளுக்கு வேலையை வெளியே தெரியாமல் முடிக்க உதவியது.

வீடியோவை அனுப்பிவிட்டு இவள் கூப்பிட காத்திருந்தவர்களாக, "இது உங்களுக்கு யூஸ் ஆகுமா இல்லையான்னு தெரியல எனக்கு யூஸாகாது அதான் அனுப்பிட்டேன். ஹஸ்பண்ட்ஸ் அவுட்டிங்க்னு சேர்ந்தா இதான் பண்றாங்க என்ன பண்றது? நாம எங்க போய் நம்ம மனசுல இருக்க குப்பையை கொட்ட முடியும் மேடம்? இது உங்க ஹஸ்பண்ட் உங்க லைஃப் சோ நீங்களே டிசைட் பண்ணிக்கோங்க. நா என் மொபைல்ல இருந்து டெலீட் பண்ணிட்டேன். பை" என வைத்திருந்தனர். அதை அனுப்பியிருந்ததும் அவளுக்கு நன்கு தெரிந்த பெண் தான் ஆனால் இவள் அவ்வளவு நெருங்கி பழகியிராத பெண்.

அதற்கான எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வீடியோவை அனுப்பிய கையோடு அவர்கள் வேலை முடிந்ததாக சென்றுமிருந்தனர், ஒரு மாதம் வரை இவளும், 'எதாவது தேவைன்னு இல்லாம இத நமக்கு அனுப்பணும்னு இல்லையே? அவங்களே டிமாண்ட் என்னன்னு வரட்டும்' என காத்திருந்து பார்த்தாள். ஒரு மாதத்திலேயே முடிவிற்கு வந்திருந்தாள், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பெண்ணுக்கு பெண் செய்யும் உதவியாக மட்டுமே அந்த வீடியோவை அவளுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள் என்று. இன்று வரை கூட வரவில்லை. இதோ அவள் 'ட்வீட்!' செய்த பின்னரும் கூட அவர்களிடமிருந்து எதுவும் செய்தியாக வந்திருக்கவில்லை.

அந்த வீடியோ அவளை அதிகம் பாதித்தது. மண்டையை உடைக்காத குறையாக குடைய துவங்கயிது. ஆனாலும் எதையும் வெளிக்காட்டாமல் உடனடியாக எதையும் செய்யாமல் நிதானமாக யோசித்தாள். அவன் இவளுக்கு மற்ற சில ஆண்களை போல துரோகம் செய்யவில்லை தான். ஆனால் இவளுடன் வாழ்ந்த வாழ்க்கையை விமிர்சித்ததையும் அவ்வளவு எளிதில் கடக்க முடியவில்லை. யோசிக்க யோசிக்க குழப்பம் அதிகரித்தது. அதுவரை அவள் அவனுடன் வாழ்ந்த வாழ்க்கை மொத்தமும் ஒன்றுமே இல்லாததாக தோன்ற தொடங்கியது.

ஹரிணி, கிருத்தி இருவரும் பிறந்தது கூட அர்த்தமில்லாத உறவில் உதித்தது போல தோன்ற துவங்கவும், பயந்து மருத்துவரை நாடிச் சென்று விட்டாள். இப்படி ஒருத்தி வீட்டினுள் குழப்பத்தோடு தூங்காமல், சரியான மனநிலை இன்றி சுற்றிக் கொண்டிருக்கிறாள் என்பதே குஹன் கண்ணிலும் கருத்திலும் படவில்லை. அதுவும் அவளுக்கு அப்போது தான் புரிந்தது.

அவனை அதிகமாக கவனிக்க ஆரம்பித்தாள், 'தான் இருந்தாலும் இல்லையென்றாலும் அவருக்கு ஒன்றுமே இல்லையா?' என்ற கேள்விக்கு பதில் தேட துவங்கினாள்.

குஹனும் வருவான், உண்பான், நேரமிருந்தால் பிள்ளைகளோடு விளையாடுவான், இவளிடம் படத்தின் உடை வடிவமைப்பு பற்றி பேசுவான், கலந்தாலோசிப்பான், குடும்ப விழாக்கள் எதுவும் வருவதாக இருந்தால் அவனுக்கு போக வேண்டும் போல இருந்தால், 'நா இத அட்டன் பண்ணிடுறேன் சித்து. நீ உன் வொர்க் பாரு' என கன்னம் தட்டி சொல்லி சென்றுவிடுவான், இல்லாமல் வேலை இருந்தால், 'உன்னால முடிஞ்சா அட்டண்ட் பண்ணு சித்து. இல்லனா அம்மா சமாளிச்சுப்பாங்க' என குரல் வழி செய்தி மட்டும் வந்து சேரும்.

அவர்கள் ஒரு குடும்ப அமைப்பில் இல்லாதது போன்ற தோற்றமே அப்போது தான் அவளுக்கு புரிந்தது. இப்போதென்று இல்லையே திருமணம் ஆன தினத்தில் இருந்தே இருவரும் இப்படித்தானே இருக்கிறார்கள், என்ற உண்மை அவள் முகத்தில் அறைந்தது.

காதலிக்கும் போதும் அவர்கள் அவ்வளவு நாசுக்கான காதலர்கள் என்றால் திருமணத்திற்கு பின்னும் அவ்வளவு நாசுக்கான கணவன் மனைவியாக தான் வாழ்ந்திருக்கின்றனர் என புரிந்தது.

ஆனால் அதெல்லாம் ஒரு நொடி தான், அவளுக்கு அதில் குறையாக எதுவும் தெரியவில்லை. 'கொஞ்சி கொண்டே திரிந்தால் தான் நல்ல கணவன் மனைவியா என்ன? நான் அவருக்கு நல்ல மனைவியாக தான் நடந்து கொண்டேன்!' என தன்னை தானே திடப்படுத்தினாள், விளைவு தவறுகள் மொத்தமும் குஹன் பக்கமாக இறங்கியது.

'நல்ல மனைவியா தானே நா இருந்துருக்கேன். இன்னும் என்ன செஞ்சுருக்கணும்? ஃபிஸிக்கலாவும், ஃபினான்சியலாவும், ஃபுல் சப்போர்டிவ்வா தான் இருந்துருக்கேன். ஃபாரின் ட்ரிப் அவங்க வேலையோட என் வேலையாவும் தான் கூட போயிருக்கேன், அங்கேயும் அவங்க வொர்க்குல நா எந்த டிஸ்டர்ப்பன்ஸும் குடுக்காம, எந்த வகையிலும் தொந்தரவு பண்ணாம பசங்கள கூட நானே பார்த்துட்டு இருந்துருக்கேன். இதுக்கும் மேல் ஒரு குட் வைஃபா நா என்ன பண்ண முடியும்? அவங்க செக்ஸ் நீட நா என்னைக்கும் அப்போஸ் பண்ணதில்லை ஈவன் ஐம் டயர்ட். இதுக்கு மேல என்ன செஞ்சுருக்கணும் நான்?' என்ற குழப்பம் நாளுக்கு நாள் அதிகரித்ததில், தூக்கம் தான் கெட்டது. முடித்து கொடுக்க வேண்டிய வேலைகள் தேங்க தொடங்கின, தானாக மனநல மருத்துவர் முன் சென்று அமர்ந்துவிட்டாள்.

ஆனால் அங்கும் அவர் பேசும் முன் அவளே, "நா இதெல்லாம் செஞ்சது தான் தப்பா? அப்ப எல்லா விதத்துலையும் கரெக்டா இருக்க கூடாதா? ஒருவேளை சில வைஃப் பண்ற மாதிரி, எல்லா விஷயத்திலையும் டார்ச்சர் பண்ணிட்டே இருந்துருக்கணுமா?" என இவளே பேச, அவர் கூற வருவதையும் கூட ஏற்க மறுத்து பேச,

"உங்களுக்கு நல்ல தூக்கம் தான் முதல்ல தேவை. ஒரு மாசம், டெய்லி நல்லா எயிட் அவர்ஸ் தூங்கி எழுந்து வாங்க அடுத்த சிட்டிங் வச்சுக்கலாம்" என்றுவிட்டார்.

ஒரே வாரத்தில் மறுபடியும் சென்று, "தூக்கமே வரமாட்டேங்குது டாக்டர். தூங்காததால என்னால என் வொர்க்குலையும் கான்சென்ட்ரேட் பண்ண முடியாம இருக்கு" என்றதில் தான் அவரும் தூக்க மாத்திரையை தூக்கி கொடுத்திருந்தார்.

"அதிகமா சாப்பிட கூடாது. நா சில கண் எக்சர்சைஸ் சொல்றேன் அதையும் தூங்குற முன்ன ட்ரை பண்ணுங்க. ஒரு மாசத்துக்கு இந்த பத்து மாத்திரை தான். ட்வல் தாண்டியும் தூக்கம் வரலைனா மட்டும் தான் எடுக்கணும். அடுத்து த்ரீ டேய்ஸ் கேப்ல தான் அடுத்த மாத்திரை எடுக்கணும். தூக்கத்துக்கான டைமிங்க ரொட்டீன் பண்ணுங்க. ஒரு பத்து நாள் பழகிட்டீங்கனா அடுத்து தன்னால அந்த டைம் வந்தா தூக்கம் வந்துடும்" என சொல்லி தான் அனுப்பியிருந்தார்.

ஆனால் அவர் சொன்ன எதையும் செய்யாமல், மீண்டும் யோசனையில் மூழ்கி, அது மனதிற்கு அசதியை தந்து, சலிப்பாகி, உளைச்சலில் கொண்டு நிறுத்தி, இறுதியில் அவன்மீது கோபமாக உறுபெற்று, "நா மட்டும் இப்படி இருக்க, என்னைய இப்படி ஆக்கிட்டு நீங்க மட்டும் நிம்மதியா இருப்பீங்களோ?" என்ற ஒரு எரிச்சலில் தான் விவாகரத்து முடிவையும் வெளியிட்டிருந்தாள்.

வண்டியை நிறுத்திவிட்டு அவளை தான் பார்த்தவாறு அமர்ந்திருந்தான் குஹன். மருத்துவமனை வந்தது கூட தெரியாத அளவிற்கு அவளுக்குள் யோசனையில் இருந்தாள் பௌர்ணமி.

அருகில் வந்து நின்ற காரின் ஹாரன் ஒலியில் நிமிர்ந்தவள், சுற்றி பார்த்து அவனிடம் வர, "நீ ஏற்கனவே இந்த மண்டைக்குள்ள யோசிக்குறதுனால வர்ற வில்லங்கம்லாம் போதாதா? இன்னும் எந்த கப்பல தண்ணிக்குள்ள தள்ள தீவிரமா யோசிச்சுட்ருக்க?" என அவள் தலையை மெல்ல தட்டி சொல்ல,

அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல், "ஹாஸ்பிடல் வந்திருச்சுன்னு சொல்ல வேண்டியது தானே?" என்றவள் கதவை திறந்து இறங்கி நடக்க, காரை பூட்டிவிட்டு தானும் அவளுடன் இணைந்து கொண்டான் குஹன்.

உள்ளே சென்று பெயரை கொடுத்ததும், மருத்துவர் அறையை காட்டிவிட்டனர்.

இருவரும் அனுமதி பெற்று உள்ளே செல்ல, "வாங்க மிஸ்டர் குஹநேத்திரன் அண்ட் மிஸஸ் குஹநேத்திரன்" என சிரித்த முகத்துடன் வரவேற்றாள் பைந்தமிழ்.

'இவ்வளவு சின்ன பொண்ணுட்ட கவுன்சிலிங்கா?' என பௌர்ணமி குஹனை முறைக்க, தோளை குழுக்கி காண்பித்தான் அவன்.

பைந்தமிழ், "உட்காருங்க!" என இருவரையும் மறுபடியும் வரவேற்க.

"நீங்க தான் டாக்டரா? இல்ல டாக்டர் இனி தான் வருவாங்களா?" என பௌர்ணமி நேராகவே கேட்க,

"சத்தியமா நாந்தாங்க டாக்டரு. குட்டி பொண்ணா தெரியிறாளேன்னு நினைக்றீங்களா? எனக்கு ஏஜ் தேர்ட்டி த்ரீ, ரெண்டு குட்டீஸ் கூட இருக்காங்க. இந்த ஃபீல்டுல எயிட் இயர்ஸ் எக்ஸ்பீரியன்ஸோட தான் உட்கார்ந்துருக்கேன். என்ன நீங்க தாராளமா நம்பலாம். இல்ல ஐடி எதுவும் காட்டணுமா?" என சாதாரணமாகவே பேசினாள் பைந்தமிழ்.

"சோ கூல். நல்லா எங்கா ட்வன்டி ப்ளஸ் மாதிரி தெரியிறீங்க டாக்டர்" என பௌர்ணமியும் உண்மையான பாராட்டாக சொல்லியவாறு அவள் எதிரில் அமர்ந்தாள்.

"ஆமாங்க ஆனா அதுல பாருங்க ப்ளஸும் இருக்கு மைனஸும் இருக்கு" என பைந்தமிழ் சிரிக்க,

"ம்ம்!" என தானும் சிரித்தாள் பௌர்ணமி.

"குஹன் சார் உட்காருங்க. உங்க பெரிய ஃபேன் நான். நீங்க நடிச்ச படங்கள விட உங்க ட்ரைக்ஷன்ல வந்த கான்செப்ட் எல்லாம் தான் சூப்பர். ரொம்ப நல்லாருக்கும். மாஸ் என்டெர்டெயினர் சார் நீங்க"

"தேங்க்ஸ் டாக்டர்!" என்றான் அவன் அமர்தலான சிரிப்புடன்.

"ஓகே நவ். ட்ரென்டிங் கப்பிலுக்கு என்ன பிரச்சினைன்னு தெரிஞ்சுக்கலாமா? டிவோர்ஸ், சூசைட் அட்டெம்ட்டுலாம் ஏன் எதுக்குன்னு நீங்களும் நானுமா டிஸ்கஸ் பண்ணி ஒரு முடிவுக்கு வருவோம்" என கேட்க,

பௌர்ணமி, குஹனை ஒருமுறை திரும்பி பார்த்து விட்டு, "சீ! நா அல்ரெடி, டாக்டர் நிவேதான்றவங்கள கன்சல்ட் பண்ணிட்டேன் டாக்டர். எனக்கு இப்போ தேவை இவரோட டிவோர்ஸ் மட்டும் தான். அது கிடைச்சுட்டாலே என் மைண்ட் ரிலாக்ஸாகி நார்மல்கு வந்திடும். எனக்கு இவர்கிட்ட பயங்கரமா தோத்துட்ட ஃபீல் இருக்கு. அது சரியாகணும்னா நா தனியா வாழ்ந்து காட்டணும். அது தான் என்ன அமைதிபடுத்தும். மத்தபடி உங்க மாத்திரை மருந்துலலாம் எதுவும் செய்ய முடியாது. என்ன தேவைன்னு தெரியாதவங்களுக்கு தான் உங்க கவுன்சிலிங் தேவை. எனக்கு என்ன வேணும்னு எனக்கே நல்லா தெரியும். சோ ப்ளீஸ் குவிட் இட் ஹியர். தேங்க்ஸ் ஃபார் யுவர் டைம்" என பேசி நிறுத்த,

"குட். தெளிவா இருக்கீங்கனா எதுக்கு ஸ்லீப்பிங் பில்ஸ் எடுக்குறீங்க?"

"அது தான் சொன்னேனே இதுக்கு முன்ன போன டாக்டர் சஜஸ்ட் பண்ணது. ஆனா அது கூட வேலை செய்யல. மாத்திரையை போட்டா தூக்கம் வரும் போடலனா வராது"

"கண்டிப்பா வராது. யாரையும் எதையும் பேச விட்ற கூடாதுன்னு முந்திட்டு ஸ்பீடா யோசிக்குற உங்க மைண்ட், இன்னும் கொஞ்ச நாள் போனா தூக்க மாத்திரை போட்டாலும் தூக்கம் வராம பண்ணிடுமே மேடம்? உங்க மைண்ட்ட சொன்னேன்!"

"அதுக்குள்ள இவர் எனக்கு டிவோர்ஸ் குடுத்துட்டாலே நா நிம்மதியா தூங்கிடுவேன்"

"ஸுயரா தான் சொல்றீங்களா? அவரோ டிவோர்ஸ் வேணும்னு இவ்வளவு அடமெண்ட்டா இருக்குறதுக்கு காரணம் நா தெரிஞ்சுக்கலாமா?"

"கண்டிப்பா சொல்லியே ஆகணுமா?"

"அப்படின்னு இல்ல. பட் நீங்க நாளைக்கு கோர்ட்டுக்கு போனா இப்படி என்ன மாதிரி ஒரு டாக்டர்ட்ட தான் அனுப்பி மூணு சிட்டிங் கவுன்சிலிங் எடுத்துட்டு வர சொல்லுவாங்க. நீங்க முன்னவே உங்களுக்கு கம்ஃபர்ட்டான இடத்துல எடுத்தீங்கனா அந்த ரிப்போர்ட்ட‌ கூட அங்க யூஸ் பண்ணிக்கலாம்" என்றாள் பைந்தமிழ்.

புருவம் சுருக்கி யோசித்தவள், "அவங்க ரெஃபர் பண்ற டாக்டர்ஸ்ட்ட தானே போக வேண்டியிருக்கும்?"

"ஆமா தான். ஆனா ரிப்போர்ட் இதையே நீங்க அந்த டாக்டர்ட்ட காண்பிச்சுக்கலாம். சைன் பண்ணிடுவாங்க"

"பட்!" என இன்னும் யோசித்தாள் பௌர்ணமி.

"ஜஸ்ட் ஃப்ரண்ட்ஸ்ட்ட ஷேர் பண்ணிக்குற மாதிரி என்ட்ட ஷேர் பண்ணிக்கோங்க சிமி மேடம். உங்களுக்கு கொஞ்சம் மைண்ட் ஃப்ரீ ஆகும் எனக்கு வாங்குன ஃபீஸ்கு ஒன் அவர் வேலை பார்த்த சேட்டிஸ்ஃபேக்ஷன் கிடைக்கும்" என மேசையில் மேல் நிமிர்ந்து அமர்ந்து கன்னம் தாங்கி அவள் கேட்ட தினுசில் தானாக தலையை உருட்டி விட்டாள் பௌர்ணமி.

அவ்வளவு நேரமும் அமைதியாக இருவரையும் மாற்றி மாற்றி வேடிக்கை பார்த்த குஹன், அவள் தலையை ஆட்டிய நொடி, "ப்பா தேங்க்ஸ் டாக்டர். இனி நீங்க பாருங்க. எப்படியும் ஒன்னவர் ஆகுமா? நா போய்ட்டு வந்து பிக்கப் பண்ணிக்கிறேன் சித்து" என எழுந்து கொண்டான்.

"அதெப்படி சார்? டிவோர்ஸ் கவுன்சிலிங்னா ரெண்டு பேரும் தான் அட்டென்ட் பண்ணணும். அவங்க மட்டும் அட்டென்ட் பண்ணா அந்த ரிப்போர்ட்டே செல்லாதே?"

அதில் பௌர்ணமிக்கு கொஞ்சமாக சிரிப்பு வர நிமிர்ந்து அவனை பார்த்து நக்கலாக சிரிக்கவும்‌ செய்தாள்.

"கொன்றுவேண்டி!" என்றான் வாயசைத்து.

"உட்காருங்க குஹன் சார்" என பைந்தமிழ் சொல்ல, மீண்டும் அமர்ந்து கொண்டான்.

"ம்ம் ஸ்டார்ட் பண்ணுங்க" என கதை கேட்க தயாரானாள் பைந்தமிழ்.

இரண்டு வயதில் எதிர்வீட்டில் குடி வந்ததிலிருந்து, சேட்டை செய்தது, பின் மூன்று வருட இடைவெளி, மீண்டும் சந்தித்ததும் காதல், பின்னர் திருமணம், இரண்டு பிள்ளைகள், அவரவர் வேலை, இடையே வந்த அந்த வீடியோ அதன் முடிவாக விவாகரத்து என சுருக்கமாக அவர்களின் இருபது வருட வாழ்க்கையை இரண்டு நிமிடங்கள் கூட வராது வகையில் சொல்லி முடித்தாள் பௌர்ணமி.

"லாங் ட்வென்டி இயர்ஸ்ல சுவாரஸ்யமா சொல்ல ஒரு விஷயம் கூட இல்லையா?" என பைந்தமிழ் கேட்க,

"கதை கேட்குற மூட்ல இருக்கீங்கன்னு நினைக்கிறேன். நாங்க அதுக்கான ஆட்கள் இல்ல டாக்டர்"

"இப்படி இந்த வீடியோக்காகலாம் கோர்ட்ல டிவோர்ஸ் தரமாட்டாங்களே மேடம். ஸ்ட்ராங் ரீசன் வேணும். ரெண்டு பேரும் அதிகமா சண்டை போடுவீங்களா?"

"நோ!"

"குடிச்சுட்டு வந்து பேட் வேர்ட்ஸ்ல ரப்பிஷா சார் பிஹேவ் பண்ணுவாரா?"

"நோ! அவர் குடிச்சே நா பார்த்ததில்லை. பட் சோசியல் டிரிங்கர்னு தெரியும். குடிச்சுட்டா நிறைய பண்ணுவாருன்னு அந்த வீடியோல தான் ஃபர்ஸ்ட் பார்த்தேன்"

"வேறெதுவும் அஃபேர் இருக்க டவுட் இருக்கா உங்களுக்கு?"

"சம் டைம்ஸ் இருக்குமோன்னு தோணும். சம்‌ டைம்ஸ் எங்க பசங்கட்ட இவரு பழகுற டைம்ஸ் இல்ல இருக்காதுன்னு தோணும். அது நா செர்ச் பண்ண விரும்பல. தேடுனா உண்மை தெரிஞ்சுடும். ஆனா நா அத தேட கூட விரும்பல. என்னையே பிடிக்கலன்னு சொன்னப்றம் அவர் வேற அஃபேர் வச்சுருந்தாலும்" என அவனை திரும்பி ஒருமுறை பார்த்துவிட்டு, "நோ ஐடியா டாக்டர்" என்றுவிட்டாள்.

"சண்டை இல்ல, வாழ்க்கைல ஜெயிச்சு டாப்ல இருக்கீங்க, அழகா ரெண்டு குழந்தைங்க. அப்றமு ஏன் சார் அப்படி உங்கள பேசினாரு?"

"அதுக்கு அவர் தான் பதில் சொல்லணும்"

"நீங்க கேட்ருக்கலாமே?"

"அது மென்ஸ் டாக்னு சொன்னாரு. புருஷன்லாம் சேர்ந்தா பொண்டாட்டிய இப்படி தான் மாத்தி மாத்தி பேசி அசிங்கபடுத்திப்போம். அது எங்களுக்கு ஒரு என்டெர்டெயின்மெண்ட்டுன்னு சொன்னாரு" இவை அனைத்தையும் கூட அவன் முகத்தை பார்த்தே தான் கூறினாள். அவனும் அவளை மட்டும் தான் பார்த்திருந்தான்.

இருவரையும் கண்டு சிரித்துக் கொண்ட பைந்தமிழ், "சரி அது விடுங்க. உங்க ரெண்டு பேருக்கும் மட்டுமான ஸ்வீட்டான விஷயங்கள் இருக்கும்ல? அத சொல்லுங்க" என்றாள்.

"இப்போ அதிகமா கடுப்பு தான் இருக்கு. வேறெதுவும் சொல்லிக்குற மாதிரி இல்ல"

"நா வேணா ரீகால் பண்ண ஹெல்ப் பண்றேன்"

"நா எல்லாமே சொல்லிட்டேன் டாக்டர். தேர்ட் பெர்சனா எல்லாம் கேட்டீங்க தானே? என் மேல எதாவது மிஸ்ட்டேக் இருக்கான்னு மட்டும் சொல்லுங்க"

"நீங்க இன்னும் எதுவுமே என்ட்ட ஷேர் பண்ணல சிமி மேடம்"

"டாக்டர்!" என பௌர்ணமி பல்லை கடிக்க,

"வெயிட் நீங்க மிஸ் பண்ண ஸ்வீட் மெமரீஸ நா ரிமைண்ட் பண்ணுறேன். நீங்க ரெண்டு பேரும் ப்ரபோஸ் பண்ணிருப்பீங்களே அது? ஃபர்ஸ்ட் கிஸ்? ஃபர்ஸ்ட் கிஃப்ட்? ஃபர்ஸ்ட் லாங் ட்ரைவ்? கல்யாணம் ஆனதும் வந்த முதல் த்ரீ மந்த்ஸ்? கன்சீவ்னு நீங்க எக்ஸ்பிரஸ் பண்ண விதம் அதுக்கு அவர் உங்களுக்கு கொடுத்த ஹக்? பேபி கேரிங் பீரியட்ல நடந்த எக்ஸ்பிரீயன்ஸ்? ஃபர்ஸ்ட் பேபிய ரெண்டு பேரும் சேர்ந்து கொஞ்சிருப்பீங்களே அந்த மினிட்ஸ்? பிஸ்னஸ் லாஸ் இல்லனா ஃபேமிலில யாரோட லாஸாவது நடந்து, அதோட வலிய ஒருத்தருக்கு ஒருத்தர் ஷேர் பண்ணிருக்கலாம்? உங்க ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தருக்கு ஹெல்த் இஷ்யூ வந்து அதுல ரெக்கவர் ஆக மற்றவங்க கேர் பண்ணிருக்கலாம். ஆஃப்டர் பிக் ஃபைட் ஒரு ரீயூனியன் நடந்துருக்கலாம் அந்த ரொமாண்டிக் மொமென்ட்ஸ்? இதெல்லாம் காமனா எல்லார் லைஃப்லையும் நடக்கும். உங்க ட்வென்டி இயர்ஸ்ல இன்னும் நிறைய நடந்துருக்கலாமே? அப்படி சுவாரஸ்யமா நடந்து மறக்க முடியாது போன ரெண்டு மூணு மட்டும் சொல்லுங்க கேட்போம்" என சாதாரணமாக அவள் கேட்டு விட்டாள், எதிரில் இருந்த இருவரும் தான் ஆழ்ந்த சிந்தனையில் இறங்கியிருந்தனர்.

இதெல்லாம் அவர்களும் கடந்து தான் வந்திருந்தனர், ஆனால் ஏன் அதை ரசித்து சொல்லும்படி நினைவில் நிறுத்த முடியவில்லை. எப்போதோ எங்கேயோ நடந்த ஒன்றாகவும் கடந்த ஒன்றாகவும் தான் தோன்றியது.

"நாங்களும் இதெல்லாம் க்ராஸ் பண்ணி தான் வந்தோம். இதுல சுவாரஸ்யமா சொல்ல என்ன இருக்கு? அப்பப்ப நடக்குறது தான் அத நிதானமா நின்னு ரசிக்குறளவுக்கு எங்களோட வேலைகள் இருந்ததில்லையோ என்னவோ. எதுவும் ரசிச்சு சொல்ற மாதிரி சிட்யூவேஷன்ல இல்ல" என பௌர்ணமியே சுழித்த புருவத்துடன் சொல்ல,

"அப்ப மெஷின் வாழ்க்கை வாழ்ந்திருக்கீங்க ரெண்டு பேரும்? இதுக்கு எதுக்கு டிவோர்ஸ்? அல்ரெடி நீங்க டிவோர்ஸ்ல தான் இருக்கீங்க" என்றுவிட்டாள் பைந்தமிழ்.

குஹன் மருத்துவரின் பேச்சிற்கு சாதாரணமாக அமர்ந்திருக்க, பௌர்ணமி தான் திருதிருத்தாள். அவளுக்கு தொண்டை வரை நின்ற பதில் எப்படி வெளியிடுவது என வர மறுத்தது.

"என்னாச்சு சைலண்ட் ஆகிட்டீங்க? நிஜம் தானே? ஒரு ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் சண்டையும் இல்லாம காதலும் இல்லாம ட்வென்ட்டி இயர்ஸ் ரிலேஷன்ஷிப்ல இருக்குறதுலாம் சாதனைல வர வேண்டியது. நீங்க ரெண்டு பேரும் அச்சீவ்ட் கப்பில்"

"நக்கல் பண்றீங்களா?"

"நிச்சயமா இல்ல. நீங்க வாழ்ந்தது மெஷின் வாழ்க்கை. காலைல எழுந்திருக்கிறோம் டயர்ட் ஃபுட் சாப்பிடுறோம். பசங்கள ஸ்கூல்ல விடுறோம். நம்ம வேலைய பாக்க போறோம். ஈவ்னிங் வர்றோம் நைட் ஃபுட் சாப்பிடுறோம் ஷார்ப்பா பத்து மணிக்கு தூங்கிடுறோம். ரைட்டா?"

"என் பசங்கள வெளில கூட்டிட்டு போறேன். அவங்களுக்கு நல்லது கெட்டது சொல்லி குடுக்குறேன். அவங்கள இவர தேட விடாம என்கேஜா வச்சுருக்கேன். அவங்க கூட சினிமா, பீச், பார்க், ரிலேடிவ் வீடு, ட்ராயிங் கிளாஸ், பியானோ க்ளாஸ், ஸ்விம்மிங் க்ளாஸ், யோகா க்ளாஸ், ப்ரேக் ஃபாரஸ்ட், லஞ்ச், டின்னர், வெரைட்டி ஹெல்தி ஸ்நாக்ஸ்னு ஃபுல் டைம்மு அவங்கள தான் பார்த்துக்குறேன். அவங்க டைம் போக தான் மீதி டைம் எனக்கானது என் வேலைக்கானது, அதையும் நா ரசிச்சு செய்றேன். தூக்கம்லாம் அதுக்கு அப்றம் தான்"

"இதுல குஹநேத்திரன் சார் எங்கையுமே வரலையே மேடம்?"

"அவர் பாதி நாள் ஷுட்டிங்னு வெளில தான் தங்கிப்பாரு, நாங்க தூங்கின அப்றம் வருவாரு, மறுநாள் எப்ப வேணா கிளம்பி போவாரு. ஆனா அவர் வீட்ல இருந்தாலும், அவரோட ஷுட்டிங் செட்யூல்ல நா ஸ்பாட்டுக்கு போனாலும் அவருக்கும் சேர்த்து ந்யூட்ரிஷியன் ஃபுட் எடுத்துட்டு போக மறந்ததில்லை நான். ப்ளஸ் பேரன்டஸ் மீட்டிங்க்ல இருந்து, பசங்க ஸ்கோர் கார்ட் வர அவருக்கு அப்டேட் பண்ணாம இருந்ததில்லை. அவரோட எந்த டெஷிசன்லயும் குறுக்க நின்னதில்ல"

"இது மெஷின் வாழ்க்கை இல்லையா மேடம்? நீங்க உங்க ரெஸ்பான்ஸிபிலிட்டிய சரியா செய்யணும்னு கான்சன்ட்ரேஷனா இருந்துருக்கீங்க. ஆனா உங்க லைஃப்ப வாழலையே?"

"நோ வே! இதெல்லாம் செஞ்சா அது மெஷின் வாழ்க்கைன்னு எப்படி சொல்ல முடியும்?"

"முதல் முத்தத்தையே நீங்க ரசிக்குற அளவுக்கு பகிர்ந்துக்களனா அப்றம் ஷேர் பண்ணிகிட்ட எந்த முத்தமும் உங்களுக்கு தித்திப்பா இருந்துருக்காதே?"

"இட்ஸ் எ ரப்பிஷ் டாக். நாங்க எப்படி கிஸ் பண்ணிட்டோம்னு டெமோவா காட்ட முடியும் உங்களுக்கு?"

"நீங்க டெஷிஷன் மைண்டடா இருக்கீங்க. நீங்க ரெண்டு பேரும் ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட்டு ஷேர் பண்ணிட்டதே லிப் கிஸ் தாம்னா கண்டிப்பா அங்க லவ் இருந்துருக்காது லஸ்ட் தான் இருந்துருக்கும். இன்னைக்கு இது போதும். நா சொன்னது எல்லாம் யோசிங்க. மறுபடியும் நா தேவைபட்டேன்னா வாங்க" என சிரித்தே விடை கொடுத்தாள்.

"நீங்க எல்லா மிஸ்டேக்கும் என் பக்கம் மாதிரி தான் பேசுனீங்க. ஏன்?"

"நீங்க ஆர்க்யூ பண்ண ரெடியா இருந்தீங்க. சார் இல்ல. ஈசியா வேலை முடியணும்னா நா உங்க ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர பேச வைக்கணும். உங்கள பேச வைக்கிறது ஈசின்னு தோணுச்சு. சிம்பிள். மிஸ்டேக் உங்க பக்கம் மட்டும்னு நா எங்ககையும் மென்ஷன் பண்ணல சிமி மேடம். டிவோர்ஸ் கேட்குறது, ஸ்லீப்பிங் பில்ஸ் எடுக்குறது, ஹைப்பர் ஆகுறது எல்லாமே நீங்க தான், சோ உங்க மைண்ட்ட ஃப்ரீ பண்ண ஹெல்ப் பண்ணேன். மெஷின் வாழ்க்கை வாழ்ந்தாலும் ஏதோ ஒரு பாண்ட் உங்க ரெண்டு பேரையும் ட்வன்டி இயர்ஸா பிடிச்சு சேர்ந்தே இருக்க வச்சுருக்கு அது என்னன்னு யோசிங்க. அத மட்டும் யோசிங்க. அத கண்டுபிடிச்சுட்டீங்கனா, அந்த வீடியோக்கு இப்படி ரியாக்ட் பண்ணிருக்க கூடாது எப்படி ரியாக்ட் பண்ணிருக்கணும்னு புரிஞ்சுப்பீங்க"

"தேங்க்ஸ் டாக்டர்!" என கை சட்டையை மேலேற்றிக் கொண்டு எழுந்துவிட்டான் குஹன்.

"சாருக்கு அல்ரெடி அது புரிஞ்சுருக்கு மேடம். அதான் உங்கள ஹைப்பர் ஆகவிட்டு வேடிக்கை பாக்குறாரு. நீங்க அவரைவிட ப்ரிளியண்ட்டுன்னு காட்டுங்க" என தானும் எழுந்து இருவருக்கும் கை கொடுத்தாள்.

பௌர்ணமியும் யோசனையோடே பைந்தமிழுக்கு விடை கொடுத்து வெளியே வந்தாள். அவளை அமர்தலான சிரிப்புடன் பார்த்தவாறு உடன் வந்தான் குஹநேத்திரன்.
 
Top